Saturday, September 28, 2019

புதுசாய் ஒரு அவதார் !

நண்பர்களே,

வணக்கம். First things first ....! இன்றைய கூரியர்களில் அக்டோபரின் 4 இதழ்களும் உங்களைத் தேடிப் புறப்பட்டு விட்டன ! பொதுவாய் வாரயிறுதிகளில் உங்கள் கைகளுக்குக் கிடைக்கும் விதமாய் பார்சல்களை டெஸ்பாட்ச் செய்வதே நம் வழக்கம் ; ஆனால் போன மாதத்து TEX பைண்டிங்கின் சொதப்பல் இம்முறையும் நிகழ்ந்திடக்கூடாதெனும் முன்ஜாக்கிரதை ஏற்பாடுகளின் பொருட்டு ஒரு நாள் கூடுதலாய் எடுத்துக் கொண்டு விட்டது ! So வெள்ளிக்கிழமைக்கு புக்குகளை அனுப்பிடல் சாத்தியப்படவில்லை ! Anyways வாரத்தின் நடுவே காந்தி ஜெயந்தி விடுமுறை காத்திருப்பதால் பிரச்னை தீர்ந்தது ! 

And இதோ - இம்மாதத்துக் கூட்டணியினில் இதுவரையிலும் உங்கள் கண்களில் காட்டியிரா இதழின் பிரிவியூ !!
பொதுவாய் TEX அட்டைப்படங்கள் என்றாலே கையில் ஒரு பிஸ்டலோடு   'தல'  தெற்காலேயோ ; மேற்காலேயோ திரும்பி நின்றபடிக்கே போஸ் கொடுப்பதே  வாடிக்கை !  சமீபத்தைய இதழ்களுள் 'சர்வமும் நானே' அட்டைப்படம் தான் இதற்கொரு விதிவிலக்காக இருந்ததாய் ஞாபகம் ! இதோ - இம்மாதம் ஆர்ப்பரிக்கும் நதியின் மத்தியில் ஒரு மொக்கைப் படகில் நம்மவர் ஸ்டைலாக நிற்கும் காட்சியே அட்டைப்படமாய் !! And சமீபத்து பழக்கம் இம்முறையும் தொடர்கிறது - ஒரிஜினல் அட்டைப்படத்தையே தக்க வைத்துக் கொண்டு அதனில் வர்ண மெருகூட்டலைச் செய்வதெனும் விதமாய் !! நாம் என்ன தான் 'தம்' கட்டி நம் ஓவியரைக் கொண்டு சித்திரங்களைப் போட்டாலும், ஒரிஜினல் கவர்களின் அங்க அளவுகள் நமக்குப் பிடிபடுவதில்லை ! 'கால் குட்டையாகிப் போச்சு ; கை நீண்டுக்கிச்சு  ; கழுத்தைக் காணோம்' - என்று ஏதாச்சும் ஒரு சொதப்பல் நிகழ்வதுண்டு ! ஆனால் படைப்பாளிகளோ இதனில் துளியும் கோட்டை விடுவதில்லை ; பாருங்களேன் - நமக்கவர் முதுகைக் காட்டிக் கொண்டிருந்தாலுமே - பக்கவாட்டில் முகம் எத்தனை அம்சமாய் வரையப்பட்டுள்ளதென்று !! 

இந்த அட்டைப்படம் சார்ந்ததொரு கொசுறுத் தகவலுமே உண்டு தான் ! 2018 வாக்கில் நமக்கு TEX அட்டைப்பட சித்திரங்கள் போட்டுத் தர இத்தாலிய ஓவியர் ஒருவரை நாம் பயன்படுத்தி வந்தது நினைவிருக்கலாம் ! (டைனமைட் ஸ்பெஷல்  ராப்பர் கூட அவரது ஆக்கமே) நான்கே நாட்களில் மனுஷன் ஒரு டிசைனைப் பூர்த்தி செய்து விடுவார் ! தற்போதைய 'புதைந்து போன புதையல்' இதழுக்கான டிஜிட்டல் கோப்புகள் அப்போதே நம் வசமிருந்ததால் - இந்த டிசைனை சற்றே வித்தியாசமான வர்ணச் சேர்க்கையோடு போட்டுத் தந்திடக் கோரியிருந்தேன் ! அவரும் வழக்கம் போலவே புயல் வேகத்தில் படம் போட்டு அனுப்பியிருந்தார் ! ஆனால் அதன் வர்ணங்கள் ரொம்பவே இருண்டு, டல்லாக இருப்பது போல்ப்பட்டது எனக்கு ! 'சரி...இது நமக்கு ஆகாது !' என்று நினைத்தபடிக்கே அந்த டிசைனை உள்ளே வைத்து விட்டேன் ! தொடர்ந்த நாட்களில் பெரும் சுகவீனம் காரணமாய் ஓவியர் ஓய்வுக்குள் புகுந்திட, நாம் அவரிடம் பணிகளைச் செய்து வாங்கும் வாடிக்கையும் முற்றுப் பெற்றது ! (தற்போது நலமாக உள்ளார் என்பது சந்தோஷச் சேதி !!) ஆபீசில் உள்ள நமது கம்பியூட்டரில் துயிலும் அந்த டிசைன் பற்றிய ஞாபகம் இந்தப் பதிவை டைப் செய்யும் போது தான் நினைவுக்கே வருகிறது என்பதால் இப்போது அதை உங்களுக்குக் கண்ணில் காட்ட இயலவில்லை ! Monday - yes ! அப்புறம் உட்பக்கங்களின் டிரெய்லர் : 
அட்டைப்படத்தோடு தொடர்பு கொண்டதொரு ஆக்ஷன் ப்ளாக் என்ற வகையில், பாருங்களேன் - நம்மவரின் செயல்பாட்டை !! கதையைப் பற்றிச் சொல்வதானால் - கதாசிரியர் கிளாடியோ நிஸ்ஸி  ரகளை செய்திருக்கிறார் - வழக்கம் போலவே !! 

ஹோல்டான்...ஹோல்டான்...!! 

எப்போதும்  போலவே 'தல' தாண்டவத்தைப் பற்றி ; கதைகளின் நெளிவு சுளிவுகளைப் பற்றி ; சித்திரங்களைப் பற்றி - பில்டப் ஸ்ட்ராங்காக தொடரப் போவதை நினைத்தால் எனக்கே கொஞ்சம் கூச்சமாகவுள்ளது ! ஒரு சகாப்தத்தைப் பற்றி எழுத புதுசாய் என்ன தேடுவதோ ? And எத்தினிவாட்டி தான் பில்டப் பரமசிவம் அவதாரோடு சுற்றி வருவது ? So இந்த ஒரு தபா மாத்திரம் கார்சனின் நண்பரை ஆராதிப்போரின் பார்வையில் ஒரு 'பில்ட்டவுண்' ரூபத்தில் முன்னுரையை எழுதினாலென்ன ? என்று நினைத்தேன் !! ஆகையால் உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக - இதோ 'பில்ட்டவுண்  பூங்காவனம் ' ஆஜர் !! 

'அது வந்துங்கன்னா - கதை ஆரம்பிச்சுப் போட்றப்போவே கார்சனின் நண்பரும், டெக்சின் நண்பரும் ஒண்ணா ஆஜராகுறாப்படி ! இந்த பின்கர்ட்டன்..பின்கர்ட்டன்ன்னு ஒரு துப்பறியும் ஏஜென்சி இருக்கில்லீங்களா ? அவனுங்க நோகாம நோன்புக்கஞ்சு குடிக்கிறதுக்கோசரம்  கார்சனோட நண்பருக்கு தகவல் சொல்லி அனுப்புறாக ! 'இன்ன மாதிரி...இன்ன மாதிரி...புதையல் மெக்சிக்கோவிலே இந்த இடத்திலே இருக்குங்கண்ணா ; அதை நீங்க லொங்கு லொங்குன்னு காடு - மேடுன்னு அலைஞ்சு தேடிப் புடிச்சுக் கொண்டு வந்தாக்கா  நாங்க ஜிலோன்னு பில்லை போட்டுக் கிழிச்சி முள்ளங்கிப் பத்தையாட்டம் டாலர் நோட்டை வசூலிச்சுப்புடுவோம்லா ?' அப்டின்னு கேக்குறாப்டி !! கார்சனோட நண்பர் தான் நல்லவரு ; வல்லவரு ; நாடே போட்ற்ரவருன்னு அல்லாத்துக்கும் தெரியுமில்லீங்கள்லண்ணா ? அப்புறம் ஒரு தட்டு நிறைய சுக்கா ரோஸ்ட்டைப் பார்த்தாக்கா டெக்சின் நண்பரையும் எமலோகத்துக்கே கூடக் கூட்டிப்போயிடலாம்னு முக்கு வூட்டு  முன்சாமிக்கே தெரியும்ங்கிறப்போ - பின்கர்ட்டன் 'தல'க்குத் தெரியாமப் போகுமா ? ராவுக்குக் கட்டையைக் கிடத்தின பிற்பாடு, கோழி கூவுறச்சே நம்மாளுங்க பயணம் கிளம்பறப்போ ஒரு அம்மணியும் கோர்த்துக்குது !! பின்கர்ட்டன் புள்ளையாண்டான் டாட்டா காட்டிப்புட்டு வூட்டுலே போயி வுட்ட தூக்கத்தைத் தொடரப் போயிடறாப்பிடி  ! 

கதையின்னு ஒண்ணு இருந்தாக்கா - வில்லன்..வில்லன்ன்னு ஒரு சோமாறி இல்லாங்காட்டி கதை சூடு புடிக்காதில்லீங்களாண்ணா ? ஆக அவன் இன்னொரு பக்கம் வேட்டைக்குக் கிளம்ப - நம்மாட்கள் பாப்பா கூடப் பேச்சுக் குடுத்திட்டே எல்லையைக் கடக்குறாப்டி  !! மலைமாடு மாதிரி தடித் தடியான மெக்சிகோ காட்டான்கள் புசு புசு மீசையோட ரகளை பண்ண, கார்சனின் நண்பர் 'ஏக் மார் பந்த்ரா துக்கடா' ஆக்கிப்புட்றாக  !! இதிலே இன்னா ஸ்பெஷாலிட்டின்னா - கதையோட பெரும் பகுதி டிராவல் பண்றது கதைக்கு அங்க அங்க அவசியமாற மனுஷாளோடே தானேகாண்டி - கார்சனின் நண்பரை வம்படியா முன்னுக்கு கூட்டியாந்து நிக்க பண்றதில்லீங்கோ ! மெக்சிகோவில் ரகளை ; திகுடுமுகுடான ஆக்ஷன் ; இவன் காலை அவன் வாற ; அவன் காலை கார்சனின் நண்பர் வாறன்னு கதை சும்மா டவுன்ஹால் லாலா கடை மைசூர்பாகாட்டம் வழுக்கிட்டு ஓடுறாப்படி !! ஓவியர் ஜோஸ் ஆர்டிஸோட சித்திரங்கள்லே கார்சனின் நண்பர் சித்தே பத்தியத்தில இருக்கும் புள்ளையாண்டானாட்டம் தெரியுறது நெசம் தானுங்கோ ; ஆனாக்கா கொள்ளைவாட்டி இந்த ஸ்டைலைப் பார்த்துப் பழகிப் போயிட்டதாலே வித்தியாசமா ஏதும் தெரிலேண்ணா   ! ஒரு கட்டத்திலே மல்லாக்கப் போட்ட கரப்பானாட்டம் கார்சனோட நண்பரும் ; கிட் வில்லரோட மாமாவும் பாலைவனத்திலே கட்டப்பட்டுக் கிடக்க - இங்கனக்குள்ள லைட்டா கண்ணுல தண்ணி வந்திடுச்சுன்னா பாத்துக்கோங்களேன்  !! ஒரு மாதிரி தப்பிச்சு அத்தனை கும்பல்களையும் தொம்சம் பண்ணிப்புட்டு, நட்பூஸ் ரெண்டு பேரும் விடை பெறச்சே கதையிலே வர்ற டுவிஸ்ட் இருக்குங்களேண்ணா - மெய்யாலுமே மெர்சலாகப் போறீக ! அதை அலசி ரவுண்ட் கட்ட இன்னும் ஒரு நாலைஞ்சு நாளிலே  இங்க வரப் போறீகன்னு என்ர மனசு சொல்லுதுங்கணோய் !! ஒரு திருவிழா வெயிட்டிங்கு !! 

ஒரு மழை நாளிலே நிதானமாப் படிச்சு போட்டுப்புட்டு  இங்கே வர்ற வழியைப் பார்த்தீங்கன்னா சிறப்பாயிருக்கும் !! தம்பி இப்போதைக்கு நடையைக் கட்டுறேனுங்க  !! தீபாவளிக்கு வெடி வெடிக்கறதுக்கு முன்னமே  கையிலே தீபாவளி மலரை ஒப்படைக்கணுமில்லீங்களா ?  ட்டாட்டா...பை பை !! வாரகடாசியை ஜமாய்ச்சிடுங்க !! அப்பாலிக்கா பார்க்கலாமுங்க !! 

ஆன்லைன் லிஸ்டிங்குமே ரெடிங்கோ :

http://www.lion-muthucomics.com/home/425-december-2018-pack.html

http://lioncomics.in/monthly-packs/629-march-2015-pack.html

353 comments:

  1. நள்ளிரவு வணக்கம் சார் 🙏🏼
    .

    ReplyDelete
  2. // வணக்கம். First things first ....! இன்றைய கூரியர்களில் அக்டோபரின் 4 இதழ்களும் உங்களைத் தேடிப் புறப்பட்டு விட்டன ! //

    💃🏻💃🏻💃🏻

    ReplyDelete
  3. // ராவுக்குக் கட்டையைக் கிடத்தின பிற்பாடு, கோழி கூவுறச்சே நம்மாளுங்க பயணம் கிளம்பறப்போ ஒரு அம்மணியும் கோர்த்துக்குது !! //

    கதை இப்பத்தான் சூடு பிடிக்குது சார்

    டர்னிங் பாயிண்டே இதுதான்னா சார் 😍😍😍
    .

    ReplyDelete
    Replies
    1. //டர்னிங் பாயிண்டே இதுதான்னா சார்//

      விடை திங்களன்று !!

      Delete
  4. // ரெண்டு பேரும் விடை பெறச்சே கதையிலே வர்ற டுவிஸ்ட் இருக்குங்களேண்ணா - மெய்யாலுமே மெர்சலாகப் போறீக ! அதை அலசி ரவுண்ட் கட்ட இன்னும் ஒரு நாலைஞ்சு நாளிலே இங்க வரப் போறீகன்னு என்ர மனசு சொல்லுதுங்கணோய் !! ஒரு திருவிழா வெயிட்டிங்கு !! //

    செம்ம செம்ம சார்

    நானுமே அப்படியே மெர்சலாயிட்டேன்
    .

    ReplyDelete
  5. பில்ட்டவுண் பூங்காவனம் 🤣. சிரிச்சு மாளலை. ஆனா பதிவு பொசுக்குன்னு உடனே முடிஞ்சுட்டா மாதிரி ஒரு பீலீங்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு முன்னூரு கமெண்டு போடுங்கோ

      உப பதிவா ஒரு பெரிய பதிவாகேட்டு வாங்கிடலாம்

      இன்னான்னுறீங்கோ 😇
      .

      Delete
    2. ஓவர் பில்டப்பே உடம்புக்கு ஆகாதெனும் போது பில்ட்டவுண் விஷயத்தில் எக்ஸ்டரா கவனம் & சிக்கனம் வேண்டாமா சார் ?

      Delete
    3. ஒரு முன்னூரு கமெண்டு போடுங்கோ//

      கொலைப்படை போடறோம் விணவெளிப் பிசாசு போடறோம்னா தான மக்கள் கமெண்ட் போடவே வெளியே வராங்க சித்தரே. புதுசா வந்த கதை எதும் நீங்க எனக்கு அனுப்பாததால என்னாலே கதையப் படிச்சு விமர்சனமும் போட முடியலை.

      Delete
    4. சிக்கனம் வேண்டாமா சார் ?//

      கரெக்ட்தாங்க சார் நான் சொல்ல வந்தது சிரிப்பு படமா இருந்தாலும் எல்லாரும் கூடி நின்னு போட்டோ எடுக்கறமா மாதிரி ஒரு சீனோட முடிப்பாங்க. சதி லீலாவதி படத்தில கார் சேசிங் பாத்து விலா நோக சிரிச்சுட்டிருக்கும் போது எல்லாரும் வீட்டுக்கு போகலாங்கற டயலாக்கோட பட்டுன்னு முடிப்பாங்க. நான் பூங்கவனத்தை ரசிச்சிட்டே அடுத்து அட்டவணை பத்தி ஏதாவது சொல்றதுக்கு ஓட்டைவாய்உலகநாதன் வருவார்னு பாத்தேன். சதி லீலாவதி மாதிரி தீபாவளி மலர் வேலை இருக்குன்னு ஓடிட்டீங்க.

      Delete
    5. //கொலைப்படை போடறோம் விணவெளிப் பிசாசு போடறோம்னா தான மக்கள் கமெண்ட் போடவே வெளியே வராங்க சித்தரே. புதுசா வந்த கதை எதும் நீங்க எனக்கு அனுப்பாததால என்னாலே கதையப் படிச்சு விமர்சனமும் போட முடியலை.//அமேரிக்காக்கு கோவை ஸ்வீட்லா பார்சல்

      Delete
  6. // தீபாவளிக்கு வெடி வெடிக்கறதுக்கு முன்னமே கையிலே தீபாவளி மலரை ஒப்படைக்கணுமில்லீங்களா //

    ஐ யாம் வெயிட்டிங்கு சாரே 😍😇🙏🏼
    .

    ReplyDelete
  7. வணக்கம் ஆசிரியரே இம்மாதமும் மீண்டும் ஒரு சதம் அடிக்கப்போகிறீர்கள் என நினைக்கிறேன்.தல வந்தாலே தீபாவளிதான்.அருமையான அட்டைப்படம்.

    ReplyDelete
  8. வஞ்சம் மறப்பதில்லை அட்டைப்படம் சூப்பர் also இளவரசி

    ReplyDelete
  9. டெக்ஸ் அட்டைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வித்தியாசமாக அட்டகாசமாக வந்துள்ளது.

    டெக்ஸ் கதையின் முன்னோட்டம் ரம்மி ஸ்டைலில் எழுதியது சிரிப்பை வரவைத்தது.

    இந்த மாத கடைசியில் எனது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடம் அருகில் உள்ள வீட்டிற்கு குடியெறுகிறேன். நமது காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாவற்றையும் பாக்கிங் செய்து அதன் மேல் "இதில் காமிக்ஸ் இல்லை" என எழுதிவிட்டேன். :-)

    ReplyDelete
    Replies
    1. ராஜதந்திரங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்திருக்கிறீர்களே சார் !

      Delete
    2. அத்திரிபச்சா. நிம்பள்கியும் அது தெரிஞ்சுடுச்சா

      Delete
    3. // ராஜதந்திரங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்திருக்கிறீர்களே சார் ! // இன்று அனைவரையும் கலாய்ப் பது என்ற முடிவோடு எடிட்டர் ஐயா இருகருங்கோ எஸ்கேப்

      Delete
  10. வரும் வாரம் வீடு மாற்றும் வேலை அடுத்த வாரம் தூத்துக்குடி பயணம் என இருப்பதால் புத்தகங்கள் கிடைத்தாலும் உடனே படிக்க முடியாது :-(

    ReplyDelete
  11. டெக்ஸ் அட்டைப்படம் அபாரம்!!

    சாதாரணமாய் இந்த அட்டைப் படத்தை நோக்கினால் பெரிதாய் ஒன்றும் தோனாது! ஆனால் டெக்ஸோடு நாமும் அந்தப் படகில் நிற்பதாய் ஒரு நிமிடம் கற்பனை செய்து கொண்டோமேயானால் அந்த அபாய சூழ்நிலையும், அட்டைப்படத்தின் வீரியமும் பளீரென்று முகதில் அறையும்!! ஆர்ப்பரிக்கும் நதியில் ஒரு மயிர்கூச்செறியும் சாகஸம்!! அதுவும் தலயோடு!! வாரே வாஹ்!!

    ReplyDelete
    Replies
    1. ஒரு நிமிஷம் 'தல'ங்கிற இடத்திலே 'தலீவர்'ன்னு போட்டுப் பாருங்களேன் !

      Delete
  12. Looking forward for the October Set. Tex Cover is So Action packed. Thanks for retaining the trend of original cover art.

    ReplyDelete
    Replies
    1. The original cover art from tales that came late in the series are no probs at all sir !
      துவக்க சாகஸங்களின் அட்டைப்படங்களில் தான் நெருடல்களே !

      Delete
  13. சார் ஜெரமியா செவ்விந்திய புக்கை எப்போது வெளியிடுவிர்கள் சார் அடுத்த வருட அட்டவணையில் புது வெட்டியானுடய கிராபிக் நாவலும் உண்டு தானே

    ReplyDelete
    Replies
    1. இப்படி வைத்துக் கொள்ளுங்களேன் சார் - வாசகர்களிடையே அபிமானத்தை ஈட்டியுள்ள & ஈட்டிடக்கூடுமென்ற நம்பிக்கையை விதைப்போருக்கு நிச்சயமாய் இடமிராது போகாது !

      Delete
    2. அப்படி சொல்லுங்கள் சார். சூப்பர்

      Delete
  14. Short and sweet builddown pathivu.😁😁🌈🌹

    ReplyDelete
    Replies
    1. ""பில்ட்டவுன்"" னாமுல...!!!
      நல்லா கெளப்ராங்கப்பா...பீதிய..

      Delete
  15. தல தாண்டவத்தை காண இப்போதிலிருந்தே வெயிட்டிங்! அட்டைப்படம் அசத்தல் இன்னும் நேரிலே பார்த்தால் இன்னும் அசத்தலாக இருக்கும் போலுள்ளது. அதே போல வஞ்சம் மறப்பதில்லை கதையும் சிக்ஸர் அடிக்கும் என்றே தோன்றுகிறது!

    ReplyDelete
    Replies
    1. //வஞ்சம் மறப்பதில்லை கதையும் சிக்ஸர் அடிக்கும் என்றே தோன்றுகிறது!//

      Fingers crossed sir..

      Delete
    2. கண்டிப்பாக அடிக்கும். I'm so confident about it.

      Delete
  16. // இன்றைய கூரியர்களில் அக்டோபரின் 4 இதழ்களும் உங்களைத் தேடிப் புறப்பட்டு விட்டன. //
    அடடே இம்புட்டு சீக்கிரமாவா,வரட்டும்,வரட்டும்,ஆவலுடன்.....

    ReplyDelete
  17. நீட் எக்ஸாம் மாதிரி தெரியுதே

    ReplyDelete
  18. ரம்மி சிவகாசி பக்கமா போயிருந்தாரா

    ReplyDelete
  19. டெக்ஸ் அட்டைப்படத்துக்கான தலைப்பு.' ஒடும் நதியில் ஒரு சாகஸம்'.சரீங்ளாண்ணா.
    அப்புறம் வஞ்சம் மறப்பதில்லை அட்டைப்படத்துல, அந்த மீசைக்கார மாமா நம்ம ரௌத்திர ரேஞ்சர் மாதிரி இருக்குறாரு.
    கடைசியா ஒண்ணு. இது பதிவா, இல்ல மினி பதிவா

    ReplyDelete
    Replies
    1. அதே சந்தேகம் தான் எனக்கும். ரொம்ப சுருக்கமாக இருக்கே

      Delete
    2. இது உப பதிவாக இருக்கலாம் சார்..இன்றைய பதிவு இனி தான் வருகை தரும் என்றே நம்புவோமாக..:-)

      Delete
    3. தலைவரே அப்படி

      Delete
    4. ஒரு நாளைக்கு முன்னாடியே பைண்டிங் முடிஞ்சிருந்தாக்கா வெள்ளியன்று புக்ஸை அனுப்பிப்புட்டு -'the ball is in your court now'ன்னு சொல்லிப்புட்டு ஓட்டம் புடிச்சிருப்பேன் சார் !

      Delete
  20. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் ஈனாவினாண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன் 🙏🏼

    இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼
    💐💐💐
    🎂🎂🎂

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஈ.வி.....தங்களது வாழ்வில் வளமும்,நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.......

      Delete
  21. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் குருநாயரே..!!

    மாடஸ்டிக்கு கோடுபோட்ட ஸ்கர்ட்டு போல எப்போதும் சந்தோசம் உங்களூடன் இருக்கட்டும்..!

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான வாழ்த்துக்கள் கண்ணா

      Delete
    2. இளவரசியின் அடுத்த ஜாகஜத்தைப் பார்த்தாக்கா உங்க வாழ்த்தை வேற மாதிரி மாத்திப்புடுவீங்க !

      Delete
    3. சார் ii
      நான் சரியாத்தான் புரிஞ்சு கிட்டேனா? i.அப்படின்னா, அடுத்த ஆண்டு ஒரு மாட ஸ்டி சாகஸம் இருக்கிறதா?ii..ஆஹா.. பிரம்மாதம்..
      (எனக்கென்னவோ 2020 ஆம் ஆண்டு -மாட் ஸ்டி, ஸ்பைடர், ஆர்ச்சி என்று ஒரு அதகளம் செய்யலாம் . )

      Delete
  22. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த தளத்தின் செல்லப்பிள்ளை ஈனாவினாண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன் 🙏🏼

    இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼
    💐💐💐
    🎂🎂🎂

    ReplyDelete
  23. ஈனா வினா ! பினா வானா ..

    ReplyDelete
  24. ஈவி

    தளத்தின் ரவி
    காமெடியில் அருவி
    செயல் வேகத்தில் புரவி
    மனமெல்லாம் இருக்கிறாய் பரவி

    ஆப்பி பர்த்டே மாப்ளே!!!

    ReplyDelete
    Replies
    1. ஆ ஆ கவிஜ கவிஜ

      Delete
    2. ஒரு டவுட்

      கட்டவுட் வச்சிட்டீங்களா

      Delete
    3. அருமையான கவிதை ஷெரீஃப் 😁

      Delete
    4. ரவி என்பது இங்கு வருகை தரும் ரவி அல்ல ...ரவி எனில் சூரியன் என்று ஷெரீப் அவர்கள் விளக்கி விட்டபடியால் இதை கவிதை என்பதை கண்டுபிடித்து விட்டேன்..:-)

      Delete
    5. //ஆப்பி பர்த்டே மாப்ளே!!!//

      டெக்ஸ்சாஸ் கவிஞர் 'இன்னிக்கு Appy மட்டுமே குடிக்கணும் நண்பா' ன்னு சொல்லுறாப்டி !

      Delete
    6. // ரவி என்பது இங்கு வருகை தரும் ரவி அல்ல //
      பேர் என்னோடது இல்லைன்னா இது கவிதை ஆகிடுமா தலைவரே....
      இது போங்காட்டம்......

      Delete
  25. இனிமையான நந்நாளாக இப்பிறந்த நாள் அமையட்டும் நண்பரே....

    ReplyDelete
  26. அ ருமை நண்பர்
    ஆ ருயிர் தம்பி
    இ னிமைக்குரலோன்
    ஈ ரோட்டுகாரர்
    உ யர்ந்தமனிதர்
    ஊ க்கம் அளிப்பவர்
    எ ன்றும் சிறந்தவர்
    ஏ மாற்றம் தராதவர்
    ஐ யமின்றி அழகானவர்
    ஒ ற்றுமையின் சிகரம்
    ஓ ங்கி வளர்க
    ஔ வையின் ஆசியுடன்
    ஃ (பிறந்தநாள் வாழ்த்துக்கள் )

    ReplyDelete
  27. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த தளத்தின் செல்லப்பிள்ளை ஈனாவினாண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன் ����

    இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்..
    🎉🎉🎉🎉
    🎂🎂🎂🎂

    கரூர் சரவணன்

    ReplyDelete
  28. நம் அனைவரது அன்பு நண்பர் ஈரோடு விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.

    ReplyDelete
  29. அந்த அம்மணியும் வில்லன் ஆள்தானோ கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  30. ஈ.வி அவர்களுக்கு ;
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐🌹💐.

    ReplyDelete
  31. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் ஈனாவினாண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன் 🙏🏼

    இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼
    💐💐💐💐💐
    🎂🎂🎂🎂🎂
    🍧🍧🍧🍧🍧
    🍫🍫🍫🍫🍫
    🍦🍦🍦🍦🍦
    🍭🍭🍭🍭🍭

    ReplyDelete
    Replies
    1. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் ஈனாவினாண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன் 🙏🏼

      இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼
      💐💐💐💐💐
      🎂🎂🎂🎂🎂
      🍧🍧🍧🍧🍧
      🍫🍫🍫🍫🍫
      🍦🍦🍦🍦🍦
      🍭🍭🍭🍭🍭

      Delete
  32. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்.

    ReplyDelete
  33. ///போன மாதத்து TEX பைண்டிங்கின் சொதப்பல் இம்முறையும் நிகழ்ந்திடக்கூடாதெனும் முன்ஜாக்கிரதை///---

    தாமதமானாலும் பரவாயில்லை!
    நல்ல பைண்டிங்கோடு வரட்டும் சார்.

    நவம்பரில் டிசம்பர்னு போடுவது நல்லாத்தான் இருக்கு! ஆனா நிறைவான பணிகளுக்கு நேரம் வேணும் எனும்போது அந்த அவகாசத்தோடு குறையில்லாமல் வரட்டும்.!

    ReplyDelete
  34. சார் அனைத்து அட்டைவளும் ஒனன ஒனனு விஞ்சுத,,,நீங்களுவளே சொல்லிட்டிய,,,,இது வர வந்ததுலயை இந்த அட்டதான பெஸ்ட்ன்னு,,,,நதியும்,,,,தலயும் அட்டைலயே தாண்டவம் அட்டகாசம்லா,,,ட்ரெண்டட்ட வேற லெவல்,,,,நாள ஜாலிலோ ஜிம்கானா

    ReplyDelete
    Replies
    1. ஏ மக்கா. ஸ்டீலு !!!மறுக்கா வந்துட்டியா!!!😍😍😍😍😍

      Delete
    2. வருக இரும்பு மனிதரே...:-)

      Delete
    3. யாருப்பா இது...போனாராஜா பொன்ராஜா

      Delete
    4. Welcome back பொன்ராஜ் ஐயா. வாருங்கள் வாருங்கள் இனிமே தான பார்க்க போரிங்க

      Delete
    5. ஒரு நாளைக்கு கோவையும் சேலமும் இங்கனக்குள்ள டேரா போட்டாக்கா 400 பின்னூட்டங்கள் கியாரண்டி !!

      Delete
    6. எடிட்டர் சார் வரவர உங்க குறும்பு ஜாஸ்தி ஆகுதே. சத்தமாக சிரித்து விட்டேன் இதை படித்து விட்டு

      Delete
    7. நாளை இரவு நம்பர மீட்டபின்பு வாரேன்

      Delete
  35. அட்டைப்படம் எக்ஸலன்ட் ஆக இருக்கு!
    தலையோட ஓவியம் பார்த்து கொண்டே இருக்க சொல்கிறது. என் கண்ணே பட்டு விடும் போல!


    பாறைகளில் சிதறும் கிரணங்கள்;
    நீரில் அவை செய்யும் வர்ண வித்தைகள;
    நீரோட்டத்தை சமாளிக்க தலயும், கார்சனும் படும் பாடு;
    பாறையில் மோதி உருவாகும் அலைகள்;
    பாதி மறைக்கும் பாறைமுகட்டின் நிழல்கள்;

    அட டா அற்புதம். அட்டைபடமே கவிதயாக நிற்குது!

    ரொம்ப நாள் கழித்து டெக்ஸ் க்கு அருமையான அட்டைபடம்.🎈🎈🎈🎈🎈

    ReplyDelete
  36. புதைந்து போன புதையல் அட்டைப் படம் செம கெத்தா இருக்கு சார்........கதை அட்டகாசமான எனும்போது இன்னும் ஆவல் கூடுகிறது.....டிரெண்ட்,வஞ்சம் மறப்பதில்லை என வித்தியாசமான ஒரு கூட்டணி காத்திருக்கிறது போல........

    ReplyDelete
  37. பின்னட்டையும் தன்பங்குக்கு பட்டைய கெளப்புது....!!!

    கதையின் வண்ணத்தை கட்டியம் கூறுவதோடு மட்டுமா....!!!

    இன்னொரு சிறப்பான விசயம்,
    அந்த போனெல்லி லோகோவுக்கும்,
    ஸ்கேன்பார் கோடுக்கும் இடையே வாட்டர் மார்க்கில்.......,

    """"" டெக்ஸ் வில்லர் """"""

    செம...செம...செம....!!!!்
    அற்புதமான அழகு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    இம்முறை அட்டைபடங்களுக்கே ஓவா சரியாப்போச்சி😍

    ReplyDelete
  38. // போன மாதத்து TEX பைண்டிங்கின் சொதப்பல் இம்முறையும் நிகழ்ந்திடக்கூடாதெனும் முன்ஜாக்கிரதை //
    இதில் எப்போதும் கவனமாக இருப்பது நல்லது சார்,போன மாதமே கொஞ்சம் பிசகாகி விட்டது,நம் இதழ்கள் வாசிப்புக்கு மட்டும் அல்ல,சேமிப்புக்கும்,அவ்வப்போது பார்த்து சிலாகிக்கவும் எனும்போது கூடுதல் கவனம் அவசியமே,அனைத்து இதழ்களும் எதிர்காலத்தில் முந்தைய காலத்தின் பொக்கிஷ நினைவுகளாக இருப்பவை அல்லவா..........

    ReplyDelete
    Replies
    1. ///,நம் இதழ்கள் வாசிப்புக்கு மட்டும் அல்ல,சேமிப்புக்கும்,அவ்வப்போது பார்த்து சிலாகிக்கவும்////

      ஆம் சரியாக சொன்னீங்க.
      மறுபடி மறுபடி புரட்டும் போது பைண்டிங் ரொம்ப ஸ்ட்ராங்க்காக இருக்க வேண்டியது அவசியம் சார். ஓரிரு நாள் தாமதம் ஆகினாலும் பரவாயில்லை.
      எனக்கு கிடைச்ச புக் இப்போதைக்கு பக்கங்கள் பிச்சிகலனாலும், அந்த பயத்துலயே அப்படியே வெச்சிட்டேன். விமர்சனம் எழுத மறுபடி புரட்டினால் பிஞ்சிடுமோனு பைக்குள் பத்திரப்படுத்திட்டேன்..ஹி....ஹி

      Delete
  39. /// 'தல' தெற்காலேயோ ; மேற்காலேயோ திரும்பி நின்றபடிக்கே போஸ் கொடுப்பதே வாடிக்கை ! சமீபத்தைய இதழ்களுள் 'சர்வமும் நானே' அட்டைப்படம் தான் இதற்கொரு விதிவிலக்காக இருந்ததாய் ஞாபகம் !///----
    லேட்டஸ்ட்டாக வந்த
    டைனமைட் ஸ்பெசல்லயும் ஒரு மென்னகையோடு தல முகம் மட்டுமே இருக்கும் சார். அதுவும் வித்தியாசமான ஒன்று.

    பச்சை வண்ண முகம் சிலபல மிக்ஸ்ட் ரியாக்ஸன்ஸ் கொணர்ந்தாலும் ,வித்தியாசமான முயற்சி களுக்கு அருமையான முன்னுதாரானம்.


    ReplyDelete
  40. பில்டப்புக்கு ரம்மி அய்யா வோட நடையை ஓசி வாங்கியது செம சார்...!!

    சிரச்சி சரிச்சி வயிறே வலிக்குது!
    புரட்டாசியில ரெஸ்ட்ல இருந்த வயிறுக்கு வேலையை கொடுத்துட்டீங்க...ஹா...ஹா...!!!

    ரம்மியை விட இன்னும் ஒருபடி அதிகப்படியான வீச்சு உங்க நடையில்...!!!

    ReplyDelete
  41. இன்று போல் இனிமையுடனும் ,இளமையுடனும் என்றும் இதே போல் மகிழ்வுடன் வாழ திரு செயலர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்..:-)

    ReplyDelete
    Replies
    1. செயலருக்கு என்னுடைய வாழ்த்துக்களும்🎂🎂🎂💐💐💐💐

      Delete
    2. //இன்று போல் இனிமையுடனும் ,இளமையுடனும் என்றும் இதே போல் மகிழ்வுடன் வாழ திரு செயலர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்..:-)//

      அதே.. அதே... நம் வாழ்த்துக்களும் அதே !

      ஆனாக்கா ஒரு சின்ன டவுட்டு ! இனிமை சரி.. அதென்ன இளமைன்னு இலவச இணைப்பு ?

      கரகாட்டக்காரன் கோவை சரளாவும் செந்திலும் லைட்டா ஞாபகத்துக்கு வர்றாப்டி !

      Delete
    3. ஹீஹீ....எல்லாம் ஒரு விளம்பரம் தான்சா ர்..செயலர் இளமைன்னா அவரை விட சின்னபையன் நான் இளமையின் சிறுவன் என அனைவரும் புரிந்து கொள்வார்கள் அல்லவா..:-)

      Delete
    4. எங்களின் நிரந்தர செயலாளருக்கு நகைச்சுவை செல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

      Delete
  42. Replies
    1. இன்னொரு பத்து வருஷம் ஓடட்டும் சார் !

      Delete
    2. \\\ இன்னொரு பத்து வருஷம் ஓடட்டும் சார் !\\\\

      பத்து வருடம் கழிச்சு மூன்று புக்காக போடம ஒரே புக்காக போடுங்கள் சார்.

      Delete
  43. // தீபாவளிக்கு வெடி வெடிக்கறதுக்கு முன்னமே கையிலே தீபாவளி மலரை ஒப்படைக்கணுமில்லீங்களா ? //
    சார் அந்த அட்டவணை...........

    ReplyDelete
  44. ஞாயிறு அன்றும் கடமையுணர்ச்சியுடன் எஸ்டி கொரியர் அலுவலகத்தில் சார் பார்சல் வந்து இருக்கு ஒரு மணிநேரம் இருப்பேன் வந்து வாங்கி கொள்கிறீர்களா என அழைப்பு வர சார் உங்களை போலவே நானும் ஞாயிறு அன்றும் கடமையுணர்வில் அலுவலகம் கிளம்பி வந்து விட்டேன்.நாளையே வந்து வாங்கி கொள்கிறேன் நண்பரே என மகிழ்வும் ,ஏக்கமும் ஒரு சேர உணர்வில் சொல்லி விட்டு..


    நாளை விடியலுக்காக காத்திருக்கிறேன்..!

    ReplyDelete
    Replies
    1. வூட்டுலே இருந்தாக்கா வேலை இன்னும் ஜாஸ்தின்னு ஞாயிற்றுக்கிழமையும் ஆபீசுக்குப் போயிடும் உங்க கடமையுணர்வு புல்லரிக்கப் பண்ணுது தலீவரே !

      Delete
  45. ///'அது வந்துங்கன்னா - கதை ஆரம்பிச்சுப் போட்றப்போவே கார்சனின் நண்பரும், டெக்சின் நண்பரும் ஒண்ணா ஆஜராகுறாப்படி !//.
    ஆரம்பமே அமர்க்களம்😁😁😁😁

    ReplyDelete

  46. // இந்த பின்கர்ட்டன்..பின்கர்ட்டன்ன்னு ஒரு துப்பறியும் ஏஜென்சி இருக்கில்லீங்களா ? அவனுங்க நோகாம நோன்புக்கஞ்சு குடிக்கிறதுக்கோசரம் கார்சனோட நண்பருக்கு தகவல் சொல்லி அனுப்புறாக !///.

    ---பிங்கர்டன் ஆட்களுக்கு தமிழ் தெரிஞ்சா தொங்கிடுவானுக...😁😁😁😁😁

    ReplyDelete

  47. /// 'இன்ன மாதிரி...இன்ன மாதிரி...புதையல் மெக்சிக்கோவிலே இந்த இடத்திலே இருக்குங்கண்ணா ; அதை நீங்க லொங்கு லொங்குன்னு காடு - மேடுன்னு அலைஞ்சு தேடிப் புடிச்சுக் கொண்டு வந்தாக்கா நாங்க ஜிலோன்னு பில்லை போட்டுக் கிழிச்சி முள்ளங்கிப் பத்தையாட்டம் டாலர் நோட்டை வசூலிச்சுப்புடுவோம்லா ?' அப்டின்னு கேக்குறாப்டி !!////----
    லொங்கு லோங்கு....மீண்டும் வெடிச்சிரிப்பு😁😁😁😁

    ReplyDelete
  48. ///கார்சனோட நண்பர் தான் நல்லவரு ; வல்லவரு ; நாடே போட்ற்ரவருன்னு அல்லாத்துக்கும் தெரியுமில்லீங்கள்லண்ணா ? அப்புறம் ஒரு தட்டு நிறைய சுக்கா ரோஸ்ட்டைப் பார்த்தாக்கா டெக்சின் நண்பரையும் எமலோகத்துக்கே கூடக் கூட்டிப்போயிடலாம்னு முக்கு வூட்டு முன்சாமிக்கே தெரியும்ங்கிறப்போ - பின்கர்ட்டன் 'தல'க்குத் தெரியாமப் போகுமா ?///---நையாண்டி தூக்கி அடிச்சாலும் தலயோட தன்மையான உதவும் குணத்தை உரக்கச் சொல்லுது💪💪💪💪

    ReplyDelete
  49. தளத்தின் சுப்ரீம் ஸ்டார் ஈரோடு விஜய் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை உண்மை சுப்ரீம் ஸ்டார் தான். வாங்க கணேஷ் வாங்க ரொம்ப நாள் ஆச்சு உங்களை பார்த்து

      Delete
  50. டெக்ஸின் இந்த அட்டைப்படம் செம மாஸாக உள்ளது சார்..கலக்கல்..

    ReplyDelete

  51. ///ராவுக்குக் கட்டையைக் கிடத்தின பிற்பாடு, கோழி கூவுறச்சே நம்மாளுங்க பயணம் கிளம்பறப்போ ஒரு அம்மணியும் கோர்த்துக்குது !! பின்கர்ட்டன் புள்ளையாண்டான் டாட்டா காட்டிப்புட்டு வூட்டுலே போயி வுட்ட தூக்கத்தைத் தொடரப்போயிடராப்பிடி///

    ---அம்மினியும் கோர்த்துகிது....ஹி..ஹி..வாயெல்லாம் பல்😍😍😍😍

    இப்பலாம் அம்மினிகளோட டெக்ஸ் இணைந்து சாகசம் பண்ணும் கதைகள் தாயகத்தில் அதிகம் வருது.

    ஏதோ பார்த்து நமக்கும் ஓரிருண்டு கண்ணில காட்டுங்க சார்.

    //.பிங்கர்டன் புள்ளையாண்டான்///--- இதை மட்டும் பிங்கர்டன் பார்த்தா ரம்மி+ரம்மியோட நடையை சுட்டவரு இருவரையும் அரிசோனவுல நடத்தியே அவிங்க ஆபீஸ்க்கு கூட்டி போவாங்க!!!😉😉😉😉

    ReplyDelete
  52. ///- நம்மாட்கள் பாப்பா கூடப் பேச்சுக் குடுத்திட்டே எல்லையைக் கடக்குறாப்டி !! மலைமாடு மாதிரி தடித் தடியான மெக்சிகோ காட்டான்கள் புசு புசு மீசையோட ரகளை பண்ண, கார்சனின் நண்பர் 'ஏக் மார் பந்த்ரா துக்கடா' ஆக்கிப்புட்றாக !! இதிலே இன்னா ஸ்பெஷாலிட்டின்னா - கதையோட பெரும் பகுதி டிராவல் பண்றது கதைக்கு அங்க அங்க அவசியமாற மனுஷாளோடே தானேகாண்டி - கார்சனின் நண்பரை வம்படியா முன்னுக்கு கூட்டியாந்து நிக்க பண்றதில்லீங்கோ ///-----

    ம்....ம்...ம்...!!!

    டெக்ஸை கலாய்ப்பு ரம்மிய விட சாஸ்தியா இருக்கு யுவர்ஆனர்.

    ReplyDelete
    Replies
    1. கதை வந்த பிற்பாடு கார்சனின் நண்பரை ஆராதிப்பவரின் அலசலுக்குக் காத்திருங்கோ !

      Delete
    2. சரியா சொன்னீங்க சார்..:-))

      Delete
  53. ///மெக்சிகோவில் ரகளை ; திகுடுமுகுடான ஆக்ஷன் ; இவன் காலை அவன் வாற ; அவன் காலை கார்சனின் நண்பர் வாறன்னு கதை சும்மா டவுன்ஹால் லாலா கடை மைசூர்பாகாட்டம் வழுக்கிட்டு ஓடுறாப்படி !!.////----

    அய்யா சுவீட்டு சுவீட்டு...!!!

    ReplyDelete
  54. ///ஓவியர் ஜோஸ் ஆர்டிஸோட சித்திரங்கள்லே கார்சனின் நண்பர் சித்தே பத்தியத்தில இருக்கும் புள்ளையாண்டானாட்டம் தெரியுறது நெசம் தானுங்கோ ; ஆனாக்கா கொள்ளைவாட்டி இந்த ஸ்டைலைப் பார்த்துப் பழகிப் போயிட்டதாலே வித்தியாசமா ஏதும் தெரிலேண்ணா !///-----

    ரொம்ப பத்தியம் இருந்திட்டாங்களோ, மெச்சிகோ போர் வழி பூராவும்.😉😉😉

    ReplyDelete
  55. ////ஒரு கட்டத்திலே மல்லாக்கப் போட்ட கரப்பானாட்டம் கார்சனோட நண்பரும் ; கிட் வில்லரோட மாமாவும் பாலைவனத்திலே கட்டப்பட்டுக் கிடக்க - இங்கனக்குள்ள லைட்டா கண்ணுல தண்ணி வந்திடுச்சுன்னா பாத்துக்கோங்களேன் !! ///

    -----உள்ளுக்குள்ள சந்தோச படுவாங்கோ பல ஊர்கள்ல🤗

    ReplyDelete
  56. யோவ்
    போதும்யா....

    காதுலருந்து வடியுது...தக்காளி சட்டினி...

    ReplyDelete
    Replies
    1. சத்தியமா வந்துடுச்சு போதுமையா

      Delete
    2. டைகர் பற்றி பெருமையாக பேசும் போது கண்ணு விரிய பார்த்துட்டே இருக்க வேண்டியது.

      டெக்ஸை பத்தி 4வார்த்தை பேசுனா உடனே ஒண்ணு கூடி சட்னி ஆட்ட வேண்டியது!

      என்ன இது கள்ளாட்டை! இந்த மாசம் பூரா டெக்ஸ் பெரும தான்!

      நாளைக்கு தலைக்கு பொறந்த நாள் வேற!!!! 71வது வருசம். 710கமெண்ட் வருது...😉

      Delete
    3. Tex விஜயராகவன் சார் செம செம்ம

      Delete
    4. நேக்கு காதெல்லாம் வலிக்குது.

      Delete
    5. செத்தான் சேகரு....

      Delete
  57. /// ஒரு மாதிரி தப்பிச்சு அத்தனை கும்பல்களையும் தொம்சம் பண்ணிப்புட்டு, நட்பூஸ் ரெண்டு பேரும் விடை பெறச்சே கதையிலே வர்ற டுவிஸ்ட் இருக்குங்களேண்ணா - மெய்யாலுமே மெர்சலாகப் போறீக ! அதை அலசி ரவுண்ட் கட்ட இன்னும் ஒரு நாலைஞ்சு நாளிலே இங்க வரப் போறீகன்னு என்ர மனசு சொல்லுதுங்கணோய் !! ஒரு திருவிழா வெயிட்டிங்கு !! ///---

    ட்விஸ்டு...ஆக்காங்!

    அண்டர்டேக்கர்க்கு டேக்கா கொடுத்து போன ரோஸ் கணக்கா இருக்குமோ???

    இல்லெ ட்ரெண்டுக்கு அசால்டா அல்வா கொடுத்த ஆக்னெஸ் கணக்கா இருக்குமோ???

    நாமளும் வெயிட்டிங்கு...வெயிட்டிங்கு!!!!

    ReplyDelete
    Replies
    1. அல்லது பௌன்சருக்கு அல்வா கொடுத்த நவோமியோ?

      Delete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. டெக்ஸாலேயே கண்டுபிடிக்க!!!! முடியாத ட்விஸ்ட்டா....

    ReplyDelete
    Replies
    1. கார்சன் ட்விஸ்ட் கண்டுபிடிக்கிறதுக்கு ஃபேமஸாச்சே

      Delete
  60. ஒரு வேளை கெவருமெண்டுகாரங்கே வந்து நாங்கதான் பொதச்சி வச்சோம் குடு...தேங்ஸ் ன்னு வாங்கிட்டு போய்ட்டாங்களோ

    ReplyDelete
    Replies
    1. ஊஹூம் .அப்டிலாம் லேசா யூகிக்க முடியாதுங்கண்ணா !

      Delete
    2. என்னைக்கு தங்கம் பொதச்சு வச்ச இடத்துல பத்திரமா இருந்திருக்கு.....

      Delete
  61. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்.

    ReplyDelete
  62. பொஸ்தவம் மட்டும் சம்முவத்து கைக்கு வரட்டும்.. அப்புறம் இருக்குது செமையான " பில்ட் டவுன்னு"..

    ReplyDelete
    Replies
    1. அதற்காக தானே காத்து இருக்கிறேன்.

      Delete
    2. போமய்யா டெக்ஸ் ஸ்லீப்பரே..:-)

      Delete
    3. பொஸ்த்தவம் வந்த பின்னாடி நானும் "தீபாவளி டெகஸ் சிறப்பு விமர்சனம்" போடலாம்னனு இருக்கேன்.

      Delete
    4. ///போமய்யா டெக்ஸ் ஸ்லீப்பரே///---மான பங்கம்! அட்டகாசம் தலைவரே!

      Delete
    5. நானும் "தீபாவளி டெகஸ் சிறப்பு விமர்சனம்"//

      அட..அட... நீங்களும் ரம்மியும் விமர்சனம் எழுதப் போறத நினைச்சா அவர் ஊத்இவர் வாசிக்கங்கற டயலாக் தான் ஞாபகத்துக்கு வரப் போகுது.

      என்ன எங்க மாதிரி தல ரசிகர்களுக்கு திருப்பி கழுவி ஊத்த மாடஸ்டி புக்கோ டைகர் புக்கோ வருசம் ஒன்னு தான் வருது.

      Delete
  63. சிலபல காரணங்களினால் கடந்த 3,4 மாதங்களாக பல இதழ்களை படிக்க நேரமில்லை! (முடியவில்லை என்பதே சரி, நேரத்தை குறை சொல்வானேன்). அந்த வகையில் கணக்கை நேர் செய்ய பென்டிங் இதழ்களை எல்லாம் படிக்கத் துவங்கியிருக்கிறேன்! இப்போது இப்பதிவை இடக் காரணம் "ட்யூரங்கோ - வதம் செய்ய விரும்பு"!

    ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் டெக்ஸ், டைகரை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டார் இந்த "மௌனப்புயல்" ட்யுராங்கோ!!

    அதிலும் ஓவியங்கள் மிக அற்புதம்! ரொம்ப மசாலாத் தனமாகவும், அதேநேரம் ஆர்ட் பிலிம் போலவும் இல்லாமல் கதை கூறும் பாங்கு நம்மை நன்றாகவே எண்டர்டெய்ன் செய்கிறது!!!

    இந்த மாதிரி கதைகளை நான்ஸ்டாப்பாக படித்துக் கொண்டே விடுமுறை நாட்களை கழிப்பது அலாதியான அனுபவம் தான்!!!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். பல காமிக்ஸ் கொஞ்சம் காபி. நல்ல வசதியான ஒரு சோபா இதற்கு மேலே என்ன வேண்டும் இந்த வாழ்க்கையில்

      Delete
    2. நாயத்துக்கெழம !!!!!!

      Delete
    3. ///பல காமிக்ஸ் கொஞ்சம் காபி. நல்ல வசதியான ஒரு சோபா இதற்கு மேலே என்ன வேண்டும் இந்த வாழ்க்கையில்///

      அய்யய்யோ நாம கிராமத்து ஆளுங்க!! வேப்பமர நிழலும், கவுத்துக் கட்டலும் கொடுக்கற சொகம் வேற எதுலயும் வராதுங்க நண்பரே!!
      வேப்பமர நிழலில், கவுத்து கட்டிலில் படுத்துட்டு, சிலபல பலகாரங்களை உள்ளே தள்ளிட்டு காமிக்ஸ் படிக்கும் சுகம் என்னைக்குமே அலாதியானது தான்!!!

      Delete
    4. டியூராங்கோவை புகழ்ற சாக்குல டெக்ஸையும், டைகரையும் சேர்த்தே வாரிட்டு இருக்காரு! ரெண்டு டைகர் ரசிகரும் கொஞ்சிட்டு இருக்கீங்க! அந்த கட்டிலோட சேர்த்து கீழே சாய்ச்சுட்டு வர்றதுல்ல..!!!

      Delete
    5. நீங்க சொல்றது சரி தான் மிதுன். ஆமா இல்ல எங்க தலைவரை வாரரிங்களா be careful

      Delete
  64. இன்று தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடும் அருமை நண்பர் பெரியவர் ஈரோடு விஜய் அவர்களை வாழ்த்த வயதில்லை, அப்பிடியே மல்லாக்க வுழுந்து கும்புட்டுக்கறேன் சாமியோவ்...

    ReplyDelete
  65. என்னது ஈரோட்டு பெரியார்க்கு பிறந்த நாளா???

    ReplyDelete
  66. Wish you happy birthday erode Vijay sir💐💐🥞🥪🍩🧁🥤🥤

    ReplyDelete
  67. ///ஒரு கட்டத்திலே மல்லாக்கப் போட்ட கரப்பானாட்டம் கார்சனோட நண்பரும் ; கிட் வில்லரோட மாமாவும் பாலைவனத்திலே கட்டப்பட்டுக் கிடக்க - இங்கனக்குள்ள லைட்டா கண்ணுல தண்ணி வந்திடுச்சுன்னா பாத்துக்கோங்களே\\\\\

    டெகஸ் சிங்கத்தை மல்லாக்க படுக்க வைத்து விட்டத்தை தப்பு வானத்தை பார்க்க வைத்த மாதிரி கதை எழுதிய காதாசிரியரை...

    சிங்கமுத்து(lionmuthu) சிங்கங்கள் சார்பாக கடுமையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம்.

    இப்படிக்கு,
    LIONMUTHU "சிங்கங்கள்".

    ReplyDelete
  68. " பில்ட் டவுன்"க்கு மரியாதை செய்யும் விதமாக..
    பாலைவனத்தில் ஒரு கப்பல்..

    இன்னிக்கு காலையிலியே பயங்கரமா போரடிச்சதாலே வேற வழியில்லாமே கைக்கு கிடைச்ச ஏதாச்சும் ஒரு புக்கை எடுத்து படிக்க ஆரம்பிச்சேன்.. புத்தகத்து பேரு வானத்தில் ஒரு சைக்கிளோ , பங்கசரான ஒரு ரயிலோ இல்லை தண்ணியில் ஒரு பஸ்ஸோ அந்த மாரி ஏதோ ஒரு பேரு. பங்சரசாயி நிக்கிற ரயிலை பங்கசர் அடைக்கிறதுக்காக போற சைக்கிள் கடைக்காரரும், அவருடைய காத்து அடிக்கிற பையனும் காணாமே போயிடுறாங்க. இந்த சம்பவம் நடந்து ஒரு அஞ்சாறு மாசம் கழிச்சு சைக்கிள் கடைக்காரரை தெரிஞ்ச பக்கத்தூரு மெக்கானிக் ஒருத்தரு அவரை காணோமேன்னு கண்டுபுடிக்க நெனைக்கிறாப்பில. யாரை அனுப்புலாமுன்னு பார்த்தா உடனே எங்க போயி வம்பிழுக்கலாம்ன்னே சுத்திட்டு இருப்பாலியே நம்ம கார்சனின் நண்பர் , அவருக்கு தந்தி அனுப்புறாப்பில. அப்புறம் என்ன மஞ்ச சொக்காயை பொட்டியிலிருந்து எடுத்து மாட்டிட்டு கெளம்புறாப்பிலே. போறப்ப சிவனேன்னு இருக்கிற நம்மாளையும் சங்ரி டீ டோரான்னு ஒரு சரக்கு இருக்கு, செமையா இருக்கும், வந்தீனா உனக்கும் வாங்கி தாரேன்னு உசுப்பேத்தி கூட்டிட்டு போயிராப்பில. அந்த மெக்கானிக்கு கிட்டே போயி அந்த சைக்கிள் கடைக்காரரை பத்தி விசாரிச்சுட்டு அவரை தேடி கெளம்புறாங்க. போற வழியில ஒரு கிராமம். ஐயா, ஒரு வேலைன்னு போனா என்ன பண்ணனும்?? அந்த வேலைய பார்க்கனும். ஆனா இந்த ஆளு என்ன பண்றாரு?? நேரா அங்கிருக்கிற சாரயக்கடையில போயி லேண்ட் ஆகறாப்பில... இதுல நம்மாளுக்கு வேற பீர் 🍺 வாங்கி தாரேன், நீ சைட் டிஷ் மட்டும் பார்த்துக்கன்னு கடைக்குள்ள கூட்டிட்டு போறாப்பில. அந்த சாராயக்கடையில போயி பீர் கேட்டா கடைக்காரர் இல்லீங்கிறாரு.. சரி சரக்காவது குடுய்யான்னு தகறாரை ஆரம்பிக்கிறாப்பில கார்சனின் நண்பர். கடைக்காரர் குடுத்தாறா?? சரக்கும் இல்லீங்கிறாரு.. ராத்திரி பத்து மணிக்கு மேல பிளாக்கில சரக்கு கெடைக்காத குடிகாரன் மாதிரி டென்சன்ல கை நடுங்க ஆரம்பிக்குது மஞ்ச சட்டைக்கு. உடனே கடைக்காரரை சட்டையை புடுச்சி நீ என்னய்யா இல்லீங்கிறது, நாங்களே எடுத்துக்கிறோம்ன்னு தகறாறு பண்றாப்பில. அப்ப அந்தூரு பெரிய மனுசன் ஒரு ஆளு வந்து மஞ்ச சட்டைகிட்ட இங்க சரக்கு கம்மியாத்தான் இருக்கு.. எங்களுக்கே பத்தாதுன்னு பக்குவமா சொல்றாப்பில.. ஆனா கை நடுக்கத்தில கோவமா இருக்கிற கார்சனின் நண்பர் அந்த பெரிய மனுசனையே போயி சரக்கு ஊத்திட்டு வந்து குடுக்க சொல்லி சண்டையை ஆரம்பிக்கிறாரு.. இருக்கிற எல்லாத்தையும் போட்டு ஒடைச்சு தள்ளிட்டு, வெவரமா சரக்கையும் ரெண்டு கிளாசையும் மட்டும் மிச்சம் வெச்சிருக்காப்பில. சைக்கிள் கடைக்காரரை காணோமே, ரயிலுக்கு பஞ்சர் அடைச்சாங்களா இதெல்லாம் கவலையே இல்லாம கடைசியா சரக்கு அடிச்சுட்டு தான் வேற வேலையே பார்க்கிறாப்பில இந்தாளு.. இந்த மாதிரி மதுப்பிரியரை எல்லாம் நம்பி சைக்கிள் கடைக்காரரை கண்டுபுடிக்கச் சொன்ன அந்த மெக்கானிக்கை என்னங்கிறது???🤦‍♂🤦‍♂ இதிலியே அம்பது பக்கம் போயிடுச்சு.. இன்னும் அந்த சைக்கிள் கடைக்காரரை தேடிட்டு போற வழியில இன்னும் எத்தனை அக்கப் போறுங்கிறங்க.. இன்னொருக்க சொல்றேன்.

    ReplyDelete
    Replies
    1. ரம்மி வர வர உங்க நகைச்சுவை நடை மெருகு எறிகொண்டே போகிறது. I love it. கண்களில் நீர் வர சிரிக்கும் படங்கள் 1000

      Delete
    2. என்னங்க ரம்மி! இப்படி சிரிக்க வச்சிட்டீங்க..சிரிச்சு சிரிச்சு வயுத்து வலி வந்ததுன்னா நீங்கதான் பொறுப்பு.

      Delete
    3. டவுஜர் கதை வர்ட்டும்...நறநற..!

      Delete
    4. ரம்மி சிரிச்சு மாளலை. தண்ணி குடிச்சிட்டு படிச்சு பொறையேறிடுச்சு மீதிக்கதையும் சீக்கிரம் போடுங்க.

      Delete
  69. பிறந்த நாள் வாழ்த்துகள் ஈ.வி.யாரே.!

    ReplyDelete
  70. PHILOSOPHY

    I used to run away from the vicinity as far as my legs can fetch if anybody utter this word.
    But not today .....
    When i tried to understand TRENT i was to some extent disappointed what is in it to pursue.
    LATER when i came across the word existentialism pertaining to TRENT it dawned on me the roots of this series are much deeper than what it appears from the surface ..
    To learn about existentialism one have to read about nihilism ,absurdism ,essentialism,the death of god and many more ..
    Trent has to be looked upon from a different perspective not merely from what it appears to be on naked eyes..
    From the beginning I CONCEIVED the idea the TRENT SERIES would become a disaster –how abysmally foolish i could be ..
    I argued a lot in this blog about a character in the second book of TRENT SERIES and even wrote satirical –if not sarcastic- comments about that particular character and TRENT BEING SECOND FIDDLE to the core of the story ..it was intended by author to be so ..because of the fact the series is about the magic word EXISTENTIALISM .. I REGRET now for writing those comments ...
    This series is supposed to evoke profundus inner thoughts ..
    To know more just read about EXISTENTIALISM ..
    Meanwhile i am ready to welcome another trent in another 24 hours eagerly ..


    ReplyDelete
    Replies
    1. இருந்தும் இல்லாம இருக்கிறதுன்னு நெனைக்கிறேன்.

      நான் ஏற்கனவே நெனச்சிருந்தேன். இப்படியா இருக்குமோன்னு.

      Delete
    2. For my naked eyes itself Trent appears so so good doc. I'll try to read about the things you have quoted. And in a very short span of time Trent has his own share of fans which includes me. Some very senior readers known to me also love Trent much

      Delete
  71. சார் பதினோரூ மணிக்கு டிடிடிசி நண்பர் புத்தகம் வந்தாச்சு வந்தா வாங்கிக்கலாம்னு குரல் தர....பேருர் வாடகைல விரைய...செல் தொலய...அது கூட வருத்தம் தரல...சந்தோசத்த பகிர ஏலலயே என வந்து புத்தகத்த கைப்பற்றி ...பாத்தா...சும்மா ட்ரெண்ட் மேட் பினிஷ் இதுக்காகவே படச்சதப் போல மின்ன...வ ஞ்சம் மறப்பதில்லை நிறத்தை அள்ளித் தெளிக்க நெஞ்சம் மறப்பதில்லைன்னு வருங்காலங்களிலும் பாடத் தயார்னு மனம் நிறைய...டெக்ஸ் அட்டை பச்சை நீலம் நீர் என மனதைக் கரைக்க எந்த அட்ட பெஸ்ட்னு சத்தியமா தெர்ல முதன் முறையா....செனவ கூப்டு ஊர்வசி ...மேனகயா மின்னும் புத்தக கைல தீபாவளி மலரக் குடுத்து ஆட விடனுமோ...இன்னிக்கே ஜாலிலோ ஜிம்கானா படச்ச காமிக்ஸ் கடவுளுக்கும் செந்தூர் கொண்ட வேலவனுக்கும்நன்றி...டிடிசிக்கும்தா கும்த்தலக்கடி கும்மா...நன்றி...கோயமுத்தூரிலிருந்து

    ReplyDelete
    Replies
    1. நாந்தே...முதல் புக்க வாங்குனதோ

      Delete
    2. செல் எப்டி திரும்ப கெடச்சது....

      Delete
    3. நீங்களே தான் claw

      Delete
  72. பொஸ்தகம் காத்தாலயே வந்துடுச்சாமா.. கெரகம்.. நாந்தேன் கண்ணுல பாக்க குடுப்பினை இல்லாம வெளீல சுத்திக்கிட்டு திரியறேன்.!!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு புத்தகம் நாளைக்கு தான் கிடைக்கும். ஆனால் இன்றே ஊருக்கு கிளம்பி விட்டேன். 😭மீண்டும் அடுத்த ஞாயிறு தான்.

      Delete
  73. தளத்தின் இளைய தளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  74. Trent அட்டைப்படம் ஜொலிக்கிறது. இந்த மாதம் அட்டைப்படத்தில் அது தான் நம்பர் 1 போல.

    ReplyDelete
  75. 191 குமார் சார் வாங்க

    ReplyDelete
    Replies
    1. வந்துட்டேன் பாலன் சார்.

      Delete
  76. 200 தொட்டு விட்டோம் வழக்கம் போல் ஒரே நாளில் 200 பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. டைகர் ரசிகர்களை விஞ்ச முடியுமா??? சமர்த்து!

      Delete
    2. பொறாமை பொறாமை

      Delete
  77. சார் தீபாவளி அன்று அட்டவணை வெளியீடு ? இதற்கு மட்டும் பதில் பிளீஸ்

    ReplyDelete
  78. எடிட்டர் சார் ஒரு suggestion இந்த முறை சந்தா A வில் அனைத்து கதைகளையும் one shots ஆக போட்டால் எப்படி இருக்கும்.

    ReplyDelete