Saturday, September 14, 2019

பில்டப்கள் ஓய்வதில்லை !

நண்பர்களே,

வணக்கம். “ஒழுங்கா சாப்ட்ரு...… இல்லாங்காட்டி பூச்சாண்டி மாமாகிட்டே புடிச்சிக் குடுத்திடுவேன் !” என்று மழலைகளை மிரட்டிச் சோறூட்டுவது வீட்டுக்கு வீடு வாடிக்கை தானே ? தலையில் ஒரு போர்வையைச் சாத்திக் கொண்டு ஜன்னல் வழியே “பூபூபூபூ” என்று வீட்டிலுள்ள ஆண்கள் பூச்சாண்டி வேஷம் போட முனைவதுமே அந்த விளையாட்டின் ஒரு அங்கம் தானே  ? அதே மழலை கொஞ்சம் வளர்ந்த பிற்பாடு “பூபூபூபூ” எனும் பூச்சாண்டி மாமாவைப் பார்த்துப் பயப்படாமல் ‘கெக்கே பிக்கே‘ என்று சிரிக்கத் தொடங்குவதும் வாடிக்கை தானே ? (போர்வை மூடாத அசல் முகரையையே நாள் முழுக்கப் பார்த்தாச்சு… இதென்ன ஜுஜுப்பி? என்ற சிரிப்பாக இருக்குமோ??) அதே பாணி தான் நமது கி.நா. சமாச்சாரத்திலும் என்பேன் ! "கிராபிக் நாவல் வருது… பதுங்கிக்கோங்க !!" என்று பயம் காட்டாத குறையாய் ஆரம்ப நாட்களில் வலம் வந்தன சிலபல அழுகாச்சி கிராபிக் நாவல்கள் ! வந்த வேகத்துக்கே உங்களில் பலரும் தெறித்து ஓடிட – கொஞ்ச காலத்துக்கு அடக்கி வாசிக்க நேரிட்டது ! அப்பாலிக்கா கொஞ்சமாய் better ஆன கதைத் தேர்வுகளோடு கி.நா.க்கள் களமிறங்கிட “ஆ… இது தேவலாமே?! என்ற ரீதியில் நீங்களும் ஏற்றுக் கொள்ள துவங்க “கி.நா.” பூச்சாண்டி போயே போச்சு ! இன்றைக்கு நம் மத்தியில் ஆவலாய் எதிர்பார்க்கப்படும் ஜானர்களுள் “கி.நா.”க்களும் ஒன்றெனும் போது வாசிப்புகளின் விசாலத்துக்கு பெரியதொரு thumbs up தந்த உணர்வு மேலோங்குகிறது !

“சரி… இந்த பில்டப்பெல்லாம் எதுக்குடா அம்பி ?” என்ற கேள்வியா உங்களிடம் ? காத்திருக்கும் அக்டோபரில் ஒரு செம மாறுபட்ட கி.நா. காத்திருப்பதே காரணம் ! “வஞ்சம் மறப்பதில்லை”….! இந்தாண்டின் அட்டவணையை தயார் செய்த போதே இந்த இதழுக்கு ஒரு early slot தந்திட ரொம்பவே ஆசையிருந்தது எனக்கு ! ஆனால் ஜனவரியில் பராகுடாவும், தோர்கலின் “சிகரங்களின் சாம்ராட்”டும் டாப் கியரைப் போட்டுத் தாக்கியிருக்க – பராகுடாவின் பாகம் 2-ஐ சீக்கிரமே களமிறக்கும் கட்டாயம் எழுந்து விட்டது ! ‘இந்தா…. அந்தா‘ என்று ஒரு மாதிரியாய் அக்டோபரே ‘வ.ம.‘ இதழுக்கான ஜாகை என்றாகிப் போனது ! அதன் preview பற்றிய பார்வைக்குள் குதிப்பதற்கு முன்பாய் ரொம்ப காலத்துக்கு முன்னே இங்கே நடந்ததொரு அலசலுக்குப் புதுசாயொரு perspective தந்திட முயற்சிப்போமா ?

கிராபிக் நாவல் என்றால் என்ன ? வழக்கமான காமிக்ஸ்க்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ? என்ற கேள்வி தான் இந்த வார ஞாயிறை ஓட்ட நமக்கு உதவிட உள்ள தலைப்பானது ! (சந்திரமுகியில் வடிவேலு : "பேய் இருக்கா இல்லியாப்பா ? நம்பலாமா ? கூடாதா ?" என்று கேட்கும் அதே மாடுலேஷனில் இதையும் கேட்டுப் பாருங்களேன் !!

எப்போதும் போலவே நேராய் திருவாளர் கூகுளை தேடிப் போய், விக்கிப்பீடியாவைப் புரட்டிப் பார்த்தேன் ! அங்கே வாசிக்க முடிந்தது பின்வருமாறு : 

“காமிக்ஸ் ஆக்கங்கள் கொண்டதொரு புத்தகத்துக்கே கிராபிக் நாவல் என்று பெயர் ! “நாவல்” என்ற வார்த்தை நீண்ட, நெடிய கற்பனைப் புனைவுகளைக் குறிப்பிடப் பயன்படும் வார்த்தை என்ற போதிலும் – “கிராபிக் நாவல்” என்பது கற்பனைகள் ; நிஜங்கள் ; சுயசரிதை போன்ற படைப்புகளின் காமிக்ஸ் வடிவங்களை உணர்த்திடுகிறது! ஒரு காமிக்ஸ் இதழ் என்பது பொதுவாய் வாராந்திர / மாதாந்திர வெளியீடுகளைச் சுட்டிக்காட்டிடும். கிராபிக் நாவல்கள் அவற்றிலிருந்து வித்தியாசப்பட்டு நிற்பவை.”

"கி.நா" என்ற இந்தப் புதிரான வார்த்தையை உருவாக்கிய புண்ணியம் ஒரு காமிக்ஸ் ஆர்வலரான ரிச்சர்ட் கைலைச் சாருமாம் ! 1964-ல் ஒரு காமிக்ஸ் ஆய்வுக் கட்டுரையில் மனுஷன் இந்த வார்த்தையை பிரயோகித்துள்ளார் ! அப்புறம் செம popular படைப்பாளியான வில் ஐஸ்னர் 1978-ல் “கடவுளோடு ஒரு கான்ட்ராக்ட்” (பெயரைச் சுட்ருவோமா ?) என்ற பெயரிலொரு சீரியஸ் ரகப் படைப்பை உருவாக்கிய வேளையில் அதனையும் பத்தோடு பதினொன்றாய் “காமிக்ஸ்” என்றே விளிக்காது – “கிராபிக் நாவல்” என்று விளம்பரப்படுத்தியுள்ளனர் ! 1982-ல் அமெரிக்காவின் மார்வெல் காமிக்ஸ் “கிராபிக் நாவல் வரிசை” என்றொரு துவக்கத்தைத் தந்திட ‘கி.நா.‘ வண்டி ஓடத் துவங்கியிருக்கிறது ! ஒரு காலகட்டத்தில் விற்பனைகளுக்கு உதவிட இந்த “கி.நா.” விவரிப்பைப் பதிப்பகங்களும்; புத்தக விற்பனையாளர்களும் கையில் எடுத்துள்ளனர் ! “அட… இது அந்த காமிக்ஸ் பொம்மை புக்கு தானே ? என்று பல்லைக் காட்டக் கூடிய வாசகர்களையும் கவர்ந்திழுக்க கெத்தாக “கிராபிக் நாவல்கள்” என்று அடைமொழி தந்திடும் பழக்கம் ஆரம்பம் கண்டிருக்கிறது ! விக்கிப்பீடியாவில் மூழ்கிப் பார்த்தால் கிறுகிறுக்கச் செய்யும் stats ; தகவல்கள் என்று எக்கச்சக்கமாய் இறைந்து கிடக்கின்றன ! இதில் கூத்து என்னவென்றால் “கிராபிக் நாவல்” என்ற வார்த்தையின் பொருள் தேசத்துக்கு தேசம் ; மார்கெட்டுக்கு மார்கெட் மாறுபடுகிறது !! ஒரு கட்டத்தில் தங்களது மாமூலான 32 பக்க format-க்கு பெரிதான சகல காமிக்ஸ் படைப்புகளையும் “கிராபிக் நாவல்கள்” என்று முத்திரை குத்தவும் செய்துள்ளார்கள் ! அப்படிப் பார்த்தால் இங்கிலீஷில் அமெரிக்காவில் வெளியாகும் 48 பக்க ஸ்மர்ஃப் இதழ்கள் கூட கி.நா.க்கள் தான் !!! ‘சிவனே‘ என்று நாமுமே அந்த ஃபார்முலாவைக் கையிலெடுத்து – இந்த நீலப் பொடியர்களை கார்ட்டூன் சந்தாக்குள் நுழைத்திடாது – கிராபிக் நாவல் சந்தாக்களுள் புகுத்தியிருக்கணுமோ? “டாக்டர் ஸ்மர்ஃப்” என்று பெயர் வைக்காமல் - “ஒரு ஊதாப் படலம்” இல்லாங்காட்டி “நீல உலகில் நீங்கா ரணம்” என்கிற மாதிரி டெரரான தலைப்புகளோடு உலக விட்டிருந்தால் இவை ஹிட்டடித்திருக்குமோ ? ச்சை... தெரியாமல் போச்சே!!

அதே போல – எங்கோ வாசித்ததில் – ஹார்ட்கவரில் வெளிவரும் காமிக்ஸ் இதழ்களுக்கு “கிராபிக் நாவல்கள்” என்று பெயர் என்பது மாதிரியொரு வர்ணனையும் இருந்தது! ஹிஹிஹி… என்று சிரித்துக் கொண்டேன் ; because அந்த இலக்கணத்தை நமக்குப் பொருத்திப் பார்க்கும் பட்சத்தில் ‘லக்கி லூக் ஆண்டு மலர்‘ கூட செம கிராபிக் நாவலாக qualify ஆகிடும் !! So அடுத்தவாட்டி டால்டன்களை ராப்பரில் போட்டு “வன்மேற்கின் அசுரர்கள்” என்ற பெயரைத் தந்திடணுமோ ?

ஐரோப்பாவில் பதிப்பகங்கள் இந்த வார்த்தை விளையாட்டுக்களை அத்தனை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும் ! நாம் முன்பெல்லாம் ”முழு நீளச் சித்திரக்கதை” என்று போடுவதைப் போலவே sober ஆன விவரிப்புகள் தான் பயன்பாட்டில் உள்ளன ! பிரெஞ்சில் Bandes dessinees (வரையப்பட்ட பக்கங்கள் என்ற மாதிரியே பொருள்) ; டச் மொழியில் stripverhaal (தொடர் கட்டங்களில் சொல்லப்படும் கதை) ; ஸ்காண்டிநேவியாவில் tegaeserie (படக்கதைத் தொடர்கள்) என்ற ரீதியிலேயே சொல்கிறார்கள் ! அழுத்தமான கதைக்களங்களை "கிராபிக் நாவல்கள்" என்பதும், இன்ன பிறவற்றை  “காமிக்ஸ்” என்றும் விவரிப்பது லாஜிக்காகத் தென்படுகிறது தானே ?

நம்மைப் பொறுத்தவரை மூக்கை நேராய்த் தொட்டால் “காமிக்ஸ்”; உசிலம்பட்டி வரை பயணம் செய்து தொட முனைந்தால் “கிராபிக் நாவல்” என்று துவக்கத்தில் சொல்லி வந்தோம் ! அதற்கு வலு சேர்ப்பது போல “தேவ இரகசியம் தேடலுக்கல்ல” ; “கனவுகளின் கதையிது” போன்ற சில non-linear கதைகளும் வெளிவந்தன தான் ! ஆனால் இன்றைக்கோ பராகுடாவின் “அலைகடலின் அசுரர்களை”யும்; தோர்கலின் சிகரங்களின் சாம்ராட்டையுமே “கி.நா.” – என்று சொல்ல சாத்தியமாகிறது ! காலத்தின் ஓட்டத்தோடு ; ரசனைகளின் மாற்றங்களோடு சிலபல இலக்கணங்களுமே மாறிடுமோ ? முற்றிலும் வித்தியாசமான கதைக்களங்கள் ; சற்றே adult natured களங்கள் ; தறிகெட்டுப் பாயும் கற்பனைகள் என இவை சகலமுமே இப்போது நம் பார்வைகளில் கி.நா.க்களின் அடையாளங்கள் தானே ? அதே போல மணிரத்னம் படத்து இருளில் வெளிவரும் “நிஜங்களின் நிசப்தம்”; “என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்” ; “இருளின் ராஜ்யத்தில்” போன்ற படைப்புகளுமே கி.நா.க்கள் தானே?
அந்தப் பார்வைக்கோணத்தின் பலனே “வஞ்சம் மறப்பதில்லை” இதழை கிராபிக் நாவலாக வகைப்படுத்திடும் முயற்சியே! In a nutshell – செம நேர்கோட்டுக் கதைகள் தான் “வஞ்சம் மறப்பதில்லை” ஆல்பத்தில் இடம்பிடித்திருப்பவை ! ஆனால் அதைச் சொல்லியுள்ள விதத்தில் ; அழுத்தத்தில் ; வீரியத்தில் ; பாணியில், செம வித்தியாசமிருக்கும் ! ஜேம்ஸ் பாண்ட் சமீப புதுப்பாணியில் violence சீன்கள் மிரட்டலாய் இருந்தன என்றால் - இதிலோ முற்றிலும் வேறொரு லெவல் ! அதே போல ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் நம்மவர்கள் எதைத் தேடி பல்பு வாங்கினார்களோ – அவையெல்லாம் இங்கே in abundance !! 😉 அதே போல நடப்புக்கும் ; ப்ளாஷ்பேக் நிகழ்வுகளுக்குமிடையே கதையை நகற்றிச் செல்வது ரொம்பவே கவனமான வாசிப்பைக் கோரிடவுள்ளதொரு சமாச்சாரம் ! மேற்படி காரணங்களின் பொருட்டே இந்த இதழை கிராபிக் நாவல் சந்தாவினுள் நுழைத்துள்ளோம் ! And இதில் மிகப் பெரிய ஆச்சர்யம் என்னவெனில் இது ஒரு காலத்தில் இங்கிலாந்தில் உருவான சாகஸம் என்பதே ! பொதுவாய் ரொம்பவே sober ஆன ; ஜனரஞ்சகமான கதைக்களமாய் அறியப்படும் பிரிட்டனில் இப்படியொரு படைப்பை எதிர்பார்ப்பது a surprise of sorts தான் ! அப்புறம் அந்தச் சித்திரங்கள் !!! பாருங்களேன்!
வழக்கமாய் கறுப்பில் கோட்டு ஓவியங்களாய்ப் பக்கங்களை வரைந்த பிற்பாடு டிஜிட்டலில் வர்ணச் சேர்க்கைகள் செய்வதே வாடிக்கை! ஆனால் இங்கேயோ ஒவ்வொரு பக்கத்தையுமே ஒரு பெயிண்டிங் போல முழுவண்ணத்திலேயே உருவாக்கியுள்ளனர்! இந்த பாணிக்கு நாம் புதியவர்களல்ல தான்; “தேவ இரகசியம் தேடலுக்கல்ல” இதை நமக்கு highlight செய்துள்ளது! இதுவும் அதே பாணி; அதே தரம்!!
சித்திரங்கள் மட்டுமன்றி இந்த ஆல்பத்துக்கான ஸ்க்ரிப்டுமே செம தெறி ! வழக்கமாய் பிரஞ்சிலிருந்து; இத்தாலிய பாஷையிலிருந்து என மொழிமாற்றம் கண்ட ஆங்கில ஸ்க்ரிப்டைக் கையில் ஏந்திக் கொண்டு மொழிபெயர்ப்பு மல்யுத்தம் அரங்கேறுவதுண்டு ! ஆனால் இது இங்கிலாந்தில் உருவானதே எனும் போது ஆங்கிலத்தில், படைப்பாளிகளின் நேரடி ஸ்க்ரிப்ட் சாத்தியமானது! படிக்கும் போதே செம ஸ்டைலிஷாகத் தென்பட்டதை எழுத ஆரம்பித்த போது தான் கதாசிரியரின் ஆற்றல் முழுமையாய்ப் புரிந்தது ! சில ஆல்பங்களில் பணியாற்றும் போது வார்த்தைகளுக்குத் தடுமாறுவதுண்டு தான்; இங்கே அந்த சிரமமெலாம் எழவேயில்லை! கதாசிரியரின் ஸ்கிரிப்ட் என் கையைப் பிடித்து இழுத்துப் போனது போலவே உணர முடிந்ததால் எழுதுவதில் மொக்கை தோன்றவில்லை! ஆனால் சமீபத்தில் பணியாற்றிய சவாலான பணிகளுள் இதுவும் ஒன்றாய் அமைந்திருந்தது !

So இது தான் அக்டோபர் கிராபிக் நாவலின் பில்டப் படலம் ! பொதுவாய்க் கட்டும் கட்டிடங்கள் எல்லாமே துபாயின் புர்ஜ் கலீபா ரேஞ்சுக்கு நெடிதுயர்ந்து நிற்குமென்பதே எனது கற்பனையாக இருந்திடும் ! அதில் ஏதேனும் டுபுக்காகிப் போய் மௌலிவாக்கத்தின் சரிந்த அபார்ட்மெண்டாகவும் அமைவதுண்டு தான் ! அது போன்ற வேளைகளில், தந்த பில்டப்பெல்லாம் முகரை முழுக்க அழுகிய முட்டையாய் வடிந்து ஓடுவது போல் feel ஆவது வாடிக்கையே ! சமீபமாய்க் கூட ஜான் கார்ட்லாண்ட் ;  “நீரில்லை… நிலமில்லை” இதழ்களுக்கு பில்டப் தந்த பிற்பாடு ஹி…ஹி…ஹி… என்று பல்லைக் காட்ட நேர்ந்தது நினைவுள்ளது ! ஆனால் நாம் பார்க்காத முட்டுச் சந்துகளா ? நாம் வாங்காத சாத்துக்களா ? இதுக்கெல்லாம் பயந்தால் வண்டி ஓட்டத்தான் முடியுமா ? So 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ' ஒரு முழுநீள பில்படப்போடு இந்த கிராபிக் நாவல் சீக்கிரமே உங்களைச் சந்திக்கவுள்ளது ! ‘ஹிட்‘ ஆகி கபாலத்தைக் காப்பாற்றிட கடவுள் ஆசீர்வதிப்பாராக !

இந்த வாரம் பின்னனூட்டங்களில் பதிலளிக்க உங்களுக்கான (நேரமிருக்கக்கூடியோருக்கு) எனது கேள்விகள் இதோ folks :

1. உங்கள் பார்வையில் கி.நா. எது? காமிக்ஸ் எது? இரண்டையும் வேறுபடுத்திடும் கோடு எது? ஒற்றை வரியில் ப்ளீஸ்!

2. இதுவரையிலான நமது வரிசையில் டாப் கிராபிக் நாவல் என்று ஏதாச்சும் ஒன்றைத் தேர்வு செய்வதாயின் – what would be your choice?

3. ‘மாற்றம்… முன்னேற்றம் ! என்று பல்ப் வாங்கிடும் ஆட்டமெல்லாம் நமக்கு கிடையாது ! மாறாக – இந்த மாற்றம் கொண்ட களங்கள் பக்கமான பயணம் ஓ.கே. தான் என்பீர்களா ? அல்லது சாதா ஆணிகளாகவே பிடுங்குவதே (comics) ஆரோக்கியத்துக்கு நல்லதென்பீர்களா ?

4. சிறுகச் சிறுக adult content அதிகமாகிப் போவது இந்தப் பரீட்சார்த்தக் களங்களின் கிளைக்கதையாகிடுகிறது! எத்தனை முயற்சித்தாலும் அதனைத் தவிர்ப்பது முழுமையாய் சாத்தியம் காண்பதில்லை! இது குறித்த நெருடல்கள் அவ்வப்போது எனக்குண்டு தான் ; ஆனால் மருத்துவத்தில் effect முக்கியமா ? side effects முக்கியமா ? என்ற கேள்வியை அணுகுவது போலவே இதைப் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்கிறேன் ! இது பற்றிய உங்களது பார்வைகள் ப்ளீஸ் – Again very crisply ப்ளீஸ் ?

இந்தாண்டின் (இதுவரையிலான) சூப்பர்ஹிட்டான “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” கூட adult content சகிதமிருந்ததால் தான் 3.5 ஆண்டுத் தயக்கத்துக்குப் பிற்பாடு நம் கரைகளில் ஒதுங்க நேரிட்டது! இன்றைய ‘தில்‘ முன்னமே கொஞ்சமாச்சும் இருந்திருந்தால் இந்த ஆல்பம் 2016-ல் வெளியாகியிருக்க வேண்டும் !

அப்புறம் 2020-ன் அட்டவணையின் கடைசிப் பெட்டிகளை tick செய்யும் முனைப்பில் வாசிப்புகளும், உருட்டல்களும் உச்சஸ்தாயில் உள்ளன guys ! And அதன் பலனாய் “பி.பி.வி.” பாணியிலொரு செம சுவாரஸ்ய one-shot கண்ணில் பட்டுள்ளது ! Very very early days yet ; கதையினை வரவழைத்து, நமது மொழிபெயர்ப்பாளரைப் படித்துப் பார்க்கச் செய்து, பரிசீலிக்க வேண்டும் தான் ! ஆனால் எனது gut feel மட்டும் சரியாக இருக்கும் பட்சத்தில் இன்னொரு ரகளையான அனுபவம் நமக்கு வெயிட்டிங் என்று மட்டும் இப்போதைக்குச் சொல்வேன் !

 Bye all! See you around! Have a rocking weekend !

211 comments:

  1. அடடே,இரண்டாவது....

    ReplyDelete
  2. இங்கே தான் இருக்கனுங்

    ReplyDelete
  3. பதிவு வேகமா படிச்சு முடிச்சுட்டா மாதிரி ஒரு பீலிங். டேலஸ் வரைக்கும் பயணம். போயிட்டு வந்து மதியம் சிக்கன் பிரியாணியை ஒரு கட்டு கட்டிட்டு பதில் போட வேண்டியது தான்.

    ReplyDelete
    Replies
    1. சனி கிழமை! சி.பிரியாணியா...!!!!
      ஓவ்..! புனித மணிடோவே..!!!

      Delete
    2. எல்லா நாளும் இறைவன் படைத்தது. அதனால் எதையும் வேறுபடுத்துவதில்லை. 🤣🤣🤣

      Delete
    3. நீங்க சொன்னது சரியே ஷெரீஃப். நானும் அப்படித்தான்.

      Delete
    4. நானும் அப்படியே ஷெரீப்..ஆனா வீடல வார செலவு மீதின்னு நான் விரதத்தை மிக கடுமையாக கடைபிடிப்பேன்..:-)

      Delete
  4. அட! எதிர்பார்காத பதிவு!!!.

    ReplyDelete
  5. ஹேப்பி வீக் எண்ட் டூ கி.நா.காதலர்ஸ்! & காமிக்ஸ் ரசிகர்ஸ்!

    ReplyDelete
  6. நீரில்லை நிலமில்லை இன்னும் படித்து முடிக்க இயலவில்லை. ரொம்பவும் சோதிக்கிறது.

    கிராபிக் நாவலுக்கும் காமிக்ஸ்க்கும் எனக்கு வித்தியாசம் எதுவும் தெரியமாட்டேன் என்கிறது. இருட்டாக இருந்தால் கிராபிக் என்று வகைப்படுத்திக் கொள்கிறேன்.
    கார்ட்டூனுக்கும் காமிக்ஸ்க்கும் வித்தியாசம். மட்டுமே புரிகிறது.

    ReplyDelete
  7. பதிவு தான். சரி. ஆனா என்னமோ மிஸ் ஆன மாதிரி ஒரு ஃபீலிங். (எனக்கு மட்டும்தானா) ஒரு வேளை சனிக்கிழமை முன்இரவிலேயே பதிவு வந்ததாலா?

    ReplyDelete
  8. // 1. உங்கள் பார்வையில் கி.நா. எது? காமிக்ஸ் எது? இரண்டையும் வேறுபடுத்திடும் கோடு எது? ஒற்றை வரியில் ப்ளீஸ்! //
    கி.நா-மூளைக்கு வேலை கொடுப்பது,
    காமிக்ஸ்-பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் அளிப்பது.

    வேறுபடுத்தும் கோடு,
    கி.நா-சுத்திவளைச்சி மூக்கை தொடுவது,
    காமிக்ஸ்-நேரடியாக மூக்கை தொடுவது.
    இப்ப இதான் தோணுச்சி,ஹி,ஹி.....

    ReplyDelete
    Replies
    1. // 2. இதுவரையிலான நமது வரிசையில் டாப் கிராபிக் நாவல் என்று ஏதாச்சும் ஒன்றைத் தேர்வு செய்வதாயின் – what would be your choice? //
      இதற்கு பதில் சொல்வது மிகக் கடினமான செயல்,ஏனெனில் பெரும்பாலான கி.நா ஏதாவது ஒரு வகையில் சிறப்பம்சங்களைக் கொண்டே வந்துள்ளது.....

      Delete
    2. // 3. ‘மாற்றம்… முன்னேற்றம் ! என்று பல்ப் வாங்கிடும் ஆட்டமெல்லாம் நமக்கு கிடையாது ! மாறாக – இந்த மாற்றம் கொண்ட களங்கள் பக்கமான பயணம் ஓ.கே. தான் என்பீர்களா ? அல்லது சாதா ஆணிகளாகவே பிடுங்குவதே (comics) ஆரோக்கியத்துக்கு நல்லதென்பீர்களா ? //
      கால ஓட்டத்திற்கு ஏற்ப மாற்றங்கள் அவசியமே,அதனால் அவ்வப்போது ஸ்பெஷல் ஆணிகளையும் பிடுங்கலாம் சார் தவறில்லை......

      Delete
    3. // 4.சிறுகச் சிறுக adult content அதிகமாகிப் போவது இந்தப் பரீட்சார்த்தக் களங்களின் கிளைக்கதையாகிடுகிறது! எத்தனை முயற்சித்தாலும் அதனைத் தவிர்ப்பது முழுமையாய் சாத்தியம் காண்பதில்லை! இது குறித்த நெருடல்கள் அவ்வப்போது எனக்குண்டு தான் ; //
      முடிந்த அளவுக்கு வடிகட்டி கதைக்கு பங்கம் நேராத அளவுக்கு கொடுக்கலாம் சார்,அவசியமான கதைக் களங்களை இந்த ஒரே காரணத்திற்காக இழப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
      18+ என்ற முத்திரையுடன் தேர்ந்தெடுத்த கதைக்களங்களை அளவான பதிப்பில் வெளியிடலாமே சார்.......

      Delete
    4. +1
      நல்லகதையை 18+ என்ற காரணத்திற்காக நிராகரிக்க வேண்டாம். தாழ்மையான வேண்டுகோள்.

      Delete
  9. பி பி வி பாணியிலொரு ஒன்ஷாட் கதை கவ்பாய் கதையா சார்

    ReplyDelete
  10. // And அதன் பலனாய் “பி.பி.வி.” பாணியிலொரு செம சுவாரஸ்ய one-shot கண்ணில் பட்டுள்ளது ! //
    முதல்ல அதை உள்ளே நுழைக்க வழியைப் பாருங்கள் சார்.....

    ReplyDelete
  11. In my point of understanding

    Graphics novel is take time to understand

    Comics is easy reading

    Yearly three Graphics novels are comfortable to all

    Barracuda is number one

    ReplyDelete
  12. லக்கிலூக் டெக்ஸ் வில்லர் டைகர் போன்றரெகுலர்ஹீரோஇல்லாமல் வரும் படக்கதை புத்தகம் க்ராபிக்ஸ் நாவல் என்று அன்பு அழைக்கப்படுகிறது. மாறாக இவர்கள் கதைகளே வழக்கமான பாணியில் வராமல் வேறுபாணியில் வந்தால்அந்தக்கதைகளும் கிராபிக் நாவல் என்றேவழங்கப்படும். உதாரணம் லக்கி லூக்கை சுட்டது யார். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  13. தேவ ரகசியம் தே டலுக்கல்ல....!
    இரவே இருளே கொல்லாதே.....போன்றவை எனக்கு பிடித்த கி.நா.க்களாக அமைந்திருந்தன.அதிகம் மண்டை காய வைத்தவை உலக யுத்த .....மற்றும் யுத்த பிண்ணனி கொண்ட கதைகளே..

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் நண்பரே JSK💐💐💐💐💐

      Delete
    2. உங்கள் பதிவை கண்டதும் மிக மகிழ்ச்சி நண்பரே..

      வாழ்த்துகள்..:-)

      Delete
    3. 😍😍😍. வருக...வெல்க.

      Delete
    4. அடடே.!வருக.! வருக.

      Delete
    5. வாங்க சரவண குமார் சார்.வாங்க வாங்க.

      Delete
    6. JSK உங்களுடைய
      பதிவு ஒரு இன்ப அதிர்ச்சியையே ஏற்படுத்தியது என்பதே உண்மை.மிக்க மகிழ்ச்சி.

      Delete
  14. வானமே எங்கள் வீதி...பாதைகளும் பயணங்களும்..விண்ணில் ஒரு வேங்கை எல்லாம்வேற லெவல் சார்.

    ReplyDelete
  15. படித்து விட்டு....

    ReplyDelete
  16. \\\நேர்கோட்டுக் கதைகள் தான் “வஞ்சம் மறப்பதில்லை” ஆல்பத்தில் இடம்பிடித்திருப்பவை ! ///
    அப்படியானால் இது சிறுகதைதைொகுப்பு...?

    ReplyDelete
  17. எச்சூஸ்மீ......! தலைவர் ஸ்பைடரின் கி.நா.ஏதேனும் உண்டா..?

    ReplyDelete
    Replies
    1. தலைவருது எல்லாமே கி.நா க்கள் தானே ஜேஎஸ்கே..!? :-)

      Delete
    2. ///தலைவருது எல்லாமே கி.நா க்கள் தானே///----அல்டிமேட்!

      Delete
  18. எச்சூஸ்மீ......! தலைவர் ஸ்பைடரின் கி.நா.ஏதேனும் உண்டா..?

    ReplyDelete
  19. எச்சூஸ்மீ......! தலைவர் ஸ்பைடரின் கி.நா.ஏதேனும் உண்டா..?

    ReplyDelete
  20. \\\நேர்கோட்டுக் கதைகள் தான் “வஞ்சம் மறப்பதில்லை” ஆல்பத்தில் இடம்பிடித்திருப்பவை ! ///
    அப்படியானால் இது சிறுகதைதைொகுப்பு...?

    ReplyDelete
  21. இது ஒரு கிராபிக் பதிவு என்பதை படித்தவுடன் உணர்ந்து விட்டேன்..:-)

    ReplyDelete
  22. ///இதுவரையிலான நமது வரிசையில் டாப் கிராபிக் நாவல் என்று ஏதாச்சும் ஒன்றைத் தேர்வு செய்வதாயின் – what would be your choice?///

    எமனின் திசை மேற்கு, சிப்பாயின் சுவடுகளில், ரத்தபூமி, தேவரகசியம் தேடலுக்கல்ல.. முதற்கொண்டு.., ஒரு முடியா இரவு, கனவுகளின் கதை, இறந்தகாலம் இறப்பதில்லையைத் தொடர்ந்து சமீபத்திய பிஸ்டலுக்கு பிரியயாவிடை வரை மனதில் இடம்பிடித்த கிநாக்கள் ஏராளம்..!

    ஆனால் ஒன்றே ஒன்று டாப் எது என்று கேட்டால்...

    என்னுடைய டாப் ஒன்...


    இரவே இருளே கொல்லாதே

    ReplyDelete
  23. ///. உங்கள் பார்வையில் கி.நா. எது? காமிக்ஸ் எது? இரண்டையும் வேறுபடுத்திடும் கோடு எது? ஒற்றை வரியில் ப்ளீஸ்!///

    சோ சிம்பிள்..

    கதையில் கதாசிரியர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாய்ண்ட் பாய்ண்டாக நாம் பேசிக்கொண்டால் அது காமிக்ஸ்.!

    கதையில் கதாசிரியருக்கே தெரியாத பாய்ண்ட்ஸையெல்லாம் நாமே கண்டுபிடித்துப் பேசிக்கொண்டால் அது கிராபிக் நாவல்.!

    ReplyDelete
    Replies
    1. கணிப்பு நன்றாக இருக்கிறது.😁😁😁

      Delete
    2. கதையில் கதாசிரியருக்கே தெரியாத பாய்ண்ட்ஸையெல்லாம் நாமே கண்டுபிடித்துப் பேசிக்கொண்டால் அது கிராபிக் நாவல்.!////

      இது கூட கி.நா ஆசிரியருக்கு தெரியாம இருக்கேன்னு சொன்னாலும் அது கி.நா தான்.

      Delete
  24. ///. ‘மாற்றம்… முன்னேற்றம் ! என்று பல்ப் வாங்கிடும் ஆட்டமெல்லாம் நமக்கு கிடையாது ! மாறாக – இந்த மாற்றம் கொண்ட களங்கள் பக்கமான பயணம் ஓ.கே. தான் என்பீர்களா ? அல்லது சாதா ஆணிகளாகவே பிடுங்குவதே (comics) ஆரோக்கியத்துக்கு நல்லதென்பீர்களா ?///

    ரெகுலர் ஆணிகளே போதுமென்று நினைத்திருந்தால் ஒரு பராகுடாவையோ பி.பி.விடையையோ நாம் பார்த்திருக்க முடியாது.!

    எனவே பாதிக்கு சற்று அதிகம் கிட்டத்தட்ட 60 சதவீதம் ரெகுலர் ஆணிகள்..
    பாதிக்கு சற்றுக் குறைவாக கிட்டத்தட்ட 40 சதவீதம் ஷ்பெசல் ஆணிகள் என்று இருத்தல் நலம் சார்.!

    ReplyDelete
  25. 1.கி.நா.:வாழ்வின் ஏதாவது ஒரு கட்டத்தை அப்பட்டமாக விவரிப்பது!

    காமிக்ஸ்: கதைசொல்லியின் கற்பனையில் லயிக்கச் செய்வது!

    2.இரத்த பூமி; எமனின் திசை மேற்கு; கிரீன்மேனர்; தேவரகசியம் தேடலுக்கல்ல; பெளன்சர்; ஜேசன் பிரைஸ்; அண்டர்டேக்கர்; என் சித்தம் சாத்தானுக்கு சொந்தம்; நிஜங்களின் நிசப்தம்; சிகரங்களின் சாம்ராட்; பராகுடா; பிஸ்டலுக்குப் பிரியா விடை!

    3.மாற்றம் ரசிக்கத்தக்கதே! 12 டூ 15%இருக்கும் புதிய முயற்சிகள் 25% ஆக ஆக்கப்படவேணும் என கேட்டு கொள்கிறேன்.

    4.கதைக்கு தேவையெனில் காம்பரமைஸ் வேணாம் என்பதே என் நிலைப்பாடு! படைப்பாளியின் வீச்சை உணரவேண்டும் எனில் கத்திரிக்கு ஓய்வு கொடுப்பதே உத்தமம்! கலாச்சாரம் காக்க கார்டூன்கள் மட்டும் போதுமே!

    ReplyDelete
    Replies
    1. ///2.இரத்த பூமி; எமனின் திசை மேற்கு; கிரீன்மேனர்; தேவரகசியம் தேடலுக்கல்ல; பெளன்சர்; ஜேசன் பிரைஸ்; அண்டர்டேக்கர்; என் சித்தம் சாத்தானுக்கு சொந்தம்; நிஜங்களின் நிசப்தம்; சிகரங்களின் சாம்ராட்; பராகுடா; பிஸ்டலுக்குப் பிரியா விடை///

      சூப்பர்

      Delete
    2. உங்க points 3 and 4 எனக்கு 100% ஓகே. Well said

      Delete
  26. கடினமான கதை களமாக இருந்தால் கிராஃபிக் நாவல். சற்று இலகு வாக இருந்தால் காமிக்ஸ்.

    ReplyDelete
  27. ///
    4. சிறுகச் சிறுக adult content அதிகமாகிப் போவது இந்தப் பரீட்சார்த்தக் களங்களின் கிளைக்கதையாகிடுகிறது! எத்தனை முயற்சித்தாலும் அதனைத் தவிர்ப்பது முழுமையாய் சாத்தியம் காண்பதில்லை! இது குறித்த நெருடல்கள் அவ்வப்போது எனக்குண்டு தான் ; ஆனால் மருத்துவத்தில் effect முக்கியமா ? side effects முக்கியமா ? என்ற கேள்வியை அணுகுவது போலவே இதைப் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்கிறேன் ! இது பற்றிய உங்களது பார்வைகள் ப்ளீஸ் – Again very crisply ப்ளீஸ் ?///

    கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் இடையில் இருப்பது ஒரு மெல்லியக் கோடுதான் என்பார்கள்.!

    நம் கதைகளை வைத்தே கூறவேண்டுமெனில்..


    லேடி S ல் இருந்தது கவர்ச்சி..
    நீ.நிலமில்லையில் இருந்தது ஆபாசம்..!

    நானும் கலாச்சார காவலனோ திரையில் கவர்ச்சியான காட்சிகள் வரும்போது கண்ணைமூடிக்கொள்ளும் நல்லவனோ இல்லைதான்.!

    இருந்தாலும்.. நமது இதழ்களில் அழகை ரசிப்பதோடு நிற்பது நல்லதென்று தோன்றுகிறது சார்.!

    அழகு ஆபாசமாகும் எல்லைக்கோடு எதுவென்று கேட்டால் சத்தியமாக எனக்கும் சொல்லத்தெரியவில்லை சார்.!

    பெரும்பான்மை நண்பர்களின் கருத்துகளுக்கு உடன்படுகிறேன்.!

    ReplyDelete
    Replies
    1. ///அழகு ஆபாசமாகும் எல்லைக்கோடு எதுவென்று கேட்டால் சத்தியமாக எனக்கும் சொல்லத்தெரியவில்லை சார்.!///

      இல்லாத கோட்டை தேடுவானேன்!
      அழகுன்னா அழகு!!
      ஆபாசம்னா ஆபாசம்!!
      அவ்வளவுதான் நண்பரே! ஹிஹி!

      Delete
    2. //அழகு ஆபாசமாகும் எல்லைக்கோடு எதுவென்று கேட்டால் சத்தியமாக எனக்கும் சொல்லத்தெரியவில்லை சார்.!///
      பிஸ்டலுக்கு பிரியாவிடையில் மார்கோ சம்பந்தப்பட்ட ஆபாசமத்தை ஆசிரியர் தவிர்த்து இருக்கலாம். ஆனால் கதையின் அழுத்தம் குறைந்து இருக்கும்.

      மார்கோ காதாபாத்திரத்தின் தன்மையை கோடிட்டு காட்ட அந்த காட்சி அவசியம்.

      அதே போன்ற காட்சி அமைப்பை தொடர்ந்து வைத்து இருந்தால் அது ஆபாசம்.

      Delete
    3. ஆபாசம்னு தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை.கதைக்கு தேவையான விதத்தில் சரியாகத்தான் படைப்பாளிகளால் கையாளப்படுகிறது.ஆனால் அதை எல்லாம் புரிந்து கொள்ளவும்;சரியான திசையில் அணுகவும் நமக்கே சாத்தியம் இல்லாத போது பிறருக்கு விளக்க முயற்சிப்பது எவ்விதம் சாத்தியப்படும்.
      நிலங்களின் நிசப்தம் எத்தனை நபர்களுக்கு புரிந்திருக்கிறது.அந்த கதை குறித்து விரிவாக ஒருவரால் கூட பதிவிட இயலாது என்பதுதானே எதார்த்த நடைமுறை.

      Delete
    4. ////அதை எல்லாம் புரிந்து கொள்ளவும்;சரியான திசையில் அணுகவும் நமக்கே சாத்தியம் இல்லாத போது ////
      தற்போது வரை எனக்கு புரிதலில் எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டது கிடையாது.

      மற்றவர்களுக்கு விளக்கம் கொடுக்க முயன்று நான் தோல்வி அடைந்து இருக்கலாம்.

      Delete
    5. ///அதை எல்லாம் புரிந்து கொள்ளவும்;சரியான திசையில் அணுகவும் நமக்கே சாத்தியம் இல்லாத போது //// தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தவில்லை.என்னை மையப்படுத்தி மட்டுமே எழுதியது.பன்மையில் எழுதியது தவறான புரிதலை ஏற்படுத்தியிருக்கலாம்.மனதார வருந்துகிறேன்.

      Delete
    6. // மற்றவர்களுக்கு விளக்கம் கொடுக்க முயன்று நான் தோல்வி அடைந்து இருக்கலாம். // Correct Ganesh.

      Delete
  28. /// ! And அதன் பலனாய் “பி.பி.வி.” பாணியிலொரு செம சுவாரஸ்ய one-shot கண்ணில் பட்டுள்ளது ///

    முதலில் டிக் அடித்து அட்டவணையில் சேர்த்துவிட்டு அப்புறமாய் வரவழைத்து பரீசீலித்துக்கொள்ளுங்கள் சார்..!:-)

    ReplyDelete
    Replies
    1. இதே இதே தான் நானும் சொன்னேன்

      Delete
  29. வஞ்சம் மறப்பதில்லை..

    அடேங்கப்பா..!

    ReplyDelete
    Replies
    1. Yes அட்டை படம் அட்டகாசம். அது மட்டுமில்லாமல் இந்த கதையை போன வருடம் ஆசிரியர் அட்டவணை வெளியிட்ட போதில் இருந்தே எதிர்பார்க்கிறேன். தெறிக்கும் ஆக்சன். இன்னும் இரண்டே வாரங்கள் தான். தெறிக்க விடலாமா

      Delete
  30. கேள்வி 1 .
    பூவும் புயிப்பமும் கதைதான் ..

    சித்திரக்கதைங்கறது - காமிக்சோ ,கிராபிக் நாவலோ ,மங்காவோ தண்ணி மாதிரிதான் ...எதுல ஊத்துறமோ குடமோ ,குடுவையோ ,டெஸ்ட் டியூபோ தேக்சாவோ , ஓல்ட் மன்க் பாட்டிலோ ,உரலோ அந்த அந்த வடிவத்தை எடுத்துக்குற மாதிரி நம்மளே பேரு வச்சுக்க வேண்டியதுதான் ..
    படிக்க சொகமா ,வித்து தீர்ந்தா செரிதேன்

    கேள்வி 2
    நிஜங்களின் நிசப்தம்தான் ..வேறென்ன ??/
    ரேசில பாஞ்சு ஓடுற குருதை ..ரொம்ப பக்கத்துல கண்ணுக்கு எட்டுற மாதிரி பின்னாடி யாரையும் –எதையும் காணோம் .. .

    கேள்வி 3
    நேசமணி ஆணி நல்லாத்தான் இருக்கு ..யோகிபாபு ஸ்க்ரூவும் இருக்கலாம் ..
    மாடு கட்டி எல்லாரும் போரடிச்சப்போ ஆனை கட்டி போரடிச்சவங்களும் இருக்கத்தானே செஞ்சாங்க
    கடப்பாரை இருக்கட்டும் ..ஜேஸிபி –ம் உபயோகப்படத்தான் செய்கிறது .

    கேள்வி 4
    அடல்ட் கன்டன்ட் என SEGREGATE செய்வது அவசியம் ..
    மற்றபடி இதெல்லாம் பெரும்பாலோருக்கு ஒரு பொருட்டில்லை என்றே தோன்றுகிறது ..
    ட்யுரங்கோ ஆல்பத்தில் மூன்றாவது கதையாக வந்த ஒரு கதையில் PRETEEN ABUSE சப்ஜெக்ட் வந்ததில் எனக்கு உடன்பாடில்லை ..கதையில் அல்ல ஆட்சேபம் ..ஒரு ஆல்பத்தில் இடம் பிடித்ததுதான்
    அடல்ட் கன்டென்ட் என முத்திரை குத்தி வரும் கதைகள் எப்படி இருப்பினும் கவலையில்லை ..PROVIDED THE SCRIPT OR THE SKETCHES ARE INTEGRAL PART OF THE STORY ..
    சிறுவயதினர் ,மாணவர்கள் ,கல்லூரி மாணவர்கள் இவர்களிடம் இருந்து விலக்கி வைக்கலாம் ..
    மட்டன் கட்லெட் ஆறுமாத குழந்தை சாப்பிடக்கூடாது என்பதற்காக நாமும் சாப்பிடாமல் இருக்கிறோமா என்ன ?




    ReplyDelete
  31. டாப் கிராபிக் நாவல்!

    இதுவரை நான் படித்த காமிக்ஸ்களில் முதல் மற்றும் ஒரே இடம்!

    "நிஜங்களின் நிசப்தம்" மட்டுமே!

    நான் ஒருசில முறை நினைத்ததுண்டு! எதுக்காக ஒரே மாதிரியான காமிக்ஸ்களை திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருக்கிறோம் என்று! ஆக்சன், அட்வெஞ்சர், திரில்லர் லாம் எனக்கு அவ்வளவாக செட் ஆகிறதில்லை!

    கி.நா. இல்லையா கார்ட்டூன், இதுதான் நம்ம ஃபேவரிட்!!

    500க்கும் மேற்பட்ட காமிக்ஸ்களை படித்த பிறகு தான் ஒரு "நிஜங்களின் நிசப்தம்" போன்ற ஒரு கிநா கிடைக்கும் என்றால், இன்னும் ஆயிரம் காமிக்ஸ்களை படிக்கவும் தயாராகவே இருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. பலரது மனக்கழிவுகளையும், தன் மேல் கொட்டியதால், தானே ஒரு கழிப்பறையாகி போனது போல புலம்பித் தீர்க்கும் பாதிரியார்!

      ஆன்டெரரை பழி தீர்க்க தூக்கிலிடப்பட்ட குதிரை!!

      தனிமையின் ஏகாந்தத்தில் இயற்கை அழகை ரசிக்கும் ஆன்டெரரை, வேவு பார்ப்பதாய் எண்ணி கொலை செய்யும் மரண பீதியில் இருக்கும் மக்கள்!

      இவையெல்லாம் மூச்சுள்ள வரை மறக்கவியலாத காட்சிகள்!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. நிஜங்களின் நிசப்தம் தான்....

      Delete
    4. இந்த புத்தகத்தின் தாக்கம் நெடு நாள் இருந்தது. அதனாலேயே இரண்டாம் முறை இதை படிக்க முடியவில்லை. அதுவும் மிதுன் சொன்ன காட்சிகள் எல்லாம் அவர் சொல்லும்போதே என் மனக்கண் முன்னே வந்து போகிறது. அப்பா பயங்கரம். மாந்தர்கள் எவ்வளவு மோசமாக நடந்து கொள்வார்கள் என்று உணர்த்திய கதை.

      Delete
  32. - I stopped segregating as Comics and GN long back.

    - Top Graphic Novel so far .. IRAVE .. IRULE .. KOLLATHE .. (close second is WESTERN)

    - Adult Content GNs should have a forewarning sticker lest kids take it from the parcel. I go with Dr.Selvam - otherwise there is nothing to worry about it.

    - Irukkura aaniyayE pudunguvom ... lots and lots are there na?

    Comic Lover

    ReplyDelete
  33. வணக்கம் காமிக்ஸ் காதலர்களே....

    ReplyDelete
  34. 1. கி. நா மற்றும் காமிக்ஸ் என்று எதையும் பிரிப்பதில்லை. ஆரம்பித்திலிருந்தே பிரிக்கவும் தோன்றவில்லை. கி நா என்ற பதம் ஆங்கில கதைகளின் வழியாக அறிமுகமான 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்பிருந்தே அப்படித்தான். அந்தப் பிராண்டிங்கை மார்க்கெட்டிங் டெக்னிக் என்று ஒதுக்கி விட்டேன்.

    ReplyDelete
  35. 2. இது வரை வெளி வந்த கி நா வரிசையில் நம்பர் 1 பிபிவி தான். இந்தக் கதையை முதலில் படித்த பொழுது கனெக்டிட் எலிமெண்டரி ஸ்கூலில் துப்பாக்கி சூட்டினால் பல மலர்கள் மலரும் முன்பே பலியான சம்பவம் நடந்திருந்த சமயம். அதனாலே இந்தக் கதையின் தாக்கம் எனக்கு சற்று அதிகம். ஆனால் அது மட்டும் காரணமல்ல.

    இந்தக் கதை போல் ஒரு மல்ட்டி டைமன்சனல், பேலன்ஸ்ட் கேரக்டர்கள் கொண்ட கதை நமது காமிக்ஸில் வந்துள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. பல சமூக அவல/ சீரழிவுகளையும்,மனித, இன, அதிகார வர்க்க, மத, அரசியல் சாக்கடைத்தன்மையை சர்வ சாதாரணமாக காமிக்கில்பொழுதுபோக்காக சொன்ன நினைவு எனக்கில்லை

    ரத்தப்படலத்தில் பிரசிடெண்ட் மற்றும் வைஸ் பிரசிடெண்ட் இறந்திருந்தால் அடுத்த நிலை யாருக்கு என்று கூறியதில் மிகப்பெரிய தவறு உள்ளது. ஆனால் அதை விட நுணுக்கமான வெளிப்படையாகத் தெரியாத யூஎஸ் அரசியல் சாஸன, உச்ச நீதி மன்ற சங்கதிகளையெல்லாம் அஸால்டடாக ஹேண்டில் பண்ணப்பட்டிருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த கிநா இதுதான்.

    ReplyDelete
  36. 3. மாற்றம் கொண்ட களங்கள் கண்டிப்பாக தேவை. ஆனால் கதைகள் உற்சாகமும் பிடிப்பும் ஏற்படுத்தும் வண்ணம் இருத்தல் அவசியம். வறுமையான கொடுமையான இளமையில் பிடிப்பையும் உற்சாகத்தையும் நம்பிக்கையும் கொடுத்தது நமது காமிக்ஸே.

    Leaving Losvegas மாதிரியான loser படங்கள் வெறுமையையும் பிடிப்பின்மையுமே அளிக்கின்றன. அது போன்ற கிநாக்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவ்வகைக் கதைகள் மட்டும் இல்லாமல் இருந்தால் போதும்.

    ReplyDelete
    Replies
    1. //வறுமையான கொடுமையான இளமையில் பிடிப்பையும் உற்சாகத்தையும் நம்பிக்கையும் கொடுத்தது நமது காமிக்ஸே. // இது உண்மை எனது நண்பர் ஒருவர் சொல்லுவார் நாம் காமிக்ஸ் படித்ததால் தான் சிகரெட் மது என்று எந்த தீய பழக்கங்களுக்கும் போகாமல் இருக்கிறோம் என்று என் அளவில் அது உண்மை தான். ஒரு நல்ல மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் காமிக்ஸ் படித்து தான் கற்றுக்கொண்டேன்.

      Delete
    2. Kumar sir!!அந்த நண்பர் யார் சார் ?

      Delete
    3. உங்களுக்கு ரொம்ப தெரிந்தவர் தான் கிரி சார்.

      Delete
  37. 4 18+ ன்னு ஸ்டிக்கர் போட்டுடுங்க. அப்புறம் பிபிவி ல உபயோகித்த அதை டார்க் பண்ற டெக்னிக்கை பாலோ பண்ணினா முடிந்தது.

    ReplyDelete
  38. காமிக்ஸையும், கிராபிக் நாவலையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.
    காமிக்ஸ் என்ற பதம் old fashioned என்றும், கிராபிக் நாவல் லேட்டஸ்ட் ட்ரென்ட் என்றும் எடுத்துக்கலாம்.

    ரெகுலர் சந்தாவிலே நிறைய கி.நா கலந்து வருவதால் கி.நா காமிக்ஸின் மரூஉ என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  39. சந்தாவில் உள்ளதை விட சந்தாவில் இல்லாத கி.நா வே சக்கபோடு போடுகிறது.அந்தவகையில் எனக்குப்

    பிடித்த கிராபிக் நாவல்.

    எமனின் திசை மேற்கு.
    தேவரகசியம் தேடலுக்கல்ல.
    இரவே இருளே கொல்லாதே.
    பிஸ்டலுக்குப் பிரியாவிடை.

    ReplyDelete
  40. புதிய களங்களுக்கு எப்போதும் சிவப்பு கம்பளம்தான்.ஒன்றிரண்டு சொதப்பினாலும், மீதியெல்லாம் கனஜோராக ஜெயிக்கின்றன.

    ReplyDelete
  41. காமிக்ஸ் தளத்தில் ஒரு Aதார்த்தமான (நன்றி: ஈ.வி) கதை பதிவிட்டதற்கே எதிர்ப்பு தெரிவிக்கும்போது;கடந்த இரண்டு மாதங்களாக நீரில்லை நிலமில்லை,பிஸ்டலுக்கு பிரியா விடை என தொடர்ந்து இரண்டு கதைகள் ஆபாசத்தின் உச்சமாக வெளியிடப்பட்டதை எவ்விதம் ஏற்றுக் கொள்வார்கள் என புரியவில்லை.
    இந்த தளத்தில் உள்ளதை நீக்கி விட்டு பூனை கண்மூடினால் உலகம் இருண்டு விடும் என்பதை போன்று உள்ளது.

    காமிக்ஸ்ல் கூடுமான வரை இவற்றை தவிர்ப்பதுதான் நலம்.அல்லது கூடுதல் கவனத்துடன் வெளியிடலாம்.சில காட்சிகளை தயங்காமல் இருட்டடிப்பு செய்வதுதான்(கூடுதலாக மசியை பூசி) உகந்தது.

    எதிர்காலத்தில் காமிக்ஸ் ஆபாச பத்திரிகை என்பதாக சிலர் அவதூறு சொல்வதற்கு நாமே காரணமாக அமைய கூடாது.
    அடுத்த கட்டமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து காமிக்ஸ் பத்திரிக்கைக்கே தடை பெறவும் வாய்ப்பாக அமைந்துவிடும்.நமது முந்தைய சில வெளியீடுகளே நமக்கெதிரான ஆதாரங்களாக உருமாறி விடும் ஆபத்தும் உள்ளது.
    காமிக்ஸை தனதாக்கி கொள்ளவும்,ஆசிரியருக்கு நெருக்கடி தரவும் பலர் முனைப்போடு இயங்குவது அனைவரும் அறிந்ததே. நுனி கிளையில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டுவதாக அமைந்து விடக்கூடாது.
    எதிரிகளுக்கான வாய்ப்புகளை வலிய தருவது சிறந்தது அல்ல.மேலை நாடுகளில் பத்திரிக்கை சுதந்திரம் வளர்ந்தது போல் நமது தேசத்தில் இன்னும் வளர வில்லை என்பதே நடை முறை எதார்த்தம்.
    தயவு கூர்ந்து கூடுதல் கவனத்தோடு பயணிப்பது தான் அனைவருக்கும் நலம்.
    நீதிமன்றங்களுடைய முடிவுகளில் தலையீடு செய்ய இயலாதுதானே.பதிவிட வேண்டும் என்று தோன்றியது அவ்வளவே.இது குறித்தெல்லாம் கவனம் கொள்ள தேவையில்லை.

    ReplyDelete
    Replies
    1. ///காமிக்ஸ்ல் கூடுமான வரை இவற்றை தவிர்ப்பதுதான் நலம்.அல்லது கூடுதல் கவனத்துடன் வெளியிடலாம்.சில காட்சிகளை தயங்காமல் இருட்டடிப்பு செய்வதுதான்(கூடுதலாக மசியை பூசி) உகந்தது.

      எதிர்காலத்தில் காமிக்ஸ் ஆபாச பத்திரிகை என்பதாக சிலர் அவதூறு சொல்வதற்கு நாமே காரணமாக அமைய கூடாது.///

      வேலிட் போயிண்ட்!! +11111111

      Delete
    2. ///காமிக்ஸ்ல் கூடுமான வரை இவற்றை தவிர்ப்பதுதான் நலம்.அல்லது கூடுதல் கவனத்துடன் வெளியிடலாம்.சில காட்சிகளை தயங்காமல் இருட்டடிப்பு செய்வதுதான்(கூடுதலாக மசியை பூசி) உகந்தது.

      எதிர்காலத்தில் காமிக்ஸ் ஆபாச பத்திரிகை என்பதாக சிலர் அவதூறு சொல்வதற்கு நாமே காரணமாக அமைய கூடாது.///

      +199999 well said. இது நமது காமிக்ஸ் வளர்ச்சியை குறைக்கும் காரணியாக மாற வாய்ப்புள்ளது.

      Delete
  42. 1. உங்கள் பார்வையில் கி.நா. எது? காமிக்ஸ் எது? இரண்டையும் வேறுபடுத்திடும் கோடு எது? ஒற்றை வரியில் ப்ளீஸ்!

    ######


    இதழை படித்தவுடன் அதன் கரு அனைவருக்கும் ஒரே மாதிரியாக தோன்றினால் அது காமிக்ஸ் ..


    எனக்கு ஒரு கரு ,பொருளாளருக்கு ஒரு கரு ,ஸ்ரீ ராம் அவர்களுக்கு ஒரு கரு ,மிதுன்ன் அவர்களுக்கு ஒரு கரு என பல கரு ( த்துகள் ) ஏற்பட்டால் அது க்ராபிக்ஸ் நாவல்..:-)

    ReplyDelete
    Replies
    1. அன்ட்..

      என்னை பொறுத்தவரை


      படித்து முடித்து கதை பிடித்தாலும் ,பிடிக்காவிட்டாலும் கதை புரிந்தால் அது காமிக்ஸ்..

      புரியாவிட்டால் அது கிராபிக்ஸ் நாவல்.

      அவ்ளோத்தான் சார்..:-)

      Delete
    2. // எனக்கு ஒரு கரு ,பொருளாளருக்கு ஒரு கரு ,ஸ்ரீ ராம் அவர்களுக்கு ஒரு கரு ,மிதுன்ன் அவர்களுக்கு ஒரு கரு என பல கரு ( த்துகள் ) ஏற்பட்டால் அது க்ராபிக்ஸ் நாவல்..:-) // அட்டகாசமான விளக்கம்

      Delete
  43. இதுவரையிலான நமது வரிசையில் டாப் கிராபிக் நாவல் என்று ஏதாச்சும் ஒன்றைத் தேர்வு செய்வதாயின் – what would be your choice?


    பிரியமான பிஸ்டலுக்கு பிரியா விடை ..;-)

    ReplyDelete
  44. ‘மாற்றம்… முன்னேற்றம் ! என்று பல்ப் வாங்கிடும் ஆட்டமெல்லாம் நமக்கு கிடையாது ! மாறாக – இந்த மாற்றம் கொண்ட களங்கள் பக்கமான பயணம் ஓ.கே. தான் என்பீர்களா ? அல்லது சாதா ஆணிகளாகவே பிடுங்குவதே (comics) ஆரோக்கியத்துக்கு நல்லதென்பீர்களா ?


    #######


    மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று..மாற்று களங்கள் டபுள் ஓகே சார்..

    ReplyDelete
    Replies
    1. நான் வளர்ந்து விட்டேனே மம்மீமீமீமீ....:-)

      Delete
  45. ஹீரோமாங்காமடையனாகஅஇருந்தால்அது கிராபிக் நாவல். காமிக்ஸ் தமிழ்சினிமா. கிராபிக் நாவல்மலையாள சினிமா. கரூர் ராஜசேகரன்

    ReplyDelete
  46. சிறுகச் சிறுக adult content அதிகமாகிப் போவது இந்தப் பரீட்சார்த்தக் களங்களின் கிளைக்கதையாகிடுகிறது! எத்தனை முயற்சித்தாலும் அதனைத் தவிர்ப்பது முழுமையாய் சாத்தியம் காண்பதில்லை! இது குறித்த நெருடல்கள் அவ்வப்போது எனக்குண்டு தான் ; ஆனால் மருத்துவத்தில் effect முக்கியமா ? side effects முக்கியமா ? என்ற கேள்வியை அணுகுவது போலவே இதைப் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்கிறேன் ! இது பற்றிய உங்களது பார்வைகள் ப்ளீஸ் – Again very crisply ப்ளீஸ் ?


    ###########

    கதை ஓட்டத்திலியே வரும் மருத்தவ முத்தங்கள் எந்த சஞ்சலத்தையும் ஏற்படுத்துவது இல்லை சார்..உதாரணமாக பராகுடா ,பி்பி விடை போன்றவை ..எனவே தங்சகளுக்ஞம் சஞ்சலம் தேவையில்லை தான்..அதே சமயம் அவ்வாறான இதழ்களில் மறவாமல் 18 + முத்திரையை தவறாமல் பதித்து விடுவது நல்லது .( தற்பொழுநு கூட கேபிள் சங்கர் என்ற எழுத்தாளரின் ( இயக்குநரும் கூட ) திரை துறை நாவல் கூட அந்த முத்திரையை நாவலின் தலைப்பை விட பெரிதாக அறிவித்து விற்பனைக்கு வந்துள்ளது

    அதே சமயம்
    ஒரு முறை நானும் செயலரும் பேசி கொண்டிருந்த பொழுது அவர் சொன்ன கருத்தும் யோசிக்க வைத்தது..சிறுவயதில் காமிக்ஸ் இதழ்களை படிக்கும் பொழுது மட்டும் பல பெற்றோர்கள் தடை சொல்லாமல் இருப்பார்கள் ..காரணம் அதில் எந்த விதமான கவர்ச்சி சமாசாரங்களும் காணப்படாது..காமிக்ஸ் தானே குழந்தை படிக்கட்டும் என விட்டு விடுவார்கள்..இப்பொழுதும் அதே போல் தானே..ஆனால் இந்த கவர்ச்சி சம்பந்தபட்ட காமிக்ஸ் இதழ்களை பொறுத்தவரை அவர்களே காண நேரிட்டால் காமிக்ஸ் இதழும் கவர்ச்சி இதழா என தனது குழந்தைகளிடம் காமிக்ஸ்இதழை தடை போட வைக்கும் செயலும் நடந்து போக வாய்ப்பு உண்டு என சொல்லியிருந்தார்..அதையும் கவனித்து கொள்ள வேண்டும் .( எனவே தான் அந்த முத்திரை விசயத்தில் மிக கவனமாக இருக்க தேவைப்படுகிறது )

    அதே போல் மேலே நண்பர் ஸ்ரீராம் அவர்கள் சொன்னதையும் கவனித்து கொள்ள வேண்டியதாகிறது ..இதை வைத்து நமது இதழ்களுக்கு எந்த வித தடைக்கற்கலும் வந்து விடக்கூடாது .

    ReplyDelete
    Replies
    1. அம்புட்டுதானுங்க தலீவரே!! நான் சொல்ல நினைச்சதை என் சார்பா நீங்களே அழகாச் சொல்லிட்டீங்க!! தலீவர்னா தலீவர்தான்!! :)

      Delete
    2. தலைவரே.!
      க க க போ.!

      இதைத்தான் நானும் சொல்ல நினைத்தேன்.

      Delete
  47. கிராபிக் நாவல் .... 😳😳

    விளக்கணுமா ... 🚶🚶🚶🏃🏃🏃🏃🏃

    ReplyDelete
  48. 2. டாப் கி.நா கண்டிப்பாக நிஜங்களின் நிசப்தம் தான். எனக்கு பிடித்தது பி பி வி and barracuda.
    3. மாற்றங்கள் தேவையே என்பது என் கருத்து. எவளோ நாள் தான் அரைத்த மாவை அரைப்பது. Go ahead and bring us a lot and lot more comics. Two thumbs up for your efforts.
    4. Adult content u already maintain a very good censor yourself. Keep it going and highlight the books with 18+ .

    ReplyDelete
  49. //கிராபிக் நாவல் என்றால் என்ன ? என்ற கேள்வி தான் இந்த வார ஞாயிறை ஓட்ட .. //
    இது குறித்து பல வருடங்கள் முன்பே இங்கே அனைவரும் பேசியாயிற்று! இப்போது கருத்துக்கள் மாறி இருக்கலாம். வர வர, உங்களின் தைரியம் கூடிக் கொண்டே போகிறது சென்சார் விவகாரத்தில்! :D

    ReplyDelete
    Replies
    1. ///வர வர, உங்களின் தைரியம் கூடிக் கொண்டே போகிறது சென்சார் விவகாரத்தில்!///

      சரியாச் சொன்னீங்க கார்த்திக்!! இந்த ஆச்சரியம் எனக்குமே உண்டு!!

      Delete
  50. அட்டகாசமான பதிவு எடிட்டர் சார்!! வழக்கம்போலவே நிறைய இடங்களில் கெக்கபிக்கே பண்ண வைத்துவிட்டீர்கள்!!

    'வஞ்சம் மறப்பதில்லை' - தலைப்பே மிரட்டல் ரகமென்றால், அந்த அட்டைப்படம் புதூ பாணி அழகுடன் மிரட்டலோ மிரட்டல்!! அட்டைப்படத்தைப் பார்த்தாலே யாருக்கும் வாங்கும் ஆசை வந்துவிடும்படியாய் அமைத்திருக்கிறீர்கள்!! அட்டகாசம்!! உள்பக்கச் சித்திரங்கள் மிரட்டல்.. இந்த வண்ணங்கலவை வாசிப்பு அனுபவத்தை இரட்டிப்பாக்கிடப் போவது உறுதி!!

    ReplyDelete
  51. And அதன் பலனாய் “பி.பி.வி.” பாணியிலொரு செம சுவாரஸ்ய one-shot கண்ணில் பட்டுள்ளது ! Very very early days yet ; ////

    மொழிபெயர்ப்பை நம்ம அமெரிக்க மாப்பிள்ளையிடமே கொடுத்து விடலாமே.

    ReplyDelete
  52. /
    4. சிறுகச் சிறுக adult content அதிகமாகிப் போவது இந்தப் பரீட்சார்த்தக் களங்களின் கிளைக்கதையாகிடுகிறது! எத்தனை முயற்சித்தாலும் அதனைத் தவிர்ப்பது முழுமையாய் சாத்தியம் காண்பதில்லை! இது குறித்த நெருடல்கள் அவ்வப்போது எனக்குண்டு தான் ; ஆனால் மருத்துவத்தில் effect முக்கியமா ? side effects முக்கியமா ? என்ற கேள்வியை அணுகுவது போலவே இதைப் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்கிறேன் ! இது பற்றிய உங்களது பார்வைகள் ப்ளீஸ் – Again very crisply ப்ளீஸ்\\\

    கதை வெயிட்டாக இருக்கும் பட்சத்தில் எவ்வளவு ஆபாசமாக இருந்தாலும் எனக்கு ok தான்.

    ReplyDelete
  53. க்ராபிக் நாவலுக்கும்,காமிக்ஸ் உள்ள வேறுபாடுகளை ஓரளவு உணர முடிகிறது.

    கதைக்காக மேம்போக்காக சித்திரங்களை வரைந்து செல்வது காமிக்ஸ் .

    கதைகளம்,பாத்திரங்களின் குணச்சித்திரம்,கதையின் கரு இவற்றை வலிமையாக சொல்ல காட்சி அமைப்புகளில் அதிக சிரத்தையோடு கவனமாக ஓவியங்கள் வரையப்பட்டால் அது க்ராபிக் நாவல்.(இது தனிப்பட்ட என்னுடைய எண்ணம்.)
    ஆனால் ஐரோப்பிய காமிக்ஸ் உலகில் இதன் வரையறை எதுவென்பதுதான் இதன் அளவுகோல்.

    பி.பி.வி யில் ஒரு காட்சி...
    பக்கம் 84 ல்

    மார்கோ நெருப்பில் குளிர் காய்வது...
    ஒரு காட்சியில் நெருப்பில் கைகளை கதகதப்பாக்கி தன்னுடைய தோள் பகுதியில் கைகளை வைத்து தன்னை சூடேற்றி கொள்வாள்.
    அந்த செவ்விந்திய கிழம் மார்க்கோ வுக்கு பின்புறமிருந்து கத்தியை கழுத்தில் வைத்து பயமுறுத்தும் போது தன் மார்பில் கைகளை வைத்திருப்பாள்.

    பின்புறமிருந்து காணும் போது தன் அழகில் பெருசை கிளர்ச்சியடைய செய்வதற்காக அதுபோல் நடந்து கொள்வாள்.

    இந்த காட்சியின் உந்துதலால் தூண்டப்படும் கிழம் இரவில் மார்கோவிடம் தவறான நோக்கில் நெருங்கும்போது ;அடித்து கட்டி போட்டுவிட்டு தப்பி விடுகிறுள்.கதையை வார்த்தைகளை ஆதாரமாக கொண்டு படிக்கும் போது உணர இயலாது.

    பூமிக்கொரு போலிஸ்காரன்;

    18 ம்பக்கத்தில் லேடி s இரயிலில் ஒரு வயதான பாட்டி மாவை சந்திப்பார்.
    அப்போது அவர்கள் பின்னல் வேலையை பற்றி கூறுவார்.

    வயோதிகர்களை அதிக அளவில் தாக்கும் நினைவு இழப்பு நோய்களில் ஒன்று அல்சீமர்.
    அதை ஓரளவு கட்டுக்குள் வைத்துக்கொள்ள சித்திரம் வரைதல்,கைப்பட எழுதுவது,பின்னல்வேலை ,கூடை முடைவது போன்றவை பயன்தரும்.மேலதிக விவரங்களை தேடி அறிந்து கொள்ளவும்.
    அந்த காட்சியை ஆழமாக உணர்ந்தால் மட்டுமே படைப்பாளிகளை உணர இயலும்.

    அண்டர்டேக்கரில் இருவேறு ஒழுக்கம் உள்ள இரண்டு பெண்களை வெகு அழகாக ஓவியத்தில் வரைந்து விடுவர்.
    நீரில் நிலமில்லை நாவலில் பேராண்மை உள்ள பாத்திரத்தையும்,ஆண்மை தடுமாற்றம் உள்ள கதா பாத்திரத்தையும் ஓவியங்களிலேயே காட்சிப்படுத்தியிருப்பர்.

    ஓவியங்களில் கதையை உணரும்போது மட்டுமே இவை சாத்தியப்படும்.வார்த்தைகளை பின்பற்றி கதையில் பயணிப்பது சிறப்பாக இராது.
    நான் உணர்ந்த க்ராபிக் நாவலுக்கும்,காமிக்ஸ் உள்ள வேறுபாடு.காமிக்ஸ் வெளியிடுபவர்கள் விற்பனைக்காக இந்த வார்த்தையை பயன்படுத்துவதும் புரிகிறது.


    ReplyDelete
  54. 1. ஒரு மெல்லிய கோடு - இந்தப் பக்கம் காமிக்ஸ் , அந்தப்பக்கம் கிராஃபிக் நாவல் - அவ்வளவுதான் வித்தியாசம்.

    2. இறந்தவர்களின் கடைசி ஆசையை கனவுகளாக காணும் கதை. மிக வித்தியாசமான கதைக்களம். நான் தீவிர ஆங்கில புதின வாசகன். ஆதலால் பெரும்பான்மையான கதைக்களங்கள் ஆச்சர்ப்படுத்துவது அபூர்வம். இந்த கனவுகளின் கதை ஆச்சர்யப்படுத்தியது. சில நண்பர்களுக்கு படுத்தியும் இருக்கலாம் :-)

    3. கண்டிப்பாக இந்த கிராஃபிக் நாவல் பயணம் முக்கியம். ரசனைகளின் விரிவாக்கங்களுக்கு இவையே சரியான எரிபொருள்.

    4. தவிர்க்க முடியாதது. Yin- Yang தத்துவம் போலத்தான். எவ்வளவு நன்மையிலும் சிறு தீமை உண்டு. எவ்வளவு தீமையிலும் சிறு நல்லதும் உண்டு.. அதுபோல அடல்ட் சமாச்சாரங்களை சிறு தீமையாக கருதி பயணிப்போம்.
    மாறுபட்ட ரசனைகளின் உலகிற்குள் பயணப்பட வாய்ப்பளிக்கும் எடிட்டர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!!

    ReplyDelete
  55. பார்வைகள் முப்பத்தியாறு இலட்சத்தை தாண்டி இறக்கை கட்டி பறக்கிறது,இதே வேகத்தில் போனால் வரும் ஜனவரியில் 4 மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் தயாராகி விடும்.....

    ReplyDelete
    Replies
    1. அட போங்க. எனக்கு தெரிந்து இதுவரை ஒரேயொரு (இரண்டு?) மில்லியன் ஹிட்ஸ் மட்டும் சிறப்பு புத்தகம் வந்ததாக ஞாபகம். நான் சொல்வது தவறு எனில் மன்னிக்கவும்.

      Delete
    2. பரணி 3 மில்லியன் ஹிட்ஸ் ku. தானே பாரகுட வெளியிட்டார் எடிட்டர்.

      Delete
    3. 1.தேவ ரகசியம் தேடலுக்கல்ல-1மிலியன் ஹிட் ஸ்பெசல்-செப்2014.

      2.ஜெரெமையா புத்தகம்1.-2மிலியன் ஹிட் ஸ்பெசல்-ஏப்2017.

      3.பராகுடா-அலைகடலின் அசுரர்கள்-3மிலியன் ஹிட் ஸ்பெசல்-ஜன2019!

      எல்லாம் வந்திருக்கு பரணி!
      அடுத்த 4மிலியன் ஹிட்டுக்கு நண்பர் சொல்லியுள்ளது நடந்தா ஹேப்பி!

      குறிப்பு:- மிலியன் ஹிட்ல இன்னும் டெக்ஸ் வர்லேன்ற குறை பாக்கி இருக்குனு நம்ம நண்பர்கள் சொல்லச் சொன்னாங்க!😉😉😉😉

      Delete
  56. வஞ்சம் மறப்பதில்லை 18+???

    ReplyDelete
  57. 18+ பற்றி: தற்போது கார்ட்டூன் கதைகள் மற்றும் கௌபாய் தவிர பிற கதை புத்தகங்களை நான் முழுவதும் பார்க்காமல் எனது குழந்தைகள் பார்க்க விடுவதில்லை; சொல்லப்போனால் அவர்கள் கண்ணில் காட்டுவது கூட இல்லை. அவற்றில் content சரி என்றால் மட்டுமே அவர்களை பார்வையிட அனுமதிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இது காலத்தின் காட்டாயம்.

      Delete
    2. இது கிட்டத்தட்ட எல்லா மீடியா (சினிமா, பாடல், டிவி தொடர்) என பொருந்தும். செல்லப்பேரு ஆப்பிள்னு பாடிட்டு வரும் பாடலகளும் படங்களும் டிவி திரைக்கும் மொபைல் போன்களுக்கும் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

      சோளிக்கே பீச்சே கியா ஹை பாடல்களுக்கு குழந்தைகளை ஆட வைத்து பெற்றோர்கள் கைதட்டிய கண்றாவிகளையெல்லாம் டிவி திரையில் 15-20 ஆண்டுகளுக்கு முன்னே பார்த்தாகி விட்டது.

      பெற்றோர்கள் இந்த (எந்த) காலகட்டத்தில்(உம்) மிகுந்த பொறுப்புடன் இருக்க வேண்டும். நீங்கள் அதில் முன்னோடியாக இருப்பது மகிழ்ச்சியாகவும் பெறுமையாகவும் இருக்கிறது பரணி.

      Delete
  58. வஞ்சம் மறப்பதில்லை - பெரியதாக ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை.அதுவும் அந்த புராதான பாணி ஓவியங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இவை எல்லாம் புத்தகத்தை படித்த பிறகு அடியோடு மாறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

    மற்றவை படித்த பிறகு :-)

    ReplyDelete
    Replies
    1. அந்த புராதான பாணி ஓவியங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

      #####

      உண்மை ..எனக்கும் இது போன்ற ஓவியங்கள் ஒரு வித அந்நியத்தையே ஏற்படுத்துகிறது..

      Delete
    2. கலரிங்கைப் பார்த்து சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.பெயிண்டிங் என்பதால் அப்படித் தோன்றுகிறது.

      Delete
  59. As other readers have already mentioned, adult content will brand Tamil comics' itself as Adults only. The same fate happened to Tamil pocket novels and even magazines. Printing 18+ on covers will not help but would rather strengthen the perception that comics are 18+.

    Then there is no point in we complaining that current generation kids are not interested in Comics when we alienate them. There are thousands of comics titles that are both kid and adult friendly which are yet to be published in Tamil. Why can't we try that? Just my two cents.

    ReplyDelete
  60. 18+ கதைகள் வேண்டவே வேண்டாம். Comics சிறு பிள்ளைகள் சமாச்சாரமாவே இருந்திட்டு போகட்டும்.
    காலத்திற்கு தகுந்த மாதிரி மாறனும்
    விற்பனையை கவனத்தில் கொள்ளணும்
    நாம வளர்ந்திட்டோம்
    நீ நல்லவனா
    அப்டினு கேட்டுட்டு யாரும் வர வேணாம்
    just say no

    ReplyDelete
  61. Sir, as my opinion:
    1.கற்பனையை அப்படியே சொன்னால் – Comics.
    கற்பனையில் யதார்த்தத்தை(Realism) பெருமளவு சேர்த்து உண்மை போல் தோன்ற செய்தால் அது கிராபிக்நாவல்.
    2. டாப் கிராபிக் நாவல் - நிஜங்களின் நிசப்தம். (இலக்கிய தரத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.)
    3. 60:40 or 70: 30 என்ற விகிதத்தில் இருக்கலாம்.
    4. முடிந்த வரை தவிர்க்கலாம். இயலாத பட்சத்தில் முன்னட்டையில் குறிப்பிட்டு விடுவது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. சார், இன்னொரு விஷயம். இன்றைய தினமலரில் "பிஸ்டலுக்கு பிரியா விடை"பற்றி சிறு அறிமுகம் செய்துள்ளார்கள். ஆனால், அட்டைப்படம் வெளியாகவில்லை. அதற்கு அந்த “18+” தான் காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில் இதுவரை அட்டைப்படம்இல்லாமல் நமது காமிக்ஸ் பற்றி எந்த செய்தியும் எந்த பத்திரிகையிலும் வெளியானது இல்லை சார்.

      Delete
    2. கிரி சார் வர வர அட்டகாசமா எழுதறிங்க. சூப்பர் உங்க first point அட்டகாசம். வேறு யாரும் இவ்வளவு தெளிவான விளக்கம் கொடுக்க வில்லை.

      Delete
    3. Thank you Kumar Sir!
      தனியாக அலுவலகத்தில் இருப்பதினால் கொஞ்சம் யோசித்தேன். எனக்கு தோன்றியதை எழுதிவிட்டேன்.ஆனால் நான் எழுதியது சரியா என்று எனக்கு தெரியாது சார். ஆசிரியர் தான் சொல்லவேண்டும்.

      Delete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
  63. ஆபாசமாக பற்றிய கேள்வி நம் வாசகர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது தவிர்க்க முடியாது.

    உடை என்பது என்றைக்கும் கலாச்சாரத்தின் அடையாளம் கிடையாது.

    சமிபத்தில் பாலகுமாரன் அவர்கள் எழுதிய "உடையார்" ரில் (சோழர்கள் நாகரிகம்) இராஜஇராஜன் காலத்தில்தான் பெண்களுக்கு மார்புகச்சை(பிரா அணியும்) பழக்கம் வந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

    மொழிதான் கலாச்சாரமே தவிர உடை கிடையாது.

    ஏன் 18+ காமிக்ஸ் படித்து தான் ஆக வேண்டும் என்ற கேள்வி வரலாம். ஆனால் பி.பி.விடை போன்ற சிறந்த படைப்புகள் நமக்கு ஆபாசமாக தெரியும் வடிவில் தான் வருகிறது.

    ஆபாசம்த்தின் திறவுகோல் கைபேசி. கைபேசினால் உலகில் உள்ள ஒட்டுமொத்த ஆபாசமும் வீட்டின் உள்ளேயே விட்டது. எத்தனை பேரால் கைபேசியை தவிர்க்க முடியும்?.

    நாம் தரமான காமிஸ்ஸை என்றுமே உருவாக்கிய தில்லை.

    ஆபாசம் என்ற ஒற்றை வரியினால் பி.பி.வி மற்றும் பராகுடா போன்ற காமிக்ஸ் களை ஒதுக்கினால், நஷ்டத்தை சந்திக்க போவது நாம்தான்.

    நம்முடைய கலாச்சாரம் மாறி கொண்டிருக்க வில்லை. ஒரு தளத்தில் இருந்து அடுத்த தளத்திற்கு நகரந்து கொண்டிருக்கிறது.

    உலகம் முழுவதும் ஒரே மாதிரி உடை என்ற உடை சார்ந்த காலாசாரம் வந்துகொண்டு இருக்கும் காலத்தில்தான் நாம் இருக்கிறோம்.

    இன்றைக்கு எம்.ஜி.ஆர் படத்தை கிண்டல் செய்யும் தலைமுறையில் நான் இருக்கிறேன். நான் ரசிக்கும் விஜய் படத்தை என் பிள்ளை கேலி செய்வான்.

    இன்று ஆபாசம் என்று ஒதுக்கும் விஷயம் நம் பிள்ளைகளுக்கு பெரிய விஷயமாக தோன்றாது.

    அதற்காக ஆபாசமாக இருக்கும் காமிக்ஸ் களை வெளியிட வேண்டும் என்ற அனர்த்தம்(அர்த்தம்) எனக்கு கிடையாது.

    ஆனால் பி.பி.வி போன்ற தரமான காமிக்ஸ்களை படித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன் Ganesh. நானும் இந்த விசயத்தில் உங்கள் கட்சி.

      Delete
  64. // அதன் பலனாய் “பி.பி.வி.” பாணியிலொரு செம சுவாரஸ்ய one-shot கண்ணில் பட்டுள்ளது ! Very very early days yet ; கதையினை வரவழைத்து, நமது மொழிபெயர்ப்பாளரைப் படித்துப் பார்க்கச் செய்து, பரிசீலிக்க வேண்டும் தான் ! ஆனால் எனது gut feel மட்டும் சரியாக இருக்கும் பட்சத்தில் இன்னொரு ரகளையான அனுபவம் நமக்கு வெயிட்டிங் என்று மட்டும் இப்போதைக்குச் சொல்வேன் ! // அப்படியே சட் புட் nu உரிமம் பெற்று வெளியிடுங்கள் சார். I'm waiting

    ReplyDelete
  65. குமார் சார் அது கவ்பாய் கதையா

    ReplyDelete
    Replies
    1. அதை பற்றி எடிட்டர் ஐயா இன்னும் சொல்ல வில்லயே நண்பரே

      Delete
    2. //பி.பி.வி. பாணி//--அப்டீனா கெளபாய் பாணி கதைதானே நண்பர்களே!

      Delete
    3. அப்படினா double ok than. போலம் right . Double right

      Delete
  66. அட்டைப்படம் பழைய முத்து காமிக்ஸ் பாணியை ஞாபகப்படுத்துகிறது. அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரம் நமது காமிக்ஸில் ஊறுகாய் போன்று இருத்தல் நலம். இதுவரை நாம் எல்லை மீறியதாக தோன்றவில்லை அதையே தொடர்வோமே !

    ReplyDelete
  67. பி.பி.விடை.

    கதைக்குள் நுழையும் முன்பாகவே முதல் பக்கத்தில் சில பத்திரிக்கை செய்திகளையும்,சில தன்னார்வ அமைப்புகளின் அறிக்கைகளையும் கதாசிரியர் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

    எந்த ஒரு வழக்கும்,விவகாரங்களும் பத்திரிக்கை செய்திகள்,அமைப்புகளின் கருத்துக்கள்,சமூக வலைத்தளங்களின் விவாதங்களை அடிப்படை ஆதாரமாக கொண்டு நம்பகத்தன்மையோடு அணுக இயலாது.
    நீதி அமைப்புகளோ,பாரள மன்ற,சட்ட மன்ற நடைமுறைகளோ பத்திரிக்கை செய்திகளை அடிப்படை ஆதாரமாக கொண்டு எதையும் ஏற்றுக் கொள்வதில்லை.

    இந்த எளிய உண்மையை உணர்ந்து கொண்டு கதையை அணுகினால் படைப்பாளிகள் கதையில் நிறுவ முனையும் சிந்தனையை புரிந்து கொள்ளலாம்.
    வாசகர்களின் கவனத்தை திசை திருப்பவே இது போன்ற தகவல்களை முதல் பக்கத்தில் தருவது.அந்த கதையில் அரசியல் சாசனத்தை திருத்த போராடுவதாக புனைந்ததே ஒரு பம்மாத்து வேலைதான்.ஆனால் மறைமுகமாக உணர்த்தியுள்ள சிந்தனைதான் மிகவும் உயர்ந்தது.அதற்கு வலு சேர்க்க மட்டுமே கதையில் ஆபாசமான காட்சிகளை உருவாக்கி இருப்பார்கள்.
    இது முழுவதுமே சிந்தனையில் மேம்பட்ட நாகரீகம் அடைந்த மக்கள் வாழும் நிலப்பரப்புக்கு உரியது.இந்த படைப்பின் முழு வீரியத்தையும் உணர அவர்களால் மட்டுமே இயலும்.இவற்றை நாமும் வாசிக்கும் வாய்ப்பு அமையப் பெற்றது வரம். கதை அவரவர் போக்கில் புரிந்து கொண்டாலும் இது உறுதியாக நமக்கு கிடைத்த வரமே.

    ReplyDelete
    Replies
    1. //எந்த ஒரு வழக்கும்,விவகாரங்களும் பத்திரிக்கை செய்திகள்,அமைப்புகளின் கருத்துக்கள்,சமூக வலைத்தளங்களின் விவாதங்களை அடிப்படை ஆதாரமாக கொண்டு நம்பகத்தன்மையோடு அணுக இயலாது.//

      Panama papers ,paradise papers என கூகுளில் டைப் செய்து பார்க்கவும் .

      ஒரு ஜெர்மன் பத்திரிகையில் 2017 –ல் பதிப்பிட தொடங்கி இன்னமும் வெளியாகிகொண்டிருக்கும் 24 மில்லியன் டாக்குமென்ட்கள் உலகம் முழுதும் சுமார் இரண்டு லட்சம் மனிதர்களை –வலிமை மிக்க மனிதர்களை –ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது ..
      சுரண்டல் மற்றும் டாக்ஸ் எவேஷன் காரணங்களுக்காக ஆப்ஷோர் கணக்குகளை இயக்கி கொண்டு இருந்தவர்கள் பட்டியலில் பல புள்ளிகள் ,பற்பல கம்பனிகள்
      துருக்கி முன்னாள் பிரதமர் ,பிரின்ஸ் சார்லஸ் ,அமெரிக்க காமர்ஸ் செகரட்டரி வில்ப்ரெட் ராஸ் ,நைக் ,ஆப்பிள் இன்னும் பலர் –இன்னும் பல
      லிட்டிகேஷன் எல்லாம் பத்திரிகை செய்திகளை வைத்துதான்
      ,ஆஸ்திரேலியா அமெரிக்கா ,இங்கிலாந்து இன்னும் பல நாடுகள் வழக்குகள் மூலம் மீண்டும் கைப்பற்றியுள்ள தொகைகள் மூச்சு முட்ட வைக்கும் ..

      ஒரு பேப்பர் செய்த வேலைதான் இது ...

      ஜனநாயகத்தின் நான்கு தூண்கள்

      அரசியலமைப்பு ...சட்டமன்றம் ,பாராளுமன்றம்
      நிர்வாகத்துறை
      நீதித்துறை
      ஊடகத்துறை

      இதில் நான்காவதை அவ்வளவு எளிதில் புறம் தள்ள முடியாது
      .

      Delete
    2. //நீதி அமைப்புகளோ,பாராளு மன்ற,சட்ட மன்ற நடைமுறைகளோ பத்திரிக்கை செய்திகளை அடிப்படை ஆதாரமாக கொண்டு எதையும் ஏற்றுக் கொள்வதில்லை.//

      பத்திரிக்கை செய்தியை அடிப்படையாக கொண்டு நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்த முன்னுதாரணங்கள் நிறைய உண்டு ஸ்ரீராம் !

      Delete
    3. // கதையில் அரசியல் சாசனத்தை திருத்த போராடுவதாக புனைந்ததே ஒரு பம்மாத்து வேலைதான்//

      பல விஷயங்களை பார்க்கவேண்டும் ..
      அமெரிக்காவின் அரசியல் சட்டம் எழுதப்படும்போது இருந்த சூழலை பார்க்க வேண்டும்
      பிரஞ்சு புரட்சி நடந்து முடிந்த சமயம் அது ..
      மக்களின் கோபம் வன்முறை கொலைகளாக முடிந்ததை அமெரிக்க மாகாணங்கள் கண்டு அஞ்சி இருந்த சமயம் அது ..
      கறுப்பினத்தவரை அடக்கி ஆள தெற்கு மாகாண விவசாயிகள் –குறிப்பாக பருத்தி – ஆயுதங்கள் வைத்திருக்க விரும்பினார்கள்
      வரி வசூலின் போது அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க மாகாணங்கள் தனிப்படைகள் விரும்பின

      அமெரிக்க அரசிலமைப்பு சட்டம் பிரிட்டிஷ் அரசியல் சட்ட அமைப்பை தழுவியது .
      அமெரிக்க அரசு சுதந்திரம் பெறுவதற்கு சுமார் நூறாண்டுகளுக்கு முன்னரே குளோரியஸ் ரெவல்யூஷன் மூலம் மக்களாட்சியுடன் கூடிய முடியாட்சி கிரேட் பிரிட்டனில் அமல்படுத்தபட்டுவிட்டது ..( பிரிட்டிஷ் அரசியல் சட்டம் எழுத்தில் எழுதபடாத ஒன்று ..அன்கோடிபையிட் ...)

      கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் ஆயுதங்களை களைய பிரிட்டிஷ் முடியாட்சி உத்தரவிட்டபோது பிரிட்டிஷ் கோர்ட் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை ..

      தனிமனித ஆயுத சுதந்திரம் குறித்து இவ்வழக்கு தீர்ப்பு வெளியான பிற்காலத்தில்தான் ஜேம்ஸ் மாடிசன் இரண்டாம் சட்ட திருத்தத்தை எழுதினார்.
      அமென்மென்ட்டில் வார்த்தை குழப்பம் இருப்பினும் தனிமனித சுதந்திரம் குறித்துதான் மேடிசன் எழுதியிருக்க வேண்டும் ..அவர் பிரயோகப்படுத்திய ambiguous வரிகள் பிபிவி –யின் கருவாக அமையப்பெற்றது

      Delete

    4. //வாசகர்களின் கவனத்தை திசை திருப்பவே இது போன்ற தகவல்களை முதல் பக்கத்தில் தருவது.//
      //நீதி அமைப்புகளோ,பாரள மன்ற,சட்ட மன்ற நடைமுறைகளோ பத்திரிக்கை செய்திகளை அடிப்படை ஆதாரமாக கொண்டு எதையும் ஏற்றுக் கொள்வதில்லை.//


      அமெரிக்க வாட்டர்கேட் ஸ்கான்டலில் வாஷிங்டன் போஸ்ட் வெளிப்படுத்திய உண்மைகள் வரலாற்றில் இடம் பெற்றவை .

      டெமாக்ரட்டிக் தலைமையகத்தில் நுழைந்த ஐந்துபேரில் ஒருவர் ரிபப்ளிக் பிரசிடென்ட் நிக்சனின் உதவியாளர் என முதலில் ஆதாரத்துடன் வெளியிட்டது வாஷிங்டன் போஸ்ட் ..

      பின்னர் டைம், நியூயார்க் டைம்ஸ் போன்றவையும் சேர்ந்துகொண்டன .
      நிக்சன் பதவியிழக்க பத்திரிக்கைகளும் முக்கிய காரணம் .

      இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் மூலம் சமுதாய நன்மைகள் அடைய செய்த சம்பவங்கள் நிறைய உண்டு ..
      மன நல மருத்துமனைகள் மேம்பாடு ஒரு நல்ல உதாரணம் ..


      Delete
    5. Constitutional monarchy என அழைக்கப்படும் பிரிட்டிஷ் அரசில் legislative constitution தான் உச்ச அதிகார மையம்

      இதை தழுவி எழுதப்பட்டாலும் அமெரிக்காவில் judicial constitution தான் உச்ச அதிகார மையம்..

      இதனை அடிப்படையாக கொண்டே பிபிவி கதை கரு சுழல்கிறது..

      Delete
    6. @ திரு.சென அனா;

      பத்திரிக்கை செய்திகளை அடிப்படையாக கொண்டு....
      1.அரசை கண்டிக்க,அரசுக்கு பரிந்துரைக்க,அரசாங்கத்துக்கு முன்மொழிய,வேண்டுகோள் விடுக்க அதிகாரம் உள்ளது.
      முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய விசாரணை இணையங்களை கூட முன்வரும்.

      இன்வஸ்டிகேட்டிவ் ஜர்னலிசத்தில் அடிப்படை ஆதாரங்கள் (மிக வலிமையாக)இருந்தால் மட்டுமே வெற்றியடைய முடியும்.

      அரசியல் சதுரங்கத்தில் ஆளும் அதிகார வர்க்கத்தை துணிந்து எதிர்ப்பதற்கு அசாத்திய மனவலிமை வேண்டும்.
      நிரூபிக்கத் தேவையான அடிப்படை ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே இவைகள் சாத்தியம்.
      அரசியல் மிக கடுமையான ஆடுகளம். திட்டமிட்டு ஆதாரங்களை உருவாக்க வேண்டும்.அல்லது ஆதாரங்களை திட்டமிட்டு அழிக்க வேண்டும்.
      குற்றச்சாட்டுகள் மூலம் மட்டுமே ஒருவரை குற்றவாளியாக நிறுவ இயலாது.பத்திரிக்கைகள் பக்கச்சார்பாக மட்டுமே இயங்கக் கூடியது.

      Delete
    7. Sri Ram : //கதைக்குள் நுழையும் முன்பாகவே முதல் பக்கத்தில் சில பத்திரிக்கை செய்திகளையும்,சில தன்னார்வ அமைப்புகளின் அறிக்கைகளையும் கதாசிரியர் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.//

      தவறான அனுமானம் சார் ; முதல் பக்கத்துப் பத்திரிகை செய்திகளின் கட்டவுட்ஸ் கதாசிரியரின் உபயம் அல்ல ! அடியேனின் கைங்கர்யமே ! ஊடகக் குறிப்புகளைக் கொண்டு கதைக்கு வலு சேர்க்கும் நோக்கம் நிச்சயமாய்க் கதாசிரியருக்குக் கிடையாது !

      Delete
    8. ஒரு காமிக்ஸ் கதைக்காக உட்பக்கத்தில் இடம் பெறும் ஒரு பக்கத்துக்கு; இவ்வளவு மெனக்கெடும் காமிக்ஸ் நிறுவனம் மார்டின் கதைகளுக்கும்,மாடஸ்தி கதைகளுக்கும் முன் அட்டை தயாரிப்பதில் உள்ள வேறுபாடுகள் மலையளவு உள்ளது.

      ஆனால் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தரவுகள் தத்ருபமாக உள்ளது.
      ஒரே இரவில் நாமும் சர்வதேசத்தரத்துக்கு உயர்ந்து விட்டது புரிகிறது.

      Delete
  68. என்னா சதை ......என்னா உதை ...........

    ReplyDelete
  69. நீதி அமைப்புகளோ,பாரள மன்ற,சட்ட மன்ற நடைமுறைகளோ பத்திரிக்கை செய்திகளை அடிப்படை ஆதாரமாக கொண்டு எதையும் ஏற்றுக் கொள்வதில்லை.////

    உண்மையில் அப்படி எதுவும் நடப்பதில்லை.

    அமெரிக்காவில் நடந்தது...


    1950 களில் ஒரு 14 பெண்ணை அவரது தெருவில் தந்தை அடிப்பதற்க்கு துரத்தி கொண்டு ஒடுகிறார். அதன் பிறகு அந்த பெண்ணை காணவில்லை.

    பெண் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் அவை தலைப்பு செய்தியாக்க பட்டு, பரபரப்பு ஏற்படுத்தி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டது.

    அந்த தந்தை துரத்தி கொண்டு ஒடியதை பர்த்த சாட்சிகள் நிறைய பேர் இருந்தனர் ஆனால் அவர் தன் மகளை கொன்றதை யாரும் பார்க்கவில்லை.

    எப்படி இருந்தாலும் அவருக்கு அதிகபட்ச ஆயுள் தண்டனை விதித்து இருக்க வேண்டும். ஏனெனில் அந்த பெண்ணின் சடலம் மீட்கப்படவில்லை.

    அனைத்து செய்தி தாள் நிறுவனங்களும் அந்த தந்தைக்கு ஏதிராக இருந்தது. அவருக்கு தூக்கு தண்டனை தந்தே தீரவேண்டும் என்று எழுதியது.

    இதனால் பெண்கள் அமைப்புகள் போராட்டம் செய்ய ஆரம்பிக்க, வேறு வழியே இல்லாமல் அந்த தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

    நான் என் மகளை கொல்லவில்லை என்று கதறியும், யாரும் காதில் போட்டுகொள்ள வில்லை.

    அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    முப்பது வருடம் கழித்து அந்த பெண்(கொலை செய்ததாக கருதபட்ட) தனது ஊருக்கு திருப்பி இருக்கிறாள்.

    தனது தந்தை அடிக்கு பயந்து இங்கிலாந்து செல்லும் சரக்கு கப்பலில் ஏறி இங்கிலாந்து சென்று விட்டு தற்போது தான் தனது தந்தையை தேடி திரும்பி வந்திருப்பதாக கூறியுள்ளார்.

    அப்படியே செய்தி நிறுவனங்கள் திசை மாறி, "ஒரு அப்பாவியை இப்படி கொன்று விட்டீர்களே" பரபரப்பாக கட்டுரைகள் எழுத ஆரம்பித்தது.

    நாடுமுழுவதும் இறந்த தந்தைக்கு ஆதரவாகவும், நீதிமன்றத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

    இந்த வழுக்கு நீதிமன்றம் வந்தபோது " பத்திரிகைகள் தான் அன்று அவர் கொல்ல படவேண்டும் என்று போரடியது".

    இன்று பத்திரிகைகள் தான் "இன்று பத்திரிகைகள் தான் அவருக்கு ஏன் தண்டனை கொடுத்தாய்" என்று போராடுகிறது.

    இனி வரும் காலங்களில் பத்திரிகை செய்தியை மட்டுமே வைத்து நீதிமன்றம் வழக்கை தீர்ப்பை முடிவு செய்ய கூடாது, என்று தீர்ப்பு எழுதினார்.

    பத்திரிகையின் வலிமை அசாத்தியமானது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்த பின்னர் அனைத்து பத்திரிகை நிறுவனங்களுக்கும் அதிபர் விருந்து குடுப்பது வழக்கம்.

    "Times of India" அந்த விருந்தில் கலந்து கொள்ளாது. ஏனெனில் அதிபர் தேர்தலில் அவர்கள் ஆதரிக்கும் நபர்கள் தான் அதிபராக வரமுடியும் என்ற நிலையுள்ளது.
    இந்த குற்றச்சாட்டை மறுத்து, அவர்கள் அதிபர் விருந்துகளில் பங்கேற்பதை புறக்கணிப்பு செய்கின்றனர்.

    ஆனால் உண்மையில் "Times Of India " கை காட்டும் நபர்தான் அதிபர்.

    கடந்த அமெரிக்க தேர்தலில் தான், ட்ரம்ப் Facebook துனையோடு, times அதரவு பெற்ற ஹிவரியை தோர்க்கடித்தார். இது சாதனையாக பார்க்க பட்டது.

    ReplyDelete
  70. காமிக்ஸ்: காண்போரை எளிதில் கவர்ந்துவிடும் நார்மலான ஓவியங்கள் போன்றது. மூளைக்கு ரொம்ப வேலை கொடுக்காது.
    கிராஃபிக் நாவல்: மாடர்ன் ஆர்ட் போன்றது. பார்த்தவுடன் புரியவும் செய்யாது. பார்க்க பார்க்க புதுப்புது விஷயங்கள் தென்படும். பார்க்கும் ஒங்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தங்களை தோற்றுவிக்கும். பல சமயங்களில் படைப்பாளி நினைத்து வரைந்தது ஒன்றாகவும், நாம் புரிந்து கொண்டது வேறாகவும் இருக்க வாய்ப்புள்ளது!

    ReplyDelete
  71. இப்ப வரை பிடித்த கி.நா: பிஸ்டலுக்கு பிரியா விடை..
    இப்ப வரை பாதித்த கி.நா: கிரீன் மேனர்.. முதல் தடவை படிக்கும் போதே நாமும் யாரையாவது போட்டு தள்ளினால் என்ற எண்ணம் வர வைத்த கதை..யப்பா இன்னொரு முறை படிக்க வேண்டும் என்ற ஆசையையும் பயத்தையும் ஒருங்கே வர வைத்த கதை..
    கிரீன் மேணர் ஒரு மாஸ்டர் பீஸ்.. ஆர்த்தர் ஆதிக்கும் ஒரு சபாஷ்..

    ReplyDelete
    Replies
    1. //முதல் தடவை படிக்கும் போதே நாமும் யாரையாவது போட்டு தள்ளினால் என்ற எண்ணம் வர வைத்த கதை.//

      ஆத்தாடி!!!

      எடிட்டர் சார்!! இனிமேட்டு காந்தியின் சத்தியசோதனை காமிக்ஸ் ,பரமார்த்த குரு கதைகள் காமிக்ஸ் மாதிரி போட்டாலே போதும்..

      Delete
    2. செனா சார் . செம்ம சிரிப்போ சிரிப்பு

      Delete
    3. நல்ல வேளை நீங்க அப்போ சிக்கலைன்னு சந்தோசப்படுங்க..

      Delete
  72. கார்சனின் தொப்பியில் ஓட்டை விழும்.. விழாது ஓட்டை கார்சனின் நண்பரது தொப்பியில்..
    போனெல்லி.
    மேலே குறிப்பிட்டிறுப்பது வஞ்சப் புகழ்ச்சி அணியின் இலக்கணம்

    ReplyDelete
  73. It was very much intense.. British...British..

    ReplyDelete
  74. 1. One Shot கதைகள் கி.நா. என்று சொல்லலாம். அதில் வரும் கதைமாந்தர்கள் இருப்பார்களா? இல்லை இறப்பர்களா? என்று தெரியாது. For example... இந்த மாத Tex கதையில் கிட் வில்லர் கண்டிப்பாக சாக மாட்டார் எண் அனைவரும் அறிந்ததெ!!!

    2. சிறந்த கி.நா. XIII - இரத்தப்படலம் முதல் பாக்ம். (இது One shot??... but fit the bill)
    3. Tex'ஏ திகட்டுகிறார்... அதனால் இப்பொது இருக்கும் அளவெ பொதும்.
    4. கி.நா சந்தாவில் 18+ என்று அட்டையில் குறிப்பிட்டு. So parents whom are buying for their kids can avoid this. That means our current setup is just fine.

    ReplyDelete
    Replies
    1. // Tex'ஏ திகட்டுகிறார்... அதனால் இப்பொது இருக்கும் அளவெ பொதும். // நோட் பண்ணுங்க பாஸ் இதை.

      Delete
    2. ஆமாமா! நோட் பண்ணுங்க!! நோட் பண்ணுங்க!!!

      Delete
  75. *** ஒரு ரெளத்திர ரேஞ்சர்***
    மேலோட்டமாக இது ஒரு டெக்ஸ் டெம்ப்லேட் கதையே. ஆனால்! டெக்ஸை ஒரு தர்மசங்கடமான நிலமையில் விட்டு, அவர் மதிக்கும் ஒரு நபரை எதிர்க்க வேண்டிவருகிறது. கிட் வில்லரின் நிலமை எதிர்பார்த்த தாக்கத்தை எனொ எற்ப்படுத்தவில்லை.
    கிளைமாக்ஸ் திருப்புமுனை ஒரு "நச்" முடிவு.
    Special Mention to ஒவியங்கள், அதிலும் 107 2ம் panel மற்றும் 108 கடைசி panelல் வரும் பாம்பு, ஏன் என்று என்னை ரொம்பவே சிந்திக்க வைக்கிறது.

    ReplyDelete
  76. ஒரு ரௌத்திர ரேஞ்சர் - செவ்விந்திய முகாம்களுக்கு உணவு பொருட்கள் கொண்டு செல்லும் வேகன்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணிக்கு செல்லும் டெக்ஸ் ஜோடிக்கு- கொள்ளைக்கும்பல் ஒன்றும் அக்கும்பலை தேடும் சக ரேஞ்சர் குழுவின் குறுக்கீடும் நேரிட அப்போது ஏற்படும் மோதலில் சக ரேஞ்சரின் மகன் கொல்லப்பட - ஒரு திரிசங்கு (டெக்ஸ் - கொள்ளையர் - மகன் சாவுக்கு பழிக்கு பழி வாங்க துடிக்கும் சக ரேஞ்சர்) படலம். முடிவில் டெக்ஸ் & கோவுக்கு ஜெயம். படித்து முடித்ததும் தனித்தனி தாள்களாக வரும் பைண்டிங் தரம். டெக்ஸ் வழமையான ஓவர் டோஸ். சந்தா பி-க்கு மாற்றம் முன்னேற்றம் அவசியம்.

    ReplyDelete
    Replies
    1. ///படித்து முடித்ததும் தனித்தனி தாள்களாக வரும் பைண்டிங் தரம்.///

      மீ... டூ...

      Delete
    2. Me three.

      டெக்ஸ் வில்லர் கதைகளை , ரெண்டாம் முறை படிப்பது அபூர்வமான நிகழ்வு.திரும்பப் படிக்கும்போது தாள்கள் தனியே வந்துவிடுமே என்ற அச்சத்தில் அந்த நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

      Delete
    3. // டெக்ஸ் வழமையான ஓவர் டோஸ். சந்தா பி-க்கு மாற்றம் முன்னேற்றம் அவசியம்.// இதையும் நோட் பண்ணி கொள்ளுங்கள். என்னுடைய புத்தகம் ஓகே பைண்டிங் நோ பிராப்ளம்.

      Delete
  77. வஞ்சம் மறப்பதில்லை அட்டைப்படம் பழையபாணியில் புதுசாக உள்ளது.உட்புற ஓவியங்கள் சாரி ..பெயிண்டிங்களும் ஒரு வெரைட்டியாகவே தென்படுகின்றன.

    ReplyDelete
  78. ஸ்பைடர்: ஆசிரியரை எங்க காணோம்? சட்டி தலையனை பார்க்க போயிருப்பாரா? ஆர்டினி , போனை போடு ஆர்ச்சிக்கு.

    பெல்காம்: போதிய வாய்ப்பு தராத காரணத்தால், ஆர்ச்சி தன்னை தானே dismantle செய்து நாட்கள் பலவாகி விட்டனவே!! உனக்கு தெரியாதா ஸ்பைடர்? நமக்கும் அந்த கதி தான் போலும்!!

    ஆர்டினி: விண்வெளி பிசாசுக்கு கூட மசிய மாட்டேங்கிறார், தலைவா!

    ஸ்பைடர்: புலம்பாதே.ஹெலிகாரை வித்துட்டு 3 செட் கவ்பாய் ட்ரெஸ்ஸும் 3 குதிரையும் வாங்கிட்டு வா. அந்த கெட்டப்லபாலைவனம் பக்கம் போய் பொம்பள பிசாசு கிடைக்குதானு பார்க்கலாம். அதுகூட மல்லுகட்டறது தான் இப்ப ட்ரெண்டு.அடுத்த வருசமே நாமும் ஸ்பெஷல் எடிஷன்ல வந்திருவோமுல்ல.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி கிரி சார். ஒரே ஒரு விண்வெளி பிசாசு மட்டுமாவது எடிட்டர் சார். தயவு செய்து இந்த வேண்டுகோளை செவி மடுங்கள். 🙏

      Delete
    2. What to do? Some of us have mokkaiomania & Archieophobia

      Delete
  79. Tex willer overdose?
    No no,i want more tex
    He is best comics.

    ReplyDelete
  80. 2016 was best,because 12 month non

    stop tex .

    2020 will be same?

    Fingers crossed$

    ReplyDelete
    Replies
    1. 2016 than Tex பொருத்த வரை மிகச் சிறந்த வருடம். அந்த முறை வந்த இதழ்கள் நிறைய எனக்கு பிடித்து இருந்தது. ஆனால் 2017,18 மற்றும் 2019 டெக்ஸ் க்கு சிறந்த வருடங்கள் இல்லை.

      Delete
  81. ///ஒரு சுவாரஸ்யமான காலையில் போஸ்ட்மன் கொண்டு வந்திருந்த மொக்கையான பார்சலில் இருந்த சில பல இத்தாலிய காமிக்ஸ் மாதிரிகளுக்குள் மூழ்கிய எனக்கு, கடவாயில் எச்சில் ஒழுகாத குறை தான் ! "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா ? என்ற கேள்வியைக் கொஞ்சமாய் மாற்றியமைத்து "எத்தனை கோடி காமிக்ஸ் உருவாக்கினாய் இறைவா?' என்றே கேட்க வேண்டும் போல் தோன்றியது ! மொழி துளியும் புரியவில்லை என்ற போதிலும் அந்தப் படங்களைப் பார்த்து சிலாகிப்பதே பரம சந்தோஷம் தந்தது ! அந்தக் கத்தையில் ஒரு ஒடிசலான கறுப்புக் கோட் அணிந்த கப்பல் காப்டனின் கதைத் தொடரும் இருந்தது ! "கார்டோ மால்டிஸ்" என்ற பெயர் கொண்ட அந்த இதழை ஏனோ கீழே வைக்க எனக்கு மனதே வரவில்லை ! மாமூலான துப்பறியும் கதைகள் + நமது மாயாவி / ஸ்பைடர் / ஆர்ச்சி கூட்டணியைத் தாண்டிச் சிந்திப்பதே மாபாதகம் என்று பயணித்த அந்நாட்களில் ஒரு கப்பல் கேப்டனின் கதையைப் பரிசீலனை செய்வது கூட சிந்திக்க இயலா சங்கதியே !சித்திரங்கள் வேறு கீச்சல் பாணியில் இருந்து தொலைத்ததால் எனக்கு அந்தத் தொடரை முன்மொழிய தைரியம் திரட்ட இயலவில்லை ! கடற் கொள்ளையர்கள் ; தீவுகளுக்குப் பிரயாணம் ; வழியில் சாகசங்கள் என ஒரு புதுமையான பாணியாக நமக்கு அன்று தென்பட்ட அத்தொடர் இத்தாலியில் மாத்திரமன்றி, ஐரோப்பாவிலும் 'ஹிட்' என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது ! பெருமூச்சோடு அந்தப் படலத்தை பீரோவுக்குள் திணித்து விட்டு, டெக்ஸ் வில்லர் + டயபாலிக் வேட்டையை மாத்திரமே தொடரக் கோரி கடிதம் எழுதினேன். ///

    இந்த கேப்டன் கதைகள் இப்ப ட்ரை பண்ணலாமா

    ReplyDelete
  82. நண்பர் ஜே எங்கே? காணோமே? உங்கள் காமெடி கமெண்ட்கள் இல்லாமல் இரண்டு வாரங்களாக நமது தளம்,கொஞ்சம் சுறுசுறுப்பு குறைவாகஉள்ளது. வருகை புரிந்து சிரிப்பு துணுக்குகளை அள்ளி விட்டு செல்லலாமே?!!

    ReplyDelete
  83. தலையை சொறியாம படிச்சா காமிக்ஸ் தலை அடிக்கடி சொறிஞ்சிகிட்டே படிச்சா அது கிராபிக்நாவல்

    ReplyDelete
  84. கிராபிக் நாவலில் பெஸ்ட் என்றால் L.M.S.ல் வந்த கதை இறந்தகாலம் இறப்பதில்லை

    ReplyDelete
    Replies
    1. எனக்கு என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் ரொம்ப புடிச்சிருந்தது.. ஆனா ஏன் இந்த பேரு வெச்சாங்கன்னு மட்டும் இப்ப வரைக்கும் புரியலை..

      Delete
  85. சனி மாலை யில் இருந்தே எனது காத்திருப்பு தொடங்கி விடுகிறதே பதிவினை எதிர் பார்த்து. I'm waiting

    ReplyDelete
  86. குமார் சார் நானும்

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாஸ் வாங்க

      Delete
    2. ஒரிஜினல் பாஸ் இன்னும் வராம இருக்காரு.☺☺☺

      Delete
  87. புதிய பதிவு ரெடி









    ஆகவில்லை போல....

    ReplyDelete