Tuesday, June 19, 2012

வானவில்லாய் சில சிந்தனைகள் !

நண்பர்களே,

அங்கே...இங்கேவென சிதறலாய் ஓடிடும் பல சிந்தனைகளின் ஒருமித்த சேகரிப்பென இப்பதிவைச் சொல்லிடலாம்...! 

முதலில்..இம்மாத வெளியீடுகள் பற்றிய update ...! முத்து காமிக்ஸ் banner -ல் ரூபாய் 10 விலைகளில் அறிமுக ஹீரோவான - டிடெக்டிவ் டோனி ஜெரோம் துப்பறியும் "சிகப்புக் கன்னி மர்மம்" + "தற்செயலாய் ஒரு தற்கொலை" தயார் ஆகி வருகின்றன. இந்த இதழ்கள் ஓரிரு நாட்களுக்கு முன்னரே வெளிவந்திருக்க வேண்டியவையே ....ஆனால் கடந்த இரு வாரங்களாய் நான் கொஞ்சம் personal பணிகளில் சுற்றிக் கொண்டிருந்தபடியால் - தாமதம் (வழக்கம் போல்) தொற்றிக் கொண்டது.




ஜெரோம் நிரம்பவே வித்தியாசமானதொரு கதைத் தொடர் என்று சொல்லிடுவேன் ! நமக்குப் பரிச்சயமான நுணுக்கமான சித்திரங்கள் இந்தக் கதைத் தொடரினில் நீங்கள் பார்த்திட முடியாது ;ஆனால் சற்றே amateurish ஆகத் தோன்றினாலும் ஒரு விதமான ஈர்ப்பினை இந்த சித்திர ஸ்டைல் ஏற்படுத்திடும் ! அதே போல் நிறைய இடங்களில் வசனங்களே இல்லாது, சித்திரங்களும், சூழ்நிலைகளும் மட்டுமே கதையை நகற்றிச் சென்றிடுவதை பார்த்திடப் போகிறீர்கள் ! ஒரு இள வயது ரிப் கிர்பி போல் மென்மையாய் செயலாற்றும் ஜெரோம் உங்களுக்குப் பிடித்திடும் பட்சத்தில் இவரை தொடர்ந்து சந்திக்க ஏற்பாடுகள் செய்திட முடியும் ! அடுத்த வாரம் இதழ்கள் கிடைத்த பின்னே நீங்கள் எழுதப் போகும் விமர்சனங்களே ஜெரோமின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் - at least நம் தமிழில்..! இதோ - எக்கச்சக்கமான மாதங்களுக்கு முன்னரே அச்சிடப்பட்ட இந்த இதழ்களுக்கான அட்டைப்படங்கள் : 



ஜெரோமைத் தொடரவிருப்பது நமது "லயன் நியூ லுக் ஸ்பெஷல் " ! முழு வண்ணத்தில் லக்கி லூக்கின் இரு கதைகளோடு -48 பக்கங்களில் surprise ஆக இரு ஆக்ஷன் ஹீரோக்களின் முழு நீள சாகசங்கள் வரவிருக்கின்றன! இதோ - ஜூலை நடுவினில் வரவிருக்கும் இந்த இதழுக்குத் தயாராகி இருக்கும் அட்டைப் படத்தின் ஒரு sneak peek !! நிழலை விட வேகமாய்ச் சுடும் நம் காமெடி கௌபாய் லக்கியும், திருவாளர் ஜாலி ஜம்பரும் பொட்டல் காட்டில் சாவகாசமாய் செஸ் ஆடும் இந்த முன் அட்டையில் - வர்ணங்களை மிதமாய் பிரயோகித்திருக்கிறோம்...ரசிக்கும்படி உள்ளதாவென்பதை அறிந்திட ஆவலாய் உள்ளேன் !



ஆகஸ்டில் வரவிருக்கும் நமது "லயன் Double Thrill ஸ்பெஷலுக்கும் கதைகள் + அட்டைப்பட டிசைன் தயார் ! இதோ - நமது "பிரியாணிப் புகழ் " கேப்டன் பிரின்ஸ் ரசிகர் மன்றத்தின் அங்கத்தினர்களுக்கும், நமது இதர நண்பர்களுக்கும் அந்த அட்டைப்படத்தின் trailer ! லார்கோவின் அட்டைபடத்தில் சில்வர் வர்ணம் வந்தது போல் இந்த இதழில் Metallic Gold கூடுதலாய் இருந்திடும் ! இந்த அட்டைப்படமும் உங்களின் rating -ல் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிடுமெனத் தெரிந்திட ஆவல் மாளவில்லை !       



அப்புறம் கள்ள வோட்டுக்கள் ; நல்ல வோட்டுக்கள் ; பிரியாணிப் பொட்டலங்கள் என்று இரு அணியினரும் தத்தம் ஹீரோக்களை நமது online poll -ல் வெற்றி பெறச் செய்ய அடாது பாடு படுவதைப் பார்த்திடும் போது, புல்லரிக்கின்றது !! Joking apart , மறுபதிப்புகளுக்குள்ள இந்த தீவிர வேட்கை என்னுள்ளே சின்னதாய் ஒரு சிந்தனையினை தோற்றுவித்துள்ளது ! 

2013 -ல் நமது ரெகுலர் இதழ்கள் ஒருபக்கம் வெளிவந்திடும் போது - சிறப்பாய்...வண்ணத்தில்....நமது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வரிசையில் - ஆண்டுக்கு 6  மறுபதிப்புகளை வெளியிட்டால் என்னவென்று தோன்றுகிறது ! முன்னக்கூடியே அந்த ஆண்டிற்கான மறுபதிப்புப் பட்டியலை வெளியிட்டு - அதற்கான கட்டணத்தையும் தெரிவித்து விட்டால், மறுபதிப்புகளை வாங்கிட விரும்பும் நண்பர்கள் மாத்திரமே அதற்கு subscribe செய்திடலாம் !  What say folks ?     

அப்புறம் நமது இதழ்களின் second இன்னிங்க்ஸ் பற்றி இன்னும் அறிந்திருக்காத ; இன்டர்நெட் தாக்கத்திற்கு அப்பாற்பட்டு நிற்கும் நண்பர்களுக்கு எப்படி விஷயத்தைத் தெரிவிப்பது என்பது பற்றி உங்களது எனக்குத் தேவை ! நீங்கள் செய்திடக் கூடியதென தற்சமயம் நான் நினைத்திடுவது :

  • உங்களின் Facebook ; Twitter பரிச்சயங்களுக்கு சேதியினை தெரிவித்திடலாமே - ப்ளீஸ் ?
  • உங்கள் ஊரில் உள்ள தரமான புத்தகக் கடைகளின் முகவரி + தொலைபேசி எண்ணினை சேகரித்து அனுப்பிட முடிந்தால், அவர்களிடம் நம் இதழ்களை விற்பனைக்கு அனுப்பிட முயற்சிக்கலாம் !  மேற்கொண்டு அவர்களோடு வியாபார ரீதியாக நீங்கள் பொறுப்பேற்க எவ்வித அவசியமும் இருந்திடாது ! 
  • சந்தா நீட்டிப்பு (Rs .400 ) இது வரை செய்திடாமல் இருக்கும் நண்பர்கள், துரிதமாய் அதனைச் செய்திட்டால் நலமே !
  • உங்களின் உறவுகளுக்கு ; நண்பர்களுக்கு ஏதேனும் பரிசளிக்கும் இடத்தில நமது இதழ்களுக்கு அவர்களின் பெயரில் சந்தா செலுத்திடுவது   சாத்தியமாவென சிந்தித்திடலாமா ?
உங்களின் ஆர்வத்தை, ஆதரவை exploit செய்திடும் முயற்சியாக எனது வேண்டுகோள்களைப் பார்த்திட மாட்டீர்களென்ற நம்பிக்கையில் எனது கோரிக்கைகளை இங்கே கடை விரித்திருக்கிறேன் ! இன்னும் நமது சந்தா எண்ணிக்கை ; வலைப்பதிவின் வீரியம் அதிகரிக்கும் பட்சத்தில் ஆட்டம் இன்னும் சூடு புடிக்குமே என்று தோன்றியதால் எழுதினேன் ! Take care guys ! இவ்வார இறுதியில் இன்னொரு பதிவோடு சந்திப்பேன் !

 


92 comments:

  1. அசத்தல்! வாசிக்காமலே பின்னூட்டமிட்டாயிற்று. இனி, வாசித்துவிட்டு வருகிறேன்.
    -Theeban (SL)

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை துண்டைப்போட்டு இடம்பிடித்தேன்; அதற்குள் பல பின்னூட்டங்கள் :)

      அட்டைப்படங்கள் நன்றாகவே உள்ளன. ஜெரோமின் அட்டைப்படங்களுக்கும், வரவிருக்கும் இதழ்களுக்கான அட்டைப்படங்களுக்குமுள்ள வித்தியாசம் - சிலவருடங்களில் நமது காமிக்ஸ்களின் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் பாய்ச்சலைக் காட்டுகின்றன. ஆண்டு மலரின் வடிவமைப்பில் கலர் தெரிவுகள் வித்தியாசமாய்; கவரும் விதத்தில் உள்ளன. ஆனால், கேக்குடன் இருக்கும் நம் லயன் மிஸ்ஸாவது வருத்தமே! (பின்னட்டையில் கண்ணாமுச்சி என்றுள்ளது - இது ஃப்ரூப் காப்பியாகத்தான் இருக்கும்).

      பரலோகப் பாதை பச்சையில் - கேப்டன் பிரின்ஸ் குழுவினரை ஒரு வட்டத்துக்குள் இவ்வளவுக்கு சுருக்கியிருக்கவேண்டாமே!
      அதன் விளைவு: முன்னட்டையை விட, பின்னட்டை 'பளிச்'சென்று அட்டகாசமாக தெரிகிறது. (அதையே முன்னட்டையாக போட்டால் சூப்பராக இருக்கும்!). இரண்டு கதைகளினதும் தலைப்புக்களில் 'பரலோகம்' இருப்பது இப்போதுதான் 'சட்'டென்று தெரிகிறது! :)

      (இந்த அட்டைகளிலும், முன்னட்டையில் 'முழு வணண்த்தில்' என்றும் பின்னட்டையில் 'ரிப்போர்ட்ர்' என்றும் எழுத்துப்பிழைகள்; இதுவும் ஃப்ரூப் காப்பியாகத்தான் இருக்கும்).

      'கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்' இல் விளையாட ஆரம்பித்திருப்பதால் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்போல தெரிகிறதே? ஜானியின் அட்டைப்படம் - ஒரிஜினலையே பாவித்திருக்கிறீர்களா? இல்லை நம் ஆர்ட்டிஸ்ட் வரைந்ததா? இல்லையென்றால் 'கம்ப்யூட்டர் கிரபிக்ஸ்'இல் 'போட்டோ ஷாப்' போன்ற மென்பொருள் கொண்டு வரைந்ததா? கையால் வரைந்ததோ, கம்ப்யூட்டரில் வரைந்ததோ - லயனின் தயாரிப்பு என்றால் - Standing Ovation உங்கள் குழுவினருக்கு! அவ்வளவு ஈர்ப்பாக இருக்கிறது.

      லக்கி லூக்கின் அட்டைகளுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. என்னதான் ஸ்கேன் செய்த படங்களைக் கொண்டு நிரப்பியிருந்தாலும், ஷார்ப்னஸ் போதாது படங்களில் என்றே தோன்றுகிறது. ஒரிஜினல் அட்டையையே முழுமையாக - கிரபிக்ஸில் மேம்படுத்தி பயன்படுத்தியிருக்கலாம். ஒரிஜினலில் இருக்கும் வண்டியோட்டுபவர் ஒரு ஓரத்துக்குப்போய்விட்டார் இங்கே!

      இது 'வெக்டர்' இமேஜ்களின் காலம் என்பதால், இன்னும் ஷார்ப்பாக இருந்திருந்தால் அற்புதமாய்த் தோன்றியிருக்கும்.

      வளர்ச்சிப் படிமுறையில் அனுபவங்களே பாடங்கள்! இனிவரும் இதழ்களுக்கு இவையே சரியான சவால்; வாழ்த்துக்கள்!!!!

      -Theeban (SL)

      Delete
    2. ஆம், நண்பர் தீபன் கூறியது போல ஜானி அட்டை படம் அமர்க்களம் .ஆனால் பிரின்ஸ் பட அட்டையை சுருக்கியது சரியில்லை என்றே தோன்றுகிறது .

      Delete
  2. முதலில் நீங்கள், Lion / Muthu Official Facebook Group-ஐ நிறுவுங்கள் சார்! கருத்துப் பரிமாற்றத்திற்கு வசதியாகவும், எளிதாகவும் இருக்கும்! :)

    ReplyDelete
    Replies
    1. I agree we can post also paste so many things....,

      Delete
    2. Double AGREE!! BTW, Karthik, உங்கள் பதிவு ஒன்றில் FB- Lionmuthu group உருவாக்கியிருப்பதாக படித்த ஞாபகம். Can you please share that link if possible? பல விஷயங்களை அலச FB-யில் சுலபமாக இருக்கும்.

      Delete
  3. அசத்தல் சார்.அட்டை படங்கள் அருமை.
    ஏற்கனவே நமது விஸ்வா சார் ப்ளாக் கில் ஜெரோமின் அட்டை படங்களை பார்த்தேன்.

    Classics முழு வண்ணத்தில் அய்யோ நினைத்தாலே இதயத்தில் தேன் ஊறுகிறதே.
    கண்டிப்பாக அனைவரும் Subscribe செய்வார்கள் எனபது எனது கருத்து.

    உங்களது கருத்துக்கள் கண்டிப்பாக எற்றுக்கொள்ளக்கூடியது தான் சார்.

    அதற்கான ஆவன செய்ய நண்பர்கள் அனைவரும் முனைவார்கள் என்பதில் ஐயமில்லை

    ReplyDelete
  4. தங்கள் அட்டை படங்களிலே இதுதான் பெஸ்ட்.
    ஆச்சரியம், உண்மையாகவே நான் நேற்று நினைத்ததை இன்று வெளியிட்டுள்ளிர்கள் .
    அதைபற்றிய எனது நெடும் நீளமான பதிவு நாளை

    ReplyDelete
  5. Great News, Awaiting the issues...

    Shriram

    ReplyDelete
  6. வணக்கம்

    மிக நீண்டதொரு இடைவெளி !!!! பணி சுமை அதிகமாகி விட்டது :(

    அனைத்து அட்டை படங்களும் அருமையாக உள்ளது.

    அடுத்த வருடம் முழுவதும் கிளாசிக் வெளியிடலாமே சார் ?

    நாகராஜன்

    ReplyDelete
  7. காமிக்ஸ் க்ளாசிக்ஸை வண்ணத்தில் கொண்டுவருவது மிகச் சிறந்த திட்டம். உடனடியாகச் செயல்படுத்துங்கள் ப்ளீஸ்..

    ReplyDelete
  8. சார், அட்டைப்படங்கள் எல்லாம் கலர்புல்லாய் ஜொலிக்கின்றன. ஒரிருயிடங்களில் அட்டையில் உள்ள எழுத்துப் பிழையைக் கவனிக்கவும். மறுபதிப்பு மாதத்திற்கு ஆறு இதழ்கள் என்பது மிகக்குறைவு. குறைந்தது பன்னியிரண்டு இதழ்கள் வெளியிட்டால் தேவலை. மறுபதிப்பிற்கு அதிக வேலை இருக்காது என்பதால் இந்த முடிவு சரியாகயிருக்கும் என்று நினைக்கிறேன். மறுபதிப்பு என்பது தனி டிராக். மாதம்தோறும் முத்து மற்றும் லயன் வெளிவரவேண்டும், ஆனால் ஏதேனும் ஒன்றுதான் வெளிவருவதால், மறுபதிப்பு மாதம் ஒன்று கண்டிப்பாக வெளியிடவும்.

    மாதம் தோறும் ஒரு இருபத்தைந்து இதழ்கள் வாங்கி எங்கள் ஏரியா கடைகளில் தள்ளிவிடலாம் என்ற எண்ணம் மேலோங்குகிறது....? கைகள் அரிக்கின்றன, பொறுத்திருந்து பார்ப்போமே என்ன நடக்கிறது என்று..... ஏதோ என்னால் முடிந்தது...

    ReplyDelete
  9. Editor and Team - Cover pages are wonderful, particularly "Johny" one is Aarumai.
    Lucky Luke story cover page looks like it doesn't have much relavance to the story (Not that it matters much but just curious), Is it true?

    Thanks for reminding even i haven't send the subscription extension (400Rs), will send it this week.

    Releasing classic issue next year makes LOT of sense, but as you had mentioned please let us know the stories and (at least the) amount before hand.

    We are going to get one more blog again... huraaay

    - Karthikeyan

    ReplyDelete
  10. //2013 -ல் நமது ரெகுலர் இதழ்கள் ஒருபக்கம் வெளிவந்திடும் போது - சிறப்பாய்...வண்ணத்தில்....நமது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வரிசையில் - ஆண்டுக்கு 6 மறுபதிப்புகளை வெளியிட்டால் என்னவென்று தோன்றுகிறது ! முன்னக்கூடியே அந்த ஆண்டிற்கான மறுபதிப்புப் பட்டியலை வெளியிட்டு - அதற்கான கட்டணத்தையும் தெரிவித்து விட்டால், மறுபதிப்புகளை வாங்கிட விரும்பும் நண்பர்கள் மாத்திரமே அதற்கு subscribe செய்திடலாம் ! What say folks ?//

    அற்புதமான யோசனை .. இந்த ஐடியா நிச்சயம் work out ஆகும் என்றே தோன்றுகிறது. New Look அட்டைப் படம் அசத்தல் .. :-)

    ReplyDelete
  11. its a very good idea to release six cc issues yearly. but all six as 100 rs issues. so we can get 12 stories or long stories like tex viller stories in a book. pls think abt it

    ReplyDelete
  12. அட்டை வடிவமைப்பு தர வரிசை பட்டியல்!
    1. டபுள் த்ரில் - பின்னட்டை! அட்டகாசம்! இதை முன்னட்டையாக ப்ரொமோட் செய்தால் நன்றாக இருக்கும்!
    2. லக்கி லுக் - முன்னட்டை - மிதம், இதம்! :)
    3. டபுள் த்ரில் - முன்னட்டை - லயன் லோகோவும் சிகப்பு பின்னணியில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!
    4. லக்கி லுக் -பின்ன்னட்டை - கதாபாத்திரங்கள், ஒன்றுக்கு ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக தெரிகிறது!

    இந்த தடவை அட்டை வடிமைப்பு மற்றும் மித வண்ணங்கள் அசத்தல்!

    * ஆனால், எழுத்துருக்கள் சொதப்பல் (பனியில் ஒரு பரலோகம் தவிர்த்து)!

    * அதே போல, தலைப்புகள் & Tagline-களுக்கான பெட்டி வடிவமைப்பு - இவற்றை கொஞ்சம் கவனியுங்கள் - ரொம்பவே உறுத்துகிறது! :)

    ReplyDelete
  13. மதிப்பிற்குரிய விஜயன் சார் அவர்களுக்கு
    அடுத்த இதழ்கள் பற்றிய அறிவிப்புகள் அசத்தல். lion நியூ லுக் ஸ்பெஷல் மற்றும் lion doble த்ரில் ஸ்பெஷல் அட்டை படங்கள் மிகவும் அருமை. தொடர்ந்து வண்ண இதழ்கள் வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மறுபதிப்பு கதைகளை வண்ணத்தில் வெளியிடும் யோசனை வரவேற்க தக்கது .
    விஜயன் சார் விரைவில் ஜூலை மாத இறுதியில் ஈரோடு புத்தக கண்காட்சி நடை பெற உள்ளது. சென்னை புத்தக கண்காட்சி போலவே ஈரோடு புத்தக கண்காட்சியும் புகழ் பெற்றது. எனவே தாங்கள் ஈரோடு புத்தக கண்காட்சியில் நமது lion - முது காமிக்ஸ் இதழ்களை விற்பனை செய்ய ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். இந்த முயற்சி வெற்றி பெரும் பட்சத்தில் கொங்கு மண்டலத்தில் காமிக்ஸ் பற்றிய விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

    எஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  14. அட்டைப்படங்களை விடுங்க சார்... வருடத்திற்கு 6 மறுபதிப்புக்கள் என்று உங்கள் அறிவிப்பு இருக்கிறது பாருங்கள்... வாவ்...சூப்பர் சார், அது என்ன கஞ்சதனமா 6 புக் மட்டும்.. வருடத்திற்கு 60 புக் மறுவெளியீடு போடுங்க சார், "இவ்ளோ பணம் அனுப்புங்கப்பா" அப்படின்னு ஆர்டர் போடுங்க உடனே அனுப்பிடுறோம். ஓகேவா பிரண்ட்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. மறந்தே போச்சு... முதல்ல சந்தா நீட்டிப்பு ரூபாய் 400 /- அனுப்பனும்.

      Delete
  15. பொடியன் ஏன் அவ்வாறு முதல் பதிவை வெளியிட்டார் என இப்போது தெரிகிறது.நான் பதிவிட ஆரம்பிக்கும் போது எனக்கு முன் இருவர்தான் இருந்தனர் ,எனது பதிவு மூன்றாவது என எண்ணி நான் பதிவிட்ட பின் பார்த்தால் ஆறாமிடத்திற்கு தள்ளப்பட்டேன் .

    நீல வானில் நீந்திச் செல்லும் முழு மதியின் முன்னணியில் ஒழுங்கோணத்தில் செல்லும் சகோதரர்கள் ,அவர்கள் குழி தோண்டினால் இதை விட சிறப்பாக கிடைக்குமா (நம்மை போல ) என ஏங்கி நிற்கும் ரான்டன்பிளான் ,ஜாலியின் மேல் அமர்ந்துய் ஜோலி (கண்காணிப்பு) பார்த்து கொண்டிருக்கும் லக்கி என பின்னட்டையில் பின்னி விட்டீர்கள் .இனி வானவில்லுக்காக காத்திருக்க வைத்துள்ளீர்கள்.முன்னட்டை அகலவாக்கில் கூலாக விளையாடும் லக்கி போல கூலான வண்ணத்தில்
    அற்புதமாக வந்துள்ளது.நீள வாக்கை விட அகலவாக்கில் அட்டை அற்புதமாக உள்ளது . இனி மேல் இரண்டு ப்ரூபை வெளி விட்டு நீள ,அகல வாக்கில்
    வாசகர் தேர்விற்கு வெளியிடலாமே.அந்த தங்க நிறத்தில் 28 வது ஆண்டு மலர் என்பதை பார்க்கும் போது நாம் 28 ஆண்டுகள் கஷ்டப்பட்டு தோண்டி
    இப்போது தங்கத்தை அடைந்து விட்டதாய் தோன்றுகிறது .இனிமேல் நாம் அனுபவிக்க போகிறோம் என நினைக்கும் போது வண்ணகலவைகள்
    வானவில்லை மனம் முழுக்க நிறத்து விட்டதை தோன்றுகிறது.நமது வயதை தொலைக்கும் முயற்சில் மென் மேலும் முன்னேறி வருகிறோம்
    என துள்ளி குதிக்க தோன்றுகிறது .


    இனி நாம் அனுபவிக்க எனது சில யோசனைகளை முன்வைத்தால் செவிமடுக்க நண்பர்கள் தயாராவார்கள் என எண்ணி...........


    ஆசிரியரின் ebay யில் இரத்தப்படலம் கடைசி புத்தகத்தை கைப்பற்றும் அதிர்ஷ்டசாலி கார்த்திக் என பார்த்தவுடன் எனக்கு சில யோசனைகள்
    தென்பட்டது.அடுத்த இரண்டு நாட்களில் ஆசிரியரும் இதே எண்ணத்தை வெளியிட்டு ஆச்சரிய படுத்தி விட்டார் .அடுத்து நாம் வோட்டளிக்கும் போது
    நமக்கு பிடித்த நாயகர்களுக்கு கள்ள ஓட்டுகள் போடுவது மிகுந்து விட்டது .
    முதலில் நாம் வாசகர்களை பிரிக்க தயாராவோம்.1970 -1980 ,1980 -1990 ,1990 -2000 ,2000 -2012 ,வாசகர் படிக்க துவங்கிய காலகட்டங்களுக்கு
    ஓட்டளிக்க வேண்டும் .கள்ள ஓட்டுகள் தயவு செய்து தவிர்க்க படட்டும் .நான் 1983 ல் துவங்கியதால் எனது ஓட்டு இரண்டாம் கால கட்டத்திற்கே.
    இங்கு கணினி இல்லாதவர்கள் ,sms மூலமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யலாம் .
    அடுத்து நாம் செய்யவிருக்கும் முயற்ச்சிகள்

    ......................................................
    எதிர்பார்க்கும் நண்பர்களுக்கு எமற்றமிருக்காது
    .தொடரும் நாளை நண்பர்களே

    ReplyDelete
  16. hai...
    very good.....drawings, tamilwords, colours, feel touching.....nalla rasikara madhri irruku.....
    thanks vijayan

    senthil :)

    ReplyDelete
  17. அட்டகாசமான அட்டை படங்கள். பார்த்து கொண்டே இருக்க தோன்றுகிறது...

    ReplyDelete
  18. Dear Sir,

    LION NEW LOOK ஸ்பெஷல் & DOUBLE THRILL ஸ்பெஷல் இரண்டின் அட்டைப்படங்களும் கலர் மற்றும் டிசைன் விசயத்தில் மிகவும் நன்றாகவே உள்ளது. ஆனால் நண்பர் ஒருவர் மேலே கூறியுள்ளது போல் பிரின்ஸ் குழு மிகவும் சிறிதாக உள்ளது நன்றாக இல்லை.

    //ஆண்டுக்கு 6 மறுபதிப்புகளை வெளியிட்டால்// ஆண்டுக்கு 12 முதல் 18 மறுபதிப்பு ரிலீஸ் செய்தாலும் நல்லாத்தான் இருக்கும் சார். வாங்குறதுக்கு நான் ரெடி.

    முன்பு போல் மாதம் ஒரு LION, முத்து, மற்றும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் "குறிப்பிட்ட தேதியில்" ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும். (கூடவே மினி LION , திகில், ஜூனியர் வந்தாலும் ஓகே தான் - ரொம்ப பேராசையா தெரியுதோ :) ).

    //உங்களின் உறவுகளுக்கு ; நண்பர்களுக்கு ஏதேனும் பரிசளிக்கும் இடத்தில நமது இதழ்களுக்கு அவர்களின் பெயரில் சந்தா செலுத்திடுவது சாத்தியமாவென சிந்தித்திடலாமா ?// முடிந்த வரை முயற்சி செய்கிறோம் சார். (ஆனா எல்லா சின்ன பயலுகளும் (என் அக்கா பசங்க) சுட்டி டிவி முன்னாடி உட்கார்ந்துகிட்டு வரமாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்க என்ன பண்றது) ஆனாலும் விக்கிரமாதித்தன் மாதிரி முயற்சியை தொடருவோம்.

    ReplyDelete
  19. dear viayan sir,
    I'm very glad to see the revival of lion comics. you were working hard to make the comics in international standard hats off to you. sir, why don't you try at higginbothams book shop it is clearly one of the biggest in south India. you may contact them at the following number
    28513519,28520640.

    ReplyDelete
  20. Dear Editor Sir,

    Nice to hear that you are planning to release previous issues, I have some suggestions regarding it:

    1. Please try to print in good quality paper and Hard bound covers with good quality ink, u can keep a good (little high) reasonable price,

    2. better than going for a mixed hero stories, each issue can consists of single hero stories.

    3. the books can be like Irathapadalam (mega size) ranging from 300-400 rs.

    4. the releases can be restricted to 3 per year.

    5. It would be nicer to see color books printed in color format itself.

    These are all my suggestions, i will be happy to hear other suggestions and your reply sir.

    Regarding improving our circulation:

    1. We can try advertising in weekly/monthly magazines (eg: kumudham, AV, JV etc), it would reach many of the discontinued readers, who are not using internet.

    2. selling in Landmaronnet, higginbothams & All big bus stands.

    ReplyDelete
  21. Vijayan sir,
    தயவு செய்து ஒரிஜினல் அட்டைப்படங்களை தமிழிலும் வெளியிட முயற்சி செய்யுங்கள் ... These designs here do have its own charm and look vibrant but we should not be missing the artists original vision..

    If not on the cover page please try to print them in its unabridged version inside the book to preserve the artist's original work in all its glory.. இதை நீங்கள் கட்டாயம் செய்வீர்கள் என்று நம்புகிறேன்

    ReplyDelete
  22. ebay வழியாக நேற்று ஆர்டர் செய்த முத்து காமிக்ஸ் சர்பரைஸ் ஸ்பெஷல் இப்போது கிடைத்தது, ஆச்சரியம். அருமையான கதைகளம்! ஸார், மார்டின் கதைகளையும் மறக்காமல் வெளியிடுங்கள்!

    ReplyDelete
  23. சார் மற்றும் ஒரு சந்தேகம் நியூ லுக் ஷ்பெசலில் இரண்டு கலர் மற்றும் ஒரு black & white வெளியிடுவதாக நீங்கள் சொன்ன ஞாபகம்,

    ReplyDelete
    Replies
    1. IravukKalugu நண்பரே, ஆசிரியர் அதையும் இங்கே குறிப்பிட்டிருக்கிறாரே, கவனிக்கவில்லையா?

      //ஜெரோமைத் தொடரவிருப்பது நமது "லயன் நியூ லுக் ஸ்பெஷல் " ! முழு வண்ணத்தில் லக்கி லூக்கின் இரு கதைகளோடு - 48 பக்கங்களில் surprise ஆக இரு ஆக்ஷன் ஹீரோக்களின் முழு நீள சாகசங்கள் வரவிருக்கின்றன! //

      Delete
    2. நன்றி நண்பரே அவ்வரிகளை தவறாக படித்துள்ளேன்.

      Delete
    3. உங்களைப்போலவேதான் நானும். முதலில் கவனிக்கவேயில்லை. என்னடா இது குழப்பமாக இருக்கிறதே என்று 2ம் 3ம் தடவை வாசித்தபோதுதான் புரிந்தது!

      Delete
    4. நானும்தான் நன்றி நண்பரே விளக்கத்திற்காக

      Delete
  24. Even though Norman comes 4th in this poll so far,once this story is published ,there will be huge request for his other stories to reprint .since many of our readers are not familiar with him , he is at this position.Personally i wanted this story to be first comics classic in 2013 in sync with pongal date as it was published as pongal special before

    ReplyDelete
  25. // முழு வண்ணத்தில் லக்கி லூக்கின் இரு கதைகளோடு -48 பக்கங்களில் surprise ஆக இரு ஆக்ஷன் ஹீரோக்களின் முழு நீள சாகசங்கள் வரவிருக்கின்றன! //

    மெய்யாலுமே சூப்பர் நியூஸ் தான் ( யார் அந்த இரு ஆக்ஷன் ஹீரோக்கள் என எனக்குமட்டும் தயவு செய்து சொல்லுங்களேன் ப்ளீஸ் இல்லன்னா தலையே வெடிச்சுடும் ப்ளீஸ் சார் )

    // சிறப்பாய்...வண்ணத்தில்....நமது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வரிசையில் - ஆண்டுக்கு 6 மறுபதிப்புகளை வெளியிட்டால் என்னவென்று தோன்றுகிறது //

    சார் இப்படி நீங்கள் கேட்கவே தேவை இல்லை நமது வாசகர்களின் கருத்துக்களை மறுபடியும் பாருங்கள் எங்கேயும் எப்போதும் கலரில் வெளியிடுங்கள் என்ற கருத்துக்கள் ஒலித்துக்கொண்டே தான் இருக்கின்றது
    ஆகையால் நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா .......!!!!!!!!!!!!!

    அப்புறம் சொல்ல மறந்துவிட்டேன் அனைத்து அட்டை படங்களும் மிக மிக அருமையாக வந்துள்ளது

    கலக்குங்கள் விஜயன் சார் நாங்கள் என்றும் உங்களுடன் :))
    .

    ReplyDelete
  26. அற்புதம் என்பது தங்களுக்கு கைவந்த விடயம் இதில் நான் எங்கே எனது இடை ஈட்டை கொண்டுவந்து நிரப்ப? நல்ல சிந்தனைகள் சார் ஜி! கலக்குங்கள் எங்களது ஆதரவு என்றும் தங்கள்பால் நிலைத்து நிற்கும் ஆணி வேர் போன்று! வாழ்க நலமுடன் வளர்க பல பெருமைகளுடன்!

    ReplyDelete
  27. Ebayil ஆர்டர் செய்த காமிக்ஸ் புதையல் கிடைத்தது.
    ஒரு குறை சார்,Code நேம் மின்னல் அடுத்து வந்த 3 காமிக்ஸ் மிஸ்ஸிங் சார்.
    அதனையும் இணைத்திருந்தால் நன்றாக இருந்தது இருக்கும்.
    அவைகளை வாங்க நான் என்ன செய்ய வேண்டும்.

    ReplyDelete
  28. டியர் எடிட்டர் sir , நம் நண்பர்களுக்கு தினமும் ஒரு காமிக்ஸ் வந்தால் சூப்பர் ஆக தா ன் இருக்கும் ,பட் தங்களின் காமிக்ஸ் கிளாச்சிக் ஐடியா கிளாச்சிக் .அடுத்த மறுபதிப்பு எது sir , வோடிங் ல் முதல் வரும் பிரின்ஸ் ஆ இல்லை கடைசில் வரும் நார்மன? போன போல்லிங் ல் கடைசில் வந்த லார்கோ தா ன் வந்தார் ,so , பிரின்ஸ் ஆ நார்மன ?, sir,ஈரோடு புக் exhibition பற்றி consider செய்யலாமே sir ? ஏன் என்றால் ஈரோடு surrounding ல் ஒரு குட்டி சுவர் கூட பாக்கி இல்லாமல் பயங்கரமாக விளம்பரம் செய்து கொண்டு இருகிறார்கள் .எடிட்டர் confirm செய்தால் கள வேலை செய்ய தயாராக உள்ளேன் .நான் practice செய்வது (as a dentist ) ஜலகண்டபுரம் என்ற ஒரு village ல் ,அங்கிருந்து ஈரோடு 1 hr travelling டைம் தா ன் ,so consider sir !

    ReplyDelete
  29. இரண்டாவது புத்தக அட்டை ஜானி மிக அருமை,அந்த பார்டர் தேவையில்லை (எடுத்து விட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும என நினைக்கிறேன் ,பிரின்ஸ் அட்டையையும் முழுவதும் கவர் செய்யுமாறு விட்டால் நன்றாயிருக்கும் என்பது எனது அபிப்ராயம் .மிக சிறியதாக இருப்பது ஏதோ நெருடலை உள்ளது .முன்னட்டையில் ஜானியை கொண்டு வரலாமே,மிக அற்புதமாய் வந்துள்ளது .



    இப்போது நாம் கிளாச்சிக் வெளியிடுவது பற்றி சிந்திப்போம் .நமது பழைய வாசகர்கள் 1990 க்கு முன்புள்ளவர்கள் எப்படி இருப்பினும் ,மீண்டுமொரு முறை அதுவும் கலரில் படிக்க தயங்க மாட்டார்கள் .அனைத்து வாக்குகளும் சிதறாமல் விழும் .புதிய வாசகர்களும் அனைவரும் விரும்பி படிப்பர்,.
    ஆகவே 50 + 50 =100 ,நமது புத்தக விலையும் கூட.


    அடுத்த கட்டமாக லயன்,திகில்,முத்து கதைகள் அனைத்தையும் ஒரு அட்டவணையாக வெளிவிடவும் .புத்தகம் வேண்டுபவர்கள் அந்த புத்தக பட்டியலில் உள்ள வேண்டிய புத்தகங்களுக்கு மட்டும் உங்கள் வாக்குகளை அளியுங்கள்.இதில் போலி வாக்குகள் வேண்டாம் நண்பர்களே.ஒரு
    புத்தகம் தேவை எனில் ஒரு வாக்கும் ,மேலும் வேண்டுமெனில் இரு வாக்கும் அளிக்கலாம்.எத்தனை புத்தகங்கள் அச்சிடலாம் எனஆசிரியர் அறிந்தது
    கொள்ள ஏதுவாக இருக்கும்.தூங்கி போன டைம் பாம் நமது இதழில் வந்த மிக மோசமான கதை என்பது எனது அபிப்ராயம் .அதை கூட விட்டு விடாமல் இதில் சேருங்கள்,விரும்புவோர் வாக்களிக்கலாம் .இப்போது அதிக வாசக விரும்பிகள் வேண்டிய கதைகளை முதலில் வெளியிடலாம்.
    இங்கு தேவையில்லாமல் கள்ள வோட்டுகள் போட வேண்டாம் என மதிப்பிற்குரிய விரும்பிகளை கேட்டு கொள்கிறேன் .நான் ஏன் இதை கூறுகிறேன் என்பது நண்பர்களுக்கு விளங்கும் என நினைக்கிறேன் .புத்தகம் தேங்காமளிருக்க இது உதவும் .

    அன்பு ஆசிரியருக்கு ,

    இதில் உள்ள குறைகள் கணினி இல்லாதவர்களுக்கு கடினம்,sms அனுப்ப அத்தனை புத்தகங்களுக்கு கடினம்,புத்தகத்தில் பின் புறம் அட்டவணை கொடுத்து வாக்குகளை சேகரிக்கலாம் .அதனை தபாலில் அனுப்புமாறு கூறலாம்.
    ஒருவருக்கு எத்தனை பிரதிகள் தேவையென அறிவதும் ஏதுவாக இருக்கும்,கள்ள ஓட்டுகள் தவிர்க்க படும்.
    நானே இது வரை எந்த கடித போக்கு வரத்தும் வைத்து கொள்ளவில்லை .எனவே என்னை போன்ற சோம்பேறி நண்பர்கள் தயவு செய்து இந்த முறை பங்கெடுத்து கொள்ளுங்கள் .
    புத்தகத்தின் பக்கங்களை கிழிக்க சிலருக்கு பிடிக்காது.
    எனவே தனியாக மூன்று பேப்பரில் இதனை புத்தகம் அனுப்பும் போது துண்டு சீட்டாக அனுப்பலாம் .
    இதில் புத்தகம் பிடித்த அனைவரின் வாக்கு எண்ணிக்கை படி ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட சந்தாவை அனுப்புமாறு (ஆறு அல்லது 12 )
    நீங்கள் ஒரு பதிவில் வெளியிடலாம் ,வேண்டுபவர் பிடித்த புத்தகங்களுக்கேற்ப சந்தாவை செலுத்தலாம்.
    நீங்கள் வெளியிட வேண்டிய பிரதிகளின் எண்ணிக்கையும் தெரிந்து விடும்.
    முதல் பதிப்பு இரண்டாம் பதிப்பு எனவும் பின்னொரு நாளில் வெளியிடலாம் .


    இது வரை பொறுமையாக படித்த காமிக்ஸ் அன்பர்களுக்கும் ,நண்பர்களுக்கும் நன்றி.எதாவது அதிக பிரசங்கி தன்மை தோன்றினால் மன்னித்து அருளுங்கள்.இது பிடித்திருந்தால் இதில் ஏதேனும் புதிய முயற்சி இருந்தால் ஆலோசனைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோமே.


    இதை படிக்கும் அனைவரும் உங்கள் கருத்துக்களை பிடித்தாலும் எதிர்த்தாலும் பதிவிடுங்கள் நண்பர்களே.
    எதிர்ப்பிருந்தால் இது போல வெளிவிடமளிருக்க எனக்கு உதவும்.

    ReplyDelete
  30. லக்கி இதழின் முன்னட்டையும் ஜானி இதழின் பின் அட்டையும் நன்றாக உள்ளது. பிரின்ஸ் தோன்றும் அட்டையில் metalic gold frame அதிகப்படியான இடத்தை அடைத்துக் கொண்டு கண்ணை உறுத்துகிறது. local artist ன் கைவண்ணத்தில் பளிச் வண்ணங்களில் மெருகூற்றபட்ட அட்டைகள் தாம் எப்போதுமே என் விருப்ப தெரிவு. இனி அவற்றை அடிக்கடி பார்க்க இயலுமா எனத் தெரியவில்லை.

    அப்புறம் கணினி பரிட்சயம் இல்லாத வாசகர்களை அனுகிட நண்பர் மகேஷ் கூறியது போல் ஊடக விளம்பரங்களும், கடைகளில் விறபனை செய்வதும் தான் சிறந்த வழிகள்.

    ReplyDelete
  31. Dear Sir

    Lion new look special- Horizontal cover print in Landscape format looks very odd. Printing in Portrait form will look elegant and dignified.

    As for increasing the revenue you could start accepting advertisement ( normally with some effort if you sell the two inside covers and couple of more pages, you should be in a position to generate more revenue which could facilitate you to reduce the issue prices. This in turn will improve the circulation setting out a cyclical effect of improvement in ad.revenue vice versa.

    Crucial point for its success will be maintaining regularity of issues, maintaining fixed prices (not fluctuating from issue to issue- but specials excluded , which are special priced)

    gopalakrishnan

    ReplyDelete
  32. எடிட்டர் சார் அவர்களுக்கு, நான் வசிக்கும் ஏரியா நண்பர் ஒருவர் புத்தக விற்பனை நிலையம் ஒன்று வைத்துள்ளார். அவரிடம் நமது புது முயற்சியை பற்றி பேசினேன். முன்பே நமது இதழ்களை விற்பனை செய்துள்ளார் என்பதால் அவர் நமது இதழ்களை விற்பனை செய்ய ஆர்வமாக உள்ளார். அவரது பெயர் மற்றும் அலைபேசி எண் போன்றவற்றுடன் மேலும் சில தகவல்களை தங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளேன்.

    இது போல் வேறேதும் தொடர்பு கிடைத்தால் உடனடியாக தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன். நன்றி

    ReplyDelete
  33. அன்பு ஆசிரியர் அவர்களுக்கு இரு கேள்விகள்
    அட்டைப்பட மதிப்பெண் மதிப்பிட இயலாது லக்கி (+infinite )
    இனி வரும் க்ளாசிக்ஸ் கலரில் எனில் சூப்பர் ஹீரோ ஸ்பெசலும் முழு வண்ணத்திலா ?
    டெக்ஸ் கதைகளும் கூடவா ?

    ReplyDelete
  34. Dear Sir,

    //கேக்குடன் இருக்கும் நம் லயன் மிஸ்ஸாவது வருத்தமே!// - நண்பர் Podiyan அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

    எல்லாமே வண்ணத்திற்கு மாறும் பொழுது நம் LION மற்றும் MUTHU ஆகியவற்றின் LOGO -க்கள் மட்டும் ஏன் சார் இன்னும் ப்ளாக் அண்ட் வைட் காலத்திலேயே உள்ளன? கொஞ்சம் கவனிக்கக்கூடதா?

    ReplyDelete
    Replies
    1. Agreeing with Soundar and theeban regarding the Lion Birthday cake .

      Delete
  35. சிகப்புக் கன்னி மர்மம்", "தற்செயலாய் ஒரு தற்கொலை வெகு நாட்களாக பார்த்து பார்த்து புளித்துப்போன அட்டைப்படங்கள்.

    லயன் நியூ லுக் ஸ்பெஷல் " லக்கி லூக்கின் அட்டைப் படம் நன்றாகவே வந்துள்ளது.

    லயன் Double Thrill ஸ்பெஷலுக்கும் அட்டைப்படம் நன்றாக உள்ளது. "பனியில் ஒரு பரலோகம்" super. கலர் combination அட்டகாசமாக உள்ளது. பரலோகப் பாதை பச்சையில் some modification தேவை.

    2013 -ல் நமது ரெகுலர் இதழ்கள் ஒருபக்கம் வெளிவந்திடும் போது - சிறப்பாய்...வண்ணத்தில்....நமது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வரிசையில் - ஆண்டுக்கு 6 மறுபதிப்புகளை வெளியிட்டால் என்னவென்று தோன்றுகிறது என்ற உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துக்கள். யார் அந்த மாயாவி கதையை கலரில் சிறுவயதில் வாங்கி புல்லரிதுபோன நிலை வருமா? வெகுநாட்களாக காணாமல் போன CID LAWRANCE & DAVID எங்கே.

    ReplyDelete
  36. ஒரு திருத்தம் அது யார் இந்த மாயாவி?.

    ReplyDelete
  37. Lion,muthu,CC ஆகியவை ஒவொன்றிலும் மாதம் ஒன்று கண்டிப்பாக வரவேண்டும். முடிந்தால் திகில் , ஜூ லயன், மினி வந்தால் படு குஷி

    ReplyDelete
  38. //அப்புறம் நமது இதழ்களின் second இன்னிங்க்ஸ் பற்றி இன்னும் அறிந்திருக்காத ; இன்டர்நெட் தாக்கத்திற்கு அப்பாற்பட்டு நிற்கும் நண்பர்களுக்கு எப்படி விஷயத்தைத் தெரிவிப்பது என்பது பற்றி உங்களது எனக்குத் தேவை !//
    விஜயன் சார்....

    இது குறித்து பல வருட்ங்களாக பல வலைப்பதிவுகள்
    , ஏன் நமது வலை தளத்தை பின்பக்கம் புரட்டிப்பாருங்கள் பல பதிவுகள் . இதனை செயல்படுத்தினாலே போதும். கொஞ்சம் பயத்தை ஓரம் கட்டி வைத்து விட்டு பட்டைய கிளப்புங்க...

    ReplyDelete
  39. ஈரோட்டில் 2 முகவர்கள் இருந்தும் நமது புத்தகம் விற்பதில் அவர்களுக்கு பெரிய ஆர்வம் இல்லை எனலாம். அவர்களுடைய கடையை தவிர இங்கு உள்ள பல நூறு கடைகளில் ஒன்றுக்கு கூட அவர்கள் வினியோகிப்பதில்லை .
    நான் சந்தித்த பல மூன்றாம் நபர்களிடம் கேட்கும் பொழுது 90 சதவிகிதம் நபர்களுக்கு நமது இதழ் குறித்து அறிந்துள்ளார்கள் . ஆனால் அது வருவது நின்று விட்டதாக கூறுகின்றனர். மிகப்பெரிய இடைவெளி நமக்கு ஒரு நட்டம் தான்.

    ReplyDelete
  40. டியர் எடி ,என்ன ஆச்சு , 4 நாட்களாக உங்கள ஆளையே காணோம் .ஜெரோம் பட்டய கிளப்புவாரு ன்னு நினைக்கிறன் .ரொம்ப எதிர்பார்ப்பு வை தால் "சகுனி " படம் போல சொதபினாலும் சொதப்பும் , சோ ,எதிர்பார்ப்பு இல்லாத ஜெரோம் மற்றொரு rib கிர்பி என்று நிரூபிப்பார்,,,, இன்னும் எந்த பய புள்ளையும் ஜெரோம் கலர் ல் வேண்டும் என்று கேட்க வில்லையே ? why guys ? then பிரின்ஸ் க்கு vote செய்த ,,,,செய்கிற அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி வார்த்தையால் மட்டும் அல்ல , பிரியாணி யாலும் சொல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது ,,,,,,,,,, வாசம் பிடிக்கும் மஞ்ச சட்ட அணியினருக்கு தயிர் பச்சடி அனுப்ப ஏற்பாடு செய்து உள்ளோம் ,,,,,,,,,,,,, டேக் கேர் guys சண்டே வாவது ப்ளாக் பக்கம் எட்டி பாருங்க guys , otherwise என்ஜாய் சண்டே ...........

    ReplyDelete
  41. ஒரு வழியாக போட்டோவை அனுப்பிவிட்டான் புனித சாத்தான்.ஊஸ் அப்பாடா.இப்பவே கண்ண கட்டுதே.

    ReplyDelete
  42. ஆசிரியரின் அடுத்த பதிவை எதிர்நோக்கி .......................................
    காத்திருக்கிறது காமிக்ஸ் தமிழகம்

    ReplyDelete
  43. ஆசிரியர்:-------->அப்புறம் நமது இதழ்களின் second இன்னிங்க்ஸ் பற்றி இன்னும் அறிந்திருக்காத ; இன்டர்நெட் தாக்கத்திற்கு அப்பாற்பட்டு நிற்கும் நண்பர்களுக்கு எப்படி விஷயத்தைத் தெரிவிப்பது என்பது பற்றி உங்களது எனக்குத் தேவை ! நீங்கள் செய்திடக் கூடியதென தற்சமயம் நான் நினைத்திடுவது :

    >> How about providing advertisement in sun/kaliyar/jaya/vijay TVs; we can advertise here when we
    are about to release our comics for the month. The kumkumam and chutti vikatan are become popular through advertisements in these channel. Instead of giving advertisement we can advertise at-least in one of the channel. Think for "Vankiviteerkala kumkumam".

    >> How about providing advertisement in leading weekly tamil magazines, as I mentioned earlier we can advertise there during our monthly comics release.

    ReplyDelete
  44. காத்திருந்து... காத்திருந்து... மாதமும் (முடிய)போகுதடி...

    ReplyDelete
  45. பாவம், டிடெக்டிவ் டோனி ஜெரோம் எப்படா நம்மள ரிலிஸ் பண்ணுவாங்கன்னு பேந்த பேந்த முழிச்சுட்டு இருக்காரு...

    எடிட்டர் சார், பார்க்க ரொம்ப பாவமா இருக்காரு... சீக்கிரம் அவர வெளியில விடுங்க...

    ReplyDelete
  46. Replies
    1. bad news for subscribers.... அப்போ சந்தாதாரர்களுக்கு முன்னுரிமை கிடையாதோ...

      Delete
    2. I thought if it is available in EBAY,it may soon be sent to all subscribers.

      Delete
  47. Dear All,

    Today i called lion office, they are not even sure of the release date, too bad vijayan sir, this is not the right attitude for a comeback, the book should be released on 15th of june, its already 26th and i don't know when the books will be released. You should definitively give an explanation.

    ReplyDelete
    Replies
    1. I was surprised to see Latest Muthu Comics selling in ebay, when its is not available for subscribers. Whats happening sir.

      Delete
  48. Dear Vijayan Sir,

    Why don't you give an option for combined shipping?! If someone wants to buy all the single titles listed on your Ebay store - then it doesn't make any sense for them to pay Courier charges for each and everyone of them! I've seen people doing that and loosing money!

    It would be nice if you can give options in the listing for combined shipping!

    -karthik

    ReplyDelete
    Replies
    1. Very True.
      For a book priced at Rs. 10, shipping charge is mentioned as Rs. 30. For regular subscribers, the books are sent via normal book post with a mere two rupee as postal charge. It doesn't matter as it is nowhere related to eBay. But if the shipping charges are going to be like this in eBay, new users who are buying from there will not provide a good feedback. Add to that, in the star rating for every transaction, users may not give a 5* for the shipping charges column (I feel so! And honestly speaking, I will not give a 5* if I'm ordering via eBay.)

      Delete
  49. தவாகு+ ஜெரோம்= 45 ரூ, கொரியர் சார்ஜ்= 60ரூ. அம்மாடியோவ், ஆர்டர் பண்ண மனசு வரல!

    ReplyDelete
    Replies
    1. [தவாகு+Courier=₹55] + [ஜெரோம்+Courier=₹50] = ₹105 = ST Courier is happy! ;)

      with combined shipping option on Ebay:
      தவாகு+ஜெரோம்+Courier=₹75 = Reader is happy! :)

      :)

      Delete
  50. கரெக்ட் கார்த்திக்! விஜயன் சார் பரிசீலனை செய்வார் என்று நம்புகிறேன்!

    ReplyDelete
  51. எது எப்படியிருந்தாலும், என்ன விளக்கங்கள் சொன்னாலும் - சந்தாதாரர்களையும், முன்பணம் செலுத்தியவர்களையும் - காத்திருக்கவைத்துவிட்டு - இ-பேயில் புத்தகங்களை விற்பனைக்கு கொண்டுவந்ததை ஏற்கமுடியவில்லை. இங்கு நண்பர்கள் குறிப்பிடுவதுபோல ஏமாற்றத்தைத் தரும் நடவடிக்கையாக இது இருக்கிறது. ஒரு பழமொழி சொல்வார்கள்...'காத்திருந்தவன் பெண்டாட்டியை..." என்று. அதுபோல இருக்கிறது என்று வாசகர்கள் கோபித்துக்கொள்ளமாட்டார்களா? - (ஆனால், சந்தாவும் கட்டிவிட்டு, அந்தப் புத்தகங்கள் வருவதற்குள் இ-பேயில் வாங்கி வாசிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் - அதுதான் இந்த உத்தியோ?)

    ReplyDelete
    Replies
    1. இல்லை நண்பரே EBAY இல் ஆர்டர் செய்தவர்களுக்கும் ஜூலை 1 மேல் தான் அனுப்பபோவதாக நண்பர் soundar இடம் கூறி உள்ளார்கள்.
      அவர்களுக்கு முதல் உரிமை என்ற பேச்சிற்கு இடம் இல்லை.
      தாமதம் அனைவருக்கும் தான்.

      Delete
    2. So what is this purchase history all about?

      http://offer.ebay.in/ws/eBayISAPI.dll?ViewBidsLogin&_trksid=p4340.l2564&rt=nc&item=221056465438

      Delete
    3. சரி, விடுங்கள். எனக்கு முந்தி உனக்கு முந்தி என்று சண்டைபோடுவதால் என்ன பயன்? இ-பே என்னும் புது முயற்சியில் நமது காமிக்ஸ்களுக்கு இருக்கும் வரவேற்பை பரீட்சித்துப் பார்க்கவும், முதலில் பைண்ட் செய்துவரும் புத்தகங்களை சந்தாதாரர்களுக்கு அனுப்பும்போது இ-பே யில் வாங்கியவர்களுக்கும் அனுப்பலாம் என்ற எண்ணத்திலும் இது நடந்திருக்கலாம். எதிர்பார்ப்பு - தாமதம் - அவர்களுக்கு முதலிலேயா? என்ற கோபம் - எல்லாம் - புத்தகங்கள் கைக்கு கிடைத்ததும் பறந்துபோய்விடும். அல்லது, அட இந்தக் கதைகளுக்குப்போயா முறுக்கிக்கொண்டோம் என்ற எண்ணமும் வரலாம். பார்ப்போம்.

      Delete
    4. Dear Friend,

      //So what is this purchase history all about?
      http://offer.ebay.in/ws/eBayISAPI.dll?ViewBidsLogin&_trksid=p4340.l2564&rt=nc&item=221056465438//

      That is only a purchase history. They will start the dispatch only from July 01 (The sms received After the order on EBAY).

      "Till date the book is not ready" as per the status received (Through Phone) from Lion Office.

      You can call them to get the latest news.

      Delete
  52. முன்னுரிமைப் பட்டியல்:
    - வெளிநாட்டு சந்தாதாரர்கள்
    - சீனியர் சந்தாதாரர்கள்
    - ஜூனியர் சந்தாதாரர்கள்
    - Ebay வாடிக்கையாளர்கள்

    இப்படி எல்லாம் இனம் பிரித்து கஷ்டப்படுவதை விட, எல்லோருக்கும் ஒரே சமயத்தில் அனுப்பிட (ship) முடியமா? Courier போய்ச் சேர வாசகர் வசிக்கும் ஊருக்கு ஏற்ப முன்னே பின்னே ஆவதை தவிர்க்க முடியாதுதான்! இருந்தாலும், ஒரே தேதியில் அனுப்பினார்கள் என்ற திருப்தியாவது மிஞ்சும்!

    அப்புறம், இன்னொரு விஷயம்! ST Courier-இன் சர்வீஸ் அவ்வளவு Professional ஆக இல்லை :) (பெங்களூரில்!)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். நான் பழைய இதழ்கள் முழுவதும் வாங்கி இருந்தேன். ST Courier என்னை அவர்கள் இடத்துக்கு வந்து பார்சலை எடுத்துச் செல்லச் சொல்லி விட்டார்கள். பிறகு என்ன? போய்ப் பெரிய பார்சலைச் சுமந்து கொண்டு வந்தேன். நல்ல சேவை! நல்ல கூத்து!

      Delete
  53. Dear Friend,

    Karthik நான் பார்த்த வரை எல்லோருக்குமே ஒரே நாளில்தான் கூரியர் பார்சல் தயார் செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அனைத்து வாசகர்களுக்கும் ஒரே நாளில் ரெடி பண்ணுவது நடைமுறை சாத்தியம் இல்லை. எனவே கூரியர் பார்சல் தயரானவரை தினந்தோறும் அனுப்பபடுகிறது. "மதுரைக்கும், சென்னைக்கும், பெங்களுருக்கும், அமெரிக்காவுக்கும், பிரான்சுக்கும் ஒரே நாளில் அனுப்பினாலும் முதலில் கிடைப்பது மதுரை, சென்னைக்குத்தான் என்பது நடைமுறை விஷயம். இதில் மதுரை, சென்னை நண்பர்களுக்கு முதலில் கிடைத்து விட்டது எனக்கும் அதே நேரத்தில் ஏன் கிடைக்கவில்லை என்று சண்டை போட்டால் என்ன செய்வது?" நான் கூறியதில் தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும் நண்பரே. என் பதில் முந்திரிக்கொட்டைத்தனமாக இருந்தால் ஆசிரியர் அவர்கள் மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. //சண்டை போட்டால் என்ன செய்வது//
      :) never - I only gave a suggestion!

      ஆசிரியர் ஒருமுறை, ஒரு பதிவின் பின்னூட்டத்தில் - சந்தா சீனியாரிட்டி முறையில் புத்தகங்கள் அனுப்பப்படுகின்றன என கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டு இருந்தார்!
      //சந்தாவில் உள்ள seniority தான் பிரதிகள் அனுப்பப்படும் வரிசையினை நிர்ணயிக்கும்.//

      எனவேதான் நான் இந்த கருத்தை கூறினேன்! வாசகர்களின் இடையே மனக்கசப்பு (மேலே உள்ள ஒருசில பின்னூட்டங்களின் தொனியை கவனிக்க!) ஏற்படுவதை ஒரே சமயம் அனுப்புவதன் மூலம் தவிர்க்கலாம் என்று மட்டுமே வேண்டுகோள் விடுத்தேன்! :)

      அது இயலாது என்றால், I can live with it - no big deal! :)

      Delete
    2. நண்பர்களே,

      சமீபமாய் இங்கே பதிவிட்டிருக்கும் அனைவருக்கும் பொதுவான பதிலாக இதனை எடுத்துக் கொண்டிடலாம் !

      ஜெரோம் கதைகளின் அச்சுப் பணிகள் சென்ற வெள்ளியன்றே நிறைவு பெற்று விட்ட போதிலும் பைண்டிங் தாமதமாகிக் கொண்டே செல்கின்றது. சனிக்கிழமை சிவகாசியில் முழு நேர மின் தடை என்பது எவ்விதத்திலும் உதவிடவில்லை ! பற்றாக்குறைக்கு இவ்வாரத் துவக்கம் முதல் நடைமுறைக்கு வந்துள்ள 8 மணி நேர மின்வெட்டு மிச்சம் சொச்சம் உள்ள பொறுமைக்கு சோதனை வைக்கின்றது. அது மட்டும் அல்லாது தற்சமயம் சிவகாசியில் உள்ள அனைத்து பைண்டிங் அலுவலகங்களும், சமச்சீர் கல்விக்கான கைடுகள் ; நோட்ஸ்கள் பணிகளில் மூச்சு விட நேரமின்றி நிற்கின்றனர். அவர்களிடும் கெஞ்சிக் கூத்தாடித் தான் நமது இதழ்களின் பணிகளை முடித்து வாங்க வேண்டியுள்ளது ! லட்சக்கணக்கில் அச்சிடப்படும் கைடுகளோடு, சில ஆயிரங்களில் அச்சாகும் நமது இதழ்களும் மல்லுக்கு நிற்க வேண்டிய சூழ்நிலை இது ! சற்றே பொறுமையாக அவர்களிடம் வேலை வாங்கிட வேண்டிய நெருக்கடி.

      நாளைய தினம் முதல் இரு இதழ்களும் despatch செய்திடத் துவங்குகிறோம். அனைத்து இதழ்களும் ST கூரியர் மூலமோ ; பதிவுத் தபாலிலோ தான் அனுப்பவிருக்கிறோம் ; so கூடியமட்டும் பிரச்னை இன்றி உங்களுக்கு இதழ்கள் கிடைத்திடும் !

      அப்புறம் E-Bayல் நமது புதிய இதழ்களும் விற்பனைக்கு விளம்பரப்படுத்தி இருக்கிறோமே தவிர அவர்கட்க்கு இதழ்கள் இன்னமும் அனுப்பிடவில்லையே ? இதழ்கள் அனுப்பிட shipping time 7 நாட்கள் என்றும் கூட எழுதியுள்ளோமே ?? இதில் நாட்டுப்புறப் பழமொழிகளை எல்லாம் துணைக்கு அழைத்துப் பொங்கிட அவசியம் ஏனென்று எனக்குப் புரிந்திடவில்லை ! இது வரை புது இதழ்கள் ஏழோ எட்டோ மட்டுமே அங்கே E-Bayல் விற்பனை ஆகியுள்ளன ! அவற்றையும் சந்தாதாரர்களுக்கு அனுப்பிட்ட பின்பே அனுப்பிடவுள்ளோம். So relax guys !

      E-bay ல் புத்தகங்களை அனுப்பிடும் கட்டணங்களில் சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். உள்ளூரில் அனுப்பிட ஒரு கட்டணம் ; வெளி ஊர்களுக்கு ஒரு கட்டணம் என்று இரு வகைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. உள்ளூர் கட்டணம் என்பது சிவகாசிக்குள் அனுப்பிட மட்டுமே பொருந்திடும் என்பதால் அதனால் துளியும் பிரயஜோனமில்லை நமக்கு. தமிழ்நாட்டுக்குள் ST கூரியர் மூலம் அனுப்புவதென்றால் குறைந்த பட்சக் கட்டணம் ரூபாய் 15 . அதே சமயம் தமிழ்நாட்டுக்கு வெளியே இதழ்களை அனுப்பிட ரூபாய் 30 ஆகின்றது. இவ்விதம் பிரித்து தமிழ்நாட்டுக்குள ஒரு கட்டணம் ; வெளி மாநிலங்களுக்கு ஒரு கட்டணம் என்று அமைத்திட E bay அனுமதிப்பதில்லை என்பதால், கட்டணங்கள் உயர்வாய்த் தோன்றிடும் தலைவலி எழுகின்றது.

      விரைவில் நேரடியாகவே ஆன்லைன் விற்பனை முறையினை நடைமுறைப்படுத்திட முயற்சித்து வருகின்றோம். அது ஒ.கே ஆகிவிட்டால், E Bay மூலம் சென்றிடத் தேவையிருந்திடாது. அது நாள் வரை இவை தவிர்க்க இயலா சிக்கல்களே ! I ask for your understanding till then guys !

      இதனைத் தொடர்ந்து புதியதொரு பதிவினை எழுதிடவிருக்கின்றேன்.. இன்று மாலை மீண்டும் சிந்திப்போம். Bye till then !

      Delete
    3. ஆசிரியருக்கு. விரிவான தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. அதீத ஆர்வமும், காமிக்ஸ் மீதுள்ள காதலுமே நம்மை சில நேரங்களில் கோபப்படவும், ஆதங்கத்தில் குமுறவும் வைத்துவிடுகிறது என்பது உங்களுக்குத் தெரிந்ததே.

      'நண்பர்களே! இ-பேயில் மேற்கொள்ளப்படுவது முன்பதிவு மட்டுமே! இதழ்கள் சந்தாதாரர்களுக்கு அனுப்பப்படும்போதுதான் அங்கே வாங்கியவர்களுக்கும் அனுப்பப்படும். இன்னும் இதழ்கள் ரெடியாகவில்லை' என்று நீங்கள் ஒரு தகவலைப் பதிந்திருந்தால் - இங்கே பல நண்பர்கள் பிரஷரை ஏற்றிக்கொள்ளவேண்டியிருந்திருக்காது.

      இடைக்கிடையே எப்படியாவது கொஞ்சம் நேரமொதுக்கி - நீங்கள் சில வரிகளிலாவது ஒரு பதிவைப்போட்டுவிட்டால் நமக்கு வேறு பக்கங்களில் சிந்தனை ஓடாது.

      பழமொழி உதாரணமெல்லாம் உங்களை பின்னூட்டமோ, பதிவோ போடவைப்பதற்கான ஒரு தூண்டுதலுக்காகத்தான்! மன்னிக்கவும்.

      அட்டைப்படங்கள் பற்றிய நண்பர்களின் கருத்துக்களுக்கும் உங்கள் பதில்களை அன்போடு எதிர்பார்க்கிறோம். நன்றி.

      Delete
    4. அன்புள்ள ஆசிரியருக்கு , காமிக்ஸ் மீது உள்ள அதித காதல் காரணமாகவே சில வாசகர்கள் பொருமி உள்ளார்கள். எனினும் உங்களுடைய விளக்கம் அவர்களுக்கு திருப்தி அளித்திருக்கும். நாளை முதல் முத்து காமிக்ஸ் இதழ்கள் அனுப்ப உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெரோம் கதைகளை படித்திட ஆவலாக உள்ளேன்.

      Delete
  54. ஆபீஸ் முடித்து வீட்டுக்கு கிளம்பும்போது எப்போதும் உங்கள் ப்ளாக் ஐ பார்த்துவிட்டுத்தான் கிளம்புவது வழக்கம். அதேபோல் வந்தேன், உங்கள் விளக்கமான பதிவை பார்த்து மகிழ்ந்தேன். நன்றி. நாங்கள் யாரும் உங்களை என்னைக்கும் தவறாக நினைக்கமாட்டோம் சார். எல்லாம் காமிக்ஸ் மீது உள்ள பற்றுதலின் வெளிப்பாடுதான் எங்களின் உரிமையான கேள்விகள், சந்தேகங்கள். நன்றி.

    ReplyDelete
  55. //லட்சக்கணக்கில் அச்சிடப்படும் கைடுகளோடு, சில ஆயிரங்களில் அச்சாகும் நமது இதழ்களும் மல்லுக்கு நிற்க வேண்டிய சூழ்நிலை இது//

    நமக்கும் காலம் வரும் சார்.

    ReplyDelete
  56. Now the LION WITH CAKE is there in the New Look Special cover page.

    ReplyDelete
  57. HAI IAM NEWLY JOINED YOUR FORM, BUT I AM A COMIC REDER LAST 20 YEARS,

    ReplyDelete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. how can i buy your books in kandy, sri lanka? can i purchase through online? can u ship it to me?

    ReplyDelete
  60. I read the new look special recently

    ReplyDelete