Friday, March 23, 2012

எனது Top 20 !


நண்பர்களே,

சென்ற வார நித்திரைக்கு ஈடு செய்யும் விதத்தில் இவ்வாரம் கொஞ்சமாச்சும் சுறுசுறுப்பாய் இயங்கிடுவோமே என்ற எண்ணம் தலைதூக்கியது ! So - இன்று முதல், இவ்வார இறுதி வரை - தினமும் ஒரு பதிவோடு உங்களை போட்டுத் தாக்குவதாக உத்தேசம்! Be warned guys !

இந்த வலைப் பதிவில் இது வரை அதீத ஆர்வத்தையும், கருத்துப் பதிவுகளையும் ஈட்டிய பெருமை - தலை வாங்கிக் குரங்கின் மறுபதிப்புப் பற்றிய அறிவிப்பே ! காமிக்ஸ் க்ளாசிக்ஸில் லயன், திகில் , மினி-லயன் மறுபதிப்பு செய்திடுவது பற்றிய proposalக்கு கிடைத்துள்ள உற்சாக வரவேற்பைத் தொடர்ந்து மூன்று மாத இடைவெளியில் நமது golden oldies இதழ்கள் மறுபதிப்பாய் வந்திடும்!

எந்தெந்தக் கதைகளை மறுபதிப்பு செய்திடலாம் என்பது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட choice ; ஒரு லிஸ்ட் இருந்திடுமென்பது உறுதி !  நினைவலைகளை பின்னோக்கி ஓடவிட்டால்..எனது டாப் 20 கதைகள் எவையாக இருக்குமென்று தெரிந்து கொள்ள எனக்கே ஆசை தோன்றியதின் பலனே இந்தப் பதிவும்..பட்டியலும் !



  • தயாரிப்பின் பொது 'பளிச்' என்று நினைவில் நின்றிட்ட கதைகள் ...
  • விற்பனையில் செம வரவேற்புப் பெற்ற இதழ்கள் .....
  • என்றும் ரசிக்கக் கூடிய ரகக் கதைகள்..... 
  • அது மட்டுமல்லாது நம்மிடம் எப்போதோ விட்டுத் தீர்ந்த இதழ்கள் ....


என்று நான்கு அளவுகோள்களைப் பயன்படுத்தி எனது தேர்வுகளை செய்திட்டேன் ! இதோ எனது லிஸ்ட் :

லயன் காமிக்ஸ் :



  1. மனித எரிமலை (இரும்புக்கை நார்மன் )
  2. டிராகன் நகரம் (டெக்ஸ் வில்லர்) 
  3. பழி வாங்கும் புயல் மர்ம எதிரி இதழில் வந்திட்ட மாடஸ்டி சாகசம்)
  4. ஒரு பனிமலை பயங்கரம் (காரிகன்)  
  5. கார்சனின் கடந்த காலம் (டெக்ஸ் வில்லர்)
  6. எமனுக்கு எமன் (யுத்தக் கதை)  
  7. மாஸ்கோவில் மாஸ்டர் (ஜான் மாஸ்டர்)
  8. எத்தனுக்கு எத்தன்   (ஸ்பைடர் )

பழி வாங்கும் புயல்  

திகில் :

  1. நரகத்தின் எல்லையில் (கேப்டன் பிரின்ஸ் )
  2. சைத்தான் துறைமுகம்   
  3. ப னிமண்டலக் கோட்டை 
  4. கறுப்புக் கிழவி ஸ்பெஷல் 
  5. சைத்தான் சாம்ராஜ்யம் (டெக்ஸ் வில்லர்)
  6. சிரித்துக் கொல்ல வேண்டும் (BATMAN)
  7. அப்பல்லோ படலம் (ப்ருனோ பிரேசில்)

மினி-லயன் :

  1. சூப்பர் சர்க்கஸ் (லக்கி லூக்)
  2. புரட்சித் தீ (லக்கி லூக்)
  3. பயங்கரப் பொடியன் (லக்கி லூக்)
  4. மினி லயன் சம்மர் ஸ்பெஷல் 
  5. காசில்லாக் கோடீஸ்வரன் (ரிப் கிர்பி)
நிச்சயமாக உங்கள் ஒவ்வொருவரின் லிஸ்டும் நிறைய மாறுபட்டு இருக்குமென்பது உறுதி ! இவை எனது மனதுக்குப் பிடித்த தேர்வுகள் தானே ஒழிய - இவை தான் மறுபதிப்புக்கான இறுதிப் பட்டியல் என்றோ..நமது பெஸ்ட் இதழ்கள் என்றோ கருதிடத் தேவை இல்லை !



உதாரணத்திற்கு - ஸ்பைடரின் "எத்தனுக்கு எத்தன்   " இதழைச் சொல்லலாம்...! அக்மார்க் 'காதுலே பூ' கதை இது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது - ஆனால் நமது லயனின் தலைவிதியையே மாற்றி அமைத்திட்ட ஒரு சாதனை இதழ் என்ற பெருமையில் எனது  டாப் 20 ல் இடம் பிடிக்கின்றது !  

மினி லயனின்  ம்மர் ஸ்பெஷல் எத்தனை பேருக்கு நினைவிருக்குமோ தெரியவில்லை...ஆனால் வெளி வந்து 2 வாரங்களுக்குள் இரு முறை reprint செய்திடும் அளவுக்கு அமர்க்களமாய் விற்பனையான இதழ் இது ! So  விற்பனையில் சாதனை செய்த பெருமை இந்தப் பட்டியலுக்குள் நுழைந்திடும் தகுதியைத் தருகின்றது !



உங்களின் தேர்வுகளை ஒரு லிஸ்டாக்கி..இங்கே பதிவு செய்திடுவதோடு lioncomics@yahoo.com என்ற நமது முகவரிக்கு ஒரு ஈ -மெயில் ஆகவும் அனுப்பிடக் கோருகிறேன் !  Happy List making !!

73 comments:

  1. டிராகன் நகரம் இதழை, சேலத்தில் ஒரு பழைய புத்தக கடையில் (1990 - இல் என நினைக்கிறேன்) ரூ.5/- கொடுத்து வாங்கினேன்! அந்த தள்ளு வண்டி / பிளாடபார்ம் கடைகளில் எக்க சக்க காமிக்ஸ் இருக்கும் - பொக்கிஷம்! ஆனால் வாங்க பணம் இருக்காது. இப்போது நினைத்தாலும் ஏக்கமாக இருக்கிறது :(

    ReplyDelete
    Replies
    1. Nanum niraiya book miss panni vitten
      ella lion minilion thigil kathaikalaiyum marupathippu seythal nanraka irukkum!..

      Delete
  2. தயவு செய்து காதுகளில் பூசுற்றும் கதைகள் வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. தற்காலிகமாக காதை கழற்றி வைத்து விட்டு, கால எந்திரத்தில் பின்னோக்கி பயணித்து ரசிக்க (முயற்சிக்க) லாமே :)

      Delete
    2. நான் மூளையைக் கழற்றி வைத்து விட்டு பாடையெந்திரத்தில் பயணிக்க தயாராக இருக்கிறேன், இன்னமும் எந்திரத்தில் சில இடங்கள் காலியாக உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன் :))

      Delete
    3. பயணிக்கவா இல்லை தூக்கவா? ;)

      Delete
    4. தூக்கினாலே அது பயணிக்கதான் ;)

      Delete
    5. >>பயணிக்கவா இல்லை தூக்கவா? ;)
      >>தூக்கினாலே அது பயணிக்கதான் ;)
      கவிதை :D

      இல்லை கனவுகளின் காதலரே, தூக்குபவர்கள் பாடையெந்திரத்தோடு (கவனிக்கவும்) திரும்பிவிடலாம்! பயணிகளோ ஒரு வழி சீட்டுதான் ;)

      Delete
    6. இந்த பாடையெந்திரத்தில் தூக்குபவர்களிற்கும் ஒன் வே டிக்கட்டுத்தான் ;)போவோமா ஊர்கோலம்.....

      Delete
    7. இந்த அர்த்த ராத்திரியில் தேமே என்று சோகமாக அலுவல் பார்த்து கொண்டு இருந்த எனக்கு கும்மி அடிக்க ஒரு ஆள் கிடைத்தது ரொம்ப சந்தோசம்தான் ;)

      போலாம் போலாம், ஆனா டிராப் செய்துவிட்டு ஹெலிகாரில் திரும்புவதாய் உத்தேசம். அடேய் ஆர்டினி, டீஸல் புல் டேங் அடிச்சு வை!

      Delete
    8. திருப்பமே கிடையாது....நேரே மேலே...:)

      Delete
    9. தன் எக்கினும் உறுதியான இழைகளால் ஸ்பைடர் ஆர்டினியை பாடையெந்திரத்தில் சக பயணிகளோடு பிணைத்தான். நரக பார்கிங் லாட்டில் இருந்த ஹெலிகாரை இயக்க வந்த ஸ்பைடர் அதிர்ச்சியில் கத்தினான்: ஆர்டினி, சாக்கடையில் நெளியும் அற்ப புழுவே - டீசல் போடா மறந்து விட்டாயடா பாவி!

      Delete
    10. ஆர்டினி என்ன சொல்றார்னா.....கோச்சுக்காத நைனா, ஜஸ்டு மிஸ்ஸு :)

      Delete
    11. இதற்கு மேல் கும்மி அடித்தால் ஆசிரியர் தம்மை சபித்து விட கூடிய வாய்பிருப்பதை உணர்ந்த ஸ்பைடர் தனக்குள் மெதுவாக முனகிக்கொண்டான் - விடு ஜூட் ;)

      தன் எக்கினும் உறுதியான இலைகளை கீழ் நோக்கி பீய்சியவாறு பூமி நோக்கி இறங்கலானான்!

      Delete
    12. ஹஸ்டா லா விஸ்டா பேபிய்.....

      Delete
    13. நானும் வரேன் போலாம்... ஊர்வலம் ;) ஆனாலும், வார்ட் வெரிபிகேஷன் டைப் அடிச்சு கும்மி அடிச்ச உங்க கடமை உணர்ச்சி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :)

      Delete
  3. Dear Vijayan:
    I hope you have not completely abandoned completing the reprint of the few remaining old Muthu issues like Nayagaravil Mayavi, uraipani marmam, beirutil johnny etc. I do like the idea of reprinting the Lion classics, but please do not completely forget the wishes of your oldest readers like me.

    ReplyDelete
  4. ஆசிரியர் அவர்கட்கு,

    சிரித்துக் கொல்ல வேண்டும் கதையை உங்கள் பட்டியலில் கண்டது ஒரு எதிர்பாராத ஆச்சர்யம் :) சிறப்பான முறையில் அக்கதையை நீங்கள் வெளியிட வேண்டும் என்பது என் அவா.

    ReplyDelete
    Replies
    1. கனவுகளின் காதலன் : BATMAN கதைத் தொடரினில் ஒரு அசாத்தியப் படைப்பாசே இந்த இதழ் ! இதை மறுபதிப்பாகிட பெரும்பான்மை வாசகர்களின் ஆதரவு நிச்சயம் இருக்குமென்றே நினைக்கிறன்.. !

      Delete
  5. நீங்க வெளிட்டுள்ள கதைகளில் பலவற்றை இன்னும் படித்ததில்லை. மினி லயன் கதைகள் அனைத்தையும் வெளியீடு செய்யலாம்.... கிளாசிக் மினி லயன் ?

    ReplyDelete
  6. என்னு​டைய லிஸ்ட்-
    லயன்-
    1. டிராகன் நகரம் (டெக்ஸ் வில்லர்)
    2. திக்கு ​தெரியாத தீவீல்
    3. இரும்பு மனிதன்
    4. ஒரு பனிம​​லை பயங்கரம்
    5. நீதி காவலன் ஸ்​பைடர்
    6. ​டேஞ்சர் டயபாலிக்
    7. ​வைகிங் தீவு மர்மம்
    8. அதிரடி கணவாய்

    திகில்-
    1. ​சைத்தான் சாம்ராஜ்யம்
    2. கடற்​கோட்​டை மர்மம்
    3. விண்​வெளி பிசாசு(ஸ்​பைடர் ​தொடர்க​தை)
    4. பயங்கர புயல்
    5. ​​கொ​​லைகார கானகம்
    6. சாகாஸ வீரன் பிரின்ஸ்
    7. முகமற்ற கண்கள்

    மினிலயன்-
    1. நடுக்கடலில் எலிகள்.
    2. எழூந்து வந்த எழூம்பு கூடு
    3. கா​மெடி கர்னல்
    4. ராஜா ராணி ஜாக்கி
    5. இரும்பு ​கொளபாய்

    ReplyDelete
    Replies
    1. இரும்புக் கெளபாய் ஓர் அருமையான படைப்பு, ஒரு காலத்தில் நான் சிரிக்க வேண்டுமென நினைத்தால் தேடி எடுத்துப் படித்திட்ட இதழ் அது. :)

      Delete
  7. ஆசிரியருக்கு, நல்ல தேர்வுகள்.

    ஏராளம் ஏராளமாக இதழ்கள் இருக்கும்போது எவற்றை மீள்பதிப்பு செய்வது என்பது தலையைப் பிய்த்துக்கொள்ளும் சமாச்சாரம். மீள் பதிப்புகளைச் செய்யும்போது பழைய வாசகர்களுக்கு அவை தங்களது கடந்த காலத்தை மீட்டிப்பார்க்க உதவுவதோடு, புதிய வாசகர்களுக்கு புதியதொரு அனுபவத்தைக் கொடுப்பவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    ஆச்சரியமாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் 'சம்மர்-ஸ்பெஷல்' இதழை மறுபடியும் எடுத்து வாசித்துப் பார்த்திருந்தேன். பார்த்தால், அது உங்களது லிஸ்ட்டில் வந்திருக்கிறது.

    BATMAN கதைகள் எப்போதும் நான் ரசிக்கும் கதைகள்! BATMAN கதைகளுக்கு பல ஆர்ட்டிஸ்ட்டுகள் பணியாற்றியிருந்தாலும் நீங்கள் தெரிவுசெய்து வெளியிட்ட கதைகளுக்கு பணியாற்றியிருந்த ஓவியர்கள் BATMAN ஐ உயிரும் சதையுமாக நிஜமாகவே எங்கள் முன் உலாவவிட்டிருந்தார்கள். அந்தச் சித்திரங்களோடு, உங்கள் மொழிபெயர்ப்பும் சேர்ந்துகொள்ள - அவையெல்லாம் நிஜமாகவே 'க்ளாஸிக்ஸ்'தான்! (இன்று ஆங்கிலத்தில் வரும் BATMAN கதைகளின் சித்திரங்களைப் பார்த்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்!)

    பௌர்ணமிப் பயங்கரம் என்ற பெயரில் ஒரு BATMAN கதை வந்ததுதானே? அதில் வில்லன் ஓநாயாக மாறும் தருணத்தில் மின்னல் தாக்க, அவன் காணமல்போய்விடுவான். அதன் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் இன்னுமொரு பாகம் வந்ததாக தெரிகிறது. தமிழில் அதனை நீங்கள் வெளியிட்டுவிட்டீர்களா? இல்லை, முதல் பாகத்தோடு முடித்துவிட்டீர்களா? இன்னுமொரு பாகம் வந்திருந்தால் இரண்டையும் சேர்த்து ஒரு மீள் பதிப்பு வெளியிடலாமே?

    திகில் இதழ்களில் ரிப்போர்ட்டர் ஜானியின் அந்தக் காலத்து கதைகள் அனைத்தையும் மீள்பதிப்பு செய்யவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கோரிக்கை. விறுவிறுப்பான கதைகள் அவை என்பதோடு - அந்தக் கதைகளின் சித்திரத் தரத்தை இன்றைய இளையவர்களும் பார்த்துப் பிரமித்து ரசிக்கவேண்டும் என்பது எனது ஆவல்!

    அச்சுத் தொழிநுட்பம் இன்றைய நவீன மாற்றங்களைக் கண்டிராத 90களில் பிரமிக்கத்தக்க தரத்தோடு நீங்கள் தந்த இதழ்கள் - ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!

    -Theeban (SL)
    (அனைவருக்கும் நன்றி!)

    ReplyDelete
    Replies
    1. சொல்ல தவறிவிட்டேன் லக்கியின் சூப்பர் சர்க்கஸ், புரட்சித் தீ - இரண்டும் கதைகள் மட்டுமல்ல - அற்புதமான நகைச்சுவை இலக்கியங்கள் அவை!

      அவற்றில் உங்கள் மொழிபெயர்ப்பு எனக்கு சிறுவயது தமிழ்ப்பாடம்!

      -Theeban (SL)
      (அனைவருக்கும் நன்றி!)

      Delete
  8. // இவ்வார இறுதி வரை - தினமும் ஒரு பதிவோடு உங்களை போட்டுத் தாக்குவதாக உத்தேசம்! Be warned guys ! //

    ஆவலுடன் காத்திருக்கிறோம் ;-)
    .

    ReplyDelete
  9. " பற்றி ஏறியும் பாலைவனம் " மிகச் சிறந்த கதை அதனை மறுபதிப்பு செய்யலாமே ( பனி மண்டலக் கோட்டைக்கு பதிலாக )

    ReplyDelete
    Replies
    1. Cibiசிபி : இறுதிப் பட்டியலின் தேர்வுக்குள் நிறைய மாற்றங்கள் எதிர்பார்த்திடலாம்...! Wait & Watch பாலிசி தான் !

      Delete
  10. காசில்லா கோடீஸ்வரனை உங்கள் லிஸ்டில் பார்த்தது இன்ப அதிர்ச்சி.

    ReplyDelete
  11. ஒரு சோகக்கதை (என்னுடையதுதான்)....

    நான் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தது "பழி வாங்கும் பாவை" லிருந்துதான். அதிலிருந்து லயன், முத்து, திகில் என்று 75 சதவித புத்தகங்களை படித்து பாதுகாக்க ஆரம்பித்தேன். 1998 ல் எனக்கு திருமணமானது, அப்போது என் மனைவியின் சொந்தக்கரர்களால் என்னுடைய அணைத்து காமிக்ஸ் பொக்கிஷங்களும் ஸ்வாகா ஆனது சில மாதங்களுக்கு (திருமணமான குஷியில் இருந்ததால்) பிறகுதான் தெரியவந்தது. அப்போது என் மனைவிடம் நான் காட்டிய கோபமும், சண்டையையும் இன்றும் மறக்காமல் மிரட்சியோடு சொல்லிக்கொண்டு இருக்கிறாள். அப்போது எதையோ பறிகொடுத்தவன்போல் இருந்தது, என் மனைவிடம் சில நாட்கள் பேசாமல் இருந்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது.

    இப்போது நான் ஒரு தனியார் நிறுவனத்தில் HR மேனேஜராக நல்ல நிலைமையில் உயர்ந்து இருக்கிறேன். ஆனால் என்கைவிட்டு போன காமிக்ஸ் பொக்கிஷங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே திரும்ப பெறமுடிந்தது.

    எனவே, திரு விஜயன் சார் எந்த காமிக்ஸ் மறுபதிப்பு செய்தாலும் வாங்குவதற்கு தயாராகவே இருக்கிறேன். ஆனால், ஒரேஒரு விருப்பம், ஆசை, மூன்று மாதங்களுக்கு ஒரு மறுப்பதிப்பு என்றில்லாமல், மூன்று, நான்கு கதைகளை ஒன்று சேர்த்து ரூபாய் 100 விலையில் சம்மர் க்ளாசிக்ஸ் ஸ்பெஷல், தீபாவளி க்ளாசிக்ஸ் ஸ்பெஷல் , பொங்கல் க்ளாசிக்ஸ் ஸ்பெஷல் என்று வெளிடலாமே.

    பேராசைதான் என்ன செய்வது...ஆசைக்கு அளவேது...

    ReplyDelete
    Replies
    1. P.Karthikeyan : 'வருத்தமில்லா வாலிபர் சங்கத் தலைவர்' பதவியிலிருந்து graduate ஆகி "குடும்பத் தலைவர்" எனும் பதவிக்கு வந்திடுவதில் உள்ள occupational hazards இவை !!

      சோகமே வேண்டாம்...உங்களது டாப் 20 தேர்வுகளுக்கு நிறையவே consideration தந்திடுவோம்...! அதே போலே சம்மர் க்ளாசிக்ஸ் ஸ்பெஷல், தீபாவளி க்ளாசிக்ஸ் ஸ்பெஷல் , பொங்கல் க்ளாசிக்ஸ் ஸ்பெஷல் என்று நிறையவே உசுப்பேற்றி விட்டிருக்கிறீர்கள் ....நிச்சயம் பிரமாதமான ஐடியா தான் !! பார்க்கலாமே !!

      Delete
    2. //சோகமே வேண்டாம்...உங்களது டாப் 20 தேர்வுகளுக்கு நிறையவே consideration தந்திடுவோம்...! அதே போலே சம்மர் க்ளாசிக்ஸ் ஸ்பெஷல், தீபாவளி க்ளாசிக்ஸ் ஸ்பெஷல் , பொங்கல் க்ளாசிக்ஸ் ஸ்பெஷல் என்று நிறையவே உசுப்பேற்றி விட்டிருக்கிறீர்கள் ....நிச்சயம் பிரமாதமான ஐடியா தான் !! பார்க்கலாமே !!//

      வாவ்....
      திரு விஜயன் சார், thanks for your reply
      நன்றி..... நன்றி.... நன்றி.....

      Delete
    3. விஜயன் சார்,

      நீங்கள் இது போன்ற ஸ்பெஷல் இதழ்கள் (ரூபாய் நூறு விலையில்) ஏன் மாதம் தோறும் வெளிவிடக்கூடாது ?

      ஒரு மாதம் - லயன் ஸ்பெஷல்
      மறு மாதம் - முத்து ஸ்பெஷல்
      அடுத்த மாதம் - க்ளாசிக்ஸ் ஸ்பெஷல்

      மீண்டும்

      ஒரு மாதம் - லயன் ஸ்பெஷல்
      மறு மாதம் - முத்து ஸ்பெஷல்
      அடுத்த மாதம் - க்ளாசிக்ஸ் ஸ்பெஷல்

      நண்பர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு சொல்வார்கள் என எதிர் பார்க்கிறேன் :)

      அன்புடன்
      நாகராஜன்

      Delete
    4. Yes definitely yes

      Delete
    5. திரு கார்த்திகேயன் அவர்களே,

      உங்கள் அனுபவம் எனக்கும் நேர்ந்து விட்டிருக்கிறது. எண்பதுகளின் இறுதியில் காமிக்ஸ் படிப்பதிலிருந்து விலகி வந்து விட்டிருந்தாலும் (எப்படி என்று நினைவில் இல்லை - எப்படி இருந்தாலும் விரும்பி அல்ல என்பது மட்டும் உறுதி), 2003 ம் வருடம் மறுபடி ஒரு நடைபாதை கடையில் எதேச்சையாக சிங்கத்தை பார்த்த போது நீண்ட நாள் பிரிந்திருத்த ஒரு நெருங்கிய நண்பனை நேரில் சந்தித்த மகிழ்ச்சியில் திளைத்தேன். அன்றிலிருந்து மறுபடி நாங்கள் இணைந்து, அதற்கு பின்னால் எல்லா முன் வெளியீடுகளையும் இரு தவணைகளாக வாங்கி (அப்போது நான் என்னுடைய முதுகலைப் படிப்பில் இருந்ததால் இரு தவணைகளாக வாங்கும் அளவுதான் என் நிதி நிலை) இந்த நீரோட்டத்தில் கலந்து கொண்டிருந்தேன்.

      2009 ல் திருமணம். மூன்று வருடங்களுக்கு முன், அலுவல் நிமித்தமாக வீடு மாற்றியபோது புத்தகங்கள் மனைவி வீட்டில் தஞ்சம் பெற்றன. சென்ற வருட விடுமுறைக்கு மாமனார் வீட்டிற்கு விஜயம் செய்த போது சில புத்தகங்கள் நான் வைத்திருந்த இடத்தில் இல்லை.

      உங்களின் முதல் பத்தியின் கடைசி நான்கு வரிகள் எனக்கும் அப்படியே நடந்தன.

      ஆனால் நல்லவேளை, அந்த புத்தகங்கள் வேறொரு பையில் பத்திரமாக இருக்கின்றன என்று சொன்ன பிறகுதான் நான் என் மனைவியுடன் சமாதானம் ஆனேன்.

      கிளறி விட்டதற்கு நன்றி, நண்பரே.

      அன்புடன்,
      இரா. ம. ஆனந்த்.

      Delete
    6. மன்னிக்க வேண்டும், திருமணம் நடந்தது 2008 ல். வழக்கம் போல மறந்து விட்டேன். இது என் மனையாளின் கண்ணில் படப்போவதில்லை என்பதால் மிகப்பெரிய எஸ்கேப்.

      அன்புடன்,
      இரா. ம. ஆனந்த்.

      Delete
  12. Sir, Muthu comics list please.Dont miss muthu releases.Mayavi,Lawrence and David-Three evergreen heroes.Please...please

    ReplyDelete
  13. சிறு வயதில் வீட்டில் சுழல் நூலகத்தில் (circulatory library) புத்தகம் போடுவார்கள். நானும் எனது அக்காவும் போட்டி போட்டுக் கொண்டு காமிக் புத்தகங்கள் படிப்போம். லயன், முத்து, மினி-லயன், திகில் என ஏராளம் படித்திருந்தாலும் எதுவுமே கையில் இருக்காது. இன்று நினைத்தாலும் ஏக்கமாக இருக்கிறது… பழைய காமிக்குகளை மறு-பதிப்பு செய்வது என்னைப் போன்றவர்களுக்கு வரப் பிரசாதம்… எத்தனை புத்தகங்கள் மறு-பதிப்பு செய்தாலும் எனக்கு சந்தோஷமே. சீக்கிரம் செய்யுங்கள். என்னைப்போல் சந்தா கட்டியுள்ளவர்களுக்கு சந்தா எப்போது முடிகிறது என ஒரு நினைவூட்டல் செய்தல் நலம். உடனே புதுப்பித்து விடுவோம். சந்தா புதுப்பிக்க மறந்து போய் இதழ்கள் எதையும் விட்டு விடுவோமோ என கவலையாக இருக்கிறது.

    ReplyDelete
  14. விஜயன் சார்,

    நீங்கள் இது போன்ற ஸ்பெஷல் இதழ்கள் (ரூபாய் நூறு விலையில்) ஏன் மாதம் தோறும் வெளிவிடக்கூடாது ?

    ஒரு மாதம் - லயன் ஸ்பெஷல்
    மறு மாதம் - முத்து ஸ்பெஷல்
    அடுத்த மாதம் - க்ளாசிக்ஸ் ஸ்பெஷல்

    மீண்டும்

    ஒரு மாதம் - லயன் ஸ்பெஷல்
    மறு மாதம் - முத்து ஸ்பெஷல்
    அடுத்த மாதம் - க்ளாசிக்ஸ் ஸ்பெஷல்


    நண்பர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு சொல்வார்கள் என எதிர்பார்க்கிறேன் :)

    அன்புடன்
    நாகராஜன்

    ReplyDelete
  15. ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கு...

    உங்களது பட்டியலில், காரிகனின் "ஒரு பனிமலைப் பயங்கரம்" உள்ளது குறித்து மகிழ்ச்சி .

    அது மறுபதிப்பாய் வெளிவர வேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. என் ஆசையும் இதுதான், பசுமையாக என்றும் என் நினைவில் நிற்கும் காமிக்ஸ்களில் இது முதன்மையானது.

      Delete
  16. Batman வரிசையில் "சிரிக்கும் மரணம்" என்றொரு இதழ் உள்ளது அல்லவா.. ??

    அருமையான கதையோட்டம் கொண்ட இதழ் அது..!

    ReplyDelete
  17. விஜயன் சார்,

    //கார்சனின் கடந்த காலம் (டெக்ஸ் வில்லர்)//

    கார்சனின் கடந்த காலம் இரண்டு பாகங்களாக வெளி வந்தது (லயன் #131, #132).

    மறுபதிப்பில் இரண்டும் ஒரே புத்தகத்தில் வெளிவருமா ?

    நாகராஜன் S

    ReplyDelete
  18. //இவ்வார இறுதிவரை தினமும்//
    இன்று வெள்ளி, இவ்வார இறுதி என்பது சனி!
    -அப்ப இரு தினங்கள் மட்டும்தானா?

    ReplyDelete
    Replies
    1. சனிக்கிழமைக்கு வலைப்பதிவு வரவேயில்லை.

      Delete
  19. Nallathu Sir, waiting for the list :-)

    ReplyDelete
  20. Dear Editor&Staff,

    every 3 months breaks our heart.i know this is not a easy task.but i am a greedy comics lover
    please do something "EVERY MONTH".i am sure all the fans will book in advance say 6 months to give you some measure of it.

    Regards

    Aldrin Ramesh from Muscat

    ReplyDelete
    Replies
    1. Dear Aldrin

      Thanks for your support .... Hope Mr. VIJAYAN will consider our request.

      Nagarajan

      Delete
  21. டாப் 20 ல் நான் ரசித்த பல கதைகளும் அடக்கம் என்பதில் மகிழ்ச்சியே. வரிசை போடும் படி அனைத்து லயன் முத்து கதைகளையும் நான் படித்ததில்லை என்பதால், நண்பர்கள் வரிசைகளையும், இறுதி எடிட்டரின் ரிபீரின்ட்டுகள் அறிவிப்பையும் படிக்க ஆவலுடன் காத்திருப்பேன்.

    ReplyDelete
  22. பேசாம சீட்டு குலுக்கி போட்டு செலக்ட் பண்ணிரலாம்னு தோணுது! :D

    ReplyDelete
  23. சபாஷ் சரியான போட்டி ....... ஆசிரியருக்கு இருக்கும் பிறை நிலா அம்மாவாசை ஆகிட போகுது .......

    ReplyDelete
  24. சார், எப்படியும் உங்களுடைய சாய்ஸ்வுடன் வாசகர்களின் சாய்ஸ் குறைந்தது 10 தாவது ஒத்துப்போகும். நான் படித்தவற்றில் இருந்து என்னுடைய சாய்ஸ்:
    லயன் காமிக்ஸ்: டிராகன் நகரம், பழி வாங்கும் பொம்மை, கார்சனின் கடந்த காலம், மந்திர ராணி, பழிக்குப் பழி (டெக்ஸ் வில்லர்)
    திகில் காமிக்ஸ்: மர்மக்கத்தி, பனி மண்டலக் கோட்டை, பழி வாங்கும் புயல், ஓநாய் மனிதன், மரணத்தின் பல முகங்கள்,
    மினி லயன் காமிக்ஸ்: புரட்திதீ, காசில்லாக் கோடிஸ்வரன்.....
    இப்போதைக்கு இவ்வளவுதான், இன்னும் கொஞ்சம் மூளையைக் கசக்கிவிட்டு வருகிறேன்!
    அப்படியே ஐந்து, ஆறு கதைகளை காமிக்ஸ் கிளாச்சிக்-ல் மொத்தமாக சேர்த்து ரீப்ரின்ட் ஸ்பெஷல் வெளியீடுகள் வெளிட்டால் சூப்பராக இருக்கும்? எதிர்பார்க்கிறோம் ...

    ReplyDelete
    Replies
    1. Dear MH Mohideen

      Thanks for your comment and suggestion .... Hope Mr. VIJAYAN will consider our request and release Classic Special Edition ASAP :)

      Nagarajan

      Delete
  25. சூப்பர் ஐடியா என் வசம்! மாதம் இரண்டு இதழாக, ஒரு இதழில் ஐந்து கதையாக, எல்லாவற்றையும் ரீபிரிண்ட் செய்தால் போயிற்று! ஒரு இதழ் விலை Rs.50, எப்படி?

    ReplyDelete
  26. Tex special .
    Tiger special.
    Luky luke special
    Spider special.
    Each 100 rs every month .
    We have to finalise top 5 or 10 stories for each
    Special

    ReplyDelete
  27. ஆசிரியருக்கு,

    நீங்கள் கொடுத்துள்ள லிஸ்டில் பல கதைகளை நான் இன்னமும் படித்திடவில்லை என்பது கொஞ்சம் சோகமான விடயம் தான் ஆனால் நான் படித்திட்ட கதைகளில் பின்வரும் கதைகள் மீள் பதிப்பாக வருவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே....

    01. டிராகன் நகரம்
    02. ஒரு பனிமலை பயங்கரம் (காரிகன்)
    03. கார்சனின் கடந்த காலம் (டெக்ஸ் வில்லர்)
    04. சிரித்துக் கொல்ல வேண்டும் (BATMAN)
    05. பயங்கரப் பொடியன் (லக்கி லூக்)
    06. காசில்லாக் கோடீஸ்வரன் (ரிப் கிர்பி)

    ReplyDelete
  28. sir, pl consider cap prince patri eriyum palivanam with colour&cap prince special 3 stories with colour for 100rs.thank u sir.dr.sundar,salem

    ReplyDelete
  29. you published ஸ்பைடரின் "எத்தனுக்கு எத்தன் just recently in comics classics. why reprint it again? there are so many stories that havent been reprinted in ages.

    ReplyDelete
  30. Editor just listed his favorites collection. It doesn't mean that he would reprint all. He might reprint few from the list.

    ReplyDelete
  31. ஸ்பைடரின்
    "எத்தனுக்கு எத்தன story rajini kanth in patsha padam pola ethanai murai venumnalum padikalam! Pls sir reprint that again!

    ReplyDelete
  32. கிட்டத்தட்ட 1990 -களின் தொடக்கத்தில் வெளியான ஸ்பைடர்-ன் "எத்தனுக்கு எத்தன்" இதழை 6 -ம் வகுப்பு பொடியனாய் கைகளில் ஏந்தி புரட்டி படித்து என் நினைவலைகளில் இன்னும் உள்ளது. Hats Off to You விஜயன் சார்!

    ஆவலுடன் அனைத்தையும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்!

    ReplyDelete
  33. 1. நடுக்கடலில் எலிகள்.
    2. எழூந்து வந்த எழூம்பு கூடு
    3. கா​மெடி கர்னல்
    4. ராஜா ராணி ஜாக்கி
    5. இரும்பு ​கொளபாய்

    ReplyDelete
  34. tex viller stories are superb along with modethy balaise i still remember those golden days

    ReplyDelete
  35. hi vijay,
    how can i buy your books in sri lanka, im from kandy, please give me reply or zenith_333@yahoo.com

    ReplyDelete
  36. When editor makes a list in 2021, the 2012 list may look கெக்கேபிக்கே

    ReplyDelete
  37. Reprints are always in demand for lion Muthu even after 12 years.

    ReplyDelete