Powered By Blogger

Saturday, May 09, 2020

கா to கா !!

நண்பர்களே,

வணக்கம். மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்ப்பதே முக்கிய ஜோலியாகிப் போனாலுமே, கடந்திடும் ஒவ்வொரு நாளையுமே  ஒரு சாதனை தினமாய்ப் பார்க்கத் தோன்றும் இன்றைய காலகட்டத்தில் சற்றே சந்தோஷச் செய்திகளாய்ச் சொல்லட்டுமா   ?  ஒரு மாதிரியாய் மே 6 முதலாய் அச்சகம் + அலுவலகம் இயங்கிட மாவட்ட நிர்வாகம் அனுமதி தந்திட, ஒரு வண்டி ஓட்டரையையும், தூசுப்படலங்களையும் தாண்டி ஆபீசுக்குள் கால் பதித்திட சாத்தியமாகியது ! மார்ச் 24 தேதியிலேயே 'தேமே' என  நிற்கும் டெய்லி காலெண்டர் ; கோமாவில் படுத்துறங்கிய பேஷண்டைப் போல மார்ச்சில் காட்சி தரும் மன்த்லி காலெண்டர் ; பூட்டிக் கிடக்கும் கேபினுக்குள்ளும் அத்துமீறிப் படர்ந்திருந்த தூசு-துப்பட்டை - என நிசப்தமாய்க் காட்சி தந்த சமாச்சாரங்களைக் க்ளியர் செய்த பிற்பாடு, சீட்டில் அமர்ந்த கொஞ்ச நேரத்துக்கு நம்ம XIII பாணியில் திரு திருவென முழித்துக் கொண்டுதானிருக்கத் தோன்றியது ! பணிகள் சீராய் ஓடிக்கொண்டிருந்த பொழுதுகளில், மாதத்தின் முதல் தேதி மைய இலக்காய் எந்நேரமும் மனசுக்குள் ஓடிக்கொண்டிருக்க , ஆபீசே அதற்கேற்ப செயல்பட்டுக் கொண்டிருக்கும் ! மாதத்தின் முன்பாதியில் இருக்கிறோமா ? ; லாஸ்டிலே குந்திக்கினு இருக்கோமா ? என்பதைப் பொறுத்து என்னுள்ளே இருக்கும் சோம்பேறிமாடனும், சுறுசுறுப்பானந்தாவும் மாறி மாறி  தலைகாட்டிக் கொண்டிருப்பர் !  ஆனால் இப்போதோ 45 நாட்களை 'ஏவ்வ்' என்று ஏப்பம் விட்ட பிற்பாடு, சுறுசுறுப்பானந்தா கைலாஸாவில் கிளை ஆரம்பிக்கப் புறப்பட்டுத் தொலைத்து விட்டாரோ - என்ற பயம் லைட்டாகத் தலை தூக்கியது ! ஒரு மாதிரியாய் சோம்பேறிமாடனின் நடு மண்டையில் நாலு குட்டு வைத்த கையோடு, டயபாலிக் & பாக்கி நிற்கும் அந்த '5 நிமிட் பொம்மை புக்கின்' அச்சு வேலைகளை ஜல்தியாய்க் கவனிக்க ஆரம்பித்தோம் !  எந்தச் சாமிப் புண்ணியமோ - ஆகஸ்ட் வரைக்குமான பேப்பரை, ஊரடங்கு துவங்கிடுவதற்கு 2 தினங்களுக்கு முன்பாகவே வாங்கிப் போட முடிந்ததால் இன்று பேப்பரைத் தேடித்திரியும் குரங்கு வேலைகளுக்கு அவசியங்களின்றித் தலை தப்பித்துள்ளது ! அந்த அதிர்ஷ்டம் நிறைய வெகுஜனப் பத்திரிகைகளுக்குக் கூட  வாய்க்கவில்லை என்பதை - நியூஸ்பிரிண்ட்டில் ; சிக்கின சிக்கின காகிதங்களில் அவர்கள் இப்போதெல்லாம் பிரிண்ட் செய்து வருவதைப் பார்க்கும் போது புரிகிறது !! Phew !!! 
அப்புறம் மாலை 5 வரை பணி செய்யலாமென அனுமதி இருப்பினும், மதியத்தோடே ஊர் அடங்கிப் போய் விடுவதால், நாமுமே 2 மணிக்கெல்லாம் மூட்டையைக் கட்டி விடுகிறோம் ! So மெது மெதுவாய் பிரின்டிங் வேலைகளை முடித்த கையோடு பைண்டிங்குக்கு சனி காலையில் மொத்தத்தையும் அனுப்பிவிட்டு - திங்கள் முதலாய் - 'ஹல்லோ...பிரபா ஒயின்சா ? புக்க எப்போ அனுப்புவீங்க ?' என்று குடலை உருவத் தயாராகி விட்டோம் !   வரும் புதன் முதலாய்  5 புக்ஸ் அடங்கிய டப்பிக்களின் டெஸ்பாட்ச் சாத்தியமே என்பது தற்போதைய நிலவரம் !  முகமூடிக் கொள்ளையர் ரேஞ்சில் எட்ட நின்றே காட்சி தரும் நம்மாட்களின் குரல்களைக் கொண்டே இது மைதீனா ? இது அண்ணாச்சியா ? என்று கண்டு பிடிக்க வேண்டி வருகிறது ! திங்கள் முதலாய் அவர்களும் பிசியாகிடுவர் என்பதால் இப்போதைக்கு உங்கள் சகாயமே அவசியமாகிடுகிறது ! 'Please folks - 'யாருக்கேனும் கூரியரை இப்போது அனுப்ப வேண்டாம் !' என்ற வேண்டுகோள் இருந்தாலோ ; 'சொந்த ஊரில் இருக்கிறேன் ; அதனால் இப்போதைக்கு இந்தப் புது முகவரிக்கு அனுப்புங்கள் !' என்ற வேண்டுகோள்கள் இருந்தால் - தயைகூர்ந்தொரு மின்னஞ்சலைத் தட்டி விடுங்களேன் ? அல்லது 98423 19755 என்ற ஆபீஸ் செல் நம்பருக்கொரு வாட்சப் ப்ளீஸ் ! And please note : இங்கே பதிவில் இது குறித்த உங்களின் பின்னூட்டங்கள் வேண்டாமே ; இங்கே பதிவிடும் சமாச்சாரங்கள் நம் front desk-ன் கவனங்களுக்குச் செல்வதில்லை ! So இங்கே பின்னூட்டத்தில் போட்டு விட்டு, அப்புறமாய் நம்மவர்களோடு போனில் WWF நடத்திட வேண்டாமே ? வழக்கம் போல பெற்றுக்கொள்ளத் தயாராக உள்ள நண்பர்களோ எதுவும் செய்யத் தேவையில்லை - புக்குகளைப் படிக்கும் முஸ்தீபுகளைச் செய்வதைத் தவிர்த்து ! 

அப்புறம் - இம்மாத இதழ்களின் அட்டைப்படப் previews தாண்டி, உட்பக்கங்களைக் கண்ணில் காட்டியிரா இதழ்களிலிருந்து சில பக்கங்கள் இதோ : We start with ட்ரெண்ட் !
தொடர்வதோ - அதிகாரியின் அமர்க்களம் : 

பார்த்த மாத்திரத்திலேயே சில அதிகாரி நேசர்களுக்கு - 'அண்ணாத்தே மாடு பத்துறாருடோய்' என்று பாயசம் போடப் பர பரக்குமென்பது புரிகிறது தான் ! ஆனால் அழகான இந்த artwork-ஐப் பார்க்கும் போது அவருக்கும் கடைவாயோரமாய் வழிந்திடக்கூடிய குற்றாலத்தின் புண்ணியத்தில், எண்ணங்கள் திசைமாறிடக் கூடும் என்பேன் ! Simply stunning artwork !! 

ரைட்டு - புது இதழ்களென்ற தேர் மெதுவாய் நகரத் துவங்கிவிட்டது ! And இதனுள் எனது பணிகள் நிறைவுற்றும் விட்டன என்பதால் - What next ? என்ற கேள்வியே இப்போது உள்ளுக்குள் பிரதானப்பட்டு நிற்கிறது ! வழக்கமாய் ஒரு batch இதழ்கள் தயாராகும் போதே அடுத்த மாதத்துப் பணிகளில் எத்தனை சதவிகிதம் இன்னமும் pending என்றே சிந்தனை ஓடிடும் ! ஆனால் இப்போதோ வேறு மாதிரிக்கு குழப்பங்கள் :

1."மாதந்தோறும் முதல் தேதி" எனும் அந்தப் பத்திரமான அட்டவணையை நாம் மறுக்கா மீட்பது எவ்விதமோ ? இந்த ஏப்ரல் batch புக்ஸ் கடைகளை எட்டிப்பிடிக்கக் கூடியதே மே 15 -க்கு மேலே தான் ; அதுவுமே லாரி சர்வீஸ் முழுமையாய் ஓடிடத் துவங்கும் பட்சத்திலும் ; முகவர்கள் மறுபடியும் கடை திறந்து வியாபாரம் பார்த்திடும் தெம்புடன் இருக்கும் பட்சத்திலும் தான் ! 'திபு திபு'வென 5 இதழ்களை இப்போது அவர்களிடம் ஒப்படைத்த கையோடு - எண்ணி பதினைந்தே நாட்களில், ஜூன் முதல் தேதிக்கே அடுத்த செட் இதழ்களை அவர்களிடம் கொண்டு செல்ல பயமாகவுள்ளது ! And அடுத்த செட் இதழ்களுள் - தோர்கல் எனும் பெரிய பட்ஜெட்க்காரர் காத்துள்ளார் எனும் போது எனது பயங்கள் இன்னமும் கூடுகின்றன !

2.Maybe ; just maybe - தோர்கல் biggie-ஐ சித்தே பின்நகற்றிடல் தேவலாமோ ? எல்லாமே முடங்கிக் கிடக்கும் இந்தத் தருணத்தில் -  ஒற்றை இதழுக்கென 450 ரூபாய்களைக் கோருவதை நினைத்தாலே கொஞ்சம் மலைப்பாக உள்ளது ! Of course - முன்கூட்டியே சந்தா செலுத்தியுள்ள நண்பர்களுக்கு இதனில் உடன்பாடிராது தான் ; ஆனால் கடைகளின் விற்பனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டி வரும்போது, சின்னதாய் இந்த juggling செய்தலில் சாதகங்கள் இல்லாது போகுமா ? 

3.அப்புறம் ஒவ்வொரு மாதமும் "ஆன்லைன் ஆர்டர்கள்" என்பது ஒரு ஓசை எழுப்பா பிஸ்டலைப் போல வீரியமான துணைவன் ! தற்சமயம் நன்பர்களுள் கணிசமானோர்க்கு WFH தான் எனும் போது ஆன்லைனில் ஆர்டர் செய்து புக்குகளை வரவழைத்துப் படிப்பது சுலபமே ! ஆனால் கூரியர் சர்வீஸின் சேவைகள் நார்மலுக்குத் திரும்பிட வேண்டுமே என்ற நெருடல் உள்ளுக்குள் ! Maybe இந்த மாதத்துக்கு மட்டுமேனும் Speed Post பற்றி நாம் யோசிக்கத் தேவைப்படுமோ ? இன்றைக்கு எதையுமே அறுதியிட்டுச் சொல்ல இயலா சூழல் எனும் போது முயற்சித்துப் பார்த்த பின்பே சாதக-பாதகங்கள் புலனாகிடும் ! அவ்விதம் முயற்சிக்கும் சமயத்தில் ஏதேனும் சொதப்பிடும் பட்சம், அதைச் சரி செய்திடும் அவகாசங்களை முகம் சுளிக்காது நீங்கள் தந்திட தயாரெனில் we can give it a shot ! 

So கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 300 புக்குகளைப் போட்ட அனுபவஸ்தனாயன்றி, புதுசாய் நடக்கப் படிக்கும் பச்சைப் புள்ளையைப் போலவே, நிறைய விஷயங்களை முற்றிலும் புதிதாய்க் கற்றுணர வேண்டிய சந்தர்ப்பமாகவே இது தென்படுகிறது ! ஒன்றேயொன்று மட்டும் நிச்சயம் folks : நம் காமிக்ஸ் நேசத்தை முன்னெப்போதையும்விட செம இறுக்கமாய்ப் பற்றிக்கொண்டாக வேண்டிய தருணமிது !! தொடரவிருக்கும் ஒவ்வொரு நாளும் இந்த 'பொம்மை புக்' சமாச்சாரங்கள் ; இந்தப் 'படக்கதை பயணங்கள் ' நமக்கு எத்தனை ஆத்மார்த்தமான அவசியங்களென்பதை நிரூபிக்கக் காத்துள்ள பொழுதுகள் !! Fingers crossed that we sail through these times safely !!

இந்த இடைப்பட்டுள்ள நாட்களில் ஆங்காங்கே FB -ல் ; வாட்சப் குழுக்களில் - காமிக்ஸ் வாசிப்பு ; காமிக்ஸ் கும்மியடிகள் ; காமிக்ஸ் போட்டிகள் என்று களை கட்டி வந்துள்ளதைக் குறிப்பிட்டு நிறைய நண்பர்கள் மின்னஞ்சலில் தகவல் சொல்லியிருந்தனர் !! இங்குமே நாம் ஏதேதோ சொந்தக் கதைகள் -சோகக்கதைகள் - ஊர் சுற்றிய கதைகள் ; போட்டிகள் என நாட்களை ஜாலியாய் நகற்றிட முனைந்ததால் மாமூலான கலகலப்பு இந்த வைரஸ் நாட்களில் கூட மங்கிடவில்லை ! இந்தச் சிரமங்களையெல்லாம் பத்திரமாய்த் தாண்டியதொரு தூரத்து நாளில் இதை நினைவுகூர்ந்திடும் போது, 'அன்றைய ரணகளத்திலும் தாத்தா அடிச்ச கூத்து பத்திச் சொல்லட்டுமாடா பேராண்டி ?' என்று அசை போடுவோமோ ? அவ்விதமான அசை போடும் பொழுதுகளில் இந்த காமிக்ஸ் நினைவுகள் சார்ந்த போட்டிகள் நிச்சயம் ஒரு முன்னணி இடம் பிடிக்கும் என்பது நிச்சயம் ! And சமீபமாய் நண்பர்களின் குழுக்களுக்குள் நிகழ்ந்துள்ள அந்தக் 'கடுதாசி எழுதும் போட்டி ' நிரம்பவே பேசப்படுவது உறுதி !   "நம்ம ஹீரோக்களோடு நீங்க போனில் பேசினாக்கா என்ன பேசுவீர்கள் ?" என்ற கொக்கியை 2 வாரங்களுக்கு முன்னே நான் பதிவில் போட்ட சமயம், எனக்கு முதலில் தோன்றிய எண்ணமே - "'தல' டெக்ஸுக்கு ஒரு லெட்டர் போடுவதாயின் என்ன எழுதுவீர்களோ ?" என்ற ரீதியில் உங்களை எழுதச் சொல்லிடத் தான் ! ஆனால் அப்புறமாய் கேள்வியை கொஞ்சம் மாற்றி அமைத்துக் கொண்டேன் ! ஆனால் என் மண்டையில் உதித்த concept-ல் இன்னும் ஒரு படி மேலே போய் - "from  ஹீரோ to ஹீரோ " என்று அமைத்திருந்தது  செம அகுடியா !! And வெற்றி பெற்றிருந்த அந்தக் கடுதாசி smply sparkling !!

இந்த நொடியில் - அரசவையின் official கடுதாசிக்காரர்" என்ற பதவிக்கு நண்பர்களின் அகுடியாவை சித்தே இரவல் வாங்கிட்டால் தப்பில்லை என்று நினைத்தேன் !! ஏற்கனவே தாரை தாரையாய்க் கண்ணீரை வரவழைக்கும் ஒரு கடுதாசிக்காரர் எனக்குப் பரிச்சயம் என்றாலும், இம்முறை அவருக்கு கடும் போட்டி தர இங்கே நிறையவே ஆற்றலாளர்கள் இருப்பது நிச்சயம் என்று தோன்றுகிறது ! நீங்க செய்ய வேண்டியது இதுவே :

கார்சன் !! பின்னணியில் இருந்தே அதிகாரிக்கு அசுர பலம் சேர்க்கும் ரவுசு பார்ட்டி !

கார்வின் ! பின்னணியில் இருந்தே தொழிலதிபர்களின் தோழிக்கு அசுர பலம் சேர்க்கும் லவுசு பார்ட்டி !

அந்தக் 'கா' இந்தக் 'கா'வுக்கொரு கடுதாசி எழுதினாலோ ; அல்லது இந்தக் 'கா' அந்தக் 'கா'வுக்கொரு லெட்டர் போட்டாலோ  - எவ்விதமிருக்கும் ? கற்பனையில் ஒரு கடுதாசி அல்லது 2 கடுதாசிகள் வரைந்திடலே இந்தப் போட்டி ! 

வெற்றி பெறும் கடுதாசிக்காரருக்கு ஜம்போ சீசன் 3 சந்தா நம் அன்புடன் !

Before I sign out - இன்னொரு ஜாலியான quiz கூட !! போரடித்துக் கிடப்பது நாம் மட்டுமல்ல - இத்தாலிய டெக்ஸ் ரசிகர்களும் தான் என்பதைச் சுட்டிக்காட்டி, நமது இத்தாலிய மொழிபெயர்ப்பாளர் ஒரு போட்டியினைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் போட்டிருந்தார் ! அங்கே கேட்கப்பட்டிருந்த கேள்விகளை நாமுமே பகிர்ந்திடுவோமா ?

'தல' டெக்ஸுக்கு நிஜத்தில் வயது 72 என்றாலும், கதைகளில் அவர் மார்க்கண்டேயரே என்பதில் no secrets ! இங்கு கேள்வியே அவரது வயது சார்ந்ததே :

*கதைகளில் சுழன்றடிக்கும் டெக்ஸுக்கு என்ன வயதென்று அனுமானிப்பீர்களோ ? தமிழில் ஒரு "டெக்ஸ் சினிமா" எடுத்தால் மஞ்சள்சட்டை அணிவிக்க யாரைத் தேர்வு செய்வீர்களோ ?

*வறுத்த கறிப் புகழ் கார்சனுக்கு age ? ஆட்டுத்தாடி பொருத்திட யாரையோ ? 

*'வோ' புகழ் டைகர் ஜாக்குக்கு ? Again age & roleplay ?

*கதை கேட்டே காலத்தை ஓட்டும் கிட் வில்லருக்கு ? என்ன வயதென்பீர்கள் ? யாரைப் போடலாம் அவர் வேஷம் கட்ட ? 

Bye guys - see you around !! Have a safe sunday !!

UPDATE :

நண்பர் அப்பு சிவாவின் கைவண்ணத்தில் !!!



டெக்ஸுக்கு ஆர்யா அவ்வளவாய் செட் ஆகலை ; but பாக்கி மூவரும் simply superb !! 

311 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு.......

    ReplyDelete
  2. உள்ளேன் ஐயா !

    ReplyDelete
  3. அருமை!
    பதிவை இன்னும் சிலமுறைப் படித்துப் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  4. சார் இப்போதாவது வரவிருக்கும் இதழ்கள் என்ன என்று சொல்லலாமே?

    ReplyDelete
  5. அனைவர்க்கும் வணக்கம்.

    ReplyDelete
  6. Tex age - 40, surya may be fit

    Karsan age 47 - vijay sethupathy may be fit

    Tiger jack age 42 - ragava lawrence may be fit

    Kid willer age 19 - g v prakash

    ReplyDelete
  7. // சின்னதாய் இந்த juggling செய்தலில் சாதகங்கள் இல்லாது போகுமா ? //
    கால சூழ்நிலையை பொறுத்து முடிவுகளை மேற்கொள்வதில் தவறில்லை சார்,உங்களுக்கு எது செளகர்யமோ அதை செய்யுங்கள் சார்......

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சாய்ஸ் சார்.

      Delete
  8. இரவு வணக்கம் சார் 🙏🏼

    .

    ReplyDelete
  9. இரவு வணக்கம்.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. இரவு வணக்கம் சார் 🙏🏼

    ReplyDelete
  12. டெக்ஸ் வில்லர் 45 வயது.

    கார்சன் 55 வயது

    டைகர் ஜாக் 35 வயது

    கிட்வில்லர் 20வயது

    ReplyDelete
    Replies
    1. இந்த வயதுகள் மிகச்சரி. அருமை GP

      Delete
  13. இந்த புத்தகங்களை இப்போது அனுப்பிவிட்டு அடுத்த செட் புத்தகங்களை ஜூலை மாதம் ஒன்றாம் தேதி அனுப்பலாம் சார்.

    ReplyDelete
  14. Tex - kamal
    Karson - prakashraj(inspired from the movie mozhi)
    Tiger - vijay sethupathi
    Kid - vaibav

    ReplyDelete
  15. டெக்ஸ் - விஷால்

    கார்சன் - விக்ரம்

    டைகர் ஜாக் - விஜய் ஆன்டனி

    கிட் வில்லர் - சித்தார்த்.

    ReplyDelete
  16. TeX willed 45 ஆதி

    கார்சன் 52 விக்ரம்

    Tiger jack 40 சமுத்திரகனி

    கிட் வில்லர் 23 சித்தார்த்

    ReplyDelete
  17. 40-60-40-20
    விக்ரம், சத்யராஜ், பிரபு விக்ரம், அருண்விஜய்

    ReplyDelete
  18. விஜயன் சார்,

    இந்த மாத (அதாவது ஏப்ரல்) மாத புத்தகங்கள் சில நாட்களில் தயாராகி டப்பாக்குள் அடைக்க போகிறார்கள் என்பது சந்தோஷமான விஷயம்!

    வழக்கம் போல் உங்கள் எழுத்துநடை சுவாரசியமாக உள்ளது! ஆனால் படிக்க ஆரம்பித்தவுடன் பதிவு முடித்து போன மாதிரி உள்ளது; ஒருவேளை நீண்ட இடைவேளைக்கு பிறகு வழக்கமாக நமது காமிக்ஸ் பணிகளை துவக்கிய மாதிரி வழக்கமான காமிக்ஸ் தகவல்கள் பற்றி எழுதுவதில், ஸ்டார்டிங் trouble என நினைக்கிறேன் .

    டெக்ஸ் மற்றும் ட்ரெண்ட்(?) கதையின் டீசர் அருமை, இன்னும் கொஞ்சம் கதையின் சில பக்கங்களை காண்பித்தால் நன்றாக இருக்கும்.

    டெக்ஸ் அவ்வளவு பெரிய எருமையை வேட்டையாடி கார்சனுக்கு சுக்கா தயார் செய்ய போகிறாரா? :-)

    ReplyDelete
    Replies
    1. எதையுமே யூகிக்க இயலா ; எதையுமே உறுதிபடக் கணிக்க இயலா ஒருவித மந்த நிலை சார் இன்றைய தொழில்கள் சகலத்துக்கும் !

      நம்மளவில் புது இதழ்கள் களமிறங்கிய பின்னே விற்பனைகள் எவ்விதமிருக்குமென்பதைப் பார்க்கும் வரையிலும், உள்ளுக்குள் படக் படக்கென்று தானிருக்கும் ! So வழக்கம் போல் ரவுசுகள் செய்யத் தோன்றவில்லை !

      Delete
    2. // நம்மளவில் புது இதழ்கள் களமிறங்கிய பின்னே விற்பனைகள் எவ்விதமிருக்குமென்பதைப் பார்க்கும் வரையிலும், உள்ளுக்குள் படக் படக்கென்று தானிருக்கும் ! So வழக்கம் போல் ரவுசுகள் செய்யத் தோன்றவில்லை ! //

      Very true! I understood!! Agreed Sir!!!

      Delete
    3. வருத்ததான ஒன்றே..;-(

      Delete
  19. T, டெக்ஸ் அஜித் கார்சன் நாசர் கிட் ஜெயம்ரவி டைகர் ஜாக் சூரி 45,62 21,35கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
  20. இந்த lock-down ரிலாக்ஸ் செய்யப்பட்ட பின்னர் Speed போஸ்ட் பற்றி எனது அனுபவம்:
    எனக்கு எனது மாமனார் சில நாட்டு மருந்து பொருள்களை சீர்காழியில் இருந்து ஸ்பீட் போஸ்டில் இந்த திங்கள்கிழமை அனுப்பிவைத்தார், அது இன்று வரை வரவில்லை; ஆன்லைன் track செய்து பார்க்கும் போது இன்று அது திருச்சியில் உள்ளதாக தெரிந்து கொண்டேன். இன்னும் எத்தனை நாட்கள் கழித்து இங்கு வரும் என்று தெரியவில்லை. வழக்கமாக 2-3 தினங்களில் அவர்கள் அனுப்பும் பார்சல்கள் எனக்கு கிடைத்துவிடும்.

    ஸ்பீட் போஸ்டில் மிகவும் அத்தியாவசியமான பொருள்களை மட்டும் வாங்குவதாக எனது மாமனார் சொன்னார்.

    இந்த லாக்-down ரிலாக்ஸ் செய்த பின்னர் பல இடங்களில் ஸ்டார்டிங் trouble என நினைக்கிறேன்.

    எனவே கொரியர் மற்றும் ஸ்பீட் போஸ்டில் அனுப்புவது (அவர்கள் சேவையின் வேகம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதா) பற்றி நன்றாக விசாரித்த பின்னர் அனுப்பவும், அல்லது இவைகளில் சேவை நார்மலான பின்னர் அனுப்புவது நலம் என நினைக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. Speed Post-ன் ஸ்பீடு இது தானாக்கும் !! கிழிஞ்சது ! நல்ல காலத்துக்குச் சொன்னீர்கள் சார் !

      Delete
    2. எங்கள் மயிலை போஸ்டல் சார் கோவிச்சுக்க போறாரு ...

      கவனம் சார்...:-)

      Delete
  21. அதிகாரியின் ஆக்சன்பலரை சத்தமில்லாமல் சுறுசுறுப்பாக்கியிருக்கும் என்பது உறுதி. பி கேர் புல்நான் என்னச்சொன்னேன்.கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அதிகாரியுடனொரு அதிகாலை !

      Delete
  22. டெக்ஸ் 50 வயசு
    (லிலித்தை கைபிடித்து, காதலிக்கும் போது தோராயமாக 30வயசு)

    கிட் வில்லர் 20வயசு

    கிட் கார்சன் 60வயசு

    டைகர் ஜாக் 45வயசு

    ReplyDelete
    Replies
    1. கிட் வில்லர் ரொம்பவே குயந்தைப் பையனாத் தெரியறானே சார் ?

      Delete
    2. செவ்விந்திய சாப்பாடு அப்படி சார். சின்ன வயசு ஆனா ஹெவி பாடி! உள்ளுக்குள் ஒரு விவகாரம் என்னான்னா, கிட் வயசு ஏறினா டெக்ஸ் வயசு இன்னும் ஏறும் சார். "இரத்த ஒப்பந்தம் "---கதைல லிலித்தை கைபிடித்தபோது டெக்ஸ் வயசு கிட்டத்தட்ட 30அனுமானிக்கலாம் ஓவியங்கள் வாயிலாக....!! அந்த கணக்கு படி பார்தம்னா கிட்டுக்கு 20னாவே டெக்ஸ் 50; கிட் 25னா டெக்ஸ்க்கு 55 வந்துடும் சார்....!! ஹி...ஹி...

      Delete
  23. நம்ம கெப்பாக்குட்டிக்கு தந்தி வேணும்னா அடிக்கலாம்.. கடிதாசு எழுதற அளவுக்கு நமக்கு சத்து பத்தாது..
    அதெல்லாம் தலைவர் டிபார்ட்மெண்ட் ஆச்சே..

    ReplyDelete
    Replies
    1. என்னாய்யா, அதிகாரி கதைக்கு பக்கம் பக்கமாக "பாயாசம்" வெக்க முடியும்! ஆனா அரைப் பக்கத்தில கடிதாசி போட முடியாதா???????

      Delete
    2. அதானே ...ரம்மி ஒரு கடுதாசியை எடுத்து விடுய்யா..
      :-)

      Delete
  24. டெக்ஸ் ஓவியங்கள் அசத்துகிறது. கதையை முழுதும் படிக்கும் போது ஸ்டன்னிங் ஆகப்போவது உறுதி! மரணநடைக்கு பிறகு டெக்ஸை பஃப்பலோக்களுக்கு மிக அருகே பார்ப்பது மனசுக்கு இனிக்குது. மரணநடை செம ஹிட். சோ, இதுவும் அதகள ஹிட் ஆக இருக்க போவது உறுதி!

    ReplyDelete
  25. கடிதாசினா தலைவர் பரணிதரன், பாரதி நந்தீஸ்வரன் அண்ணா, ஜேடர்பாளையம் சரவணக்குமார்....போன்ற நண்பர்களின் விமர்சனக் கடிதங்கள் தான் நினைவு வருகின்றன...!!! நான் நிறைய எழுத இவர்கள் பெரிதும் இன்ஸ்பிரேசன் ஆக அமைந்தவர்கள்! ஏற்கெனவே ஜம்போ சீசன் 3 பரிசாக வென்று விட்டாச்சுது! புதிய நண்பர் யாரும் வெல்லும் பொருட்டு வழிவிட்டு வாழ்த்துகிறேன்! அட்வான்ஸ்டு வாழ்த்துகள் டூ வின்னர்!

    ReplyDelete
    Replies
    1. அப்படிலாம் சொல்லப்புடாது.
      உங்கள் எழுத்து திறமையை பார்க்க ஆவலாக இருக்கிறோம்.
      பரிசை வாங்கி யாருக்காவது கொடுத்துக்கலாம்

      Delete
    2. நானெல்லாம் சின்னப்புள்ள டெக்ஸ்...நீங்களும் பாபுவும் அசத்தி இருந்தீர்கள்...இங்கேயும் தொடருங்கள்...:-)

      Delete
    3. தலைவர் & சகோவும் சொல்லிட்டா அப்பீல் ஏது....!!!!

      Delete
  26. டெக்ஸ் - 50ish
    கார்சன் -60ish
    டைகர் - 40ish
    கிட் - 20ish

    OLD /Middle /Now
    டெக்ஸ் - MGR. /கமல். /அஜித்
    கார்சன் - அசோகன். /விசு. /சத்யராஜ்
    டைகர் - சிவாஜி. /அருண்பாண்டியன் /ஆர்யா
    கிட் - சிவகுமார். /ராம்கி. / ஹரிஷ் கல்யான்

    டெக்ஸ்ஸாக நடிக்க மீசை இருக்கூடாது

    ReplyDelete
    Replies
    1. ஹை...கார்சனாக விசுவா ? செத்தாண்டா சேகர் !!

      Delete
  27. மீண்டும் காமிக்ஸ் இதழ்கள் பற்றிய சுவாரசியமான பதிவு.மகிழ்ச்சி.
    தயாரான ஏப்ரல் இதழ்களை அனுப்புதல் நலம்.மீண்டும் ஜூலை ஒன்றிலிருந்து இதழ்களை வெளியிடலாம்.
    கண்டிப்பாக இந்த வருடம் தோர்கல் வரவேண்டும் சார்.நான் 2020ல் மிக ஆவலோடு எதிர்பார்த்த இதழ்களில் இதுவும் ஒன்று.பெரும்பாலான நண்பர்களின் கருத்துக்கள் தோர்கல் வருகை தரவேண்டியதாகத் தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. ///இந்த வருடம் தோர்கல் வரவேண்டும்///--- ஆம். நிறைய பேரின் எதிர்பார்ப்பு லிஸ்ட்ல இருக்கும் இதழ் இது.

      Delete
    2. என்னுடைய எதிர் பார்ப்பில் முதல் இடத்தில் இருக்கும் இதழ் இது தான் இந்த வருடம்.

      Delete

  28. *கதைகளில் சுழன்றடிக்கும் டெக்ஸுக்கு என்ன வயதென்று அனுமானிப்பீர்களோ ? தமிழில் ஒரு "டெக்ஸ் சினிமா" எடுத்தால் மஞ்சள்சட்டை அணிவிக்க யாரைத் தேர்வு செய்வீர்களோ ?


    டெக்ஸ்:வயது 45 To 47

    டெக்ஸ்: கட்டான உடல் கௌபாய் உடை சரியாக பொருந்துவது கணீர் குரல் விக்ரம் டெக்ஸிக்கு சரியாக பொருந்துவார்


    *வறுத்த கறிப் புகழ் கார்சனுக்கு age ? ஆட்டுத்தாடி பொருத்திட யாரையோ


    கிட் கார்சன் : வயது 55 To 57
    கிட் கார்சன் : கார்சனின் நையாண்டிகளுக்கு விஜய் சேதுபதியே சரியாக இருப்பார்


    *'வோ' புகழ் டைகர் ஜாக்குக்கு ? Again age & roleplay ?

    டைகர்: வன மகனில் ஜெயம்ரவி காட்டுவாசி வேடம் அதை நினைத்துப்பார்த்தால் டைகருக்கு ஜெயம்ரவி சரியாக இருப்பார்
    டைகர் : வயது 38 To 40


    *கதை கேட்டே காலத்தை ஓட்டும் கிட் வில்லருக்கு ? என்ன வயதென்பீர்கள் ? யாரைப் போடலாம் அவர் வேஷம் கட்ட ?

    கிட் : வயது 18 To 20

    கிட் : தனுஷ் சரியாக இருப்பார்







    ReplyDelete
    Replies
    1. ஹை...அந்த ஜெயம் ரவி தேர்வு சூப்பர் சத்யா !

      Delete
  29. டெக்ஸ் வயது 50.
    கார்சன் வயது 60.
    டைகர் வயது 45.
    கிட் வயது 20.
    டெக்ஸ்-எம் ஜி ஆர்.
    கார்சன்-நம்பியார்.
    டைகர்-முத்து ராமன்.
    கிட்-விஜயகுமார்.

    ReplyDelete
  30. ஏப்ரல் இதழ்கள் கடைகளில் கிடைக்குமா சார்?

    ReplyDelete
  31. இரவுக்கழுகுகளுக்கு நள்ளிரவு வணக்கங்கள்.

    ReplyDelete
  32. ட்ரெண்டின் வண்ணப்பக்கங்களும் அதிகாரியின் கறுப்பு வெள்ளைப் பக்கங்களும் கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படி இருந்தன.
    எத்தண்டி எருமையை அடக்குகின்றார் தல.இதழ்களைச் சீக்கிரம் கண்ணில் காட்டுங்கள் சார்.

    ReplyDelete
  33. காமிக்ஸ் படிக்கும் நாமெல்லாம் ஆண்டவரின் சிறப்பு ஆசிப் பெற்றவர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.வேலையில்லை,வருமானமில்லை ஆனாலும்
    வீட்டில் அடைந்து கிடப்பதும் மனக்குரங்கைச் சமாளிப்பதும் மிகப் பெரிய சிரமமாக இருந்தது.ஆனால் நம் போன்ற காமிக்ஸ் காதலர்களுக்கு மனவலிமைப் பெறுவதும் ஆற்றல் நல்கிடுவதும் எளிதாக்கின காமிக்ஸ்கள்.மனச்சோர்வை விரட்டியடித்தன ;தன்னம்பிக்கை தந்தன;
    எதையும் தாங்கும் வலிமை தந்தன இந்த லாக் டவுன் நாட்களில்.
    வாழ்க காமிக்ஸ் நேசம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை நண்பரே...:-)

      Delete
    2. அழகாய்ச் சொன்னீர்கள் சார் !

      Delete
    3. காமிக்ஸ் & காமிக்ஸ் சார்ந்த உலகம் இல்லைனா ரொம்பவே சிரமமான காரியமாக இருந்து இருக்கும் இந்த சோதனை கட்டத்தை சமாளிப்பது.....!!! காமிக்ஸ் உலகின் முக்கியத்துவத்தை அருமையாக சொன்னீங்க சரவணன்! சூப்பர்.

      Delete
  34. 45 நாட்கள் கழித்து அலுவலகத்தில் ஆஜரரகி இருக்கும் எடிட்டர் மற்றும் குழுவினருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  35. டெக்ஸின் இதழ்களின் சித்திரங்கள் அருமை.

    அதிகாரிக்கு ஏறத்தாள 50 வயதிருக்கும்
    டெக்ஸின் இடத்திற்கு விக்ரம்

    கார்சனுக்கு தோராயமாக 60 வயதிருக்கலாம்
    கார்சனுக்கு டூப்பாக நாசரை போடலாம்

    டைகர் ஜாக் இற்கு சுமார் 40 வயதிருக்கும்
    டைகர் ஜாக் இற்கு டூப்பாய் Dhoom 2 இல் வந்த உதய் சோப்ரா

    கிட் இக்கு சுமார் 20 வயதிருக்கும்
    கிட் இற்கு டூப்பாய் கெளதம் கார்திக்கை போடலாம்


    ReplyDelete
  36. தோர்கலை பின்னர் வெளியிடுவது.,...... என்னளவில் , உங்களுக்கு எதுவெல்லாம் தற்போதைய நிலையில் தோன்றுகின்றதோ .. செயற்படுத்துங்கள் சார். எனது ஆதரவு என்றும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கும், நம்பிக்கைக்கும் நன்றிகள் சார் !!

      Delete
  37. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம்
    டெக்ஸ் வயது 40. கார்த்தி
    கார்சன் வயது 50. விக்ரம்
    டைகர் வயது. 38. ஜெயம் ரவி
    கிட் வயது. 17 ஜி.வி.பிரகாஷ்

    ReplyDelete
    Replies
    1. அட...செம யூத்தான 'தல' தான் சார் - உங்கள் கணிப்பில் !

      Delete
    2. அனைவருமே சரியான தேர்வாகவும் தெரிகிறார்கள் நண்பரே...செம..:-)

      Delete
  38. டெக்‌ஷ் வயது 45-விஜய்.
    கார்சன் வயது 55-சத்யராஜ்.
    டைகர் வயது 44-விசால்.
    கிட் வயது 25-அதர்வா.

    ReplyDelete
    Replies
    1. அதர்வா மாத்திரம் ஓ.கே. மாதிரித் தோணுது சார் !

      Delete
  39. டெக்ஸ் : மகேந்திரன் பரமசிவம்
    கார்சன் : ஈரோடு விஜய்
    டைகர் ஜாக் : தலீவர் பரணிதரன்
    கிட்வில்லர் : வேற யாரு.. நாந்தேன்.!

    இங்க வர்ர சில அகுடியாக்களைப் பாக்கறச்சே நாங்களே பெட்டரா பண்ணுவோம்னு தோணுது..! :-)

    ReplyDelete
    Replies
    1. அப்புறம்.. சரியா அவங்கஅவங்க வயசுப்படி லிஸ்ட்டு போட்டிருக்கேன்.! அது சரியில்ல இது சரியில்லன்னு ஆரும் குறுக்கால வந்து கொஸீன் பண்ணக்கூடாது சொல்லிப்புட்டேன்.!

      Delete
    2. பெஸ்ட் சாய்ஸ் கண்ணன். BTW டெக்ஸ் என்றால் என் மனதில் எப்போதும் தோன்றும் உருவம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.மட்டுமே. வேணும்னா டெக்ஸ் ரோல்க்கு மஹி மற்றும் பத்து சாரை சாய்ஸ் ஆக வைக்கலாம். மற்றவர்கள் தேர்வு சூப்பர்.

      Delete
    3. ஆக.. கிட் வில்லர் தேர்வு சரியாக இருக்குன்னு ஏத்துக்கிட்டாங்க போல.. யாஹூஹூ..!!

      Delete
    4. ஆமாமா.கிட் வில்லர் தேர்வு மிகச் சரியானது. ஏன்னா வயாசயிடுச்சின்னா குருதை மேல வர முடியாது. உக்காந்து கதை கேக்கற கேரக்டர் தான் பண்ண முடியும். என்ன மேக்கப்புக்கான பட்ஜட் தான் அதிகமாயிடும். பரவால்லை அட்ஜஸ் பண்ணிக்கலாம்.

      Delete
    5. மகேந்திரன் @ செம பதில். மிகவும் ரசித்தேன்.

      Delete
    6. நல்ல தேர்வுகள் கண்ணரே...ஆனா கிட் வில்லரா உங்களை நினைச்சா பயந்து வருது...உங்க வயசுக்கு நீங்க டைகர் தோழர் ஜிம்மிக்கு தான் சரியா இருக்கும்...:-)

      Delete
    7. வறுத்த கறியையும், ஆட்டுத் தாடியையும் தள்ளி விட சைக்கிள் கேப்பில் ஒரு 'யூத்தை' சிக்க வைத்தாச்சாக்கும் ?

      Delete
  40. டெக்ஸ் வில்லர்..

    யம்மாடியோ.. ஆர்ட்வொர்க் சும்மா அள்ளுது.!

    ReplyDelete
  41. ட்ரெண்ட் as usual..
    திருத்தமான படங்கள்..👌👌

    ReplyDelete
  42. கார்சன் to கார்வின்

    நான் பரவால்லடா மாப்ளே.! உன்னை நெனச்சாத்தான் ரொம்பப் பரிதாபமா இருக்கு.! இப்படியே அம்மஞ்சல்லிக்கி பிரயோஜனமில்லாம போயிட்டு இருக்குதே.. இதுக்கு என்னதாண்டா முடிவு.?


    கார்லின் to கார்சன்

    கேலி பண்ணாதிங்க மாமா.! நானாவது பரவால்ல.. ஏதோ சண்டைபயிற்சி.. நீச்சல்பயிற்சின்னு லேசுபாசாவாச்சும் காலத்தை ஓட்டிட்டு இருக்கேன்.! உம்ம பொழப்பு குதிரைமேலயே முடிஞ்சிரும் போலயே.!?

    கார்சன் to கார்வின்

    க்கும்.. அந்தப் பொழப்புக்கு குதிரைசவாரியே மேலுடோய்.!

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் ஒரு கடுதாசியாயா வென்று என்று ஃபீல் பண்ணுவோர் இதனை தந்தியாக (தத்தியாக அல்ல) பாவித்துக்கொள்ளவும்.!:-)

      Delete
    2. யோவ் நீ படிச்சது ஒரே ஒரு மட சட்டி கதை அத அத வெச்சிட்டு கார்வின் காஞ்சு போயி திரிகிறார் என்று சொல்வதெல்லாம் டூ டூ மச்.
      இப்ப கதை படி கார்சன்தான் காஞ்சு போய் இருக்கிறது

      Delete
  43. டெக்ஸ் வயது - 47,விக்ரம்
    கார்சன் வயது - 52,நெப்போலியன்
    டைகர் வயது - 45, பசுபதி
    கிட் வயது - 23,தனுஷ்.

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸுக்கும், தாத்தாவுக்குமிடையே வெறும் 5 வயசு வித்தியாசமா சார் ? ஆவ்வ் !!

      Delete
    2. கிட் வில்லர் அவ்ளோ ஒல்லி கெடையாதே

      Delete
    3. // வெறும் 5 வயசு வித்தியாசமா சார் ? ஆவ்வ் !! //
      வயதை ஏற்றினால் மூட்டுவலி வரும் என்று கார்சன் தாத்தா கோரிக்கை விடுத்ததால் கொஞ்சம் குறைச்சிங்.......

      Delete
    4. // கிட் வில்லர் அவ்ளோ ஒல்லி கெடையாதே //
      தனுஷை கொஞ்சம் உடம்பை ஏத்த சொல்லிடுவோம்....ஹி,ஹி...

      Delete
  44. // வரும் புதன் முதலாய் 5 புக்ஸ் அடங்கிய டப்பிக்களின் டெஸ்பாட்ச் சாத்தியமே என்பது தற்போதைய நிலவரம் ! //
    ஹைய்யா,காலையில் ஒரு அருமையான தகவல் சார்.........
    மகிழ்ச்சி,மகிழ்ச்சி,மகிழ்ச்சி........

    ReplyDelete
  45. Tex- சிம்பு அல்லது விட்டலாசாரிர்
    படத்தில் வரும் யாரோ ஒரு
    ஒருவர்(தோட்டா உருவாக்கும்
    மந்திரம் தெரிந்தவர்).

    Karsan- வேற யாரு பவர்ஸ்டார் தான்.

    Tiger jack - எம்.ஜி. ஆர்.

    Kit viller - சந்தானம்.

    ReplyDelete
    Replies
    1. ஏன் எல்லோரையும் நகைச்சுவை நடிகர்களாகத் தேர்வு செய்தீர்கள் ?

      Delete
    2. தேர்வுகள் உங்களைப்போலவே அருமையாக இருக்கிறது

      Delete
  46. அடுத்த வாரம் புத்தகங்கள் வருவது மகிழ்ச்சி! சோம்பிக்கிடக்கும் மனதிற்கு சிறு மகிழ்ச்சியை தரக்கூடிய சக்தி காமிக்ஸ்க்கு மட்டுமே உள்ளது! அதுவும் டெக்ஸ் & டயபாலிக் வருவது மட்டட்டற்ற மகிழ்ச்சியே!இம்மாதம் 15 தேதிக்குள் புத்தகங்கள் வருவதால், அடுத்த மாத புத்தகங்களை 10 ம் தேதிக்கு வருகிற மாதிரி பார்த்துக் கொண்டால் நல்லாயிருக்கும் சார். ஏனென்றால் எல்லோருக்கும் பணம் புரட்ட வசதியாக இருக்கும்! இந்த வருடத்தை 10 தேதிக்குள் கடத்தி விட்டு அடுத்த வருடத்திலிருந்து வழக்கமான 1ந்தேதி பாணியை கடைப்பிடிக்கலாம்! அதே போல அடுத்த மாத தோர்கல் ஒரே இதழ் 450 என்பதால் மற்ற கதைகளும் சேர்ந்தால் பட்ஜெட் எகிறி அடிக்க தொடங்கிடும். லாக்டவுன் நேரத்தை கணக்கில் கொண்டால் எல்லோராலும் அனைத்தையும் வாங்குவது சிரமமே! ஒற்றை இதழ்கள் வாங்குவது எல்லோருக்கும் சாத்தியமாக இருந்தாலும், விற்பனையாளர்கள் திணறுவது நிச்சயமே! ஆதலால் தோர்கலை நவம்பர் அல்லது டிசம்பருக்கு ஒத்தி வைத்தால் நல்லாயிருக்கும் என்பது எனது கருத்து, நவம்பர், டிசம்பர் க்குள் ஓரளவு எல்லா தொழிலும் ஓரளவு சிரடைய வாய்ப்பும் உள்ளதாக கருதுகிறேன்! இந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் யோசித்து முடிவெடுங்கள் - நன்றி

    ReplyDelete
    Replies
    1. தெளிவான suggestions சார் ! மாதத்தின் முதல் தேதிக்குப் பதிலாய் 10-ம் தேதியைப் பிடித்துக் கொள்வது நல்ல யுக்தியாகவே தோன்றுகிறது ; பணப் புரட்டலுக்கு மட்டும் இந்த ஏற்பாடானது சிரமம் தராது போயின் சூப்பர் !

      Delete
  47. இதே ரீநியில போச்சின்னா...

    மாடஸ்டி : காந்திமதி
    வில்லி கார்வின் : வெங்கல்ராவ்
    டைகர் : மயில்சாமி
    ஜிம்மி : போண்டா மணி
    ரெட்உல்லி : தயிர்வடை தேசிகன்
    டயபாலிக் : முத்துக்காளை
    ஜெரெமயா : ஓமக்குச்சி நரசிம்மன்

    ReplyDelete
    Replies
    1. ஓ... நோ நோ நோ... ரொம்ப கன்றாவி செலெக்ஷன்.என் லிஸ்ட் வரும் அப்போ பாருங்கள்.

      Delete
    2. மாடஸ்தி - நயன்தாரா

      Delete
    3. நயன்தாரா = லிலித்

      Delete
    4. மாடஸ்டிக்கு விஜய் சாந்தி தான்...

      கார்வினுக்கு பழைய சிவாஜி கணேசன் ( நோ ஃபைட் மாஸ்டர்)

      Delete
  48. // தோர்கல் biggie-ஐ சித்தே பின்நகற்றிடல் தேவலாமோ ? //

    தாராளமாக செய்யுங்கள்.

    அதேநேரம் வேறு ஏதாவது சிறப்பு இதழ்கள் அல்லது பெரிய குண்டு புத்தகங்கள் வரும் நேரம் இதனை வெளியிட வேண்டாம், ஒரே நேரத்தில் சில குண்டு/சிறப்பிதழ்கள் என்றால் பட்ஜெட் காரணமாக சிலரால் வாங்குவது கடினமாகும்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு ஸ்பெஷல் புக் ரிலீசுக்கே மலைக்கும் நிலையில் குண்டூஸ் vs குண்டூஸ் என்ற மோதலை அனுமதிப்பேனா சார் ?

      Delete
    2. கண்டிப்பாக செய்ய மாட்டீர்கள் என தெரியும் சார். Just wanted to remind this. :-)

      Delete
  49. டெக்ஸ் கதையின் வரும் கதாபாத்திரங்களின் வயசா முக்கியம்? அவர்கள் செய்யும் சம்பவங்கள் தரமாக ரசிக்கும் படி உள்ளதால் நான் அவர்கள் வயசைப் பற்றி யோசித்தது இல்லை :-)

    ReplyDelete
  50. கார்சன் to கார்வின்

    வணக்கம் மாப்ள. நலம் நலமறிய ஆவல். வள வள வள வள

    வள வள வள வள வள வள வள வள வள வள வள

    அப்புறம் உன்கிட்ட ஒரு கோரிக்கை மாப்ள வரவர டெகஸ் பிள்ளையான்டான் என்னை ரொம்ப டென்ஷன் பன்றான். ஒரு மாறுதலுக்கு நீ டெகஸ் கிட்டேயும், நான் மாடஸ்டி கிட்டேயும் கொஞ்ச நாள் குப்பை கொட்டலாம. யோசிச்சு சொல்லு மாப்ள??..

    இப்படிக்கு,
    கார்சன்.

    கார்வின் to கார்சன்,
    வள வள வள வள வள வள வள வள வள
    நீங்க கேட்ட விசயத்துக்கு எதுக்கு யோசிக்கனும்??!!. செவ்விந்திய பெண்கள் எல்லாம் செகப்பா அழகா இருப்பாங்க தானே. இப்பையே நான் flught ல அமெரிக்க கிளம்புறேன். நீங்கள் குதிரையை அடிச்சு ஓட்டி இத்தாலி வந்து சேருங்க.

    இப்படிக்கு,
    கார்வின்.

    கொஞ்ச நாள் கழித்து ....

    இத்தாலியில் இருந்து கார்சன் கார்வினுக்கு எழுதுகிறார்.

    வணக்கம் மாப்ள,
    வள வளன்னு பேசம என்னோட அனுபவத்தை நேரடியாக சொல்றேன் மாப்ள. முத நாள் வந்த உடனே என்னோட பித்த நரையை பார்த்துவிட்டு மாடஸ்டி தாத்தான்னு கூப்டுச்சு, அதோடு விடல மாப்ள உன்னோட எல்லா கேர்ள் ஃப்ரெண்டும் தாத்தா துன்னு சொல்லி மனசை நோகதுங்க.

    தீடீன்னு மாடஸ்டி வந்து நாளைக்கு போதை மருந்து கும்பளை பிடிக்க போறோம்ன்னு சொன்னுச்சு. நானும் அதுலே ரெண்டு பாட்டிலை அமுக்கிடலாம்ன்னு நினைச்சு சந்தோசமா ஒத்துக்கிட்டேன்.

    மாடஸ்டி இத்துன்னுடு கத்தியை குடுத்து சண்டை போட சொன்னுச்சு. ஆனால் எனக்கு கத்தி வச்சு காய்கறி நறுக்க கூட தெரியாது. ஆனால் மாடஸ்டி முன்னாடி எப்படி சொல்ல முடியும்??.

    சண்டை போடறதுக்கு முன்னாடி மாடஸ்டி தன்னோட சட்டையை மடிச்சு அப்படியே மேலே தூக்கி நெஞ்ச சேர்ந்து கட்டுச்சு. முதல்ல சபலபட்டாலும் நண்பனோட தோஸ்த் நமக்கும் தோஸ்த்துன்னே மனசை கட்டுபடுத்திகிட்டேன். இத்தாலி லில சண்டை போடறதுக்கு முன்னாடி இப்படி சட்டையை மடித்து நெஞ்சு மேல கட்றது கலாச்சாரம்னு நினைச்சு நானும் சட்டையை மடிச்சு நெஞ்சு மேல கட்டிகிட்டு வழக்கம் போல எதிரிங்க முன்னாடி நின்ன. எல்லாரும் என்னை பார்த்து சிரிச்சு புட்டானுங்க, இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி மாடஸ்டி எல்லா பயலுக ளையும் அடிச்சு பிடிச்சுடுச்சு.

    சரக்கு பாட்டிலை எதிர்பார்த்த எனக்கிட்ட கேனொகைன் சொல்லி ஏதோ ஒரு வெள்ளை சக்கரையை கொண்டு வந்து வச்சங்க. இந்த வெள்ளை சக்கரையை பிடிக்கறதுக்கா இவ்வளவு அக்கபோருன்னு, ஒரு பொட்டலத்தை பிரிச்சு வாயில போட்டதுதான் மாப்ள தெரியும், மூனு நாள் கழிச்சு தான் முழிச்சேன். எனக்கு கண்ணே லேசாத்தான் தெரியுது. போதும் மாப்ள நான் இப்பவே அமெரிக்கா கிளம்புறேன்.

    இப்டிக்கு கார்சன்.

    அமெரிக்க வில் இருந்து கார்வின் to கார்சன்
    உங்க நிலைமை எவ்வளவோ தேவலாம் மாமா..

    (தொடரும்)

    ReplyDelete
    Replies
    1. குதிரைய அடிச்சி ஓட்றதா. அடிச்சிக் கொன்னாக்கூட அமெரிக்காவில இருந்து இத்தாலிக்கி போ முடியாதே .
      மட சட்டி போட்டோல்லாம் வச்சிருக்கிங்க. ஆனா மட சட்டி இருக்குறது இத்தாலி இல்ல இங்கிலாந்துன்னு தெரியாம போச்சே .

      யாரை கோனகையன்னு சொல்றிங்க கார்சனையா கார்வினையா.?

      Delete
    2. //மட சட்டி போட்டோல்லாம் வச்சிருக்கிங்க. ஆனா மட சட்டி இருக்குறது இத்தாலி இல்ல இங்கிலாந்துன்னு தெரியாம போச்சே .//

      அட இங்கபருப்பா. இன்று ஒரு தகவல்.

      Delete
    3. //
      யாரை கோனகையன்னு சொல்றிங்க கார்சனையா கார்வினையா//
      இதுக்கு நான் பதில் சொன்ன நிறைய போருக்கு கோபம் வரும்.

      Delete
    4. வாணாம் சாமீ !

      Delete
  51. @ அனு

    எப்படியோ உங்க லிஸ்ட் உப்மாவை விட நல்லா இருந்த ஓகே

    ReplyDelete
    Replies
    1. அவங்க மறந்தாக்கூட நீங்க விட மாட்டீங்க போலேயே சாமீ ?

      Delete
    2. ஆனா எல்லோரும் ஏன் உப்மாவை கிண்டல் பன்றாங்கன்னே தெரில சார்..

      எனக்கு மகப்பிடித்த உணவு உப்புமா தான்...அதுவும் உப்மாவுடன் தேங்கா சட்னியை கொஞ்சம் கொஞ்சமா தொட்டு தொட்டு சாப்ட்டு பாத்தா தான் ருசியே தெரியும்...உப்புமா புடிக்காதுன்னு சொல்றவங்க உண்மையான உப்புமாவை இதுவரை சாப்ட்டு இருக்க மாட்டாங்க...:-)

      Delete
    3. அகில உலக உப்மா முன்னேற்றக் கழகத் தலீவரும், கொ.ப.செ.யும் ரெடி !

      கழகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது ! அலைகடலென வாரீர் !

      Delete
    4. நன்றி பரணி. இன்றைக்கு கழக உறுப்பினர் சேர்க்கை, லாபம் ஒன்று 🤑 பரணி, தரணி ஆளும் சார்.

      Delete
    5. உப்புமா சங்கமா.... எஸ்கேப்!

      Delete
    6. நெம்ப நாளாவே 'ஊசிப் போன உப்மா பெசலிஸ்ட்' என்றொரு பெயரும் உண்டு அடியேனுக்கு ! அப்படியிருக்கையில் நானில்லாது ஒரு உப்மா கழகமா ? நெவெர் !!!

      Delete
  52. வரும் புதன் முதலாய் 5 புக்ஸ் அடங்கிய டப்பிக்களின் டெஸ்பாட்ச் சாத்தியமே என்பது தற்போதைய நிலவரம் !

    #####


    மிக மிக மகிழ்வான செய்தி சார்...

    ReplyDelete
  53. வழக்கம் போல பெற்றுக்கொள்ளத் தயாராக உள்ள நண்பர்களோ எதுவும் செய்யத் தேவையில்லை - புக்குகளைப் படிக்கும் முஸ்தீபுகளைச் செய்வதைத் தவிர்த்து !


    #####

    வெகு ஆவலுடன் வெயிட்டிங்..இந்த ஓய்வான சமயத்தில் புது இதழ்களை படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என காத்துக்கொண்டே இருக்கிறேன்..:-)

    ReplyDelete
  54. தோர்கல் மெகா இதழ்..கொஞ்சம் தள்ளிக்கூட வரட்டும் சார்..தவறு இல்லை...

    ReplyDelete
  55. கதைகளில் சுழன்றடிக்கும் டெக்ஸுக்கு என்ன வயதென்று அனுமானிப்பீர்களோ ? தமிழில் ஒரு "டெக்ஸ் சினிமா" எடுத்தால் மஞ்சள்சட்டை அணிவிக்க யாரைத் தேர்வு செய்வீர்களோ ?

    *இளமையான பாட்ஷா ரஜினி*


    கிட்கார்சன் ...சத்யராஜ்..


    டைகர் ஜாக்...லாரன்ஸ்


    கிட்வில்லர்...ஜெய்

    ReplyDelete
    Replies
    1. தலைவருக்கு மீசை இல்லாங்காட்டி சுகப்படாது ; 'தல' மீசை வய்ச்சா சுகப்படாதே ?!

      Delete
    2. ஆஹா்..மீசைனால வட போச்சே...:-(

      Delete
    3. தலீவரே வட எங்கும்போகல!
      ப்ரியா படத்தில் மீசையுடன் ஜூலியஸ் சீசராக நடித்தவர்தானே!( அதுவும் எழுத்தாளர் சுஜாதாவின் கணேஷ் கதாபாத்திரமாக. மேடைநாடகம் என்ற கொடுமை வேறு!) ரஜினி ரசிகர்கள் இதையெல்லாம் கண்டு கொள்ளமாட்டார்கள்!
      இப்ப டெக்ஸாக நடிக்ககூடாதா?

      Delete
    4. அதானே...:-

      சார் ...பாத்து மனசு வையிங்க...:-)

      Delete
  56. நானும் அப்டேட் ஆகி ரொம்ப வருசமாச்சு ...எனவே கடுதாசி எழுதலாமா வேண்டாமா என குழப்பம் ...எழுதுனா காமெடியா எழுதுறதா நகைப்புக்காக எழிதறதான்னு ஓர் குழப்பம் ..ரொம்ப யோசிச்சு சீரியஸாவே ஒரு லெட்டர் போட்றலாம் ன்னு ஓர் முடிவு...பார்க்கலாம்..:-)

    ReplyDelete
    Replies
    1. விடாதீங்க தலீவரே !! போட்டுத் தாக்குங்க !! இசைக்கு ஒரு செயலர்னா...(கடுதாசிப்) பசைக்கொரு தலீவர்னு காட்ட வாணாமா ?

      Delete
  57. இது என்னுடைய லிஸ்ட். Age group, ஆக்டர் பெயர் அண்ட் my personal ஜஸ்டிபிகேஷன்.

    ஒன்றை நாம் மறக்கக் கூடாது. இவர்கள் எப்போதும் on-the-go. குதிரை மீது லொடக் லொடக் என்று ஓடினாலும் arthritis, spondylitis, disk slip எல்லாம் இல்லாமல், கட்டுமஸ்தான தேகம் உள்ளவர்கள். முக்கியமாக ஆட்டுத் தாடி தவிர clean shaven guys.

    டெக்ஸ் வில்லர் 40 - 50 வயது வரம்பு. வெயிலில் சுற்றுவதால் weathered face and broad type முகம்.
    தல அஜித்

    கார்சன் 50 - 60 வயது வரம்பு. ஒல்லியான தேகம். கொஞ்சம் V shape face.
    அருண் விஜய்


    டைகர் ஜாக் 35 - 45 வயது வரம்பு.
    டெக்ஸ் போலவே broad face. Heavy செட் body.
    ராணா டகுபாட்டி

    கிட் வில்லர் 20 - 30 வயது வரம்பு.
    மழு மழு கன்னம், சுருக்கம் விழாத முகம், சிக்கென்ற இடுப்பு.
    ஹரிஷ் கல்யாண்

    ReplyDelete
    Replies
    1. அருமை அனு அழகான விளக்கம் மற்றும் தேர்வுகள்.

      Delete
    2. தேங்க்ஸ் குமார். சண்டே காலை கொஞ்சம் வெட்டியா இருக்கேன். உப்புமாவிற்கு பயந்து என் அகத்துக்காரர் ஹோட்டலில் இருந்து இட்லி, வடை ஆர்டர் செய்து விட்டார். அதனால விளக்கத்துடன் பதிவு.

      Delete
    3. @ குசேலர் =குமார் சேலத்துக்காரர்

      யார் என்ன சொன்னாலும் பாராட்டும் உங்க மனம் ஆசம் ;)

      Delete
    4. கார்சனாக அருண் விஜய் !! ஐயகோ - கார்சனுக்கு வந்த வாழ்வு !!

      Delete
    5. சேலம் னாவே விசாலம் தானே மனசு...!

      Delete
    6. எல்லாம் சரி, இதில எதாவது உள்குத்து இருக்கா? என் லிஸ்ட் பிடிக்கலையா? பரவாயில்லை, ஒப்பீனியன் டிபர்ஸ். ஐ நெவெர் mind. But உங்க அபிப்ராயத்தை நேரிடையாக சொல்லுங்க.

      Delete
    7. ///@ குசேலர் =குமார் சேலத்துக்காரர்

      யார் என்ன சொன்னாலும் பாராட்டும் உங்க மனம் ஆசம் ;)///

      உண்மை.. உண்மை.! எங்க ஊரு பக்கத்துல எல்லாருமே அப்படித்தானே..!

      ///சேலம் னாவே விசாலம் தானே மனசு...!///


      அதே அதே சபாபதே..!

      Delete
  58. கார்வின் டூ கார்சன் கடுதாசி போட்டி...


    அன்புள்ள எனது இனிய ,முதிய நண்பர் கார்ஸன் அவர்களுக்கு நான் இங்கு நலம் தாங்கள் அங்கு நலமா என்றெல்லாம் வழக்கம் போல் நான் கேட்கப்போவதில்லை.காரணம் உங்கள் தலைவர் டெக்ஸ் வில்லர் உங்களுடன் இருக்கும் வரையிலும் ,என்னுடன் எனது தானைத்தலைவி இளவரசி இருக்கும் வரையிலும் நாம் இருவருமே நலமாகத்தான் இருப்போம் என்ற நம்பிக்கை எனக்கு எப்பொழுதுமே உண்டு.

    சரி விசயத்திற்கு வருகிறேன்..முதலில் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் கார்சன் சார்..நம்மை தமிழகத்தில் ஆட்சி புரிய வைத்த ,வைக்கும் நமது லயன் காமிக்ஸ் நிறுவனம் இன்றும் வீறுநடை போட்டு கொண்டு ஆலமரமாக நடைப்பயில மிகப்பெரும் காரணம் தாங்களும் ,தங்கள் தலைவருமே அதற்கு என் வாழ்த்துக்கள்.. என்றாலுமே கூட அதன் விதை எங்கள் இளவரசி விதைத்த ஒன்று என்பதில் எனக்கு எப்பொழுதுமே கர்வம் உண்டு.

    கார்ஸன் சார்....நீங்கள் உங்கள் தலைவருக்காக உயிரையும் கொடுப்பீர்கள் ..உயிரையும் எடுப்பீர்கள் .உங்கள் தலைவருக்காக கண்டம் விட்டு தேசம் விட்டு தேசம் பாய்வீர்கள் போலவே அவர்களுமே அவ்வாறு தாம் .அதே போல எனது இளவரசியும் தாம்.

    ஆனால் ஒரு விசயத்தில் உங்களை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது .என்றாவது எனது இளவரசி என்னை மட்டம் தட்டி பேசி இருக்கிறார்களா?...ஆனால் உங்கள் ஆள் மட்டும் உங்களை அடிக்கடி கிழவா ,ஆட்டுத்தாடி என்றெல்லாம் என்றெல்லாம் மட்டம் தட்டி பேசுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது .எனது இளவரசி என்றாவது என்னை மட்டம் தட்டி பேசியதை பார்த்து இருக்கிறீர்களா..? சொல்லுங்கள் ..அதேப் போல் உங்கள் தலைவர் "ஏகப்பத்தினி விரதனாக" இருக்கலாம் ஆனால் உங்களை "ஒருப்பத்தினி விரதனாக" கூட இருக்க விடாமல் இன்னமும் அலைய வைப்பதில் எனக்கு மிகுந்த வருத்தம்.எங்கள் இளவரசியை பாருங்கள் என்றாவது எனது ஆசைக்கும் ,சந்தோசத்திற்கும் குறை வைத்திருக்கிறாரா..உங்கள் தலைவருக்கு அது ஏன் புரியவில்லை..சத்தியமாக உங்கள் இருவருக்கும் சிண்டு முடிய இதை சொல்லிக்காட்டவில்லை கார்சன் சார் .உங்களின் நிலைமை மேல் எனக்கு ஏற்பட்ட சங்கடமே இதை எனக்கு சொல்ல தோன்றியது.மற்றபடி நீங்கள் எப்பொழுதும் எங்களை போல இணைப்பிரியாமல் இருக்க வாழ்த்துகிறேன்.

    இன்னொன்று தெரியுமா கார்சன் சார். உங்களை விட எங்களுக்கு ரசிகர்கள் குறைவுதான் .ஆனால் அந்த சின்ன ரசிகர்கள் கூட்டம் எங்கள் மீது எவ்வளவு வெறியாக உள்ளார்கள் தெரியுமா..ஒரு சிறிய காமிக்ஸ் கூட்டம் எப்படி வெறித்தனமாக உள்ளார்களோ அதுப்போல் எங்கள் ரசிகர் கூட்டம் என்பதிலும் எங்களுக்கு பெருமைத்தான்.அதனால் தானே ஆசிரியர் கூட எப்பொழுது மெகா இதழ் போட்டாலும் எப்படி நீங்கள் தவறாமல் இடம் பிடிப்பீர்களோ அதே போல் எங்களையும் தவறாமல் இடம் பெற வைத்துக்கொண்டார்.அவ்வாறுவாவது நாம் அடிக்கடி இணைந்து வந்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.இப்பொழுது தான் சூழல் சரியில்லை போல..நம்மை கூட்டணியில் கொண்டு வர மாட்டேன் என்கிறார்.பரவாயில்லை.. எனது இளவரசிக்கு தெரிந்த தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து அவருக்கு ஓர் மிரட்டல் போன் இடவைத்தால் அது நிறைவேறி விடும்தான்..ஆனால் நாங்கள் தான் உங்களை போலவே நல்ல மனிதர்களிடம் வன்முறையை காட்டுவதில்லையே..அதனால் பார்க்கிறோம்.அப்புறம் தொழிலதிபர் ன்னு சொன்னவுடன் தான் நினைவற்கு வருகிறது கார்சன் சார்..அதென்ன நாங்கள் சந்திக்கும் தொழிலதிபர்கள் எல்லாம் நண்பர்களாகவே இருக்கும் பொழுது நீங்கள் சந்திக்கும் தொழிலதிபர்கள் எல்லாம் வில்லன்களாகவே இருக்காங்களே..நீங்க நகரத்துக்கு வந்தீங்கனா நல்ல ,நல்ல தொழிலதிபர்களை அறிமுகப்படுத்துறேன் வாங்க..அப்புறம் கார்சன் சார் உங்கள் ஊர் டிராகன் நகரத்தை விட எங்கள் ஊர் கழுகுமலைக்கோட்டை செம பேமஸ் தெரியுமா..ஏதோ இதை சொல்லனும்னு தோணுச்சு அவ்ளோத்தான் தப்பா நினைச்சுக்காதீங்க..ஓகே

    என்றாவது ஒரு நாள் உங்கள் வன்மேற்கை விட்டு பெரும் நகரத்திற்கு வர விரும்பினால் மறவாமல் எனக்கு தகவல் தெரிவிக்கவும். நானும் இளவரசியும் உங்களுக்காக காத்துக் கொண்டு இருப்போம்..


    இப்படிக்கு ,

    என்றென்றும் அன்புடன்,

    வில்லி கார்வின்.

    ReplyDelete
    Replies
    1. 16-ம் மாவட்டத்து தலீவர், இருபதாம் மாவாட்டர தலீவருக்கு எழுதும் கடுதாசி போலவே தோணுதே !!

      Delete
  59. //தொடரும்//

    கார்வின் to கார்சன்(from US).

    உங்க பொழப்பாவது ஏதோ பரவாயில்லை. இங்க ப்ளைட்ல வந்து இறங்கதோட சரி.

    யாரோ மெக்ஸிகனாம். ரொம்ப கொடுரன். அப்பாவி செவ்வியந்தர்கள் எல்லாரையும் அடிச்சி அவுங்க வச்சு இருக்கிற ரவுண்ட் பன் எல்லாத்தையும் பிடுங்கிட்றானாம். இதானால வெள்ளைளயர்கள் மற்றும் செவ்விந்தியர்கள் இடையே போர் அபாயம் ஏற்படும் சூழல் உருவாகுதாம். அதனால அவனை பிடிக்கனும்னு குதிரை கூட்டிட்டு போக அராம்பிச்சாரு..

    நாங்களும் போகுறோம் போகுறோம் பலைவனத்துல போய்கிட்டே இருக்கோம். வெறும் காச்ச பின்ஸ்ஸூம் காப்பி மட்டும் தான் குடுத்தாரு. இடையில் யாராவது செவ்விந்திய குழு வந்து "உலகப் புகழ்பெற்ற" ன்னு பத்து நிமிசத்துக்கு மேல புகழ்ந்து தள்றாங்க.

    கடைசியில மெக்ஸிகோ கொடுரனை கண்டுபிடிச்சோம். சுமார் 246 பேர் கொண்ட கும்பல். நாங்க இரண்டு பேர் ஒரே ஒரு வின்ஸ்டரோட. எனக்கு அல்லு இல்லை. எனக்கு துப்பாக்கி சம்பந்தப்பட்ட எதுவுமே சுட தெரியாது ன்னு சொன்னேன். அதோட இதுல தோட்ட வேற நம்பகிட்ட குறைவுன்னு சொன்னேன்.

    நீ எதைப்பற்றியும் கவலை படதே. நீ எப்படி வேனா சுடுன்னு சொன்னாரு.

    "எனக்கு ஒரு நிமிடம்தலையே சுத்திடுச்சு. கண்ணாடி திருப்பினா ஆட்டோ எப்படி ஓடும்".

    கடவுள் மேல பாரத்தை போட்டு சுட ஆரம்பித்த்தேன். அதிசயம் நான் எங்க சுட்டாலும் யாராவது இரண்டு பேர் செத்து விழறான்.
    துப்பாக்கி யில தோட்ட திரவே மாட்டங்குது.

    ஏதோ ஒரு ஆர்வத்துல மேல் நோக்கி சுட்டேன். வானத்துல இருந்தும் ஒருத்தன் செத்து விழறான்.

    ஒருவழியாக அத்தனை பேரையும் கொன்னுட்டு ஊர் திருப்பினோம்.

    "டெகஸ் பொண்ண பாரத்தா மன்ன பார்க்கும் ரகம்ன்னு அப்புறம் தான் தெரிந்தது".

    "அதிகாரி யோட நண்பன், நமக்கு எல்லாம் அண்ணன் ன்னு" எல்லா சிகப்பாக இல்லாத எல்லா செவ்விந்திய பொண்ணும் சொல்லிட்டு போய்டுச்சு.

    இதோ நானும் இங்கிலாந்து கிளம்பிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த பாயச அண்டாவை வேறெங்கேயோ பாத்த மேரியே இருக்கே ?!

      Delete
    2. முன்னாடி நா சொல்லுவேன். இப்பா கார்வின் சொல்றாரு

      Delete
  60. டெக்ஸ் வில்லர் - சரத்குமார்

    கிட் கார்சன் - விக்ரம்

    டைகர் - கார்த்திக் சிவகுமார்


    கிட் வில்லர் - சூர்யா சிவகுமார்.

    லிலித் - நயன்தாரா.



    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் வில்லராக சிவக்குமார் அவர்களையே போட்டிருந்தால் லாஜிக் செம்மயா இருந்திருக்கும் J ஜி.! :-)

      Delete
    2. கண்ணா செம்ம செம்ம

      Delete
  61. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) @

    விளங்காத ஒரு விசயத்திற்காக வீணடித்த உங்கள் சிந்தனையையும் நேரத்தையும் உருப்படியான வேறு விசயத்திற்கு உபயோகப்படுத்தி இருக்கலாம் நண்பா.!

    புரிந்துகொள்வீரென்ற நம்பிக்கையில்...

    ReplyDelete
    Replies
    1. +1000.....!!!! நாங்கள் புரிந்து கொண்டு மாமங்கம் ஆவுது! கிறுக்கலாரும் புரிந்து கொள்வார்னு நம்பிக்கை இருக்கு!

      Delete
  62. கிட் வில்லர் , kaபஞ்சல oம்லேட் கண்ணன்.
    அந்த லிஸ்ட் சூப்பர்கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  63. டெக்ஸ்/47/ஆர்யா
    கார்சன்/58/அர்ஜூன்
    டைகர்ஜாக்/44/ஷாம்
    கிட்/23/துல்கர்

    Image..ready..
    எப்படி அனுப்ப

    ReplyDelete
    Replies
    1. படங்களை பார்க்க ஆவலுடன் உள்ளேன் அப்புசிவா. சீக்கிரம்.

      Delete
    2. பதிவின் வால்பகுதியில் பாருங்களேன் folks !!

      Delete
  64. /// உப்புமா புடிக்காதுன்னு சொல்றவங்க உண்மையான உப்புமாவை இதுவரை சாப்ட்டு இருக்க மாட்டாங்க. ///

    பிரச்னையே உண்மையான உப்புமா எதுங்கிறதுலதானே இருக்கு. (கொழ கொழ கெழ கெழ ல்லாம் தனி லைன்.)

    /// வேணும்னா டெக்ஸ் ரோல்க்கு மஹி மற்றும் பத்து சாரை சாய்ஸ் ஆக வைக்கலாம். ///

    அனு, தல மேல ஏன் இந்த கொலவெறி. பாவம் அவர்.

    ReplyDelete
  65. அன்பே டெக்ஸ்சிவம்

    செவனேன்னு குருதைல போய்ட்டு , சுட்டுக்கிட்டு, வேகாத பீன்ஸ தின்னுட்டுருந்தவன கடுதாசி போடுன்னுட்டாய்ங்கே.ஙே...ஙெங்ஙெங்ஙெங்ஙே ...

    காருவினு எப்டிருக்கப்பா...
    நம்ம மாடஸ்டி லேடி எப்டிருக்காப்பா...

    வயசான என்ன நிச்சயமா புடிக்கும்தான...நானுமுமே சுக்கா திங்கிற தொழிலதிபரு தாம்ப்பா...

    நம்மாளு ஒரு துளி துரோகம் பண்ணுன செனட்டர் வால்காட்ட கொல்லமுடியலயேங்குற வெறில - 65 ன்னு நெனச்சி இஞ்சியை கடிச்ச சிம்பன்ஸியாட்டமா கருவிகிட்டே திரியிறான்.இந்த அக்னி நட்சத்திரத்துல எங்கன ஓட்டிட்டு போக காத்துக்கிட்டுருக்கானோ புரியல...ஏதோ ஜல்லிக்கட்டு க்கு போற மாதிரி தெரியுது.என்ன ஓடப்(நடக்கப்)போவுதோ தெரிலடா சாமி...ஒம்பாடு பரவால்ல...எதையோ கைல கெடச்சத தூக்கி எறிஞ்சாப் போதும்.கரெக்டா அடிச்சுருவ.
    எம்பாடு அப்பிடியா...கரெக்டா நாலு பேரு குறுக்கால வந்து விழுந்து சாவுற மாதிரி சுடணும்ல- பின்ன என்ன பின்ன..அப்படி கரெக்டா தப்பா சுடணுமாக்கும்...இல்லன்னா டெக்ஸு கோச்சுக்குவான்ல...பீன்ஸூக் கூட தராம , தானுந் திங்காம இழுத்தடிப்பாம்பா...

    சரி சரி நீங்க எப்ப செவகாசி பக்கமா வரப்போறீக..அங்கென கொரானோ கொன்னுகிட்டு கெடக்கு...இந்த பக்கமா வந்துட்டு தா போங்களேம்ப்பா...ஏதோ கபசுர டிரிங்ஸு குடுப்போம்ல...இந்த மாசம் உங்க மாடஸ்டி நடிச்ச படம் ஏதாச்சும் ரிலிஸாவுதா...

    சொல்ல மறந்துட்டேன் நா...போன படம் ஒங்க படம் சூப்பரு ப்பா... ரெண்டு பேரும் கெஸ்ட் ரோல்ல ஹீரோ ஹீரோய்னா டமாஸ் போலீஸாட்டாம் கடேசி கட்டத்துல கரீட்டா வந்து கலக்குனீங்களே...அந்தப்படம் பாக்ஸாபீஸூக்குள்ள நூறு மணி ஓடிருச்சாமே...என்னா படம்...என்னா படம்...நானுமு பாரு பாருன்னு பாத்துட்டே இருந்தது தாம் மிச்சம். நீ கவுட்டுக்குள்ளாற கல்ல வுட்டு எறிஞ்ச. மாடஸ்டி டிஸூம்னு ஒதச்சா...அவ்ளோதா...தங்க பந்துக்கு நடுவால நின்ன அந்த பச்சை புள்ளயவாவது குளோஸப்ல காட்டுனீங்களா...பாவிகளா...

    ஆனா எங்க விஷயத்த பாரு...நம்மாளூ கொரானோ மாதிரி...ஒட்டவும் மாட்டான்...தட்டவும் மாட்டான்...காத்துலயே சுட்டுகிட்டே இருப்பான்...எந்த குண்டுல...எந்த கொரானோ வைரஸோ...சும்மா ஆயிரம் பேரன்னாலும் ஒத்தக் கொரானாவா நின்னே கொன்னுடுவான்ல...நானும் சப்ப வைரஸாட்டமா கூடவே நின்னு கொல்றேனாக்கும்...ஏதோ நாங்களும் டெக்ஸாஸ உட்டுட்டு இத்தாலி வந்து போனெல்லி காரவுகள நல்லி எலும்பாக்கிட்டோம்ல...
    சரி சரி...

    டெக்ஸாஸூக்கு கெளம்புறோமாக்கும்...மிச்ச சொச்ச கொரானோவாட்டத்த அங்கன போயி (ஏதாச்சும் மிச்சம் மீதிய செனட்டுக்கு தப்பிச்ச டிரம்பு வச்சிருந்தா)முடிக்கணும்னு ரேஞ்சர்ஸ் கமாண்ட்லருந்து உத்தரவு வந்துருக்காம்...போயி கடுதாசி போட்றே....வர்ட்டா...


    இப்டிக்கி

    குத்துயிரு கார்ஸன்

    ReplyDelete
  66. Tex(Ajith) age - 59, kit (Tex son - surya) age - 29
    Karsan(Vijay Sethupathy) age - vijay sethupathy

    Tiger jack age 42 - (0nly one Ajith) may be fit

    Kid willer age 19 - g v prakash

    Reply

    ReplyDelete
  67. பார்த்த மாத்திரத்திலேயே சில அதிகாரி நேசர்களுக்கு - 'அண்ணாத்தே மாடு பத்துறாருடோய்' என்று பாயசம் போடப் பர பரக்குமென்பது புரிகிறது தான் !//

    அப்போ....
    இருக்கு.. என்னவோ இருக்கு..
    சட்டியை ரெடி பண்ணிற வேண்டியது தான்.. பாலை சுண்டக் காய்ச்சிற வேண்டியது தான்...

    ReplyDelete
  68. TEX. KAPILDEV

    KARSAN. VENGSARKAR


    TIGER JACK. DHONI

    KIT. SUBMAN GILL

    ReplyDelete
  69. @ ALL : பதிவின் வால்பகுதியில் இப்போது பாருங்களேன் folks !!

    ReplyDelete
    Replies
    1. Thanks sir
      டெக்ஸ்...க்கு....ம்

      யோசிப்போம்

      Delete
    2. அருமை....ஆசிரியர் சொன்னது போல டெக்ஸ் மட்டும் மாற்றம் தேவை..:-)

      Delete
  70. அதிகாரிக்கு ஜெய்சங்கர் செட் ஆவாரு..

    ReplyDelete
  71. அப்பு சிவா @ அருமையான ஓவியங்கள். படமாகவே வரைந்து அசத்தி வீட்டீர்கள். பாராட்டுக்கள்.

    கார்சன் மற்றும் டைகர் ஜாக் கதாபாத்திர தேர்வுகள் இரண்டும் அட்டகாசம்.

    ReplyDelete
  72. டெக்ஸ் கதாபாத்திரத்துக்கு எனது தேர்வு தெலுங்கு நடிகர் மகேஷ். இப்போது உள்ள நடிகர்களில் மீசை இல்லாமல் handsome + வயதை எளிதில் கணிக்க முடியாதபடி உள்ள ஒரு ஹீரோ இவரே.

    ReplyDelete
    Replies
    1. கார்சன் - விஜய் சேதுபதி, நக்கல் நையாண்டி மற்றும் உடல்மொழி சிறப்பாக இருக்கும்.

      கிட் - சூர்யா செமையாக செட் ஆவர். மீசையில்லாமல் துரு துரு கதாபாத்திரத்தில் இவர் கலக்குவார்

      Delete
    2. நான் kit வில்லரின் ரோல்காக முதலில் யோசித்தது மகேஷ் பாபு தான். ஆனால் தமிழ் நடிகர் இல்லை என்பதால் opted out. But டெக்ஸ்சின் வேஷத்தில் ரொம்ப young ஆக இருப்பார். Stand alone tex என்றால் ஓகே, கிட்டின் அப்பா என்னும் போது கொஞ்சம் நெருடல்.

      Delete
    3. டைகர் ஜாக் - ஷாம் (அப்பு சிவாவின் சாய்ஸே எனது தேர்வும்)

      Delete
    4. டெக்ஸ் என்றும் மார்கண்டேயன் எனவே மகேஷ் பாபுவை டெக்ஸ் கதாபாத்திரத்துக்கு நன்றாக செட் ஆவார் அனு.

      Delete
    5. அப்புறம் மகேஷ் பாபு சில தமிழ் படங்களில் நடித்து உள்ளார் எனவே அவர் தமிழ் நடிகர் தான் :-)

      Delete
    6. அப்படியா சரி. பாபு இனிமேல் தமிழ் நடிகர் தான்.

      Delete
  73. I அக்ரீ பரணி சார். Stand alone tex. பாபுகாரு சூப்பர் சாய்ஸ், ஆனால் சூர்யா அவரை விட வயது ஜாஸ்தியாக தெரிவார். I will leave it to your இமாஜினேஷன்.

    ReplyDelete
    Replies
    1. மேக்கப்பில் சரி செய்து விடலாம். வாரணம் ஆயிரம் படத்தில் வரும் இளமையான சூர்யா கதாபாத்திரத்தை வைத்து யோசித்தேன்.

      Delete
  74. டெக்ஸ் = சரத்குமார்

    ReplyDelete
  75. இட்ஸ் my பர்சனல் opinion. இப்போது உள்ள பெருவாரியான தமிழ் ஹீரோஸ் 40s ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். மேக்கப் அள்ளித்தெளிச்சி, நாலரை அடியை உயர்த்தி காமித்து. Crew cut செய்தால் போதும், போலீஸ் அல்லது சிபிஐ அதிகாரி என்று மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். For example நயன்தாரா கண்கள் அல்லது சூர்யாவின் கண்களையே உற்று பாருங்கள். Crows feet மறைக்க layer, layer ஆக மேக்கப். போலி பிம்பங்களுக்கே மரியாதை. டெக்ஸ் காமிக்ஸ் நாயகர் ஆக மட்டுமே இருக்கட்டும்.

    ReplyDelete