நண்பர்களே,
வணக்கம். ஒவ்வொரு சனிக்கிழமை மாலையிலும் லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு குந்தும் வரையிலும் அன்றைய பதிவினில் எதைப் பற்றி எழுதப் போகிறேன் என்பது குறித்து எவ்வித முன்னேற்பாடும் மண்டைக்குள் இருப்பது கிடையாது ! Of course - புது இதழ்களின் previews ; புத்தக விழா சந்திப்புகள் ; போன்ற clearcut தருணங்களில் பெருசாய் யோசிக்க எதுவும் இராது தான் ! ஆனால் அவை நீங்கலான வேளைகளில், டைப்ப ஆரம்பித்த பின்னே தான் பதிவின் பாதைகளே புலனாவது வாடிக்கை ! ஆனால் இம்முறையோ மெலிதாயொரு மாற்றம் ! நாலைந்து நாட்களுக்கு முன்பிலிருந்தே 'இது தான் இவ்வாரத்து topic !' என்று திட்டவட்டமாய்த் தெளிவிருந்தது என்னுள் ! வேறொன்றுமில்லை folks - ஆண்டின் அந்த "புள்ளிவிபர ரமணா" அவதார் எடுத்திடும் வாய்ப்பு மறுக்கா வாய்த்துள்ளது - டிசம்பர் 31-ம் தேதிக்கு நம்மவர்கள் கிட்டங்கிகளில் ஸ்டாக் எடுத்துக் கொணர்ந்ததன் நீட்சியாக !! So கடந்த ஓராண்டின் ஆன்லைன் விற்பனைகள் ; புத்தக விழா விற்பனைகளுக்குப் பிற்பாடான நிலவரத்தின்படி - நமது நாயக / நாயகியரில் யார் - என்ன மாதிரியான standing தனை கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் பார்ப்போமா ? "நல்ல சேதி-கேட்ட சேதி" பாணியிலேயே இந்தப் பதிவையும் அமைத்திட நினைத்தேன் - simply becos நிலவரத்தில் கலவரமும், குதூகலமும் மாறி மாறியே ஆட்சி செய்து வருகின்றன ! Here goes :
நல்ல சேதி என்னவென்றால் - ஜம்போவில் அறிமுகமாகி, வண்ணத்தில், புது பாணியில் அதிரடி செய்து வரும் ஜேம்ஸ் பாண்ட் 2.0 செம ஹிட் !! "பனியில் ஒரு பிரளயம்" வெளியானது போன வருஷமா ? அல்லது 2018-லா ? என்று நினைவில்லை எனக்கு ; ஆனால் இந்தச் சென்னை புத்தக விழாவினைத் தாண்டி இதனில் ஸ்டாக் இருப்பின் ஆச்சர்யம் கொள்வேன் என்பதே நிலவரம் ! வெகு சமீபத்து "சுறா வேட்டை" கூட doing pretty well ! கறுப்பு வெள்ளையில் மட்டுமன்றி, கலரிலும் நம் 007 சாதித்து வருவது குஷியான விஷயம் தானே ?
கெட்ட சேதி என்னவென்றால் - நமது லேடி ஜேம்ஸ் பாண்ட் மாடஸ்டி இன்னமுமே நம் கிட்டங்கியுடனான பந்தத்தை தளர்த்திக் கொள்ளும் மன நிலையில் இல்லவே இல்லை !! ரூ.30-ல் ஆரம்பித்து ரூ.50 வரையிலும் சின்னச் சின்ன விலைகளிலேயே உள்ள இவரது black & white இதழ்கள் ஓராண்டின் புத்தக விழாக்களிலுமே ஸ்கோர் செய்யாதிருப்பது நிஜமாய் நெருடுகிறது ! All said & done - நமது இளவரசிக்கு இதை விட சற்றே கூடுதலாய் வரவேற்பு இருக்க வேண்டுமென்றே படுகிறது ! இதோ - ரூ.40 விலையிலான புதுத் தடத்தினில் மார்ச் மாதம் வரவுள்ள இளவரசியின் அடுத்த சாகசத்தை எப்படியேனும் டாப் கியர் போட்டுத் தூக்க ஆன மட்டுக்கு முயற்சிப்பது தான் எனது priority !! ஜெய் மாடபலி !!
நல்ல சேதி என்னவென்றால் எப்போதும் போலவே மாயாவிகாருவின் விற்பனையானது ஆண்டின் ஒவ்வொரு புத்தக விழாவிலும் துவக்கத்து உச்சங்களில் இல்லாவிடினும் - pretty decent all the same !! இடைப்பட்ட வேளைகளில் ஆன்லைனிலுமே "வெறும் மாயாவி பிரியாணி போதும் ; டெக்ஸ் வில்லர் லெக் பீஸோ ; லக்கி லூக் பாதாம்கீரோ வேணாம் !!" என்ற ஆர்டர் வருவதுண்டு ! அவர்கள் அனைவருமே - முன்னாட்களது வாசகர்கள் ; மாயாவியின் மச்சீஸ் என்பது நொடியில் புரிந்திடும் ! Evergreen மாயாவி ; முடிவறியா மாயாவி !
கெட்ட சேதி என்னவென்றால் மாயாவியின் சூப்பர் ஹீரோ சகாவான குற்றச் சக்கரவர்த்தி ஸ்பைடர் விற்பனை சார்ந்த ஓட்டப் பந்தயத்தில் ரொம்பவே பின்தங்கி நிற்கிறார் ! In fact மாயாவி ஓடி முடித்து, கோப்பையை வாங்கி விட்டு, வூட்டுக்குப் போய் ஒரு குளியலும் போட்டு முடித்திருப்பார் - இக்கட ஸ்பைடர் காசியப்பன் பாத்திரக் கடையைத் தேடிப் புறப்படும் நேரத்திற்கு ! அந்நாட்களது massive ஹிட்களான 'கடத்தல் குமிழிகள்" : "டாக்டர் டக்கர்" ; "எத்தனுக்கொரு எத்தன்"போன்ற இதழ்களிலெல்லாம் நம்மிடம் உள்ள கையிருப்பைப் பார்த்தால் பீதியில் உறைந்தே போகத் தோன்றுகிறது !! Phew !!
நல்ல சேதி என்னவென்றால் மறுபதிப்பு மேளாவின் இன்னொரு அங்கமான CID லாரன்ஸ் ஓரளவுக்குத் தலை தப்பியுள்ளார் இடைப்பட்ட இந்த ஓராண்டின் புத்தக விழா விற்பனைகளினில் ! ஆனால் ஏனோ புரியவில்லை - "மஞ்சள் பூ மர்மம் " & "சிறைப் பறவைகள்" இதழ்கள் மட்டும் சுத்தமாய் ஸெல்ப் எடுக்கக் காணோம் ! இந்த 2 டைட்டில்களில் மாத்திரம் உள்ள ஸ்டாக் - சாலையோர பானிப்பூரிவாலாவிடம் குமிந்து கிடக்கும் குட்டி பூரிகளைப் போல ஒரு வண்டி தேறும் !! Thinking !!
கெட்ட சேதி என்னவென்றால் பூப்போட்ட ட்ரவுசருக்கும் ; கர்னல் ஜேகப்புக்கும் ரொம்பவே பிடித்தமான ஜானி நீரோ தள்ளாட்டமே கண்டு வருகிறார் விற்பனைகளில் ! காணாமல் போன கைதி ; கொலைக் கரம் ; மூளைத் திருடர்கள் ; போன்ற இதழ்களில் மலையாய் ஸ்டாக் !! மும்மூர்த்திகளுள் முக்கியமான ஜானி நீரோவுக்கு ஏனிந்த பாராமுகம் - முன்னாட்களது வாசகர்களிடம் ?என்பது புரிபட மாட்டேன்கிறது ! Maybe இனிமேல் 2 மாயாவி வாங்கிட வேண்டுமெனில் 1 ஜானி நீரோ வாங்கியே தீர வேண்டுமென்ற நிபந்தனை விதிக்க வேண்டுமோ - என்னமோ ?
நல்ல சேதி என்னவென்றால் நாலைந்து முக்கிய புத்தக விழாக்களின் உபயத்தால் நீலப் பொடியர்கள் SMURFS ஓரளவுக்கு விற்பனை கண்டுள்ளனர் ! இங்கும் "தேவதையைக் கண்டேன்" இதழ் மட்டும் 'அம்போ'வென கண்டு கொள்ள ஆளின்றித் தவிக்கிறது ! ஆனால் பாக்கி SMURFS இதழ்கள் "பிடாரிச் சுமை" என்ற கட்டத்தில் இல்லை என்பது ஆறுதலான சேதி ! அதற்காக அடுத்த வருஷமே இவர்களை மறுக்கா அழைத்து வரலாமே ? என்ற கோரிக்கைக்கு இது நேரமல்ல ; because இந்தக் கையிருப்பு குறைய / கரைய இன்னமும் 2 ஆண்டுகளாவது அவசியப்படும் - இதே வேகம் தொடர்ந்தாலே !!
கெட்ட சேதி என்னவென்றால் - என்னவென்றால்... என்னவென்றால்...?!!! என்ன தடுமாற்றம் என்று பார்க்கிறீர்களா ? விழுங்கக் கொஞ்சமல்ல ; ரொம்பவே கஷ்டமான சேதி தொடரவுள்ளது ! அது தான் உட்ஸிடியின் சிரிப்புப் போலீசின் செயல்பாடு - இந்தக் கடைசி ஒற்றை ஆண்டினில் மாத்திரமன்றி, சமீப சில ஆண்டுகளிலுமே !! "ஒரு ஷெரீபின் சாசனம்" & அந்த ஹார்டகவர் "சிக்பில் ஸ்பெஷல்" நீங்கலாய் பாக்கி எல்லா சிக் பில் ஆல்பங்களிலுமே உள்ள கையிருப்பு மதுரை சிம்மக்கல் கோனார் மெஸ்ஸில் செம கட்டு கட்டியவனின் தொப்பையைப் போல பிதுங்கி நிற்கிறது ! சுத்தமாய்ப் புரியக் காணோம் - ஆனால் முதல் ரவுண்டில் சந்தாக்களிலும், முகவர் ஆர்டர்களிலும் விற்பனை கண்டிடும் இதழ்களுக்குப் பின்பாய் இவற்றை ஆராதிக்க ஆளைக் காணோம் !! "ஆர்டினின் ஆயுதம் " ; "நிழல் 1 ; நிஜம் 2 " : ஒரு பைங்கிளிப் படலம்" போன்ற ஆல்பங்கள் அடுத்த தசாப்தம் வரைக்கும் தாக்குப் பிடிக்கும் - ரொம்பச் சுலபமாய் !! MAXI லயனில் இவர்கட்கு இடமளிப்பது குறித்து ரொம்பவே மறுபரிசீலனை அவசியம் போலும் !! Perplexing !!
நல்ல சேதி என்னவென்றால் புது வரவுகளான மேக் & ஜாக் விற்பனையில் spectacular என்றில்லாவிட்டாலும் செம ஸ்டெடி ! அந்த வரிசையில் இதுவரைக்கும் வெளிவந்துள்ள 2 ஆல்பங்களுமே அழகாய் விற்றுள்ளன ! இந்த அட்டாவே ஏஜென்சி நம் மத்தியில் அட்டையை ஒட்டிடப் போவதுஉறுதி என்பது "கதவைத் தட்டிடும் கோ)டி " கண்டுவரும் வெற்றி ஊர்ஜிதம் செய்கிறது !! Glad for that !!
கெட்ட சேதி என்னவென்றால் மதியிலா மந்திரியாரும் going the சிக் பில் way !! ரொம்பவே மந்தம் விற்பனையினில் ! நிச்சயமாய் இது இந்தத் தொடரின் தரத்தின் மீதான தீர்ப்பாய் நான் பார்த்திடவில்லை ; மாறாக, சிறுகதைத் தொகுப்புகளின் மீதான துவேஷம் தொடர்வதையும், ஒட்டு மொத்தமாகவே கார்ட்டூனுக்குக் கொடி பிடிப்போர் சங்கத்தின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் மாறிடுவதையே காட்டுகிறது !! கார்ட்டூன் ரசிகர்களெல்லாம் இனிமேல் லெமூரியாவுக்குத் தான் குடி பெயர வேண்டிவரும் போலும் !! மறக்காமல் எனக்கொரு டிக்கெட் போட்ருங்கப்பா ; புளிசாதத்தைக் கட்டிக்கிட்டு ஓட்டமா ஓடியாந்திடறேன் !
நல்ல சேதி என்னவென்றால் LADY S இந்த ஓராண்டினில் நன்றாகவே perform செய்துள்ளார் !! எல்லாமே புத்தக விழா உபயங்கள் என்பதில் சந்தேகங்களிலை - becos ஆன்லைன் ஆர்டர்களில் இவரை அவ்வளவாய்ப் பார்த்ததாகவே எனக்கு நினைவில்லை ! Maybe இன்னுமொராண்டுக்கு இதே வேகத்தில் LADY S செயல்பட்டால் - இவரது தொடரின் பாக்கி ஆல்பங்களை பற்றிச் சிந்திக்கலாமென்று படுகிறது !!
கெட்ட சேதி என்னவென்றால் தொங்கலில் நிற்கும் இன்னொரு தொடருக்கு (நம்மிடையே) மறுஜென்மம் தந்திட துளியும் வாய்ப்பு லேது & அது கமான்சே தொடரே ! இதன் ஆரம்பத்து ஆல்பங்கள் தவிர்த்து மீதம் சகலத்திலும் முழிபிதுங்கச் செய்யும் ஸ்டாக் உள்ளது ! நிச்சயமாய் இந்தச் சொதப்பலுக்குக் காரணமாகிடும் வகையில் மட்டமல்ல இந்தத் தொடர் ! Maybe இங்கே ஒரு டெக்சின் ஆக்ஷனோ ; டைகரின் விவேகமோ மிஸ்ஸிங் ஆக இருக்கலாம் தான் ; ஆனாலும் இந்தத் தீர்ப்பு ரொம்ப ரொம்ப harsh என்பேன் ! வாசக நாட்டாமைஸ்...தீர்ப்பே மாத்துங்க - ப்ளீஸ் !!
நல்ல சேதி என்னவென்றால் 'தல' TEX எப்போதும் போல மலை !! எந்தச் சேதங்களுமின்றி எல்லா சீதோஷ்ணங்களையும் தாக்குப் பிடித்து நிற்கும் அண்ணாமலை ! டைனமைட் ஸ்பெஷல் காலி ; "காதலும் கடந்து போகும்" almost காலி ; முந்தைய ஸ்பெஷல் இதழ்களும் காலி ! டெக்சா ? தக்காளித் தொக்கா ? இன்னமும் கூட இவரை சிலாகித்துக் கொண்டே போகலாம் தான் ; ஆனால் கார்சனின் நண்பரை சிலாகிப்பது சிலருக்கு காதிலே புகை வரவழைக்கக்கூடும் - தமன்னாவோடு ஆட்டம் போடும் லெஜெண்ட் சரவணனைப் பார்த்திடும் பாணியில் என்பதால் அடக்கி வாசிக்கிறேன் ! சில "அதிகாரிகளை" அசைக்க இயலாதென்பது ஆண்டவனின் நிர்ணயம் போலும் ! ஆனால் இங்கேயும் ஒரு சிறு புதிரான சமாச்சாரம் : "சட்டத்துக்கொரு சவக்குழி " & "திகில்நகரில் டெக்ஸ்" மாத்திரம் சுணங்கி நிற்கின்றன !!
கெட்ட சேதி என்னவென்றால் ஒரு முழுத் தொடருமே களமிறங்கிய பிற்பாடும் ஒரு ஜாம்பவான் எழுத்தாளரின் படைப்புக்கு நம் மத்தியிலான ஆதரவு கலக்கத்தையே தருகிறது ! அது வேறு யாருமல்ல - வான் ஹாமின் "வெய்ன் ஷெல்டன்" ! NBS-ல் அறிமுகம் கண்டுள்ள இவரது அடுத்த எட்டுப் பத்து ஆல்பங்களிலுமே கணிசமோ கணிசமான ஸ்டாக் உள்ளது !! புள்ளி விபரங்களை மாத்திரமே கொண்டு நமது கதை தேர்வுகளை ; கதை நாயகத் தேர்வுகளை நான் செய்திருக்கும் பட்சத்தில் இவருக்கு எப்போதோ நாம் டாட்டா சொல்லியிருக்க வேண்டும் !! குலைநடுங்கச் செய்கிறது இவரும் கமான்சேக்குத் துணையாய்க் கிட்டங்கியில் கோந்து போட்டு குந்தி இருப்பதைக் காணும் போது !
நல்ல சேதி என்னவென்றால் ஜில் ஜோர்டன் ("துணைக்கு வந்த தொல்லை" நீங்கலாய்) ; ரின்டின் கேன் ; சாகசவீரர் ரோஜர் (மஞ்சள் நிழல் நீங்கலாய்) ஆகிய mid level உருப்படிகள் இந்த ஓராண்டில் decent விற்பனை கண்டுள்ளன ! தலையில் சுமையாய் நின்றவை இப்போது இடுப்பில் சுமக்கக் கூடிய சுமையாய் உருமாற்றம் கண்டுள்ளன என்றமட்டுக்கு சந்தோஷம் !
கெட்ட சேதி என்னவென்றால் அட்டகாசமான reviews பெற்றிட்ட போதிலும் ஜேசன் ப்ரைஸ் முப்பாக fantasy தொடர் அதன் பின்னே அதிக விற்பனை கண்டிடக் காணோம் ! Maybe சற்றே திகில் கலந்த அந்த fantasy லயிக்கவில்லையோ - என்னவோ தெரியலை ; ஆனால் மூன்று பாகங்களிலுமே கணிசக் கையிருப்பு !! Strange !!
அப்புறம் கொடியிடை ஜூலியா ; CID ராபின் போன்றோரும் ரொம்பவே slow movers இந்த ஓராண்டினில் ! And ஸ்லோவோ ஸ்லோ - XIII தொடரின் இரண்டாம் சுற்றுச் சமாச்சாரங்கள் + spinoffs !! ஆண்டிறுதியின் ஸ்டாக் நிலவரத்தைப் பார்க்கும் போது நண்பர் XIII -ஐப் போல தற்காலிக மராத்தி வந்திட்டாள் தேவலாம் என்றே தோன்றுகிறது ! அதிலும் பெட்டி & ஆமோஸ் !! Phewwwwwwwwwww !!
இவை தவிர துவக்க நாட்களது கிராபிக் நாவல்கள் கிட்டத்தட்ட மறந்தே போனது போலாகி தேங்கிக் கிடக்கின்றன ! In fact "இரவே..இருளே..கொல்லாதே" ; "தேவ ரகசியம் தேடலுக்கல்ல" ஆல்பங்களுமே in plenty !!
So where do we go from here on these stats folks ? சிகப்பு மசியால் வட்டமிட்டு கிட்டத்தட்ட 55 டைட்டில்களை விசேஷ கவனத்துக்கென இருத்தியுள்ளேன் ! அவை சகலத்துக்கும் இந்தப் புத்தக விழாவிலிருந்தே 25% டிஸ்கவுண்ட் தந்திடத் தீர்மானித்துள்ளோம் ! So அதீதக் கையிருப்புள்ள இதழ்களுக்கு 25% என்றொரு ஸ்டிக்கர் ஒட்டி - அவற்றை கண்ணில்படும் விதமாய் display செய்திடவுள்ளோம் நமது சென்னை ஸ்டாலில் ! கொஞ்சமேனும் இதற்கொரு பலன் கிட்டின், தெய்வமே - இழுத்துப் பிடித்திருக்கும் மூச்சை சற்றே வீட்டுக் கொள்வேன் !! ஆன்லைனிலுமே ஜனவரியின் மத்தியிலிருந்து ஒரு SALE கொணர எண்ணியுள்ளேன் - குறிப்பிட்ட title-கள் மீது !! And இவற்றை வாங்கிடும் முகவர்கட்கு பிரேத்யேகமாய் ஒரு incentive தந்திடவும் திட்டமிட்டுள்ளோம் !
Before I sign off - ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாய்ப் புரிகிறது guys !! ஒட்டுமொத்தமாய் ஒரு மாதத்தினில் எல்லா இதழ்களுமே நல்ல ரேட்டிங்ஸ் பெற்றிடும் தருணங்களில் அந்த பாசிட்டிவ் vibes ஆன்லைன் விற்பனை ; கடைகளின் விற்பனை என சகலத்தையும் தொற்றிக் கொள்கின்றன ! இதோ இந்த ஜனவரியின் ட்யுராங்கோ ; ஜேம்ஸ் பாண்ட் ; MAXI டெக்ஸ் ; மேக் & ஜாக் சார்ந்த உங்களின் சிலாகிப்புகள் நிறையவே விற்பனைக்கு ஊக்கம் தந்திடுவது கண்கூடாய்த் தெரிகிறது ! அதிலும் ஜேம்ஸ் பாண்ட் & ட்யுராங்கோ அதகளம் ! So ஒரு கதையைப் படித்த பின்னே ரெண்டே நிமிஷம் இதற்கென ஒதுக்கி - ஒரு thumbsup அல்லது thumbs down தந்தால் கூட - அந்த இதழ்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் காரணிகளை அவை மாறிடக் கூடும் ! நிச்சயமாய் இது ஜாலரா - காலரா கோரல் அல்ல guys ; சிலபல நாயக / நாயகியர் நம் மத்தியில் தொடர்வதற்கும், தொலைவதற்கும் அவசியமான தீர்ப்புகளை எழுதச் சொல்லி உங்கள் முன்வைக்கும் மன்றாடலே ! Give it a thought & a finger guys !! அது நடுவிரலை உசத்திக் காட்டுவதாகவே இருந்தாலும் கூட - அதனிலும் ஒரு சேதி இருப்பது புரியாது போகாது !
ஜனவரியின் இதழ்கள் தூள் கிளப்புவதில் பெரும் நிம்மதி எனக்கு ! அதிலும் ரூ.40 விலை ஜேம்ஸ் பாண்ட் எல்லா பக்கங்களிலும் நிறைவான வரவேற்பைக் கண்டுவருகிறதென்பது icing on the cake ! மார்க்கெட்டில் ரவுண்டடிக்கும் நமது பணியாட்களிடம் "பட்டாம் பூச்சிப் படலம்" புக்கைப் பார்க்கும் எல்லா முகவர்களுமே செமயாய் impressed ! அவை ஆர்டர்களாய் ; விற்பனைகளாய் உருமாற்றம் கண்டிடுமா ? என்பதைப் போகப் போகத் தான் பார்த்தாக வேண்டும் ! ஆனால் இப்போதைக்கு அந்த சைஸ் ; அந்த அட்டைப்படம் ப்ளஸ் ஜேம்ஸ் பாண்ட் 007 என்ற அந்தப் பரிச்சயம் கவனங்களைக் கோரத் தவறவில்லை !! உங்கள் ஊரினில் இன்னமும் JB அடிவைக்கவில்லை எனும் பட்சத்தில், நீங்கள் வாடிக்கையாக புக் வாங்கிடும் கடையின் விலாசத்தை மட்டும் நமக்குத் தெரியப்படுத்துங்களேன் ப்ளீஸ் ? அங்கே பேசி முயற்சிக்க நம்மாட்களை அனுப்பிடலாம் !
Bye all guys ; ஜனவரியின் விமர்சனங்கள், அலசல்கள் தொடரட்டுமே ? See you around !! Have a beautiful Sunday !!
And here's Chennai Bookfair's Stalls layout :
And here's Chennai Bookfair's Stalls layout :
முதல் இடம் .......
ReplyDeleteஜனவரி இதழ்கள் நான்கும் பட்டையக் கிளப்பி வருவது கண்டு மிக மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDelete3 வது..எப்பா எவ்வளவு கஷ்டம் நம்பர் 10 க்குள் வருவதற்கு..
ReplyDeleteவணக்கம் ஆசிரியர்
ReplyDelete11 சனியன்று தங்களை கான ஆவலுடன் உள்ளோம்.
ReplyDeleteஆவல் இக்கடயுமே சார் !
Deleteதல டெக்ஸ் மற்றும் 007 2.0 தொடர்ந்து விற்பனையில் சாதித்து வருவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
ReplyDeleteஅனைவருக்கும் நள்ளிரவு வணக்கங்கள்.
ReplyDelete25% டிஸ்கவுன்ட் அருமையான யோசனை சார்...ஜேம்ஸ்பாண்ட் ரூ.40 புக்கை கடைகளுக்கு கொண்டு சேர்க்க எனது முழு ஒத்துழைப்பு உண்டு சார்.....
ReplyDeleteவுட்சிட்டி நாயகர்கள்..!!! ??? Shocked...
ReplyDeleteஷெல்டன்..!!!..???? Shocked..
DeleteMe too !!! Big time !!!
Delete#Me too!!!!! :(
DeleteMe too சார்.
Deleteடுட்டுடு சார்........
Deleteபுத்தக விழாவிற்கு 25% டிஸ்கவுண்ட் கொடுக்கும் நீங்கள்.அனைத்து வகையிலும் இதை கடை பிடித்தால். .பு.விழாவிற்கு வர முடியாதவர்கள் கூரியரில் ஆர்டர் செய்து வாங்கலாம் என்னைப் போல்.....
ReplyDeleteபதிவிலிருந்து :
Delete//ஆன்லைனிலுமே ஜனவரியின் மத்தியிலிருந்து ஒரு SALE கொணர எண்ணியுள்ளேன் - குறிப்பிட்ட title-கள் மீது !! //
ஆன்லைனில் வாங்கி பழக்கம் இல்லாதவர்களுக்கும் என்று சொல்ல வந்தேன்..என் மனைவிக்கு இதில் எல்லாம் பழக்கமில்லை....
Deleteஸ்டெல்லாவுக்கு போன் போட்டாச்சா புக் லிஸ்டை whatsup அனுப்பியாச்சா புக் வந்தாச்சா பீரோவில் எடுத்து வைத்தாயிற்றா....முடிந்தது ஜோலி...
Deleteபுத்தக திருவிழாவில் ஞாயிறு உங்கள் வருகை இல்லையா சார்....?
ReplyDeleteஇப்போதைக்கு உண்டென்று தான் நினைக்கிறேன் பழனி !
Deleteமாடஸ்டிக்கும் discount உண்டா சார்....?
ReplyDeleteஉண்டு !
Deleteநன்றி சார்...
Delete///மாடஸ்டிக்கும் discount உண்டா சார்....?///
Delete"மாடஸ்டி கதைகளுக்கும் discount உண்டா சார்....?" என்று கேட்டிருந்தால் சரியாய் இருந்திருக்கும்!ஹிஹி!! ;)
@Erode VIJAY
Delete😋😋😋
ரணகளத்திலும் நம்மாட்களுக்கொரு கிளுகிளுப்பு தான் ரம்யா !
Deleteமாடஸ்டி ஏற்கனவே டிஸ்கவுண்டல தான்(dress) இருக்காங்க.
Deleteமும்மூர்த்திகள் என்றாலே சொல்லி வைத்த மாதிரி நாச அலைகள், மஞ்சள் பூ மர்மம், கொலைகாரக் கலைஞன் மூளைத் திருடர்கள் என்று மீண்டும், மீண்டும் வருவது விற்பனை டல்லடிக்க ஒரு காரணம்.
ReplyDeleteசட்டியில் உள்ளது தானே சார் அகப்பையில் ?
Deleteசட்டி ,அகப்பை புரியவில்லை. ...நீங்கள் வெளியிட்ட கதைகள்எவ்வளவோ இருக்க...திரும்ப திரும்ப அதே கதைகளை வெளியிட என்ன காரணம். ..விளக்கம் ப்ளீஸ்
Deleteயெஸ்.யுவர் ஆனர்
Delete//And இவற்றை வாங்கிடும் முகவர்கட்கு பிரேத்யேகமாய் ஒரு incentive தந்திடவும் திட்டமிட்டுள்ளோம் !//
ReplyDeleteநிச்சயமா என்னால் முடிந்ததை செய்கிறேன் சார்....
Super !!
Deleteசிக்பில் தேக்கம் நான் எதிர் பார்த்தது தான்.முன்பிருந்த நகைச்சுவை மிஸ்ஸிங்கா...அல்லது நகைச்சுவை உணர்வு குறைந்து விட்டதா..லக்கிக்கும் அதே நிலை தான் என் வகையில்...முன்பு சூப்பர் சர்க்கஸ்,பயங்கர பொடியன்,புரட்சித் தீ இதை எல்லாம் எத்தனை தடவை படித்தேன் என்று ஞாபகம் இல்லை. .ஆனால் இப்போது வரும் கதையை 1 முறைக்கு மேல் படிக்க முடிவதில்லை...(வேலை பளு காரணமோ)..அப்படியும் சொல்ல முடியவி ல்லை...டைனமைட் இதழை இதுவரை 4 முறை படித்து விட்டேன்..
ReplyDelete23வது
ReplyDeleteஇந்த 'நல்லசேதி - கெட்டசேதி' பதிவு அபாரம் சார்!! நிஜமாகவே சந்தோசத்தையும் வருத்தத்தையும் மாறிமாறி கொடுத்தது!! வாழ்க்கையில் பிடிபடாத சமாச்சாரங்கள் எப்போதும் சில இருந்துகொண்டுதான் இருக்கும் போலும்!!
ReplyDeleteநிச்சயமாய் !
Delete// வாழ்க்கையில் பிடிபடாத சமாச்சாரங்கள் எப்போதும் சில இருந்துகொண்டுதான் இருக்கும் போலும்!! //
Deleteஇரண்டும் கலந்ததுதானே வாழ்க்கை........
புள்ளி விவரங்கள் வயிற்றில் புளியைக் கரைக்கின்றன. கார்ட்டூன்கள் விற்பனை படுசரிவாகவுள்ளது ஏன் என்று புரியவில்லை யே?
ReplyDeleteவுட்சிட்டி கோமாளிகள் விற்பனையில் படு மந்தம் என்பது வேதனைக்கு உரியது.
தானைத் தலைவர் ஸ்பைடர் மற்றும் இளவரசி மாடஸ்டி விற்பனை சொல்லும்படியாக இல்லாதது மனதை வாட்டுகிறது.
ஆசிரியர் 25%தள்ளுபடி தந்து கிட்டங்கியை குறைக்க முயற்சி செய்வதைப் பாராட்டுகின்றேன்.
//கார்ட்டூன்கள் விற்பனை படுசரிவாகவுள்ளது ஏன் என்று புரியவில்லை யே?//
Deleteரொம்ப காலமாகவே புரியாப் புதிரிது !
007 நீங்கலாக பல முகவர்களுக்கு புத்தகம் அனுப்பிய மர்மம் என்னவோ?
ReplyDeleteஅங்கெல்லாம் ஊரிலுள்ள சிறு கடைகளுக்கும் ரூ.40 விலையிலான இதழ்களை மட்டும் பரவலாக விநியோகம் செய்திடும் ஏஜெண்ட்களுக்கான நியமனம் நடந்துள்ளது / அல்லது தேடுதல் நடக்கிறதென்று அர்த்தம் !
DeleteSuperb sir
Delete✋✋ ஆஜர்
ReplyDeleteஸ்பைடர் & சிக்பில் & ஷெல்டன் விற்பனை மந்தம் உண்மையிலே கண்ணீர் சிந்த தோன்றுகிறது
ReplyDeleteஸ்மர்ப்ஸ் சூப்பர் !!!
Deleteடைனமைட் ஸ்பெஷல் காலியா..ஓ.மைகாட் அதில் இன்னும் 2 புக் வாங்கலாம் என்று இருந்தேனே...
ReplyDeleteஒரு பிக் கொஸ்டீன் யுவர் ஆனர்,மாடஸ்டியக்காவோட இந்த படம் அட்டைப்படமா கலரில் வருமுங்களா?
ReplyDelete//ஒரு பிக் கொஸ்டீன் யுவர் ஆனர்,மாடஸ்டியக்காவோட இந்த படம் அட்டைப்படமா கலரில் வருமுங்களா?//+1 me too expecting!
Deleteஇந்த டீலிங் ரெம்ப புடிச்சிருக்கு..!
Deleteஎன்ன இருந்தும் போணியாக மாட்டீங்குதே!
Deleteஆமா i? ஏற்கனவே -மாட ஸ்டி - என்றால் கவர்ச்சி , - என்று விமர்ச்சனம்.
Deleteஇதில் அட்டையில் இப்படி படம் போட்டு ஒருத்தரையும் வாங்க விடாமல் செய்வதற்கா? i..
அனேகமா பழைய சைஸில் இல்லாமல் தற்போதைய பெரிய சைஸில்தான் வெளியிடுவார்.
பெரிய சைஸில் மாடஸ்டியை - க்ளோஸப் ஷாட் - யில் பார்க்க ஆவலாய் உள்ளேன்.
இந்த டிசைனையே அட்டைப்படமாய் போட்டுத் தாக்கினால், ஆங்காங்கே வூட்டுக்குள்ளாறவே பூரிக்கட்டைத் தாக்குதல்களும் சாத்தியம் ! பரால்லியா சார் ?
Deleteசில பல சின்ன சந்தோஷங்களுக்காக, சில பல சேதாரங்கள் தவிர்க்க இயலாததே.கரெக்ட்தானே ஈ.வி சார் ?
Deleteசேதாரத்தை பாத்தா தங்கத் தீவு கிடையாது.
Deleteமும்மூர்த்திகள் என்று நீங்கள் சொன்னாலும் லயனில் ஸ்பைடர் வந்த பின் ஜானி இடத்தை ஸ்பைடருக்கு தந்து விட்டேன் அப்போதே. .ஏனோ ஜானி நீரோ என் மனதை பிடிக்க தவறி விட்டார்..
ReplyDeleteஸ்பைடர் அவ்வளவு மெதுவாகவா நடந்து வருகிறார்.சைஸ் ஒரு வேளை ஒத்து வரவில்லையோ...நம் லயனின் தலையெழுத்தை நிர்ணைத்தது ஸ்பைடர் மட்டுமல்ல பாக்கெட் சைஸூம் என்பது என் எண்ணம். ....
இப்போது கூட சந்தா D சைஸ் ஆஹா ஓஹா என்று சிலர் கூறலாம்..ஆனால் விரைவில் இந்த சைஸ் மாறும் என்று என் மனது கூறுகிறது. .
பக்கெட் சைஸ்க்கு ஒரு கவர்ச்சியும், ஈர்ப்பும் உள்ளது நிஜம் தான்!
Delete//சந்தா D சைஸ் ஆஹா ஓஹா என்று சிலர் கூறலாம்..ஆனால் விரைவில் இந்த சைஸ் மாறும் என்று என் மனது கூறுகிறது. //
Deleteதுரதிர்ஷ்டவசமாக அது உங்கள் மனதின் அபிப்பிராயமாக மாத்திரமே தொடரவுள்ளது சார் ! அடுத்த 5 மாத சந்தா D ராப்பர்கள் ரெடி ஆகியும் விட்டன !
///பக்கெட் சைஸ்க்கு ஒரு கவர்ச்சியும், ஈர்ப்பும் உள்ளது நிஜம் தான்///
Delete+1
+1
Deleteதப்பா நெனக்காதீங்க GP சார். எடிட்டர் சொல்ல வந்தது பாக்கெட்ைஸைஸ். டைப்பியதில் கால் மிஸ்ஸாயிட்டு. பாக்கெட், பக்கெட் ஆயின்னு.
Deleteகெட்ட தேதியாக சொன்னதில் கமான்சே(தொடர வேண்டிய தொடர்),மாடஸ்டி,வெய்ன்ஷெல்டன் போன்றவர்களின் புள்ளி விவரம் மனதிற்கு வேதனை அளிக்கிறது. ..
ReplyDeleteஒண்ணுமே புரியல உலகத்திலே
13 தொடர் spin offs கதைகளை எல்லாம் தனியாக போட்டால் வேலைக்கு ஆகாது..collectors edition னாக களத்தில் இறக்குங்கள்...
ReplyDeletePhewww !!
Deleteஒவ்வொரு மாதமும் புத்தகங்கள் வெளியான முதல் வாரத்திற்கு பாஸிடிவ் கமெண்ட் மட்டும் போடலாம். இரண்டாவது வாரத்திற்கு மேல் ப்ளஸ் (or) மைனஸ், அலசல், துவைத்து காயப்போடுவதை வைத்துக் கொள்ளலாம்.
ReplyDeleteஅப்படி செய்தால் விமர்சனங்கள் மீதான தாக்கம் குறையும். உண்மை உடனுக்குடன் வருவது தான் நல்லது.
DeleteHi..
ReplyDelete43rd
ReplyDeleteகிட்டங்கி கிடாரர்களை வருங்காலத்தில் அட்டவணையிலிருந்து கழித்து விடுங்கள் சார்.
ReplyDeleteஇங்கு நல்ல மீன்கள் விற்க்கப்படும் கதையாயிடும் ஷெரீப்.!
Deleteகிட்டங்கிகளில் அதிகபடியாய் இருக்கும் புத்தகங்களின் தகவல் தெரிந்தால் அதை பற்றிய Review மீண்டும் எழுதலாம்,
Deleteசரியாக சொன்னீர்கள் ஷெரீஃப். ஓடும் குதிரை கள் மட்டும் போதும் ஆசிரியர் சார்.
Delete//கிட்டங்கிகளில் அதிகபடியாய் இருக்கும் புத்தகங்களின் தகவல் தெரிந்தால் அதை பற்றிய Review மீண்டும் எழுதலாம்,//
Deleteஅருமையான சிந்தனை !! ஏற்கனவே நானும் அந்தத் தீர்மானத்தில் தானுள்ளேன் !
டியர் எடி,
ReplyDeleteஸ்பைடர், ஜானி நீரோ கிளாசிக்குகள் விற்பனை மந்தம் எதிர்பார்த்ததே... எனக்கு தெரிந்து பிரிட்டீஸ் ஓல்டிகளில் இரும்பு மனிதன் ஆர்ச்சி மற்றும் இரும்பு கை மாயாவி மட்டுமே, விற்பனை எல்லை கோட்டை மெதுவாகவாது தொடுவார்கள். மற்ற இருவரும் காலாவதிதான். ஒருவேளை, தனி நாயகர்களை விட்டு கிளாசிக் கதை தொடர்களை பிரிட்டீஸ் களத்தில் இருந்து வெளியிட இது ஒரு சரியான தருணமாக எனக்கு படுகிறது... மான்ஸ்டர், சர்வைவர், போன்ற தொடர்கள் கலெக்ஷன் முயலலாமே?!
கமான்சே, லேடி எஸ், ஷெல்டன், கதைகள் தோல்வி ... முன்பே அறிந்த ஒன்றும் கூட. மூல கதைகளில் அவ்வளவு வலு இல்லை. ஓவியங்களை வைத்து ஐரோப்ப ரசிகர்களை மட்டும்தான் கவர முடியும் என்பதற்கு இந்த தொடர்கள் ஒரு உதாரணம்.
மாடஸ்தி 40 ரூபாய் விலையில் சாதிப்பார் என்று நினைக்கிறேன். எழுத்துரு மட்டுமே அங்கே ஒரு இடறல்.
சிக்பில் கூட்டணி மற்றும் மதியில்லா மந்திரி சோபிக்காதது, எனக்கும் ஏமாற்றமே... நெடுந்தொடர்களில் கதைகள் தரம் என்றும் சீராக இருக்கபோவதில்லை என்பதுதான் அவற்றின் சாபம் போல.
விற்பனைக்கு ஏற்ப தொடர்களுக்கு கல்தா கொடுக்க யோசிக்காதீர்கள். No harm to bet on the horses, which will win courses.
// விற்பனைக்கு ஏற்ப தொடர்களுக்கு கல்தா கொடுக்க யோசிக்காதீர்கள். No harm to bet on the horses, which will win courses. //
DeleteTrue
//மாடஸ்தி 40 ரூபாய் விலையில் சாதிப்பார் என்று நினைக்கிறேன்.//
DeleteFingers crossed sir !!
இஞ்சி லாபம் மஞ்சளிலே..என்று ஒரு சொல் உண்டு. டெக்ஸால் விற்பனை ஏறுமுகம் என்றால் இதர நாயகர்களால் இறங்கு முகம் எனில் அவர்களுக்கு (தற்காலிகமாவது) ஓய்வு கொடுப்பது கிட்டங்கிக்கு நல்லது.
ReplyDeleteநிச்சயமாய் சார் !
Deleteதங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக் கொள்ள முடியாது. எனவே யோசித்து முடிவு எடுங்கள்.
ReplyDeleteசின்னச் சின்ன விலைகளிலேயே உள்ள இவரது black & white இதழ்கள் ஓராண்டின் புத்தக விழாக்களிலுமே ஸ்கோர் செய்யாதிருப்பது நிஜமாய் நெருடுகிற//
ReplyDeleteKodu potta sattaithan reason.
தவறான அனுமானம் ! புத்தக விழாக்களில் வருகை தரும் பொது ஜனத்துக்கு மாடஸ்டி யாரென்றோ ; அவருக்குக் கோடோ ரோடோ போடப்பட்டிருப்பது தெரியவும் செய்யாது ; அவர்கள் அதன் பொருட்டு ஏமாற்றம் கொள்ளவும் வாய்ப்பிராது !
Deleteநல்ல சேதி
ReplyDeleteமாடஸ்டியை காத்தாட விடுவது.
கெட்ட செய்தி
கோடு போட்ட சட்டை போட்டு விடுவது.
The reason I never got into Comanche is that it's poorly translated. Or, to be precise, it works poorly when translated. The conversations are dragged out and so not-on-point. Maybe that's the way it was originally made, but you could have adapted it to our readers. As you've pointed out, among the Tex and Tigers of western Tamil comics, Comanche never stands a chance.
ReplyDeleteஒரிஜினல் பிரெஞ்சு பதிப்பையும் படித்திருந்து அபிப்பிராயம் சொல்லிடும் பட்சத்தில் மொழிபெயர்ப்பு சார்ந்த உங்கள் எண்ணத்தில் வலு இருக்கக்கூடும் சார் ! இல்லாத பட்சத்தில் will just be a random shot in the dark !
Deleteவணக்கம் நண்பர்களே!
ReplyDelete2019 வெளியீடுகள் - என் பார்வை
Deleteமுந்தைய ஆண்டுகளில் ஆன்லைனிலோ புத்தக விழாக்களிலோ இதழ்களை வாங்கி வந்த நான் 2019 முதல் சந்தா குடும்பத்தின் அங்கமாக மாறிய பின் , அந்தந்த மாதங்களின் வெளியீடுகளைப் பற்றி விமர்சனம் செய்ய நேரமும் , பணிப் பளுவும் ஒத்துழைக்காத காரணத்தால் கடந்த ஆண்டின் வெளியீடுகள் குறித்து என்னளவில் ஒரு பார்வையை சந்தா இதழ்கள் நிறைவுற்ற இந்த கணத்திலாவது பதிவிட வேண்டும் என்று எண்ணியதால் இந்த பதிவு.
சந்தா A:
Delete1. சிகரங்களின் சாம்ராட் : தோர்கலின் முப்பாக தொகுப்பு , மிரட்டும் காலப்பயண களத்துடன் ஒரு கதை , அருமை . மூன்று கதைகளும் தோர்கலின் மகுடத்தில் மேலும் சூடிக் கொள்ள அற்புதமான ரத்தினங்கள். 9.5 /10
2. ஜானி 2.0 : புதிய பாணி ஜானியின் கதை இரசிக்கும்படி அமைந்தது . ஆனால் பழைய பாணி எனக்கு இன்னும் பிடித்திருந்தது . 7/10
3. லயன் 350 ஸ்பெஷல் / குளிர்காலக் குற்றங்கள் : எதிர்பார்ப்பை விதைத்து ஏமாற்றமளித்த இதழ் . 4/10
4.வதம் செய்ய விரும்பு : கதையிலும் சரி , ஓவியங்களிலும் சரி , சோடை போவாரோ ட்யூராங்கோ ? அட்டகாசம் !! 10 /10
5. நீரில்லை... நிலமில்லை ! : நிறைய நண்பர்கள் மாறுபட்ட கருத்தை தெரிவித்து இருந்தாலும் எனக்கு சன்பென்ஸ் இரசிக்க முடிந்தது . மோசமில்லை . 7.5 /10
6. இருளின் ராஜ்யத்தில் ! : கதையின் நாயகனை விட அட்டகாசமான வில்லன் டாக்டரே கதையின் பலம் . அண்டர்டேக்கரின் அடுத்தடுத்த கதைகளை வாசிக்க ஆவலை ஏற்படுத்தி விட்டது . 10 /10
7. சாலையெலாம் ஜுவாலைகளே ! : ட்ரெண்ட் மெல்லிய சோகத்துடன் கூடிய ஒரு சஸ்பென்ஸ் கதை . 8 /10
8. ஒரு பள்ளத்தாக்குப் படலம் : மெதுவாக கதை நகரும் பாங்கு . சுவாரஸ்யத்தில் குறையில்லை . 7 .5 /10
9. துரோகமே துணை : அதிரடி திருப்பங்கள் நிறைந்த அட்டகாசமான கதை . ஷெல்டனும் கதையுடன் ஓடுகிறார் . 9 .5 /10
சந்தா A ரேட்டிங் : 73/90, 81%
சந்தா B:
Delete1. சாத்தானின் சீடர்கள் : சராசரிக்கும் கீழான டெக்ஸ் கதை . 5 /10
2. பாலைவனத்தில் ஒரு கப்பல் : அட்வென்சர் போல இருந்தது . 8 /10
3. பச்சோந்திப் பகைவன் : ப்ரோட்டியஸ் ஒரு சரியான வில்லன் , கிளைமாக்ஸ் சொதப்பல் . 8.5/10
4.நியூட்டனின் புது உலகம் : மார்ட்டினுக்கு அதிகம் வேலையில்லாத மற்றொரு நல்ல சாகசம் . 7.5/10
5. ஒரு ரெளத்திர ரேஞ்சர் ! : இறுதியில் எதிர்பாராத திருப்பம் . நன்றாக இருந்தது . 8/10
6. புதைந்துபோன புதையல் : Treasure hunting ரக கதையை எதிர்பார்த்து கொஞ்சம் ஏமாற்றம் . இறுதி திருப்பம் நன்றாக இருந்தது . 7.5/10
7. லயன் தீபாவளி மலர் 2019
சர்க்கஸ் சாகஸம் : டெக்சின் இன்னொரு கதை , அவ்வளவுதான் . 6 /10
சிகப்பு ரோஜாக்கள் : கறுப்பு வெள்ளை டைலன் கதை அருமை , படங்களில் ஒரே இருட்டு , ஆனால் இக்கதைக்கு வண்ணமில்லாததே நல்லதாகப் போயிற்று . 8.5/10
விசித்திர உலகமிது : மார்ட்டின் கதை என்ற எதிர்பார்ப்பை அவ்வளவாக பூர்த்தி செய்யவில்லை , ஓ.கே . ரகம் . 6/ 10 க ொலை .. கொலையா .. முந்திரிக்கா … ! : ராபினின் இன்னொரு நல்ல சேசிங் ஸ்டோரி . 8/10
ஒரு இல்லத்தின் கதை : ஜூலியாவின் மதிப்பை அதிகரிக்கச் செய்யும் வகையிலான கதை . நன்றாக இருந்தது . 8.5/10
லயன் தீபாவளி மலர் 2019 (overall): 7.5/10
8.ஒரு தங்கத் தடம் : வண்ணத்தில் வான்சின் ஓவியங்கள் அருமை , மற்றொரு கெளபாய் கதை . ரிங்கோவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம் . 7/10
9. சூது கொல்லும் : அதிரடி டெக்ஸ் , என்பதை தவிர ஒன்றுமில்லை … டெக்ஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் . 7/10
சந்தா B ரேட்டிங் : 66/90 , 73%
சந்தா C:
Delete1. நட ( ன ) மாடும் கொரில்லாக்கள் : கெக்கே … பிக்கே … கலக்கல் ! 9.5/10
2. பரலோகத்திற்கொரு படகு : லக்கியா … கொக்கா ? 9.5/10
3.ஒரு ஷெரீப்பின் சாஸனம் ! : வுட்சிட்டிவாலாக்களின் அமர்க்களம் . தூள் ! 9/10
4. லக்கி 35 வது ஆண்டு மலர் - பாரிசில் ஒரு கௌபாய் / உத்தமபுத்திரன் ! : விமர்சனமே தேவையில்லை . 9/10
5. க ரு ப்புதான் எனக்குப் பிடிச்ச கல ர் ..! : யுத்த பூமியில் ஒரு புகைப்படக்காரர் , இந்த கருவே வியட்னாம் யுத்த புகைப்பட சம்பவத்தை நினைவுகூரச் செய்து விட்டது . போர்க் களத்தையே ஒரு நகைச்சுவை க் களமாக மாற்றி ரசிக்கும் படி செய்யும் படைப்பாளிகளின் திறமை சூப்பர் . 8.5/10
6. விடுமுறையில் கொல் : பக்கத்திற்குப் பக்கம் சிரிப்பு வரவழைக்க இவரால் முடியாது , ஆனால் அட்டகாசமான ஆக்சன் காமெடி பட்டாசு ! 9/10
சந்தா C ரேட்டிங் : 54.5 /60, 91 %
Deleteசந்தா D:
1.வைக்கிங் தீவு மர்மம் : டெக்சின் எவர் கிரீன் கதைகளை வண்ண த்தில் பார்ப்பதே தனி இன்பம் . 8 /10
2. விற்பனைக்கு ஒரு பேய் / எழுந்து வந்த எலும்புக்கூடு : வாய் விட்டு சிரிக்க வேண்டுமா ? இந்த இதழை மிஸ் செய்து விடாதீர்கள் , 10/10
3. மரண வைரங்கள் : பிரின்சின் கதை வண்ணத்தில் , மற்றபடி சுமார் ரகம் . 6.5/10
4. இளமையில் கொல் !-1 : கொஞ்சமும் உடன்பாடு இல்லாத இதழ் , மீண்டும் டைகர் கொத்து பரோட்டாவா ? இன்னும் படிக்கவில்லை . மற்ற இரண்டு பாகங்கள் வரும் வரையில் படிக்க போவதுமில்லை . --/--
5. தலைமுறை எதிரி : மறுபதிப்பாக இருந்தாலும் இந்த கதையை முதல் முறையாகப் படித்தேன் . பழைய ஜானி கதைகள் சுவாரஸ்யத்திற்கு கேரண்டி . 8.5/10
6. பழி வாங்கும் புயல் : ஒருமுறை வாசிக்கலாம் , ஓ.கே . 6.5/10
சந்தா D ரேட்டிங் : 39.5/50, 79%
Deleteசந்தா E:
1. பராகுடா 1 - அலைகடலின் அசுரர்கள் : இரண்டு புத்தகங்களும் வெளியான பின்னர் ஒட்டு மொத்தமாகத் தான் படித்தேன் . முதல் 3 பாகங்கள் , இதுவரை கண்டிராத களம் , ஓவியங்களே முழுமதிப்பெண்களையும் அள்ளிவிடும் , கதை எல்லா திசைகளிலும் பாய்ந்து ஓடுகிறது . 9.5/10
2.முடிவிலா மூடுபனி : நல்ல கதையோட்டம் , சித்திரங்கள் அற்புதம் . 8/10
3.பராகுடா 2 - இரத்த வைரம் : அடடா ! கையிலெடுத்த புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை , கிளைமாக்சில் கொஞ்சம் பூச்சுற்றல் இருந்தாலும் கதையோட்டத்தில் அது பெரிதாக தெரியவில்லை . அருமை ! 9.5/10
4. நித்திரை மறந்த நியூயார்க் ! : புரிந்த மாதிரியும் இருக்கிறது , புரியாத மாதிரியும் இருக்கிறது . மீள வாசிக்க வேண்டும் . 8/10
5. வஞ்சம் மறப்பதில்லை : எக்கச்சக்க வன்முறை ( இரத்தப் பொறியல் என்பது உண்மைதான் ), இருந்தாலும் வாசிக்க விறுவிறுப்பாகவே இருந்தது . பெளன்சரின் கதைகளை மேற்கொண்டு வாசிக்க இதுபோன்ற களங்களை பழகிக் கொள்ளவேண்டும் . படித்துவிட்டு குழந்தைகளுக்கு எட்டாமல் மேலே வைத்துவிட்டேன் . 7.5/10
6. கதை சொல்லும் கானகம் : கதை முடிந்துவிட்டதா ? சமூகத்தில் உலவிடும் மனித மிருகங்களை எண்ணி இன்னும் பயமாகவே இருக்கிறது . ஓவிய பாணியில் வேறுபடுத்தி சொல்லப்பட்ட பிளாஷ்பேக் புரிந்து கொள்ள எளிமையாகவே இருந்தது . 8.5/10
சந்தா E ரேட்டிங் : 51/60, 85%
Deleteடெக்ஸ் சிறுகதை கள் :
1. வெளிச்சத்துக்கு வந்த நிழல் : 8.5/10
2. நட்புக்கு நாட்களேது ?: 8 .5 /10
3. தகிக்கும் நியூ மெக்சிகோ ! : 3.5/10
4. ரெளத்திரம் மற ! : 8 /10
பொதுவாகவே டெக்சின் வண்ண சிறுகதைகள் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது ரகமே . ஒன்றிரண்டு மட்டும் பதம் தவறிய அல்வாவாக மாறிவிடுகிறது .
DeleteEBF ஸ்பெஷல் வெளியீடுகள் :
1. பிஸ்டலுக்குப் பிரியாவிடை ..! : வரலாற்றையொட்டி புனைந்து எழுதப்படும் கதைகள் வெற்றி பெறுவது வாடிக்கை என்ற போதிலும் இந்தக் கதையின் ஒவ்வொறு கூறுமே உச்ச மதிப்பெண்களைத் தொட்டு நிற்கிறது . கதை , ஓவியங்கள் , மொழிபெயர்ப்பு , சொல்லாடல் என ஒரு ஸ்பெஷல் வெளியீட்டிற்கு 100% தகுதியான இதழ் . நன்றிகள் சார் . 10/10 ( சாத்தியமிருந்தால் 10+/10)
2. நித்தம் ஒரு யுத்தம் ! : சுவாரஸ்யம் / வேகம் / விறுவிறுப்பு . அருமையான இதழ் . 8.5/10
3. பழி வாங்கும் பாவை : MAXI யில் மறுபதிப்புகள் என்பது அருமையான முடிவு . கதைகள் மட்டும் தகுதியானவைகளாக அமைந்து விட்டால் அட்டகாசமாகி விடும் . எவர்கிரீன் டெக்ஸ் சாகசம் மேக்சியில் அற்புதம் . 9/10
4. மனதில் உறுதி வேண்டும் : இருவண்ணத்தில் வந்தபோதே முழுவண்ணத்தில் வந்திருக்க வேண்டும் என எண்ணிய இதழ் , வசனங்கள் மேம்படுத்தப் படும்போது அந்த ஆண்டிக் ஃபீலிங் குறைந்து விடுகிறது . 9.5/10
EBF ஸ்பெஷல் ரேட்டிங் : 37/40, 93%
@SARAVANAKUMAR R
Deleteஅட்டகாசம்!! அருமை அருமை!!!
மனம் நிறைந்த பாராட்டுகள்!!
எல்லா விமர்சனங்களும் அருமையாக இருந்தது சரவண குமார்.
Deleteஅடேங்கப்பா...!கலக்கிட்டீங்க.!
Deleteசூப்பர் சரவணா அழகாக மதிப்பெண் கொடுத்து இருக்கிறீர்கள். என்ன ஒரு உழைப்பு. தொடர்ந்து பதிவிடுங்கள்.
Deleteஅட்டகாசமான ; யதார்த்தமான அலசல்கள் ! More than anything else - ஒற்றைப் பின்னூட்டம் போடவே நேரத்தைத் தேடிடும் நிறைய நண்பர்கள் மத்தியில் இத்தகைய பொறுமை deserves a round of applause !!
Deleteசூப்பர் சூப்பர்!!
DeleteReally super saravanakumar sir.wellset.
Delete// ஒற்றைப் பின்னூட்டம் போடவே நேரத்தைத் தேடிடும் நிறைய நண்பர்கள் மத்தியில் இத்தகைய பொறுமை deserves a round of applause//
Deleteநன்றிகள் சார்! உள்ளபடியே அந்தந்த மாத வெளியீடுகளைச் சுடச்சுட படித்து விமர்சனம் செய்யும் நண்பர்களே இந்த பாராட்டுக்குத் தகுதியானவர்கள்.
நன்றி நண்பர்களே! வரும் காலங்களில் முடிந்த அளவு அவ்வப்போது பதிய முயற்சிக்கிறேன்.
சரவணன் @ நன்றி. ஒரே நேரத்தில் இது வரை வந்த கதைகளின் விமர்சனங்களை ஒரே மூச்சில் போட்டதற்கு.இனிவரும் காலங்களில் அந்த மாதமே கதைகளின் விமர்சனங்களை போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
Deleteஉங்கள் ஊரினில் இன்னமும் JB அடிவைக்கவில்லை எனும் பட்சத்தில், நீங்கள் வாடிக்கையாக புக் வாங்கிடும் கடையின் விலாசத்தை மட்டும் நமக்குத் தெரியப்படுத்துங்களேன் ப்ளீஸ் ? அங்கே பேசி முயற்சிக்க நம்மாட்களை அனுப்பிடலாம் !
ReplyDeleteJai Sri books.
Markandeyan book store.
இருவரிடமும் நமக்கு வரவு-செலவு உண்டு சார் ! நாம் தற்போது தேடுவது இதர கடைகளுக்கும் விநியோகம் செய்திடக்கூடிய news agents களை !
Deleteடியுராங்கோ இந்த ஆண்டின் ஓப்பனிங் பேட்ஸ் மேன் நன்றாகவே அடித்து ஆடி என் அளவில் 100 ரன் எடுத்து உள்ளார். கதையும் சரி ஓவியங்களும் கலரும் நன்றாக உள்ளது.
ReplyDelete+1
Deleteசொல்லி அடிச்ச ஜேம்ஸ்பாண்ட். சார் சென்னைபுத்தகவிழா ஸ்பெசல் புக் எதுவும் உண்டா. தகவல் ப்ளீஸ். கரூர்ராஜ சேகரன்
ReplyDeleteJAMES BOND COLOUR, HIGH SPEED ACTION PACKED CINEMA 9.5/10
ReplyDeleteB/W JAMES BOND 007, ABSOLUTELY CLASSIC! FANTASTIC! 9.5/10
Both versions have their own strengths and class. No need to compare.
Iniya Kalai Vanakkangal🙂
ReplyDelete@Thozhar
Nanri Thozhare
வணக்கம்.!வணக்கமுங்க..!
ReplyDelete// ஒட்டு மொத்தமாகவே கார்ட்டூனுக்குக் கொடி பிடிப்போர் சங்கத்தின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் மாறிடுவதையே காட்டுகிறது !! //
ReplyDeleteரொம்பவே வலிக்கிறது சார்...
ரொம்ப ரொம்ப...!
Deleteகெட்ட செய்தி எல்லாம் நல்ல செய்திகளாகவும் நல்ல செய்திகள் இன்னும் நல்ல செய்திகளாக சென்னை புத்தகக் திருவிழாவில் மாறும் என்று நம்பிக்கை கொள்வோம். எல்லாம் வல்ல இறைவன் இதற்கு அருள் புரிந்து இந்த தமிழ் காமிக்ஸ் உலகத்தை பெரிய உலகமாக மாற்றற்றும்.
ReplyDeleteவழிமொழிகிறேன்..
Deleteமறுபதிப்பில்...ஸ்பைடர் மாயாவி lawernce.... ஏற்கனவே ஏகப்பட்ட தடவை மறுபதிப்பு கண்டவை......
ReplyDeleteஅவை விற்பனை ஆகாதது....ஆச்சர்யம் ஒன்றும் இல்லை......
மறுபதிப்பு அதிகம் இல்லாத கதைகளை தேர்வு செய்து இருக்க வேண்டும்....
ஏ.கா...நயகராவில் மாயாவி.....
எல்லாம் அந்த விண்வெளி பிசாசுக்கு தான் வெளிச்சம்....😊😊😊
காதிலே புய்ப்பங்களை நாமாய் கேட்டுக் கேட்டு வாங்கிச் சுற்றிக் கொண்ட அந்த நாட்களிலேயே 'மிடிலே' என்று சொல்ல வைத்த ஜாகஜம் தான் 'விண்வெளிப் பிசாசு" ! இன்றைக்கு ??
Delete//மறுபதிப்பில்...ஸ்பைடர் மாயாவி lawernce.... ஏற்கனவே ஏகப்பட்ட தடவை மறுபதிப்பு கண்டவை......அவை விற்பனை ஆகாதது.... ஆச்சர்யம் ஒன்றும் இல்லை......//
Deleteபின்னே மாயாவி மட்டும் விற்பனையானது எவ்விதமோ ?
//மறுபதிப்பில்...ஸ்பைடர் மாயாவி lawernce.... ஏற்கனவே ஏகப்பட்ட தடவை மறுபதிப்பு கண்டவை......அவை விற்பனை ஆகாதது.... ஆச்சர்யம் ஒன்றும் இல்லை......//
Delete+1
Maxi யில் வரும் அளவிற்கு உட் சிட்டி கோமாளிகள் வளர்ந்த விட்டார்கள்....😢😢
ReplyDeleteஞாயிறு காலை வணக்கம் சார் &
ReplyDeleteநண்பர்களே 🙏🏼
கெட்ட சேதி
கொஞ்சம் வருத்தப்பட வைக்கும் விசயமே 🤷🏻♂️
கிட்டங்கி காப்பாளர்களுக்கு தற்காலிக ஓய்வு கொடுப்பதில் தவறில்லை சார்
.
வேறு வழி இருப்பதாய்த் தெரியக் காணோம் தான் சார் !
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇருளின் மைந்தர்கள்:
Deleteஆராய்ச்சிக்காக செல்லும் ஒரு குழு காணாமல் சென்று விடுகிறது. அதனை கண்டுபிடிக்க செல்லும் டெக்ஸ் & கார்சன்.
ஒரு அனுமாஸ்யம் இதனை மையமாக வைத்து சுவாரசியமான மற்றும் ஜனரஞ்சகமான கதையை கொடுத்த கதாசிரியருக்கு பல கைதட்டல்கள்.
கதையில் வரும் அனுமாஸ்யம் மற்றும் அது மனிதர்களை தாக்குவதற்கான வழிமுறை என்ன/எப்படி என்று டெக்ஸ் கார்சனிடம் சொல்லும் இடம் அட போட்டு நமது மனநிலமையை எளிதாக்குகிறது.
இருளின் மைந்தர்களுக்காக வேலை செய்யும் மெக்சிகன் மற்றும் யாஹைக்களை பந்தாடுவது வெறும் டாமல் டூமில் மட்டும் இல்லை, தந்திரங்களும் உண்டு.
இறுதிபோருக்கு தனது நவஹோ குழுவுடன் கிளம்புவது உடலில் உள்ள நாடி நரம்பை எல்லாம் சிலிர்த்தது எழுப்ப செய்தது.
இதுவரை வந்த டெக்ஸ் மறுபதிப்பில் மிகச்சிறந்த இதழ் இதுவே.
இருளின் மைந்தர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்.
//இதுவரை வந்த டெக்ஸ் மறுபதிப்பில் மிகச்சிறந்த இதழ் இதுவே//
Deleteசார்....சார்....இட்லியே நம்பாது - இது சட்னியென்று !!
எனக்கு இந்த கதையில் எந்த நெருடலும் இல்லை; நாம் படிக்கும் 90% கதைகள் கற்றனையே எனும் போது இதனை மட்டும் மாறுபட்ட பார்வையில் பார்க்க தேவையில்லையே.
Deleteஅவதார், இன்டியான ஜோன்ஸ் மற்றும் பல ஹாலிவுட் பூச்சூற்றல்களை ஆகா ஓகோ என்று கொண்டாடும் நாம் இங்கே அதே மனநிலையில் இல்லாததை என்ன சொல்ல.
Correct PFB sir
Delete//அவதார், இன்டியான ஜோன்ஸ் மற்றும் பல ஹாலிவுட் பூச்சூற்றல்களை ஆகா ஓகோ என்று கொண்டாடும் நாம் இங்கே அதே மனநிலையில் இல்லாததை என்ன சொல்ல//
Deleteஇங்கே நம்மவர்கள் மிக உசரமான அளவுகோல்களை நிர்மாணித்து ஸ்ட்ரிக்ட் சுடலைமுத்து ஆகிடுவது தான் காரணம் சார் !
// இங்கே நம்மவர்கள் மிக உசரமான அளவுகோல்களை நிர்மாணித்து ஸ்ட்ரிக்ட் சுடலைமுத்து ஆகிடுவது தான் காரணம் சார் ! //
DeleteComplan அதிகம் குடித்து விட்டார்கள் போல :-)
இதுக்கு தான் என்னை மாதிரி தண்ணீயை தவிர இல்ல குடிநீரை தவிர வேறெதுவும் குடிக்ககூடாதுன்னு சொல்றது..:-)
Delete///இதுவரை வந்த டெக்ஸ் மறுபதிப்பில் மிகச்சிறந்த இதழ் இதுவே.///
Deleteலைட்ட்டா ஸ்டீல்க்ளா வாசம் அடிக்குதே...
ஒரே ஒரு! டெக்ஸ் கதையை குறை சொல்லும் போது ஹாலிவுட் படங்களை உதாரணத்துக்கு காட்டும் நாம் மாயாவி, ஸ்பைடர் கதைகளை "மிடிலே,காதில் புய்ப்பம், தூக்க மாத்திரை, ஆதாம், ஏவாள் காலத்துக்கதை என்று நக்கலடிப்பவர்களை ஊக்குவித்துக் கொண்டுதானே இருக்கிறோம். அப்படி நக்கலடிப்பவர்களுக்கு அயர்மேன், பேட்மேன்,போன்ற படங்களை உதாரணம் காட்டாமல் விட்டுவிடுகிறோமே! "மாயாவி, ஸ்பைடருக்கு வந்தால் தக்காளி சட்னி! டெக்ஸூக்கு வந்தால் ரத்தம்!!என்றுதானே இருக்கிறது நியாயம்!. இதில் வேடிக்கையென்னவென்றால் ஸ்பைடர், மாயாவி கதைகளை நக்கலடிப்பவர்கள்தான் இந்த ஹாவ்....வ்..கதையை கொண்டாடுகிறார்கள். மாமியார் "உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தால் பொன்குடம்!"
DeleteATR @ நான் காமிக்ஸ் ரசிகன். அதிலும் மும்மூர்த்திகளை படித்து வளர்ந்தவன். எனது கருத்து மும்மூர்த்திகளை குறை சொல்லி நக்கலடிப்பவர்களுக்கும் பொருந்தும்.
Deleteஇது போன்று ஒரு உதாரணத்தை மும்மூர்த்திகளை குறை சொல்லும் போதும் நான் பதிவிட்டு இருக்கிறேன்.
அப்புறம் இந்த ஈரோடு விஜயுடன் சேர்ந்து கிட் ஆர்டின் கண்ணன் இரண்டு பேரும் தான் நம்ப மும்மூர்த்திகளை ரொம்ப கலாய்ச்சாங்க :-) அதானால உங்க பின்னூட்டத்தை அவங்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன் :-)
சார்...
ReplyDeleteநான் நேற்று தான் officeக்கு போன் செய்து கேட்டேன்
எனக்கு இந்த வருடம் யாரும் சந்தா கட்டவில்லை என்று சொன்னார்கள் சற்றே வருத்தமாக உள்ளது...😑😔....
ஈரோட்டில் நம்ம காமிக்ஸ்சை எங்கு வாங்க முடியும் சார்...
இந்த மாதத்து புக்கை அடுத்த மாதம் வைத்திருபார்களா...??...
சார்...
பஸ் ஸ்டான்ட் கடையில் ; பாரதி புத்தகாலயத்தில் ; கருங்கல் பாளையத்தில் புக்குகள் கிடைக்கும் அகில் !
Deleteசார்
Deleteஇந்த மாதத்து புக்கை அடுத்த மாதம் வாங்க முடியுமா...
??
முடியணும் அகில் !
Delete// நான் நேற்று தான் officeக்கு போன் செய்து கேட்டேன்
Deleteஎனக்கு இந்த வருடம் யாரும் சந்தா கட்டவில்லை என்று சொன்னார்கள் //
தம்பி உங்கள் எண்ணத்தை மாற்றுங்கள்.
வரும் காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து நீங்களே அந்த அந்த மாத புத்தகங்களை வாங்கி படிக்க பழகுங்கள்.
ஓவ்வொரு வருடமும் யாராவது நமக்கு சந்தா செலுத்துவார்கள் என்ற எண்ணத்தை தூக்கி வீசுங்கள்.
நமது விமர்சனங்கள் நிறை மற்றும் குறைகளை கலந்து வரட்டும். குறைகளை மட்டும் சொல்லாமல் நிறைகளையும் கலந்து சொல்வது நலம்.
ReplyDeleteகுறைகளை இதமாக சுட்டி காட்டுங்கள், அவைகளை எப்படி நிறைகளாக்குவது என்ற ரீதியில் விமர்சனம் செய்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.
குறைகளைத் தேடிடும் வேகத்தில் முதல் வாசிப்பின் ரம்யத்தை சில நண்பர்கள் இழந்திடுகிறார்களோ என்ற ஐயமும் உண்டு எனக்கு ! "குளிர்காலக் குற்றங்கள்" ; "சாத்தானின் சீடர்கள்" போலான சுமாரான கதைகளை சும்மா படித்தாலே அவற்றின் மிதத் தரங்கள் அப்பட்டமாய்த் தெரியாது போகாது தான் ! நிலவரம் இதுவே எனும் போது 'ஜாலியாய் வாசிப்போம் ; குறைகள் நெருடும் போது சுட்டிக் காட்டுவோம்" என்ற approach பொருத்தமாக இருக்கக்கூடும் ! மாறாக "குறைகளைத் தேடுவோம் ; நிறைகள் தென்பட்டால் பார்த்துக்கலாம் !" என்ற பாங்கு தேவை தானா ?
Deleteமுதல் வாரம்: நிறைகள் மட்டும்- விற்பனை வேகம் எடுக்க.
Deleteஇரண்டாம் வாரம்: நிறை+ குறைகள்- நண்பர்களுக்கு.
மூன்றாம் வாரம்: குறைகள் மட்டும். எடிட்டர் மற்றும் அனைவருக்கும்.
// குறைகளைத் தேடிடும் வேகத்தில் முதல் வாசிப்பின் ரம்யத்தை சில நண்பர்கள் இழந்திடுகிறார்களோ என்ற ஐயமும் உண்டு எனக்கு ! //
Deleteஉண்மை.
// 'ஜாலியாய் வாசிப்போம் ; குறைகள் நெருடும் போது சுட்டிக் காட்டுவோம்" என்ற approach பொருத்தமாக இருக்கக்கூடும் //
Deleteஇந்த approach எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
///இந்த approach எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.///
Deleteஉங்களுக்குப் பிடிச்சு பிரயோஜனம் இல்லே PfB! நிறைகள் நிறையவே இருக்க, அவற்றைப்பற்றி ஒருவார்த்தை கூட எழுதாமல், குறைகளை மட்டுமே தேடிப்பிடித்து ஃபேஸ்புக்கில் போட்டு லைக்ஸ் வாங்கி சந்தோசப்பட்டுக்கொள்ளும் ஆசாமிகளுக்கும் இந்த அப்ரோச் பிடிக்கவேண்டும்!!
லெமுரியாவுக்கு ஒரு டிக்கெட் கெடைக்குமா சார்??!!
ReplyDeleteடிக்கெட்டே இல்லாங்காட்டியும் வித்தவுட்டிலேயாச்சும் பயணம் போறதா தீர்மானம் சார் ! கூரையிலே ஒரு இடம் பிடிச்சு வைக்கட்டுமா உங்களுக்கு ?
Deleteஎனக்கும் ஒரு இடம் ப்ளீஸ்...
Deleteலெமூரியாவில் வசிப்பவர்கள் யாருமே ஆடை-அணிகலன்களெல்லாம் போடறதில்லைனு படிச்ச ஞாபகம் எனக்கு!
Deleteஅ..அது உண்மைன்னா, எனக்கு ஒரு ஜன்னலோர டிக்கெட் போட்ருங்க! அதுவும் ஒன்வே டிக்கெட் போறும்!! ஹிஹி! :P
நான் ஏற்கனவே லெமூரியாவாசிதான்..!
Deleteகிளின்டனுக்கு போன் பண்ணி சொன்ன
Deleteதே நான் தான்.
சாரே. எனக்கு ஒரு டவுட்டு. 'நம்ம' மாடஸ்டியக்கா பாக்குறதுக்கு அசப்புல ஏஞ்சலினா ஜோலி மாதிரி இருக்காகளே. உன் ஜோலிய பாத்துக்கிட்டு பேசாம போன்னு சொல்றது இதத்தானோ-டவுட்டு தனபால்.
ReplyDeleteசாரே...தினமலர் படிச்ச கையோடு இக்கட கமிங்கா ? அதும் நெல்லை பா)திப்போ ?
Delete///உன் ஜோலிய பாத்துக்கிட்டு பேசாம போன்னு சொல்றது இதத்தானோ///
Deleteஹா ஹா! :))))
காலை வணக்கம் சார்.. ஜனவரி புத்தக விழாவுக்கு வெயிட்டிங்..
ReplyDelete// ஆனாலும் இந்தத் தீர்ப்பு ரொம்ப ரொம்ப harsh என்பேன். //
ReplyDeleteகமான்சே கதைகளுக்கான விமர்சனங்களை மீண்டும் எழுதலாம் நண்பர்களே...
நான் skip செய்து வைத்திருந்த பௌன்சர் தொகுப்புகளை நண்பர்களின் வலைப்பக்க சிலாகிப்புகளுக்கு பின்னரே வாங்கும் எண்ணம் ஏற்பட்டது.
666 பண்ணையை மீட்டெடுக்கும் வரையிலான பாகங்களில் எல்லாமே கதைக்களம் - அழுத்தமானது.. தொய்வில்லாதது!! அத்துடன் தொடரை முடித்திருக்கவேண்டும்! ஆனால் அதன்பிறகு கதையை சரியான பாதையில் நகர்த்திச் செல்ல கதாசிரியருக்கு இயலவில்லையென்பதால்தான் இந்த பின்னடைவு!!
Deleteஹெர்மனுக்கும் பேனா சறுக்கும்!
கதாசிரியர் க்ரேக் ஐயா அவர்கள்.
Deleteஹெர்மன் ஐயா ஓவியர்தானே.
@ GP
Deleteஉண்மைதான்! தெளிவாக இருக்கிறீர்கள்!! :)
ஹெர்மனும், க்ரேக்கும் தொழில்முறை கூட்டாளிகள் என்பதால் கதையிலும் ஹெர்மனுக்கும் கணிசமான பங்கு உண்டு என்று விக்கியில் படித்த ஞாபகம் எனக்கு!
Maxi யில் வரும் அளவிற்கு உட் சிட்டி கோமாளிகள் வளர்ந்த விட்டார்கள்....😢😢
ReplyDeleteகாமிக்ஸ் படிக்கும் போது நமது ஆறாம் அறிவை கொஞ்சம் விலக்கி வைத்து படிக்க ஆரம்பித்தால் இந்த கெட்ட செய்திகள் எல்லாம் நல்ல செய்தியாகும் வாய்ப்புகள் அதிகம் :-)
ReplyDeleteஆறாவது அறிவை விலக்கிவைத்துவிட்டால் அப்புறம் புத்தகத்தைப் படிக்கத்தோன்றாது.. நல்லா மென்று சாப்பிடத்தான் தோன்றும்!! அப்புறம் 'இதுவரை வந்த கதைகளிலேயே இதுதான் டேஸ்ட்'னு கமெண்ட் போடுவாங்க! பர்ர்ர்ர்ரால்லியா? ;)
Deleteஇதுதான் 'டாப்' டேஸ்ட் என ஸ்டீல் பாணியில் சொல்லுங்கள்.
Deleteசிந்திக்கும் விஷயத்தை கொஞ்சம் தூரத்தில் வைத்து விட்டு படித்து பாருங்கள் விஜய்.
that means logic பார்க்கக் கூடாது. சரிதானே PFB சார்.
Deleteஅதே அதே பத்மநாபன்.
Delete///சிந்திக்கும் விஷயத்தை கொஞ்சம் தூரத்தில் வைத்து விட்டு படித்து பாருங்கள் விஜய்.///
Deleteஎப்படி.. வீட்டுக்குள் நுழையும்போதே மானம், ரோசம் - இதையெல்லாம் தூரப்போட்டுவிடுகிறோமே.. அதுமாதிரிங்களா PfB? ;)
அதே அதே விஜய்.
Deleteஇத நான் முதல்லேயே நீங்கள் எழுதினது மாதிரி எழுதி இருந்தால் மக்கள் கோவிச்சுக்குவாங்க... புரிஞ்சுக்க மாட்டாங்க.
நீங்க ஒருவராவது புரிஞ்சுகிட்டது சந்தோஷம் :+)
mutual understanding
Deleteஇத்தனை நாளா உங்கள செயலாளர்னு சொன்னது இந்த சங்கத்துக்கு தானா ஈ.வி.சார் ?
Delete:))))
Deleteஈ.வி'ன்னே கூப்பிடுங்க. 'சார்' போட்டா ஆபீஸ்ல இருக்கற ஃபீலிங்! கூடவே தூக்கமும் வந்துடுது! ;)
I 138
ReplyDeleteஅர்த்த சந்திர வியூகம் பற்றி யாராவது விளக்கம் சொல்ல முடியுமா? இது ஓர் போர் தந்லிரம என நினைக்கிறேன் ஆனால் எந்த மாதிரியானது. இருளின் மைந்தர்கள் இரண்டாம் பாகத்தில் பக்கம் 51ல் வருகிறது.
ReplyDeletehttps://m.jeyamohan.in/64159#.XhF6fYnhV-F
Delete///அர்த்த சந்திர வியூகம் பற்றி யாராவது விளக்கம் சொல்ல முடியுமா?//
Deleteசிந்திக்கும் திறனை தூர வைத்துவிட்டு கீழுள்ள விளக்கத்தைப் படியுங்கள் PfB!
அதாவது, ஒரு அர்த்தத்தோட சந்திர ஒளியில ஒரு வியூகம் அமைச்சாங்கன்னா அது 'அர்த்த சந்திர வியூகம்'!
அர்த்தமே இல்லாம சந்திர ஒளியில் வியூகம் அமைச்சு லந்து பண்ணிக்கிட்டிருந்தாங்கன்னா அது 'அனார்த்த சந்திர வியூகம்'!
சரி, இப்ப சிந்திக்கும் திறனை வரவழைச்சுக்கிட்டு மேலே செனாஅனா கொடுத்திருக்கும் லிங்க் கிளிக் பண்ணுங்க! :)
இல்ல, செல்வம் அபிராமி கொடுத்த லிங்க நீங்க கொடுத்த விளக்கத்தை படித்த பிறகு படிக்க மனம் வரவில்லை :-)
Deleteஇதுக்குதான் ஊருக்குள்ள உங்களை மாதிரி ஆல் ஆன் ஆல் அனத்தர நடமாடும் விக்கிப்பீடியா வேண்டும் என்கிறது.:-)
என்னிக்காச்சும் ஒருநாள்.. யாருக்காச்சும் ஒருவருக்கு.. செனாஅனாவைவிட நல்ல விளக்கம் கொடுக்கமுடியும்னு எனக்கு நானே நம்பிக்கிட்டிருந்தது வீண்போகலை! பூவ்.. பூவ்..(ஆனந்தக் கண்ணீர்)
Deleteஇனிமே ஏதாச்சும் டவுட்டா ஸ்ட்ரெய்ட்டா எங்கிட்டயே கேட்கலாம் நீங்க! :D
ஆனால் நீங்கள் எழுதியதை படித்த உடன் எனக்கு கண்ணெல்லாம் வேர்த்து விட்டது. வீட்டில் கூட பயந்து விட்டார்கள்... கண்ணில் தூசி என சொல்லி சமாளித்து விட்டேன் :-)
Deleteசார் பாண்ட் கலக்ki விட்டாr...
ReplyDeleteஎஸ்.:-)
Deleteஇருளின் மைந்தர்கள் இரண்டாம் பாகத்தில் நெருடிய விஷயம் கையில் துப்பாக்கி குண்டால் காயப்பட்ட கார்சன் ஒரு நேரத்தில் கையில் கட்டுடனும் மறுநேரம் கட்டு இல்லாமல் மாறிமாறிவருவது.
ReplyDeleteஅசிஸ்டன்ட் கதாசிரியர் இந்த கன்டியுனிட்டி விஷயத்தை கவனிக்காமல் கொட்டை விட்டு விட்டார் போல.
நம்மை போல வரமுடியுமா பரணி சார்...இல்ல இல்ல பரணி ...
Delete( ஓகேவா பரணி சார்..)
தலைவரே நீங்கள் பட்டா பட்டியை விட்டு ஜாக்கிக்கு மாறினாலும் இந்த"சாரை" விடமாட்டிங்க போல :-)
Deleteநல்ல சேதி கெட்ட சேதி படிக்க படிக்க இருவேறு மனப்பாங்கினை கிளப்பினாலும் கெட்ட சேதியில் ஒரு நல்ல சேதி என்னான்னா சார்..அதில் 50% ( மட்டும்) என் மனதிற்கு எட்டாதவையே..:-)
ReplyDelete
ReplyDeleteமாடஸ்டிக்கு அட்டையில் " லேடி ஜேம்ஸ் பாண்ட்" என்று பெரிதாய் கொட்டை எழுத்தில் போட்டால் புத்தக விழாவில் வாசகர்களை எளிதில் கவருமல்லவா?
சரவணக்குமாருக்கு ஜே.....
ReplyDeleteட்யூராங்கோ...
ReplyDeleteபுதுவருடத்தின் அட்டகாசமான தொடக்க இதழ்..அட்டைப்படமும் சரி ,உட்பக்க சித்திரங்களும் சரி ,அந்த மிதமான வண்ணகலவையும் சரி பரபரவென விறுவிறுப்பாக நகரும் கதைக்கு உயிரூட்டின என சொன்னால் மிகையில்ல..டெக்ஸ் ஐ போல வாசகர்களுக்கு நெருக்கமாகி விட்ட இந்த நாயகரின் சாகஸம் இன்னும் இருப்பது ஒரே ஒரு இறுதி சாகஸம் தான் எனும் பொழுது ஒரு வித ஏமாற்றத்தை அளிக்கிறது..இந்த வெற்றிகரமான நாயகரை டெக்ஸை போல படைப்பாளிகள் தொடராமல் போனது துரதிர்ஷட்டமே..அவரின் அடுத்த வெளியீட்டை அடுத்த வருடத்திற்கு பதிலாக இந்த வருடமே வெளிவந தால் செமயாக இருக்குமே என்றும் மனதினுள் ஓர் ஏக்கம்..
ட்யூராங்கோ வெற்றி நாயகனின் மற்றுமோர் வெற்றி படைப்பு...
ட்யூராங்கோ விற்கு தனி சந்தா, சங்கம்,கொடி என்றெல்லாம் கேட்பதற்குள் ஆணியே பிடுங்க வேணாம் என்று விட்டீர்கள்.
ReplyDeleteஒரு வருட இதழ்களை மொத்தமாக அலசி சரவணன் சார் அவர்கள் கலக்கி எடுத்து விட்டார்..
ReplyDeleteவாழ்த்துகள் சரவணன் சார்..:-)
இனி இருப்பது இருளின் மைந்தர்கள் மட்டுமே ..ஏற்கனவே படித்த கதை தான் எனினும் அந்த அட்டகாசமான அளவும் ,பட்டையை கிளப்பும் அட்டைப்படமும் ,வண்ணப்பக்கங்களும் அதை விட முக்கியமாக அதில் இருப்பது டெக்ஸ் வில்லர் என்ற நாயகரும் எனும் பொழுதே புத்தகத்தை எடுத்து படிக்க பரபரவென உள்ளது தான்..ஆனால் படித்து விட்டால்...வேறு புத்தகம் இல்லையே என்ற வருத்தம் இன்னும் இதழை தடவிக்கொண்டே இருக்க சொல்கிறது..:-(
ReplyDeleteஆசிரியரே நீங்கள் ஏற்கனவே கேட்ட கேள்வி தான் மேக் and Jack kku இரண்டு இடம் ஒதுக்கலாமா என்று நீங்கள் போன வருடமே கேட்டீர்கள் நாங்கள் எல்லாரும் ஒரு இடம் போதும் என்று சொல்லி விட்டோம். 2021இல் தயவு செய்து இவர்களுக்கு இரண்டு இடம் ஒதுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
ReplyDelete+1
Deleteஉண்மையாகவே இந்த பதிவினை படிக்கும் போது கஷ்டமாக இருந்தது. இன்னும் விற்காமல் கிடங்கியில் இருக்கும் நாயகர்களுக்கு கல்தா கொடுத்து விடுங்கள் சார்.
ReplyDeleteஜம்போ சீசன் -3 இன் மீதம் உள்ள 3 புத்தகங்களை பற்றி எப்போது அறிவிப்பு வரும் சார்?
இந்த வருட ஈரோடு புத்தக விழாவில் டைகர் உடன் சேர்த்து யங் டெக்ஸ் சந்தா D இல் அறிவித்ததை ஒரே புத்தகமாக வெளியிடலாமே சார். தல தளபதி ஸ்பெஷல் இந்த வருடம் ஈரோட்டில். யோசியுங்கள் சார். Please
சார் இன்னும் ஒரு வேண்டுகோள் பாண்ட் 2.0 வை அடுத்த வருடம் சந்தா A kku கொண்டு வாருங்கள் சார்.
ReplyDelete//கிட்டங்கிகளில் அதிகபடியாய் இருக்கும் புத்தகங்களின் தகவல் தெரிந்தால் அதை பற்றிய Review மீண்டும் எழுதலாம்,//
ReplyDeleteஅருமையான சிந்தனை !! ஏற்கனவே நானும் அந்தத் தீர்மானத்தில் தானுள்ளேன்
######
சார்..வரும் பதிவுகளில் தேங்கி நிற்கும் இது போன்ற இதழ்களில் இரண்டு ,இரண்டாக தொடர்ந்து உங்கள் எண்ணத்தை விதைக்கும்பொழுது நண்பர்களும் மீண்டுமொரு முறை வாசித்து விமர்சனம் எழுதும் ஆவல் பிறக்கும்.
க்ளாசிக் விமர்சனம்...நான் ரெடி..:-)
நானும் ரெடி தலைவரே.
Deleteபாண்ட் 2.0 இன்னொரு copy வாங்கி எனது நண்பர்களுக்கு பரிசளிக்க நினைத்தேன் அதை இப்போதே செய்து விடுவது நல்லது என்று உங்கள் தகவல் மூலம் அறிந்தேன். இப்போதே order போட்டு விடுகிறேன்.
ReplyDeleteபாண்ட் 2.0வின் 3 கதைகளையும்.
இந்த ரமணா நேரத்தை பார்த்தால் ஆசிரியர் 2021 அட்டவணையில் பாதியை ரெடி செய்து விட்ட மாதிரி தெரிகிறது.
ReplyDeleteசூப்பர் விஜயன் சார், வேண்டிய மாற்றங்களை உடனுக்குடன் செய்து விற்பனையை அதிகரிக்க செய்வது. 25% தள்ளுபடி விற்பனை சிறந்த முடிவு.
// நல்ல சேதி என்னவென்றால் 'தல' TEX எப்போதும் போல மலை ! //
ReplyDeleteதல எல்லாவற்றிலும் விதிவிலக்கானவர் போல,மற்ற இதழ்கள் கொடுக்கும் பளுவை தல இதழ்களின் விற்பனை ஓரளுக்காவது ஈடுகட்டுவது மகிழ்ச்சியான செய்தி....
எடிட்டரின் புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். :) ஒரே ஒரு சந்தேகம்..குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சார்ந்த களங்கள் , ஓரினச்சேர்க்கையாளர்களை பகடி செய்தல் , மனோதத்துவ ரீதியிலான த்ரில்லர்கள் என்பதையெல்லாம் காமிக்சில் அனுமதிக்கும் தாங்கள் cleavage , bikini, frontal nudity போன்றவற்றை streaming காலமான இந்த 2020லும் எடிட் செய்து வெளியிடுவது ஏன் ? amazon prime , netflix , சினிமாக்கள் , டிவிகளில் வருவதை விடவா காமிக்சில் வந்து விட போகிறது ? தயவு செய்து 13+, 16+, 18+ போன்ற வெவ்வேறு rating கொடுத்து எடிட் செய்யாமல் வெளியிடுங்கள் அல்லது அனைவரும் படிக்கத்தகாதவை(!) என்று தாங்கள் கருதும் கதைக்களங்கள் , ஓவியங்கள் கொண்ட புத்தகங்களை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். Editing the illustrations really spoils the reading experience.. :( :( :(
ReplyDeleteஜனவரி இதழ்கள் முதல் புரட்டலோடு நிற்கிறது,இனிதான் வாசிக்க வேண்டும்,அயர்ச்சியூட்டும் பணிப் பளுவில் நேரம் கிட்டவில்லை,மற்றபடி இதழ்கள் தயாரிப்பு தரத்திலும்,அசத்தலான வண்ணங்களிலும் மிளிர்கிறது......
ReplyDeleteட்யூராங்கோ அட்டைப்படம் முன்,பின் இரு பக்கங்களிலும் கண்படும் அளவிற்கு கலக்குகிறது,இந்த முறை பைண்டிங் தரமும் நிறைவு......
இதில் காமெடி என்னவெனில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இதழ்கள் குறைகளோடு வருவதாக முகநூலில் பகிர்கிறார்கள்......
எனக்கென்னவோ இந்த நிகழ்வுகள் அரிதிலும் அரிதாக நடப்பதாகவே தோன்றுகிறது...இவங்களுக்கு எல்லாம் என்னதான் பிரச்சனையோ தெரியவில்லை.....
எனக்கு இதுவரை வந்த இதழ்கள் எதிலுமே எந்த குறையும் இல்லை.
Delete