Friday, February 28, 2014

ஒரு நீல மாதம் !

நண்பர்களே,

வணக்கம். வழக்கம் போல் இதழ்களின் இறுதிக் கட்டப் பணிகள் எடுக்கும் நேரமும், முயற்சியும் அதிகம் என்பதால் இங்கு பதிவிட நேரம் ஒதுக்க இயலாது போயிற்று ! அது மட்டுமல்லாது இம்மாத வெளியீடுகளில் ஒன்றான "கப்பலுக்குள் களேபரம்" இதழுக்கான ஒரிஜினல் CD -க்குப் பதிலாய் வேறொரு கதையின் CD நமக்கு வந்து சேர்ந்திட - அந்தக் குளறுபடியைச் சரி செய்து முடிக்கவும் நேரம் ஓடியே விட்டது ! Anyways ஒரு வழியாய் பணிகள் நிறைவேறி - அச்சுப் பணிகள் துவங்கியுள்ளன ; வரும் வியாழனன்று 2 இதழ்களும் உங்களைத் தேடித் புறப்படும் ! இதோ இம்மாத (தாமத) நாயகர்களின் அட்டைப்படம் + கதையின் முன்னோட்டம் ! 


சமீப மாதங்களின் அட்டைகளைப் போலவே இம்முறையும் ஒரிஜினல் டிசைனில் மேலோட்டமாய் நமது கைவரிசைகளைக் காட்டுவதோடு நிறுத்திக் கொண்டுள்ளோம் ; பின்னட்டை தான் நமது டிசைனரின் கைவண்ணம் ! கதையைப் பொறுத்த வரை - வழக்கமான நகைச்சுவை சங்கதிகளோடு கொஞ்சமாய் அந்த உள்நாட்டு யுத்தத்தின் வரலாற்றுப் பின்னணியையும் இணைத்துள்ளதை நீங்கள் பார்த்திட இயலும் ! யுத்தத்தின் அர்த்தமின்மையை ஒரு கார்ட்டூன் பாணியில் சொல்ல முனைவதே ப்ளூகோட் பட்டாளத்தின் சாராம்சம் என்று தைரியமாய்ச் சொல்லலாம் ! இந்த இதழில் நான் சொன்ன அந்த "சூப்பர்" அறிவிப்பும் இடம்பிடிக்கிறது ; இரத்த வெறியன் ஹாகர் + சிரிப்பின் நிறம் சிவப்பு கார்ட்டூன் filler pages சகிதமாய் ! 

சின்னச் சின்னதாய் சில updates :

  • இம்மாதம் ஒரிஜினலாய் டைகரின் "அட்லாண்டாவில் ஆக்ரோஷம்" + டெக்ஸ் வில்லரின் "நில்..கவனி...சுடு.." இதழ்களே வருவதாய் இருந்தன ! ஆனால் இங்கு சமீபமாய் அரங்கேறி வரும் 'தல-தளபதி' ரேஞ்சிலான டிஷ்யூம் ..டிஷ்யூம்களைத் தொடர்ந்து - இரவுக் கழுகாரை மே மாதத்துக்கு மாற்றித் திட்டமிட்டுள்ளேன் ! சமீபமாய் ஒரு வாசகர் இது பற்றி எனக்கொரு நீண்ட விளக்கக் கடிதம் எழுதி இருந்தார் - "ஏன் இவர் அவரை விடப் பெரியவர் ; எவ்விதத்தில் அவர் இவரை விடப் பெரிய பிஸ்தா" என்பதாக ! விளையாட்டாய் துவங்கியதொரு கருத்து யுத்தத்தை நண்பர் ரொம்பவே சீரியசாக எடுத்துக் கொண்டு நிறைய நேரம் செலவழித்து - எக்கச்சக்க ஆராய்ச்சி எல்லாம் செய்து துல்லியமாய் புள்ளி விபரங்களை புட்டுப் புட்டு வைத்திருந்தார் ! அது மட்டுமல்லாது - இந்தக் கேள்வியினில் உங்கள் நிலைப்பாடு என்னவென்று நீங்கள் தெளிவுபடுத்தியே ஆக வேண்டும் என்பதாய் என்னையும் வம்பில் மாட்டிவிட ரூட் போட்டு வைத்திருந்தார் ! ஏற்கனவே வாய்க்குள் காலை விட்டுக் கொள்வதில் நான் நிபுணன் ; இந்த அழகில் புதுசாய் சாலமன் பாப்பையா வேலை பார்க்கப் போய் ட்ரவுசர் கழன்று போக இடம் தர வேண்டாமே என்று தோன்றியதால் ஐ ஆம் எஸ்கேப் !

  • தற்போதைய நம் கௌபாய் பட்டியலில் - டெக்ஸ் ; டைகர் & கமான்சே நீங்கலாய் இன்னுமொரு குதிரை நாயகரும் அணி சேர்கிறார் என்பதை சென்ற பதிவிலேயே கோடிட்டுக் காட்டி இருந்தேன் ! நேற்றைய தினம் தான் அவரது கதைகளுக்கான உரிமைகள் முறைப்படி நமக்கு உறுதியாகியுள்ளன ; வெகு சீக்கிரமே அவரது அறிமுகம் ஒரு பிரத்யேகப் பதிவின் மூலம் அரங்கேறிடும். மாமூலான 'டுமீல்..டுமீல்' ஆசாமியல்ல இவர் - முழு வண்ணத்தில் வரும் மிக வித்தியாசமான நாயகர் என்பது மட்டும் இப்போதைக்கு சொல்லி வைக்கிறேன் !  அது மட்டுமல்லாது - நம் நண்பர் XIII -க்கு நெருங்கியவர் இவர் !! இவ்வளவு கோடுகள் போதாதா - சூரர்களான நீங்கள் ஒரு நெடுஞ்சாலையே போட்டிட ? 

  • நீண்ட நெடுங்காலமாய் நமது காமிக்ஸ் மகளிர் அணியின் presence - ஆவ்ரெல் டால்டன் கணக்குப் பாடத்தில் வாங்கும் மதிப்பெண்ணை நகல் எடுத்தது போல் நிற்பது நாம் அறிந்ததே ! கூடிய விரைவில் அந்தக் குறையினையும் நிவர்த்தி செய்திடுவோமா folks ? தாட்டியமான நம் ஹீரோக்களுக்கு மத்தியில் வலம் வரக் காத்திருக்கும் மங்கை யாராக இருக்குமென்று யூகிக்கலாமே ?

  • புது அறிமுகங்களைப் பேசி முடித்திருப்பது ஒரு பக்கமிருக்க - 'கல்லைத் தூக்கிப் போடுவோமே - வந்தால் மாங்காய் ; போனால் கல் ' என்ற கதையாய் ஒரு முன்னணி ஐரோப்பிய நிறுவனத்திடம் - லார்கோ வின்ச் பாணியிலானதொரு கதைத் தொடருக்கு உரிமைகள் வாங்கிட முயற்சித்துப் பார்த்தோம் ! பெரியதாய் ஒரு நூறு வாட்ஸ் பல்ப் வாங்கியது தான் பலன் ! 'ஊஹூம் ...இப்போதைக்கு உங்களது தரம் எங்களுக்கு ஏற்புடையதாய் இல்லை ; இன்னும் பெரிய சைசில் - இன்னும் நேர்த்தியாய் தயாரிப்புத் தரங்களை உயர்த்தி விட்டு வாருங்கள் " என்று மூக்கில் குத்தி அனுப்பி விட்டனர் ! "ஆஹா...2 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாமிருந்த நியூஸ் பிரிண்ட் காகிதம் ; சின்ன சைஸ் ; பாக்கெட் சைஸ்களை மனுஷன் பார்த்திருந்தால் கட்டி வைத்து உதைத்திருப்பாரோ ?" என்று நினைக்கத் தோன்றியது ! 

  • பல்ப் வாங்கிய அதே தினத்தில் சந்தோஷம் தரும் மின்னஞ்சல் ஒன்றும் கிட்டியது ! நமது TEX தீபாவளி மலரின் பிரதிகளில் ஒரு டஜனை ஏற்கனவே போனெல்லி நிறுவனத்திற்கு அனுப்பியிருந்தோம் ! அதனை இதர மொழிகளில் டெக்சை வெளியிடும் பதிப்பகங்களுக்கு அனுப்பி விட்டதாகவும், மேற்கொண்டு 10 பிரதிகள் முக்கிய நண்பர்களுக்கு விநியோகம் செய்திடும் பொருட்டு வேண்டுமென்றும் கோரிக்கை அனுப்பி இருந்தனர் ! 'வாழ்க இத்தாலி' என்று நினைத்துக் கொண்டேன் ! 

  • E-Bay-ல் சில சிக்கல்கள் காரணமாய் நாம் அங்கு விற்பனை செய்வதை தற்காலிகமாய் நிறுத்தி வைத்துள்ளோம். விரைவில் நமது வலைத்தளத்தில் இருந்தே நீங்கள் online purchase செய்திடும் வசதிகளை செய்திடவிருக்கிறோம் ; அது வரையினில் சந்தா செலுத்தி இருக்கா நண்பர்கள் நேரடியாக நமக்கு bank transfer மூலமாய் பணம் அனுப்பிப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளலாம் !
  • துப்பறிவாளர்கள் பட்டியலில் - நமது சோடாபுட்டி ஜெரோமின் சாகசங்கள் வண்ணத்தில் பிரெஞ்சு மொழியில் அழகாய் விற்பனையாகி வருவதை சமீபமாய் படைப்பாளிகளின் newsletter மூலம் அறிந்திட முடிந்தது ! வண்ணத்தில் மீண்டுமொரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்போமா சைக்கிளில் வலம் வரும் இந்த அலட்டலில்லா ஆசாமிக்கு ? 



  • இது நண்பர் (பெங்களுரு) அஜய் பழனிசாமியின் கைவண்ணம் !! (கார்ட்டூனிலாவது   கேசத்தின் அடர்த்தியை அதிகமாக்கிக் காட்டி இருக்கலாம்...இல்லாங்காட்டி - டெக்சின் தொப்பியை என் தலையிலும் கவிழ்த்திருக்கலாம் !! ஹும்ம் !!) 


See you around folks ! Bye for now ! 

349 comments:

  1. Replies
    1. இரவுக்கழுகாருக்கு பதில் வருபவர் என்று கூறவில்லை சார்.
      இம்மாதம் இரண்டு புத்தகங்கள் தானா.

      புதிய அறிமுகம் "jonathan cartland" அவரா சார்.

      எனக்கு கலரில் ஜெரோம் வருவதில் சந்தோசம் தான் ..எனக்கு ஏனோ இந்த அமைதியான நபரை பிடித்திருந்தது.

      ஆங்கிலத்தில் வந்த ப்ளூ கோட் படித்துவிட்டதால் அடுத்த முறை ஆங்கிலத்தில் வராத கதை தேர்ந்தெடுங்கள் சார்.

      ஆனால் பரட்டையை மாற்றாமல் எங்கள் தலைவரை மாற்றியதற்கு எனது கண்டனங்கள்....:)

      Delete
    2. //எனக்கு கலரில் ஜெரோம் வருவதில் சந்தோசம் தான் ..எனக்கு ஏனோ இந்த அமைதியான நபரை பிடித்திருந்தது.//

      +1

      Delete
    3. அனைத்து ஹீரோக்களுமே அவரவர் பாணியில் சரிநிகர் சமானம்தான் ஜி! எங்களுக்கும் பொழுதுபோக இப்படியெல்லாம் போட்டி வெச்சி விளையாடி மகிழ்கிறோம்! இருந்தாலும் அந்த புள்ளியியல் புலி எப்படி எழுதி இருந்தா நீங்க பிக் புல் கணக்கா முழிக்கிறீங்க என நினைக்கையில் ஹீ ஹீ ஹீ ஆனாலும் அவருதாங்க இவரை விட சூப்பரு! ஆனா இவரு அவரை விட தெளிவானவருங்க!!!! ஹீ ஹீ ஹீ நானில்லை சாமீய்ய்!!!!

      Delete
  2. Replies
    1. அட நீங்க இன்னும் ஊருக்குக் கிளம்பலையா??? அப்போ வாங்க யாரு சூப்பர்னு சீட்டு குலுக்கிப் போட்டு விளையாடலாம்!!! டுர்ர்ர்ர்ர்ர்!!!

      Delete
  3. I like tex but personally feel tiger is the best...

    ReplyDelete
  4. அஜய் பழனிசாமி அவர்களின் கைவண்ணம் அற்புதம்...

    ReplyDelete
  5. அஜய் கலக்கி இருக்கிறார்.
    முகநூலில் பார்த்த பொழுதே பாராட்டி இருந்தேன்.

    இருந்தும் இங்கும் பிடியுங்கள் எனது பாராட்டுக்களை.
    அருமை அருமை.

    ReplyDelete
  6. So sad about you stopped Ebay buying. but its good about your future plans to buy from our website.

    ReplyDelete
  7. // இம்மாதம் ஒரிஜினலாய் டைகரின் "அட்லாண்டாவில் ஆக்ரோஷம்" + டெக்ஸ் வில்லரின் "நில்..கவனி...சுடு.." இதழ்களே வருவதாய் இருந்தன ! //

    பட்சி மொதல்லையே சொல்லுச்சு சார், டெக்ஸ் வர்றாருன்னு ஆனா அந்த பட்சிக்கு தெரியல நீங்க அப்படியே பல்டி அடிப்பீங்கன்னு :) எப்படியோ கோடை மலர் ரெடி :)


    //விரைவில் நமது வலைத்தளத்தில் இருந்தே நீங்கள் online purchase செய்திடும் வசதிகளை செய்திடவிருக்கிறோம்//

    மிக நல்ல முயற்சி ... படிப் படியாக முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது ...


    //விளையாட்டாய் துவங்கியதொரு கருத்து யுத்தத்தை நண்பர் ரொம்பவே சீரியசாக எடுத்துக் கொண்டு நிறைய நேரம் செலவழித்து - எக்கச்சக்க ஆராய்ச்சி எல்லாம் செய்து துல்லியமாய் புள்ளி விபரங்களை புட்டுப் புட்டு வைத்திருந்தார் ! //

    அவ்வளவு சிரமப்பட்டு அவர் தயாரித்ததை நீங்கள் இங்கே வெளியிடலாமே சார் ?



    புத்தகங்களை பெற இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமா ???????



    ReplyDelete
    Replies
    1. எப்படியோ டெக்ஸ் வில்லருடன் கோடை மலர் ரெடி :)

      Delete
    2. @ ப்ளூ

      // எப்படியோ கோடை மலர் ரெடி //

      ஹா ஹா! க.க.க போங்க!

      Delete
    3. @ ALL : நான் பாட்டுக்கு 'தேமே'ன்னு இருந்தாலும், வா.வி.வி. விளையாட்டை நீங்கள் விடுவதாய் இல்லை போல் தெரியுது guys !

      Delete
  8. ப்ளுகோஸ்ட் அட்டைப்படம் சூப்பர் சார்

    ReplyDelete
  9. அடடா இன்னும் ஒரு வாரமா ? அட்டை படம் அருமை சார் ! வண்ணச்சேர்க்கை இதம் ! பின்னட்டை புத்தகம் வந்த பின்னர் தெரியும் ! வித்தியாசமாய் உள்ளது !
    டெக்ஸ்தான் பெஸ்ட் என இன்னும் சொல்ல தயக்கம் ஏனோ ! டெக்ஸ் தாமதம் கோடை மலர் பொருட்டே எனும் போது சந்தோசமே ! ஆனால் இந்த இழப்பை ஈடு கட்ட இரண்டு டெக்ஸ் கதைகள் தீபாவளி ஸ்பெசல் போல !
    ஜோனதன் கார்ட்லேண்டு தானே புதிய குதிரை வீரர் !
    புதிய மங்கை ஏற்கனவே அட்டை படம் எல்லாம் ரெடி ஆனா பின்னர் கை விட பட்டவரா அல்லது வான் ஹேம்மேயின் படைப்பா !
    சார், ஆசையை காட்டி ஆசையில் மண் அள்ளி போட்டு விட்டீர்களே ,தொட்டிலை ஆட்டி விட்டு பிள்ளையை கிள்ளி விட்டீர்களே நியாயாமா ? அந்த லார்கோவிர்க்கு இணையான நாயகர் யாரென்றாவது தெரிவிக்கலாமே ! இன்னும் பெரிய சைசிர்க்கு நாம் தயாராவோமா என்று கூறுங்களேன் ! அந்த சைஸ் நமது பழைய இரும்பு மனிதன், சதிவலை , கொலைப்படை சைசா ?
    ஜெரோம் அந்த அளவு கவரவில்லை ! வண்ணத்தில் ஜொலிப்பாரா என பார்ப்போம் !
    அஜய் பழனிசாமி வாழ்த்துகள் நண்பரே , அப்படியே வரைந்து தள்ளி விட்டீர்கள் ! ஆனால் அந்த பயம் மட்டும் கண்ணிலே காணோமே ஆசிரியருக்கு ! கோடை மலர் கேட்டு தலைக்கு மேலே சுடுங்கள் !

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //ஜோனதன் கார்ட்லேண்டு தானே புதிய குதிரை வீரர் !
      புதிய மங்கை ஏற்கனவே அட்டை படம் எல்லாம் ரெடி ஆனா பின்னர் கை விட பட்டவரா அல்லது வான் ஹேம்மேயின் படைப்பா ! //

      ஊஹூம் !

      Delete
    2. ஆஹா இவர்கள் இல்லையா ! சஸ்பென்ஸ் தாங்கலையே ! ஏற்கனவே ஒரு திரி கொளுத்தி போட்டு விட்டீர்கள் ! அது கூட நான் கணித்த ஏதோ ஒன்றில் இருக்கலாம் என வியாழன் வரை காத்திருக்கிறேன் ! ஆனால் இந்த முறை நான் யூகித்ததில் மூன்றில் ஒன்று கூட சரியில்லை என்பது பட்சிக்கும் அடி சறுக்கும் போல உள்ளதே ! வாஷ் அவுட்...

      Delete
  10. குதிரை வீரர் - Kit Carson ?

    அந்த மங்கை - LADY S ?

    பலப் கொடுத்த அந்த நிறுவனம் - dupuis ?

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விஜய் : சாரி விஜய்...மூன்று யூகங்களுக்கும் ஒரே பதில் தான் - Nopes !

      அபார்ட்மெண்டில் லெண்டிங் லைப்ரரி ஜோராய் ஓடுகிறதாவாம் ?

      Delete
    2. /////////அபார்ட்மெண்டில் லெண்டிங் லைப்ரரி ஜோராய் ஓடுகிறதாவாம் ? ////////

      டியாபாளிக் செல்லங்களே ........கிளம்புங்க பெங்களூரு அடுக்கு மாடி குடி இருப்பு நோக்கி............


      நம்மலாம் லயன் சிநேகிதம் உங்க அட்ரஸ் குடுங்கண்ணே

      Delete
  11. அந்த கண்ணாடி போட்ட detectiveநமக்கு வேண்டவே வேண்டாம் சார் !( சந்திரமுகி வடிவேல் styleல் படிக்கவும் )

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : மாப்பு...வச்சுடாங்கடா நமக்கு ஆப்பு...!
      (இது ஜெரோமின் மைண்ட் வாய்ஸ் - பெல்ஜியத்தில் !)

      Delete
    2. இயல்பான கதாபாத்திரங்களாலும், மனித உணர்களை அழகாக வெளிப்படுத்தும் சித்திரங்களின் நேர்த்தியாலும் என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டார் ஜெரோம்...

      Delete
    3. Erode VIJAY : வண்ணத்தில், பெரிய சைசில் இன்னும் அழகாய் காட்சி தருகிறார் இந்த சோடாபுட்டிக்காரர் !

      Delete
    4. ஆஹா எதிர்பார்ப்பை கூட்டுகிறீர்களே ! சீக்கிரம்....

      Delete
  12. \\\\\\\\\\\\\\\ஊஹூம் ...இப்போதைக்கு உங்களது தரம் எங்களுக்கு ஏற்புடையதாய் இல்லை ; இன்னும் பெரிய சைசில் - இன்னும் நேர்த்தியாய் தயாரிப்புத் தரங்களை உயர்த்தி விட்டு வாருங்கள் " என்று மூக்கில் குத்தி அனுப்பி விட்டனர் \\\\\\\\\\\\\\\

    கழுதைக்கு தெரியுமா கற்பூர (லயன், முத்து) வாசனை
    விடுங்க சார் வேற நல்ல தொடரா பார்ப்போம்.

    ////////////////////// டெக்ஸ் துப்பாக்கியால் எடிட்டரை குறி வைக்கும் படம்/////////////////

    வளர்த்த கடா மார்பில் பாய்கிறது.
    இதே டைகர்னா சமாதானமாக குறைந்தது 4 அல்லது 5 சுற்று பேச்சுவார்த்தையாவது நடத்தி உங்களை சம்மதிக்க வைத்திருப்பார்.
    இப்பவாவது புரிஞ்சுக்கோங்க யார் நல்லவர் என்று
    யாராவது டைகர் ரசிகர்கள் டெக்ஸ் பின்னந்தலையில் டைகர் துப்பாக்கி வைப்பதுபோல் படம் வரைந்து நமது எடிட்டரை காப்பாற்றவும். நமக்கு இன்னும் பல 100 வருடங்களுக்கு நல்ல தரமான காமிக்ஸ்கள் கிடைக்க வேண்டி இருக்கிறது.

    //////////////////// டைகர்/டெக்ஸ் மோதலை சீரியசாக எடுத்து கொண்டு கடிதம்//////////////////////////////

    யார் சார் அவர். அந்த கடிதத்தை பதிவிடுங்கள். படித்து ரசித்து வாய்விட்டு சிரிப்போம்

    //////////////////டைகர் இதழ் வருவதால் டெக்ஸ் இதழ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது////////////////////

    இதுதான் ஒரே பிரச்சினை ரஜினி படம் ரிலீஸ் ஆனால் மற்ற எந்த படமும் போணி ஆகாது.

    அட்டைப்படம் அருமை. ஜெரோம் மீது நம்பிக்கை வைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. Mugunthan kumar : //இதே டைகர்னா சமாதானமாக குறைந்தது 4 அல்லது 5 சுற்று பேச்சுவார்த்தையாவது நடத்தி உங்களை சம்மதிக்க வைத்திருப்பார்.//

      நிச்சயமாய் நண்பர்களில் முக்காலே மூன்று வீசத்தினருக்குக் கரை வேஷ்டிகள் 'நச்' என்று பொருந்தும் என்றே நினைக்கிறேன் ! எந்தவொரு சூழலையும் தங்கள் பார்வைக்கு வாகாகத் திருப்பும் அந்த லாவகம் - அடடே அடடே...!

      //யார் சார் அவர். அந்த கடிதத்தை பதிவிடுங்கள். படித்து ரசித்து வாய்விட்டு சிரிப்போம்//

      சில சமயங்களில்...யான் பெற்ற இன்பம் - என்னோடு மாத்திரமே போகட்டுமே !! நண்பராக அதனை பொதுப் பார்வைக்கு அனுப்பி வைத்தால் அது வேறு !!

      Delete
    2. //இதுதான் ஒரே பிரச்சினை ரஜினி படம் ரிலீஸ் ஆனால் மற்ற எந்த படமும் போணி ஆகாது.//

      பள்ளிகூடங்களில் பரிட்ச்சை நடக்கும் னேரத்தில் டைகர்கதை ரிலீஸ் ஆவதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் டைகரின் மவுசு முடிந்துபோன ஒன்றெனென்று.
      விடுமுறை காலத்தை உற்சாகப்படுத்தவே எங்கள் தலை டெக்ஸ் தாமதம் என்பதே தெரிவிக்கும், யார் சூப்பர் ஸ்டார் என்பதை.

      மேலும் காமடியங்களுடன் போட்டிபோடவே டைகர் தகுதியானவர் என்பதை உணர்த்தவே ப்ளுகோட்டுடன் ரிலீஸ் ஆகிறார்.

      Delete
    3. டெக்ஸ்ன் கரம் நடுங்குவதையும் , ஆசிரியரின் புண் முறுவலையும் கவனியுங்களேன் , சும்மா மிரட்டி பார்க்கிறார் , எதிரிகள் நூறு பேர் இருப்பினும் புயலென சீரும் டெக்ஸ் கையில் உள்ள வின்செஸ்டர் நடுங்குவதிளிருந்தே தெரியலையா டெக்ஸ் சும்மா சீன போடுரார்னு ஆசரியர் மேல் உள்ள மதிப்பு என்னவென்று ! ஆசிரியருக்கு டெக்ஸ் மேல் உள்ள நம்பிக்கை அவரது பார்வை காட்டுவதில் தெரியலையா ? டைகர் இருந்தா இந்நேரம் காட்டி கொடுத்திருப்பாரே ! அவருடன் கலி திங்க வைத்திருப்பார் ! சார் ஜாக்கிரதை டெக்ஸ் தலைக்கு குறி வைக்கிறேன்னு ஏதாவது பண்ணிட்டு குறி தவறிடுச்சுன்னு சொல்லி விடுவார் ! இவரது செயல்பாடுகள் உங்களுக்கும் தெரியும்தானே ! ஜாக்கிரதை !

      Delete
    4. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்:-

      நண்பா ! அதுவும் டெக்ஸின் பின்னால் நின்றே துப்பாகியை டைகர் நீட்ட வேண்டி நண்பர் கோரிக்கை வைப்பதிலிருந்தே தெரியவில்லையா அவர்களின் பயம். ?!

      Delete
  13. @விஜயன் சார்,

    அட்டைப்படங்களை வைத்துப் பார்க்கும்போது ப்ளூகோட், டைகர் - இம்மாதத்தின் இரண்டு கதைகளுமே முத்து காமிக்ஸில் வருவதுபோல் தெரிகிறது. கார்ட்டூன் கதை வரிசைகளை முத்துவிலிருந்து விலக்கி லயன் அல்லது சன்ஷைன் பக்கமாக Align பண்ணிவிடலாமே சார். இதை தொடர்ச்சியாக செயல்படுத்துவது கடினம் என்பது தெரிகிறது, இருப்பினும் சன்ஷைன் கிராபிக் நாவலைத்தவிர 3 Choice இருப்பதனால் மூன்றுக்கும் தனித்தனி Genre அல்லது Age Group-ஐ Fix பண்ணிக்கொள்வது புதிதாக வாங்குவோருக்கு எளிதாக இருக்கும் எனத்தோன்றுகிறது.

    // இன்னும் பெரிய சைசில் - இன்னும் நேர்த்தியாய் தயாரிப்புத் தரங்களை உயர்த்தி விட்டு வாருங்கள் " என்று மூக்கில் குத்தி அனுப்பி விட்டனர்! //

    2015-16 களில் பெரிய சைஸ் Samples-உடன் ஆரோக்கியமான மூக்குடன் மீண்டும் முயற்சிக்க முடியுமா சார்? ;)

    ReplyDelete
    Replies
    1. Ramesh Kumar : நல்ல ஐடியா தான்....ஆனால் முத்து காமிக்ஸ் சதா காலமும் சீரியஸ் ரகக் கதைப் பாணிகளோடே வலம் வருவதைக் கொஞ்சமாய் மாற்றிப் பார்ப்போமே என்று தோன்றியது ! Anyways 2015-ன் அட்டவணையை கையில் எடுக்கும் வேளையில் இதனை திரும்பவும் பரிசீலிப்போமே !

      //2015-16 களில் பெரிய சைஸ் Samples-உடன் ஆரோக்கியமான மூக்குடன் மீண்டும் முயற்சிக்க முடியுமா சார்? ;)//

      உடைந்த மூக்கு தான் நம் நாயகர்களின் பலம் எனும் போது - உடைந்தது உடைந்ததாகவே இருந்து விட்டுப் போகட்டுமே ?! திரும்பவும் இதை விடப் பெரிய சைஸ்... இத்யாதி என்பதெல்லாம் இன்னுமொரு விலையேற்றத்துக்கு வழி வகுக்கும் ! 2015-ன் முழுமையுமாவது இதே விலையில் கடந்தாக வேண்டுமென்ற வேட்கை என்னுள் !!

      Delete
    2. // 2015-ன் முழுமையுமாவது இதே விலையில் கடந்தாக வேண்டுமென்ற வேட்கை என்னுள் !! //
      That's understandable! ஏதாவது அதிசயம் நிகழ்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு மடங்கு உயர பிரார்த்திப்போமாக! :D

      // உடைந்த மூக்கு தான் நம் நாயகர்களின் பலம் எனும் போது... //
      @டெக்ஸ் ரசிகர்கள், Note this point! :D

      Delete
    3. உடைந்த மூக்குதான் ....அதாவது டெக்ஸ் எதிரிகளுக்கு விடும் குத்தில் எதிரிக்கு உடைந்த மூக்குதான் நமது நாயகருக்கு பலம்

      Delete
    4. டெக்ஸ் ரசிகர்களின் சின்னம் ................''விரித்த குடை''.................... 'விரித்த குடைக்கு வாக்களிக்காதீர்

      Delete
    5. டெக்ஸ் ரசிகர்களின் சின்னம் டெக்ஸ் அணியும் தொப்பியே.

      தொப்பி அணிந்த நிலையிலிருக்கும் டெக்ஸின் கம்பீரமும் ,அழகும் வேறு எந்த நாயகரிடமும் இல்லை.

      Delete
    6. //தொப்பி அணிந்த நிலையிலிருக்கும் டெக்ஸின் கம்பீரமும் ,அழகும் வேறு எந்த நாயகரிடமும் இல்லை.//

      Delete
  14. டியர் விஜயன் சார்,

    //"கப்பலுக்குள் களேபரம்" இதழுக்கான ஒரிஜினல் CD -க்குப் பதிலாய் வேறொரு கதையின் CD நமக்கு வந்து சேர்ந்திட//
    CD-யிலும் களேபரமா?! ;) இந்தக் காலத்திலும், CD எல்லாம் அனுப்பி வைக்கிறார்களா?! பேசாமல், அங்கே அப்லோட் செய்யச் சொல்லி விட்டு, இங்கே டவுன்லோட் செய்து விடுங்கள் சார்!

    //வண்ணத்தில் மீண்டுமொரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்போமா சைக்கிளில் வலம் வரும் இந்த அலட்டலில்லா ஆசாமிக்கு ? //
    சாகச வீரர் ரோஜருக்கே கொடுக்கிறோம்... இவருக்குத் தாராளமாகக் கொடுக்கலாம்! :D

    //டெக்ஸ் வில்லரின் "நில்..கவனி...சுடு.." - மே மாதத்துக்கு மாற்றித் திட்டமிட்டுள்ளேன் !//
    நில்..கவனி...மே வரை சுடாதே?!

    //ஏன் இவர் அவரை விடப் பெரியவர் ; எவ்விதத்தில் அவர் இவரை விடப் பெரிய பிஸ்தா//
    எவரை விட எவர்? இவரை விட அவரா? அவரை விட இவரா? ஒண்ணுமே புரியலியே.... இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள் சார்! ;)

    //ஒரு முன்னணி ஐரோப்பிய நிறுவனத்திடம் - லார்கோ வின்ச் பாணியிலானதொரு கதைத் தொடருக்கு உரிமைகள் வாங்கிட முயற்சித்துப் பார்த்தோம்//
    லார்கோ வின்ச் பாணி என்றால், அது "மிலன் கே" தொடரா?
    Milan K

    பிரபலத் தொடரான Bouncer-ஐத் தான் தரவில்லை - இந்தப் புதிய தொடரையுமா தர மறுக்கிறார்கள்?! அவர்கள் குவாலிட்டிகே தமிழிலும் போட வேண்டும் என்றால் விலை கட்டுப்படி ஆகாதே! ஒருவேளை தமது போட்டி நிறுவனங்களின் (Dupuis, Lombard etc.) கதைகளை வெளியிடும் ஒரு பதிப்பகத்திடம், உரிமங்களைத் தர விரும்பாததால் இப்படி எல்லாம் சால்ஜாப்பு சொல்கிறார்களோ?!

    //தாட்டியமான நம் ஹீரோக்களுக்கு மத்தியில் வலம் வரக் காத்திருக்கும் மங்கை யாராக இருக்குமென்று யூகிக்கலாமே ?//
    அவரும் தாட்டியமாக இருப்பாரோ?! :D

    //இது நண்பர் (பெங்களுரு) அஜய் பழனிசாமியின் கைவண்ணம் !!//
    இன்னொரு ஓவியத்தையும் facebook-ல் பகிர்ந்து இருந்தார் - அவரின் அட்டகாசமான கற்பனையைப் பாருங்களேன்!: If Morris had been the illustrator for Tex Willer series...

    ReplyDelete
    Replies
    1. // நில்..கவனி...மே வரை சுடாதே?! //

      ஒரு வேளை மே மாதத்தைத் தாண்டியும் தாமதமானால் இப்படி ஆகிவிடும்:
      நில்.. கவனி.. நில்.. கவனி..

      // அவரும் தாட்டியமாக இருப்பாரோ?! :D //

      அல்லது பாட்டியமாக இருப்பாரோ? :D (கருப்புக் கிழவி!)

      Delete
    2. இப்போதைக்கு நில் மட்டும் தான் ............

      Delete
    3. //இப்போதைக்கு நில் மட்டும் தான் ............//

      எப்போதைக்கும் நம்பர் ஒன்னிலேயே (டெக்ஸ்) நில் என்பதுதான்.

      Delete
    4. //ஒரு வேளை மே மாதத்தைத் தாண்டியும் தாமதமானால்//
      காமிக்ஸ் ரூமர்ஸ்: அட்லாண்டாவில் ஆக்ரோஷத்தை மட்டும் வெளியிட்டு விட்டு, "நில் கவனி சுடு"-வை மே வரை தாமதப் படுத்தியதால், "டெக்ஸாசில் டெக்ஸ் ரோஷம்" ஆக இருக்கிறாராம்! அவரை சமாதானப் படுத்த ஏப்ரல் மாதத்தில், "உகாண்டாவில் உக்ரோஷம்" என்ற டெக்ஸ் சிறப்பிதழ் வெளிவரப் போகிறதாம்! :)

      இதற்குப் போட்டியாக டைகரின், "ஜமைக்காவில் ஜலதோஷம்" என்ற கதை, ஜூனில் வெளியாகும்! :D இவ்விருவரின் இதழ்களுக்கும் - புலிவேஷம், ரசாபாசம், ஆசுவாசம் - இவை போல ரைமிங்காக முடியும் தலைப்புக்கள் வரவேற்கப் படுகின்றன!

      //அல்லது பாட்டியமாக இருப்பாரோ? :D (கருப்புக் கிழவி!)//
      மங்கை என்று ஆசிரியர் குறிப்பிட்டிருப்பதால், அவர் நாட்டியமாடும் நங்கையாக இருந்தாலும் இருப்பாரே தவிர; பல்செட் ஆடும் பாட்டியாகவோ, கறுப்புக் கிழவிக்கு போட்டியாகவோ இருக்க மாட்டார் என்று நம்புகிறேன்! :)

      Delete
    5. :D

      சமீபத்தில் 2 word ரைமிங் தலைப்புகள் அதிகமாகிவிட்டது! ப்ளூகோட்ஸ், டைகர் மற்றும் XIII Spin off களின் குறைந்தபட்சம் 2 கதைகள்.

      // எப்போதைக்கும் நம்பர் ஒன்னிலேயே (டெக்ஸ்) நில் என்பதுதான் //
      ஆனால் இந்த மாதம் Tex = Nil

      Delete
    6. பரிட்ச்சை எழுதும் மாணவர்களின் நலனுக்காக டெக்ஸ் இந்த மாதம் Nil

      Delete
    7. அப்போ.... டெக்ஸ் கில்லர் அல்ல என்கிறீர்கள் ! :D

      Delete
    8. டெக்ஸ் இல்லாதபோது Tex Niller. இருக்கும்போது Tex Killer.

      எதுக்குப்பா வலிய வந்து Same side goal போட்டுக்கிறீங்க? ஆனாலும் Same side goal போடுவது டைகரோட குணாதிசம்கறதுனால I appreciate! :D

      Delete
    9. இதில் same side goal என்ன இருக்கு ? வில்லர் என்பது தமிழில் ''அவர்'' என்ற பதத்தில் முடிவதால் அவர் பெயர் இயல்பிலேயே ஒரு மரியாதையை உண்டு பண்ணிவிடுகிறது. இல்லை என்னும் போது டெக்ஸ் Niller என்றும். எதிரிகளை கொல்வதால் டெக்ஸ் கில்லர் என்றும் அவரை பாராட்டுவதாகவே அதுவும் அவரை மரியாதையாக பாராட்டும் தொனியிலேயே உள்ளது.

      Delete
    10. அதிதீவிர டெக்ஸ் ரசிகர் கார்த்திக் அவர்களே...

      Delete
    11. Karthik Somalinga : உங்கள் ஊரில் broadband எப்படியுள்ளதோ - ஆனால் இங்கே 2GB கொண்ட பைல்களை download செய்வதற்குள் டெக்ஸ்-டைகர் பஞ்சாயத்துக்குத் தீர்ப்பெழுதி விடலாம் போலுள்ளது ! இரவில் download போட்டு விட்டு காலையில் வந்து பார்த்தால் "நெட்வொர்க் error " என்று பல்லைக் காட்டுகிறது ! இந்த வேடிக்கையில் அடிக்கடி இது போன்ற முரட்டு பைல்களை வீட்டிலிருந்து download செய்வதால் BSNL உள்ளூர் அலுவலகத்திற்கு சந்தேகம் - இது Home Unlimited Plan -ஐ துஷ்ப்ரயோகம் செய்கிறேனா என்று !! இந்தக் கண்றாவிக்குப் பயந்தே தான் நிறைய வேளைகளில் CD களாக வரவழைப்பது !

      //எவரை விட எவர்? இவரை விட அவரா? அவரை விட இவரா? ஒண்ணுமே புரியலியே.... இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள் சார்! //

      ஒ. ..அவரா ? நம்ம இவர் தான் அவர் !! :-)

      Delete
    12. @விஜயன் சார்:
      //உங்கள் ஊரில் broadband எப்படியுள்ளதோ//
      Airtel Broadband புண்ணியத்தில் டக்கராக உள்ளது! :)

      //இன்னுமொரு குதிரை நாயகரும் அணி சேர்கிறார் - XIII -க்கு நெருங்கியவர்//
      கூகிளை கொஞ்சம் துளாவியதில் அந்த வெஸ்டர்ன் நாயகர் Ringo ஆக இருக்கலாம் என்று தெரிகிறது!: Ringo Intégrale T1 & Ringo Intégrale T2

      "ரிவால்வர் ரிங்கோ" - பேரே சும்மா அதிருதில்ல?! :P

      @விஜய் சார்:
      //அதிதீவிர டெக்ஸ் ரசிகர் கார்த்திக் அவர்களே...//
      பேசாம ரெண்டு பேரையும் (பெயரையும்) இணைச்சு, ப்ளூ வில்லர் அல்லது டெக்ஸ் பெர்ரி-னு ஒரு புது நாயகரை உருவாக்கிட்டா பிரச்சினை தீர்ந்துடும்! மத்தபடிக்கு, நான் ரிவால்வர் ரிங்கோவின் படுதீவிர ரசிகனாக்கும்! ;)

      Delete
    13. Karthik Somalinga : ரிங்கோ இல்லிங்கோ..!

      Delete
    14. வில்லியம் வான்ஸ் வரைந்த ரிங்கோ என்று சொன்னதும் பிங்கோ (Bingo) என்பீர்கள் என எதிர்பார்த்தேன்... ஊஹீம்! சரி, இங்கி பிங்கி பாங்கி போட்டுப் பார்க்கலாம்... ஆங்.... ஜாங்கோ (Django) ஆக இருக்குமோ? ஊஹீம், அமெரிக்க பதிப்பகங்களின் பக்கம் தான் தலை வைத்துக் கூட படுக்க மாட்டீர்களே?!

      அட்லீஸ்ட் ஒரு டுராங்கோ (Durango)? ரைட்டா ராங்கா... சொல்லுங்கோ சார்! :) ரிவால்வர் ரிங்கோவை விட "டுமீல் டுராங்கோ" கூட நல்லாத் தான் இருக்கு! ஆனா, அவருக்கும் XIII-க்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? அவரும் ஒரு ஞாபக மறதிப் பேர்வழியோ?

      //வெகு சீக்கிரமே அவரது அறிமுகம் ஒரு பிரத்யேகப் பதிவின் மூலம் அரங்கேறிடும்//
      சரி சரி, நீங்கள் பதிவு போடும் போதே கண்டுபிடித்துக் கொள்கிறோம்! ;)

      Delete
    15. // XIII-க்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? //

      @கார்த்திக், "XIII -க்கு நெருங்கியவர்" என்பதால் அவருக்கு 12 அல்லது 14 எண்களுடன் சம்பந்தமிருந்தாலும் இருக்கலாம். அதையும் Verify பண்ணிவிடுங்கள் :D

      Delete
  15. சார் தமிழ் காமிக்ஸ்களின் பொற்காலமென நாம் கொண்டாடும் 1980 களயே மிஞ்சி விடும் போல உள்ளது உங்களது தொடர்ந்த தேடுதலும் , அதிரடி வெளியீடுகளும் , அதிரடி அறிவிப்புகளும் ! பிரம்மாதம் , பிரம்மாண்டம் சார் ! தொடர்ந்து கலக்குங்கள் ! ,

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : ஒரு பத்துப், பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னே, பின் திரும்பிப் பார்த்து - 'அடடா...Comeback ஸ்பெஷல் வெளியானதைத் தொடர்ந்த நாட்கள் பிரமாதம் என்று சொல்ல முடிகிறதா - பார்ப்போமே !

      Delete
    2. நிச்சயம் முடியாது சார் !
      ஒவ்வொரு தொடர் வருடங்களும் நமக்கு பொற்காலமாய் இருக்க போவதாய் பட்சி சொல்கிறதே !
      லார்கோ போல இன்னொரு வரிசை !
      ஆஹா , எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என பாட தோன்றுகிறது !

      Delete
  16. ரிவேர்சிலேயே மே மாதத்திற்கு போன ஒரே குதிரை வீரன் டொக்ஸ் தான்பா ......

    ReplyDelete
    Replies
    1. TEX IS REVERSED AND ''MAY'' RESERVED......ஹி ஹி

      நிக்காம ஓடு ........ஓடு........... ஓடு........... ஓடு........... ஓடு ..............

      புலி உறுமுது ............................புலி உறுமுது (நன்றி :போக்கிரி)

      Delete
  17. யார்பா அது இங்க நடக்கிற கூத்தை உண்மைன்னு நம்பி கடுதாசி போட்டது .................

    ReplyDelete
    Replies
    1. "இங்கு நடைபெறும் விவாதங்கள் அனைத்தும் கற்பனையே" - அப்டீனு ஒரு title போடணும்.

      காமிக்ஸ் அறிமுகமில்லாதவங்க யாராவது தப்பித்தவறி இதையெல்லாம் படிச்சா டைகரும் டெக்ஸும் யாரோ அரசியல்வாதிகள்னு நெனைச்சுப்பாங்க!

      Delete
    2. டைகரும் டெக்சும் அப்ப உயிரோட இல்லையா .............?


      Delete
    3. // டைகரும் டெக்சும் அப்ப உயிரோட இல்லையா .............? //

      Fact #436: புக்கை திறந்தா உயிரோட இருக்காங்க, புக்கை மூடினா காணாம போய்டறாங்க.

      Delete
    4. டெக்ஸ் புக்க மூடுனாலும் நிற்கிறார் அட்டை படத்தில் ! டெக்ஸ் எப்பவும் உயிரோடதான் !

      Delete
    5. Fact #437: கதைக்கு உள்ளே உயிரோடு. வெளியே ஆவியாக

      Delete
  18. அந்த கார்டூன்ல ஒன்னு மிஸ்ஸிங் ..............

    அதான் விரித்த குடை அளவுக்கு ஓட்டை போடுவேன் ...........

    ஒரு நிராயுதபானியிடம் துப்பாக்கி நீட்டினால் எப்படி.............?

    இதே எங்க டைகர்னா காமிக் ஆசானுடன் சமாதான குழாயில் புகை பிடித்து கிராபிக் கேப்புல குண்டு புக் வாங்கி இருப்பாரு..........

    ReplyDelete
    Replies
    1. அப்போ ஆசிரியரையும் கெடுத்துருவாருங்கிறீங்களா மந்திரி அவர்களே !

      Delete
    2. // இதே எங்க டைகர்னா காமிக் ஆசானுடன் சமாதான குழாயில் புகை பிடித்து //

      குழந்தை உள்ளம் கொண்ட எங்கள் காமிக்ஸ் ஆசானுக்கும் 'தம்' அடிக்கக் கற்றுக் கொடுக்க நினைக்கும் நயவஞ்சகப் புலியை வன்மையாகக் கண்டிக்கிறேன்...

      Delete
    3. Erode VIJAY : எனக்குக் கிடைக்காத அந்தத் தொப்பியை உங்கள் பூனை ஆட்டையைப் போட்டதன் ரகசியம் என்னவோ ?

      Delete
    4. @இரும்பு அண்ட் பி.ப.பி (பின் பக்க பிரான்டியார் )
      கதை கொண்டு வாங்க அப்பு .........
      குசு குசு .................

      பேச்சை மாத்தாதீங்க அப்பு .....................

      சிங்கத்தின் சிறுவயதில் வேண்டும் என்றால் கருப்பு வெள்ளை புத்தகம் கேட்டாலே போதும் அதுல எல்லாம் வந்துடும்................


      Delete
    5. எ போங்கப்பா .......
      இப்பிடடியே உலக தரம் இல்லைன்னு சொல்லி திகில் ரிப்ரின்ட் வந்துச்சு அதையும் கெடுத்துடீங்க அத இலவச இணைப்பை நினச்சு விட்டு இருக்கலாம்................
      மந்திரியா புரிஞ்சுகுங்கபா..............

      ஊ ஊ ஓஒ ஓஓஒ ஓஓஒ ....திகில் ஓநாயின் சவுண்ட் .........

      Delete
  19. ஒரு வழியாக நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க்கில் பிப்ரவரி மாத இதழ்கள் வாங்கி விட்டேன். ஜானி கிடைக்கவில்லை. ஆ.........ஆ.........ஆ.........ஆ............ஆ..........ஆஅஅஅஅ.......... இதை கமல் போல ஏற்ற இறக்கத்துடன் கண்ணீருடன் வாசிக்கவும். இரண்டு புத்தகத்தையும் படித்தவுடன் எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் மேலே சொன்ன ஆ..... ஆ.....!!!!!!!!!

    காலத்தின் கால்சுவடுகளில்:- வெறும் சம்பவங்களின் தொகுப்பு, கதையை காணவில்லை. ஒரு விஞ்ஞானியையும் அவருடைய மகனையும் தேடித்தான் ரோஜர் செல்கிறார், ஆனால் கடைசியில் விஞ்ஞானியை கண்டுபிடித்தார்களா இல்லையா, அதை பற்றி ஏதும் சொல்லபடவில்லை. 30ஆம் பக்கத்தில் ரோஜரை தள்ளிவிட்டது தாந்தான் என்று இகாயா சொல்கிறார், 31ஆம் பக்கத்தில் தள்ளிவிடப்பட்ட ரோஜர் தன்மீது விழுந்ததால் காலில் அடிபட்டுவிட்டதாக கூறுகிறார். பின்னால் இருந்து தள்ளிவிட்டால் தள்ளிவிட்டவன் மீதே விழுவது எந்த ஊரில் சாத்தியம் என்று தெரியவில்லை. ஐம்பது பக்கத்துக்குள் கதையை முடித்தால் தான் கம்பெனிக்கு கட்டுபடியாகும் என்பதால் நடுவில் கொஞ்சம் எடிட் செய்யப்பட்டுவிட்டதா?..........

    காவியில் ஒரு ஆவி:- ஒரு டிடெக்டிவ் கதையின் முக்கிய அம்சமே “ கதாபாத்திரங்கள் அனைத்தையும் ஆரம்பத்திலேயே நமக்கு ஒரு முறை அறிமுகம் செய்துவிடவேண்டும்” கடைசீகட்டத்தில் ஒருவன் திடிரென்று தோன்றி நான் தான் ஆவி என்று சொல்வது சுத்த அபத்தம். உதாரணம்: அதே கண்கள் திரைப்படம், சன் டீவியின் விடாது கருப்பு, மற்றும் நமது ஜானி கதைகள். ஜில் ஜோர்டானுக்கு மேயர் மீதும் அவரது உதவியாளர் மீதும் சந்தேகம் வருவதற்க்கு தகுந்த காரணம் சொல்லப்படவில்லை.

    ஒரு திரைப்படத்தில் நாகேஷ் அவர்கள் “ ஹீரோயின் கெடைசாச்சி, ஹீரோ............ ப்ச் அதை நானே பாத்துப்பேன்...... இந்த கதைதான் இன்னும் கிடைக்கவில்லை” என்று சொல்லுவார். ஏனோ எனக்கு இந்த வசனம் இந்த நேரத்தில் ஞாபகம் வருகிறது.

    ஏம்பா மரமண்ட.....! இதல்லாம் இன்னான்னு கேக்க மாட்டியா.....?

    ReplyDelete
    Replies
    1. //ஏம்பா மரமண்ட.....! இதல்லாம் இன்னான்னு கேக்க மாட்டியா.....?//

      ஹா ஹா ஹா :) :) :) நீங்கள் யாரை கூறினீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் நான் சிரிக்க நீங்கள் தடை சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் என்னதான் உங்களின் விஷய ஞானத்தை ; கலை ஞானத்தை மறைத்து மறைத்து அல்லது குறைத்து குறைத்து இங்கே பதிவிட்டாலும் - அவைகள் மறைந்து விடவோ அல்லது குறைந்து விடவோ போவதில்லை.

      நீங்கள் இந்த பதிவை சீரியஸாக பதிவிட்டிருந்தால், உங்களுக்கு கதை சொல்ல நான் தயாராகவே உள்ளேன். மற்றபடி உங்களின் தைரியம் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்திருக்கிறது ; உங்களைப் போல் இதற்கு முன் ஒரே ஒருவர் மட்டுமே இந்தியாவில் வாழ்ந்திருந்தார். அவர் பெயர் விக்கிரமாதித்தன் என்று ஞாபகம் ;)

      Delete
    2. //மிஸ்டர் மரமண்டை.....! நானும் கதை கேட்க தயாராகவே உள்ளேன்//

      இது கதையல்ல நிஜம் :

      உண்மைதான்.. நீங்கள் பதிவிட்டுள்ளது அனைத்தும் - கதையல்ல ; நிஜம் போன்றே தெரிகிறது. இதுவரை எவர் கண்ணுக்கும் உறுத்தாத ஒரு விஷயம் ; இதுவரை எவர் கருத்துக்கும் முரண்படாத ஒரு விஷயம் ; உங்கள் பதிவில் காணக்கிடைப்பது மிகவும் ரசிக்க வைக்கிறது. காமிக்ஸ் வாசிப்பில் ; காமிக்ஸ் ரசனையில் நீங்கள் எவருக்கும் சளைத்தவரல்ல என்பதை உலகுக்கு பறைசாற்றுவதாக உங்களளின் பதிவு அமைந்துள்ளது. பாராட்டுகள் சுந்தரமூர்த்தி சார் !

      ஒ சி சு - போன்றதொரு முரண் இங்கே தொக்கி நிற்பதாகவே தெரிகிறது. உங்களுக்கான விடையை அளிக்க இங்கு ஒருவரால் மட்டுமே முடியும் என்று நினைக்கிறேன். அவர் ஒரு பிரபல பதிவர் ; ஒ சி சு பற்றிய ஆய்வறிக்கையை - எளிய பதிவாக மாற்றி நான்கு பாக தொடராக வாசகர்களுக்கு அளித்தவர் ; வாசகர் நலன் கருதி இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்க வேண்டுமாறு இங்கு கோரிக்கை வைப்பதைத் தவிர வேறொன்றும் எனக்கு தெரியவில்லை.

      //பின்னால் இருந்து தள்ளிவிட்டால் தள்ளிவிட்டவன் மீதே விழுவது எந்த ஊரில் சாத்தியம் என்று தெரியவில்லை// :D

      Delete
    3. இது வஞ்ச புகழ்ச்சியா.......?

      Delete
    4. //இது வஞ்ச புகழ்ச்சியா.......?//

      இது வஞ்ச புகழ்ச்சியோ என்று தவறாக நினைக்க வேண்டாம் .. ஏனெனில் அப்படி எழுதுவதை நிறுத்தி பல மாதங்கள் கடந்தோடி விட்டது. அனைத்தும் உள்ளத்திலிருந்து வெளிவரும் எண்ணங்கள் ; உளமார முன்வைக்கும் கருத்துகள் ; மனமார பாராட்ட நினைக்கும் ஆசைகள் ; அத்தனையும் வெளிப்படையான பரிமாற்றங்கள் !

      பிரபல பதிவரை பற்றிய கருத்துகள் கூட மனதார முன்வைக்கப்பட்ட புகழ்ச்சிகள் தவிர வேறொன்றுமில்லை !

      Delete
    5. பரவாயில்லை மிஸ்டர் சுந்தரமூர்த்தி. அது அவரவர் மனம் ஒப்புக்கொள்ள வேண்டிய சங்கதி ;)

      off topic : இதோ உங்களுக்கான ஒரு நீதிக் கதையும் ; அதிலிருந்து ஒரு அறிவுப்பூர்வமான கேள்வியும் கீழே :

      பாட்டி வடை சுட்ட கதையில் வடையை சுட்டது யார் ?..?..?

      A . காக்கா
      B . நரி
      C . பாட்டி
      D . வடைசட்டி
      E . நெருப்பு

      Delete
    6. Off topic > Off topic :

      அந்த ஏழைப் பாட்டிய விட்ருங்கப்பா... எத்தனை தலைமுறைக்குதான் அவங்க சுடற வடையெல்லாம் காக்கா லவட்டும்? பாட்டிக்கு Retirement-ஏ கிடையாதா?

      Delete
    7. குற்றம் நடந்தது என்ன ?

      //Ramesh Kumar : எத்தனை தலைமுறைக்குதான் அவங்க சுடற வடையெல்லாம் காக்கா லவட்டும்? //

      காக்கா வடையை லவட்டியது என்னவோ ஒரே ஒரு முறை தான் ; அதற்கான புலனாய்வு மட்டுமே தலைமுறை தலைமுறையாக முடிவின்றி தொடர்கிறது. சரி நீங்களாவது விடையை சொல்லுங்கள்... பாட்டி வடை சுட்ட கதையில் வடையை சுட்டது யார் ?

      Delete
    8. - சுட்டது பாட்டி (சட்டியில்)
      - சுட்டது காக்கை (திருடியது)
      - சுட்டது நரி (ஏமாற்றிப் பறித்தது)
      - சுட்டது வடைசட்டி (வேக வைத்தது)
      - சுட்டது நெருப்பு (சட்டியை)

      நிற்க...

      உங்கள் கேள்வி வடையை "சுட்டது யார்? " என்பதால் என் விடை "சுட்டது பாட்டி"

      ஓடுக...

      (எப்படியும் நிற்க சொன்னால் யாரும் எழுந்து நிற்கப்போவதில்லை, அதனால் ஒரு Change-க்கு "ஓடுக" சொல்லிப் பார்ப்போமே... :D)

      Delete
    9. பாட்டி வடை சுட்டது இருக்கட்டும்,........ என்னுடைய சந்தேகத்தை தீர்க்கபோவது யார் ....?

      Delete
    10. இந்த இணைப்பு தற்போது Busy-ஆக இருப்பதால் சில வருடங்களுக்குப் பிறகு டயல் செய்யவும்...

      Delete
    11. அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் !

      //Ramesh Kumar: நிற்க...ஓடுக... //

      அமர்க ;

      * கமெண்ட்களின் எண்ணிக்கை பதிவு தோறும் 300/ஐ தாண்டினாலும் பங்களிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை 30/ஐ தாண்டாத மர்மம் என்ன ? அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் விரைவில் - உங்கள் அபிமான லயன் முத்து வலைதளத்தில்...

      * கருத்தில் வல்லினமும் ; எழுத்தில் மெல்லினமும் ; நய்யாண்டியில் இடையினமும் கலந்து எழுதிய பல வாசகர்கள் இந்த 300 லிலும் 30 லிலும் அடங்காத வனவாசம் எதனால் ? அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் விரைவில் - உங்கள் அபிமான லயன் முத்து வலைதளத்தில்...

      * கமெண்ட்களின் எண்ணிக்கை 300/ஐ எளிதாக தாண்டுவது இதனாலா ?

      1. +1
      2. வாழ்த்துகள்
      3. ஒற்றை வார்த்தை knockout அல்லது மூக்கு அவுட்
      4. போரடிக்கும் டைகர் vs டெக்ஸ்
      5. fb ரக கமெண்ட்கள்

      அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் விரைவில் - உங்கள் அபிமான லயன் முத்து வலைதளத்தில்...

      Delete
    12. @மிஸ்டர் மரமண்டை, ஏதே Plan-உடன் வந்து ஒரு Message சொல்வதுபோல் உள்ளது. Plan இல்லாமல் இயல்பாக மனதில் தோன்றியதை தெரிப்பது Straightforward - நேராகப் பயன்படும்.. எதுக்கு இந்த Indirect messages? யாரும் இங்கே Comment எண்ணிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை - as long as feedbacks shared along.

      Anyway, I will participate only in the witty comments only.

      Delete
    13. Ramesh Kumar:

      அவரவர் மனதில் படுவதை அவரவர் பாணியில் எழுதுகிறோமேயன்றி இதில் ப்ளான் செய்து பதிவிடுவதோ ; மறைமுகமாக சாடுவதோ - என்று ஏதுமில்லை. பொதுவாக கூற வேண்டுமானால் இரண்டு மாதகாலமாக தொடரும் டைகர் vs டெக்ஸ் கமெண்ட்கள் அர்த்தமற்றதாகவும் ; மிகவும் அயர்ச்சியை தருவதாகவும் உள்ளது என்பது என் கருத்து. அதை என் பாணியில் கூறியுள்ளேன் ; அவ்வளவுதான் !

      பொதுவாகவே 30 நபர் ஒத்து போகும் ஒரு விஷயத்தில் ஒருவர் மாற்று கருத்து கொள்ளும் போது அவர் ப்ளான் செய்து பதிவிடுவதாக தோன்றுவதில் வியப்பேதுமில்லை ; அதற்காக அல்லது அவர்களுக்காக அவரும் அவற்றிற்காக ஒத்துப்போக நினைப்பதில் தனித்தன்மை என்று ஏதுமில்லை !

      வாழ்த்துகள் - பற்றி ஏற்கனவே சிலர் இங்கு அபிபிப்ராயம் தெரிவித்துள்ளனர். அதில் காசோ மற்றும் ஆதி தாமிரா அவர்களின் கருத்துகளை நான் பகிரங்கமாக ஆதரிக்கிறேன். மிக வேகமாக நம் வலைதளம் பிரபலம் அடைந்து வருகிறது ; புதிதாக பார்வையிட வரும் நண்பர்களுக்கு பழைய வாசகர்களான நாம் பதிவிடும் விஷயங்கள் எப்படிப்பட்டவையாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை தூண்டியதன் விளைவே என் முந்தைய பதிவு. மற்றபடி இதில் ப்ளான் செய்ய - இங்கு என்ன நாடாளுமன்ற தேர்தலா நடக்கிறது :D

      //Anyway, I will participate only in the witty comments only// - தனிப்பட்ட முறையில் நீங்கள் என் பதிவை எடுத்து கொண்டதில் மிகவும் வருத்தமடைகிறேன் ; நீங்கள் உங்கள் பாணியில் பதிவிடுவதை மனதார வரவேற்கிறேன் ; பத்தோடு பதினொன்றாக என் கருத்தும் இங்கு பதிவாவதையே நான் மிகவும் விரும்புகிறேன். எனவே வாசகர்களின் பொது நலன் கருதி ''அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட்'' இக்கணமே கைவிடப்படுகிறது..!

      Delete
    14. @மிஸ்டர் மரமண்டை, உண்மையில் நானே ஒன்றை எதிர் பார்த்தேன். மற்ற வாசகர்கள் டைகர்-டெக்ஸ் விவாதங்கள் மற்றும் கடி ஜோக்குகளைப் பற்றி நொந்துகொள்வார்களோ என்று. அவ்வாறு Complaints எதுவும் இதுவரை தட்டுப்படாததனாலேயே நானும் தொடர்ந்து கொண்டிருந்தேன் - I think the same might be true for others too who frequently comments. நிச்சயம் இது மற்றவர்களுடைய Feedback-ஐ பாதிக்கிறது என்று மனதில் தோன்றினால் நேரடியாக தெரியப்படுத்துவது தவறேயில்லை. ஆனால் "அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட்" என்பதைப் பார்த்ததும் சற்று Odd-ஆகத் தோன்றியது - not now though!

      Thanks for the kindness anyway!

      @ஸ்டீல்,
      I am fine :)

      Delete
    15. //அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட்" என்பதைப் பார்த்ததும் சற்று Odd-ஆகத் தோன்றியது//

      ஹா ஹா ஹா ! என்ன செய்வது ராமேஷ்.. எனக்கு காரசாரமான செட்டிநாட்டு சிக்கன் என்றால் நிரம்ப பிடிக்கும். அதனாலேயே என் பதிவுகளிலும் சற்று மசாலா தூக்கலாக இருக்கிறதோ என்னவோ :)

      நான் தொடர்ச்சியாக email comment subscription செய்வதால் - இரவு 1 மணிக்கு பெல்லடித்தாலும் தூக்கத்தை துறந்து கமெண்ட் படிக்கும் பழக்கமுள்ளவன். அப்படிப்பட்ட நிலையில் நடுநிசி ஒரு மணிக்கு ஒரு மொக்கை கமெண்ட்/ஐ யாராவது பதிவிட்டிருந்தால் - அதை அப்போது படிக்கும் எனக்கு எப்படி இருக்கும் என்று கொஞ்சம் நினைத்து தான் பாருங்களேன் ;) மற்றபடி

      நான் கமெண்ட் பதிவிடும் தினம் மட்டும் குறைந்தது 100 Page views ஆவது இன்றுவரை எனக்கு சொந்தமாகிறது.

      மிக்க நன்றி ரமேஷ் மற்றும் சுந்தரமூர்த்தி அவர்களுக்கு - மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கலாம் :)

      Delete
    16. ரமேஷ் புதிதாய் வரும் வாசகர்களை கவர கூடிய வகையில் பல விஷயங்கள் வரும் போல உள்ளது ! தளம் சும்மா கிடந்தது கொண்டிருப்பதை காட்டிலும் சுறுசுறுப்பாய் இருப்பதே மேல் ! எல்லோர் கருத்தும் ரசிக்கப்படும் ! வருந்துமளவு விவாதங்கள் இல்லை ! தொடருவோம் ! இது எனது கருத்து மட்டும் !(நன்றி கார்த்திக்)

      Delete
    17. அப்புறம் மேலே போய் மறக்காமல் ஓட்டு போடுங்கள் !

      Delete
    18. ஒரு அலசல் ரிப்போர்ட் என்னவென்று படிக்க ஆவலுடன் உள்ளேன். அதிரவைக்கும் வகையில் இருக்காது என்பது என் எண்ணம்.

      Delete
  20. அஜய் பழனிசாமி அசத்தியிருக்கிறார். பிடியுங்கள் அஜய் என் பாராட்டுக்களையும் ! அப்படியே ஒரு தொப்பியையும், ஒரு துப்பாக்கியையும் சொருகி விட்டிருந்தால் கார்சனுக்கு நிகரான ஒரு புது கெள-பாய் நமக்குக் கிடைத்திருப்பார். ஹம்ம்...

    எடிட்டர் சார்,

    ஜெரோம் மீண்டும் வருவது குறித்து எனக்கும் மகிழ்ச்சியே! ஏனோ அந்த சோடாபுட்டி டிடெக்டிவ்வின் நேர்மை, உண்மை, எளிமை, வெண்மை ஆகிய குணங்கள் எனக்கும் பிடித்துவிட்டது!

    அப்படியே டிடெக்டிவ் ராபினையும் களமிறக்கி தேவதைகளின் கடாட்சம் பரிபூரணமாய் கிடைக்கப் பெறுவீர்களாக!

    // டெக்ஸ் தீபாவளி மலரில் மேற்கொண்டு 10 இதழ்கள் வேண்டுமென்று கோரிக்கை அனுப்பியிருந்தார்கள் //
    டெக்ஸ் வாழ்க! அவர் கீர்த்தி ஓங்குக! (டைகர் புத்தகங்கள் பிரதி வேணும்னு கேட்டு எப்பியாச்சும் பதிப்பகத்தார் கோரிக்கை அனுப்பியதுண்டா சார்? ஹி ஹி)


    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : தேவதைகளின் கடாட்சம் கிட்டுவது இத்தனை சுலபமா? இத்தனை காலம் தெரியாது போயிற்றே !! Better late than never ! மார்ச் இதழைப் பாருங்களேன்..!

      Delete
    2. ஹைய்யா! அப்படீன்னா மார்ச் மாசம் ராபின் பற்றிய அறிவிப்பு உறுதியாகிடுச்சு! :)

      Delete
    3. ராபின் கருப்பு வெள்ளை உலகிற்கு அதாவது கனவுலகிற்கு வரவேற்கிறோம் !
      ராபின், டெக்ஸ் , டயபாளிக் , மார்ட்டின் , டயலான்....இன்னும் சிலர் சேர்ந்தால் சிறப்பான கருப்பு வெள்ளை மலர் தயாராகுமே !

      Delete
    4. இவர்களுடன் லாரென்ஸ் -டேவிட் சேர்த்து கொள்வோம் !

      Delete
  21. தல முதல்ல சொன்னதையே இன்னும் கண்டுபிடிக்க முடியல?!! அதுக்குள்ள இன்னொரு .. ஹ்ம்ம் கலக்குங்க!! டெக்ஸ் எப்போவுமே பெஸ்ட் அப்டின்னு நீங்களே சொல்லிடிங்க இதுக்கு மேல எங்களுக்கு வேற என்ன வேணும்?

    ReplyDelete
    Replies
    1. balaji ramnath : பாஸ்...நான் மௌன விரதம் !!

      Delete
    2. காமிக் ஆசான் ------------அப்ப எழுதி காட்டுங்க

      Delete
    3. மந்திரியரே உங்கள் மதியூகம் மலையென இருப்பதை எண்ணி மகிழ்வடைகிறேன்..

      Delete
    4. மந்திரியின் IQ = 200!

      IzNoGoud => Is So Good!

      Delete
    5. // அப்ப எழுதிக் காட்டுங்க //
      ஹா ஹா ஹா!

      // மந்திரியின் IQ = 200 //

      மந்திரி + ஜால்ரா பாய் IQ = 200 என்பதுதான் சரியாக இருக்கும். இதில் ஜால்ரா பாயின் IQ மட்டும் 145னு பேசிக்கிட்டாங்க... :D

      Delete
    6. IQ 55 ஆக இருக்கும்போதே மந்திரிக்கு இவ்வளவு திறமைன்னா, 100+ ல எப்டி இருப்பாரு? :D

      Delete
    7. // 100+ ல எப்டி இருப்பாரு? //

      கண்டிப்பா 'கலீபா' ஆகியிருப்பாரு. ஆனா என்னைப் பொருத்தவரை அவருக்கு 55ன்றதையே நம்ப முடியலையே...

      Delete
    8. அட அப்பாவி மக்க்கா .....................தூக்குரதே தாரும் இறகும் பூசத்தானா.....................

      Delete
    9. ////////அவரு சாப்புடறதே களி பா/////////......................நர நர ...............

      Delete
  22. I am little bit disappointed that "Lion-Muthu" comics sales has been stopped in e-bay online portal from this month..Dont know how long i should wait for purchasing the March month releases by online through our Comic's own website..

    Mr.Vijayan (sir): I wish could you please give us an estimated date to expect when this new option will available in Lion-Muthu comics webpage? I can't resist to but March month releases..

    ReplyDelete
    Replies
    1. Simbubalan : An online Bank Transfer for Rs. 240 will fetch you the March books ; you can find our Bank info on our website !

      Delete
  23. 1. I think we should continue with ebay even after our comics are available through our website, simply because ebay will definitely reach more people.
    2. Detective Jerome - yes why not, more hero's more merry.
    3. New Cowboy - No clue :(
    4. Lady comics - thought Lady S but editor said no already to that, so again not sure...

    ReplyDelete
  24. nallavelai rajniyam kamalum modhaveedalai (tex vs tiger)

    ReplyDelete
  25. அந்தப் 'புள்ளிவிபரப் புலி' தன்னைத் தானே இங்கு வெளிப்படுத்திக் கொண்டு எங்களைக் கொஞ்ச நேரம் விலாநோகச் சிரிக்க வைக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்.

    (எனக்கென்னவோ அது நம்ம போராட்டக் குழு தலைவரா இருக்குமோன்னு ஒரு டவுட் இருக்கு... :D )

    ReplyDelete
    Replies
    1. அதென்னவோ நீங்க தான்னு சந்தேகம் ம் ம் ம் ம் மா இருக்கு.............

      Delete
    2. திடீரென்று கெட் அப் மாத்தினது சந்தேகத்தை உறுதி செய்கிறது ,,,,,,,ஹி ஹி

      Delete
    3. @ மந்திரி

      எனக்கு லேசா நம்ம நாட்டாமையின் மேல் ஒரு டவுட் இருக்கு. ஆனா அவருக்குத்தான் எழுதப்படிக்கத் தெரியாதே! ஒருவேளை.. நம்ம ஸ்டீலிடம் சொல்லி எழுதியிருக்கலாம். ஒவ்வொரு வரிக்கும் நாலு எழுத்துப் பிழைகள் இருந்ததுன்னா... அது ஸ்டீலேதான்! :D

      Delete
    4. எனக்கும் அந்த நாட்டாமை மேலதான் டவுட்! :D

      Delete
    5. // நான் அவரில்லை //

      இருந்தாலும் தவறில்லை !

      Delete
    6. நான் அவரில்லை

      Delete
    7. யாரந்த டால்டன் ....?

      Delete
  26. XIII -க்கு நெருங்கியவர் இவர் !! The Scorpion
    Correcta Sir

    ReplyDelete
  27. //நீங்கள் இந்த பதிவை சீரியஸாக பதிவிட்டிருந்தால், உங்களுக்கு கதை சொல்ல நான் தயாராகவே உள்ளேன்.//

    மிஸ்டர் மரமண்டை.....! நானும் கதை கேட்க தயாராகவே உள்ளேன்.

    ReplyDelete
  28. மே மாத பதிவின் தலைப்பு லீக் ஆகிவிட்டது...ஆக்ரோச புலியால் மே மாதத்திற்க்கு துரத்த பட்ட கிழட்டு எலி..

    ReplyDelete
  29. எல்லா மேட்டரும் சஸ்பென்ஸ் ஆகி போச்சி....
    நெட்டிலே தேடி தேடி மௌஸ் பேடு தேய்ந்சு போச்சி..
    விட்டத்தை பாத்து யோசிச்சி யோசிச்சி..
    ஹேர் ஸ்டைல் எடிடர் மாதிரி ஆகி போச்சி..

    ஓட்டை வாய் உலக நாதனை பார்த்து ரொம்ப நாளாகி போச்சி...
    .

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா!

      கொஞ்சம் அழுத்தமா சொல்லுங்க Rummi XIII அவர்களே... எனக்கு வேற என்னவோ மாதிரி கேட்குது.

      Delete
    2. Rummi XIII : எனக்கு இன்னொரு பேரும் இருக்கு...பெவிகால் வாய் பெரியசாமி !! (என்கவுண்டர் ஏகாம்பரம் வடிவேலின் modulation-ல் ....! )

      Delete
    3. // பெவிகால் வாய் பெரியசாமி //

      ஹா ஹா ஹா! But, we hate 'பெவிகால் வாய் பெரியசாமி' :)

      Delete
    4. எம் பேரு ஓட்டை வாய் உலகநாதன்... எனக்கு இன்னொரு பேரும் இருக்கு (BGM starts) பெவிகால் வாய் பெரியசாமி !!!! ( பாட்ஷா ரஜினி modulation ) இது எப்பிடி இருக்கு???

      Delete
    5. இத்த மொதல்ல சொல்லோனும்

      Delete
  30. விஜயன் சார், என்னை பொறுத்தவரை காமிக்ஸ் என்று எழுதி எதை கொடுத்தாலும் படிப்பேன்! எனவே ஜெரோமின் சாகசம்களை மீண்டும் வெளி இடுவது குறித்து சந்தோஷம்! மாடஸ்டி கதைகள் நமது ஹீரோகளுக்கு சரியான போட்டி, தயவு செய்து மீண்டும் வெளி இடுங்கள்!

    நமது காமிக்ஸ் சொன்ன தேதியில் வெளிவர தாமதமானால் நமது விற்பனை முகவர்களுக்கும் இது பற்றி முன் அறிவிப்பு செய்வது நலம்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்டீல். "காமிக்ஸ்" படித்து விட்டேன்! அருமை!!

      Delete
  31. மிஸ்டர் மரமண்டை! காரசாரமான அலசலை இங்கே வெளியிட மனமில்லையேன்றால் உங்கள் Blogல் வெளியிட்டு linkஐ இங்கு share செய்யலாமே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மிஸ்டர் செந்தில். ஆனால் அதற்கு இது சரியான தருணமல்ல என்றே தோன்றுகிறது. பலமுறை சில விஷயங்களை பொதுவில் பகிர வேண்டும் என்று நினைத்தாலும் அது முடியாமலேயே போகிறது. உதாரணமாக நம் தளத்தில் தற்போது பதிவிடப்படும் கமெண்ட்கள் பெரும்பாலும் காற்றுக்குமிழி போன்றே இருப்பதாக தோன்றுகிறது. அதுவே சிலநேரம் நீர்க்குமிழி போன்றே எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இவைகள் நிரந்தரமானவையா அல்லது ரசிக்கத்தக்கவைகளா என்பதை பற்றி யாரும் கவலை கொள்வதில்லை.

      முன்பு வாசக நண்பர் பாலசுப்ரமணியன் அவர்கள் நம் லயன் முத்து வலைதளத்தை பற்றி குறிப்பிடும்போது - விமர்சன மேடை, அரட்டை அரங்கமாக மாறிய பின்னர் திண்ணை பேச்சாக மாறிவிடுமோ என்ற (வீண்) பயத்திற்காக எழுதுகிறேன் என்று ஆசிரியருக்கு கடிதம் எழுதியிருந்தார். இது நிற்க ;

      மாறாக இங்கு தொடர்ந்து நடைபெறும் டைகர் vs டெக்ஸ் விவாதங்கள் நம்மை ஒரு பக்கம் சாய்த்து விடுவதாகவே இருக்கிறது. இது மேலும் தொடர்ந்தால் டைகர் ரசிகர்கள் டெக்ஸ் வில்லர் படிக்கும் போது அவரின் பலவீனம் மட்டுமே கண்களுக்கு புலப்பட்டு அங்கே நம் காமிக்ஸ் [டெக்ஸ்] ரசனையை நிரந்தரமாக இழந்துவிடும் அபாயம் நிச்சயமாக இருக்கிறது. போலவே டெக்ஸ் ரசிகர்கள் டைகரை ரசிப்பதை விடுத்து அவரின் கதையை எப்படி மட்டம் தட்டலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். இன்று என் கருத்து நகைப்புக்குரிய விஷயமாக இருக்கலாம். ஆனால் நாளை நடப்பதை யாரறிவார் ? எதுவுமே அளவுக்கு மீறினால் அது நஞ்சாகத்தான் மாறும் என்பது விதி !

      இதுபோல இன்னும் பல வித்தியாசமான விஷயங்களை பதிவிட நினைத்தாலும் அதற்கு இது சரியான தருணமல்ல!

      Delete
    2. நண்பர் மரமண்டை அவர்களுக்கு .....

      தங்கள் கருத்தில் ( டெக்ஸ் @ டைகர் மோதல் ) கண்டிப்பாக நான் உடன் படுகிறேன் .நாம் ஏதோ ஒரு பதிவில் இதை கடை பிடித்தது ஓகே .ஆனால் ஒவ்வொரு பதிவிலும் இந்த மோதலை கடை பிடிப்பது வீண் என்பதே எனது கருத்தும். இந்த மோதல் தீவிரமானால் டைகர் ரசிகர்களுக்கு டெக்ஸ் அவர்களின் நல்ல கதையும் பிடிக்காது .டெக்ஸ் ரசிகர்களுக்கும் " டைகரின் " எந்த கதையும் பிடிக்காது என்பது உண்மை .

      Delete
    3. // மாறாக இங்கு தொடர்ந்து நடைபெறும் டைகர் vs டெக்ஸ் விவாதங்கள் நம்மை ஒரு பக்கம் சாய்த்து விடுவதாகவே இருக்கிறது. இது மேலும் தொடர்ந்தால் டைகர் ரசிகர்கள் டெக்ஸ் வில்லர் படிக்கும் போது அவரின் பலவீனம் மட்டுமே கண்களுக்கு புலப்பட்டு அங்கே நம் காமிக்ஸ் [டெக்ஸ்] ரசனையை நிரந்தரமாக இழந்துவிடும் அபாயம் நிச்சயமாக இருக்கிறது. போலவே டெக்ஸ் ரசிகர்கள் டைகரை ரசிப்பதை விடுத்து அவரின் கதையை எப்படி மட்டம் தட்டலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.//

      +1 இந்த பழக்கம் தொடரும்பட்சத்தில் கதையின் சுவையை அதற்குரிய ரசனையுடன் உணரமுடியாமல் செய்துவிடக்கூடும்.

      Delete
    4. எனவே இனி ஹீரோக்கள் குடுமி பிடி சண்டை இங்கே இடாமல் ( விளையாட்டிற்கு கூட ) யாராக இருந்தாலும் நல்ல கதையை ஆசிரியருக்கு தெரிவிப்போம் .மோசமான கதையை ஆசிரியர் அறிய செய்வோம் .அது டெக்ஸ் ..,டைகர் யார் கதை என்றாலும் .........

      Delete
    5. // மோசமான கதையை ஆசிரியர் அறிய செய்வோம் .அது டெக்ஸ் ..,டைகர் யார் கதை என்றாலும் .........//
      நிச்சயமாக அது இது வரை தொடர்ந்துதான் வருகிறது ! கதை நன்றாக இருந்தால் யாராக இருந்தாலும் ரசிக்க இயலும் ! நாம் இங்கு செய்த கலாட்டாக்கள் யார் மனதையும் மாற்ற போவதில்லை ! பெயரை மாற்றி புழு போடுவதும், அந்த புழுவை பிடிக்க சில மீன்கள் செல்வதும் பிறகு அந்த மீனே தவிப்பதும் இங்கே நடந்து வருவதுதானே !

      Delete
    6. //Ramesh Kumar2 March 2014 12:54:00 GMT+5:30

      // மாறாக இங்கு தொடர்ந்து நடைபெறும் டைகர் vs டெக்ஸ் விவாதங்கள் நம்மை ஒரு பக்கம் சாய்த்து விடுவதாகவே இருக்கிறது. இது மேலும் தொடர்ந்தால் டைகர் ரசிகர்கள் டெக்ஸ் வில்லர் படிக்கும் போது அவரின் பலவீனம் மட்டுமே கண்களுக்கு புலப்பட்டு அங்கே நம் காமிக்ஸ் [டெக்ஸ்] ரசனையை நிரந்தரமாக இழந்துவிடும் அபாயம் நிச்சயமாக இருக்கிறது. போலவே டெக்ஸ் ரசிகர்கள் டைகரை ரசிப்பதை விடுத்து அவரின் கதையை எப்படி மட்டம் தட்டலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.//

      +1 இந்த பழக்கம் தொடரும்பட்சத்தில் கதையின் சுவையை அதற்குரிய ரசனையுடன் உணரமுடியாமல் செய்துவிடக்கூடும்.//
      ரமேஷ் டெக்ஸ் என்றால் இப்படிதான் , டைகர் என்றால் இப்படிதான் என உணரவும் அது உதவுமல்லவா ! டைகரை ஒரு ரியல் மனிதராய், சில மனிதர்களின் குணங்கள் கொண்டவராய் பார்க்க உதவுமே !
      அந்த வகையில் ஒரு பிளஸ் போடலாம் அல்லவா ?

      Delete
    7. // மாறாக இங்கு.....
      .....யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். //

      நல்ல கருத்து. எனக்கும் சரியென்றே தோன்றுகிறது. ஆகவே, நானும் இனிமேல் கேப்டன் டைகர் பற்றிய எந்தவொரு குடுமிபிடி சண்டையிலும் பங்கேற்கப் போவதில்லை என்று உறுதிகூறுகிறேன்.

      அதே நேரம்... இங்கே ஒருவித 'கூட்டநெறிசல்' குறைவு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுவதன் காரணத்தையும் ஆராய்ந்தறிய எண்ணுகிறேன்... புதிய வாசகர்கள் இங்கே பதிவிடத் தயங்குவதன் காரணத்தையும், பழைய பின்னூட்டக்காரர்கள் (தற்காலிகமாவது) காணாமல் போவதன் காரணத்தையும் கண்டறிய ஆசைப்படுகிறேன்.

      இது குறித்து நண்பர்கள் தங்கள் கருத்துக்களைக் பகிரலாமே?....

      Delete
    8. மாறாக இங்கு தொடர்ந்து நடைபெறும் டைகர் vs டெக்ஸ் விவாதங்கள் நம்மை ஒரு பக்கம் சாய்த்து விடுவதாகவே இருக்கிறது. இது மேலும் தொடர்ந்தால் டெக்ஸ் வில்லர் ரசிகர்கள் டைகர் படிக்கும் போது அவரின் பலவீனம் மட்டுமே கண்களுக்கு புலப்பட்டு அங்கே நம் காமிக்ஸ் [டைகர்] ரசனையை நிரந்தரமாக இழந்துவிடும் அபாயம் நிச்சயமாக இருக்கிறது. போலவே டைகர்ரசிகர்கள் டெக்ஸ/ஐ ரசிப்பதை விடுத்து அவரின் கதையை எப்படி மட்டம் தட்டலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்


      மேலிருக்கும் வாக்கியம் இவ்வாறே அமைந்த்திருக்க வேண்டும்.



      மேலும் நண்பரின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏன் உடன்பாடு இல்லை என்பதை விளக்க ஆரம்பித்தால் தேவையற்ற மன உளச்சலை எனக்கு கொண்டுவந்து சேர்க்கும் வாய்ப்பு இருப்பதால், அதை இப்போதைக்கு இங்கு பதிவதில்லை. டெக்ஸ் / டைகர் என்பது சிறுவயது பள்ளிகூட விளையாட்டுகளை ஞாபகப்படுத்தியதால் ஆர்வமுடன் கலந்துகொண்டேன். இப்பொழுதும் ஆர்வத்துடனே இருக்கிறேன்.

      Delete
    9. // உதாரணமாக நம் தளத்தில் தற்போது பதிவிடப்படும் கமெண்ட்கள் பெரும்பாலும் காற்றுக்குமிழி போன்றே இருப்பதாக தோன்றுகிறது. அதுவே சிலநேரம் நீர்க்குமிழி போன்றே எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இவைகள் நிரந்தரமானவையா அல்லது ரசிக்கத்தக்கவைகளா என்பதை பற்றி யாரும் கவலை கொள்வதில்லை //

      வாராவாரம் புதிய பதிவுகள் வரும் Blog-ல் நிரந்தரமாகவும் இரசிக்கத்தக்கவையாகவும் Comments அமைந்திருக்க வேண்டிய எதிர்பார்ப்பு அவசியமில்லை. ஏனென்றால் ஆசிரியரின் பதிவு சம்பந்தப்பட்ட மற்றும் புத்தகம் சார்ந்த விமர்சனங்களைத் தவிர்த்து ஏனைய அனைத்து Topic-களும் just for fun-தான். அவற்றின் உபயோகம் / ஆயுள் Just 7 days approximately.

      அவைகளைக் களைய முற்பட்டால் பின்னூட்டங்கள் காமிக்ஸின் / பொழுதுபோக்கின் அடையாளம் குறைந்து ஒரு Marketing / Production / Customer care Channel போலத் தோற்றமளிக்கும். We are not here for that alone.


      // இது குறித்து நண்பர்கள் தங்கள் கருத்துக்களைக் பகிரலாமே? //
      காக்கை (& பாட்டி) வடை சுட்ட கதை சம்பந்தமான ஒரு Comment-க்கு நான் பதிலளிக்கப்போய் - திடுதிப்பென்று மிஸ்டர் மரமண்டை ஒரு புது கருத்தை முன்வைத்தார். அவர் முன்வைத்த Points கவனத்தில் கொள்ளும்படி இருந்தாலும் அந்த Casual Joke Discussion-க்கு நடுவில் ஏன் அதை முன்வைத்தார் என்பது புரியவில்லை.

      இருப்பினும் Just for clarification; மிஸ்டர் மரமண்டை இதனை ஆரம்பித்ததால் அவரே விளக்கத்தையும் சொல்வதுதான் நியாயம். மற்றவர்கள் இதில் சொந்த ஈடுபாட்டுடன் கருத்துகளைத் தெரிவிக்கும் பட்சத்தில் No problem, ஆனால் இந்த மெனக்கெடலை நாம் செய்யும் நோக்கம் முக்கியம். Be aware!

      Delete
    10. //அவைகளைக் களைய முற்பட்டால் பின்னூட்டங்கள் காமிக்ஸின் / பொழுதுபோக்கின் அடையாளம் குறைந்து ஒரு Marketing / Production / Customer care Channel போலத் தோற்றமளிக்கும். We are not here for that alone.
      //
      கேட்பவர் அப்படியெல்லாம் செய்தவர்தானா !
      ஆகவே விட்டு தள்ளுங்கள் ரமேஷ் ! ரொம்ப சீரியஸ் தேவை இல்லை இந்த காமிக்ஸ் தளத்திற்கு ! சீரியசான காமிக்ஸ் விவாதங்களும் வந்தால் நன்றாக இருக்கும் !
      இந்த தளத்திற்கு இப்போதைய தேவை அட்லாண்டாவில் ஆக்ரோஷமும், கப்பலுக்குள் கலேபரமும்தான் !

      Delete
    11. இருந்தாலும் நல்லதை எவர் எந்த நோக்கத்திற்காக வைத்தாலும் நல்லது என்றால் அலட்சியபடுத்த போவதில்லை யாரும் !

      Delete
    12. இப்போது இந்த தளம் மிகவும் அமைதியாக இருப்பது எதனால்? புயல் கரையை கடந்துவிட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் :))

      Delete
    13. இன்று விடுமுறை நாளாக இருப்பதால் இருக்கும் நண்பரே !

      Delete
  32. Replies
    1. இடையில் எனக்கு ஆகிவிட்டது பீதி! :D

      Delete
    2. நண்பரே அவரின் விளையாட்டுகளில் இதுவும்/வே ஒன்று !

      இதெல்லாம் நெறைய பாத்தாச்சு !

      இதான் டெக்ஸ் பக்கமே இருங்கன்னு சொன்னது !

      Delete
    3. // இதான் டெக்ஸ் பக்கமே இருங்கன்னு சொன்னது ! //
      ஆ.. இதென்ன டெக்ஸுக்கு Timing பார்த்து விளம்பரமெல்லாம் நடக்குது...

      டைகர் விளம்பரம்:
      மூக்கு உடைந்தாலும் அழகாகத் தெரிய வாங்குவீர்... டைகர் மார்க் கண்ணாடிகள்!

      Delete
  33. காக்கை வடை சுட்ட கதையில் வடையை சுட்டது யார் என்ற சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும். காக்கை வடை சுட்ட கதையை முதன்முதலாக சுட்டது யார்? Latestஆக சுட்டவர் யார்?;-)

    ReplyDelete
  34. ஈரோடு விஜய் அவர்களுக்கு அந்த புள்ளி விபர கடிதம் நான் எழுத வில்லை என்பதை அறிவித்து கொண்டு எழுதிய நண்பர் இங்கே பகிர்ந்தால் படிக்க ஆவலுடன் நானும் காத்து கொண்டு இருக்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன் .

    அஜய் பழனி சாமி அவர்களுக்கு எங்கள் போராட்ட குழுவின் சார்பாக " பொன்னாடையை" அளிக்க காத்து கொண்டு இருக்கிறோம் . எங்கள் போராட்டதிற்கு ஆசிரியர் மனம் இறங்க வில்லை எனினும் அஜய் அவர்களின் திறமைக்கு ஆவது மதிப்பளித்து " தொகுப்பை " வெளி இட ஆவன செய்ய வேண்டும் .

    டெக்ஸ் ரசிகர்களுக்கு மாபெரும் வேண்டுகோள் .அவரின் மதிப்பு நாம் அறிவோம் .டைகரின் ரசிகருக்கு நாம் பதிலுக்கு பதில் சொல்லி இந்த மாதம் " அநியாமாய் " டெக்ஸ் சாகசம் மறைந்து விட்டது .நாமும் ...,ஆசிரியரும் ..,பல பதிப்பகத்தாரும் உணர்ந்த " டெக்ஸ் " மகிமையை மற்றவர் உணராமல் போனால் இழப்பு நமக்கல்ல .எனவே எந்த " புலி " சீண்டினாலும் இனி நாம் அதை கடந்து செல்லுவோம் மௌனமாய் .

    சூப்பர் அறிவிப்பை காண ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்மா ?

    இன்னும் பெரிய சைஸில் # ஒரு வேளை அவர்கள் செய்தி தாளில் தான் " காமிக்ஸ் " படிப்பார்களா ..?

    ReplyDelete
    Replies
    1. // ஒருவேளை அவர்கள் செய்தி தாளில் தான் "காமிக்ஸ்" படிப்பார்களா..? //

      :D

      Delete
  35. //துப்பறிவாளர்கள் பட்டியலில் - நமது சோடாபுட்டி ஜெரோமின் சாகசங்கள் வண்ணத்தில் பிரெஞ்சு மொழியில் அழகாய் விற்பனையாகி வருவதை சமீபமாய் படைப்பாளிகளின் newsletter மூலம் அறிந்திட முடிந்தது ! வண்ணத்தில் மீண்டுமொரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்போமா சைக்கிளில் வலம் வரும் இந்த அலட்டலில்லா ஆசாமிக்கு ? //
    ஆசிரியர் அவர்களுக்கு , சார்
    வண்ணத்தில் மீண்டுமொரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்போமா ஜெரோமிர்க்கு ?
    என கேள்வி இருந்திருந்தால் சிலர் ஆகட்டும் பார்ப்போம் என வாக்களிக்க வாய்ப்பிருக்கிறது !

    ReplyDelete
    Replies
    1. //வண்ணத்தில் மீண்டுமொரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்போமா ஜெரோமிர்க்கு ?//
      ஆகட்டும் பார்ப்போம்

      Delete
    2. //வண்ணத்தில் மீண்டுமொரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்போமா ஜெரோமிர்க்கு ?//
      ஆகட்டும் பார்ப்போம்

      Delete
  36. ஆமையார் ஓகே சொன்னா SIDE EXCHANGE பண்ணி கேம் ஆடலாம் ........................

    ReplyDelete
    Replies
    1. // SIDE EXCHANGE பண்ணி கேம் ஆடலாம் //

      அப்பவும் அதே ரிசல்ட்தான் வரும்.

      அந்தந்த பதிவுக்கு Related-ஆக மட்டுமே பின்னூட்டங்கள் (games, jokes, விவாதம் etc) அமைந்தால் Disturbance ஆக தெரியாது என்று தோன்றுகிறது. Variety ஆகவும் இருக்கும் :D

      Delete
    2. // ஆமையார் ஓகே சொன்னா... //

      எனக்கு பயமா இருக்கு... :D

      Delete
  37. மாடெஸ்டி,ராபின்,மார்டின் போன்றஎங்களது மனம் கவர்ந்தவர்களை எப்போது சந்திக்க முடியும்

    என்று நாங்கள் எல்லோரும் ஆவலாக காத்திருக்க ...... அதை கண்டுகொள்ள மனமில்லாமல்

    கொஞ்சம் கூட சுறுசுறுப்பே இல்லாத ஜெரோமை கொண்டுவந்தால் என்ன? என்று கேட்பது

    என்ன நியாயமோ?ஜெரோமை மீண்டும் வாசிக்கும் அனுபவத்தை நினைத்தாலே பகிர் என்கிறது

    (இதற்கு டைகர் அட்டைபடமே தேவலாம்).....ஜெரோம் பூச்சாண்டியை மீண்டும்

    கொண்டுவரும் எண்ணமே தயவு செய்து வேண்டாம் சார் ப்ளீஸ்



    ReplyDelete
    Replies
    1. இந்த இந்தி காரர் சொல்றதும் யோசிக்கிற மாதிரி தான் இருக்கு ...:​-)

      Delete
  38. சுட்ட பிறகுதான் அது வடை , சுடுவதற்கு முன் அது வெறும் மாவுதான் . ஆக வடையை யாரும் சுட முடியாது . நேற்றிரவு என் கனவில் தோன்றிய அறிய சிந்தனை இது .

    ReplyDelete
  39. 0.80 million another 0.20 million to complete 1 million....

    ReplyDelete
  40. மிஸ்டர் மரமண்டை ....! என்னுடைய பதிவின் இடையே உங்களை வம்புக்கு இழுபதின் காரணம் உங்களின் பதிவுகள் எனக்கு பிடித்திருப்பது தான் . வெட்டித்தனம் இல்லாத நியாமான பதிவுகள் . உங்களின் அலசல் ரிப்போர்ட்டை கண்டிப்பாக பதியவும் .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி.. மிஸ்டர் சுந்தரமூர்த்தி !

      அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட் - தற்போது தோன்றிய சிந்தனை அல்ல. முன்பு ஒரு முறை தொடரும் ஒரு யாத்திரை ! பதிவில் நம் எடிட்டர் விஜயன் அவர்கள் - சமீபமாய் இங்கே நம் பதிவுகளில் நண்பர்களின் பங்களிப்பு வெறும் பார்வைகளோடு நின்று வருவது அப்பட்டமாய்த் தெரிகிறது. தினமும் சராசரியாய் 1500 பார்வைகள் என்றாலும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை கணிசமாய்க் குறைந்துள்ளதில் இரகசியம் ஏதுமில்லை தானே ? - இவ்வாறு எழுதியிருந்தார்.

      அன்று மேலோட்டமாக சிந்தித்தப்போது என் மனதில் நிழலாடிய எண்ணங்களே - நேற்றைய தினம் 'அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட்' - என்ற தலைப்பை திருடிச் சென்றது. அதை விரிவாக பதிவிட எத்தனித்தக்கும் போது உள்ளதை உள்ளபடி அல்லது நான் எண்ணியதை எண்ணியபடி பதிவிட வேண்டிய நிலை வருமானால் அது எனக்கு நன்மையை சேர்ப்பதாக அமையாது என்பது திண்ணம். இது நிற்க ;

      மேலும், தற்போது தொடரும் 300+ கமெண்ட்கள் - பெரும்பான்மையான வலைதள வாசகர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தாத நிலை தொடருமானால் மீண்டும் நம் வலைதளம் ஒருவித தொய்வை நிச்சயமாக எட்டும் என்பது என் கணிப்பு. [ அப்படி நடக்கா விட்டால் மிகவும் சந்தோஷமே ] அதுபோக இங்கே பதிவிடும் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதே நேரம் இங்கே பதிவிடாமல் தள்ளி நிற்கும் போது பழைய ஈர்ப்பு வருவதே இல்லை. இது போல் நிச்சயமாக இன்னும் பலருக்கும் இருக்கலாம் - இது போன்றதொரு நிலை இந்த வலைதள தொய்வுக்கு விரைவில் வழிவகுக்கலாம் என்பது என் கருத்து. இருந்தாலும் தற்சமயம் அதிரவைக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட்/ஐ எழுத ஆர்வமில்லை என்பதே உண்மையும் கூட. தங்களின் மாறாத அன்புக்கு இந்த பதிவே என் கைம்மாறாகட்டும் ..!

      Delete
    2. //சுவாரசியத்தை ஏற்படுத்தாத நிலை தொடருமானால் மீண்டும் நம் வலைதளம் ஒருவித தொய்வை நிச்சயமாக எட்டும் என்பது என் கணிப்பு.//
      சுவாரஸ்யத்தை கூட்ட எண்ண செய்யலாம் !
      மேலும் இங்கே வரும் நண்பர்கள் யாரும் ஆசிரியர் பதிவை மட்டுமே படிக்கிறார்கள் போலும் ! தங்கள் எண்ணங்களை தெரிவிக்க தயங்குகிறார்கள் ! ஏன் ?
      இந்த தளம் தமிழ் காமிக்ஸை விரும்பி, நேசிப்பவர்களுக்கு சொந்தமானது .....இதில் தங்கள் கருத்தை தெரிவிக்க விரும்பும் நண்பர்கள் சோம்பல் படாமல் ,கூச்ச படாமல் ஒளிவு மறைவின்றி எண்ணங்களை அறிவித்தால் ஆசிரியருக்கும் ஒரு நிலை பாட்டை எடுக்க உதவுமே !
      நான் என்ற எண்ணம் யாருக்கும் உதவாது அல்லவா ! ஏன் , தான் என்ற எண்ணம் கொண்டவருக்குமே ......

      Delete
    3. இந்தத் தளத்தில் புதியவர்களுக்கு வரவேற்பு குறைவு தான். இங்கு பெரும்பாலோனோர் வலைத் தளத்துக்கு வெளியிலும் சந்தித்துப் பேசி பரிச்சயம் ஆனவர்கள். கிண்டல், நையாண்டி என்று நண்பர்கள் போல் தமக்குள் உரையாடுவது போல், புதியவர்களுடன் உரையாடுவது அவர்களுக்கும் கஷ்டமாகவே இருக்கும். இங்கு பின்னூட்டங்கள் வளர்வது பெரும்பாலும் இப்படியான நண்பர்களுக்கு இடையேயான கருத்துப் பரிமற்றங்களாலே தானே! புதியவர்கள் ஓரிரு பின்னூட்டங்களுக்கு மேல் பதியாமல் இருப்பது இதனால் தான்.

      Delete
  41. //மேஜிக் வின்ட் -- நினைவினை இழந்த செவ்விந்தியன்..
    இவர்தான் அவரா?//

    இந்த கேள்வியை நண்பர் ரமேஷ் முகநூலில் கேட்டுள்ளார்

    ReplyDelete
  42. Dear Vijayan sir,

    I too liked Detective Jerome stories. Please publish Jerome stories. Thanks.

    Regards,
    Mahesh

    ReplyDelete
  43. புதிய குதிரை நாயகர்.....Buddy Longway ?

    ReplyDelete
  44. டெக்ஸ் VS டைகர் இந்த அளவுக்கு காமிக்ஸ் ரசிகர்களை வீறு கொள்ளவைக்கும் என ஆசிரியர் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்! இது ஒரு நல்ல பாடம்!

    அதே நேரம் கடந்த இரண்டு மாதமாக சோம்பிகிடந்த நமது காமிக்ஸ் தளத்தை இந்த தலைப்பு சுறுசுறுப்பாகிவிட்டது! இது நல்ல விஷயம் அல்ல! என்னை பொறுத்தவரை கருத்து பரிமாற்றம் இல்லை என்றாலும் வலைத்தள நண்பர்களிடம் மனகசப்பு வரகூடாது, முக்கியமாக கடந்த முறை ஆசிரியர் ஒரு முழு பதிவை தூக்கிய கருப்பு தினம் மீண்டும் வேண்டாம். ஆசிரியர் கருத்து/போட்டிகளை வைக்கும் போது இவைகளை மனதில் கொள்வது நலம்!

    நமது தளத்திற்கு புதிதாக வரும் நண்பர்கள் இவற்றை பார்த்தால் ஆசிரியரே இது போன்ற நிகழ்வுகளை விரும்புகிறார் என்ற தவறான எண்ணம் வர வாய்ப்புகள் அதிகம்.

    ReplyDelete
  45. ஆகவே... வாக்காளப் பெருமக்களே,உங்களது பொன்னான வாக்குகளை ஜெரோமின் 'சோடா புட்டி' சின்னத்தில் வாக்களித்து அவரைப் பெருவாரியான வெற்றிபெறச் செய்யுமாறுத் தங்களை இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கின்றேன்.

    கள்ள ஓட்டுப் போடுவோர் மேடைக்குப் பின்புறம் வந்து 'தேவையானதை' பெற்றுச் செல்லுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்...

    ReplyDelete