Wednesday, April 23, 2014

இல்லம் எங்கிலும் காமிக்ஸ்...உள்ளம் முழுவதும் மகிழ்ச்சி !

நண்பர்களே,

வணக்கம். 150-வது பதிவென்பதால் மாமூலான சங்கதிகளோடு சலாம் போட்டு முடித்து விடாமல் - கொஞ்சம் பொறுமையாய் எழுதுவோமே என்று பேனாவையும், பேப்பரையும் தூக்கிக் கொண்டு அமர்ந்தால்  தொடர்ந்த பதிவின் கருவானது  ஒன்பது மணி மெகா சீரியலைப் போல் நீள்வதைத் தவிர்க்க இயலவில்லை ! எழுதியதை டைப் அடிப்பதில் தாவு தீர்ந்து போவதால் ஸ்க்ரிப்டை நமது டைப்செட்டிங் பெண்மணியிடம் ஒப்படைக்கிறேன் - இன்றைய இரவுக்குள் டைப்செட் செய்து வந்து விடுமென்ற நம்பிக்கையில் ! Here goes : 








மே மாத இதழ்கள் இன்றைய கூரியரில் / பதிவுத் தபாலில் புறப்பட்டு விட்டன ! எலெக்ஷனுக்கு மறு நாள் காலை உங்கள் வீட்டுக் கதவுகளை அவை தட்டியாக வேண்டும் ! 



235 comments:

  1. Finally..!
    Hope this will be a special post with some 'special' announcements. :-)

    ReplyDelete
  2. super.so 11 o clock login will give more details

    ReplyDelete
  3. Expecting some special announcements!!!

    ReplyDelete
  4. What it will be...

    Spider Special...
    Tex Special...
    150th Special...
    New Hero's introduction..
    Reintroduction of Junior Lion..
    Bi monthly introduction...

    ReplyDelete
  5. @ FRIENDS : கௌபாய் கதைகளின் தாக்கமோ - என்னவோ நமது கற்பனைக் குதிரைகள் தறிகெட்டு ஓடுகின்றன !! சற்றே நிதானம் ப்ளீஸ் !!

    ReplyDelete
  6. சார், பார்த்தவுடன் என் முகத்தில் புன்னகை ! இல்லமெங்கும் மகிழ்ச்சி !

    ReplyDelete
  7. Sir,

    Thanks. awaiting for your post and books.
    Regards,
    Mahesh

    ReplyDelete
  8. சார், வந்து வந்து சென்று சோர்வடைந்ததுடன் நாளை புத்தகம் கிடையாது என சோம்பி இருந்தேன் ! கதைகள் நாளை மறுநாள்தான் கிடைக்கும் என்றாலும் , இன்று உங்கள் அற்புதமான 150 வது பதிவை எதிர் நோக்கி இருப்பதால் இனம் புரியாத சந்தோசம் மனதில் ! நீண்ட நாளுக்கு பின் உங்களுடன் உரையாடுவது போல ஒரு எண்ணம் ஏனென்று தெரியவில்லை !
    அட்டை படம் அருமை சார் ! இரவுக்காக காத்திருக்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. எழுத்துக்கள் அருமை ,பனி கடல் என்பதால் அலை போல புரளுகின்றதோ மேலும் கீழுமாய் ! பின்னட்டை கதை குறித்த குறிப்புகள் படிப்பவரை வாங்க வைக்க வேண்டும் என்ற என்னத்தை (விஜய் மன்னியுங்கள் பிழை இருப்பதால் ) தூண்டுவதாய் உள்ளது ! இது போல தொடரும் பின்னட்டைகள் இருந்தால் நன்றாக இருக்குமே !

      Delete
    2. // இது போல தொடரும் பின்னட்டைகள் இருந்தால் நன்றாக இருக்குமே !// +1.

      Delete
  9. Replies
    1. மழ வருது மழ வருது நெல்லு குத்துங்க
      .... .... .... .....
      .... .... .... .....
      சும்மா வந்த மாமனுக்கு சூடு வையுங்க !
      ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ....

      Delete
  10. தோர்கல் அட்டைபடம் சூப்பர்!
    புத்தகங்களை கைப்பற்ற இப்போதே கொரியர் நண்பரிடம் சொல்லி விடுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. // விஜய் மன்னியுங்கள் பிழை இருப்பதால்)//
      நீங்கள் உங்கள் வழியினிலே பதிவிடுங்கள் ஸ்டீல் க்ளா! ,உங்கள் எண்ணங்களை அப்படியே பதிவது அதுவும் அழகு தான்! (என்பதே என் கருத்து)

      ஆச்சரியக்குறி ஏனோ? நாம வழக்கமா செய்வது தானே?

      Delete
    2. நண்பரே எனக்கு முன்பே வாங்கிடுவீர்களோன்னுதான் !

      Delete
  11. // முழுமையான பதிவு இன்று பின்னிரவு தயாராகிடும் guys - so அதன் முன்பாக refresh அடித்தே நீங்கள் சோர்ந்து போக வேண்டாமே..?! //
    அதற்குள் இங்கே 100-க்கு மேல் பின்னுட்டங்கள் என்றாகி விடலாம்!

    ReplyDelete
  12. அம்மாடியோவ்......................... 150 வது பதிவா கலக்குங்க காமிக் ஆசான்

    ReplyDelete
  13. அட்டை படம் சூப்பர் சார்.150பதிவு மகிழ்ச்சியளிக்கிறது சார்,முழு பதிவை கான மிகுந்த ஆவலாக உள்ளேன்

    ReplyDelete
  14. இந்த 150வது பதிவில் சிறப்பான அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்கிறோம் Editor Sir! காத்திருக்கிறோம் இரவு 11மணியடிக்க !!!

    ReplyDelete
  15. Sir, உங்களின் முழு பதிவுக்காக ஆவலாக காத்திருக்கிறேன். Hope there is something special...

    ReplyDelete
  16. நண்பர்களே..

    இப்பதிவின் தலைப்பே ஏதோ சொல்வது போல் இருப்பது எனக்கு மட்டும்தானா...

    ReplyDelete
  17. * தலைப்பு சூப்பர்.
    * என்னை மிகவும் ஈர்த்த கதைகளில் தோர்களும் ஒன்று - ஒரே கவலை புத்தகம் மிக ஒல்லியாக இருக்கும்.

    ReplyDelete
  18. தல ஆட்டம் ஆரம்பிடிச்சுடோய்!!!! சீக்கிரமா அப்டேட்ஸ்ஸ அள்ளி உடுங்க தல...

    ReplyDelete
  19. எடிட்டர் சார்,

    உங்களின் பெரிய பதிவுகள் என் போன்றோருக்கு பரவசம் தரும் ஒரு அனுபவம்.
    இன்றிரவு அதை அனுபவிக்க காத்திருக்கிறேன்.

    சென்ற தங்களின் பதிவிலேயே குறிப்பிட நினைத்தேன். தாங்கள் அளித்த "நில் கவனி சுடு" sample பக்கத்தில் எழுத்துருக்கள் பெரிதாக இருந்து படத்தில் 25% ஆக்ரமித்தது. ஆனால் தோர்கள் கதையில் சரியான அளவில் இருப்பதாக எனக்கு தெரிகிறது. இதே போல் தொடர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  20. சார்.. Refresh பண்ணி பண்ணி, விரைவில் மில்லியன் ஹிட்ஸ் ஐ எட்டிப்பிடிக்கவைத்து, எங்களுக்கு ஸ்பெஷல் புக் ரெடி பண்ண நினைக்கும் உங்கள் ஆர்வம் அட்டகாசம்...! ;-) :-)

    ReplyDelete
  21. "நம் முன்னே காத்திருக்கும் மலையைத் தாண்டவே சூப்பர்மேனும் ; ஸ்பைடரும் தேவை"_ஆமாங்க அய்யா! ஆயாவும் தேவை ஸ்பைடர் அண்ணாச்சியும் தேவை! சூப்பர் மேனை இசுத்துகினு (இழுத்துக் கொண்டு_சென்னை ஸ்டைல்) வந்தீங்கன்னா அதகளம்தான்! ஹீ ஹீ ஹீ கலர்ல ஆயா கதைங்க கொஞ்சம் சேர்த்துக்கலாமே! நண்பர்கள் லொள்ளு பண்ண மாட்டாங்கன்னு நினைக்கிறேன் ஹீ ஹீ ஹீ

    ReplyDelete
    Replies
    1. \\கலர்ல ஆயா கதைங்க கொஞ்சம் சேர்த்துக்கலாமே! \\
      +1

      Delete
  22. தோர்கல் அட்டகாசமான கதை வரிசை! தங்களது தேர்வுகளும் அட்டகாசம்! நன்றிகள் பல சார்! சர்ர்ர்னு புத்தக சங்கமத்துக்கும் கொண்டு வந்துடுங்க!!!

    ReplyDelete
  23. நமது எடிட்டர் முழு பதிவயம் போடுற முன்னாடியே கமென்ட் செஞ்சுரி அடிச்சிடும் போல இருக்கு நண்பர்களே. நானும் வந்துட்டேன்.ஜாலி

    ReplyDelete
  24. 0.87 million 0.13 million to reach 1 million...

    ReplyDelete
  25. டாலரின் மதிப்பு குறைய , அதன் மூலம் நமது காமிக்ஸ் அச்சடிக்க பயன் படும் அயல்நாட்டு தாளின் விலை குறைய தகுதியானவருக்கு வாகளியுங்கள் வாக்கால நண்பர்களே ! பிரச்சார நேர வரம்பு முடிந்து விட்டதால் யாருக்கும் ஆதரவு கோரி எனக்கு கீழே யாரும் கோர வேண்டாம் !

    ReplyDelete
  26. அருப்புக்கோட்டை நண்பர் புக்ஸ் கைப்பற்றிவிட்டார்

    ReplyDelete
  27. Dear Editor

    Its an nice article. Always nice to remember the first achievement now that too when you reached 30th year milestone.
    Keep going..we will be supporting you always

    All the best

    ReplyDelete
  28. Thanks for sharing your thoughts sir... We are eagerly waiting for சி.சி.வ. soon...

    ReplyDelete
  29. நேற்றைய சிதைக்கப்பட்ட கனவுகளின் அஸ்திவாரத்தில்தான் இன்றைய கோட்டைகள் கட்டபடுகின்றன என்பதை தங்களின் 150வது பதிவு மெயபிகிறது! மீண்டும் மணியோசை modern trendற்கு ஒத்த ஓசையோடு ஒலிக்கும் என வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  30. நேற்றைய சிதைக்கப்பட்ட கனவுகளின் அஸ்திவாரத்தில்தான் இன்றைய கோட்டைகள் கட்டபடுகின்றன என்பதை தங்களின் 150வது பதிவு மெயபிகிறது! மீண்டும் மணியோசை modern trendற்கு ஒத்த ஓசையோடு ஒலிக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  31. What an Emotional Post...
    Your writing style took us back to 1980's and i can completely understand your passion for comics since it started this early.
    The Layout of Ding-Dong were beautiful and catchy, i am sure kids would have loved it - if the book came out.

    All in all, a Fitting Post for 150

    ReplyDelete
  32. டியர் எடிட்டர் ,
    தோர்கள் இன் முன் பின் அட்டை படங்கள் அருமையாக வந்துள்ளன . சிறுவனாக நடை பயின்ற வயதில் நீங்கள் ஆரம்பித்த "டிங் டாங் " இதழ் வெளி வராமல் மறைக்க பட்டாலும் அந்த சிறு வீரிய விதைதான் இன்று பெரிய விருட்சம் ஆக கிளைகள் பரப்பி உலகளாவி பரந்து நிற்கும் "லயன் & முத்து காமிக்ஸ்" இன் அடிக்கல் என்பதே நாம் எல்லாம் பெருமை பட கூடிய நிதர்சனம் . சார் நான் எல்லாம் , எனது பால்ய வயதினில் காமிக்ஸ் பார்த்து கதை கேட்டு அதனூடாக தமிழ் பயின்றவன் என்று கூறுவதில் , தாங்கள் எமது உணர்வுகளினை புரிந்து கொள்வீர்கள்.

    இன்றோ தங்களின் அரிய பொக்கிஷம் , எத்தனை வருடம் கழித்து நண்பர்கள் மூலம் திருப்பி கிடைத்தது , அதில் சில பக்கங்களினை எந்த 150 வது பதிவினை அலங்கரிப்பது சாலச் சிறந்தது.

    ReplyDelete
  33. முத்து வாரமலர்களில் சிலவற்றை நான் பாதுகாத்துவைத்துள்ளேன்....உங்களின் நெகிழ்ச்சியான இந்தப்பதிவு அந்நாட்களை மீண்டும் கண்முன்னே கொண்டுவந்துவிட்டது ஆசிரியரே........தஙளின் ஆடோகிராஃப் கேட்டு நான் எழுதியதும்,அதற்கு தங்களின் பதில் கடிதமும் தங்களுக்கு நினைவுள்ளதா அன்பு ஆசிரியரே...?

    ReplyDelete
  34. 150தொடர் பதிவுகள் வாயிலாக எங்களை அசத்திய ஆசிரியருக்கு நன்றிகள் பல. இந்த 28மாதங்களை பின்னோக்கி பார்த்து நடந்தவைகளை ஞாபகம் வைத்து கொள்ளவே நாங்கள் பிரம்ம பிரயத்தனம் செய்தாலும் முடியாத காரியம் . 34ஆண்டுகளுக்கு முன்பு தங்களின் முயற்சியை ஏதோ போன வருசம் நடந்ததை போல நினைவு கூர்வது ஒன்றும் லேசு பட்ட விசயம் அல்ல சார் . உண்மையான அசத்தல் சார் . வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  35. சார் , 150வது பதிவு எதிர்பார்க்கவில்லை உங்களிடமிருந்து இப்படி வரும் என்று !
    அன்று ரத்னபாலா ,பூந்தளிர், அம்புலி மாமா , பாலமித்ராவுடன் இணைந்து எங்களுடன் கை குலுக்க வாய்ப்பிலாமல் போய் விட்டது !
    இப்போது வண்ணத்தில் இவற்றை ஒரு புத்தகமாக சிறுவர்களுக்கு வெளிவிடலாமே ! அல்லது இடை நிரப்பியாக கூட !
    கோடை மலர் ... இந்த ஈகிள் மேன் தாங்கி வந்த கதை நினைவில் இல்லாமல் இருந்தது ! இப்போது அந்த இறக்கை கிழிவது என பார்த்ததும் நினைவிலாடுகிறது ! வண்ணத்தில் ...ஜோடி, நாடாலியா என நினைக்கிறேன் ! ஆனால் வெகுவாய் எதிர்பார்த்த இந்த கதை நான்கைந்து பக்கங்களில் முடிந்து மனதை காய விட்டதும் மனதில் ! ஏதேனும் ஈகிள் மேன்கதை இருந்தால் அதனை கூட இடை நிரப்பலாமே !
    வேதாளனின் இந்த கதை வேதாளனுக்கு வாழ்வுண்டு அழிவில்லை என்பது போல படுகிறதே ! அப்போ வண்ணத்தில் பிரம்மாண்டமாய் வேதாளனை பார்க்க போகிறோமா !

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் இந்த பக்கம் அன்று என்னிடம் கிட்டி இருந்தால் ஊருக்கு செல்லும் போது வாய்க்கால்களிலும், குளங்களிலும், ஆற்றிலும் கலக்கி இருப்போம் ! ஹ்ஹோஒ ! பெருமூச்சுதான் !

      Delete
    2. /வேதாளனின் இந்த கதை வேதாளனுக்கு வாழ்வுண்டு அழிவில்லை என்பது போல படுகிறதே ! அப்போ வண்ணத்தில் பிரம்மாண்டமாய் வேதாளனை பார்க்க போகிறோமா !//
      +1...

      Delete

  36. டைப் அடிச்சா தாவு தீருதோ இல்லையோ,
    இந்த இமேஜ் பதிவை அதுவும் மொபைல்ல ஜும் பண்ணி ஜும் பண்ணி படிக்கிறதுக்குள்ள என் தாவு தீர்ந்துடுச்சு!
    :-)

    ReplyDelete
    Replies
    1. மொபைலில் வாசிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் இப்பொழுது. இதனை மனத்தில் வைத்து ஆசிரியர் இமேஜ் பதிவுகளைத் தவிர்த்தால் நல்லது.

      Delete
    2. கம்ப்யூட்டர் மூலம் படித்தாலும் கஷ்டமாகத்தான் இருக்கிறது !

      Delete
    3. //கம்ப்யூட்டர் மூலம் படித்தாலும் கஷ்டமாகத்தான் இருக்கிறது !//
      +1

      Delete
  37. இனிமையான நினவுகள்....அருமை..
    நீங்கள் முதன் முதலில் வடித்த சிலைக்கு, தற்போது உயிர் கொடுக்கும் திட்டம் ஏதேனும் உள்ளதா Sir....

    ReplyDelete
  38. முகமூடி மாயாவி எனக்கு பிடித்தமான காமிக்ஸ் கதாபாத்திரம்....90 களில் ராணி காமிக்ஸில் ரசித்து படித்தவை....
    ஈகில் மேன் முதல் பக்கம் ஆர்வத்தை தூண்டுகிறது...

    ReplyDelete
  39. எடிட்டர் சார்,
    இது சிங்கத்தின் ரொம்ப சிறு வயதில் என்ற தலைப்பில் இதனை LMS ல் போடுங்களேன்

    ReplyDelete
  40. இந்த 150 வது பதிவு " சிங்கத்தின் சிறு வயதில் " போல நலமாக இருப்பினும் போனில் படிக்கும் நண்பர்களுக்கு வருத்தமான விசயமே ...

    புத்தகத்தை நாளை எட்டி பார்த்து மீண்டும் வருகிறேன் சார் ....

    ReplyDelete
  41. டியர் எடிட்டர்,

    * உங்களது இரண்டாண்டு கால கன்னி உழைப்பு, முல்லை தங்கராசன் அவர்களின் மறுபிரவேசத்தால் கானல் நீராகிப் போன சம்பவம் மனதை கனக்க வைக்கிறது. நினைவுகளை 34 வருடங்களுக்கு முன் பயணிக்க வைத்து இப்படியொரு 'திரும்பிப் பார்க்கும் படலம்' உண்டாகக் காரணமான அந்த நண்பர்களுக்கு நன்றி!

    * தோர்கல் அட்டைப்படம் அசத்துகிறது! நமது வழக்கமான அட்டைப் படங்களிலிலிருந்து மாறுபட்டு இத்தொடரின் அட்டைப்படங்கள் தனித்துவத்தோடு அமைந்துவருவது தனிச் சிறப்பு!

    * இப்பதிவில் சென்னை புத்தகத் திருவிழா பற்றிய துணுக்குகள் ஏதாவது இருக்குமென்று எதிர்பார்த்தேன்... ( LMS பேனர் வைக்கப்பட்டிருக்கிறா சார்? )

    * 'தல' டெக்ஸின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. விஜய் , அட்டைபடம் பின்னணியில் வெள்ளைக்கு பதில் பச்சை ,சிகப்பு என உபயோகித்தால் நன்றாக இருந்திருக்குமோ ?

      Delete
    2. // 'தல' டெக்ஸின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...//
      +1111111111

      Delete
    3. வரும் ஞாயிறு புத்தக கண்காட்சி செல்கிறேன். நமது ஸ்டால் உண்டல்லவா? கொரியர் தொகையை மிச்சபடுத்தி மேலும் புத்தகம் வாங்க ஆவலோடு வருகிறேன்.

      Delete
  42. அப்புறம் சார் சொல்ல மறந்து விட்டேன் .உங்கள் இந்த பதிவின் தலைப்பை பார்த்ததும் தான் இதை சொல்ல முனைகிறேன் . வீட்டில் குழந்தைகளின் விடுமுறை காரணத்தால் அனைவரும் இரண்டு நாள் வெளியூர் சென்று விட தனிமையில் நான் ..

    எப்பொழுதும் இரண்டு ..,மூன்று மணி நேரம் கிடைத்தால் நமது இதழ்களை ( பழைய ) புரட்டி பார்ப்பேன் .ஒரு நாள்..,இரண்டு நாள் தனிமை என்றால் நமது பெரிய புத்தங்களை எடுத்து படிப்பேன் .எனவே இப்பொழுது எந்த புத்தங்களை படிக்கலாம் என்ற நினைவு வந்த பொழுது " ரத்தபடலம் " தொகுப்பு நினைவு வந்தது .ஆனால் ஏற்கனவே அதை மூன்று முறை படித்துள்ளதால் அடுத்து எதை படிக்கலாம் என யோசித்த போது ..,தாங்கள் இந்த மாத இதழில் " லார்கோ " விளம்பரம் வந்ததை பார்த்தேன் .நல்லதாக போயிற்று ...புது லார்கோ படிக்கும் முன் முன்னர் வந்த அவரின் அனைத்து சாகசத்தையும் படித்தால் நன்றாக இருக்குமே என்ற நினைவு வந்தது .

    எனவே " என் பெயர் லார்கோ " முதல் " ஆதலினால் அதகளம் செய்வீர் " வரை மொத்தமாக எடுத்து இரண்டு நாட்களுக்கு முன் ஒரே மூச்சில் படித்தேன் .வெகு அட்டகாசம் சார் ...அன்று முழுவதும் லார்கோ சிறு வயது முதல் அவரின் அதகள சாகசம் வரை நானும் சைமன் போல அவர் கூடவே பயணித்த உணர்வு ...எனது தனிமையை எப்பொழுதும் விரட்டி அடிக்கும் நமது காமிக்ஸ் புத்தகங்களுக்கும்..,வெளி இடும் தங்களுக்கும் மிக்க ..,மிக்க நன்றி சார் ...

    முன்னர் அனைவரது " நாவல்களும் " படித்து கொண்டு இருந்த நான் இப்பொழுது மறுபடியும் கூட அல்ல புதிதாக கிடைத்தால் கூட படிக்க தோன்றுவதில்லை....ஆனால் நீங்கள் வெளி இடும் நமது " காமிக்ஸ் இதழ்கள் " என்னிடம் இல்லம் எங்கும் இருக்கும் வரை உள்ளம் எங்கும் மகிழ்ச்சி மட்டுமல்ல.....

    தனிமையை தொலைத்து கட்டும் உற்ற தோழன் கூட அவன் ஒருவன் மட்டுமே சார் ...மீண்டும் நன்றி ...

    ReplyDelete
    Replies
    1. //...எனது தனிமையை எப்பொழுதும் விரட்டி அடிக்கும் நமது காமிக்ஸ் புத்தகங்களுக்கும்..,வெளி இடும் தங்களுக்கும் மிக்க ..,மிக்க நன்றி சார் ...//
      அது போலவே !

      Delete
  43. டியர் விஜயன் சார்,

    பிள்ளை சிங்கராஜா Vs முல்லை தங்கராஜா! லயனின் துவக்க காலங்களில், நீங்கள் முத்து காமிக்ஸை விட்டு சற்று விலகியே நின்றதன் காரணம் இப்போது புரிகிறது! :D

    தமிழம் என்ற இணைய தளத்தில், தமிழில் வெளியான சிறுவர் இதழ்கள் சிலவற்றின் மாதிரி அட்டைகளை தொகுத்திருக்கிறார்கள்! உதாரணத்திற்கு, 1932ல் வெளியான சித்திரக் குள்ளன் இதழின் முன்னட்டை இதோ!

    முல்லை தங்கராசன் அவர்களின் பெயர் தாங்கிய பற்பல காமிக்ஸ்களை, சிறு வயதில் கடந்து வந்திருக்கிறேன்! எழுபதுகளில் "மணிப் பாப்பா" என்ற சிறுவர் இதழை அவர் வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது! அந்த நாட்களில், எனக்குப் பிடித்தமான இதழ் பூந்தளிர் தான்! அடுத்த படியாக (அன்றைய) சிறுவர் மலர், கோகுலம் & ரத்னபாலா! கடைசி வரிசையில், அம்புலிமாமா & பாலமித்ரா - இந்த புத்தகங்களில் வரும் படங்களும், பெயர்களும் தெலுங்கு டப்பிங் படம் பார்க்கும் உணர்வைத் தரும் என்பதால் அவை பிடிக்காது! :D

    இன்றைய யுகத்தில், இது போன்ற பல்சுவை இதழ்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிட்டும் எனத் தெரியவில்லை! ஆனால், 25 ரூபாய் மியாவி கலெக்ஷன் ஒரு நல்ல துவக்கம்! இது போன்ற இதழ்களுடன், சில பல்சுவை சமாசாரங்களையும் சேர்த்து வெளியிட்டு, உங்கள் பழைய டிங் டாங் கனவை மினி லயனாக மீட்டெடுக்கலாமே?! :)

    ReplyDelete
    Replies
    1. இலவச இணைப்பு:
      இந்த 4MB இமேஜ் பதிவைக் கண்டதும், நண்பர் விஸ்கி-சுஸ்கியின் நினைவைத் தவிர்க்க முடியவில்லை! ;) போனில் படிக்கும் நண்பர்களின் வசதிக்காக, முதல் பக்கத்தை தமிழ் OCR இணைய தளம் ஒன்றில் உள்ளிட்டுப் பார்த்தேன்! விளைவுகள் விபரீதமாக இருந்தன! Read at your own risk! ;)

      *********

      நண்பர்கஎள,

      வலாக்கம், இது 'சி.எல.சி.வ' என்பதஈல் - ஏகமரய் மலரும் நீனனவுகபிளரடும்; நீனறயஎல யி [வுர்ப
      சங்கதீகனேரடும் தீருந்தீடப் (பெரகுஎமரரு நீளமஎன பதீஷீ 80 - சிங்கத்தீன் சிறு வயதீனனக்ய க்ஸ்டப்பட்டுக்
      கடந்து எசல்னும் நண்பர்கள் - சிங்கதசீதீன் "சிவகு" சின்ன வயஸதத் தஈண்ட நீச்சயமஈய் சிரமப்படுவர்!
      அவர்களது எபரருட்டு - பதீவின் பின் பரதீ - இன்ஸறய நமது நஸடமுனறகனளச் சரர்ந்த லிதமரய் தீருக்கும்!
      லேப 62" 200ளர்|'11|1'0|'0ரீ0||<$!

      இந்தப் பதீவின் விளத என் தஸலக்குள் கீடம் பிடித்தது - நண்பர்கள் சிலரது சமீபத்ஸதய சிவகாமி
      வருனகயீன் எபாதே! கரமிக்ஸ் கரதலர்கள் + கரமிக்ஸ் டீசகரிப்பஎளர்களும் னட என்ற விதத்தீல் தங்களது
      சமீப கரமிக்ஸ் கீசகரிப்புகனள என்னிடம் கபட்டி மசிழ்ந்து எகஈண்டிருந்த பிபாது தரன் என? கண்ணில் பட்டது
      அந்த வீசசு( & யர்மம "டிங் - டரங்" என்ற எபயமீரஈடு! 198|ல் எப்பிபஎபிதஎ முத்து கரமிக்ஸ்
      நிறுவனத்தீனில் தயப்பிக்கப்பட்ட அந்த மரதீரிப் பிரதீயரனது எப்படிகீயர பஸழய ('ச்பப்பகீரஎடு பயணமர்கி.
      நன்யர்களின் னககனள சமீபத்தீல் எட்டியிருந்தீருக்சிறது! மணிகுயஎனசனயக் குறிப்பிடும் அந்த எசரற்எறரடர்
      ஒரு கரலத்த்ல் நரன் சுவர்சித்த ஆக்சிஜனபய் இருந்து வந்தஎதரரு கனதனய சமயம் க்ட்டும் கீபாது
      உங்கபிளரடு பசிர்ந்தீடலஎ-எமன்ற சிந்னத எனக்குள் எழுந்தது அன்று தரன்1 நமது வவைப்ஆவின் 150,.வது
      பதீவுக்கு இது பயன்படும் எள்ற சிறு நம்பிக்லககீயரடு எமல்ல அசை (கீபாட்டுடன் 34 ஆண்டுகளுக்கு
      முன்பரனஎதரரு அக்சளி நட்சத்தீரத்து நரனள!

      (பெ) 1 1980! நீனறய விதங்களில் என் வஈழ்க்னகயின் பயனாப் பஎனதனய தீதழியல் பக்கமரய்த்
      தீருப்பிய புண்ணியத்தை (?!0 தேடித் தந்த நரளது! ஒனசீபதஎம் வகுப்பு முழுப் பரீட்ஸச விடுமுஸற நரட்களில்
      எனது அன்னறய உலகமரன 2066 வழிகா; "னயு' மெர்க நஎவல்களுக்குள்ளும். எடக்ஸ் ளில்லர்: மஎண்ட்பீரக்பு யுவ
      கரமிக்ஸ்களுக்குள்ளும் சமமரய் பசிர்ந்து முழ்கிக் சிடப்பதே மபய்டீ! ஏகமரய் பிசியரக இருக்கும் என் தந்ஸத
      அந்த (3ம தின முதல் கபீனலமில் ஏதேனும் ஒரு விடுமுஸற ஸ்ததைதீற்கு வீட்டில் அனளவஸரயும் அனழதசீதுச'
      எசல்வதரய் 'திடு திடு ப்எபன்று எசான்ன (யேரது எனசீக்குள? குஷி! உள்ளுர் தீருவிழஎவின் எபரருட்டு எதரீடர்ந்து
      முன்பீற" - நரன்கு நர்ட்கள் அனுவலகமும் விடுமுனற என்பதரல் எங்பிக ரிசன்றஎனும் குனறத்த பட்சம் 4
      நரட்கள் பீடரா உறுதி என்பது புரிந்தது! எபாதுவரய் எங்களுக்கு அண்னமஎயன்று பஈர்த்தரல் மதுனர:
      குற்றரவம்: கன்னியரகுமரி பீபரீன்ற ஊர்கனளத' தரீன் ர்மப்பீவு/ 50018 என்று எசரல்விட முடியும்! என் தந்னத
      என்ன நீனைத்தரரேரர - குற்றரலம் (பெஸிவரீம்` என்று எசரல்ல மறு (பெச்சின்றிப் புறப்பட்டுடஈம்! அப்கீபஎது
      எங்களிடம் இருந்தஎதரரு ளவஸீள வேனில் எதரீர - எதஎரஎவன்று புறப்பட்ட வ்பபீது வண்டி கீநரரய் எசன்று
      நீன்றது முத்து கஎமிக்ஸ் அனுவலக்ததீனில்! கிழிஞ்சது". 'ஏகும்னும் டுவனலனய முடித்து விட்டு வருகீகீறன்!'
      என்று என! தந்னத கரனலயின் பரீதீனய ஓய்க்கப் (பெரசிறரர் என்ற கிலி வீட்டில் அத்தனன (கீபருக்கும் பீடிக்க.
      டுவனின் பின்பக்கத்ஸந்த் தீறந்து சில புத்தகங்கனளக் கட்டுக் கட்டாய் எடுத்து வந்து அடுக்கீனரீர்
      அந்நரட்களது நமது ஆஸ்தரள ஆர்ட்டிஸ்பான சிகரீமணி! அத்தஸனயும் சீர்சமர்பரவு/ ^ராப8| எவளியீடுகள்...
      சேயறு பல ஆங்கீல சிறுவர் கீதழ்கள்." 16" ஸ யுய' பரணியீலரன எபாது அறிவு நால்கள' 1216,. சாப அத்கீதஎடு
      தனது வனரயும் சரமரன். சட்டுக்கனளயும் எடுத்துக் எகரண்டு சிகஈமணியும் எங்க6ள|1டு கீவனில' ஏறிக்
      எகரண்டரர். சஎச்ச சுபாவத்தின் எமர்த்த உருவமரன அந்த மனிதர் குற்றரலம் எசல்னும் முன்று பணி கீநரப்

      பயரைத்தீள் (பெரதும் பல்லி கீபரல சீட்டிவ' எனக்கருகே சன்னமரய் எதஈற்றிக் எகரண்டு பிரயரணம் எசய்தது

      இப்லபரதும் நீனனவில் உள்ளது!

      Delete
    2. கார்த்திக் உங்களை போன்றே நானும் ! ஆனால் அம்புலி மாமா வண்ணங்கள் கொண்ட படங்கள் , ரோடுகள் கூட கலர் கலராய் மனதை வெகுவாய் என்னை ஈர்த்தது ! பூந்தளிரும், ரத்னா பாலாவும் என்னை மிக மிக கவர்ந்தவை ! கோகுலத்தில் ஃ பிளிகா என் நண்பன் என ஒரு குதிரையும் சிறுவனும் கொண்ட கதை ,ஒரு சூனியகாரியின் அரபு தேச கதை வண்ணத்தில் படக்கதை படித்துள்ளீர்களா ? இன்றும் நான் அதனை தேடி திரிகிறேன் !

      Delete
    3. //எனக்குப் பிடித்தமான இதழ் பூந்தளிர் தான்//
      +1

      Delete
    4. //இந்த 4MB இமேஜ் பதிவைக் கண்டதும், நண்பர் விஸ்கி-சுஸ்கியின் நினைவைத் தவிர்க்க முடியவில்லை! //

      :-)! இதை டைப் செட் செய்யும் போது கணினியில் டைப் அடித்திருக்க வேண்டும். அப்படி அடித்தவைகளை காபி பேஸ்ட் செய்திருக்கலாம். அதை விட்டு ஏன் இமேஜ் ஆகா மாற்றி,optimise செய்து இவ்வளவு மெனக்கெட வேண்டுமா??

      maybe டைப் செய்தது unicode font இல்லாமல் இருக்கலாம். அப்படி இருக்க பட்சத்தில் இந்த உரலில் "http://www.suratha.com/reader.htm" சென்று எளிதாக மாற்றி உபயோகப்படுத்துவது நலம்!

      Delete
  44. சார் புத்தகங்கள் இன்றே வாங்கி விட்டேன்,டெக்ஸ் வில்லர் கதையில் சித்திரங்கள் வித்தியாசம் தெரிகின்றது ,சில இடத்தில் தெளிவில்லாமல் இருக்கிறது,

    ReplyDelete
    Replies
    1. என்னது ....எங்கள் " தல " புத்தகத்தில் குறையா ...?

      என்ன கொடுமை சார் ..இது :​(

      Delete
    2. ஆஹா , அப்போ நானும் இன்னைக்கே வாங்கிருக்கலாம் போல உள்ளதே !

      Delete
  45. Dear Editor,

    As a practitioner and student of Management, I can infer the pyschology behind two happenings from this post:

    a) The genesis and resounding success of Lion Comics
    b) The relational equations between Mullai Thangaraasan and The 'Lion' King ( No pun intended :-D)

    Hence a fascinating read for me.

    ReplyDelete
  46. பூந்தளிர் இதுவரை தமிழில் வந்த மிக சிறந்த சிறுவர் இதழ் என்பதில் மாற்று கருத்தே இல்லை... அதை ஏன் நாம் அதேபெயரில் அவர்களிடம் உரிமை வாங்கி பயன்படுத்த கூடாது?

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விஜய். சூப்பர்ர்ர் விஜய். நானும் கூட பூந்தளிரின் ரசிகன்.

      Delete
  47. மிகவும் சுவாரஸ்யமான - வித்தியாசமான - நெகிழ்ச்சியான பதிவு எடிட்டர் சார். மணியோசை பக்கங்களில் காணப்பட்ட வேதாளர் என்னை எனது பதின்ம வயதிறகே அழைத்துச் சென்று விட்டார். கானக வேதாளரை விட, குற்றம் களைய நகர்ப்பிரவேசம் செய்யும் வேதாளரும், அவரது நாற்கால் நண்பனும்.... ம் பொற்காலம் தான். சார் வேதாளரை வெளியிடும் திட்டம் உள்ளதா ஏதேனும்... அட்டகாசமான நல்வரவு தரலாம்....

    ReplyDelete
    Replies
    1. S.V.Venkateshwaran : //கானக வேதாளரை விட, குற்றம் களைய நகர்ப்பிரவேசம் செய்யும் வேதாளரும், அவரது நாற்கால் நண்பனும்....//

      அசாத்தியமான கதைக்களங்கள் அவை !!

      Delete
  48. டியர் எடிட்டர்ஜீ!!!

    திரு.முல்லை தங்கராசன் மாயஜால கதைகள் மூலமாக அடியேனை கவர்ந்தவர்.இன்றும் மாயஜால கதைகள் என்றால் பல "பெருசு"கள் முல்லையாரையே நினைவுகூறுகிறார்கள். ஆனால்,அவரது காமிக்ஸ் ஆக்கங்கள் ஏனோ பெரிதாக யாரையும் கவரவில்லை.மேத்தா காமிக்ஸ் ஒன்றிரண்டு கதைகள் மட்டுமே நன்றாக இருந்ததாக ஞாபகம்.திரைப்பட துறை மீது அவருக்கு ஏற்பட்ட ஆர்வம் அவரை காமிக்ஸ் வாசகர்களிடமிருந்து அந்நியப்படுத்திவிட்டது.அவருடைய புகழ்பெற்ற "வீரப் பிரதாபன்" கதை தெலுங்கில் திரைப்படமாக N .T .R பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்தது (என நினைக்கிறேன்.சரியாக நினைவில்லை).அந்த கதையில் வீர பிரதாபனுடன் வலம்வரும் குள்ளன் "பெரிய மனுசனை" மறக்கமுடியுமா...?படு மட்டரகமான தாள்களில் அச்சிடப்பட்ட அக்கால மாயஜால கதைகளை என் சிறுவயதில் பண்டல் பண்டலாக சேர்த்து வைத்திருந்தேன்.இன்று கைவசம் ஒன்றுகூட இல்லை!

    ReplyDelete
    Replies
    1. வீர பிரதாபன் அணில் அண்ணா நண்பரே ! அப்போது காமிக்ஸுடன் சிறிதளவு என்னை ஈர்த்தவை மாயாஜால கதைகளே ! நாவல்களை நான் திரும்பி பார்த்ததில்லை !

      Delete
    2. டியர் ஸ்டீல் க்ளா!!!

      yes yes .அது அணில் அண்ணா கதைதான்.வேண்டும் என்றே தவறாக குறிப்பிட்டேன் நீங்கள் உஷாராக இருக்கிறீர்களா என்றறிவதற்காக;-)
      (எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டியிருக்கு.அவ்வ்வ்)

      Delete
    3. அது போல மாயாஜால கதைகளை வெளியிட்டவர் யுவராஜாதானே ! தங்கராஜா அல்ல ! இது கூட டெஸ்ட்தானே !

      Delete
    4. saint satan : தனது எழுத்துத் திறமைகளை நமது நிறுவனங்களில் பணியாற்றிய போது முல்லை தங்கராசன் சரியாகப் பயன்படுத்திடவில்லை என்பதே எனது எண்ணம். அவரது பலமான மாயாஜாலக் கதைகளை எழுதும் வேகத்தையும், நளினத்தையும் கண்டு நானே நிறைய வியந்திருக்கிறேன். நியூச்ப்ரின்ட் காகிதத்தைக் கத்தையாகக் கிழித்து வைத்துக் கொண்டு குண்டு குண்டான அழகு கையெழுத்தில் எழுதுவார் என்பது எனக்கு இன்னமும் நினைவுள்ளது. காமிக்ஸ் எனும் குதிரையில் சவாரி செய்தால் சுலபப் புகழுக்கு உத்திரவாதம் என்ற சிந்தனைக்குள் புகுந்திருக்காமல் இந்த மாயாஜால genre -ல் அவர் தொடர்ந்திருந்தால் நிச்சயமாய் நம்மிடம் சோபித்திருப்பார் !

      Delete
  49. ரஜினிக்கு 100/வது படமாக ராகவேந்திரா அமைந்ததுபோல், எடிட்டருக்கு 150/வது பதிவு அமைந்துவிட்டது.

    அதிக எதிர்பார்ப்புடன் ஒரு பதிவை எதிர்பார்த்தால், சிங்கத்தின் சிறுவயதின் ஒரு தொடர்ச்சி வெளியாகி இருக்கிறது.

    டெக்ஸ்வில்லரையும், தோர்கலையும் காண மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன்.

    ராணி காமிக்சிலும் (மாதம் இருமுறையும்), மாலைமலரிலும் (தினசரியும்) மாயாவி என்றழைக்கப்பட்டு சிறிதும் இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக வந்த வேதாளரின் கதைகள் இன்னும் மிச்சம் உள்ளதா என்ன?

    அம்புலிமாமா, பூந்தளிர் போன்று ஒரு இதழ் தொடங்குவதற்கு பதிலாக மாதம் இருமுறை வருவது போல்
    கௌபாய்களுக்கென்றே தனியாக ஒரு காமிக்ஸ் வெளிவந்தால் நன்றாக இருக்கும்.

    மணியோசையில் வந்ததைபோல் துனுக்குகள், பல்சுவை தகவல்கள், பேனா நண்பர்கள், புதிர், ஒரு நிமிட கதைகளை நமது காமிக்சின் பில்லர் பேஜ்களில் உபயோகிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. PM : பதிவின் அறிமுக வரிகளே உஷார் செய்திருக்க வேண்டாமா உங்களை ?

      Delete
  50. அருமையான பதிவு. அவ்வளவு சிறிய வயதிலேயே நீங்கள் காமிக்ஸ் பணியில் ஈடுபட்டது ஆச்சரியமாக உள்ளது சார்! அதன் பலன்தான் எங்களுக்கு நீங்கள் வழங்கி வரும் காமிக்ஸ் பொக்கிஷங்கள்!

    ReplyDelete
    Replies
    1. WillerFan@RajaG : அவ்வளவு சிறிய வயதிலேயே எனக்குக் கிட்டிய வாய்ப்புகள் கடவுள் தந்த வரம் என்று சொல்லுவேன் !

      Delete
  51. டியர் எடிட்டர்,
    இந்த சிங்கத்தின் வெகு சிறிய வயதில் வெகு சுவையாக இருந்தது. நம் மேல் நமக்கு இருக்கும் நம்பிக்கையின் வீரியத்தை பொருத்து நமது செயலின் தரம் அமையும் எனபது நிதர்சனம் என்பதால், தற்போது பதிப்புலகில் நீங்கள் கொண்டுள்ள இந்த தனித்துவமான இடத்துக்கு காரணம்,அன்று உங்கள் தந்தை உங்கள் மனதின் ஆழத்தில் விதைத்த தரமான நம்பிக்கை/ஊக்குவிப்பு எனும் அற்புதமான விதைகள் காரணம் என்றால் அது மிகை ஆகாது. இந்த பதிவின் மூலம் இந்த கருத்தை மேலும் உறுதிப்படுத்தி விட்டீர்கள் சார்.

    தோர்கல் அட்டைப்படம் அருமையாக உள்ளது. waiting....!

    ReplyDelete
    Replies
    1. விஸ்கி-சுஸ்கி : தரையில் நீச்சல் பழகி விட்டுத் தண்ணீருக்குள் குதிக்கும் வாய்ப்புகள் மிக மிகக் குறைச்சல் என்பதை திடமாய் நம்புகிறவர் எனது தந்தை.

      காலச் சக்கரம் முழுசாய் ஒரு சுற்று வந்து இன்று நானுமொரு தந்தையாய் இருக்கும் போது தான் அன்று என்பால் காட்டப்பட்ட நம்பிக்கை + தரப்பட்ட சுதந்திரத்தின் முழுப் பரிமாணத்தை உணர முடிகின்றது ! ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது தந்தை ஒரு ஸ்பெஷலான படைப்பாய் தெரிவது சகஜம் தான் என்றாலும், எனது தந்தை நிச்சயமாய் unique !!

      Delete
    2. ஆந்தைக்கும் தன் தந்தை பொன் தந்தை :-D

      Delete
  52. Replies
    1. சொன்னது போல் மே மாத புத்தகம்களை ஒரு வாரம் முன்னால் அனுப்பியதற்கு "நன்றி", இதன் பின்னால் உள்ள நமது அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் ஒரு நன்றி. ஒரே மாதத்தில் 5 புத்தகம்கள் என்பது உங்களை/நம்மை போன்ற குறைந்த பணியாளர்களை வைத்து இயங்கும் காமிக்ஸ்காரர்களுக்கு மிக பெரிய சாதனை. மேலும் சாதனை பல படைக்க வாழ்த்துக்கள்.
      "Hats off to every one"

      Delete
    2. விஜயன் சார், அருமையான பதிவு! 150 பதிவுக்கு பொருத்தமான பதிவு. மனதில் உள்ள பசுமையான நினைவுகள் என்றும் பசுமையாக நினைவில் இருக்கும் என்பதை இந்த பதிவு உணர செய்கிறது. சிறுவயதில் பூந்தளிர் எனக்கு பிடித்த புத்தகம்...இன்றும் பழைய புத்தக கடைகளில் நான் வலை வீசி தேடும் புத்தகம் என்றால் மிகையில்லை.

      வழக்கமாக நமது காமிக்ஸ் புத்தகம்கள் சிவகாசியில் இருந்து அனுப்பிய மறுநாள் எனக்கு வந்து சேர்த்துவிடும், ஆனால் பெங்களூர் S.T. கூரியர் அலுவலகத்தில் நமது புத்தகம்கள் இன்னும் வரவில்லை என கூறியது ஆர்ச்சரியத்தை வரவழைத்தது... நான் ஆர்வமுடன் எதிர்பார்ப்பது கருப்பு வெள்ளை கதைகளின் நாயகன் டெக்ஸ் கதையை :-)

      பெங்களூர் நண்பர்கள் யாருக்காவது நமது காமிக்ஸ் புத்தகம்கள் S.T. கூரியர் மூலம் இன்று கிடைத்து இருந்தால் தெரிவிக்கவும்.

      Delete
    3. Parani from Bangalore : //ஒரே மாதத்தில் 5 புத்தகங்கள் //

      அட...நான் கூடக் கவனித்திரா சின்னதொரு மைல்கல் !!

      Delete
    4. வாரம் ஒரு புத்தகம் என்பது இனி சாத்தியம் அல்லவா :-)
      [சும்மா இருந்த சங்கை ... ஹி ஹி :-D]

      Delete
    5. விஜயன் சார், மியாவியையும் சேர்த்தால் இந்த மாதம் மட்டும் 6 புத்தகம்கள் :-)

      Delete
  53. வெகு விரைவில் நூற்றி ஐம்பதாவது பதிவை எட்டி பிடித்துள்ள ஆசிரியருக்கு வாசகர்கள் சார்பில் வாழ்த்துகள் !
    Sir, this show you are not only a good entrepreneur, but also a person with remarkable leadership qualities. Best wishes to reach 1000 posts with 1,00,000 followers at the earliest.


    ReplyDelete
    Replies
    1. விஸ்கி-சுஸ்கி : ஆஹா.."ஆயிரம் பதிவெழுதிய ஆந்தைவிழியார் " என்ற பட்டம் வாங்கும் வரை உங்களை விடப்போவதில்லை !!

      கனிவான வார்த்தைகளுக்கு நன்றிகள் !!

      Delete
  54. Replies
    1. தேர்தல் ஆணையத்திடம் S.T கொரியர் பற்றி புகார் தெரிவிக்கலாம் என்று இருக்கிறேன் ..

      அது எப்படி தேர்தலன்று வேலை செய்யலாம்? (வைத்தெரிச்சல்)

      Delete
  55. எங்கள் ஊரில் st courier வாகனங்கள் வரிசையாக ஏழெட்டு பூட்டிய கொரியர் வாசலில் நின்று கொண்டிருக்கின்றன ! பொட்டி உடைக்கலை ! நாளைதான் கிடைக்கும் போல ! இன்றே வாங்கிய கில்லாடி நண்பர்களுக்கு வயிற்றேறிச்சல் கலந்த வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : நாளைய காலை கூரியர் வாசலில் !!

      Delete
  56. நேற்று நமது அலுவலகத்தில் புத்தககங்கள் பற்றி விசாரித்தபோது அவர்கள் புத்தகம் டெலிவரி பற்றி ஏதும்

    தெரிவிக்கவில்லையே!

    ஆசிரியரின் பதிவு அவரது நினைவு திறனின் வலிமையை நிரூபிக்கிறது ... இந்த நினைவு திறனை

    மறுபதிப்புகள் (பழைய முத்து காமிக்ஸ் கதைகள்) பற்றிய விஷயத்தில் காண்பியுங்களேன் ப்ளீஸ்...


    நூற்றிஐம்பது பதிவுகள் வாவ்! இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுக்கு நமது ஆசிரியர் மற்றும் நண்பர்களின்

    உற்சாகமே காரணம் என்பதால் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    என்பதால் நண்பர்கள் அனைவருக்குமே வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Senthil Madesh : நினைவுகளின் பின்னோக்கிய பயணம் சுலபம் என்பதால் இது போன்ற பதிவுகள் சாத்தியமாகின்றன...நிஜத்திலொரு பின் செல்லும் படலம் அத்தனை சுலபமாய் அமைவதில்லையே !

      Delete
    2. மனமிருந்தால் மார்க்கபந்து சார்

      Delete
  57. @ FRIENDS : பிரான்சில் வசிக்கும் நம் வாசகக் குடும்பத்திலிருந்து (suji jeya ) கொஞ்சம் முன்பாக எனக்குக் கிட்டிய மின்னஞ்சல் இது !

    ஹாய் விஜயன் சார்,
    எப்படி இருக்கீங்க? நான் முதல்ல இதை பிளக்கில் பதிவிட எண்ணியிருந்தேன்..ஆனால் இவ்வளவு பெரிய கமெண்டை அது ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. (மேலும் யாரேனும் ஏதேனும் சொல்லிவிடுவார்களோ எனவும் பயமாக உள்ளது.)

    முதலில் ஆன்லைன் மூலமாக வாங்குவது என்பதெல்லாம் எங்களுக்கு பரிச்சயம் அல்லாதவை..இருந்தும் முதன்முதலாக அதை செய்ய தூண்டியது காமிக்ஸ் என்றால்..முன்பின் பார்திராத ஒருவருக்கு பணம் அனுப்ப போகின்றீர்களா? என்ற அப்பாவின் மறுப்பிற்கு "இல்லை,அங்கே எங்கள் விஜயன் சார் இருக்கின்றார்" என நாங்கள் துணிந்தது தங்கள் எழுத்தின் மீது கொண்ட நம்பிக்கையால்...
    உண்மையில் அப்போது உங்கள் முகம் கூட தெரியாது எங்களுக்கு.!.ஆனாலும் எங்களின் பத்து வயதிலிருந்தே நாங்கள் படித்துவரும் ஹாட்லைனி்ல் கூலாக எழுதும் எங்கள் விஜயன் சார் எங்களுக்கு பரிச்சயமற்றவரா என்ன? லயனின் நம்பிக்கை நீங்கள் என்றால் அது பாராட்டல்ல..உண்மை!

    நேற்றுதான் எங்களுக்கு காமிக்ஸ் கிடைத்தது...முழுசாய் மூன்று வருடங்களின் பின்...... தமிழ் வாடையே இல்லாத ஊரில்...... கட்டுக்கட்டாய் நம் காமிக்ஸ்..டோர் டெலிவரி செய்த பிரெஞ்சு காரன் வாயிலை தாண்டும் முன்பாகவே எங்களது கூச்சல் அப்பார்ட்மெண்டையே கிடுகிடுக்க வைத்துவிட்டது..அவசர‍மவசரமாக பார்சலை பிரித்து புத்தகங்களை எடுத்து பார்த்துகொண்டேயிருந்தோம்.வாசிக்கத் தோன்றவில்லை.. குரங்கு குட்டிகளைப்போல் தாவி குதித்துக் கொண்டிருந்தோம். நெடுநேரத்தின் பின்னரே புத்தகத்தை திறக்க வேண்டும் என்ற உணர்வே வந்தது..இறுதி சுவாசத்தை உள்ளிளுப்பதைப் போல் முகர்ந்து முகர்ந்து ஆனந்தித்தோம். அதன் பின்னரே சுய உணர்வு வந்து படபடவென பாகப்பிரிவினை செய்யத்தொடங்கினோம்...நான் முதலில் டெக்ஸ் புத்தகங்களைத்தான் அள்ளிக்கொண்டேன்..தம்பி லக்கி,டைகர் காமிக்ஸ்களை வாரிக்கட்டிக்கொண்டான்

    Continued ....

    ReplyDelete
  58. தொடர்ச்சி :

    எனக்கு டைகர் கதைகளை தொடவே அச்சமாக இருந்தது..இரண்டாம் பாகம் அது இதுவென்று..முதலாவது பாகம் இல்லாது இரண்டாம் பாகத்தை வாசிப்பது எப்படி?.... நானகாவது பாகம்...? குழப்பமாக இருக்குமோ?! என பயம் பிடித்து ஆட்டுகின்றது.
    .
    முதலில் இருவரும் படித்தது ஹாட்லைனைத்தான்.அதன் பின்னரே மனம் சமனப்பட்டு கதைக்குள் நுழைந்தோம்.டெக்ஸ் வழக்கம் போல தூள் பரத்திவிட்டார். வழக்கமாக வசனங்களில் மட்டும் ஓடும் கண்களை ஓவியங்களிலும் படரவிட்டேன்..ஒவ்வொரு பக்கத்தையும் நிதானமாய் துளிதுளியாய் ரசித்தேன்.
    கறுப்புவெள்ளை டெக்ஸ் மனதுக்கு எத்தனை நெருக்கமாய் தெரிந்தாரோ அந்த அளவிற்கு வர்ண டெக்ஸ் அந்நியமாக தெரிகின்றார். தம்பி சொன்னான்" b&w டெக்ஸ் தான் நம்ம டெக்ஸ் மாதிரி இருக்கார்"
    காமிக்ஸின் புதிய சைஸ்,புது ஹீரோக்கள் எல்லாமே...mmm.. புது பளபளப்பு..மனதோடு ஒட்ட சற்றே காலமெடுக்குமென்று தோன்றுகின்றது...

    "நிலவொளியில் ஒரு நரபலி" தான் முந்தைய சைஸ் என நினைக்கின்றேன். ஹாண்ட் பாக்கில் எடுத்துச்செல்ல வசதியாய், போகுமிடங்களில் நேரத்தை இனிமையாய் கழிக்க உதவும் நல்ல தோழியாய் இருப்பாளென்று தோன்றியது.
    இப்போதைய சைஸ்சும் பெருமையையே தருகின்றது..உலகத்தரத்தை எட்டிபிடிக்கும் சைசிலல்லவா இருக்கின்றது.(பக்கங்கள் குறைந்த புக்குகள் மட்டும்.... ஒல்லிப்பிச்சானாய் இருக்கையில் சிறிய நெருடல் வருகின்றது)

    "மனதில் மிருகம் வேண்டும்" முதல்பாகத்தை வாசிக்காததால் தலையும் புரியாத வாலும் புரியாத நிலையிலேயே வாசிக்கதொடங்கினேன்.பக்கங்கள் கடக்க கடக்க "என்னடா நடக்குது இங்கன்னு" என்று கடைசிபக்கங்களுக்கு தாவத்துடித்த மனதை அடக்க பெரும் பாடுபட்டுப் போனேன்..இறுதியில் "ஙே" என விழித்தபடி நின்றேன். சற்று பொறுத்தே கதையின் சாராம்சம் தலைக்குள் இறங்கியது. "அட..! அப்படியா விசயம்?"னு அதன் பின்னரே அதன் விநோத கட்டமைப்பை கண்டு வியந்தேன் உண்மையிலேயை அருமையான கதைதான்.(முதற் பாகம் மட்டும் கிடைத்திருந்தால்...மிக அருமையான கதை என்றே சொல்லியிருப்பேன்)

    ReplyDelete
  59. கடிதத்தின் இறுதிப் பாகம் :

    வேய்ன் ஷெல்டனின் "எஞ்சி நின்றவனின் கதை" யின் சித்திரத்தரம் அருமை..ஆனால் கதை..? ம்ஹூம் எனக்கு பிடிக்கல..இவர் எதார்தவாதியாய் இருக்கின்றார்..புத்திசாலித்தனமான மூவ் பண்ணுவதெல்லாம் வில்லன் தான்..இவர் இரண்டு அடிவைத்து நடப்பதற்குள் அவன் பறந்தே விடுகின்றான்.அடி வாங்குகின்றார்,மகனை இறக்க விட்டுவிடுகிறார்..(எப்படி அவர் அப்படி விடலாம்?)
    சோகம் நெஞ்சை அறுப்பது ஒரு காமிக்ஸ்லிலா? ......சந்தோஷமாய் இருக்கத்தானே காமிக்ஸ் படிக்கறோம்? இவர் ஏன் இவ்ளோ ஸ்லோவாக இருக்கறார்? ஹீரோ என்றால் அவர் ஹீரோவாக இருக்கணும்.

    இதனால் "ஒரு ஒப்பந்தத்தின் கதை"யை கடைசியாய் படிப்போம் என ஓரங்கட்டி விட்டு "ஒரு கழுதையின் கதை"யை வாசித்தேன்...மைகாட்...!கதையின் உண்மையான ஹீரோ ஷெரீப் டாக்புல் தான்.அந்த வசனங்கள் யார் எழுதியவை? எழுதியவர் வெடிச்சிரிப்புக்களுக்கு நான் காரண்டி என்று ஒரு போர்ட் போட்டுக்கலாம் .கொன்றே விட்டார் மனிதர்."பேஸ்மெண்ட தானா ஆடுதே""ரப்பர் வாயா""அவசியப்பட்டா எங்கேயாவது கடத்திட்டு போயின்னாலும் கல்யாணத்தை நடத்திட நாங்க ரெடி"...இதுபோல பக்கத்துக்கு பக்கம் கொளுத்தி போட்டுக்கொண்டே இருந்தார்.

    மதியில்லா மந்திரி தானும் சளைத்தவரல்ல என அவர் பங்குக்கு வயிற்றை வலிக்கவைத்தார்."எங்க குல பூதம் மேல சத்தியமா" "ஜால்ரா! இங்கே சித்தே வாடா என் செல்லம்! என்னே ஒரு பாசம்..ஹா..ஹா...ஹா!

    "நினைவுகளைத் துரத்துவோம்" வித்தியாசமான கதைதான்....ஆனா...ஒரு 65..அவ்ளோ தான் மார்க் கொடுக்கலாம்.(ஸாரி)

    தம்பி லார்கோ கதை நன்றாக இருந்தது என்றான்.அதில் அவனுக்கு சைமனைத்தான் ரொம்ப புடிச்சிருக்காம். செம காமடியா பேசறாராம்.

    திடுமென அம்மா எங்களை அழைத்தபோதுதான் நாங்கள் பிரான்சில் இருக்கும் விசயமே உறைத்தது.பக்கங்களுக்குள் மூழ்கி காலச்சக்கரத்தின் சுவடுகளுக்குக் காணாமல் போய் அரைப்பாவாடையும் காற்சட்டையும் போட்ட இரு பாலகர்களாய் அத்தனை நேரமும் எங்கள் நாட்டிலல்லவா இருந்தோம்.(அம்மாவிடம் கேட்கத்தோன்றியது "அம்மா...! இது இரவா?பகலா? ...நாம எந்த நாட்டில இருக்குறோம்? ...நான் சோபாவிலதான் இருக்கின்றேனா?இல்லை இந்த கறுப்பு மைக்குள் தொலைந்து போய்விட்டேனா?")
    நாங்கள் முழித்த விதத்தில் அம்மாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.கட்டாயப்படுத்தி தூங்க அனுப்பிவிட்டார்கள்.மனமே இன்றி தூங்கப் போனோம்..கனவில் ஓநாய் கூட்டங்களை நானும் தம்பியும் டெக்ஸும் சுட்டுத்தள்ளினோம். விடிந்ததும் இவற்றையெல்லாம் உங்களுக்கு சொல்லவேண்டும் என இப்போ டைப் பண்ணிகிட்டிருக்கேன்.மீதி புத்தகங்கள் என்னை அழைக்கின்றது..குட் பாய் .

    எனது அக்கவுண்டில் எத்தனை ரூபா மீதமுள்ளதோ தெரியவில்லை...ஒரு வேளை பணம் இருந்தால் மேற்கே ஒரு சுட்டிப்பயல்,ஆகாசத்தில் அட்டகாசம்,குற்றத் திருவிழா வை அனுப்ப இயலுமா?

    ReplyDelete
    Replies
    1. sujijeya : பிரவாகமெடுத்து ஓடும் உங்களின் காமிக்ஸ் காதலை கிட்டத்தட்ட என்னால் தொட்டு உணர முடிகின்றது !! awesome !!

      Delete
    2. @sujijeya
      முத்து,லயன் காமிக்ஸ் வாசகர்களான நாம் அனைவருக்கு மட்டும் பிரத்யோகமாக உரித்தான இந்த passion உங்களிடமும் அழகாக மிக அழகாக வெளிப்படுகிறது, இதை வார்த்தைகளால் இங்கே பலருக்கு, பல வேலைகளில் வெளிப்படுத்துவது கடினம். நம் மனதில் உள்ளதை நம்மால் மட்டுமே புரிந்துகொள்ள,உணர்ந்துகொள்ள முடியும் ஒரு extacy அது. நம் குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களால் புரிந்துகொள்ளமுடியாத நமக்கே நமக்கு உரித்தான ஆனந்தமான,மகிழ்ச்சியான உணர்சிப்ரவாகம்.

      இதை மிக அழகாக வார்த்தைகளால் வெளிப்படுத்தியுள்ளீர்கள். i enjoyed reading.

      இங்கே இதை வெளிப்படுத்துவதற்கு உங்களிடம் இருக்கும் தயக்கம் சற்று வருத்தத்தை அளிக்கிறது. இங்கே தொடர்ந்து பதிவிடும் நான் உட்பட சிலர் தவறான ஒரு image'ஜெய் புதிய வருகையாளர்களுக்கு வழங்குகிறோமா எனும் ஐயம் மனதில் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. should we not introspect ourselves guys?

      Delete
    3. அஹா, உங்கள் காமிக்ஸ் ஆர்வத்தால் நானும் புத்தகம் வாங்க செல்லும் முன்னர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற என்னத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் . அருமை ! மேற்கே ஒரு சுட்டிப்பயல்,ஆகாசத்தில் அட்டகாசம், காமெடியில் ஒரு கழுதையின் கதையை மிஞ்சும் . குற்றத் திருவிழா வை விட்டு விடாதீர்கள் ,நினைவுகள் பின்னோக்கி செல்லும் அற்புதமான கதை . ஷெல்டனின் முதல் மூன்று பாகங்களை படித்திருந்தால் இப்படி சொல்லி இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் . ஷெல்டன் கதைகள் நண்பர்களை இழப்பது , அதற்க்காக வீறு கொண்டு பழி வாங்குவது என்றே கட்டமைக்க பட்டுள்ளன . சீறிப்பாயும் ட்ரக்குகள் , அழகிய ஓவியங்கள், மின்னல் வேகம் என்று சீறி செல்லும் செல்டன் ,பிரம்மாண்டமாய் திட்டமிடல் என உணர்வீர்கள் . மூன்றாவது பாகமான ஒப்பந்தத்தின் கதை படிக்கும் போது சற்று உணர சிரமமாய் இருக்கும் . முதலிரண்டு பாகங்களின் தொடர்ச்சி அந்த கதை . அதில் பழி வாங்கல் ,நஷ்ட ஈடு மட்டுமே இருக்கும் . லார்கோ படியுங்கள் ; அது ஒரு தனி உலகம் . உங்கள் எண்ணங்களை அழகாய் வெளி படுத்தியதற்கு நன்றிகள் . தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என செயல் பட்டு அதனை இங்கே அழகாய் தந்த ஆசிரியருக்கு நன்றிகள் .

      Delete
    4. /////////////சுஜிஜெயா///////////

      உங்களது விமர்சனம் அழகாக இருந்தது. உங்களுக்கு காமிக்ஸ் மீதுள்ள தீவிர காதல் நன்கு புலப்பட்டது.
      அடுத்த வருட தொடக்கத்தில் மெகா மற்றும் கனவு இதழான டைகரின் மின்னும் மரணம் வெளியாகிறது.
      அதை கண்டிப்பாக வாங்கி படித்து பாருங்கள். அதன்பின்னர் வேறு எந்த நாயகரின் கதையும் உங்களுக்கு
      இரண்டாம்பட்சமாகத்தான் தெரியும். இது என்னுடைய கருத்தல்ல ஊரறிந்த உண்மை.

      போன வருடம் ஈரோட்டில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் ஸ்பெசல் வெளியீட்டிற்கு 375 ருபாய் சந்தா செலுத்த சொல்லி, 500 ருபாய் கொடுத்து எனது டிரைவரை அனுப்பி இருந்தேன். அங்குள்ள பெரியவர் தவறுதலாக 475க்கு பில் போட்டு மீதி 25 ருபாய் கொடுத்து அனுப்பி விட்டார். நான் மறுநாள் லயன் காமிக்ஸ் அலுவலகத்திற்கு போன் செய்து அங்குள்ள பெண்ணிடம் விசயத்தை கூறினேன். அவர்களும் விசாரித்து கூறுகிறேன் என்று கூறினார்கள். பின்னர் நான் அதை சுத்தமாக மறந்து விட்டேன். இந்த வருடம் சந்தா செலுத்த லயன் அலுவலகத்திற்கு செல்கையில், அவர்கள் அதை ஞாபகமாக குறிப்பிட்டு அந்த தொகையை கழித்து விட்டார்கள். இதை ஏன் தெரியப்படுத்துகிறேன் என்றால் உங்களை போன்று வேறு யாராவது இதே எண்ணத்தில் சந்தா செலுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு இது உற்சாகத்தை வரவழைக்கும் என்பதால் தான்.

      Delete
    5. suji jeya & family @ நமது காமிக்ஸ் படிக்கும் போது உங்கள் மனதில் வெளிப்பட்ட எண்ணங்களை அருமையாக இந்த கடிதம் முலம் வெளிபடுத்தி உள்ளீர்கள். உங்கள் குடும்பத்தின் காமிக்ஸ் காதலை புரிந்து கொள்ள முடிகிறது. தயக்கம் இல்லாமல் காமிக்ஸ் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தொடர்ந்து பதிவிடவும்.

      Delete
  60. 2011ம் ஆண்டு, டிசம்பர் மாத கடைசி வாரத்தின் ஒரு மதிய நேரத்தில் பூத்த இந்த வலைப்பூ,

    28 மாதங்களில் 150 பதிவுகளை கண்டிருப்பது உண்மையிலேயே பாரட்ட வேண்டிய விஷயங்களில் ஒன்று.

    அதே சமயம் மலைக்க வைக்கும் சங்கதியும் கூட.

    120 வாரங்களில் 150 பதிவுகள்!

    ஒவ்வொரு பதிவிலும் சராசரியாக (குறைந்த பட்சம்) 250 கமெண்ட்டுகள்!

    சராசரியாக ஒவ்வொரு வாரமும் மூன்று ஃபாலோயர்கள்!

    ஒரு நாளைக்கு (சராசரியாக) 1033 வருகயாளர்கள்!

    ஃப்பூ,
    கண்டிப்பாக காமிக்ஸ் வலைப்பதிவுகளில் மட்டுமேயன்றி தமிழ் வலையுலகிலும்கூட இது ஒரு மகத்தான சாதனையே.

    இந்த வெற்றியின் பின்னால் இருந்து இந்த தளத்தை இயங்க வைக்கும் ஒவ்வொரு காமிக்ஸ் வாசகருக்கும் நன்றி, நன்றி, நன்றி!

    இந்த வலைதளம் தொடங்க முக்கிய காரணமாக இருந்த இளவல் திரு விக்ரம் விஜயன் அவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக!

    அடுத்த 120 வாரங்களில் இன்ன்மும் 300 பதிவுகளை களமிறக்க முன்கூட்டிய வாழ்த்துக்கள் எடிட்டர் சார்.

    (Apologies for the Late Wishing, That too @ 2.40 AM)

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, அப்படியே தனது கனிவான பார்வையை வேதாளன் மேல் திருப்பும் படி ஆசிரியரை கேட்க கூடாதா ! ராணி காமிக்ஸில் வேதாளனை படித்ததை பல நண்பர்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள் . நமது முத்துவின் ஒரு கதையை படித்தால் நமது மொழி பெயர்ப்பின் தாக்கத்தை உணரலாம் ! நானும் ராணி காமிக்ஸில்தான் படித்தேன் . ஆனால், பழைய புத்தக கடைகளில் கிடைத்த சில வேதாளன் கதைகள் பொக்கிசங்கள் . பிற பதிப்பகங்கள் வெளி விட்டாலும் ஆசிரியர் தயங்காமல் முத்துவின் மறு பதிப்ப வெளி விடலாம் .

      Delete
  61. // இந்த வெற்றியின் பின்னால் இருந்து இந்த தளத்தை இயங்க வைக்கும் ஒவ்வொரு காமிக்ஸ் வாசகருக்கும் நன்றி, நன்றி, நன்றி!// +1.

    ReplyDelete
  62. ஸ்டீல் க்ளா! புத்தகங்களை கைபற்றியாச்சா?

    ReplyDelete
    Replies
    1. புத்தகங்கள் வாங்கி விட்டேன் நண்பரே . ஒன்னு.....ரெண்டு,மூணு,நாலு ,ஐந்து ! ஆஹா , ஐந்து புத்தகங்களும் , கணக்கு படி இந்த மாதமே ஏழு புத்தகங்களும் வாரி வழங்கிய கொ/கோடை வள்ளலுக்கு நன்றிகள் ! தோர்கள், பின்னட்டை நேரில் இன்னும் பிரம்மாதம் ,தெளிவு . அட்டை படங்கள் அனைத்தும் அருமை .முகமற்ற கண்கள் நேரில் பிரம்மாதம் . அதிக வேலை பளுவால் கோடை மலர் ஸ்டிக்கர் ஒட்டவில்லை போலும் . அடுத்த மே மாத லார்கோவுக்கு கோடை மலர் தலைப்பு கிடைக்குமோ !
      அனைத்துக்கும் நன்றிகள் சார் !

      Delete
    2. கலக்குங்க ஸ்டீல்.. வாழ்த்துக்கள்..

      Delete
    3. உங்கள் இருவருக்கும் கிடைத்ததா ? பரணி, டெக்ஸ் கிட்டுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது சிறிது வருத்தமாக உள்ளது !

      Delete
    4. ஸ்டீல் க்ளா! காலை 11 மணிக்கே புத்தகங்களை கைப்பற்றியாச்சு! அதை இங்கே சொல்ல முடியாமல் அலுவலக வேலை மாற்றி மாற்றி!

      அட்டைபடம் அனைத்தும் சூப்பர். தோர்கள் அட்டைபடம் நேரில் படு அழகு. எல்லா பக்கங்களும் சரியாகவே உள்ளது.எனக்கு.

      Delete
    5. இன்னும் வரலை ஸ்டீல் :-) வருத்தப்பட ஒன்றும் இல்லை... ஏன்னா நாங்க எல்லாம் வருத்தபடாத வாலிபர் சங்கத்துல இருக்கோம்ல.

      Delete
    6. ஸ்டீல், உண்மைய சொல்லனும்னா பழகி போயிடுச்சி :-)

      Delete
  63. சுஜிஜெயா அழகான வார்த்தைகளில் தமது உண்மையான அனுபவங்களை பகிர்ந்து உள்ளார் .ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகனும் அனுபவிக்கும் உணர்வு .நன்றி நண்பரே ...

    ReplyDelete
  64. the Ding dong seems to be a work of great research and time put together. It is interesting to read it even now. It s a sad thing that it had not continued. awaiting thorgal

    ReplyDelete
  65. முதல் முயற்சி அல்லது ஆசை எனபது எப்பொழுதுமே ஒரு ஸ்பெஷலான விஷயம் தான்.
    அது தோல்வியில் முடிந்தால் அது எப்பொழுதுமே நமது மனதில் இருந்து நீங்காது.

    அக்காலத்தில் பல புத்தகங்கள் அதே வகையில் இருந்தன, அப்பொழுது வந்திருந்தால் ஒருவேளை
    முத்து வாரமலருக்கு நேர்ந்த முடிவே இதற்கும் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் நீங்கள் உங்களை தனித்து காட்டி இன்றளவும் வெற்றியில் இருக்கும் லயன் காமிக்ஸ் உருவாக்கி இருக்கிறீர்கள்.

    நான் எனது வாசிப்பை சிறுவர் மலருக்கு பின் லயனின் மூலமாகவே தொடர்ந்தேன்.
    ஆகையால் எனக்கு முத்துவை விட லயனின் மீது தான் அன்பு அதிகம்.

    இன்றும் பலருக்கு அந்தகால முத்து காமிக்ஸ் மீது எப்படி ஒரு செண்டிமெண்ட் இருக்குமோ அதுபோல எனக்கு லயனின் மீது உண்டு.

    அத்தகையதொரு இதழை எங்களுக்கு தந்தற்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  66. ///////////டியர் எடிட்டர்///////////

    அற்புதமான பதிவு...... மைல்கல்லான 150/வது பதிவில் ஏதாவது ஒரு அற்புதமான அறிமுகம் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பதிவு ஏட்டுக் கல்வி வாழ்க்கைக்கு உதவாது, அனுபவம்தான் சிறந்த கல்வி என்பதை உங்கள் வாழ்க்கை வரலாற்றின் முலம் தெரிந்துகொள்ள முடிந்தது. அடுத்த வருடம் இதே நாளில் வெற்றிகரமாக உங்களது 300வது பதிவு வர எனது ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்.

    ///////////ஒரு வேண்டுகோள்////////////

    குழந்தைகளை பொருட்காட்சிக்கோ, திருவிழாவிற்கோ கூட்டிச் சென்றால் அங்கே இருக்கும் அனைத்து மிட்டாய் மற்றும் விளையாட்டு பொட்களை பார்த்து எனக்கு வேண்டும்...... எனக்கு வேண்டும்............ என்று கேட்பதுபோல நம்ம ஸ்டீல் இருக்காறே நீங்க எந்த நாயகனின் படத்தை போட்டாலும் உடனே எனக்கு அந்த கதை வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். தொந்தரவு தாங்க முடியல. ஒன்னு குழந்தையை கண்டிச்சு வளருங்க, இல்லைனா பேசாம பழைய மாதிரி மாதம் ஒருமுறை காமிக்ஸ் கிளாசிக்கை தொடங்கிடுங்க என்ன நான் சொல்றது....

    ////////////////நன்றி////////////

    ReplyDelete
    Replies
    1. //பேசாம பழைய மாதிரி மாதம் ஒருமுறை காமிக்ஸ் கிளாசிக்கை தொடங்கிடுங்க ...//
      +1
      even though it is tough..but still try...

      Delete
    2. குழந்தைகளை கண்டிக்க கூடாது என்பது உளவியல் வல்லுனர்களின் கருத்து அல்லவா !

      Delete
  67. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்// உங்க கைக்கு கிடைத்தது 3 bookஆ or 4 book? Super 6 சந்ததரர்களுக்கு மியாவி அனுப்புவதாக எடிட்டர் சொனாரே ??

    ReplyDelete
  68. அன்பின் ஆசிரியருக்கு,

    150வது பதிவுக்கு வாழ்த்துகள். காலத்தில் பின்னோக்கிப் பயணிப்பதென்பது எப்போதும் மனதுக்கு இதமான சங்கதிதான். அதிலும் உங்களுடைய முதல் முயற்சி குறித்த நினைவுகூரல் எனும்போதும் அதன் கனம் இன்னும் கூடுகிறது. உங்களது இந்தப் பதிவை வாசித்தபின்பு வீட்டில் சேமித்து வைத்திருக்கும் பழைய பாலமித்ரா இதழ்களை எடுத்துப் பார்க்க ஆசையாயிருக்கிறது. ஆனால் சந்தோசத்தைக் கொண்டாடும் இந்தப்பதிவில் முல்லை தங்கராசன் குறித்துப் பேசும்போது மட்டும் வார்த்தைகளில் சின்னதாய் ஒரு கோபம் வெளிப்பட்டுள்ளதே.. அது தேவைதானா? அவரைக் குற்றம் சொல்வது போன்றதான தொனியைத் தவிர்த்திருக்கலாமே? எனக்குத் தெரிந்து ஆசிரியர் இதுமாதிரி எப்போதும் பேசியதில்லை என்பதால் அது சற்றே வித்தியாசமாகத் தெரிந்தது. ஒருவேளை என் பார்வையில் தவறிருக்குமாயின் மன்னியுங்கள். 150வது பதிவுக்காக உங்களுக்கு மீண்டும் என் வாழ்த்துகள். நன்றி.

    பிரியமுடன்,
    கார்த்திகைப்பாண்டியன்

    ReplyDelete
  69. விஜயன் சார், இன்றும் எனக்கு புத்தகம் வரவில்லை, வழக்கமாக புத்தகம் அனுப்பிய மறுநாள் எனக்கு கூரியர் முலம் கிடைத்துவிடும்.இன்று பகல் நமது அலுவலகத்துக்கு போன் செய்து கூரியர் ட்ராகிங் விபரம் கேட்டபோது மொத்தமாக அனுப்புவதால் எங்களுக்கு 2 நாள் கழித்துதான் ட்ராகிங் ரசீது கொடுப்பார்கள், வந்தவுடன் தருகிறோம் என கூறினார்கள் :-(

    கூரியர் அனுப்பிய மறுநாள் புத்தகம்கள் அனுப்பியதற்கான ரசீதுகளை வாங்கிவைத்து கொண்டால் என்னை போன்ற புத்தகம் கிடைக்காத நண்பர்களுக்கு அந்த ரசீது மிகவும் பயன்படும். தயவு செய்து இனிவரும் நாட்களில் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. hmm this time books are coming late..checked with ST courier no books today...

      Delete
  70. எடிட்டர் சார்,

    தங்களது சிங்கத்தின் சிறு வயதில் 35 மற்றும் 36 ஐ நேற்றுதான் படித்தேன். (ஒரு நாள் தாமதமாக கிடைக்கும் கொரியர்... அதையே தாங்கிக் கொள்ளாமல் கொரியர்காரரை ஆள்வைத்து அடிக்கும் அளவுக்கு கோபம் கொள்ளும் நண்பர்கள் மன்னிப்பார்களாக... ஏனென்றால் எங்களுக்கெல்லாம் சேலம் கர்ணன் சார் வழியாகத்தான் புத்தகங்கள் கைக்கு கிடைக்கும். அதற்கு ஓரிரண்டு நாட்கள் தாமதம் ஆகும்) மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. எவ்வளவு சிரமங்களைத் தாண்டி வந்திருக்கிறீர்கள்?

    தங்களிடம் ஒரு கோரிகை. தங்களது பிறந்ததினம் என்ன? எந்த சாக்கும் சொல்லாமல் வெளியிடுங்கள் சார்.

    நண்பர்களே, எனது சில ஐடியாக்களை சொல்கிறேன். பிடித்திருந்தால் வலியுறுத்துங்கள்.

    ஐடியா - 1

    எடிட்டர் அவர்களின் பிறந்த தினத்தன்று, அவரது நீண்ட நாள் காமிக்ஸ் காதலை (நமக்குத்தான் லாபம்...) கௌரவிக்கும் வகையில் ஒரு 'EDITOR'S SPECIAL' வெளியிட வேண்டுகோள் வைக்கலாம்.

    ஐடியா - 2

    அந்த எடிட்டர் ஸ்பெஷலில் ஸ்பைடர் - வேதாளர் - காரிகன் - மாயாவி - மாடஸ்டி - சிஐடி லாரன்ஸ் - கருப்புகிழவி - மாண்ட்ரெக் - ரிப்கெர்பி - போன்ற நமது ஹீரோக்களை மட்டும் கொண்டு வெளியிட கேட்கலாம்.

    ஐடியா - 3

    புத்தகத்தின் விலை குறைந்த பட்சம் 500 ருபாய் ஆக இருக்கலாம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும்...

    ஐடியா - 4

    வருடத்திற்கொரு முறை எடிட்டர்ஸ் ஸ்பெஷல் வெளியிடும் நாள் - ஒரு வாசகர் சந்திப்பு தினமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளலாம்.

    எப்படி இருக்கிறது நண்பர்களே? சொதப்பலாக இருந்தால் திட்டுங்கள். உருப்படியான ஐடியாவாக இருந்தால் நடைமுறைப்படுத்த என்ன செய்யலாம் என்பதை தெரிவியுங்கள்.

    முதலில் ஆசிரியர் அவரது தன்னடக்கம் காரணமாக இதை கண்டிப்பாக மறுப்பார் என்று நினைக்கிறேன்.

    எடிட்டர் சார்... மிக்க அன்புடன் வேண்டுகிறேன். தங்களது பிறந்த தினத்தை தெரிவியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. //அந்த எடிட்டர் ஸ்பெஷலில் ஸ்பைடர் - வேதாளர் - காரிகன் - மாயாவி - மாடஸ்டி - சிஐடி லாரன்ஸ் - கருப்புகிழவி - மாண்ட்ரெக் - ரிப்கெர்பி - போன்ற நமது ஹீரோக்களை மட்டும் கொண்டு வெளியிட கேட்கலாம்.//
      ஸ்பைடர் - வேதாளர் -மாயாவி - சிஐடி லாரன்ஸ் - கருப்புகிழவி போன்றவர்கள் இருந்தால் போதும் . அனைவரும் அதாவது ஒருவர் விடாமல் ரசித்த ஹீரோக்கள் இவர்கள் மட்டுமே என நினைக்கிறேன் நண்பரே .

      Delete
    2. அப்ப ஐடியா ஓகே தான்.... மார்ச் 16, வருசம்?

      Delete
    3. S.V.Venkateshwaran : சினிமாவில் "குதிக்கும்" எண்ணமெல்லாம் சத்தியமாய் கிடையாதெனும் போது வயதைச் சொல்ல தயக்கம் தேவையா - என்ன ?! டாக்டர் ஜாகிர் ஹுசைன் அவர்கள் இந்தியாவின் முதல் இஸ்லாமிய ஜனாதிபதியான ஆண்டில் தான் அடியேன் பிறந்தேன் !!

      அப்புறம், பிறந்த நாள் என்றால் நண்பர்கள் யாராவது ட்ரீட் கொடுத்து நான் தொந்தியை ரொப்பிக் கொண்டால் அது லாஜிக் ! அதை விட்டு விட்டு , நானே ஸ்பெஷல் அறிவித்து விட்டு, நானே பெண்டு நிமிர பனியாற்றுவதெல்லாம் போங்கு ஆட்டம் !!!

      Delete
    4. Oops .. 2017 is your Golden Jublee year :-) Warrants a special :-D

      Delete
    5. // அதை விட்டு விட்டு , நானே ஸ்பெஷல் அறிவித்து விட்டு, நானே பெண்டு நிமிர பனியாற்றுவதெல்லாம் போங்கு ஆட்டம் !!!//

      ஹா ஹா... பிறந்த நாளுக்கு மட்டுமாவது நம்ப வாத்தியாருக்கு விடுமுறை கொடுப்போம் :-)

      Delete
  71. நண்பர்களே தோர்கள் படித்து முடித்தேன் . முந்தய கதை அந்த சிறிய புத்தகத்தில் இரு பாகங்கள் என துக்கடாவாக இருந்தது . டக்கென முடிந்தது போல இருந்தது . ஆனால் இந்த முறை முழு நீள கதை . அற்புதமாய் செல்கிறது கதை . அட்டகாசமான தோர்களுக்கு நல்வரவு . ஆனால் இதனை நூற்று இருபது ரூபாய் விலையில் இரண்டு பாகமாய் விட்டால் நன்றாக இருக்கும் . வண்ணங்களும், ஓவியங்களும் , மொழி பெயர்ப்பும் அருமை . ஒரு அருமையான விறு விறுப்பான கதையை ரசிக்க தந்த ஆசிரியருக்கு நன்றிகள் . அடுத்த தோர்களை விரைவில் வெளிவிடலாமே !

    ReplyDelete
  72. Replies
    1. tex kit : எந்த நகரில் உள்ளீர்கள் நண்பரே ? எந்த கூரியர் ?

      Delete
  73. இந்த வருடத்தின் முதல் சொதப்பல்கள் கிடைத்துவிட்டன.
    டெக்ஸ் வில்லரின் கதைகள் சுமார் 350 க்கும் இருக்கையில் ,இந்த மாதிரி கீச்சலான ,மோசமான சித்திரங்களை நமது ஆசிரியர் தேர்வு செய்தது ஏனோ..?
    வேதாளம் முருங்கை மரமேறிய கதையாக தோர்கல் பிரின்டிங் தரம்.....
    அடிக்கடி நான் மட்டுமே புலம்புகிறேன்....
    நண்பர்களே.....வரப்போகும் மேக்னம் ஸ்பெஷல் இந்த தரத்தில் இருந்துவிட்டால் வாழ்க்கை வெறுத்துவிடும்..

    ReplyDelete
    Replies
    1. தோர்கள் பிரிண்டிங் தரமா ! எந்த பக்கம் என்று கூறுங்களேன் . எனக்கு வந்த புத்தகத்தில் அனைத்து பக்கங்களும் பளிச் .

      Delete
    2. நண்பரே...
      தோர்கல் தரத்தை பற்றியும் டெக்ஸ் கதையைப்பற்றியும் மற்றவர்களின் கருத்துக்களை கேட்கலாமே..

      Delete
    3. //இந்த மாதிரி கீச்சலான ,மோசமான சித்திரங்களை நமது ஆசிரியர் தேர்வு செய்தது ஏனோ..?//

      இக்கதையை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்.ஒரு சிறப்பான ஆக்சன் கதை.
      சித்திரங்களில் எனக்கு என்னவோ டெக்ஸ் இளமையாகவும் ஒரு ஒல்லியாகவும் v ஷேப்பிலும் இருப்பது போல தோன்றுகிறது.

      Delete
    4. AHMEDBASHA TK : தொடரும் பின்னூட்டத்தில் அச்சையும், இதழ்களையும் நண்பர் கூர்ந்து சிலாகித்திருக்கும் போது உங்களது புகாருக்கு என்ன பதில் சொல்லவென்பது சத்தியமாய்த் தெரியவில்லை !
      ஒன்று - சுமாரான அச்சிலான பிரதிகளாய் தொடர்ந்து உங்களைத் தேடித் தேடி வந்து சேரும் ராசி உங்களுக்கு இருக்க வேண்டும் ; அல்லது உங்களது எதிர்பார்ப்புகள் நிஜமான சர்வதேசத் தரத்தில் இருந்திட வேண்டும். முந்தையது நிஜமெனில், நாளை மாற்றுப் பிரதி ஒன்றினை அனுப்பிட்டால் சிக்கல் தீர்ந்திடும். இரண்டாமது தான் காரணமெனில் நம்பிக்கையோடு நாட்களை நகற்றுவதைத் தாண்டி வேறு வழியில்லை. தோர்கள் கதையின் கலரிங் பாணி புராதனமானதென்பதால் உங்களுக்கு பிடிக்கவில்லையா என்பதும் தெரியவில்லையே ! But காரணங்கள் எதுவாய் இருப்பினும் I do apologize !

      Delete
    5. AHMEDBASHA TK : 12 ஓவியர்கள் பணியாற்றும் ஒரு தொடரில் இளமை குன்றா அழகனாய் காலம் முழுவதும் டெக்ஸ் உலவுவது சாத்தியமாகுமா ?

      Delete
    6. அன்பு ஆசிரியரே...
      தொடர்ந்து டார்ச்சர் கொடுப்பதற்கு மன்னிக்கவும்.உங்களின் எழுத்துக்களையும்,புத்தக்ங்களையும் வாழ்கையின் ஒர் அங்கமாக பாவிப்பவன் நான்.பொக்கிஷங்களாக சேர்து வைப்பவன்.தயவு செய்து மாற்றுப்புத்தகம் அனுப்பிவையுங்கள்.நமது காமிக்ஸ் குடும்ப உறுப்பினன் என்ற முறையில் ஒர் வேன்டுக்கோள்....மேக்னம் ஸ்பெஷலில் மிகுந்த கவனம் அவசியம்..

      Delete
    7. நண்பரே இதில் டார்ச்சர் ஏதுமில்லை . உங்கள் நிலை, தவிப்பு தொடர்ந்து சிறப்பாய் வர வேண்டும் என்ற எண்ணம் உங்கள் பதிலில் உள்ளது . இதுதான் டார்ச்சர் எனில், ஆசிரியரை தொடர்ந்து டார்ச்சர் செய்யுங்கள்.
      உங்களால் டெக்ஸ் கதை படிக்க ஆரம்பித்தேன் . இதுவரை நூறு பக்கங்கள் புரட்டி விட்டேன் . ஓவியங்கள் தற்போதைய டெக்ஸ் கதைகளுக்கு பழைய முகம் மாறு பட்டு விட்டது ,தொடர்ந்த நான்கு கதைகளின் நிலை இதுதான் . சிகப்பாய் ஒரு சொப்பனம் படிக்கும் போதே டெக்ஸ் இவர் என ஏற்று கொள்ள முடியவில்லை .சில இடங்களில் ஓவியமும் லாங் ஷாட் என காட்ட அவ்வாறு வரைந்துல்லார்களா என தெரியவில்லை . கதையை படியுங்கள் இவை ஏதும் குறைகளாக தெரியாது. டெக்ஸ் கதைகளில் இதுதான் பெஸ்ட் எனும் எண்ணம் கூட தோன்றலாம் .

      Delete
  74. டியர் ஆல்,
    சில மணித்துளிகளுக்கு முன்னாள் மே மாதத்தின் புத்தகங்களை மன மகிழ்வுடன் பெற்றுக்கொண்டேன். இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள்.
    புதிய சந்தா(சூப்பர் சிக்ஸ்) கட்டியவர்களுக்கு மியாவியுடன் சேர்த்து நான்கு புத்தகங்கள், காட்டாதவர்களுக்கு முன்று என்ற பாகுபாட்டுடன் வந்துள்ளது புத்தக அஞ்சல்கள்.
    இனி மேல் புதிய சந்தா கட்டவிருப்பவர்களுக்கு வரும் மாதங்களில் மியாவி வந்து பிராண்டப்போவதாக தெரிகிறது. ஆசிரியர் இதை உறுதிப்படுத்த வேண்டும்.

    இந்த மாதத்தின் முன்று புத்தகங்களின் அட்டைகளும் அட்டகாசமாக வந்துள்ளன.அட்டையின் corner to corner முழுவதுமாக ஓவியங்கள் ஆக்கிரமிக்கின்றன. எந்த ஒரு கிராபிக்ஸ் வேலைகளும் இல்லை. கட்டங்கள்/வட்டங்கள் இல்லை. வண்ண stripes இல்லை.BG /FG MISMATCHகள் இல்லை. நூறு சதவீதம் ஓவியரின் கைவண்ணம். இப்படி இருப்பது தான் அழகு.

    வண்ண புத்தகங்களில் பிரிண்டிங் தரம் அருமையாக உள்ளன. நமது பிரிண்டிங் தரத்துக்கு ஓவியங்கள் இன்னமும் கொஞ்சம் compliment செய்திருக்கலாம். "முகமற்ற கண்கள்" புத்தகத்தில் ஓவியங்கள் பழமையானவை என்பதால் நமது அச்சு இயந்திரத்தின் முழுமையான நுட்பமான பிரிண்டிங் திறனையும், ஆர்ட் பேப்பரின் வளவளப்பான தரத்தையும், இறக்குமதி மையின் மினுமினுப்பான வண்ணக்கலவைகளையும் முழுமையாக அதன் சாதகங்களுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளவில்லை எனபது தெரிகிறது.

    தோர்கல் ஓவியங்கள் அற்புதமாக உள்ளதென்றாலும் கலரிங் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கலாம். கலரிங் ஆர்டிஸ்ட் ரொம்ப பிளட்டாக பல இடங்களில் வண்ணம் தீட்டிவிட்டார்.(அந்த காலத்து படைப்புகள்) இங்கே சற்று கவனிப்பு இருந்திருந்தால் தோர்கல் தொடர் வெகு சிறப்பாக இருந்திருக்கும்.

    டெக்ஸ் ஓவியங்கள் வித்தியாசமாக உள்ளன. என்னை அவ்வளவாக கவரவில்லை. கதை கவர்ந்தால் புத்தகம் தேறிவிடும். பிரிண்டிங் தரம் அருமை. கைகளில் புத்தகம் நேசமாக அடங்குகிறது.

    மீண்டும் சிந்திப்போம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. விஸ்கி-சுஸ்கி : தோர்கலின் ஒரிஜினல் கலரிங் குறித்து எனக்கும் ஏமாற்றமே ; ஆனால் 1977-ல் பிரயோகத்தில் இருந்த பாணியாக இது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. தற்போதைய தோர்கல் கதைகளில் இந்தக் குறை நிச்சயமாய் இல்லை !

      டெக்சின் ஓவியங்களைப் பொருத்த வரை கடந்த பதிவிலேயே நண்பர் ஒருவருக்குச் சொல்லிய பதிலையே இங்கு மீண்டும் சொல்லுவது அவசியமாகிறது ! கிட்டத்தட்ட 12 வெவ்வேறு ஓவியர்கள் டெக்ஸ் கதைகளுக்கு படம் வரைகிறார்கள் ; so இந்த வேறுபாடுகள் அவ்வப்போது தலைதூக்குவது தவிர்க்க இயலாது போகிறது. And yes, டெக்சின் சைஸ் compact ஆக உள்ளதல்லவா ?!

      Delete
    2. பதிலுக்கு நன்றிகள் சார்! ஆர்ட் பேப்பரில் வண்ணத்தில்,படிப்பதற்கு எடுத்தவுடன் சட்டென்று முடிந்துவிடும், ஒல்லி புத்தகங்களில் உள்ள கவர்ச்சியை விட கைக்கு அடக்கமாக சிறிய வடிவத்தில் உள்ள குண்டுபுத்தகங்கள் கருப்பு வெள்ளை, சாதா தாளில் என்றாலும் மனதை கொள்ளை கொள்கின்றன! :-) . படிப்பதற்கு நிறைய வசனங்கள், நீண்ட கதை, புத்தகத்தில் நிறைய நேரம் செலவழிக்க வைப்பது மற்றும் nostalgia யாவும் காரணங்கள் ! மாதம் இது போல ஒரு புத்தகம் வந்தால் தனி சிறப்பு!

      Delete
  75. சிங்கத்தின் சிறு வயதில் , நமது அலுவலக நிலை/அமைப்பு, தான் சென்றது மட்டுமின்றி பணியாளர்களை லவட்டி செல்லும் துரோகங்கள் , அதிக சம்பளம் கேட்டு வெளி நடப்பு செய்த திறமையாளர்கள் என முதலாளிகளுக்கு ஏற்படும் பாதகங்களும் , உதவி செய்த பலருடன் சேர்ந்த உங்கள் சின்ன தாத்தாவையும் சொல்லி வந்த விதம் அருமை . ஒரு கதை கேட்பது போல லாவகமாய் எழுத்துக்களை கையாளும் திறன் வியக்க வைக்கிறது . இவை அனைத்தையும் கொண்டு/தாங்கி வந்த நமது தீபாவலி மலர் ஆச்சரியமே ! அதற்க்கு பின்னால் உள்ள வலிகளும் , அது தந்த துணிவும் வாழ்கையை எது வந்தாலும் எதிர்கொள் எனும் துணிச்சலை தருகிறது . தீபாவளி மலர் அட்டையை ஒரு முறை இங்கே போடுங்களேன் !

    ReplyDelete
  76. நண்பரே...
    தோர்கல் தரத்தை பற்றியும் டெக்ஸ் கதையைப்பற்றியும் மற்றவர்களின் கருத்துக்களை கேட்கலாமே..

    ReplyDelete
  77. டெக்ஸ் வில்லரின் கதை அருமை.. தோர்கள் ஓவியங்கள் அழகு..கதை?

    ReplyDelete
    Replies
    1. selvas : தோர்கல் கதைகள் படிக்கப் படிக்கவே நம்மோடு ஒன்றிடும் என்றே நினைக்கிறேன்...! எனக்கும் கூட ஆரம்பத்தில் இந்த ஹீரோவை அத்தனை ரசிக்க முடியவில்லை ; ஆனால் மறுமுறை படிக்கும் போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் அவரோடு நெருங்க முடிவதை உணர்ந்தேன்.

      Delete
  78. Replies
    1. கேரளாக்காரன் : லாக் நெஸ் மான்ஸ்டர் இந்நேரத்க்துக்கு ரிடையர் ஆகி இருக்காதா :-)

      Delete
    2. ஹா ஹா பஞ்சாயத்து இன்னமும் ஓடிட்டு தான் இருக்குது :)

      இதப்படிங்க LOCH NESS MONSTER

      Delete
    3. முடிந்தால் பாப் அப் கமண்ட் பாக்ஸ் போடுங்க, ஒவ்வொரு வாட்டியும் Reload ஆகுது :) #Request

      Delete
  79. மியாவி பார்த்தவுடன் சந்தோசம், எனக்கு கிடைத்த முகமற்ற கண்கள் புத்தகம் பிரித்து பார்த்தவுடன் காணாமல் போயிற்று ஏனெனில் பக்கம் 13 இல் இருந்து 20 வரை மடங்கி போனஸ் ஆக 17 முதல் 20 பக்கம் வரை ஓரத்தில் கிழிந்தும் இருந்தது!!

    ReplyDelete
    Replies
    1. தல புத்தகம் கிழிஞ்சு இருந்தத குறையா சொல்லல .. ஒரு வேகத்துல இங்க அப்டேட் பண்ணிட்டேன் !! தப்பா நெனைகாதிங்க!!!

      Delete
    2. balaji ramnath : நிச்சயமாய்த் தவறில்லை !! கிழிந்த நிலையிலான புக்கை நமக்கு சதாத் தபாலில் திருப்பி அனுப்பங்களேன் - ப்ளீஸ் !

      Delete
  80. சார் இம்மாத புத்தங்களின் தாள்களின் தரம் மிகவும் ஏமாற்றமாக உள்ளது.
    ஆர்ட் பேப்பர்களின் வேலை நிறம் போய் சற்றே பழுப்பு நிறமாக உள்ளது.

    அதுவும் டெக்ஸ் ஸின் புத்தகத்தின் காகிதம் தரம் நமது 10 ரூ புத்தகங்கள் போல் உள்ளது.
    இறுதி பக்கங்களின் நிறம் மேலும் பழுப்பேறி உள்ளது.

    எனது முகமற்ற கண்கள் புத்தகத்தின் முதல் மற்றும் மூன்றாம் பக்கங்கள் கத்தி வைத்து கிழித்தது போல் உள்ளது.மேலும் சில பக்கங்கள் எழுத்துக்கள் மிக மங்கலாக அச்சாகி உள்ளன.

    எனக்கு முகமற்ற கண்கள் மாற்று புத்தகம் தேவை, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.
    இந்த புத்தகத்தை நமது ஆபிசிற்கு திருப்பி அனுப்பிவிட்டு அவர்களை அழைத்து கூறினால் போதுமா?

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ணா வ வெ : கடந்த 3 மாதங்களாய் நாம் பயன்படுத்தி வரும் ஒரே ரக ஆர்ட் பேப்பரே இம்முறையும் ! So பழுப்பு நிறம் எவ்விதம் என்பதெனக்குப் புரியவில்லை. புத்தகம் கிழிந்தே வந்து சேர்ந்திருப்பின், அதனை சதா தபாலில் எங்களுக்குத் திருப்பி அனுப்புங்கள் ; மாற்று இதழ் அனுப்புகிறோம். கூரியரின் தவறெனில் அவர்களிடம் புகார் செய்ய உதவும் ; பைண்டிங்கில் பிழையெனில் அதனை சரி செய்யவும் உதவும்.

      தவிர டெக்ஸ் வில்லருக்கு நாம் பயன்படுத்தியுள்ளது தீபாவளி மலருக்கு மொத்தமாய் ஆர்டர் போட்டு மில்லில் வாங்கிய காகிதத்தின் எஞ்சியவைகளே. தொடர்ச்சியாய் ஆர்ட் பேப்பர் இதழ்களைப் பார்த்ததன் effect என்று எண்ணத் தோன்றுகிறது !

      Delete
    2. பதில் அளித்ததற்கு நன்றிகள் சார்.
      புத்தகத்தை சாதா தபாலில் அனுப்பிவிடுகிறேன்.

      //தொடர்ச்சியாய் ஆர்ட் பேப்பர் இதழ்களைப் பார்த்ததன் effect என்று எண்ணத் தோன்றுகிறது !//
      இருக்கலாம் சார்.புத்தகத்தில் சில பக்கங்கள் வெள்ளையாகவும் சில பக்கங்கள் பழுப்பேறியதாகவும் என் கண்களுக்கு தெரிகின்றது.

      Delete
    3. கிருஷ்ணா சில பக்கங்கள் பழுப்பேறிய என்றவுடன் ஆசிரியர் தவறாக நினைத்து விட்டார் .பழுப்பேறிய என்றாலே பழையது என்ற ஒரு எண்ணம் பரவலாக உள்ளது . வெளிர் மஞ்சளாய் சில பக்கங்கள் உள்ளன . ஆனால் காகிதம் தரம் நமது 10 ரூ புத்தகங்கள் போல் நிச்சயம் இல்லை .நன்றாகவே உள்ளது.

      Delete
    4. ஆசிரியர் பதில் கொடுத்த பின்னரே நான் கூறினேன் . தவறாக நினைக்க வேண்டாம் . நீங்கள் கூறியது போல அட்டகாசமான டெக்ஸ் கதை இது.

      Delete
  81. Editor VIJAYAN sir this is my first post... We want some oldies of spider in reprint please for the last couple of months we are asking for it but there is no positive response from you... please for the sake of our 1st super star and his die hard fans we want one final SPIDER complete collection in art paper.( Here WE represents all the Spider fans...) By TRUE SPIDER BLOODS....

    ReplyDelete
    Replies
    1. இப்படியாவது வெளி பட்டீர்களே ! ஸ்பைடர் குறித்த உங்கள் எண்ணம் ஸ்பைடர் ரசிகனாய் ,எனக்கு உற்ச்சாகம் தருகிறது . கண்டிப்பாக ஒரு போராட்டம் நடத்தி கிங் ஸ்பெசலை , கிங் ரிட்டர்ன்ஸ் ஸ்பெசலாய் மாற்றி விடுவோம் .

      Delete
    2. kumaresan Ts ; சாத்தியங்கள் உள்ள வேளையில் அதைப் பற்றிப் பேசுவோமே..?

      Delete
  82. விஜயன் சார், தோர்கல் புத்தகம் இந்த மாதம் 2 கதையோட வருது என்று சொன்னவுடன் இல்லத்தரசிக்கு மகிழ்ச்சிதாங்க முடியவில்லை, அடுத்த நிமிடமே, 2 கதைனா படிச்ச மாதிரியே இருக்காது அதனால தோர்கல் கதை எல்லாத்தையும் ஒரே புத்தகமா வெளிஈட முடியுமான ஆசிரியர்ட்ட சொல்லுங்க.. சொல்லிட்டேன்.

    என்னை பொறுத்தவரை தோர்கல் போன்ற தொடர்களை வருடத்திற்கு 2 புத்தகம் என்ற முறையில் Rs.120 விலையில் (4 கதைகளாக) வெளிஈடலாம். இப்படி செய்வதனால் தோர்கல் போன்ற சிறிய (சரியாக தெரியவில்லை) விரைவில்முடித்துவிட்டு, நம் முன் உள்ள வேறு ஒரு புதிய காமிக்ஸ் தொடருக்கு செல்லலாம்.

    இம்மாத கதைகள் பற்றிய கருத்துக்கள், புத்தகம் கையில் கிடைத்தவுடன் :-(

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு கதை கிடையாது நண்பரே . சென்ற கதைதான் இரண்டு . ஒரே கதை என்பதால் பிழைத்தது . //வருடத்திற்கு 2 புத்தகம் என்ற முறையில் Rs.120 விலையில் (4 கதைகளாக) வெளிஈடலாம்.//

      Delete
    2. ஒரு கதை ஐம்பது பக்கமாவது இருக்க வேண்டாமா ! ஐம்பது பக்கமும் அற்புதம் .

      Delete
    3. அதுவும் டெக்ஸ் திரை மறைவில் இருந்து வரும் என்ட்ரி எப்டி ஸ்டீல்?

      Delete
    4. Parani from Bangalore : தோர்கல் வரிசையில் 35 கதைகள் உள்ளன பரணி சார்..! நீங்கள் சொல்வது போல் 2015-ல் இதற்கென கூடுதலாய் slots வழங்கலாம் தான் - ஆனால் இது வரையிலும் வாசகர்களிடையே தோர்கல் முழுமையான வரவேற்பைப் பெற்றுள்ளாரா என்று கணிக்க இயலவில்லை என்னால் !! தொடர்ந்து feedback கோருவது இது போன்ற புதுத் தொடர்களின் தலைவிதிகளை நிர்ணயிக்கும் பொருட்டே !

      Delete
  83. சார்.. மூன்று புத்தகங்களும் நேற்றே கிடைத்தன.. ஒரு புரட்டு புரட்டிவிட்டு முதலில் படித்து 'தானை தலைவனின்' கதையையே..

    * 'நில் கவனி சுடு' கதை அட்டகாசம். முதல் பக்கத்தை தொட்டதும் முடிக்கும் வரை கீழே வைக்க முடியவில்லை. பர பர action, அதிரடியான வில்லன்கள், நண்பர்களின் பதிலடி என ஒரு அதிரடி movie பார்த்த திருப்தி.

    * மொழிபெயர்ப்பும் அருமை. உங்களின் வசனம் அந்த கீச்சலான ஓவிய பாணியை மறக்கடிக்க செய்கிறது.

    * புத்தகத்தின் size ம் கைக்கு அடக்கமாக, 'குப்புறக்க, மல்லாக்க, ஒருக்களிச்சு' படிக்க நன்றாய் இருக்கிறது.

    * மொத்தத்தில் இம்மாத டெக்ஸ் இதழ்... "அடி தூள்".

    ReplyDelete
    Replies
    1. Muthu Kumaran : //புத்தகத்தின் size ம் கைக்கு அடக்கமாக, 'குப்புறக்க, மல்லாக்க, ஒருக்களிச்சு' படிக்க நன்றாய் இருக்கிறது. //

      ரொம்பவே valid point !!

      Delete
  84. dear editor sir what is the name of the eagle man in english version.

    ReplyDelete