Powered By Blogger

Saturday, May 23, 2020

கனமான காமிக்ஸ் ; ஜாலியான அலசல் !

நண்பர்களே,

வணக்கம். லேப்டாப் புட்டுக்கிட - டைப்படிக்க இயலா ஒரு சூழல் ! So ஒரு 35 நிமிடங்கள் + 1 headphone + கொஞ்சம் datapack உங்கள் வசமிருப்பின் - கீழ்க்கண்ட YouTube லிங்கை க்ளிக் செய்து தான் பாருங்களேன் - ப்ளீஸ் !

https://youtu.be/mAQnfpIwyc0

And once you are done there ; YouTube பார்த்த பிற்பாடு - உங்கள் பின்னூட்டங்களை இட இக்கட வாபஸ் வந்திடலாம்  ! See you around !! Bye for now !!

268 comments:

  1. ஆகா இது புது மாதிரி ஐடியாவா இருக்கே :-) நான் நாளைக்கு வருகிறேன்.

    ReplyDelete
  2. ஹைய்யா புதிய பதிவு......

    ReplyDelete
  3. இன்னும் பார்க்கலை....

    இருந்தாலும்

    இளவரசி வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. இளவரசியை பாத்துட்டா அப்புறம் வாழ்கன்னு சொல்ல மாட்டீங்க.

      Delete
    2. பரவாயில்லை....

      வாழ்க! வாழ்க!

      Delete
  4. சார் This videos is private என்று வருகின்றதே?

    ReplyDelete
  5. படிப்பதற்கே நேரம் கிடைப்பது இல்லை, அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக நமது காமிக்ஸ் மற்றும் பதிவுகளை படித்து வரும் எனக்கு வீடியோ ம்ம் நேரம் கிடைக்கும் போது கேட்டு விட்டு வருகிறேன்.

    But I like this video idea. Good move.

    ReplyDelete
  6. Video is private என்று வருகிறது sir. Play ஆகவில்லை

    ReplyDelete
  7. ஆனா லிங்கை க்ளிக் பண்ணினால் 'this video is private'னு வருதுங்களே எடிட்டர் சார்?!!

    ReplyDelete
    Replies
    1. நீங்க மட்டும் தனியா பாக்கனுமுன்னு சொல்லுறாருன்னு நினைக்கிறேன் ஈனா வினாண்ணே 🙏🏼

      உங்க பக்கத்துல யாராச்சும் இருக்காங்களா 😍🥰🤷🏻‍♂️😇
      .

      Delete
    2. சித்தரே,ஹா,ஹா,ஹா........

      Delete
    3. சித்தரே.. இப்பத்தான் கவனிச்சேன்.. ஹா ஹா.. செம செம!! :)))))

      Delete
  8. வீடியோ ஓடவில்லை..
    ப்ரைவேட் என்கிறது ஆசானே..

    ReplyDelete
  9. விஜயன் சார், வீடியோ private என வருகிறது. பார்பதற்கு எனக்கு அனுமதி நீங்கள் வழங்க வேண்டும். Please give permission to all to watch the video.

    ReplyDelete
  10. நான் எனக்கு மட்டும்தானோன்னு பயந்துட்டேன்..!! :-)

    ReplyDelete
  11. வீடியோ விமர்சனம்

    கருப்பு பேக்ரவுண்டில் "This video is private" என்று அழகாக இருக்கிறது. :))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா!! செம!! :))))))

      Delete
    2. நான் எனக்கு மட்டும்தானோன்னு பயந்துட்டேன்..!! :-)

      Delete
    3. நல்ல விமர்சனம்!

      Delete
  12. இரவு வணக்கம் சார் மற்றும் நண்பர்களே 🙏🏼

    எது மாதிரியும் இல்லாத ஒரு புதுமாதிரியான முயற்சியா சார்

    இந்த வருடம் இன்னமும் என்னென்ன புதுசு புதுசா பாக்க போறோமோ 🤷🏻‍♂️🙏🏼
    .

    ReplyDelete
    Replies
    1. //இந்த வருடம் இன்னமும் என்னென்ன புதுசு புதுசா பாக்க போறோமோ//

      ஒருக்கால்...."வாத்தி கமிங் !!!" என்று தலீவர் போடக்கூடிய குத்து ?

      Delete
  13. ஹாய் பிரண்ட்ஸ் ,நான் பொதுவாக எந்தக் கதைக்கும் விமர்சனம் எழுதுவதில்லை, காரணம் வேலைப்பளு மற்றும் நேரமின்மை,ஆனால் ஆசிரியரின் பதிவு மற்றும் நண்பர்களின் விமர்சனத்தை தவறாமல் படித்துவிடுவேன்
    (தாமதமானாலும்),
    உங்களின் விமர்சனத்தை பார்த்துதான் இன்று கண்ணான கண்ணே புத்தகத்தை படித்தேன் ,படித்ததும் எனக்கு தோன்றியதை தான் எழுதுகிறேன்.

    1.இது குழந்தைகளுக்கா அல்லது இரசனையில் முதிர்ந்தோருக்கா என்றால் இரண்டும்கெட்டான்(சாரி friends its true)

    2.இரசனையில் முதிர்ந்தோருக்குதான் என்றால் குழந்தையின் பார்வையில் கதை ஏன்?

    3.நண்பர்களின் வாரிசுகள் எல்லாம் படிப்பதாக சொல்லி இருந்தீர்கள் அவர்களுக்கு ,*தயவு செய்து இதை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்*(ஏன் என்றால் இதில் சில வார்த்தை பிரயோகங்களும் காட்சிகளும் குழந்தைகளுக்கானதல்ல அதுக்கு நீங்க smurf இல்லாட்டி lucky Luke கொடுக்கலாம் )நாம் சிறுவயதில் நேர்மறை எண்ணங்கள் கொண்ட நீதிக்கதைகள் மற்றும் பஞ்சதந்திரக்கதைகளைத்தான் படித்தோம் ,குழந்தைகளுக்கு மன அழுத்தம் தரும் கதைகள் வேண்டாமே🤝


    4.இது ஆசிரியருக்கு ,சார் வித்தியாசமான முயற்சிக்காக ஒரு தடவ படிக்கலாம் ஆனா நண்பர்கள் சிலாகிக்கறத பார்த்துட்டு இதே டைப்ல இன்னொன்னு வந்துடுமோன்னு .................

    ReplyDelete
    Replies
    1. அடடே.. பேபிமா.. நீங்களும் களமிறங்கியாச்சா.!?

      வெல்க்கம் டூ அவர் டென்.!

      Delete
    2. ////இது ஆசிரியருக்கு ,சார் வித்தியாசமான முயற்சிக்காக ஒரு தடவ படிக்கலாம் ஆனா நண்பர்கள் சிலாகிக்கறத பார்த்துட்டு இதே டைப்ல இன்னொன்னு வந்துடுமோன்னு ///

      கவலைப்படாதீங்க பேபிம்மா.. இந்தமாதிரி கதையெல்லாம் எடிட்டரே தேடினாலும் அடிக்கடி கண்ணில் படாது!!

      ஆனா உங்களையெல்லாம் இந்த அளவுக்கு எழுத வைக்கறதுக்காவது வருஷத்துக்கு ஒன்னு-ரெண்டு தேவைதான்!

      Delete
    3. கொம்பரே....இவ்வளவு நீளமா நீங்க விமர்சனம் போடுவீங்கன்னு இன்னிக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்..

      :-)


      அழகான கருத்துக்கள்...:-)

      Delete
    4. // படித்ததும் எனக்கு தோன்றியதை தான் எழுதுகிறேன். //
      வெளிப்படையான,தெளிவான கருத்துகள்.....

      Delete
    5. // நாம் சிறுவயதில் நேர்மறை எண்ணங்கள் கொண்ட நீதிக்கதைகள் மற்றும் பஞ்சதந்திரக்கதைகளைத்தான் படித்தோம். //
      மறுக்க முடியாத கருத்து சுசி.......

      Delete
    6. சார்...சிலாகிப்புகளெல்லாம் காத்திருக்கக்கூடிய முதல் சொதப்பல் வரையிலுமே என்பதை என்றைக்கோ புரிந்தாச்சு ! Youtube பதிவைப் பார்த்திருப்பின், உங்கள் பயங்களுக்கு முகாந்திரம் நஹி என்பதும் புரிந்திருக்கும் ; இந்த இதழை வம்படியாக நான் முயற்சித்திருப்பினும், இதன் மீதான எனது எதிர்பார்ப்புகள் என்னவாக இருந்தன என்பதுமே புரிந்திருக்கும் !

      Delete
  14. வீடியோ private என்ற மெசேஜூம்,
    Server error 400 என்ற செய்தியும் வந்தது.

    மீண்டும் முயற்சிக்கும் போது, பிரைவேட் மெசேஜ் மட்டும் வருகிறது.

    வீடியோ பிரைவசி செட்டிங்கில் public என்று மாற்றவும், எடி சார்...

    ReplyDelete
  15. You to be link open agala..this video private msg only coming

    ReplyDelete
  16. வணக்கம் நண்பர்களே.....

    ReplyDelete
  17. இரவு வணக்கம்.

    ReplyDelete
  18. https://youtu.be/mAQnfpIwyc0

    இந்த எளனியிலே தண்ணியே வரமாட்டீங்குது.்்

    ReplyDelete
    Replies
    1. பாரு பைப்புல வரும்.. போய் புடிச்சிக்குடி.!

      Delete
    2. இந்த எளனியிலே தண்ணியே வரமாட்டீங்குது.்்
      சூப்பர் ரம்மி

      Delete
    3. சூப்பர் ரம்மி :-)

      Delete
  19. 35 நிமிடங்கள் + 1 headphone + கொஞ்சம் datapack உங்கள் வசமிருப்பின்

    ஐயோ சாமி.. அன்னிக்கே முக்காலமும் உணர்ந்த ரம்மி13 தளத்தில் சொன்னார்.. ஆனா நான் தான் எப்பிடி பிரைவேட் வீடியோ பார்க்கிறதுன்னு கத்துக்காமே விட்டுட்டேன்.. சரி பிரைவேட் வீடியோ தானேன்னு வழக்க்கம் போல பாத்ரூம்குள்ளே போயி கதவை சாத்திட்டு VPNகூட முயற்சி பண்ணி பார்த்துட்டேன்.. பிரயோஜனமில்லை..

    ReplyDelete
    Replies
    1. மாற்றம் ஒன்றே மாறாதது. புதிய முயற்சிகள் எப்போதுமே வரவேற்புக்கு உரியதே...

      Delete
    2. // பிரைவேட் வீடியோ தானேன்னு வழக்க்கம் போல பாத்ரூம்குள்ளே போயி கதவை சாத்திட்டு //

      :-)

      Delete
    3. /// வீடியோ தானேன்னு வழக்க்கம் போல பாத்ரூம்குள்ளே போயி கதவை சாத்திட்டு VPNகூட முயற்சி பண்ணி பார்த்துட்டேன்.. பிரயோஜனமில்லை..///

      ///புதிய முயற்சிகள் எப்போதுமே வரவேற்புக்கு உரியதே...///

      ???? அது யாருங்க VPN.

      Delete
    4. அட.. என்ன சார் நீங்க..!? VPNஐத் தெரியாதா..!? :-)

      Delete
    5. எனக்கு RPNதான் தெரியும். R Padma Naban.

      Delete
  20. இப்போ பாருங்களேன் சாமீ.....should work !

    ச்சை....நமக்குலாம் புறா காலிலே ஓலை கட்டி அனுப்புற டெக்னீக் தான் லாயக்கு !! போனில் இருந்து வேலை பார்ப்பதற்குள் சந்நியாசம் வாங்கிடலாம் போலுள்ளது !!

    ReplyDelete
    Replies
    1. 5000 மீட்டர் பந்தயமும் முதலடியிருந்து தானே சார் ஓடியாகனும்..
      ஒருபோதும் தப்பு செய்யாதவன் புதிதாக ஒன்றுமே செய்ய போவதில்லை..
      ராக்கெட் தியரி

      Delete
    2. அடேங்கப்பா ரம்மி தத்துவம் எல்லாம் சொல்லுறாரு ! செம!!

      Delete
    3. சனியிரவில் சொதப்பும் இன்டர்நெட் சத்ரு # 1 !!

      Delete
  21. வரலைங்க சார்..

    ReplyDelete
  22. Video is playing. Will see then back. Im in night duty today.

    ReplyDelete
    Replies
    1. தாயத்துல்லாம் கட்டி இருக்கீங்க தானே சார் ?

      Delete
    2. எவ்ளோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டமா...

      Delete
    3. வீடியோ போட்ட நீங்களே கையில கயிறு தாயத்தோடதான் இருக்கிங்க போலிருக்கு.

      Delete
  23. பிரிவோம் சந்திப்போம்..! இந்த மாசத்தோட ஹைலைட்டா நான் நினைக்கிறது இதைத்தான்..!

    எடிட்டர்.


    ஆஹா.. இதைத்தான் நான் இரண்டு பதிவுகளாக கூறிக்கொண்டிருக்கிறேன்..! தேங்க் யூ எடிட்டர் சார்..!

    ReplyDelete
  24. Friends,

    Keep playback speed at 1.25 - that will give a good feel and pace for this recording.

    And if you want some comedy, make playback speed to 1.75 :-D :-D :-D

    ReplyDelete
    Replies
    1. Dear Editor,

      This content is real good. Monthly once you can give a recording like this instead of writing up on the blog.

      Delete
    2. ///Monthly once you can give a recording like this ///

      +1111

      Delete
    3. மாங்கு மாங்கென்று எழுதுவதை விடவும், இது சுளுவாகத் தான் உள்ளது சார் ! பார்க்கலாமே - நண்பர்களுக்கும் இது பிடித்திருக்கிறதா என்று !

      Delete
  25. பிரிவோம் சந்திப்போம் :

    முழுக்க முழுக்க கெட்டவர்களே இல்லாமல் ஒரு கதையை சுவாரஸ்யமாக எழுபது பக்கங்களுக்கு கொண்டு செல்ல முடியுமா..!? முடியும் என்கிறது இந்த பிரிவோம் சந்திப்போம்.!

    கதையின் மாந்தர்கள் அனைவருமே சூழ்நிலையால் மட்டுமே சில தவறுகளை செய்கிறார்கள்..( சில நல்லவையும் செய்கிறார்கள்.!
    சூழ்நிலையோடு சுயநலமும் கைகோர்க்கும் வேளையில் கெட்ட சங்கதியின் வீரியம் சற்று தூக்கலாக அமைந்துவிடுகிறது.!

    கதையில்.. இந்த சம்பவம் அடுத்து இப்படிப் போகும் என்று எதிர்பார்த்தால் முற்றிலும் மாறாக நடக்கும்.!

    முழுக்கதையையுமே சொல்லி பக்கம் பக்கமாக சிலாகித்து விவரித்தால்தான்.. சரியாக விமர்சனம் செய்த திருப்தி என் மனதிற்கு கிட்டும்.! முடிந்தவரை சுருக்கமாக (அரைகுறையாக) விமர்சிக்க முயல்கிறேன்.!
    அந்த டைட்டில் போடும் பேனல் ஒன்றே போதும்.. சித்திரங்களைப்பற்றி சிலாகிக்க... ப்ப்ப்பா செம்ம.!

    அநாதையாகிவிட்ட நண்பனின் மகனை(பென்னட்) தன்னுடன் அழைத்துச் செல்கிறார் ரஸ்ஸல் என்றொரு கௌபாய்.! காலமாற்றத்தில் ரயில்வேக்களின் முன்னேற்றத்தால் நொடித்துப்போகிறது ரஸ்ஸல் போன்றோரின் கௌபாய் தொழில்.!
    சேமிப்பையும் பென்னட்டையும் வாரிக்கொண்டு கிர்பி என்ற நம்பிக்கைக்குரிய அஸிஸ்டென்டுடன் வளமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறார் ரஸ்ஸல்.!
    வழியில் ஒரு சிறுநகரத்தில் இளைப்பாறவும் பொருட்கள் சேகரிக்கவும் தங்குகிறார்கள்.!

    இதற்கிடையே கால்நடைகளை ஏற்றும் ரயில்வே ஜங்சனை குறுக்கு வழியில் அச்சிறு நகருக்கு (அதாவது ரஸ்ஸல் குழு தங்கும் அதே சிறுநகருக்கு) கொண்டுவர திட்டமிடுகிறார்கள் மேயரும் ஷெரிப்பும் மற்றும் முக்கியஸ்தர்களும்.!

    "இளைப்பாறச்"சென்ற ரஸ்ஸலும் கிர்பியும் திரும்பி வந்து பார்க்கும்போது பென்னட் பிணமாகக் கிடக்கிறான்.!

    பென்னட்டின் மரணத்திற்கு காரணமானவனை ஒப்படைக்க வேண்டுமென கூலிப்படையினரின் துணையுடன் ஊரை முற்றுகையிடுகின்றனர் ரஸ்ஸல் மற்றும் கிர்பி ஆகியோர்.! சிறுவனின் மரணம் வெளியில் தெரிந்தால் ஊரின் பெயர் கெட்டுவிடும்., அதனால் ரயில்வே ஸ்டேசன் வருவதில் பிரச்சினையாகிடுமே என்று அவ்வூர் பெருந்தலைகள் தவிக்கிறார்கள். எதுவும் செய்யமுடியாதபடி ஊரைச்சுற்றி ரஸ்ஸல் கும்பல் வெறியோடு காத்திருக்கிறது.!

    இனிதான் கதையில் பல திருப்பங்களே..!

    தன் மாணவனின் உயிரையும் எதிர்காலத்தையும் காக்க நினைத்த ஸ்கூல் டீச்சிர் மிஸ் காலின்ஸ் ரஸ்ஸலிடம் போகிறாள்.! வெறியில் இருக்கும் ரஸ்ஸலோ மிஸ் காலின்ஸையே கொல்ல முயல., ரஸ்ஸலின் வலது கையான கிர்பியே ரஸ்ஸலுக்கு எதிராக திரும்புகிறான்.!
    இந்த மோதலில் எதிர்பாராத விதங்களில் எதிர்பாராத சிலர் உயிர்விட.. அச்சிறு நகரின் பிரச்சினை சுமூகமாக முடிகிறது என்பதுதான் பிரிவோம் சந்திப்போமின் கதை.!

    ~~~~ தொடரும் ~~~~

    ReplyDelete
    Replies
    1. ரஸ்ஸல்., பென்னட்.., கிர்பி., மிஸ் காலின்ஸ்., டாம் போன்றோர் மறக்கவியலா கதாப்பாத்திரங்கள்.!
      தன் நண்பனின் மகன் என்றாலும் தன்மகனைப் போலவே பென்னட்டை வளர்க்கும் ரஸ்ஸல். பாசத்தை வெளிக்காட்டாமல் முரட்டுத்தனமாகவே நடந்துகொண்டாலும்... "என் சொத்து முழுதையும் நீ எடுத்துக்கொள். என் மகனுக்கு நல்ல எதிர்காலத்தை தருவேன் என்ற உறுதிமொழியை மட்டும் கொடு. " என்று கிர்பியிடம் கூறிவிட்டு உயிரைப் பணயம் வைத்து மோதலில் இறங்கும்போதும்.. பெற்றால்தான் பிள்ளையா என்று கேட்டு பென்னட்டின் மரணத்திற்கு பழிவாங்க சேமிப்பு மொத்தத்தையும் இழக்கத் தயாராகுபோதும் ரஸ்ஸல் ஒரு பாசமிக்க தந்தையாக மிளிர்கிறார்.!

      ரஸ்ஸல் ஸ்கூல் மிஸ்ஸை கொல்லத் தயாராகும்போது ஒரு வெறியனாக நினைக்கத் தோன்றுகிறது.. எல்லாவற்றையும் இழந்தபிறகு கிர்பியின் கையால் இறக்க விரும்பி தோட்டா நீக்கிய துப்பாக்கியுடன் மோதும்போது அதே ரஸ்ஸல் மீதான மதிப்பு கூடுகிறது.!

      ரஸ்ஸலிடம் விசுவாசமிக்க உதவியாளனாக இருக்கும் கிர்பியும் பென்னட்டின் மரணத்திற்கு பழிவாங்க துடிக்கிறான். ஆனாலும் ஸ்கூல் மிஸ் நிச்சயம் கொலை செய்திருக்க மாட்டாள் என்று நம்பி ரஸ்ஸலுக்கு எதிராக திரும்பவதும்.. மிஸ்ஸுக்காகவோ அல்லது சோகத்தில் ரஸ்ஸல் தவறு செய்துவிடக்கூடாது என்ற எண்ணத்தாலோ ரஸ்ஸலையே எதிர்த்து கொல்வதிலும் பிறகு அநியாயமாக உயிர்விடுவதிலும் கிர்பியின் பாத்திரம் நிறைய ஸ்கோர் செய்கிறது.!

      மிஸ் காலின்ஸ்.. தன்னுடைய உதாவக்கரை மாணவன் டாம் மீது நம்பிக்கை வைத்து.. அவனை தண்டனையில் இருந்து காப்பாற்றி நல்ல எதிர்காலத்தை உண்டாக்கித்தர விரும்பி.. தானே வலியப்போய் ரஸ்ஸலிடம் மாட்டிக்கொள்கிறாள்.! கிர்பியின் உதவியுடன் ரஸ்ஸலிடம் இருந்து தப்பினாலும் விதி வேறு உருவத்தில் வந்து இருவரையும் காவு வாங்கிவிடுகிறது.!

      டாம்.. முரட்டுத்தனமான உதவாக்கரையாக திரியும் தனக்காக உயிர்த்தியாகம் செய்த ஸ்கூல் மிஸ்ஸின் மரணத்தை நேரில் பார்த்துவிட்டு ஊரைவிட்டே ஓடிவிடுகிறான்.! பல வருடங்கள் கழித்து அதே ஊருக்குத் திரும்பி வருகிறான். மிஸ்ஸின் உயிர்த்தியாகத்தால் இன்று அச்சிறு நகரமும் அதன் பெருந்தலைகளும் செழிப்பாக இருப்பதைப் பார்த்துக்கொண்டே சென்று மிஸ்ஸின் கல்லறையில் மலர் வைத்துவிட்டு திரும்பவும் அதே ரயிலில் ஏறிக் கிளம்பிவிடுகிறான்.!
      அன்று உதவாக்கரை மாணவனாக இருந்த டாம்.. இன்று மிஸ்ஸின் விருப்பப்படி ஒரு கௌரமான ஷெரீப்.! டாம் மட்டும் மிஸ்ஸின் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கியிருந்தால் இது சாதாரண கதை.. பழிவாங்குவதைவிட மிஸ்ஸின் உயிர்த்தியாகத்திற்கான மரியாதையை வாழ்ந்துகாட்டி திருப்பி செலுத்தியிருக்கிறான் டாம்! அருமையான க்ளைமாக்ஸ்.!

      மார்சல் சைக்ஸ் ..
      நில் கவனி வேட்டையாடு.. பிரிவோம் சந்திப்போம்..

      எடிட்டர் சார்..

      ஜம்போவில் வரும் ஒன்ஷாட் கௌபாய் கி.நா செலக்ஷன்ஸ் தூள் கிளப்புகின்றன .. மனமார்ந்த பாராட்டுகளும் நெஞ்சார்ந்த நன்றிகளும் சார்.!

      Delete
    2. அட்டகாசமான ரிவியூ KOK!! பதிவின் நீளமே சொல்கிறது - நீங்கள் இக்கதையை எத்தனை ரசித்துப் படித்திருக்கிறீர்கள் என்பதை! விறுவிறுப்பான இவ்விமர்சனத்தைப் படிக்கும் நம் நண்பர்களுக்கு சித்தே 'இளைப்பாற வேண்டிய' அவசியம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! :D

      Delete
    3. அடேங்கப்பா..

      கதையை விட விமர்சனம் பெருசா இருந்தாலும் நன்றே...:-)

      Delete
    4. எடிட்டர் சார்..

      ஜம்போவில் வரும் ஒன்ஷாட் கௌபாய் கி.நா செலக்ஷன்ஸ் தூள் கிளப்புகின்றன .. மனமார்ந்த பாராட்டுகளும் நெஞ்சார்ந்த நன்றிகளும் சார்.!

      Delete
    5. எடிட்டர் சார்..

      ஜம்போவில் வரும் ஒன்ஷாட் கௌபாய் கி.நா செலக்ஷன்ஸ் தூள் கிளப்புகின்றன .. மனமார்ந்த பாராட்டுகளும் நெஞ்சார்ந்த நன்றிகளும் சார்.!

      Delete
    6. கண்ணரே பிரிச்சி மேய்ஞ்சிட்டிங்க போல....

      Delete
    7. கண்ணா திரும்பவும் பழைய பன்னீர் செல்வம் ஆக வந்து இருக்கிறீர்கள். செம்மயா

      Delete
    8. கண்ணா எம்மாம் பெரிய பின்னூட்டம்! செம அலசல்! கலக்குங்க!!

      Delete
    9. அழகான அலசல் சார் ! Youtube பதிவில் நான் சொன்னது போல, ஜம்போ தடத்தில் எனக்கு சாத்தியமாகிடும் சுதந்திரமே இது போன்ற one shot-களை முயற்சிக்க கைகொடுக்கிறது !

      Delete
  26. மலர்ச்சியான மாற்றம் சார்.. மரத்தடி மீட்டீங் பீலிங்... ஒரே குறை பேக்கிரவுன்ட் வெளிச்சம் உங்க முகத்தை சரியா பார்க்க முடியலை..

    ReplyDelete
    Replies
    1. அவரு விவரமாத்தான் லைட்டிங்கை அப்படி செட் பண்ணியிருக்காரு! :)

      Delete
    2. //மரத்தடி மீட்டீங் பீலிங்//

      ஆஹா !!

      Delete
  27. ஆஹா!!! முழு வீடியோவையும் கேட்டாச்சு(?)!!

    எடிட்டர் சார், தங்கு தடையில்லாம முழு வீடியோவுலயும் அருமையா, தெளிவா பேசி இருக்கீங்க!
    இந்த மாத இ்தழ்களின் தேர்வு/தயாரிப்புப் பின்னணி தகவல்கள் அனைத்தும் சுவாரஸ்யம்!!
    அந்த '5 நிமிஷத்துக்கான' விளக்கத்தையும் ஒருவழியா தெரிஞ்சுக்கிட்டாச்சு!
    இந்தமாதிரி வீடியோ பதிவும் கூட (எங்க பாட்டீம்மா கதை சொல்ற மாதிரி) நல்லாத்தான் இருக்கு! ப்ளீஸ் கண்டினியூஊஊ!! மேலே காமிக் லவர் சொன்னாப்ல மாசத்துக்கு ஒரு தடவையாவது இந்த மாதிரி வீடியோ போட்டு வுட்டீங்கன்னா செமயா இருக்கும்!

    சகோ கோகிலாவுக்கு திருமண வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ///இந்தமாதிரி வீடியோ பதிவும் கூட (எங்க பாட்டீம்மா கதை சொல்ற மாதிரி) நல்லாத்தான் இருக்கு! ப்ளீஸ் கண்டினியூஊஊ!! மேலே காமிக் லவர் சொன்னாப்ல மாசத்துக்கு ஒரு தடவையாவது இந்த மாதிரி வீடியோ போட்டு வுட்டீங்கன்னா செமயா இருக்கும்///


      யெஸ்ஸ்ஸ்... +1

      Delete
    2. சகோதரி கோகிலா விற்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.

      Delete
    3. //அந்த '5 நிமிஷத்துக்கான' விளக்கத்தையும் ஒருவழியா தெரிஞ்சுக்கிட்டாச்சு!//

      ஆத்தா !! ஒரு வாலிபரின் உசிர் ஊசலாடாது காப்பாற்றிட்டேன் !!

      Delete
  28. நாங்க ரசிச்சுட்டு லந்து பண்ற ஆளுக இல்லே சார்..நாங்க ரசிக்கிறதே லந்து பண்றததை தான்...

    ReplyDelete
  29. நம் காமிக்ஸ் குடும்ப சகோதரி கோகிலாவுக்கு திருமண வாழ்த்துகள்.

    ReplyDelete
  30. சாத்தானின் சீடர்களில் தான் அடுப்பையே பத்த வெச்சது.. அப்கோர்ஸ் பாத்திரங்களை பரணிலிருந்த இறக்க கொஞ்சம் தாமதமாயிடுச்சு..

    ReplyDelete
    Replies
    1. இதுக்காகயாவது 'அந்த' புது புக்கைப் போட்டாகணும் போலிருக்கே !!

      Delete
  31. வானவில்லுக்கு நிறமேது.:

    பூக்கடைக்கு விளம்பரம் தேலையில்லைன்னு சொல்லுவாங்க..
    அதேபோல
    வறுத்தகறிக்கும் விளம்பரம் தேவையில்லைன்னு நினைக்கிறேன்.!

    ரேட்டிங் 10/10

    ReplyDelete
  32. நாளை வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தில் அடியெடுத்து வைக்க இருக்கும் சகோதரி கோகிலா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.. 💐💐💐💐💐

    ReplyDelete
  33. அனைவருக்கும் வணக்கம். வீடியோவில் எடிட்டரை பார்ப்பது மகிழ்ச்சியே. இதுவும் ஒரு புது experiece தான். ஆனால் 40 மினிட்ஸ் என்பது கொஞ்சம் அதிகம் போல் உள்ளது. எழுத்துக்களை வாசிப்பதை விட வீடியோ வில் பார்ப்பது சுலபம்தான். Thumbs up...

    ReplyDelete
    Replies
    1. சார்....review 5 புக்குகளுக்கு & அவற்றுள் 2 கொஞ்சம் in-depth அலசிட அவசியமாக்கிய இதழ்கள் ! So நீண்டு சென்றதைத் தவிர்க்க இயலவில்லை !

      Delete
  34. சகோதரி கோகிலா அவர்களுக்கு திருமணம் நல்ல முறையில் நடைபெறவும் அவர்கள் இல்வாழ்க்கை சிறந்து அமையவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய வாழ்த்துகளும்...:-)

      Delete
    2. சகோதரி கோகிலா அவர்களுக்கு திருமண நல்வாழ்த்துகள்.

      Delete
  35. ஒரு நல்ல குறும்படம் பார்த்த திருப்தியோடு தூங்கச் செல்கிறேன்!! (இன்றைய கனவில் ஏலியன்ஸ் வந்து பயமுறுத்துமோன்னு நினைச்சாத்தான் கொஞ்சம் நடுக்கமா இருக்கு!)

    ReplyDelete
  36. கோகிலா அவர்கள் மண வாழ்க்கையில் மகிழ்வான நாட்களே நிறைந்திருக்க மனதார வாழ்த்துகிறேன் கோகிலா அவர்களிடம் ஒரெயோரு கோரிக்கை வைக்கிறேன் எ(ங்கள்)ன் மனைவி(கள்)தூக்கி போட்டு உதைப்பது போல் அவர் செய்யக்கூடாது
    இந்த விஷயம் கடுகளவு கசிஞ்சா கூட என் உயிருக்கு ஆபத்து என்பதனால் உடனே ஓடிவிடுகிறேன் உடூ ஜீட்
    🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃

    ReplyDelete
  37. Replies
    1. அறுவை என்றில்லாதவரை அருமை சார் !

      Delete
  38. Replies
    1. எல்லோருமே பார்த்திருக்கிறார்களே சார் ?

      Delete
  39. சார் நீங்க இந்த பதிவையெல்லாம் எங்களுக்குஈரோட்டுல படிச்சுக் காட்டுங்க ப்ளீஸ். நிற்க. டயபாலிக்கின்அலைகடல் அற்புதம் சூப்பர். கப்பலில் கொள்ளையடிக்கப்போகும். டயபாலிமற்றும்ஈவா இருவரும்கிராமேன் தம்பதி, கிளார்க் தம்பதிஎன்று இரண்டு மாறுவேடம் களில் பயணிக்கின்றனர். எதிர்பாராமல் குறுக்கிடும் கொள்ளையர்களால்ஒரு மாறுவேடம் வெளிப்பட மற்றொரு வேடத்தில் தப்புகின்றனர். டெக்ஸ் கதைகளில்யுத்ததந்திரங்கள் போலகொள்ளையரின்இந்ததந்திரமும் நம்மை ரசிக்க வைக்கிறது. ரசிக்க வைக்கும்கதையமைப்பின் காரணமாய் முதலிடம் பிடிக்கிறார் டயபாலிக்..கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. //முதலிடம் பிடிக்கிறார் டயபாலிக்..//

      அகில் உங்ககிட்டே நேத்திக்கு ஏதும் பேசினானா சார் ?

      Delete
  40. ஆஹா....யூ ட்யூப் போகனுமா ...

    போவோம்...போய்த்தான் பாப்போம்..:-)

    ReplyDelete
    Replies
    1. அங்கே போறதுக்கு எத்தனாம் நம்பர் பஸ்னு கரீட்டா கேட்டுக்கோங்க தலீவரே !

      Delete
  41. அருமை சார் கண்ணை மூடிக் கொண்டு கேட்கும் போது உலக நாயகன் கமல் ஹாஸன் குரல் போலவே இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நான் காதை மூடிக்கிட்டு கேட்கும்போது கர்மவீரர் காமராஜ் குரல் மாதிரியே இருந்துச்சு! :D

      Delete
    2. கமல் ஹாஸன் + சிவகாசி ஸ்லாங்

      Delete
    3. பாவம் சார் உலக நாயகன் !!

      அப்புறம் நீங்க கண்ண மூடிட்டே கேட்டதுக்கு வேற காரணங்கள் ஏதும் இல்லீங்களே ? இருக்காது..இருக்காது...குமார் சாரைலாம் நம்பலாம் !!

      Delete
    4. இல்லை சார். ஒரு சில நேரம் சில விசயங்களை ஆழ்ந்து கவனிக்க கண்களை மூட வேண்டும் சார். :)))

      Delete
    5. ////ஒரு சில நேரம் சில விசயங்களை ஆழ்ந்து கவனிக்க கண்களை மூட வேண்டும் சார்.////

      நான்லாம் இஸ்கூல் படிக்கறப்போலேர்ந்தே இப்படித்தான்! ;)

      Delete
  42. உங்களது பார்வையில் இந்த மாத இதழ்கள் அருமையாக இருந்தது சார்.

    இதழ்களை தேர்ந்தெடுக்க காரணம்

    வாசகர்களுக்கு நீங்கள் தர விரும்பும் சர்ப்ரைஸ்

    இந்த மாத இதழ்கள் சோகமாகவே முடிவது அனைத்துமே அருமை.


    நல்ல முயற்சி சார்.

    ReplyDelete
  43. யு ட்யூப் பதிவு நல்ல முயற்சி தொடர்ந்து தர வேண்டும் காசி

    ReplyDelete
  44. விஜயன் சார், அட்டகாசமான வீடியோ, காலையில் வீட்டில் மற்றவர்கள் எழுந்து கொள்வதற்கு முன்னால் எழுந்து உங்கள் வீடியோ முழுவதும் பார்த்து விட்டேன்.

    வரும் மாதங்களில் அந்த அந்த மாதங்களில் வெளிவந்த நமது காமிக்ஸ் கதைகளின் விமர்சனத்தை இது போன்று வீடியோவாக வெளியீடுகள். இது நமது காமிக்ஸ் மேலும் பலரிடம் செல்ல மற்றும் கடைகளில் மற்றும் ஆன்லைனில் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    தங்கு தடையின்றி மிகவும் அருமையாக பேசி உள்ளீர்கள். சூப்பர். தொடருங்கள்.

    அடுத்த முறை முகத்தில் வெளிச்சம் படுமாறு உள்ள இடத்தில் உட்கார்ந்து பேசுங்கள். இன்றைய வீடியோவில் பின்புறம் உள்ள ஜன்னலில் வெளிச்சம் உங்கள் முகத்தை மற்றும் நீங்கள் காண்பித்த நமது காமிக்ஸ் படங்களை சரியாக பார்க்க முடியாமல் செய்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. @PfB

      குட் சச்சச்சன்!

      Delete
    2. //பின்புறம் உள்ள ஜன்னலில் வெளிச்சம் உங்கள் முகத்தை மற்றும் நீங்கள் காண்பித்த நமது காமிக்ஸ் படங்களை சரியாக பார்க்க முடியாமல் செய்து விட்டது.//

      ஆபீசில் எனது அறையின் அமைப்பு சார் ; மாலை 4 மணிக்கும் வெளிச்சம் தூக்கலாகவே இருந்தது ! Maybe அடுத்தவாட்டி இப்படி ஏதேனும் shoot செய்வதாக இருந்தால் வெயில் போன பிற்பாடு முயற்சிக்கணும் போலும் !

      Delete
    3. மிக முக்கியமாக முகத்தில் வெளிச்சம் படும்படி பார்த்து கொள்ளுங்கள், முகத்திற்கு பின்னால் வெளிச்சம் இருக்க வேண்டாம்!

      Delete
  45. நமது காமிக்ஸ் குடும்ப சகோதரி கோகிலா அவர்களுக்கு இன்று திருமணம் நல்ல முறையில் நடைபெறவும் அவர்கள் இல்வாழ்க்கை சந்தோஷம் மற்றும் ஆரோக்கியமானதாக அமையவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  46. பிரிவோம் சந்திப்போம் ..

    இந்த மாதத்தின் blockbuster இதுதான் ..

    கதைதான் பிரதானம் .. ஹீரோ , வில்லன் என்று குறிப்பிட்டு சொல்ல யாரும் இல்லை .. அனைவரும் சூழ்நிலைக்கு ஏத்த மாறி react பண்ணுகிறார்கள் .. முதல் 2 பக்கமே கதையை செட் செய்து விடுகிறது .. coloring கதையின் pace எல்லாமே சரியாக உள்ளது .. எதார்த்தத்தின் பிரதிபலிப்பு பிரிவோம் சந்திப்போம் ..

    rating:10/10..

    ReplyDelete
    Replies
    1. //ஹீரோ , வில்லன் என்று குறிப்பிட்டு சொல்ல யாரும் இல்லை .. அனைவரும் சூழ்நிலைக்கு ஏத்த மாறி react பண்ணுகிறார்கள் //

      இந்தக் கதையின் அச்சாணியே அது தான் சார் ; அவரவரது சூழல்களில், அவரவரது reactions நியாயமாகவே தென்படக்கூடும் ! ரொம்பவே தேர்ந்த கதை சொல்லும் பாணி !

      Delete
  47. அப்புறம் இன்று நேரம் கிடைக்கும் போது எடிட்டர் மாமாவின் இந்த வீடியோவை குழந்தைகளுடன் வீட்டில் டிவியில் பார்க்க உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. பாவம் சார் பிள்ளைங்க !!

      Delete
    2. அவங்க அதனை முழுவதும் பார்ப்பாங்களா என தெரியாது பட் முதல் சில நிமிடங்கள் பார்த்த பின்னர் அவர்களில் reaction என்ன என தெரிந்து கொள்ள ஆசை!

      Delete
    3. எனக்குப் போட்டியாய் முழிக்கப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதி !!

      Delete
    4. Parani, do that when Editor is analyzing Lucky Luke or something? This content is so heavy - they may become allergic to Editor mama! :-)

      PS: Nice new name for our dear Editor ! Note this point Erode Vijay !! :-D

      Delete
    5. @Raghavan

      ஹிஹி!! எனக்கே ஒருதபா அப்படிக் கூப்பிடணும்னு ஆச ஆசயா வருது!!

      Delete
  48. Just now only I an re reading Comanche series . definitely it should continue once Trent is over

    ReplyDelete
  49. Video is good. But try to make it short .

    ReplyDelete
    Replies
    1. I share what I feel like sharing ; brevity or verbosity is never intended !

      Delete
  50. விஜயன் sir! வீடியோ பாத்தாச்சு! தங்கு தடை இல்லாமல் இவ்வளவு நேரம் பேச எப்படி தான் வருகிறதோ உங்களுக்கு?

    (ஒருவேளை retake எதும் நடந்து இருக்குமோ?)

    5 புத்தகங்களின் கதை குறித்த உங்கள் எண்ணம்! கதைகள் தேர்வான விதம்! குறிப்பாக பிரிவோம் சந்திப்போம்! கண்ணான கண்ணே! பற்றிய தகவல்கள்!

    இந்த வீடியோ பதிவு முறை இந்த ஒரு முறை மட்டும் தான் என்று கூறி இருப்பது ஏமாற்றம் தான்! இருந்தாலும் ஒரு மகிழ்வான காலை பதிவு - நேர்காணல் போல கிடைத்ததும் ஓர் வரமே!

    ReplyDelete
    Replies
    1. சார்....இதை இப்டி பேசியிருக்கலாமோ ? அதை அப்டி சொல்லியிருக்கலாமோ ? என்ற யோசனைகளோடு retake எல்லாம் எடுத்து, அப்பாலிக்கா அவற்றை எடிட் செய்து ; ஒட்டுப் போட்டு, ஒரே வீடியோவாக்கும் நுணுக்கங்களும் நம்மகிட்டே லேது ; அதுக்கான பொறுமையும் நஹி ! As always - மனசிலே தோணுறதை தப தபவெனப் பகிர்வது மட்டுமே நமக்கெல்லாம் சாத்தியம் சார் ! 4 GB இருந்த இந்த வீடியோவை நேற்றிரவு வலையேற்றுவதற்குள் நாக்குத் தொங்கிப் போய் விட்டது ; இதில் பட்டி டிங்கேரிங்கெல்லாம் சான்ஸே கிடையாது !

      Delete
  51. காமிக்ஸ் வந்துவிட்டது. ஆனால் பெங்களூரு க்கு. நான் திருச்சி யில் இருக்கேன்.
    நண்பரிடம் வாங்கி வைத்து உள்ளார்.

    எப்ப படிப்பேன்னு எனக்கே தெரியலை.

    (நான் காமிக்ஸ் படிக்கும் வரை விமர்சனம் படிக்க மாட்டேன்.)

    ReplyDelete
  52. Suggestion on video: Next time, please keep the mobile in horizontal direction and do the recording.

    ReplyDelete
    Replies
    1. நினைத்தேன் சார் - ஆனால் போன் குப்புற விழுந்து கடுப்பேற்றிக் கொண்டிருந்தது ! நேராய் நிறுத்திய போது பிராணனை வாங்காது இருந்தது ! So அப்படியே விட்டு விட்டேன் !

      Delete
    2. You can try using mobile holder/stand for this!

      Delete
  53. சகோ.கோகிலாவிற்கு திருமண வாழ்த்து கண்கள்.

    ReplyDelete
  54. // I share what I feel like sharing //

    Please continue like this sir!
    வீடியோ எனும் போது short ஆக செய்ய வேண்டும் என நினைக்க வேண்டாம்! வேண்டுமானால் வீடியோ அதிக பட்சமாக 30 நிமிடங்களுக்குள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்! அல்லது இரண்டு வீடியோவாக போடுங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. 5 புக்குகள் இல்லாத பொழுதுகளில் ; தாக்கத்தை ஏற்படுத்திடும் இதழ்கள் அவ்வளவாய் இல்லாத பொழுதுகளில் தானாக நீளம் குறைந்திடும் சார் !

      Delete
  55. பார்த்துட்டேன்
    பார்த்துட்டேன்

    ReplyDelete
    Replies
    1. ரிக்சா மாமா படத்தில் வரும் கவுண்டமணி சத்யராஜ் காமெடி ஞாபகம் வருகிறது!

      Delete
    2. கடவுளே...கடவுளே..கடவுளே...

      Delete
  56. சகோதரி கோகிலாவின் திருமண வாழ்க்கை சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  57. நடுநிலையான விமர்சனம்

    ReplyDelete
  58. இந்த வீடியோ காமிக்ஸ் review நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது!

    ReplyDelete
    Replies
    1. நமக்கு இது புதுசு சார் ; but இன்றைய tech லோகத்தில் இது ரொம்ப பழசு !

      Delete
    2. True. But it is very much required for our comics sir!

      Delete
  59. செம சார்.... பின்னிட்டீங்க...!!! வித்தியாசமான அனுபவம். சரியான ஐடியா! நேரில் தங்களோடு உரையாடுவது போல இருந்தது. அருமையாக இருந்தது. ரிப்பேர் ஆன லாப்டேக்கு பிக் தேங்ஸ்! அடுத்த வாரங்களில் தாங்கள் நார்மல் பதிவுக்கு வந்துடுவீங்க என்றாலும் மாதம் ஒருமுறை இதே போல போடலாம். இல்லீனா உப பதிவை இந்த முறையில் போடலாம் சார். முன்னெப்போதும் விட தங்களது அண்மை+ நண்பர்களது அண்மை தேவைப்படும் நேரம் இது! ப்ளீஸ் கன்சிடர் சார்.

    ReplyDelete
  60. எடிட்டர் சார், long arm flexible mobile holder என்று பல தளங்களில் விற்கிறது. 3-4 வருடங்களுக்கு உழைக்கும். ட்ரை பண்ணுங்க. விலை 500 ருபாய்க்குள். Going ahead, மாதா மாதம், இந்த மாதிரி ஒரு வீடியோ ஹாட்லைன் வைத்து கொள்ளலாம். BTW உங்கள் தாரக மந்திரம் பாயாச அண்டா வா? மூன்று தடவை சொல்லிட்டீங்க. அப்புறம் உங்க accent எங்காத்து accent மாதிரியே இருக்கு (அல்ப சந்தோஷம்). என்ன இருந்தாலும்
    கடைசி பக்கங்கள் ஒட்டினது தப்பு, பல பேரை கிழிக்க வெச்சிட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. திட்டமிடல் துளியுமின்றி எடுத்த impromptu முயற்சி என்பதால் முன்னேற்றங்களுக்கு நிச்சயம் இடமிருக்கும் தான் !

      அப்புறம் நம்மள் கி accent-ன் பின்புலத்தில் நிறைய விஷயங்கள் உள்ளனவோ ?

      Delete
  61. 5புத்தகங்களின் மேக்கிங்கை விலாவரிபடுத்தி விட்டது வீடியோ பதிவு. இத்தனை தகவல்களை வழக்கமாக சந்தா அறிவிப்பு பதிவுல தான் காண முடியும். தலை கதைகளின் தேர்வுக்கு தாங்கள் சொல்லி உள்ள காரணம் எக்ஸலன்ட்! ரியாலிட்டி கூட! பெரும்பாலான நண்பர்கள் இதை உணர்ந்து உள்ளோம். தல புக் படித்து முடிக்கும் போது மனம் எத்தனை கனமாக இருந்தாலும் இலகுவாக மாறிடும். தங்களது குரலில் இன்னும் ஆழமாக படவேண்டிய அண்டாக்களில் கூட விழும்.

    ReplyDelete
    Replies
    1. அண்டாவென்பர்..குண்டாவென்பர்...அதிகாரியின் பெயர் கேட்டாலே அதிர்ந்து நிற்போர் !

      Delete
  62. "பிரிவோம் சந்திப்போம் "-- கதையை செலக்ட் பண்ண தாங்கள் காண்பித்த ஓவியம் இந்த கதையின் ஹைலைட். என்னோட விமர்சனத்தில் நானும் இதை குறிப்பிட்டு இருந்தேன்.! அந்த ஓவியம் பார்த்தவுடன் கண்ணை விலக்க முடியாத ஈர்ப்பு! தாங்கள் இந்த கதை செலக்ட் பண்ணவே இந்த ஓவியம் தான் காரணம் என்பது ஐசிங் ஆன் த கேக் சார்.


    ////கதையோட்டத்துக்கு இணையாக போட்டி போடும் ஓவியங்கள் கதை நெடுக வலு சேர்க்கின்றன்.

    6ம் பக்கத்தின் "பிரிவு...புதுச் சந்திப்பு"- என இருக்கும் அகன்ற பேணலில் உள்ள ஓவியம் உச்சம்!///.

    ///Vijayan21 May 2020 at 22:26:00 GMT+5:30
    6ம் பக்கத்தின் "பிரிவு...புதுச் சந்திப்பு"- என இருக்கும் அகன்ற பேணலில் உள்ள ஓவியம் உச்சம்!

    +1 ////




    ReplyDelete
  63. ஒவ்வொரு மாதமும் புத்தகம் வெளிவந்தபின்
    நண்பர்களின் அலசல்கள் துவங்கிய சமயம் இதேபோல் வீடியோ வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.
    அடுத்தமுறை உங்கள் தலைக்கு பின்னே ஒளிவட்டம் இன்னும் 'பளிச்' சென்று இருக்கிற மாதிரி பார்த்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்! எக்ஸ்ட்ரா லைட்டிங் செலவு ஆனாலும் பரவாயில்லை சார். இந்தமுறை உதயசூரியனின் வெளிச்சம் டல்லடிக்கிறது. (நான் அரசியல் ஏதும் பேசலிங்கோ....!) அடுத்தமுறை முகத்துக்கும் கொஞ்சம் வெளிச்சம் படற மாதிரி பார்த்துக்கொண்டு ஒருமாசம் டெக்ஸ், ஒருமாசம் டைகர், ஒருமாசம் தோர்கல், ஒரு மாசம் லக்கிலூக், அப்புறம்... ஸ்பைடர்,ஆர்ச்சி...இப்படி கெட்டப் சேஞ்ச் பண்ணி சேஞ்ச் பண்ணி வீடியோவை வெளியிட்டால் குரலில் மட்டுமல்ல தோற்றத்திலும் உலக நாயகனாகிவிட வாய்ப்பிருக்குறது.( மாடஸ்டி வேடம் வேறு போடணுமே...!)பர்ரால்லே சார். ஔவை ஷண்முகியை பாத்து அட்ஜீஸ் பண்ணிக்கலாம்.

    ReplyDelete
  64. முழு காணொலியையும் கண்டாயிற்று,இந்த முயற்சி கூட நன்றாகவே உள்ளது,மாதமொருமுறை இதுபோன்ற முயற்சியை முன்னெடுக்கலாம்.......

    ReplyDelete
  65. மே மாத இதழ்களை எப்போது காணுவோம் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழ ஆரம்பித்து விட்டது சார்,அதற்கு இன்னும் 17 பொழுதுகளை காண வேண்டும் எனும்போது சற்று மலைப்பாகவே உள்ளது.....

    ReplyDelete
  66. வீடியோ பதிவும் அருமையோ அருமை சார்.. ஆனால் ஒரே ஒரு குறை தான்..

    கடந்த சில மாதங்களாக என் மகனுக்கு ஆன்லைன் வகுப்புதான் புத்தகங்கள் இல்லாமல்..

    அதே நிலைதான் எனக்கும்.. புத்தகங்கள் நொயிடாவை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது... புத்தகங்கள் இல்லாமல் ஆன்லையனில் புத்கங்களின் விமர்சனங்களை படித்து, பார்த்து காத்திருக்கிறேன்..

    ஒரு தகவல்..

    சமீபத்தில் நண்பரின் உதவியுடன் எமனின் தசை மேற்கு புத்தகம் வாசித்தேன்... அருமையான கதைக்களம், மனதில் நின்ற கதாப்பத்திரங்கள் இவற்றை மிஞ்சும் ஓவியங்கள்.. அந்த செவ்விந்திய சிறுவனின் ஓவியம் மறக்க இயலாதது.. கிராபிக் நாவலில் கௌபாய் இனியும் அமையுமா???..

    சரி ஓவியங்களை படைத்தவர் யாரென்று பார்த்தால் அவர் தோர்கல் படைப்பிலும் பங்காற்றியுள்ளார் என தெரிந்தது..

    தற்போது ஆன்லையனில் 8 தோர்கல் புத்தகங்கள் கிடைக்கிறது..

    எடி சார் மற்றும் நண்பர்களே இந்த புத்தகங்கள் ஒவ்வோன்றும் தனித்தனி கதைகளா அல்லது தொடரா??? தொடரெனில் இவை தவிரவும் புத்தகங்கள் வெளிவந்துள்ளதா???

    நன்றி..

    ReplyDelete
    Replies
    1. லார்கோ..ஷெல்டன்லாம் .இரத்தப்படலம்லாம் படிக்கலியா நண்பரே

      Delete
    2. தோர்கல் தனி தனி கதையாகவும் ரசிக்கலாம்.‌ஆனால் முதல் கதையில் இருந்து வரிசையாக படியுங்கள் இன்னும் நன்றாக இருக்கும்.

      Delete
    3. ஸ்டில் சார்.. லார்கோ, ஷெல்டன் மற்றும் XIII spinoff கதைகளும் வாசிக்கிறேன்.. ஆனால் தோர்கல் இன்னும் வாசிக்கவில்லை.

      பரணி சார்.. இப்போது கிடைக்கும் எட்டு புத்தகங்களில் ஆரம்பிக்கலாமா??

      நன்றி..

      Delete
  67. சார், உண்மையாகவே டயபாலிக்கை ரசித்துப்படித்தேன் சார். கதை மிகவும் பிடித்திருந்தது. தோர்கல். ட்ரெண்ட். டயபாலிக் முதலில் சோபிக்காமல்இப்போதுசாதிப்பவர்கள் கிற்கு சாதிப்பவர்கள் இவர்கள். இவர்கள் வரிசையில் தூங்கிப்போன டைம்பாம் ஏஜெண்ட் 327க்கும் இடம்உண்டுங்களா சார். கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
  68. சார் கோவை வந்தாச்...கொஞ்சும் பார்சல எடுத்தாச்

    ReplyDelete
  69. யூ ட்யூப் பதிவு மிக நன்றாக இருந்தது சார்.ஒவ்வொரு இதழ்களைப் பற்றிய பின்னணித் தகவல்கள் அருமை.தடையில்லாமல் மடை திறந்த வெள்ளமென பேசுவது இன்னொரு கூட்டல் புள்ளி.


    ReplyDelete
  70. முகத்தை சிரித்த மாதிரி வைத்து இருக்கலாமேன்னு நினைத்த போது அந்த கேள்விக்கு பதில் வந்துடுச்சு 👌👌👌🙏

    ReplyDelete
  71. நேற்றுமுன்தினம் ஐந்தாப்பு படிக்கும் என் மகளிடம் 'கண்ணான கண்ணே'வை கொடுத்து, "இரண்டு பக்கங்கள் படி - உனக்குப் பிடித்திருந்தால் தொடர்ந்து படி" என்றேன். படிக்க ஆரம்பித்தவள் நிறுத்தவேயில்லை! அவள் ஆழ்ந்து படித்துக்கொண்டிருந்தபோது க்ளிக்கியதைக் காண "இங்கே க்ளிக்குங்க பாஸு!"

    கதையைப் பற்றி அவளிடம் இன்று காலையில் எடுத்த ஒரு மினி வீடியோ பேட்டியைக் காண "இங்கே க்ளிக்குங்க பாஸு!"

    ReplyDelete
    Replies
    1. குருநாயரே... 👌👌👌👌👌

      Delete
    2. ஈ.வி ஜூனியர் கலக்கல் 👌👌👌. ஆனால் viva questions கொஞ்சம் tough topic போல இருந்தது🤪😁

      Delete
    3. அருமையான கதை சொல்லி. செம்ம.. ஈ.வி. இன்றைய தளிர்கள் துளிர்த்து நாளை மரமாகும்.

      Delete
    4. ஹா ஹா! நன்றி நண்பர்களே! :)

      Delete
    5. அருமை சார்... இப்படி கதை சொன்னால் நாள் முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்... நமது காமிக்ஸின் குழந்தைகள் சங்கத்திற்க்கு தலைவி தயார்...

      Delete
  72. சூப்பர் ஈ.வி.
    குட்டிப்பாப்பா க்ளாராவைப் பற்றி சொல்லும் உங்கள் வீட்டு ரம்யா( பெயர் கரெக்ட் தானே ஈ.வி) குட்டிப்பாப்பாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இல்லீங் ATR sir. அது என் வீட்டம்மாவின் பெயர்! முன்பொரு சமயம் எடிட்டரால் பெயர்மாற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது!

      Delete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. என்னாது!!!! ட்ரெண்ட் முடிய போகுதா??? ஙேஙஙஙஙங.
    வீடியோ ஆரம்பம் ராசி பலன்கள் பகுதியை நினைவு கூர்ந்தாலும் பின்னர் பழகி விட்டது. (Starting trouble எங்களுக்கு)
    ஆனால் எழுத்துக்களை விட்டு விலகி அந்நியமாக இருந்த பீலிங் கொஞ்சம்.
    கடைசி ending நிதர்சனமான சூழலை அறைந்தார் போல சொல்லி இருந்தது.

    ReplyDelete
  75. குட்டிப் பாப்பாவுக்கு வாழ்த்துக்கள். அண்ட் வெல் கம் பாப்பா காமிக்ஸ் உலகிற்கு. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  76. கண்ணான கண்ணே - குழந்தைகளுக்கான கி.நா

    கனவே கலையாதே - மௌன ராகம்

    அலைகடலில் அதகளம் - பழைய நெனப்புடா பேரான்டி பழைய நெனப்புடா!

    வானவில்லுக்கு நிறமேது - வழக்கம்போல் ஹிஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் "என் பெயர் டைகர்"
      இது கொடுக்கும் சுவாரஸ்யம் ஏனோ அந்த நாலிலுமே கிட்டவில்லை!

      ஜம்போ வரட்டும் பார்ப்போம்!!

      Delete