Monday, June 18, 2012

ஒரு பஜ்ஜியும் ; ஒரு பட்டாசுப் பார்சலும் !

நண்பர்களே,

'No place like home' என்று எங்கேயோ, எப்போதோ சொல்லி வைத்த புண்ணியவான் ஏகப்பட்ட செருப்புகள் தேய எக்கச்சக்கமான பயணங்கள் செய்தவராய் தான் இருந்திருக்க வேண்டும். ஊரெல்லாம் சுற்றி விட்டு வீடு திரும்பிடும் குஷியை அனுபவித்து,ரசித்துத் தான் மனுஷன் இதை வாயாற சொல்லி வைத்திருப்பார் ! 

ஐந்து நாள் போராட்டத்துக்குப் பின்னே, தங்கு தடையற்ற இண்டர்நெட்டை வீட்டில் உபயோகித்திட முடியும் போது, ரம் பாட்டிலைக் கண்ட பார்னேயின் உற்சாகம் தான் எனக்கு ! அப்படியே இங்கே நுழைந்து, உங்களின் சமீபத்திய பதிவுகள் ; தொடர்ந்து வரவிருக்கும் நமது ஸ்பெஷல் இதழ்களுக்கான 'பெயர் சூட்டும் படலம்' ; நமது மறுபதிப்புக்கான இடைத்தேர்தலின் வாக்கு சேகரிப்புகள் ; நல்ல / கள்ள வோட்டுக்களின் பின்னணிகள் என்று படிக்கும் போது பயணக் களைப்பு காணாது போன இடமே தெரியவில்லை ! 

First things first - என்ற கதையாய் அந்த பஜ்ஜிக்கும் ; பட்டாசுக்கும் சொந்தக்காரர்கள் யாரென்று முதலில் பார்த்திடுவோமே ?!  

எக்கச்சக்கமான பெயர் suggestions ; நிறைய புது நண்பர்களின் பங்களிப்பு ; கோவை steel claw அனுப்பிய மெகா பட்டியல் என்று இம்முறை மெய்யான பரபரப்பு ஆடுகளத்தில் ! சென்ற முறை நண்பர் Saint Satan அனுப்பிய பெயரைத் தேர்வு செய்திடும் போது அதிக சிரமம் எனக்கிருந்திடவில்லை! ஆனால் இம்முறையோ தினமும் வந்திட்ட selections அசத்தல் ரகங்களாய் இருந்திட்டதால் ஒரு தீர்மானத்திற்கு வந்தடைய நிறையவே அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டியதாகிப் போச்சு ! 'பஜ்ஜியின் படலம்' கொணர்ந்த பெயர் தேர்வுகளில் எனக்கு 'பளிச்' ரகமென மனதிற்குப் பட்ட பெயர்கள் இதோ :


  • லயன் ADVENTURE ஸ்பெஷல் - Raja Babu 
  • லயன் 'கோல்டன் ஒல்டி' ஸ்பெஷல் - Venkat 
  • லயன் 'எவர்க்ரீன் ஹீரோ' ஸ்பெஷல் - Venkat





ஒவ்வொரு பெயருமே கேப்டன் பிரின்ஸ் மற்றும் ரிப்போர்டர் ஜானி தோன்றிடும் அந்த ஸ்பெஷல் இதழுக்குப் பொருத்தமானவையாகவே எனக்குப் பட்டது ! இந்த 3 பெயர்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியது தான் வேலை என்று முடிவு செய்து விட்டு சிறிது நேரத்தில் "லயன் Adventure ஸ்பெஷல் " என்ற பெயரை டிக் அடித்தேன் !   'சிம்பிள், yet neat ' என்ற நினைப்பில் இதனை பிரின்ஸ் அட்டைப்படத்தில் கூட இணைத்து டிசைன் தயார் செய்து விட்டோம். அப்போது தான் வந்திட்டது நண்பர் உதயகுமாரின் தேர்வு ! "லயன் டபுள் த்ரில் ஸ்பெஷல் "  என்ற அவரது ஆக்கம் instant hit அடித்தது என் மனதில் ! இரு ஹீரோக்கள் சாகசம் செய்திடும் இந்த இதழை வர்ணித்தது போலவும் ; ஒரு விறுவிறுப்பை உணர்த்திடுவது போலவும் இந்தத் தலைப்பு இருப்பதாய் எனக்குத் தோன்றியது !  So பஜ்ஜி பார்சல் - நண்பர் உதயகுமாருக்கே ! 


வாழ்த்துக்கள் உதயகுமார் ! உங்களின் புகைப்படத்தோடு , உங்களைப் பற்றிய சின்னதொரு அறிமுகத்தையும் எழுதி அனுப்புங்களேன் ப்ளீஸ் ? ஆகஸ்ட் மாதம் வரவிருக்கும் இந்த Double-Thrill ஸ்பெஷல் இதழில் அதனை சந்தோஷமாய்ப் பிரசுரிப்போம் ! 

And  நண்பர் Saint Satan : நீங்களும் துரிதமாய் உங்களின் போட்டோ + அறிமுகத்தை அனுப்பிடுங்களேன் : லயன் நியூ லுக் ஸ்பெஷலில் பளிச் வண்ணத்தில் வந்திடும் !

அடுத்தது பட்டாசுப் பார்சலுக்கான போட்டி : (கேப்டன் டைகர் + 'எமனின் திசை மேற்கு' - இரு கௌபாய் இதழ்கள் வந்திடும் இதழுக்கான பெயர் தேர்வு)

இம்முறை கவனத்தை ஈர்த்திட்ட பெயர்கள் இதோ :    


  • "தோட்டா ஸ்பெஷல் " - Bladepedia Karthik
  • "Wild West ஸ்பெஷல்" -SoundarSS
  • "Great ஹீரோஸ் ஸ்பெஷல்" - Saint Satan (!) 



தேர்வுகளை shortlist செய்த பின்னர் வழக்கம் போல் குழப்பம் என்னுள் ! ஆனால் நண்பர் சௌந்தரின் "Wild West ஸ்பெஷல்" என்ற பெயரைக் கேட்கும் போதே 'சும்மா அதிருது-லே ' என்று எனக்குத் தோன்றியது ! அதுவும் அல்லாது "எமனின் திசை மேற்கு" (Van  Hamme ) கிராபிக் நாவல் வரவிருக்கும் இந்த ஸ்பெஷல் இதழுக்கு - இந்தப் பெயர் ரொம்பவே பொருந்துமெனத் தோன்றியது ! 

ஆங்கிலத்தில் இந்தப் பெயர் fairly common  ; எக்கச்சக்கமான கௌபாய் இதழ்கள் இந்தப் பெயரில் வந்துள்ளன என்ற போதிலும், தமிழுக்கு ; நம் இதழ்களுக்கு இது முதன் முறை தானே ?! So - பட்டாசுப் பார்சலை வென்றிடுவது நண்பர் சிவகாசி சௌந்தர் ! (பார்சலை கூரியர் அனுப்பும் செலவு மிச்சம் !!) Congrats சௌந்தர் ! உங்களின் புகைப்படம் + bio data  வினை விரைவில் எதிர்பார்த்திடுவேன் !    




உற்சாகமாய் ; creative -ஆக பெயர்கள் எழுதி அனுப்பிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் ! "வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்"  என்ற பொன்மொழியைப் பின்பற்றி மனம் தளராது அடுத்த முறையும் இது போன்ற போட்டியில் "சமோசா வேட்டையை" நடத்த துள்ளிக் குதித்து வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு - இன்றைய இப்பதிவை நிறைவு செய்கிறேன் ! நாளை இரவு - உங்களின் சமீபத்திய கமெண்ட்ஸ்-க்குப் பதில்கள் ; எனது updates கொண்டதொரு புதுப் பதிவோடு உங்களை சந்திக்கிறேன் ! Adios until then ! 

69 comments:

  1. Vijayan sir,

    I expected some comments about this month release.

    By the way good selection for the names. Great going guys.

    Please send the bajji before it gets cold. hahhaha

    ReplyDelete
  2. அன்பு விஜயன் சார் அவர்களுக்கு,
    அடியேனுடைய இந்த "லயன் டபுள் த்ரில் ஸ்பெஷல்" தலைப்பை தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி.
    வாசக நண்பர்களுடைய பலத்த போட்டிகளின் நடுவில் இந்த தேர்வு எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. Really great surprise for me.
    விரைவில் எனது புகைப்படத்தோடு, சில வார்த்தைகளையும் உங்களுக்கு ஈமெயிலில் அனுப்பி வைக்கிறேன் சார்.
    தமிழ் காமிக்ஸ் உலகில் நீங்கள் உலக அளவில் சாதனை புரிய எனது வாழ்த்துக்கள்.
    மீண்டுமொருமை எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் சார்.
    -உதயகுமார்

    ReplyDelete
  3. வெல்கம் back சார்.
    வந்தவுடன் ஒரு பெரிய கடமையை முடித்து விட்டீர்கள்.
    பெயர்கள் தேர்வு அருமை.
    வாழ்த்துக்கள் to சௌந்தர் and உதயகுமார்.
    உங்கள் அடுத்த பதிவை ஆர்வமுடன் எதிர் பார்கிறேன் சார்.

    கிருஷ்ணா வ வெ.

    ReplyDelete
  4. தெரிவுசெய்யப்பட்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    15ஆம் திகதி என்று அறிவித்திருந்த (ஜூன் 15 -ல் முத்து காமிக்ஸ் - black & white இதழ்களான "சிவப்புக் கன்னி மர்மம்" & "தற்செயலாய் ஒரு தற்கொலை" ஒரே சமயத்தில் வெளிவந்திடும் ! ) இரண்டு இதழ்களும் எப்போது வரும்?

    ஏற்கனவே நான் குறிப்பிட்டிருந்ததுபோல ஏதாவது மாற்றமிருக்குமா? 'மாற்றம் என்பது மட்டுமே மாறாததா?'

    -Theeban (SL)

    ReplyDelete
    Replies
    1. Podiyan : மாற்றங்கள் இம்மாதம் உண்டென்று நான் சொல்லிடவே இல்லியே..?? அப்படியிருக்க மாற்றங்களை எதிர்பார்ப்பது போன்ற உங்களின் பதிவுகள் ஏனென்று புரியவில்லை ! இவ்வார இறுதியில் பணிகள் முடிந்து அடுத்த வாரத் துவக்கம் முதல் இதழ்கள் அனுப்பப்படும்.

      Delete
    2. ஆசிரியருக்கு,
      மன்னிக்கவும். உங்களை சில நாட்கள் இந்தப் பக்கம் காணவில்லை; புதிய வெளியீடுகள் பற்றிய உறுதிப்படுத்தல்கள் இல்லையென்றதும் - இப்படி நடந்துவிடுமோ? என்ற அங்கலாய்ப்பில் வந்ததுதான் இந்த எண்ணம். வேறொன்றுமில்லை.

      இரண்டு பாகங்களும் ஒரே தேதியில் வந்திடுமா? இல்லை இரண்டுக்குமிடையில் இடைவெளி இருக்குமா? (குடும்ப கட்டுப்பாட்டு வாசகம் போல இருக்கிறதே!).

      -Theeban (SL)

      Delete
  5. congrates uday &சௌந்தர் ,,டியர் எடி (உபயம் பொடியன் ), உங்கள் செயல் வேகம் சூப்பர் சார் ,சொன்ன மாதிரி இன்று காலை comment போட்டு விடீங்க! இந்த வயதில் உங்க வேகம் எங்கள மாதிரி இள வட்ட pasangaluku (33 வயசுன்ன இள வட்டம்தானே?) ஒரு பாடம் சார் !

    ReplyDelete
    Replies
    1. லூசு பையன் : ஆஹா..இதை ஒரு compliment என்று நான் எடுத்துக் கொள்வதா ? அல்லாங்காட்டி "பெருசுகள்" பட்டியலில் அடியேனையும் கோர்த்து விட்டதற்குப் பொருமிடுவதா ? ஒண்ணுமே புரியலியே !!

      Delete
    2. அன்பு ஆசிரியருக்கு ,நீங்கள் 17 வயதில் காமிக்ஸ் வெளியிட வெளியூர் சென்ற போதே நீங்கள் பெரிசு ஆகி விட்டீர்கள் .ஆனால் இப்போது சிறியவர் போல
      காமிக்ஸ் ஆர்வமுடன்(அப்போதைய விட) இம்ப்ரூவ் செய்வதால் மகா பொடியன் ஆகி விட்டீர்கள்.சிறியவருக்கு தானே ஆர்வம் அதிகம்

      Delete
  6. வாழ்த்துக்கள் சௌந்தர்! அதனால் என்ன, "தோட்டா ஸ்பெஷல்" தலைப்பை அடுத்த கௌ-பாய் ஸ்பெஷலுக்கு வைத்தால் போயிற்று! வேண்டுமானால் அட்வான்ஸ் ஆக எனது பய(!) டேட்டாவை அனுப்பி வைக்கிறேன்! :)

    ReplyDelete
    Replies
    1. //வாழ்த்துக்கள் சௌந்தர்//
      & உதயகுமார்!

      Delete
  7. "பஜ்ஜி & பட்டாசு" நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இந்த தடவையும் போச்சா. ரைட் விடுங்க. பஜ்ஜியும் பட்டாசும் வாங்கிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஏதோ வெங்கட் நம்ம ரூம்மேட்-ங்கறதால பஜ்ஜில பாதி கெடைக்கும்னு நெம்ப நம்ம்ம்ம்ம்பி இருந்தேன் .. பஜ்ஜி போச்சே ...!!!

      வெங்கட் பாய் .. பொறுத்தது போதும் .. பொங்கி எழறோம் ... சமோசா நமக்கே ... ஜெய் பஜ்ரங்க பலி !!!

      Delete
  9. புக்கை அனுப்பிட்டு கம்மெண்டு போடலாமே சார்.........பஜ்ஜி... போண்டா.... சமோசா .....வாங்குனவங்க புக்கையும் வாங்கி தந்தா நல்லா இருக்கும் ......புக் வரும்வரை உங்க பேச்சு ''கா''

    ReplyDelete
  10. अगली लयन कॉमिक्स कब आता है विजयन जी ?

    ReplyDelete
    Replies
    1. आप अगली लान्गुवेजी में त्रय कीजिये जी...कियोंकि विजयन जी को हिंदी मालुम नहीं जी

      Delete
    2. आस्क...... पुस्क....... लालालाकड़ी कोलाकोपुरा कोइया.....
      मुझे लायन कॉमिक्स चाहिये बॉस
      जी........ आप उनके पास इस matter बुलाव...
      सुकिरिया जी.

      Delete
    3. अगले सोमवार ।

      Delete
    4. 對不起,我不能讀印地文! :)

      Delete
    5. बहुत अच्चा जी

      Delete
    6. பார்த்து! ஹிந்தி எதிர்ப்பு போராட்ட குழு இங்க வந்துற போறாங்க! :)

      Delete
  11. Dear Sir,

    என்ன சொல்வெதென்று தெரியவில்லை. நண்பர் ஒருவர் இன்று காலையில் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். அவரிடம் காமெடி பண்ணாதீர்கள் என்று சொல்லிவிட்டு, அலுவலகத்திற்கு வந்து ப்ளாக்கை பார்த்த பிறகுதான் நம்பினேன். மிகவும் சந்தோசமாக இருந்தது. என்னை மிகவும் கவர்ந்த எங்கள் டைகருக்கு பெயர் சூட்ட கிடைத்த வாய்ப்பை நினைக்கும் போது என் மகிழ்ச்சியை விவரிக்க இயலவில்லை. அத்துடன் சிறுவயதில் வாசகர் கடிதம் எழுதி LION காமிக்ஸ்-ல் நம் பெயரும் வந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணியதுண்டு, பள்ளி செல்லும் வயதில் அந்த முயற்சியை கிடப்பில் போட்டுவிட்டேன். ஆனால் தற்பொழுது நம் புகைப்படத்துடன் பெயர் வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இம்மாதிரி விசயங்கள்தான் வாசகர்களுக்கு BOOST . ஆசிரியர் மற்றும் தேர்வுக்குழுவுக்கு நன்றிகள் பல.

    //இரவுக்கழுகு, Msakrates, பொடியன், Blade கார்த்திக், லூசு பையன் // உட்பட வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நண்பர் உதய குமாருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    மிகப்பெரிய வருத்தம் அடுத்த வெளியிட்டைப்பற்றி கூறாதது. எப்போ சார் Detective ஜெரோம் ரிலீஸ்.

    Soundarss , Sivakasi

    ReplyDelete
    Replies
    1. SoundarSS : இவ்வார இறுதியில் (Detective ஜெரோம்) பணிகள் முடிந்திடும் ; அடுத்த திங்கள் அனுப்பப்படும் !

      Delete
    2. அப்போ சனிக்கிழமையே ஆஜராகிடுறேன் :)

      ஒரு சின்ன application சார் பட்டாசு பார்சலுக்கு பதிலா டெக்ஸ் டைகர் ப்ரின்சின்னு நம்ம ஹீரோக்கள் படம் போட்ட போஸ்டர் மற்றும் புக் மார்க் தந்த நல்லா இருக்கும். பட்டாச ஞாபகர்த்தமா பாதுகாக்க முடியாதே. (முடிந்தால் ஸ்பெஷல் ரிலீஸ்ல மட்டுமாவது நம்ம ஹீரோக்களின் அழகான புக் மார்க் Free -ஆ குடுத்தா நல்லா இருக்கும்). அதோட எனக்கு மட்டும் பட்டாசு நண்பர் உதய குமாருக்கு மட்டும் பஜ்ஜியோட விடுறதா?

      கண்டிப்பா மாதம் ஒரு வாசகர் கொண்டு வாங்க சார், ஆனா நண்பர் Blade கார்த்திக் பத்தி மட்டும் 2052 ல போடுங்க போதும் :)

      Blade கார்த்திக்கின் புதிய சாதனைக்கு (கடைசி புத்தகத்தையும் வாங்கியது) வாழ்த்துக்கள்.

      Delete
    3. //அப்போ சனிக்கிழமையே ஆஜராகிடுறேன் :)//
      அப்படியே ஒரு காப்பி பெங்களூர் அனுப்பிருங்க பாஸூ!

      //பட்டாச ஞாபகர்த்தமா பாதுகாக்க முடியாதே//
      why not, ஃபிரேம் போட்டு வைங்க! வேணும்னா ஃபிரேமில் ஒரு வெடிகுண்டுன்னு பேர் வச்சு மகிழுங்க ;)

      //ஆனா நண்பர் Blade கார்த்திக் பத்தி மட்டும் 2052 ல போடுங்க போதும் :)//
      அந்த வயசுல, கண்ணீர் அஞ்சலிதான் போட முடியும்! ஏன் சார் இந்த கொல வெறி உங்களுக்கு! உங்க அறிமுக பக்கத்தை மட்டும் சாணித் தாள்ல அச்சடிக்க பலத்த சிபாரிசு பண்ணப் போறேன்! :D

      //Blade கார்த்திக்கின் புதிய சாதனைக்கு (கடைசி புத்தகத்தையும் வாங்கியது) வாழ்த்துக்கள்//
      சிவகாசி ST கொரியர்ல நேத்து நைட்டு புக்கை ஆட்டைய போட்டது நீங்கதானே?! :)

      Delete
    4. //அப்படியே ஒரு காப்பி பெங்களூர் அனுப்பிருங்க பாஸூ!//நிறைய நண்பர்களுக்கு அதைத்தான் செய்கிறேன். உங்களுக்கு இல்லாமலா அட்ரஸ் மட்டும் அனுப்புங்க.

      நமது மற்ற பதில்களை வேறு இடத்தில் வைத்துகொள்வோம். அப்புறம் மற்ற நண்பர்கள் வெறுப்பாகி விடப்போகிறார்கள்.

      Delete
  12. தெரிவுசெய்யப்பட்ட சௌந்தர்& உதயகுமார்! நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
    விஜயன் சார் "சிவப்புக் கன்னி மர்மம்" & "தற்செயலாய் ஒரு தற்கொலை" இரண்டு இதழ்களும் எப்போது வரும்?

    எஸ். ஜெயகாந்தன், புஞ்சை புளியம்பட்டி

    ReplyDelete
    Replies
    1. jayakanthan : வரும் திங்கட்கிழமை !

      Delete
    2. super sir aarvamaaga kathirukkiren!
      combo books ellame gali polirukke sir?
      ippo enna books mattum namma officela kidaikkuthu enru oru list pathividungalen!

      Delete
  13. ஆசிரியருக்கு ,எனது பெயரை தங்கள் ப்ளாக்கில் போட்டதற்கு நன்றி.வெற்றி பெற்ற நண்பர்கள் சௌந்தர் மற்றும் உதயகுமார் இருவருக்கும் அருமையான தலைப்பை அளித்தமைக்கு நன்றிகள் மற்றும் பாராட்டுகள் .மீண்டும் ஆசிரியருக்கு எனது நன்றிகள்.

    ReplyDelete
  14. பெயர் படல நெடுநாள் போட்டியில் வெற்றி பெற்ற, நண்பர்களுக்கு வாழ்த்துகள். பஜ்ஜி போண்டாவுடன் கூடவே, இம்மாத புத்தகம் எப்போது வரும் என்றும் அறிவித்திருந்திருக்கலாம். அடுத்த பதிவில் அதை பற்றி எதிர்பாக்கலாமா, எடிட் ? :)

    ReplyDelete
  15. குங்குமத்தில் இந்த வாரம்:
    2022-ம் ஆண்டு காமிக்ஸ் க்ளாசிக்ஸில் வெளிவரவிருக்கும், லார்கோ இதழின் ப்ளாக் அண்ட் வைட் மறு பதிப்பிலாவது எனது போட்டோ மற்றும் கட்டுரை வெளிவருமா? ப்ளேட்பீடியா கார்த்திக் 'க்க்குமுறல்ல்'! :D

    ReplyDelete
  16. Ebay-யில் செம சேல்ஸ் போல?! இரத்தப் படலத்தின் லாஸ்ட் காபியாம்! இதை வாங்குபவர் இரத்த சரித்திரத்தில் இடம் பெறலாம்! :D

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : அந்த "சரித்திர நாயகர்" நீங்களே ! Thanks again !

      Delete
    2. உங்கள் கையெழுத்துடன் அனுப்பி வைத்தால் மகிழ்வேன்! :)

      Delete
    3. ஏற்கனவே அனுப்பிவிட்டார்கள் :-)

      Delete
    4. உங்கள் அலுவலர்களின் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது! :D

      Delete
    5. aha aha aha valthukkal kaarthik ji!

      Delete
  17. இந்த ஊர்சுற்றி உதவாக்கரை 'பிரின்ஸ்' க்கு 147 ஓட்டு.....என்ன கொடும இது.....

    எடிட்டர் சார்... ஏதோ சதி நடக்குது உடனே "ஃபிரான்செஸ்கோ கெம்பா" வின் ஆவியை வைத்து ஒரு விசாரணை நடத்துங்கள். (ஃபிரான்செஸ்கோ கெம்பா - சமீபத்தில் மறைந்த புகழ்பெற்ற டெக்ஸ் வில்லர் கதாசிரியர், ஓவியர்)

    ReplyDelete
    Replies
    1. என் ன முக்கினாலும் நடக்காது .......... polling முடிவதற்குள் குறைந்த பட்சம் 500 vote வாங்கி எங்க கடலின் காதலன் பிரின்ஸ் வெற்றி பெறுவது உறுதி ............. பிரின்ஸ் க்கு vote செய்யும் நண்பர்களுக்கு கடைசி நா ள் அன்று சிக்கன் பிரியாணி ஏற்பாடு செய்ய பட்டு உள்ளது ............ மஞ்சள் சட்ட minor அணிக்கு ஒரு பெரிய நாம கட்டி யும் ஏற்பாடு செய்ய பட்டு உள்ளது ..............

      Delete
    2. P.Karthikeyan : உங்கள் அணிக்கு இன்னும் சற்றே கூட்டணி பலம் சேர்த்திடலாமோவெனத் தோன்றுகிறது ! அந்தப் பக்கம் சிக்கன் பிரியாணி வாசம் மூக்கைத் துளைக்கிறதே !!

      Delete
  18. வாழ்த்துக்கள் சௌந்தர்

    ReplyDelete
  19. முடியல பயங்கர போட்டி என்னோட போட்டியே வெளியே வந்து விடும் போலிருக்கு! எனி வே நண்பர் படைகள் எப்போதுமே ஜெயிக்கற கட்சிதான் வாழ்க வளர்க என மனம் கனிந்து வாழ்த்துகிறேன் நண்பர்களே!

    ReplyDelete
  20. Congrats to Soundar and Udaykumar.
    - Karthikeyan

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!! சௌந்தர் & உதயகுமார்!

    விஜயன் சார் .. மீண்டும் "மதம் ஒரு வாசகர்" பகுதியை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் . மீண்டும் ஒரு நினைவூட்டல், ஈரோட்டில் நடக்கும் புத்தக திருவிழாவில் நமது புத்தக ஸ்டால் போடலாமே

    நண்பர்களே! முத்து காமிக்ஸ் இன் 100 வது இதழான "யார் இந்த மாயாவி ? " http://tamilcomicskadanthapaathai.blogspot.in/ -உங்கள் பார்வைக்கு ஒரு கண்ணோட்டம்

    ReplyDelete
    Replies
    1. I request you don't put any details other than muthu and lion comics here, basically when we start putting URL/link others also start following; some time this leads to someone to hack our site or put junk url. Please don't take it in different way.

      Delete
    2. Erode M.Stalin : "மாதம் ஒரு வாசகர் " பகுதியினைத் திரும்பவும் கொண்டு வருவது ஸ்வாரஸ்யமானதொரு suggestion ! விரைவில் அமல்படுத்திட்டால் போச்சு !!

      ஈரோடு புத்தகக் கண்காட்சி எந்தத் தேதிகளில் வந்திடுகின்றது ?

      Delete
    3. ஆனால் ஒரு குறிப்பிட்ட கேள்வி / பதில் பார்மேட்டில் சிக்காமல் (உதாரணம்: இங்கே கிளிக்குக!), கால் பக்கத்தில் போட்டோ, அரை பக்கத்தில் அவரவர் ஸ்டைலில் சுய குறிப்பு, இன்னுமொரு கால் பக்கத்துக்கு அவர் நமது இதழில் மிகவும் விரும்பிய, விரும்பும், எதிர்பார்க்கும் ஒரு விஷயம் இப்படி ஏதாவது எழுத சொல்லலாம்! :)

      Delete
  22. ஜூலை இறுதி மற்றும் அகஸ்ட் முதல் வாரம் வரை நடை பெறும் (10 நாட்கள் ) . ஈரோடு சுற்றயுள்ள அணைத்து மக்களுக்கும் ஒரு திருவிழாவாக இருக்கும் . தமிழ் நாட்டின் 3 வது பெரிய புத்தக திருவிழா .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் id க்கு லிங்க் அனுப்பி உள்ளேன்

      Delete
    2. ஈரோடு புத்தகக் கண்காட்சி நமது காமிக்ஸ் ரசிகர்களை இன்னும் எழுச்சி கொள்ள செய்யும் சார்! கண்டிப்பா அங்கே நம்ம பட்டறையை போட்டு பட்டையை கிளப்புங்க!

      Delete
  23. Tex vote 2 a pirinchathala oothikittaru...

    ReplyDelete
  24. Vote for prince !
    (piriyani udan mutdai undu)

    ReplyDelete
  25. I wish Dragon nagaram is best for next reprint. if Prince on first i also welcome him!

    ReplyDelete
  26. நான் இந்த முறை அனைத்து வேட்பாளர்களுக்கும் தலா 10 வோட்டுக்கள் மட்டும் அளிப்பதாக முடிவு செய்து விட்டேன். ஏனென்றால் டெக்ஸ், பிரின்ஸ், நார்மன், மற்றும் திகில் எல்லாமே எனக்கு வேண்டும்.

    ஆனால் 1 . டெக்ஸ் (டிராகன் நகரம்) 2 . பிரின்ஸ் 3 . நார்மன் 4 . கார்சனின் கடந்த காலம் (புக் என்கிட்டே இருக்கு இல்லையென்றால் இரண்டாமிடம் இதற்குத்தான்) 4 . திகில் இந்த வரிசையில் வந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  27. Tex total 174
    prince total 157

    tex rasikarkale...

    2 matham munputhan
    thalai vanki kuranku

    vanthathal immurai prince ku vote podunkal enrchu
    kettu kolkiren..!!

    ReplyDelete
  28. லயன் முத்து Complete Collection ஆர்டர் செய்துவிட்டேன்.

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள்!!! சௌந்தர் & உதயகுமார்!

    ReplyDelete
  30. Even though Norman comes 4th in this poll so far,once this story is published ,there will be huge request for his other stories to reprint .since many of our readers are not familiar with him , he is at this position.Personally i wanted this story to be first comics classic in 2013 in sync with pongal date as it was published as pongal special before

    ReplyDelete
  31. வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் நன்றிகள்...!

    ReplyDelete
  32. Wonderful to know some behind the scenes happenings.

    ReplyDelete