Saturday, April 26, 2014

கேட்டது கிடைத்தது...!!


நண்பர்களே,

வணக்கம் ! இதை..இதைத் தான் காணக் காத்துக் கொண்டிருந்தேன் ! ஒவ்வொரு மாதத்து இதழ்களும் வெளியாகும் முன்பாக அதன் எதிர்பார்ப்பில் இங்கு நிறையப் பின்னூட்டங்கள் குவிவதும், உற்சாக அரட்டைகள் அரங்கேறுவதும் சந்தோஷம் தரும் நிகழ்வுகள் ! ஆனால் இதழ்கள் கைக்குக் கிடைத்தான பின்னே, கொஞ்சமாய் in-depth  விமர்சனங்கள் ; சன்னமாய் மேலோட்டமான விமர்சனங்கள் என்பதைத் தாண்டி பெரியதொரு feedback இருப்பதைக் காணவே இயலாது போயிருந்தது ! உங்கள் நாடிகளை ; ரசனைகளை எனக்கு அறியத் தரும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் கொஞ்ச காலமாகவே இல்லாததில் எனக்கொரு மௌன வருத்தம் ! ஆனால் இம்முறையோ மே மாதத்து இதழ்கள் மூன்றையும் அழகாய் அலசிடும் ஒரு பாங்கை நண்பர்கள் அனைவரும் பொறுப்பேற்று நயம்படச் செய்து வருவதைக் கண்ட போது மனதுக்கு இதமாய் இருந்தது ! ஓராண்டின் ஓட்டத்தின் போதே தொடரும் ஆண்டின் இதழ்களைப் பற்றிய அசைபோடுதல் என் மனதில் ஓடும் அளவுக்கு நாம் முன்னேறியுள்ளது உங்கள் அனைவரது ஒத்துழைப்பினால் தான் என்பதில் எவ்வித இரகசியமும் கிடையாது ! அப்படியிருக்கையில் - உங்களது விருப்பு-வெறுப்புகளை ஸ்பஷ்டமாய் தெரிவிக்க கொஞ்சமே கொஞ்சமேனும் அவகாசம் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் - அதன் பலன்கள் நம் அனைவருக்கும் இன்னும் தரமான கதைகளாகக் கிடைக்கும் விதத்தில் பிரதிபலிக்கும் !

அதற்கொரு உவமை காண அதிக தொலைவு நாம் செல்லத் தேவையிராது - மே மாதத்து "முகமற்ற கண்கள்" நம் அருகாமையில் இருக்கும் போது ! கால் நூற்றாண்டுக்கு முன்பாக இது வெளியான சமயம் நமது ரசனைகளும், வயதுகளும் வேறொரு பரிமாணத்தில் இருந்ததால் - அன்றொரு smashhit ஆவது சுலப சாத்தியமானது ! ஆனால் இன்றைய 'லார்கோ' யுகத்தில் என்ன தான் வான்சின் சித்திரங்கள் மாயம் செய்தாலும், வண்ணம் அழகாய் மிளிர்ந்தாலும், முதுகெலும்பான கதையின் புராதனம் ப்ருனோவை ரசிப்பதை சிரமமாக்குவதை நான் எடிட் செய்யும் போதே உணர்ந்தேன் ! இங்கே இப்போது தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் தொனிகளும், எனது அனுமானமும் ஒன்றிச் செல்வதால் - ஓரளவுக்கேனும் we are in sync என்ற ஆறுதல் எனக்கு. நல்ல காலமாய் இந்தாண்டின் திட்டமிடலில் இதற்கு மேலாக ப்ருனோவிற்கு (மறுபதிப்பு) வாய்ப்புகள் வழங்கவில்லையே என்ற மகிழ்ச்சியும் கூட ! 2015-ன் மறுபதிப்புப் பட்டியலைப் பற்றிய திட்டமிடலுக்கு நிறையவே யோசனை தேவை என்பது மட்டும் இப்போதைக்கு நான் இதனில் உள்வாங்கி இருக்கும் பாடம். கேப்டன் பிரின்ஸ் கதைகள் + லக்கி லூக் கதைகளைத் தாண்டி (வண்ண) மறுபதிப்புகளுக்கு ஒத்து வரக் கூடிய கதைகள் வேறு என்னவாக இருக்குமென்ற உங்களின் suggestions ப்ளீஸ் ? (ஸ்பைடர் ; ஆர்ச்சி என்ற மாமூல் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட )..

மறுபதிப்புகள் பற்றிய பேச்சு ஓடிக் கொண்டிருக்கும் வேளையிலேயே - எனக்கு சமீபமாய்த் தோன்றியதொரு சிந்தனையை உரக்க வெளிப்படுத்த இதை வாய்ப்பாக்கிக் கொள்கிறேன் ! ஜூலையில் மறுபதிப்பு வரிசையில் லக்கி லூக்கின் "பூம் -பூம் படலம்" வரக் காத்துள்ளது. இக்கதை லயனில் ஒரிஜினலாய் வெளியான நாட்களில் நாம் ஒவ்வொரு தொடருக்கும் பயன்படுத்திய மொழிநடைகளில் ஒரு consistency இருந்து வந்ததில்லை. சில கதைகளில் லக்கி பேச்சு வழக்கில் உரையாடுவதும், சில கதைகளில் தூய தமிழில் "செப்புவதும்" உண்டு ! "பூம்-பூம் படலம்" டைப்செட் ஆகி எனது மேஜைக்கு சென்ற வாரம் வந்த போது - சுத்தமாய் மறந்து போய் இருந்த இக்கதையை மேலோட்டமாய்ப் படிக்கத் துவங்கினேன். கதையினில் லக்கி தூய தமிழில் மாத்திரமே பேசும் பாணியானது தற்போது நாம் அவருக்கென நிர்ணயம் செய்து வைத்துள்ள பேச்சு வழக்கிற்கு நெருடலாய் இருப்பது போல் எனக்குப்பட்டது. தவிரவும், பேச்சு வழக்கில் கிட்டும்  அந்த சுலப humour அதில் குறைவாய் இருப்பதாய்த் தோன்றியது ! LMS மற்றும் சூப்பர் 6-ன் கதைகளை இழுத்துப் போட்டுக் கொண்டிரா ஒரு சற்றே ஓய்வான சமயமாக இருப்பின், இக்கதையை நிச்சயமாய் நாம் மறுமொழிபெயர்ப்பு செய்ய முனைந்திருப்பேன் ; ஆனால் தற்போதோ விழி பிதுங்கி நிற்கும் சூழலில் அது சாத்தியமில்லை எனும் போது எனக்கொரு சிந்தனை தோன்றியது ! KAUN BANEGA COMPLETE TRANSLATOR ? போட்டி ஒன்றை அறிவித்து இந்த இதழை முழுமையாய் - தற்போதைய லக்கி பாணிக்கு ஒத்து வரும் விதத்தில் வாசக நண்பர்கள் மொழிபெயர்க்க ஒரு வாய்ப்பளித்தால் என்ன என்பதே அந்த மகா சிந்தனை !! What do you think of it folks ? உங்கள் அனைவரிடமும் இந்த இதழின் ஒரிஜினல் (தமிழ்) பதிப்பு இருக்குமெனும் போது, புதியதொரு வார்ப்பில் மொழிநடையினை அமைக்கும் பணியானது சுவாரஸ்யம் தருமா உங்களுக்கு ?  சின்னச் சின்ன கதைகளாக இல்லாது - ஒரு முழு நீளக் கதையினில் பணியாற்றும் அனுபவமும் எப்படி இருக்குமென்பதை சந்தடி சாக்கில் உங்களுக்கு அறிமுகம் செய்தது போலாகாதா ? What say ?


மே மாத வண்ண இதழ் # 2 - தோர்களிலும் எனது அனுமானங்கள் உங்களின் அபிப்ராயங்களோடு ஒத்துச் செல்லும் விதமாகவே உள்ளன ! Cinebook வெளியிடுவதைப் போல நடு நடுவே உள்ள ஹிட் கதைகளை மட்டுமாய்த்  தேர்வு செய்து நாமும் வெளியிடுவதில் படைப்பாளிகளுக்கு அத்தனை ஏற்பில்லை. பிந்தைய கதைகளில் கவனத்தைச் செலுத்திடும் பட்சத்தில் - ஒரு கட்டத்துக்குப் பின்னே துவக்க நாட்களது கதைகளை நாம் ஓரம் கட்டி விடுவோம் என்ற (நியாயமான) முன்ஜாக்கிரதை அவர்களுக்கு. So ஒரிஜினலான வரிசையில் பயணிப்பது தவிர்க்க இயலா சூழல். ஆனால் ஆங்கிலத்தில் இது வரைப் படிக்க வாய்ப்புக் கிட்டா கதைகளையும் தமிழ் மூலமாவது படிக்க சாத்தியமாகிறதே என்று positive ஆக எடுத்துக் கொள்வோமே ! கதைகளைப் பொறுத்த வரை - இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை அதன் களம் முழுமையாய் நம் முன்னே விரிவதற்கும், தோர்கல் முழுமையாய் நம்மை ஆக்கிரமிப்பதற்கும். ஆங்கிலத்திலோ, இதர மொழிகளிலோ இதனைப் படித்திருகா நண்பர்கள் சற்றே பொறுமை காத்தால் - ஒரு அழகான தொடரை தைரியமாய் தொடரும் சூழல் உருவாகும். இக்கதையின் வர்ணக் கலவைகள் சற்றே outlandish ஆக இருப்பது கண்ணுக்கு உறுத்தலாய் இருப்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன் ; கொஞ்சமே கொஞ்ச தூரம் இத்தொடரில் கடந்து விட்டால் காத்திருப்பது ஒரு விருந்து என்பது நிச்சயம் ! 

இறுதியாய் மே மாதத்து முதல்வர் டெக்ஸ் பற்றி : கதையின் அதிரடிக் களம் நம்மை நிச்சயமாய் டிராகன் நகரத்து நாட்களுக்குக் கொண்டு செல்லும் என்பதை உணர அதிகம் சிரமம் நேரவில்லை ! அதிலும் அந்த ஒற்றைக்கு ஒற்றை duel நமக்குள் இருக்கும் அந்த hero worship ஐ தூக்கலாய் வெளிக் கொணரும் என்பது எனது நம்பிக்கையாக இருந்தது. இந்த சாகசத்தில் கார்சனுக்கும் முக்கிய பங்கு இருப்பதால் அவரது மாமூலான wisecracks சங்கதிகளை அள்ளி விட எனக்குமொரு வாய்ப்பு கிட்டியது. சித்திரங்களில் உள்ள அந்த வேற்றுமை ஒரு தவிர்க்க இயலா விஷயம் எனும் போது அதனோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டியது தான் ! அதிலும், இந்த சாகசத்தின் ஓவியர் இத்தலைமுறை டெக்ஸ் கதைகளுக்கு தீவிரமாய்ப் பணியாற்றும் ஓவியர் எனும் போது -  we are bound to see more of him ! காகிதத்தின் தரம் பற்றிய உங்களின் வருத்தங்கள் புரிந்து கொள்ளக் கூடியதே ! ஆனால் சில காலமாகவே நான் வைத்து வரும் பிலாக்கனமும் மாறும் வழியைக் காணோம் எனும் போது கறுப்பு-வெள்ளை இதழ்களோடு ஒவ்வொரு முறையும் இதே மல்யுத்தமே ! நாம் இதழின் விலையை ஜாண் ஏற்றினால். பேப்பர் மில்களோ தரமான வெள்ளைத் தாளின் விலைகளை முழம் ஏற்றி விடுகின்றன ! தற்போது நாம் பயன்படுத்தியுள்ள காகிதம் (Malar Maplitho) டன் ஒன்றின் விலை ரூ.54,000 ! TNPL போன்ற முன்னணி மில்களின் விலைகளோ ரூ.70,000 ! டன் ஒன்றிற்கு ரூ.16,000 கூடுதல் எனும் போது தான் டிரௌசர் இடுப்பில் நிற்கவே மாட்டேன்கிறது ! இதற்கொரு மாற்றுத் தீர்வை என் தந்தையும், என் தனையனுமாய் சேர்ந்து தேடி வருகின்றனர் ! LMS-ல் நிச்சயமாய் இந்த ரகக் காகிதம் இராது என்பது மட்டும் உறுதி. மற்றபடிக்கு, புதிய முயற்சி வெற்றி காணும் பட்சத்தில் அடுத்த black & white இதழிலேயே நீங்கள் ஒரு சந்தோஷ மாற்றத்தைக் காண்பீர்கள் !  

அடுத்த மாதம் லார்கோ வின்ச் + சிக் பில் கதைகள் என்பதால் எனது பணி சிரமம் ; ஆனால் பாடு சுலபம். சீக்கிரமே இவர்களும் உங்களைத் தேடி வரத் தயார் என்பதால் இந்தாண்டின் மையப் பகுதியை நாற்கால்ப்பாய்ச்சலில் எட்டிப் பிடித்து விடுவோம். ஆனால் நிஜமான பரிசோதனைகள் காத்திருப்பது இரண்டாம் பாதியினில் தான் என்பதால் - இப்போதிலிருந்தே ஒரு உத்வேகம் கலந்த nervousness எங்களுள் !! அவ்வப்போது சாய்ந்து கொள்ள உங்களின் ஆக்கபூர்வமான சிந்தைகள் கிட்டிடும் பட்சத்தில் தூள் கிளப்பிடும் உறுதி எங்களுக்குள்ளது !

தற்போது நடந்து வரும் சென்னை புத்தக சங்கமம் கோடையின் வெயிலுக்கும், IPL எனும் அசுரனுக்கும் இரண்டாம் பட்சமாய் இருந்து வந்தாலும் இவ்வாரம் மானத்தைக் காப்பாற்றி விட்டது என்றே சொல்ல வேண்டும். ஜனவரியின் விற்பனை இலக்குகளுக்கும் இதற்கும் துளி சம்பந்தமும் இல்லையெனினும், காற்றாடிய ஆரம்ப நாட்களைப் போல் அல்லாது இவ்வாரம் சுறுசுறுப்பாகவே விற்பனைகளைக் கண்டுள்ளது ! நாளையே இறுதி தினம் என்பதால் இது வரைக்கும் செல்ல நேரம் கிட்டி இருக்கா சென்னை நண்பர்கள் நாளை தலையைக் காட்டிடலாமே ? மீண்டும் சிந்திப்போம் ...Stay cool until then !

330 comments:

  1. Dear Editor Sir,
    Thanks for the explanation about the paper. I was hesitating to convey this concern. Glad to hear that it will be rectified soon. Thanks again Sir.

    ReplyDelete
  2. Dear Editor Sir,
    Thanks for the explanation about the paper. I was hesitating to convey this concern. Glad to hear that it will be rectified soon. Thanks again Sir.

    ReplyDelete
  3. துண்டு போட்டுட்டன்,படிச்சிட்டு வர்ரேன்

    ReplyDelete
  4. எடிட்டர் சார்,
    நான் தங்களின் கடந்த பதிவை ZOOM பண்ணி ZOOM பண்ணி படிக்கும் போது, என் மனதும் என் பாலிய காலத்திற்கு ZOOM ஆனது,

    * உங்கள் தந்தை உங்களை புத்தகங்களை படிக்க வைத்தார்,
    என் தந்தை பாட புத்தகத்தையும்,பைபிளையும் தவிர வேறு புத்தகங்களை படிக்க அனுமதி தந்ததில்லை,

    *ஆனால் என் அம்மாவின் ஊருக்கு சென்றபோது பெயர் தெரியாத ஒரு உறவினரிடம் “விசித்திர விமானம்” என்ற ராணி காமிக்ஸ் பார்த்தேன்,படித்தேன். அதுதான் ஆரம்பம்.

    *அப்புறம் சிறுவர்மலருக்காக வெள்ளிகிழமைகளில் ஒரு பண்ணையார் வீட்டில் காத்திருந்து படித்தேன்.
    அது தொடர்ந்த போது “ஆர்ச்சிக்கோர் ஆர்ச்சி” மூலமாக நமது காமிக்ஸ் அறிமுகமானது, அதன் பின் சக மாணவர்களுக்கு நோட்ஸ் எழுதிக் கொடுத்து 10 காசு 20 காசு கூலியாக வாங்கி புத்தகங்கள் வாங்கி படித்து வந்தேன்.
    வீட்டில் அதை மறைத்து வைக்க நான் படும் பாடு தனி படலம். (சூப்பர் ஸ்பெஷலை வாங்க காசு சேர்க்க முடியாமல் திருடியது ஒரு தனி படலம்)

    *இப்படியாக நான் படித்து வந்த போது என் தந்தையிடம் மாட்டி அவர் எரித்தது ஒரு சோக படலம்.

    *எனது 13 –ம் வயதில் சிறு துணுக்குகள் எழுதி வைத்திருப்பதை பார்த்து என்னடா கிறுக்குத் தனமா கிறுக்கி வச்சிருக்க என்று கேட்டு அடிக்க அதையே காரணமாக வைத்து நான் எழுதுவதற்க்கு (கிறுக்கல் கிறுக்கன்) என்று கையெழுத்திட ஆரம்பித்து ஒரு அடிவாங்கும் படலம்.

    *அப்புறம் அதே காமிக்ஸ் புத்தகங்களை தம்பி தமிழ் படிக்கவில்லை என்பதற்க்காக நான் வாங்கி வந்து அப்பா முன்னாலேயே அவனை படிக்க வைத்தது ஒரு அமைதியாக பழிவாங்கும் படலம்.

    *அப்படியாக வீட்டிலேயே சேர்த்து வைத்த புத்தங்களை சிறு பிரச்சனையால் நான் வீட்டிற்க்கு செல்லாத போது எடைக்கு போட்டது ஒரு பயங்கர படலம்.

    இப்படி பல விஷயங்கள் என் மனதில் ZOOM ஆகி வந்தது.
    இனியும் நிறைய உண்டு என் காமிக்ஸ் வாழ்க்கையில்
    திரும்பவும் நண்பர்களிடம் அடிவிழும் படலம்
    துவங்காதிருக்க இத்தோடு முடிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் என்கிட்டே வாங்குன புக்க இன்னும் தரலங்குறது என்ன படலம் நண்பா ?

      Delete
    2. லயனும் நானும் பதிவில் போட வேண்டியதை லேட்டா இங்க போட்டுட்டேன்

      Delete
  5. 7
    Again in top 10...so always refreshing this page :)

    ReplyDelete
  6. சைத்தான் சாம்ராஜ்யம்
    கார்சனின் கடந்த காலம் வண்ணத்தில்
    இரத்தபடலம் வண்ணத்தில்
    உங்களுக்கு தெரிந்து திகிலில் வந்த சிறந்த கதைகள்
    வேதாளன் முழுதும் வண்ணம் அல்லது இரு வண்ணம்
    பச்சை வானம் மர்மம்
    மறு பதிப்பில் இவைகளை வெளி விடலாம்



    ReplyDelete
    Replies
    1. சார்,சிகப்பாய் ஒரு சொப்பனம் கதையில் வந்த தாளை போல இருந்தால் நன்றாக இருக்கும் .

      Delete
    2. ஸ்டீல் @ கார்சனின் கடந்த காலம் இந்த வருடம் கருப்பு&வெள்ளையில் ஏற்கனவே அறிவித்தாகி விட்டது. என்னை பொறுத்தவரை டெக்ஸ் கதைகள் வண்ணத்தில் என்பதை விட கருப்பு&வெள்ளையில் தான் அழகு.

      Delete
    3. பரணி நானும் கருப்பு வெள்ளைதான் டெக்ஸ்க்கு ஆதரிக்கிறேன் ! ஆனால் இந்த கதை புல்வெளிகள், இடிபாடுகள் என வண்ணத்தில் பிரம்மாண்டமாய் இருக்கும் என நினைக்கிறேன் ! டிராகன் நகரம் கூட கருப்பு வெள்ளையில் வரட்டும் . ப்ளீஸ் ....ப்ளீஸ் ...இந்த ஒன்று மட்டும் !

      Delete
  7. சார்..

    1. விங் கமாண்டரின் 'பனியில் புதைந்த ரகசியம்'
    2. சார்லியின் 'சிறை மீட்டிய சித்திரக்கதை'
    3. மின்னல் படையினரின் 'மரணமண்டலம்' மற்றும் 'முகமில்லா மாயாவி'
    4. ராபினின் 'வீடியோவில் ஒரு வெடிகுண்டு'
    5. டெக்ஸ் ன் 'பவளசிலை மர்மம்' மற்றும் 'டிராகன் நகரம்'
    6. 'நியூயார்க்கில் பிரின்ஸ்' மற்றும் 'காணாமல் போன கழுகு'

    போன்ற கிளாசிக் படைப்புகளை new version ல் காண ஆசை.

    ReplyDelete
  8. டெக்ஸ் ' தொடர் துப்பாக்கி முழக்கங்கள் ' இல்லாமல் பேசி, பேசி அற்புதம் செய்த தனித்துவம் மிக்க கதை ! அதற்க்கு வட்டியும் முதலுமாய் கடைசியில் இரு பக்கம் முழுதுமே டுமீல் டுமீல்தான் . நல்ல வேளை நேருக்கு நேராய் சுடும் போது டெக்ஸ்சும் , கார்சனும் குண்டடி பட்டார்கள் டைகர் ஆதரவாளர்களிடமிருந்து டெக்ஸ் நண்பர்கள் பிழைத்தார்கள் ! பக்கம் முழுதும் வில்லன்கள் டெக்ஸ், மற்றும் கார்சனிடம் பேசி பேசியே அவர்கள் மனதை மாற்ற முயற்ச்சிப்பதும் , ஆரம்பத்திலேயே அவர்கள் மேல் சாதாரணமாக சந்தேக பார்வை விழும் வண்ணம் என் அப்பன் குதிருக்குள் இல்லை என அவர்கள் கூறுவதும் ...வாசகர்களாகிய நமக்கு அப்பட்டமாய் அவர்கள்தான் வில்லன் என தெரிந்தும் கதை மிக மிக சுவாரஸ்யமாய் செல்வது எப்படி என புரியவில்லை . மொழி பெயர்ப்பாளர் உற்ச்சாக மூடில் மொழி பெயர்த்துள்ளார் போலும் . பக்கம் முழுதும் நிறையும் வசனங்கள் மனதை கொள்ளை கொள்கிறது . கார்சன் இல்லாமலும் அவரை வைத்து கிட்டை கிண்டல் செய்வதும் ஒரே உற்ச்சாகம்தான் . டைகர் ஜாக் கூட கர்சனை கிண்டல் செய்கிறார் .எதிரிகளை தேடி டெக்ஸ் செல்வது விறு விறுப்பாய் செல்கிறதென்றால் ....

    கார்சனின் வரவை தொடர்ந்து ஒரே அதகலம்தான் . கார்சன் புலம்புவதும் , துணிந்து செயல் படுவதும் என தொடர்ந்து கார்சன் தீனி போட....
    நால்வரும் இணைந்த பின் அசராத வில்லன்கள் ஏதும் நடவாதது போல கூலாய் செயல் படுவதும் , தங்களை நல்லவர் போல காட்ட முயல்வதும் என மொழி பெயர்ப்பை தூக்கி நிறுத்த பேருதவி செய்துள்ளார்கள் .. விரியன்கள் என்பதற்கு அர்த்தம் இவர்கள்தானோ ?

    ஆனால் இந்த கதை படிக்கும் போது என்பதுகளின் இறுதியிலோ , தொன்னூறுகளிலோ வாழ்ந்தது போல ஒரு உற்ச்சாகமான , எந்த கவலயுமின்றி திரிந்த படி படித்த நிலையை மனதிற்கு அளிக்க தவறவில்லை !
    இந்த வருடத்தின் சிறந்த கதைகளில் இதுதான் முதலிடம் பிடிக்கும் என நினைக்கிறேன் ! அடுத்த கருப்பு வெள்ளை டெக்ஸ் கதை ரெடியா சார் !

    ReplyDelete
    Replies
    1. சார், காதல் கிளிகளுக்கு அஸ்தியில் ஜுரம் கண்டு விட்டதென்று நினைக்கிறேன் ...என கார்சன் கூறுவது மட்டும் புரியவில்லை !

      Delete
    2. ''கார்சனின் வரவை தொடர்ந்து ஒரே அதகலம்தான் . கார்சன் புலம்புவதும் , துணிந்து செயல் படுவதும் என தொடர்ந்து கார்சன் தீனி போட....//
      +1

      Delete
  9. Text story is nice but pictures are not so good...pictures looks like outline in many places...and looks like unfinished pictures...

    ReplyDelete
  10. TEX story is nice but pictures are not so good...pictures looks like outline in many places...and looks like unfinished pictures...

    ReplyDelete
  11. Thorgal...No action done by him...Story, the series is fully based on him but he is just coming as a co-actor....page 20 to 23 just helped to increase the page count..As editor sir said in this post, hope forthcoming series will be interesting...

    ReplyDelete
  12. Sir, engalukum ketadhu kidaikuma?.....Spider, Mayavi, Aarchi....Kidaikuma Sir.....

    ReplyDelete
  13. Dear Editor
    In last month lucky Luke book, in my copy there were 8 defective pages - not printing issue instead the pages were torn. This month too some copy of Thorgal has same issue. I request you to instruct printing press to discard such papers before binding. I hope this problem will be rectified soon.

    ReplyDelete
  14. விஜயன் சார், புத்தகம்கள் ஒருவழியாக வந்து சேர்ந்து விட்டன :-) கதைகளை இன்னும் படிக்கவில்லை. காமிக்ஸ்.com, ஹாட்-லைன் மற்றும் புத்தகம்களை முழுமையாக புரட்டிவிட்டேன்.
    நில்-கவனி-சுடு:-
    +++
    மேட் பினிஷ் செய்த மாதிரி அட்டைபடம் அருமையாக உள்ளது
    ---
    புத்தகத்தில் உள்ள காகிதம்கள் வேறு வேறு நிறம்களில் உள்ளது, சில இடம்களில் பளீர் வெண்மை, சில இடம்களில் மங்கிய வெண்மை நிறம். இதற்கான காரணத்தை கண்டுபிடித்து இதனை சரி செய்வது நலம்.

    முகமற்ற கண்கள்:- (மனதில் நெருடிய விஷயம்)
    =====================================================================
    காமிக்ஸ்.com: ப்ருனோ-பிரேசில் கதைகளை லாஜிக் மற்றும் யதார்த்தம் பார்க்காமல் படித்தால் ரசிப்பதற்கு நிறைய உள்ளன என்றால், அதே விதிகள் நமது பழைய கருப்பு&வெள்ளை நாயகர்களுக்கும் (ஸ்பைடர்/லாரன்ஸ்/மாடஸ்டி/இரும்புக்கை) பொருந்தும். ப்ருனோ-பிரேசில் (மறுபதிப்பு) கதைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நமது பழைய கருப்பு& வெள்ளை நாயகர்களுக்கு கொடுக்க மறுப்பது ஏன்? நமது கருப்பு&வெள்ளை நாயகர்களின் சிறந்த பழைய மற்றும் நமது காமிக்ஸ்-ல் வெளிவராத கதைகளை வெளி இட பலமுறை பல விதம்களில் (புத்தக திருவிழாகளில்/கடிதம்/காமிக்ஸ்தளத்தில்) கோரிக்கைகள் வைத்தும் அதனை சில காரணம்கள் சொல்லி நீங்கள் மறுப்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.

    முகமற்ற கண்கள் புத்தகத்தில் 4 பக்கத்தில் இருந்து சுமார் 10பக்கம்கள் கசங்கி/நசுங்கி இருந்தன.

    ReplyDelete
    Replies
    1. அதற்காக ப்ருனோ-பிரேசில் கதை வேண்டாம் என சொல்லவில்லை.. மறுபதிப்பில் எனது சாய்ஸ் "பவள சிலை மர்மம்"

      Delete
    2. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) @ நான் குறிபிடுவது டெக்ஸ்-ன் "பவள சிலை மர்மம்" நண்பரே.

      முதலை பட்டாளம் கலீல்/ரஞ்சித் ரஞ்சித்/AHMEDBASHA TK/ போன்ற நமது நெடுநாளைய காமிக்ஸ் நண்பர்கள் சிறந்த கதைகளை இங்கு குறிபிட்டால் என்னை போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

      1998 பின்னால் வந்த கதைகளை மறுபதிப்பு செய்ய வேண்டாம்.

      Delete
    3. //டெக்ஸ்-ன் "பவள சிலை மர்மம்"//
      +1

      Delete
    4. பழி வாங்கும் புயல் .டிராகன் நகரம்,பவழ சிலை மர்மம்,வைகிங் தீவு மர்மம், இதுவரை வந்த டெக்ஸ்கதைகளில்மிகச் சிறந்தாய் இவைகள் ரிபிரிண்ட்கள் வந்தால் மிகவும் நான்றாக இருக்கும் ,இருந்தாலும் இந்த வருட ரிபிரின்ட் கோட்டா முடிந்து விட்டாதல் அடுத்த வருடம் இடம் பெற எடிட்டரிடம் இப்போதே ஒரு விண்ணப்பம் போட்டு வைக்கலாம்

      Delete
    5. //பழி வாங்கும் புயல் .டிராகன் நகரம்,பவழ சிலை மர்மம்,வைகிங் தீவு மர்மம், இதுவரை வந்த டெக்ஸ்கதைகளில்மிகச் சிறந்தாய் இவைகள் ரிபிரிண்ட்கள் வந்தால் மிகவும் நான்றாக இருக்கும் ,//
      +1

      Delete
    6. டெக்ஸ்-ன் "பழி வாங்கும் புயல் .டிராகன் நகரம்,பவழ சிலை மர்மம்,வைகிங் தீவு மர்மம்"

      Delete
  15. Ovoru muraiyum Marupathipu Puthiya puthagangal patri karuthukkalai engalidam ketpathum kelviyai mudikum munnarae Spider Mayavi vagarayakkal ketka vendamae endru neengal kuruvathum engaluku yen enrae puriavillai!!!!! Green Manor, Sippayin Suvadugal , Danger Diabolic pondra very ordinary kathaigalai kuda extraordinary buildup odu thantha neengal SPIDER endral jaga vanguvathu yen endru puriavillai.... Oru CLASSIC herovai Super hero super special endra orae flop moolam orangatuvathu yen endru theriavillai ... K at last oru final request ore Spider special avarathu classic top 5 stories reprint kudungal apuramum ungal nilaipadu marukiratha endru parpom.... Plz its our request...

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சூப்பர் ஹீரோ ஸ்பெசல் விற்பனை தூள் ! ஸ்பைடர் ஆசிரியரை மீறி வருவார் நம்மை கரையேற்ற ! மனதை தளர விட்டு விடாதீர்கள் நண்பரே !

      Delete
  16. விஜயன் சார்,
    மியாவியை தொகுப்பாக வெளிஇட்டது போல் மதி-இல்லா மந்திரி கதையையும் அடுத்து வரும் புத்தக திருவிழாவில் வெளி இட முயற்சிக்கவும். நம்ப மதி-இல்லா மந்திரியை பார்த்து ரொம்ப நாள் வேற ஆச்சு :-)

    // "பூம் -பூம் படலம்" // இக்கதையை நிச்சயமாய் நாம் மறுமொழிபெயர்ப்பு செய்ய முனைந்திருப்பேன் ;
    வாசகர்கள் மொழி பெயர்பதை விட நமது விக்ரம்விடம் இதனை கொடுத்தால் என்ன? I wish to go with Vikram!

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : //மியாவியை தொகுப்பாக வெளிஇட்டது போல் மதி-இல்லா மந்திரி கதையையும் அடுத்து வரும் புத்தக திருவிழாவில் வெளி இட முயற்சிக்கவும். //

      நல்ல ஐடியா !!

      Delete
  17. டியர் விஜயன் சார்,

    தோர்கல் பற்றிய என் கருத்துக்களை, கடந்த நவம்பரில் பதிவு செய்திருந்தேன்!

    //முதல் ஆறு ஆல்பங்கள் இணைந்தது ஒரு கம்ப்ளீட் ஸ்டோரி ஆர்க் என்று கேள்விப் பட்டேன்; எனவே தான், அவற்றை ஒரே இதழாக வெளியிட முடியுமா என்ற விண்ணப்பம்!//

    கீழ்க்கண்ட ஆறு கதைகளையும், 250 ரூபாய் விலையில், சன்ஷைன் அறிமுக ஸ்பெஷலாக - கடந்த ஜனவரியிலோ அல்லது சம்மர் ஸ்பெஷலாகவோ வெளியிட்டு இருந்திருக்கலாம்; ஒரு முழுமையான தொடரை / கதையை படித்த திருப்தியில், தோர்கலுக்கு, சிறப்பான வரவேற்பு கிடைத்திருந்திருக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன!

    Sun Shine:
    1. The Sorceress Betrayed (released)
    2. The Island of Frozen Seas (released)
    3. The Three Elders of Aran (next issue)

    Brek Zarith story arc:
    4. The Black Galley
    5. Beyond the Shadows
    6. The Fall of Brek Zarith

    34+ பாகங்களில் சில தொடர் கதைகளும், சில தொடர்புடைய கதைகளும் இருக்கின்றன. முதல் இரண்டு இதழ்கள் தற்போது ஷன்ஷைனில் வெளியாகி விட்டன! மூன்றாவதை தனி இதழாக வெளியிட்டு விட்ட பிறகு; பாகங்கள் 4, 5 மற்றும் 6-ஐ ஒரு ஸ்பெஷல் இதழாக வெளியிடலாமே?

    முதல் மூன்றும் (1, 2 & 3) தோர்கல் பற்றிய அறிமுகக் கதைகள்; அடுத்த மூன்றும் (4, 5 & 6) ஒரே கதையின் பாகங்கள் (Brek Zarith story arc)! எனவே, அவற்றையும் பிரித்து வெளியிடுவது குழப்பத்தையே தரும் எ.எ.க.!

    that said,
    //ஆங்கிலத்தில் இது வரைப் படிக்க வாய்ப்புக் கிட்டா கதைகளையும் தமிழ் மூலமாவது படிக்க சாத்தியமாகிறதே என்று positive ஆக எடுத்துக் கொள்வோமே//
    +1

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : //முதல் இரண்டு இதழ்கள் தற்போது ஷன்ஷைனில் வெளியாகி விட்டன! மூன்றாவதை தனி இதழாக வெளியிட்டு விட்ட பிறகு; பாகங்கள் 4, 5 மற்றும் 6-ஐ ஒரு ஸ்பெஷல் இதழாக வெளியிடலாமே?//

      புதியதொரு தொடரை - அதுவும் சற்றே மாறுபட்ட கதை வரிசையினை எடுத்த எடுப்பிலேயே ஒரு collection ஆகப் போடுவது சரி வருமா என்ற தயக்கமே தோர்கலின் ஆரம்பத்துப் பாகங்களை ஒற்றை ஒற்றையாய் வெளியிட்ட பின்னணி. தொடரும் பாகங்களை 2015-ல் சந்தாவின் ஒரு அங்கமாக ஆக்கிடாமல் collectors edition ஆக வெளியிடுவது தான் எனது திட்டம். இந்த genre -ஐ ரசிக்க இயலா வாசகர்களுக்கு இதை வாங்காது உதறி விடும் சுதந்திரம் இருக்கும் !

      Delete
    2. Vijayan @ // 2015-ல் சந்தாவின் ஒரு அங்கமாக ஆக்கிடாமல் collectors edition ஆக வெளியிடுவது தான் எனது திட்டம்.//
      I jolly :-)

      Delete
    3. சார் , எப்படியோ தோர்கள் தொடர்ந்தால் போதும் ! தொகுப்பாய் வந்தால் நிச்சயம் கவரும் . இது வரை வந்தவை முன்னுரைதானே ! ரசித்தவர்கள் கூறும் போது நிறைவாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை ! கெட்டியான அட்டையில் இதன் வரவினை எதிர்நோக்கி ....

      Delete
  18. ஆறு கதைகளையும், 250 ரூபாய் விலையில் = தவறு!
    ஆறு கதைகளையும், 360 ரூபாய் விலையில் = சரி!

    :-) நடுநிசி இல்லையா? கணக்கு கொஞ்சம் சொதப்பி விட்டது! ;-)

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : ஆறு கதைகள் எனில் ரூ.300 க்கே கணக்கு ஓகே ஆகி விடும் !

      Delete
  19. மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வில்லர் விஜியின் நன்றிகள், 2013ல் 4 சொதப்பல்களுக்கு பிறகு 2014ல்தலையின் சூப்பர் ஹிட் ஓபனிங்கிற்கு பிறகு புது நம்பிக்கை வந்து விட்டது சார். காகித விலை விவகாரங்களில் உங்கள் நிலைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம் சார். விரைவாக ஒரு தீர்வு காண்பீர்கள் என்று நம்பிக்கை உண்டு சார். தோர்கல் விஷயத்தில் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் சார் வேறு வழி இல்லை. தோர்கல் தேறுவார் (?) என்று நம்புகிறேன் சார். இது என் கருத்து மட்டுமே சார் .

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : //2013ல் 4 சொதப்பல்களுக்கு பிறகு 2014ல்தலையின் சூப்பர் ஹிட் ஓபனிங்கிற்கு பிறகு புது நம்பிக்கை வந்து விட்டது //

      "நிலவொளியில் ஒரு நரபலியும்", "சிகப்பாய் ஒரு சொப்பனமும்" சொத்தப்பல்கள் என்று சொல்ல முடியாதே நண்பரே !

      Delete
  20. சமீபத்திய இதழ்களில் Shelton கதைக்கு பிறகு ஒரு super hit story நில்!கவனி!சுடு! மறுபதிப்புகளிலும் இது போன்ற bang! Bang கதைகளை எதிர்பார்க்கிறோம் ! சொல்ல மறந்தது இனிமேல் தங்களின் பதிவை offset modeல் blogல் post வேண்டவே வேண்டாம் ! Desktopல் படிக்கும்போதே கண் வலிஎடுதுவிடுகிறது mobileல் படித்தால் ....கடவுளே!!!

    ReplyDelete
  21. Comics kathalar thangavel ku Happy birthday . . Sollikiren

    ReplyDelete
    Replies
    1. Thangavel..Many more happy returns of the day..

      Delete
  22. மறுபதிப்புகள் குறித்து முன்பே பலமுறை விவாதிக்கப் பட்டுள்ளது!

    எந்த கதைகளை மறுபதிப்பு செய்தால் ஹிட் ஆகும் என்று அதை படித்தவர்கள் தானே சொல்ல முடியும்!

    கிடைப்பதற்கு அரிதாகி விட்ட ஹிட் கதைகளை மறுபதிப்பு செய்யலாம்!

    [ இந்த கதை வேணும்,
    இந்த கதை வேணாம்,

    லிஸ்ட் ரயில் மீண்டும் ஆரம்பம்! ]

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சாக்ரடீஸ் சொல்வதை நான் வழிமொழிகிறேன்.

      வண்ணமோ அல்லது கருப்பு வெள்ளையோ! எதுவாயிருப்பினும் பழைய வெற்றிக் கதைகளை மறுபதிப்பாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

      Delete
  23. டியர் எடிட்டர்
    நான் என்றுமே நமது காமிக்சை குறை கூற விரும்பியதில்லை. ஏனென்றால் காமிக்ஸ் தொடர்ச்சியாக வந்தால் போதும் என்று நினைப்பவன் நான். ஆனால் சமீப காலமாக சில நெருடல்கள் எனக்குள்ளே தோன்றுகிறது.
    டெக்ஸ் கதைகளைவிட சிறந்த கௌபாய் கதைகள் ஏராளமாக இவ்வுலகில் உள்ளது. ஆனால் இன்னும் டெக்ஸ் கதைகளை மட்டும் தொடர்ந்து தொங்கி கொண்டிருப்பது ஏன்? பல கௌபாய் கதைகளை ஆங்கிலத்தில் படித்தவன் என்ற முறையில் நான் கூறுகிறேன் டெக்சைவிட பல அற்புதமான கௌபாய் கதைகள் ஏராளமாக உள்ளது அதை ஏன் தாங்கள் முயற்சிக்க கூடாது. உங்கள் மனம் தொட்டு சொல்லுங்கள் டெக்சைவிட சிறந்த கௌபாய் தொடர் இல்லையென்று? வியாபார ரீதியில் தற்போது வந்த நில் கவனி சுடு கதையின் வடிவில், பக்கங்களின் எண்ணிக்கையில், விலையில் எந்தவொரு நாயகரின் கதை வந்தாலும் சக்க போடு போடும் என்பதில் ஐயமில்லை. அதுவே தரமான கௌபாய் கதைகளாக இருந்தால் நமது காமிக்சின் வெற்றி பன்மடங்கு உயரும் என்பதில் மாற்றுக் கருத்து யாருக்காவது உண்டா என்ன?

    இந்த மாதம் வந்த 3 கதைகளில் என் வரிசைப்படி 1) தோர்கல், 2)டெக்ஸ் 3) புருனோ பிரேசில்
    தயவுசெய்து இனிமேல் புருனோ பிரேசில் வேண்டாம்.

    எனது நண்பர் ஒருவர் இரவு 11 மணிக்கு போன் செய்து பேசினார், 2 ருபாய்க்கு விற்ற பழைய காமிக்ஸ்களை பலர் ஆயிரக்கணக்கான ருபாய்க்கு விற்கிறார்கள் என்று. இது சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. என்னிடமும் சிலர் இதுபற்றி பேசினார்கள், அதற்கு நான் கொடுத்த பதில் அச்சில் ஏற்ற முடியாதவை.

    என்னை பொறுத்தவரை இதுபோன்ற நபர்களை வளரவிடாமல் தவிர்க்க ஒரே வழி நமது காமிக்ஸ் கிளாசிக்கை தொடர்வதுதான். சந்தாவில் பழைய காமிக்ஸ்களை சேர்க்காமல் அதற்கென்று தனியாக ஒரு இதழை கொண்டு வந்தால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. நாம் காமிக்ஸ் படிக்குறோம் என்று தெரிந்தால் அதை கிண்டல் அடிக்கும் நபர்கள் நிறையே பேர் நம்மை சுற்றி உள்ளனர், ஆனாலும் அதையும் மீறி, நமது திரிப்திக்காக, சந்தோஷத்துக்காக தான் நாம் காமிக்ஸ் படிக்கின்றோம்.. நண்பர்களின் திரிப்திக்காக நாம் காமிக்ஸ் வாசிக்க வில்லை...So ரெண்டு ரூபாவில் வெளிவந்த புத்தகம், இன்று 60 ரூபாய்க்கு விற்கப்படுவதின் காரணம் பொருளாதார மாற்றம். மறுபதிப்பு புத்தகங்களின் விலை நமக்கு ஏற்புடையது இல்லையெனில் then நாம் மாறுவெளியீடு கோரிக்கைய தவிர்க்க வேண்டும், ஏனெனில் மாறுவெளியீடு வேண்டும், அதும் கலரில் வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைப்பது நாம் தான்..

      Delete
    2. //என்னை பொறுத்தவரை இதுபோன்ற நபர்களை வளரவிடாமல் தவிர்க்க ஒரே வழி//
      நாம் அவர்களின் பேச்சை காதில் வாங்கி கொள்ளாமல் இருப்பது தான் ஒரே வழி...
      அடுத்தவர் அடிக்கும் கிண்டல்களை நாம் ignore பண்ணிய காரணத்தினால் தான் இன்றளவும் காமிக்ஸ் காதலர்ககளாக உள்ளோம்....

      Delete
    3. //நான் என்றுமே நமது காமிக்சை குறை கூற விரும்பியதில்லை. ஏனென்றால் காமிக்ஸ் தொடர்ச்சியாக வந்தால் போதும் என்று நினைப்பவன் நான்.//
      +1111111

      Delete
    4. Mugunthan kumar : //டெக்ஸ் கதைகளைவிட சிறந்த கௌபாய் கதைகள் ஏராளமாக இவ்வுலகில் உள்ளது. ஆனால் இன்னும் டெக்ஸ் கதைகளை மட்டும் தொடர்ந்து தொங்கி கொண்டிருப்பது ஏன்? //

      ஆசையும், ஆதங்கமும் மட்டுமே சில நேரங்களில் பயன் தருவதில்லையே !! நீங்கள் இங்கு நடைமுறையில் பார்க்கும் கதைத் தொடர்கள் 10 என்றால் - நான் திரைக்குப் பின்னே ஓசையின்றி முயற்சித்து வருவது 50 கதைத் தொடர்களுக்கு ! ஆனால் ஒவ்வொரு படைப்பாளியின் எதிர்பார்ப்பும், ராயல்டி டிமாண்ட்களும் விதம் விதமானவை ! நம் போன்ற சிறு சர்குலேஷன் இதழ்களுக்கு உள்ள சிரமங்களைப் புரிந்து கொண்டு கரம்கோர்க்க சம்மதிப்போரைத் தாண்டிய நிறுவனங்கள் தான் பெரும்பான்மை என்பது யதார்த்தம் !

      Delete
  24. Yes ennidame oru Nanbar Dragon Nagaram ithalai 4500/-rs ku tharugiren endrar... Ennavae Comics Classicsil reprint kuduthal anaithu comics rasigarkum santhosham than .... Reprint Black and white il vanthalum paravaillai coloril than tharuven endru thukada kathaikagalai podamal unmaiyil hit aditha classics konduvanthal nanraga irukum...

    ReplyDelete
  25. டியர் ஆல்!
    மறுபதிப்பு என்று பழைய பாயில் என்னதான் உருண்டு புரண்டாலும் நம்மை கடந்துவிட்ட பழைய காமிக்ஸ் புத்தகங்களுடன் பின்னி பிணைத்திருக்கும் இளமைகால இன்ப உணர்வுகளை மீட்டெடுக்க முடியாது. wintage புத்தகங்கள் புதிய மையில் புதிய தாளில் காணும் போது அது அந்த பழைய கிளாச்சிக் உணர்வுகளை பாலாக்குவதற்கே பெரும்பாலும் உதவுகின்றது. இந்த கருத்தை இங்கே சொல்வதற்கு நிறைய வாங்கிக்கட்டி கொள்வேன் என்றாலும் ஒன்றை நான் தெளிவுபடுத்திவிடுகிறேன். பழைய புத்தகங்களை பெரும்பாலும் அந்த வயதில் படித்திருக்கிறேனோ தவிர எதும் தற்போது கையில் இல்லை.

    //அதிலும், இந்த சாகசத்தின் ஓவியர் இத்தலைமுறை டெக்ஸ் கதைகளுக்கு தீவிரமாய்ப் பணியாற்றும் ஓவியர் எனும் போது - we are bound to see more of him !//
    ஐயையோ , இன்னமுமா ?? நம்ம ஹிரோக்கள் தான் ஹீரோயின்களுடன் close-up ஷாட் களில் சொதப்புவார்கள் என்று பார்த்தல் இந்த ஓவியர் சொதொப்போ சொதப்பு என சொதப்புகிறார். பழைய பொன்னி காமிக்ஸ் ஓவியர் இந்த விதத்தில் பரவாயில்லை! ஏன் சார் இவர் முகங்களை வரையும் போது இவ்வளவு திணறுகிறார். நார்மல் frame மில் மனிதர் கலக்குகிறார். என்னுடய அட்வைஸ், இவரது படைப்புகளை நம்மால் avoid செய்யமுடியாது எனும்போது closeup காட்சிகளை எடிட் செய்து தூக்கிவிடுவது ஒரு சிறந்த வழி. டெக்ஸ் முகத்தை இவ்வளவு கோனாங்கி தனமாக பார்பதற்கு மனம் ஒப்பவில்லை.

    தோர்கல் பற்றி என்னுடைய விமர்சனம் சென்ற பதிவில் இட்டிருந்தேன். உங்கள் கருத்து எனதை பெரும்பாலும் ஒத்துபோகிறது சார். மீண்டும் இங்கே ஒரு மீள் பதிவு








    விஸ்கி-சுஸ்கி26 April 2014 15:42:00 GMT+5:30

    தோர்கலின் இரண்டாவது புத்தகமான இந்த "பனிக்கடலில் ஒரு பாழும் தீவு" ,இதற்கு முந்தய கதையான "வஞ்சிக்கப்பட்ட வசியக்காரி"யின் தொடர்ச்சி.

    புத்தகத்தின் ஆரம்பத்தில் "பனிக்கடல் அரசி ஸ்லீவ் அந்த பனிப்ரபிரதேசத்தை விட்டு சென்று பத்து வருடங்களை கடந்த பின்" என்பதை போல் ஒரு பிணைப்பு வாக்கியத்தை கொடுத்திருக்கலாம்.

    இந்த கதையில் "தோர்கல் ஏஜிர்ஸ்ன்" னின் பெயர் காரணமும் தோர்கலின் ஆதி,தோற்றம் பற்றியும் மேலோட்டமாக ஒரு introduction கொடுக்கப்படுகிறது. அதனால் இந்த தொடரில் இது ஒரு முக்கிய புத்தகமாக கருதப்படும். இந்த plot'டை மையமாக கொண்டு இனி கதை விரிவடையும் போல தெரிகிறது.

    முதல் புத்தகத்தை படித்தபிறகும் இந்த தொடரின் மேல் ஒரு பிடிப்பு வராமல் இருந்தது. இந்த கதை அழகாக கதையின் மையத்தின் மேல் நம்மை loose ஆக wrap செய்து விடுகிறது. இந்த பிணைப்பின் இறுக்கம் இன்னமும் வலிமையாக இல்லை எனபது என் கருத்து.

    இரண்டு புத்தகங்களை கடந்தபின்னும் சிலருக்கு தொடரின் மேல் ஒரு பிடிப்பு வராமல் இருக்கலாம்.அதற்கு தோர்கல் இன்னமும் ஒரு சாமான்யனாக சித்தரிக்கப்படுவது காரணமாக இருக்கலாம்.இன்னொன்று பெரிதாக ஒரு large scale action sequence இல்லாததும் காரணமாக இருக்கலாம்.ஹீரோக்களுக்கு உரிய சில supernatural சக்திகள் தொர்கலிடம் இருந்து வெளிப்படுவதாக காட்டி,கதையின் முடிவில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தால் இன்னமும் தொடர் ரசிக்கப்படும். ஒரு வலுவான good vs evil backbone plotடும் இதுவரை கதாசிரியர் வெளிப்படுத்தவில்லை.இதுவே இந்த தொடருக்கு ஒரு weakness ஆகா அமையலாம்.

    நாம் பொறுமையாக இருந்தால் இன்னமும் இரண்டு முன்று புத்தகங்களை கடந்தபின் இவற்றுக்கான விடைகள் நமக்கு விளங்கும் போல தெரிகிறது. express வேக லார்கோ யுகத்தில் தோர்கல் தொடரை உள்வாங்க நம் வாசகர்கள் சற்றே சிரமப்பட வேண்டியிருக்கும்.

    ஓவியங்கள் கலைநயத்துடன் இருந்தாலும் கலரிங் சற்றே let-down ஆக படுகிறது. பிரிண்டிங் தரம் நன்றாக உள்ளது என்றாலும் முன்னேற்றத்துக்கு இன்னமும் இடம் உள்ளது.

    மொழிபெயர்ப்பு அற்புதம்.குறை சொல்ல முடியாத பணியை ஆசிரியர் மீண்டும் செய்துள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. இத்தொடரில் Thorgal ஒரு சாகச ( adventure ) விரும்பி. அவனது வாழ்வின் சூழ்நிலைகள் அவனை வெவ்வேறு சாகசங்களுக்கு இட்டுச் செல்லும். அவனை சுற்றிலும் உள்ளவர்கள் - மகன், மகள் உட்பட - அதீத சக்திகள் பல கொண்டவர்கள் - இவைகள் வெளிவரும் இடங்கள் ரசிக்கத் தக்கவை.

      Good vs Evil என்பதைக் காட்டிலும் Thorgal vs His Universe என்ற ரீதியில் ஆன தொடர் இது - இதில் அவனுக்கு நண்பர்களும் உண்டு, பகைவர்களும் உண்டு, பகைவர்கள் நண்பராவதுண்டு, நண்பர்கள் துரோகம் செய்வதுண்டு, அதிரடி சாகசங்கள் உண்டு, நெஞ்சைக் கிள்ளும் சோகங்களும் உண்டு - எல்லாம் கலந்த ஒரு adventure series !

      கண்ணைப் பறிக்கும் அசாத்திய சித்திரங்கள் காத்திருக்கின்றன!

      எனது ஒரே கேள்வி - இது 'வழ வழா' ஆர்ட் பேப்பரில் வரவேண்டிய கதையா என்பதுதான். உயர்தர 'வழ வழா' அல்லாத தாளில் வண்ணத்தில் இன்னும் சிறக்குமோ என்ற எண்ணம் ஏற்படாமலில்லை !

      Delete
    2. 'ஆலிநோ' என்ற அற்புதமான, அதிவேக 'திகில்' கதை கூட உண்டு - நான் படித்த சிறந்த திகில் கதைகளில் இதுவும் ஒன்று!

      Delete
    3. விஸ்கி-சுஸ்கி //மறுபதிப்பு என்று பழைய பாயில் என்னதான் உருண்டு புரண்டாலும் நம்மை கடந்துவிட்ட பழைய காமிக்ஸ் புத்தகங்களுடன் பின்னி பிணைத்திருக்கும் இளமைகால இன்ப உணர்வுகளை மீட்டெடுக்க முடியாது. //

      +101

      Delete
  26. ஒரு மறுபதிப்பு படலம் :-)

    இம்மாத புத்தகங்கள் பற்றி:

    டெக்ஸ் கதை விறுவிறு - இது நமது கோல்டன் years கதைகளுடன் ('87 circa) களமிறங்கி இருக்குமெனில் இந்நேரம் ஒரு classic ஆகி விட்டிருக்கும். எனது பிரதி அச்சுக் குறைகளை இல்லாமல் இருந்த போதிலும் சில காகிதங்கள் மஞ்சளாய் இருந்ததை ஏற்கனவே கூறிவிட்டேன்.

    Thorgal - ஆங்கில தார்கல் அனைத்தும் (இது வரை வந்தவை) படித்து விட்ட படியால் - இக்கதைக்கும் அவைகளுக்கும் உள்ள தொடர்பு புரிந்த படியால் - எனக்குப் பிடித்தது. ரசித்திட முடிந்தது.

    எனினும் ஓவியங்கள் மற்ற ஹிட்டடித்த கதைகளைவிட ஒரு அளவு குறைவுதான். ஆங்கிலத் தோர்கல் volume 2 முதலாய் இக்கதைகள் பல வாசகர்களுக்கு பிடிக்க ஆரம்பிக்கும் - 80 N கருத்து ...!

    புத்தகத்தில் அச்சுப் பிழைகள் - எழுத்துப்பிழைகள் - ஓரிரு இடங்களில் - proof readingல் கவனம் வேண்டும் - மறுவரவு ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டதல்லவா?

    ப்ருனோ பிரேசில் - சரியான ஜெய்ஷங்கர் கதை :-D இனிமேல் வேணாம் சாமி - முதல் வெளியீட்டில் 1987'ல் இது நம்மை நிச்சயம் கவர்ந்தது தான் - ஆனால் இப்போ ? விக்ரம் (கமல் படம்) படத்தை multiplex-ல் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது பீலிங் ! இதுல பழைய கதைகளின் reprint வேறையா? ... வேணாஞ்சாமி !!! இக்கதைகளுக்கான காலம் கடந்து விட்டது. இவர் சூப்பர் ஹீரோவும் அல்ல என்பதால் இவை பழமையாய்த் தெரிகின்றன 80 N கருத்து !

    ReplyDelete
    Replies
    1. Raghavan : //ப்ருனோ பிரேசில் - சரியான ஜெய்ஷங்கர் கதை :-D இனிமேல் வேணாம் சாமி - //

      காலச் சக்கரமானது ஜெய்ஷங்கருக்கும் சரி ; முதலைப் பட்டாளத்திற்கும் சரி - துளி வேறுபாடும் காட்டுவதில்லை என்பது புரிகிறது !

      Delete
  27. Thorgal பற்றிய கார்த்திக்ன் கருத்துடன் எனக்கு ஒப்புதல் உண்டு. அடுத்த நான்கு கதைகள் அனைவரையும் கவரக்கூடும் - Three Elders of Aran தனியாகவும் மற்ற மூன்றும் ஒரு தொகுப்பாகவும் வந்தால் ஹிட் அடிக்கும்.

    ஆனால் thorgal முதலிரண்டு புத்தகங்கள் பெற்ற வரவேற்பை வைத்து ஒரு தொகுப்பு வெளியிடும் அளவு நம்பிக்கை / ஆர்வம் வந்து விட்டதா என்பது நிச்சயப்படுத்திவிட்டால் இதை செய்து பார்க்கலாம் !

    ReplyDelete
    Replies
    1. Raghavan : அடுத்தாண்டிற்கு தோர்கல் கதை வரிசைகளுக்கொரு சிக்கல் தராத் திட்டம் வைத்துள்ளேன். நிச்சயமாய்த் தொடரும் - நெருடல்களின்றி !

      Delete
  28. நண்பர் முகுந்தன் அவர்கள் மேல் சொன்ன இரண்டு கருத்துகளையும் 100 சதவீதம் ஒத்து கொள்கிறேன் .ஆனால் தூக்க கலக்கதிலா என தெரிய வில்லை .ஒரு வாக்கிய பிழை அமைத்து விட்டார் .அதன் பிழை திருத்தி கீழே ....

    சார் ..டைகர் கதைகளை விட சிறந்த கௌ பாய் கதைகள் ஏராளமாக இவ்வுலகில் உள்ளது.ஆனால் இன்னமும் வரலாற்று புத்தகத்தை படித்தால் பாதியில் தூக்கம் வந்து மூடி வைக்கும் எண்ணம் வருவது போல இருக்கும் டைகர் கதைகளை இன்னமும் தொங்கி கொண்டு இருப்பது ஏன் ?பல ஆங்கில கௌ பாய் கதைகளை நான் படித்ததில்லை என்றாலும் தாங்கள் படித்து இருப்பீர் என்ற நம்பிக்கையில் வினவுகிறேன் டைகர் கதைகளை விட பல அற்புதமான கௌ பாய் கதைகள் உள்ள போது அதை ஏன் தாங்கள் முயற்சிக்க கூடாது .( உடனே மின்னும் மரணம் ..,தங்க கல்லறை என்று சொல்லி போரடிகாதீர் ..அது வெற்றி பெற்று மீண்டும் டிஜிட்டல் முறையில் பார்த்தாயிற்று & பார்க்க போகிறோம் )உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் டைகர் கதையை விட சிறந்த தொடர் இல்லை என்று ...?வியாபார ரீதியில் நில் கவனி சுடு போல பல சிறந்த டெக்ஸ் கதைகள் வெற்றி பெறுவதை போல மற்ற நாயகர்களும் வெற்றி பெறுவார்கள் டைகரை தவிர ..அப்படி இருக்கும் அது தரமான "டெக்ஸ் " கதைகளை போல இருக்கும் மற்ற கௌ பாய் கதைகள் வந்தால் நமது வெற்றி பன்மடங்கு உயரும் என்பதில் யாருக்காவது மாற்று கருத்து உண்டா என்ன ...?.

    ReplyDelete
    Replies
    1. டைகர் கதைகளை திரும்ப படிக்கும் எண்ணமே வருவதில்லையே ஏன்




      டைகர் கதைகளை திரும்ப படிக்கும் எண்ணமே வருவதில்லையே ஏன்?

      Delete
    2. போராட்டக் குழுத் தலைவரின் ரசிக்கத்தக்க பதிலடி!! :)

      Delete
  29. தல டெக்ஸ் கதைகளை நீங்கள் தவிர்த்தால் கண்டிப்பாக இங்கு ஒரு பிரளயமே ஏற்படும்!!! ஏனோ லக்கியை ரசிக்க முடிந்த அளவு வுட் சிட்டி கோவை ரசிக்க இயலவில்லை!! ஜானி , டைகர் ஒரு சில கதைகளில் வெளுத்து வாங்கினாலும் சில கதைகளில் வெளுத்து போகிறார்கள்!!

    ReplyDelete
    Replies
    1. balaji ramnath : டெக்சின் கதைகளைத் தவிர்க்கப் போவதாய் நான் எப்போ சொன்னேன் நண்பரே ?

      Delete
    2. தல நீங்க சொல்லல மிக மிக சிலர் டெக்ஸ் வர விடாமல் தடுக்க சதி செய்வதாக பட்சி கூறியதால் ஒரு PRE போஸ்ட் ..

      Delete
  30. இன்று பிறந்த நாள் கானும் தங்கவேல் அவர்களுக்கு என் மனமர்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. டியர் எடிட்டர்ஜீ!!!

    நண்பர்கள் கருத்து எதுவாயினும் "முகமற்ற கண்கள்"மறுபதிப்பு அடியேனை கவரவே செய்தது.1987-இல் இந்த புத்தகத்தை குமாரபாளையத்தில் ஒரு சிறு பெட்டிக்கடையில்யில் வாங்கி படித்தது ஞாபகம் இருக்கிறது.அப்போது நான் 9-th படித்துக் கொண்டிருந்தேன்.
    நமது புத்தகங்கள் தவறாமல் கிடைக்கும் என்பதால் டெய்லி ஒரு முறையாவது அங்கே ஆஜர் ஆகிவிடுவேன்.கடைக்கு அருகிலேயே ஒரு குதிரை லாயம் இருக்கும்.குதிரை வண்டிகளும் நின்றுகொண்டிருக்கும்.
    பவானிக்கும்,குமாரபாளையத்திற்கும் இடையே குதிரைவண்டி போக்குவரத்து நடந்த காலம் அது.நமது காமிக்ஸ்கள் ஆகட்டும் அல்லது மதுரையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த பொன்னி காமிக்ஸ்,மாயஜால கதைகள் ஆகட்டும் எதையும் விட்டுவைக்காமல் வாங்கி பள்ளிக்கே எடுத்துசென்று ஆசிரியர் இல்லாதபோது எடுத்து சக நண்பர்களோடு படித்தது ஒரு இனிய அனுபவம்.வில்லியம் வான்ஸின் ஆர்ட் ஒர்க் -ஒன்று போதுமே சுமாரான கதையையும் போனி செய்ய!

    ReplyDelete
    Replies
    1. saint satan : இம்மாத நண்பர்களின் பின்னூட்டங்களில் ஒரு முக்கிய விஷயத்தை கவனியுங்களேன்...!

      சுமாரான சித்திரங்கள் கொண்ட டெக்ஸ், வலுவான கதையின் தோளில் சவாரி செய்து சுலபமாய் வெற்றி காண்கிறது ! ஆனால் அற்புத சித்திரங்கள் கொண்ட "முகமற்ற கண்கள் " - கதையின் மெல்லியதன்மையால் தடுமாறுகிறது !!

      Delete
  32. //"முகமற்ற கண்கள்"மறுபதிப்பு அடியேனை கவரவே செய்தது.//
    +1

    ReplyDelete
  33. அன்பு ஆசிரியர் அவர்களே,

    "KAUN BANEGA COMPLETE TRANSLATOR ? போட்டி ஒன்றை அறிவித்து இந்த இதழை முழுமையாய் - தற்போதைய லக்கி பாணிக்கு ஒத்து வரும் விதத்தில் வாசக நண்பர்கள் மொழிபெயர்க்க ஒரு வாய்ப்பளித்தால்"

    - இதற்கு என்னுடைய மிகப்பெரும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சித்திரமோ, கதையோ, பேப்பரோ எது எப்படி இருந்தாலும் ஏறத்தாழ முப்பது வருடங்களாக நான் பெரிதும் ரசிப்பது உஙகளுடைய வசன நடையைத்தான். கடந்த சில மாதங்களாக வாசக நண்பர்களின் மொழி பெயர்ப்பில் வரும் சிலவற்றை என்னால் ஏற்கவும் இயலவில்லை. ரசிக்கவும் முடியவில்லை. (அவைகள் எவ்வளவுதான் நன்றாக இருந்த போதும் கூட...)

    கதைகள் பற்றிய தேர்வுகளுக்காக ஒரு யோசனை (ஏற்க வேண்டிய அவசியமில்லை) வேண்டுமானால் நீங்கள் கேட்கலாம். மற்றபடி ஒரு முழு கதையை மொழிபெயர்ப்புக்காக என்று .... எனக்கு பிடிக்கவில்லை.

    மேலும் நமது இதழ்களின் வியாபாரம் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியும். இங்கே வலை தளத்தில் திரும்பத் திரும்ப ஒரு 50 பேர்கள் மட்டும் தான் தொடர்ச்சியாக வருகிறார்கள். மௌனமாய் வலைதளத்தில் உலாவுபவர்கள், இங்கே வர இயலாதவர்கள், இதைப்பற்றி அறியாதவர்கள், பயன்படுத்த தெரியாதவர்கள் என்று பல வகையினர் இருக்கின்றார்கள். அவர்களின் ஒட்டு மொத்த சார்பாய் நான் வேண்டுகிறேன். தயவு செய்து வேறு மொழிபெயர்ப்பாளர் வேண்டாம்.

    துக்ளக் பத்திரிகை படிப்பவர்கள் சோ அவர்களுக்காகத்தான் படிப்பார்கள்.
    ரஜினி படங்களில் வேறு நடிகர்கள் ஹீரோவாக நடித்தால் ஓடாது.

    அது போல, நமது காமிக்ஸ் நான் வாங்குவதும், படிப்பதும் உங்கள் வசன நடைக்காகத்தான்.

    மற்றபடி பேப்பர் பழுப்பாய் இருக்குதா - எனக்கு ஓகே. வெள்ளையாய் இருக்குதா - அதுவும் சரிதான்.

    கலர் பிரிண்ட் - கருப்பு அச்சு - அது பற்றி கவலையில்லை.

    விலை - அது பற்றியும் கவலையில்லை.

    இதழ் தாமதமாகிறதா? - வரும்போது வரட்டும். எப்பொழுது வந்தாலும் வாங்கிக் கொள்கிறோம்.

    பழைய பதிப்பா - புதிய கதையா - எப்படியானாலும் காமிக்ஸ் வர வேண்டும்.

    ஆனால் வேறு மொழிபெயர்ப்பாளர் மட்டும் வேண்டாம்... வேண்டாம்... வேண்டாம்... வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. ...ம் மறந்து விட்டேன். பலுன் நிறைய வரும் டயலாக்குகள் தான் என்னை எப்போதும் கவருமே தவிர, வெறும் டமால், டுமீல்கள் அல்ல.

      என்ன, எங்காவது பாடல்கள் அல்லது கவிதைகள் என்றால் நீங்கள் எடுத்து விடும் பாடல்கள் தான் கொஞ்சம் பிய்த்துக் கொள்ள வைக்கும்.

      எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. கார்சனின் கடந்த காலம் - கதையில் கதையின் டெம்போவை குறைத்தது அதில் வந்த பாடல் வரிகள் தான்...

      மற்றபடி அதில் வந்த கண்ணியமான காதல் உணர்வுகள் உங்கள் எழுத்தில் (மொழிபெயர்ப்பில்) மிளிர்ந்தன.

      Delete
    2. டியர் வெங்கட்!!!

      உங்கள் வாதம் 100% ஏற்கக்கூடியது.இப்படியே இது தொடர்ந்தால் ஒருநாள் நம்ம எடிட்டர் "kaun banega complete editor" என்று நம் தலையில் எல்லா பொறுப்பையும் ஒப்படைத்து "எஸ்"ஆகிவிடுவார்.நண்பர்களே.உஷார் ;-)

      Delete
    3. S.V.Venkateshwaran & saint satan : துக்ளக் சோ சார் அவர்களோடோ, வேறு ஜாம்பவான்களோடோ நம்மை ஒப்பிடுவதெல்லாம் டூ மச்சோ மச் !

      மாற்றங்கள் வேண்டாமென்பது தவறில்லை ; ஆனால் நல்ல மாற்றங்களும் வேண்டாம் என்பது ?

      Delete
  34. //பழைய பதிப்பா - புதிய கதையா - எப்படியானாலும் காமிக்ஸ் வர வேண்டும்.//
    //மற்றபடி பேப்பர் பழுப்பாய் இருக்குதா - எனக்கு ஓகே. வெள்ளையாய் இருக்குதா - அதுவும் சரிதான்//
    //விலை - அது பற்றியும் கவலையில்லை.//
    +11111111111

    ReplyDelete
  35. டெக்ஸ் வழக்கம் போல் பிரமாதம்...

    முகமற்றகண்கள் ரசிக்க நிறைய விஷயங்கள் இருக்கும் கதை...

    தோர்க்கல் ம்ம்ம் சாரி நோ கமெண்ட்ஸ்

    மாடஸ்டி கதைகலின் மறுபதிப்புகள் (கத்தி முனையில், இஸ்தான்புல்) வேதாளர் கதைகளின் மறுபதிப்புகள்

    ஓரளவு எங்களை திருப்தி செய்யும்

    ReplyDelete
    Replies
    1. Senthil Madesh : தோர்கல் கதைகளும் உங்களுக்குப் பிடிக்கும் நாள் தொலைவில் இல்லை ..எஞ்சியுள்ள கதைகளைப் படித்த தைரியத்தில் தான் இதைச் சொல்கிறேன் !!

      Delete
  36. 'மாடஸ்டி கதைகலின் மறுபதிப்புகள் (கத்தி முனையில், இஸ்தான்புல்) வேதாளர் கதைகளின் மறுபதிப்புகள்'

    +11111111111111111

    ReplyDelete
  37. //2 ருபாய்க்கு விற்ற பழைய காமிக்ஸ்களை பலர் ஆயிரக்கணக்கான ருபாய்க்கு விற்கிறார்கள் என்று/
    கெட்டதில்லும் ஒரு நல்லது நடந்துள்ளது என்று சந்தோசப்படலாம்
    இதைக் கேள்விப்படும் எத்தனையோ பேர் வாய் பிளக்கிறார்கள். நம்மிடம் இருந்த புக்ஸை கிலோகணக்கில் போட்டு விட்டோமே என்று அங்கலாய்த்தவர்கள் எத்துனை பேர்

    ReplyDelete
    Replies
    1. R.Anbu : எடைக்குப் போட்டோர் பட்டியலில் நீங்களும் உண்டா நண்பரே ? :-)

      Delete
  38. டியர் எடிட்டர்,
    இந்த மாத டெக்ஸ் வில்லர் பட்டய கிளப்பிட்டார். அதிலும் அந்த க்ளைமாக்ஸ் தூள், மொழி பெயர்ப்பும் மிக மிக அருமை. குறிப்பாக கார்சனிடம் டெக்ஸ் சொல்லும் அந்த வசனம் "காலம் கற்று கொடுப்பதை நிறுத்துவதே இல்லை" பிரமாதமான வரிகள். ட்ராகன் நகரம் போன்று நல்ல வலிமையான வில்லன்கள் கதையின் பலம்.
    ப்ருனோ கதை படங்கள் பெரியதாக இருந்தது தான் ஒரிஜினளுக்கும் மறுபதிப்புக்கும் உள்ள வித்தியாசம், மற்ற படி படங்கள் இரு வண்ண படங்கள் போல தான் இருந்தது.
    தோர்கள், இன்னமும் அவர் ஏதும் சாகசம் என்று எதுவும் செய்தது போல தெரிய வில்லை. அந்த தோர்கள் ஸ்டைல் அட்டைப்படமும் போட்டோ போல் உள்ளதால் காமிக்ஸ் புக் போல் தோன்ற வில்லை.
    ஆனால் அனைத்திற்கும் சேர்த்து டெக்சும் கார்சனும் கலக்கி விட்டனர்.தேங்க்ஸ் எடிட்டர் சார். கூடிய விரைவில் ஸ்பைடரை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. குற்றச் சக்கரவர்த்தி : //ட்ராகன் நகரம் போன்று நல்ல வலிமையான வில்லன்கள் கதையின் பலம்.//

      வலுவானதொரு பாய்ன்ட் !! சமீபத்து டெக்ஸ் கதைகளில் வில்லன்கள் அனைவருமே உப்மா கோஷ்டிகளாய் இருந்ததால் தான் டெக்சும் மிளிரவில்லை ! எதிராளிகள் மூர்க்கமாய் நிற்கும் போதே நம்மவரின் ரௌத்திரம் தூக்கலாய் வெளி வருகிறது !

      Delete
    2. குற்ற சக்கரவர்த்தி விரைவில் நமது பதிப்பில் வருவார் என்று காத்திருக்கும் ஆயிரம் பேர்களில் நானும் ஒருவன்!!! இவன் டெக்ஸ் மற்றும் லக்கி , டயபாளிக் வெறியன்..

      Delete
  39. டெக்ஸ் வில்லர் "நில் கவனி சுடு " வெற்றிக்கு ஒரே அத்தாட்சி இரவு படித்த இந்த இதழை இன்று மீண்டும் இப்பொழுது படிக்க கையில் எடுக்க போகிறேன் .சூப்பர்.நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய டெக்ஸ் சாகசம் ட்ராகன் நகரம் ..,கழுகு வேட்டை படித்த திருப்தியை கொடுத்தது .சித்திரம் எனக்கு ஏமாற்றம் அளிக்க வில்லை என்றாலும் கழுகு வேட்டை ..,ட்ராகன் நகரம் போல இதில் அவர் உருவம் இருந்திருந்தால் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும் என்ற எண்ணமும் மனதில் ஓரத்தில் வராமல் இல்லை .மற்றபடி அட்டைபடம் ..,அச்சு தரம் ..,அருமையான கதை என 100 %முழு திருப்தி தந்த புத்தகம் ....மீண்டும் அடுத்த "டெக்ஸ் " எப்பொழுது என்ற ஆவலை ஏற்படுத்திய இதழ் ...

    "முதலை பட்டாளம் " ஏற்கனவே படித்த இதழ் மற்றும் கைவசம் உள்ள இதழ் என்றாலும் வண்ணத்தில் மீண்டும் படிக்க ஆரம்பித்தேன் .எனக்கு என்னவோ போரடிக்க வில்லை .நன்கு ரசித்தேன் .முடிவு தான் "சப் " என்று முடிந்தது போல ஒரு தோற்றம் .

    தோர்கள் .............. " ஹி ...ஹி ....." என்று சொல்லுவதை தவிர வேறொன்றும் சொல்ல தோன வில்லை.

    மொத்தத்தில் ஓட்ட பந்தயத்தில் முதல் இடத்தை எப்பொழுதும் போல "டெக்ஸ் "அவர்கள் பிடித்து கொள்ள ....ப்ருனோ ஓடி வருவது கண்ணுக்கு தெரிய ....தோர்கள் வருவதை கண்களை குவித்து தேடி கொண்டு இருக்கிறோம் .

    ReplyDelete
  40. மறுபதிப்பு பற்றிய கருத்து:
    இதே போல் நம்மிடம் பல பல முறை என்ன புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டு விட்டு தன் இஷ்டம் போல மறுபதிப்பு செய்வது புதுசு அல்லவே!!!
    இவை அனைத்தும் செவிடர் காதில் ஊதும் சங்கென கொள்க!!!
    அனைவரின் கருத்தும் ஒன்றாக இருப்பினும் வர போவது சமீபமாக வந்த வேறொன்று தானே. நமக்கு தான் ரசனை பத்தாது அதனை புரிந்தும் ரசிக்கவும்!!! :(
    அப்புறம் எதுக்கு மாஞ்சு மாஞ்சு கூவிக்கிட்டு...
    நமது ரசனைகளை தோர்கல் கதையை (தாங்கல பாஸ்!!! வேணாம் விட்டுடுங்க!!!) ரசிக்க மாற்றி கொள்ளலாமே!!! (நமக்கு விரும்புவது கிடைக்கலைனா கிடைச்சத விரும்ப வேண்டியது தானே!!!)
    எனவே இந்த ஜய வருடம் முதல் அது வேணும் இது வேணும் என்று அடம் பிடிக்காமல் வருவதை படிக்க பழகி கொள்வோமே நண்பர்களே :P
    மேலும் ஒரு கெஞ்சல் வேண்டுகோள்: புத்தகம் அழுக்கு, பழுப்பு, கிழிசல் கலர் டல் என்று எல்லாம் குறை கூறாதீர்கள், எங்களுக்கு தரம் எப்படி இருந்தாலும் கிழிந்தோ, கிழியாமல் இருந்தாலும் காமிக்ஸ் வெளி வருவது தான் மிக மிக முக்கியம்... அதன் கலரோ கதையோ முக்கியம் அல்ல அல்ல!!! அவ்வாறு எல்லாம் குறை சொல்லி யாரையும் புண் படுத்தாதீர்கள்!!! (ஹாவ் எவ்வளோ தடவ தான் பாஸ் இதையே சொல்றது!!! சொல்லி சொல்லி அலுத்து போச்சு போங்க பாஸ்!!!) பல முறை சொல்லி பார்த்து அலுத்தும் வெறுத்தும் போன பல பேர் இங்கு மௌன பார்வையாளர் சங்கத்தில் மட்டுமே...
    இதுல்லாம் ஒரு டைம் பாஸ் னு நெனச்சு போங்க boss!!!
    'கேட்டது கிடைத்தது' என்பது பதிவின் தலைப்பாகவாவது இருப்பதில் கிடைக்கும் சந்தோஷமே காமிக்ஸ் ரசிகர்களான எங்களுக்கு போதும் சார்... நன்றி இறைவா இந்த சந்தோசத்தை எங்கள் அன்பின் ஆசிரியர் தந்ததற்கு!!! என்றும் உங்கள் வழியில்...

    ReplyDelete
    Replies
    1. நவீன வள்ளுவன் ஒவ்வொரு வார்த்தைகளும் சாட்டையடி..... பலருக்கு உறைத்திருக்கும்
      ஆனாலும் உறைக்காத மாதிரி நடிப்பார்கள்....
      அட்டைபடம் தவிர அனைத்து பக்கங்களும் வெள்ளைத்தாளாக இருந்தாலும் சில நண்பர்களின் கமெண்ட் இப்படித்தான் இருக்கும்.

      (ஈரோடு விஜய்) இந்த மாதிரி புத்தகம் வருவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கையில் எடுத்த புத்தகத்தை கீழே வைக்க மனம் வரவேயில்லை. வீட்டில் உள்ள பெண்கள் மளிகை லிஸ்ட் எழுதவும், குழந்தைகள் படம் வரைந்து விளையாடவும் அனைத்து பக்கங்களையும் காலியாக விட்ட ஆசிரியரின் செய்ல் பாராட்டுக்குரியது.
      (முகுந்தன்) டைகர் அளவுக்கு இல்லாவிட்டாலும் ரொம்ப அற்புதமான கதை. எனக்கு காமிக்ஸ்ன்னு பெயர் போட்டு எது வந்தாலும்போதும். இந்த புக்கை யாராவது 120க்கு வாங்கி 2 லட்சத்திற்கு விற்பனை செய்திடுவாங்களோன்னு பயமா இருக்கு. அதனால வேறு கதைகள் எதையும் போடாமல் தொடர்ந்த இதையே மறுபதிப்பா வெளியிட்டு வருமாறு ஆசிரியரை கேட்டுக் கொள்கிறேன்.
      (பொன்ராஜ்) மொழிபெயர்ப்பு அருமை. வசனங்கள் வளவளவென்று இல்லாமல் மௌனமே பல ஆயிரம் கதைகளை கூறியது. பொக்கிசமாக பாதுகாக்க வேண்டிய இதழ். உடனடியாக ஆசிரியர் இதை மறுபதிப்பு இட வேண்டும்.
      (பரணிதரன்) இந்த புத்தகத்தை தயாரிக்க கதையை தேர்வு செய்தவிதம், இந்த கதையை வாங்க ஆசிரியர் பல வெளிநாடுகளுக்கு வருடக்கணக்கில் சுற்றி வந்தது ஆகியவற்றை தொகுத்து சிசிவ புத்தகமாக வெளியிட வேண்டும். இல்லையென்றால் போராட்டக்குழு உடனடியாக போராட்டத்தை தொடங்கும்.
      (ரமேஷ்குமார்) புத்தகம் மிகவும் அழகாக உள்ளது. பாராட்ட வார்த்தைகளே இல்லை. புத்தகத்தில் புரட்டி ஏதாவது இருக்கிறதா என்று உற்று பார்க்கையில் வெள்ளை காகிதத்தில் என் முகம் தெரிந்து அந்த உருவம் என்னை முறைப்பதுபோல் உள்ளது. ஆகையால் இனி நான் இங்கு பதிவிட வரமாட்டேன்.
      (செந்தில் மாதேஸ்) இந்த புத்தகத்தில் ரசிக்க ஏகப்பட்ட விசயங்கள் உள்ளது. ஓவியங்கள் அபாரம். உலகத்தரத்திற்கு சவால்விடும் வகையில் உள்ளது. இதுபோன்று தங்கள் அலுவலகத்தில் உள்ள அனைத்து வெள்ளை காகிதத்தையும் உடனே மறுபதிப்பாக போடவும்.
      (பாலாஜி) மற்ற கதைகள் அனைத்தும் படிக்க படிக்க வெளுத்துவிடுகிறது. இந்த கதை மட்டும் படிப்பதற்கு முன்பாகவே வெளுப்பாக உள்ளது. இந்த மாதிரி கதைகளை தொடர்ந்து வெளியிட வேண்டும். இதை நிறுத்தினால் சுனாமி வரும், எரிமலை வெடிக்கும்.
      (ஆதிதாமிரா) அட்டகாசமான கதைகளம். ஓவியங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது. பாராட்டப்பட வேண்டிய முயற்சி. ஆனா என் நண்பர்கள் 100 பேர் என்ன சொல்றாங்கன்னா இதெல்லாம் புத்தகமா? இனிமேல் நாங்க காமிக்சே வாங்கி படிக்க மாட்டோம். உலகத்திலே எல்லோரும் வெட்டியா சுத்திக்கிட்டு இருக்காங்க, ஆனா எனக்கு மட்டும் வேலை பளு இருப்பதால் இந்த பதிவை இதோடு நிறுத்தி கொள்கிறேன்.
      (மரமண்டை) புத்தகம் சுத்தமா நல்லா இல்லை. ஆனா நல்லா இருக்கு. கதை பிடிக்கவில்லை ஆனா விறுவிறுப்பா இருக்கு. எனக்கு எதிரி நான்தான். இந்த புத்தகத்தை படிச்ச எனக்கு எதுவுமே புரியலை, இந்த பதிவை படிச்ச உங்களுக்கும் ஏதுவும் புரியாது.
      (தாசுபாலா) இந்த புத்தகத்தை வெளியே வைத்து படிக்கும்போது ஊரே கைகொட்டிச் சிரிச்சது. இருந்தாலும் அதையெல்லாம் இக்னோர் பண்ணிட்டு தொடர்ந்து படிச்சிட்டுக்கிட்டே இருக்கேன். இது பல வண்ணத்தில் மறுபதிப்பாக வரவேண்டும்.
      (நவீன வள்ளுவன்) பாவிகளா உங்க அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையா? இது காமிக்ஸ் இல்ல, வெறும் நோட்புக்... என்னமோபோங்க உங்கபதிவை எல்லாம் படிக்க படிக்க எனக்கு பைத்தியம் பிடிக்கும் போல இருக்கு.
      (மௌன பார்வையாளர்கள்) காமிக்சைவிட இவர்கள் ஓட்டும் படம்தான் நல்லா இருக்கு. பைசா செலவில்லாமல் பொழுதுபோகுது. நடத்துங்க..... நடத்துங்க...... உங்க ஆக்டிங்க எல்லாம் பார்த்துதான் சிவாஜி செத்து போயிட்டாரு.

      Delete
    2. தமிழ் காமிக்ஸ் புக் வெளியிடுவது என்பது இந்தியாவில் விவசாயம் பார்ப்பது போன்றது நண்பரே

      ஆர்வமும், வீம்பும் உள்ளவர்கள் மட்டுமே தற்போது விவசாயம் செய்து வருகிறார்கள் என்பது

      உண்மை. நமது ஆசிரியரும் அது போலத்தான் தனது ஆர்வத்தின் காரணமாகவும் வீம்பின்

      காரணமாகவும்தான் நூலிழை லாபம் மட்டுமே உள்ள காமிக்ஸ் வெளியீடுகளில் கவனம்

      செலுத்துகிறார்கள் என்பது எனது துணிபு. நேர்மறை எண்ணம் நிரம்பியவர்கள் மட்டுமே

      இது போன்ற தொழிலில் ஈடுபட முடியும்.. அதனால்தான் நாங்களும் எங்களது பதிவுகளில்

      புண்படுத்தும் வார்த்தைகளை தவிர்த்து விமர்சிக்கிறோம். மற்றபடி எடிட்டரின் மறுபதிப்புகள்

      பற்றி தீவிரமான கருத்து வேறுபாடு எனக்கு உண்டு. மறுபதிப்புகளின் மூலம் பால்யத்தை

      மீட்க முயல்கிறோம் என்ற ஆசிரியரின் கருத்து எனக்கு எந்த விதத்திலும் உடன்பாடு இல்லாதது..

      எடிட்டரே ஒத்துக்கொண்டது போல் அசாத்திய கதைகளங்களுக்காக மட்டுமே மறுபதிப்பு

      கேட்கிறோம் என்பது மறுக்கமுடியாதது.(ஆனாலும் அதை எடிட்டர் மறுக்கலாம்)

      நாம் எதுவானாலும் எடிட்டரை கேட்டு பெறக்கூடிய நிலையில்தான் இருக்கிறோம் என்பதை நீங்கள்

      உணர்தல் அவசியம்.

      அப்புறம் நீங்கள் சொன்னது எனது முகமற்ற கண்கள் பற்றிய பதிவுக்கானது எனில் .. அதில்

      கதையை தவிர அனைத்து அம்சங்களும் ரசிக்கத்தக்கவையே ..வேண்டுமானால் பட்டியலிடட்டுமா?

      Delete
    3. செந்தில் Stay Chill..
      துங்குரவங்கல எழுப்பிடலாம் ஆனா துங்குரவங்க மாதிரி நடிப்பவர்களை எழுப்புவது கடினம்!!

      Delete
  41. மறு பதிப்பு பற்றி நீங்களே மீண்டும் எடுத்துள்ளதால் இதை சொல்கிறேன் .நண்பர் முகுந்தன் அவர்கள் சொன்னது போல அதிகம் விலை சொல்லுவது நண்பர்கள் மட்டுமல்ல பழைய புத்தக கடைகள் என்று இப்பொழுது நாடி போனாலும் இதே நிலை தான் . ஒருவருக்கு பிடித்த கதை இன்னொருவருக்கு பிடிக்காது .ஒருவரிடம் உள்ள புத்தகம் இன்னொருவரிடம் இருக்காது .எனவே இது தேவை இல்லை ...அது நன்றாக இல்லை என்ற நண்பர்களின் கருத்துக்கள் எந்த மறுபதிப்பு விட்டாலும் வந்து தான் தீரும் .இதற்க்கு ஒரே வலி " காமிக்ஸ் கிளாசிக் " மீண்டும் ஆரம்பித்து இந்த ..இந்த கதை என்பதை விட்டு விட்டு ..,கலரோ ..கருப்பு வெள்ளையோ என்பதையும் தாங்களே முடிவு செய்து விட்டு ..இதுவரை வராத மறுபதிப்பு கதைகளை மினி லயனில் வந்த கதைகளை முதல் நான்கு ..,திகிலில் வந்த முதல் மூன்று ..அல்லது நான்கு கதைகள் என்று அடுத்து அடுத்து வந்த அனைத்தையும் வெளி இடுங்கள் .

    புத்தக சேகரிக்கும் நண்பர்களுக்கும் பயன் உள்ளதாய் இருக்கும் .படிக்காத நண்பர்களுக்கும் ஒன்று படித்து இருந்தாலும் இன்னொன்று படிக்க வில்லை எனவே வாங்கலாம் என்ற எண்ணமும் தோணலாம் .மினி லயன் ..,திகில் மறுபதிப்பு முடிந்தவுடன் முத்து முதல் 100 அதே போல என வெளி இடுங்கள் .அவ்வளவு தான் சார் .இதற்கு போய் அவர் ஓகே இவர் சரி இல்லை என்று குழம்பி கொண்டு இருக்கிறேர்கள் .

    ப்ராப்ளம் சால்வ்.......சங்கம் வாழ்க ....

    இந்த சங்க செயலாளர் தான் யாரோ பேஷ் புக்குல சொன்ன்னாங்க....நோஸ் புக்குல சொன்னாக ன்னு சொல்லிட்டு சங்கத்துக்கு ஆதரவு தராம பதுங்கி..பதுங்கி வர்றாரு. செயலாளர் அவர்களே சங்கம் ன்னு ஒன்னு ஆரம்பித்து மேடை ஏறிட்டா கல்லு எறிவாங்க ...நாம தான் அதை பிடித்து வீடு கட்டனும் ....முட்டையை வீசுவாங்க ..நாம தான் அதை பிடித்து ஆம்லட் போடணும் ...அடிக்க கூட வருவாங்க ....உடனே அவங்க காலை பிடிசிருனும் ...சமயம் வந்தா அவங்க காலை வாரி விட்டுருனும் ..அதை விட்டுட்டு .......

    சீக்கிரம் வாங்க .....சங்கம் என்ன முடிவு எடுத்தாலும் வந்து ஆதரவு குரல் கொடுங்கள் ....( தனி ஆளா எத்துனை ஆம்லட் போட முடியும் ..புரிஞ்சுக்ங்க செயலாளர் அவர்களே )

    ReplyDelete
    Replies
    1. களத்தில் இறங்கி அடித்து ஆடாமல், கேலரியில் சாய்ந்து உட்கார்ந்தபடியே ஆட்டத்தை ரசிப்பதிலும் ஒரு சுகம் உள்ளதே, தலைவர் அவர்களே? ;)

      Delete
    2. அது மற்றவர்களுக்கு தான் செயலாளர் அவர்களே ....

      நாம் போராட்ட மண்ணில் பிறந்தவர்கள் .....போராட பிறந்தவர்கள் .....அதை விட்டு நாம் வேடிக்கை பார்ப்பது .......கூட பிறந்தவர்களை போராட சொல்லி விட்டு நாம் பின்னால் நின்று அவர்களை வேடிக்கை பார்ப்பது போல ஆகி விடாதா ..?

      களத்தில் இறங்கினால் தான் நம் வெற்றி பெற்றாலும்...தோல்வி அடைந்தாலும் இவன் போர் களத்தில் போராடியவன் என்ற எண்ணம் அனைவருக்கும் வரும் .அமைதியாக இருப்பதும் சாத்வீகம் தான் .அது சில இடங்களில் மட்டுமே செயலாளர் அவர்களே ....
      போராட்ட களத்தை விட்டு வெளியே நின்று வேடிக்கை பார்த்தால் எதிர்கள் பார்த்தாயா ...என்னால் தான் போரிட பயந்து களத்துக்கே வர வில்லை என்று கூவ மாட்டார்களா ..? நமது படையோ இங்கே .....அவர்கள் படையோ பேஷ் மண்ணில் ....நாம் இங்கயே போரிடவோம் ..வீரம் இருந்தால் அவர்கள் இங்கே வந்து போரிடலாம் .அடுத்தவர் மண் நமக்கு வேண்டாம் .அதே போல நமது மண்ணை விட்டு தரவும் வேண்டாம் .
      வாருங்கள் ..சங்க அபராதத்தை உடனடியாக அடைக்க வாளை எடுங்கள் .

      Delete
    3. Paranitharan K : //தனி ஆளா எத்துனை ஆம்லட் போட முடியும் ..புரிஞ்சுக்ங்க செயலாளர் அவர்களே//

      அவரவர் பிரச்னை அவரவருக்கு !!

      Delete
  42. டியர் எடிட்டர்,

    'நில்-கவனி-சுடு'வை சுடச்சுட படித்து முடித்த பிரம்மிப்பு ஓயாமல் இதை எழுதுகிறேன்...

    * டெக்ஸ் குழுவினர் தூள் கிளப்பிவிட்டார்கள். ஒற்றைவரியிலான கதையை இதைவிடவும் நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லிவிடமுடியாது என்று அடித்துக் கூறலாம். நமது இதழ்களில் இதுவரை வெளிவந்துள்ள டெக்ஸ் கதைகளில் நிச்சயம் டாப்-10ல் இடம் பிடித்துவிடும் தகுதியுடையது எ.எ.க!

    * மொழிபெயர்த்தவருக்கு திருஷ்டி சுற்றிப்போடுங்கள் சார்! மொழியாக்கம் என்பதற்கான எந்த சுவடும் தெரியாமல் நேரடியாகத் தமிழிலேயே படைக்கப்பட்டது போல அப்படியொரு நேர்த்தி! வசனங்கள் ரொம்பவே ஷார்ப்! ரொம்பவே ரசித்து மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ஒவ்வொரு பக்கத்திலும் கண்கூடாகத் தெரிகிறது. இது-இதற்குத்தானே ஆண்டாண்டு காலமாய் கட்டுண்டு கிடக்கிறோம்!

    * காலெப்பினியின் சித்திர பாணியில் டெக்ஸின் முகம் மட்டும் அவ்வப்போது சற்று அந்நியமாகத் தோன்றினாலும், அட்டகாசமான கதை நகர்வில் ஒன்றிப்போய்விடுகிறோமாதலால் பெரிய குறையாகத் தெரியவில்லை. ஒருவேளை, இது சொதப்பலான கதையாக இருந்திருந்தால் இந்த ஓவிய பாணி ஏக கண்டனத்திற்குள்ளாகி இருந்திருக்கும். நல்லவேளை பிழைத்தது! (காகிதத் தரத்தில் மாற்றம் காணவிருக்கிறோம் என்று நீங்கள் அறிவித்துள்ளதால் அந்தக் குறையைப் பற்றி மீண்டும் பேச விரும்பவில்லை)

    * இந்தக் கதையின் தாக்கம், LMSல் முழுவண்ணத்தில் வரயிருக்கும் டெக்ஸை எண்ணி இப்போதே ஏங்க வைக்கிறது.

    * 'நில்-கவனி-சுடு' - இக்கதைக்கு மிகப் பொருத்தமான தலைப்பு!

    மனசு நிறைவாய் உணர்கிறது. நன்றி சார்!

    ReplyDelete
    Replies
    1. புள்ளையாண்டன் இப்போவாச்சும் வாயை திறந்ததிற்கு நன்றி!!

      Delete
    2. Erode VIJAY : //காலெப்பினியின் சித்திர பாணியில் டெக்ஸின் முகம் மட்டும் அவ்வப்போது சற்று அந்நியமாகத் தோன்றினாலும், அட்டகாசமான கதை நகர்வில் ஒன்றிப்போய்விடுகிறோமாதலால் பெரிய குறையாகத் தெரியவில்லை. ஒருவேளை, இது சொதப்பலான கதையாக இருந்திருந்தால் இந்த ஓவிய பாணி ஏக கண்டனத்திற்குள்ளாகி இருந்திருக்கும். //

      கதையின் வலுவை உறுதிபடுத்திக் கொண்ட பின்னரே இந்த சித்திர பாணிக்கு 'பரவாயில்லை' என்று தலையாட்டினேன் ! சென்றாண்டின் mild ஆன டெக்ஸ் கதைகளுக்கு ஒரு மாற்றாய் - ஒரு சரவெடி சாகசம் அவசியமோ அவசியம் என்பதில் ரொம்பவே தீவிரமாய் இருந்தேன் !

      மொழிபெயர்ப்பு குறித்தான கனிவான வார்த்தைகளுக்கு நன்றிகள் ; ஆனால் கார்சனும், டெக்சும் ஒருசேர தலைகாட்டும் கதைகளை எழுதுவது துளியும் அலுப்புத் தட்டா பணி என்பதோடு ஸ்கோர் செய்ய நிறையவே வாய்ப்புகள் தரும் களம். நிஜமான சவால்கள் எனில் அவை லார்கோ ; ஷெல்டன் போன்ற புது யுகக் கதைகளிலும் , கார்ட்டூன் வரிசைகளிலுமே ! Tex மொழிபெயர்ப்பாளனின் ஆத்ம நண்பன் !

      Delete
    3. //காலெப்பினியின் சித்திர பாணியில் டெக்ஸின் முகம் மட்டும் அவ்வப்போது சற்று அந்நியமாகத் தோன்றினாலும்//

      ஓவியர் "மஸ்டான்டுவோனோ" என புத்தகத்தினுள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தான் நமது புத்தகத்தில் இவர் வரும் முதல் முறை என தோன்றுகிறது.

      Delete
  43. 'பனிக்கடலில் ஒரு பாழும் தீவு'

    * மற்ற வழக்கமான கதைக் களங்களிலிருந்து விலகி, பனிக்கடலிலும், பனிப் பிரதேசங்களிலும் கொஞ்ச நேரம் நாமும் சஞ்சரித்துவிட்டு வருவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.

    * தோர்கலின் பிறப்பு ரகசியம் கட்டவிழ்க்கப்பட்டுள்ளதால், இனி வரும் பாகங்கள் இன்னும் விறுவிறுப்பாய் அமைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. (ஒரு நம்பிக்கைதான்!)

    * ஓவியங்களும், கண்ணுக்கு இதமான வண்ணங்களும் அழகு!

    * அதிக வசனங்கள் இல்லாததால் சீக்கிரமே படித்துவிட்டு 'அட, அதுக்குள்ள முடிஞ்சு போச்சே...' என எண்ண வைக்கிறது. (முடிந்தால் இரண்டிரண்டு பாகங்களாகப் போடுங்க எடிட்டர் சார்)

    * முன் அட்டையில் 'தோர்கல் சாகஸம்' என்று போடப்பட்டிருப்பது அப்பட்டமான பொய்! படகில் போவதையும், பனியில் நடப்பதையும் 'சாகஸம்' என்று சொல்லிவிட முடியுமா என்ன? அப்படிப் பார்த்தால், நெருக்கடியான நகர்ப்புற ட்ராஃபிக்கில் தினமும் பைக்கிலும், காரிலும் பயணிக்கும் நாம் கூட 'சாகஸக்காரர்கள்' தானே?

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : //முன் அட்டையில் 'தோர்கல் சாகஸம்' என்று போடப்பட்டிருப்பது அப்பட்டமான பொய்! படகில் போவதையும், பனியில் நடப்பதையும் 'சாகஸம்' என்று சொல்லிவிட முடியுமா என்ன? //

      அடுத்த முறை tagline "தோர்கலின் பாதயாத்திரை " என்று போட்டு விட்டால் போச்சு !!

      Delete
  44. நவீன வள்ளுவன் ஒவ்வொரு வார்த்தைகளும் சாட்டையடி..... பலருக்கு உறைத்திருக்கும்
    ஆனாலும் உறைக்காத மாதிரி நடிப்பார்கள்....
    அட்டைபடம் தவிர அனைத்து பக்கங்களும் வெள்ளைத்தாளாக இருந்தாலும் சில நண்பர்களின் கமெண்ட் இப்படித்தான் இருக்கும்.

    (ஈரோடு விஜய்) இந்த மாதிரி புத்தகம் வருவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கையில் எடுத்த புத்தகத்தை கீழே வைக்க மனம் வரவேயில்லை. வீட்டில் உள்ள பெண்கள் மளிகை லிஸ்ட் எழுதவும், குழந்தைகள் படம் வரைந்து விளையாடவும் அனைத்து பக்கங்களையும் காலியாக விட்ட ஆசிரியரின் செய்ல் பாராட்டுக்குரியது.
    (முகுந்தன்) டைகர் அளவுக்கு இல்லாவிட்டாலும் ரொம்ப அற்புதமான கதை. எனக்கு காமிக்ஸ்ன்னு பெயர் போட்டு எது வந்தாலும்போதும். இந்த புக்கை யாராவது 120க்கு வாங்கி 2 லட்சத்திற்கு விற்பனை செய்திடுவாங்களோன்னு பயமா இருக்கு. அதனால வேறு கதைகள் எதையும் போடாமல் தொடர்ந்த இதையே மறுபதிப்பா வெளியிட்டு வருமாறு ஆசிரியரை கேட்டுக் கொள்கிறேன்.
    (பொன்ராஜ்) மொழிபெயர்ப்பு அருமை. வசனங்கள் வளவளவென்று இல்லாமல் மௌனமே பல ஆயிரம் கதைகளை கூறியது. பொக்கிசமாக பாதுகாக்க வேண்டிய இதழ். உடனடியாக ஆசிரியர் இதை மறுபதிப்பு இட வேண்டும்.
    (பரணிதரன்) இந்த புத்தகத்தை தயாரிக்க கதையை தேர்வு செய்தவிதம், இந்த கதையை வாங்க ஆசிரியர் பல வெளிநாடுகளுக்கு வருடக்கணக்கில் சுற்றி வந்தது ஆகியவற்றை தொகுத்து சிசிவ புத்தகமாக வெளியிட வேண்டும். இல்லையென்றால் போராட்டக்குழு உடனடியாக போராட்டத்தை தொடங்கும்.
    (ரமேஷ்குமார்) புத்தகம் மிகவும் அழகாக உள்ளது. பாராட்ட வார்த்தைகளே இல்லை. புத்தகத்தில் புரட்டி ஏதாவது இருக்கிறதா என்று உற்று பார்க்கையில் வெள்ளை காகிதத்தில் என் முகம் தெரிந்து அந்த உருவம் என்னை முறைப்பதுபோல் உள்ளது. ஆகையால் இனி நான் இங்கு பதிவிட வரமாட்டேன்.
    (செந்தில் மாதேஸ்) இந்த புத்தகத்தில் ரசிக்க ஏகப்பட்ட விசயங்கள் உள்ளது. ஓவியங்கள் அபாரம். உலகத்தரத்திற்கு சவால்விடும் வகையில் உள்ளது. இதுபோன்று தங்கள் அலுவலகத்தில் உள்ள அனைத்து வெள்ளை காகிதத்தையும் உடனே மறுபதிப்பாக போடவும்.
    (பாலாஜி) மற்ற கதைகள் அனைத்தும் படிக்க படிக்க வெளுத்துவிடுகிறது. இந்த கதை மட்டும் படிப்பதற்கு முன்பாகவே வெளுப்பாக உள்ளது. இந்த மாதிரி கதைகளை தொடர்ந்து வெளியிட வேண்டும். இதை நிறுத்தினால் சுனாமி வரும், எரிமலை வெடிக்கும்.
    (ஆதிதாமிரா) அட்டகாசமான கதைகளம். ஓவியங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது. பாராட்டப்பட வேண்டிய முயற்சி. ஆனா என் நண்பர்கள் 100 பேர் என்ன சொல்றாங்கன்னா இதெல்லாம் புத்தகமா? இனிமேல் நாங்க காமிக்சே வாங்கி படிக்க மாட்டோம். உலகத்திலே எல்லோரும் வெட்டியா சுத்திக்கிட்டு இருக்காங்க, ஆனா எனக்கு மட்டும் வேலை பளு இருப்பதால் இந்த பதிவை இதோடு நிறுத்தி கொள்கிறேன்.
    (மரமண்டை) புத்தகம் சுத்தமா நல்லா இல்லை. ஆனா நல்லா இருக்கு. கதை பிடிக்கவில்லை ஆனா விறுவிறுப்பா இருக்கு. எனக்கு எதிரி நான்தான். இந்த புத்தகத்தை படிச்ச எனக்கு எதுவுமே புரியலை, இந்த பதிவை படிச்ச உங்களுக்கும் ஏதுவும் புரியாது.
    (தாசுபாலா) இந்த புத்தகத்தை வெளியே வைத்து படிக்கும்போது ஊரே கைகொட்டிச் சிரிச்சது. இருந்தாலும் அதையெல்லாம் இக்னோர் பண்ணிட்டு தொடர்ந்து படிச்சிட்டுக்கிட்டே இருக்கேன். இது பல வண்ணத்தில் மறுபதிப்பாக வரவேண்டும்.
    (நவீன வள்ளுவன்) பாவிகளா உங்க அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையா? இது காமிக்ஸ் இல்ல, வெறும் நோட்புக்... என்னமோபோங்க உங்கபதிவை எல்லாம் படிக்க படிக்க எனக்கு பைத்தியம் பிடிக்கும் போல இருக்கு.
    (மௌன பார்வையாளர்கள்) காமிக்சைவிட இவர்கள் ஓட்டும் படம்தான் நல்லா இருக்கு. பைசா செலவில்லாமல் பொழுதுபோகுது. நடத்துங்க..... நடத்துங்க...... உங்க ஆக்டிங்க எல்லாம் பார்த்துதான் சிவாஜி செத்து போயிட்டாரு.

    ReplyDelete
    Replies
    1. \நவீன வள்ளுவன் ஒவ்வொரு வார்த்தைகளும் சாட்டையடி..... பலருக்கு உறைத்திருக்கும்
      ஆனாலும் உறைக்காத மாதிரி நடிப்பார்கள்....\ தப்பு நண்பரே. நமக்கு உறைத்திருந்தால் திரும்பவும் வந்திருக்க கூடாதே... ஒரு வேலை திரும்ப திரும்ப வந்தவர்களுக்கு உறைத்திருக்குமோ????? நோ புண் (pun) intended!!! ஆனால் உங்கள் பதில் டாப் கிளாஸ் பாஸ் :) பலருக்கு உறைத்திருக்கும்
      ஆனாலும் உறைக்காத மாதிரி நடிப்பார்கள் :) (காப்பி பேஸ்ட் பண்ண வசதியாக இருந்ததற்கு நன்றிகள்) :)

      Delete
    2. ஹ ஹ ஹா ...
      நண்பரே எனக்கு வழ வழ என வசனம் பேசினால்தான் பிடிக்கும். ஒரு வேலை நீங்கள் கூறுவது போல வெள்ளையாய் புத்தகம் முழுதும் வந்தால் அதில் ஆசிரியரின் வெள்ளை மனது தெரிகிறது என்று எழுதுவேனே .
      சிவாஜியை விட சிறந்த நடிகர் நீங்கள்தானய்யா . அருமையாக பிறரை போல நடிக்கிறீர்களே . கொஞ்சம் ஓவர் ஆக்டிங் . என்றாலும் வாய் விட்டு சிரிக்கமளிருக்க முடியவில்லை . வாருங்கள்.சந்தோசம்!

      Delete
    3. Sundar Raj : உங்கள் அபிப்ராயங்களைப் பதிவிடும் சுதந்திரம் நிச்சயமாய் உண்டு ; ஆனால் நையாண்டி என்ற பெயரில் உங்கள் சிந்தனைகளோடு ஒத்துப்போகாதோரைத் தாக்கும் உரிமை கிடையாது. விமர்சியுங்கள் ; ஆனால் மௌனப் பார்வையாளர்களின் மொத்தப் பிரதிநித்துவத்தை நீங்களாக கையில் எடுத்துக் கொள்ளாமல் !

      Delete
    4. Sundar Raj..Thanks a lot for commenting us....Cool.....

      Delete
    5. டியர் எடிட்டர்,

      சுந்தர் ராஜ் மற்றும் நவீன வள்ளுவர் பற்றி உடனே மறுப்பு தெரிவித்த நீங்கள் - 'லூசு தி பாதர் of லூசுபையன்' என்பவர் பல மாதங்களாய் அடிக்கடி புதிய வருகையாளர்களை நக்கல் செய்வதை ஒரு முறை கூட கேட்டதில்லை - இத்தனைக்கும் இவர் அடிக்கடி தோன்றி எல்லாரையும் வம்பு இழுப்பவர் !

      நான் முன்பு வெளியேறக் காரணமாயும் இங்குள்ளவர்கள் மீது சீற்றம் கொண்டிருந்ததற்கும் - கூடாத வார்த்தைகள் கொண்டு சீற்றம் கொட்டியதர்க்கும் இவரே பிரதம காரணி.

      ஒவ்வொரு முறையும் பலருக்கிடையே புகுந்து சமரசம் செய்விப்பது இயலாது என்பதை நான் அறிவேன். அது நமது கவனமும் அல்ல என்பதையும் அறிவேன் - நவீன வள்ளுவர் மற்றும் சுந்தர் ராஜ் பற்றி பரிந்தும் பேச வரவில்லை - இவர்கள் யார் என்று எனக்கு தெரியவும் தெரியாது.

      எனினும் நாம் உதாரணம் என்று நினைத்து எடுத்துக் காட்டுவது சில சமயங்களில் சிலரால் inconsistent ஆகப் பார்க்கத் தூண்டிவிடுகிறது என்பது என் கருத்து. இதைச் உங்களுக்கு (மட்டும்) சுட்டிக் காட்டவே இந்த கமெண்ட். When we moderate, we cannot afford to be inconsistently consistent.

      பின் குறிப்பு: சமீபத்தில் இவர் மற்றவர்களை வார்த்தைகளால் புண்படுத்திய பொது கூட நீங்கள் மற்றவரை நோக்கி (உதாரணம் நண்பர் சௌந்தர்) கூறிய கருத்துக்களில் ஒரு சதவிகிதம் கூட இவர் பக்கம் திரும்பவில்லை! இவரால் கமெண்ட் போட வந்த ஒருவர் மீண்டும் மௌனி ஆனதும் நடந்தது உங்களுக்கு தெரிந்ததே !

      Delete
    6. Raghavan : //இவரால் கமெண்ட் போட வந்த ஒருவர் மீண்டும் மௌனி ஆனதும் நடந்தது உங்களுக்கு தெரிந்ததே ! //

      யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது பற்றி சத்தியமாய் எனக்கு தெரியவில்லை ; but இனி வரும் நாட்களில் இயன்ற வரை இது போன்ற பின்னூட்டங்கள் ஊக்குவிக்கப்படாது !

      Delete
    7. முடிந்த வரை போலி ஐடிகளை தவிர்த்தல் நலம்

      Delete
    8. //முடிந்த வரை போலி ஐடிகளை தவிர்த்தல் நலம்// +1111111111

      நானும் இதை அப்படியே சொல்லுகிறேன்.

      Delete
    9. @ Editor:

      நான் கூறியவற்றை விளங்கிக்கொள்ள ஒரே ஒரு பழைய கமெண்ட். இதனை இட்டவரும் மேலே ஒற்றை வரி போட்டிருக்கிறார். இவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பது எங்கள் இருவர் கமெண்ட்லும் உள்ளது. இதற்கு மேல் இதனை வளர்க்க விரும்பவில்லை. நான் கூற வந்ததன் சாராம்சம் உங்களுக்கு புரிந்திருக்கும் எனில் மகிழ்ச்சி :-D

      /***

      Ganesh k 13 April 2014 21:05:00 GMT+5:30
      நீங்கள் பதிவிடும் முறையிலே எடி ஏன் வருத்தப் படுகிறார் என புரிகிறது இதற்கு மேல் இதை விவாதிக்க விரும்பவில்லை மீண்டும் மௌன வாசகனாக இருக்கவே விரும்புகிறேன் நன்றி நண்பர் லூசு பாதர் லூசு பையன்

      ***/

      Delete
    10. ராகவன் அவர்களே, மன்னிக்கவும். உங்கள் எடுத்துக் காட்டுத் தவறு. ஆசிரியர் தனி மனிதத் தாக்குதல்களையே எதிர்க்கிறார். ஒரு குறிப்பிட்ட குழுவையே "வெறும் வெள்ளைக் காகிதமாக இருந்தாலும் புகழுவார்கள்" என்று சொல்வது வேறு இன்னொருவருக்கு பதில் சொல்ல முனைவது வேறு. நீங்கள் சொன்ன பதிவில் ganesh k சொன்ன கருத்துடன் (பிறர் கமெண்ட் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது) உடன்படாமல் ஒருவர் பதில் சொல்லியிருக்கிறார். அதில் எங்காவது தனி மனிதத் தாக்குதலோ தரக் குறைவான விமர்சனமோ இருக்கிறதா என்று பாருங்கள். எனக்கு அப்படி எதுவுமே தெரியவில்லை. உண்மையில் அந்தப் பதில் மிகவும் கண்ணியமாக நயமாக தனது எதிர்க் கருத்தை முன் வைத்திருக்கிறது. எனவே அங்கு ஆசிரியர் தலையிட வேண்டிய அவசியம் என்ன?

      Delete
  45. /இதை..இதைத் தான் காணக் காத்துக் கொண்டிருந்தேன் ! ஒவ்வொரு மாதத்து இதழ்களும் வெளியாகும் முன்பாக அதன் எதிர்பார்ப்பில் இங்கு நிறையப் பின்னூட்டங்கள் குவிவதும், உற்சாக அரட்டைகள் அரங்கேறுவதும் சந்தோஷம் தரும் நிகழ்வுகள் ! ஆனால் இதழ்கள் கைக்குக் கிடைத்தான பின்னே, கொஞ்சமாய் in-depth விமர்சனங்கள் ; சன்னமாய் மேலோட்டமான விமர்சனங்கள் என்பதைத் தாண்டி பெரியதொரு feedback இருப்பதைக் காணவே இயலாது போயிருந்தது !/ சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்பொழுது தான் புரியுமோ??? இல்லை புரியாதது போல் உள்ளனரா? யாம் அறியோம்!!!
    /உங்கள் நாடிகளை ; ரசனைகளை எனக்கு அறியத் தரும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் கொஞ்ச காலமாகவே இல்லாததில் எனக்கொரு மௌன வருத்தம் !/ இதை விசிலடிச்சான் குஞ்சுகள் உணர்ந்து கொண்டால் யாவருக்கும் நலம் !!!
    /அப்படியிருக்கையில் - உங்களது விருப்பு-வெறுப்புகளை ஸ்பஷ்டமாய் தெரிவிக்க கொஞ்சமே கொஞ்சமேனும் அவகாசம் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் - அதன் பலன்கள் நம் அனைவருக்கும் இன்னும் தரமான கதைகளாகக் கிடைக்கும் விதத்தில் பிரதிபலிக்கும் !/ y blood same blood...
    /015-ன் மறுபதிப்புப் பட்டியலைப் பற்றிய திட்டமிடலுக்கு நிறையவே யோசனை தேவை என்பது மட்டும் இப்போதைக்கு நான் இதனில் உள்வாங்கி இருக்கும் பாடம். கேப்டன் பிரின்ஸ் கதைகள் + லக்கி லூக் கதைகளைத் தாண்டி (வண்ண) மறுபதிப்புகளுக்கு ஒத்து வரக் கூடிய கதைகள் வேறு என்னவாக இருக்குமென்ற உங்களின் suggestions ப்ளீஸ் ? (ஸ்பைடர் ; ஆர்ச்சி என்ற மாமூல் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட )../ யப்பா... முடியலடா சாமி. வலிக்குது. ஏற்கனவே ஆஆஆரம்பத்தில் வெளியிட்ட அனைத்து பழைய முத்து ஸ்பெஷல் புத்தகங்களும் சேர்த்தா சேர்க்காமலா என்ற குழப்பம் தலை தூக்குவதில் தவறில்லையே!!! (சிலர் வேண்டாம் என்பதால் வெளியிட முடிய வில்லை எனில் தற்போது வருபவை எவர் வேண்டுவது??? குழப்பமே வழக்கம்!!!)
    /ஜூலையில் மறுபதிப்பு வரிசையில் லக்கி லூக்கின் "பூம் -பூம் படலம்" வரக் காத்துள்ளது. இக்கதை லயனில் ஒரிஜினலாய் வெளியான நாட்களில் நாம் ஒவ்வொரு தொடருக்கும் பயன்படுத்திய மொழிநடைகளில் ஒரு consistency இருந்து வந்ததில்லை./ இது என்ன புதுசா??? அது எப்போ இருந்துச்சு???
    /கதையினில் லக்கி தூய தமிழில் மாத்திரமே பேசும் பாணியானது தற்போது நாம் அவருக்கென நிர்ணயம் செய்து வைத்துள்ள பேச்சு வழக்கிற்கு நெருடலாய் இருப்பது போல் எனக்குப்பட்டது./ ஓஹோ தற்போதா??? நாங்கள் அப்போதுன்னு நெனச்சுடோம். சாரி பாஸ் :P
    /உங்கள் அனைவரிடமும் இந்த இதழின் ஒரிஜினல் (தமிழ்) பதிப்பு இருக்குமெனும் போது, புதியதொரு வார்ப்பில் மொழிநடையினை அமைக்கும் பணியானது சுவாரஸ்யம் தருமா உங்களுக்கு ?/ இருக்கும் போது எதுக்கப்பு ரீப்ரிண்ட்??? புரியலையே பாஸ்... நீங்களே இருக்குன்னு சொல்றிங்க; ரீப்ரிண்ட் போடறிங்க. இல்லாதத சொன்னா ரீப்ரிண்ட் வேணாம், ரசனை மாறணும்னு சொல்றிங்க. அது ஏன் பாஸ்??? மத்தவங்க சொல்ற கதைலாம் வரவே வராதுன்னு தெரிஞ்சும் நாங்க மாஞ்சு மாஞ்சு டைப் அடிச்சு கையெல்லாம் நோகுது ஆசானே!!!
    /கதைகளைப் பொறுத்த வரை - இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை அதன் களம் முழுமையாய் நம் முன்னே விரிவதற்கும், தோர்கல் முழுமையாய் நம்மை ஆக்கிரமிப்பதற்கும். ஆங்கிலத்திலோ, இதர மொழிகளிலோ இதனைப் படித்திருகா நண்பர்கள் சற்றே பொறுமை காத்தால் - ஒரு அழகான தொடரை தைரியமாய் தொடரும் சூழல் உருவாகும்./ எத்தனை ஆயிரம் வருடங்கள் உங்கள் இஷ்டப்படி வெளியிடும் கதைகளை கண்ணை மூடி கொண்டு அதனை புகழ்ந்து கொண்டு படித்து சிலாகிக்க எங்கள் சங்கம் என்றும் தயார்!!!
    /சித்திரங்களில் உள்ள அந்த வேற்றுமை ஒரு தவிர்க்க இயலா விஷயம் எனும் போது அதனோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டியது தான் ! / எதேதேயோ தாங்கிகிறோம் இத பழகிக்க மாட்டோமோ??? நீங்க ஜமாய்ங்க... நாங்க புகழ இருக்கிறோம்...
    /LMS-ல் நிச்சயமாய் இந்த ரகக் காகிதம் இராது என்பது மட்டும் உறுதி./ அப்போ மத்த எல்லா புக் க்கும் உண்டு என்பது உறுதியோ???
    /மற்றபடிக்கு, புதிய முயற்சி வெற்றி காணும் பட்சத்தில் அடுத்த black & white இதழிலேயே நீங்கள் ஒரு சந்தோஷ மாற்றத்தைக் காண்பீர்கள் !/ ஒரு காலத்தில் இனிமேல் நோ ப்ளாக் & ஒயிட் ன்னு சொன்னதா நியாபகம் வருதே நியாபகம் வருதே நியாபகம் வருதே :(
    /அவ்வப்போது சாய்ந்து கொள்ள உங்களின் ஆக்கபூர்வமான சிந்தைகள் கிட்டிடும் பட்சத்தில் தூள் கிளப்பிடும் உறுதி எங்களுக்குள்ளது !/ எங்களின் சிந்தனைகளை கண்டு கொண்டால் தானே??? தனியா ஒரு ஓரமா நின்னு பேசுறதுக்கு கூட பலன் இருக்குமோ???
    /இவ்வாரம் மானத்தைக் காப்பாற்றி விட்டது என்றே சொல்ல வேண்டும்./ அப்பாடா... நாங்கள் மட்டும் அவமானம் படுகிறோம் நாங்கள் படிப்பவை (காமிக்ஸ்) அந்த வலியை அனுபவிக்க வேண்டாம்...
    மனசு மிக மிக நிறைவாய் உணர்கிறது. நன்றி சார்! என்றும் உங்கள் பின்னால்!!!

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கேட்டதும் .....கிடைக்குது . இனி நாங்கள் கேட்டதும் கிடைக்கும் . இனி உங்க காட்டுல மழைதான் போங்கல் !

      Delete
    2. நவீன வள்ளுவன் : நவீன யுக வள்ளுவருக்கு இரண்டடிகள் பயன்படுகிறதோ , இல்லையோ - இரண்டு ஐ.டி.க்கள் பிரமாதமாகவே பயன் தருகின்றன ! ஜமாயுங்கள் !

      Delete
    3. நன்றி ஆசானே. எங்கள் கருத்துக்கு என்றும் மதிப்பு இல்லாமல் இருப்பினும் நீங்கள் தவறாய் கணித்து பதில் அளித்ததே பேரானந்தம் தந்தது (இதிலிருந்தே நீங்கள் குறிப்பிட்ட ஒரு சிலரால் தவறாய் வழி நடத்த படுவது அப்பட்டமாகிறது). எனினும் உங்கள் பதிலால் மனசு நிறைவாய் உணர்கிறது. நன்றி ஆசானே!!! என்றும் உங்கள் பின்னால்...

      Delete
    4. நவீன வள்ளுவன் : //(இதிலிருந்தே நீங்கள் குறிப்பிட்ட ஒரு சிலரால் தவறாய் வழி நடத்த படுவது அப்பட்டமாகிறது). //

      :-) தொடரட்டும் புதிய கண்டுபிடிப்புகள் !

      Delete
    5. ஏன் ப்ளாகில் யாரேனும் புதிதாய் வந்து விட்டால் கத்த சொல்லி உங்களை வழி நடத்துவது உங்கள் மனதா .... இல்லை யாருமா . இது பிடிக்கவில்லை , இவரது கருத்துகள் பிடிக்கவில்லை என உங்கள் சொந்த பேரில் சொல்லலாமே . முக மூடி எதற்கு !

      Delete
    6. ஆசானே அந்த LOUD ஸ்பீக்கர் ஐ ஆப் பண்ண சொல்லுங்க ஆசானே... இல்லனா ப்யூஸ்'ஐ ஆவது பிடிங்கி போட்டுடுங்க. (பி.கு: இது புதிய கண்டுபிடிப்பு அல்ல அல்ல பழைய கண்டுபிடிப்பு தான்!!!!)

      Delete
    7. இவ்வளவு திறன் படைத்த கண்டு பிடிப்பாளரான நீங்கள் ஏன் மிக சிறந்த கதைகளை கண்டு பிடித்து ஆசிரியர் முன் வைக்க கூடாது . யாருக்கேனும் பலனாவது கிட்டுமே !

      Delete
  46. நண்பர்களே , முகமற்ற கண்கள் படித்து முடித்து விட்டேன் ! ஓவியங்களும், அச்சு தரமும் வில்லியம் வான்சை மீண்டும் உயிர்த்தெழ வைத்துள்ளன . கதை அருமை . படிக்க தொடங்கி வைத்து விட்டுதான் முடித்தேன் . ஆனால் ஏனோ சடக்கென கதை முடிவது போல ஒரு எண்ணம் . இன்னும் சிறிது இழுத்திருக்கலாமோ என தோன்றுகிறது. மற்றபடி முதலை படை வரவு நல்வரவாகுக ! சாக மறந்த சுறா பிடிக்கவில்லை என்பதை இங்கே பிடிக்கவில்லை என கூறினால் சந்தோசப்படும் சில நண்பர்களுக்கு சொல்லி கொள்கிறேன். ஆசிரியருக்கு முகமற்ற கண்கள் மேல் சந்தேகம் இருப்பினும் எனக்கு பிடித்தது, அதும் மிகவும் பிடித்தது எனவும் கூறி கொள்கிறேன்.

    ReplyDelete
  47. ஹையா புரிந்து கொண்டு ஒரே ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கமெண்டாக போட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்...கடைசியில புரிந்துடுச்சு போல பாஸ் உங்களுக்கும்... என்றும் உங்கள் பின்னால் :P

    ReplyDelete
  48. சார். டெக்ஸ் கதை இன்னிக்கு காலையில் இருந்து மூன்று முறை படித்து விட்டேன்.படிக்க படிக்க திகட்டாத டெக்ஸ் கதை.மியாவியும் குழந்தைகளை கவரும் சார். தோர்கள் நிறைய பேரத்துக்கு பிடிக்கலை சொல்றாங்க.ஆனா எனக்கு தோர்கள் புடிக்கும் சார்.அதே மாதிரி முகமற்ற கண் கதையும் நான் இப்போதான் முதல் தடவை படிக்கிறேன்.அதுவும் ஒரு சிறப்பான கதை. ஆனால் இனி மறுபதிப்பு போடும் போது இன்னும் நன்றாக இருக்கும் கதைகளை தேர்வு செய்யவும் சார்.எனக்கு டெக்ஸ் கதையில் வரும் சித்திரங்கள் பிடிக்கவில்ல.இந்த முறை காகிதமும் முன்னாடி வந்தது மாதிரி இல்லை.மேக்னம் புத்தகத்தில் வரும் டெக்சும் இதை போல உள்ள சித்திரங்களா?

    ReplyDelete
  49. ஒரு குட்டி கமெண்டை சுடச்சுட படித்து முடித்த பிரம்மிப்பு ஓயாமல் இதை எழுதுகிறேன்... தூள் கிளப்பிவிட்டார் நண்பர். இதுவே அனைத்து பழைய கதைகளின் ரீப்ரிண்டை பார்த்தது போல இருந்தது... ஒற்றைவரியிலான கமெண்ட் இதைவிடவும் நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லிவிடமுடியாது என்று அடித்துக் கூறலாம். நமது ப்ளாக்கில் இதுவரை வெளிவந்துள்ள கமெண்ட்களில் நிச்சயம் டாப்-10ல் இடம் பிடித்துவிடும் தகுதியுடையது எ.எ.க! திருஷ்டி சுற்றிப்போடுங்கள் சார் அவருக்கு !!! வாழ்த்துக்கள் நண்பரே... மனசு நிறைவாய் உணர்கிறது. நன்றி நண்பா! (இது அனைத்தும் காப்பி பேஸ்ட் பண்ணிய கமெண்ட் வகையறா மட்டுமே!!! நானாக எதையும் டைப் பண்ண வில்லை பாஸ்... புரிந்தாலும் புரியாவிட்டாலும் சந்தோஷம்...) என்றும் ரீப்பிட்டு!!! :P

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது புரியவில்லை வள்ளுவரே.இதை மாதிரிதான் கமென்ட் போடணும் அப்படின்னு சொல்லறீங்களா?

      Delete
    2. ஆசானே அடக்கி வாசிக்க சொல்லியும் அது புரியலேன்னா ஹ்ம்ம்ம் நீங்கள் பெரிய ஆஆஆஆஆஆஆஆசான் தான் பாஸ் :P அடி ஆத்தி. இவருக்கு எல்லாமே புரிஞ்சுடுச்சே!!! இப்போ என்ன செய்யறதுன்னு தெரியலேயே... ஆச்சர்ய குறி.... :) எவ்ளோ அடிச்சாலும் தாங்குராரே இவரு ரொம்ப நல்ல்வர்யா!!! உமக்கு பிள்ளை மனது பாஸ்!!! (ஐயோயோ உங்களை சொல்லலை நண்பா... இரும்பை சொன்னேன்.)

      Delete
    3. இங்கு ப்ளாக்கில் நடக்கும் அனைத்தையும் பல நாட்களால படித்ததில் இருந்து பலரும் வளவள கொளகொள கமென்ட்,+1111 கமென்ட், பிறந்தநாள் வாழ்த்து,கல்யாண வாழ்த்து,குழந்தை பிறந்தா வாழ்த்து,அன்புள்ள எடிட்டர் எது சொன்னாலும் வாழ்த்து,ஒரு கமென்ட் கீழேயே கமென்ட் போட்டு போட்டு கட்டிடம் கட்டும் கமென்ட்,புதிதாக வருவருக்கு ஒரு கமென்ட்,யாரும் வரலேன்னா ஒரு கமென்ட் இப்படி கமென்ட் போட்டு போட்டு,me the first இல் ஆரம்பித்து 300 என முடிப்பதில் ஒரு சந்தோசம்.அதனால்தான் இது எல்லாம் தெரிந்தால் நாமும் அப்படி பண்ணக் கூடாது என்று நான் சொல்ல வந்தேனோ அதை சொல்லி விட்டு போய் விடுவேன் வள்ளுவரே.

      Delete
    4. ஹ ஹ ஹா ....வள்ளுவரே எதிராளியே நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை நிர்மாணிக்கிறான் ! உங்களுக்கெல்லாம் நான் இரும்பாக மாற கூடாதே . அதற்கொரு மதிப்பு இருக்குல்லையா ?அதான் ! புரிதா !

      Delete
  50. துரு பிடித்த இரும்பிற்கு ஏதையா மதிப்பு??? அது சரி... எனக்கு புரியறது இருக்கட்டும் உமக்கு ஏதும் இது வரை புரிந்துள்ளதா நண்பரே??? இனி உங்க காட்டுல மழைதான் போங்கல் !!! (என்ன ஒரு வார்த்தை பிரயோகம்??? கொன்னுடீங்க பாஸ்) :P நீங்க எங்கயோ போய்ட்டிங்க :)

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா ... உங்கள் பிரச்சினை என்னவென்று புரியவில்லை ! போங்கள் !

      Delete
    2. துரு பிடித்தாலும் இரும்புக்கு மதிப்பு இருப்பது தெரியுமா ? என கேட்டு உங்களை சந்தோஷ பட வைக்கிறேன் !

      Delete
    3. வார்த்தை பிரயோகம் பற்றி நீங்கள் குறை சொல்வது சரியில்லை.. உங்கள் எதிர்பார்ப்புகளின்படி

      இங்கு தமிழ் புலவர்கள்(உங்களை போன்ற) மட்டுமே பதிவிட வேண்டுமா என்ன?

      Delete
    4. இல்லை நண்பரே, நான் யாரையும் வரைமுறை படுத்துமாறு சொல்லவும் இல்லை அவ்வாறு சொல்வது முறையும் இல்லை. நாம் அனைவரும் எதிர்பார்ப்பது ஆசானிடம் மட்டுமே, வேறு எவரிடமும் அல்ல அல்ல... சற்று நயமாக சொன்னேன். அவ்வளவே... தவறு இருப்பின் திருத்தி கொள்கிறேன் பாஸ். ஓகே???

      Delete
  51. சார் பே ான பதிவில் பேப்பர் பற்றி கூ றிய பெ ாழுது ஆர்ட் பேப்பர் பார்ததால் ஏற்பட்டிருக்கும் என்று கூறியவர் இன்று அதர்கென பதிவில் விளக்கம் அளித்து ள்ளீர்கள் நான் கூறியபெ ாழுது ஏற்காததன் காரணம் என்ன நான் கூ றினால் அதில் உண்மை இருக்காதா

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ணா... நாம் ஏற்கனவே பல முறை அனுபவபட்டது தானே... அப்புறம் என்ன இந்த கேள்வி??? பதில்: 'அது போன பதிவு இது இந்த பதிவு' என்பதாக இருக்க கூடுமோ??? தெரில பாஸ் :P

      Delete
  52. ப்ரெண்ட்ஸ் இது ஆசிரியர் இடம்.இங்க நாம்ம சண்டை வேண்டாமே ப்ளீஸ். நவீன வள்ளுவர்,சுந்தர்ராஜன் யாரா இருந்தாலும் அவங்களுக்கு நான் சொல்றேன்.நம்ம எடிட்டர் மனசை யாரும் காயப்படுத்த வேண்டாம் ப்ரெண்ட்ஸ்.அவர் உழைப்பது நமக்காக தான் ப்ரெண்ட்ஸ்.இப்படி நிறைய கோபமா கேக்கிறது பதிலா எல்லோரும் உண்மையான பேர்ல வந்து அவர்கிட்டே முறையிடலாம்.அவர் கண்டிப்பா பதில் சொல்லுவார்.நானும் என் குறையை சொன்னேன்.இந்த தடவை பேப்பர் சரியில்லன்னு.சித்திரங்கள் கீச்சு கீச்சுனு இருக்குன்னு.ஆனால் மொழிபெயர்ப்பு அற்புதமா இருந்தது.அதை ஒத்துக்கணும்.நமக்காக இரவு பகல் பாராமல் உழைக்கின்ற ஆசிரியரை மனதை நோகடிக்க வேண்டாமே.

    ReplyDelete
    Replies
    1. நல்ல எழுத்துத் திறமையை கொண்டிருக்கும் நபர்களில் சிலர் எடிட்டரின் பதிவையே வரிக்குவரி ஏளனம் செய்திடும் எதிர்மறை எண்ணங்களையும் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.

      இந்த தகாத செயலுக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      Delete
    2. /நல்ல எழுத்துத் திறமையை கொண்டிருக்கும் நபர்களில் சிலர் எடிட்டரின் பதிவையே வரிக்குவரி ஏளனம் செய்திடும் எதிர்மறை எண்ணங்களையும் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது./ எதிர்மறை எண்ணங்களை வேறு எப்படி பகிர்ந்து கொள்வதாம்??? அதன் சாராம்சத்தை பார்த்தால் கேள்விகளின் யதார்த்தம் உறைக்கும் நண்பரே :( மேலும் எதிர்மறை எண்ணங்களை கூறுவது தகாத செயலா என்ன??? புரியல பாஸ்!!!!

      Delete
    3. எதிர்மறை எண்ணங்களைக் கூற 'ஏளனம்' ஒன்றே வழி என்று நம்பும் நீங்கள் நவீன வள்ளுவன் என்று சொல்லிக் கொள்வது தான் காலத்தின் கோலம் போலும்.

      Delete
    4. காலம் எவ்வளவு கொடுமையான மாற்றத்தை இந்த ப்ளாக் வூடே வெளிக்கொணர்கிறது பார்த்தீரா நண்பரே??? ஏளனமும் ஒரு வழி என கொள்க....

      Delete
  53. விஜயன் சார், உங்கள் பார்வைக்கு
    முகமற்ற கண்கள்:- (மனதில் நெருடிய விஷயம்)
    =====================================================================
    காமிக்ஸ்.com: ப்ருனோ-பிரேசில் கதைகளை லாஜிக் மற்றும் யதார்த்தம் பார்க்காமல் படித்தால் ரசிப்பதற்கு நிறைய உள்ளன என்றால், அதே விதிகள் நமது பழைய கருப்பு&வெள்ளை நாயகர்களுக்கும் (ஸ்பைடர்/லாரன்ஸ்/மாடஸ்டி/இரும்புக்கை) பொருந்தும். ப்ருனோ-பிரேசில் (மறுபதிப்பு) கதைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நமது பழைய கருப்பு& வெள்ளை நாயகர்களுக்கு கொடுக்க மறுப்பது ஏன்? நமது கருப்பு&வெள்ளை நாயகர்களின் சிறந்த பழைய மற்றும் நமது காமிக்ஸ்-ல் வெளிவராத கதைகளை வெளி இட பலமுறை பல விதம்களில் (புத்தக திருவிழாகளில்/கடிதம்/காமிக்ஸ்தளத்தில்) கோரிக்கைகள் வைத்தும் அதனை சில காரணம்கள் சொல்லி நீங்கள் மறுப்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. /மனதில் நெருடிய விஷயம்/ அட போங்க பாஸ், நெருடல் தானே, அதுல்லாம் பழகி போய்டும். இன்னும் எவ்வளவோ இன்னும் இருக்கு. விடுங்க பாஸ் :P நாமலாம் சொல்றத ஏத்துக்க முடியுமா???

      Delete
  54. எடிட்டர் சார்,

    Off the topic :
    சென்ற வெள்ளி இரவு உங்களுக்கு பிரெஞ்சு இரும்புக்கை மாயாவி scanned cover pages அனுப்பியிருந்தேன். கிடைக்கப் பெற்றதா?

    ReplyDelete
  55. நவீன வள்ளுவர் ஜீ...
    நமது காமிக்ஸ் இன்னும் மேம்படும் கருத்துக்களை பதிவிடலாமே...
    நமது லயனின் 30வது ஆண்டு மலர் மலரவிருக்கையில் வீண் கதை பேசுவதைவிட ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன் உங்களிடம்...

    ReplyDelete
    Replies
    1. /உங்கள் அனைவரிடமும் இந்த இதழின் ஒரிஜினல் (தமிழ்) பதிப்பு இருக்குமெனும் போது, புதியதொரு வார்ப்பில் மொழிநடையினை அமைக்கும் பணியானது சுவாரஸ்யம் தருமா உங்களுக்கு ?/ இருக்கும் போது எதுக்கப்பு ரீப்ரிண்ட்??? புரியலையே பாஸ்... நீங்களே இருக்குன்னு சொல்றிங்க; ரீப்ரிண்ட் போடறிங்க. இல்லாதத சொன்னா ரீப்ரிண்ட் வேணாம், ரசனை மாறணும்னு சொல்றிங்க. அது ஏன் பாஸ்??? மத்தவங்க சொல்ற கதைலாம் வரவே வராதுன்னு தெரிஞ்சும் நாங்க மாஞ்சு மாஞ்சு டைப் அடிச்சு கையெல்லாம் நோகுது ஆசானே!!!
      எவ்வளவோ முறை கூறியும் கேட்காத மாதிரி இருப்பதினால் வந்த வார்த்தையின் வலிகள் அவை. இது மட்டும் புரிந்து விடுமோ அன்பின் ஆசானுக்கு??? நெவர்...

      Delete
    2. நேரடியாய் விசயத்திற்கு வருவோமே . உங்களுக்கு பூம் பூம் படலம் பிடிக்கவில்லை எனில் , வேண்டாம் என காரணம் கூறி எழுதலாமே ! எனக்கும் பூம் பூம் படலம் கையில் இருப்பதால் வேண்டாம் என்று தோன்றுகிறது. ஆனால் இல்லாதவர்களுக்கு ? உங்களிடம் இல்லாத புத்தகங்கள் வந்தால் உங்களுக்கு பிடிக்கும் . எனக்கும் அது போலதான் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு புத்தகங்கள் கேட்கிறோம். . யாரேனும் உங்களுடன் வெகுவாய் இணைந்தால் ஆசிரியர் வேறு ஒன்றுக்கு தயாராவாறே ; இப்போது அட்டை படம் அடிக்கமலிருந்தால் . ஒவ்வொருவரும் தன் ஒருவருக்காக , தான் கேட்ட புத்தகங்கள் கிடைக்கவில்லை என கோபம் கொண்டால் நான் உட்பட உங்களை மாதிரி முகமூடி அணிந்து ஆசிரியருடன் சண்டை போட வேண்டியதுதான் .
      பூம் பூம் படலம் , பெரிய சைசில் படிக்கட்டும் என நினைத்து ஆசிரியர் இதனை வெளி விடலாம் .
      புதிய வாசகர்களை ஈர்க்க , வாங்காதவர்களுக்காக வெளியிடலாம் .

      இதற்கெல்லாம் மேலாக விற்பனை என்ற ஒன்று உள்ளது அல்லவா .ஆனால் விற்பனைகள் அற்புதம் விளைவித்தால் பழைய சூப்பர் ஹீரோக்களுக்கும் வாய்ப்புண்டு என கூறினாரே தெரியவில்லையா .
      நிழல் ஒன்று நிஜம் ஒன்று பலரின் எதிர்ப்பால் கை விட பட்டது.
      கார்சனின் கடந்த காலம் கருப்பு வெள்ளை வேண்டாம் என்ற அதிக குரல்களால் தள்ளி வைக்க பட்டுள்ளது.
      கிராபிக் நாவல்கள் கூட குறைக்க பட்டுள்ளது , சிறந்த கதைகளை மட்டும் விடுவோம் என்று .
      சமீபத்திய டெக்ஸ் சில கதைகள் பிடிக்கவில்லை என்று கூட சிலர் கூறினார்கள் , ரசனை மாற்றம் சிறிதேனும் வந்தால் அவர்களை திருப்தி படுத்துவோம் என கிராபிக் நாவல்களுக்கு மாறினார் . விற்க போவதில்லை , படிக்க மாட்டார்கள் எனும் எண்ணம் இருந்தால் அவர் உங்களை விட அதிகம் கவலை படுவார் . விற்காத ஒன்றை வைத்து அவர் என்ன சாதிக்க போகிறார் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்ற வேண்டுமே .

      முதலில் உங்கள் பெயரிலேயே வாருங்கள் , யாரும் உங்களை கடித்து தின்று விட போவதில்லை . அப்போதுதான் தேவை இல்லாமல் வார்த்தைகளை விட மாட்டீர்கள் . புத்தகங்களை படிப்பதை விட உங்களை போல முகமூடி தரித்து வரும் நண்பர்களுடன் போராடியே பொழுது விறு விறுப்பாய் கழிகிறது .நீங்கள் என்ன கூறி அவர் ஏற்கவில்லை என கூறலாமே .ஆசிரியரை தவராய் வழி நடத்தி செல்ல அவர் குழந்தையா . ஒரு சிலரை சந்தோஷ படும் வகையில் புத்தகங்கள் வெளி விட்டால் ஆசிரியர் கடையை இழுத்து சாத்த வேண்டியதுதான் என்பது அவருக்கும் தெரியுமே ! உங்களை போன்ற முகமூடி மாவீரர்கள் அவ்வாறு நடந்தால் ஏற்று கொள்வீர்களா ?

      Delete
    3. நவீன வள்ளுவரே...
      அச்சுத்தரமும் வண்ணங்களும் ஒரு பக்கம் இருந்தாலும் டெக்ஸ் வில்லரின் நில்..கவனி..சுடு....ஒரு அட்டகாஸமான கதைதான் என்பதை மறுக்க முடியுமா?விமர்சனங்கள் ஒரு புறமிருந்தாலும் நமது ஆசிரியரின் அந்த டிரேட் மார்க் தமிழ் ரவுண்டுகட்டி அடித்துள்ளதா இல்லையா..?உண்மையை சொல்லுங்கள்..

      Delete
    4. அதில் ஒ(எ)ன்றும் குறை இருந்ததில்லை நண்பரே. சொல்ல போனால் க்ரீன் manor கதை மொழிபெயர்ப்பின் தீவிர ரசிகன் நான். மறுபதிப்பு ஆதங்கத்தின் வெளிபாடு அது. அவ்வளவே.

      Delete
  56. ஹாய் விஜயன் சார்,
    அயல்நாட்டிலிருப்பதால் உடனுக்குடன் புத்தகங்களை வாசித்து தங்கள் பதிவுகளுக்கு எமது கருத்துக்களை அளிக்க முடியாத கஷ்டத்திலிருக்கின்றோம்..இந்த புத்தகங்கள் எப்போது எங்கள் கைகளுக்கு வருமோ? என்னமோ?...அதை நாங்கள் வாசித்து முடித்து கருத்துக்களை இங்கே பதிவிடுகையில் அது "என்னது காந்தி செத்துப்போயிட்டாரா?" ங்கிற மாதிரி ஆயிடுது.
    போன வாரம் வந்திறங்கிய 24 புத்தகங்களையுமே இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன்.
    முந்தைய பதிவில் எனது மின்னஞ்சலிற்கு பதிலளித்த நண்பர்கள் பொறுத்தருள்வார்களாக..புத்தகத்தில் மூழ்கிப்போனால் உலகை நாட்கணக்கிலே மறந்து விடுவதை தங்களால் புரிந்து கொள்ள இயலுமென நம்புகின்றேன். தங்களின் கேள்விகளுக்கான பதில்களை முந்தைய பதிவிலிட்டிருக்கின்றேன்.
    விஸ்கி-சுஸ்கி

    கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்

    Mugunthan kumar

    Parani from Bangalore

    தங்களனைவரினதும் அக்கறைக்கும் சிரமம் பார்க்காது பதிலளித்த நல்லுள்ளத்திற்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. //அயல்நாட்டிலிருப்பதால் உடனுக்குடன் புத்தகங்களை வாசித்து தங்கள் பதிவுகளுக்கு எமது கருத்துக்களை அளிக்க முடியாத கஷ்டத்திலிருக்கின்றோம்//

      @ Suji Jeya :

      சரியாய் சொன்னீர்கள். இதே கருத்தை நான் பதிய இன்று பதிய நினைத்தேன். நீங்கள் முந்திக் கொண்டீர்கள் :-)
      புதிய கதைகளைப் பற்றி நண்பர்களது கருத்துக்களை படிக்கும்போது இதே ஏக்கம் எனக்கும் உண்டு!

      Delete
    2. நண்பர்களே படித்த கதைகளை எப்போது வேண்டினும் பகிர்ந்து கொள்ளலாமே ! பிடித்ததா ? பிடிக்கவில்லையா ? என்று . அது ஆசிரியருக்கும் தன பாதையை சரியாய் அமைக்க உதவலாம் . நிறை, குறைகளை சொல்வதில் தயக்கம் வேண்டாம் . தங்கள் தயக்கம் குறைந்து பதில்களை தந்ததற்கு நன்றி . தொடரட்டும் உங்கள் சேவை .

      Delete
  57. \\\\\\\\\\\\\\நவீன வள்ளுவன், சுந்தர்ராஜ்////////////////

    உங்கள் 2 பேருக்கும் என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியவில்லை. இங்கு பதிவிடும் அனைவரையும் கிண்டல் செய்து பதிவிடுவதே உங்களுக்கு வழக்கமாகிவிட்டது.
    உங்கள் மனதில் தோன்றும் நிறை குறை எதுவாக இருந்தாலும் தயங்காமல் தெரியப்படுத்தலாமே? அதைவிட்டுவிட்டு அடுத்தவர்களை கேலி கிண்டல் செய்வது நாகரீகமில்லாத செயல்.

    ReplyDelete
    Replies
    1. நான் என்ன நண்பரே கிண்டல் செய்தேன்??? ஆசானிடம் என் ஆதங்கத்தை வெளிபடுத்தினேன் அவ்வளவே...

      Delete
  58. இந்தப் பதிவில் நடக்கும் களேபரங்களைப் பார்த்தால், ஆசிரியரின் அடுத்த பதிவு "கேட்காததும் கிடைத்தது!" என்பதாக இருக்குமோ? :)

    ReplyDelete
    Replies
    1. இதில் களேபரம் ஏதும் இல்லையே. எங்கள் வெளிப்பாட்டின் வழி என கொள்ளலாமே.

      Delete
  59. திருஷ்டிக்கு என்று சிலர் வந்து விடுகிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. எங்கள் பாண்டிய நாடே திருஷ்டிக்கு பெயர் போனது நண்பரே. தயை கூர்ந்து எங்களையும் அனுமதியுங்களேன், உண்மைளை எடுத்துரைக்க இந்த திருஷ்டி பூசணிக்காய்கள் உதவும் அல்லவா!!!!!

      Delete
  60. 1 மில்லியன் கமெண்ட் எப்பொழுது reach ஆகும்....august or september???

    ReplyDelete
  61. எனது மகள்..மியாவி படங்களை பார்த்து கதை சொல்ல சொல்லி கேட்டாள்...

    ReplyDelete
    Replies
    1. /எனது மகள்..மியாவி படங்களை பார்த்து கதை சொல்ல சொல்லி கேட்டாள்.../ உங்கள் பாடு தேவலாம்... நாங்கள் இன்னும் மிகவும் சிலாகித்து சொல்லப்பட்ட சிப்பாயின் சுவடுகளின் கதையினை படம்+டயலாக் படித்தும் புரிந்து கொள்ள முயற்சித்து பலன் இன்றி, என் தாடியின் பெரும்பகுதி முடிகளை இழந்தது தான் நண்பரே மிச்சம்... நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்...

      Delete
  62. முகமற்ற கண்கள் படிக்கவே தோணலை... தோர்கல் முடிக்கவே முடியவில்லை... டெக்ஸ் ஆறுதல்!!!

    முகமற்ற கண்கள் மறுபதிப்பு செய்ய்த்ததற்க்கு பரிகாரமாக தங்க தலைவனின் " ரத்த கோட்டை " முழு வண்ண மறுபதிப்பை உடனே அறிவிக்கும்படி கேட்டு கொல்கிறேன்!!!!!

    ரத்த கோட்டை முழு தொடரையும் வண்ண மறுபதிப்பாக ஒரு special வெளியீடாக வர செய்யலாமே!! மீண்டும் ஒரு முறை பாலைவன புழுதியையும் , ஒற்றை கண் குவானாவின் குள்ள நரி தனத்தையும், தங்க தலைவனின் மதி யூகத்தையும் , செயல் திறனையும் அனுபவிக்க ஆசை ( வெள்ளையர் தலைவர் தந்திரத்தில் நரியையும், செயல் ஆற்றலில் சிறுத்தையையும் மின்சியவர் ) ...
    மறுபதிப்புக்கு முற்றிலும் தகுதியான ஒரு கதை!!!!

    ReplyDelete
    Replies
    1. தோர்கல் அற்புதமான கதை நண்பரே, இப்பொழுதுதானே தொடங்கி உள்ளது. போகப்போக பாருங்கள் நன்றாக இருக்கும். தோர்கலுக்கு நான் கியாரண்டி.
      ரத்த கோட்டையின் முழு வண்ண மறுபதிப்புக்கு என்னுடைய ஆதரவு எப்பொழுதும் உண்டு.

      இதுவரை வந்த நமது வெளியீடுகள் அனைத்திலும் டாப் 3 கதைகள் எதுவென்று கேட்டால் மின்னும் மரணம், தங்க கல்லறை, ரத்தகோட்டை இந்த முன்றையும்தான் சொல்வேன்.
      தங்க கல்லறை வந்துவிட்டது. மின்னும் மரணம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வருகிறது. ரத்தகோட்டை நிச்சயமாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

      ////////// வெள்ளையர் தலைவர் தந்திரத்தில் நரியையும், செயல் ஆற்றலில் சிறுத்தையையும் மின்சியவர்////////
      ரத்தக்கோட்டையை மீண்டும் படிக்கும் ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள்.

      Delete
  63. //முதலில் உங்கள் பெயரிலேயே வாருங்கள் , யாரும் உங்களை கடித்து தின்று விட போவதில்லை . அப்போதுதான் தேவை இல்லாமல் வார்த்தைகளை விட மாட்டீர்கள் . புத்தகங்களை படிப்பதை விட உங்களை போல முகமூடி தரித்து வரும் நண்பர்களுடன் போராடியே பொழுது விறு விறுப்பாய் கழிகிறது .நீங்கள் என்ன கூறி அவர் ஏற்கவில்லை என கூறலாமே .ஆசிரியரை தவராய் வழி நடத்தி செல்ல அவர் குழந்தையா . ஒரு சிலரை சந்தோஷ படும் வகையில் புத்தகங்கள் வெளி விட்டால் ஆசிரியர் கடையை இழுத்து சாத்த வேண்டியதுதான் என்பது அவருக்கும் தெரியுமே ! உங்களை போன்ற முகமூடி மாவீரர்கள் அவ்வாறு நடந்தால் ஏற்று கொள்வீர்களா ?//


    ஸ்டீல் உங்கள் கருத்து முற்றிலும் உண்மை...
    ஒரு வேளை முகமூடி மாட்டி கொண்டால் தான் உள்ளத்தில் இருக்கும் கருத்துக்கள் வெளியே வருமோ????

    ReplyDelete
  64. Replies
    1. அட போங்கபா...

      Delete
    2. VKS & சூப்பர் விஜய் : அட..இதுக்கே அலுத்துக் கொண்டால் எப்படி ? :-)

      Delete
  65. காமிக்ஸ் மீதான விமர்சனம் எனக்கு உவப்பானதல்ல என்பதால் எப்போதும் மற்ற விஷயங்களில் மட்டும்தான் என் கருத்தைப் பதிந்துவருகிறேன். ஆனால் மறுபதிப்பு குறித்த போராட்டம் பெரும் தொடர்கதையாக, இந்தத் தளத்தை எப்போதும் ரத்தபூமியாக வைத்திருக்கிறது.

    என் கருத்தைச் சொல்வதானால் மறுபதிப்பே தேவையில்லை. ஸ்டீல்கிளா போன்ற நண்பர்கள் மறுபதிப்புகளை மிக தீவிரமாக கேட்கிறார்கள். அவர்கள் விஸ்கி‍‍ சுஸ்கி சொல்லும் கருத்தைச் சிந்திக்கலாம். நாஸ்டால்ஜிக் உணர்வைத் தூண்டி மகிழும் பயன் தவிர்த்து மறுபதிப்புகளால் எந்தப் பல‌னும் இல்லை. பாட்ஷா போன்ற படங்களை மறு உருவாக்கம் செய்யவே இயலாது. சிறப்பாக உருவாக்கப்பட்டதோ, குறைகள் உள்ளனவோ அவ்வளவுதான், அவை முடிந்து போனவை. நம் எடிட்டரின் தேடல் நாம் நன்கு அறிந்ததுதான். அவரது பட்ஜெட்டுக்கு உட்பட்ட கதைகளை தொடர்ந்து தர முயற்சித்துக் கொண்டேயிருப்பார். ஆக, இந்த மறுபதிப்பு இம்சையெல்லாம் இல்லாதிருந்தால் புதிய கதைகள் நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

    வின்டேஜ் இதழ்கள் விலை அதிகம் என்பதால், அதை தடுக்கும் எண்ணத்தில் மறுபதிப்பைச் சிலர் கோருவதைக் காணமுடிகிறது. இது அப்பட்டமான நகைப்புக்குரிய விஷயம்!

    அதெல்லாம் முடியாது, மறுபதிப்பு வந்தே தீரும் என்றாலும், என்னைப்பொறுத்த வரை மகிழ்ச்சியே!

    மொழிபெயர்ப்புப் போட்டியைப் பற்றி ஒருவரைத் தவிர யாரும் கருத்துக்கூறியதாக தெரியவில்லை. அந்த நண்பரும் கன்டிஷன்டு மனநிலையில் இருப்பதைக் காணமுடிகிறது. என் விருப்பம் வேறானது. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துநடை என்பது விவரிக்கமுடியாத அனுபவத்தைத் தரக்கூடியது. ஆஸம்!! அப்படியானால், சுஜாதா தவிர்த்து வேறு யாரையும் நான் படிக்கவே மாட்டேன் என்பது எந்த விதத்தில் நியாயமாகும்? பின்பு எப்படி கி.ரா, நாஞ்சில் நாடன், ச.தமிழ்ச்செல்வன், அ.முத்துலிங்கம் போன்றோரின் எழுத்துவீச்சை எல்லாம் உய்த்துணர்வது?

    எடிட்டரின் மொழிபெயர்ப்பு ஒரு சகாப்தம் என்பதையும், ஏன் என்பது குறித்தெல்லாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆயினும் நான் வெரைட்டியை விரும்புகிறவன். இந்தத் தளத்தில் நடத்தப்படும் போட்டிகள், ஓரிரு கதைகளில் வாசகர்களின் பங்களிப்பு என்பதையெல்லாம் நான் குறிப்பிடவில்லை. அதெல்லாம் ஜுஜுபி! ஆனால், எடிட்டர் நிச்சயம் தன் மொழிபெயர்ப்புக் குழுவைப் பெரிதாக்கிக்கொள்ள வேண்டும். மொழியறிவு மட்டுமே மொழிபெயர்ப்பதற்கான தகுதியாகிவிடாது, படைப்பூக்கம் நிரம்பத்தேவைப்படும் பணி இது என்பதை நன்கறிவீர்கள் நீங்கள். நிறைய வாசிப்பும், அனுபவமும் வாய்ந்த தகுதியான எழுத்தாளர்களை அணுகி, மொழிபெயர்ப்பைக் கோரிப் பெறுவதும் கூட நம் இதழ்களுக்குச் சிறப்புச் சேர்க்கும் என்பது என் கருத்து!

    ReplyDelete
    Replies
    1. ஆதி தாமிரா : //நாஸ்டால்ஜிக் உணர்வைத் தூண்டி மகிழும் பயன் தவிர்த்து மறுபதிப்புகளால் எந்தப் பல‌னும் இல்லை. பாட்ஷா போன்ற படங்களை மறு உருவாக்கம் செய்யவே இயலாது.//

      //மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துநடை என்பது விவரிக்கமுடியாத அனுபவத்தைத் தரக்கூடியது. ஆஸம்!! அப்படியானால், சுஜாதா தவிர்த்து வேறு யாரையும் நான் படிக்கவே மாட்டேன் என்பது எந்த விதத்தில் நியாயமாகும்?//

      +101

      Delete
    2. சார், அப்படியென்றால் தங்க கல்லறை, இரத்த படலம் , மின்னும் மரணம் ......போன்றவை நாஸ்டால்ஜிக் உணர்வைத் தூண்டி மகிழும் புத்தகங்கள்தானா ! மிக சிறந்த கதைகள் என்பதால்தானே இவை வெளி விட படுகின்றன . அது போல சிறந்த சூப்பர் ஹீரோக்களின் கதைகளும் வெளி விடுங்கள் என்றே கேட்கிறோம் .

      Delete
  66. எந்த மாதம், எத்தனை இதழ்கள், என்ன இதழ்கள் என்பது குறித்த தகவல்களை ஆர்டராக யாரும் சேகரிக்கிறீர்களா நண்பர்களே? இந்தத் தளத்தில் அந்தத் தகவல் இல்லை. நண்பர் ஒருவருக்காக, கடந்த ஆறு மாதங்களில் வந்த இத‌ழ்கள் என்னென்ன என்பது பற்றி தகவல் சேகரிக்க முனைந்து முடியெல்லாம் கொட்டிப்போய் நான் லூஸானதுதான் மிச்சம். ஆசிரியர் இதைக் கொஞ்சம் கவனத்தில் கொண்டு ஒரு வழி செய்தால் தேவலை!

    ReplyDelete
    Replies
    1. ஆதி தாமிரா : நமது வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் ; சமீபத்து வெளியீடுகள் அனைத்தும் அட்டைப்படங்களோடே உள்ளனவே ! www.lion-muthucomics.com

      Delete
  67. ஆசிரியரின் பதிவுகளிலிருந்து மட்டும் இதைத் தெரிந்துகொள்ளவே முடியாது. எல்லா பதிவுகளும் ஏற்கனவே வந்த, வரப்போகிற, வந்துகொண்டிருக்கிற (இம்மாத இதழ்கள் இதோ இன்று கூரியர் செய்யப்பட்டுவிட்டது என்பதாக) இதழ்களில் ஏதாவது ஒன்றிரண்டைப் பற்றி மட்டுமே பேசுகிறது. ஒரே கன்ப்யூஸிங்!

    ReplyDelete
  68. ALL THREE COMICS IS GOOD. MY REPRINT SUGGESTION IS "ORU VEERANIN KATHAI". YOU ALSO DON'T FORGET THIS BEAUTY FUL STORY. I DON'T HAVE THE OLD COPY NOW. I EXPECTING THIS ONE ALSO 2015 RE PRINT LIST. PLEASE CHECK THE "DISCOVERY BOOOK PALCE" PROBLEM. i BOUGHT THE ALL 2013 BOOKS AT THERE. BUT, WHAT KIND OF PROBLEM BETWEEN YOU?! I DON'T KNOW. PLEASE CHECK AND CLEAR THAT PROBLEM. I ALSO TALKED ABOUT WITH MR.RADHA KRISHNEN IN CHENNAI BOOK FAIR. I EXPECTING GOOD RESULT FROM YOUR SIDE. MANY MORE PEOPLE BOUGHT OUR COMICS AT THIS PLACE. I THINK, YOU KNOW ABOUT THIS?!

    ReplyDelete
    Replies
    1. Siva Lingam : ஆர்டர் + முன்பணம் = புத்தக டெஸ்பாட்ச் ! Simple as that..!

      Delete
  69. இத்தளத்தில் சில நண்பர்கள் வெட்டி கமெண்ட்ஸ் பற்றியும் fake ids கருத்துகளுக்கு மாறுபடுகிறேன்! Blogன் beautyயே அதன் எல்லையற்ற சுகந்திரம் ! சாதரணமாக ஒரு வார இதழுகோ, magazineகு கடிதம் எழுதினால் சாதரணமாக ஒரு சில கடிதங்களை தவிர வெளியிட வாய்ப்பில்லை! ஆனால் blogல் அப்படி அல்ல நாம் வெளியிடும் கருத்து worth or waste publish ஆகிறது. ஓரளவுக்கு moderate மட்டுமே செய்ய முடியும் . நம் கருத்தை வெளியிட தடையிருந்தால் தனியே நமகென்று ஒரு blog அமைத்து வெளியிட வாய்ப்புள்ளது or social networkகளில் வெளியிட வாய்ப்புள்ளது. Blog படிப்பவர் யாருமே இல்லை என்ற போதிலும்!!!வெட்டி கமெண்ட்ஸ் ஒதுங்கி வழிவிட சொல்கிறார்கள்! யார் யார் வழியை மரிக்க முடியும் ??? யார் எப்போது கமெண்ட்ஸ் என்ன கமெண்ட்ஸ் வெளியிட நிர்ணயம் செய்ய முடியும்?? load more என்பது தவிர்க்க இயலாதது ! Freedom of Expression is beauty of blog!

    ReplyDelete
    Replies
    1. யாம் எவர் வழியையும் மறிக்கவில்லை.தடுக்கவுமில்லை.சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.ஆனால் அவரவருக்கு தானே தன் சுதந்திரத்தின் அளவையும்,அதை மற்றவர்கள் மேல் எவ்வளவு தூரம் பிரயோகிக்கலாம் என்றும் வரைமுறை ஒன்று வைத்துக் கொண்டால் நன்றாக இருக்குமே என்பதே எம் ஆதங்கம்.மற்றபடி யாம் எவரையும் குற்றம் குறை சொல்லுவதற்காக இந்தப் பெயரில் வரவில்லை நண்பரே.குறை சொல்ல வேண்டும் என்றால் 300 கமென்ட்டுகளையும் யாமே நிரப்பிடலாமே.எனக்கு இரும்பர்,மற்றும் விஸ்கி போன்ற எந்த ஒரு நண்பர்கள் மீதும் தனிப்பட்ட முறையில் எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.மற்றபடி மாயாவி,ஆர்ச்சி,ஸ்பைடர் மறுபதிப்புகள் கேட்டு இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் அழுது அடம் பிடிப்பதில் யாம் இரும்பரையே மிஞ்சிடுவோம் என்பது நீங்கள் அறியாதது. எங்களுக்கு காமிக்ஸ் என்றாலே இவர்கள் மட்டுமே.இவர்களை மிஞ்சி எந்த பெரிய லார்கோ, ஷெல்டன் கொம்பர்கள் வந்தாலும் மாயாவிக்காக தன் வலதுகரத்தை வெட்டி அவ்விடத்தில் புதிய இரும்புக்கரம் மாட்டும் அளவிற்கு வெறியர்கள் யாம்.இந்த மூன்று பேருக்காக தங்கள் இன்னுயிரையும் தந்து போராட்டத்தில் கலந்து வாழைப்பூ, நண்டுஃப்ரை, ஆமை வடை போன்ற வஸ்துக்களை வயிற்றின் உள்ளே தள்ளிடவும், மில்லேனியம் ஹிட்ஸ் ஸ்பெசலுக்காக தங்கள் தூக்கத்தை தொலைத்து ஒரு மில்லியன் எனும் லட்சிய கோட்டையை நோக்கி போய்க் கொண்டிருக்கும் எங்கள் காளையாம் இரும்பார் மற்றும் சக நண்பர்கள் அனைவரையும் பாராட்டிடவும் மிக மிக ஆவலோடு வந்திருக்கிறோம் யாம்.அஹம் ப்ரம்மாஸ்மி.

      Delete
    2. senthilwest2000@ Karumandabam Senthil : Relax நண்பரே..! அபிப்ராயங்களை வெளிப்படுத்த ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி ! அவ்விதம் பார்க்கப் பழகிக் கொள்ளுவோமே !

      Delete
  70. சார் நான இன்று வங்கி கணக்கில் பணம் செலுத்தி உள்ளேன் ...எப்படி உறுதி செய்து கொள்வது ...நாளை தெரிந்து கொள்ள முடியுமா...(சூப்பர் சிக்ஸ் சந்தா )

    ReplyDelete
    Replies
    1. இளம் பரிதி : பணம் அனுப்பிய விபரம் + உங்கள் முகவரி + மொபைல் நம்பரோடு ஒரு மின்னஞ்சல் அனுப்பிடுங்கள் - பணம் கிட்டிய மறு தினம் உங்கள் சந்தா எண்ணோடு பதில் கிட்டிடும்.

      Delete
  71. மியாவி சில பக்கங்கள் புரியவில்லை . ஆனால் தொகுப்பை பார்க்கும் பொது மிக அருமையாக உள்ளது . சிறுவர்களை கவர அருமையான முயற்சி . இவற்றை போல காளி, கபீஸ், சாம், ஹேகர் , விசு ,கிச்சு வந்தால் அருமையாக இருக்கும் .

    ReplyDelete