Saturday, September 28, 2019

புதுசாய் ஒரு அவதார் !

நண்பர்களே,

வணக்கம். First things first ....! இன்றைய கூரியர்களில் அக்டோபரின் 4 இதழ்களும் உங்களைத் தேடிப் புறப்பட்டு விட்டன ! பொதுவாய் வாரயிறுதிகளில் உங்கள் கைகளுக்குக் கிடைக்கும் விதமாய் பார்சல்களை டெஸ்பாட்ச் செய்வதே நம் வழக்கம் ; ஆனால் போன மாதத்து TEX பைண்டிங்கின் சொதப்பல் இம்முறையும் நிகழ்ந்திடக்கூடாதெனும் முன்ஜாக்கிரதை ஏற்பாடுகளின் பொருட்டு ஒரு நாள் கூடுதலாய் எடுத்துக் கொண்டு விட்டது ! So வெள்ளிக்கிழமைக்கு புக்குகளை அனுப்பிடல் சாத்தியப்படவில்லை ! Anyways வாரத்தின் நடுவே காந்தி ஜெயந்தி விடுமுறை காத்திருப்பதால் பிரச்னை தீர்ந்தது ! 

And இதோ - இம்மாதத்துக் கூட்டணியினில் இதுவரையிலும் உங்கள் கண்களில் காட்டியிரா இதழின் பிரிவியூ !!
பொதுவாய் TEX அட்டைப்படங்கள் என்றாலே கையில் ஒரு பிஸ்டலோடு   'தல'  தெற்காலேயோ ; மேற்காலேயோ திரும்பி நின்றபடிக்கே போஸ் கொடுப்பதே  வாடிக்கை !  சமீபத்தைய இதழ்களுள் 'சர்வமும் நானே' அட்டைப்படம் தான் இதற்கொரு விதிவிலக்காக இருந்ததாய் ஞாபகம் ! இதோ - இம்மாதம் ஆர்ப்பரிக்கும் நதியின் மத்தியில் ஒரு மொக்கைப் படகில் நம்மவர் ஸ்டைலாக நிற்கும் காட்சியே அட்டைப்படமாய் !! And சமீபத்து பழக்கம் இம்முறையும் தொடர்கிறது - ஒரிஜினல் அட்டைப்படத்தையே தக்க வைத்துக் கொண்டு அதனில் வர்ண மெருகூட்டலைச் செய்வதெனும் விதமாய் !! நாம் என்ன தான் 'தம்' கட்டி நம் ஓவியரைக் கொண்டு சித்திரங்களைப் போட்டாலும், ஒரிஜினல் கவர்களின் அங்க அளவுகள் நமக்குப் பிடிபடுவதில்லை ! 'கால் குட்டையாகிப் போச்சு ; கை நீண்டுக்கிச்சு  ; கழுத்தைக் காணோம்' - என்று ஏதாச்சும் ஒரு சொதப்பல் நிகழ்வதுண்டு ! ஆனால் படைப்பாளிகளோ இதனில் துளியும் கோட்டை விடுவதில்லை ; பாருங்களேன் - நமக்கவர் முதுகைக் காட்டிக் கொண்டிருந்தாலுமே - பக்கவாட்டில் முகம் எத்தனை அம்சமாய் வரையப்பட்டுள்ளதென்று !! 

இந்த அட்டைப்படம் சார்ந்ததொரு கொசுறுத் தகவலுமே உண்டு தான் ! 2018 வாக்கில் நமக்கு TEX அட்டைப்பட சித்திரங்கள் போட்டுத் தர இத்தாலிய ஓவியர் ஒருவரை நாம் பயன்படுத்தி வந்தது நினைவிருக்கலாம் ! (டைனமைட் ஸ்பெஷல்  ராப்பர் கூட அவரது ஆக்கமே) நான்கே நாட்களில் மனுஷன் ஒரு டிசைனைப் பூர்த்தி செய்து விடுவார் ! தற்போதைய 'புதைந்து போன புதையல்' இதழுக்கான டிஜிட்டல் கோப்புகள் அப்போதே நம் வசமிருந்ததால் - இந்த டிசைனை சற்றே வித்தியாசமான வர்ணச் சேர்க்கையோடு போட்டுத் தந்திடக் கோரியிருந்தேன் ! அவரும் வழக்கம் போலவே புயல் வேகத்தில் படம் போட்டு அனுப்பியிருந்தார் ! ஆனால் அதன் வர்ணங்கள் ரொம்பவே இருண்டு, டல்லாக இருப்பது போல்ப்பட்டது எனக்கு ! 'சரி...இது நமக்கு ஆகாது !' என்று நினைத்தபடிக்கே அந்த டிசைனை உள்ளே வைத்து விட்டேன் ! தொடர்ந்த நாட்களில் பெரும் சுகவீனம் காரணமாய் ஓவியர் ஓய்வுக்குள் புகுந்திட, நாம் அவரிடம் பணிகளைச் செய்து வாங்கும் வாடிக்கையும் முற்றுப் பெற்றது ! (தற்போது நலமாக உள்ளார் என்பது சந்தோஷச் சேதி !!) ஆபீசில் உள்ள நமது கம்பியூட்டரில் துயிலும் அந்த டிசைன் பற்றிய ஞாபகம் இந்தப் பதிவை டைப் செய்யும் போது தான் நினைவுக்கே வருகிறது என்பதால் இப்போது அதை உங்களுக்குக் கண்ணில் காட்ட இயலவில்லை ! Monday - yes ! அப்புறம் உட்பக்கங்களின் டிரெய்லர் : 
அட்டைப்படத்தோடு தொடர்பு கொண்டதொரு ஆக்ஷன் ப்ளாக் என்ற வகையில், பாருங்களேன் - நம்மவரின் செயல்பாட்டை !! கதையைப் பற்றிச் சொல்வதானால் - கதாசிரியர் கிளாடியோ நிஸ்ஸி  ரகளை செய்திருக்கிறார் - வழக்கம் போலவே !! 

ஹோல்டான்...ஹோல்டான்...!! 

எப்போதும்  போலவே 'தல' தாண்டவத்தைப் பற்றி ; கதைகளின் நெளிவு சுளிவுகளைப் பற்றி ; சித்திரங்களைப் பற்றி - பில்டப் ஸ்ட்ராங்காக தொடரப் போவதை நினைத்தால் எனக்கே கொஞ்சம் கூச்சமாகவுள்ளது ! ஒரு சகாப்தத்தைப் பற்றி எழுத புதுசாய் என்ன தேடுவதோ ? And எத்தினிவாட்டி தான் பில்டப் பரமசிவம் அவதாரோடு சுற்றி வருவது ? So இந்த ஒரு தபா மாத்திரம் கார்சனின் நண்பரை ஆராதிப்போரின் பார்வையில் ஒரு 'பில்ட்டவுண்' ரூபத்தில் முன்னுரையை எழுதினாலென்ன ? என்று நினைத்தேன் !! ஆகையால் உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக - இதோ 'பில்ட்டவுண்  பூங்காவனம் ' ஆஜர் !! 

'அது வந்துங்கன்னா - கதை ஆரம்பிச்சுப் போட்றப்போவே கார்சனின் நண்பரும், டெக்சின் நண்பரும் ஒண்ணா ஆஜராகுறாப்படி ! இந்த பின்கர்ட்டன்..பின்கர்ட்டன்ன்னு ஒரு துப்பறியும் ஏஜென்சி இருக்கில்லீங்களா ? அவனுங்க நோகாம நோன்புக்கஞ்சு குடிக்கிறதுக்கோசரம்  கார்சனோட நண்பருக்கு தகவல் சொல்லி அனுப்புறாக ! 'இன்ன மாதிரி...இன்ன மாதிரி...புதையல் மெக்சிக்கோவிலே இந்த இடத்திலே இருக்குங்கண்ணா ; அதை நீங்க லொங்கு லொங்குன்னு காடு - மேடுன்னு அலைஞ்சு தேடிப் புடிச்சுக் கொண்டு வந்தாக்கா  நாங்க ஜிலோன்னு பில்லை போட்டுக் கிழிச்சி முள்ளங்கிப் பத்தையாட்டம் டாலர் நோட்டை வசூலிச்சுப்புடுவோம்லா ?' அப்டின்னு கேக்குறாப்டி !! கார்சனோட நண்பர் தான் நல்லவரு ; வல்லவரு ; நாடே போட்ற்ரவருன்னு அல்லாத்துக்கும் தெரியுமில்லீங்கள்லண்ணா ? அப்புறம் ஒரு தட்டு நிறைய சுக்கா ரோஸ்ட்டைப் பார்த்தாக்கா டெக்சின் நண்பரையும் எமலோகத்துக்கே கூடக் கூட்டிப்போயிடலாம்னு முக்கு வூட்டு  முன்சாமிக்கே தெரியும்ங்கிறப்போ - பின்கர்ட்டன் 'தல'க்குத் தெரியாமப் போகுமா ? ராவுக்குக் கட்டையைக் கிடத்தின பிற்பாடு, கோழி கூவுறச்சே நம்மாளுங்க பயணம் கிளம்பறப்போ ஒரு அம்மணியும் கோர்த்துக்குது !! பின்கர்ட்டன் புள்ளையாண்டான் டாட்டா காட்டிப்புட்டு வூட்டுலே போயி வுட்ட தூக்கத்தைத் தொடரப் போயிடறாப்பிடி  ! 

கதையின்னு ஒண்ணு இருந்தாக்கா - வில்லன்..வில்லன்ன்னு ஒரு சோமாறி இல்லாங்காட்டி கதை சூடு புடிக்காதில்லீங்களாண்ணா ? ஆக அவன் இன்னொரு பக்கம் வேட்டைக்குக் கிளம்ப - நம்மாட்கள் பாப்பா கூடப் பேச்சுக் குடுத்திட்டே எல்லையைக் கடக்குறாப்டி  !! மலைமாடு மாதிரி தடித் தடியான மெக்சிகோ காட்டான்கள் புசு புசு மீசையோட ரகளை பண்ண, கார்சனின் நண்பர் 'ஏக் மார் பந்த்ரா துக்கடா' ஆக்கிப்புட்றாக  !! இதிலே இன்னா ஸ்பெஷாலிட்டின்னா - கதையோட பெரும் பகுதி டிராவல் பண்றது கதைக்கு அங்க அங்க அவசியமாற மனுஷாளோடே தானேகாண்டி - கார்சனின் நண்பரை வம்படியா முன்னுக்கு கூட்டியாந்து நிக்க பண்றதில்லீங்கோ ! மெக்சிகோவில் ரகளை ; திகுடுமுகுடான ஆக்ஷன் ; இவன் காலை அவன் வாற ; அவன் காலை கார்சனின் நண்பர் வாறன்னு கதை சும்மா டவுன்ஹால் லாலா கடை மைசூர்பாகாட்டம் வழுக்கிட்டு ஓடுறாப்படி !! ஓவியர் ஜோஸ் ஆர்டிஸோட சித்திரங்கள்லே கார்சனின் நண்பர் சித்தே பத்தியத்தில இருக்கும் புள்ளையாண்டானாட்டம் தெரியுறது நெசம் தானுங்கோ ; ஆனாக்கா கொள்ளைவாட்டி இந்த ஸ்டைலைப் பார்த்துப் பழகிப் போயிட்டதாலே வித்தியாசமா ஏதும் தெரிலேண்ணா   ! ஒரு கட்டத்திலே மல்லாக்கப் போட்ட கரப்பானாட்டம் கார்சனோட நண்பரும் ; கிட் வில்லரோட மாமாவும் பாலைவனத்திலே கட்டப்பட்டுக் கிடக்க - இங்கனக்குள்ள லைட்டா கண்ணுல தண்ணி வந்திடுச்சுன்னா பாத்துக்கோங்களேன்  !! ஒரு மாதிரி தப்பிச்சு அத்தனை கும்பல்களையும் தொம்சம் பண்ணிப்புட்டு, நட்பூஸ் ரெண்டு பேரும் விடை பெறச்சே கதையிலே வர்ற டுவிஸ்ட் இருக்குங்களேண்ணா - மெய்யாலுமே மெர்சலாகப் போறீக ! அதை அலசி ரவுண்ட் கட்ட இன்னும் ஒரு நாலைஞ்சு நாளிலே  இங்க வரப் போறீகன்னு என்ர மனசு சொல்லுதுங்கணோய் !! ஒரு திருவிழா வெயிட்டிங்கு !! 

ஒரு மழை நாளிலே நிதானமாப் படிச்சு போட்டுப்புட்டு  இங்கே வர்ற வழியைப் பார்த்தீங்கன்னா சிறப்பாயிருக்கும் !! தம்பி இப்போதைக்கு நடையைக் கட்டுறேனுங்க  !! தீபாவளிக்கு வெடி வெடிக்கறதுக்கு முன்னமே  கையிலே தீபாவளி மலரை ஒப்படைக்கணுமில்லீங்களா ?  ட்டாட்டா...பை பை !! வாரகடாசியை ஜமாய்ச்சிடுங்க !! அப்பாலிக்கா பார்க்கலாமுங்க !! 

ஆன்லைன் லிஸ்டிங்குமே ரெடிங்கோ :

http://www.lion-muthucomics.com/home/425-december-2018-pack.html

http://lioncomics.in/monthly-packs/629-march-2015-pack.html

Sunday, September 22, 2019

என் கடன் பில்டப் செய்து கிடப்பதே..!

நண்பர்களே,

வணக்கம். மாதத்தின் ஆரம்ப வாரங்களில் வாழைப்பழம் வாங்கி வரப் போகும் செந்திலைப் போல முகம் பிரைட்டாக இருப்பதும் – மூன்றாம் வாரத்திலிருந்தே கடுப்பிலிருக்கும் கவுண்டரைப் போல முகரை கடுகடுவென்றிருப்பதும் சமீப வருடங்களாய்ப் பழகிப் போய்விட்டதொரு routine ! அந்தந்த மாதத்து இதழ்களைத் தயார் செய்து முடித்த கையோடு – 'ஹை… ஜாலி !' என்ற சன்னமான உற்சாகமும் ; இன்னுமொரு பத்து நாட்களுக்காச்சும் ராக்கூத்தடிக்காது தூங்கலாமே என்ற சந்தோஷமும் அலையடிக்கும் ! தேதிகளைக் கிழிக்கக் கிழிக்க – ‘வேலைகளுக்குள் நுழையற வழியைப் பாருலே… போன மாசம் மாதிரியே கடைசி வரைக்கும் ஜவ்வுமிட்டாய் இழுக்காதேலே !!‘ என்று ஒரு குரல் உள்ளாற ஒலிக்கத்தான் செய்யும் ! ஆனால் ‘இன்னும் 20 நாள் இருக்குல்லே… பார்த்துக்கலாம் !‘ என்றபடிக்கே மாடு மேய்த்துத் திரியும் routine-ல் தொடர்ந்திடுவது வாடிக்கை ! மாதத்தின் 15 தேதியைக் கடக்கும் போதே ஊசிப் போன உளுந்து வடையை உள்ளே தள்ளிய effect-க்கு வயிறு லேசாய்க் கலக்க ஆரம்பிக்கும் வேளையில், மைதீனும் மண்டையைச் சொறிந்தபடிக்கே நிற்பது தெரியும் – ‘ப்ரிண்டிங் ஆரம்பிக்க எப்போ ரெடியாகும் அண்ணாச்சி ?‘ என்ற கேள்வியோடே! அப்போது தான் மேஜையில் குவிந்து கிடக்கும் டெக்ஸின் 220 பக்க சாகஸம் அசுரத்தனமான எடை கொண்டிருப்பதாய்த் தோன்றத் துவங்கும் ; கிராபிக் நாவல்கள் சகலமும் தண்டுவடத்தின் உறுதியைப் பரிசோதிக்கக் காத்திருக்கும் பயிற்சிகளாயத் தோன்றத் துவங்கும் ; கார்ட்டூன்கள் நீங்கலாய், பாக்கி எல்லாமே மலைப்பைத் தரும் மலைச்சிகரங்களாய் தென்படும் ! And has been no different this month too!

‘ஹை... மாடஸ்டி மறுபதிப்புத் தான் !‘ என்ற ஜாலியில் அதனில் பெரிசாய் மெனக்கெட அவசியமின்றி அச்சுக்கு அனுப்பி விட்டிருந்தேன் ! “வஞ்சம் மறப்பதில்லை” தடதட ஆக்ஷன் + நேர்கோட்டுப் பயணம் என்றிருந்ததால் தஸ்ஸு-புஸ்ஸென்று மூச்சுவிட்டுக் கொண்டே அதனுள் புகுந்து முக்கால்வாசிப் பணிகளையும் முடித்தாச்சு ! ஒரு மாதிரியாய் வெள்ளியிரவு மீதமிருந்த மொழிபெயர்ப்பை முடித்துக் கொடுத்த கையோடு சுடச் சுட டைப்செட்டிங் & பிராசசிங் அரங்கேறிட - நேற்றைக்கு பிரிண்டிங்கும் துவங்கிவிட்டது ! I have said this before too - and I 'll repeat it too : முந்தைய ராப்பொழுது வரைக்கும் பேப்பரில் கோழி கீச்சலான மொழிபெயர்ப்பாய் நின்றிடும் சமாச்சாரத்தை ஒற்றை நாள் கழித்து அச்சில் பார்ப்பது என்பது இன்னமுமே ஒரு செம த்ரில்லான அனுபவமாய்த் தொடர்ந்திடுகிறது ! And அந்த washdrawing சித்திரப் பக்கங்கள் வண்ணத்தில் மிரட்டுவதையும் சேர்த்தே ரசிப்பது கூடுதல் fancy !!  

பணி # 3 ஆக கையிலெடுத்தது நமது சிகப்புச் சட்டை நண்பர் ட்ரெண்டை ! நமது கருணையானந்தம் அவர்கள் இந்த ஆல்பத்திற்குப் பேனா பிடித்திருக்க – வழக்கம் போல கொஞ்சம் மாற்றங்கள் ; முன்னேற்றங்கள் என்று எடிட்டிங் செய்திட உட்புகுந்தேன் ! ஒன்றுக்கு இரண்டாய் ‘ஹிட்‘ மாதங்கள் ஆகஸ்டிலும், செப்டம்பரிலும் அமைந்திருக்க அந்த momentum-ஐத் தக்க வைத்துக் கொள்ள அக்டோபரின் ட்ரெண்டும் ஒத்துழைக்க வேண்டுமே என்ற படபடப்பு லேசாயிருந்தது ! சென்றாண்டின் பிற்பகுதியில் இதன் ஆங்கில Cinebook ஆல்பத்தைப் படித்தது நினைவிருந்தாலும் – கதையின் outline-ஐத் தாண்டி வேறெதுவும் ஞாபகத்தில் நஹி ! So வேக வேகமாய்க் கதைக்குள் புகுந்தேன் ! “சாலையெல்லாம் ஜுவாலைகளே” கதையினில் – காதலி ஆக்னெஸ் தரும் நயமான பல்பை வாங்கியிருந்த பாவப்பட்ட ட்ரெண்ட் இம்முறை என்ட்ரி தந்திட்டதே கணிசமான பக்கங்களுக்குப் பிற்பாடு தான் ! கதை நெடுக மெதுமெதுவாய் கதாசிரியர் செய்திட்ட ‘திகில்‘ பில்டப்பானது ட்ரெண்ட் களமிறங்கிய பிற்பாடு இன்னமும் வேகமெடுக்க, அந்த clean சித்திர பாணிகளோடு பயணிப்பது அத்தனை அட்டகாசமான அனுபவமாகயிருந்தது ! வசனங்களில் ஆங்காங்கே தென்பட்ட புராதனத்தை மட்டும் மாற்றியெழுதியபடியே தடதடத்ததால், க்ளைமேக்ஸைத் தொட்டு நின்றேன் – இரண்டே மணி நேரங்களில் ! And இம்முறையுமே கடைசி 2 பக்கங்களில் கதாசிரியர் நம்மை மெலிதான உணர்வுகளால் கட்டிப் போடும் பாணி தொடர்கிறது ! அந்த இறுதிப் பக்கங்கள் இரண்டையுமே மொத்தமாய் மாற்றி எழுதிவிட்டு, கதையை மீண்டுமொரு முறை படித்த போது இந்த டீமின் படைப்பாளிகளைப் பார்த்தொரு நமஸ்காரம் பண்ணிடத் தோன்றியது ! அதிர்ந்து பேசத் தெரியா ஒரு ஹீரோ ; அதிரடிகளை அடையாளமாய்க் கொண்டிரா ஒரு கதை பாணி ; இதன் மத்தியிலும் கொஞ்சம் வரலாறு ; கொஞ்சம் திகில் ; கொஞ்சம் ஆக்ஷன் ; கொஞ்சம் ட்விஸ்ட் ; கொஞ்சம் மெல்லிய உணர்வுகளென்று கலவையாய்த் தூவி, சுவையாய் ஒரு படைப்பை நேர்கோட்டில் உருவாக்குவதென்பது சாமான்யக் காரியமல்லவே !! Of course – நம்மிடையே உள்ள அதிரடிப் பிரியர்களுக்கு இந்த சிகப்புச் சட்டைக்காரர் கடைப்பிடிக்கும் மென்மையான பாணி மீது அத்தனை பிடித்தமிராது போகலாம் தான் ! "இந்த முழியாங்கண்ணன் பண்ற பில்டப் ரவுசுக்கு ஒரு வரைமுறையே இல்லாது போச்சுப்பா ! இன்னும் விச்சு & கிச்சுவுக்குத் தான் பதிவு போடாம இருக்கான் !!" என்று மனதுக்குள் உரக்கவே நினைத்தும் கொள்ளலாம் தான்! ஆனால் trust me guys – ஆர்ப்பரிக்கும் அருவிகள் ஒரு பிரம்மாண்டமெனில், விசையோடு ஓடும் தெளிந்த நீரோடையுமே ரசனைக்குரியதே ! மொத்தமுமே 8 ஆல்பங்கள் தான் ட்ரெண்ட் தொடரினில் ! நாமிப்போது தொடவிருப்பது ஆல்பம் # 4 ! So எஞ்சியிருப்பன அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு தாக்குப்பிடித்திடும் எனும் போது – இருக்கும் வரை சிலாகித்துக் கொள்வோமே ? இதோ ட்ரெண்டின் அட்டைப்பட முதல் பார்வை ! 
வழக்கம் போலவே ஒரிஜினல் டிசைன் தான் – கொஞ்சமாய் நமது நகாசு வேலைகளுடன்! And இதோ – உட்பக்கங்களின் preview-ம் ! 
இன்றைக்கு 79 வயதைத் தொட்டு நிற்கும் பிரேசிலிய ஓவியரான லூயி எடுவர்டோ டி ஒலிவியரா (Leo) தான் இந்தத் தொடருக்கு சித்திர ஜாலங்கள் செய்திடும் ஆற்றலாளர் !! மெக்கானிக்கல் எஞ்சினியரான மனுஷன் காமிக்ஸ் கரையிரமாய் ஒதுங்கியது நமது அதிர்ஷ்டம் எனலாம் ! இவரைப் பற்றி இன்னொரு சேதியுமே : GANDHI - The Pilgrim of Peace என்றதொரு நம் தேசப்பிதா பற்றியான பிரெஞ்சு கிராபிக் நாவலுக்கும் சித்திரங்கள் போட்டுள்ளார் !! 
ஓவியர் செய்யும் அதகளம் ஒருபக்கமெனில், கலரிங் ஆர்டிஸ்டின் பங்களிப்பும் இங்கே கொஞ்சமும் சளைத்ததல்ல ! இதோ - அதற்கான பணியாற்றிய பெண்மணி இவர் தான் (Marie Paul Alluard) :
ஒரு நிசப்த மழையிரவில் இந்த ஆல்பத்தைப் படித்துப் பாருங்களேன் – செம ரம்யமாய் தென்படக்கூடும் ! Thus ends the பில்டப் பரமசிவம் அவதார் yet again for ட்ரெண்ட் ! 

அக்டொபரில் தொடர்வது பில்டப்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதொரு அசகாயரின் ஆல்பமே (TEX - புதைந்து போன புதையல்) என்பதால் அவரை preview செய்திடும் படலத்தை அடுத்த ஞாயிறுக்கென வைத்துக் கொண்டு, இப்போதைக்கு  வேறொரு திக்கில் வண்டியைத் திருப்பிட நினைத்தேன் ! அது தான் இந்தாண்டின் புத்தக விழா கேரவன் சார்ந்த சிலபல சேதிப் பகிர்வுகள் ! Nothing earth shattering, but still....!

எப்போதுமே ஆண்டின் துவக்கம் சென்னைப் புத்தக விழாவோடு டாப் கியர் போட்டாலுமே, தொடர்ந்திடும் பிப்ரவரி & மார்ச் மாதங்கள் புத்தக விழாக்களுக்கு உகந்த பொழுதுகளாய் எங்குமே அமைவதில்லை ! அப்பாலிக்கா ஏப்ரல் & மே மாதங்கள் கோடையின் உக்கிரத்தின் முன்பாக அத்தனை பேரும் தெறித்தடித்து ஓடி ஜகா வாங்கிடும் பொழுதுகளாகிப் போகின்றன ! ஜுன் மாதம் பள்ளி அட்மிஷன்களின் பொழுதெனும் போது, யார் பைக்குள் கை விட்டாலுமே கணிசமாய் காற்றை மட்டுமே துளாவிட முடிவது வாடிக்கை ! So ஒரு மாதிரியாய் ஜுலையில் துவங்கிடும் புத்தக விழாக்களின் சுற்றானது, நெய்வேலியில் துவங்கி, கோவையில் சூடு பிடித்து; ஈரோட்டில் சாகஸம் செய்து ; மதுரையில் சுப மங்களம் போடுவது வாடிக்கை! இம்முறை நடுவே தஞ்சாவூர் விழாவிலும் நமக்கு இடம் கிடைக்க, தொடர்ச்சியாய் 5 ஊர்கள் ; தொடர்ச்சியாய் சுமார் 75 நாட்கள் on the road என்றாகியிருந்தது ! 

சமீப ஆண்டுகளில் தமிழகமெங்கும் புதியதொரு trend நடைமுறையிலுள்ளது உங்கள் கவனத்திலிருந்து தப்பியிராது தான் ! சகல Tier 2 நகர்களிலும் இப்போதெல்லாம் ரெகுலராய் நடந்து வரும் புத்தக விழாக்கள் ஒரு வெகு சமீப நிகழ்வே ! வாசிப்பைப் பரவலாக்கிட ; மலையைத் தேடி முகமது செல்லா பட்சத்தில் முகமதைத் தேடி மலையே பயணமாகும் ஒரு முயற்சியிது ! பெரம்பலூர்; ராம்நாட்; காரைக்குடி; அரியலூர்; மேட்டுப்பாளையம்; புஞ்சைபுளியம்பட்டி; ஆரணி; ஹோசூர் ; கும்பகோணம் etc என்று ஆண்டின் புத்தகவிழாப் பட்டியல் இப்போதெல்லாம் எனது நீட்டி முழக்கும் பதிவுகளை விடவும் நீளமானதே ! On the flip side இவற்றின் தாக்கங்கள் பெருநகர விழாக்களின் விற்பனைகளில் ஓரளவு பிரதிபலிப்பதையுமே சமீபமாய்ப் பார்த்திட முடிகிறது ! எது எப்படியோ – விற்பனை; வருவாய் – என்ற நம்பர்களைத் தாண்டி, புதுப்புது ஊர்களிலுள்ள வாசகர்களை எட்டிப் பிடிக்க இயலும் வாய்ப்பானது, வரவு-செலவு கணக்குகளுக்கு அப்பாற்பட்டதே ! என்ன ஒரே சிக்கல், இந்த bookfair cycle கிட்டத்தட்ட தொடர்ச்சியாய் ; ஒன்றன்பின் ஒன்றாய் அமைந்து விடும் போது நம் பணியாட்களுக்கு ஓய்வானது குதிரைக்கொம்பாகிப் போகிறது ! So ஒரு கட்டத்தில் ஒரு சில விழாக்களிலிருந்து ஜகா வாங்கிட வேண்டிப் போகிறது ! Anyways – இதோ இந்த ஆண்டின் 5 ஊர் கேரவன் பயணத்தின் சிலபல highlights :

😄 கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலுமே இன்னமும் நமது ஸ்டீல்க்ளாவுக்கு மவுசு தொடர்கிறது! (கவிஞரல்ல நான் குறிப்பிடும் ஸ்டீல்க்ளா) இந்த மேம்பட்ட மறுபதிப்புகள் துவங்கிய 2015...2016-ன் craze இன்றைக்கு இல்லை என்றாலும் – இன்னமுமே – மாயாவியை நம்பினோர் கைவிடப்படேல் ! என்றே தொடர்ந்து வருகிறது ! ஆனால் ஒரே நெருடல் என்னவெனில்  – மாயாவி ஆர்வலர்கள் மற்ற எந்த இதழ்களையும் சுட்டு விரலால் கூடத் தொட்டுப் பார்க்கவும் தயாரில்லை ! கண்டேன் மாயாவி மாமாவை !!" என்றபடிக்கு அவற்றுள் ஓரிரு பிக்குகளை வாங்கிய கையோடு நடையைக் கட்டிவிடுவது சகஜ நிகழ்வு ! So காமிக்ஸ் சார்ந்த nostalgia தான் இங்கே கோலோச்சுகிறதே தவிர – காமிக்ஸ் நேசமல்ல !

😄 மும்மூர்த்திகளின் பாக்கி இருவரும் சரி, நமது குற்றச் சக்கரவர்த்தி ஸ்பைடரும் சரி – ஊர்ஊராய் போய் சாட்-பூட்-த்ரீ ஆடிவிட்டு பத்திரமாக ஊர் திரும்பியுள்ளனர் ! CID லாரன்ஸ் & டேவிட் ; ஜானி நீரோ என்ற பெயர்களை வாசிக்கும் சிலபல வதனங்களில் பிரகாசம் spark அடிப்பதோடு சரி ! கல்லாப்பெட்டி வரை அந்த மையல் தொடர்ந்திடுவதில்லை !

😄 சந்தேகமின்றி இந்தாண்டின் இந்த 5 புத்தக விழாக்களிலுமே flavor of the season டெக்ஸின் “டைனமைட் ஸ்பெஷல்” தான்! என் ஞாபகம் சரியெனில் போன அக்டோபரில் வெளியான இதழிது ! கடைசிப் பத்துப்-பதினைந்து இதழ்களே இப்போது கையிருப்பு என்ற நிலையைத் தொட்டுள்ளது ! அட்டைப்படத்தில் பச்சைபடர்ந்த டிசைன் ; அந்த 500+ பக்கக் கதையின் சினிமாத்தனம் என விமர்சனங்களைச் சந்தித்த போதிலும் – ‘தல‘ தாண்டவத்தைத் தடைபோட வழியில்லை ! So சமீப சமயங்களின் biggest success story "டைனமைட் ஸ்பெஷல்" தான் என்பேன்!

😄 அதே போல “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” இந்தாண்டின் ஈரோட்டிலும் சரி, தொடர்ந்த தஞ்சாவூர் & மதுரையிலும் சரி – runaway hit ! கதையின் வலு பற்றி ஆங்காங்கே நீங்கள் செய்துள்ள சிலாகிப்புகள் ; அலசல்களே இந்த வெற்றிக்கு உறுதுணை என்பது நிச்சயம் ! புத்தக விழாக்களில் மட்டுமன்றி சிலபல ஊர்களிலும் “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” இதழை மட்டுமே மறுக்கா ஆர்டர் செய்துள்ளனர் ஏஜெண்ட்கள் ! The power of positivity !!

😄 “இரத்தப் படலம்” வண்ணத் தொகுப்பு கிடைக்குமா ?" என்ற கேள்வியோடு கடந்த 75 நாட்களது வெவ்வேறு புத்தக விழாக்களிலும், குறைந்தது ஒரு 50 வாசகர்களாவது நடைபோட்டிருப்பார்கள் ! ஓராண்டுக்கும் அதிகமாய் முன்பதிவு செய்திட அவகாசம் இருந்த போதிலும் தவற விட்ட வாசகர்கள் தற்போது தர்மசங்கடமான இந்தக் கேள்வியோடு நம்மை அணுகிடும் போது – கையை விரிப்பதைத் தாண்டி வேறு மார்க்கமில்லை ! ‘மறுக்கா ஒரு முன்பதிவு – மறுக்கா ஒரு edition’ என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமிலா சமாச்சாரம் என்பதால் “இப்போதைக்கு வாய்ப்பில்லீங்க!” என்று தான் சொல்லிட வேண்டியுள்ளது ! Truly sad...!

😄 எப்போதும் போலவே லக்கி லூக் சகல தரப்பினரின் ஜிகிடி தோஸ்தாக தொடர்ந்திடுகிறார்! அதிலும் லக்கி க்ளாசிக்ஸ்; லக்கி ஆண்டுமலர் ஹார்ட்கவர் இதழ்கள் கண்ணில்படும் நொடியிலேயே புது வாசகர்களைக் கவர்ந்து விடுகின்றன!

😄 TEX அபிமாணிகள் தேடுவது பருமனான; வண்ணமயமான ஆல்பங்களையே ! சர்வமும் நானே; டைனமைட் ஸ்பெஷல்; சைத்தான் சாம்ராஜ்யம் etc...etc... முதல் பார்வைகளிலேயே மக்களை ஈர்த்து விடுகின்றன ! அதே போல Color Tex தொகுப்பான “புனிதப் பள்ளத்தாக்கு” கூட best seller தான்!

😄 பௌன்சர்; கமான்சே & ஜெரெமயா ”மறக்கப்பட்ட மாந்தர்கள்” பட்டியலில் தொடர்வது தான் வருத்தமே ! Extremely cold reception !!

😄 ஈரோடு, தஞ்சை & மதுரையில் MAXI லயனின் 2 இதழ்களுமே massive ஹிட்ஸ் ! அந்தப் பெரிய சைஸா ? அல்லது டெக்ஸ் & லக்கியை வண்ணத்தில் பார்த்த வாஞ்சையா ? - தெரியாது ; ஆனால் இரு மெகா மறுபதிப்புகளுமே best sellers!

😄 சிக் பில் & கோவின் “கொலைகாரக் காதலி” இம்முறை விரும்பி வாங்கப்பட்ட இதழ்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது ! பொதுவாகவே ஹார்ட்கவர் இதழ்களுக்கொரு fancy இருப்பது புத்தக விழாக்களில் தெரிகிறது!

😄 இந்தாண்டின் surprise package மதுரை விழா தான் ! பொதுவாய் இதுவரையிலான மதுரைப் புத்தக விழாக்களில் ‘எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போறார்‘ என்று பீற்றும் விதமாய் மட்டுமே இருந்திடும் நமது விற்பனைகள் ! நிறைய நாட்களில் நாம் காலிபிளவர் பஜ்ஜிக் கடைக்காரர்களை பொறாமையோடு லுக் விட்டிருக்கிறோம் தான் !! ஆனால் இம்முறை எல்லா நாட்களுமே மழைக்கு மத்தியிலும் செம decent ஆன விற்பனை ! Thanks மதுரை!

😄 இந்தாண்டின் கோவை விழாவிலுமே போன வருடத்தை விட better performance தான் ! ஆனால் “ஆண்டுக்கொருவாட்டி இந்த விழாவில் மாத்திரமே காமிக்ஸ் வாங்குவோம்!” என்று சொன்ன குடும்பங்கள் கணிசம்! இதர மாதங்களில் கோவையிலுள்ள நமது பல முகவர்களுள் யாரையேனும் நாடினால் சூப்பராகயிருக்கும் தான் ! ஹ்ம்ம்ம்...!!

😄 தஞ்சாவூருமே முதல் முயற்சிக்கு not bad என்ற அனுபவமே நமக்கு ! அந்தப் பகுதிகளில் நமக்கு முகவர் பலம் அத்தனை வலுவாய் கிடையாதெனும் போது – இத்தகைய வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொண்டால் தானுண்டு!

😄 என்ன தான் கிராபிக் நாவல்கள்; யுத்தகால அனுபவங்கள்; அமெரிக்க அரசியல் சாஸனத் திருத்தங்கள்; கடற்கொள்ளையர் கதைகள் என்று நாம் பயணித்தாலும் – ‘ஆங்... காமிக்ஸா?‘ என்ற எகத்தாளத்தோடு நகர்ந்திடும் ஜனத்துக்கு இன்னமுமே பஞ்சம் நஹி! ‘7 முதல் 77 வரை – அனைவருக்குமான காமிக்ஸ்‘ என்பது நனவாக இன்னும் நிறைய தூரம் போகனும் நாம் ! இயன்றமட்டிலும் உங்களது FB பதிவுகளில், காமிக்ஸ் சார்ந்த எண்ணங்களையும் சுற்றில் விட முயற்சியுங்களேன் guys?

Before I sign off - சன்னமாய் சில updates

1.வரலாறு முக்கியம் அமைச்சரே !! அடிக்கடி நம் பேச்சுவழக்கில் இடம்பிடித்திடும் வாக்கியமிது !! அதை நடைமுறைக்கும் ஒத்துப் போகிடச் செய்தல் சாத்தியமாகிடுமா folks ? ஏன் கேட்கிறேன் என்றால் - வண்ணத்தில் ஒன்று ; black & white -ல் இன்னொன்று என வரலாற்றை அட்டகாசமான கற்பனையுடன் கலந்து பிரமாதமான கிராபிக் நாவல்களாக்கிடும் முயற்சிகள் சமீபத்தில் கண்ணில் பட்டன ! அவற்றுள் ஒன்று வன்மேற்கைச் சார்ந்தது ! இவை நமக்கு சுகப்படும் என்பீர்களா folks ? 

2.இன்னொரு 2 பாக கௌபாய் அதிரடி சாகசமும் கண்ணில் பட்டூ !! எங்கேனும் அதற்கொரு சீட் போட்டு வைக்கலாமா ? இல்லாங்காட்டி காதுலாம் தக்காளிச் சட்னி கசியுதா - தோட்டாச் சத்தத்தில் ?  

3.2020 அட்டவணையை கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு முன்பே முடித்து விட்டதாய் நினைத்துக் கொண்டே திரிந்து வந்தேன் ! 'But இன்னும் கொஞ்சம் எமோஷன்ஸ் இருந்தாக்கா தேவலையோ ?' என்ற கேள்வி நாளாசரியாய் உள்ளுக்குள் குடையும் நேரமாய்ப் பார்த்து - புதுசு புதுசாய் சில அதகளங்களைப் படைப்பாளிகளும் கண்ணில் காட்டி வைக்க - கோட்டை அழிச்சுப்புட்டு முதல்லேர்ந்து மறுக்கா புரோட்டா சாப்பிட உத்தேசித்துள்ளேன் !! புரட்டாசி என்பதால் சைவக்குருமா வாளியை இக்கட park பண்ணுங்கப்பா !! 

ரைட்டு...“புதைந்து போன புதையலின்” எடிட்டிங்கினுள் புகுந்திட நான் நடையைக் கட்டுகிறேன்! Have a Super Sunday all! Bye for now ! See you around !!

Saturday, September 14, 2019

பில்டப்கள் ஓய்வதில்லை !

நண்பர்களே,

வணக்கம். “ஒழுங்கா சாப்ட்ரு...… இல்லாங்காட்டி பூச்சாண்டி மாமாகிட்டே புடிச்சிக் குடுத்திடுவேன் !” என்று மழலைகளை மிரட்டிச் சோறூட்டுவது வீட்டுக்கு வீடு வாடிக்கை தானே ? தலையில் ஒரு போர்வையைச் சாத்திக் கொண்டு ஜன்னல் வழியே “பூபூபூபூ” என்று வீட்டிலுள்ள ஆண்கள் பூச்சாண்டி வேஷம் போட முனைவதுமே அந்த விளையாட்டின் ஒரு அங்கம் தானே  ? அதே மழலை கொஞ்சம் வளர்ந்த பிற்பாடு “பூபூபூபூ” எனும் பூச்சாண்டி மாமாவைப் பார்த்துப் பயப்படாமல் ‘கெக்கே பிக்கே‘ என்று சிரிக்கத் தொடங்குவதும் வாடிக்கை தானே ? (போர்வை மூடாத அசல் முகரையையே நாள் முழுக்கப் பார்த்தாச்சு… இதென்ன ஜுஜுப்பி? என்ற சிரிப்பாக இருக்குமோ??) அதே பாணி தான் நமது கி.நா. சமாச்சாரத்திலும் என்பேன் ! "கிராபிக் நாவல் வருது… பதுங்கிக்கோங்க !!" என்று பயம் காட்டாத குறையாய் ஆரம்ப நாட்களில் வலம் வந்தன சிலபல அழுகாச்சி கிராபிக் நாவல்கள் ! வந்த வேகத்துக்கே உங்களில் பலரும் தெறித்து ஓடிட – கொஞ்ச காலத்துக்கு அடக்கி வாசிக்க நேரிட்டது ! அப்பாலிக்கா கொஞ்சமாய் better ஆன கதைத் தேர்வுகளோடு கி.நா.க்கள் களமிறங்கிட “ஆ… இது தேவலாமே?! என்ற ரீதியில் நீங்களும் ஏற்றுக் கொள்ள துவங்க “கி.நா.” பூச்சாண்டி போயே போச்சு ! இன்றைக்கு நம் மத்தியில் ஆவலாய் எதிர்பார்க்கப்படும் ஜானர்களுள் “கி.நா.”க்களும் ஒன்றெனும் போது வாசிப்புகளின் விசாலத்துக்கு பெரியதொரு thumbs up தந்த உணர்வு மேலோங்குகிறது !

“சரி… இந்த பில்டப்பெல்லாம் எதுக்குடா அம்பி ?” என்ற கேள்வியா உங்களிடம் ? காத்திருக்கும் அக்டோபரில் ஒரு செம மாறுபட்ட கி.நா. காத்திருப்பதே காரணம் ! “வஞ்சம் மறப்பதில்லை”….! இந்தாண்டின் அட்டவணையை தயார் செய்த போதே இந்த இதழுக்கு ஒரு early slot தந்திட ரொம்பவே ஆசையிருந்தது எனக்கு ! ஆனால் ஜனவரியில் பராகுடாவும், தோர்கலின் “சிகரங்களின் சாம்ராட்”டும் டாப் கியரைப் போட்டுத் தாக்கியிருக்க – பராகுடாவின் பாகம் 2-ஐ சீக்கிரமே களமிறக்கும் கட்டாயம் எழுந்து விட்டது ! ‘இந்தா…. அந்தா‘ என்று ஒரு மாதிரியாய் அக்டோபரே ‘வ.ம.‘ இதழுக்கான ஜாகை என்றாகிப் போனது ! அதன் preview பற்றிய பார்வைக்குள் குதிப்பதற்கு முன்பாய் ரொம்ப காலத்துக்கு முன்னே இங்கே நடந்ததொரு அலசலுக்குப் புதுசாயொரு perspective தந்திட முயற்சிப்போமா ?

கிராபிக் நாவல் என்றால் என்ன ? வழக்கமான காமிக்ஸ்க்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ? என்ற கேள்வி தான் இந்த வார ஞாயிறை ஓட்ட நமக்கு உதவிட உள்ள தலைப்பானது ! (சந்திரமுகியில் வடிவேலு : "பேய் இருக்கா இல்லியாப்பா ? நம்பலாமா ? கூடாதா ?" என்று கேட்கும் அதே மாடுலேஷனில் இதையும் கேட்டுப் பாருங்களேன் !!

எப்போதும் போலவே நேராய் திருவாளர் கூகுளை தேடிப் போய், விக்கிப்பீடியாவைப் புரட்டிப் பார்த்தேன் ! அங்கே வாசிக்க முடிந்தது பின்வருமாறு : 

“காமிக்ஸ் ஆக்கங்கள் கொண்டதொரு புத்தகத்துக்கே கிராபிக் நாவல் என்று பெயர் ! “நாவல்” என்ற வார்த்தை நீண்ட, நெடிய கற்பனைப் புனைவுகளைக் குறிப்பிடப் பயன்படும் வார்த்தை என்ற போதிலும் – “கிராபிக் நாவல்” என்பது கற்பனைகள் ; நிஜங்கள் ; சுயசரிதை போன்ற படைப்புகளின் காமிக்ஸ் வடிவங்களை உணர்த்திடுகிறது! ஒரு காமிக்ஸ் இதழ் என்பது பொதுவாய் வாராந்திர / மாதாந்திர வெளியீடுகளைச் சுட்டிக்காட்டிடும். கிராபிக் நாவல்கள் அவற்றிலிருந்து வித்தியாசப்பட்டு நிற்பவை.”

"கி.நா" என்ற இந்தப் புதிரான வார்த்தையை உருவாக்கிய புண்ணியம் ஒரு காமிக்ஸ் ஆர்வலரான ரிச்சர்ட் கைலைச் சாருமாம் ! 1964-ல் ஒரு காமிக்ஸ் ஆய்வுக் கட்டுரையில் மனுஷன் இந்த வார்த்தையை பிரயோகித்துள்ளார் ! அப்புறம் செம popular படைப்பாளியான வில் ஐஸ்னர் 1978-ல் “கடவுளோடு ஒரு கான்ட்ராக்ட்” (பெயரைச் சுட்ருவோமா ?) என்ற பெயரிலொரு சீரியஸ் ரகப் படைப்பை உருவாக்கிய வேளையில் அதனையும் பத்தோடு பதினொன்றாய் “காமிக்ஸ்” என்றே விளிக்காது – “கிராபிக் நாவல்” என்று விளம்பரப்படுத்தியுள்ளனர் ! 1982-ல் அமெரிக்காவின் மார்வெல் காமிக்ஸ் “கிராபிக் நாவல் வரிசை” என்றொரு துவக்கத்தைத் தந்திட ‘கி.நா.‘ வண்டி ஓடத் துவங்கியிருக்கிறது ! ஒரு காலகட்டத்தில் விற்பனைகளுக்கு உதவிட இந்த “கி.நா.” விவரிப்பைப் பதிப்பகங்களும்; புத்தக விற்பனையாளர்களும் கையில் எடுத்துள்ளனர் ! “அட… இது அந்த காமிக்ஸ் பொம்மை புக்கு தானே ? என்று பல்லைக் காட்டக் கூடிய வாசகர்களையும் கவர்ந்திழுக்க கெத்தாக “கிராபிக் நாவல்கள்” என்று அடைமொழி தந்திடும் பழக்கம் ஆரம்பம் கண்டிருக்கிறது ! விக்கிப்பீடியாவில் மூழ்கிப் பார்த்தால் கிறுகிறுக்கச் செய்யும் stats ; தகவல்கள் என்று எக்கச்சக்கமாய் இறைந்து கிடக்கின்றன ! இதில் கூத்து என்னவென்றால் “கிராபிக் நாவல்” என்ற வார்த்தையின் பொருள் தேசத்துக்கு தேசம் ; மார்கெட்டுக்கு மார்கெட் மாறுபடுகிறது !! ஒரு கட்டத்தில் தங்களது மாமூலான 32 பக்க format-க்கு பெரிதான சகல காமிக்ஸ் படைப்புகளையும் “கிராபிக் நாவல்கள்” என்று முத்திரை குத்தவும் செய்துள்ளார்கள் ! அப்படிப் பார்த்தால் இங்கிலீஷில் அமெரிக்காவில் வெளியாகும் 48 பக்க ஸ்மர்ஃப் இதழ்கள் கூட கி.நா.க்கள் தான் !!! ‘சிவனே‘ என்று நாமுமே அந்த ஃபார்முலாவைக் கையிலெடுத்து – இந்த நீலப் பொடியர்களை கார்ட்டூன் சந்தாக்குள் நுழைத்திடாது – கிராபிக் நாவல் சந்தாக்களுள் புகுத்தியிருக்கணுமோ? “டாக்டர் ஸ்மர்ஃப்” என்று பெயர் வைக்காமல் - “ஒரு ஊதாப் படலம்” இல்லாங்காட்டி “நீல உலகில் நீங்கா ரணம்” என்கிற மாதிரி டெரரான தலைப்புகளோடு உலக விட்டிருந்தால் இவை ஹிட்டடித்திருக்குமோ ? ச்சை... தெரியாமல் போச்சே!!

அதே போல – எங்கோ வாசித்ததில் – ஹார்ட்கவரில் வெளிவரும் காமிக்ஸ் இதழ்களுக்கு “கிராபிக் நாவல்கள்” என்று பெயர் என்பது மாதிரியொரு வர்ணனையும் இருந்தது! ஹிஹிஹி… என்று சிரித்துக் கொண்டேன் ; because அந்த இலக்கணத்தை நமக்குப் பொருத்திப் பார்க்கும் பட்சத்தில் ‘லக்கி லூக் ஆண்டு மலர்‘ கூட செம கிராபிக் நாவலாக qualify ஆகிடும் !! So அடுத்தவாட்டி டால்டன்களை ராப்பரில் போட்டு “வன்மேற்கின் அசுரர்கள்” என்ற பெயரைத் தந்திடணுமோ ?

ஐரோப்பாவில் பதிப்பகங்கள் இந்த வார்த்தை விளையாட்டுக்களை அத்தனை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும் ! நாம் முன்பெல்லாம் ”முழு நீளச் சித்திரக்கதை” என்று போடுவதைப் போலவே sober ஆன விவரிப்புகள் தான் பயன்பாட்டில் உள்ளன ! பிரெஞ்சில் Bandes dessinees (வரையப்பட்ட பக்கங்கள் என்ற மாதிரியே பொருள்) ; டச் மொழியில் stripverhaal (தொடர் கட்டங்களில் சொல்லப்படும் கதை) ; ஸ்காண்டிநேவியாவில் tegaeserie (படக்கதைத் தொடர்கள்) என்ற ரீதியிலேயே சொல்கிறார்கள் ! அழுத்தமான கதைக்களங்களை "கிராபிக் நாவல்கள்" என்பதும், இன்ன பிறவற்றை  “காமிக்ஸ்” என்றும் விவரிப்பது லாஜிக்காகத் தென்படுகிறது தானே ?

நம்மைப் பொறுத்தவரை மூக்கை நேராய்த் தொட்டால் “காமிக்ஸ்”; உசிலம்பட்டி வரை பயணம் செய்து தொட முனைந்தால் “கிராபிக் நாவல்” என்று துவக்கத்தில் சொல்லி வந்தோம் ! அதற்கு வலு சேர்ப்பது போல “தேவ இரகசியம் தேடலுக்கல்ல” ; “கனவுகளின் கதையிது” போன்ற சில non-linear கதைகளும் வெளிவந்தன தான் ! ஆனால் இன்றைக்கோ பராகுடாவின் “அலைகடலின் அசுரர்களை”யும்; தோர்கலின் சிகரங்களின் சாம்ராட்டையுமே “கி.நா.” – என்று சொல்ல சாத்தியமாகிறது ! காலத்தின் ஓட்டத்தோடு ; ரசனைகளின் மாற்றங்களோடு சிலபல இலக்கணங்களுமே மாறிடுமோ ? முற்றிலும் வித்தியாசமான கதைக்களங்கள் ; சற்றே adult natured களங்கள் ; தறிகெட்டுப் பாயும் கற்பனைகள் என இவை சகலமுமே இப்போது நம் பார்வைகளில் கி.நா.க்களின் அடையாளங்கள் தானே ? அதே போல மணிரத்னம் படத்து இருளில் வெளிவரும் “நிஜங்களின் நிசப்தம்”; “என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்” ; “இருளின் ராஜ்யத்தில்” போன்ற படைப்புகளுமே கி.நா.க்கள் தானே?
அந்தப் பார்வைக்கோணத்தின் பலனே “வஞ்சம் மறப்பதில்லை” இதழை கிராபிக் நாவலாக வகைப்படுத்திடும் முயற்சியே! In a nutshell – செம நேர்கோட்டுக் கதைகள் தான் “வஞ்சம் மறப்பதில்லை” ஆல்பத்தில் இடம்பிடித்திருப்பவை ! ஆனால் அதைச் சொல்லியுள்ள விதத்தில் ; அழுத்தத்தில் ; வீரியத்தில் ; பாணியில், செம வித்தியாசமிருக்கும் ! ஜேம்ஸ் பாண்ட் சமீப புதுப்பாணியில் violence சீன்கள் மிரட்டலாய் இருந்தன என்றால் - இதிலோ முற்றிலும் வேறொரு லெவல் ! அதே போல ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் நம்மவர்கள் எதைத் தேடி பல்பு வாங்கினார்களோ – அவையெல்லாம் இங்கே in abundance !! 😉 அதே போல நடப்புக்கும் ; ப்ளாஷ்பேக் நிகழ்வுகளுக்குமிடையே கதையை நகற்றிச் செல்வது ரொம்பவே கவனமான வாசிப்பைக் கோரிடவுள்ளதொரு சமாச்சாரம் ! மேற்படி காரணங்களின் பொருட்டே இந்த இதழை கிராபிக் நாவல் சந்தாவினுள் நுழைத்துள்ளோம் ! And இதில் மிகப் பெரிய ஆச்சர்யம் என்னவெனில் இது ஒரு காலத்தில் இங்கிலாந்தில் உருவான சாகஸம் என்பதே ! பொதுவாய் ரொம்பவே sober ஆன ; ஜனரஞ்சகமான கதைக்களமாய் அறியப்படும் பிரிட்டனில் இப்படியொரு படைப்பை எதிர்பார்ப்பது a surprise of sorts தான் ! அப்புறம் அந்தச் சித்திரங்கள் !!! பாருங்களேன்!
வழக்கமாய் கறுப்பில் கோட்டு ஓவியங்களாய்ப் பக்கங்களை வரைந்த பிற்பாடு டிஜிட்டலில் வர்ணச் சேர்க்கைகள் செய்வதே வாடிக்கை! ஆனால் இங்கேயோ ஒவ்வொரு பக்கத்தையுமே ஒரு பெயிண்டிங் போல முழுவண்ணத்திலேயே உருவாக்கியுள்ளனர்! இந்த பாணிக்கு நாம் புதியவர்களல்ல தான்; “தேவ இரகசியம் தேடலுக்கல்ல” இதை நமக்கு highlight செய்துள்ளது! இதுவும் அதே பாணி; அதே தரம்!!
சித்திரங்கள் மட்டுமன்றி இந்த ஆல்பத்துக்கான ஸ்க்ரிப்டுமே செம தெறி ! வழக்கமாய் பிரஞ்சிலிருந்து; இத்தாலிய பாஷையிலிருந்து என மொழிமாற்றம் கண்ட ஆங்கில ஸ்க்ரிப்டைக் கையில் ஏந்திக் கொண்டு மொழிபெயர்ப்பு மல்யுத்தம் அரங்கேறுவதுண்டு ! ஆனால் இது இங்கிலாந்தில் உருவானதே எனும் போது ஆங்கிலத்தில், படைப்பாளிகளின் நேரடி ஸ்க்ரிப்ட் சாத்தியமானது! படிக்கும் போதே செம ஸ்டைலிஷாகத் தென்பட்டதை எழுத ஆரம்பித்த போது தான் கதாசிரியரின் ஆற்றல் முழுமையாய்ப் புரிந்தது ! சில ஆல்பங்களில் பணியாற்றும் போது வார்த்தைகளுக்குத் தடுமாறுவதுண்டு தான்; இங்கே அந்த சிரமமெலாம் எழவேயில்லை! கதாசிரியரின் ஸ்கிரிப்ட் என் கையைப் பிடித்து இழுத்துப் போனது போலவே உணர முடிந்ததால் எழுதுவதில் மொக்கை தோன்றவில்லை! ஆனால் சமீபத்தில் பணியாற்றிய சவாலான பணிகளுள் இதுவும் ஒன்றாய் அமைந்திருந்தது !

So இது தான் அக்டோபர் கிராபிக் நாவலின் பில்டப் படலம் ! பொதுவாய்க் கட்டும் கட்டிடங்கள் எல்லாமே துபாயின் புர்ஜ் கலீபா ரேஞ்சுக்கு நெடிதுயர்ந்து நிற்குமென்பதே எனது கற்பனையாக இருந்திடும் ! அதில் ஏதேனும் டுபுக்காகிப் போய் மௌலிவாக்கத்தின் சரிந்த அபார்ட்மெண்டாகவும் அமைவதுண்டு தான் ! அது போன்ற வேளைகளில், தந்த பில்டப்பெல்லாம் முகரை முழுக்க அழுகிய முட்டையாய் வடிந்து ஓடுவது போல் feel ஆவது வாடிக்கையே ! சமீபமாய்க் கூட ஜான் கார்ட்லாண்ட் ;  “நீரில்லை… நிலமில்லை” இதழ்களுக்கு பில்டப் தந்த பிற்பாடு ஹி…ஹி…ஹி… என்று பல்லைக் காட்ட நேர்ந்தது நினைவுள்ளது ! ஆனால் நாம் பார்க்காத முட்டுச் சந்துகளா ? நாம் வாங்காத சாத்துக்களா ? இதுக்கெல்லாம் பயந்தால் வண்டி ஓட்டத்தான் முடியுமா ? So 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ' ஒரு முழுநீள பில்படப்போடு இந்த கிராபிக் நாவல் சீக்கிரமே உங்களைச் சந்திக்கவுள்ளது ! ‘ஹிட்‘ ஆகி கபாலத்தைக் காப்பாற்றிட கடவுள் ஆசீர்வதிப்பாராக !

இந்த வாரம் பின்னனூட்டங்களில் பதிலளிக்க உங்களுக்கான (நேரமிருக்கக்கூடியோருக்கு) எனது கேள்விகள் இதோ folks :

1. உங்கள் பார்வையில் கி.நா. எது? காமிக்ஸ் எது? இரண்டையும் வேறுபடுத்திடும் கோடு எது? ஒற்றை வரியில் ப்ளீஸ்!

2. இதுவரையிலான நமது வரிசையில் டாப் கிராபிக் நாவல் என்று ஏதாச்சும் ஒன்றைத் தேர்வு செய்வதாயின் – what would be your choice?

3. ‘மாற்றம்… முன்னேற்றம் ! என்று பல்ப் வாங்கிடும் ஆட்டமெல்லாம் நமக்கு கிடையாது ! மாறாக – இந்த மாற்றம் கொண்ட களங்கள் பக்கமான பயணம் ஓ.கே. தான் என்பீர்களா ? அல்லது சாதா ஆணிகளாகவே பிடுங்குவதே (comics) ஆரோக்கியத்துக்கு நல்லதென்பீர்களா ?

4. சிறுகச் சிறுக adult content அதிகமாகிப் போவது இந்தப் பரீட்சார்த்தக் களங்களின் கிளைக்கதையாகிடுகிறது! எத்தனை முயற்சித்தாலும் அதனைத் தவிர்ப்பது முழுமையாய் சாத்தியம் காண்பதில்லை! இது குறித்த நெருடல்கள் அவ்வப்போது எனக்குண்டு தான் ; ஆனால் மருத்துவத்தில் effect முக்கியமா ? side effects முக்கியமா ? என்ற கேள்வியை அணுகுவது போலவே இதைப் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்கிறேன் ! இது பற்றிய உங்களது பார்வைகள் ப்ளீஸ் – Again very crisply ப்ளீஸ் ?

இந்தாண்டின் (இதுவரையிலான) சூப்பர்ஹிட்டான “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” கூட adult content சகிதமிருந்ததால் தான் 3.5 ஆண்டுத் தயக்கத்துக்குப் பிற்பாடு நம் கரைகளில் ஒதுங்க நேரிட்டது! இன்றைய ‘தில்‘ முன்னமே கொஞ்சமாச்சும் இருந்திருந்தால் இந்த ஆல்பம் 2016-ல் வெளியாகியிருக்க வேண்டும் !

அப்புறம் 2020-ன் அட்டவணையின் கடைசிப் பெட்டிகளை tick செய்யும் முனைப்பில் வாசிப்புகளும், உருட்டல்களும் உச்சஸ்தாயில் உள்ளன guys ! And அதன் பலனாய் “பி.பி.வி.” பாணியிலொரு செம சுவாரஸ்ய one-shot கண்ணில் பட்டுள்ளது ! Very very early days yet ; கதையினை வரவழைத்து, நமது மொழிபெயர்ப்பாளரைப் படித்துப் பார்க்கச் செய்து, பரிசீலிக்க வேண்டும் தான் ! ஆனால் எனது gut feel மட்டும் சரியாக இருக்கும் பட்சத்தில் இன்னொரு ரகளையான அனுபவம் நமக்கு வெயிட்டிங் என்று மட்டும் இப்போதைக்குச் சொல்வேன் !

 Bye all! See you around! Have a rocking weekend !

Monday, September 09, 2019

ஒரு ரிப்பீட் ராக்கூத்து !

நண்பர்களே,

வணக்கம். சில நேரங்களில் மாங்கு மாங்கென்று எதையாச்சும் ரோசனை பண்ணி  எழுதித் தள்ளி விட்டு - ''இன்னிக்கு பின்னூட்டம் அள்ளப்  போகுதுடோய்  ; ஓவர் நைட்டிலே ஒபாமா தான் !!" என்ற எதிர்பார்ப்பில் விட்டத்தைப் பார்த்துக் கிடந்தால், ஞாயிறு ராவுக்கு பின்னூட்ட எண்ணிக்கை "57" என  நொண்டியடித்துக் கொண்டு நிற்கும் !! ஆனால் சில வேலைகளிலோ கேஷுவலாய் ; மண்டையில் உதிக்கும் முதல் சமாச்சாரத்தை டைப்பி விட்டு மதியமாய் கொட்டாவி விட்டபடிக்கே இங்கே எட்டிப் பார்த்தால் ரணகள வேகத்தில் பின்னூட்டங்கள் பதிவாகிக் கிடக்கும் - நேற்றைய பொழுதைப் போல ! 

நிஜத்தைச் சொல்வதானால் சனிக்கிழமை பதிவின் பொருட்டு சின்னதாயொரு கூத்து அரங்கேறியிருந்தது ! டைப்படிக்கச் சோம்பேறித்தனப்படுவதால், சமீபப் பொழுதுகளில் பேப்பரும், பேனாவுமாய், சனி பகலில் அமர்ந்து பதிவுக்கான மேட்டரை எழுதித் தந்து, அதனை நமக்கு DTP ஜாப்ஒர்க் செய்திடுபவரிடமோ ; அல்லது நமது DTP பெண்களிடமோ ஒப்படைத்து டைப்படித்து வாங்கி வருவேன் ! அதே routine இந்த சனியன்றும் தொடர்ந்தது & சனி மாலை வேலை முடித்துக் கிளம்பும் முன்பாகவே நமது பெண்கள் முடித்து எனக்கு மெயில் பண்ணியும் விட்டார்கள் !! சரி, இரவு கட்டையைக் கிடத்தும் முன்பாய் சாவகாசமாய் போஸ்ட் செய்து விடலாமென மெயிலை வாசிக்கத் தொடங்கும் போது, லைட்டாக ஒரு சந்தேகம் துளிர் விடத்துவங்கியது ! இதே மேட்டரை - சமீபமாய் எழுதினோமோ ? என்பது போலொரு பீதி குடியேற - அவசரம் அவசரமாய் இந்தாண்டின் பதிவுகள் முழுசையும் இழுத்துப் போட்டு வாசிக்க ஆரம்பித்தேன் !! 'ஆத்தாடியோவ் - வண்டி வண்டியாய் எத்தனை மொக்கை போட்டிருக்கிறேன் !' என்பதை உணர்ந்த போது எனக்கே மலைப்பாயிருந்தது !! ஒரு மாதிரியாய் மே மாதத்தின் பதிவுக்குள் புகுந்த போது 'பக்கோ' என்று ஆகிப் போனது - simply becos எனது பயம் மெய்யாகியிருந்தது !! They came ...They saw ...They left என்ற பதிவினில் அட்சர சுத்தமாய் அதே சங்கதிகளை எழுதியிருப்பதை படித்திட முடிந்தது !! (https://lion-muthucomics.blogspot.com/2019/05/they-camethey-sawthey-left.html

எங்கள் ஊர்ப்பக்கம் ஓயாது பேசிக்  கொண்டிருப்பவனைக் கிண்டலாய் - "ஓலைப்பாயில் நாய் மூச்சா போவது போல சள சளத்துக்   கொண்டேயிருக்கிறான்" என்பார்கள் !  ஒற்றை ஆளாய் நான் இங்கே விடிய விடிய வருஷக்கணக்காய்ப் பெனாத்திக் கிடப்பதில் உள்ள flipside -களுள் இதுவும் ஒன்று ! எதை ஏற்கனவே பகிர்ந்து விட்டேன் ? - எதில் வாயைத் திறந்திருக்கவில்லை ? என்பது பல நேரங்களில் தோராயமாகவே நினைவிருக்கும் !! பேப்பரையும், பேனாவையும் எடுத்துக் கொண்டு இந்த சனியன்று எழுதத் துவங்கும்  வேளையில், அரைத்த மாவையே மறுக்கா அரைக்கும் உணர்வு துளியும் எழாது போக - கடமைவீரன் கந்தசாமியாக செயலாற்றி விட்டிருந்தேன் ! எந்தச் சாமி புண்ணியமோ - அவசரமாய் அதை அன்றைக்கு post செய்து, செம குண்டு பல்புகளை சல்லிசாய் உங்களிடம் வாங்கிடும்  கண்றாவியிலிருந்து தப்பித்தேன் ! 

ராவில் இந்த ரிப்பீட் லூசுத்தனத்தை தோண்டியெடுத்திருந்த போதே நள்ளிரவைத் தாண்டியிருந்தது ! இதுக்கு மேல் புதுசாய் என்னத்தை எழுதுவதென்று தெரியாது திரு திருவென முழிக்க - தூக்கமோ சுழற்றியடித்தது ! 'சரி...இப்போ படுத்துத் தூங்கலாம் ; காலையிலே எதுவும் தோணாங்காட்டி, இருக்கவே இருக்கு வாடகை சைக்கிள் ; இருக்கவே இருக்கு  பிராங்பர்ட் !" என்றபடிக்கே அலாரத்தை செட் பண்ணிவிட்டுத் தூங்கிப் போனேன் ! காலையில் ஆறு மணிக்கு மலங்க மலங்க கண் முழித்த போது - மண்டையின் உட்புறமும், வெளிப்புறத்தைப் போலவே துடைத்து வைத்தாற்போல சூன்யமாய்த் தென்பட்டது !  'சிவனே' என்று ஒரு கார்பீல்டு கார்டூனைப் போட்டு விட்டு ஏதாச்சும் சால்ஜாப்பு சொல்லிப் பார்க்கலாமா ? என்று கூட நினைக்கத் தோன்றியது ! அப்போது தான் நான் ரொம்ப காலமாய் சொல்ல நினைத்து; ஆனால் சொல்லாதே போன அந்த BBB ஸ்பெஷல் சமாச்சாரம் நினைவுக்கு வந்தது ! சரி, இன்னொரு "57 பின்னூட்ட ஞாயிறு" confirm என்றபடிக்கே மாங்கு மாங்கென்று டைப்படித்து, பதிவைப் போட்டு விட்டு, ஒரு தபா ஸ்பெல்லிங்குகளைச் சரி பார்த்து விட்டு  பல்லைத் தேய்க்கக் கிளம்புவதற்குள்ளேயே பின்னூட்ட எண்ணிக்கை 30-ஐத் தொட்டிருக்க - 'பார்டா !!' என்று புருவங்கள் சன்னமாய் உசந்தன ! மதியத்துக்குள் 150  ; மாலைக்குள் 200 ; அப்பாலிக்கா இன்று நண்பர்களின்  போங்கு ஆட்ட உபயத்தில்  300-ஐத் தாண்டி பின்னூட்ட எண்ணிக்கை நிற்பதைப் பார்க்கும் போது 'ஒண்ணுமே புரியலே.உலகத்திலே....!!' என்று சந்திரபாபு (??) பாட்டுத் தான் மண்டைக்குள் ஓடியது !! So வெகு காலமாய் தலைக்குள் தேமே என நின்றதொரு சமாச்சாரம் உங்களையும், என்னையும் நேற்றைக்குக் காப்பாற்றி விட்டது - பிராங்பர்ட் தக்காளிச் சட்னியிலிருந்து !!  And இதோ - ஒரு உபபதிவுக்குமே மேட்டராகிப் போயுள்ளது !! வாழ்க BBB !!! 

Bye folks !! Carry on with the September reviews please !! 

Sunday, September 08, 2019

ஒரு கோ.மா.கனவு !

நண்பர்களே,

வணக்கம். செம்டம்பர் இதழ்கள் : டிக் அடிச்சாச்சு! நீங்களுமே சூட்டோடு சூடாய்ப் படித்தாச்சு ! ஆனால் நாட்காட்டியைப் பார்த்தால் இன்னுமும் இரட்டை இலக்கத் தேதியைத் தொடவே அவகாசம் உள்ளது என்று சொல்கிறது! But அக்டோபரின் இதழ்கள் பற்றிய preview-க்களுக்கு இது ரெம்பவே early ! வழக்கமாய் எழுத சமாச்சாரம் சிக்காங்காட்டி நேராக ரிவர்ஸ் கியர் போட்டு ஒரு வாடகைச் சைக்கிளை எடுத்தபடிக்கு "நான் ப்ராங்க்பர்ட் போனேனா...தன்னானே...." என்று ஆரம்பித்து விடுவது தான் வாடிக்கை ! ஆனாக்கா "பிராங்பர்ட்" என்ற வார்த்தையை உச்சரித்தால் என் காதிலேயே தக்காளிச் சட்னி கசிவதால், அந்தத் திக்கில் வண்டியை விடவும் இஷ்டமில்லை ! So thinking...!

செப்டம்பரின் success story என்று பார்த்தால் ஒரு எதிர்பாரா ஆசாமி கைதூக்கி நிற்பதைக்  கடந்த 10 நாட்களாய் பார்த்து வருவதால் அவரது பின்னணியினை inspiration ஆக எடுத்துக் கொண்டே இந்த வாரத்துப் பதிவு வண்டியை துவக்க  நினைக்கிறேன்!

ட்ரெண்ட் !! 'தல' டெக்ஸையும் ; 'ஒல்லித்  தல' லுக்கியையும் கார்ட்டூன் இரட்டையர் ஸ்கூபி & ரூபியையும் பச்சைக் குதிரை தாண்டி எதிர்பாரா முதல் ஆசாமியாய் எகிறி நிற்கும் இந்தச் சிகப்புச் சட்டைக்காரரை கொஞ்சம் வாஞ்சையோடும், கொஞ்சம் புதிரோடும்  பார்த்திடுகிறேன்! பொதுவாகவே கௌபாய்கள் எல்லாருமே முரட்டு அதிரடிக்காரர்கள் என்பது template ! தோட்டாக்கள் பறப்பதும் ; முஷ்டிகள் சீறுவதும்,  டெக்ஸ் / டைகர் / ட்யுராங்கோ என அத்தனை வெற்றி கண்ட வன்மேற்கர்களின் அடையாளங்களுமே ! ஆனால் அதிலிருந்து விலகி நிற்கும் இந்த கனடாவின் காவல் வீரர் - பெரிய அடிதடிகளுக்கோ; ஆக்ஷன் sequence-களுக்கோ அவசியமே நஹி ; தெளிவான கதையும், அழகான சித்திரங்களும் இருந்தாலே போதுமென்பதை நிலைநாட்டியிருக்கிறார்! அதன் மூலமாய் தொடரும் அட்டவணைகளில் தனக்கான slot பற்றிய சந்தேகங்களை அறவே நீக்கி விட்டுமுள்ளார் ! So "சாலையெல்லாம் ஜுவாலைகளே" - இந்தத் தொடருக்கான சாலைகளை நம்மளவிற்காவது smoothen பணியுள்ளது! (என்ன ஒரே வருத்தம் - மொத்தமே  8 ஆல்பங்கள் தான் ட்ரெண்ட் தொடரில் ! இன்னமும் நாம் போட்டிரா கதைகள் நான்கே இந்தாண்டின் இறுதியில் எஞ்சி நிற்கும் எனும் போது, மிஞ்சிப் போனால் இரண்டோ / மூன்றோ ஆண்டுகளே இவரது பரிச்சயம் இருந்திட முடியும் !!)

இந்தத் தருணத்தில்  இன்னொரு சற்றே சாத்வீகமான கௌபாய்த் தொடரான கமான்சேவை எண்ணிடாமலும் இருக்க இயலவில்லை ! அங்குமே பெரும் ஆக்ஷனுக்கோ ; மாமூலான கௌபாய் சாகச template களுக்கோ முக்கியத்துவம் தந்திட கதாசிரியர் முனைந்திடுவதில்லை ! யதார்த்தமாய் ; மிகைகளின்றி சீராய் ஓடிடும் கதைகளை அங்கு பார்த்துள்ளோம் ! And அங்குமே சித்திரங்கள்  ஜாம்பவான் ஓவியரான ஹெர்மனின் கைவண்ணம் !! ஆனால் - டிரெண்ட் நம்மை கவர்ந்துள்ளதில் பாதி கூட கமான்சே கவர்ந்திடவில்லையே எனும் போது மோவாயில் கைவைத்து யோசிக்கவே தோன்றுகிறது !! இரு தொடர்களுக்கும் மத்தியினில் உள்ள வேற்றுமைகளை நீங்கள் எதை பார்த்திடுகிறீர்கள் ? என்று அறிந்திட ஆவல் folks !! ட்ரெண்ட் vs கமான்சே - ஒற்றை வரியில் வேறுபடுத்திட முடியுமெனில் முயற்சித்துப் பார்க்கலாமே ப்ளீஸ் ?  

Anyways ட்ரெண்ட் புராணமல்ல இந்தப் பதிவின் நோக்கம் ; மாறாக ஆண்டின் மூன்றாவது quarter ஒரு surprise வெற்றியாளரோடு மெருகு கண்டு நிற்கும் வேளைதனில் - அவரை சிலாகித்து முடித்த கையோடு - இத்தகைய star power இலா நாயகர்களின் பக்கமாய் பார்வைகளை ஓடச் செய்யும் ஒரு freewheeling சிந்தனைக்கே இந்த ஞாயிறு !! இன்னும் சொல்லப் போனால் - நானே ஆசைப்பட்டாலும் நிறைவேற்றிட இயலாக் கனவாய் என்னுள் நின்றிடும் ஒரு project சார்ந்த உரத்த சிந்தனை என்று வைத்துக் கொள்ளுங்களேன் ? 

ரொம்ப வருடங்களாகவே எனக்கொரு கோக்கு-மாக்கான ஆசையுண்டு ! அதாவது ஏதேதோ காரணங்களின் பொருட்டு நாம்  waiting list -க்கு அனுப்பிவைத்திருக்கும் நிறைய நாயக / நாயகியரை தூசி தட்டி, மெருகூட்டி அவர்களைக் கொண்டொரு பிரத்யேக ஸ்பெஷல் இதழ் வெளியிட்டிட வேண்டும் என்பதே அந்த கோ.மா. ஆசை !! உதாரணத்துக்கு ஜாகஜ வீரர் ரோஸர் ; டிடெக்டிவ் ஜெரோம் ; Lady S போன்றோரை எடுத்துக் கொள்வோமே ?! நமது தர எதிர்பார்ப்புகளும், அளவீடுகளும் இத்தனை strict சுடலைமுத்துக்களாய் இல்லாதிருப்பின், இவர்களெல்லாம் நிச்சயமாய் இன்னமும் நம் மத்தியில் உலவி வருவார்கள் தானே ?! Granted - ரோஜர் தொடரில் உப்மாக்கள் நிறையவே கிடக்கின்றன தான் ; அதே சமயம் "மர்மக் கத்தி " ; "தவளை மனிதனின் முத்திரை" ; "கறுப்புக் கதிரவன்" போன்ற செம offbeat சாகசங்களும் இருந்துள்ளன தானே ? So அத்தகைய சுவாரஸ்யக் கதையினைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்தால் சுகப்படாது போகுமா - என்ன ?

எனது "கோ.மா.கனவு" இதழுக்கொரு பெயரும் உண்டு என்னிடம் ! "The BBB ஸ்பெஷல் !!" என்பதே அது !!! அதாவது வகுப்பின் முன்பெஞ்சில் எப்போதுமே 'படிப்ஸ்' பார்ட்டிகள் இடம் பிடிப்பது சகஜம் தானே ? So  லார்கோ ; தோர்கல் ; டெக்ஸ் ; லக்கி போன்ற 'பளிச்' மாணாக்கர்கள் அந்த முன்வரிசைகளை ஆக்ரமித்துக் குந்தியிருப்பது  நடைமுறை என்றால் - ஓரம்கட்டப்பட்டிருக்கும் 'not so பளிச்' மாணவர்களின் ஜாகையாக அந்தப் பின்பென்ச்கள் தானே இருந்திட முடியும் ? ஆக - BBB Special = Back Bench Boys  ஸ்பெஷல் !! அதாவது - 'ஓரம்கட்டப்பட்ட நாயகர்களின் ஸ்பெஷல்' என்று சொல்லலாம் !!

நிஜமாகிட வாய்ப்பில்லா இந்த ஸ்பெஷலினை நான் துவக்கிடத்  திட்டமிட்டிருப்பது - ஒரு வில்லிய வான்ஸ் சித்திரங்களுடனான சா.வீ.ரோஜரின் கதையிலிருந்து தான் !! டிடெக்டிவ் பாணிக் கதைகள் ; நார்மலான ஆக்ஷன் கதைகளெனத் தேர்வு செய்தால் அங்கே புராதனத்தின் சுவடுகளை மறைக்க இயலாது போகும் என்பதால் - offbeat கதைகளாய் ; ஒருவித திகில் ஜாடைகளோடு பயணிக்கும் த்ரில்லராய்த் தேடிட வேண்டும் என்பது இலட்சியம் !! இதன் பொருட்டு, நிறையவே கதைத் தேடல் ; உருட்டல் என்று மெனெக்கெட வேண்டியிருக்கலாம் ; but கடல்படுகையில் புதையல் தேட நினைத்தால் அதற்கென முதுகை வளைத்தே தீர வேண்டும் தானே ?

So ஜாகஜ வீரர் முதல் பந்தைச் சந்திக்கிறாரெனில், மறுமுனையில் அவரது பார்ட்னராக நான் களமிறக்க எண்ணியிருப்பது  எஞ்சியிருக்கும் ஒற்றை புது சாகசத்தினுடனான முதலைப்படையினரை !! ப்ருனோ பிரேசில் ! 'திகில்' comics வெற்றியோடு மிளிர்ந்த நாட்களில் இவரும் அதற்குப் பெருமளவில் உதவி செய்திட்ட நாயகரே !! இன்றைக்கு இத்தனை காலம் கடந்த பிற்பாடு, இவரது கதைகளை மறுக்கா வாசிக்க முனையும் போது - நிறையவே ஜெர்க் அடிக்கத் தான் செய்கிறதென்றாலும் - சர்வதேச அரங்கில் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் கொடிகட்டிப் பறந்து வந்த '70-களில் உருவாக்கப்பட்ட இந்த "ஜேம்ஸ் பாண்ட் ஜெராக்ஸ்" - wouldn't do too badly for an one-shot என்றே சொல்வேன் !! Moreover - இங்கேயும் திரு வான்சின் கைவண்ணம் உண்டெனும் போது - இரு சமகால பிரான்க்கோ-பெல்ஜிய ஆல்பங்கள், ஒரே ஜாம்பவானின் தூரிகையினில் என்ற திருப்தி கிட்டிடாதோ ? 

கதை # 3 என நான் தேர்வு செய்வதுமே ஒரு பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்பாகவே இருந்திடும் - இம்முறை டிடெக்டிவ் ஜெரோம் ரூபத்தில் ! 'ஒரே ஆல்பம் தான் வாய்ப்பு ; அதுவே அவரது தலைவிதியை நம் மத்தியில் நிர்ணயிக்கும் தீர்ப்பு' என்ற அந்த not so fair உபசரிப்பே இந்தக் கோழிமுட்டைக் கண் நாயகருக்கு நாம் வழங்கியுள்ளோம் ! 'தற்செயலாய் ஒரு தற்கொலை' டாம்-டூம் ஆக்ஷன் இல்லாததொரு டிடெக்டிவ் சாகசம் தான் ; but தேசத்தில் எல்லாத் துப்பறிவாளர்களும் துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு, 'உய்..உய்' எனக் கூச்சலிடும் சைரன் கார்களில் குறுக்கும் நெடுக்குமாய்ப் பயணிப்பதில்லையே - நிஜத்தினில் ? So 'தேமே' என சைக்கிளைத் தள்ளிக் கொண்டு பாரிஸை வலம் வந்தபடிக்கே மர்மங்களை முடிச்சவிழ்க்க முனையும் இந்த சிம்பிள் டிடெக்டிவினை இன்னொருவாட்டி பரிசீலிக்க விழையும் எனது BBB ஸ்பெஷல் ! அதுவும் இதுவொரு 26 ஆல்பம் கொண்ட not so ancient தொடர் எனும் போது, நவீன பாணியில் கலரிங்கும் இருந்திடும் ! So கண்களைக் கூசச் செய்யும் பஞ்சு மிட்டாய் வர்ணங்களை அள்ளித் தெளித்த effect இங்கே இராது ! ஆக ஆக்ஷன் ஜானருக்கு ரோஜர் ; சர்வதேச spy த்ரில்லர் பாணிக்கு ப்ருனோ பிரேசில் ; டிடெக்டிவ் பாணிக்கென ஜெரோம் என்றிருக்கும் !

எனது தேர்வு # 4 - கார்ட்டூன் கரைகளில் பக்கமாய் இருந்திடும் ! இங்கே நாம் ஓரம்கட்டியுள்ள நாயகர்கள் / தொடர்கள் ஏராளமுண்டு ! Smurfs ; பென்னி ; லியனார்டோ ; மந்திரியார் ; ரின்டின் கேன் - என்று அடுக்கிக் கொண்டே போகலாம் ! ஆனால் அவர்களையெல்லாம் மறுக்கா தூசி தட்டுவதற்குப் பதிலாய் நான் நாட நினைப்பது திருவாளர் "ஸ்தீல்பாடி ஷெர்லாக்" அவர்களையே ! இதுவரைக்கும் குட்டிக் குட்டி சாகசங்களில் (!!) மனுஷனின் கூத்துக்களைப் பார்த்துள்ளோம் ! But இவரது தொடரில் இன்னமும் சில முழுநீள ஆல்பங்கள் காத்துள்ளன ! So ஒரு 46 பக்க நீள ஆல்பத்தில் இந்த குடாக்கு ஷெர்லாக் & டுபுக்கு வாட்சன் ஜோடியை ரசிக்க எண்ணிடும் எனது ஸ்பெஷலானது ! கார்ட்டூன் பாணியையும் டிக் அடித்தது போலாச்சு ; ஒரு offbeat நாயகரை உட்புகுத்திய திருப்தியும் கிட்டியாச்சு என்பேன் !

My கதை # 5 would be : LADY S ! 'பின்பென்ச் பசங்க' என்ற அடையாளத்தோடு வந்திடும் ஒரு இதழில் பொம்மனாட்டிக்கு என்ன ஜோலியோ ? என்ற லாஜிக் கேள்விகளை நீங்களும் சரி, நானும் சரி, அம்மணியின் விஷயத்தில் மட்டும் வசதியாய் ஓரம்கட்டிடுகிறோமாம் !! So அந்தச் சலுகையைக் கையில் எடுத்துக் கொண்ட கையோடு கதாசிரியர் வான் ஹாமின் இந்தப் படைப்பின் நடுவாக்கைத் தொட்டிடும் ஒரு ஆக்ஷன் ஆல்பத்தோடு களமிறங்கத் தயாராவேன் ! இங்கே தொடரின் ஒரிஜினல் கதைவரிசைக்கெல்லாம் பெருசாய் முக்கியத்துவம் தந்திடாது - CINEBOOK -ல் அத்தனை லேடி S ஆல்பங்களையும் வாங்கி, பர பரவெனப் படித்துவிட்டு அவற்றுள் best எதுவோ, அதையே தேர்வு செய்திட முனைந்திடுவேன் ! எப்படியும் - எந்த ஆல்பத்தைத் தேர்வு செய்தாலும் நிக்கரோடு கூரைகளில் பாப்பா நடுராத்திரியில் பயணிப்பது நிச்சயம் எனும் போது நம்மிலுள்ள 'கலாரசிகர்களுக்கும்' ஏமாற்றங்களிராது !! வான் ஹாமின் இதர அமர படைப்புகளை (XIII ; தோர்கல் ; எமனின் திசை மேற்கு etc ) மனத்திரையில் ஓடவிட்டுக் கொண்டே லேடி S தொடரினையும் அவற்றோடு ஒப்பிடாது - கதையைக் கதைக்காக மட்டுமே ரசிக்க முனையும் இந்த ஸ்பெஷல் இதழினில் !

அரை டஜனாவது கதையோடு இந்த ஸ்பெஷலை நிறைவு செய்திட நான் தேர்வு செய்வது கமான்சே கதையினையே !! 'கௌபாய் சுவையின்றி ஒரு ஸ்பெஷல்' என்பது இப்போதெல்லாம் நினைத்துப் பார்க்கவே இயலா சமாச்சாரம் எனும் போது - நம்மிடையே the neglected cowboy series என எஞ்சி நிற்கும் இந்த கேரட் மண்டைக் கௌபாயை களமிறக்கிடுவதில் தயக்கமே இராது என்னுள் ! Again - கதைத் தொடரின் வரிசைக்கு நோ முக்கியத்துவம் ; எஞ்சியுள்ளவற்றுள் எது பெஸ்டோ அதை பச்சக் என தூக்கியாந்திட வேண்டியது தான் ! And maybe..just maybe இந்த ஒற்றை சாகசத்தை மட்டும் கலரில் அல்லாது - black & white-ல் முயற்சித்திடுவேன்- கண்களைக் கூசச் செய்யும் அந்த வர்ணக்கலவையினைத் தவிர்த்திடும் பொருட்டு !!

ஆக அரை டஜன் கதைகளோடு அம்சமாய் அமைந்திடும் இந்த இதழினில் வில்லியம் வான்ஸ் ; கிரெக் ; வான் ஹாம் ; ஹெர்மன் போன்ற பிரான்க்கோ-பெல்ஜிய அசுரர்களின் கைவண்ணங்கள்  நெடுக விரவிக் கிடக்கும் ! And இவர்களையெல்லாம் ஒரே இதழில் ஒட்டுமொத்தமாய் சாம்பாராக்கிட படைப்பாளிகள் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் - அதற்குமொரு உபாயம் இருக்கும் என்னிடம் ! ஆறு இதழ்களையும் , ஆறு individual இதழ்களாய் ; தனித்தனி அட்டைப்படங்களோடே வெளியிட்டு விட்டு, மொத்தமாய் அவற்றை உட்புகுத்திட ஒரு அழகான slipcase ரெடி செய்து தந்திடுவேன் ! So 6 கதைகளையும் அந்த box set-ல் போட்டு அசத்திட திட்டங்கள் ரெடி !! Phew !!! கனவுகளுக்கும் எத்தனை நுணுக்கம் அவசியமாகிறது இன்றைக்கெல்லாம் ?

Back to reality - வெளியிட ரிஸ்க் இலா கதைகள் ஒரு வண்டி காத்துள்ள போது, இந்தப் பின்பென்ச் காதல் எல்லாம் வேலைக்கு ஆகாது என்பதை மண்டை சுட்டிக்காட்டுவதால் எனது இந்தக் கோக்கு மாக்குக் கனவானது கனவாக மாத்திரமே தொடர்கிறது என்னுள் ! And அவ்விதமே தொடரவும் செய்திடும் ! என்றேனும் ஒரு பொழுது போகா நாளில் இதனை உங்களோடு பகிர்ந்திட நினைத்திருந்தேன் ; and அந்த நாள் இன்றாகிப் போனது என்று வைத்துக் கொள்ளுங்களேன் !

Before I sign off - இதோ காத்திருக்கும் அடுத்த மாதத்தின் மறுபதிப்பின் அட்டைப்பட முதல்பார்வை :
இப்போதெல்லாம் ஒரிஜினல் அட்டைப்படங்களையே உபயோகிக்கும் பாங்கு கிட்டத்தட்ட 95% நடைமுறையிலிருப்பதைக் கவனித்திருப்பீர்களென்று நினைக்கிறேன் ! இந்தாண்டின் இதுவ்ரைக்கிலும் " சாத்தானின் சீடர்கள்" & "பாலைவனத்தில் ஒரு கப்பல்" ஆகிய 2 ஆல்பங்களுக்கு மாத்திரமே நமது ஓவியர் மாலையப்பனின் பெயிண்டிங்கை பயன்படுத்தியுள்ளோம் ! அவருக்கும் வயதின் தாக்கம் அதிகமிருப்பதால் முன்போல் சிரத்தை தந்திட இயன்றிடுவதில்லை ! So நல்ல நாளைக்கே மாடஸ்டிக்கு டிசைன் போடுவதினில் சிரமம் காண்பதுண்டு என்ற நிலையில் - இந்த வேளையில் மேற்கொண்டும் விஷப்பரீட்சை செய்திட தோன்றவில்லை ! அதனால் இந்த மறுபதிப்பு சாகசத்துக்கு ஒரு ஒரிஜினல் டிராயிங்கையே அட்டையாக்கிட முனைந்துள்ளோம் ! அச்சிலும் ரொம்பவே decent ஆக வந்துள்ளதாக எனக்குத் தோன்றியது ! Your thoughts folks ? நமது முதல் நாயகியின் இந்த classic மறுப்பதிப்பை உங்களில் எத்தனை பேர் படித்துள்ளீர்களோ - தெரியாது ; ஆனால் ஒரு அட்டகாச ஆக்ஷன் த்ரில்லர் காத்துள்ளது என்பதை மட்டும் முதல்வாட்டி படிக்கவுள்ள நண்பர்களுக்குச் சொல்லிடுவேன் ! One of the best tales from the series guys !!

நாளை நிறைவுறும் மதுரைப் புத்தக விழாவோடு இந்த சீசன் புத்தக விழா caravan வீடு திரும்புகிறது ! இந்த சீசனது ஆச்சர்ய சந்தோஷமெனில் அவை கோவை & மதுரை புத்தக விழாக்கள் என்பேன் !! இரண்டிலுமே அசகாய விற்பனை நம்பரெல்லாம் நஹி என்றாலும் - நாம் மாமூலாய்ச் சந்தித்து வந்துள்ள இலக்கங்களை இந்த 2 நகரங்களில் மட்டுமே தாண்டிட இயன்றுள்ளது ! இன்றும், நாளையும் மதுரையில் அதே trend தொடர்ந்திட்டால் சூப்பர் !! Fingers crossed !!

Bye folks...have a wonderful sunday ! See you around !!

Sunday, September 01, 2019

வாசிப்புக்கொரு வரிசை 😃

நண்பர்களே,

வணக்கம். திரும்பின திக்கெல்லாம் வாழைமரங்கள் கட்டிய மஹால்களின் முன்னே முரட்டு ப்ளெக்ஸ் பேனர்களில் பெண்ணும், மாப்பிள்ளையும் ஸ்டைலாய் போஸ் கொடுத்து நிற்க,  மாமன்மார்களும், சித்தப்பு-பெரியப்புமார்களும் டெரராய் இளித்து நிற்க, கல்யாண சீஸன் well & truly on என்பது தெரிகிறது ! நம்மையும் மதித்து, பத்திரிக்கைகளைத் தந்து போவது நடக்க – மொய் கவரும் கையுமாய்ப் போய் பந்தியில் சாம்பாரையும், சில்லி புரோட்டாவையும் பதம் பார்க்கும் முஸ்தீபுகள் ஆரம்பம்! உங்களுக்குமே இந்த ஞாயிறும், காத்திருக்கும் சதுர்த்தித் திருநாளும் பிஸியான விடுமுறை நாட்களாயிருக்குமென்பதால் மாமூலான ஞாயிறின் பதிவை crisp ஆக்கிடுவோமே ? தவிர ஒன்றுக்கு – நாலாய் செம breezy reads இம்மாதம் உங்கள் கைகளில் சுடச்சுடக் குடியிருப்பதால் அவற்றோடு இந்த வாரயிறுதியை நகற்றும் பொறுப்பும் உங்களதல்லவா ?

செப்டம்பரின் preview படலம் மூன்று இதழ்களோடு நின்றிருக்க – பிரிவ்யூ # 4 வெளியாகும் முன்னமே அந்த இதழே உங்களை எட்டிப் பிடித்து விட்டது ! So 'உலக பில்டப்களில் முதன் முறையாக' – preview க்குப் பதிலாய் postview என்று வைத்துக் கொள்வோமே ?! இம்மாதத்துக் கூட்டணியில் இடம் பிடித்திருக்கும் நால்வரில் – மூன்று டீம்களுக்குத் தொடரும் அட்டவணைகளில் இடம் பற்றிய கேள்வியே எழாது என்பதால் அவர்களெல்லாமே Super Safe Zone-ல் உள்ளவர்கள் ! ஆனால் மீசையில்லாத விஷாலைப் போலத் தோற்றம் தரும் செஞ்சட்டைக் காவலர் ட்ரெண்ட் - இரண்டு ஆல்பங்களோடு மாத்திரமே இதுவரைக்கும் நம்மிடையே பரிச்சயம் கண்டிருப்பவர் என்ற முறையில் அந்த Super Safe சொகுசுகளுக்கு ஆட்டோமேட்டிக்காகத் தகுதி பெற்றிடும் நிலையைத் தொட்டிருக்கவில்லை ! So இம்மாதம் ‘தல‘ TEX எவ்விதம் ரவுசு செய்கிறாரென்பதைக் கவனித்திடுவதை விடவும் ; ப்ளூகோட் பட்டாளத்துப் புண்ணியவான்களின் performance எப்படியென்று பரிசீலிப்பதை விடவும் ; லக்கியின் புது one-shot அவதாரை நீங்கள் எவ்விதம் அணுகுகிறீர்களென்பதை அலசுவதை விடவும் – ட்டிரண்டின் பாணிக்கு நீங்கள் தந்திடவுள்ள வரவேற்பு மீதே எனது கவனம் லயித்து நிற்கும் ! பெர்சனலாய் எனக்கு ரொம்பவே பிடித்தமான (சமீப) நாயகர்களுள் இவருக்கும் ஒரு இடமுண்டு ! ஆனால் எனக்குப் பிடித்தவர்கள், உங்களுக்கும் பிடித்தமானவர்களாய் இருந்தால் தானே ரயிலில் பெர்த் கிடைக்கும் ?! So தொடரும் ஆண்டின் ட்ரெண்டுக்கான slot அல்லது slots பற்றிய இறுதி முடிவெடுக்க இம்மாதத்து “சாலையெலாம் ஜுவாலைகளே” ஈட்டிடவுள்ள வரவேற்போ ; சாத்துக்களோ நிறையவே உதவிடும். இயன்றால் இம்மாதத்து வாசிப்புகளை இந்தக் கனடா காவலரிலிருந்து ஆரம்பித்துப் பாருங்களேன் folks ? 

கதையைப் பொறுத்த வரையிலும் செம ட்விஸ்ட்களோ ; செம அதிரடிகளோ இருந்திடப் போவதில்லை ! மாறாக யதார்த்தம் + மெல்லிய மனித உணர்வுகளுக்கு இங்கே முக்கியத்துவமிருக்கும் ! And maybe குடும்பத்தை விட்டுப் பிரிந்து, தொலைவில் பணியாற்றுவோருக்கு இந்தக் கதையின் பின்னணியில் இழையோடும் உணர்வுகளோடு அடையாளம் காண முடிந்திடலாம் ! லேசாய் நம்மூர் சினிமாக்களின் கதையைப் போல தோற்றம் தரும் இந்த ஆல்பத்தை தமிழாக்கம் செய்வது செம breezy அனுபவமாயிருந்தது போலவே – வாசிப்பதும் சுலபமாக அமையின், ட்ரெண்ட் நம்மிடையே டெண்ட் கொட்டாய் போட்டுத் தங்கத் தயாராகி விட்டார் என்று எடுத்துக் கொள்ளலாம் ! அடுத்த மாதமுமே இவரது சாகஸம் தொடரவுள்ளதால் all the more eager to know your ratings !! கனடாலேர்ந்து டெம்போலாம் வச்சுக் கூட்டி வந்திருக்கோமுங்க... சித்தே பார்த்து மார்க் போடுங்கோ – ப்ளீஸ் ?

இம்மாதத்தின் surprise package ஆக இருக்கப் போவது நமது காமெடி சூப்பர் ஸ்டார் லக்கி லூக் தான் என்பதில் எனக்குச் சந்தேகம் கிடையாது ! பொதுவாய் ஒரு நாயகருக்கானதொரு template நம் மனதில் பதிந்து விட்டால் அதனை அத்தனை சீக்கிரமாய் அகற்றிக் கொள்ள விரும்புவோரல்ல நாம் ! இதற்கு விதிவிலக்கென்று நான் சொல்லக் கூடியது நமது கூர்மண்டையைர் ஸ்பைடரை மட்டுமே ! ஆரவாரமான வில்லனாய் அறிமுகமாகி நம் மனதைக் கொள்ளை கொண்ட மனுஷன், அப்படியே U-turn அடித்து நீதிக்காவலனாய் மாறிப் போனதை நாம் வாஞ்சையோடு ஏற்றுக் கொண்டது ஒரு அதிசய நிகழ்வு என்பேன் ! அவர் நீங்கலாய் மற்ற கதாநாயக / நாயகியர் யாருமே அறிமுகமான பாணியிலிருந்து பெரிதாய் விலகியது போல் எனக்கு நினைவில்லை ! (Anybody at all folks ??) But இம்மாதத்து லக்கி லூக் ஒரு total makeover சகிதம் நம் முன்னே வலம் வருகிறார் ! சித்திர பாணிகள் ; கதை சொல்லும் பாங்கு ; நாயகருக்கென வழங்கப்படும் ட்ரீட்மெண்ட் – என்று சகலமுமே “லக்கி லூக்கை சுட்டது யார்?” ஆல்பத்தினில் வேறுபட்டு நிற்பதைக் கண்டிருப்பீர்கள் ! ஒரு ரீல் நாயகன், ரியல் நாயகனாகிடும் பட்சத்தில் நிகழக்கூடிய சம்பவங்களைச் சுவையாய்ச் சொல்ல முனைந்து; அதனில் முழுவெற்றியும் பெற்றிருக்கும் கதாசிரியரைத் தான் இங்கே தோளில் தூக்கிக் கொண்டு கொண்டாட வேண்டுமென்பேன் ! So செப்டம்பர் வாசிப்பினில் இயன்றால் – “லக்கி லூக்கைச் சுட்டது யார்?” ஆல்பத்தினை உங்களது வாசிப்பு # 2 ஆக வரிசைப்படுத்திடலாமே?

My choice of # 3 – டெக்ஸின் “ரௌத்திர ரேஞ்சர்” black & white சாகஸமாகத்தானிருக்கும். இது பற்றிப் போன வாரமே கணிசமாய் பில்டப் செய்திருப்பதால் மேற்கொண்டும் பீப்பீ ஸ்மர்ப்பாய் சுற்றித் திரிய வேண்டாமென்று நினைத்தேன் !

வாசிப்பு வரிசையின் இறுதி இடம் – நமது ப்ளூகோட் பட்டாளத்துக்கென்று சொல்லலாம் ! இந்த வரிசைக்கிரமமானது கதைகளின் தரங்கள் மீதான பிரதிபலிப்பல்ல ; சும்மாக்காச்சும் இம்மாத இதழ்களுள் பயணிக்க (நமக்கு) வசதியான ‘ஏக்-தோ-தீன்-சார்‘ என்பதால், “ஆ... ஸ்கூபி & ரூபியை மட்டம் தட்டிப்புட்டீகளே!!” என்று கண் சிவக்கத் தேவையில்லை ! As with all cartoons – இதுவுமே எனது ஆதர்ஷத் தொடர்களுள் ஒன்றே ! அதுவும் படைப்பாளிகள் தேர்வு செய்துள்ள களமானது – சிரிப்புக் கதைகளுக்கு ரொம்பவே வித்தியாசமானது என்ற வகையில், இந்தத் தொடர் வெற்றி காண வேண்டுமென ரொம்பவே விரும்புபவன் நான் ! இம்முறையும் கதைக்களமானது போரின் கோரங்களை ; தோல்விகளின் பாரங்களை காமெடி எனும் சர்க்கரைப் பூச்சோடு சொல்ல விழைகின்றது ! வரலாற்றில் ஏதோவொரு பக்கமே இது ; நாம் கண்ணிலேயே பார்த்திரா பூமியில் அரங்கேறிடும் யுத்தமிது என்றாலும் – சாவுகளை; இழப்பின் சங்கடங்களை உணர்ந்திட அவை தடைகளாய் இருக்காது தானே ? So சிந்தித்தபடியே சிரிக்க – இம்மாதத்து இறுதித் தேர்வாய் “கறுப்புத் தான் எனக்குப் பிடிச்ச கலரு!” அமைந்தால் பொருத்தமாகயிருக்குமென்பேன் !

இதெல்லாமே எனது ரோசனைகளே தவிர்த்து – அவரவரது ஆதர்ஷ வாசிப்பு வரிசைகளில் தவறிராது தான் ! So எதைப் படித்திட நேரம் கிட்டினாலுமே – அவை சார்ந்த உங்கள் பார்வைகளை இங்கே பதிவிட்டால் கச்சேரி களைகட்டிடும் !

Moving on, ஒரு மெகா ஹிட் மாதத்தைத் தொடரும் வேளைகளில் ஒருவிதமான மிதப்பு நம்மை அறியாமலே குடிகொள்வது வாடிக்கை ! வெயிட்டான விருந்துக்கு மறுநாள் ஆபீஸ் போனால் புளிச்ச ஏப்பமும், சோம்பலுமாய் ரவுண்டு கட்டியடிக்குமே – அதே மாதிரித் தான் இந்த மிதப்புமே ! ஆனால் இம்முறையோ அட்டவணையின் திட்டமிடலின் தருணத்திலேயே – ‘ஆகஸ்ட்‘ எனும் full meals மாதத்தின் மறுமாதத்தின் reading ரொம்பவே light-ஆக அமைந்திட வேண்டுமென்று நினைத்திருந்தேன் ! அது ஓரளவுக்கு நிறைவேறியுள்ளதில் ஹேப்பி அண்ணாச்சி!

ஆகஸ்டின் இதழ்களுள் முதலிடம் பிடித்திருந்த “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” ஏகப்பட்ட அலசல்களுக்கு உட்பட்டது மாத்திரமின்றி – ஏகோபித்த thumbs up பெற்றதில் மனம் நிறைகிறது ! கதாசிரியரின் வெற்றி ; ஓவிய பாணியின் வெற்றி ; மொழிநடையின் வெற்றி ; மேக்கிங்கில் வெற்றி என்றெல்லாம் நிறைய கனிவான சிந்தனைகளை ஆங்காங்கே படிக்க முடிந்த போதிலும், இதனை நான் உங்கள் “ரசனைகளின் வெற்றி” என்று தான் சொல்வேன் ! I have a reason to say this folks...! 

பொதுவாய் இதுவரையிலுமான மெகா இதழ்கள் எல்லாமே – யாரேனுமொரு ஸ்டார் நாயகரின் குடையில் இளைப்பாறியிருப்பது வழக்கம் ! கேப்டன் டைகர்; டெக்ஸ்; லக்கி லூக் ; XIII என்று big names பிரதானமாய் இருக்கும் போது மெகா இதழ்களின் சக்கரங்கள் கிறீச்சிடாமல் சுற்றி வந்திடுகின்றன ! ஆனால் இந்த தபா “ஈரோடு எக்ஸ்பிரஸ்” என நான் அறிவித்திருந்த 2 இதழ்களுமே total புதுவரவுகள் ! And எவ்வித முன் அறிமுகமோ ; அதிரடிகளுக்கான உத்தரவாதங்களோ இல்லாத இதழ்களெனும் போது எனது அறிவிப்பைத் தொடர்ந்து ஒரு ‘மின்னும் மரண‘ முன்பதிவு அதகளமோ ; ஒரு இரத்தப்படலத் தொகுப்பு முன்பதிவுகளின் ரணகளமோ அரங்கேறிடவில்லை ! ஓரளவுக்கு நானுமே இதை எதிர்பார்த்திருந்தேன் ; ஆனால் விடாது ஊதிடும் பில்டப் பீப்பியின்  புண்ணியத்தில் நமது மாமூலான முன்பதிவு இலக்கை (500) கொஞ்சமாச்சும் நெருங்கிடலாமென்று நான் நினைத்திருந்தேன் ! ஆனாக்கா ‘ஜடாமுடி ஜானதனுக்குமே பில்டப் தர்றவன் தானே நீ...? அப்டிக்கா ஓரமாய் போயி தனியாப் பேசிக்கோ !‘ என்று நிறைய நண்பர்கள் தீர்மானித்து விட்டனர் ! தஸ்ஸு... புஸ்சென்று முக்கியும் 345-ஐத் தாண்டவில்லை முன்பதிவு எண்ணிக்கையானது ! கொஞ்சம் ஜெர்க்கடிக்கத் தான் செய்தது என்றாலுமே – கதையின் வீரியம் நம்மைக் கரை சேர்த்து விடுமென்ற நம்பிக்கையோடே ஈரோட்டுக்குப் பொட்டலம் கட்டிக் கொண்டு புறப்பட்டோம் ! MAXI லயனின் TEX + லக்கி லூக் மெகா கூட்டணியும், ஈரோட்டின் சர்ப்பரைஸ் என்றிருக்க – அவர்களது ராட்சஸ presence-ஐ தாண்டி வேறு யாரும் மிளிர்வது சிரமமே என்பதும் புரியாதில்லை தான் ! ஆனாலும் உள்ளுக்குள் ஒரு சின்ன திட நம்பிக்கை – உங்கள் ரசனைகள் மீது லயித்துக் கிடந்ததால், ஈரோட்டு விழாவை நிறைவு செய்த கையோடு ஊர் திரும்பிய கணம் முதலாய் ‘பி.பி.வி.‘க்கு உங்களது ரெஸ்பான்ஸைக் கணிப்பதிலேயே மும்முரமாயிருந்தேன் ! And எனது நம்பிக்கை துளி கூட வீண் போகவில்லை ; அண்டர்டேக்கர் ; TEX ; லக்கி போன்ற பிஸ்தாக்களையே ‘அப்பாலிக்கா ஓரமாய்ப் போய் விளையாடுங்க தம்பிகளா!‘ என்று சொல்லி விட்டு ”பி.பி.வி‘ யை நீங்கள் தெறிக்க விட்டது செம landmark moment இந்தாண்டினில் ! உங்கள் மத்தியில் வெற்றிக்கு Star Power இனியும் ஒரு அத்தியாவசியமல்ல என்பதை ஆணித்தரமாய் நிரூபித்திருக்கும் தருணமாய் இதை நான் பார்த்திடுகிறேன் !!   சமீப மாதங்களில் நீளமான ஆல்பங்களை தவணை முறைகளில் படிக்கவே திணறி வந்த நண்பர்கள் இந்த 4 பாக ஆல்பத்தை ; ஒரு ஹீரோவே இல்லாத ஆல்பத்தை ; கோக்மாக்கான சித்திரபாணியிலான ஆல்பத்தை – சும்மா ஜெட் வேகத்தில் படித்து, முடித்து, சிலாகித்தது செமத்தியானதொரு சாதனை என்பதில் ஐயமே கிடையாது ! “ஹாாாவ்... ஹீரோவே இல்லியே ?.... அமெரிக்க அரசியல் சட்டமா....?? இது இன்னா மேரி கதைப்பா ? அய்யே..படமே சொகப்படலியே  ?” என்றெல்லாம் கொட்டாவிகள் விடாது இந்த இதழினை நீங்கள் ரசித்தது – நான் உங்கள் மீது வைத்த நம்பிக்கையின் வெற்றி !! தொடர்ந்த நாட்களில், ஈரோட்டுப் புத்தக விழாவில் ; கடைகளில்  ; ஆன்லைனில் என்று பரபரத்த விற்பனைகள் ஒற்றை விஷயத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றன – என்னளவிற்கு : ரசனைகள் எனும் ஏணியில் நீங்கள் LIC கட்டிட உசரங்களையெலாம் தாண்டி நாட்கள் பலவாச்சுங்கோய் ! 'இந்தத் தொடர் நம்மாட்களுக்குப் புரியுமா ? ரசிக்குமா ?' என்ற கேள்விகளெல்லாம் இனிமேலும் கேட்டுத் தயங்குவது குடாக்குத்தனம் என்பதே அது ! மெய்யான தரமிருந்தால் – அது எத்தனை முரட்டுப் போர்வையின் பின்னணியிலிருந்தாலுமே நீங்கள் பிரித்து மேய்ந்து விடுவீர்கள் என்றாகி விட்டது ! Take a bow all !!

பிஸ்டலுக்குப் பிரியாவிடை... தாழிடப்பட்டிருந்த ரசனைக் கதவுகள் பலவற்றிற்கான பிரியாவிடையுமே !! 

 Before I sign out –  பற்றிய தாக்கல் ! வெள்ளி மாலை மதுரை தமுக்கம் மைதானத்தில் துவங்கியுள்ள புத்தக விழாவினில் நமது ஸ்டால் # 195 ! And முதலிரண்டு நாட்களில் அட்டகாச response !! புது இதழ்கள் சகலமுமே அங்கும் கிடைக்கும் என்பதால் – மதுரை மண்ணின் மைந்தர்கள் ஒரு விசிட் அடிக்கலாமே – ப்ளீஸ்!
Bye folks! Have a Super Sunday !! See you around ! முன்கூட்டிய பண்டிகை வாழ்த்துக்களும் !!