Thursday, March 06, 2014

புலி வருகுது..!

நண்பர்களே,

வணக்கம். இன்றைய கூரியர்களிலும், பதிவுத் தபால்களிலும் மார்ச் மாதத்து இதழ்கள் 'ஜம்'மென்று புறப்பட்டு விட்டன ; so எப்போதும் போல் 'Operation கூரியர் முற்றுகை' யினை நாளைக் காலை நீங்கள் அரங்கேற்றலாம் ! அதிலும் இம்முறை ST கூரியரில் நமக்கென பிரத்யேகமாய் இரு பணியாளர்களை நியமித்து - சகல பார்சல்களையும் பொறுப்பாய் புக்கிங் செய்துள்ளனர் ! நாளைய பொழுது நமது இதழ்களோடு உங்களுக்குப் புலர்ந்திட்டால் - ST கூரியருக்கு ஒரு பெரிய 'ஓ' போட்டே விடலாம் ! 
இந்தாண்டின் முதல் consolidated இதழாக ; ரூ.120 விலையில் வெளியாகும் முதல் இதழாக - டைகரின் "அட்லாண்டாவில் ஆக்ரோஷம்" அமைகிறது ! ஏற்கனவே நான் சொல்லி இருந்தது போல - ஒரு நீண்டு செல்லும் saga வின் வழித்தடங்கள் டைகரின் இந்த சாகசங்கள் ! இதன் முந்தைய பாகமான "வேங்கையின் சீற்றம்" சமீபமாகவே வெளியானது என்பதால் கதைக்களம் உங்கள் நினைவுகளில் fresh ஆகவே இருக்குமென்பதில் எனக்கு ஐயமில்லை ! "மரண நகரம் மிசௌரி" முதலாய் இத்தொடரில் பணியாற்றும் வண்ணச் சேர்க்கை அமைக்கும் (பெண்) ஓவியரான ஜேனட் கேல் மெல்லிய வர்ணக் கலவைகளோடு இந்த இரு பாகங்களுக்கும் பணியாற்றியுள்ளார் ! So டாலடிக்கும் பளீர் வர்ணங்களாக அல்லாது - பெரும்பாலும் ஒரு sober கலரிங் பாணியையே இம்முறை நீங்கள் பார்த்திடப் போகிறீர்கள் ! இதற்கு நேர் மாறாய் - ப்ளூகோட் பட்டாளத்தின் "கப்பலுக்குள் களேபரம்" எக்கச்சக்க bright கலர்ஸ் சகிதம் மினுமினுக்கிறது ! இந்த இதழின் அட்டைப்படத்தை இத்தொடரின் ஓவியரான வில்லி லாம்பில் ரொம்பவே ரசித்தாராம் ; இதழ் வெளியான உடனே மாதிரிப் பிரதியினைப் பார்க்க விரும்புவதாகவும் தகவல் சொல்லி அனுப்பியுள்ளார் !! மிகுந்த பெருமிதத்தோடு இன்று அவருக்கும் "க.களே " இதழினை அனுப்பியுள்ளோம் ! அவகாசம் தர அவர் தயாராக இருக்கும் பட்சத்தில் அடுத்த முறை ஐரோப்பா பயணம் மேற்கொள்ளும் போது அவரை சந்திக்கக் கோரி விண்ணப்பமும் தட்டி விட்டுள்ளேன்...fingers crossed !

திரு.வில்லி லாம்பில்
'க.களே.' இதழின் துவக்கப் பக்கத்தில் நான் குறிப்பிட்ட "சுவாரஸ்யம்" பற்றிய அறிவிப்பு காத்திருக்கிறது ! அதனை இப்போதே போட்டு உடைத்திடாது - நாளைக் காலை வரை "பெவிகால் வாய்ப் பெரியசாமியாய்' இருந்தால் தேவலை என்று நினைத்தேன்! அதற்காக 'ஓட்டை வாய் உலகநாதன் ' ஒரேடியாக லீவில் போய் விடவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக அந்த இதழின் பின்பகுதியில் இடம்பெறும் இரு விளம்பரங்களை இங்கு பதிவிடுகிறேன் ! 

C.I.D ராபின் & மர்ம மனிதன் மார்டினின் கதைகள் 2014-ன் சந்தாப் பட்டியலில் இடம் பெறாத போது ஏகமாய் கவலை / கோபம் / பரிகாசம்   தெரிவித்து நண்பர்கள் சிலர் கருத்துக்களைப் பரிமாறி இருந்தனர் ! உரிய தருணம் வரும் போதே எனது திட்டமிடல்களை பகிரங்கமாக்குவது என்பதில் நான் திடமாக இருந்ததால் அச்சமயம் நான் எவ்வித பதில்களும் தர முனையவில்லை ! ராபினும், மார்ட்டினும் சென்ற நவம்பர் முதலாகவே நமது நாயகர்கள் பட்டியலுக்குள் entry ஆகிவிட்ட போதிலும் - black & white கதைகளுக்கு ஒரு சிக்கலில்லா தளம் நிர்ணயம் செய்ய இயலாத வரை மௌனமே உசித மொழியென நான் தீர்மானித்திருந்தேன் ! இப்போது சமயம் சரியெனத் தோன்றுவதால் அறிவிப்பில் தாமதம் இல்லை ! 

அடுத்த மாதம் முதலாக - நமது வலைத்தளத்திலேயே நீங்கள் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி இதழ்களைத் தருவித்துக் கொள்ளும் ஏற்பாடுகள் செய்திட தீவிரமாய் இருக்கிறோம் ! இது தவிர, இன்னுமொரு online store-ல் நமக்கென ஒரு பிரத்யேகப் பக்கம் தயாராகியும் வருகிறது ! So சந்தா செலுத்தி இருக்கா நண்பர்கள் - இந்த மாதம் மாத்திரம் நமக்கு நேரடியாய் பணம் அனுப்பி இதழ்களைத் தருவித்துக் கொள்ளக் கோருகிறோம் !  இம்மாதப் புது வெளியீடுகளைப் பற்றிய உங்களின் முதல் பார்வை தரும் அபிப்ராயங்கள் / அலசல்களோடு நாளை சந்திக்கிறேன்  ! See you around folks ! Bye for now !

இன்றைய காலையின் addition...

448 comments:

  1. Can't believe, I am 3rd.

    விஜயன் சார், அப்படியே வருட சந்தாவையும் credit card மூலம் செலுத்துமாறு வசதியினை சேர்க்கவும்.

    ReplyDelete
    Replies
    1. மேலும் போன மாதம் ஜானி இதழ்க்கு பதிலாக ரோஜர் இதழே இரண்டாக வந்திருந்தது. இதனையும் பார்சல் செய்யும் போது கவனத்தில் கொள்ள அலுவலக நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்.

      Delete
    2. Makesh,

      //விஜயன் சார், அப்படியே வருட சந்தாவையும் credit card மூலம் செலுத்துமாறு வசதியினை சேர்க்கவும்.//

      சேர்த்தாயிற்று .........

      Delete
  2. Replies
    1. நாலாவது கமெண்ட் போட்டால் அந்த நாலாவது டிடெக்டிவ் நான் இல்லீங்கோ,

      Delete
  3. நான் காண்பது என்ன கனவா, விஜயன் சார் இன் அறிவுப்புகள், இதே போல் கருப்பு கிழவி ஸ்பெஷல் ஒன்று வெளியிட்டால் நன்றாக இருக்கும், கிரெடிட் கார்டு மூலம் வாங்க வேண்டும் என்றால் அதற்கு சர்வீஸ் டாக்ஸ் உண்டா

    ReplyDelete
    Replies
    1. lion ganesh : //கிரெடிட் கார்டு மூலம் வாங்க வேண்டும் என்றால் அதற்கு சர்வீஸ் டாக்ஸ் உண்டா//

      இருக்குமென்றே நினைக்கிறேன் !

      Delete
  4. எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிற நம் ஆசிரியருக்கு நன்றிகள் பல!

    ReplyDelete
    Replies
    1. WillerFan@RajaG : நிஜமாக நன்றி சொல்வதெனில் - நமது சின்னதொரு சர்குலேஷனையும் மதித்து - தொடர்ந்து கதைகள் தந்து ஆதரவுக் கரம் நீட்டிடும் படைப்பாளிகளுக்கே அவை சேர வேண்டும் !

      Delete
  5. கோச்சடையான் ரீலீஸ் மாதிரி கேப்டன்... விஸ்வரூபம் ரீலீஸ் மாதிரி அதிரடி அறிவிப்புகள். அப்பாடா..மார்டின், ராபின் பார்த்தபிறகுதான் சந்தோசமா இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. cap tiger : தலைவர் பட ரிலீசோடு ஒப்பிட்டுப் பேசினால் நம்மை கட்டி வைத்து உதைக்கப் போகிறார்கள் சார் !

      Delete
  6. அப்போ டைலன், மார்டின், ராபின் + சஸ்பென்ஸ் டிடெக்டிவ் சேர்ந்து கலங்கடிக்கும்/கலந்தடிக்கும் 'கோடை மலர்' ரெடி....?

    ReplyDelete
    Replies
    1. MH Mohideen : 'ஒரு பொறுமைப் படலம் !' - இது வரவிருக்கும் ஏதோ மாதத்துக் கதையின் பெயரல்ல !!

      Delete
    2. சார் அப்போ ரத்த படலம் என்பது ஏதேனும் கதையின் பெயராய் இருக்குமோ !

      Delete
  7. We are on right track...keep going... right right :-)

    ReplyDelete
  8. அப்படியே கருப்புக்கிழவி கதைகளையும் தலைவர் டெக்ஸ் வில்லரின் திகில் நகரில் டெக்ஸ் கதையையும் வெளியிடும் அறிவிப்பையும் வெளியிட்டால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவோ!

    ReplyDelete
    Replies
    1. WillerFan@RajaG : கிழவிக்கும் இத்தனை மவுசா ? அடடே !

      Delete
    2. கருப்புக்கிழவி கதை super...

      Delete
  9. Black and white, 200 Pages . 2 stories. SSSSSSSSSSSSSSSuper sir.

    When sir. MAY or .?

    ReplyDelete
  10. http://tamilcomics-soundarss.blogspot.in/2014/03/116.html

    புலி வருகுது...
    புலி வருகுது...
    புலி வருகுது...

    Super :) இத இத இதைதான் சார் நாங்க எதிர் பார்த்தோம் ... Welcome "சூப்பர் 6"

    உண்மையிலேயே இது நமது காமிக் பொற்காலம் ....

    ReplyDelete
    Replies
    1. //இத இத இதைதான் சார் நாங்க எதிர் பார்த்தோம் ... Welcome "சூப்பர் 6"

      உண்மையிலேயே இது நமது காமிக் பொற்காலம் ....//
      மிக பெரிய கொண்டாட்டங்களில் இது மாபெரும் கொடாட்டம் நண்பரே ! பொங்கல், தீபாவளி , கோவில் கொடைகள், சுற்றுலாக்கள் , திரைப்படங்கள் அது இது...... என எதுக்கும் மேலான கொண்டாட்டம் ! பா

      Delete
    2. next "சூப்பர் 12"

      Delete
  11. Happy to see Dylan, Martin and Robin..a treasure for mature audience..

    ReplyDelete
  12. இந்த வருடத்தில் சந்தோசமான செய்தி ஒவ்வொரு பதிவிலும் அரங்கேற்றம் ஆகிவருகிறது.
    இது என்றென்றும் தொடர வேண்டும்.

    புயல் டீம் சந்தாவுடன் இணைந்து வருகிறதா? அல்லது அதற்கு தனியாக பணம் அனுப்ப வேண்டுமா?

    நிறைய நாயகர்கள் வருவது மகிழ்ச்சி. ஆனால் புத்தகங்களின் எண்ணிக்கை உயர மாட்டேன்கிறது.
    இதனால் நாம் விரும்பும் ஆதர்சன நாயகர்களின் இதழ் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு என்று வருவதால் ஒரு நீண்ட பிரிவை ஏற்படுத்தி வருகிறது.
    ஆகையால் நாயகர்களின் எண்ணிக்கையை உயர்த்த தாங்கள் காட்டும் ஆர்வத்தை, இதழ்களின் எண்ணிக்கையை கூட்டுவதிலும் காட்ட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    டெக்ஸ் கதைகள் 100க்கும் மேற்பட்டு உள்ளது. தற்போது தாங்கள் அறிவித்த மேஜிக்விண்ட்/ம் 100க்கும் மேற்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளீர்கள். இதைத்தவிர லார்கோ, செல்டன், லக்கி, சிக்பில், தோர்கல் என்று வரிசைகட்டி நிற்கிறது நாயகர்களின் படை.
    வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு என வந்தால் இந்த கதைத் தொடர்களை படிக்க இந்த பிறவி போதாது என்பது மட்டும் நிச்சயம். ஆகையால் இதழ்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

    டைகரை சந்திக்கபோகும் தருணத்தை எதிர்பார்த்து என் மனம் ஆவலுடன் காத்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. // இதழ்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.//

      Delete
    2. ஆமாம் ஆமாம் ஆமாம்

      Delete
    3. இதழ்களின் எண்ணிக்கையை உயர்த்தத் தானே சூப்பர் 6 ?

      Delete
    4. சூப்பர் 6....coming சூப்பர் 12

      Delete
  13. நான்காமவர் ஒருவேளை Julia Kendall ?

    ReplyDelete
  14. டைலான் வரவு எதிர்பார்க்க வைக்கிறது.ஆனால் காணாமல் போனோர் இருவர் குறிப்பாக CID ராபின் வரவு அளவிட முடியா மகிழ்ச்சி.குரல் எழுப்பிய அனைவர்க்கும் நன்றி.பெஸ்ட் டீடெக்டிவ் யார் என போட்டீ ஆரம்பித்தால் இவருக்கும்,காரிகனுக்குமே என் ஓட்டு.

    ReplyDelete
  15. விரைவில் வருகிறது விளம்பரத்தின் நீண்ட Caption-ல் "பாக்கெட் சைஸ்" என்ற வார்த்தை கண்ணில் பட்டது! :D

    ReplyDelete
    Replies
    1. ஏப்ரல் fool பண்ணாமல் இருந்த சரி

      Delete
    2. ஹ ஹ ஹா ....நானும் இதனை கடைசியில் குறிபிட்டே தனியாய் கேட்க வேண்டும் என்றிருந்தேன் , உங்களுடனே இணைந்து விட்டேன் ! வந்தால் நன்றாய் இருக்குமே என மனதிற்கு தோன்றினாலும் ....அந்த பழைய இதழ்களின் மறுபதிப்பில் முத்துவின் பழைய முத்துக்களில் , அந்த எழுபதுகளின் நாங்கள் பார்க்காத சைஸ்களில் கை வைத்து விட மாட்டார் என்றே எண்ணுகிறேன் ! லயனின் பாக்கெட் சைஸ் மறுபதிப்புகள் மிக சிறியதாய் இருந்ததை அந்த அளவிற்கு மனது ரசிக்கவில்லை ..பக்கெட்(விஜய் ஸ்பெல்லிங் மிஸ்டேக் அல்ல ) சைஸ் வேண்டும் மறுபதிப்புகளுக்கு ...புதிய கதைகளுக்கு பாக்கெட் சைஸ் ஓகே என எண்ணுகிறேன்

      Delete
    3. இப்போது வந்து கொண்டிருக்கும் பெரிய பக்க நாயகர்களுக்கு பெரிய சைஸ்தானே எப்போதும் !

      Delete
    4. பாக்கெட் சைஸ் ஒரு காரணத்திற்காக தேவைதான்! புத்தகக் கண்காட்சிகளில் மாயாவி கதைகள் பற்றி விசாரிக்கும் பழைய வாசகர்கள் ஏமாற்றமடையாமலிருக்க உதவும்! Atleast ஒரேவொரு புத்தகமாவது பாக்கெட்சைஸில் கைவசமிருப்பது நல்லதுதான்!

      Delete
    5. ரமேஷ் வேறு கதைகள் அல்லது புதிய கதைகள் கூட பாக்கெட் சைசில் சரிதான் ! ஆனால் , திசை மாறிய கப்பல்கள் பழைய சைசும் , மறு வெளியீடுகளும் பார்த்தால் இந்த கோரிக்கை வைக்க மாட்டீர்கள் !

      Delete
  16. Vijayan Sir ,

    Kindly update the available comics list in our website , I have requested few books based on the availability mentioned in the "recent releases" list .But later i came to know that those books are of "out of stock". It would be great ,If you could inform the team to update the list time to time ,please .

    thx

    ReplyDelete
    Replies
    1. saravanan v : Have already asked our administrator to do the updates !

      Delete
  17. விஜயன் சார்,அறிவிப்புகள் ஒவ்வொன்றும் அருமை! வாசகர்களின் விருப்பதை நிறைவேற்ற கருப்பு வெள்ளை கதைகளுக்கு வாய்ப்பு கொடுப்பது அருமையான முடிவு! நமது பழைய (கருப்பு வெள்ளை) ரசிகர்களை மீண்டும் நம்முடன் இணையவைக்கும் பாலம் என்றால் மிகை இல்லை!

    சூப்பர் 6:- விளம்பரம் அனைத்து தரப்பு வாசகர்களின் நீண்ட நாள் ஆசைகளையும் தீர்த்துவைக்கும்! உங்களின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்!

    புதிய அறிவிப்புகளுக்கு லோகோ தேர்ந்து எடுக்கும் போது சிறிது கவனம் செலுத்துவது நலம், கிராபிக் நாவல் போல் சுமாரான லோகோ மீண்டும் வேண்டாம் நமது காமிக்ஸ்க்கு!

    அப்றம் அப்புறம் ... இந்த .... அதான் ... இளவரசி ... அதான் மாடஸ்டி சாகசம் பற்றி எப்ப அறிவிப்பிங்க? முடிஞ்சா லாரன்ஸ் & டேவிட்-இன் விட்டு போன கதைய கேப் கிடைக்கும் போது வெளி இட பாருங்க!

    இந்த நாள் காமிக்ஸ் ரசிகர்களுக்கு இனிமையான / அருமையான நாள்! நன்றிகள் கோடி உங்களுக்கு!

    ReplyDelete
  18. தல நடுராத்திரில புலி வருகுதுன்னு பீதிய கிளப்பிவிடுட்டிங்கலே?!!! எப்போ பத்து மணி ஆக போகுது, புலிய புடிக்க st கூரியர் ஆபீஸ் போகணும்!!! ஆபீஸ்.ல ஒன் ஹவர் பெர்மிசன் போடனும்!!

    ReplyDelete
    Replies
    1. ஒடுங்க ஒடுங்க இப்பவே கிடைத்தாலும் கிடைக்கும் ! புலி இந்த முறை சற்றே சீற்றத்துடன் வந்துள்ளதே !

      Delete
    2. ஸ்டீல் கிளா ......ஸ்டீல் பிங்கர்ஸா (ஜெத்ரோ ).........மாறுவதற்கு முன்னால் புத்தகம் கைக்கு கிடைக்கணும்

      Delete
    3. கவலை படாதீர்கள் மந்திரியாரே ....நானும் டைகரின் தீவிர ரசிகனே .....நிச்சயம் ரசிக்கும் வண்ணமே இருக்கும் ....டைகரின் இளம் வயது கதைகளை ஓவியத்தை மீறி ரசித்தேன் ...விறு விருப்பிற்கு பஞ்சமில்லா கதைகளே கௌ பாய் spl படித்ததிலிருந்து....

      Delete
  19. விஜயன் சார், வலைதளதிக்கு அப்பால் உள்ள ரசிகர்கள் லைன் 30 ஆண்டு மலரில் தமது காமிக்ஸ் அனுபவம்களை பகிர்வதற்கான அறிவுப்புகள் இந்த மாத புத்தகம்களில் உண்டா... அவர்களின் அனுபவத்தை நாம் தவற விட கூடாது.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : இதழின் வெளியீட்டுத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பாக அந்தப் பணிகளைத் துவக்கிடுவோம் !

      Delete
    2. நன்றி! என்னை பொறுத்தவரை நமது காமிக்ஸ் பின்னால் உள்ள மிக பெரிய சக்தி அவர்கள்!

      Delete
  20. புலிய பிடிக்க வலையோட ஸ்டீல் & விஜய் கூரியர் ஆபீஸ்ல காத்திருபதாக சன் டிவி பிளாஷ் நியூஸ்ல சொன்னாக :-)

    ReplyDelete
    Replies
    1. ஹம்... புத்தகங்கள் கைகளில் கிடைக்க எப்படியும் மதியமாயிடுமே...

      Delete
    2. எப்படி ஸ்டீல்... உங்களால மட்டும் முடியுது... வலைய போட்டு "புலிய" பிடிச்சாச்சின்னு சொல்லுங்க ....

      Delete
    3. enjoyyy ஸ்டீல்.....

      Delete
    4. வாழ்த்துக்கள் ஸ்டீல்

      Delete
  21. புலி உறுமுது .....
    சார் உங்க பொட்டிய (மதுரை பார்சல் ) இப்போதான் ஓடைக்குறாங்க என்ற பிரிப்பவரின் வார்த்தை கேட்டு வீட்டுக்கு வந்து வண்டியை நிறுத்தினேன் !

    ReplyDelete
  22. சேரில் அமர உடனே அழைப்பு , சார் வாங்க வந்திருச்சி என்று ! மீண்டும் உடனே சென்று புத்தகத்தை கைப்பற்றி விட்டேன் ! அட்டை படம் டைகர் அருமை , சுஸ்கி விசனப்பட்டது போல அல்லாமல் கரடு முரடாகவே தெரிகிறது கோபத்தில் சிவந்த டைகர் முகம் ! சார் வழக்கம் போல நமது மாலையப்பனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள் ! பின்னட்டயும் அருமை !

    ReplyDelete
    Replies
    1. கப்பலில் களேபரம் விரியும் காட்சி நீல கடலை , நீல வானை அருமையாக காட்டியுள்ளார்கள் ! பின்னட்டை இது போல கதையின் ஒரு பக்கத்தை அப்படியே போட்டால் நன்றாய் இருக்குமே என நான் ஏங்கியதுண்டு ! ஆனால் டல்லடிக்கும் பின்புறம் வித்தியாசமாய் இருப்பினும் ஏனோ அந்த அளவு கவரவில்லை ! 50-50 பின்னட்டைக்கு !
      நண்பர்களே நான் உள்ளே செல்லவில்லை , அந்த பக்கத்தை பார்த்து உடனே உங்களிடம் சொல்லி அந்த திடீர் சந்தோசத்தை குலைக்க விரும்பவில்லை ! ஆகவே புத்தகம் கிடைத்ததும் நீங்களாகவே தெரிந்து கொள்ளுங்கள் !
      புத்தகத்தை பிரிக்க போகிறேன் !

      Delete
    2. வாழ்த்துக்கள்,ஸ்டீல் க்ளா!

      Delete
    3. வந்துடுச்சா .நர நர நர

      Delete
    4. நன்றி சிவா ! மந்திரி உடனே சூடாக கிடைத்ததால் (நீங்களும் சூடாக ) நர நர அல்ல மொறு மொறு ...

      Delete
    5. க்கும் ..........அதெப்படி ''கை''க்கு (எலெக்சன் முடியும் வரை ) மட்டும் இவ்ளோ சுளுவா கிடைக்குது

      Delete
    6. அந்த கைக்கு ......வேண்டாம் அரசியல் , இந்த கைக்கு அப்படிதான் மந்திரியாரே !

      Delete
    7. இனிமேலாவது தமிழர்களை தன்மானத்தோடு வாழ விடுங்க.........

      Delete
    8. Mugunthan kumar..என்ன சொல்லவர்றீங்க

      Delete
    9. மந்திரி சார் இந்த விசயத்தை ரொம்ப டீப்பா எழுதினா அரசியலா ஆயிரும்............
      புரிந்தால் சந்தோசம்........... இல்லைனா விட்டுருங்க..........

      Delete
  23. * சூப்பர்-6
    * லயன் திரில்லர் ஸ்பெஷல்
    * ராபின், மார்ட்டின் - ரீஎன்ட்ரி

    வாவ்! தூள்! அட்டகாசம்! அருமை! நீங்க கொஞ்ச நாள் சைலண்ட்டா இருந்தா, ஏதோ சில சரவெடிகள் வெடிக்கும்னு மறுபடியும் நிரூபிச்சிட்டீங்க எடிட்டர் சார்!

    'சூப்பர்-6' பற்றி கார்த்திக் சோமலிங்கா சில மாதங்களுக்கு முன் கணித்த (உங்களிடம் கேட்டிருந்த) ஆரூடம் என் நினைவுக்கு வருகிறது. ஆனாலும் மனிதரின் கணிப்பு பல நேரங்களில் உண்மையாவதையும் வியக்காமல் இருக்க முடியவில்லை! (கலக்குறீங்க ஜோதிடர் கார்த்திகானந்தா அவர்களே! :) )

    'சூப்பர்-6'ன் விபரங்கள் அடுத்த இதழில் என்று சொல்லி - கிடைத்த குதூகலத்தை முழுமையடையாமல் செய்திருக்கிறீர்கள். ஆனாலும் 'ஓ.வா.உ.நாதன்' விரைவில் திருவாய் மலர்ந்தருள்வார் என்று நம்புகிறோம்.

    புத்தகத்தின் முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ள 'சூப்பர் அறிவிப்பை' பார்த்துவிடும் ஆவலுடன், கொரியர் பாய்க்காக......

    ReplyDelete
    Replies
    1. ஓ! அந்த 'சூப்பர் அறிவிப்பு' இந்த ' சூப்பர்--6' பற்றியதுதானா! சூப்பர்! (நன்றி ஸ்டீல்)

      Delete
    2. தாறுமாறாய் ஓடப் போகும் ஆறு....
      இவங்கள அடக்க இனி யாரு....

      Delete
    3. //தாறுமாறாய் ஓடப் போகும் ஆறு....
      இவங்கள அடக்க இனி யாரு....//
      ++++++++++++++

      Delete
    4. Erode VIJAY : //'சூப்பர்-6'ன் விபரங்கள் அடுத்த இதழில் என்று சொல்லி - கிடைத்த குதூகலத்தை முழுமையடையாமல் செய்திருக்கிறீர்கள்//

      இந்த விஷயத்தில் "ஓட்டை வாய் உலகநாதனுக்கு " லாங் லீவு !

      சூப்பர் சிக்சின் சந்தாத் தொகை ;
      இடம்பெறும் இதழ்களின் titles ;
      விலைகள் ;
      வெளியீட்டுத் தேதிகள்

      மாத்திரமே ஏப்ரலில் அறிவிக்கப்படும். அந்தந்த கதைகளின் விபரம் அந்தந்த வெளியீட்டுத் தேதிக்கு 60 நாட்கள் முன்பாக தான் விளம்பரப்படுத்தப்படும் ! அத்தனையையும் முன்கூட்டியே அறிவித்து விட்டான பின்னே துளியும் சஸ்பென்ஸ் மிஞ்சாதல்லவா ? கொஞ்சமேனும் உங்களின் யூகக் குதிரைகளை ஓட விடச் செய்வோமே ?

      Delete
    5. //ஜோதிடர் கார்த்திகானந்தா ///
      great

      Delete
    6. ஓட்டை வாய் உலகநாதன் அய்யா அப்ப மே மாதம் சூப்பர் 6-ல்ல இருந்து முதல் புத்தகம் வருதுன்னு சொல்லுங்க!

      Delete
    7. அட ஆமாம்ல...Parani..
      ரொம்ப அடக்குனா..டமால்னு வெடிச்சுடும்...அதுனால அப்போ அப்போ ஒட்டவாய் வெளியிலே வந்துடுறாறு போல....

      Delete
  24. // அடுத்த மாதம் முதலாக - நமது வலைத்தளத்திலேயே நீங்கள் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி இதழ்களைத் தருவித்துக் கொள்ளும் ஏற்பாடுகள் செய்திட தீவிரமாய் இருக்கிறோம் ! //

    அப்போ டெபிட் கார்டு கிடையாதா,விஜயன் சார்?

    ReplyDelete
    Replies
    1. ஆனா எங்கிட்ட ''விஸ்டிங் கார்டு'' மட்டும் தானே இருக்கு

      Delete
    2. மந்திரியாரின் விசிடிங் கார்டால் பாக்தாத்தில் பாதியை விலைக்கு வாங்க முடியுமே !! அது போதாதா ?

      Debit Card-ம் ஏற்றுக் கொள்ளப்படும் சிவ சுப்ரமணியன் சார் !

      Delete
    3. நன்றி,சார்.

      புத்தகங்கள் கிடைத்து விட்டன. 1 மணி நேரமாக படிக்க முடியாமல் தவிக்கிறேன். காமிக்ஸ் டைம் படித்து விட்டேன்.

      "சூப்பர் சிக்ஸ்" -இல் ஆண்டு மலர்,மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல்,தீபாவளி மலர் என்று திட்டமிட்டது அருமை.

      அட்டைபடம் இரண்டு புத்தகங்களிலும் அருமை.

      "அட்லாண்டாவில் ஆக்ரோஷம் " முன் அட்டை மற்றும் உள்ளே உள்ள டைகரின் தனி ஓவியம் அழகோ அழகு.

      Delete
    4. //"அட்லாண்டாவில் ஆக்ரோஷம் " முன் அட்டை மற்றும் உள்ளே உள்ள டைகரின் தனி ஓவியம் அழகோ அழகு.//
      ulle ulla kappalil kaleparamum appadiye

      Delete
    5. விஜயன்,சார். நான் உங்களை விட வயதில் மிக சிறியவனே!(1988). எனவே என்னை பெயர் சொல்லி அழைப்பைதையே நான் விரும்புகின்றேன்.

      Delete
  25. சார் பதிவை நான் இப்போதுதான் படித்தேன் ! போட்டு உடைத்து விட்டீர்களே ! பரவாயில்லை , புத்தகம் முதல் நாள் கிடைக்கா நண்பர்களுக்கு இது உதவுமே என்று தோன்றினாலும் , இந்த முறை உங்கள் செய்கைகளால் முதல் நாளே அனைவருக்கும் கிடைக்கும் போல உள்ளதே ! பரவாயில்லை நேற்றிரவே பல நண்பர்கள் உற்ச்சாகத்தை அனுபவித்திருப்பர் !
    இருள் உலகின் ஆழங்களை ஆரோய்வோமா ,நியுயார்க்கின் நிழல் உலகிற்கு நித்தமும் நித்திரை கிடையாது ஏனென்று கண்டறிவோமா ....எனும் வரிகள் மனதில் ஏனோ இனம் புரியாத உற்ச்சாகத்தினை பாய்ச்சுகின்றன , நமது என்பதுகளில் ஆர்வத்தினை தூண்டியது போல் !
    இனி சிக்சர்களை கண்டு களித்திட ipl மேட்சுகளைதான் கண்டு களித்திட வேண்டுமென்பதில்லை ! ஒரே அடியில் கனவுலகினை மீண்டும் உயிர்பித்து விட்டீர்கள் ! நீங்கள் வாழ்க ! அட்டகாசம் ! களேபரம் கப்பலில் மட்டுமால எங்கள் மனதிளும்தானே ! சீக்கிரம் அறிவிப்புகளை துரிதபடுத்துங்கள் !


    விஜெய் இவை அனைத்தினையும் எனது பொய்யா மொழி பட்சி கணித்திருந்தது என்பதனை எப்போதும் அதனை கிண்டலடிக்கும் உங்களிடம் கூறுமாறு கேட்டு கொண்டது ! வருந்துவீர்களா என நான் கேட்கிறேன் ?

    ReplyDelete
  26. சூப்பர் 6 ...... வாவ் ....அருமையான ..,அட்டகாசமான அறிவிப்பு சார் ...இதை ..இதை தானே அதிகம் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம் .

    ஆனால் ஒரு சின்ன டவுட் ...

    விளம்பரத்தில் 6 அல்ல 12 நாயகர்கள் ....மற்றும் விபரம் ஏப்ரல் இதழில் என்று அறிவித்ததில் ஒரு குழப்பம் ...அது 30 வது ஆண்டு மலர் விளம்பரம் இல்லைய சார் ...இல்லை அது தானா இது ....மண்டையை குழப்புகிறது ...தயவு செய்து 30 வது ஆண்டு மலர் வேறு.....சூப்பர் 6 வேறு என்ற நல்ல செய்தியை தெளிவு படுத்தி விடுங்கள் .

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : 'முப்பது நாட்களில் குழப்பம் தீருவது எப்படி ?" புதுப் பதிப்பு வெளியாகியுள்ளதாம் பரணி சார் !

      அது கிடைக்காது போனாலும் பரவாயில்லை ; நமது ஏப்ரல் இதழ்கள் உங்களுக்கு உறுதுணை நின்றிடும் - குழப்பத்தைத் தீர்த்து விட !

      Delete
  27. நண்பர்களே அதிரடி ரசிகர்களுக்கு இன்னுமொரு விருந்து அடுத்த மாதம் ! இப்போதிருந்தே நாட்காட்டியின் தாள்களை வேகமாய் கிழிக்க வேண்டியதுதான் !

    ReplyDelete
  28. ராபின் ..மார்டின் என கருப்பு வெள்ளை நாயகர் பயணத்தில் எங்கள் இளவரசி " மாடஸ்தி " அவர்களுக்கு கடைசி சீட்டில் ஒரு ஓரமாக இடம் கிடைக்க அருள் புரிவீர்களா ...?

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : இளவரசியாக இருந்தாலுமே பயணச் சீட்டு அவசியமன்றோ ?

      Delete
    2. புரியல .... அழுதிடுவேன் .... என்ன சொல்ல வாரிங்க... இளவரசி இந்த வருடம் காட்சி தருவாங்களா இல்லையா ...

      Delete
    3. எடிட்டர் வீட்டில் இளவரசியின் ஆட்சி என்பதால் பயப்படுகிறார் என்று நினைக்கிறேன்.......
      பாவம் சிங்கம் சிங்கிளா என்ன செய்யும்..........

      Delete
  29. Edi,

    chinna chinna aasai
    sixum gundaaiirukka aasai

    kelungaal kodukkapadum, athanaikkum aasaipadu --> apdinnulam periyavanga sollitaanga

    nanum aasaipattuttaen, kekkavum kettutaen so neenga oru Gentlemana koduthurunga seriya

    super sixin subscription amount sollunga ippovae katturom (appurama adhavechii actual announcement vara varaikkum nanga buildup pannikkurom)

    ReplyDelete
    Replies
    1. // 'சின்ன சின்ன ஆசை, 6ம் குண்டாயிருக்க ஆசை' //

      ஹா ஹா! சூப்பர் குண்டு-6!

      Delete
    2. சூப்பர் குண்டு சிக்ஸ் ...சூப்பர் எனக்கும் சத்யாவின் இந்த பதிலை பிடிக்கும்

      Delete
    3. கேளுங்க கேளுங்க லயன் F.M..................கேட்டுகிட்டே இருங்க

      Delete
  30. சூப்பர் 6 Supeeer...

    ReplyDelete
  31. இந்த டைகரின் சாகசம் " வேங்கையின் சீற்றம் " தொடர்ச்சியா.... ? அப்போ மீண்டும் எடுக்க வேண்டியது தான் வேங்கையின் சீற்றத்தை .....
    ( நமக்கு நினைவு திறன் இப்பொழுது அதிகம் ஆகி விட்டது ...எனவே தான் ...ஹி ..ஹி ..)

    ReplyDelete
  32. சார் ....அப்படியே உங்கள் மனதில் " சூப்பர் 6 டெக்ஸ் " என்ற எண்ணமும் உதித்தால் தயங்க வேண்டாம் .சொல்லி விடுங்கள் .நாங்கள் தவறாக நினைக்க மாட்டோம் .காரணம் இனி " டைகர் " கதைக்காக டெக்ஸ் ரசிகர்கள் கட் -அவுட் வைப்பார்கள் .டெக்ஸ் கதைக்காக "டைகர் " ரசிகர்கள் கட் -அவுட் வைப்பார்கள் .நாங்கள் ஒன்று சேர்ந்து விட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : புல்லரிக்குது !

      Delete
    2. கம்பளி வைத்து போர்த்திகோங்க... இல்லேன்னா ஆடு மாடு புல்லுன்னு நினைச்சி மேஞ்சிட போகுது.
      உபயம்: சுருளி ராஜன் வில்லு பாட்டு

      Delete
  33. ஹைய்யா! 'சூப்பர்-6'க்கான சந்தாவை நமது வளைத்தளத்திலேயே ஆன்-லைனில் கட்டிவிடலாம் என்று சொல்லுங்கள்!

    சூப்பர்!

    காத்திருக்கிறோம்...

    (ஆன்-லைனில் பணம் செலுத்தும் முதல் 10 பேர்களுக்கு வாழைப்பூ வடை குருமாவுடன் வழங்கப்படும்தானே சார்? ஹி ஹி)

    வலைப்பூவில் பணம் செலுத்த இனி இல்லை தடை...
    வாய்க்குள்ளே விழப்போகுது வாழைப்பூ வடை...
    வானம்தானே எல்லை இனி நமக்கேது தடை...

    ஏ டண்டனக்கா...

    ReplyDelete
    Replies
    1. //வானம்தானே எல்லை இனி நமக்கேது தடை...//
      ஆசிரியர் பின்னால் பெரும் படை ....
      துக்கங்களுக்கும் துயரங்களுக்கும் கொடுப்போம் தடை ...

      Delete
    2. போரடிக்கும் பொழுதுகளுக்கும் போர் செய்து கொடுப்போம் தடை ...

      Delete
    3. Erode VIJAY : நமது டாக்டர் பாலசுப்ரமணியன் அவர்களின் புதல்வர் துரை பிரசன்னா தான் இந்த வலைத்தள ஏற்பாடுகளை செய்து வருகிறார் ! மாதந்தோறும் நமது தளத்தைப் பராமரிப்பது கூட அவரே - ஒற்றை அணா கூட வாங்கிக் கொள்ளாமல் !! So அவருக்குப் போடுவோமே ஒரு டன் டணக்கா !

      Delete
    4. So இனிமேல் http://www.lion-muthucomics.com என்ற ஒரே இணையதள முகவரி இருந்தாலே போதும் Purchase இலகுவாகிவிடும்! திரு துரை பிரசன்னா அவர்களின் முயற்சிக்கு நன்றி!

      Delete
    5. சிவகாசி டாக்டர். திரு. பாலசுப்ரமணியம் அவர்களது கடிதங்கள் பலவற்றை நான் நமது 'வாசகர் கடிதம்' பகுதியில் பார்த்திருக்கிறேன். எல்லையில்லா காமிக்ஸ் காதலுடன் நீண்டநெடுங்காலமாக அவர் நமக்கு ஆற்றிவரும் பணி போற்றற்குரியது. அவருக்கும், அவரது மகன் துரை பிரசன்னாவுக்கும் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரது சார்பாகவும் நன்றிகளும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

      Delete
    6. // நமது டாக்டர் பாலசுப்ரமணியன் அவர்களின் புதல்வர் துரை பிரசன்னா தான் இந்த வலைத்தள ஏற்பாடுகளை செய்து வருகிறார் ! மாதந்தோறும் நமது தளத்தைப் பராமரிப்பது கூட அவரே - ஒற்றை அணா கூட வாங்கிக் கொள்ளாமல் !! So அவருக்குப் போடுவோமே ஒரு டன் டணக்கா !//

      காமிக்ஸ் காதலோடு நேரம் ஒதுக்கி இது போன்ற உதவிகள் செய்யும் நண்பர் துரை பிரசன்னா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

      Delete
    7. //சிவகாசி டாக்டர். திரு. பாலசுப்ரமணியம் அவர்களது கடிதங்கள் பலவற்றை நான் நமது 'வாசகர் கடிதம்' பகுதியில் பார்த்திருக்கிறேன். எல்லையில்லா காமிக்ஸ் காதலுடன் நீண்டநெடுங்காலமாக அவர் நமக்கு ஆற்றிவரும் பணி போற்றற்குரியது. அவருக்கும், அவரது மகன் துரை பிரசன்னாவுக்கும் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரது சார்பாகவும் நன்றிகளும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.//
      நானும் !

      Delete
    8. /சிவகாசி டாக்டர். திரு. பாலசுப்ரமணியம் அவர்களது கடிதங்கள் பலவற்றை நான் நமது 'வாசகர் கடிதம்' பகுதியில் பார்த்திருக்கிறேன். எல்லையில்லா காமிக்ஸ் காதலுடன் நீண்டநெடுங்காலமாக அவர் நமக்கு ஆற்றிவரும் பணி போற்றற்குரியது. அவருக்கும், அவரது மகன் துரை பிரசன்னாவுக்கும் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரது சார்பாகவும் நன்றிகளும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.//
      நானும் ! : -)

      Delete
    9. +1. Thank you Durai Prasanna. I am not sure whether you read our blog, if yes then please do write here about your experience in building/administering our website.

      Delete
  34. ஸ்டீல்.... தங்க தலைவனின் கதை எப்படி இருக்கு ஜீ??????

    ReplyDelete
  35. வணக்கம் சார்,
    ஒவ்வொரு மாதமும், மாதத்தின் முதல் வாரத்திலேயே நமது புதிய காமிக்ஸ் புத்தகங்கள் இருக்கும் இடம் தேடி வந்து எங்களை அடைவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.இதை தொடர்ந்து சாதியமாக்கிக்கொண்டிருக்கும் உங்களுக்கு & டீமுக்கு நன்றிகள் பல.

    புத்தகங்களின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.

    //அவகாசம் தர அவர் தயாராக இருக்கும் பட்சத்தில் அடுத்த முறை ஐரோப்பா பயணம் மேற்கொள்ளும் போது அவரை சந்திக்கக் கோரி விண்ணப்பமும் தட்டி விட்டுள்ளேன்...fingers crossed !//

    அப்போது MR.வில்லி லாம்பிலிடம் நமக்காக பிரத்யோகமாக ஒரு நான்கு பக்கம் சிறிய சாகசம் "காக்கி பேண்ட்ஸ் பட்டாளம்" ப்ராஜெக்ட் செய்ய முடியுமா என வினாவிப்பாருங்க சார். நிச்சயம் காமெடிக்கு நமது காக்கி பேண்ட்ஸ் பட்டாளம், ப்ளூ கோட்ஸ் பட்டாளத்துக்கு சளைத்தவர்கள் இல்லை. மற்றொன்று, வந்தால் மலை இல்லை என்றால் பல்பு. அவ்வளவு தானே ! : -). இதற்க்கு அவர் சம்மதிக்கும் வேலையில் அப்படியே சூட்டோடசூடா KBSR (K.B.ஸ்கிரிப்ட் WRITER ) என்றொரு போட்டியையும் அறிவிக்கலாம். : ).
    இந்திய காமிக்ஸ் வரலாற்றில் இது ஒரு TURNING POINT ஆகவும் அமையலாம். ரொம்ப ஆசையோ??: -)))
    புத்தகங்கள் இன்னைக்கு கொஞ்சம் சீக்கரம் வந்த பரவாயில்ல! : -)))!

    ReplyDelete
    Replies
    1. விஸ்கி-சுஸ்கி //MR.வில்லி லாம்பிலிடம் நமக்காக பிரத்யோகமாக ஒரு நான்கு பக்கம் சிறிய சாகசம் "காக்கி பேண்ட்ஸ் பட்டாளம்" ப்ராஜெக்ட் செய்ய முடியுமா என வினாவிப்பாருங்க//

      "பெல்ஜியத்தில் மொத்து !" - விரைவில் எதிர்பாருங்கள் !!

      Delete
    2. ஹா ஹா ஹா! நீங்க மட்டும் அவர் சம்மதிக்க வைங்க,அதுக்காக அவரு எவ்வளவு மொத்து மொத்தினாலும் நாங்க எங்க முதுக கொடுக்க தயார்! : )

      //KBSR// CORRECTION KBSW !

      Delete

    3. "பெல்ஜியத்தில் மொத்து !"
      வாழைப்பூ வடைகாரரே .........................
      நான் உங்கள் முதுகுக்கு எண்ணெய் போட்டுவிட நான் தயார் ..........
      ஜல்தி ஜல்தி............. சட்டைய கழட்டுங்க ஆசான்..........

      Delete
    4. // ஒரு நான்கு பக்கம் சிறிய சாகசம் //

      அதுக்குப்பொருத்தமான கதை ஒன்னு கைவசம் இருக்கு. ஹி ஹி, பொன்னியின் செல்வன் நாவலை அனுப்பிவச்சு அதை 4 பக்க Filler Page ஆக வரைய சொல்லிடலாம்! இதைக்கேட்டாங்கன்னா பெல்ஜியம் நம் நாட்டின் மீது போர் தொடுக்கவும் வாய்ப்பிருக்கு! :D

      Delete
  36. // KBSR //

    'நாடகங்களுக்கு வசனம் எழுதுவது எப்படி?'

    (மொன மொன மொன...)

    ReplyDelete
  37. வருமா வரதா..இன்னமும் வீட்டுல இருந்து confirm வரலையே...book received nuu

    ReplyDelete
  38. விஜயன் சார், பாக்கெட் சைஸ்-ல் வெளி வந்த காமிக்ஸ் கிளாசிக் கதைகளில் உள்ள மிக பெரிய குறை மிக சிறிய எழுத்துகள் [font size]. எனவே சரியான font size-i இனி வெளி வர உள்ள பாக்கெட் சைஸ்-ல் புத்தகம்களில் உபயோகபடுத்துங்கள்.

    ReplyDelete
  39. நான் நேற்று நள்ளிரவு பார்க்கும்போது சூப்பர் 6 விளம்பர போஸ்டர் இல்லை. சந்தோசம்.............
    இருந்தாலும் இந்த அறிவிப்பு யானை பசிக்கு சோளப்பொறிதான் என்பதில் ஐயமில்லை.

    மேலே நண்பர் பரணிதரன் டெக்ஸ் 6 கேட்டிருந்தார், அற்புதமான யோசனை (அதிக புக் படிக்கிறதுக்காக சண்டைகாரன் கால்ல எல்லாம் விழ வேண்டி இருக்கிறது) சிவகாசியில் எடிட்டர் வீட்டு வாசல் முன்பு டைகர்/டெக்ஸ் இருவரும் அரவணைத்தபடி கட்அவுட் வைத்துவிடலாம்.

    லாரன்ஸ், மாடஸ்தியை ஏன் ஒதுக்கி வைக்கிறீர்கள் என்று தெரியவில்லை. எடிட்டர் வீட்டில் மாடஸ்தி ஆட்சி என்பதாலா?

    ReplyDelete
    Replies
    1. Mugunthan Kumar : நண்பரே, கேள்வியை எழுப்புவதில் தவறில்லை...யூகமாய் பதிலை தயார் செய்து கொண்டே எழுப்பும் போது தான் நெருடுகிறது !

      Delete
    2. டியர் எடிட்டர்
      இந்த பதிவை அதிக புத்தகங்கள் வேண்டும் என்ற ஒரு ஆர்வ கோளாறினால்தான் கேட்டிருந்தேன்
      இது உங்கள் மனதை பாதித்திருந்தால் மன்னிக்கவும்.

      Delete
  40. இந்த முறையும் சிங்கத்தின் சிறு வயதில் தீபாவளி மலர் கதை தேர்வுகள் குறித்த எதிர்பார்ப்புகள் அடுத்த இதளுக்காகாக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படி செய்து விட்டது ! ஆனால் அந்த கதைகள் தேர்வில் பதிமூன்றின் கதை குறித்த விளம்பரங்கள் எனக்கு பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவில்லை ! திகிலின் துக்கடா கதைகள் அந்த அளவில் ஆரம்ப காலங்களில் ஈர்ப்பை எற்படுத்தாதளால் இருக்கலாம் ! அதில் இதுவும் ஒன்று என எண்ணி இருக்கலாம் !திகில் நான் ஏகமாய் எதிபார்த்தது பேட் மேன் மட்டுமே ! சூப்பர் ஹீரோக்களுக்கு அடிமையாய் மனது இருந்ததும் ஒரு காரனமே ! ஏன் பதிமூன்றின் இரத்தபடலம் முதல் கதை படித்ததை கூட நினைவில் இல்லை ! இரண்டாம் பாகமாய் முழுக்கதையும் தீபாவளி மலரில் படித்தவுடன் எனக்கிருந்த தவிப்பு இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது ! அரக்க பறக்க தேடினேன் ! ஸ்டீவ் ராலாண்து குறித்து முதல் கதையில் விரிவாக கூறி இருப்பார்களோ என்று ! எங்கு தேடினும் கிடைக்கவில்லை !என்னை நானே நொந்து கொண்டேன் இவ்வளவு அற்புதமான கதையை இழந்து விட்டோமே என்று ! அந்த மூன்றாவது கதையில் புத்தகம் கதை சுருக்கம் படித்து முடித்து இன்னும் தவிப்பை ஏற்றியது ! அதாவ்து பின்னர் ஒரு பத்து வருடங்கள் முன்பு உக்கடம் பழைய புத்தக கிடைத்தது ! அதனை எனது பாக்கெட்டில் திணித்து கொண்டு கம்பெனி tvsல் வரும் போது வழியில் தவற விட்டேன் ! அதனை தேடி எத்தனை முறை ஆவாரம்பாளயத்திர்க்கும் உக்கடம் நடுவே அலைந்தேன் என்பது நினைவில் இல்லை , ஐந்து முறைக்கு மேல் இருக்கலாம் ! குப்பை தொட்டிகளையும் , பழைய புத்தக கடைகளையும் பார்வை இட்டேன் ! ம்ஹோஹ் ! கிடைக்கலையே ! பிறகு ஐந்து வருடம் கழித்து சாய்பாபா காலனி ராஜா புக் ஹௌசில் கிடைத்தது ! அப்போது படித்த போது கருப்பு தினம் அதிலே விவரிப்பாய் இல்லை ! ஸ்டீவ் ராலண்டுமே ! ஆனால் அந்த நினைவுகள் ஏக்கங்கள் இன்னும் உண்டு , காலனின் கைக்கூலி குறித்த உங்களது அறிவிப்பை கண்டவுடன் எனது கொண்டாட்டங்கள் மீண்டும் எதிர்பார்ப்பில் உள்ளது ! அந்த அசகாய சூரனின் திறமைகள் , வழிகள் ,என் அவ்வாறு செய்தான் , நல்லவனா, கெட்டவனா , கூலித்தொளிலாலியா , cia உளவாளியா , கியூபா போராளியா என ஏங்கி கிடக்கிறது மனது காலனின் கைக்கூலிக்காக ....சீக்கிரமாய் வெளியிடுங்கள் என கோரிக்கை வைக்கிறேன் !

    இதில் நீங்கள் எடுத்த முடிவுகள், உங்கள் தாத்தாவின் துணிவுகள் என அனைத்தும் ஒரு விடா முயற்ச்சிக்கும், துணிச்சலுக்கும் உதாரணமாய் திகழ்கிறது ! உங்களது சுய சரிதையும் இதனுடனே இணைந்து வந்தாலும் அதுவும் உற்ச்சாகமாய் இருக்கும் ! நீங்கள் சுய புராணமாய் போய்விடுமோ என ஐயுற தேவை இல்லை ! தொடருங்கள் இதுவும் நமக்கு ஒரு சுய முன்னேற்ற நூலே ! போராட்டமே வாழ்க்கை !
    அன்றே நீங்கள் துணிச்சலாய் முடிவெடுத்து ஒரு லட்ச்ச ரூபாய் முதலீட்டில் புத்தகங்கள் வெளியிட்டுள்ளீர்கள் ! இப்போதோ தெளிவாய் இத்தனை புத்தகங்கள் விற்கும் என தாங்களும் அறிவீர்கள் ! இப்போது அதிக விலைக்கு வாங்க காத்திருப்போர் அதிகம் ஆகவே குண்டு புத்தகங்கள் தங்களை மண் கவ்வ வைக்காது என்பது தெளிவு !

    ReplyDelete
    Replies
    1. \\\\\\\\\\\\\\குண்டு புத்தகங்கள் தங்களை மண் கவ்வ வைக்காது என்பது தெளிவு\\\\\\\\\\\\\\\\

      +1

      Delete
    2. ஸ்டீல் நீங்கள் ஏங்கி தவித்த நாட்களை விவரித்து அபாரம். சூப்பர் ஸ்டீல் தன்னை மறந்தவன் உங்களை மறக்க வைத்த கதை முழு புத்தகமாக படித்தீர்களா இல்லையா?

      Delete
    3. இரும்பையும் இலவம்பஞ்சாக்கிய காமிக்ஸ் தேடல். சூப்பர் ஸ்டீல்!

      // ம்ஹோஹ் //
      நல்லாருக்கில்ல? எடிட்டர் சார், இனி நம் புத்தகங்களில் 'ம்ஹூம்-க்கு பதிலாக இதையேகூட யூஸ் பண்ணலாம்! :D

      Delete
    4. // இரும்பையும் இலவம்பஞ்சாக்கிய காமிக்ஸ் தேடல். சூப்பர் ஸ்டீல்! //
      இலவம்பஞ்சு க்ளா!

      // ஐந்து வருடம் கழித்து சாய்பாபா காலனி ராஜா புக் ஹௌசில் கிடைத்தது //
      கொஞ்சநேரம் முன்னாடி பால் வாங்கப்போகும்போது அந்தக்கடை கண்ணில்பட்டது (ஆச்சரியம், உங்க Comment-ஐ பார்க்கும்முன் அந்தக்கடை என் கண்ணில் பட்டதில்லை!) பழைய புத்தகங்கள் வாங்கும் பழக்கத்தை விட்டுவிட்டாலும் உள்ளேபோய் ஒரு நோட்டமிட்டேன். ஒரேவொரு அமர்சித்ரகதாவும் Tinkle Digest-களும் இருந்தது. தமிழில் குழந்தைகளுக்கான வாசிக்கும் சமாச்சாரங்கள் ரொம்பவே குறைந்துவிட்டது :(

      Delete
    5. முத்து அந்த இரண்டாவது முறை ராஜாவில் வாங்கினேனே அந்த புத்தகம் இன்னும் உள்ளது ! இருநூறு ரூபாய் புத்தகத்தை நான்கு முறை படித்திருப்பேன் ! படிக்கும் ஒவ்வொரு முறையும் உற்ச்சாகம் தெறிக்கும் !
      விஜய் ஆசிரியர் நல்லா இருப்பது பிடிக்கலையா ?
      ரமேஷ் இது போன்ற ஆச்சரியங்கள் நிறைய நடந்துள்ளது , இதுதான் eps ஓ

      Delete
  41. சூப்பர் 6

    கண்டு பிடிச்சுட்டேன் ...கண்டு பிடிச்சுட்டேன் ...

    புரிஞ்சுகிட்டேன் ....புரிஞ்சுகிட்டேன் ....

    சூப்பர் 6 இல் " ஆண்டு மலர் " ஒன்னு ....சூப்பர்

    சூப்பர் 6 இல் " தீபாவளி மலர் " ஒன்னு ...சூப்பர்

    சூப்பர் 6 இல் " மில்லெனியம் ஸ்பெஷல் " ஒன்னு ...சூப்பர்

    ஆனா சார் நீங்க விளையாட்டுக்கு தான் " ஹிட்ஸ் " அதிகமானால் ஸ்பெஷல் புத்தகம் என்று சொன்னதாக நினைத்து இருந்தேன் .ஆனால் நீங்கள் "கலியுக கர்ணன் " என்பதை நிருபித்து விட்டிர்கள்.அப்படியே மற்ற மூன்றையும் " குண்டு புத்தகம் " தான் என உறுதி சொல்லி விட்டிர்கள் எனில் சந்தோசமாக நடையை கட்டுவேன் .

    ReplyDelete
  42. # முகுந்தன் குமார் : அதிக புக் படிக்கறதுக்கு சண்டைகாரன் கால் ல எல்லாம் விழ வேண்டி இருக்கு #

    :-)

    ஆனால் நாம் இனி இணைந்த கைகள் ....

    ReplyDelete
    Replies
    1. அப்படீன்னா கையில இருக்கும் சொம்பை அப்படீக்கா வச்சுட்டு வாங்க கை குலுக்கிக்குவோம். ஃப்ரண்ட்ஸ்?

      Delete
    2. டெக்ஸ் புளுபெரி
      டைகர் வில்லர்
      கார்சன் ரெட்
      ஜிம்மி கிட்
      இந்த பெயர் மாற்றத்தை பார்த்து நண்பர் ம.......மண்டை அவர்கள் சிலர் மனம் புண்படும் என்று சண்டைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
  43. புத்தகம் கிடைத்திவிட்டது!

    'அ.ஆ'வின் அட்டைப் படத்தை ஒரு பத்து நிமிடங்கள் ரசித்துவிட்டுத்தான் முதல் பக்கத்திற்குப் போனேன். அட்டையைவிட உள்ளே 5ம் பக்கத்தில் அப்படியொரு அழகுமுகம்! பருவத்தில் டைகரும் அழகுதானே! ;)

    என்ன ஆயிற்று எடிட்டருக்கு? ஏகப்பட்ட உற்சாக அறிவிப்புகள்...
    சூப்பர்-6 ல்,
    * ரூ 500 விலையில் 30வது ஆண்டுமலர்
    * ரூ.150 விலையில் 'மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல்'
    * ரூ 150 விலையில் 'தீபாவளி மலர்'
    * டைலன்-டாக்கின் 200 பக்க குண்டுபுக்.
    * ராபின், மார்ட்டின் இவர்களோடு இன்னுமொரு புதிய டிடெக்டிவ்
    * Magic windன் அறிமுகம் (அதைப் பற்றிய அறிவிப்பு எதுவும் காணவில்லை)

    மொத்தத்தில் இந்தவருடமும் 'குண்டு புக் வருடம்' என்று தாராளமாகச் சொல்லலாம் போலிருக்கிறதே! (எங்கே இருக்கீங்க ஆதி? follow-up மட்டும் பண்ணிட்டு நடையை கட்டினால் கடுப்பாயிடுவேனாக்கும்)

    கொண்டாட்டம் கொண்டாட்டம் வருசமெல்லாம் கொண்டாட்டம்...

    வாழ்க 'சூப்பர் குண்டு-6'!

    ReplyDelete
  44. Thriller Specialஐ பற்றிய நெனப்பே Thirllingஆ இருக்கு ! இதுல 30ம் ஆண்டு மலர் அறிவிப்பை நெனச்சா April மாதம் வரை தூக்கம் தொலைந்தது சாமீ !

    ReplyDelete
  45. இம்முறை இரண்டுமே முத்துகாமிக்ஸ்களே என்பதால் 'சி.சி.வயதில்' வெளியாகாது என்றே நினைத்திருந்தேன். ஆனால், வெளியாகியிருந்தது. படித்தேன். என்னவொரு உணர்வுப்பூர்வமான ஃப்ளாஸ்பேக் அது! இத்தனை பணிகளுக்கு நடுவிலும் இப்படியொரு அழகான நினைவுகூறல் எடிட்டருக்கு எப்படி சாத்தியமாகிறதோ என்று வியக்கவைக்கிறது. 87ன் தீபாவளி ஸ்பெஷலை வெளியிட மேற்கொண்ட முயற்ச்சிகளில் என்ன ஒரு அசாதாரண அனுகுமுறை!! எடிட்டரின் தாத்தாவைப் போல் எனக்கும் ஒரு தாத்தா அமையவில்லையே என்ற ஏக்கம் எழுந்துவிட்டது என்னுள். அன்றைய கால கட்டத்தில் அவரது அந்த உதவி மகத்தானது. பிரதிபலன் பாராதது. நீங்கள் மட்டுமல்ல எடிட்டர் சார்; நாங்களும்கூட உங்கள் தாத்தாவிற்கு ஏதோ ஒரு வகையில் கடன் பட்டவர்களே!

    சரி... 'சி.சி.வயதில்' 50 பாகங்கள் கொண்ட தொகுப்பை 'சூப்பர்-6'ன் ஒரு புத்தகமாக எங்களுக்குக் கொடுப்பதில் உங்களுக்கு அப்படி என்ன பிரச்சினைன்னேன்?

    ReplyDelete
    Replies
    1. ம்......இப்ப தான் சங்க செயலாளர் உரையாடுற மாதிரி இருக்கு .....

      Delete
    2. //நீங்கள் மட்டுமல்ல எடிட்டர் சார்; நாங்களும்கூட உங்கள் தாத்தாவிற்கு ஏதோ ஒரு வகையில் கடன் பட்டவர்களே!//
      +1

      Delete
  46. டியர் ஸார்,

    > மர்ம மனிதன் மார்டின்
    > CID ராபின் - ஆகியோரின் மறுவருகை பற்றிய அறிவிப்புகள்

    > டைலன் டாக் அறிமுகம்

    > எனக்கு மிகவும் பிடித்த டேஞ்சர் டயபாலிக்கிற்கு மீண்டும் கிடைத்த இடம்

    > சூப்பர் சிக்ஸ் மற்றும்
    > ரூ. 150 விலையில் தீபாவளி ஸ்பெஷல், மில்லினியம் ஹிட்ஸ் ஸ்பெஷல் என்று பட்டையை கிளப்பும் பட்டாசு அறிவிப்புகளால், சில மாதங்களாக, சில காரணங்களால் இங்கே பதிவிடாமால் இருந்த என்னை தங்களின் அட்டகாசமான அறிவிப்புகளால் மீண்டும் பதிவிடத்தூண்டியது!

    அப்படியே ”கோடைமலர் 2014” மெகா குண்டுபுக் அறிவிப்பும் இருந்திருந்தால் வாசகர்களின் சந்தோஷம் முழுமையடைந்திருக்கும்?!

    நன்றி!








    ReplyDelete
    Replies
    1. கோடை மலர் வேண்டும், அப்போ நீங்க இனிமே தொடந்து உரையாட வேண்டி இருக்கும் ! பரவால்லையா ?
      இப்படி குரல்கள் ஒலித்தால்தானே உற்ச்சாகமாய் இருக்கும் நண்பரே !

      Delete
    2. வெல்கம் பேக் கார்த்திகேயன்!

      Delete
  47. book வந்துருச்சு....ஜாலி

    ReplyDelete
  48. ராபின், மார்டின் போன்றவர்களின் மறுவருகை மற்றும் சூப்பர் 6 அறிவிப்புகள்... அற்புத பதிவு இது.

    சூப்பர்சிக்ஸ், கோடைமலர்,ஆண்டுமலர் சந்தாக்களை பற்றிய அறிவிப்பும் வந்திருந்தால் மிகவும்

    நன்றாக இருந்திருக்கும். தற்போதைய சுழலில் எங்களது வா(தா)ங்கும் திறன் ஒரளவுக்கு

    நன்றாகவே இருக்கிறது. அப்படியே திறன் இல்லாவிட்டாலும் அந்த நேரத்திற்குள் வளர்த்துக்கொள்ளவாவது

    செய்வோமில்லையா?

    ReplyDelete
    Replies
    1. // அப்படியே திறன் இல்லாவிட்டாலும் அந்த நேரத்திற்குள் வளர்த்துக்கொள்ளவாவது செய்வோமில்லையா? //

      என்னா ஒரு பாஸிடிவ் அட்டிட்யூட்! நோட் பண்ணுங்க மக்களே, நோட் பண்ணுங்க மக்களே!

      Delete
  49. மாடஸ்ட்டி இல்லாத காமிக்ஸ் பயணம் நிறைவை ஏற்படுத்தாது சார் .. விரைவில் மாடஸ்ட்டி கதைகளை

    பற்றிய அறிவிப்பும் வரும் என அருள்வாக்கு சொல்ல ஜோதிடர் பரணியை அழைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஜோதிடர் வாய் நிறைய வெத்தலை போட்டு குதப்புவதால் நாளைதான் வாய் திறப்பார் என பட்சி ஜோதிடம் கூறுகிறது !

      Delete
  50. Dear Editor sir,

    I am now a subscriber yes paid the amount on wed , got courier today , hats off to your staff, happy very happy especially by your announcements

    ReplyDelete
    Replies
    1. அப்படியே கதைகள் குறித்தும் கூறினால் சந்தோஷ படுவோமே !

      Delete
  51. டியர் எடிட்டர்ஜீ!!!

    சூப்பர் 6 அறிவிப்புகள் எதிர்பார்த்தவாறே அமைந்துள்ளது.டேஞ்சர் டயபாலிக்கை நீங்கள் கை விடாததற்கு மிகவும் நன்றி.அவரது கதைகள் எதிர்பார்த்ததை விட மிக அற்புதமாக உள்ளது.சில வாசகர்களின் ஆட்சேபனைகள் காரணமாக அவரது கதைகளை நீங்கள் நிராகரிப்பீர்கள் என அஞ்சினேன்.

    * ரூ.150 விலையில் 'மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல்' -"கார்சனின் கடந்த காலம்" வண்ண மறுபதிப்பு...?or கருப்பு&வெள்ளை கதம்ப ஸ்பெசல்...?

    எது எப்படியோ,இனி மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு புத்தகங்கள் நிச்சயம்.படிக்கப் போகும் எங்களுக்கு ஜாலிதான்.புத்தகங்களை தயாரிக்கும் உங்கள் பாடுதான் திண்டாட்டம்.எதற்கும் ஒரு பெட்டி நிறைய அமிர்தாஞ்சன்,மூவ்,அயோடெக்ஸ் போன்றவைகளை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளுங்கள்.நீங்களும் எத்தனை நாளைக்குத்தான் வலிக்காத மாறியே நடிப்பீங்க;-)


    ReplyDelete
    Replies
    1. // மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் - "கார்சனின் கடந்த காலம்" வண்ண மறுபதிப்பு? //

      அஹ்கா!

      Delete
    2. விஜய் நான் நினைக்கவே இல்லை ! அடி தூள் ! அப்படியும் இருக்குமோ ?

      Delete
    3. சாத்தான் அவர்களே இது நடந்தால் உங்களுக்கு ஈரோடு புத்தகத்திருவிழாவில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா உங்கள் வாய்க்கு உண்டு !

      Delete
  52. Sir When we will get books by Register Post ??

    ReplyDelete
  53. டியர் விஜயன் சார்,

    விலை அதிகமான / தடிமனான இதழ்கள் அனைத்தையும் சந்தாவில் இணைக்காமல் "சூப்பர் 6" என்ற குடையின் கீழ் கொண்டு வருவது நல்ல விஷயம் தான்!

    ஆனால், சூப்பர் 6 அறிவிப்பில் இருக்கும் நாயகர்களின் எண்ணிக்கை மற்றும் விலைகளைப் பார்த்ததில் - அந்த ஆறு புத்தகங்களும், 'சிவகாசி ட்ரேட்மார்க் மிக்ஸர் ஸ்பெஷல்'-களாக வந்து விடுமோ என்று கொஞ்சம் உதறலாக இருக்கிறது! :) அவற்றில் குறைந்தது மூன்று இதழ்களையாவது, தனித் தனி நாயகர்களின் சிறப்பிதழ்களாக அறிவித்தால் நன்றாக இருக்கும்!

    அ.ஆ. ஐந்தாம் பக்கத்தில், ப்ளூபெர்ரியின் ஓவியம் (முகம்) அருமையாக உள்ளது! மூல இதழ்களில் இருப்பதைப் போலவே, நமது சமீபத்திய இதழ்களிலும் - கதைக்குள் நுழைவதற்கு முன்னதாக, கதை சார்ந்த ஓவியத்துடன், தனியே ஒரு கிரெடிட் பக்கத்தை ஒதுக்குவது நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. எனது எண்ணமும் இதுவே ks
      +1

      Delete
    2. //கதைக்குள் நுழைவதற்கு முன்னதாக, கதை சார்ந்த ஓவியத்துடன், தனியே ஒரு கிரெடிட் பக்கத்தை ஒதுக்குவது நன்றாக இருக்கிறது.//+1

      Delete
    3. அந்த 5/ம் பக்கம் புளுபெரி ஓவியம் ரம்யம். எனது டேப்லெட்டில் மெயின் பிக்சராக அதைதான் வைத்துள்ளேன்.

      Delete
  54. எடிட்டர் சார்,

    'கார்சனின் கடந்த காலம் மறுபதிப்பு' ஏப்ரலில் வெளியாகும் என்று நீங்கள் முன்பொருமுறை இங்கே அறிவித்திருந்ததாய் நியாபகம். என் ஞாபக சக்தியை நான் மெச்சிக்கொள்ளலாமா?

    நன்றி: நினைவூட்டிய ஒரு சென்னை நண்பருக்கு.

    ReplyDelete
  55. Dear Editor,

    சூப்பர் 6 அறிவிப்புகள் உற்சாகம் கொள்ளச் செய்துள்ளன

    மில்லியன் ஹிட் ஸ்பெஷல் .. வெறும் ரூ.15௦-ஆ? ஒத்துக்கொள்ள முடியாது.. ஒரு குண்டு புத்தகம் அல்லவா அறிவிக்கப்பட்டது?

    at least, ரூ.400-ல் ஒரு குண்டு ஸ்பெஷல் வந்தால் தான் மில்லியன் ஹிட்ஸ்-கு மரியாதை ;)

    ReplyDelete
    Replies
    1. பெரியார், இதே எண்ணம் எனக்கும் தோன்றியது ...ஆனால் வருவது கார்சனின் கடந்த காலமாய் இருந்து விட்டால் குண்டை இருந்தால் எண்ண , கனமான கதையாய் இருந்தால் என்ன என நினைக்கிறேன் !

      Delete
  56. தீபாவளி மலர் வெறும் ரூ.15௦ ஆ? ஒத்துக்கொள்ள முடியாது... அதுவும் ரூ.400-ல் வந்தால் நல்லது

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் மனதுக்குள் ....நல்ல கெளப்புராங்கப்பா பீதிய ...

      Delete
  57. குண்டு 6க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  58. மறுபடியும் ஆரம்பிக்கலே....அது கார்சன்னின்
    கடந்த காலமல்ல ....இ்ரத்த கோட்டை முழு வண்ண மறுபதிப்பு தான் அந்த சிறப்பிதழ் என்று சிவகாசியிலிருந்து தகவல் கசியவிடப்பட்டுள்ளது.......

    ReplyDelete
    Replies
    1. ஜீ....அதுக்கு பேர் தான் சூப்பர் சிக்ஸ்!!!!

      Delete
    2. ஹ ஹ ஹா .... உங்கள் கதைகள் அனைத்துமே வண்ணத்தில்தானே ! எங்களுக்கு எதோ சில கதைகள் ! இந்த ஒன்றை விட்டுத்தரலாமே !

      Delete
  59. ST கூரியருக்கு ஒரு பெரிய 'ஓ' :)

    ReplyDelete
  60. 2008 ஆம் ஆண்டு நான் காமிக்ஸ் பற்றி எழுதிய பதிவு இங்கே.
    http://coolzkarthi.blogspot.com/2008/10/blog-post_2342.html
    காமிக்ஸ் தேடி நான் அலைந்த நாட்கள் அவை, அந்த ஆதங்கத்தில் பதிவிட்டு இருந்தேன், இப்பொழுது மாதம் தவறாமல் வருவதில் எனக்கு உள்ள சந்தோசம் சொல்லி மாளாது :) இப்பொழுது உள்ள ஒரே மனக்குறை NBS மற்றும் தங்கக் கல்லறையை தவறவிட்டது தான். இரண்டு ஆண்டுகள் வெளி நாட்டில் இருந்ததால் மிஸ் பண்ணி விட்டேன் :( பிற காமிக்ஸ் கை வசம், உபயம் சென்னை புத்தகத் திருவிழா.
    பி.கு. இரவுக்கழுகுக்கு எதிராக ஒரு புரட்சிப்படை டைகர் அணியில் திரள்வதாக அறிகிறேன்...நவஜோக்கள் இதை எப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை :)

    ReplyDelete