Saturday, April 04, 2015

ரொம்பவே புதுசும்...ரொம்பவே பழசும்...!

நண்பர்களே,

வணக்கம். வழக்கமாய் நானொரு பதிவிட, நீங்கள் பின்னூட்டங்களோடு  தொடர்வது மாமூல் ! இன்றைக்கு மட்டும் நடைமுறையை மாற்றிக் கொள்வோமே - உங்கள் பின்னூட்டங்கள் முந்திக் கொள்ள  - புதிய பதிவோடு இந்த இடத்தை நாளைக்கு நான் நிரப்பிடுகிறேனே ?! நேற்று வெகு சீக்கிரமே சகல சந்தாப் பிரதிகளையும் கூரியர்களிடம் ஒப்படைத்து விட்டதால் இன்று உங்கள் வீட்டுக் கதவுகளை டெலிவரி தோழர்கள் தட்டிட வேண்டும் ! ரொம்பவே புதுசும்...ரொம்பவே பழசும் இணைந்த இம்மாத இதழ்களின் package பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை தவறாது இங்கே பதியலாமே ?! கடந்த பதிவின் நெரிசலில் புது இதழ்கள் காணாது போய் விட வேண்டாமே என்ற அவாவில் இந்த quickie பதிவு ! !  Happy reading...catch you tomorrow ! 


119 comments:

  1. Replies
    1. வரவு நல்வரவு ஆகட்டும்!

      Delete
  2. Replies
    1. புதிய இதழ்களை பற்றிய விமர்சனமா...!? என் வீட்டுக் கதவை தட்டிய பின் தான் எழுதவே வேண்டுமெனில், 20 நாட்களுக்கு பின்வரும் என் விமர்சனம் ஆறின பழைய கஞ்சியாகிப் போய்விட்டிருக்கும்.

      எப்படியோ...நண்பர்களே start the Music.

      Delete
    2. ஆறி போன பிரியாணியும் நன்றாக இருக்கும்
      நீங்க கலக்குங்க தோழரே

      Delete
  3. M.M yeppa air delivery. I am going to Bangalore. Plan for house trip that day.

    ReplyDelete
  4. விஜயன் சார் புத்தகங்கள் கிடைத்தாயிற்று

    லார்கோ நேரில் அசத்துகிறார்

    மிக்க நன்றி சார் :))

    ReplyDelete
    Replies
    1. எடிட்டரின் இந்த மிகப்பெரிய்ய்ய பதிவைப் பற்றித் தகவல் தந்ததற்கு நன்றி சிபி அவர்களே! (கிர்ர்ர்ர்...)

      Delete
  5. வெய்ட்டீங் ....ஃபார் குரியர்

    ReplyDelete
    Replies
    1. (தலை)வரே நீங்களுமா இப்படி ?

      Delete
  6. Replies
    1. ரஃபீக் உங்களுக்கும் வடை வர்லியா ?. அப்பாடி துணைக்கு ஆள் இருக்கு....

      Delete
    2. +1 எனக்கும் ரண்டு ஆளிருக்கு

      Delete
    3. Rafiq Raja & Friends : உங்கள் ஏரியாவின் டெலிவரி தோழர்களும் காமிக்ஸ் ரசிகர்களாக இல்லாதவரை தேவலை !! நேற்றைக்குக் காலையிலேயே அத்தனை சந்தாப் பிரதிகளையும் ஒப்படைத்து விட்டோமே !!

      Delete
  7. புத்தகங்கள் வந்து விட்டது

    ReplyDelete
  8. வந்துட்டானே அவன் சைக்கிள்ல ......
    தந்துட்டானே புத்தக பார்சல ........ ..

    ReplyDelete
    Replies
    1. என்ன பாட்டு எல்லாம் ஜாஸ்தியா இருக்கு!

      Delete
    2. (தலை)வரே இன்னேரம் நீங்கள் புக்ஸ் வாங்கி படிச்சிருப்பீங்கன்னு நெனைச்சேனே

      Delete
  9. புத்தகங்கள் வந்து விட்டது

    ReplyDelete
  10. Vijayan Sir,
    Got Rip kirby [ prize] book in excellent condition yesterday. Felt very happy to find your autograph inside. Thank you very much.
    Friends: to view the cover scans of that book ,please visit http://maayapuri.blogspot.in .

    ReplyDelete
  11. அனைவருக்கும் வணக்கம். இது புதுசு கண்ணா புதுசு. எடிட்டர் தினுசு தினுசா யோசிக்கிறாரு

    ReplyDelete
  12. மதிய வணக்கங்கள் நண்பர்களே,

    'டாலர் ராஜ்யம்!' படித்துக்கொண்டிருக்கிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. படிச்சுட்டு கதை சொல்லுங்க
      நாங்கள்ளாம் பாவம்யா

      Delete
  13. எடி சார் & நண்பர்களே மதிய வணக்கம்.
    எனக்கு இன்னும் வடை வரலை.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே,கூரியர்பாய்க்கு தீபாவளி,பொங்கலுக்கு மொய்முறை செய்தேன் இப்போது காலையிலே கிடைத்துவிடுகிறது.

      Delete
  14. திடீரென்று பதிவிடும் தேதியை மாற்றினால் எப்படி எடி சார்

    ReplyDelete
  15. Received books
    Waiting for மின்னும் மரணம்
    16 days to go.....

    ReplyDelete
    Replies
    1. கவுண்ட் டவுன் ஸ்டாட்ஸ்....

      Delete
  16. நண்பர்களே வணக்கம் .
    காமிக்ஸ் என்ற ஒரு ஒற்றை மந்திரச்சொல்லில் கட்டடுண்ட நம்மை அதையும் தாண்டி நட்பு எனும் அனுசரனை அதிகம் ஈர்த்துள்ளது என்பது திண்ணம்.
    உடல் நலம் சரியில்லை என்பதை நண்பர் நாகராஜ் எப்படியோ அறிந்து கொள்ள காட்டு தீ போல பரவி அதை தொடர்ந்த நண்பர்களின் அலைபேசி அலைப்பு ஓயாது அழைக்க ஆரம்பித்தது .
    நண்பர்கள் நேரடியாக மருத்துவமனைக்கும் பின்னர் வீட்டிற்கும் தொடர் படையெடுப்புடன் வ்ந்திருந்து அனுசரணையான விசாரிப்பு மற்றும் கூட்டு பிராத்தனை, அதுமட்டுமல்லாமல் இங்கு லயன் ப்ளாக்கில் நண்பர்களின் வேண்டுதல்கள் அலைபேசி விசாரிப்பு ஆகியவை என என்னை இன்று வெகுவாகவே குணப்படுத்திவிட்டது . இப்படிப்பட்ட் நண்பர்கள் கிடைக்க என்ன தவம் செய்தேன் என்பது மட்டும் தெரியவில்லை .

    சிரம்தாழ்த வணக்கத்துடன் நன்றி நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பாதிப்படைந்திருந்தால் தானே சார்...குணமடைவதற்கு..! விடுப்பட்ட விஷயங்களை நினைவுபடுத்தும் வாய்ப்பாக தோன்றுகிறது இந்தநலக்குறைவு என உங்கள் இரும்பு மனம் நினைப்பதாக சொன்ன நியாபகம்..! :-)

      நான் இந்த தளத்திற்கு அறிமுகமாகி சில மாதங்களே ஆகியிருப்பினும், உங்கள் வருகையை (கமெண்டை) இப்பொழுதுதான் பார்க்கிறேன். நீண்டகால இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்..
      சர்வாதிகாரி அவர்களே..!

      அநேகமாக 'லார்கோ வின்ச்' கைக்கு வந்திருப்பார். அவரை சந்தித்துவிட்டு, சந்தித்த அதே உற்சாகத்தோடு இனி வருகையை விடாமல் தொடருங்கள் பார்ப்போம்..!

      Delete
    2. வெல்கம் பேக் ஸ்டாலின் ஜி! :)

      //நண்பர்களே வணக்கம் .
      காமிக்ஸ் என்ற ஒரு ஒற்றை மந்திரச்சொல்லில் கட்டடுண்ட நம்மை அதையும் தாண்டி நட்பு எனும் அனுசரனை அதிகம் ஈர்த்துள்ளது என்பது திண்ணம். ///

      என்ன எடிட்டர் மாதிரியே எழுத ஆரம்பிச்சுட்டீங்க?! ;)

      ஹம்ம்... 'என்னிடமுள்ள மொத்தக் காமிக்ஸ் கையிருப்பும் (கரையான்கள் நீங்கலாக) என் கலை வாரிசான ஈரோடு விஜய்க்கே'னு ஒரு ஸ்டாம்ப் பேப்பரில் அவசர அவசரமா எழுதி எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்தேன் . ICUல நீங்க தெம்பா பெளன்ஸர் படிச்சுட்டிருக்கறதைக் கேள்விப்பட்டவுடன் குபுக்னு அழுகை வந்திடுச்சு எனக்கு! கொண்டுவந்த பேப்பரைக் கிழிச்சு வீசிட்டு சோகமா வெளியேறிட்டேன்! :D

      Delete
    3. இனி அவர் விட்டதை (இங்கு வருவதை)தொடரப்போவதால் மீண்டும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிட்ட போவதில்லை என்பது நினைக்கும்போது...இத்தாலி மியாவ் அவர்களே...பேப்பரை கிழித்து விட்டு ஜன்னல் வழியாக எகிறி குதித்து, காம்பவுண்ட் சுவர் மீது குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டுப்பதை பார்த்தால், செம காமெடியாக உள்ளது..ஹாஹா..! :D (இதுக்கு பேர் தான் பகற்கனவோ..)

      Delete
    4. Erode M.STALIN : சில சமயங்களில் நட்பின் வெளிப்பாடுகளை ஆழமாய்ப் பதிவிடும் பொருட்டே கூட கடவுள் சிரமங்களைத் (தற்காலிகமாய்த்) தருவார் போலும் ! நலமாய் ; ஆரோக்கியமாய் தொடர நானும் இணைந்து கொள்கிறேன் நண்பர்களின் வேண்டுதல்களோடு !

      ICU -வில் பௌன்சர் ! இது ஆனாலும் ஓவரோ ஓவர் சார் !

      Delete
    5. வெல்கம் பேக் ஸ்டாலின் சார் . உடல் நலம் தேறி தாங்கள் இங்கே வருகை புரிந்தது கண்டு மகிழ்ச்சி . இனிமேலும் விடிய விடிய கம்பியூட்டர் ல டீ ஆத்தாமல் , 11 மணிக்கு டான்னு கடைய சாத்துங்க சார் .

      Delete
    6. ஈரோடு ஸ்டாலின் அவர்கள் நலமுடன் திரும்பியதறகு கடவுளுக்கு நன்றி

      Delete
    7. //வெல்கம் பேக் ஸ்டாலின் சார் . உடல் நலம் தேறி தாங்கள் இங்கே வருகை புரிந்தது கண்டு மகிழ்ச்சி . இனிமேலும் விடிய விடிய கம்பியூட்டர் ல டீ ஆத்தாமல் , 11 மணிக்கு டான்னு கடைய சாத்துங்க சார் //

      +100

      Delete
    8. ஸ்டாலின் சார்க்கு ரெண்டு லக்கி லூக், சிக் பில், ரின் டின் கேன், பார்சல்...

      Delete
    9. மீண்டு(ம்) வந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்டாலின்-ஜி.

      Delete
  17. புத்தகங்கள் கிடைத்தது, லார்கோ அருமையான அச்சு தரம், மாயாவி பின் அட்டை கர்ண கொடூரம், spider முகத்தில் மாயாவியை பார்த்தது போல் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Mahesh : ஸ்பைடரில் மாயாவியையும் பார்த்திட முடிந்தால் நியாயப்படி சந்தோஷப்பட வேண்டுமல்லவா ? :-)

      Delete
    2. அதெல்லாம்கூட பரவாயில்லை சார்! ஆனா, டைகர் முகத்துல டெக்ஸைக் காட்டுறேன்னு கிளம்பிடாதீங்க. இநதப் பிஞ்சு நெஞ்சு 'புசுக்'னு வெடிச்சு சிதறிடும்! :)

      Delete
    3. @Erode Vijay
      அந்த டைகர் புள்ள என்ன பாவம் பன்னுச்சி 😂
      இந்த வெரட்டு வெரட்டுரீங்க

      Delete
    4. சொலவடை : பழுத்த பழந்தே கல்லடிபடும்..!

      Delete
    5. Mahesh @
      // spider முகத்தில் மாயாவியை பார்த்தது போல் உள்ளது.//
      இத பார்க்க உங்களுக்கு கொடுத்துவைத்து இருக்கு! நான் இன்னும் எத்தனை நாள் காத்துகொண்டு இருக்கனுமோ :-) ஹும் நமக்கு கொடுத்துவைக்கவில்லை!

      Delete
  18. கொள்ளைக்கார மாயாவி !..

    முதன் முதல் படிப்பதால் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை ..படங்கள் தெளிவாக உள்ளன .
    இரும்பு கையின் வழக்கமான சக்திகள் (மறைவது தவிர )இல்லாமல் வித்தியாசமாக இருந்தது ..

    ஆனால் சிறையில் ஒரு முகமூடி கொள்ளையன் காவலாளியால் சுட பட்ட பின்னும் மறுபடியும் 4பேர் வந்த மாயமென்ன ?
    மாயாவி வேறு ஒருவனை சுடுகிறார் ....

    கதை ஜாலியாக போகிறது ...

    ReplyDelete
    Replies
    1. selvam abirami : ஜாலியாகப் போகிறது என்றான பிறகு அங்கே லாஜிக் தேடுவதெல்லாம் டூ மச் சார் ! ஹி..ஹி..

      Delete
  19. டாலர் ராஜ்யம் லார்கோவின் ராஜ்யத்தில் முதலாவது (கடைசியில் இருந்து) இடத்தை பிடிக்கும் என்பதில் எந்த ஐயம்மும் இல்லை!!! ஏதோ வணிகவியல் வகுப்பிற்கு போனது போல் இருந்தது... சாரி தல!!!!

    ReplyDelete
    Replies
    1. balaji ramnath : லார்கோவின் கதைகளின் பின்னணியே அந்த பிசுனஸ் சிக்கல்கள் தானே சார் ; கான்க்ரீட் கானகம் நியூயார்க்கை விடவுமா ஒரு இடியாப்ப plot இருந்திட முடியும் ?

      எனக்கு "டா.ரா." ரொம்பவே ரசிக்க முடிந்தது ; அது மட்டுமன்றி - லார்கோவின் கதைத்தொடரின் print run -ல் இரண்டாம் இடத்தில் நிற்கும் சாகசம் இது ! ஆச்சர்யமே - உங்களுக்குப் பிடிக்காது போனது ! மீண்டுமொருமுறை ஒரு இடைவெளிக்குப் பின்னே படிக்க முயற்சித்துப் பாருங்களேன் !

      Delete
    2. ஹ்ம்ம். ஓகே தல !!! கோடைமலர் டெக்ஷை தராமல் போங்கு ஆட்டம் ஆடரிங்கலே இது நியமாரே?!!!

      Delete
    3. Business angle makes it very interesting, and what they show in the book is very close to reality so we can even a learn a thing or two ☺

      Delete
  20. எடிட்டர் சார்,

    நண்பர் பாலாஜி சொன்னமாதிரி 'கோடை மலர்'னு பெயர் தாங்கி ஒரு குண்டுபுக் வந்து வருஷம் பல ஆச்சுதுங்களே... ரொம்ப குண்டா இல்லேன்னாலும் கொஞ்சம் பூசினாப்லயாவது ஏதாச்சும் கோடைமலர் வர வாய்ப்பிருக்கா சார்? நீங்க நினைச்சா முடியும் சார்...

    ReplyDelete
    Replies
    1. கோடைமலர் நிச்சயமாக உண்டு விஜய் . ஐ ஆம் கான்ஃபிடன்ஸ் , மே மாதம் வர வேண்டிய லார்கோ இம்மாதமே வர்லியா ?. அதுமாதிரி ஜூன் ல வர வேண்டிய தலை (லயன் 250) மேவுலியே வந்தால் கோடைமலர் ஆகிட்டு போறாரு ......நாராயண நாராயண .. ..

      Delete
    2. Erode VIJAY : கொஞ்சம் பூசினாப்லதா ? ; ஏன், கொழு கொழு கோடைமலரே வர வாய்ப்பெல்லாம் அமோகமாய் இருக்கு ! இப்போது தான் கோடை அக்டோபர் வரைக்கும் தாக்கித் தள்ளுதே !

      So 'தல' தில்லா வரவிருக்கும் சூப்பர் ஸ்பெஷல் இதழினையே (ஜூன் மாத்ததுக்) கோடை மலராகப் பாவிப்பீராக ! அப்புறம் உங்க நாட்டிலெலாம் ஆகஸ்ட் தானே சம்மர் ?!

      Delete
    3. டெக்ஸ் மே யில் வருவார் என்று புறா பட்சி சொல்லுது

      டெக்ஸ் விஜயராகவன் சார்
      விஜயன் சார உங்க இரும்பு பிடியால இன்னும் கொஞ்சம் நெருக்குங்க

      குண்டுபுக் தண்ணப்போல வந்திடும்

      Delete
    4. இரும்பு பிடியெல்லாம் பெரிய வார்த்தை ஜெயசேகர் சார் . அன்பு வலையே ஆசிரியர் சாருக்கு போதுமானது . என்ன எல்லோரும் சேர்ந்து அந்த வலைய பிடிக்கனும் .

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  21. எனக்கும் புத்தகங்கள் கிடைத்துவிட்டது..அட்டைபடங்களை ரசித்துக்கெண்டுஇருக்கின்றேன்..

    ReplyDelete
    Replies
    1. Madipakkam Venkateswaran : அட..கதைக்குள்ளும் புகுந்திடுங்க சார்!

      Delete
  22. ஹைய்யா! எனக்கும் புக்கு வந்துடுச்சு!! :)

    ReplyDelete
  23. I will receive after 20 days :)
    Just finished tiger வேங்கைக்கூ முடிவுரையா
    What a come back for tiger after few disaster titles in between, thoroughly enjoyed it.
    Loved the tiger mass introduction, no military just plain and simple masala story.

    ReplyDelete
  24. @editor,
    Waiting for reporter Johnny, when his next sir?

    ReplyDelete
    Replies
    1. V Karthikeyan : A fair distance away....November'15 !

      Delete
    2. Novemberra, already looking forward to november

      Delete

  25. டாலர் ராஜ்யம்..! முதல் பாகம் விமர்சனம்..!

    புகைவண்டி போல விடாமல் சிகரெட் புகைவிட்டே பரலோகம் போய் சேர்ந்தவர்களில் ஒருவன் மனைவி "அதெப்படிங்க சிகரெட் குடிச்சா சின்ன சாவு வயசுல வரும் ? இத நான் ஒத்துக்க மாட்டேன், வித்தா வாங்கி குடிக்காத்தான் செய்வாங்க..! சாவு சீக்கிரமா வருன்னு கம்பெனிகாரங்க சொல்லாதது பெரிய தப்பு. அந்த எச்சரிக்கை பாத்திருந்தா என்னோட வீட்டுகாரர் சிகரெட் குடிச்சிருக்கவே மாட்டாருங்க" ன்னு வாதாடி சிகரெட் கம்பெனிகாரங்க கிட்ட பெரிய நஷ்டஈடு (ஒரு வில்லங்கமான வக்கீல் மூலமா) வாங்கினா ஒருத்திங்கிற தகவல் வித்தியாசமா இருக்கில்லே..!

    "ஈரமானதை உலர்த்தக்கூட எங்க மைக்ரோ ஓவன் உபயோகிக்கலாம்ன்னு செஞ்ச விளம்பரத்தை பார்த்துதான் என்னோட கட்சிக்காரர், ஈரமான தன்னோட பூனையை உலர்த்த முற்பட்டார். ஆசையாசையா வளர்த்த பூனை செத்துடுச்சி...மேனுவல் புக்குல இதுபத்தி குறிப்பு இருந்திருந்தா இந்த இழப்பு என்னோட கட்சிகாரருக்கு ஏற்ப்பட்டிருக்காது" ன்னு வில்லங்கமா வாதாடி அஞ்சி மில்லியன் டாலர் வாங்கிகொடுத்த வக்கீல், ஒரு மேனேஜர் தற்கொலை செஞ்சிகிட்டதுக்காக நம்ம லார்கோ மேல 50 லட்சம் டாலர் கேட்டு கேஸ்போடுறார்.

    நாகப்பன்-புகழேந்தி, சோமவள்ளியப்பன் துவங்கி ஷேர் மார்கெட் சிங்கம் 'வாரன் பட்' வரை ஷேர் மார்கெட்டிங் பற்றி அலசும் என்னை போன்றவர்களிடம் லார்கோ கதை எப்போதுமே கைதட்டல் வாங்கும். இந்த கதைக்கும் கைத்தட்டல் அள்ளுகிறது..! பணம் பண்ண 'வால்ஸ்ட்ரீட்' கிரிமினல் கில்லாடிகள் கையாலும் புதுபுது யுக்திகள், கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸ், யூகிக்கவே முடியாத திருப்பம் ( லார்கோ கைது..ஹீ..ஹீ ) என முதல் பாகம் அட்டகாசம். விறுவிறுப்புக்கு பஞ்சமேயில்லை, இரண்டாம் பாகம் நாளைக்கு படிக்க போகிறேன். காரணம்....

    முதல் பாகம் வெளியிட்டு இரண்டு மாதங்கள் இடைவெளிவிட்டே அடுத்த பாகம் வந்ததால், அவர்களுக்கு அந்த இடைவெளி தந்த ஆர்வத்தை நானும் அனுபவித்து பார்க்க, நானும் ஆர்வத்தை அடக்கிக்கொண்டு மறுநாளுக்காக காத்திருக்கிறேன்..!

    அந்த வக்கீல் மேட்டர் சீரியசுக்கு சொன்னாங்களோ, காமெடிக்கு சொன்னங்களோ...
    இரண்டுக்கும் என்னோட பதில்: "நாங்க கொடுத்த வாக்குபடி ஈரமா இருந்த பூனை உலர்ந்திடிச்சில்ல, மத்தபடி எங்க ஓவன் உயிர்கொடுக்கும், எடுக்கும்ன்னு நாங்க சொல்லலையே..! வேணுன்னா உங்க தலையை வெச்சு முடியை கூட உலர்த்திபாக்கலாம், கண்டிப்பா ஈரப்பசை இருக்காது. ஆனா முடி அதுக்கப்புறம் அதிக வளர்றதோ,வளராம போறதோ உங்க அதிஷ்டம்...ஹாஹா...!"

    ReplyDelete
    Replies
    1. திருத்தம்: சாவு சின்ன வயசுல...
      சேர்த்தல்: இதுக்கப்புறம் தான் 'புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது' என்ற வாசகம் பிரசுரிக்கபட்டது.
      வேண்டுகோள்: கேப்டன் டைகர் 'டீசர்' ல் புகைபிடிப்பது போன்ற படத்துடன் வருவதை தவிர்க்கவும்.

      Delete
    2. //முதல் பாகம் வெளியிட்டு இரண்டு மாதங்கள் இடைவெளிவிட்டே அடுத்த பாகம் வந்ததால், அவர்களுக்கு அந்த இடைவெளி தந்த ஆர்வத்தை நானும் அனுபவித்து பார்க்க, நானும் ஆர்வத்தை அடக்கிக்கொண்டு மறுநாளுக்காக காத்திருக்கிறேன்..! ///

      பாருங்க மக்களே... எப்படியெல்லாம் பில்ட்அப் கொடுக்கறாங்கன்னு!!!

      ஏங்க மாயாவி... அடுப்புக்குள்ள வைக்க உங்களுக்கு பூனையேஏஏ தான் வேணுமா? இந்த வெட்டுக்கிளி, புறா - இப்படி ஏதாவது...

      Delete
    3. மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன்... வாசகர் கடிதம் பக்கத்தில் வந்திருப்பது உங்கள் கடிதமா..?

      Delete
    4. ஹலோ..இத்தாலி விஜய் அவர்களே,

      நீங்கள் இந்த கேள்வியை காதாசிரியர் 'ஷான் வான் ஹாமே' இடம் தான் கேக்கணும்...ஏன்னா டாலர் ராஜ்யம் படிங்க புரியும், போனோல்லி ஆபிஸ்ல இருந்து நீங்க கேட்ட பதில் வரும். அவரு இது என்னோட ஸ்கிரிப்டு இல்லன்னு சொல்லிட்டருன்னா, வேறு வழியில்லை சிங்க(அங்க அல்லசரிதானே )முத்து வாத்தியாரை ஒரு பிராண்டு பிராண்டிடலாம்...! :-)))

      Delete
    5. பிராண்டியே ஆகனும்
      ( கவனிக்க சரக்கு பிராண்டி அல்ல.)

      Delete
  26. Replies
    1. R.Anbu : உங்கள் அபிப்பிராயங்களை பகிர்ந்து கொள்ளலாமே !

      Delete
  27. புக்குஸ் ரிசீவ்வுடு

    சமீப காலமாகதான் என் பசங்களுக்கு காமிக்ஸ்ஷ மாசா மாசம் ஊட்டிட்டு வந்திட்டிருக்கேன்

    நிரம்ப ஆர்வமா படிச்சிட்டிருக்கிற பசங்கள்ட்ட
    நீங்க மாயாவிய இந்த மாதிரிலாம் போட்டோ போட்டு மிரட்டினா பசங்கள் எப்படி படிப்பாங்கள்

    கொலவெறிய மிரட்டுறீங்க

    ReplyDelete
  28. அன்புள்ள எடி அவர்களுக்கு,

    வெகு நீண்ட காலம் கழித்து இந்த சிறு பின்னூட்டம். இது ஒரு புது விவாதத்துக்கு ஒரு ஆரம்பமாக கூட அமையலாம்.

    எனது மனதில் சில காலமாக தோன்றி வந்த எண்ணம் இது. அதாவது brand value என்பது கூடுதலாக ஆகும் பொழுது, customer friendly என்ற கோட்பாடு உடைத்தெறியப்படும் என்பது தங்களது பதிப்பகத்துக்கும் பொருந்திவிடுமொ என்ற ஐயம் என்னுள்.

    Easy to reach என்பதாலோ, வாசகர்களுக்கு கிடைத்திடும் extra space என்ற இந்த தளத்தினை நான் பயன்படுத்தவில்லை.

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. நமது ஆசிரியரோட இந்த புதிய பதிவ பார்கையில் மி.ம. சொன்ன தேதியில் நமது கைக்கு கிடைத்துவிடும் போல் தெரிகிறது, நமது ஆசிரியரும் அது சார்ந்த ஒரு உற்சாக பதிவ நாளை போடுவார் என ஆவலுடன் இருக்கிறேன்!

    ReplyDelete
  32. டா.ரா.வழக்கம் போல்,ஓவியம்,விறுவிறுப்பு,அழகு பெண்களின் அணிவகுப்பு என்றுஅசத்தலாக இருந்தது.நெரியோவன்ச்சும் இரண்டு பக்கங்கள் வந்தாலும் முத்திரை பதித்தார்.கார்சனின் கடந்த காலம் போல் நெரியோவின் கடந்த காலம் வந்தால் நன்றாக இருக்கும்.முடிவு என்கு ரெம்போபிடித்தது.எங்க வீட்டு பிள்ளை படம் போல் எல்லா கதாபாத்ரங்களும் சந்தோஷமாக சுபமாக கதையை முடித்தவிதம்.

    ReplyDelete
  33. எனது தந்தையின் ம்றைவிற்கு பின் ஒன்ற்ரை வருடங்களுக்கு பிறகு இன்றுதான் நமது பிளாக்கில் எழுத ஆரம்பித்துள்ளேன். அதற்கு மாயாவியின் கை பக்குவ கதைக்கும் ஒரு நன்றி சொல்லியே தீரவேண்டும்

    விஜைய் அந்த கரயாண் புத்தகங்கள் மட்டும் இப்பொழுதைக்கு உங்கள் பெயரில் எழுதி வைத்துவிட்டேன் அதற்கு பிரதியுபகாரமாக உங்கள் காமிக்ஸின் அசையும் மற்றும் அசயா சொத்துக்களை எனக்கு தறுவதாக சொன்ன உங்களுக்கு கோடி நன்றிகள்

    //ICU -வில் பௌன்சர் ! இது ஆனாலும் ஓவரோ ஓவர் சார் ! //

    ICU வில் மூன்று நாட்கள் இருக்க போகிறேன் என்று அறிந்தவுடன் எனது துணைவியார் வீட்டுக்கு சென்று எனக்கு துணிகளுட்ன் சேர்த்து 7 காமிக்ஸ் புத்தகத்தையும் கொண்டுவந்தார் . என்னை உள்ளே அனுமதிக்காவிட்ட்டாலும் பரவாயில்லை இந்த புத்தகத்தை அவரிடம் ஒப்படைத்து விடுங்கள் என அந்த காமிக்ஸை எனக்கு உள்ளே அனுப்பிவைத்து துன்பத்தில் இன்பம் காணட்டும் என்று என்னை கேட்காமலே உற்சாக படுத்தி ஊக்குவித்தவர் எனது பெஸ்ட் ஆப் ( அந்த காமிக்ஸை காண்பித்து நர்ஸுக்கு கதை சொன்னது வேறு பெறிய கதை)

    ReplyDelete
    Replies
    1. பன்னெடுங்காலத்திற்கு பிறகு., ப்ளாக்கில் பங்கெடுத்து கொண்ட மக்களின் அட்மின் ஈரோடு ஸ்டாலின் அவர்களை ப்ளாக்கின் அப்பரசெண்டிகள் சார்பாக வருக வருக என வரவேற்க்கிறேன்..

      // ( அந்த காமிக்ஸை காண்பித்து நர்ஸுக்கு கதை சொன்னது வேறு பெறிய கதை).//

      நர்சுக்கு சொல்ல நல்ல கதையா தேர்த்தெடுத்தீங்க போங்க.!!! :)

      Delete
    2. // என்னை உள்ளே அனுமதிக்காவிட்ட்டாலும் பரவாயில்லை இந்த புத்தகத்தை அவரிடம் ஒப்படைத்து விடுங்கள் என அந்த காமிக்ஸை எனக்கு உள்ளே அனுப்பிவைத்து துன்பத்தில் இன்பம் காணட்டும் என்று என்னை கேட்காமலே உற்சாக படுத்தி ஊக்குவித்தவர் எனது பெஸ்ட் ஆப் ( அந்த காமிக்ஸை காண்பித்து நர்ஸுக்கு கதை சொன்னது வேறு பெறிய கதை) //
      உங்கள் மனைவிக்கு தெரிந்து இருக்கிறது, ஏது உங்களை விரைவாக குணபடுத்தும் என்று; உங்களை சரியாக புரிந்து வைத்துஉள்ளார்! நீங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர் ஸ்டாலின்!

      Delete
    3. தானே வந்த தானை தலைவர் வாழ்க... வாழ்க!!!

      Delete
  34. ----
    சார் நீங்க லைப்ரரி நடத்துறீங்களா ?
    இல்லையே..
    இல்ல.. நானே மூணு மாசமா இந்த காமிக்ஸ் புத்தகம் டெலிவரி பண்றேன்.
    சந்தா கட்டியிருக்கேன்.. அதனால மாதம் ஒரு முறை புத்தகம் வரும்
    ------
    இது ப்ரொபஷனல் குரியர் டெலிவரி செய்பவர் என்னிடம் இன்று கேட்டது...

    ------
    டாலர் ராஜ்ஜியம் -- பிரம்மாதம். சரி ஸ்பீடு.
    மற்ற இரண்டு புத்தகஙக்ள் நாளைக்குப் படிக்கப்படும்.
    ரூ 50 புத்தகங்கள்.. பைண்டிங் முறையினால், 10 பக்கங்களுக்குப் பிறகு உட்பக்கம் படிக்க கடினமாக இருக்கிறது.
    நான் பார்த்தவரை, வலது பக்கம் நிறைய இடம் இருக்கிறது. அதனால் பைண்டிங் சற்று உட்புறம் விட்டு செய்தால் இந்த பிரச்சினை இருக்காது. இது சாத்தியமா என்று தெரியவில்லை.
    ----

    ReplyDelete
    Replies
    1. சொல்ல மறந்துவிட்டேன்... நானும் பங்குச் சந்தை செய்திகளைப் படிப்பதினால், டா.ரா ரொம்ம்ம்ம்ம்ப ரசிக்க முடிந்தது. என் பெயர் லார்கோ... கா.கா.. வரிசையில் இது ஒரு சூப்பர் கதை. அடுத்த மாதம் வரும் கதையினை முன்பே வரவைத்ததின் காரணம் கதையைப் படித்த உடன் புரிந்தது.

      Delete
  35. அவ்வபோது ஆக்கப்பூர்வமான கருத்துகளையும்., தேவையான தகவல்களையும் வாரிவழங்கிய
    குருநாயர் "கானக்குயில் " ஈரோடு ஸாரி இத்தாலி விஜய்க்கு கோட்டானு கோடி நன்றிகள். :) (ஸ்மைலியை சரியா போட்டுட்டேனா?)

    ReplyDelete
  36. லார்கோ: ஒரே மூச்சில் படித்தாகி விட்டது...நல்ல விறுவிறுப்பான கதை..Liked the story plot...

    ReplyDelete
  37. புத்தகம் இன்னும் வரவில்லை Mr.Vijayan Sir

    ReplyDelete
  38. sir the colour nix recently is not good as before.
    please kindly rectify that.
    may be problem in ink quality or paper or the print machine
    please do look into it

    ReplyDelete
  39. டாலர் ராஜ்யம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை! நிறைய business technical details தெரிந்து கொள்ள முடிந்தது !

    ReplyDelete
  40. இந்தப் பதிவிலேயே அப்டேட் பண்ணுவார்னு இந்தப் பக்கத்தை refresh செய்வேனா...
    புதுசாவே பதிவு போடுவார்னு ஹோம் பேஜை refresh செய்வேனா?

    புதுசு புதுசா குழம்பவேண்டியதாகிடுச்சே...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப பெரிய குழப்பம் தான் சகோதரரே :)

      Delete
    2. எனக்கும் கொஞ்சம் நாளாவே ஒரு குழப்பம்
      விஜய் யை
      ஈரோடு விஜய்
      சேரோடு விஜய்
      இத்தாலி விஜய்
      இதில் எந்த பேரை வைத்து அழைப்பது என்று.....,

      கடைசியாக இத்தாலியில் உள்ள பொனெல்லியில் வேலை செய்யும் விஜயை
      ஈசேலி விஜய் என்பதா

      சேரோலி விஜய் என்பதா

      Delete
  41. Where is the update?
    Editor sir wake up :)

    ReplyDelete
  42. மிகவும் அருமையான கதை. நேற்றே ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டு இன்று இரண்டாவது முறையாக படித்துக்கொண்டு இருக்கிறேன். ( அதற்காக கதை புரியவில்லை என எடுத்துகொள்ளவேண்டாம்......)

    ReplyDelete
  43. லார்கோ வின்ச் கதைகள் அனைத்தையும் ஒரே புத்தகமாக வெளியிடலாமே... Spl Edition or Collectors Edition....

    ReplyDelete
  44. அட்டை படம் ஒரியினலை ஒட்டி இருப்பது அருமை.

    ReplyDelete
  45. ICU இல் பெளன்சர்? சூப்பர் சர்ர்.

    ReplyDelete