Powered By Blogger

Tuesday, October 07, 2025

அந்த மூவர்....!

 நண்பர்களே,

வணக்கம். 'புலி வருது...புலி வருது' என்று சில வாரங்களாகவே காட்டிக்கொண்டிருந்த  டிரெய்லர் போன வாரயிறுதியினில் மெயின் பிக்ச்சராக ரிலீசும் ஆகி, உங்கள் மனத்திரைகளில் இன்று ஓடியும் வருகிறது ! பரவலாய் ஒரு big thumbs up வரவேற்பு & எதிர்பார்த்தபடியே சில பிசிறடிக்கும் குரல்களும் - உங்களின் ரியாக்ஷன்ஸ்களில் !! ரசனை சார்ந்த தீர்மானங்களில் நாம் அனைவரும் ஒற்றைப் பக்கத்தில்,  சங்கமிப்பதெல்லாம் லெமூரியா கண்டத்தில் மாத்திரமே சாத்தியம் என்பதில் எனக்குத் துளியும் ஐயங்களில்லை என்பதால், ஒலித்த விசனங்களின் பொருட்டு எனக்கு disappointments இல்லை ! So "வாவ்....வியப்பில் வாயடைத்துப் போனேன்" என்றோ -  "ஓ...ஏமாற்றத்தில் ஏங்கிப் போனேன்" என்றோ டயலாக்கெல்லாம்  விடப் போவதில்லை ! என்ன - இயன்றமட்டுக்கு எனது ஒவ்வொரு தீர்மானத்தின் பின்னணியினையும் தெளிவாய் விளக்கி இருந்தாலுமே - ஒனாண்டிப் புலவரின் விளக்கங்களைக் காதில் போட்டுக் கொள்ள மறுக்கும் புலிக்கேசியாரின் பாங்கு கொஞ்சமே கொஞ்சமாய்த் தென்பட்டது தான் சின்னதாய் எனக்கொரு disappointment ! 

சமரசங்களின்றி எதுவும் சாத்தியம் நஹி - என்பதை ஏற்றுக் கொண்ட பின்னரே அட்டவணைப் பணிகளுக்குள் நான் ஒவ்வொரு முறையுமே குதித்திடுவதுண்டு ! என்னுள்ளேயே ஒரு வாசகன் - ஒரு எடிட்டர் - ஒரு பப்ளிஷர் - என மூன்று வேதாளங்கள் குந்தியிருக்கும் போது, எனக்குள்ளேயே கணிசமான முரண்கள் இருப்பது obvious !! உதாரணத்திற்கு : எடிட்டர் அவதாருக்கு  - புதுசு புதுசாய் ஹீரோக்களைப் பிடித்து இழுத்து வந்து உங்கள் புருவங்களை உயரச் செய்திடுவதில் ஒரு த்ரில் இருப்பதுண்டு ! ஆனால் ஒரு பப்ளிஷரின் நிலைப்பாடு கொஞ்சம் மாறுபடும் ! "ஏலே...என்ன வெளாடுறியா ? உம்பாட்டுக்கு புதுசு புதுசா ஆளுங்களை கூட்டியாந்திடுறே !! இருக்கவுகளுக்கே இங்கே சீட் தர மிடிலே ! இந்த அழகிலே புது வரவுகளை வருஷா வருஷம் எப்புடி தூக்கிச் சுமக்குறதுலே ?" என்று அந்த அவதார் கண்சிவப்பதுண்டு ! இதன் பொருட்டே இப்போதெல்லாம் நான் தேடிடும் புது நாயகர்களின் தொடர்களில், சொற்பமாய் ஆல்பங்கள் உள்ளனவா ? என்பதைப் பார்ப்பதே முதல் வேலை ! So ஈயம் பூசுனா மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும் என்பதே எழுதப்படா முக்கிய விதி !! 

இந்த variety-ன் தேடலும், புதியவர்களின் வருகைக் கட்டாயங்களுமே எனது சில்லுமூக்குக்கு சேதம் விளைவிக்கின்றதென்பது எனக்குப் புரியாதில்லை ! 2026 -க்கென நான் அறிவித்துள்ள 3 புது வரவுகள் :

*புதைகுழிப் பூக்கள்

*ரெட் கன் - குருதியின் கூலி 

*ப்ரூஸ் ஹாக்கர் - கரை சேரா காவியம் 

இந்த மூன்றையும் கூட்டினால் ரூ.500 வரும் ! இந்தப் பணத்துக்கு maybe அந்த  பௌன்சர் நெடும் ஆல்பத்தையும், இன்னொரு ஸாகோர் black & white  ரெகுலர் இதழையும் இணைத்திருக்கலாம் தான் ! But "புதுசாய் ஒண்ணுமே இல்லியா ?" என்ற விசனங்கள் அப்போது ஒலித்திருக்கும் என்பதில் no doubts ! முன்செல்லும் பாதையில் :

ஆண்டின் சந்தா ரூ.6000 க்குக் கீழே தான்....

&

ஆண்டுக்கு மினிமம் 10 டெக்ஸ்

ஆண்டுக்கு மினிமம் 2 டின்டின் 

என்ற பார்முலா தொடர்வதில் மாற்றங்கள் இராதென்று தைரியமாய் நம்பிடலாம் எனும் போது - இந்த டஜன் புக்ஸ் மட்டுமே நெருக்கி ரூ.2500-ஐ உறிஞ்சிக் கொள்வதைத் தவிர்க்க முடியாது ! And இவர்களே பயணத்தின் அச்சாணிகள் எனும் போது அவர்கட்கான ஸ்லாட்களையோ, பட்ஜெட்டையோ துளியும் துண்டு போட இயலாது ! மீதமிருக்கக் கூடிய மூணாயிரத்துக்குள் கிட்டத்தட்ட 20 ஹீரோ / ஹீரோயின்களை நுழைக்க முற்படும் போது தான் இல்லாத குரங்கு பல்டியெல்லாம் அடிக்க நேரிடுகிறது ! So - 2027 முதலாய் கொஞ்சமே கொஞ்சமாய் சந்தா பட்ஜெட்டை ஏற்றிக் கொள்வதில் ஏகோபித்த ஒப்புதல் இருந்திட வேண்டி வரும் (maybe ரூ.500 ஜாஸ்தி) ; or else இதே ரீதியில் அளவுச் சாப்பாட்டு முறையினையே தான் தொடர்ந்திட வேண்டி வரும் ! And "ஒக்கே ஒக்க சாகோர் தானா தேவுடு ?" ; "பௌன்சர் பர்த்தில்வா அன்னையா ?" ; "ஹாரர் கதா லேதா சேட்டா ?" என்ற குரல்களும் தொடரவே வேண்டி வரும் ! Anyways - 2027-ல் நமது நாயகர்களைக் கையாள வேறொரு பாணி இப்போதே மனசுக்குள் உலாற்றி வருகிறது ! 2026-ன் ஓட்டத்தின் மத்தியில் அந்தப் புதுத் திட்டமிடலை அசை போட்டபடிக்கே finetune செய்ய முயற்சித்தாகணும் ! 

In the immediate future - 2026 அட்டவணையினுள் அதிர்ஷ்டத்தின் துணையோடு புகுந்தோரை கொஞ்சம் வெளிச்சம் போட்டுப் பார்ப்போமா folks ?

First & foremost : காவியத் தலைவன் தோர்கல் !! ஏற்கனவே சொல்லியது போல, இவருக்கு VRS தந்து அனுப்பிட மனதளவில் நான் ரெடியாகவே இருந்தேன் ! ஆனால் THORGAL SAGA வரிசையில் இதுவரை வெளிவந்துள்ள 4 இதழ்களின் தரத்தையும் பார்த்தான பின்னே, கல்தா தரும் முடிவு மிக்க சிரமமாகிப் போச்சு ! So இந்த நொடியின் தீர்மானம் இவ்விதமே : காவியத் தலைவன் தோர்கல் இதழ்களை ஆண்டுக்கு ஒன்று என 2026 & 2027-ல் முயற்சிப்போம் ! அதன் பின்னேயும் வண்டியில் தடுமாற்றம் தென்படும் பட்சத்தில் மனுஷனை ஆரத் தழுவி, அன்போடு வழியனுப்பி வைப்போம் ! ஓ.கே.தானுங்களா ?

ஹிக்.....அது வந்து ...நெஸ்ட் on the லிஸ்ட் - வேறு யாருமில்லை - நம்ம இளவரசியே !!  கிட்டத்தட்ட ஆறாயிரம் ரூபா சந்தாவிலே ஒரு ஓரமா எழுபது ரூவா மட்டுமே கோரும் பொம்மனாட்டி மேலே நோக்கு ஏன்டா காண்டு ? என்ற கேள்வி எழலாம் தான் ! But honestly - நம்மில் எத்தினி பேர் இன்னமும் இளவரசியின் கதைகளை முழுமையாய் வாசிக்கிறோம் என்பதோ......எப்போதேனும் மறுவாசிப்புக்கு இளவரசி ஆட்படுகிறாரா ? என்பதோ மில்லியன் டாலர் கேள்விகளே ! "முன்போல ஈர்ப்பு தோண மாட்டேங்குது" என்று தனிச்செய்திகளில் இப்போதெல்லாம் மெசேஜ் அனுப்புவோர் கணிசம் ! பெர்சனலாக எனக்கு இவர் என்றென்றும் செல்லப்பிள்ளையே ; ஆனால் அந்த ஒற்றை கோட்டாவை நம்பியே அம்மணி சவாரி செய்வதாக இருந்தால் - அது அவரது கெத்துக்கே பங்கம் தானே guys ? So இளவரசிக்கும் விற்பனை முனைகளில் கண்ணில் castor oil கொண்ட கவனம் நல்கப்படும் !! சூரியகுமார் யாதவைப் போலவே உசக்க உசக்கத் தான் பந்தைத் தூக்கி அடித்துக் கொண்டிருப்பாரெனில் ......அது வந்து.....தொண்டை லைட்டாய் அடைக்குது !!

ரிப்போர்ட்டர் ஜானி : Maybe just maybe - இவரது வசீகரங்களுக்கான shelf life பூர்த்தி கண்டு விட்டதோ - என்னமோ ? என்ற கேள்வி எனக்கு ரெண்டு-மூன்று ஆண்டுகளுக்கு முன்னமே எழத் துவங்கிவிட்டது ! Moreso becos - கடைசி மூன்றாண்டுகளாகவோ, என்னவோ ரிப்போர்ட்டர் ஜானிக்கு நான் தான் பேனா பிடித்து வருகிறேன் & கதைகளில் தென்படும் அந்த அதே பஞ்சாங்க பாணிகள் ரொம்பவே உறுத்தி எடுத்தன ! Of course - சில மாற்றமின்மைகளே உங்களின் வாஞ்சைகள் எனும் போது அவருக்கு ரிட்டயர்மெண்ட் தரும் எண்ணத்தினை தள்ளிப்போட்டுக் கொண்டே போயிருக்கிறேன் ! Just maybe - 2026 ஒரு இறுதிப் பரீட்சையோ, என்னவோ - புன்னகை மன்னருக்கு ! SODA போல ஒரு முற்றிலும் மாறுபட்ட கதைத்தொடர் வெளியே காத்துக் கிடக்க, 1986 முதலாய் 39 ஆண்டுகளில் கிஞ்சித்தும் மாறியிருக்கா ஒரு நாயகரை விடாப்பிடியாய் தக்க வைத்திருப்பது நெருடுகிறது ! ரோஹித் ஷர்மாவையே ஒற்றை ராவினில் காலைப் பிடித்து கீழே இழுத்துப் போட்டிருக்கும் நம்ம ஊரில் அவசியமாகிடக்கூடிய மாற்றம் அமலுக்கு வரத்தான் வேணும் என்பேன் !    

Frankly, இன்று அச்சாகியுள்ள 2026-ன் அட்டவணையினை விரல் தேயப் புரட்டோ-புரட்டென்று புரட்டித் தள்ளினாலும், இந்த மூவரைத் தவிர்த்த வேறு யாரது ஸ்லாட்களும் கேள்விக்குறி எழுப்பக் கூடியவைகளாக எனக்குத் தென்படவேவில்லை ! So இருக்கும் பட்ஜெட்டுக்குள் வேறு விதமான combinations சாத்தியமென்று நண்பர்கள் கருதினால் - more than happy to listen to their takes !! 

GEN Z சந்தாவின் அவசியம் எனக்கு ஒரு வருஷத்துக்கு முன்பிலிருந்தே தென்பட்டு  வந்தது தான் - but இந்தாண்டினில் அதன் அத்தியாவசியம் ஸ்பஷ்டமாய்ப் புரிகிறது ! Becos காமிக்ஸ் காதல் என்ற சிலுவையினை எத்தனை அக்கறையோடு ஆளாளுக்கு தோள்களில் நாம் தூக்கிச் சுமந்து வந்தாலும், வயதுகளும், குடும்பப் பொறுப்புகளும் ஒரு விலை கேட்பதை மறுப்பதற்கில்லை !! 2015-ன் ஒரு ஞாயிறு காலையில் "மாயாவி-லாரன்ஸ்,டேவிட்-ஜானி நீரோ மறுபதிப்புகள் மறுக்கா மறுக்கா  தொடரவுள்ளன - என்றொரு அறிவிப்புடன் இங்கே பதிவைப் போட்ட ரெண்டு மணி நேரங்களுக்குள் 350 பின்னூட்டங்கள் குவிந்து கிடந்ததெல்லாம் மறக்க இயலா நினைவுகள் ! இதோ இப்போது 2026 -க்கென அறிவித்திருக்கும் இதே அட்டவணையினை,பத்தாண்டுகளுக்கு முன்னே நான் அறிவித்திருக்கும் பட்சத்தில் - இந்நேரத்துக்கு 300+ பின்னூட்டங்கள் கொண்ட பதிவுகள் இரண்டாவது ஓடி முடிந்திருக்கும் ! அட, ஏதோ ஒரு மாயம் நிகழ்ந்து, நமக்கெல்லாம் மறுக்கா இயமை திரும்பி, திரும்பவும் சட்டையை  இன்சர்ட் பண்ணிப்புட்டு, பொண்ணு பார்க்கப் போகும் படலங்களெல்லாம் அரங்கேறிடும் பட்சத்தில், பஜ்ஜி-சொஜ்ஜியோடு ருக்மிணி வசந்த் முன்னே வந்து நின்றால் கூட, இன்றைய நமது பொறுமைகளுக்கு - "ஆங்...சித்தே ஓரமா போயி வெளாடுடிட்டு இருடிமா கொழந்தே..மாமா இந்த ரீல்ஸ் பாத்துக்கினு வாரேன் !!" என்று தான் சொல்வோமோ - என்னமோ !! So ஒரு புது, இளம் வாசகத் தலைமுறைக்கு கொஞ்சமே கொஞ்சமாய் தனித்தடம் ஏற்படுத்தித் தருவது ஒரு ஆடம்பரமல்ல - அத்தியாவசியம் என்றே உறுதிபடத் தோன்றுகிறது !! And புதுசாய், இளசாய் உருவாகும் அந்தத் தலைமுறையானது நம் இல்லங்களிலிருந்தே துளிர் விட சாத்தியமானால் - அதை விடவும் பெரிய சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும் ? 

காத்துள்ள 2026-ன் கதைகளின் தரம் பற்றி என்னுள் quiet confidence இருப்பதால் - pretty sure we have a great journey ahead !! மொத்தமே 30 புக்ஸ் தான் ரெகுலர் (சிங்கிள்ஸ்) தடத்தில் எனும் போது, கணிசமான வாய்ப்புகள் எனக்குண்டு, குறுக்கும் மறுக்கும் ஸ்பெஷல் இதழ்களைப் புகுத்திட !! So சீட்பெல்ட்களை மட்டும் இறுக்க கட்டிக் கொண்டு காத்திருங்களேன் folks - இன்னொரு தெறி பயணத்துக்கு நாங்க கியாரண்டி !! Bye all....See you around !!



95 comments:

  1. அடடே! I am the first! What a surprise 😀

    ReplyDelete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. அனைவருக்கும் வணக்கம். வாங்கும் திறனும் வாசிக்கும் ரசனைகளும் மாறுபடும் நாளில் இந்நிலைமை மாறும் என்று நம்புகிறேன். நம்பிக்கை தானே வாழ்க்கை.

    ReplyDelete
  4. இளவரசி will always Win.

    Nothing to worry sir...

    ReplyDelete
  5. // So சீட்பெல்ட்களை மட்டும் இறுக்க கட்டிக் கொண்டு காத்திருங்களேன் folks - இன்னொரு தெறிப் பயணத்துக்கு நாங்க கியாரண்டி //
    இதுவொரு நல்ல அட்டவணை தான் சார்,எல்லோரையும் திருப்தி செய்வது எந்நாளும் சாத்தியமில்லை,யாராலும் சாத்தியமில்லை...
    எந்த சிறந்த குதிரையாக இருந்தாலும் சாட்டையடியில் இருந்து தப்புவதில்லை,எந்த சிறந்த மனிதனாலும் விமர்சனங்களில் இருந்து தப்புவதில்லை...
    அது மாதிரிதான் நம்ம அட்டவணையும்...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு விமர்சனங்கள் மீது துளியும் வருத்தங்கள் லேது சார் ; "இதே பட்ஜெட்டுக்குள், யாரும் முகம் சுளிக்காத விதத்தில் அட்டவணையினை பட்டி-டிங்கரிங் பார்க்க சாத்தியமாகும் என நீங்கள் எண்ணிடும் பட்சத்தில் - please be my guest" என நான் விமர்சித்தோரிடம் சொன்னதே இந்த குண்டுச் சட்டிக்குள் ஓட்ட சாத்தியமாகும் குதிரைகள் இவை மாத்திரமே என்ற நம்பிக்கையின் பெயரில் தான் !

      Delete
  6. //என்னுள்ளேயே ஒரு வாசகன் - ஒரு எடிட்டர் - ஒரு பப்ளிஷர் - என மூன்று வேதாளங்கள் குந்தியிருக்கும் போது, எனக்குள்ளேயே கணிசமான முரண்கள் இருப்பது obvious !!//

    மிகவும் சரி சார்!
    அதில் முதல் வாசகனாக நீங்கள் இருப்பதால்தான், எடிட்டரும், பப்ளிஷரும். வாசகரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தடுமாறுகிறார்கள். 2026 க்கான அட்டவணைத் திட்டமிடலில் உங்கள் உழைப்புக்கு மாற்று கருத்தில்லை. அக்கறையுடனான உழைப்பு! நன்றி!💐

    // So - 2027 முதலாய் கொஞ்சமே கொஞ்சமாய் சந்தா பட்ஜெட்டை ஏற்றிக் கொள்வதில் ஏகோபித்த ஒப்புதல் இருந்திட வேண்டி வரும் (maybe ரூ.500 ஜாஸ்தி) ; or else இதே ரீதியில் அளவுச் சாப்பாட்டு முறையினையே தான் தொடர்ந்திட வேண்டி வரும் ! //

    விலைவாசி, புது நாயகர்கள் கருத்தில் கொண்டு தங்கள் எண்ணம் சரிதான். நான் ஆமோதிக்கிறேன்.👍

    // நம்மில் எத்தினி பேர் இன்னமும் இளவரசியின் கதைகளை முழுமையாய் வாசிக்கிறோம் என்பதோ......எப்போதேனும் மறுவாசிப்புக்கு இளவரசி ஆட்படுகிறாரா ? என்பதோ மில்லியன் டாலர் கேள்விகளே ! //

    நான் இளவரசியின் கதைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். முழுமையாகப் படிக்கிறேன்.
    கண்டிப்பாக மறு வாசிப்புகள் உண்டு. உ.தா. 'கழுகு மலைக் கோட்டை ' my all time favourite. பல முறை படித்துள்ளேன். இருப்பது ஒரே ஒரு ஹிட் நாயகி. லோகா. chapter 1யைப் போல தனி ஹீரோயினாக தனி சாதனை படைத்தவர். அவர் வருடத்தில் குறைந்தது 3 கதைகளிலாவது வர வேண்டும். ஈரோட்டில் "மாதம் ஒரு மாடஸ்டி " கோரஸை மறந்து விட்டீர்களா? கண்டிப்பாக 'போல்' வைக்கவும். 👍

    நன்றி 🙏

    ReplyDelete
  7. வணக்கம் நண்பர்களே!

    ஒவ்வொரு வாசகருக்கும் தன் மனம் கவர்ந்த நாயகன் மேல் ஈர்ப்பு கூடுதலாகவே இருக்கும், மற்றவர்களுக்கு அவர் வேப்பங்காயாய் கசந்தால் கூட... ஆனால் நிறைவான அட்டவணை என்பது எந்த ஒரு ஒற்றை நாயகனுக்கோ அல்லது வாசகருக்கோ மட்டுமானது அல்லவே...

    அதனால் 2026 அட்டவணை 100% திருப்தியானதாகவே உள்ளது. (அட்லீஸ்ட் என்னைப் பொறுத்த வரையிலாவது!)

    ReplyDelete
    Replies
    1. எனக்குமே 100சதம் திருப்தி தான்.

      Delete
  8. அட்டவணை 2026 பற்றி இருந்த கொஞ்ச நஞ்ச கேள்விகளுக்கும் பதில் கிடைத்து விட்டது சார்.

    ReplyDelete
  9. புதிய கதைகளை படித்து முடித்து
    மறுவாரங்களில் - பழசுஏதேனும்
    மறுவாசிப்புக்கு எடுக்கும் போது
    முதலில் எடுப்பது மாடஸ்டி கதைகள் தான்..
    அப்றம் லார்கோ ... x111 - சிக்பில் தான்..
    என்னைப் பொறுத்தவரை..
    தங்களது முதல் வெளியீடுகளான
    "கத்தி முனையில் மாடஸ்டி "
    " மாடஸ்டி in இஸ்தான்புல்"
    இரண்டு இதழ்களையும்
    தற்போதைய தரத்தில் தந்துவிட்டாலே போதும்...
    நான் புதுக் கதைகளை எதிர்பார்க்க மாட்டேன்..
    காமிக்ஸ் என்பதே மறுவாசிப்பு சுகம்தான்..
    இதை மட்டும் செய்து விடுங்களேன் சார்..
    மாடஸ்டியின் ரசிகராக ...
    (உங்களுக்கும் திருப்தி - யாக
    இருக்கும்..)

    ReplyDelete
    Replies
    1. சார் - "கத்திமுனையில் மாடஸ்டி" - தொடரில் மிக சுமாரான கதை! எப்படித்தான் அதை முதல் இதழாக்கினோமோ - ஆண்டவனுக்கே வெளிச்சம்! And அதன் மொழிபெயர்ப்பு 🥴🥴...!!இன்றைக்கும் அதை வாசிக்கும் போது நெளியவே செய்கிறேன்!

      அதை மறுக்கா போட்டு, மீதமுள்ள மாடஸ்டி ரசிகர்களையும் நோகச் செய்ய வேணாமே என்று தான் தயங்குகிறேன்!

      Delete
    2. "மாடஸ்டி in இஸ்தான்புல்" அதுக்கு much better!

      Delete
  10. // 2027 முதலாய் கொஞ்சமே கொஞ்சமாய் சந்தா பட்ஜெட்டை ஏற்றிக் கொள்வதில் ஏகோபித்த ஒப்புதல் இருந்திட வேண்டி வரும் (maybe ரூ.500 ஜாஸ்தி) //

    Super! I welcome this!!!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயம் தான் சார். காலத்தின் கட்டாயம்.

      Delete
    2. யெஸ்,இயன்றால் இன்னும் ₹.500/- ஏற்றி ஹார்ட் பைண்டிங் இதழ்களை கூட்ட முடிந்தாலும் மகிழ்ச்சியே...

      Delete
    3. நடக்கும் நிகழ்வுகளில் ஒரு தூரத்து நாளில் ஹார்ட் பைண்டிங் இதழ்கள் கனவாய் போய்விடுமோ என்று கூட தோன்றுகிறது...😇😇😇

      Delete
    4. // ஹார்ட் பைண்டிங் //

      தேவையான கதைக்கு வரட்டும். காமிக்ஸ் மாதம் தவறாமல் தொடர்ந்து வருவது மிக முக்கியம்.

      Delete
    5. யெஸ் காமிக்ஸ் தொடர்ந்து வரனும்...

      Delete
  11. சந்தா லைட் லயும் GEN Z சந்தாவையும் சேர்த்திருக்கலாம் டியர் எடி .. ஏன் இந்த ஒரவஞ்சனை ???

    ReplyDelete
    Replies
    1. அதானே... இன்னும் திருப்பூர்லேர்ந்து இன்னும் நம்மாள் கொக்கி போட காணோமேன்னு யோசிச்சேன் - ஆஜராகிட்டீங்க!

      Lite சந்தா எனில் என்னவென்று கொஞ்சமாய் யோசிங்க - உங்களுக்கான பதில் கிடைத்திருக்கும்!

      ஓரவஞ்சனை, சைடு வஞ்சனைலாம் எனக்கெதற்கு தெய்வமே ஏழப்போகிறது?

      Delete
    2. தேவையுள்ளவர்கள் மட்டும் ஏட் பண்ணிக்கலாம்ன்னு கூட சொல்லிருக்கலாம் டியர் எடி ..

      Delete
  12. ரிப்போர்ட்டர் ஜானியை திரும்பத் திரும்ப பார்டர் பக்கம் தள்ளுவது கொஞ்சம் கூட நியாயமாக தெரியலை சார். அவருடைய கதை டெம்ப்ளேட்டில் இடியாப்பம் தான் ஸ்பெசல் எனும் போது, அது ஏன் போரடிக்கிறதோ!

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் பூபதி ஜி
      ஜானியின் கதைகளின் வீரியம் சற்று குறைந்துள்ளது
      ஓநாய் மனிதன்
      ரத்த காட்டேரி மர்மம்
      ஊடு சூன்யம்
      பிசாசு குகை
      இரத்த அம்பு
      விண்வெளி படையெடுப்பு
      விசித்திர நண்பன்
      மரணப் பட்டியல்
      விசித்திர போட்டி
      என் ஊடு கட்டி ஹிட் கொடுத்தவர் இன்று கொஞ்சமே கொஞ்சம் தடுமாறுகிறார் ஆனானப்பட்ட லக்கி லூக் & சிக் பில் கோ வே முன்பு இருந்த கதை வீரியம் குறைந்துள்ளது அவர்களை போலவே ஜானியும் அடுத்தடுத்து வாய்ப்புகளில் சாதிப்பார் என நம்புவோம்

      Delete
    2. விற்பனையிலும் சாதிக்க வேண்டுமே

      Delete


  13. தோர்கல்

    விற்பனையில் தோர்கல் வைரக்கல் அல்ல உப்புக்கல் என்பது எப்போதோ நிரூபணமான உண்மை. பாறாங்கல்லாய் தோளில் சுமப்பதை விட இறுதி வாய்ப்பில் விற்பனையில் சாதிக்கவில்லை என்றால் கழற்றி விடலாம்

    ரிப்போர்ட்டர் ஜானி

    விற்பனையில் வேலைக்கு ஆகாத ஆணி என்று நிரூபிக்கப்பட்டால் தலையை சுற்றி தூக்கி எறிந்து விடலாம்..

    மாடஸ்டி

    விற்பனையில் (rusty) ரஸ்டி என புலப்படும் அக் கணமே இந்த டீயை ஊற்றி விடலாம் தரையிலே.

    விற்பனையில் சாதிக்காதவர்கள் யாராயினும் புறந்தள்ளப்பட வேண்டியவர்களே..

    வாசனை பலமாக இருப்பினும் காலி பெருங்காய டப்பாக்களால் என்ன பயன்?

    2026 அட்டவணை மிகவும் திருப்தி அளிக்க கூடிய ஒன்று.

    மாடஸ்டி, ஜானி இல்லாமல் இருந்தாலும் கூட அட்டவணை ஜொலிக்கத்தான் செய்யும்..

    உங்கள் கையை கடித்து கண்ணுக்குள் முள்ளாய்
    உறுத்தக்கூடிய நாயகி, நாயகர் தேவையில்லை.


    அரை ஏக்கர் நிலத்தின் விளைச்சலை போரடிக்க யானையைக் கூட்டி வந்தால் கட்டுபடியாகுமா?


    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரி.

      பழைய செல்வம் சார் பேக். மகிழ்ச்சி உங்களை மீண்டும் ஆக்டிவ் ஆக தளத்தில் பார்ப்பது.

      Delete
  14. அருமை சார்...நிச்சயமா புரட்சி நடக்கும்....இப்படை தோர்க்கின் எப்படை வெல்லும்...டின் டின் போல ஓப்லிக்சும் வந்தா இன்னும் ஓரடி முன் வைக்கலாமோ என தங்கள் பதிவை பாத்ததும் மனதிலோர் கேள்வி...தோர்கள விமிட்டட்ல கொத்து கொத்தாக முன்பதிவில் லிமிட்டட்டில் போட்டு தள்ளவும் எங்களை போன்றோர்க்காக...நிச்சயமா தோர்கள் செல்ஃப் ஸ்டார்ட் எடுக்கும் நாட்கள் தொலைவில் லை...காவியத்தலைவன் வந்தபின்னுன்னு தோன்றுவது..கதை சேரா காவியம் தலைப்புமள்ளுது....சிறுவயது கடற்கொள்ளையர் ஏக்கங்களுன் எட்டிப்பார்ப்போம்

    ReplyDelete
  15. மேகியின் கடைசி ஆல்பமும் வரயிருப்பதில் இளவரசர் ஏக குஷி! வெட்டியான் ஸ்டெர்னுக்கு வாய்ப்பளித்திருப்பதில் மறுபடியும் இ. ஏ. கு!!

    இளவரசிக்கு ஒற்றை ஸ்லாட் என்பது நியாயமானதே! இப்போதும் இவரது கதைகள் ரசிக்கும்படிதான் இருக்கிறது!

    ஜானி கதைகளில் முன்பிருந்த வீரியம் சற்று குறைச்சல் என்றாலும், இப்போதும் ரசிக்கும்படிதான் இருக்கிறது! ஜானி மாதிரியே இல்லாத 2.0க்கு கிளாசிக் ஜானி எவ்வளோவோ மேல்!

    தோர்கல் நம்மிடையே ஹிட் அடிக்காமல் போனது துரதிர்ஷ்டமே! பின்னொரு நாளில் தோர்கல் ஒரு தொகுப்பாக வெளியாகிடும் நாளில் ஒரு எதிர்பாரா ஹிட் அடிக்க வாய்ப்பிருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. //இளவரசிக்கு ஒற்றை ஸ்லாட் என்பது நியாயமானதே! இப்போதும் இவரது கதைகள் ரசிக்கும்படிதான் இருக்கிறது//


      +9

      Delete
  16. ஓரிரு பிடிக்காத இதழ்கள் வருவதோ பிடித்த இதழ்கள் வராமல் போவதோ எனக்கு ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. குடோன்ல தங்காத கதைகள் வருவது, இளம் தலைமுறைக்கு ஆர்வமூட்ட Gen Z இதழ்கள் வருவது எல்லாமே தேவையான மாற்றங்கள். ஒவ்வொரு முறையும் புதுப்புது உத்திகளை பரிசோதித்து பார்ப்பதும் நல்லதே.

    ReplyDelete
  17. வரியேற்றம், விலையேற்றத்தின் படி, வார மாத இதழ்களை அவ்வப்போது விலையேற்றி, தங்களது கையை கடிக்காத மாதிரி வண்டியோட்டும் பல பதிப்பாசிரியர்கள் மத்தியில், கடந்த 3 வருடங்களாக 6000 க்கும் குறைவாக பட்ஜெட்டை போட மண்டைய குடையும் தங்களது சிரமங்களை பற்றி புரியாதவர்களின் குறைகளை பெரிதாக எடுக்க வேண்டியதில்லையாதலால்
    No Disappointment- be happy ங்க sir.

    இதழ்கள் அதிகமானால்/அதாவது மாதம் 3 என்ற கணக்கில் 3×12=36.இதழ்கள் வருசத்துக்கு இருந்தால் கண்டிப்பாக சில நாயகர்கள் மீண்டும் உள்ளே வர சான்ஸ் உண்டு. இதுக்காகவே V காமிக்ஸ் என்ற புதிய பாதை உருவானது.
    டெக்ஸ் , பெளன்சர், டைகர் ஹீரோஸ் லயன் முத்து தடத்தில் பயணிக்க,மாடஸ்டி, ராபின், யங் டெக்ஸ் போன்றோர் குறைந்த விலையில் வி-காமிக்ஸ் தடத்தில் பயணித்தது நல்ல முயற்சி.

    ஆனால் இந்த பட்ஜெட் பிரச்சினை காரணமாக மாதம் 12 என அழகாக வந்து கொண்டிருந்த வி காமிக்ஸ், வருசத்துக்கு 5,6 வந்தாலே அதிசயம்ற மாதிரி ஆகிப்போச்சு.
    அடுத்த வருடம் முதல் அதிகமாக்கும் பட்ஜெட்டை இந்த வருடமே ஏற்றியிருக்கலாம் சார். வருடம் 500₹ என்பது அவ்வளவு பெரிய தொகை இல்லை.
    ஏன்னா மற்ற விலைவாசி நிலவரங்களை ஒப்பிடும்போது காமிக்ஸ் விலை எவ்வளவோ தேவலை என்பேன். அதும் 3 வருடமாக ஒரே பட்ஜெட் எனுங்கறப்ப பெஸ்ட் தான்.
    ஆனா மற்ற நிறுவனங்களும் விலை ஏற்றறப்ப காமிக்ஸ் பட்ஜெட் உயர்வது பெரிய விசியமில்ல.

    ஆகவே மீண்டும் தடையின்றி வி காமிக்ஸ் வருசத்துக்கு 12 வெளிவர ஆவண செய்யுங்கள் சார்.

    வருசத்துல ஒருவாட்டி தான பட்ஜெட் ஏறுது? மாத மாதம் இல்லியே?,
    ஆனா அதே விலை மற்ற நிறுவனங்கள் தங்கள் இதழ்களுக்கு வருடம் முழுக்க தருகிறதா? என வாசகர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

    மூன்று புதிய வரவுகள் ரெம்பவுமே வரவேற்கத்தக்கது.
    அதும் இத்தனை இறுக்கங்களுக்கு மத்தியில் இவர்களுக்கு இடம் ஒதுக்கியது பெரும் மகிழ்ச்சி. மேலும் இந்த வருட புதிய வரவான ஸகுவாரோ & சைனா குள்ளருக்கும் தலா 1 சூப்பரோ சூப்பர்.

    **SODA போல ஒரு முற்றிலும் மாறுபட்ட கதைத் தொடர் வெளியே காத்துக் கிடக்க,**
    Yes sir, அதேதான் ஜானி,மாடஸ்டி வேண்டவே வேண்டாம் என சொல்லவில்லை, நாயகர்களுக்கு டிமாண்ட் உள்ளபோது, ரெகுலர் ஹீரோஸை கொஞ்சம் நிறுத்தி அடுத்த முறை வாய்ப்பு தரலாம். அல்லது ஏதாவது புத்தக விழாவில் வெளியிடலாம்,
    தேவையுள்ளோர் வாங்கி கொள்ள ஏதுவாக.

    ஆனால் தோர்கல் கடைசி சில இதழ்களில் ரெம்பவுமே ஆர்வத்தை தூண்டிவிட்டார்,
    அடுத்து "தோர்கல் சாகா" எனும் பெரிய கடல் முன்னே விரிந்து கிடப்பதை பாக்கறப்ப உள்ளுக்குள் ஒரு குதூகலம் "இவைகள் எப்ப தமிழில் வரும்?" என.
    அதும் விற்பனையில் சுணக்கம் காட்டினால் டாடா சொல்வதில் நோ ப்ராப்ளம்.
    தங்களின் பரிசீலனை சரிதான்.

    தங்களுக்கான வாசிப்பு என்பது வீட்டுக்குள் வராத வரைதான் - டிவி,மொபைல் எல்லாமே,
    "உங்களுக்கான கதை இதோ" என குழந்தைகளை நோக்கி GEN Z நேசக்கரம் நீட்டும்போது சில மாதங்களில் அவர்கள் கையை பற்றி வாசிப்பின் நேசத்தை உணர்ந்து கொள்ளும் நம்பிக்கை உள்ளது. நல்ல முயற்சி 💐❤️.

    ReplyDelete
    Replies
    1. //மீண்டும் தடையின்றி வி காமிக்ஸ் வருசத்துக்கு 12 வெளிவர ஆவண செய்யுங்கள் சார்//

      +9
      ஆமாங்க தமிழய்யா
      இதில் ஸாகோர், மிஸ்டர் நோ, ராபின், ஆளுக்கு இரண்டு இரண்டு ஸ்லாட்களில் வந்து கொண்டிருந்தாங்க

      Delete
  18. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்கு பிடித்த கதைகள் வரவில்லை என்றால் கவலைபடுவேன். ஒருகாலத்தில் அதிகப்படியான சர்குலேஷன் மற்றும் அதிகப்படியான தமிழ் காமிக்ஸ் வாசகர்கள் இருந்தது. இன்று குறைவான வாசகர்கள் உள்ள இந்த தமிழ் காமிக்ஸ் உலகில் நமது காமிக்ஸ் தவறாமல் வரவேண்டும், அதற்கு தேவை விற்பனை, விற்பனை ஆகும் நாயகர்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் ஆசிரியர் செய்வதுவரும் முயற்சி சரி என்று புரிந்து கொள்ள் ஆரம்பித்தேன்.

    இப்போது எல்லாம் எனக்கு எவ்வளவு பிடித்த தோர்கல்/நாயகர்/இளவரசி கதைகள் விற்பனையில் சாதிக்காமல் குடோனில் இருக்கிறார்கள் என்பதை அறிந்த பிறகு அவர்கள் வராமல் இருப்பதே காமிக்ஸ் வளர்ச்சிக்கு நல்லது என இருந்து விடுகிறேன்.

    ReplyDelete
  19. என்னைப் பொருத்தவரை எந்த நெருடலும் இல்லாத அட்டகாசமான அட்டவணை. சென்ற முறை கூட இளவரசி மெயின் அட்டவணையில் இல்லாமல் எலக்ட்ரிக் அறுவதில் வந்தார். இம்முறை மெயின் அட்டவணையில் வந்தது சந்தோஷமாக இருக்கிறது.
    மீண்டும் சொல்கிறேன் என்னை பொறுத்தவரை ஒரு நல்ல விருந்தை சாப்பிட்ட திருப்தி இந்த அட்டவணை எனக்கு கொடுத்தது. எனக்கு இந்த அட்டவணையில் குழப்பங்களும் நெருடல்களோ இல்லை அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் படியான கதைகள் தான்

    ReplyDelete
  20. எனக்கு கதை தேர்வுகளில் எந்த குறையும் இல்லை
    தோர்கல் சிங்கிள் ஷாட் கதையாக கொண்டு வருவது அருமை

    இந்த வருட வந்த ஜானி கதை நன்றாக இருந்தது, புத்தக விழாக்களில் டிடெக்டிவ் கதையை தேடும் சிறார்களுக்கு இவர் சரியான சாய்ஸ்

    இளவரசி குட் சாய்ஸ், என்னை பொறுத்தவரை கதைகளில் சுவாரசியம் உள்ளது, அதற்காகவே வரவேற்கிறேன்

    ReplyDelete
  21. சார் சமீப காலங்களில் இளவரசி ரசிகர்கள் பெருகி இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. 2026லேயே புதிய இளவரசி கதை ஒன்று கலரில் முன் பதிவுக் கென் அறிவித்து குறிப்பிட்ட எண்ணிக்கை தொட்டால் மட்டும் புத்தகம் வருவது போல் ஒரு பல்ஸ் பார்க்கலாம் சார்(ரெகுலர் சைஸ்)

    ReplyDelete
    Replies
    1. ///சமீப காலங்களில் இளவரசி ரசிகர்கள் பெருகி இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது///

      ஆமாங்க ராஜசேகர் ஜி.. கொஞ்சம் வெயிட் குறைக்கணும்!😰

      Delete
    2. // சமீப காலங்களில் இளவரசி ரசிகர்கள் பெருகி இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது //

      ஆமாம் ரொம்பவே பெருகி குண்டாகி வராங்க 😊 நான் நம்ப இளவரசரை சொல்லவில்லை 😉

      Delete
  22. தோர்கல் ஜனவரியில் வருவதில் மகிழ்ச்சி

    புதிய சாகா பற்றி பல்லடம் சரவணகுமார் அவ்வப்போது பேசும்போது, தமிழில் வந்தால் நன்றாக இருக்கும், ஆனால் வரப்போவதில்லை என வருத்தம் கொண்டிருந்தேன் நினைத்தேன்
    என்னை போன்ற தோர்கல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி
    இதனை வெற்றி அடைய வைத்து அடுத்தடுத்த ஒன்ஷாட்களை வாங்குவதே லட்சியம்

    அதற்குமுன் நம்ம பல்லடத்துக்காரர் கதையை ஸ்பாயலர் பண்ணாம பார்த்துக்கனும்

    ReplyDelete
  23. இந்த கதைகளின் ப்ரேஞ்ச், ஆங்கில விலைகளை நீங்க குடுப்பது குறைவான விலையே, சார்

    நல்ல கதைகளுக்கு பட்ஜெட் பிரச்சனை இல்லைங்க சார்
    கூடுதலாக 500 அடுத்த வருடம் ஏற்றி கொள்ளலாங்க
    எங்களுக்கு படிக்க கூடுதலாக கதைகள் கிடைத்தால் ஓகே

    ReplyDelete
  24. என்னது குறைக்கனுமா? போன வருசமே வெய்ட் குறைக்கற முயற்சில இறங்கறதா சொன்னிங்க ஜி மறந்துட்டிங்களா? எக்ஸர்சைஸ்வீடியோ போடுங்க ஜி

    ReplyDelete
  25. சார் ஆன்லைன் லிஸ்டிங் எப்போதுங் சார் ?!
    இதழ்கள் நாளை கிளம்பிடுமா ?!

    ReplyDelete
  26. ❤️❤️❤️❤️👍👍👍👍🙏🙏...

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. சார்.. இன்று புத்தகங்கள் வந்து சேருமாங் சார்? தீபாவளி மலர்களை கையில் ஏந்தி குதூகளிக்கக் காத்திருக்கிறோம்... 😍😍😍

    ReplyDelete
    Replies
    1. சரியான கேள்வி EV. சார் புக் எப்போ கிடைக்கும்?

      Delete
    2. எங்களுக்கு தீபாவளி இன்றா நாளையா, சார்?

      Delete
  29. எங்கள் தீபாவளி உங்கள் கைகளில்

    ReplyDelete
  30. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  31. சந்தேகமோ, குழப்பமோ வந்துவிட்டால்.. முடிவு காண.. எல்லாக் கோட்டையும் அழித்து விட்டு, மீண்டும் முதலில் இருந்து கோடுகள் போடலாம்.

    என்றென்றும் புன்னகை..!!! பாகம் -2

    என்றென்றும் அனைவருக்கும் புன்னகை..

    ஆவலுடன்

    ReplyDelete
  32. 2026 வருட சந்தா VS புத்தக விழா பர்சேஸ்
    நான், அடுத்த 2026 வருட சந்தா கட்டாமல் சேலம் புத்தக விழாவில் அந்த வருடம் அதுவரையில் வந்த புத்தகங்களை மொத்தமாக
    சதவீத தள்ளுபடி விலையில் வாங்கும் போது..
    லாப வாய்ப்பு (!!?)
    வாய்ப்பு-1:
    ஜனவரி முதல் டிசம்பர் வரை வந்த ரெகுலர் புத்தகங்கள் + ஆன்லைன் புத்தக விழா ஸ்பெஷல் வெளியீடுகள் + ஈரோடு,கோவை,சேலம்..போன்ற புத்தக விழா ஸ்பெஷல் + கிளாச்சிக் ஸ்பெஷல் + தனித்தட வெளியீடுகள் என மொத்தமும் ரூ.9999/- (கணிப்பாக)
    புத்தக விழாவில் வாங்கும் வாங்கும்போது 10% தள்ளுபடி 1000+ ரூ.440/- = ரூ.1440/-லாபம் (!!?) கிடைக்கும். மனக்கணக்கு + காகித கணக்கீடு போடும் போது இனிப்பாக இருக்கிறது.
    (ரூ.440/- என்பது, சந்தா தொகை – 2026 வருட அட்டவணை புத்தகங்களின் மொத்த மதிப்பு = ரூ.440/-)
    2026 வருட சந்தா VS புத்தக விழா பர்சேஸ்,
    புத்தக விழா பர்சேஸ் என முடிவெடுத்தால் எனக்கு 2026 வருட லாபம் ரூ.1440/-
    ஆனால்,
    அதற்காக தோராயமாக ரூ.9999/- தொகை, பூதம் புதையல் காத்த மாதிரி 12 மாதங்களும் சேமித்து வைத்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். ஒவ்வொரும் மாதமும் வங்கி கடன்கள் டெபிட் ஆன பிறகு 7 ஆம் தேதியே மாத கடைசி ஆகி விடுகிறது. பஞ்சர் ஆன பாக்கெட்டுடன் மாதத்தின் மீதி நாட்கள் ஓடிவிடும் எனக்கு. இந்த லட்சணத்தில் வருடத்தின் மொத்த புத்தகங்களும் சேலம் புத்தக விழாவில் வாங்கும் எனது திட்டம்.. எனது தலையை பெட்ரோல் ஊற்றி கொள்ளிக் கட்டையால் நானே மசாஜ் செய்தது போல இருக்கும்.

    லாபம் = கொள்ளிக் கட்டை

    ReplyDelete
  33. வாய்ப்பு-2:
    சரி திருப்பூர் , ஈரோடு,சேலம் என மூன்று புத்தக விழாவில் வாங்கினால் கொஞ்சம் சிரமம் குறையுமே என மும்முனை பயண திட்டம்.
    சேலம் TO ஈரோடு புத்தக விழா பயணம்,
    என்னை விட்டு விட்டு நீ மட்டும் ஈரோடு புத்தக விழா போறியா? நானும் வருவேன்அப்பா, என அடம் பிடிக்கும் கௌசல்யாவை சரிகட்ட ஸ்நாக்ஸ் தொகை குடுத்தால் தான் நான் படி தாண்ட முடியும். நிதர்சனம். ரூ.100/-
    வீடு TO பஸ் ஸ்டாண்ட் டூ வீலர் பார்கிங் செலவு ரூ.15/-
    பஸ் டிக்கெட் போக,வர ரூ.45+45= 90/-
    குறைந்தபட்சம் மதிய உணவு ரூ.90/-
    குறைந்தபட்சம் டீ செலவு ரூ.100/- (டீக் கடையை பார்த்தல் நம்ம ஆட்டோ ஓடாது)
    மொத்தம் ரூ.395/- தோராயமாக ரூ.500/- செலவு இல்லாமல் பயணம் நிறைவேற்ற இயலாது போல..

    ஈரோடு புத்தக விழா பயண செலவு ரூ.500/-
    திருப்பூர் புத்தக விழா பயண செலவு ரூ.500/-
    உள்ளுராக இருந்தாலும் சேலம் புத்தக விழா பயண செலவு ரூ.300/-
    மும்முனை பயண திட்டம் தோராயமாக மொத்தம் செலவு ரூ.1300/-

    தோராயமாக மொத்த லாபம் ரூ.1440 – 1300 = ரூ.140/- OR LESS

    ReplyDelete
  34. வாய்ப்பு-3:

    ஈரோடு, திருப்பூர் நண்பர்களிடம் கேட்டுக் கொண்டால் புத்தக விழாவில் புத்தகம் பெற்று கொரியர் அனுப்பி வைப்பார்கள் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை வந்த புத்தகங்கள் அனைத்தும் அனுப்பி வைக்க..
    ஈரோடு, திருப்பூர் TO சேலம் கொரியர் செலவு தோராயமாக ரூ.800-900/-
    சேலம் புத்தக விழா பயண செலவு ரூ.300/-
    மொத்த செலவு ரூ.1100 -1200/-
    தோராயமாக மொத்த லாபம் ரூ.1440 – 1200 = ரூ.240/- OR LESS

    இதற்காக எனக்காக ஈரோடு, திருப்பூர் நண்பர்களின் கொரியர் அனுப்பும் அலைச்சல்,செலவு நண்பர்களுக்கு. (இதில் கொரியர் பார்சலின் புத்தக அட்டை ஓரம் கிழித்த, ஒடிந்த சிக்கல் நண்பர்கள் குழுவில் படித்துள்ளேன்)

    ReplyDelete
  35. லாப முடிவு..

    வாய்ப்பு-1:
    லாபம்= கொள்ளிக் கட்டை

    வாய்ப்பு-2:
    தோராயமாக மொத்த லாபம் ரூ.1440 – 1300 = ரூ.140/- OR LESS

    வாய்ப்பு-3:
    தோராயமாக மொத்த லாபம் ரூ.1440 – 1200 = ரூ.240/- OR LESS

    ReplyDelete
  36. புத்தக விழாவில் மட்டும் பர்சேஸ் எனில் எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு..

    மாதா மாதம் கொரியர் கிடைத்தவுடன் முதல் 10 தினங்களுக்குள் படித்து விடும் எனக்கு பல இரவு நேர வாசிப்பு மிகப்பெரிய இழப்பு. வாழ்க்கையின் உறுதியான கட்டமைப்புக்குள் கடினமான நிலையில் வேதனையிருந்தும், இறுக்கங்களியிருந்தும் மனதை சமனப்படுத்த காமிக்ஸ் தவிர பெரும்பான்மையான நாட்களில் வேறேதுமில்லை.
    ரூ. 0 –240/- இந்த லாப தொகைக்காக எனது பல சந்தோஷ நாள்களை இரவுகளை தொலைக்க நான் தயாராக இல்லை.
    ஹாலிவுடில் ஜாலி கதையில் செவ்விந்திய தலைவர், “வேட்டையாடுவோம், பக்கத்து கிராமத்து ஜனங்களுடன் சண்டையிடுவோம், கொலை செய்வோம் என சந்தோசமாக வாழ்ந்து வந்தோம்” எனச் சொல்வதைப் போல்..
    மாதா மாதம் கொரியர் கிடைத்தவுடன் படித்தோமா, ப்ளாக் மற்றும் நண்பர்கள் குழுவில் அம்மாத விமர்சனங்கள், வரவேற்ப்பு, கேலி கிண்டல் படித்தோமா, ரகளைகளை பார்த்தோமா முடிந்தால் பங்கேற்றோமா என வாழ்க்கை ஓடுகிறது. மாதா மாதம் அம்மாத புத்தகங்களை படிக்காமல் இருந்தால், ப்ளாக், கம்யுனிட்டி மற்றும் நண்பர்கள் குழுவில் எடிட்டர்,நண்பர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள், எதற்கு கைத் தட்டுகிறார்கள், எதற்கு சட்டைகளை கிழித்துக் கொண்டார்கள் எனத் தெரியாமல், மொழி தெரியாத ஹிந்தி படத்தை பாதியிலிருந்து பார்ப்பதை போல் இருக்கும்.
    புத்தக விழாவில் மட்டும் பர்சேஸ். இது எமக்கு ஒத்துவராது.
    புத்தக விழாவில் மட்டும் பர்சேஸ் என்பது புதிய அறிமுக வாசகர்கள், தேர்தெடுத்த புத்தகங்கள் மட்டும் வாசகர்கள், பொருளாதார ரீதியாக நெருக்கடி உள்ள வாசகர்கள், புதியவரை அறிமுகப்படுத்த, நண்பர்கள் உறவினருக்கு பரிசளிக்க வாங்குவோர்க்கு புத்தக விழா ஒரு மிகப்பெரிய வாசல் என்பது சந்தேகத்திக்கு இடமின்றி நிருபணம்.

    ஆங்.. என்ன சொல்லவருகிறேன் என்றால்..

    2026 வருட சந்தாவில், நவம்பர் மாத இறுதியில் தொடங்க உள்ள சேலம் புத்தக விழாவில் சந்தா தொகை கட்டி 2026 வருட சந்தாவில் இணைய உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. ////மாதா மாதம் கொரியர் கிடைத்தவுடன் முதல் 10 தினங்களுக்குள் படித்து விடும் எனக்கு பல இரவு நேர வாசிப்பு மிகப்பெரிய இழப்பு. வாழ்க்கையின் உறுதியான கட்டமைப்புக்குள் கடினமான நிலையில் வேதனையிருந்தும், இறுக்கங்களியிருந்தும் மனதை சமனப்படுத்த காமிக்ஸ் தவிர பெரும்பான்மையான நாட்களில் வேறேதுமில்லை.////

      Super 💐💐💐💐👏👏👏

      Delete
    2. ///மாதா மாதம் கொரியர் கிடைத்தவுடன் படித்தோமா, ப்ளாக் மற்றும் நண்பர்கள் குழுவில் அம்மாத விமர்சனங்கள், வரவேற்ப்பு, கேலி கிண்டல் படித்தோமா, ரகளைகளை பார்த்தோமா முடிந்தால் பங்கேற்றோமா என வாழ்க்கை ஓடுகிறது. மாதா மாதம் அம்மாத புத்தகங்களை படிக்காமல் இருந்தால், ப்ளாக், கம்யுனிட்டி மற்றும் நண்பர்கள் குழுவில் எடிட்டர்,நண்பர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள், எதற்கு கைத் தட்டுகிறார்கள், எதற்கு சட்டைகளை கிழித்துக் கொண்டார்கள் எனத் தெரியாமல், மொழி தெரியாத ஹிந்தி படத்தை பாதியிலிருந்து பார்ப்பதை போல் இருக்கும்.
      புத்தக விழாவில் மட்டும் பர்சேஸ். இது எமக்கு ஒத்துவராது.////

      செம!!👏👏👏💐💐💐

      Delete
    3. சந்தா Vs புத்தக திருவிழா!!

      அருமையான அலசல் பதிவு ரகுராமன் ஜி!!💐💐💐

      Delete
    4. // ஆங்.. என்ன சொல்லவருகிறேன் என்றால்.. //
      ஒருவழியா தலைய சுத்தி மூக்கை தொட்டாச்சி...🤣🤣🤣
      ரொம்ப வெட்டியாக்கும்...🤣🤣🤣

      Delete
    5. நன்றி நண்பர்களே..!

      Delete
  37. ரகுராமன் ஜி .+1111111111111111

    ReplyDelete
  38. ஹாலிவுட்டில் ஜாலி கதையிலிருந்து செவ்விந்திய தலைவர்//வேட்டையாடு வோம். பக்கத்து கிராமத்து மக்களுடன் சண்டையிடுவோம் . கொலை செய்வோம்.என சந்தோசமாக வாழ்ந்து வந்தோம்// அருமையான கதையிலிருந்து அழகான உதாரணம்சூப்பர் . ரகு சார்.

    ReplyDelete
  39. வணக்கம் ரகுராமன் நண்பரே...

    என்னென்னவோ கணக்கெல்லாம் போட்டிருக்கீங்க... நீங்கெல்லாம் புக்கு வெளியான உடனே படிச்சிடற ஆளுங்க... ஆனா என்னைப் போலான சோம்பேறிகளுக்கு அந்தந்த மாதத்தில் ஆர்வத்தை தூண்டும் புத்தகங்களை வாசிப்பது தவிர மீதியெல்லாம் தூங்கும். திடீரென ஒரு ஞானோதயம் வந்து வரிசையா படிக்கத் தோணும். அதனால புத்தகவிழாவிலோ, இல்லேன்னா அப்பப்போ ஆன்லைனிலோ வாங்கிக்கலாம்தான்...

    ஆனால் மாதமாதம் கொரியர் டப்பா சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வரலைன்னாலே கைகால் நடுங்க ஆரம்பிச்சிடுது. 2026 சந்தாவை திருப்பூர் புத்தக விழாவில கட்டிக்கலாம்னு போன வருடம் நினைச்சிருந்தேன்... திருப்பூர் விற்பனை கணக்கில வரும்னு... ஆனா ஜனவரி மாதத்தை எப்படி தாண்டறதுன்னு பயமாகி இப்பவே கட்டி முடிச்சப்பறமாத்தான் படபடப்பு குறைஞ்சது.

    ஆக, இங்கெல்லாம் லாப நட்ட கணக்கெல்லாம் கிடையாது. ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் புத்தகங்களை அந்த மையின் வாசத்துடனே சுவாசிப்பதும், அப்புறம் வாசிப்பதுமே பேரின்பம்!!

    ReplyDelete
    Replies
    1. //இங்கெல்லாம் லாப நட்ட கணக்கெல்லாம் கிடையாது.//

      இந்த காமிக்ஸ் நேசம் வாழ்க.. ஆண்டு சந்தா வளர்க.. சார்

      Delete
  40. Books online listing ready. May be today courier also ready start..

    ReplyDelete
  41. //மாதாமாதம் கொரியர் டப்பா சரியான நேரத்துக்கு வரலைனாலே கை கால் நடுங்க ஆரம்பிச்சிருது.....ஆனா ஜனவரி மாதத்தை எப்படி தாண்டரதுனு மயமாகி இப்பமே கட்டி முடிச்சுப் புறமாய் தான் படபடப்பு குறைஞ்சது இங்கெல்லாம் லாப நட்ட கணக்கெல்லாம் கிடையாது புத்தகங்களை அந்த மையின் வாசத்துடனேயே சுவாசிப்பதும், அப்புறம் வாசிப்பதுமே பேரின்பம்// ஆசிரியர் சார்.இந்த பதிவு ஆத்மார்த்தமா குடுத்திருக்கிங்க . படிச்சவுடன் மனசுல ஒரு திருப்தி தேங்க்ஸ் சார். இந்த நாள் இனிய நாள்

    ReplyDelete
  42. இன்னிக்கு கிளம்புதா தீபாவளி வெடி...

    ReplyDelete