Friday, June 30, 2017

நன்றிகள் - குங்குமத்துக்கு !!

காமிக்ஸ் குடும்பத்தார்!





-யுவகிருஷ்ணா

இரும்புக்கை மாயாவியை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? லாரன்ஸ் டேவிட், ஜானி நீரோ, ஸ்பைடர், டெக்ஸ் வில்லர், லக்கிலுக் என்று கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக தமிழ் வாசிப்பில் ரசனையை கூட்டும் காமிக்ஸ் ஹீரோக்கள் அத்தனை பேருக்குமே சிவகாசியில்தான் டப்பிங் கொடுக்கப்படுகிறது. 

எழுபதுகளின் தொடக்கத்தில் ‘முத்து காமிக்ஸ்’, எண்பதுகளின் மத்தியில் ‘லயன் காமிக்ஸ்’ என்று தொடரும் இந்த காமிக்ஸ் பயணத்துக்கு முடிவே இல்லை. இப்போது சர்வதேசத் தரத்தில் வழுவழு தாள்களில் முழுவண்ணத்தோடு புதுப்பொலிவோடு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தாத்தா சவுந்தரபாண்டியன், ‘முத்து காமிக்ஸ்’ தொடங்கினார். அப்பா விஜயன், ‘லயன் காமிக்ஸ்’ ஆரம்பித்தார். மூன்றாவது தலைமுறையாக இப்போது இத்தொழிலில் புதுமுகமாக களமிறங்குகிறார் விஜயனின் மகன் விக்ரம். ‘முத்து காமிக்’ஸின் 400வது இதழ், ‘லயன் காமிக்’ஸின் 300வது இதழ் என்று ஒரே மாதத்தில் - ஜூலையில் - இரண்டு இதழியல் துறை மைல்கற்களை எட்டியிருக்கிறார்கள்! 
லயன் காமிக்’ஸின் ஜூனியர் எடிட்டரான விக்ரம் விஜயனை, தீபாவளிக்காக பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் கந்தக பூமியான தகதக சிவகாசியில் ஒரு மதியவேளையில் சந்தித்தோம். 

“இருபத்தைந்து வயதை இப்போதான் எட்டப்போறேன். நான் கொஞ்சம் லேட்டு. அப்பா விஜயன், பதினேழு வயசிலேயே ‘லயன் காமிக்’ஸுக்கு ஆசிரியராகி சாதித்தவர். சிவகாசியில் ஸ்கூல் முடிச்சேன். சென்னையில் பி.டெக் படிச்சேன்.

தாத்தா, அந்தக் கால ஐரோப்பிய காமிக்ஸ்களின் பரம ரசிகர். காமிக்ஸ் புத்தகங்களை தமிழில் வெளியிடுவதை ஒரு தொழிலாக இல்லாமல் தன்னுடைய கடமையாகத் தொடங்கினார். அப்பா, அதை விரிவுபடுத்தினார். சின்ன வயசுலே எங்க வீடு முழுக்கவே காமிக்ஸ் நிறைஞ்சி கிடக்கும். காமிக்ஸ் தவிர்த்து கார்ட்டூன் சேனல்கள் பார்த்துக்கிட்டிருப்பேன். 
லக்கிலுக், டின்டின்னு கார்ட்டூன் ஹீரோக்கள் என் மனசுக்குள்ளேயே எப்பவும் வசிக்கிறாங்க. எங்க குடும்பத்துக்கு உலகம் முழுக்க இருக்குற தமிழர்கள் மத்தியில் அடையாளம் கொடுத்தது காமிக்ஸ்தான். அப்படியிருக்க எனக்கு மட்டும் எப்படி இதில் ஆர்வம் வராமல் போகும்?”  கேள்வி கேட்கப் போன நம்மையே கேள்வியோடு எதிர்கொண்டார் விக்ரம்.

உங்க ஊரு பட்டாசுகளை வெடிச்சி, காசை கரியாக்குறோம்னு எங்களைத்தான் எல்லாரும் சொல்லுவாங்க. நீங்க காமிக்ஸிலே பெரிய முதலீடு போட்டு காசை கரியாக்குறீங்களே?

கரியாக்குறோம்னு சொல்ல முடியாது. மத்த தொழில் மாதிரி இதுலே பெருசா லாபமெல்லாம் பார்க்க முடியாது. ஆனா, பெரிய முதலீடு தேவைப்படும் தொழில்தான் இது. தமிழில் காமிக்ஸ் வெளியிட, ஒரிஜினல் கதைகளின் அயல்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரிய ராயல்டி தொகை தருகிறோம். 

அதைத் தவிர்த்து மொழிபெயர்ப்பு, அச்சு என்று நிறைய செலவாகிறது. இதைத் தொழிலாக லாபம் எதிர்பார்த்து செய்வதாக இருந்தால், நிச்சயமாக வாசகர்களுக்கு இவ்வளவு குறைந்த விலையில் எங்களால் காமிக்ஸ் வழங்க முடியாது. என் அப்பாவும், தாத்தாவும் பயங்கரமான காமிக்ஸ் ஆர்வலர்கள். இப்போ தாத்தா ஓய்வில் இருக்க அப்பாவும், சித்தப்பாவும்தான் எங்க தொழில்களை நிர்வகிக்கிறார்கள். சித்தப்பாவுக்கும் காமிக்ஸ் ஆர்வம் உண்டு. அவங்க ரசனை அப்படியே எனக்கும் வந்திருக்கு.

எங்க குடும்பம் பாரம்பரியமா அச்சுத்தொழில் செய்துகிட்டு வருது. அது தொடர்பான நெடிய அனுபவம் எங்களுக்கு இருக்கு. சிவகாசி மாதிரியான தொழில் நகரத்தில் இயங்குறோம் என்பதால் மார்க்கெட் நல்லா அத்துப்படி ஆகியிருக்கு. திடீர் விலையேற்றங்களை எதிர் பார்த்து, அதற்கேற்ப புதிய தொழில் யுக்திகளை கையாண்டு எங்க செலவுகளை கட்டுக்குள் வெச்சிருக்கோம். 

அதனால்தான் மூன்று தலைமுறைகளாக, நாற்பத்தைந்து ஆண்டுகளாக நாங்கள் தொடர்ச்சியா செயல்பட முடியுது. இப்போ எங்க காமிக்ஸ்களில் என் அப்பாவின் ஈடுபாடும், உழைப்பும்தான் நூறு சதவிகிதம். ஆன்லைன் விற்பனையை நிர்வகிப்பது, சமூக வலைத்தளங்களில் மார்க்கெட்டிங் செய்வது போன்றவற்றில் நான் இறங்கியிருக்கிறேன்...

வாசகர்கள் இன்னமும் அதே ஆர்வத்தோடு காமிக்ஸ் புத்தகங்களை வாசிக்கிறார்களா?

அப்பா, தாத்தா காலத்து காமிக்ஸ் வரவேற்பைப் பற்றி நான் நேரடியாக அறியவில்லை. இப்போ அஞ்சு வருஷமாதான் தயாரிப்பு, திட்டமிடல் போன்றவற்றில் அப்பாவுக்கு துணையா இருக்கேன். எண்பதுகளைத்தான் காமிக்ஸ்களின் பொற்காலம் என்று வாசகர்கள் பலரும் சொல்றாங்க. 

ஆனா, இப்போ முன்பு எப்போதும் தமிழ் காமிக்ஸ் துறையில் இல்லாத அளவுக்கு புதுமைகளையும், தரத்தையும் எட்டியிருக்கோம். ஆக்‌ஷன், கெளபாய், கார்ட்டூன், சூப்பர்ஹீரோக்கள், கிராஃபிக் நாவல்கள் என்று வாசகர்களுக்கு வெரைட்டியா விருந்து பரிமாறுகிறோம். எங்களுக்கு வரவேற்பு எப்படியிருக்கிறது என்று நீங்களே புத்தகக் காட்சிகளின்போது எங்க ஸ்டாலுக்கு வந்து பார்க்கலாம். ஒருவேளை இன்னும் இருபது வருஷம் கழிச்சி இப்போதைய காலம்தான் காமிக்ஸ்களின் பொற்காலம் என்றுகூட சொல்லப்படலாம்!

காமிக்ஸ்களுக்கு என்று பிரத்யேகமாக நடத்தப்படும் comic con போன்ற புத்தகச்சந்தை நிகழ்வுகளில் பங்கேற்கிறீர்களா ?

நாங்களும் நம்முடைய தமிழ் காமிக்ஸ்களை எடுத்துக்கொண்டு ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் பங்கேற்றோம். பெங்களூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத், பூனே என்று எங்கெங்கோ அவற்றை நடத்துகிறார்கள். சென்னைக்கு மட்டும் வரமாட்டேன் என்கிறார்கள். தமிழர்களுக்கும் நீண்டகால காமிக்ஸ் வாசிப்பு உண்டு என்பதை அவர்கள் அறியவேண்டும். என்றேனும் ஒருநாள் இங்கும் நடத்துவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இப்போதைக்கு தமிழகத்தில் நடக்கும் பெரிய புத்தகக்காட்சிகளில் நாங்க பங்கேற்கிறோம். புத்தகக்காட்சி  அமைப்பாளர்களும் நாங்க பங்கேற்பதை விரும்பறாங்க...

முன்பெல்லாம் பெட்டிக்கடைகளிலும் கூட ‘முத்து’ / ‘லயன்’ காமிக்ஸ்கள் தொங்கும். இப்போது அப்படியில்லையே..?

சின்ன வாசகர் வட்டம். போதுமான அளவுக்கு விற்பனை என்று நாங்களே எங்களை வரையறைத்து வைத்திருக்கிறோம். பெரியளவில் விளம்பரம் செய்து விற்பனை செய்யும் சக்தி எங்களுக்கு இல்லை. வாட்ஸப் குழுமங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் எங்கள் வாசகர்களே எங்களுக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள். புத்தகக் காட்சிகளின் போது புதிய வாசகர்கள் உருவாகிறார்கள். 

எல்லாத் துறையிலும் ராக்கெட் வேக மாற்றங்கள் நடைபெறுகின்றன. நம் தமிழ் காமிக்ஸ் துறை அந்தளவுக்கு வேகமாக மாறமுடியவில்லை என்றாலும், போட்டி நிறைந்த சூழலில் நாங்களும் எங்களுக்கான ராஜபாட்டையில் கம்பீரமாக நடை போடுகிறோம். இன்டர்நெட் மூலமாவே எங்க வாசகர் வட்டத்தை ஊக்கமாக செயல்பட வைக்கிறோம். வாசகர்களின் ரசனை மாற்றங்களை இப்போ உடனுக்குடன்  தெரிஞ்சுக்கவும் இன்டர்நெட் உதவுது.

இன்றைக்கும் முக்கிய நகரங்களில் எங்களுக்கு ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். எங்களது இப்போதைய வெளியீடுகள் நல்ல ஆர்ட் பேப்பரில், முழு வண்ணத்தில் சர்வதேசத் தரத்தில் உருவாக்கப்படுகின்றன. விலையை தொடர்ச்சியாக ஒரே மாதிரி கட்டுக்குள் வைக்க முடிவதில்லை. ஒரு இதழ் 50 ரூபாய் என்றால் அடுத்த இதழ் 100 ரூபாயாக இருக்கும். எனவே சிறிய கடைகளில் விற்க முடிவதில்லை.

வாசகர்களின் நேரடி சந்தா, ஆன்லைன் விற்பனை, புத்தகக் காட்சிகளில் பங்கேற்பு போன்ற முறைகளில் விற்பனை செய்து வருகிறோம். பல்லாயிரம் ரூபாய் செலவழித்து உரிமை வாங்கும் கதைகளை, இங்கே மிகக்குறைவான வாசகர்  வட்டத்துக்குத்தான் கொண்டு செல்ல முடிகிறது என்கிற சங்கடம் எங்கள் குடும்பத்துக்கு உண்டு! 


http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12325&id1=4&issue=20170630     
=====================================================

குங்குமம் குழுமத்துக்கும், ஆர்வமெடுத்து இதனை சாத்தியமாக்கிய நண்பர் யுவகிருஷ்ணாவுக்கும் நமது உளமார்ந்த நன்றிகள் !! 

138 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நாங்களும் உங்க குடும்பத்தார் தான் சார்

    ReplyDelete
  3. ஆதிகாலை வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. இது அநியாயம் சார்.! ஆதிக்கு மட்டும் காலை வணக்கம் சொல்றிங்களே..?!? :-)

      Delete
  4. ///எங்க குடும்பத்துக்கு உலகம் முழுக்க இருக்குற தமிழர்கள் மத்தியில் அடையாளம் கொடுத்தது காமிக்ஸ்தான். அப்படியிருக்க எனக்கு மட்டும் எப்படி இதில் ஆர்வம் வராமல் போகும்?” கேள்வி கேட்கப் போன நம்மையே கேள்வியோடு எதிர்கொண்டார் விக்ரம்.
    ////


    அட்ரா சக்கை! அட்ரா சக்கை! அட்ரா சக்கை!!

    மகிழ்ச்சி ஜூ.எடி!

    ReplyDelete
  5. ////ஒருவேளை இன்னும் இருபது வருஷம் கழிச்சி இப்போதைய காலம்தான் காமிக்ஸ்களின் பொற்காலம் என்றுகூட சொல்லப்படலாம்!?////

    +111111

    வாழ்த்துக்கள் விக்ரம் சாா்!!

    ReplyDelete
  6. வாவ் ...ஜூனியர் எடிட்டர் ரெடி ஆயிட்டாருங்கோவ் !
    இந்த முறை EBF இல் ஜூனியர் எடிட்டர் ஸ்பெஷல் ஒன்னு போட சொல்லி கேக்கணும் ;-)

    ReplyDelete
  7. Gm sir. U can vert well extend d marketting to d newer gen by social media like watsapp. I m not saying Dis for commercial. I wish to see dcyounger generation read our tamil books. For youngs reading habits of tamil books can b created by comics. Dis s a grt service to d tamil community. U r one of d pioneers in dis movement. U shd create such an opportunity to d young ones.

    ReplyDelete
  8. குங்குமம் குழுமத்துக்கும், ஆர்வமெடுத்து இதனை சாத்தியமாக்கிய நண்பர் யுவகிருஷ்ணாவுக்கும் நமது உளமார்ந்த நன்றிகள் !!

    ReplyDelete
  9. ///இதைத் தொழிலாக லாபம் எதிர்பார்த்து செய்வதாக இருந்தால், நிச்சயமாக வாசகர்களுக்கு இவ்வளவு குறைந்த விலையில் எங்களால் காமிக்ஸ் வழங்க முடியாது. என் அப்பாவும், தாத்தாவும் பயங்கரமான காமிக்ஸ் ஆர்வலர்கள். இப்போ தாத்தா ஓய்வில் இருக்க அப்பாவும், சித்தப்பாவும்தான் எங்க தொழில்களை நிர்வகிக்கிறார்கள். சித்தப்பாவுக்கும் காமிக்ஸ் ஆர்வம் உண்டு. அவங்க ரசனை அப்படியே எனக்கும் வந்திருக்கு.///

    அருமை விக்ரம் சார். .!

    ReplyDelete
    Replies
    1. அருமை விக்ரம் சார். .!

      அருமை விக்ரம் சார். .!

      Delete
  10. வாழ்த்துக்கள் விக்ரம். இது வரை புத்தகதிருவிழாகளில் நீங்கள் அதிகம் பேசியது கிடையாது. இன்று ஒரு வழியாக உங்கள் எண்ணங்களை இந்த பேட்டி வழியாக தெரிந்து கொண்டேன். குங்குமம் இதழ் மற்றும் யுவகிருஷ்ணா அவர்களுக்கு நன்றி, உங்கள் காமிக்ஸ் காதலுக்கு நன்றி யுவா.

    விக்ரம் போட்டா போஸை பாருங்கள் சாமி,செய். அடுத்து சினிமாவில் இறங்கற மாதிரி தெரியுது.

    ReplyDelete
    Replies
    1. ///விக்ரம் போட்டா போஸை பாருங்கள் சாமி,செய். அடுத்து சினிமாவில் இறங்கற மாதிரி தெரியுது.///

      :))))

      Delete
  11. ///. பல்லாயிரம் ரூபாய் செலவழித்து உரிமை வாங்கும் கதைகளை, இங்கே மிகக்குறைவான வாசகர் வட்டத்துக்குத்தான் கொண்டு செல்ல முடிகிறது என்கிற சங்கடம் எங்கள் குடும்பத்துக்கு உண்டு! ///

    இந்த நிலை மாறி, நமது வாசகர்வட்டம் மிகப்பெரியதாக 80களில் இருந்ததைப்போல, சொல்லப்போனால் அதைவிட பெரிதாக ஆகவேண்டுமென்பதே நம் அனைவரின் ஆசையும். .!

    ReplyDelete
  12. அப்படி போடுங்க விக்ரம் !!! தந்தையின் நாடி நரம்புகளில் தெறித்து கொண்டிருக்கும் காமிக்ஸ் காட்டாற்று அன்பு பிரவாகம் உங்களில் இருப்பதில் ஆச்சர்யமில்லைதான் !!

    தரத்தில் ,மொழிபெயர்ப்பில், இப்போதே காமிக்ஸ் பொற்காலம்தான் ...

    எதிர்காலத்தில் டிஜிட்டல் காமிக்ஸ் வடிவத்தை -அச்சு வடிவத்துடன் -கூடுதலாக அறிமுகம் செய்து அதிலும் கொடி கட்டி பறப்பீர்கள் என நம்புகிறேன் ..அதற்கான வாழ்த்துகளும் ...

    ReplyDelete
    Replies
    1. ///தரத்தில் ,மொழிபெயர்ப்பில், இப்போதே காமிக்ஸ் பொற்காலம்தான் ...////

      +1

      Delete
    2. ///தரத்தில் ,மொழிபெயர்ப்பில், இப்போதே காமிக்ஸ் பொற்காலம்தான் ...////

      +2

      Delete
    3. அட்டகாசமான வாசகங்கள் திருசெனா அனா அவர்களே!.காமிக்சுக்கு தமிழ் மொழியில் ஓர் மங்காத பொற்காலம் உருவாகும்.அதில் லயன் மற்றும் முத்து நிறுவனத்தின் பெயர் மகுடத்து வைரமாய் பதியப்படும்.கனவுகள் மெய்படும் நாட்களும் வெகு தொலைவில் இல்லை.

      Delete
    4. அட்டகாசமான வாசகங்கள் திருசெனா அனா அவர்களே!.காமிக்சுக்கு தமிழ் மொழியில் ஓர் மங்காத பொற்காலம் உருவாகும்.அதில் லயன் மற்றும் முத்து நிறுவனத்தின் பெயர் மகுடத்து வைரமாய் பதியப்படும்.கனவுகள் மெய்படும் நாட்களும் வெகு தொலைவில் இல்லை.

      Delete
    5. /தரத்தில் ,மொழிபெயர்ப்பில், இப்போதே காமிக்ஸ் பொற்காலம்தான் ...////
      +11111

      Delete
  13. சின்ன சிங்கம் வேட்டைக்கு ரெடியாகி விட்டது மக்களே. ஈரோடுல்ல மீட் பண்ணலாம்.

    ReplyDelete
    Replies
    1. குங்குமம் மூலம் சின்ன சிங்கம் பற்றி ஊருக்கு சொல்லியாச்சு... சும்மா வெடிக்குதுல

      Delete
  14. பொதுவாக இம்மாதிரி பேட்டிகள் பத்திரிகையில் இடம் பெறும்போது ''இரும்புக்கை மாயாவி படங்களே இடம் பெறும்...மாறுதலாக ஜேசன் ,லேடி எஸ் ,அன்டர்டேக்கர் ,டைகர் ,டெக்ஸ் ,என எல்லோரும் கலந்து கட்டி ஆஜராகியிருப்பது ஆசுவாச பெருமூச்சை எழுப்புகிறது ...அப்பாடி !!!

    என்ன !! ஜெரெமியா -வும் இடம் பெற்று இருந்தால் மான்யம் அளித்த,அளிக்க போகும் பிரெஞ்ச் கலாச்சார குழுமத்துக்கு ஒரு அட்டாச்மெண்ட் அனுப்பியிருக்கலாம் ....மிகவும் மகிழ்ந்திருப்பர்....

    ReplyDelete
    Replies
    1. ///ஜெரெமியா -வும் இடம் பெற்று இருந்தால் மான்யம் அளித்த,அளிக்க போகும் பிரெஞ்ச் கலாச்சார குழுமத்துக்கு ஒரு அட்டாச்மெண்ட் அனுப்பியிருக்கலாம் ....மிகவும் மகிழ்ந்திருப்பர்....///

      பேட்டியெடுத்த யுவகிருஷ்ணா சாரும் ஜெரெமயாவை படித்திருக்கக்கூடும். ஆகையினால ஹிஹி.. . .!! :-)

      Delete
    2. ///பேட்டியெடுத்த யுவகிருஷ்ணா சாரும் ஜெரெமயாவை படித்திருக்கக்கூடும். ஆகையினால ஹிஹி.. . .!! :-)///

      ஹா ..ஹா..ஹா..கண்ணனின் ட்ரேட்மார்க் கிண்டல் !!! பாத்துகிட்டே இருங்க !!! ஜெரெமியா இரண்டாம் பாகம் வந்த பின்னாடி நீங்க கட்சி மாறத்தான் போறீங்க!!!!

      Delete
    3. ஜெரமயா....படிங்க ...பொறுமயா...அப்ப தெரியும் திறம்ம்ம்மயா..

      Delete
  15. எடிட்டருக்கும், நமக்கும் இடையே ஒரு பாலமாகவும் - நமக்கெல்லாம் நூற்றுக்கணக்கான நேசமிகு நண்பர்கள் கிடைத்திட காரணமாகவும் - விளங்கிவரும் இவ்வலைப் பூ - ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஜூ.எடி தன் தந்தைக்குக் கொடுத்த உந்துதலின்பேரில் தொடங்கப்பட்டது - என்பதை நன்றியோடும், மகிழ்ச்சியோடும் நினைவுகூர்கிறேன்!

    ReplyDelete
  16. பேட்டி வெளியாகக் காரணமாகிய யுவகிருஷ்ணா அவர்களுக்கும், குங்குமம் நிறுவனத்தார்க்கும் நன்றிகள் பல! _/\_

    ReplyDelete
  17. ////வாட்ஸப் குழுமங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் எங்கள் வாசகர்களே எங்களுக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள். ////

    நிறைய நண்பர்கள் இதில் முனைப்புடன் செயல்பட்டாலும், மிகுந்த மெனக்கெடலின் பேரில் அன்றாடம் தனது 'மாத்தியோசி 2 in 1'வடிவமைப்புகள் மூலம் இதை முகநூலில் செவ்வனே செய்துவரும் மாயாவி சிவா அவர்களுக்கு அனைவரின் சார்பாகவும் இக்கணத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! _/\_

    ReplyDelete
    Replies
    1. ///நிறைய நண்பர்கள் இதில் முனைப்புடன் செயல்பட்டாலும், மிகுந்த மெனக்கெடலின் பேரில் அன்றாடம் தனது 'மாத்தியோசி 2 in 1'வடிவமைப்புகள் மூலம் இதை முகநூலில் செவ்வனே செய்துவரும் மாயாவி சிவா அவர்களுக்கு அனைவரின் சார்பாகவும் இக்கணத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! _/|\__/|\_/|\_

      Delete
    2. நிறைய நண்பர்கள் இதில் முனைப்புடன் செயல்பட்டாலும், மிகுந்த மெனக்கெடலின் பேரில் அன்றாடம் தனது 'மாத்தியோசி 2 in 1'வடிவமைப்புகள் மூலம் இதை முகநூலில் செவ்வனே செய்துவரும் மாயாசார் அவர்களுக்கு அனைவரின் சார்பாகவும் இக்கணத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! _/\_

      Delete
    3. காமிக்ஸின் ஆக்கத்திற்காக பயன்படும் ஒவ்வொரு நல்ளுங்களையும் வணங்குகிறோம்.திரு மாயவி சிவா அவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு நன்றி!நன்றி!!நன்றி!!!.

      Delete
  18. நன்றிகள் பல குங்குமம் பேட்டியை இங்கே வெளியிட்டமைக்கு !

    ReplyDelete
  19. வொண்டர்புல் விக்ரம் ஜி...
    வாழ்த்துகள் சார்...
    வணக்கம் நண்பர்களே...

    "மாற்றம் ஒன்றே மாறாதது"---
    நம்ம தளத்தின் தீம் செட்டப்புக்கு பொய்த்துப் போனது...

    மொபைலில் பார்க்கும்போது இந்த தீம் தான் அனைத்துக்கும் வசதி சார். ஹோம் பட்டனில் முதல் 3அல்லது 4பதிவுகளின் இன்ட்ரோ இருக்கும். பதிவில் கண்ணுக்கு இதமான பேக்ரவுண்ட்+ யார் யார் கமெண்ட்கள் எங்கிருக்கு,ரிப்ளை தர மிக எளிது; டைப்அடிக்க வசதி என சொந்த வீட்டில் உள்ளது போல ஒரு பீலிங் கிடைக்கும் இங்கே...

    இதுவே இனியும் தொடரட்டும் சார்...

    ReplyDelete
  20. மகிழ்ச்சியாக இருக்கு. செயல் தலைவர் ஜூனியர் எடிட்டர் அசத்த எங்கள் வாழ்த்துகள். :) அப்பாவே தொடாத பல காமிக்ஸ் ஜர்னர்களை நீங்கள் நாடி பார்த்து தமிழ் காமிக்ஸ் உலகிற்கு அழைத்து வர வேண்டும் என்பது எங்கள் ஆசை. All the best VIKRAM .

    ReplyDelete
  21. அருமை,அருமை சிறப்பான தகவல்கள். மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  22. அப்படியே ஜூலை இதழ்கள் எப்ப கிளம்புதுன்னு சொல்லியிருந்திங்கன்னா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
    ஹி,ஹி.

    ReplyDelete
  23. This comment has been removed by the author.
    ஹி ஹி சும்மா

    ReplyDelete
    Replies

    1. மந்திரியாரே!...இது என்ன விபரீத விளையாட்டு...?!.

      Delete
  24. Congrats Vikram. The comics legacy continues and next generation has taken control.

    Now i am happy that my son would be immersed in comics thanks to the Editor Mr.Vikram.

    Please give my son a best childhood memories because thats what your dad Mr.Vijayan did it to me.


    THANKS
    And
    ALL THE VERY BEST..

    ReplyDelete
  25. Congrats Vikram. The comics legacy continues and next generation has taken control.

    Now i am happy that my son would be immersed in comics thanks to the Editor Mr.Vikram.

    Please give my son a best childhood memories because thats what your dad Mr.Vijayan did it to me.


    THANKS
    And
    ALL THE VERY BEST..

    ReplyDelete
  26. ///‘முத்து காமிக்’ஸின் 400வது இதழ், ‘லயன் காமிக்’ஸின் 300வது இதழ் என்று ஒரே மாதத்தில் - ஜூலையில் - இரண்டு இதழியல் துறை மைல்கற்களை எட்டியிருக்கிறார்கள்!///

    ///இப்போ எங்க காமிக்ஸ்களில் என் அப்பாவின் ஈடுபாடும், உழைப்பும்தான் நூறு சதவிகிதம்.///

    ///ஒருவேளை இன்னும் இருபது வருஷம் கழிச்சி இப்போதைய காலம்தான் காமிக்ஸ்களின் பொற்காலம் என்றுகூட சொல்லப்படலாம்!///

    ///புத்தகக்காட்சி அமைப்பாளர்களும் நாங்க பங்கேற்பதை விரும்பறாங்க...///

    ///வாட்ஸப் குழுமங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் எங்கள் வாசகர்களே எங்களுக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள். புத்தகக் காட்சிகளின் போது புதிய வாசகர்கள் உருவாகிறார்கள்.///

    ///போட்டி நிறைந்த சூழலில் நாங்களும் எங்களுக்கான ராஜபாட்டையில் கம்பீரமாக நடை போடுகிறோம்///

    ---- மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் வைர வரிகள்...

    கம்பீர ராஜ நடையில் சிங்கத்தோடு நேரடியாக நடைபோடவும், முந்தைய பொற்காலத்தை ஹைலைட்ஸாக பார்க்கவும் வாய்ப்பு பெற்ற நாம் எல்லோரும் நிச்சயமாக கொடுத்து வைத்தவர்கள் நண்பர்களே...
    நாமெல்லாம் முன் ஜென்மத்தில் ஏதாவது நல்ல விசயத்தை ஒன்றாக சேர்த்து கூட்டாக செய்திருக்கிறோம் என உறுதியாக நம்புகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ///நாமெல்லாம் முன் ஜென்மத்தில் ஏதாவது நல்ல விசயத்தை ஒன்றாக சேர்த்து கூட்டாக செய்திருக்கிறோம் என உறுதியாக நம்புகிறேன்...///

      +1

      கூட்டாகச் சேர்ந்து செய்த அந்த நல்ல விசயம் என்னவென்று யாருக்கேனும் ஞாபகம் வந்தால் (!) இங்கே சொல்லுங்களேன் நண்பர்களே?

      Delete
    2. ///கூட்டாகச் சேர்ந்து செய்த அந்த நல்ல விசயம் என்னவென்று யாருக்கேனும் ஞாபகம் வந்தால் (!) இங்கே சொல்லுங்களேன் நண்பர்களே?///

      வேறேன்ன.???

      முன்ஜென்மத்திலும் பல மட்டன்ஸ்டால் ஓணர்களையும் மிலிட்டெரி ஹோட்டல் முதலாளிகளையும் வாழவைத்திருப்போம்.! அவர்களின் ஆசிர்வாதம்தான் இது..!!

      Delete
    3. கூட்டா சேர்ந்ததே நல்ல விசயம் தானே.

      Delete
    4. டெக்ஸ் விஜய் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வார்த்தைகளுமே கருத்தாழம் மிக்க தேர்ந்த மதியூகமான வாசகங்கள்.ஜுனியர் எடிட்டருடைய உள்ளத்திண்மையை பிரதிபலிக்கும் திறன் பெற்றவை.இதழியல் துறையில் தனக்கென ஓர் தனியிடத்தை தகவமைத்து கொள்ள எல்லாம் வல்ல இறைவனின் திருவருள் அமைக.

      Delete
    5. டெக்ஸ் விஜய் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வார்த்தைகளுமே கருத்தாழம் மிக்க தேர்ந்த மதியூகமான வாசகங்கள்.ஜுனியர் எடிட்டருடைய உள்ளத்திண்மையை பிரதிபலிக்கும் திறன் பெற்றவை.இதழியல் துறையில் தனக்கென ஓர் தனியிடத்தை தகவமைத்து கொள்ள எல்லாம் வல்ல இறைவனின் திருவருள் அமைக.

      Delete
  27. இன்று துவங்கும் நெய்வேலி புத்தகத் திருவிழா வெற்றிகரமாக அமைய என் வாழ்த்துகள்!!:

    ReplyDelete
    Replies
    1. Super... என்னுடைய வாழ்த்துக்களும்...

      அங்கே உதவ செல்லும் நம் நண்பர்களுக்கு வணக்கங்களும்...

      Delete
    2. எமது வாழ்த்துக்களும்.

      Delete
  28. வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  29. நவீன யுக பிரதிநிதியான ஜு.எடிட்டரின் கன்னிப்பேட்டி கொணரும் உற்சாக அதிர்வலைகளின் நீட்சி மிகப்பிரம்மாண்டமானது.
    வாழ்த்துக்கள் ஜுனியர் சார்.
    உங்ககிட்டேர்ந்து இன்னும் நெறைய எதிர் பாக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ///உங்ககிட்டேர்ந்து இன்னும் நெறைய எதிர் பாக்கிறோம்///...அப்படிப்போடுங்க நண்பரே...

      Delete
  30. சர்வதேச தரத்தில் வெளிவரும் இக்காலமே பொற்காலம். வாழ்க வளர்க உங்கள் பணி. வாழ்த்துக்கள் விக்ரம்!

    ReplyDelete
  31. நமது பயணத்தின் மீண்டும் ஒரு புதிய சகாப்தத்திற்கான உந்து சக்தி.முன் கூட்டியே நமது வாசகர்களால் புரிதல் பட்ட கருத்துக்களே நேர்காணலில் பதியப்பட்டுள்ளது.ஆனபோதும் இச்சாளரம் சில புதிய பார்வைகளை நம்மீது ஈட்டுத்தரும் வல்லமையுடையது.ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துக்கள்.குங்குமம் வார இதழுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ///இச்சாளரம் சில புதிய பார்வைகளை நம்மீது ஈட்டுத்தரும் வல்லமையுடையது///...👌👌👌👌

      Delete
  32. நமது பயணத்தின் மீண்டும் ஒரு புதிய சகாப்தத்திற்கான உந்து சக்தி.முன் கூட்டியே நமது வாசகர்களால் புரிதல் பட்ட கருத்துக்களே நேர்காணலில் பதியப்பட்டுள்ளது.ஆனபோதும் இச்சாளரம் சில புதிய பார்வைகளை நம்மீது ஈட்டுத்தரும் வல்லமையுடையது.ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துக்கள்.குங்குமம் வார இதழுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  33. மனமார்ந்த வாழ்த்துக்கள் விக்ரம்.
    தாத்தா முத்து
    அப்பா லயன்
    நீங்கள் வெளியிடப்போகும் புதிய
    வெளியீடு என்னவோ???
    ( Note -புதிய)

    ReplyDelete
  34. ஜுன் மாதம் மட்டுமே காமிக்ஸ் தளத்தில் ஏழு பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. வாவ்....
      இன்னும் 11மணிநேரங்கள் பாக்கியுள்ளன நண்பரே...
      எட்டாவது பதிவு எந்நேரமும் வரக்கூடும்...
      லயன் 33வது பிறந்தநாளை, நாளை லயன்300டு கொண்டாடலாம் என்ற இனிய சேதியை சொல்ல கூடும்...

      Delete
  35. ஜுன் மாதம் மட்டுமே காமிக்ஸ் தளத்தில் ஏழு பதிவுகள்.

    ReplyDelete
  36. வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  37. ஜூனியர் எடிட்டர் இன்று முதல் செயல் தலைவர் என அழைக்கப்படுவாராக!

    இது என் கட்டளை! என் கட்டளையே சாசனம்!!

    ஜெய் விக்ரம் அர்விந்த்!!!

    ReplyDelete
    Replies
    1. நம்ம தலீவா் இன்னும் படுக்கையிலே விழலையே!!

      அதுக்குள்ளயும் செயல் தலைவரா???

      ஜூனியா் எடிட்டா் "இளைஞரணி செயலாளராகவே இருக்கட்டும்"!!

      அப்போதான் யூத் புல்ல ஏதாவது காமிக்ஸ் கெடைக்கும்!!

      Delete
    2. ///ஜூனியா் எடிட்டா் "இளைஞரணி செயலாளராகவே இருக்கட்டும்"!!///

      'குழந்தைகள் அணிச் செயலாளராக' அடியேன் பதவி வகித்துவருவதை யாரும் மறந்துடாதீங்க ஆம்ம்ம்மா..! ;)

      Delete
    3. ///ஜூனியா் எடிட்டா் "இளைஞரணி செயலாளராகவே இருக்கட்டும்"!!///

      'குழந்தைகள் அணிச் செயலாளராக' அடியேன் பதவி வகித்துவருவதை யாரும் மறந்துடாதீங்க ஆம்ம்ம்மா..! ;)

      Delete
    4. விஜய் தொப்ளா குட்டிக்கு
      தொட்டில் ஆட்டும்போதே
      அனைவருக்கும் தெரியுமே நீங்கள்தான்
      குஅசெ என்று.

      Delete
  38. அட பரவாயில்லையே...
    நம்ம ஜூனியர் ஆசிரியரா இது..???

    ReplyDelete
    Replies
    1. ///அட பரவாயில்லையே...
      நம்ம ஜூனியர் ஆசிரியரா இது..???//

      ஆமா அவரேஏஏ தான்! நான்தான் சொன்னேன்ல - அவருக்கு என்னிக்காச்சும் ஒருநாள் பேச்சு வந்துடும்னு!
      மாரியாத்தாவுக்கு வேண்டிக்கிட்டது வீண் போகலை! :P

      Delete
    2. ஆமாமாம் ஞியாபகம் வந்துட்டது செயலரே...
      ஜூ.எடி.க்கு பேச்சு வந்தால் உங்கள் கையால் உம்ம சிஷ்யபிள்ளைக்கு நாக்கில் அலகு போடுவதாக நேர்ந்து கொண்டதும் கூட இப்போ நியாபகம் வந்துட்டது... ஆனால் அந்த கம்பு மேட்டரை எப்படி டேக்கிள் செய்வீங்கனு தெரியலயே...

      Delete
    3. அது ஏன்னு கேக்குறேன்??

      அதை வெச்சிதான் பொழச்சிட்டு இருக்கேன்..! அது பொறுக்கலையா சாமி..!!

      Delete
  39. ஜூனியர் எடிட்டர் விக்ரம் கலக்கி விட்டார். ஒரு வழியாக குங்குமத்துக்காவது மவுனம் கலைத்தாரே . இந்த பேட்டியின் மூலமாவது இன்னும் நேரினில் இதுவரை சந்தித்து இருக்காத என் போன்றவர்களுக்கு, உங்கள் மனதினில் உள்ளவைகளைகளையும் , எதிர் கால திட்டகளையும் அறிந்து கொள்ள முடிந்தது . இளம் சிங்கம் ஏற்றகனவே களம் இறங்கியது அறிந்ததே . ஜாமாய்யுங்கள் விக்ரம் .

    ReplyDelete
  40. இப்போதுதான் குங்குமம் இதழை வாங்கிப் பார்த்தேன்! மிக நேர்த்தியாக, தாரளமாக வடிவமைக்கப்பட்டு அசத்துகிறது! நிச்சயம் பலரது கவனிப்புக்கும், வாசிப்புக்கும் உள்ளாகப் போவது உறுதி!
    புத்தகத்தில் பார்க்க விக்ரம் - கம்பீரம் - ஸ்டைலிஷ் - அழகு!

    நமது கிட்ஆர்ட்டின் கண்ணனும், யுவா கண்ணனும் கூட தலை காட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! வாழ்த்துகள் நண்பர்களே! ( "நாங்கள்லாம் 'குங்குமம் புகழ்' கண்ணன்களாக்கும்"னு பெருமையடிச்சுக்கலாம் பாருங்க?!) ;)

    ReplyDelete
    Replies
    1. ///நமது கிட்ஆர்ட்டின் கண்ணனும், யுவா கண்ணனும் கூட தலை காட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! வாழ்த்துகள் நண்பர்களே! ( "நாங்கள்லாம் 'குங்குமம் புகழ்' கண்ணன்களாக்கும்"னு பெருமையடிச்சுக்கலாம் பாருங்க?!) ;) ///

      இப்பவே விசய் டீவில கூப்பிடுறாங்க..!
      பாகுபலி டைரக்டர் ராஜமௌலி சார்ட்ட இருந்துகூட போன் வரலாம்னு எதிர்பார்க்கிறோம். .!

      டைரக்டர் பாலா சார் கூப்பிட்டுடுவாரோன்னுதான் பயம்மா இருக்கு.. (ஏன்னா அவர் படத்துக்கு எனக்கு மேக்கப்பே தேவையில்லை பாருங்க..) :-)

      Delete
    2. ///பாகுபலி டைரக்டர் ராஜமௌலி சார்ட்ட இருந்துகூட போன் வரலாம்னு எதிர்பார்க்கிறோம். ///

      ராஜமெளலி மட்டும் அடுத்ததா ஒரு மியூசிகல் சப்ஜெக்டை கையில் எடுத்தார்னா, எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாவது உங்களை புக் பண்ணாம விடமாட்டாருங்க கண்ணர். படத்துக்கு 'பாட்டுபலி'ன்னு பேர் வைக்கவும் நிறையவே வாய்ப்பிருக்கு!

      Delete
    3. ///படத்துக்கு 'பாட்டுபலி'ன்னு பேர் வைக்கவும் நிறையவே வாய்ப்பிருக்கு!///

      "பாட்டு பலி " ன்னு பிரிச்சி எழுதியிருந்தா பொருத்தமா இருந்திருக்கும்..ஹிஹி..!!

      Delete
    4. ஏற்கனவே வாட்டு பலின்னு கேள்வி.....இப்ப பாட்டுமா..

      Delete
  41. வாழ்த்துக்கள் விக்ரம்...

    ReplyDelete
  42. குங்குமத்திற்க்கு நன்றிகள் பல....
    நானும் இந்த காமிக்ஸ் ஓர் அங்கம்

    ReplyDelete
  43. சார்! புத்தகம் கிளம்பியாச்சா.??

    ReplyDelete
  44. CBF, EBF, TBF, NBFனு எந்த புக் ஃபேருக்குப் போனாலும் இனிமே கோட்-சூட் சகிதம் டிப்பு-டாப்பா போலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். குமுதம், கல்கண்டு, ஆனந்தவிகடன்னு எதுலவேண்ணாலும் திடீர்னு நம்ம தலை தெரிய வாய்ப்பிருக்கு பாருங்க!?!

    கல்யாணத்துக்கு வாங்கின கோட் ஒன்னு ஆணியில இன்னும் தொங்கிக்கிட்டுதான் இருக்கு. எடுத்து ரெண்டு உதறு உதறினோம்னா, மேலே படிஞ்சிருக்கும் நாலு கிலோ தூசும் செவ்விந்திய புகை சமிக்ஞை மாதிரி உயர எழும்பி வானத்துல மறைஞ்சிடும்!
    அப்பால, ஒரு பத்து நிமிஷம் மொட்டைமாடி வெயிலில் போட்டு அதைக் காயவச்சுட்டோம்னா மக்கினாப்ல வர்ற அந்த நெடி - அதாங்க, பழையக் காமிக்ஸைப் புரட்டும்போது வருமே... - அது காணாமப்பூடும்!
    அழகா மடிச்சு பெட்டிக்குள்ள வச்சுட்டு, பெட்டியின் வாயை அப்படியே லேஏஏசா திறந்து புஸ்ஸ்ஸுனு கரப்பான் பூச்சிக்கு மருந்தடிக்கறாப்ல சிங்கப்பூர் சென்டை அடிச்சு படக்குனு மூடிவச்சுட்டோம்னா - கமகமனு ஒரு கோட் ரெடி!

    நாளைக்கு GST வரி அதிகமாகறதுக்குள்ள இன்னிக்கி ராவே அந்த சிங்கப்பூர் சென்ட்டை மட்டும் வாங்கி வச்சுகிட்டேன்னா... முடிஞ்ச்!

    ஒரு கணவான் உருவான கதை! :)



    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் உங்களுக்கு செம்ம தில்லு குருநாயரே..!
      ஆணியில மாட்டிவெச்சி அதைப் பார்த்துகிட்டே இருக்குற மனோதிடம் இருக்கே .., அதெல்லாம் சத்தியமா எனக்கெல்லாம் வரவே வராதுங்க..!!

      Delete
    2. ///அப்படியே லேஏஏசா திறந்து புஸ்ஸ்ஸுனு கரப்பான் பூச்சிக்கு மருந்தடிக்கறாப்ல சிங்கப்பூர் சென்டை அடிச்சு படக்குனு மூடிவச்சுட்டோம்னா - கமகமனு ஒரு கோட் ரெடி! ///

      எதுக்கும் நாலஞ்சி பாச்சா உருண்டைய வாங்கி கோட்டு பாக்கெட்ல போட்டுட்டு வாங்க. .!

      பூரான், பல்லியெல்லாம் செண்ட் வாசத்துக்கு போகாதாமாம். .!

      Delete
    3. ///பூரான், பல்லியெல்லாம் செண்ட் வாசத்துக்கு போகாதாமாம். .///

      அவசியமில்லை! விருப்பப்பட்டால் அவை தொடர்ந்து அங்கேயே தங்கிக்கொள்ளலாம்!

      Delete
    4. விஜய் அந்த கோட் மட்டும் EBFக்கு
      வேண்டாம்.பீதி கலந்த வேண்டுகோள்.

      Delete
    5. @ ganesh kv

      கோட்-சூட்டெல்லாம் போட்டு எங்கே நான் அழஹ்ஹ்கா ஆயிடுவனோன்னு உங்களுக்குப் பொறாமைனு நினைக்கிறேன்! ;)

      Delete
    6. புகை சமிக்ஞ்சை அபாயகட்டத்த தாண்டி போகாம பாத்துக்கங்க..அதிகாரிக எங்கடா புகன்னு வர்றதா காத்து வாக்ல கேள்வி

      Delete
  45. Super j.edi! Thank you so muchch mr.yuvakrishna.

    ReplyDelete
  46. விக்ரம் ஜி உங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன். கலக்குங்க ஜி!

    ReplyDelete
  47. எடிட்டர் சார் பொட்டி கிளம்பிடுச்சா?

    ReplyDelete
  48. 🌷🌷🌷🌷🎉🎉🎉🎉🌹🌹🌹🌹💐💐💐💐🍧🍧🍧🍧🍧🍧இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டூ "லயன்" காமிக்ஸ்.... இன்று போல் என்றும் எப்போதும் பீடு நடைபோட்டு எங்கள் எல்லோரையும் மகிழ்விக்க எல்லாம் வல்ல கடவுள் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்💝💝💝💖💖💖🎉🎉🎉🎉🎉🎆🎆🎆🎆🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎈🎈🎈🎈🎈🎄🎄🎄🎄🍨🍨🍨🍨🍧🍧🍧🍧🍦🍦🍦🍰🍰🍰🍰🍰🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🌷🌷🌷🌷🌷🌷

    ReplyDelete
    Replies
    1. 🌷🌷🌷🌷🎉🎉🎉🎉🌹🌹🌹🌹💐💐💐💐🍧🍧🍧🍧🍧🍧இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டூ "லயன்" காமிக்ஸ்.... இன்று போல் என்றும் எப்போதும் பீடு நடைபோட்டு எங்கள் எல்லோரையும் மகிழ்விக்க எல்லாம் வல்ல கடவுள் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்💝💝💝💖💖💖🎉🎉🎉🎉🎉🎆🎆🎆🎆🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎈🎈🎈🎈🎈🎄🎄🎄🎄🍨🍨🍨🍨🍧🍧🍧🍧🍦🍦🍦🍰🍰🍰🍰🍰🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🌷🌷🌷🌷🌷🌷

      நன்றி: விஜயராகவன்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. லயன் காமிக்ஸிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அன்றும் இன்றும் என்றும் எம்மை மகிழ்விக்கும் காமிக்ஸ்க்கு மென்மேலும் சிறப்படைய எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டுகின்றேன்.
      🎂🎂🎂🎁🎁🎁💐💐💐🌹🌹🌹🎊🎊🎊💝💝💝🎉🎉🎉🎈🎈🎈🎷🎷🎷

      Delete
  49. 🌷🌷🌷🌷🎉🎉🎉🎉🌹🌹🌹🌹💐💐💐💐🍧🍧🍧🍧🍧🍧இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டூ "லயன்" காமிக்ஸ்.... இன்று போல் என்றும் எப்போதும் பீடு நடைபோட்டு எங்கள் எல்லோரையும் மகிழ்விக்க எல்லாம் வல்ல கடவுள் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்💝💝💝💖💖💖🎉🎉🎉🎉🎉🎆🎆🎆🎆🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎈🎈🎈🎈🎈🎄🎄🎄🎄🍨🍨🍨🍨🍧🍧🍧🍧🍦🍦🍦🍰🍰🍰🍰🍰🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🌷🌷🌷🌷🌷🌷

    ReplyDelete
  50. காமிக்ஸ் வாசகர்களின் வாழ்வோடும்,உணர்வோடும் ஒன்றிணைந்த லயன் காமிக்ஸிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  51. லயன் குடும்பத்தினருக்கு இநிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  52. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    எங்கள் லயன் காமிக்ஸுக்கு.
    கேக் எப்போ சார் வரும்.???🌹🌺🌹🌺

    ReplyDelete
  53. புக் ரெடியா???
    யாராவது சொல்லுங்கப்பா???

    ReplyDelete
    Replies
    1. காலை 10 மணிக்கு சிவகாசிக்கு போன் செய்து விசாரித்தேன், நண்பரே! புத்தகம் அடுத்த வாரம்தான் உங்களுக்கு கிடைக்கும் என்று ஒரு பெண் பதில் சொன்னார்.

      Delete
  54. பதுங்கு குழி வாழ்க்கைக்கு காரணம் பிசி பிசி எனும் வழக்கமான பல்லவியை பாடிவிட்டு வெளியே வருகிறேன். அனைவருக்கும் வணக்கம்.

    இந்த பேட்டியின் மூலமாக அமைதியாகவே வலம் வந்துகொண்டிருக்கும் ஜூ.எடிட்டரின் மனவோட்டங்களை அறிந்துகொள்ள முடிந்தது. அவரது ஆர்வம், செயல்பாடு போன்றவை எதிர்காலம் குறித்த நம்பிக்கையூட்டுகின்றன. நம் அன்பும், வாழ்த்துகளும் அவருக்கு!

    நடைபெற்றுக்கொண்டிருப்பது நமது பொற்காலம் என்பதில் சந்தேகமில்லை, இன்னும் 20 ஆண்டுகள் கழித்து இந்த நாட்கள் நினைவுகூரப்பட்டால், அப்போது நாம் இந்நிலையைவிட்டு சற்றே இறங்கிவிட்டதாய் அர்த்தம் தொனிக்கும். ஆகவே பன்னெடுங்காலத்துக்கு அடுத்தடுத்த படிக்கு பொற்காலத்தை ஓட்டிச்செல்லும் பொறுப்பு நம் அனைவரின் கரங்களிலும் இருக்கிறது என்று கூறி என் சிற்றுரையை முடித்து அமர்கிறேன். நன்றி வணக்கம். :)))

    ReplyDelete
    Replies
    1. @ ஆதி

      அப்பப்போ காணாமப் போறதே உங்களுக்கு வேலையாப் போச்சு!

      போவட்டும்! இப்போ இங்கே ஆத்தியது சிற்றுரைன்னாலும் சுறுசுறுன்னு சூப்பராத்தான் இருக்கு!

      அ..அப்புறம்... ரிப்போர்ட்டர் ஜானி கதையை மொழிபெயர்த்தது நீங்கதானே? யாருமே கண்டுபிடிக்கமுடியாதபடிக்கு எடிட்டர்தான் க்ளூ கொடுத்தார்! :)

      Delete
    2. @ஈவி,

      கமெண்டுகளை படிக்கிறதில்லை எனினும், பதிவுகளை தவறவிடாமல் படித்துக்கொண்டுதானே இருக்கிறேன். அந்த க்ளூ பதிவையும் கண்டேன்.
      அது யார்னு என்னாலேயே கண்டுபிடிக்க முடியலைன்னா பாத்துக்குங்களேன். :-))))))))))))))

      Delete
    3. ///அது யார்னு என்னாலேயே கண்டுபிடிக்க முடியலைன்னா பாத்துக்குங்களேன். :-)))))))))))))///

      ஒண்ணும் பிரச்சனையில்ல சார். சரி பண்ணிடலாம்.

      என்ன பண்றீங்கன்னா நாளைக்கு வல்லாரை சூப் வச்சி சாப்பிடுங்க.
      'இல்ல தம்பி நாளைக்கு சண்டே'னு ஃபீல் பண்ணீங்கன்னா நல்ல நாரை சூப் வச்சு சாப்பிடுங்க. அவ்வளவுதான்.

      Delete
    4. வல்லாரை, நல்லநாரை.. எங்கியோ இடிக்குதே.. ஈவி, இதில் ஏதும் உள்குத்து இருக்குதா? பெருமாள் சார், நம்ம பதுங்குகுழிக்காரரா? எதிர்க்குழிக்காரரா? ஐடண்டிடி கன்பர்ம் செய்யவும். :-))

      Delete
    5. எண்ட ஆதார் கார்டு ஐடி கார்டு ஆகலாம் சாரே.
      பச்சே
      எண்ட ஐடி கார்டு ஆதார் கார்டு ஆகாது சாரே.

      Delete
    6. @பெருமாள்,

      இந்தாமேரி அரிய தத்துவம்லாம் எங்க குழிக்காரர்களுக்குதான் தோணும். ஐடண்டிடி கர்பர்ம்டு. அடுத்தவாட்டி பாக்கசொல்லோ முளகாபஜ்ஜி வாங்கித்தந்துவிடவும்! :-)))

      Delete
    7. ///இந்தாமேரி அரிய தத்துவம்லாம் எங்க குழிக்காரர்களுக்குதான் தோணும். ஐடண்டிடி கர்பர்ம்டு. அடுத்தவாட்டி பாக்கசொல்லோ முளகாபஜ்ஜி வாங்கித்தந்துவிடவும்.///

      எங்கேயோ கேட்ட குரலா இருக்கே..!! ம்ம்ம்ம். . . இந்த நாடா நமக்கு நல்லா பழக்கப்பட்ட நாடா மாதிரி தெரியுதே..!!?!

      Delete
  55. அருமை..கலக்குங்க...விக்ரம் அப்டியே அந்த ஸ்பைடர ....

    ReplyDelete
    Replies
    1. ஸ்டீஈஈஈல்!!!

      உங்க இஸ்பைடர் புராணத்தை ஜூனியர்கிட்டேயும் பாடணுமா?!! "நான் காமிக்ஸுக்கே வரலை. என்னை ஆளை விடுங்க சாமி"ன்னு அடுத்தவாரமே குமுதத்தில் பேட்டி கொடுக்கறாப்ல பண்ணீடாதீங்க! :D

      Delete
    2. ஈ.வி உண்மைய கொஞ்சம் மெதுவா சொல்லலாமே!!!.காதுக்குள்ளாற ஒரே இரைச்சல்.

      Delete
    3. ஈ.வி உண்மைய கொஞ்சம் மெதுவா சொல்லலாமே!!!.காதுக்குள்ளாற ஒரே இரைச்சல்.

      Delete
  56. சார் புத்தகம் எங்கே சார்... புத்தகம் தாமதம் குறித்து கூட தகவல் இல்லையே சார்...

    ReplyDelete
  57. நண்பர்களே GST வடை...சாரி ...வரி பிரச்சனையாலதான் இந்த மாத புத்தகங்கள் தாமதமாம்.அடுத்த வெள்ளிக்கிழமைதான் பார்சல்.நம்ப தகுந்த தகவல்களை சொன்னது பிரகாஷ் பப்ளிசர்ஸ் நிறுவனம்.

    ReplyDelete
    Replies
    1. ஹூம்... இப்படியே போச்சுனா 'சந்தாவுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்'னு கவர்ன்மெண்ட்லேர்ந்து அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யப்படறதுக்கில்லே!! ;)

      Delete
    2. ஹா ஹா ஹா ஹா....!

      Delete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. அருமையான பேட்டி,வாழ்த்துக்கள்

    ReplyDelete