Wednesday, May 01, 2019

தி ஈரோடு எக்ஸ்பிரஸ் ..!

நண்பர்களே,

வணக்கம். மே தின வாழ்த்துக்கள் !! ஓட்டுக்கள் பொட்டிக்குள் துயில் பயிலும் போதே "அண்ணன் மந்திரி....நான் வட்டம்...நீ சதுரம் !" என்ற கணக்குகள் ஓடுவதெல்லாம் சகஜம் தானே நம்மூர்களில் ? முதல் வாரத்தைத் தாண்டி படம் தாக்குப் பிடிக்குமா என்பது தெரியாத நிலையிலேயே "வெற்றி..மாபெரும் வெற்றி" என்ற promos ஓடுவதும் நமக்குத் புதுசல்ல தானே ?  அப்புறம் நாம் மட்டும் அதற்கு விதிவிலக்காகிட முடியுமா - என்ன ? ஈரோட்டுப் புத்தக விழா '2019 காத்திருப்பதோ ஆகஸ்டில் தான் ; ஒவ்வொருமுறையைப்  போலவுமே  இந்தாண்டும் பொறுமையாய், நம்பிக்கையோடு காத்திருந்தே ஸ்டால் கிடைப்பதனை உறுதி செய்திட வேண்டிவரும் தான் ; ஆனால் இதோ கெத்தாய் கிளம்பிட்டோம்ல "தி ஈரோடு எக்ஸ்பிரஸ்" அறிவிப்போடு !! 

நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஒவ்வொரு புத்தக விழா சந்திப்பின் போதும் ஆங்காங்கே உள்ள புளியமர நிழல்களில் தான் வாசகர்களோடு அரட்டையரங்கம் தொடர்ந்து வந்தது ! அட...LMS வெளியீட்டினைக் கூட ஈரோட்டில், நமது ஸ்டாலிலேயே தான் வைத்துக் கொண்டிருந்தோம் - சுற்றுமுற்றும் இருந்த மற்ற கடைக்காரர்களின் எரிசல்களை ஈட்டிடும் விதத்தில் ! இனியும் இந்தச் சேட்டைகள் தொடர்ந்தால் - புத்தகவிழாவினுள் நுழைய வாலுமிராது ; காலுமிராது என்ற புரிதல் புலர்ந்த பிற்பாடு தான் புத்தக விழா நடைபெறும் V.O.C மைதானத்தின் வாசலிலேயே உள்ள ஹோட்டலில் ஒரு குட்டியான அரங்கில் சந்திக்கும் ஞானோதயம் துளிர்விட்டது ! முதல் ஆண்டினில் maybe 30 - 40 நண்பர்கள் குழிமியிருந்தாலே அதிகம் என்ற ஞாபகம்...! So அது புளியமரத்தின் நீட்சி போலவே இருந்ததால் எனக்குப் பெருசாய் பேஸ்மெண்ட் டான்ஸ் ஆடவில்லை ! எப்போதும் போலவே அரட்டை ; கலாய்ப்புகள் என்ற அந்த 3 மணி நேரங்கள் ஓட்டமெடுத்தன ! ஆனால் தொடர்ந்த ஆண்டுகளில் ஈரோட்டுக்கு பயணிக்கும் ஆர்வமான நண்பர்களின் எண்ணிக்கை மிகுந்து கொண்டே செல்ல, 2018-ன் ஆகஸ்ட் - was a beautiful high !! அந்த காலைப்பொழுதானது ஒரு வாசக சந்திப்பு என்ற லெவலோடு நின்று கொள்ளாது -  குட்டியான கல்யாண வீட்டு feel-ஐத் தந்தது என்றால் மிகையில்லை தான் ! அன்றைய தினத்தின் agenda-வில் இருந்த "இரத்தப் படலம்" ஒரு மெகா உச்சம் எனும் போது - நீங்கள் தெறிக்க விட்ட உற்சாகங்களும் அதனோடு கைகோர்த்திட - நிறைவானதொரு காலையை நமக்கெல்லாம் நினைவில் நிற்கச் செய்து விட்டது ! And அது நாள்வரையிலும் நம்மள் கி  குச்சிப்பிடி ; குடுமிப்பிடி ; கதக் ; வெஸ்டர்ன் ரக நடனங்களையெல்லாமே பதிவுப் பக்கங்களில் மௌன வாசகராய் மட்டுமே பார்த்துப் பழகியிருந்த கருணையானந்தம் அவர்களும் ; சீனியர் எடிட்டரும் அன்றைய நாளில் நம்மோடு ஐக்கியமாகியிருக்க - the morning seemed even more special ! 

ஒவ்வொருமுறையும் ஒரு உயரத்தைத் தொட்டுப் பார்க்கத் தட்டுத் தடுமாறிட வேண்டிவரும் தான் ; and அந்தத் தடுமாற்றங்களின் மும்முரத்தில் "ஆஹா...இவ்ளோ உசரமா ? மறுக்கா இதனில் ஏறுவதென்றால் சில்லுமூக்கு சிதறிடுமேடா சாமீ ?" என்ற பயங்களோ ; "அடுத்த தபா இதே உசரத்தையோ ; இல்லாங்காட்டி இன்னும் ஜாஸ்தியையோ எட்டிப் பிடிக்க முயற்சிக்காட்டி ரெம்போ சப்பையாய் feel ஆகுமே ?" என்ற குழப்பங்களோ எழுவதில்லை தான் ! But அந்தக் குழப்ஸ் & டரியல்ஸ் எல்லாமே ஒட்டுமொத்தமாய்த் தலைகாட்டுவதெல்லாம் - அடுத்த மலையேற்றத்துக்கான நேரம் நெருங்கும் போது தான் ! 2019-ம் புலர்ந்து...அட்டவணையில் பெயர்களாய் மட்டுமே  நின்ற இதழ்களை நிஜமாக்கும் பணிகளும் துவங்கிய போதெல்லாம் மண்டையில் தெளிவிருந்தது ! ஆண்டின் mid point -ல் காத்திருந்த சில பல biggies இதழ்களைக் கரைசேர்க்கும் முனைப்பே அப்போது முக்கியமாய்த் தென்பட்டது ! அந்த வேளையும் புலர்ந்து, வேலைகளும் துவங்கி ; ஒன்றல்ல-இரண்டல்ல-மூன்று குண்டூஸ்களை பூர்த்தி செய்த கையோடு ஹாயாக முன்னோக்கும் போது தான் வயிற்றுக்குள் லேசான 'கட முடா' சத்தம் ! எனக்கு செம பிடித்தமான ஒரு வேலையினைச் செய்திடுவதற்கு ஆண்டின் 12 பொழுதுகளில் வாய்ப்புகள் கிட்டுவது வாடிக்கை ! அது வேறொன்றுமில்லை - ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும், அந்தாண்டின் அட்டவணையைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு கலர் மார்க்கரைக் கொண்டு - "ஆங்...தோர்கல் புக் முடிஞ்சது ; லக்கி லூக் வெளிவந்திடுச்சு ; கிராபிக் நாவல் பினிஷ் " என்ற ரீதியில் அந்தந்த மாதத்து ரெடியான இதழ்களை டிக் அடிப்பேன் !! "ஹை,...கிட்டத்தட்ட பாதிக்கு மேலே தாண்டியாச்சு ; அடுத்து என்ன காத்திருக்கு ?"  என்று பார்த்தபடிக்கே அடுத்த ஒரு வாரத்தை OP அடித்தே ஒப்பேற்றுவேன் ! வழக்கமானதொரு சூழலாயிருப்பின், மே மாதத்து biggies-களைப் பூர்த்தி செய்த கையோடு அட்டவணையைப் பார்த்திருப்பின், தொலைவில் காத்திருக்கும் "தீபாவளி மலர்" இதழைத் தவிர்த்து , பணி மிகுந்த சமாச்சாரம் என்ற இதழ்கள் வேறெதுவும் தென்பட்டிராது !! அட்ரா சக்கை... அட்ரா சக்கை... என்றபடிக்கே 2020-ன் தேடல்களுக்குள் புகுந்திடுகிறேன் பேர்வழி என்ற பாவ்லாவோடு சுற்றித் திரிந்திருப்பேன் !  ஆனால் இப்போதோ - "ஈரோடு 2019 கூப்பிடு தொலைவில் கீதே ; இன்னா மேட்டரு ?" என்ற கேள்வி  ஜிங்கு ஜிங்கென்று எழுந்து நிற்கிறது !! சும்மா இருக்காமல் நடப்பு அட்டவணையில் "ஈரோடு ஸ்பெஷல் புக் இரண்டா ? மூணா ? அரை டஜனா ?" என்று நானும் பகுமானமாய் விளம்பரத்தையும் செய்து வைத்திருக்க - கொஞ்ச நாட்களாகவே thinking !! 

களமிறக்கிட கதைகளுக்குப் பஞ்சமே லேது எனும் போது பொதுவாய் இது போன்ற சந்தர்ப்பங்களில் எனது டயரியைத் தூக்கி வைத்துக் கொண்டு பக்கங்களைப் புரட்டிக் கொண்டே, நான் குறிப்பெழுதி வைத்திருப்பதிலிருந்து ஏதேனுமொரு ஆல்பத்தை / தொடரைத் தேர்வு செய்திருப்பேன் ! In fact இம்முறை அதற்குக் கூடத் தேவையின்றி -  உங்களிடம் சென்றாண்டு நடத்திய கருத்துக் கேட்பின் பலனாய்க் கதைகளையும் தேர்வு செய்தே வைத்திருந்தேன் !! "இத்தாலியா ? அமெரிக்காவா ? கென்யாவா ?" என்ற பதிவு நினைவுள்ளதா folks ? இதோ - அன்றைக்கு எழுதியது :

//இந்த 500-ன் தருணத்துக்கு என்று யோசித்த போது சில பல options என் முன்னே அணிவகுத்தன ! இந்த மைல்கல்லைத் தொட்டுப் பிடித்திட உதவியது நீங்கள் தான் எனும் போது அந்த ஸ்பெஷல் இதழ் எதுவாக இருந்திடலாமென்ற தேர்வையுமே உங்களிடமே ஒப்படைக்கலாமென்று தோன்றியது !“ஆங்… சாய்ஸில் எதையுமே விட்டுத் தள்ளாம – அத்தனையையும் போட்டுப்புடலாமே!” என்றே நீங்கள் அபிப்பிராயப்படுவீர்கள் என்று பட்சி சொன்னாலும் தேர்வு செய்திடும் சுதந்திரத்தை உங்களிடமே ஒப்படைக்க எண்ணுகிறேன் - இந்த ஒற்றைத் தருணத்திலாவது !! 

 - Fun with 500!! என்பதே இந்த ஸ்பெஷல் இதழின் பெயராக இருந்திடும் !

- சந்தாவினில் இடம்பெறாது ; முன்பதிவுகளுக்கு மாத்திரமேயான limited edition !!

- “500” என்பதால் இதழின் விலையும் ரூ.500 !! Plus courier costs...!

இதற்கென உங்களுக்கு நான் தரக்கூடிய Options 3 !!

முதலாவது நமது குண்டு-கதம்ப புக் ஆசைக்கு நியாயம் செய்திடக் கூடிய விதத்தில் - "THE BEST OF BONELLI" - என்றதொரு 550+ பக்க black & white ஆல்பம் - 5 அட்டகாசக் கதைகளோடு !! 

"இத்தாலி பக்கமாய்ப் பறந்து - பறந்து அலுத்துப் போயிட்டூ அண்ணாத்தே !! " - என்பதே உங்களது எண்ணங்களாயிருப்பின் - பிளேனை நேராக பிராங்கோ -பெல்ஜிய மண்ணை நோக்கி விட்டு - அங்கே அவர்களிடம் ஆசீர்வாதங்களையும், அனுமதிகளையும் வாங்கிக் கொண்டு, லைட்டாக பெட்ரோல் நிரப்பிக் கொண்ட கையோடு - அமெரிக்க களத்தை  நோக்கிப் படையெடுப்போமா - அந்த மண்ணிலான க்ரைம் த்ரில்லர்களெல்லாம் சுகம் தானாவென்று கண்டறிய ? 5 பாகங்கள் கொண்டதொரு வண்ண த்ரில்லர் maybe ? What say ?

அட..."அமெரிக்காலாம் பார்த்துப் பழகிய கதைக்களம் தானே அண்ணாச்சி ? " என்கிறீர்களா ?  கவலையே வாணாம் - மறுக்கா பிளைட்டை அதே பிரான்க்கோ-பெல்ஜிய மண்ணை நோக்கி விட்டு, மறுக்கா ஆசீர்வாதங்கள் + அனுமதி + பெட்ரோல் என்று நிரப்பிக் கொண்டு,  நாம் ஜாஸ்தி பார்த்திரா  ஆப்ரிக்கா மீதாகப் பறந்து பார்க்கலாமா ? மறுக்கா 5 பாகங்கள் கொண்ட கலர் த்ரில்லர்களை அங்கேயும் பார்க்கலாமோ ? "என்னா ஒய்.. அவ்ளோ பெரிய இருண்ட கண்டத்தில் எங்கேன்னு பறக்கிறதாம் ?" என்று கேட்கிறீர்களா ? "ஆங்....ஒன் மினிட் ப்ளீஸ் !! ம்ம்... கென்யா மேலே பறந்து பார்க்கலாமா ?" சுகப்படுமென்று தோணுதோ ? இந்த டீசர்களோடே இப்போதைக்குப் புறப்படுகிறேன் folks - இந்தத் தேர்வுகளில் உங்களது எண்ணப் பிரதிபலிப்புகளைப் பார்த்திடும் ஆர்வத்தோடு !! //

And தொடர்ந்த உங்களது 'குத்தடி-குத்தடி-சைலக்கா' வோட்டிங்கைத் தொடர்ந்து வெற்றி கண்டது "அமெரிக்கா" !! https://lion-muthucomics.blogspot.com/2018/09/blog-post_24.html

So சுலபமாய் உங்களது தேர்வுகள் 1 & 2-ஐ (அமெரிக்கா & கென்யா) இரு தனித்தனி இதழ்களாக்கி ஈரோட்டு ஸ்பெஷல் ஆகியிருக்கலாம் ! In fact கென்யாவுக்கும் உரிமைகள் வாங்கியாச்சு & அமெரிக்காவுக்கும் உரிமைகள் வந்துவிட்டன நம்மிடம் ! எல்லாமே ரம்யமாய்த் தோன்றினாலுமே, தலையோரமாய் ஒரு சிறு நெருடல் - பட்ஜெட்டின் பொருட்டு எழுந்தது !

ஏற்கனவே ஜம்போ சீசன் # 2 உங்கள் பாக்கெட்களில் ஆயிரம் ரூபாய்க்கொரு சூடு போட்டு விட்டிருக்க - "ஈரோடு ஸ்பெஷல்" என்ற சாக்கில்  பெருசாய்த் திட்டமிட்டு, இன்னொரு மெகா ஓட்டை போட்டுவிடும் பயம் தான் அது  ! பற்றாக்குறைக்கு, "சொத்து விற்றுத் தான் இனி காமிக்ஸ் வாங்கணும் போலும்" என்ற புலம்பல்களுமே ஒலித்திட - கொஞ்சம் அடக்கி வாசித்தால் தப்பில்லையோ ? என்று தோன்றியது ! இந்தக் குழப்பத்தில் சுற்றித் திரிந்த சமயம் தான் "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" ஞாபகத்துக்கு வந்தது !! 4 பாக ஆல்பம் எனும் போது கொஞ்சமாய் விலை கட்டுக்குள் இருந்திடுமென்று நினைத்தேன் ! Plus இந்த ஆல்பத்தை தமிழுக்குக் கொணர ரொம்ப காலமாகவே எனக்கு ஆசை - அந்த க்ரீன் மேனர் பாணியிலான non-linear சித்திரங்களின் காரணமாய் !! நேர்கோட்டில் செல்லும் linear கதைகள் தெரியும் ; மூக்கை முன்னூறு சுற்று சுற்றிடும் non-linear கதைகளும் தெரியும் ! ஆனால் அதென்ன - non-linear artwork என்கிறீர்களா ? சித்திர பாணி ஒன்றாய் இருந்து - கதை பயணிக்கும் திக்கோ வேறாக இருப்பின் அதனை non -linear artwork என்ற சொல்லலாம் தானே ? So கார்ட்டூன் பாணியில் சித்திரங்கள் ; கதையைக் கொண்டு செல்லும் விதத்திலும் நகைச்சுவை - but கதையின் மையப் புள்ளி ஒரு பக்காவான ஆக்ஷன் plot என்ற இந்த மினி தொடரை ஏதேனுமொரு பொழுதினில் உட்புகுத்தக் காத்திருந்தேன் ! தி ஈரோடு ஸ்பெஷல் எக்ஸ்பிரஸின் முதல் 4 கோச்களுமே  "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" என்பதைத் தீர்மானித்தேன் !

சரி....ஒரு தேர்வு ஆச்சு ; அடுத்தது ? என்ற யோசனை பலமானது ! Of course ஒரு ஜனரஞ்சக சந்திப்புத் தருணத்தை இன்னும் உற்சாகமாக்கிட ஒரு popular & evergreen ஆக்ஷன் நாயகரைக் களமிறக்குவதே லாஜிக் என்ற புரிந்தது ; and மேற்படி விவரிப்புகளுக்கு "உள்ளேன்" என்ற பதிலளிக்கக் கூடிய தகுதி ஒரு இத்தாலிய மஞ்சள் சொக்காய்க்காரரிடம் மாத்திரமே இருப்பதும் புரிந்தது ! TEX 700 ; TEX Maxi ; என்ற நிறையவே மண்டைக்குள் ஓட்டமெடுத்தன ! ஆனால் தினப்படி சந்திக்கும் ஒரு நாயகரை  ; அதுவும் பெரும்பான்மையினர் தவறாது வாங்கிடப் பிரியப்படும் ஒரு popular ஹீரோவை - இதுபோலான முன்பதிவுக்கான limited edition வரிசைக்கு கொண்டு போவதென்பது "இஷ்டப்பட்டால் வாங்கி கொள்ளுங்கள் " என்ற மேலோட்டமாய்ச் சொன்ன கையோடு - "இதை வாங்கிக்காமே போயிடுங்களேன் பார்ப்போம் !!" என்ற குசும்பும் செய்வதற்கு சமானம் என்று தோன்றியது ! So இரவுக்கழுகார் & கோ.அந்த இரண்டாம் ஸ்பெஷல் slot-க்கு வேண்டாமே என்று பட்டது !

தொடர்ந்து மின்னும் மரணத்தாரின் இளம் பிராயத்து ஆல்பங்களைத் தொகுப்பாக்கினால் என்னவென்று யோசித்தேன் ! ஆனால் இரண்டாவது பட்டாசைப் பெருசாய்  வெடிக்காது, அளவாய் அமைத்திடுவதே பட்ஜெட்டின் கட்டாயம் எனும் போது - ஐந்தாறு ஆல்பங்களை ஒன்றிணைப்பது வேலைக்கு ஆகாது என்று பட்டது ! பற்றாக்குறைக்கு அந்தக் கதைவரிசை சங்கிலித் தொடராய் ஓடுகிற போது, நடுவாக்கில் ஒரு சில ஆல்பங்களை போட்டு விட்டு, அப்புறம் இன்னொரு வாய்ப்புக் கிட்டும் வரை 'தேமே' என்றிருப்பதும் சரிப்படாது என்று தோன்றியது ! இன்னொரு 132 பக்க க்ரைம் த்ரில்லரைப் பரிசீலித்தேன் ; வண்ணத்தில் வித்தியாசமாய்த் தென்பட்டது தான் ; ஆனால் கொஞ்சம் dark ஆன கதைக்களம் - "பாதி கி.நா" என்ற சொல்லும் விதமாய் ! அச்சோ...ஒரு ஜாலியான வேளையின் மூடுக்கு இந்தக் கதை அவ்வளவாய் set ஆகாதென்று தீர்மானித்தேன் ! "Lone ரேஞ்சரை மட்டும் ஜம்போ - சீசன் 2-க்கென ஒதுக்கியிராவிடின் அவரை இந்த இரண்டாம் ஸ்லாட்டுக்குள் நுழைத்திருக்கலாமே ? என்ற எண்ணமும் ஓடியது தான் ! ஆனால் ஜம்போவின் இரண்டாம் சீசனை அதிரடியாக்கிட இந்த முகமூடி மனிதர் ரொம்பவே அவசியம் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது ! அப்போது தான் ஜம்போவின் சீசன் 2 ; சீசன் 3 (!!) பொருட்டு வாங்கி வைத்திருந்த கதைகளுள் ஒன்று நினைவுக்கு வந்தது !!

தெறிக்கும் ஆக்ஷன் ; முற்றிலும் வித்தியாசமான நாயகக்  குழு (!!) and எல்லாவற்றையும் விட முக்கியமாய் - தெளிவான கதையோட்டம் என்று டாலடிக்கும் அந்த ஆல்பம் ஈரோடு எக்ஸ்பிரஸின் பேட்டி நம்பர் 5 & 6 ஆனது !! "நித்தமொரு யுத்தம்" - இன்னொரு பிராங்கோ-பெல்ஜிய ஆக்கமே ! இதன் பிரதான protaganist ஒரு பெண்ணே ; ஆனால் ஒரு டீமாய் நண்பர்களுடன் களமிறங்கிடுவார் இவர் ! கூப்பிடு தொலைவிலிருக்குமொரு எதிர்கால சமூகத்தின் உச்சபட்ச நிலைகளிலிருக்கும் பெரிய மனுஷர்களுக்கு எல்லாவித சூழல்களிலும் பாதுகாப்பு நல்கிடத் தயாராகயிருக்கும் ஒரு high tech பாடிகார்ட் நிறுவனத்தின் top டீம் இவர்கள் !!  அவர்களை நாடிவரும் பெரும் புள்ளிகளை பாதுகாக்கும் படலங்களில் அசாத்திய ஆக்ஷன் பலனாகிறது !! DAMOCLES என்பது இத்தொடரின் ஒரிஜினல் பெயர் !! மொத்தமே 4 ஆல்பங்கள் கொண்ட இந்தத் தொடரின் முதல் சாகசம்  2 ஆல்பங்களில் நிறைவுற்றிடும் ! So சிக்கென்று ஒரு டபுள் ஆல்பமாய் போட்டு அசத்திவிடலாம் என்ற நினைத்தேன் !

"பிஸ்டலுக்குப் பிரியாவிடை" இன்றைய உலகிற்கு அத்தியாவசியமானதொரு சமாச்சாரத்தை - நேற்றைய சூழலில் சொல்ல முற்படுகிறதென்றால்....

"நித்தமொரு யுத்தம்" இன்றைய உலகிற்கு அவசியப்படக்கூடியதொரு கற்பனையை நாளைய சூழலில் சொல்ல விழைகிறது !!

So இந்த 2 ஆல்பங்களையும் ஒற்றைத் தருணத்தின் இரட்டை துளிர்களாய் அறிவிப்பது பொருத்தமே என்ற நினைத்தேன் !! And here you go :
இரு இதழ்களும் முன்பதிவுகளுக்கானவை என்பதால் சின்னதொரு பிரிண்ட் ரன் மட்டுமே இருந்திடும் ! Of course - இவற்றை ஈரோட்டில் புத்தக விழாவில் நமது ஸ்டாலில் வாங்கிக்கொள்ளலாம் தான் ; or அன்றைய பொழுதில் நம் கைவசம் எஞ்சியிருக்கக்கூடிய பிரதிகளை நமது ஆன்லைன் ஸ்டோரிலோ ; முன்பணம் செலுத்திடும் முகவர்களிடமோ வாங்கிக்கொள்ளலாம் தான் ! ஆனால் முன்பதிவு செய்திடும் நண்பர்களின் டப்பாக்களுக்குள் மட்டும் ஒரு சன்ன surprise gift-ம் இருந்திடும் என்பதிங்கே கொசுறுச் சேதி  ! So எவ்விதம் வாங்குவதென்ற தீர்மானத்தை உங்களிடமே விட்டுவிடுகிறோம் guys ; and ஈரோட்டில் சந்திப்பின் போது வாங்கிட எண்ணும் முன்பதிவுகளுக்கு கூரியர் கட்டணங்களை முழுசுமாய் waive செய்திடத் தீர்மானித்துள்ளோம் !  Please note : இது நமது மீட்டிங் தினத்தன்று நேரில் பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு மட்டுமே பொருந்திடும் ! "ஸ்டாலில் வைத்திருங்கள் ; நான் அப்பாலிக்கா ஒருநாள் வந்து பெற்றுக்கொள்கிறேன் !" என்ற கோரிக்கைகளை செயல்படுத்த இயலாது guys - பெரும் குளறுபடியாகி விடுகிறது அந்த நடைமுறை ! So இயன்றமட்டுக்கு விரயங்களை மட்டுப்படுத்த முயற்சித்துள்ளோம் ! (அதற்காக எனக்கு ஒரு சிலை வைத்திட ஏற்பாடுகள் நடந்தேறும் என்ற பகற்கனவெல்லாம் எனக்கில்லை ; இதற்குள்ளேயும் ஏதேனுமொரு காரணத்தைக் கண்டுபிடித்து நாலு சாத்தினால் தான் சிலபலரது மே தினங்கள் முழுமை காணும் என்பதை புரிந்தே உள்ளேன் !!) Anyways - this is what has been decided guys !! இனி முன்பதிவுக்கு நீங்கள் முந்தினால் பணிகளுக்குள் தடதடப்போம் நாங்கள் !! In fact "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" மொழிபெயர்ப்பு பாதிக்கும் மேல் ஓவர் & இன்றைக்கு DAMOCLES டீமுடன் கைகுலுக்க உத்தேசித்துள்ளேன் !!

Before I  sign out - கேள்வியும் நானே ; பதிலும் நானே என்றொரு அவதார் எடுத்துக் கொள்ளட்டுமா ?
-----------------------------------------------------------------------------------------------------------
கேள்வி # 1 : முன்பதிவு செய்வதானால் இரண்டுக்கும் சேர்த்தே தானா ? தனித்தனியாய் நஹியா?

பதில் : தனித்தனியாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம் - but  சலுகை விலைகள் இராது & கூரியர் கட்டணங்கள் will apply ! And of course the surprise gift'd miss out too !

ONLY "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" எனில் - ரூ.450 (கூரியர் சேர்த்து)

ONLY "நித்தமொரு யுத்தம்" எனில் -ரூ.250 (கூரியர் சேர்த்து)
------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி # 2 : எப்போக்குள்ளாற முன்பதிவு பண்ணனும் ?

பதில் : ஜூலை 10 க்கு முன்பாய் !!
------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி # 3 : "கார்ட்டூன்...கார்ட்டூன் என்ற கரடியாய்க் கத்தியது காதில் விழலியா டமாரக்காதா ?"

பதில் : விழுந்துச்சுங்கோ ; "பிஸ்டலுக்குப்  பிரியாவிடை" கார்ட்டூன் பாணி தான் - சித்தே அஜீஸ் பண்ணிகோங்க !" என்ற வாயில் வடை சுடமாட்டேன் !! A promise is a promise ---ஈரோட்டில் உங்களுக்கு கார்ட்டூன் இதழ்களும் காத்திருக்கும் ! எது ? எப்படி ? என்றெல்லாம் இப்போது கேட்காதீர்கள் guys - ஆகஸ்டில் முதல் ஞாயிறை நிச்சயமாய் நீங்கள் நமது சிரிப்புப் பார்ட்டிகளோடும், சிறப்பாய்க் கொண்டாடுவீர்கள் !!
------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி # 4 : "இப்படியொரு தருணத்தில் 'தல' இருக்க வேண்டாமோ ? அவரின்றி ஓரணுவும் அசையாதே ?"

பதில் : வாஸ்தவமே !! Again - எப்படி ? என்ற கேள்வியை மட்டும் கேட்காதீர்கள் நண்பர்களே - ஆனால் 'தல'யும் இருப்பார் உங்களின் ஈரோட்டுப் பயணத்தின் சமயம் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கொள்கிறேன் ! 
------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி # 5 : KENYA ??? AMERICA ???

பதில் : இரு தொடர்களுக்கும் உரிமைகள் ரெடி ; "கென்யா" மொழிபெயர்ப்புமே ரெடி ! வெளியிடவொரு வேளை புலர்ந்திட வேண்டியது மட்டும் தான் பாக்கி ! 2020-ல் இரண்டும் நிச்சயமாய் உங்களை சந்திக்கும் என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன் ! 
------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி # 6 : வரிசைக்கு புக்கா அறிவிச்சிட்டே போய் எங்களை ஒரு வழி பண்றதாய் உத்தேசமா ? இந்தக் கதைகளை படிக்கலைன்னு யாரு அழுதா உன்கிட்டே ?

பதில் : ஒரு சிறு வாசகவட்டத்தின் சந்தோஷமே பிரதானம் இந்தப் பயணம் தொடர்ந்திடுவதற்கு ! "இரத்தப் படலம்" எனும் ஒரு ராட்சச முன்மாதிரி 2018 -ல் களமிறங்கியான பிற்பாடு - சும்மா சந்தித்து ; அரட்டையடித்து ; வடை சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவதெல்லாம் இனி சுகப்படாதென்று மனசு சொல்கிறது ! So இரத்தப் படல மெகா பட்ஜெட்டெல்லாம் இன்றியும், ஏதேனும் வித்தியாசமான கதைத்தேடல்களின் வாயிலாய் உங்களின்  சுவாரஸ்யங்களைத் தக்க வைப்பதே பின்னணியிலுள்ள அவா ! 

தவிர, இவை போன்ற மினி தொடர்களைக் களமிறக்கிட ரெகுலர் சந்தாவில் வாய்ப்புகள் மிகச் சொற்பம் ! So இத்தகைய one-off தருணங்களை விட்டால் - இவற்றை வெளியிட platforms லேது !! 
------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி # 7 : உனக்கு மொக்கை போட்டுப் போட்டு போரே அடிக்காதாப்பா அழகப்பா ? பதிவு இம்மாம் நீளம் போகுதே ? எதைப் போட்டு அந்தக் காவாய் வாயை அடைக்கிறதாம் ?

பதில் : இதோ கிளம்பிட்டேனுங்கோ - வழக்கமா சொல்றதைச் சொல்லிப்புட்டு : Bye guys ; see you around !! Have a chill break  !!

பி,கு, மே இதழ்கள் செவ்வாய் மாலை தயாராகி விட்டன ! வியாழன்று கூரியரில் கிளம்பிடும் !! 

175 comments:

  1. நீளமான பதிவு ஈரோடு அறிவிப்புகள் நன்று

    ReplyDelete
  2. அட்வான்ஸ் புக்கிங் செய்திடுவோம்!

    ReplyDelete
  3. இம்மாத புத்தகங்கள் என்று கிடைக்கும்

    ReplyDelete
  4. எப்பொழுதும் காமிக்ஸ் நினைவுகளிலே இருப்பதால் மற்றவைகள் பின்தள்ளப்படுகிறது!(தூங்கும் போதும் கனவிலும் காமிக்ஸ்தான்)

    ReplyDelete
  5. அருமையான இரண்டு புத்தகங்கள். நன்றி சார்...

    ReplyDelete
  6. ஆசிரியர், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தோழமைகள் அனைவருக்கும் உழைப்பாளர் நாள் வாழ்த்துகள்.
    🎉🎉🎉🎉🎉🎉🎉

    ReplyDelete
  7. தொழிலாளர் தின நல்வாழ்த்துகள் மொதலாளி சார் ! :) காமிக்ஸ் நண்பர்களுக்கும்.

    ReplyDelete
  8. // வாங்கணும் போலும்" என்ற புலம்பல்களுமே ஒலித்திட - கொஞ்சம் அடக்கி வாசித்தால் தப்பில்லையோ ? என்று தோன்றியது.//
    சில,பல அதி புத்திசாலிகளின் இது போன்ற முத்தான கருத்துகளால் இறுதியில் எங்களைப் போன்ற வாசகர்களுக்கு தான் இழப்பு,
    எனக்குத் தெரிந்த வரை நிறைய நல்ல விஷயங்கள் ஒரு சில அதிபுத்திசாலிகளால் மட்டுமே தடைப்பட்டுள்ளது,இழப்பென்னவோ அனைவருக்கும்தான்....

    ReplyDelete
  9. // இப்படியொரு தருணத்தில் 'தல' இருக்க வேண்டாமோ? //
    அடுத்து இந்த கேள்வியைத்தான் கேட்கலாம் என்று நினைத்தேன்.....

    ReplyDelete
  10. /// மே இதழ்கள் செவ்வாய் மாலை தயாராகி விட்டன ! வியாழன்று கூரியரில் கிளம்பிடும் !! //
    மிரட்டும் இதழ்கள் வரட்டும்.....

    ReplyDelete
  11. இரண்டு புதிய கதைக்களத்துடன், ஏதாவொரு டெக்ஸ் வண்ண மறுபதிப்பு கதையையும் ஈரோட்டில் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் சார்! கழுகு வேட்டை அல்லது பழிவாங்கும் பாவை & பழிக்குப்பழி ஆகிய இரு கதைகளையும் ஒன்றாக போட்டுத் தாக்கினால் இன்னும் பட்டாசாக இருக்கும் என்பது எனது அபிப்ராயம்!

    ReplyDelete
  12. ///ஆகஸ்டில் முதல் ஞாயிறை நிச்சயமாய் நீங்கள் நமது சிரிப்புப் பார்ட்டிகளோடும், சிறப்பாய்க் கொண்டாடுவீர்கள் !!///

    ///ஆனால் 'தல'யும் இருப்பார் உங்களின் ஈரோட்டுப் பயணத்தின் சமயம் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கொள்கிறேன் ! ///


    அட்றா சக்கை... அட்றாசக்கை அட்றாசக்கை..!!

    ஆங்... மறந்துபோயி..

    உள்ளேன் ஐயா..!!

    ReplyDelete
  13. உழைக்கும் தோழர்களே ஒன்றுகூடுங்கள்
    உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்..

    மே தின வாழ்த்துகள்..!!

    ReplyDelete
  14. ஆகஸ்ட் புத்தக விழா சிறப்பு இதழ்கள் குறைந்த பட்சம் மூன்றாகவாவது இருக்கும் என பல முன்கணிப்புகள்,பஜ்ஜி,போண்டா ஆகியவைகள் கூறினாலும்,இறுதியில் இரு இதழ்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளது சற்றே வருத்தமாகத்தான் உள்ளது.
    எது எப்படியோ கிடைக்கும் இதழ்கள் வாசகர்களை மகிழ்விக்கும் என்று நம்புவோமாக.

    ReplyDelete
  15. Wow wow wow got the post finally. This is what I wanted this is what our comics is all about. Love your announcement editor sir. Just loved it. This time I'll come there by person to enjoy every moment. I'll send that 560/- right away

    ReplyDelete
  16. அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள். தி ஈரோடு எக்ஸ்பிரஸ்க்கு டிக்கட் புக் பண்ணியாச்சு.வாழ்கIMPS. தீயா வேல செய்யணும் குமாரு!

    ReplyDelete
    Replies
    1. Sir you have sent money to which account? Please

      Delete
    2. Sunshine library.tamilnadu mercantile bank.ac no.details printed in book inside and last .page

      Delete
  17. பாவம்.. இருந்தாலும் அந்த பெரியவருக்கு ஈரோட்டில் ஒரு வாய்ப்பு குடுத்திருக்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. நீங்க

      உடைந்த மூக்காரைதானே சொன்னீங்க

      எப்படி கண்டுபிடிச்சோம் பாத்தீங்களா 💃🏻💃🏻💃🏻
      .

      Delete
    2. Prabhakar rummi yarachum sonnarunu ellarukume therium😉

      Delete
  18. யாஹூஊஊஊஊ

    அட்டகாசம் அருமை கலக்கல் சார் 💃🏻💃🏻💃🏻

    .

    ReplyDelete
  19. அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள் 🙏🏼
    .

    ReplyDelete
  20. அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும், ஆசிரியருக்கும், இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் ii

      Delete
  21. எடிட்டர் சார். 600 ரூபாய் கட்டியாச்சு. உங்களுக்கு மெயில் லும் தட்டியாச்சு. Please check it sir.thanks.

    ReplyDelete
  22. "ஏன் சார், ஆகஸ்டில் ஈரோடு புக்ஃபேர் வருது ஒரு அறிவிப்பும் வர்லையே"

    "அறிவிச்சாச்சுங்க 'தி ஈரோடு எக்ஸ்பிரஸ்'"

    "அட போங்க, ஒரு ஸ்பெஷல் புக்குக்காக நான் இவ்ளோ தூரம் வரனுமா"

    "ஒன்னு இல்லீங்க ரெண்டு ஸ்பெஷல் புக்குங்க"

    "என்ன சார் இப்படி பன்றிங்க, தல டெக்ஸ் இல்லாம புக்ஃபேரா. வெளையாடாதிங்க சார்"

    "தல டெக்ஸூம் இருக்காருங்க"

    "வாக்கு தவரிட்டிங்க சார். கார்ட்டூன் ஸ்பெஷல் போட்ரதாதான இருந்திங்க?"

    "டோண்ட் வொர்ரிங்க சார் அதுவும் உண்டுங்க சார்"

    "அட என்னங்க நீங்க. நான் இவ்ளோ தூரம் வரப்போரேன் ஒரு சர்ப்ரைஸ் கிப்டும் இல்லைனா எப்படிங்க?"

    "முன் பதிவில் வாங்கப்போற எல்லாருக்குமே ஒரு சர்ப்ரைஸ் இருக்குங்க சார்"

    "ஏன் சார் 200,300 கிலோமீட்டர் தூரம் வர்றோம் விலையை கம்மி பன்னி கொடுத்தா என்னவாம்'

    "அப்படி இல்லைங்க சார். டைரக்டா வந்து வாங்குரவங்களுக்கு கொரியர் சார்ஜ் முற்றிலும் தள்ளுபடிங்க சார்"

    "சரி என்னதான் புக்கோட விலை சார்"

    "ரெண்டு பெரிய சைஸ் புக் சார். ஹார்ட்பவுண்ட் கவர் சார். கலர்ல 6 ஆல்பங்கள் சார். 350 பக்கங்களுக்கு மேல வரும் சார். ஸ்பெஷல் கிஃப்டும் உண்டுங்க சார். கொரியர் சார்ஜ் இல்லைங்க சார். 540 ரூபாதான் சார். அதோட முகமறியா காமிக்ஸ் நண்பர்களோட இந்த டென்ஷன் லைஃப்ல இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம் சார். அதுக்கு விலை மதிப்பே இல்லைங்க சார்"

    "என்னதூதூதூ.... 500 ரூபய்க்கு மேலையா.... நான் இப்பவே பேங்க் க்கு போறேன் லோன் போட"

    "......."

    ReplyDelete
    Replies
    1. Karthikeyan well said bro. Your sense of timing is too good.

      Delete
    2. ///Karthikeyan well said bro. Your sense of timing is too good.///

      யெஸ்!! பதிவை நன்றாக உள்வாங்கி அதற்கேற்ப வசனங்களை அழகாக அமைத்திருக்கிறார்! நம் எடிட்டருக்கு 'அமைந்த' வாசகர்களின் வழக்கமான பாணியைப் பற்றி நகைச்சுவையோடு நன்றாகச் சொல்லியிருக்கிறார்! :)

      Delete
    3. Ha Ha Ha Ha ..

      பேங்க் லோனோ கந்து வட்டியோ .. இது கட்டிட்டேன் .. :-)

      ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க கார்த்திகேயன் .. வழக்கமா கேக்குறதுதான் ..

      "ஹ்ம்ம் ... தமிழ் காமிக்ஸும் இனி வசதி படைத்தவர்களுக்குத்தான் போலும் ... :-("

      :-) :-) :-)

      பி கு : இப்ப வர்ற பல சினிமா படங்கள் நான் பாக்குறதேயில்லை - அதுக்கு பதில்தான் காமிக்ஸ் வாசிப்பு. வருடம் 2-3 படம் பார்த்தால் அதிகம்.

      பி கு 2: இதுக்கும் வந்துருவாய்ங்கே "நண்பரே எனக்கு சினிமாவும் பிடிக்கும் .. அனைத்து காமிக்ஸும் பிடிக்கும் .. என்ன செய்வது?" ;-)

      Delete
    4. சூப்பர் கார்த்திகேயன்.

      Delete
    5. @Kumar Salem
      @Erode Vijay

      Thanks Friends

      @Raghavan

      //பேங்க் லோனோ கந்து வட்டியோ .. இது கட்டிட்டேன்//

      :) SUPER!

      Delete
  23. பதிவை முழுமையாக படித்து முடிக்கும் முன்னர் முன் பதிவுக்கு பணத்தை அனுப்பி வைத்து விட்டேன். நன்றி.

    இனி பதிவை முழுமையாக படிக்க வேண்டும்.

    ReplyDelete
  24. விஜயன் சார், FAQ:- விடுபட்ட ஒரு கேள்வி; கார்டூன் இதழ்களும் உண்டு மற்றும் சிரிப்பு பார்டிகளுடன் என குறிப்பிடப்படுகிறது, அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கார்டூன் கதைகள் வருவதாக தெரிகிறது. இதனை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

    2. கார்டூன் கதைகள் ரெகுலர் சந்தாவில் வருமா? அல்லது தனியாக பணம் செலுத்த வேண்டுமா? முன்பதிவு உண்டா?

    ReplyDelete
    Replies
    1. 3. முன்பதிவு செய்யாமல் ஈரோடு புத்தகத் திருவிழாவில் வாங்கினால் ரூபாய் 540 இரண்டு புத்தகங்கள் கிடைக்குமா? (எனது புரிதல் நோ, பதிவை நன்றாக இன்னும் ஒரு முறை படித்தால் இது புரிந்து விடும்)

      Delete
  25. Dear Vijayan sir

    We need one TEX Special for Erode meet.

    ReplyDelete
    Replies
    1. ஆம்.செம சூப்பராக இருக்கும்.

      Delete
    2. Tex உண்டுன்னு சொல்லிடார்ல .. வெயிட் ப்ளீஸ் :-)

      Delete
  26. விஜயன் சார்,

    1. புத்தகத் திருவிழா ஸ்பெஷல் விலையை கட்டுக்குள் வைக்க இரண்டு புத்தகங்கள் மட்டும் என்பது சரியான முடிவு. (எனக்கு இன்னும் அதிக புத்தகங்கள் வேண்டும் தான்). பாராட்டுக்கள்.

    2. புத்தகங்களை நேரில் பெற்று கொள்ளும்/முன்பதிவு நண்பர்களுக்கு சிறப்பு விலை. சூப்பர்.

    3. கார்டூன் பிரியர்களுக்கு ஓர் சஸ்பென்ஸ் புத்தகம்.

    4. முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.

    அருமையான திட்டமிடல். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்னது ரெண்டு ? அதான் கார்ட்டூன் உண்டு .. tex உண்டுன்னு சொல்லிடார்ல .. வெயிட் ப்ளீஸ் :-)

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. சார் அருமை....இபவுக்கு ஈடு செய்ய விலையை விட கதையின் பிரம்மாண்டம் முக்கியமென முடிவு சந்தோசம் தருகிறது....கென்யா அமேரிக்கா நிச்சயம் எனும் லட்சியமும் அருமை....சிறுவட்டத்தை சந்தோசப்படுத்த எடுத்த முயற்ச்சியும் சூப்பர்...டெக்சுமுண்டு அருமை...கார்ட்டூனில் நீலப்பொடியர்களும் அடடடா...ஆனா...இன்னும் விலை உலைன்னு சொல்றது சுகப்படலை....முடிஞ்ச அளவு போட்டுத்தாக்குங்க அதற்கான விலையில் limitedல்...வாங்குவோர் அல்ல வேண்டுவோர் வாங்கட்டுமே....இந்த மேய சந்தோசமா மேய விட்ட தங்களுக்கும் தொழிலாளர் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் மே தின வாழ்த்துக்கள்.....இயன்றவர் வாங்கிப் படிக்கட்டும் என்று வழிவிட்ட நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  29. Editor sir happy may day.Thanks for erode book fair announcement.🎂🎂💐💐😄😄😄🍓🍓🍓🍉🍉🍉🍒👏👏👏👍👍🏼👍👍

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. The Erode express - Ticket booked and sent mail to lion comics office also.

    ReplyDelete
  32. Dear Editor,

    ஈரோடு எக்ஸ்பிரஸ் புக்கிங் செய்தாச்சு சார். 600 அனுப்பி உள்ளேன். ஆனாலும் ஈரோடு வருவதுதான் உத்தேசம் இம்முறை. ஒருக்கால் பணி நிமித்தம் வர முடியாமல் போனால் தெரிவிக்கிறேன் - கூரியரில் அனுப்பவும்.

    வாசகர்கள் சந்தோஷமே பிரதானம் என்ற செயல்பாடு அருமை. நமது டீமுக்கு ஒரு சிறப்பு gift கொடுத்து விடுங்கள் சார் - நம் பொருட்டு இவ்வளவு உழைப்பதற்கு. உங்களுக்கு தான் இருக்கவே இருக்கு 'சாத்துக்கள்' அவ்வப்போது ;-) :-p

    Jokes apart, நம் பொருட்டு தூக்கம் தொலைப்பவர்கள் மற்றும் மனம் பிறழ்பவர்களை நமது செயல்களால் வெற்றி கொள்வதே சிறப்பு. அவ்வகையில் இது போன்ற முயற்சிகளுக்கு என்று என் ஆதரவு உண்டு.

    ReplyDelete
  33. ஈரோடு எக்ஸ்பிரஸ் அழகான திட்டமிடல்.புதுவரவுகள் எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.ஒன்று கடந்த காலத்தின் பின்னோக்கிய பயணம்.மற்றது எதிர்காலத்தின் முன்னோக்கிய பயணம் என இந்த தொகுப்பு சுவாரஸ்யமாகவே உள்ளது.கூடவே டெக்ஸும் ,கார்டூனும் சேர்ந்து பயணிப்பதால் அந்த எக்ஸ்பிரஸின் வேகம் இன்னுமே அதிகரிக்கப் போகிறது.

    ReplyDelete
  34. ஈரோட்டில் சஸ்பென்ஸ் டெக்ஸா
    சூப்பரோ சூப்பர் மரணமுள்ளாக இருக்குமோ அல்லது இலவச கலர் டெக்ஸா எதுவாக இருந்தாலும் சஸ்பென்ஸ் சூப்பரே

    ReplyDelete
  35. I have already booked for Erode express after initial announcement on April 9th itself. Today I have sent balance Rs.180/- today. So ticket is now ready for Erode express.

    ReplyDelete
  36. நன்றி ஆசிரியரே.ஒரு வழியாக அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்டு நிம்மதியாக பெருமூச்சு விட வைத்துவிட்டீர்கள் ஐயா.கார்டூன்,ஆக்‌ஷன், தலை,இரண்டு புத்தகம்,தள்ளுபடி விலை,கையடக விலை,சர்ப்ரைஸ் கிப்ட் அப்பப்பாபா காமிக்ஸ் இரசிகர்களை மகிழ்விக்க எத்தனை அறிவிப்பு.சிறப்பு ஐயா.மிகச் சிறப்பு.நாளை முன் பதிவு செய்துவிடுகிறேன்.நன்றி ஆசிரியரே.

    ReplyDelete
  37. முதலைப்பட்டாளம்,மின்னல்படையினர்,பெருச்சாளிப்பட்டாளம் ஆகியோருக்கு பிறகு ஒரு குழுவாக சாகசம் செய்ய வரும் புதிய நாயக குழுவினரை வந்தனம் செய்து வரவேற்கிறோம்.

    ReplyDelete
  38. ஆஹா ii
    சானியா -விற்கு தங்கை மாதிரி.ii
    எப்படியாவது கை (பிடிச்சிரனும் )பத்திரனும். கொரியரிலாவது, ஈரோடு புத்தக விழாவிலாவது.

    ReplyDelete
  39. வணக்கம்!

    அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்!!

    ஈரோடு வாசகர் சந்திப்பு
    வெளியீட்டு புத்தக விவரங்கள் அருமை!!

    ReplyDelete
    Replies
    1. ஈரோட்டில் பெற்றுக்கொள்ள ரூ.540/-
      புக் பண்ணியாச்சு!!

      Delete
  40. முன்பதிவு செய்ய ஆன்லைனில் புக் லிஸ்ட் அப்டேட் பண்ணுங்க சார்...

    ReplyDelete
  41. ஆசிரியர் பதிவை போட்ட பிறகு இங்கு வராததை பார்த்தால் ஆபீஸில் எல்லோரையும் புத்தகங்களை டப்பாவில் அடைத்து நமக்கு சொல்லியபடி அனுப்புவதற்கு குச்சியை வைத்து விரட்டி விரட்டி வேலை வாங்குவதில் பிஸி போல் தெரிகிறது.

    ReplyDelete
  42. பணம் கட்டிட்டு வந்து பதிவை படிக்கிறேன்

    ReplyDelete
  43. டியர் விஜயன் சார்,

    கடந்த வாரம் ஈரோடு ஸ்பெஷலை ₹360 அனுப்பி, மிகத் தாமதமாக பின்பதிவு செய்திருந்தேன். இன்று மதியம் நண்பர் ராகவன் அவர்கள், இப்படி ஒரு எக்ஸ்பிரஸ் முன்பதியப் படுகிறது என்று தகவல் அனுப்பி இருந்தார். ஒரு வேளை அதுதான் இதுவோ என்று பதிவைத் துளாவினால், எக்கச்சக்கமாய் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அறிவிப்புப் பதாகைகளில் உள்ள முன்பதிவுத் தொகையை வைத்து அது வேறு, இது வேறு என்று அறிகிறேன்.

    என்னைப் போன்ற சோம்பேறி + ஞாபக மறதி வாசகர்களின் நலன் கருதி, இனி வரவிருக்கும் பொதுச் சந்தா, தனிச் சந்தா, கிளைச் சந்தா, ஈரோடு - ஸ்பெஷல், சூப்பர் ஸ்பெஷல், பேஸஞ்சர், எக்ஸ்பிரஸ் மற்றும் இன்ன பிற தடங்களைப் பற்றிய தகவல்களை "சுருக்கமாக", கதைகளின் தலைப்பு மற்றும் விளம்பர படங்களுடன், தனியே ஒரு பக்கத்தில் நிர்வகித்தால், அவ்வப் போது எட்டிப் பார்த்து, தகவல் அறிந்து, முன்பதிவு செய்து கொள்ள மிகவும் வசதியாக இருக்கும்!

    எள்ளல் தொனியில் எழுதியமைக்கு வருந்துகிறேன் :(
    ஆனால், குழுமத்தின் புத்தக வெளியீட்டு நிலவரம் அப்படி, ஒரே குழப்படி! :)

    நன்றி!

    ReplyDelete
  44. Karthik , Editor had said that there would be two books and had asked us to wait till May to hear about the second title. Essentially, the payment you had made already was for the first book in this ERODE EXPRESS series. So actually less to pay now :)

    But I agree with your suggestion of one page containing all releases of the year which gets periodically updated. Would help everyone if Editor implements it.

    ReplyDelete
    Replies
    1. A myriad of decisions go into the planning of an year's schedule.... Some of them are mine ; many the copyright holders ! That is why a 100% upfront planning is always elusive...

      Delete
    2. @Raghavan:
      As you correctly understood, the request was not about the planning part. All I would like to see is a one page stop that captures the "essential" information about the current subscription tracks, upcoming limited editions and pre-booking details. Forget about being helpful to the new readers, but it is really hard even for a seasoned (but occasional) reader like me to dig through all the posts and myriad of comments to find such information. Anyways, I will keep myself subscribed to efficient folks like you to learn about such announcements which are hidden in plain sight! :)

      I don't mind being labeled as someone who does not read all the books but still keeps finding faults. But, the point is I don't want to miss even a single release from Lion & Co. for obvious reasons. If I miss one now, I will end paying a fortune later. ;) I will definitely try to catch-up with all the backlog but I don't see that happening in the near future!

      Delete
  45. "அடுத்த வெளியீடு, வருகிறது, விரைவில்" என்ற அறிவிப்புகளே ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியை மனதில் உண்டாக்கும்.

    வெளியீட்டு நாட்களை நோக்கி காத்திருப்பதும்,இதழ்களை பெற்ற பின்பான நிறைவும் வார்த்தைகளில் விவரிக்க இயலாதது.
    மின்னும் மரணம்,இரத்த கோட்டை,இரத்த படலம் வெளியீடுகள் கொணர்ந்த உற்சாகம் இன்றளவும் துளியளவு குன்றாமல் உள்ளது.
    இதோ அடுத்ததாகவும் ஓர் கனவு தருணத்தை நோக்கி விழிகள் விரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. //அடுத்த வெளியீடு, வருகிறது, விரைவில்" என்ற அறிவிப்புகளே ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியை மனதில் உண்டாக்கும்.//

      :-))))

      Delete
  46. குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள் !!!!!!

    முனுசாமி : எடிட்டர் மரண வைரங்கள் –னு தலைப்பு வச்சிருக்கார்ல .....

    பொன்னுசாமி : தலைப்பை விடும் ..கதைய படிச்சீரா ??

    முனுசாமி : உம்ம்...

    பொன்னுசாமி : நல்லா இருந்துச்சா ??

    முனுசாமி : ரொம்ப நல்லா இருக்கு ...

    பொன்னுசாமி :: லே அவுட் ,படங்கள் ,வர்ண சேர்க்கை எல்லாம் நல்லா இருந்துச்சா ?
    முனுசாமி : சூப்பரா இருக்கு
    பொன்னுசாமி : அப்புறம் என்ன ?? விடும் ....வடைய திங்க சொன்னா துளையை ஏன் எண்ணுறீர்? பொண்ணை பாக்க சொன்னா புடவை கலரை ஏன் பாக்குறீர்?
    முனுசாமி : எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ...கதைக்குள்ள பச்சை கற்கள் அப்டின்னு போட்டு இருக்கு ..தலைப்புல மரண வைரங்கள்னு போட்டு இருக்கு ..வைரம் வெள்ளையாத்தானே இருக்கும் ??

    பொன்னுசாமி : சரியான நொச்சு புடிச்ச ஆளையா நீர் ...சிரிப்பு பதில் வேணுமா ? சீரியஸ் பதில் வேணுமா ?
    முனுசாமி : ரெண்டுமே ...
    பொன்னுசாமி : விலை உயர்நத கல் அப்டிங்கரதால நவரத்ன கல்லாத்தான் இருக்கணும் ...அதுல
    முனுசாமி : நான் சொல்றேன்

    வைரம் ,புஷ்பராகம் நிறம் கிடையாது
    வைடூரியம் வெளிர் மஞ்சள்
    முத்து வெள்ளை
    மாணிக்கம் ..அடர் சிவப்பு
    பவளம் ..அடர் சிவப்பு
    கோமேதகம் ..வெளிர் சிவப்பு
    நீலக்கல் ..நீலம்
    மரகதம் ..பச்சை

    கதை தலைப்பு மரண மரகதம் அப்டித்தானே வரணும்?

    பொன்னுசாமி ;
    நான் ஆரம்பிக்கும்போதே ஊடாலே நுழையுறீர்...

    காரணம் ஒன்று ..
    சந்தாதாரர் ரெண்டு மூணு பேரோட வூட்டுக்கார அம்மா பேரு மரகதம் அப்டின்னு இருந்து அவங்க கண்ணுல மரண மரகதம் அப்டிங்கற இந்த புத்தகம் பட்டுட்டா ???
    காரணம் ரெண்டு ..இயற்கையில் கிடைக்கும் நவரத்னம் நீர் சொன்ன வர்ணங்களில் கிடைக்கனும்னு அவசியம் இல்ல ..

    முத்துலயும் கருப்பு முத்து உண்டு
    வைடூரியம் மஞ்சள்னு இல்லாம சிவப்பு பச்சைன்னு கிடைக்கலாம்
    வைரம் கூட colored diamonds அப்டின்னு பச்சை மஞ்சள் ,கருப்பு அப்டின்னு கிடைக்குது ...
    கதையில வர்றது கூட பச்சை வைரமா இருக்கலாம் ..

    முனுசாமி : ஓஹோ ..அப்டியா சமாச்சாரம் ..எனக்கு இன்னொரு உண்மை தெரிஞ்சாகனும் ..

    பொன்னுசாமி : இன்னும் என்னய்யா ..நொய் நொய்னு???

    முனுசாமி : நீர் சொன்ன ரெண்டுல எது சிரிப்பு காரணம்? எது சீரியஸ் காரணம் ?

    ReplyDelete
    Replies
    1. Ha Ha Ha .. That Marana Maragatham bit is superb ...!!!

      Delete
    2. ##நீர் சொன்ன ரெண்டுல எது சிரிப்பு காரணம்? எது சீரியஸ் காரணம்##
      Last ball sixer...

      Delete
    3. "மரகதம்" என்ற பெயரில் ஆயுசுக்கும் titles எதுவும் வைக்க மாட்டேனே !!

      Delete
    4. செனா...👌🏼👌🏼👌🏼 சிரிச்சி மாளலை.

      Delete
  47. ## ஒரு popular & evergreen ஆக்ஷன் நாயகரைக் களமிறக்குவதே லாஜிக் என்ற புரிந்தது ; and மேற்படி விவரிப்புகளுக்கு "உள்ளேன்" என்ற பதிலளிக்கக் கூடிய தகுதி ஒரு இத்தாலிய மஞ்சள் சொக்காய்க்காரரிடம் மாத்திரமே இருப்பதும் புரிந்தது ! TEX 700 ; TEX Maxi ; என்ற நிறையவே மண்டைக்குள் ஓட்டமெடுத்தன ! ஆனால் தினப்படி சந்திக்கும் ஒரு நாயகரை ; அதுவும் பெரும்பான்மையினர் தவறாது வாங்கிடப் பிரியப்படும் ஒரு popular ஹீரோவை ##

    மஞ்ச சட்டனு வந்த கணமே மனதில் உற்சாகம் பிரவாகிக்க, உள்ளம் தடுமாற, மண்டையில் வாணவேடிக்கை வெடிக்க "அய்யோ ! எந்த கதைனு தெரீலயே ! மேபிஸ்டோவா இல்ல பச்சோந்தியா, சிங்கம் சிங்குலாவ இல்ல கொழந்த குட்டியோட களமிறங்குதா, வேட்டை பெருசாவ இல்ல சிறுசாவ, என்னானு தெரீலயே சொக்கா ! னு மனம் முழுதும் விசிலோடு படிச்சா "பாபா பிசுக்கோத்து னு" முடிஞ்சுதும் மனம் பிம்பிளிக்கா பிளாக்கி ஆயிடுச்சி. ஒரு ஏமாற்றம் வந்தது பாருங்க. சத்தியம் பண்ணிட்டு தர்மயுத்தம் பண்ணலாமானு கூட மனசுல ஓடிச்சி. இதுக்கு எதுக்கு சார் தலய கொண்டு வருவானேன். நாங்கபாட்டுக்கு செவனேனு தானே போயிட்டு இருக்கோம். டெக்ஸ் வெறியர்கள் அனைவரும் அண்ணாரை சுற்றி அரை வட்டமாக வரவும்.. ஓவர் ஓவர் ..

    ReplyDelete
  48. காரணம் ஒன்று ..
    சந்தாதாரர் ரெண்டு மூணு பேரோட வூட்டுக்கார அம்மா பேரு மரகதம் அப்டின்னு இருந்து அவங்க கண்ணுல மரண மரகதம் அப்டிங்கற இந்த புத்தகம் பட்டுட்டா ???/// வ.பட்டி ராமசாமிக்கு குடுத்த கடன் மாதிரி தான்.. அடுத்த நாள் நண்பரகள் மட்டும் தான் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்க வேண்டி வரும்... அதுவும் பேர் போடாமே..😉

    ReplyDelete
  49. கேள்வி # 4 : "இப்படியொரு தருணத்தில் 'தல' இருக்க வேண்டாமோ ? அவரின்றி ஓரணுவும் அசையாதே ?"

    பதில் : வாஸ்தவமே !! Again - எப்படி ? என்ற கேள்வியை மட்டும் கேட்காதீர்கள் நண்பர்களே - ஆனால் 'தல'யும் இருப்பார் உங்களின் ஈரோட்டுப் பயணத்தின் சமயம் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கொள்கிறேன் !
    Thank you sir.

    ReplyDelete
  50. @ ALL : கூரியர்கள் ; பதிவுத் தபால்கள் என மே மாதத்து இதழ்கள் இன்றைக்கு கிளம்பி விட்டன guys ! Safe receipt & Happy reading !

    ReplyDelete
    Replies
    1. நன்றி. தற்போது தூத்துக்குடியில் இருப்பதால் திங்கள் அன்றுதான் புத்தகங்களை கண்களில் பார்க்க முடியும். நன்றி.

      Delete
    2. Same thing with me too. I came to covai I'll go to Salem on 11th only I'll get the books. 😭

      Delete
  51. அப்புறம் ஆன்லைன் லிஸ்டிங்ஸ் போட்டாச்சு - மே இதழ்களுக்கும் ; தி ஈரொடு எக்ஸ்பிரஸ் முன்பதிவுக்கும் !

    ReplyDelete
  52. Erode express booking confirmation mail received yesterday.thanks sir.

    ReplyDelete
  53. Books vanthaachu @ Home! Lunch time'la than paakka mudiyum. Hmmm. Waiting to see barakuda!

    ReplyDelete
    Replies
    1. Erode express booking confirmed by Email. THANK YOU sir!

      Delete
  54. பொதுவா அட்டை பத்தியெல்லாம் ரொம்ப அலட்டிக்கறதில்ல..

    ஆனாலும் இம்மாத இதழ்களின் அட்டைகள் ஜொலிக்கின்றன என்பதை சொல்லாமல் இருக்கமுடியவில்லை..

    எடிட்டருக்கு பட்ஜெட் இடிக்காமல் இருந்திருப்பின் லோன் ரேஞ்சருக்கும் பராகுடாவுக்கும் ஹார்ட் பவுண்ட் அட்டை போட்டிருப்பார்..

    செமத்தியா இருந்திருக்கும்..இப்பவும் சூப்பராத்தான் இருக்கு..

    சரி..நான் படிக்க போறேன்....

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இன்றைக்கு பார்சல் வரவில்லை..!
      செனா அனா வீட்டில் இன்றைக்கு பவர்கட் ஆகி படிக்கமுடியாமப் போகணும்னு நான் ஏன் வேண்டிக்கொள்ளக்கூடாது .!? :-)

      Delete
    2. அதைவிட அவரோட கண்ணாடி காணாம போகணும்னு வேண்டிக்கிடலாம்:-)

      Delete
  55. ஏன் இந்த கொலவெறி? எனக்கு கையில கிடைக்க ஜூலை 17 ஆகும். அதுவரைக்கும் மூதறிஞர் கண்ணருக்கு புக்கு கிடைக்கக்கூடாதுன்னு வேண்டிகிட்டா?

    ReplyDelete
    Replies
    1. எது.. மூதறிஞரா.!?
      எல்லோரையும் தன்னைப்போலவே எண்ணும் நல்லுள்ளம் வாய்ப்பது அரிது ஷெரீப்.! :-)

      Delete
  56. எனக்கும் இன்னும் கிடைக்கில..😏😏😏

    ReplyDelete
  57. @ALL : அடித்துப் பிடித்து நேற்றைக்கு அத்தனை பார்சல்களையும் கூரியரில் ஒப்படைத்த விட்டோம் - நன்பகலுக்கே ! DTDC எவ்வித இக்கன்னாவும் இல்லாது புக்கிங் செய்து விட்டுள்ளனர் ! ஆனால் ST கூரியரில் ஆள் பற்றாக்குறை என்ற சொல்லி சாவகாசமாய்ப் பாதியை மட்டுமே புக்கிங் செய்திருக்கும் விஷயம் இன்றைக்கு நண்பர்களின் சரமாரியான புகார்களுக்குப் பின்பே தெரிய வந்துள்ளது !

    இங்குள்ள கிளையில் சமீபமாகவே வேலைக்கு ஆட்களே குறைவு ; அவ்வப்போது கான்டிராக்ட் ஆட்களை வரவழைத்தே சமாளிக்கிறார்கள் ! நேற்றைக்கு அது இயலவில்லையென்று சிம்பிளாக முடித்துக் கொண்டார்கள் !!

    இங்கே DTDC சிறப்பாய் இயங்கிடுகின்றனர் ; so அடுத்த மாதமே முதலாய் அங்கு முழுசுமாய் மாறிட நினைக்கிறோம் !! What say ?

    ReplyDelete
    Replies
    1. இரண்டு சந்தாவுக்கான பார்சல்களில் ஒன்று மட்டுமே வந்தது..

      அலுவலகத்தில் விசாரித்தபோது( இத்தனை வருடங்களில் ஆபிஸ்க்கு போன் செய்வது இதுவே முதல்முறை) பாக்கி பார்சல் இன்னும் இரு தினங்களில் வந்துவிடும் என மிக இனிமையான குரலில் சமாதான தொனியில் பதில் வந்தது..

      DTDC எங்கள் பகுதியில் அறவே இல்லை சார்...

      இது குறித்து சற்று பொறுமையாகவே முடிவெடுக்க வேண்டுகிறேன் சார்..

      Delete
    2. ///இங்கே DTDC சிறப்பாய் இயங்கிடுகின்றனர் ; so அடுத்த மாதமே முதலாய் அங்கு முழுசுமாய் மாறிட நினைக்கிறோம் !! What say ?///

      இங்கே dtdc அத்தனை சுகமில்லை சார்.!
      நான் நாளைக்கே பார்சலை வாங்கிக்கொள்கிறேன்..! STயை மாற்றிவிடவேண்டாம் சார்!

      Delete
    3. சார்,
      ST கூரியருக்கு 12 கி.மீ. (கோபி) போயி வாங்க வேண்டியிருக்கு!
      DTDC-னா ஈரோடு (40 கி.மீ) போயித் தான் வாங்க வேண்டி வரும்னு நெனைக்கிறேன்!!
      கோபியில் DTDC சர்வீஸ் இருக்கானு தெரியல!!

      Delete
    4. எனக்கு எதுன்னாலும் பிரச்சனை இல்ல.ரைட்ல பொடிநடையா போனால் DTDC வந்திடும்.லெப்ட்ல லைட்டா வேகநடை போட்டா ST வந்திடும்.:-)

      Delete
    5. பெங்களூரில் உள்ள எனக்கு DTDCயில் தொடர வேண்டும்.

      Delete
    6. எனக்கு இங்கு DTDC பணியாளர் தான் ரெகுலராக கொண்டு வருகிறார். இருப்பினும் இன்று எனக்கு புத்தகம் வரவில்லை. என்ன கொடுமை சார் இது?

      Delete
  58. ட்யுராங்கோ !

    ஆபத்தானவன்!

    நெஞ்சுரம் மிக்கவன்!!

    நேர்மையாளன்!!!

    பக்கம் எண். 13

    🚬🚬🚬 வதம் செய்ய விரும்பு 🔫🔫🔫

    ReplyDelete
  59. சார் காலை எட்டு மணிக்கு அலை பேசினேன்...பார்சல் வந்தாச்சு...ஆ...உங்களதும் வந்தாச்...இதோ கெளம்பிட்டேன்.. பார்சல் குண்டா இல்லயோ...ஸ்டேண்டுக்கு வந்து ஒரு அக்கா சொன்னதால பிரிச்சா ஒரு புக்க காணம்...அட்டைப்படங்க அள்ளுது...அதும் நீல நிறம் முகத்தில் அறைய ஒளிரும் கொள்ளையன் அசத்த....உள் பக்கங்கள் அதிரடி ...வண்ணம்...ௐவியம்...நீலகாட்சிகள் என மனச கொள்ளயடிக்க பின்னட்டயும் மனத களவாடுது அறிந்தும் அறியாமலே....ட்யூராங்கோ வேற லெவல் ...சும்மா மிரட்டுது முன்னட்டை ட்யூரா முகமாய்....எழுத்துரு நிழல் நம் மனதிலும் பதிய....பின்னட்டை கலக்க...உள் பக்க முதல் பக்கம் வித்தியாச வண்ணத்தில் அடடான்னு ஆனந்தப்படுத்த...இவ்வண்ணத்த முதன் முறயா பாக்றாப்லயே ஃபீலிங்கு...சூப்பர் சார்...அடுத்த மாதம் ஏன்னே தெரில மனங்கவர் ஆர்ட்டின் இருந்தும் ஏனோ சப்பை மாதமா தோன ...அட நம்ம மார்ட்டின்...என சொன்னாலும் அந்த இளம் டெக்ஸ் இல்லன்னா அம்பேல்தான் அடுத்தமாதம்...தனியொருவன நாளை அனுப்றோம்னாங்க...சந்தோசமாய் நாளை நம்பி காத்திருக்கிறேன்...கடல் புதயல கொள்ளயடிக்க வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் வியப்போடே...

    ReplyDelete
  60. குட்டி டெக்ஸ் ௐவியம் அசத்த ட்யூராங்கோ பக்க காட்டுவான் பக்காவா இனிக்குது

    ReplyDelete
  61. Erode erode august இன்னும் முழுசா 6 மாசம் இருக்கு இப்பவே மனsu பரபரக்kuthu கருர் ராஜா sekaran

    ReplyDelete
  62. S.T.கூரியர் சேவை வரவர மோசமாகிக் கொண்டே போகிறது. இந்த லட்சனத்தில் எங்கள் பகுதி தபால்களுக்கென்று (Thirupapuliyur branch) கிளை ஒன்று ஆரம்பித்து இயங்கி வருகிறது. அலுவலகத்தில் ஃபோன் நம்பரும் கிடையாதாம்! வேலை பார்ப்பவர்கள் தங்கள் எண்ணையும் தரமாட்டார்களாம்! நாம் தொடர்பு கொள்ள முடியாதாம். அலட்சியமான பதில். நேரில் போய்தான் கேட்க வேண்டும்! போய் விசாரித்தால் புத்தகம் வரவில்லை என்கிறார்கள்.
    இப்படி ஒரு கூரியர் சர்வீஸ்!

    ReplyDelete
    Replies
    1. இங்கே 2 கிளைகள் இருந்தன சார் ---ஓராண்டுக்கு முன்பு வரைக்கும் ! ஏதேனும் ஒன்றில் உள்ள ஆட்களைக் கொண்டு வேலை ஆகிவந்தது !

      ஆனால் இப்போது இருப்பது மொத்தமே ஒரு ஆபீஸ் தான் & மாலை 6 மணிக்குத் தான் அவர்களது பகுதிநேர ஊழியர்கள் வந்து சேர்கிறார்கள் !

      கடந்த 6+ ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் தந்திருப்போம் என்ற போதிலும் கொட்டாவி விட்டபடிக்கே - "ஆளில்லை..என்ன பண்ணச் சொல்றீங்க ?" என்று கேட்கிறார்கள் !! And இதற்குப் பெயர் service industry !!

      Delete
    2. DTDC நேர் opposite ! புக்ஸ் போய் இறங்கிய ஒரு மணிநேரத்துக்குள் சகலத்தையும் புக் செய்து கம்பியூட்டர் ரசீதைக் கையில் தந்து விடுகிறார்கள் !

      Delete
    3. எனக்கும் இன்னும் புத்தகங்கள் வந்து சேரவில்லை.
      எங்கள் பகுதியில்(பல்லடம்) ST கொரியர் சர்வீஸ் அருமை சார். எனக்கு STயிலேயே அனுப்புங்கள்.

      Delete
    4. எடிட்டர் சார்
      உங்களது கடமையை உடல்நிலை சரியில்லாத நிலமையிலும் தவறாமல் செய்துவிட்டீர்கள். நான் கூரியர் பற்றிய எனது ஆதங்கத்தை மட்டுமே வெளிப்படுத்தினேன். அதற்கு நீங்கள் என்ன செய்யமுடியும். நீங்கள் உங்களது உடல்நிலையை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். அதுபோதும்.ஓரிரு நாள் தாமதமானால் பரவாயில்லை.
      எனக்கு S.T.கூரியரே தொடரட்டும்.காரணம் வீட்டிலிருந்து மூன்று கி.மீ.தொலைவுக்குள் இருக்கிறது. DTDC இன்னும் அதிக தூரம் போக வேண்டும்.
      அதற்கு இதுவே மேல்!

      Delete
  63. கொடுமையைப் பாருங்களேன்....அத்தனை பாடுபட்டு தயார் செய்த புக்ஸைப் பற்றிப் பேச வாய்ப்பின்றி, கூரியர்களைப் பற்றிப் புலம்ப வேண்டியதாகிப் போச்சே !!

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை ஃபானி புயல் காரணமாக இருக்குமோ?

      Delete
  64. ஆத்தா மகமாயியின் அருட்கடாட்சம் பூரணமாகக் கிடைக்கப்பெற்றுள்ள மதிப்பிற்குரிய DTDC கொரியர்காரவுகளின் சிறப்பான சேவையால் இன்று புத்தகங்கள் வீடு வந்து சேர்ந்தன (நோட் பண்ணிக்கோங்க ஆத்தா.. பழைய பாக்கி + 1)
    ஆனால் நான் வீடு வந்தடைய இன்னும் இரு தினங்கள் ஆகும் என்பதால் புத்தகங்களை உச்சிமோந்து வாரியணைக்க முடியாத நிலையிலிருக்கிறேன் என்பதை வருத்தத்துடன் கூறிக்கொண்டு...

    ReplyDelete
  65. என் வருத்தத்தை நீக்கி இருக்க வேண்டும். வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும். செய்ததா இந்த DTDC ?ஓடினேன்.... கூரியர் ஆபீஸ்க்கே ஓடினேன்.வரவில்லை பார்சல் என்று சொல்லிவிட்டார்கள்.

    ReplyDelete
  66. சரிதான்னு இங்கே வந்து பந்தியில பார்த்தா பல பேருக்கு வடை ேபாச்சே ஃபீலிங்கு.

    ReplyDelete
  67. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை i?
    எனக்கோ நேற்று 12.00 மணிக்கே DTDC_யில் புக் பார்சல் வந்து விட்டது என்று Sms . பின் போன் கால். நான் பார்சல் இருக்கட்டும் ஊருக்கு ( நாகர்கோவில்) போய் வந்து வாங்கி க் கொள்கிறேன் என்றேன். ஆனாலும் விடவில்லை. சார் , கம்பெனிக்கு கொரியர் கொண்டு வருவேன். அங்கு கொண்டு வந்து தருகிறேன். என்கிறார் .வேண்டவே வேண்டாம் என்று மறுக்கவேண்டிய சூழ் நிலை. (பார்சலை தூக்கிக் கொண்டு ஊருக்கு வர வேண்டும். ஆர்வக்கோளாரில் பிரித்து படிக்க உட்கார வேண்டும்.இவ்வளவு வேலைகள் கிடக்கு இதை செய்யாமல் இப்ப இது தான் ரொம்ப முக்கியமா?i என்று என் மனைவி titil_க்கு ஏற்ப " வதம் செய்ய விரும்ப" வில்லை.
    (எனது ஓட்டு DTDC_க்கே...iii)

    ReplyDelete
  68. // DTDC நேர் opposite ! புக்ஸ் போய் இறங்கிய ஒரு மணிநேரத்துக்குள் சகலத்தையும் புக் செய்து கம்பியூட்டர் ரசீதைக் கையில் தந்து விடுகிறார்கள் ! //

    ரசீது மிகவும் உபயோகமாக விஷயம். இது தற்போது உடனே கிடைக்கிறது என்பது புத்தகங்கள் கிடைக்காத நண்பர்களுக்கு இந்த tracking number மிகவும் உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  69. Indrum puthagam varavillai...:-(

    Naalai sunday...:-(


    Indrum naalaiyum vidumurai ..illathil anaivarum payanam sendru vitta padiyal intha iru naalum namadhu comics uden payanam endra nilaiyil vegu vegu ematram...:-(


    Aanal St Mastram vandam sir...(enakku)

    ReplyDelete
    Replies
    1. அடடா...

      எனக்கு காலையிலேயே கூரியர் கிடைச்சிடுச்சி தலீவரே..

      எனக்கு அவசரமில்லை.. அனுப்பி வைக்கிறேன்.!
      பச்சிட்டு அப்புறமா கொடுங்க போதும்..!

      Delete
    2. Nandri Ravi Kannan ...

      Indru oru naal thanay poruthu kolgiren ...

      Delete
  70. ஆச்சர்யம்.!புத்தகங்கள் DTDC மூலம் நேற்றே கிடைக்க பெற்று படிக்கப்பட்டு விட்டன ..தர வரிசை ?நாளை...

    ReplyDelete
  71. மேமாத வெளியீடுகளின் அட்டைப்படம் அனைத்துமே அருமை.முன் பின் என இரண்டு பக்க அட்டைப்படமும் அருமை.புத்தகம் இன்று தான் கிடைத்தது விமர்சனம் நாளை.

    ReplyDelete
  72. சந்தாவின் இரண்டாம் பார்சலும் இன்று காலையே வந்துவிட்டது..

    எனக்கு ST கூரியரே போதும் சார்..:)

    ReplyDelete
  73. புத்தகங்களை நேற்று காலையிலேயே கைப்பற்றி விட்டேன். ST Courier Cuddalore. கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்களையும் பார்த்து படித்து விட்டேன், அப்பப்பா என்ன அட்டகாசம். Avengers Endgame தோற்று விட்டது கடற்கொள்ளையர்களிடம். இதை திரைப்படமாக எடுத்தால் நிச்சயம் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் படமாக இருக்கும்.

    ReplyDelete
  74. சித்திரங்களை கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் அவ்வளவு அழகு

    ReplyDelete
  75. கதையின் வேகம் பற்றி சொல்லவே வேண்டாம் தெறிக்க வைத்து விட்டார் கதாசிரியர்.

    ReplyDelete
  76. நம்ம எடிட்டர் சும்மா பிரிச்சு மேஞ்சுட்டார் மொழி பெயர்ப்பில். எதிர்பாராத திருப்பங்கள் கதை முழுவதும். படித்து மகிழுங்கள் நண்பர்களே.

    ReplyDelete
  77. நிச்சயம் திரும்பத் திரும்ப படிக்க பார்க்கத் தூண்டும் பராகுடாடாடா

    ReplyDelete
  78. மன்னிக்கவும் எழுத்துப் பிழை பராகுடா

    ReplyDelete
    Replies
    1. Muthal vimarsanam Indha madha puthagangaluku. Super Saravanan

      Delete
  79. இன்று எனக்கு புத்தக பார்சல் கிடைத்தது ஆனாலும் ஏமாற்றமே. சந்தா கட்டியும் ஜம்போ புக் வர வில்லை. என்ன பண்ணுவது sir

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சந்தா நம்பரைக் குறிப்பிட்டு ஒரேயொரு மின்னஞ்சலை சிரமம் பாராது தட்டி விடுங்களேன் சார் ?

      Delete
  80. @ ALL : நிறைய எழுதியாச்சு ; தடி தடியாய் ஒன்றுக்கு மூன்றாய் புக்குகளை உங்களிடம் ஒப்படைத்தாச்சு ! So இந்த ஞாயிறு சிக் பில் உடனான ஒரு ஜாலி நாளாக எனக்கிருக்க - இதழ்கள் பற்றிய உங்களின் பார்வைகள் ; அலசல்களோடு தான் பதிவுப் பக்கம் பயணித்தாக வேன்டும் ! பந்து உங்கள் தரப்பில் இம்முறை !

    ReplyDelete
  81. அப்போ ஆட்டத்துல நீங்க இல்லியா?

    ReplyDelete
  82. கொரியர் இன்று வந்து விட்டது. 3 புத்தகங்களின் அட்டைப் படமும் சிம்ப்ளி சூப்பர். பராகுடா ஹார்ட் கவரில் வந்திருக்கலாமே என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

    ReplyDelete
  83. தனியொருவன் புத்தகத்தில ஜம்போ சீஸன் 2. புக் 8 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீஸன் 1ல் 6. இது சீஸன் 2ல் முதல் புத்தகம் என்றால் புக் 7 என்று அல்லவா இருக்க வேண்டும். விளக்கம் please.

    ReplyDelete
    Replies
    1. ஜம்போ 7 கால வேட்டையர் தள்ளிப் போய்விட்டது

      Delete
  84. வெளிச்சத்துக்கு வந்த நிழல்..

    சிறு " விறு விறு "...9/10


    மினி டெக்ஸ் பெரும்பாலும் சோடை போவதில்லை என்பதற்கு மற்றுமோர் உதாரணம்..

    (பொருத்தமான கவித்துவமான தலைப்புக்கு தனியாக ஒரு ஷொட்டு)



    ReplyDelete
  85. எது எப்படி இருந்தாலும் ஒரு பத்து வரியை எழுதி ஒரு படத்தையும் போட்டுவிட்டு எடிட்டர் சென்றார் என்றால் நான் பஸ்ட் நான் செகண்ட் என்றொரு சந்தோச தருணங்கள் அமைந்திருக்கும். இப்போது மட்டன் இல்லாத ஞாயிறாக காட்சி தருகிறது தளம்.இருந்தாலும் தர வரிசையில் மே இதழ்களில் முதலிடம்....நமது டுராங்கோ .கச்சிதமானதோர் கதை அம்சத்தோடு ஆஜராகி இருக்கிறார்.நல்ல சித்திரங்கள் .தேவையான அளவு ஆக்சன் .மீண்டும் மீண்டும் படிக்க கூடிய கதை ..டுராங்கோ சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி விட்டார் .

    ReplyDelete
    Replies
    1. //இப்போது மட்டன் இல்லாத ஞாயிறாக காட்சி தருகிறது தளம்// True true

      Delete
  86. மே இதழ்களில் இரண்டாம் இடம் நமது தலைக்கே ..மிக சிறப்பான கதை கடுகு சிறுத்து விட்டது காரம் சூப்பர் .இது கொஞ்சம் நார்மலான பெரிய கதையாக வந்து இருந்தால் நிச்சயம் முதல் இடத்தை பிடித்திருக்கும். டெக்ஸ் டெக்ஸ்தான் ..

    ReplyDelete
  87. மூன்றாம் இடம் பராகுடா ...வேறு சில மொக்கை கதைகளோடு வந்திருந்தால் நிச்சயம் முதல் இடத்தை பிடித்திருக்கும்.டுராங்கோ முந்தி கொண்டார்.. சிறந்த சித்திரங்கள்..கதையமைப்பு .திருப்பங்கள் .விரும்பி படிக்கலாம் .

    ReplyDelete
  88. Hi edit
    Durango 3 is an instant classic
    Regards
    Arvind

    ReplyDelete
  89. மே மாத இதழ்கள் கையில் கிடைத்ததும் முதலில் படிக்க ஆரம்பித்தது டியுராங்கோ தான், வருடம் ஒரு முறை வந்தாலும் கதையிலும் ஆக்சனிலும் எவ்வித குறையும் வைப்பதில்லை.

    இந்தமுறை எதிர்பார்ப்பு கொஞ்சம் தூக்கலாக இருந்ததாலும் அதை சற்றும் குறைவில்லாமல் பூர்த்தி செய்து விட்டது இந்த மூன்றாவது இதழ். டியுராங்கோ ஹாட்ரிக் அடித்துவிட்டார். அசத்தல்.

    9.9/10
    0.1 எதற்கு குறைந்தது என்றால் கண்ணு பட்டு விட போகுதய்யா...

    ReplyDelete
  90. What about thani oruvan ? Anyone please

    ReplyDelete
  91. எடிட்டரின் புதிய மினி பதிவு ரெடி !!!!

    ReplyDelete