Tuesday, February 06, 2018

..லாம் !

Hi all !!






161 comments:

  1. ஹைய்யா வந்தாச்சி.

    ReplyDelete
  2. பதிவு போட்டது யாரு சீனியர் / ஆசிரியர் / ஜூனியர்

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவின் ஸ்டைலை பார்க்கையில் இது நமது ஆசிரியரின் பதிவுதான் என்பது என கணிப்பு!

      Delete
    2. பதிவிற்க்கு நன்றி ஆசிரியரே

      Delete
  3. இன்னும் படிக்கல

    ReplyDelete
  4. வந்துட்டேன்னு சொல்லுங்க ..
    திரும்ப வந்துட்டேன்னு சொல்லுங்க..போன பதிவுக்கு முன்னாடி பதிவிலே எப்படி போனேனோ அப்டியே வந்துட்டேன்னு சொல்லுங்க...


    வாத்தியார்டா......:-)

    ReplyDelete
  5. மீ ஆல்ஸோ ஹேப்பி! :)

    ReplyDelete
  6. மேலேயிருக்கும் சிங்கத்தைப் பாருங்களேன்... நல்லா இளமையா, புத்துணர்ச்சியோட இல்லை?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். ..!

      சிலிர்த்தெழுவோம். .!!

      Delete
    2. இளமை,புதுமை,இனியெல்லாம் இனிமை.

      Delete
  7. // தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. //
    ஏதோ சொல்லனும்னு தோணிச்சி.

    ReplyDelete
  8. வெண்பனியில் செங்குருதி: வித்தியாசமான டெக்ஸ் கதை!

    வழக்கமாக டெக்ஸ் கதையில் ஒரு எதிரி இருப்பார், இந்த முறை இரண்டு; ஒன்று ஓநாய் கூட்டம் மற்றும் ஒன்று நரி. இந்த இரு கும்பலும் எப்படி ஒரு புள்ளியில் இணைகிறார்கள் அவர்களை எப்படி டெக்ஸ் வெற்றி பெறுகிறார். இதில் நேர்மையான அதிகாரிகள் இருவர் இந்த கும்பலால் கொல்லப்பட டெக்ஸ் இன்னும் சிலிர்த்து எழுவது, நடுவே ஒரு அப்பாவி மேல் கொலை பழி அவனை எப்படி காப்பாற்றுகிறார். இப்படி பல வேலைகளை டெக்ஸ் மற்றும் கார்சன் செய்து முடிப்பதே கதை.

    ஆமா இதில் என்ன வித்தியாசம் வழக்கமான டெக்ஸ் கதை போல இருக்கிறது என நினைக்கலாம்...

    இந்த கதை நடப்பது ஒரு பனி பிரதேசத்தில், இதுவரை காணாத ஒரு களம்; எங்கு பார்த்தாலும் பனி, அந்த பனி பிரதேசத்தில் வண்டியை இழுத்து செல்லும் நாய்கள், அவற்றின் மோப்பசக்தி, அவற்றின் விசுவாசம், எஸ்கிமோ இளைஜனின் வாழ்க்கை/சவால், கனடா சென்சட்டை காவலாளிகளின் நேர்மை, மனிதாபிமானம், டெக்ஸ் (வாய் ஜாலத்தை) அடக்கி வாசித்து இருக்கிறார், டெக்ஸ்ஸின் அதிரடியோடு இப்படி ரசிக்க பல விசயங்கள் உள்ளது.


    கடைசியில் டெக்ஸ் அந்த இரண்டு கொடும்பாவிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பதில் அவர்களுக்கு இரண்டு தோட்டாக்களை பரிசாகக் கொடுத்து இருக்கலாம், ஏன் என்றால் அவர்கள் செய்த கொடுமைகள் அதிகம்!

    படித்து முடித்த போது, இந்தக்கதை வண்ணத்தில் வந்து இருந்தால் இந்த பனிபிரதேசத்தில் வாழ்த்த அனுபவத்தை கொடுத்து இருக்கும். ஓவியங்கள் அருமை!

    ReplyDelete
    Replies
    1. //படித்து முடித்த போது, இந்தக்கதை வண்ணத்தில் வந்து இருந்தால் இந்த பனிபிரதேசத்தில் வாழ்த்த அனுபவத்தை கொடுத்து இருக்கும். ஓவியங்கள் அருமை!//
      +1

      Delete
    2. ஏற்கனவே ஒரு முறை நம்ம ஆளு பனியில் விளையாடி உள்ளார்.
      ஆனால இம்முறை நீங்கள் கூறியது போல இன்னும் விளக்கமாக அங்கிருக்கும் வாழ்வியல் பற்றி கூறியது நன்றாகவே இருந்தது

      Delete
    3. Krishna VV @ சரியாக ஞாபகம் இல்லை ஜி எந்த கதை என்று!

      Delete
    4. ஒரு குண்டு புக்

      Delete
  9. எங்கள் அனைவரின் வேண்டுகோளுக்கு இளகி பதிவிட்டமைக்கு நெகிழ்ச்சியான மகிழ்ச்சி சார்

    தகவலுக்கு நன்றி ஈ.வி

    ReplyDelete
    Replies
    1. முன்னாள் சேந்தம்பட்டி உறுப்பினர்.@!

      "மகிழ்ச்சி "

      Delete
  10. இந்த மாத இதழ்களை பிரித்ததும் அட்டகாச படுத்தி நீண்ட நேரம் கண்வாங்காமல் பார்க்க வைத்த அட்டைப்படம் "வெண்பனியில் செங்குருதி" முன்பின் இருபக்க அட்டைபடமும் கலக்கல் ரகம் .போன முறை போலவே இந்த முறையும் அந்த பழைய டெக்ஸ் பாணி ஓவியங்கள் மனதை அள்ளுகிறது .இந்த நீள் டெக்ஸ் இன் திரை சாகஸத்திற்குள் நுழைவதற்கு முன் இந்த மாதம் சந்தா நண்பர்களுக்கு இலவசமாக வந்த விரட்டும் விதி என்ற குறும்படத்தை இன்றே பார்த்து விடலாம் என உள்நுழைந்தேன்.ஒரு கால்மணி நேர அவகாசம் தான் .முடித்தாயிற்று .இப்பொழுது பார்த்து அந்த " கடுகு சிறுத்தாலும் " என்ற பழமொழியை தவிர வேறெதுவும் நினைவிற்கு வராமல் போகிறது .செம அட்டகாசமான விருந்து.குறும்படமாக காணப்பட்டாலும் ஒரு முழுநீள படத்தை பார்த்த திருப்தி .என்ன ஒன்று முன்பக்கத்தில் அதே தாளில் அட்டைபடம் போல டெக்ஸ்ன் ஒரு அசத்தல் போஸை இனைத்து இருந்தால் இன்னும் கலக்கி இருக்கும்.அட்டகாச இலவச படைப்பு.பாராட்டுகளுடன் நன்றிகள் சார்.

    ReplyDelete
  11. *மரணம் ஒரு முறையே..!*


    சிம்பிளான அட்டைப்பட சித்திரம் தான் .ஆனால் அந்த வித்தியாசமான.. கம்பிகளுக்கு பின் நிற்கும் ஷெல்டனின் தனித்த அட்டைப்படம் மனதை கவரதான் செய்கிறது.மேலும் ஷெல்டன்..லார்கோ போன்றவர்கள் நமது நெருங்கிய..,மிகவும் பிடித்த உறவினர்கள் நீண்ட நாட்கள் கழித்து வரும்பொழுது அவர்களை காண்பதற்கு மனது எவ்வளவு சந்தோசபடும் அந்த சந்தோசத்தை தருபவர்கள் .இன்றைய முதல் நாளிலியே ஷெல்டனிடம் பயணித்தாயிற்று.வழக்கமான அதே பாணிதான் என்றாலுமே ஒவ்வொரு முறையும் புதிதாக படிக்கும் கள சாகஸம் போலவே அமைவது சிறப்பு.அதிரடி சாகஸத்தில் அதனுடன் இணைந்த காமெடி போல ஷெல்டனின் உரையாடல்களில் சிரிக்க வைத்த இடங்களும் பல.அதே போல வழக்கமான ஷெல்டன் பாணி ப்ளாக்மெயில் முடிவு கைதட்ட வைக்கும் ஒன்று . மீண்டும்..,மீண்டும் படிக்க தோன்ற வைக்கும் சாகஸம் .


    பிறகு அந்த இதழில் வந்திருந்த நண்பர் ஜேடர்பாளைய சரவணரின் வாசகர் கடிதத்தை பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.வெகு அழகாக எண்ணத்தை பகிர்ந்து உள்ளார்.உண்மையில் அவரின் கடிதத்தை படித்த பிறகு ஏதாவது பழைய ஸ்பைடர் சாகஸம் படிக்க வேண்டும் போல எண்ணம் தோன்றியது மறுக்க முடியா உண்மை.


    மரணம் ஒரு முறையே ஆனால் ஷெல்டன் எத்தனை முறை வந்தாலும் நடிகை ராதா பாணியில் சொல்வது என்றால்


    "அடி தூள்.."

    ReplyDelete
  12. இந்த பதிவில் சிங்கத்தின் கையில் உள்ள அட்டை வடிவேல் படத்தில் வரும் "இங்கு நல்ல மீன் விற்கப்படும்" காமெடியை நினைவுபடுத்துகிறது :-)

    ReplyDelete
  13. என் நண்பேன்டா :

    நாலுகாலில் ஒரு ஞானசூன்யம் இருந்தாலே கலகலப்புக்கு பஞ்சமிருக்காது .. இக்கதையிலோ நம்ம ரின்டின்கேனுக்கு போட்டியா நாலுகால்களுடன் கூடவே முதுகில் எக்ஸ்ட்ரா லக்கேஜும் கொண்ட பச்சோலி என்றதொரு ஞானசூன்யமும் களமிறங்க .. .. சேர்ந்து கலக்கியிருக்கிறார்கள்.!

    இவர்கள் இருவரையும் தாண்டிய பெரியதொரு கவனஈர்ப்பை கோருபவர் நம்ம பஃபெல்லோ பில் .!
    மனுசன் தற்பெருமை பேசியே, தன்னுடைய இமேஜை காப்பாற்றிக்கொள்ள எடுக்கும் முயற்சிகளால் சிரிக்கவைக்கிறார்.! கூடவே பில்லின் உதவியாளர் அரிசோனா ஜானும். . ஒவ்வொரு சிக்கலையும் டாலர்களை கொண்டே தீர்க்கும் ஜானின் திறமை மெச்சப்பட வேண்டிய ஒன்று. !
    ரின்டின் கேனின் மாஸ்டரான பாவ்லோவைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.! ஒட்டகத்தை கட்டி மேய்க்க பாவ்லோவ் படும் பாடுகள்... ஹாஹாஹா ...!
    அந்தக் கஷ்டத்தோடு ரின்டின்கேனின் 'அறிவார்ந்த ' சேஷ்டைகளும் சேர்ந்துகொள்ள பாவ்லோவ் கதைமுழுக்க பரிதாபலோவாகவே திரிகிறார் பாவம்.!
    பிராணிகளை பராமரிக்கும் செக்ஷனின் புரொபஷரின் கட்டுப்பாட்டில் ஏழெட்டு கிளிகள், புறாக்கள் கொண்டதொரு பறக்கும் படை இருக்க, நம்ம ரின்டின் கேன் ஒட்டுமொத்த பறக்கும் படையையும் கப்ளீகரம் செய்து ஏப்பம் விட்டுவிடுகிறது.!
    எஞ்சிய ஒரேயொரு கிளி மட்டும் புரொபெசரிடம் ரிப்போர்ட் செய்யும் அழகிருக்கே .. அடா ...அடா ...!

    றெக்கையால் சல்யூட் வைத்தபடி

    " பறக்கும் படை2 .. சிப்பாய் பச்சப்புள்ள ரிப்போர்ட்டிங் சார் ..! "

    ஹாஹாஹா ... செம்ம.!

    முதல்முறை சுமாராகத் தெரிந்தால் மறுமுறை புரட்டிப்பாருங்கள் ..நிச்சயம் பிடிக்கும்.!

    என் நண்பேன்டா : ஒரு கதை இரண்டு குடாக்குகள். .!

    ரேட்டிங் 9/10

    ReplyDelete

  14. விரட்டும் விதி :

    முப்பத்தியிரண்டே பக்கங்களில் முப்பது ட்விஸ்ட் வைத்து, தெளிவான அழகான சித்திரங்களை நேர்த்தியான வண்ணக் கலவையில் அட்டகாசமான விருந்தாக படைத்துள்ளனர்.!
    சந்தாவில் இல்லாத நண்பர்களுக்கு தாமதமாகத்தான் கிடைக்கும் என்பதால் நிச்சயம் நல்லதொரு டெக்ஸ் வில்லர் சிற்றுண்டியை தாமதமாகவே சுவைக்க வேண்டியிருக்கும்.! சந்தாவில் இணைவதைப்பற்றி பரிசீலியுங்கள் நண்பர்களே ..!

    இக்கதையை படிக்கும்போது தோன்றியது:
    போனவருட தீபாவளி மலரில் இந்த மாதிரி கதைகளை மூன்றோ நான்கோ ஒன்றிணைத்து வெளியிட்டிருந்தால் அமோக வரவேற்பினை பெற்றிருக்கும்.!


    இலவச இணைப்பு இம்மாதத்தின் ரேட்டிங்கில் டாப் இடத்திற்கு போட்டியிடும் தகுதி படைத்தது என்றால் அது மிகையாகாது ..!!

    விரட்டும் விதி - தல 70 கொண்டாட்டம் ஆரம்பம்

    ரேட்டிங் 15 /10

    ReplyDelete
    Replies
    1. இக்கதையை படிக்கும்போது தோன்றியது:
      போனவருட தீபாவளி மலரில் இந்த மாதிரி கதைகளை மூன்றோ நான்கோ ஒன்றிணைத்து வெளியிட்டிருந்தால் அமோக வரவேற்பினை பெற்றிருக்கும்.!

      +11111111

      Delete
  15. சார் , விரட்டும் விதி சிக்கென உுள்ளது . அட்டையில்லாமலே , முதல் பக்கம் அதாவது அந்த பூ பூத்த கள்ளி வண்ணத்தால் அழகு . முடிவு திகைப்பு . டெக்சயே வீழ்த்த பார்க்க ,டெக்ஸ் எப்பவும் போல அலர்ட் . அருமை. ஜேடர்பாளயத்தாரின் ஸ்பைடர் அருமை . அடுத்த மாதம் ஸ்மர்ஃப் மாதம் . சூப்பர் .

    ReplyDelete
  16. எல்லாமே நன்றாக இருந்தது

    ReplyDelete
  17. ALL Friends @

    மீ த ஃபர்ஸ்ட்,

    36th ,

    101 St ,(நானும் போட்டதை மறுக்கல)

    ......... என்பதை தாண்டி ஏதாவது எழுதபாருங்கள்.

    மாற்றம் வேணும் எனில் அதற்கு ஒரு துவக்கத்தை தர வேணும் தானே....

    ReplyDelete
    Replies
    1. மெளனப் பார்வையாளர்களும் தங்கள் விரதத்தை கலைக்கும் நேரம் இது....

      Delete
    2. இதுபோல சுய கட்டுப்பாடுகள் இந்த விசயத்திற்குத் தேவையில்லாதது டெக்ஸ் விஜய்! மாற்றம் எல்லாவற்றிலும் இருக்கவேண்டிய அவசியமும் இல்லை!

      'மீ த ஃபர்ஸ்ட்'டில்...
      * இத்தளத்தை நான் ஆர்வமாகக் கண்காணித்து வருகிறேன்
      * இன்று அதிர்ஷ்ட தேவதையின் பார்வை - என் பக்கம்
      ஆகியவை உள்ளிட்ட, கொஞ்சம் பெருமையும், ஒரு குழந்தையின் குதூகலமும் இதில் அடங்கியிருக்கிறது!

      காமிக்ஸ் வாசிப்பு என்பதேகூட நம் பிள்ளைப்பிராயப் பழக்கத்தின் தொடர்ச்சிதானே?
      ஒரு குழந்தையாய் குதூகலிப்பதில் தவறில்லை! இங்கு வரும் எல்லோருமே ஒரு குழந்தையின் மனநிலையோடு இருந்திருந்தால், இரவு-பகலாக நம் சந்தோசத்திற்காக உழைத்துவரும் இத்தளத்தின் முதன்மைக் குழந்தையை மருத்துவ விடுப்பில் அனுப்ப நேர்ந்திருக்காது!

      என்னைப்பொருத்தவரையில், ஆண்டுக்கணக்கில் இத்தளத்தைப் பார்வையிட்டு வந்தாலும் இன்றுவரை ஒரு '+1' கூட போட்டிராத மெளனக்குழந்தைகளைக் காட்டிலும் ஒவ்வொரு பதிவிலும் லேட்டாக வந்தாவது '139th' என்றோ, '87th' என்றோ போட்டு இத்தளத்தில் தொடர்ந்து தன் பங்களிப்பை உணர்த்திவரும் நண்பர் texkit ஒருபடி மேலானவரே!

      நான் குழந்தையாகவே இருந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கம் எனக்கு இப்போதும் உண்டு. கொழுக் மொழுக் என்றிருந்த அந்தக் காலகட்டத்தில் என் கன்னம் கிள்ளி முத்தமிட்ட பக்கத்துவீட்டு பெண்பிள்ளைகள் ஏராளம்! இப்போதும் கொழுக் மொழுக் என்றுதான் இருக்கிறேன்... ஆனால்...

      Delete
    3. நன்றி விஜய். நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரிந்தது. Everyone has their own comfort zone.... இதுவும் ஒரு சுகமே!

      //
      நான் குழந்தையாகவே இருந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கம் எனக்கு இப்போதும் உண்டு. கொழுக் மொழுக் என்றிருந்த அந்தக் காலகட்டத்தில் என் கன்னம் கிள்ளி முத்தமிட்ட பக்கத்துவீட்டு பெண்பிள்ளைகள் ஏராளம்! இப்போதும் கொழுக் மொழுக் என்றுதான் இருக்கிறேன்... ஆனால்...
      //
      உங்கள் மனைவியிடம் கேட்டால் இதற்க்கு பதில் கிடைக்கும் :)


      Delete
    4. வணக்கம் கார்த்திக்! நீங்கள் மௌனம் கலைத்தது சந்தோசமே!
      நமது காமிக்ஸ் பற்றிய உங்கள் விமர்சனங்களை இங்கு பதிவிடலாமே!

      Delete
    5. நன்றி பரணி! சில காரணங்களால் நான் நமது காமிக்ஸ் விமர்சனங்களை பதிவு செய்ய முயன்றதில்லை. எதிர் காலத்தில் முயற்சிக்கிறேன்.

      Delete
    6. ஈவி@ உங்கள் பாயிண்டை ஒப்புக் கொள்கிறேன். சம் திங் ஈஸ் பெட்டர் தென் நத்திங். அதையும் தாண்டி அவர்களும் எழுத வேண்யதும் சில பல சமயங்களில் அவசியம்.

      மெளன ராகங்கள் இனிய கீதங்களாக ஒலிக்கட்டும்....

      நம்மில் தொடர்ந்து ஒரு சிலரின் விமர்சனங்களும் , ஸ்டைல்களும் சலிப்பபூட்டும் நிலையை அடைந்து விட கூடாது. புதிய எழுத்துக்களான வேளை இது.

      மாற்றங்களின்
      தொடக்கமாக இந்த வருடம் முழுதும் புதிய டெக்ஸ் கதைகளுக்கு நான் விமர்சனம் எழுத போவது இல்லை. மற்ற நாயகர்களின் கதைகளுக்கு முடிந்த அளவு எழுதுவேன். சென்ற வார தோர்கல் விமர்சனம் அதற்காகான ஆரம்பம் தான்.

      Delete
    7. சேலம் தல.

      டெக்ஸ் கதைகளின்வி மர்சனமும் எழுதுங்க. உங்க விமர்சனங்கள், நினைவுகளை அசை போடும் கட்டுரைகளை படித்து மகிழ ஒரு கூட்டம் இருக்குங்கறத மறந்துடாதீங்க. நேரம் கிடைக்கும் போத எழுதுங்க.

      Delete
  18. பழைய முத்து காமிக்ஸ் effect

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஜி! இந்த மாத புத்தகங்கள் பற்றிய உங்கள் விமர்சனத்தை எழுதலாமே?

      Delete
  19. நண்பேன்டா:
    நண்பர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு ரின் டின் கேனின் நண்பேன்டா கதையை சொல்லுங்கள் அவர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள், அதே நேரம் நமக்கும் அதில் உள்ள நகைச்சுவைக்கு இன்னும் பிடிக்கும்! முயற்சி செய்யுங்கள்!

    ReplyDelete
  20. Replies
    1. என் நண்பேன்டா:

      தலைப்பே கதையை சொல்லும் விதத்தில் உள்ளது! ஆம் இது நமது ரின் டின் கேன் மற்றும் பச்சோலி இருவருக்கும்மான நட்பை கொண்டு அமைத்த சிரிப்புத் தோரணம்; இவர்களின் நட்பில் பஃபெல்லோ அடக்கம்!

      முதல் சில பக்கங்களை படித்தவுடன் "எள்ளு என்று சொன்னால் எண்ணெய்யுடன் வரனும்" என்ற பழமொழி தான் ஞாபகம் வந்தது; ஆமா பின்னே பொதி சுமக்க கழுதை வேண்டும் என்றால் ஒட்டகத்தை தருவேன் என சொல்லுவதை என்ன சொல்ல! இங்கு ஆரம்பிக்கும் சிரிப்பு கடைசி வரை நமது வயிற்ரை நன்றாக குலுங்க வைக்கிறது!

      ரயில் வண்டியில் பஃபெல்லோ பயணம் செய்யும் போது டிக்கெட் பரிசோதகர் பைன் போட்டு பஃபெல்லோ பணம் வசூலிக்கும் இடம் செம! ஒவ்வொரு முறையும் இவர் சொல்லும் காரணம் சூப்பர்!

      அதே போல் நமது ரின் டின் கேன் சோப்பை கிரீம் என சுவாகா செய்வது, தனது நண்பன் பச்சோலிக்கு ஆபத்து எனும் போது வீறுகொண்டு கடித்து குதறி எடுப்பது!

      அதை எல்லாம் விட அந்த சர்க்கஸ் கதாநாயகன் அடிக்கும் கூத்து, மற்றும் அவருக்கு கொடுக்கும் அடைமொழி! நமது ரின் டின் கேன் & பச்சோலி வந்த பின் கதாநாயகன் காமெடி பீஸ் அளவுக்கு உயர்வது செம!

      பஃபெல்லோ ரொம்ப நல்ல மனிதன்.. ஆனால் இவருக்குத்தான் எத்தனை சோதனை, ஆனால் இவரின் சோதனைகள் எல்லாம் நமக்கு சிரிப்பை கொண்டு வருவது இவரின் கதாபாத்திரத்தின் வெற்றி!

      கடைசி சில பக்கங்களில் இந்த நண்பர்கள் பச்சோலியை பிரிவது கஷ்டமாக இருந்தது!

      இவர்கள் நமது கண்களுக்கு ஞானசூன்யமாக தெரிந்தாலும் நட்பை வெளிபடுத்திய விதத்தில் என்னை பொறுத்தவரை இவர்கள் நல்ல மனதுகாரர்கள்! இந்த முறையும் ரின் டின் கேன் & கோ என்னை கவர்ந்து விட்டார்கள்!

      Delete
  21. சிங்கம் திரும்பவும் களம் இறங்கிருச்சி...ஒரு வேளை கேரளாவுக்கு போய் ரகசிய மூலிகை சிகிச்சை ஏதும் எடுத்துட்டு வந்திருக்குமோ....!?

    ReplyDelete
  22. நானும் வந்துட்டேன்!!!

    ReplyDelete
  23. Replies
    1. கோயம்புத்தூர் பாபு @ நமது காமிக்ஸ் பற்றிய உங்கள் விமர்சனத்தை பதிவிடலாமே?

      Delete
  24. இம்மாத டெக்ஸ் இதழ் கொஞ்சம் மொக்கை தான்.. போன இதழில் இருந்த நகைச்சுவை அளவு இல்லை.. அதற்கான இடங்கள் மிக குறைவுதான்.

    ஒரு சிறு விண்ணப்பம் லார்கோ தோர்கள் கமான்சே போன்ற இதழ்களில் அதன் தொடரின் வரிசை எண்களை இருந்தால் நன்றாக இருக்கும்.. தோர்களின் ஆரம்ப இதழ்களில் இருந்தது பின் நிறுத்தப்பட்டுவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் இதழின் கதை தேவையில்லாமல் கதைக்குள் கதையாக சென்றதே காரணம் என நினைக்கிறேன். வேண்டும் என்றே இழுத்ததாக தோன்றியது

      Delete
    2. எனக்கும் இதே உணர்வுதான்! கதை 200 பக்கங்களுக்கு மேல் எனும் போது கொஞ்சம் விறுவிறுப்பு குறைகிறது சில கதைகளில்!

      Delete
    3. டெக்ஸ் கதைகளுக்கு 240 பக்கம் என்பது சரியான அமைப்பாகவே உள்ளது.

      வன்மேற்கில் உருப்படியான கருவினை உருவாக்கி, அதில் நல்ல மற்றும் கெட்ட நோக்கத்தை உள்ளடக்கி, டெக்ஸ், கார்சனை உள்ளிழுத்து, விறுவிறுப்பான கதையோட்டத்தை உண்டாக்கி, தொய்வில்லாமல் கொண்டு செல்ல அத்ததனை பக்ககங்கள் கண்டிப்பாகவே திருப்தியான உணர்வையே தரும்.

      Delete
  25. எத்தனையாவதா இருந்தாலும் பரவாயில்லை ஆனா நானும் வந்துட்டேன்

    ReplyDelete
  26. நண்பேண்டா ரின் டின் கேன் group காமெடியில் ஏமாற்றவில்லை ரோஜரின் மர்ம கத்தி படித்து வருகிறேன்

    ReplyDelete
  27. //////டெக்ஸ் இதழின் கதை தேவையில்லாமல் கதைக்குள் கதையாக சென்றதே காரணம் என நினைக்கிறேன். வேண்டும் என்றே இழுத்ததாக தோன்றியது/////


    .......கரீக்ட்டு பா ..............

    ReplyDelete
  28. பதிவை தேடி .........

    ஓ ரெண்டே எழுத்து பதிவா ........

    பின்னுறீங்க சார்

    ReplyDelete
  29. இந்த மாத இதழ்கள் ரேட்டிங்,
    1.விரட்டும் விதி-டெக்ஸ்-10/10
    2.வெண்பனியில் செங்குருதி-டெக்ஸ்-9/10
    3.மரணம் ஒரு முறையே-ஷெல்டன்-9/10
    4.என் நண்பேண்டா-ரின்டின்-8/10
    5.மர்மக் கத்தி-ரோஜர்-8/10

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் துவக்க சுற்றுக்களில் முன்னிலை பெறத் துவங்கி விட்டார் என அழுத்தமாக பதிவாக தொடங்கி விட்டது...

      சென்ற மாதம் புத்தக காட்யில வெற்றி, இம்மாதம் கதையில் வெற்றி...

      2017 ன் தொய்வை அடுத்து டெக்ஸ் மீண்டெல துவங்கி விட்டார்..

      ஈரோடு 2018ல் ,

      TEX Vs XIII செம...

      Delete
  30. இங்கே தான் இருக்கேன்...

    ReplyDelete
  31. சூப்பர் சார்.

    இது போதுமே. ஒரு வாரத்தை நாங்க ஓட்டிடுவோம்.'

    ஞாயிற்றுக் கிழமைக்கு இந்த 'லாம் 'ம கொஞ்சூண்டு எக்ஸ்டென்சன் பண்ணா போதும்.

    ReplyDelete
  32. இந்த இரண்டு வரி பதிவாக்கும்.
    போங்கப்பா சும்மா காமெடி பண்ணிக்கிட்டு.....

    ReplyDelete
  33. TEX Vs XIII செம...
    We are waiting.....!

    ReplyDelete
  34. மரணம் ஒருமுறையே :

    ஈரான் ராணுவத்தின் கண்களில் மண்ணைத்தூவி அங்கிருந்து சாடியா என்கிற உளவாளியை கொண்டு வந்து சேர்க்கவேண்டும் என்பதே ஷெல்டனுக்கு இடப்படும் பணி.!
    அதுவும் எப்படியாம் .. முதலைக்கூட்டத்தில் வீசப்படும் ஆட்டுத்தொடையின் நிலையில்., குறைவான ஊதியத்திற்கு.!
    வேறுவழியேதுமின்றி பணியை ஏற்கும் ஷெல்டன் என்னென்ன வழிமுறைகளை கையாண்டு, எப்படி ஒட்டுமொத்த ராணுவத்துகும் கல்தா கொடுத்து அந்தப்பெண் சாடியாவை மீட்டுவருகிறார் என்பதே கதை.!

    கதையின் போக்கில் அடுத்தடுத்து நம்மால் யூகிக்கவே முடியாத மாதிரி வருகின்ற திருப்பங்கள் அசரவைக்கின்றன.!
    கர்னல் ரஜாவி எத்தன் என்றால் டாக்டர் நாசின் எத்தனுக்கு எத்தனாக இருக்கிறார்.! சாடியா நாசினோ இவர்களைவிடப் பெரிய கில்லாடியாக இருக்கிறார்.! நம்ம ஷெல்டனோ எல்லோரையும் விட ஜகஜ்ஜால கில்லாடியாக இருக்கிறார்.!
    தப்பிச்செல்ல ஷெல்டன் வகுக்கும் திட்டங்களும் அவற்றை செயல்படுத்தும் முறைகளும் செம்ம த்ரில்லிங்காக இருக்கின்றன.!
    அதுவும் சாடியாவை பத்திரமாக மீட்டுவிட்டு தன்னை வலுக்கட்டாயமாக சொற்பக் கூலிக்கு வேலைக்கு அமர்த்தியவர்களிடம் ஐந்து மடங்க பணம் கேட்டு ஷெல்டன் பேரம் பேசும் கெத்து டக்கரான ஒன்று.! அத்தோடு சேர்த்து., எல்லையைக்கடக்க கடத்திவந்த நடிகரை பணயக்கைதியாக்கி, உதவி செய்த நண்பர் ஜமைல்கானுக்கு பணமும், நடிகருக்கு பப்ளிசிட்டியும் என ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் ஷெல்டனின் சாதூர்யம் அடா அடா ..!!

    முதல் பக்கத்தோடு காணாமல் போகும் ஹானஸ்டி கடைசிப்பக்கத்தில் வந்து சேர்கிறார். ! ஹானஸ்டி இல்லாத குறை சாடியாவால் நிவர்த்தி செய்யப்படுகிறது.!
    வழக்கமான படாபடா டயர்களைக் கொண்ட முரட்டு ட்ரக்குகள் இதில் மிஸ்ஸிங்....!

    பரபரப்பான கதையோட்டமும் பக்காமாஸான க்ளைமாக்ஸும் என ஷெல்டனின் மற்றொரு சூப்பர்ஹிட் இக்கதை.!


    மரணம் ஒருமுறையே - ரசிக்கலாம் பலமுறை

    ரேட்டிங் 9/10

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் ஓகே, சார்! ஆனால், இதில் ஓவியர்தான் ஒரு சிறிய பிழை செய்திருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த ஹானஸ்டியையும், இஸ்ரேலில் பிறந்து வளர்ந்த சாடியாவையும், ஈரானை சேர்ந்த ஆஸ்ட்ரிட் என்ற பெண்ணையும் அக்கா தங்கச்சிகள் போல ஒரே முகச்சாயலில் வரைந்திருக்கிறார். விமானத்தில் ஈரான் நடிகரின் தோழியாக வந்த அந்த ஆஸ்ட்ரிட்டை பார்த்ததும், நம்ம ஹானஸ்டிதான் தலை முடிக்கு டை அடித்துக்கொண்டு ஷெல்டனை காப்பாற்ற வந்து விட்டாள் என்று நினைத்து விட்டேன்.

      Delete
  35. பதிவின் ஆரம்பத்துல 'நண்பர்களே! வணக்கம்' இல்லை.... கடைசில 'bye for now. See u around!' இல்லை... ம்ஹூம், இது எடிட்டரோட பதிவா இருக்காது!

    தவிர, எடிட்டரா இருந்தா இந்தப் பதிவுக்கு 'மீண்டும் ஒரு மினி பதிவு', 'உரத்த சிந்தனையும், ஒரு உப பதிவும்' - இப்படித்தானே தலைப்பு வச்சிருப்பார்?

    அ.கொ.தி.க மாதிரி யோரோ ஒரு கும்பல் நம்ம தளத்தை ஹேக் பண்ணி வச்சுக்கிட்டு விளையாட்டுக் காட்டிக்கிருக்காங்கன்னு நினைக்கிறேன்! ஹிஹி, நம்ம கம்புசுத்தும் தொப்பிக்காரப் பார்ட்டியை வரவழைத்து விஷ்க்கு விஷ்க்குன்னு ரெண்டு சுத்து சுத்தச் சொன்னோமின்னா யாராயிருந்தாலும் தளத்தைக் கீழே போட்டுட்டு ஓடித்தானே ஆகணும்? :P

    ReplyDelete
    Replies
    1. //ஹிஹி, நம்ம கம்புசுத்தும் தொப்பிக்காரப் பார்ட்டியை வரவழைத்து விஷ்க்கு விஷ்க்குன்னு ரெண்டு சுத்து சுத்தச் சொன்னோமின்னா யாராயிருந்தாலும் தளத்தைக் கீழே போட்டுட்டு ஓடித்தானே ஆகணும்? //

      Really LOL :-)))))))

      Delete
  36. டெகஸ் சார் சக்தியை சந்திக்க வரும்போது lastஆ வந்த கமான்சே சேலத்தில கிடைத்தால் வாங்கி வரவும். வருகை அறிவிப்பு எதிர் நோக்கி யுள்ளேன்.

    ReplyDelete
  37. றது ...பர் ...டும் ..டும் ....லாம் .....

    ReplyDelete
  38. நண்பர்களின் ஆறுதலான வார்த்தைகளும், நிதி உதவியும் ஒரு மனிதரை எந்த அளவுக்கு மீட்டெடுக்க முடியுமென்பதை நேற்றைய பொழுதில் கரூர் ராஜசேகரிடம் ஃபோனில் உரையாடியபோது அவர் வார்த்தைகளில் தெரிந்த தெளிவின் மூலமாக நன்றாகவே உணர்ந்துகொள்ள முடிந்தது!

    இதுவரை நம் நண்பர்கள் செய்திருக்கும் சுமார் 6000 ரூபாய் வரையிலான நிதி உதவி, அவரது குடும்பத்தில் நிலவிவந்த இறுக்கத்தையும் சற்றே தளர்த்தியிருக்கிறது.

    நிதியுதவி செய்திருக்கும் அனைவரும் நம் காமிக்ஸ் குடும்பம் சார்பாக நன்றிகள் பல! _/\_

    ReplyDelete
    Replies
    1. நெகிழ்ச்சியான நேரம் ஈவி...

      இதை நடத்தி காட்டிய அத்தனை நல் உளங்களுக்கும் இரு கரம் கூப்பிய வணக்கங்கள்.

      3 மாதங்கள் விலகியிருந்து மீண்டு வந்த பின் ஏன் வந்தோம் என ஆகிட்ட மனம், இன்று நெகிழ்ச்சிச்சியில் பூரிப்படைகிறது.

      இவர்கள் என் நண்பர்கள் என சத்தமாக சொல்லிக் கொள்கிகிறேன்.
      இதில் நானும் ஒரு அங்கம் என நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

      இத்தகைய உள்ளங்களை இணைத்த காமிக்ஸ்க்கும், நம் எடிட்டர் சாருக்கும் நன்றி !

      வாழ்க காமிக்ஸ் நேசம் எந்நாளும்!!

      Delete
    2. முன்னெடுத்த செயலருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..

      Delete
    3. //முன்னெடுத்த செயலருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..//
      +1

      Delete
  39. என் நண்பேன்டா....

    ரின்டின் கேன் இதழை என்னை பொறுத்த வரை அதிகம் எதிர்பார்ப்பது இல்லை...காரணம் ஒரு லக்கி ..சிக்பில்..ஏன் பொடியன் பென்னி போன்றோர் கவர்ந்த அளவிற்கு எல்லாம் இதுவரை ரின்டின் என்னை கவர்ந்தாரா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்வேன்.ஆனால் இந்த முறை ரின்டின் கேன் உடன் ஒட்டகம் ஒன்று இணைந்தாலும் அவர்களுடன் ஈடுஇனையில்லா அஞ்சாநெஞ்சன்..தியாக தலைவன் ,எழுச்சி நாயகன்.,இளம் தளபதி..எதிர்காலத்தின் விடிவெள்ளி ..மாற்றத்தின் நாயகன் ..ஏழை பங்காளன் பஃபெலோ பில் இணைந்தவுடன் தான் ஆட்டம் களை கட்டுகிறது.நீண்ட நாட்களுக்கு ரின்டின் சாகஸம் வாய்விட்டு சிரிக்க வைத்த ஒன்றாக இந்த " என் நண்பேண்டா " அமைந்துள்ளது.

    அருமை...

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்கு பிறகு ...

      என தொடரவும்..:-(

      Delete
  40. வென்பனியில் செங்குருதி....


    அக்மார்க் டெக்ஸ் சாகஸம்..அட்டகாசமான அட்டைபடமும்..உள்ளே அசத்தலான சித்திர தரமும் ஆக வழக்கமான செவ்விந்திய குடியிருப்பு..நவஜோ கோட்டை அருகே டெக்ஸ் பயணிக்காமல் அந்த அடர்ந்த பனி பிரதேசத்தில் டெக்ஸ் @ கார்சன் கூட்டணி பட்டாசாக சாகஸம் புரிந்து மீண்டும் வெற்றியை நாட்டிவிட்டார்கள் .கதை முடிந்து விட்டதோ என்று நினைக்கும் பொழுதும் நண்பர்கள் சொன்னது போல மேலும் சாகஸத்தை நீட்டி கொண்டு கதாசிரியர் கொண்டு சென்றாலும் போல் தோன்றினாலும் இறுதிவரை அலுப்பு தட்டாமல் சென்றது தான் அந்த கதாசிரியருக்கும்..டெக்ஸ் வில்லருக்குமான வெற்றி...

    இந்த முறை வசனங்கள் சிற்சில இடங்களில் சிறு எழுத்துக்களாக தோன்றியது போல் பட்டது எனக்கு மட்டும்தானா இல்லை எனது கண்ணின் குறைபாடா என தான் தெரியவில்லை..:-)

    ReplyDelete
  41. 🗣""தல"" டெக்ஸின் 70 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக இம்மாதம் வாசகர்களுக்கு கிடைத்த குட்டி 'டைனமைட் ' 😤இந்த விரட்டும் விதி.....!😤

    👄டக்ஸன் நகரில் உள்ள வங்கியில் 2 லட்சம் டாலர் கொள்ளை அடித்ததோடு வங்கி ஊழியர் இருவரை காவு வாங்கி விட்டு கம்பி நீட்டுகின்றனர் ப்ரைன் மர்ரே கும்பல்......

    👣டக்ஸனின் ஷெரீப் ரூபர்ட் தனது நண்பர் டெக்ஸிடம் மர்ரே கும்பலை ஒழிக்கும் பொறுப்பு வந்துசேர காசாகிராண்டேவிலிருந்து மர்ரேவை பின்தொடர்கிறார் டெக்ஸ். தலயின் வருகையை அறிந்து அங்கிருந்து தப்பியொடும்போது வழியில் அனபெல் காலேம்ஸ் எனும் பெண்மணியும் அவளது மகளுடன் ஒட்டிக்கொண்டு அடைக்கலமாகிறான் மர்ரே.

    😢மர்ரேவின் உதவிக்கு கைமாறாக அனபெல் வயிறுபுடைக்க விருந்தோடு விஸ்கியில் விஷம்கலந்து அவனை கொள்ள முயன்றதோடு இதேபோல் பலர் தன்னுடைய விஷத்திற்கு பலியான கதை சொல்கிறாள்.

    💗இருவரூக்கும் இடையிலான போராட்டத்தில் அனபெல்லின் கையிலுள்ள துப்பாக்கி வெடிக்க மர்ரே பலியாகும் போது தல வீட்டின் உள்ளே வர மர்ரே தன்னிடம் தவறாக நடக்க முயன்றான் ஆகவே தற்காப்பிற்காக அவனை கொலை செய்ததாக நாடமாடுகிறாள் .

    😳டெக்ஸிற்க்கு விசம் கலந்த விஸ்கியை ஊற்றி தருகிறாள் அனபெல் வழக்கம் போல் தல அதில் விஷம் கலந்திருப்பதை அனபெல் மகளின் முகத்திலோடிய சவக்களையை கண்டு சுதாரிக்க சட்டென்று தன் மகளின் நெற்றியில் தூப்பாக்கியை வைத்து சுட முயல அப்போது மர்ரே கும்பலில் மீந்துபோன ஒருவன் உள்ளேவர டெக்ஸ் சமர்த்தியமாக அனபெல்லை தள்ளிவிட்டு எதிரியை போட்டு தள்ளுகிறார், அனபெல் எதிரியின் துப்பாக்கிக்கு இரையானாள்.

    😥பெலிஷியாவை மீட்டு திரும்புகிறார் ""தல"" டெக்ஸ்.....

    😃கடுகு சிறுத்தாலும் காரம் குரையாது என்பதாக அளவில் சிறிய கதை என்ற போதும் தல கதையின் அத்தனை அம்சமும் பக்காவாக அமைந்து ஒவ்வொரு பக்கமும் ஜெலட்டின் குச்சியாக சித்திரம் வெடித்து சிதறுகிறது.

    😤பக்கம் 4,5 ல் மர்ரே கும்பல் வங்கி ஊழியரை போட்டு தள்ளும் காட்சிகள் ஒவ்வொன்றும் மத்தாப்பூ தோரணம்.

    💗பக்கம் 4ல் முதல் கட்டத்தில் துப்பாக்கி வெடிக்கும் காட்சி, பக்கம் 5ல் 4வது கட்டத்தில் வங்கி ஊழியரை கொள்ளையன் சிவப்பு டவலால் முகத்தை மறைத்துக் கொண்டு மிரட்டும்போது வங்கி ஊழியர் வாயிலிருந்து ஒழுகும் ரத்தமும் கண்ணில்தெரியும் மிரட்சியும் 70mm திரையில் 4k technology லே படம் பார்த்த பிரமிப்பு.....

    💖பக்கம் 25ல் இரண்டாவது கட்டத்தில் மர்ரே விஷமருந்தி அது வயிற்றில் உள்ளேபோய் தீப்பிடித்து கதற மறுக்கப் கையிலுள்ள கிளாஸ் கீழேவிழுந்து நொறுங்கும் காட்சி அடடா.....
    என்ன அற்புதமான சித்தரிப்பு.....

    💜அனபெல் அட்டகாசமான விஸ்கி இது என ஊற்றி தலயிடம் தர அதனை கையில் வாங்கிக்கொண்டு பெலிஷியாவை பார்க்க அவள் முகத்தில் தெரிந்த சவக்கலை 4 கட்டத்தில் மர்ரே கையில் கீழேவிழுந்து கொட்டிய விஸ்கி சிதறிய பணத்தினூடாக கலந்து பச்சைநிறத்தில் காட்சிதந்து நான் விஷமாக்கும் என சாட்சி சொல்கிறது.
    கதாசிரியருக்கும் ஓவியருக்கும் நல்ல புரிதல் உள்ளதை இவை காட்டுகின்றன.
    வாசகர்களுக்கு உண்மையிலேயே தல விருந்தாக அமைந்துள்ளது இந்த விரட்டும் விதி.....!

    www.lioncomics.in
    பிப்ரவரி லயன் காமிக்ஸ் இனணப்பு இது...

    💋யாழிசை செல்வா 💋
    07 /01/2018

    ReplyDelete
  42. ஆசிரியர் சார்! அடுத்து வரவிருக்கும் டெக்ஸ்'சின் 5 இலவச புத்தகங்களையும் இதே சைஸில் வெளியிடுங்கள் சார்! அப்போதுதான் 6 புத்தகங்களையும் பைண்டிங் செய்து வைத்துக்கொள்ள வசதியாக இருக்கும். அட்டை இல்லாத இந்த புத்தகங்களை பைண்டிங் செய்துவைத்துக்கொள்ளவில்லையென்றால் நாளடைவில் கிழிந்துவிட வாய்ப்பிருக்கிறது.

    ReplyDelete
  43. ஹாய் சார்...

    கேப்சன் போட்டிக்கான பரிசு புத்தகம்(LMS) நேற்று பெற்றுக் கொண்டேன்.நன்றி சார்.

    ஏற்கனவே இருப்பதுதான் என்றாலும் இது ஸ்பெசல் தான்..

    இந்த புத்தகத்தில் பைண்டிங் தலைகீழாக உள்ளது.முன் அட்டைகள் தலைகீழாகவும் உள் பேப்பர்கள் நேராகவும் பைண்டிங் ஆகி இருந்தாலும்,தவறாக இருப்பதுதான இதன் ஸ்பெசலே...திருப்பி அனுப்ப போவதில்லை சார்.

    சில இடங்களில் சரியாக இல்லாமல் இருப்பதும் மதிப்புதான் போல...
    (இந்த வாக்கியத்திற்கும் ஆசிரியரின் மௌனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென தெரிவித்துக் கொள்கிறேன்)

    நீங்கள் பதிவிடாவிட்டால் என்ன சார் பார்வையிடுகிறீர்கள் என்பதே போதுமானது இந்த தளம் எப்போதும் ஆக்டிவாக இருக்க...

    மீண்டும் நன்றிகள் சார்.

    ReplyDelete
  44. இந்த மாதத்தின் அனைத்து புத்தகங்களும் மிகவும் சூப்பர்.

    டெக்ஸ் வில்லர் புக் (வெள்ளை பனி) டெக்ஸ் மட்டுமே ஹீரோ இல்லை. பனி பிரதேசத்தில் வண்டியை இழுத்து செல்லும் நாய்கள், அவற்றின் மோப்பசக்தி, அவற்றின் விசுவாசம், எஸ்கிமோ இளைஞனின் வாழ்க்கை/சவால், கனடா செஞ்சட்டை காவலாளிகளின் நேர்மை, என பல ஹீரோக்கள்.

    ஷெல்டன் கதையில் பல திருப்பங்கள் உள்ளன. இது ஒரு ஹால்வுட் ஆக்ஷன் கதையை ஒத்திருக்கிறது.

    ரின் டின் கதை ஒரு நகைச்சுவை வெடி ஆகும்,

    ரோஜர் மர்மமான வாள் வழக்கம் போல் இருக்கிறது

    குட்டி டெக்ஸ் ஒரு அதிரடி ஒன்றாகும்.

    இந்த மாதத்திற்கான எனது மதிப்பீடு

    1 Tex Willer – 10 / 10
    2. Shelton - 10 / 10
    3. Rin-Tin – 10/10
    4. Roger – 8 / 10




    ReplyDelete
  45. மகிழ்ச்சியான செய்தி நண்பர்களே!

    கரூர் ராஜசேகருக்கு நம் காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக சற்றுமுன்பு வரை கிடைத்திருக்கும் நிதியுதவியின் மதிப்பு ரூ.35,000 ஐ எட்டியிருக்கிறது!

    இதில் நம் மதிப்புற்குரிய எடிட்டரின் பங்களிப்பும் கணிசமானது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்! ( மன்னியுங்கள் எடிட்டர் சார்! உங்களின் அனுமதியின்றி இதை நான் சொல்லியிருக்கக்கூடாதுதான்! நல்ல விசயங்கள் நண்பர்களுக்கும் சென்று சேருவது நல்லதென்று தோன்றியதால் செய்தேன்! மீறி என்னை ஏதாவது திட்டவேண்டுமென்று தோன்றினால் இங்கே தளத்தில் வந்து கமெண்ட்டாக போடுங்களேன், பார்க்கலாம்! )

    முத்தாய்ப்பாக, இதுவரை நம் நண்பர்களில் பலருக்கும் அள்ளிக்கொடுத்து உதவிகள் பல செய்துவரும் நம் அன்புள்ள அனாமதேயாக்களில் பிரதானமானவரை நேற்று அடையாளம் கண்டுகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. (உபயம் : அவரிடமிருந்து கிடைத்த ஈமெயில் ) சமீபத்திய 'புலன் விசாரணை'யின் தொடர்ச்சியாக எடிட்டருக்கும், நம் நண்பர்களில் சிலருக்கும் தன் அனாமதேயத்தால் களங்கம் ஏற்பட்டிருப்பதில் மனிதருக்கு ரொம்பவே மனவருத்தம்! (அவரிடமிருந்து கிடைத்த ஈமெயிலின் ஒருபகுதி - விரைவில்...)

    என்னிடம் கரூர் ராஜசேகரின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுக் கொண்ட நம் அன்புள்ள அனாமதேயா இன்று அவருக்கு அனுப்பியிருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா நண்பர்களே? ரூ.20,000 !!!

    "அண்ணா... காமிக்ஸ் நண்பர்களிடமிருந்து கிடைத்துவரும் இந்த எதிர்பாரா உதவிக்கு எப்படி நன்றி சொல்லப்போறோம்னே தெரியலைங்ணா" என்று உடைந்த குரலில் ராஜசேகரின் மனைவி நம்மிடம் சொல்லும்போது, நம் நண்பர்களையும், அவர்களை இனங்காண வைத்த இந்த காமிக்ஸ் உலகையும் - நெகிழ்வோடும், பெருமையோடும் நினைக்கத் தோன்றுகிறது!

    இந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க! _/\_

    ReplyDelete
    Replies
    1. வாவ்-ஸ்டன்னிங்....
      நண்பர்களின் நல்ல உளம் கண்டு
      கண்கள் பனிக்கிறது...

      நட்பு என்னும் நூல் எடுத்து பூமியைக் கட்டி நீ நிறுத்து....

      நட்பே காமிக்ஸ்; காமிக்ஸே கடவுள்...

      உதவிகள் செய்த நட்புகளுக்கும்,
      எடிட்டர் சாருக்கும்,
      அன்புள்ள அனாமதேய நண்பருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....

      Delete
    2. \\முத்தாய்ப்பாக, இதுவரை நம் நண்பர்களில் பலருக்கும் அள்ளிக்கொடுத்து உதவிகள் பல செய்துவரும் நம் அன்புள்ள அனாமதேயாக்களில் பிரதானமானவரை நேற்று அடையாளம் கண்டுகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. (உபயம் : அவரிடமிருந்து கிடைத்த ஈமெயில் ) சமீபத்திய 'புலன் விசாரணை'யின் தொடர்ச்சியாக எடிட்டருக்கும், நம் நண்பர்களில் சிலருக்கும் தன் அனாமதேயத்தால் களங்கம் ஏற்பட்டிருப்பதில் மனிதருக்கு ரொம்பவே மனவருத்தம்! (அவரிடமிருந்து கிடைத்த ஈமெயிலின் ஒருபகுதி - விரைவில்...) //....

      சூப்பர் ஈ.வி.
      இத்தனை நாளும் இருந்து வந்த களங்கம் துடைக்கப்பட்டுள்ளது....

      ஒரு குறிப்பிட்ட கருவியை வாசிப்பவர்களுக்கே , எடிட்டர் சார் சந்தா வழங்குகிறார் என தப்பாக எண்ணி வந்த சில பல ந(ப)ண்பர்களின் தவறான வாதம் பொய்த்துப் போனது.


      Delete
    3. வாவ்...வாவ்...மனதிற்கு மிக மிக மிக மகிழ்வான செய்தி...நமது காமிக்ஸ் நண்பர்களின் உதவியாலும்..ஊக்கத்தாலும்..கரூர் ராஜசேகர் சார் விரைவில் பூரண நலமடைந்து இங்கே தனது கமெண்ட்களால் இங்கே " நிறைய " போகிறார்...

      ஆசிரியருக்கும்...உதவி செய்யும் அத்துனை நல் உள்ளங்களுக்கும் ..அந்த அழகான " அநாமதேயர்க்கும் " ஈரம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் .

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. கண்கள் பணிக்கிறது...!

      Delete
    6. நண்பர்களின் நேசம் சிலிர்க்க வைக்கிறது.

      முன்னெடுத்துச் சென்ற ஈ.வி யாருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

      மெச்சத் தகுந்த பணி மேலும் தொடர வாழ்த்துக்ககள்.

      Delete
    7. அனாமதேய நண்பர்ளுக்கு மிகவும் நன்றிகள்
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      Delete
  46. Thanks editor for your attendance - Senthil Vinayagam.

    ReplyDelete
  47. Replies
    1. Thanks sir please help me tamil taypeng

      Delete
    2. எழுத்தானி
      உபயோகப்படுத்துங்கள்

      Delete
    3. செல்லினமும் நன்றாக இருக்கும்...
      2ல் எது எளிதா வருதோ அதை பழகுங்கள்.

      Delete
  48. நெகிழ்ச்சியான குரல் அது..!
    என்ன பேசுவதென்றே சகோதரிக்குத் தெரியவில்லை...!
    காமிக்ஸ் நண்பர்களின் அளப்பறிய,பரந்த,அன்பு நிறைந்த பங்களிப்பால் நல்லதொரு தொகை கரூர் நண்பர் ராஜசேகர் அவர்களின் வங்கிக் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ளது...!
    ஆச்சர்யம் கொள்கிறார்..!
    எத்தனையோ முறை திட்டி காமிக்ஸ் படிக்க விடாமல் செய்திருக்கிறார் இந்த அன்புச் சகோதரி...!
    அப்படியும் விடாமல் தெரு விளக்கின் வெளிச்சத்திலே அந்த மாதத்து அத்தனை புத்தகங்களையும் படித்து விட்டுத்தான் வீடு திரும்புவார் ராஜசேகர்...!
    காமிக்ஸ் நண்பர்களின் உதவும் கரங்களை மானசீகமாய் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறார்...!
    மிகப் பெரியதொரு சந்தோஷத்தில் அந்தக் குடும்பம் இப்போது இருக்கிறது...!
    நம்பிக்கை வெளிச்சம் துளிர் விட்டிருக்கிறது...!
    துளிர் விட காரணமான அத்துணை அன்பு உள்ளங்களுக்கும் ஆத்மார்த்தமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் நண்பர்களே...!
    ஞாயிறன்று வருகை தரவிருக்கும் நண்பர்களை வரவேற்கக் காத்திருக்கிறேன்..!

    ReplyDelete
    Replies
    1. நல்ல முன்மாதிரிக்கு நீங்கள் சிறந்த உதாரணம் குனா.... நெகிழ்ச்சியான பாராட்டுக்கள்.

      Delete
    2. ////மிகப் பெரியதொரு சந்தோஷத்தில் அந்தக் குடும்பம் இப்போது இருக்கிறது...!
      நம்பிக்கை வெளிச்சம் துளிர் விட்டிருக்கிறது...!
      துளிர் விட காரணமான அத்துணை அன்பு உள்ளங்களுக்கும் ஆத்மார்த்தமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் நண்பர்களே...!////

      உணர்வுப் பூர்வமான வார்த்தைகள்!!

      Delete
    3. தளமே தற்போது உணர்ச்சிப்பெருக்கால் நிரம்பியுள்ளது.

      Delete
    4. ஈவி ..மகத்தான பணி...வாழ்த்துகள்..உங்களை போன்ற உள்ளங்களை படைத்த கடவுளுக்கு நன்றிகள்...😊

      Delete
    5. அருமை நண்பர் குணா அவர்களே...

      தங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுதல்களுடன் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்..

      Delete
    6. நல்லது நடக்கும்..!
      நல்லதே நடக்கும்..!

      Delete
    7. நல்லதே நடந்து கொண்டிருக்கிறது குணா ஜி

      Delete
  49. ஈரோடு விஜய் & கரூர் குணா & எடிட்டர் & அநாமதேய நண்பர் & மற்ற அனைத்து நண்பர்களே...!

    மகத்தான பணி ..!!

    கரூர் ராஜசேகர் அவர்கள் பூரண நலம் பெற்று விரைவில் நண்பர்களை சந்திக்க புத்தகத்திருவிழாவிற்கு வருவார் ..!!

    ReplyDelete
    Replies
    1. அதே நம்பிக்கையுடன் நானும்

      Delete
    2. நண்பர் ராஜசேகர் விரைவில் குணமடையட்டும்.உதவிய
      நல்உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.

      Delete
  50. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் வணக்கம். நட்பு என்பது வெறும் எழுத்துகளோடும் வார்த்தைகளோடும் நிற்பதில்லை என்பதை இங்கே பல நண்பர்களின் செயல்பாடுகள் நிருபித்துள்ளன.

    ReplyDelete
    Replies
    1. உரசல், புரிதலின்மை எனும் காலைப்பனிகள்,
      நட்பெனும் உயிர்ம ஒளி பிரகாசிக்கும் போது விலகி சென்றுத்தானே ஆகனும்.

      Delete
  51. இப்போது இங்கே பரவி நிறக்கும் ஆனந்தமான ,மகிழ்வான அதே உணர்ச்சி பெருக்கோடு ஆசிரியரை வரவேற்க காத்திருப்போம் புது பதிவிற்கு....

    ReplyDelete
  52. அன்பு நண்பர் கரூர் ராஜசேகர் விரைவில் நன்கு குணமடைந்து, எப்போதும் போல நலமுடனும்,வளமுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..

    ReplyDelete
  53. 121வது. கடவுளுக்கு இரக்கம் இருக்கு குமாரு!

    ReplyDelete
  54. பாராட்டுகளுக்கு நன்றி நண்பர்களே! நம் அன்புள்ள அநாமதேயாக்களுடன் ஒப்பிட்டால் நான் செய்திருக்கும் இந்தக் இக்ளியூண்டு பணி ரொம்பவே அற்பமானது!
    அப்படியாப்பட்ட அ.அனாமதேயாக்களில் பிரதானமானவரை உங்கள் முன் ஒருசில வார்த்தைகள் உரையாற்ற இதோ அவரை மேடைக்கு அழைக்கிறேன்!

    (கூச்சப்படாம பேசுங்க அ.அ சார்... தொண்டையச் செருமிக்கிட்டு பேச்சை ஆரம்பியுங்க)

    அன்புள்ள ஈவி.
    தளத்தில் இதைப் பற்றி பகிர வேண்டும் என்ற உங்கள் ஆவல் எனக்கு புரிகிறது. ஒரு நல்ல செயலை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதன் மூலம் மேலும் பல நல்ல, பாஸிட்டிவ் செயல்களை தூண்டுவதற்கு இந்த மாதிரி நிகழ்வுகள் உதவும். ஆனால் தற்போதைக்கு என்னை வெளிபடுத்திக் கொள்ள வேண்டுமா என்று யோசித்து வருகிறேன்.
    என்னுடைய அநாமதேய செயல்கள் மூலம் ஆசிரியருக்கும், சேந்தம்பட்டி என்ற பெயரால் அறியப்படும் நண்பர்கள் குழுவிற்கும் மற்றும் அன்புப்பரிசு பெற்ற நண்பர்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டது எனக்கு மிகுந்த மன உளைச்சலே. தெரிந்தோ தெரியாமலோ நடந்திருந்தாலும் அவர்களின் சங்கடங்களுக்கு காரணமானதிற்கு முதலில் என்னுடைய மனமார்ந்த மன்னிப்புகள்.
    இதில் கார்ப்பரேட் சதியோ, பெற்றோரின் உரிமையில் தலையிடும் எண்ணமோ சத்தியமாகக் கிடையாது. பழைய காமிக்ஸ் வாங்கி விட்டு காசு கொடுக்கவோ, வாசகர்கள் விலை அதிகரிப்பை எதிர்க்காமல் இருக்கவோ கொடுக்கப்பட்டதும் இல்லை. இதெல்லாம் அதீத கற்பனையே. எனக்கும் லயன் நிறுவனத்திற்கும் நீண்ட நாள் சந்தாதாரன், வாசகன் என்பதைத் தவிர எந்த தொடர்பும் கிடையாது.
    அன்பிற்கும் அதன் வெளிப்பாடாய் வரும் செயல்களுக்கும் எந்த முகாந்திரமும் கிடையாது. இதை உண்மையான நிபந்தனையற்ற அன்பை உணரக்கூடிய அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடும். காமிக்ஸ் மூலம் எனக்கு கிடைத்த நட்பையும், இத்தளத்தையும் இம்மாதிரி செயல்களையும் செய்ய வசதி செய்யும் ப்ளாட்பார்ம் ஆகவே பார்க்கிறேன். செந்தில் சத்யாவுக்கு மண்டையில் அடிபட்ட செய்தி தெரிந்தவுடன் ஏற்பட்ட அதே knee jerk ரியாக்சன் போலத்தான் நான் முன்பின் அறியாத ராஜசேகர் சார், மூத்த வாசகர் ATR ன் சிரமங்களை அறிந்த போதும்.
    ராஜசேகரின் உடல்நலம் பற்றிக் கேள்விப்பட்ட உடனே செயலில் இறங்கிய (அதனால் தான் உங்களை ஆசிரியர் செயலாளர் என விளிக்கிறாரா எனத் தெரியவில்லை.) உங்களை போல் என்னால் செயல்பட முடியாத காரணத்தால், என்னால் முடிந்த உதவியாக செய்கிறேன். இது பெரிய விசயம் அல்ல. எண்ணிக்கை என்றும் பெரிது அல்ல. எண்ணமே பெரிது. எனவே இங்கு நண்பர் ராஜசேகருக்காக பிரார்த்தித்த, இயன்ற உதவி செய்த நணபர்கள் அனைவருமே பாராட்டுக்குரியவர்களே.
    யார் புழுதி வீசினாலும் நான் என்னால் இயன்றவை தொடர்ந்து செய்யத்தான் போகிறேன். இதுவரை சம்பந்தம் இல்லாதவர்கள் வாட்ஸ்ஆப்பிலும் முகநூலிலும் புழுதி வீசிய போது எனக்குத் தெரியவில்லை. நான் மிகவும் மதித்த ஒரு நண்பரே தளத்தில் ஆசிரியர் மற்றும் நண்பர்கள் மேல் புழுதி வாரி வீசும் போது இதை சரி செய்யும் பொறுப்பும் என்னுடையதே. இதுவுமே மற்ற நடுநிலை நண்பர்கள் ஆசிரியரையும் நண்பர்களையும் தவறாமல் எண்ணக்கூடாது என்பதற்காகத் தான்.

    எனக்கு அநாமதேயமாக செய்வதே பிடிக்கும். ஏனென்றால் அது அன்புப்பரிசு பெற்றவரை கொடுத்தவருடன் Bind செய்யாது. எனக்கு அதுவே மிகப்பெரிய வசதி. ஆனால் இந்நிகழ்ச்சியால் நானே என்னை ஆகஸ்ட் புத்தக விழா சந்திப்பிற்கு பின் வெளிப்படுத்திக்கொள்ளலாம் என்று தான் எண்ணிக்கொண்டுள்ளேன். அல்லது அதற்கு முன்னேயே ஒரு வேளை நிலைமை கட்டுக்கடங்காமல் போனால்.
    அதுவரை உங்களை அமைதி காத்திடவும் வேண்டுகிறேன்.

    பிரியமுடன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. உங்களின் எண்ணமும் செயலும் மிகச் சரியே. பாராட்டுக்கள்.

      Delete
    2. அழகான எண்ணங்களும்..உயர்வான சிந்தனைகளும்...பாசமான நேசமும்..கொண்ட அன்புள்ள இந்த அநா ..(சாரி இனி அண்ணனே..) இந்த அண்ணனின் அன்புக்கு நாங்களும் பாத்திரபட்டதில் பெருமகிழ்ச்சியுடன் தலைவணங்குகிறேன்...

      Delete
    3. அன்புள்ள அ.அ.@ உங்கள் அன்புள்ளம் இங்கே கேள்விக்குள்ள்ளாக்கப்பட்டபோது பெருத்த சங்கடமாக இருந்தது.

      "அது இப்போது விலகியுள்ளது."

      உங்கள் பிரியமான செய்கை யாருக்கும் மன அயர்ச்சியை தந்து விடக் கூடாது என உங்களை வெளிப்படுத்த முடிவு செய்தது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது.... உங்கள் நல்ல உள்ளத்திற்கு தலை சாய்த்த வணக்கங்கள்....

      Delete
    4. //எனக்கு அநாமதேயமாக செய்வதே பிடிக்கும். ஏனென்றால் அது அன்புப்பரிசு பெற்றவரை கொடுத்தவருடன் Bind செய்யாது. எனக்கு அதுவே மிகப்பெரிய வசதி. //

      உங்கள் நோக்கம் உயர்வானதே என்றாலும் ஒரு க்ரூப் உறுப்பினர்களுக்கு மட்டுமே இதற்கு முன்பு சந்தாவை வாரி வழங்கியபோது, இந்த பொது தளத்தில் விளம்பரமாக அமையாது பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம் அல்லவா?! என்பதே பலரின் ஆதங்கம்.

      ஆசிரியர் மூலமாக கொடுக்கவேண்டிய காரணம் என்ன என்றே பலருக்கும் மிகுதியான குழப்பம் இப்பவும்.

      இது பலதரப்பட்ட வாசகர்களும் பார்வையிடும் தளம் என்பதை அனைவரும் மறந்தது எப்படியோ? ஆசிரியர் உட்பட..

      என்னை திட்டும் முன்பு கொஞ்சம் விசாலமாக யோசியுங்கள் நண்பர்களே ....

      Delete
    5. //இதில் கார்ப்பரேட் சதியோ, பெற்றோரின் உரிமையில் தலையிடும் எண்ணமோ சத்தியமாகக் கிடையாது//

      உங்கள் தரப்பில் வேண்டுமானால் அப்படி எண்ணிக் கொள்ளலாம் ஆனால் ஒரு தன்மானம் உள்ள தந்தையாக அல்லது இந்த வயதில் படிப்பே பிரதானம் அல்லது படிப்பு மட்டுமே பிரதானம் என்று நினைக்கும் பெற்றோராக இருந்திடும் பட்சத்தில் உங்கள் பதில் என்ன?

      Delete
    6. ஸ்டீல் மற்றும் நண்பரகளுக்கு வேண்டுகோள்.

      தளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல சூழ்நிலை உருவாகி வருகிறது. அந்திசையிலேயே செல்லட்டும். இந்தக் கேள்விகளுக்கு யார் பதில் அளித்தாலும் அது கற்பனையே. நல்லதாக நினைத்தால் நல்லது. கெட்டதாக நினைத்தால் கெட்டது. பதில் அளிக்க வேண்டியவர்களே கேள்விக்கான தகுதியையும் முடிவு செய்யட்டும். மற்றவர்கள் ஏன் சிரமப்படுவானேன்?

      ஆசிரியர் நம் பக்குவம் பார்தது திரும்பி வரக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவோம்.

      தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

      Delete
    7. ஒரே ஒருவர் - மாயாவி சிவா - ஒரு சந்தேகத்தை கிளறிவிட்டதற்காக அல்லது தவறான புரிதலை தெரிவித்ததற்காக இத்தனை விளக்கங்கள், விவாதங்கள் பொதுவெளியில் தேவையா? இந்த விளக்கங்கள் தேவைப்படாத மெஜாரிட்டி விசிட்டர்களையும் கொஞ்சம் நினைத்துப்பார்க்கவும்.

      தன் தரப்பில் நியாயம் இருந்தாலும் அதனை விளக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் சிறு சிறு பிரயத்தனங்கள் எங்கும் என்றைக்கும் நான்கைந்து கேள்விகளை மீதம் வைத்தபடிதான் இருக்கும், சிலரின் பார்வையில் களங்கத்தை மட்டுமே பெரிதாக்கிக்கொண்டிருக்கும். சந்தேகங்களுக்கு நடுவிலும் இயல்பாக செயல்பட இயன்றால் மட்டுமே சில செயல்கள் அதற்கான மரியாதையை பெரும். உதவிபுரிந்த அனாமதேயரும், எடிட்டரும், பயனடைந்தோரும் பிறரின் சந்தேக வார்த்தைகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் நகர்ந்தால் - அது ஒரு நல்ல உதாரணமாக அமையும் என்பது என் கருத்து.

      Delete
    8. வழிமொழிகிறேன் மகிஜீ..& ரமேஷ் சார்..


      எல்லாம் நன்மைக்கே...

      Delete
    9. அருமை
      மகி ஜி & ரமேஷ் ஜி

      Delete
    10. ///உதவிபுரிந்த அனாமதேயரும், எடிட்டரும், பயனடைந்தோரும் பிறரின் சந்தேக வார்த்தைகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் நகர்ந்தால் - அது ஒரு நல்ல உதாரணமாக அமையும்///---- உண்மை ரமேஷ் ஜி; அருமையாகச் சொன்னீர்கள்.

      Delete
    11. // உதவிபுரிந்த அனாமதேயரும், எடிட்டரும், பயனடைந்தோரும் பிறரின் சந்தேக வார்த்தைகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் நகர்ந்தால் - அது ஒரு நல்ல உதாரணமாக அமையும் //

      +11111

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. // உதவிபுரிந்த அனாமதேயரும், எடிட்டரும், பயனடைந்தோரும் பிறரின் சந்தேக வார்த்தைகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் நகர்ந்தால் - அது ஒரு நல்ல உதாரணமாக அமையும் என்பது என் கருத்து.//
      +111111
      உண்மை.

      Delete
  55. ***** விரட்டும் விதி **** சந்தாதாரர்களுக்கான இலவச இணைப்பு ****

    32 பக்கங்களிலும்கூட ஒரு டெக்ஸ் கதையை - சில யூகிக்க முடியாத திருப்பங்களோடு - பரபரப்பாய் நகர்த்திச் சென்று கைதட்டல் பெற முடியும் என்று நிரூபித்திருக்கிறது இந்த 'கலர் டெக்ஸ்' இலவச இணைப்பு!

    செம ஓவியங்கள் - சூப்பரான கலரிங்! ஓவியங்களைப் பார்க்கும்போது 'கதை ஒருவேளை கி.நா பாணியா இருக்குமோ' என்ற சந்தேகம் எழ வாய்ப்புண்டுதான்! ஆனால் அப்படியெல்லாம் இல்லை - டெக்ஸின் வழக்கமான (அதிரடி) பாணிதான்!

    புத்தக வடிவமைப்பு எளிமையானதாகத் தோன்றினாலும், பளபள ஆர்ட் பேப்பரில் அந்த சைஸ் - ரொம்பவே க்யூட்!

    இந்த வருடத்தில் இதேபோல மொத்தம் ஆறு மினி 'கலர் டெக்ஸ்' புத்தகங்கள் கிடைக்கப் போகிறதென்றாலும் ( நண்பர் ஜெகத் குமார் சொன்னதுபோல) மொத்தமாக இதையெல்லாம் ஒன்று சேர்த்து பைண்டிங் செய்துவிட்டால் - அடடே! கிட்டதட்ட ஒரு குண்டுபுக் ரெடி!!

    என்னுடைய ரேட்டிங் : 9.5/10

    ReplyDelete
    Replies
    1. நல்லது. இந்த வாரம் படித்து விடுகிறேன்

      Delete
    2. ஈவி எல்லா சைசுலயும் வந்தா நல்லாருக்கும்....தலையில்லா போராளி சைசும் கூட...அந்த சைசும் இனி வருடம் ஒன்று எனும் போது ...அதுக்கு நடுலயும் வச்சி பாதுகாக்கலாமே..ஓவியமும் வண்ணமும் கலக்கல்

      Delete
    3. என்னமோ தெரியல.என்ன மாயமோ தெரியல. இன்னும் எந்த புக்கும் படிக்கவே இல்லை.
      (பின்னணியில் சோக இசை) .

      Delete
    4. // தலையில்லா போராளி சைசும் கூட...அந்த சைசும் இனி வருடம் ஒன்று எனும் போது ...அதுக்கு நடுலயும் வச்சி பாதுகாக்கலாமே.. //
      -1

      Delete

  56. ரின் டின் கேன் அதகளம்:

    "என் நண்பேண்டா...!!!"

    *அட்டைப்படத்தில் இருக்கும் காட்சியே உள்ளே இருக்கும் காமெடி விருந்துக்கு கட்டியம் கூறுகிறது. இது வரை வந்த ரின் டின் சாகசங்களுக்கு இணையாகவே, சிரிப்பு தோரணம் நிரம்பிய சாகசமிது. கதை முடிவதற்குள் ஏகப்பட்ட இடங்களில் குபீர் சீரிப்பை வெளிப்படுத்திய என்னை என் அஸிஸ்டன்ட் ஒரு மாதிரியாகப் பார்த்து கொண்டே, எந்நேரமும் தெறித்து ஓட கடை வாசலையே பார்த்து கொண்டே இருந்தான்.

    *ஆரம்ப பேனலிலேயே ஆரவாரமான சிரிப்பு வெடி துவங்கிடுது. "மிஸ்டர் டைரக்டர்" என்ற சிறையாய்வு இன்ஸ்ஸின் குரலைக் கேட்டதும் கடுப்பாகும் டைரக்டர் உதிர்க்கும் பொன் மொழி, "வந்துட்டானா அந்தத் தீவட்டி தடியன்?" என்பதை கண்டதும் பொங்கும் சிரிப்பு கதை நெடுகிலும் தொடருது.

    *சிறைச்சாலையில் சுமை தூக்க கழுதைக்குப் பதில் ஒட்டகம் ஒதுக்கீடு ஆகியிருக்கும் தகவலைத் தொடர்ந்து, டைரக்டர் & பாவ்லோவின் ரியாக்சன்களை ரசித்து முடித்தோமெனில், அடுத்து கொள்ளைக்கார ரயில்வே கண்டக்டரோடு பாவ்லோவின் ரணகள காமெடி சீக்வென்ஸ் ஒரு 7பக்கங்களில் நம்ம சிறுகுடலையும் பெருங்குடல் சமாச்சாரங்களையும் புரட்டி எடுத்து விடுகிறது.

    *ஒட்டகத்தை பிக்கப் பண்ண பாவ்லோவோடு "யுமா"வுக்கு கிளம்பும் ரின் டின்னார் , ரயிலோடு போட்டியாக ஓடி குகைச்சுவரில் "பணால்" என மோதும் இடம் செம கெக்கெ பிக்கே...ஹெ...ஹெ...

    *ஒருவழியாக ரயிலில் தொற்றிக் கொள்ளும் ரின்டின்டின் சேட்டைகள் வரிசையாக குபீர் சிரிப்போடு தொடர்கின்றன. சோப்பை விழுங்கும் ரின் டின்னைப் பார்த்து தெறித்து ஓடும் பயணிகள், "விதி" வசத்தால் மீண்டும் அதே ரின் டின்னை கோச் வண்டியில் பார்த்து அடையும் "திடுக்"...ஹா...ஹா & அதை அடுத்து கோச்சின் குதிரைகளில் பயணிப்பது செம ரகளையான கட்டம்...(முதல் முறை இப்படி ஒரு பயணத்தை ரசிக்கிறோம் என நினைக்கிறேன் நண்பர்களே)

    *யுமாவில் ஒட்டகங்கள், ராணுவ சேவைக்கு வந்த " ரகசியம்", யுமா கோட்டை கூத்துக்கள் என- சில பல "ப்ரூம்ம்ம்ம்ம்" கள் & "புளிச்ச்ச்ச்", "தடால்", " பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்" களுமாக வயிற்றைப் பதம்பார்க்கும் படலம் தொடருது.

    *யுமாவில் இருந்து ஒருவழியாக கிளப்பும் மூவரணி,
    அரிசோனா பாலையில் சாகசம்(???) செய்யும் பஃபலோ பில் அணியோடு எதிர்பாராமல் ஐக்கியமாக தொடரும் கூத்துகள் செம.

    *பில்லின், சீரியஸான சாகசமானது செமயான காமெடியாக மாறிப்போகிறது. இதை ஏற்கெனவே லயன் காமிக்ஸ்ஸில் நாம் ஒருதடவை ரசித்து உள்ளோம். லயன் வெளியீடு 129- " ஹாலிவுட்டில் ஜாலி"யிலும் சீரியஸ் படம் எடுக்கப் பார்த்து காமெடி படமாக மாறி செம ஹிட் ஆகி எதிர்பாரா டுவிஸ்ட் கொடுக்கும். அதே ஸ்டைலில் இங்கேயும் நடக்கும் கூத்துக்களில் இருந்து எப்படி தப்பி, மீண்டும் சிறைச்சாலையை அடைகிறார்கள் பாவ்லோவ் அணியினர் என்பது சுவையான க்ளைமேக்ஸில் காணலாம்.

    *சிறைச்சாலையை அடையும் போது மீ..மீ..ஈண்டும் ஒரு செம நகைச்சுவையான டுவிஸ்ட். அதை விவரிப்பதை விட இம்மாத லயன் இதழ் எண் 318-"என் நண்பேண்டா" வில் காணுங்கள். பழைய வாசகர்களுக்கு மட்டும் அந்த க்ளைமாக்ஸ் டுவிஸ்ட் என்ன என ஒரு சின்ன க்ளூ... (ஏற்கெனவே லயன் சூப்பர் ஸ்பெசலில் வெளியாகி செக்க வரவேற்பு பெற்ற, லக்கி சாகசமான பயங்கர பொடியன் கதையின் 2ம் பாகமாக மினி லயன் இதழில் வெளியான அதிரடிப் பொடியன்-2 ல் உள்ள க்ளைமாக்ஸ் தான் அது).

    ########################

    ReplyDelete
    Replies
    1. // பில்லின், சீரியஸான சாகசமானது செமயான காமெடியாக மாறிப்போகிறது. இதை ஏற்கெனவே லயன் காமிக்ஸ்ஸில் நாம் ஒருதடவை ரசித்து உள்ளோம். லயன் வெளியீடு 129- " ஹாலிவுட்டில் ஜாலி"யிலும் சீரியஸ் படம //

      அட எனக்கு இது மறந்து விட்டது! அருமையான நினைவு கூறல்!

      Delete
    2. ///அட எனக்கு இது மறந்து விட்டது! அருமையான நினைவு கூறல்!///--- தேங்யூ பரணி ஜி.

      இந்த ஜாலி கதை ஒன் ஆஃப் மட்டுமே, ஆகவே சட்டுனு நினைவுக்கு வருவது கடினமே ஜி.

      அந்த வயதான செவ்விந்திய சீஃப்; அவரது "அழகான" பெண் (வடிவேல் தங்கை மணிமேகலை மாதிரி); செவ்விந்திய மரபுகளை ஏறக்குறைய மறந்து போன இளம் வீரர்கள்; ("வோ" சொல்வது கூட மறந்துடும்) செவ்விந்திய கேரக்டரில் டூப் போட்டு நடிக்கும் நடிகர்; தன்னுடைய அதீத கட்டணத்தால் சீஃபை மயக்கம் போட வைக்கும் நடிகை; அத்தனையும் கட்டுக்குள் வைக்கும் ஷெரீஃப் கம் நாயகன் "ஜாலி".

      செம லூட்டியான கதை; செவ்விந்திய மணிமேகலை நடிகரை கட்டிபிடிக்க வர நடிகர் பதற ரகளையான கட்டம்...

      எங்கயோ பெட்டியில இருக்கும், தேடிப்பிடித்து இன்னொரு முறை படிக்கனும். மறக்க இயலா வித்தியாசமான சாகசங்களில் ஒன்று இது...

      கார்டூன் ஜாம்பவான் நம்ம கிட் அங்கிளோட விமர்சனம் அந்த கதைக்கு படிக்கனும்; ஆவண செய்யுங்கள் அங்கிள்.

      Delete
  57. மரணம் ஒரு முறையே...என்னா ஒரு அட்டகாச சாகசம்...துவக்கம் நிறுத்தி , நிதானமாக பொறுமயா படிக்க வைக்க , நாயகி துரோகியா இருப்பாளா ,எனக் கோவப்பட செய்தால்் ,உண்மை அறிய சந்தோசம் கலந்த சோகம் . அனைத்தும் எளிதாய் தோன்றும் செல்டனோட பரபரப்பின்றி பயணித்தால் , நாயகியுடன் இணைந்த பின் அனலடிக்கும் வேகம்்....

    ReplyDelete
    Replies
    1. சங்கேத வார்த்தை வராததால் அடக்கி வாசிக்கும் உஷாரான ஷெல்டன் , அடக்கி வாசிக்க , டெனாயரின் டிரக் காதலோட பயணிக்க , ஏற்கனவே பார்த்த களம் எனினுும் , கதை நகர்த்தும் லாகவத்தால் பின்னிப் பெடலெடுக்கிறார் ஆசிரியர் .ஷெல்டன் முதல் சாகசத்தில் எப்படி கவர்ந்தாரோ அதே போல் ...ஒவியங்களும் , வண்ணங்களும் , பளபளக்கும் அச்சுத் தரமும் அஙஹ்கயே அழைத்துப் போக ....இயற்கை தீட்டிய ஓவியங்கள் அதை விட அதகளம் ...வானிலஐ அறிக்கையை மறக்காமல் தொடர் மழையினூடே தொடர் பயணம் ...

      Delete
    2. தன்னை கட்டாயபடுத்தி சாகசத்துக்கு மூன்று மில்லியன் தர மறுக்கும் அதிகாரியிடம் அதே பாணியில் gst போட்டு ஜந்தாக வாங்கும் செல்டன் சந்தோசத்துடன் சபாஷ் போட வைக்கிறார்...


      Delete
    3. ரசித்த உரயாடல்....கைகளை கீழே போடு டியர்....என் புஜங்கள் வலிக்கின்றன....து...துப்பாக்கி மீது ஏக மரியாதை எனக்கு...
      அந்த மரியாதை உன்னை வாழ்க்கையில் ரொம்ப தூரத்திற்கு இட்டுச் செல்லும்......
      மொத்தத்தில் பரபரப்பினுடே கனக்கச் செய்யும் காதல் கதை . காதலுக்காக எனும் போது காதல் மேல் மரியாதை ஊற்றெடுக்கிறது...ஷெல்டன் வழக்கமான கததைதான் , வழக்கம் போலவே அசத்தல்தான்....

      Delete
  58. ,நண்பரர்களே புதிய பதிவுு தயார்னு யாராச்சும் போடுங்கப்பூ...

    ReplyDelete
    Replies
    1. இன்று இரவோ...அல்லது நாளை விடிகாலையிலோ செயலர் இது போல் வெளியிடுவார் என்று நம்பிக்கை

      வைப்போம்...


      ப்போம்...

      போம்..

      ம்...

      Delete
  59. ஆசிரியர் சாரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே...!!!

    ReplyDelete