Friday, January 09, 2015

கார்முகிலும் அழகே..!

நண்பர்களே,

வணக்கம். பெரிய பீடிகைகள் இல்லாமல் சொல்வதாயின் -   இது பௌன்சர் நேரம் !! நேற்றைய மாலையில் கூரியரில் நாங்கள் சேர்ப்பித்த சந்தாப் பிரதிகள் உங்களை எட்டிடும் போது - 'பர பர'வென டப்பாவைப் பிரித்து "ரௌத்திரம் பழகு" இதழினை மட்டுமன்றி - மும்மூர்த்திகளின் மறுபதிப்புகள் மூன்றையும் அவசரம் அவசரமாய் அழகு பார்த்து விட்டு - புயல் வேகத்தில் பௌன்சரின் கிராபிக் நாவலைப் படித்தான பின்னே உங்களின் reactions எவ்விதம் இருக்குமென்று கொஞ்சமாய் நானே மனக்கண்ணில் ஓடச் செய்து பார்த்தேன்...!

"வாவ்....ஆக்ரோஷமான கதைக்களம் !! என்னவொரு அசாத்திய சீற்றம்....வேகம் !! வித்தியாசமான சித்திரங்களும், வர்ணங்களும், அதகள ஆக்ஷனுமாய் இதுவொரு  no holds barred அதிரடி தான் !!" என்பது ஒரு சாராரது ரசனையின் வெளிப்பாடாய் இருந்திடக் கூடும்  !

இன்னொரு பக்கமோ - முகமெல்லாம் எள்ளும்,கொள்ளும் வெடிக்க,  "இதைப் படித்து விட்டு லோகத்தில்  என்ன சாதிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் வெளியிட்டீர்களோ சாமி ?" என்ற காரசாரக் கேள்வியோடு நண்பர்களின் தரப்பு # 2 வரிந்து கட்டிக் கொண்டு நிற்கக்கூடும் !

மூன்றாம் தரப்போ - 'அட போய்யா....!! மனுஷன் என்னென்னவோ பார்த்தாச்சு....படிச்சாச்சு..! இந்தக் கதைலாம் எங்களுக்கு சப்பை மேட்டர்...! இதுக்கு தான் இத்தனை பில்டப்பாக்கும்  ? ஹக்கும்!'  என்ற விசனத்தை வெளிப்படுத்திடவும் வாய்ப்புள்ளது ! 

School of thought # 4 - ' 'இங்கிலீஷில் படித்த கதை தான் ! ஆனால் அதிலிருந்த டெம்போ தமிழில் மிஸ்ஸிங் ...இன்னும் சிறப்பாகப் பண்ணியிருக்கலாம் !' என்ற ரீதியில் இருக்கவும்  கூடும் !! 

Last but not the least, - "அட..போங்க சார்..! இதே நேரத்திற்கு இதுவொரு 'தல' சாகசமாகவோ ; 'தளபதி' சாகசமாகவோ இருந்திருந்தா தூள் கிளப்பியிருக்கும் !! கௌபாய் கதைகள் என்றாலே அவர்கள் தான் டாப் ! "என்பது இன்னுமொரு அபிப்ராயச் சங்கிலியாகவும் இருக்க வாய்ப்புகள் பிரகாசம் ! 

நீங்கள் எந்த நம்பரின் சிந்தனைக்குச் சொந்தக்காரராக இருப்பினும், ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையான பீலிங் inevitable என்றே சொல்லுவேன் ! பிடித்தாலும் ; பிடிக்காது போனாலும் இம்மாதத்து  ஒற்றைக்கை ஆசாமியிடம் ஒரு வித வசீகரம் இருப்பதை நாம் நிச்சயமாய் மறுக்க வாய்ப்பில்லை என்பதே அந்த common thought ! சமீப காலங்களில் வேறு எந்தவொரு அறிமுக நாயகனைச் சுற்றியும் இது போன்றதொரு buzz இருந்ததாகவோ ; எதிர்பார்ப்பு கிளம்பியிருந்ததாகவோ எனக்கு நினைவில்லை ! அந்த வகையில் பார்த்தால் களமிறங்கும் முன்பாகவே  மனுஷன் அரைசதம் போட்டு விட்டார் ! கதையும் ; இந்தக் கதை பாணியும் உங்களுக்குப் பிடித்துப் போயிடும் பட்சத்தில் அந்த அரை சதம் ஒரு செஞ்சுவரி ஆகிடும் ! So துவக்க மேட்சிலேயே அண்ணன் '100' போடப் போகிறாரா - என்ற கேள்விக்கு விடையறிய ஆள் காட்டி விரலின் மீது நெளிந்து நிற்கும் நடுவிரலோடு காத்திருக்கிறோம் ! 

இந்த இதழின் பக்கங்களைப் புரட்டிடும் போது உங்களை முதலில் தாக்கிடப் போவது அந்த சித்திர பணியும், ஒரு மாறுபட்ட வர்ணப் பாங்குமே என்று தான் சொல்லுவேன் ! 'பளீர்' பளீர்' கலர்களுக்கு  இடமின்றி - அந்நாட்களது உலகை rustic colors வாயிலாக வெளிக்காட்ட முயற்சித்துள்ளனர் படைப்பாளிகள் ! நம் ஆற்றலுக்கு இயன்றவரை அந்த வர்ணக் கலவைகளுக்கு நம் அச்சுப் பணியாளர்கள் நியாயம் செய்திருக்கிறார்கள் என்பதை கதையைப் படிக்கும் போது புரிந்திட இயலும் ! 'அட..இங்கே ஏன் நீலம் கம்மியாகத் தெரிகிறது ? இங்கே ஏன் சிவீரென்று உள்ளது ?' போன்ற கேள்விகள் உங்களுக்குள் எழுந்திடும் பட்சத்தில் - please be assured ஒரிஜினல் கலரிங் பாணியே இது தான் என்று  !! 

அட்டைப்படத்தைப் பொறுத்தவரை முன்னட்டை டிசைன் ஒரிஜினலின் பிரதிபலிப்பே  - சற்றே மித வர்ணங்களோடு ! பின்பக்கமும் கூட கதையினுள் இருந்து எடுக்கப்பட்ட frame -ல் உருவாக்கப்பட்ட டிசைனே ! அட்டை to அட்டை இந்த இதழில் பௌன்சரும் ;  அவனது கதைகள் தொடர்பான விளம்பரங்களும் மட்டுமே இடம் பிடித்து நிற்பதை நீங்கள் பார்த்திடப் போகிறீர்கள்! In fact - அந்த முதல்பக்கத்து ஹாட்லைன் கூட ஒரு கடைசி நிமிடச் சிந்தனையின் பலனே ! இக்கதையின் பாணி என்னவென்ற முன்னறிவிப்பின்றி புதுசாய் உள்ளே நுழையக் கூடிய வாசகர்களுக்கு சின்னதொரு caution ஆக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று அதனை நுழைத்து வைத்தேன் ! 
Chennai Bookfair Banner.....
இறுதியாக - கதை ! ....அந்தக் கதையைப் பற்றி..! நிச்சயமாய் இது உலகை உலுக்கப் போகும் ஒரு one of a kind ரகமெல்லாம் கிடையவே கிடையாது தான் ! சொல்லப் போனால் ஒரு காரசாரமான  தெலுங்குப் படத்துக்கு இதன்  கரு சுலபமான தேர்வாகிப் போகக் கூடும் ! ஆனால் காமிக்ஸின் கௌபாய் உலகிற்கென உள்ள   சில எழுதப்படா விதிகளை காலுக்குள் போட்டு நசுக்கித் தாண்டவமாடுவதில் தான் இந்தத் தொடர் வேறுபட்டுத் தெரிகிறது என்பது எனது அபிப்ராயம் ! ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும் ஒரு டெக்ஸ் வில்லரோ ; கேப்டன் டைகரோ ; சிஸ்கோ கிட்டோ ; கமான்சேவோ நல்லவர்கள் - வல்லவர்கள்- நீதியின் அண்மையில் நிற்பவர்கள் என்ற லேபிலைச் சுமந்திருப்பதே மாமூல் ! ஆனால் பௌன்சரின் உலகில் கிட்டத்தட்ட அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் குறைகளைச் சுமந்து நிற்கும் ஆசாமிகள் ! உடலிலோ ; மனதிலோ ; குணத்திலோ ஒவ்வொருவனிடமும் ஒரு இருண்ட பக்கம் 'பளிச்' பிரதானமாய் இருக்கக் கூடும் ! இது போன்ற கதைமாந்தர்களை ஒட்டுமொத்தமாய் இணைத்து ஒரு தொடரை உருவாக்குவதென்பது தினசரி நிகழ்வல்ல - நிச்சயமாய் !  அதிலும் கௌபாய் கதையுலகின் ஜாம்பவானான கேப்டன் டைகரை உருவாக்கியவரிடமே பாராட்டைப் பெறும் விதமாய் அந்தத் தொடர் அமையும் போது அதனில் நிச்சயம் ஏதோ ஒரு X  FACTOR இருந்திட வேண்டும் !! அது என்னவாக இருக்குமென்ற தேடலில் தான் நாம் தற்போது நிற்கின்றோம்..! 

Bouncer பரீட்சையில் நமக்குக் காத்திருக்கும் மதிப்பெண்கள் எத்தனையாக இருப்பினும் - அவை நம் தேடலுக்கொரு தடை போடப் போவதில்லை ! 'ரிஸ்க் இல்லா கதைக்களங்களுக்குள்ளே  பிரயாணம் செய்வதே போதும் ... பரீட்சையெல்லாம்  எதற்கு ?' என்ற சிந்தனை சொகுசாய்த் தோன்றினாலும் - சோம்பலுக்குள்ளே கால் பதிக்கச் செய்யும் ஆபத்துக்கும் அது வித்திடக்கூடும் தானே ?! எல்லாவற்றிற்கும் மேலாக  - பரீட்சைக்குத் தயாராவது ; அந்தப் படபடப்பை ரசிப்பது ; மதிப்பெண்களை எதிர்நோக்கி 'திக் திக்' இதயத்தோடு காத்திருப்பது ; வெற்றியாயின் லயிப்பது - தோல்வியாயின் அதனிலிருந்து படிப்பது என இதுவொரு வித்தியாச அனுபவம் - ஒவ்வொருமுறையும் !! மின்சார ஓட்டைக்குள்ளே விரலை விட்டு மாயமாகும் மனிதனின் கதையை ஆயிரத்தோராவது தடவையாய் வெளியிடும் சொகுசு ஒரு பக்கமெனில் - இந்த கிராபிக் நாவலின் அனுபவங்கள் வானவில்லின் மறு முனையல்லவா ? So ஒரு வசந்த காலத்துக் காலையை இதமாய் ரசிப்பது சுகமெனில் - மழை மேகத்துடனான ஒரு கார்முகில் நாளின் லயிப்பையும் கூட இன்னொருவிதமான ரசனையாய் எடுத்துக் கொள்ளலாம் தானே ?! பொறுமையாய் பௌன்சரை படித்தான பின்னே அதனை அங்குலம், அங்குலமாய் நீங்கள் ஆராய்வுக்கு ஆட்படுத்தப் போவது நிச்சயம் ; அதனை சுவாரஸ்யத்தோடு உள்வாங்கிடக் காத்திருப்போம் !

Moving on, மும்மூர்த்திகளின் 3 மறுபதிப்பு இதழ்களும் கூரியர் பார்சலில் சேர்த்தி ! துரதிர்ஷ்டவசமாய் ஸ்பைடரின் "சைத்தான் விஞ்ஞானி" இதழினை மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்திட இயலாது போய் விட்டது ; அடுத்த வாரம் தயாராகிடக் காத்துள்ள இந்த இதழை பிப்ரவரி மாதத்து இதழ்களோடு அனுப்பிட உங்கள் அனுமதி கோருகிறோம் ! சீசனின் உச்சத்தில் எக்கச்சக்கப் பணிகளுக்கு மத்தியினில் பைண்டிங் நண்பர்  விழிபிதுங்கி நிற்பதைப் பார்க்கும் போது நம்மாட்களுக்கே இதற்கு மேலே அவரை குடலை உருவ மனம் வரவில்லை என்பதே நிலவரம் ! We hope for your understanding !

முதல்முறையாக மறுபதிப்புக் காணும் "நயாகராவில் மாயாவி " இதழும் சரி ; இதர 2 இதழ்களும் சரி - வழக்கமான காகிதத்தை விடத் 'திக்'கான தாளில் ; 'திக்'கான அட்டையில் அழகாக வந்திருப்பதாய்த் தோன்றியது எனக்கு ! ஒரிஜினல்களில் உள்ளது போலவே விச்சு கிச்சு ; புதிர் பக்கங்கள் என்று பக்கங்களை நிறைத்துள்ளேன் - எனது 'பீப்பீ' களை இதனிலும் நுழைத்து ஊதிடாமல் ! So இவை ஒரிஜினலைப் போன்ற இதழ்கள் என்பது மட்டுமன்றி ; இன்று உலகினில் வேறெங்கும் ; வேறெந்த மொழியிலும் உலவிடா; உலவிடச் சாத்தியமே இலா இதழ்கள் என்பது மிகைப்படுத்தல் இல்லா நிஜம் ! இந்தக் கதைவரிசைகளுக்கான ஒரிஜினல்கள் டிஜிடல் கோப்புகளாய் படைப்பாளிகளால் பத்திரப்படுத்தப்படவில்லை என்பதால் நம்மிடம் உள்ளவையே இனி என்றேனும் ; எப்போதேனும் வரக்கூடிய வேற்று மொழிப் பதிப்புகளின் ஆதாரமாகவும் இருந்திடப் போகின்றன ! இதன் பொருட்டு அந்நாட்களில் நமக்கு வந்திருக்கக் கூடிய ஆங்கில ஒரிஜினல்களின் spare prints களிலிருந்து ஸ்கேன் செய்து படைப்பாளிகளுக்கு அனுப்பவிருக்கிறோம் !

இன்று மாலை துவங்கக் காத்திருக்கும் சென்னைப் புத்தக விழாவினில் நம்மாட்கள் நேற்றே ஆஜராகி புத்தகங்களை அடுக்கத் தொடங்கி விட்டனர் ! காலி இடமே தெரியாது ஸ்டாலை banner களால் நிரப்புவதாய் உத்தேசம் இம்முறை ! பாருங்களேன் அவற்றில் சிலவற்றை :
உங்களின் வருகைகளை எதிர்நோக்கிக் காத்திருப்போம் !! Please do drop in all !!See you later this evening !

பின்குறிப்பு : ஜனவரி பிறக்கும் வரை சந்தா செலுத்தாதிருந்த நண்பர்கள் புது இதழ்களின் வருகைகளைத் தொடர்ந்து - அவசரம் அவசரமாய் பணம் அனுப்பி விட்டு பிரதிகள் அனுப்பியாச்சா ? என்ற கேள்விகளோடு நமது போன் லைன்களை 24 x 7 மும்முரமாக வைத்துள்ளனர் ! பண வரவை சரி பார்த்து விட்டு ; புதுச் சந்தாக்களை நடைமுறைப்படுத்திட எங்களுக்கு ஒரு நாள் அவகாசமேனும் தேவை - ப்ளீஸ்  ! So சற்றே பொறுமை அவசியமாகிடுமே இத்தருணத்தில் ! கடந்த 2 நாட்களில் மாத்திரமே தினமும் சராசரியாய் 200 அழைப்புகள் - வெவ்வேறு காரணங்களுக்காக எனும் போது 2 பெண்களால் அவற்றிற்கு சரி வர பதில் சொல்லி ; புதிய இதழ்களின் டெஸ்பாட்ச் வேலைகளையும் பார்த்திடுவது மிகச் சிரமம் என்றாகிறது ! So நேற்றைய கூரியர்களின் டிராக்கிங் நம்பர்கள் பற்றிய வினவல்களை இன்று ஒரே ஒரு நாள் மட்டும் சற்றே மட்டுப்படுத்தினால் - தொங்கலில் நிற்கும் நிறைய வேலைகளை அவர்கள் நிறைவு செய்திட எதுவாக இருக்கும் ! இன்னமும் கூடுதலாய் ஒரு front office assistant பணியமர்த்திட முயற்சித்து வருகிறோம் ; அது வரை உங்களின் புரிதலுக்கும் பொறுமைக்கும்  எங்களின் அட்வான்ஸ் நன்றிகள் !! 

131 comments:

  1. விஜயன் சார், ஒரு ஜென்டில்மேன் கதை நன்றாக இருந்தது, வித்தியாசமான கதை. மிதமான காமெடி கதை என்றாலும் ஆங்காங்கே சிரிப்பை வரவழைத்தது மனதை எளிதாக்க்கியது உண்மை. செவ்விந்தியன் மற்றும் பட்லர் கூட்டணி இந்த கதையின் சிறப்பு. வோல்டோவிக்கு வசனம் மத்தவர்கள் பேசுவதில் இருந்து வித்தியாசபடுத்தி காண்பித்தது நன்றாக இருந்தது; நேருக்கு நேர் மோதலில் தோட்டாவை நெஞ்சில் வாங்கிகொண்டுதான் ஒரு ஜென்டில்மேன் காட்டுவதுபோல் அமைந்து இருந்தது சிறப்பு, கதையின் தலைப்பு ஒரு சரியான தேர்வு,
    லக்கி லூக்கின் எல்லா கதைகளும் புரட்சி தீ மாதிரி இருக்கவேண்டும் என்று எண்ணாமல் படித்தால் லக்கி லூக்கின் அனைத்து கதைகளையும் என்ஜாய் பண்ணலாம்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : //லக்கி லூக்கின் எல்லா கதைகளும் புரட்சி தீ மாதிரி இருக்கவேண்டும் என்று எண்ணாமல் படித்தால் லக்கி லூக்கின் அனைத்து கதைகளையும் என்ஜாய் பண்ணலாம். //

      +111

      Delete
  2. சென்னை புத்தக திருவிழாவில் நமது காமிக்ஸ் நல்ல விற்பனையாகவும் மேலும் பல புதிய வாசகர்களை பெறவும் எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சென்னை புத்தக திருவிழா போஸ்டர் அனைத்தும் நன்றாக உள்ளது!

      Delete
  3. விஜயன் சார், அடுத்த மாதம் வேயின் ஷெல்டனின் ஒரு பாக கதை வெளிவருவதனா விளம்பரம் கண்டேன்; நமது இந்த வருட காமிக்ஸ் காலண்டரில் வேயின் ஷெல்டனின் 2 பாககதைகள் வரும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள், ஏன் இந்த மாற்றம்? இப்படி ஒரு கதையை குறைப்பதால் அந்த இடத்தில் வரும் புதிய கதை ஏது?

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : அட்டவணையை மீண்டுமொருமுறை புரட்டிப் பாருங்களேன்...!

      Delete
    2. பார்த்து விட்டேன் சார்? 2 பாககதைகள் 1 என குறிப்பிட்டு இருந்தது? ஒரு வேலை நான் ஓவர் லுக் செய்து விட்டேனா என இன்று ஒருமுறை பார்த்து விடுகிறேன்!

      Delete
    3. 2015அட்டவணை யில் 3ம் பக்கம் 1பாக கதை 1என உள்ளது பரணீ ஜி. 8ம் பக்கம் 2பாக கதை க்கான விளம்பரம் உள்ளது .மாலை வீட்டிற்கு போகும் போது பார்க்கலாம் நீங்கள் .

      Delete
    4. சேலம் Tex விஜயராகவன் @ அப்ப நான் சரியாக பார்க்கவில்லை! தகவலுக்கு நன்றி!

      Delete
  4. விஜயன் சார், நிழலோடு நிஜ யுத்தம் கதை விறுவிறுப்பாக இருந்தது, மொழி பெயர்ப்பு அருமை; குறிப்பாக கார்வின் ஜெமினியை “போலி” மாடஸ்டியை எப்படி கண்டு பிடித்தார் என்ற இடத்தில் பேசும் வசனம் சூப்பர்.

    இந்த கதையில் மிகபெரும் குறை என்றால், கருமை நிறம் பல இடம்களில் அப்பியது போல் உள்ளது; சொல்ல போனால் இந்த கருமை நிறம் புத்தகத்தின் எல்லா பக்கம்களிலும் ஏதாவது ஒரு சித்திரத்தின் பின்னனியில் இருந்ததை பார்க்கும் போது எரிச்சலாக இருந்தது. சித்திரம்கள் கிறுக்கலாக இதற்கு முன்னால் பல கதைகள் வந்து உள்ளன, ஆனால் அவைகளில் இதுபோல் கருமை நிறம் அப்பியது போல் இருந்தது இல்லை, இந்த புத்தகத்தில் மட்டும் ஏன் இப்படி உள்ளது?

    இந்த கதை மற்ற கதைகளை போல் ராயல்டி அதிகம் எனும்போது இது அச்சாகும் போது “பௌன்செர்” கதைக்கு செலுத்திய அதே கவனத்தை நீங்கள் இதற்கும் செலுத்தி இருந்தால் நன்றாக அமைந்து இருக்கும்.

    அடுத்து வரும் மறுபதிப்பு மற்றும் மறுவரவு கதைகளில் இது போல் குறைகள் இல்லாமல் பார்த்து சரி செய்யவும், சரி செய்யப்படும் என்று நம்புகிறேன்.

    நெடு நாட்களுக்கு பின் வரும் இந்த மாடஸ்டி கதை எல்லா வகையிலும் சிறப்பாக இருந்தால் மேலும் பலரை சென்னை புத்தக திருவிழாவில் கவரும் வாய்ப்புகள் அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : 'அச்சில் கோளாறு' என்ற ஒற்றை வரியையும் தாண்டி வேறு காரணங்கள் இதன் பின்னணியில் இருக்க வாய்ப்புண்டா என சிந்திக்க சற்றே நேரம் செலவழித்துத் தான் பாருங்களேன் நண்பரே...!

      Delete
    2. எல்லா வகையிலும் யோசித்து பார்த்த பின் தோன்றியதைதான் இங்கு பதிவிட்டு உள்ளேன்!

      Delete
    3. இந்த கதையின் ஒரிஜினல் மாதிரி பக்கம்களை தற்போது பார்க்க கிடைத்தது, அதுவும் நமது காமிக்ஸ் போல்தான் உள்ளது. எனவே எனது எண்ணத்தை மாற்றி கொள்கிறேன்!

      http://tamilcomics-soundarss.blogspot.in/2015_01_01_archive.html - நன்றி சௌந்தர்!

      Delete
  5. விஜயன் சார், பௌன்சர் கதையின் அட்டை படம் நன்றாக உள்ளது.

    சிறு கோரிக்கை: இந்த மாதம் வரும் லாரன்ஸ் & டேவிட் கதைகளுக்கு தயாரித்த அட்டைபடம் போல் கதைக்கு சம்பந்தம் இல்லாத அட்டை படம்களை தவிர்த்தல் நலம்!

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சமாய் அவகாசம் எடுத்துக் கொண்டு Fleetway நிறுவனத்தின் லாரன்ஸ் டேவிட் ; ஜானி நீரோ கதைகளுக்கான ஒரிஜினல் ராப்பர்களைத் தான் பார்க்க முயற்சி செய்திடுங்களேன்..! உங்கள் அபிப்ராயத்தை அவை சற்றே மாற்றிடக்கூடும் !

      Delete
    2. Fleetway நிறுவனத்தின் லாரன்ஸ் டேவிட் ; ஜானி நீரோ கதைகளுக்கான ஒரிஜினல் ராப்பர்களை பார்த்தது இல்லை! நீங்கள் சொல்வது போல் முயற்சித்தால் நாம் இதுநாள் வரை பழகிய விஷயம்களை மாற்ற கொஞ்சம் அவகாசம் தேவை படும்!

      Delete
  6. விஜயன் சார்,
    // துரதிர்ஷ்டவசமாய் ஸ்பைடரின் "சைத்தான் விஞ்ஞானி" இதழினை மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்திட இயலாது போய் விட்டது ; அடுத்த வாரம் தயாராகிடக் காத்துள்ள இந்த இதழை பிப்ரவரி மாதத்து இதழ்களோடு அனுப்பிட உங்கள் அனுமதி கோருகிறோம் ! //

    அப்படி என்றால் அடுத்த வாரம் இது புத்தக திருவிழாவில் கிடைக்க வாய்ப்புகள் உண்டா?

    ReplyDelete
  7. பௌன்ஸர் தரிசனம் நாளை புத்தக திருவிழாவில் தான் ....

    ReplyDelete
    Replies
    1. இரவு எடுத்து வருகிறேன் . ட்ரெயின்ல பார்த்து ரசிக்கலாம் ரம்மி .

      Delete
    2. Super @Salem tex, enjoy the trip and provide us some updates

      Delete
    3. தேங்யூ கார்த்திகேயன் ஜி. நாம கெஸ்ட் ஆ போறம் ஜி. சென்னை நண்பர்கள் தூள் கிளப்புவாங்க ஜி.

      Delete
  8. எத்தனை போஸபோஸ்டர் இருந்தாலும் மெயின் அட்ராக்சன் மிஸ் ஆகிறதே .....

    ReplyDelete
  9. வாவ் சூப்பர் விஜயன் சார்
    மீ 25 :))
    .

    ReplyDelete
  10. இந்த பதிவின் தலைப்பின் காரணம் என்னவாக இருக்க கூடும் என்ற கேள்வி எழுகிறது சார் ....

    புத்தக திருவிழாவில் மகத்தான வெற்றி அடைய -முந்தைய வருடத்தை விட -வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. பவுன்சரின் வருகை ....ஆவலை அதிகமாக்குகிறது .......:-)

      Delete
    2. பேனர்கள் கண்ணை பறிக்கின்றன .....!!!!!

      Delete
    3. //இந்த பதிவின் தலைப்பின் காரணம் என்னவாக இருக்க கூடும் என்ற கேள்வி எழுகிறது சார்//
      அட !!!! இதற்கான பதில் பதிவிலேயே இருப்பது பிரபாகர் சுட்டி காட்டியபின்தான் தெரிகிறது .....!!!!

      Delete
    4. புத்தக திருவிழாவில் மகத்தான வெற்றி அடைய -முந்தைய வருடத்தை விட -வாழ்த்துக்கள் !

      ஆமா ஆமா ஆமா

      Delete
  11. வணக்கம் சார் . புத்தகங்கள் 4ம் அற்புதமான பேக்கிங்கில் வந்து கிடைத்தன. முனைமடங்காமல் கசங்காமல் என்பது கூடுதல் தகவல். அட்டகாஷ் சார் பெளன்சர் அட்டைப்படம் . பச்சை வண்ண பின்னனியில் இந்த ஆண்டின் பெஸ்ட் இதுவாகத்தான் இருக்கும்( ,இதை பீட் செய்ய தலை வருவார் ஆகஸ்ட் மாதம்) சார் . நல்ல குவாலிட்டியான சித்திரங்களை வழங்கியுள்ளீர்கள் சரியான வண்ணக்கலவை உடன் சார் . பழைய மும்மூர்த்திகள் கலக்குகிறார்கள், இம்முறை அவர்கள் சற்றே வெற்றியையும் ருசிப்பார்கள் சார் . நண்பர்களே அய்யா திரு செளந்திரபாண்டியன் அவர்கள் காமிக்ஸ் டைம் எழுதி உள்ளார்கள் . அது தொடரும் என எதிர் பார்க்கிறேன். நாங்களும் இன்று இரவு தலைநகரம் புறப்படுகிறோம், ஆசிரியர் மற்றும் சென்னை நண்பர்களை சந்திக்க .

    ReplyDelete
  12. // பெரிய பீடிகைகள் இல்லாமல் சொல்வதாயின் - இது பௌன்சர் நேரம் //

    சந்தேகமே இல்லாமல் பௌன்சர் கலக்குவார் சார்

    // ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும் ஒரு டெக்ஸ் வில்லரோ ; கேப்டன் டைகரோ ; சிஸ்கோ கிட்டோ ; கமான்சேவோ நல்லவர்கள் - வல்லவர்கள்- நீதியின் அண்மையில் நிற்பவர்கள் என்ற லேபிலைச் சுமந்திருப்பதே மாமூல் ! //

    இதில் கேப்டன் டைகர் மற்றும் சற்றே விதிவிலக்கு என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன் சார் ;-)
    .

    ReplyDelete
    Replies
    1. //இதில் கேப்டன் டைகர் மற்றும் சற்றே விதிவிலக்கு என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன் சார் ;-)//

      சிபி ஜி.! கடமையை ரொம்ப கரெக்டா செய்யுறிங்க போல.:)

      Delete
    2. அப்போ டைகர் நல்லவரோ வல்லவரோ இல்லை, மத்யமர்'னு சொல்ல வர்ரீங்களா? :P

      Delete
  13. // வெற்றியாயின் லயிப்பது - தோல்வியாயின் அதனிலிருந்து படிப்பது // - தத்துவாசிரியர்

    // ஒரு வசந்த காலத்துக் காலையை இதமாய் ரசிப்பது சுகமெனில் - மழை மேகத்துடனான ஒரு கார்முகில் நாளின் லயிப்பையும் // - கவிதாசிரியர்

    // பௌன்சரை படித்தான பின்னே அதனை அங்குலம், அங்குலமாய் நீங்கள் ஆராய்வுக்கு ஆட்படுத்தப் போவது நிச்சயம் // - அறிவியலாசிரியர்

    மொத்தத்துல நீங்க யாருங்க சார் :))
    .

    ReplyDelete
    Replies
    1. // வெற்றியாயின் லயிப்பது - தோல்வியாயின் அதனிலிருந்து படிப்பது // - தத்துவாசிரியர்

      // ஒரு வசந்த காலத்துக் காலையை இதமாய் ரசிப்பது சுகமெனில் - மழை மேகத்துடனான ஒரு கார்முகில் நாளின் லயிப்பையும் // - கவிதாசிரியர்

      // பௌன்சரை படித்தான பின்னே அதனை அங்குலம், அங்குலமாய் நீங்கள் ஆராய்வுக்கு ஆட்படுத்தப் போவது நிச்சயம் // - அறிவியலாசிரியர்

      மொத்தத்துல நீங்க யாருங்க சார் :))

      Delete
    2. வரிக்கு வரி படித்து ரசிப்பதால் ......கலாரசிகர்

      வகை படுத்தி பிரிப்பதால் ......புள்ளியியல் ஆய்வர்

      கேள்விகள் இறுதியில் கேட்பதால் ....தர்க்கவியலாளர்

      இதில் பிரபாகர் .......யார் சார் நீங்க ????.....:-)

      Delete
  14. // வழக்கமான காகிதத்தை விடத் 'திக்'கான தாளில் ; 'திக்'கான அட்டையில் அழகாக வந்திருப்பதாய்த் தோன்றியது எனக்கு ! ஒரிஜினல்களில் உள்ளது போலவே விச்சு கிச்சு ; புதிர் பக்கங்கள் என்று பக்கங்களை நிறைத்துள்ளேன் - //

    வாவ் சூப்பரோ சூப்பர் சார்

    ஆவலுடன் காத்திருக்கிறோம் சார் :))
    .

    ReplyDelete
  15. க்கும் ...........................இன்னும் போன வாரத்து புக்கே வரலை ..........

    ReplyDelete
    Replies
    1. மொதல்ல சந்தா பணம் கட்டுநீங்களா?

      Delete
    2. பணம் கட்டுனாத்தான் புத்தகம் கிடைக்கும் :-)

      Delete
    3. ////////மொதல்ல சந்தா பணம் கட்டுநீங்களா?//////////.......கடைசியில அதாவது மாச கடைசில தான் சந்தா கட்டினேன்...........ரொம்ப பேசினா செல்வம் அபிராமிகிட்ட புடிச்சு குடுத்துடுவேன் ...............வணக்கம் தலைவா

      Delete
  16. என் அருமை ஸ்பைடரை காண
    புக்பேர்கு வருவதாக இருந்தேன்

    என் நினைப்பில் மண்ண அள்ளி போட்டுட்டீங்களே எடிசார்

    ரைட்.. ரைட்டோ...
    ஸ்பைடர் வாசகனாக என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்

    சோ புக்பேர் ட்ரிப் கேன்சல்டு

    ReplyDelete
    Replies
    1. புக்பேர்ல சந்திக்க போகும் நட்புகளை ஒரே கணம் எண்ணிப்பாருங்கள் நண்பரே.

      Delete
    2. புக்பேர்ல சந்திக்க போகும் நட்புகளை ஒரே கணம் எண்ணிப்பாருங்கள் நண்பரே jayasekhar
      +1

      Delete
  17. தலைவர் ஸ்பைடர் வரலையா ? என்ன கொடுமை சார்?

    ReplyDelete
  18. புத்தக சந்தையில் இன்று மாலையில் 2015 இதழ்கள் எவை எவை கிடைத்திடும் என்று கூறிடுங்களேன் சார்

    ReplyDelete
  19. டியர் எடிட்டர் சர்ர்,
    நரன் 47 வது சர்ர்! மேலே போய் விட்டு வருகிறேன்.
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  20. டியர் எடிட்டர் சர்ர்,
    இம்மரதம் 10 இதழ்கள் என்னும்போது பரவம் பைன்டிங் செய்பவர்தரன் என்ன செய்வர்ர்? ஸ்பைடரின் "சைத்தரன் விஞ்ஞரனி" மறு மரதம் வருவது எனக்கு பிரச்சனை இல்லை என்றாலும்கூட , " சென்னை புக் பெயர்ருக்கு" என்ன சர்ர் செய்யபோகிறீர்கள்?
    //உலக வரலாற்றில் முதன் முறையரக// சூப்பர் சர்ர்! // படைப்பரளிகளிடம் டியிட்டல் கோப்புகள் இல்லரதபடியரல் நரம் ஸகரன்சிலேசன் அனுப்பி உள்ளோம்// இதை விட வேறு என்ன வேண்டும் சர்ர்?
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  21. டியர் எடிட்டர்சர்ர்,
    மரதம் 4 இதழ்களர? ஐ ஐ ஐ சூப்பரோ சூப்பர்!
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  22. டியர் எடிட்டர் சர்ர்,
    பெளன்சர் கட்டாயம் செஞ்சுரி போடுவர்ர் என்ற நம்பிக்கை எனக்குள்ளது சர்ர்! ஏக் தம்மில் வெளியிடப்போகிறீர்கள். வரழ்த்துக்கள் சர்ர்!
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  23. Book fair posters are looking awesome with modern look.
    Best wishes for Chennai book fair.
    Waiting to receive my books, hopefully will get in another 0 days ☺

    ReplyDelete
  24. I don't have much expectation about bouncer, which is a good thing as I can enjoy the story fresh ☺

    ReplyDelete
  25. Hmm spider pushed to next month is a disappoint even though I can understand the reason behind it. It's just that expectation was set for 10 books initially

    ReplyDelete
  26. மேலோட்டமாய் பார்த்தபோதே பவுன்சரின் வீச்சு புரிந்துவிட்டது. பொருமையாக பொங்கல் விடுமுறையில் படிக்கவேண்டும்.

    மறுபதிப்புகள் தரமாக வந்துள்ளன. சூப்பர்.
    அட்டைபடங்களும் அட்டகாசமே.!தெளிவான சித்திரங்கள், பெரியஎழுத்து வசனங்கள் என பாராட்ட பல விசயங்கள் உள்ளன.

    பக்கங்களின் எண்ணிக்கை மட்டுமே குறைவாக தெரிகிறது. பக்கத்திற்கு இரண்டு பேனல்கள் எனும் போது 128 பக்கங்கள் மட்டுமே போதாதோ என தோன்றுகிறது. பில்லர் பேஜ்களை கொஞ்சம் அதிகப் படுத்தினால் தேவலை என்பது என் கருத்து. விச்சு கிச்சுவுடன் நிறுத்தாமல் சில சிறுகதைகளையும் எட்டு அல்லது பத்து பக்கங்களுக்கு சேர்த்துவிட்டால் பரிபூரண திருப்தியான மறுபதிப்பு இதழ்கள் என மனதார வாயார பாராட்ட முடியும். எனதருமை லாரண்ஸ் டேவிட் ஜோடி கலக்கலான. ரீஎன்ட்ரீ கொடுத்துள்ளனர். மொத்தத்தில் சூப்பரப்பு.!

    ReplyDelete
  27. மறுபதிப்பு புத்தகங்கள் அப்போது வந்தது போலவே இப்போதும் விச்சு கிச்சு ...புதிர் என அப்படியே ...#

    வாவ் ...சூப்பர் சார் ...இதை தானே எதிர் பார்த்தேன் ...மிக ..மிக ...மகிழ்ச்சி சார் ..
    அப்போதைய பொக்கிஷம் இப்போது அப்படியே புத்தம் ...புதிதாய் ...50 ரூபாய் ....ஆஹா ...சேலம் பழைய புத்தக கடையில் எல்லாம் அந்த இதழ்கள் 1000...1500.....சார் ...அவ்வாறு விலை கொடுத்து என்னால் என் கனவை நிறைவேற்ற முடியாது (நமது இதழ்களின் சேகரிப்பு )..என புத்தக கடை போவதையை நிறுத்தி விட்டேன் சார் ..இப்போது வயிற்றில் பாலை வார்த்தீர்கள் ....தொலை தூரத்தில் என் கனவு நிறைவேறும் புள்ளி இப்போது தெரிகிறது சார் ....தயவுசெய்து இதை நிறுத்தி விடாதீர்கள் ......

    நன்றி ...நன்றி ....

    ReplyDelete
    Replies
    1. //சேலம் பழைய புத்தக கடையில் எல்லாம் அந்த இதழ்கள் 1000...1500.....சார் //
      தலைவரே, நீங்க எந்த சேலத்தை சொல்றீங்க.:)
      அந்த வெலைக்கு புக் வாங்குற நல்லவங்களும் இருக்காங்களா.? அடோசாமி.!!!!

      Delete
    2. ரொம்ப காசுக்கார ஊர் போல இருக்கே

      Delete
  28. புதிய வெளியீடு , நித்தமும் குற்றம், பக்கம் ஒன்றுக்கு ஆறு பேனல்கள் வீதம் 154 பக்கங்களுக்கு மேல் உள்ளது.
    ஆனால் மறுபதிப்புகளோ பக்கம் ஒன்றுக்கு ரெண்டே பேனல்களுடன் 128 பக்கங்கள் மட்டுமே உள்ளன.
    இரண்டின் விலையும் அதே 50 ரூபாய்கள்தான்.
    இந்த முரண்பாட்டிற்க்கு நியாயமான காரணம் இஇருக்கலாம், அது என்ன காரணம் என்பதை தெரிந்துகொள்ளும் நோக்கிலேயே இந்த பின்னூட்டம் இடப்படுகிறது.
    முக்கிய குறிப்பு.:-
    கள்ள மார்க்கெட்டை ஒப்பிடும் சமாச்சாரம் வேண்டாமே.! அதை எல்லோரும் ஆதரிப்பதில்லை.

    ReplyDelete
    Replies

    1. அருமை நண்பர் ஒருவர் மூலம் சில விளக்கங்கள் கிடைக்கப் பெற்றேன்.எனவே என்னுடைய இந்த சந்தேக கேள்வியை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.!

      இருந்தாலும் சில ஃபில்லர் பேஜஸ் சேர்த்துவிட்டால் எல்லையில்லா மகிழ்ச்சி எல்லோருக்குமே உண்டாகும்.:)

      Delete
  29. டியர் எடிட்டர் சர்ர்,
    பேனர்கள் அருமை. ஆயினும் இவற்றரல் மட்டும் 150 இனை மூடி விட முடியரது. இன்னும் கொஞ்சம் நண்பர்கள் மூலம் தயர்ரியுங்கள் சர்ர். ப
    சென்னை புக் கண்கரட்சிக்கு மட்டுமாவது பல்டி அடித்தரவது கொஞ்சமாய் "ஸ்பைடரை" கொண்டு போக முடியரதர சர்ர்? நம்பி வந்து ஏமாந்து போவார்கள் நம் வரசகர்கள். Please sir!
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  30. டியர் எடிட்டர் சர்ர்,
    ஐரனி நீரோ, ஸ்டெல்லர், லர்ரனஸ், டேவிட் என்ன பரவம் செய்தர்ர்கள்? அவர்கட்கும் போஸ்டர் ஒன்று தயர்ரியுங்கள் சர்ர்.
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  31. "என் பெயர் லார்கோ" எப்போது வாங்கிட முடியும்,சார்?

    ReplyDelete
  32. நண்பர்களின் கவனத்திற்கு:

    இன்றைய 'தி இந்து' தமிழ் நாளிதழின் 'இளமை புதுமை' பகுதியில் லயன்-முத்து காமிக்ஸின் ஜனவரி மாத வெளியீடுகள் பற்றிய சிறப்புக்கட்டுரை வெளியாகியுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. விஜய் !!! வேஸ்ட் ஆக ஒவ்வொரு முறையும் இது போல சுட்டி காட்டுகிறோம் என நினைத்து இதுபோல் எழுதாமல் இருந்து விடாதீர்கள் .....இதுவரை நீங்கள் எடுத்து கூறிய பின்னரே ஒவ்வொரு கட்டுரையையும் படித்து வருகிறேன் ....என்னை போல் இன்னும் நிறைய பேர் இருக்கலாம் ....தொடருங்கள் .....

      Delete
  33. டியர் எடிட்,

    சென்னை புத்தக கண்காட்சியின் லயன் முத்து இன்னும் புதிய வாசகர்களை சென்றடையும் என்ற நம்பிக்கையுடன், வரவேற்கிறேன்...

    கிளாசிக் சித்திரங்களுக்கான அட்டைபடங்கள் ஸ்பைடைரை தவிர மற்றவைகளை அனைத்தும் சரியான மொக்கை என்பது என்னுடைய தனிபட்ட கருத்து.... ஒரிஜினல்கள் சம்பந்தமில்லாதவை என்றாலும், இந்தளவிற்கு அது திராபையாக இருந்ததில்லை..... அடுத்து வரும் கிளாசிக் செட்டிற்காகவது, அட்டைபடம் டிசைன் செய்யவில்லை என்றாலும், உள்ளிருககும் ஓவிய காட்சிகளை கொண்ட கொலேஜ் பண்ணி விடுங்களேன்.... அதுவே இவைகளை விட சிறப்பாக இருக்கும் வாய்ப்புகள் ஏராளம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த சென்னை விழாவில் அசத்தப் போவது மும்மூர்த்திகள் தான் நண்பரே ரஃபீக் .

      Delete
  34. முதலாளி எம்பொண்டாட்டி ஊருக்கு போக என்னை உட்டுட்டாஆஆஆஆஆஆஆஆஆஆஆ பேக் எடுத்துகிட்டு கிளம்பிட்டேன்!. இனி திங்கள் காலை தான் வீட்டுக்கு . 60மணி நேரம் , 3நைட் & 2பகல் சுதந்திரம் . ஜாலி ஜாலி ...........முதலாளி ஜாலி.

    ReplyDelete
    Replies
    1. டியர் tex விஐயர்ரகவன் சர்ர்,
      "என்னை என் பொண்டரட்டி ஊருக்கு போக விட்டுட்டர" " ஐ ஐரலி!" என்னை போல் மருத்துவமனையில் இருந்தால் அப்போது பொண்டரட்டி அருமை புரியும் சர்ர்! சும்ம்ரதரன்.
      தங்கள் உண்மையுள்ள
      திருச்செல்வம் பிரபரனந்

      Delete
    2. அய்யா 12வருசமா அவ அருமை புரிஞ்சது போதும் சாமியோவ் . 2நாளைக்கு அய்யாவ அவுத்து உட்டுட்டாங்க

      Delete
    3. டியர் tex விஐயர்ரகவன் சர்ர்,
      //அய்யா 12வருசமா அவ அருமை புரிஞ்சது போதும் சாமியோவ் . 2நாளைக்கு அய்யாவ அவுத்து உட்டுட்டாங்க//
      வரழ்த்துக்கள் சர்ர். எடிட்டரை பர்ர்க்க போவதற்கும், சென்னை புக் கண்கரட்சிக்கு போவதற்கும்.
      தங்கள் உண்மையுள்ள
      திருச்செல்வம் பிரபரனந்

      Delete
  35. ///ஒரிஜினல்களில் உள்ளது போலவே விச்சு கிச்சு ; புதிர் பக்கங்கள் என்று பக்கங்களை நிறைத்துள்ளேன் ///
    super sirrrrrr

    ReplyDelete
  36. Editor Sir,

    Would request to publish - Athiradi Twins Stories - Long time since I read them

    ReplyDelete
  37. எல்லோரும் பௌன்செர் புக் பத்தி பேசறாங்க.எனக்கு இன்னும் முதல் மூன்று புத்தகங்களே வரவில்லை.அலுவலகத்திற்கு நாலைந்து முறை போன் செய்தவுடன் தான் அது தபால் துறையின் குழப்பம் என்று தெரிகிறது.சரி கொரியரிலாவது அனுப்புங்கள் என்று கூறி இருக்கிறேன்.திங்கள்கிழமையாவது வந்து சேருமா என்று தெரியவில்லை.
    ஆரம்பமே சோகமாக உள்ளது.

    ReplyDelete
  38. டியர் எடிட்டர் சர்ர்,
    பெளன்சர் இதழினையும், மற்ற இதழ்களையும் எதிர்பார்த்து , இப்போதே தபரல்ஆபிஸின் வரசலில் தவங்கிடக்க என் அன்பு மனைவியை அனுப்பி வைக்கிறேன் சர்ர்.
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. இப்போது துவங்கியிருக்கும் சென்னை புத்தகத்திருவிழா 150 எண் ஸ்டால் வெற்றிக்கொடி கட்ட என்னுடைய
    மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..கலந்துகொள்ள விரை ந்துகொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்
    நன்றிகளுடன் கூடிய சந்தோஷ வாழ்த்துக்கள்..கொண்டாட்டங்களை படம் பிடித்து போடுங்கள் நண்பர்களே..
    நான் ஏற்கனவே சொன்னது போல் வானம் பெரியது..வெட்டுக்கிளியின் இறகுகள் சிறியது,,காலம் கனிந்தால்
    எப்போதாவது ஒரு புத்தக விழாவில் ச ந்திப்போம்..வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

    ReplyDelete
  41. அதிசயம் ஆனால் உண்மை, புத்தகம் அனுப்பிய மறுநாளே இந்த முறை கிடைத்து விட்டது! நமது மறுபதிப்பு நாயகர்களின் கதைகள் சிறப்பாக வந்துள்ளது. பௌன்செர் அட்டைபடம் நேரில் பார்பதற்கு சிறப்பாக உள்ளது. இதை எல்லாம் விட சிறப்பு என்னவென்றால் எனக்கு வந்த பார்சலில் ஸ்பைடர் கதை அடுத்த மாத இதழ்களுடன் வரும் என ஒரு சிறிய குறிப்பு!

    நன்றி விஜயன் சார் மற்றும் நமது அலுவலக நண்பர்களுக்கும்.

    ReplyDelete
  42. இன்னும் புக்ஸ் வராத ஏக்கத்தில் ஈரோடு விஜய்...

    ReplyDelete
    Replies
    1. நானும் அவ்வண்ணமே கோரும் மாயாவி சிவா + இங்கே'கிளிக்'

      Delete
  43. மறுப்பதிப்புகளுக்கு மிக பெரிய தம்ஸ் அப் ...மீண்டும் 90 காசு புத்தகங்களை நமது கண்முன்னே கொண்டு வந்துவிட்டது.

    அதுவும் மாயாவியில் வந்துள்ள வியப்பூட்டும் விந்தைகள் பகுதி nice touch.

    அனைத்து புத்தகங்களும் நல்ல வெளிர் காகிதத்தில் நன்றாக உள்ளது. அட்டையும் கெட்டியாக உள்ளது.

    தொடர்ந்து கலக்குங்கள்...பல நண்பர்கள் கூறியது போல பழைய அட்டைபடம் பின் அட்டையாகவோ முதல் பக்கமாகவோ இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    தலை ஸ்பைடரை அடுத்த மாதம் தான் சந்திக்க முடியும் எனபது சிறு வருத்தம்.

    ReplyDelete
  44. டியர் விஜயன் சார்.,மும்மூர்திகள் கதை பிரிண்டிங் நன்றாக வந்திருப்பதாக நண்பர்கள்சொன்னார்கள்.மிகவும்மகிழ்ச்சி.இந்த பொங்கலை எங்கள் பால்யத்துடன் கொண்டாட செய்துவிட்டீர்கள். உங்களுக்கும் Advanced பால்ய பொங்கல் வாழ்த்துகள்சார்.

    ReplyDelete
  45. மாலை வணக்கம் எடிட்டர் சார்!!!

    ReplyDelete
  46. ஆஹா...பதிவைப் படித்தவுடனே மிஸ்டர்.பௌன்ஸரைக் காண மிகவும் ஆவலாக உள்ளது...
    நாளை வரை பொறுமையில்லை... :)

    ReplyDelete
  47. முதல் இதழிலேயே பவுன்சர் தூள் கிளப்புகிறார்.
    பவுன்சர்------- சிக்ஸர்!!

    ReplyDelete
  48. டேஜ்சர் டயபாலிக் நம்ம ஹீரோ சூர்யா மாதிரி போல.
    முதல்ல வந்த 2 கதைகள விட இப்ப வந்திருக்கற கதை சூப்பர்.

    ReplyDelete
  49. எடிட்டர் சார். புது புக்ஸ் எல்லாமும் ஆன்லைன்லேயும் வாங்குற மாதிரி அப்டேட் பண்ணுங்க.

    ReplyDelete
    Replies
    1. \\புது புக்ஸ் எல்லாமும் ஆன்லைன்லேயும் வாங்குற மாதிரி அப்டேட் பண்ணுங்க\\
      +1

      Delete
  50. சென்னை புத்தக விழா இன்னுமொரு மைல் கல்லாக அமைய மற்றும் கலந்து சிறப்பிப்போர்க்கும் பதிவுகள் போடப் போவோர்க்கும் வாழ்த்துக்கள் !

    ம்ம்ம்......கிரிக்கெட் பௌண்ஸர் போல் தான் இந்த பௌன்ஸரும் கணிக்க முடியா நபராக இருப்பார் என்று தோன்றுகிறது.அப்படியே ஒரே பௌண்ஸில் கடல் தாண்டி வந்து கிடைப்பாரா? :)

    ReplyDelete
  51. சென்னை புத்தக கண்காட்சி சிறப்பான முறையில் நடைபெற நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  52. Hi Friends..... hope everything goes very well for us on bookfair 2015... Bookfair 2014ல்தான் lion muthu வை மீண்டும் சந்திக்கும் பாக்கியம் கிட்டியது....
    This lead me too constant search and i reached worldmart.... Now our blog sopt..
    2015 Subscription... இவை அனைத்தும் Bookfair ல் நமது Stall பற்றிய. Hidnu paper news னால்..... so thanks to Chennai bookfair.. Editor sir... i pray the Almighty that we should get a lot more young readers...

    ReplyDelete
  53. Really Enjoyed this month's lucky luke and Blue coats. Read again and again. Dear Editor, Pls stop with Modesty. Very much outdated. That 60s swinger s culture s even hated by westerners today. Creates bad impression in readers regarding western culture.
    Expecting Bouncer.
    What happened to magic wind? really enjoyed that cowboy western.

    ReplyDelete
  54. புத்தகங்கள் வந்து விட்டன! பௌன்சர் அட்டைபடம் அருமை!

    மாயாவி+ஜானி நீரோ+லாரன்ஸ் டேவிட் - ஸ்பைடர் தாமதமாக வருவார் என்ற குறிப்போடு வந்துள்ளனர்.

    ReplyDelete
    Replies
    1. "என் பெயர் லார்கோ" எப்போது வாங்கிட முடியும்,சார்?

      Delete
    2. \\என் பெயர் லார்கோ" எப்போது வாங்கிட முடியும்,சார்?\\
      +1

      Delete
  55. தவிர்க்க முடியாத சில காரணங்களால் புத்தக கண்காட்சிக்கு வர இயலவில்லை. நமது இதழ்களின் விற்பனை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  56. மூர்த்திகளின் மறுபதிப்புகள் கைக்கு கிடைத்தது.. நல்லவேளை மாடஸ்டி கதை லெவலுக்கு இல்லாமல் சித்திரங்கள் Enhance / Cleanup செய்யப்பட்டு சுமாராக உள்ளன. ஒருவேளை பாதி சைஸில் சுருக்கி பாக்கேட் சைஸாகப் போடடால் இன்னும் ஷார்ப்பாகவும், நாஸ்டால்ஜியா ஃபேக்டர் கூடுதலாகவும் அமையும். ஆனது ஆச்சு.. ஏதாவது ஒன்னு ரெண்டு புக்காவது பாக்கெட் சைஸில் வந்தால் நன்றாக இருக்கும்!

    ReplyDelete
  57. புத்தகங்கள் வந்தன. பௌன்செர் பிரிண்டிங் அருமை. ஒரு 4 பக்கங்கள் மட்டும் சற்றே கிழிந்த பேப்பரில் பிரிண்ட் ஆகி இருந்தது.

    ரிப்ரிண்ட் புத்தகங்கள் நல்ல தாளில் பிரிண்ட் ஆகி இருக்கிறது. சித்திரங்கள் ஒ.கே .

    சற்றே சிறிய சைஸ் ( நிலா ஒளி நர பலி சைஸ் ) சரியாக இருக்கும் என நினைக்கிறன்.

    பழைய நியாபகம் பாக்கெட் சைஸ் இல் இருக்கிறது. அந்த சைஸ் இப்பொழுது முடியாது எனும் போது நி ஒ ந சைஸ் நன்றாக இருக்கும்.

    All the very best for Chennai Book Fair

    ReplyDelete
  58. PLEASE ANY ONE CAN UPDATE ABOUT CBF 2015

    ReplyDelete
  59. CBFல் இருக்கும் நமது நண்பர்கள் எடிட்டர் தலைமையில் சன்டீவிக்கு பயம்காட்ட போயிருப்பதாக தகவல் புகை சமிஞ்சை மூலம் கிடைத்தது.
    மேலும் கூடுதலான தகவல்கள் மாலையில் கிடைக்கக்கூடுமென எதிர்பார்க்கப்ப் படுகிறது.!:)

    ReplyDelete
  60. CBFல் இருக்கும் நமது நண்பர்கள் எடிட்டர் தலைமையில் சன்டீவிக்கு பயம்காட்ட போயிருப்பதாக தகவல் புகை சமிஞ்சை மூலம் கிடைத்தது.
    மேலும் கூடுதலான தகவல்கள் மாலையில் கிடைக்கக்கூடுமென எதிர்பார்க்கப்ப் படுகிறது.!:)

    ReplyDelete
  61. Today only I came to notice of your post! So today only I received the books. Modesty Blaze's Nizhalodu oru yudham story is thrilling! Lucky Luke wins in comedy as usual in Oru Gentleman's Kathai. Now reading bluecoats.Please somebody update Book Exhibition news in our blog.

    ReplyDelete
  62. விஜயன் சார், மூர்த்திகளின் மறுபதிப்புகள் அருமை, மறுபதிப்பில் வந்த "காமிக்ஸ் கிளாச்சிக்" கதைகள் போல் இல்லாமல் தெளிவான சித்திரம்கள் வசனம்கள், மற்றும் புத்தகத்தின் புதிய (பெரிய) அளவு இதன் சிறப்பு; குறை என்று சொன்னால் ஆங்காங்கே தென்படும் எழுது பிழைகள் (அடுத்து வரும் புத்தகம்களில் இவை சரி செய்யப்படும் என நம்புகிறேன்)!

    இது போல் இதே தரம் மற்றும் சித்திரம்கள் ஷார்ப் உடன் தொடரவேண்டும். இந்த மறுபதிப்பு கண்டிப்பாக நமது புதிய வாசகர்களையும் கவரும்.

    மாயாவிகதையின் இந்த கதையை இதற்கு முன்னால் படித்து இல்லை, நன்றாக விறு விறுப்பாக இருந்தது!

    கனவிலும் நினைத்து பார்க்க முடியாத நமது ஆதர்ச நாயகர்களின் கதையை எங்களுக்கு (சிறந்த தரத்தில்) வழங்கிய உங்களுக்கு எனது மனபூர்வமான நன்றி.

    ReplyDelete
  63. விஜயன் சார், மாடஸ்டி கதையின் ஒரிஜினல் பக்கம்களும் இதே மாதிரிதான் உள்ளது. எனவே அச்சு குறைபாடு என சொல்ல முடியாது! ஒரிஜினல் மற்றும் நமது புத்தகத்திற்கும் உள்ள வித்தியாசம் ஒரு பக்கத்தில் 9 படம் வர வேண்டும் என்றால் அதனை 5 படம்களாக குறைத்து காலி இடமாக காட்டியது; இதனால் பக்கம்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கும். இதன் காரணம் எனக்கு புரியவில்லை, இதனை வரும் இதழ்களில் சரி செய்வது நலம்.

    ReplyDelete
  64. டியர் எடிட்டர் சர்ர்,
    விற்பனை அமோகமரகமரக இருக்கவும், பல புதிய வரசகர்கள் கிடைக்கவும் வரழ்த்துக்கள்.

    ReplyDelete
  65. விஜயன் சார், பெய்ரூட்டில் ஜானி கதையின் மிகப்பெரிய குறை என்றால் 3 பக்கம்களுக்கு ஒரு முறை தென்படும் எழுத்து பிழைகளே! அனைத்து பக்கம்களிலும் கடல் என்பது கடன் என உள்ளது. புத்தகம் முழுவது தென்படும் இந்த எழுத்து பிழைகளால் இந்த கதையை படிக்கும் போது எரிச்சல் வருகிறது!

    இந்த கதையின் நமது முந்தைய வெளி ஈடுகளில் கூட இது போன்ற எழுத்து பிழைகள் இல்லை. இந்த மறுபதிப்பில் எழுத்து பிழைகளை இதனை "review" செய்தவர் புதிதாக நுழைத்த உணர்வை தருகிறது.

    இதனை உடன் சரிசெய்வது நலம். Please consider this as serious issue.

    நமது காமிக்ஸ் நண்பர்கள் முலம் நமது மறுபதிப்பு கதைகளை ப்ரூப் ரீட் செய்யும் முயற்சி என்ன ஆனது?

    ReplyDelete
  66. டியர் எடிட்டர் சர்ர்,
    என் மைத்துனியின் ஐ.டி வேலை செய்யவில்லை. என் மகளின் ஐ.டி யில் வருகிறேன் சர்ர்.
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  67. கிரிக்கெட் மேட்சுகளில் அதிக ரன் அடிப்பவருக்கு மேன் ஆஃப் தி மேட்ச் தருவார்கள்.அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்களை கண்டுகொள்ள மாட்டார்கள்.
    ஜனவரி வெளியீடுகளின் கதையும் ஏறத்தாழ இதுவேதான்.
    எல்லோரும் மாடஸ்டியை குதறுவதில் கவனமாக இருந்ததில் அடுத்த சொதப்பல் கலரிங் கொண்ட டைலன் டாக்கை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
    அந்தி மண்டலத்தின் தெளிவான சித்திரங்களில் கட்டுண்டு டைலனின் ரசீகனாகவே மாறத் தொடங்கியிருந்தேன்.
    ஆனால் அடுத்து வந்த வீ.உதிரம் கதையின் சித்திரங்களும் கலரும் ஏதோ பரவாயில்லை ரகமாகவே இருந்தது. ஆனால் நள்ளிரவு நங்கை "என்னமோ போடா மாதவா." ரேஞ்சுக்குத்தான் இருக்கிறது.
    நம்பிக்கையில்லா நண்பர்கள் அந்தி மண்டலத்தை அருகில் வைத்துக்கொண்டு ஓப்பிட்டு பாருங்கள்.
    தெளிவான சித்திரமும் தரமான கலரிங்கும் இருந்தால் சுமாரான கதைகள் கூட சூப்பராக தெரியும். ஆனால்...............!
    ஒரிஜினலே இப்படித்தான் என்றால் இதுபோன்ற ஒரிஜினல்களை தவிர்த்து விட்டு தெளிவானவற்றை வெளியிட்டால் மகிழ்ச்சி சார்.!
    (சற்றேறக்குறைய மேஜிக் விண்டின் கதையும் இதுவேதான்.)
    லட்சக் கணக்கான கதைகளும்.,களங்களும் காத்திருக்கும் போது வருடம் "சுமார் " ஐம்பது கதைகளை மட்டுமே வெளியிடும் நாம் தேர்ந்தெடுத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பது சிறியேனின் சிறிய கருத்து.!!

    ReplyDelete
    Replies
    1. டைலன் டாக் கதையை நான் இன்னும் படிக்கவில்லை, இவரது கதையை படிக்க பொறுமை வேண்டும். படித்த பின் சொல்லுகிறேன்.

      என்னை பொறுத்தவரை இவரது கதையில் பொதுவாக சித்திரம் (ஷார்ப்நஸ்) மற்றும் வண்ணத்திற்கு பெரிய அளவு முக்கியத்துவம் கொடுக்கிறமாதிரி தெரியவில்லை. நமது மற்ற கலர் கதைகளின் உள்ள ஷார்ப்நஸ் இவரது கதையில் மிஸ்ஸிங்.

      Delete
  68. நித்தமும் குற்றம்.:-
    தரமான இதழ் என்பதற்க்கு எடுத்துக்காட்டு.
    அருமையான.,அடக்கமான சைஸ்.
    தெளிவான பிசிறற்ற சித்திரங்கள்.நல்ல ஆர்ட்வொர்க்.பொருத்தமான விலை.அட்டகாசமான அட்டைப்படங்கள்.(முன்+பின்.)
    மொத்தத்தில் ஜனவரியின் முதல் செட்டில் அப்பழுக்கற்ற வெளியீடுகளில் இதுவும் ஒன்று.


    ம்ம்ம்..... என்னங்க.? கதையா.?
    ஹிஹிஹி அதை இன்னும் படிக்கலீங்க.! மற்ற எல்லாத்தையும் படிச்சிட்டு கடோசியா டயபாலிக் படிப்பேன்..!! :)

    ReplyDelete
    Replies
    1. 1. Lucky Luke + Bluecoats
      2. Diabolic
      3.Modesty
      11. Dylan :-)

      Delete
  69. பௌன்செர் ஒரு மெகா ஹிட். என்ன ஒரு கதையாக்கம். முதலில் படிக்கும்போது திடுக்கிடாலும் , படித்து முடித்தவுடன் மீண்டும் ஒரு முறை படிக்க வைத்தது. லார்கோ போல இதுவும். சித்திரங்கள் டாப் கிளாஸ் .

    ReplyDelete
  70. டியர் எடிட்டர் சர்ர்,
    சன் டி.வி பேட்டி, கலந்துரைடல் என்று சொல்லுகிறார்கள். எது நடந்தாலும் நன்மைக்கே. வரழ்துக்கள் சர்ர்!
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  71. அன்புள்ள எடிட்டருக்கு,

    முதலில் எனது நன்றிகள்! மும்மூர்த்திகளின் மறுபதிப்பு + குற்றச் சக்கரவர்த்தி மறுபதிப்புகளுக்காக...

    இம்மாத மறுபதிப்பு வெளியீடுகளின் காகிதத்தரம், புத்தக அளவு (size & dimension), அட்டைகள் மிக மிக அருமை. வெளிஅட்டை ஓவியங்களைத் தவிர்த்து..

    தயவுசெய்து, இனிவரும் மறுபதிப்புகளில், முன்பு, முதன்முதலில் வெளியிட்ட அதே முன் & பின்னட்டை ஓவியங்களை, அப்படியே (எவ்வித மாற்றமின்றி) பயன்படுத்த வேண்டுகிறேன். அது இயலாவிடில், at least, பின்னட்டையிலாவது, முன்பு, முதன்முதலில் வந்த அட்டை ஓவியங்களை அப்படியே அச்சிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    Definitely, that (front & back cover art work) is the important/main aspect of our (at least me) longing/expectation for the true nostalgic effect from these gems (reprints). I hope you will consider this request.

    Thanks again.

    Regards,
    Periyar

    ReplyDelete
  72. +1
    Dear Editor sir,
    Please consider This.
    Your's
    Thiruchelvam Prapananth

    ReplyDelete
  73. சன்டிவி பேட்டி உண்மைதானா ...வானொலி விளம்பரம் என்ன ஆனது

    ReplyDelete
  74. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!!

    ReplyDelete