Sunday, March 25, 2012

மறுபதிப்புக்கு மரியாதை !


நண்பர்களே,

வாணவேடிக்கைக்கு சிவகாசி தான் பிரசித்தம் என்று நினைத்தேன்...ஆனால் "மறுபதிப்பு" என்ற topic துவங்கியது முதல் உங்களின் வரவேற்பு நிஜமாகவே அதிரடி ரகம் தான்!...ஏராளமான பதிவுகள்...ஈ-மெயில்கள் ;ஐடியாக்கள் ;நேற்றைக்குப் பின்னிரவில் செய்த பதிவுக்கு அதற்குள் 700 + கண்ணோட்டங்கள் என்று அசரச் செய்யும் உற்சாகத் தோரணம் ! Phew !! நிஜமாகவே மண்டையைப் பிறாண்டிக் கொண்டு தான் இருக்கிறேன் ...உங்கள் ஆர்வத்துக்கு ஈடு கொடுக்க வழிகள் தேடி !  

இங்கே பலரும் கோருவது போல், மறுபதிப்புகள் அடிக்கடி வெளியிடுவது என்பது ஒரு possibility தான்...ஆனால் நடைமுறையில் உள்ள பிரச்னைகளை சிறிது சிறிதாய் களைந்து கொண்டே வந்திட சற்றே அவகாசம் நமக்குத் தேவை!

தற்சமயம் நேரடி விற்பனை என்பதால்...நமது விற்பனை எண்ணிக்கை இன்னும் சற்றே கூடிட வேண்டும். ஆங்காங்கே உள்ள பெரிய நகரங்களில் உள்ள தரமான புத்தகக் கடைகளுக்கு இதழ்கள் அனுப்பிடவும் முயற்சித்துக் கொண்டுள்ளோம் ! அது நடைமுறை ஆகிட்ட பின்னே இன்னும் சற்றே தைரியமாக செயல்பட்டிடலாம் !

அது தவிர எங்களது தயாரிப்பு ஏற்பாடுகள் இப்போது தான் சிறுகச் சிறுக இந்தப் புதிய பாணி...கம்ப்யூட்டர் மூலம் வண்ணச் சேர்க்கை ...வண்ண அச்சு ....என்பதற்குப் பரிச்சயமாகி வருகின்றன ..! "திடும்" என ஒரே நாளில் இதழ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதென்பது அவர்கள் தலையில் நியாயமற்ற சுமையை ஏற்றியது போலாகிடும் ! So எங்களது backroom strength சற்றே பலப்படுத்தி விட்டு நம் வேகத்தை அதிகரிப்பது சரியாக இருந்திடும் என நினைக்கிறேன் !

எல்லாவற்றிற்கும் மேலாக, காற்றில் கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிராமல்...சொல்வதை இம்முறை தப்பாமல் சாதித்துக் காட்ட வேண்டுமென்ற ஒரு உத்வேகம் என்னுள் ! "வந்தோமா..வீராவேசமாய் ரெண்டு பஞ்ச் டயலாக் விட்டோமா '..அப்புறம் காணமல் போனோமா என்ற கதையே இனி வேண்டாம் என்பதில் உறுதியாய் இருக்கிறேன் !

ஒன்று மட்டும் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும் ! இவ்வருடத்தின் நடுப்பகுதி வரை சற்றே பொறுமை காட்டுங்கள் guys! உங்களை திக்குமுக்காடச் செய்யும் அறிவிப்புகள்..அதிர்வேட்டுக்கள் தயாராகி வருகின்றன ! நிச்சயம் disappoint ஆக மாட்டீர்கள் !

அப்புறம் காமிக்ஸ் க்ளாசிக்ஸ் அடுத்த மறுபதிப்பு என்னவென்று இப்போது இங்கே பார்த்தாலென்ன ?


"ஸ்பெஷல்" இதழ்களாக க்ளாசிக்ஸ் வெளியிடுவது பற்றிய உங்களின் சிந்தனைகள் நிஜமாகவே சூப்பரானதொரு concept தான்..!

So அடுத்த மறுபதிப்பு - எனது லிஸ்டிலும் சரி ..உங்கள் எவரின் லிஸ்டிலும் சரி. வந்திடாத 3  இதழ்களின் ஒரு combo !! நமது ஆரம்ப திகில் காமிக்ஸின் இதழ் 1 ; 2 & 3 - மூன்றையும் ஒன்றிணைத்து "திகில் க்ளாசிக்ஸ் " என்ற பெயரில் அதே ஒரிஜினல் (பெரிய) சைசில் வெளியிட நினைத்துள்ளேன் !

திகில் இதழ் # 1 முன் அட்டை 



1986 ஜனவரி..பிப்ரவரி & மார்ச்சில் இந்த இதழ்கள் பெரிய சைசில் Rs 3 விலையில் வெளியாகின ! ஒரு முழுநீளத் திகில் சித்திரக் கதை....சின்னச் சின்ன 4 -6 பக்கத் திகில் சிறுகதைகள்...அமானுஷ்ய சங்கதிகள்..கட்டுரைகள் என்று ஒரு வித்தியாசமான கலவையாக இந்த இதழ்கள் அமைந்திருந்தன !

பெரிய சைசுக்கும் சரி...மூன்று ரூபாய் விலைக்கும் சரி ...இந்தக் கதம்பம் போன்ற கதைக் கலவைக்கும் சரி..அப்போது ரொம்பவே சுமாரான வரவேற்பு ! So 'துண்டைக் காணோம்' 'துணியைக் காணோம்' என்ற கதையாக டபக்-கென்று இதழ் நம்பர் நான்கு முதல் நமக்குப் பரிச்சயமான முழுநீளக் கதை என்ற பார்முலாவுக்கே திரும்ப வேண்டியதாகிப் போச்சு ! இன்னமும் கூட அப்போதைக்கு வந்த சில வாசகர் கடிதங்கள் எனக்கு நினைவில் உள்ளது !! "பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது போல் துண்டும் துக்கடாவுமாய் இதழ் உள்ளதாய் கூட ஒரு நண்பர் எழுதி இருந்தார் ! அந்தக் காலத்தில்..அந்த வயதில் ஒரு சறுக்கலை சமாளிக்கும் உறுதி அவ்வளவாய் கிடையாதென்பதால் ரொம்பவே தளர்ந்து போனேன் !

பின் அட்டை 
என்னை சந்தித்திடும் நமது வாசக நண்பர்களுக்கு எனது இந்தத் தேர்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்திடாது என்று தான் நினைக்கிறேன்! பலரிடமும் நான் பகிர்ந்து கொண்டிடும் விஷயம் தான் இது ! எனக்கு மனசுக்குப் பிடித்த இதழ்களின் பட்டியலில் இந்த முதல் மூன்று திகில் இதழ்களுக்கும் ரொம்பவே நெருக்கமான இடம் உண்டு !


அதிலும், திகில் இதழ் 1 ல் வந்திட்ட ஜெட் வீரர் லோகனின் அசாத்தியத் த்ரில்லர் உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்குமோ தெரியவில்லை..! எனது ஆல்-டைம் favorite கதைகளில் அதுவும் ஒன்று ! Fleetway நிறுவனத்தின் வெளியீடான இந்தக் கதை "Seven Went to Sirius" என்ற தலைப்பில் 1962 ல் வந்திட்டது !


முதல் முறை நான் இந்தக் கதையைப் படிக்க வாய்ப்புக் கிட்டியது நான் 10th விடுமுறையின் போது என் தந்தையுடன் டெல்லி சென்றிட்ட போது ! போகும் ஊரில் எல்லாம் நிறையப் புத்தகக் கடைகளைப் பரிச்சயம் செய்திருக்கும் வழக்கம் என் தந்தைக்கு உண்டென்பதால் இஷ்டத்துக்கு புத்தகங்களை உருட்ட அனுமதிப்பார்கள் ! Connaught circus க்கும் ஜன்பத்-க்கும் இடையில் உள்ளதொரு பெரிய புத்தகக் கடையின் பரணில் இருந்து பழைய ஸ்டாக் காமிக்ஸ்களை நான் துளாவும் போது சிக்கியது இந்த இதழ் ! பல ஆண்டுகள் கழித்து அதே கதையை மொழிபெயர்க்கும் பொது ரொம்பவே ரசித்து எழுதியது நினைவில் உள்ளது ! இது தவிர இதழ் # 3 -ல் வந்திட்ட "பயங்கரப் பூனைகள்" கதையும் அட்டகாச விறுவிறுப்பு ! முதல் முறையாக இந்த இதழ்களைப் படிக்கப் போகும் நண்பர்கள் மெய்மறக்கப் போவது உறுதி !! மே இரண்டாம் வாரத்தில் இதழ் கிடைத்திடும் !

இந்த "திகில் க்ளாசிக்ஸ்"மறுபதிப்பு  எனக்கும் சரி..உங்களுக்கும் சரி..நிச்சயம் நிறைவானதொரு இதழாக இருக்குமென்ற ஆசையில் இப்போதைக்கு கும்பகர்ணனின் லோகத்தைத் தேடிச் செல்கிறேன் !மீண்டும் ஒரு பதிவோடு சந்திக்கும் வரை ..adios people !



218 comments:

  1. Replies
    1. Ithu mathiri anaithu marupathippum 4 5 kathaikalaka serthu podalam...

      Delete
  2. Thigil 1 2 3 SUPER kandippaka coloril podunkal vilai RS 150 vaithalum OK than...

    ReplyDelete
  3. அருமை...சார் இந்த வருடம் கோடைமலர் இல்லையா சார்?

    ReplyDelete
    Replies
    1. Thigil 1 2 3 than intha varuda kodai malar

      Delete
    2. Vijayan Mar 24, 2012 09:33 PM

      Super Hero Super Special - Rs.100 - May'12

      Delete
  4. ஆசிரியருக்கு, நீங்கள் குறிப்பிட்டதுபோலவே ஆரம்ப திகில் இதழ்கள் என்னையும் ஈர்த்தவைதான்!

    ஜெட் லோகனின் சாகசத்தோடு வந்திட்ட முதல் இதழ் தொடங்கி அநேகமாக திகில் இதழ்கள் என் சேகரிப்பில் இருந்தன. நாட்டின் சூழ்நிலை - என் சேகரிப்பைக் கபளீகரம் செய்தபோது அவற்றில் பெரும்பாலானவை அழிந்துபோய்விட்டன. மீண்டும் அவற்றை வெளியிடுவது என்பது இதழ்களை தவறவிட்ட என்னைப்போன்ற வாசகர்களுக்கு உற்சாகம்தரும் செய்தி. மிக்க நன்றி.

    பயங்கரப் பூனைகள் கதையும் சித்திரங்களும் மனக்கண் முன் உலாவ ஆரம்பித்துவிட்டன.

    ரிப்போர்ட்டர் ஜானியின் ஆரம்ப திகில் இதழ்களை மீள்பதிப்பிக்கவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். ஏனைய நண்பர்களும் அதை ஆதரிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    Theeban (SL)

    ReplyDelete
    Replies
    1. Yes
      jhony mattm alla
      anaithu LION MINILION THIGIL kathaikalum marupathippu seiya vendum,..

      Delete
  5. அவ்...கறுப்பிகிழவியின் க​தைகள்...இ​தோ புகழ்​பெற்ற வசனங்கள்----

    - யாருக்கும் ​தெரியாமல் என்று நாம் ​செய்கிற காரியங்க​ளை ஆவிகள் கவனித்து ​கொண்டு தான் இருக்கின்றன என்றாகிவிட்டது பாருங்கள் ஜாக்கிர​தை! ஹி! ஹி! ஹி!

    -ஆவிகளுக்கும் மனுஷங்க​ளைப் ​போல ஆசாபாசங்கள் உன்டுன்னு நான் ​சொன்னா அ​தைக்​​​கேட்டு நீங்க சிரிப்பீங்க! ஆனா இந்தக் க​தை​யை படிச்சுட்டு பிறகு ​சொல்லுங்க உங்க அபிப்ராயத்​தை!

    -எல்​ஜெப்பின் திடீர் மரணத்​தையடுத்து அந்தத் தீவில் அச்சமும், பீதியும் விலகி, சுதந்திரக்காற்று மீண்டும் வீசத்​தொடங்கியது .. ஆர்லன்​டோவின் பூத உடல் பு​தைக்கப்பட்டாலும் அவனு​டைய ஆவி அமரத்துவம் ​பெற்றது! இறந்தவனு​டைய ஆவி அமரத்துவம் ​பெற்றது! இறந்தவ​னைக ​கொன்றால் இப்படித்தான்- எதிர்பாராத வி​ளைவுகள் சம்பவிக்கும்-ஹி-ஹி-ஹி

    ReplyDelete
    Replies
    1. மறக்க முடியுமா அவளது வார்த்தைகளையும் அறிவுரைகளையும் ???
      மிக மிக அருமையான முறையில் மொழி பெயர்க்கப்பட்டவை ஆயிற்றே?

      Delete
    2. இதுவரை படித்ததில்லை .... மே மாதம் நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன் ....

      நாகராஜன்

      Delete
  6. சார், சும்மா அடித்து பட்டையைக் கிளப்புங்க... திகில் வெளியீடுகள் 1 - 5 நான் கேள்விபட்டதுடன் சரி, மற்றப்படி படித்தோ, பார்த்தோ உணர்ந்தவன் அல்ல. அவை இப்போது மறுபதிப்பில் வருவது அறிந்து, வார்த்தைகளால் என்னவென்று சொல்வது! speechless , mind blowing நியூஸ். நான் ஒன்று மட்டும் தான் சொல்கிறேன் ...now I am back to past . நான் தொலைத்த வயதோடு 80 's க்கு செல்ல முடிவுபண்ணிவிட்டேன்...!

    ReplyDelete
    Replies
    1. "நான் தொலைத்த வயதோடு 80 's க்கு செல்ல முடிவுபண்ணிவிட்டேன்...!"

      good words

      Delete
  7. sir, this yr kodimalar-cap tigar in&as thanga kallari in colour or tex any big stories r possible? r any kodimalar possible in this year?-dr.sundar,salem

    ReplyDelete
    Replies
    1. Super Hero Super Special - Rs.100 - May'12

      Delete
    2. Vijayan Sir

      Super Hero Special was supposed to come in April ..right?Why the delay now?(May)

      Also, any update on Thalaivangi kurangu? Its supposed to be reaching us from 26th march(monday) onwards....

      pls reply.

      Delete
    3. மே மாதம் நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன் ....

      Delete
  8. Great news. Please include all the covers . The back cover may be printed as the back page of each front cover. You know that we give importance to the covers also.

    ReplyDelete
  9. நல்லதொரு முடிவு, நான் படித்து ஆனால் கைகளில் இல்லாத இதழ்களில் திகில் இதழ்களும் உள்ளடங்கும். இதற்கான முக்கிய காரணம் உங்களது ஆரம்ப கால இதழ்களை நான் நூலகத்தின் உதவியுடன் படித்தமையே.....

    அன்று படிக்க முடிந்த இதழ்களை இனி கைகளில் ஏந்தலாம் என்பதே மகிழ்ச்சியான விடயம் தானே. :)

    ReplyDelete
  10. Good to see this:
    http://discoverybookpalace.com/categories.php?category=Tamil-comics

    You can also try flipkart, landmarkonline etc!

    ReplyDelete
  11. Excellent news sir...
    Reprints are very much needed.
    Most of us still want to read those old books again (pure nostalgia)..
    And it would be safe bet than new comics..
    Dreaming to get all the good books via reprints again...
    (Like listening those old good songs again and again)

    ReplyDelete
  12. thanks sir.Thank u for your reply.in super hero special any prince story in colour? dr.sundar,salem.

    ReplyDelete
  13. அருப்புக்கோட்டை சரவணன்25 March 2012 at 16:26:00 GMT+5:30

    ஆஹா… அசத்திப்புட்டீங்க சார்… முதல் மூன்று திகில் காமிக்ஸ் ஒரே இதழாவா… சூப்பர். இந்த மே இரண்டாம் வாரம் எப்பப்பா வரும்… மறக்காம எனக்கு அனுப்பிடுங்க…

    ReplyDelete
  14. கறுப்புக் கிழவியின் கதைகள் அருமையான செலக்‌ஷன். நன்றிகள் பல. ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தாயிற்று. இப்பொழுது படித்தாலும் சில கதைகள் சில்லிட வைக்கும் கிளாசிக் த்ரில்லர்.

    ReplyDelete
  15. Your post made me count the days to get that book. Please expedite the process and let us get that book asap....
    Regards,
    Mahesh kumar .S

    ReplyDelete
  16. Your post made me to count the days, to get that book. Please expedite the process and let us get that book asap....
    Regards,
    Mahesh kumar .S

    ReplyDelete
  17. Irathak katteri marmam
    saithan veedu
    pisasuk kugai
    thalaimurai ethiri
    pondra kathikalai padikka aasai!

    ReplyDelete
  18. old book stall's la irunthu collect panni padichirukken...bayangara poonaigal...its an awesome thriller..didnt get a chance to read the rest..thanks for providing us...if possible..print them in colour..it will be nice

    ReplyDelete
  19. “Best of the Best” என்ற Series ல் – ரூ25/ விலையில் - புதியதொரு சைஸில் – ஒவ்வொரு Top ஹீரோவின் 3 முத்தான கதைகளைத் திரட்டி வெளியிடவிருக்கிறோம். முதல் இதழ் - 3 டாப் மாயாவி கதைகளைத் தாங்கி வந்திடும். -என்று ஆசிரியர் அவர்கள் காமிக்ஸ்-டைம்-ல் எழுதியி‌ருந்தார்.

    சமீபத்தில் தமிழ் திரைப்பட உலகம் திரு சிவாஜி கணேசன்நடித்த பழைய ‘கர்ணன்” படத்தை புதிய தொழில்நுட்ப உதவியுடன் மெருகூட்டி வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து பல பழைய தமிழ் திரைப்படங்கள் இதுபோல் வரவிருக்கின்றன.

    எனவே காலத்திற்கேற்ப பழைய தரமானவை புதிய தொழில்நுட்பத்துடன் வெளியிடப்பட்டால் வெற்றி நிச்சயம்.

    ஆசிரியர் எப்படி வெளியிட்டாலும் தரமானவையாகவே இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமான வெற்றி தரக்கூடிய கதைகளை செலக்ட் செய்வது என்பது உங்களுக்கு கை வந்த கலை சார். என்னதான் பழையவை என்றாலும் காலத்தை கடந்து வாழக்கூடிய பல விஷயங்கள் நமது உலகில் இருக்கத்தான் செய்கின்றன. நமது லயன் குழுமம் வாழ்வாங்கு வாழும் நிலைத்து நிற்கும் நாங்கள் என்றும் ஆதரவு கொடுப்போம்.

      Delete
  20. 'தலை வாங்கி குரங்கு' யாருக்கேனும் கிடைத்தா?

    ReplyDelete
    Replies
    1. இல்லை நண்பரே, அனேகமாக செவ்வாய் அல்லது புதனிலிருந்துதான் dispatch பண்ண ஆரம்பிப்பார்கள் என்று நினைக்கிறேன். திரு விஜயன் சார்தான் சொல்லவேண்டும். மற்றபடி நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

      Delete
  21. "திகில் க்ளாசிக்ஸ் ஸ்பெஷல்" வரவேற்கிறேன்

    ReplyDelete
  22. "திகில் க்ளாசிக்ஸ் ஸ்பெஷல்" வரவேற்கிறேன்

    ReplyDelete
  23. இதேபோல் மூன்று அல்லது நான்கு கதைகளை ஒன்றுசேர்த்து "லயன் க்ளாசிக்ஸ் ஸ்பெஷல்" "மினி லயன் க்ளாசிக்ஸ் ஸ்பெஷல்" "முத்து க்ளாசிக்ஸ் ஸ்பெஷல்" "சம்மர் க்ளாசிக்ஸ் ஸ்பெஷல்" "தீபாவளி க்ளாசிக்ஸ் ஸ்பெஷல்" "பொங்கல் க்ளாசிக்ஸ் ஸ்பெஷல்" என்று பட்டாசு கொளுத்துங்க சார், என்னைக்கும் நாங்க உங்ககூட இருக்கோம்.

    ReplyDelete
  24. Major announcements by our editor,

    thalai vangi kurangu (re-print) - March 4th week

    Doctor 7 (Lion) - March 4th week

    Super hero special - May 2012

    XIII oru pulan aaivu - No time frame

    Western (எமனின் திசை மேற்கு) - 2nd half of 2012

    Largo Winch at Muthu comics - Somewhere in 2012
    (வேங்கையாய் ஒரு வாரிசு" + "செல்வத்தின் நிறம் சிகப்பு)

    Tiger stories - release schedule will be announced in super hero special

    Thihil special in CC - May 2nd week

    ReplyDelete
  25. Vijayan Sir

    Super Hero Special was supposed to come in April ..right?Why the delay now?(May)

    Also, any update on Thalaivangi kurangu? Its supposed to be reaching us from 26th march(monday) onwards....

    pls reply.

    ReplyDelete
  26. // ஒன்று மட்டும் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும் ! இவ்வருடத்தின் நடுப்பகுதி வரை சற்றே பொறுமை காட்டுங்கள் guys! உங்களை திக்குமுக்காடச் செய்யும் அறிவிப்புகள்..அதிர்வேட்டுக்கள் தயாராகி வருகின்றன ! நிச்சயம் disappoint ஆக மாட்டீர்கள் ! //

    இது வெறும் வார்த்தை அல்ல ! உங்கள் வார்த்தைகளில் உள்ள நிஜம் எங்களுக்கு புரிகிறது சார்.

    எங்களின் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

    ஒரு வேண்டுகோள்: முடிந்த வரை சொன்ன தேதியில் இனி மேல் புத்தகங்கள் வந்திட்டால் நமது வாசகர் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும். சமீபத்தில் நான் பார்த்த ஒரு BLOG-ல் சில வாசகர்கள் தங்களின் தாமதத்தை(இப்போது அல்ல, சுமார் ஒரு வருடம் முன்பு எழுதப்பட்டது) பற்றி குறை கூறி இருந்தனர். அதனாலே அவர்கள் லயன், முத்து காமிக்ஸ் படிப்பதை குறைத்து கொண்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

    எனவே இனி வரும் காலங்கள் இது போல இல்லாமல் ஏற்றம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதே ஏன் ஆவல். இதற்க்கு எங்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு.

    நன்றி - நாகராஜன்

    ReplyDelete
    Replies
    1. //ஒரு வேண்டுகோள்: முடிந்த வரை சொன்ன தேதியில் இனி மேல் புத்தகங்கள் வந்திட்டால் நமது வாசகர் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும்//

      yes I agree with you mr . Nagarajan santhan சரியாக சொன்னீர்கள்

      ஆரம்ப காலத்தில் என்னுடன் படித்த என் காமிக்ஸ் நண்பர்களில் பலர் இந்த தாமதத்தினாலேயே வெறுத்து போய் காமிக்ஸ் படிப்பதையே நிறுத்திவிட்டனர். இப்போதுதான் இரண்டு பேரை கண்டுபிடித்து உடனே சந்தா கட்ட சொல்லிருக்கிறேன். அவர்களும் அவ்வளவு சீக்கிரம் நான் சொல்வதை நம்பாமல் திரு விஜயன் சார் blog ஐ பார்த்தபிறகுதான் நம்பினார்கள்.

      so விஜயன் சார் எங்களை நம்புங்கள். நாங்கள் இருக்கிறோம்....வயசானாலும் எங்க வேகம் குறையாது இல்ல.....

      Delete
  27. எங்க ஆயா வாராங்க டோய்
    நல்லா கேட்டுக்குங்க அவங்களை கலர்லதான் நான் பார்க்கணும் மறந்துடாதிங்க எப்பவுமே உங்க தேர்வுகள் இப்படிதான் கலக்கலா இருக்கும்னு எங்களுக்கு நல்லாவே தெரியும் சூப்பர் தலை

    ReplyDelete
  28. தலை வாங்கி குரங்கு எல்லார் கைகளுக்கும் வந்து சேர்ந்தாகி விட்டதா... எனக்கு இன்னும் கிடைக்கவில்லை :(

    ReplyDelete
    Replies
    1. அடடா, என்ன ரஃபிக், இன்னுமா உங்களிற்கு வந்து சேரவில்லை!! எனக்கு வந்து சேர்ந்துவிட்டது, அட்டைப்படம் முதல் இறுதிப்பக்கம்வரை சொல்லவே வேண்டாம், கண்ணில் எடுத்துக் ஒற்றிக் கொள்ளலாம், கலைத்தாளில் கறுப்பு வெள்ளை செம கம்பீரமாக படு ப்ரெஷ்ஷாக வந்திருக்கிறது, டெக்ஸிற்கும், கார்சனிற்கும் சிவாஜி ரஜினி இளமை எஃபெக்ட் என்பது கூடுதல் +, இப்படி எல்லாம் சொன்னால் நம்பவா போகிறீர்கள் :)))

      Delete
    2. நீங்கள் எப்படி சொன்னாலும் நான் நம்ப போவதில்லை ;)

      Delete
    3. ஹா ஹா ஹா ..... கனவுகளின் காதலன், நீங்கள் உண்மைலேயே கனவுகளை காதலிக்கிறவர்தான். இருந்தாலும் இன்னும் புத்தகம் கைக்கு வரவில்லையே என்ற ஆதங்கம் தெரிகிறது

      Delete
  29. // நமது ஆரம்ப திகில் காமிக்ஸின் இதழ் 1 ; 2 & 3 - மூன்றையும் ஒன்றிணைத்து "திகில் க்ளாசிக்ஸ் " என்ற பெயரில் அதே ஒரிஜினல் (பெரிய) சைசில் வெளியிட நினைத்துள்ளேன் ! //

    வாவ் சூப்பர் நியூஸ் சார் :))
    .

    ReplyDelete
  30. // # 3 -ல் வந்திட்ட "பயங்கரப் பூனைகள்" கதையும் அட்டகாச விறுவிறுப்பு ! //

    சார் இரண்டாவது இதழில் வந்த பிசாசு செடிகளை விட்டுவிட்டீர்களே ;-)

    மறக்க முடியாத கதை அது :))

    மொத்தத்தில் அனைத்து கதைகளுமே ஒரு சிறப்பானதொரு தொகுப்பு எனலாம்
    ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் சார்
    .

    .

    ReplyDelete
  31. Vijayan sir, I have sent money for airmail annual subscription. When I can get "thalai vaangi kurangu and Doctor 7"? Please give me a heads up.Moreover I havet got any acknowledgement for the mail that I sent for annual subscription.

    ReplyDelete
  32. Hi everybody,

    "Thalaivaangik Kurangu" will be despatched starting tomorrow ! And we are doing it in the order of the subscription dates ! Not too long a wait now guys ! Thanks for your patience !

    ReplyDelete
    Replies
    1. காலையில் ஒரு நல்ல சேதி :)

      - நாகராஜன்

      Delete
    2. what about Doctor 7?

      Delete
    3. Sir,
      Great. Good news...

      அப்படியே டிராகன் நகரம் மறு பதிப்பும் போட்டிங்கன்னா உங்க ஊர்ல மாதம் மும்மாரி மழை பெய்யும்.

      Delete
    4. ஏம்பா, அவங்க ஊர்ல மழை மாதம் மும்மாரி பெய்ஞ்சா, அப்புறம் எப்புடி பட்டாசு செய்வாங்களாம்?? :) ஹிஹி! ச்சும்மா ச்சும்மா!

      Delete
    5. Mahesh Kumar S : அதில் என்ன சிக்கனம் ?? மாதம் வெறும் மூன்றே மாரிகள் தானா ? ஒரு பத்துப் பன்னிரண்டு பெய்து நாங்களும் இந்த ரெயின் கோட் -லாம் போட்டுத் தான் பார்த்துக் கொள்ளுகிறோமே ?!

      எனினும் கவலைப் படேல்..உங்களின் தயாள சிந்தனைகள் நிச்சயம் பலனின்றிப் போகாது !

      Delete
    6. Dear Sir,

      Thanks for your response.. We will wait (We know good things will take it's own time, but it is worth to wait for it)..

      Regards,
      Mahesh

      Delete
  33. Hi guys,

    How you guys are typing in Tamil... Please help me.

    ReplyDelete
    Replies
    1. Goto this url

      http://www.google.com/transliterate/tamil

      type it and copy paste here ... thats all :)

      NAGARAJAN

      Delete
  34. ஹலோ விஜயன் சார் திகில் மறுபதிப்பு மற்றும் நமது அணைத்து காமிக்ஸ் மறுபதிப்பு என்று பார்க்கும் போது எனக்கு நிஜமாகவே பழைய நியாபகங்கள் வந்து கொட்டுது சார், நமது பழைய புதகங்குளுகாக நான் மதுரை சுற்றி சுற்றி அலைந்தது இன்னும் என் நெஞ்சில் பசுமையாய் நியாபகம் இருக்கு. எனக்கு தெரியவில்லை இதை நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ என்று ஆனால் இது நடந்தது நிஜம். நான் காலேஜ் படித்து கொண்டிருந்தேன் அப்போது ஒரு நாள் இரவில் ஒரு கனவு அந்த கனவில் நன் ஒரு புத்தக கடையில் உட்கார்ந்து கொண்டு நமது பழைய காமிக்ஸ் வெளியீடுகளை கட்டு கட்டாக எடுத்து கொண்டிருந்தேன் அதில் நன் படிக்காத பெயர் தெரியாத சில புத்தகங்களும் அடங்கும், கண் விழித்து பார்த்தால் அது வேறு கனவு நொந்து போய் விட்டேன். ஆனால் அதன் பிறகு நடந்ததுதான் அதிசயம். எப்பொழதும் போல் நான் மதுரை கடை வீதியை சுற்றி வந்த பொது நான் என் கனவில் பார்த்த அதே கடை மற்றும் அன்று நான் 75 புக்ஸ் purchase பண்ணினேன் அதில் நான் கனவில் பார்த்த புக்ஸ் கூட அடங்கும், இது நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும் ஆனால் எனக்கு இந்த மாதிரியான சம்பவங்கள் நிறைய தடவை நடந்துள்ளன :). Few things cant be explained. இதற்கு ஒரு பதில் இருகின்றது நாம் ஒரு விசயத்தில் தொடர்ந்து concentrate செய்தல் இது மாதிரி நடக்க வாய்ப்புள்ளது. இது நான் நமது காமிக்ஸ் மீது கொண்டுள்ள அபரீத அன்பை வெளிபடுத்துவதாக உள்ளது. அந்த அளவிற்கு நேசித்தேன் என்றால் அது மிகை ஆகாது :). இன்றும் அதே காதல் முன்பை விட அதிகமாகி உள்ளது. மறு பதிப்பு என்றாலே அதிக சந்தோசம்தான் beacsue பழைய புத்தகத்தில் ஸ்டாக் ரிப்போர்ட் இருக்கும் அதை எல்லாம் நம்மால் படிக்க முடியாமல் போய் விட்டதே என்று எத்தனை நல்ல ஏங்கி இருப்பேன் :(. விஜயன் சார் ப்ளீஸ் மறு பதிப்புகள் வெளி இடும் போது நான்கு அல்லது ஐந்து புத்தகங்களை சேர்த்து வெளி இடுங்கள், I believe most of our comic readers have improved lot in financial position and now a days 100 rs in not that much bigger amount for everyone (Sorry if i say anything wrong). Please consider it and do your best.

    With Love,

    Giri

    ReplyDelete
    Replies
    1. உங்களைப்போன்ற காமிக்ஸ் காதலர்கள்தான் லயன், முத்து குடும்பத்தின் பலம். உங்களது ஆத்மார்த்தமான பின்னூட்டத்திற்கு ஒரு காமிக்ஸ் ரசிகன் என்ற முறையில் நன்றிகள்.

      தமிழில் எப்படி தட்டச்சு செய்வது என்பதை சற்றுமுன்னர்தான் நண்பர் நாகராஜன் மூலமாக அறிந்துகொண்டு தமிழிலேயே பின்னூட்டமிட்டிருக்கும் உங்கள் முயற்சி ஆச்சரியம்.

      விலை அதிகமாக பெரிய அளவுகளில் புத்தகங்களை வெளியிடுவதும் அதற்கு இருக்கும் வரவேற்பும் நாமெல்லாம் அறிந்ததுதான். ஆனால், புதிய - இளைய வாசகர்களையும் கவரவேண்டிய நிலை (ஆசிரியரின் முன்னைய பதிவுகளை கட்டாயம் வாசித்துப் பார்க்கவும்) அவசியம் இருப்பதால் எல்லா இதழ்களையுமே அதிக விலையில் மீள்பதிப்பு செய்வது சிரமமாக இருக்கும் என்று நினைக்கிறேன் (இது எனது தனிப்பட்ட கருத்து). இணையவெளி லயன்-முத்து குழுமத்திற்கு வந்திருக்கும் உங்களைப்போன்றவர்களின் ஆதரவே ஆசிரியருக்கான டானிக்!

      Theeban (SL)

      Delete
    2. giri ; Theeban (SL) :

      காமிக்ஸ் என்பது வெறும் சித்திரக் கதைகள் மட்டுமல்ல...நம் இளவயதின் ஒரு பிரதான அங்கமும் தான் என்பதை ஒவ்வொருவரின் அனுபவங்களையும் படித்திடும் பொது உணர முடிகின்றது ! இந்தப் பரவசத்தை இன்றைய இளசுகளும் உணர்ந்து ; ரசித்திட்டிட வேண்டுமே எந்த ஆதங்கம் மேலோங்குகிறது !

      Delete
    3. //காமிக்ஸ் என்பது வெறும் சித்திரக் கதைகள் மட்டுமல்ல...நம் இளவயதின் ஒரு பிரதான அங்கமும் தான் என்பதை ஒவ்வொருவரின் அனுபவங்களையும் படித்திடும் பொது உணர முடிகின்றது !//

      >சத்தியமான வார்த்தைகள்.

      //இந்தப் பரவசத்தை இன்றைய இளசுகளும் உணர்ந்து ; ரசித்திட்டிட வேண்டுமே எந்த ஆதங்கம் மேலோங்குகிறது !//

      >அதற்கான முயற்சிகளில் நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட அக்கறையோடு ஈடுபடுவோம்.

      -Theeban (SL)

      Delete
  35. இந்த முறை சற்றே மாறுப்பட்ட ஒரு பின்னூட்டம். விஜயன் அண்ணா எனக்கு லயன் மற்றும் முத்து இதழ்களின் மீது இருந்த காதல் இதுவரை திகில் காமிக்ஸ் ல் ஏற்ப்படவில்லை. முழுநீள கதைகளை படிக்கின்ற ஆர்வம் சிறிய கதைகளில் வருவதில்லை. இந்த அறிவிப்பு என்னை பொறுத்த வரை சிறிய ஏமாற்றம் தான். காரிகன், மாடஸ்தி அதிரடிப்படை , பிரின்ஸ் , லூக், சிக்பில், ப்லுபெர்ரி, இரவுக்கழுகார் என இவர்களுடன் வாழ்த்து பழகிய என்னால் மாறுபட்ட ரசனைக்கு வரமுடியவில்லை.

    தலைவாங்கி குரங்கு இதழ் எப்பொழுது எனது கைக்கு வரும் என்பது மட்டுமே இப்பொழுது எனது கனவாக உள்ளது. ஜானி கதைகளை தவிர திகில் காமிக்ஸ் இதழ்களின் மற்ற பதிப்புகளுக்கு Im not voting.

    ReplyDelete
    Replies
    1. பிடித்த நடிகர்களின் பிடிக்காத படங்களையும் ஒரு தடவை பார்ப்பதில்லையா ?! அப்படி எடுத்துக்கொள்ளுங்களேன்! :)

      Delete
    2. பிடித்த நடிகரின் பிடிக்காத படத்தை ஒரு முறை பார்ப்பதற்கு அப்படம் பிடித்த நடிகரின் பிடிக்காத படம் என்பது ஒரு முறை தெரிந்திருப்பது அவசியம், எனவே பிடித்த நடிகரின் பிடிக்கப்போகாத படத்தை பிடிக்கும் என நம்பி ஒரு முறை பிடிவாதமாக பார்த்து, பிடித்த நடிகரின் பிடிக்காத படமாக ஒரு முறை உறுதி செய்தால் மட்டுமே அது பிடித்த நடிகரின் பிடிக்காத படம் என கொள்ளப்படலாம்,இந்நிலையில் பிடித்த நடிகரின் பிடிக்காத படத்தை ஒரு முறை பார்க்காத நிலையில் அது பிடித்த நடிகரின் பிடிக்காத படத்தை ஒரு முறை பார்த்தல் என கொள்ளப்படுமா ?!!!!!! :)

      Delete
    3. வந்துட்டார்யா வந்துட்டார்! :) அணிலை பலர்க்கு (நான் நீங்கலாக) பிடித்தே இருந்தாலும், படம் ரிலீஸ் ஆகும் முன்பே படு மொக்கையாக இருக்கும் என்று தெரிந்தே இருந்தாலும், சளைக்காமல் ரசிக கண்மணிகள் பார்ப்பதைத்தான் சொன்னேன் :)

      Delete
    4. அஹ உஸ்ஸ் இப்பவே கண்ணா கட்டுதே.... முடியல....

      Delete
    5. காதலருக்காக கரெக்சன் :)

      பிடித்த நடிகர்களின் பிடிக்காத படங்களையும் இரண்டாவது தடவை பார்ப்பதில்லையா (இந்த டைமாவது நல்ல எடுத்திருப்ப்பாய்ங்களோ என்று நம்பி?!) அப்படி எடுத்துக்கொள்ளுங்களேன்! :)

      Delete
    6. எப்படி காதலரே உங்களால மட்டும் இப்படி முடியுது ;-))
      .

      Delete
  36. அன்புள்ள விஜயன் சார்,

    மறுபதிபுகளில் தொடராக வந்த கதைகளையும் கொண்டு வந்தால் மிகபெரிய வரவேற்பு கண்டிப்பாக இருக்கும்.
    1. விண்ணில் முளைத்த மண்டை ஓடும்
    2. விண்வெளி பிசாசும்

    ஒரே புத்தகமாக இருந்தால் அனைவரும் வரவேற்பார்கள்.
    நமது வாசகர்களில் எவ்வளவு பேருக்கு அணைத்து புத்தகங்களும் கிடைத்திருக்கும்.
    I strongly belive more then 90% of people would not had the pleasure of reading the complete story. It will be like a new story and also a reprint.

    Do consider this in feature.

    Reagrds
    Suresh

    ReplyDelete
    Replies
    1. Hi Vijayan sir,
      I agree with suresh, I already requested you to reprint those 2 comics mentioned by suresh. Hope we will get the possitive reply from you.

      With Love

      Giri

      Delete
    2. Suresh ; Giri : நமது காமிக்ஸ் மீது உங்களுக்குள்ள காதல் உங்களின் ரசனைகளை சற்றே compromise செய்திடச் செய்கிறது என்று தான் சொல்லுவேன் நான் !

      'மொக்கையோ மொக்கை" ரகக் கதைகள் என்ற ஒரே காரணத்தால் மேற்படி இரு கதைகளையும் நான் முழு இதழ்களில் வெளியிட விரும்பாமல் தொடர்கதைகளாக ஒப்பேற்றியது இன்னமும் நினைவில் நிற்கிறது ! இவற்றை முழுநீள மறுபதிப்பாய் - அதுவும் ஒரே இதழில் வெளியிட்டால் என்னை காமிக்ஸ் இல்லா காட்டுக்கு மாற்றல் பண்ணிடுவார்கள் நம் நண்பர்கள் !

      Delete
  37. ஒரு சின்ன ரிக்வெஸ்ட்! திகில் முதல் 3-இன்-1 மறு பதிப்பு இதழின் அட்டை படங்களை ஒரிஜினல் போல் அவ்வளவு பயங்கரமாக [ அட பாராட்டுதான் சார்! ;) ] போடாமல் சற்றே மென்மையாக போடுங்கள் :)

    ReplyDelete
    Replies
    1. மலர் வளையங்கள், மற்றும் பூங்கொத்துகள், பலூன்கள், சிவப்பு இருதயம் என போட்டால் மென்மை அருமையாக தாண்டவமாடும், அல்லது கபலாத்திற்கு கூலிங் கிளாஸ் போட்டாலும் மென்மையான எஃபெக்ட் கிடைக்கும்...:)) அட அத விடுங்க ஒரு எலும்புக்கூடு மொஹிட்டோவை சிர்ர்ர்ரென உறிஞ்சியபடியே திகில் கிளாசிக் இதழை ஆர்வமாக படிப்பது போல் போட்டால் மென்மை கரகாட்டமே ஆடிடும்....:))

      Delete
    2. காமெடி காதலரே, இதயத்தை துளைக்கும் அம்பை ஏன் மிஸ் செய்து விட்டீர்கள்? ;) திகில் காதல் ஸ்பெசலாக போட்டால் போயிற்று! :)

      Delete
    3. அருமையான அய்டியா, டிகில் லவ் சிறப்பிதழ் மே 2012 :) இரு எலும்புக்கூடுகள் கல்லறைக்கு மேலிருந்து கட்டியணைத்து முத்தமிடுவதுபோல் அட்டைப்படம் போடலாம் :)) வவ்வால்கல் வெள்ளை தேவதை ஆடையணிந்து லல்ல்லாலா கோரஸ்.....

      Delete
    4. தனது காமெடியான எண்ணவோட்டங்களை பின்னூட்டமாய் முன்கூட்டியே போட்டு, திகில் காமிக்ஸை மினி-லயன் ரேஞ்சுக்கு இறக்கிய காதலரை தலை வாங்கி குரங்கிடம் யாராவது தள்ளி விட்டால் நலம் :)

      அடுத்த "திகில் விச்சு கிச்சு ஸ்பெஷல்" டைட்டில்கள்:
      பார்ட் 1 : காதல் வலையில் குரங்கு!
      பார்ட் 2 : ஒரு குரங்கு சடலம்! (காதலரின் ரௌஸ் தாங்காமல் குரங்கு எடுத்த பரிதாப முடிவு!)

      Delete
    5. பரிதாப முடிவு எடுத்தது குரங்கு மட்டும்தான்னு இல்லை.... :)), ஆனா பயங்கரமா இருக்கு :) மென்மையா அட்டைப்படம் போடலாமேன்னு பரிந்துரைத்து கும்மியை ஸ்டார்ட் பண்ணியது யாரு :) நீதிபதிகளே பதில் அளியுங்கள், நீங்க சொன்னாலும் சொன்னீர்கள் விச்சு கிச்சு ஸ்பெஷல் வந்தாலும் ஆச்சர்யமில்லை :)

      Delete
    6. >> பரிதாப முடிவு எடுத்தது குரங்கு மட்டும்தான்னு இல்லை
      யாரந்த இன்னொரு குரங்கு, ஸாரி நபர்? ;)

      Delete
    7. மன்னிக்க, கருத்து பிழை உள்ளது :) முதலாவது குரங்கு என்பது நிதர்சனமான உண்மை என்பதால்,

      யாரந்த இரண்டாவது குரங்கு
      (அ)
      யாரந்த முதல் நபர்

      மேற்கண்ட இரண்டில் ஒரு வாக்கியமே சரியாக இருக்க முடியும் ;)

      என்ன செய்ய காதலோரோடு கருத்து யுத்தம் நடத்தும் பொது சொற்குற்றம், பொருட்குற்றம் இருந்தால், விசு ரேஞ்சில் வாயிலேயே கரகம் ஆடி விடுவார் ;)

      Delete
    8. பாகம் 3) காதல் குரங்கின் காம ஆவி.... டிடெக்டிவ் கார்த்திக் சாகஸம்....:) அற்ப ஆயுசில் தன் ஆசைகள் தீராத நிலையில் தற்கொலை செய்த குரங்கின் ஆவியின் நாசச் செயல்களை எதிர்த்து போராடுகிறார் நவரசநாயகன் டிடெக்டிவ் கார்த்திக் :))

      Delete
  38. Waiting for தலைவாங்கி குரங்கு ..........................................

    ReplyDelete
  39. எனக்கு இந்த திகில் கதைகள் reprint செய்வது சரியாக படவில்லை. jonny கேப்டன் பிரின்ஸ் லக்கி luke போன்ற கதைகளை அனைவரும் விரும்பும் போது ஏன் இப்படி ஒரு முடிவை விஜயன் எடுத்தார் என்று புரியவில்லை?. சிங்கம் துக்கு ஏஜ் ஆகி விட்டதால் சரியாக முடிவு எடுக்க முடியவில்லை. எவ்வளுவு அடித்தாலும் இவனுங்க தங்குவங்கட என்ற வடிவேலு காமடி மாதிரி நாம் ஆகிவிட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. Anonymous நீங்கள் சொல்வதை காமிக்ஸ் பிரியர்கள் யாரும் ஏற்றுகொள்ளமாட்டர்கள், திரு விஜயன் சார் எத்தனை திகில் காமிக்ஸ் reprint செய்திருக்கார் சொல்லுங்கள் பார்ப்போம். முதலில் நீங்கள் இப்போது மறுபதிப்பாக வரப்போகிற திகில் கதைகளை படித்து இருக்கிறிர்களா, அப்படி என்றால் அந்த கதைகளின் அருமை தெரிந்து இருக்கும். அதுமட்டும் இல்லாமல், நமக்கு எல்லாம் இத்தனை நாள் எட்டாக்கனியாக இருந்த தமிழ் காமிக்ஸ் இப்போதுதான் நமக்கு கைகூடி வரஇருக்கிறது. விஜயன் சார் சில மாதங்கள் வரை பொறுத்துக்கொள்ள சொல்லி இருக்கிறார். அனைத்தும் நடைமுறைக்கு வரும்வரை அவருக்கு ஆதரவாக positive வாக இருப்போமே, அதில் ஒன்றும் தப்பில்லையே. அவருக்கும் நடைமுறை சிக்கல்கள் எவ்வளவு இருக்குமோ, நமக்கு எப்படி தெரியும்...

      அப்புறம் ஒரு வேண்டுகோள், தங்கள் அழகான பெயரில் தங்கள் கருத்துக்களை பதிவிடலாமே.

      Delete
    2. //விஜயன் சார் சில மாதங்கள் வரை பொறுத்துக்கொள்ள சொல்லி இருக்கிறார். அனைத்தும் நடைமுறைக்கு வரும்வரை அவருக்கு ஆதரவாக positive வாக இருப்போமே, அதில் ஒன்றும் தப்பில்லையே. அவருக்கும் நடைமுறை சிக்கல்கள் எவ்வளவு இருக்குமோ, நமக்கு எப்படி தெரியும்...

      அப்புறம் ஒரு வேண்டுகோள், தங்கள் அழகான பெயரில் தங்கள் கருத்துக்களை பதிவிடலாமே.//

      கார்த்திகேயனது கருத்துக்களை நானும் வழிமொழிகிறேன்.

      இப்போது மறுபடியும் ஆரம்பித்திருக்கும் காமிஸ் மீள் எழுச்சியை உத்வேகத்தோடு கொண்டு செல்லவேண்டியது எங்கள் ஒவ்வொருவரதும் கடமை.

      முன்னர் நாங்கள் வாசித்து - ரசித்து - வாழ்ந்த - காமிக்ஸ் காலகட்டத்தை மீண்டும் பெறும் வாய்ப்பு எம் ஒவ்வொருவரதும் கைகளிலேயே இருக்கிறது.

      எல்லாருமே கண்மூடித்தனமாக எம்மைப்போல் ஆசிரியர் வெளியிடும் எந்தக் கதைகளையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறுதான் என்றாலும், சோடைபோகாத அவரது ரசனையும் தேர்வுகளும்தான் எமக்கு இதுவரையிலும் தமிழ் காமிக்ஸ்கள் மீதான நம்பிக்கையை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

      எதிர்மறையான விமர்சனங்களும் இருக்கவே வேண்டும்! ஆனால், அவை முட்டுக்கட்டையாக இருந்துவிடக்கூடாது என்பதே கார்த்திகேயன், நான் உட்பட அனைத்து நண்பர்களதும் எண்ணமாக இருக்கிறது.

      கதைத் தேர்வுகளில் வாசகர்கள் மாற்றுக் கருத்துக்களைச் சொல்லும்போது - ஆசிரியர் அது குறித்து அடுத்தடுத்த இதழ்களிலேயே வருத்தம் தெரிவித்ததோடு அல்லாமல் அதன் பின்னர் எமது எதிர்பார்ப்பு - ரசனையை - ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காக பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்காமல் - தனது தனிப்பட்ட எதிர்பார்ப்புகளை மூட்டைகட்டி வைத்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

      எங்கள் சுயநலம் - பல பரீட்சார்த்த முயற்சிகளை முடக்கிவிட்டிருக்கிறது. இனியும் அவ்வாறான முட்டுக்கட்டைகளாக நாம் இருக்கவேண்டாமே! எங்கள் ரசனைகளிலும் மாற்றங்கள் வரட்டுமே!

      கடந்த - மற்றும் அடுத்த தலைமுறைகளுக்கிடையில் ரசனை மாற்றங்களின் பதிவுகளாக வரவிருக்கும் அனைத்து லயன், முத்து, சிசி க்களையும் வரவேற்போமே!

      எதெதெற்கோவெல்லாம் பணத்தை அள்ளித் தெளிக்கும் நாம் - வாசிப்பிற்கும் கொஞ்சமாகவேனும் கிள்ளியாவது கொடுப்போமே!

      -Theeban (SL)

      Delete
    3. மிக சிறப்பாக சொல்லிவிட்டீர்கள் ஜி நானும் அப்படியே டிட்டோ

      Delete
    4. Dear Theeban,
      Very nicly said.i agree with you. i am spending lot of money on unwanted things.
      this new comics era should be supported by every comics fan.

      Aldrin Ramesh from Muscat

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. john simon, Aldrin Ramesh. வாசிப்புப் பழக்கத்திலிருந்து நீண்ட தொலைவு போய்க்கொண்டிருக்கும் எம் இளையவர்களிடம் வாசிப்பின் சுவையை ஊட்டுவதற்கு சிறந்த சாதனங்கள் தமிழ் காமிக்ஸ்களாகத்தான் இருக்கும் என்பது என் கருத்து. நண்பர்களும் ஓரளவுக்கு இதை ஏற்பார்கள் என்று நினைக்கிறேன்.

      Theeban (SL)

      Delete
    7. Hi Anonymous, first of all to have old Thgil comics back is my dream. when i read thigil, I felt like watching a horror english movie. I have come across the same situation so many times, you will also feel the same when you read forthcoming issue in our lion, I hope so :).

      Regards,

      giri

      Delete
    8. Novels are nothing compared with comics!

      Delete
    9. ஆபீஸ் பிசியில் இன்று நாள் முழுவதும் இங்கு வரமுடியவில்லை.

      எனக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்ட Theeban உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி

      Delete
    10. //P.KarthikeyanMar 27, 2012 09:10 PM
      Anonymous நீங்கள் சொல்வதை காமிக்ஸ் பிரியர்கள் யாரும் ஏற்றுகொள்ளமாட்டர்கள், //

      You are correct Mr. Karthi ....

      Nagarajan

      Delete
    11. Anonymous : சிங்கம் அன்றைக்கும் சரி..இன்றைக்கும் சரி..முயலுக்கு மூன்றே கால் என்று சாதித்தது கிடையாது ! எப்போதுமே கானகத்தின் சகப் பிரஜைகளின் கர்ஜனைக்கும் நிரம்பவே மதிப்பளித்திட விழையும் !

      அதே சமயம் - உள்ளே ஓடிடும் ஒரு gut feel க்கு நிறையவே செவி மடுப்பது சிங்கத்தின் வழக்கம்..! இத்தனை காலம் good friend ஆக இருந்திட்ட அந்த திருவாளர் gut feel -ன் பரிந்துரையே இந்த திகில் க்ளாசிக்ஸ் !

      வெள்ளி முடி எட்டிப் பார்க்கும் நரையோடு இருந்தாலும் அவர் தம் கணிப்பு இன்னமும் சரியாக உள்ளதா....சொதப்பலாக உள்ளதா என்று கண்டறிந்திட நாட்கள் அதிகம் காத்திருக்கத் தேவை இல்லியே..! மே மாதம் தெரிந்திடுமே !!

      Delete
    12. உங்க ஆசையை என் பாட்டி அழகாக நிறைவேற்றி வைப்பாள் சார்! நிஜமாவே நான் என் பாட்டி மூலம்தான் காமிக்ஸ் சுவையை ருசித்தேன். கருப்பு கிழவிக்கு முன் எல்லாம் நலமே!
      உங்க உள்ளுணர்வு என்னிக்குமே சோடை போனது இல்லையே?

      Delete
  40. அப்பாடா ரொம்ப நாளைக்கு அப்புறம் Me the 75th.... ;-))
    .

    ReplyDelete
  41. இந்த ப்ளாக்கில் எந்த பதிவின் பின்னூட்டங்களும் இது வரை சதம் அடித்ததில்லை என்று நினைக்கிறேன், இது அடிக்கும்!

    கும்மிகளும் கருத்துகளும் வெல்கம் :)

    நின் டு கோ குய்ஸ்! - சாரி இதற்கு காரணம் Google Transliterate, இங்கிலிஷ்லேயே சொல்லுகிறேன் ;)

    Nine to go guys! :)

    ReplyDelete
    Replies
    1. Karthik, ஆசிரியர் ரொம்ப பிஸி போலும். இல்லாவிட்டால், அவருடைய பின்னூட்டப் பதில்களும் சேர்ந்து எப்போதோ சதத்தை எட்டியிருக்கலாம்.

      பார்ப்போம் - யார் 100வது பின்னூட்டம் போடுகிறார் என்று...(சச்சினுடைய சதத்துக்கே இவ்வளவு எதிர்பார்ப்பு இருந்திருக்குமோ தெரியாது... :) )

      Theeban (SL)

      Delete
    2. நண்பர்களே !!

      "தலைவாங்கிக் குரங்கு" -- மீண்டும் !

      http://lion-muthucomics.blogspot.in/2012/02/blog-post_19.html

      113 கமெண்ட்ஸ் வாங்கி முதலிடத்தில் உள்ளது :)

      நாகராஜன் S

      Delete
    3. இரண்டுமே மறுபதிப்புகள் பற்றிய பதிவுகள் என்பது வெறும் தற்செயலானதொரு ஒற்றுமையா ? அல்லது மறுபதிப்புகள் நம்மில் கிளறிடும் பழைய நினைவுகளின் பிரவாகமா..... ?

      Delete
    4. 125 பின்னூட்டங்களைக் கடந்துபோய்க்கொண்டிருக்கிறோம். ஆசிரியர் அடுத்த பதிவை கொஞ்சம் தாமதப்படுத்தினால் 150ஐக் கடப்பது உறுதி!

      -Theeban (SL)

      Delete
    5. சதம் அல்ல நண்பரே ஒன்றரை சதம் அடிக்க போகிறோம்,

      Delete
  42. Munpu
    Meendum
    thalai vangi kurangu

    POST
    ku 113 commends kidaithathu!

    ReplyDelete
  43. 'திகில்' காமிக்ஸில் வந்த ரிப்போர்டர் ஜானியின் கதை ஒன்று. அதில் அவரை சுழலும் நீர் ராட்டினத்தில் கட்டி வைத்துவிடுவார்கள் சதிகாரர்கள்.

    அற்புதமான சித்திரங்களோடு வந்த விறுவிறுப்பான கதை அது. அதன் டைட்டில் யாருக்காவது நினைவிருக்கிறதா நண்பர்களே?

    -Theeban (SL)

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சாக்ரடீஸ் சொன்னது போல திகில் காமிக்ஸில் வந்த தலைமுறை எதிரி தான் அந்த கதை.

      Delete
    2. நன்றி நண்பர்களே. 'தலைமுறை எதிரி'யை நினைவுபடுத்தியமைக்கு.
      அற்புதமானதொரு கதையல்லவா, அது?

      ஆசிரியருக்கு: மீள்பதிப்பு ப்ளீஸ்! :)

      -Theeban (SL)

      Delete
  44. again many r using this to chat among themselves.
    why are they again repeating the same thing done for the lion website!
    atleast those who really post their comments wont have d patience to see the others gossiping among themselves like this.
    dont rank urselves in posting d comments? anyone planning 2 give awards for that?
    lets give our support 2 all d sternous efforts taken by vijayan sir.
    sorry if i have hurt anyone.

    ReplyDelete
    Replies
    1. lionpriyan : அவ்வப்போது கொஞ்சம் கலாட்டா..கொஞ்சம் leg pulling இல்லாது போனால் இது ரொம்பவே சீரியசான பதிவாகிடும் ! உற்சாகத்தை வெளிப்படுத்துவதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும் ! அதனையும் ரசித்திடுவோமே ?!

      Delete
    2. நன்றி விஜயன் சார்! நிஜமாகத்தான்! உங்கள் பதிவுகளையும், நமது இதழ்களின் மறு பதிப்புக்களையும் கண்டு உற்சாகம் பீறிட்டதன் விளைவாய் ஒரு பதிவு! எனக்கு பிடித்தமான நாயகர் ஜான் சில்வரின் டாப் கதைகளில் ஒன்றான இரத்தப் பாதை..!

      http://bladepedia.blogspot.in/2012/03/blog-post_29.html

      Delete
  45. Vijayan sir..Why dont we reprint the super hit "Marana Mandalam" war story in colour.It would be really nice and amazng experience.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட்,
      இந்த மரண மண்டலம் கதையானது இங்கிலாந்தில் கறுப்பு வெள்ளையில் வெளிவந்தது. இப்படி கறுப்பு வெள்ளையில் வந்தவற்றை வண்ண மயமாக்குவது அத்தனை சிறப்பாக இராது என்று ஏற்கனவே எடிட்டர் கூறியுள்ளார். ஆகையால் .....

      Delete
  46. நான் ரிடையர்ட் ஹர்ட் ஆகி விட்டதால், மீதியை இங்கே பின்னூட்டமிட போகிறேன், வெல்கம் ஆல் :)

    http://bladepedia.blogspot.in/2012/03/blog-post.html

    ReplyDelete
  47. UK காமிக்ஸ் எல்லாம் வண்ணத்திற்கு சரி இல்லதவைகள். பிரெஞ்ச் காமிக்ஸ்கல் மட்டும் வண்ணத்தில் எடுப்பாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Ramesh : பெரும்பான்மையான நமது UK கதைகள் - தொடர்களாக வாரந்திரக் காமிக்ஸ் இதழ்களில் வந்திட்டவை ! ஆனால் நமது பிரெஞ்சுக் கதைகள் நிறையவே தனிக் கதைகளாக வடிவமைக்கப் பட்டவை ! So பிரெஞ்சுப் படைப்பாளிகளுக்குக் கிட்டிய அவகாசமும் சரி..சன்மானங்களும் சரி....மிகவும் அதிகமே ! அதனால் தரத்திற்கு ..வண்ணத்திற்கு ; வித்தியாசமான கதைக்களங்களுக்கு அவர்களால் முயற்சித்து வெற்றி பெற முடிந்துள்ளது !

      ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு ரசனை !! அவற்றில் சிறந்தவற்றை ரசிப்பது நமது ரசனை !!

      Delete
  48. நண்பர்களே,

    டெக்ஸ் வில்லரின் பிஸ்டல் பிச்சை வாங்கிடும் உங்கள் ஒவ்வொருவரின் வேகத்திற்கு முன்னே ! சரவெடி கொளுத்திப் போட்டது போல் எத்தனை எத்தனை எண்ணச் சிதறல்கள் !! எத்தனை உத்வேகம் !! உற்சாகம் ! awesome !!

    காமிக்ஸ் என்பது 'கன்னித் தீவு சிந்துபாத் - லைலா சமாச்சாரம்' என்று நினைத்திடும் நண்பர்கள் எப்போதாச்சும் ஒரு முறை இந்தப் பதிவின் பக்கம் தலை வைத்துப் படுக்க நேரிட்டால் - நிச்சயம் கிறுகிறுத்துப் போய் விடுவார்கள்.

    இந்தத் தலைப்பிற்கு வந்துள்ள ஏராளமான கருத்துப் பதிவுகளுக்கு அங்காங்கே பதிலளிக்க முயற்சித்துள்ளேன்...so பொறுமையாகவே கொஞ்சம் பின்நோக்கி scroll செய்திடல் தேவைப்படலாம் !

    அப்புறம் "தலைவாங்கிக்குரங்கு" தயாராகி விட்டது...despatch செய்து வருகின்றோம் ! லயன் காமிக்ஸ் (எமனின் தூதன் டாக்டர் 7 ) இவ்வாரம் சனிக்கிழமை தயாராகி விடும். திங்கள் முதல் இதழ்கள் அனுப்பப்படும். Happy Reading !

    வரவிருக்கும் அடுத்த இதழ் நமது "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" தான் !

    ReplyDelete
    Replies
    1. சார், அப்போ Dr .7 - க்கு அப்புறம் வர வேண்டிய ஜானியின் "மரணத்தின் நிசப்தம்" என்னாயிற்று / எப்போது வரும்...?

      Delete
    2. MH Mohideen, இது ஒரு நல்ல கேள்வி!

      Theeban (SL)

      Delete
    3. சார், தலை வாங்கி குரங்கு கடைகளில் கிடைக்குமா?

      Delete
  49. ஜெட் வீரர் லோகன் நல்லா நினைவு இருக்கு .அதுல ஒரு மொழி பெயர்ப்பு கருவி வரும் ,அது நம்மகிட்ட இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு கற்பனை பண்ணிய நாட்கள் இனிமையானவை

    ReplyDelete
  50. Replies
    1. http://bladepedia.blogspot.in/2012/03/blog-post_29.html

      Delete
  51. Dear Sir,

    //Hi everybody,

    "Thalaivaangik Kurangu" will be despatched starting tomorrow ! And we are doing it in the order of the subscription dates ! Not too long a wait now guys ! Thanks for your patience !// - You have quoted this on March 04.

    வெறுப்பேத்தாதிங்க சார் நான் நேரில் உங்கள் ஆபீசிக்கு சென்று கேட்டால் அடுத்த வாரம் வியாழக்கிழமை (ஏப்ரல் 05) அன்று வருமாறு சொல்லிவிட்டார்கள். நான் ஆபீசில் பெர்மிசன் போட்டு அலைந்ததுதான் மிச்சம். (I have visited your office on Mar 28). I know so much current cut in our town & in Friday will be holiday for all the offices. But still you can fix a date.

    எனது சொந்த ஊர் சிவகாசி நான் வேலை பார்ப்பது ராஜபாளையத்தில், தயவு செய்து சரியான Date குறிப்பிட்டால் சென்று புத்தகங்களை வாங்குவதற்கு மிகவும் உபயோகமாக இருக்கும். காமிக்ஸ் மீது இன்னமும் உள்ள ஆர்வத்தினால்தான் ஆபீசில் பெர்மிசன் போட்டு நேரில் உங்கள் ஆபீசிற்கு புத்தகம் வாங்க வருகிறேன். ஆனால்...

    புத்தகம் வந்தவுடன் படித்து விட வேண்டும் என்றுதான் நேரில் உங்கள் ஆபீசிற்கு புத்தகம் வாங்க வருகிறேன்.

    சொந்த ஊர் வாசகர்களிடம் ஏனிந்த மாற்றந்தாய் மனப்பான்மை. (I have very much frustrated when i try to buy the come back special. Same thing happen again with Thalai vannki kurangu also. "Fix a common date to buy the book for all the people". Dont fix the date for chennai first. If you have time reply me sir. (Only Vijayan Sir))

    ReplyDelete
  52. SoundarSS : நீங்கள் எங்கள் அலுவலகத்துக்கு வந்து விசாரித்தது கடந்த ஓரிரு நாட்களில் அல்ல என்று நினைக்கிறன். தலைவாங்கிக் குரங்கு தயாராகவே உள்ளது. இன்று மதியம் வந்தால் கூட வாங்கிக் கொள்ளலாம்..

    பைண்டிங் பணிகள் முடிந்து - சிறுகச் சிறுகவே பிரதிகள் வந்து கொண்டிருப்பதால் சந்தாக்களுக்கு முன்னுரிமையில் அனுப்பி வருகிறோம் ; so அந்த process நிறைவு பெறும் வரை - வந்த உடனேயே வாங்கிடுவது என்பது சாத்தியப்படாது. Comeback ஸ்பெஷல் இதழின் போதும் இதே சிக்கலில் தான் நீங்கள் மாட்டி இருக்க வேண்டும் !

    சென்னை வாசகர்களுக்கு ஒரு நாள் ; மற்றவர்களுக்கு இன்னொரு நாள் என்றெல்லாம் ஏதும் கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. Dear Sir,

      Thanks for your immediate response. (I have visited our lion comics office yesterday afternoon only not 2 or 3 days back. Still i will happy to go to our lion office today for the books.)

      Delete
    2. ஆசிரியர் அவர்கட்கு,

      சொந்த நாட்டை விட்டு வெகுதூரத்தில் வாழ்ந்து கொண்டு தமிழ் காமிக்ஸிற்கு சந்தா கட்டிய அயல் நாட்டு சந்தாதாரர்களிற்கு இதழ்களை அனுப்பி வைத்து ஒரு மாதத்திற்கு பின்பாக உள்ளூர் அன்பர்களிற்கு இதழ்களை [ கையிருப்பில் இருந்தால்] அனுப்பி வைத்திடலாமே .... :)))

      Delete
    3. இது அன்னிய நாட்டு சதி, உள்ளூரில் இருந்து கொண்டே பன்னாட்டு நிறுவனங்களுக்காக பணி புரியும் எங்களுக்கே முன்னுரிமை!

      "உள்ளூர் அன்பர்களிற்கு" என்று சொல்லி பரம்பரை வைத்தியம் லாட்ஜில் பார்க்கும் ஆசாமிகளை போல எங்களை இறக்கியது அநியாயம் :)

      Delete
    4. Kadhalare en intha Kolaiveri ungaluku...

      Delete
    5. Dear Vijayan sir, I have ordered for airmail to USA.When I can expect them to reach me.Can you please respond ?

      Delete
  53. Time for New Post from Vijayan Sir,

    ReplyDelete
  54. ஒரு 1000 கும்மிக்கு அப்பறம் நியூ போஸ்ட்.... ;)

    ReplyDelete
  55. கனவுகளின் காதலன் ; Seeni, Denver : கடல் கடந்த நண்பர்களுக்கு சந்தா முன்னுரிமை தந்திடுவது நல்லதொரு எண்ணமே !அயல்நாட்டுச் சந்தாக்கள் நாளை முழுவதுமாக அனுப்பப்படும்.....ஒரு வாரத்திற்குள் உங்கள் கைகளுக்கு இதழ் கிடைத்திடுமென்று நினைக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. Dear Mr. Vijayan,

      I had a very very tough time for past one week at my office, but in one more week
      i am going to get my book.Great News
      it is time for new post Editor with lot of good news!!!

      Aldrin Ramesh from Oman

      Delete
    2. ஆவலாகக் காத்திருக்கிறேன் :-)

      Delete
    3. பப்பரப்பா பப்பரா, பப்பரப்பா பப்பரா பத்திகிச்சு பம்பரம் ஹோய் :)) ஹிஹிஹி, இந்த உவப்பான சேதியை படித்திடும் உள்நாட்டு சந்தாதாரர்கள் அனைவர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடும் அந்த இன்பக் காட்சி என் மனக்கண் முன் ஓடுகிறது.... :)) வெரி நைஸ், ஓ யா பேபிய்.....

      ஐநா அயல்நாட்டு சந்தாதாரர் துறை.

      Delete
    4. ரொம்பதான் ஆட வேண்டாம் :) வெளிநாட்டுக்கு பிரதிகள் வந்தடைவதற்குள் உள்ளூர்வாசிகளான நாங்கள் முழு புத்தகத்தையும் உரு போட்டுருப்போம்!

      Delete
    5. இதை நான் வன்மையாக கண்டிக்கறேன் :)

      Delete
    6. டென்வரில் இருந்து கொண்டு சந்தோஷப்படாமல் எதையய்யா கண்டிக்கிறீர்? அயல் நாட்டுக்கு முயல் வேகத்தில் புத்தகங்கள் அனுப்பப் போவதையா? அல்லது உள்ளூர்வாசிகள் உருப்போடுவதையா?

      Delete
    7. டெலிபோன் மணி ட்ரிங் ட்ரிங்

      - சார், நாந்தான் கார்த்திக் பங்களூர்லிருந்து பேஸ்றேன் என் புக்கு அனுபியாச்சா சார்?
      - பங்களூரிலிருந்து கார்த்திக்கா!!! புக்கா!!! சார் நீங்க சந்தா கட்டியிருக்கீங்களா என்ன !!
      - என்ன சார் கேள்வி இது, ரெண்டு நாளைக்கு முன்னாடி பங்களூர் அனுமார் கோவில்ல வெச்சு வேண்டிகிட்டே அனுப்பின சந்தா சார் அது, கொஞ்சம் பாருங்க சார்..
      - அப்டியே கொஞ்ச நேரம் லைன்ல இருங்க சார்!
      - அய்யய்யோ இப்ப அவங்களிற்கெல்லாம் போயிருக்குமே, ச்சேச்சே அவ்ளோ விரைவாவா போய்டும்
      - சார் லைன்ல இருக்கிங்களா
      - இல்ல லைன்ல இல்ல, புக்கு அனுப்பியாச்சா சார்
      - சார் உங்க பேரே சந்தாதாரர் லிஸ்ட்ல இன்னம் பதியல சார், இப்ப நோட் பண்ணிக்கிறம் சார் இன்னம் இரண்டு நாளைக்குள்ள பதிஞ்சிருவம் சார், அனேகமா இன்னம் இரண்டு வாரத்திற்குள்ள புக்கு உங்க கைக்கு வந்திரும் சார்
      - இரண்டு வாரத்திலயா, என்ன சார் நான் என்ன டென்வர்லயா இருக்கேன், பங்களூர் சார், பங்களூர்
      - அப்டி அவசரம்னா ஆபிசில வந்து வாங்கிக்கோங்க, தோ நேத்துக்கூட ஒருத்தர் வந்து புக்க வாங்கிட்டு அழுதுகிட்டே போனாரு
      - சார்,இப்ப, உடனே அனுப்பி வைங்க சார், கும்மியா கமெண்டு எல்லாம் போட்டேன், அனுப்பி வைங்க சார்
      - உடனே அனுப்பினா 3 வாரம் ஆகும், பரவாயில்லயா
      - !!!!!!!!

      Delete
    8. ட்ரிங்... ட்ரிங்...
      கனவுகளின் காதலன்: ஹலோ, யார் பேஸ்றது ?
      மறுமுனையில்: ஹலோ, நான் இன்டர்போல் ஆபிசர் பேசறேன்
      க. கா.: கு.. கு... குட் மார்னிங் ஆபிசர், நான் எந்த குரங்கையும் கடிக்கல, எனக்கு ஒண்ணும் தெரியாது...
      இ. ஆ.: மவனே நீயாவே மாட்னியா, எங்க இலாகா ரொம்ப வருஷமா தேடிட்டிருக்கிற பயங்கர குரங்கு இப்போ உன் வீட்லதான் இருக்குன்னு பெங்களூர்ல இருந்து போன் வந்துச்சு!
      க. கா.: பெங்களூர்ல இருந்து போனா? வேணா ஆபிசர், நம்பாதீங்க. என்கிட்டே இருக்கறது குரங்கு பத்தின ஜெனரல் நாலெட்ஜ் புக்கு மட்டும்தான். மத்தபடிக்கு ஜூல மட்டும் பாத்திருக்கேன்
      இ. ஆ.: வீச்சருவா வச்சுக்கிட்டு ட்ரைனிங் குடுக்கறதா சொன்னது?
      க. கா.: ஐயோ ஐயோ அது எனக்கு வரப் போற புது லயன் காமிக்ஸ் அட்ட படம் சார், நான் வேணா சந்தாவ கேன்சல் பண்ணிர்றேன். என்ன விட்டுருங்க!
      இ. ஆ.: நா உன் வீட்டுக்கு வர்றப்போ குரங்கு பத்தின எந்த தடயம் கெடைச்சாலும் உன்னை சும்மா விட மாட்டேன்
      க. கா.: வேணா ஆபிசர், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க - நான் இப்பவே சந்தா கேன்சல் பண்ணிர்றேன்
      இ. ஆ.: அது! அப்படியே பெங்களூர் அனுமாருக்கு ஒரு வடை மாலை சாத்திட்டு வந்துரு. இல்லே மவனே தொலஞ்ச நீ

      Delete
    9. உங்களுக்கு நான் அளித்த பதில் கூகிள் கமெண்ட்ஸ் போஸ்டிங் பழுதடைந்த காரணத்தால் மறைந்து போய் விட்டது! :(

      Delete
  56. Anonymous : இந்த ஞாயிறன்று புதியதொரு பதிவோடு சந்திப்பேன் !

    ReplyDelete
    Replies
    1. Dear Editor,

      you are online!!!

      Aldrin Ramesh from Oman

      Delete
  57. அந்தன்னிக்கு Apirl foooool சொல்லி ஏமாத்திட மாடீங்களே :)

    ReplyDelete
  58. விஜயன் சார், நான் சந்தா இரண்டு நாள் முன்புதான் கட்டினேன் - அப்போ எனக்கு கடைசியாதான் அனுப்புவீங்களா. அய்யகோ, என்னிடம் TVK முதல் பதிப்பு கூட இல்லையே!

    ஆமாம், பெங்களூர் தமிழ்நாட்டில் இல்லை என்பதால் வெளிநாட்டில்தானே உள்ளது?

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா "பாண்டிச்சேரி" வெளிநாடுதானா, தப்பிச்சேன்டா சாமி....

      Delete
    2. சென்னையே வெளிநாட்டில்தான் இருக்கிறது.. :)

      Delete
  59. எனக்கு லேட்டாக புக் அனுப்பப் போவதற்கு தண்டனையாக இந்த பதிவை படித்து துன்புறுங்கள்! Btw, மொஸாடை மையமாக கொண்டு ஏதாவது காமிக்ஸ் இதுவரை வந்துள்ளதா? நீங்கள் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் (Graphic Novel வகையில்)

    ReplyDelete
  60. Dear Vijayan sir,

    It is unbelievable to see 151 comments on the post.
    Great. It is time for having an official LION-MUTHU vibrant Facebook page also.

    Another suggestion,
    I really believe that you need to increase the price of the comics books
    so that it is profitable and viable for your firm.
    As a LION Addict, I'am shamlessly selfish in stating that we want to reach a stage where LION-MUTHU comics becomes a fortnightly and we get a bumper issue every 2 months.

    In these days a Dosa at kayendhi bhavan is 15 Rs and 40 Rs at adyar ananda bhavan.
    A haircut at a low grad saloon costs 35 Rs and a cinema ticket is costing 50 to 150 Rs.
    It is puzzling for me how you are managing at such low costs.
    All we want is free flow of comics from your firm and we are ready to pay for it.

    -Mani-Chennai.

    ReplyDelete
  61. //125 பின்னூட்டங்களைக் கடந்துபோய்க்கொண்டிருக்கிறோம். ஆசிரியர் அடுத்த பதிவை கொஞ்சம் தாமதப்படுத்தினால் 150ஐக் கடப்பது உறுதி!//

    ஆரூடம் பலித்தது. ஆனால்,வெறும் ஆரூடத்தால் அல்ல. காமிக்ஸ் காதலர்களால்!

    ஆசிரியர் ஞாயிறுதான் அடுத்த பதிவு என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டார். இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. அதற்குள் 200 பின்னூட்டங்களை எட்டிவிடுவோமோ?

    நினைத்தால் நடக்காதது என்று எதுவுமில்லையே!

    -Theeban (SL)

    ReplyDelete
  62. இந்த திகில் இதழ்களை தேடி அலைந்த நாட்களை நினைவு கூர்கிறேன்.

    பேட் மேன் இதழ்களை மறுபதிப்பு செய்தாலென்ன? நமது இதழ்களின் படங்களின் ஸ்டைல் இப்போதுள்ள DC காமிக்ஸ் இதழ்களில் இல்லை.

    மற்றபடி எந்த இதழை மறுபதிப்பு செய்தாலும் வரவேற்கிறேன்! வாழ்க உங்கள் அனைத்து முயற்சிகளும்! வளர்க வாசகர் வட்டம்!

    செ. சங்கர்

    ReplyDelete
  63. தலை வாங்கியார் நாளை வந்துவிடுவார் என்றார்கள் ஏற்கனவே கையில் உள்ள புத்தகம் தான் என்றாலும் எதிர் பார்ப்பு அதிகம் உள்ளது .
    "சந்தா "கட்டினாலே "பந்தா"தான்..............

    ReplyDelete
  64. reprint fever இந்த அளவுக்கு இருக்கும் என்று ஆசிரியரே எதிர்பாத்து இருக்கமாட்டார்னு நினைக்கிறேன். 160 பின்னுட்டங்கள், பார்வையாளர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டி இருக்குமென்று நினைக்கிறேன்.

    வாவ்... இது ஒரு அட்டகாசமான சாதனைதான்..சந்தேகமே இல்லை. விஜயன் சார் Blog ஆரம்பித்து மூன்று மாதத்திற்குள் இப்படி ஒரு வரவேற்ப்புக்கு காரணம், உலகம் முழுதும் பரவி இருக்கும் லயன் காமிக்ஸ் பிரியர்களால்தான்.

    விஜயன் சார், காமிக்ஸ் பிரியர்களை நன்றாக உசுபேத்தி விட்டுவிட்டிர்கள், நாங்களும் நிருபித்துவிட்டோம். இனிமேல் நீங்கள் தப்பிக்க முடியாது.

    இந்த fever க்கு ஒரே மருந்து சரியான தேதியில் சீரான இடைவெளியில் நீங்கள் வெளியிடபோகும் புத்தகங்கள்தான்.

    என்ன செய்ய போகிறிர்கள். திருநெல்வேலி அல்வாவா... அல்லது, சிவகாசி சரவெடியா...

    ReplyDelete
  65. விஜயன் சார்,

    ஒரு சின்ன suggestion , மொபைல் போன் வைத்திருக்காத மனிதர்களே இல்லை எனலாம், உருப்படாத விஷயத்துக்கெல்லாம் இப்போ SMS alert என்ற பேர்ல கொடுமையான sms எல்லாம் வருது.

    அதனால் நாமளும் கலக்கினா என்ன? "book despatched " "your subscription amount received " "அடுத்த வெளியீடு super hero super special " இப்படி..

    இதனால் பல புது வாசகர்களை கவரலாம் என நினைக்கிறேன். மேலும், சார் எனக்கு புக் அனுப்பியாச்சா போன்ற கேள்வியில் இருந்தும் தப்பிக்கலாமே.

    ReplyDelete
  66. இதோ.. இப்போதான் தபாலகாரர் தலை வாங்கி குரங்கை கையில் தினித்து விட்டு செல்கிறார். தூள் அட்டைப்படம், அட்டகாசமான காகித தரம். படிக்க ஆரம்பிக்க போகிறேன்

    :
    :
    :
    :
    :
    ;
    ;
    ;
    ;
    இப்படி யாராவது கமெண்ட் போடுவாங்கன்னு ரொம்ப நேரமா இதே பக்கத்தை வெறித்து வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். சீக்கரம் இது போன்ற உண்மை கமெண்ட் யாராவது போடுக்கப்பா...

    ReplyDelete
  67. நம்ம விஜயன் சார் வலை பதிவில் விளம்பர பின்னூட்டம் போட்டே எனது பதிவிற்கு படிக்க ஆள் சேர்க்க உத்தேசம் ;) சார் கோச்சுக்க மாட்டார்னு நெனைக்கறேன்!

    காமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் ஒன்று!

    ReplyDelete
    Replies
    1. நல்ல முயற்சி நண்பரே இதன் மூலம் காமிக்ஸ் புகழ் பரவட்டும்!!!

      Delete
  68. 'தலைவாங்கிக் குரங்கு' இதழுக்காய் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் நண்பர்கள்.

    இந்த நேரத்தில் இலங்கை வாசகர்களுக்கு ஓர் இனிக்கும் செய்தி:
    வழமைபோல் 3, 4 மாதங்கள் தாமதிக்காமல் விரைவில் கிடைக்கப்போகிறது அவர்களுக்கும் லேட்டஸ்ட் இதழ்!

    -Theeban (SL)

    ReplyDelete
  69. kindly add any other comics classic stories to super hero special
    Especially மினி லயன் சம்மர் ஸ்பெஷல் # மனித எரிமலை (இரும்புக்கை நார்மன் ),it is a super combination and great result to sales in our comics circles

    ReplyDelete
  70. Vijayan sir

    From what I observed, You seem to replying only to ppl whom you know or to ppl who talk something unrelated to the forum...

    The email id you have given - lioncomics@...No one replies to emails sent to that email id..Even for new subscriptions related queries, there is no reply.

    I dont understand how the current subscriber count will increase if it is like this.

    I had asked certain questions related to the Delay in this post(2 times)..there has been no response from you so far..I think you should be replying to queries which needs more attention, instead of replying to some timepass comments posted here.

    ReplyDelete
    Replies
    1. Srini V : Our staff are just about finding their way in the world of the internet & e-mails. As with almost every city in Tamilnadu, Sivakasi has a dire shortage of skilled employees and we are constantly looking to rope in more people to strengthen the production as well as sales sections.

      Almost all details that you require for subscriptions / back issues are in this blog along with payment info. Should you require anything further - a buzz to 04562-272649 ; 320993 (asking for Mr.Radhakrishnan or Ms.Stella Mary) would definitely give you the answers.

      This blog ideally ought to be a place where every visitor finds something to read and savour. That is the reason why I prefer not to reply to subscription or back issue queries.

      And branding the postings here as "timepass comments" is certainly not fair ! Each single member who writes in here is a passionate comics fan and writes to express his / her thoughts ! Let's respect that please !

      Delete
  71. எங்களுக்குள் தூங்கி கொண்டிருந்த 'காமிக்ஸ் ஆர்வம்' என்ற சிங்கத்தை இந்த மாதிரி பிளாக் ஆரம்பிச்சு எழுப்பி விட்டு விட்டீர்கள். தயவு செய்து எதாவது காமிக்ஸ் புத்தகத்தை இரையாக போடுங்கள்....

    ReplyDelete
  72. Dear Sir,

    ஆபீசிற்கு சென்று தலை வாங்கிக் குரங்கு - COMICS CLASSICS வாங்கிவிட்டேன். புத்தகம் மிகவும் நன்றாக இருந்தது. இரத்தப்படலம் பாகம் 19 எப்பொழுது வெளியாகும் என்று இப்பொழுதே ஆர்வமாக உள்ளது (RATHAPADALAM PULANVISARANAI?). நன்றி. (http://soundarss.blogspot.in/2012/03/comics-classics-reprint.html)

    ReplyDelete
  73. me the 170!!!!!
    vera onnumilla oru perumaithan. innum Thalai vangi vanthukitte irukku!

    ReplyDelete
  74. நீண்ட காத்திருப்பிற்கு பிறகு, இன்று த​லைவாங்கி குரங்கு ​பெற்​​றேன், ​சொல்ல வார்த்​தைகள் இல்​லை புத்தக அ​மைப்பு, ​சைஸ், ​பேபர் தரம் அ​னைத்தும் அரு​மை.

    ReplyDelete
  75. எனக்கும் இன்று வந்து விட்டது நிறைய நிறைகள் கொஞ்சம் குறைகள் என்று எனக்கு தோன்றுகிறது. ஆனாலும் அருமையான கதை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை! நிச்சயம் இன்னும் அருமையான விஷயங்கள் காத்திருக்கின்றன

    ReplyDelete
  76. விஜயன் சார் இந்த பதிவை பார்ப்பாரா? வாசகர் சந்தேகம் தீர்ப்பாரா? காமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் இரண்டு! - ரெடி!

    ReplyDelete
  77. ஹலோ பாய்ஸ் , இப்படியெல்லாம் உசுப்பேத்ததீங்க, எனக்கு புத்தகம் இன்னும் வரலை,,

    ReplyDelete
  78. vijayan sir, i"m waiting for ur new post. after finish my clinic i regularly watch this blog daily.atleast 2 post for a week is enough for us. we know lot of work for u. but pl consider this. ur posts r energy tonic for us.thank u.

    ReplyDelete
  79. எனக்கும் புத்தகம் இன்னும் வரலை,, :(

    ReplyDelete
  80. காமிக்ஸ் கிடைக்காதவங்களுக்கு விரைவில் கிடைத்து விடும் நண்பர்களே மிக மிக விரைவாக வேலைகள் நடந்து வருகின்றனவாம் மேலும் நிறைய பணியாளர்களை சேர்க்க போவதாக சார் சொல்லி இருக்கிறார். எல்லாம் நலமாகும் நாள் வந்தாச்சி ஜாலியா இருங்க நண்பர்களே இம்முறை சார் புதிதாக யோசித்து உடனே அமலாக்கம் செய்வதை கொஞ்சம் யோசித்து பொறுமையாக இருக்குமாறு கேட்டுகொள்கிறேன்

    ReplyDelete
  81. அதுவரை எனது காமிக்ஸ் போராட்டம்- என்ற எனது டுபாகூர் பதிவை பாருங்களேன். எனது கன்னி முயற்சியை கலாய்க்கலாமே ப்ளீஸ்.
    http://johnsimon-johny.blogspot.in/2012/03/blog-post.html

    ReplyDelete
  82. நேற்று எனக்கு தலை வாங்கிக் குரங்கு கிடைத்தது. அருமையாக உள்ளது.
    முழுவதுமான விமர்சனம் பின்னர்.

    ReplyDelete
  83. டியர் விஜயன் சார் , நாங்கள் வாரம் குறைந்தபட்சம் 2 பதிவுகள் உங்களிடம் எதிர்பார்கிறோம் .உங்கள் வேளை பளுவை நாங்கள் அறிவோம்.நான் தினமும் கிளினிக் முடித்த
    .. பின்பு ,இரவு தூங்குவதற்கு முன்பு உங்கள் பதிவை பார்த்த பின்புதான் தூங்குவேன் .நான் எப்போது காமிக்ஸ் வாங்கும்போதும் முதலில் படிப்பது ஹாட் லைன் தான்.அது ஒரு நண்பன் என்னோடு பேசுவது போல் இருக்கும். ஸோ,வாரம் 2 பதிவுகள் ,ப்ளீஸ் சார் .

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சார் ..........hello dr.sundar iam 1995 madurai batch .........happy that i got a colligue for sharing and iam in covai

      Delete
    2. Dr.Sundar,Salem ; DrSureshkumarraju : உங்களின் அன்பிற்கு என்றும் எனது நன்றிகள் !

      'ஒரு எடிட்டர் தனது வாசகர்களிடம் தகவல் சொல்லுவது' என்ற கண்ணோட்டத்தில் ஒரு நாளும் நான் ஹாட்லைன் எழுத முயற்சிப்பதில்லை ! ஜாலியாக, மனதில் படுவதை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுவது மட்டுமே எனது ஹாட்லைனின் நோக்கம் ! So இது எனது எழுத்துப் புலமைக்குக் (??!!) கிடைத்த பாராட்டு என்று பீலா விட்டுக் கொள்வதை விட ; காமிக்ஸ் எனும் ஒரு சங்கிலியில் கட்டுண்டவர்களிடையே எண்ணப் பரிமாற்றம் எத்தனை சுலபமாகிறது என்ற பெருமிதமே பொருத்தமாக இருக்கும் ! !

      மூன்று மாத இந்த வலைப்பதிவில் 29 பதிவுகள் எனும் போது, வாரம் 2 என்பதையும் விட அதிகமாகவே எழுதி வருகிறேன் என்பதை நானே இப்போது தான் கவனிக்கிறேன் ! தோன்றும் போதெல்லாம் எழுதுவது என்று இருக்கிறேனே தவிர - மனதில் குறிப்பிட்டதொரு நம்பர் வைத்து அல்ல ...! எனினும் வரும் நாட்களில் உங்களிடம் சொல்லிட நிறையவே விஷயங்கள் காத்திருப்பதால் அடியேனின் தலை அடிக்கடி தென்பட்டுக் கொண்டே இருக்கும் !

      அப்புறம் வேலைப் பழு என்பதெல்லாம் எனக்கு மட்டுமே பிரத்யேகமான பிரச்னை அல்லவே ! இங்குள்ள நண்பர்களும் சரி..வலைக்கு இன்னும் வந்திடாத இதர வாசகர்களும் சரி, busy-ஆன பணிகளுக்கிடையே தான் காமிக்ஸ் மீது காதல் செய்து வருவது தெரிந்ததே ! So நானும் பணிகளுக்கிடையே இங்கேயும் கவனம் செலுத்துவது உறுதி ! Thanks again !

      Delete
  84. 'மறுபதிப்புக்கு மரியாதை' என்று ஆசிரியர் தலையங்கம் போட்டாலும் போட்டார்... 180 பின்னூட்டங்களைக் கடந்திருக்கிறது இந்தப் பதிவு.

    வலைப்பதிவுகளில் எந்தவொரு பதிவும் இந்தளவு பின்னூட்டங்களை எட்டுவது என்பது சாதாரண விடயமல்ல.

    வாசகர்கள் கும்மி அடித்தாலும்கூட 100ஐத் தாண்டுவது என்பது மிக மிகக் குறைவு.
    ஆனால், இங்கே 200 எட்டிவிடும் சாத்தியத்தில் இந்தப் பதிவு இருக்கிறது.

    மீண்டும் புத்துணர்ச்சி பெற்றிருக்கும் நமது காமிக்ஸ்கள் வெளிவருவதில் மின்வெட்டுப் போன்ற காரணிகள் தாக்கத்தைச் செலுத்திவருகின்றன.

    அவற்றையெல்லாம் வெற்றிகரமாகக் கடந்து தொடர்ச்சியான வெளியீடுகளை எமக்கு விரைவாகத் தருவதற்கு ஆசிரியருக்கு ஓர் எக்ஸ்ட்ரா உத்வேகத்தைக் கொடுக்க - ஏராளம் வாசகர்கள் வெளியீடுகளுக்காக தினம் தினம் காத்துக்கிடக்கிறார்கள் என்கிற அழுத்தத்தை ஆசிரியருக்கும் (பல வேலைப்பழுக்களுக்கு மத்தியில் அவரும் பாவம்தான்; ஆனால் ஆண்டுகள் கடந்தும் பொறுமையோடு காத்திருந்த நாமெல்லாம் அவரை விடப்பாவமில்லையா?) கொடுப்பதற்காக - இந்தப் பதிவின் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்துவோமா?

    நண்பர்கள் என்ன சொல்கிறீர்கள்?

    -Theeban (SL)

    ReplyDelete
  85. நண்பர்களே....! ராஜேஷ் குமார் ,பிரபாகர் ,சுபா நாவலுக்கு கூட இத்தனை வரவேற்பு ,கிண்டல்கள் கேளிகள் பாராட்டுக்கள் நெட்டில் கிடையாது என்று நினைக்கிறேன் .........

    ReplyDelete
  86. Podiyan (Theeban SL) :நிஜமாகவே இங்கே எழுந்திடும் உற்சாகம்..உத்வேகம்..முதிர்ந்த சிந்தனைகள் ..எங்களுக்கு சொல்ல இயலா தைரியத்தை தந்து வருகின்றது ! எங்கள் சின்ன டீமின் சார்பாக எல்லோருக்கும் நன்றிகள் !!

    மின்வெட்டு சங்கதி தான் இப்போதைக்கு எங்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக உள்ளது.தினமும் பத்து மணி நேர மின்தடை + வாரந்திர வெள்ளிகள் மின்விடுமுறை எனும் போது சிவகாசி ஸ்தம்பித்துத் தான் போகின்றது ! 'சற்றே தேவலை' என்ற அளவிற்கு சூழ்நிலை மாறிட்டால், தயாரிப்புப் பணிகள் இன்னும் சுலபமாய் முடிக்க இயலும் ! Fingers crossed !

    ReplyDelete
  87. ஏதேதோ தினம் வருது ''தமிழ் காமிக்ஸ் தினம் ''(லயன் காமிக்ஸ் ஆரம்பித்த தினத்தை......)கொண்டாடலாமே .....முடிந்தால் விஜயன் சார் முன்னிலையில் சிவகாசியில் ...............

    ReplyDelete
    Replies
    1. drsureshkumarraju : நிச்சயம் இது கொஞ்சம் டூ டூ மச் ! அதுவும் ஏப்ரல் ஒன்னாம் தேதி வேற இன்னிக்கு!! :-)

      Delete
    2. அப்படியே ஆரம்பித்தாலும், அதற்கு முத்து காமிக்ஸ் ஆரம்பித்த தினம்தான் சரியான தேர்வாக இருக்க முடியும்!

      Delete
  88. விஜயன் சார், எனக்கும் புத்தகம் இன்னும் வரலை :'(

    ReplyDelete
  89. நீங்க இன்னைக்கு புதுசா பதிவு போடுறேன்னு சொல்லிட்டு ஏமாத்திபுடீங்களே சாமி ...........நீங்க ஏப்ரல் முதல் தேதி கொண்டாடிடீங்க ............

    ReplyDelete
  90. விஜயன் சார்,

    நமது ப்ளாக்கில் நேரம் தவறாக பதிவாகிறது.

    உதாரணமாக இதை நான் எழுதும் பொழுது நேரம் 03:30PM. ஆனால் பதிவான நேரம் என்று வேறு நேரம் டிஸ்ப்ளே ஆகும்.

    இதற்க்கு நீங்கள் உங்களது பிளாக்கர் அக்கௌன்ட் செட்டிங்க்ஸ் மாற்ற வேண்டும்.

    Blogger Settings > Language and Formatting > Time Zone > (GMT +05:30) India Standard Time

    NAGARAJAN S

    ReplyDelete
  91. dear suresh,i"m 96 batch salem.i am a dentist practise in salem.vijayan sir, thank u for ur reply in ur busy schedule.

    ReplyDelete
  92. டியர் பிரெண்ட்ஸ் ,எப்படி தான் தமிழில் டைப் அடிக்ஹரிநிக்களோ .சாரி சற்று தவறினாலும் இப்படி ஆகி விடுகிறது .நாம் பழைய புத்தக கடையில் ஒரு காமிக்ஸ் 50 ,100 கொடுத்து வாங்குவது விட புதிய காமிக்ஸ் வருவது ஊக்க படுத்தலாமே ?ஏன் என்றால் என்னுடிய பால்ய நண்பர்கள் பலருக்கு இன்று காமிக்ஸ் வரு வது தெரியவில்லை .அவர்களை சந்தா கட்டசொல்லி உள்ளேன் .பழைய காமிக்ஸ் மறு பதிப்பு செய்ய எடிட்டர் தயாராக உள்ளார் . ஸோ,நண்பர்களே நம் காமிக்ஸில் ஆர்வம் உள்ள நம் நண்பர்களை சந்தா கட்ட சொன்னால் அது நம் காமிக்ஸ்இற்கு புரியும் உதவி ஆகும் .நான் பழைய புத்தக கடையில் நிறைய பணம் இழந்து உள்ளேன் ,எனைய நண்பர்கள் போல் .நான் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் .

    ReplyDelete
  93. டியர் டாக்டர் சார் உங்க பீலிங்க்ஸ் தான் இன்று காமிக்ஸ் வலை தளம் வரை என்னை உசுப்பேற்றி விட்டு உள்ளது நம் நண்பர் கிங் விஸ்வா போன்றோர்கள் இதை தடுக்கத்தான் எல்லா விதத்திலும் முயற்சி மேற்கொண்டுள்ளார்கள் கண்டிப்பாக நீங்கள் விரும்பியது நடக்கும் இந்த வருடத்தின் அடுத்தடுத்த அதிரடிகளுக்கு தயாராக இருப்போம்.

    ReplyDelete
  94. எடிட்டர் சார், ஆன்லைனில் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி புத்தகம் வாங்க முடியுமா ? இரத்தபடலம் கம்ளீட் கலெக்ஷன் பற்றி இப்போது தான் தகவல் தெரிந்தது. மனியார்டர் மட்டும் தான் இப்போதைய பணம் / சந்தா செலுத்தும் வழியா ?

    செந்தழல் ரவி, தில்லி

    ReplyDelete