Saturday, June 29, 2019

ஒரு சனியிரவின் சிந்தனைகள்...!

நண்பர்களே,

வணக்கம். நாளைய பொழுது நம் உலகக்கோப்பை எக்ஸ்பிரஸின் அதிமுக்கியப் பயண நாளெனும் போது - டி.வி.பொட்டிகளைத் தாண்டி வேறெங்கும் கவனம் தர நேரமோ, முனைப்போ யாருக்கும் இராதென்பது உறுதி ! So இன்றைய பதிவை இயன்றமட்டிற்கு short 'n crisp ஆக்கிட முனைவேன் !!

First things first.... ஜூலை இதழ்கள் சகலமும் திங்களன்று கூரியரில் கிளம்பிடுகின்றன ! இம்முறை ஹார்ட்கவர் இதழின் பைண்டிங்கிற்கு நிறையவே நேரம் எடுத்துக் கொண்டது ஒரு பக்கமெனில், "நீரில்லை..நிலமில்லை.." இதழின் எடிட்டிங் பணிகளிலும் நேரம் ரொம்பவே விரயமாகிப் போனது இன்னொரு பக்கத்து சங்கடம்  ! ஒரு மாதிரியாய் எனக்குத் தெரிந்த மாற்றங்களை / திருத்தங்களை கதை நெடுகச் செய்து முடித்து - இதழினை அச்சுக்கு அனுப்புவதில் நேர்ந்த தாமதம் - அதன் பைண்டிங்கிலும் பிரதிபலித்தது ! அடர்வர்ண உட்பக்கங்கள் சகலத்திலும் ஏகமாய் குடிகொண்டிருந்த இங்க் காய்ந்திடவே 2 நாட்கள் காத்திருக்க வேண்டிப் போனது ! So இன்றைக்கு செய்திட எண்ணியிருந்த டெஸ்பாட்ச்சை திங்களுக்கு தள்ளிப் போட்டுள்ளோம்  ! Sorry guys !!

வாரநாளில் இதழ்கள் கைக்குக் கிட்டும் போது நம்மில் பலருக்கும், அவற்றை வாஞ்சையாய்ப் புரட்டிப் படம் பார்க்கவே நேரம் பற்றாது என்பதில் இரகசியங்கள் நஹி ! So "வார நாள் பிசி - காமிக்ஸ் வாசிப்புக்கு நேரத்தைத் தேடும் படலம்" என்ற தவிர்க்க இயலாச் சுழலினுள் இம்மாதம் கால்பதித்திருக்க - அதையே இவ்வாரத்து அலசலின் தலைப்பாக்கினால் என்னவென்று நினைத்தேன் ! 

Light Reading !! சில வாரங்களுக்கு முந்தைய பதிவினில் இது பற்றி மேலோட்டமாய் உச்சரித்திருந்தேன் ! And நீங்களுமே அதற்கு வித விதமாய் ரியாக்ட் செய்திருந்தீர்கள் ! ஒரு சாவகாச நாளில் சற்றே விரிவாகப் பேசிக்கொள்ளலாமே என்ற நினைப்பில் உங்களின் பின்னூட்ட அபிப்பிராயங்களுக்கு பதிலளிக்க நான் முனைந்திருக்கவில்லை ! Maybe அந்த சாவகாச நாள் இன்று தானோ ? 

தமிழின் மூத்த அறிஞர் செந்தில் சொன்னது போல "பூவைப் பூன்னும் சொல்லலாம் ; புய்ப்பம்னும் சொல்லலாம் தான் !" So "இலகுரக வாசிப்பு" என்றும் light reading-க்கு அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் ; "பருமன் குறைவான இதழ்கள்" என்ற சராசரிப் பொருள் தந்தும் பார்த்துக் கொள்ளலாம்  ; "நிறைய ஈடுபாட்டோடு படிக்க அவசியப்படா சுலபக் கதைக்களங்கள் கொண்ட புக்ஸ்" என்றும் எடுத்துக் கொள்ளலாம் ! நீங்கள் எம்மாதிரியாக அர்த்தப்படுத்திக் கொண்டாலும் - அவற்றினூடே இழையோடும் ஒற்றை ஒற்றுமை : "ரிலாக்ஸ்டாகப் படிக்கவல்ல கதைகள்" என்பதாகவே நான் பார்த்திடுகிறேன் ! I might be right...might  be wrong too !! But just my two cents !!

"குண்டூ புக்ஸ் வேண்டும்....கலந்து கட்டிய ஸ்பெஷல்ஸ் வேண்டும்" என்ற குரல்கள் அவ்வப்போது கேட்டு வருவது நாமறிந்ததே ! ஆனால் மெய்யாகவே கனமான இதழ்கள் வெளியாகும் சமயங்களில், அவற்றினுள் ஏக் தம்மில் மூழ்கிடும் முனைப்பும், அவகாசமும் நம்மில் எத்தனை பேருக்கு இப்போதெல்லாம் உள்ளதென்பதே எனது வினா ! மே மாதம் இதற்கொரு classic example !! பராகுடா ; ட்யுராங்கோ ; தனியொருவன் - என 3 மெகா ஹெவிவெயிட்ஸ் ஒரே மாதத்தில் தற்செயலாய் கூட்டணி போட்டுக் களமிறங்க - கூரியர் டப்பியின் கனமே மிரட்டியது ! முன்னொரு காலத்தில் நீங்களெல்லாம் Annual விடுமுறையில் இருக்கும் பாலகர்களாய் இருக்கும் நாட்களில், இத்தகையதொரு முரட்டு விருந்து பரிமாறப்பட்டிருப்பின் - சும்மா வூடு கட்டி அடித்திருக்க மாட்டீர்களா - என்ன ?! ஆனால் இன்று பள்ளி போகும் பிள்ளைகளைப் பராமரிக்கும் பெற்றோர்களாய் நம்மில் பெரும்பான்மை புரமோஷன் கண்டிருக்க - இதழ்களைத் தடவி, உச்சி மோர்ந்திடத் தானே நேரம் கிட்டியது மே மாதத்தினில் ? Of course காலவோட்டம் நம் கைகளில் திணித்திடும் பொறுப்புகளுக்கு முன்னுரிமை தந்திட வேண்டியது தலையாயம் என்பதில் மாற்றுக் கருத்துக்களே இருக்க முடியாது ! எனது கேள்வியெல்லாம் இது தான் : 

*மாயாவியை ரசித்தவர்கள் டெக்ஸுக்குத் தாவினோம் !
*ஜனரஞ்சகத்தை ரசித்தவர்கள் லார்கோவின் பண சாம்ராஜ்யத்தை ரசிக்கும் ஆற்றலைப் பெற்றோம் !
*நேர்கோட்டுக் கதைகளே மார்க்கம் என்றிருந்தவர்கள் XIII-ஐ ஆராதிக்கும் பக்குவம் பெற்றோம்!
*"கி.நா" என்றால் "கிராதக நாவல்" என்று பொருள் சொல்லி நகைத்த நாமே இன்றைக்கு அவற்றிற்கொரு தனித் தடத்தைத் தந்து கொண்டாடுகிறோம் !!

இவை எல்லாமே அகவைகளின் முன்னேற்றத்தோடு கை கோர்க்கும் ரசனைகளின் முன்னேற்றமென்று புரிந்து கொள்கிறோம் ! அதே ரீதியில் பார்த்தால்,வயதுகளின் முன்னேற்றங்களோடு பொறுப்புகள் கூடிப் போகும் தருணங்களில், அதற்கேற்ப கொஞ்சம் light reading-க்கு வகை செய்வதும் அவசியமாகிடாதா என்பதே எனது சந்தேகம் ! "கிழிஞ்சது போ....புக் எண்ணிக்கைக்கு இனிமேல் கத்திரியா ? " ; "கிராபிக் நாவல்களுக்கு இனி பீப்பீபீ தானா ?" "குண்டு புக்ஸ் இனி கோவிந்தா - கோவிந்தா தானா ?" என்ற ரீதியிலான சந்தேகங்களுக்கு இங்கே அவசியமில்லை people ....ஏனெனில் நான் கேட்க முனைவதெல்லாமே - உங்கள் வாசிப்பில் சமீப நாட்களில் எறியுள்ள கனத்தை சற்றே மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமா ? என்ற கேள்வியினை மட்டுமே !! 

பராகுடா மாதிரியானதொரு இதழையே இங்கொரு case study ஆக்கிக் கொள்வோமே ?  ரொம்பவே intense ஆன ஆல்பம் அது என்பதில் no doubts at all !! நாக்கார் தொங்க  ஆபிசிலிருந்து வீடு திரும்பும் மாலையினில்  பராகுடாவைப் பார்த்த கணத்தில் WoW என்று தோன்றிடலாம் ; ஆனால்..ஆனால்... எடுத்துப் புரட்டி அதனுள் ஆரவாரமாய்ப் புகுந்திடும் 'தம்' நம்மில் எத்தனை பேருக்கு இன்றைக்கு சாத்தியப்படுகிறது ? பிள்ளைகளுக்கு ஹோம்ஒர்க் போட ஒத்தாசை செய்திடும் சமயம், புக்கைத் தூக்கி வைத்துக் கொண்டு சத்தமின்றி கீன்-பிலேமையும் ; ராபியின் காதலியையும் 'கலைக்கண்ணோடு' ரசிப்பதைத் தாண்டி வேறென்ன செய்ய முடிகிறது இந்த ஓட்டமோ-ஓட்ட நாட்களில் ? சரி, ஒரு சாவகாச ராவில் படிக்கலாமென்று தலைமாட்டில் புக்கைப்  பதுக்கி வைத்தால் - ஏழாம் பக்கத்தைத் தொடும் முன்பாய் எட்டுக் கொட்டாவிகள் விட்டம் வரை விரியும் போது, வென்றிடக் கூடியது பராகுடாவா ?  தூக்க தேவதையா ? என்ற பட்டிமன்றம் எழுகிறது ! அட.. பயணங்களின் போது படிக்கலாமே என்று பத்திரமாய் பெட்டிக்குள் புக்கைப் பேக் செய்த கையோடு பஸ்ஸிலோ / ரயிலிலோ ஏறினால், காதில் மாட்டிய earphones வழியே குவிந்து தள்ளும் Youtube வீடியோக்களும், troll-களும் - வேறெதெற்கும் நேரம் தரா கிங்கரர்களாய் கோலோச்சுகின்றன !!  இத்தனைக்கும் மத்தியில் நேரம் ஒதுக்கி நமது இதழ்களை  படிப்பது மாத்திரமன்றி, அலசவும்  இயல்கிறதெனில் அது நிச்சயமாய்  உங்களின் காமிக்ஸ் நேசத்துக்கொரு அட்டகாச testimony என்பதைத் தாண்டி வேறென்ன ?!! Take a bow all you busybees !! 

அதே நேரம் மேஜையில் கிடக்கும் இதழ் ஒரு crisp டெக்ஸ் வில்லர் கதையாய் இருந்தாலோ ; ஒரு கலர்புல் லக்கி லூக்காய் இருந்தாலோ ; ஒரு ஜாலியான டாக்புல் கூத்தாய் இருந்தாலோ - "சித்த நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேனே !!" - என்றபடிக்கு புக்கைப் பர பரவென வாசிக்கும் வாய்ப்புகள் ஜாஸ்தி தானே ? So மாதந்தோறும் உங்கள் வாசிப்பினில் இருக்கும் கனரக இதழ்களின் கோட்டாவை மட்டுப்படுத்தி விட்டு, இலகுரக தேர்வுகளை அதிகப்படுத்துவது ஒரு practical தீர்வாய் இருக்குமா ? என்பதே எனது கேள்வி !! மாதந்தோறும் மூன்றோ / நான்கோ  இதழ்கள் எனும் பட்சத்தில் - ஒன்றே ஒன்று மட்டும் அழுத்தமான வாசிப்புக்கென இருந்துவிட்டு, பாக்கி அனைத்தும் ஜாலி reads என்றிருப்பின் உங்கள் பாடுகள் சற்றே லேசாகிடுமோ ? 

எனது பார்வையில் (I repeat - எனது பார்வையில் மட்டும்) light reading-க்கு qualify ஆகிடக்கூடிய கதைகள் / தொடர்கள் கீழ்க்கண்டவாறு :
  • டெக்ஸ் வில்லர்
  • கேப்டன் டைகர் (மார்ஷல் அல்ல !!)
  • லக்கி லூக்
  • சிக் பில்
  • மாயாவி & மும்மூர்த்தியர்
  • ஹெர்லாக் ஷோம்ஸ்
  • மேக் & ஜாக்
  • ட்யுராங்கோ 
  • ரின்டின் கேன்
  • ஜில் ஜோர்டான்

கொஞ்சமாய்  மெனக்கெடல் அவசியமாகிடும் medium reading பட்டியல் :
  • லார்கோ வின்ச் 
  • வேய்ன் ஷெல்டன் 
  • ப்ளூ கோட் பட்டாளம்
  • ட்ரெண்ட்
  • மாடஸ்டி 
  • CID ராபின் 
  • டைலன் டாக் 
  • ஜேம்ஸ் பாண்ட் 007 
  • கர்னல் கிளிப்டன் 
  • லேடி S 
  • தோர்கல்

நிறைய நேரம் & ஈடுபாட்டோடு கரைசேர்ந்திட வேண்டிய கதைகள் / தொடர்கள் :
  • Most கிராபிக் நாவல்கள்
  • மர்ம மனிதன் மார்ட்டின்
  • Criminologist ஜூலியா
  • ரிப்போர்ட்டர் ஜானி 
  • XIII & spin-offs
  • கமான்சே 
  • Lone ரேஞ்சர் 

Point to Ponder # 1 ****இந்தப் பட்டியலின் சாராம்சம் ஓரளவுக்கேனும் ஓ.கே. என்றிருப்பின், ஒரே மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட heavyweights category இதழ்கள் இடம்பிடித்திடக் கூடாதென்று இனி அட்டவணைத் திட்டமிடலின் போது கவனமாயிருந்திட வேண்டுமோ ?! 

Point to Ponder # 2 ****அதே போல - "variety" என்ற ஒற்றைக் காரணத்தின் பொருட்டு மித நாயகர்களை மாதா மாதம் கண்ணில் காட்டுவதற்குப் பதிலாய் -  படிக்கும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய நாயகர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட slots கொடுத்தாலும் தப்பில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாமோ ? Maybe அட்டவணையில் கலர் கலராய் ; கலக்கலாய் ; ஏகமாய் நாயகர்கள் தென்படாது போகலாம் ; ஆனால் மாதம்தோறும் கூரியரைப் பிரிக்கும் போது உருவாகிடக்கூடிய உற்சாகம் அதற்கு ஈடு செய்துவிடுமோ ?

Point to Ponder # 3 ****Last but not the least - கலர் டெக்ஸ் இதழ்கள் வெளியாகும் ஒவ்வொரு மாதமும் அவை ஈட்டிடும் வெற்றியின் பின்னே ஒரு சேதி ஒளிந்துள்ளதோ ? வாசிக்கப்படுவதில் முதலிடம் ; சிலாகிக்கப்படுவதிலும் முதலிடம் என்பதன் பின்னணியில் - TEX எனும் ஜாம்பவானின் நிழலைத் தாண்டி அந்தக் கதைகளின் நீளத்துக்கும் ஒரு பங்கிருக்கக் கூடுமோ ? Maybe in the days to come - ஒரு கலர் டெக்ஸ் ; அல்லது அத்தகைய crisp வாசிப்புக்கான மினி புக்ஸ் மாதாமாதம் தலைகாட்டல் அவசியமோ ? 200+ பக்கங்கள் எனும் போது - "இதை படிக்க உருப்படியாய் நேரம் கிடைச்சால் தான் ஆச்சு !" என்ற மெல்லிய தடை மனசில் அனிச்சையாய் உருவாகிடுவது புரிந்து கொள்ளக்கூடியதே ! அதே சமயம் மெகா சீரியல் போலின்றி, 'சிக்'கென்று மினி வெப் சீரிஸ் போலான இதழ்கள் மாதந்தோறும் தலைகாட்டின் - நம் சுலப வாசிப்புக்கு உதவிடக்கூடுமோ ? 
இவை சகலமும் எனக்கு ஒற்றை மாதத்து நிகழ்வுகளின் தொடர்ச்சியாய்த் தோன்றிய எண்ணங்களல்ல ! மாறாக - over a period of time உங்களோடு செய்திடும் பயணத்தில் எனக்குப் புலப்பட்ட  சமாச்சாரங்கள் என்று சொல்லலாம் ! பதிவின் துவக்கத்தில் சொன்னது போல - I may be right on this...I might be wrong too !! ஆகையால் இவை சகலமும் ஒரு உரத்த சிந்தனையின் சாராம்சமே தவிர்த்து - நாளையே நடைமுறை காணவிருக்கும் தீர்மானங்களின் முதற்புள்ளியாய்க் கருதிட துளியும் தேவையில்லை ! There will be no knee jerk reactions guys ; அதனால் நீங்களும் "நல்லாத் தானே போய்க்கிட்டிருந்தது....? நோண்ட அவசியமென்ன வந்துச்சு ?" என்ற ரீதிகளில் பொங்கிட அவசியமே நஹி ! நிதானமாய்ப் படித்த பின்னே எங்கே என் அபிப்பிராயங்களோடு ஒத்துப் போகிறீர்கள் ?  ; எங்கே எனது பார்வைகளோடு மாறுபட்டு நிற்கிறீர்கள் என்று சொல்லிட முனைந்தால் மகிழ்வேன் ! நாயக / நாயகியரை நான் அடைத்துள்ள பட்டியல்கள் சரி தானா ? என்றும் சொல்லலாம் ! புதுசாயொரு ஆண்டுக்கான திட்டமிடலில் fine-tuning செய்திட உங்கள் அலசல்கள் இக்ளியூண்டுக்கு உதவினாலும் ; முன்செல்லும் பாதைக்கு எது உதவிடக்கூடும் என்ற புரிதல் இம்மியூண்டு விசாலப்பட்டாலுமே, அது நமக்கெல்லாம் பலன் தரும் தானே ? So just thinking aloud on a Saturday night !! 

Bye folks....have a lovely weekend ! See you around !!
ஈரோடு எக்ஸ்பிரஸ்  - "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" previews !! 

290 comments:

  1. Replies
    1. வாழ்த்துக்கள் நண்பா

      Delete
  2. Replies
    1. ஆமாம் தோர்கல் இன் third section than

      Delete
  3. புத்தகங்கள் கைக்குக் கிடைத்ததும் உடனே வாசித்து முடித்திடுவதென்பது இப்போது என்னைப் பொறுத்தவரை சற்றே சிரமமான காரியமாகவே உள்ளது. ஆனால், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் லைட் ரீடிங்குக்கான கதைகளை 'எப்போது ஒரு சிறிய இடைவேளை கிடைத்தாலும் எடுத்துப் படித்துவிடலாம்!' என்பதால் அவற்றை சேமிப்பில் பத்திரமாக வைத்துவிட்டு ஹெவியான களங்களுள்ள கதைகளை முதலில் எடுத்துக்கொள்வேன். அவை ஒருபுறம் மெல்ல மெல்ல நகர்த்தப்படும்போது சில மணித்துளிகள் ரிலாக்ஸாக நேரம் கிடைத்திடும்போது டெக்ஸ், லக்கி கதைகளை மள மள வென்று ஊதித் தள்ளிடுவேன். இப்படி இங்கே இன்னும் சில நண்பர்களும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆகவே, புத்தகங்கள் கிடைக்கும் ஒழுங்கில் வாசித்திடாத என்னைப் போன்றவர்களுக்கு நீங்கள் என்ன காம்பினேஷனில் மாதாமாதம் தந்தாலும் அது ஓ.கே தான் சார்! உடனே வாசித்து தங்கள் கருத்துக்களையும் பதிவிடும் நண்பர்களே இங்கே வாக்குகளை அளிப்பது முக்கியமானது.

    ReplyDelete
  4. Replies
    1. அதே சந்தேகம் தான் எனக்கும் 🤯

      Delete
  5. Replies
    1. இந்நேரத்திலயுமா..???!! :-)

      Delete
    2. ஓய்.. போயிட்டு வாங்கய்யா..இதுக்கெல்லாம் என்ன பண்ண முடியும்.. ?? அவரே போன வாரமே நிலமுமில்ல .. தண்ணியுமில்லன்னு சொன்னதுக்கு அப்புறமும் வந்தாச்சி .. வந்தாச்சுன்னு சொல்லிட்டு இருந்தா என்னப்பா அர்த்தம்?? வெய்ய காலத்துலே கொஞ்சம் அனுசரிச்சு தான் போகனும்..

      Delete
    3. @ ரம்மி

      ஹா ஹா! செம்ம!! :))))

      Delete
    4. அவர் அடிக்கடி ப்ளைட்டுல போவருண்ணு நினைக்கிறேன்

      Delete
  6. அதாவது....தலை சுத்துகிற கதை களம்.... கொண்ட கதைகளை தவிர்ப்பது நலம்.......பல கி.நா க்கள்....நான் ஒரு தடவை படித்ததோடு சரி.........

    ReplyDelete
  7. டெக்ஸ் வில்லர்
    கேப்டன் டைகர் (மார்ஷல் அல்ல !!)
    லக்கி லூக்
    சிக் பில்
    மாயாவி & மும்மூர்த்தியர்
    ஹெர்லாக் ஷோம்ஸ்
    மேக் & ஜாக்
    ட்யுராங்கோ
    ரின்டின் கேன்
    ஜில் ஜோர்டான்......மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுபவை.....

    ReplyDelete
  8. ///முன்னொரு காலத்தில் நீங்களெல்லாம் Annual விடுமுறையில் இருக்கும் பாலகர்களாய் இருக்கும் நாட்களில், இத்தகையதொரு முரட்டு விருந்து பரிமாறப்பட்டிருப்பின் - சும்மா வூடு கட்டி அடித்திருக்க மாட்டீர்களா - என்ன ?! ///

    அப்போ படித்தபோது குண்டு புக்காக தெரிந்தது.. ஆனா இப்ப, குண்டு புக்கே இலகுவா தெரியுதே.. காலம் செய்த கோலமோ???

    பக்கம் குறைவான புத்தகங்களை படிக்கும் போது, சீக்கிரம் படித்துவிட்டது போலவே தோன்றுகின்றன..

    ReplyDelete
    Replies
    1. //
      அப்போ படித்தபோது குண்டு புக்காக தெரிந்தது.. ஆனா இப்ப, குண்டு புக்கே இலகுவா தெரியுதே.. காலம் செய்த கோலமோ???

      பக்கம் குறைவான புத்தகங்களை படிக்கும் போது, சீக்கிரம் படித்துவிட்டது போலவே தோன்றுகின்றன.. // Idhe than enough karuthum

      Delete
  9. மார்ட்டின் இரண்டாம் ரகம்.....

    ReplyDelete
  10. இந்த பதிவை நான் காலையில தான் படிப்பேன்..In very private

    ReplyDelete
  11. ஸ்பைடர் my all time favourite....மம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  12. இலகுரக வாசிப்பு என்பதை எப்படி வரையறுப்பதென்றே தெரியவில்லை.!

    எனக்கு ராமையாவைத் தவிர சமீபத்திய எல்லாக் கதைகளுமே இலகுரகமாகத்தான் தெரிகிறது.!

    ஆங்.. அந்த மரண வைரங்கள் போன்ற பெர்னார்டு பிரின்ஸ் கதைகளும் அவ்வபோது லேசாக இலகுத்தன்மையை சோதிப்பதுண்டு.!

    ReplyDelete
    Replies
    1. கண்ணா வளர்ந்து விட்டீர்கள்

      Delete
    2. சைடுலயா குமார்...!? :-)

      Delete
    3. நானும் தான். Sideways

      Delete
    4. // அவ்வபோது லேசாக இலகுத்தன்மையை சோதிப்பதுண்டு.!//
      ரொம்பவே சோதிச்சிடுச்சி கண்ணரே,இதற்கு ரிப்போர்ட்டர் ஜானி எவ்வளவோ பரவாயில்லை.😍

      Delete
    5. ///ரொம்பவே சோதிச்சிடுச்சி கண்ணரே,இதற்கு ரிப்போர்ட்டர் ஜானி எவ்வளவோ பரவாயில்லை.😍.///

      அதேதான் ரவி.!
      ப்ரின்ஸ்க்கு கிடைக்கும் ஸ்லாட்டுகள் ஜானிக்கு கிடைப்பதில்லை.!

      ஜானி ஓவியங்களும் சரி.. கதைகளும் சரி ப்ரின்ஸைவிட பத்துமடங்கு பெட்டர் என்பது என் கருத்து.!

      Delete
  13. யப்பாடிக்கப்பாடியோவ்!!!
    என்னமா யோசிக்கறீங்க எடிட்டர் சார் நீங்க!!! ஆனால் ஒரு பொறுப்பான எடிட்டராக - எங்களுக்கெல்லாம் ஒரு நண்பராக - நீங்கள் யோசிப்பதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது!

    கிடைக்கும் கேப்களில் கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது ஏக் தம்மிலோ படிக்க 'லைட்-வெயிட் கதைகள்' உதவுவது உண்மைதான்!! சாப்பிடும் வேளைகளில் கூட ஒரு கார்ட்டூன் புத்தகத்தில் பத்துப் பதினைந்து பக்கங்களைப் படித்துவிட்டு, அடுத்த சாப்பாட்டு வேளை வரும்வரை மூடிவைத்துவிட முடியும்! உண்மையில், சாப்பிடும்போது ஏதாவதொரு கார்ட்டூன் அல்லது டெக்ஸ் கதைகளைப் படிப்பது ரொம்ப ரொம்பப் பிடித்த சமாச்சாரம்!!

    ஆனால், கி.நா உள்ளிட்ட 'ஹெவி வெயிட்' கதைகளைப் படிக்க ஒரு பிரத்யேக நேரம் தேவைப்படுகிறது! சற்றே ஆழ்ந்து படிக்க/வித்தியாசமானதொரு வாசிப்பு அனுபவத்தைப் பெற/ஆச்சரியப்பட ஒரு தனிமை தேவைப்படுகிறது! அந்த தனிமைக்காகவும், பிரத்யேக நேரத்துக்காகவும் காத்துக்கிடக்க நேரிடுகிறது! அந்த காத்திருப்பு சில சமயங்களில் நாட்கணக்கிலும், சில சமயங்களில் வாரக்கணக்கிலும் நீளுகிறது!

    என்னைப்பொருத்தவரை, ஒரு மாதத்தில் 4 புத்தகங்கள் வெளியாகிறதென்றால் அதில் இரண்டு - இலகுரகக் கதைகளாகவும், ஒன்று - மீடியம்வெயிட் கதையாகவும், ஒன்று - ஹெவி-வெயிட் கதையாகவும் இருப்பது நல்லது! (ஏற்கனவே அப்படித்தானே வந்துக்கிட்டிருக்குன்னு நீங்க கேட்கலாம் தான்.. அப்படீன்னா சரிதானுங்க சார்! ஹிஹி!)

    மாதம் ஒரு கார்ட்டூன்!
    மாதம் ஒரு டெக்ஸ்!
    மாதம் ஒரு டிடெக்டிவ்/அட்வென்ஜர்/ஃபேன்டஸி!
    குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கொரு கி.நா பாணி கதை!

    அவசியம்!
    அவசியம்!!
    அவசியம்!!!

    ReplyDelete
    Replies
    1. ///மாதம் ஒரு கார்ட்டூன்!
      மாதம் ஒரு டெக்ஸ்!
      மாதம் ஒரு டிடெக்டிவ்/அட்வென்ஜர்/ஃபேன்டஸி!
      குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கொரு கி.நா பாணி கதை!///

      இதுவுந்தே...!

      Delete
    2. ஆகா அருமை நண்பரே.என் கருத்தும் இதுவே.

      Delete
    3. //என்னைப்பொருத்தவரை, ஒரு மாதத்தில் 4 புத்தகங்கள் வெளியாகிறதென்றால் அதில் இரண்டு - இலகுரகக் கதைகளாகவும், ஒன்று - மீடியம்வெயிட் கதையாகவும், ஒன்று - ஹெவி-வெயிட் கதையாகவும் இருப்பது நல்லது! (ஏற்கனவே அப்படித்தானே வந்துக்கிட்டிருக்குன்னு நீங்க கேட்கலாம் தான்.. அப்படீன்னா சரிதானுங்க சார்! ஹிஹி! // இது எனக்கு ok. அருமை யாக சொன்னிங்க EV

      Delete
  14. டெக்ஸ்
    13
    007
    லார்கோ
    மார்ட்டின்

    ReplyDelete
  15. மாதம் ஒரு கார்ட்டூன்

    (இரண்டு என்றாலும் மகிழ்ச்சியே)

    மாதம் ஒரு டெக்ஸ்

    (110,220,330,440,550 எத்தனை பக்கங்கள் இருந்தாலும் மகிழ்ச்சியே)

    மாதம் ஒரு டிடெக்டிவ்

    (ரிப்போர்டர் ஜானி பழைய பாணி ஒண்ணு புதுபாணிஒண்ணு மறுபதிப்பு ஒண்ணு. மீதி நேயர் விருப்பத்திற்கு)

    மாதம் ஒரு கி நா

    (கருப்புவேள்ளை கலர்னு கலந்துகட்டி)

    அப்புறம் நடுநடுவே அட்வென்ஞர் ,ஃபேன்டஸி,க்ரைம் திரில்லர், சயின்ஸ் பிக்சன், புதுமுயற்சி இப்படி எதுவேணாலும் செய்யலாம் சார்..!

    ReplyDelete
    Replies
    1. கண்ணரே அனைத்தையும் கன்னாபின்னான்னு வழிமொழிகிறேன்.😍

      Delete
  16. முடிவு என்றுமே நீங்களா தான்எனும் போது சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு விசயத்தை தெளிவு படுத்தி கொள்ளலாம் என்று எழுத துவங்குகிறேன்...
    குண்டு புக்கோ,கலர் புக்க2அதிக விலையோ ஒரு பெரிய விசயமே இல்லை....ஆனால் எடுக்கும் கதை களம் heavy யாக இருந்து விட்டால் என் பாடு திண்டாட்டம் தான்...அதற்குசமீபத்திய எடுத்து காட்டு நிஜங்களின் நிசப்தம்....நேரம் கிடைக்கும் போது எப்படியாவது படித்து விட வேண்டும் என்று கையில் எடுப்பேன் ஆனால் 10 பக்கங்களை தாண்டுவதற்கு மூடி வைத்து விட்டு ஏதேனும் ஒரு டெக்ஸ் புக் கையில் எடுத்து விடுவேன்...(நி.நி புக்கை ரசித்த வாசகர்களை குறை கூறவில்லை.எனது பார்வையின் கோணம் பற்றி கூறுகிறேன்..
    இதுவே டெக்ஸின் சமீபத்திய புயலுக்கொரு பிரளயம் என் கைக்கு கிடைத்தது. 2 மாதங்களுக்கு முன்பு தான் இதுவரை 5 முறை படித்து விட்டேன். .ஆனால் நி.நிசப்தம் 1 முறை கூட படிக்கவில்லை...
    வீட்டிலும் சரி வெளியிலும் சரி நமக்கு இருக்கும் பிரச்சினையில் அதுவும் உலகமே நம் கையில் உள்ள இந்த வேலையில் கனமான கதைக் களம் என்றால் ஒரு தயக்கத்துடன் தான் தொட வேண்டி இருக்கிறது.
    ஆதலால் மாதம் ஒரு டெக்ஸ்+மினி கலர் டெக்ஸ்,ஒரு கார்ட்டூன் ,ஒரு இலகுவான கதைக் களம்,ஒரு மறுபதிப்பு...3 மாதங்களுக்கு ஒரு முறைஉங்களின் பரீட்சார்த்த முயற்சி என்றுஇருந்தால் நலம் என்பதுஎன் எண்ணம். ..என் எண்ணம் மட்டுமே. உங்களின் விற்பனையிலோ,முயற்சியிலோ அடியேன் தாசன் எந்த வித கோரிக்கையும் வைக்க வில்லை....
    உங்களுக்கு எது சரி என்று பட்டதோ அதை தான் இன்று வரை சரியாக செய்து வந்துஉள்ளீர்கள். ..
    உங்கள் முயற்சி எதுவாக இருந்தாலும் என் போன்ற வாசகர்களின் ஆதரவு என்றும் உண்டு..ஜெய்ஹிந்த். .நன்றி. .🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. அய்ய்யோ, நண்பரே நீங்க சொல்ர பிரச்சனை எல்லாம் எனக்கும் அப்புடியே இருக்கு!

      ஆனா அந்த நி.நி.க்கு பதிலாக ஒரு ஒரு டஜன் கருப்பு/வெள்ளை டெக்ஸ் கதைகளை போட்டுக்கங்க!

      கோவிச்சுகாதீங்க நண்பரே!
      சும்மா தமாஸுகாண்டி!!
      ஆனா விஷயம் உண்மைங்க!!!

      Delete
    2. மிதுன் செம்ம கவுண்டர் நண்பரே

      Delete
    3. // இதுவே டெக்ஸின் சமீபத்திய புயலுக்கொரு பிரளயம் என் கைக்கு கிடைத்தது. 2 மாதங்களுக்கு முன்பு தான் இதுவரை 5 முறை படித்து விட்டேன். // என்னால் ஒரு முறை படித்து முடிப்பதர்குள்ளே போதும் போதும் என்று ஆகி விட்டது.

      Delete
    4. மிதுன் நண்பரே..செம காமெடி😜😜😜😜😜

      Delete
    5. ஆனால் எடுக்கும் கதை களம் heavy யாக இருந்து விட்டால் என் பாடு திண்டாட்டம் தான்...அதற்குசமீபத்திய எடுத்து காட்டு நிஜங்களின் நிசப்தம்....\\\

      சரன்செல்வி

      கனமான காமிஸ்ஸில் படிப்பதற்கு அல்ல. ரசிப்பதற்கு.

      Delete
  17. வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே

    ReplyDelete
  18. ஆசிரியர் & காமிக்ஸ் நண்பர்களே உங்களனைவரின் அன்பினாலும் பண உதவியினாலும் கடவுள் பிரார்த்தனைகளாலும் என் மனைவியை நல்லபடியாக மருத்துவமனையிலிருந்து அழைத்து வந்து 6 மாதங்களாகிவிட்டது இப்போழுதும் எனக்கு நண்பர்கள் உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள் 3 மாத செக்கப் வந்தபோது நமது ஷெரீப் கனிசமான தொகையை அனுப்பி எனது இக்கட்டில் பங்கெடுத்து உதவினார் நண்பர் பரணி மருந்து மாத்திரைகளுக்கு பணம் அனுப்பி உதவினார் இரண்டு நாட்களுக்கு 6 மாத செக்கப்பிற்க்கு அன்புள்ள அனாமதேயர் 2500 அனுப்பி உதவினார் நீங்களனைவரும் செய்த செய்யும் செய்துகொண்டிருக்கும் உதவிகளுக்கு நான் நன்றிகள் சொல்லியே என் வாழ்நாள் முடிந்துவிடும் போலிருக்கிறது நண்பர்களே நீங்களையெல்லாம் எனக்கு கிடைக்க உதவிய என்னைபெற்ற தாயுக்கும் கடவுளுக்கும் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  19. வணக்கம்!

    இது எடிட்டரோட பதிவா? அல்லது எனது கடந்த 2 மாத அனுபவத்தை பிக்பாஸ் போல ஏதாவது கேமரா செட் பண்ணி பதிவிட்டிருகிறாரானு சந்தேகமாய் இருக்கு?!

    மே மாத புக்குகளை பொட்டிய பிரித்து தடவி தடவி பார்த்ததோடு சரி, இதுவரை அந்த மினிடெக்ஸ் தவிர மற்ற 3 புக்குகளில் ஒரு பக்கம் கூட படிக்கவில்லை!

    இதுக்குனு ஒரு நேரம் ஒதுக்கி படிக்கலாம்னு பென்டிங் வச்சு, இரண்டு மாதம் ஓடிப் போச்சு!!

    இம்மாதம் டெக்ஸ் கதைய தவிர மற்ற எல்லாம் வாங்கிய ஒரு நாளிலேயே படிச்சாச்சு!

    என் தலைமேட்லயே மே மாத புக்குகளும், டெக்ஸ் சி.சி.வயதில் வைச்சிருக்கேன்!

    இப்போது தான் சி.சி.வயதில் பாதி படிச்சிருக்கேன்! மே மாத ஹெவி வெயிட்டுகளுக்கு ஏற்ற சுபமுகூர்த்த வேளை எப்போ வரும்னு தெரியலை!!

    டெக்ஸைவாவது படித்து முடிப்போம் அடுத்த மாத புக்கும் வருவதற்குள்ளாக என்று முடிவு பண்ணி பாதி கிணறு தாண்டியிருக்கேன்!!

    சில கருப்பு/வெள்ளை டெக்ஸ் படிக்காமலேயே பரணுக்கு போயிருந்தாலும் உண்மையிலேயே "சி.சி. வயதில்" சூப்பர்! சூப்பரோ சூப்பர்!!

    மார்க் 9/10

    கடந்த 6 மாத காலமாகவே பணிச்சூழல் முற்றிலும் மாறியதால், படிப்பதில் ஒரு ஒழுங்கு இல்லாமல் போய்விட்டது! விரைவில் அனைத்தும் சரியாக ஆவண செய்ய வேண்டும்!

    இதுல இந்த ஒன்றரை மாத உ.கோ.கிரிக்கெட் வேற ஏகப்பட்ட நேரத்தை பிடிங்கிக் கொண்டது!!

    இடையில் ஒரு 20 நாள் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம மே மாத குண்டு பார்சலை ஆஸ்பத்திரிக்கும், வீட்டுக்கும்னு தூக்கி சுமந்தும், ஒரு பக்கம் கூட படிக்க முடியலை!

    (முக்கிய குறிப்பு : அதுக்காண்டி குட்டி புக், ஹெவி வெயிட் கதையெல்லாம் வேண்டாம்னு எடுத்தாதீங்க எடிட்டர் சார்! படிக்கரதும்,, படிக்காததும் அவரவர் தலைவிதி!! நாங்க 20 வருஷம் கழிச்சு, கண்ணு தெரியுதோ, இல்லையோ. ஈஸீ சேர்ல உங்காந்து கூட படிப்போம்!)

    யப்பா! ஒரு வழியா, ஒரு மாதிரி எல்லாத்தையும் சொல்லியாச்சு!!

    ம்ம்ம்... இப்போ சொல்லுங்க சார்.
    நாங்க சொல்றத வைச்சு என்ற முடிவு எடுப்பீங்கன்னு!!

    😆😆😆

    ReplyDelete
    Replies
    1. குண்டு புக். //குட்டி புக்,// னு பதிவாயிருச்சு!!

      Delete
    2. // முக்கிய குறிப்பு : அதுக்காண்டி குட்டி புக், ஹெவி வெயிட் கதையெல்லாம் வேண்டாம்னு எடுத்தாதீங்க எடிட்டர் சார்! படிக்கரதும்,, படிக்காததும் அவரவர் தலைவிதி!! நாங்க 20 வருஷம் கழிச்சு, கண்ணு தெரியுதோ, இல்லையோ. ஈஸீ சேர்ல உங்காந்து கூட படிப்போம்!)

      யப்பா! ஒரு வழியா, ஒரு மாதிரி எல்லாத்தையும் சொல்லியாச்சு!!

      ம்ம்ம்... இப்போ சொல்லுங்க சார்.
      நாங்க சொல்றத வைச்சு என்ற முடிவு எடுப்பீங்கன்னு!! // தயவு செய்து குண்டு புக்ஸ் எடுத்து விடா தீர்கள்

      Delete
  20. Sir, a graphic novel or a lighter read is onething . But seeing the preview of 'pistolukku piriya vidai', understanding how many different stories you bring to us, I think how sad it is to see our print run dropped from 5000 (if my memory is right, in the beginning of our 2nd innings) to 2000(am I right?). I wish we had much more circulation. OK sir, I vote for Mayavi &mummoorthi, Modesty blaise , XIII,& Lady S

    ReplyDelete
  21. DeR edited sir
    Think one more for light reading. If you wish make it as separate slot.

    Don't disturb regular slots

    ReplyDelete
  22. ஞாயிறு காலை வணக்கம் சார்
    மற்றும்
    நண்பர்களே 🙏🏼
    .

    ReplyDelete
  23. // அதே நேரம் மேஜையில் கிடக்கும் இதழ் ஒரு crisp டெக்ஸ் வில்லர் கதையாய் இருந்தாலோ ; ஒரு கலர்புல் லக்கி லூக்காய் இருந்தாலோ ; ஒரு ஜாலியான டாக்புல் கூத்தாய் இருந்தாலோ - "சித்த நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேனே !!" - என்றபடிக்கு புக்கைப் பர பரவென வாசிக்கும் வாய்ப்புகள் ஜாஸ்தி தானே ? //

    ஆமா சார்
    ஆமா சார்
    உண்மையோ உண்மை 🙏🏼

    அதுக்காக கிநா வேண்டாமுன்னு சொல்ல மாட்டோம்

    அதுவுந்தேன்

    இதுவுந்தேன் 😍🥰
    .


    ReplyDelete
  24. ஸ்மர்ஸ் வேண்டும்

    ReplyDelete
  25. ஒவ்வொரு மாதமும் வரும் காமிக்ஸ்களை பெரும்பாலும் கைக்கு வந்த முதல் நாட்களிலேயே படித்து முடித்து விடுவேன்.

    மிண்ணும் மரணம் மற்றும் XIII படித்து நான்கு நாட்கள் லேவைப்பட்டது.

    மாதம் எத்தனை எவ்வளவு கனமாக வந்தாலும் படிக்க நான் தயார்(ஆர்வத்தோடு).

    ReplyDelete
    Replies
    1. // ஒவ்வொரு மாதமும் வரும் காமிக்ஸ்களை பெரும்பாலும் கைக்கு வந்த முதல் நாட்களிலேயே படித்து முடித்து விடுவேன்.

      மிண்ணும் மரணம் மற்றும் XIII படித்து நான்கு நாட்கள் லேவைப்பட்டது. // எனது நிலைமையும் இதே தான். ஒரு நாள் அல்லது அதிக பட்சம் இரண்டாம் நாள். அதிக நாள் எடுத்து கொண்டது மின்னும் மரணம் மற்றும் XIII than. அதே நான்கு நாட்கள்.

      Delete
  26. மேன்மை மிகு ஆசிரியருக்கு வணக்கம் 🙏. தாங்கள் பிரித்த விதம் மிக மிக சரி.நீங்கள் கூறியுள்ள அனைத்து கருத்துகளும் அனுபவத்தில் உணர்ந்து பயணிக்கின்ற செயல்தான்.நீங்கள் கூறியுள்ளது போல் புத்தகங்களை வெளியிடுங்கள் ஆனால் பக்க குறைப்பு ,புத்தகம் குறைப்பு எந்த சூழலிலும் வேண்டாம்.மாதமோ முப்பது நாட்கள் புத்தமோ மூன்று அல்லது நான்கு மட்டுமே. எப்படியும் நமது வாசகர்கள் பத்து நாட்களில் படித்து முடித்து விடுவார்கள்... ஐயா நான் நமது மாத வெளியீடுகள் புத்தகங்களை ஒரே வாரத்தில் படித்து முடித்து விடுவேன்.மீதமுள்ள நாட்களில் என்ன செய்வேன் தெரியுமா? தொடர் பாக கதைகள் வெளிவர இருப்பின் அதன் முந்தைய கதைகளைப் படித்து என்னை நானே ஆயத்தப்படுத்திக் கொள்வேன்.நீங்கள் கூறியது போலவே லைட் ரீடிங் கதை தொகுப்பில் முதல் இடம் பிடித்த டெக்ஸ் வில்லர் கதைகளை நான் ஓய்வு நேரத்தில் படிப்பது என்னுடைய பொழுது போக்கு.டெக்ஸ் வில்லர்,டைகர்,லக்கி லுக்,டுயூராங்கோ, கமான்சே போன்றோரின் சாகசங்களை அடிக்கடி படிப்பேன்.படித்து முடித்த பின்னர் மீண்டும் பழைய புத்தகத்தில் இருந்து படிப்பேன்.இவ்வாறு புதிய புத்தகம் வரும் வரை மீண்டும் மீண்டும் படிப்பது நமது வாசகர்களின் வழக்கமாக இருக்குமென்று நினைக்கிறேன். எங்களது எண்ண ஓட்டங்களை தெளிவாக உள்ளங்கையில் வைத்துள்ள நீங்கள் சிறப்பாக அட்டவணை செய்து வெளியிடுங்கள் ஆசிரியரே, நன்றி,வணக்கம்..

    ReplyDelete
    Replies
    1. // மீதமுள்ள நாட்களில் என்ன செய்வேன் தெரியுமா? தொடர் பாக கதைகள் வெளிவர இருப்பின் அதன் முந்தைய கதைகளைப் படித்து என்னை நானே ஆயத்தப்படுத்திக் கொள்வேன் // சரியாக சொன்னீர்கள் நண்பரே. இதே தான் நானும் செய்கிறேன். இந்த Durango வரும் முன் முந்தைய இரண்டு புத்தங்கங்களும் படித்து முடித்து விட்டேன். இரத்த வைரம் வரும் முன் barracuda படித்தேன். இந்த புத்தகம் வந்த பின் இதனை படித்து முடித்து விட்டு பிறகு இரண்டையும் சேர்த்து ஒரு முறை படிப்பேன் .

      Delete
  27. Light reading கதைகள், அந்த சமயத்தில் படிப்பதற்கு சுலபமாக தோன்றினாலும், அதன் பெயருக்கேற்றாற் போல் light ஆகவே உள்ளது. ஆனால் அழுத்தமான கதைகளும், அதிக பக்கங்கள் உள்ள கதைகளும் தான் காலங்கள் தாண்டியும் மனதில் பசுமையாய் குடிகொள்கிறது. மேலும் காமிக்ஸ் மீது உள்ள ஈர்ப்பை குறையாமல் வைப்பது குண்டு புத்தகங்களும், கனமான கதைக்களங்களுமே. மினி கதைகளை
    பொருத்தவரை அளவோடு இருப்பதே
    நலம்.

    ReplyDelete
    Replies
    1. // ஆனால் அழுத்தமான கதைகளும், அதிக பக்கங்கள் உள்ள கதைகளும் தான் காலங்கள் தாண்டியும் மனதில் பசுமையாய் குடிகொள்கிறது. மேலும் காமிக்ஸ் மீது உள்ள ஈர்ப்பை குறையாமல் வைப்பது குண்டு புத்தகங்களும், கனமான கதைக்களங்களுமே // valid point

      Delete
    2. மிகச் சரியான கருத்து நண்பா..

      Delete
  28. ஒரு கலர் டெக்ஸ் மாதாமாதம் தலைகாட்டல் அவசியம்.

    ReplyDelete
    Replies
    1. கருப்பு வெள்ளையா இருந்தாலும் மாதம் ஒரு டெக்ஸ் எனக்கு ஓகே சார்..:-)

      Delete
  29. ஆகா... மாடஸ்டிக்குப்ரமோசன் தந்துட்டிங்க தேங்க்ஸ் சார் மாதம் இரு கலர் டெக்ஸ் ஒ ரு கார்ட்டூன் ஒரு குண்டுபுத்தகம் ஒரு டெக்ஸ் மற்றும்ஒரு கி. நா நமது இப்போதையவாசிப்பு மற்றும் ரசனைக்கு ஓக்கே என நினைக்கிறேன் சார் கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  30. அருமையான அலசல் பதிவு சார்...யோசிக்க வேண்டிய பதிவே...என்னை பொறுத்த வரை இலகுவான கதைகள் ,வெயிட்டான கதைகள் என்பது அதன் களங்களை பொறுத்து அமைகிறது பராகுடா உட்பட. பராகுடாவும் எனக்கு இலகுவான கதை களமே .காரணம் அதன் கமர்ஷியல் கதை களம் .
    இதழ் குண்டோ ,ஒல்லியோ ..நாயகனோ ,நாயகியோ கதை களனே அதனை தீர்மானிக்கிறது.ஏன் கிராபிக் நாவல் கூட .ஆனால் நிஜங்களின் நிசப்தம் போன்ற சில கிராபிக் இதழ்கள் மட்டுமே கடினமாக தோன்ற வைக்கிறது என்பதும் உண்மை...அது போன்ற கதை களங்களே உடனே படித்து முடிக்க தோன்றுவதில்லை...அல்லது படிக்கவே தோன்றுவதில்லை..( பல மாதங்கள் கழித்து அதனை மிக பொறுமையாக படித்து முடித்து ஓகே என்று தோன்றியதும் உண்மை..).அதுமட்டுமில்லாமல் இதுவரை சொல்லாத உண்மையை கூட :-) இப்பொழுது சொல்கிறேன்.இதுவரை எவ்வளவு பெரிய டெக்ஸ் கதையாக இருந்தாலுமே படிக்க ஆரம்பித்தால் முடித்து விட்டு தான் மறுவேலை.ஆனால் ஒரே ஒரு இதழ் கிராபிக் நாவல் போல ( அதாவது நி.நி ,வானமே எங்கள் வீதி போல..) விட்டு விட்டு கொஞ்சம் கடினப்பட்டு படித்த டெக்ஸ் இதழும் உண்டு.அது வல்லவர்கள் வீழ்வதில்லை என்ற இதழ்.எனவே என்னை பொறுத்தவரை நாயகர்களோ ,பக்கங்களோ இதழ்களை லைட்டா...வெயிட்டா என தீர்மானிப்பதில்லை..அதன் கதை களங்களே தீர்மானிக்கிறது.எனக்கு டெக்ஸ் ,லக்கி ,பராகுடா ,அண்டர்டேக்கர் கூட எனக்கு இலகுவான கதை களங்களே.விறுவிறுப்புடன் பரபரவென நகரும் கதை களங்கள் எடுத்தால் முடித்து விட்டு மறுவேலை.பராகுடா போன்ற தொடர் இதழ்கள் எனில் இறுதி பாக இதழ்கள் வரும் பொழுது முன் வந்த பாகங்களை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படித்து முழுமையாக படித்து ரசிப்பது அதனால் தான்.

    இது இதழ்களுக்கான சூழல்..அடுத்து புறநிலை சூழல்கள் .தாங்கள் கூறியது போல முன்னரெல்லாம் காமிக்ஸ் இதழ்கள் படிப்பது மட்டும் தான் வேலை .இப்பொழுதோ ....?
    மேலும் காமிக்ஸ் இதழ்களை படிக்கும்பொழுது இடையில் எந்த குறுக்கீடும் இல்லாது அமைதியான சூழலில் படிப்பதே அலாதியானது.அப்படி பட்ட சூழல்கள் இப்பொழுது எல்லாம் அமைவது மிக கடினமாக உள்ளது என்பதே உண்மை.முன்னர் எல்லாம் சாப்பிடும் பொழுது கையில் படித்த இதழாகவே இருந்தாலும் கையில் ஏதாவது காமிக்ஸ் இதழ் இருக்க வேண்டும்..உறங்கும் முன்னர் தினம் ஒரு காமிக்ஸ் இதழை படித்து விட்டு தான் உறங்குவது .ஆனால் இப்பொழுதோ மீண்டும் கேள்விக்குறி தான்... புது இதழ்களை படிக்க கூட அமைதியான சூழலை தேடி, தேடி ஓடிக் கொண்டே கொண்டே இருக்க வைக்கிறது.

    இப்படி தேடி தேடி...ஓடி..ஓடி அமைதியான சூழல் கிடைக்கும் நேரம் கிடைத்து விட்டது அலைபேசியும் வேண்டாம் ,தொலைகாட்சியும் வேண்டாம் புக்கை எடு எனது மனது ஆனந்தப்படும் பொழுது தான் அடுத்து மிகப்பெரிய தடை ஏற்படுகிறது.அது முன் பதிவில் நண்பர் ப்ளேட்பீடீயா கார்த்திக் சோமலிங்கம் அவர்கள் கூறியது தான்.


    ( தொடரும் )

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் படிக்கும் நாம் அனைவரும் மனதளவில் சிறுவர்களே...( அதனால் தானே அவ்வப் பொழுது சில சில சண்டைகாட்சிகளையும் பார்க்க முடிகிறது :-) )

      அது மனது அளவில் மட்டுமே என்பதே நிதர்சனமானது அல்லவா...நிஜத்தில்...?

      நமக்கு வயது கூடுவது எதில் தெரிகிறதோ இல்லையோ... நண்பர் கார்த்திக் அவர்கள் சொன்னது போல கண்களில் நன்றாகவே உணர முடிகிறது.பகல் வேளைகளில் கூட அறைகளில் லைட் வெளிச்சத்தில் படிக்கும் சூழலில் கூட உற்று .உற்று கூர்ந்து படிக்க வைக்கிறது எனில் இரவு நேரங்களில் சொல்லவும்
      வேண்டுமா என்ன...?
      அதிலும் இதழ்களில் வரும்
      கையெழுத்து போன்ற எழுத்துருக்களை
      படிப்பதற்குள் தாவு தீர்ந்து
      விடுகிறது
      என்பதே உண்மை.அதே போல கட்டத்தில் வரும் அடர் நிறங்களின் பிண்ணனியில் வரும் எழுத்துருக்களும் அவ்வாறே..இவ்வாறு கண்களை சுருக்கி ..இதழ்களை முன்பின் முன்பின் என நகர்த்தி ,நகர்த்தி கடினப்பட்டு இதழ்களை படிக்கும் பொழுது மறு வாசிப்பிற்கோ...உணவருந்தும் சமயமோ..உறங்கும் பொழுதோ எங்கே படிப்பது ..இதுவும் மிக பெரிய காரணம். ரீடிங் க்ளாஸ் அணிந்தால் தான் வேலைக்கு ஆகும் போல என்புது புரிகிறது ..( கண்ணாடி போட்டா கவர்ச்சி போயிருமான்னு வேற தெரில..)..அதற்கு கூட நேரம் கிடைக்க காணோம்...ஆனால் காமிக்ஸ் படிப்பதற்காகவது கண்ணாடி அணிய வேண்டும் என்பதே சூழல்.இந்த காரணிகளும் இதழை படிக்க தாமத படுத்துகிறது.எனவே தான் இப்பொழுது எல்லாம் தினத்தை பொறுத்து அமையாமல் சூழலை பொறுத்து முதல் நாளிலேயே அனைத்து இதழ்களையுமோ..அல்லது தாமதமாகவோ படிக்க முடிகிறது.


      ஆனால் இதையெல்லாம் மீறி நமது காமிக்ஸ் இதழ்கள் எப்பொழுது வரும் என காத்திருப்பது ,இதழ்கள் வந்தவுடன் புரட்டி புரட்டி ரசிப்பது ,பின் அந்த உலகில் நுழைத்து நாமும் சாகஸத்தில் ஈடுபடுவது காமிக்ஸ் ரசிகர்களுக்கு என்றும் குறைய போவதும் இல்லை...ஆர்வமும் மங்க போவதில்லை.காரணம் நாங்கள் காமிக்ஸால் வாழ்ந்தவர்கள் .காமிக்ஸால் வளர்ந்தவர்கள்.

      வழக்கம் போல் தொடருங்கள் ...தொடந்து கொண்டே வருவோம்...

      வாழ்க வளமுடன்...

      Delete
    2. ///( கண்ணாடி போட்டா கவர்ச்சி போயிருமான்னு வேற தெரில..).///

      ஆமா தலீவரே..! நீங்க கண்ணாடி போட்டா கண்ணாடியோட கவர்ச்சி போயிரும் தலீவரே..! :-)

      Delete
    3. கண்ணா மரண அடி உருண்டு புரண்டு சிரித்து கொண்டு இருக்கிறேன்.

      Delete
    4. ஆமா தலீவரே..! நீங்க கண்ணாடி போட்டா கண்ணாடியோட கவர்ச்சி போயிரும் தலீவரே..! :-)


      ######


      யோவ்...போய்யா...

      Delete
    5. தலீவரே...
      மனசுல நினைக்கறதை கோர்வையா எழுத்துக்களில் கொண்டு வருவது ஒரு கலை! இளங்கோவடிகளுக்கு அப்புறம் அது உங்களுக்குத்தான் நல்லா வருதுங்க தலீவரே!
      கண்ணரு கிண்டலடிப்பதைக் கண்டுக்கிடாதீங்க தலீவரே.. கண்ணாடி போட்டா நீங்க குருதிப்புனல் கமல் மாதிரியே இருப்பீங்க! போட்டுக்கங்க!

      Delete
    6. ///இளங்கோவடிகளுக்கு அப்புறம் அது உங்களுக்குத்தான் நல்லா வருதுங்க தலீவரே!///

      இந்த பாரதி.., கம்பரு.. இவங்கெல்லாம் என்ன பாவம் பண்ணாங்க குருநாயரே..!?


      ///தலீவரே.. கண்ணாடி போட்டா நீங்க குருதிப்புனல் கமல் மாதிரியே இருப்பீங்க! ///

      க்ளைமாக்ஸ்ல நாசர் சேர்ல கட்டிவெச்சிருப்பாரே.. அந்தக் கமலைத்தானே சொன்னீங்க குருநாயரே..!?

      Delete
    7. இளங்கோவடிகளுக்கு அப்புறம் அது உங்களுக்குத்தான் நல்லா வருதுங்க தலீவரே!

      #######

      செயலரே..மொத தடவ படிச்சவுன அப்படியே புல்லரிச்சு போயிட்டேன்..அப்புறமா எனது எதிரி கண்ணரு பாரதி ,கம்பரை எல்லாம் நினைவுபடுத்தினவன திரும்ப படிச்சவுன தான் தெரிந்தது நாம இளங்கோவடிகள் அளவுக்கு எல்லாம் வொர்த் இல்லைன்னு..அதுக்கு தான் பொருளாளர் இருக்காரேன்னு ..

      ஹீம்...உங்களை சொல்லி தப்பில்ல..:-(

      Delete
    8. க்ளைமாக்ஸ்ல நாசர் சேர்ல கட்டிவெச்சிருப்பாரே.. அந்தக் கமலைத்தானே சொன்னீங்க குருநாயரே..!?

      #####

      அதைவிட மோசமா இருந்தாலும் பரவால...எப்படியோ கமல்ன்னு சொன்னா போதும்..

      கண்ணாடி போடறேன் ..கலக்குறேன்..:-)

      Delete
  31. வணக்கம் நண்பர்களே..

    இலகுரகம்,கனரகம் என்றி்ல்லாமல் எந்த புத்தகத்தையுமே படிக்கும் நேரம் குறைந்த பரபரப்பு உலகில் எடியின் கருத்துக்கள் நியாயமே..

    பால்யங்களில் விளையாட்டும் புத்தகங்களும் மட்டுமே பிரமாணமாய் இருந்தது.காற்றில் பறந்து வரும் சின்ன கிழிந்த பேப்பரைக் கூட விடாமல் படித்து அலமாரியில் பத்திரப்படுத்திய அரை டவுசர் காலம் அது..

    உண்மையை சொல்லப் போனால் நிறைய விசயங்கள் முழுமையானதும் தான் நாம் அரை(பாதி) ஆகியிருக்கிறோம்...

    கணிணி,மொபைல்,வலைத்தளம் என வாழ்க்கை வளர்ந்த பின் நேரம் சுருங்கி போய் கிடக்கிறது.மேற்சொன்ன அனைத்திலும் எவ்வளவோ புத்தகங்கள் கிடைத்தாலும் இப்போதெல்லாம் பதிவிறக்கம் மட்டுமே சாத்தியப்படுகிறது.

    பொம்மை புத்தகமாய் இருந்தால் போதும் உடனே வாங்கும் உங்களை போலத்தான் நானும்...ஒரு புத்தக கண்காட்சியையும் விடாமல் வீட்டுக்காரம்மாவின் முறைப்பையும் தாண்டி பை நிறைய அள்ளி வந்து அலமாரி நிறைய அடுக்குவதோடு சரி...

    பாராகுடாவே இன்னும் படிக்காமல் தான் உள்ளது எனும் போது என்ன சொல்ல..
    ஆனால் எல்லாமே இலகுரக கதையென மாற்றி வாசிப்பில் முதிர்ந்து கொண்டு வரும் நம் வாசகர்களை பின் நோக்கி நகர்த்த வேண்டாம் சார்...

    பொறுப்புகள் யாவும் முடிந்து வேலையின்றி கிழடு தட்டி அமரும் நமக்கான நாட்கள் வருகையில் கண்டிப்பாய் நமக்கான நேரமும் கிட்டி இப்போது வாசிக்காமல் விட்ட அனைத்தையும் ஒருநாள் வாசிக்கக் கூடும்...
    நமக்குப் பின் நம் தலைமுறைக்கும் கடினரக வாசிப்புக்கான புத்தகங்கள் கிடைக்கட்டுமே...

    புத்தகங்கள் வாங்குவதற்கு கூட வாய்ப்பில்லாத காலங்களில் வாசிப்புக்கான நேரங்கள் நிறைய இருந்தது.வாங்கும் வாய்ப்பு கூடிப் போன இக்காலங்களில் வாசிப்பும் இல்லை..
    வாழ்தலும் இல்லை....

    ReplyDelete
    Replies
    1. // ஆனால் எல்லாமே இலகுரக கதையென மாற்றி வாசிப்பில் முதிர்ந்து கொண்டு வரும் நம் வாசகர்களை பின் நோக்கி நகர்த்த வேண்டாம் சார்... // சரியான பதில்.

      Delete
    2. அனுபவமான வார்த்தைகள்...

      Delete
    3. // ஆனால் எல்லாமே இலகுரக கதையென மாற்றி வாசிப்பில் முதிர்ந்து கொண்டு வரும் நம் வாசகர்களை பின் நோக்கி நகர்த்த வேண்டாம் சார்... //

      அதே அதே!!

      Delete
    4. உண்மையான நிஜங்கள் நண்பரே...

      Delete
  32. Jokes apart...

    உண்மையாகவே என்னால் என்னுடைய இலகுரக வாசிப்பு எது என்பதை வகைப்படுத்த முடியவில்லை.!

    மாதாமாதம் பார்சல் வந்ததும் முதலில் நான் தேடுவது கார்ட்டூனைத்தான்..! பிறகு கி.நா..,அடுத்து மற்ற கதைகள்..., இறுதியாகத்தான் டெக்ஸ் வில்லர். !
    அதற்கு காரணம் டெக்ஸ் வில்லர் கடின களம் என்பது அல்ல. !
    டெக்ஸை காத்திருந்து பொறுயமையாக படிப்பதில் ஒரு ஆனந்தம் அவ்வளவே.!

    எது எப்படியாயினும் கார்ட்டூன் இல்லாத மாதம் ஏதோ ஒரு வெறுமையை விதைத்துவிட்டுச் செல்கிறது.! எனவே அடுத்த அட்டவணையில் மாதம் ஒரு கார்ட்டூன் தவறாமல் இடம்பிடித்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன் சார்.!

    ReplyDelete
    Replies
    1. மாதம் ஒரு கார்ட்டூன் எனக்கும். கார்ட்டூன் இல்லாத மாதம் வெறுமை ye

      Delete
    2. மே மாதம் கார்ட்டூன் இல்லாததும் அந்த மாதம் மிகவும் கடினமாக feel ஆனதற்கு காரணம்.

      Delete
    3. // கார்ட்டூன் இல்லாத மாதம் ஏதோ ஒரு வெறுமையை விதைத்துவிட்டுச் செல்கிறது.! எனவே அடுத்த அட்டவணையில் மாதம் ஒரு கார்ட்டூன் தவறாமல் இடம்பிடித்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன் சார்.! //

      +1

      Delete
    4. அதான் கார்ட்டூன்க்கு பதிலாக தல டெக்ஸ் வர்ராரே! அப்புறம் எதுக்கு பீல் பண்ணீங்க நண்பர்களே!

      ஹிஹிஹி!!

      Delete
    5. ///அதான் கார்ட்டூன்க்கு பதிலாக தல டெக்ஸ் வர்ராரே! அப்புறம் எதுக்கு பீல் பண்ணீங்க நண்பர்களே!///

      டெக்ஸ்க்கு ஒரு போட்டி வாணாமா மிதுன்..!? :-)

      Delete
  33. ///கொஞ்சமாய் மெனக்கெடல் அவசியமாகிடும் medium reading பட்டியல் :///

    மாடஸ்டி....!???

    மாடஸ்டிக்கு மெனக்கெட என்ன இருக்கு..!?

    (இளவரசி ரசிகர்கள்லாம் வந்துட்டு போனப்புறம் வர்ரேன்..ஹிஹி..)

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் தான் எனக்கு டென்ஷன் குடுப்பாரு. ஹிஹி

      Delete
    2. ///மாடஸ்டிக்கு மெனக்கெட என்ன இருக்கு..!?///

      அதானே.!அவுக இளகின மனசுகாரக.கதையும் இலகுவாகவும் இளமையாகவும் இருக்குமே.

      Delete
    3. ரொம்ப இளகினாலும் தப்பாச்சே....

      Delete
    4. பொண்ணோட மனசை புரிஞ்சவங்களுக்கு மாடஸ்தி ஒரு புயல்..புரியாதவங்களுக்கு மாடஸ்தி ஒரு புதிர்...

      Delete
    5. ///பொண்ணோட மனசை புரிஞ்சவங்களுக்கு மாடஸ்தி ஒரு புயல்..புரியாதவங்களுக்கு மாடஸ்தி ஒரு புதிர்...///

      ஒரு பொண்ணோட மனசு இன்னோரு பொண்ணுக்குதான் தெரியும்னுகூட சொல்வாங்க தலீவரே..!

      மும்பை பக்கம் ஏதும் போனீங்களா ..!?:-)

      Delete
  34. Dear Edi,

    Light Reading is the demand of changing times. So my vote is always to implement it sooner, to secure the future of our Comics unique hobby.

    Regarding series categorizations, I would like to leave them be debated by our readers who have read all our titles, in recent times. I am more a passive reader these days, of select titles.

    But, my choice for perfect combo would be,
    * 3 issues every month - 1 Lion/1 Muthu/1 GN or 1 Jumbo
    * 1 Tex every month, but it should alternate between Mini, Regular, Young Tex series.
    * 1 Big Volume every other Month - should alternate between Reprint Collection, Collected Volumes, Big Tex
    * 1 Detective and 1 Cartoon Title at minimum every quarter.
    * Special editions*2 for Erode and Chennai Book Fairs

    ReplyDelete
  35. // தலைமாட்டில் புக்கைப் பதுக்கி வைத்தால் - ஏழாம் பக்கத்தைத் தொடும் முன்பாய் எட்டுக் கொட்டாவிகள் விட்டம் வரை விரியும்//

    * கதை இருந்தால் சத்தியமாக கொட்டாவி வராது எடிட்டர் சார். மேலும் படிக்கவெ தூண்டும்.

    * புத்தகங்களை ஒரெ மூச்சில் படித்து முடிக்க வேண்டும் என்று இருந்தால் LMS & XIII full edition வெற்றிகரமாக விற்பனையாகி‌ இருக்குமா???

    ReplyDelete
    Replies
    1. ** கதை விறுவிறுப்பாக இருந்தால்**

      Delete
  36. நாங்கள் காமிக்ஸால் வளர்ந்தவர்கள். வாழ்பவர்கள். சூப்பர் சூப்பர். பரணிதரன் ஜி இப்படிக்கு கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அருமையாக சொன்னீர்கள் தலைவரே

      Delete
    2. உண்மையை சொன்னேன் நண்பர்களே ..நன்றி.நன்றி..:-)

      Delete
  37. நானும் என் பங்கிற்கு பதிவிடுகிறேன். காமிக்ஸ் எனது கைக்கு கிடைத்து விட்டது என்றால் அதனை படித்து முடிக்க ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் அதிக பட்சம் ஆகும். அது இலகு ரகமாக இருந்தாலும் சரி அல்லது குண்டு புத்தகமாக இருந்தாலும் சரி. சிறு வயதில் இருந்தே இந்த பழக்கம் ஒரு புத்தகத்தை எடுத்தால் அதனை படித்து முடித்து விட்டு தான் கீழே வைப்பேன். சில நேரங்களில் ஊருக்கு சென்று புத்தகத்தை படிக்க முடியாது அந்த நேரங்களில் blog il நண்பர்களின் பதிவினை படித்து எந்த புத்தகம் நன்றாக உள்ளது என்பதை அறிவேன். எனக்கும் கண்ணன் சொன்னது போல எல்லா புத்தகங்களும் இலகு ரகமாக வே உள்ளது.

    ReplyDelete
  38. சார் நேரம் கெடக்கலதான்....ஆனா எல்லாமும் வேண்டும்...மே மாதம் போல எப்பாச்சுதான வருது...அதுவும் வேணும்...இதுவும் வேணும்...

    ReplyDelete
  39. ஏதோ ஒரு மாசம் மூனு ஹெவி வெயிட் புத்தகங்களை குடுத்தோம்ன்னு ரொம்ப பீல் பண்ணாதீங்க.. வருசத்தில ஒரு ஆறு மாசமாவது இதே மாதிரி குடுக்க பாருங்க.. அசால்ட் ஆந்திராவில கால் வெச்சு ரொம்ப நாள் ஆச்சு..

    ReplyDelete
    Replies
    1. // ஏதோ ஒரு மாசம் மூனு ஹெவி வெயிட் புத்தகங்களை குடுத்தோம்ன்னு ரொம்ப பீல் பண்ணாதீங்க.. வருசத்தில ஒரு ஆறு மாசமாவது இதே மாதிரி குடுக்க பாருங்க.. //

      +1

      Delete
    2. ரம்மி சூப்பர்....:-))

      Delete
    3. ரம்மி அடிக்கிற ஷட் எல்லாம் சிக்ஸர் தான்.

      Delete
  40. பிஸ்டலுக்கு பிரியா விடை preview பட்டயை கிளப்புகிறது. ஒரே மாதம் தான் ஆகஸ்ட் க்கு. செவ்வாய் அன்று புத்தகங்கள் கிடைக்கும் அருமையான செய்தி. ஞாயிறு அன்று அவற்றை கை பற்றி எனது விமர்சனத்தையும் பதிவிடுகிறேன். இரண்டு dark ஆன கதைகள் அவற்றை ஈடு செய்ய லக்கி ஆண்டு மலர். அற்புதமான மாதமாக அமைய போகிறது ஜூலை. மேலும் ஈரோடு புத்தக விழாவில் வர ப்போகும் புத்தகங்களுக்கு ஆன அறிவிப்புக்கள் தான் இப் போது எனது main aim. எத்தனை புத்தகங்கள் யார் யார் ஹீரோக்கள்? காத்திருப்பு இன்னும் 2 நாட்களுக்கு மட்டும்.

    ReplyDelete
  41. 100 இந்த முறை 100 அடித்து உள்ளேன்

    ReplyDelete
  42. விஜயன் சார், ஒரு மாதம் பல ஹேவி வெயிட் புத்தகங்கள் வந்ததால்/கொடுத்தினால் எழுந்த இந்த சிந்தனையில், விற்பனையில் ஏதாவது பாதிப்பு இருந்ததா சார். அப்படி என்றால் அதிக குண்டு புத்தகங்களை ஒரே நேரத்தில் கொடுக்காமல் இரண்டு மாத இடைவெளியில் பிரித்து கொடுங்கள்.

    பக்கம் குறைந்த புத்தகங்களை புத்தகங்கள் வந்த சில நாட்களில் (முதல் வாரத்தில்) படித்து விடுவேன். அதிக பக்கம் உள்ள புத்தகங்களுக்கு தொடர்ச்சியாக சில மணிநேரம் ஒதுக்கி அதே மாதத்தில் படித்து முடித்து விடுவேன். குண்டு புத்தகங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் படிப்பதால் சிலநாட்கள்/பல மணிநேரம் எடுத்து கொள்வேன்.

    ஆனால் எத்தனை புத்தகங்கள் வந்தாலும் அவைகளை அந்த அந்த மாதங்களிலேயே படித்து முடித்து விடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. நானும் அதே மாதத்தில் படித்து விடுகிறேன். No carry over to next month இது வரை

      Delete
  43. காமிக்ஸ் வெளியீடுகள் என்னை பொருத்த மட்டிலும் தன்னிறைவாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. சிறிய கருத்து ..சீரான கருத்து நண்பரே..:-)

      Delete
  44. இலகு ரகம் என்றால் மனதில் எத்தனை கவலைகள் இருந்தாலும் அதனை மறக்க செய்து மனதை இலகுவாக மாற்றும் கார்ட்டூன் கதைகளே. எனவே மாதம் ஒரு கார்ட்டூன் கதைகள் வர ஆவண செய்யுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இலகு ரகம் என்றால் மனதில் எத்தனை கவலைகள் இருந்தாலும் அதனை மறக்க செய்து மனதை இலகுவாக மாற்றும் டெக்ஸ் கதைகளே. எனவே மாதம் ஒரு டெக்ஸ் கதைகள் வர ஆவண செய்யுங்கள்.

      Delete
  45. எது எப்படியோ எனக்கு பிடிச்ச வகைகள் இவையே,
    ஒரு டெக்ஸ் (ஆக்‌ஷன்),
    ஒரு கார்ட்டூன்,
    ஒரு கி.நா,
    ஒரு துப்பறியும் புலி.
    இரண்டு மாசத்துக்கு ஒருக்கா ஒரு குண்டு புக்,
    வருஷத்துக்கு நான்கு குண்டு சிறப்பிதழ்கள்.
    இது போக ஆசிரியர் சமூகமா பார்த்து இன்னும் ஏதாவது வெளியிட்டாலும் அவர் மனசை நோகடிக்க விரும்பலை,அதையும் மகிழ்ச்சியோட வாங்கிக் கொள்கிறோம்.😍🙏

    ReplyDelete
    Replies
    1. இது நல்ல டீல் ரவி அவர்களே..

      Delete
    2. ///இது போக ஆசிரியர் சமூகமா பார்த்து இன்னும் ஏதாவது வெளியிட்டாலும் அவர் மனசை நோகடிக்க விரும்பலை,அதையும் மகிழ்ச்சியோட வாங்கிக் கொள்கிறோம்///

      நல்ல மனசு.. நல்ல மனசு..!

      Delete
    3. இது நல்ல டீல் ரவி அவர்களே..👍👍👍

      Delete
  46. ஜுன் மாத இதழ்கள் அனைத்தையும் முடித்தாயிற்று.
    1.சிங்கத்தின் சிறுவயதில் மரண மாஸ்,அட்டகாசம்,அதிலும் ஜிம் ப்ரிட்ஜர் எனும் அந்த கதைப்பாத்திரம் எல்லாம் நீண்ட வருடங்கள் மனதில் நிற்கும்.எமது ரேட்டிங்-10/10,
    2.ஒரு ஷெரீப்பின் சாஸனம்-கிட் ஆர்டின் ஜோடி அலம்பல் செய்வதால் மட்டுமே இதுபோன்ற களங்களை நம்மால் இரசிக்க இயலுகிறது,கொஞ்சமே கவனம் பிசகினாலும் சீரியஸான ஒருதன்மையை கொண்டுவரும் வாய்ப்புள்ள களத்தில் அடித்து ஆடி நம்மை மகிழ்விக்கிறார்கள.எமது ரேட்டிங்-9/10,
    3.நியூட்டனின் புது உலகம்-வித்தியாசமான கதையமைப்பு,மார்ட்டின் துணைப்பாத்திரம் போல் வருகிறார்.எனினும் வாசிப்பவர்களுக்கு சவால்களை அளிக்கும் இதுபோன்ற கதைகள் வரவேற்புக்குரியவை.எமது ரேட்டிங்-9/10.
    4.இளமையில் கொல்-வண்ணத்தில் வாசிக்க இன்னும் சிறப்பு.

    ReplyDelete
  47. இதுவரை வந்த கருத்துகளின் படி லைட்டோ வெயிட்டோ மாசம் நாலு புக்கு ..அதுல ஒண்ணு டெக்ஸ்..ஒல்லியை விட குண்டு பெஸ்ட் என்பதே ..

    இதனை ஆசிரியர் ஆணி அடித்தாற் போல் மனதில் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க புனித தேவனை வேண்டுகிறேன்..

    ReplyDelete
  48. தன் துணையை அழைக்க ஆண் கலாபம் விரிக்கும் தோகையை ரசிக்கும் அதே கண்கள் பட்டாம்பூச்சியின் சிறிய வண்ண சிறகுகளை ரசிக்கத்தான் செய்கின்றன ..

    விண்ணில் நீந்தும் வெண்மதியை ரசிக்கும் கண்கள் விண்மீன்களை ரசிக்க மறுக்கவா செய்கின்றன ?

    வளைந்து நெளிந்து ஆடும் கதாநாயகியை ரசிக்கும் விழிகள் வலப்புறம் மூன்றாவது வரிசையில் ஆடும் களை மிகுந்த நடன குழு பெண்ணை ரசிக்கவா மறுக்கின்றன ?

    இரண்டடி இறக்கையை விரித்து பறக்கும் ராஜாளி கழுகை பார்த்து வியக்கும் மனம் இரண்டு விரற்கடை இறக்கை உடைய தேன் சிட்டை பார்த்து வியக்க மறுக்குமா என்ன ?

    நண்பன் நாசர் கொடுத்த பிரியாணி தின்று ருசி கண்ட நாக்கு நான்கு நாள் கழித்து வெளியூர் வேலையாக சென்று வேலை முடியாமல் அந்த ஊர் அத்தைமுறை உறவினர் வீட்டுக்கு இரவு அகால வேளையில் செல்ல அத்தாச்சி அவசரமாக செய்து கொடுத்த ரசம் சாதமும் பருப்பு துவையலையும் வெறுக்குமா என்ன ?

    ஸ்ரீரங்கத்தின் அகண்ட காவிரியில் அம்மாமண்டபத்தில் நனைந்து சுகம் கண்ட கால்கள் ( பழைய பைல் ) உள்ளூர் வாய்க்காலில் சலசலக்கும் நீரோட்டத்தில் நனைவதால் கிடைக்கும் சுகத்தை விலக்கவா செய்யும் ?



    வாவியில் ......

    ***************************************************************************************************************
    பாஸ் ! கொஞ்சம் பொறுங்க ..!!! லைட் ரீடிங் புக்ஸ் அவசியம் அப்டின்னு சொல்ல வர்றீங்க ....அவ்ளதானேமேட்டரு !!! விடுங்க போதும் !! நீங்க பாட்டுக்கு அடிச்சி விட்டுகிட்டே போறீங்க ...BAIRSTOW வும் ROY –ம் இந்தியன் பௌலிங்கை அடிச்சிகிட்டு இருக்கிறமாதிரி !!!!

    ReplyDelete
    Replies
    1. அருமையான கவிதை நண்பா.

      Delete
    2. செனா அனா கவிதையை ரசிக்கும் மனம் , ஈரோடு விஜய்யின் காமெடியை மறுக்கவா செய்யும். ஆகவே...

      Delete
    3. ///செனா அனா கவிதையை ரசிக்கும் மனம் , ஈரோடு விஜய்யின் காமெடியை மறுக்கவா செய்யும்///

      Super 👌👌👌

      Delete
    4. அதுக்கு பெயரை செ அனா வே சொல்லி விடலாம்
      இது கவிதை யில்லை. தொடர்நடை கட்டுரை என்பதை....

      Delete
    5. ///செனா அனா கவிதையை ரசிக்கும் மனம் , ஈரோடு விஜய்யின் காமெடியை மறுக்கவா செய்யும். ஆகவே...///

      _/\_

      Delete
  49. லைட்டோ ,வெயிட்டோ நான் தயாராகவே இருக்கேன்.இந்த டைம்..டைம்.. மட்டும் கிடைச்சா போதும் சார் , மயிலும் மாம்பழமும் இல்லாமலேயே உலகத்தை சுற்றி வர நான் ரெடி.

    ReplyDelete
  50. பர்சனலா குண்டு புக் மேலதான் ஆர்வம் அதிகம்.ஆனா ,ஆத்திர அவசரத்துக்கு ஒல்லிகளே துணைக்கு வருகிறது.

    என்ன செய்ய ஆசிரியருக்கு ரெம்ப பர்சனலா பிடிச்ச மாடஸ்டிக்கு ஒரு ஸ்லாட்தான் கிடைக்குது.ஹி...ஹி..அதனால ஆசிரியர் எவ்வழியோ ,நானும் அவ்வழியே.

    ReplyDelete
  51. எனக்கு 6 மாதத்துக்கு ஒரு முறை புக்கு வரும் பொழுது முதலில் படிப்பது டெக்ஸ். பிறகு கார்ட்டூன் பிறகு மற்றவை. எப்படியும் ஒரு மணி நேரம் கிடைச்சிடும் தினம். அதனால பிரச்னையில்லை. வரிசையா கம்ப்ளீட் பண்ணிடறதுன்னால மாத மாதம் எப்படி வருவதுங்கறது்பிரச்னையில்லை. நான் படிக்க சிரமப்பட்டது நி. நி. மட்டுந்தான். அந்தக் கதை எனக்கு ரொம்பவே உயரத்துல இருக்கு. எனக்கு விளக்க கொஞ்சம் வசனம் தேவை. மத்தபடி இலகு ரகம், கன ரகமெல்லாம் பிரச்னையே இல்லை.

    என்னோட ஆலோசனை என்னன்னா முடிந்த அளவு மாதாந்திரத் தொகை யூனிபார்மா வர மாதிரி இருந்தால், சந்தா கட்டாத கடைகளில் வாங்கும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும். ஈபுவி, செபுவி யின் போது ஸ்பெசல் இதழ்கள் வருவது இதற்கு விதிவிலக்கு.

    ReplyDelete
  52. The going is good and hence no further thoughts required,I feel.... Finishing books before 10th of a month and waiting for the next month by reading the older ones is what my case as we need stress busters amidst our hefty work schedule and comics is the only way we have been making ourselves excited.

    ReplyDelete
  53. ஹய்யோ.. ஈரோட்டுத் திருவிழாவிற்கு இன்னும் 30 நாள்தான் இருக்கு...
    🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🧚‍♀️🧚‍♂️🧚‍♀️🧚‍♂️🧚‍♀️🧚‍♂️🧚‍♀️🧚‍♂️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️

    ReplyDelete
  54. ஆசிரியருக்கு வணக்கம்..
    Lion புக்ஸ் வந்தவுடன் அது எத்தகைய கதையாய் இருந்தாலும் முதல்
    1, 2 நாட்களில் படிக்கும் தரப்பு நான்.

    On Point No.1 : தேவையில்லை என நினைக்கிறேன். heavyweight கதைகள் எப்படியும் சற்று காலம் தாழ்த்தி பிடித்துவிடுவார்கள். கதை அருமையாய் இருப்பின் படித்ததுவுடன் தோன்றும் நிறைவு அலாதியானது.
    On Point No.2 : மித நாயகர்கள் அதிகமாக அதிகமாக வாசகர்களிடம் படிக்கும் ஆர்வம் குறையும். இந்த கதைகள் மாதத்தின் எண்ணிக்கையை கூட்டவே உதவுகின்றன. ஒரே மாதத்தில் டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர், லக்கி லூக் and சிக் பில் வந்தால் அந்த மாதம் ஏற்படுத்தும் அதிவுகளை எண்ணிப் பாருங்கள். That will be a smash hit . உண்மையை சொல்வதெனில் ஈரோட்டுக்காக அறிவித்த எந்த புத்தகமும் உடனடியாக பதிவு செய்ய மனதில் அதிர்வை ஏற்படுத்தவில்லை. (நான் பதிவு செய்து விட்டது வேறு விஷயம்). கதை ஒருவேளை அற்புதமாக இருக்கலாம். ஆனால் ஓர் டெக்ஸ் ஸ்பெஷல், ஓர் டைகர் ஸ்பெஷல் போல் எதிர்பார்ப்பதை தூண்டவில்லை.
    On Point No.3 : டெக்ஸ் மினி "அட" என ஆச்சரிய படுத்துகிறது. ஒரு முந்திரி கேக் போல. அவ்வளவே. ஆனால் அது ஒருபோதும் 200+ பக்க full meals ஆகாது. அதிக பக்கங்கள், நீடித்த மகிழ்ச்சி.

    கூர்ந்து கவனித்தீர்கள் எனில் உங்கள் புத்தக காம்பினேஷனை அடிக்கடி எங்களுக்காக மாற்றி வருகிறீர்கள் என தெரியும். இதை மறுபடியும் சொல்ல நினைக்கிறேன். (நீங்கள் முடியாது என பலருக்கு சொல்லி விட்டீர்கள்). இப்படியும் பலர் இருக்கிறார்கள் என நீங்கள் தெரிந்து கொள்ள மட்டுமே. நாங்கள் விரும்புவது டெக்க்சின் குண்டு புக். மேபிஸ்டோ போன்ற எவ்வளவு காதில் பூ சுற்றினாலும். அந்த பரிமாணத்தையும் தெரிந்து கொள்ள.
    மற்றபடி அனைத்து தரப்பினரையும், விஷயங்களையும் கருத்தில் கொண்டு நீங்கள் best of the best கொடுப்பீர்கள் என்பதால், என்னை போன்ற சிலரின் கருத்தாக பதிவிடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ///heavyweight கதைகள் எப்படியும் சற்று காலம் தாழ்த்தி பிடித்துவிடுவார்கள். கதை அருமையாய் இருப்பின் படித்ததுவுடன் தோன்றும் நிறைவு அலாதியானது. ///

      +11111

      ////டெக்ஸ் மினி "அட" என ஆச்சரிய படுத்துகிறது. ஒரு முந்திரி கேக் போல. அவ்வளவே. ஆனால் அது ஒருபோதும் 200+ பக்க full meals ஆகாது. அதிக பக்கங்கள், நீடித்த மகிழ்ச்சி.///

      +111111

      Delete
  55. குண்டுபுக்கோ ஒல்லி புக்கோ படிக்கும் வாசகனின் மனநிலை தான் முக்கியம். என்ன தான் ஜேசன் ராயும் பென்ஸ்டோக்சும் இந்திய பௌலிங்கை பிரிச்சு மேஞ்சா மாதிரி வாசகர்கள் விமர்சனங்களால் மொத்தினாலும் சமீபத்திய வெளியீடுகளில் போனியாகாமல் தேங்கியிருக்கும் இதழ்கள் எத்தனை சார். கடந்த சில ஆண்டுகளாகத் தான் தங்கள் கதைத் தேர்வுகள் அனைத்து வாசகர்களுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. அதிலும் சமீபத்திய ஜம்போ - லயன் கிராஃபிக் நாவல் வரிசை வேற லெவல். சந்தாக்களின் எண்ணிக்கை கடைகள் மற்றும் இணையதளம் மூலம் வாங்கும் வாசகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக தாங்கள் சமீபமாக தெரிவித்துள்ளீர்கள் தானே. உங்கள் தேர்வுகள் நன்றாக இருப்பதால் தானே இது சாத்தியமாயிற்று. பிறகு ஏன் சார் லைட்டு வெயிட்டுனு பொலம்பிக்கினு‌. தற்போதைய நிலையிலேயே தொடர்ந்திடுங்களேன். போட்ட கோட்டை அழித்து விட்டு மறுபடியும் முதலில் இருந்து மறுக்கா ஒரு கோடு போட போகிறீர்களா சார்.
    வேண்டுமானால் வருடம் 12 முழு நீள கார்ட்டூன், ராபின், ஜானி, மாடஸ்டி இவர்களுக்கு ஒரு கூடுதல் ஸ்லாட் மற்றும் சமீபத்தில் ஓரங்கட்டிய டைலன், ஜூலியா, கமாண்சே, லேடி எஸ், மேஜிக் விண்ட் இவர்களுக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு ப்ளீஸ்.சமீபத்திய இதழ்களில் தோட்டாக்கள், புழுதி, வாடை அதிகம் ஆதலால் க்ரைம் துப்பறியும் கதைகளில் கவனம் செலுத்தலாம். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமாவது ஒரு அண்டவெளி கதை சாத்தியம் தானா?. மற்றும் மறுபதிப்பில் இதுவரை வெளிவராத திகில் காமிக்ஸ் அனைத்தும்.
    எப்படியும் 2020க்கான அட்டவணைகள் 99% இறுதி செய்திருப்பீர்கள் எனும் போது கோடிட்ட இடங்களை இதிலிருந்து ஏதாவது ஒன்றை இட்டு நிரப்ப வாய்ப்புகள் உண்டா ஆசிரியரே?

    ReplyDelete
    Replies
    1. // சமீபத்திய ஜம்போ - லயன் கிராஃபிக் நாவல் வரிசை வேற லெவல் // உண்மை

      Delete
  56. இன்னிக்கு ஆபிசுல ஆசிரியர் பிஸியா இருப்பாரு...நாளைக்கு நாம...எஸ்டியே இந்த முறையாவது தயவு காட்டு ..நாளைக்கு வீட்ல ப்ரீயா இருப்பேன்..கை விட்றாதே...

    ReplyDelete
    Replies
    1. தலைவரே அப்படியே புக் கிடைச்சா எனக்கு ஒரு உதவி.

      Delete
    2. Erodil அடுத்த மாதம் என்னேனே புத்தகங்கள் வருகிறது என ஒரு preview எனக்காக.

      Delete
    3. கண்டிப்பாக நண்பரே..
      அ...ஆனா...வருசம் பூரா அறிவித்த அடுத்த நாளில் கிடைத்த இதழ்கள் இரண்டு மாதமாக தாமதமாக தான் கிடைக்கிறது..இம்மாதம் எப்படியோ தெரியவில்லை..:-)

      Delete
  57. மாதம் இரண்டு லைட் ரீடிங் புக்குகள் வந்தால்!!!!!!!

    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    நடக்கும் !!!

    ஒரு வீட்டில் ....

    பள்ளி சிறுமி : அம்மா ! ஸ்கூல்ல எக்ஸ்கர்ஷன் போறாங்க..அப்பா கிட்ட சொல்லி பணம் வாங்கி குடும்மா ....
    அம்மா : ( ஹாலை எட்டி பார்த்து விட்டு ) அப்பா லைட்ரீடிங் புக்குதான் படிச்சிட்டு இருக்காரு ..நல்ல மூடில இருப்பாரு ...இப்ப போய் கேளு ..உடனே கொடுத்திடுவாரு....

    ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    நடக்கலாம் !!!!
    கல்லூரி கணித பேராசிரியர் : ( மனைவியிடம் ) என்னடி இது ? நான் காலேஜ்ல trigonometry , set point topology , advanced calculus, differential geometry ,linear algebra அப்டின்னு பாடம் சொல்லி கொடுத்துட்டு இருக்கேன் ..எங்கிட்ட பால் கணக்கும் , மளிகை கணக்கும் கூட்டு புள்ளி தப்பா வருதுன்னு சரி பாக்க சொல்றே ?
    மனைவி : நீங்க மட்டும் உங்க எடிட்டர் கிட்ட லைட் ரீடிங் புக் கேக்கலையா? அது மாதிரித்தான் இதுவும்.....
    ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    நடக்கும்றீங்க???

    மிசஸ் லயனஸ் : ( பக்கத்து வீட்டு தோழியிடம் ) முன்னாடியெல்லாம்
    தூக்கத்துல ;; உண்மைய சொல்லிடு ! இல்லாட்டி ஒரு கூடை நிறைய உடைஞ்ச உன் தாடையை அள்ளிட்டு போணும்’’ அப்டின்னு பஞ்ச் டயலாக் நிறைய பேசுவாரு ..இப்ப அதெல்லாம் குறைஞ்சு நல்லா தூங்குறாரு !!!
    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    ReplyDelete
    Replies
    1. செனா அனா ஜி அருமை 😂🤣

      Delete
    2. ஹிஹிஹி!! அந்த 'நடக்கும் - நடக்கலாம் - நடக்கும்றீங்க?' - செம்ம!! :))))))

      Delete
  58. Ch செ. அ. ஜீ உங்க பதிவு எப்ப வரும்ன்னு எதிர் பார்த்து காத்திருந்தேன். அருமை. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  59. கல்யாண வீட்டுல என்னதான் விதவிதமா, வெரைட்டி டிஃபன் போட்டாலும் மத்திய விருந்துல ஃபுல் மீல்ஸ் சாப்பிடும் நிறைவு இருக்கே, அந்த சுகம் அலாதியானது.லைட் ரீடிங் அந்த டிஃபன் மாதிரி.

    ReplyDelete
  60. இன்னும் சொல்லப்போனால் ஹெவியான கதைகள் வீட்டு சாப்பாடு மாதிரி.லைட் ரீடிங் ஹோட்டல் டிஃபன் மாதிரி.(சரியான சாப்பாட்டு ராமன் போல,என்று சிலபல வாய்ஸ் லேசா கேட்குது)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி! 'சுவையான' விளக்கம்!

      Delete
    2. நல்ல விளக்கம் sir

      Delete
  61. யாருக்காச்சும் புக்கு வந்துச்சா மக்களே?

    ReplyDelete
    Replies
    1. அதே கேள்வி நானும் கேட்கிறேன்.

      Delete
    2. நம்ப ஸ்டீல் வாங்கி விட்டார். புத்தகங்கள் பற்றி விரிவாக விரைவில் எழுதுவாராம் :-)

      Delete
    3. காலை 9 மணிக்கே வாங்கி விட்டோம்... பர்த்டே சாக்லெட் உடன்.... 🍫🍫

      Delete
  62. ஆசிரியர் மைண்ட் வாய்ஸ் : லைட்டு, ஸ்ட்ராங்குனு கதையை பத்தி எழுத சொன்ன, எல்லாம் சோத்த பத்தியே உதாரணம் கொடுக்குறாங்க. தமிழனா திருத்த முடியாது.

    ஒரு நல்ல கதையை போட்டா 200 கமெண்டுக்கு மேல வர்றதில்லை. ஒரு சொத்த கதையை போட்டுபுட்டா 2000 கமெண்டுக்கு மேல வருது. ஐடியே இல்லாதவங்க கூட நண்பனோட ஐடில வந்து திட்டுறாங்க.

    yes or no னு மட்டும் சொல்லுங்கன்னு சொன்னா வழக்கம் போல may be, as you wish, let us see, will think over னு 50 டைப்பா பதில் சொல்லி தலைய பிச்சுக்க வைக்கிறது. இது போக நம்ம ஐடியவே ஆட்டைய போட்டு புதுசு புதுசா பிரச்னையை கிளப்பி உட்டுறாங்க. இதை என்ன பாக்கிஸ்தான் காரணா பண்றான். எல்லாம் நம்ம பையன்க தான். இவிங்களே அடிச்சிக்கிட்டு கடைசில ஆசிரியர் தான் இப்பிடி ஒருதலை பட்சமா நடந்துக்கிறார்னு போஸ்ட் போடுறது.

    இவுங்களுக்கு காமிக்ஸ் படையல் மாசா மாசம் போடுறதுக்கு பேசாம பரோட்டா கடை போட்ருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. @ Ashok

      :)))))

      ஹா ஹா ஹா!! ஆபீஸுலயே கெக்கபிக்கேன்னு சிரிச்சுட்டேன்! (நல்லவேளை.. இதுவே வீடா இருந்திருந்தா என் நிலைமை என்னவாகியிருக்கும்!!)

      Delete
    2. உண்மையிலேயே ஆசிரியர் நிலை அப்படித்தான் இருக்கு..

      Delete
    3. விஜய் @ வீடாக இருந்தால் உங்களை பார்த்து நாங்க கெக்கபிக்கேன்னு சிரிச்சு இருப்போம் :-) சரி சரி ஆப்பிளோட கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் பார்ப்போம்.

      Delete
    4. அசோக் @ செம காமெடியாக எழுதுரிங்க.

      Delete
    5. ஈ வி

      கெக்கே கொக்கேன்னு சிரிச்சிருந்தா அதும் வூடாயிருந்தா என்னாகியிருக்கும்..


      ஒரு மினிடெக்ஸ் அலறல் சத்தம் கேட்டிருக்கும்....


      அப்பறம்...அப்பறம்...ஹிஹ்ஹி

      அல்வா மல்லிகப்பூக்கு பணம் செலவு....

      அசடு வழிவு.....

      அப்பறம் டெய்லி போல் அதே ஒண்ணும் நடக்காத மொகத்த வச்சிகிட்டு
      ஆபீஸ் பயணம்....

      வீராவேசமாய் ஆபீஸில் அதிகாரமாய் ஜபர்தஸ்து....

      ஆபீஸ் பாயின் நமட்டுச் சிரிப்பு வெந்தமண்டையில் வாட்ஸ்அப் பாய்ச்சும்....


      வேறென்ன....
      இதெல்லாம் காமிக்ஸ் குடும்பவஸ்த்தன்களின் சகஜமப்பா....

      Delete
  63. டெக்ஸ் வில்லரின் மினி சாகசங்கள் நன்றாக இருந்தாலும் சாத்தான் வேட்டை நள்ளிரவு வேட்டை இரத்த நகரம் போல் முழுநீள சாகசங்கள் கவர்ந்த அளவிற்க்கு இல்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்

    ReplyDelete
  64. ஜூலை இதழ்கள் - UNBOXING விமர்சனம் :

    வழக்கமான அட்டைப் பெட்டி. ஆனால், எப்படித்தான் உடையாமல், கிழிந்து போகாமல் வந்து சேர்கிறதோ தெரியவில்லை. அந்தளவிற்கு அட்டைப் பெட்டி பயமுறுத்தும் அளவிற்க்கு இருக்கிறது. பெட்டியை ஓப்பன் பன்னவுடன், லயன் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லெட் உடன் லயன் லோகோ அச்சிடப்பட்ட ஒரு அழகிய பிறந்தநாள் கார்ட், ஒரு நல்ல விஷயம். நமது லயன் காமிக்ஸ்க்கு 35வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    அடுத்து நம்ம தல டெக்ஸின் ‘நட்புக்கு நாட்களேது’ கலர் மினி சாகசம். இரண்டாவது புத்தகமாக இந்த மாத எதிர்பார்ப்பில் இருக்கும் ‘நித்திரை மறந்த நியூயார்க்’. ஆசிரியர் பதிவில் சொன்னதுபோல் சுடச்சுட அச்சிட்டு பைண்டிங் செய்த பேப்பர் மை வாசம் நாசியை துளைக்கிறது. உள் பக்கங்களை புரட்டியதில், ஆசிரியரின் காமிக் டைம் முன்னுரையுடன், அடர் கருப்பு வெள்ளையில் நன்றாக இருப்பதாகவே தோன்றுகிறது. உள் அட்டைகளில் அடுத்து வருகிறது விளம்பரங்கள் கவர்கின்றன.

    மூன்றாவது புத்தகமாக, வித்தியாசமான முன் அட்டை மற்றும் ’யார் அந்த எமதூதன்’ என்ற
    ஆச்சர்ய கேள்வியுடன் கூடிய மின் அட்டை படங்களில் ‘நீரில்லை நிலமில்லை’ முழுவண்ணத்தில் மிரட்டுகிறது.

    இறுதியாக லயன் 35 வது ஆண்டு மலர் என்ற பெருமையுடன் லக்கி லூக்கின் இரண்டு கதைகள் கொண்ட புத்தகம், ’தி லக்கி ஆண்டு மலர்’ என்ற பெயரோடு, ஹார்ட் பவுண்ட் அட்டையில் அட்டகாசமாக வந்திருக்கிறது. ஆசிரியரின் ஹாட் லைன் உடன் ஆரம்பிக்கும் முதல் பக்கம், அடுத்த பக்கங்களில் ‘தி ஈரோடு எக்ஸ்பிரஸ்’ விளம்பரங்கள் ஆர்வத்தை துண்டுகிறது. கடைசி பக்கங்களில் அடுத்த வெளியீடுகள் விளம்பரங்களுடன் இந்த சிறப்பிதழ் நிறைவுபெறுகிறது.
    ஆகஸ்ட் வெளியீடுகள் 1.தி அண்டர்டெக்கர் - இருளின் ராஜ்யத்தில் 2.ரிப்போர்ட்டர் ஜானி - தலைமுறை எதிரி 3.கலர் டெக்ஸ் - தகிக்கும் மெக்ஸிகோ மற்றும் தி ஈரோடு எக்ஸ்பிரஸ் இரண்டு புத்தகங்கள் 4.பிஸ்டலுக்குப் பிரியாவிடை 5.நித்தமொரு யுத்தம் மேலும் 6.தல டெக்ஸ் சர்ப்ரைஸ் இதழ் 7.கார்ட்டுன் சர்ப்ரைஸ் இதழ், என ஆகஸ்டின் நீண்ட காமிக்ஸ் ரயில் பல மடங்கு ஆர்வத்தை தூண்டி வாசகர்களை ஆகஸ்ட் வரை சரியாக தூங்க முடியாமல் செய்திருக்கிறார் எடிட்டர் என்றால் மிகையாகாது.

    அவ்வளவுதான் இந்த சிறிய அன்பாக்ஸிங் விமர்சனம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அருமையான அன்பாக்ஸிங் விமர்சனம்!! ஆகஸ்ட்டில் வந்து குவியப்போகும் இதழ்களின் எண்ணிக்கையை நினைத்தால் உற்சாகம் சும்மா சல்லுன்னு எகிறுது!

      Delete
    2. ஏறும் ஏறும்

      சும்மா பணமும் ஏறுதில்ல எகிறுதில்ல....

      இல்ல....

      இல்....

      இ....

      ..

      .















      பணம் காலியாயிடுச்சிப்பாஆஆஉஉஉஉஉ

      Delete
  65. Parcel um sweet um vaanghiyachuuuuuuuu

    ReplyDelete