Saturday, March 07, 2015

பன்னிரண்டு - Part 2 !

நண்பர்களே,

வணக்கம். ஞாயிறு அதிகாலை மூட்டைகளைக் கட்டிக் கொண்டு  சின்னதானதொரு பயணம் செல்ல வேண்டியிருப்பதால் பதிவுக்கு ஒரு நாள் புரமோஷன் ! டிடெக்டிவ் நாயகர்களைப் பற்றி போன ஞாயிறு நாம்  பார்க்கத் துவங்கியதும், இடைப்பட்ட தருணத்தில் மார்ச் இதழ்கள் வெளியானதும் சில நாட்களுக்கு முந்தைய நிகழ்வுகள் போலத் தோன்றவில்லை தலைக்குள் ! அடுத்தடுத்து எதற்குள்ளாவது தலைநுழைத்து வருவதால் சதா நேரமும் fast forward -ல் இருப்பது போலொரு உணர்வு !!   Anyways, சென்ற வாரத்தின் தொடர்ச்சியை பார்ப்போமே ?! 

பட்டியலைத் தொடங்கும் முன்னே சின்னதாய் ஒரு விஷயம் : இந்தப் பட்டியல் எந்தவொரு குறிப்பிட்ட வரிசையிலும் இல்லை என்பதால் நம் சீனியர் அறிமுகங்கள்  -ஜூனியர் அறிமுகங்கள் என்ற பாகுபாடிராது ! ஞாபகப்படுத்திப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுவதை இங்கே பதிவிடுகிறேன் ! லயன் காமிக்ஸ் வெளியான துவக்க ஆண்டில் இதழ் # 6 (??) தலைக்காட்டியதொரு துப்பறியும் குழுவை இன்றைக்கு நம்முள் எத்தனை பேருக்கு நினைவிருக்குமோ நானறியேன் - ஆனால் "மீட்போர் ஸ்தாபனம்" என்ற பெயரோடு "கபாலர் கழகம்" இதழில் அறிமுகமான துப்பறியும் டீமே இந்த வாரப் பட்டியலைத் துவக்கும் நபர்கள் ! THE SEEKERS என்ற பெயரோடு இங்கிலாந்தில் 1966 முதல் '71 வரை தினசரி ஸ்ட்ரிப்களாக இவர்களது 27 சாகசங்கள் வெளியாகியுள்ளன ! ஜேகப் ; சுசன் என்ற முக்கிய கதாப்பாத்திரங்களும், இந்தத் தொடரின் மையப் புள்ளிகள் !  லேசாக மாடஸ்டி பிளைசியின் ஜாடையிலிருக்கும் சித்திரங்களோடு 5 ஆண்டுகள் ஓடிய இந்தத் தொடர் அத்தனை பெரிய வெற்றியை ஈட்டவில்லை ; ஆனால் அவை 'மோசமில்லை' என்பதே எனது அபிப்பிராயம்   ! 

பட்டியலில் அடுத்த இடமும் ஒரு இங்கிலாந்துப் படைப்புக்கே ! THE HUNTERS என்ற பெயரோடு Fleetway தங்களது BATTLE வார இதழில் வெளியிட்டு வந்தனர் ! பரபரப்பான அந்த ஜோடியே நமது லயனில் அறிமுகமான இரட்டை வேட்டையர் ! இங்கிலாந்தின் கதாசிரியரும், ஒரு ஸ்பானிஷ் ஓவியரும் கூட்டணி போட்டு உருவாக்கிய இந்தக் கதைகள் நம் இதழ்களில் சக்கைபோடு போட்டன ! அதிலும் "ஆப்பிரிக்க சதி"  என்ற இதழ் மறக்க இயலா ஒரு ஹிட் இதழ் ! இங்கிலாந்தின் உளவுத் துறைக்காகப் பணியாற்றும் இந்த ஜோடி டிடெக்டிவ்கள் என்று சொல்வதை விட ஆக்ஷன் மன்னர்கள் என்று வர்ணிப்பதே பொருத்தமாக இருக்கும் !

Next on the list - இவரும் ஒரு பிரிட்டிஷ் தயாரிப்பே...! டென்னிஸ் ஆட்டக்காரராகவும், இரகசிய ஏஜெண்டாகவும் டபுள்-ஆக்ட் கொடுத்த ஜான் மாஸ்டர் ஒரு "அழகான ஹீரோ" என்பதில் சந்தேகமே இருக்க முடியாது ! மொத்தம் இரண்டே கதைகள் மட்டுமே உருவாக்கப்பட்டது தான் ஏனென்று புரியவில்லை ; ஆனால் அந்த இரண்டையுமே நாம் வெளியிட்டு புண்ணியம் சேர்த்துக் கொண்டோம் ! (சதி வலை & மாஸ்கோவில் மாஸ்டர்). அட்டகாசமான சித்திரங்கள், அதிரடி ஆக்ஷன் + தெளிவான storyline இந்த மினி தொடரின் அடையாளங்கள் !   

பட்டியலின் டிடெக்டிவ் # 15 தான் இம்மாதம் ஒளிவட்டத்தை ஏற்று நிற்கும் ராபின் ! 1988-ல் இத்தாலியில் உருவாக்கப்பட்ட இந்த அலட்டல் இல்லா நாயகர் 2005 வரை அங்கே 200 சாகசங்களில் வலம் வந்துள்ளார் ! NICK RAIDER என்ற ஒரிஜினல் பெயர் கொண்ட இம்மனுஷனை உருவாக்கியவர் டெக்ஸ் வில்லர் கதைகளின் ஒரு முக்கிய கதாசிரியரான கிளாடியோ நிஸ்ஸி ! ராபினை படைத்திட ஒரு inspiration ஆக இருந்தது ஹாலிவுட் நடிகரான ராபர்ட் மிட்சம் செய்த சில டிடெக்டிவ் ரோல்கள் தானாம் ! ராபினோடு அவ்வப்போது துணை வரும் மார்வின் என்ற உதவியாளருக்கும் கூட ஹாலிவுட்டின் பின்னணி உண்டு - நடிகர் எட்டி மர்பி ரூபத்தில் ! இத்தாலிய காமிக்ஸ் ஜாம்பவான்களான பொனெல்லியின் படைப்புகளுள் ஒரு out & out துப்பறியும் நாயகர் என்ற பட்டத்துக்குத் தகுதியானவர் ராபின் மாத்திரமே என்று கூட சொல்லலாம் ! இதர கதைவரிசைகள் சகலமும் ஹாரர் ; கௌபாய் ; எதிர்காலக் கதைகள் ; கிராபிக் நாவல்கள் ; வரலாற்றில் நிகழும் சாகசங்கள் என்ற பாணியில் இருந்திட்ட போது ராபின் மட்டும் ஒரு அக்மார்க் போலீஸ்காரராய் வந்து வெற்றி ஈட்டியது ஸ்பெஷல் ! 

Robert Mitchum


நமது இதழ்களில் ராபின் தலைகாட்டத் துவங்கியது '90 களின் மத்தியில் என்றொரு ஞாபகம் ! ஒரே ஒரு இதழ் நீங்களாய் பாக்கி அனைத்துக் கதைகளுமே எவ்வித சிக்கல்களுமின்றி கரை சேர்ந்துள்ளன இது வரை ! ராபினின் இதழ் # 100 & 200 மட்டும் வண்ணத்தில் வெளியாகியுள்ளன ! LMS -ல் சாகசம் # 100 வெளியிட்டுள்ள நிலையில் - எஞ்சி நிற்கும் 200-வது இதழை கலரில் வெளியிடலாமா ? What say all ? (இந்த இதழின் வர்ணங்கள் அட்டகாசமாய் உள்ளன என்பது கொசுறுச் சேதி !)

பட்டியலுக்குள் தலைவிடும் அடுத்த ஆசாமியும் ஒரு கலப்படமில்லா டிடெக்டிவ் என்றே சொல்லலாம் ! ஒப்புக்குப் பத்திரிகை ரிபோர்டர் என்று மனுஷன் சொல்லிக் கொண்டாலும், பத்திரிகை ஆபீஸ் பக்கமாய் அவர் தலை வைத்துப் படுத்த நாட்கள் சொற்பமே என்று நினைக்கிறேன் ! Yes, நமது அபிமான 'இடியப்பப் புகழ்' ரிப்போர்டர் ஜானி தான் பட்டியலில் # 16 ! "இரத்தக் காட்டேரி மர்மம்" என்ற இதழோடு நமது திகில் காமிக்ஸில் 1986-ல் தலை காட்டிய இந்த பிரான்கோ-பெல்ஜிய வீரரின் ஒரிஜினல் பெயர் RIC HOCHET ! ஜெர்மனியில் ரிக் மாஸ்டர் என்றும், இத்தாலியில் ரிக் ரொலண்ட் என்றும், பின்லாந்தில் ரிக்கு ஒஸ்கா என்றும், ஹாலந்தில் ரிக் ரிங்கர்ஸ் என்றும், சுவீடனில் ரிக் ஹார்ட் என்றும் அறியப்படும் இந்த lovable hero உருவானது 1955-ல் ! இது வரையிலும் 78 ஆல்பம்கள் வெளியாகியுள்ளன பிரெஞ்சு மொழியில் ! (நாம் வெளியிட்டுள்ளது...??) வழக்கமான டிடெக்டிவ் கதைகளின் பாணியிலிருந்து கொஞ்சம் விலகி நிற்பதே ஜானியின் ஸ்பெஷாலிட்டி என்று சொல்லலாம் ! ஒரு சின்ன புள்ளியை மத்தியில் இட்டு விட்டு அதைச் சுற்றி வளைவும், நெளிவுமாய் கோலங்களை சகட்டு மேனிக்குப் போட்டு விட்டு அத்தனையையும் கடைசி இரு பக்கங்களில் சரி செய்வதே இந்தக் கதை பாணி ! பிரான்க்பர்ட் புத்தக விழாவின் போது இவரது ஆல்பத்தைப் படம் பார்த்து தேர்வு செய்து விட்டு, கதையையும் வாங்கியான பின்னே, பிரெஞ்சு மொழிபெயர்ப்பு கைக்கு வந்தான பிறகு நான் முழித்த முழி இன்னமும் நினைவில் உள்ளது ! ஆனால் இடியாப்பங்களை ரசிப்பதும் நமக்குப் பிடித்த பொழுதுபோக்கு என்பதால் ஜானியின் ராஜ்ஜியம் தொடர்கிறது ! 

தொடர்பவர் ஒரு புராதன ஆசாமி ; ஆனால் நாவல் உலகில் அதகள நாயகராய் வலம் வந்தவர் ! தொழில்முறை வழக்கறிஞர் என்ற போதிலும் இவரொரு முதல்தர டிடெக்டிவ் என்பதில் சந்தேகமே கிடையாது ! யெஸ்.. கொஞ்ச காலம் மட்டும் காமிக்ஸ் ஸ்ட்ரிப்களாகவும் சுற்றி வந்த பெர்ரி மேசன் தான் பட்டியலில் அடுத்தவர் ! 1950-களில் உருவாக்கப்பட்ட இவரது கதைகளில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமே இராது ; இது வரை மூன்றோ-நான்கோ கதைகளை நாம் வெளியிட்டுள்ளது போல் நினைவு எனக்கு ! 

புராதனத்தின் தொடர்ச்சியாய் முதலைப்படை பட்டாளம் சகிதம் சுற்றி வந்த ப்ரூனோ பிரேசிலையும் இந்த லிஸ்டுக்குள் நுழைத்துக் கொள்ளலாம் ! உருவான நாட்களில் ஜேம்ஸ் பாண்ட் பாணியை மனதில் கொண்டிருந்தார் கதாசிரியர் கிரெக் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது ! 1969-1995 வரை 11 ஆல்பங்களில் சாகசம் செய்த ப்ரூனோ இன்று நம் மனங்களில் மட்டுமே இடம் பிடிக்கும் நிலைமையில் உள்ளதே நிஜம் ! 

பட்டியலின் அடுத்த டிடெக்டிவ் துளி அறிமுகம் கூடத் தேவைபட்டிடா ஒரு அசாத்திய ஜாம்பவான் ! THE DARKNIGHT DETECTIVE - வழக்கமான துப்பறியும் பாணிக்கு அந்நியமானவர் எனினும், இவரின்றி இப்பட்டியல் முழுமையாகாதே ! உலகெங்கும் கொண்டாடப்படும் BATMAN -ஐ மீண்டும் நம் இதழ்களுக்குக் கொண்டு வர இயன்ற முயற்சிகளைச் செய்திடுகிறோம் ; fingers crossed !

"ரொம்பப் பிரபலம்" என்ற நிலையிலிருந்து -'relatively lesser known' என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர்கள் அடுத்த இடங்களைப் பிடிக்கும் டிடெக்டிவ்கள்  ! And moreover - மூவருமே பிரான்கோ-பெல்ஜியக் குழந்தைகள் ! 

PAUL FORAN என்ற துப்பறியும் ஹீரோ நமக்குப் "பிசாசுக் குரங்கு" வாயிலாக அறிமுகம் ! இவரது ஓவியங்களை வரைந்தவர் நமக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமான (மாயாவி புகழ்) ஜீசஸ் ப்ளாஸ்கோ ! 1968-ல் துவங்கிய இவரது சாகசங்களில் நாம் மூன்று ஆல்பங்களை வெளியிட்டுள்ளோம் ! (அவற்றின் பெயர்கள் நினைவுள்ளதா guys ?)
அடுத்தவர்  சைக்கிளில் சாவகாசமாய் சுற்றி வரும் கோட் போட்ட கண்ணாடிக்காரர் ! இது வரை இரண்டே இதழ்களில் நம்மிடம் இவர் தலைகாட்டியிருப்பினும், தொடரும் காலங்களில் இவருக்கு கூடுதலாய் வாய்ப்புகள் தருவதில் தவறிராது என்றே சொல்லத் தோன்றுகிறது ! Yes - டிடெக்டிவ் ஜெரோம் தான் நான் குறிப்பிடும் ஆசாமி ! இது வரை 24 ஆல்பங்கள் வெளியாகியுள்ள இத்தொடருக்கு பிரான்சில் நல்ல வரவேற்புள்ளது ! இவருக்கொரு இரண்டாம் இன்னிங்க்ஸ் தான் தந்து பார்ப்போமா folks ? 

தொடர்பவர் புராதன டிடெக்டிவ் ; ஆனால் நிறையவே ரசிகர்களை ஈட்டியுள்ள ஆசாமி ! நம்மைப் பொறுத்த வரை இவர் இன்னமும் முழுமையாய் பாஸ் மார்க் வாங்கியிருக்கா ஒரு man on trial ! 1956-ல் பெல்ஜியத்தில் உருவாக்கப்பட்ட ஜில் ஜோர்டான் - ஒரு பாரிஸ் நகரத்து டிடெக்டிவ். எந்தவொரு சிக்கலும் இவருக்குக் கஷ்டமானதல்ல ! லொட லோடவென பேசிக் கொண்டே திரியும் உதவியாளனோடு இவர் செய்யும் சாகசங்கள் ஐரோப்பிய காமிக்ஸ் வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ! ஆண்டுக்கொரு ஆல்பம் என இவரது கதைகளை சற்றே நிதானமாய் கையாண்டு வரும் நாம் - அவருக்குக் கூடுதலாய் வாய்ப்புகள் தரலாமென்று நினைக்கிறீர்களா ? 

இந்த வாரத்து டஜனைப் பூர்த்தி செய்பவர் இந்தப் பட்டியலுக்குள் ஒரு surprise inclusion என்றே சொல்லலாம் ! ரேஞ்சர் பிரிவில் முக்கிய அதிகாரிகள் என்ற முறையில், நம் இரவுக்கழுகாரையும், கார்சனையும் இங்கே இணைப்பதில் தவறில்லை என்று நினைத்தேன் ! மர்மங்களை துப்புத் துலக்கும் நேரங்களை விட, பலரது பல்செட்களை மாற்றி அமைப்பதே இவர்களது பணியும், பாணியும் என்றாலும் கூட - 'தலைவாங்கிக் குரங்கு' ; 'மரணத்தின் நிறம் பச்சை' போன்ற மர்ம த்ரில்லர்களை முன்னின்று தீர்த்து வாய்த்த பெருமை இவர்களைச் சாரும் அன்றோ ? So இன்றைய ஒரு டஜன் டிடெக்டிவ்களின் பட்டியலை முழுமைப்படுத்துகிறார் 'தல' ! 

மாடஸ்டி ; சார்லி போன்ற நாயக / நாயகியரும் ஏதோ ஒரு விதத்தில் இந்தப் பட்டியலுக்குள் நுழையத் தகுதி வாய்ந்தவர்களா ? - இல்லையா ? என்ற விவாதங்களை உங்களிடம் ஒப்படைத்து விட்டு, இப்போதைக்கு நான் ஊருக்குக் கிளம்பும் ஏற்பாடுகளைச் செய்யக் கிளம்புகிறேன் ! இந்தப் பட்டியலில் உள்ள நாயகர்கள் தவிர, one shot டிடெக்டிவ்கள் நிறையவே உண்டு நம் அணிவகுப்பில் ; but அவர்களை இங்கே  நுழைக்க நான் முயற்சிக்கவில்லை என்பதும் postscript ! So this is just a small list !

See you around soon ! Adios for now ! 

P.S : சென்ற பதிவில் கேட்டிருந்த ரிப் கிர்பி கதைகளின் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு முதலில் (சரியான) விடை அனுப்பியுள்ள நண்பர் R கெளதம் நிதிஷ் - குட்டிப் பரிசான அந்த ரிப் கிர்பி வண்ண இதழைப் பெற்றிடுவார் - நான் ஊருக்குத் திரும்பியான பின்னே ! உங்கள் முகவரியை அனுப்பிடுங்களேன் நிதிஷ் ! 


கடல் கடந்த கார்சனின் கடந்த காலம் . போனெல்லி நிறுவனத்தின் நிர்வாகி Mrs.Ornella நமது இதழுடன்:  https://www.facebook.com/LionMuthuComicsSivakasi/photos/a.1388570328040814.1073741828.1388544204710093/1616849731879538/?type=1

241 comments:

  1. என்னது... சனிக்கிழமையே பதிவா.....

    ReplyDelete
  2. முன் சீட்ட புடிச்சாச்சி

    ReplyDelete
  3. நாங்களும் வந்துட்டோம்ல

    வழக்கமா நாளைக்கிதானே வரும் பதிவு :))
    .

    ReplyDelete
  4. லயனின்-முத்துவில் வெளியான துப்பறியும் கதை என்று பார்க்கும் போது இடியாப்ப சிக்கல்காரருக்கே முதலிடம்..ஆனால் உலக துப்பறியும் பாத்திரங்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமானமான ஹோம்ஸை நாம் சரி வர பயன்படுத்திடவில்லை என்பது என் கருத்து அவருக்கு இன்னும் ஓர் வாய்பளித்தால் நலமே...
    அப்புறம் பேட் மேன் 'மீண்டு'ம் வந்தால் அடியேன் மிக்க மகிழ்வடைவேன்..!

    ReplyDelete
  5. // உலகெங்கும் கொண்டாடப்படும் BATMAN -ஐ மீண்டும் நம் இதழ்களுக்குக் கொண்டு வர இயன்ற முயற்சிகளைச் செய்திடுகிறோம் ; fingers crossed !//

    யாஹூ

    இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

    என்பது போல நீங்கள் முயற்சிக்கிறோம் என்றாலே கண்டிப்பாக வருவார்
    என்ற நம்பிக்கை மனதில் தோன்றி விட்டது விஜயன் சார்

    நமது திகில் இதழில் வந்த அனைத்து Batman கதைகளும் சூப்பரோ சூப்பர்
    சித்திரங்கள் ஒரு கதியில் ஒரு மனிதனின் வளர்ப்பு குருவியை வில்லன் கோஷ்டி கொன்றுவிட
    அந்த மனிதனின் முக மாற்றத்தை ஒரே பிரேமில் பலவிதமாக மாறும்

    சான்சே இல்லை சார் :))
    .

    ReplyDelete
    Replies
    1. //மாதம் 2 புத்தகம் என்றாலும் சரி ..8 புத்தகம் என்றாலும் சரி ..முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை கதை மட்டுமே இருப்பதை தவிர்க்க பாருங்கள் ///

      அருமையாச் சொன்னீங்க சிபி அவர்களே!

      Delete
  6. // சென்ற பதிவில் கேட்டிருந்த ரிப் கிர்பி கதைகளின் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு முதலில் (சரியான) விடை அனுப்பியுள்ள நண்பர் R கெளதம் நிதிஷ் //

    வாழ்த்துக்கள் நண்பரே :))
    .

    ReplyDelete
  7. நண்பர்களே அடியேனின் ஒரு குட்டிப்பதிவு.,நேரம் இருந்தால் படியுங்கள்
    ஸ்கூபி டூ:Wrestlemania Mystery

    http://kavinthjeev.blogspot.com/2015/03/wrestlemania-mystery.html?m=1

    ReplyDelete
  8. நண்பர்களே அடியேனின் ஒரு குட்டிப்பதிவு.,நேரம் இருந்தால் தலைப்பின் மீது 'க்ளிக்'கி படியுங்கள்..!
    ஸ்கூபி டூ:Wrestlemania Mystery

    ReplyDelete
  9. Please publish more of Gil Jourdan

    ReplyDelete
  10. பேட்மேன் Game ஓனறின் பதிவு
    பேட்மேன் ஆர்க்ஹாம் சிட்டி கேம் விமர்சனம்

    பேட்மேன்:ஆர்க்ஹாம் நகரம்

    ReplyDelete
  11. அப்படி என்றால் அடுத்த வருட லிஸ்டில் நமது "பேட்மேன் "கண்டிப்பாக உண்டு என்ற நம்பிக்கை மனதை ஆரவாரபடுத்துகிறது சார் .நன்றி ..

    பிறகு மாதம் 2 புத்தகம் என்றாலும் சரி ..8 புத்தகம் என்றாலும் சரி ..முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை கதை மட்டுமே இருப்பதை தவிர்க்க பாருங்கள் சார் ...

    ReplyDelete
    Replies
    1. //மாதம் 2 புத்தகம் என்றாலும் சரி ..8 புத்தகம் என்றாலும் சரி ..முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை கதை மட்டுமே இருப்பதை தவிர்க்க பாருங்கள் ///

      அப்படிப் போடுங்க தலீவரே!

      Delete
  12. என்ன இன்னும் பூனையாரக் காணோம்.

    ReplyDelete
  13. To: Edi,
    //LMS -ல் சாகசம் # 100 வெளியிட்டுள்ள நிலையில் - எஞ்சி நிற்கும் 200-வது இதழை கலரில் வெளியிடலாமா ? What say all ? (இந்த இதழின் வர்ணங்கள் அட்டகாசமாய் உள்ளன என்பது கொசுறுச் சேதி !)//
    இதெல்லாம் கேள்வி கேட்டு செய்யிற வேலையா சார்? கலர்ல அடிச்சு வுடுங்கோ!

    ReplyDelete
  14. My sincere thanks to Vijayan sir and other friends.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் கௌதம் நிதிஷ் !!!!!!

    ReplyDelete
  16. ஜில் ஜோர்டான் வேணும் ......கொஞ்சம் பாத்து போடுங்க சார் !

    ReplyDelete
  17. கலர்ல ராபின் வேணும் .....

    ReplyDelete
  18. ஜெரோம் சான்ஸ் கொடுக்கலாம் ...

    ReplyDelete
    Replies
    1. //கலர்ல ராபின் வேணும் .....//
      +1

      ///ஜெரோம் சான்ஸ் கொடுக்கலாம்///
      +1

      //ஜில் ஜோர்டான் வேணும் ///
      -1

      Delete
    2. //கலர்ல ராபின் வேணும் .....//
      +1

      ///ஜெரோம் சான்ஸ் கொடுக்கலாம்///
      +1

      //ஜில் ஜோர்டான் வேணும் ///
      -1

      NEED MORE REPORTER JOHNNY STORIES

      Delete
  19. Dear Editor, Why can't we have DIGEST kind of classics? Especially we can combine Tex's Dragon Nagaram, Ratha Muthirai, etc. in a single book. We can release them even for Pre-booking alone like Minnum Maranam (Hope you know most of the comics lovers buy older comics even for 50K). Why can't you consider this? What say folks? Editor Sir, Especially I need your reply for this post, Please ....!!!

    ReplyDelete
    Replies
    1. Domo : நிறைய முறை சொன்னதே தான் இம்முறையும் நண்பரே...! மறுபதிப்பு எனும் சாலையை நிதானமாகவே போடுவது அவசியம் ! தட தட வென அந்த ரோட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வண்டிக்கோ ; பயணத்துக்கோ நலம் பயக்காது ! For sure டெக்ஸ் மறுபதிப்புகள் உண்டு - but slow n steady !

      Delete
    2. அன்புள்ள எடிட்டர்,

      //.. For sure டெக்ஸ் மறுபதிப்புகள் உண்டு ..//

      சூப்பர் news ... எப்போ.. ...எப்போ.. ...எப்போ.. ...எப்போ.. ... ஆவலுடன்

      தயவுசெய்து வண்ணத்தில் வெளியிடவும் .. அத்துடன் நான் வெகுநாட்கள் எதிர்பார்த்திருந்த "கார்சனின் கடந்த காலம்" - மறுபதிப்பில் resize செய்தது (cinemascope effect) போலல்லாமல், original அளவுகளிலேயே வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..

      நன்றி!

      Delete
  20. //BATMAN -ஐ மீண்டும் நம் இதழ்களுக்குக் கொண்டு வர இயன்ற முயற்சிகளைச் செய்திடுகிறோம்//
    W..............................ooooooooooooooooooooooooo.....wwwwwww!

    ReplyDelete
  21. ஆஹா!! டிடெக்டிவ் ஜெரோமுக்கு (அந்தப் பால் மனம் மாறாத பச்சப் புள்ளைக்கு) மீண்டும் வாய்ப்பளிப்பதை நான் பலமாக வரவேற்கிறேன். மனித உணர்வுகளை அழகாகப் பிரதிபலிக்கும் ஓவியங்கள்- இவரது கதையின் சிறப்பம்சம்! வண்ணத்தில் வெளிவருவாரென்றால் டபுள் ஓகே!

    ராபின் கதைகள் நிறைய்ய்ய வேண்டும். எஞ்சியிருக்கும் அந்த ஒரேயொரு வண்ண இதழ் கண்டிப்பாக வேண்டும் வேண்டும்!

    டெக்ஸ், கார்ஸன் கூட டிடெக்டிவ் வகையறான்னு தெரியாம இத்தனை நாளும் அப்பாவியா இருந்துட்டேனேன்னு வருத்தமா இருக்கு. அ..அப்படீன்னா அடுத்த வருடம் வரயிருக்கும் 'டிடெக்டிவ் டைஜெஸ்ட்'லயும் டெக்ஸுக்கும் ஒரு இடம் இருக்கும்தானே? "டிடெக்டிவ் டெக்ஸ்" ... ஆஹா! சொல்லும்போதே உடம்புல ஏதோ பண்ணுது!
    யார் யாரோ 'மார்ஷல்'னு சொல்லிக்கிட்டுத் திரியும்போது எங்க தலயை 'டிடெக்டிவ் டெக்ஸ்'னு சொன்னாத்தான் என்னவாம்?!

    ReplyDelete
    Replies
    1. டிடக்டிவ் டெக்ஸ் ?????...ஹா ..ஹா ..


      டாக்டர் கார்ஸன். : ஒரே குத்துல அந்த தடியன் மேல் கடைவாய் பல் மூணையும் எடுத்துட்டியே எப்படி அது டெக்ஸ் ?

      டிடெக்டிவ் டெக்ஸ் ...: எலிமென்டரி பன்ச் கார்ஸன் எலிமென்டரி ...;-)

      Delete
  22. அப்புறம்... சத்தமில்லாம பரிசைத் தட்டிச்சென்ற நண்பர் கெளதம் நிதிஷ்'க்கு என்னுடைய வாழ்த்துகளும்!

    ReplyDelete
  23. டெக்ஸ்ஸை இங்கே கொண்டுவந்ததில் உடன்பாடு கிடையாது.

    ReplyDelete
  24. ஆ..ஆனா எடிட்டர் சார்... கேப்டன் டைகரும் ஒரு டிடெக்டிவ்தான்னு மட்டும் சொல்லீடாதீங்க... இந்தப் பிஞ்சு நெஞ்சு தாங்காது!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : "மார்ஷல்" என்பது "டிடெக்டிவ்" என்ற பதவிக்கு எல்லாம் மேலே..மேலே !

      Delete
  25. //mayavi. siva6 March 2015 at 10:25:00 GMT+5:30
    அந்த மூன்றுகால் நாய்க்கு சரியான ரோல் ! ஒரு கால் இல்லாத நாயை வளர்க்கும் மனிதனின் மென்மை, குரங்ககை வளர்க்கும் மனிதனின் கொடூரம், கவனமாக கொடூரத்தை கவ்வும் மென்மை..அடடடா...என்னொரு காட்சி...!//
    Super wordings siva sir...

    ReplyDelete
  26. //டைகர் பெரிதாக ஒன்றும் செய்யப்போறதில்லை என்கிற நினைப்புடனே படிக்க ஆரம்பித்தால் சிறிதாகக் கூட
    ஒன்றும் செய்யவில்லை...//
    +1

    ReplyDelete
  27. //Erode VIJAY6 March 2015 at 22:30:00 GMT+5:30
    மூனு புக்ஸுக்கும் சேர்த்து ஒரே 'காமிக்ஸ்-டைம்'ல ரொம்பச் சிக்கனமா முடிச்சிக்கறதை வன்மையா கண்டிக்கறேன். //

    //இந்தமாத ஃபில்லர் பேஜ்களில் ( போற போக்கைப் பார்த்தா 'ஃபில்லர் பேஜ்' என்ற சொல் விரைவிலேயே வழக்கொழிந்து போய்விடுமோன்னு ஒரு பயம் வருது)//

    //VETTUKILI VEERAIYAN6 March 2015 at 11:34:00 GMT+5:30
    ஒரு சின்ன வேண்டுகோள்..எந்த ஒரு புத்தகத்தையும் அட்டை டு அட்டை வெறும் கதையுடன் நிறுத்திவிட .வேண்டாம்...பௌ ன்சரின் இவ்வளவு பெரிய 200 ரூபாய் புத்தகத்தில் இன்னும் நிறைய pagefillars அட்லீஸ்ட்
    கருப்பு விதவையின் கதை என்கிற விளம்பரம் போல மற்ற கதைகளின் விளம்பரங்களையாவது போடுங்கள்..
    ப்ளீஸ்..மனம் அதை எதிர் பார்க்கிறது.. புத்தகம் கையில் கிடைத்ததும் புரட்டிப் பார்த்து ரசிப்பது அவைகளைத்தான் ..//
    +1

    ReplyDelete
  28. அண்ணாத்தே யாரையும் வுட்டுராதீக எல்லா இரோவையும் போடுங்க
    ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பீலிங்கு ஆனாக்கா எல்லாருக்கம் காமிக்ஸ் பீலிங்கு

    ReplyDelete
  29. // டிடெக்டிவ் ஜெரோம் தான் நான் குறிப்பிடும் ஆசாமி ! இது வரை 24 ஆல்பங்கள் வெளியாகியுள்ள இத்தொடருக்கு பிரான்சில் நல்ல வரவேற்புள்ளது ! இவருக்கொரு இரண்டாம் இன்னிங்க்ஸ் தான் தந்து பார்ப்போமா folks ? //

    நிச்சயம் தரவேண்டும் சார்.
    வண்ணத்தில் என்றால் டபுள் ஓ.கே.
    சி.க.மர்மம்
    த.ஒ.தற்கொலை
    இரண்டும் அட்டகாசமான சித்திரங்கள்.

    // எஞ்சி நிற்கும் 200-வது இதழை கலரில் வெளியிடலாமா ? What say all ? (இந்த இதழின் வர்ணங்கள் அட்டகாசமாய் உள்ளன என்பது கொசுறுச் சேதி !)//
    இது என்ன கேள்வி சார். கண்டீப்பாக வெளியிட்டே தீரணும்.

    ஜில் ஜோர்டானின் கதை பாணிக்கு நான் எப்போதுமே ரசிகன்.
    ஆண்டிற்கு இரு முறையாவது ஜில்லை கண்ணில் காட்டுங்கள் சார்.

    ReplyDelete
  30. ஒரு வழியா டைம் கிடைச்சி, பௌன்சரின் முதல்பாகம் படித்துவிட்டேன்.

    இதுவரை கௌபாய் கதைகளுக்கென நாம் கொண்டிருந்த அனைத்து பிம்பங்களையும் அடித்து நொறுக்கிவிட்டார் ஜோடோரெவ்ஸ்கி.
    அப்பாவிகளுக்கு தண்டனை கிடைக்கும் போதெல்லாம் டெக்ஸோ டைகரோ எப்பாடுபட்டாவது அவர்களை காப்பாற்றி விடுவார்கள். இதுவரை நாம் வைத்திருந்த ஹீரோ இலக்கணம் இதுதான்.
    ஆனால் இரண்டு பேர் நிரபராதிகள் என்று தெரிந்தும், அதில் ஒருத்தி நேசத்துக்குறிய காதலியாக இருந்தாலும் (நவோமி கர்ப்பிணி என்பது கூடுதல் தகவல்) ,
    அவர்களை பௌன்சரின் கையாலேயே தூக்கிலிட வைத்துவிட்டார் ஜோடோரெவ்ஸ்கி.
    சூது கவ்வும் தர்மம் வெல்லும் என்ற டயலாக்கை துவம்சம் செய்து யதார்த்தத்தில் ஹீரோயிசமெல்லாம் சும்மா என்று நிருப்பித்து விட்டார்.
    இதற்க்கும் ஒரு சொலவடை இருக்கு.
    "வல்லான் வகுத்ததே வாய்க்கால் "
    மீதியையும் படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ///சூது கவ்வும் தர்மம் வெல்லும் என்ற டயலாக்கை துவம்சம் செய்து யதார்த்தத்தில் ஹீரோயிசமெல்லாம் சும்மா என்று நிருப்பித்து விட்டார். ///

      ரசிக்கவைக்கும் விமர்சன வரிகள்!

      //வல்லான் வகுத்ததே வாய்க்கால் ///

      அடடே! ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு சொலவடை!!!

      Delete
    2. KiD ஆர்டின் KannaN ; //சூது கவ்வும் தர்மம் வெல்லும் என்ற டயலாக்கை துவம்சம் செய்து யதார்த்தத்தில் ஹீரோயிசமெல்லாம் சும்மா என்று நிருப்பித்து விட்டார்.//

      முகத்தில் அறையும் விதத்தில் கதை சொல்லும் இந்த பாணி நம்மூர் டைரெக்டர் பாலாவின் பாணிக்கு ஒப்பாகச் சொல்லலாமா ?

      Delete
    3. நிச்சயமா சொல்ல முடியும் நியாயமாஆஆ.....ரே...!

      பிதாமகன்
      பரதேசி

      இரண்டும் மிகச்சிறந்த உதாரணங்கள்.

      Delete
  31. //மாடஸ்டி ; சார்லி போன்ற நாயக / நாயகியரும் ஏதோ ஒரு விதத்தில் இந்தப் பட்டியலுக்குள் நுழையத் தகுதி வாய்ந்தவர்களா ? - இல்லையா ? //

    மாடஸ்டி அக்காவ எதுல சேத்தின்னே சொல்ல முடியாது. ஹிஹி அதாவது யாரோட சேத்தின்னு சொல்ல முடியாது. அப்புறம் எப்படி டிடெக்டிவ்னு சொல்ல முடியும்.
    சார்லிய டிடெக்டிவ் சார்லின்னுதான் நீங்களே குறிப்பிடுவீர்கள். எனவே சார்லியும் டிடெக்டிவ்தானே.!

    ReplyDelete
    Replies
    1. என்னது... மாடஸ்டி அக்காவா?.. ஹலோ... அவுங்க எல்லாம் எங்க மாதிரி ஆளுகளுக்கு ராணி மாதுரிங்க ... மனச நோகடிக்காதிங்கோ.. ( எனக்கு வயசு வெறும் 44 தான் ....யாருகிட்டேயும் சொல்லிடதீங்க... )

      Delete
    2. கருவூர் சரவணன் : Life begins @ 40 !!

      Delete
  32. வரழ்த்துக்கள் நிதிஷ்

    ReplyDelete
  33. எத்தர்களின் எல்லை...

    விறுவிறுப்பாக நகர்ந்து செல்லும் ஒரு கதை என்ற வகையில் எனக்கு இதைப் பிடித்திருக்கிறது. ஆனால் இதற்கு முன் வெளிவந்த டிடெக்டிவ் ராபின் கதைகளிலிலிருந்து இது நிறையவே வேறுபடுகிறது. ( நுணுக்கமான குற்றப் பின்னணிகளும், இயல்பான பாத்திரப் படைப்புகளும் கொண்ட) வழக்கமான ராபின் பாணிக் கதையை எதிர்பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றமே! டிடெக்டிவ் டெக்ஸுக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கதை கடைசிநேரத்தில் டிடெக்டிவ் ராபினுக்காக மாற்றப்பட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

    புத்தகத்தைத் திறந்ததுமே இரண்டு விசயங்கள் மயங்க வைக்கின்றன்.
    ஒன்று - அழகான, தெளிவான சித்திரங்கள்.
    இரண்டு - சுர்ரென்று நாசியில் ஏறும் மை வாசனை! ப்ப்பா! :)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : //சுர்ரென்று நாசியில் ஏறும் மை வாசனை!//

      பைண்டிங் செல்வதற்கு 3 மணி நேரங்களுக்குமுன்பு தான் அச்சான இதழ் என்பதால் - சுடச் சுட !

      Delete
  34. Hi goodmorning to all friendz and wishes to all sisters for world women Day

    Sham1881@erode

    ReplyDelete
  35. review for adult and matured audience only!

    wow,

    it deserves the danger board, yes this books features rapists, child abusers, child eaters, and what not! but I felt comfort reading it all alone with out much of fear of others peeping into my book.

    this books takes you to the roller-cost ride, it took time for me to align my mind to the violent but once set wow, I had good reading experience. it good book showcases blond and raw WILD west. I said roller cost because it takes you into father sentiment, casual romance, serious romance, revenge from daughter revenge from old man, Love, love failure, innocent love and love in first sight! My god it a book full of surprise turning and twists !

    verdict: if any reader keep the sensor mind away and read it with open mind!, you will appreciate the book reflects the truth of wild west and saying the story in most classic and brutal way. no wonder why Bouncer cherished all over comics community!

    ReplyDelete
    Replies
    1. Sathishkumar S : ரொம்பவே பாதுகாப்பானதொரு சூழலில் உள்ள நம் காமிக்ஸ் ரசனைகளுக்கு பௌன்சர் போன்ற no holds barred கதைகள் அதிரடியாய் தோன்றலாம் ; ஆனால் இதைவிடவும் தடாலடியான கதைகளுக்கும் பஞ்சமே கிடையாது - மேற்கத்திய காமிக்ஸ் வானில் !

      Delete
  36. ஜெரோமை விட ஜில் ஜோர்டான் மீண்டு வருவது சுகமே..கலரில் ராபின் பேட் மேன் வருகை அருமை..
    அப்படியே பழைய டிடக்டிவ் ஸ்பெசல் மீதும் கொஞ்சம் மனசு வையுங்கள் சார்..

    ReplyDelete
    Replies
    1. BAMBAM BIGELOW : வண்ணத்தில், பெரிய சைசில் ஒரு முறை ஜெரோமை ரசித்துப் பார்த்தால் உங்கள் அபிப்பிராயம் மாற்றம் கண்டால் ஆச்சர்யப்பட மாட்டேன் சார் !

      Delete
  37. Batman is always welcome ... Jill Jordan and Jerome can be given more chances i think ... Sir can u re print john master's books
    and இரட்டை வேட்டையர்in "ஆப்பிரிக்க சதி" for readers like me ..

    ReplyDelete
    Replies
    1. Mks Ramm : இரண்டாம் தலைமுறையின் மறுபதிப்புகளைத் துவங்கிடும் சமயம் இவற்றை பட்டியலின் மேலே வைத்திருப்போம் நண்பரே..!

      Delete
  38. நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கு வருகிறேன். கரசன் கடந்த காலம் கடைசியாய் worldmart இல் வாங்கியது. அதன் பின் வந்த இதழ்களின் லிஸ்ட் யாராவது சொல்லமுடியுமா,ப்ளிஸ்.நவம்பர் டிசம்பர் monthlypackage lion comics . in இல் ஆர்டர் செய்தாகிவிட்டது. ஆனாலும் ரௌத்திரம் பழகு , அம்பின் பதில் இரவே இருளே கொள்ளாதே இது எந்த மாதம் வந்தது? இதுதவிர எதுவும் மிஸ் செய்துவிட்டேனா என்று தெரியவில்லை. யாராவது அக்டோபரிலிருந்து வெளிவந்த இதழ் லிஸ்ட் இருந்தால் சொல்லுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்பறம் 2015 சந்தா இன்று கட்டிவிட்டேன். மின்னும் மரணம் ஆறு மாதம் முன்பே முன்பதிவு செய்தாகிவிட்டது.
      so ஜனவரியிலிருந்து எல்லாம் சரியாய் வந்துடும். நவம்பர் டிசம்பர் monthly package lioncomics.in இல் ஆர்டர் செய்தாகிவிட்டது. அதற்கும் முன் தான் குழப்பம்.

      Delete
    2. @ சூப்பர் விஜய்
      வருக நண்பரே...வருக..!
      நீங்கள் கேட்ட விவரம் கீழே..

      லயன் காமிக்ஸ்
      332. ஒரு நிழல் நிஜமாகிறது---Oct-2014
      333. சிறையில் ஒரு சடுகுடு---Nov-2014
      முத்துகாமிக்ஸ்
      332. ஒரு நிழல் நிஜமாகிறது---Oct-2014
      333. சிறையில் ஒரு சடுகுடு---Nov-2014
      Sun shine காமிக்ஸ்
      4. காலனின் கைகூலி---oct-2104
      5. வானமே எங்கள் வீதி---dec-2014
      சன்சைன் லைப்ரரி
      14. கார்சனின் கடந்த காலம்---oct-2014
      15. சைத்தான் வீடு---nov-2014

      Delete
    3. பல மாதங்களுக்குப் பிறகு இங்கே மீள்வருகை காட்டியிருக்கும் நண்பர் சூப்பர் விஜய்க்கு நல்வரவு!

      அப்படியே சில மாதங்களாக காணாமல்போயிருக்கும் இன்னொரு பெங்களூருக்காரரும் இங்கே வந்து ஒரு செங்கல்லையாவது நட்டுவச்சுட்டுப் போனா நல்லாருக்கும்...

      Delete
    4. சூப்பர் விஜய் : Welcome back...குட்டி மயில் நலமா ?

      Delete
  39. கடந்த 2 வார பதிவுகளை பார்க்கும்போது விரைவில் உங்களிடம் இருந்து டிடெக்டிவ் ஸ்பெசல் அறிவிப்பு வெளியாகும் என்று தோன்றுகிறது. அப்படி வந்தால் மிகவும் மகிழ்ச்சிதான்.
    ஜில் ஜோர்டான், ஜெரோம் இருவரையும் தயவு செய்து இந்த டிடெக்டிவ் ஸ்பெசலில் சேர்த்துவிட வேண்டாம். சந்தாவிலும் சேர்த்துவிட வேண்டாம். விரும்பியவர்கள் வாங்கி கொள்ளலாம் என்று வெளிவந்தால் நன்றாக இருக்கும்.
    விற்பனை அதிகம் என்ற காரணத்தினால் டெக்சை டிடெக்டிவ் லிஸ்டில் சேர்த்துள்ளதை ஜீரணிக்க முடியவில்லை.
    விரைவில் டெக்ஸ், காமெடி ஸ்பெசல், கறுப்பு கிழவி கதைகள் என அனைத்திலும் இடம் பிடிப்பார் என்று நம்புகிறேன்.
    பௌன்சர் கதையை வீட்டில் உள்ள சிறுவர்களின் கைகளில் கிடைக்காதவாறு வைக்க படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இதுபோன்ற கதைகள் வளரும் தலைமுறையை எளிதில் சீரழித்துவிடும் என்பது மட்டும் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. //விரைவில் டெக்ஸ், காமெடி ஸ்பெசல், கறுப்பு கிழவி கதைகள் என அனைத்திலும் இடம் பிடிப்பார் என்று நம்புகிறேன்.//

      சுந்தர் ராஜ் ...ஹா ..ஹா ...சிரிக்காமல் இருக்க முடியவில்லை ..

      டெக்ஸ் ,பேட்மேன் ஆகியோரை டிடெக்டிவ் லிஸ்டில் சேர்த்ததை நிறைய நண்பர்கள் ஏற்று கொள்ள வில்லை என்பது உண்மை .

      டிடெக்டிவ் ஸ்பெஷலில் இவர்கள் கதைகள் வந்தால் நல்லதுதானே என்ற நினைப்பில் நான் உட்பட பலபேரும் இதற்கு மறுப்பு சொல்லாமல் இருக்கலாம் ...

      Delete
    2. Sundar Raj : //விரைவில் உங்களிடம் இருந்து டிடெக்டிவ் ஸ்பெசல் அறிவிப்பு வெளியாகும் என்று தோன்றுகிறது//

      இப்போதைக்கு ஸ்பெஷல் கோட்டா full ! இப்போதைக்கு இதுவொரு ஜாலியான சென்சஸ் எடுக்கும் முயற்சி மாத்திரமே !

      Delete
  40. டியர் எடிட்டர் சர்ர்,
    ர்ரபின் 200 ஆவது இதழ் வண்ணத்தில் கட்டரயம் வெளிவரவேண்டும் ஸர்ர். கரும்பு தின்ன கூலியர? வெளவரல் மனிதன் மீண்டும் வருவதில் எனக்கு மகிழ்ச்சியே. ஏனெனில் என்னிடம் ஒரு புத்தகம் கூட இல்லை. டெக்ஸையும் கர்ர்சனையும் டிடெக்டிவ் குழுவில் சேர்த்து விட்டீர்களர ஸர்ர்? ஆனரல் அவர்கள் கெளபரய் அல்லவா?
    மருத்துவமனையில் மனோவியல் டரக்டர் என்னை டெஸ்ட் செய்து பர்ர்த்து விட்டு, என் தர்ரதரம் சர்ரசரி மனிதனின் நிலையில் உள்ளதரக சான்றிதழ் வழங்கினர்ர். ஞரபகம் வைத்திருக்கும் பல டெஸ்ரும், படங்களை சரியரன வரிசையில் அடுக்கும் டெஸ்ரும் (பல) வைத்தர்ர். என்க்கு உதவியது கரமிக்ஸ்தரன் என்று சொன்னால் மிகையரகரது. அவருக்கு தெரியரது நரன் லயன், முத்து கரமிக்ஸ் வரசிப்பது.

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் வீடு திரும்ப என் பிரார்த்தனைகள் பிரபானந்த் ...

      Delete
    2. @செல்வம் அபிர்ரமி
      நன்றிகள் கோடி

      Delete
    3. Thiruchelvam Prapananth : நலமாய் எழுந்து வாருங்கள் நண்பரே...(வாழ்க்கையின்) இரண்டாவது இன்னிங்க்ஸ் அமர்க்களமாய் அமையும் பாருங்களேன்..!

      Delete
  41. @ R கெளதம் நிதிஷ்

    சென்ற பதிவில் கேட்டிருந்த ரிப் கிர்பி கதைகளின் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு முதலில் (சரியான) விடை அனுப்பி, பரிசு பெற்ற நண்பர் R கெளதம் நிதிஷ் மீண்டும் வாழ்த்துக்கள்!
    மொத்தம் ரிப்கெர்பி நாம் வெளியிட்ட கதைகள் நாற்பது என்கிறார் நண்பர் ஒருவர்...39 தான் என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. விடுபட்டவை தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் 'R கெளதம் நிதிஷ்'..!
    எனக்கு தெரிந்த பட்டியல் கீழே...
    39 ரிப் கெர்பி பட்டியல் விவரங்கள்/வெள்யீடு எண்,பெயர்கள்

    முத்துகாமிக்ஸில் வந்தவைகள்...

    28. புதையல் வேட்டை
    37. ரோஜா மாளிகை ரகசியம்
    52. கொலை வழக்கு மர்மம்
    59. பகல் கொள்ளை
    64. மூன்று தூண் மர்மம்
    70. பட்லர் படுகொலை
    76 கள்ள நோட்டுக்கும்பல்
    83. விசித்திர குரங்கு
    88. பிரமிட் ரகசியம்
    91.கற்கோட்டை புதையல்
    94. காணாமல் போன வாரிசுகள்
    99. சூரிய சாம்ராஜ்யம்
    104. கையெழுத்து மோசடி
    109. யார் அந்த கொலையாளி
    113. மரணக்குகை
    115. நாலூகால் திருடன்
    116. வழிப்பறிக் கொள்ளை
    120. வாரிசு யார்?

    லயன்காமிக்ஸில் வந்தவைகள்...

    78 பொக்கிஷம் தேடிய பிசாசு
    79 operation அலாவுதீன்
    82 மரண மாளிகை
    83.மரணமயக்கம்
    86.ஒரு வெறியனைத் தேடி
    88 பாலைவன சொர்க்கம்
    91 கானகக் கோட்டை
    93.பலி கேட்ட புதையல்
    96 வேங்கை வேட்டை
    100.வைரச்சிலை மர்மம்
    115 இரத்தக்கரம்
    123 கம்ப்யூட்டர் கொலைகள்
    134.கருப்பு விதவை
    160. மாயமாய் போன மணாளன்
    167 பனியில் ஒரு நாடகம்
    189.ப்ளாக் மெயில்
    194.மன்மதனை மன்னிப்போம்
    195.தேவதையைத் தேடி
    211.கன்னித் தீவில் ஒரு காரிகை


    மினி லயனில் வந்தவைகள்...

    37.காசில்லா கோடிஸ்வரன்
    38.மாயஜால மோசடி

    @ நண்பர்களே
    அதே போல cid மார்ஷல் கதை மூன்று வந்துள்ளன என எடிட்டர் குறிப்பிட்டுள்ளார், திகில்காமிக்ஸில் '1.பிசாசு குரங்கு 2.மர்ம ஏரி 3.என்னவென்று தெரிந்த நண்பர்கள் குறிப்பிடுங்களேன்..!

    @எடிட்டர்
    சார் batman பயங்கர வில்லன்களிடமிருந்து மக்களை காக்க இரவில் களமிறங்கும் நீதிகாவலர் என நினைத்திருந்தேன். அவர் ஒரு 'டிடெக்டிவ்' என்பது எனக்கு புதிய தகவல் தான்..!

    ReplyDelete
    Replies
    1. பட்டியலுக்கு நன்றி மாயாவி ஜி.

      Delete
    2. மகளிர் தினத்தன்று மாடஸ்டியைக் கண்ணில் காட்டிய மாயாவிக்கு நன்றி!

      Delete
    3. @ ஈரோடு விஜய்

      "அட்டகாசமான தரத்தில் 'மரணத்தின் முத்தம்' non stop ஆக்சன் கதையை எடிட்டர் என்னை கண்(னடித்து)ணில் காட்டுவார் என்ற நம்புகிறேன்" என மாடஸ்டியின் கண்கள் பேசுவதா எனக்கு படுகிறது...சரிதானே ஈரோடு விஜய் அவர்களே..!

      Delete
    4. நன்றி சொல்வது தவறா மாயாவி அவர்களே? இப்படியா கோர்த்துவிடுவது! ;)

      கவலையவிடுங்க, நம்ம இளவரசி அடுத்த கதையில் ச்சும்மா சிக்குனு சிறுத்தைக்குட்டி மாதிரி வந்து அசத்தப்போவது உறுதி! ;)

      Delete
    5. லயன்காமிக்ஸ்ஐ குத்துவிளக்கு ஏற்றி துவைக்கிவைத்த, லேடி ஜேம்ஸ்பாண்ட் என கொண்டாடிய அசத்தல் பெண் டிடெக்டிவ்வை...கிடைத்த சந்தர்ப்பத்தில் மாடஸ்டிக்கு ஒரு ஒட்டு போட்டுவைக்கலாமே என மகளிர் தினத்தில் இதை ஒருவாய்ப்பாக நினைத்தேன். கொஞ்சம் (மடாஸ்டியை) தூக்கிவிட நினைத்தேனே ஒழிய, மற்றபடி கோத்துவிடுவதெல்லாம் எனக்கெங்கே வரும் விஜய் :)))

      கீழ் வரும் கருத்து பொதுவிற்கு...

      " ஆற்றல்-வீரம்-வேகம்-விவேகம்- இவற்றின் மொத்த உருவம் தான் மாடஸ்டி பிளைசி! இங்கிலாந்தின் உளவு ஸ்தாபனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய மாடஸ்டி, எண்ணற்ற சதிக் கும்பல்களை முறியடித்திருகிறாள்..!"
      ...இப்படிதான் அம்மையாரை லயனில் எடிட்டர் முதல் இதழில் அறிமுகமானார்.
      அதே இங்கிலாந்து உளவு(நிழற்படை) ஸ்தாபனத்தின் ஏஜென்டாக முத்துகாமிக்ஸில் அறிமுகமான இரும்புகைமாயாவிக்கு டிடெக்டிவ் பட்டியலில் முதலிடம், ஆனால்...
      துப்பறிவதையே சவாலாக, வாழ்க்கையாக கொண்ட மாடஸ்டியை, அச்சு தரத்திற்க்கு எதிர்த்தோம் என்ற ஒரே காரணத்திற்க்காக 'லேடி ஜேம்ஸ்பாண்ட்' பதவியை சந்தேகிப்பதும்...
      பரணி புகழ் பாடும் (!!) மாடஸ்டி அம்மையார் டிடெக்டிவ்வா ? என கேட்பதும்...
      D(etective) Comics-ல் வந்த ஒரே காரணத்திற்க்காக நீதிகாவலர் batman ஒரு துப்பறிவாளராக மாறியதும்....
      எந்த விதத்தில் நியாயம்..!
      இளவரசி topten ல் வராததே மனம் ஒப்பவில்லை. பட்டியலில் சேர்க்கலாமா என விவாதத்தை துவக்குவது...
      வருத்தங்கள் சொல்ல வார்த்தைகள் அகப்படவில்லை :(((

      Delete
    6. rib kirbi 40 th story muthu vill vantha rainbow viduthi mayavi ji

      Delete
    7. // நீதிகாவலர் batman ஒரு துப்பறிவாளராக மாறியதும்....
      எந்த விதத்தில் நியாயம்..! ///

      யாரோ எப்படியோ போகட்டும்... எங்க தல டெக்ஸுக்கு திடீர்னு 'டிடெக்டிவ்' பட்டம் கிடைச்சதுல நான் தலகால் புரியாத சந்தோசத்துல இருக்கேனாக்கும்! அவரோட சொந்த ஊர் இத்தாலியிலே கூட இப்படிப்பட்ட கெளரவம் எல்லாம் கிடைச்சிருக்குமான்னா டவுட்டுதான்!

      Delete
    8. யாரோ எப்படியோ போகட்டும்... எங்க தளபதி டைகருக்கு இந்த மாதிரி திடீர்னு 'டிடெக்டிவ்' புஸ்வாணமெல்லாம் வேண்டியதில்லை, இனி காலத்துக்கும் கிடைக்க போற புகழ நெனச்சி சந்தோசத்தில நான் தலகால் புரியாத இருக்கேனாக்கும்! அவரோட சொந்த ஊர் ஈரோப்ல கூட இப்படிப்பட்ட கெளரவம் எல்லாம் கிடைச்சிருக்குமான்னா டவுட்டுதான்! அது பத்தின அறிவிப்ப பாக்க...இங்கே'கிளிக்'

      Delete
    9. வாவ்! உற்சாகமளிக்கும் 'இங்கே க்ளிக்'!!! நன்றி மாயாவி அவர்களே! அழகான டிசைன் மனதை அள்ளுகிறது!

      Delete
    10. mayavi.siva : தேதிகளில் சின்ன திருத்தம் : ஏப்ரல் 13 to 23 என புத்தக சங்கமத்தினர் மின்னஞ்சலனுப்பியுள்ளனர் ! பார்ப்போமே..!

      Delete
  42. ஓரிரண்டு மட்டும்தரன் என்னிடமுள்ளது

    ReplyDelete
  43. Wow what a narration
    Bouncer is bouncing like a hell even after a long time.

    ReplyDelete
  44. Wow what a narration
    Bouncer is bouncing like a hell even after a long time.

    ReplyDelete
    Replies
    1. sai vignesh : லேசுக்குள் நினைவை விட்டு அகலா சாகசம் !

      Delete
  45. எடி சார்,இந்த மாதத்தின் புத்தக விமர்சனங்கள் எனக்கு தெரிந்த அளவில்-
    1. எத்தர்களின் எல்லை- அட்டைப் படம் பிரமாதம், உள்ளே சித்திர தரங்கள் அருமை, பிரமாதமான கதைக்களம்.இந்தக்கதையில் அளவான ஆக்சன்,அளவான செண்டிமெண்ட் மற்றும் அளவான திரில்லிங் எல்லாமே சரியான கலவையில் கலந்து கொடுக்கப்பட்டு உள்ளது.
    மொத்தத்தில் கதைகளம் வலுவாகவும், மிகைமீறல் இன்றி கச்சிதமாகவும், நம்பகத் தன்மையுடனும் அமைந்துள்ளது என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  46. 2. வேங்கைக்கு முடிவுரையா ?- மார்ஷல் டைகரின் சாகசம் அருமையோ அருமை .அட்டைப்படம் அட்டகாசம், உள்ளே சித்திர தரம் கண்ணைப் பறிக்கிறது, மொழிபெயர்ப்பு நிறைவாக உள்ளது, பின்னணி வர்ணச்சேர்க்கைகள் அபாரம்,சட்டென்று பக்கங்களை புரட்ட விடாமல் கைகளை தடுக்கின்றன,ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பு குறையவில்லை,பின்னணி காட்சி அமைப்புகள் நன்று,ஓவியங்கள் பெரிய வித்தியாசத்தை காட்டவில்லை என்று தோன்றுகிறது.இரண்டு சாசங்களிலுமே ஓவியங்கள் தன் பணிகளை செவ்வனே செய்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. \\வேங்கைக்கு முடிவுரையா ?- மார்ஷல் டைகரின் சாகசம் அருமையோ அருமை\\
      +1

      Delete
    2. Arivarasu @ Ravi : வேங்கைக்கு முடிவுரையா ? - சீனியர் எடிட்டருக்கும் ரொம்பவே பிடித்திருந்தது !

      Delete
  47. 3. பெளன்சர் (சர்ப்பங்களின் சாபம்)- ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை,மேற்கின் வன் களங்களின் காட்சிகள் சில நேரங்களில் திடுமென முகத்தில் அறைகின்றன, வழக்கமான கதை நாயகனின் அதிரடி முத்திரைகள் இன்றி இந்த நாயகன் யதார்த்தங்களுக்கு ஏற்ப அடிவாங்குவதும், அடி கொடுப்பதும் வசைகள், அவமானங்களை சந்திப்பதும் உண்மையாகவே வித்தியாசமானது தான்.
    சித்திரங்கள் என்ன சொல்ல அருமை,பின்னணி வர்ணச்சேர்க்கைகள்,காட்சி அமைப்புகள் பிரமாதம், மொழி பெயர்ப்புகள் சான்சே இல்ல சார் சூப்பரோ சூப்பர்.
    மொத்தத்தில் பெளன்சர் உண்மையாகவே வேற மாதிரி அனுபவத்தை கொடுக்க வல்லவர்தான்,கதையை முழுமையாக ரசிக்க,ருசிக்க,ஏற்க திட மனம் வேண்டும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : //பெளன்சர் உண்மையாகவே வேற மாதிரி அனுபவத்தை கொடுக்க வல்லவர்தான்,கதையை முழுமையாக ரசிக்க,ருசிக்க,ஏற்க திட மனம் வேண்டும்//

      "Noir series" என்றழைக்கப்படும் இது போன்ற சமரசமில்லா dark கதைத் தொடர்கள் நமக்குப் புதுசே தவிரே , காமிக்ஸ் உலகுக்குப் பழக்கமானவையே ! கொஞ்சம் கொஞ்சமாய் விரிவாகிவரும் நம் ரசனைகளின் எல்லைகளுக்கு இதுவொரு சின்ன சான்று ! அதே சமயம் இது போன்ற கதைகளை ரெகுலராய் வெளியிடுவதும் சரியாகாது என்பதால் - ஊறுகாய் போல் பயன்படுத்திக் கொள்வோம் !

      Delete
  48. என்னைப் பொறுத்தவரை இந்த மாதம் அனைத்து கதைகளுமே நிறைவாக உள்ளது.
    நாம் நிச்சயமாக எல்லா வகையிலும் தரத்தில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி விட்டோம், இந்த தரத்தை கண்டிப்பாக நாம் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும்.
    வெளியிடு எண் மட்டும் இரண்டு முத்துவிலும் ஒரே எண்ணாக 338 என்று உள்ளது,
    எந்த இதழ் முதல் இதழாக வைப்பது என்று குழப்பமாக உள்ளது.

    ReplyDelete
    Replies

    1. Reply

      Prabakar T5 March 2015 at 17:12:00 GMT+5:30
      விஜயன் சார்

      வேங்கைக்கு முடிவுரையா & எத்தர்களின் எல்லை

      இரண்டிலுமே வெளியீடு எண் 338 என இருக்கிறது

      நன்றி :)
      .

      Reply
      Replies

      mayavi. siva5 March 2015 at 18:32:00 GMT+5:30
      சரியாக சொன்னீர்கள் சிபி...இதில் எதை 338 என எடுத்துக்கொள்வது ?
      கடந்த மாதத்திலேயே 'வேங்கைக்கு முடிவுரையா?' அடுத்த வெளியீடு என வந்துவிட்டதால்...'எத்தர்களின் எல்லையில்..!' கடந்தவாரம்தான் அறிவிக்கப்பட்டதாலும், காமிக்ஸ் டைம் பகுதியில் # 3 cid ராபின் கதை என குறிப்பிட்டுள்ளதாலும்...டைகர்-338 cid ராபின்-339 என கணக்கிட்டு கொள்வோமா..சிபி..?


      Vijayan6 March 2015 at 08:36:00 GMT+5:30
      Prabakar T : Oops....தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் ! ராபின் தான் இதழ் # 339. அடுத்த இதழின் நம்பரை 340 என அமைத்து வரிசையை சரி செய்து விடுவோம் !

      Reply

      Delete

    2. Reply

      Prabakar T5 March 2015 at 17:12:00 GMT+5:30
      விஜயன் சார்

      வேங்கைக்கு முடிவுரையா & எத்தர்களின் எல்லை

      இரண்டிலுமே வெளியீடு எண் 338 என இருக்கிறது

      நன்றி :)
      .

      Reply
      Replies

      mayavi. siva5 March 2015 at 18:32:00 GMT+5:30
      சரியாக சொன்னீர்கள் சிபி...இதில் எதை 338 என எடுத்துக்கொள்வது ?
      கடந்த மாதத்திலேயே 'வேங்கைக்கு முடிவுரையா?' அடுத்த வெளியீடு என வந்துவிட்டதால்...'எத்தர்களின் எல்லையில்..!' கடந்தவாரம்தான் அறிவிக்கப்பட்டதாலும், காமிக்ஸ் டைம் பகுதியில் # 3 cid ராபின் கதை என குறிப்பிட்டுள்ளதாலும்...டைகர்-338 cid ராபின்-339 என கணக்கிட்டு கொள்வோமா..சிபி..?


      Vijayan6 March 2015 at 08:36:00 GMT+5:30
      Prabakar T : Oops....தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் ! ராபின் தான் இதழ் # 339. அடுத்த இதழின் நம்பரை 340 என அமைத்து வரிசையை சரி செய்து விடுவோம் !

      Reply

      Delete
    3. ர(வுடிஜி)வி...
      'கறுப்பு வெள்ளைக்கே முதலிடம் ' போராட்டம் தொடர்கிறதா...?
      ஹாஹா.....நிறைவடைந்துவிட்டதா...!

      Delete
    4. ஹா ஹா .. வேறு வழியில்லாமல் நிறைவேறி விட்டது மாயாவி ஜி.

      Delete
  49. எத்தர்களின் எல்லை சித்திரங்கள் , கதை அருமை !

    ReplyDelete
  50. Bouncer திக்குமுக்காட வைத்துவிட்டது ! கருப்பு விதவையின் கதை எப்போது சார் ?

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : ஜூன் '15-ல் நண்பரே !

      Delete

  51. சர்ப்பங்களின் சாபம்...

    ஸ்தம்பிக்க வைத்துவிட்டது!!

    பல பக்கங்களில் வசனங்களும் அப்படியே!

    'ஒரு மெல்லிய காதல் கதையொன்றை கொடுங்கள் எடிட்டர் சார்' என்று முன்பொருமுறை கேட்டிருந்தேன்... ஆனால் இந்த ஒரு புக்கிலேயே மெல்லிய காதல், வன்முறைக் காதல், ஒப்பந்தக் காதல், உப்புமா காதல் (அவசரத்துக்கு), நூடுல்ஸ் காதல் (ரெண்டு நிமிஷத்துல முடிஞ்சிடும்), பரிதாபக் காதல், பிரதிஉபகாரக் காதல், விடலைப்பருவக் காதல், வேசிக் காதல், முதல் காதல், முக்கோணக் காதல், கலப்பினக் காதல், வேற்று நாட்டினக் காதல் - என்று ஒரு காதல் ராஜாங்கத்தையே கண் முன் நிறுத்திவிட்டீர்களே! அம்மாடியோவ்!!

    சரி... காதல் மட்டும்தானா என்றால் அதுதான் இல்லை! தாய்ப் பாசம், தந்தைப் பாசம், நாய்ப் பாசம், ஓநாய்ப் பாசம், குரங்குப் பாசம், சகோதர பாசம் , முதலாளி பாசம் என்று பாசப் பட்டியலும் மற்றொருபுறம் நீள்கிறது! இத்தனை காதல்/பாசப் பிணைப்புகளையும் ஒரு கலவையாக்கி, நிறைய வன்முறைகளையும் சிலபல எதிர்பாராத திருப்பங்களையும் அள்ளித் தெளித்து நாக்கை மேலன்னத்தில் ஒட்டச்செய்திடும் ஒரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்திருக்கும் கதாசிரியர் ஜோடரோஸ்க்கியின் திறமையை வியக்காமலிருக்கமுடியவில்லை!

    படித்துமுடித்த பின்னரும் பலமணிநேரங்களுக்கு கதையின் தாக்கத்திலிருந்து விடுபடமுடியவில்லை!

    பெளன்சர் இவ்வாண்டின் நமது வெற்றிப் படைப்புகளில் பிரதான இடத்தைப் பிடிக்கும்!

    அதிரவைத்திடும் கதைத்தொடரை அறிமுகப்படுத்தியதற்கும், அதை அழகாகக் கொடுத்ததற்கும் நன்றிகள் பல, எடிட்டர் சார்!

    மற்ற நண்பர்களைப் போலவே அடுத்த பாகங்களுக்காக ஆவலுடன் நானும்...

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : //இத்தனை காதல்/பாசப் பிணைப்புகளையும் ஒரு கலவையாக்கி, நிறைய வன்முறைகளையும் சிலபல எதிர்பாராத திருப்பங்களையும் அள்ளித் தெளித்து நாக்கை மேலன்னத்தில் ஒட்டச்செய்திடும் ஒரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்திருக்கும் கதாசிரியர் ஜோடரோஸ்க்கியின் திறமையை வியக்காமலிருக்கமுடியவில்லை! //

      வித்தியாசமான பார்வைக் கோணங்கள் கொண்ட கதாசிரியர் என்பதில் ஐயமே கிடையாது...! எனினும் அடுத்துக் காத்திருக்கும் 2 ஆல்பங்களும் சம்மட்டி அடிகள் என்பது கொசுறுச் சேதி ! அதனை எவ்விதம் கையாளப் போகிறேன் என்பது கடவுளுக்கே வெளிச்சம்...!! ரொம்ப ரொம்ப complex plot !

      Delete
    2. // அடுத்துக் காத்திருக்கும் 2 ஆல்பங்களும் சம்மட்டி அடிகள் என்பது கொசுறுச் சேதி ! அதனை எவ்விதம் கையாளப் போகிறேன் என்பது கடவுளுக்கே வெளிச்சம்...!! ரொம்ப ரொம்ப complex plot ! //

      நீங்கள் எங்களின் சமையல்காரரைப் போன்றவர் சார். என்னென்ன பதார்த்தங்களை எந்தெந்த விகிதாச்சாரங்களில் கலந்து எப்படி சமைக்கிறீர்களோ... நாங்கள் அறியோம்! ஆனால், இறுதியில் சுடச்சுட பரிமாறப்படும்போது சப்புக்கொட்டி ருசித்திடும் சுலபமான வேலைதான் எப்போதும் எங்களுக்கு!

      சிம்ப்பிளா சொல்லணும்னா- மருந்து உங்களுக்கு, விருந்து எங்களுக்கு! :)

      Delete
    3. //சிம்ப்பிளா சொல்லணும்னா- மருந்து உங்களுக்கு, விருந்து எங்களுக்கு! :)//

      அதுவும் பீஸ் நெறய்ய இருக்கும் பிரியாணி விருந்து.!

      Delete
  52. சர்ப்பங்களின் சாபம் ..
    எதிர் பாரா சம்பவங்கள் ...எதிர் பாராத திருப்பங்கள் ...எதிர் பாராத முடிவுகள் என பரபர....விறுவிறு ....என்று சென்றது .வழக்கமான கதைகளில் சில திருப்பங்கள் ...முடிவுகள் எதிர் பார்த்தவை போலவே இருக்கும் .ஆனால் பெளன்சரின் சாகசத்தில் யூகிக்க முடியாத பல அதிரடிகள் ..சூப்பர் ...மீண்டும் அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர் பார்க்க வைக்கிறது ....

    ராபின் ஏற்கனவே சொன்னதுதான் ...நேர்கோட்டில் சென்றாலும் விறுவிறுப்புடன் சென்ற அருமையான சாகசம் ...

    டைகர் ...இந்த முறை என்னை ஏமாற்ற வில்லை ..கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது .எதிரிகள் டைகர் மூலமாக பிடிபட வில்லை எனினும் இதிலும் எதிர் பாராத திருப்பங்கள் எனலாம் ..

    மொத்தத்தில் இந்த மாதம் வந்த மூன்று இதழ்களுமே மனதிற்கு நிறைவை தந்தன ...

    அட்டைபடங்கள் .மொழிபெயர்ப்பு ...சித்திர தரம் ...அச்சு தரம் என எதிலுமே குறை காணா படைப்புகள் ....நன்றி சார் ...

    ReplyDelete
    Replies
    1. 'பெளன்சர்' போன்ற கிராஃபிக் நாவல்களை போராட்டக்குழுத் தலீவர் சிலாகித்து எழுதுவதைக் காணும்போது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை! ;)

      Delete
    2. Paranitharan K : //டைகர் ...இந்த முறை என்னை ஏமாற்ற வில்லை ..கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது .//

      :-) சங்க நோட்டீஸ் போர்டில் இதை நல்ல பெரிய எழுத்துக்களில் ஒட்டி வையுங்கள் !

      Delete
  53. \\எதிரிகள் டைகர் மூலமாக பிடிபட வில்லை எனினும் இதிலும் எதிர் பாராத திருப்பங்கள் எனலாம் ..\\
    +1

    ReplyDelete
  54. எத்தர்களின் எல்லை சித்திரங்கள் , கதை அருமை

    ReplyDelete
  55. எத்தனைபேர் கவனித்தீர்களோ தெரியவில்லை... இந்தமாதம் வெளியான மூன்று புத்தகங்களில்:
    ராபினுக்கு குண்டு பாய்ந்து வலதுகையில் கட்டு;
    டைகருக்கும் குண்டு பாய்ந்து வலதுகையில் கட்டு;
    பெளன்ஸருக்கும் குண்டு பாய்ந்து (வலது கை இல்லாததால்) இடது கையில் கட்டு!

    ஹீரோவோட கைல குண்டு பாய்ஞ்ச மாதிரி எந்தக் கதை வந்தாலும் அது ஷ்யூர் ஹிட்'னு ஒரு புரளியைக் கிளப்பிவிட்டா என்னன்னு தீவிரமா யோசிச்சிட்டிருக்கேன்... ;)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : எப்படியோ - 'தளபதி'யின் கதை ஹிட் என்று (தலீவர் வழியில்...?)ஒத்துக் கொண்ட மட்டிலும் சரி தான் !

      Delete
  56. அப்புறம்... பெளன்சர் கதையில் வரும் மூன்றுகால் செல்லம் 'மோச்சோ'வுக்கு ஏன் ஒரு கால் இல்லாமப் போச்சுன்ற ஃப்ளாஸ்பேக் சமாச்சாரம் எதுவும் கதையில் இல்லாதது ஏமாற்றமளிக்குது! எடிட்டர் அவர்கள் சீக்கிரமே படைப்பாளிகளிடம் பேசி, மோச்சோவுக்கென ஒரு ஸ்பின்-ஆஃப் தயார் பண்ணச் சொல்லலாம். தலைப்புக்கூட 'வானரத்தின் விரோதி' அப்படீன்னு வச்சா பொருத்தமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து! :)

    ReplyDelete
    Replies
    1. பூனையாரே எப்படி இப்படி ?

      Delete
    2. Erode VIJAY : ரின் டின் கேனுக்கு ஒரு தனித் தொடரே இருக்கும் போது - மோச்சோவுக்கு ஒரேயொரு ஆல்பமாவது கொடுக்கலாமோ ?

      Delete
  57. Anyone remember about detective Charles
    எனக்கு இவருடைய கதைகளில் வரும் வித்தியாசமான கரு ரொம்ப பிடிக்கும். மியாவ் மியாவ் மரணம் மற்றும் விபரீத விதவை தான் என்னிடம் உள்ளது. கடலோர கொலைகள் என்னும் படிக்கவில்லை.
    இவருடைய உண்மையான பெயர் என்ன என்று தெரியுமா ?

    ReplyDelete
    Replies
    1. @ niru 9

      நண்பரே, நீங்கள் கேட்ட டிடெக்டிவ் பெயர் 'சார்லஸ்' ! மொத்தம் மூன்று கதைகள் மட்டுமே வந்துள்ளன.
      113. விபரீத விதவை----ஜூன்1995
      118. மியாவ் மியாவ் மரணம்----ஜனவரி1996
      134. கடலோரக் கொலைகள்----ஆகஸ்ட்1997
      'விபரீத விதவை' பற்றி நண்பர் jsc johny ஒரு நீண்ட பதிவு போட்டுள்ளார்.அதை பார்க்க...இங்கே'கிளிக்'

      Delete
  58. கூடியவிரைவிலேயே ஷெரீப் டாக்புல் மற்றும் கிட்-ஆர்ட்டின் ஆகியோருக்கும் 'டிடெக்டிவ்' அந்தஸ்து வழக்கிக் கெளரவிக்கவேண்டுமாய் மேச்சேரி ரவிக்கண்ணன் சார்பாக மதிப்புக்குரிய எடிட்டர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்... :p

    ReplyDelete
    Replies
    1. ஹை இது கூட நல்லாயிருக்கே.

      Delete
    2. Erode VIJAY : கடைசியாய் வெளியான கதைகளில் எல்லாமே இந்த ஜோடி காதலைத் தேடித் திரிவதால் - "காதல் டிடெக்டிவ்" என்று maybe பட்டம் கொடுக்கலாம் !

      அது சரி...அந்தக் கதைத் தொடரின் நாயகர்கள் சிக் பில் & குள்ளன் என்பது ஞாபகம் இருக்குதா - யாருக்காச்சும் ?

      Delete
    3. //அது சரி...அந்தக் கதைத் தொடரின் நாயகர்கள் சிக் பில் & குள்ளன் என்பது ஞாபகம் இருக்குதா - யாருக்காச்சும் ?///

      வுட்சிட்டியில் இருக்காமல் பெரும்பாலும் ஏதாவது வெளியூர் பயணங்களிலேயே பொழுதைக் கழித்துவிட்டு, கதையின் கடைசியில் கரெக்டாக வந்து கிட்ஆர்ட்டினை காப்பாற்றிடும் பொறுப்பை மட்டும் செய்வார்களே... நீங்கள் அந்த இருவரைப் பற்றியா கேட்கிறீர்கள் எடிட்டர் சார்? கெஸ்ட் ரோல் செய்பவர்களையெல்லாம் ஹீரோ'னு ஏத்துக்கிட முடியாது. செல்லாது செல்லாது!

      Delete
    4. டெக்ஸ் வில்லரை டிடெக்டிவ்னு சொன்னதே இன்னும் ஜீரணம் ஆகலே. ஆர்டினையும் ஏஞ்சாமி இழுக்குறீக.

      இந்த தொடரின் நிஜ நாயகர்கள் ஆர்டினும் டாக் புல்லும்தான்.
      சிக்பில்லும் குள்ளனும் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்டுங்க...!

      Delete
  59. கஞ்சன் வீட்டு பந்தியை போல காற்றடுகிறது'

    'நாற்றமடிக்கும் நம் விதைகளிலிருந்து வாசமாய் ஒரு கொடி மலர்ந்து விட்டு போகட்டுமே?'

    'இந்த சேதி விற்பனைக்கல்ல என்பதை ரணமான உன் நாக்கு ஞாபகபடுத்தட்டும்'

    'என் தாயை போல இவளும் சுருட்டு பிடிக்கிறாள்'

    'உன்னை ஏமாற செய்வது குழந்தையிடமிருந்து குச்சி மிட்டாயை பறிப்பது போல் அவ்வளவு லேசாக இருந்தது'

    'என்றாவது ஒருநாள் என்னை மன்னித்துவிடு'

    'நம் தந்தைகளின் மரணங்களில் நம் பாதைகளும் பிரிகின்றன'

    எப்டி சார்.. இப்டி...

    ReplyDelete
    Replies
    1. Muthu Kumaran : ஒரிஜினல் ஸ்கிரிப்ட் நம்மையறியாது சில சமயங்களில் நம் பேனாவிற்கு ஒரு பூஸ்ட் வழங்குவதுண்டு ! இங்கும் அதுவே நிகழ்ந்துள்ளது யெற்று சொல்லலாம் !

      தவிர, இந்தத் தொடருக்கு வழக்கத்தை விடக் கூடுதலாய் அவகாசம் கொடுத்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் !

      Delete
    2. ஒவ்வொரு வரியும் ஒரு கதை சொல்கிறது சார்..

      தொடர்ந்து கலக்குவீராக.

      Delete
  60. Just finished Tex "King Special" - This is the first tex story where Tex & co appears in less number of pages than shawn & co. Very good reading experience.

    ReplyDelete
    Replies
    1. @ V Karthikeyan

      அதெப்படி...? டெக்ஸ் & கோ ரொம்பக் குறைச்சலான பக்கங்களில் வந்தால் உங்களுக்கு' very good reading experience'ஸா? கிர்ர்ர்ர்ர்...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. @Erode Vijay
      ha ha ha.
      Be honest, don't you get bored if tex comes in all pages (sometimes in all panels) and utters punch dialogues and karson always singing tex praises :)

      Delete
    4. @ V Karthikeyan

      நான் இத்தாலியில் குடியேறினதுக்கப்புறம் அங்கே பழைய புத்தகக் கடைகள்லேர்ந்து ஒரு பொட்டி நிறைய டிடெக்டிவ் டெக்ஸ் புக்ஸ் வாங்கி உங்களுக்கு அனுப்பிவைக்கலாம்னு நினைச்சுட்டிருந்தேன். ஹம்ம்...

      Delete
  61. வணக்கம் சார் . பெளன்சரின்சாகசம் சர்ப்பங்களின் சாபம் ஒரே மூச்சில் படித்து முடித்தேன் சார் . வழக்கமாக சனிக்கிழமை படிக்க ஆரம்பித்து , முடிக்க வில்லையானால் வீட்டிற்கு கொண்டு சென்று படிக்க மாட்டேன் சார். (எப்போதும் நான் கடையில் மட்டுமே படிப்பேன்)தலை டெக்ஸ் கதை மட்டுமே விதிவிலக்கு சார் . ஆனால் இம்முறை பெளன்சரை 2பாகம் படித்து விட்டு , 3ம்பாகம் படிப்பதற்குள் கடை மூடும் நேரம் வந்துவிட்டது சார் . கிளைமாக்ஸ் படிக்காமல் திங்கள் வரை காத்திருக்க முடியாத நிலையை கதையின் போக்கும் உங்கள் எழுத்தும் செய்துட்டதால் நேற்று வீட்டுக்கே எடுத்து வந்து படித்து முடித்தேன் சார் . ஒரே வார்த்தையில் முடிவு -ஸ்டன்னிங் சார் . ஒரே வருத்தம் அடுத்த கதையோடு இந்த சீரியஸ் முடியப்போகுதே என்பதேயாகும் சார் .

    ReplyDelete
  62. சர்ப்பங்களின் சாபம்.:-
    இப்போதான் படிச்சி முடிச்சிட்டு ஃப்ரெஷ்ஷா எழுதுறேன்.
    முதல் பாகத்தை படிக்க ஆரம்பித்த போது ஒரு சின்ன நெருடல் இருந்தது. இந்த மாதிரி ஒரு ஸ்லம் ஏரியாவில் ரொம்பவும் அராத்தாக திரியும் ஜனங்கள் எதுகை மோனையில் கவித்துவம் பொங்கும் வரிகளில் வசனம் பேசியது கொஞ்சம் உறுத்தியது என்ற உண்மையை மறைக்க விரும்பவில்லை.
    ஆனாலும் கதைப்போக்கில் வசனங்களுடன் ஒன்றிப்போனதில் மற்ற நெருடல்கள் மங்கிப்போனதும் உண்மை.
    ஹேங்வுமன் லோலாவின் சாயலில் இருந்ததால் நான் பயந்தே போனேன். ஏற்கனவே சேத் - டபரா ஜோடி ஏற்படுத்திய சஞ்சலம் இதிலும் தொடர்ந்திடுமோ என்று. நல்லவேளையாக ஹேங் உமனின் காபிரைட் முன்னாள் ஹேங்மேனுக்கு உரியது என்று தெரிந்தவுடன் நிம்மதியாயிற்று.
    டயாப்ளோ பிரபுவின் ரகசியத்தை முன்னதாகவே யூகிக்க முடிந்தது. பௌன்சருக்கு சொத்து எஎழுதியதும், பௌன்சரின் தந்தை பற்றி தெரியவந்ததும் டயப்ளோ பிரபுவின் முகமூடியும், ஒயிட் எல்க் யாரிடமும் சிக்காமல் தலைமறைவாவதும்
    இவற்றையெல்லாம் கணக்கிட்டு பார்த்ததில் இந்த யூகம் இரண்டாம் வாய்ப்பாடு போல் எளிதாக இருந்தது.
    யின்லீ.. , இந்த புள்ள (கொஞ்சம் ஆயா மாதிரி இருக்கு.) கஞ்சா விக்கிறத விட்டுடட்டு கவிதை எழுத போயிருக்கலாம். என்னமா பொளந்து கட்டுது.அவங்க அம்மா அதுக்க்கும்மேல இருக்கு. கவிதை குடும்பம் போல.

    மாரா மாரா., இது என்ன பொம்பளைன்னே புரியல. கூட வந்தவங்களையே போட்டு தள்ளுது. இத கூட கூட்டிக்கிட்டு திரியற அந்த கூப்பர் பெரிய தைரியசாலிதான்.
    ரௌத்திரம் பழகு
    சர்ப்பங்களின் சாபம்
    இரண்டுமே எண்பதுகளில் வந்த பழிக்குப்பழி வாங்கும் திரைப்பங்களின் சாயலில் இருந்தாலும் சினிமாத்தனம் இல்லாத , ஒரு வரைமுறைக்கு உட்படாத நிஜமுகங்களை பதிவு செய்ததில் தனிச்சிறப்பை பெறுகின்றன.
    அடுத்து
    கறுப்பு விதவையின் கதை க்காக காத்து இருக்கிறேன்.

    ReplyDelete


  63. எடிட்டர் சார்,
    ஜோடோரெவ்ஸ்க்கி பௌன்சர் தவிர மேலும் சில தொடர்களும் படைத்துள்ளதாக தெரிகிறது.
    தொடர்ந்து வரும் வருடங்களில் அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடும் வாய்ப்புகள் உண்டா சார்.?
    இந்த ஆண்டைப்போலவே தனிவரிசையில் வருடத்திற்க்கு ஒரு தொடர் என வெளியிடுங்கள் சார்.

    ச்சும்மா பிச்சிகினு போவும்.

    ReplyDelete
  64. "For sure டெக்ஸ் மறுபதிப்புகள் உண்டு"
    எடிட்டரின் அறிவிப்புக்கு நன்றி. என்னிடம் 2011ஆம் ஆண்டிற்கு பிறகான டெக்ஸ் கதைகள்தான் உள்ளன.)
    பெரும்பாலானவர்களிடம் முதல் இருபத்தைந்து டெக்ஸ் கதைகள் இருக்காது என்று நினைக்கிறேன்.அவை அனைத்தையும் பதிப்பித்தால் நன்று
    அல்லது
    டெக்ஸ் Reprint அடியேனுடைய சாய்ஸ்
    (பவளச்சிலை மர்மம்-110 pages
    வைகிங் தீவு மர்மம்-187 pages
    எமனோடு ஒரு யுத்தம்-94 pages
    மரணத்தின் நிறம் பச்சை-76 pages
    பழி வாங்கும் புயல்-144 pages
    மரண முள்-149 pages
    மந்திர மண்டலம்-186 pages
    கழுகு வேட்டை-181 pages

    ReplyDelete
  65. @ Vijayan....For sure டெக்ஸ் மறுபதிப்புகள் உண்டு - but slow n steady !

    really...!?

    அப்போ tag-line இப்படி ரெடி செய்துவிடுவோமா...

    'நேற்றைய டெக்ஸ் - நாளை வருகிறார்"...

    கதைகளை நீங்கள் தேர்ந்தெடுங்கள்...தேதிகளை நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. //"நேற்றைய டெக்ஸ் - நாளை வருகிறார்" //

      அடடே! நல்லாயிருக்கே! (நோட் பண்ணுங்க எடிட்டர் சார், நோட் பண்ணுங்க எடிட்டர் சார்)

      Delete
  66. டெக்ஸ் வில்லர் டிடெக்டிவ் லிஸ்டில் இடம்பிடித்தது எப்படி என்று இரண்டு மூன்று டிடெக்டிவ்களை அமர்த்தி ஒருவழியாக கண்டுபிடித்தேன்.
    திரை உலகின் சகலகலா வல்லவர் கமல்ஹாசன், எந்த கேரக்டருக்கும் செட் ஆவார். அவர் செய்யாத பாத்திரங்களே இல்லை. ஹீரோ, வில்லன், காமெடியன், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் மற்றும் கெஸ்ட்ரோல் ., அவ்வளவு ஏன் கிருஸ்ணவேணி., அவ்வை சண்முகி என கூட கலக்கி எடுத்தவர்.
    டெக்ஸ் வில்லரோ காமிக்ஸ் உலகின் சகலகலா வல்லவர். எனவே டெக்ஸையும் எந்த கேட்டகரியில் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
    இந்த காரணத்தை அடிப்படையாக வைத்தே எடிட்டர் டெக்ஸை டிடெக்டிவ் வரிசையிலும் சேர்த்து இருக்கிறார்.
    இதனை துப்பறிந்து கண்டறிந்த டிடெக்டிவ் நண்பர்களுக்கு நன்றி.!

    ReplyDelete
    Replies
    1. வன்மேற்கின் நவரச நாயகன் டிடெக்டிவ் டெக்ஸ்! ஆஹா!! தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் டெக்ஸின் மீது பொழியும் அன்பு இந்த எதிர்கால இத்தாலியப் பிரஜையை இன்புறச் செய்கிறது! ;)
      லலலலல...
      மாசிலா உண்மைப் பாசமே
      மாறுமோ மின்னும்மரணம் வந்தபோதிலே...

      Delete
    2. அட !டெக்ஸ விட்டு தள்ளுங்க !1போற போக்க பாத்தா நம்ம ப்ளாக்குக்கு ஒரு "நவரச கவிஞர் "கிடைப்பார் போலிருக்கே ...:-)
      நானே முதல் பட்டம் கொடுத்துடறேன் ....

      காமிக்ஸ் கவியரசு ...வித்தக கவி விஜய் ..:-)

      Delete
    3. //காமிக்ஸ் கவியரசு ...வித்தக கவி விஜய் .//
      +1

      (செக் பாஸாயிடுச்சா செல்வம். எனக்கு பௌன்ஸ் ஆயிடுச்சி.) :-)

      Delete
    4. @ செல்வம் அபிராமி

      இன்னும் நிறையப் பேர் லைக் போட்டால் மட்டுமே நீங்கள் கொடுக்கும் பட்டங்களை ஏற்க இயலும் என்பதை இங்கே பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ( செக் பெளன்ஸ் ஆன மற்ற நண்பர்களும் கண்ணன் ரவியைப் போலவே தாராளமாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என் வார்த்தைகளில் நம்பிக்கை வையுங்கள் ப்ளீஸ்!)

      Delete
  67. இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!
    இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!

    மார்ச் மாதத்தின் மூன்று புத்தகங்களும் சூப்பர்!!!
    அதுலையும் மூன்று புத்தகங்களின் அட்டைப்படங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொள்ளும் அளவுக்கு உலகத்தரம்!!!
    ஒரே மாதத்தில் வெளிவரும் அனைத்து புத்தகங்களின் அட்டைப்படங்களுமே கண்களுக்கு விருந்தாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி!!!!
    வாங்கும் காமிக்ஸ் புத்தகங்களுக்கு உடனுக்குடன் நியூஸ் பேப்பரில் அட்டை போட்டுவிடுவேன் (ஐடியா உபயம்- ஈரோடு விஜய் அண்ணா)...

    ஆனால் இந்த மூன்று புத்தகத்தின் அட்டைப்படங்களை இன்னும் அட்டை போட்டு வைக்க மனமில்லாமல் பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கிறேன்...முடிந்தால் 'டைகரின்' முன் மற்றும் பின் அட்டைப்படத்திற்கும், 'பௌன்சர்' மற்றும் 'ராபினி'ன் முன் அட்டைப்படங்களுக்குத் திருஷ்டி சுற்றிப் போட்டுவிடுங்களேன்...என் கண்ணே நிறைய பட்டு விட்டது....!!!

    டிடக்டிவ் ராபினும், மார்ஷல் டைகரும் ஒரு பக்கம் பட்டையக் கிளப்புகிறார்கள் என்றால் மறு பக்கம் 'பௌன்சரும் அந்த நன்றியுள்ள ஜீவனும்' இன்னொரு பக்கம் சான்ஸே இல்லை....
    'பௌன்சர்' கதையின் மொழி பெயர்ப்பும் அட்டகாசம்!!!
    உதாரணமாக ஒரு வசனம் 'சலூனின் கல்லாப் பெட்டியோ கஞ்சன் வீட்டின் பந்தியைப்போல் காற்றாடுகிறது'....ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்....

    மொத்ததில் இந்த மார்ச்சில் வெளிவந்த அனைத்துக் கதைகளுமே என்னைப் போன்ற காமிக்ஸ் ரசிகர்களுக்கு அருமையான விருந்து என்பேன்...Thanks a lot Editor sir!!!

    We r waiting for more 'Action Mela' in April!!!

    ReplyDelete
    Replies
    1. //உதாரணமாக ஒரு வசனம் 'சலூனின் கல்லாப் பெட்டியோ கஞ்சன் வீட்டின் பந்தியைப்போல் காற்றாடுகிறது' //

      ஏதாவது கல்யாண விருந்துக்கு போய்ட்டு வந்ததுக்கப்புறம் எடிட்டர் இதை எழுதியிருப்பார்னு நினைக்கிறேன்! ;)

      Delete
    2. //ஏதாவது கல்யாண விருந்துக்கு போய்ட்டு வந்ததுக்கப்புறம் எடிட்டர் இதை எழுதியிருப்பார்னு நினைக்கிறேன்! ;)//

      இன்னும் தெளிவா சொல்லணுமின்னா,
      கடைசி பந்தியில உக்காந்து இட்லிக்கு சட்னியும் , பாயாஸமும் கிடைக்காத கடுப்புல எழுதின மாதிரி தோணுது..:-)

      Delete
  68. மொழிபெயர்ப்பு என்பது ஓர் அற்புதமான கலை. அது மிக தளராத பழக்கத்தினாலேயும் மூல மற்றும் வரைவு மொழிகளில் கொண்ட ஆழ்ந்த ஆளுமைகளினாலுமே கைகூடும். மேலே நண்பர் எடுத்துக்காட்டி குறிப்பிடதைபோல், இந்த கதையில் அது மிக அழகாக வெளிப்படிருகிறது. மிக்க வாழ்த்துகள். உங்களின் "சிங்கத்தின் சிறுவயதில்" தொடரைப்போல் மொழிபெயர்ப்புச் சவால்களையும் பகிர்ந்துகொள்ளலாமே.

    ReplyDelete
    Replies
    1. //மொழிபெயர்ப்பு என்பது ஓர் அற்புதமான கலை. அது மிக தளராத பழக்கத்தினாலேயும் மூல மற்றும் வரைவு மொழிகளில் கொண்ட ஆழ்ந்த ஆளுமைகளினாலுமே கைகூடும்.//

      +1

      உண்மை.! உண்மை.!

      அதுவும் மாதம் இத்தனை கதைகளுக்கு .......,
      அம்மாடியோ.!!!

      Delete
    2. உண்மை உண்மை!
      மிகுந்த ஆச்சர்யமான விசயமும்கூட! பெளன்ஸரின் இந்த மூன்று பாகங்களையும் மொழிபெயர்க்க எடிட்டர் எடுத்துக்கொண்ட கால அளவு - ஒரே ஒரு வாரம் மட்டுமே! பல்வேறு பணிகள்/பிக்கல் பிடுங்கல்களுக்கு நடுவிலும் இதைச் சாதித்திருப்பது அசாத்தியமானதுதான்!

      Delete
  69. குறிப்பு : இது ஜாலி சீண்டல்

    ஹலோ மிஸ்டர் மங்கூஸ் & மியாய்,

    நீங்க டெக்ஸை புகழ்ற மாதிரி தெரியலை...அவர நீங்களே ஓட்ற மாதிரி தான் இருக்கு ! டெக்ஸை 'டிடெக்டிவ்' ன்னு சொன்ன எடி தான் "மார்ஷல்" என்பது "டிடெக்டிவ்" என்ற பதவிக்கு எல்லாம் மேலே..மேலே " ன்னு சொல்லியிருக்கிறார்..! வன்மேற்க்கு பகுதியின் நீதியை நிலைநாட்டும் நீதிக்காவலரான 'இரவு கழுகை' நீங்கள் 'டிடெக்டிவ்' ன்னு கொண்டாடுவது எப்படி இருக்கு தெரியுமா....

    "எங்கள் ஐ.ஜி.சௌத்ரி அவர்கள் இன்று 'ஹெட் கான்ஸ்டபிள்' என்ற இன்னொரு சிறப்பு பெயர் பெற்ற பெருமைக்குரியவர்! எந்த அரசும் இதுவரையில் இப்படி ஒரு அங்கிகாரத்தை வழங்கி சிறப்பித்ததேயில்லை... ஜூப்பர் ! " என குதிப்பது பயங்கர காமெடியா இருக்கு...ஹா..ஹா...இது இப்படியே போன அடுத்து நடக்க போறதை நினைச்ச இப்பவே சிரிப்பை அடக்கமுடியலை, அது என்னென்னா ...

    வரும் வாரங்களில் கார்ட்டூன் ஸ்பெஷலுக்காக 'காமெடியன் பட்டியலில்' கூட டெக்ஸையும் சேர்த்து, அதுக்கும் "டெக்ஸூக்கு மறுபடி ஒரு கௌரவம்' ! கடமை தவறா 'வச்சுமேன்' என்ற இன்னொரு பட்டம் கிடைச்சிருக்கே.. ஜூப்பர்...ஜூப்பர்..." ன்னு நீங்க கொண்டாட்டங்கிற பேர்ல பண்ணப்போற காமெடிய நினைச்ச சிப்பு சிரிப்பா வருது ....ஹாஹா ஹா....!

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் மாயாவி,

      என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு உங்களுக்கு? எங்கள் தல 'காமெடி ஸ்பெஷல்'இல் இடம்பெறத் தகுதியற்றவரென்று நினைக்கிறீர்களா என்ன?
      ஒரு முழுநீள டிடெக்டிவ் டெக்ஸ் காமெடி கதையின் கருவை பொனெல்லி குழுமத்திற்கு பரிந்துரை செய்ய யோசித்திருக்கிறேன். அதன் சுரு பின்வருமாறு...

      இதுவொரு 240பக்க கதை!

      வேட்டைக்குப் போன நவஜோ செவ்விந்தியன் வழிதவறி தொலைஞ்சுபோய்டறான். அவனைத்தேடி நம் டிடெக்டிவ் குழு கிளம்புகிறது. வழிநெடுக டெக்ஸ், கார்ஸனின் நக்கல் நையாண்டிகளுடன் பலஆயிரம் மைல்கள் பயணிக்கும் அக்குழு, 120வது பக்கத்தில் ஒரு நீர்சுணையருகே தொலைந்துபோன செவ்விந்தியனைக் காண்கிறது/கண்டுபிடிக்கிறது. அவனை அழைத்துக்கொண்டு 121ம் பக்கத்தில் மீண்டும் பயணத்தைத் தொடங்கும் அக்குழு, வழிநெடுக மீண்டும் நக்கல்-நையாண்டிகளால் நம் வயிறைப் பதம் பார்த்த பிறகு 240ம் பக்கத்தில் தங்களது நவஜோ கிராமத்தை வந்தடைகிறது. முற்றும்.
      துளிகூட வில்லத்தனமோ, துப்பாக்கிச் சண்டைகளோ கிடையாது. ஆனால், ரசிகர்கள் ஏமாந்துவிடக்கூடாதே என்பதற்காக கடைசிப்பக்கத்தின் கடைசிப் பேனலில் தனது துப்பாக்கியை வானத்தை நோக்கிச் ஒருமுறை சுடுகிறார் டெக்ஸ். 'டுமீல்' - ஒரே ஒரு புல்லட் - செலவு 50 ரூபாய்.

      இந்த முழுநீளக் காமெடிக் கதை வெளியான பிறகு வயிற்றுவலி மாத்திரைகளுக்கு ஏக டிமாண்ட் ஆகப்போவது உறுதி! இது தமிழில் வெளியாகும்போது எடிட்டர்ட்ட சொல்லி முன்னட்டையில் ஒரு scream dialog balloon ல் ' இலவச வயிற்றுவலி மாத்திரையைக் கேட்டுவாங்குங்கள்' அப்படீன்னு போட்டுடலாம்.

      பின்னட்டையில் ... கதை: ஈரோட் விட்ஜய் ஓவியம் : காலெப்பினி

      சூப்பர்ல? :D

      Delete
    2. கிட்ஆர்ட்டின் கண்ணன்...
      எனக்கு 'செக்' எல்லாம் வேண்டானுட்டேன், புக் பார்சல் வந்துடிச்சி..! அதனால...இங்கே'கிளிக்'

      Delete
    3. வணக்கம் வேதாளரே.!
      என்னோட பின்னூட்டத்தின் சாரம்சத்தையே புரிஞ்சிக்காம சிப்பு சிப்பா சிரிக்கிறிங்களே மாயாத்மா.!
      டிடெக்டிவ் பதவி என்பது டெக்ஸ் வில்லரின் பன்முக திறமைகளில் ஒன்று. ஐ.ஜி, ஹெட்கான்ஸ்டபிள் என்று எடிட்டர் வகைப் படுத்தவில்லை.
      எப்போதும் குடைச்சல் கொடுத்துக்கொண்டே., எதற்க்கும் சரிபட்டு வராத ஆட்களை ட்ரான்ஸ்பர் செய்ய சரியான காரணம் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு ப்ரமோஷன் கொடுத்து வேறு இடத்துக்கு விரட்ட. வேண்டிய கட்டாயத்துக்கு உயரதிகாரிகள் ஆளாகின்றனர்.
      உங்காளுக்கு மார்ஷல் பதவி கிடைத்ததும் அப்படித்தான். லெப்டினன்ட் அதைவிட்டா மார்ஷல் இதைத்தவிர வேறு ஏதாவது உண்டா டைகருக்கு.
      கேப்டன் பதவியே நம்ம எடிட்டர் பரிதாபப்பட்டு கொடுத்தது.

      டெக்ஸ் டிடெக்டிவ் வரிசையிலும் இடம் பிடித்தது பொறுக்காமல் ஏன் வேதாளரே பொங்குறிங்க.!

      டெக்ஸ் வில்லரை டிடெக்டிவ் என்று கூறியதால் அவருடைய புகழ் மங்கிவிடப் போவதில்லை.
      முடிவுரை எழுதப்பட்ட வேங்கையின் நினைத்தால்தான் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

      Delete
    4. ஹா..ஹா...நல்ல ஒன்னு தெரிஞ்சிக்கோங்க கண்ணன்..!

      பொரல தெரிச்சவனாலத்தான் உக்கார முடியும்!
      உக்கார முடியறவனாலத்தான் நிக்க முடியும்!
      நிக்க தெரிஞ்சவனால தான் நடக்க முடியும்!
      நடக்க தெரிச்சவனால தான் ஓடமுடியும்!
      ஓடத்தெரிஞ்ச்சவனால தான் பாய முடியும்!
      "பாயத்தெரிஞ்ச்ச என் சிங்கம் நல்ல படுத்து பொராலும் தெரியுமா"ன்னு கேக்கறப்பல இருக்கு உங்க
      பண்முக விளக்கம்..ஐயோ...ஐயோ..! உங்க விளக்கத்தை நினைச்ச சிப்பு சிரிப்பா வருது.....!

      Delete
    5. //"பாயத்தெரிஞ்ச்ச என் சிங்கம் நல்ல படுத்து பொராலும் தெரியுமா"ன்னு கேக்கறப்பல இருக்கு உங்க
      பண்முக விளக்கம்..ஐயோ...ஐயோ..! //

      அப்போ டிடெக்டிவ்ஸ் எல்லாம் படுத்து பொரளும் பச்ச புள்ளைகன்னு சொல்றிங்களா.??
      முதல்ல ஐ.ஜி. முன்னாடி நிக்குற ஹெட்கான்ஸ்டபிள்னு சொன்னிங்க. இப்போ பாயும் சிங்மில்லை. படுத்து பொரளும் சிங்கம்னு சொல்றிங்க.
      உங்க கருத்துப்படி பாத்தா டிடெக்டிவ் பதவி என்பது மட்டமான ஒன்றாக தெரிகிறதே.
      இரும்பு கை மாயாவி
      லாரன்ஸ் டேவிட்
      ஜானி நீரோ
      ஜேம்ஸ் பாண்ட்
      காரிகன் மற்றும் ராபின் முதலிய நமது ஆதர்ஷ நாயகர்களை மட்டமான வேலை செய்பவர்களாக உங்கள் விளக்கம் காட்டுகிறதே.!
      டெக்ஸ் வில்லரை டிடெக்டிவ் னு சொன்ன ஒரே காரணத்துக்காக அந்த வேலையை இப்படியா கேவலப்படுத்துவது மாயாத்மா.!!!
      இதில் எங்களை பார்த்து வேறு சிப்பு சிப்பா சிரிக்கிறிங்களே வேதாளரே.? இது நியாயமா.???
      டிடெக்டிவ் பணி என்பது அடி மமட்டமோ, கவுரவக் குறைவோ அல்ல மாயாத்மா.! அதுவும் நம்மை வசீகரித்து வைத்திருக்கும் ஒரு கௌரவமான கதாபாத்திரம்தான்.!
      பதில் தருகிறேன் பேர்வழி என்று நமது கதாநாயகர்களை மட்டம் தட்டாதீர்கள் மாயாத்மா.!!!
      இதற்கு மேலும் சிப்பு வந்தால் நீங்க கண்ணாடிய பாத்து சிப்பு சிப்பா சிரிப்பதுதான் நியாயம்.

      (ஜாலியான சீண்டல் பதில்தான். சீரியஸாக வேண்டாம் வேதாளரே.) :-)

      Delete
    6. @ மாயாவி

      வாங்கிக்கொண்ட புத்தகப் பார்சலுக்கும் அதிகமாவே ஃபீல் பண்ணி அசத்திட்டீங்க! ;)
      இப்போல்லாம் முன்பைவிடவும் நகைச்சுவை உணர்வும் ஏகத்துக்கு எகிறிடுச்சு! அசத்துங்க!

      Delete
    7. //எதற்க்கும் சரிபட்டு வராத ஆட்களை ட்ரான்ஸ்பர் செய்ய சரியான காரணம் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு ப்ரமோஷன் கொடுத்து வேறு இடத்துக்கு விரட்ட. வேண்டிய கட்டாயத்துக்கு உயரதிகாரிகள் ஆளாகின்றனர்.
      உங்காளுக்கு மார்ஷல் பதவி கிடைத்ததும் அப்படித்தான் //

      ஏனோ என் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!

      Delete
    8. PART-1
      மு.கு : ஜாலியான சீண்டல் பதில்தான். சீரியஸாக வேண்டாம் மங்கூஸாரே :)))
      ஹாஆஆஆஆ...ஹாஹா...
      கண்ணன்...உங்க பதில படிச்சா இன்னு சிப்பு சிரிப்பாவருது...ஹாஹா...

      முதல்ல ஒரு சொலவடை:
      "மாமியார் ஒடச்சா மண்ணு கொடம்! மருமக ஒடச்சா பொன்னு கொடம்!"ன்னு உங்க வட்டரதுல சொல்லுவாங்க, இப்படித்தான் இருக்கு உங்க பதில்..! மார்ஷல் டைகரை மட்டம்தட்டி எப்பிடியெல்லாம் கமெண்ட் போட்டிருப்பிங்க...உங்க டெக்ஸ் & கோ மார்ஷல் டைகரை எவ்வளவு அசிங்கப்படுத்திருப்பிங்கன்னு கொஞ்ச யோசிச்சி பாருங்க..!
      //பதில் தருகிறேன் பேர்வழி என்று நமது கதாநாயகர்களை மட்டம் தட்டாதீர்கள்// இந்த வேலையை கரெக்டா செய்யறது யார் ரசிகர்கள்கிறது 'இத்தாலி' வரைக்கும் தெரியும்..!டைகரை குறைசொன்னதை,கிண்டல் பண்ணினதை copy பேஸ்ட் பண்ணின 'மின்னும்மரணம்' அளவுக்கு ஒரு புக்கு போடலாம். 'டெக்ஸ்வில்லர்' திறமையை பாராட்டியதை(கவனிக்க திறமையை..டெக்ஸ் ரசிகர்களே) copy பேஸ்ட் பண்ணினா 'மியாவி' அளவு கூட தேறாது..! பில்டிங்கில நிக்கறவர் 'பந்த' தான் புடிக்கணும், பேட்ஸ்மேன் சட்டைய புடிச்சிட்டா...பிஸ்தா கிடையாது...ஹா...ஹா..!
      அப்பறம் முக்கியமான ஒன்னை தெரிச்சிகோங்கோ...யங் டைகர்,கேப்டன் டைகர்,மார்ஷல் டைகர் இப்படி தனிதனி டைட்டில்லதான் டைகரோட தொடரே வந்திருக்கு..! 'கேப்டன்' கிற பதவியை எடிட்டர் கொடுத்தது கிடையாது! //கேப்டன் பதவியே நம்ம எடிட்டர் பரிதாபப்பட்டு கொடுத்தது.// ன்னு நீங்க சொல்றது...ஹாஹா...(இந்த டெக்ஸ் ரசிகர்களோட அறியாமைக்கு ஒரு அளவேயில்லையா..?!) உண்மையா உங்க டெக்ஸ்க்கு தான் நம்ம எடிட்டர் (தெரியாத்தனமா) பரிதாபப்பட்டு 'டிடெக்டிவ்' பட்டம் கொடுத்திருக்கார்...! :D

      //அப்போ டிடெக்டிவ்ஸ் எல்லாம் படுத்து பொரளும் பச்ச புள்ளைகன்னு சொல்றிங்களா.??//
      //உங்க கருத்துப்படி பாத்தா டிடெக்டிவ் பதவி என்பது மட்டமான ஒன்றாக தெரிகிறதே.//
      //ஆதர்ஷ நாயகர்களை மட்டமான வேலை செய்பவர்களாக உங்கள் விளக்கம் காட்டுகிறதே.!//
      இதுக்கு பதில் part-2. ( மாலைக்கு 5:00 pm)


      Delete
    9. " இத்தொடரின் நாயகர் ப்ளூபெர்ரி ஒரு லெப்டினென்ட். .குழல் ஊதுவோன், கார்ப்பொரெல், சார்ஜெண்ட். பின்னர் லெப்டினென்ட் . இதுவே மைக் எஸ் டோனாவன் வகித்த பதவிகள். ப்ளுபெர்ரி என்பதே தெற்கத்திய வாடை தெரியாமல் இருக்க அவராகவே வைத்துக்கொண்ட பெயர். (பக்கத்தில் இருந்த ப்ளெபெர்ரி பழங்களை பார்த்து. ஆதாரம். :-இளமையில் கொல்.)
      டைகர் என்ற பெயரும் கேப்டன் பதவியும் தமிழில் நாமாக கொடுத்தது என்பதை எடிட்டர் அந்த கதையிலேயே எழுதியிருப்பார்.
      அறியாமை எங்களுக்கா.? ஓகே. ஓ.கே.
      மீண்டும் உங்களை முழுமூச்சாக ப்ளாக்கில் ஈடுபட வைத்ததில் வெற்றி எனக்கே.! ஹாஹாஹா.!

      (ஒரு நாள் முழுக்க நேரில் பேசியே உங்களை "அசைக்க " முடியவில்லை. ப்ளாக்கில் என்னெத்த பேசி என்னெத்த செய்ய)
      பார்ட் 2
      பார்ட் 3 இன்னும் எத்தனை வந்தாலும் வரவேற்கிறேன்.
      கலக்குங்க மாயாத்மா.! (ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி.)

      Delete
    10. மு.கு : இது கொஞ்சம் உபயோகமான தகவல் (part -1-A)..ஹீ..ஹீ...!

      Lieutenant என்பதன் பொருள் 'ராணுவத்தின் உயர்அதிகாரியான படைதலைவருக்கு அடுத்தஸ்தானமான 'துணைப் படைதலைவர்'..! இதை நமக்கு புரிய தங்கிலீசில் துணை கேப்டன் என சொல்லலாம்...! கதையின் நிறைய இடங்களில் 'துணை கேப்டன்' கிற நிலை தாண்டி 'கேப்டனாகவே நடந்துகிட்டதால எடிட்டர் 'துணை' எடுத்திட்டார். அவ்வளவே..! 'துணைப் படைதலைவரா' வந்த Lieutenant Blueberry கதைகளின் பட்டியல்...
      Lieutenant Blueberry Series:
      1.Fort Navajo---இரத்தகோட்டை
      2.Thunder in the West----மேற்கே ஒரு மின்னல்
      3.Lone Eagle----தனியே ஒரு கழுகு
      4.Mission to Mexico----மெக்சிகோ பயணம்
      5. The Trail of the Navajos----செங்குதிப் பாதை
      6.The Man with the Silver Star----இரும்புக்கை எத்தன்
      7.The Iron Horse----பாரலோகப்பாதை
      8.Steel Fingers----இரத்தத்தடம்
      9.General Golden Mane----தலைக் கேட்ட தங்கத்தலைவன்

      Delete
  70. கடல் கடந்த கார்சனின் கடந்த காலம்
    போனெல்லி நிறுவனத்தின் நிர்வாகி Mrs.Ornella நமது இதழுடன்..! பார்க்க....இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. என் எதிர்கால சகஊழியரை ஃபோட்டோவில் காண்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்... ;)

      Delete
    2. சூப்பர்.! சூப்பர்.!
      விஜய் ஒரு டவுட்டு,
      போனெ'எலி' யில் பூனை எப்படி பணியாற்ற முடியும்.? :)

      Delete
    3. //என் எதிர்கால சகஊழியரை ஃபோட்டோவில் காண்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்... ;)//

      இதுக்கு என்ன அர்த்தம் விஜய்...
      நீங்க bsnl வேலையை ரிஸைன் பண்ணிட்டு, இத்தாலியிலிருந்து வந்த அழைப்பை ஏத்துகிட்டு, டெக்ஸ்வில்லருக்காக ஸ்கிரிப்ட் எழுதற வேலையை போகப்போறிங்களா...இல்ல "வேலைப்பாத்தா உங்கள மாதிரி 'டெக்ஸ்' ரசிகரோடத்தான் வேலைப்பாக்கணும்" ன்னு அவங்க bsnl ல ஜாயின் பண்ணபோறாங்களா...எது உண்மை ? சொல்லுங்க விஜய்...சொல்லுங்க..!

      Delete
    4. ///இத்தாலியிலிருந்து வந்த அழைப்பை ஏத்துகிட்டு, டெக்ஸ்வில்லருக்காக ஸ்கிரிப்ட் எழுதற வேலையை போகப்போறிங்களா///

      ஆனாலும் என்னை ரொம்பத்தான் உணர்ச்சிவசப்பட வைக்கறீங்க மாயாவி அவர்களே! எனக்கு எடுத்தவுடன் அவ்வளவு பெரிய வேலையெல்லாம் வேண்டாம். போனெல்லி ஆபிஸில் லைப்ரரி இன்சார்ஜ்/ ஸ்டோர் கீப்பர்/ ஆபீஸ் பாய் வேலை கிடைச்சாக்கூடப் போதும்! (அப்பால கொஞ்சம் கொஞ்சமா உழைப்பால் உயர்ந்து டைரக்டர் ஆகிடுவேன்றது வேற விசயம் ஹிஹி)

      டிடெக்டிவ் டெக்ஸின் 1000வது இதழ் வெளியீட்டு விழாவின்போது மேடையின் ஒரு ஓரத்தில் நான் உட்கார்ந்திருந்தாலே போதும்! (அந்த போட்டோவை 'இங்கே கிளிக்'கில் போட கண்டிப்பாய் உங்களுக்கு அனுப்பிவைப்பேன்) ;)

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. //டிடெக்டிவ் டெக்ஸின் 1000வது இதழ் வெளியீட்டு விழாவின்போது மேடையின் ஒரு ஓரத்தில் நான் உட்கார்ந்திருந்தாலே போதும்! (அந்த போட்டோவை 'இங்கே கிளிக்'கில் போட கண்டிப்பாய் உங்களுக்கு அனுப்பிவைப்பேன்) ;)//

      உங்கள் கனவு உண்மை விஜய்..உண்மை...
      என் காலஏந்திரத்தில் பயணித்து எனக்கு அனுப்புவதாக சொன்ன போட்டோவைகொண்டுவந்துள்ளேன்...ஹாஹா...
      பார்க்க ஆவாக உள்ளதா ஈரோடு விஜய் அவர்களே...! நீங்கள் செய்யவேண்டியது என்னவென்று உங்களுக்கே தெரியும்..அதேதான் ஒரு புத்தக கட்டை அனுப்பினால் போதும்...ஹாஹா...சரிதானே...!
      அட்டகாசமான டெக்ஸின் 1000வது இதழ் வெளியீட்டு விழா பார்க்க காத்திருங்கள்...!

      9:00 pm க்கு அந்த கிளிக் அரங்கேறும்...!

      Delete
    7. !! இனிமேலும் நான் புத்தகப் பார்சல் அனுப்பனும்னா சிவகாசிக்குப்போய் அந்த 500ஐத்தான் ஆட்டையை போடணும்!

      மகா ஜனங்களே! 9 மணிக்கு நடைபெறவிருக்கும் 'தல'யின் 1000வது புத்தக வெளியீட்டுவிழாவைக் காண அனைவரும் வாரீர்! அனுமதி இலவசம்! :)

      Delete
  71. கடல் கடந்த கார்சனின் கடந்த காலம் . போனெல்லி நிறுவனத்தின் நிர்வாகி Mrs.Ornella நமது இதழுடன்: Click here

    ReplyDelete
    Replies
    1. நைஸ் !......வல்லவர்கள் வீழ்வதில்லை காண்பித்தீர்களா சார் ?....

      Delete
    2. நைஸ் !......வல்லவர்கள் வீழ்வதில்லை காண்பித்தீர்களா சார் ?....

      Delete
    3. அ..அவங்களுமா சந்தா கட்டுறாங்க?!!

      Delete
    4. எனக்கு அப்படி தோணலை விஜய்...இதுஒரு புது மாதியான 'நாசூக்கான' விமர்சனம் பார்க்க...இங்கே'கிளிக்'

      Delete
    5. ஹா ஹா ஹா! சினிமாஸ்கோப்பை விடமாட்டீங்க போலிருக்கே, மாயாவி அவர்களே!

      எடிட்டரின் 'Click here' Vs மாயாவியின் 'இங்கே கிளிக்' ? ;)

      Delete
  72. எத்தர்களின் எல்லை.:-
    சில வருடங்களுக்கு முன்புவெளியான ராபினின் மரண ஒப்பந்தம் கதையை நினைவுப் படுத்திய்து இந்த எ.எல்லை.
    கலர் புத்தகங்கள் நிறையவே கவர்ந்தாலும் இந்த கறுப்பு வெள்ளையின் மீதான வசீகரம் மட்டும் ஏனோ குறையவேயில்லை.
    சித்திரங்கள் அருமை. நல்ல விறுவிறுப்பான கதைப்பாணிக்கும் ஒரு சல்யூட்.
    கேப்டன் டோப்ஸனிடம் ராபின் பேசும் வசனங்கள் அக்மார்க் டெக்ஸ் வில்லர் முத்திரை. தென் அமெரிக்காவில் இருந்து கள்ளத்தனமாக டெக்ஸாஸ் எல்லையை கடந்து வேலை தேடிவரும் ஒரு கும்பலைப் பற்றி N G C யில் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு டாக்குமெண்ட்ரி பார்த்திருக்கிறேன்.
    எனவே இது சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து கற்பனையும் கலந்து புனையப்பட்ட படைப்பு என்றே நினைக்கிறேன்.
    இம்முறையும் ராபின் ஏமாற்றவில்லை.
    என்ன ஒரே வருத்தம் என்றால் ராபின் ஒன்று இறந்த நண்பர்களின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள ஊருக்கு செல்கிறார். அல்லது ராபின் தேடிச்செல்லும் நண்பர்கள் இறந்து விடுகிறார்கள்.
    கடந்த இரண்டு கதைகளாகவே மார்வின் இல்லாமல் ராபின் மட்டும் தனியாக சாகசம் செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். அடுத்த முறையாவது மார்வின் இடம்பெறும் கதையை வெளியிடுமாறு எடிட்டரை கேட்டுக் கொள்கிறேன்.
    முன்னட்டையை விட பின்னட்டை சிறப்பாக உள்ளது. கைக்கு அடக்கமான சைசில் நல்ல ரீடிங் எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்தது.
    எத்தர்களின் எல்லை ஆவ்ரேஜுக்கும் அதிகமான மதிப்பெண்களை பெறுகிறது.

    இனி மிஞ்சியிருப்பது மார்ஷல் டைகர்.

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN @ உங்கள் விமர்சனத்தை இப்போதுதான் படித்தேன். இருவது விமர்சனமும் ஒன்று போல் உள்ளது!

      //உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து கற்பனையும் கலந்து புனையப்பட்ட படைப்பு என்றே நினைக்கிறேன். //
      இனி இதனை நமது மாயாவி.சிவா தான் உறுதி செய்ய வேண்டும்!

      Delete
    2. @ Parani from Bangalore

      இதைபத்தி நண்பர் 'கிங் விஸ்வா' ஒரு பதிவு போடுவார்ன்னு எதிபார்க்கிறேன்..!
      இங்க நான் வேறுசில குறிப்பிடவிரும்புகிறேன். இது மாதிரி கறுப்பு வெள்ளையில் குறைந்த விலை இதழ்கள் தான் புதிய இளம் வாசகர்கள் கைகளுக்கு முதல்ல போகும்கிறது என் எண்ணம்..!ஆகையால இந்த மாதிரி இதழ்களில் கூடுத்தல் கவனம் தேவை.
      1. 'அவர் தான் c.i.d.ராபின்' என்ற ஒற்றை பெட்டி செய்தி தவிர வேறு எங்கும் 'இரவு,பகல்,ஆபிஸ்,இவ்வளவு நேரம் கழித்து, என சூழ்நிலையை விளக்கும் பெட்டி விஷயம் ஒன்று கூடஇல்லை. வெறும் வசனங்கள் மட்டுமே. கிராபிக்ஸ் நாவல் பழகிய நமக்கு ஒகே,பிறருக்கு..?

      2.கீன்,பூன்,ஸ்லிம்,சாம்,ப்ரேடி,ரெட்,பில்,மாக்,பியர்,ஜேக் இப்படி குட்டி குட்டி பெயர்களில் இங்குள்ள இரண்டு பெயர் ஒருவரையே குறிக்கும், இதை கண்டுபிடியுங்கள். ஒருமுறையாவது இரண்டையும் இணைத்து உபயோகித்துவிட்டு,அதன்பிறகு முன்பாதி or பின்பாதி பெயரை பயன்படுத்தலாம். இரண்டையும் இணைத்து சொல்லாமல், இரண்டையும் மாறி மாறி உபயோகிப்பது புதிய வாசகர்களை நிச்சயம் குழப்பும்..!

      3. கதையில் பொய்வாக்குமூலத்திற்க்கு இரண்டு பக்கங்கள் சித்திரம் உள்ளது, ஆனால் 'குற்றம் நடந்தது என்ன?' விளக்கம்... இரண்டே இரண்டு பலூன் வசனம்...! சித்திரம் இல்லாத மர்மத்தைவிவரிக்கும் இதுமாதிரி இடங்களில் தான் எடிட்டரில் முழு வீச்சு தேவை என எனக்குபடுகிறது.

      4. ..ம்....போதுமே.....!

      Delete
    3. //கீன்,பூன்,ஸ்லிம்,சாம்,ப்ரேடி,ரெட்,பில்,மாக்,பியர்,ஜேக் இப்படி குட்டி குட்டி பெயர்களில் இங்குள்ள இரண்டு பெயர் ஒருவரையே குறிக்கும், இதை கண்டுபிடியுங்கள். ஒருமுறையாவது இரண்டையும் இணைத்து உபயோகித்துவிட்டு,அதன்பிறகு முன்பாதி or பின்பாதி பெயரை பயன்படுத்தலாம். இரண்டையும் இணைத்து சொல்லாமல், இரண்டையும் மாறி மாறி உபயோகிப்பது புதிய வாசகர்களை நிச்சயம் குழப்பும்..!///

      நல்ல கருத்து!

      Delete
    4. மாயாவிஜி என்கிற வேதாள மாயாத்மா என்கிற சிவாஜி என்கிற மாயாவி சிவா அவர்களின் கருத்துக்கு ஆமோதித்த விஜய் என்கிற ஈரோடு விஜய் என்கிற சேரோடு விஜய் என்கிற பூனையார் அவர்களே !....

      அய்யய்யோ !..நான் இப்படி எழுத நினைக்கவில்லை ..மேச்சேரி கண்ணன் என்கிற மாடர்ன் மங்கூஸ் என்கிற மேச்சேரி மங்கூஸ் என்கிற கிட் ஆர்ட்டின் கண்ணன் என்கிற kiD ஆர்டின் kannaN தான் எழுத சொன்னாருங்க

      இவ்வளவு பேரு வச்சுருக்கற நம்மளயே எல்லாரும் புரிஞ்சிக்கும்போது சிவாஜி சொன்ன விஷயத்தையா புரிஞ்சிக்க மாட்டாங்க ..அப்படின்னு கேக்க சொன்னாரு ...:-))

      Delete
  73. விஜயன் சார், இந்த மாதம் முதலில் படித்து ராபின் கதை! இந்த கதையின் ஓவியம்கள் என்னை கட்டிப்போட்டு விட்டது என்றால் மிகையில்லை, சமீபத்தில் வந்த கருப்பு வெள்ளை கதைகளில் ஓவியம்களை என்னை மிகவும் கவர்ந்தது இதுதான். கதை பிடித்து இருந்தது, எனக்கு என்னமோ இந்த கதை ஒரு உண்மை சம்பவத்தின் கருவை எடுத்து கொண்டு உருவாக்க பட்டது போல் தோன்றுகிறது.

    இது போன்று எல்லைகளில் இன்னும் சில உண்மை சம்பவம்கள் உலகம் முழுவதும் நடந்து வரலாம் என நினைக்கிறன்.

    ReplyDelete
  74. விஜயன் சார், வேங்கைக்கு முடிவுரையா – கதையை படிக்க ஆரம்பித்த போது ஓவியம்கள் என்னை கவரவில்லை, கதையோடு ஒன்ற ஆரம்பித்தபின் அவைகளை மிகவும் ரசித்தேன், இந்த புதுமையான ஓவியம் என்னை மிகவும் கவர்தது. ஆனால் ரணகள ராஜ்ஜியம் ஓவியம்கள் என்னை கவரவில்லை, நமது அந்த கால கதைகளில் வரும் ஓவியம் போல் இருந்தது, குறிப்பாக லாங்-ஷாட் ஓவியம்கள்.

    தெளிவான கதை, கதை வழக்கத்தை விட விறுவிறுப்பாக இருந்ததுகதையில் ஆங்காங்கே தென்படும் திருப்பம்கள் மேலும் கதையை ரசிக்க செய்தது. இறுதி கட்டத்தில் எதிரியுடன் மோதும் இடம், அதில் உள்ள சின்ன ட்விஸ்ட் என இந்த கதை மொத்தத்தில் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது.

    கடைசியில் டைகரரை இந்த கதையில் ஒரு முழு ஹீரோவாக காட்டியதற்கு நன்றி.

    அட்டைபடம் நமது ப்ளாக்கில் பார்த்தபோது அழுத்தமான அடர்த்தியான வண்ணத்துடன் இருந்தது, ஆனால் நேரில் வண்ணம் குறைந்து காணப்பட்டது. நமது ப்ளாக்கில் பார்த்த அதே தரத்தில் வந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. //அட்டைபடம் நமது ப்ளாக்கில் பார்த்தபோது அழுத்தமான அடர்த்தியான வண்ணத்துடன் இருந்தது, ஆனால் நேரில் வண்ணம் குறைந்து காணப்பட்டது. நமது ப்ளாக்கில் பார்த்த அதே தரத்தில் வந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.///

      உண்மை!

      Delete
  75. மாயாவிஜீ உண்மை .

    நானே சில முறை இங்கே குறிப்பிட்டுள்ளேன் .நாயகரை தவிர வரும் துணை கதாபாத்திரம் பெயர் பலதடவை மாறி மாறி வருவது குழப்பத்தை விளைவிக்கிறது .ஒரு முறை முழுநீள பெயரால் விளிப்பதும் ..பிறகு முதல் பாதி பெயரை மட்டும் விளிப்பதும் ...சில பக்கம் கழித்து பின் பாதி பெயரை மட்டுமே விளிப்பதும் கண்டு பக்கத்தை மீண்டும் புரட்டி முகத்தை அடையாளம் காண வைக்க சொல்கிறது .ஆசிரியர் இந்த குறைபாட்டை நீக்க வேண்டும் .கதை முழுவதும் கதாபாத்திரத்தின் பெயர் ஒரே விதமாக இருப்பின் நன்று .

    ReplyDelete