Sunday, January 11, 2015

புதுப் புது அர்த்தங்கள் !

நண்பர்களே,

வணக்கம். தமிழகராதியின் சில சொற்களுக்கு நமது பிரத்யேக உலகினில்  துளி கூட அர்த்தமில்லை என்பதை நேற்றைய தினமும், அதன் முந்தைய மாலையும் எனக்கு உணர்த்தியுள்ளன ! "எல்லைகள்"..... "வேலிகள்".... "அரண்கள்" ..."கட்டுப்பாடுகள்.." என்ற சொற்களுக்கெல்லாம் நம் செம்மொழி ஒரு பொருளை உணர்த்தினாலும் - காமிக்ஸ் எனும் மாய உலகினுள் உலவும் நம் மாயாத்மாக்கள் அந்த வார்த்தைகளுக்கெல்லாம் ஒரு புதுப் புது அர்த்தத்தை எழுதி வருகிறார்கள் என்பது நிதர்சனம்  ! ஒவ்வொரு முறையும் ; ஒவ்வொரு நகரிலும் நாம் பங்கேற்கும் ஒவ்வொரு புத்தக விழாவினிலும் ஆங்காங்கேயுள்ள நண்பர்களின் அன்புச் சாரலில்  நனையும் பாக்கியான்கள் நாம் என்பதில் இரகசியம் கிடையாது ! So எல்லாவற்றையும் தான் பார்த்து ரசித்து விட்டோமே ; நண்பர்களின் ஆற்றலையும், அளப்பரிய அன்பையும் எக்கச்சக்க முறைகள் தரிசித்து ; அனுபவித்து ; உணர்ந்து விட்டோமே - இனி புதிதாய் பார்த்திட உயரங்கள் தான் என்ன இருந்திடக் கூடும் என்ற சிந்தனையோடு சென்னையில் வெள்ளி மாலை துவங்கிய புத்தக விழாவிற்கு மூட்டை, முடிச்சுகளோடு கிளம்பி வந்தோம் ! அதற்கேற்ப அன்றைய மாலையில் நிகழ்ச்சியின் அரங்கமே பாதி மேக்கப் போட்ட கலைஞனைப் போல காட்சி தர - 'சரி தான்...இந்தாண்டு நம் எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்திக் கொள்வதே ஏமாற்றத்தைத் தவிர்க்கும் சாலையாக இருக்கும் !" என்ற மௌனத் தீர்மானம் என்னுள் ஓடிக் கொண்டிருந்தது ! முதல் சுற்றின் பெயர் அச்சில் நமது ஸ்டால் பெயர் விடுபட்டுப் போயிருந்ததால் முதல் நாளின் முழுமைக்கும் ; மறு நாளின் பெரும்பகுதிக்கும் நமது ஸ்டால் வேறு ஜூடோ டேவிட்டின் மண்டையைப் போல 'மொழுக்கடீர்' என்று காட்சியளித்தது !  வெள்ளிக்கிழமை மாலை நம் நண்பர்களின் வருகை கூட அத்தனை வேகமாய் இல்லை என்ற போது காற்று வாங்கிய மொத்த அரங்கினில் நாமும் ஜாலியாக ஐக்கியமாகிக் கொண்டோம் ! ஆனால் இம்முறை நம்மிடமுள்ள டைட்டில்களின் எண்ணிக்கை சற்றே அதிகம் ; விலைகளும் அதிகம் என்பதால் மிதமான கூட்டமே வந்திருந்த போதிலும் பில் தொகைகள் ஆரோக்கியமாய் இருப்பதை உணர முடிந்தது ! காலையிலேயே நம் ஸ்டாலில் ஆஜராகி பண்டல்களைப் பிரித்து, இதழ்களை அடுக்கி வைப்பதில் துவங்கிய நண்பர்களின் அசாத்திய உதவிகள், மாலையில் பில்லிங்கில் ; பாக்கிங்கில் என்று அதகளமாய்த் தொடர்ந்தது ! இராதாகிருஷ்ணன் தற்போது பணியில் இல்லை என்ற நிலையில் - புதிய பணியாளருக்கு சென்னை விழாவும், அதன் பிரம்மாண்டமும் முற்றிலும் பரிச்சயமற்றவை ! நண்பர்களின் உதவியின்றி நாம் நிச்சயமாய்த் தத்தளித்திருப்போம் என்பது உறுதி ! முதல் நாள் வருகை தந்த வாசகர்களின் பெரும்பகுதி புதியவர்கள் என்பதால் 2013-ன் வெளியீடுகள் எவை ? '14-ன் புத்தகங்கள் எவை ? என்ற ரீதியில் தொடர் கேள்விகளை முன்வைக்க நம் நண்பர்கள் அணி  அதனையும் திறன்பட சமாளித்து வர - நான் சற்றே புஷ்டியான சோளக் கொல்லை பொம்மை போல ஓரமாய் நின்று பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன் ! புது வாசகர்களின் வேட்டை ஒரு பக்கமெனில், சென்னையைச் சார்ந்த நம் ரெகுலர் வாசகத் தம்பதி கையில் கொண்டு வந்திருந்ததொரு நீளமான பட்டியலோடு புத்தகங்களை தேர்வு செய்து,  'டிக்' அடித்துக் கொண்டே அள்ள - தயாராய்க் காத்திருந்த கட்டைப்பை தள்ளாடியது !  அதிரடியாய் செல்லாவிடினும் ஒன்பது மணிக்கு ஸ்டாலுக்கு மூடாக்குப் போடும் சமயத்தினில் - 3 நண்பர்களின் சந்தாவையும் சேர்த்து வசூல் ரூ. 60,000 -ஐத் தொட்டிருந்த போது - 'அடடே' என்று மனசுக்குள் குட்டியாய் ஒரு ஆச்சர்ய உணர்வு தோன்றியது ! விளக்கை அணைத்து ; கணக்கு முடித்து நாம் கிளம்பும் நொடி வரை சென்னை நண்பர் உடனிருந்து உதவி நெகிழச் செய்தார் ! Day 1 சாந்த அவதாரம் எனும் போது இரண்டாம் நாளின் ரூபம் எவ்விதம் இருக்குமென்ற மெல்லிய சிந்தனையோடு ஜூனியரும், நானும் நடையைக் கட்டினோம் ! சனிக்கிழமை காலையில் ஈரோடு ; சேலம் ; திருப்பூர் பகுதிகளில் இருந்து நண்பர் பட்டாளம் கிளம்பி வருவதாலும், வார இறுதி எனும் போது உள்ளூரில் வசிக்கும் நண்பர்களின் வருகையும் நிச்சயம் இருக்கும் என்பதாலும் Day 2 நிச்சயமாய் lively ஆக இருக்குமென்ற நம்பிக்கை உள்ளுக்குள் இருக்க, அசதியில் தூக்கம் ஆளைச் சாய்த்தது ! And what a day the saturday was !!!!

சென்றாண்டைப் போலவே சன் நியூஸ் டி.வி.யினில் தலை காட்ட நண்பர் விஷ்வா மற்றும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. நெல்சன் சேவியரின் சகாயங்களில் நமக்கொரு வாய்ப்பு கிட்டியிருந்தது ! சென்னைப் புத்தக விழாவினில் வெளியாகும் பலதரப்பட்ட புது இதழ்களில் முக்கியமானவைகளை டி.வி. அரங்கினில் வெளியிடுவது போலான பிரோக்ராமில் "காமிக்ஸ்" என்ற genre -ன் பிரதிநிதியாய்  நமது "பௌன்சர்" இதழை முன்னிறுத்தி வைத்திருந்தோம் !  தமிழ் ஓவிய உலகின் அசாத்தியத் திறமைசாலிகளில் முக்கியமானவரான திருமிகு. மணியம் செல்வன்  அவர்கள் இதழினை வெளியிடுவதாக ஏற்பாடாகியிருந்தது! So சனி காலையில் நானும், ஜூனியரும் வீட்டிலிருந்து கிளம்பி சன் ஸ்டுடியோவிற்குச் சென்றிட, புரோக்ராமில் கலந்து கொள்ளும் பொருட்டு வாசக அணியும் தங்கள் லாட்ஜிலிருந்து சன் குழுமத்தின் பிரம்மாண்ட ஆபீஸ் நோக்கிப் புறப்பட்டனர் ! சென்றாண்டும் கிட்டத்தட்ட இதே போன்றதொரு தருணத்தில் 'ஸ்ட்ராங்கான பில்டிங்கோடும் ; வீக்கான பேஸ்மன்டோடும்' அங்கே அடி வைத்திருந்த நாட்கள் நினைவுக்கு வர - "அட...ஓராண்டின் ஓட்டம் இத்தனை வேகமா ?" என்று நினைக்கச் செய்தது ! சென்றாண்டைப் போல நான் மாத்திரம் தனியாக 'பெ பெ பெ ...பெ பெ பெ..' என்று மேடையில் அமர்ந்து ஓசை தரும் சூழலாக இல்லாது - இம்முறை ஓவியர் ம.செ அவர்களும்,நண்பர்களும் கலந்துரையாடுவது போலான ஏற்பாடு என்பதாலும் ; நிகழ்ச்சியின் நோக்கமே பௌன்சரை பற்றிய சிறு அலசல் என்பதாலும் முட்டிகால்கள் ஜாஸ்தியாய் பிரேக் டான்ஸ் ஆடவில்லை ! தவிர, பௌன்சர் இதழினை அதுவரை பார்த்திருந்த நண்பர்கள் அனைவருமே அதன் தரம் ; தயாரிப்பு பற்றி ஆர்ப்பாட்டமாய் சிலாகித்திருக்க,எனக்குள் ஒரு குட்டியான நம்பிக்கை குடிகொண்டிருந்தது ! 

சற்றைக்கெல்லாம் ஓவியர் திரு. ம.செ. அவர்களும் ஸ்டுடியோவிற்கு வந்திட ஷூட்டிங் நடக்கும் தளத்துக்குச் சென்றோம் ! சன் டி.வி.யின் பிரம்மாண்டம் புதிதாய் வருவோரை மிரளச் செய்யும் பாணி என்ற போதிலும், எங்கு சென்றாலும் அதகள முத்திரை பதிக்கும் நம் வாசகர்களுக்கு அதுவொரு பொருட்டாகவே இருந்திடவில்லை ! முன்பக்கம் 'தல' டெக்ஸ் & பின்பக்கம் 'தளபதி' டைகர் என்ற படங்களோடு அட்டகாசமான டி-ஷர்ட்களில் நண்பர்கள் ஆஜராக வழக்கம் போல அந்த ஏரியாவில் களை கட்டியது ! ஏற்கனவே இன்னொரு புத்தக வெளியீட்டு விழாவின் ஷூட்டிங் ஓடிக் கொண்டிருந்ததால் பக்கத்து அறையில் காத்திருந்த வேளையில் திரு.ம.செ அவர்களை தங்கள் கேள்விகளாலும், அன்பு மழையாலும் நண்பர்கள் நனையச் செய்யத் துவங்கினர் ! எனக்கும் இதுவொரு புது அனுபவம் என்பதால் திரு ம.செ அவர்கள் பௌன்சரின் ஒவ்வொரு பக்கத்தையும் பொறுமையாய் புரட்டிக் கொண்டே, ஒவ்வொரு பக்க சித்திர நுணுக்கங்களையுமொரு topnotch ஓவியரின் பார்வையில் விளக்கிச் செல்ல / சொல்ல எனக்குள் பிரமிப்பை அடக்க இயலவில்லை ! கிட்டத்தட்ட 2 மாதங்களாய் நான் தினமும்  பார்த்து வந்த சித்திரங்கள் இன்று அவரது பார்வைக் கோணங்களில் புதுப் புது அர்த்தங்களை நல்குவதை உணர்ந்த போது - ஒரு நிஜமான கலைஞனின் ஆற்றலை / உயரத்தை உணர முடிந்தது ! திறந்த வாய் மூடா நிலையில் நானும், நண்பர்களும் ஓவியர் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையையும் பற்றிக் கொநிருக்க நேரம் ஓடியதே தெரியவில்லை ! நண்பர்களின் உற்சாகம் எனக்குள்ளும் தொற்றிக் கொண்டிருக்க - செட்டிற்குச் சென்று மைக் மாட்டிக் கொண்டு மேடையில் அமரத் தயாரான போது சென்றாண்டைப் போல வாயெல்லாம் சோற்றுக் கற்றாழையை முழுசாய் கபளீகரம் செய்த உணர்வு எழவில்லை ! 'நான் வேடிக்கை பார்க்க மட்டுமே வருவேன் ; என்னை தெரியாத்தனமாய் கூட மேடையேற்றி விடக் கூடாது !' என்ற கண்டிஷனோடு வீட்டிலிருந்து புறப்பட்டிருந்த ஜூனியரையும் நண்பர்கள் குழாம் குண்டுக்கட்டாய் மேடைக்கு பார்சல் செய்து வைக்க அழகான பின்னணியிலான செட்டில் ஷூட்டிங் தொடங்கியது ! 

நிகழ்ச்சிக்கொரு திறமையான தொகுப்பாளர் என் தரப்பில் அமர்ந்திருக்க 'கணீர்' குரலில் அவர் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார் ! மூத்த தலைமுறையின் ஆசீர்வாதங்களோடு திரு.ம.செ அவர்கள் இதழை வெளியிட, இளைய தலைமுறையின் பிரதிநிதியாய் ஜூனியர் அதனைப் பெற்றுக் கொண்ட போது எனக்குள் ஓடியது ஒரு பதிப்பாளனின் நிஜமான சந்தோஷமா - அல்லதொரு தந்தையின் மட்டற்ற பெருமிதமா ? என்ற பட்டிமன்றமே நடத்தியிருக்கலாம் ! நான் பொதுவான சில கேள்விகளுக்குப் பதிலளிக்க,  பௌன்சர் கதையின் கர்த்தாவைப் பற்றி விஷ்வா சிலாகிக்க, சிறப்பு விருந்தினரான திரு.ம.செ அவர்கள் கிராபிக் நாவல்களைப்  பற்றியும் ; இந்தக் கதைக்கான ஓவிய பாணிகள் பற்றியும் அற்புதமாய்ப் பேசத் துவங்கினார் ! வாசகர்கள் கொஞ்சமாய் கேள்விகளைக் கேட்கவும் வாய்ப்புத் தந்து, அதற்கான பதில்களையும் நாங்கள் தரும் விதமாய் நிகழ்ச்சி அழகாய் ஓடியது !  இந்த 20 நிமிட புரோக்ராமை ஒரு மெகா சீரியல் நீளத்துக்குக் கொண்டு போயிருக்கக் கூடிய அளவில் நம்மவர்கள் ஒரு பரீட்சைப் பேப்பர் நிறைய கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தது வேறு விஷயம் !! பெரிதாய் ஒரு ரீ-டேக் எடுக்க அவசியமின்றி நிகழ்ச்சி முடிந்த பின்னே மேடையில் போட்டோக்கள் எடுத்து தூள் கிளப்பத் தொடங்கி விட்டனர் நண்பர்கள் ! காமிக்ஸ் எனும் காதலின் பின்னே இத்தனை வீரியமானதொரு ரசிகர் பட்டாளம் உள்ளதென்பதை திரு ம.செ அவர்கள் நிச்சயம் யூகித்திருக்க இயன்றிருக்காது என்ற விதத்தில் அவரும் திக்குமுக்காடிப் போய் விட்டார் இந்த அன்பு மழையில் ! என்றேனும் நாமொரு அழகான ஸ்கிரிப்ட் தயார் செய்திடும் பட்சத்தில் ஒரு 16 பக்கக் கதைக்கு தான் நிச்சயம் சித்திரங்கள் போட்டுத் தருவதாய் திரு. ம.செ. அவர்கள் முன்வந்த போது எனக்கு அந்த நாளே ஒரு புதுப் பரிமாணத்தில் காட்சி தந்தது ! நம் நன்றிகளை பணிவோடு சமர்ப்பித்து விட்டு அவரை வழியனுப்பி விட்டு - புத்தக விழாவிற்கு நடையைக் கட்டினோம்..!

அங்கே..! 



நாளின் பாதிப் பொழுதை டி.வி.நிலையத்தில் கழித்தான பின்னே, கொஞ்சமாய் அவர்களது பாணியைக் கடைபிடித்தால் தப்பில்லை என்று தோன்றுவதால் -இப்போதைக்கு ஒரு short commercial (breakfast) break !! வயிற்றுக்குப் பெட்ரோல் போட்டான பின்னே இந்தப் பதிவு தொடரும் - ஒரு சஸ்பென்ஸ் அறிவிப்போடு ! Stay tuned folks !

Post Break Post : 

மாலை 4 மணிக்கு நம் ஸ்டாலுக்குச் சென்ற போதே சரியான கூட்டம் ! நம் போராட்டக் குழுத் தலைவர் பில் போடும் பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்க, அவருக்கு இணையாய் வருகை தரும் ஒவ்வொருவரின் கேள்விகளுக்கும் பதில் சொல்லி ; இதழ்களை சேகரித்து ; pack செய்து கொடுத்து அசத்திக் கொண்டிருந்தனர் மற்ற நண்பர்கள் ! எப்போதும் போலவே பந்தியில் காலியான முதல் பதார்த்தம் 'தல'யின் இதழ்களே !! KING SPECIAL & "கார்சனின் கடந்த காலம்" நொடியில் காலியாகிப் போயின ! மறுபதிப்புகள் இன்னொரு பக்கம் ஜரூராய் அள்ளப்பட - "நயாகராவில் மாயாவி" ஆளுக்கு முந்தி out of stock அட்டையை மாட்டிக் கொண்டார் ! "ஸ்பைடர் வரலையா ?" என்ற கேள்வி ஒரு தொடர் ரீங்காரமாகிட - போஸ்டரில் இருந்து நம் கூர்மண்டையன் எகத்தாளமாய்ச் சிரிப்பது என்னைப் பார்த்தே என்பது போல் பட்டது ! "காலங்கள் மாறினாலும்..சில காதல்கள் மாறாது !" என்ற குற்றச் சக்கரவர்த்தியின் மைண்ட்வாய்ஸ் எனக்குக் கேட்காத குறை தான் !  இன்னொரு பக்கம் தமிழக டீக்கடைகளின் ஆஸ்தான ஆயுதங்களான வடையும், பஜ்ஜியும் போல் LMS சுறுசுறுப்பாய் விற்பனையாகிட, மாலைக்குள் அதுவும் அம்பேல் ! பௌன்சரும் அனைவரது கண்ணையும் பறித்திட - விற்பனை முன்னணியில் இந்த ஒற்றக்கையரும் சேர்த்தி ! "என் பெயர் லார்கோ " இன்னொரு hotseller என்றால் - குட்டீஸ் மத்தியில் லக்கி லூக் வழக்கம் போல் popular ! அழகான ஆச்சர்யம் என்னவெனில் நேற்று 2 குட்டி வாசகர்கள் (10-11 வயதுக்குள்ளான cutiepies) வேகமாய் ப்ளூ கோட்ஸ் பட்டாளத்தின் கதைகளை அள்ளியதே ! இருவருமே, இதுவரையிலான ஸ்கூபி-ரூபி கதைகளை படித்து விட்டதாகவும், லக்கிக்கு இணையாக இதையும் ரசித்தோம் என்று சொன்னதும் எனக்கு வியப்பாக இருந்தது ! இன்றைய வாண்டுகளின் ஆற்றல்களை எடைபோட்டிட அளவுகோல்களே கிடையாது போலும் என்று எண்ணிக் கொண்டேன் !   முதல் நாள் மாலையின் சுமார் கூட்டம் என்னை சற்றே மெத்தனமாய் இருக்கச் செய்து விட்டதென்பென் ; இல்லையேல் எல்லா இதழ்களிலும் கூடுதலாய் ஸ்டாக் ஏற்றி இருந்திருப்போம் தான் !   காலியாகிப் போன எல்லா இதழ்களுமே இன்று காலை  சிவகாசியிலிருந்து கணிசமாய் வரவழைக்கப்பட்டு விட்டதால் - we should be o.k. today ! டபுள் த்ரில் special இதழும் இன்று கிடைக்கும் என்பது கொசுறுச் சேதி !

நேரம் செல்லச் செல்ல நண்பர்களின் வருகையும் கூடிக் கொண்டே செல்ல - வழக்கம் போல் நம் ஸ்டாலில் ஒரு buzz தொற்றிக் கொண்டது ! அதிர்ஷ்டவசமாய் நமக்கு நடைபாதையை ஒட்டியதொரு ஸ்டால் என்பதால் அங்கே கொஞ்ச நேரம் ; இங்கே கொஞ்ச நேரமென ஒதுங்கி நின்று - பக்கத்து ஸ்டால்களின் உஷ்ணங்களைச் சம்பாதிக்கவில்லை ! நிறைய நண்பர்கள் துணைவியரோடு ஆஜரானது சந்தோஷம் எனில் ; மனைவியரும் இந்தக் காமிக்ஸ் காதலுக்குத் தடை போடாது,  தத்தம் கணவர்கள் கால இயந்திரங்களில் ஏறிப் பின்னோக்கிச் செல்வதை புன்சிரிப்போடு ரசித்து நின்றது நிறைவாக இருந்தது ! அது மட்டுமன்றி நேற்றைய புதுப் பார்வையாளர்களுள் மகளிரும் ஒரு கணிசமான எண்ணிக்கையிலானவர்களே ! இதுநாள் வரை ஒரு ஆர்வத்தில் உள்ளே புகுந்த பின்னே, டபுள் ஸ்பீடில் ரிவர்ஸ் கியர் போட்ட பெண்களே அதிகம் ! ஆனால் இம்முறையோ ஒவ்வொருவரும் நிதானமாய் நம் இதழ்களைப்  புரட்டியதும் சரி ; ஏதாவதொரு இதழையாவது வாங்கியதும் சரி - தவறாது நடந்தது ! வண்ண இதழ்களை மட்டும் தான் என்றில்லாது, தற்போதைய மறுபதிப்புகளையும் ஆற அமர அவர்கள் புரட்டிய போது - என்றேனும் ஒருநாள் மகளிரின் கோட்டைக்குள்ளும் நம் காமிக்ஸ் ராஜ்ஜியம்  நுழைந்திட வாய்ப்புகள் பிரகாசமே என்று நினைத்துக் கொண்டேன் !




வருகை தந்திருந்த நண்பர்கள் நொடிக்கொரு கேள்வியும், நிமிடத்துக்கொரு போட்டோவுமாய் தூள் கிளப்பிக் கொண்டிருப்பது ஒரு பக்கமெனில் - சென்னை வர இயலாது போயிருந்த இதர நண்பர்கள் தத்தம் ஊர்களில் இருந்தே இங்குள்ள நிலவரங்களை கால் மணி நேரத்துக்கொருமுறை வினவி வந்ததைக் கண்டிட முடிந்தது ! 'கூட்டம் எப்படி உள்ளது ?" ; "விற்பனை எவ்விதமுள்ளது ?" ; "வரவேற்பு எப்படியுள்ளது ? " "நண்பர்கள் யார்யாரெல்லாம் ஆஜர் ?" என்று தங்கள் வீட்டு விசேஷத்தைப் போன்ற நிஜமான அக்கறையோடு ஒவ்வொருவரும் போன்களில் கேள்விக்கணைகளை தொடுத்து வந்ததை மௌனமாய் ரசித்து வந்தேன் ! நாகர்கோவிலில் இருந்து வருகை ;  ஹைதராபத்தில் இருந்து வருகை ; புதுவையிலிருந்து வருகை ; பெங்களூரிலிருந்து வருகை என ஒவ்வொருவரும் இதற்கென எடுத்துக் கொண்டுள்ள மெனக்கெடலும் ; செலவும் நிச்சயமாய் நம்மை ஆயுளுக்கும் கடனாளிகளாக்கும் நிகழ்வுகள் என்பதை மறக்கவோ ; மறுக்கவோ இயலாது ! துளித் துளியாய் துவங்கியதொரு நேசம் சிறுகச் சிறுக பிரவாகம் எடுக்குமொரு அற்புதம் நம்மைச் சுற்றி அரங்கேறி வருவதை ஆண்டவின் கருணை என்றல்லாது வேறு எவ்விதம் வர்ணிக்கவோ - தெரியவில்லை ! 

நேற்றைய பொழுது நண்பர்களில் பலரும் முன்வைத்த பல கோரிக்கைகளுள் ஒன்று மட்டும் 'மறு ஒளிபரப்பாகவே ' தொடர்வதைப் பார்த்திட முடிந்தது ! 'கார்ட்டூன் கதைகளுக்கு இன்னும் கொஞ்சம் ஸ்லாட் ஒதுக்கினால் எங்களுக்கும், எங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கும் குதூகலமாய் இருக்குமே ! 'என்ற ஆதங்கக் குரல்களே அவை ! ஒரு லக்கி லூக் ; ஒரு சிக் பில் என்ற மினி மெனு எங்களின் கார்ட்டூன் பசிக்குச் சோளப் பொரியாக மட்டுமே காட்சி தருகிறது என்பதை அனைவரும் சொல்வதை நேற்றுக் கேட்க முடிந்தது ! சுவாசமாய் நம்மை நேசிக்கும் நெஞ்சங்களின் கோரிக்கை ; அதிலும் நம் அடுத்த வாசகத் தலைமுறையின் பொருட்டுமான கோரிக்கை எனும் போது அதற்கு செவி சாய்க்காது இருத்தல் சாத்தியமாகுமா ? So 2015-ன் போக்கினில் ஒரு அட்டகாசமான கார்ட்டூன் ஸ்பெஷல் இதழினைத் தயாரிப்பதென்ற தீர்மானம் நேற்றே என் தலைக்குள் உருவெடுத்து விட்டது ! இதன் கதைத் தேர்வுகள் ; பணி மேற்பார்வைகள் என முக்கிய வேலைகள் நம் ஜூனியர் எடிட்டரின் கைவண்ணமாக இருக்கப் போகிறது என்பதும் அவனே இப்போதைக்கு அறிந்திருக்காத் தகவல் ! விலை ; கதைகள் ; சைஸ் போன்ற basic சமாச்சாரங்கள் பற்றிய திட்டமிடலை நேற்றைக்கு வீட்டுக்குச் செல்லும் வழியிலேயே துவங்கி விட்டேன் ; படைப்பாளிகளிடம் இது தொடர்பாய் பேசிட மட்டும் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டு மார்ச் இதழ்களில் இதற்கான விளம்பரம் வெளியாகச் செய்வேன் ! கலக்கக் காத்திருக்கும் இந்த காமெடி மேளாவிற்கு என்ன பெயர் சூட்டலாமென்பது உங்கள் choice - முழுக்க முழுக்க !! So give it your best guys !!

மாலைப் பொழுது ஓடிய சுவடே தெரியாமல் கடை மூடும் நேரமும் நெருங்கிய போது - ஊருக்குத் திரும்பும் நண்பர்கள் நெகிழ்வாய் கைகுலுக்கி விட்டு கிளம்பிய தருணம் ஒரு சிறு மௌனம் சூழ்ந்து கொண்டது ! மயிலாடுதுறையில் வசிக்கும் நம் நண்பர் தான் கொண்டுவந்திருந்த சின்னதொரு பரிசை எனக்குத் தந்த போது அந்த gift wrapped பார்சலை ஆவலைப் பிரித்தேன் ! உள்ளே இருந்த பொருளைப் பார்த்த போது வார்த்தைகள் வரவில்லை எனக்கு ! அஞ்சல்துறையில் பணியாற்றும் நண்பர் என் படத்தோடு கூடியதொரு நிஜ தபால்தலையை அச்சிட்டே கொண்டு வந்திருந்தார் !!! இந்திய தபால்துறை சமீபமாய் இது போன்றதொரு திட்டத்தைத் துவக்கியிருப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன் தான் ; ஆனால் நானே அதன் ஒரு முகமாய் மாறிடும் ஒரு நாள் புலரும் என்றெல்லாம் நான் கனவு காணக் கூடத் தயாராக இருந்ததில்லை ! அதனுடன் 2 பக்கக் கடிதமொன்றை இணைத்துத் தந்த நண்பரை என்சொல்லி நன்றி பாராட்ட என்று இப்போது வரை எனக்குத் தெளிவு ஏற்பட்ட பாடில்லை ! 

ஒன்றே ஒன்று மட்டும் சொல்லியாகணும் guys ...போன ஜென்மமென்று ஒன்று இருந்திருப்பின் அதனில் நான் மலைக்குரங்காய்ப் பிறந்திருந்தால் கூட , நிறையவே புண்ணியம் செய்த குரங்காகத் தான் இருந்திருக்க வேண்டும் !   இல்லையெனில் காலைப்பனி போன்ற இந்த நேசங்களை இன்று அனுபவிக்கும் இது போன்ற பாக்கியங்கள்  எனக்கெவ்விதம் கிட்டிடும் ?  ஒவ்வொரு நாளும் . ஒவ்வொரு விதமான காமிக்ஸ் ரசனையினாலும், ஒவ்வொரு அன்பின் வெளிப்பாட்டின் மூலமும் வாமண அவதாரம் எடுத்து வரும் இந்த வாசகக் குடும்பத்தில் ஒரு சிறு அங்கமாய் இருப்பது என் ஆயுளுக்கொரு அர்த்தம் தரும் தருணம் ! அனைத்திற்கும் நன்றிகள் நண்பர்களே !! See you again today ! Bye for now ! 

P.S : நண்பர்களே...நேற்றைய போடோக்களில் இன்னமும் கொஞ்சம் அனுப்புங்களேன்...இங்கே வலையேற்றம் செய்து விடுவோமே !! 

279 comments:

  1. முதல் முறையாக இரண்டாவதாக

    ReplyDelete
  2. சென்னையில் முதல் நாள் அட்டகாசமாய் இருந்தது

    ReplyDelete
  3. ///ஸ்ட்ராங்கான பில்டிங்கோடும் ; வீக்கான பேஸ்மன்டோடும்' அங்கே அடி வைத்திருந்த நாட்கள் நினைவுக்கு வர - அட...ஓராண்டின் ஓட்டம் இத்தனை வேகமா ? ///

    அதகளம் பண்ணீட்டீங்க / பண்ணப்போறீங்க எடிசார்

    ReplyDelete
  4. //நாளின் பாதிப் பொழுதை டி.வி.நிலையத்தில் கழித்தான பின்னே, கொஞ்சமாய் அவர்களது பாணியைக் கடைபிடித்தால் தப்பில்லை என்று தோன்றுவதால் -இப்போதைக்கு ஒரு short commercial (breakfast) break !! வயிற்றுக்குப் பெட்ரோல் போட்டான பின்னே இந்தப் பதிவு தொடரும் - ஒரு சஸ்பென்ஸ் அறிவிப்போடு ! Stay tuned folks ! ///

    :D

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  6. சஸ்பென்ஸ் தாங்கல...

    Staying tuned


    Do 100 i=1,n
    Press 'F5'
    100 Continue

    ReplyDelete
  7. Dear editor Prince Desigan here... Met you yesterday evening ... So happy... Expecting the surprise announcement from you.....😊

    ReplyDelete
  8. //முன்பக்கம் 'தல' டெக்ஸ் & பின்பக்கம் 'தளபதி' டைகர் என்ற படங்களோடு அட்டகாசமான டி-ஷர்ட்களில் நண்பர்கள் ஆஜராக வழக்கம் போல அந்த ஏரியாவில் களை கட்டியது !///- திருப்பூர் நண்பர் சங்கிஓம் ன் ஆனந்த அன்பளிப்பாக வந்திருந்த தல-தளபதி டீசர்ட்டை அணிந்து கொண்டு சன் நியூஸ் புரோகிராம் மற்றும சனி கிழமை முழுதும் புத்தக விழாவில் கலக்கி எடுத்து விட்டேன் . டீசர்ட் தந்த நண்பர் சங்கிஓம்க்கு என்னுடைய மற்றும் நம்நண்பர்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் .

    ReplyDelete
  9. //முன்பக்கம் 'தல' டெக்ஸ் & பின்பக்கம் 'தளபதி' டைகர் என்ற படங்களோடு அட்டகாசமான டி-ஷர்ட்களில் நண்பர்கள் ஆஜராக வழக்கம் போல அந்த ஏரியாவில் களை கட்டியது !//

    நண்பர்ஓம்சங்கர் உங்கள்மிகச்சரியான தருணத்தில் உங்கள் பங்களிப்பு நண்பர்களின் மகிழ்ச்சியை மேலும் மேலும் அதிகப்படுத்துகிறதுதி இருப்பது நண்பர்களிண் வார்த்தைகளில் வெளிப்படுகிறதுது

    ReplyDelete
  10. ஈரோடு விஜய், நேரில பார்ப்பதை விட போட்டோவில் அழகாக இருக்கிறீர்கள்.... பவுன்சர் வருவதற்கு முன்பே அதகளமாக இருந்தது. இப்போது கேட்கவும் வேண்டுமா. ,

    ReplyDelete
    Replies
    1. //ஈரோடு விஜய், நேரில பார்ப்பதை விட போட்டோவில் அழகாக இருக்கிறீர்கள்.... //
      Dr.ஜி.! சென்னைக்கு போகணும்னு கேரளாவுக்கு போய் ஆயுர்வேத சிகிச்சை செஞ்சிட்டு வந்திருந்தார் நம்ம விஜய்.!
      பலன் நல்லா கிடைச்சிருச்சு போல.!

      Delete
    2. Dr. Sundar

      அ..அப்படீன்னா இனிமே நாம ஃபோட்டோலயே பார்த்துக்கலாம்! ;)

      Delete
    3. @ ரவிக்கண்ணன்
      ம்க்கும்! 'இப்படியெல்லாம் நீங்க சொல்லணும்... அதுவும் அந்த மேச்சேரி ரவி காதுல உழுகற மாதிரி சொல்லுங்க'ன்னு சொல்லி டாக்டர் ஃபீஸ் வேற கட்டியிருந்தேன். :)

      Delete
    4. @ரவி கண்ணன் ....சன் டிவி ப்ரைம் டைம் சீரியலில் விஜயை ஹீரோவாக நடிக்க சொல்லி ஒப்பந்தம் போட பட்டதாகவும் தமன்னாவுக்கு குறைவாக வேறு எந்த ஹீரோயின் -ஐயும் விஜய் ஏற்று கொள்ள மறுத்து ஒப்பந்தத்தில் இருந்து விலகி விட்டதாகவும் செய்தி வைரலாக பரவியுள்ளது நீங்கள் அறிய வில்லையா ???

      பின் குறிப்பு .....விஜய் நீங்கள் அனுப்பிய காசோலை நேற்று வந்து சேர்ந்தது ..;)

      Delete
    5. செல்வம்.,
      உங்களுக்கு வந்த தகவல் தவறு.
      டைரக்டர் ஷங்கர் "ஐ" க்கு பிறகு எடுக்கப்போகும் "அவ் " படத்திலும்,
      "லிங்காவிற்க்கு அடுத்து கே.எஸ். ரவிக்குமார் அவர்களின் "மாங்கா " படத்திலும் ஹீரோவாக ஒப்பந்தமாகி இருப்பதால்தான் சன்டிவியில் நடிக்க மறுத்தார் சேரோடு விஜய்.!!!

      முக்கிய குறிப்பு.:-
      விஜய் காசோலை இன்னும் வந்து சேரவில்லை.!

      Delete
    6. ........செய்தி வைரலாக பரவியுள்ளது நீங்கள் அறிய வில்லையா ???.............
      அஹா ...

      ஓஹோ ......

      பேஷ் பேஷ்

      Delete
  11. ஆனால் நம்ம எடிட்டர் கொஞ்சம் ஓவராத்தான் பெட்ரோல் போடுறாறோன்னு தோணுது!! ( எண்ணெய் கிணறுக்கே போய்ட்டாரோ என்னவோ!!! ;) )

    ReplyDelete
  12. @சேரோடு விஜய்.!
    என்னோட சார்பா கார்ட்டூன் தனிசந்தா போராட்டத்தை தலைமை தாங்கி நடத்துங்கன்னு சொல்லி சென்னைக்கு அனுப்பி வெச்சா நீங்க விதவிதமா போட்டோவுக்கு போஸ் குடுத்துட்டு இருக்கீங்களே.?
    கடமை தவறுதல் காமிக்ஸ் காதலருக்கு அழகில்லையே.!

    ReplyDelete
  13. Feel happy to know such good things about our comics.

    I am sure this year CBF will be a mega success not only interms of sales but media coverage and increase in readership

    ReplyDelete
  14. Waiting for the surprise!!! Nice to see all friends together...
    Sankar, Sampath kalakkitinga pola :-)

    ReplyDelete
  15. Super,என்ன சஸ்பென்ஸ் சீக்கிரம் சொல்லுங்கப்பா ?

    ReplyDelete
  16. எடி சார்,நெகிழ்ச்சியான சூப்பரான பதிவு.
    கார்ட்டுன் ஸ்பெஷல் திடிரென வருவதால் "மின்னல் ஸ்பெஷல்" என்று வைத்து விடுவோம்.

    ReplyDelete
  17. அடுத்த பதிவு 200- ம் பதிவு

    அதில் முத்து 350 குறித்த தகவல் வருமா..............

    ReplyDelete
    Replies
    1. வாவ்வ்வ் ..................ஆச்சர்ய பட்டேன் .....................!!!! (வாந்தி எடுக்கலை ........)

      Delete
  18. Chennai Book Fair நமக்கு மெகா successஆக அமைந்ததற்கு மகிழ்ச்சியான வாழ்த்துகள் !

    ReplyDelete
  19. சூப்பர் ..சார் ......

    எந்நாளும் இது மறக்க முடியாத நாள் சார் .... எனது முதல் வெளி நாட்டு :-) பயணமும் இதுவே என்பதால் வற்புறுத்தி அழைத்து சென்ற எனது காமிக்ஸ் நண்பர்கள் .....அனைவருக்கும் எனது மிக பெரிய நன்றி .....இன்று இங்கே இப்போது அலுவலகம் வந்து விட்டாலும் மனது என்னவோ இன்னமும் அங்கே தான் சுற்றி கொண்டு இருக்கிறது ........
    அருமையான "கார்டூன் ஸ்பெஷல் " அறிவித்ததற்கு மிக்க ..மிக்க ,,,நன்றி ....சார் ....

    முதன் முறையாய் காலை முதல் மாலை வரை புத்தக காட்சியில் இருந்ததால் .....

    நேற்றைய எனது புத்தக காட்சி அனுபவங்கள் சிறு துளிகளாய் ............

    இங்கே ....

    ReplyDelete
    Replies
    1. எல்லாரும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணிருப்பாங்க பரணிதரண்

      Delete
  20. ஆஹா ! கண்ணன் ! ........நண்பர்கள் அடங்கிய தனிப்படையை சென்னைக்கு அனுப்பி கார்ட்டூன் -க்கு தனி சந்தா பெற்று தந்த உங்களை "கார்ட்டூன் சந்தா கண்ட கருப்பு " என வரலாறு வாழத்தி மகிழும் ...!!!!:)....:-)

    ReplyDelete
    Replies
    1. கார்ட்டூன் ஷ்பெசல் என்பது 2014 ஜூலையில் இந்த தளத்திற்க்கு நான் வந்த புதிதில் எழுப்பிய. ஒரு கோரிக்கை.
      ஆறுமாதங்களுக்கு பிறகு அந்த கோரிக்கைக்கு செயல் வடிவம் கொடுத்திருக்கும் எடிட்டருக்கு நன்றிகள் பல.!
      ஆனால் தற்போதைய போராட்டம் கார்ட்டூன் தனி சந்தா வேண்டுமென்பதே.!. தனிசந்தா இல்லையெனினும் மினி லய்ன் போன்று தனி வரிசையாவது தொடங்க வேண்டும்.
      முதல் கோரிக்கையை ஆறுமாதங்களில் நிறைவேற்றிய எடிட்டர்., இந்த கோரிக்கையை அடுத்த வருடம் செயல்படுத்துவார் என்று நம்புகிறேன்.
      அதுவரையிலும் அவருடைய கனவில் பாட்டுபாடியும், டான்ஸ் ஆடியும் பயமுறுத்திக் கொண்டே இருப்பேன் என்று சோலார்ஸ்டார் மேல் சத்தியம் செய்கிறேன்.!!
      விடாது கருப்பு.!!!!

      Delete
    2. // தற்போதைய போராட்டம் கார்ட்டூன் தனி சந்தா வேண்டுமென்பதே.! //

      மிகச்சரியாக சொன்னீங்க கண்ணன் ஜி :))

      // தனிசந்தா இல்லையெனினும் மினி லய்ன் போன்று தனி வரிசையாவது தொடங்க வேண்டும். //

      Vijayan sir - Lion

      Mr. Vikram - Junior Lion

      So ஜூனியர் லயன்

      // அதுவரையிலும் அவருடைய கனவில் பாட்டுபாடியும், டான்ஸ் ஆடியும் பயமுறுத்திக் கொண்டே இருப்பேன் என்று சோலார்ஸ்டார் மேல் சத்தியம் செய்கிறேன்.!! விடாது கருப்பு.!!!! //

      எது வேண்டுமானாலும் செய்யுங்க என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க
      நமக்கு புத்தகம் வந்தா சரி :))
      .


      Delete
  21. கார்ட்டூன் ஸ்பெஷல் கோடை மலராக வெளியிடலாமே எடிட்டர் சார்.....

    ReplyDelete
  22. Dear friends, anybody know when ll bouncer releasing function telecast?

    ReplyDelete
  23. First ever cartoon special

    First ever comedy special

    First ever children's special

    First ever comedy cartoon special

    ReplyDelete
  24. Super Sir
    Always looking for my age stories to read :)

    We can have
    1 Rintin
    2 suske
    3 Chick bill
    4 lucky luke
    5 iznogood

    ReplyDelete
  25. டியர் காமிரேட்ஸ்,

    இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒரு காமிக்ஸ் வெளியீடு உங்கள் தொலைக்காட்சி பெட்டியில்!!!

    சன் நியூஸ் தொலைக்காட்சியில் நேற்றைய லயன் காமிக்ஸ் புத்தக வெளியீட்டு விழா நாளை திங்கள் கிழமை
    (12-01-2015) மதியம் 3.00 முதல் 3.30 வரை ஒளிபரப்பாக உள்ளது.

    அலுவலக நேரம் என்பதால் இதனை நம்மில் பெரும்பாலோனோர் மிஸ் செய்யும் வாய்ப்பு உண்டு. ஆகவே இதன் மறு ஒளிபரப்பு இரவு 11 மணிக்கு உள்ளது. இப்போதைக்கு எடிட் செய்யப்பட்டு கிட்டதட்ட 22 நிமிடங்கள் உள்ள இந்நிகழ்ச்சி அருமையாக வந்துள்ளது.

    நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க உதவிய கவிஞர், நண்பர் மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும், செம்மையாக ஒழுங்கு செய்த சகா நெல்சன் சேவியருக்கும், கடைசி நேரத்தில் அழைத்திருந்தும், வந்து விழாவை சிறப்பித்த ஆசான் திரு மணியம் செல்வன் அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றி.

    விழாவுக்கு லேட்டாக வந்தாலும், சிறப்பாக ஒத்துழைப்பு நல்கிய அனைத்து காமிரேட்டுகளுக்கும் ஸ்பெஷல் நன்றி.

    பின் குறிப்பு: அயல்நாட்டில் இருக்கும் காமிரேட்டுகள் இந்த இணைப்பில் இருக்கும் லின்க்கில் நாளைக்கு சன் நியூஸ் சேனலை காணலாம்.

    நிகழ்ச்சி முடிந்தவுடன் இதனை எடிட்டர் அவரது தளத்தில் You Tube Video லின்க் ஆக அளிப்பார்.

    ReplyDelete
    Replies
    1. Thank you for ur kind info viswa.

      Delete
    2. வாவ் சூப்பர் effort விஸ்வாஜி :))
      .

      Delete
    3. Great Viswa. Very Nice. This will take our comics to all corners of Tamil speaking world.

      Delete
    4. டியர் கிங் விஸ்வர சர்ர்,
      சன் டி.வி லிங்க் கொடுத்ததுக்கு நன்றிகள் சர்ர்.
      தங்கள் உண்மையுள்ள
      திருச்செல்வம் பிரபரனந்

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. டியர் எடிட்டர் சர்ர்,
      லயன் கர்ர்டூன் ஸ்பெஷல்

      தங்கள் உண்மையுள்ள
      திருச்செல்வம் பிரபரனந்

      Delete
    7. Dear King Viwa Sir
      Please give News? Or Vivatham?
      Prapananth

      Delete
  26. ///என்றேனும் நாமொரு அழகான ஸ்கிரிப்ட் தயார் செய்திடும் பட்சத்தில் ஒரு 16 பக்கக் கதைக்கு தான் நிச்சயம் சித்திரங்கள் போட்டுத் தருவதாய் திரு. ம.செ. அவர்கள் முன்வந்த போது எனக்கு அந்த நாளே ஒரு புதுப் பரிமாணத்தில் காட்சி தந்தது ////

    கற்பனை வளம் மிக்க கார்த்திக் சோமலிங்கா போன்றோர் ஸ்கிரிப்ட் பற்றி யோசிக்கலாமே !!!

    ஒருவேளை பின்னாளில் விருட்சம் என ஆகப்போகும் ஒரு நிகழ்வின் விதையென இம்முயற்சி
    மாறக்கூடிய வாய்ப்புகள் கண்முன்னே நிழலாடுகிறது ....

    ReplyDelete
    Replies
    1. // கற்பனை வளம் மிக்க கார்த்திக் சோமலிங்கா போன்றோர் ஸ்கிரிப்ட் பற்றி யோசிக்கலாமே !!!

      ஒருவேளை பின்னாளில் விருட்சம் என ஆகப்போகும் ஒரு நிகழ்வின் விதையென இம்முயற்சி
      மாறக்கூடிய வாய்ப்புகள் கண்முன்னே நிழலாடுகிறது .... //

      சரியா சொன்னீங்க அபிராமி ஜி :))

      நம்ம நண்பர் கூட ஒருத்தர் இருக்காரு

      ஆனா அவரு யாரு என்னான்னு கேட்டா சொல்ல மாட்டாரு
      அவர empty vessel அப்படின்னு சொல்லிக்குவாறு
      ( ராமாயணத்த கரச்சி குடிச்சிருக்கார்ன்ன பாத்துக்குங்களேன் )
      .

      Delete
  27. பார்வையாளர்கள் அனுமதி கிடைத்தவுடனே மக்கள் வெள்ளம் உட்புகுந்தது......ஒவ்வொரு ஸ்டால் உள்ளே சென்று மக்கள் வெள்ளோட்டம் பார்க்க நமது காமிக்ஸ் ஸ்டாலில் உடனடி விற்பனை சூடு பிடித்தது ...

    *************************

    இரும்பு கை மாயாவி பேனரை பெரிதாக வைத்திருந்ததால் பலர் ... " ஹே ....மாயாவி ..." என்ற சந்தோஷத்துடன் உட் புகுந்தனர் ...பார்த்து ரசித்தது மட்டுமல்லாமல் அனைவரும் "மாயாவியை " விலைக்கு அள்ள மதியமே .....மாயாவி மின்சாரத்தில் "கை "வைக்காமலே மறைந்து விட்டார் .....

    ************************

    தல ....டெக்ஸ் பத்தி சொல்ல தேவை இல்லை . கார்சனின் கடந்த காலம் ...வல்லர்வர்கள் வீழ்வது இல்லை ..மாயாவிக்கு முன்னரே மறைய நாளை வந்தால் கண்டிப்பாக கிடைக்குமா என்று வினவியவர்கள் வாங்கியவர்களை விட அதிகம் ...

    *************************

    லயன் மேக்னம் ஸ்பெஷல்....550 ரூபாய் என்பதால் கொஞ்சம் மெதுவாக பயணம் ஆவார் என பார்த்தால் அவரோ அந்த அட்டை படத்திற்கு ஆகவே "எக்ஸ்பிரஸ் "வேகத்தில் பயணம் செய்தார்.இதில் சிலர் டெக்ஸ் புத்தகத்தை மட்டுமே எடுக்க..பில் போடும் பொழுது இதனுடன் இணைப்பு ஒன்று உள்ளது சார் ...என்று என்று "டைகரை " மறவாமல் எடுத்து கொடுக்க மறுக்காமல் வாங்கி சென்றனர் நண்பர்கள் ...எனவே அவரும் காலி ...

    *************************

    சிலர் ஒன்று ...இரண்டு புத்தகத்தை தேர்வு செய்து எடுக்க நண்பர் யுவ கண்ணன் ஒவ்வொரு புத்தகத்தின் சிறப்பை எடுத்து சொல்லி பல புத்தங்களை வாங்க வைத்தார் .அதே போல வாங்கியவர் அனைவரிடமும் "மின்னும் மரணம் " இதழை பற்றி எடுத்து சொல்லி சிலரை சந்தா கட்டவும் வைத்து விட்டார் ...ஹாட்ஸ் ஆப் யுவா ஜி ..

    *************************

    ஆண்கள் மட்டுமல்லாமல் அதிகளவு பெண்களும் இம்முறை காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி சென்றனர் ...மாயாவி மட்டுமே வேண்டும் என்று ஆண்கள் வினவியதை போலவே பெண்களும் வினவியது ஆச்சிரியமான ஒன்று ...

    *****************************

    இம்முறை ஆசிரியர் "சன் டிவி "நேரடி நிகழ்ச்சிக்கு சென்று மாலை நான்கு மணி அளவில் தான் வந்ததால் வந்தவர்கள் பலர் அவரை காண முடியாத வருத்தத்தில் சென்றனர் ....

    *****************************

    நண்பர் சத்யா அவர்களும் வருபவர்களுக்கு நமது இதழ்களை பற்றி சொல்லி ...நமது வலை தளம் ....பற்றி எடுத்து கூறி ....புத்தகத்தை எடுத்து கொடுத்து அவர் வீட்டு நிகழ்ச்சி போல மகிழ்ச்சி உடன் செயல் பட்டார் .ஹாட்ஸ் ஆப் சத்யா ஜி ....

    *******************************

    இப்போதைய இளம் வாசகர்களும் நமது இதழ்களை வாங்கி சென்றனர் ....அவர்களின் பெரும் விருப்பம் காமடி கதைகள் தாம் ......

    ******************************

    ஏற்கனவே அறிமுகமான நமது நண்பர்களையும் ....புதிதாய் அறிமுகமான நண்பர்களையும் சந்தித்ததில் மிக பெரிய மகிழ்ச்சி ...

    *********************************

    ஆசிரியருக்கு ஒரு அட்டகாச "பரிசை " அளித்தார் ராஜா சார் .அவர்களுக்கு காமிக்ஸ் ரசிகர்கள் சார்பாக ஒரு "ஹாட்ஸ் ..ஆப் ..."

    *******************************

    காலையில் ஒரு பெரிய புத்தக காட்சி இல்லம்மாக தெரிந்த நமது ஸ்டால் மாலைக்குள் ஒரு சிறிய பெட்டி கடையாக மாறியது ....

    *******************************

    நமது ஆசிரியர் மற்றும் நண்பர்கள் குழுவினரை பிரபல சன் தொலை காட்சியில் தோன்ற செய்த தலைவர் "கிங் விஸ்வா " அவர்களை வாழ்த்தும் அளவிற்கு நான் பெரிய மனிதன் அல்ல .வணங்குகிறேன் சார் ....

    ********************************

    இத்துணை தூரம் ...ஒரு பகல் ..இரு இரவு என முதன் முறையாக பயணம் என்ற ஒரு சிறு தயக்கம் மனதில் இருந்து கொண்டே இருந்தாலும் நமது ஆசிரியர் ....ஜூனியர் எடிட்டர்....நண்பர்கள் குழுவில் கலக்க....கலக்க ...அந்த தயக்கம் மறைந்து சந்தோசம் மட்டுமே மனதில் ......இந்த அருமையான நிகழ்ச்சியில் என்னை பங்கு பெற வைத்த ......மாயாவி சிவா அவர்கள் ....செயலாளர் விஜய்..அவர்கள் ...டெக்ஸ் விஜய் அவர்கள் .....சுசிந்தர் அவர்கள் ...யுவ கண்ணன் அவர்கள் ..அனைவருக்கும் எனது ஈரம் கனிந்த நன்றிகள் .......

    ********************************

    விரைவில் இன்னும் ஒரு புத்தக காட்சி நடை பெற இருப்பதும் .....இதில் கலந்து கொள்ளும் ஆர்வம் இப்போது பல மடங்கு அதிகமாக இருந்தாலும் ...வருடம் ஒரு ஆபர் என்ற முறையில் அனுமதித்த வீட்டுக்காரம்மா கொஞ்ச தூரத்தில் இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுப்பாரா என்பது ஆண்டவனுகே வெளிச்சம் ...

    "எல்லாம் மனைவியாண்டிச்வரி செயல் "

    ******************************

    ReplyDelete
    Replies
    1. //மாயாவி மின்சாரத்தில் "கை "வைக்காமலே மறைந்து விட்டார் .....//

      LOL

      Delete
    2. // சிலர் ஒன்று ...இரண்டு புத்தகத்தை தேர்வு செய்து எடுக்க நண்பர் யுவ கண்ணன் ஒவ்வொரு புத்தகத்தின் சிறப்பை எடுத்து சொல்லி பல புத்தங்களை வாங்க வைத்தார் .அதே போல வாங்கியவர் அனைவரிடமும் "மின்னும் மரணம் " இதழை பற்றி எடுத்து சொல்லி சிலரை சந்தா கட்டவும் வைத்து விட்டார் ...ஹாட்ஸ் ஆப் யுவா ஜி .. //

      வாழ்த்துக்கள் நண்பரே :))

      // நமது ஆசிரியர் மற்றும் நண்பர்கள் குழுவினரை பிரபல சன் தொலை காட்சியில் தோன்ற செய்த தலைவர் "கிங் விஸ்வா " அவர்களை வாழ்த்தும் அளவிற்கு நான் பெரிய மனிதன் அல்ல .வணங்குகிறேன் சார் .... //

      அட ஆமால்ல
      தப்பு பண்ணிட்டனே சாரி விஸ்வாஜி

      தலைவர்ன்னா தலைவர்தான்
      என்னமா சொல்லுரார்பா :)

      // இந்த அருமையான நிகழ்ச்சியில் என்னை பங்கு பெற வைத்த ......மாயாவி சிவா அவர்கள் ....செயலாளர் விஜய்..அவர்கள் ...டெக்ஸ் விஜய் அவர்கள் .....சுசிந்தர் அவர்கள் ...யுவ கண்ணன் அவர்கள் ..அனைவருக்கும் எனது ஈரம் கனிந்த நன்றிகள் ....... //

      நாமளும் கூடவே நன்றி சொல்லிக்கிறோம் :))

      // "எல்லாம் மனைவியாண்டிச்வரி செயல் " //

      கவலை படாதீங்க ஜி ஆத்தா உங்க பெரிய மனசுக்கு கண்டிப்பாக அருள் புரிவாங்க ;-)
      .


      Delete
    3. நன்றி, பொராமையாக உள்ளது

      Delete
    4. நன்றி பரணி! சுவையாக தொகுத்து உள்ளீர்கள்!

      Delete
  28. // புதிய பணியாளருக்கு சென்னை விழாவும், அதன் பிரம்மாண்டமும் முற்றிலும் பரிச்சயமற்றவை ! நண்பர்களின் உதவியின்றி நாம் நிச்சயமாய்த் தத்தளித்திருப்போம் என்பது உறுதி ! முதல் நாள் வருகை தந்த வாசகர்களின் பெரும்பகுதி புதியவர்கள் என்பதால் 2013-ன் வெளியீடுகள் எவை ? '14-ன் புத்தகங்கள் எவை ? என்ற ரீதியில் தொடர் கேள்விகளை முன்வைக்க நம் நண்பர்கள் அணி அதனையும் திறன்பட சமாளித்து வர //

    மனமுவந்த வாழ்த்துக்கள் நண்பர்களே :))))))))

    // சென்றாண்டைப் போலவே சன் நியூஸ் டி.வி.யினில் தலை காட்ட நண்பர் விஷ்வா //

    வாழ்த்துக்கள் விஸ்வாஜி :)))


    // முன்பக்கம் 'தல' டெக்ஸ் & பின்பக்கம் 'தளபதி' டைகர் என்ற படங்களோடு அட்டகாசமான டி-ஷர்ட்களில் நண்பர்கள் ஆஜராக வழக்கம் போல அந்த ஏரியாவில் களை கட்டியது ! //

    சரியா சொன்னீங்க சார் ( நம்ம ஸ்டால் banner ல அவங்களுக்கு கல்தா கொடுத்துட்டீங்களே சார் )

    // திரு.ம.செ அவர்கள் ஒவ்வொரு பக்க சித்திர நுணுக்கங்களையுமொரு topnotch ஓவியரின் பார்வையில் விளக்கிச் செல்ல / சொல்ல எனக்குள் பிரமிப்பை அடக்க இயலவில்லை ! கிட்டத்தட்ட 2 மாதங்களாய் நான் தினமும் பார்த்து வந்த சித்திரங்கள் இன்று அவரது பார்வைக் கோணங்களில் புதுப் புது அர்த்தங்களை நல்குவதை உணர்ந்த போது - ஒரு நிஜமான கலைஞனின் ஆற்றலை / உயரத்தை உணர முடிந்தது ! //

    அப்படியே அத அடுத்த பதிவா போட்டா நல்லா இருக்குமே சார்


    // என்றேனும் நாமொரு அழகான ஸ்கிரிப்ட் தயார் செய்திடும் பட்சத்தில் ஒரு 16 பக்கக் கதைக்கு தான் நிச்சயம் சித்திரங்கள் போட்டுத் தருவதாய் திரு. ம.செ. அவர்கள் முன்வந்த போது எனக்கு அந்த நாளே ஒரு புதுப் பரிமாணத்தில் காட்சி தந்தது ! //

    நோட் பண்ணுங்கப்பா
    நோட் பண்ணுங்கப்பா

    உலக தரத்தில் தமிழ் காமிக்ஸ் என்னும் நாள் அதிக தொலைவில் இல்லை என தெரிகிறது சார் :))
    .

    ReplyDelete

  29. // ஒரு அட்டகாசமான கார்ட்டூன் ஸ்பெஷல் இதழினைத் தயாரிப்பதென்ற தீர்மானம் நேற்றே என் தலைக்குள் உருவெடுத்து விட்டது ! இதன் கதைத் தேர்வுகள் ; பணி மேற்பார்வைகள் என முக்கிய வேலைகள் நம் ஜூனியர் எடிட்டரின் கைவண்ணமாக இருக்கப் போகிறது என்பதும் அவனே இப்போதைக்கு அறிந்திருக்காத் தகவல் ! //

    யாஹூ ஹூஊஊஊஊ
    ( லக்கியும் ப்ளூ கோட்டும் அதிகம் வேண்டாம் சார் முழுக்க முழுக்க எனது சாய்ஸ் மட்டுமே என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் நண்பர்களே )

    // கார்ட்டூன் ஸ்பெஷல் இதழினைத் //

    சற்றே இதில் சிறிது மாற்றம் தேவை சார் , அதாவது என்ன சொல்ல வரேன்னா

    கார்ட்டூன் ஸ்பெஷல்க்கு பதிலாக


    கார்ட்டூன் சந்தா Track 1


    அந்த காமெடி மேளாவிற்கு என்ன பெயர் ( அந்த ரிஸ்க் தேவையே இல்லையே சார் )

    ஜூனியர் லயன்

    இதுவே அந்த மந்திரச்சொல்

    ஓகேவா கண்ணன் ஜி ( நீங்க சொன்ன மாதிரியே எக்ஸாம் எழுதிட்டேன் )

    இனி பாஸ் பண்ண வைக்க வேண்டியது நம்ம நண்பர்கள் கையில தான் இருக்கிறது :)
    .

    ReplyDelete
  30. // மயிலாடுதுறையில் வசிக்கும் நம் நண்பர் தான் கொண்டுவந்திருந்த சின்னதொரு பரிசை எனக்குத் தந்த போது அந்த gift wrapped பார்சலை ஆவலைப் பிரித்தேன் ! உள்ளே இருந்த பொருளைப் பார்த்த போது வார்த்தைகள் வரவில்லை எனக்கு ! அஞ்சல்துறையில் பணியாற்றும் நண்பர் என் படத்தோடு கூடியதொரு நிஜ தபால்தலையை அச்சிட்டே கொண்டு வந்திருந்தார் !!! //

    வாழ்த்துக்கள் நண்பரே :))
    .

    ReplyDelete
  31. // அனைத்திற்கும் நன்றிகள் நண்பர்களே !! See you again today ! Bye for now ! //

    அடுத்த பதிவு மறுபடியும் உண்டா சார் :))
    .

    ReplyDelete
  32. எடிட்டர் சார்,

    மிகவும் நெகிழ்ச்சியாகவும், நமது காமிக்ஸ் புகழ் பரவுவது கண்டு பெருமையாகவும் இருக்கிறது.
    இது போன்ற விழாக்களில் அங்கிருந்து கலந்துகொள்ள முடியவில்லையே என்று ஏக்கமாகவும் இருக்கிறது.
    நீங்களும் நமது நண்பர்களும் பதிவேற்றும் போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து மகிழ்ச்சிகொள்ள வேண்டியதுதான் :-)

    ReplyDelete
    Replies
    1. //இது போன்ற விழாக்களில் அங்கிருந்து கலந்துகொள்ள முடியவில்லையே என்று ஏக்கமாகவும் இருக்கிறது.//
      +11111

      Delete
  33. Bouncer ஐ திருநெல்வேலி to நாகர்கோவில் end to end ல் எடுத்தேன் ஆரல்வாய்மொழி அருகே bus bounce ஆகும் .அதை கூட உணராமல் படித்தேன் .அட்டகாசம் .

    ஆனால் ஒரு சிறு நெருடல்.

    டெபோராவும் சேத்தும் சகோதர சகோதரி அல்லவா .

    இல்லை என் புரிதல் தவறா.....?

    ReplyDelete
    Replies
    1. டேபோரோ யாரோ பெத்த புள்ள .....

      Delete
  34. டியர் எடிட்டர் சர்ர்,
    நரன் 62 வது சர்ர்.
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  35. I was there at our stall yesterday evening... wanted to meet all of our friends.. But அனைவரும் Channel interview ku போய் விட்டீர்கள் என்று அறிந்து... நம் எடிட்டர் சொல்வது போல ஙே ஙே ஙே ஙே ஙே என முழித்து கொண்டு தனியே நின்றிருந்துவிட்டு வந்தேன்... அங்கு கண்ட ஒரு காட்சி "அடுத்த தலைமுறையினரின் காமிக்ஸ் ஆர்வம்".... மிகவும் நிறைவாக இருக்கு....


    இதை ஒரு பொறியியல் கல்லூரி professor aga இஙகு பதிவிடுகிறேன்...


    இன்றைய இளம் தலைமுறை வாசிப்பு பழக்கம் அற்ற எதையும் பகுத்தறியும் நுண் திறனற்றும் நெறிகளில் நம்பிக்கையின்றியும் இருக்கக் காரணி வாசிப்பு பழக்கம் இன்மையே
    ...

    ReplyDelete
  36. Super post, lot of information.
    Cartoon special - need lot of variety not Just lucky Luke and blue coats as we see them in the regular issues itself.
    Viswa- looking forward top the sun tv program.

    ReplyDelete
  37. my wish for Cartoon special features
    1. Hard bound
    2. Lots and lots of stories
    3. New heroes / characters
    4. Some reprints

    ReplyDelete
    Replies
    1. இலை எல்லாம் மார்ச் இதழில் வெளிவரும் v.karthikeyan

      Delete
    2. ஆஹா வந்தால் மிக நன்று

      Delete
  38. நேற்று கண்ட ஆர்வம் வளர்த்தெடுக்கபட வேண்டிய ஒன்று...


    குழந்தைகள் மனதில் நல்லொழுக்கத்தை விதைக்க வளர்க் காமிக்ஸ்களால் முடியும்!!!!

    ReplyDelete
  39. டியர் எடிட்டர் சர்ர்,
    " இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையரக" சன் ரி.வி யின் வெளிச்
    சம் நமது கரமிக்ஸ் மீது விழுந்துள்ளது நமது அதிஷ்டம் என்றே சொல்ல வேண்டும். கர்ரணமரன கிங் விஷ்வரவிற்கொரு பெரிய யே!
    நம் எடிட்டரின் படத்துடன் தபரல் தலை வெளியிட்ட வரசகரின் அன்புக்கு நரம் தலை வணங்குகின்றோம். சரியரன ரெயில் வண்டியைத்தைரன் தெரிவு செய்து இருக்கிறர்ர் . நம் வரசகர் எல்லோரையும் சரியரன வழியில் கொண்டு வழியில் கொண்டு சேர்க்கிறர்ரே.
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  40. டியர் எடிட்டர் சர்ர்
    "சென்னை புக் பெயர்ர்" இரண்டு நரள் விற்பனை நன்றரக வந்ததை போலவே தொடர என்வரழ்த்துக்கள் சர்ர்!
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  41. டியர் எடிட்டர் சர்ர்,
    சென்னை புக் பெயர்ர் உக்கு "ஸ்பைடரின்" மறுபதிப்பை மட்டும் உங்கள் ரீமிடம் கொஞ்சமாக என்றரலும் பிரின்ட் செய்யலரமே சர்ர் பிளீஸ்?
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  42. டியர் எடிட்டர் சர்ர்,
    எப்போது சர்ர் வெளியாகும் சர்ர்? சஸ்பென்ஸ் தரங்கவில்லை .
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  43. Vijiyan sir.... surprise special "என் பெயர் லார்கோ " Is a complete action package ..... ultimately a grand opening for largo series ....!!!!

    ReplyDelete
  44. டியர் எடிட்டர் சர்ர்
    கர்ர்டூனிற்கு ஸ்பெஷல் ஒன்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது. சென்னை புக் பெயர்ரில் இருந்தாலும் பதிவிட்டதற்கு நன்றிகள் சர்ர்.
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  45. ஒரு வழியாக எடி அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது.
    மிகவும் சந்தோசமான நிமிடங்கள்..அவரை பார்த்ததும் பேச தயக்கமாக இருந்தது இருந்தும் துணைவியாரின் தூண்டுகோளில் சென்று அறிமுகம் செய்துகொண்டேன்.

    பல நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். மறுபதிப்புகளின் தரம் பற்றிய எனது மகிழ்ச்சியை கூறிவிட்டு,
    கார்சனின் கடந்த காலம் தலையணை அளவில் இல்லாத குறையை கூறினேன். சமீபத்தில் வந்த புத்தகம் ஏன் மறுபதிப்பு செய்தீர்கள் என பலர் கூறியதை தெரிவித்தார்.

    ஈரோடு நண்பர்கள் டெக்ஸ் விஜய் , ஈரோடு விஜய், டெக்ஸ் சம்பத், ஷால்லும், பரணிதரன் மற்றும் மாயாவி சிவா அவர்களையும் சந்தித்து உரையாற்றியது மறக்க முடியாததாக அமைந்தது.

    மற்றும் சென்னை நண்பர்கள் ரபிக், ரமேஷ்,லக்கி,ரஞ்சித்,ராஜ் முத்துக்குமார்,திருப்பூர் ப்ளுபெர்ரி (நாகராஜ்) , ஸ்ரீராம்
    ஆகியோரை இப்படி புத்தக திருவிழாக்களில் தான் சந்திக்க முடிகிறது.

    மொத்தத்தில் மறக்க முடியாத தினமாக இருந்தது.

    எடி சார் நான் அனுப்பிய புகைப்படங்களை பதிவேற்றியதற்கு நன்றிகள் பல.

    ReplyDelete
    Replies
    1. ஜி இப்போதைக்கு நீங்க ஈரோடுதான் உங்க ஒருதர்காக ஒரு ஊர் பெயரை போட முடியாது :)

      Delete
    2. கிருஷ்ணா...உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்..! உண்மை என்னன்னா ஈரோடில் இருந்து யாரும் வரலை....ஈரோடு விஜய் கூட இருப்பது சேலமே...! ஜாலிக்கு ஒரு இங்கே'கிளிக்'

      Delete
    3. ஒரு ஏரியா காரங்க என்றாலும் கிருஷ்ணாவை வருஷம் ஒரு முறை தான் பார்க்க முடியுது... அது போலவே காமிக்ஸ் நண்பர்கள். ஒரு நகரமா இருந்தாலும்.. இல்லாட்டாலும்...

      அப்பப்ப புத்தக கண்காட்சி மூலமாவது சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்குதே..... தூள் :)

      Delete
    4. அருமையாக சொன்னீர்கள் ரஃபீக் . நானும் உங்கள் அனைவரிடமும் பல விசயங்கள் பேச வேண்டும் என தயார் செய்து கொண்டு தான் வந்திருந்தேன் நண்பரே. உங்கள் அனைவரையும் பார்த்த உடன் வாய் அடைத்து போய் மூளை (?) ஸ்டக் ஆகிவிட்டது . பேசியது கொஞ்சமே என்றாலும் ஏற்பட்ட ஆனந்தம் அளவிடமுடியாத ஒன்று . அடுத்த மீட்டை எண்ணி மனம் இப்போது ஏங்க ஆரம்பித்து விட்டது நண்பர்களே!

      Delete
    5. //உங்கள் அனைவரையும் பார்த்த உடன் வாய் அடைத்து போய் மூளை (?) ஸ்டக் ஆகிவிட்டது .//

      ஹா...ஹா...இதுக்கு என்னோட பதில் (சும்மா ஜாலிக்கு) பார்க்க..... இங்கே'கிளிக்'

      Delete
    6. மாயா நண்பரே ரஃபீக் ஜியை பார்த்ததும் அவரும் என்னைப்போல் பிரியாணி மற்றும் ஒரு ப்ளேட் சில்லி சிக்கனுக்கு முதல் ரசிகர் என்று . அதற்கு அப்புறமும் அவர் தல ரசிகர்தான் என எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லையே.

      Delete
    7. .............என்று தெரிந்து கொண்டேன் .(என படிக்கவும் )

      Delete
  46. புத்தக திருவிழா ஆரம்பித்தவுடன் முதல் ஆளாக நின்றவர் நமது நாகர்கோவில் நண்பர் தான். நானும் உடன் செல்ல வேண்டியது. ஆனால் கடைசி நேரத்தில் வர முடியாத நிலை. ஆனாலும் நண்பரிடம் அவ்வப்போது நிலவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு இருந்தேன். மிகவும் உற்சாகமாக பதில் சொன்னார். மறுநாள் மதியம் 1 மணிக்கு மேல் தான் ஸ்டாலுக்கு வந்து விடுவதாக சொன்னா ர்.

    ReplyDelete
  47. மறுநாள் காலையிலும் உற்சாகமாக பேசினார். மதியம் 2 மணி அளவில் போன் பன்னி பேசிய போது தான் தெரிந்தது அவர் சன் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று. புத்தக வியாபாரிகளுக்கு வந்த அழைப்பு உண்மையாக உழைப்பவர்களுக்கு வரவில்லை. ஏன் இந்த நிலை. இது யார் ஐடியா.

    ReplyDelete
    Replies
    1. +1
      (ஆதங்கம் நியாயமானது.)

      Delete
    2. ஆதங்கம் நியாயமானது நண்பரே!

      Delete
    3. நண்பர்களே ஏன் இப்படி

      ஶ்ரீதர் என்னிடம் கேட்ட போது எனக்கு அந்த விஷயமே தெரியாது .

      அப்புறம் தெரிந்த போது எனக்கு நண்பர்கள் யாரும் சொல்லவில்லை என்று தானே சொன்னேன் .

      அதற்கு நான் வருத்த படவில்லை .

      ஆனால் காமிக்ஸ் காதலர்களுடன் காமிக்ஸ் வியாபாரிகளும் இருந்ததை பார்த்த போது சிறிது வருத்தப்பட்டேன்.

      அதுவும் அவர்களின் வியாபாரத்தை பெருக்க இதை சாட்சியாக எடுத்து கொள்வார்களே என்றுதான் வருத்தப்பட்டேன்

      Delete
    4. //ஆனால் காமிக்ஸ் காதலர்களுடன் காமிக்ஸ் வியாபாரிகளும் இருந்ததை பார்த்த போது சிறிது வருத்தப்பட்டேன்.//
      நண்பர்களே.,
      வியாபாரிகள் என்று குறிப்பிடுவதால் ஒன்றுக்கு மேற்ப்பட்டோர் என்ற அர்த்தம் வருகிறது. உண்மையான காமிக்ஸ் காதலர்கள் சங்டத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். நடந்ததை மறப்போம். நல்லதே நடக்க விரும்புவோம்.
      ஃப்ரீயா விடுங்க ஃப்ரண்ட்ஸ்.!

      Delete
  48. I havenot seen this post in the morning. However I went to the stall in the afternoon. I had a chance to meet Mr. Vijayan, and had a chat with him and also with Mr. Siva (the man with the Hat) for almost an Hour. It was a wonderful thing and very nice gesture from the Editor. I am meeting him for the first time, and the immediate feeling was that he is highly friendly and firmly grounded. He is very talkative person (in an interesting way) and one could see his passion beyond doing this as business. Also saw lot of couples, families and an very old couple...vising the shop and leaving with lot of happiness and satisfaction, along with few comics.

    A Special thanks to Mr. Vijayan and I never expected that he will talk for such a long time.

    ReplyDelete
  49. டியர் எடிட்டர் சர்ர்,
    King Special , " கர்ர்சனின் கடந்த கரலம்" ,மறுபதிப்பரன "நரயகர்ரவில் மரயரவி" என்பன கடகடவென விற்றுத்தீர்ந்தது போல எல்லர இதழும் விற்பனையாகும் பர்ருங்கள் சர்ர். இது உறுதி சர்ர்.
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  50. ரௌத்திரம் பழகு.:-
    ஒரு மசாலா படத்துக்கான கதைக்கரு போல இருந்தாலும் இனம்புரியா வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.
    நாகரீகமான கௌபாய் உலகின் மறுபக்கத்தை அப்பட்டமாய் தோலுரித்து காட்டும் கதைகளத்திற்க்கு ஒரு சபாஷ்.!
    சில இடங்கள் நெஞ்சை கனக்க வைத்ததும் உண்மை. சில! இடங்கள் முகத்தை சுளிக்க வைத்ததும் உண்மை.
    நிறைய இடங்களில் நாசூக்கான வசனங்கள் பாராட்ட வேண்டியவை.நேரடியான மொழிபெயர்ப்பை தவிர்த்து (அதாவது அர்த்தம்) நாசூக்காக மாற்றி இருப்பது பாராட்டத் தக்கதே.!
    பலூன்கள் நிறைய சந்தர்ப்பங்களில் அசியமான இடங்களில் பொருத்தப்பட்டு இருப்பதும் வரவேற்க தக்கதே.!
    மற்றபடிக்கு நல்ல விறுவிறுப்பு நிறைந்த கதையம்சம், சித்திரபாணியும் சூப்பராக உள்ளது. பக்கத்துக்கு பக்கம் கட்டங்கள் பொருத்தப்பட்டு இருக்கும் அழகும் சிறப்பே.!(குறிப்பாக பக்கம் 16 & 17 ).
    வன்முறை., வக்கிரம்., இலேசான ................. காட்சிகள் போன்றவை தூக்கலாக தெரிந்தாலும்., மூடி வைக்க மனமில்லாமல் ஒரே மூச்சில் படிக்க வைத்ததில் நிச்சயம் பவுன்சரின் வருகை மகிழ்ச்சியே.!!! படித்து முடித்த சில மணிநேரங்களிலேயே மறுபடியும் புரட்டிப் பார்க்க தோன்றியது ஆச்சரியம். சில கதைகளை படித்தவுடன் பரணுக்கு அனுப்பவே தோன்றும். ஆனால் பவுன்சர் திரும்ப திரும்ப படிக்க வைப்பார் போல் இருக்கிறது.
    அடுத்த பாகத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.!

    நல்வரவு பவுன்சர்.!!!!

    ReplyDelete
    Replies
    1. பலூன்கள் நிறைய சந்தர்ப்பங்களில் அசியமான இடங்களில் பொருத்தப்பட்டு இருப்பதும் வரவேற்க தக்கதே.!

      பலூன் சென்சார் வாழ்க

      Delete
  51. //பக்கத்துக்கு பக்கம் கட்டங்கள் பொருத்தப்பட்டு இருக்கும் அழகும் சிறப்பே.!(குறிப்பாக பக்கம் 16 & 17 ).//
    //வன்முறை., வக்கிரம்., இலேசான ................. காட்சிகள் போன்றவை தூக்கலாக தெரிந்தாலும்., மூடி வைக்க மனமில்லாமல் ஒரே மூச்சில் படிக்க வைத்ததில் நிச்சயம் பவுன்சரின் வருகை மகிழ்ச்சியே.!!!//
    //சில இடங்கள் நெஞ்சை கனக்க வைத்ததும் உண்மை. சில! இடங்கள் முகத்தை சுளிக்க வைத்ததும் உண்மை//
    Same feel...+111111

    ReplyDelete
  52. Happy to hear the success story of our comics in book fair, hope we get a complete sell out and you are forced to publish another 40 titles this year.

    Kutties Special

    ReplyDelete
  53. ரௌத்திரம் பழகு (BOUNCER): வெவ்வேறு சூழல்களில் மனித மனதின் எண்ண ஓட்டத்தை துல்லியமாக தோலுரித்து காட்டும் கதையோட்டம். சித்திரங்களும் நன்றாக உள்ளது...வெகு வேகமாக செல்லும் கதையோடடம் காரணமாக படித்து முடிக்கும் வரை புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை..
    4.5/5
    0.5 is reduced due to violence

    ReplyDelete
  54. விஜயன் சார், நெகிழ்வான நினைவுகள், மனதை என்னமோ செய்கிறது! இந்த விழாவை மிஸ் செய்து விட்டேன் என்பது உண்மை! இதே போல் மேலும் பல விழாகள் வரும் நாம் இன்னும் மேலே செல்லுவோம் நமது நண்பர்களுடன் என்ற நம்பிக்கையுடன் நமது அடுத்த விழாவிற்கு ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறேன்.

    சன் டிவி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொடுத்த நமது காமிக்ஸ் நம்பர் விஸ்வா மற்றும் அனைவருக்கும் நன்றிகள், உங்களின் இந்த சேவை என்றும் பாராடுதலுக்கு உரியது.

    ReplyDelete
  55. லயன்கரமிக்ஸ் ஷ்பெஷல்

    ReplyDelete
  56. நம் எடிட்டர் நமக்கு எல்லரம் சந்தேகமலில்லரமல் Fariry Queen தரன். நம் எல்லோரையும் கையைப் பிடித்து கரமிக்ஸ் எனும் கடலில் மூழ்க அழைத்து செல்கிறர்ர் எனும் வகையில்.
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  57. டியர் எடிட்டர் சர்ர்,
    லயன் கர்ர்டூன் ஸ்பெஷல்

    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  58. // So 2015-ன் போக்கினில் ஒரு அட்டகாசமான கார்ட்டூன் ஸ்பெஷல் இதழினைத் தயாரிப்பதென்ற தீர்மானம் நேற்றே என் தலைக்குள் உருவெடுத்து விட்டது ! இதன் கதைத் தேர்வுகள் ; பணி மேற்பார்வைகள் என முக்கிய வேலைகள் நம் ஜூனியர் எடிட்டரின் கைவண்ணமாக இருக்கப் போகிறது என்பதும் அவனே இப்போதைக்கு அறிந்திருக்காத் தகவல் ! விலை ; கதைகள் ; சைஸ் போன்ற basic சமாச்சாரங்கள் பற்றிய திட்டமிடலை நேற்றைக்கு வீட்டுக்குச் செல்லும் வழியிலேயே துவங்கி விட்டேன் ; படைப்பாளிகளிடம் இது தொடர்பாய் பேசிட மட்டும் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டு மார்ச் இதழ்களில் இதற்கான விளம்பரம் வெளியாகச் செய்வேன் ! //

    Good News for 2015! :)

    ReplyDelete
  59. // So 2015-ன் போக்கினில் ஒரு அட்டகாசமான கார்ட்டூன் ஸ்பெஷல் இதழினைத் தயாரிப்பதென்ற தீர்மானம் நேற்றே என் தலைக்குள் உருவெடுத்து விட்டது ! இதன் கதைத் தேர்வுகள் ; பணி மேற்பார்வைகள் என முக்கிய வேலைகள் நம் ஜூனியர் எடிட்டரின் கைவண்ணமாக இருக்கப் போகிறது என்பதும் அவனே இப்போதைக்கு அறிந்திருக்காத் தகவல் ! விலை ; கதைகள் ; சைஸ் போன்ற basic சமாச்சாரங்கள் பற்றிய திட்டமிடலை நேற்றைக்கு வீட்டுக்குச் செல்லும் வழியிலேயே துவங்கி விட்டேன் ; படைப்பாளிகளிடம் இது தொடர்பாய் பேசிட மட்டும் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டு மார்ச் இதழ்களில் இதற்கான விளம்பரம் வெளியாகச் செய்வேன் ! //

    Dear Vijayan Sir,

    கார்ட்டூன் சிற(ரி)ப்பிதழுக்கு மனமார்ந்த வரவேற்புகள் . குட்டிஸ்களுக்காக புத்தகம் போடும் பொழுது அவர்களுக்கான வாங்கும் சக்தியை கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும். மெகா விலையில் ஒரு சிறப்பிதழோடு ஒரு அரை dozen 60-100 விலை உள்ள இதழ்கள் வெளியிடுவது நலம் பயக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  60. //எடிட்டர் சார் புது புக்ஸ் அனைத்தும் ஆன்லைனில் வாங்க அப்டேட் பண்ணுங்க சார்.//
    +2

    ReplyDelete
  61. // அஞ்சல்துறையில் பணியாற்றும் நண்பர் என் படத்தோடு கூடியதொரு நிஜ தபால்தலையை அச்சிட்டே கொண்டு வந்திருந்தார் !!! இந்திய தபால்துறை சமீபமாய் இது போன்றதொரு திட்டத்தைத் துவக்கியிருப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன் தான் ; ஆனால் நானே அதன் ஒரு முகமாய் மாறிடும் ஒரு நாள் புலரும் என்றெல்லாம் நான் கனவு காணக் கூடத் தயாராக இருந்ததில்லை !//
    நிஜமாய் மிக பெரிய பரிசு இது,விஜயன்,சார்! நண்பருக்கு நன்றிகள்.
    //"ஸ்பைடர் வரலையா ?" என்ற கேள்வி ஒரு தொடர் ரீங்காரமாகிட - போஸ்டரில் இருந்து நம் கூர்மண்டையன் எகத்தாளமாய்ச் சிரிப்பது என்னைப் பார்த்தே என்பது போல் பட்டது ! "காலங்கள் மாறினாலும்..சில காதல்கள் மாறாது !" என்ற குற்றச் சக்கரவர்த்தியின் மைண்ட்வாய்ஸ் எனக்குக் கேட்காத குறை தான் //
    ஸ்பைடர் இருந்திருந்தால் இன்னும் கலக்கலாக இருந்திருக்கும் தான்! குற்ற சக்கரவர்த்தி மிஸ் ஆனது வருத்தமே!

    //பௌன்சரும் அனைவரது கண்ணையும் பறித்திட - விற்பனை முன்னணியில் இந்த ஒற்றக்கையரும் சேர்த்தி ! "என் பெயர் லார்கோ " இன்னொரு hotseller என்றால் - குட்டீஸ் மத்தியில் லக்கி லூக் வழக்கம் போல் popular !// பௌன்சர் வரவேற்க பட்டது அழகான துவக்கம்! "என் பெயர் லார்கோ"
    நாங்கள் வாங்க முடிவது எப்போது,விஜயன் சார்?

    // ஒவ்வொரு நாளும் . ஒவ்வொரு விதமான காமிக்ஸ் ரசனையினாலும், ஒவ்வொரு அன்பின் வெளிப்பாட்டின் மூலமும் வாமண அவதாரம் எடுத்து வரும் இந்த வாசகக் குடும்பத்தில் ஒரு சிறு அங்கமாய் இருப்பது என் ஆயுளுக்கொரு அர்த்தம் தரும் தருணம் ! அனைத்திற்கும் நன்றிகள் நண்பர்களே !! //
    அனைத்து காமிக்ஸ் காதலர்களின் இதயத்தின் வார்த்தைகளும் இவையே! காமிக்ஸ் குடும்பத்தில் நானும் ஒருவன் என்பதே என் பெருமை!

    ReplyDelete
  62. Some suggestions for kids comics:

    1.Lion Comedy special

    2.Lion kutties special

    3.Lion chutties special

    4.lionin Comedy kadambam

    Caption:

    1.மனதளவில் குழந்தையாக உள்ள அனைவருக்கும் .

    2.வார்னிங்:
    உங்கள் வயிறு புண்ணாவது நிச்சயம்.

    ReplyDelete
  63. இன்னாபா இது துரதிர்ஷ்டம் பிடிச்ச வைரக்கல் கதைய தானே .....
    வேற ஆங்கிளில் சொல்லி இருக்காங்க ......
    நம்ம கதைய உல்டா பண்ணிகிராங்கோ.......

    டௌசெர் (பௌன்செர்) கத ஒகே தான்

    ReplyDelete
    Replies
    1. அபி செல்லம் ...உங்க கருத்த எடுத்து உடுங்கோ .....

      Delete
    2. அட !!!! மந்திரியார்க்கு ரெண்டு பார்சலும் வந்துடுச்சா ???...பலே ...பலே ....

      (அடுத்த வருஷம் அக்டோபரிலேயே சந்தா கட்டி புடுங்க....)

      பவுன்சர சக்கர பொங்கல் துன்னுகினே படிப்பேன் ...இப்ப பட்ச்சா எங்க ஆத்தா வையும் ....

      Delete
  64. Dear Editor

    Nice post

    Sham1881@erode

    ReplyDelete
  65. நேற்று மதியம் நான் வந்த போது , எடிட்டர் அங்கு இல்லை. இந்த ஆண்டும் அவரை பார்க்க முடியவில்லை. ஸ்டால் நல்ல கூட்டமாக இருந்தது.

    ReplyDelete
  66. பிரதிபலன் எதிர்பாராமல் செய்யும் உதவியே சிறந்தது.

    தெரு தெருவாய் கூட்டுவது பொதுநலத் தொண்டு,
    அதை ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடிப்பதில் சுயநலம் உண்டு.

    மனதில் துணிவில்லாத ஒருவரால் பொதுவாக கூறப்பட்ட குற்றச்சாட்டால்
    படத்தில் உள்ள அனைவரையும் சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்க தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. நான் எப்போதும் முகமூடி போட்டு இந்த தளத்தில் வருவதில்லை .

      என் தொடர்பு எண்ணையும் சரியான முகவரியையும் இங்கே இடும் துணிவு எனக்கு உண்டு ,தங்களுக்கு எப்படியோ ........;) ;) :P :P

      Delete
    2. S.SundarRaj,
      83, மாரியம்மன் கோவில் முதல் தெரு, காந்தி மார்க்கெட் அருகில்,
      வரகனேரி, திருச்சி.

      செல்போன் எண் இந்த தளத்தில் வேண்டாம். தாங்கள் விரும்பினால் குடும்பத்துடன் எங்கள் இல்லத்துக்கு விருந்துக்கு வரும்போதோ, அல்லது ஏதாவது புத்தக திருவிழாவில் சந்திக்கும்போதோ நேரில் வழங்க தயாராக உள்ளேன்.

      நீங்கள் முகமூடி போட்டுக் கொண்டு இங்கே வருவதாக நான் சொல்லவில்லை. நீங்கள் குற்றம் சாட்டிய நபரை நேரடியாக கூறி இருந்தால், மற்றவர்கள் மீது சந்தேகம் வராதே என்ற எண்ணத்தில்தான்.

      Delete
    3. சபாஷ்.. சரியான போட்டி!

      தயவு செய்து யாரும் க்ரெடிட் கார்ட், பின் நம்பரெல்லாம் போட்டுவிடாதீர்கள்...

      Delete
    4. // நீங்கள் முகமூடி போட்டுக் கொண்டு இங்கே வருவதாக நான் சொல்லவில்லை. நீங்கள் குற்றம் சாட்டிய நபரை நேரடியாக கூறி இருந்தால், மற்றவர்கள் மீது சந்தேகம் வராதே என்ற எண்ணத்தில்தான். //

      +1

      இன்னொரு முக்கியமான விஷயம்... புத்தக வியாபாரி அல்லது வியாபாரி என்ற யதார்த்தமான நல்ல வார்த்தையை, தனக்குப் பிடிக்காதவர்களை குறிப்பிட பயன்படுத்துவது நாகரிகமாகத் தோன்றவில்லை. புத்தக விற்பனையாளர் யாராவது கமெண்ட்களைப் படிக்க நேர்ந்தால் சங்கடமாகதான் ஆகும். புறம்பேசுவது என வந்துவிட்டால் அதை ஸ்பீக்கர் போட்டு நடுத்தெருவில்தான் பேசவேண்டுமா?

      Delete
    5. நண்பர் ரமேஷ்


      என் முதுகை நானே சொறிஞ்சிக்கிறேனே.......

      Delete
  67. பௌன்சர்.........
    ரியலி கிரேட். மெய்மறக்கச் செய்யும் இதழ். தொடர்ச்சியாக 3 தடவை படித்துவிட்டேன், பிரமிப்பு விலகவில்லை. மேற்கத்தியர்களின் உண்மை முகத்தினை தெளிவாக காட்டும் வகையில் உள்ளது.
    சிறந்த கதைகள் அல்ப ஆயுசில் (பாகங்களின் எண்ணிக்கை ) முடிந்து விடுவதுதான் கொடுமை.
    இதுபோன்ற நல்ல கதைகள் ஆசிரியரின் தேடுதல் வேட்டையில் இருக்கும் என்று நினைக்கிறன். இருந்தால் நல்லது.

    காமெடி தனி சந்தா...........
    கால தாமதமாக எடுக்கப்பட்ட முடிவானாலும், ஆராதிக்கப்பட வேண்டிய முடிவு.

    மறுபதிப்புகள்..........
    அனைத்து கதைகளும் அருமை.
    இப்பொழுது உள்ள எழுத்து நடைக்கும், பழைய எழுத்து நடைக்கும் உள்ள வேறுபாடு சிறு சலிப்பை உண்டாக்குகிறது.
    அட்டைபடம் வெளிநாட்டுகாரரின் கைவண்ணம்தான் கடைசி இடத்தை பிடிக்கிறது.
    எனக்கு உள்ளுர் ஓவியரின் படைப்பே சிறந்ததாக தெரிகிறது.

    ReplyDelete
  68. மதிய வணக்கங்கள் நண்பர்களே,

    புது வரவு 'பௌன்சர்' ,மும்மூர்த்திகளின் மறுபிரவேசகள் என பிரம்மாண்டமான புத்தக கண்காட்சிக்கு சென்னைக்கு நண்பர்களுடன் சென்ற ஆட்டத்தின் துவக்கமே அட்டகாசம், நண்பர் கிங் விஸ்வாவின் பெரும் முயற்சியில், சன் நியூஸ்ல் 30 நிமிடம் ஒளிபரப்பும் நிகழ்ச்சி ஏற்பாடுயுடன், 'பௌன்சர்' புத்தக வெளியீடு சன் டிவி அரங்கிலேயே, புகழ்பெற்ற ஓவியர் திரு மணியன் செல்வன் முண்ணிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.வெளியீடும் விழாவை நண்பர்களுடன் வாசகர்கள் பகுதியில் அமர்ந்ந்து பார்க்கும் வாய்ப்பும், சன்டிவி அரங்கிற்கு செல்லும் வாய்ப்பும் நண்பர் 'கிங் விஸ்வா' மூலமாக கிடைத்தது.

    அந்த நிகழ்ச்சி இன்னும் சில நிமிடங்களில் சன் நியூஸ்-ல் (3:00 to 3:30)ஒளிபரப்பாகும்.
    அதை ஆன்லைனில் பார்க்க.... இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. 700 பதிப்பாளர்களுக்கு இடியில் ஒரேயொரு கிரீடம் வைத்த சிங்கம். இந்த சிங்கம் காட்டுக்கு ராஜாவா இல்லாவிட்டலும்... நிச்சயம் காமிக்ஸ்க்கு ராஜாதான் என்பதில் சந்தேகமேயில்லை.
      உலக தமிழ் மேடையில் காமிக்ஸை வெளிச்சம் போட்டு காட்டிய சன் நியுசுக்கும், மேடையேற்றி நன்பர் 'கிங் விஸ்வா' விற்கும் இங்கு அனைத்து நண்பர்களின் சார்பாக நன்றிகள் !
      எழுத்துக்களால் காட்சிகளை வளர்த்து, கற்பனையில் சிலாகிப்பைதைவிட, கண் முன்னே காட்சிகளை விவரிக்கும் கிராபிக்ஸ் (காமிக்ஸ்) நாவல் பற்றிய ஆழமான பதிவு! இதன் மறு ஒளிபரப்பு இரவு 11:00 to 11:30 க்கு சன் நியூஸ்-ல்.

      Delete
    2. எழுத்து பிழை: 700 பதிப்பாளர்களுக்கு இடையில்...

      Delete
    3. மாயாவிஜி ! உங்களை ,விஜயை ,டெக்ஸ் விஜயராகவன்ஜி இவர்களை தெரியும் ..மற்றவர்கள் யாரென்று வரிசை படி எழுதுங்களேன் ....

      Delete
    4. வாசகர்கள் பகுதியில் அமர்ந்திருந்தவர்களின் பெயர் விவரங்கள் பார்க்க...இங்கே'கிளிக்'
      உங்களை திருவிழாவில் எதிபார்த்தேன், செல்வம் அபிராமி...வந்தீர்களா...? உங்களை சந்திக்க முடியாதது வருத்தமே...!

      Delete
    5. மாயாவிஜி !!! நன்றிகள் பல ......மகளின் விருப்பப்படி (கட்டளைப்படி அப்படினு உண்மைய எழுதி இருக்கனுமோ ? )மகளுடன் சென்னை புக்பேர் -க்கு பொங்கல் விடுமுறையில் செல்ல உத்தேசம் ......

      Delete
    6. வருகின்ற சனிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமை( 17&18 ) இரு நாட்களும் எடிட்டர் சென்னை புத்தக திருவிழாவில் இருப்பார்...அவரை சந்திக்க மீண்டும் ஒரு வாய்ப்பு செவ்வம் அபிராமி,பிற நண்பர்களும் அதற்கேற்ப்ப திட்டமிட்டுக் கொள்ளலாம்.

      புகைபடத்தில் சிறு பெயர் மாற்றம் புதியபடம் பார்க்க....இங்கே'கிளிக்'

      Delete
    7. //வருகின்ற சனிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமை( 17&18 ) இரு நாட்களும் எடிட்டர் சென்னை புத்தக திருவிழாவில் இருப்பார்..//

      வாவ் !!! அற்புதமான தகவல் மாயாவிஜி !!!!!....பயண திட்டத்தை இதற்கு தகுந்தவாறு மாற்றி கொள்வேன் ......மறுபடியும் நன்றிகள் பல ....

      Delete
    8. வேதாள மாயாத்மா.!!
      நானும் புக்குபேருக்கு சென்னைக்கு வாரேன், என்னையும் கூட்டீட்டு போங்கன்னு எவ்ளோ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுணேன்.
      நீங்க.,ஈரோடு விஜய். டெக்ஸ் விஜய் , போ.கு.த.பரணி, ரம்மி அப்புறம் யுவா கண்ணன் நம்ம சுசி., சம்பத்து எல்லோரும் கூடி குசுகுசுன்னு பேசி முடிவெடுத்து , சின்னப் பசங்கள எல்லாம் எச்சுபிசன் உள்ளுக்க வுடமாட்டாங்கன்னு சொல்லி என்னைய ஏமாத்தி ஊருலயே வுட்டுட்டு போயிட்டீங்க.!
      அது கூட பரவால்ல, இப்புடி போட்டோவா போட்டு மேலமேல என்னைய கடுப்பேத்துறீங்களே.!?
      இது உங்களுக்கே ஞாயமாபடுதா வேதாளரே.!!!?,

      Delete
    9. நல்லவேளை எங்க ஊருல சனநியூஸ் சேனல் தெரியாது.!

      Delete
    10. @ கிட் ஆர்ட்டின் KANNAN

      அடபாவமே...நா சொல்லவேண்டிய டையலாகை நீங்க சொல்றது செம, எவ்வளவு தபா கெஞ்சி, கெஞ்சி கூப்டேன். யுத்தம் உண்டு எதிரி இல்லை....எதிர் வீட்டில் எதிரிகள்....காவல் கழுகு....காலன் தீர்த்தகணக்கு...
      சூ மந்திரகாளி....மந்திரியும் நானே மன்னவனும் நானே...ன்னு எவ்வளவு டையலாக் சொல்லி "ஐயம் பிஸி" ன்னு சொல்லிட்டு இப்படி தோசையை திருப்பிபோட்டிங்களே....ம்...!

      அப்பறம், உங்களுக்கு மட்டுமில்ல கண்ணன் சேலம்மாவட்டம் புறவும் சன் நியூஸ் நகி.

      ஓகே முக்கியமான ஒரு அறிவிப்பை இப்பவே அறிவிச்சிடுறேன்...
      'மின்னும் மரணம்' பட துவக்கவிழா சம்மந்தமான ஒரு ப்ளான் இருக்கு, அது என்னன்னா...கொஞ்சம் பொறுங்க 'கிளிக்' போடுறேன்..!

      Delete
  69. சன் டிவி நிகழ்ச்சி இனிமையாக இருந்தது ......

    மாபெரும் ஓவியர் ம.செ ...நிகழ்ச்சியில் கலந்து புத்தகத்தை வெளியிட்டது பலரின் கவனத்தை

    ஈர்க்க கூடியது .....எடிட்டரின் முயற்சிகளை ம.செ அவர்கள் பாராட்டியும் வாழ்த்தியும் பேசிய போது நெஞ்சில் பெருமிதம் .......

    எடிட்டர் ,விஷ்வா அவர்களின் பேச்சுக்கள் ...தெளிவு ....கச்சிதம் .....

    அருமை ....

    ReplyDelete
  70. கார்ட்டூன் ஸ்பெஷல் -க்கு "லயனின் கார்ட்டூன் கலாட்டா " என வைக்கலாம் ....
    (அல்லது விழியின் விளிம்பில் உள்ள கண்ணீர் துளியை துடைத்து விட்டு ...........
    JE SUIS CARTOON ......எனவும் வைக்கலாம் ....)

    ReplyDelete
  71. டியர் எடிட்டர் சர்ர்,
    உங்கள் பேட்டியை you tube ல் பதிவேற்றம் செய்யுங்கள் சர்ர். அயல்நாட்டு நண்பர்கள் ஆவலரக உள்ளோம். சஸ்பென்ஷ் தரள முடியவில்லை.

    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  72. ---- L I O N J U N I O R S P E C I A L -------

    ReplyDelete
    Replies
    1. முதல்ல இப்படி பேர் வைப்போம். அப்புறம் Junior Lion ன்னு தனிய ஒரு புத்தகமே வர வைப்போம் :)

      Delete
    2. //---- L I O N J U N I O R S P E C I A L -------///

      தூள்!

      Delete

  73. "கிட்ஸ் ஹைலைட் ஸ்பெஷல்"

    ReplyDelete
  74. -- Lion Cartoon Special --
    -- Non-stop Cartoon Special --
    -- Lion Chutties Special --

    ReplyDelete
  75. Gud evening frnds....
    Tonight @11pm ---sun news channel (sun news channel live telecast link)
    http://www.sunnetwork.in/tv-channel-details.aspx?Channelid=10&channelname=SUN%20NEWS
    and in youtube (sun news channel live telecast link)
    https://www.youtube.com/watch?v=N38WMdHlutE

    ReplyDelete
    Replies
    1. Thank you @Sathiya
      Watching it right now, cool show with participation from everybody.

      Delete
    2. Host spoke clearly in very good tamil.
      - Editor spoke fluently
      - King Viswa gave a good history
      - Maniyan spoke about his experience and his view
      - @Jsc John and @Mayavi Siva asked some good questions.

      In total very good program far better then our previous tv appearances.

      Delete
  76. ரௌத்திரம் பழகு.-
    கொஞ்ச நாளைக்கு முன்னால "எமனின் திசை மேற்கு " அப்படீன்னு ஒரு பசுமாட்டு பயல் (கௌபாய்) கதை வந்துச்சுங்க.!
    அதுல பாத்தீங்கன்னா நேட் கோல்டன்னு ஒரு ஈரோ வருவாப்புல.! அந்த தம்பிக்கு ஒரு கை இருக்காதுங்க.! அப்புறம் ஒரு ஈரோயினு வருமுங்க.! அந்த புள்ளயோட பேரு மறந்து போச்சுதுங்க.! அப்புறமா வழக்கம்போல ஈரோவும் ஈரோயினியும் டாவு கட்டுவாங்க.! அங்கன ஒரு ட்விஸ்ட்டு வருமுங்க.!
    அதாவது ஈரோ வந்து ஈரோயினியோட சித்தாப்பாரு மகன்னு தெரியவருமுங்க.! அதுக்கு நடுவுல ஈரோ சொத்த அமுக்கத்தான் ஈரோயினியோட சித்தப்பாரு மகனா வேசம் கட்டுவாப்புல. ஆனா நம்ம பேசப்போற சப்ஜெக்டுக்கு அது சம்மந்தமில்லாத மேட்டரா இருக்குமுங்க.! அதனால அந்த மேட்டர விட்ருவோமுங்க.!
    ஈரோ தன்னோட சித்தப்பாரு மகனா இருந்ததால ஈரோயினு அந்த பயல கட்டிக்காம., தம்பி இது தப்புப்பா, மொறை இல்லீடாப்பா கண்ணு.! நாமோ ரெண்டுவேரும் அக்காதம்பிங்கோ, கன்னாலம் கின்னாலமெல்லாம் கட்டிக்க கூடாது சாமி அப்பிடீன்னு சொல்லி அந்த பயல பொடனில ரெண்டு வெச்சி வெரட்டி உட்ருமுங்க.!
    இந்த கதை நடந்தது அம்பேரிக்காவுலிங்க.! இத நல்லா கெவனத்துல வெச்சீட்டு அடுத்தத படிங்க.!!!
    இப்ப வந்துருக்குற ரவுத்திரம் பழகு அப்டீங்குற கதையிலயும் ஈரோவுக்கு ஒரு கை இல்லீங்கோ.! ஆனா நமக்கு அது தேவையில்லீங்கோ.! இதுவுமே ஒரு பசுமாட்டு பயல் கதைதானுங்கோ.!
    இந்த கதையில வார சேத்து ங்குற. சின்னப்பய டபராங்குற (கதையில டெபோரான்னு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இருக்கு.எனக்கு டபராதான் புடிச்சிருக்கு.) டியூசன் டீச்சர லவ்வு பண்றாங்க.! அந்த புள்ளயும் ஈக்கோலா லவ்வு பண்ணுதுங்க.! க்ளிமாக்ஸூல டபரா.,சேத்துப் பயலோட சித்தப்பாரு மகங்குற விசயம் தெரிஞ்சாலும் ஒன்னுமே பிரச்சினை இல்லைன்னு ரெண்டும் சோடி போட்டு திரியுதுங்க.! வுன்னோரு சித்தப்பாரு பவுன்சரு சேரி போயி கட்டிக்கோடா மவனேன்னு சொல்லிப் போட்ராருங்க.!!
    இந்த கதையும் அதே அம்பேரிக்காவுல தானுங்க நடக்குது.!!
    இப்ப என்ற டவுட்டு என்னான்னு கேட்டீங்கன்னா, அந்த கதையில மொறை தவறுனதா சொல்லப்படுற காதலு இந்த கதையில மொறைய பத்தி கவல பட்ட மாதிரி தெரிய்லியே.!!!
    இந்த வெளிநாட்டுகாரனுவள புரிஞ்சிக்கவே முடியலிங்களே பாஸூ.!

    ReplyDelete
    Replies
    1. @ கண்ணன் ரவி

      :)

      இவ்ளோ... பெரிசா டைப் பண்ண மட்டும் உங்களுக்கு நேரம் கிடைக்குது... CBFக்கு வரமுடியலியோ?

      Delete
  77. அனுப்புதல் :-
    கருந்தேள் கண்ணாயிரம்,
    அ.கொ.தீ.கழகம்.,
    மேச்சேரி கிளை.
    பெறுதல்.:-
    எடிட்டர் மற்றும் ஜூ.எடிட்டர் .,
    சர்வதேச காமிக்ஸ் சங்கம்,
    சிவகாசி.
    பொருள்.-
    லய்ன் ப்ளாக்கின் 200ஆவது சிறப்பு பதிவில்., முத்துவின் 350ஆவது சிறப்பிதழ் பற்றி அறிவிக்க வேண்டி.
    ஐயா,
    தங்களுடைய லயன்முத்து ப்ளாக்கில் அடுத்த பதிவானது 200ஆவது சிறப்பு பதிவென்று., எங்களுடைய அ.கொ.தீ.க.வின் மூத்த உறுப்பினரும் கொடுங்கோலருமான நாகர்கோவிலார் அலைபேசி வழி தகவல் அனுப்பினார்.
    இத்தகைய சிறப்பான தருணத்தில் வரஇருக்கும் முத்து காமிக்ஸ் 350ஆவது இதழை ஒரு சிறப்பிதழாக அறிவித்து டூ இன் ஒன் சிறப்பு பதிவாக இடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
    இதனை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் நீங்கள் எங்கே சென்றாலும் மாயாவி சிவா மூலம் ஆங்காங்கே ஒரு "இங்கே க்ளிக் " போட்டு டார்ச்சர் செய்வோம்.
    அதற்க்கும் நீங்கள் அசையவில்லை என்றால் செல்வம் அபிராமி மூலமாக., உங்களை அதிகாலை மூன்று மணிக்கு எழுப்பி கொஞ்சம் கம்பராமாயணம்.,கொஞ்சம் ஷேக்ஸ்பியர், புறநானூறு மற்றும் வில்லியம் வேர்ட்ஸ்வேர்த், இவற்றோடு ஆர்க்மிடீஸ், ஐசக் நியூட்டன் எல்லாம் சேர்த்து ஃபைனல் டச்சாக ரெண்டு திருக்குறளும் சொல்ல வைத்து விதவிதமாக டார்ச்சர் செய்வோம் என்று கழகத்தின் சார்பாக எச்சரிக்கிறோம்.

    இங்ஙனம்.,
    கருந்தேள் கண்ணாயிரம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா!ஹா !.......கண்ணன் !.....மந்திரியார் என்கிட்ட புடிச்சு குடுத்துடுவேன் அப்டின்னு நண்பர் பரணியை மிரட்டராறு .....

      நீங்க எடிட்டரை ,ஜூனியரை என்ன வச்சு மிரட்டரீங்க .......

      *****ஒரு பெரிய பூச்சாண்டியா ****மாத்திட்டீங்களே ...:-)*********:-)

      Delete
    2. முதல் டார்ச்சர் பார்க்க..... இங்கே'கிளிக்'

      Delete
    3. :D

      எடிட்டரை பயமுறுத்துவோர் லிஸ்ட்டில் நம் போராட்டக்குழுத் தலைவரோடு இப்போது மாயாவி சிவாவும், செல்வம் அபிராமியும்! நடக்கட்டும்! :)

      Delete
  78. டியர் எடிட்டர் சர்ர்,
    புத்தகத்தை வெளியிட்ட ஓவியர் மணியம் செல்வன் சர்ரின் ஓவிய விளக்கங்களும், நம் எடிட்டர் சர்ரின் பதில்களும், எல்லரவற்றிக்கும் மகுடம் வைத்தது போல் நம் கிங் விஸ்வர சர்ரின் விளக்கங்களும் சேர்ந்து புத்தகம் எப்போது நம் கைக்கு வரும் என்று ஏங்க வைக்கின்றன சர்ர்.
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  79. டியர் எடிட்டர் சர்ர்.,
    கொஞ்ச நேரமே வந்தரலும் , சன் நியூஸில் புத்தகம் -அதுவும் கிர்ரபிக்ஸ் நரவல் வெளியிட நிறைய தில் வேணும் சர்ர். அது உங்களிடம் நிறைய உண்டு சர்ர். நீங்கள் சொன்னது சரி. குண்டு சட்டியில் எத்தனை கரலம்தரன் குதிரை ஓட்டுவது? நம்வரசகர்களும் கரல ஓட்டத்தை புரிந்து கொண்டு , கொஞ்சம் கொஞ்சமாக மரறரதிருக்க வேண்டரமர சர்ர்?

    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
    Replies
    1. பவுன்சர் போல சீரிஸ் தமிழில் வெளியிட எடிட்டர் -க்கு உண்மையில் தில் உள்ளது ..

      ஆனால் சன் டிவி -யில் வெளியிட காமிக்ஸ் -ஐ தில் (ஹிந்தி )என கொண்ட கிங் விஷ்வா போன்ற தில் தோழர்கள் தேவை .......

      king viswa is astoundingly well connected and he contributes to our comics selflessly

      Hats off to vishwa ....!!!!

      We have to remember ......

      CONTENT IS KING ....PROMOTION IS QUEEN .......

      ****BOB MAYER *******

      Delete
  80. Saturday i met some of the friends in bookfair, editor really down to earth person.
    I think v will have suski vishki in the comedy spl.

    ReplyDelete
    Replies
    1. யார் இந்த மஞ்சள் சட்டை மாவீரன் ? பார்க்க ..... இங்கே'கிளிக்'

      Delete
    2. @ mayavi. siva...அவர் யாருன்னு பாக்க நெனச்சி 'அங்கே கிளிக்' பண்ணினா...கடைசி panel-ல வச்சிருக்கீங்க பாருங்க ஒரு ட்விஸ்ட்...என்னோட லாப்டாப்-ஐ தலைகீழா திருப்பித்தான் பாக்க முடிஞ்சது. more 'இங்கே க்ளிக்' ப்ளீஸ்.

      Delete
  81. நண்பர்கள் ,
    https://www.youtube.com/watch?v=N38WMdHlutE
    இந்த you tube லிங்கில் சென்று நம் எடிட்டரின் புத்தக வெளியீட்டை கண்டுகளிக்கலரம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே பிரபனந்த் கொடுத்த லிங்க் சன் நியூஸ் live , அந்த பகுதி இன்னும் you tube ல் அப்டேட் செய்யப்படலை...! குழம்பவேண்டாம்...!!

      Delete
  82. முதலில் ஒரு நாள் பயணமாகவும் கடைசி நிமிடத்தில் 2வது நாளுக்கும் நீட்டிக்கப்பட்ட எனது சென்னை புத்தக விழா பயணம் இனிய அனுபவமாக அமைந்தது நண்பர்களே. 60மணி நேர பரோல் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் பார்த்துக்கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. சென்னை மக்கள் புத்தக விழாவை கொண்டாடுவார்கள் என்பதை நேரிலே பார்த்து தெரிந்து கொண்டேன் . முகநூல் மற்றும் பிளாக்ல பெயர்களாக மட்டுமே தெரிந்த பல நண்பர்களை நேரில் பார்த்து பேச முடிந்ததும் , முடிந்த அளவு அனைவருடனும் போட்டோ எடுத்துக்கொண்டது மறக்க இயலா இனிய தருணங்கள். ஆசிரியர் , ஜூனியர் எடிட்டர் மற்றும் நண்பர்கள் உடன் இரு நாட்களும் உற்சாகமா ஓடிப்போனது . இரு நாட்களும் ஏராளமான நண்பர்கள் வந்து சந்தித்து சென்ற வண்ணம் இருந்தனர் . அத்தனை பேரின் பெயர்களையும் டைப் அடிக்கவே ஒரு முழு நாள் தேவைப்படும் . ஆசிரியரின் முந்தைய ஓவியர்கள் மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை சந்திக்க முடிந்தது .ஆசிரியரின் பல்வேறு வகையான சுவையான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் . சில பல கிராபிக் நாவல்களுக்கான தீம் அவர் வசமே ஏராளமாக உள்ளது .தலைநகரம் சத்தியமாக விழாநகரம் .

    ReplyDelete
  83. டகடும் டகடும் டகடும் ஸ்பெஷல் :-) எப்படி!

    ReplyDelete
  84. சிவா ஜி சும்மா துவம்சம் பண்றீங்க ...வசனங்கள் அனைத்தும் கலக்கல்...அனைத்து புகைப்படங்களும் பதிவேற்றி லிங்க் கொடுத்தால் நன்றாக இருக்குமே..

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் சுசூபி...கிருஷ்ணா....நம்ம குரு ஈரோடு ஸ்டாலின் போடுவாரு பாருங்க, சும்மா பட்டையை கிளப்பும் ! அநேகமா சேலம் டெக்ஸ்ம்,அவரும் சேர்ந்து 'சூப்பர் சென்னை' ன்னு ஒரு பதிவுவை ஸ்டாலின் ப்ளாக்ல போடுவாருன்னு நினைக்கிறேன்...!

      Delete
  85. சிறுவர்கள் கனவுப்புத்தகம்
    Kids Dream Special
    Kids Galatta Special
    jee boomba special (Just to catch kids attn)

    ReplyDelete
  86. சன் டிவி ல் அசத்திய அசத்த காரணமாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  87. அன்புள்ள ஆசிரியர் ஐயா அவர்களுக்கு அன்புடன் இல்லை வேண்டுதலுடன் இல்லை தாழ்மையுடன் இல்லை இறைஞ்சி கோரிக்கை விடுக்ககிறேன்
    இரவு வேளைகலில் என்னை "கடலில் துாங்கிய பூதம்" மிகவும் துன்புறுத்துகின்றது எனவே காரிகனை ரீ பிரிண்ட் செய்து எனது பயத்தை போக்குங்களேன்!!!!!!!

    ReplyDelete
  88. இன்னும் CBF தந்த சந்தோச அனுபவங்களிலிருந்து மீளவில்லை நான்! வீடு, அலுவலக டார்ச்சர்கள் ஏதுமின்றி இரண்டு முழு இரவு-பகல்கள் காமிக்ஸ்-காமிக்ஸ்-காமிக்ஸ் மட்டுமே ஆட்கொண்டிருந்த அந்தத் தருணங்கள் மனதைவிட்டு அகல, இன்னும் பல யுகங்கள் தேவை!

    நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கே வந்திருந்து தங்கள் அன்பைத் தெரிவித்த நண்பர்களுக்கும், எந்தவித ஈகோவும் இன்றி நமது ஸ்டாலில் என்னை/எங்களைத் தேடிவந்து அறிமுகம் செய்து கொண்ட நண்பர்களுக்கும் நேசத்தால் கடன்பட்டுள்ளோம்!
    சந்திக்க இயலாமல் போன நண்பர்களையும் அடுத்தமுறை (ஏப்ரல்?) சந்தித்திட உறுதிபூண்டுள்ளோம்!

    பயணத்தை இனிமையாக்கிய சேலம் -திருப்பூர் மாவட்ட நண்பர்களுக்கும், கூடவே இருந்து உதவிகள் செய்த சென்னை நண்பர்களுக்கும் பாசத்தால் கடன்பட்டுள்ளோம் ( இப்பவே ஓவரா கடன் ஆகிடுச்சே...) ;)

    சிறப்பு நன்றிகள்: சன் டிவி அலுவலகத்துக்கு வரவழைத்து எடி, ஜூ.எடி மற்றும் என் அபிமான ஓவியர் 'ம.செ' அவர்களிடம் மறக்க இயலா ஓர் உரையாடலை ஏற்படுத்திக்கொடுத்ததோடு, சன் டிவி அலுவலகத்தின் ஒவ்வொரு floorக்கும் (பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்) எங்களை அழைத்துச்சென்று சுற்றிக் காட்டிய நண்பர் கிங் விஸ்வா அவர்களுக்கு! இவரது ஏற்பாட்டின்படி 'தி இந்து' தமிழ் நாளிதழின் முக்கியப் பொறுப்பாளர்களைச் சந்திக்க நேர்ந்ததும் கூடுதல் மகிழ்ச்சி!

    வியப்பான நன்றிகள்: சிறு விபத்தொன்றில் தோள்பட்டையிலும், விரல்களிலும் பலத்த காயமுற்றிருந்தபோதும் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கே வந்திருந்து உற்சாகமான, ஆர்ப்பாட்டமான வரவேற்பளித்த அருமை நண்பர் ஜான் சைமன் அவர்களுக்கு! உற்சாகத்தின் இன்னொரு பெயர் - ஜானி!!

    என்றென்றும் நிலைத்திருக்கட்டும் இந்தக் காமிக்ஸ் நேசங்கள்!

    ReplyDelete
  89. Ideas for new comic
    Treasure comics/ chutti comics/ young lion comics/ jungle comics/ IQ library/ hippo picture library/ apple comics/ imagine comics/ creative book works/ Rainbow comics/ amuse comics

    ReplyDelete
  90. பௌன்சர்...

    முன்பு (அந்த காலத்தில்) தங்கக்கல்லறை படித்தபோது ஏற்பட்ட பிரமிப்பில் ஒரு 48 சதவீதம் (!) பிரமிப்பை பௌன்சர் தந்தது... பக்கங்கள் மற்றும் பேனல்களின் அமைப்பு முதல் நாம் கண்டுகொள்ள வாய்ப்பில்லாத பல நுணுக்கங்களை படைப்பாளர்கள் கதைக்காக அமைத்திருப்பது மிகப்பெரிய Luxury. 125 ரூபாய்க்கு இரண்டு பாகங்கள் Excellent Product! :)

    ReplyDelete
  91. அன்புள்ள எடிட்டர்
    தங்களது மறு பதிப்புகள் தரம் குணம் திடம் அனைத்தும் அருமை
    பாக்கட் சைஸ் கிளாசிக் படித்து வெறுத்து போன எனக்கு இந்த மறு பதிப்புகள் எனது சிறு வயது ஞாபகங்களை மீட்டெடுத்து வந்தன
    Please keep it up don't make any changes
    It is very good

    ReplyDelete
  92. *வணக்கம் சார் . 2நாள் கடைவேலைகள் முடித்து இன்று பெளன்சர் ரொளத்திரம் பழகு படித்து முடித்தேன் சார் . ஆரம்ப பேனல் முதல் இறுதி முற்றும் வரை ஏக் தம்மில் படித்து நானும் அதனுடனே பயணித்தேன் சார் .
    *நம்முடைய ரசணைகள் நிச்சயமாக அடுத்த பரிமாணத்தை அடைந்து விட்டதாக சொல்லலாம் சார் . பொற்காலம் , வறட்சிக்காலம், மீட்சிகாலம் என நாம் பயணித்தாலும் இனி நம்முடைய காலத்தை பெளன்சருக்கு முன் , பின் என்ற வரையறையையும் சேர்த்துக்கொள்ளலாம் சார் .
    *பருவத்தே பயிர் செய்- என்ற முது மொழியை மிகச்சரியாக உணர்ந்து உள்ளீர்கள் சார் . பெற்றவர்களுக்கு தெரியும் எந்த வயதில் எந்த உணவளித்து பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று . வெறும் பொழுது போக்கு தானே காமிக்ஸ் என்று நினைக்காமல் இவர்களுக்கு இந்த இந்த வயதில் இதை இதை தரவேண்டும் என மிகச்சரியாகவும் கவனமாகவும் முடிவு செய்துள்ளீர்கள் சார் . சரியான சமயத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு சார் . இந்த தொடர் எப்போதோ உங்களுக்கு கிடைத்திருக்கும் , எங்களில் பெரும்பாலோர் இதை ஏற்றுக்கொள்ளும் காலம் வரை காத்திருந்து இப்போது தந்துள்ளீர்கள் சார் . அந்த துணிச்சலான முடிவுக்கே ஒரு பெரிய தேங்ஷ் சார் .
    *ஆண்டு இறுதியில் பெளன்சர் தொடர் நிச்சயமாக வெற்றி பெற்ற ஒன்றாக இருக்கும் சார் .இந்த தொடர் முழுவதும் நம்முடைய பழக்க வழக்கத்திற்கு ஒவ்வாத பல விசயங்களை நாம் பார்க்க இருக்கிறோம் என்பது தெளிவு சார் . நண்பர்கள் யாருக்கும் மறுப்பு இருப்பின் ,திரு ராகுல் சாங்கிருத்யாயன் அவர்களின் "வால்கா முதல் கங்கை வரை " - புத்தகத்தை படிக்கவும் . (இது முழுக்க முழுக்க என் கருத்து மட்டுமே நண்பர்களே.)

    ReplyDelete
    Replies
    1. // இது முழுக்க முழுக்க என் கருத்து மட்டுமே நண்பர்களே //

      ஆ... அவசரத்தில் "இது முழுக்க முழுக்க என் கற்பனை மட்டுமே" என்று படித்துவிட்டேன்! :D

      Delete
    2. அது வேறொன்றும் இல்லை ரமேஷ் ஜி, போன வாரம் போல மற்றொரு சர்ச்சையில் இந்த பண்டிகை சமயத்தில் சிக்க வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கையில் சேர்க்கப்பட்ட பாதுகாப்பு கவசம் மட்டுமே .

      Delete
  93. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே,

      நம்ம பௌன்சர் சொன்னதாலே நா முந்திக்கிறேன்...ஜனவரி 14 தை திருநாளன்று பிறந்தநாள் கொண்டாடும்,
      மென்மையான மனமும் (குரலும்) கொண்ட நண்பருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..!

      அந்த நண்பர் நா யாருன்னு சொல்றத விட 'பௌன்சர்' கேக்கறார்...அத பாக்க இங்கே'கிளிக்'

      Repl

      Delete
    2. மெலடி பாடல்களால் நம்முடைய இதயங்களை கொள்ளை கொண்ட இளையராஜா வின் போட்டவை புரோபைல் அடையாளமாக கொண்டுள்ள மென்மையான குரலுக்கு சொந்தக்காரர் , ஆணித்தரமான கருத்துக்கு சொந்தக்காரர் நம்முடைய இனிய நண்பர் பெங்களூரு பரணீ அவர்களுக்கு இனிய இனிப்பான தித்திப்பான பிறந்த நாள் நல்வாழ்த்துகள் .

      Delete
    3. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் பரணி !!!:)

      Delete
  94. நண்பர்களுக்கும் வரசகர்களுக்கும் எடிட்டருக்கும், ஐ௨னியர் எடிட்ருக்கும், அவர்தம் ரீமுக்கும் அவர்கள் எல்லோருடைய குடும்பத்திற்கும் என் மனங்கனிந்த பொங்கல் நல்வரழ்த்துக்கள் உரித்தரகுக .
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete