Wednesday, July 17, 2013

மாற்றமே - உன் விலை என்ன ?

நண்பர்களே 

வணக்கம். "ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் " ; "வானவில்லின் இரு முனைகள்" ; என்றெல்லாம் ஆங்காங்கே படிக்கும் போது - தேய்ந்து போன சொற்றொடர்கள் தானே என இரண்டாவது சிந்தனைக்கு இடம் தராது நகன்று கொண்டே இருப்பது வழக்கம் ! ஆனால் அதை நயம்பட ; துளிப் பாசாங்குமின்றி நண்பரொருவர் நடைமுறைப்படுத்திக் காட்டும் போது -  கண்டும் காணாமல் செல்வது சாத்தியமாகுமா ? 'புதிர் போட்டுப் பேசுகிறானே ?' என்ற உங்களின் புருவ உயர்த்தல்களுக்கு இதோ இக்கடிதம் விடை தரலாம் ! இன்று காலை நம்மை வந்து சேர்ந்த தாரமங்கலம் நண்பர் பரணிதரனின் கடிதம் உங்கள் பார்வைக்காக : 
வார இறுதியில் நண்பர்களோடு போனில் நான் பேசும் முயற்சிகளுக்கு ஜீவன் இருந்த சென்றாண்டு தவறாது அழைக்கும் பரணிதரனை, அதற்கும் முன்பாகவே அவர்தம் அழகான கையெழுத்துடனான வாசகர் கடிதங்கள் வாயிலாக எனக்குப் பரிச்சயமே! என்றைக்குமே நமது நிறைகளை சிலாகித்தும் ; குறைகளை குறைத்தும் எடை போடும் காமிக்ஸ் அபிமானி என்பதில் சந்தேகம் கிடையாது ! இன்று அவரது கடிதத்தைப் படித்த போதே எனக்குள் ஒரு இனம் சொல்ல இயலா உணர்வு !ஒவ்வொரு முறையும் என்னால் இயன்ற அளவு வெவ்வேறு காலணிகளுக்குள் புகுந்து, ஒவ்வொருவரின் மாறுபட்ட கோணங்களில் இருந்தும் நமது கதைகளைப் பார்த்திட முயற்சிப்பது எனக்கொரு பொழுது போக்கு ! ஆல் நியூ ஸ்பெஷல் இதழின் பணிகள் நடந்தேறும் போதும் இம்முயற்சிக்கு விடுமுறை தந்திடவில்லை என்பதால் நண்பர் பரணியின் ஆதங்கமான கடிதம் முழுவதுமாய் ஒரு ஆச்சர்யமாய் எனக்கு வந்திடவில்லை ! இத்தகைய விமர்சனங்கள் வரவும் வாய்ப்புள்ளது என்ற புரிதலோடு நான் இருந்தேன் என்ற போதிலும், வெள்ளந்தியாய் தன உள்ளக் கிடங்கை வெளிப்படுத்தியுள்ள பரணியின்  பாங்கு சிந்தனையைத் தூண்டியது நிஜமே ! 

"நான் 'C 'கிளாஸ் தான் ; எனது ரசனைகள் இதர நண்பர்களின் அளவுகோல்களுக்கு முன்னே சற்று குறைச்சலே ; ஆனால் நான் கண்ட காமிக்ஸ் ஆகாயம் இதுவே ; இது மாத்திரமே எனக்குப் போதும் ! "என்று துளியும் பூசி மெழுகாமல் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைக்கும் டெக்சைப் போல் காட்சி தரும் நண்பர் பரணிதரனுக்கு என்ன பதில் சொல்வது என்ற சிந்தனை என்னுள்  காலை முதல் !  ! இது போன்ற உணர்வுகளை - இந்த நயமின்றி, நறுக்குத் தெரித்தாற் போல வெளிப்படுத்திய இன்னும் சொற்ப மின்னஞ்சல்களும் வந்துள்ளன எனும் போது, எண்ணிக்கையில் மைனாரிட்டியாக இருப்பினும், இவர்களது ஆதங்கங்களுக்கும் ஆறுதல் அவசியமே என்பது புரிந்தது ! 

ரசனைகள் என்பன ஒவ்வொருவரின் சிந்தனைக்கும் ஏற்ப மாறும் எனும் போது - வெவ்வேறு ரகங்களை, வெவ்வேறு  முத்திரைகள் குத்தி பட்டியல்கள் போட்டு அடைப்பது சிரமமே  ! 'இவருக்கு ஸ்பைடர்-மாயாவி இத்யாதி தான் பிடிக்கும் ; அதைத் தாண்டிட விரும்ப மாட்டார் ' என்ற அடையாளங்களோ ; ' இவர் hi -tech களங்கள் கொண்ட கதைகளை மாத்திரமே ரசிப்பவர் ; "காதுலே பூ" சங்கதிகள் எடுக்காது " என்ற சிந்தனைகளோ நிச்சயம் சல்லிக்காசுக்குப் பெறாது ! நண்பர்களுள் பலர் செம versatile என்பதால் - ஒரு பக்கம் பிரெஞ்சில் வரும் லேட்டஸ்ட் கதைகளின் மொழிபெயர்ப்புகளைப் படித்த கையோடு - ஸ்பைடரின் 150 பக்க மெகா சாகசத்தையும் படிக்க விருப்பம் தெரிவிக்கிறார்கள் ! அவர்களைப் போன்ற பல்ரசனைப் பிரியர்களை திருப்திப்படுத்துவது எத்தனை சிரமமோ ; அத்தனை கஷ்டமே - நண்பர் பரணியைப் போல ஒரு வட்டத்தைத் தாண்டிட விருப்பமில்லா நண்பர்களுக்கான படைப்புகளை மாத்திரமே தந்திடுவதும் !  

இதில் உயர் ரசனை ; தாழ்வான ரசனை என்ற பேச்சுக்கே இடமில்லை பரணிதரன் சார் ....!  அடுத்தவருக்கு சுவையாகத் தோன்றும் பாயசம், நமக்குப் பாகற்காயை நினைவு படுத்தினால் அது குற்றமில்லை ! அதற்கென உங்களின் ரசனையை நீங்களே சாடுவதற்கு அவசியமில்லை ! வாழ்வில் எல்லாமே ஒரு பழக்கம்  தானே ? லார்கோவும், அவரது லியர்ஸ் ஜெட் விமானமும், ஒரு ஜூலையாகத் தானே நமக்குப் பரிச்சயம் ? ஷெல்டனின் ட்ரக்குகள் 2013-ன் நண்பர்கள் தானே ? அவர்களை ஏற்றுக் கொண்டு, அவர்களோடு பயணிக்கவும், ஜீவிக்கவும் பழகி விட்டோம் அன்றோ ? லார்கோ நாம் ஆண்டாண்டுகளாய் அறிந்து வைத்திருந்த துப்பறிவாளர் அல்லவே ? ஷெல்டன் ஒரு ரகசிய ஏஜென்ட் கிடையாதே ? இவர்களை ஏற்றுக் கொள்ளத் துவங்கும் போதே உங்கள் ரசனைகளின் விஸ்தீரணமும் விரிகிறது என்றாகாதா ? 

"கொலை செய்வீர் கனவான்களே" உங்களுக்கு அன்னியமாய்த் தோன்றுவதற்குக் காரணம் கண்டறிவதில் சிரமமில்லை ! 
  • அந்தப் புராதனம் சொட்டும் லண்டன் தான் கதைகளின் பின்னணி என்பது திகட்டல் # 1. 
  • சின்னச் சின்ன கதைகளாய் இருந்தது நோவு # 2. 
  • பிரதானமாய் - கதையில் ஒரு ஹீரோவோ ; ஒரு வில்லனோ  இல்லாமல் போனது சிக்கல் # 3 ! 
  • கனமான ஒரு கதைக்கு சிரிப்புச் சித்திரங்கள் போல் ஓவியங்கள் அமைந்தது குழப்பம் # 4 ! 
  • எல்லாவற்றிற்கும் மேலாக - ஒரு ஸ்பெஷல் எனும் போதெல்லாம் நாம் இது நாள் வரைப் பரிச்சயம் கொண்டுள்ளது "பளிச்" பெயர்களோடும் , நன்கு அறிமுகமான நாயகர்களோடுமே  ! ஆனால் ANS -ல் நாம் சந்தித்த ஆசாமிகளோ - நாடகங்களில் ராஜாவுக்கு சாமரணம் போடும் சைடு ஆர்டிஸ்ட்களைப்  போன்ற தோரணைக்குச் சொந்தக்காரர்களே ! இது தான் ஏமாற்றம் # 5! 

இவை ஒன்றாய் இணையும் போது எழும் ஏமாற்றம் - ஒட்டு மொத்தமாய் "புது பாணி" யின் மீது விழுவது புரிந்திட இயல்கிறது ! 

"தோட்டா தேசம் " எவருக்கும் சர்ச்சை தரா தேர்வு என்பதால், அதன் பொருட்டு கவலை இல்லை ! எஞ்சி இருப்பதோ - பிரளயத்தின் பிள்ளைகள்   - கிராபிக் நாவல் ! இதனைப் படிக்க நிச்சயம் கொஞ்சம் பொறுமை அவசியம் என்பதாலேயே, ANS தலையங்கப் பகுதியில் சின்னதாய் ஒரு "உஷார் நோடீஸ்" ஒட்டிட முனைந்திருந்தேன் ! ஒரு National Geographic சேனலின் படைப்பை - சிரிப்பொலிக்கும், கிரிகெட் மேட்ச் நடக்கும் சேனலுக்கும் நடுவிலே ரசிக்க முயல்வது அனைவருக்கும் சுலபமகாது என்பதை ஒத்துக் கொள்கிறேன் ! ஆனால் -  'இடர் மிகுந்த வாழ்வினில் நாங்கள் தேடி வருவது ஒரு மாற்றத்தை ; இங்கேயும் ஒரு வரலாற்று சோகத்தைச் சொல்லி சோதிக்க வேண்டுமா ?' என்ற நண்பர் பரணிதரனின் கேள்வியோடு நான் உடன்பாடு கொள்ளப் போவதில்லை ! செயற்கையாய் ஒரு சோகத்தை உருவாக்கி - நம்மில் புதைந்து கிடக்கும் கஷ்டங்களை நினைவுக்குக் கொணர்ந்து நம் மீதே ஒரு விதப் பச்சாதாபத்தைக் கொண்டு வரும் முயற்சியல்ல "பி.பி" நாவல் ! 'என்றோ ; எங்கோ அரங்கேறி முடிந்ததொரு சம்பவம் தானே - எனக்கென்ன அதிலொரு ஈடுபாடு ?' என்ற கேள்விக்கு - Auschwitz முகாமின் மியூசியத்தின் வாயிலில் பொறிக்கப் பட்டிருக்கும் வாசகங்களே பதில் சொல்லும் : "வரலாற்றை மறக்க எத்தனிப்போரை - அதனை மீண்டுமொருமுறை வாழ்ந்து அனுபவித்து நினைவு கூறச் செய்வது வாழ்க்கை நியதி"  என்று மொழிபெயர்க்கலாம் அந்த வரிகளை ! . 

உங்கள் மகனுக்கு நீங்கள் லக்கி லூக்கை புகட்டாவிடினும் 'நகைச்சுவை உணர்வைக் கற்றுக் கொடுக்கத் தவறி விட்டீர்களே அப்பா'  என்று உங்களைக் கோபிக்கப் போவதில்லை பரணி சார் ; டெக்ஸ் வில்லரின் அரிசோனாவுக்கு அவனே நேரில் சென்றும் என்றோ ஒரு நாள் பயணிக்க வாய்ப்புகள் உண்டு தான்  ; ஆனால் - வரலாற்றின் ஒரு கறும்புள்ளியைச் சொல்லும் ஒரு ஆக்கம் உங்கள் கைவசம் இருந்தும், அதனை உரிய வயதிலேயே எனக்குக் காட்டத் தவறி விட்டீர்களே ? என்று அவன் ஆதங்கம் கொள்ளும் நாள் வரும் பட்சத்தில் - உங்களிடம் அதற்கான பதில் இராது நண்பரே ! நித்தமும் வாழ்வு பல இன்னல்களுக்கு மத்தியிலானதே ; ஆனால் அதற்கென வரலாற்றை ஓரம் கட்டுவது சரியாகாது ! 

ரொம்பவே சீரியஸ் ஆக வேண்டாம் என்பதால் - உங்கள் பாணியிலேயே : "வரலாறு ரொம்பவே முக்கியம் அமைச்சரே !"  :-)

கவலை வேண்டாம் ; "மனதில் மிருகம் வேண்டும் " இதழோடு இந்த GREEN MANOR தொடர் நிறைவாகிறது ! அடுத்து வரவிருக்கும் "சிப்பாயின் சுவடுகள்" யதார்த்தம் + கொஞ்சமாய் flashback என்று நாம் இது வரை புகுந்திருக்கவே செய்யாத வியட்நாமில் சொல்லப்படும் ஒரு கதை ! நிச்சயம் "பிரளயத்தின் பிள்ளைகள்" பாணியில் இல்லாது, இது வேறொரு track -ல் இருக்கும் ! அதனைத் தொடர்வது உங்கள் அபிமான லார்கோ ; டெக்ஸ் ; டயபாலிக் ; டைகர் இத்யாதிகளே ! அப்புறம் 2014-ன் தேர்வுகளை ANS -ன் வெற்றி பெரிதாய் புரட்டிப் போடப் போவதில்லை நண்பரே ! மாற்றம் என்பது மாற்றத்திற்காக மட்டுமல்ல ; நமக்கு பயன் தரும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாகவே இருப்போம். "புது பாணிகள்" என்பது அவ்வப்போது எழுந்திடும் "புது பேஷன்கள்" போலத் தானே ? பெல் பாட்டம் பாண்ட் போட்டோம் ; டைட்ஸ் போட்டோம் ; அதே போலத் தான் நம் பயணத்தில் இந்த மாறி வரும் ரசனைகளும். சிறிது சிறிதாய் புதுக் களங்களை நோட்டம் விடுவோம் ; யார் கண்டது - நமக்கு அங்கே ஒரு புதையலும்  காத்திருக்கலாம் அல்லவா ?

மற்ற நண்பர்களது நடை வேகம் துரிதமாய் இருப்பினும், உங்களால் அந்த வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலவில்லை எனினும் - நாங்கள் யாரும் உங்களைப் பின்னே விட்டுச் செல்வதாக இல்லை ! கொஞ்சம் கொஞ்சமாய் நீங்களும் வேக நடைக்குப் பழகிடும் நாள் வரும் போது நீங்களே சொல்லத் தான் போகிறீர்கள் - :I am a Complan Boy ! " என்று ! அந்த நாளும் நிச்சயம் தொலைவில் இல்லை ! உங்கள் வீட்டில் வசிக்கும் எங்களது நாளைய வாசகரையும் நலமாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள் ; (அனைத்து விதக்) காயங்களின் வலியும்  தீர எங்களின் பிரார்த்தனைகள் ! 

'வானவில்லின் இன்னொரு முனை' என்பதை நினைவு படுத்தும் விதமாய் - இதோ இன்று காலையே வந்து சேர்ந்த இன்னொரு நண்பரின் கடிதமும் : 

ஒவ்வொரு ஸ்பெஷல் இதழிலும் நான் பல்வகைக் கதைகளைப் புகுத்த முனையும் போதெல்லாம்   - 'வேண்டாமே இந்தக் கதம்ப மாலை' என்று நண்பர்கள் சிலர் ஆதங்கப்படுவது நாம் அறிந்ததே ! ஆனால் நான் விடாப்பிடியாக அந்தப் பாணியைத் தொடர்வது இயன்ற வரைக்கும் இது போன்ற சங்கடங்கள்  எழக் கூடாதென்ற முன்ஜாக்கிரதைகளினால் ! ஒரே கதை - ஒரு மெகா இதழ் எனும் போது - சேமிக்க ; பாதுகாக்க அது நிச்சயம் ஒரு அழகான இதழாக இருக்குமென்பதில் ஐயமில்லை ; ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் ஏராளம் அதனில் ! ஒரே கதை எனும் போது அந்தக் கதை பாணி ஏதோ காரணங்களால் சிலருக்குப் பிடிக்காது போயின், அந்த முழு இதழுமே அவரைப் பொறுத்த வரை துளிப் பிரயோஜனமில்லா குப்பையாகிடாதா ?! தவிரவும், லார்கோ வின்ச் போன்ற தொடரை ஒரு NBS போன்ற 400 பக்க இதழில் சோலோவாக வெளியிடும் பட்சத்தில் அந்தத் தொடரின் 60% காலியாகி விடும் ஒரே நொடியில் ! வெவ்வேறு நாயகர்களின் combo எனும் போது, ரசனைகள் மாறுபட்டாலும், அவரவர் ரசிக்க ஏதாவது இருந்திடுமே என்ற ஒரு சிறு திருப்தியே எனக்கு ! இதில் நிச்சயம் நண்பர்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்குமென்பது உறுதியே ; அவர்களது அபிப்ராயங்களுக்கு நிச்சயம் அவர்தம்  கண்ணோட்டங்களில் ஒரு வலுவான நியாயம் இருக்குமென்பதும் புரிகிறது ; ஆனால் XIII  போன்றதொரு single thread கதைத் தொடர் சிக்காத பட்சத்தில் - 'ஒரே கதை / ஹீரோ கொண்ட ஒரே மெகா இதழ்' என்பது சிரமமான சிந்தனையே ! 

Anyways, இதோ - ஒரே நாயகரின் ஒரு ஸ்பெஷல் இதழின் (தாமதமான) விளம்பரம் :


பாரிசில் நமது இதழ்கள் !! நண்பர் ப்ரபானந்தின் முயற்சிகளில் !



இவ்வாரத்து இந்தியா டுடே (தமிழ்) இதழில், காமிக்ஸ் பதிவுகள் பற்றிய 2 பக்கக் கட்டுரை வந்திருந்தது நமக்கெல்லாம் சந்தோஷமான சங்கதியே ! சவலைப் பிள்ளைகளான காமிக்ஸ் ரசிகர்களின் மீதும் வெளிச்சம் போடும் பணியை ஒரு முன்னணி ஊடகம் செய்ய முன்வரும் போது நமது நன்றிகள் அவர்களுக்கு உரித்தாகுக! இதன் பொருட்டு ஒரு துளியாகவேனும் காமிக்ஸ் ஆர்வம் துளிர் விடும் பட்சத்தில் நமக்கெல்லாம் குதூகலம் தானே ?! Take care folks ! Catch you soon !

354 comments:

  1. Dear Editor & Staff,

    Great news for all Willer fans!!! Two Tex at a time
    and long awaited pillow size book.

    Aldrin Ramesh from Muscat

    ReplyDelete
    Replies
    1. well said sir! baraniyai naan gavanichchikiren! All New Special is a super hit! i like all the stories! india today gives a pure gift to the comics lovers sir! take care sir!

      Delete
  2. All the very best to Prapanath! Typical Tamil book stall with Jasmine flower and "மாவிலை தோரணம்". Great move Prapanath!!

    ReplyDelete
    Replies
    1. Typical Tamil Book stall with Jasmin flower and Mavilai Thoranam// great attractive poem lovely word Parani Sir. Thank you so much for you engorgement

      Delete
  3. விஜயன் சார் இது அட்டை படமா அல்லது டெக்ஸ்-இன் விளம்பர போஸ்டரா? விளம்பரத்தில் கருப்பு வெள்ளை என வாசகம் சேர்த்தால் நல்லது! இந்த போஸ்டர நமது அனைத்து புத்தக Agent's கடைகளில் இப்போதே தொங்க விட்டால் நல்லது!!

    ReplyDelete
    Replies
    1. பரணி இது போஸ்டர் மாதிரி தெரியலை....புத்தகத்தில் உள்ள விளம்பரமென நினைக்கிறேன்! இரவு தெரிந்து விடும் ஆசிரியரின் பதிவில்!

      Delete
  4. விஜயன் சார், டெக்ஸ் கதைன்னு சொல்லிட்டு டெக்ஸ் படத்த சின்னதா போட்டதுக்கு பதில் விளம்பரத்தில் டெக்ஸ் படத்த நல்லா பெரிசா போட்ட இன்னும் சிறப்பா இருக்கும்!

    count down starts now...

    ReplyDelete
    Replies
    1. பரணியின் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்!

      எங்கள் தலைவர் டெக்ஸின் படம் பார்த்தவுடன் பளிச்சென்று தெரியும்படி இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்திருக்கலாம். விளம்பரத்தில் டெக்ஸ் எங்கேன்னு தேடவேண்டியில்ல இருக்கு?

      Delete
    2. நன்றி விஜயன் சார்! டெக்ஸ் படத்த தெரிகிற மாதிரி போட்டதுக்கு!

      Delete
  5. பாரிஸ்ல நம்ம புக்ஸ்ங்க கெடைக்க முயற்சி எடுத்த பிரபானந்த்க்கு வாழ்த்துக்கள். ஆனாக்காட்டியும், இப்படி ஆர்ட் பேப்பர் புக்குங்கள பாட்டு பொஸ்தகம் மாதிரி தொங்கவுட்டுருக்கறதுதான் மனசுக்கு வருத்தமா இருக்கு. புக்கு டக்குனு டேமேஜ் ஆயிடும். டிஸ்ப்ளே அவசியம்தான். ஆனாக்காட்டியும் நம்ம பைண்டிங் க்வாலிட்டியோட ரேஞ்சுல பிஞ்சு நூடுல்ஸ்யாயிடுமே! ப்ளீஸ்பா. லாஸ்ட்டு பிச்சர்ல இருக்கறமாதிரி ஷெல்ப்ல அடுக்கிவக்க சொன்னிங்கன்னா சூப்பரா இருக்கும். மனசு புக்கு ரெண்டுத்துக்கும் டேமேஜ் வராது.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே , தங்களின் நியாயமான வருத்தம் எனக்கும் உண்டானது . விற்பனையாளர் டிஸ்ப்ளே செய்கிறார் என்று அவ்வாறு முதலில் செய்திருந்தாலும் எனது வேண்டுகோளின் பின்பு அழகாக ஷெல்பில் அடுக்கி வைத்துள்ளார். ஆலோசனைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் கோடி .

      Delete
  6. தோட்டா தேசம் இன்றுதான் படிக்கமுடிந்தது! சித்திரங்கள் பரவசம் ! Hero இல்லாத விறுவிறுப்பான கதை பாணி வித்தியாசமான அட்டகாசம்!

    ReplyDelete
  7. தவிர்க்க முடியாத காரணத்தால் இரண்டு பதிவு களில் கலந்து கொள்ள முடிய வில்லை .ஆசிரியரின் 100 வது பதிவிற்கும் ,சிறு மொழி ஆக்கத்தில் ஈடுபட்ட நண்பர் கார்த்திக் அவர்களுக்கும் ,வெளி நாட்டில் நமது புத்தகத்தை அறிமுக படுத்தும் நமது வாசக நண்பருக்கும் வாழ்த்துகள் .இதில் மிக பெரிய சந்தோசம் டெக்ஸ் "அந்த "சைஸ் புத்தகதில் இரண்டு சாகசத்தோடு வருவது தான் .மிக்க நன்றி ,நான் இன்று தான் இரண்டு பதிவுகளின் கமெண்ட்ஸ் படிக்க முடிந்தது .ANS கு இங்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும் பொழுது உண்மையில் எனக்கு பயம் தான் வருகிறது .
    என்னை பொறுத்த வரை "தோட்டா தேசம் "சூப்பர் .மற்ற கதைகள் சுமார் ரகமே. (ஸ்டீல் பாடி பரவாயில்லை ரகம்).புது முயற்சி என்று இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து வருவது இதே போலவே கதைகள் தான் என்பது என்னை வருத்த பட தான் வைக்கிறது.(எனது விரிவான விமர்சனம் கடிதத்தில் அனுப்பி விட்டேன் ).இங்கு ரசனை மிக்கவர்கள் அதிகம் வந்து விட்டார்கள் என்பதனை ஒத்து கொள்கிறேன் .ஆனால் இன்னும் என்னை போல ரசனையை வளர்த்து கொள்ளாத நண்பர்களும் இங்கு உண்டு என்பதனை ஆசிரியர் உணர்ந்து கொள்ள வேண்டுகிறேன் .எனவே இப்படி பட்ட "உயர் தர " கதையை வெளி இடும் போது எங்களையும் நினைவில் கொண்டு கூட வேறு ஒரு 100 ரூபாய் புத்தகத்தை கொண்டு வந்தால் நலம் .இங்கு வராத நண்பர்களின் பலர் கருத்தும் அதுவே .
    நண்பர் ராஜ் குமார் அவர்கள் இரண்டு பக்கம் படித்தவுடன் படிக்க தோன வில்லை என்று இன்னமும் புத்தகத்தை தொட வில்லை .(தோட்டா தேசம் " ஆவது படியுங்கள் என கூறி உள்ளேன் .பார்க்கலாம் )
    அது போலவே சேலம் பேங்க் நண்பர் அடுத்த இரண்டு மாத புத்தகத்தை நினைத்து கலங்கி கொண்டு இருக்கிறார் ..அது போலவே சேலம் மருத்துவ நண்பரும் ..மற்றும் இன்னமும் பலர் .ஆனால் இங்கே அதை கோரினால் நாங்கள் ரசனை இல்லாதவர்கள் என்ற பழி சொல்லுக்கு ஆளாக நேரும் என்பதால் இங்கே சொல்ல பிரிய பட வில்லை என கூறி விட்டார்கள் .அதை பற்றி எனக்கு கவலை இல்லை .
    புது முயற்சியாக புது ஹீரோ களை அறிமுக படுத்துங்கள் .அவர்கள் மூலம் எங்கள் கவலைகளை மறக்க வையுங்கள் .ஆனால் அவர்கள் கவலைகளை எங்கள் மீது திணிக்க வேண்டாமே ..ப்ளீஸ் ..

    "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு வர வேண்டும் என்ற போராட்டமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது . நன்றி .

    ReplyDelete
    Replies
    1. //நான் இன்று தான் இரண்டு பதிவுகளின் கமெண்ட்ஸ் படிக்க முடிந்தது .ANS கு இங்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும் பொழுது உண்மையில் எனக்கு பயம் தான் வருகிறது .//

      நண்பர் பரணி, உங்கள் மன நிலையை என்னால் முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது. உங்களின் வெளிப்படையான பின்னூட்டம் வரவேற்கப்பட வேண்டியவொன்று.

      ANS சை முழுமையாக ENJOY செய்தவர்களுள் நானும் ஒருவன் என்றபோதிலும் GREEN MANOR -2 அடுத்த மாதமே வருவது எனக்கும் சற்று ஓவர் DOSE ஆகவே படுகிறது.

      Delete
    2. Hi Parani,

      Every body has the right to their opinion

      Appreciate you voicing it

      infact i also liked thotta desam better than green manor and i have never liked sherlock, i am yet to read the fourth story..

      may be inda madri idazhagallukku naduvae gap irundal better

      but may be edi feels if green manor is read in succession then it will have a different impact.
      adutha madam teriyum:-)

      Rajniyoda ella padamum ellorukkum piddikkum endru solla mudiyadallava ana Rajniya ellorukkum pidikkumla adu madridan - kamal rasigargal rajnikku badil kamal pottukollavum

      Delete
    3. ஹ ஹ ஹா எனது ரசனை உயர்துதான் போயிற்றோ! பிரளயத்தின் பிள்ளைகள் இரண்டு நாட்கள் படிக்கலாம் என துவங்கினேன் , ஆனால் வைக்க விடவில்லை மனது; முழுதும் ஒன்றி விட்டேன்; நானும் அதிரடிகளுக்கு முன்னுரிமை கொடுப்பவன்தான்! ஆனால் இவை போன்ற கதைகள் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் என நினைக்கிறேன்! அதிரடிகள் வந்தாலும் சரியே! ஆனால் இது போன்ற குறிஞ்சி மலர்களும் அரிதாய் கிடைக்கும் பொது நமது தோட்டம் வசீகரிக்கும் அழகு பேருமே! உங்கள் எண்ணம் தவறில்லை! பார்ப்போம் முதல் குரல் எதிர்ப்பாக! அதுவும் அழுத்தமாக!

      Delete
    4. எல்லோருக்கும் ஒன்றே (அதிரடி) பிடிக்கும் என்றால் வள வண்ணங்களுக்கு வேலை இல்லாமல் போய் விடும் நண்பரே ! வானவில்லுக்கு உள்ள மதிப்பு ஒரு தனி வண்ணத்துக்கு கிட்டுவதை விட அதிகம்! அதுவும் அந்த காய்ந்து போன ரத்த கரை கொண்டு தீட்டபட்ட ஓவியங்கள் ......

      Delete
    5. i also thinking like Paranitharan K..........

      in my privies post.........i talking about this..............

      Giri1 July 2013 11:58:00 GMT+5:30

      welcome the all new special
      but same time...........
      i want to say that we have to stand strong before try to new things

      /// ALL NEW SPECIAL -ஐ ஒரு வகையில் - ஒரு விஷப் பரீட்சை என்று கூட சொல்லிடலாம் - ஆனால் பரந்து, விரிந்த காமிக்ஸ் உலகின் புதிதான சில பரிமாணங்களை ரசிக்கும் ஆர்வத்தில், இம்முயற்சியிலுள்ள ரிஸ்க் பின் செல்லுகின்றது ! As always, fingers crossed ! ////

      has u told there is lot of tex .//631 புதுக் கதைகள் கொண்ட டெக்ஸ் வரிசையில் நாம் இது வரை முயன்றிருப்பது 50+ கதைகளையே !/// like this lot of our old hit heros are here

      make strong our comics with hit heros and then try like all new special..........
      --------------
      Giri1 July 2013 13:56:00 GMT+5:30

      fist line i said "i welcome the all new special "
      i know all this 4 stories are going to be good
      i never say its......." விஷப் பரிட்சை"
      its editor words...............
      i just suggest to publish our hit heros stories to stand back like olden days (1985's)
      lot of our friends here asking about old heros......
      but i suggest to publish hit heros stories not yet published in our comics
      so its bring strong base to our comics

      Delete
    6. now i read all 4 stories..........
      some what its ok........ only pass mark

      Delete
  8. Edi sir,

    black and whitenu poraapppo namma kadanayagargal palarirukkirargalae waitingil

    texodu serthu avargalaiyum podunga

    book innum konjam gundaaaanaaaa naanga enna vanga mattomna solrom

    only tex pattasu vedikkiradukkuthan iqual
    podavae podadu
    new dress, sweetsum kaarammum kattayam thevai

    oru thadavai sonnalae ungae mindukkullae poidumnu enakku teriyum

    rendu thadavi sollitaen

    diwali special 100rs is toooooo much we are expecting atleast 200RS

    edavudu paathu pannunga bosss- atleast chinna chinna filler kadaigal or 50 pages aavudu,
    serthu poda kuda-dunna (copyright issue)
    .
    .
    inaipppaga kodukkavum
    inippaga irukkum

    adadae inda blog vandu vandu nammkkum oru walkinga eluda varudae!(adannga oru nadaiya)

    Great to see our comics in Paris - wishing him great sales..

    p.s: one more option 87 diwali special apdiyae reprint panni (price u decide) but in same size if you send along with diwali special- appo engallukku ellam idu thalaidiwali special aayidum

    tex malari thalai - diwali malar endru arivippom
    87 issuevai diwali malar endru arivippom

    tex fans also happy, rest all also happy (inda rest all kkul nan mattum adakkamo endru sandaegam nedunaalai undu:-))

    edi sir, ungal optionai keelae select seiyavum
    option 1: OK (talai diwali + diwali)
    Opton 2: double ok (talai diwali + diwali + 50 pgs fillers)

    Kanavu Meipaduma?

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சார்,

      எங்க 'தலை' டெக்ஸ் வில்லர் இந்தத் தீபாவளிக்கு இரட்டை சாகஸம் செஞ்சு பட்டாசு கிளப்பப் போறாரில்லையா? அப்படீன்னா 'தலைத் தீபாவளி மலர்'-னு பெயர் வைக்க வேண்டுமென்று நண்பர் சத்யா சார்பாக நானும் கேட்டு வைக்கிறேன். :)

      Delete
  9. "தீபாவளி ஸ்பெஷல்" என்பதற்கு பதில் "தீபாவளி மலர் " என்றால் இன்னமும் அருமையாக இருக்கும்

    இலவசமாக ஒரு சிவகாசி துப்பாக்கி உண்டா சார் ??

    ReplyDelete
    Replies
    1. // "தீபாவளி ஸ்பெஷல்" என்பதற்கு பதில் "தீபாவளி மலர் " என்றால் இன்னமும் அருமையாக இருக்கும் //

      +1

      Delete
    2. ஹா ஹா ஹா! டபுள் மாஸ்டர் டிகிரி

      Delete
    3. நீங்கள் ஒரு முறை அதிகமா சிரித்து விட்டீர்கள் ஹ ஹ ஹ ஆராய்ச்சியாளர் (phd)

      Delete
  10. FROM SPIDER AKA MURUGAN,
    i completed ANS today.i thoroughly enjoyed it.the printing quality is excellent though i am not at all happy with very light color of red dust story.since i dont like serious type graphic novels in comic format i am not going to comment about that.green manor is something special.we can explore every now and then as my brain accept the fact that i have to come out of the thalivar spider era.its very hard to digest but i have no choice steel body sherlock is 50/50 .as i have travelled with the edit for the past 29 years i can able to understand his problem of satisfying diverse tastes of readers like us.hats off for our editor for crossing 400 mark{as editor}the combined number of lion and muthu alone is 375.lion comics -220,muthu-155 plus cc and 3 sun shine issues.to do these sort of things in just 29 years is amazing afterall comic reading habbit is not common to most.

    ReplyDelete
  11. விஸ்கி &சுஸ்கி மற்றும் சத்யா அவர்களுக்கு நன்றி .
    விஸ்கி சார் .., அடுத்த மாதம் மட்டுமா ...பிறகு வரும் மாதமும் பாருங்கள் ..நினைத்தாலே கலங்குகிறது .நல்ல வேலை கூட லக்கி மற்றும் பிரின்ஸ் வருவது தான் மிக பெரிய ஆறுதல் எனக்கு .இலக்கியம் மட்டும் படிக்க நான் "மேதை "அல்லவே ...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் இது இலக்கியம் அல்ல நண்பரே, இலக்கணம் ....

      Delete
  12. வாவ் அட்டகாசம்!
    மீண்டும் நன்றி கலந்த வாழ்த்துக்கள் பாரிஸ் நண்பருக்கு! உங்களை போன்றவர்களால் நமது விற்பனை உயர்ந்து அதன் மூலம் நிறைய புத்தகங்கள் கிடைக்கவிருக்கின்றன! மீண்டும் மீண்டும் நன்றிகள் எனது சார்பாக!

    ReplyDelete
  13. சார் வெடிச்சத்தம் இப்பவே காதை பிளக்கிறது, எனது இதய ஒலியே!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஸ்டீல் ..,நமது ஒவ்வொரு ரசனையும் ஒவ்வொரு முறையும் ஒத்து போனது .ஆனால் ANS இல் மட்டும் மாறியது எனக்கு வருத்தமே :-(

      Delete
    2. கவலை படாதீர்கள் டெக்ஸ் அறுநூறு கதைகள் உள்ளன ! இருநூறாவது தேராமலா போகும்! ஒரே வெடிதான்! பெரிய நடிகர்கள் படம் வந்தால்தான் தீபாவளி என்பார்களே நமக்கும் அப்படியே, டெக்ஸ் அல்லது லார்கோ வந்தால் , வரும் போதெல்லாம் தீபாவளியே!

      Delete
  14. ஆனால் ரெட் கலக்கி விட்டார் .தனது நீ......ண்ட தொடராலும் ,சட்டத்துக்கு மட்டும் கட்டு படுவேன் அதனால் மற்றவருக்கு தீமை நடந்தாலும் சரி என டைகர் நடந்து கொண்டதாலும் அவருக்கு நடந்த சரிவை ரெட் பிடித்து கொண்டார் என்பது உண்மை .ஆனால் இவரது சாகசம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையாக இருந்தால் விளம்பரத்தில் "தொடர் "என விளம்பர படுத்த வேண்டாம் என ஆசிரியரை வேண்டி கொள்கிறேன் . "புது "நண்பர்கள் குழம்பி கொள்வார்கள் .

    ReplyDelete
    Replies
    1. ய்யொய்யோ .....மறந்துட்டேன் ....
      "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு வர வேண்டும் ....
      இனி இங்கே நான் அதை மறந்தாலும் ஆசிரியர் ஒத்து கொள்ளும் வரை போராட்டம் நடந்து கொண்டே தான் இருக்கும் .சீக்கிரம் நல்ல முடிவை சொல்லுங்கள் சார் ..ப்ளீஸ் ..

      Delete
    2. அதிலும் விரியும் காட்ச்சிகளும் பரவும் வண்ணங்களும் பரவசப்படுத்துகின்றன !

      Delete
  15. No. 24...

    all the july stories are great. loved green manor very much.

    comanche art is good.

    sherlock holmes stories aes are good- warm welcome

    the graphil novel is mind blowing

    ReplyDelete
    Replies
    1. புரிகிறது டாக்டர் ஸார் புரிகிறது.பில் கேட்ஸ் இருக்கும்போது அல்கேட்ஸ் இருக்கக்கூடாதா என்று சொல்கிறீர்கள்.தாராளமாக இருக்கலாம்.வெல்கம் டாக்டர்:-)

      Delete
  16. டியர் எடிட்டர் விஜயன் சார்,
    வாசகர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளி மலர் வெளியிட உள்ள தங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். அதுவும் டெக்ஸ் வில்லரின் இரண்டு கதைகள் உண்மையிலேயே தீபாவளியை ரெட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவும். சார் ஈரோடு புத்தக திருவிழாவில் பங்கேற்பது உறுதியாகி விட்டதா?
    எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  17. மேலும் இந்தியா டுடேவில் பதிவர்கள் சார்பாக எழுதப்பட்டுள்ள கட்டுரை அருமை , நமது லயனின் அடுத்த மிக பெரிய தாவலுக்கு நம்மை தயார் படுத்தி உள்ளது! நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! விஜய் எனும் ஒரு பதிவர் ஈரோட்டில் தயாராவதாய் கேள்வி! இரவு கழுகு கிருஷ்ணாவை காணலியே!

    ReplyDelete
  18. Anduku oru murai pookum malaruku than madipum, mariyataium.antha poovay dinamum poothaal...

    ReplyDelete
  19. டியர் எடிட்டர்,

    நமது விளம்பர அறிவிப்புகளில் பெரும்பாண்மையானவை '13ம் தேதி'யைக் கொண்டிருக்கக் காரணம் ஏதாவது....?!!

    ReplyDelete
  20. டியர் விஜயன் சார், deepavaliக்கு வரும் tex ன் இரண்டு சாகசத்துடன் , ஃபில்லெர்page ஆக இதர ஒரு பக்க அல்லது இரண்டு பக்க கதைகள் போடாமல், இன்னொரு tex mini சாகசம் போட வாய்ப்பு உள்ளதா? எத்தனை tex கதைகள் வந்தாலும் எங்களுக்கு பத்தாது!
    ERODE BOOK FAIR ல் நமக்கு ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில் , தயவு செய்து லயன் LOGO போட்ட CARRY BAGS மற்றும் லயன்& LUCKY LOOK& TEX ன் மினி STICKERS ஏற்பாடு செய்ய வாய்ப்பு இருக்கிறதா சார்!
    இந்த வருட CHENNAI BOOK FAIR ல் நம் ஸ்டால் ல் CARRY BAG இல்லாததால் , நிறய பேர் நண்பர் ராதாகிருஷ்ணன் யை கடிந்து கொண்டும், சிலர் தன்னுடைய BAG ல் இடம் இல்லாததால் , எடுக்க நினைத்த BOOKயை விட குறைவாகவும் எடுத்து சென்றதை கவனிக்க முடிந்தது! இனி வரும் காலங்களில் ,நாம் தனியாக STALL போடும் பட்சத்தில் நம் LOGO போட்ட CARRYBAGS ஆவன செய்வீர்களா சார்?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆமாம் ஆமாம் .............கண்டிப்பா ''தூக்கு பை'' வேண்டும்

      Delete
    2. Dr.Sundar,Salem. @ STALL போடும் பட்சத்தில் நம் LOGO போட்ட CARRYBAGS ஆவன செய்வீர்களா சார்?

      Super IDEA! But NO PLASTIC BAGS please!

      Delete
  21. @ டாக்டர் சுந்தர்

    இந்த 'Carry bag' விசயம் மிக மிக பயனுள்ள ஒரு நினைவூட்டல்!

    ReplyDelete
  22. Wow, Looking our books in france book store is Amazing. Bringing back old memories of looking our books in sholinganallur (chennai) small shop (பொட்டி கடை).

    ReplyDelete
  23. டியர் சார் ... டெக்ஸ் கதைகளின் விளம்பரத்தை வெளியிட சொன்னால்? அதற்கு ஒரு தனி பதிவே போட்டு அசத்தியுள்ளீர்கள், நன்றி சார். பிரளயத்தின் பிள்ளைகள் கதை போல். மரணம் மறந்த மனிதர்கள், இலக்கில்லா யாத்திரை, ஒரு சிப்பாயின் சுவடுகள் கதைகளையும் எதிபார்க்க வைத்துள்ளது. அதே போல் தாங்கள் விரைவில் வருவதாக சொல்லியுள்ள ரோஜர்&பில் , ப்ரூனோ பிரேசில் கதைகள் எப்போது வெளிவரும் என்பதையும் தாங்கள் கூறினால் இன்னும் சற்று மகிழ்ச்சியாக இருக்கும், மற்றும் வில்லியம் வான்ஸ் கைவண்ணத்தில் உருவான கேப்டன் டைகரின் இரு கதைகளையும் தாங்கள் வெளியிட முயற்ச்சிக்கலாமே?

    ReplyDelete
  24. பிரளயத்தின் பிள்ளைகள் சித்தரிக்கும் "சிகானி" இன மக்கள் பற்றி ஒரு சுவாரசிய பதிவு.
    அடியேனின் வலைப்பூவில்......
    படித்து துன்புறுவீர்....ஹிஹி!!!

    ReplyDelete
  25. பாரிசில் லயன்-முத்து காமிக்ஸ்கள் கிடைக்கிறது என்ற செய்தி மகிழ்சியான ஒன்று. அப்படியே முகவரியும் தெரிவித்தால் அந்நாட்டுக்கு செல்லும் பட்சத்தில் சென்று வர ஏதுவாக இருக்கும்!!!!!!!!

    தீபாவளி ஸ்பெஷல்லா? தமிழ் பத்திரிக்கைகள் போட்டி போட்டுகொண்டு வெளியிட்ட தீபாவளி மலர்களை பெரும்பாலும் நிறுத்திவிட்ட நிலையில் 456 பக்கங்களில் தீபாவளி மலரை வெளியிடுவது தற்போதைய நிலையில் பெரிய சாதனைதான். இது தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, பாரிஸ் இல் தமிழர்கள் இன் கோட்டை என வர்ணிக்கப்படும் லா -சப்பல் எனுமிடத்தில் அமைந்துள்ள "Shayee Cash & Carry ", "Ocian Indien ", "Nishan Cash & Carry " ஆகிய 3 நிலையங்களிலும் எமது லயன் & முத்து காமிக்ஸ் தற்போது கிடைகிறது. இன்னும் 3 நிலையங்களில் விநியோகிக்க முயற்ச்சி செய்கின்றேன் .

      Delete
    2. கலக்குங்க நண்பரே வாழ்த்துக்கள்...

      Delete
    3. வாழ்த்துக்கள் Thiruchelvam Prapananth

      Delete
  26. பதிவே போடலை, அதுக்குள்ளார 50+ comments .... பாரிஸ் நண்பரின் முயற்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  27. அதிகம் காக்க வைக்காமல் பதிவிட்டதற்கு நன்றி சார் ..

    ReplyDelete
    Replies
    1. நானும் நாளைதான் பதிவு வரும் என்று எதிர்பார்த்தேன் :)
      குறிப்பிட்ட நேரத்தில் பதிவிட்டதற்கு நன்றி

      Delete
  28. ப்ரான்ஸ் ல லயன் முத்து 50 ரூபா புக்கு 4 யூரோவும் {ரூ.310) 100 ரூபா புக்கு 7 (ரூ.540) யுரோவும் விலையாமே? நெசமாவா?

    ReplyDelete
    Replies
    1. I think that's because it includes shipping (if the book price is Rs 310)

      Delete
    2. நண்பரே, தாங்கள் குறிப்பிட்ட விலை விபரங்களில் சிறு மாற்றம் .விற்பனை நிலையங்களில் எமது காமிக்ஸின் விற்பனை விலையானது அதனது air மெயில் கட்டணங்களையும் உள்ளடக்கி 3.50€ உம் , 6.50€உம் ஆக அறிமுகம் செய்துள்ளனர் .விற்பனை விலையினை பாரிஸ் இல் தீர்மானிப்பது வர்த்தகர் சங்கம் . எதிர் காலத்தில் இந்த விலை குறையும் சாத்தியம் உள்ளது .

      Delete
    3. பக்கத்திலிருக்கும் இலங்கைக்கு அனுப்புவதற்கே தபால் கட்டணங்கள் தலையைச் சுற்றும்போது பிரான்ஸ்க்கு கேட்கவும் வேண்டுமா? எங்கள் நாணய மதிப்பில் பார்த்தால் புத்தகங்களின் விலை பிரான்சில் ரூபா 605, ரூபா 1124 என்று தெரிகிறது. ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்! எடைக்கு எடை விற்பனை விலையும் அதிகரிப்பது தவிர்க்க இயலாததே! இறக்குமதிக்கு வரியும் உண்டா நண்பரே?

      Delete
    4. பிரான்சில் இளைய தலைமுறையினர் தமிழ் வாசிக்கிறார்களா? அல்லது மூத்த தலைமுறைதான் புத்தகங்களை வாங்குகிறார்களா? என்பதையும் அறிய ஆவல் (ஊற்றடிக்கிறது!) !

      Delete
  29. // வெவ்வேறு நாயகர்களின் combo எனும் போது, ரசனைகள் மாறுபட்டாலும், அவரவர் ரசிக்க ஏதாவது இருந்திடுமே என்ற ஒரு சிறு திருப்தியே எனக்கு//

    இது 100% உண்மை, அது மட்டும் அல்லாமல் வெவ்வேறு நாயகர்களின் combo எனும் போது எதிர்பார்ப்பு பன்மடங்கு பெரிகிவிடுகிறது. தயவு செய்து NBS போன்ற ஸ்பெஷல் புத்தகங்களுக்கு வெவ்வேறு நாயகர்களின் combo வழியே தொடறவும்.

    We are not cine book, we are not DC Comics ==> WE ARE LION/MUTHU COMICS so please keep the originality of releasing multiple stories in a special which gives the whole meaning of SPECIAL to begin with.



    ReplyDelete
    Replies
    1. V Karthikeyan : கல்லில் அடித்த இலக்கணங்கள் நம் பயணத்துக்குக் கிடையாதென்பதால், நம் பெரும்பான்மையின் ரசனைகளைச் சார்ந்தே நமது பாணிகளும் அமைகின்றன !

      ஒரே இதழாய் XIII போன்ற ஒரே கருவைச் சுமந்து
      நீள்பயணம் செல்ல வாய்ப்புக் கொண்டதொரு கதை கிட்டும் போது - ONE SHOT முயற்சிகளையும் கையில் எடுப்போமே !

      Delete
  30. ரசனைகள் பலவிதம்! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு Feeling!

    ReplyDelete
  31. Let's make LION 30th year Special be surpassing NBS with Great stories Sir!

    ReplyDelete
    Replies
    1. WillerFan@RajaG : உயரங்கள் தாண்டப்படுவதற்கே ! நிச்சயம் முயற்சிப்போம் நண்பரே !

      Delete
  32. brmuda triangle pola comics blog-inai thooki niruththiya "muthufan, King viswa, Rafiq Raja" agiyorinaik kuriththu arputhamaaga india todayvil ezhuthiya nanbar "Narasimhanukku nalvazhthukkal" sir!!

    ReplyDelete
  33. "BERMUDA MUKKONAM"-Pizhaikku mannikka vendugiren!!

    ReplyDelete
    Replies
    1. பெர்முடா முக்கோணம் சார்ந்த ஏதேனும் கதைகள் இருந்தால் வெளி விடலாமே சார் ...

      Delete
  34. "மரணம் மறந்த மனிதர்கள்" என்னவாயிற்று? முந்திய இதழ் ஒன்றைப் புரட்டும் போது விளம்பரம் கண்ணில் பட்டது.

    ReplyDelete
    Replies
    1. Prunthaban : அவர்களை நாமும் மறக்கவில்லை ; 2014-ல் ஆஜராவார்கள் !

      Delete
  35. Black Humor என்பதை மறைவான நகைச்சுவை என்றோ கொடூர நகைச்சுவை என்றோதானே பொருள் கொள்ள வேண்டும் ?!
    அல்லது இருண்ட நகைச்சுவைதானா ?

    ReplyDelete
    Replies
    1. Meeraan : Black Humor = Dark Humor = இருள் தானே ? Anyways, இதில் நூல் பிடித்தாற்போல வார்த்தைத் தேர்வுகளுக்கு அவசியம் ஏலாது என்றே நினைக்கிறேன் ! "இருண்ட நகைச்சுவை" கூட நயமாகத் தான் உள்ளது !

      Delete
  36. டியர் எடிட்டர்,
    தீபாவளி ஸ்பெஷல் இதழ் நமது அபிமான டெக்ஸ் வில்லரின் தரமான 2 கதைகளான " நீதியின் நிழலில் "+"மரண தேசம் மெக்ஸிகோ " ஆகியவற்றை தாங்கி வருவது சூப்பர் சார். இந்த தீபாவளி எமக்கு டெக்ஸ் உடன் சேர்ந்து சர வெடிதான் . சித்திரங்கள் அருமை .இரு கதைகளுக்கும் ஒரே ஓவியரே தானா ? அதிலும் குறிப்பாக நீரினடியில் டெக்ஸ் முதலையுடன் போராடும் காட்சி அருமை .

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : மாறுபட்ட 2 ஓவியர்களின் அட்டகாசம் ! இரண்டுமே ஒரு சித்திர விருந்துக்கு உத்திரவாதம் !

      Delete
  37. எனதருமை நண்பர் தாரமங்களம் பரணிதரன் அவர்களே,

    விபத்தில் சிக்கி சிகிச்சை மேற்கொண்டு வரும் உங்கள் குழந்தை விரைவில் குணமடைய இவ்வுலகின் எல்லா சக்திகளையும் வேண்டிக்கொள்கிறேன்!

    உங்கள் கடிதத்தை படித்தபோது 'பிரளயத்தின் பிள்ளைகள்' என்ற கிராபிக் நாவலை மீண்டும் படித்ததுபோல் உணர்ந்தேன்!

    காமிக்ஸோடு சேர்ந்தே வாழ்க்கையை வாழப் பழகியிருக்கும் உங்கள் அளவுக்கு நான் காமிக்ஸை ரசிக்கவில்லையே என்ற பொறாமை கலந்த ஏக்கம் என்னுள் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை! அந்த வகையில் என்னை நான் ஒரு 'C class' காமிக்ஸ் ரசிகனாகவே அடையாளம் காண்கிறேன்.

    ANS குறித்த ஏறக்குறைய 300+ பின்னூட்டங்களை உங்களின் இந்த ஒற்றைக் கடிதம் சற்றே ஓரம்கட்டியிருக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமா? (முன்பொரு முறை எடிட்டரால் மேற்கொள்ளப்பட்ட 'operation dry-clean' ஞாபகம் வந்து தொலைக்கிறது!) மனதிலிருப்பதை மறைக்காமல் கொட்டி எடிட்டரை மட்டுமல்லாது என்னைப் போன்ற சாமானிய வாசகனையும் அசைத்துப் பார்த்திருக்கிறது உங்களின் தனித்துவமான வெள்ளந்தி எழுத்துக்கள்! ஒட்டுமொத்த காமிக்ஸ் ரசணையின் அழகான, எதார்த்தமான இன்னொரு பக்கமாக உங்கள் கடிதத்தைப் பார்க்கிறேன்!

    எனினும் கொஞ்சம் கொஞ்சமாகவாவது இந்தப்புதுமையான மாற்றங்களுக்கு (கிராபிக் நாவல், etc.,) உங்களைப் பழக்கப்படுத்திக்கொண்டுவிடுங்கள். இந்த மாற்றங்கள் காலத்தின் கட்டாயம்; ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை நமக்கு!

    'கதம்ப மாலை' பாணியிலான புத்தகங்களின் அவசியத்தை எடிட்டர் (combo இதழ்கள் வேண்டாமே என்று கூறும்) மற்ற நண்பர்களுக்கு உணர்த்த நல்லதொரு வாய்ப்பையும் உங்கள் கடிதம் வழங்கியிருக்கிறது என்பதே உண்மை!

    உங்கள் காமிக்ஸ் நேசம் வாழ்க! உங்கள் வெள்ளந்தித்தனம் வாழ்க!

    உங்களுடன் ஒரு கப் டீ; துளியூண்டு பால் சேர்த்து சாப்பிட்டுக்கொண்டே கிராபிக் நாவல் பற்றிப் பேசிட ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆவலுடன் காத்திருப்பேன்! :)

    ReplyDelete
    Replies
    1. பரணிதரன் நானும், விபத்தில் சிக்கி சிகிச்சை மேற்கொண்டு வரும் உங்கள் குழந்தை விரைவில் குணமடைய இவ்வுலகின் எல்லா சக்திகளையும் வேண்டிக்கொள்கிறேன்!

      Delete
    2. பரணிதரன், நீங்களும் உங்கள் குழந்தையும் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் உங்கள் கடிதத்தில் உள்ள வலிகளையும் எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால்? லார்கோ& வேய்ன் ஷெல்டன் போன்ற கதைகள் இன்னும் சில கதைகள் மட்டுமே எஞ்சி உள்ளது. அறுநூறுக்கும் மேற்பட்ட டெக்ஸ் கதைகள் இருந்தாலும் இதை தொடர்ச்சியாக படிக்கவும் முடியாது. அதனால் பழைய கதைகளை நாம் ரசித்து பழகியது போல். தற்போது வரும் புதிய கதைகளையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எந்த ஒரு கதையும் அனைவரையும் திருப்தி படுத்துமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். எமனின் திசை மேற்கு, பிரளயத்தின் பிள்ளைகள் கதைகளை அனைவரும் ஏற்றுக் கொண்டது போல் தாங்களும் ஒரு நாள் ஏற்றுக் கொள்வீர்கள்.

      Delete
    3. அன்பு நண்பர் பரணிதரன்,உங்கள் உணர்வுப்பூர்வமான கடிதம் எனக்கு உணர்த்தியதெல்லாம்  ஒன்று தான் ...நாம் மட்டும் இங்கு தனியாக இல்லை  ..

      Delete
    4. நண்பரே, உங்கள் குழந்தை விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

      Delete
    5. குழந்தை விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

      Delete
    6. Erode VIJAY : //உங்கள் கடிதத்தை படித்தபோது 'பிரளயத்தின் பிள்ளைகள்' என்ற கிராபிக் நாவலை மீண்டும் படித்ததுபோல் உணர்ந்தேன்!//

      கனகச்சிதமானதொரு ஒப்பீடு ! நேற்று காலை நான் உணர்ந்ததும் இதுவே !

      Delete
    7. @ எடிட்டர்
      இதே கடிதத்தை நம்ம ஸ்டீல் க்ளா எழுதியிருந்தால் 'அரக்கன் ஆர்டினி'யை மீண்டும் படித்ததுபோல் உணர்ந்திருப்பேன்! :)

      Delete
  38. இருப்பினும் , நண்பர்களின் ANS பற்றிய விமர்சனங்களை பார்த்து ஆறுதல் அடைய வேண்டிய சூழ்நிலை . சார் இன்னும் ANS வந்து கிடைக்கவில்லை . எனது வழமையான சந்தா பிரதி அனுப்பி விட்டார்களா என்று கவலையாக உள்ளது . மேலும் தங்களின் கைவசம் உள்ள காமிக்ஸ் புத்தகங்களின் பெயர் விபரங்களை அனுப்பினால் தேவையான பிரதிகளை இ-மெயில் மூலம் ஆர்டர் செய்து தருவிக்க வசதியாக இருக்கும் . ஏனெனில் குறிப்பாக என்னிடம் "என் பெயர் லார்கோ ", "தலை வாங்கி குரங்கு" , "பயங்கரவாதி டாக்டர் 7", 3விண்ணில் ஒரு குள்ளநரி " போன்ற பல வெளியீடுகள் இல்லை . சார் , "கார்சனின் கடந்த காலம் " மறுபதிப்பு ப்ளீஸ் ??????

    ReplyDelete
    Replies
    1. கைவசமுள்ள பிரதிகளின் விபரம் புதிய இதழ்களின் உள்ளேயே இருக்கிறது நண்பரே. அனேகமாக பின்னட்டையின் உள்புறத்தில்.

      Delete
  39. Counding days for Tex,after a long time we will get a mega depavali issue. Thanks to editorand team.

    ReplyDelete
  40. மாற்றமே உன் விலை என்ன ? ஆசிரியரின் சரியான வினாதான், இதன் பதில் சிறந்த கதை என்றாலும் வெகு சிலருக்கு ஏமாற்றம்தான் என்பது பரணிதரன் காட்டும் எண்ணம். அவரது எண்ணத்தை வெகு எதார்த்தமாக, யாரையும் காய படுத்த கூடாது என்ற எண்ணத்துடன் வாழைப் பழத்தில் ஊசியை செருகுவது போல ஏற்றி உள்ளார்! ஒரு கடிதம் எவ்வளவு நயமாக, அழகாக தனது எதிர்மறை கருத்துக்களை ஆசிரியருக்கும் பிற ரசிகர்களுக்கும், கழக கண்மணிகளுக்கும் காய படுத்தாமல், கோபத்தை கிளப்பாமல் ஏற்று கொள்ளலாமோ என எண்ணம் வரும் படி தெரிய படுத்த இந்த கடிதம் ஒரு உதாரணம்! உங்களது எண்ணங்களை குழப்பமின்றி தெளிவு படுத்தி உள்ளீர்கள், ஒரு கடிதம் எப்படி எழுத வேண்டும் என காட்டியதற்கு நன்றிகள் மற்றும் மெகா சல்யூட் நண்பரே! உங்களது வாசகர் அறிமுகம் அன்று புத்தகத்திற்கு மேலும் அழகு சேர்த்ததென்றால் இந்த கடிதமும் தென்றலாய் அழகு சேர்க்கும்! கதை எனக்கு ஒரு வலியை ஏற்படுத்தி உள்ளதென்றால், உங்களுக்கும் வலியை ஏற்படுத்தி உள்ளது வேறு விதத்தில்!

    ReplyDelete
    Replies
    1. // கழக கண்மணிகளுக்கும் //

      ஸ்டீல், கொ.ப.செ யார் ?

      Delete
    2. // ஒரு கடிதம் எவ்வளவு நயமாக, அழகாக தனது எதிர்மறை கருத்துக்களை ஆசிரியருக்கும் பிற ரசிகர்களுக்கும், கழக கண்மணிகளுக்கும் காய படுத்தாமல், கோபத்தை கிளப்பாமல் ஏற்று கொள்ளலாமோ என எண்ணம் வரும் படி தெரிய படுத்த இந்த கடிதம் ஒரு உதாரணம்!//

      எனது மனதில் தோன்றிய கருத்தும் இதுவே நண்பா! பரணிதரனுக்கு ஒரு ++1. ஒரு எதிர் மறை கருத்தை வெளிப்படுத்த முயலும் போது அதை நயமாக,நாகரீகமாக அடுத்தவர் மனம் புண் படாமல் எப்படி சொல்லமுடியும், என்பதற்கு இந்த கடிதம் ஒரு அருமையான உதாரணம் நண்பர்களே! Guys, many of us need to learn from this!

      Delete
  41. வணக்கம் நண்பர்களே நண்பர் பாரீஸ் பிரபானந்த்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எவ்வளவு துணிச்சலான செயல் தைரியமாக துணிந்து புத்தகங்களை வாங்கி விற்கிறார். இதைவிட வேறு என்ன வேண்டும் நமது ஆசிரியருக்கு? இது போல் நமது வாசகர்களும் துணிந்து செயல் படுத்தினால் நமது ஆசிரியரும் துணிந்து நம்மை கதை குவியலில் குளிப்பாட்டுவார் என்றே நினைக்கிறேன். நண்பர்களினால் நமது காமிக்ஸ் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு என்ன சொல்லப்போகிறார்கள் (செய்யப்போகிறார்கள் ) என்பதை தெரிந்துகொள்ளவே ஆசைப்பட்டேன் ஆனால் 4 அ 5 நண்பர்கள் மட்டும் பதில் அளித்தார்கள் அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் இந்த பதிவில் பிரபானந்த் பாரிஸில் நமது காமிக்ஸ் விற்பனைக்காக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களின் போடோக்களை வெளியிட்டிருப்பது மற்ற வாசகர்களுக்கும் மனதில் ஒரு முனைப்பை தரும் என்றே நம்புகிறேன். என்ன நண்பர்களே உண்மைதானே?

    ReplyDelete
  42. தாரை பரணி, same blood! உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்!

    ReplyDelete
  43. ஓவியம் மூலமான கதை... என்னவொரு சக்தி கொண்டு எனது எண்ணங்களை புரட்டி போட்டு விட்டது என ஒரு கேள்வி எனது மனதில்! ஒன்றுமில்லை நானும் ஹிட்லர் மேல் பெரிய தவறு எதுமில்லையோ, ஜெர்மானியரே உலகை ஆள வேண்டும்,தானே(ஜெர்மானியரே) உயர்ந்தவர் என தனது எண்ணத்தை கூறிய ஹிட்லர் மேல் எனக்கும் ஒரு எண்ணம் இருந்தது சிலரை போல !
    ஆனால் அந்த எண்ணத்தை சாட்டை கொண்டு அடித்து உலுக்கி விட்டது எல்லா மனிதர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு, ஏக்கங்கள் உண்டு என அந்த கூட்டத்தினூடே நானும் ஒரு பாதிக்கபட்டவனாய் பயணிக்க வைத்தது இந்த கதை என்றால் அதற்க்கு ஒரே சான்று இரண்டு நாட்கள் வைத்து படிக்க வேண்டும் என்று நினைத்த என்னை ஒரே மூச்சில் படிக்க வைத்தது! ஓவியருக்கும், ஆசிரியருக்கும் முதல் நன்றிகள்!
    இந்த கதை ஒரு சக மனிதனுக்கு, நண்பனுக்கு நடந்த துயரை எனது எண்ணத்தில் ஏற்றியதென்றால் அதற்க்கு பெரும் துணை (ஒரு நண்பர் வண்ணம் பிடிக்கவில்லை என்று கூறினார்) அவர் தேர்ந்தெடுத்த வண்ணமே! இவை அனைத்தும் அதாவது ஹிட்லரின் கொடுமைகள் என பிற அனைத்தும் ஏதோ செய்திதான் எனக்கு, இந்நாள் வரை ; அதாவது இந்த கதை படிக்கும் வரை! ஒரு வேலை ஹிட்லர் இந்த கதையை போன்ற கதைதனை படித்திருந்தால் தனது தவறை உணர்ந்து அனைவரும் சமம் என உணர்ந்திருப்பாரோ!

    ஓவியரின் எண்ணம் தெளிவாய் உணர்த்துகிறது அவரது வண்ணத்தின் தேர்வை! நன்கு கவனித்தால் நீண்ட நாட்கள் கழிந்த ஒரு சோகம் குருதியால் அன்றே வரையப்பட்டு, அந்த ஈரம் காய்ந்த பின்னர் என்ன நிறம் வருமோ அந்த நிறத்தை தேர்வு செய்துள்ளார் ஓவியர் பழமையை காட்ட ! இதில்,நிறத்தின் தேர்வில் ஓவியர் மாபெரும் வெற்றி அடைந்துள்ளார் அதற்கே அதிக மதிப்பெண் தந்து விடலாம் என நினைத்தால், தொடரும் ஓவியங்கள் எனது மனதையும் தொடர செய்தது காட்ச்சிகள் அமைப்பால்! அழகான வழி காட்ச்சிகள் , அதனூடே அவர்களின் பாதிப்புகள்,அவர்களது நேர்மை, நீதி பரிபாலனம் , சோகத்தில் தங்களை ஆறுதல் படுத்தும் இசை என நாடோடிகளின் தன்மைகளும் தன்மையாய் படம் கொண்டு காட்ட பட்டுள்ளது!
    ஓவியர் நான்கு ஆண்டுகள் மெனக்கெட்டுள்ளார் என்றால் அவை எப்படி அவரது மனதை ஆக்கிரமித்திருக்கும் என்பதை தெளிவாய் உணர முடிகிறது! வழி நெடுக்கும் நம்மோடு கூடவே பயணிக்கும் நிழல்களையும் காணுங்கள், ஓவியர் எப்படி எல்லாம் விழிப்புணர்வோடு செயல் பட்டுள்ளார் என்பதும் தெரியும், நான்கு ஆண்டுகள் அவர் செதுக்க தேவைப்பட்ட காரணமும் புரியும்!
    123ம் பக்கம் வலது புற மூலையில் உள்ள முதல் ஓவியம் கவனியுங்கள் அந்த நிழல் வாசலில் இடது புறமாகவும், சற்று தள்ளி வலது புறமாகவும் வீழ்ந்து கிடக்கும் மின் விளக்கின் அருளால் , அதனை கூட தெளிவாய் காட்சி படுத்தி உள்ளார் ஓவியர் ,இது வழி தோறும் தொடர்வதை ஒவியத்தை கூர்ந்து கவனித்த நண்பர்கள் உணர்வார்கள்!
    நாடோடிகள் எப்போதும் வானம் பாடிகளாய் சந்தோசத்தை தேடி, சந்தோசமாய் திரிவார்கள், கடவுளின் குழந்தைகள் என நினைத்த எனக்கு இந்த கதை படித்த பின்னே, தங்களது தொலைத்த குழந்தைகளை தேடுவது போல கண்ட பின்னர், இப்போது குருவிக்காரர்களை, ரோட்டில் டென்ட் அடித்து அமர்ந்திருப்பவர்களை கண்டால் அவர்களும் நிம்மதி தேடி திரிகிறார்களோ என்று எழுந்த எண்ணம் இந்த கதைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி!
    அந்த பெண்ணின் முடிவு என்ன, நமது கற்பனைக்கே விட்டு விட்டார் ஆசிரியர் என்பது சற்று நிம்மதி , நாமும் நினைத்து கொள்வோம் அல்லது ஏமாற்றி கொள்வோம் அவள் கிடைத்திருப்பாள் என்றே நாயகன் போலவே !
    இதுவும் ஒரு குறிஞ்சி மலரே! சென்ற வருடம் ஒன்ரென்றால் ,இந்த வருடம் இன்னொன்று, நமது தோட்டத்தில் மட்டுமே பூக்கும் வருடம் ஒரு குறிஞ்சி மலர்!


    நண்பர் பரணிக்கு, இங்கே உள்ள சோகம் என்பது ஒரு சுவை,சிலருக்கு நகைச்சுவை பிடிக்கும்... சிலருக்கு அதிரடி சண்டைகள் பிடிக்கும்...சிலருக்கு சோகம் ....இந்த கதை ஒரு அவலம்,பதை பதிப்பை விதைக்கிறது...சிறு வயதில் அதிரடி திரை படங்கள், பின்னர் பாடல்கள்,அடுத்த கட்டம் நகை சுவை , பின்னர் ஏதேனும் மாற்றம் வேண்டும் ஒரே போரடிக்கிறது ஒன்று போலவே என ஏங்கும் உள்ளங்களுக்கு சிறிது மாற்றத்தை தந்துள்ளது இந்த கதை என்பதை உணர்ந்துள்ளீர்கள் அதற்கும் நன்றிகள் !மேலும் வரலாற்றில் வாழ்தல் என்பது நமது எண்ணங்களையும் சீர் படுத்தவே இது தவறு, இது சரி என வரலாறு தொடர்ந்து காட்டி வருகிறது! அந்த வகையில் இதுவும் ஒரு புரிதலை கொணரவே! இது சிறுவர்களுக்கு தம்முடன் வாழ்ந்து வரும் சம கால மக்களையும் நேசிக்க உதவலாமே! மகனுக்கும் கொடுங்கள்!
    பின்பு ஒரு நாள் இதனை படிக்கும் போது தெளிவாய் உணர்வீகள், மனது போரடித்து மாற்றம் வேண்டுமென ஓலமிடும் போது; மாற்றமே என்றும் மாறாததன்றோ ! அது வரை பத்திர படுத்தி வையுங்கள் ! பின்னர் ஸ்பைடர் கதைகளை தொலைத்து விட்டு இப்போது தேடுவது போல இதனையும் தேட வேண்டி வந்தாலும் வரும்!



    ReplyDelete
    Replies
    1. //ஓவியரின் எண்ணம் தெளிவாய் உணர்த்துகிறது அவரது வண்ணத்தின் தேர்வை! நன்கு கவனித்தால் நீண்ட நாட்கள் கழிந்த ஒரு சோகம் குருதியால் அன்றே வரையப்பட்டு, அந்த ஈரம் காய்ந்த பின்னர் என்ன நிறம் வருமோ அந்த நிறத்தை தேர்வு செய்துள்ளார் ஓவியர் பழமையை காட்ட ! //

      ஆஹா! இதை இப்படியும் பாக்கலாம் அல்லவா !! ++1

      பிறகு, எந்த ஒரு சிக்கலுக்கும் நம்முன்னே தீர்வுகள் பலவாக இருக்கும்போது, எளிமையான் நேரடியான தீர்வுமுறை அவற்றுள் எதுவோ அதுவே மிகச்சிறந்த தீர்வு எனபது அறிவியலின் அடிப்படை விதியல்லவா ??simphony யில் ஆயிரம் இசை கருவிகளை கொண்டிசைதால் தான் இசையா ??? குழலோசை யாழோசையை விட நமது மழலை செல்வங்களின் மழலை குரலோசை இனிதன்றோ?? இவை இப்படியிருக்க நமது வாசகர்களை திருப்திப்படுத்த நாம் ஏன் ஆழமான கதை களங்களை தேடி செல்ல வேண்டும்??, simple action கதைகளால் இதை சாதிக்க முடியாதா?? எனும் கேள்வி மனதில் எழாமல் இல்லை. நிச்சயம் முடியும்.

      ஆனால் அது எவ்வளவு தொலைவு வரை எனபது ஒரு கேள்விக்குறியே!! கலை துறையை பொறுத்தவரை ஒரு கலைக்குள் எவ்வளவு தூரம் ஆழமாக ஒரு கலைஞன் ஈடுபடு காட்டுகிறானோ அவ்வளவு தூரம் அவன் படைப்புகள் காலத்தால் நிலைபெற்று புகழ் பெறும் எனபது அடிப்படை.இங்கே be simple எனபது அர்த்தமற்றது.

      நாம் இங்கே இருப்பது கலையை வளர்த்துவதற்கு அல்லவே என்றாலும் நமது காமிக்ஸ் துறை படைப்புத்திறனையும் கலை திறமையையும் அடிப்படையாக கொண்டது. இவை இரண்டையும் நாம் ஒதுக்கிவிட முடியாதே. வியாபார நோக்கம் என்று வந்துவிட்டால் BE SIMPLE எனபது நிறைய லாபம் தரும் என்றாலும் நீண்ட காலம் வியாபாரம் நிலைக்க அது உதவாது அல்லவா ??

      இங்கே ஆசிரியர் இவற்றுக்கு இடையே ஒரு சரியான நிலைபாட்டை எடுத்து பயணிக்கிறார். நாம் அதற்க்கு முழுமையாக ஆதரவு தருவோம் நண்பர்களே !



      Delete
    2. ஸ்டீல்,
      அனுபவிச்சுப்படிச்சு, அழகா எழுதியிருக்கீங்க! பரணிதரனுக்கு சொல்லியிருக்கும் ஆலோசனை உபயோகமானது. இப்போ பிடிக்கலைன்னாலும், இந்த மாதிரியான (க்ரீன் மேனர், கிராபிக் நாவல்கள்) கதைகள் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு (சில மாதங்களோ, வருடங்களோ) பிறகு பிடிக்க வாய்ப்புகள் அதிகம்.

      Delete
    3. விஸ்கி-சுஸ்கி :// வியாபார நோக்கம் என்று வந்துவிட்டால் BE SIMPLE எனபது நிறைய லாபம் தரும் என்றாலும் நீண்ட காலம் வியாபாரம் நிலைக்க அது உதவாது அல்லவா ??//

      Well said !

      Delete
    4. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் :

      ரசனைகளில் நாம் எவருக்கும் சளைத்தோர் அல்ல என்பதை நிலை நாட்டுகிறீர்கள் ! ஆழமான கவனத்தோடு ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்துள்ளது புரிகிறது !

      Delete
  44. சார் ஆக மொத்தம் மூன்று முத்துக்களை! நமது லயன் தாங்கி வந்துள்ளது! இந்த வெற்றி என்றும் தொடர வாழ்த்துக்களும், மீண்டும் உங்களது எழுத்துக்களுக்கு நன்றிகளும்!
    ஆனால் தங்களது இந்த பதிவில் நீங்களே குறிப்பிட்டுள்ள போது, நான் கேட்காமல் போனால் எனது மனது நிம்மதியுறாது, அந்த முழு நீள மெகா ஸ்பைடரை வெளியிட ஏதேனும் எண்ணம் உள்ளதா என கேட்க மாட்டேன், விரைவில் வெளி விடுங்கள் ஏதேனும் ஒரு மெகா இதழ் கலவையாய் என கோரிக்கை வைக்கிறேன் நானும் ஸ்பைடர் ரசிகர்கள் சார்பாய் .....முப்பதாவது ஆண்டு விழாவில் ஐநூறு ரூபாய் கருப்பு வெள்ளை இதழில் இதனையும், ஐநூறு ரூபாய் வண்ண இதழில் வண்ணத்தில் விண்வெளி பிசாசையும் விட்டால் உளம் மகிழ்வேன்....ஆயிரம் ரூபாயில் இரண்டு இதழ்கள், குண்டு இதழ்களை இழந்து தவிக்கும் நமது அலுவலகத்திற்கு துணையாய்.....
    குண்டு இதழ்கள் எப்போதும் வெற்றி பெரும் ஆறு மாதங்களில் விற்று தீர்ந்த நமது nbs போல, முந்தய மலர்களை போல...

    ReplyDelete
    Replies
    1. வண்ணத்தில் ஒரு ஸ்பைடராவது முடியுமென்றால்...

      Delete
    2. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : நிச்சயம் நாம் தாங்க மாட்டோம் ! வேண்டாமே வில்லங்கமான விஷப் பரீட்சை !

      Delete
    3. சார், என்றாவது ஒரு நாள் மாற்றத்தை விரும்பும் போது....

      Delete
  45. EDITOR SIR, NO REPLY FOR SUBSCRIPTION RELATED MAILS.

    Professional Courierக்கு பதிலாக speed post இல், அதுவும் தவறான pincode உடன் அனுப்பியதால் ஒரு வாரம் கழித்து (16-Jul) தான் கிடைத்தது. போனமாதமே mail அனுப்பியும் மீண்டும் அதே தவறு.

    PLS ASK THE TEAM TO RESPOND TO MAILS SIR

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விஜய் : அலுவலகத்தில் மராமத்து வேலைகள் நடந்தேறி வருவதால் - இப்போது ஒரு தற்காலிக இடத்திலிருந்து பணியாற்றுகிறோம் ! கம்ப்யூட்டர் ஏற்பாடுகள் ; இன்டர்நெட் வசதிகள் இப்போது தான் சரியாகியுள்ளன ! நிச்சயம் இந்தத் தவறு தொடராது ! Our Apologies !!

      Delete
  46. repost:
    July - லயன் / முத்து ரெகுலர் இதழ் - ALL NEW Spl @ Rs.200

    August - லயன் / முத்து ரெகுலர் இதழ் - மனதில் மிருகம் வேண்டும் @ Rs.100
    +6 No:2 - மேற்கே ஒரு சுட்டி புயல் @ Rs.50

    September - லயன் / முத்து ரெகுலர் இதழ் - ஒரு சிப்பாயின் சுவடுகளில் @ Rs.100
    சன்ஷைன் லைப்ரரியில் மறுபதிப்பு No:3 - கேப்டன் பிரின்ஸ் spl @ Rs.100

    October - லயன் / முத்து ரெகுலர் இதழ் - ? - @ Rs.100
    +6 No:3 @ Rs.50 ?

    November - லயன் / முத்து ரெகுலர் இதழ் - ஆதலினால் அதகளம் செய்வீர்" @ Rs.100
    சன்ஷைன் லைப்ரரியில் மறுபதிப்பு No:4 - ரிபோர்டர் ஜானி spl @ Rs.100
    +6 No:4 - தீபாவளி மலர் TEX in "நீதியின் நிழலில்" + "மரண தேசம் மெக்சிகோ" @ Rs.100
    +6 No:5 - New face in color @ Rs.50?

    December - லயன் / முத்து ரெகுலர் இதழ் @ Rs.100
    சன்ஷைன் லைப்ரரியில் மறுபதிப்பு No:5 - சிக் பில் spl - @ Rs.100
    +6 No:6 @ Rs.50?

    அப்ப அந்த 15அவது இதழ் எங்க?

    ReplyDelete
    Replies
    1. அதான், ALL NEW Spl இல் 2 புக்கு சேர்ந்து வந்துடுச்சே!!! எப்பூடி? :-)

      Delete
    2. சூப்பர் விஜய் : +6 வரிசையில் 6 x ரூ.50 வெளியீடுகள் ; பாக்கி 75 ரூபாய் கூரியர் / பதிவுத் தபால் செலவு வகைக்கு என்பதே கணக்கு !

      1.நிலவொளியில் ஒரு நரபலி x ரூ.50
      2.மேற்க்கே ஒரு சுட்டிப் புயல் x ரூ.50
      3.அக்டோபர் - ரூ.50
      4.நவம்பர் - டெக்ஸ் தீபாவளி மலர் x ரூ.100 (இது 2 இதழ்களுக்குப் பதிலாய்)
      5.வண்ணத்தில் ஒரு கார்டூன் புதுமுகம் x ரூ.50

      கணக்கு ஒ.கே. தானா ?

      Delete
    3. புது முகம்...ஆஹா காத்திருக்கிறோம்....என்ன ஒரு வியப்பு காத்துள்ளதோ (வரும் தொடர் அறிமுகங்களால் கவர பட்டதால் ).

      Delete
  47. அடக்கடவுளே! 5 லட்சம் ஹிட்ஸ் என்ற இமாலய எண்ணிக்கையை இன்னும் சில நிமிடங்களில் எட்டவிருக்கிறோம்!!

    ( 5 லட்சம் ஹிட்ஸை முன்னிட்டு ஏதாவது சிறப்பு வெளியீடு உண்டா எடிட்டர் சார்? ஹி ஹி!)

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு விஜய் ....இதைததான் சைக்கிள் கேப் என்கிறார்களோ ...?

      Delete
    2. atleast ஒரு ஆயிரம் ரூபாய் புத்தகமாவது வெளி இடுவார் என எதிர்பார்ப்போம்!

      Delete
    3. ஆசிரியர் :கொலெ பண்ணிப்பிடுவேன் அம்புட்டு பயலையும் ...

      Delete
    4. // ஆசிரியர் : கொலெ பண்ணிப்பிடுவேன் அம்புட்டு பயலையும்... //

      ஓ! மீதமுள்ள அந்த ஸ்பைடர் கதையை வெளியிடப் போறீங்களாக்கும்? :D

      Delete
    5. ஒத்துக்கிறேன் ஸ்பைடர் கதை என்பதே  கொலை தான் ..ஒத்துக்கிறே ...நெக்ஸ்ட் மீட் பண்றேன் ....

      Delete
    6. ஐந்து லட்டம் ஹிட்ஸ் ஸ்பெஷல்:

      ஸ்பைடரின் "பெருச்சாலிப் புரஃபஸர் பெல்ஹாம்"

      கதை: புரபஸர் பெல்ஹாம் கண்டுபிடித்த புதுவகை ஆயுதம் ஒன்று ஆர்டினியின் விளையாட்டால் வினையாகி, பெல்ஹாமின்ம மீதே பிரயோகிக்கப்படுகிறது. அதனால் கழுத்துக்குக்கீழே ஒரு பெரிய சைஸ் பெருச்சாலியாக மாறிவிடுகிறார் புரபஸர் பெல்ஹாம். தான் இப்படி மாற ஸ்பைடர்தான் காரணமென்று தவறாகப் புரிந்துகொண்ட பெல்ஹாம், ஸ்பைடரை தன் அற்புத சக்திகளால் புரட்டியெடுக்கிறார். ஸ்பைடர் தனது வலைத் துப்பாக்கியிலுள்ள 108 வகையான ஆயுதங்களை பிரயோகித்தும் பலனின்றி தவிக்கும்போது புரபஸரிடம் ஆர்டினி உண்மையைச் சொல்லி ஸ்பைடரைக் காப்பாற்ற முயற்சிக்கிறான். மனம் திருந்தி மனிதனாகும் புரபஸரை அழைத்துக்கொண்டு நிம்மதியைத் தேடி செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாரில் பயணமாகிறார் ஸ்பைடர்!

      விரைவில்...

      அடுத்த வெளியீடு; "செவ்வாயில் சிலந்தி வலை"

      Delete
    7. நியூ இயர்ஸ் இவ் அப்போ மணி 12:00 அடிக்க காத்திருப்பதை போல் 500000 ஹிட்ஸ் அடிக்க காத்திருந்து பதிவிட யார் யார் எல்லாம் தயார இருகிறீங்க, கண்டிப்பா ஈரோடு விஜய் உண்டு..

      Delete
    8. யாராவது ஓவியர் கவனிங்கப்பா , புண்ணியமா போகும்!

      Delete
    9. Erode VIJAY : இன்னமும் வெளியாகாதிருக்கும் SPIDER Vs THE SNAKE 150 பக்கக் கதையைப் படித்து விட்டீர்களோ ? :-)

      Delete
    10. Erode VIJAY : //( 5 லட்சம் ஹிட்ஸை முன்னிட்டு ஏதாவது சிறப்பு வெளியீடு உண்டா எடிட்டர் சார்? ஹி ஹி!)//

      ஒரு மில்லியனுக்கு உண்டு !! It's a promise !

      Delete
    11. நண்பர்களே தொடர்ந்து குத்தி எறியுங்கள், நாளையே மில்லியனை தொட்டிடுவோமே!

      Delete
  48. ANS பற்றி மலை போல் எண்ணங்கள் வந்து குவிந்தாலும், எல்லோரும் மிகவும் எச்சரிக்கையாக ஒரு வார்த்தையை பயன்படுத்துகின்றனர்.... "வருடம் ஒருமுறை" இவ்வாறன கதை தெரிவுகள் வரலாம்.....என்று....

    அப்போ மீதி மாதங்களுக்கு :))))

    ReplyDelete
  49. Replies
    1. வாழ்த்துக்கள் ..

      Delete
    2. ஹிட்டை சூப்பர் ஹிட்டாய் மாற்றிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

      Delete
    3. இது அனைத்து நண்பர்களின் கூட்டு முயற்சியே அன்றி வேறொன்றுமில்லை ... ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும்.

      இனிமேலும் தொடரட்டும் ....

      Delete
  50. வாவ்! 500000!

    1000000ஐ எட்டிபிடிக்க வாழ்த்துகள்..

    ReplyDelete
  51. ஐந்து லட்சம் பார்வைகள் என்ற அசாத்திய சாதனை படைத்த நமது ப்ளாக் தளத்துக்கும் அதை வழிநடத்து ஆசிரியர் விஜயன் அவர்களுக்கும்,இந்த சாதனையை சாத்தியமாக்கிய நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    TREAT எப்போ சார் ???

    ReplyDelete
    Replies
    1. @ விஸ்கி-சுஸ்கி
      // TREAT //
      எல்லோருக்கும் ஒரு கப் 'நல் நேர நஞ்சு' ரெடியா இருக்காம்! :)

      Delete
    2. நம்ம ஈரோடு பூனையாருக்கு மட்டும் ஸ்பெஷல்லா துளியூண்டு பால் விட்டு ரெடி பண்ணியிருக்காங்களாம்!

      Delete
    3. விஸ்கி-சுஸ்கி ; Erode VIJAY & ALL FRIENDS :

      இங்கு சாதனைகள் என்று ஏதேனும் இருப்பின் சகல பெருமைகளும் உங்கள் ஒவ்வொருவரையுமே சாரும் guys ! துவங்கும் போது, இதனை நான் சின்னதானதொரு விளம்பரப் பலகையாக பயன்படுத்திடவே நினைத்திருந்தேன் ! இந்த உத்வேகம் ; இந்த ஆற்றல் ; இந்த 500,000 பார்வைகள் எனும் மாயாஜாலங்கள் - அனைத்துமே உங்களின் காமிக்ஸ் காதலின் தாஜ் மகால்கள் !
      Awesome folks !!

      ஒரு மில்லியனைத் தொடும் நாளன்று ஒரு treat நிச்சயம் ! நான் மறந்து போனாலும் நினைவூட்டுங்கள் நண்பர்களே ?!

      Delete
  52. வாவ்! ஐந்து லட்சம் பார்வைகள்!! எதிர் பார்த்ததைவிட அசுர வேகத்தில் அடைந்திருக்கிறோம்!!!

    ReplyDelete
  53. @ஈரோடு விஜய்:

    ஈரோடு புத்தக திருவிழாவில் நமது ஸ்டால் பற்றி ஏதேனும் தகவல் உண்டா ? தனி ஸ்டால் ? - இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ளது.

    (ஈரோடு சர்வாதிகாரி என்ன செய்து கொண்டு இருக்கிறார் ?)


    ReplyDelete
    Replies
    1. @ ப்ளூ

      புத்தகத் திருவிழா பற்றி எடிட்டரே அறிவிக்கும்வரை நான் வாயைத் திறக்காமலிருப்பதுதான் நல்லது! எனினும் அந்த 'ஈரோடு சர்வாதிகாரியிடம்' தொடர்பு கொண்டீங்கன்னா ஏதாவது பயனுள்ள தகவல் கிடைக்கக்கூடும்! :)

      Delete
    2. Erode VIJAY & திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்
      யாரப்பா அந்த 'ஈரோடு சர்வாதிகாரி'?

      Delete
    3. @ Parani

      ம்ஹூம்... நான் சொல்ல மாட்டேன்! வேணுமின்னா நீங்க ஈரோடு ஸ்டாலின்-டயே கேட்டுக்கோங்க! ;)

      Delete
    4. எனக்கு 'எங்க அப்பா குதிருக்குள் இல்லை' என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. இது தற்செயலா ?

      Delete
    5. குதிருக்குள் அல்ல நண்பரே, புதிருக்குள் இருக்கிறார்.....

      Delete
    6. நான் ஆட்டத்துக்கு வரல சாமியோ!

      Delete
    7. @ ALL : ஈரோட்டில் நமக்கு ஸ்டால் கிடைப்பது 90% உறுதியே ; பணமெல்லாம் ஒரு மாதத்துக்கு முன்பே செலுத்தியாகியாச்சு ! ஆனால் அமைப்பாளர்களிடமிருந்து அதிகாரபூர்வமாய் இது வரை ஏதும் தகவல் கிடையாது ! நிச்சயம் கிடைக்குமென்ற நம்பிக்கை உள்ளது !

      "மனதில் மிருகம் வேண்டும்" + "மேற்கே ஒரு சுட்டிப் புயல் " - ஆகிய 2 இதழ்கள் மாத்திரமே ஆகஸ்ட் ரிலீஸ் ! தொடரும் 5 மாத அட்டவணை பயங்கர tight என்பதால் - இதனுள் புதுத் தாண்டவங்கள் சாத்தியமாகாது !

      Delete
  54. Congrates ! Sir, 500000 visits , Greate Achèvement . It's your comitement and our Comics Lovers Love & Crezy. Well set. Where are you sir? Please Côme on Stage???

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : Many thanks ! We are all blessed ones for sure !

      Delete
  55. விஜயன் சார், சொந்த வாழ்கையில் பல கடினமான சூழ்நிலைகளில் எனது கண்ணீரை கட்டுபடுத்தி எனது உறவுகளுக்கு ஆறுதல் மற்றும் நம்பிக்கை கொடுத்து உள்ளேன் (வேற வழி இல்லை)! எனது கண்ணீரை வெளிக்காட்டினால் அனைவரும் உடைந்து விடுவோம் என்ற பயமே இதற்கு காரணம்! அப்படிப்பட்டஎனக்கு சோகமான கதைகளோ அல்லது படம்களோ (ஏன் உங்கள் சில பதிவுகள் கூட) எனது கண்களில் பலமுறை கண்ணீர் வர வைத்துள்ளன! அவை எனது மனதில் பொதிந்துள்ள வேதனைகளின் வெளிப்பாடு, இது போன்ற நேரம்களில் மீட்டெடுத்து மனதை அமைதி படுத்துகிறது!

    என்னை பொருத்தவரை நமது காமிக்ஸ்-ல் எல்லா விதமான கதைகளும் தேவை!

    ReplyDelete
  56. நான் முன்பெல்லாம் சோகமான முடிவைத்தரும் எந்த திரைப்படத்தையும் பார்க்கமாட்டேன், காரணம் பொழுதுபோக்கென்பது சந்தோஷமாக மட்டுமே இருக்கவேண்டுமென்ற என்னுடைய நிலைப்பாட்டால். ஆனால் அந்த படங்களையே வேறு வழியில்லாமல் hitech bus களில் பார்க்க நேர்ந்தபோது பிடிக்கத்தான் செய்தது. அது போல் சோகம் இழையோடும் கதைகளை படிக்கும்போது, சோகம் நம் வாழ்விலேயே உள்ளதே, அப்புறம் அதை படிக்கவேற செய்ய வெண்டுமா என்ற எண்ணம் வருவது சகஜமே. ஆனால் படித்தோமென்றால் பிடித்து விடுகிறது. நமக்கு இந்தளவு சோகமில்லையே என்ற எண்ணத்தில்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore ; கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : சிரமங்கள் யாதாக இருப்பினும், புலரும் காலை நல்லதையே காட்டுமென்று நம்புவோமே !

      Delete
  57. நண்பர்களே, அடுத்த மாத வெளிஈடாக சுட்டி லக்கி + கிரீன் மனோர் இறுதி பாகம் என இரண்டு புத்தகம் வருவதாக ஆசிரியர் கூறியதில் எதாவது மாற்றம் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. சுருங்கி வரும் கிட்டங்கியை நிறைக்க, ஏதோ சத்தமில்லாமல் ஒரு கதையை ஈரோட்டில் அறிமுக படுத்த உள்ளதாய் கேள்வி !

      Delete
    2. அப்ப அடுத்த மாசம் 2+1=3 புத்தகம்கள் ?
      அப்ப நாம ஈரோடு புத்தக திருவிழாவில் ஸ்டால் போடுறோம்னு சொல்லுங்க :-)

      Delete
    3. இது என்ன கேள்வி..... ஆசிரியர்தான் அதிரடியாய் ஏதேனும் செய்து கால் கட்டை விரலை .....

      Delete
  58. பிறந்த நாள் காணும் அன்பு நண்பன் கிரிதரனுக்கு ADVANCE வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
    Replies
    1. @ friends : ADVANCE வாழ்த்துக்கள் எனின் - 19-ஆம் தேதி பிறந்த தினமா ? All the very best Giri :-)

      Delete
  59. நான் ஒன்று கேட்கிறேன். டெக்ஸ் வில்லர், லக்கி லூக், டைகர், கமான்சே, சிக்பில் எல்லாமே 19th century யில் நடக்கிற மாதிரி எழுதப்பட்ட ஃபிக்க்ஷன். ஆனால் வசண நடை சாதாரணமாக இருக்கிறது. அதிலும் டைகர் ஒரிஜினலில் சதர்ன் ஆக்சென்ட்டில் பேசுவார். அதற்காக திருநெல்வேலி பாக்ஷையிலா மொழி பெயர்த்தீர்கள்?

    க்ரீன் மேனர் அருமையான கதைகள். ஒவ்வொரு கதையும் ஒரு விதத்தில் ஜோர். அதை இப்படி 19th century நியுஸ்பேப்பர் ஆக்சென்ட்டில் வந்திருக்கிறதே. சுத்த போர். படிக்கவே டயர்டாக இருக்கிறது. கக்ஷ்டமாக எழுதுவது ஈஸி. சிம்பிளாக இருப்பது தான் மிகவும் கக்ஷ்டம். எடுத்துக்காட்டு- சிக்பில்.

    இன்னொரு சந்தேகம்- இப்போ படிக்கிற பொடியன்ஸ்ஸுக்கு இது புரியுமா???? நீங்கள் போகும் வழி சரி தானா???

    நான் சொல்வது என்னவென்றால் க்ரீன் மேனருக்கு ஒரு கிரேட் வெல்கம், ஆனால் மொழிநடைக்கு அல்ல.

    ReplyDelete
    Replies
    1. ஆஸம் ஆஸம் உங்க கருத்து அருமை வாங்க சிவகாசி டாக்டர் அவங்களே.. சிவகாசில கூட டாக்டர் பட்டம் தர்ரது பெருமையா இருக்கு..

      Delete
    2. Dr. அல்கேட்ஸ் ://இப்போ படிக்கிற பொடியன்ஸ்ஸுக்கு இது புரியுமா???? நீங்கள் போகும் வழி சரி தானா???//

      'பொடியன்சுக்குப் பிடிக்கும் பாஷை' என ஒன்றை கையாளும் முயற்சிக்கு எதிரி அல்ல நான் ! ஆனால் இக்கதைக்கு அது பொருந்துமென்று உங்களுக்குத் தோன்றினால் நிச்சயம் அதுவொரு unique point of view மட்டுமே !

      இங்கு பயன்படுத்தப்பட்ட மொழி நடை உணர்த்த முனைவது கதைக்களத்தின் புராதனத்தை அல்ல - அதனைப் பேசிடும் மாந்தர்களின் மேட்டுக்குடித்தனத்தை ! டைகர் கதைகளும் நடப்பது 1850+-ல் தானே ; ஆனால் அதற்கென இவ்விதம் எழுதுவதில்லையே என்ற உங்களின் வாதம் வலுவிழப்பது இதனாலேயே !

      //19th century நியுஸ்பேப்பர் ஆக்சென்ட்டில் வந்திருக்கிறதே// என நீங்களே குறிப்பிட்டிருக்கும் போதே அது நம் முயற்சியின் அங்கீகாரம் ஆகாதா ? Anyways, each to his / her own taste !

      Delete
  60. பரணிதரன், உங்கள் குழந்தை விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  61. ஆல் நியூ ஸ்பெஷல் - லிட்டில் விமர்சனம்

    1) COMANCHE - சுமார்!

    2) GREEN MANOR - எல்லா கதைகளும் அருமை(சுஜாதாவின் சிறுகதைகள் போல)

    3) பிரளயத்தின் பிள்ளைகள் - நாஜி படைகளின் கொடூரமும் இல்லை... யூதர்கள் போன்ற நாடோடிகளின் மரணாவஸ்தையும் இல்லை.. ஆனாலும் இன்றுவரை உலகின் பல நாடுகளில் நாம் காணும் இனபடுகொலைகளை ஒரு நிமிடமாவது நினைக்கதூண்டுகிறது!

    4) ஸ்டீல் பாடி : நன்று! இந்தமுறையாச்சும் ஷெர்லாக்தான் ஹீரோ என்று எண்ணவைத்து கடைசியில் ஜீரோவாக்கும் சுவாரஸ்யம்!

    5) ANS வித்தியாசமான தொகுப்புகளின் முதல்முயற்சி! மேன்மேலும் இதுபோன்ற நமக்கு அறிமுகமாகாத கதை வரிசைகள் வரவேண்டும்!

    மொத்ததில் ஆல் நியூ ஸ்பெஷல்: அம்மா உணவகத்தில் கிடைத்த சரவணபவன் பிரியாணி! :)

    ReplyDelete
    Replies
    1. யாரப்பா அது டைகருக்கு ஆதரவாய் குரல் கொடுப்பது போலுள்ளதே!

      Delete
    2. cap tiger ://அம்மா உணவகத்தில் கிடைத்த சரவணபவன் பிரியாணி! :)//

      கலக்கலான உவமை :-)

      Delete
  62. ANS is the Best :).
    GREEN MANOR - அட்டகாசம், வெகு நாளைக்கு பிறகு வரிக்கு வரி ஊன்றி படித்தேன். சில கஷ்டமான தமிழ் சொற்க்களை தவிர்த்து இருக்கலாம், இன்றைய தலை முறையினர் படிக்க நேர்ந்தால் மண்டையை பிய்த்து கொள்வார்கள் :)

    தோட்டா தேசம் - இத்தனை கலர் புல்லாக எந்த கதையையும் படித்ததாய் நினைவில் இல்லை. அற்புதம் :)

    பிரளயத்தின் பிள்ளைகள் : படித்து முடித்த பின் நாமெல்லாம் எவ்வளவு உன்னதமான வாழ்க்கையை வாழ்கிறோம் என்றுதான் நினைக்க தோன்றியது. மனது இன்னும் வலிக்கிறது :(

    ஸ்டீல் பாடி இந்த தடவை ரசிக்க வைத்தது :). பழைய கதைகளையும் திரும்ப படிக்கலாம் என்று இருக்கிறேன் :)

    குறைகள்:-

    புத்தகம் மடங்கி வந்தது

    புத்தகம் உள்ளே ஒரு பேப்பர் பாதியாக கிழிந்து இருந்தது :)

    //வெவ்வேறு நாயகர்களின் combo எனும் போது, ரசனைகள் மாறுபட்டாலும், அவரவர் ரசிக்க ஏதாவது இருந்திடுமே என்ற ஒரு சிறு திருப்தியே எனக்கு// நான் நிச்சயம் இந்த கருத்துக்கு உடன் படுகிறேன். கதை படிக்க ஆரம்பித்து பிடிக்காமல் போய் முழு கதையையும் படிப்பதை விட, comboவாக படிப்பதே மேல்.

    மொத்தத்தில் இந்த ANS என்ற அற்புத வாசிப்பினை கொடுத்ததற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சார் :)

    ReplyDelete
    Replies
    1. Giridharan V : //சில கஷ்டமான தமிழ் சொற்க்களை தவிர்த்து இருக்கலாம், இன்றைய தலை முறையினர் படிக்க நேர்ந்தால் மண்டையை பிய்த்து கொள்வார்கள் :)//

      கவலை வேண்டாம் ; தொடரும் பாகங்களில் அந்தச் சிரமம் இராது !

      Delete
  63. ஏனப்பா இந்த ரெட் டஸ்ட் மட்டும் துப்பாக்கியை வித்தியாஸமாக வைத்திருக்கிறார். யாராவது கவனிதீர்களா??

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலேயே ரெட் டஸ்ட் துப்பாக்கியை கைப்பிடியை முன்னால் வைத்து பெல்ட்டில் வைத்திருப்பார்

      Delete
  64. ஆசிரியர் அவர்களுக்கு ...,

    எனது கடிதத்திற்கு தங்கள் பதில் ஒரு பதிவு ஆகவே வந்ததில் எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .மிக்க நன்றி சார் .தங்கள் பதில் எனக்கு ஆறுதல் தந்ததில் எந்த சந்தேகமும் இல்லை .நானும் இந்த கதைகளை ரசிக்க பழகி கொள்ளும் நேரம் வருமா என்றும் காத்து கொண்டு இருக்கிறேன் .அதே சமயம் எனது மிக பெரிய ஆதங்கம் என்னவென்றால் தொடர்ந்து மூன்று மாதத்திற்கும் இதே போலே கதைகள் வருவது தான் .பலரது பாராட்டை பெற்ற கதைகளை சிறு பான்மையான எங்களுக்காக நிறுத்த வேண்டாம் .பட் சிறிது இடைவெளி விடலாமே என்பது தான் எங்கள் கோரிக்கை .இந்த மாதம் ANS ,அடுத்த மாதமும் அதே ,அதற் கடுத்த மாதமும் ஒரு கிராபிக் நாவல் என்பதற்கு பதில் இடையில் வேறு புத்தங்களை விடலாமே என்பது தான் .இந்த கதைகளை ரசிக்கும் நண்பர்கள் கூட இதை வருடம் ஒரு முறை ,அல்லது இரு முறை மட்டும் வெளி இட சொல்வதன் பொருள் தாங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன் .மீண்டும் நன்றி சார் ...

    தங்கள் பிரார்த்தனை ,நண்பர்களின் பிரார்த்தனை என ஆறுதல் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி .எனது மகன் இப்பொழுது நலமுடன் உள்ளார் .அவன் கிராபிக் நாவலை நாவலை ரசித்து படிக்கும் காலத்தை காண ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் :-)

    அப்புறம் அந்த "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு சார் ... :-)

    ReplyDelete
    Replies
    1. உங்க பேரு பரணிதரனா??.. இல்லை விடாக்கண்டனா??

      Delete
    2. சிங்கத்தின் சிறு வயதில் : Supporting Paranitharan on this .
      The real beauty if this series is that it brings back the nostalgic memories of how we purchased that book at that time .It is amazing how i am able to remember those things very well while i am forgetting what my wife told to buy in today morning

      Delete
    3. ஆங் ஒரு ஐடியா!

      எடிட்டர்ஜி, 500 பக்கங்களையும், 500 ரூபாய் விலையையும். முழுவண்ணத்தில் 10 கதைகளையும் தாங்கி 'லயன் 30வது ஆண்டுமலர் வருகிறதென்று வைத்துக்கொள்வோம் (சும்மா ஒரு பேச்சுக்காவது); 30 ஆண்டுகாலப் பயணத்தில் சிங்கம் கடந்துவந்த பாதையை 'சிங்கத்தின் சிறுவயதில் - முப்பதாண்டு கால பின்னோக்கிய பயணம்' என்று தலைப்பிட்டு கருப்பு-வெள்ளைத் தாள்களில் 30 பாகங்களையும் இணைத்துவிட்டால் (NBSல் மாடஸ்டி, மாயாவி கதை வந்த மாதி) எங்களுக்கு மேலும் 50-60 பக்கங்கள் கிடைக்கும் என்பதோடு, படிக்க-பாதுகாக்க சிறந்த வழிமுறையாக இருந்திடும். கடந்த காலத்தை திரும்பிப்பார்த்திடும் black & white நினைவுகள் என்பதால் கருப்பு-வெள்ளையில் வெளிவருவது குறித்து நண்பர்களிடமும் ஆட்சேபம் எழாது!

      என்ன சொல்கிறீர்கள்? டீலா, நோ-டீலா?

      Delete
    4. பரணிதரன் சொல்வது முற்றிலும் சரி ...கதைகள் நன்றாக இருந்தாலும் ஓவர் டோஸ் வேண்டாமே ...கவனிப்பீர்களா ஆசிரியரே ..

      Delete
    5. @ friends : ஓவர்டோஸ் என்று பார்த்திடின் - டெக்ஸ் வில்லர் கூட சமீப மாதங்களில் அப்பட்டியலுக்குள் இடம் பிடிப்பாரே ? GREEN MANOR வரும் ஆகஸ்டோடு நிறைவாகிறது ; தொடரும் மாதத்து கிராபிக் நாவல் முன்னேமே திட்டமிடப் பட்டதொன்று ; so அதைத் தாண்டியான பின்னே இப்போதைக்கு கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நம் பார்முலாக் கதைகளின் அணிவகுப்பு தானே ?!

      "சிங்கத்தின் சிறுவயதில் " தொடரைப் பொறுத்த வரை ஒன்று செய்யலாம் ; முதலிலிருந்து அனைத்து பாகங்களையும் டைப்செட் செய்து, நம் வலைப்பதிவில் upload செய்து இதெற்கென ஒரு லிங்க் ஏற்படுத்தி விடுவோம். இஷ்டப்படுவோர் அங்கே படித்துக் கொள்ளலாமே ?!

      நாளைக்கே அல்ல ; சற்றே ஒய்வானதொரு தருணத்தில் !

      Delete
    6. நம்ம நண்பர்களில் யாரோ ஏற்கனவே இந்த ஐடியாவை சொல்லியிருக்காங்க. எப்படியோ, upload செய்வதற்காவது உடன்பட்டீர்களே, தேவதைகள் அருள்பாலிக்கட்டும்!

      Delete
  65. ஐந்து இலட்சத்திற்கு வாழ்த்துக்கள் விஜயன் சார் ! தாங்கள் ஒருமுறை CC சந்தா நிலவரம் [165] பற்றி இங்கு கூறியதிலிருந்து நான் அடிக்கடி இவ்வாறு நினைப்பதுண்டு. ஐந்து பணக்கார வாசகர்கள் விருப்பபட்டு; ஐந்து, ஐந்து இலட்சம் முதலீடு செய்து; கூட்டி வரும் இருபத்தைந்து இலட்சத்தில் வண்ண மறுபதிப்பாக;

    1. மின்னும் மரணம்
    2. XIII இரத்தப் படலம்

    பிரிமியம் விலையில் தயாரிக்க தங்களுக்கு உதவ முன்வந்து; தாங்களும் காமிக்ஸ் வளர்ச்சியை கருத்தில் கொண்டு; அந்த யோசனையை ஏற்று நடைமுறை படுத்தினால் எவ்வாறு இருக்கும் என்றும், நாங்கள் கொடுக்கும் அந்த பணத்தை மெதுவாக புத்தகங்கள் விற்று ஸ்டாக் முழுவதுமாக தீர்ந்தப்பின் கொடுத்த அளவே திருப்பி அளித்தால் போதுமே என்றும் பல நேரம் சிந்திப்பது உண்டு.

    அமெரிக்காவில் $ 8500 ஐரோப்பாவில் € 6500 நம்மூரில் மட்டுமே கொஞ்சம் அதிகமாக தெரியும். இருந்தாலும் வங்கி வைப்புத்தொகையின் பயனை விட இது ஒரு ஆத்ம திருப்தி தருவதாகவே அமையும். நண்பர்களுக்கான யோசனை அல்ல இது; என் ஆசை மட்டுமே:

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் மரமண்டை : 'பணக்கார வாசகர்கள்' எனும் போதே அது நமக்குள்ளே நம்மை அறியாது ஒரு வேறுபாட்டை உருவாக்கியதாக ஆகி விடாதா ? காமிக்ஸ் நேசத்தில் நாம் சகலரும் கோடீஸ்வரர்கள் தானே ?

      Delete
    2. உண்மைதான் சார், நாம் பணக்கார வாசகர்களாக இருப்பதை விட கோடீஸ்வரர்களாக இருக்கவே விரும்புவோம் :-)

      Delete
  66. Hyderabad Comic on Sep 21 & 22 .Any plan for our stall sir ?

    ReplyDelete
    Replies
    1. Arun Prasad : Nopes, COMIC CON called me 2 days back too ; I told them they need to accept Chennai into their fold ! They have promised it for 2014.

      Delete
  67. ஈரோடு புத்தக திருவிழாவில் நாம் பங்கேற்கிறோமா சார் ?புது வெளியீடுகள் ஏதேனும் உண்டா?அப்டேட் செய்தால் நானும் பயண ஏற்பாடு செய்ய ஏதுவாகியிருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. AHMEDBASHA TK : நமக்கு ஸ்டால் கிடைப்பது 90% உறுதியே ; பணமெல்லாம் ஒரு மாதத்துக்கு முன்பே செலுத்தியாகியாச்சு ! ஆனால் அமைப்பாளர்களிடமிருந்து அதிகாரபூர்வமாய் இது வரை ஏதும் தகவல் கிடையாது ! நிச்சயம் கிடைக்குமென்ற நம்பிக்கை உள்ளது !

      "மனதில் மிருகம் வேண்டும்" + "மேற்கே ஒரு சுட்டிப் புயல் " - ஆகிய 2 இதழ்கள் மாத்திரமே ஆகஸ்ட் ரிலீஸ் ! தொடரும் 5 மாத அட்டவணை பயங்கர tight என்பதால் - இதனுள் புதுத் தாண்டவங்கள் சாத்தியமாகாது !

      Delete
    2. அப்படியே நீங்களும் நம் ஜூனியர் எடிட்டரும் ,எந்த தேதியில் திருவிழாவிற்கு வருகை தருவீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும் ....sirji...

      Delete
  68. Replies
    1. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் & AHMEDBASHA TK : ஜூனியருக்குக் கல்லூரி துவங்கி விட்டது ; அந்த சமயத்தில் Industrial Visit இருக்கும் சாத்தியங்கள் அதிகமென்பதால் அவனது ப்ரோக்ராம் நானறியேன் ! But பார்ப்போமே - ஸ்டால் முதலில் உறுதியாகிக் கொண்ட பின்னே தீர்மானிப்போமே ?!

      Delete
  69. சார்,
    A N S என் பார்வையில் 50% சூப்பர் 50% ..........
    1. கிரீன் மேனர் எனக்குப் பிடித்த ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் என்பதால் நன்றாகவேயிருந்தது.
    2. கமான்சே எதிர்பார்க்க வைக்கும் ஒரு மாறுபட்டதொரு கௌ-பாய் படைப்பு.
    3. பிரளயத்தின் பிள்ளைகள் இன்னும் ப(பி)டிக்கவில்லை. துன்பம், சோகம், வருத்தம், அழுகை நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே இருந்தாலும் இவைகளைக் கண்டு குதிக்கால்கள் பிடரியிலடிக்க ஒடுபவனாகவேயிருக்கிறேன். அவைகள் காமிக்ஸ் என்றாலும் சரியே. பி. பி. இப்போதல்ல எப்போதும் படிக்கும் எண்ணமில்லை?
    4. ஸ்டீல் பாடி - என்ன சொல்றது?

    ReplyDelete