Sunday, July 02, 2017

ஒரு இணைதடத்தின் கதை !

நண்பர்களே,

வணக்கம். 'பழையன கழிதல் ; புதியன புகுதல்" என்றெல்லாம் நிறையவே வாசித்திருப்போம் - ஆனால் அது நடைமுறையாகிடும் பொழுது மனுஷனுக்கு நவ துவாரங்களிலிருந்தும் சுடு காற்று மட்டுமே வெளிப்படும் பட்சத்தில் - விழி பிதுங்கிப் போகிறது என்பதை இவ்வாரம் உணர்ந்திட முடிந்துள்ளது ! வருது,...வருது...என்றான மூன்றெழுத்துப் புலி ஒரு வழியாய் வந்தே தீர, GST பதிவுகள் ; அந்தப் படிவம் நிரப்பல் ; இந்தப் படிவம் நிரப்பல் ; கணக்கெழுதும் software அப்டேட் செய்தல் ; இறக்குமதிக்குள்ள விதி மாற்றங்கள் பற்றியறிதல் ; சேவை வரியின் மாற்றங்கள் இத்யாதி....இத்யாதி என என்று இந்த வாரமே ஒரு  மண்டை காயும் வாரமாகிப் போனது ! சரி...அலைந்தோம், திரிந்தோம் என்பதற்காக விபரங்கள் ஸ்பஷ்டமாய்த் தெரிந்தனவா என்றால் - ஊஹூம் !! ஆளுக்கொரு விதமாய்ச் சட்டங்களை அர்த்தம் செய்து கொண்டு மனுஷனின் கடைசிக் கற்றை கேசத்தையும் நிர்மூலமாக்க கச்சை கட்டி நிற்கின்றனர் ! "சுக்குக் காபிக்கு GST  கிடையாதாம் ; டிகாஷன் காபிக்கு 18 % வரியாம்"  ; "கடவாய்க்குள் நம்ம விரலை விட்டுச் சப்பிக் கொண்டிருந்தாலே 5 % சேவை வரி உண்டாம் - அதே இது, அடுத்தாள் விரலைச் சப்ப நேர்ந்தால் 12 % வரியாம் சாமி !தெரியுமோ ?" என்ற ரீதியில் ஆளாளுக்கு ஒரே நாளிரவில் பொருளாதார மேதாவிலாசங்களை, சல்லிசாய் கொள்முதல் செய்து கொண்டிருப்பது புரிகிறது ! நமக்கு மாத்திரம் தானென்றில்லாது - நமது பைண்டிங் பிரிவுக்குமே இந்த GST வருகை தவிர்க்க இயலா அவசியமாகிப் போக - பணியில் கவனம் தர நேரமின்றி, மனுஷன் கனக்குப் பிள்ளை வீட்டின் முன் தவம் கிடந்தது வருகிறார் ! "ஜூலை 1 " என்ற கெடு நம் இதழ்களுக்கும் சரி, GST க்கும் சரி, ஒன்றாய் அமைந்திட - வேறு வழியே இல்லை, திரு திரு வென்று விழிப்பதைத் தாண்டி !! மாதத்தின் 3 இதழ்கள்  பைண்டாகித் தயாராகியிருக்க - லயன் # 300 மட்டும் கடைசிக் கட்டப் (பைண்டிங்)  பணிகளில் இருந்து வருகிறது. அதன் ஒவ்வொரு தயாரிப்பு நிலையிலுமே வெயிட் போட்டு செட்டாக அவகாசம் ; பெவிகால் காய்ந்திட அவகாசம் என்று time gap தருவது இன்றியமையா சமாச்சாரம் என்பதால், பல்லைக் கடித்துக் கொண்டே காத்துக் கிடக்க வேண்டிப் போகிறது ! To cut a long story short - வரும் செவ்வாய் மாலைக்கு உங்களது கூரியர்கள் இங்கிருந்து கிளம்பிடும் ! சமீப காலங்களில் இதுவே மிகுந்த தாமதம் என்பதன் பொருட்டு உள்ளுக்குள் ரொம்பவே நெருடுகிறது ! ஆனால் விடிந்து முழித்தால் -வேலையைத் தாண்டி வேறெதிலும் கவனம் தர அவசியமில்லாது சுற்றி வந்த மக்களை, இந்த GST திருவிழாவுக்குள்  பங்கேற்க 'வாங்கோ....வாங்கோ..' என்று கையைப் பிடித்து இழுத்துச் செல்லும் அனுபவம் இவ்விதமிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை ! Sorry guys - நிஜமாகவே வருந்துகிறோம் !

இதனை ஈடு செய்திடும் பொருட்டு "இரத்தக் கோட்டை" இதழினை ஜூலை 15 -க்குள் அச்சிடத் தீர்மானித்துள்ளோம் ! அடுத்த 4 நாட்களுக்குள் அதன் DTP வேலைகள் மொத்தமாய் நிறைவு கண்டிருக்கும் என்பதால் - proof reading பணிக்கு உதவிட முன்வந்திருந்த நண்பர்களுக்கு பணிகள் பிரித்து அனுப்பப்படும் ! 3 நாட்கள் அவகாசத்தில் பிழை திருத்தம் செய்து திருப்பி அனுப்பிடல் அவசியம் guys !! And அட்டைப்பட டிசைனும் தற்போது ரெடியென்பதால் - காரணங்கள் இராது, ஆகஸ்டில் தாமதத்துக்கு ! Sorry again all !

தாமதத்தின் ஒரு பங்கு அடியேனுக்கும் சாரும் ; இந்த இதழினில் இடம்பிடிக்கும் ஜூலியா சாகஸத்தின் மொழிபெயர்ப்பினைச் செப்பனிடுவதில் நேரமெடுத்துக் கொண்ட வகைதனில் !   நமது புது மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் பேனாவின் படைப்பிது என்ற வகையில் மேம்போக்காக அந்நேரம் புரட்டிப் பார்த்ததைத் தாண்டி வேறெதற்கும் நேரம் இருந்திருக்கவில்லை ! But இம்மாதம் அதனைத் தூக்கி வைத்துக் கொண்டு பணிகளைத் துவக்கிய போது தான் -ஏகமாய்த்  திருத்தங்கள் செய்திடும் அவசியம் புரிந்தது ! நல்ல மொழிநடை தான் எனினும், வாக்கிய அமைப்புகள் ; எதைத் தவிர்ப்பது, எதைத் தழுவுவது ? போன்ற சிற்சிறு விஷயங்களில், அனுபவமின்மை காரணமாய் நேரும் சொதப்பல்கள் நிறையவே நெருடின ! அவற்றைச் சரி செய்ய அமரும் வேளைகளில் எல்லாம் கொட்டாவிகள் விட்டம் வரை விரிய - தாமதம் அங்கேயும் !! Maybe இது ஆண்டுமலர் மாதம் என்பதாலோ - என்னவோ, நமது அந்நாளைய ஆத்ம தோழனாம் தாமதப் பிசாசும், ஆட்டத்துக்கு சேர்த்தியாகிக் கொண்டது போலும் !  Anyways - தொடரும் மாதங்களில் நேரம் தவறாமையைத் தவறாது கடைப்பிடிப்போம் !

இது சூப்பர் 6 இதழின் மாதமுமே என்பதால், சிக் பில்லின் classics பிரதியினைக் கையில் வைத்து அழகு பார்க்கும் போது எழுந்த சில random சிந்தனைகளே இந்த ஞாயிறின் பதிவுக்கான topic ஆகிடுகிறது ! பழசின் மறுபதிப்போ, புதுசின் புதுவரவோ - fresh அறிவிப்புகள் வெளியாகும் ஒவ்வொரு தருணத்திலும் அவற்றை விசிலடித்து வரவேற்கும் உங்கள் உத்வேகத்தை நாமறிவோம் ! அந்த விதத்தில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் இந்த SUPER 6 இணைதடம் ஒரு அழகான வெற்றி என்பதில் ஐயமில்லை ! லக்கி கிளாஸிக்ஸ் துவக்கி வைத்த டெம்போவை மாடஸ்டியின் "கழுகுமலைக் கோட்டை" அடுத்த லெவலுக்கு இட்டுச் செல்ல ; தொடர்ந்திட்ட 'ஜெரெமியா' for - against என்று ஏகமாய் உணர்வுகளை வெளிப்படுத்தக் காரணமாக அமைந்ததொரு இதழ் ! And இப்போது நமது வுட் சிட்டி கோமாளிகளின் மறுபதிப்பு மேளா நிச்சயமாய் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் வைத்திடாதென்ற நம்பிக்கை திடமாயுள்ளதால் சூப்பர் 6 -ன் நான்காம் வெளியீடுமே தேறிடும் என்று நம்ப இடமுள்ளது ! காத்திருப்பது 'தல'யின் "டிராகன் நகரம்" - வண்ணத்தில் எனும் பொழுது கண்களை இருக்க மூடிக் கொள்ளலாம் - இதன் வெற்றி உத்திரவாதத்தை எண்ணி !! And இறுதி இதழும் ஒரு ஜனரஞ்சக நாயகரது என்பதால் - "பிரின்ஸ் ஸ்பெஷல்" சந்தோஷத்தை மட்டுமே விதைத்திடும் என்று நம்பலாம் தானே ? God willing - சகலமும் நலமாய் அமைந்தால், இந்த SUPER 6 முயற்சி நினைவுகளில் தொடர்ந்திடும் அந்தஸ்த்தைப் பெற்றிருக்கும் ! So இந்த இணைதடத்தைத் தொடரும் காலங்களிலும் தொடர்வதன் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் ! But இந்தாண்டினைப் போலவே மினிமம் வசூலுக்கு கியாரண்டி தரும் மறுபதிப்புகளை மிகுதியாக்கிடாது - புதுசுகளுக்கு அடுத்த சுற்றில் இடம் தந்தாலென்னவென்று தோன்றியது ! Of course - இவை சகலமும் உங்கள் ஆர்வங்கள் பிரதிபலிப்புகள் எனும் பொழுது - இங்கு எனது சிந்தனைகளை விட, உங்களது தேர்வுகளுக்கே முன்னுரிமை !

ஆகையால் 100 % பழசா ? 100 % புதுசா ? அல்லது 50 - 50 கலவையா ? என்பதே எனது முதல் கேள்வி ! 

"பழசே செம !!" கட்சிக்காரர்களாய் நீங்களிருப்பின், நமது ரேடார்களைக் கீழ்க்காணும் நாயகர்களுக்கு மத்தியில் ஓடச் செய்யலாம்  :
  • சாகச வீரர் ரோஜர் (அந்த "மர்மக் கத்தி"  promise மறக்கவில்லை எனக்கு !)
  • சுஸ்கி & விஸ்கி 
  • கூர்மண்டயர் (கொலைப்படை சைசில்..)
  • சார்ஜெண்ட் தாமஸ் / மின்னல்படை  (யுத்த கதைகள்)
  • "சாவதற்கு நேரமில்லை " சைமன் !
  • மாயாவிகாரு - வண்ணத்தில் - கொரில்லா சாம்ராஜ்யம் / யார் அந்த மாயாவி ? etc..
Elaborating on these - வண்ணத்தில் சா.வீ,ரோ.வின் "மர்ம கத்தி" + ஏதேனுமொரு ரோஜர் சாகசம் நிச்சயம் அழகானதொரு இதழாய் அமையும் என்ற நம்பிக்கையுள்ளது எனக்கு! அந்நாட்களில் இந்த இதழைத் தயாரித்த தருணம் எனக்கு இன்னமுமே பளிச்சென்று நினைவில் உள்ளது ! ஜூலை 1986 release என்பதால் - ஒரு மாதம் முன்பாய் இதனுள் பணியாற்றப் புகுந்த தருணம் தான் எனது பி.காம் இறுதியாண்டின் பரீட்சைகள் இருந்தன - மதுரையில் !! So பத்து நாட்களாய் அங்கே ரூம் போட்டுத் தங்கியிருந்து பரீட்சைகள் எழுதும் அக்கப்போருக்கு மத்தியில் தான் இந்த ரோஜர் சாகசம் அச்சுக் கோர்க்கப்பட்டு என்னிடம் வந்து சேர்ந்தது - எடிட்டிங்கின் பொருட்டு ! 2 நாட்களில் Business Law பரீட்சையை வைத்துக் கொண்டு இந்தப் பக்கங்களுக்குள் கொஞ்ச நேரம் ; அந்தப் பக்கங்களுக்குள் மிச்ச நேரம் என்று தலை நுழைக்கப் பார்த்த பொழுது - ரிசல்ட் ஒன்றாகவே இருந்தது - தலை கிறுகிறுத்த விதத்தில் ! இங்கேயும் ஏதும் புரியலை ; அங்கேயும் ஒரு கழுதையும் புரியவில்லை ! சில சிக்கல்களுக்கு ஸ்பஷ்டமான தீர்வு - சூடாய் ரெண்டு பரோட்டா தான் என்பதை அன்றைய ராப்பொழுதில் உணர்ந்தேன் - தூங்கா நகரின்சாலையோர பரோட்டா கடைகளின் புண்ணியத்தில் ! சாப்பிட்டு விட்டு ரூம் திரும்பிய போது தலை காலியாக இருந்த போதிலும், தொப்பை நிறைந்திருந்ததில் மனம் குதூகலித்தது ! 'நேரா ரூமுக்கு போறோம் ; ஒரே அவர்லே எடிட்டிங் பண்றோம்  ; அப்புறமா முழுக்க   Business Law குள்ளாற முங்கு நீச்சல் போடுறோம் !" என்ற வைராக்கியத்தோடு ரெண்டு வாழைப்பழத்தைப் பிய்த்துப் போட்டுக் கொண்டே லாட்ஜுக்குத் திரும்பினால் ரிசெப்ஷன் பகுதியில் சொல்லி மாளா ஜனத் திரள் !! 'அடடே...ஒரு இளம் தொழிலதிபர் கிட்டே ராப்பொழுதிலேயும் ஆட்டோகிராப் வாங்க ராத்திரி ரெண்டு மணிக்கும் இவ்ளோ ஆர்வமா ? இந்நேரம் பாத்து நீ லுங்கிலே திரியுறியேடா பாவி !! " என்றபடிக்கே படியேறினால் - அந்நாட்களது black & white DYNORA டி.வி. முன்னே அத்தனை பயபுள்ளைகளும் குழுமிக் கிடந்தனர் - "ஓய்ய்ய்ய்" என்ற கூச்சலோடு ! பார்த்தால் மெக்சிகோவில் அந்நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்ததொரு புட்பால் மேட்ச் பரபரப்பாய் ஓடிக் கொண்டிருந்தது ! ஆர்ஜென்டினாவும், இங்கிலாந்தும் மோதினர் என்று ஞாபகம் ! எனக்கு பொதுவாய் லொங்கு லொங்கென்று ஒரு பந்துக்காக 22 பேர் சட்டையைக் கிழித்துக் கொள்ளும் அந்த ஆட்டத்தின்  மீது அத்தனை மைய்யல் கிடையாது தான் ; ஆனால் ரூமில் மிரட்டலாய்க் காத்துக் கிடந்த ரோஜரையும் , தடிமனான பாடப் புத்தகத்தையும் நினைத்த மறுகணமே புட்பால் மீது தீராக்  காதல் பிரவாகமெடுத்தது எனக்கு  !! கதவோரம் இருந்த துக்கனூண்டு இடத்தில நானும் கட்டையை நுழைத்துக் கொண்டு, மேட்சுக்குள் மூழ்கிப் போக  - ராப் பொழுது கரைந்தது ! ஒரு மாதிரியாய் மூன்று மணி சுமாருக்கு ரூமுக்குப் போய் நின்றால், மறுநாள் அதிகாலையில் - ரோஜரின் பக்கங்களைத் திரும்பவும் வாங்கிச் செல்ல, சிவகாசியிலிருந்து நம்மாட்களை வரச் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது ! செல்போன்கள் இல்லா நாட்கள் என்பதால் - அவர்களை நிறுத்தவும் வழி லேது !! So விழிகளில் உறக்கம் அசுரனாய்க் கனத்ததொரு பின்னிரவில் அந்த சாகசத்தைக் கரை சேர்த்தேன் ! அதன் கிராபிக் நாவல் பாணி முடிவை எட்டிப் பிடித்த போது - தூக்கமெல்லாம் வடிந்தே போனது ! ஏற்கனவே அந்த மாதம் தான் நமது இரத்தப் படலம் - பாகம் 1-ல் என் மண்டையும், உங்களது ஒட்டு மொத்த மண்டைகளும் ரெங்க ராட்டினம் சுற்றிய நினைவு பசேலென்று நிற்க - 'தெய்வமே...தமிழ் காமிக்ஸ் உலகிற்கு ஏனிந்த சோதனை ??' என்று பொருமத் தான் முடிந்தது !! But 'எல்லாம் அவன் செயல்' என்று பாரத்தைத் தூக்கிப் பகவான் மீது போட்டுவிட்டு, குறட்டைவிடத் தொடங்கினேன் ! ஆனால் இதழ் வெளியான சமயம் நம் அனைவருக்குமே அந்த கிளைமாக்ஸ் த்ரில்லிங்காக அமைந்திருந்ததும், இதழ் சிக்கலின்றி ஹிட்டடித்ததும் கண்முன்னே நிகழ்ந்த பொழுது - பகவான் நினைப்பை விடவும், அடியேனின் கதைத் தேர்வை எண்ணி காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளத் தான் தோன்றியது ! ஆனால் பிட்டத்தில் மிதிக்கும் அவசியங்களை சுடச் சுட நடைமுறைப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஆண்டவர் - மறு மாதமே "ரிப்போர்ட்டர் ஜானியின்" இடியாப்ப நூடுல்ஸ் சாகசத்தை முன்வைத்து - ஐயோ...தெய்வமே !! என்று  கதறச் செய்தது தனிக்கதை !! So, if & whenever it happens - மர்ம கத்தி reprint நிறைய மலரும் நினைவுகளையும் வாரித் தரும் என்பதில் ஐயமில்லை !

பட்டியலில் # 2 ஆன சுஸ்கி & விஸ்கி கதைகளை அழகாய், முழு வண்ணத்தில், பெரிய சைசில் மறுபதிப்பு செய்தால் நிறைய வளர்ந்த குழந்தைகள் கண்ணில் பால்யத்து நினைவுகள் சார்ந்த ஜலம் பெருக்கெடுக்கும் என்பது நிச்சயம் ! ஆனால் கதைகளின் ஓவரான மழலைத்தனம் வேறு மாதிரியான கண்ணீர்களையும் வரவழைத்து விடுமோ என்ற சந்தேகம் தான் என் கைகளில் எழும் நமைச்சலைக் கட்டி வைத்துள்ளது ! உங்கள் சிந்தனைகளே இங்கு பிரதானம் ! 

Number 3 on the list - நமது சிரசாசன SMS புகழ் கூர்மண்டையரின் alltime classics-களுள் ஒன்று! கொலைப் படை வெளியான நாட்களை பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன் என்றாலும், அந்த சாகசத்தை vibrancy 32  ஆண்டுகளுக்குப் பின்னேயும் நினைவில் தங்கியுள்ளது ! இன்னொரு வாய்ப்பு - முழு வண்ணத்தில் கிட்டினால் ரசிக்க ரெடியா நீங்கள் ? என்பதே எனது கேள்வி ! RK நகர் பார்முலாவில் அல்லாது - நம்பும் விதமாய் ஒரு கருத்துக் கோரலை முன்வைப்போமா ? 

லிஸ்டில் நான்காம் இடத்தைப் பிடிப்பவர்களுமே அந்நாட்களது Fleetway நாயகர்களே ! வெகு குறைவான வாய்ப்புகள் மட்டுமே பெற்றிருந்த மின்னல் படையினரும், சார்ஜெண்ட் தாமஸும் எனது பால்யத்து தோழர்கள் ! உலக யுத்த ஆக்ஷன் கதைகளுக்கொரு landmark என்பேன் இவர்களது சாகசங்களை ! இவர்களது தொடர்களில் தலா 13 சாகசங்கள் உண்டு - நமது மும்மூர்த்திகளின் சைசில் ! இவற்றின் மீது உங்களுக்கு ஆர்வம் தொடர்ந்திடும் பட்சத்தில் worth a try ! ஆனால் இதுவொரு ஏகோபித்த தீர்வாய் இலா பட்சத்தில் - 'உன் ஆசைக்கு என் பணம் தான் சிக்குச்சா - கரியாக்க ?' என்று தெளியத் தெளிய சாத்துக்கள் நிச்சயம் ! 

லிஸ்டில் 5 - ஒரு புயல் வேக நாயகர் ! Jean Valhardi என்பது இவரது பிரெஞ்சு நாமகரணம் ! ஆனால் அரையணா செலவின்றி, இவருக்கொரு புதுப் பெயர் (சைமன்) வழங்கியிருந்தேன் 1987-ல் ! "சாவதற்கு நேரமில்லை" மூச்சிரைக்கச் செய்யுமொரு ஆக்ஷன் த்ரில்லர் ! பின்னாட்களில் இன்னமுமொரு கதையும் இவரது தொடரிலிருந்து வெளியிட்டதாக ஞாபகம் ! So இந்த நாயகரை உயிர்த்தெழச் செய்ய வாய்ப்புகள் உண்டு தான் - உங்களுக்கு ஆர்வமிருப்பின் !! 

Last, but not the least - வண்ணத்தில் இரும்புக்கை மாயாவி ?!! "பில்டப் கேட்டேனா ? நான் பில்டப் கேட்டேனா ?" என்று நம்மவர் தரும் மைண்ட் வாய்ஸ் உலகுக்கே கேட்கும் என்பதால் எனக்கு மாய்ஞ்சு மாய்ஞ்சு டைப் அடிக்கும் அவசியமில்லை இங்கே ! சந்தேகமிலா சூப்பர் ஹிட்டடிக்கும் தானே ?

இவர்கள் தவிர்த்து இன்னமுமே உங்களது favorite நாயகர்கள் நிறையவே இருக்கலாம் - இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கும் தகுதியோடு ! ஆனால் எனது இந்த முன்மொழிவுகள் எல்லாமே - சுவாரஸ்யம் ; கதைகளின் டிஜிட்டல் பைல்கள் ; மறுபதிப்பு உரிமைகள் பெற்றிடுவதில் சிரமமின்மை  ; ஒரு நெடிய கால இடைவெளி போன்ற காரணங்களின் பலன்களே ! So  உங்கள் ஆதர்ஷர்களுக்கு காத்திருக்கும் காலங்களில் நிச்சயமாய் வழி பிறக்காது போகாது ! 

ஆக - இவையே மறுபதிப்புகளுக்கு special status தந்திடும் பட்சத்தில் நம் முன்னுள்ள வாய்ப்புகளாக இருந்திடும் ! இவற்றின் சாதக-பாதகங்களை சுட்டிக் காட்டின், ஆர்வமாய்க் கேட்டுக் கொள்வேன் ! And of course - வலைக்கு அப்பாலுள்ள நண்பர்களிடமும் இதே கேள்விகளை முன்வைக்கும் கடமையும் நமக்குண்டு தான் ; but இங்கு உங்களது பெரும்பான்மை அபிப்பிராயங்களே அவர்களது எண்ணவோட்டங்களாகவும் இருப்பதை நிறைய தருணங்களில் கவனித்துள்ளேன் என்பதால் please do place your thoughts on board folks !! 

இடைப்பட்டதொரு வாரத்தில் - இதே இணைதடத்தைப் புது இதழ்களுக்கென ஒதுக்குவதாயின் - நம் முன்னே இருக்கக் கூடிய தேர்வுகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறேன் ! Maybe ஈரோட்டில் நமது சந்திப்பின் போது அது பற்றிய கச்சேரியை வைத்தும் கொள்ளலாம் ! இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தானபின்பாய் ஒரு முடிவைச் சொல்லுங்கள் - அறிவிப்பைச் செய்து விடலாம் ! Bye for now !! See you around !

P.S : Of course - இந்த இணைதட  ஓவர்டோஸ் வேண்டாமே !! 2018 -ல் வழக்கமான இதழ்கள் மட்டுமே போதுமே என்பது உங்களது எண்ணமாயின் - நிச்சயமாய் அத்தனையும் தெரியப்படுத்தலாம் ! 

324 comments:

  1. Replies
    1. இன்னும் அண்டர்டேக்கருக்காக தே வுடு காத்துக்கொண்டிருக்கிறேன்...அதற்குள் இணை தடமா 😢😢😢.

      Delete
  2. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  3. John Master & Norman stories can be considered for Super Six !

    ReplyDelete
  4. Sir,
    "மின்னல் படை, சார்ஜெண்ட் தாமஸ்"
    What is the original characters name?
    Is it Battle Pictures or Warlord or Valient?
    Thanks.

    ReplyDelete
  5. RK நகர் பார்முலாவோ திருமங்கலம் பார்முலாவோ.. சுஸ்கி விஸ்கி வந்தே ஆகணும். பழைய கதையோ புது கதையோ முழு வண்ணத்தில் படிக்க ஆவலாக இருக்கிறேன். நுணுக்கமான சித்திரங்களுக்காவே வெளியிடுங்கள் சார்.
    சுஸ்கி விஸ்கி +1234567890
    ரோஜர் - வில்லியம் வான்சின் மாயாஜாலத்திற்காக +12345
    சைமன் - பிரெஞ்சு மொழியில் என்னிடம் உள்ளது. ஆர்ப்பரிக்கும் அலைகள்.. கரு மேகங்கள்.. படகு.. முழு வண்ணத்தில் அதகளம் - +12345
    கூர் மண்டையார் - அந்த மெகா சைஸுக்காக +12345
    இது தவிர நீங்கள் எந்த கதை வெளியிட்டாலும் ஓகே சார். ஜூனியர் லயன், மினி லயன் அனைத்தும் முழு வண்ணத்தில் வெளியிடுங்கள் சார். கார்ட்டூன் எதுவானாலும் +1234567890

    ReplyDelete
    Replies
    1. ஜூனியர் லயன், மினி லயன்
      Wow...+1 +1

      Delete
  6. meendum super six welcome. anal new 50 and old 50 endru vanthal I am double happy.

    ReplyDelete
  7. சைமன் தோன்றும் வைரவேட்டை முத்து காமிக்ஸ் சார்.
    ஜெஸ்லாங்கின் மரண வியாபாரிகள்
    பிரின்ஸ்ன் கதைகள்
    மாடஸ்தியின் ஒரு 3 கதை தொகுப்பு
    ரிப்கெர்பி காரிகன் மாடஸ்தி ஜேம்ஸ் பாண்ட் கலந்த கருப்பு வெள்ளை ஸ்பெஷல் ஒன்று இன்னும் நெறைய இருக்கு சார்

    ReplyDelete
    Replies
    1. ரிப்கெர்பி மற்றும் காரிகன் கதைகள்

      Delete
  8. மின்னல் படை WAR கதைகளை அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்

    ReplyDelete
  9. இணைதடம் ஓவர் டோசா? எடுங்கய்யா அந்தக் கத்திய!

    ReplyDelete
  10. சாதாரண ரெகுலர் இதழ்கள் விலைபோல் எத்தனை வந்தாலும் மகிழ்ச்சி ஆனால் சந்தா E போல் premium விலையில் வேண்டாம் இது எனது தனிப்பட்ட கருத்து
    மேச்சேரி மாமா சேலம் டெக்ஸ் அண்ணா கோவிக்க வேணாம்....!

    ReplyDelete
  11. ///! To cut a long story short - வரும் செவ்வாய் மாலைக்கு உங்களது கூரியர்கள் இங்கிருந்து கிளம்பிடும் ! ////---"பொன்(தங்கம்-gold) கிடைத்தாலும் புதன் கிடைப்பது அரிது"..என சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள். அத்தகைய புகழ் வாய்ந்த புதனில் சாதனை எண்ணிக்கை புத்தகங்கள் 2ம் கிட்ட இருப்பது நமக்கும் அரிதே. வெயிட்டிங் ஃபார் புதன் சார்...

    ReplyDelete
  12. புது இதழ்களுக்கு வேறொரு 'துணை' தடத்தை ஏற்படுத்திட்டா போச்சு சார்!

    ReplyDelete
  13. ஆசிரியர் & நண்பர்களே
    சந்தா சரி செய்து பழைய பண்னீர் செல்வமாக வந்து விட்டேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க செந்தில் வாங்க..!!

      Delete
    2. அறிவரசு ரவி
      கிட் ஆர்ட்டின் கண்ணன்
      டெக்ஸ் விஜய ராகவன்
      கடல் யாழ் ரம்யா
      வரவேற்ப்பிற்க்கு நன்றி நண்பர்களே & தோழியே
      நான் நலம்

      Delete
  14. சில்வர் ஸ்பெஷல் முன்அட்டையில் இருப்பவர், சில்வரின் ஒன்று விட்ட சித்தப்பாவா சார்?

    ReplyDelete
  15. ஜாலங்கள் பிரமிக்க வைக்கின்றது.

    ReplyDelete
  16. ஆசிரியரே அருமையான பதிவு
    அற்புதமான அறிவிப்புகள்
    சுஸ்கி விஸ்கி கேட்டு இரண்டான்டுகளாக ஈரோட்டில் உங்கள் கேசங்களை பிய்த்து கொள்ள வைத்தவன் நான் இந்த அறிவிப்பால் முழு வெற்றி எனக்கு சுஸ்கி விஸ்கி யில் எனது சாய்ஸ் பயங்கர பயனமே செம காமெடி சுஸ்கி விஸ்கி அறிவிப்பு கிட் ஆர்டின் கண்ணனை மிகுந்த சந்தோஷப் படுத்தும் கொலைப் படை நான் ( ஸ்டீல் க்ளா) மட்டுமல்ல காமிக்ஸ் கலெக்டர்களே ஆவலுடன் எதிர் பார்க்கும் இதழ் நானும் ஸ்டீலும் இனைந்து கொலைப் படை யை இந்த வருடம் ஈரோட்டில் கேட்டு உங்களிடம் போரட்டம் நடத்தலாம் என்று திட்ட மிட்டோம் அதற்கு வேலையில்லாமல் செய்து விட்டீர்கள் நன்றி கொலைப் படை அறிவிப்பு கிட் ஆர்ட்டின் கண்ணன் காதுகளில் புகையை வர வழைக்கும் ரோஜரின் மர்ம கத்தி அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கை உங்களைப் போலவே எனக்குமுன்டு அருமை
    மாயாவி யை கலரில் தரிசிக்க கசக்குமா சந்தோஷம் சூப்பர்
    மின்னல் படையினரை மேகக் கோட்டை மர்மத்திற்கு பிறகு இப்போது தான் சந்திக்ப் போகிறேன் மகிழ்சி
    சைமனுக்கு டபுள் ரைட்
    அப்படியே ஆர்ச்சியை ஓரக் கண்ணால் பார்த்தால் மிக மிக சூப்பராக இருக்கும்
    உங்கள் அறிவிப்பால் இந்த இரவு மிக சந்தோஷமாக கழிகிறது
    பழசே செம
    + 10000000000

    ReplyDelete
  17. சிங்கத்திற்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் இனி வரும் எல்லா வருடங்களும் இதே பீடு நடை போட ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
    இம் மாதம் என்னுடை பிறந்த நாளும் வருவதால் ஐயம் ரொம்பவே ஹாப்பி

    ReplyDelete
  18. என் டாப் 3 சாய்ஸ்:

    சுஸ்கி & விஸ்கி (பயங்கர பயணம் கண்டிப்பா ஹிட் ஆகும்னு தோணுது)
    மாயாவிகாரு - வண்ணத்தில் - கொரில்லா சாம்ராஜ்யம் / யார் அந்த மாயாவி ? etc..(இவரு கலர்ல இருந்த கண்டிப்பா புத்தக கண்காட்சிகளை அதிர விடுவார்)
    சாகச வீரர் ரோஜர் ("மர்மக் கத்தி" - இது எந்த காலத்துலயும் ஹிட் அடிக்கும்....அதுவும் கலர்ல கேக்கவே வேணாம்)

    அதுல பாருங்க.....ரெண்டு பேர் நமக்கு அதிகமா பழக்கமிலிங்.....ஒருத்தர் கூட ஓவர்'ஆ அல்ரெடி பழகி பழகி பயந்து வருதுங்கோ :-)
    அடுத்த மூணு பேர வேணா அடுத்த ரவுண்டு ட்ரை பண்ணலாம். (ஹப்பா.....ஐ யாம் எஸ்கேப் )

    சார்ஜெண்ட் தாமஸ் / மின்னல்படை (யுத்த கதைகள்)
    "சாவதற்கு நேரமில்லை " சைமன் !
    கூர்மண்டயர் (கொலைப்படை சைசில்..)

    ReplyDelete
  19. 'அடடே...ஒரு இளம் தொழிலதிபர் கிட்டே ராப்பொழுதிலேயும் ஆட்டோகிராப் வாங்க ராத்திரி ரெண்டு மணிக்கும் இவ்ளோ ஆர்வமா ? இந்நேரம் பாத்து நீ லுங்கிலே திரியுறியேடா பாவி !! "

    அட....இதை பாருப்பா....
    நம்ம ஈ. வி. குட்டி பையனா இருக்கப்பவே நம்ம விஜயன் பாஸ் கூட....கூடு விட்டு கூடு பாஞ்சு விளான்ட்ருக்கார் ;-)

    ReplyDelete
  20. இந்தக் கதைகள் எல்லாம் வராதான்னு பலர் காத்துட்டு இருக்கோம் சார். போட்டுத் தள்ளுங்க. ஆனா ஒவ்வொரு ஆல்பமும் நல்லா குண்டாஇருக்கற மாதிரி பாத்துக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. +1
      (இங்கேயும் அதே கதை தான், இவற்றில் பல வெறும் பெயர்களாக மாத்திரமே தெரியும் சார்)

      Delete
  21. இணைய பதிவு இவ்வளவு பெரிதாக இருந்தால் அதற்கான 28% GST வரி தனியாக செலுத்த வேண்டிய ஒரு நிலை ஏற்படும் எடிட்டர் சார்.

    ReplyDelete
    Replies
    1. @ POSTAL PHOENIX

      :))))))

      நாலுவரிக்கு மேல கமெண்ட் போட்டாலும் GST விதிக்கப்படும்ங்களா?!! ;)

      Delete
    2. நாலுவரிக்கு மேல கமெண்ட் போட்டாலும் GST விதிக்கப்படும்ங்களா?!! ;)////

      அப்ப நம்ம ஸ்டில்லோட நிலம?

      Delete
  22. Happy birthday lion comics. 🎂🍬🍰🍦👏👏

    ReplyDelete
  23. அனைவருக்கு இனிய காலை வணக்கங்கள்... ஈரோட்டு கொண்டாட்டத்திற்கு இன்னும் நான்கு வாரங்களே உள்ளன...

    ReplyDelete
  24. வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  25. Replies
    1. Hi கடலயாழ், hi brother, hi sister ரை தவிர hi comics , hi விமர்சனம் இந்த மாதிரி எதுவும் முயற்சி செய்ய லாமே....

      Delete
    2. @Ganeshkumar
      Kandipaaga muyarchi seikiren Ganesh
      Nanrigal sagotharare☺

      Delete
  26. உள்ளேன் ஐயா..!!

    அடுத்த Super 6 ல் ரிப்போர்ட்டர் ஜானிக்கு வாய்ப்பு தருவதாக உறுதியளித்து இருந்தீர்கள் என்பதை நினைவூட்ட கடமைப்பட்டவனாகிறேன் சார். .!!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் 6 சந்தாவை சூப்பர் 8 ஆக உயர்த்தி, தலா மூன்று கதைகளாக வெளிட்டால் மேலும் நிறைவானதாக இருக்கும். ஹார்டு கவர் பைண்டிங்கில் இரண்டு கதைகள் எனும் போது ஒருவித ஏமாற்றமே உருவாகிறது.

      Delete
  27. Good Morning Sir☺
    Good Morning All☺
    Please include all the stories mentioned in 2018,especially Suski Viski

    ReplyDelete
    Replies
    1. அடடே! மீண்டும் கடல்!!! வாங்க சகோ வாங்க!! :)

      Delete
    2. Adade! Meendum meendum welcome comments😝

      Avvapothu comments Ida maaten
      Matrapadi mouna paarvaiyaalaarai iruppen😏

      Delete
    3. மேலே கொடுத்த replay மறந்து டுங்க யாழ்..

      Delete
    4. நல்வரவு கடல்யாழ் அவர்களே.

      Delete
    5. @Salem Tex Vijayaraghavan
      Nanri Sagotharare
      Melee typing mistake aagi vittathu😁

      Delete
    6. @Ganeshkumar
      Naallathuthaane solli Irukeenga Sagotharare☺

      Delete
    7. கடல் யாழ் இங்கு வந்தால் மட்டும் போதாது ஈரோட்டுக்கும் வந்தால் நலம்
      உங்கள் தோழி விஷ்ணுப் பிரியா நலமா

      Delete
    8. @Senthil Sathya
      Erode Vijayam kandipaaga undu thozhare
      VishnuPriya nalame☺

      Delete
    9. அது யார்ங்க விஷ்ணுப்ரியா ?

      Delete
    10. @Tex Sampath
      😝😝😝
      En Thozhi, Tex Rasigar

      Delete
  28. யுத்த கதைகள் வேண்டாமே

    ReplyDelete
  29. ///ஆகையால் 100 % பழசா ? 100 % புதுசா ? அல்லது 50 - 50 கலவையா ? என்பதே எனது முதல் கேள்வி ! ///


    100% புதுசாக இருந்தால் ரொம்பவே சந்தோசம் சார்..!
    50-50 என்றால் லக்கி, சிக்பில்லுக்கு இன்னொரு இடம் தரலாம் என்பது என்னுடைய அபிப்ராயம்.!
    100% பழசு என்றாலும், லக்கி, சிக்பில், ஜானி உடன் சுஸ்கி விஸ்கி சூப்பராக இருக்கும்.!
    சைமன், மின்னல் படையெல்லாம் ஹிஹி ஸாரி ஸார். .!! :-)

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் 100 சதவீதம் புதுமை என்றால் நலமே...

      மற்ற கதைகள் பார்க்கும் சரக்கை கண்ட ஜேன் மாதிரி உற்சாகம் ஆகும் எனக்கு

      சந்தா D யில் உள்ள தற்போதைய நாயகர்கள், ரிப்கேர்ப்பி, மாண்ட்ரேக், சிஸ்கோ இவர்களை பார்க்கும் போது ஜேனை tea குடிக்க சொன்ன எப்படி இருக்குமோ அப்படி ஆகி விடுகிறது.

      1995 பிறகு காமிக்ஸ் படிக்க ஆரம்பித்த நிறைய பேர் இன்னும் நிறைய லக்கி மற்றும் சிக்பில் கதைகளை படிக்க வில்லை அவை தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்.

      இரும்பு கை நார்மன் வர வாய்ப்பு இருக்கிறதா?

      ஜனிக்கு எப்பவுமே ஜே போடும் ரகம் நான்.

      Cartoon எழுதி எதை போட்டாலும் என் தரப்பில் இருந்து வந்தனம்.

      சைமன், ஜார்ஜ், மின்னல் படை , மாண்ட்ரெக் இவர்களை எல்லாம் சந்தா D யில் சன்னமாக கொண்டு வரலாமே?

      Delete
    2. ////Cartoon எழுதி எதை போட்டாலும் என் தரப்பில் இருந்து வந்தனம்.

      சைமன், ஜார்ஜ், மின்னல் படை , மாண்ட்ரெக் இவர்களை எல்லாம் சந்தா D யில் சன்னமாக கொண்டு வரலாமே?////

      என் கருத்தும் அதுவே சந்தா Dல் வேண்டுமானால் இவற்றை முயற்சியுங்கள்!!!

      லக்கியும், சிக்பில்லும், டெக்ஸ் இல்லையென்றால் அது எப்படி சூப்பா் சிக்ஸ் ஆக முடியும்????

      மறுபதிப்புக்கு என்று ஒரு சந்தாவை உருவாக்கி விட்டு, பின் சூப்பா் 6ஐ கெடுப்பானேன்!!

      Delete
  30. Happy Birthday to Lion Comics 🎂🍰🍫🍬

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.
      நலமாயிருக்கிறீர்களா? உங்கள் தாயார் நலமாயிருக்காறாரா?

      Delete
    2. Nanraaga Ullen Sagotharare☺
      Ammavum nalama Ullargal
      Thaangal nalama ulleergala Sagotharare?

      Thamizhil type seiya iyala villai😁

      Delete
    3. மகிழ்ச்சி சகோ.

      Delete
  31. சாவதற்கு நேரம் இல்லை பர பராமரிப்பு என்று செல்லும் கதை ஆனால் மிகப்பெரிய பூசுற்றல் கதை. இது சூப்பர் 6 பொருத்தம் இல்லாத இதழ். தயவு செய்து வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. கதை என்று பெருசா எதுவும் கிடையாது, ஓடிக்கொண்டே இருப்பார்கள். எண்ணிலடங்கா லாஜிக் ஓட்டைகள். வேண்டாம்.

      சூப்பர் 6ல் இந்த கதைக்காக ஒரு ஸ்லாட்டை வேஸ்ட் பண்ண வேண்டாம்.

      Delete
    2. வைரஸ் எக்ஸ் மிகவும் அருமையான கதை.

      Delete
    3. இரட்டை வேட்டையர்களின் திக்கு தெரியாத தீவில் சூப்பர் ஹிட் கதை

      Delete
  32. வைரஸ் x மற்றும் பவளச்சிலை மர்மம் கதைகளை வெளியீடலாமே பிளீஸ். இவைகளை இது வரை படித்தது இல்லை அதே வேளையில் கடந்த சில வருடங்களாக இவைகளை நண்பர்கள் ஆயிரக்கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். மனது வைத்தால் உங்களால் முடியும்.

    ReplyDelete
    Replies
    1. இவைகள் சுமாரான கதைகள் என சிலர் நினைக்கலாம். ஆனால் இதனை படிக்காதவர்கள் பலர். பலரின் மனதில் எப்போது இவைகளை படிக்க போகிறாம் என்ற எண்ணத்தை விதைத்த கதைகள்.

      Delete
    2. ///I Agree with Patani brother///

      'பட்டாணி' ப்ரதர்! அட இதுகூட நல்லா இருக்கே!!! :D

      Delete
    3. Post agum pothu type seithathu maari vittathai kavanikka thavari vitten Sagotharare😩, manikkavum Parani Sagotharare

      @Erode Vijay
      Krrrrrrrr😤
      Ungalukku melum naanku kottukal addition😛

      Delete
    4. ஐ பட்டாணி பிரதர் :-)

      Delete
    5. என்ன பட்டானி brother number இல்லை கால் பன்ன சொன்ன கால் பன்ன மாட்டேகிறிங்க?

      Delete
  33. இனியகாலை வணக்கம்.
    ஆசிரியரின் அறிவிப்புகள்
    இன்பத்தேன் பாய்ந்தது.
    கொரில்லா சாம்ராஜ்ஜியம்
    கொள்ளையர் பிசாசு
    யார்அந்த மாயாவி
    2018ல் முழுவண்ணத்தில் வேண்டும்.

    ReplyDelete
  34. சுஸ்கி விஸ்கி முழு வண்ணத்தில் படிக்க ஆவலாக இருக்கிறேன்

    கூர் மண்டையார் - ஸ்பைடர் The Name is enough

    +++++

    ReplyDelete
  35. எடிட்டர் சார்,
    சூப்பர் 6 ஐ சூப்பர் 8/12 ஆக மாற்றி க்ளாசிக்ஸ்/ புதிய வரவுகள் இரண்டையுமே கொடுக்கலாமே. சாத்தியமிருந்தால் முயற்சியுங்கள்.

    ReplyDelete
  36. என்னோட சாய்ஸ் இணைத்தடத்தில் 50-50. எல்லோரையும் திருப்திபடுத்தினாப்ல இருக்கும் பாருங்க!
    மர்மக்கத்தி, கொலைப் படை பெரிய சைஸில் வண்ணத்தில், வண்ணத்தில் இரும்புக் கை - ஆஹா ஆஹஹ்ஹஹ்ஹா... பட்டையக் கிளப்புங்க பாஸ்!!

    சுஸ்கி-விஸ்கியோடு நம்ம அங்கிள் ஸ்க்ரூட்ஸையும்... நான் எனக்காண்டி கேட்கலே... ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்காண்டி கேட்கிறேன்!

    ReplyDelete
  37. காலை வணக்கம் நண்பர்களே!சுஸ்கி & விஸ்கி filler pageக்கு தான் சரிபடுவார்கள். பவளசிலை மர்மம் ,வைகிங் தீவு படலம் வெளியிடலாம், இரும்பு கை மாயாவி கொரில்லா சாம்ராஜ்ஜியம்,கொள்ளையர் பிசாசு
    யார்அந்த மாயாவி2018ல் முழுவண்ணத்தில் வேண்டும். கூர்மண்டையரின் சதுரங்க வெறியன் ,நீதி காவலன் ஸ்பைடர் வெளியிட முயற்சிக்கவும்.

    ReplyDelete
  38. சூப்பர் 6ல் மும்மூர்த்திதள் வேண்டாம். அவர்கள் ஏற்கனவே மறுபதிப்பு தடத்தில் வருவதால் இங்கு வேண்டாம் பிளீஸ்.

    அதேநேரத்தில் சூப்பர் 6ல் வரப்போகும் மும்மூர்த்திகள் மறுபதிப்பில் வர வாய்ப்பு இருக்காது, இது மறுபதிப்பில் மும்மூர்த்திகள் ரசிகர்களை பாதிக்கும். அவர்களால் சூப்பர் 6ல் இணைய முடியுமா என்பது என்னை பொறுத்தவரை முடியாத விஷயம்.

    மும்மூர்த்திகளை பல தருணங்களில் பல வடிவங்களில் மறுபதிப்பு செய்துவிட்டு அவர்களை இங்கேயும் கொண்டு வருவது நன்றாக இல்லை. சாரி.


    ஸ்பைடரின் விண்வெளி பிசாசை மட்டும் வெளியீடலாம் என்றால் சூப்பர் 6க்கு அப்பால் உள்ள அப்பாவிகளுக்கு எப்படி கிடைக்கும் :-( சாரி.

    இங்கே நீங்கள் மற்றும் நண்பர்கள் பலர் குறிப்பிட்ட மும்மூர்த்திகளின் கதைகளை ஏற்கனவே வரும் மறுபதிப்பு தடத்தில் அடுத்த வருடம் வெளியிடலாமே?
    எல்லோருக்கும் கிடைக்கும் எல்லோரும் சந்தோசபடுவார்களே.

    மும்மூர்த்திகள் தலைகாட்ட தனித்தும் ஏற்கனவே உள்ளதால் அவர்கள் சூப்பர் 6ல் வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. @ PfB

      +11111111

      தீப்பொறி பறக்கும் பாயிண்ட்டுகள்!

      Delete
    2. Vijay sir what a coincidence.... already I felt somany times that our wavelength is same... Please note the time above.... :)

      Delete
    3. @karthic vadugapatty

      அடடே!! ஈரோட்டுக்கும், வடுகபட்டிக்கும் புவியியல் ரீதியா ஏதோ தொடர்பு இருக்கும்னு தோனுது! :)

      Delete
    4. பரணி@ +10000

      மும்மூர்த்திகள் அந்த சந்தா Dயை விட்டு வேறெங்கும் எண்ணிப்பார்க்க கூடாது சார். கலரோ கருப்போ அதுக்குள்ளயே அவுங்களுக்கு போதுமான இடம் இருக்கேஏஏஏஏஏஏஏஏஏள.....

      Delete
    5. ////மும்மூர்த்திகள் தலைகாட்ட தனித்தும் ஏற்கனவே உள்ளதால் அவர்கள் சூப்பர் 6ல் வேண்டாம்.////

      +1111111111111111111111111111111111
      இவ்வோ தான் 1 போட முடிஞ்சுது!!

      லக்கியும், சிக்பில்லும் இல்லையென்றால் அது சூப்பா் 6- இல்லை!!

      80+ கதைகள் கொண்ட இரண்டும் தொடா்ந்து சூப்பா் 6ல் வேண்டும்!!

      அதேபோல் கேப்டன் பிாின்ஸ்ஐயும் இன்னும் ஓாிரு முறை முயற்சிக்கலாம்!!!

      Delete
  39. சார் , தயவுசெய்து சூப்பர் சிக்சில் ரீப்ரிண்ட் தான் வேண்டும் ஆனால் மேற்கண்ட எதுவும் பிடிக்கவில்லை.... மீண்டும் டெக்ஸ், லக்கி,சிக்பில், ரிப்,போன்ற சூப்பர் ஸ்டார்ஸ் ஐ மட்டும் பரிசீலித்து முடிவெடுங்களேன்...

    ReplyDelete
    Replies
    1. என்ன கண்ணன் மேலே 100 சதவீதம் புதுமை வேனும் கமெண்ட் போட்டுட்டு. இங்க 100 சதவீதம் reprint தான் வேனும் சொல்ற கமெண்ட்டுக்கு +1 போடுறிங்க. ஏதோ ஆசிரியர் தலையில் முடி இல்லாததால் அவர் தப்பிச்சார்?

      Delete
    2. அதுக்குள்ள இரண்டு கண்ணன் , மேலே உள்ள கமெண்ட் kid கண்ணனுக்கு...

      Delete
    3. ////மீண்டும் டெக்ஸ், லக்கி,சிக்பில், ரிப்போன்ற சூப்பர் ஸ்டார்ஸ் ஐ மட்டும் பரிசீலித்து முடிவெடுங்களேன்////

      ரிப் வேணுமோ வேண்டாமோ மத்த 3ம் கட்டாயம் வேண்டும்!!!

      Delete
    4. /// மேலே 100 சதவீதம் புதுமை வேனும் கமெண்ட் போட்டுட்டு. இங்க 100 சதவீதம் reprint தான் வேனும் சொல்ற கமெண்ட்டுக்கு +1 போடுறிங்க.///

      புதுசா இருந்தால் சந்தோஷம்னுதானே கணேஷ் போட்டிருக்கேன். .!
      கீழேயே மற்ற ஆப்சன்களும் இருக்கே. .., பழசுன்னா கண்டிப்பா லக்கி, சிக்பில், டெக்ஸ் இருக்கணும்னு அதே கமெண்ட்லயே சொல்லியிருக்கேனே..!

      குழப்பமே கிடையாதே கணேஷ்..!! :-)

      Delete
  40. விஜயன் சார் நாங்கள் கேட்காமலே நீங்களாகவே அறிவித்த பழைய கதைகளின் அறிவிப்பு சந்தோஷத்தில் மூழ்கடிக்கச் செய்துவிட்டது. இன்னும் கூட பழைய நாயகர்களின் பட்டியல் தயாராக உள்ளது. ( மேலே தோழர்கள்கூட அவர்களை குறிப்பிட்டுள்ளனர்) அவர்களை நான் பலமுறை கேட்டு அப்போதெல்லாம் உங்கள் காதிலிருந்து வெளிவந்த புகை சமிக்கைகளை கண்டு வாயடைத்துப்போனதால் நீங்களாகவே கொடுக்கும் பழைய நாயகர்கள் கதைகளை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்வது என முடிவு செய்து இருகரம் கூப்பி உங்கள் அறிவிப்பினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
    ஒரே ஒரு வேண்டுகோள். மாயாவியை வண்ணத்தில் வெளியிடும்போது பாக்கெட் சைஸ் மட்டும் வேண்டவே வேண்டாம். வழுவழு தாள்கள் விலையை உச்சத்துக்கு கொண்டு போக வாய்ப்புள்ளது என்ற எண்ணம் வருமானால் தற்போதைய கறுப்பு வெள்ளை தாள்களில் வண்ணத்தில் தற்போதைய மறுபதிப்பு அளவிலேயே வெளியிடுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பாக்கட் சைஸ் புக்ல படிக்கிறதே ஒரு அலாதியான விஷயம் ங்க ராஜன் ஜி. பழைய வாசகர்களுக்கு அப்படி வந்தால் மிகவும் பிடிக்குமே. அதுவே பாக்கட் சைஸில் குண்டு புக்கா இருந்திட்டால் அதை விட மிகப்பெரிய சந்தோஷம் போல வேறு என்ன இருக்கிறது ஜி

      Delete
  41. சூப்பர் 6: பழைய கிளாசிக் கதைகள் வர மும்மூர்த்திகள் மறுபதிப்புதடத்தை தவிர வேறு வழியில்லை.

    புதிய கதைகள் பல தடத்தில் வருகின்றது.

    அதிகபட்சமாக புதிய கதைகள் ஒன்று மட்டும் சூப்பர் 6ல் இணைக்கலாம், சொல்ல போனால் அதுவும் தேவையில்லை.

    சூப்பர் 6ல் பழைய கிளாசிக் கதைகளை மட்டும் வெளியிடுங்களேன் சார். ஏன் இங்கேயும் புதிய கதைகளை இணைக்க வேண்டும்?? :-(

    ReplyDelete
    Replies
    1. புது கதைக்கு எங்க ஸாலாட் இருக்கு, சந்தா D ஏற்கனவே 12 ஸ்லாட் ஒதுக்கியாச்சு. சந்தா B யில் வேற மறுபதிப்பு வருகிறது.

      ஸ்லாட் இல்லம எத்தனை undertakar மாதிரி கதைகள் waiting கில் உள்ளதோ?

      Delete
  42. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். மர்ம கத்தி ஒரு மிகப்பெரிய பூக்கடை.அதை பற்றி பெரிய எதிர்பார்ப்புகளுடன் அணுக வேண்டாம்.சுஷ்கி &விஷ்கி ஒக்கே. இணை தடம் கண்டிப்பாக தொடர வேண்டும். உலக யுத்த கதைகள் போரனவை சார் வேண்டாமே please. காரிகன்,ரிப்கிர்பி,வேதாளன்,இளவரசி கதைகளின் மறுபதிப்பு தடத்தில் இடம் பெற வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை சார் மனது வையுங்கள் please.super six must be continued

    ReplyDelete
    Replies
    1. காரிகன்,ரிப்கிர்பி,வேதாளன், Please.

      Delete
  43. மாடஸ்டி கதை ஒன்றை இந்த சூப்பர் 6ல் சேர்க்கலாம் சார்.

    ReplyDelete
    Replies
    1. ஐயோ பரணி BLR!!!!????

      தலையில் குண்டத் தூக்கி போடரீங்களே!!!

      போன கதைக்கே விடை தொியாம இருக்குது!!! மறுபடியுமா???

      Delete
    2. Mithun Chakravarthi @ நாங்க குண்டு போடுறது இல்லை, தலையில் கல்லைத்தான் தூங்கி போடுவோம் :-)

      மாடஸ்டிஇல்லாமல் சூப்பர் 6 இல்லை :-)

      Delete
    3. மிதுன் வசூலில் பட்டையை கிளப்பிய கழுகு மலைக் கோட்டையை நினைத்து பாருங்கள் மாடஸ்டி யை தானாக பிடிக்கும்

      Delete
    4. மாடஸ்திய பார்த்தா பிடிக்காது பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும். எனவே சூப்பர் சிக்ஸ்ஸில்வே ண்டாமே . 2018 மறுபதிப்பில் எதிர்பார்க்கலாம்

      Delete
    5. பார்த்து பார்த்தே பிடிக்காமல் போனவரு ஒருத்தரு இருக்காரு ... டெக்ஸ் ( சம்பத் )

      Delete
    6. அவர் அல்ரவுண்ட் எவர் க்ரீன் ஹீரோ ன்னா - எப்பவுமே பிடிக்கனும்னு அவசியமில்லை.

      ஆனாலும் மாடஸ்தி வேணும்

      Delete
  44. +1

    No MUMMOORTHY in SUPER SIX please !

    ReplyDelete
  45. Dear Editor,

    GSTயால் காமிக்ஸ் விலையேற்றம் உண்டா ? எனில் சந்தா செலுத்தியவர்கள் என்ன செய்ய வேண்டும் ?

    ReplyDelete
  46. பரணி சார் சொல்வது சரி சூப்பர் 6 ல்
    அவர்கள் வேண்டாம்
    மறுபதிப்பில் வரட்டும்
    ரிப் கெர்பி
    காரிகன்
    கொண்டு வாருங்கள்

    ReplyDelete
  47. எங்களுக்கு வேண்டியது திருப்தியான சப்பாடு( பழைய கதைகள்)
    அதனை தட்டில் வைத்து கொடுத்தாலும், இலையில் வைத்து வழங்கினாலும், அதுவுமில்லையா உருண்டையாக உருட்டி கொடுத்தாலும் வயிறு நிரம்பினால் சரிதான்.
    Super 6 ல் கொடுத்தால்திரு. பரணி அவர்கள் கூறியதைபோன்ற எண்ணவோட்டங்கள் பலருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதால் மறுபதிப்பு வரிசையிலேயே தொடரலாம்
    ஆக மொத்தத்தில் எங்களுக்கு வேண்டியது திருப்தியான சாப்பாடு.அம்புடுதேங்...

    ReplyDelete
  48. ///Of course - இந்த இணைதட ஓவர்டோஸ் வேண்டாமே !! 2018 -ல் வழக்கமான இதழ்கள் மட்டுமே போதுமே என்பது உங்களது எண்ணமாயின் - நிச்சயமாய் அத்தனையும் தெரியப்படுத்தலாம்///....அந்தப் பேச்சுக்கே இடமில்லை சார்...

    இணைதடம் அவசியம் வேணும்...
    அதுவும் இரண்டு சூப்பர்6ஆக வேணும்...

    ஒன்று வழக்கமான சூப்பர்6(அதில் பெருவாரியான வாக்குகள்+ப்ராக்டிகளாக எவற்றிற்கு வாய்ப்பு இருக்கோ அவைகள் இணைந்த மெகா கூட்டணி)

    மற்றொன்று டெக்ஸ் சூப்பர்6(டெக்ஸின் 70ம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக நம் லயனில் ஏற்கனவே பெரிய வெற்றி பெற்ற 6சூப்பர் ஹிட் கதைகள்; கருப்பு+வண்ணம் கலந்த கலவை)

    இந்த இரு அணிகளும் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் வர வேணும் சார்... போட்டி கடுமையாகவும் இரண்டு அணிகளும் வெற்றியில் சம்பங்கும் வகிக்கும் படியும் இருக்கும் சார்.

    ReplyDelete
    Replies
    1. ////மற்றொன்று டெக்ஸ் சூப்பர்6(டெக்ஸின் 70ம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக நம் லயனில் ஏற்கனவே பெரிய வெற்றி பெற்ற 6சூப்பர் ஹிட் கதைகள்; கருப்பு+வண்ணம் கலந்த கலவை)///

      ஆறு கதைகள் எனும்போது கண்டிப்பாக 1000பக்கங்களை எட்டும். அப்படியே அதற்கு
      "Tex with 1000" என்று நாமகரணம் சூட்டினால் பொறி பறக்காதா என்ன?.

      Delete
    2. ////மற்றொன்று டெக்ஸ் சூப்பர்6(டெக்ஸின் 70ம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக நம் லயனில் ஏற்கனவே பெரிய வெற்றி பெற்ற 6சூப்பர் ஹிட் கதைகள்; கருப்பு+வண்ணம் கலந்த கலவை)////

      +111

      அருமையாகச் சொன்னீா்கள் நண்பரே!

      டெக்ஸின் வண்ணப் பதிப்புகளின் அழகே தனி தான்!!!

      கருப்பு வெள்ளை வேண்டாமே!!

      Delete
    3. டெக்ஸ் அருமையான யோசனை

      Delete
  49. Super 6 2018

    லக்கி க்ளாசிக்ஸ் (3 கதைகள் அடங்கியது) - 1
    சிக்பில் க்ளாசிக்ஸ் (3-4 கதைகள் அடங்கியது) - 1
    டெக்ஸ் வில்லர் (1-2 கதைகள் அடங்கியது) - 1
    ரிப்போர்ட்டர் ஜானி (3 கதைகள் அடங்கியது) - 1

    ஜெரெமயா + மாடஸ்டி (எனக்கு பிடிக்கவில்லையென்றாலும் நண்பர்களுக்காக) - 1+ 1

    (முடிந்தால் ப்ரின்ஸ் அல்லது சுஸ்கி விஸ்கி அல்லது ரிப் கிர்பி இடைச்செருகலாக)

    இப்படி இருந்தால் மெய்யாலுமே சூப்பர் சிக்ஸாக இருக்குமென்பது என் கருத்து சார். .!
    மற்றவைகள் அந்த காலத்தில் வரவேற்பு பெற்றிருக்கலாம். . ஆனால் இன்றைய அண்டர்டேக்கர் ட்யூராங்கோ போன்றவைகளை ரசித்துவிட்டு சைமனையும், காரிகனையும், மின்னல் படையையும் ரசிக்க முடியுமாவென்று தெரியவில்லை..
    போலவே மாயாவி, ஸ்பைடர் போன்றோர் சந்தா D யில் வருவதே போதுமானது என்பதும் என்னுடைய கருத்து சார். .!

    ReplyDelete
    Replies
    1. கண்ணன் நீங்க கேட்பதை பார்த்து எடிட்டர் சார் விட்டத்தை பார்த்து சிரித்திருப்பார்.ஹி,ஹி.

      Delete
    2. சைமனையும், ரோஜரையும், மின்னல் படையையும், காரிகனையும் இப்போது படித்தால் நீங்களும் விட்டத்தைப் பார்த்து சிரிப்பீர்கள் ரவி..! :-)

      Delete
    3. அப்ப வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து சிரிப்போம்.

      Delete
    4. Comics padithu Vittathai paarthu sirikkum Sagotharargal😝

      Delete
    5. ////சைமனையும், ரோஜரையும், மின்னல் படையையும், காரிகனையும் இப்போது படித்தால் நீங்களும் விட்டத்தைப் பார்த்து சிரிப்பீர்கள் ரவி..! :-)?////

      😂😂😂😂👌👌👌👌

      சாியாக சொன்னீா்கள் நண்பரே!!

      இவையெல்லாம் கால ஓட்டத்தில் கரைந்து போனவை!!!

      Delete
  50. overdose ll am ille Sir ... Continue super 6 ... Super 8 aga kuda mathunga .. Old and New kalande try pannalam sir ...

    ReplyDelete
  51. //ஆர்ஜென்டினாவும், இங்கிலாந்தும்
    மோதினர் என்று ஞாபகம் ! எனக்கு
    பொதுவாய் லொங்கு
    லொங்கென்று ஒரு பந்துக்காக 22
    பேர் சட்டையைக் கிழித்துக்
    கொள்ளும் அந்த ஆட்டத்தின் மீது
    அத்தனை மைய்யல் கிடையாது
    தான் ; ஆனால் ரூமில் மிரட்டலாய்க்
    காத்துக் கிடந்த ரோஜரையும் ,
    தடிமனான பாடப் புத்தகத்தையும்
    நினைத்த மறுகணமே புட்பால் மீது
    தீராக் காதல் பிரவாகமெடுத்தது
    எனக்கு !! கதவோரம் இருந்த
    துக்கனூண்டு இடத்தில நானும்
    கட்டையை நுழைத்துக் கொண்டு,
    மேட்சுக்குள் மூழ்கிப் போக - ராப்
    பொழுது கரைந்தது ////...இதைப்போன்ற வர்ணனைகளே எங்கள் ஞாயிறு காலைகளை கலகலப்பாக்குகின்றன சார்...

    ReplyDelete
    Replies
    1. அதானே,கால்பந்துக்கு இன்னும் உங்க பதிலை காணோமேன்னு பார்த்தேன்.ஹி,ஹி.

      Delete
    2. தேங்ஸ் ரவி...

      ஆசிரியர் சார் குறிப்பிட்ட அந்த ஆட்டம் உலக கோப்பையின் மிகச்சிறந்தவற்றுள் ஒன்று.

      7இங்கிலாந்து வீரர்களை (மொத்தமே 11பேர் தான் ஒரு அணிக்கு) தாண்டி சென்று அடிக்கப்பட்ட உலக கோப்பையின் மிகச்சிறந்த கோலும், கையால் பந்தை வலையில் தள்ளி போடப்பட்ட மிக மோசமான கோலும் விழுந்த ஆட்டம் அது. 2க்கும் சொந்தக்காரர் ஒருவரே, "தி அன்டிஸ்பியூடட் காட் ஆஃப் புட்பால்" மரடோனா தான் அவர்.
      இன்னும் ஒரு மணி நேரம் பேசலாம் அதைப்பற்றி, இப்பவே நிறைய பேர் அடிக்க கற்களை கையில் எடுப்பதால்...ஐ ஆம் தலைதெறிக்க ஓடிங்....

      Delete
  52. வாவ்.

    சுஸ்கி & விஸ்கி
    கூர்மண்டயர் (கொலைப்படை)
    "சாவதற்கு நேரமில்லை " சைமன் !
    மாயாவிகாரு - வண்ணத்தில் - கொரில்லா சாம்ராஜ்யம் / யார் அந்த மாயாவி

    மிகவும் மகிழ்ச்சியான அறிவிப்பு. கொலைப்படையின் இன்றைய resale மதிப்பு 2017-2018 சந்தாவைவிட அதிகம் என்பதால் உங்கள் அறிவிப்பு ஒரு மகிழ்ச்சி பிரளயத்தை உண்டுபண்ணுகிறது. மிகவும் நன்றி ஆசிரியர் அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே .

      கூர்மண்டயர் (கொலைப்படை)
      மாயாவி- கொரில்லா சாம்ராஜ்யம் / யார் அந்த மாயாவி

      இரண்டு இரண்டு வாங்கி விடவும். அவை விரைவில் காலியாகிவிடும்.

      Delete
    2. கண்டிப்பாக நண்பரே
      கொலைப் படையின் மதிப்பு ஒரு சந்தாவின் விலை

      Delete
  53. //ஆகையால் 100 % பழசா ? 100 % புதுசா ? அல்லது 50 - 50 கலவையா ? என்பதே எனது முதல் கேள்வி !//
    நூறு சதவிகிதம் பழசே சிறப்பாக இருக்கும் என்பதே எனது கருத்து,அவைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கதைகளாக இருக்க வேண்டும்,மேலும் மறு பதிப்பு தடத்தில் இவைகள் இணைந்து வருவதே சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  54. //இந்த இணைதட ஓவர்டோஸ் வேண்டாமே !! 2018 -ல் வழக்கமான இதழ்கள் மட்டுமே போதுமே என்பது உங்களது எண்ணமாயின் - நிச்சயமாய் அத்தனையும் தெரியப்படுத்தலாம் !//
    அதெல்லாம் ஒண்ணுமில்லிங் சார்,நாங்க எவ்வளவு அடிச்சாலும் (சந்தோசமா) தாங்குவோம்.

    ReplyDelete

  55. சாகச வீரர் ரோஜர் (அந்த "மர்மக் கத்தி" promise மறக்கவில்லை எனக்கு !)
    சுஸ்கி & விஸ்கி
    கூர்மண்டயர் (கொலைப்படை சைசில்..)
    சார்ஜெண்ட் தாமஸ் / மின்னல்படை (யுத்த கதைகள்)
    "சாவதற்கு நேரமில்லை " சைமன் !
    மாயாவிகாரு - வண்ணத்தில் - கொரில்லா சாம்ராஜ்யம் / யார் அந்த மாயாவி ?//
    எல்லாத்தையும் போட்டு தாக்குங்க சார்,முடிஞ்சா இன்னும் கொஞ்சம் சேர்த்து.

    ReplyDelete
  56. அந்த காலத்தில் வந்த சுஸ்கி விஸ்கி, டொனால்ட், மற்றும் சில காமெடி கதைகள் இன்றும் வேண்டும் என கேட்கிறோம். ஆனால் தற்போது வரும் பல காமெடி கதைகள் பிடிக்கவில்லை, சிரிப்பு ரொம்ப வரல என சொல்லுகிறோம்.


    என்னை பொறுத்தவரை பழைய கால காமெடி கதைகளை விட தற்போது வரும் கதைகள் எந்த அளவிலும் குறையில்லை, சொல்ல போனால் தற்போது வரும் கதைகள் மிகவும் நன்றாக உள்ளது, குறிப்பாக படத்தை பார்த்து ரசிப்பதற்கு ஏன் சிரிப்பதற்கு நிறைய உள்ளது.

    சரி, அப்ப ஏன் தற்போதைய காமெடி கதைகள் எனக்கு பிடிக்கவில்லை? நாம் வளர்ந்து விட்டோம், நமது வாசிப்பு முறைகள் மாறிவிட்டன (குறிப்பாக படத்தை நுணுக்கமாக ரசித்து படிப்பது).

    நாம் கடந்த காலங்களில் சிரித்து படித்த கதைகளை இன்று படித்தால் அதே சிரிப்பு நமது முகத்தில் எட்டிபார்ப்பது உத்திரவாதம் இல்லை. இதற்கு உதாரணம் தற்போதைய மும்மூர்த்திகள் மறுபதிப்பு கதைகள், சிறு வயதில் கிடைத்த வாசிப்பு அனுபவம் இப்போது கிடைப்பது இல்லை.

    தற்போது வரும் காமெடி கதைகள் அடுத்த தலைமுறை மற்றும் வளரும் தலைமுறைகளுக்கு என்பதை புரிந்து கொண்டால் போதும். தற்போது இவை நமக்கு (எனக்கு) நல்ல வாசிப்பு அனுபவத்தை தருகிறது, இன்றைய கம்ப்யூட்டர் காலத்தில் அதிகம் மண்டையை குடையாமல் படிப்தற்கு இது போன்ற கதைகள் தேவை. மனதை எளித்தாக்குகிறது.

    என்னை பொறுத்தவரை தற்போது வரும் காமெடி கதைகள் தொடரட்டும், இதில் பட்டி டிங்கரின்க் எதுவும் தேவையில்லை. முடிந்தால் காமெடி கதைகளை அதிகபடுத்துங்கள்

    ReplyDelete
    Replies
    1. ////முடிந்தால் காமெடி கதைகளை அதிகபடுத்துங்கள்////

      காா்ட்டூனுக்கு ஜே!!!

      +111111111111111111111111111111111111111111111111111111111111111

      கை வலிக்குது !!

      நிறுத்திக்கிறேன்!!

      Delete
    2. PfB : //இன்றைய கம்ப்யூட்டர் காலத்தில் அதிகம் மண்டையை குடையாமல் படிப்தற்கு இது போன்ற கதைகள் தேவை. மனதை எளித்தாக்குகிறது.//

      நிஜம் தான் ; ஆனால் ஆக்ஷனைத் தாண்டிய கதைகளை ரசிக்கவே முடிய மாட்டேன்கிறது என்ற நண்பர்களைக் கடிந்து கொள்ளவும் முடியாதல்லவா ? 2018 -ல் கார்ட்டூன்கள் தொடரும் ; but அந்த சந்தா கட்டாயமான திணிப்பாய் மட்டும் இராது !

      Delete
  57. அந்த கறுப்பு கிழவி ய மறந்துடாதீங்க சாா்.

    ReplyDelete
    Replies
    1. sivakumar siva : பாஸ்போர்டைப் பறிகொடுத்த நாள் முதலாய் எனக்கு all மொழிகளில் பிடிக்காத ஒரே வார்த்தை - "கிழவி" !!!

      :-)

      Delete
  58. சூப்பர் சிக்ஸ்:

    1. டெக்ஸ் 2 கதைகள்
    2. மாடஸ்டி 1 + ஜான் சில்வர் 1
    3. ரிப்பி கேர்பி 2 கதைகள்
    4. சுஸ்கி 1 + டொனால்ட் 1
    5. மின்னல் படை 1 + ரெட்டை வேட்டையர் 1
    6. மாடலாய மர்மம் + மர்ம கத்தி

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் 7ன்னும் பேர மாத்திகிட்டு வேதாளர் கதை ரெண்டு சேர்த்துகோங்க சார் :-)

      Delete
    2. சூப்பர் 8ன்னும் பேர மாத்திகிட்டு சட்டி தலையன் ஆர்ச்சி கதை ரெண்டு சேர்த்துகோங்க சார் :-)

      Delete
    3. @ Friends above : Out of syllabus பதில்கள் சாரே !! வினாத் தாளை மறுபடியும் பரிசீலனை செய்யுங்களேன் !

      Delete
  59. மாடஸ்டி பிளைசி

    ReplyDelete
  60. 50 - 50 கலவையா? - ஓகே

    ReplyDelete
  61. ஆசிரியர் அவர்களுக்கு ,
    பைண்டிங் வேலை முடிந்த புத்தகங்களை முதல் தவணையாக இன்றோ நாளை காலையிலோ அனுப்பியும் முடியாத லயன் 300 மற்றும் இரத்தக் கோட்டை மறுபதிப்பை ஜூலை 15ம் தேதி இரண்டாவது தவணையாக அனுப்பி வைக்தால் உங்களின் காலதாமதத்தால் எற்பட்ட நெருடலும் போய் எங்கள் நெஞ்சில் நிம்மதி நிலைக்கும். பரிசீலனை செய்யுங்க சார்

    ReplyDelete
    Replies
    1. ravanan iniyan : ஒரு நாளை மிச்சம் செய்திட, கூரியருக்கென ரூ.20,000 விரையம் செய்வதில் யாருக்கும் பலன் இராதே சார் ? தவிர, இரத்தக் கோட்டை ஆகஸ்ட் 4 -க்குத் தானே ?

      Delete
  62. டியர் விஜயன் சார்,

    மறுபதிப்பில் சட்டிதலையன் ஆர்ச்சிக்கு எப்போது வாய்ப்பு தருவீர்கள்! ஓவ்வொரு வருடமும் என்னை போன்ற சில அல்லது பல வாசகர்கள் ஆர்ச்சிக்காக காத்திருக்கிறோம்!
    எஸ்.ஜெயகாந்தன், புஞ்சை புளியம்பட்டி

    ReplyDelete
    Replies
    1. jayakanthan : அட...இப்போது தான் கீழே ஒரு பதில் போட்டேன் - சிகப்பு மண்டையன் தொடர்பாய் ! பாருங்களேன் !

      Delete
  63. சாகச வீரர் ரோஜர் (அந்த "மர்மக் கத்தி" promise மறக்கவில்லை எனக்கு !)

    சுஸ்கி & விஸ்கி

    கூர்மண்டயர் (கொலைப்படை சைசில்..) ///

    இந்த மூன்றும் ஓகே சார்
    மற்ற மூன்றும் வேண்டாமே

    வார் - கதைகளை படிக்கக்கூடிய மனநிலையில் வளர்ந்த குழந்தைகளுக்கு மனமில்லை.

    சைமன் - ஒன்றிரண்டு கதைகளை மட்டும் படித்திருப்பதால் (அதுவும் அவ்வளவாக கவரவில்லை) கதைகளை பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை
    இதற்க்கு பதில் ஆர்ச்சியின் நல்ல கதைகளை இங்கு தேர்வு செய்யலாமே ?

    மாயாவிக்கு தனி சந்தா இருப்பதால் இதுவும் வேண்டாமே . இதற்க்குப்பதில் இரட்டை வேட்டையர் ரை இங்கே களமிறக்கலாம் சார் (அ) மிஸ்டர் ஜெட் டை கொண்டு வரலாமே

    ReplyDelete
    Replies
    1. Tex Sampath : Operation ஆர்ச்சியை துவக்க தயக்கம் தொடர்கிறது நண்பரே ; அந்நாளில் நம் கனவு நாயகனாய் காட்சி தந்த ஸ்பைடர் இன்றைக்குப் பெற்றிடும் mixed response தான் எனது யோசனைக்கு காரணம் ! அப்படியே ஆர்ச்சியை கொணர்வதாய் இருந்தாலும், நிறைய புதுக் கதைகள் பாக்கியுள்ளன அதனில் ! So மறுபதிப்புகளாய் இல்லாது, புதுசுகளை களமிறக்கலாம் ! பார்க்க வேண்டும், சட்டித் தலையனுக்கு ஆதரவு எவ்விதமுள்ளதென்று !

      Delete
    2. சரிங்க சார். குறிப்பிட்ட சாரர் மட்டும் கேட்பதாக இருந்தால் ஆர்ச்சி வேண்டாம்


      இரட்டை வேட்டையர்
      Mr. ஜெட்
      இவர்களின் ஓரிரு கதைகளையாவது முயற்சி செய்யுங்கள் சார்
      (புயலோடு ஒரு போட்டி / திக்குத்தெரியாத தீவில் இவைகளை எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தட்டுவதேயில்லை)

      Delete
    3. சட்டித்தலையனின் புதுசுகளுக்கு தடையேதும் இல்லை சார்...அவ்வப்போது புய்ப கூடையில் விழுந்து புரள்வதும் சிறப்பே...

      Delete
  64. @ ALL : அடடே....அதற்குள் பின்னூட்ட எண்ணிக்கை 150 ஐத் தாண்டியாச்சா ? இதோ வந்துட்டேன் !!

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் பேக் டூ கமெண்ட் செக்சன் சார்...

      Delete
  65. இரும்புக்கை மாயாவி already overcooked, அதை தவிர வேறு எந்த கதையாக இருந்தாலும் ஓகே.

    ReplyDelete
  66. தலைவா புதிய ஆர்ச்சி கதைகளை அடுத்த ஆண்டு தயவு செய்து வெளியிடுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  67. கமெண்டுகள் ரெக்கைய கட்டிகிட்டு பறக்குதே.

    ReplyDelete
    Replies
    1. பழைய இதழ்களைப் பற்றி பேச்சும் கேள்வியும் வந்தாலே இதானே வாடிக்கை அய்யா...!!!

      Delete
  68. MV sir@ எங்கே உள்ளீர்கள்?? கணிசமான நாட்களாக காணோமே உங்களை...

    இவ்வருடம் ஈரோடு வருவீர்களா???

    ReplyDelete
  69. சட்டி தலையனின் புதிய கதைகளா! ஆகா ஆகா.. சூப்பர் நியூஸ். சீக்கிரம் பரிமாறுங்கள் சார். ஐ ஆம் ரெடி.

    ReplyDelete