Sunday, March 29, 2015

இன்னொரு ஞாயிறு...இன்னுமொரு பதிவு...மீண்டும் மூர்த்திகள் !

நண்பர்களே,

வணக்கம். இது மும்மூர்த்திகளில் இருவர் எழுந்தருளும் நேரம் ! "மாயாவி ; லாரன்ஸ்-டேவிட் ; ஜானி நீரோ என்று அந்தப் பெயர்களைக் கேட்டாலே இன்னமும் எனக்கு சிலிர்த்துப் போகும் ; நான் தாட்டியமாய் இருக்கும் போதே அந்த மறுபதிப்புகளை போட்டு முடிச்சிடுங்க - ப்ளீஸ் !" என்றவாறு இந்தாண்டின் சென்னைப் புத்தகவிழாவின் போது என் முன்னே புன்சிரிப்போடு  நின்ற முதியவரை மட்டுமன்றி, இது போன்ற "மும்மூர்த்தி வாஞ்சை" செண்டிமெண்ட்களை ஏராளமான முறைகள் என்னிடம் பகிர்ந்துள்ள அத்தனை vintage ரசிகர்களையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது ! இது பற்றி நாம் ஓராயிரம்   முறைகள் பேசி விட்டோம் ; விவாதித்து விட்டோம் ; வியந்து விட்டோம் ; சிரித்து உருண்டும் விட்டோம் தான் ; ஆனால் இன்னமும் இந்த மறுபதிப்பின் வேளைகளில் நிகழுமந்த விற்பனை மாயாஜாலத்தை விவரிக்க வார்த்தைகள் கிடையாது ! "ஏப்ரலின் வெளியீடுகளுள் மறுபதிப்புகளும் உண்டா ? அப்படியானால் ஒவ்வொன்றிலும் 25 கூடுதலாய்ப் போடுங்களேன் !" என்று  2 நாட்களுக்கு முன்பு கூட, கோவையின் ஒரு பிரதான புத்தக நிலையத்தின் உரிமையாளர் கோரியது போல் ஆங்காங்கே தவறாது நிகழ்வதுண்டு - "மாயாவி" என்ற பெயரைக் கேட்ட மறுகணம் !  

"புதுயுகக் கதைகள் ; மாறுபட்ட ரசனைகள்" என்றெல்லாம் தொண்டை நரம்பு புடைக்க நான் ஒரு பக்கம் சவுண்ட் விட்டுத் திரிய.."அது கிடக்கு அரை லூசு !" என்ற பாணியில் நமது இந்தப் புராதனச் சின்னங்களை இன்னமும் ரசிக்கும் அணி அநேகம் ! பால்ய நினைவூட்டல்களாய்ப் பார்த்தாலும் சரி ; குழப்படியற்ற சிம்பிளான கதைகளென்று பார்த்தாலும் சரி - இந்தக் கதைகள் உலகின் எந்தவொரு மொழியிலும் பெற்றிருக்காத வரவேற்பை நாம் யுகங்களாய்  நல்கி வருவது நிஜம் ! இங்கிலாந்தில் வெளியான இந்தக் கதைகள் பின்னாட்களில் இத்தாலிய மொழியில் ; பிரெஞ்சில் ; ஸ்பானிஷில் கூட வெளிவந்துள்ளன ! In fact - சமீபமாய் போனெல்லி அலுவலகத்தில் மர்ம மனிதன் மார்டினின் கதாசிரியரோடு பேசிக் கொண்டிருக்கும் போது - "நீங்கள் ஸ்பைடர் கதைகளையும் வெளியிட்டுள்ளீர்கள் தானே ?" என்று அவர் கேட்டார் !  எனக்கு நிஜமான ஆச்சர்யம் - இரண்டு காரணங்களின் பொருட்டு : முதல் ஆச்சர்யம் - "ஸ்பைடர்" என்றதொரு 1960's பிரிட்டிஷ் ஹீரோவை கூட   இவர் தெரிந்து வைத்திருக்கிறாரே என்று ; இரண்டாவது - நமது இதர வெளியீடுகளின் விபரங்களையும் மனுஷன் இத்தனை நுணுக்கமாய் கவனித்து வந்துள்ளாரே என்று ! அப்புறம் தான் தெரிந்தது 1970-களின் ஏதோ ஒரு தருணத்தில் இத்தாலியின் ஒரிஜினல் கூர்மண்டையரோடு சில காலத்துக்கு நம்மாள் போட்டி போட்டிருக்கிறார் என்று ! 

அதே போல ஸ்பானிஷ் மொழியிலும் மாயாவியின் பிரபல கதைகள் சகலம் + ஸ்பைடரின் சாகசங்களின் பெரும் பகுதி + லாரன்ஸ்-டேவிட்டின் சாகஸங்களென ஒரு முழு சுற்று வெளிவந்துள்ளன ! சொல்லப் போனால் இம்மாத லாரன்ஸ் - டேவிட் மறுபதிப்பான FLIGHT 731-க்கு நாம் அட்டைப்பட தோசை சுட்டிருப்பது ஸ்பானிஷ் மாவின் புண்ணியத்திலேயே! சமீபமாய் நமது புது இதழ்களுக்கான ராப்பர்கள் ஒரிஜினல்களைத் தழுவியே அமைத்து வருவதால் அதற்கென பெரியதொரு மெனக்கெடலுக்கு அவசியம் நேர்வதில்லை ! ஆனால் இந்த மறுபதிப்புகளின் விஷயத்தில் மட்டுமே சிக்கல்கள் அட்டைப்பட வடிவங்களில் எழுகின்றன ! ஒரிஜினல் டிஜிட்டல் பைல்கள் படைப்பாளிகளிடமே இல்லையெனும் போது - அட்டைப்படங்களுக்காக நாமிங்கே மொக்கை போடுவது வாடிக்கையாகி வருகிறது ! அந்நாட்களில் ப்ளீட்வே உருவாக்கியிருந்த அட்டைப்பட டிசைன்கள் அழகாய் இருப்பினும் அவற்றை நிறைய முறை நாம் பார்த்தாகி விட்டோமென்பதால் அவற்றினருகே செல்லும் அவசியங்களை சற்றே குறைத்திட நினைக்கிறோம். So இதர மொழிகளில் நம் மும்மூர்த்திகளின் உலாக்கள் நம் கவனத்தை அவ்வப்போது ஈர்ப்பது வாடிக்கையாகியுள்ளது இப்போது ! 

இதோ - அந்த ஸ்பானிஷ் அட்டைப்பட டிசைன் ; அதன் பின்னே ப்ளீட்வேயின் ஒரிஜினல் டிசைன் + நமது கூட்டணித் தயாரிப்பு ! தமிழில் நாம் அன்றைய நாட்களில் வெளியிட்ட FLIGHT 731-ன் அட்டைப்பட ஜாடையும் லேசாக இருந்திடும் பொருட்டு கொஞ்சம் பட்டி-டிங்கரிங் செய்துள்ளோம் ! இறுதி வடிவில் லாரன்ஸ் ஏதோ பரத அபிநயம் பிடிப்பது போல் தோற்றம் தந்தாலும் வழக்கமான துப்பாக்கி-கத்தி-கப்படா பாணியிலிருந்து இதுவொரு சின்ன மாற்றமாய் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று நினைத்தேன் ! May 1967-ல் ஒரிஜினலாய் உருவாக்கப்பட்ட இந்த லாரன்ஸ்-டேவிட் சாகசம் தான் தமிழுக்கு இந்த நாயகர்களை அறிமுகம் செய்து வைத்த கதை ! அன்றைய நாட்களில் இந்தக் கதைகள் ஏற்படுத்திய தாக்கம் well chronicled என்பதால் நான் என் பங்குக்கு அதனுள் தலைவிடப் போவதில்லை ! 



இந்தத் தொடர்கள் வெளியானது இங்கிலாந்தில் தான் எனினும் அவற்றின் படைப்பாளிகள் பெரும்பாலும் இத்தாலியர்களாகவோ, ஸ்பெயின் நாட்டவராகவோ தான் இருந்துள்ளனர் ! FLIGHT 731 கதைக்கு சித்திரம் போட்டவர் ரபேல் லோபெஸ் என்ற இந்த ஸ்பெயின் நாட்டு ஜாம்பவான் தான் ! 

இவர் பணியாற்றியுள்ள கதைகள் / தொடர்கள் பற்றிய பட்டியலைப் போட இங்கே இடம் பற்றாது - மனுஷன் அப்படியொரு பிரம்மிக்கச் செய்யும் எண்ணிக்கையிலான கதைகளை உருவாக்கியுள்ளார் ! லா-டே ஜோடியின் கதைகளில் மட்டும் 7 இவரது கைவண்ணம் ! 

1.தலை கேட்ட தங்கப் புதையல்
2.காற்றில் கரைந்த கப்பல்கள்.
3.பார்முலா X -13
4.FLIGHT 731
5.விண்ணில் மறைந்த விமானங்கள்
6.மஞ்சள் பூ மர்மம்
7.CID லாரன்ஸ்

இவை தவிர, இரும்புக்கை மாயாவி & ஸ்பைடர் - கதைகளுக்கும் நிறைய சித்திரங்கள் போட்டுள்ளார் ! கணினிகள் இலா அந்நாட்களிலேயே இத்தனை அதகளம் செய்த பெருமைக்குச் சொந்தக்காரர் ! 

தொடர்வது நமது ஆஸ்தான மாயாவியாரின் மறுபதிப்பு - "கொள்ளைக்கார மாயாவி" - for the umpteenth time ! இந்த இதழ் தமிழில் வெளியான நாட்களில் எனக்கு ரொம்பவே பிடித்திருந்ததொரு கதை ! கிளைமாக்சில் வில்லனைத் துரத்திச் செல்லும் மாயாவியின் நெஞ்சில் வந்து விழும் சம்மட்டி அடி ; அண்டங்காகம் சுமந்துவரும் அந்த விசித்திர ஆயுதம் ; நிழல்படைத் தலைவரை மூக்கோடு சேர்த்துக் குத்தும் sequence என்று மனதில் 'பச்சக்' என பதிந்து போன விஷயங்கள் ஏராளம் ! இன்று திரும்பவும் படிக்கும் போது கண்ணில்பட்டவை பெரும்பாலும் கதையின் லாஜிக் ஓட்டைகளும், மொழியாக்கத்தின் அன்றைய vintage பாணியுமே ! கதையைச் செப்பனிட இயலாதெனும் போது - மொழிநடையை சிறிதேனும் சீர் செய்திடவாவது முயற்சிப்போமே என்று ஆங்காங்கே கொஞ்சமாய் கை வைத்துள்ளேன் ! ஓரளவுக்குப் பற்கள் ஆட்டம் காணாது இப்போது கதையைப் படிக்க முடிந்திட்டால் - செலவிட்ட நேரம் உருப்படியானது என்றாகும் ! இனி வரும் நாட்களிலும் இது போல் (அவசியப்படும்) மாற்றங்களை மட்டும் செய்திடவுள்ளோம் - அதற்கான அவகாசம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் !

இதற்கான அட்டைப்படம் - ஒரிஜினல் டிசைனின் உபயமே - முன்னட்டைக்கு ! பின்னட்டையுமே கூட ஒரு ஸ்பானிஷ் நாட்டு ஓவியரின் கைவண்ணத்தின் தழுவல் - நமது பின்னணி வர்ணச் சேர்க்கைகளோடு ! "பார்க்கப்..பார்க்கப் பிடிக்கும் ரகம் " என்ற நம்பிக்கையோடு இந்த டிசைனை இரும்புக்கையாரின் இம்மாத இதழுக்கு ராப்பராக்குகிறோம் !  Genuinely curious to know how you find them !  



செப்டெம்பர் 1967-ல் உருவான இந்தக் கதைக்கு இன்றைய வயது 48 !! Still going strong !! உலகத்திலேயே இவை தற்போது லைவ்வாக வெளியாவது நமது தமிழில் மட்டுமே என்ற விதத்தில் நாம் பெருமைப்பட்டுக் கொள்வதா ? அல்லது (காமிக்ஸ்) உலகமே எங்கெங்கோ சவாரி செய்து கொண்டிருக்கும் வேளையில் கூட - புறப்பட்ட இடத்திலிருக்கும் மரங்களைச் சுற்றிய டூயட் காதலர்களாய் இன்னமும் நம்மைப் பார்த்துக் கொள்வதா ? - விடையறியாக் கேள்வியே ! 

இதோ நம்மில் பலருக்கு காமிக்ஸின் மறு சொல்லாகிப் போய் விட்ட மாயாவியாரின் முக்கிய படைப்பாளிகள்   : 
Jesus Blasco
Tom Tully
கதாசிரியர் டாம் டல்லி ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்தவர் ! ஓவியர் ஜீசஸ் ப்ளாஸ்கோ ஸ்பெயினைத் தாயகமாகக் கொண்டவர்! "கொள்ளைக்கார  மாயாவியின்"  சித்திரங்களைப்  போட்டவர்  ஜீசஸ்  ப்ளாஸ்கோ இல்லையெனினும் கூட, அந்நாட்களில் இதர மாயாவி ஓவியர்களின் முன்மாதிரியே ப்ளாஸ்கோவின் பாணி தான் ! அந்நாட்களில் இங்கிலாந்தில் ஓவியர்களுக்குப் பஞ்சம் இருந்ததில்லை தான் ; ஆயினும் இந்தக் கதைவரிசைகளை அயல்நாட்டு ஓவியர்களிடம் ஒப்படைத்ததன் பின்னணி சிக்கன நடவடிக்கைகளே ! இங்கிலாந்தில் ஆகும் செலவுகளை விட, இத்தாலி ; ஸ்பெயின் போன்ற இடங்களில் இவற்றைத் தயாரித்து வாங்குவது பணம் மிச்சம் செய்திடவொரு முக்கிய வழியாக அமைந்திருந்தது ! சொல்லப் போனால் இந்தக் கதைகள் சகலத்தையும் அச்சிட்டதும் கூட இத்தாலியில் தான் ! Outsourcing சமீபத்திய நடைமுறையல்ல என்பது தெளிவு ! 

'ரமணா' பாணியில் சிக்கிய புள்ளிவிபரங்களை அள்ளித் தெளிப்பதொடு இந்த மறுபதிப்புகளில் எனது கடமை முடிந்து போகிறது ! மேலோட்டமாய்ப் புரட்டிப் பார்த்து விட்டு, மலரும் நினைவுகளுக்குள் மூழ்கியான பின்னே இதழ்களைப் பத்திரமாக உள்ளே வைத்துப் பூட்டி விடாது - please do give them a read ! உங்கள் வீட்டிலுள்ள இளம் வாசகர்களுக்கும் கூட இவை ஒரு சுலபமான துவக்கப் புள்ளியாக இருந்திடலாம் என்பதால் அவர்களுக்கும் படிக்கக் கொடுத்துப் பாருங்களேன் - ப்ளீஸ் ?! "காமிக்ஸ் சேகரிப்பு" என்பது ஒரு சுகமான ஹாபி தான் ; ஆனால் வாசிப்புக்கும் அதனில் ஒரு வாய்ப்பின்றிப் போகும் பட்சத்தில் வெறும் சேகரிப்புகள் மட்டுமே நெடு நாள் ஓடாதே ! 

புராதனங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் பணிகள் ஒரு பக்கம் கறுப்பு-வெள்ளை அச்சோடு நிறைவுபெற்றிருக்க, மறு பக்கமோ வண்ணச் சூறாவளிகளில் தளபதியும், கோமானும் நம்மை பிசியாக ஆழ்த்தி வருகின்றனர் ! "மின்னும் மரணம் " அச்சுப் பணிகள் 70% ஐத் தாண்டி விட்ட நிலையில் - லார்கோவின் பிரிண்டிங் குறுக்கே புகுந்துள்ளது ! வரும் வார இறுதிக்குள் அத்தனையையும் முடித்து விட்டு பைண்டிங் படையெடுப்பில் மூழ்கிடுவதே இப்போதைய அட்டவணை ! அடுத்த சனிக்கிழமை துவக்கம்  எங்கள் ஊரின் கோவில் திருவிழாவின் பொருட்டு புதன்கிழமை வரையிலும் விடுமுறை எனும் போது - மின்னும் மரணம் மெகா இதழினை ஏப்ரல் 19-க்குத் தயார் செய்திட ராட்சஸ முயற்சிகள் அவசியமென்பது இப்போதே புரிகிறது ! எங்களது பைண்டரின் நிலையை நினைத்தால் இப்போதே எனக்குப் பாவமாய் உள்ளது - நம்மவர்கள் தற்காலிகமாய் அவர் ஆபீசில் தான் குடித்தனமே செய்யப் போகிறார்கள் என்பது உறுதி !  இதில் தளபதியின் போஸ்டர் வேறு தயார் செய்தாகணும் - phew !!!  

Moving on, நமது தலையின் 330 + 220 + 110 பக்கக் கதைகளின் தொகுப்பான லயன் 250-வது இதழின் பணிகளும் இன்னொரு தடத்தில் தடதடத்து வருகின்றன ! இரண்டு கதைகள் கிட்டத்தட்ட 70% முடிவடையும் நிலையில் -துரதிஷ்டவசமாய் டெக்ஸ் கதைகளை மொழிபெயர்க்கும் இல்லத்தரசிக்கு சின்னதொரு விபத்தில் எலும்பு முறிவு நேர்ந்து ; அறுவை சிகிச்சைக்கும் அவசியமாகிப் போய் விட்டது ! நான் கைகளைப் பிசைந்த வண்ணம் இருந்த நிலையில் 15 நாட்கள் ஓய்வுக்குப் பின்னே கடமையுணர்வோடு சிரமப்பட்டேனும் தன பங்குப் பணிகளைப் பூர்த்தி செய்து அவர் ஒப்படைத்து விட்டதில் பூரித்துப் போய் விட்டோம் !! பணம் என்பதையெல்லாம் தாண்டி ஒருவித அர்ப்பணிப்பு இல்லையெனில் இது போன்ற செயல்வேகம் சாத்தியமே ஆகாது ! தலைவணங்குகிறோம் ! 

நேற்றுத் தான் 2015-ன் அட்டவணையும், திட்டமிடல்களும் துவங்கியது போலான உணர்வு தலைக்குள் இன்னமும் தேங்கிக் கிடக்க, வருடத்தின் முதல் 5 மாத இதழ்களின் பணிகள் நெருக்கி முடியும் தருணம் புலர்ந்து விட்டதும் புரிகிறது ! வழக்கமாய் ஆகஸ்டிலேயே மறு ஆண்டுக்கான யோசனைகளை ஆரம்பித்து வந்துள்ளேன் - கடந்த 2 வருஷங்களாய் ! அப்படிப் பார்க்கையில் இன்னமும் மூன்றே மாதங்களில் THE YEAR NEXT பற்றிய தீவிர பரிசீலனை துவங்கிடும் நேரமும் வந்து விடும் ! இம்முறை எனது வேலைகளை சுலபமாக்க அதிர்ஷ்டவசமாக ஒரு புதுப் பதிப்பகத்தின் பரிச்சயம் நமக்குக் கிட்டியுள்ளது ! 'எதைப் போட..? எதை வேண்டாமென்று சொல்ல ? ' என்று விழி பிதுங்கும் விதமுள்ளது அவர்களது படைப்புகள் ஒவ்வொன்றும் ! நமது தற்போதைய இதழ்கள் அத்தனையையும் பார்த்து விட்டு ரொம்பவே குஷியாகிய நிலையில் - உரிமைகளைத் தர சம்மதம் சொல்லியுள்ளனர் ! மின்னும் மரணம் தயாரிப்புப் பணிகள் நிறைவு பெற்றான பின்னே, கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டு, அவர்களை நேரில் சந்திப்பதாக திட்டம் ! So 2016-ல் நிறையவே அதிரடிகள் காத்துள்ளன folks ! அதற்குள் நமது விற்பனை எண்ணிக்கை கொஞ்சமே கொஞ்சமாய் புஷ்டியாகிடும் பட்சத்தில், அவர்கள் கோரும் ராயல்டிகளை செலுத்திட - முரட்டு அந்தர்பல்டிகளுக்கோ ; திரும்பவும் கடன் கோரி வங்கியின் கதவைத் தட்டுதலோ அவசியமாகாது போகலாம் ! நம்பிக்கையோடு முயற்சிகளை செய்து வருகிறோம் ! 

அடுத்த மாதம் முதல் ரேடியோ விளம்பரங்களை ஒவ்வொரு மாதத்து முதல் வாரங்களிலும் செய்வதாக உள்ளோம். தற்போதைக்கு சென்னை ; கோவை ; சேலம் ஆகிய மூன்று நகரங்களில் கவனம் செலுத்த உள்ளோம் ; இந்தப் பகுதிகளில் நல்ல reach உள்ள சேனல்கள் எவை ? என்பது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன் guys ?

சரி ...இப்போதைக்கு நான் புறப்படும் வழியைப் பார்க்கிறேன்..! 'யார் ஜெயிச்சால் நமக்கென்ன ?" என்ற மோன நிலையில் ஞாயிறின் பகல்  பொழுதை பைனல்ஸ் பார்ப்பதில் செலவிட்டு விட்டு, அடுத்து காத்திருக்கும் பௌன்சரின் "கறுப்பு விதவை"யின் மொழிபெயர்ப்பில் செலவிடுவதாக உள்ளேன் ! See you around soon ! Bye for now ! 

P.S : ஏப்ரல் துவக்கத்தின் இதழ்கள் மூன்றும் (லார்கோ + மாயாவி + லாரன்ஸ்) ஏப்ரல் மூன்றாம் தேதி இங்கிருந்து புறப்படும் !  

342 comments:

  1. Replies
    1. வெல்கல் நவீனகிளிமண்டை

      Delete
    2. இந்த கொசுத்தொல்லை தாங்கலப்பா ..இன்னுமா இந்த மெண்டல் சைகோ ஆஸ்பத்திரிக்குப் போகல்லே

      Delete
  2. இரண்டு அட்டைப் படங்களுமே கண்கவர் வண்ணங்களுடன் மனதை அள்ளுகிறது!!

    அட! நம்ம லாரன்ஸ் அந்தக் காலத்திலேயே மான்-கராத்தே போஸ் கொடுத்திருக்காரு பாருங்களேன்!! :)

    ReplyDelete
    Replies
    1. மான் கராத்தேல நாமதா லேட் பிக்கப் பூனைசாமி

      Delete
    2. @ FRIENDS : ஆனால் என்ன பாருங்க....நம்மூர் மான் கராத்தேகாரருக்கு ஜோடியாக ஹன்சிகா ; பாவப்பட்ட லாரன்சுக்கோ மொட்டை டேவிட் தான் ! இதெல்லாம் அயல்நாட்டு சதிங்கோ ..!

      Delete

  3. டெக்ஸ் கதைகளை மொழிபெயர்க்கும் இல்லத்தரசியின் அர்பணிப்பு உணர்வுக்கு ஒரு சல்யூட்

    ReplyDelete
    Replies
    1. நானும் சல்யூட்!

      அவர் விரைவில் குணமடைந்து அடுத்த வருடப் பட்டியலில் மலையாய் காத்திருக்கும்(?) டெக்ஸ் மொழிபெயர்ப்புப் பணிகளுக்குத் தயாராகிடப் பிரார்த்திக்கிறேன்!

      Delete
    2. // மலையாய் காத்திருக்கும்(?) டெக்ஸ் மொழிபெயர்ப்புப் பணிகளுக்கு //
      + 1

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. +1

      காரணம் அடுத்த வருடம் டெக்ஸ் காமிக்ஸ் என்றே மாதா மாதம் ஒன்று வருவதாக அடிக்கடி கனவு ....

      Delete
    5. அதற்கு அடுத்த வருடம் முதல் டெக்சு கதையை படிக்கும் ஆசை உங்களுக்கே போய் விடும் தலைவரே...

      Delete
  4. Replies
    1. தம்பி, 2015 ஆரம்பிச்சே மூனுமாசம் தான் ஆச்சு!

      Delete
    2. @ FRIENDS : நம்மாட்கள்னா சும்மாவா ?

      Delete
  5. மாயாவி அட்டை படம்தாம் மனச அள்ளுது

    முதல் பிரிண்ட் : ஆஹா ஓஹோ
    இரண்டாவது பிரிண்ட் : ஏதோ பரவால்ல
    முன்றாவது பிரிண்ட் : வேஸ்ட்

    இந்த மூன்றுக்கும் அடுத்து இப்போ வருவது
    நன்றாகத்தான் இருக்கு

    லா-டே
    அட்டை படம்
    எதிர்பார்த்தது போலில்லை இருந்தாலும் பரவாயில்லை ரகம்

    ReplyDelete
  6. இனிய காலை வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  7. புத்தகத்தை காண மிக ஆவலுடன் காத்து கொண்டு இருக்கும் அதே சமயம் நமது ஸ்பைடர் என்னவானார் எப்பொழுது தரிசனம் தருவார் என தகவல் தருவீர்களா சார் .....

    காரணம் இன்னும் நான் படிக்காத சாகசம் அது ..

    ReplyDelete
    Replies
    1. நிங்க எதத்தான் படிக்கலை தலைவரே

      Delete
    2. கொள்ளைக்கார மாயாவியின் பின்னட்டையிலிருப்பது நம்ம ஸ்பைடர் தான் தலீவர் அவர்களே! அந்த ஹேர் ஸ்டைலை கவனியுங்க. இரும்புக்கையை மாட்டிக்கிட்டு எகத்தாளமா பார்த்திட்டிருக்கறது நம்ம ஸ்பைடர் தான்னு தெரியலியா உங்களுக்கு? ;)

      Delete
    3. நிங்க எதத்தான் படிக்கலை தலைவரே #

      இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்பிட்டு இருக்கு ..... :-)

      Delete
    4. @ தலீவர் : ஒரிஜினல் கூர்மண்டையர் மே மாதம் களம் குதிப்பார் !! கொஞ்சம் பைனான்ஸ் சிக்கல் ; ஹெலிகாருக்கு பெட்ரோல் ரொப்ப முடியவில்லையாம் இந்த மாசம் !

      Delete
    5. // ஹெலிகாருக்கு பெட்ரோல் ரொப்ப முடியவில்லையாம் இந்த மாசம் ! //
      ஹெலிகாரின் எரிபொருள் காஸ் என கேள்விபட்டேன்! ஏன் சார் இப்படி பொய் சொல்லி Paranitharan K ஏமாத்துறிங்க!

      Delete
  8. மின்னும் மரணம் டைகர், லயன் 250 டெக்ஸ், 2 இதழ்களும் சென்னை புத்தக திருவிழாவில் ஒருசேர வெளிவர இருக்கிறதா சார்?

    மறுபதிப்புகளின் அட்டைப்படம் அருமையாக வந்துள்ளது. எனக்கென்னவோ பழைய மும்மூர்த்திகளின் மறுபதிப்பு இதழ்களில் மனம் லயிக்கவில்லை. கலெக்சனுக்காகத்தான் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன். எழுத்துநடையை தற்போதுள்ள தரத்திற்கு கொண்டுவந்தால் நன்றாக இருக்குமோ என்னவோ.

    ReplyDelete
    Replies
    1. அவரே அவர் ஊர் பொங்கலுக்குள்ள பள பளா சாவ முடிக்க முடியுமான்னு திணரராமே
      இதுல 250வது இதழையும் சேர்த்து
      கேட்கறீங்களா

      கடுப்பாகிட போறார் சுந்தர் ராஜ் சார்

      Delete
    2. ஜெயசேகர்

      டைகர்/டெக்ஸ் யுத்தம் சற்று ஓய்ந்ததுபோல் உள்ளது. இந்த இரண்டு இதழ்களும் ஒருசேர வந்தால் பழையபடி இந்த தளம் களைகட்ட ஆரம்பித்துவிடும் அதற்காகத்தான்

      Delete
    3. அதாம் டெக்ஸ்ஸ மிஞ்ச ஆளில்லனு எடி சாரே சொல்லிட்டாரில்ல

      Delete
    4. Sundar Raj : //டைகர்/டெக்ஸ் யுத்தம் சற்று ஓய்ந்ததுபோல் உள்ளது. இந்த இரண்டு இதழ்களும் ஒருசேர வந்தால் பழையபடி இந்த தளம் களைகட்ட ஆரம்பித்துவிடும் அதற்காகத்தான்//

      சரிசமமான பலங்கள் கொண்ட அணிகளுக்கு மத்தியில் போட்டி நடக்கும் போது தானே களை கட்டும் ? ஒன்று மறுபதிப்பு.....மற்றொன்று முற்றிலும் புதுசு எனும் போது ஆர்வங்கள் புதுசின்பால் பாய்வது இயல்பாகிடுமல்லவா ? Would be an unfair contest !

      Delete
    5. //ஒன்று மறுபதிப்பு.....மற்றொன்று முற்றிலும் புதுசு எனும் போது ஆர்வங்கள் புதுசின்பால் பாய்வது இயல்பாகிடுமல்லவா //

      புதுசுக்கு பழசு மேட்சே ஆகாது
      எப்படினாலும் டெக்ஸ்ஸ மிஞ் (இப்போதைக்கு) ஆளில்லை

      Delete
    6. சார் நான் டெக்ஸ் ரசிகர் என்றாலும்.... நமது தளபதியின் மின்னும் மரணத்தை மிஞ்ச கதை இருக்குமா என்ன ?
      நமது வெளியீடுகளில் மின்னும் மரணமும், இரத்தபடலமும் இருகாவியங்கள் அல்லவா ?

      Delete
    7. அப்புறம் நாயகர் என்றால் டெக்ஸ் தான் என்பதையும் அழுத்தமாய் சொல்லி கொள்வோமே !~

      Delete
  9. Good Morning have a nice day friends

    ReplyDelete
  10. இம்முறை எனது வேலைகளை சுலபமாக்க அதிர்ஷ்டவசமாக ஒரு புதுப் பதிப்பகத்தின் பரிச்சயம் நமக்குக் கிட்டியுள்ளது ! 'எதைப் போட..? எதை வேண்டாமென்று சொல்ல ? ' என்று விழி பிதுங்கும் விதமுள்ளது அவர்களது படைப்புகள் ஒவ்வொன்றும் ! நமது தற்போதைய இதழ்கள் அத்தனையையும் பார்த்து விட்டு ரொம்பவே குஷியாகிய நிலையில் - உரிமைகளைத் தர சம்மதம் சொல்லியுள்ளனர் !

    2016/ல் புத்தக எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. Sundar Raj : இல்லை சார் ! இந்தாண்டின் அட்டவணையே நாக்குத் தள்ளச் செய்து வரும் நிலையில் இன்னமும் அதிக எண்ணிக்கை என்பதெல்லாம் சக்திக்கு மீறிய ஆசையாகிப் போய் விடும் ! "இன்னமும் தரமான கதைகளோடு" 2016-ன் திட்டமிடல் இருந்திடும் என்று சொல்வது பொறுத்தமாக இருக்கும் !

      Delete
    2. // தரமான கதைகளோடு" 2016-ன் திட்டமிடல் இருந்திடும் என்று சொல்வது பொறுத்தமாக இருக்கும் !//
      super

      Delete
  11. புத்தக எண்ணிக்கை அதிகமாக இருக்குமோ இல்லையோ

    சாந்தா தொகை அதிகமாகத்தான் ஆக போகுது

    அத நெனச்சாத்தான் பகீர்னு இருக்கு

    இப்போலிருந்து டெய்லி இரண்டு ஷிப்ட் வேல செஞ்சு காசு பணம் மணி துட்டு சேர்த்த ஆரம்பிக்கோணும்

    நியூசிலாந்து 33/2

    ReplyDelete
    Replies
    1. Jaya Sekhar : Wrong guess ! சந்தாவும் சேதாரம் ஏற்படுத்தா ஒரு தொகையாக இருந்திடவுள்ளது !

      Delete
    2. சினிமா போன்ற ஒரு சில பொழுதுபோக்குகளை குறைத்துகொண்டால் சரி செய்துவிடலாம்.
      புத்தக எண்ணிக்கை அதிகரித்தால் மகிழ்ச்சிதான்.

      நியூசிலாந்து 40/3

      Delete
    3. Sundar Raj : எனக்கும் எண்ணிக்கை கூடிடும் பட்சத்தில் மகிழ்ச்சியே ; ஆனால் நான் பார்த்து வரும் சில வேலைகளைப் பிரித்துக் கொடுக்கும் வேளையும், நம்பிக்கையும் புலரும் வரை பளுவைக் கூட்டுவதில் மொழித் தரத்தில் / தயாரிப்புத் தரத்தில் / தேதி தவறாமையில் பின்தங்கிப் போகும் ஆபத்து உள்ளது ! அது தான் எனது மைய பயமே ! இல்லையெனில் தற்போதுள்ள கதைக் குமியல்களுக்கு - the sky is the limit !

      எல்லாவற்றிற்கும் மேலாக - நமது விற்பனையாளர்களும் ஓவர்டோஸ் என்று திணறிப் போய் விட்டால் சிக்கலாகிடுமே என்ற பயமும் நிறையவே உள்ளது !

      Delete
    4. //சினிமா போன்ற ஒரு சில பொழுதுபோக்குகளை குறைத்துகொண்டால் சரி செய்துவிடலாம்.//
      இன்னுமுண்டு பலவழிகள் .....நமது முக்கிய தேவை தேவை காமிக்ஸ்சாய் இருக்கும் பொது

      சார் காலம் மாறும் .....the sky is the limit !

      Delete
  12. பழயபடி பத்து ரூபாய்லர்ந்நது ஸ்டார்ட் பண்றீங்களா எடி சார்

    ReplyDelete
    Replies
    1. Jaya Sekhar : பத்து ரூபாய்க்கு இன்றைக்கு உங்கள் கைகளில் அட்டைப்படத்தை மட்டும் தான் கொடுக்க சாத்தியமாகுமே ! பொறுத்திருந்து பாருங்களேன்..!

      Delete
    2. அடுத்த வருடத்திலிருந்து கலெக்டர் ஸ்பெஷல் போட ஆரம்பிங்க சார்

      பழய புக்கு கெடைக்காம அல்லாடுர எங்களைல்லாம் கொஞ்சம் நெனைச்சு பாருங்க. சார்

      Delete
    3. Jaya Sekhar : எதுவொன்று கிடைக்காது உள்ளதோ - அதுவரைக்கும் தான் அதன் மீதான ஈர்ப்பு நண்பரே ! இதோ - மும்மூர்த்திகள் + ஸ்பைடர் வந்தாச்சு ; ஆனால் இப்போதைய தேடல் "டிடெக்டிவ் ஸ்பெஷல்" , டெக்ஸ் classics என்று அலைபாய்கிறது ! அதுவும் வந்து விட்டால் தேடலின் இலக்குகள் மாறிப் போகலாம் ! So கொஞ்சமாய் வெளியே வந்து நின்று பாருங்களேன் ---பழசைத் தேடியலையும் இந்த மோகமெல்லாம் ஒரு சோப் முட்டை போலானது என்பது புரியும்...விரல் நீட்டித் தொட்டு விட்டால் டொப்பென வெடித்து விடும் !

      மறுபதிப்புகள் தொடரும் for sure - ஆனால் அதுவேவொரு obsession ஆக இல்லாத நிலையில் !

      Delete
    4. //பழசைத் தேடியலையும் இந்த மோகமெல்லாம் ஒரு சோப் முட்டை போலானது என்பது புரியும்...விரல் நீட்டித் தொட்டு விட்டால் டொப்பென வெடித்து விடும் ! ///

      ஆஹா!! போன பதிவுல நீங்க இதை எழுதியிருந்தால் 'கவிதை' வகையறாவில் சேர்த்தியிருப்போம்! :)

      Delete
    5. Erode VIJAY : நாலு காலும் ஒரு வாலும் இருக்கும் போதே லொள்ளுக்குப் பஞ்சமில்லை எனும் போது வாயில் பைப்பும், சிரத்தில் தொப்பியும் இருக்கும் போது கெத்துக்குக் கேட்கவா வேணும் ?

      Delete
    6. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : தேடல்கள் மாறுவதில்லை ; மட்டுப்படுவதுமில்லை....அவற்றின் இலக்குகள் தான் மாறிச் செல்வன !

      Delete
  13. எடிட்டர் சார்,
    அடுத்த வருடக் கதைகளுக்கான முன்னோட்டங்களை 'லயன்-250 not-out'ல் எதிர்பார்க்கலாமா? இதுவொரு 'டெக்ஸ் ஸ்பெஷல் ' என்பதால் நல்லதொரு reach இருக்குமில்லையா?

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : ஜூன் மாதமே 2016-ன் அட்டவணையைக் கண்ணில் காட்டத் துவங்கி விட்டால் நடப்பு ஆண்டின் இதழ்களின் மவுசு சற்றே குறைந்தது போலாகிடுமல்லவா ? அது மட்டுமல்லாது ஜூன் - டிசம்பர் புதுக் கதைகளின் முன்னோட்டங்களைப் பார்த்துப் பார்த்தே அவையும் கூட போரடிக்கத் துவங்கி விடும்.

      So எப்போதும் போலவே ஆண்டின் இறுதிக்கு அவற்றை வைத்துக் கொள்வோமே !

      Delete
    2. ஆஹா!...எப்போதும் ஜுலைல தான் டெக்ஸ் ஆண்டு மலரில் விஜயம் ஆவார்!...போன வருசம் ஆகஸ்ட்!(LMS)....இப்போ advance ஆக june லேவா?... superb!...வெல்‌கம் 250 not out!

      Delete
    3. மே க்கு கோடை மலராய் வந்துட்டு போகட்டுமே சார் !

      Delete
  14. Good Morning have a nice day friends

    ReplyDelete
  15. விடுமுறை தினத்திலே மூன்று இதழ்களும் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தி.

    ReplyDelete
  16. சிவகாசி சிவகாசிதான்

    ReplyDelete
    Replies
    1. rajasekarvedeha : :-)

      திருவிழா நடைபெறும் கோவில் நம் அலுவலகத்திலிருந்து கல்லெறி தூரத்தில் தான் ! சும்மா ஜெகஜ்ஜோதியாய் உள்ளது அந்தப் பகுதியே !

      Delete
    2. கிளம்புங்க!...எல்லோரும்!....சிவகாசிக்கு!....கலர் கலர் ஆக பார்க்கலாம்!.....

      Delete
  17. எனது 13 வயது அண்ணன் மகன் தீவிர இரும்பு கை மாயவி ரசிகன் ஆகிவிட்டான்.புதிய பதிப்புகளை படித்து முடித்துவிட்டு,என் பழைய கலெக்சன்களையும் கேட்கின்றான்.

    ReplyDelete
    Replies
    1. Madipakkam Venkateswaran : அட !

      Delete
    2. சார் ஏனிந்த ஆச்சரிய குறி ....நிச்சயம் சிறுவர்களிடம்....

      Delete
  18. பழமையின் மேல் உள்ள ஆர்வம் மனிதனின் இறுதிவரை தொடரக்கூடியது இளமையின் இனிய தருனங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக மீளவும் வாழ்க்கையில் விரும்புகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. rajasekarvedeha : இளமையின் தருணங்கள் மட்டும் தான் என்றில்லாது - வாழ்வின் ஒவ்வொரு தருணமுமே ஒரு மறக்க இயலா அத்தியாயம் தான் !

      என்ன - திரும்பக் கிடைக்காத விஷயங்கள் என்ற விதத்தில் அந்த பால்யப் பருவங்கள் ரொம்பவே extra special ! அவற்றை சிறிதளவேனும் மீட்டெடுக்க நமது மறுபதிப்புகள் உதவினாலும் super !!

      Delete
  19. கொள்ளைக்கார மாயாவி -best of mayavi என்பதால் ஆவலுடன் waiting!

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : என் பார்வையில் best of mayavi - இயந்திரத்தலை மனிதர்கள் !

      காதுலே பூ என்றான பின்னும் கூட, அதை அட்டகாசமாய் செய்த கதையது என்று எனக்குப் பட்டது !

      Guys - உங்களின் choice எதுவோ ?

      Delete
    2. கலி மண் மனிதர்கள் எப்போதும் ... நயுயார்க்கில் மாயாவி

      Delete
    3. இந்த இரண்டும் சமீபகாலம்வரை விற்பனைஆகத லிஸ்டில் இருந்தவை.

      Delete
    4. மாயாவி கதைகளில் என்னுடைய சாய்ஸ் : யார் அந்த மாயாவி? சூப்பர் கதை. இதுவரை மறுபதிப்புகளில் வராத கதை :-)

      Delete
    5. யார் அந்த மாயாவி

      மறு பதிப்பில் ஏற்கனவே வந்து விட்டது ரட்ஜா சார்
      மறுபதிப்பு
      வெ.எண் : 236

      Delete
  20. சார் அட்ட காசம் !
    மும்மூர்த்திகள் அதகள படுத்தட்டும் !
    லாரென்ஸ் கதைகளில் அற்புதமான ....அல்ல ...அல்ல ....மிக மிக அற்புதமான கதை களமிறங்க போகிறது அற்புதமான அட்டை படம் தாங்கி ....அந்த மடாலயம் இப்போது நினைத்தாலும் திக் திக் என படித்தது நினைவில் ....இந்த கதை நிறைய என்னிடம் இருந்தாலும் தரமான தாளில் அற்புதமான வடிவில் மீண்டும் படிக்க காத்திருக்கிறேன் ...சிறுவர்களை ஈர்க்க அற்புதமான கதை ..மாயாவியின் அட்டை படம் அருமை ...முன்னட்டை , பின்னட்டை அனைத்தும் தூள் கிளப்புகிறது ....லார்கோ மூன்றாம் தேதிய .....ஆஹா ...சார் நிதமும் ஏதேனும் ஒரு லார்கோ பக்கத்தை புரட்டி பார்ப்பேன் ....என்னவொரு அற்புதமான பாத்திர படைப்பு ... மனதில் ஒரு உற்ச்சாகம் கொப்பளிக்கும் புத்தகத்தின் ஏதேனும் பக்கங்களில் லயிக்கும் போதெல்லாம் பத்து பக்கமாவது புரட்டி கொண்டிருப்பேன் ....நடை , உடை, கதாபாத்திரம் என ....மூன்றாம் தேதிக்கு மனம் கவர் லார்கோவிர்க்காகாக காத்திருக்கிறேன் ~!
    நான்கு புத்தகமும் இரு வாரம் கழித்தோ என எண்ணினேன் .....ஆஹா அருமை
    தல எப்போதோ ?

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //.சிறுவர்களை ஈர்க்க அற்புதமான கதை .//

      இன்றைய சிறுவர்கள் இவற்றை ரசிக்கக் கூடுமெனில் நிஜமான சந்தோஷமே ! But I have my own doubts ! முயற்சித்துப் பார்த்துச் சொல்லுங்களேன் !

      Delete
    2. சார் இப்போது கூட இரும்பு கை மாயாவி, ச்பைடருக்கு இணையான கற்பனை கிடையாதே .....ஆஹாவே வெல்லும் ! முயற்சிக்கிறேன் !

      Delete
  21. நியூசிலாந்து 152/6/37ஓவர்

    ReplyDelete
  22. //அடுத்த சனிக்கிழமை துவக்கம் எங்கள் ஊரின் கோவில் திருவிழாவின் பொருட்டு புதன்கிழமை வரையிலும் விடுமுறை எனும் போது////

    நல்ல வேளை ...இப்ப சொன்னீங்க !!....முன்னாடியே சொல்லி இருந்தா விஜய் "சிவகாசி திருவிழா டெக்ஸ் ஸ்பெஷல் " கேட்டு இருந்து இருப்பாரு :-)

    ReplyDelete
    Replies
    1. selvam abirami : இரவுக்கழுகாரும், வெள்ளி முடியாரும் அக்னிச்சட்டி எடுப்பது போல் அட்டைப்படம் போட வேண்டியிருந்திருக்கும் !! Just miss !!

      Delete
    2. ஹ ஹா இப்போதே எடுக்க வைத்திடுவோம் ....தமிழகத்தில் டெக்ஸ்

      Delete
    3. டெக்ஸ் வில்லர் தோன்றும் 'ஈஸ்வரன் கோயில் எண்ணெய்ச் சட்டி மர்மம்' :)

      Delete
    4. அப்படியே கார்சனின் மகளான ?)லினா வை டெக்ஸ்வில்லரின் மகனுக்கு திருமணம் செய்துவைத்து இருவரையும் சம்மந்தி ஆக்கிவிடுவோம்.

      Delete
  23. கொஞ்சம் லேட்டுதான் ...இருந்தாலும் ...

    பௌன்ஸர் அட்டகாஷ் .....

    T.R ..யாருன்னுதான் தெரியல ...

    டைகர் ....

    ஆஸி -இந்தியா செமி மாதிரி க்ளைமாக்ஸ் கொஞ்சம் புஸ்தான் ..

    ஒண்ணுமே செய்யாத கோலிக்கு அனு மாதிரி நம்ம டைகருக்கு டெஸ் ...

    அநேகமாக அடுத்த டைகர் எபிசோடில் மெயின் வில்லன் "காக்கா வலிப்பு "வந்து செத்து போக உப வில்லன்கள் குதிரை சாணம் சறுக்கி செத்து போவார்கள் என நம்புகிறேன் ....:-))

    ReplyDelete
    Replies
    1. அந்த பெண்தான் tr
      சார் பௌன்சர் அருமை .அந்த தாளில் ராபின் ஓவியங்கள் கதை அருமை !மூன்று கதைகளும் தூள் !

      Delete
    2. // T.R ..யாருன்னுதான் தெரியல ... //
      கடந்த பதிவில் இத பற்றி கேட்ட போதும் இன்னும் பதில் வரவில்லை! யாருப்பா அந்த T.R?

      Delete
    3. சரியாக சொன்னார் .நான் இதுவரை படித்த கதைகளில் எந்த வில்லன்களும் இப்படி செத்தது கிடையாது.ஒருவேளை நம் ஊரில் யாரவது கதை ஆசிரியருக்கு காசு கொடுத்து கவிழ்த்துவிட்டார்களா ?

      Delete
    4. வேங்கையிக்கு முடிவுரையா ?
      கதையில் வில்லனாக வரும் 'கார்மொடி' முகத்தோற்றம் T.ராஜேந்திரன் போல உள்ளதை தான் எடிட்டர் குறிப்பிட்டார்..! (சிரிக்க மட்டும் : இதையாவது நண்பர்கள் ஒத்துகொள்வார்களா ? எடி பதில் தான் வேணும்ன்னு அடம்பிடிப்பர்களா ? அடடே மறந்தே விட்டேன் என சிங்கமுத்துவாத்தியார் வேறு பதில் கூறுவாரோ ? :-))

      Delete
    5. வேங்கையிக்கு முடிவுரையா ?
      கதையில் வில்லனாக வரும் 'கார்மொடி' முகத்தோற்றம் T.ராஜேந்திரன் போல உள்ளதை தான் எடிட்டர் குறிப்பிட்டார்..! #

      மாயாவி சார் ....இதனை நான் வழி மொழிகிறேன் ..நானும் அப்பொழுதே கண்டுபிடித்து விட்டேன் . :-)

      Delete
  24. எடிட்டர் சார்,
    2016'ம் ஆண்டு அட்டவணையில் 'வேதாளர்', 'முகமூடி வீரர்'ஐ எதிர்பார்க்கலாமா??

    ReplyDelete
    Replies
    1. // 2016'ம் ஆண்டு அட்டவணையில் 'வேதாளர்' //

      எனக்கும் இதில் உடன்பாடு ஆசிரியரே!

      Delete
    2. @ரதன் சூர்யா

      நான் இங்கு தங்களை சந்திப்பது இதுவே முதல் முறை..! உங்களுக்கு என் முதல் வணக்கங்கள்..!

      Delete
    3. @மாயாவி சிவா ஜி

      இங்கு நான் வருவது இந்த ஒரேயொரு கோரிக்கை வைக்க மட்டும்தான் :-p
      இதே கேள்வியை 2 வருடம் முன்பும் கேட்டிருந்தேன், காலம் கனியும்போது பார்க்கலாமென எடி ஏதோ பதில் சொல்லியதாய் நியாபகம். கூடிய சீக்கிரம் கனியட்டும் :-)
      அங்கே நான் ஏற்கனவே உங்களின் நண்பன்தான், @அமித் கமல் நானேதான் :-)

      Delete
    4. ஓஓஒ...amith kamal...அது நீங்கள் தானா..! உங்கள் முகம் இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி சூர்யா..!

      Delete
  25. Replies
    1. கண்டிப்பாக வருவார்!

      Delete
    2. பரணி உங்கள் நம்பிக்கை என் மனதை குளிர்விக்கிறது..!

      Delete
    3. மாயாவி, அவருக்கு பெரும் அளவில் ரசிகர் கூட்டம் இருப்பது ஆசிரியர் உட்பட அனைவரும் அறிந்ததே! எனவே அடுத்த வருடம் நமது காமிக்ஸ் மறுபதிப்பில் இடம் பிடிப்பார்!

      Delete
    4. ராணி காமிக்ஸில் வராத கதைகள் மட்டும் வந்தால் சூப்பராக இருக்கும்.

      Delete
    5. எனக்கு நமது காமிக்ஸில் வந்த அனைத்து கதைகளும் வேண்டும்!

      Delete
    6. lee falk கதையில் sy barry ஓவியத்தில் வந்தவைதான் 'டாப்' ரகம்..!அவைமுழுவதும் ராணி காமிக்ஸில் வந்துவிட்டன என நினைக்கிறேன்.

      Delete
  26. மே மாதம் வரவிருக்கும் 'விண்ணில் ஒரு வேங்கை'யின் தலைப்பு 'விண்ணில் ஒரு வீராங்கனை' என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். உங்களின் அபிப்ராயம் என்ன நண்பர்களே?

    ReplyDelete
    Replies
    1. விண்ணில் ஒரு ஏவுகணை
      விண்ணை வளைக்கும் மோகினி ..
      விண்ணில் நீந்தும் சாகசக்காரி ! சர்கஸ்காரி

      Delete
    2. இப்பிடி தொடரும் ஆபத்து உள்ளது நண்பரே ....போதும் நிறுத்திக்கிறேன் !

      Delete
    3. கதையை படிப்தற்கு முன் அதன் தலைப்பை பற்றி கேட்பது சரியாகாது என்பது எனது அபிப்பிராயம்! என்னை பொறுத்தவரை நமது ஆசிரியர் எப்பொதும் சரியான தலைப்பையே வைப்பார்! கதையை படித்த பின் நீங்களே உங்கள் அபிப்பிராயதை மாற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு!

      Delete
  27. விஜயன் சார், கடந்த பதிவில் மின்னும் மரணம் வெளி ஈடும் நாள் மற்றும் நேரம் பற்றி அடுத்த பதிவில் (அதாவது இந்த பதிவில்) சொல்வதாக சொன்னிங்க, இந்த பதிவில் அதனை உறுதி படுத்தினால் சந்தோஷம்! என்னை போன்றவர்கள் பயணத்தை சரியான முறையில் திட்டமிட (வீட்டில் அடி வாங்காமல்) முடியும்! ப்ளீஸ்!!

    ReplyDelete
  28. என்னை சிறுவயதில் மிகவும் கவர்ந்த கதை, தலை கேட்ட தங்க புதையல்! இன்னும் இந்த கதை மனதில் பசுமையாக உள்ளது!

    ReplyDelete
  29. அட்டைப்படங்கள் அழகாக வந்துள்ளன. இந்த முறை ராப்பர்க்கு அயல் நாட்டு ஓவியர்களின் கைவண்ண மில்லையோ..?

    சென்ற மறுபதிப்புகளில் பலூன் பெரியதாகவும், font-கள் சிறியதாகவும் இருந்தன! இந்த முறை அது போல் நேரா வண்ணம், ஒன்று பலூன்-க்கு ஏற்றார்போல் font-டை பெரியதாக்குதல் / font-க்கு ஏற்றார்போல் பலூனை சிறியதாக்குதல் அவசியம்.

    ம்ம், நீங்களும், எங்களிடம் மறுபதிப்புகளை வாசியுங்கள் என்று கெஞ்சி, கூத்தாடி, மன்றாடினாலும் பள்ளிக்கூட புத்தகங்களைப் போல் அதனுடன் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறதே...? Anyway, this time definitely I will give a try - phew!

    இவர்களுடன் மர்ம மனிதன் வருகிறாரா...? இல்லையா..? ஒரே மர்மமாக உள்ளதே..?

    ReplyDelete
  30. மாயாவி கதையின் முன் அட்டை சூப்பர்! பின் அட்டை சுமார் ரகம்! லாரன்ஸ்& டேவிட் அட்டை படம், சுமாருக்கும் மேல்! அட்டை படம் நமது அந்நாளைய புத்தகம்களை ஞாபகபடுத்துகிறது, கண்டிப்பாக நமது பழைய வாசகர்களை நம்பக்கம் திருப்ப இவை உதவும்!

    மறுபதிப்புக்கு கிடைத்து உள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது! இது நமது காமிக்ஸின் பழைய சிறந்த கதைகளை தொடர்ந்து தைரியமாக வெளி இட உதவும் ஒரு "டானிக்"! அண்ணாச்சி ஹாப்பி!

    ReplyDelete
  31. நமது கதைகளுக்கு மொழி பெயர்ப்பு செய்து தரும் அந்த இல்லத்தரசியின் தொழில் பக்திக்கு ஒரு ராயல் சல்யூட்! தொடரட்டும் அவரது சேவை!

    ReplyDelete
  32. // ஏப்ரல் துவக்கத்தின் இதழ்கள் மூன்றும் (லார்கோ + மாயாவி + லாரன்ஸ்) ஏப்ரல் மூன்றாம் தேதி இங்கிருந்து புறப்படும் ! //
    ஏப்ரல் மூன்றாம் தேதி புனித வெள்ளி விடுமுறை நாள் சார்! முடிந்தால் சனிகிழமை அல்லது வியாழகிழமை அனுப்பிவைக்கவும்!

    ReplyDelete
  33. வணக்க்க்க்க்க்கம்ம்ம்.!!!!

    ReplyDelete
  34. வணக்கம் சார் . வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  35. மாயாவி சிவா அவர்களே நேற்று நான் அனுப்பிய போட்டோ கிடைத்ததா?

    ReplyDelete
    Replies
    1. கிடைத்தது நண்பரே...மிக மங்களாக உள்ளது. (போட்டோவை போட்டோஎடுத்தது போல)

      Delete
  36. மாலை வணக்கங்கள் நண்பர்களே,

    நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு இருதயத்தில் ஏற்ப்பட்ட சின்ன அடைப்புக்கு, 'ஆண்ஜோ பிளாஸ்ட்' சிகிச்சை செய்துகொண்டு நேற்று வீடுதிரும்பியதால், நண்பர்கள் பத்து பேர் அவரை சந்திக்க அவர்வீட்டிற்கு சென்றோம்..!ஆண்டவர் அருளால் நலமாக இருக்கிறார், நண்பர்களுடன் இரண்டு மணிநேர சந்திப்பு அவரை நிறையவே மனமாற்றத்தையும், உற்சாகத்தையும் தந்தது என்பதே உண்மை..! அவர் வீட்டில் எடுத்த போட்டோக்கள் பார்க்க...இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. //ஆண்டவர் அருளால் நலமாக இருக்கிறார்,//
      ஆண்டவர்க்கும் நண்பர்களுக்கும் நன்றி

      Delete
    2. நண்பர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். தகவலை பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.

      Delete
    3. @ FRIENDS : அடடா !! மதியம் மதுரைக்குச் சென்றவன் இப்போது தான் இங்கே தலை நுழைக்கிறேன் !! சேலம் டெக்ஸ் விஜயராகவன் அனுப்பியிருந்த வாட்சப் செய்தியினையும் தாமதமாகவே பார்க்க நேரிட்ட போது கூட எதுவும் புரியவில்லை ; நண்பர்களின் ஜாலியான சந்திப்பு போலவென்று நினைநித்திருந்தேன் ! இங்கு வந்த பிறகே நண்பரின் சுகவீனம் பற்றிய விஷயத்தைப் படித்துத் தெரிந்து கொள்ள முடிந்தது ! சங்கடமாக உள்ளது ! பூரண நலம் பெற்று சீக்கிரமே எப்போதும் போல் துடிப்பாய் செயல்பட ஆண்டவனை வேண்டுவோம் !!

      Delete
    4. *இரவு வணக்கம் சார்.
      இன்று காலை நண்பர்கள் மாயாவி சிவா, ஸ்பைடர் ஶ்ரீதர் , அறிவரசு (எ)ரவி , யுவா கண்ணன் , மாமா கிட் ஆர்டின் கண்ணன் , சுசீ மற்றும் நான் , மாயாவி சாரின் காரில் கிளம்பி ஈரோடு சென்றோம் சார் . *நண்பர்கள் நாங்கள் ஸ்டாலின் ஜி அவர்களின் வீட்டின் உள்ளே நுழைந்த போது சோர்வாக இருந்த அவர் , பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே உற்ச்சாகமானார். அவரை ஆறுதல்படுத்தி உற்சாக படுத்தவே நாங்கள் சென்றோம். வெற்றியும் பெற்றோம்.! 😊
      *நட்பின் வலிமையை அது கொணரும் உற்சாகத்தை இன்று நேரடியாக கண்டேன் . இந்த நட்புகளை அளித்த காமிக்ஸ் நேசம் நிச்சயமாக மகத்தானது . வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே இல்லாமல் காமிக்ஸ் நட்பும் அடுத்த பரிமாணத்தை அடைய ஆரம்பித்துள்ளது .
      *போகும் வழியில் காலையில் பள்ளிபாளையம் கவுண்டர் மெஸ்சில் ஸ்பெசல் பன் பரோட்டா ,குடல் கறி,நாட்டுக்கோழி வருவல் , முட்டை விச்சு , முட்டை தோசை என காலை டிபனாக கிட் ஆர்டின் கண்ணன் வாங்கி தந்து நட்புக்கு மரியாதை செய்து மகிழ்ந்தார்.

      Delete
    5. சேலம் Tex விஜயராகவன் @

      // காலையில் பள்ளிபாளையம் கவுண்டர் மெஸ்சில் ஸ்பெசல் பன் பரோட்டா ,குடல் கறி,நாட்டுக்கோழி வருவல் , முட்டை விச்சு , முட்டை தோசை என காலை டிபனாக கிட் ஆர்டின் கண்ணன் வாங்கி தந்து நட்புக்கு மரியாதை செய்து மகிழ்ந்தார். //
      உங்க ஊரில் மதியான சாப்பாட்டதான் காலை டிபன் அப்படின்னு சொல்விங்களா? ஒரு புல் அசைவ சாப்பாட்ட கட்டு கட்டுன்னு கட்டிட்டு அத டிபன்னு சொல்லுறது நல்லா இல்ல ஜி!

      ரவி கண்ணன் @ எங்களுக்கு எல்லாம் கிடையாதா? அடுத்த முறை நாம் ஈரோடுடில் சந்திக்கும் போது இங்கு விஜயம் செய்ய ஏற்பாடு செய்யுங்க!

      Delete
    6. //ரவி கண்ணன் @ எங்களுக்கு எல்லாம் கிடையாதா? அடுத்த முறை நாம் ஈரோடுடில் சந்திக்கும் போது இங்கு விஜயம் செய்ய ஏற்பாடு செய்யுங்க!//

      @ Parani from Bangalore
      செஞ்சிட்டாப் போச்சு நண்பரே.

      @மாமா விஜயராகவன்

      " பத்த வெச்சுட்டியே பரட்டை "

      Delete
    7. ஆடார் கொடுத்ததை எனக்குகொடுத்துடுங்க...அப்பறம் இந்த பில்லை நீங்க ஒருத்தரே கொடுத்தாலும் சரி, நாலு பேர் சேர்ந்து கொடுத்தாலும் சரி...கொடுத்துட்டு வாங்க, வெளிய வெயிட் பண்றேன்னு சொன்னதை இங்கஅழக தோசையை திருப்பிபோட்ட மாதிரியே திருப்பிபோட்டு நட்புக்கு தாரைவத்திட்டிங்களே டெக்ஸ் விஜயராகவன்...கிரேட்..!
      (சாப்பிட்டதுக்கு எப்படியெல்லாம் பிட்டு போட்டு பில் கேக்கவேண்டியிருக்கு,,ஹாஹா..! :-)))

      Delete
    8. இதுல என்ன ஹாஹாஹா வேண்டிக் கெடக்கு. எல்லாருமே செட்டில் பண்ணிட்டாங்க.!
      இதுல ஒரு சந்தோசமா.??????(ஹாஹாஹா வேற)

      Delete
    9. இட்லி மட்டுமே போதும் என்று இருந்த என்னை இந்த பல ஐட்டங்களும் ஆர்டர் செய்து வாங்கி தந்த , சாப்பிட வைத்து மகிழ்ந்த அன்பை பாருங்கள் மாயாவி சார் . மற்றதெல்லாம் பிறகு. பஸ்சில் போய் அவதி படவேண்டாம் என உடனடியாக உங்கள் காரை எடுத்து வந்து , இந்த கடும் கோடை வெய்யில் கடுமை தெரியாமல் பார்த்து கொண்ட உங்கள் நேசமும் சற்றும் சளைத்ததல்லவே !!!

      Delete
    10. //பஸ்சில் போய் அவதி படவேண்டாம் என உடனடியாக உங்கள் காரை எடுத்து வந்து , இந்த கடும் கோடை வெய்யில் கடுமை தெரியாமல் பார்த்து கொண்ட உங்கள் நேசமும் சற்றும் சளைத்ததல்லவே !!!//

      +1

      ஆமாம் மாயாவி.!
      நட்பே பிரதானம் என்று அடிக்கடி சொல்வது இப்போது நன்றாக புரிகிறது.

      Delete
    11. அப்ப சேலம் Tex விஜயராகவன் கிட்ட கொஞ்சம் கவனமா இருக்கனும் போல! இதை "போட்டு" கொடுத்த சிவாவிற்கு நன்றி!

      Delete
    12. " இட்லி மட்டுமே போதும் என்று இருந்த என்னை இந்த பல ஐட்டங்களும் ஆர்டர் செய்து வாங்கி தந்த , சாப்பிட வைத்து மகிழ்ந்த நண்பர் யுவா (புயல்) கண்ணன் அன்பை பாருங்கள் மாயாவி சார் "....என்ற வரிகள் தானே சரியாவை டெக்ஸ் விஜயராகவன் அவர்களே..! :-))

      Delete
    13. //அப்ப சேலம் Tex விஜயராகவன் கிட்ட கொஞ்சம் கவனமா இருக்கனும் போல! இதை "போட்டு" கொடுத்த சிவாவிற்கு நன்றி!//

      போட்டு குடுக்கறதெல்லாம் ஒண்ணும் இல்லிங்க பரணி.
      நாங்க எப்பவும் பில்லை Share செஞ்சிதான் சாப்பிடுவோம்.
      மாயாவிக்கு குழந்தை மனசு.
      பச்சை மண்ணு., அத்தனை பேரும் ஒண்ணா இருந்த இடத்துல என்னோட பெயரை மட்டும் குறிப்பிட்டதை குழந்தையால ஏத்துக்க முடியல. அது நியாயம்தானே.! !!

      Delete
    14. உடம்பு சரியில்லாத மனுசனை பாக்கப் போயிட்டு.,
      ஹோட்டல்ல பரோட்டாவுக்கு யாரு மாவு பிசைஞ்சாங்க., குடல் கொழம்புல யாரு காரம் போட்டாங்க., சிக்கனுக்கு யாரு சால்ட் போட்டாங்கன்னு ஆராய்ச்சி பண்ணி., பஞ்சாயத்து பேசிக்கிட்டு இருக்கும் இவர்களின் நட்பின் ஆழம் நன்றாக புலப்படுகிறது.

      Delete
    15. @ ஸ்டாலின்....அதிக பணிச்சுமை, அலைச்சல் இல்லாமல் சற்றே ஓய்வாய், நலமாய் இருக்கவும் நண்பரே. Get well soon.

      Delete
    16. குடும்ப பணி காரணமாக என்னால் நண்பர்களுடன் இணைந்துகொள்ள இயலவில்லை (அடடா இந்தக் குடும்பத்தையெல்லாம் யாருங்க கண்டுபிடிச்சது?). சில நல்ல தருணங்களை இழந்திருக்கிறேன் என்பது புரிகிறது!

      இந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க!

      Delete
  37. சூப்பர் மாயாவி சார் ....காமிக்ஸ்...... நண்பர்களை உறவினர் போல மாற்றுவது தான் நமது காமிக்ஸின் பெருமை .....

    நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் .....

    ReplyDelete
    Replies
    1. உறவினர்களையும் விட நெருங்கிய உணர்வை காமிக்ஸ் நமக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது என்பது உண்மை தலீவா..!
      சேர்த்துவைத்த மொத்த காமிக்ஸையும் தொலைத்துவிட்டது போல உயிரோட்டமே இல்லாமல் அமர்ந்திருந்த ஸ்டாலின் ஸார்...நாம் பேசிவிட்டு கிழம்பும்போது காருக்கு அருகில் வந்து, காருக்குள் ஏதாவது காமிக்ஸ் மூட்டை இருக்கிறதா என ஆர்வமாய் பார்ப்பதுபோல, உள்ளே எட்டிபார்த்து,பாத்து போங்கப்பா..! என வாய்நிறைய சிரிப்புடன் வழியனுப்பிவைத்தது நிறைவான ஒன்று..!

      Delete
  38. கடந்தவார பதிவில் புதைந்து போன முக்கிய(எனக்குப்பட்ட) கமெண்ட்களை திரும்பிப்பார்க்கும் ஒரு குட்டி முயற்சி.....இங்கே'கிளிக்'

    ReplyDelete
  39. எடிட்டர் சார்,

    லாரன்ஸ் டேவிடின் பின் அட்டைப்படம் சூப்பர். அதுபோல் மாயாவியின் முன் அட்டைப்படம் நன்றாக வந்துள்ளது.
    மாயாவின் பின் அட்டை ரோஜர் மூருக்கு இரும்புக்கை மாட்டிவிட்டதுபோல் உள்ளது. :-)

    ReplyDelete
  40. இந்த வாரம் பதிவு ஒரு சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பது போல் தோன்றுவது எனக்கு மட்டும்தானா ?

    ReplyDelete
  41. Sir ஒரு சிறிய வேண்டுகோள் மி.ம Hardbound binding பற்றியது. Lmsல் பக்கங்களை விட்டு 1Cmக்கு மேல் வெளியில் நீட்டிக்கொண்டிருப்பதால் விளிம்பு மடங்கி விடுகிறது Pck binding போல பக்கங்களை ஒட்டினாற்போல அல்லது மிக குறைவான அளவு நீண்டாற் போல் இருந்தால் அவ்வளவு கனமான பக்கங்களை தாங்கி முனைகள் பழுதடையாமல் நீண்ட நாட்கள் உழைக்கும். இதனை நடைமுறையில் கொண்டு வருவதற்கு எவ்வளவு பிரச்சினைகளை நீங்கள் எஎதிர்கொள்ள வேண்டிவரும் என தெரியவில்லை. மேலும் இதனைவிட சிறந்த வழிமுறைகள் இருக்கலாம்.

    ReplyDelete
  42. நண்பர் ஸ்டாலின் அவர்கள் விரைவில் குணமாக கடவுளை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  43. ///அப்படியே கார்சனின் மகளான ?)லினா வை டெக்ஸ்வில்லரின் மகனுக்கு திருமணம் செய்துவைத்து இருவரையும் சம்மந்தி ஆக்கிவிடுவோம்.///

    மன்னித்துக் கொள்ளுங்கள் மடிப்பாக்கம் வெங்கடேஷ்வரன் அவர்களே.!
    லினா.. , கார்சன் ஒருதலையாய் காதலித்த மேடைப்பாடகி.
    லினாவுக்கும் அவளின் காதலன் ரே க்ளம்மன்ஸிற்க்கும் பிறந்த பெண் டோனா. டோனாவின் உயிரையும் மானத்தையும் கிட்வில்லர் காப்பாற்றியும் கூட இருவருக்கும் காதல் வரவில்லை .(ஏனெனில் அவர்கள் தமிழ் சினிமா பார்த்ததில்லை.)

    கிட் வில்லருக்கு கல்யாணம் செஞ்சிவைக்க இவ்வளவு அவசரப்படுறிங்களே.,
    எங்க தல கார்சனுக்கே இன்னும் கல்யாணம் ஆகலயே., அதப்பத்தி கொஞ்சமாச்சும் ஃபீல் பண்றிங்களா.,???

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் டோனாவை லீனா என்று மாறி டைப் செய்து விட்டேன்.

      Delete
  44. //ஏப்ரல் துவக்கத்தின் இதழ்கள் மூன்றும் (லார்கோ + மாயாவி + லாரன்ஸ்) ஏப்ரல் மூன்றாம் தேதி இங்கிருந்து புறப்படும் ! //

    அப்போ. ம.ம. மார்டின் கதி.????

    ReplyDelete
    Replies
    1. அவர்தான் மர்ம மனிதன் ஆயிற்றே!மர்மமாகத்தான் வருவார்.

      Delete
    2. KiD ஆர்டின் KannaN : ம.ம.மா. மே மா.வ. !

      Delete

  45. //சென்னை ; கோவை ; சேலம் ஆகிய மூன்று நகரங்களில் கவனம் செலுத்த உள்ளோம் ; இந்தப் பகுதிகளில் நல்ல reach உள்ள சேனல்கள் எவை ? //

    சேலம் :-
    கோடை FM (கொடைக்கானல்) தான் நல்ல ரீச் சார்.
    கொஞ்சம் சூரியன் FMம் உண்டு.
    ஹலோFM,,,, FM மிர்ச்சியெல்லாம் ரொம்பவும் குறைவு.

    ReplyDelete
    Replies
    1. FM விளம்பரங்களைவிட லோக்ககல் டிவி சேனல்களில் விளம்பரம் செய்வது அதிக பலன் தரும் என்பது என் கருத்து.
      டிவி பொட்டி இல்லாத இடமே கிடையாது. காலையில கறி வாங்க போனா மட்டன் ஸ்டால்ல கூட டிவி ஓடீட்டு இருக்கு.!!!

      Delete
    2. KiD ஆர்டின் KannaN @ உங்க பதிவுல இந்த "மட்டன்" ஸ்டால்ல விட மாட்டிங்க போல தெரியுதே! அவ்வளவு பிரியமா மட்டன் மேல :-)

      Delete
    3. மட்டனும் சிக்கனும் மண்ணில் மாந்தர்க்கு
      கண்ணிரெண்டு என்பதாம் காண்.

      Delete
    4. //மட்டனும் சிக்கனும் மண்ணில் மாந்தர்க்கு
      கண்ணிரெண்டு என்பதாம் காண்.///

      :)

      Delete
  46. சார் அப்படியே தமிழ் காமிக்ஸிலே நம்பர் 1 கதை தொகுப்பு எப்போது எங்கே என்று சொல்லிவிட்டால் வசதியாக இருக்கும்

    ReplyDelete
  47. இதைவிடவும் முதல் பிரதியை நான் பெற்றிட்டால் என் ஜென்மம் ஜாபல்யமடையும்...

    ReplyDelete
  48. // ஒரு புதுப் பதிப்பகத்தின் பரிச்சயம் நமக்குக் கிட்டியுள்ளது ! 'எதைப் போட..? எதை வேண்டாமென்று சொல்ல ? ' என்று விழி பிதுங்கும் விதமுள்ளது அவர்களது படைப்புகள் //

    இதில் விழி பிதுங்க ஒன்றுமேயில்லை சார். எல்லாத்தையும் வரிசையா போட்டுவிடுங்க.!! ப்ராப்ளம் சால்வ்டு..!!!

    ReplyDelete
    Replies
    1. அட அட அட
      பயலுக்கு எம்பூட்டூ
      அறிவு

      இதை தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதிட்டு பக்கத்தில்லயே நீயும் உக்கார்ந்துக்கோ
      உனக்கு பின்னால வர்ற சந்ததிகள் இதை பார்த்து படிச்சு தெளிஞ்சு புரிஞ்சுப்பாங்க

      Delete
    2. ஏம் பெருசு.? நீரு எல்லாத்தையும் அங்கன எழுதிட்டு உட்காந்துருவீரா.??

      Delete
    3. புது கதைகள் கி.நாவலாக இல்லாமல் இருந்தால் நீங்கள் கூறியது சூப்பர்தான்.

      Delete
    4. அருஞ்சொற்பொருள்.:-

      நீரு - நீங்கள்
      உட்காந்துருவீரா - உட்கார்ந்து விடுவீர்களா.

      Delete
    5. அனுபவங்கள் தான் வாழ்ககை

      எமக்குப் பின் நீர் அங்கே உட்காரனும்னு ஒரு அவா

      Delete
  49. டியர் எடிட்டர் ஸர்ர்,
    அட்டை படங்கள் நன்றரக வந்துள்ளது.

    ReplyDelete
  50. மின்னும் மரணத்துடன் லயனின் 250 ஆவது இதழா? சூப்பர் ஸர்ர். இதய அறுவை சிகிச்சை செய்த நண்பர் ஸ்டாலின் அவர்கள் சீக்கிரம் குணமடைய பிர்ரர்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மி.ம.த்துடன் 250வது இதழா?இது உண்மையா?

      Delete
    2. வரூரூரூரூம்
      ஆனா வராது

      Delete
  51. சர்வாதிகாரியின் சிறுவதில்....பகுதி -1
    (நண்பர் ஸ்டாலின் நேற்று பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் )
    அப்ப நான் காலேஜ் சேர்ந்த சமயம்,அப்போதைய சாதனையான லயன் சூப்பர் ஸ்பெஷல் வந்திருந்த நேரம், நானும் என்னோட நண்பர் ராஜேந்திரனும் சிவகாசிக்கு பஸ் ஏறி காலையில பத்துமணிக்கு லயன்காமிக்ஸ் ஆபிஸுக்கு போனோம். "எடிட்டரை பாக்கவந்திருக்கிறோம்..அவரு இருக்காரா..?" கேட்டோம்.
    " அவரு 11 மணிக்கு தான் வருவாரு வாங்க...இதுதான் பிரிண்டிங் ஏரியா..இது குடோன்...இது புரூப் பாக்கற செக்ஷன்...டீ சாப்பிடுங்க.." நாங்க யாருன்னு தெரியாம எங்களுக்கு டீ வாங்கிகொடுத்து பிரஸ் புரா சுத்திகாட்டினார் அங்க வேலை பார்த்தவர். திகில் காமிக்ஸ் 'விண்வெளி படையெடுப்பு' பிரிண்டிங் ஓடிட்டிருந்தது, சற்றைக்கெல்லாம் என் வயது தோற்றம் உள்ள 20 வயது வாலிபர் விறுவிறுவென அந்த குட்டி ஆபிஸ் ரூமுக்குள் சென்று அமர்ந்துகொண்டார்.
    வேலைபார்ப்பவர் அந்த வாலிபர் டேபிளுக்கு எதிரில் இருந்த சேரில் உட்காரவைத்தார், ஆசிரியர்ன்னா எங்க அப்பா வயசு தாண்டியிருக்கும்ன்னு எதிர்ப்பாத்து போன எனக்கு..நம்ம வயசுக்காரா ஆசிரியர் என ஆச்சரியப்பட்டு உட்கந்திருந்தேன். அவரு என்னை தலையை தூக்கியே பார்க்கலை, அவரு பாட்டுக்கு ஏதேதோவெல்லாம் படிச்சிட்டு, திருத்திட்டு, அவரு வேலையை பாத்துட்டு இருந்தார். ஒரு 20 நிமிஷம் கழிச்சி தலைதூக்கி பார்த்து "எந்த ஊர் ஏஜெண்ட் நீங்க ? என்ன விஷயம் ? " ன்னு கேட்டார்.
    "சார்...நான் ஏஜெண்ட் இல்லீங்க, லயன்காமிக்ஸ் வாசகர்..! " முழிச்சிட்டே ன்னு சொன்னேன். அவரு என்னைவிட பெரிசா முழிச்சிட்டே"என்னது வாசகரா..! இத முதல்லயே சொல்லக்கூடாதா ஸார்..!"
    என கையில் இருந்த பையில்,பேனா,பேப்பர்,ஸ்கேல் எல்லாத்தையும் போட்டுட்டு சீட்டைவிட்டு எந்திருச்சி நின்னுட்டார்.அதுவரை வெறப்பா இருந்த முகம் மாறி, சிரிச்சிட்டே பேசஆரம்பிச்சார் பாருங்க...
    இங்கு கிட் ஆர்ட்டின் கண்ணன் கமெண்ட்: "ஆளே இல்லாத ஆபிசை தேடி ஒரு ஏஜெண்ட் சிக்கிட்டருன்னு அரைமணி நேரம் 'சீன்' போட்டிருக்காரு நம்ம எடிட்டர், இது தெரியாம அவரு வேலபாத்தருன்னு நம்பிட்டிங்க..ம்..மேலபோங்க.."

    தொடர்ச்சி...12:00 மணிக்கு.

    ReplyDelete
    Replies
    1. அடடே! நல்லா இருக்கே! :) கிச்சுகிச்சு மூட்டும் காமெடி நடை! 12 மணிக்காக வெய்ட்டிங்...

      ( எடிட்டரை முதன்முதலில் சந்தித்தது பற்றிய நம் நண்பர்களின் ஃப்ளாஷ்பேக் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள தனிப் பதிவே போடலாம் போலிருக்கே! பயங்கர தமாஷா இருக்கும்ன்றது நிச்சயம்!)

      Delete
    2. அருமை,அருமை.சிறு வயதிலேயே வாசகர்களை ஆர்வத்துடன் மதித்துள்ளார்.12 மணிவரை காத்துள்ளேன்.

      Delete
    3. சர்வாதிகாரியின் சிறுவயதில்....பகுதி -2
      (நண்பர் ஸ்டாலின் நேற்று பகிர்ந்து கொண்ட அனுபவங்கள்)

      'வாசகர்' என்ற ஒரு சொல் அந்த மனிதர் மனதில் என்ன மாயம் செஞ்சதோ தெரியலை, இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு ஆசிரியர் பேச ஆரம்பிச்சாரு பாருங்க...பேசுறாரு,பேசுறாரு, பேசிட்டே இருக்காரு..! என் காதைமட்டும் அவர் கிட்ட கொடுத்துட்டு, ஆன்னு அவருபின்னாடியே போனேன்.
      இந்த எழுத்த இப்படி செட்பன்றோம், வர்ற இதழ்ல இந்த கதை அறிமுகம் செய்யறோம், இந்த கதை இந்த சைஸ்ல போடப்போறோம், வரப்போற மலருக்கு இதுதான் அட்டைபடம், இது தலைப்புன்னு விவரத்தை அடுக்கிட்டே ஆபிஸை சுத்திவந்து சுத்திவந்து, மூணுமணி நேரம் விடாமா அப்படி பேசினாரு போங்க..!
      அப்ப முத்துகாமிக்ஸ் சம்மர் ஸ்பெஷல் ரெடியாயிட்டிருந்தது. முதல் எட்டு பக்கம் வால் பையன் 'அப்பு' கலர்ல சுடசுட பிரிண்டிங் ஆயிட்டிருந்தது. அந்த பிரிண்டான பெரிய சீட்டை அவரே உட்கார்ந்து 'கட்' பண்ணி பாக்கெட் சைசுக்கு சரியா இருக்கான்னு அழகு பாத்து, "இதை இங்க வந்துட்டு போன நினைவாக வெச்சிகோங்க" ன்னு கொடுத்தப்போ எனக்கு வார்த்தையே வரலை..!

      அடுத்து ஒரு காரியம் செஞ்சாரு பாருங்க...
      அப்ப நமக்கு சின்னவயசு, நூறு ரூபாய் பணம்கிறது பெரிசு, சந்தா கட்டினா அப்ப ஒரு 'டீசர்ட்' இலவசம், நமக்கு அப்ப வசதியில்லை...டக்குன்னு பிரோவில இருந்து 'லயன்காமிக்ஸ்' கிரீடம் வச்ச சிங்கம் படம் போட்ட ஒரு டீசர்ட்டை எடுத்து கொடுத்து "இதை என் பரிசா வெச்சுக்கோங்க" ன்னு கொடுத்தாரு பாருங்க...அப்பப்பா மறக்கவேமுடியாது ! இப்ப நினைச்சாலும் அவ்வளவு சந்தோசமா இருக்கு போங்க..!
      வாசகர்களுக்கு அவரு எவ்வளவு முக்கியத்துவம் தர்றாருன்னு அன்னையில இருந்து பாக்கிறேன், இப்பவரையும் மனுஷன் மாறவேயில்லை. வாசகர்கள் மேல என்ன பிரியம் பாருங்க...வார்த்தையே வரலை போங்க..!
      "அப்புறம் ஸார்...உங்களை பாக்கவந்ததுக்கு இன்னொரு காரணம் இருக்கு..." என விஷயத்தை சொன்னதும் ஆசிரியர் முகம் மறுபடியும் வெறப்பாயிடிச்சி..!

      தொடர்ச்சி...இரவு

      Delete
    4. சஸ்பென்ஸ் தாங்கமுடியல!ஒரே தம்மில் போடுங்க நண்பரே!!

      Delete
    5. @Madipakkam Venkateswaran

      ஐய்யயோ...அடிச்ச டைப்புக்கே கைகொஞ்ச்சுது...அதுவேற இல்லாம ஒரே தம்முல போட்டா எல்லாரும் சேர்ந்து கமெண்ட் போடுற இடத்துல இவ்வளவு நீநீநீளாமான்னு துவெச்சுருவாங்க...! மாலை டைப் அடித்து இரவு போடுகிறேன் நண்பரே..!

      Delete
    6. @ FRIENDS : ஸ்டாலின் சாரை அந்நாட்களில் சந்தித்தது ; பேசியது இத்யாதியெல்லாம் சுத்தமாய் நினைவில் இல்லையெனினும், அவர் என்ன கேட்டு எனக்குப் புளியைக் கரைத்தார் என்பது மட்டும் நினைவில் நிற்கிறது ! அதைச் சொல்லி சஸ்பென்சை உடைப்பது நியாயமாகாது என்பதால் பெவிகால் பெரியசாமிக்கு அழைப்பு விடுத்து விடுகிறேன் !

      பொதுவாக அந்நாட்களில் நம்மைத் தேடி வாசகர்கள் வருவது அரிதிலும் அரிது ; அவ்விதம் வருபவர்கள் கூட "எடிட்டர் இவர் தானா?? !" என்று என்னை பார்த்தவுடன் முழிக்கும் முழி ரொம்பவே பரிதாபமாய் இருப்பது வாடிக்கை ! பற்றாக்குறைக்கு அந்நாட்களில் ஆபீசுக்கு வருகை தரும் ஏஜெண்ட்கள் கூட, "இந்தச் சுள்ளானிடம் என்னத்தைப் பேசுவது ?" என்ற பாணியில் நமது டெஸ்பாட்ச் பிரிவினரிடம் பேசி விட்டு நடையைக் கட்டி விடுவார்கள் ! So கொஞ்சமாச்சும் பெரிய மனுஷத் தோரணையை maintain செய்யும் ஒரு மகாசிந்தனையில் புசு புசு மீசையோடும் , விறைப்பான பாடி லாங்குவேஜோடும் வலம் வருவது உண்டு ! கூடியமட்டிலும் வாசகர்கள் வந்தால் தலையைக் காட்டாமல் இருந்துவிட்டால் தேவலையே என்பதே அந்நாட்களின் எனது சித்தாந்தம் ! Probably நண்பர் ஸ்டாலின் வந்த போது அந்த 'அலெர்ட் ஆறுமுகம்' பாணியில் விறைப்பாக இருந்திருப்பேன் !

      இதை விட இன்னொரு காமெடி 1990-ல் நிகழ்ந்தது - இன்னுமொரு வாசகரோடு ! சமயம் வாய்க்கும் போது சொல்கிறேனே !

      Delete
    7. //////இதை விட இன்னொரு காமெடி 1990-ல் நிகழ்ந்தது - இன்னுமொரு வாசகரோடு ! சமயம் வாய்க்கும் போது சொல்கிறேனே !////////

      இப்பவே சொல்லுங்க சார் ...காமெடிக்கு ஏது சமயம் எல்லாம் ??
      ப்ளீஸ் ....

      Delete
  52. //இங்கு கிட் ஆர்ட்டின் கண்ணன் கமெண்ட்: "ஆளே இல்லாத ஆபிசை தேடி ஒரு ஏஜெண்ட் சிக்கிட்டருன்னு அரைமணி நேரம் 'சீன்' போட்டிருக்காரு நம்ம எடிட்டர், இது தெரியாம அவரு வேலபாத்தருன்னு நம்பிட்டிங்க..ம்..மேலபோங்க.."///


    சத்திய்மாக இது என் வார்த்தைகள் கிடையாது.
    "ஏஜெண்ட்டுன்னு நினைச்சி பிஸியா காட்டியிருப்பாரு. வாசகர்னு தெரிஞ்சதும் வேலையெல்லாம் தூக்கிப் போட்டு இருப்பாரு."

    மற்றவை கற்பனை.

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவில் உங்களை இருமுறை( உங்கள் பார்வையில்)மனம் நோக வம்புக்கிழுத்தபடி எழுதியமைக்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்..கிட் ஆர்ட்டின் கண்ணன் அவர்களே..! இனி இவ்வண்ணம் தொடராமல் பார்த்துக்கொள்கிறேன்...__/\__..!

      Delete
    2. சிங்கத்தின் சிறுவயதில் ,விருமாண்டி பட ஸ்டைலில் அருமையாக உள்ளது நண்பரே!!

      Delete
    3. உங்களின் "க்ளிக்"ரசிகன் நான்,ஒருமுறை கமெண்ட் போட்ட சில நிமிடங்கள் ஒரு "க்ளிக்" வெளியிட்டீர்கள்.போராளி படத்தில் கஞ்சகருப்பு டீ கடை திறப்பு விழா பேனர் காட்சிதான் ஞாபகம் வந்தது.!!

      Delete
    4. வெங்கட் ...அது நாடோடிகள் ....:-)

      ஆனால் உண்மையிலேயே மாயாவிஜி வானத்தை போல மனம் படைத்த மன்னவர்தான் ..:-)

      Delete
  53. மின்னும் மரணம் Apiril 19 th! My parents are coming to Maldives on 16 th april....... ada poongappa... so ..... vada pochey

    ReplyDelete
    Replies
    1. Tex willer rasigan!!! : அட...Air -Mail -ல் அனுப்பினால் ஒரு வாரத்தில் வந்து சேர்ந்திடுமே - இதற்கென நவம்பர் வரைக் காத்திருப்பானேன் ?

      Delete
  54. ஆனால் Novemberல் India vandhu Padipomla....

    ReplyDelete