Monday, July 10, 2017

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஆர்டின் வாழ்க !!

நண்பர்களே,

வணக்கம். நிறைய தடவைகள் ஹாட்லைனிலும், நமது இன்ன பிற மாட்லாடல்களின்போதும் செப்பிய அதே விஷயம் தான் ; ஆனால் இன்னொரு முறை இங்கே சொல்லி வைத்தால் தப்பாகாது என்று தோன்றியது. அரை நிஜார்களும், பள்ளிப் பைகளும் நம்மை அலங்கரித்த - or rather உங்களை அலங்கரித்த நாட்களில் - ஏப்ரல் & மே மாதங்கள் ஒட்டுமொத்தமாய் சோன்பப்டியாய் இனித்திடுவது வழக்கம். மாறாக ஜூன் & ஜூலை மாதங்கள் வேப்பங்காயாய்க் கசப்பது வாடிக்கை ! So என்னை அறியாமலே, "ஜூலை என்றாலே சுமாரான விற்பனைகள்" என்றதொரு template தலைக்குள்  நிலைகொண்டு விடும் ! 

ஆனால் -

இந்த ஜூலை 5 -ம் தேதி உங்கள் கைகளுக்கு நமது கூரியர் கவர்கள் கிடைத்த நாள் முதலாய் - நமது அலுவலக போன்களிலும் சரி ; ஆன்லைன் ஸ்டோரின் தளத்திலும் சரி - அதகள அனல் பறக்கின்றது !! மாமூலாய் 'ஹாவ் ' என்று கொட்டாவி விட்டபடிக்கே நம்மைப் பார்த்திடும் சில ஏஜெண்ட்கள் கூட, " சிக் பில்னு ஏதோ ஒரு  புக் வந்திருக்காமே .....அதிலே மறக்காமே 20 போட்டிடுங்க !!" என்று பரபரக்கிறார்கள் ! "இது limited edition ; ஆகையால் கடன் கிடையாது sir !" என்று நம்மவர்கள் சொல்லும் போதும் முகம் சுளிக்காது இயன்ற முன்பணத்தைத் தட்டி விடுகிறார்கள் ! 

ஆன்லைனிலோ திருவிழாக் கோலம் தான் !! வழக்கமாய் வார நாட்களில் மாயாவிகாரு pack ஒன்றிரண்டு போணியாகும் ; டெக்சின் சில இதழ்களைத் தேடி பிடித்து ஆர்டர் செய்யும் சில புண்ணிய ஆத்மாக்களின் தலைகள் தென்படும். ஆனால் கடந்த நாலைந்து நாட்களாய் அண்டர்டேக்கர் ஒரு பக்கம் ; LADY S இன்னொரு பக்கம் ; லயன் # 300 ; ஜூலை pack  - என்று அதகளம் அரங்கேறி வருகிறது !! பற்றாக்குறைக்கு LADY S ஆங்கில Cinebook இதழ்களும் பறந்து வருகின்றன !!

But எல்லாவற்றிற்கும் சிகரம் நமது ஆர்டினின் அழகுமுகம் ஜொலிக்கும் சிக் பில் ஸ்பெஷல்லின்- அதிரடி விற்பனை தான் !! பொதுவாய் ஆன்லைனில் நண்பர்கள் கொள்முதல் செய்திடும் போது - கார்ட்டூன் இதழ்களுக்கு கல்தா கொடுத்து விடுவது வாடிக்கை ! ஆனால் இம்முறையோ நிலைமையில் ஆரோக்கியமான மாற்றம் ! 75 % ஆர்டர்களில் உட்ஸிட்டி கும்பல் இடம்பிடித்துள்ளது ! Of course - "கார்ட்டூன்களுக்கும், எனக்கும் ஏழாம் பொருத்தம் !" என்று தொடர்ந்திடும் வாடிக்கையாளர்களும் உள்ளனரே ; but இம்மாதம் நிறைய கார்ட்டூன் எதிர்ப்புக் கோட்டைகளை ஆர்டினின் கள்ளமிலாப் புன்னகை சிதறச் செய்துள்ளது அப்பட்டம் !! இன்றைக்கு நம்மிடையே மட்டுமொரு தேர்தல் நடத்தி அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்வதாயின் 100 - 0 என்ற வோட்டு எண்ணிக்கையில் டாக்புல்லின் சகா வெற்றிவாகை சூடி ஷெர்வானி மாட்டிக்கொண்டு நிற்பது நிச்சயம் !! வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஆர்டின் சார் வாழ்க !! 
சூப்பர் 6 அறிவித்த போது நம்மிடையே கொஞ்சமாய் சலனங்கள் ; இது இப்போ தேவை தானா ? இந்த விலைகள் சரி தானா ? என்ற விவாதங்கள் தலைதூக்கியதை நாமறிவோம் ! But ஆறில் நான்கு உங்களை எட்டிப் பிடித்து விட்ட நிலையில் - இந்தாண்டின் சந்தோஷத் தருணங்களில் ஒரு கணிசமான பங்கை SUPER 6 நமக்குத் தந்துள்ளதை மறுப்பதற்கில்லை என்பேன் ! என் மூக்கும் ; உங்கள் பணங்களும் சேதாரமின்றித் தப்பித்துள்ளதற்கு ஆண்டவனுக்கு, லக்கி லூக்குக்கும் ; இளவரசிக்கும் ; ஜெரெமியாவுக்கும் ; சிக் பில் & கோ.வுக்கும் அந்த வரிசையில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் !!

Last but not the least - சூன்ய மாதமாய் மண்டைக்குள் நிலைகொண்டிருக்கக்கூடிய ஜூலை மாதத்தை ஒரு அட்டகாச அதிரடி மாதமாய் மாற்றி வரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பவுண் மோதிரம் போட ஆசை தான் ; but சங்க நிதிநிலைமைக்குச் சவால் விடும் நம்மள் கி நிதிநிலைமை அதற்கு ஒத்துழைக்க மறுப்பதால்  - பவுனுக்குப் பதிலாய் பன் மாத்திரமே  சாத்தியமாகிறது ! ஈரோட்டில் மறக்காமல் கேட்டு வாங்கி கொள்ளுங்கள் guys !! 

Jokes apart - இங்கு கூத்தும், கும்மாளமுமாக அரங்கேறும் ஒவ்வொரு நாளோடும் , நமது இதழ்களின் ஆரோக்கியத்திற்கும் ஒரு நேரடித் தொடர்பு இருப்பதை சத்தியமாய் மறப்பதற்கோ ; மறுப்பதற்கோ நான் தயாரில்லை ! உங்கள் ஒவ்வொருவரின் வருகைகளிலும், அளவளாவல்களிலும்  - நிறைவது கல்லா மாத்திரமல்ல guys ; உள்ளமுமே !! நீங்கள் ஒவ்வொருவருமே காமிக்ஸ் வாசகர்கள் ; ஆர்வலர்கள் மட்டுமல்ல - காமிக்ஸ் தேசத்துத் தூதர்களுமே ! Keep rocking Ambassadors !!!
P.S : கடந்த பதிவின் load more  இறுதிக்கட்ட நெரிசலுக்குள் உங்களது கதை விமர்சனங்கள் புதைந்து கிடப்பின், அவற்றை இங்கே ஒரு மீள்பதிவு செய்திடுங்களேன் all ? Thanks !

308 comments:

  1. Hi sir இரண்டு நாட்களாக வேலைகள் அதிகமிருந்ததால் பின்னூட்டமிட முடியவில்லை இனி தொடரும்

    கொரீயர் கிடைத்தது நன்றிகள் சார்

    ReplyDelete
  2. "நள்ளிரவுப் பதிவு" க்கு நன்றிகள் சார்.

    ReplyDelete
  3. Tex
    க்யூபா படலம்
    -------------

    கதையை நீங்கள் தேர்ந்தெடுத்தபோதே தெரிந்தது விட்டது. இது ஹிட்டடிக்குமென்று

    மெபிஸ்டோ கதைகளை போல் இல்லாவிட்டாலும் வித்யாசம்மிக்க ஒரு கதையாய் அமைந்து விட்டது. மாதாமாதம் அதிரடியான டெக்ஸ்ஸை மட்டும் எதிர்பார்த்தால் நீங்கள் இப்படி விதம் விதமாக செலக்ட்டிவா போட்டு தாக்குறீங்க. அதுவே ரசிக்கும்படியாக இருக்கிறது.

    இம்மாத டெக்ஸ் 08/10

    ReplyDelete
  4. ஆசிரியரே அடுத்த மாதம் மரணத்தின் நிறம் பச்சை ஆர்டர்களில் முதலிடம் பிடிக்கும்

    ReplyDelete
  5. Le jour du soleil noir + 17

    எப்போ சாா்??

    We are waiting???

    ReplyDelete
  6. பூஊஊவ்... பூஊஊவ்...

    கஷ்டப்பட்டு டைப் பண்ணி சித்தே முன்னேதான் லேடி-Sக்கு விமர்சனம் போட்டேன்... அது இப்ப 'கடந்த பதிவு' ஆகிடுச்சு!

    பூஊஊவ்.. பூஊஊவ்..

    ReplyDelete
    Replies
    1. ஹய்யா! அப்டிதான் வேணும்!!

      ஹிஹிஹி!!

      Delete
    2. சித்தே கீழே போய் அங்கேயும் ஒரு "ஹைய்யா!அப்டித்தான் வேணும்" போட்டிடுங்க மிதுன் சார்!

      நாட்டுல எல்லாரும் சந்தோசமாத்தான் இருக்காங்க போலிருக்கு!

      Delete
    3. ஈ.வி. தூள் கெளப்பிட்டிங்க!

      Lady S!!

      அதுவரைக்கும் வந்த உங்களுடைய பதிவுகளிலேயே இதுதான் பெஸ்ட்!!

      மற்ற விமா்சனங்கள் எல்லாவற்றையும் விட அற்புதமான பதிவு!!

      இந்தக் கதைக்கு ஒரு நல்ல விமா்சனம் எழுத வேண்டும் என நினைத்தேன்!!

      அதை நீங்க எழுதி பிரம்மாதப்படுத்தி விட்டீா்கள்!!

      Delete
    4. ///அதுவரைக்கும் வந்த உங்களுடைய பதிவுகளிலேயே இதுதான் பெஸ்ட்!!///

      பாத்தீங்களா மக்களே?! இவரே ( நண்பர் மிதுன்) இங்கே போனமாசம்தான் வந்தவராம்... இதுவரைக்கும் என்னோட பதிவுகள்லயே இதுதான் பெஸ்ட்டாம்...

      சரி, இருந்தாலும் இருக்கலாம்! ஷானியாவைப் பார்த்தமாத்திரத்தில் பொங்கி பிரவாகமெடுத்த கவிதைகளை நான் விமர்சனமாக மாற்றிவிட்டேனோ என்னமோ?!! ;)

      பாராட்டுகளுக்கு நன்றி மிதுன் அவர்களே! _/\_

      Delete
    5. //பாத்தீங்களா மக்களே?! இவரே ( நண்பர் மிதுன்) இங்கே போனமாசம்தான் வந்தவராம்... இதுவரைக்கும் என்னோட பதிவுகள்லயே இதுதான் பெஸ்ட்டாம்...///

      மிதுன் சொன்னதுல என்ன தப்பு ஈவி ?? அவர் போன வாரம் பிளாக்கில் எழுத ஆரம்பித்து இருந்தாலும்தான் என்ன ?

      மௌன பார்வையாளராக உங்க கமென்ட் எல்லாத்தையும் படிச்சு இருக்கலாம்ல ???

      நான் பிளாக் வந்த புதுசுல உங்க கமென்ட் எல்லாம் படிச்சு சிரிச்சு அப்புறம் அதுக்கு முன்னாடி வந்த எடிட்டர் பதிவு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா படிச்சு அதுல உங்க கமென்ட் எங்க இருக்குன்னு தேடி தேடி படிச்சு இருக்கேன் ...

      நீங்க ஜாம்பவான் மாதிரி ...உங்க பலம் உங்களுக்கே தெரியாது ..

      இப்படிக்கி

      ஈவியின் நூற்றுக்கணக்கான ரசிகர்களில் -துரதிர்ஷ்டவசமாக ஆண் ரசிகர்களில் :-) --- ஒருவன்

      Delete
    6. (துரதிர்ஷ்டமாக ஆண் ரசிகர்களில்) அந்த நூறில் நானும் ஒருவன்

      Delete
    7. //(துரதிர்ஷ்டமாக ஆண் ரசிகர்களில்) அந்த நூறில் நானும் ஒருவன்//
      Me too

      Delete
  7. ஈரோடு திருவிழாவுக்கு வர இயலாதவர்களுக்கு ஒரு பன் கூரியரில் அனுப்பப்படும்.

    ReplyDelete
  8. பூஊஊவ்... பூஊஊவ்... ( இது அதே பூஊஊவ் இல்லீங்)

    'கை சீவம்மா கை சீவு' படிக்க ஆரம்பிச்சேன். நல்லா பரபரப்பா போய்க்கிட்டிருந்தது. பாதி கதையைத் தாண்டினப்போ 'நடுவிலே 32 பக்கங்களைக் காணோம்' ! அதுக்குப் பதிலா கதையின் ஆரம்பப் பக்கங்களே ரிபீட் ஆகியிருக்கு!

    பூஊஊவ்... பூஊஊவ்...

    (ஆனா அதுக்காண்டி கொரியர் செலவு பண்ணி எனக்கு மாற்றுப் பிரதியெல்லாம் அனுப்ப வேண்டாம் எடிட்டர் சார்! மாற்றுப் பிரதியை EBFலயே வாங்கிக்கறேன். )

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் இதுக்குத் தான் "ஹய்யா" போடணும்!!

      Delete
    2. ///உண்மையில் இதுக்குத் தான் "ஹய்யா" போடணும்//

      போடுங்க போடுங்க!

      'கை சீவம்மா கை சீவு' மாதிரியான ஒரு ரணகளமான கதையை படிச்சு ஒரு பிஞ்சு நெஞ்சு (நான்தான் - என்னுதுதான்) பயந்துடக் கூடாதேன்னு நினைச்சுத்தான் அந்த ஆண்டவர் அப்படிப் பண்ணியிருப்பாருனு தோனுது!

      'ஏன் அடுத்த மாசம் பிஞ்சு நெஞ்சா இருக்காதா?'ன்னு நீங்க கேட்பீங்கன்னு தெரியும்! பிஞ்சு - காயா மாறிடும்ல? :)

      Delete
    3. மச்சக் கண்ணியை விரும்பும் நமக்கெல்லாம் எப்பவுமே பிஞ்சு மனசுதான்!!

      Delete
    4. பாதி கதையைத் தாண்டினப்போ 'நடுவிலே 32 பக்கங்களைக் காணோம்' ! அதுக்குப் பதிலா கதையின் ஆரம்பப் பக்கங்களே ரிபீட் ஆகியிருக்கு!

      பூஊஊவ்... பூஊஊவ்...// போட்டு தாக்குங்க,செம டைமிங்.ஹி,ஹி,ஹி.

      Delete
  9. ஆசிரியரே பன்னோடு சேர்த்து ஒரு அமலா பாலும் சாரி சாரி ஆவீன் பாலும் வாங்கிக் கொடுங்கள் செயலாளர் ஆசையாக சாப்பிடுவார்

    ReplyDelete
  10. பூஊஊவ்... பூஊஊவ்... ( இது ஆனந்த அழுகை)

    கிட்ஆர்டின் கதைகள் விற்பனையில் சக்கைபோடு போடுவது "சபாஷ்டா அம்மாஞ்சிப் பயலே! நீ ஜெயிச்சுட்டே!"னு சொல்லி பாராட்டத் தோனுது!

    அட்டகாசமான கதைத் தேர்வுகளும், அருமையான காமெடி எழுத்துகளும், அட்டகாசமான தரம் + வடிவமைப்புகளுமே இந்த ஆரவாரமான வெற்றிக்குக் காரணம்!

    இது வெள்ளந்திகள் வெற்றிபெறும் காலம் போலிருக்கிறது! (உதாரணம் : கிட்ஆர்டின், ரின்டின்கேன்)

    பூஊஊவ்... பூஊஊவ்...

    ReplyDelete
    Replies
    1. ////இது வெள்ளந்திகள் வெற்றிபெறும் காலம் போலிருக்கிறது! (உதாரணம் : கிட்ஆர்டின், ரின்டின்கேன்) ////

      +1111

      Delete
    2. ///இது வெள்ளந்திகள் வெற்றிபெறும் காலம் போலிருக்கிறது! (உதாரணம் : கிட்ஆர்டின், ரின்டின்கேன்) ///

      எக்காலமும் இக்காலம் போலே அமைந்துவிட்டால் எக்காளமிட்டு இக்காலத்தை கொண்டாடுவோமே. .!!

      Delete
    3. முக்காலமும் நற்காலமாய் ஆகட்டும்.

      Delete
    4. நாற்காலமும் விழாக்கோலமாகட்டும்

      Delete
  11. நண்பா் ஈ.வி.யின் அற்புத விமா்சனம்!!

    Load more காரணமாக மீண்டும் பதிவிட்டுள்ளேன்!!

    ****** முத்து #400: விடைகொடு ஷானியா *****

    ப்பா!!! என்னா ஒரு படைப்பு!!
    அதிரடி ஆக்ஷன்கள் இல்லை! துடிக்கும் துப்பாக்கிகள் இல்லை! அலப்பரை செய்யும் ஹீரோயிஸம் இல்லை! ஆனாலும் இவ்வளவு அழகான முடிச்சுகளோடு, பரபரபரவென ஒரு கதையை நகர்த்திச்செல்ல முடியும் எனில், அது வான் ஹாம்மே போன்ற படைப்புலக ராட்சதர்களுக்கே சாத்தியம்! கதையை காட்சிகளாகப் பிரித்து, அதை வெவ்வேறு காலகட்டங்களாகப் பிரித்து, எங்கெங்கு தேவையோ அங்கே அதை ஒரு அழகான ஃப்ளாஸ்பேக்காக தந்து, எல்லா சம்பவங்களைம் அர்த்தப்பூர்வமாக்கி... கடைசி பக்கம் வரை நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்!
    சிறுவயதில் ஷானியா ஏன் அனாதையாகிறாள்...
    ஏன் திருடியாகிறாள்...
    பிறகு, ஏன் தன் திருட்டுத் தொழிலைக் கைவிடுகிறாள்...
    பிட்ஸ்ராய் தம்பதிக்கு எவ்வாறு வளர்ப்பு மகளாகிறாள்... - உள்ளிட்ட பல சம்பவங்கள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து, அர்த்தமுள்ளதாகச் சொல்லப்பட்டிருப்பது பிரம்மிப்பான அழகு! ( lady-S என்ற நாமகரணத்திற்கான விளக்கம்கூட கதையின் கடைசியில் வருகிறது)

    இக்கதையைப் படிக்கும்போது ஏனோ மனது தன்னிச்சையாக லார்கோ கதையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறது. லார்கோவும் பிரம்மிக்க வைத்த/வைத்துக்கொண்டிருக்கும் தொடர்தான்! ஆனால் இதில் லார்கோவையும் மிஞ்சிய ஒரு ஈர்ப்பு+உயிர்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது! காரணம், இதில் லேடி-S ஆக வரும் அழகு மயில் ஷானியாவின் வாழ்க்கையில் எப்போதும் இளையோடிடும் ஒரு மெல்லிய சோகம்! ( லார்கோவும் கூட ஒரு தனித் தீவுக்குப் போய், மொட்டைப் பாறையில் குத்தவைத்து அமர்ந்து தன் சோகத்தைக் காட்டியிருக்கலாம் தான்; ஆனாலும் தன் கண்களாலேயே சோகத்தை உணர்த்திவிடும் ஷானியா அளவுக்கு இல்லை என்பதே உண்மை!)


    வான் ஹாம்மேவின் கற்பனை வளத்துக்கு அழகாக உயிர்கொடுத்திருக்கிறார் - ஓவியர் ஃபிலிப் ஐமாண்ட்! ( இவர் லார்கோவுக்கு ஓவியம் வரையும் ஃபிலிப் ஃப்ராங்க்'கின் சகோதரரோ?!! இரண்டுபேர் பெயரிலும் 'ஃபிலிப்' வருகிறதேன்னு கேட்டேன்!). ஒவ்வொரு முறையும் சற்றே சோகமான ஃப்ளாஷ்பேக்கிலிருந்து நிகழ்காலத்திற்கு திரும்பும் ஃப்ரேமில் ஷானியாவின் நிலைகுத்திய விழிகளைத் தாங்கிய க்ளோஸ்அப் படத்தோடு முடித்திருப்பது ஓவியரின் அழகான தனிமுத்திரை! பெரும்பாலான பக்கங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் - மஞ்சளோடு சற்றே பச்சை கலந்த வண்ணம் - கண்களை வெகுவாகக் கவர்கிறது!

    இந்த இரண்டு பாகங்களிலும் ஷானியாவின் பின்புலத்தைப்பற்றியும், அவளது மதிநுட்பம் பற்றியும் அழகாக விளக்கிவிட்டு, ஷானியாவை ப்ளாக்மெயில் செய்யும் ஓரியன் என்ற அந்தப் பெரியவர் யார்?; அவரது நோக்கம் என்ன?; அவர் நல்லவரா கெட்டவரா? - என்று நம் மனதில் எழும் கேள்விகளுடன் முடித்திருப்பது - அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிறவைத்திருக்கிறது!

    பிரம்மிக்கச் செய்திடும் இன்னொரு விசயம் - மொழிபெயர்ப்பும், மிகப் பொருத்தமான சொற்களைத் தாங்கிய வசனங்களும்! இத்தனை ஆண்டுகளாகியும் நம்மிடம் காமிக்ஸ் நேசம் துளியும் வற்றாமல் பாதுகாத்துவருவது இந்தத் தனித்துவமான மொழிபெயர்ப்பு நேர்த்திதானே? கதையோடு ஒன்றிப்போகிடும் சமயங்களிலும்கூட தட்டியெழுப்பி ஆச்சரியப்படவைத்திடும் வசனங்களும் இதில் ஏராளமே! ( உதாரணம்: இரவுமுழுக்க ஊர்சுற்றி வந்த ஷானியாவிடம், அவளிருக்கும் ஆபத்தான சூழ்நிலையை கோடிட்டுக்காட்டியபின் அவளது வளர்ப்புத் தந்தை பிட்ஸ்ராய் : "உன் வாழ்க்கை உன்னதுதான் ஸ்வீட்டி! ஆனால் அதனில் எனக்கும் ஒரு சிறு பங்குண்டு என்பதை மறந்துவிடாதே! என் வாழ்க்கையின் இன்றியமையா அங்கம் நீ என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?" என்பது! இதைவிட அழகாக எப்படிச் சொல்லிவிட முடியும்? ஆஸம் ஆஸம்!)

    கதையில் திருடியாக வரும் ஷானியா - இறுதியில் நம் மனங்களையும் சேர்த்தே திருடிவிடுவதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திடுங்கள் நண்பர்களே!

    என்னுடைய ரேட்டிங் : 10/10

    ReplyDelete
    Replies
    1. நல்ல விமர்சனம் தான்! திரும்பவும் படிச்சப்போத்தான் இது எனக்கே தெரிஞ்சது! ;)

      காப்பி-பேஸ்டியதற்கு நன்றிகள், மிதுன் அவர்களே!

      Delete
    2. ஈ.வி.

      உண்மையில் ஒரு கதையை அரசியல், பொருளாதார, வரலாற்று பின்னணியோடு ஆராயாமல் "உணா்வுப் பூா்வமாக விமா்சிப்பது" ஒரு அருமையான பணிங்க நண்பரே!

      Delete
    3. //// ஒரு கதையை அரசியல், பொருளாதார, வரலாற்று பின்னணியோடு ஆராயாமல் ////

      இதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணியிருந்தாத்தான் நான் +2லயே 'state first' வந்திருப்பேனே? ( குறைஞ்சபட்சம் ஒரு டாக்டராவாவது ஆகியிருப்பேனே? ;) )

      Delete
    4. ப்பா என்னா ஒரு விமர்சனமப்பா

      படிக்கயிலயே கண்ணு வேர்க்குதே
      ரூம் போட்டு யோசிச்சி எழுதியிருப்பாரோ (குப்புற படுத்து யோசிக்கும் படங்கள் வரிசையா போட்டுக்கோங்கப்பா )

      சொல்லுங்க

      நீங்க இதுக்கு முன்னணி பம்பாயில என்ன பண்ணிட்டு இருத்தீங்க

      சொல்லுங்கண்ணே சொல்லுங்க _/\_
      .

      Delete
    5. /// (குப்புற படுத்து யோசிக்கும் படங்கள் வரிசையா போட்டுக்கோங்கப்பா )///

      நடைபாதையில படுக்காம நகுந்து படுத்து யோசிங்க..!

      Delete
    6. குப்புற படுத்து யோசிக்கும் போது
      கீழ ஆணி இல்லாம பார்த்துக்கங்க

      Delete
  12. ஹாய் நண்பர்களே.

    ReplyDelete
  13. அழகான, ஆழமான, இயல்பான, ஈகையான, உயர்வான, ஊக்கமான விமர்சனம் திரு ஈரோடு விஜய் அவர்களே...

    ReplyDelete
    Replies
    1. அ,ஆ,இ,ஈ,உ,ஊ - ரூம் போட்டு யோசிச்சிங்களா கரூர் ஜி?!

      Delete
    2. ///ரூம் போட்டு யோசிச்சிங்களா கரூர் ஜி?!///

      இல்லை ரவி..! கெடா விருந்தில் லெக்பீசை கடிக்கும்போது தோணியிருக்கும்..!

      Delete
    3. சிக்கன் சாப்பிட்டதே யோசிச்சது?

      Delete
    4. KAK நான் டைப் பண்ணி முடிக்கிறக்குள்ளாற இப்படி போட்டுத் தாக்கீட்டீங்களே? இதுக்குதான் நாங்கெல்லாம் 1, 2,3 போடறதோட நிறுத்திக்கறது.

      Delete
    5. எடுப்பான, ஏற்புடைய, ஐயமில்லாத, ஒப்பில்லாத, ஓரவஞ்சனையில்லாத, ஓளகாரமான - இதையெல்லாம் விட்டுட்டீங்களே கரூர்கார்! ( இஸ்கூல்ல பாடம் படிச்சப்போ வாத்தியார் சொல்லித்தந்ததை கவனிக்காம, பெஞ்சுக்கடியில பொம்மை பொஸ்தவத்த வச்சுப் படிச்சிட்டிருந்தீங்க போலிருக்கு!) ;)

      Delete
    6. ஹா,ஹா,ஹா செம,செம.

      Delete
    7. மஹி ஜி,பாருங்க இப்படியே தான் பண்றாங்க,நம்மைப் போல் சிறியவர்களுக்கு வாய்ப்பே அளிக்க மாட்டென் என்கிறார்களே?!

      Delete
    8. ஹா..ஹா..கலக்கிட்டீங்க சரவணன் சார்...

      Delete
    9. என்னலே நடக்கு இங்க

      ரெண்டு வாத்தியாருங்க பாடம் நடத்துறாமாதிரி தெரியுதே

      (தலை தெறிக்க ஓடும் படம் ஒன்று )
      .

      Delete
    10. அதுசரி.. நான் பெஞ்சுகடில வெச்சு காமிக்ஸ் படிச்சது உங்களுக்கு எப்படித் தெரியும்.. ஒழுங்கா சொல்லுங்க.. போன ஜென்மத்துல நீங்க என்ன செஞ்சுகிட்டு இருந்தீங்க... 😜😜😜

      Delete
    11. சிறியவர்களா, எனக்கு சித்தப்பாரு வயசாகுது உங்களுக்கும் மஹிஜிக்கும்..!

      என்ன பண்றது, மஹி வந்து லார்கோ வின்ச் மாதிரி லுக்கா இருக்காரு , நீங்க லார்கோவோட தோஸ்து சைமன் மாதிரி கிக்கா இருக்கீங்க. ..!
      நான்தான் சின்ன வயசுன்னாலும் டைகர் மாதிரி பேப்பயலா சுத்திகிட்டு இருக்கேன் . .!

      Delete
    12. புரியுது,புரியுது காது வழியா புகை வருவது தெரியுது.

      Delete
    13. /// லெக்பீசை கடிக்கும்போது தோணியிருக்கும்..! ///
      /// சிக்கன் சாப்பிட்டதே யோசிச்சது ///

      அது எப்படி என் வீட்டுல நான் சாப்பிடறத எல்லாரும் பார்க்கறாங்க.. அப்ப செல்லுல இருக்குற கேமரா வழியா எல்லரையும் கண்காணிக்கலாம்ன்னு சொல்லறது உண்மையோ.. எதுக்கும் கேமராவை மல்லாக்கப் போட்டு புக்கை வெச்சு மறைச்சுட்டுதான் சாப்பிடனும் போல இருக்கே...

      Delete
    14. ///சிறியவர்களா, எனக்கு சித்தப்பாரு வயசாகுது உங்களுக்கும் மஹிஜிக்கும்///---
      யோவ் மாம்ஸ் 11மணிக்கு சிரிச்சி திட்டு வாங்கி கொடுத்து விட்டாய்பா...நிம்மதியா தூங்கு...ஹீம்...

      Delete
    15. ///யோவ் மாம்ஸ் 11மணிக்கு சிரிச்சி திட்டு வாங்கி கொடுத்து விட்டாய்பா.///

      ம்க்கும்! பகல்ல சிரிச்சா மட்டும் பாராட்டிடப் போறாங்களாக்கும்?

      Delete
    16. ///எதுக்கும் கேமராவை மல்லாக்கப் போட்டு புக்கை வெச்சு மறைச்சுட்டுதான் சாப்பிடனும் போல இருக்கே...///

      ஒரு கூரான ஆணியிருந்தா எடுத்து கேமிராவை கீறி விட்டுடுங்க..! அப்புறம் உங்களாலேயே உங்களை கண்காணிக்க முடியாது, அதானுங்க செல்ஃப்பியெடுக்க கூட முடியாதுன்னு சொல்றேன்.

      Delete
    17. ///யோவ் மாம்ஸ் 11மணிக்கு சிரிச்சி திட்டு வாங்கி கொடுத்து விட்டாய்பா...நிம்மதியா தூங்கு...ஹீம்...///

      வெறும் திட்டு மட்டும்தானா? அடடே..!!

      Delete
  14. கியூபா படலம்...

    (டச் விட்டுப் போனதால் ரொம்ப சுமாராகத்தான் எழுத வருது...பொறுத்து கொள்ளுங்கள். தினம் கொஞ்சம் கொஞ்சமாக....)

    க்யூபா படலம்:-

    *லயன் வரலாற்றில் முதல் டெக்ஸ் காவியம் "கார்சனின் கடந்த காலம்". நண்பர்கள், அவரவர் ரசனைக்கு ஏற்ப
    டாப் 3கதைகளை சொல்வார்கள். பெரும்பாலான நண்பர்கள் லிஸ்ட்ல கா.க.கா. இடம்பெற்று இருக்கும். இம்மாத " க்யூபா படலம்"-ம் இனிமேல் அந்த டாப் 3ல் இடம்பெறும் வாய்ப்பு பிரகாசம் என்பது மறுக்க முடியாத உண்மை.

    *க்யூபா படலத்தின் மிகச்சிறந்த அம்சமாக நான் கருதுவது வழக்கமான சூப்பர் ஹூரோ "டெக்ஸ்" ஆக இல்லாமல் ஒரு சராசரி முன்னாள் போர் வீரராக அவர் பாத்திரம் படைக்கப்பட்டு இருப்பதே. மேலும் வழக்கமான பாலை பரப்பை காட்டாமல் டெக்ஸ் கதையை சுவாரசியமான டெம்போவில் நகர்த்துவதும் சவாலான ஒன்று.

    *சில கதைகளில் ஆழமான களம் இருக்கும்; சிலவற்றில் நுணுக்கமான ஓவியங்கள்; சில பரபரப்பான கதைநகர்வை கொண்டவை; சில வரலாற்று பின்னணி கொண்டவை; க்யூபா படலம்-இதுபோன்ற அனைத்து பன்முக தன்மைகளுடனும் படைக்கபட்டு இருப்பது மிக மிக அரிதான நிகழ்வு.

    *கதைநடக்கும் காலகட்டப் பின்னணி, வரலாற்று நிகழ்வுடன் பின்னப்பட்ட களம், இயற்கையான நுண்ணிய ஓவியங்கள், அசாத்திய முகபாவங்கள், போராட்டத்திற்குள் போராட்டம், 19ம் நூற்றாண்டின் அடிமைமுறை அவலங்கள், ஆதிக்கவாதிகளின் ஆணவ அடக்குமுறை, அப்போது மலிந்து கிடந்த மூடப்பழக்கங்கள் நிறைந்த மதநம்பிக்கைகள், அமானுச மந்திர ஜாலவித்தைகள், தியாகம்... என பல்வேறு கலவையான பரிமாணங்களை தேவையான விகிதத்தில் கலந்து பரிமாறியுள்ளது அன்றாட நிகழ்வல்லவே...!!!

    *தெரிந்தோ தெரியாமலோ அமைந்த செட்யூலில் சென்ற மாத கவரிமான்களின் கதையின் ஒற்றை குடும்பம் உணர்த்திய ஸ்பானிய அராஜக ஆதிக்கவெறியின் தொடர்ச்சியும், கவர்னர் மண்டாலஸின் நியாயமான செயல்பாடுகள் இதிலும் தொடர்வதும் க்யூபா படலத்தோடு ஒன்றிட உதவும் உப காரணிகள்...

    *எந்த ஒரு நாட்டின் விடுதலை வேட்கையில் விளையும் புரட்சியோ போராட்டமோ துரோகிகள், சுயநலமிகள் இல்லாமல் நடந்து முடிந்ததாக சரித்திரம் கிடையாது. க்யூபா சுதந்திர போரும் விதிவிலக்கல்லவே. க்யூபா விடுதலை போரின் துவக்கத்தில் பெரும்பாலான புரட்சியாளர்கள் கரும்பு தோட்டங்களில் இருந்த அடிமை கறுப்பின மக்களே. இவர்களிடையே காலம் காலமாக விரவியிருந்தது மூடநம்பிக்கைகள் மலிந்த மதக்கோட்பாடான சான்டாரியா. இம்மதத்தின் பில்லி சூனிய கடவுள்கள் டம்பால்லா மற்றும் ஷாங்கோ. பில்லி சூனிய சடங்குகள் செய்த "வாங்கா" என்ற உருவ பொம்மைகளைக் கொண்டு சான்டாரியாவின் மாந்திரீகர்கள் அம்மத மக்களை அச்சுறுத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து காரியங்களை செய்ய பணிக்கிறார்கள்.
    .......தொடரும்......

    ReplyDelete
    Replies
    1. அருமை டெக்ஸ், அசத்தலான விமர்சனம், தொடருங்கள்.

      Delete
    2. எடுப்பான, ஏகாந்தமான, ஒப்பற்ற விமர்சனம் திரு. டெக்ஸ் விஜயராகவன் அவர்களே. தொடருங்கள்.. தொடர்கிறோம்...

      Delete
    3. வாவ்

      அட்டகாசமான ஆரம்பம் இயல்பாக உள்ளது விஜய் அவர்களே

      தொடருங்கள் தொடர்கிறோம் _/\_
      .

      Delete

    4. *க்யூபா படலத்தின் மிகச்சிறந்த அம்சமாக நான் கருதுவது வழக்கமான சூப்பர் ஹூரோ "டெக்ஸ்" ஆக இல்லாமல் ஒரு சராசரி முன்னாள் போர் வீரராக அவர் பாத்திரம் படைக்கப்பட்டு இருப்பதே. மேலும் வழக்கமான பாலை பரப்பை காட்டாமல் டெக்ஸ் கதையை சுவாரசியமான டெம்போவில் நகர்த்துவதும் சவாலான ஒன்று////
      முழுப் பூசணி கதை.. அருமை...

      Delete

    5. *லயன் வரலாற்றில் முதல் டெக்ஸ் காவியம் "கார்சனின் கடந்த காலம்". நண்பர்கள், அவரவர் ரசனைக்கு ஏற்ப
      டாப் 3கதைகளை சொல்வார்கள். பெரும்பாலான நண்பர்கள் லிஸ்ட்ல கா.க.கா. இடம்பெற்று இருக்கும். இம்மாத " க்யூபா படலம்"-ம் இனிமேல் அந்த டாப் 3ல் இடம்பெறும் வாய்ப்பு பிரகாசம் என்பது மறுக்க முடியாத உண்மை.////
      இன்னமும் 3 வது வரவில்லை ஐயன்மீர்... 1. சர்வமும் நானே... 2. எல்லையில் ஒர் யுத்தம்... 3?????????

      Delete
    6. ///.......தொடரும்......///

      தொடரட்டும் தொடரட்டும்.. நல்லா ரசிச்சி எழுதியிருக்கீரு க்யூபா படலத்தை..!!

      தொடரும்னு போட்டு இருக்கீரு சரி, கதை 233 பக்கங்கள்தான்.! அதுக்கு மிகாமல் பாத்துகிட்டீருன்னா போதும் ஓய்..!! :-)

      Delete
    7. @ டெக்ஸ் விஜய்

      டச் விட்டமாதிரியே தெரியலையே? அம்சமால்ல இருக்கு!!

      Delete
    8. ஙே

      இவரு எத சொல்ல வர்றாரு

      (தலை சொறிந்து யோசிக்கும் படம் ஒன்று, நல்லா கவனிங்க மக்களே தலை சொறிந்துன்னுதான் சொல்லியிருக்கேன், தலையில என்ன இருக்குன்னு கேக்கபடாது)
      .

      Delete
    9. என்னங்க ஈ.வி.

      ரண்டு ரண்டா பதிவிடரீங்க?

      அடுக்குத் தொடரா???

      Delete
    10. ///என்னங்க ஈ.வி.

      ரண்டு ரண்டா பதிவிடரீங்க?///

      அது... என்னோட மொபைல் ஃபோன் '1+1 ஆஃபர்'ல வாங்கினது... அதான் அப்பப்போ...

      Delete
    11. ///(தலை சொறிந்து யோசிக்கும் படம் ஒன்று, நல்லா கவனிங்க மக்களே தலை சொறிந்துன்னுதான் சொல்லியிருக்கேன், தலையில என்ன இருக்குன்னு கேக்கபடாது)///

      இதெல்லாம் அநியாயம் சிபிஜி!
      உங்களை நீங்களே கலாய்ச்சிகிறது கொஞ்சம்கூட நியாயமே இல்ல..! அப்புறம் நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்னு கேக்குறேன்.!!

      Delete
    12. ///இதெல்லாம் அநியாயம் சிபிஜி!
      உங்களை நீங்களே கலாய்ச்சிகிறது கொஞ்சம்கூட நியாயமே இல்ல..! அப்புறம் நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்னு கேக்குறேன்.!!///

      :))))))))

      Delete
    13. //அது... என்னோட மொபைல் ஃபோன் '1+1 ஆஃபர்'ல வாங்கினது... அதான் அப்பப்போ...//

      ஈ.வி.

      ஒன்னு இங்கிருக்கு!
      இன்னொன்னு எங்கே!!

      Delete
    14. அட்டகாசம் டெக்ஸ் ..!!!! தொடருங்கள் ...தொடருங்கள் ...

      Delete
    15. சீரியஸா பேசிட்டு இருக்கும் போது இந்த ரம்மி வேற நடுநடுவுல வந்து காமெடி பண்ணிக்கிட்டு....:-)😠😠

      Delete
  15. ஜூலை மாத இதழ்கள் கலக்கிவருவது எங்களுக்கும் மிகுந்த சந்தோசத்தையளிக்கிறது விஜயன் சார்

    அப்போதானே சூப்பர் 6 சூப்பர் 12ஆக பரிணமிக்க இயலும்

    கலக்குங்கள் நண்பர்களே _/\_
    .

    ReplyDelete
    Replies
    1. ///அப்போதானே சூப்பர் 6 சூப்பர் 12ஆக பரிணமிக்க இயலும் ...///அதே தான் ஜி...

      Delete
    2. ///அப்போதானே சூப்பர் 6 சூப்பர் 12ஆக பரிணமிக்க இயலும்.///

      இதை கண்ணைமூடிக்கிட்டு கன்னாபின்னான்னு வழிமொழியுறேனுங்க சிபிஜி..!

      Delete
    3. அதுல ஒரு லக்கி ஒரு சிக்பில்ன்னா
      டபுள் ஜே!!

      Delete
  16. விஜயன் சார், தற்போதைய பதிவில் நாள் நேரம் இரண்டும் வருகிறது. நன்றி.

    ReplyDelete
  17. சூப்பர் 6 இமாலய வெற்றி இந்த ஆண்டும் தொடர வேண்டும்.

    ReplyDelete
  18. விஜயன் சார், இந்த மாத விற்பனை அதகளம் செய்து வருவதை கேட்க ரொம்ப குஷியாக இருக்கிறது.

    ReplyDelete
  19. // பவுனுக்குப் பதிலாய் பன் மாத்திரமே சாத்தியமாகிறது //

    ஙே

    செல்லாது செல்லாது
    செல்லவே செல்லாது

    எங்க சங்கத்தை நீங்க இந்தளவுக்கு கலாய்கிறதை ஒத்துக்கொள்ளவே முடியாது
    .

    ReplyDelete
    Replies
    1. ///எங்க சங்கத்தை நீங்க இந்தளவுக்கு கலாய்கிறதை ஒத்துக்கொள்ளவே முடியாது ///

      சும்மா இருங்க சிபிஜி.! நம்ம சங்கத்துல பத்து பேத்துக்கு பன்னு வாங்கித்தரக் கூட நிதியில்ல.!
      எடிட்டர் சாரே நம்மளை கௌரவப்படுத்திதான் பேசியிருக்காரு.!
      நீங்க சத்தம்போட்டு காட்டிக்குடுத்துடாதிங்க..!

      Delete
    2. ///நம்ம சங்கத்துல பத்து பேத்துக்கு பன்னு வாங்கித்தரக் கூட நிதியில்ல.!
      எடிட்டர் சாரே நம்மளை கௌரவப்படுத்திதான் பேசியிருக்காரு.!
      நீங்க சத்தம்போட்டு காட்டிக்குடுத்துடாதிங்க////----ஹா..ஹா...ஹோ..ஹோ...

      Delete
  20. மாடஸ்டியை மனதில் கொண்டே லேடி எஸ்-ஐ வான் ஹாமே உருவாக்கி இருக்க கூடும்.கார்வின்-ஆன்டன்,டார்ரன்ட்-ஓரியன்,அனாதை,திருட்டு,உளவு என நிறைய ஒற்றுமைகள்.மூன்றாவது கதை சுடும் பனி-ஐ இத்துடன் இணைத்து ஹார்டு பைண்டிங்-ல் வெளியிட்டிருந்தால் முத்து இதழ்#400 லயன் இதழ்#300-க்கு ஓரளவுக்காவது ஈடு கொடுத்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை விடுங்க பூபதிஜி.. ஈரோட்டுல லேடி எஸ்ஸுக்கு குண்டு புக் கேட்டு போராட்டம் நடத்திரலாம்

      Delete
    2. ///மூன்றாவது கதை சுடும் பனி-ஐ இத்துடன் இணைத்து ஹார்டு பைண்டிங்-ல் வெளியிட்டிருந்தால் முத்து இதழ்#400 லயன் இதழ்#300-க்கு ஓரளவுக்காவது ஈடு கொடுத்திருக்கும்.///

      உண்மைதான். .! முத்து 500 க்காவது ஒரு குண்ண்ண்ட்டுடுடு புக்கா போடுங்க சார்..! ஹார்ட் பவுண்ட்ல, ஃபுல் கலர்ல..!

      Delete
    3. ஏன் 425 க்குப் போட்டால் நாம் வேண்டாம் என்றா மறுக்கப் போகின்றேரம்?!

      Delete
    4. என்னுடைய கருத்தும் அதுவே ட்யுராங்கோ போல் வந்திருந்தால் விற்பனையில் முதலிடத்திற்க்கு வந்திருப்பாள் லேடி S

      Delete
  21. டெக்ஸ் விஜயராகவன் சார், க்யுபா படலம் விமர்சனம் அ௫மையிலும் அ௫மை.

    ReplyDelete
  22. தளம் ஜெ ஜெ பச்சையில் ஜொலிக்கிறது.

    ReplyDelete
  23. Lady S அதகளம் சார்! சர்வதேச அரசியலை வியாபாரரீதியில் லார்கோ வின்ச் கதைகளிலும், மெர்கனரி(கூலிபடை) ரீதியிலும் பார்த்த நமக்கு மிக மிக ஆபத்தான ராஜாங்க ரீதியிலான சர்வதேச அரசியலை Lady S வழியாக பார்த்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் ... இப்படிபட்ட காமிக்ஸ்கள் படிக்கும் ஒரே மொழி தமிழாக மட்டுமே இருக்கமுடியும் என்பதில் தனி பெருமை. தற்போது உண்மையாகவே துருக்கிக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் நடந்துவரும் பனிப்போர் பற்றி அறிந்துகொள்ள இந்தமாதிரியான ஒரு கதை வாசகனுக்கு ஒரு புது பார்வையை சர்வதேச அரசியல் பக்கம் காட்டியுள்ளது எனலாம். சீனாவின் சமீபத்திய ராக்கெட் தோல்வி, துருக்கியில் லைவ் டிவி பேட்டியின்போது சுட்டுகொல்லபட்ட ரஷ்ய தூதர் என எல்லா சமீபத்திய நிகழ்வுகளுக்கு பின்பும் இதுப்போல சில ஷானியாக்களும், ஆண்டன்களும் இருப்பார்கள் என புரியும்போதே முதுகுதண்டுசில்லிடுகிறது. நன்றி சார், காமிக்ஸ் என்றால் வெறும் படகதை என நினைப்பவர்களில் எண்ணத்தில் கரிபூசும் விதமாக பலவேறு தளங்களில் எங்கள் வாசிப்பை கொண்டு சேர்க்கும் உங்கள் பணி மேன்மேலும் சிறக்கட்டும், ஜீனியர் எடிட்டர் விக்ரமிற்கும் ஸ்பெஷல் நன்றிகள். :)

    ReplyDelete
    Replies
    1. @ cap tiger

      அருமை அருமை!

      Delete
    2. ////காமிக்ஸ் என்றால் வெறும் படகதை என நினைப்பவர்களில் எண்ணத்தில் கரிபூசும் விதமாக பலவேறு தளங்களில் எங்கள் வாசிப்பை கொண்டு சேர்க்கும் உங்கள் பணி மேன்மேலும் சிறக்கட்டும், ஜீனியர் எடிட்டர் விக்ரமிற்கும் ஸ்பெஷல் நன்றிகள். :)////

      முற்றிலும் உண்மை நண்பரே!!

      Delete
    3. ///உண்மையாகவே துருக்கிக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் நடந்துவரும் பனிப்போர் பற்றி அறிந்துகொள்ள இந்தமாதிரியான ஒரு கதை வாசகனுக்கு ஒரு புது பார்வையை சர்வதேச அரசியல் பக்கம் காட்டியுள்ளது எனலாம்.///

      இந்தக் கதை ஒருசில ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியாகி இருக்க வேண்டும். இல்லையென்றால் "வடகொாியாவும்" நிச்சயம் இடம் பெற்றிருக்கும்!!!

      Delete
    4. @ஈரோடு விஜய் , நன்றி நண்பரே!
      @Mithun Chakravarthi, இனிவரும் கதைகளில் ஐரோப்பியா மட்டுமின்றி ஆசிய, அமெரிக்க நாடுகளிடையே நடக்கும் திரைமறைவு அரசியலையும் LadyS பேசுவாள் என எதிர்பார்க்கிறேன்!

      Delete
    5. ///காமிக்ஸ் என்றால் வெறும் படகதை என நினைப்பவர்களில் எண்ணத்தில் கரிபூசும் விதமாக பலவேறு தளங்களில் எங்கள் வாசிப்பை கொண்டு சேர்க்கும் உங்கள் பணி மேன்மேலும் சிறக்கட்டும், ஜீனியர் எடிட்டர் விக்ரமிற்கும் ஸ்பெஷல் நன்றிகள். :)///

      + 999 999 999

      Delete
    6. வழிமொழிகிறேன் ....டைகர் அவர்களே....:-)

      Delete
  24. ஜூலியாவோடு மீட்டிங்கிற்கு கிளம்புறேன்.. பை பை ..!!

    ReplyDelete
  25. Lady S ல் எனக்கொரு சந்தேகம்!!

    அலெக்ஸாண்டா் காலம் தொட்டு, ஹிட்லா் வரை ரஷ்யாவின் பனிக் காலத்தில், உள்ள நுழைந்தவா்கள் உயிரோடு நாடு திரும்ப வழிதொியாது விறைத்துப் போன கதைகள் வரலாற்றில் ஏராளம்!!

    ரஷ்யாவின் கடும்பனி அவ்வளவு கொடுமையானது!!

    சானியா ஜோடி தப்ப முயன்றது வேறு திசையில் என்ற போதிலும், அந்த கடும்பனியில், 250 கிலோ மீட்டா் கடந்து உயிா்பிழைப்பது சாத்தியம் தானா??

    உலகின் மற்ற நாடுகளை போல் அல்ல ரஷ்யாவின் பனிக்காலம் என்கிறபோது எப்படி???

    ReplyDelete
    Replies
    1. க்ரிவென்கோவின் ஹீட்டர் பொருத்தப்பட்ட காரில் பயணிப்பது சுலபம்தானே மிதுன் ...பக்கம் 45 முதல் படத்தில் கார் நிறுத்தப்பட்டு இருப்பது காண்பிக்கபடுகிறதே....

      பனிப்பாளங்களின் அடியில் உள்ள நீரோட்டத்தில் விழுந்து பின் பனிப்புயல் வீழும் நிலையில் ஆன்டன் தப்பி பிழைத்துத்தான் ஆச்சர்யம் ...வெறும் சாதாரண கேபினில் வாழ்க்கையை நடத்தி வந்த ஆன்டனின் உடல் ரஷ்யாவின் பனிக்கு கொஞ்சம் பக்குவ பட்டு இருக்கவேண்டும் ...

      Delete
    2. ///க்ரிவென்கோவின் ஹீட்டர் பொருத்தப்பட்ட காரில் பயணிப்பது சுலபம்தானே மிதுன் ...பக்கம் 45 முதல் படத்தில் கார் நிறுத்தப்பட்டு இருப்பது காண்பிக்கபடுகிறதே///

      ஆம் நண்பரே, திரும்பவும் படித்தபோது அதை நானும் கவனித்தேன்!!

      Delete
    3. ////பனிப்புயல் வீழும் நிலையில் ஆன்டன் தப்பி பிழைத்துத்தான் ஆச்சர்யம்////

      ஒருவேளை அடுத்த இதழான "சுடும்பனி" இது தொடா்பாக இருக்குமோ!!

      Delete
    4. மிதுன் சார்.
      ஆச்சரியமா இருக்கு. ஒரே பதிலிலே திருப்தியாயிட்டீங்களே.

      Delete
  26. அட அதற்குள்ளேயா?

    ReplyDelete
  27. ஆர்ட்டினை பாரட்டும் அனைவரும் ஏனய்யா டாக்புல் லை கண்டுக்க மாட்டேங்கிறிங்க
    உங்கள் அனைவருக்கும் எனது கண்டனங்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. ///ஆர்ட்டினை பாரட்டும் அனைவரும் ஏனய்யா டாக்புல் லை கண்டுக்க மாட்டேங்கிறிங்க///

      சாியாச் சொன்னீங்க பாஸு!!

      டாக்புல்லின் முக பாவங்கள் இத்தொடாின் வெற்றிக்கு முக்கியக் காரணம்!!

      Delete
    2. ///ஆர்ட்டினை பாரட்டும் அனைவரும் ஏனய்யா டாக்புல் லை கண்டுக்க மாட்டேங்கிறிங்க.///

      ரெண்டு பேரும் ஒண்ணுதானே!
      கதைக்கு ரெண்டு கண்ணுதானே.!

      Delete
    3. டாக்புல் ல பாராட்டாம போனா வாயில மண்ணுதானே

      Delete
  28. இன்று பிறந்தநாள் காணும் அருமை நண்பர் செந்தில் சத்யா அவர்கள் இன்றுபோல் என்றும் கைநிறைய காமிக்ஸோடு பல்லாண்டு காலம் வளமோடு வாழ வாழ்த்துகிறோம். .!!

    Happy birthday dear senthil ..!!

    ReplyDelete
    Replies
    1. அருமை நண்பர் செந்தில் சத்யா எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட என்னுடைய வாழ்த்துகளும்!

      Delete
    2. நண்பர் செந்தில் சத்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்வில் வளமும்,நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

      Delete
    3. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சத்யா...குண்டுபுக் ஆண்டுக்கு 4கிடைத்து மகிழ்ந்திட வாழ்த்துகிறேன்....

      Delete
    4. செந்தில் சத்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

      மெரினாவில் போல் அல்லாமல் என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்...:-)

      Delete
    5. வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்கள் கிட்ஆர்ட்டின் கண்னன்
      ஈரோடு விஜய்
      அறிவரசு ரவி
      செல்வம் அபிராமி சார்
      டெக்ஸ் விஜயராகவன்
      பரணிதரன்
      அனைவருக்கும் நன்றி நண்பர்களே
      உங்களுடைய வாழ்த்துகளால் மிக்க மகிழ்ச்சி (நெகிழ்ச்சி )அடைகிறேன்
      வெறும் வார்த்தைகளாக அல்லாது
      உணர்வுபூர்வமான வாழ்த்துகள் உங்களுடையது

      Delete
    6. செந்தில் சத்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் என்றென்றும் குண்டு புக்கள் கிடைக்கவும் வாழ்த்துக்கள்...

      Delete
    7. குண்டு புக் கிடைக்க வாழ்த்தும் நண்பர்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்

      Delete
    8. போராட்ட நாயகன் செந்தில் சத்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

      Delete
    9. நன்றி நண்பரே
      ஆனாலும் இந்த பட்டம் கொஞ்சம் ஓவர்

      Delete
  29. விஜயன் சார், அமேசான் விற்பனை தளத்தில் நமது புத்தகம்கள் விற்பனை ஆவதை கண்டேன், மின்னும் மரணம், தலையில்லா போராளி, என் பெயர் டைகர், 2016 தீபாவளி மலர். எப்படி இப்படி!!

    ReplyDelete
    Replies
    1. அது நமது கும்பகோணம் முகவரின் ஆர்வத்தில் நடந்திடும் முயற்சி சார் !

      Delete
  30. மேலே உங்கள் பதிவில் CASANOVA KID படத்தில் யார் சார் அந்த இரண்டுபேர்??
    வெளிநாடு போகையில் கோட் அணிந்து போவேன் என்று முன்பு சொல்லியிருக்குறத நெனச்சிப் பாரத்தேன்....
    கண்டு புடுச்சுட்டேன்...!கண்டு புடுச்சுட்டேன்....!!!!
    அது நீங்க தான சார். எப்டி கரிக்டா சொன்னேன் பாத்தீங்களா?
    உங்க கூட இருக்குறது யார் சார்?
    அதயும் கண்டு புடுச்சுட்டேன்....!அதயும் கண்டு புடிச்சிட்டேன்..!!!
    உங்களான்ட ஆட்டைய போட்ட ரெண்டு கிழவிங்க்ள ஒண்ணுதான சார் அது?
    ஓடும் ரயில்ல பின்னால் ஒருத்தர் நறநறன்னு பல்லை கடிப்பதை கண்டுக்காம"இந்த போஸ்ல" கண்ணவேற மூடிக்கிட்டு நின்னாக்கா முதுகில் தொங்கிய பையில் உள்ளதை லவட்டிக்கிட்டு போகாம வேற என்னா பண்ணுவாங்களாம்??
    ஆனா ஒரு சந்தேகம்....
    ரெண்டு கிழவிங்கன்னு சொன்னிங்க!
    ஒன்னு இங்கிருக்கு! இன்னொன்னு எங்க சார்....????

    ReplyDelete
  31. சார்...இந்த மாத இதழ்கள் அனைத்தும் படித்தாயிற்று.

    அடுத்த வெளியீடு எப்பொழுது சார்...:-)

    ReplyDelete
    Replies
    1. தலைவரே,நீங்க போற வேகத்தைப் பார்த்தா வாரா வாரம் புக் வெளியிடனும் போல.

      Delete
    2. பாத்து பொறுமையா படிங்க தலீவரே.
      நீங்க படிக்கிற வேகத்துக்கு GST போட்டிடப்போறாங்க. ஆமா.

      Delete
  32. சார் இந்த சந்தோஷத்தை "பன்"கொடுத்து எங்களுடன் பகிர்ந்து கொள்வதைவிட "குண்டு புக்"கொடுத்து பகிர்ந்து கொண்டால் ரொம்ப சந்தோஷம். (இனாமாக அல்ல!)

    ReplyDelete
  33. சில வருடங்களுக்கு பிறகு குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ரீபிரிண்ட் மற்றும் நான்கு ஐந்து சந்தா ஆரம்பித்த பிறகு அனைத்து கதைகளும் அருமையாக இருந்தது இந்த மாதம் தான். மிகவும் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. இது நீண்ட வருடங்களுக்கு பிறகு நீங்கள் இங்கே வருகை புரிவதில் இருந்தே நன்கு புரிபடுகிறது ஆடிட்டர் ராஜா சார்...தாங்கள் நலமா ...?

      தங்களை சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டது...ஈரோடு புத்தக காட்சியில் ஆவது சந்திக்க முடியுமா ..?-:-)

      Delete
    2. வெல்கம் ஆடிட்டர் ராஜா சார்.நலமா???

      Delete
  34. சார், உட்சிடியின் கோமாளிகள் - என்று வழமையாக அழைக்கும் உங்கள் திருவாயால், சாரி - திருக்கரத்தால் இப்படியொரு புளகாங்கித வார்த்தைப் பிரயோகம் வந்தது சூப்பர். கடந்த ஜனவரியிலேயே ஆர்டின் - அமேரிக்க ஜனாதிபதியாகிவிட்டார், நீங்க கவனிக்கலப்போல....!!!

    ReplyDelete
    Replies
    1. ///கடந்த ஜனவரியிலேயே ஆர்டின் - அமேரிக்க ஜனாதிபதியாகிவிட்டார், நீங்க கவனிக்கலப்போல....!!!!!//

      :-)))))))

      Delete
    2. STILL LAUGHING ...COMIRADES OF BLOG NEVER FAIL TO AMAZE ME AGAIN AND AGAIN WITH THEIRS' EXTRADINARY SENSE OF HUMOUR...

      Delete
    3. Podiyan : நம்ம ஊரில் ஆட்டோ + உருட்டுக்கட்டை காம்பினேஷன் ! அமெரிக்காவில் எப்படியோ ?

      மோவாயில் கை வைத்து யோசிக்கும் படங்கள் நிறைய !!

      Delete
    4. சார், அவரு டுவிட்டர்லதான் புலம்புவாரு. அதனால, நமக்கு நோ டென்சன்!

      Delete
  35. விண்ணில் ஒரு எலி ரிப்ரின்ட் பலனே தான் இந்த ராக்கெட் வேக விற்பனை ....
    நீடல் நாள் காத்திருப்பின் பலன் ....

    ReplyDelete
  36. ஈரோட்டில் பன்னா? தேங்காப்பூ வைச்ச ரவுண்டு பன்தானே? அப்ப டபுள் ஓகே!! :-))

    ReplyDelete
    Replies
    1. தேங்கா பூவா அதெல்லாம் கஷ்டம் சார்....உங்களுக்கு பூவு வேணுமின்னா நீங்களே வர்ற வழில ஒரு ரோஜா பூவையோ செம்பருத்திபூவையோ பறிச்சிட்டு வந்துருங்க.....:-))

      Delete
  37. செயலரே ....உங்கள் விமர்சனம் ஆஸம்....நீங்கள் சொன்னது படி லேடி S லார்கோ ,ஷெல்டனுக்கே சவால் விடுவார் போல...உண்மையில் இன்னும் ஒரு சாகஸத்தோடு லார்கோ விடைபெறுகிறார் எனும்பொழுது கண்டிப்பாக லேடி லார்கோ அந்த இடத்தை நிரப்புவார்....

    ReplyDelete
  38. பரவாயில்லை விடுங்க பூபதிஜி.. ஈரோட்டுல லேடி எஸ்ஸுக்கு குண்டு புக் கேட்டு போராட்டம் நடத்திரலாம்

    #########


    வழிமொழிகிறேன் சரவணாரே....:-)

    ReplyDelete
  39. இதுவரை இந்த வருடம் புதுவரவுகளின் வருடமாகவே ஜொலிக்கிறது!!

    டியுராங்கோ

    ஜெரேமையா

    ஆண்டா்டேக்கா்

    Lady S ஷானியா (மச்சக்கண்ணி)

    நாலுமே அருமை!!!

    ReplyDelete
  40. லேடி S ..
    ஓர் அறிமுகப் படலம் தான் என்ற போதிலும்... ஒரு அட்டகாசமான கதை. சிற் சில இடங்களில் லார்கோவை நியாபகப் படுத்துகிறது . ஆழமாக பார்த்தால் இருவருக்கும் இடையே ஒரு சில ஒற்றுமைகள் இருப்பது போல் உள்ளது. ஏற்கனவே மேலே நண்பர் ஒருவர் சொன்னது போல் , லார்கோவின் களங்கள் கம்பெனி பிரச்னைகளையை அடிப்படையாய் உள்ளது. லேடியின் களங்களோ ராஜ்ஜிய உறவுகளில் பின்னிக் கிடப்பதாய் தோன்றுகிறது.

    அடுத்த அடுத்த கதைகள் இன்னும் சுவாரசியமாக இருக்க வேண்டும்.
    லேடி S ... ஓர் அட்டகாசமான அறிமுகம்.

    ReplyDelete
    Replies
    1. முத தபா நம்ம டைகரு தம்பி புலி வராத கதைக்கு விமர்சனம் பண்ணியிருக்காரு....


      அல்லோரும் சோரா கை தட்டுங்க....

      Delete
    2. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

      Delete
    3. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌

      Delete
    4. Rummi XIII : பாயும் புலியின் பாசறையிலிருந்து பெண்புலிக்கு வாழ்த்துக்களா ? சூப்பர் !

      Delete
  41. மாடஸ்டி முதல் பிரமே அமர்க்களம் ....ஹி ஹி ...

    ReplyDelete
    Replies
    1. மந்திரியாரே
      மாடஸ்டி
      லேடி S
      ஜீலியா
      மூன்று பேரையும் பார்த்ததிலிருந்து என் கடைவாயிலிருந்து வழிய தொடங்கிய ஜொள் என் மனைவியிடம் கொட்டு வாங்கிய பிறகு தான் நின்றது
      இப்போது உங்களுக்கு ஆரம்பித்திருக்கிறது பார்த்து உஷாராக இருங்கள்

      Delete
  42. தோழர் செந்தில் சத்யா விற்கு
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி
      எத்தனையோ பேர் வாழ்த்து சொன்னாலும் காமிக்ஸ் தோழர்கள் தோழிகள் வாழ்த்து சொல்லும் போது தான் உண்மையான உற்சாகம் கரை புரண்டோடுகிறது

      Delete
    2. செந்தில் சத்யா : அடடே..நம்ம சத்யாவுக்குப் பிறந்த நாளா ? நமது உளமார்ந்த வாழ்த்துக்களையும் பிடியுங்கள் நண்பரே ! நித்தமும் உங்கள் தினங்கள் சந்தோஷத் தோரணங்களாகிடட்டும் !

      Delete
    3. நம்ம சத்யா என நீங்கள் கூறிய ஒரு வார்த்தை போதும் ஆசிரியரே நித்தம் நித்தம் நான் சந்தோஷமாக இருப்பேன்
      நன்றி என் மூத்த சகோதரரே

      Delete
  43. க்யூபா படலம் தொடருது.....

    *பில்லி சூனிய கடவுள் ஷாங்கோவின் அவதாரமாக தன்னை கட்டிக்கொள்ளும் மாயாஜால உருவங்களை ஏவிவிடும், மந்திர ஜால வித்தைக்கார சுயநலமி ராயாடோ புரட்சியின் தலைமையை அபகரிக்க நினைக்கிறான். தன்னுடைய ஆட்டுமூளையில் உதித்த திட்டத்தை செயல்படுத்த அவனுக்கு ஆயுதங்கள் தேவை. சிலகாலம் முன்பு க்யூப கரும்பு கொல்லை முதலாளி டான் ரபேல் ஸெர்ரானுவுக்கு சில ஆயுதங்களை, நியூஆர்லியன்ஸை சேர்ந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஹென்றி பிக்கார்டு ரகசியமாக அனுப்பி வைத்ததை மோப்பம் பிடிக்கிறான். சுயநலமியின் வஞ்சக திட்டம் உருஉருவாகிறது. பில்லி சூனிய ஏவல்வித்தை மூலம் இரட்டை சர்ப்ப உருவங்களை ஏவிவிட்டு நீயூஆர்லியன்ஸ் சதுப்பு கானக மாந்த்ரீகன் ஆண்ட்ரேயை வசப்படுத்தி,ஹென்றியின் மகன் சிறுவன் மாட்டை கடத்தி வர ஆஞ்சை பிரப்பிக்கிறான். சிறுவன் மாட் பிக்கார்டின் மீட்புக்கு பணயமாக ஆயுதங்களை கோருவது அவன் திட்டம்.

    * ஹென்றி பிக்கார்டிடம் தலைமை பணியாளனாக நீண்டகாலமாக இருக்கும் முன்னாள் கறுப்பின அடிமை எடீனை ஊடு "வாங்கா" உருவ பொம்மையை கொடுத்து கடத்தல் திட்டத்திற்கு பணிய வைக்கிறான் ஆண்ட்ரே. அடிமைதனத்தில் இருந்து வெகுகாலம முன்னரே தனக்கு விடுதலை தந்த முதலாளிக்கே எடீன் துரோகம் செய்கிறான் எனில் அக்காலத்திய மந்திர தந்திர ஏவல்களின் வீரியத்தை உணரலாம்.

    *தன் மகனை மீட்க தன்னுடைய நெடுநாளைய ஆத்ம நண்பனும் சிகுவாகுவா கவர்னருமான மண்டாலஸின் உதவியை ஹென்றி நாட, மண்டாலஸின் பரிந்துரையில் நம் தல "டெக்ஸ்" இந்த இடத்தில் களம் இறங்குகிறார்(காதை கிழிக்கும் விசில் சத்தம் பல நிமிடங்கள் ஒலிக்க...)

    *டெக்ஸ்,மண்டாலஸ்,ஹென்றி பிக்கார்ட் இடையேயான அறிமுக உரையாடல்களில் கொஞ்சம் கவனமாக செவிமடுத்தோம் எனில், கதை நடக்கும் காலத்தின் வரலாற்று பின்னணி விளங்குமே என தலையை நுலைத்தது தான் தாமதம் வரலாற்று சுழல் என்னை வாரிக்கொண்டு போய் தள்ளியது19ம் நூற்றாண்டில்....

    *தானும், டெக்ஸும் மண்டாலஸுக்கு நண்பர்களானது மெக்ஸிகோ விடுதலைப் போரில் தாங்கள் இருவரும் அங்கம் வகித்த போதுதான் என ஹென்றி சொல்கிறார்.அதை மண்டாலஸ்ம் உறுதி படுத்துகிறார். அமெரிக்க உள்நாட்டு போரில் டெக்ஸ் பங்கு கொண்டது நாம் ஏற்கனவே பல கதைகளில் அறிந்த உண்மை. அதை ஹென்றியும் நினைவு கூறுகிறார்.

    மெக்சிகோ விடுதலை போர் முடிந்தது-1821;
    அமெரிக்க உள்நாட்டு யுத்தம் நடந்தது 1861to1865;
    கியூபா விடுதலை போர்கள் 1898ல் முடிகின்றன். ஏகாதிபத்திய ஸ்பென் ஆட்சியாளர்களுக்கு கமிசன் தர மறுத்த கியூப கரும்பு கொல்லை முதலாளிகளும் ஏனைய உள்நாட்டு வசதியான பெருமுதலைகளும் பிரகடனப்படுத்திய பத்தாண்டுப்போர் 1868to1878தான் மூன்று கியூப விடுதலைப் போர்களில் முதலானது. நம் கதை நடந்த கால கட்டமும் இதுவே எனக்கொண்டால் டெக்ஸ் எப்படி மெக்சிக்கோ சுதந்திர போரில் பங்கு கொண்டு இருக்க முடியும்...???? அப்படீனா டெக்ஸ்க்கு என்னா 80வயதா? ஒரே கன்பீயூசன்...

    ..........தொடரும்......

    ReplyDelete
    Replies
    1. ///டெக்ஸ் எப்படி மெக்சிக்கோ சுதந்திர போரில் பங்கு கொண்டு இருக்க முடியும்...???? அப்படீனா டெக்ஸ்க்கு என்னா 80வயதா? ஒரே கன்பீயூசன்...///

      ககக போ!!

      எங்கே இதைய பதிவிட்ட யாரேனும் சண்டைக்கு வந்துருவாங்கலோன்னு கம்முனு இருந்தேன்!!

      ஆனா உங்க நோ்மை ரொம்ப புடிச்சிருக்கு பாஸு!!

      Delete
    2. ///எங்கே இதைய பதிவிட்ட யாரேனும் சண்டைக்கு வந்துருவாங்கலோன்னு கம்முனு இருந்தேன்!!///...சறுக்கி விழுந்தால் கையை கொடுத்து தூக்கி விடவும், பட்டையை கிளப்பினால் நெஞ்சார பாராட்டவும்,தவறென்றால் முதுகில் தட்டி நம் தவறை சரிப்படுத்தும் உயிரான நண்பர்கள் இருக்கையில் என்ன கவலை மிதுன்....


      ////ஆனா உங்க நோ்மை ரொம்ப புடிச்சிருக்கு பாஸு!!///--தேங்யூ...

      Delete
  44. /// அப்படீனா டெக்ஸ்க்கு என்னா 80வயதா? ///

    ஆகா.. நீங்களே ஆரம்பிச்சு கொடுத்துட்டீங்களே டெக்ஸ்...

    நம்ம டைகர் க்ரூப்புக்கு டெக்ஸ் காலை வார ஒரு வழிய காண்பிச்சுட்டீங்க..

    நம்ம வரலாற்று ஆசிரியர்களுக்கும் இதில் நோண்ட்டி நொங்கெடுக்க ஒரு கேள்விய கேட்டுட்டீங்க..

    மறுபடியும் இந்த புக்கை கைல வெச்சுகிட்டே சுத்தனுமா...

    நல்ல வேலை ஹார்ட் பவுண்டா போச்சு...

    ReplyDelete
  45. // நம்ம டைகர் க்ரூப்புக்கு டெக்ஸ் காலை வார ஒரு வழிய காண்பிச்சுட்டீங்க..//
    பழமொழி சொன்னா அனுபவிக்கனும்,ஆராயக் கூடாது.அது போல,கதை வந்தால்,அதை அலசுவோம்.டெக்ஸ் அங்கே எப்படி வந்தார்னு யோசிச்சா.அதற்கு விடையே இல்லை?!

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : //பழமொழி சொன்னா அனுபவிக்கனும்,ஆராயக் கூடாது//

      ஹி...ஹி..ஹி..!

      Delete
    2. ///டெக்ஸ் அங்கே எப்படி வந்தார்னு யோசிச்சா.அதற்கு விடையே இல்லை?!///--- விடை சொல்ல முடியாத கேள்வி என எதுவுமேயில்லை ரவி...எல்லா கேள்விக்கும் அறிவியல் பூர்வமான பதிலும் தர்க்கரீதியான (லாஜிக்) பதிலும் என இரு விதமாக விடை காண இயலும் என்பது என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும்...
      கற்பனை பாத்திரம் தான் என்றாலும் தர்க்கரீதியாக டெக்ஸ்சின் வயதை நிர்ணயிக்க இயலும்... இந்த க்யூபா படலம் மிகச்சிறந்த காரணி,டெக்ஸ் வயதை நிர்ணயிப்பதில்... 1880ல் டெக்ஸ்க்கு தோராயமாக 50வயது என்பது இதற்கு முன்பு நாம் படித்த அவரின் சாகசங்களை சலித்து உணராம்...

      Delete
  46. /// அப்படீனா டெக்ஸ்க்கு என்னா 80வயதா? ///----இந்த கேள்வி உரைப்பது 50வயசு டெக்ஸ் தான் அங்கேயும் எங்கேயும் உள்ளார்...

    பொருளர் செனா அனா ஜி& மிதுன் போன்ற வரலாற்று தொல்லியலார்களுக்கு என் கேள்வி- எந்த மெக்சிகோ விடுதலை போரில் டெக்ஸ் பங்கெடுத்தார்??? என்பதே....

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் !!!! @
      டெக்ஸ் பிறந்த வருடம் தோராயமாக 1840
      மெக்ஸிகோ ஸ்பெயின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றது 1821.

      அமெரிக்க உள்நாட்டு போரில் பங்கு பெற்றபோது டெக்ஸ் வயது சுமார் 25.
      MEPHISTO-வை துரத்தி மெக்ஸிகோ –வுக்கு செல்லும்போதுதான் –அமெரிக்க உள்நாட்டு போர் முடிந்தபின்தான் செல்கிறார் – மண்டலாஸ் –ஐ டெக்ஸ் சந்திக்கிறார்...
      மண்டலாஸ் கறை படிந்த மெக்சிக -ஆனால் சுதந்திர- அரசாங்கத்துக்கு எதிராக போராடும் ஒரு லிபரல் ...அவரது போராட்டம் அந்நிய சக்திகளுக்கு எதிரானது அல்ல ...ஊழல் மலிந்த தனது அரசுக்கு எதிரானது ...
      மெபிஸ்டோ-வை பிடிக்க தனக்கு பெரிதும் உதவிய மண்டலஸ் சிகுகுவா கவர்னர் ஆக பெரிதும் உதவுகிறார் டெக்ஸ் ....
      நமது கதை நடக்கும்போது டெக்ஸ் –ன் வயது தோராயமாக ஐம்பதுக்குள்.
      கியூபா விடுதலைக்காக போராடி கொண்டு இருக்கும்போது டெக்ஸ் அங்கு செல்வதாக கதை அமைக்க பட்டுள்ளது எனவே இவ்வயது பொருத்தமானதாக இருக்கும் ....


      Delete
    2. And மேற்கத்திய திடகாத்திரர்களுக்கு 50 என்பதெல்லாம் பல்செட் மாட்டத் திட்டமிடும் ஒரு பருவமுமல்ல ! So நம்மவர் ஐம்பதிலும் going strong என்பதில் வியப்பில்லை !

      Delete
    3. //And மேற்கத்திய திடகாத்திரர்களுக்கு 50 என்பதெல்லாம் பல்செட் மாட்டத் திட்டமிடும் ஒரு பருவமுமல்ல ! So நம்மவர் ஐம்பதிலும் going strong என்பதில் வியப்பில்லை///

      And மேற்கு மாவட்ட திடகாத்திரர்களுக்கு 50 என்பதெல்லாம் பல்செட் மாட்டத் திட்டமிடும் ஒரு பருவமுமல்ல ! So நம் அன்புக்குரிய எடிட்டர் ஐம்பதிலும் going strong என்பதில் வியப்பில்லை.....சிவகாசி டெக்ஸ் !!!

      Delete
    4. சரியான விளக்கம் பொருளர் ஜி..👌👌👌👌🍦🍦🍦

      ///சிவகாசி டெக்ஸ்///---சூப்பரு...!!!.

      டெக்ஸ், மண்டாலஸ்க்கு உதவியது அந்த உள்நாட்டு கிளர்ச்சி என சரியாக பிடித்து விட்டீர்கள் செனா அனா ஜி.

      இன்னும் ஒரே சந்தேகம் மட்டுமே பாக்கி, க்யூபா படலத்தில்(33ம் பக்கத்தில் முதல் கட்டம்) "நம் இருவருக்கமிடையே பொதுவான அம்சம் உண்டு வில்லர்.இருவருமே மெக்ஸிகோ விடுதலைப் போராட்டத்தில் அங்கம் வகித்திருக்கிறோம்....மண்டாலெஸூக்கு நாம் நண்பர்களானது,அந்தச் சந்தர்ப்பத்தின் போது தான்!"-என ஹென்றி,டெக்ஸிடம் சொல்கிறார். "கரெக்ட்"-என ஆமோதிக்கிறார் மண்டாலஸ். இந்த ஹென்றி தாத்தா,மண்டாலஸ்க்கு உதவிய "போர்" சரியாக எந்தப் போர்???
      (நானும் விக்கிபீடியாவில் அப்போதைய இந்த போர்களில் மூழ்கிப்பார்க்கிறேன்)

      Delete
    5. இந்த கேள்வி மிக எளிமையானது டெக்ஸ் ...
      //இந்த ஹென்றி தாத்தா,மண்டாலஸ்க்கு உதவிய "போர்" சரியாக எந்தப் போர்???///

      மாக்ஸ்மிலியன் 1861-ல் மெக்ஸிகோ -வை கைப்பற்ற முயற்சி செய்து அதில் அரைகுறை வெற்றி அடைந்தார் அல்லவா ???

      பிரெஞ்ச் அரசு துணையுடன் நடந்த இச் செயலால் ஜூவரெஸ் மெக்சிகோவின் வட பகுதியை நோக்கி சென்று அப்பகுதியை மட்டும் தனது கட்டுபாட்டில் வைத்து கொள்ள நேர்ந்தது ...

      உண்மையில் 1862 -MAY மாதம் PUEBLA நகருக்கு அருகாமையில் மாக்ஸ்மிலியன் படைகளுக்கும் மெக்ஸிகோ படையினருக்கும் இடையே நடந்த போரில் மாக்ஸ் மிலியன் படைகள் தோற்கடிக்கப்பட்டன ..

      இதுதான் இருபிரிவினருக்கும் இடையே நடந்த பெரிய அளவிலான போர் ..

      இதைத்தான் ஹென்றி குறிப்பிட்டு இருக்கவேண்டும் ....

      மெக்ஸிகோ தலைநகரை விட்டு மாக்ஸ்மிலியனை மெக்ஸிக படையால் துரத்தமுடியவில்லை

      ஜூவாரெஸ்-ன் மெக்ஸிக படையினரை மாக்ஸ் மிலியனால் கட்டுபடுத்தமுடியவில்லை ..

      1867-ல் பிரெஞ்ச் அரசு கைவிட்டபோது மாக்ஸ் மிலியன் உயிர் துறக்க நேர்ந்தது ...

      வல்லவர்கள் வீழ்வதில்லையில் டெக்ஸ் மெக்ஸிகோ வருவதாக -அமெரிக்க உள்நாட்டு போர் முடிந்த பின் வருவதாக பிளாஷ்பேக் சொல்லுகிறார் --ஆனால் அப்போது அவர் ரேஞ்சர் அல்ல ..

      ஹட்ச் குழுவினரை அவர் சந்திக்கையில் அவர் அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளி ...

      மண்டலஸ் -ஐ பின்நாளில் சந்திக்கும்போதும் அவர் குற்றவாளிதான் ...ஆனால் குற்றம் சுமத்தப்பட்ட ரேஞ்சர் ....

      மாக்ஸ் மிலியன் கொல்லப் பட்ட பிறகு ஜூவரேஸ் 1867-1872 வரை பிரசிடென்ட் ஆக இருந்தார் ...1877-1911 வரை டைஸ் இருந்தார்..

      இடைப்பட்ட காலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை ..இக் காலகட்டத்தில்தான் மண்டலஸ் -ஐ டெக்ஸ் முதன்முதலில் சந்தித்து இருக்க வேண்டும்

      Delete
    6. Wow super செனா அனா ஜி👏👏👏👏👏👏👏👌👌👌👌👌🍦🍦🍦🍦🍦

      மிகச்சரியான விளக்கம், இப்போது இந்த எல்லா தகவல்களை பொறுத்து பார்த்தால் எல்லா பல்சக்கரங்களும் கச்சிதமாகப் பொறுந்துகின்றன...
      நானும் அந்த French invasion of Mexico 1861to1867ஐ படித்து பார்த்தேன் ஜி.

      அட்டகாசமாக கியூபா கதை நிகழ்வுகள் வரலாற்றில் இருந்து பின்னப்பட்டுள்ளன....

      மெக்சிக்கோ விடுதலை போர் என்றால்1821மட்டும் அல்ல இந்த 1867ல் முடியும் போரையும் கணக்கில் கொண்டிருக்கனும். எத்தனை தடவை தாண்டா சுதந்திரம் வாங்குவீங்க மெக்சிகோ தடிப்பயல்களா...
      ஆசிரியர் சார் அந்த 33ல்பக்கத்தில் 2ம் மெக்சிகோ விடுதலைப்போர்னா போட்டிருக்க முடியாது தான்.இந்தப் பயலுக 2தடவை சுதந்திரம் வாங்குவாங்கனு யாருக்கு தெரியும்...


      முந்தைய கடனுக்கு வட்டி கட்டாத மெக்சிகோ மீது ப்ரான்ஸ்,ஸ்பெயின், இங்கிலாந்து 3ம் படையெடுக்க,மெக்சிகோ முழுதும் ஆக்ரமிக்கும் ப்ரன்ச்சின் எண்ணம் தெரிந்தவுடன் இங்கியும் ஸ்பெயனும் எஸ்கேப். பரென்ச் அரை குறை வெற்றி பெற மேலே நீங்கள் சொன்ன எல்லா குழப்பங்களும் அரங்கேறுகின்றன்...

      Delete
    7. ///இதைத்தான் ஹென்றி குறிப்பிட்டு இருக்கவேண்டும் ....///இதே தான் ஜி. இதைத்தான் ஹென்றி குறிப்பிடுகிறார்,; 38ம் பக்கத்தில் அமெரிக்க உள்நாட்டு போரின் இறுதி கட்டமான The Battle of Appomattox April 9,
      1865, American
      Civil Warல் படுகாயமடைந்து விட்டதாகவும் தான் லேசான காயங்களுடன் தப்பியதாகவும் மண்டாலஸ் குறிப்பிடுகிறார். எனவே அதற்கு பிறகான 1867இறுதி போரில் ஹென்றி பங்கேற்றிருக்க முடியாது. அமெரிக்க படையில் மண்டாலஸ் எப்படி? என அடுத்த கேள்வி பிறக்கிறது.இதற்கு கதையில் 32ம் பக்கத்தில் கடைசி பேனலில் விளக்கம் உள்ளது. "அந்நாளைய அதிரடி நடவடிக்கைகளையும், சட்டத்திற்கு முரண்பட்ட அனுபவங்களையும் அப்படியே மறந்துவிட வேண்டும்... பழசைக் கிளறக் கூடாது'என்று ஹென்றி விரும்பக்கூடும்"--என மண்டாலஸ் கூறுவதில் இருந்து இவர்கள் இருவரும் இரு பக்க போர்களிலும் ஏதோ தில்லாலங்கடி வேலைகள் செய்து இருவரும் பரஸ்பர நன்மை அடைந்து உள்ளனர் என்பது புரியவரும். முதலில் கதையை படிக்கும் போது இந்த டயலாக் அர்த்தமற்றதாக தோன்றியது. ஆனால் இந்த உள்குத்து விவகாரங்களை பார்க்கும்போது மிகத்தேவையான கட்டமாக தோனுது.

      Delete
    8. அருமையான விளக்கங்கள்..

      Delete
    9. ///மாக்ஸ் மிலியன் கொல்லப் பட்ட பிறகு ஜூவரேஸ் 1867-1872 வரை பிரசிடென்ட் ஆக இருந்தார் ...1877-1911 வரை டைஸ் இருந்தார்...///----இந்த கால கட்டத்தில் தான் நம்ம டைகரு மின்னும் மரணத்தில் மெக்சிகோவில் புகுகிறார்.முதலில் ஜூவாரெஸ் காலத்தில் லோபெஸ்
      சிகுவாகுவா கவர்னராக இருக்கும் போதும்,; லோபெஸ் மறைந்து அந்த புதையல் ரகசியத்தை அறிந்த சாதாரண கமாண்டர் விகோ,ஜூவாரெஸை மிரட்டி கவர்னராகிறான். டைகரை சுட்டுத்தள்ள இருக்கும் போது ஜூவாரெஸ் மறைய, அடுத்த இடைக்கால பிரஸிடென்ட் லார்டோவின் கவர்னராக போர்டிலாஸ் வர டைகர் தப்புகிறார்.ஒரே வரலாற்று நிகழ்வில் டெக்ஸ் & டைகர் இருவருக்கும் கதைக்களன்கள் அமைக்கப்பட்டுள்ளன...செம...

      Delete
    10. ஆஹா ஓஹோ!!

      தூள்!! சபாஸ்!!

      பலேபலே!!

      பிரம்மாதம்!!

      ஆனாலும் டெக்ஸ் 50 வயசுதான்கிரது சந்தேகமா தானே இருக்கு!!!

      Delete
    11. @ Friends : யோசித்துப் பாருங்களேன் ...நேற்று வரைக்கும் பிடல் கேஸ்ட்ரோவின் தேசம் ; சே குவாரா புரட்சிக்குப் போராடிய மண் என்ற அடையாளங்களைத் தாண்டி நமக்கும் க்யூபாவுக்கும் என்ன பரிச்சயம் இருந்திருக்க முடியும் ? இன்றைக்கு அதன் வரலாறு ; பூகோளம் ; அரசியல் என்று பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறோம் !! ஒரு பொம்மை புக்கின் ஆற்றலைப் பாருங்களேன் ?!!

      இன்னமுமொரு வித்தியாசமான பூமியில் 'தல' கால்பதிக்கவிருக்கும் சாகசம் 2018 க்கு தயாராகி வருகிறது !

      Delete
    12. ///இன்னமுமொரு வித்தியாசமான பூமியில் 'தல' கால்பதிக்கவிருக்கும் சாகசம் 2018 க்கு தயாராகி வருகிறது !/////

      அது எந்த பூமிங்க சாா்!!

      Delete
    13. முதல்முறையாக ஐரோப்பாவில் டெக்ஸாங் சார்???

      Delete
  47. ஆச்சர்யப்பட வேண்டியதே இல்லை சார்..
    இதழ்களின் தரமும்,வடிவமைப்பும் உலக தரம் வாய்ந்தவை எனும் போது , நூறு சதவிகித வெற்றி நிச்சயம் .
    இம்மாத பல்சுவை variety இதழ்கள், மேலும் பல புது வாசகர்களை கவரும் என எதிர்பார்க்கலாம்.
    அட்டைப்பட வடிவமைப்பு,மற்றும் வண்ணங்கள் மிக மிக அருமையாக அமைந்துவிட்டன.வாழ்த்துக்கள் ஆசிரியரே.

    ReplyDelete
  48. சாா்,

    அடுத்த சூப்பா் 6ல் லக்கியும், சிக்பில்லுமாவது சோ்த்துகங்க சாா்!!

    ReplyDelete
    Replies
    1. போராடினால் 3வருக்கும் போராடனும். இதுன்னா சாமி டெக்ஸ் ஐ லைட்டா கழட்டி விடுவது...(கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர)
      Luky...
      Kid ordinary...
      TeX...
      Always Fight for L.K.T. Trio...

      Delete
    2. கழட்டி விடணும்னு நெனச்சாலும் டெக்ஸ் கிட்ட நடக்காதே.

      Delete
  49. மிதுன் மண்டை மேலே ஒரு கொட்டு.
    அடுத்தது சூப்பர் 6 அல்ல.
    சூப்பரோசூப்பர் 12. போராட்டக்குழு
    மற்றும் நமது கா மு க --ர ர க்கள்
    ஆதரவு குரல் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. 12ஆ???

      அப்போ ரண்டுலயும் டபுள் செட் பாா்சல்!!!

      சாாிங்க டெக்ஸ் விஜய் 3லயும் ரண்டு செட் பாா்சல்!!!

      Delete
  50. காமுகரர -விளக்கம்
    காமிக்ஸ் முன்னேற்ற கழக ரத்தத்தின்
    ரத்தங்கள்.

    ReplyDelete
  51. விஜயன் சாா்!!

    டெக்ஸ், டைகா், அண்டா்டேக்கா், தாடிவாலா நாலு பயலுவலும் ஒரே எடத்துல இருக்கர படத்த போட்டுருந்தீங்களே!! அது நெசம்தான் போல!!

    பேசாம நாலு பேரையும் சேத்து வெச்சாப்ல நீங்களே ஏன் ஒரு கதையை எழுதப்படாது!!

    ReplyDelete
    Replies
    1. கதைக்களம் : உள்நாட்டு போா் முடிந்த பிறகு ஒரு ஹாயான பாா்!

      தலைப்பு : இரு மலைகளுக்கு நடுவே ஒரு வெட்டியான்!!

      Delete
    2. காட்சா 1 : ஒரு ரவுடி கும்பல் பாா் முதலாளியை சுட எத்தனித்த சமயம் "டுமீல்" டெக்ஸ் என்ட்ரி!!

      Delete
    3. காட்சி 1 படிக்கவும்

      Delete
    4. காட்சி 2 : ஆல்ரெடி 2 ரவுண்டு முடிச்சு 3வது ஊத்தி தாகசாந்தி செய்தபடி சிரித்துக் கொண்டே டெக்ஸை மப்போடு பாா்க்கிறாா் டைகா்!!

      Delete
    5. காட்சி 3 : துப்பாக்கி முழக்கத்தை கேட்டதும் தன் வெட்டியான் வண்டியின் மேல் சாய்ந்தபடி ஒய்யாரமாக நின்றிருந்த க்ரோ புன்னகையோடே சொன்னான் "மொதல்லயே ஒரு எத்தன் உள்ளே இருக்கான்; இப்போ 2வது ஆளும் உள்ளே போயிட்டானா??
      நமக்கு இன்னிக்கு நல்ல போனிதான்"

      Delete