Thursday, July 11, 2013

ஆடிக்கு முன்பே ஒரு offer !

நண்பர்களே,

வணக்கம். 100-வது பதிவின் சந்தோஷம்  + ANS விமர்சனங்களென   இவ்வார நாட்கள் அனைத்துமே supercharged ஆக இருந்துள்ளன !  ஒரு இதழை சிறப்பித்திட "பெரிய பெயர்கள்" அவசியமன்று -நல்ல கதைகள் இருந்தாலே போதுமென சந்தேகமறப் பதிவு செய்துள்ளீர்கள் guys ! Many many thanks ! வலைக்கு அப்பாலுள்ள நம்  "கடுதாசி நண்பர்களும் " இந்த இதழுக்கொரு thumbs up கொடுக்கும் பட்சத்தில் - முழு நிறைவாக இருக்கும் ! இந்தப் பக்கங்களுக்குள் நுழைந்தாலே, உங்களின் positive energy மின்னலாய்த் தொற்றிக் கொள்கிறது - மாயாவிக்குள் மின்சாரம் பாய்வது போல் ! மௌனப் பார்வையாளர்களாய் இருந்திடப் பிரியப்பட்டிருந்த  நண்பர்களையும் களத்திற்கு ஈர்த்து வந்துள்ள பெருமை உங்களின் இந்த அசாத்திய நேசத்திற்கும் , காமிக்ஸ் மீதுள்ள உங்களின் வற்றாக் காதலுக்குமே சாரும் guys  ! Awesome !! 

And to all our new entrants - welcome guys to our Lion's Club ! (கார்த்திக்கின் குரலில் ; கிரீன் மேனரின் பட்லர் தாமசின் modulation -ல் :-))

பொதுவாக ஒவ்வொரு முறையும் தொடரும் 3 மாதங்களுக்கான கதைகளின் review  ; மொழிபெயர்ப்புப் பணிகள் என்று திட்டமிடுவது வழக்கம். அவ்வேளைகளில் முதலில் தலைக்குள்ளே தோன்றுவது : 'லார்கோ ? டைகர் ? லக்கி லூக் ? ' டெக்ஸ்? ' என்ற "முரட்டுக் கைகளின் " பெயர்களே..! ஆனால் - சென்றாண்டின் கடைசிப் பகுதியினில் பாரிசில் நம் படைப்பாளிகளைச் சந்தித்து, அவர்களது சேகரிப்பிலிருந்து கைக்குச் சிக்கிய சாம்பிள்களை எல்லாம் வாங்கி பைக்குள் அடைக்கும் ஒரு தருவாயில் கவனத்தை ஈர்த்த GREEN MANOR - மௌனமாய் என்னுள் ஒரு முத்திரை பதித்திருந்தது. அன்று முதல் ஒவ்வொரு quarter -க்கான(!!!) கதைத் தேர்வுகளின் போதும் -  'இதனை எப்போது ரிலீஸ் செய்யலாம் ?' என்ற எண்ணம் மேலோங்கியே இருக்கும் ! ANS அதற்கொரு வாகான சந்தர்ப்பம் தந்திட,மீதச் சங்கதிகள் தான் நாம் அறிவோமே ?! என்ன தான் கதைகள் மாறுபட்டு இருந்தாலும், இந்தச் சிறுகதைப் பாணியை எவ்விதம் ஏற்றுக் கொள்வீர்களோ என்ற லேசான மிரட்சி என்னுள் இருந்தது நிஜமே ! But விரிவாகும் நம் ரசனைகளின் எல்லைகளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்லவென்று மண்டையில் ஒரு குட்டு வைத்தாற் போல பதிவு செய்துள்ளீர்கள் ! 

சென்ற பதிவில் பின்னூட்டங்கள் 300-ஐத் தாண்டி விட்டதால்- அங்கு மேற்கொண்டு கருத்துக்களைப் பகிர்வது செல்போன் மூலம் பங்கேற்கும் நண்பர்களுக்கு மிகச் சிரமம் என்பதாலும், Kaun Banega Translator - 2-ன் இரண்டாமிட மொழிபெயர்ப்பை வெளியிட ஜகா வேண்டும் என்பதாலும், ஒரு புதிய பதிவை துவக்குவோமே என்று தோன்றியது !  So - ஒன்றுக்கு ஒன்று free என்ற ஆடி மாத பாணியிலான இணைப்பாக ; ANS பற்றிய பதிவின் தொடர்ச்சியாக - இப்பதிவைப் பார்த்திடலாம் !மேற்கொண்டு எழுத நான் அவகாசம் எடுத்துக் கொள்ளுமுன் நண்பர் சூப்பர் விஜயின் மொழியாக்கத்தை இங்கே upload செய்து விடுகிறேனே ? விஜய்யின் கையெழுத்தும் அழகாகவே உள்ளதால் - அதனை ஒரு முறை டைப்செட் செய்வதற்குப் பதிலாய் 'அப்படியே' வலையேற்றி உள்ளேன் ! படிக்க சிரமமாக இருப்பின், நாளை தட்டச்சு செய்யப்பட பிரதியினை இங்கு சரி செய்து விடலாம் ! இதோ : ALL NEW SPECIAL -ல் பக்கம் 34-40 வரையிலான கதைக்கு இன்னுமொரு மொழிபெயர்ப்பு !  







ஆபீஸ் ரூமை ஒதுக்கும் போது கிட்டியது ! 15 ஆண்டுகளுக்கு முந்தைய வாசகப் படைப்பு ! ஊரின் பெயரைக் கவனியுங்களேன் ! 
NBS -க்குப் பின்னதாக எங்களை நிறையவே வேலை வாங்கிய இந்த ANS -ன் making -ல் நிறையவே சுவாரஸ்யம் இருந்தது ! ஜாலியாய் அதைப் பற்றியும் இங்கே பங்கிட்டாலென்னவென்று தோன்றியது :

அட்டைப்படம் வடிவமைக்கும் பணி எப்போதுமே ஏகப்பட்ட நேரம் விழுங்கும் ஒரு வேலை. நமது டிசைனர் பொன்னன் இன்ன பிற வேலைகளுக்கு மத்தியில் ; எனது எண்ணற்ற போன் நினைவூட்டல்களுக்கும், தளரா நடை போடும் மைதீனின் நச்சரிப்புக்குமிடையே ஒரு டிசைனைப் போட்டுக் கொடுப்பது ; பின்னர் அதில் நான் 108 மாற்றங்கள் சொல்வதென இழுக்கும் ஜவ்வு மிட்டாய்ப் படலம்.

டயபாலிக்கின் பின்னட்டைப்பட டிசைனினில் அமர்க்களம் செய்திருந்த நமது வாசக நண்பர் ஷண்முகசுந்தரம், ANS அட்டைப்படப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள ஆர்வமாய் இருந்ததால், நானும்  சந்தோஷமாய் தலையாட்டினேன். நண்பரும் வெகுத் துரிதமாய்,  அழகாய் ஒரு ராப்பரை அனுப்பி இருந்தார் (பக்கம் : 5-ல் வரும் அந்தப் பச்சைப் பின்னணிக் குதிரை வண்டி டிசைனோடு ) ; ஆனால் அவரது வழக்கமான super duper பாணிக்கு ஒரு மாற்று கம்மியாக அந்த டிசைன் இருப்பது போல் எனக்குப் பட்டதால், இன்னும் ஒரு முயற்சி செய்து பார்ப்போமே என்று அபிப்ராயப்பட்டிருந்தேன். ஆனால் நண்பரின் பணிச் சூழல் அவருக்குப் போதிய அவகாசத்தை வழங்காததால் - அவரை மேற்கொண்டு சிரமத்திற்கு ஆளாக்க வேண்டாமே என பொன்னனின் கதவுகளில் மத்தளம் தட்டத் தொடங்கினோம் !
நண்பர் ஷண்முகசுந்தரத்தின் stylish ஆனதொரு  முயற்சி ! 
பொன்னனுக்கு இந்த GREEN MANOR கதாப்பாத்திரங்களைப் பார்க்கும் பொது கோமாளிகளைப் போல் தோன்றியதோ என்னவோ - கௌபாய் ரெட் டஸ்ட் -க்கு முன்னட்டைக்கு promotion கொடுத்து  வித விதமாய் போஸ் கொடுக்கச் செய்திருந்தார் ! சமீப மாதங்களாய் கௌபாய் கதைகளின் ஆதிக்கம் மிகுந்து வரும் வேளையில், ANS இதழிலும் ஒரு குதிரைக்கார ஆசாமி அட்டையில் வேண்டாமே என தோன்றியது எனக்கு ! அப்புறமே கிரீன் மேனரின் butler-ஐ அட்டைக்குப் பயணமாக்கினோம் ! பாருங்களேன் சில முயற்சிகளை :




டிசைன் # 3 - ஒரிஜினலின் ஈயடிச்சான் காப்பி என்பதாலும், சற்றே dull வர்ணங்களில் இருக்கும் சங்கதி என்பதால்  - அச்சில் இன்னமும் அழுத்தம் கூடும் போது ரொம்பவே இருண்டு விடுமென்று எனக்குப் பட்டதால் - பின்னணியை 'பளிச்' வர்ணமாய் மாற்றிடச் சொன்னேன். கதையின் தலைப்பிற்கேற்ப பச்சையாய் மாற்றிட தோன்றியது தான் - ஆனால் Vivid Green எனும் தனிப் பச்சை மசியைக் கொண்டு எக்ஸ்ட்ராவாக ஒரு கலர் அச்சிடாவிட்டால் - நாம் எதிர்பார்க்கும் richness கிடைக்காது என்பதே சிக்கல் . (வழக்கமான அச்சுப் ப்ராசசில் மஞ்சள் + ப்ளூ கூட்டணியில் கிடைக்கும் கலவையே - பச்சை நிறம் ). So bright red திரைசீலைகளின் மத்தியில் கொலை உபகரணங்களோடு butler காட்சி தந்ததன் பின்னணி இதுவே !

அட்டைப்பட கூத்து நடந்தேறும் வேளையில் -சென்றாண்டு ஆண்டுமலரின் ராப்பரில்  'பர்த்டே லயன்'  இடம்பெறாது போய், நான் டின் வாங்கிய அனுபவம் திடு திடுப்பென நினைவுக்கு வந்ததால் - விடாதே-புடி என்று திருவாளர் சிங்கத்தையும் அட்டையில் இணைத்தோம் ! செய்யும் பணிக்குப் பணம் பெறுகிறார் என்ற போதிலும், நமது 'ஒரே இரவில் ஒரு லட்சம் மாற்றங்கள் ' பாணியை முகம் சுளிக்காது ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டார் பொன்னன் என்றே சொல்ல வேண்டும் :-)

316 comments:

  1. //ஆபீஸ் ரூமை ஒதுக்கும் போது கிட்டியது ! 15 ஆண்டுகளுக்கு முந்தைய வாசகப் படைப்பு ! ஊரின் பெயரைக் கவனியுங்களேன் !
    //

    ஜெயன் என்கிற பெயர் பரிச்சயமான ஒன்றாகவே இருக்கிறது.

    லயன் காமிக்ஸ் இதழ் ஒன்றினில் இவர் நீண்ட கடிதம் ஒன்றை எழுதியதாகவும் நினைவு.

    ReplyDelete
    Replies
    1. King Viswa : அவரது கையெழுத்து மாத்திரமே எனக்கு முன்பு பார்த்த ஞாபகத்தைத் தருகிறது ! இந்நண்பர் இன்னமும் நம் வாசகரா தெரியவில்லை !

      எங்கிருப்பினும், என்றோ சொல்லி இருக்க வேண்டிய பாராட்டுக்களை இப்போது அவருக்கு உரித்தாக்குவோம் !

      Delete
  2. // கார்த்திக்கின் குரலில்; க்ரீன் மேனரின் பட்லர் தாமஸின் modulation-ல் //

    ஹா ஹா ஹா! அதற்குள்ளாக எப்படி சார் தெ(பு)ரிந்து கொண்டீர்கள்? லயன் க்ளப்பும் 'க்ரீன் மேனர்' போன்றதே என்று இந்த வரிகளின் மூலம் தெளிவாகப் புரியவைத்துவிட்டீர்களே! ஹா ஹா ஹா!

    கார்த்திக்கின் பதிலென்னவோ? :)

    ReplyDelete
    Replies
    1. @ Erode VIJAY:
      முதலில் ஆசிரியர் ஏன் இப்படி எழுதினார் என்பது மற்றவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக, ஒரு மீள்பதிவு. அதைத் தொடர்ந்து என் பதில் வெளியாகும்! ;)

      ------------------------------------------------------------
      *** 1 ***
      ஆதி தாமிரா has left a new comment on the post "நம்பர்களும் ..,நண்பர்களும்...!":

      வயது ஏழுகழுதை ஆகிறதால், வழக்கமாக கொஞ்சம் கெத்தாக வாசித்துவிட்டு மட்டும் போய்விடுவேன். ஆனால் பின்னூட்டங்களில் நண்பர்களின் உற்சாகமும், எடிட்டருடனான விளையாட்டும் ஒரு குதூகலத்தைத் தருகிறது. இனியும் உற்சாகத்தை அடக்கிக்கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இனி நானும் பின்னூட்ட விவாதங்களில் கலந்துகொள்ளலாம் என்று இருக்கிறேன். என்னையும் ஆட்டைக்கு சேர்த்துக்கொள்ளுங்கள் நண்பர்களே..

      ------------------------------------------------------------
      *** 2 ***
      Karthik Somalinga has left a new comment on the post "நம்பர்களும் ..,நண்பர்களும்...!":

      @ ஆதி தாமிரா
      //வயது ஏழுகழுதை ஆகிறதால், வழக்கமாக கொஞ்சம் கெத்தாக வாசித்துவிட்டு மட்டும் போய்விடுவேன்.//
      இப்படியே பல பேரு விறைப்பாக சுத்தறாங்க பாஸ்! :) நீங்க நிறைய மிஸ் பண்ணிட்டீங்க! Welcome to the Lion's club (இதுவும் கிட்டத்தட்ட க்ரீன் மேனர் க்ளப் மாதிரிதான்.. ஹீ ஹீ ஹீ!).

      ஹாஸ்யதைத் தவிர்த்து பார்த்தோமானால், நம்மைப் போன்ற நடுத்தர வயது இளைஞர்களின்(!) தயக்கமற்ற பங்களிப்பும், கலந்து கொள்ளல்களுமே காமிக்ஸ் என்பது குழந்தைகளுக்கானது மட்டும் அல்ல என்ற உண்மையை பிற வளர்ந்த குழந்தைகளுக்கு உணர்த்தி அவர்களையும் இங்கு அழைத்து வரும்!

      ------------------------------------------------------------
      *** 3 ***
      Erode VIJAY has left a new comment on the post "நம்பர்களும் ..,நண்பர்களும்...!":

      @ ஆதி தாமிரா

      த்சொ! நல்ல எழுத்துத் திறமையை வச்சுக்கிட்டு இத்தனை நாளும் சைலண்ட்டா இருந்துட்டீங்களே!

      @ கார்த்திக்

      // இதுவும் கிட்டத்தட்ட க்ரீன் மேனர் க்ளப் மாதிரிதான் //

      ஹா ஹா ஹா!
      அப்படீன்னா இங்கே அந்தப் பெரியவர் தாமஸ் பிலோ யாருன்னு கொஞ்சம் சொல்றீங்களா? :)

      ------------------------------------------------------------
      *** 4 ***
      Karthik Somalinga has left a new comment on the post "நம்பர்களும் ..,நண்பர்களும்...!":

      @Erode VIJAY
      //அப்படீன்னா இங்கே அந்தப் பெரியவர் தாமஸ் பிலோ யாருன்னு கொஞ்சம் சொல்றீங்களா? :) //

      யாருக்கு தெரியும் பாஸ்?!

      1. அவரு அவலத்தில் குதூகலம் கொள்ளாத பைரன் மாதிரியான நல்ல ஆசாமியாக இருக்கலாம்!

      அல்லது...

      3. 'சிறு கொலையும் கைப்பழக்கம்' கதையில வர்ற ஜான் ஸ்மித் மாதிரியான ஆளாக கூட இருக்கலாம்!! ஒரே பெயரின் கீழ் உலவும் பல மனிதர்கள்! ;) ;)

      4. இரசித்துக் கொல்ல வேண்டுமில் வருவதைப் போல ஒரு காமெடி இரட்டையராக இருக்கலாம்!

      5. நிஷ்டூர தண்டனையில் வருவதைப் போன்ற கர்ண கஷ்டூரமான செல்வந்தராக இருக்கலாம்! :)

      6. போதையில் வந்த போதனையில் வரும் திடீர் கொலைகாரராக இருக்கலாம்!

      ...
      ...
      ...
      ...
      ...

      அவ்வளவு ஏன் அந்தப் பெரியவர் நீங்களாகவே கூட இருக்கலாம்!

      அட இரண்டாவது கதை விட்டுப் போச்சு இல்ல?!

      ஒரு பின்குறிப்பு: டுமீல்

      ஒரு பின்குறிப்பின் பின்குறிப்பு: மேற்கண்ட 'டுமீல்' விஜய் என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்ட போது எழுத சப்தமாகும்!

      இப்போதைக்கு கதவடைக்கும் நேரமாகி விட்டது ஜென்டில்மென்! லயன்ஸ் கிளப்பின் கதவுகள் மீண்டும் திறக்கும்! அடுத்த பதிவில்!!! :)

      ------------------------------------------------------------
      *** 5 ***
      Erode VIJAY has left a new comment on the post "நம்பர்களும் ..,நண்பர்களும்...!":

      :D

      ஊப்ஸ்! க்ரீன் மேனரின் மொத்தக் கதைகளையும் மனப்பாடம் பண்ணிட்டீங்க போலிருக்கே?!!!!!!! ஒரு மூலை முடுக்கு விடாம எல்லோரைப் பத்தியும் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே?!!!
      அ..அப்படீன்னா... அ..அந்தப் பெரியவர்... அடக்கடவுளே!!

      ------------------------------------------------------------
      *** 6 ***
      Karthik Somalinga has left a new comment on the post "நம்பர்களும் ..,நண்பர்களும்...!":

      அந்தப் பெரியவர்...
      ...
      ...
      ...
      ...
      ...
      இந்தக் கதையை வெளியிட்டு நம்மை எல்லாம் ரசித்துப் படிக்க வைத்... ஆ.. ஆ...

      டுமீல்.. டுமீல்..

      அசரீரி: சில உண்மைகள் வெளியாகும் முன்னரே கொலையாகி விடுகின்றன! :)

      பின் அசரீரி: புத்தகம் கையருகே இருக்கும் போது அதைப் பார்த்துப் பார்த்து எழுதுவது ஒன்றும் பெரிய கலை இல்லையே?! :)

      டுமீல், டுமீலுக்கு முன்னாடியே எப்படி 'ஆ.. ஆ..' வந்துச்சுன்னு கேக்கக் கூடாது, டப்பிங் ப்ராப்ளம்! ;)

      ------------------------------------------------------------

      Delete
    2. @Erode VIJAY:

      *** 4 *** பகுதியில் உள்ள இந்த வசனத்தை கவனியுங்கள்:
      //இப்போதைக்கு கதவடைக்கும் நேரமாகி விட்டது ஜென்டில்மென்! லயன்ஸ் கிளப்பின் கதவுகள் மீண்டும் திறக்கும்! அடுத்த பதிவில்!!! :)//
      இதைத் தொடர்ந்து, ஆசிரியரின் அடுத்த பதிவு உடனே வெளியானது கவனித்தீர்களா?! இப்போது புரிகிறதா?! ;)

      //கார்த்திக்கின் குரலில் ; கிரீன் மேனரின் பட்லர் தாமசின் modulation -ல் :-))//
      மேலே உள்ள ஆசிரியரின் வரிகளை மனதில் இருத்துங்கள்! குறிப்பாக "modulation" என்ற சொல்லை!

      *** 6 *** பகுதியில் உள்ள என்னுடைய கமெண்டையும் பாருங்கள்:
      //ஆ.. ஆ...
      டுமீல்.. டுமீல்..
      டுமீல், டுமீலுக்கு முன்னாடியே எப்படி 'ஆ.. ஆ..' வந்துச்சுன்னு கேக்கக் கூடாது, டப்பிங் ப்ராப்ளம்! ;)//

      இதன் மூலம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், பட்லர் அவர்களுக்கு தொண்டையில் கிச்சு கிச்சு இருந்ததால் அவருக்காக நான் டப்பிங் மட்டுமே கொடுத்துள்ளேன்! ஹி ஹி ஹி... :)

      அந்த பட்லரின் பெயர்...
      ...
      ...
      ...
      ...
      ...
      வேறு யார்? நம்ம, டெஸ்மாண்ட் அங்கிள்தான்!

      me the escape! :)

      Delete
    3. @ karthik

      ஹா ஹா ஹா! Very clever!

      உலகின் எந்த மூலைக்குப் போய் நாஜிக்களிடம் மாட்டினாலும் யார் உதவியும் இல்லாமலேயே தப்பிப் பிழைச்சுக்குவீங்க! :)

      Delete
  3. Super Vijay க்கு வாழ்த்துக்கள்! ஆசிரியரின் எதிர்பாரா பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  4. Green Manor உண்மையிலேயே நல்ல முயற்சி! மனித மனங்களின் இருண்ட பக்கங்களை தோலுரித்து காட்டியது!குறிப்பாக Green manorல் 1st கதையின் climax! உயிரோடு இருபவர்களையும் மரணத்தின் நிழல் பின்தொடர்வதை உணர வைக்கிறது! ALL NEW SPECIAL 100% SUCCESS! மற்ற கதைகளை நிதானமாக படித்து வருகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : எல்லாக் கதைகளையும் படித்து முடித்து விட்டுச் சொல்லுங்களேன் !

      Delete
  5. @சூப்பர் விஜய்:
    'தோட்டத்தில பாத்தி கட்டி பாத்திருக்கேன்... பாத்திருக்கேன்...!' என்ற சங்கத் தமிழ் பாடலை நினைவுறுத்தும் வகையினிலே A4 தாளில் குளமே வெட்டி இருக்கிறீர்கள்! :)

    நல்ல முயற்சி (பாத்தி கட்டியதை சொல்லவில்லை!). மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே!!

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : இம்முறை நண்பர்கள் எடுத்துக் கொண்டுள்ள சிரமங்கள் நிஜமாகவே மிக அதிகம் !

      அருப்புக்கோட்டை டாக்டர் சரவணன் ; புதுவை செந்தில் ; மற்றும் பரிமேலழகன் சார் (துணைவியாரின் உதவியோடு!!) சித்திரங்களுக்குள்ளேயே கையால் எழுதி / டைப்செட் செய்து அனுப்பி இருந்தனர் ! நண்பர் கோவை ரவீந்திரன் இன்னும் ஒரு படி மேலே போய், Green Manor அறிமுகப் பக்கங்களையும் சேர்த்து மொழிபெயர்த்து, அனைத்தையும் வண்ணப் printout எடுத்து அனுப்பி இருந்தார் ! நண்பர் ஆதி தாமிரா - மொழிபெயர்ப்போடு - கதைக்கான தலைப்பு suggestions ; ஒரு முன்னுரை என்றெல்லாம் பிரமாதப்படுத்தி இருந்தார் !

      இம்முறை கிட்டிய response எண்ணிக்கையில் பெரிதாய் இல்லாவிடினு, தரத்தில் awesome ! Great show guys !

      Delete
    2. டியர் விஜயன் சார்,
      வியக்க வைக்கும் முயற்சிகள்தான்! காமிக்ஸ் மீதான நண்பர்களின் ஈடுபாட்டை வெளிச்சம் போட்டு காட்டுகிறது! KBT2-வில் பங்கேற்ற இந்த நண்பர்களின் முயற்சிகளில் இருந்து நீங்கள் ரசித்த பகுதிகளை / வசனங்களை / தலைப்புகளை ஒரு தனிப் பதிவாக இடலாமே?! அவர்களுக்கும் அது உற்சாகமூட்டும் அல்லவா?!

      Delete
  6. எதிர்பாரா பதிவு! நண்பர் சூப்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள். வாசகரின் ஓவியம் பிரமாதம். வர்ணங்களை சிறிது மெருகேற்றினால் ஒரு அட்டைப்பட டிசைன் ரெடி!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விஜயின் சூப்பர் கட்டங்கள் and சூப்பர் கட்டங்கள்

      Delete
  7. செல்போன் மூலம் படிப்பவர்களுக்காக #நன்றி விஜயன் அங்கிள்

    ReplyDelete
    Replies
    1. thinaharan natham : தமிழில்..ஆங்கிலத்தில்...ஹிந்தியில்...ஏன், உலக மொழிகளில் - 45+ ஆசாமிகளுக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை : அங்கிள் !!!

      Delete
    2. டியர் விஜயன் சார்,

      அகவைகளில் 35 ஐ விரைவில் கடக்கவிருக்கும் என்னையே, காலேஜ் பைனல் படிக்கும் ஒரே காரணத்தால் தன்னை ஒரு யூத் என்று கற்பனை செய்து கொள்ளும் ஒரு தடிப்பயல் சமீபத்தில் என்னை 'இப்படி' அழைத்து பயங்கர கடுப்பேற்றினான்! உங்கள் வேதனையை உணர முடிகிறது! :(

      @தினகரன் அங்கிள்:
      ஏன் இந்த கொலைவெறி?! :)

      Delete
    3. @ கார்த்திக்

      ஒரு தடிப்பயல் 'அப்படி' அழைத்ததையே உங்களால் தாங்க முடியவில்லையே; என்னை 'அப்படி' அழைத்ததோ ஒரு இளம் பெண்! நான் பட்ட துயரங்களையும், வேதனைகளையும் எந்த கிராபிக் நாவல் கொண்டு வடிப்பது? சொல்லுங்கள்! :-(

      Delete
    4. //என்னை 'அப்படி' அழைத்ததோ ஒரு இளம் பெண்!//
      நல்ல விஷயம்தானே விஜய்?! 'அப்படி' அழைத்து விட்டு 10 ஆண்டுகள் கழித்து அதே அங்கிளுடன் டூயட் பாடுவது தமிழ்நாட்டில் சகஜம்தானே?! ;)

      Delete
    5. இளம் பெண்ணா.... வயசு நாற்பது இருக்குமா ...?

      ஒரு வேளை ''கும்'' இருட்டில் பார்த்து இருப்பீங்களோ
      இருட்டு கூட உங்களுக்கு ''கும்''முன்னு தான் தோணும்

      எதுக்கும் கண் மருத்துவர் ஆலோசனை தேவை ......

      பாருங்கையா பூனைக்கெல்லாம் கிராபிக் நாவல் கேக்குதாம் .

      Delete
    6. Karthik & Erode Vijay : Why blood ? Same blood !

      Delete
    7. // ஒரு தடிப்பயல் 'அப்படி' அழைத்ததையே உங்களால் தாங்க முடியவில்லையே; என்னை 'அப்படி' அழைத்ததோ ஒரு இளம் பெண்! நான் பட்ட துயரங்களையும், வேதனைகளையும் எந்த கிராபிக் நாவல் கொண்டு வடிப்பது? சொல்லுங்கள்! :-( //

      Ha ha ha - ஆபீசுல சத்தமா சிரிக்க முடியல்ல - நல்ல காமெடி.

      Delete
    8. @ v. Karthikeyan

      அடுத்தவர் வேதனையில் இன்பம் கானும் நீங்களும் 'க்ரீன் மேனர் க்ளப்' அங்கத்தினர்களில் ஒருவர் என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது! :)
      விரைவிலேயே ஒரு மிக மிக அழகான இளம்பெண் உங்களை "அங்கிள்" என்றோ, "ஏங்க பெரியவரே" என்றோ அழைக்கக்கடவது! :)

      Delete
    9. Even our editor used to call us PAZHANGAL...what about this guys? Ha...Ha...

      Delete
    10. // அடுத்தவர் வேதனையில் இன்பம் கானும் நீங்களும் 'க்ரீன் மேனர் க்ளப்' அங்கத்தினர்களில் ஒருவர் என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது! :) //

      'க்ரீன் மேனர்' கதை இன்னும் படிக்கவில்லை, ஆனால் உங்க கமேண்டுலேந்து அந்த கிளப் உறுபினர்கள் நலவர்கள் இல்லை என்று தெரிகிறது. :)

      //விரைவிலேயே ஒரு மிக மிக அழகான இளம்பெண் உங்களை "அங்கிள்" என்றோ, "ஏங்க பெரியவரே" என்றோ அழைக்கக்கடவது! :) //

      "ஏங்க பெரியவரே" -- கொஞ்சம் too much :)

      Delete
    11. @ கார்த்திக் & All
      நம்ம (தமிழ்நாட்டுல) ஊருல வயசுல பெரியவங்கள அண்ணாச்சி இல்ல அண்ணன்னு சொல்லுவாங்க ஆனா (பெங்களூர்) இங்க எல்லாரையும் அங்கிள்-இன்னு சொல்லுறாங்க! சமிபத்தில் 50 வயசு பானி பூரிகாரன் என்னை அங்கிள் இன்னு சொன்ன போது சிரிப்புதான் வந்தது :-)

      Delete
    12. //ஒரு தடிப்பயல் 'அப்படி' அழைத்ததையே உங்களால் தாங்க முடியவில்லையே; என்னை 'அப்படி' அழைத்ததோ ஒரு இளம் பெண்! //

      ஒய் பிளட்...? சேம் பிளட் ......அதுவும் என்னை அழைத்தது ஹவுஸ் ஓனரின் மகள் வேறு........ஒன்றும் செய்ய முடியாமல் நம்பியார் போல கையைப்பிசைந்த கொடுமை இருக்கிறதே..........

      Delete
  8. கிரீன் மனோர் படிக்கதெரியாமல் படித்தேன்.............ஒவ்வொன்றும் ஒவ்வொறு கதையா.?........எல்லாத்தையும் படிச்சுட்டு என்னடா ஒண்ணும் புரியலன்னு குழம்பிட்டேன் .........நடுவில சுதாரிச்சாச்சு .............


    மந்திரி மதிஇல்லாதவர் தானே.

    ReplyDelete
    Replies
    1. அந்நியன்,அம்பி,ரெமோ மந்திரி : உங்களுக்குத் துணைக்கு ஆளுண்டு ; கவலை வேண்டாம் ! முதல் முறையாக (ஆங்கிலத்தில்) இந்தத் தொடரைப் படித்த போது, நானும் கொஞ்ச நேரம் 'திரு திரு'வென முழித்தது இன்னமும் நினைவுள்ளது !

      Delete
    2. வாங்க சார் வாங்க .........நீங்க தான் அந்த கலிபா ராஜாவா .....?

      Delete
  9. வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!

    விஜயன் சார், உங்களுடைய அதிரடி அறிவிப்புகள் உற்சாகம் கொள்ள வைத்தன. ரொம்ப நாள் கழித்து தீபாவளியை எதிர்பார்க்க வைத்தன டெக்ஸ் வில்லரின் "அந்த" சைஸ் புத்தக அறிவிப்பு.

    என்னுடைய நீண்ட நாள் கோரிக்கையை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்-
    லக்கி லூக்கின் பூம் பூம் படலத்தை முழு வண்ணத்தில் மறுபதிப்பாக வெளியிடுங்கள் சார். இதனுடன் உங்களை நினைவுபடுத்தும் "புரட்சி தீ"-யையும் இணைத்து வெளியிடலாமே?

    ReplyDelete
    Replies
    1. Sankar C : அதென்ன சார் - புரட்சித் தீக்கும் அடியேனுக்கும் சம்பந்தம் ? ஆஹா..புதுசா இருக்கே..?

      Delete
    2. என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்? புதிய முயற்சிகளை செய்வதில் புரட்சி தீ "ஹோரஸ்"-க்கு எந்த விதத்திலும் நீங்கள் சளைத்தவரில்லையே?

      Delete
    3. உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்(பேன்)போம். என்ன நண்பர்களே?

      Delete
    4. நானும் ஏற்கனவே சொல்ல நினைத்திருந்தேன், சிங்கத்தின் சிறு வயதில் படிக்கும் பொது தாங்கள் புத்தக சைசில் அடித்த பல்டிகள் ஹோராசை நினைவிக்க தவறவில்லை!

      Delete
    5. //உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்(பேன்)போம். என்ன நண்பர்களே?//
      உண்மை அனைத்து முயற்ச்சிகளும் எங்களை மகிழ்விக்கதானே, துணை நிற்போம் என்பதனை விட, தொடர்வோம்!

      Delete
    6. '' புர‌ட்சித்தீ '' கதையும் பத்திரிக்கை நடத்துவதில் உள்ள சிரமங்களைக்கூறும் கதைதானே? காமிக்ஸாகவே இருந்தாலும் நீங்களும் பத்திரிக்கையாளர்தானே சார்?

      Delete
  10. டியர் விஜயன் சார்,

    எனது எழுத்துக்களை எனக்கு பிடித்த காமிக்ஸ் இதழிலேயே வாசிப்பது என்பது மிகவும் த்ரில்லிங்கான அனுபவமாக இருந்தது! வாய்ப்பு அளித்ததிற்கு மிக்க நன்றி! இதை சாக்காக வைத்தாவது எனது மனைவியை மீண்டும் காமிக்ஸ் படிக்க வைக்கலாம் என்று முயற்சித்து வருகிறேன்! :) முதல் முயற்சி படு தோல்வியில் முடிந்தது! பிரிதொரு இடத்தில பகிர்ந்த தகவல் உங்கள் பார்வைக்காக! :)

    //அவ்வபோது என் மனைவியை காமிக்ஸ் படிக்க வற்புறுத்துவது மூலமாக துன்புறுத்தி மகிழ்வது உண்டு! :) எனக்காக ஆர்வத்துடன் படிப்பது போல பாவ்லா காட்டி நான் நகர்ந்ததும் புத்தகத்தை மூடி வைத்து விடுவார்! 'ஊஹீம், இது வேலைக்கு ஆகாது, என் எதிரில் முழுதாக படித்தே ஆக வேண்டும்' என்று வம்படியாக 'ஒரு கழுதையின் கதையை' படிக்க வைத்தேன். நான் ரசித்து சிரித்த இடங்களை எல்லாம் ஒரு ஜென் துறவியைப் போன்ற சலனமில்லா முகத்துடன் கடந்து கொண்டிருந்தார். என் நகைச்சுவை உணர்ச்சி மீது எனக்கே பலமான சந்தேகம் வந்து விட்டது! 'இங்கே சிரிக்கணும்', 'ஷெரிஃப்போட இந்த முகபாவத்தைப் பார்த்தியா - காமெடியா இல்ல?' என்று ரன்னிங் கமெண்டரி கொடுத்ததில் லைட்டாக புன்னகைத்துக் கொண்டே வந்தார்; அவர் கண்களுக்கு நானே ஒரு காமெடி கழுதையாக தெரிந்தேனோ என்னவோ? :) என் மனைவிக்கு லார்கோ ரக ஆக்ஷன் கதைகளும் பிடிப்பதில்லை, இது போன்ற கார்ட்டூன் கதைகளும் பிடிப்பதில்லை. தவிர காமிக்ஸ் பாணி தமிழ் வசனங்களை புரிந்து கொள்வதே அவருக்கு சற்று சிரமமாகத்தான் இருக்கிறது! ரசனை என்பது தானாக வர வேண்டிய ஒன்று, திணிக்க முடியாது இல்லையா?! அவருக்கு காமிக்ஸ் மீது ஈடுபாடு இல்லை - அவ்வளவுதான்! ஆனாலும், என் துன்புறுத்தல்கள் தொடரும்! :)//

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : அட..நீங்க என்ன கார்த்திக் - என்னால் 20+ வருஷங்களில் முடியாததை ஒரு சில ஆண்டுகளுக்குள்ளே சாதிக்க நினைத்தால் பேராசையாகாதா ? காலையில் எழுந்து 'மாங்கு-மாங்கென்று' எழுதிக் கொண்டிருப்பேன் ; என் மனைவியோ 'என்ன தான் செய்கிறான் மனுஷன்?' என்று பார்க்கக் கூட சுவாரஸ்யம் இல்லாமல் 'ஹாவ்' என்ற கொட்டாவியோடு, ப்ரூவுடன் ஐக்கியம் ஆகிடுவாள் !

      வீட்டில் தான் இந்தக் கதையென்றால், ஆபீசில் - நித்தமும் ஒரு நூறு வாசகர் போன்கால்களுக்குப் பதில் சொல்லும் நம் front office பெண்களிடம் - 'எப்போவாது இந்த comics புக்குகளைப் படித்துப் பார்த்தது உண்டா ?' என்று கேட்டால் - 'ஹி..ஹி..இல்லை சார் - இதைப் படித்தால் தலை வலிக்குது ' என்ற புன்னகை கலந்த பதிலே கிட்டும் !

      ' யாம் பெற்ற இன்பம் - பெறுக இவ்வையகமும் ' என்று நினைப்பது - சில வேளைகளில் நமக்கு நாமே சூன்யம் வைத்துக் கொள்வதற்குச் சமானமாகும் ! குறிப்பாக காமிக்ஸ் வாசிப்பை புதிதாய் மலரச் செய்யும் முயற்சிகளில் !

      Delete
  11. கொடுங்கோலன் நீரோ நீரில் தானாக முழ்க கூடிய விசித்திரமான படகினை வடிவமைத்து தனது தாயை கொல்ல சதி செய்தானே ? அந்தத் திட்டம் தரை தட்டி போனதென்பதை நான் நினைவுறுத்தவும் வேண்டும் ? . . கார்த்திக் சோமலிங்கா . . வாவ் . . தரை தட்டி . . சூப்பர்

    ReplyDelete
  12. கிரீன் மோனார் எனக்கு பிடித்திருக்கிறது . . . கைகள் கட்டப்பட்ட பட்லரின் அறிமுகத்தில் ஆழ்ந்தவன் முடிக்கும் வரை வேறு நினைவே இல்லை . . கண்டிப்பாய் இது ஆல் நியூ ஸ்பெஷலே . . அப்புறம் இந்த ஸ்டீல்பாடி படிக்க படிக்க கூட பிடிக்க வில்லையே . .

    ReplyDelete
  13. காமிக் லவர் எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து இவ்விழாவைச் சிறப்பிக்குமாறு விழாக்குழுவினர் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்! :)

    ReplyDelete
  14. @Erode VIJAY:
    நானும் பேசிப் பார்த்துட்டேங்க, மனுஷன் இன்னும் விறைப்பாகவே இருக்கார்! அடம் புடிக்கிறார்! :D அவருக்கு ANS புக்கு வேற கிழிஞ்சு வந்ததுல செம கடுப்புல இருக்கார்! :)

    ReplyDelete
    Replies
    1. @ கார்த்திக்

      வருவார்! உடனே வந்தாரென்றால் ஈரோடு புத்தகத்திருவிழாவில் அவருக்கு சிறப்புப் பரிசா ஒரு புத்தம்புதிய ANS கொடுக்கத் தீர்மானிச்சிருக்கேன்! :)

      Delete
    2. please note:
      அவருக்கு = அவருக்கு மட்டும்
      (உஸ்ஸ்...அப்பாடா, தப்பிச்சுட்டேன்!)

      Delete
  15. சார் . . NBS ஸ்டாக்கில் உள்ளதாக உள்ளது . ! ஆனால் போன் செய்தால் இல்லை என்று பதில் வருகிறதே ? கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்

    ReplyDelete
    Replies
    1. thinaharan natham : கடைசிப் 15 பிரதிகளுக்கு வந்து விட்டோம் ; விற்பனைக்கு ஏஜெண்டுகள் கேட்கும் பட்சத்தில் ஸ்டாக் இல்லையெனச் சொல்லும்படி பணித்திருந்தேன். உங்களை முகவராக நினைத்துத் தவறுதலாய்ச் சொல்லி இருக்கக் கூடும் !

      இன்னமும் 15 பிரதிகள் மாத்திரமே உள்ளன !

      Delete
    2. சார் அப்போ அடுத்த குண்டு புத்தகத்தை ஆரம்பித்து விட வேண்டியதுதானே! குண்டு புத்தகங்கள் விற்பனையில் தூள் கிளப்பியது ரகசியம் அல்லவே!
      மின்னும் மரணமும் ,இரத்த படலமும் அணிவகுக்கலாமே!

      Delete
  16. டியர் விஜயன் சார்,

    ALL NEW SPECIAL – ALL PASS என்றுதான் சொல்ல வேண்டும் (இன்னும் "பிரளயத்தின் பிள்ளைகள்" மட்டும் படிக்கவில்லை, எனினும் நண்பர்களது கருத்துக்கள் அதன் வெற்றியை பறை சாற்றுகின்றன).

    முதல் கதை GREEN MANOR உண்மையிலே வித்தியாசமான கதை களம், (முதல் இரண்டு பக்கங்கள் படிக்கும் பொழுது ஒன்றுமே புரியவில்லை :) நண்பர் ஈரோடு விஜய் கூறியது போல இதை பொறுமையாக (ஓவியங்களை) கவனித்து படிக்கும் பொழுது அருமை !!!!

    தோட்டா தேசம் – சித்திரங்கள் அருமையாக உள்ளது. இவருக்கும் நமது காமிக்ஸ் வரிசையில் இடம் பெற எல்லா தகுதியும் உள்ளது (ஆனாலும் டைகரை எட்டி பிடிக்க முடியாது :)

    ஸ்டீல் பாடி – வழக்கம் போலவே அருமை. எனக்கும் பிடித்த கதை வரிசையில் இதுவும் ஒன்று.

    "பிரளயத்தின் பிள்ளைகள்" – பொறுமையாய் இந்த வார இறுதியில் படித்து விட்டு எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன் ...

    :::::: ALL NEW SPECIAL – ALL PASS ::::::

    ReplyDelete
  17. அட! NBS அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதா? இது தலைப்புச் செய்திகளில் வரவேண்டிய விசயமாச்சே?!!

    எடிட்டர் சார், விளக்கம் ப்ளீஸ்!

    ReplyDelete
  18. Thanks Radja, for letting us know editor's new post.

    நான் ANS இன்னும் படிக்கவில்லை, ஆனால் ஈரோடு விஜய் மற்றும் கார்த்திக் விமர்சனங்களை படித்தபிறகு - Green Manor எபொழுது படிப்போம் என்று இருக்கிறது..

    Super Vijay - மொழியாக்கம் மற்றும் கையெழுத்து நன்றாக உள்ளது.

    ReplyDelete
  19. என்னவாயிற்று? நான் பதிந்த கமெண்ட்கள், ANS விமர்சனங்கள் எதையும் காணவில்லை? திடிரென ஒரு புதிய பதிவிற்குள் வந்தது போல் உணர்கிறேன், உண்மையாகவா? எல்லோரும் காமிக்ஸ் சம்பந்தமாக எழுத சொன்னதால் பிரளயத்தின் பிள்ளைகள், தோட்டா தேசம் ஆகியவற்றின் கதை விமர்சனம் எழுதியிருந்தேன், அதற்கு நண்பர்கள் சிலர் வரவேற்பும் தந்திருந்தார்கள். ஆனால் அதற்குள், வெறும் மூன்றே நாட்களுக்குள் அடுத்த பதிவா..!

    என்னாச்சு..? காமிக்ஸ் பற்றி மட்டுமே கமெண்ட் போட்டேன், ஆனா யாருமே படிக்காம போயே போச்சு, என் கமெண்ட் காணாம போச்சு. ஹ்ம்ம் என்றைக்குத் தான் எனக்கு 'புதன் புத்தியில் சுக்கிர திசை அடிக்குமோ' தெரியவில்லை :-(

    என்னாச்சு..? தோட்டா தேசத்தில் பிரளயத்தின் பிள்ளைகள் காணாமல் பொய் விட்டார்கள் :-(

    என்னாச்சு..? :-)

    ReplyDelete
  20. Dear editor..
    ஆல் நியூ ஸ்பெஷல் நிஜமாலுமே ultimate ஹிட் தான் போங்கள்.. 4 கதைகளயுமே ரசித்து படித்தேன்.. சொல்ல வார்த்தைகள் தான் இல்லை..
    புதுமை விரும்பிகளுக்கு green manor, நகைச்சுவை பிரியர்களுக்கு steel body, அதிரடி வாசகர்களுக்கு comanche மற்றும் sentiment ரசிகர்களுக்கு பிரளயத்தின் பிள்ளைகள் என ஒரு perfect mixed..

    1. 'கொலை செய்வீர் கனவான்களே' அருமையான ஆக்கம். படைப்பாளிகளுக்கு ஒரு 'ஓ' போடலாமென்றால் மொழி பெயர்பாளர்களுக்கு டபுள் 'ஓ'.. கதைகளின் ஆழம், அதை சொன்ன விதம், பாத்திரங்களின் படைப்பு என top class.

    2. 'தோட்டா தேசம்' ஒரு cow boy ன் கதை என்றாலும் இதை பத்தோடு பதினொன்றாக என்னால் சேர்க்க இயலவில்லை.. hit formula இதிலும் உண்டு. சித்திர தரம் நீங்கள் சொன்னபடி ஒரு visual treat than.. மற்ற கௌ பாய்களுக்கு ஒரு 'சவால்' காத்திருக்கிறது நண்பர்களே..

    3. 'பிரளயத்தின் பிள்ளைகள்' really heart touching Sir.. சித்திரங்களும் சரி கதைக்களமும் சரி கதை மாந்தர்களும் சரி.. நெஞ்சை வருடி விட்டார்கள்.. ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு.. படைப்பாளிகளுக்கு ஒரு royal salute..

    4. 'steel body'.. ஹா.. ஹா.. ஹா.. ஏதேது ஸ்டீல் பாடி நமது 'மந்திரியாரை' தூக்கி சாப்பிட்டு விடுவார்போல.. அட்டகாசம்.. அதுவும் அவருடன் அந்த 'பப்ளிமாசும்' சேர்ந்து அடிக்கும் லந்து.. ஒரே அளப்பரைதான் போங்கள்..

    மொத்தத்தில் ஐந்தே இதழ் ஒரு நிறைவானதொரு இதழ் என்பது என் அபிப்ராயம்.. உங்கள் கருத்து என்ன, Frenz...

    ReplyDelete
  21. நதியில் ஒரு நாடகம் - கதை விமர்சனம் :

    எதிரியின் கையில் உள்ள துப்பாக்கியை விட நண்பனின் கையில் உள்ள மொக்க கத்தி ரொம்ப ரொம்ப டேஞ்சரானது. என்ன வாசகர்களே ஒன்னும் புரியவில்லையா? கீழ்வரும் கதை விமர்சனத்தை கொஞ்சம் படித்து தான் பாருங்களேன் :)

    ஆழ்ந்த அறிவாற்றலும், தீர்க்கமான சிந்தனையும், கூர்மதியும் கொண்ட தோழன் என தொடங்கும் கதாசிரியரின் வரிகளுக்கு சொந்தக்காரரான ஷெர்லாக் ஹோம்ஸ் - ஸ்டீல் பாடியைத் தானா, இது வரை நாம் வேஸ்ட் பாடி, வொர்ஸ்ட் பாடி என்று நக்கலும் நய்யாண்டியும் செய்து வந்தோம் என்று ஒரு கணம் அதிர்ந்து தான் போகிறோம் :-(

    சிரிப்புக்கான இடமும் அதற்கான படமும் (210) : அடங்கொக்கா மக்கா..!
    இந்த இடத்தில் நீங்கள் ஒரு தடவ சிரிச்சா அது நூறு தடவ சிரிச்சா மாதிரி..!

    எனக்கென்னவோ இம்முறை நம் நாயகன் கண்டுப்பிடித்த உண்மையிலேயே நடந்த உண்மையை சிலாக்கோ(எ)டுபாக்கோ பிரபு தான், தன் டார்லிங் க்கு பயந்து மறைத்து கடைசியில் பீலா விட்டு விட்டார் என்று தோன்றுகிறது. எனவே அவர் ஒரு டுபாக்கூர் பிரபு என்பது உண்மையாகி விட்டது. அதற்கு தோதாக முன்பு ஒரு முறை செம மப்பில் ராணியாரை 'பப்ளிமாஸ்' என்று விமரிசித்த டாக்டர் வாட்சன் ஹி ஹி, ஹா ஹா, ஹோ ஹோ என்று சிரித்து, கடைசியில் நம் ஷெர்லாக் ஹோம்ஸை காமடி பீஸ் ஆக்கி விட்டார். இங்கு நீங்கள் மீண்டும் ஒரு முறை மேலே உள்ள வரியை படித்து பாருங்கள் :)

    ReplyDelete
  22. ANS பற்றி நண்பர்களின் குதூகலமான கருத்துக்களை படிக்கும்போது , உடனே படிக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது (எப்போது புத்தகம் எனக்கு கையில் கிடைக்கும் என்று தெரியவில்லை ).

    இப்போதெல்லாம், ஆசிரியர் உடனுக்குடன் பதிளிடுவதால், இந்த இடம் நண்பர் ஈரோடு விஜய் குறிப்பிட்டதுபோல் திருவிழா கோலமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  23. Super circus, podiyan billy, Nbs ellam super a irukku... (vera enna elutharathu? Innum nan ANS vangala.... Rrrrrr.. Nar.. nara..)

    ReplyDelete
  24. கிரீன் மேனர் கதைகள் ஒரு சாயலில் கறுப்புக்கிழவியின் கதைகள் போலத் தோன்றுவது எனக்கு மட்டும்தானா? அட்டகாசமான சிறுகதைகள்.அதுவும் ஆர்தர் கோனனை கொல்ல முயலும் கோமாளிகளின் கதை படித்து சிரிப்பை அடக்கவே முடியவில்லை…! கார்த்திக்கின் மொழிபெயர்ப்பு இந்தக் கதையில் அருமையாக உள்ளது…! அடுத்த மாத கிரீன்மேனர் கதைகளுக்கு இப்போதே ஏங்குகிறது மனது…!

    ReplyDelete
    Replies
    1. @krishna babu & thinakaran:
      மிக்க நன்றி நண்பர்களே!

      Delete
  25. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்! நானோ ஒரு கவளம் சாப்பிட்டுள்ளேன் அந்த நம்பிக்கையில்தான் 100% sucess என்று கூறினேன் Editor sir!

    ReplyDelete
  26. கூலியில்லா கைக்கூலி - கதை விமர்சனம் :

    ஸ்டீல்பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் இம்முறை ஹுயுமன்பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் ஐயும் மிஞ்சி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். என்னவொரு வேகம், அதற்கேற்ற யூகம், குற்றத்தை நிரூபிக்க துடிக்கும் உத்வேகம்... அடடா, உண்மையாகவே அவர் ஒரு ஸ்டீல் பாடி தான் சார்.

    நய்யாண்டிக்காகவே உருவாக்கப்பட்ட இந்த நாயகன், தன்னை உருவாக்கிய கதாசிரியரின் கற்பனையையும், கைகளையும் மீறி இக்கதையில் தன் சாதனையை, டெர்மினேட்டரை போல் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். ஸ்டீல்பாடி வேஸ்ட்பாடி என்று கூரியவர்களுக்கு, ஹாய் எவெரிபடி; பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஃஆப் மை பாடி என்று நிரூபித்து விட்டார். வாய் விட்டு சிரிக்கவும் இங்கு சில இடங்கள் உண்டு என்பதால் டாக்டர் வாட்சனும் இக்கதையில் திடீர் பிரபல்யத்தை தேடிக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்..!

    ஆதலினால் ஸ்டீல்பாடியும் தொடர்ந்து அதகளம் செய்வாராக :-)

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் மரமண்டை : ஸ்டீல் பாடியாருக்கும் சிறுகச் சிறுக ஆதரவு பெருகி வருவது சந்தோஷம் தரும் சமாச்சாரம் !

      ஆனால் ஒன்று : எழுதும் போது மெய்யாக நிறைய சிரமம் தரும் ஆசாமி இவர் !

      Delete
    2. ஆனாலும் அதற்குரிய தகுதி இவருக்கு இருக்கிறது சார், அதனால் இவரை தயவுசெய்து கைவிட்டு விடாதீர்கள். என்னவொன்று இவருக்கு இருக்கும் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு புத்தி தான் தடையாக தோன்றுகிறது. மற்றபடி குறையேதும் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட கூர்மதி கொண்ட துப்பறிவாளருக்கு ஒரு ரிலாக்சேஷனும் வேண்டும் தானே ஸார்..!

      Delete
  27. @ சூப்பர் விஜய்

    நல்லதொரு மொழிபெயர்ப்பு முயற்சிக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்! அழகான கையெழுத்தும், அரசர் கால மொழி நடையும் சிறப்புச் சேர்க்கிறது!

    எனினும், உங்களுடைய best இதுவல்ல என்றே தோன்றுகிறது! இன்னும் கொஞ்சம் நிதானமாகப் பட்டை தீட்டியிருந்தால் வைரம் ஜொலித்திருக்கும் (உங்கள் எழுத்துக்களில் ஒரு அவசரம் தெரிவது ஏனோ?).
    அடுத்த KBTல் கார்த்திக்கை ஓரம் கட்டிட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
    Replies
    1. @Erode VIJAY:
      அப்படி எல்லாம் சொல்லி தப்ப முடியாது விஜய்! :) அடுத்த முறை அனைவரையும் உங்கள் நகைச்சுவை எழுத்துக்களால் கட்டிப் போட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! ஆனால், அடுத்த போட்டி இணையத்தில் இணையாத வாசகர்களுக்கு மட்டும் என எண்ணுகிறேன்!

      Delete
    2. Karthik Somalinga : சின்ன திருத்தம் : 'இணையத்தில் இணையாத நண்பர்களும்' இணைந்து கொள்ளும் வாய்ப்போடு அடுத்த போட்டி ! ஆகஸ்ட் இதழில் இதெற்கென சின்னதொரு column வரும் ! Open to all for sure !

      Delete
    3. // அடுத்த போட்டி இணையத்தில் இணையாத வாசகர்களுக்கு மட்டும் //

      அப்படின்னா இப்பவே இந்த க்ளப்பிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்.

      தாடையில் சின்னதா ஒரு மருவை ஒட்டிட்டேன்னா ஈரோடு ஸ்டாலினுக்குக்கூட என்னை அடையாளம் தெரியாது என்கிறபோது நம் எடிட்டரை ஈசியா ஏமாத்தி போட்டியிலே ஜெயிச்சிடலாம்தானே?. ஹிஹி!

      Delete
    4. தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி விஜயன் சார்!

      @ஈரோடு விஜய்:
      அப்புறம் என்ன, நீங்க பட்டையை கிளப்பிற வேண்டியதுதானே? :)

      Delete
    5. Erode VIJAY : அந்த ஒட்டுக் கிருதாவையும் மறந்து விடாதீர்கள் !

      Delete
    6. @ கார்த்திக்
      //அப்புறம் என்ன, நீங்க பட்டையை கிளப்பிற வேண்டியதுதானே? //

      ம்... சரி! ஆனா தமிழ்நாட்டு பார்டரைத் தாண்டி இருக்கிறவங்க யாரும் போட்டியில கலந்துக்க மாட்டோம்னு சத்தியம் பண்ணுங்க! அப்புறம் நான் போட்டியில கலத்துக்கிறேன். :)

      (அதெப்படி? 'வலைக்குள்' கலந்துகிட்ட 20 பேரில் நீங்க 'கஷ்டப்பட்டு' ஜெயிப்பீங்களாம்; "வலைக்கு வெளியே" நான் 200 பேர்களிடம் போட்டிபோட்டு 'ஜமாய்க்கணுமா'?) :)

      Delete
    7. @Erode VIJAY:
      200 + 20 இவர்களுடன் நானும் இணைந்து கூட்டத்தோடு கோவிந்தா போட ஆவலாகவே உள்ளேன்! :) எடிட்டரை நினைத்தால்தான் பாவமாக உள்ளது! அத்தனை ஸ்கிரிப்ட்களையும் படித்து எதை எடுப்பது, எதை விடுப்பது என்று குழம்பிப் போய் விடுவார்! :) அப்புறம் என்ன - குலுக்கல் முறைதான்! ;)

      //ஆனா தமிழ்நாட்டு பார்டரைத் தாண்டி இருக்கிறவங்க யாரும் போட்டியில கலந்துக்க மாட்டோம்னு சத்தியம் பண்ணுங்க!//
      இது சத்தியம்! நான் ஓசூர் வந்துதான் குரியர் பண்ணுவேனாக்கும்! :p

      Delete
    8. ஹம்... எடிட்டர் சார், 'கண்டிப்பாக ஈரோடு வாசகர்களுக்கு மட்டும்' என்ற அறிவிப்போடு ஏதாவது போட்டி ஆரம்பிச்சீங்கன்னா தேவலை!

      Delete
    9. Erode VIJAY : பெங்களூருவிலிருந்து கொஞ்சப் பேரும் ; புதுச்சேரியிலிருந்து ; சென்னையிலிருந்து ; கோவையிலிருந்து ; ஏன் - இலங்கையிலிருந்தே மக்களும் ஈரோட்டில் தற்காலிகமாய்க் குடியேற வீடு தேடுவதாய்க் கேள்விப்பட்டேன் !

      Delete
    10. விஜயன் சார்,

      //Vijayan12 May 2013 14:09:00 GMT+5:30
      இன்னும் ஒரு படி மேலே போகணுமென்றால் - "KAUN BANEGA TRANSLATOR " பாணியில் - "Kaun Banega Graphic Designer " என்றதொரு போட்டி கூட துவக்கிப் பார்க்கலாமே - நண்பர்களின் திறன்களை வெளிக் கொணர ?! What say folks ? //

      அப்படியே மறக்காம இந்த போட்டியையும் அறிவிச்சீங்கன்னா இன்னும் ரணகளமா இருக்குமே?! :) ஈரோடு விஜய் இந்த வாரமே போட்டோஷாப் ஸ்பெஷல் கிளாஸ் போக ஆரம்பிச்சுருவார்! ;)

      Delete
    11. Erode VIJAY : அப்புறம் அடுத்த மாதம் துவக்கம், உங்கள் பூனையாருக்குக் கடும் போட்டி காத்துள்ளது ! மியாவி ; Garfield ; Heathcliff என்று ஏராளமான புஷ்டியான பசங்கள் களத்தில் இறங்குகிறார்கள் !

      Delete
    12. @ எடிட்டர்

      ம்ஹூம், இதெல்லாம் சரிபட்டுவராது! பேசாம என்னை இத்தாலிக்கு நாடு கடத்திடுங்க ஸார்! இல்லைன்னா தானே நம்ம ஜோஸப் மாதிரி நாடோடி கும்பல் ஏதாவதொன்றோடு ஒட்டிகொண்டு சூன்யகாரியோடு செட்டில் ஆயிடுவேன்! :)

      Delete
    13. Karthik Somalinga : // ஈரோடு விஜய் இந்த வாரமே போட்டோஷாப் ஸ்பெஷல் கிளாஸ் போக ஆரம்பிச்சுருவார்! ;)//

      ஸ்கூல் யூனிபார்ம் போட்டால் - அது 'யூத்'தின் அடையாளமென்ற தமிழ் திரையின் அசைக்க இயலா கோட்பாடின்படி - விஜய்யும் ஸ்பெஷல் கிளாசுக்கு அவ்விதம் செல்லத் துவங்கினால், அதன் பிறகு ஒரு பயலோ ; பெண்ணோ அவரை "அங்கிள்" என்று அழைக்க முடியாதே !

      Delete
    14. Erode VIJAY : அடையாள அட்டையை ஆட்டையைப் போட்டு, உங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் அவசியமெல்லாம் சூனியக்காரிக்கு இராது போல் தெரியுதே !! நீங்களாகவே உங்கள் ID -ஐ கிணற்றில் தூக்கி விட்டெறிந்து விட்டு settle ஆகிடுவீர்கள் தானே ? !

      Delete
    15. சூன்யகாரியிடம் "என் IDயே நீதான் என்றானபின் இந்த காகித அட்டை எதற்கு கண்ணு? இந்தா, இந்த அடையாள அட்டையை எரித்துக் கொஞ்சம் குளிர்காய்ந்து கொள்! அந்த வெப்பம் போதாதென்றால் என் மூச்சுக் காற்றிலே கொஞ்சம் கடன் வாங்கிக்கொள்!" என்று காதலாகி கசிந்திடமாட்டேனா? :)

      Delete
    16. ஈரோட்டு விழாவிற்காக காத்திருக்கிறோம் சார்!

      Delete
  28. Though I like "Green Manor" & "பிரளயத்தின் பிள்ளைகள்", completely stunned by art work and colors of "தோட்டா தேசம்". Its simply Superb!

    Eagerly waiting to see remaining books in the Comanche series

    Green Manor - Already read it in English. Its an excellent series.

    பிரளயத்தின் பிள்ளைகள் - மனதை உருக வைக்கும் கதை + அட்டகாசமான சித்திரங்கள்

    ReplyDelete
    Replies
    1. Periyar : நிஜமான Visual treat தான் இந்தத் தொடரின் முழுமையுமே !

      Delete
  29. க்ரீன் மேனர் - கதைகள் விமர்சனம் :

    க்ரீன் மேனர் கதைகளின் ஆழத்தையும், நீளத்தையும், அகலத்தையும் ஏற்கனவே நண்பர்கள் அலசி ஆராய்ந்து, துவைத்து காயப்போட்டு விட்டதால், அதன் மூலம் நாம் உணர்ந்துக் கொள்ளவேண்டிய நீதி போதனைகளை மட்டுமே இங்கு சொல்வது அவையடக்கத்திற்கு ஒரு சான்றாக அமையுமன்றோ..?!

    1. கொலை செய்வீர் கனவான்களே..!
    செந்தமிழும் நா பழக்கம், சித்திரமும் கைப்பழக்கம் ;

    2. அவலத்தில் குதூகலம்!
    பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் ;

    3. (ஒரு பின்குறிப்பு)
    கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் ;

    4. சிறு கொலையும் கைப் பழக்கம்
    தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் (ஜான் ஸ்மித்) ;

    5. இரசித்துக் கொள்ள வேண்டும்!
    களவும் கற்று மற ;

    6. நிஷ்டூர தண்டனை!
    ஆதலினால் காதல் செய்யாதீர் ;

    7. போதையில் வந்த போதனை
    புல் தடுக்கி பயில்வான் :)

    கதை சுருக்கம் : மிஸ்டர் மரமண்டை !

    ReplyDelete
    Replies
    1. கலக்குரீர்கள் sir.. உங்கள் எழுத்து நடையும், மொழி ஆளுமையும் really Super.. (என்ன.. உங்கள் பெயரை சொல்லி கூப்பிடத்தான் பயமாய் இருக்கிறது)

      Delete
    2. Muthu Kumaran :

      அட நமக்குள்ள என்ன சார், sir என்கின்ற மரியாதையெல்லாம். என் பெயர் இங்கு எழுத்தாக உருவகம் பெற்றது ஒரு சுவாரசியமான பொழுதில் என்பதால் நீங்கள் கவலைப்படாமல் என் பெயர் சொல்லியே கூப்பிடலாம். என்னவொன்று என்னை திட்டத்தான் மற்றவர்களுக்கு வார்த்தை கிடைக்காது :)

      Delete
    3. உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் எவருக்கும் திட்ட தோன்றாது Sir.. நேசிக்கவே தூண்டும்.. ஒரு வேண்டுகோள்.. என்னை போன்ற சாமானியனுக்கும் புரியும்படி இருந்தால் இன்னும் சிறப்பு.. நேசிப்பு உங்கள் மேல் காதலாகவே மாறிவிடும், உங்களது தனித்துவமான மொழி ஆளுமையினால் அது எளிமையாக இருக்கும் பட்சத்தில். (இது வேண்டுகோள்தான் Sir...)

      Delete
    4. Muthu Kumaran :

      நண்பரே உண்மையாகவே நெகிழ்ந்து விட்டேன். உங்களின் விருப்பத்திற்கேற்ப பதிவிட முயற்சிக்கிறேன். தங்களின் வெளிப்படையான பதிவுகள் உங்களின் நல்ல மனதை இங்கு வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமையட்டும். மிக்க நன்றி..!

      Delete
  30. டியர் விஜயன் சார்,
    புதிதாக இணைக்கப்பட்ட பயன்படுத்தப்படாத அட்டை டிசைன்களைப் பார்த்தேன்! முன்னட்டையைப் பொருத்த வரை இதழில் வெளியாகி இருக்கும் அட்டையே பொருத்தமாக உள்ளது! ஆனால், பின்னட்டைக்கு பொன்னன் அவர்களின் மற்ற மூன்று டிசைன்களில் ஒன்றை (குறிப்பாக #2 அல்லது #3) உபயோகித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது!

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : எனக்கும் பின்னட்டை # 2 பிடித்திருந்தது ; but ரெட் டஸ்ட் பத்தோடு, பதினொன்றாக 'கோவிந்தா' போடாமல் கொஞ்சம் prominent ஆக இருந்தால் தேவலை என்று பட்டது ! அதனால் தான் தற்சமயப் பின்னட்டை !

      Delete
    2. எனக்கு அனைத்து அட்டைப்படங்களும் பிடித்துள்ளன

      Delete
  31. To:Editor,

    நீங்கள் முதலில் பரீட்சித்த அட்டைகளில் 2ஆவதாக உள்ளதன் பின்னட்டை நன்றாக இருந்திருக்கும்போல தெரிகிறது. இந்த டிசைனை அடுத்துவரும் ஏதாவது இதழுக்கு பயன்படுத்திப் பாருங்கள் சார்.

    ReplyDelete
  32. //அட்டைப்பட கூத்து நடந்தேறும் வேளையில் -சென்றாண்டு ஆண்டுமலரின் ராப்பரில் 'பர்த்டே லயன்' இடம்பெறாது போய், நான் டின் வாங்கிய அனுபவம் திடு திடுப்பென நினைவுக்கு வந்ததால் -//

    இந்த முறை பெரிய சைஸ் டின்னாகவே வைத்திருந்தோம். தப்பிவிட்டீர்கள்.... :-)

    ReplyDelete
    Replies
    1. Podiyan : பத்திரமாக வைத்திருங்கள் - அதற்கென இன்னொரு சந்தர்ப்பம் தராமலா இருந்திடப் போகிறேன் நான் ?

      Delete
  33. dear vijayan sir, ANS படித்து முடித்து விட்டேன். GREEEN MANNER தவிர அனைத்து கதைகள் பிடித்து இருந்தன. GREEN MANNER இன்னும் புரிபடவில்லை. இந்த கருத்தையே என்னுடைய COMICS friend bank officer kumar கூட பிரதிபலித்தார்!GREEN MANNER BLOG ல் ஒருசிலர் நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருப்பதை தவிர ,எத்தனை பேருக்கு புரிந்தது என்பது தெரியவில்லை. கருப்பு கிழவியை விட green manner top என்று சிலர் சொல்வது எந்த விதத்தில் சரி என்பதும் புரியவில்லை! green manner க்கு பதில் கருப்பு கிழவி colour ல் வந்திருந்தால் பட்டையை கிளப்பி இருக்கும்! இது என்னமோ எனக்கு விச பரிட்சை போல தெரிகின்றது!

    ReplyDelete
    Replies
    1. Dr.Sundar, Salem : சின்னதொரு இடைவெளிக்குப் பின்னே மீண்டுமொருமுறை படித்துப் பாருங்களேன் ; maybe பிடிக்க வாய்ப்பிருக்கலாம் ! கறுப்புக் கிழவியின் கதைகளும் - இவையும் வானவில்லின் வெவ்வேறு முனைகளில் இருப்பன ; ஒன்றின் இடத்தை மற்றொன்று எடுத்தல் சாத்தியமாகாது !

      Delete
  34. Muthu kumaran sir...Posting a comment via phone is always ...DANDA NAKKA DAN..thaan...above one is a mistake kichchidi..sorry guys..

    ReplyDelete
    Replies
    1. Ok.. Ok.. Apology is Accepted..

      ANS எப்டி இருக்கு..

      Delete
  35. Please read my comment I have repeatedly (by mistake) posted just above..

    ReplyDelete
  36. எடி,
    இரண்டாவது டிசைனில் உள்ள பின் அட்டை மிக மிக அருமை. முன் அட்டை உங்களுடைய தேர்வே சரி.

    ReplyDelete
    Replies
    1. Editor sir - தங்களுடைய விளக்கம் தற்போது தான் படித்தேன் - Makes sense

      // எனக்கும் பின்னட்டை # 2 பிடித்திருந்தது ; but ரெட் டஸ்ட் பத்தோடு, பதினொன்றாக 'கோவிந்தா' போடாமல் கொஞ்சம் prominent ஆக இருந்தால் தேவலை என்று பட்டது ! அதனால் தான் தற்சமயப் பின்னட்டை ! //

      Delete
  37. ஒரு வழியாக இரண்டு நாள் போராட்டங்களுக்கு பின் இன்று தான் புத்தகம் கைக்கு கிடைத்தது... என்ன அழ வச்சு அலையவும் வச்சுடாங்க....

    //நித்தமும் ஒரு நூறு வாசகர் போன்கால்களுக்குப் பதில் சொல்லும் நம் front office பெண்களிடம் - 'எப்போவாது இந்த comics புக்குகளைப் படித்துப் பார்த்தது உண்டா ?' என்று கேட்டால் - 'ஹி..ஹி..இல்லை சார் - இதைப் படித்தால் தலை வலிக்குது ' என்ற புன்னகை கலந்த பதிலே கிட்டும் ! ///

    இதை நீங்க கொஞ்சம் முன்னமே சொல்லிருக்கலாம் சார்.... புத்தகம் வர தாமதமானதால் நான் அலுவலகம் அழைத்து ,இப்பொழுது புதிதாக சேர்ந்திருக்கும் staff கிட்டே,

    நான்: Madam உடனே POD நம்பர் குடுங்க.... புத்தகம் இன்னும் வரலை

    Staff : சார் கவலைபடாதீங்க, புக் அனுப்பியாச்சு கண்டிப்பா வந்திடும்,

    நான்: இல்ல மேடம் , லேட் ஆய்டுச்சு, நீங்க POD நம்பர் குடுத்தா உடனே என்ன எதுன்னு பார்த்திடுவேன்.

    Staff : POD நம்பர் வர நாலு நாள் ஆகும் சார்.... கொஞ்சம் வைட் பண்ணுங்க....

    நான்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ,,, என்ன மேடம் இப்படி பொருப்பிலாம சொல்றீங்க, புக் வேற ஊருக்கு மாத்தி அனுப்பிட்டா என்ன செய்ய , உடனே POD நம்பர் குடுங்க.

    Staff : சார் புக்கு தானே, கண்டிப்பா வந்திடும் கவலைபடாதீங்க....

    நான்: சரி மேடம், இனி கொஞ்ச நேரம் பேசினா, கோவத்துல கதறி அழுதிடுவேன்.... வச்சிடுறேன்.....

    இது நேற்று நடந்தது.......

    ReplyDelete
    Replies
    1. Green Manor பற்றி : நான் சொல்ல நினைத்தது பல நண்பர்கள் சொல்லிவிட்டார்கள்.
      உங்களுக்கு கருப்பு கிழவியின் மீது உள்ள தீரா காதல் காரணமாக , எப்படியோ முயன்று ஒரு மாற்று ஏற்பாடு ( Green Manor) செய்து விடீர்கள். ஆனால் கதையை பற்றின எனது கருத்து , நண்பர்களுடன் சற்று மாறுபட்டு உள்ளமையால், நான் அதனை உங்களுக்கு மின்னஞ்சல் செய்து விடுகிறேன்....

      Delete
    2. அஹ்ஹ் முக்கியமான ஒன்று சொல்ல மறந்துட்டேன்.... இந்த கொஞ்சூண்டு 'அந்த' சைஸ் புத்தகம் கலக்கல்.... இப்படி மாதம் இரண்டு புத்தகம் கிடைத்தால் , என் ஆத்மா அமைதி அடையும்.....

      மரண பயம் மனதில் இருந்தாலும், கம்பீரமாக உக்கார்ந்து கொண்டு, பரிமாறப்படும் மதுவை நாசுக்காக மறுப்பது (page no 15) fantastic . இவ்வாறன சித்திரங்களை , அதன் வெளிப்படுத்தும் திறன் அளவு, வர்ணிக்க, என்னிடம் வார்த்தைகள் இல்லை.... great art work .

      Delete
    3. @ சிம்பா

      // என் ஆத்மா அமைதி அடையும் //
      அப்படியே என்னோட ஆத்மாவையும் சேர்த்துக்கங்க! :)

      அந்த page no 15 ல் நீங்கள் சொல்லும் அப்பகுதியை நானும் வெகுவாக ரசித்தேன்! சித்திரங்களில் காட்டப்படும் இந்தமாதிரியான gestures- வசனம் ஏதுமில்லாமலேயே கதைக்கு வலுச் சேர்க வல்லவை!

      Delete
    4. சிம்பா : மாறுபட்ட கருத்தென்றாலும் அதனை இங்கே பகிர்வதில் நிச்சயம் பிரச்சனை இருக்கப் போவதில்லை. ரசனைகள் universal ஆக இருந்திட அவசியம் கிடையாதே நிச்சயமாய் ?

      Delete
    5. சிம்பா : கூரியரில் ஒரு மொத்தமாய்ப் பிரதிகளை ஒப்படைப்பதால், POD + ரசீதுகளை சாவகாசமாகவே ST கூரியரின் சிவகாசிக் கிளை நமக்குத் தருவது வழக்கம். நம் ஆட்களும் 'அனுப்பியாச்சே ' என்ற நிம்மதியில் ரிலாக்ஸ் ஆகிடுவார்கள் ! 99% பிரதிகள் மறு நாளே சிக்கலின்றிப் பட்டுவாடா ஆகி விடுவதால் பெரிதாய் இது வரை இதன் பொருட்டு தலை நோவு நேர்ந்ததில்லை ! Anyways - உங்களுக்கு நேர்ந்த சங்கடம் repeat ஆகாமல் பார்த்துக் கொள்வோம் !

      Delete
    6. சிம்பா பேசாமல் கோவைக்கு மாறி விடுங்களேன்!

      Delete
    7. இன்னும் வரல. proffessional கொரியர். அழுகையா வருது..

      Delete
    8. சூப்பர் விஜய் : ஐயோ...! இன்னமும் கிடைக்கவில்லையா ? Professional Courier-ல் புக்கிங் செய்த நொடியே ரசீது கொடுத்து விடுவார்கள் ; உங்களது ரசீது எண்ணைக் குறித்து இன்னும் சற்று நேரத்தில் அலுவலகத்திலிருந்து கூப்பிடச் செய்கிறேன் ! அதன் துணையோடு, உங்கள் பகுதி Prof Courier -ல் விசாரிக்கலாம் !

      Delete
    9. ஆசிரியருக்கு, இந்த மாத இதழை படிப்பதில் சற்று தாமதப்படுத்தி வருகிறேன்... ஒரு வாக்யூம் மனநிலையில் படிக்க கூடிய கதை வரிசைகள்.... முதலில் கௌ பாய் , ரெட் டஸ்ட் ..... அவர் இன்னொரு கௌ பாய் ஹீரோவாக இல்லாமல் , அவருக்கென ஒரு தனி இடத்தை உருவாகிடும் நிலையில் இருக்கிறார்.... பழக்கப்பட்ட கதைக்கலாம் என்றாலும் கதையோட்டம், சித்திரம் போன்றவற்றில் ரம்மியமாக , ரசிக்கும்படி அமைத்து விட்டது. We shall bet on him.

      Green Manor : உண்மையிலேயே படிப்பவர்களை மிரளச்செய்யும் கதை ஆக்கம். நாகரீகம் என்ற மிடுக்குடன் சுற்றும் மனிதர்களின் இருண்ட பக்கங்களை, மெலிதாக இழையோடும் நகைச்சுவையுடன் தோலுரித்து காட்டும் அல்லது பகடி செய்யும் ஒரு ஆக்கம். இதில் சிலாகித்து பேச ஒவ்வொரு கதையிலும் ஓராயிரம் விஷயங்கள் உள்ளது.

      "கடவுள் இல்லன்னு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொன்னேன்" இவ்வாறான வசனங்களும், வசனமே தேவையிலா சித்திரங்களும் அள்ளி தெளிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு ஆக்கத்தை ஒன்று அல்லது இரண்டு கதைகளாக படித்தால் நன்றாக இருக்கும்.

      நான் முன்னமே ஒருமுறை சொல்லியிருக்கிறேன்,முழுநீள கதைக்கும், தொடர் சிறுகதைகளுக்கும், வேற்றுமைகள் அதிகம். என்னமோ தெரியவில்லை, கருப்பு கிழவியின் கதைகள் எனக்கு பிடிப்பதே இல்லை.... ஆனால் Green Manor நன்றாகவே இருக்கிறது. இருந்தாலும், இவ்வகையான கதைகள் Filler Page ஆக பயன்படுத்தினால் மட்டுமே சரியாக இருக்கும். So I request you to reconsider the decision to publish the remaining short stories of Green Manor in a single volume .

      மற்ற நண்பர்களுக்கு இந்த கருத்து ஏற்புடையதாக இருக்குமா என்று தெரியவில்லை.... ஆகவே தான் இதனை தனியாக தங்களுக்கு மின்னஞ்சல் செய்ய நினைத்திருந்தேன். So my choice is to use Green Manor only as filler pages .

      Delete
  38. டியர் எடிட்டர்ஜீ !!!
    ANS -ரியலி சூப்பர் .கதை தேர்வுகள் அனைத்தும் அருமை.குறிப்பாக green manor -சும்மா சொல்லக்கூடாது.நமது ரசனைகள் மிக உயர் தரத்திற்கு பயணம் செய்வதன் சான்றாக அமைந்துள்ளது.பிரளயத்தின் பிள்ளைகள் நெஞ்சை கனக்க வைத்த சோக காவியம்.
    பிரளயத்தின் பிள்ளைகள் நம் அனைவரையும் உலுக்கி எடுத்துவிட்டது.இதற்க்கு காரணம் உண்மையோடு மிக நெருக்கமான கதைக்களம் தான்.
    இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்த காலத்தில் ஹிட்லரது கொலைப்படைகள் "ஜெர்மனியின் எதிரி"களாக சித்தரிக்கப்பட்ட ஏராளமான இனக்குழுக்களை அடியோடு ஒழித்துக்கட்ட பணிக்கப்பட்டார்கள்.
    ஸ்லாவ்களும்,செர்ப்களும்,ஸ்லோவாக்குகளும்,குரோட்ஸ்களும்,யூதர்களும்,மற்றும் ரோமானி (ஜிப்ஸி)எனப்பட்ட இந்தோ-ஆரிய நாடோடி குழுவினர் உள்ளிட்ட ஏராளமான இனத்தவர்கள் வதை முகாம்களில் அடைக்கப்பட்டு சொல்லொனா சித்திரவதைகளுக்கு உள்ளாகி இறுதியில் மரணதேவனின் இருப்பிடத்திற்கு அனுப்பிடப்பட்டார்கள்.இந்த கொடூரங்களை அரங்கேற்றிய நாஜி வெறியர்கள் "நூரெம்பர்க் விசாரணை"யில் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள் என்பது பிற்கால வரலாறு.
    "பிரளயத்தின் பிள்ளைகள்" -சித்தரிப்பது செக் நாட்டை சேர்ந்த பொஹீமியன் ஜிப்ஸிகளை!!!
    கதையின் மொழிபெயர்ப்பில் ஜிப்ஸி என்ற பெயரை தவிர்த்தது ஏனோ...?நாடோடி என்ற வார்த்தையை தவிர்த்திருக்கலாம் என்பது அடியேனின் கருத்து.நாடு நாடாக ஓடுபவர்கள் எல்லாம் நாடோடிகள் என்றால் ஜூலியன் அசாஞ்ச் ,ஸ்னோடென் போன்ற "திருட்டு பசங்கள்"கூட நாடோடிகள் தானே...:-)
    அப்புறம் உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும்.அதாவது.......வந்து.....எப்படி கேட்பது என்று தெரியவில்லை....கூச்சமாக இருக்கிறது....அதாவது.....ஹிஹி ......பக்கம் 187-இல் உள்ள மியாவி அடியேனுக்கு புரியவில்லை.அது என்ன ஜோக்.....ஸார் ...?
    சொல்ல மறந்துவிட்டேன்.நம்ம "குரு"கார்த்திக்கை உங்கள் மொழிபெயர்ப்பு குழுவில் இணைத்து கொள்ளுங்களேன்.அந்த பெங்களூர் அங்கிள் தூள் கிளப்பிவிட்டார்.ஹிஹி !!!

    ReplyDelete
    Replies
    1. dear சாத்தான் ,welcome back!உங்களீடம் எதிர்பார்த்தது இந்த நக்கல் நையாண்டிதான்! கலக்குங்க!

      Delete
    2. saint satan : "பிரளயத்தின் பிள்ளைகள்" கதையை ரொம்பவே ரசித்திருப்பது புரிகிறது. அந்த ஆஷ்விட்ஸ் பீர்கெனௌ concentration camp -ஐ பத்தாண்டுகளுக்கு முன்பாக நேரில் பார்த்திடும் சங்கட அனுபவம் எனக்குக் கிட்டியது. உடன் வந்திருந்த நண்பரின் மனைவி போலந்து நாட்டைச் சார்ந்தவர் ; அவரது தாத்தா அந்த முகாமில் அடைக்கப்பட்டு மரணத்தைத் தழுவியவராம் ! அங்கு சென்றான பின்னே அவர் கண்களில் வழிந்த தாரைகள் இன்றளவும் மறக்க இயலா சோகம்.

      இன்று சலனமற்று நிற்கும் அந்தக் கான்க்ரீட் கொலைக் கூடங்கள் ; சிதிலமடைந்து கிடக்கும் ரயில்வே தண்டவாளங்கள் ; நெடிதுயர்ந்து நிற்கும் புகைக் கூண்டுகள் - மனிதகுல வரலாற்றின் ஒரு கறுப்புப் பக்கத்தை பிரதிபலிக்கும் சின்னங்கள் !

      Delete
    3. டியர் சாத்தான் ஜி!

      //அந்த பெங்களூர் அங்கிள்//
      அய்யோ, அய்யோ :) அந்த பெங்களூர் தடிப்பயல்தான் அப்படி கூப்பிட்டான் என்றால் நீங்களுமா?! ;) சரி சரி, உங்கள் வயதை எண்ணி வருத்தப் படாதீர்கள் - Life begins at 40 gentlemen! ;)

      உங்கள் பாராட்டுகளுக்கும், குசும்புகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்! :)

      //இந்தோ-ஆரிய நாடோடி குழுவினர்//
      பக்கம் 172ல் உள்ள சித்திரங்களை கவனித்தீர்களா? அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பொஹீமியன் ஜிப்ஸிகள் இந்திய வம்சாவளியினரா? படங்களும், வசனங்களும் அதையே உணர்த்துவதாய் தோன்றுகிறது!

      Delete
    4. அந்த கொலை கூடங்களின் புகை படங்கள் எல்லாம் பழய comicsகளில் தொடராக வந்ததாக ஞாபகம்...

      Delete
  39. சார் ரெட் டஸ்ட் இடம் பெற்றுள்ள பொன்னனின் முதல் அட்டை படம் இன்னும் அட்டகாசமாய் இருந்திருக்கும்!
    டெக்ஸ் வில்லர் அருமை!முதலில் நான் படித்தது தோட்டா தேசமே, கண்களின் பயனை இப்போதுதாம் உணர வைக்கிறானோ இறைவன்! கதை மொழி பெயர்ப்பும் சரி பஞ்ச்களும் சரி நச்! ஓவியங்களும் வண்ணச்சேர்க்கைகளும் அடடா சொல்ல வைக்கின்றன, , வண்ணங்கள் பல தடவி கொண்டு திரியும் வண்ணத்து பூச்சியின் இறகுகளால் இமைகளை பிரிக்கின்றன ! கடைசியாக தாங்கள் வெளியிட்ட கண்களுக்கு விருந்தளித்த பிரின்ஸ் முடிந்து விட்டதே என வருந்தியா எனக்கு அந்த குறையும் நீங்கியது! மேலும் பார்னே, பொடியன் ஜிம்மியை நினைவு படுத்தும் முகங்கள் பிரின்சின் நண்பர்களுடன் உலவுவது போன்றே! இது வரை வந்த கௌ பாய் கதைகளில் (ஏன் டைகரையும் சேர்த்திதான் ) இல்லாத அளவிற்கு கௌ பாய் உலகில் என்ன தேவையோ, இருந்திருக்குமோ அவை அனைத்தும் இடம் பிடிக்க தவறவில்லை ! காதலியை, மனைவியை தேடுவார்களே எனது கனவு பெண் என அதுபோல இந்த கதை கவ்பாய் உலகம் என என் கண்கள் காண துடித்தது இதைதான் என எனது மனது உச்சரிக்க தவறவில்லை! இந்த அற்புதத்தை படைத்த ஓவியருக்கும்,எங்கள் முன்னே படைத்த தங்களுக்கும் வெறும் நன்றிகள் கூறினால் முடியாது ! வாழ்க! வளர்க!! என்ன சொல்வதென்றே தெரியவில்லை ! அருமை ! அற்புதம்!

    ஸ்டீல் பாடி வழக்கம் போலவே பின்னி பெடலெடுக்கிறார் வாட்சன் துணையால் ! மொழி பெயர்ப்பு நகைச்சுவையின் உச்சமென்றால் மிகை அல்லவே!
    நண்பர்களின் எழுத்துக்களை காணும் போது எனக்கு அடுத்த மாபெரும் விருந்த காத்திருப்பதை உணர்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. // .... சார் ரெட் டஸ்ட் இடம் பெற்றுள்ள பொன்னனின் முதல் அட்டை படம் இன்னும் அட்டகாசமாய் இருந்திருக்கும்!
      டெக்ஸ் வில்லர் அருமை!முதலில் நான் படித்தது தோட்டா தேசமே, கண்களின் பயனை இப்போதுதாம் உணர வைக்கிறானோ இறைவன்! கதை மொழி பெயர்ப்பும் சரி பஞ்ச்களும் சரி நச்! ஓவியங்களும் வண்ணச்சேர்க்கைகளும் அடடா சொல்ல வைக்கின்றன, , வண்ணங்கள் பல தடவி கொண்டு திரியும் வண்ணத்து பூச்சியின் இறகுகளால் இமைகளை பிரிக்கின்றன ! கடைசியாக தாங்கள் வெளியிட்ட கண்களுக்கு விருந்தளித்த பிரின்ஸ் முடிந்து விட்டதே என வருந்தியா எனக்கு அந்த குறையும் நீங்கியது! மேலும் பார்னே, பொடியன் ஜிம்மியை நினைவு படுத்தும் முகங்கள் பிரின்சின் நண்பர்களுடன் உலவுவது போன்றே! இது வரை வந்த கௌ பாய் கதைகளில் (ஏன் டைகரையும் சேர்த்திதான் ) இல்லாத அளவிற்கு கௌ பாய் உலகில் என்ன தேவையோ, இருந்திருக்குமோ அவை அனைத்தும் இடம் பிடிக்க தவறவில்லை ! காதலியை, மனைவியை தேடுவார்களே எனது கனவு பெண் என அதுபோல இந்த கதை கவ்பாய் உலகம் என என் கண்கள் காண துடித்தது இதைதான் என எனது மனது உச்சரிக்க தவறவில்லை! இந்த அற்புதத்தை படைத்த ஓவியருக்கும்,எங்கள் முன்னே படைத்த தங்களுக்கும் வெறும் நன்றிகள் கூறினால் முடியாது ! வாழ்க! வளர்க!! என்ன சொல்வதென்றே தெரியவில்லை ! அருமை ! அற்புதம்! ..//

      Dear Editor, எனக்கு இவ்வாறு விரிவாக எழுதத்தெரியவில்லை.. ஆனால் இதே தான் எனது உணர்வுகளும்...

      அழகான வார்த்தைகளில் வடித்த கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்க்கு நன்றி

      Delete
  40. Vijayan11 July 2013 19:44:00 GMT+5:30

    thinaharan natham : கடைசிப் 15 பிரதிகளுக்கு வந்து விட்டோம் ; விற்பனைக்கு ஏஜெண்டுகள் கேட்கும் பட்சத்தில் ஸ்டாக் இல்லையெனச் சொல்லும்படி பணித்திருந்தேன். உங்களை முகவராக நினைத்துத் தவறுதலாய்ச் சொல்லி இருக்கக் கூடும் !

    இன்னமும் 15 பிரதிகள் மாத்திரமே உள்ளன !
    கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்12 July 2013 08:00:00 GMT+5:30

    ஆஹா!
    Delete
    கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்12 July 2013 08:13:00 GMT+5:30

    சார் அப்போ அடுத்த குண்டு புத்தகத்தை ஆரம்பித்து விட வேண்டியதுதானே! குண்டு புத்தகங்கள் விற்பனையில் தூள் கிளப்பியது ரகசியம் அல்லவே!
    மின்னும் மரணமும் ,இரத்த படலமும் அணிவகுக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. @கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : +1

      Delete
    2. தயவு செய்து மின்னும் மரணம் அனைத்து பாகங்களும் ஒரே புத்தகமாக அல்லது இரண்டிரண்டு volumes சேர்த்து ஆனால் ஒரே நேரத்தில் வெளியிடவும்

      Delete
  41. @ALL : பாராட்டுகளுக்கு நன்றி

    @ ஈரோடு விஜய்: கடைசி நாள் அன்று அவசரம் அவசரமா லஞ்ச் டையத்தில் மொழிபெயர்த்து, rough copy யை தங்லிஷில் எழுதி மீண்டும் fair copy தமிழில் எழுத ஆரம்பித்தால் எழுத்தே வரல . சுமார் 17 வருஷத்துக்கு முன்னாடி 10th இல் தமிழ் இரண்டாம் தாள் பரிட்சை தான் கடைசியா தமிழ்ல கைல எழுதுனதுனு உறைச்சது. அதான் எழுத்துக்கள் எல்லாம் ஒரு பக்கமா இழுத்துகிட்டுஇருக்கு.

    எல்லோரும் இப்படி ANS விமர்சனத்த துவச்சு காயபோடும் பொது மணிக்கொரு முறை விட்டுக்கு போன் பண்ணி கொரியர் வந்துச்சானு கேட்டு பொண்டாட்டி கிட்ட வாங்கி கட்டிக்கிட்டு இருக்கேன். இன்னைக்கு வரலேன்னா.....

    ReplyDelete
    Replies
    1. நான்: குரியர் வந்துச்சா மா ?மனைவி: ஒருவாரமா அம்மாவீட்டுல இருந்து குடுத்து விட்ட மசாலா பொடிய தங்கச்சி வீட்டுல போய் வாங்கிட்டு வரலாம்னு சொன்னது ஞாபகம் இல்ல,
      4 நாள் முன்னாடி பூரி கட்டைய கால்ல போட்டு நகம் விண்விண்னு வலிக்குதுனு சொன்னத ஒரு தடவ கூட விசாரிக்கல,
      மயில் (மகள்: வயது 5 ) ஸ்கூல்ல இன்னைக்கு "Purple" கலர் day, அதுக்கு purple கலர்ல ஒரு fruit கொண்டு வரசொல்லி இருக்காங்க அது பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல,
      மின்மினி (மகள் no:2: வயது 1.5) ரெண்டு நாளா சரியாவே கக்கா போகல அது பத்தி எல்லாம் கொஞ்சம் கூட கவலை இல்லாம மணிக்கொரு தடவ போன் பண்ணி கொரியர் வந்துச்சான்னு கேக்கறீங்களே உங்க நெஞ்சுல ஈரமே இல்லையா.. நீங்கெல்லாம் ஒரு மனுஷனா.. ச்சே..

      நான்: சரி, கொரியர் வந்தா கூப்பிடு.. நான் அப்றம் பேசறேன்...

      சட சடார் சில் டொக் (போன் கீழே சிதறும் சத்தம்).

      Delete
    2. ஹா ஹா ஹா! வாய் விட்டு சிரிச்சுட்டேன் விஜய்!

      நம்மில் நிறையப்பேர் வீட்டிலும், ஆபீஸிலும் இப்படி மந்திரிச்சுவிட்ட மாதிரிதான் சுத்திட்டிருக்கோம்! :)

      நான்கூட, யாரோட உயிரும் போகாமயே ஒரு கொலைகாரனா மாறுவது எப்படின்னு தீவிரமாக யோசிச்சிட்டிருக்கேன்! :)

      (மயில், மின்மினி - ஆஹா! நல்ல பெயர்கள்!)

      Delete
    3. @சூப்பர் விஜய்:

      இந்த காலத்தில் தமிழ் பெயர் வைப்பதை விரும்பாத தருணத்தில், அழகிய தமிழ் பெயர்கள், அருமை ... வாழ்த்துக்கள் நண்பரே :)

      Delete
    4. @ஈரோடு விஜய்:

      //நான்கூட, யாரோட உயிரும் போகாமயே ஒரு கொலைகாரனா மாறுவது எப்படின்னு தீவிரமாக யோசிச்சிட்டிருக்கேன்! //

      உங்கள் கனவுகளில் நீங்கள் கொலை செய்யலாமே :)

      Delete
    5. @ ப்ளூ

      // உங்கள் கனவுகளில் நீங்கள் கொலை செய்யலாமே //

      ஆஹா! செம ஐடியா! :)
      அப்படின்னா, நான் இப்பவே ஒரு லிஸ்ட் ரெடி பண்ண ஆரம்பிச்சுடுறேன்; ஏகப்பட்ட கொ/வேலைகள் பாக்கியிருக்கு!

      முதலாவதா என் பள்ளிக்கூடக் கணக்கு வாத்தியாரைப் போட்டுத்தள்ளனும்!

      Delete
    6. விஜய் அதுவும் கணக்கு போட்டு கொள்ள வேண்டும் ! அப்போதுதான் கொலையும் கணக்காய் இருக்கும் ! ஏற்கனவே நீங்கள் பள்ளியில் போட்ட கணக்கால் பாதி இறந்திருப்பார்! ஆகவே மீதி கணக்கும் சுலபமே! விடாதீர்கள் !

      Delete
  42. @சிம்பா & சூப்பர் விஜய்
    காத்திருத்தல் என்று ஓன்று நமது வாழ்வில் நேருவதாக இருந்தால் அது நமது லயன் கமிக்ஸுக்காக இருக்க வேண்டும். புத்தகம் பிறகு கைகளில் கிடைக்கும் போது அந்த காத்திருத்தலுக்கான உரிய அர்த்தம் கிடைத்து விடுகிறது. இது போன்ற அர்த்தமுள்ள மதிப்புமிக்க காத்திருப்பு தருணங்கள் வாழ்வில் அமைவது மிக சொற்பமே!

    வழக்கமாக அடுத்த நாள் கைக்கு வர வேண்டிய எனது புத்தகம் ஒரு நாள் என்னை காத்திருக்கவைத்து பிறகே கைக்கு கிடைத்தது. அப்போது பிறந்த ஞானமே எனது இந்த பின்னூட்டத்தின் முதல் பகுதி! : )

    பின் குறிப்பு: முதல் நாள் புத்தகம் கைக்கு வராத போது ST கொரியருக்கு போன் செய்கிறேன்.

    என்னங்க ஆச்சு என்னோட புக் ??

    இந்த ஏரியாவுக்கு வர்ற ஆள் இன்னக்கு லீவு சார்...நாளைக்கு கொடுத்திடறேன் !!

    என்னங்க உங்க சர்வீஸ் இவ்வளவு மோசமா இருக்கு ??? என்னால இதுக்கு மேல காத்திருக்க முடியாது !!! : )

    ஒரு நாள் பொறுத்துக்கோங்க சார் ! காலையில கட்டாயம் வந்து கொடுத்திடறேன் !

    எவ்வளவு நாள் தாம்பா காத்திருக்கறது !!!நாளைக்கு முதல் வேலையா கொண்டுவந்து கொடுத்திடு !!!

    ReplyDelete
    Replies
    1. மழலை மொழி பேசும் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் பொழுது கிடைக்கும் ஒரு மன நிம்மதி , நமது காமிக்ஸ் இதழ்களை படிக்கும் பொழுது மட்டுமே ஏற்படுகிறது. அது அம்மாவின் மடியினில் படுத்துறங்கும் பொழுது கிட்டிடும் நிம்மதியை போன்றது..... அவ்வாறான வாய்ப்பு மாதம் ஒருமுறையே கிடைக்கிறது நமக்கு..... அச்காமையம் காத்திருப்பின் வலி சற்று அதிகமாகி பொறுமை இழக்க செய்து விடுகிறது.... :)

      Delete
  43. 'பிரளயத்தின் பிள்ளைகள்' கதையின் இறுதிப் பக்கத்தில் புன்னகைத்தபடியே போஸ் கொடுத்திருக்கும் ஓவியர் பெடெண்ட், கதையில் நாயகனாக வரும் ஜோஸப் போலவே இருப்பதாக எனக்குத் தோன்றுவது உண்மைதானா?!!

    ReplyDelete
  44. டியர் ஸார் ......
    பிரளயத்தின் பிள்ளைகள் .....ஏனோ ஒட்டவில்லை ...............சித்திரங்கள் கலக்கல் ................டாகுமெண்டரி effect ......எப்பவாவது சோகமா இருந்தால் படிக்க வேண்டும்............மந்திரியாவது சோகமாவவது....

    ReplyDelete
  45. ஸ்டீல் பாடி சூப்பர்

    ReplyDelete
  46. டியர் விஜயன் சார்,

    ANS-ஐ நேற்றிரவு முழுதாய் படித்து முடித்தேன்!

    க்ரீன் மேனர் பற்றி ஏற்கனவே சொல்லி விட்டேன்! அட்டகாசம்தான் போங்கள்! இதில் உள்ள ஒரே சங்கடம் - சமகால பாணியில் இல்லாத தமிழ் வசனங்கள் தமிழ் ஆர்வலர்களைத் தவிர்த்து பிறரை பரவலாகக் கவருமா எனத் தெரியவில்லை! எனது பகுதியை (மட்டும்) பெரும் கெஞ்சல்களுக்குப் பின் படித்த என் மனைவியார் ("மனைவியர்" அல்ல) - 'தமிழ்ல புரியற மாதிரி எழுதி இருக்கலாமே?!' என்று கடுப்பேற்றினார். காமிக்ஸ் வாசிப்பை புதிதாய் மலரச் செய்யும் முயற்சிகளில் இது போன்ற சிறுசிறு அவமானங்களை சகித்துக் கொண்டுதானே ஆக வேண்டும், என்ன செய்வது?! :)

    ஆறுதல் அளிக்கும் விதத்தில் என் அண்ணர் 'க்ரீன் மேனர் கதைகள் மிக நன்றாக இருக்கின்றன' என்று கூறினார்! அவர் 30 வருடங்களுக்கு பிறகு காமிக்ஸ் படிக்கிறார் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்!

    நீங்கள் முடிவெடுத்ததிற்கு மாறாக இக்கதையில் பேச்சுத் தமிழை உபயோகித்திருந்தால் இது இன்னொரு ஸ்டீல் பாடி நகைச்சுவை துணுக்கு கதைகளாக மாறி இருக்கும் என்பதே உண்மை! துயரத்தை பகடி செய்யும் விக்டோரியன் கால க்ரீன் மேனருக்கு தூய தமிழே பொருத்தமானது என்ற உங்கள் முடிவோடு முழுதும் ஒத்துப் போகிறேன்!

    அதே வேளையில், எனக்கு நெருடலாக தோன்றிய விடயங்கள் இரண்டு!

    1. 'வெற்றார்ப்பரிப்பு', 'கற்பனைக்கப்பாற்பட்டதொரு' - இவை போன்ற கடினமான இரண்டு சொற்களை இணைத்து கூட்டுச் சொற்களாக மாற்றும் போது படிக்க சற்று சிரமமாக இருக்கக் கூடும்!

    2. நிஷ்டூரம், நல் நேர நஞ்சு, யெளவனமான யுவதி - போன்ற வழக்கில் இல்லாத பிரயோகங்கள் குழப்பத்தை தரக் கூடும்.

    உண்மையில் இது போன்ற அழகிய தமிழினை நான் மிகவும் ரசிக்கிறேன், நமது வாசகர்களும் ரசிப்பார்கள் என்றாலும், புதிதாய் காமிக்ஸ் படிக்க முயற்சி செய்பவர்களுக்கு இவை ஒரு மனத்தடையாக அமைந்து விடக் கூடாது அல்லவா?!

    ReplyDelete
    Replies
    1. // புதிதாய் காமிக்ஸ் படிக்க முயற்சி செய்பவர்களுக்கு இவை ஒரு மனத்தடையாக அமைந்து விடக் கூடாது அல்லவா? //

      உண்மைதான்!

      Delete

    2. @Karthik Somalinga, @Erode VIJAY: உங்கள் இருவரது தமிழுமே கொஞ்சி விளையாடுகிறது. முதலாவரது புத்தகத்தில், இரண்டாமவரது பதிவுகளில் :)


      @சூப்பர் விஜய் : நீங்களும் தான் நண்பரே :)

      Delete

    3. //அவர் 30 வருடங்களுக்கு பிறகு காமிக்ஸ் படிக்கிறார்//
      சிறிய திருத்தம்! 20 வருடங்களுக்குப் பிறகு படிக்கிறார்!

      Delete
  47. I have read only one story as of now - thotta desam - it was good.

    surprised to see no comments on the new translator(not referring our karthi:-) ) mentioned at the end of the story with the editors name.

    Edi Sir,

    Yaar inda pudu translator?

    ReplyDelete
    Replies
    1. Sathya : நீங்கள் ஒரிஜினல் ஷெர்லாக்கா - ஸ்டீல்பாடியாரின் டூப்பா என்ற ஆராய்ச்சி வேண்டாம் என்பதால் - உங்களின் கேள்விக்கான பதில் இதோ :-)

      (ஆரம்பம் முதலே) நம் கதைகளில் பலவற்றை தமிழில் மொழிபெயர்க்கும் முதல் நிலையில் பொறுப்பேற்பவர் திரு.கருணைஆனந்தம் அவர்கள் ! அவரது முதல் copy -ன் மீது நான் திருத்தங்கள் ; மெருகூட்டல் ; மாற்றி எழுதுதல் இத்யாதிகளைச் செய்து finished copy தயாரிப்பேன் .So ANS -ல் அது போன்ற கூட்டணியில் உருவான கதைகளில் எங்கள் இருவரது பெயர்களும், இடம் பிடித்திருந்தது.

      நான் மாத்திரமே எழுதிய கதைகளில் என் பெயர் மாத்திரமே !முன்னரே நம் வலைபதிவுகளில் இதனைக் குறிப்பிட்டுள்ள ஞாபகம் எனக்குள்ளது ; எந்தப் பதிவில் என்று நினைவில்லை !

      Delete
  48. டியர் எடிட்டர்,

    ஆல் நியூ ஸ்பெஷல் - விமர்சனம் !

    1. க்ரீன் மேனர்

    ஆசிரியர் இந்த கதையை அறிவித்தபோது, இதை தமிழில் போழிபெயர்ப்பது கடினம், கொஞ்சம் சொதப்பினாலும் காமடி பீசாகிடும் என்று சிலர் பயமுறுத்தி இருந்தனர். நானும் ஆஹா விஜயன் சார் மாட்டிகிட்டாருடா, குற்றம் மட்டுமே கண்டுபிடிப்பர்களிடம் மாட்டிப்பார் போலிருக்கே, அடப்பாவமே என்று ஒருவித திகிலுடன் எதிர்நோக்கி இருந்தேன். நானும் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் ஒவ்வொரு பக்கங்களையும் புரட்ட புரட்ட எனக்கு இன்ப அதிர்ச்சி என்றால் மிகையில்லை. எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. எடிட்டரின் அட்டகாசமான உழைப்பு, மிக வித்தியாசமான மொழிபெயர்ப்பு என்று (சில இடங்களில் இலக்கனதமிழ் புரிய நேரமானாலும்) வித்தியாசமான படிக்கும் அனுபவத்தை கொடுத்தது. நண்பர் கார்த்திக்கின் மொழிபெயர்ப்பு தேர்வும் சோடைபோகவில்லை.

    கிரீன் மேனர் - கிரீன் சிக்னல் !

    2. தோட்டா தேசம்

    அற்புதமான ஆர்ட் வொர்க். சில இடங்களில் தென்படும் எழுத்து பிழைகளைத்தவிர பெரிதாக குறைசொல்ல ஒன்றுமில்லை. ரெட் டஸ்ட் - பெயரில்தான் டஸ்ட் ஆனால் ரொம்ப பாஸ்ட். அனேகமா டைகர் என்கிற ப்ளுபெர்ரிக்கு மிகப்பெரிய மிகப்பெரிய போட்டியை தருவார் (தல டெக்ஸ் என்னைக்கும் ஒன்மேன் ஆர்மிதான்).

    தோட்டா தேசம் - மிடுக்கான வேஷம் !

    3. பிரளையத்தின் பிள்ளைகள்

    தளபதி படத்தில் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவை ஞாபகப்படுத்தும் அற்புதமான ஆர்ட்வொர்க். கல் மனதையும் கலங்கசெய்யும் கதைக்களம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோல் கதைகளை நிறைய எதிர்ப்பார்க்கிறேன்.

    பிரளையத்தின் பிள்ளைகள் - மனதைக் கிள்ளியவர்கள் !

    4. ஸ்டீல்பாடி ஷெர்லாக் - வழக்கம்போல் ஷாக் !

    5. மியாவி - கொட்டாவி !

    மொத்தத்தில்

    ஆல் நியூ ஸ்பெஷல் - இனி என் ஆல்டைம் பேவரிட் ஸ்பெஷல்

    மார்க் போடலனா எப்படி. என்னோட மார்க் 91.5/100

    ReplyDelete
    Replies
    1. P.Karthikeyan : // மிக வித்தியாசமான மொழிபெயர்ப்பு என்று (சில இடங்களில் இலக்கனதமிழ் புரிய நேரமானாலும்) வித்தியாசமான படிக்கும் அனுபவத்தை கொடுத்தது.//

      நம் மொழியின் அகன்ற ஆற்றலை ; அதன் அபரிமித ஆழங்களை லேசாக ரசிக்க ஒரு வாய்ப்பு GREEN MANOR மூலம் கிட்டியதில் எனக்கு சந்தோஷமே ! எழுத்தின் மெலிதான நடைமாற்றம் எத்தனை புதுமைகளை நமக்குக் கட்டவிழ்த்துக் காட்டுகிறது எனும் போது இங்கு நிஜமான வெற்றி எனக்கோ ; செமையாய் எழுதியிருந்த நண்பர் கார்த்திக்கிற்கோ அல்ல - தமிழ் மொழிக்கே !

      எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க இயன்றளவு முயன்றாலும் - அவை எங்காவது "உள்ளேன் அய்யா" போடத் தவறுவதில்லை ! 'Printer's Devils" என்று இவற்றிற்குப் பெயர் வைத்த புண்ணியவான் நிச்சயம் ஒரு எடிடராகத் தான் இருந்திருக்க வேண்டும் ! Will take more care !

      Delete
  49. தனது 29 ஆவது பிறந்தநாளை புத்தாடை உடுத்தி கொண்டாடுவதை போல நமது சிங்கராஜா புதிய கதை களங்களையும் புதிய நாயக நாயகியரையும் ஏற்றிருப்பது மிகப்பொருத்தமாக அமைகிறது.

    HAPPY BIRTHDAY சிங்க ராஜ!

    முன்னட்டை கிளாச்சிக் காக வந்துள்ளது. சிகப்பு BG அருமையான தேர்வு. பளிச் என்றதொரு எடுப்பான தோற்றம். ஒரு சிறு உறுத்தல் அந்த ANS டைட்டிலுக்கு பின்னே உள்ள சதுர டிசைனை AVOID செய்திருக்கலாம். அட்டை படத்துடன் ஒட்டவில்லை.

    கனமாக உள்ள இந்த புத்தகத்தை போல எல்லா மாதமும் புத்தகம் வரக்கூடாதா என மனம் ஏங்குவதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் இது போன்ற கதம்பமான கதைகளை கொண்ட புத்தகங்களால் ஒரு குறை என்னவென்றால் கிரீன் மேனர் மற்றும் பிரளயத்தின் பிள்ளைகள் போன்ற கதைகள் தனி பிரதிகளாக வந்திருந்தால் அவை அவற்றுக்கே உரிய தனி தன்மையுடன் கூடிய நீங்கா முத்திரையுடன் வாசகர்ளின் மனங்களில் நிலைபெற்றிருக்கும். தற்போதைய சூழலில் தங்கப்போவதெல்லாம் ஒரு "ஆல் நியூ ஸ்பெஷல்" என்ற முத்திரை மட்டுமே. "எமனின் திசை மேற்கு" மற்றும் "பிரளயத்தின் பிள்ளைகள்" ஆனா இந்த கதைகளின் மதிப்பு இப்படி மற்ற கதைகளுடன் இணைப்பதால் சற்றே மங்கி விடுகிறதென்பது என்னுடைய எண்ணம்.

    புத்தகத்தின் பிரிண்டிங் தரம் அற்புதம்.

    நான் முதலில் படித்தது தோட்டா தேசம் . இதற்கான தலைப்பு இன்னமும் சற்று கதை CENTRIC ஆக இருந்திருக்கலாம். BUT CLASSIC TITLE.
    எண்பதுகளில் வெளிவந்த ஒரு கிளாச்சிக் கௌபாய் கதையை படிக்காமல் தவறவிட்டு இப்போது படித்தால் என்ன ஒரு உணர்வு வருமோ அப்படி இருந்தது இதை படித்து முடிக்கும் போது. சித்திரங்கள் அருமையோ அருமை. காமிக்ஸ் எனபது ஒரு ஜாலியான RELAXING அனுபவத்தை படிக்கும்போது தர வேண்டுமென்பதற்கு இந்த கதை ஒரு சிறந்த உதாரணம்.

    பிறகு ஏன் ரெட் டஸ்ட் துப்பாக்கியை ரேவர்சில் சொருகியுள்ளார் என்ற விஜயின் கேள்வி எனை சிந்திக்க வைத்த போது, இது போல இருந்தால் துப்பாக்கியை உருவும் போது WRIST ACTION மிக துரிதமாக இருக்கும் என தோன்றுகிறது. எனது அலுவலகத்தின் மதிய வேலையில் WRIST ACTION னை PRACTICE செய்தபோது அது புலப்பட்டது. எனது சகா என்னை ஒரு மாதிரி பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.
    லைப்ல இதுல்லாம் சகஜம்பா : p

    ReplyDelete
    Replies
    1. @ விஸ்கி-சுஸ்கி

      கிட்டத்தட்ட என் குழப்பத்தை போக்கியிருக்கிறீர்கள். நன்றி!
      அதாவது, சித்திரங்களில் கையை நேராக வைத்திருந்தாலும், துப்பாக்கியை உருவியெடுக்கும்முன் மணிக்கட்டை 180 டிகிரி ஆன்டி-க்ளாக்வைஸில் சுழற்றி, துப்பாக்கியைப் பிடித்து உருவியெடுத்து மீண்டும் ஒரு 270 டிகிரிக்கு கீழிருந்து மேல்புறமாக வெர்ட்டிக்கலாக சுழற்றி குறியை நோக்கி... உஸ்... அப்பாடா! இதையா சுலபமென்கிறீர்கள்?!!

      Delete
    2. அவர் துப்பாக்கியை எடுக்கும் போது யாரேனும் பார்த்தீர்களா! அது போலவே உள்ளே வைப்பதும் ஒரு கலை!

      Delete
    3. சீதையை ராமர் மடக்கிய போது வில் உடைந்த ஒலியைதானே கேட்டார், ஒளியை அல்லவே !

      Delete
    4. விஸ்கி-சுஸ்கி ://நான் முதலில் படித்தது தோட்டா தேசம் . இதற்கான தலைப்பு இன்னமும் சற்று கதை CENTRIC ஆக இருந்திருக்கலாம். BUT CLASSIC TITLE.//

      ஒரு நீளமான தொடரின் ஆரம்பம் என்ற பார்வையில் "தோட்டா தேசத்தை" நான் அணுகியதால் - குறிப்பிட்ட இந்த episode -க்கு மாத்திரமே பொருந்தும் வகையில் பெயர் சூட்டாமல், சற்றே 'விசலாமாய்' இருக்க அனுமதித்தேன் ! (இது வரை) 15 பாகங்கள் கொண்ட இத்தொடரை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய எண்ணியுள்ளேன்.,..fingers crossed !

      அந்த கௌபாய் துப்பாக்கி wristaction சங்கதி சூப்பர் :-) சிந்திக்கச் செய்த ஈரோடுப் பூனையாருக்கும் ; சிந்தித்த உங்களுக்கும் ஒரு தீபாவளித் துப்பாக்கியாவது வாங்கி அனுப்பப் பரபரக்கிறது !

      Delete
    5. விஸ்கி-சுஸ்கி //இது போன்ற கதம்பமான கதைகளை கொண்ட புத்தகங்களால் ஒரு குறை என்னவென்றால் கிரீன் மேனர் மற்றும் பிரளயத்தின் பிள்ளைகள் போன்ற கதைகள் தனி பிரதிகளாக வந்திருந்தால் அவை அவற்றுக்கே உரிய தனி தன்மையுடன் கூடிய நீங்கா முத்திரையுடன் வாசகர்ளின் மனங்களில் நிலைபெற்றிருக்கும். //

      தனியாக வரும் கதைகளின் தாக்கம் அதிகமிருக்கும் என்ற கருத்துக்கு நான் உடன்பாடு சொல்ல மாட்டேன் ! பத்தோடு பதினொன்றாக அணிவகுத்து நிற்கும் போதும் வீரியம் கொண்ட கதைகள் நம் மனதை விட்டு அகல்வதில்லையே !

      இங்கு சின்னதாய் ஒரு விஷயம் : நம் கதைகளின் பெரும்பான்மை பெல்ஜியத்தில் வெளியான TINTIN ; SPIROU போன்ற காமிக்ஸ் பத்திரிகைகளில் தொடர்களாக வந்து ; வெற்றியான பின்னே தனித் தனி ஆல்பம்களாக வலம் வந்தவை. So நிறைய வேளைகளில் இவைகளின் துவக்கப் புள்ளிகள் - கதம்பமானதொரு கச்சேரியில் தானே தவிர exclusive albums வாயிலாக அல்ல !

      Delete
    6. // 15 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய எண்ணியுள்ளேன் //

      ஹம்... எடிட்டர் திருந்திட்டர்னு நெனச்சேன்... அடுத்த இரத்தப்படலம் உருவாகிவருதற்கான எல்லா அறிகுறியும் தெரிகிறது! அந்தச் சின்னப்பெண் 'கமான்சே' மூதாட்டி ஆவதற்குள் முடித்தால் சரிதான்!
      :)

      Delete
  50. பிரளயத்தின் பிள்ளைகள் super

    ReplyDelete
  51. பக் 57. . பளிச் வெள்ளையாய் இருப்பது ஏன் ? புரிய வில்லையே சார் . .

    ReplyDelete
  52. அப்புறம் . . ரெட் டஸ்ட் ஏற்கனவே ஒரு கதை மூலம் நமக்கு அறிமுகமாயிருக்கிறார் . . . ஆனால் துவக்கம் ஒரு அழகான கௌபாய் தொடர் என இருப்பது ! !

    ReplyDelete
    Replies
    1. ஓநாய் கணவாய் (The wolves of Wyoming - in English)

      Delete
  53. விஜயன் சார், வழக்கமாக நமது காமிக்ஸ் வந்த 10 நாட்களுக்குள் தினமும் 2-4 பக்கம்கள் படிப்பதன் மூலம் எல்லா கதைகளையும் படித்து விடுவேன். ஆனால் இந்த முறை ANS-ல் தோட்டா தேசம் முதல் இரண்டு பக்கம் படிக்கும் போதே இது ஒரு வித்தியாசமான கதை என்பதால் நிதானமாக ஒரே மூச்சில் படிக்கவேண்டும் என முடிவு செய்து விட்டேன்! இது மற்ற கதைகளுக்கும் பொருந்தும் என்பதை நண்பர்கள் விமர்சனம் மூலம் புரிந்து கொண்டேன்! ANS-ல் புத்தகத்தில் ஸ்டீல் பாடி ஷெர்லாக் மட்டும் படித்தேன்! ANS-ல் மற்ற கதைகளை சரியான நேரம் கிடைக்கும் போது படிக்க போகிறேன்

    ReplyDelete
  54. //Vijayan12 May 2013 14:09:00 GMT+5:30
    இன்னும் ஒரு படி மேலே போகணுமென்றால் - "KAUN BANEGA TRANSLATOR " பாணியில் - "Kaun Banega Graphic Designer " என்றதொரு போட்டி கூட துவக்கிப் பார்க்கலாமே - நண்பர்களின் திறன்களை வெளிக் கொணர ?! What say folks ? //

    டியர் சார்,
    நமது புத்தகத்தில் முதலில் பெரும்பான்மையோர் படிப்பது ஹாட் லைன் . அதன் பிறகு எனது பார்வை "வருகிறது" விளம்பரங்களின் மேல் மையல் கொள்ளும்.
    சில வேலைகளில் இந்த விளம்பரங்களுக்கான layout கள் அவசர கதியில் ஏனோதானோ என்று லோ resolution படங்களை கொண்டு இருக்கும். இந்த இதழில் "ஆதலினால் அதகளம் செய்வீர் " விளம்பரம் ஒரு உதாரணம்.

    இந்த "Kaun Banega Graphic Designer " ரை ஏன் இந்த பகுதிக்கு நீங்கள் முயற்சி செய்ய கூடாது ???

    ReplyDelete
    Replies
    1. விஸ்கி-சுஸ்கி ://சில வேலைகளில் இந்த விளம்பரங்களுக்கான layout கள் அவசர கதியில் ஏனோதானோ என்று லோ resolution படங்களை கொண்டு இருக்கும். இந்த இதழில் "ஆதலினால் அதகளம் செய்வீர் " விளம்பரம் ஒரு உதாரணம்.//

      Valid Point ! எனக்கும் அந்த விளம்பரம் பிடிக்கவில்லை ! முன்பெல்லாம் ஓவியர்களைக் கொண்டு பணியாற்றும் போது, படங்களை பொறுமையைத் தேர்வு செய்து, அழகாய் layout போட்டு விளம்பரங்கள் தயாரிப்போம். ஆனால் இப்போதோ சகலமும் கணினிமயம் என்றான பின்னே, பணி செய்யும் நம்மவர்களிடம் அந்த artistic values குறைவாகவே உள்ளது ! உட்பக்கங்களை மாய்ந்து, மாய்ந்து டைப்செட் செய்து ஓய்ந்து போன பின்னே, 'அட..இவை வெறும் விளம்பரங்கள் தானே ?' என்று சற்றே சுலபமாய் எடுத்துக் கொள்ளும் attitude தலை தூக்கி விடுகிறது.

      எல்லாவற்றிற்கும் மேலாக, ஆர்டிஸ்ட்களோடு வேலை நடந்தேறும் போது, அவர்கள் இருப்பது நமது ஆபீசில் ! அவ்வப்போது நான் எட்டிப் பார்க்க ; திருத்தங்கள் சொல்ல - அனைத்துமே சுலபம். ஆனால் இன்றோ அவர்தம் வீடுகளிலிருந்து பெண்கள் பணி செய்யும் போது சின்னச் சின்ன நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன !

      Anyways இந்த பிரச்சனை இனி தொடராது பார்த்துக் கொள்வோம் !

      Delete
  55. டியர் விஜயன் சார்,

    தோட்டா தேசம் வழக்கமான வெஸ்டர்ன் ஷெரிப், ரேஞ்சர், bounty hunter ரக சாகசங்களில் இருந்து விலகி ஒரு நிஜமான 'கௌபாய்' கதையாக அமைந்துள்ளது! ரெட் டஸ்ட் & கென்டக்கி இவர்களின் அமுங்கிய மேல்மண்டைகளையும், கமான்ச்சேவின் டோரா கண்களையும் தவிர்த்துப் பார்த்தால் பிரம்மிப்பூட்டும் சித்திரங்கள். கதையும் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது!

    பிரளயத்தின் பிள்ளைகள் பற்றிய நண்பர்களின் கருத்துகளை வழிமொழிகிறேன்! ஒவ்வொரு பேனல்களும் மனதை ஆட்கொள்கின்றன! பெருகி வரும் மாற்று காமிக்ஸ்க்கான ஆதரவு மகிழ்வு தருகிறது! மற்ற அனைத்து கதைகளைக் காட்டிலும் இதில் மொழிபெயர்ப்பு மிக அருமையாக வந்திருக்கிறது! ஓவியரின் புகைப்படத்தை பிரசுரித்து பெருமை சேர்த்தது வரவேற்கத்தக்கது! இதை சீராக அனைத்து இதழ்களுக்கும் கடைபிடித்தால் என்ன? (சிலவற்றில் ஓவியரின் உருவங்கள் வெளியாகின்றன, பலவற்றில் வருவதில்லை!). அதே போல மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களை வெளியிட்டதையும் வரவேற்கிறேன்!!

    வகுப்பில் வொர்ஸ்ட் பாயாக இருந்து குழப்பம் விளைவிக்கும் ஒரு மாணவனுக்கு ;) ஒழுக்கம் புகட்டி பெஸ்ட் பாயாக மாற்ற முயற்சிக்கும் ஒரு கண்டிப்பான ஆசிரியரைப் போல ;) ;) - வேஸ்ட் பாடி என "என்னால்" அழைக்கப்பட்ட ஸ்டீல் பாடிக்கு புத்துயிர் பாய்ச்சி டேஸ்ட் பாடி ஆக்கி இருக்கிறீர்கள்! :) கதை சரியில்லை என்றால் டெக்ஸ் & டைகரையே கந்தலாக்கும் நம் நண்பர்களுக்கு ஸ்டீல் பாடி எல்லாம் ஒரு பொருட்டா என்ன?! ;) பரவாயில்லை சார், "அவர்" பாட்டுக்கு ஒரு ஓரமாய் காமெடி செய்து கொண்டு நம்மை மகிழ்விக்கட்டும்! ;) Jokes apart, நிஜமாகவே இம்முறை ஸ்டீல் பாடி பெட்டராக இருந்தது!

    இறுதியாக, விஸ்கி-சுஸ்கியின் கீழ் கண்ட கருத்தை வழிமொழிகிறேன்!

    //ஆனால் இது போன்ற கதம்பமான கதைகளை கொண்ட புத்தகங்களால் ஒரு குறை என்னவென்றால் கிரீன் மேனர் மற்றும் பிரளயத்தின் பிள்ளைகள் போன்ற கதைகள் தனி பிரதிகளாக வந்திருந்தால் அவை அவற்றுக்கே உரிய தனி தன்மையுடன் கூடிய நீங்கா முத்திரையுடன் வாசகர்ளின் மனங்களில் நிலைபெற்றிருக்கும்//

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : தோட்டா தேசத்தின் துவக்கம் dramatic ஆகவோ ; flashy ஆகவோ உருவாக்கப்படாமல், ஒரு மிதப் போக்கில் இருப்பது ஒரு deliberate முயற்சி ! இந்தத் தொடரின் போக்கு எவ்விதமிருக்கப் போகிறது ; என்ன எதிர்பார்க்கலாம் - எதிர்பார்த்தல் ஆகாது என்ற வரைமுறைகளை நிலைநாட்டும் ஆரம்பம் ! தொடரும் பாகங்கள் விறுவிறுப்பில் ஒரு மாற்று கூடிச் செல்வதை பார்த்திடலாம் ! அந்த "அமுங்கிய மண்டைகளும் ; டோரா விழிகளும்" தானே ஓவியரின் trademak !

      தனியாக வரும் கதைகளின் தாக்கம் அதிகமிருக்கும் என்ற கருத்துக்கு நான் உடன்பாடு சொல்ல மாட்டேன் ! பத்தோடு பதினொன்றாக அணிவகுத்து நிற்கும் போதும் வீரியம் கொண்ட கதைகள் நம் மனதை விட்டு அகல்வதில்லையே !

      இங்கு சின்னதாய் ஒரு விஷயம் : நம் கதைகளின் பெரும்பான்மை பெல்ஜியத்தில் வெளியான TINTIN ; SPIROU போன்ற காமிக்ஸ் பத்திரிகைகளில் தொடர்களாக வந்து ; வெற்றியான பின்னே தனித் தனி ஆல்பம்களாக வலம் வந்தவை. So நிறைய வேளைகளில் இவைகளின் துவக்கப் புள்ளிகள் - கதம்பமானதொரு கச்சேரியில் தானே தவிர exclusive albums வாயிலாக அல்ல !

      Delete
    2. @ எடிட்டர்

      'ஒரு வண்ணமயமான இதழ்' என்ற வார்த்தைக்கு முழுத் தகுதி கொண்ட, கண்களுக்கு விருந்து படைத்திடும் 'தோட்டா தேசத்தின்' மீதப் பாகங்களையும் அடுத்த வருடத்திற்குள் வெளியிட்டுவிடும் உத்தேசம்/வாய்ப்பு இருக்கிறதா ஸார்? உங்கள் பதில் ஆமாம்/உண்டு என்று தொடங்க வேண்டுமென்று 'க்ரீன் மேனர் க்ளப்'பின் புதிய அங்கத்தினர் என்ற முறையில் ஆசைப்படுகிறேன்!

      Delete
    3. Erode VIJAY : தொடரும் 14 பாகங்களை அடுத்த ஒராண்டுக்குள்ளா ? நடக்கும் காரியமா ?

      Delete
  56. கறுப்பு கிழவியின் கதைகள் எல்லாம் thgil என்றால் இந்த green manor கதைகள் எல்லாம் கொலை களங்களாக உள்ளன...இந்த தொடர் முடிந்தவுடன்.. கறுப்பு கிழவியின் கதைகள் filler pages ஆகவாவது வர வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. tex kit : "கறுப்புக் கிழவியின் கதைகள்" ஒரு பிரசித்தி பெற்ற அமெரிக்க மெகா நிறுவனத்தின் சொந்தம் ! அதனை filler pages -க்கு உபயோகிக்க permission கோரினால் பிடரியில் போடுவார்கள் ! தனியாக..பிரத்யேகமான இதழ்களாய் வெளியிட உத்தேசம் இருந்தால் தவிர அவர்களிடம் மூச்சுக் காட்ட இயலாது !

      Delete
  57. ஆசிரியர் அவர்களே.....


    பக்கம் 57 [ க்ரீன் மேனர் ] எனக்கு வந்த புத்தகம் முக்கால் பாகம் வெள்ளையாக இருந்தது.....கிளைமாக்ஸ் நெருங்கும் பகுதியாதலால் கதையை புரிந்துகொள்ள முடியவில்லை.......தயவு செய்து அந்த ஒரு பக்கத்தை மட்டும் நமது தளத்தில் அப்லோட் செய்தால் கதையை புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.....ப்ளீஸ்........

    ReplyDelete
  58. சிவ.சரவணக்குமார் : உங்களுக்கு மாத்திரமின்றி இதே கேள்வி கொண்டிருக்கும் இதர நண்பர்களுக்கும் : பக்கம் 57-ன் சித்திர அமைப்பே அது தான் ! அது வெள்ளையாகிப் போனதொரு பக்கமன்று !

    ReplyDelete
    Replies
    1. @ பக்கம் 57 :

      கொடூரமான பல நிகழ்வுகளால் சித்தம் பேதலித்துப்போன ஒரு பெரியவர் கடந்தகாலப் பயணம் ஒன்றை தன் வலுவிழந்த மூளைச் செயல்பாட்டினால் சிரமமே மேற்கொண்டு, நிகழ்காலத்திற்குத் திரும்பிடும் பொருட்டுத் தன் எண்ண அலைகளை மீட்டெடுக்கும் அந்தக் "கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையேயான வெறுமையான (சூன்யமான) கணங்களையே" அவ்வெண்மையான பக்கம் வாசகர்களுக்கு உணர்த்தட்டும் என்று படைப்பாளிகள் நினைத்தார்களோ, என்னவோ?!

      (உஸ்.. அப்பாடா! யாருக்காவது புரிந்ததா?)

      Delete
    2. @Erode VIJAY:
      பரவாயில்லையே?! படைப்பாளிகளே யோசிக்காத கோணத்துல எல்லாம் எக்குதப்பா யோசிக்கறீங்க?! :) ஆனா உண்மை என்னன்னா, கதை தொடங்குவதற்கு முன்பாகவே இதே பாணியில் இன்னும் ஒரு பக்கமும் உண்டு (டாக்டர் தார்ன் தாமஸை சந்திக்க மருத்துவமனைக்குள் நுழைவது போன்ற ஒரு கால் பக்க சித்திரம்!!). நமது இதழில் இந்தப் படம் இடம் பிடிக்கவில்லை! ஒகே, இப்ப வேற ஏதாவது விளக்கத்தை இந்த விடுபட்ட படத்துக்கு ரெடி பண்ணுங்க பாப்போம்! :)

      Delete
    3. @ விஜய்
      தாமஸ் விவரிக்கும் "கடந்த கால நிகழ்வுகள் " எல்லாம் அவர் சித்த பேதலித்த மனதில் உருவான கற்பனை உலக நிகழ்வுகள் என்றும் பார்க்கலாம். அப்படி பார்க்கும் போது கற்பனையான ஒரு உலகிற்க்கும் நிஜ உலகிற்கும் உள்ள இடைவெளியே அந்த சூன்யமான வெண்மை என கொள்ளலாமே !
      ஒரு காட்சிக்கு பல விளக்கங்களை மறைமுகமாக பிணைத்துவிடுவதில் கிரீன் மேனர் படைப்பாளிகள் almost வெற்றிபெற்று விட்டார்கள் என்று சொல்ல வேண்டும்.

      @ கார்த்திக் அந்த முதல் பக்கத்தில் உள்ள சிறிய கோச் வண்டி வெண்மையான BG யில் BLEND ஆவதும் இந்த 57 ஆம் பக்கத்தின் காட்சி BLEND ஆவதிலும் ஒரு SUBTLE வித்யாசம் உள்ளது. முதலில் உள்ள அந்த வெறுமைக்கு எந்த அர்த்தமும் கிடையாது.வேறுமானான் கண்களை கவரக்கூடிய காட்சி அமைப்பு அது. பின்னது அர்த்தம் பொதிந்தது.(அப்படியா ?? : p )

      ரொம்ப யோசிகிறோமோ !!???

      Delete
    4. கண்கள் குருடாகிப்போனதோ என்று ஐயம் எழச்செய்திடும் 'வெண்மையே' வீதியெங்கும் நிறைந்திட்ட பனிபடர்ந்ததோர் அந்திப்பொழுதில், ஆரவாரமின்றி அங்கே நுழைந்திட்ட அந்தக் கோச்வண்டியிலிருந்து இறங்கி நடந்திட்ட ஒரு குண்டுக் கிழம்...

      Delete
    5. @விஸ்கி-சுஸ்கி:
      //ஒரு காட்சிக்கு பல விளக்கங்களை மறைமுகமாக பிணைத்துவிடுவதில் கிரீன் மேனர் படைப்பாளிகள் almost வெற்றிபெற்று விட்டார்கள் என்று சொல்ல வேண்டும்//
      இதுதான் சரியான விளக்கம்! These pages are intentionally left blank!!

      @Erode VIJAY:
      //கண்கள் குருடாகிப்போனதோ என்று ஐயம் எழச்செய்திடும் 'வெண்மையே' வீதியெங்கும் நிறைந்திட்ட .....//
      இந்த வசனம் கமான்ச்சே முதல் பேனல்ல வர்ற வசனம் மாதிரியே இருக்கே! இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க விஜய்? நீங்க யாரை கலாய்க்கறீங்க?! :p

      இந்த பேனலுக்கும் அந்த பேனலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா விஜய்? (நல்ல மாட்னீங்களா?!) ;)

      Delete
    6. நண்பர்களே,

      கொலையாளியும், கொலையானவரும் இதுவரை நேரில் சந்தித்துக்கொண்டதே இல்லை! எனினும், துடிதுடிக்க அந்த அப்பாவி ஜீவன் கொல்லப்பட்ட கதை தெரியுமா உங்களுக்கு?

      முன்னவர் - பெங்களூரிலும்,
      பின்னவர் - ஈரோட்டிலும்!

      :)

      Delete
    7. இருவரும் ஒருவரை ஒருவர் கொல்ல முயல்கிறார்கள்!
      கொலையாளி உயிரோட இருப்பாங்கிறீங்க.... ?

      Delete
    8. இது கொலை ஆகாது கொலை முயற்சி என்றே கொள்ளவேண்டும்!

      Delete
    9. Erode VIJAY : //கொலையாளியும், கொலையானவரும் இதுவரை நேரில் சந்தித்துக்கொண்டதே இல்லை! எனினும், துடிதுடிக்க அந்த அப்பாவி ஜீவன் கொல்லப்பட்ட கதை தெரியுமா உங்களுக்கு?//

      "தொலைதூரக் கொலை" - உங்கள் புண்ணியத்தில் அடுத்த ஒரு இதழுக்கு டைட்டில் தயார் :-)

      Delete
    10. Erode VIJAY : அது சரி...இந்த "அப்பாவி ஜீவன்" என்று அடைமொழி தாங்கி வரும் ஆசாமி யாரோ ?

      :-)

      Delete
    11. @ எடிட்டர்

      "தொலைதூரக் கொலை செய்வீர் பெங்களூரு கணவான்களே!" என்பது இன்னும் கச்சிதமாகப் பொருந்தும் சார்! :)

      Delete
  59. //

    ப்ரூனோ ப்ரேசில்8 July 2013 15:49:00 GMT+5:30
    வாவ்.. தீபாவளி மலரில் இரண்டு டெக்ஸ் கதைகளா? சூப்பர் ... இதன் விளம்பரங்களையும் வெளியிட்டு
    இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    Vijayan9 July 2013 06:45:00 GMT+5:30
    ப்ரூனோ ப்ரேசில் ://இதன் விளம்பரங்களையும் வெளியிட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும//
    புதனன்று இணைத்திடுவோம் !

    ப்ரூனோ ப்ரேசில்9 July 2013 10:40:00 GMT+5:30
    நன்றி சார். அதன் விளம்பரங்களை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். இன்னும் ஒரு நாள் உள்ளதே? ஹும்

    //


    நண்பர் ப்ரூனோ ப்ரேசில் இதை மறந்து விட்டாரோ என்னமோ நாங்கள் மறக்கவில்லை சார்.

    நீங்களும் மறக்காமல் இணைத்திடலாமே ?

    ReplyDelete
    Replies
    1. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : இன்றிரவு :-)

      Delete
  60. கொலை செய்வீர் கனவான்களே அற்புதமான, வித்தியாசமான படைப்பில், ஓவியங்களின் தரத்தில் மிளிர்கிறது! ஓவியங்களை கூர்ந்து கவனியுங்கள் கண் அசைவுகளும், ஒரே மாதிரியான பார்வைகளும், சந்தேகம், ஆச்சரியம், கோபம், அனைவரும் ஆமோதித்தல் என படங்களே பாதி கதைகளை சொல்லும்! ஆசிரியர் அந்த காலத்தை நினைவுறுத்தும் விதமாக அழகு தமிழில் விளையாடி உள்ளார்! பல இடங்கள் கூர்ந்து ரசிக்க வைத்தன! அதிலும் மனித மனதின் குரூரங்களை யதார்த்தமாய் பதிவு செய்கிறது கதை, மனோவியல் தத்துவங்கள் ஆங்காங்கே சிதறி விழுந்து கதையா நகர்த்த பெரும் துணை புரிந்துள்ளது! கார்த்திக்கின் சொல்லாடல் பிரம்மாதம் ...கப்பலில் கொல்லவிருந்த திட்டம் தரை தட்டியது வாவ் சூப்பர் கார்த்திக் !
    யதார்த்தம் போல தெரியும் குரூர எண்ணங்களை வெளிச்சம் போட முயன்ற கதாசிரியருக்கும், அதனை அற்புதமாய் வடித்த ஓவியருக்கும், கதைதனை விலகாமல் தனது மந்திர எழுத்துக்களால் கட்டி போட்ட ஆசிர்யருக்கும் ஜே !
    கதவு திறக்க நாம் காத்திருக்க வேண்டிய காலம் இன்னும் பதினெட்டு நாட்கள், அச்சில் எறியாகி விட்டது என ஆசிரியர் கூறி உள்ளதால் முன்னரே வெளியிட வாய்ப்புள்ளதோ! தட்டுவோம் முன்னரே, திறக்கட்டும் கதவுகள் எனக் கோரி !

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் :

      இங்கு credits பட்டியலில் முக்கியமானதொரு டீமின் பங்களிப்பை மறந்து விட்டீர்கள் நண்பரே !

      ஒரு புதுமையான ஆக்கத்தை ............. நீண்டு செல்லும் தொடராக இல்லாத இது போன்ற one shot படைப்புகளை .......அங்கீகரிப்பதும், நிராகரிப்பதும் பதிப்பகங்களின் துவக்கப் புள்ளிகளாய் இருந்து வரும் "கதை கேட்கும் குழு"வின் கைகளிலேயே உள்ளது.

      புதியதொரு சிந்தனையோடு ; கதைகளின் ஒரு outline சகிதம் வரும் எண்ணற்ற (காமிக்ஸ்) கதாசிரியர்கள் இந்தக் குழுவைச் சந்தித்து தங்களது ஐடியாக்களை எடுத்துரைப்பார்கள். கிட்டத்தட்ட ஒரு திரைப்படம் எடுக்க producer - ஐ சந்தித்து கதை சொல்லும் புது டைரக்டர்களின் நிலை தான் இது !


      "தேறும்" என்ற அபிப்ராயங்களை உருவாக்கும் கதைகளை முழுமையாக develop செய்து எடுத்து வரச் சொல்லுவார்கள் ! அவ்விதம் ஆன பின்னே முழுக் கதையையும் மறு பரிசீலனை செய்து ; ஆங்காங்கே மாற்றங்கள் அவசியமிருப்பின் அதனையும் செய்யச் சொல்லி விட்டு, அதன் பின்னரே தொடருக்கான ஓவியப் பணிகளை யார் வசம் ஒப்படைக்கலாம் என்ற discussion துவங்கும். சில வேளைகளில் எழுத்தாளர் + ஆர்டிஸ்ட் ஒரே நபராக இருக்க நேரிடும் ; அல்லது எழுத்தாளர் + ஆர்டிஸ்ட் ஒரே டீமாக இணைந்து வந்து கதை சொல்லி அசத்தி இருக்கும் வாய்ப்புகளும் இருக்கலாம். அந்த வேளைகளில் ஆர்டிஸ்ட் தேடும் படலம் மட்டும் அவசியமாகாது.

      கதை ; ஸ்கிரிப்ட் ; ஆர்டிஸ்ட் தேர்வு முடிந்த பின்னே, சித்திரங்களின் பாணி ; கலரிங் பாணி ; கலரிங் செய்யவிருக்கும் ஆர்டிஸ்ட் யார் ? என்பதும் தீர்மானமாகும். "கொலை செய்வீர் கனவான்களே" கதைக்கு சீரியஸ் ரகச் சித்திரங்களும் போட்டிருக்கலாம் ; ஆனால் இது போன்ற கார்ட்டூன் ஸ்டைலை தேர்வு செய்ய தைரியம் கொடுத்தது நிச்சயம் "கதைக் குழுவே" ! So - கதாசிரியர் சிறு கருவாகக் கொண்டு வந்து நின்ற போதே, இத்தொடரை முழுமையாக visualize செய்து, அதன் வெற்றி-தோல்வியை நிர்ணயம் செய்ய ஆற்றல் கொண்டிருந்த அந்த டீமுக்கு ஒரு salute சாரும் !

      'அட..என்னப்பா..இதெல்லாம் எங்கே தேறப் போகுது ?' என்ற நிராகரிப்பை அவர்கள் அன்றே செய்திருந்தால், கதாசிரியர் நிச்சயம் அந்த ப்ரோஜெக்டைக் கிடப்பில் போட்டிருப்பார் !

      Delete
  61. ALL NEW SPECIAL :- T . ராஜேந்தரின் " வீராசாமி " ; ராமராஜனின் "மேதை " ; ரஜினியின் "பாபா " ; சேரனின் "மாயக்கண்ணாடி " ஆகிய படங்களை ஒரே நாளில் தொடர்ந்து பார்த்த திருப்தியை தந்தது . எவ்வளவு அடித்தாலும் வலிக்காத மாதிரியே நடிக்கும் LION _ MUTHU COMICS ரசிகர்கள் வாழ்க .

    ReplyDelete
    Replies
    1. எல்லாருக்கும் நல்லாருக்கும்போது உங்களுக்குமட்டும் அப்டி தோணுணா, அது உங்க ரசனை இன்னுமே இரும்புக்கைலயும், ஸ்பைடர் வலைலயும் நிக்குதுனு அர்த்தம்.

      Delete
    2. @ Sundaramoorthy j

      சின்னச் சின்ன திருத்தங்கள் சிறப்புச் சேர்த்திடுமே நண்பரே!

      ALL NEW SPECIAL :- T.ராஜேந்தரின் "மைதிலி என்னைக் காதலி"; ராமராஜனின் "கரகாட்டக்காரன்"; ரஜினியின் "படையப்பா"; சேரனின் "வெற்றிக் கொடி கட்டு" ஆகிய படங்களை ஒரே நாளில் தொடர்ந்து பார்த்த திருப்தியைத் தந்தது. எவ்வளவு கொடுத்தாலும் சலிக்காத மாதிரியே படிக்கும் LION _ MUTHU COMICS ரசிகர்கள் வாழ்க.


      :)

      Delete
    3. டியர் சுந்தரமூர்த்தி!!!

      தங்கள் கருத்து தவறு.பலராலும் ரசிக்கப்பட்ட தங்க கல்லறையை (வண்ண மறுபதிப்பு) கடுமையாய் தாக்கி பதிவிட்டவன் என்ற முறையில் சொல்கிறேன். நமது வாசக நண்பர்களின் ரசனை வெகுவாக மாறிவிட்டது.அந்த மாற்றத்தை உணர்ந்தே எடிட்டர்ஜீ அவர்கள் பல புதிய பாணியிலான கதைகளை தொடர்ந்து வெளியிடுகிறார்.
      உங்களால் ரசிக்கமுடியாவிட்டால் அது மாற்றங்களை விரும்பாத உங்கள் மனப்போக்கே காரணமாக இருக்கும்.மற்றவர்களின் ரசனையை கேலி செய்வதற்கு உங்களுக்கு உரிமையில்லை.உங்கள் விமர்சனம் ரசக்குறைவானது.கீழ்த்தரமானது.
      உங்கள் விமர்சனத்தை வன்மையாக கண்டிக்கிறேன் நண்பரே!!!

      Delete
    4. sundaramoorthy j : உங்களின் ரசனைகளை மதிக்கும் அவசியம் நிச்சயம் நமக்குண்டு ; ஆனால் உங்களின் கருத்தோடு ஒத்துப் போகாதோர் அனைவருமே ரசனைகளில் குறைந்தவர்கள் என்ற சிந்தனை சரி தானா ?

      நையாண்டிகளிலும் ஒரு நயம் இருக்கும் பட்சத்தில் உங்களின் அபிப்ராயங்கள் கவனிக்கப்பட வாய்ப்புகளை உருவாக்கும் ; ஆனால் "சீ..சீ..இந்தப் பழம் புளிக்கும் " பாணியிலான மட்டம் தட்டல் நிச்சயம் அதற்கு உதவப் போவதில்லை !

      Delete
  62. ஈரோடுக்கு இப்பவே ரெடி ஆகிட்டோம்! ஆல் நியூ ஸ்பெஷல் ஒரு பல்சுவை பொக்கிஷம்! Simply Superb Sir!

    ReplyDelete
  63. இன்னமும் book கிடைக்கவில்லை

    name Aravinth kumar
    santha No : 1095

    ReplyDelete
  64. 100 பதிவுகளை ஏறத்தாழ 5 லட்சம் பார்வைகளை கடந்து 101 வது பதிவையிடும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்! லயன் காமிக்ஸ் 29 வது ஆண்டுகளை நிறைவு செய்வதற்கும் அடியேனின் மனமுவந்த வாழ்த்துக்கள்!!
    டெக்ஸின் இரட்டை சாகசம் வரவேற்கக்கூடியதே. 450 பக்க கருப்பு வெள்ளை சித்திரப்புதையலின் தயாரிப்புப் பணிகள் ஒருவேளை உங்களுக்கு திண்டாட்டமாய் இருக்கக்கூடும், எங்களுக்கோ கொண்டாட்டம் தான்.

    ஆவலாய் நான் எதிர்ப்பார்ப்பது டெக்ஸின் சரவெடியை மட்டுமல்ல, ANSயையும் தான்.

    KBT -2 ன் வின்னர் நண்பர் கார்த்திக்குக்கும், ரன்னர் நண்பர் சூப்பர் விஜய்க்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete