நண்பர்களே,
வணக்கம். இது தள்ளிப் போகும் சீசன் போலும் !! நேத்திக்கான பதிவு, இன்னிக்கிக்குன்னு தள்ளிப் போயுள்ள சுண்டைக்காய் மேட்டரை மட்டுமே நான் குறிப்பிடலை folks ! தீபாவளி ஆக்டோபரின் பிற்பகுதியில் தான் அமைந்தது என்பதால் அக்டோபர் இதழ்களின் டெஸ்பாட்ச்சை 10 தேதிகளுக்குத் தள்ளிப் போட்டோம் ! அதன் பலனாய் - இதோ நவம்பரின் இதழ்களும் தாமாகவே கொஞ்சமாய் பின்னுக்குப் போய் விட்டுள்ளன ! பற்றாக்குறைக்கு இந்த சீஸனின் புத்தக விழா circuit-லும் கணிசமான தள்ளிப் போடல்ஸ் ! திருச்சி புத்தக விழா - மறுதேதியின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது ! கரூரும் தான் ! தென்காசியுமே ! விருதுநகருமே !! And if the news is to be believed - சேலம் புத்தக விழா கூட டிசம்பர் நடுவாக்குக்குத் தள்ளிச் செல்கிறதாம் ! உறுதியாகத் தெரியலை தான் - ஆனால் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகமுமே மத்திய, மாநில சர்க்கார் பணிகளில் பிசி என்பதால் இந்தவாட்டி புத்தகவிழா சார்ந்த முன்னெடுப்புகள் லைட்டாய் பின்சென்றுவிட்டுள்ளது போல் தென்படுகிறது ! And இந்த சீசனில் மாறி, மாறி ஒவ்வொரு ஊருக்காய் சட்டியையும், பெட்டியையும் கட்டிக் கொண்டு போய் ரெண்டு காசு பார்ப்பதே, சக்கரம் சுழல உதவிடும் தாரகம் ! ஆங்காங்கே தினமும் அரங்கேறிடும் ரொக்க விற்பனைகளில் தான் ஆண்டின் பிற்பகுதியில் பிழைப்பே ஓடிடுவது வாடிக்கை என்ற நிலையில், இந்தத் தொடர்ச்சியான தள்ளிப்போடல்ஸ் - நெரிச்சிங் the சங்கு !! So கொஞ்சமே கொஞ்சமாய் வேகமெடுத்து வரும் சந்தா சேகரிப்புகளின் முதுகில் உப்புமூட்டை கட்டிக் கொண்டு பயணிக்க வேண்டிய சூழலில் உள்ளோம் folks !! So இயன்றமட்டுக்கு கரம் கொடுக்கக் கோரிடுகிறோம் !!
'ஆஹா...விடிஞ்சி முழிச்ச ஒடனே ஆரம்புச்சிட்டானா ?' என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது மக்களே - but யதார்த்தங்களை உரைக்காது இருக்க முடிலீங்களே !! Anyways - இதோ நவம்பர் பக்கமாய் பார்வைகளை ஓட விடுமுன் "சாம்பலின் சங்கீதம்" சார்ந்த இடைச்செருகல்ஸ் ! எப்போதும் போல நவம்பர் மூன்றாம் வாரமே சேலம் விழா துவங்கி விடுமே என்ற நினைப்பில், "சாம்பலின் சங்கீதம்" சார்ந்த பணிகளை முதலில் முடித்து விட்டு, அப்புறம் மின்னல் வேகத்தில் நவம்பர் புக்ஸுக்குள் புகுந்திடலாமே என்ற நினைப்பில் கடந்த 2 வாரங்களாகவே ஐன்ஸ்தீன் சாரோடும், அமெரிக்க ப்ரெசிடெண்ட்ஸ் ; காம்ரேட் ஸ்டாலின் போன்ற வரலாற்றுப் பெருந்தகைகளோடே உலாற்றித் திரிந்தேன் ! But சேலம் விழாவானது டிசம்பர் பிற்பாதிக்கு என்ற ரீதியில் தகவல் காதில் விழுந்த பிற்பாடு, பேஸ்தடித்துப் போய் ரூட் மாற வேண்டிய அவசியத்தில் உள்ளோம் ! So பக்கம் 325-ல் சா.ச. ஓய்வெடுக்க, அடுத்த நாலைந்து நாட்களுக்குள் நவம்பரின் பணிகளைப் போட்டுத் தாக்குவது என்று தீர்மானித்துள்ளேன் !
இக்கட நெக்ஸ்டு ட்விஸ்ட் !
நவம்பரின் ஒரு முக்கிய இதழாய் அறிவிக்கப்பட்டிருந்த லார்கோ சாகசமான "போர் கண்ட சிங்கம்" டிசம்பருக்கு மாற்றம் காண்கிறது ! இந்தக் கதை பங்குச்சந்தை சார்ந்த செம complex கதைக்கரு கொண்டதாலேயே இதனுள் மண்டையை நுழைக்கத் தயங்கியிருந்தோம். But இந்தத் துறையில் அனுபவம் கொண்டவரான நண்பர் மதுரை நாகராஜ சேதுபதி இதனை மொழிபெயர்க்க முன்வந்திருக்க, அவருக்கே பரிவட்டம் கட்டி விட்டிருந்தோம். நண்பரும் இயன்ற பெஸ்ட்டை முயற்சித்துள்ளார் - ஆனால் துறையில் அனுபவம் இருப்பினும், முழுநீள மொழியாக்கம் அவருக்குப் புதிதே என்பதை ஸ்கிரிப்ட் சொல்கிறது ! So கணிசமாகவே உட்புகுந்து பணியாற்ற வேண்டியிருப்பது புரிகிறது ! போன மாசம் கம்பியூட்டர் டெக்கீ அவதார் எடுத்து ராபின் 2.0 சகிதம் பயணிச்சாச்சு ! இனி பீரோவுக்குள் அந்து உருண்டைகளுக்கு மத்தியில் எங்கயாச்சும் கிடக்கக்கூடிய கண்ணால கோட்டை மாட்டிக்கிட்டு பங்குச்சந்தை பார்ட்டியாகவும் ஒரு ரவுண்டு அடிச்சுப் பார்த்திட கொஞ்சமே கொஞ்சமாய் அவகாசம் தேவைப்படுது folks ! அதனால் லார்கோ moves to டிசம்பர் ! எண்ட குருவாயூரப்பா - ஈ வயசிலேயே அடிக்க அவசியமாகிடும் பல்ட்டிகள் இன்னும் எத்தனை காத்துள்ளனவோ ?
குருதியில் பூத்த குறுஞ்சிமலர் !!
(எனக்குமே) கொஞ்சம் மர்மம் சூழ்ந்த கதையாகவே தொடர்ந்து வரும் ஆல்பம் இது !! And நேற்றைக்குத் தான் இதனுள் பணியாற்றப் புகுந்துள்ளேன் என்பதால் - விழிகள் மேற்கொண்டும் அகண்ட நிலையில் ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டி வருகிறேன் ! Trust me guys - மிரண்டே போகப்போகிறீர்கள் - வன்மேற்கின் இந்த லேட்டஸ்ட் அனுபவத்தினில் !! இந்தக் குறுந்தொடருக்கு ஒரிஜினலில் CATAMOUNT என்று பெயர் ! பிரெஞ்சில் 4 ஆல்பங்களில் நிறைவுறும் ஒரு ஆக்ஷன் அதகளம் இது ! அது இன்னாய்யா பெயர் ? என்ற கேள்வியோடே கொஞ்சமாய்த் தேடிய போது தான் - (BIG) CAT of the MOUNTAIN என்று பொருளாகிடும் விதமான பெயர் இது என்பது புரிய வந்தது ! அதாவது மலைச்சிங்கம் (Cougar) ; மலைச் சிறுத்தை (Panther) போலான முரட்டு வன விலங்குகளைக் குறிப்பிட அந்நாட்களில் பயன்படுத்தப்பட்ட சொல்லாம் இது !
இப்போது தான் எழுதத் துவங்கியுள்ளேன் என்பதால் இந்தப் பெயருக்கான context பற்றி இன்னும் தெரியலை - but இந்தப் பெயருக்கொரு தமிழாக்கம் அவசியமாகிடும் பட்சத்தில் உங்களின் பரிந்துரை(கள்) என்னவாக இருக்குமோ மக்களே ? இந்தக் குறுந்தொடர் உள்ளபடிக்கே தனித்தனியாய் படிக்கவும் சாத்தியம் தருவதால் மேற்கொண்டு இதன் பின்புலத்தினை ஆராய்ந்தேன் - உரிமைகளை வாங்கிடும் முன்பாக ! அப்போது தான் புரிந்தது - இந்தத் தொடரானது பிரெஞ்சில் கௌபாய் நாவல்கள் பல எழுதி வந்ததொரு பிரபல novelist ஆல்பர்ட் போனோவின் காமிக்ஸ் தழுவல் என்பது !
பிரான்சில் 20-ம் நூற்றாண்டின் மத்தியில் கௌபாய் நாவல்கள் கன்னா பின்னாவென பிரபலமானவைகளாம் !! அந்தக் காலகட்டத்தில் இந்த எழுத்தாளர் வெவ்வேறு புனைப்பெயர்களில் டிடெக்டிவ் நாவல்கள், சாகச நாவல்கள், இளைஞர்களுக்கான நாவல்கள் என்றெல்லாம் கிட்டத்தட்ட 750 நாவல்கள் வரை எழுதியுள்ளாராம் ! நிறையவே எழுதியிருந்த போதிலும், மிரட்டலான கௌபாய் நாவல்களில் இவர் கிங் போலும் ! அதிலும் 1929-ல் துவங்கிய இந்த CATAMOUNT நாவல் தொடர் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு, 70-க்கும் மேற்பட்ட கௌபாய் நாவல்களுடன் வெளுத்துக் கட்டியுள்ளது. அதன் ஹீரோ Catamount செமயானதொரு ஆக்ஷன் நாயகராய், வீட்டிலிருந்தபடிக்கே வன்மேற்கை தத்ரூபமாய் தரிசிக்கும் வாய்ப்பினை பல தலைமுறை பிரெஞ்சு வாசகர்களுக்கு வழங்கி வந்துள்ளார் ! அவரை 2015-ல் காமிக்ஸ் உலகினுள் புதியதொரு பதிப்பகம் இட்டு வந்திருக்க, 4 இதழ்கள் கொண்ட இக்குறுந்தொடர் 2021-ல் முற்றுப் பெற்றுள்ளது ! அன்று முதலே இத்தொடர் நம்மள் கி ரேடாரில் இருந்து வர,போன வருஷம் இப்புது நிறுவனத்துடன் கைகுலுக்கி இருந்தோம் ! And here we are !!
இதோ - மிரளச் செய்யும் அதன் அட்டைப்பட first look !! இந்தத் தொடரின் ஒவ்வொரு ராப்பருமே இதே போல் அல்லு விடும் ரகத்தில் இருப்பது செம highlight ! உட்பக்கச் சித்திரங்களிலும் புதியதொரு ஸ்டைலில் ஓவியர் மெர்சலூட்டியுள்ளார் ! இன்னமும் DTP ஆரம்பிக்கலை என்பதால் உட்பக்க preview தமிழில் இல்லை இந்த நொடியில் ! Maybe நாளை இங்கே upload செய்கிறேன் !
"நரகத்திற்கொரு புரவி" என 2026-ல் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள அடுத்த அத்தியாயம் ஒரு டபுள் ஆல்பம் என்பது சமீபமாய்த் தான் தெரிய வந்துள்ளது ! So எப்படியேனும் அதனை ஒரு டபுள் ஆல்பமாகவே 2026-ல் களம் காணச் செய்து விடுவோம் !! ஆகையால் கூகுளில் தேடிய கையோடு தம் கட்டி அர்ச்சனை செய்திடும் வேலை உங்களுக்கு மிச்சம் guys !! இதோ உட்பக்க previews from the original !!
நவம்பரில் காத்துள்ள மீத 2 இதழ்களின் லிஸ்ட் இதோ :
ப்ளூகோட் பட்டாளத்தின் - "ஊழியம் செய்ய விரும்பு"
&
மிஸ்டர் நோ !
வண்டி வண்டியாய் பணிகள் வெயிட்டிங் என்பதால் அவற்றிற்கான previews அடுத்த வாரப்பதிவினில் folks !! Bye now....See you around ! Have a lovely Sunday !!



ஹாய்
ReplyDeleteசூப்பர். மகிழ்ச்சி
Deleteவாழ்த்துகள் சகோ
Deleteநன்னி...
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteSecond
ReplyDeleteபத்துக்குள்ள..!
ReplyDelete10 kulla
ReplyDeletePresent sir
ReplyDeleteவணக்கம்
ReplyDelete🌹
ReplyDelete😘😘😘🥰Me in😘💐😄
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவணக்கமுங்க!!
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDeleteGood morning all
ReplyDelete// இந்தப் பெயருக்கொரு தமிழாக்கம் அவசியமாகிடும் பட்சத்தில் உங்களின் பரிந்துரை(கள்) என்னவாக இருக்குமோ மக்களே ? //
ReplyDeleteமலைக் கள்ளன்...
சார் - மலைசிங்கத்துக்கும் கள்ளனுக்கும் இன்னா லிங்க் ?
Deleteசம்மந்தப் படுத்திக்கிட்டோம்.!
Deleteஹி,ஹி...
Delete//அதனால் லார்கோ moves to டிசம்பர் ! //
ReplyDeleteசூப்பர் சார்
லார்கோ Vs யங் டெக்ஸ்
மிஸ்டர் நோ அடுத்த மாதம் வருவது அருமை
😍😍
DeleteAyyo
ReplyDeleteBluecoat aaaaaa
Aandavaa.
Mudiyalaaa. saami
அட்டவணையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதைக் கண்டு 13 மாசம் கழிந்த பின்னே தெறிக்கிறீங்களே நண்பரே - செம ஸ்பீடு போங்க !!
Deleteஅப்ப டிசம்பரில்தான் நவம்பரா சார் ?!
ReplyDeleteவரும் வாரக் கடைசியில் வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன்...
டிசம்பரில் நவம்பரா ??? அது ஏன் சார் ?
Deleteநவம்பரில், நவம்பர் !
ஹை சூப்பரு...😍🤩
Deleteகுருதியில் பூத்த குறிஞ்சி மலர் அட்டைப் படம் தெறிக்குது...
ReplyDeleteமலை சிறுத்தை
ReplyDeleteஞாயிறு காலை வணக்கம் அனைவருக்கும்...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteCatamount....
ReplyDeleteவர்ரே வாஹ்...
இதுவே நல்லாதான் இருக்குங்க சார்..
அட்டைப்படம் 🔥🔥🔥🔥🔥
ReplyDelete💗🎇
ReplyDeleteCatamount...
ReplyDeleteசித்திரங்கள் அள்ளுது சார்..😍😍
' குருதியில் பூத்த குறிஞ்சி மலர்' - அட்டைப்படமே பயங்கரமாக மிரட்டுகிறது!! 👁️👁️
ReplyDeleteஅந்தக் குழந்தையின் கண்களில் தெரியும் பயம் - ஊஊய்!!😯
பின்பக்க அட்டையும் பயங்கர மாஸ்!! அந்த கமான்ச்சேவை வரைந்திருக்கும் விதம்😲😲
கதையோடு கூடவே ஓவியங்களும் மிரட்டப்போவது உறுதி!!
// இந்தப் பெயருக்கொரு தமிழாக்கம் அவசியமாகிடும் பட்சத்தில் உங்களின் பரிந்துரை(கள்) என்னவாக இருக்குமோ மக்களே ? //
ReplyDeleteமலை விலங்கு
மலைக்குரங்கு..
ReplyDelete🏃🏃🏃🏃🏃
😂😂😂
Delete// இந்தப் பெயருக்கொரு தமிழாக்கம் அவசியமாகிடும் பட்சத்தில் உங்களின் பரிந்துரை(கள்) என்னவாக இருக்குமோ மக்களே ? //
ReplyDeleteபாந்தெரா மலை
பாந்தெரா - பெரிய பூனை இனம்
Hi..
ReplyDeleteஓய்..
Deleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteஅடர் சிகப்பு வண்ணத்தில் அட்டைப்படம் மிரட்டலாக உள்ளது சார். ஆவலுடன் waiting.
ReplyDeleteகூடவே ப்ளுகோட் வாவ், சூப்பர்.
நவம்பர் & டிசம்பர் கோட்டா இப்போதுதான் டக்கரா கீது.
மலைச்சிங்கம் பெயரே நன்றாகவே உள்ளதுங்க, சார்
ReplyDeleteமலை இளவரசன் (அல்லது) மலை அரசன்
Deleteவைக்கலாம்
இந்தப் பெயர்லாம் "மருதநாட்டு இளவரசி" level க்கு கீது ரம்யா 🥴
Delete😂😂😂
Deleteமலைச் சிங்கம், மலைச் சிறுத்தை இவைகளே நன்று தான். இருந்தாலும், இதையும் யோசிப்போம்.
ReplyDelete1. மலை வேங்கை
2. மலைப் புலி
அப்புறம், நரகத்திற்கு ஒரு புரவி யின் ஓவியங்கள் அபாரம்.
அதுவும், காட்டருவியின் பின் long shot ல் ஒரு புரவி, மற்றும் back lightல் புரவி மேல் கௌபாயின் தோற்றம் ஆகியவை போட்டோகிராபி போல் உள்ளது. என்ன ஒரு camera angle vision. ஓவிருக்கு அபார ரசனை. இந்த மாதிரி எல்லா கதைகளும் வந்தால், காமிக்ஸ் இன்னும் பிரபலமடையும். அருமை 👍
//! So எப்படியேனும் அதனை ஒரு டபுள் ஆல்பமாகவே 2026-ல் களம் காணச் செய்து விடுவோம் !! ஆகையால் கூகுளில் தேடிய கையோடு தம் கட்டி அர்ச்சனை செய்திடும் வேலை உங்களுக்கு மிச்சம் guys//
ReplyDeleteஎன்னங்க சார், எங்களுக்கு வேலை இல்லாம பண்ணிட்டீங்க
கடல் ஹிஹிஹி
Deleteவந்துட்டேன்
ReplyDeleteSigarangalin Siruthai
ReplyDeleteஇதுவும் sounds gud...
Delete👌👌👌
Deleteகு.பூ.கு.மலர் அட்டைப்பம் செம கலக்கல் சார்..பட்டையை கிளப்புகிறது..!
ReplyDeleteபாந்தெரா மலை + 5
ReplyDeleteதலைப்பு வசீகரமாகவும் அதே வேளையில் ஆர்வத்தையும் தூண்டுகிறது.
பாந்தெரா - பெரிய பூனை இனம்
மலைப் புலி😸😸😸😸
ReplyDeleteசிகர வேங்கை
ReplyDeleteஇது தேவலாம்... 🤔
Deleteமலை மாயன், மலை மல்லன், மலை காடன்😀😀😀😸😸😸
ReplyDeleteஅடேயப்பா வேற லெவல் அட்டை...இனிமேல் இதான் டாப்பெனும் வார்த்தைகள் வராதென்பது நிச்சயம்
ReplyDelete😊😊😊
Deleteலார்கோ தள்ளிப் போவது வருத்தமானாலும் நோவும் ப்ளூவும் முன்னால் வருவதும் காரணத்தோடு தானே....சூப்பர் சார்...குண்டு வெடிப்பை காணவும் லோடு ஆவலோடு
ReplyDeleteஅவ்வளவு தான். அடுத்த மாதம் செம்மையாக இருக்கப் போகிறது
Deleteவணக்கம் நண்பர்களே🙏🙏
ReplyDeleteப்ளூ coats, Action கௌபாய், Mr. நோ எல்லாம் ஒரு மாதிரி கலவையாக சூப்பர் ஆக இருக்கு.
ReplyDeleteThe power of variety sir...
Deleteதீபாவளி தந்த தித்திப்பிலும், தீபாவளி மலர்கள் தீபாவளிக்கே கிடைத்த சந்தோஷத்தில், நவம்பர் புக்ஸ் என்பதே மறந்து போனதுங்க சார், இன்று இந்த பதிவு படிக்கும் வரை.ஆகையால் பொறுமையாகவே நவம்பர் இதழ்கள் வரட்டும்.
ReplyDeleteபுதிது புதிதான தங்களது அட்டகாசமான தேடல் இன்னமும் வியக்க வைக்கிறது,
அதிலும் இந்த வன்மேற்கு என்கிறபோது விழி விரிய பலமடங்கு ஆவலை தூண்டுகிறீர்கள் சார்.
மேலும் தாங்கள் தேர்வு செய்யும் கெளபாய் கதைகள் என்றும் சோடை போனதில்லை,
"ஒரு குன்டா சக்கரை பொங்கலுக்கு ஒரு சோறு சுவை" என்பது போல,
"மிரண்டே போகப் போகிறோம்" என்பதற்கு புதிதாக களமிறங்கியுள்ள இந்த கு பூ கு வின் மாஸ் காட்டும் அட்டைப்படமே சாட்சி.
அதே போல
"நரகத்திற்கொரு புரவி" படங்களே ஒரு வித்தியாசமாக மிரட்டுகிறது.
ஆவலுடன் waiting....
இது தனித்தனி கதைகளாக படிக்க ஏதுவாகும் என்னாலும், அனைத்து ஆல்பங்களையும் 2026 லேயே போட்டு முடிப்பது நல்லது.
இந்த பாகங்கள் தள்ளிப்போவது என்றாலே இப்ப அங்கங்கே சலசலப்பு எழுவதை பார்க்க முடிகிறது.
தற்போது வெளியான ராபின், வந்த வேகத்தில் அனைவரிடமும் போய் சேர்ந்து, பலரிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது,
அதே சமயம் அந்த முடிவு பாகம் அடுத்த பிப்ரவரியில் எனும்போது சிலர், "முடிவு புக் வந்ததும் படிச்சுக்கலாம்" என அதை எடுத்து வைக்கும் சூழலும் உள்ளது.
எவ்வளவுதான் பாஸிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், இது போன்ற குறைகள்
அந்த விமர்சனங்களை சற்றே மங்கச் செய்கிறது.
முடிந்தவரை பாகங்கள் கொண்ட கதைகளை ஒரே இதழாக போடலாம் அல்லது அந்த வருடத்திலேயே மீத பாகங்களையும் வெளியிடலாம்.
இந்த கு பூ கு வின் மீத ஆல்பங்களையும் 2026 லேயே வெளியிட ஆவண செய்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி. சந்தாவில் போட இயலாத பட்சத்தில்
ஏதாவது ஸ்பெஷல் இதழாக வெளிடலாம்.
ஏனெனில் இந்த கதை பற்றிய தங்களின் முன்னோட்டம், காத்திருக்க பொறுமையின்றி இந்த கருத்தை சொல்ல வைக்கிறது.
தீபாவளியின் 4 வகை பலகாரங்களில் நவம்பரில் இந்த கதைகளுடன் ப்ளூகோட் & மிஸ்டர் நோ வருவது கூடுதல் மகிழ்ச்சி ❤️.
சார் - வந்தா ஈரோவா தான் வருவேன் ; படிச்சா மொத்தமா தான் படிப்பேன் - என்ற சலசலப்புகளுக்கு நான் விடாப்பிடியா காது கொடுத்து வந்திருந்தால்,
Delete*இரத்தப் படலம் இருந்த தெருப்பக்கம் கூடத் தலை வைச்சுப் படுத்திருக்க மாட்டோம்! *மின்னும் மரணம் மின்னிக்கிட்டே அவுக ஊரில் மட்டுமே இருந்திருக்கும் - தமிழுக்கு வந்திராது!
*இரத்தக் கோட்டையும் தான்...!
*அட, இளம் டைகரின் முழுத் தொடருமே தான்!
அப்புறம் ராபின் 2.0 மொத்தமாய் 10 கதைகளுமே ஒற்றை story arc என்பது தான் போனலியின் திட்டமிடல் ! போட்டா மொத்தமா தான் போடணும் என்று இருப்பின், இந்தத் தொடரே வந்திராது!
படைப்புகளின் தரம் பேசும் - ஒண்டியாகவோ, கூட்டிலோ! நமது நடைமுறை சாத்தியங்களும் இங்கே கவனம் கோருவதை நான் நிராகரிக்க வாய்ப்பு லேது எனும் போது - Relax sir..
நான் பார்த்துக்கிறேன்!
//இரத்தப் படலம் இருந்த தெருப்பக்கம் கூடத் தலை வைச்சுப் படுத்திருக்க மாட்டோம்! *மின்னும் மரணம் மின்னிக்கிட்டே அவுக ஊரில் மட்டுமே இருந்திருக்கும் - தமிழுக்கு வந்திராது!
Delete*இரத்தக் கோட்டையும் தான்...!
*அட, இளம் டைகரின் முழுத் தொடருமே தான்!//
+9
ரைட்டு... ஒற்றை நொடி... ஒன்பது தோட்டா - 5 பார்ட்ஸ் கொண்ட திரில்லர்! ஏக் தம்மில் நாக்குத் தொங்க வெளியிட்டோம்!
Deleteசொல்லுங்களேன் - அது ஈட்டிய ரெஸ்பான்ஸ் பற்றி? அற்புதமான தொடர்.. But hardly got the recognition!
இந்த reason எனக்கு புரியவே இல்ல, ஒ நொ ஓ தோட்டா 3 வது முறையாக படித்து பாதி முடிந்து விட்டது, ஆனா இந்த கதையை இன்னுமே பலர் தொடாமல் இருப்பது ஆச்சரியம்.
Deleteஅதே கதையை இரத்தப் படலம் போல பிரித்துப் போட்டிருந்தால் 5 அத்தியாயங்களில் மிரட்டி இருக்கும் சார்!
Deleteஅடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பால் ஈர்ப்பு கூடி இருக்கும்
Delete// அதே கதையை இரத்தப் படலம் போல பிரித்துப் போட்டிருந்தால் 5 அத்தியாயங்களில் மிரட்டி இருக்கும் சார்! //
Deletewithout a doubt sir.
// சார் - வந்தா ஈரோவா தான் வருவேன் ; படிச்சா மொத்தமா தான் படிப்பேன் - என்ற சலசலப்புகளுக்கு நான் விடாப்பிடியா காது கொடுத்து வந்திருந்தால், //
Deleteசார் நாங்க தலைகீழாக தான் குதிப்போம்!
இந்த புத்தகத்தில் இன்னும் ஒரு பாகம் கூட முடிக்காத ஆட்களில் நானும் ஒருவன் சார். மன்னிக்கவும். அதிக நண்பர்களால் புகழ்ந்து பேசப்பட்ட கதை, நானும் ஆர்வமுடன் வாங்கினேன்! நேரம் சரியாக அமையாத காரணத்தால் இன்னும் இதனை முழுமையாக படித்து முடிக்கவில்லை! நீங்கள் சொன்னது போல தனித்தனி கதையாக வெளியிட்டு இருந்தால் படித்து முடித்து இருப்பேன் என்று நம்புகிறேன் சார்.
குண்டு புத்தகம் என்றால் டெக்ஸ் மட்டுமே மிக சரியான ஆள் சார்.
மற்றவர்கள் கதை என்றால் இரண்டு பாகங்களுக்கு மேல் இணைத்து இனிவரும் காலங்களில் வெளியிட வேண்டாம் என்பது எனது தாழ்மையான எண்ணம் சார்.
வேதாளருக்கு (ஆண்டு அட்டவணை வரிசையில்) நீதி வேண்டும்:
ReplyDelete♦️சமீபத்திய வருட அட்டவணையில் வேதாளருக்கு இடமில்லை அதே சமயம் விற்பனையில் பின் தங்கி உள்ள விற்பனையே ஆகாத ஹீரோக்களின் கதைகளுக்கு இடம் உண்டு (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) இது என்ன நியாயம்?
♦️கிளாசிக் ஹீரோக்களுக்கு இடமில்லை என்றால் Zen X வரிசையில் இடம் பெற்றுள்ள ஒரு ஹீரோ மற்றும் ரெகுலர் அட்டவணை வரிசையில் இடம் பெற்றுள்ள சில ஹீரோக்கள் கிளாசிக் நாயகர்கள் தானே( இப்பொழுதும் பெயர் குறிப்பிட விரும்பவில்லை) அவர்களுக்கு மட்டும் எப்படி இடம் கிடைத்தது?
♦️விற்பனையில் சாதிக்காத ஒரு ஹீரோக்களுக்கு இடம் இல்லை என்றால் உங்களை விட்டு செல்ல மாட்டேன் உங்களை விட்டு பிரிய மாட்டேன் என அடம் பிடித்து (கல்யாணமாகி செல்லும் புது பெண் போல😂) விற்பனையாகாமல் குடோனில் தங்கி இருக்கும் இரண்டு ஹீரோக்களுக்கு ரெகுலர் இடத்தில் இடம் உள்ளது வேதாளருக்கு ஏன் இல்லை?
♦️விற்பனையில் ஸ்டாக் அவுட் ஆகி இருப்பதற்கு இடம் இருக்கிறது என்றால் அத்தனை புத்தகமும் ஸ்டாக் அவுட் ஆகி இருக்கும் வேதாளருக்கு ஏன் இடமில்லை?
♦️ஒருமுறை சாப்பிட்ட அதே உணவை மறுமுறை சாப்பிடும் போது சலிப்பு ஏற்படுவது இயற்கை, அதுபோல நன்றாக இருந்தாலும் கூட விற்பனையில் ஜொலித்தாலும் கூட ஒரே நாயகரின் இதழை (இப்பொழுதும் பெயர் வேண்டாம்😇) வருடம் முழுவதும் மாதம் தோறும் கேட்பது என்ன நியாயம்?
♦️ஒரே நாயகரின் இதழை அதிகமாக கேட்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் அதிகமான இதழை தனித்தடத்தில் ஒதுக்காமல் (விற்பனையில் சாதிக்கும் வேதாளரை தனித்தடத்தில் ஒதுக்கி பர்ஸுக்கு பாம் வைக்கும் வேலை😢) ரெகுலர் ஆண்டு அட்டவணையில் ஒதுக்குவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.?
♦️ வெரைட்டி காமிக்ஸ் மற்றும் அனைத்து நாயகர்களின் கதைகளையும் (மாதம்தோறும் வேண்டும் என கேட்கும் நாயகரையும் சேர்த்து😝 ) கேட்பவர்கள் ஒரே நாயகரின் கதையே வருடம் முழுவதும் படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
♦️புதிய புதிய கதைகள் வருவதில்லை அயல்நாட்டு காமிக்ஸ் வெளியீட்டு நிறுவனம் யாரும் இந்த காமிக்ஸ் நாயகரின் கதையை தொடர்வதில்லை எனக்கூறி வேண்டாம் என்ன சில நாயகர்களை அட்டவணையில் இடமில்லை என ஒதுக்கினால் தற்பொழுது வரை புதிய கதை வெளிவரும் வேதாளருக்கு ஏன் இடமில்லை?
♦️குழந்தைகளுக்கான அட்டவணை வரிசையில் உண்மையுடன் நடந்து கொள்ள வேண்டும், வனவிலங்குகளை துன்புறுத்த கூடாது, (எடுத்துக்காட்டு வேதாளரின் ஜும்போ காமிக்ஸ்) இயற்கை சமநிலையை பேண வேண்டும் என நீதிநெறிகளை கூறும் வேதாளரின் கதைகள் தானே அட்டவணை இடம்பெற வேண்டும்?
♦️புத்தகத் திருவிழாக்களில் புத்தகங்களை வாங்காதவர்களை வாங்க வைக்க நிதி தேவை என்ற ஆக்சிஜனை அதிகப்படுத்த வேதாளர் கதைகள் தேவைப்படுகின்றன பிறகு ஏன் வருடம் முழுதும் வாங்குபவர்களுக்கு ஆண்டு அட்டவணையில் வேதாளருக்கு இடமில்லை?
♦️ மேற்கூறிய கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிப்பது எடிட்டர் அவர்களுக்கே வெளிச்சம்😉
அது தான் எடிட்டருக்கே வெளிச்சம்னு சொல்லிடீங்களே நண்பரே - அவரே பார்த்துப்பார் 👍
Deleteமாட்டிகிட்டீங்களா
Deleteஇந்த பக்குவமான, பஞ்ச் சான பதிலை கேள்வி கேட்ட நண்பர் எதிர் பார்திருக்க மாட்டார்.
Deleteஅவர கேக்குறீங்களோ?
Deleteபின்சீட் டிரைவிங் மேலே நிறைய பேருக்குத் தீரா காதல் உண்டு சார் - அதை எப்போதோ புரிஞ்சுக்கிட்டேன்!
Deleteமலை காடன், மலை கானகன், கான் மலே, மலையன்,
ReplyDeleteகுருதியில் பூத்த குறிஞ்சி மலர் அட்டைப்படம் செம மிரட்டலாக உள்ளது. இதனை பார்த்தே புத்தக திருவிழாவில் பலர் இந்த புத்தகத்தை வாங்கி செல்வார்கள்.
ReplyDeleteஆவலுடன் காத்திருக்கிறேன்.
சார், இன்றைய பதிவு ரொம்ப சின்னதாக உள்ளது சார். தயவு செய்து உங்கள் கைகளை சில நண்பர்கள் சொல்வதற்காக எழுதுவதற்கு கட்டிப்போட வேண்டாம் சார்.
ReplyDeleteவேலை அதிகம் என்ற காரணத்தினால் அதிகம் எழுத முடியவில்லை என்றால் ஓகே சார்.
Deleteவேலை அதிகம் போல PFB...
DeleteOkay Arivarasu!
Delete"குருதி வீரன்"
ReplyDeleteசிகரங்கள் வரிசையில் பார்த்தால்
"சிகரங்களின் அரிமா" தோன்றிறறு
//! So எப்படியேனும் அதனை ஒரு டபுள் ஆல்பமாகவே 2026-ல் களம் காணச் செய்து விடுவோம் !! ஆகையால் கூகுளில் தேடிய கையோடு தம் கட்டி அர்ச்சனை செய்திடும் வேலை உங்களுக்கு மிச்சம் guys//
ReplyDeleteஅதெல்லாம் முடியாது வார்டன்னா அடிப்போம்
அதே அதே தோழரே 😁😁
Delete// இந்தப் பெயருக்கொரு தமிழாக்கம் அவசியமாகிடும் பட்சத்தில் உங்களின் பரிந்துரை(கள்) என்னவாக இருக்குமோ மக்களே ? //
ReplyDeleteகிரிபுலி
புலிக்கடல்
சிம்ஹவேல்
மலையன்
மலையில் ஒரு புறாஞ்சி - A Wildcat in the Mountains
பர்வதராஜ் - Mountain King
மலைக்காவலன்
மலை நிழல் – Shadow of the Mountain
copilot உபயம் இது - ஓடுடா பரணி ஓடு
பரணி சகோ🤣🤣🤣
Deleteஎன்னமா இது இப்படி சிரிச்சி காமெடி பண்ணுறீங்க :-)
Deleteசிம்ஹவேல் - பேரரசு பட டைட்டில் மாதிரி இருக்கும், அதற்காக ரிஜெக்ட் பண்ண வேண்டாம் சார்
Deleteகிரிபுலி கொஞ்சம் நல்லா இருக்கு ஆபீசர், பார்த்து செய்யுங்க ஆபீசர் சார்.
Deleteஓவியங்கள் அட்டாஹாசம் sir... ❤️👍🙏...
ReplyDeleteஅறிமுகம் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
ReplyDelete100
ReplyDeleteமலைக்காட்டு மாயன், காட்டு மாயன்
ReplyDeleteகடுவன் பூனை , கடுவன் சிறுத்தை , மலை கடுவன் ..
ReplyDeleteமலை வேங்கை மாயன்
ReplyDeleteமலைப்புலியர், ,வேங்கை மலையர், சிகரவேங்கையன்
ReplyDeleteபயணம் - வீட்டில் இன்று ஏதாவது கதை சொல்லுங்க என்ற எனது துணைவியாரிடம் பயணம் கதையின் முன்னுரையை படிக்க சொல்லிவிட்டு கதை சொல்ல ஆரம்பித்தேன், சித்திரங்களில் என்ன சொல்ல வருகிறார்கள் என்று விவரித்து கொண்டே கதையின் வசனங்களை வாசித்து பாதி கதையை அவர்களுக்கு சொல்லிவிட்டேன், அவர்களால் அந்த கதையின் தாக்கத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடிந்தது. குழந்தைகள் இது போன்ற கதையை சொல்லாதீர்கள் என்று ஆரம்பத்தில் ஓடிவிட்டார்கள். படித்து முடித்த பிறகு கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் கனவு முழுவதும் தந்தையும் மகனும் பயணிக்கும் அந்த காட்சிகள் தொடர்ந்து துரத்தியது. என்ன ஒரு அருமையான கதை.
ReplyDeleteஇரண்டாவது முறை இதனை படித்தேன்.
👌👌👌
Deleteஉண்மை. இரண்டாம் முறை மட்டுமல்ல. கதை சொல்ல வரும் கருத்தையும் உணர்ந்து கொள்ள பல முறை படிக்கலாம்.
Delete"காட்டுப் பூனை".
ReplyDelete" எழுந்து வந்த எதிரி"
ReplyDeleteV காமிக்ஸின் தீபாவளி வெளியீடு - முதல் அத்தியாயம்.
Texன் கதைகள் போன்ற பல கதைகளால், பழைய காலத்திலேயே உலாவுகிறோமே? பாலைவனமும், போன் கூட இல்லாத கால கட்டங்களிலும் உலவுகிறோமே!
செல் போன், இன்டெர் நெட் யுகத்தை வைத்து, இந்தக்காலத்தில் இருப்பது போன்று கதைகள் வருவதில்லையா? என்று எடிட்டரிடம் ஈரோடு வாசகர் சந்திப்பில் வினவினேன்.
இதோ பதிலாய் ராபினின் மூன்று அத்தியாய கிரைம் திரில்லர். Wow! 😲
முழுமையாய் அனைத்து லேட்டஸ்ட் technology யோடும் இணைந்து ஒரு கதை! கம்ப்யூட்டர், செல்போன், இமெயில், GPS என சகல Technology களும் இணைந்த ஒரு கதை. அப்படியென்றால் எவ்வளவு சிக்கலான ஒரு கதையாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! 😮
ஓர் அரசாங்க உயர் அதிகாரி காரில் பாய்ந்து, பாலத்தில் இருந்து குதித்து, மோதி, நொறுங்கி, இறந்து போகிறார். அது தற்செயலாய் நடந்த தற்கொலை அல்ல, Technology துணையோடு நடத்தப்பட்ட கொலை என்று உணர்கிறார்கள் ராபின் மற்றும் அவர் குழுவினர்.
லெஸ்ஸும், காத்ரீனாவும் ஜேம்ஸ்பாண்ட் சாகசங்களில் ஈடுபட,
பால் காரை ஆராய,
மார்கரெட் பாலை ஆராய்கிறார். குழுவில் சேர்க்கப்பட்ட பழைய சைபர் கிரைம் குற்றவாளி மனீஷா டெர்சனை வைத்து, விவேகத்தோடு துப்பறிகிறார் ராபின். இந்த அறுவர் குழுவின் முன் இரண்டு சவால்கள். செனட்டரின் கார் விபத்து, தற்கொலை அல்ல, கொலை என்று நிருபிக்க வேண்டும். போலீஸ் படையை வைத்தே திட்டமிட்டு நடந்த இன்னொரு கொலையும் இதைப் போல் செல்போன் மூலம் trogen virus வைத்து, நடந்த கொலை என்று நிரூபித்தாக வேண்டும்.
இந் நிலையில் பாரெட் என்பவருக்கு போன் கால். Unknown என்ற trace செய்ய முடியாத கால். பாரெட்டின் ஒரிஜினல் பெயரைக் குறிப்பிட்டு பேசிய அந்த மர்ம நபர் 'வஞ்சம் தீர்க்கும் நேரம் வந்து விட்டது ' என்கிறான். அவன் தான் அந்த 'எழுந்து வந்த எதிரி.'
அத்துடன் முதல் அத்தியாயம் முடிவடைகிறது.
இரண்டு முறை படிக்க வேண்டியதாயிற்று. இப்படித்தான் ஒரு கதை யோசிக்க வைக்க வேண்டும்.
சிக்கலான கதை. சுவாரசியமான ஆரம்ப அத்தியாயம்! அடுத்த அத்தியாயம் எப்படிப் போகிறதென்று பார்ப்போம்! 🤔
"இரத்தமின்றி யுத்தம்"
ReplyDeleteV காமிக்ஸின் தீபாவளி வெளியீடு - இரண்டாம் அத்தியாயம்.
கிரிப்டோ கரன்சியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதை.
கிரிப்டோ கரன்சி என்றால் என்ன தெரிந்து கொள்வதற்கு ஆரம்பத்திலேயே ஒரு பக்கத்திற்கு தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
அதன் பின் கதை flash back ல் 2010, நியூயார்க்கில் ஆரம்பிக்கிறது.
இளம் ராபின் களமிறங்குகிறார்.
ஒரு தனி பங்களா.
உள்ளே கார் நுழைகிறது. 'மிரிஸ், கேட்டைத்திற' என்கிறார். கதவு திறக்கிறது. உள்ளே ஒவ்வொரு செயலுக்கும் மிரிஸ் என்ற கம்ப்யூட்டர் பாதுகாப்பு சிஸ்டம் பயன்படுகிறது. ஆனால், உடனடியாக கோளாறு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு பங்களா அழிகிறது. அதிக ஆடம்பரம் அழிவுக்கும் வழி வகுக்கும் என்று உணர வைக்கிறார்கள்.
ஆனால், அதுவும் திட்டமிடப்பட்ட கொலை என்று கண்டு பிடிக்கிறார்கள் ராபினும், போலிஸ் டீமும்.
அதற்குக் காரணமான நபரை தேடிப் பிடித்து, சில சாகசங்களுக்குப் பிறகு அவனைத் தீர்த்துக் கட்டுகிறார்கள். ஆனால், அவனுக்குப் பின்னால் ஒரு கும்பல் இயங்குகிறது.
மேலும், சில விபத்துகள் போல் கொலைகள். கம்ப்யூட்டர் ஹேக்கிங் மற்றும் நேரடி நாச வேலைகளே காரணம் எனத் தெரிகிறது. அடுத்த இலக்கில், இன்னொரு வெடி விபத்து. ஒரு ஸ்வான்சன் என்ற ஆபிஸர் தப்பிக்கிறார். அவர் தலைமையில், கிரிப்டோ கரன்சி பற்றிய மீட்டிங் இம்முறை ராபின் குழுவின் பாதுகாப்போடு, கடலில், ஒரு மின்சாரப் படகில் நடக்கிறது. அங்குள்ள சிஸ்டத்தை ஆராயும் ஆபிஸர் இருவர், அதிலும் வைரஸ் நுழைக்கப்பட்டு, படகு வெடிக்கும் என உணர்கிறார்கள். சிஸ்டத்தை சரி செய்ய முயற்சிக்கிறார்கள்.
இரண்டாம் பாகம் முடிகிறது.
"வஞ்சம்"
ReplyDeleteV காமிக்ஸின் தீபாவளி வெளியீடு - மூன்றாம் அத்தியாயம்.
சிஸ்டத்தில் வைரஸ் ஊடுருவியிருப்பதால், படகு எந்த நேரமும் வெடித்து விடலாம் எனக் கூறி, படகில் உள்ளோரை பாதுகாப்பாக வேறு படகில் அழைத்துச் செல்கிறார்கள். அந்த இருவர் பிரச்சனையை சரி செய்ய முயல, உடனிருக்கும் ராபினையும் வெளியேற்றி விட்டு, போராடுகிறார்கள். படகு வெடித்து விடுகிறது.
அந்த இருவரின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டு பிடித்து, அழிக்க ராபின் புறப்படுகிறார்.
இரத்தம் தெறிக்கும் சாகசங்களோடு, ஒரு பெண் தலைமையிலான அறுவர் குழுவை நசுக்குகிறார். ஆனால், அவர்கள் பார்த்திராத 'நிழல்' என்று பெயரிடப்பட்ட மர்மத் தலைவன் ஒருவன் இருக்கிறான் என்று அறியப்படுகிறது.
இரு ஆபிசர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதோடு மூன்றாம் பாகம் முடிவடைகிறது.
இத்துடன் கதை முடியவில்லை. அடுத்த பாகம் வருகிறது என அறிவிப்பு.
'ராபின் Vs நிழல்'
"எங்கேயோ கேட்ட குரல்".
மொத்தத்தில் படிப்பதற்க்கே இவ்வளவு நிதானம் தேவைப்படுகிறதென்றால், மொழி பெயர்ப்பிற்கு எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள் என்பது புரிகிறது. காமிக்ஸ் உலகில் நிலைத்து நிற்க மொழி பெயர்ப்பும் பெரும் சாகசமே என்பதை இக்கதை தெளிவாகப் புரிய வைக்கிறது.
மொழி பெயர்ப்பாளர்களின் கடும் முயற்சிக்கு வாழ்த்துகள். 👏👍
இதனால் தான், ஒரே குண்டு புக்காய் அனைத்து பாகங்களும் இருந்தால் நல்லது என்கிறோம்.
பாகங்கள் காணாமல் போகாது. முழுக்கதையையும் படிக்க முடியும். அதுதான்! 👍
மொத்தத்தில், நல்ல ஒரு கதை வாசிப்பு! 👏👏👏
"கபால வேட்டை"
ReplyDeleteThe லயன் லைப்ரரி வெளியீடு.
வழக்கமாய் லயன் லைப்ரரி வெளியீட்டு வேதாளர் கதைகளில், படங்கள் அவ்வளவு தெளிவாக இருக்காது. இந்த முறை சற்று முன்னேற்றம் கண்டு o. k என்று சொல்லுமளவுக்கு உள்ளது.
இந்த முறை இரண்டு பிரசிடெண்டுகளை, நகரத்திற்கு வந்து கூலிப்படையிடமிருந்து காப்பாற்றுகிறார் வேதாளர்.
கூலிப்படை மூலம் தனித்தீவுத்தலைவனை கண்டு பிடித்து, தீவை அழித்து, கும்பலைப் பிடித்ததில், பிரசிடெண்ட் லூகாவையும் சாகசத்தில் பங்கெடுக்க வைத்திருக்கிறார்கள்.
புது புது அர்த்தங்களுக்குப் பிறகு, வேதாளரின் இந்தக் கதை சுவாரசியமான சம்பவங்களோடு ரசிக்க வைத்துள்ளது.
👍👍👍
C.S. கண்ணன், சித்தோடு.
காண்ட்ரேராஸ் தேசபக்தனா, தெள்ளவாரியா?
ReplyDelete1. கனடா அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைய வேண்டும்.
2. கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைவது அதற்கு நல்லது.
3. பக்ரம் விமானத்தளம் அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தானத்தினால் ஒப்படைக்கப்பட வேண்டும் இல்லை என்றால் என்ன நடக்கும் என்றே தெரியாது.
இவையெல்லாம் சமீப காலங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உதிர்த்த வாக்கியங்கள்.
ஒரு பேரரசராக அமெரிக்க ஜனாதிபதி தன்னை நினைத்துக் கொண்டு பேசிய வாக்கியங்களை கிட்டத்தட்ட அதே பொருளில் சுமார் 190 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவரும் பேசினார். அவர் பெயர் ஜேம்ஸ் நாக்ஸ் போக்.
'கடவுள் நியமித்த வெளிப்படையாக நியாயப்படுத்தப்பட்ட பிராந்திய விரிவாக்க கொள்கை அமெரிக்காவின் விதி "
(மேனிபஸ்ட் டெஸ்டினி) என்பதை அடிப்படையாகக் கொண்டு தனக்கு முன்பிருந்த அமெரிக்க ஜனாதிபதியான டைலர் உருவாக்கியதை ஜேம்ஸ் போக் நடைமுறைக்கு கொண்டு வர முயன்றார்.
கிழக்கே அட்லாண்டிக் கடற்கரையிலிருந்து மேற்கே
பசிபிக் கடற்கரை வரைக்கும் நில விரிவாக்கம் செய்வது இதன் அடிப்படை தத்துவமாகும்.
டெக்சாஸ் இணைப்பு:
Delete1821-ல் ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்து மெக்சிகோ விடுதலை ஆனபின்பு அதன் உள்நாட்டு ஆட்சி நிர்வாகம் நிலைத்தன்மையுடன் இருக்கவில்லை. டெக்ஸாஸ் பகுதியில் மக்கள் அடர்த்தி மிகவும் குறைவாக இருந்ததாலும் அந்த பிராந்திய பழங்குடியினர்களான கமான்சே, அபாச்சேக்கள் மின்னல் வேக தாக்குதல் நடத்தி கால்நடைகளை கவர்ந்து செல்வதை தடுக்கும் முதல் அரணாக அங்கு குடியேறும் அமெரிக்கர்கள் திகழ்வார்கள் என்ற நம்பிக்கையினாலும் வேறு பல காரணங்களாலும் மெக்சிகோ அரசு சுமார் 300 அமெரிக்க குடும்பங்களை டெக்ஸாஸ் பகுதியில் குடியேற்றம் செய்யுமாறு ஒரு அமெரிக்க பிரஜையிடம்( ஆஸ்டின் ) கேட்டுக் கொண்டது. அதன்படி சுமார் 300 குடும்பங்கள் டெக்ஸாஸில் குடியேறின. ஆனால் மெக்சிகோ அரசு எதிர்பார்த்ததை போல் இந்த குடியேறி குடும்பங்கள் டெக்ஸாஸின் மேற்கு பகுதியில் குடியேறாமல் மெக்சிகோவுக்கு வடகிழக்கு பகுதியில் செழுமையான பண்ணை நிலங்கள் இருக்கும் பகுதியிலும் லூசியானாவுக்கு அருகாமையிலும் குடியேறினார்கள்.. இது 300 குடும்பங்களோடு நிற்கவில்லை. மேலும் மேலும் அமெரிக்க பிரஜைகள் டெக்ஸாஸ் பகுதிக்கு வந்து குடியேற துவங்கினார்கள்.
ஒரு கட்டத்தில் மெக்ஸிகன்களை விட வந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக மாறியது. இதை தடுத்து நிறுத்த தனது அரசின் எல்லைகளை மெக்சிகோ மூடியது.
தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக இது பலன் அளிக்கவில்லை. கள்ளத்தனமாக இங்கு வந்து குடியேறும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது இந்த பிராந்தியத்தில் அதிக வரிகளை விதித்தும் அடிமை முறையை ஒழித்தும் மெக்சிகோ அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இப்போது வெளிப்படையாகவே டெக்ஸாஸ் மெக்சிகோ அரசை எதிர்த்தது.
தொடர்ந்து டெக்சாஸுக்கும் மெக்சிகோ அரசுக்கும் நடந்த போரின் முடிவாக டெக்ஸாஸ் தன்னை சுதந்திர நாடாக பிரகடனம் செய்தது. இது 1836 இல் நடந்தது.
பின்னர் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைய டெக்ஸாஸ் முடிவு செய்து 1845இல் அமெரிக்காவுடன் இணைந்தது.
டெக்ஸாசை சுதந்திர நாடாக அங்கீகரிக்காத மெக்ஸிகோ அமெரிக்காவின் செயலை கண்டித்து அமெரிக்காவுடன் தனது தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது. இப்போது ஜேம்ஸ் போக் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார்.
Deleteபோக்கின் குள்ளநரித்தனம்
எல்லா நாடுகளுக்கும் ராணுவம் உண்டு ஆனால் பாகிஸ்தான் ராணுவத்துக்குத்தான் ஒரு நாடே உண்டு என்று வேடிக்கையாக சொல்லுவார்கள். அப்போதைய மெக்ஸிகோ இது போலவே இருந்தது. ராணுவமும் உள்நாட்டு கலகக்காரர்களும் செய்த செயல்களால் மெக்சிகோவின் அதிகார மையம் மாறிக்கொண்டே இருந்தது ( ஒரு சமயம் இரண்டே வருடங்களில் 11 முறை அதிகார மையம் மாறியது ). இந்த சூழ்நிலையில் வாடகைக்கு வீட்டுக்கு வந்தவன் வீட்டையே அபகரித்ததை போல் அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவின் டெக்ஸாஸுக்கு வந்து குடியேறி இப்படி வந்த குடியேறிகளால் டெக்சாஸே அமெரிக்காவுடன் இணைந்தது மெக்சிகோவுக்கும் தேசப்பற்றுள்ள மெக்சிகன்களுக்கும் கடும் கோபத்தை கிளப்பியது. ஆயினும் நிலையற்ற மத்திய அரசு இது குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்க முடியவில்லை. டெக்ஸாசை இணைத்து கொண்ட அமெரிக்கா அதன் தென் எல்லையாக ரியோ கிராண்டே நதியை குறிப்பிட்டது
ஆனால் மெக்சிகோ ரியோ கிராண்டே நதியிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் இருக்கும் நியூசஸ் நதியை அமெரிக்காவின் தென்எல்லையாக குறிப்பிட்டது. ( இந்த நியூசஸ் நதியின் அருகாமையில் இருக்கும் ஊரில்தான் டெக்ஸ் வில்லர் பிறந்தார் ).
நில விரிவாக்க எண்ணத்தில் இருந்த போக் மெக்சிகோவுக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி இப்போதைய நியூ மெக்சிகோ, அரி சோனாவின் பெரும்பான்மையான பகுதிகள், நெவெடா, யுடா மற்றும் கலிபோர்னியாவின் பகுதிகள் இவற்றை 30 மில்லியன் டாலருக்கு விற்குமாறு மெக்சிகோ அரசை கேட்டார். மெக்சிகோ அரசு மறுத்துவிட்டது.
போக்கின் தெற்கு நோக்கிய விரிவாக்கத்திற்கு அவருடைய டெமாக்ரடிக் கட்சியிலும் அமெரிக்க காங்கிரஸிலும் எதிர்ப்பு இருந்தது.
ஏனெனில் அடிமைகள் வியாபாரம் குறித்த நிலைப்பாட்டில் வடக்கு மற்றும் தெற்கத்திய மாகாணங்களின் சமநிலை மாறி தெற்கத்திய மாகாணங்களின் கை ஓங்கும் என்று அவர்கள் கருதினார்கள். ( ஆபிரகாம் லிங்கனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவரே ).
போக் முதலில் ஒரு குயுக்தியான ஒரு முயற்சி செய்தார். ஸ்பெய்னுக்கு எதிரான விடுதலைப் போரில் ஈடுபட்டு மெக்சிகோவின் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து பிறகு உள்நாட்டு கலகத்தினால் கியூபாவில் தஞ்சமடைந்த சாண்டா அன்னா என்பவரிடம் பேசி அவருக்கு இரண்டு மில்லியன் டாலர் தந்து மெக்சிகோவின் குறிப்பிட்ட சில பகுதிகளை குறைந்த விலைக்கு வாங்கி தர மெக்ஸிகோ அரசை சம்மதிக்க வைக்குமாறு ஏற்பாடு செய்தார்.
Deleteபணத்தை வாங்கி தன்னுடைய சொந்த பாக்கெட்டில் போட்டுக்கொண்டு மெக்சிகோ வந்தடைந்த சாண்டா அன்னா பேசியபடி நடக்க மறுத்து அமெரிக்காவுக்கு எதிராக போர் குரல் எழுப்பினார்.
இந்த முயற்சி இப்படியாக ஊற்றிக் கொள்ளவே போக் வேறொரு முயற்சியில் ஈடுபட்டார். இது அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் போரை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும்.
டெக்ஸாஸ் அமெரிக்காவுடன் இணைந்ததை ஏற்றுக் கொள்ள மறுத்த மெக்ஸிகோ ரியோ கிராண்டே அமெரிக்க மெக்சிக எல்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள மறுத்தது.
Delete1846-ல் அமெரிக்க ஜனாதிபதி போக் ஜெனரல் சகரி டெய்லரை ரியோ கிராண்டே ஆற்றை நோக்கி செல்ல சொன்னார். ரியோ கிராண்ட் நதியை ஒட்டி டெக்ஸாஸ் கோட்டை கட்டப்பட்டது. ரியோ கிராண்டே நதியோரம் ரோந்து சென்ற அமெரிக்க குழுவை மெக்ஸிக தளபதி ஹரிட்டா தலைமையில் மெக்சிகப் படை தாக்கியது. 70 அமெரிக்க வீரர்கள் கொண்டிருந்த இந்த ரோந்து குழுவில் 16 வீரர்கள் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் காயமடைந்தனர்.
மேலும் டெக்சாஸ் கோட்டையை மெக்சிகப் படை தாக்கியது. இதில் 16 வீரர்கள் காயமடைந்தனர் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
டெக்ஸாஸ் கோட்டையை மீட்க சகரி டைலர் தலைமையில் ஒரு படை விரைந்தது. இதனை வழியிலேயே இடை மறித்த மெக்ஸிகப் படை அமெரிக்க படையின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் சிதறி ஓடியது.
அமெரிக்கா மெக்சிகோவின் மேல் போர் தொடுக்க அமெரிக்க காங்கிரசை சம்மதிக்க வைக்க மெக்சிகோவின் இந்த தாக்குதலை போக் சரியாக உபயோகப்படுத்தினார்.
அமெரிக்க மண்ணில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று முழங்கினார். உண்மையில் இப்படி நடக்க வேண்டும் போரை தூண்டி விட வேண்டும் என்பதற்காகவே போக்கினால் இந்த செயல் திட்டமிட்டு நடத்தப்பட்டது.
நியூ மெக்சிகோ அரிசோனா கலிபோர்னியா பகுதிகளை அமெரிக்க ராணுவம் எளிதில் கைப்பற்றி விட்டபோதிலும் உறுதியான ஒரு வெற்றியை ஈட்டு வதற்காக ஸ்காட் தலைமையிலான படை மெக்ஸிகோ முழுவதும் ஊடுருவிச் சென்றது.
Delete( இந்தப் படையெடுப்பில் இருதரப்பின் வீரமும், அமெரிக்க ஜெனரல் ஸ்காட்டின் போர்
வியூகங்களும் லாவகமும் திறமையான தலைமைத்துவமும் இது பற்றி வாசிப்போரை பிரமிப்பில் ஆழ்த்தும் )
காண்ட்ரேராஸ் படிர்னா என்னும் இடத்தில் நடந்த யுத்தம் அமெரிக்க மெக்சிக போரின் இறுதி கட்டத்தில் அமெரிக்க ஜெனரல் ஸ்காட்டுக்கு மெக்ஸிகோவின் தெற்கு வாசலை திறந்து வைத்தது.
இந்த போரின் விளைவாக
மெக்ஸிகோ - கலிபோர்னியா, நியூ மெக்சிகோ, டெக்ஸாஸ், நெவாடா,
யுடா,அரிசோனாவின் பெரும் பகுதிகள் , வயோமிங், கொலராடோவின் பல பகுதிகள், மற்றும் கான்சாஸ்,ஒஹோலகாமா இரண்டின் பல்வேறு பகுதிகள்- என சுமார் ஐந்து லட்சத்து 25 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவை இழந்தது. கிட்டத்தட்ட ஸ்பெயினில் இருந்து அது விடுதலை வாங்கிய போது இருந்த நிலப்பரப்பில் சுமார் 55 சதவீதம் நிலத்தை இழந்தது.
வலிமை காட்டி அமெரிக்கா நிலத்தை கைப்பற்றிய இந்த செயல் தேசப்பற்றுள்ள அத்தனை மெக்சிகன்களுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. காண்ட்ரேராசும் இத்தகைய மெக்ஸிகன்களில் ஒருவர்தான் என்பதை நம்பத்தான் வேண்டும்.
காண்ட்ரேராஸ் என்ற சொல்லுக்கு
Deleteசூழப்பட்ட என்ற புவியியல் பொருளும் நேர் எதிரானது என்ற நடைமுறைப் பொருளும் உள்ளது.
காண்ட்ரேராஸ் தேசபக்தனா தெள்ள வாரியா என்ற கேள்விக்கு நமது கதையில் தெரியும் அவரது முகத்துக்கு நேர் எதிரான விடை தான் அவர் பெயர் மூலமாகவே கிடைக்கும் என்று நான் சொன்னாலும் கூட மறுப்பவர்கள் மறுக்கலாம்.
பின்னுரை :
1867 இல் பிரான்சின் ஆதிக்கத்திலிருந்து மெக்சிகோ விடுபட அமெரிக்கா உதவி புரிந்தது அந்த நன்றியை மெக்சிகோ மறக்கலாமா என்று மெக்சிகோ சரித்திரத்தை படித்தவர்கள் கேட்கலாம்.
பின்னணி: அமெரிக்க உள்நாட்டு போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் (1861-1865) மெக்சிகோ ஒரு பெரிய இடரில் சிக்கிக் கொண்டிருந்தது.
அப்போதைய மெக்சிகன் பிரசிடெண்ட் ஜ்வாரஸ் நிதி நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு கொடுக்க வேண்டியிருந்த கடன்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
இதனால் இங்கிலாந்து,பிரான்ஸ், ஸ்பெயின் மெக்சிகோவின் மேல் போர் தொடுத்தன.. சில காரணங்களினால் இங்கிலாந்தும் ஸ்பெயினும் பின்வாங்க பிரான்ஸ் விடாப்பிடியாக முன்னேறி போர் தொடுத்தது. அப்போதைய பிரான்சின் நெப்போலியன் III
மேக்ஸிமில்லியனை( பல கதைகளில் இவர் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர் தான் ) மெக்சிகோவின் பேரரசர் என்று பட்டம் சூட்டியது மெக்சிகோவை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
இந்த காலகட்டத்தில் அமெரிக்கா உள்நாட்டு போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபடியால்அதனால்
இந்த விஷயத்தில் நேரடியாக ஈடுபட முடியவில்லை. ஆனால் உள்நாட்டு போர் முடிந்தவுடன் பிரான்சுக்கு பல வகைகளில் நெருக்கடியை தந்தது.
மெக்சிகோவுக்கு அமெரிக்காவின் ஆதரவு, உள்நாட்டில் எழுந்த எதிர்ப்பு குரல்கள் என பல விஷயங்களினால் பிரான்ஸ் மெக்சிகோவை விட்டு விலகியது. மேக்ஸிமிலியனும் மெக்சிகோவில் கொல்லப்பட்டார்.
ஆனால் மெக்ஸிகோவின் மேல் உள்ள அக்கறையினால் அமெரிக்கா இந்த செயலை செய்யவில்லை.
ஏற்கனவே ஒரேகான்( பசிபிக் ) பிராந்தியத்தை இங்கிலாந்து இடமிருந்து பேச்சுவார்த்தை மூலம் பெற்றுவிட்ட அமெரிக்கா மத்திய மேற்கு பகுதியிலும் வட மேற்கிலும்
ஸ்பெயின் இடம் பேச்சுவார்த்தை நடத்தி தெற்கு டகோடாவின் சில பகுதிகள் வயோமிங்கின் மீதி இருந்த பகுதிகள் என அத்தனையுமே அமெரிக்காவின் வசம் கொண்டு வந்துவிட்டது
இனிமேலும் மெக்சிகோவின் வழியாக இங்கிலாந்து மற்றும் வேறு ஒரு எந்த ஐரோப்பிய தேசமும் வட அமெரிக்காவில் கால் வைப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்ற சுயநலமே காரணம். இதுவே அமெரிக்கா மெக்சிகோவிற்கு உதவி புரிந்ததன் நோக்கம்.
அட்டகாசமான தகவல்கள்
Deleteசெனா அனா சார், அருமையான கட்டுரை, தொடருங்கள் please !
ReplyDeleteவணக்கம் ங்க செனா. அனா. ஜி. வழக்கம் போல அசத்தறிங்க.. சூப்பர் அடிக்கடி வாங்க.ஜி
ReplyDelete