நண்பர்களே,
வணக்கம். ரயிலில் ஜன்னலோரமாய் சீட் கிடைத்து, மண்டையில் கேசமென ஒண்ணு இருக்கும் பட்சத்தினில் அதனைப் பரபரவென வருடிப் போகும் குளிர் காற்றை ரசித்த கையோடு, வெளியே பார்வைகளை நீள விட்டால், சின்னச் சின்ன ஊர்கள், ரயில் நிலையங்கள், அழகான வயல்வெளிகள், மலை முகடுகள் என காட்சிகள் மின்னலாய் மாறிக் கொண்டே போவதை காணலாம் ! அதே நிலவரமே - நமது பொம்ம புக் பயணத்திலும் !! வருஷத்தின் முதல் மாசம், முத்து ஆண்டுமலர், சென்னைப் புத்தகவிழா ஸ்பெஷல்ஸ் என ஆரம்பிக்கும் வண்டி, கோடை மலர், குடை பிடிக்கும் மலர், ஆன்லைன் மேளா, ஆப்பக்கடை பாயா, ஈரோடு ஸ்பெஷல், சேலம் ஸ்பெஷல் இத்யாதி..இத்யாதி என ஜாக்கி சான் படங்களின் விறுவிறுப்போடு ஓடிக் கொண்டே இருப்பது வாடிக்கை ! And இதோ - போன வாரம் அட்டவணை 2026 ரகளைகளின் சூடு ஆறும் முன்பாய், அடுத்த மைல்கல் : இந்தாண்டின் தீபாவளி ஸ்பெஷல்ஸ் ரூபத்தினில் !!
நேற்று மதியமே டெக்சின் தெறிக்கும் தீபாவளி மலர் '25 + நம்ம V காமிக்ஸ் தீபாவளி மலர்ஸ் + 2026 அட்டவணை கொண்ட கூரியர்கள் கிளம்பியாச்சு ! So இன்று காலை முதலாய் உங்கள் இல்லக்கதவுகளை டெலிவரி நண்பர்களும், உள்ளக்கதவுகளை போனெல்லியின் நண்பர்களும் தட்டத் தயாராகி வருவார்கள் ! கலரில் 'தல' விடும் வாணவேடிக்கைகள் எங்க ஊரின் aerial shots -க்கு செம tough தரும் ரகமெனில், black & white-ல் ஏஜென்ட் ராபின் வைத்திருக்கும் லக்ஷ்மி வெடி +அணுகுண்டு combo இன்னொரு blockbuster !! கலரில் 336 பக்கங்கள் + b&w-ல் 292 பக்கங்கள் எனும் போது, மெய்யான entertainment இங்கே வெயிட்டிங் !! Happy reading amigos !!
இங்கே சின்னதாயொரு இக்கன்னா இல்லாதில்லை !! ராபினின் 2 புக்ஸ் (ஒண்ணு 98 பக்கங்கள் ; இன்னொண்ணு 192 பக்கங்கள்) ஒரு slipcase-ல் வந்திடுவதாகவே திட்டம். Slipcase மட்டும், புக்ஸ் ரெடியான பின்னே, அவற்றின் இணைந்த பருமனை சரியாகப் பார்த்தான பின்னேயே அளவெடுத்துச் செய்திட வேண்டிய சமாச்சாரம். So போன வாரத்தினில் ராபினின் 2 இதழ்களும் ரெடியான பிற்பாடு, slipcase அளவுகள் சரி பார்த்து, பிரிண்ட் செய்தும் விட்டோம். அதன் அடுத்த கட்டப் பணி - டப்பாக்கள் செய்து தருவோரிடம் ஒப்படைத்து, சரியான சைசில் முதுகுக்கு, தலப்புக்கு, வாய் பகுதிக்கு பன்ச் செய்து, அப்புறமாய் ஒட்டி, slipcase ஆக்குவது ! அங்கே தான் ஏழரை ஆகிப்போச்சு ! ஊரே தீபாவளிப் பட்டாசு டப்பாக்களின் தயாரிப்பில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருப்பதால், தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தும், நம்ம slipcase-ஐ வேலைக்கே எடுக்கத் தீரலை அவர்களுக்கு ! Fireworks நிறுவனங்கள் ஆளாளுக்கு ஒரு லட்சம் டப்பிகள், ரெண்டு லட்சம் என ஆர்டர் கொடுத்து விட்டு அங்கேயே தேவுடு காத்து வர, நாம ஒரு ஓரமாய் நின்னபடிக்கே, "அண்ணே....அந்த ஆயிரத்துச்சொச்சம் slipcase" என்று ஈனஸ்வரத்தில் கேட்கும் போது நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டேன்கிறார்கள் ! ஒரு மாதிரியாய் கெஞ்சிக் கூத்தாடியான பிற்பாடு, நாளை காலையில் (சனிக்கிழமை) எப்படியேனும் தந்துடறதாய் promise செய்துள்ளனர் ! So அதுவரைக்கும் காத்துக் கொண்டே இருந்தால் வேலைக்கு ஆகாது என்றபடிக்கே slipcase மட்டும் இல்லாது, புக்ஸை நேற்றைக்கு டெஸ்பாட்ச் செய்துள்ளோம் ! Ever so sorry all !!! 🙏🙏🙏விடுபட்டுள்ள ஸ்லிப்கேஸ்களை நவம்பரின் பார்சலில், மிஸ்டர் நோ இதழினை உள்வைத்து அனுப்பிடுகிறோம் folks - ஏற்றுக் கொள்ளுங்கள் ப்ளீஸ் !!
So சின்னதான இந்த திருஷ்டி நீங்கலாய், டப்பிக்குள் காத்திருப்பன அனைத்துமே - அக்மார்க் டைனமைட் என்பேன் !! இந்த தீபாவளியினை போனெல்லியின் பிள்ளைகள் எவ்விதம் colorful ஆக்குகிறார்கள் என்பதை உங்களிடமிருந்து அறிந்து கொள்ள ஆவலாய் காத்திருப்போம் !!
And ஸ்க்ரீனில் மட்டுமே நீங்கள் பார்த்திருந்த 2026 அட்டவணை ஒரு 32 பக்க விலையில்லா இணைப்பாய் கையில் ஏந்திப் பார்க்கும் போது இன்னமுமே வீரியமாய் தென்படாது போனால் வியப்படைவேன் ! Looks real neat folks !! அவற்றை நிதானமாய்ப் புரட்டிய கையோடு, 2026-க்கான பயணத்துக்கு உங்களின் சந்தாக்கள் எனும் டிக்கெட்களை துரிதமாகப் போட்டு விடலாமே - ப்ளீஸ் ? Bye all....see you around ! Enjoy the weekend !!
பி.கு. : போன வாரம் எழுதிய பதிவைக் கொண்டே துபாய் வரைக்கும் போகலாம் & இந்த வாரம் உங்கள் கைகளில் சுடச் சுட தீபாவளி மலர்களும் இருக்கும் என்பதால் tomorrow பதிவுக்கடைக்கு லீவு !! "சாம்பலின் சங்கீதம்" கிட்டத்தட்ட பாதியைத் தொடும் தருவாயில் இருப்பதால், ஒரு flow-ல் மீதத்தையும் முடித்திடப் பார்க்கணும் !! So 2 தீபாவளி மலர்களையும் புரட்டிய கையோடு உங்களின் selfies + முதல் அபிப்பிராயங்களை இங்கே பகிர்ந்திடுகிறீர்களா - ப்ளீஸ் ? Blog கொஞ்சம் ஆக்ட்டிவ் ஆக இருந்தது போலிருக்கும் அல்லவா ?
And ஆன்லைன் லிஸ்டிங்ஸ் கூட போட்டாச்சு !! துவக்க 50 ஆர்டர்களுக்கு மட்டும் அனுப்பிட கலரில் 2026-ன் அட்டவணை கையிருப்பு இருக்கும் என்று நினைக்கிறேன் ! So நீங்கள் ஆன்லைனில் வாங்கிடுவோராய் இருந்தால் - please rush !!


Hai
ReplyDeleteவணக்கம் ஆசிரியர் மற்றும் நண்பர்களே....
DeleteCongrats!
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteHi..
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteHi
ReplyDeleteபத்துக்குள்ளயா
ReplyDeleteOh yes
DeleteYes
Deleteஆஹா இன்னொரு லட்டு
ReplyDeleteபத்துக்குள்ள...
ReplyDeleteஅப்போ.. இன்னிக்கித்தான் தீபாவளிங்களா?!!😍😍😍
ReplyDeleteMe 11
ReplyDeleteவந்துட்டேன். Ever so happy to hear read this புத்தகம் கிளம்பி விட்டது பதிவு.
ReplyDeleteஅந்த 300ரூவா வேல்யூக்கு ஒரே ஒரு "டெக்ஸ் வில்லர்"-- புக், பிரத்யேகமாக சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என அறிவிச்சிருந்தா வரவேற்பு வேறு மாதிரி இருக்கும்... அந்த புக் கடைகளுக்கோ, ஆன்லைன் விற்பனைக்கோ கிடைக்க கூடாது.. ஒன்லி ஃபார் சந்தா2026 னு இருந்து இருந்தா யோசித்து பாருங்க....
ReplyDelete300ரூவாக்கு 2020க்கு முன்பு வெளி வந்த புத்தகங்களை வாங்கி கொள்ளலாம்னு எவர் ஐடியா கொடுத்தது னு தெரியல...🤣🤣🤣🤣🤣🤣
கடவுளே, சந்தாரார்கள்கிட்ட 2012ல இருந்து வந்த புக்ஸ் அனைத்தும் இருக்கும் என்பதை எப்படி மறந்தார்களோ🤭🤭🤭🤭🤭
200ரூவா விலையில் ஒரு டெக்ஸ்&100ரூவா விலையில் ஓரு மாடஸ்தி
ஸ்ட்ரிக்ட்லி ஒன்லி ஃபார் சந்தா னா ஒரு 20% சந்தா கூடுவது திண்ணம்.. 80% சந்தாதாரர்கள் அகமகிழ்வர்.
ஆனா 300ரூவாகு்கு தண்ட வுவுச்சர் ,வழக்கொழிந்து போன வேரியன்ட் கவர், புளித்து போன போட்டோ போட்டு தருவது.... எல்லாமே போன நூற்றாண்டு சிந்தனைகள்
Good idea
DeleteGood idea alright... but from whose perspective sir?
Deleteசந்தாவில் இணைய வசதிப்படாதோரைப் பற்றியும் சிந்திக்க வேண்டிய இடத்தில் நீங்கள் இல்லாதிருக்கலாம்... But நான்?
எடிட்டர் பார்வைக்கு மேலுள்ள சில கனவுலக கமெண்டுகள்.
ReplyDeleteடாங்க்ஸ் சார் 👍
Deleteசந்தா செலுத்த ஆற்றல் குறைந்தோரையும், எஜெண்ட்களிடமும், ஆன்லைனிலும் வாங்கிடுவோரையும் எண்ணிப் பார்த்தேன் நண்பரே....
Deleteஅவர்களை சங்கடத்தில் ஆழ்த்தி விட்டு, சந்தாக்களில் நாம் கல்லா கட்டுவதைக் காட்டிலும், சிலபல "இத்துப் போன "perks போதுமென்று தோன்றியது!
@ஆசிரியர்
Deleteஉங்களுடைய கண்ணோட்டம் தான் சரியானதுங்க சார். அதேபோல் சந்தாவினையும் ஊக்கப்படுத்த நெருடல் இல்லாத ஏதாவது ஒரு வகையை செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
///சந்தா செலுத்த ஆற்றல் குறைந்தோரையும், எஜெண்ட்களிடமும், ஆன்லைனிலும் வாங்கிடுவோரையும் எண்ணிப் பார்த்தேன் நண்பரே....
Deleteஅவர்களை சங்கடத்தில் ஆழ்த்தி விட்டு, சந்தாக்களில் நாம் கல்லா கட்டுவதைக் காட்டிலும், சிலபல "இத்துப் போன "perks போதுமென்று தோன்றியது!/////
Lion comics@ இத்தனை சிந்தித்த நீங்கள் சந்தாதாரர்கள் யார்னு ஏன் சிந்திக்கல...??? அவர்கள் தான் காமிக் தேரை நகர்த்தும் உந்து சக்திங்கிறீங்க மூச்சுக்கு மூச்சு.... அப்ப அவுங்களை உரிய முறையில் அங்கீகரிப்பது தானே முறை....
சந்தாதாரர் யாருங்க முந்தா நாள் வந்தவனா? ஆஃப் ட்ராயர் போட்டுகிட்டு விஜயன் ங்கிற பெயருக்கு பின்னாடி உள்ளவரு கறுப்பா சிவப்பா? நெட்டையா குட்டையா? னு எதுவும் தெரியாத காலத்தில் இருந்து சந்தா கட்டுறவன்...
கம்பேக்குக்கு பிறகு தம் நிறுவனம் போல நினைத்து சந்தாகட்டி வர்றவன்...
95% பேர் இப்படி தான்.. இவன்கிட்ட 2020க்கு முன்னாடி வந்த புக் இராதா?? இதை போய் தாங்கள் தரும் வவுச்சருக்கு வாங்குவனா??? ஏதாவது பிரயோசணம் உண்டா??
இதற்கு வழக்கம்போல ஒண்ணும் இல்லைனு சொல்லி இருந்தாலும் இவன் சந்தாகட்ட போவதை நிறுத்தபோவதில்லை..
நண்பர் AKK எத்தனை அழுத்தமாக பதிவிட்டார்.. சந்தாதாரர்கள் க்கு எக்ஸ்குளூசிவாக ஏதாவது ஓரு புக் கொடுங்கனு...
ஒண்ணா கொடுத்தா 1980கள்ல இருந்து உங்ககூட கையைபிடிச்சி வர்றவங்களை கொஞ்சம் மாவது மதிச்சி கொடுங்க...
//300ரூவாயை கூட விடுங்க...ஒரு புக் ஒரேஒரு புக் டெக்ஸ் சிங்கிள் ஆல்பம்+ லயனின் முதல் நாயகி மாடஸ்தியோட ஒரு கதை...கொடுத்தா போதும்.. ஆனா இது வேறு எங்கும் எப்போதும் கிடைக்க கூடாது... அதான் சந்தாவுக்கு உண்டான அடையாளம்....//!
//இல்லையா அந்த வவுச்சருக்கு 2026ன் புக் ஃபேர் ஸபெசல்ல எதை வேணும்னாலும் வாங்கிகிடலாம்//-- னு வையுங்க.
இந்த மாதிரி 2020க்கு முன்னாடி வந்த பெளன்சர், தோர்கல், பிபிவி ,இத்தியாதியில இருந்து வாங்குங்கனு சொல்லி டவுசருக்குள்ள ஜட்டி போடாத காலத்தில் இருந்து உங்க கூட வர்றவங்களை சங்கடபடுத்தாதீங்க..🙏
சந்தாவில இன்ன இன்ன புக் போடுவதில் தலையிட்டமா ???! இல்லையே அது எடிட்டர் ஆக எது எதுனு முடிவெடுக்கும் திறமை உங்களிடம் மாத்திரமே உள்ளது.
போலவே இன்ன விலை ஏன்னு கேட்டோமா என்றாவது?? அது ஓரு பதிப்பாளராக தாங்கள் மட்டுமே நிர்ணயிக்க இயலும்.
கிழியானி ஐயா@ நான் இங்க நேரடியாகவே போட்டுள்ளேன்.. உங்களுக்கு காபி,பேஸ்ட் வேலை மிச்சம்.
நன்றி தலைவரே.
Deleteவரிக்கு வரி, காரத்துக்குக் காரம்னு பதில் சொல்ல முடியாதோ, தெரியாதோ இல்லை! But அந்த வயசயெல்லாம் எப்போதோ தாண்டியாச்சு & பொதுவெளியில் உச்சஸ்தாயிகளை தொடும் ஆர்வங்களும் எப்போதோ காணாது போயாச்சு!
Deleteதவிர,ஒற்றைப் பார்வைக் கோணத்துடன் பொரிந்திடுவோருக்கு எனது தர்மசங்கட நிலை புரிந்திருக்கவில்லை எனில் விளக்க முற்படலாம். ஆனால் நிலவரம் அதுவல்ல எனும் போது, வார்த்தைகளை செலவிட்டு ஆகப் போவது என்ன? அவரவர் எண்ணங்களில் அவரவருக்கு திருப்தி!
இதுவும் கடந்து போகும்!
And இனிப்பான விஷயங்கள் நாலோ, எட்டோ இருந்தாலும், காரமான ஒண்ணை மட்டும் தேடிக் கொண்டு வந்து, அது நம்ம கண்ணிலே பட்டதா - இல்லியா? என ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முனைப்பாய் விரும்பும் தொண்டர்களுக்குப் பொழுது போக இது உதவிடுமெனில் why grudge that?
Delete.பஞ்சாயத்து முடிஞ்சி....😜😜😜😜😜
Deleteவழக்கம் போல சந்தாகாரனுக்கு இன்னொரு நாமக்கட்டி பார்சல்🤣🤣🤣🤣🤣
ஒரே குழப்பமா இருக்கு.
சரி, அப்டி எல்லாரும் ஒரே தட்டுலனா எதுக்கு "முத்து 50வது ஆண்டு பாக்ஸ்,மாயாவி போஸ்டர் எல்லாம் "சந்தாதாரர்களுக்கு மட்டும், கடைகள்ல வாங்கறவங்களுக்கு இல்லை" னு சொல்லனும்?.
இதுக்கு ஒரு பெரிய கலவரமே ஆச்சே?, அப்ப ஏழை பாளைங்க யாரும் இல்லாம போய்ட்டாங்ளா?.
சந்தா அல்லாதோர் புக்ஸ் வாங்கி அந்த பாக்ஸ்க்காக பெரிய ஏமாற்றமே உண்டாச்சு.
தொண்டரே....புது புக்ஸ் பார்த்தாச்சா?
Deleteஒரு விஷயம் தான் தீரா கேள்வியாய் உள்ளுக்குள் தொடர்கிறது நண்பரே....!இத்தனை எரிச்சலும், கோபமும் உள்ளுக்குள் குமைந்திடும் அளவுக்கு நான் கெடுத்த உங்களது குடி என்னவோ?
Deleteஇருமல் மருந்தில் ஏதேனும் தப்பான கெமிக்கலை கலந்து வைத்து விட்டேனா? அல்லது உங்க அன்னத்தில் மண்ணள்ளிப் போட்டு விட்டேனா? இல்லாவிடின் எங்கேனும் உங்களோடு எனக்கு பாகப் பிரிவினை தகராறு உண்டா?
எனது தீர்மானங்கள் தப்பானவையாகவே இருந்து விட்டாலும், அவை உங்களை கடுப்பேற்றி இருந்தாலும்,இத்தனை வெறுப்புக்கு அதுவொரு முகாந்திரமா? Honestly புரியவில்லை!
Agreeing to disagree என்பது அத்தனை அசாத்தியமா?
@Shankur Giulini
Deleteதாங்கள் உங்க சொந்த கருத்தை பகிருங்கள், சார்
மற்றவர்களுடையதை இங்கு கொண்டு வந்து போடாதீங்க
என் கருத்தும் அதே. விஜயராகவன் சொல்வது போல, சந்தாவினருக்கு 2020க்கு முன் வந்த புத்தகங்கள் தருவது எந்த விதத்தில் நியாயம்? ஆஹா, ஓஹோ, பேஷ், பேஷ் சொல்ல பலர் இருக்கிறார்கள். வாசகர்களுக்குள் புழுங்குவதை சொல்ல நான் இருந்துவிட்டுப் போகிறேன். இதில் வெறுப்பு எங்கிருக்கிறது? நியாயமாக கேள்வி கேட்டால் இப்படி சொல்வது சரியில்லை ஆசிரியரே. விஜி கேட்பது போல பலரும் கீழே கேட்டிருக்கிறார்கள் கொஞ்சம் அதையும் பாருங்கள்.
Deleteகடல்யாழ்9 நீங்க யாருங்க? இந்த வலைப்பூவின் நாட்டாமையா?
// இத்தனை எரிச்சலும், கோபமும் உள்ளுக்குள் குமைந்திடும் அளவுக்கு நான் கெடுத்த உங்களது குடி என்னவோ? //
Deleteசார் தீபாவளி இதழ்கள் தெறிக்கின்றன,அதிலும் டெக்ஸ் கெட்டி அட்டையில் கெத்து காட்டுகிறார்,என்ஜாய் பண்ண வேண்டிய நேரமிது...
விடுங்க ரம்யா... காரண -காரியங்கள் எதுவாக இருந்தாலும் உள்ளுக்குள் இத்தனை வெறுப்பு குடி கொண்டிருப்பது யாருக்குமே நல்லதாகாது ! குமைந்திடுவதை கொட்டி விடட்டும்!
Delete//என்ஜாய் பண்ண வேண்டிய நேரமிது...//
Deleteசார்... நானா மறுக்கிறேன்?
தாராளமாய் சொல்லுங்கள் நண்பரே ; நல்லதிருந்தால் காதில் போட்டுக் கொள்கிறேன் ; ஏற்பில்லையேல் தாண்டிப் போகிறேன்!
Deleteபல்வேறு பார்வைக் கோணங்கள், இன்றைக்கோ, என்றைக்கோ பயன் தரக்கூடிய விஷயங்கள் தான் எனும் போது always happy to lend an ear...!
சிலநாள்களுக்கு முன் பலநாள் வாசகர் திருநாவுக்கரசு கூறிய அருமையான ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் தாங்கள் "வெறுப்பு" என்றே மடைமாற்றம் செய்தது ஏனோ நினைவுக்கு வருகிறது. ஆக்கப்பூர்வமான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள் ஆசிரியரே.
DeleteThis comment has been removed by the author.
Deleteநண்பரே, 58 வயதாகிறது எனக்கு! 41 ஆண்டுகளாகிறது இந்தத் துறைக்கு வந்து! ஆனால் அனுதினமும் எதையேனும் படித்துக்கொண்டு இருப்பதாகத் தான் எண்ணி வருகிறேன்.
Deleteஇதோ- இன்று கூட ஒரு டஜன் ஆண்டுகளின் பரிச்சயத்தினை முன்னூறு ரூபாய் சார்ந்ததொரு பொதுவெளி விவாதத்தில் காற்றில் பறக்க விடுதல் செம சுலபமே என்பதைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிட்டியுள்ளது. So yet another learning curve என்றே மகிழ்கிறேன்!
ஈகோவுக்கும், தன்னம்பிக்கைக்கும் இடைப்பட்ட கோடு சில தருணங்களில் அரூபமாகிடலாம் நண்பரே! அது தான் பல வேளைகளில், என் விஷயத்தில் பலரையும் நெருடுகிறது என்பது obvious! இத்தனை உறுத்தல்களை ஈட்டுவது தான் பலனாகிறது எனில் - நிச்சயமாய் அடக்கி வாசிக்கிறேன் சார்!
@Shankar Giulini
Deleteசகோதரர் விஜயராகவன் இங்கு பேசாமல் இருந்தது நாங்கள் அறிந்ததே
நாங்கள் அவ்வப்போது டிஸ்கஷன் செய்வது வேறு
அவரது கருத்தை சொல்வதற்கு பதில் நீங்களே உங்க கருத்தை போட்டிருக்கலாமே
அடுத்தது இன்னொரு சகோதரரின் கமெண்ட்ஸ்லகாபி பேஸ்ட்
Shankar Sir
நாங்கள் ஆசிரியரிடம் கேட்க வேண்டுமென்றால் எங்கள் வழியில் கேட்டு கொள்கிறோம்
அவரை காயபடுத்தி கேட்க வேண்டிய அவசியம் இல்லை
சகோதரர் விஜயராகவன் டெக்ஸ் பத்தி பதிவிட்ட நீள கமெண்ட்ஸ்களையும் பகிர்ந்து இருக்கலாமே
ஏன் காலையில் மஹேந்திரன் சகோ
300 வவுச்சரை தான் புத்தக விழாவில் வரும் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கி தர பயன்படுத்துவதாக சொல்லி இருந்தாரே
அதை பகிர்ந்து இருக்கலாமே
//ஏன் காலையில் மஹேந்திரன் சகோ
Delete300 வவுச்சரை தான் புத்தக விழாவில் வரும் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கி தர பயன்படுத்துவதாக சொல்லி இருந்தாரே
அதை பகிர்ந்து இருக்கலாமே//
300 என்று சாதாரணமாக சொல்லிவிட்டீர்கள் ஆசிரியரே. பட்ஜெட்டில் ஒரு ரூபாய் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளும் நீங்கள் இதை சொல்வது மிகவும் ஆச்சரியம். இது வெறும் 300 சம்பந்தப்பட்டது நிச்சயம் இல்லை. இது சந்தாதார்களை இலகுவாக எடுத்துக்கொண்டது பற்றியது. அதற்கான சம்பாஷணைகளே கனவுலகில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. வழக்கமான ஆஹா, ஓஹோ, பேஷ், பேஷ் பேர்வழிகள் இதை உங்களுக்கு கடத்த வாய்ப்பில்லை. எனவே, யாம் செய்தோம். தவறு என்றால் மன்னிச்சூ.
Delete////ஏன் காலையில் மஹேந்திரன் சகோ
Delete300 வவுச்சரை தான் புத்தக விழாவில் வரும் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கி தர பயன்படுத்துவதாக சொல்லி இருந்தாரே
அதை பகிர்ந்து இருக்கலாமே//
அதை லயன் நிறுவனமே செய்யலாமே. எதற்கு வாங்கின புத்தகங்களையே மீண்டும் சந்தாவினரை வாங்க வைக்க வேண்டும்.
@Shankar - ஒருவரின் தனிப்பட்ட கருத்தை அதுவும் ஒரு பிரைவேட் வாட்ஸாப் க்ரூப்பில் பகிர்ந்ததை அவரின் அனுமதி இன்றி பொதுவெளியில் பகிர்வது அநாகரீகம் சார்.
Deleteஆசிரியரிடம் சொல்ல வேண்டும் என்றால் டெவி நேராகவே சொல்லக்கூடியவர். சில கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இந்த சந்தா படலத்திற்கு ஆசிரியர் அடிக்கும் குட்டிக் கரணம் அவருக்கும் தெரியும் என்பதாலேயே நண்பர்களுக்குள்ளே அவருக்கே உரிய நய்யாண்டியுடன் பகிர்ந்த செய்தி அது.
பகிர்வதாய் இருந்தால் நாற்பது ஆண்டு கால டெக்ஸ் புள்ளிவிபரங்களை பதிந்திருந்தாரே அதை கொண்டு வந்து பதிவிடுங்கள். அது தான் ரியல் டெவி.
இரண்டு காமிக்ஸ் காதலர்களின் மனதை பொது வெளியில் நோகவைத்து என்ன சாதிக்கப் போகிறீர்கள் ?
@Shankar Sir
Deleteகாமிக்ஸ் க்ருப்பில் பாஸிடிவ் நெகடிவ் இரண்டுமே அலசப்படும்
அதுவே பொது தளத்தில் வேறு
இத்தனை வருட எதனை பேச வேண்டும் என அறிந்துள்ளோம்
நெகடிவ் மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளீர்கள்
உங்க சொந்த கருத்துகள் அல்ல
பேச வேண்டாம் என சொல்லவில்லை
உங்க சொந்த கருத்தை எப்படி வேண்டுமானால் சொல்லி கொள்ளுங்கள்
//பகிர்வதாய் இருந்தால் நாற்பது ஆண்டு கால டெக்ஸ் புள்ளிவிபரங்களை பதிந்திருந்தாரே அதை கொண்டு வந்து பதிவிடுங்கள். அது தான் ரியல் டெவி.//
Delete+9
யாருடைய பெயரையும் சொல்லவில்லையே ரிஜு சார். வெறும் கமெண்டுகளை மட்டுமே பகிர்ந்தேன். அதில் தவறொன்றுமில்லை. கனவுலகில் இருந்து திரைநகல் எடுத்து ஆசிரியருக்கு யாரும் அனுப்பியதே இல்லையா? இங்கு பகிரப்பட்டது வெறும் கருத்துக்களே. நான் வெறும் தூதுவன் தான். என்னை சுட்டுக்கொன்றுவிடாதீர்கள். கருத்துக்கள் பகிரப்படவேண்டியது. அதை மட்டும் பாருங்கள். நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள். தவறாக இருந்தால் மன்னிச்சூ.
Deleteரம்யா... என் பொருட்டு நீங்க நடுவில் நின்று சங்கடம் கொள்ள வேணாமே ப்ளீஸ்? நான் பார்க்கும் முதல் பஞ்சாயத்தும் இது அல்ல, இறுதியானதும் இதுவாக இருக்கபோவதில்லை!
Deleteஇங்கே அந்த 300 ரூபாய் வவுச்சரை ஆகப் பெரிய கொலைப் பாதகமாய் சித்தரிக்கும் நண்பர்கள் அதன் பின்னணியிலுமே ஏதேனும் லாஜிக் இருந்திருக்குமா? என்று சிந்திக்க மெனெக்கெட்டு இருந்தால் சிக்கலே இருந்திராது!
But நம்ம ராசிக்குத் தான் "மிதி first ; சிந்தனை next" ஆச்சே?
நிலவரம் இது தான் :
கொரோனாக்கு அப்புறமான வெளியீடுகளின் printruns கணிசமாய் குறைத்து விட்டோம். So post 2020 வெளியீடுகளில் ஆளை நசுக்கும் அளவில் ஸ்டாக் கிடையாது. ஆனால் அதற்கு முன்பானவற்றில் எக்கசக்கம் உண்டு. It's come to a stage where கிட்டங்கிகளில் இடம் குறைந்து கொண்டே போகிறது! கொஞ்சமே கொஞ்சமாகவாவது இடங்களை காலி செய்தால் மட்டுமே நடப்பு இதழ்களை சேமிக்க இடமிருக்கும். புத்தக விழாக்களில் நாம் பிள்ளைகளுக்கு கணிசமாய் புக்சை தள்ளி விட்டு வந்தாலும், அவை பெரும்பாலும் கார்ட்டூன்ஸ் மட்டுமே. அவை நீங்கலான கையிருப்பை நீங்கள் யாருக்கேனும் அன்பளிப்புகளாகவாவது வழங்க வாய்ப்புத் தந்தால் ஒரு கணிசமான காலியிடம் கிடைக்குமே என்ற எண்ணத்தில் தான் "2020 க்கு முன்னே" என்று அறிவித்தேன். But அவை இத்தனை கனத்த வார்த்தைகளை ஈட்டிடும் என்று எதிர்பார்க்கவே இல்லை!
Anyways no problems... இன்னொரு கிட்டங்கியினை பார்க்கக் கோரி புரோக்கரிடம் இப்போது சொல்லி வைத்தாயிற்று. தீபாவளி முடிந்த பின்னே ரெடி பண்ணிடலாம் ; பட்டாசு கிட்டங்கிகள் நிறையவே free ஆகும் என்றுள்ளார்!
So அந்த 300 கூப்பனே வேணாம் ; வேறு எதையேனும் அதனிடத்தில் ஏற்பாடு செய்து கொள்ளலாம் folks 👍
Delete////But அவை இத்தனை கனத்த வார்த்தைகளை ஈட்டிடும் என்று எதிர்பார்க்கவே இல்லை///----
Deleteஇது எங்கே தவறான புரிதலை தந்துட்டுதுனாங் சார்,
நாங்க சந்தாவில எக்ஸ்க்ளூசிவாக ஒரு புக் கேட்டு இம்முறை பலமாக வரும்னு எதிர்பார்த்து இருந்தோம்...
ஆனா அது கிடைக்காம இப்படி வவுச்சர்ன உடன், இத்தனை அழுத்தமாக கேட்டு சந்தாதாரர்கள் வேண்டுகோளை உதாசீனபடுத்திட்டீங்கனு ரெளத்திரம் ஆகிட்டது.. இங்கே ஏதாவது பேசிடுவோம்னு ஒரு வாரம் தாண்டியே போயிருந்தேன்.
நாங்க இயல்பாக எங்க ஸ்டைலில் கனவுலகில பேசிட்டு இருந்தோம்.. அதை முழு கான்வர்சேசனும் சங்கர் கிழியானி போடாம வெட்டி போட்டதால் தவறான புரிதலுக்கு வழி வகுத்துட்டது... அடுத்து கொஞ்சம் சூடாக பேச வேண்டியதாயிற்று... காரணம் இனி விவாதித்து பயன் இல்லை.
ஒரே ஒரு விசயந்தா முழு கான்வர்சேசனும் பார்த்து இருந்தால் அந்த உரையாடல் முழுதுமான நக்கல் நையாண்டி வெளிப்பட்டு இருக்கும்.
இது 2வது முறை தாங்கள் ஓரு திசையில் சிந்திக்க, நாங்கள் வேறு திசையில் சிந்திக்க... யங் டெக்ஸ முதல் முறை
Sorry Sir
Delete300 வவுச்சரை பறறி கேட்டதில் நானுமே ஒருவர்
காலையில் மஹேந்திரன் சகோ பள்ளி குழந்தைகளூக்கு பயன்படுத்திகலாம் என கூறிய போது, அந்த ஐடியாவே ஃபாலோ செய்யலாம் என தோன்றியது
ஆனால் இங்கு சொல்லவில்லை
மன்னிக்கவும் சார்
You always have the big picture in mind
சங்கர் அவர்களே யாரும் இங்கு நாட்டாமை கிடையாது பொதுத்தளத்தில் இன்னொருவர் கமெண்ட்ஸை நீங்கள் போட்டதால் ரம்யா இந்த விவாதத்திற்கு வந்தார் நீங்கள் உங்கள் சொந்த கமெண்ட்ஸை போட்டால் யாரும் உங்களை விமர்சனம் செய்ய போவதில்லை எனவே யாரும் உங்களை சுட்டு விட வரவில்லை வார்த்தைகளை பார்த்து விடுங்கள்
Delete@செந்தில் சத்யா முத்து லக்ஷ்மி சத்ய லக்ஷ்மி தேவி லயன் குடும்பத்தினர்
Deleteஎடுக்கப்பட்டதும் பொதுவெளி தான். எதுவும் அந்தரங்க செய்தி இல்லை. எல்லோருக்கும் பொதுவான காமிக்ஸ் சம்பாஷணைகள். மீம் போல யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். காப்பிரைட் கிடையாது.
உங்கள் சொந்த கருத்தை பகிருங்கள் அடுத்தவர் கருத்தை முழுவதுமாக பகிராமல் வெட்டி ஒட்டி போட்டது தான் இங்கு விவாதமாகிறது
Deleteஒரு விஷயம் தெளிவாக புலப்படுகிறது. வெட்டி ஓட்டுவது போன்றவை நேர்மறையான நோக்கில் நடந்தால் அதில் குறை ஒன்றும் இல்லை. உதாரணத்திற்கு, டெக்ஸ் புள்ளிவிபரங்கள் அல்லது மாணவர்களுக்கு அன்பளிப்பாக புத்தகங்கள் வழங்குவது போன்றவை.
Deleteஆனால், அது நியாயமான குறைகளைப் பற்றி பேசுவதாக இருந்தாலும், இங்கே அதைப் பகிர்வது கூடாது என மிரட்டப்படுவது தவறு. “அதை நீ செய்தாயா?”, “இதை செய்யவில்லையே?” என்ற கேள்விகளும் மிரட்டல்களும் ஏன்?
பொதுவெளியில் சொல்லப்பட்ட ஒரு சரியான கருத்தை, பெயர் குறிப்பிடாமல் ஆசிரியரின் கவனத்துக்கு கொண்டு வந்தால் அதில் தவறு எது?
அசிரியர் - ஒரு காமிக்ஸ் காதலர், ஆசிரியர், புத்தக வெளியீட்டாளர் என்ற மூன்று பரிமாணங்களிலும் இங்கே வளம் வருகிறார். அவரிடம் குறைகளை சொல்லாமல் வேறு யாரிடம் சொல்ல முடியும்?
“அவரது மனம் புண்படும்” என்ற வாதம் எந்த அளவுக்கு நியாயம்?
அவரே அதைப் புரிந்து விட்டுவிட்டாலும், சுற்றியுள்ள “ப்ரகஸ்பதிகள்” மிரட்டலைத் தொடர்கிறார்கள்.
அடுத்தவர் கருத்துக்கு பின்னால் ஒளிந்து கொள்ளும் வீரர்கள் மற்றவரை ப்ரகஸ்பதிகள் என்று சொல்வது வேடிக்கையானது
Delete// வழக்கம் போல சந்தாகாரனுக்கு இன்னொரு நாமக்கட்டி பார்சல் //
Deleteதவறான வார்த்தை. எல்லோரும் இப்படி சொன்னதாக உங்கள் வார்த்தைகள் வெளிபடுத்துகிறது.
உங்கள் கருத்துக்களை மட்டும் சொல்லுங்க.
//
Deleteநெகடிவ் மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளீர்கள்
உங்க சொந்த கருத்துகள் அல்ல
பேச வேண்டாம் என சொல்லவில்லை
உங்க சொந்த கருத்தை எப்படி வேண்டுமானால் சொல்லி கொள்ளுங்கள் //
மிகவும் சரி.
😄😄😄... எனக்கு சிரிப்புதான் வருது... 300 ரூபாய்... என்று ஆசிரியர் சொல்லும் போதே எனக்கு புரிந்து விட்டது... அது அன்பளிப்பாக நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும் விஷயம் என்பது.... எடிட்டர் ன் உன்னதமான அந்த நோக்கம்.. மஹி, ரம்யா மற்றும் சிலருக்கு புரிந்து விட்டது...பலருக்கும் புரியல... 😄😄😄😄
Deleteவாழ்த்துக்கள் எடிட்டர் sir...
நன்றி... ❤️❤️❤️👍👍🙏🙏...
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.. 💐💐💐
ReplyDeleteவாய்யா வா❤️
Deleteதீபாவளி இதழ்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்...
ReplyDeleteஇந்த புக்ஸ் பார்சல்கள் வருவது தெரிந்தாலே..
ReplyDeleteஹையா தீபாவளி வந்திடுச்சே மனசு துள்ளுது..
Me in Sir💐🙏😘🥰
ReplyDeleteசூப்பர் சார்...ஏக எதிர்பார்ப்பு...ஸ்லிப் கேசை அடுத்த மாதமும்...தாமதமின்றி தந்த எண்ணமும்.....நீங்க வேற லெவல் சார்...வார்த்தைகளில்லை ...இதயத்திலிருந்து அருமை
ReplyDelete23 வது
ReplyDelete@Edi Sir😘💐
ReplyDeleteவேதாளரின் *கபாலர் கழகம்*
இன்னும் வாங்கவில்லை சார் 🙏
சேலம் புத்தக விழாவில் எனக்கு ஒரு பிரதி கிடைக்க ஏற்பாடு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 💐🙏😘
"கபால வேட்டை" தல..!
Delete👍💐😘Yes சார் 😘கபால வேட்டை 👍😘
Delete##So 2 தீபாவளி மலர்களையும் புரட்டிய கையோடு உங்களின் selfies + முதல் அபிப்பிராயங்களை இங்கே பகிர்ந்திடுகிறீர்களா - ப்ளீஸ் ? Blog கொஞ்சம் ஆக்ட்டிவ் ஆக இருந்தது போலிருக்கும் அல்லவா ? ##
ReplyDeleteவாய்ப்பில்லை சார் 😄😄😘
இங்க blog ல selfie போடற வாய்ப்பில்லையே சார் 🤔🤔🤔
வாட்சப் கம்யூனிட்டி வர்றதுக்கு முன்பான காலகட்டத்துக்கு சுத்தே rewind பண்ணுங்க தல...
DeleteHi
ReplyDeleteஅப்படியே அந்த 32 பக்க "விழா அழைப்பிதழை" pdf ஆ ஷேர் பண்ணீங்கன்னா அதை உற்றார் உறவினருக்கெல்லாம் அனுப்பிடுவோம்
ReplyDeleteஅது தான் வாட்சப் கம்யூனிட்டியில் ஒரு வாரமாய் உள்ளதே சார்?
Delete28th
ReplyDeleteசார், இதுக்காக மெனக்கெட்டு இந்த ஸ்லிப் கேஸ் அடுத்த மாசம் கொடுக்கறது எல்லாம் வேண்டாம் சார். புத்தகங்கள் தானே சார் முக்கியம். இதுவரையில் நான் ஒரு ஸ்லிப் கேஸை கூட வைத்துக் கொண்டதில்லை .(சும்மா தகவலுக்காக)
ReplyDeleteகொடுமை என்னன்னா ஸ்லிப்கேஸ்களை இப்போது டெலிவரி கொடுத்துள்ளார்கள் சார் 🥹🥹
Deleteபரவாயில்லைங்க சார்
Deleteஅடுத்த மாதம் மிஸ்டர் நோ கூட வாங்கிக்கிறோம்
நானும் ஸ்லீப் கேஸை அடுத்த மாதமே வாங்கிக் கொள்கிறேன்.
Deleteதீபாவளி வெடி இன்னிக்கு தான் கிளம்புதுன்னு நினைச்சிகிட்டு இருந்தபோது,நண்பர் போன் செய்து வெடி நேத்தே கிளம்பிருச்சின்னு சொல்ல,நான் அலுவலகத்தில் இருக்கேன் என்ன செய்யன்னு யோசிக்க,திடீர்னு ஒரு யோசனை, வழக்கமாய் வரும் கூரியர் நண்பருக்கு போன் அடிக்க நான் இங்கேதான் பேங்க் டெலிவரியில் எதிரில் இருக்கேன்னு சொல்ல,தோ உடனே வர்றேன்னு சொல்லி கபால்னு பறந்து,கப்புனு வெடியை கைப்பத்தி கொண்டாந்துட்டேன்...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே🙏🙏
ReplyDelete🙇🙇🙇
ReplyDeleteFrom :
ReplyDeleteநண்பர் ரகுராமன், சேலம் :
2026 வருட சந்தா vs புத்தக விழா பர்சேஸ் :
நான், அடுத்த 2026 வருட சந்தா கட்டாமல் சேலம் புத்தக விழாவில் அந்த வருடம் அதுவரையில் வந்த புத்தகங்களை மொத்தமாக
சதவீத தள்ளுபடி விலையில் வாங்கும் போது..
லாப வாய்ப்பு (!!?)
வாய்ப்பு-1:
ஜனவரி முதல் டிசம்பர் வரை வந்த ரெகுலர் புத்தகங்கள் + ஆன்லைன் புத்தக விழா ஸ்பெஷல் வெளியீடுகள் + ஈரோடு,கோவை,சேலம்..போன்ற புத்தக விழா ஸ்பெஷல் + கிளாச்சிக் ஸ்பெஷல் + தனித்தட வெளியீடுகள் என மொத்தமும் ரூ.9999/- (கணிப்பாக)
புத்தக விழாவில் வாங்கும் வாங்கும்போது 10% தள்ளுபடி 1000+ ரூ.440/- = ரூ.1440/-லாபம் (!!?) கிடைக்கும். மனக்கணக்கு + காகித கணக்கீடு போடும் போது இனிப்பாக இருக்கிறது.
(ரூ.440/- என்பது, சந்தா தொகை – 2026 வருட அட்டவணை புத்தகங்களின் மொத்த மதிப்பு = ரூ.440/-)
2026 வருட சந்தா VS புத்தக விழா பர்சேஸ்,
புத்தக விழா பர்சேஸ் என முடிவெடுத்தால் எனக்கு 2026 வருட லாபம் ரூ.1440/-
ஆனால்,
அதற்காக தோராயமாக ரூ.9999/- தொகை, பூதம் புதையல் காத்த மாதிரி 12 மாதங்களும் சேமித்து வைத்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். ஒவ்வொரும் மாதமும் வங்கி கடன்கள் டெபிட் ஆன பிறகு 7 ஆம் தேதியே மாத கடைசி ஆகி விடுகிறது. பஞ்சர் ஆன பாக்கெட்டுடன் மாதத்தின் மீதி நாட்கள் ஓடிவிடும் எனக்கு. இந்த லட்சணத்தில் வருடத்தின் மொத்த புத்தகங்களும் சேலம் புத்தக விழாவில் வாங்கும் எனது திட்டம்.. எனது தலையை பெட்ரோல் ஊற்றி கொள்ளிக் கட்டையால் நானே மசாஜ் செய்தது போல இருக்கும்.
லாபம் = கொள்ளிக் கட்டை
வாய்ப்பு-2:
சரி திருப்பூர் , ஈரோடு,சேலம் என மூன்று புத்தக விழாவில் வாங்கினால் கொஞ்சம் சிரமம் குறையுமே என மும்முனை பயண திட்டம்.
சேலம் TO ஈரோடு புத்தக விழா பயணம்,
என்னை விட்டு விட்டு நீ மட்டும் ஈரோடு புத்தக விழா போறியா? நானும் வருவேன்அப்பா, என அடம் பிடிக்கும் கௌசல்யாவை சரிகட்ட ஸ்நாக்ஸ் தொகை குடுத்தால் தான் நான் படி தாண்ட முடியும். நிதர்சனம். ரூ.100/-
வீடு TO பஸ் ஸ்டாண்ட் டூ வீலர் பார்கிங் செலவு ரூ.15/-
பஸ் டிக்கெட் போக,வர ரூ.45+45= 90/-
குறைந்தபட்சம் மதிய உணவு ரூ.90/-
குறைந்தபட்சம் டீ செலவு ரூ.100/- (டீக் கடையை பார்த்தல் நம்ம ஆட்டோ ஓடாது)
மொத்தம் ரூ.395/- தோராயமாக ரூ.500/- செலவு இல்லாமல் பயணம் நிறைவேற்ற இயலாது போல..
ஈரோடு புத்தக விழா பயண செலவு ரூ.500/-
திருப்பூர் புத்தக விழா பயண செலவு ரூ.500/-
உள்ளுராக இருந்தாலும் சேலம் புத்தக விழா பயண செலவு ரூ.300/-
மும்முனை பயண திட்டம் தோராயமாக மொத்தம் செலவு ரூ.1300/-
தோராயமாக மொத்த லாபம் ரூ.1440 – 1300 = ரூ.140/- OR LESS
வாய்ப்பு-3:
ஈரோடு, திருப்பூர் நண்பர்களிடம் கேட்டுக் கொண்டால் புத்தக விழாவில் புத்தகம் பெற்று கொரியர் அனுப்பி வைப்பார்கள் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை வந்த புத்தகங்கள் அனைத்தும் அனுப்பி வைக்க..
ஈரோடு, திருப்பூர் TO சேலம் கொரியர் செலவு தோராயமாக ரூ.800-900/-
சேலம் புத்தக விழா பயண செலவு ரூ.300/-
மொத்த செலவு ரூ.1100 -1200/-
தோராயமாக மொத்த லாபம் ரூ.1440 – 1200 = ரூ.240/- OR LESS
இதற்காக எனக்காக ஈரோடு, திருப்பூர் நண்பர்களின் கொரியர் அனுப்பும் அலைச்சல்,செலவு நண்பர்களுக்கு. (இதில் கொரியர் பார்சலின் புத்தக அட்டை ஓரம் கிழித்த, ஒடிந்த சிக்கல் நண்பர்கள் குழுவில் படித்துள்ளேன்)
லாப முடிவு..
வாய்ப்பு-1:
லாபம்= கொள்ளிக் கட்டை
வாய்ப்பு-2:
தோராயமாக மொத்த லாபம் ரூ.1440 – 1300 = ரூ.140/- OR LESS
வாய்ப்பு-3:
தோராயமாக மொத்த லாபம் ரூ.1440 – 1200 = ரூ.240/- OR LESS
புத்தக விழாவில் மட்டும் பர்சேஸ் எனில் எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு..
Continues....
மாதா மாதம் கொரியர் கிடைத்தவுடன் முதல் 10 தினங்களுக்குள் படித்து விடும் எனக்கு பல இரவு நேர வாசிப்பு மிகப்பெரிய இழப்பு. வாழ்க்கையின் உறுதியான கட்டமைப்புக்குள் கடினமான நிலையில் வேதனையிருந்தும், இறுக்கங்களியிருந்தும் மனதை சமனப்படுத்த காமிக்ஸ் தவிர பெரும்பான்மையான நாட்களில் வேறேதுமில்லை.
Deleteரூ. 0 –240/- இந்த லாப தொகைக்காக எனது பல சந்தோஷ நாள்களை இரவுகளை தொலைக்க நான் தயாராக இல்லை.
ஹாலிவுடில் ஜாலி கதையில் செவ்விந்திய தலைவர், “வேட்டையாடுவோம், பக்கத்து கிராமத்து ஜனங்களுடன் சண்டையிடுவோம், கொலை செய்வோம் என சந்தோசமாக வாழ்ந்து வந்தோம்” எனச் சொல்வதைப் போல்..
மாதா மாதம் கொரியர் கிடைத்தவுடன் படித்தோமா, ப்ளாக் மற்றும் நண்பர்கள் குழுவில் அம்மாத விமர்சனங்கள், வரவேற்ப்பு, கேலி கிண்டல் படித்தோமா, ரகளைகளை பார்த்தோமா முடிந்தால் பங்கேற்றோமா என வாழ்க்கை ஓடுகிறது. மாதா மாதம் அம்மாத புத்தகங்களை படிக்காமல் இருந்தால், ப்ளாக், கம்யுனிட்டி மற்றும் நண்பர்கள் குழுவில் எடிட்டர்,நண்பர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள், எதற்கு கைத் தட்டுகிறார்கள், எதற்கு சட்டைகளை கிழித்துக் கொண்டார்கள் எனத் தெரியாமல், மொழி தெரியாத ஹிந்தி படத்தை பாதியிலிருந்து பார்ப்பதை போல் இருக்கும்.
புத்தக விழாவில் மட்டும் பர்சேஸ். இது எமக்கு ஒத்துவராது.
புத்தக விழாவில் மட்டும் பர்சேஸ் என்பது புதிய அறிமுக வாசகர்கள், தேர்தெடுத்த புத்தகங்கள் மட்டும் வாசகர்கள், பொருளாதார ரீதியாக நெருக்கடி உள்ள வாசகர்கள், புதியவரை அறிமுகப்படுத்த, நண்பர்கள் உறவினருக்கு பரிசளிக்க வாங்குவோர்க்கு புத்தக விழா ஒரு மிகப்பெரிய வாசல் என்பது சந்தேகத்திக்கு இடமின்றி நிருபணம்.
ஆங்.. என்ன சொல்லவருகிறேன் என்றால்..
2026 வருட சந்தாவில், நவம்பர் மாத இறுதியில் தொடங்க உள்ள சேலம் புத்தக விழாவில் சந்தா தொகை கட்டி 2026 வருட சந்தாவில் இணைய உள்ளேன்.
## ரகுராமன், சேலம் ###
அருமை...
DeleteValid facts
Deleteஉண்மைதான் நானும் ஒரு வருடங்கள் கடையில் வாங்கி பார்த்து விட்டுத்தான் சந்தா கட்டவே ஆரம்பித்தேன். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் கொள்முதல் செய்கிறார்கள். அதுமட்டுமல்ல அந்த சமயத்தில் இடையில் வரும் புத்தகங்கள் தவறி விடுகிறது. இதற்காகத்தான் நான் சந்தா கட்டவே ஆரம்பித்தேன்.
Deleteநான் 2020ல் இருந்து தான் சந்தா கட்டுகிறேன். அதற்கு முன் ஒரு வருடங்கள் கடையில் வாங்கினேன். 2012 டு 2019 வரை உள்ள புத்தகங்கள் லிஸ்ட் எனக்கு தெரியாதே. அதாவது கையிருப்பில் என்ன புத்தகங்கள் இருக்கிறது என்கிற லிஸ்ட் எனது whatsapp எண்ணுக்கு அனுப்ப முடியுங்களா சார். எனது வாட்ஸ்அப் எண்ணை உங்கள் கம்யூனிட்டி எண்ணுக்கு அனுப்பி வைக்கிறேன்
ReplyDeleteமெக்ஸிகோவில் ஒரு மாய ரயில் தலைப்பே ஈர்க்குது...
ReplyDeleteகதையைப் படிக்கும் போது தலைப்பின் பொருத்தம் புரியும் சார் !
Deleteஎழுந்து வந்த எதிரி போய்கிட்டு இருக்கு ஓவர்,ஓவர்...
Deleteவேகம் எப்புடி கீது? ஓவர்... ஓவர்...?
Deleteஎழுந்து வந்த எதிரி-1
Delete"நெருப்பால் பாதிக்கப்பட்டவருக்குத்தான் அதைக் கட்டுபடுத்துவது எப்படி என்பது தெரியும்"
-வஞ்சம் தீர்க்கும் பொழுது புலர்ந்து விட்டது...
-தொடரும்...
முதல் பாகம் எதிர்பார்ப்போடு நிறைவு...
சில கதைக் களம் எல்லாம் என்னமோ இருக்கு,ஏதோ நடக்கப் போகுதுன்னு ஒரு எண்ணத்தோடவே நம்மை நகர்த்திட்டு போகும்,ஒரு எதிர்பார்ப்போடு...
அடுத்த பாகம் இரத்தமின்றி யுத்தத்தை நோக்கி...
இறுதி 2 பாகங்கள் செம ஹை-டெக் த்ரில்லர் சார் !
Deleteஇரத்தமின்றி யுத்தம்-2
Deleteஇந்த ஹோம் ஆட்டோமேஷன்,தானியங்கி வீட்டுப் பராமரிப்பு அமைப்பு பண்ணின வேலை இருக்கே...
ஒரு டிஜிட்டல் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் முழுவதுமாய் இருப்பின் இடர்ப்பாடானதொரு தருணத்தில் கட்டுப்பாடு நம் வசம் இருக்காது...
சென்னையில் புயல் சார்ந்த பேரிடர் நிகழ்வில்,புயலின் அசுர தாண்டவத்தால் செலவுகளுக்கு கையில் பணம் வைத்திருந்தவர்களுக்கு சிரமங்கள் குறைந்தன,டிஜிட்டல் பரிமாற்றங்கள் அப்போது கைகொடுக்கவில்லை என்ற செய்தியை வாசித்தது ஏனோ நினைவில் வந்து போனது...
"நாம் அப்பாவிகளையும் பலி கொடுத்திருக்கிறோம்"-இது ஒரு பார்வை...
" யுத்தங்களின் தவிர்க்க முடியாத இணைச் சேதங்கள் இவை "-இது ஒரு பார்வை...
சுருக்கமாக சொன்னால் யுத்தத்தில் அறம் தேவையா,இல்லையா...
" தவறுகளுக்கு தண்டனையின்றிப் போகாது...! இனியும் ஒளி இருளின் கைதியாகிடாது...! தொடுவானில் விழிகள் நிலைத்திடட்டுமே... ஒரு டிஜிட்டல் விடியலை வரவேற்றிடட்டுமே...!"
-டிஜிட்டல் கவிதை சிறப்பு...
Bug,Trojan (Malware)... இது டிஜிட்டல் யுகமாக்கும்,இனி குற்றங்கள் கத்தியின்றி,சத்தமின்றி,இரத்தமின்றியும் நடக்கும்...
Gen Z தலைமுறை குற்றங்களுக்கு ராபின் (2.0) அப்டேட் ஆகிட்டார் போல...
பொதுவாகவே குற்றவியல் நிகழ்வுகளில் டெக்னாலிஜியில் குற்றவாளிகள் ஒரு ஸ்டெப் முன்னாகவே நிற்பர்...
மெய்நிகர் உலகின் குற்றங்களிலும் இதுவே தொடரும் போல...
அப்டேட் ஆகலைன்னா எல்லோருக்கும் கஷ்டம்தான்...
கண்ணுக்குத் தெரியாத எதிரியோட மோதுவதே கடினம்,அதுவும் டிஜிட்டல் உலகின் துணையோடு இருக்கும் எதிரியை வீழ்த்துவது அதைவிட கடினம்...
ஆர்ட் சொல்ற மாதிரி விடலைகள் வெறித்தனமா விளையாடும் வீடியோ கேமுக்குள் சிக்கிக் கொண்ட உணர்வுதான் ஏற்படும்...
க்ரிப்டோ கரன்சி-சபிக்கப்பட்ட கற்பனைக் கரன்சி,நல்ல ஒப்பீடு...
"இறங்க வேண்டிய இடம் வந்துவிட்ட பிறகும் தொடர்ந்து பயணிக்க நினைப்பது முட்டாள்தனம் இல்லையா ?"-உண்மை...
" விதி விளையாடும் வேளையில் வீராப்பு வேலைக்கு ஆகாது தம்பி"- நச் பஞ்ச்...
"யார் இருந்தாலும்,இறந்தாலும் இந்த உலகம் இயங்கிக் கொண்டேதான் இருக்கும்,அது யாருக்காகவும் நிற்பதில்லை"
"சிலர் நினைப்பது போல வாழ்க்கை அவர்களிடம் தொடங்கி அவர்களுடனேயே முடிவதில்லை"-நிதர்சனமான உண்மை...
-வசனங்கள் நச்...
தடதடக்கும் சில கண்டுபிடிப்புகளோடு அத்தியாயம்-3 வஞ்சத்தை நோக்கி,நிழல் வெளியே வருமா ?!
2 ஆம் பாகம் தோட்டா மாதிரி தெறிக்குது சார்...
வஞ்சம்-3
Delete"டெக்ஸ்வில்லர் இருக்குமிடத்தில் தானே கிட் கார்ஸனும் இருந்தாக வேண்டும் ?!"-ஹா,ஹா,செம...
" கோபம் ஒரு ஆபத்தான மிருகம்,அது உன்னை விரும்பத்தகாத விளைவுகளில் கோர்த்துவிட்டு விடும்"
"எல்லா இழப்புகளும் பின்னடைவுகள் அல்ல"
" உய்நிலை செயல்முறைகள்"-தூய தமிழ் எல்லாம் விளையாடி இருக்கு,மொழிபெயர்ப்புப் பணிகள் செமையா வேலை வாங்கி இருக்கும் போல...
"டிஜிட்டல் விடியல்" பேர் நல்லா இருக்கு...
இரு காலி சவப்பெட்டிகளுக்கு இறுதி மோதலில் விடை கிடைக்கும்னு தோணுது...
வஞ்சம் அத்தியாயம்-3 மோதல் அனல் பறக்குது...
முதல் பாகம்-Normal Speed...
இரண்டாம் பாகம்-செம Speed...
மூன்றாம் பாகம்-Jet Speed..
அடுத்து எங்கேயோ கேட்ட குரல்-இறுதி மோதலுக்காக வெயிட்டிங்...
ஓவியங்கள் மூன்றாம் பாகத்தில் மட்டும் கொஞ்சம் பிசுறு தட்டுவது போல ஒரு Feel...
இந்த மூன்று பாகமும் சேர்த்து ஒரே குண்டு புக்கா முடிஞ்சா ஹார்ட் பைண்டிங்கில் வந்துருந்தா செமையானதொரு சம்பவமா இருந்துருக்கும்னு தோணிச்சி...
மற்றபடி ராபினின் பெஸ்ட் செல்லர் சாகஸத்தில் இதுவும் ஒன்று எனில் அது மிகையாக இருக்காது...
ஆசிரியர் & மேச்சேரியார் கூட்டணியில் மொழிபெயர்ப்பு தரம் வேற லெவல்...
அசத்திட்டிங்க...
ஒரு வண்டி உழைப்பினைக் கோரிய பணி சார் ; நன்றாக வந்திருப்பதில் மகிழ்ச்சி !!
Deleteகதையின் நீளம் ஒருபக்கமிருக்க, அதன் சமகாலத்தன்மை இன்னோர் பக்கமிருக்க, அனைத்துமே புரியும் விதமாய், கோர்வையாய் அமைந்திடாது போயிடக்கூடாதே என்பதே எனது ஆதங்கமாகிப் போச்சு சார் ! கதாசிரியரின் மெனக்கெடல் ஒவ்வொரு பக்கத்திலும் மிளிரும் போது, அவருக்கு நியாயம் செய்திட நாம தயங்கிடப்படாதே என்ற உறுத்தல் தான் ஏகமாய் குவிந்து கிடக்கும் பணிகளுக்கு மத்தியிலும் இதனுள் நேரம் செலவிடச் செய்தது !
Just another regular story என்றிருந்திருப்பின் இவ்வளவு முக்கியத்துவம் தந்திருப்பேனா - தெரியலை ! But ஒரு பிரமாதமான கதைக்கு, நம்மால் இயன்றதை தராது போனால் புனித மனிடோ கண்ணைக் குத்திப்புடுவாரே ?!
களத்தில் கையாளப்படும் வார்த்தைகளில் தெரிகிறது சார் தங்களது மெனக்கெடல்...
Deleteவிமர்சனங்களுக்கு பெரிய மெனக்கெடல் தேவையில்லை,ஒரு நல்ல விமர்சனத்திற்கான தரத்திற்கு ஒரு கதைக் களத்தை வெளிக்கொணர்வது என்பது பிரசவ வலிக்கு இணையானது,அதைக் இக்கதையில் உணர முடிந்தது...
அய்யா அறிவரசு பேக் டு பார்ம். கலக்குறிங்க.
Deleteஅட்டகாசமான அலசல்.
Tq...PFB...
Deleteநண்பர் சங்கர் சொல்வது போல் சந்தா தரர்களுக்கு தாங்கள் அறிவித்த பலன்களால் பெரிதான பலன் ஒன்றுமில்லை.
ReplyDeleteஎனவே மாற்று வழி யோசிக்கலாமா?
அங்கேயே நான் தந்துள்ள பதிலையும் படிச்சுக்கோங்க சார் ; அப்புறமாய் "மாற்று வழி" என்னவாக இருக்கக்கூடுமென்று முன்மொழியுங்களேன் - கேட்டுக்கொள்கிறேன் 👍
Deleteசார் நான் தீபாவளிக்கு பின் தான் சந்தா கட்டப் போகிறேன். அப்போது எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு முந்தைய இதழ்களின் இருப்பு பற்றிய விவரங்களை தர முடியுமங்களா சார். ஒருவேளை நான் வாங்காத இதழ்கள் இருப்பு இருக்கும் பட்சத்தில் நிச்சயம் அந்தன் கூப்பன் தொகை போக அதிகமாக இருந்தாலும் அதை வாங்குவதற்கு நான் தயாராக உள்ளேன்
Deleteஆபீஸில் கேட்டால் அனுப்பி விடுவார்கள் சார்!
Deleteநன்றிங்க சார்
Deleteஅனைவருக்கும்ஹாப்பி தீபாவளி
ReplyDeleteஆமா ஆமா தீபாவளி மலர் கையில் கிடைக்கும் நாள் தானே தீபாவளி. இன்னைக்கு எனக்கு தீபாவளி
Deleteசந்தாவில் இணைய ஊக்கபடுத்தும் விதமாக முந்தி கொடுத்தது போல் டெக்ஸ் 32 பக்க புத்தகம் சந்தாதாரர்களுக்கு மட்டும் எக்ஸ்க்ளூசிவாக கொடுக்கலாம்... பின்னர் போனமுறை போலவே ஒரு 120 பக்க பேப்பர்பேக்காக புத்தக விழாக்களில் விற்பனைக்கு வைக்கலாம். சந்தா இல்லாதவர்கள் அதை வாங்கிக் கொள்ளலாம்... 32 பக்க சிறு இதழ்கள் சந்தாவில் உள்ளோர்களுக்கான தனிப்பட்ட வெகுமதி...
ReplyDeleteஎனது நட்பு வட்டத்தில், மூன்று பேர் இந்த முறை சந்தாவில் கலந்து கொள்ளப் போவதில்லை எனக் கூறியுள்ளார்கள்...
நம்மை போன்ற சிறு வாசகர் வட்டத்திற்கு சந்தாக்களே முதுகெலும்பு இதயம் எல்லாம்...
இம்முறை நீங்கள் அறிவித்துள்ள கதை சொல்லும் காலெண்டர் என்னளவில் top of the charts. இது போன்ற சிறு சிறு வெகுமதிகளைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்...
அந்த 300 ரூபாய் கூப்பனுக்கு பதில் பழையபடி முன்பு போல 32 பக்கமோ எது வசதியோ சந்தாதாரர்களுக்கு மட்டும் என லேபிலுடன் வெளியிட ஆவண செய்வீர்கள் என்பதே என் நீண்ட நாள் அவா...
சார்.... போனலியின் படைப்புகள் எவற்றையுமே சிங்கிள் புக்ஸாய் போட இப்போதும், இனியும் அனுமதி இல்லை!
Deleteடைலன் டாக் - THE GOOD BAD & UGLY கூட சிறுகதைத் தொகுப்புகளே! But அவற்றை ஒரே புக்காய் போட எண்ணுவதன் காரணம் என்னவாக இருக்கக்கூடும் என யோசித்துப் பாருங்களேன்? இயன்றிருக்கும் பட்சத்தில் அதையெல்லாம் நடைமுறைப்படுத்தாது இருந்திருப்பேனா சார்?
ஈர்க்கும் விதமாய், சின்னச் சின்னதாய் வேறு எதைப் போடலாம்னு சொல்லுங்க - இயன்றால் தாராளமாய் பண்ணிடலாம் !
அந்த ₹300 கூப்பனுக்கு பழைய புத்தகங்கள் வாங்கிக் கொள்வதற்கு பதிலாக நண்பர் STV குறிப்பிட்டது போல், புத்தக விழா புத்தகங்களில் ஏதேனும் வாங்கிக் கொள்வது போல கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது கருத்து.
Deleteமுடிவு உங்கள் கையில் சார்.
உசரும் குரல்களுக்கு நிதானம் திரும்பட்டும் சார் - அந்த நாளில் பார்த்துக் கொள்ளலாம்!
Deleteஅன்பு ஆசிரியருக்கு....
ReplyDeleteஒவ்வொரு வருடமும் காமிக்ஸ் அட்டவணை பற்றி சாதக பாதகங்கள் கனவுலகம் குரூப்ல எப்பவும் பேசப்படறதுதான் அதில் நெகடிவ் பாஸிட்டிவ் என மாறி மாறி பேசினாலும் முடிவு என்பது காமிக்ஸ்க்கு சாதகமாகவே இருக்கும். அடுத்த ஒரு மணி நேரத்தில் நெகடிவ் பாஸிட்டிவ் என பேசியதெல்லாம் வேடிக்கையாக போய்விடும்.
அதுக்காக காமிக்ஸையோ அல்லது ஆசிரியரையோ அவரது செயல்பாடுகளையோ மட்டந்தட்டி, காமிக்ஸை வேண்டாம் என ஒதுக்கிவிடுவதாக அர்த்தம் அல்ல.
இது "புரிதல் உள்ள கனவுலக நண்பர்களுக்கு" பழக்கமான ஒன்றுதான்.
ஆகவே அங்கு விவாதிக்கப்படும் காமிக்ஸ் பற்றிய நெகடிவ் கமெண்ட்களை அங்குள்ள நண்பர்களே "அடேய்...போய் ஓரமா வெளாடுங்கடா" னு நமட்டுச் சிரிப்பு சிரிச்சு நகர்கையில், அதையும் சீரியஸாக ஒருத்தர் மெனக்கெட்டு இங்க போடுவதையும், அதுக்கும் மெனக்கெட்டு சிலர் ஆயக்கால் போடுவதையும் பார்க்கையில்....🤣🤣🤪🤣🤪🤣🤪...
சந்தா பற்றி பேசறப்ப, "சந்தாதாரர்களுக்கு ஏதாவது ஸ்பெஷல் இருக்காதா?" என நண்பர்கள் ஆதங்கப்பட்டதாக ஏற்கனவே இதுக்கு முந்திய பதிவு கமெண்டில் சொல்லியிருந்தேன்.ஆக அவர்கள் சொன்னதில் எந்த ஒளிவுமறைவும் கிடையாது. இதுவரையில் சந்தாவுக்கென இலவச இணைப்புகள் கொடுத்த போதும் கொடுக்காத போதும் அவர்கள் சந்தா கட்டிக் கொண்டுதான் உள்ளனர். அவர்களுக்கு தேவை காமிக்ஸ் மாத மாதம் வருவதே தவிரவும், இலவச புத்தகங்கள் கொடுப்பதும் கூடுதல் மகிழ்ச்சியே.
இந்த முறை super fan ஆக சில சலுகைகள் அறிவித்த போது அதையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள்.
அதை விவாதம் பண்றப்ப "அந்த ₹300 வவுச்சருக்கு பதில் ஏதாவது டெக்ஸ் புத்தகமோ அல்லது ஏதாவது ஸ்பெஷல் வெளியீடுகளோ தரலாம்" என்பது பல நண்பர்களின் யோசனையாக இருந்தது.
ஏனெனில்....
1)அங்க பல சந்தாதாரர்களுக்கு லயன் ஆபிஸில் உள்ள அனைத்து இதழ்களும் கைவசம் இருக்கும்.அவர்களுக்கு அந்த வவுச்சர் கண்டிப்பாக யூஸ் இல்லைதான்.
2) அப்படியே அந்தத் தொகைக்கு புக் வாங்கி யாருக்காவது அன்பளிப்பு தரலாம் என்றால் அதை சிலபேர் ஏத்துக்குவாங்க,
சிலர் "இது எதுக்கு இத வாங்கி நான் தரனும்" என அவரவர் வேலையுண்டுனு இருப்பார்கள்.
அவங்கள இந்த வவுச்சர் கட்டாயபடுத்துவது போலானது.
தனக்கு போக தானதர்மம் எனும்போது,
அந்த வவுச்சர் தனக்கு ஏதாவது பயன் தர நினைப்பதும் தவறில்லை.
****
"சரி, இதுக்கு பதிலா வேறு எதாவது ஆசிரியரிடம் கேட்டு பார்க்கலாம்" என காலையில் முடிவான போது,
"ஏதாவது டெக்ஸ் புக் கேக்கலாம்".
அல்லது
"சந்தா அல்லாத ஸ்பெஷல் புக்ஸ் வாங்கிக்க கேக்கலாம்" என முடிவானது.
இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தோணவில்லை, தவிர "இதுதான் வேண்டும்" என ஆசிரியரை யாரும் கட்டாயப்படுத்தவும் போறதில்லை, இல்லைன்னாலும் யாரும் காமிக்ஸ் படிக்காம விலகிப் போவதும் நடவாத காரியம்.
ஜஸ்ட் ஒரு யோசனை மட்டுமே.
எது எப்படியாயினும் "காமிக்ஸ் என்ற ஒற்றைச் சொல்லுக்கு என்றும் கட்டுப்பட்டவர்கள்" என்பதால் கனவுலகை பொறுத்தவரை யாரும் அதை குறை சொல்லி பழிக்கவும்,தவிர்க்கவும் யாரும் தயாராக இல்லை என்பதால் வருகை தரும் தீபாவளி மலர்களை வரவேற்று ஆனந்தமாக தீபாவளியை கொண்டாடுவோம்.
லக்கி லூக் கின் "நிதிக்கு தலை வணங்கு !",வில்லன் ஜட்ஜ் ராய் பீன்ஸ் ,டெக்ஸுடன் பங்கு பெறுகிறார்"நிதிக்கு நீதி" கதையில்
ReplyDeleteஆமா சார்....நீங்களாச்சும் கவனிச்சீங்களே !!
Delete
ReplyDelete*டெக்ஸ் 40° ஆண்டுகள்......*
இன்று 10/10/2025.....சரியாக 40ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தமிழ் காமிக்ஸ் வானில் ஒரு புதிய நட்சத்திரம் உதயம் ஆனது...
இன்றைய தமிழ் காமிக்ஸ் உலகில் அந்த நட்சத்திரம் தான் மெகா ஸ்டார் அந்தஸ்தில் ஜொலித்து கொண்டுள்ளது...
இன்று மாதா மாதம் அந்த நட்சத்திரம் இல்லைனா காமிக்ஸ் உலகம் இயங்காது.
அது சாட்சாத் நம்ம *டெக்ஸ் வில்லரே*
*டெக்ஸ் 40 Facts 1...*
முதல் இதழாக அக்டோபர் 1985ல தீபாவளிமலராக வெளியானது *தலை வாங்கி குரங்கு*, 186வது தமிழ் டெக்ஸ் இதழாக சரியாக 40ஆண்டு நிறைவடையும் தருவாயில் வெளியாகியுள்ளது *"மெக்ஸிகோவில் ஒரு மாய ரயில்"---டெக்ஸ் தீபாவளி மலர்2025.*
ஆண்டு.....இதழ்கள்
1985-----1
1986-----1
1987-----2
1988-----2
1989-----3
1990-----1
1991------2
1992-----2
1993-----1
1994-----1
1995------1
1996-----2
1997-----4
1998-----1
1999-----2
2000----3
2001-----1
2002-----5
2003-----5
2004-----3
2005-----3
2006-----1
2007-----1
2008-----3
2012-----1
2013-----4
2014-----5
2015-----2
2016----12
2017----10
2018----17
2019----15
2020----11
2021----10
2022----12
2023----14
2024----13
2025----10*
ஒரு ஆண்டில் அதிகப்படியான இதழ்கள் வெளியானது 2018ல்---17இதழ்கள்.
டெக்ஸ் இதழ்களின் பெஸ்ட் ஆண்டுகள் என 2016முதல் 2025யிலான 9ஆண்டுகளை குறிப்பிடலாம், ஆண்டுக்கு 10இதழ்களுக்கு மேலாக தொடர்ந்து வெளியாகி அசத்தி வரும் கோல்டன் பீரியட் இது....
1980களை ஸ்பைடர் எரா, 1990களை டைகர் எரா என குறிப்பிட்டால், தற்போதைய காலத்தை
*டெக்ஸ் ஏரோ* என சொல்லலாம்.
*டெக்ஸ் 40 Facts 2...*
*40ஆண்டுகளில் வெளியான டெக்ஸ் இதழ்கள்=186*
கறுப்பு வெள்ளை இதழ்கள் 128
வண்ண இதழ்கள் 53
கறுப்பு வெள்ளை & வண்ணம் இணைந்த ஹைபிரீட் இதழ்கள் 5
*டெக்ஸ் 40 Facts 3...*
டெக்ஸின் தனி இதழ்கள் 166
மற்ற நாயகர்களுடன் கூட்டணியில் 20 இதழ்கள்
*டெக்ஸ் 40 Facts 4...*
ரெகுலர் புதிய இதழ்கள் 161
மறுபதிப்புகள் 25
*டெக்ஸ் 40 Facts 5...*
பக்கங்களின் அடிப்படையில்...
மிக நீளமான வண்ணக் கதை: புயலுக்கொரு பிரளயம்-507பக்கங்கள்---டைனமைட் ஸ்பெசல்-2018,
மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெசல்1&2--500பக்கங்கள்;
மிகச்சிறிய வண்ணக் கதை: தகிக்கும் நியூ மெக்ஸிகோ-16பக்கங்கள்
மிக நீளமான கறுப்பு வெள்ளை கதை: *பனிமண்டலப் போராளிகள்* ---440பக்கங்கள்-தீபாவளிமலர்2024
மிகச்சிறிய க/வெ கதை-மாய எதிரி-25பக்கங்கள்
பாக்கெட் சைசில் நீளமான கதை: மரண தூதர்கள்-296 பக்கங்கள்.
மிகச்சிறிய கதை-மாய எதிரி-25பக்கங்கள்
*டெக்ஸ் 40 Facts 6...*
மிக நீளமான டெக்ஸ் பிரத்யேக இதழ்கள்,.....
1.டைனமைட் ஸ்பெசல்- 792பக்கங்கள்-2018---2கதைகள்
2.சுப்ரீமோ ஸ்பெசல் -728பக்கங்கள்-2023---4கதைகள்
3.தி லயன் 250- 680பக்கங்கள்-2015---3கதைகள்
4.தீபாவளிமலர்2020-648பக்கங்கள்-3கதைகள்
*டெக்ஸ் 40 Facts 7...*
நீண்டகால இடைவெளியில் வண்ண மறுபதிப்பு...
தலை வாங்கிக் குரங்கு-35ஆண்டுகள்
முதல் பதிப்பு 1985; வண்ண மறுபதிப்பு 2020
குறுகிய கால மறுபதிப்பு....
ரெளத்திரம் மற- 1 மாதம்
முதல் பதிப்பு டிசம்பர்2019; மறுபதிப்பு ஜனவரி 2020
*டெக்ஸ் 40 Facts 8...*
அதிகமுறை வெளியிடப்பட்ட கதைகள்... 3- தலா 3முறைகள்
1.தலைவாங்கி குரங்கு
முதல்பதிப்பு:1985
2ம் பதிப்பு: 2012
3ம் பதிப்பு: 2020
2.பழிவாங்கும் பாவை
முதல்பதிப்பு:1987
2ம் பதிப்பு: 2000
3ம் பதிப்பு: 2019
3.கார்சனின் கடந்த காலம்
முதல்பதிப்பு:1997
2ம் பதிப்பு: 2014
3ம் பதிப்பு: 2023
*டெக்ஸ் 40 Facts 9...*
தனி இதழ்கள்: 165
தொடராக வெளியான இதழ்கள்: 21
21தொடர் இதழ்களில்,
3இதழ்கள் கொண்ட தொடர்கள்=3 (3x3)
2இதழ்கள் கோண்ட தொடர்கள்=6 (6x2)
*டெக்ஸ் 40 Facts 10...*
டெக்ஸ் இதழ்கள் வெளியான ப்ரகாஷ் பப்ளிஷர்ஸ் ப்ராண்ட்களில்.....
1.லயன் காமிக்ஸ்-162
2.திகில் காமிக்ஸ்-1
3.காமிக்ஸ் க்ளாசிக்ஸ்-2
4.சன்ஷைன் லைப்ரரி-5
5.மேக்ஸி டெக்ஸ்-4
6.தி லயன் லைப்ரரி-7
7.ஜம்போ-2
8.V for We Comics-3
*டெக்ஸ் 40 Facts 11...*
டெக்ஸ் இதழ்கள் வெளியான ஸ்பெசல் இதழ் வகைகள்.....
1.லயன் பொங்கல் மலர்
2.லயன் கோடைமலர்
3.லயன் ஆண்டுமலர்
4.லயன் தீபாவளி மலர்
5.லயன்50வது, 100, 150, 200, 250, 300, 400...மைல்கல் ஸபெசல்ஸ்
6.லயன் டாப் 10ஸ்பெசல்
7.லயன் மில்லேனியம் ஸ்பெசல்
8.லயன் சம்மர் ஸ்பெசல்1, 2
9.Tex Classics
10.லயன் மெகா ட்ரீம் ஸ்பெசல்
11.லயன் ஜாலி ஸ்பெசல்
12.லயன் கெளபாய் ஸ்பெசல
13.Book Fair Special
14.கிங் ஸ்பெசல்
15.டெக்ஸ் மினிகள்
16.டெக்ஸ் மினி கலக்சன்
17.ஜம்போ
18.டைனமைட் ஸ்பெசல்
19.சுப்ரிமோ ஸ்பெசல்
20.விஜயன் 1000 ஸ்பெசல்
Excellent!
Deleteபிரமாதம் விஜி நண்பா.
Deleteகாமிக்ஸ் காதலன் நீர்தானய்யா.
நீ கலக்குய்யா விஜி. உன்னோட கெத்து என்னைக்கும் எங்கியும் குறையாது.🔥🔥🔥🔥👍
DeletePfB, Psaravanan, ஸ்ரீ, ராஜசேகரன் @பாராட்டுக்கும், உற்சாகபடுத்தலுக்கும் மனமார்ந்த நன்றிகள்😍😍😍😍😍
Delete. சூப்பர்டெக்ஸ் விஜய ராகவன் ஜி.நாடி நரம்பெல்லாம்காமிக்ஸ் ஊறி நிற்க்கும் ஒருத்தரால் தான் இப்படிலாம் புள்ளி விவரம் குடுக்க முடியும் .எவ்வளவு அர்ப்பணிப்பு.
ReplyDeleteகண்ட்ரோல் இல் ஊடுருவி காரின் ஓட்டத்தை தறிகெட வைத்து விபத்து .நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்து .வீட்டு ஹோம் ஆட்டோ மேசன் சிஸ்டத்தில் குளறுபடி செய்து தீ விபத்து.அனைத்தும் டிஜிட்டலில்.ஆனால் தொடர் கொலைகள்.எவ்வளவு புத்திசாலியான கிரிமினலாக இருந்தாலும் சின்ன தவறால் மாட்டிக் கொள்வார்கள்.மானுவலில் ஜன்னல் கதவுகளை குளறுபடி செய்ய செல்லும் ஒருவன் சாதாரண தெரு காமிராவில் சிக்கிக் கொள்ள ஆக்ஷனில் இறங்குகிறார் ராபின்.பட்டாசு வெடிக்கிறது கதையில். இந்த தீபாவளி ராபின் தீபாவளி.... கலக்குகிறார்ராபின். இன்னும் டெக்ஸ் பக்கம் திரும்பக் கூட முடியல.
ReplyDeleteசொன்னேன் இல்லியா சார் - ராபின் 2.0 வேறொரு ரேஞ் !!
Deleteநேற்றைய நிலவரம் :
ReplyDeleteநடப்பாண்டினில் நேற்றைய தினம் தான் நமது அலுவலகத்தின் ஆக பிஸியான தினங்களில் ஒன்றாக இருந்திருக்கும் என்பது உறுதி !! ஆன்லைனிலும் சரி, நேரடியாய் GPay மூலம் பணமனுப்பி புக்ஸை தருவித்துக் கொள்வோரும் சரி, நேற்றைக்கு தெறிக்க விட்டுள்ளனர் !!
டெஸ்பாட்ச் தினத்தினில் ஆட்டோவில் தான் டப்பிகள் சகலமும் கூரியருக்குப் பயணமாகிடும் & இதர நாட்களில் நம்மாட்கள் டூ-வீலர்களில் கொண்டு போய் போட்டு விட்டு வருவர் ! ஆனால் நேற்றோ - ஒரு சின்ன லோடு ஆட்டோவை வரவழைக்க வேண்டிய கட்டாயம் !! Absolute pile of books !!
இதில் icing on the cake யாதெனில், வாங்கியுள்ள அனைவருமே ராபினுக்கும் சேர்த்தே ஆர்டர் போட்டுள்ளனர் ! பொதுவாய் 'தல' பட்டாசாய் பறக்க, உடன் பயணிப்போர் பராக்குப் பார்த்துக் கொண்டிருப்பர். But இம்முறை ராபினும் டெக்ஸுக்கு இணையாய் டிராவல் செய்கிறார் !! Oh wowww என்று பட்டது - நேற்றைய ஆர்டர்களைப் பார்த்த போது !!
And சந்தா எக்ஸ்பிரஸின் பயணத்திலுமே - அனைத்தும் FAMILY சந்தாஸ் என்பதில் சூப்பர் ஹேப்பி ! ஒரேயொரு LITE சந்தா & இரண்டே SINGLES சந்தாஸ் ! பாக்கி சகலமும் FAMILY சந்தாஸ் !!
தேங்க்ஸ் a ton folks !!
❤️😍👏👏👏👏.
Delete// இம்முறை ராபினும் டெக்ஸுக்கு இணையாய் டிராவல் செய்கிறார் !! //
Deleteசூப்பரப்பு...
அட்டகாசம்!!
Deleteசூப்பர் சூப்பர் சார். வாழ்த்துக்கள்.
Delete// ஆன்லைனிலும் சரி, நேரடியாய் GPay மூலம் பணமனுப்பி புக்ஸை தருவித்துக் கொள்வோரும் சரி, நேற்றைக்கு தெறிக்க விட்டுள்ளனர் !!
Deleteடெஸ்பாட்ச் தினத்தினில் ஆட்டோவில் தான் டப்பிகள் சகலமும் கூரியருக்குப் பயணமாகிடும் & இதர நாட்களில் நம்மாட்கள் டூ-வீலர்களில் கொண்டு போய் போட்டு விட்டு வருவர் ! ஆனால் நேற்றோ - ஒரு சின்ன லோடு ஆட்டோவை வரவழைக்க வேண்டிய கட்டாயம் !! Absolute pile of books !!
//
ஆகா ஆகா அட்டகாசமான செய்தி.
தொடரட்டும் இந்த விற்பனை
மகிழ்சசியான சேதி. சந்தாவும் இந்த முறை மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள். அதும் 101 ன்னு அக்கவுண்டை ஓபன் பண்ணி வைச்சிருக்கேன். எப்படியாவது இந்த தடவை சந்தா ரெக்கார்ட் ப்ரேக் பண்ணனும் ஆத்தா. நடந்ததுன்னா தலீவருக்கு மொட்டையடிச்சு செயலர் மடில உக்கார வைச்சு காது குத்தி இரும்புக் கம்மல் போடறேன்.
Deleteசார் ராபின், வேதாளர் இரண்டும் படிச்சாச்சு. Wow
ReplyDeleteNot bad ஆ சார்?
DeleteWow என்று சொல்லி இருகிறார் சார்
Deleteசார் என்ன இப்படி சொல்லிட்டீங்க. ஒரு NYPD Detective சீரிஸ் அப்படியே கண் முன்னே. என்ன ஒரு பரபரப்பு ஆரம்பம் முதல் தொடங்கும் பரபரப்பு இரண்டாம் மூன்றாம் பாகத்தில் வேறு மாதிரி வேகம் எடுக்கிறது.
Deleteஅடுத்த வருடம் வரும் ராபினுக்கு இப்போது இருந்தே வெயிட்டிங்.
எனது மதிப்பெண் 10/10
ஹலோ இங்கு இன்னும் புத்தகம் வரவில்லை குமார் 😊
ReplyDeleteஎன்னது வேதாளர் கதையா? ஸ்பெஷல் புக் ஆ குமார்?
ReplyDeleteமதுரை ஸ்பெஷல்.. வேதாளரின் “கபால வேட்டை !”
ReplyDeleteநன்றி
ReplyDeleteஆமாம் சார் .ராபின் 2.o வேற ஒரு ரேஞ்ச் மட்டுமில்ல அதுக்கு மேல வேற வேற வேற. ரேஞ்ச் . இந்த ஆண்டின் கிராஃப் இன்னும் பல படி மேல ஏறிடுச்சு ராபினால
ReplyDelete“மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம், வழியிருந்தால் கடுக்குள்ளே மலையைக் காணலாம்..’’ கண்ணதாசன் அவர்களின் வரிகள்.
ReplyDelete2026 சந்தாதாரருக்கு..
“ரூ.300/- க்கு Gift Voucher உண்டு! அதனை 2020 க்கு முன்பான நமது முந்தைய வெளியீடுகளை வாங்கிக் கொள்ளப் பயன்படுத்திடலாம்! அல்லது யாருக்கேனும் பரிசாகவும் அனுப்பச் செய்யலாம்!*”
இது 2026 சந்தாதாரருக்கான பரிசுகளின் அறிவிப்புகளில் ஓன்று.
இந்த அறிவிப்பிலேயே என்னுடைய பயனுக்கான விடை உள்ளதாக பார்க்கிறேன்.
என்னிடம் 2012 to 2020 வரை அனைத்தும் உள்ளதாக எண்ணுகிறேன்.
நான் நேசிக்கும் காமிக்ஸ் வாசிப்பைத் தாண்டி அடுத்த தலைமுறைக்கான பாதையை செதுக்க அவ்வப்போது ஆக்கபூர்வமாக சின்னஞ்சிறு செயல்களில் செயல்படுவது உண்டு.
சந்தாவினால் எனக்கு கிடைக்கும் ரூ.300/- மதிப்புள்ள Gift Voucher உடன், என்னை அறிந்த நண்பர்களுடன் இணைந்து ஆர்வமுடன் முன்வரும் காமிக்ஸ் நண்பர்களுடன் சேர்ந்து 20 Gift Voucher ஐ சேர்த்து ரூ.300/- x 20 = ரூ.6000/- மதிப்புள்ள முந்தைய வெளியீடுகளை வாங்கி “ஏதேனும் ஒரு அரசுப் பள்ளிக்கு நூலகத்திற்கு கொடுக்கும் திட்டம் மனதில் தோன்றுகிறது.” 10 Gift Voucher மட்டும் கிடைத்தால் கூட ரூ.3000/- மதிப்புள்ள புத்தகங்களே போதும். இந்த முயற்ச்சியினால் முகம் தெரியாத 10 மாணவர்கள் பின் நாட்களில் காமிக்ஸ்சை நேசிக்க தொடங்கி இருப்பார்கள் என்ற வேட்கைதான்.
“விதைத்தவன் உறங்கினாலும் விதைத்த விதை உறங்காது.”
“மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம், வழியிருந்தால் கடுக்குள்ளே மலையைக் காணலாம்..’’ கண்ணதாசன் அவர்களின் வரிகள்.
எடிட்டரின், 2026 சந்தாதாரருக்கான ரூ.300/- மதிப்புள்ள Gift Voucher அறிவிப்புக்கு எனது தனிப்பட்ட சுயமான ஆதரவு உண்டு.
ReplyDeleteபுத்தகங்கள் நேற்று மாலை கையில் கிடைத்தது! ஆனால் இங்கே ஏற்பட்ட சிறு களேபரத்தின் பொருட்டு மனசு மெல்லிய வருத்தத்தில் இருந்ததால் நேற்றைய தீபாவளியை குதூகளித்துக் கொண்டாடமுடியவில்லை!
ReplyDeleteபுத்தக ஆக்கம் சிறப்பாக வந்திருக்கிறது! ராபின் புத்தகங்கள் 2 பாகங்களும் ஒரே குண்டுவாக ஹார்ட் பைன்டிங்கில் வந்திருந்தால் இன்னும் சூப்பர் தெறி மாஸ் தீபாவளியாக இருந்திருக்கும் என்றே! தோன்றியது!
Delete/ஆனால் இங்கே ஏற்பட்ட சிறு களேபரத்தின் பொருட்டு மனசு மெல்லிய வருத்தத்தில் இருந்ததால் நேற்றைய தீபாவளியை குதூகலித்துக் கொண்டாடமுடியவில்லை//
மெல்லிய வருத்தம் எல்லாம் எனக்கு இல்லை. ஆனந்த் அம்பானியின் இடை அளவு பெரிய வருத்தம்.
புள்ளி விவரங்களை அள்ளி விடுவதனால் எஸ் டி வி பெரும் புள்ளியாகி விட முடியாது. அவர் தளத்தில் இட்டிருக்கும் பதிவுக்கு அவரை கரும்புள்ளி என்று சொல்ல வேண்டும்.
சந்தாதார்கள் வேர்களைப் போன்றவர்கள். எந்த வேரும் பழம் கொடுக்கும் மரத்தை நோக்கி நானே உனக்கு முக்கியமானவன் என்று வியாக்கியானத்தில் ஈடுபடுவதில்லை.
மரம் பல்கி பெருக உதவும் விழுதுகளும் கிளைகள் ஒடியாமல் இருக்க உதவுகின்றன.
வேர்கள் விழுதுகளை நோக்கி ஆதி முதல் கொண்டு இருப்பவன் நான். உன்னை விட நானே பெரியவன் என விதண்டாவாதம் செய்வதில்லை..
அன்னையின் வயிற்றிலே இருக்கும் போதே நான் சந்தா கட்ட துவங்கி விட்டேன் என்று ஆர்ப்பரிப்பது காமிக்ஸ் ஐ நேசிக்கும் ஒரு உண்மையான சந்தாதாரனின் குரலாக இருக்க முடியுமா?
சந்தா கட்டுபவர்களுக்கு அது பெருமித உணர்வை தரக்கூடும். அதை காமிக்ஸ் -ன் மேல் வரக்கூடிய வாத்சல்யத்தினால் வரக்கூடியது.. இயல்பானது.. அது தலைக்கனமாக மாறுமாயின் அது எங்கே போய் முடியும்.?
எஸ் டி வி இது போல் ஆக்ரோஷமாக எழுதுவது இது முதல் முறையும் அல்ல. அவர் கனவுலகத்தில் என்ன எழுதினார் என்பது தெரியாது.. ஆனால் தளத்தில் எழுதி இருக்கும் தொனி கண்டனத்துக்குரியது.
சந்தா செலுத்துபவர்கள் சில சலுகையை எதிர்பார்ப்பதில் தவறில்லை. அதை தெரிவிக்கும் விதத்தில் தளத்திற்கும் தளத்தின் உரிமையாளருக்கும் கண்ணியக் குறைவு ஏற்படாத வண்ணம் தெரிவிக்கலாம்.
வழுக்குப் பாறை திருநாவுக்கரசு அவர்களும் சந்தாதாரர்களுக்கு கூரியர் தொகை இல்லாமல் செய்யலாம் என்று கேட்டிருந்தார். அவர் கேட்டிருந்த விதம் அவர் மேல் உள்ள மதிப்பை அதிகரித்தது.
இங்கு ஒரு காமிரேடு பிரயோகப்படுத்தி இருக்கும் சொற்றொடர்களை பாருங்களேன்
" சந்தாவை ஆகா ஓகோ பேஷ் பேஷ் சொல்லுபவர்கள் "
"'பஞ்சாயத்து முடிஞ்சு போச்சு சந்தாகாரனுக்கு நாமக்கட்டி தான் "
உரையாடல் இடையே பதிலளிக்க விழை யும் சகோதரி ரம்யாவுக்கு கிடைத்த பதில்
" நீங்க என்ன நாட்டாமையா? "
பொதுவெளி நாகரிகம் இல்லாமல் இது போல் உரையாடும் சங்கர் கிலானி போன்றவர்களை புறந்தள்ளி விடலாம்.
ஒரு சந்தாவை கட்டிவிட்டு ஒட்டு மொத்த எல்லா சந்தாதாரர்களையும் கூட்டுக்கு அழைத்து சந்தாக்காரனுக்கு நாமக்கட்டி தான் என்று சொல்லுகிறார்..
இவர்களைப் போன்றவர்களுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியமே இல்லை..
ஆனால் எஸ் டி வி அப்படிப்பட்டவர் அல்ல.
கோபம் கண்ணை மறைக்கும் போது சிறிது அமைதியாக இருந்து பதிவு எழுதலாம்.
பேரழிவை ஏற்படுத்தும் பிரம்மாஸ்த்திரத்தை வில்லில் இருந்து விடுவித்த பின்னும் அதை திரும்பப் பெற இயலும். ஆனால் கொட்டிய வார்த்தைகளையும் எழுதிய வாக்கியங்களையும் அழிக்க முயன்றாலும் கூட அது ஏற்படுத்திய காயங்களை மாற்ற இயலாது.
நண்பர் என கருதப்பட்டவர்களாலே முதுகில் குத்தப்படுவதும் அன்பு பாராட்டுபவர்கள் என நம்பப்படுபவர்களாலேயே கல்லடிக்கு உள்ளாவதும் எடிட்டர் சாருக்கு புதிதில்லை தான்.
எடிட்டர் சார் ஒரு சமார்த்தியசாலி அல்ல.
17 வயதில் கோட்டை போட்டுக்கொண்டு வெளிநாடுகளுக்கு பயணித்து பல பதிப்பகங்களுக்கு ஏறி இறங்கி செலவழித்த நேரம் பணம் அறிவு இவற்றை அதே வெளிநாட்டில் ஒரு எம்பிஏ படித்து 1990களில் உலகமயமாக்கல் துவங்கிய போது அந்த படிப்பை பயன்படுத்தி ஒரு செல்வ சீமானாக திளைத்து இருக்கலாம்..
மனம் விரும்பிய தொழில் என்று உழைப்பு நேரம் என செலவழித்து அச்சு எந்திரங்கள் விற்பதினால் கிடைக்கும் பணத்தையும் வங்கிகளில் கடன் வாங்கியும் உருப்படி இல்லாத இந்த தொழிலில் ஈடுபட்டு 300 ரூபாய் வவுச்சருக்கு 3000 பதில்கள் சொல்ல வேண்டிய நிலைமை.
இன்னமும் காலதாமதமாகவில்லை. ஜூனியர் எடிட்டரை இந்த சிரமங்களில் எல்லாம் இருந்து விடுவித்து வெளிநாட்டுக்கு அனுப்பி அச்சுத்துறை சம்பந்தப்பட்ட வணிக மேலாண்மை குறித்து படிக்க வைத்து அவரையாவது ஒரு உன்னத நிலைக்கு கொண்டு போக வைக்க வேண்டும்.
உங்களுடைய அனுபவம்என்ன? அறிவாற்றல் என்ன? அவற்றையெல்லாம் மனம் விரும்புகிறது என்பதனால் இந்த தொழிலில் ஈடுபட்டு எத்தனை தான் இழப்பீர்கள்..?
வாசகர் சங்கமம் என்பதற்காக நீங்கள் வாரி இறைக்கும் பணம் வெறும் விழலுக்கு பாய்ச்சிய நீராகவே மாறுகிறது.
// மெல்லிய வருத்தம் எல்லாம் எனக்கு இல்லை. ஆனந்த் அம்பானியின் இடை அளவு பெரிய வருத்தம். //
Deleteஎன்ன இருந்தாலும் இளவரசரின் இடையளவு வருத்தம்னு சொல்லி இருக்கலாம் நீங்க...
Arivarasu ரவி சகோ
Delete😂😂😂😂😂
அருமையாக சொல்லி உள்ளீர்கள் செல்வம் அபிராமி சகோ
Delete// வாசகர் சங்கமம் என்பதற்காக நீங்கள் வாரி இறைக்கும் பணம் வெறும் விழலுக்கு பாய்ச்சிய நீராகவே மாறுகிறது. //
Deleteவாசகர்களுக்கு பன்னை அன்புடன் வைத்து அனுப்புவது,
வாசகர் சந்திப்பில் பன் வழங்குவது,
பலநேரங்களில் இனிப்புகள் வழங்கி மகிழ்வது,
ஒவ்வொரு வாசகர் சந்திப்பிலும் ஆகும் பலசெலவுகளை ஏற்றுக் கொள்வது,
முத்து மினி காமிக்ஸ்கள் வெளியிட்ட தருணத்தில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி வழங்கியது,
மறைந்த வாசகர் பழனிவேல் அவர்களின் குடும்பத்திற்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட நிதியை வழங்குவது,
இதெல்லாம் கண்ணுக்கு தெரிந்தவை,கண்ணுக்குத் தெரியாமல் பல உதவிகள் செய்து கொண்டு இருக்கலாம்...
இதற்கெல்லாம் அவர் பாராட்டை எதிர்பார்க்கவில்லையே...
இச்செயல்கள் அவரின் அன்பு மற்றும் பொறுப்பை வெளிப்படுத்துகின்றன...
எனது தனிப்பட்ட கருத்து யாதெனில் ஆசிரியர் போன்றவர்களை பாராட்டவில்லை என்றாலும் விமர்சனங்களையாவது கொஞ்சம் நாசூக்காக வைக்கலாம்...
-எல்லாவற்றையும் தாண்டி காமிக்ஸ் மீதான காதலே அவரை இயக்குகிறது...
//இதற்கெல்லாம் அவர் பாராட்டை எதிர்பார்க்கவில்லையே...
Deleteஇச்செயல்கள் அவரின் அன்பு மற்றும் பொறுப்பை வெளிப்படுத்துகின்றன...
எனது தனிப்பட்ட கருத்து யாதெனில் ஆசிரியர் போன்றவர்களை பாராட்டவில்லை என்றாலும் விமர்சனங்களையாவது கொஞ்சம் நாசூக்காக வைக்கலாம்...
-எல்லாவற்றையும் தாண்டி காமிக்ஸ் மீதான காதலே அவரை இயக்குகிறது...//
+9
செனா அனா ஜி.. உள்ளுக்குள் எந்த அளவுக்கு வருத்தமும் ஆதங்கமும் இருந்திருந்தால் நீங்கள் இப்படியொரு பதிவை - அதுவும் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் - எழுதியிருப்பீர்கள் என்பதை உணர முடிகிறது!
Deleteஇந்த 300 ருபாய் கூப்பனால் பிரச்சனைகள் எழும் என்பது குறித்து முன்பே கணிக்க முடிந்ததால், அட்டவணை வெளியான இரண்டாவது நாளிலேயே எடிட்டருக்கு தனிப்பட்ட முறையில் இதைப் பற்றி தெரிவித்திருந்தேன்! ஆனால், ஒரு மூ.ச படலத்திற்கு பிறகுதான் முன்னூறு ரூபாய் கூப்பன் குறித்த முக்கிய முடிவை எடுக்கமுடியும் என்று 'விதி எழுதிய வாட்ஸ்அப் வரிகள்' இருந்தால் அதை யாரால் மாற்ற இயலும்?😰
ஒரு நல்ல மனிதர், ஒரு நல்ல நண்பர், ஒரு நல்ல எடிட்டர், ஒரு நல்ல காமிக்ஸ் காதலர் என்பதையெல்லாம் தாண்டி இவர் மாடஸ்டியின் நண்பராகுமளவுக்குத் தகுதியானவரா என்று கேட்டால் 'இல்லை' என்று தான் சொல்லுவேன்!😑
// மாடஸ்டியின் நண்பராகுமளவுக்குத் தகுதியானவரா என்று கேட்டால் 'இல்லை' என்று தான் சொல்லுவேன்!😑
Delete//
என்னைத் தாண்டிதான் உள்ளே வரனும்னு குறுக்கே ஒரு இளவரசர் நின்றுக் கொண்டு இருக்கும்போது....
கார்வினை தாண்டி சென்று மாடஸ்டியை பார்த்தி விடலாம்
Deleteஆனால் இளவரசரை இருக்க மாடஸ்டி பார்க்க முடியாது
அறிவரசு & சகோ.. 😝😝😝
Delete// ஜூனியர் எடிட்டரை இந்த சிரமங்களில் எல்லாம் இருந்து விடுவித்து வெளிநாட்டுக்கு அனுப்பி அச்சுத்துறை சம்பந்தப்பட்ட வணிக மேலாண்மை குறித்து படிக்க வைத்து அவரையாவது ஒரு உன்னத நிலைக்கு கொண்டு போக வைக்க வேண்டும்.//
Delete+1 வரிக்கு வரி உண்டன்படுகிறேன்
வர வர இளவரசர் உங்களுக்கு காமெடியன் ஆகிவிட்டார். நேற்று அவரின் இடையலகை ரசித்த நீங்கள் எல்லாம் அவரின் ஒன்னரை டன் மிதியை கொஞ்சம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
Delete@ PfB 😂😂😂😂😂
Delete@selvam abirami : வணக்கம் சார் ....பொதுவாகவே நம் தளத்தினில் இடப்படும் பின்னிரவுப் பின்னூட்டங்கள் ஏதேனும் பிம்பிலிக்கா ID-லிருந்து பகடிகளாகவோ, காட்டங்களின் வெளிப்பாடுகளாகவோ இருப்பதே நடைமுறை ! So உங்களின் உள்ளத்திலிருந்தான நெடும் பின்னூட்டம் makes for a welcome change !! அர்த்த ராத்திரியிலும் இதற்கென நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மெனெக்கெடலுக்கும் உளமார்ந்த அன்புக்கும் ஒரு கோடி நன்றிகள் சார் !
Deleteஇது போலான flash points ....fraying tempers நமது வலைப்பூவினில் துளிர் விடும் நேரங்களில் உடனே லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு, என் தரப்பு நியாயங்கள், விசனங்களுக்கு விளக்கங்கள் - என ஒரு பதிவையே போட்டுத் தாக்கிட முனைந்திருப்பேன் ! ஆனால், எத்தனை மகா மக்கு மண்டையனாக இருந்தாலுமே, காலம் எனும் மகா ஆசான் கற்றுத் தரும் பாடங்களை ஏதேனுமொரு கட்டத்தில் தலைக்குள் ஏற்றிக் கொள்ளத்தானே வேணும் ? So அதன் பலனே - வாடிக்கையான அந்த "எட்றா சம்முவம் லேப்டாப்பை " என்ற நமைச்சல் இந்த முறை எழவில்லை ! Over a period of time நன்றாகவே நான் புரிந்து கொண்ட விஷயமொன்று உண்டு sir !! இதயத்தைப் பிளந்து உள்ளிருப்பது ஒரு கரும் படலம் அல்ல என்பதை காட்சிப்பொருளாக்கிட நம்பளுக்கு ஆஞ்சநேயரின் ஆசிகளும் லேது ; openheart surgery செய்திட டாக்டர் செரியனின் ஆற்றலும் லேது ! தொண்டை கிழிய நான் என்ன தான் கூவினாலும் அதுவும் பகடியாவதோ, அல்லது அடுத்த விவாதப் பொருளாவதோ இக்கட common practice தானே சார் ?! So அதற்கென நான் செலவிடும் வரிகளை "சாம்பலின் சங்கீதம்" பணியினில் செலவிட்டேன் எனில் பொது நன்மை உண்டாகிடும் அல்லவா ?
இருந்தும், உங்களின் ஆதங்கங்கள் கலந்த பின்னூட்டத்தினை "நன்றி சார் " என்ற ஒற்றை வரியோடு கடந்து சென்றிட மனசு ஒப்பவில்லை என்பதால், எண்ணங்களை yet another பதிவாக்கிடாது, ஒரு பதிலாக மாத்திரமே இங்கேயே பதிவு செய்கிறேன் ! பின்னூட்டங்களுக்கு மத்தியில் புதைந்து கிடப்பது பல நேரங்களில், பலரது பார்வைகளுக்குப் போகிடாது என்பது இந்த நொடியில் ஒரு பாசிட்டிவ் ஆகவே தென்படுகிறது சார் !
continues......
@selvam abirami sir :
Deleteரொம்ப காலமாகவே எனக்கு நானே ஒரு பட்டப்பெயர் வைத்துக் கொண்டிருப்பதை யாரும் அறியமாட்டார்கள். "ஆந்தைக் கண்ணன், முழியாங்கண்ணன்" என்பனவெல்லாம் லோக்கலாய் தென்படுவதால், கொஞ்சம் கெத்தாக இருக்கட்டுமே என - இங்கிலீஷில் பெயர் வைத்துக் கொண்டேன் !
"The Man They Love to Hate " !!
ரெண்டு நிமிஷம் பொறுமையாய் யோசியுங்களேன் - அதன் கனகச்சிதப் பொருத்தம் miss ஆக வாய்ப்பே இராது !
*ஓராண்டின் பேக்கிங் + டப்பா + கூரியர் செலவுகள் மட்டுமே - சந்தா ஒன்றுக்கு ரூ.740 ஆகிறது. தற்போதைய அட்டவணையினில் 2026-க்கென நாம் விளம்பரப்படுத்தியுள்ள புக்சின் கிரயங்களை கூட்டிப் பார்த்த கையோடு - இந்த ரூ.740 -ஐ சேர்த்து ஒரு டோட்டல் போட்டுக்கோங்க ! இனி அறிவிக்கப்பட்டிருக்கும் சந்தாத் தொகையோடு ஒப்பிட்டுப் பாருங்களேன் - உங்கள் சிரத்தில் சாத்தப்பட்டிருப்பது எவ்வளவு ? ; நாம் கையிலிருந்து போடுவது எம்புட்டு ? என்பது புரிபடும். ஆனால் 'அஸ்கு-பிஸ்கு - வார்டான்னாலே நாங்க குட்டுவோம் தான் !! இந்த யோகம் வடிவேலுவுக்கு அப்புறம்எத்தினி பேருக்கு சார் கிட்டும் ?
*ஒற்றை அட்டவணையினில் உள்ள இதழ்களினை வெளியிட மட்டுமே 14 வெவ்வேறு சர்வதேச பதிப்பகக் குழுமங்களிடமிருந்து முன்கூட்டிய அனுமதிகள் பெற்றுத்தான் நான் சுட்டுவிரலைக் கூட அசைக்க முடியும் ! சிலரிடம் சுலபமாய் வேலைகள் ஆகி விடும் ! பலரிடம் பந்தி முடிந்த பின்னே, இலையெடுக்க ட்ரம்மும் கையுமாய் நிற்கும் சிப்பந்தியினைப் போல புழக்கடை வாசலில் மாதங்களாய் தவமிருக்க வேண்டி வரும் ! இதோ - இன்னமும் ஆகஸ்டில் கேட்டதொரு கதைத்தொடருக்கான பதிலுக்கு வெயிட்டிங் !! Yet - "எங்களுக்கென தனிப்பட்டதாய் நீ என்ன இழவை அறிவிச்சிருக்கே ?? ஒண்ணும் இல்லியே ...போவியா ?!" என்ற வாஞ்சைகளின் வெளிப்பாடு நமக்கே நமக்கானது தானே சார் ?
*"கிட்டங்கி நிரம்பி வழியுது ; அடுத்த வருஷ புக்ஸை உள்ளே வைக்கணும்னா 2020 -க்கு முன்பான மிகுதிகளை ஒண்ணு எடைக்குப் போடணும் ; அல்லது யாருக்கேனும் பயன்தரும் விதமாய் விலையின்றியாச்சும் தந்திட வேணும் !" என்ற மகாசிந்தனையில் ரூ.300 வவுச்சரை முன்மொழியும் போது முகரையோடு குத்து வாங்கும் வரமுமே "எடிட்டர் exclusive " தானே சார் ?
*5 மாத உழைப்பின் மத்தியினில் - "இந்த நண்பர்களுக்கெல்லாம் இது ரசிக்குமா ? அந்த நண்பர்களுக்கெல்லாம் அது புடிக்குமா ?" என்ற ரீதியிலான கனவுகளும், ஒரு நூறு சுயகேள்விகளும் கரம்கோர்த்திருப்பதை சிந்தைக்குக் கொண்டு செல்ல பொறுமைகள் at a premium என்பது எனக்கு ஸ்பஷ்டமாய் தெரியும் சார் ! Yet - எனக்கு இயன்ற உச்சத்தைத் தர இயன்ற சகல குட்டிக் கரணங்களையும் போட்டேன் என்ற திருப்தி மட்டுமே போதும் ; and இந்த நொடியில் இல்லாது போயினும் - ஆண்டின் பயணம் நிகழ்ந்திடும் நாட்களில், கதைத்தேர்வுகளின் வீரியங்கள் புரிந்திடாது போகாது என்ற நம்பிக்கையுமே நம்ம வண்டியினை ஓட்டிடப் போதும் என்று தீர்மானிப்பதுமே நம்பளுக்கே நம்பளுக்கான privilege தானே சார் ?
*க்ளாசில் பாதியோ, முக்காலோ நிரம்பி இருப்பினும், காலியான பகுதியினை 5 வருஷங்களுக்கு ஞாபகம் வைச்சிருந்தேனும் கொண்டு வந்து, பொதுவெளியில் இறக்கி, 'நீ எதுக்காகவோ ரெண்டு மிதிக்கிறியா ? தோ - நானும் என் பங்குக்கு ரெண்டு !!" என குதூகலமாய் கடன் தீர்ப்பதை தரிசிப்பதும் நம்பளது சுக அனுபவ லிஸ்டில் சேர்த்தி தானே சார் ?
இப்போ சொல்லுங்களேன் - "The Man They Love to Hate " என்ற பெயருக்குப் பூரண அருகதை அடியேனுக்கு உண்டா-இல்லியா என்று ? And செம பொருத்தமான பெயரை தேடிப் பிடித்துக் கொண்டதற்கு எனக்கு நானே ஷொட்டு வைத்துக் கொள்ளவேணும் அல்லவா ?
continues...
Oh yes - இதெல்லாம் பின்னே எதுக்கு ? ஒழுங்கா பிள்ள குட்டிய பிழைக்க வைக்கும் வழிய பாத்துட்டு, நாலு காசு சம்பாரிக்கும் வேலையை செய்யலாமே ? என்ற உங்களின் அங்கலாய்ப்பு நியாயம் தான் சார் ! ஆனால் புதுசாய் ஒவ்வொரு கதையைப் பார்க்கும் போதும், இன்னமும் பஞ்சுமிட்டாயைப் பார்த்த புள்ளையைப் போல துள்ளிடும் அந்த மனசை, மிஷின் விற்று காசு பார்க்கும் போதும் miss செய்வேனே ?
DeleteOh yes - காலத்தின் போக்கில் கனத்ததொரு சருமத்தை வளர்த்துக் கொண்டிருப்பதால், முன்போல பகடிகளும், விமர்சனங்களும் நோவுவதில்லை தான் சார் ! ஆனாலும், குறையே காண முடியா ஒரு perfection-ஐ தேடி, பிழையே காண முடியா ஒரு முழுமையினை நாடி, விமர்சிப்போரை வென்று காட்ட இன்னமும் ஓடியே தீருவேனென்று மனசு அடம் பிடிக்கிறதே சார் - ஞான் எந்தா செய்யூ ?
Oh yes - மாற்றுப் பிழைப்புகள் சாத்தியமே சார் & நான் இந்தத் துறைக்குள் நிற்பதும் சமூக சேவை செய்யும் பொருட்டு என்றெல்லாம் அள்ளி விடவும் மாட்டேன் சார் ! ஆனால் இது இத்துறையினில் இது எனது Year # 42. எனது ஆப்த பள்ளி நண்பன் ஒரு பெரும் பட்டாசு நிறுவனத்தின் பங்குதாரர். மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்து விட்டு, ஆபீஸ் திரும்பும் வழியிலேயே தலை தொங்கிப் போய் Dead on Arrival என்று அவனை தூக்கிக் கொண்டு போன சமயத்தில் அவனுக்கு வயசு 43 தான் ! So கிட்டத்தட்ட ஒரு மித ஆயுசுக்காரனின் ஆயுட்காலத்தினை already இத்துறைக்குள் போட்டாச்சு ! By now, வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஆகிப் போய்விட்டதை ஓரம்கட்டி விட்டு இனிமேல் புதுசா இந்த வயசுக்கு மேல் எதை சாதிக்கப் போறோம் சார் ? And யார் கண்டது - இங்கே மூ.ச.ன்னா புதுசான வேறொரு துறையில் வேறு ஏதாச்சுமொரு 'ச' இராதென்பது என்ன நிச்சயம் ?
More than anything else, மிஞ்சிப் போனால் சில ரௌத்திர வெளிப்பாடுகளும், கனமான வார்த்தைகளும் தானே சார் - நாம் சந்திக்க நேர்ந்துள்ளவை ? காலுக்குள் மிதிபட்டு பச்சைப் பிள்ளையை இழந்தவர்களின் கதிக்கு முன்னே இதெல்லாம் ஒரு மேட்டராகவாச்சும் ஆகுமா ? சளிக்கு மருந்து என்று ஒரு இழவைக் குடிக்கக் கொடுத்துவிட்டு, 21 பிள்ளைகளைப் பறிகொடுத்தோரின் வலிகளின் முன்னே இதெல்லாம் ஒரு விஷயமாவாது ஆகுமா ?
என்ன - ஜூனியர் எடிட்டராக மட்டுமன்றி, அவர் நம்ம பிள்ளையாகவும் இருப்பதால், இந்த நோவுகளை நான் தாண்டிப் போகும் அதே சுலபத்துடன் அவனால் கையாள இயலவில்லை ! பற்றாக்குறைக்கு நமது மொழிபெயர்ப்பாள சகோதரிகளும் இந்த blog-ஐ பார்ப்போர் என்ற முறையில், அவர்களை எண்ணியும் நெளிந்தது போலுள்ளது !
ஒரே saving grace - இவற்றைக் கண்டு சங்கடம் கொள்ள சீனியர் எடிட்டர் இனியும் இல்லை ! So அந்த விதத்தில் me happy !
And ரைட்டாகவோ, தப்பாகவோ, அப்பா என்னிடம் ஒப்படைத்ததை எனக்குத் தெரிந்த விதத்தில் முன்னெடுத்துச் செல்லும் கடமை என்னிடமுள்ளது சார் ! ஜூனியரும் இதே போல கருதிடுவாரா - மாட்டாரா ? என்ற கேள்விக்கான விடைகளை காலமே சொல்லட்டுமே ?! நதி தனக்கென ஒரு பாதையை நிர்ணயித்து முன்செல்வது போல வாழ்க்கை அவனுக்கென்ன விதித்துள்ள பாதையில் பயணிக்கச் செய்யட்டும் சார் !
நம்பளோ - க்ளாஸின் நிறைவான பகுதியினை நோக்கியபடியே மிச்ச காலத்தை ஒட்டிப்புடலாம் சார் ! There are enough positives to hold me in good stead for a very very long period of time !!
Thanks again for the time & the thoughts sir...!
ஆசிரியர் இல்லாத வகுப்பில் பகடியாய் ஆரம்பித்த உரையாடல், யாரோ ஒரு ஃபேக் ஐடியால் பொதுவெளிக்கு வந்து, அதன் ரிப்பிள் எஃபெக்ட் இந்த அளவு போகும் என்பதை எதிர்பார்க்கவில்லை சார். உங்கள் மனதை இந்த அளவு காயப்படுத்தி எதையும் சாதித்து விடும் எண்ணம் துளியும் இல்லை. ஒரு விழாக்கால நேரத்தில் உங்களையும் நிறுவனத்தில் பணி செய்பவர்களையும் காயப்ப்படுத்தியதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள் சார்.
Deleteநினைத்திருந்தால் 6000 + 900 கூரியர் சார்ஜ். அது சந்தாதார்களுக்கு இலவசம். 6000 மட்டும் கட்டுங்கள் என ஆடிமாத ஆஃபர் போல விளம்பரப்படுத்தியிருக்கலாம். இனி 300 கூப்பனோ அல்லது வேறு எதுவுமோ வந்தாலும்.. மனதில் இருக்கும் குற்ற உணர்ச்சி போகுமா எனத் தெரியவில்லை. நிதானமும் வார்த்தைத் தேர்வுகளில் மிகுந்த கவனமும் வேண்டும் என புரிந்து கொள்ளக் கொடுத்திருக்கும் இந்த விலை அதிகம் தான். வந்ததும் உடனே படித்துவிடும் டெக்ஸ் இந்தமுறை கைகளில் கனக்கிறது.
Again, Truly sorry sir ! Hope we can get past this.
பிரீயா விடுங்க சார் ; நிஜம் சில நேரங்களில் சுடும் தான். ஆனால் அதற்காக அதனை புறம்தள்ள முடியாது!
Deleteநான் என்னிக்கோ நிஜத்துடன் சமரசம் செய்து கொண்டேன் என்பதால் - am already past this!
இதோ - புதுசாய் ஒரு கார்ட்டூன் அம்மணி கண்ணில் பட்டுள்ளார் - அவரை study பண்ணும் முனைப்பினில் நானிப்போது பிசி! And "குருதியில் பூத்த குறிஞ்சி மலரும்" வெயிட்டிங்! So can't sit around idle!
எடிட்டர் சார்.. 🙏🙏💐💐💐💐
Deleteநன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐
Delete// குருதியில் பூத்த குறிஞ்சி மலரும்" வெயிட்டிங்! //
Deleteஉங்கள் வஜனத்துக்காண்டி வெயிட்டிங் சார்...
// நினைத்திருந்தால் 6000 + 900 கூரியர் சார்ஜ். அது சந்தாதார்களுக்கு இலவசம். 6000 மட்டும் கட்டுங்கள் என ஆடிமாத ஆஃபர் போல விளம்பரப்படுத்தியிருக்கலாம். //
Deleteஉண்மை. ஆனால் நமது ஆசிரியர் தான் காமிக்ஸ் காதலரே.
// நேற்று அவரின் இடையலகை ரசித்த நீங்கள் எல்லாம் அவரின் ஒன்னரை டன் மிதியை கொஞ்சம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். //
Deleteஅடி வாங்கினாலும்,மிதி வாங்கினாலும் இளவரசரின் இடையே சிறந்தது...
வட நாட்டு இடையைப் புறக்கணிப்போம்...
உள்ளூர் இடையை ஆதரிப்போம்...
இதுவே இப்போதைய கோஷம்...🤣🤣🤣
நான் நேசிக்கும் காமிக்ஸ் வாசிப்பைத் தாண்டி அடுத்த தலைமுறைக்கான பாதையை செதுக்க அவ்வப்போது ஆக்கபூர்வமாக சின்னஞ்சிறு செயல்களில் செயல்படுவது உண்டு//
Deleteகடந்த முறை நீங்கள் எவ்வளவு நேரம் செலவிட்டீர்கள் என்பது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது நண்பா. இந்த வவுச்சர் பற்றி தெரிந்தவுடன் எனக்கு உடனடியாக மனதில் பட்ட ஐடியாவும் அதுவே. நீங்கள் கனவுலகம் குழவில் இல்லை என்பதை நேற்று தான் உணர்ந்தேன். பிறகு போன் சிக்கல்களால் குழுவில் தாற்காலிகமாக நீங்கள் இல்லை என்று குமாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். சிக்கல்கள் தீர்ந்து விரைவில் குழுவில் மறுபடி இணைய ஆவலுடன் காத்திருக்கிறோம்.
அறிவரசு @ Rofl 😂 🤣🤣🤣🤣😂
Delete💟இல்லமெல்லாம் காமிக்ஸ் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி 💟.
ReplyDeleteஇந்த வார்த்தையில் எத்தனை உண்மை👌.
மாதமாதம் புத்தகங்கள் கைக்கு கிடைப்பது அளப்பறிய மகிழ்ச்சின்னாலும், இந்த தீபாவளி மலர்களை கையில் ஏந்தும் சுகத்துக்கு எந்த மாத காமிக்ஸ்ம் ஈடாகாது,
Including எத்தனையோ அருமையான கதைகள் வந்தாபோதிலும்.
இந்த வருசமும் அதே ஃபீலிங்.
"அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் " என்ற குறுங் கார்டுடன்,
2026 அட்டவணை மினி இதழோடு,
அழகான தரத்தில் ஆக்சன் சூறாவளியாய் டெக்ஸ் தீபாவளி மலர்,
எந்த தைரியத்திலோ, என்றுமில்லாமல் டெக்ஸ்க்கு எதிராக அதிரடியாக களமிறங்கியுள்ள "ராக் ஸ்டார் ராபின்" என இரண்டு சிறப்பிதழ்களும் இல்லத்தை தேடி வந்தாயிற்று.
*ராபின்....*
இந்த இரண்டு புத்தகங்களில்,
*"இரத்தமின்றி யுத்தம்"* தலைப்பு பச்சென மனதில் ஒட்டிக்கொண்டது.
"அதெப்படி இரத்தமின்றி யுத்தம்? அதும் ரத்ததிலகம் ராபின் கதையில்?" என்பதை அறிய ஆவலை தூண்டுவதாக 2 வது பெரிய புக்கின் மேலட்டை வழவழப்பும்,
ஆர்வத்தை தூண்டும் அட்டைப்படமும்,
பிசிறு தட்டாத உட்பக்க சித்திரங்களும் பார்த்த போது "டெக்ஸ்க்கு ஈக்வலான படை பலத்தோடு" ராபின் தீபாவளி யுத்தத்துக்கு இறங்கிருப்பது புரிந்தது. fantastic making 🔥.
*தெறிக்கும் தீபாவளி மலர்*...
இந்த வருடம் வந்த எல்லா டெக்ஸ் கதைகளிலும் ஏதாவது ஒரு ஈர்ப்பும்,
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் போரடிக்காத கதைக்களமும் இருக்கவே செய்தது. அப்ப இந்த தீபாவளி மலர் மட்டும் டோமோட்டா தொக்கா என்ன?.
ராபின் 2 புத்தகங்களில் வந்து சமாளிக்கும் அளவுக்கு தகுதியாக டெக்ஸ் இந்த முறை கெட்டியான அட்டையில்,
கனமான எடையோடு,
கண்களை பளீரிட வைக்கும்
344 பக்க கலரில், தரமான தரத்தோடு
தெறிக்க விடுகிறார்.
"கண்டிப்பாக அனலாக பறக்கும் கதை" என்பதை சொல்கிறது முன் பின் அட்டைப் படங்கள்.
"ஓடும் ரயிலில் டெக்ஸ், ரயிலை துரத்தியபடி டெக்ஸை குறி வைக்கும் வேட்டையர்கள்" என்ற காரணத்தினாலே இதை முன்னட்டையாக தேர்வு செய்து விட்டோம்.
ஆனா புத்தகத்தை திருப்பி பார்த்தால்
பாலைவன பரப்பிலுள்ள மரத்தில்,
"தலைகீழாக தொங்கும் சடலங்களை பறந்தபடியே கொத்தி திங்கும் கழுகுகளை
விரட்டியடிக்க விரைந்து வரும் டெக்ஸ்ம் கார்சனும்,
"தங்களுக்கு இன்னுமிரண்டு இரை கிடைத்த" சந்தோஷத்தில், ஆக்ரோஷமாக அவர்களை பின்தொடர்ந்து வரும் கழுகுகள் என,
திகிலூட்டும் விதமான பின்னட்டை அசர வைக்கிறது என்றால், அப்ப உள்ளே கதை
அசர வைக்குமா? வைக்காதா?.
யப்பா என்னாவொரு உயிரோட்டமான Photography 😍❤️.
(இதை முன்னட்டையாக தேர்ந்தெடுக்காமல் போனோமே).
அடித்து சொல்லலாம் - இந்த மாத தீபாவளி மலர்கள் இரண்டும் தீப்பிழம்பு சிதறும் எரிமலையாக எகிறப்போவது நிச்சயம்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.
அனைவருக்கும் அனல் பறக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
🌹.
Robin படித்தாயிற்று...
ReplyDeleteஎடுத்த புத்தகத்தை கீழே வைக்கவே மனமில்லைதான் எனினும், வேலை பளுவும்... PTMமும் சேர்ந்து சதி செய்ததில் ஒரு பன்னிரெண்டு மணி நேரங்கள் துண்டு விழுந்து விட்டது...
"எழுந்து வந்த எதிரி"
விபத்து போல் நடக்கும் கொலைகளை துப்பறிய தொடங்கும் ராபினிற்கு கிடைப்பது புலியின் வால் மட்டுமே... அந்த வாலை கெட்டியாக பிடிக்க முயற்சித்து தன் பக்கம் திருப்ப எத்தனிக்கும் படலமே "இரத்தமின்றி யுத்தம்"
அனைத்திற்கும் சிகரமாய் "வஞ்சம்". நிற்க கூட நேரமின்றி பரபரவென நூறு மீட்டர் போட்டியின் போல்ட் போல, அசராமல் சென்று அதிரடியாக முடிகிறது மூன்றாம் பாகம்...
மார்வின், ஆல்ஃபி, ஆர்ட் மூவருமே ராபினிற்கு தோள் கொடுக்கிறார்கள்...
Positive: Crypto currency போன்ற ஒரு dry subjectல் இருக்கும் வண்டி வண்டியான explanationகளை, நறுக்குத்தெறித்தார் போன்ற அற்புதமான மொழிபெயர்ப்பில் மிளிர்கிறார் நமது ஆசிரியர். Simply superb. அழகான சித்திரங்கள் இருப்பினும், வசனங்களுக்கே என் முதல் பரிசு...
Negative: மூன்று பாகங்களும் ஒரே Hardboundல் வந்திருந்தால் இந்த தீபாவளி டபுள் டமாக்காவாக ஜொலித்த இருக்கும். வராதது பெரும் சோகமே..
முதல் பாக அட்டையில் ஒரு 18+ போட்டு விட்டிருக்கலாம்...
அடுத்த Robin இதழான "எங்கேயோ கேட்ட குரல்" இதன் completion volumeஆ சார்...!?
// அடுத்த Robin இதழான "எங்கேயோ கேட்ட குரல்" இதன் completion volumeஆ சார்...!?// ஆமாம் டாக்டர்
Deleteஜனவரியில் அந்த இதழை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
Deleteகுமார் நல்ல யோசனை...
Deleteஆமாங்க சார், நானும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
Delete// நானும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் //
Deleteபொறுப்பான Student...🤣🤣🤣
பிப்ரவரி சார்....!
Delete😁😁😁
Deleteசேலம் ரகுராமன்... ❤️❤️❤️🙏🙏
ReplyDeleteஅதே தான்.. எடிட்டர் இன் நோக்கம் அழகானது... ❤️🙏👍புரிந்து கொண்டு விட்டீர்கள்... மனம் கனிந்த நன்றி... வாழ்த்துக்கள். ❤️🙏
ஈஸ்வர் சார், நன்றி.
Deleteஅவரே அன்பளிப்பாக கொடுப்பதை விட... நாம் அன்பளிப்பாக மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று எடிட்டர் நினைக்கிறார்..எனக்கு புரிகிறது.... ❤️❤️❤️
ReplyDeleteExcellent...❤️🙏🙏🙏...
அதேதான். கச்சிதமான கருத்து சார்...
Deleteதீபாவளிமலர்கள் இன்னும் மலரவில்லை
ReplyDeleteஎனக்கு பொட்டி வந்து விட்டது 😍
ReplyDeleteவெற்றி வெற்றி
Deleteமாபெரும் வெற்றி குமார்
Deleteசூப்பர்...
Deleteசூப்பர் சகோ
Deleteமெக்ஸிகோவில் ஒரு மாய ரயில்...
ReplyDeleteஇராணுவ படை ஒன்றை உருவாக்கி கிளர்ச்சியை உண்டாக்கி ஆக்ரமிப்பு செய்யும் ஜெனரல் காண்ட்ரேராஸின் கொட்டத்தை அடக்க டெக்ஸும்,கார்ஸனும் களமாடுவதே கதைக் களம்...
"ஓநாயின் குகைக்குள் நுழைய முயலுக்கு ஆசையெனில் அதுவும் ஓநாய் போலவே வேஷம் கட்டணுமாம்"
தங்க இரயிலை தடுத்து நிறுத்த டெக்ஸ் வில்லர் போடும் திட்டமிடல்களும்,வகுக்கும் உத்திகளும் அபாரமானது,அசுர பிரயத்தனமானது,அதன் உழைப்பு கடினமானது...
நம்பமுடியாத சாகஸத்தை நம்பகத்தன்மையான நகர்வுகளோடு கொண்டுபோனது கதாசிரியரின் புத்திசாலித்தனம்...
கதை முடிவுக்கு சற்றுமுன் வரும் ட்விஸ்ட்டை எதிர்பார்க்கவில்லை தான்...
கலர்ல சும்மா தெறிக்குது கதை...
தரமான கெட்டி அட்டையில்,கனமான ஒரு இதழ்...
மேக்கிங்கும் சிறப்பா இருக்கு...
அடுத்த வருஷம் தீபாவளிக்கு இந்த பாக்கியம் இல்லைன்னு நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு...
வன்மேற்கின் சாம்ராட் அசத்துகிறார்...
தீபாவளி வெடிமாதிரி தெறிக்கும் ஆக்ஷன் மேளா,தீபாவளியின் சிறப்பை இன்னும் சற்றே கூட்டியிருப்பது மகிழ்ச்சி...
Sema sema
Delete300 - முதலில் சந்தா கட்டிவிட்டு அதன் பிறகு ஆசிரியரிடம் இது பற்றி நிதானமாக இருந்து விடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.
ReplyDeleteமறுநாள் - என்னிடம் எல்லா புத்தகங்களும் உள்ளது எனவே தேவைபடும் நண்பர்களுக்கு கொடுத்து விடலாம், ஒருவேளை என்னால் சரியான நண்பர்களிடம் கொடுக்க முடியவில்லை என்றால் ஆசிரியர் மூலம் தேவைப்படும் நண்பர்களுக்கு கொடுக்கலாம் என்று 300 கிப்ட் வவுச்சர்ஐ இப்படி உபயோகபடுத்தலாம் என்று முடிவுக்கு வந்து விட்டேன்.
கடந்த இரண்டு நாட்களாக - நண்பர்கள் சிலர் ஐடியாவை பார்த்த பிறகு, அட இது கூட நல்ல ஐடியாவாக இருக்கிறது, பள்ளி குழந்தைகளுக்கு கொடுப்பது மிக சிறந்த ஐடியா. நானும் இந்த நல்செயலில் இணைந்து கொள்கிறேன்.நல்ல யோசனை நண்பர்களே, எனது கிப்ட் வவுச்சர்ரையும் இணைத்து கொள்ளுங்கள்.
ஆல் குட் now.
அன்புடன் வரவேற்கின்றேன் பரணி சார். ஆர்வமுடன் முன்வரும் நண்பர்களுடன் இணைந்து Gift Voucher கிடைத்த உடன் நிறைவேற்றி விடலாம், 1000+ மேற்பட்டவர்கள் பயிலும் இரு பள்ளிகள் யோசைனையில் உள்ளன.
Delete///நல்ல யோசனை நண்பர்களே, எனது கிப்ட் வவுச்சர்ரையும் இணைத்து கொள்ளுங்கள்.///
Deleteபோன் வயர் பிஞ்சு போய் மூனு நாள் ஆச்சுங்க PfB!
தோ மேரி, கிப்ட் வவுச்சரை கிடப்பில் போட்டும் மூனு நாள் ஆச்சு! 😁
இளவரசரே 😂😂😂
Deleteஇளவரசே , வேண்டும் என்பவர்களுக்கு ஆசிரியர் கொடுக்கட்டுமே.. நீங்கள் சொன்னதை நான் ஏற்கனவே கவனித்தேன்.
Deleteநன்றி ரகு.
Delete// கிப்ட் வவுச்சரை கிடப்பில் போட்டும் மூனு நாள் ஆச்சு! 😁//
Deleteஎடிட்டர் சார் மற்றும் / ஈரோடு விஜய் சார் வணக்கம்..
Gift Voucher இன்னமும் நடைமுறை சாத்தியங்கள் உள்ளதாக கருதுகிறேன் சார். பாருங்கள் ரூ.3000/-முதல் ரூ.10000/-வரை மதிப்புள்ள காமிக்ஸ் புத்தககங்களை தனிப்பட்ட முறையில் பள்ளி நூலகத்திற்கு அன்பளிப்பாக கொடுக்கும் நிலையில் எனக்கு இந்நாட்கள் இல்லை. ஆனால் ரூ.300/- க்கு Gift Voucher கிடைத்தால் நண்பர்களுடன் இணைந்து அதனை வெற்றியடையச் செய்ய இயலும். மனம் கவர்ந்த ஹீரோக்கள் கதைகளில் முடியாததை முடிக்கும் போது, அவர்களின் பாணியில் தம்மாந்துண்டாவது செய்ய இயலாதா என நினைக்கின்றேன் சார்.
பாருங்கள், இம்மாத தீபாவளி மலர் டெக்ஸ் வில்லரின் செம தெறிப் பறக்கும் “மெக்ஸிகோவில் ஒரு மாய ரயில்...” 344 பக்க கதையில் 250 பக்கம் வரை டெக்ஸ் தனது திட்டத்தை எப்படி நிறைவேற்றுவார் என்பது கணிக்கக் கூட இயலவில்லை. இன்னும் சொல்லப் போனால் டெக்ஸ் யூகமான கணிப்பில் தான் களத்திற்கே செல்வார். இம்முறை டெக்ஸ் ஏற்றுக்கொண்ட பணி மதில் மேல் பூனையாக வெற்றி வாய்ப்பு இருக்கும். கதையில் “எது முன்னே எது பின்னே” (அது சஸ்பெண்ஸ்) என்பதே வெற்றியை தீர்மானிக்கும். ஹீரோவை கொண்டாடினால் மட்டும் போதுமா என நினைத்துக் கொள்வேன். நாமும் கிடைக்கும் சிறு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆர்வமுடன் உள்ளேன்.
மாணவர்களுக்கு புத்தகம் பரிசளிக்க எனக்கும், என்போன்ற கருத்தும் உள்ளோர்க்கும், என்னை போன்ற சூழ்நிலையில் உள்ளோர்க்கும், இந்த Gift Voucher ஐ ஒரு வாய்ப்பாக கருதுகிறேன் சார்.
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே – மகாகவி
//நன்றி ரகு.//
Deleteநன்றி பரணி சார்..
இப்பூவுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை - ஔவையார்
ரகுராமன் ஜி..
Deleteஉங்கள் நல்ல மனம் வாழ்க!
உங்கள் சேவை எண்ணம் ஓங்குக! 👏👏👏💐💐💐
உங்களின் நல்ல செயல்களுக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு! எனது கூப்பனையும் உங்களிடமே கொடுத்து விடுகிறேன்!
ஓடி விளையாடு பாப்பா! - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடிவிளையாடு பாப்பா! - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா! - பாரதியார்
I am so sad all of my old DETECTIVE ROBIN stories were given to my relatives.
ReplyDeleteNow I am realise DET. ROBIN stories should preserve
" மெக்ஸிகோவில் ஒரு மாய ரயில்..."
ReplyDelete"தெறிக்கும் தீபாவளி 2025"
முதலில் இதழும்..அட்டகாசமான அட்டைப்படமும்..உள்ளே வண்ண சித்திரங்களுமே கண்களை தெறிக்க விட்டன எனில் இதழை வாசிக்க ஆரம்பித்தவுடன் சுமார் இரண்டு மணி நேரம் டெக்ஸ் மட்டுமல்ல டெக்ஸ் குழுவினருமே நெஞ்சை தெறிக்க விட்டு விட்டனர்..எத்தனை திட்டங்கள்..எத்தனை சவால்கள்..எத்தனை எதரிகள் அனைத்தையும் பட்டாஸாய் தெறிக்கவிட்டு மனதை கொள்ளை கொண்டு விட்டார்கள் இந்த டெக்ஸ் உடன் பயணித்த அனைவருமே...அதிலும் இறுதியில் க்ளைமேக்ஸ் நான் நினைத்தே பார்க்க முடியா ஓர் அதிரடி ட்விஸ்ட் ..என்ன சொல்வது என்றே தெரியவில்ல..அனைத்து டெக்ஸ் கதைகளுமே பட்டாஸாய் கவர்ந்து விடுகின்றன என்றாலுமே கூட டெக்ஸின் தலைவாங்கி குரங்கு..பழிவாங்கும் பாவை ..பழி வாங்கும் புயல் சர்வமும் நானே போன்ற சில இதழ்கள் எப்படி அனைவராலும் இன்னமும் அதிகமாய் கவர்ந்து உள்ளதோ அது போன்ற மற்றொரு சாகஸம் இந்த தெறிக்கும் தீபாவளி இதழ் ..சும்மா பன்ச் வசனம்..டமால் .டுமீல் மட்டுமல்லாமல் தனது புத்தி கூர்மையாலும்.மதியூகத்தாலும் ஓர் ராணுவ படையையே வெல்வதுடன் ஓர் இரயிலையே கடத்தி கொண்டு வர செயல்படும் டெக்ஸ் அட்டாகாசபடுத்தி விட்டார்..முதல்வரியை வாசிக்க ஆரம்பித்தது தான் தெரியும்..330 பக்கமும் ஒரே மூச்சில் வாசித்து முடித்தவிட்டு தான் இதழை கீழே வைக்க முடிந்தது.. இதழை வாசித்த முடித்தவுடன் அட்டகாசம்..தெறி..மாஸ்...என எது உச்சபட்ச மகிழ்ச்சியின்..பாராட்டின் வார்த்தையோ அதுவே இந்த இதழுக்கான வார்த்தைகள்..ஓர் அட்டகாசமான திரைப்படம் பார்த்த மகிழ்ச்சியை விட இந்த இதழை வாசித்தவுடன் கிடைத்த மகிழ்வு அசாதரணம்..அட்டைப்படம் சித்திரங்கள் ..மொழி ஆக்கம்..இதழின் தரம் என அனைத்திலும் தெறி தெறி தெறிதான்..இந்த இதழை வாசித்து முடித்த இந்த விநாடி என் முன்னர் யாராவது வந்து அட்டைப்படத்தை கிழித்து விட்டால் டெக்ஸ் கதை எல்லாம் ஒன்று தான் என்று என்றெல்லாம் வசனம் பேசினால் நானே டெக்ஸை போல் அவர்களின் நடுமூக்கில் குத்துவேன் என்பது உறுதி...இன்னமும் இந்த இதழை பற்றி ..சாகஸத்தை பற்றி கதையை பற்றி எழுத சொல்கிறது விரல்கள்..மனமோ மீண்டும் இந்த இதழை விரைவில் மறுவாசிப்பாக்கு என்கிறது ..இது ஓர் கிராபிக் நாவலோ..மனதை தொடும்..அல்லது மனதை நெருடும் கதை களமோ அல்ல தான்..வழக்கமான ஓர் அக்மார்க் கமர்ஷியல் டெக்ஸ் கதையே தான் இதுவும்...ஆனால்...
அருமை...அருமை..அருமை...இந்த இதழுக்காக சம்பந்த பட்ட அனைவருக்குமே எழுந்து நின்று எனது பாராட்டுதல்களை தெரிவித்து கொள்கிறேன்..எனது இரண்டு மணி நேரத்தை மிக மிக பரப்பரப்பாக அந்த மெக்ஸிகோ மண்ணிலும்..மெக்ஸிகோ எல்லையிலும் .அரிஸோனா பகுதியிலும் ஓட வைத்த ஆசிரியர் குழுவிற்கு மீண்டும் ஓர் நன்றி...
சிறப்பு...
Deleteராபின் முதல் பாகம் செம🔥🔥
ReplyDelete200
Delete