Saturday, February 10, 2018

ரீல் vs ரியல் ..!

நண்பர்களே,

வணக்கம். வந்தனம். நமஸ்தே. நமோஷ்கா ! சின்னதொரு இடைவெளிக்கு அப்புறமாய் தலைகாட்டுகிறேன் அல்லவா- அது தான் பலமான வணக்கத்தைப் போட்டு வைக்கிறேன்! ‘மருத்துவ ஓய்வு‘ என்றவுடன் ஏகமாய் “get well soon” சேதிகள்; நலம் விசாரிப்புகள் !! அன்புக்கு நன்றிகள் all - ஆனால் கிட்டத்தட்ட 12+ ஆண்டுகளாய் வேதாளமாய் கூடவே பயணம் பண்ணும் இந்தச் சமாச்சாரங்கள் ஆயுட்காலத் துணைவர்கள் என்பதால் நான் சன்னமாய் ஓய்வெடுப்பதால் அவை குணமாகிடவோ, விடை தந்து போய்விடவோ போவதில்லை ! அவற்றோடு வாழப் பழகிக் கொள்வதே சாத்தியமன்றி - அவையின்றி அல்ல ! So சின்னதான இந்த ப்ரேக் - ஓய்வுக்கு என்பதைவிட கனன்று கொண்டிருந்த சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திடவும், தொடர்ச்சியாய் 6 வருஷங்களுக்கு இங்கே நான் போட்டு வந்த மொக்கையிலிருந்து உங்களுக்கும், எனக்கும் ஒரு mini விடுதலையாகவும் இருந்திடும் பொருட்டே பிரதானமாய் ! வருஷமாய் உங்கள் மூஞ்சுக்குள்ளேயே நின்று வருவதால் ஏற்படக் கூடிய இயல்பான சலிப்பை சற்றே மட்டுப்படுத்தவும் ; எனது மண்டைக்குள்ளே சில சிந்தனைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவுமே இந்த அவகாசம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்  ! 

சரி.... ஒதுங்கியிருந்த நாட்கள் கற்றுத் தந்த பாடங்கள் என்னவோ ? என்று கேட்டீர்களெனில் - ‘புதிதாய் ஏதுமில்லை!‘ என்பதே எனது பதிலாக இருந்திடும் ! ஆறு வருஷங்களாய் இங்கே உலாற்றி வருவதில் படித்திராத பாடங்களை ஓரிரு வாரங்கள் கற்றுத் தருவதெல்லாம் ஆகிற காரியமா? போஜ்பூரியிலிருந்து, ஒரிய மொழி வரை ஒவ்வொரு மாநிலத்து மரங்களையும்,, கண்மை & லிப்ஸ்டிக் போட்ட நாயகர்கள் சுற்றிச் சுற்றி வந்து எக்ஸர்சைஸ் செய்யும் அழகை சேனல் சேனலாக  குதித்து விளையாடி, ரசித்து   பரபரப்பின்றி ஒரு சனியிரவைக்  கழித்தேன் என்று சொல்லலாம் ! அப்புறம் நிதானமாய் ரெண்டு பரோட்டாவை உள்ளே தள்ளிய கையோடு ஞாயிறு காலையில்  சித்தே கண்ணை மூடினால் - டிரம்ப், புடின் கூடவெல்லாம் one to one அளவளாவ முடிகிறது -அதுவும் விண்வெளியில் வைத்து - என்ற விஞ்ஞானபூர்வ உண்மையை உணர முடிந்தது ! இவற்றைத் தாண்டி, கொஞ்ச நேரம் ஹெர்லாக் ஷோல்ம்ஸ் ; கொஞ்ச நேரம் ஜில் ஜோர்டன் ; கொஞ்ச நேரம் Tex & புதியதொரு நாயகரின் கதைக்கு என கதம்பமாய் பேனா பிடிக்கவும் வாய்ப்புக்  கிட்டியது !  அது மட்டுமன்றி நமக்கும், சர்ச்சைகளுக்கும் எனிப்படியொரு 'தீராக் காதல்' ? என்று யோசிக்கவும் முயன்றேன் தான் ! Again - அதன் விடை காலமாய் நாமெல்லாம் அறிந்ததே என்பதையும் மண்டை சொல்லிய போது மறுக்க இயலவில்லை !  So – புதுசாய் புரட்சிகரமாய் சிந்தனைக் கடல்களுக்குள் ‘தொபுக்கடீர்‘ என்று குதித்தேன் என்றெல்லாம் அள்ளி வி்ட மாட்டேன்! ஆனால் தட தடவென ஓடிக்கொண்டே சீனரியை பார்க்கும் போது ஒரு ஒட்டுமொத்தப் பச்சை தெரிவதும் ; நின்று, நிதானித்து அதே சூழல் மீது பார்வையை லயிக்கச் செய்யும் போது கொஞ்சம் பச்சை ; கொஞ்சம் பிரவுண் என்று பிரித்துத் தெரிவதும் இயல்பே என்பதை இந்த சில நாட்களில் புரிந்து கொள்ள முடிந்திருப்பது ஒரு மேஜர் plus என்பேன் ! இங்கு பதிவினில் மட்டுமென்றின்றி, நமது ஒட்டுமொத்த publishing பணிகளில் ; விற்பனை முறைகளில் எங்கெங்கே மாற்றங்களை அரவணைக்கலாம் ? என்ற அலசல்களை செய்திட இந்த அவகாசம் பிரயோஜனப்பட்டுள்ளது ! சொல்லப் போனால், ஆண்டுக்கு one தபா ஒரு (இயல்பான) 10 நாள் ப்ரேக் நிச்சயம் தவறாகாது  என்றே தோன்றுகிறது இந்த நொடியில் !!  அந்தந்த 365 நாட்பயணங்களை ஓரமாய் நின்று reflect செய்வதில் நிறையவே ஆதாயங்கள் இருக்கக்கூடும் தொடர்ந்திடும் பயணத்துக்கும் ! 

ஒரேயொரு விஷயத்தை மட்டும் முன்செல்லும் காலங்களில் கையிலெடுப்பதெனத்  தீர்மானித்துள்ளேன் ! பின்னூட்டங்களில் கூட அது பற்றி ஏதோ படித்தது போல் ஞாபகம் உள்ளது ! அந்த ஒற்றை விஷயமானது – no more back seat driving என்பதே ! இது ஊர் கூடி இழுக்கும் தேர் என்பதை ஒரு நூறு தடவைகள் உரக்கப் பதிவு செய்துள்ளேன் தான் & நிஜமும் அதுவே ! So வடம் பிடித்து இழுக்கும் உரிமைகளை, உற்சாகங்களை உங்களதாக்கிடுவது எனது அவா ! ஆனால் வடங்களோடு, ஆளுக்கொரு ஸ்டியரிங் வீலையும் தந்திடுவது என்றுமே எனது அபிலாஷையாக இருந்ததில்லை ! ஒன்றிணைந்து இழுக்கும் உற்சாகங்களில், ஆளுக்கொரு பிரேக்கையும், ஆக்சிலரேட்டரையும் அமுக்குவதும்,'பூவாய்ங்' என்று ஹார்னை ஒலிப்பதையும் செய்திடத் துவங்கும் போது தான் தேர் தடுமாறத் தொடங்குகிறது !  Sorry folks - தேர் சுற்றி வர வேண்டிய ரத வீதிகளையும், மாட வீதிகளையும் இறுதி செய்யும் பொறுப்பினை இந்தப் பூசாரியிடமே் விட்டு விடுங்களேன் – ப்ளீஸ் ! என்னதான் நமது காமிக்ஸ் ரசனைவட்டமானது சிறிதாகவும் ரசனைகளின் அடிப்படையில் அமைந்திருப்பினும் - end of the day இதுவுமே ஒரு தொழிலாக நடத்தப்பட வேண்டிய சங்கதி தானெனும் போது - ஒரு எடிட்டர் ; நண்பன் என்ற அவதார்களோடு, சன்னமாகவேணும் ‘தொழில் முனைவோன்‘ என்ற அவதாரும் அவசியம் அல்லவா ?! ரசனை சார்ந்த விஷயங்களில் இஷ்டப்பட்ட உரிமைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.... கதைகளை ரசியுங்கள் ; விமர்சியுங்கள் ;எங்கள் பணிகளின் நிறை-குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள் ; "இவை வேண்டும் ; இவை வேண்டாமே !" என்ற எண்ணங்களைப் பகிர்ந்திடுங்கள் ! ஆனால் தொழில் சார்ந்த முடிவுகள் என்னதாக மட்டுமே இருந்திட / தொடர்ந்திட சந்தோஷத்தோடு அனுமதியுங்கள் ப்ளீஸ் ! அதற்காக ஒற்றை நாளில் நான் சர்வாதிகார ஆட்சியை அமலுக்கு கொணரப் போவதான எண்ணத்துக்கு அவசியமில்லை ; freedom + business discipline என்ற பாலிசிக்கே 'ஜே' போடுகிறேன் ! 

And இங்கே நமது மௌன வாசகர்கள் அணிக்குமே இந்தத் தருணத்தில் ஒரு வேண்டுகோள். இது எல்லோருக்குமான தளமே என்றாலும் – ‘நாங்க படிச்சிட்டு மட்டும் போயிடுவோம்‘ என்ற உங்களது பாணிகள் சில தருணங்களில் இருமுனைகளும் கூரான கத்திக்குச் சமானமாகிடக் கூடும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் ! ரசனைகளில் நான் உங்களோடும் ஒத்துப் போகிறேனா ? கதைத் தேர்வுகளில் நாமெல்லாம் ஒரே பக்கத்தில் தான் இருக்கிறோமா ? என்ற கேள்விகளுக்குப் பதில் உங்கள் ஜோப்பிகளில் தான் உள்ளன எனும் போது – அதனை இறுகப் பூட்டி வைப்பானேன் ? அட, அவ்வளவு ஏன் - சமீபத்தைய புரிதலின் குறைபாடுகள் போல் மறுக்கா இன்னொரு தபா நிகழாதென்று என்ன உத்திரவாதம் உள்ளது ?  So குறைந்தபட்சமாக இங்கே ஒரு ஏகோபித்த புரிதல் நிலவுகிறதா ? என்று ஊர்ஜிதம் செய்துகொள்ளவாவது உங்கள் மௌனங்கள் கலைவது அவசியம் என்பேன் folks !! தமிழில் டைப் செய்வதில் சிரமமா ? ஆங்கிலத்திலேயே கூட பின்னூட்டமிட்டுப் போகலாமே ? நானிங்கு கோருவது சத்தியமாய் என் தலைக்கான கிரீடங்களையல்ல folks; எங்கள் உழைப்புக்கான மதிப்பெண்களையே ! அவை 100 ஆக இருந்தாலும் சரி; 40 ஆகவோ; 30 ஆகவோ இருந்தாலும் சரி ! And "ஜால்ரா & மத்தள வித்வான்களின்  crossfire-க்கு மத்தியில் சிக்குவானேன் ?" என்ற கிலேசங்களும் (இனி) வேண்டியதில்லை என்பேன் ! இவை அபிப்பிராய மோதல்கள்கள் தானேயன்றி எதுமே  ஆளைத் தூக்கிப் போகக் கூடிய பகைகள் / பூதாகரங்கள் நஹி ! So தயக்கங்களின்றி களமிறங்குங்களேன் -மௌன அணியினரே ? பிடிக்காததொரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுவதாக இருப்பினுமே , ஆரோக்யமானதொரு எழுத்து பாணியையோ, நயமான நையாண்டியையோ கையாளுங்களேன் என்பது மாத்திரமே எனது வேண்டுகோளாக இருந்திடும் ! And எல்லாத் தருணங்களிலும் உங்கள் குரல்கள் கேட்கப்படும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள் guys ; ஆனால் அவற்றின் plus-minus-களை பரிசீலிக்கும் உரிமை எனதாகயிருக்கும் என்பதையும் மறந்திட வேண்டாமே ?! ‘நான் சொன்னேன் – நீ கேட்கலை!‘ என்ற ரீதியிலான மனத்தாங்கல்கள் நாளாசரியாய் பகைகளின் அஸ்திவாரங்களாக மாறிப் போவதில் இரகசியங்களேது ? இதைத் தவிர்க்க வேண்டுமெனில் – எனது தீர்மானங்களின் பின்னணிகளில் நிச்சயம் ஏதேனுமொரு உருப்படியான காரணம் இருக்குமென்று நம்பிக்கை கொள்வது அத்தியாவசியம் guys !! இதோ - எப்போது கிடைக்குமென்ற உத்திரவாதம் கூட (இதுவரை) இருந்திரா "இரத்தப் படல" முயற்சிக்கென சில லட்சங்களை ஒப்படைத்திருக்கிறீர்களே - – அதனைச் சுருட்டிக் கொண்டு நான் கம்பி நீட்டி விட மாட்டேன் என்ற தைரியத்தில் ; அதன் நீட்சியாய் உங்கள் ரசனைகள் சார்ந்த விஷயங்களிலும் நிச்சயமாய் தவறிழைக்க மாட்டேன் என்று நம்பிட முயற்சிக்கலாமே ?

And எல்லாவற்றிற்கும் மேலாய் ஒரு சமாச்சாரம் ! என்ன தான் காமிக்ஸ் காதல்; நேசம்; வெறி; ஆர்வம் ; சேகரிப்பு  இத்யாதி... இத்யாதி... என்றாலும் – end of the day இது சகலமும் ஒரு ரீல் உலகம் தானே ? அதை நாம் அவ்வப்போது மறந்து விடுகிறோமோ ? என்று தோன்றுகிறது ! "ரியல் எது ?" என்பதை சுகவீனத்தில் வாடும் கரூர் நண்பரைப் பற்றிய சிந்தனைகள் பிடரியில் சாத்தியது போலச் சொல்கின்றன! நோய் தாக்கும் முந்தைய நாள் வரை அவருமே நம்மைப் போலொரு ஆர்வலரே ; நமது ரீல் சந்தோஷங்களிலும் - சங்கடங்களிலும் கலந்து கொண்டவரே ! ஆனால் ஒற்றை நிகழ்வுக்குப் பின்தான் அவரது  உலகில் எத்தனை-எத்தனை மாற்றங்கள் ? Of course – ஆண்டவன் அருளோடும், நமது ஒட்டுமொத்தப் பிரார்த்தனைகளோடும் நண்பர் சீக்கிரமே எழுந்து நடமாடப் போகிறார் தான் ; மறுபடியும் நம்மோடு புத்தக விழாக்களில் கலகலக்கப் போகிறார் தான் !! ஆனால் ரீலின் தாக்கமென்ன ? ரியலின் தாக்கமென்ன ? என்பதை நமக்கிந்த இடைப்பட்ட நாட்களும், நண்பருக்கு கரம் கொடுக்க  நாமெல்லாம் அணி திரண்டிடும் உத்வேகமும்  சொல்லித்தராது போய் விடக் கூடாது என்பதே  எனது அவா ! கண்ணில் பார்த்தேயிரா ஒரு சக வாசகருக்காக எங்கோ தொலைவில்  இருக்கும்   இதயங்கள் சலனம் கொள்வது வாழ்க்கையின் அழகுகளில் பிரதானம் ! அடுத்த மெகா இதழ் வெளியான பின்னே, "இரத்தப் படலத்தை" மறந்திருப்போம் ; அடுத்த 'ஹிட்' நாயகர் களம் கண்டான  பின்னே, லார்கோவை மறந்திருப்போம் ! ஆனால் நேசங்கள் மேலோங்கும் இந்தத் தருணங்கள் நிலைத்து நிற்கும் ! Of course காமிக்ஸ் எனும் passion அத்தியாவசியமே ; இன்றியமையாததே ; இயல்பே ; ஆனால் ரீல் Vs ரியல் எனும் போது இடைப்படும் அந்த மெலிதான  கோட்டையும் லேசாக மனதில் இருத்திக் கொள்வோமே ? என்பதே எனது வேண்டுகோள் !

"தோ பார்டா..பத்தே நாள் தேசாந்திரம் போயிட்டு வந்ததுக்கே மனுஷன் இந்த மாதிரி 'அட்வைஸ் ஆராவுமுதன்' ஆகிப்புட்டானே ?  இதெல்லாம் கம்பெனி புது ரூல்ஸ் போல ; இவற்றை தீயாய் அமல்படுத்தியாக வேண்டும் ! இல்லாங்காட்டி மறுக்கா ‘மருத்துவ ஓய்வில்‘ மனுஷன் கிளம்பி விடுவானோ?” என்ற ரீதியிலான inferences-க்கு இங்கே அவசியம் லேது ! ‘கழுதை கெட்டால் குட்டிச் சுவரு‘ என்ற கதையாய் ஏது வேறு போக்கிடம் ? நாலு நாள் தூங்கி எழுந்தால் ஐந்தாவது நாளே அதிகாலையில் எழுந்து பாயைப் பிறாண்டத் தோன்றும் நமக்கெல்லாம் – பணிகள், பதிவுகள் என்பதெல்லாம் வாழ்க்கையோடு ஐக்கியமாகிப் போன சமாச்சாரங்கள் தானே ?! இப்போது எடுத்துக் கொண்ட ப்ரேக்கின் புண்ணியத்தில் நிறையவே செப்பனிடல்கள் ; business discipline ; தொடரும் மாதங்களுக்கான சில மாற்று யோசனைகள் ; விற்பனை முறைகளில் செய்யத் தேவைப்படும் திருத்தங்கள் சார்ந்த ரோசனைகள் என்று எனக்கு சாத்தியமானதெல்லாமே ஒரு போனஸ் ! ‘லொட லொட‘ வென்று அவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டிராது தொடரும் மாதங்களில் செயல்களில் அவற்றைக் காட்டுவது என்பதும் இந்த ”அவகாச” போதி மரம் தந்துள்ள ஞானோதயம் ! ஓடிக் கொண்டேயிருக்கும் போது தட்டுப்படுவது ஒன்று; ஆற அமர அவதானிக்கும் போது தோன்றுவது இன்னொன்று எனும் போது – ‘மருத்துவ ஓய்வுகள்‘ கூட நல்லதோ? என்று யோசிக்கச் செய்கிறது - maybe minus the விளக்குமாற்று சாத்துக்கள், the next time(s) !

Moving on – இம்மாத இதழ்களின் உங்கள் விமர்சனங்கள் இன்னமும் சூடு பிடிக்கவில்லை என்பது அப்பட்டம் ! பாதிப் பேர் புரட்டிப் பார்க்கும் ; மை முகர்ந்து பார்க்கும் படலங்களைத் தாண்டியிருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை ! இன்றைய பரபர உலகுகளில் – ‘அக்கடா‘ வென கட்டையைக் கிடத்த கிடைக்கும் தருணங்கள் ரொம்பவே குறைவு என்பது புரிகிறது! அந்தக் குறைச்சலான நேரத்தைப் பங்கு போட்டுக் கொள்ள ஒரு நூறு ஹை-டெக் பொழுதுபோக்குச் சமாச்சாரங்கள் வரிசை கட்டி நிற்கும் போது – (காமிக்ஸ்) வாசிப்புக்கென நேரம் ஒதுக்குவதன் சிரமங்கள் ஸ்பஷ்டமாய்ப் புரிகின்றன! So கதைகளில் star value ; வாசிப்புகளில் துளியும் தொய்விலா அனுபவங்கள் என்பதெல்லாம் முன்னெப்போதையும் விட இனி வரும் நாட்களில் ரொம்பவே முக்கியமாகிப் போகுமென்பதை யூகிக்க முடிகிறது ! அதன் பலனாய் இனி வரும் காலங்களில் நமது தேர்வு அளவுகோல்கள் ரொம்பவே ஸ்ட்ரிக்டாகிடப் போவது தவிர்க்க இயலா விஷயமாகிடக் கூடும்! சென்னைப் புத்தக விழாவில் 2016 & 2017-ன் ஒட்டுமொத்தத்தையும் வாங்கிச் சுமந்து சென்ற நண்பர் அவற்றுள் எத்தனை சதவிகிதத்தை வாசித்து முடித்திருப்பாரென்று அறிய வழியிருப்பின் – would make for an interesting analysis ! ”"சேகரிப்புக்கு"” என்ற உத்வேகங்களை மட்டுமே நம்பி வண்டியோட்டக் கூடிய நாட்கள் மலையேறி விட்டதாகவே எனக்குப்படுகிறது! ‘ஹா... எனது favourite ஹீரோ / ஹீரோயின் ! இந்த சாகஸத்தை / கார்டூனை நான் ரசித்தே தீர வேண்டும்!‘ என்ற ஆர்வத்தை; வேகத்தை யாரெல்லாம் உருவாக்கும் சக்தியோடு இனி தொடர்கின்றனரோ  – அவர்களை மட்டுமே சுற்றி காத்திருக்கும் காலங்களில் குழுமிட வேண்டிடலாம் ! 

And இங்கே இன்னொரு சேதியுமே ! நடப்பாண்டின் சந்தா எண்ணிக்கை சுமார் 15% குறைவென்பது ஜீரணிக்கப்பட வேண்டிய யதார்த்தமே ! GST-ன் தாக்கம் ; பொதுவாய் தொழிலில் நிலவும் அயர்ச்சி ; அதே சமயம் ஏகமாய் களமிறங்கும் நமது இதழ்கள் - என இதன் பின்னணியில் பல்வேறு காரணிகள் இருப்பதை யூகிக்க முடிகிறது ! காரணங்கள் எவையாக இருப்பினும், இந்த எண்ணிக்கைக் குறைவுகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு – பட்டி, தொட்டியெங்கும் ‘ஊருக்கு ஒரு கடையாவது‘ என்ற ரீதியில் புது விற்பனையாளர்களைத் தேடி நம்மாட்கள் களத்தில் ஓடி வருகின்றனர் ! தேனி; பெரியகுளம் ; தஞ்சை ; கோபி; மாமல்லபுரம் ; ஆம்பூர் ; வேலூர்; தென்காசி; தர்மபுரி ; காரைக்குடி என்று சின்னச்சின்ன புது வரவுகள் நமது விற்பனையாளக் குடும்பத்தினுள் ! ஓ...யெஸ்..ஆயிரம் ரூபாய் பில்லுக்கும் பஸ்ஸைப் பிடித்து ரூ.150 செலவழித்து ஓடியலைய வேண்டிவரும் தான் என்பது புரிகிறது ; ஆனால் தவிர்க்க இயலா முயற்சிகளாகவே இவற்றைப் பார்க்க வேண்டிய நிலையிது ! 

And இன்னமுமொரு decision / request-ம் கூட ! நடப்பாண்டின் காமிக்ஸ் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ.7000 என்பதில் எனக்கு நிறையவே நெருடல் ! ”இரத்தப் படலம்” எனும் பகாசுர இதழ் சந்தாத் தொகையின் பாதியை கபளீகரம் செய்திருப்பதில் இரகசியமில்லை ! ஆனால் அது உங்கள் ஆர்வங்களின் உச்சம் என்பதால், ஒரு மாதிரியாகக் கைதூக்கி விட்டு, வண்டி குடைசாயாது காப்பாற்றி விட்டீர்கள் ! ஆனால் “தங்கக் கல்லறை”யில் ஆரம்பித்து, மின்னும் மரணம்”; ”இரத்தக் கோட்டை” & இப்போது இரத்தப் படலம்” வரைத் தடதடத்து வந்திருக்கும் இந்த ரீபிரிண்ட் எக்ஸ்பிரஸை சில காலத்துக்காவது ஷெட்டில் நிறுத்திப் பூட்டுப் போட்டு வைப்பதே சாலச் சிறந்தது என்பேன் ! இனியும் பெரிதாய் “மறுபதிப்புக் கோரிக்கை” எழுப்பத் தூண்டிடும் ரகத்தில் கதைகளும் இல்லை என்பதால் – மெகா பட்டிஜெட்களை அவசியப்படுத்தும் மறுபதிப்புகள் இனி நமது திட்டமிடல்களில் இராது – at least for the near future ! டெக்ஸின் வண்ண மறுபதிப்புகள் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிடாது – simply becos அவை மிஞ்சிப் போனால் ரூ.150 அல்லது ரூ.200/-ஐத் தாண்டா இதழ்கள் ! And விற்பனையிலும் முழங்காலைப் பதம் பார்க்காதவை எனும் போது – ‘தல‘ எப்போதும் போல உலா வருவார் !

So தொடரும் நாட்களில் – பின் திரும்பி – நமது அந்நாளைய இதழ்களுக்கோசரம் கொடி பிடிப்பதற்குப் பதிலாய் – முன்செல்லும் பயணத்துக்குப் பயனாகக் கூடிய புதுத் தொடர்கள் பற்றிய பதாகைகளை ஏந்தல் நலமென்பேன் ! இது சில மாதங்களாகவே எனக்குள் ஓடி வரும் சிந்தனையே என்றாலும் ; ஆண்டின் சந்தாக்களைக் கணக்கெடுக்கும் பிப்ரவரி முதல் வாரத்தில் இது சார்ந்ததொரு தீர்மானத்துக்கு வரலாமென்று மௌனமாகயிருந்தேன் ! அந்தப் பொழுதும் புலர்ந்து விட்டது எனும் போது – மௌனத்தைக் கலைக்கும் தருணமும் புலர்ந்துள்ளது ! No more costly reprints! At least for a while!

அப்புறம் “ஞானோதயங்கள் பட்டியலில்” இறுதியாக ! இந்தத் தளத்தின் பலத்தையும் சரி, பலவீனத்தையும் சரி, 6 ஆண்டுகளில் – உள்ளங்கை நெல்லிக்கனியாய்ப் பார்த்தாகி விட்டோம் ! இங்கே மகிழ்ச்சியும், உற்சாகமும், சந்தோஷமும் ததும்பும் தருணங்களில் அவரவரது சிக்கல்களை, நிஜவாழ்க்கையின் சிரமங்களை தற்காலிகமாகவாவது மறப்பது சாத்திமாகிறது என்பதில் no secrets ! அதே சமயம் சர்ச்சைகளும், காரசாரங்களும் பரிமாறிக் கொள்ளப்படும் நாட்களில், ஒரு ஒட்டுமொத்த நெகடிவ் போர்வை நம்மை சூழ்வது போலான உணர்வும் மேலோங்குவ்து நிஜமே ! So கசப்புகளுக்கு இனியும் இடம் தராது – let's keep things bright & cheerful ! விமர்சிப்பதாகவே இருந்தாலும், கோங்குரா காரம் இல்லாத வரிகளை நிச்சயமாய் யாரும் ஜீரணிக்கத் தயங்கப் போவதில்லை ! 

புன்னகைகளை மலரச் செய்யும் ஆற்றல் ஒரு வரம் guys ; அதன் மகிமையை உணர்ந்து தான் பார்ப்போமே – ஒட்டு மொத்தமாய் ?

And இதோ - மார்ச் மாதத்தின் preview படலம் கூட ஆரம்பிக்கிறது - 'தல'யின் சிங்கிள் ஆல்பத்தோடு !! "பாலைவனத்தில் புலனாய்வு" நம்மவரின் இன்னுமொரு அதிரடி - இம்முறையும் ஒரிஜினல் ராப்பரோடே !! நேர்வசமாயின்றி - படுக்கை வசமாய் வெளிவரும் சமீப கவர் இதுவே என்று நினைக்கிறேன் ! இதற்கு முன்பான எந்த இதழுக்கு இந்த பாணி ராப்பர் என்று நினைவூட்டுங்களேன் guys ? டெக்சின் கவர்களில் இதற்கு முன்பாய் இந்த யுக்தியினைக் கடைப்பிடித்துள்ளோமா ? இல்லையென்றே நினைக்கிறேன் ? பின்னட்டை - நமது ஓவியரின் கைவண்ணம் ! 

மார்ச்சுக்குள் நாங்கள் marchpast நடத்தும் நேரத்துக்கு நீங்களிங்கே பிப்ரவரி விமர்சனங்களை இன்னும் டாப் கியருக்கு கொண்டு போனாலென்ன? பிப்ரவரியின் "குட்டிப்பையன்" - பெருசுகளை விட அதிகமாய் ஸ்கோர் செய்திருப்பதொரு சந்தோஷ ஆச்சர்யம் ! "விரட்டும் விதி" மினி இதழ் பற்றியே நான் பேசுகிறேன் என்பதை நிச்சயம் யூகித்திருப்பீர்கள் ! இந்தக் கதைகள் COLOR TEX என்ற வரிசைக்கென போனெல்லி உருவாக்கிய முழுவண்ண ஆக்கங்கள் ! அதாவது மற்ற TEX கதைகளை போல black & white-ல் உருவாக்கி விட்டு, அப்புறமாய் வர்ணம் பூசும் சமாச்சாரங்களல்ல - படைக்கப்படுவதே முழு வண்ணத்திற்கென ! So அந்த கலரிங் பாணிகளில் தெரியும் உயிரோட்டம் ஒரு மிடறு தூக்கலாய் இருப்பதில் வியப்பில்லை ! காத்திருக்கும் 5 மினி இதழ்களும் இந்த COLOR TEX ஆக்கங்களே எனும் போது -  ஊசிப் பட்டாசுகள் இன்னமுமே பட படக்கக் காத்துள்ளன என்பேன் ! And- இத்தாலியில் நம்மவரின் புது ஆல்பத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது ! அதற்கான புதியதொரு ஓவிய பாணியைப் பாருங்களேன் !! பின்னாட்களில் வர்ணம் தீட்டிட இது செம அட்டகாச களமாக அமைந்திடும் !

Bye all! See you around ! 

301 comments:

  1. 2nd ..😊

    வணக்கம் எடிட்டர் சார் .. வருக வருக

    ReplyDelete
    Replies
    1. ! இதற்கு முன்பான எந்த இதழுக்கு இந்த பாணி ராப்பர் என்று நினைவூட்டுங்களேன் guys ? டெக்சின் கவர்களில் இதற்கு முன்பாய் இந்த யுக்தியினைக் கடைப்பிடித்துள்ளோமா ? இல்லையென்றே நினைக்கிறேன் ?

      நியூ லுக் ஸ்பெஷல் புக் படுக்கை வசம் வந்து உள்ளது எடிட்டர் சார் ...

      Delete
    2. ஆஹா question கரெக்ட் .... Answer தப்பு ... 😎

      Delete
    3. "எமனின் எல்லையில் "

      Delete
  2. ////ரசனை சார்ந்த விஷயங்களில் இஷ்டப்பட்ட உரிமைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.... கதைகளை ரசியுங்கள் ; விமர்சியுங்கள் ;எங்கள் பணிகளின் நிறை-குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள் ; "இவை வேண்டும் ; இவை வேண்டாமே !" என்ற எண்ணங்களைப் பகிர்ந்திடுங்கள் ! ஆனால் தொழில் சார்ந்த முடிவுகள் என்னதாக மட்டுமே இருந்திட / தொடர்ந்திட சந்தோஷத்தோடு அனுமதியுங்கள் ப்ளீஸ் ! ////


    சூப்பர் சார்!

    நண்பர்கள் 'தங்களுடைய எல்லைகளை' உணர்ந்து, அதை மீறாமல் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்! இனியாவது சில்லுமூக்குகளை சிதறடிக்கும் சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்வது நலம்!

    இனியெல்லாம் சுகமே!

    ReplyDelete
    Replies
    1. காலம் கடந்ந ஞானமா

      Delete
  3. ////So கசப்புகளுக்கு இனியும் இடம் தராது – let's keep things bright & cheerful ! விமர்சிப்பதாகவே இருந்தாலும், கோங்குரா காரம் இல்லாத வரிகளை நிச்சயமாய் யாரும் ஜீரணிக்கத் தயங்கப் போவதில்லை ! ///

    +1112223333

    ReplyDelete
  4. ////No more costly reprints! At least for a while!////

    ஆகட்டும் சார்! உடன்படுகிறோம்!!

    ReplyDelete
    Replies
    1. இத இப்பயாவது தெரிஞ்சுகிட்டா நல்லது.

      Delete
    2. எதை எதிர் பார்த்து சர்ச்சையை எழுப்பினார்களோ அது இனிதே நடந்தேறி விட்டது...வருத்தமே

      Delete
    3. ஆமாம் சார் ஈரோடு புத்தக விழா வரைக்கும் கேட்க மாட்டோம்..

      Delete
  5. Wow😍😍 அட்வான்சாவே பதிவா ஹேப்பி அண்ணாச்சி-__/\__/\

    ReplyDelete
  6. ///ஆண்டுக்கு one தபா ஒரு (இயல்பான) 10 நாள் ப்ரேக் நிச்சயம் தவறாகாது என்றே தோன்றுகிறது இந்த நொடியில் !! ///

    உண்மைதான் சார்!

    இது எங்களுக்கும்கூடப் பொருந்தும்தான்!

    ஒரு பத்துநாள் இங்கேர்ந்து போயிடணும்தான் தோனறது... ஆனா நான் எங்கே போவேன்? நேக்கு யார் இருக்கா? :)

    ReplyDelete
    Replies
    1. 'பாலைவனத்தில் புலனாய்வு' அட்டைப்படம் படு அட்டகாசம் என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு பத்துநாள் மருத்துவ விடுப்பில் செல்கிறேன்!

      Delete
    2. அதானே ஆரு இருக்கா...

      Delete
  7. ஆஹா. பொருளையெல்லாம் ஆட்டோல ஏத்துங்கப்பா. ஹீரோ வந்தாச்சி. போர் ஸ்ட்டார்ட்ட்ட்ட்...

    ReplyDelete
  8. நேராவே அட்டையைப் பார்த்துட்டுப் பத்து ரூபா அட்டை எபக்ட் டப்புன்னு மனசில் அமர்ந்துக்குது. அந்தாண்ட டெக்ஸ்ஸை கவனிக்கிறமாதிரியே கிராபிக் நாவலையும் கவனிச்சிக்கோங்க. அதான் ஸ்பெஷல் அடையாளம்.

    ReplyDelete
    Replies
    1. சைமன் ஜி ஆயா கத வரல...உண்ணும் விரத போராட்டத்த ஆரம்பியுங்கள்

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. //"தோ பார்டா..பத்தே நாள் தேசாந்திரம் போயிட்டு வந்ததுக்கே மனுஷன் இந்த மாதிரி 'அட்வைஸ் ஆராவுமுதன்' ஆகிப்புட்டானே ?//

    இப்படி எல்லாம் நீங்களே கேள்வி கேட்டு, பதில் சொல்லி கலாச்சிகிட்டா நாங்க என்ன பன்றதாம் ! :)

    // இந்த ரீபிரிண்ட் எக்ஸ்பிரஸை சில காலத்துக்காவது ஷெட்டில் நிறுத்திப் பூட்டுப் போட்டு வைப்பதே சாலச் சிறந்தது என்பேன் ! இனியும் பெரிதாய் “மறுபதிப்புக் கோரிக்கை” எழுப்பத் தூண்டிடும் ரகத்தில் கதைகளும் இல்லை என்பதால் – மெகா பட்டிஜெட்களை அவசியப்படுத்தும் மறுபதிப்புகள் இனி நமது திட்டமிடல்களில் இராது //

    வரவேற்கிறேன்.... சில காலம் தடம் மறந்து சென்ற நமது வண்டி இப்போதாவது சரியான பாதையில் திரும்புவது உண்மையிலேயே சந்தோஷமளிக்கிறது. இனி, மேலும் பல புதிய நாயகர்களுக்கும்/கதைகளுக்கும் வழி பிறக்கும் என நம்பிக்கை தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. P.Karthikeyan : //இப்படி எல்லாம் நீங்களே கேள்வி கேட்டு, பதில் சொல்லி கலாச்சிகிட்டா நாங்க என்ன பன்றதாம் ! :) //

      அட..கவலையே வாணாம் ; நமக்கும் முட்டுச் சந்துகளுக்கும் தான் ஏக நட்பாச்சே ?! சீக்கிரமே இன்னொரு வாய்ப்புத் தராதா போய் விடாய் போகிறேன் ?

      Delete
  11. //No more costly reprints! At least for a while!// ரீ-பிரிண்ட் களுக்கு செலவிடும் காலம், பணம், உழைப்பு, சிந்தனை எல்லாவற்றையும் புதிய தங்களை நோக்கி ஓடவிடலாம் என்பதை பல தடவை இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறோம் ஆசிரியரே. இ.படலம் ரீபிரிண்ட் பற்றிய கருத்தாடல் ஆரம்பித்தபோது அதை மேலும் வலியுறுத்தியிருந்தோம். இப்போதைய உங்கள் முடிவு: மகிழ்ச்சி; பெரு மகிழ்ச்சி!

    ReplyDelete
  12. //படுக்கை வசமாய் வெளிவரும் சமீப கவர் இதுவே என்று நினைக்கிறேன் ! இதற்கு முன்பான எந்த இதழுக்கு இந்த பாணி ராப்பர் என்று நினைவூட்டுங்களேன் guys ? //

    அண்மைய வெளியீடு என்றால், லார்கோவின் துரத்தும் தலைவிதி, லக்கியின் எதிர் வீட்டில் எதிரிகளை குறிப்பிடலாம்.

    ReplyDelete
  13. //டெக்சின் கவர்களில் இதற்கு முன்பாய் இந்த யுக்தியினைக் கடைப்பிடித்துள்ளோமா ? இல்லையென்றே நினைக்கிறேன் ? //
    வந்திருக்கிறது சார். 'எமனின் எல்லையில்!',

    ReplyDelete
  14. நமது காமிக்ஸ்கள் புதிய வடிவில் மாறிய சமயம், இறுதியாக பழைய வடிவில் வந்து விடை கொடுத்த காமிக்ஸ்களில் 'சாத்தானின் துஸதன் டாக்டர் செவன்' (காரிகன்) இதழும் இப்படி கிடை வடிவ அட்டை கொண்டதுதான்!

    ReplyDelete
  15. இனிய மத்தியான வணக்கம்!!!

    ReplyDelete
  16. // freedom + business discipline என்ற பாலிசிக்கே 'ஜே' போடுகிறேன் ! //


    // -மௌன அணியினரே ? பிடிக்காததொரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுவதாக இருப்பினுமே , ஆரோக்யமானதொரு எழுத்து பாணியையோ, நயமான நையாண்டியையோ கையாளுங்களேன் என்பது மாத்திரமே எனது வேண்டுகோளாக இருந்திடும் ! And எல்லாத் தருணங்களிலும் உங்கள் குரல்கள் கேட்கப்படும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள் guys ; //

    ±+++++++100000012

    ReplyDelete
  17. நல்ல பதிவு... அவ்வப்போது ஒரு பிரேக் எடுத்துக் கொள்வதும் நல்லதே..

    ReplyDelete
  18. இனிய மத்தியான வணக்கம்!!!

    ReplyDelete
  19. மனமகிழ் நல்(மீள்)வரவு சார்..!
    சந்தாப் புத்தகங்கள் ஊர்ல இருக்கு. ஓடிக் கொண்டிருக்கிறேன் அவை நோக்கி..!

    ReplyDelete
  20. {
    நடப்பாண்டின் காமிக்ஸ் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ.7000 என்பதில் எனக்கு நிறையவே நெருடல் !

    நடப்பாண்டின் சந்தா எண்ணிக்கை சுமார் 15% குறைவென்பது ஜீரணிக்கப்பட வேண்டிய யதார்த்தமே !

    }

    I believe both are interlinked

    {

    No more costly reprints! At least for a while!

    }

    It is really a good decision and it will help to manage individuals comics budget as well.

    ReplyDelete
  21. ஆசிரியர் சார்@

    /// படுக்கை வசமாய் வெளிவரும் சமீப கவர் இதுவே என்று நினைக்கிறேன் ! இதற்கு முன்பான எந்த இதழுக்கு இந்த பாணி ராப்பர் என்று நினைவூட்டுங்களேன் guys ? டெக்சின் கவர்களில் இதற்கு முன்பாய் இந்த யுக்தியினைக் கடைப்பிடித்துள்ளோமா ? இல்லையென்றே நினைக்கிறேன்////....

    படுக்கை வச அட்டையிலும் தல டெக்ஸ் கலக்கியிருக்கார் சார்....

    லயன் வெளியீடு எண்205-"எமனின் எல்லையில்"-(3பாக சாகசமான மரணத்தின் முன்னோடி"யின் 3ம் பாகம்) இந்த படுக்கை வச அட்டைப்படம் இடம்பெற்றுள்ளது சார்... கலக்கலான அட்டைப்படம்+கதை...

    இம்முறையும் டெக்ஸ் கலக்குவார்....

    ReplyDelete
    Replies
    1. // -(3பாக சாகசமான மரணத்தின் முன்னோடி"யின் 3ம் பாகம்) //
      ஆம் அருமையான கதை.

      இந்த புத்தகம் எனக்கு கிடைத்தது ஒரு தனிக்கதை. மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு எனது அம்மா மற்றும் அண்ணனுடன் காரில் வரும் போது அருப்புக்கோட்டையில் உள்ள முக்குரோடு திருப்பத்தில் உள்ள கடையில் வாங்கினேன். இது உடன் பறக்கும் பலூனில் டெக்ஸின் கதையும் வாங்கினேன். எனது அம்மா இதனை நான் வாங்கி வந்தை பார்த்து இன்னும்மா இதப்படிக்கிறியா? ஆம் என்று சொல்லி விட்டு அன்று இரவே இந்த புத்தகங்களை படித்து முடித்து விட்டேன். அப்போது நமது காமிக்ஸ் ரெகுலராக வரவில்லை என நினைக்கிறேன்.

      Delete
  22. வணக்கம் சார்.இது பதிவா ..பதிவு மாதிரியா என அளவு எடுக்க இங்கே வந்தேன்.பதிவே தான்..

    மகிழ்ச்சி சார்...


    இனி படித்து விட்டு வருகிறேன்..:-)

    ReplyDelete
  23. விரட்டும் விதி - கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை.

    என் நண்பேன்டா - நன்றாக இருந்தது .. ஒட்டகத்தின் காதல் எஸ்பிரேசன்ஸ் செம காமெடி.

    ReplyDelete
    Replies
    1. முன்னைய பதிவில் பார்த்தீர்களா தெரியவில்லை தோர்கள் லார்கோ கமான்சே ஆகிய புத்தகங்களில் அதன் வரிசை நம்பர் தாங்கி வந்தால் படிக்க வரிசை படுத்த ஏதுவாக இருக்கும்

      Delete
    2. Krishna VV :

      தோர்கல் : இனி செய்திடலாம் !

      லார்கோ : தொடரே முடியும் தருவாயில் !

      கமான்சே : தற்காலிக VRS -ல் உள்ளாரே மனுஷன் !

      Delete
    3. // ஒட்டகத்தின் காதல் எஸ்பிரேசன்ஸ் செம காமெடி.//

      நண்பர்களில் எத்தனை பேர் கவனித்தார்களோ, தெரியவில்லை ; but அந்த ஒட்டகத்தின் கண்கள் வரையப்பட்டிருப்பதில் தான் எத்தனை காதலின் வெளிப்பாடென்று பாருங்களேன் ?

      Delete
    4. // தோர்கல் : இனி செய்திடலாம் ! //

      உங்கள் கேள்வி என்ன கிருஷ்ணா?

      அப்படியா...

      இனி மூன்று நான்கு கதைகள் இணைந்து குண்டு புத்தகமாக வரப்போகிறதா?

      Delete
    5. @pfb thorgal kathaikalin varisai nambarkal attayil irunthal padikka varisai padutha vasathiyaaka irukkum yendru keten sir

      Delete
    6. சரி. நான் தவறாக புரிந்து கொண்டேன்.

      Delete
  24. தங்களின் பதிவுக்கு நன்றி ஆசிரியரே

    ReplyDelete
  25. Replies
    1. கேட்டது இன்றே கிடைத்து விட்டது ஸ்டீல் ..:-))

      Delete
    2. 😊கேட்டது கிடைத்தது கோடிக்கணக்கில் ...போட்டடது முளைத்தது...கொத்துக் கொத்தாய் பூக்குது நாமிந்த நாட்டிலே இன்னொரு ராஜாதான்...😍😍😍

      Delete
    3. கமலஹாசன் ஞாபகம் வந்திடிச்சாக்கும்.
      ஆனா கையில வாக்கிங் ஸ்டிக் டெக்ஸ் தொப்பி போட்டிருப்பாரே
      " சங்கர்லால்"

      Delete
  26. விமர்சிப்பதாகவே இருந்தாலும், கோங்குரா காரம் இல்லாத வரிகளை நிச்சயமாய் யாரும் ஜீரணிக்கத் தயங்கப் போவதில்லை

    #######

    உண்மை சார் ...பல நண்பர்கள் வேண்டுவதும் இதை தான்..

    ReplyDelete
  27. மெகா பட்டிஜெட்களை அவசியப்படுத்தும் மறுபதிப்புகள் இனி நமது திட்டமிடல்களில் இராது

    #######

    அப்பாடா....மறுபதிப்பு இதழ்கள் எனும் போது ஐம்பது முதல் இருநூறு வரை இருக்குமாறு இருப்பது தான் சிறப்பு சார்..500..1000 என இனி வருவது புது இதழ்களாக மட்டுமே இருக்கும் என்பது சிறப்பான முடிவு .

    வரவேற்கிறேன்..

    ReplyDelete
  28. பாலைவனத்தில் ஒரு புலனாய்வு., ஒரே பக்கத்தில் நாலு வியூக்களில் ஓவிய அமைப்பு அசத்துகிறது.!
    டெக்ஸ் வில்லர் கதைகளில் அதிகம் காணக்கிடைக்காத லோ ஏங்கிள், டாப் ஆங்கிள் கலக்கலாக இருக்கின்றன.!

    ReplyDelete
  29. So தயக்கங்களின்றி களமிறங்குங்களேன் -மௌன அணியினரே ? பிடிக்காததொரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுவதாக இருப்பினுமே , ஆரோக்யமானதொரு எழுத்து பாணியையோ, நயமான நையாண்டியையோ கையாளுங்களேன்

    #####


    +111

    ReplyDelete
    Replies
    1. ஏழைச் சொல் அம்பலம் ஏறுமா

      Delete
  30. // மெகா பட்டிஜெட்களை அவசியப்படுத்தும் மறுபதிப்புகள் இனி நமது திட்டமிடல்களில் இராது //
    +111

    ReplyDelete
  31. ரசனை சார்ந்த விஷயங்களில் இஷ்டப்பட்ட உரிமைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.... கதைகளை ரசியுங்கள் ; விமர்சியுங்கள் ;எங்கள் பணிகளின் நிறை-குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள் ; "இவை வேண்டும் ; இவை வேண்டாமே !" என்ற எண்ணங்களைப் பகிர்ந்திடுங்கள் ! ஆனால் தொழில் சார்ந்த முடிவுகள் என்னதாக மட்டுமே இருந்திட / தொடர்ந்திட சந்தோஷத்தோடு அனுமதியுங்கள் ப்ளீஸ்.


    #######


    அனுமதி வழங்கப்பட்டது சார்..:-)

    ReplyDelete
    Replies
    1. தலைவரே அனுமதி வழங்கிட்டார்.!இது கெஸட்டில் வந்த மாதிரி.!!!

      Delete
    2. @ மாடஸ்டி ஆர்மி

      கடந்த வருடமும் CBFக்கு உங்களால் வரமுடியாத சூழ்நிலை; இந்த வருடமும் எட்டிப்பார்த்த மாதிரி தெரியவில்லை!

      அடுத்தவருடமாவது வருவீர்களா?

      Delete
    3. M.V. sir@ அப்படியே அந்த "லட்டு" பாக்கி உள்ளது என்பதையும் நியாகப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்...😊😊😊

      Delete
  32. விஜயன் சார், மறுபதிப்புகளில் சில சிறந்த கருப்பு வெள்ளை கதைகளை மட்டும் இரண்டு அல்லது மூன்று கதைகளாக இணைத்து வருடம் ஒருமுறை மட்டும் முடிந்தால் வெளியிட வேண்டும். இதில் மும்மூர்த்திகளோ டெக்ஸோ பிரின்ஸ் லக்கி வேண்டாம். பிற நாயகர்கள் கதை மட்டும்.

    ReplyDelete
  33. ,,அருமை சார் இரத்தப்படலத்துக்கு பின்னே , அந்த சைசிலும் , அந்த அளவிலும் அற்புதம் கிடையாது....ஆகவே அந்த இடத்தில் டாப் கியரில் புதுக்கதையை அபாரமாய் ,பிரம்மாண்டத்தை தரிசிக்க காத்திருக்கிறோம்....LMS ,MMS போன்ற கதைகள் வரட்டும்....பழய கதய கேக்கல...அந்த ஸ்பைடரின் வெளியிடா குண்டு மட்டும்....😍ofcourse...,புதுக்கததான் ...கவனத்துல வைங்க சார்...

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் எமனோடு ஒரு யுத்தம் , இதே போல பக்கவாட்டு அட்டடைதான்...இந்த டெக்ஸ் அட்டை தூள் , அதவிட பின்னட்டயும் அருமை....அந்த குட்டி புக் ஓவியமும் வண்ணமும் அதகளம்தான்...

      Delete
  34. சார், நடந்த களேபரங்களுக்கு மத்தியில் ஜம்போ காமிக்ஸ் பற்றி யாரும் பேசவில்லை. நீங்களும் அதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு ஒரே ஒரு அனுமானம். ஜம்போ காமிக்ஸில் வேதாளர் வரப்போகிறார் என்று நினைக்கிறேன். நீங்கள் இந்த விஷயத்தில் ஓட்ட வாய் உலகநாதனா? இல்லை பெவிக்கால் பெரியசாமியா?

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதம் 24 & 25 திருச்சி வருகிறேன். நீங்கள் திருச்சியில் இருந்தால் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.

      Delete
    2. Trichy Vijay : "ஆமாம்" என்று சொல்ல எனக்கும் ஆசை தான் ; ஆனால் "இல்லை" என்பதே நிஜமாகிடும் போது - "ஆமாம்" என்று சொல்வதும் பொய்யானது போலாகிடும் அல்லவா ? பொய் சொல்ல நிஜமாய் பிடிக்காதென்பதால் நிஜத்தையே பொய்யின்றிச் சொல்லி வைத்து விடுவது தேவலாம் தானே ?

      இப்போ ஓட்டைவாயும் கிடையாது ; பெவிக்காலும் கிடையாது ; லேட்டஸ்ட் அவதாராக - குழப்பம் குழந்தைசாமி !!

      Delete
    3. ///: "ஆமாம்" என்று சொல்ல எனக்கும் ஆசை தான் ; ஆனால் "இல்லை" என்பதே நிஜமாகிடும் போது - "ஆமாம்" என்று சொல்வதும் பொய்யானது போலாகிடும் அல்லவா ?///


      என்னோட நிலைமை இப்போ ஏர்வாடிக்கு போகவேண்டி இருக்கும்போல தோணுது..!

      எந்த பஸ்ஸுல போகணும்!! ;-)

      Delete
    4. பஸ்சிலேயும் போலாம்....பசிலேயும் போலாம் !

      பஸ்ஸிலே போனதுக்காக ஏர்வாடி வந்திடும்னும் இல்லே..ஏர்வாடி போறதுக்காக பஸ்ஸும் வந்திடும்னும் இல்லே ! ஏர்வாடிலே தேடிப் போறது நிவாரணத்தைனாலும், அது கிடைக்காட்டி சட்டையைக் கிழிச்சாக்கா கிடைப்பது நிர்வாணமாவும் இருக்கலாம் எனும் போது, நான் என்ன சொல்ல வர்றேன்னா....அது வந்து....! அது வந்து...

      Delete
    5. அச்சச்சோ!!

      மருத்துவ விடுப்பு இன்னும் முழுசா முடியறதுக்குள்ள டூட்டில ஜாய்ன் பண்ணிட்டார் போலிருக்கே!! :D :P

      @ KOK

      அப்படியே எனக்கும் ஒரு டிக்கெட் ப்ளீஸ்?

      Delete
    6. குருநாயரே.!

      நாம பாடிவெச்சிருக்குற பாட்டு எதையாச்சும் எதேச்சையா கேட்டுட்டு இப்படி ஆகியிருக்கலாம்னு நேக்கு ஒரு சின்ன சம்சயம்!! :-)

      Delete
    7. ஒரு "மாதிரி"யும், ஒரு "மாதிரி"யும்- ஒரு " மாதிரி"தான்;
      ஆனால், ஒரே "மாதிரி" அல்ல...😋😋😋😋

      Delete
    8. விஜயன் சார், இனிமேல் இப்படி கேள்வியே கேட்க்கப் போறது இல்லை. ஆளை விடுங்க சாமி.

      Delete
    9. எனக்கு புரியவில்லையே..நேக்கு ஏதாச்சும் ஆயுடுச்சா..இல்லை வெயில் காலம் ஆரம்பமாயிடுச்சு..

      Delete
    10. ,ஆமா...உங்களுகக்கு என்னமோ ஆயிடுச்சி...பேச்சு கூட வந்துரிச்சி...நல்ல டாக்டர பாருங்க

      Delete
  35. நண்பர்களுக்கும் ஆசிரியர்க்கும்
    எனது வணக்கங்கள்.
    சற்றே மன வருத்தத்தில் இருந்த
    என்னை கடந்த வாரம் தொடர்பு கொண்ட
    பெங்களூர் பரணி ஆறுதல் கூறியதுடன்
    புத்தக விழாவில் எனது பங்களிப்புக்காக
    சந்தா ஒன்றை அளிப்பதாக கூறினார்.
    நான் சந்தா செலுத்திவிட்டதாக சொன்னதும்
    F & F சந்தா அளிப்பதாகவும் சொன்னார். தற்ப்போது
    சந்தாக்கள் கட்டும் நிலையில் நான்
    இருப்பதால் அதனை நமது நண்பர்களில் ஒருவருக்கு வழங்க விரும்புகிறேன்.
    நண்பர் ராஜ சேகரின் உடல்நிலை
    காரணமாகவும் அவரின் தற்போதய
    தேவை பொருளாதார உதவி என்பதாலும்
    அதற்கு என்னாலான உதவியும் மற்ற பல
    நல்லுள்ள நண்பர்களின் உதவியும்
    இருப்பதால் நண்பர் செந்தில் சத்யாவுக்கு
    அதனை அளிக்குமாறு அன்புடன்
    கேட்டுக்கொள்கிறேன்.ராஜசேகருக்கு
    உதவிய சகோதரர்களுக்கு என் உளம்
    ‌கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன்.

      Delete
    2. பரணி உங்கள் அன்புக்கு நன்றி.

      Delete
    3. 'சென்னையில் சிறப்பாக களப்பணியாற்றிடும் நண்பருக்கு F&F சந்தா பரிசு' என்று தான் அறிவித்தபடியே செய்துகாட்டிய PfBக்கும், அதை வாங்காமலேயே கைமாற்றிய நல்ல மனம் படைத்த KVGக்கும், பரிசு பெற இருக்கும் செந்தில் சத்யாவுக்கும் வாழ்த்துகள்!

      @ KVG
      PfB அளிக்கயிருக்கும் பரிசை நீங்கள் பெறுவதுதான் பரிசு கொடுக்க முன்வந்தவருக்கு நீங்கள் அளிக்கும் மரியாதை! அதுதான் முறை!
      செந்தில்சத்யாவுக்கு நீங்கள் பணம் செலுத்தி அந்தச் சந்தாவைப் பரிசளியுங்களேன்!

      எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். தவறென்றால் மன்னிக்கவும்!

      Delete
    4. உதவும் உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் கணேஷ் ஜி.

      Delete
    5. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்& பாராட்டுக்கள்...

      சந்தா பரிசு பெறும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...

      Delete
    6. நன்றி ஈ வி.
      சத்யாவுக்கு நான் அளிக்கும் சந்தா என்று
      சொல்வதைவிட பரணி அளித்த சந்தா
      எனும்போது அன்பு இரண்டு மடங்காகிறது.
      மேலும் அவர் அளிப்பது ரெகுலர் சந்தாவில்
      ஏதேனும் ஒரு காம்பினேஷன்.
      ஈ வி தொண்டை கட்டு சரியாகிவிட்டதா.?

      Delete
    7. ////ஈ வி தொண்டை கட்டு சரியாகிவிட்டதா.?///

      'ஓடுற நரியில ஒரு நரி காமிக்ஸ் நரிதான்.. அஜூம்... அஜூம்... அஜூம்'னு அட்சரம் பிசகாமல் பாடுற அளவுக்கு ரெடியாகிட்டேன் ஜி! :D

      அன்புக்கும், விசாரிப்புக்கு நன்றி!

      Delete
    8. ஹி..ஹி..இங்கே மருத்துவ ஓய்வுகளுக்கு ஆயுட்காலம் ரெம்போ சொற்பமே !

      Delete
    9. ஈ வி பாட்டு மட்டும் பாடாதீங்க.
      KOKவுக்கு ஏர்வாடிக்கு பஸ்ருட்டெல்லாம்
      டீடெய்லா சொல்றார் ஆசிரியர் .மறுபடி
      பாடுனீங்கன்னா ஐயகோ.
      ஆனா குருவும் சிஷ்யனும் சேர்ந்தா
      ( பாடுனா) குருதேவர் ( ஆசிரியர்)
      கோவிந்தா கோவிந்தா.
      G P மன்னிக்க உங்களை கூப்பிடல.

      Delete
  36. //"பாலைவனத்தில் புலனாய்வு" நம்மவரின் இன்னுமொரு அதிரடி - இம்முறையும் ஒரிஜினல் ராப்பரோடே !! //
    டெக்ஸ் ராப்பர் அசத்தல்.

    ReplyDelete
  37. //No more costly reprints! At least for a while!//
    ஸ் அப்பாடா இப்பவாவது இந்த முடிவிற்கு வந்தீர்களே மிக்க மகிழ்ச்சி சார்,இனி குண்டு புக் எனில் புதிய அசத்தலான கதைகளுக்கு வரவேற்பு அளிப்போம்.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : முதல்நாள் முதலாகவே மறுபதிப்புகள் பற்றிய எனது நிலைப்பாடை நான் வெளிப்படையாகச் சொல்லி வரத்தானே செய்கிறேன் சார் ? But நண்பர்களின் ஏகோபித்த வேண்டுகோள்களை நிராகரிக்க முடிந்திருக்கவில்லை !

      Delete
  38. //And- இத்தாலியில் நம்மவரின் புது ஆல்பத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது.//
    அடுத்த வருட சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு பொங்கல் ஸ்பெஷல் புக்கா இதை போட்டுடுங்க சார்,ஏன்னா நல்ல காரியத்தை தள்ளி போடக்கூடாது.

    ReplyDelete
  39. இந்த தளத்தில சில நபர்கள் நான் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த நல்ல காரியத்தைக் கூட கேலியும் கிண்டலுமாகத்தான் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    அவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் நீங்கள் எவ்வளவு தான் என்னை கிண்டல் நக்கல் அடித்தாலும்
    நல்ல காமிக்ஸ் நண்பர்களுக்கு என்னுடைய அன்புப்பரிசு தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.

    இன்று
    நண்பர் கரூர் குணா & ஜேடார்பாளையம் சரவணக்குமார் இருவருக்கும் நான் கொடுக்கும் அன்புப்பரிசு 😍

    " இரத்தப்படலம் " கலர் எடிசன்

    (முன்பதிவு எண் 󾠱󾠮󾠯 (412). நண்பர் குணா உங்கள் முகவரிக்கே புக்கிங் செய்துள்ளேன்)

    இதனை அவர்கள் அன்புடன் பெற்றுக் கொண்டால் நான் மிக்க மகிழ்ச்சியடைவேன்.

    என்றும் நான் காமிக்ஸ் காதலன் தான்.
    நல்ல காமிக்ஸ் நண்பர்களுக்கு நான் என்றும் இணை பிரியா நண்பன்தான்

    ReplyDelete
    Replies
    1. @ கரூர் குணா, மற்றும் JSK

      வாழ்த்துகள் நண்பர்களே!

      பாராட்டுகள் டெக்ஸ் சம்பத்!

      Delete
    2. வாழ்த்துக்கள் சம்பத் 👏👏👏.... நமது அறிமுகம் முன்னரே உள்ளதால் ... இந்த தலத்தில் தேவை இல்லை ...

      Delete
    3. வாழ்த்துக்கள் நண்பர்களே...JSK ji & Guna...

      நல்ல விசயம் தம்பி சம்பத்,
      உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்...

      Delete
    4. நல்ல விஷயம். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சம்பத்.

      Delete
    5. அடுத்த பதிவில் இரத்தப் படல முன்பதிவு லிஸ்டை வெளியிடுகிறேன் ; இன்றைய முன்பதிவு நம்பர் : 423 !

      Delete
    6. பாராட்டுக்கள் சம்பத் சார்.

      Delete
    7. ///இன்றைய முன்பதிவு நம்பர் : 423 !////--வாவ்..வாவ்...வாவ்...👏👏👏👏👏👏
      டார்கெட்டை கடந்து, ஒட்டமொத்த எண்ணத்தை நோக்கி ஓடத் தொடங்கிட்டது....மகிழ்ச்சி சார்...

      Delete
    8. வாழ்த்துக்கள் நண்பர்களே . பாராட்டுக்கள் நண்பர் சம்பத் .

      Delete
    9. @ டெக்ஸ் சம்பத்
      இன்ப அதிர்ச்சி கொடுப்பதில் நீங்கள் வல்லவரய்யா....!

      அன்போடு உங்கள் அன்பை ஏற்றுக்கொள்கிறோம்...!

      Delete
    10. அருமை டெக்ஸ் சம்பத் அவர்களே

      Delete
    11. அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்!

      சொல்ல வார்த்தைகள் இல்லை சம்பத்...

      அன்பு நண்பா .

      நன்றி..!
      நன்றி..!!
      நன்றி...!!!

      💐💐💐

      ☺️☺️☺️

      Delete
    12. 👌,சம்பத்....சார் ஆயிரத்த தொடும் பாருங்க...அதும் கடைகளில் விலை அதிகம் வேறு....உடனே கிடைக்கும்....முன் பதிவர்களுக்கு டயானா ,xiii ஸ்டிக்கர்கள் கிடைக்கும்னு பட்சி சொல்வது உண்மைதானா...

      Delete
    13. வாழ்த்துக்கள் சம்பத்.

      Delete
    14. நண்பர்கள் கரூர் குணா அவர்களுக்கும்,ஜேடர்பாளயத்தாருக்கும் எமது வாழ்த்துக்களும்.

      Delete
  40. அன்பு செந்தில் சத்யா நண்பர்
    பரணி அன்புடன் அளிக்கும் சந்தாவினை
    ( எந்த சந்தாவாக இருந்தாலும்)
    ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.தங்கள் வீட்டு
    விலாசத்துடன் தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete
  41. நம் தளம் என்றும் எப்போதும் அன்பால்
    மட்டுமே நிரம்பி வழிய வேண்டும்.

    ReplyDelete
  42. தயக்கமின்றி பதிவிடங்கள் மெளண வாசகர்களே ?................ உள்ளேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. @erode venki

      நல்வரவு நண்பரே!

      Delete
    2. வாங்க பழகலாம் வெங்கி.

      Delete
    3. நான் ரெடி வாங்க வாங்க பழகழாம் பரணி அண்ணா..

      Delete
    4. thank you tex விஜயராகவன் அண்ணா

      Delete
    5. erode venki : More the merrier...! தூள் கிளப்புங்க நண்பரே !

      Delete
    6. .///.. உள்ளேன் ஐயா///

      நல்வரவு

      Delete
    7. wow...thank you எடிட்டர் சார்...

      Delete
    8. thank you செந்தில் சத்யா &thirucelvam சார்

      Delete
  43. நண்பர் ராஜசேகர் பூரண குணமடைந்து
    நம்மோடு E B F ல் கலந்து கொள்ள
    ஆண்டவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  44. ஆசிரியர் நலத்தோடு திரும்பி வந்தது, மிகுந்த மகிழ்ச்சி .

    ReplyDelete
  45. மாடஸ்டிக்கும் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மாடஸ்தியாரே...!!!🍰🍰🍰🍰🍫🍫🍫🍫🍭🍭🍭🍭🍨🍧🍦🍦🍧🍨🎂🎂🎂🎂🎈🎈🎈🎈🎉🎉🎉🎉

      Delete
    2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இராவணன் இனியவன் சார் .

      Delete
    3. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார்..:-)

      Delete
  46. ஹா...ஹாஹா..ஹா..ஹா..ஹா

    ஹி...ஹி....ஹி...ஹி...ஹி

    ஹா...ஹா...ஹி...ஹி...ஹோ...ஹோ

    ஹி...ஹி....ஹா..ஹா.. ஹோ..ஹி

    ஹோ...ஹோஹோ...ஹி...ஹா...ஹா

    சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சாலும் சிரிப்பை நிறுத்த முடியலையே.

    ஹா..ஹா...ஹி..ஹி..ஹா..

    நன்றி :ரின் டின் கேன், பச்சோலி மற்றும் பாவ்லோவ்.

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பயபுள்ள பஃபல்லோ பில்?

      Delete
    2. பஃபல்லோ பில்லைவிட எனக்கு அரிசோனா ஜானைத்தான் பிடிச்சிருக்கு.!
      கூட்டம் வர காரணம் ரின்டின்னும் பச்சோலியும்தான்னு புரிஞ்சிக்கிட்டு மானேஜர் வேலையை பஃல்லோட்ட இருந்து ரின்டின், பச்சோலிக்கு மாத்திக்கிறதாகட்டும்.. , அந்த ஷெரீப்பை கவனிக்கிற விதகமாகட்டும், பாவ்லோவை முடக்கிப்போடுற டெக்னிக் ஆகட்டும்..,, மனுசன் அரசியல்ல நுழைஞ்சா பெரிய ரவுண்டு வருவாப்ல..!!

      Delete
    3. அடுத்த சாகசத்திலாவது பேபிம்மாவை கர்னல் சந்திப்பாரா...????

      Delete
    4. // அரிசோனா ஜானைத்தான் பிடிச்சிருக்கு.!
      கூட்டம் வர காரணம் ரின்டின்னும் பச்சோலியும்தான்னு புரிஞ்சிக்கிட்டு மானேஜர் வேலையை பஃல்லோட்ட இருந்து ரின்டின், பச்சோலிக்கு மாத்திக்கிறதாகட்டும்.. , அந்த ஷெரீப்பை கவனிக்கிற விதகமாகட்டும், பாவ்லோவை முடக்கிப்போடுற டெக்னிக் ஆகட்டும்..,, மனுசன் அரசியல்ல நுழைஞ்சா பெரிய ரவுண்டு வருவாப்ல..!! //

      மிகவும் நான் ரசித்தவை இது.

      Delete
  47. JSK, கரூர் குணா, செந்தில் சத்யா..!!

    வாழ்த்துகள் நண்பர்களே..!!

    பரணி, கணேஷ், சம்பத்..!!

    பாராட்டுகள் நண்பர்களே ..!!

    தூற்றுவார் தூற்றினாலும் நிச்சயம் போற்றுவார் போற்றுவர்

    தொடரட்டும் நண்பர்களே இந்த நேசம்.!!

    ReplyDelete
  48. போன வாரமே வந்திருக்கவேண்டிய பதிவு ஒரு வாரம் லேட்டா வந்திருக்குது! அப்படீன்னா நியாயப்படி இன்னிக்கு வரவேண்டி பதிவு?

    ( ஹிஹி. எடிட்டருக்கு லைட்டா ஒரு ஜெர்க் கொடுக்கலாமேன்னு...)

    ReplyDelete
    Replies
    1. காலுக்கடியில் கம்பளம் இருந்தாத் தானே அதைப் பிடித்து இழுத்து ஜெர்க் கொடுப்பது ? இப்போல்லாம் நயமான புளியமரமாய்ப் பார்த்து மேலேறி குந்திக் கொள்வதே சாலச் சிறந்ததென்று தீர்மானம் ஆகி ஒரு மாமாங்கம் ஆச்சே !! பேச்சுத் துணைக்கும் இங்கே பஞ்சமிராது அல்லவா ?

      Delete
    2. சமீபத்துல கி.நா எதுனா படிச்சீங்களா எடிட்டர் சார்?
      இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரியும் எழுதியிருக்கீங்களேன்னு கேட்டேன்! :)

      Delete
    3. ,ஈவி புரிலயா...அடப்போங்க...ஆசிரியர் அந்த ஸ்பைடர மொழி பெயர்த்துகிட்டிருக்கார்...

      Delete
    4. //
      புளியமரமாய்ப் பார்த்து மேலேறி குந்திக் கொள்வதே சாலச் சிறந்ததென்று தீர்மானம் ஆகி ஒரு மாமாங்கம் ஆச்சே///

      புளிய மரமா?? போதி மரமா ??? விஜயன் சார் :-)

      இந்த வார பதிவு, போதி மரம்தானு சொல்லுது ;-)

      Delete
    5. //நயமான புளியமரமாய்ப் பார்த்து மேலேறி குந்திக் கொள்வதே சாலச் சிறந்ததென்று தீர்மானம் ஆகி ஒரு மாமாங்கம் ஆச்சே//

      ஹா..ஹா..ஹா...!!

      Delete
    6. /
      புளியமரமாய்ப் பார்த்து மேலேறி குந்திக் கொள்வதே சாலச் சிறந்ததென்று தீர்மானம் ஆகி ஒரு மாமாங்கம் ஆச்சே///

      ஹா..ஹா..ஹா..

      Delete

  49. K.v. கணேஷ் சார் &பெங்களுர் பரணி
    மிக்க நன்றிகள் நண்பர்கள் அன்பிற்க்கு உண்டோ அடைக்குந் தாழ்

    ReplyDelete
  50. வெண்பனியில் செங்குருதி - முக்கால் கிணறு தாண்டியிருக்கேன்.!
    அந்த ஃப்ளாஷ்பேக் கொஞ்சம் நீளம்தான் என்றாலும், அந்த கும்பலின் கொடூர குணத்தைக்காட்ட அது கண்டீப்பாக தேவைதான்.!
    அப்போதுதான் கதையைப் படிக்கும் நமக்கும்,
    ' அந்த போன்சுப் பயலையும் பொல்லார்டு பயலையும் விட்றாத தல.! கனடாவுக்கு மட்டுமில்ல ப்ளூட்டோவுக்கே போனாலும் விரட்டிட்டு போயி பொடனிலயே நாலு போட்டு இழுத்துட்டு வந்து தூக்குல போடு தல 'ன்னு ஆவேசமா சொல்லத்தோணும்.!

    ReplyDelete
  51. இந்த மாத ரின் டின் கதையை நான் சொல்ல எனது குழந்தைகள் மிகவும் ரசித்தார்கள். அவர்களின் பார்வையில் ரின் டின் விமர்சனம் விரைவில்.

    ReplyDelete
    Replies
    1. இந்த PFB ேயாட குட்டி ஆபீசர்ஸ் எனக்கு ஏதோ விமோஜனம் தரப்போறாங்களாமே. ருசி சூப்பராத்தான் இருக்கும். ஆன அத என் காத புடிச்சிட்டு தரப்போறாங்களாமே, அதுதான் ஏன்னு பிரியல மக்கா,
      வானத்த பாத்து முட்ட கண்ண முழிக்கும் படங்கள் ஒரு டேங்க் சூப் அளவுக்கு

      Delete
  52. விஜயன் சார், இந்த பதிவின் உங்கள் தீர்மானங்கள் அனைத்துக்கும் வரிக்கு வரி எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete
  53. விஜயன் சார், அப்புறம் போன வாரம் பதிவை மிகவும் ரசித்தேன். அது உண்மையில் யாரின் பதிவு. தெரிந்து கொள்ள ஆர்வமுடன் மட்டுமே.

    ReplyDelete
    Replies
    1. சீனியருக்கு வேண்டாமே இங்கு தலைகாட்டும் அனுபவம் என்று நிறையவே கோரிக்கைகள் !

      ஜுனியருக்கோ இந்த 'லொட லொடக்கும்' எனது பாணியில் உடன்பாடே கிடையாது !

      So மிஞ்சி நிற்பது "பல நூறு முட்டுச் சந்துகள் பார்த்த முட்டைக்கண் வீரன்" தான் எனும் போது - அந்த பதிவுக்கும் கர்த்தா வேறு யாராக இருக்க முடியும ?

      Delete
    2. // முட்டைக்கண் வீரன் //
      ஆஹா...! ஞாபகப்படுத்திட்டாரே..! மினி லயன்ல சிறுகதைகளா சாகஸம் பண்ணினவனாச்சே இந்த முட்டைக்கண் வீரன் ( ஒரு மூலிகை வேரை தீயில் பொசுக்கி..புகையை உறிஞ்சியதும் பலசாலியாகிவிடுவான் )
      பரண் உருட்டடும் படலம் ஆரம்பம்..!

      Delete
    3. நன்றி.
      அந்த மூட்டை கண் வீரர் கதையை முடிந்தால் கண்ணில் காட்டுங்கள் சார்.

      Delete
  54. ***! No more costly reprints! At least for a while!***

    i completely agree with you sir, its a bitter truth.
    Though i wish to make a "ratha padalam" enrollment since its announcement, till now im unable to make a payment for various reasons. but for sure i' ll make it by next month :)



    ReplyDelete
  55. நீங்கள் கேட்டுக்கொண்டதால் நான் பதிவிடுகிறேன். கடந்த இரண்டு வருடங்களாக சந்தா தவிர நம் இணையதளம் மூலம் நம்மிடையே இருக்கும் அணைத்து தமிழ் காமிக்ஸ்களையும் வாங்கி, ஒன்று விடாது படித்து முடித்து விட்டேன்.I also bought XIII all available English comics and finished reading them too. ஒவ்வொரு மாதமும் வரும் அனைத்து காமிக்ஸ் இதழ்களையும் 4 நாட்களுக்குள் ரசித்து, ருசித்து, புசித்து விடுவேன்.
    காமிக்ஸ் சேகரித்து வைத்திருப்பது மீண்டும் மீண்டும் சுவாசிப்பதற்கே.
    ராணி காமிக்ஸ் மாயாவியிடமிருந்து துவங்கிய இந்த ஈர்ப்பு, லயனின் லக்கி, இரும்புக்கை மாயாவி என மையம் கொண்டு மயக்கி வருகிறது.

    ReplyDelete
  56. விஜயன் சார்,
    அருமையான முடிவுகள் (10 நாள் ரெஸ்ட், காஸ்ட்லி ரீபிரிண்ட்,...)

    வாழ்த்துக்கள்.

    இருப்பினும் உடல்நிலையில் கவனம்.

    ReplyDelete
  57. அருமையான முடிவு சமீபத்தில் படித்த மறுபதிப்புகள் இனி வேண்டாம் என்ற முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது அதற்கு பதிலாக புதிய கதைகள் அல்லது இதுவரை மறுபதிப்பிடாத கதைகளை கலரில் வெளியிடலாம் கழுகு மலைக்கோட்டை போல்.

    ReplyDelete
    Replies
    1. மஞ்சள் சட்டை மாவீர நண்பரின் கருத்தை வழிமொழிகிறேன்..:-)

      Delete
  58. வருக...வெல்க...

    ஈரோடு வெங்கி சார்..:-)

    ReplyDelete
  59. கணேஷ் ஜீ...செந்தில் சத்யா அவர்களுக்கும் பெங்களூர் பரணி அவர்களுக்கும் வாழ்த்துகளுடன் பராட்டுதல்கள்...


    போலவே...


    கரூர் குணா அவர்களுக்கும்..ஜேடர்பாளையம் சரவணன் அவர்களுக்கும்..திருப்பூர் சம்பத் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுடன் பாராட்டுகள் ..



    நல்ல மனம் வாழ்கவே...

    ReplyDelete
  60. முன்பதிவு லிஸ்டை வெளியிடுகிறேன் ; இன்றைய முன்பதிவு நம்பர் : 423 !
    நல்வரவு சார் காலையில் ஒரு மகிழ்ச்சியான செய்தி

    ReplyDelete
  61. ஸ்டீலு மக்கா கவிதமழை பொழியுதே ..?

    ReplyDelete
    Replies
    1. பழனி நம்ம கனவிதழ் ...பட்டயதிளப்ப போகுது போல....ஆனந்தக் கவிதை

      Delete
  62. KVG அண்ணா சூப்பர் .
    சுருக்கமா பெயர் வைக்கிறதுல ஈ வி தான் பெஸ்ட் 👍

    ReplyDelete
  63. Sir, yesterday went to discovery book palace for February issues. They informed that publishers declined to send the books due to lack of manpower in packing. Disappointed. Please do needful. Saravanan, chennai

    ReplyDelete
  64. //தேர் சுற்றி வர வேண்டிய ரத வீதிகளையும், மாட வீதிகளையும் இறுதி செய்யும் பொறுப்பினை இந்தப் பூசாரியிடமே் விட்டு விடுங்களேன் – ப்ளீஸ் ! என்னதான் நமது காமிக்ஸ் ரசனைவட்டமானது சிறிதாகவும் ரசனைகளின் அடிப்படையில் அமைந்திருப்பினும் - end of the day இதுவுமே ஒரு தொழிலாக நடத்தப்பட வேண்டிய சங்கதி தானெனும் போது - ஒரு எடிட்டர் ; நண்பன் என்ற அவதார்களோடு, சன்னமாகவேணும் ‘தொழில் முனைவோன்‘ என்ற அவதாரும் அவசியம் அல்லவா ?! ரசனை சார்ந்த விஷயங்களில் இஷ்டப்பட்ட உரிமைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.... கதைகளை ரசியுங்கள் ; விமர்சியுங்கள் ;எங்கள் பணிகளின் நிறை-குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள் ; "இவை வேண்டும் ; இவை வேண்டாமே !" என்ற எண்ணங்களைப் பகிர்ந்திடுங்கள் ! ஆனால் தொழில் சார்ந்த முடிவுகள் என்னதாக மட்டுமே இருந்திட / தொடர்ந்திட சந்தோஷத்தோடு அனுமதியுங்கள் ப்ளீஸ் !//
    Very Good decision Sir..

    ReplyDelete
  65. SANDY நண்பரே சந்தா கட்டுங்க
    சந்தோஷமாக வீட்டில் நேரடியாக
    புத்தகங்களை பெற்று படித்து மகிழுங்கள்.

    ReplyDelete
  66. Welcome back editor.
    I loved marma kathi.
    Those were times when comics had nice feel to it.May be retro effect.
    Yet to read other books of the month.

    ReplyDelete
  67. ***** வெண்பனியில் செங்குருதி *****

    மெளரோ போசெல்லி : "ந்தாப்பா ஓவியம் வரையிற தம்பி... இங்கிட்டு வா! கதையெல்லாம் அதே தான்! அதாவது, ஒரு பணக்கார முதலை - ஊருக்குள்ள அராஜகம் பண்ணிக்கிட்டு அலையுது - அந்த ஊர் ஷெரீப்பை போட்டுத் தள்ளிட்டு, பழியை ஒரு அப்பாவி நீக்ரோ இளைஞனின் மேல போட்டுடுது - தன் அதிகார, பண பலத்தால அந்த அப்பாவி நீக்ரோவை தூக்கில் போடவும் ஏற்பாடு பண்ணுது. நம்ம டெக்ஸும் கார்சனும் அந்த ஊருக்கு வழக்கம்போல வேறொரு பணி நிமித்தம் வர்றாங்க - இந்த அநியாயத்தைத் தடுக்கறாங்க - அந்த பணக்கார முதலைதான் அம்புட்டு குற்றத்துக்கும் காரணம்றதை சட்டத்துக்கும், ஊர்மக்களுக்கும் புரிய வச்சு நீதியை நிலை நாட்டுறாங்க - ரிவால்வர்லேர்ந்து வர்ற புகையை 'ஊப்ப்'னு ஊதிட்டு போய்க்கிட்டே இருக்காங்க! ஆமா, ஏற்கனவே 38 தடவை வந்த இதே கதையைத்தான் இப்பவும் நாம பயன்படுத்தப்போறோம் - சின்ன சின்ன மாற்றங்களோட!
    அதாவது, பாலைவனத்துக்குப் பதிலா பனிபடர்ந்த கனடா மலைப்பிரதேசம் - குதிரைகளுக்குப் பதிலா நாய்கள் - கோச் வண்டிக்குப் பதிலா ஸ்லெட்ஜ் வண்டி - நீக்ரோ இளைஞனுக்குப் பதிலா எஸ்கிமோ பழங்குடி இளைஞன் - ஷெரீப்புக்குப் பதிலா கனடா மலைப்போலீஸ் - புழுதிப் புயலுக்குப் பதிலா பனிப்புயல் - முடிஞ்ச்!
    சட்டுபுட்டு படங்களை வரைஞ்சுட்டு எனக்கு தகவல்கொடுப்பா! அப்புறம், அந்த எஸ்கிமோ இளைஞனின் பாத்திரப்படைப்பு பக்காவா இருக்கணும் - கனடா மலைப் போலீஸ்காரங்களெல்லாம் கடமை வீரர்கள்னு காட்டிடு. 200+ பக்கங்களுக்கு கதையை இழுத்துட்டுப் போறோம்றதால, இராப்பொழுதுல அந்தப் பனிக்காட்டுல தீமூட்டி குளிர்காஞ்சுக்கிட்டே எல்லோரும் பக்கம் பக்கமா வசனம் பேசி துப்பறியறாப்ல செஞ்சுடு - மொத்த ஆல்பமும் ரெடியானதுமே முதல்ல தமிழ்நாட்டுக்கு அனுப்பி வச்சிடுவோம். அங்கே அழகா மொழிபெயர்த்து, படுசுவாரஸ்யம் பண்ணி - எப்படியும் செம ஹிட் பண்ணிடுவாங்க!
    ஆங்! இன்னோரு விசயத்தைச் சொல்ல மறந்துட்டேன்...! போன கதையில டெக்ஸுக்கு தோள்பட்டையில துப்பாக்கிக் குண்டு பாயறாப்ல எழுதியிருந்தோமில்லையா? இந்த கதையில கார்ஸனுக்கு தோள்பட்டையில குண்டு பாயுறாப்ல காட்டிடு. அதை டெக்ஸ் கத்தியால தோண்டியெடுக்கும்போது கார்ஸன் துடிக்கக்கூடாது; ஆனா படிக்கிறவங்களெல்லாம் துடிச்சுப் போயிடணும்! சரிதானே? எல்லாத்தையும் சரியாச் செஞ்சுடு, நான் போய் அடுத்த கதைக்காக சில வரலாற்று ஆவணங்களைப் புரட்டவேண்டியிருக்கு! Bye for now! see you around!"

    :D :P



    ReplyDelete
    Replies
    1. விக்ரமன் படத்துல வர்ரா பாட்டு மாதிரில்ல இருக்கு

      Delete
  68. இன்று நம் நண்பர்கள் ஈ வி டெக்ஸ்விஜய்
    Drசுவாமிநாதன் மற்றும் மதியம்
    பழனிவேல் நண்பர் ராஜசேகரை
    சந்தித்து நலம் விசாரிக்க செல்கின்றனர்.
    ஒன்றுபட்ட நண்பர்களே நம் வலிமை.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நண்பர்களே.
      இன்று போல் என்றும் ஒற்றுமையாய்
      இருப்போம்.நண்பர்கள் அனைவரும்
      பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டுகிறேன்.

      Delete
  69. Hi Editor
    Since you asked for opinion of the silent lot. Here are a few thoughts about the January issues

    Thorgal would be my pick for the month. Very good indeed

    Spider this issue was a memorable one from my childhood and i enjoyed it this time too in the compact pocket size

    Tex is evergreen and there is nothing to complain about

    Bluecoats - if ever there is one comics in our lineup that i don't like it should be bluecoats. Never liked the series, except one which seemed like an intro to the duo. Otherwise it is all boring and dont even bring a smile (that's a lot to say about a comic book)

    The graphic novel was good in story and presentation, but i did not like two things..First the size- though different from regular books, the size was kind of uncomfortable to hold and read. Second the story was too dark a story and is one of the alugatchi kaviyams kind

    Overall January issues must be ranked as average and not the opening i would have liked for the year.

    February issues i am still going through.. will post when finished. Thanks for taking the time to read




    ReplyDelete
  70. மௌனப் பாா்வையாளா்

    ReplyDelete
  71. வெற்றுப் பேச்சு உலகில்
    மாறிப் போச்சு கவர்ச்சியில்
    ஆறிப் போனால் பாயாசமே கூட
    சாறிட மறுத்து ஆயாசமே கூட்டும்

    அரைத்த மாவே ஆயினும் போல்
    புளித்த கதையே தாயினும் சால்
    தாளித்த வாசனை சேயினும் மேல்
    அளித்த விஜயனை அணைப்பினும் ஆல்

    இவ்வுலகம் வேற்றாகி நாளுமாச்சு
    நாமும்தான் புலம்பியுருகி சோர்வுமாச்சு
    காமிக்ஸ் மட்டுமேயாகி நிம்மதியாச்சு
    இதற்கிடை வெட்டியாகி ஏனேச்சுபேச்சு

    நாள் கடத்த வேணும் வெற்றியாய் பொம்மை
    தாள் நடத்த வேணும் விஜயனாய்
    தோள் கொடுத்திட வேணும் மாயமாய்
    கோள் கண்டிட வேணும் வியப்புமாய்

    அன்பன்
    J


    ReplyDelete
    Replies
    1. @ j

      உங்கள் தமிழ் புலமை வியக்கவைக்கிறது!

      குறிப்பாக, அந்த கடைசி வரிகள் - அருமை அருமை!!

      Delete