நண்பர்களே,
வணக்கம். பொங்கலோ பொங்கல் !! இல்லமெங்கிலும் சந்தோஷமும், குதூகலமும் பொங்கி வழியட்டும் !! ஏக் தம்மில் இது போல சரமாரியாக லீவுகள் இப்போதைக்குக் கிடைக்காதென்பதால் போட்டுத் தாக்கிட கூடுதலாய் ஒரு காரணம் !! So have a blast guys !!
சென்னைப் புத்தக விழாவினில் அற்புதங்கள் தொடர்ந்திடுவது இந்தப் பதிவின் முதல் ஜாலி சேதி ! வெள்ளி & சனிக்கிழமைகளில் வசூலான பணத்தை ஜோப்பிக்குள் குஷாலாய்ச் செருகிக் கொண்டு நான் ஞாயிறு ஊர் திரும்பியிருந்தேன் ! அந்த ஞாயிறின் விற்பனைகளுமே பட்டாசு ரகம் தான் & கேக்கின் மீதான ஐசிங் போல ஒன்பது நண்பர்கள் அன்றைக்கு சந்தாக்களையும் செலுத்தியிருந்தனர் என்பதை நம்மாட்கள் மகிழ்வோடு சொல்லக் கேட்ட போது வயிற்றில் பாயசம் வார்த்தது போலிருந்தது ! ஏதோவொரு கித்தாய்ப்பில் டபுள் ஸ்டால் எடுத்திருந்தாலும் - "கொஞ்சம் ஆவேசப்பட்டுப்புட்டோமோ ? " என்ற நெருடல் உள்ளுக்குள் ஓசையின்றி உலவித் திரிந்து வந்தது தான் ! "ஆங்....வாசகர்களுக்கு வசதியாய் இருக்கும்லே... பார்வையை இருக்கும்லே...!" என்று வெளியே சால்ஜாப்பு சொல்லிக் கொண்டாலும், "அந்தப் பணத்தில் அடுத்த இதழுக்குப் பேப்பர் வாங்கியிருக்கலாமோ ? கதை வாங்கியிருக்கலாமோ ?" என்ற குடைச்சல் இல்லாதில்லை தான் ! ஒரு மாதிரியாய் விற்பனை on the right track என்று ஊர்ஜிதமான பின்னே தான் மூச்சை கொஞ்சமாய் விட்டுக் கொண்டேன் ! தொடரவுள்ள பொங்கல் விடுமுறை நாட்களிலும், வாரயிறுதியிலும் இதே உத்வேகம் தொடர்ந்திட பெரும் தேவன் மனிடோ அருள் பாலிப்பாராக !!
"ஹை....ஒண்ணும் வலிக்கலியே...எல்லாம் ஜாலி..ஜாலி தான் !" என்பதாய் முகரையை வைத்துக் கொண்டு நான் சுற்றித் திரிந்திருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி என்பது தான் நிலவரம் ! கூடி வரும் கிட்டங்கிக் கையிருப்பு + எகிறிச் செல்லும் செலவினங்கள் என்ற double whammy-ஐ சமாளிக்க ரொம்பவே நாக்குத் தள்ளிக் கொண்டிருந்தது தான் ! பற்றாக்குறைக்கு 2020-ன் சந்தா எக்ஸ்பிரஸில் இன்னமும் கணிசமான நண்பர்கள் தொற்றிக் கொள்ளவும் வேண்டியிருப்பதால் M.N.நம்பியாரைப் போல கையைக் கசக்கிக் கொண்டு தானிருந்தேன் திரைமறைவில் !! எதிர்பாரா சாரல் மழை போல இந்தச் சென்னைப் புத்தக விழா கைகொடுத்திருக்கும் சூழலில் - சந்தாவினில் பாக்கி நண்பர்களும் மட்டும் இணைந்து கொண்டிட்டால் phewwwwwwwwwww என்றொரு பெரும் பெருமூச்சை விட்டுக் கொள்வேன் !! சந்தா நினைவூட்டல் guys !!
Early days yet - ஆனால் சென்னைப் புத்தக விழாவினில் இதுவரையிலும் தொய்வின்றி விற்பனை கண்டுள்ள இதழ்கள் எவை என்பதை ஜூனியர் எடிட்டர் ஏற்பாடு செய்திருக்கும் புது software -ன் புண்ணியத்தில் பார்க்க முடிந்தது & that made for interesting viewing :
- 2019-ன் டாப் 2 இதழ்களான "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" & பராகுடா எதிர்பார்த்தபடியே brisk sellers !!
- "லக்கி லூக்கைச் சுட்டது யார் ?" ஆச்சர்யமூட்டும் விதத்தில் has sold well !!
- "டைனமைட் ஸ்பெஷல்" - சென்னை ஸ்டாலில் உள்ளது மாத்திரமே கையிருப்பு என்பதாலோ-என்னமோ selling in a hurry !!
- "2019-ன் மொத்த இதழ்கள்" என்றதொரு முரட்டு பண்டலை ஏதோவொரு ஆர்வக்கோளாறில் போடச் சொல்லியிருந்தேன் ! "எனக்குப் போன வருஷத்து இதழ்கள் சகலதும் வேணும் !" என்று யாராச்சும் கேட்டு வராது போக மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அடித்த கூத்து அது ! And surprise ..surprise ...அந்த பண்டல் பிரமாதமாய் விற்று வருகிறது !!
- 25% டிஸ்கவுண்ட் ஸ்டிக்கர் தாங்கி நிற்கும் அந்த 52 இதழ்களும் ஓரளவிற்கு போணியாகியுள்ளன ! Maybe இதனை கொஞ்ச காலம் முன்னரே நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டுமோ - என்னவோ !! சீக்கிரமே நமது ஆன்லைன் ஸ்டோர்களிலுமே இந்த discounted விலைகளை அமல்படுத்திட எண்ணியுள்ளோம் - பெவிகால் தடவிக்கொண்டு நம் கிட்டங்கியிலேயே வாடகையும் தராது குடியிருக்கும் இதழ்களுக்கு விடை தரும் பொருட்டு !!
- இம்முறை சென்னைப் புத்தக விழாவினில் நான் கவனித்ததொரு விஷயம் - வலைமன்னனின் இதழ்கள் ஓரளவுக்கேனும் விற்பனை கண்டுள்ளதை !! வழக்கமாய் ஜன்னலோர சீட்டை சடுதியில் பிடித்து விட்டு ஊர் ஊராய்க் கிளம்பும் மனுஷன், போனது போலவே அலுங்காமல், குலுங்காமல் பத்திரமாக வீடு திரும்புவது வாடிக்கை ! ஆனால் இந்தவாட்டி தான் லைட்டாக மாறுதல் !! சிங்காரச் சென்னையின் அழகில் மயங்கி அங்கே கால்பதிக்கும் நினைப்போ ; இல்லாங்காட்டி மெரினா பீச்சுக்கு அடியே கொக்கி மாட்டி சென்னையையே இக்கட இழுத்து வரும் திட்டமோ - தெரியலை - ஜாகை மாற்றத்துக்குத் தயாராகி வருகிறார் !
தொடரும் நாட்களில் விற்பனை பற்றி இன்னமும் ஒரு தெளிவான சித்திரம் கிடைத்திடும் போது, அது பற்றி மேற்கொண்டு பேசுவோமே !!
Moving on, இந்த உழவர் திருநாளில் - பச்சைப் பசேலென்ற வயல்வெளிகளை நினைவூட்டும் விதமாய் இதோ ஒரு பளிச் பச்சையில் காத்திருக்கும் பிப்ரவரியின் அட்டைப்படப் preview ! புத்தக விழா ; ஜனவரி இதழ்கள் என்றே நாம் சுற்றி வந்தாலும், ஆண்டின் இரண்டாம் மாதம் புலர இன்னும் இரண்டே வாரங்கள் தானே உள்ளன ? So பார்வைகள் ; பணிகள் அப்பக்கமாய்ப் பயணித்தாக வேண்டுமென்றோ ?! Here you go !!
இங்குள்ள பால்யக் காதலர்களுக்கு இந்த அட்டைப்பட நாயகனைப் பார்க்கும் தருணம் 'ஜிவ்'வென்று உற்சாகம் தூக்கியடிப்பதும் ; பால்யத்தை பால்யத்தோடே விட்டு வந்தோர்க்கு குளிர் ஜுரத்தில் உடம்பு தூக்கித் தூக்கி அடிப்பதும் ஒருசேர நிகழவிருப்பது உறுதி !! புய்ப்பமே ஆனாலும் - அதனை பயபக்தியோடு காதில் செருகிக் கொள்ள நண்பர்களில் ஒரு கணிசமான அணி தயாராய் இருப்பதால், இந்தாண்டின் கோட்டாவாய் இதனை பாவித்திடலாம் guys !! And சட்டித் தலையன் ஆர்ச்சியின் அந்த மாமூலான காலப்பயண ஜாகஜமே இம்முறையும் !! இந்த கி.நா. யுகத்திலுமே போட்டுத் தாக்கும் இதுபோன்ற superhero tales-களுக்கு நம் மத்தியில் ஆர்வம் தொடர்வது ஒரு பட்டிமன்ற அலசலுக்கு உகந்த தலைப்பே ! ஆனால் ரசனைசார் விஷயங்கள் அலசல்களுக்கு அப்பாற்பட்டவை என்பதால், ஓட்டைவாய் உலகநாதன் - அடக்கி வாசிக்கும் ஆராவமுதன் ஆகிடுவதே உசிதம் என்று படுகிறது ! Anyways, ஓராண்டின் பயணத்தினில் ஒரேயொரு super hero இதழ் என்பதில் பெருசாய் நெருடல்கள் யாருக்கும் இராதென்றே நம்ப விரும்புகிறேன் !! அட்டைப்படம் நமது அமெரிக்க ஓவியை (!!!) யின் கைவண்ணம் ! ஜனவரியின் 5 இதழ்களுள் மூன்றின் அட்டைப்படங்கள் அவரது கைவண்ணமே ! And இதோ - பிப்ரவரியிலும் அவரது திறன்கள் களங்காண்கின்றன !! 'ஜிங்கு-ஜாங்-'பச்சையாய் இங்கே வர்ணங்கள் தோன்றினாலும், மிரண்டு போகத் தேவையிலில்லை என்பேன் - becos நேரில் ரொம்பவே பளிச்சென்று தெரிகிறது ! விற்பனையிலும் இந்த ரூ.40 தடத்தின் இதழ்கள் பளிச்சென்று சாதித்துக் காட்டிட நம் சட்டித் தலையன் சிறிதேனும் உதவினால் நாங்களும் ஹேப்பி அண்ணாச்சி ! Fingers crossed !
இந்தத் தருணத்தில் ஒரு அத்தியாவசிய இடைச்செருகல் folks :
ஆண்டின் முதல் தேதியன்று நமது கோவைக்கவிஞரின் கைவசம் ஒரு வாய்ப்புத் தந்தேன் - "இஷ்டப்பட்டதொரு இதழைத் தேர்வு செய்து கொள்ளுங்கோ !!" என்றபடியே ...! நிச்சயமாய் காதிலே புய்ப்ப லாரியையே டாப் கியரில் சபக்கடீர் என்று ஏற்றிடச் செய்யும் கதைகளாகத் தான் அவரது தேர்வு இருக்கும் என்று தெரிந்திருந்தே தான் அந்த ரிஸ்க் எடுத்தேன் ! And எதிர்பார்த்தது போலவே ஸ்பைடர் & ஆர்ச்சிக்கு கொடி பிடித்தார் கவிஞர் !
புத்தக விழாவில் மூத்த வாசகர்களின் ஆர்வத் தாண்டவங்களை தரிசித்த கையோடு -"புட்ச்சிக்கோங்க யூத்ஸ் !! மாயாவி மறுக்கா மறுபதிப்புக்கு வாராருங்கோ !!" என்று அறிவித்தேன் !
அதற்கு சற்றே முன்பாக தான் ரூ.40 தடத்தினில் சிகப்புத் தலையன் ஆர்ச்சி ஆஜராகவுள்ள சேதியைச் சொல்லியிருந்தேன் ! So ஒற்றை மாதத்து இடைவெளியினில் 3 பிரிட்டிஷ் சூப்பர் ஹீரோக்களின் மறுவருகை உறுதியாகியுள்ளது !!
அரை நிஜார்களுக்கு ஈரிருபது ஆண்டுகளுக்கு முன்னேயே டாடா காட்டிவிட்ட இன்றைய 5G நண்பர்களுக்கு இந்த திடீர் U-டர்ன் மாதிரியான செயல்பாடு லைட்டாக வயிற்றைக் கலக்கலாம் தான் ! ஏதேதோ பிரயத்தனங்களை செய்து, வேறுபட்ட காமிக்ஸ் வாசிப்புக்கு வித்திட்டு வரும் இந்த சமீப வேளைகளில் கோட்டை முழுசும் அழிச்சிப்புட்டு ஆரம்பத்திலிருந்து சூப்பர் ஹீரோ பரோட்டா சாப்பிட முனைவது என்ன மாதிரியான திட்டமிடலோ ? என்ற பீதி தலைகாட்டினால் நிச்சயம் தவறு அவர்களதல்ல !! So அந்த பயங்களை சற்றே சமனம் கொள்ளச் செய்வது என் பொறுப்பல்லவா ?
Rest assured folks - இது U-டர்ன் அல்லவே அல்ல !! எத்தனை புதுசுகளை ரசித்தாலும் ; எத்தனை நவீனங்களுக்குள் நீச்சலடித்தாலும் ; "அந்த நாள்..ஞாபகம்... நெஞ்சிலே... வந்ததே..வந்ததே..!" என்று TMS குரலில் கணீரென்று கானம் பாடிக்கொண்டே ஒருவாட்டியாச்சும் அன்றைய நாயகர்களுடன் கைகுலுக்க விழையும் அணியினரை இக்ளியூண்டாவது திருப்திப்படுத்திப் பார்க்கும் ஆசை என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! நான் எத்தனை பெரிய கல்லுளிமங்கத் தடித்தாண்டவராயனாய் இருந்தாலுமே , மனம் தளராது தம் ஆசைகளை வெளிப்படுத்திட்டுக் காத்திருக்கும் அந்தப் பொறுமைகளுக்கான ஒரு சிறு அங்கீகாரம் ! And இந்த இதழ்கள் உங்கள் அபிமானங்களை ஏகமாய் ஈட்டினாலொழிய சந்தாக்களின் அங்கமாக இருந்திடாது என்பது எனது promise ! ஏதேனும் புத்தக விழாக்களின் போது 'லோஜெக்-மொஜக்' என்று ஓசையின்றி வெளிவந்திடும் ! So ஆர்ச்சி மட்டுமே விதிவிலக்காக - ரெகுலர் சந்தாவினில் இடம்பிடித்திருக்கிறான் ! பயலைக் கரை சேர்ப்பதும் ; கையைப் பிடித்து இழுப்பதும், இனி உங்கள் பாடு சாமி !
I'll now sign out folks....இதோ புத்தக விழாவிலிருந்து இன்னும் சில போட்டோக்கள் !! உங்கள்வசம் மேற்கொண்டும் இருப்பின், ப்ளீஸ் do mail them to us !! Bye now....Happy Pongal !!
This comment has been removed by the author.
ReplyDeleteநேற்றைய,
ReplyDeleteஇன்றைய,
நாளைய,
ஆசிரியர் களுக்கும் உறவினர்கள் நண்பர்கள் பணியாளர்கள்
மற்றும் நம் காமிக்ஸ் சகோதரர்கள் அவர்கள் குடும்பத்தினர் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைபொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
####ஒருவாட்டியாச்சும் அன்றைய நாயகர்களுடன் கைகுலுக்க விழையும் அணியினரை இக்ளியூண்டாவது திருப்திப்படுத்திப் பார்க்கும் ஆசை என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! நான் எத்தனை பெரிய கல்லுளிமங்கத் தடித்தாண்டவராயனாய் இருந்தாலுமே , மனம் தளராது தம் ஆசைகளை வெளிப்படுத்திட்டுக் காத்திருக்கும் அந்தப் பொறுமைகளுக்கான ஒரு சிறு அங்கீகாரம் ####
ReplyDeleteI love you sir.
= 2 u
DeleteHappy pongal
ReplyDeleteஆசிரியர் & காமிக்ஸ் நண்பர்களுக்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDelete6
ReplyDeleteஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!!
ReplyDeleteஆர்ச்சி அட்டைப்படம் செம கலக்கல்.
ReplyDeleteபச்சைப் பசேலென்று மனதில் பசக்கென்று ஒட்டிக்கொண்டது.
பசுமை நிறைந்த நினைவுகளே....
DeleteHappy pongal to all.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteதைத் திருநாள் வாழ்த்துகள்!
Deleteஅனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்.
ReplyDelete13வது
ReplyDeleteஅனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteசீனியர் எடிட்டர், எடிட்டர், ஜூனியர் எடிட்டர், அலுவலக நண்பர்கள் மற்றும் அருமை(யான) காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்
ReplyDeleteதிருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன்
சீனியர் எடிட்டர், எடிட்டர், ஜூனியர் எடிட்டர், அலுவலக நண்பர்கள் மற்றும் அருமை(யான) காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்......
ReplyDelete
ReplyDeleteசீனியர் எடிட்டர், எடிட்டர், ஜூனியர் எடிட்டர், அலுவலக நண்பர்கள் மற்றும் அருமை(யான) காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்
பொங்கல் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாழ்த்துக்கள்..!
Deleteவிஜயன் சார், ஆர்ச்சியின் அட்டைப்படம் அருமை, கண்ணைக் கவரும் விதத்தில் உள்ளது. அட்டைப்படத்தை பார்பவர்கள் என்னடா ஒரு ரோபோ வாள் வைத்து கொண்டு மனிதனுடன் சண்டை போடுகிறது, என்று வாங்கி படிக்கும் மனநிலைக்கு தள்ளுவதாக உள்ளது.
ReplyDeleteஇந்த அட்டைபடத்திற்காகவே புதிய மற்றும் பழைய நண்பர்கள் வாங்குவார்கள். இதுபோன்ற கம்யூட்டர் வாழ்கையில் ஆர்ச்சி போன்ற சூப்பர் ஹீரோ கதைகள் அவ்வப்போது தேவை எளிதாக மூச்சு விட.
மீண்டும் ஆர்ச்சி மனம் முழுவதும் சந்தோஷம். நன்றி.
நன்றி...!
Deleteஅருமைல
Deleteமனதை படித்து விட்டீர்கள் பரணி!
Delete// ஒருவாட்டியாச்சும் அன்றைய நாயகர்களுடன் கைகுலுக்க விழையும் அணியினரை இக்ளியூண்டாவது திருப்திப்படுத்திப் பார்க்கும் ஆசை என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! நான் எத்தனை பெரிய கல்லுளிமங்கத் தடித்தாண்டவராயனாய் இருந்தாலுமே , மனம் தளராது தம் ஆசைகளை வெளிப்படுத்திட்டுக் காத்திருக்கும் அந்தப் பொறுமைகளுக்கான ஒரு சிறு அங்கீகாரம் //
ReplyDeleteநன்றி நன்றி நன்றி நன்றி சார்
ஓகே சார்..வரவேற்கிறேன்..:-)
Delete😊
Deleteஇங்கு கூடும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇனிப்பான பொங்கல் பதிவு..
மகிழ்ச்சி...!
இரும்பு மண்டையனின் அட்டைப்படம்...
ReplyDeleteச்ச்சும்மா அள்ளு வுடுது..
நமது.காமிக்ஸ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteவரும் நாட்களில் சென்னை புத்தகத் திருவிழாவில் நமது காமிக்ஸ் விற்பனை உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கட்டும்.
ReplyDeleteஅனைவர் இல்லத்திலும் காமிக்ஸ் பொங்கல் பொங்கட்டும் ஆனந்தம் எட்டுத்திக்கும் பரவட்டும்..
ReplyDeleteபொங்கலோ பொங்கல்.
சீனியர் எடிட்டர், எடிட்டர், ஜூனியர் எடிட்டர், அலுவலக நண்பர்கள் மற்றும் அருமை(யான) காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்... 🙏🏼🙏🏼🙏🏼
ReplyDeleteஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். சென்னை புத்தக விழா கொண்டு வந்து இருக்கும் நல்ல செய்திகள் தொடர வேண்டும். 2020 அருமையாக தொடங்கி உள்ளது இப்படியே தொடர வேண்டும்.
ReplyDeleteHappy pongal all friend
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தித்திக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteமுத்து காமிக்ஸ் அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.மாயாவியின் வருகைக்கு காத்திருக்கும் அன்பன் ஜெயகுமார்.
ReplyDeleteபொங்கலோ பொங்கல்....
ReplyDeleteலுலூலூலூலூலூலூ
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஎடிட்டர் சார் சந்தா D யில் ஜேம்ஸ்பாண்ட் விற்பனையில் சாதித்துக் கொண்டிருந்தால் மீதமுள்ள மூன்று இளம் டெக்ஸ் இடத்தில் ஜேம்ஸ்பாண்டையே களம் இறக்கலாமே
சூப்பர்..சூப்பர்..!
Deleteஇப்படி ஒரு ஐடியாவைதான் நான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன்.
வானாம் ஜி. ஒரே நேரத்தில் அதிக ஜேம்ஸ் பாண்ட் திகட்டிவிட போகிறது.
Deleteநல்ல ஐடியா. அருமையான யோசனை.
Deleteபொங்கலோ பொங்கல்!!
ReplyDeleteஆஹா!! ஆர்ச்சி அட்டைப்படம் - அதகளம்!! அந்தப் பச்சை வண்ணப் பின்புலத்தில் செக்கச்செவேல் ஆர்ச்சி - புதுசாய் சர்வீஸுக்குப் போய்வந்த ப்ளசர்கார் கணக்காய் ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே!!
'ஆர்ச்சி இருக்க பயமேன்?' டைட்டிலும் அருமை!! டைட்டிலில் இயந்திர உதிரி பாகங்களையும் பல்சக்கரங்களையும் தெறிக்கவிட்டிப்பது செம்ம!! கீழே அந்த 17-18 சைஸ் ஸ்பேன்னரில் 'ஆர்ச்சி is back' - ஹா ஹா.. ரசணை ரசணை!!
அட்டகாசமாக வரைந்திருக்கும் அமெரிக்க ஓவியைக்கு வாழ்த்துகள்!!
பொங்கலோ பொங்கல்!!
உங்கள் அட்டைப்பட வர்ணனை அட்டகாசம். மிகவும் ரசித்தேன்.
Deleteஈவா எழுத நினைத்து மறந்துட்டைன்... அருமை
Deleteஈவி
Deleteதமிழ் காமிக்ஸ் உலகினை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உங்கள் அனைவருக்கும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்....
ReplyDeleteபொங்கி வரும் பொங்கலைபோல் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கி பெருகட்டும்...
நன்றி
காமிக்ஸ் அறிந்த..
ReplyDeleteகடவுளின் அருள்பெற்ற..
கண்ணுக்கினிய குழந்தைகள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்..!
ஆர்ச்சிக்கு கம்பேக் ஸ்பெஷல்...வெல்கம் ஆர்ர்ச்ச்ச்சீஈஈஈஈ..
ReplyDeleteஅனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
சார் அட்டைப்பட உலக வரலாற்றிலேயே அட்டகாசமான அட்டை மலர்ந்துள்ளது......
ReplyDeleteபொங்கல் மலர் எமக்கிது இதழ் வராவிடினும்...இதழ் கனிய காத்திருக்கிறோம்....கனியிருக்க மலர் கவர்ந்தற்று எனும் வள்ளுவப் பெருந்தகையின் குற/ரல் விளங்க கனியின் ஜிகுனா வேலைப்பாடுகள் பாண்ட் போல் தகதகவென்று லோகோவுடன் மின்னி விற்பனை என்பதுகளின் சந்தோசத்த தாரை வார்க்கட்டும் என செந்தூரான் அருளை வேண்டி நிற்கிறேன்....
பொங்கலோ பொங்கல்.... பொங்கல் மலர் கொலைப் படையை நினைவுறுத்தத் தவறவில்லை....பொங்கல் பரிசு இவ்வட்டைக்கிணையேது....
முதல் முறையாக படிக்காமலே அட்டயப்பாத்ததும் பதிவிட்டேன் என்றால் எனது சந்தோசம் பிடி படுமா....படித்த பின் மீதம்
ஸ்டீல்....
ஆசிரியர் குழுமத்திற்கும்,
ReplyDeleteஅலுவலக அன்பர்களுக்கும்
சித்திரக் கதை ஆர்வலர்களுக்கும்,
.இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் iii
இதோ நானும் பொங்கல் விடுமுறையில் என் சந்தாவை புத்தக திருவிழாவில் செலுத்தி விட்டு பொக்கிஷங்களை அள்ளிக் கொண்டு வரப்போகிறேன். தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteசூப்பர் ஜி
Deleteபொங்கலோ பொங்கல்!!
DeleteEditor sir and family members happy Pongal 💐💐💐💐
ReplyDeleteOffice staffs happy Pongal💐💐💐
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteசார் அடுத்தடுத்து சந்தோச மழையில் திக்கு முக்காடித்தான் போகிறேன்.... நீங்க இதழைத் தேர்வு செய்யச் சொன்ன பொது...அப்படியே மாற்றமின்றி வேண்டுமென்றேன்....பொங்கல் மலர் எனும் வாசகமும் வேண்டுமெனில் பொங்கல் மலராய் வந்தால் நன்றாயிருக்குமே எனும் எண்ணம் மேலோங்கி...அடடா ஆசிரியர் முன்னர் அறிவித்திருந்தால் பொங்களுங்கே வாங்கியிருக்கலாமே எனும் எண்ணத்தை.... அது புத்தாண்டு பரிசல்லவா என தட்டி விரட்டினேன்...
ReplyDeleteசார் கதையின் தலைப்பை முருகனிடமிருந்து வாங்கியுள்ளீர்கள் போல...வெற்றி நிச்சயம்...ஆர்ச்சியின் தலைக்கன வார்த்தைகள் தலைப்பில் அட்டகாசம்....பின்னட்டை பின்ன முன்னட்டை மின்ன கலக்கட்டும் இதழ்கள்.....பின்னட்டை இவனுக்கு இணையில்லை என்பதுண்மையே.....காலத்தை புரட்டிப் போடும் காலப் பெட்டகம் ...காலப் பயணம் செய்ய அழைக்கிறது....சந்தா செலுத்தா நண்பர்களும் சட்டெனச் செலுத்தி பயணச் சீட்டு உறுதி செய்யலாமே ஆசிரியரும் மனமகிழும் வண்ணமாய்...ஆர்ச்சியுடன் மீதும் கவச உடை தரித்த எதிரியும் காலப் பயணம் செய்து இன்னைக்கே பிப்ரவரிக்குள் நுழைவாயா எனக் கேட்பது எனக்கு மட்டும்தானா...
பொங்கல் ஸ்பெஷல்... இன்று கிடைத்த இதழ்கள்,
ReplyDelete1. ஜனவரி இதழ்கள் அனைத்தும்.
2. மனதில் மிருகம் வேண்டும்
3. சுறா வேட்டை.
4. கதை சொல்லும் கானகம்.
ஆகா அருமையான பொங்கல்.
பொங்கலோ பொங்கல்!
Deleteதீபாவளிக்கு இரண்டு நாள் முன்பே தீபாவளி மலர் மேக்ஸி டெக்ஸோட கிடைச்சு. பொங்கல் வந்திடுச்சு. பொங்கல் மலர் இன்னும் வரல்லியே. ஒரு மினி டெக்ஸாவது...
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தை பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐
ReplyDeleteமகேஷ்
விக்டர்: ஆர்ச்சி, யாரைத்துரத்திக் கொண்டு செல்கிறது?
தாம்ஸன்: “பழைய பேப்பர்” வியாபாரியைதான். இத்தனை நாளாய் இங்கேயே சுற்றி திரிந்தவன், இன்று ஆர்ச்சியை கிண்டலாக பார்த்தபடியே "பலீய்ய்ய்ய்ய இரும்பு பித்ல ஈயத்திற்கு பேர்ர்ரீஈஈஈஈஈஈச்சம் பளோம்” என்று முரட்டுக்குரலில் கூவினான்.
விக்டர்: அதனால்?
தாம்ஸன்: வருடங்கள் பல கடந்து தனது புதிய சாகசம் வெளிவரப்போவதைக் கொண்டாட “ப்ரூட் கேக்”கிற்கு மாவுடன் பழங்களை சமர்த்தாக பிசைந்து கொண்டிருந்த ஆர்ச்சியை “அவனையும் கொஞ்சம் பிசைந்து விட்டு வா” என விளையாட்டாய் ஏவினேன்.
விக்டர்: அடப்பாவி உன் விளையாட்டை சரியாக புரிந்துகொள்ளாது ஆர்ச்சி அவனை வேறு எங்காவது.........? (சொல்லி முடிக்கும் முன் .....)
தூரத்தில் ஒரு தினுசான அலறல்: “ங்ங்ஙிஙீயாயா ஆஆ மியாமியா”
விக்டர்: பயந்தபடியே நடந்துவிட்டது. முரட்டுக்குரல் பூனைகுரலாய் மாறிவிட்டது. ஆர்ச்சியின் சாகசம் இனி "18+" warning உடன் தான் வரப்போகிறது. அதை விடு. ஆர்ச்சியைக் கூப்பிடு. நம்மை நோக்கி யாரோ ஒரு ஜென்டில்மேன் வருகிறார், பாருங்கள்.
வந்தவர்: ஹாய் All. I am புரொஃபஸர் ஜெலஸ்டீன். அடுத்தமாதம் வரவுள்ள ஆர்ச்சியின் கதையை நினைத்து கடுப்புற்று, சட்டிதலையனை நேரில் பார்த்து முறைத்துவிட்டு கிண்டல் செய்துவிட்டு போகலாம் என்று திருவுளம் கொண்டு இங்கு எழுந்தருளியுள்ளேன்.
ஹிஹிஹிஹீ what?! ஹேய்…… என்ன நடக்கிறது?..... ய்ய்ய்யியீயீக்க் ... மிய்யாவ்.
தாம்ஸன்: ஆர்ச்சிக்கும் 2.0 version Confirmed.
Dear Sir, Thank you very much. கதை வெளிவந்தபின்பு என்ன நடக்கும் என்று தெரியாது. அதனால்தான் நானும் இப்போதே கொஞ்சம் “பில்டப்” கொடுத்துள்ளேன். தவறு ஏதேனும் இருந்தால் மன்னித்து விடுங்கள்.
இந்த 5G காலத்திலும், புறா மூலம் செய்தி அனுப்பிய சங்க காலத்திய இலக்கியங்களில் சொல்லப்பட்டிருப்பதை படியுங்கள் என்று அ.முத்துலிங்கம், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் சொல்லி வருகின்றனர். எனவே பழமையை கண்டு வெறுக்க வேண்டியதில்லை. ஆர்ச்சியையும் படிப்பதில் தனி சுகம் உண்டு சார்.
நண்பர் ஸ்டீல், கொலைப்படையையும் , மர்மத்தீவினையும் தேர்வு செய்ததற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். wish you happy pongal.
கிரி சார் சும்மா பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள். செம்ம செம்ம.
Deleteநன்றிகள் நண்பரே....தங்களுக்கும் பொங்கலோ பொங்கல்...
Deleteகிரி சார் சும்மா பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள். செம்ம ஹியூமர் சென்ஸ் உங்களுக்கு!! செம்ம!
Deleteசரி... அதென்ன அந்த புரபஸர் மியாவ்'னு கத்தறார்?!! கிர்ர்ர்ர்... :)
நண்பர்களே இங்கு நான் குறிப்பிட்டு இருக்கும் பூனை குரல்களுக்கும் நண்பர் ஈரோட்டு பூனையார் குரலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரின் குரல் "மியாவ்" என்று இனிமையாய் ஒலிக்கும். இந்த குரல்களோ கர்ணகடூரமாக இருக்கும். No misunderstanding please.
Delete
DeleteE.V .அது "மியாவ்" அல்ல நண்பரே . "மிய்யாவ்".
///அவரின் குரல் "மியாவ்" என்று இனிமையாய் ஒலிக்கும். இந்த குரல்களோ கர்ணகடூரமாக இருக்கும்.///
Deleteவெட்கமா வர்து எனக்கு!!
ஆனாப் பாருங்க.. ஆர்ச்சி 'பிசைந்தால்' நான் இதைவிடவும் கர்ணகடூரமா கத்துவேன்றதுதான் உண்மை! அதை நினைச்சாக்கூட லேசா வலிக்கிறாப்ல இருக்கு!!
ஆபாசம் தோழரே 😜😝😛😉
Deleteபுத்தக பிரியரே மன்னித்து விடுங்கள் .
Deleteசில வேளைகளில் பேச்சு பேச்சாக மட்டும் அல்ல கோடும் கோடாகத்தான் இருக்க வேண்டும் . அதன் மேல் ரோடு போட்டால் இப்படி கொஞ்சம் சங்கடம் ஆக்கிவிடுகிறது.
E.V. ஹிஹிஹிஹீ
😁😁😁
Deleteஇன்று அலுவலகத்தில் நான் மட்டும் தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அதனால் தான் கமெண்ட்ஸ் போட முடிந்தது. இப்போது தான் முந்தைய பதிவிற்கு போய் அங்கு இறுதி பகுதியில் இடப்பட்டிருந்த கமெண்ட்ஸ்களை படித்தேன். என்னமோ நடந்துள்ளது போல தெரிகிறது.
Deleteஎனது DIALOGUE முழுவதும் என் கற்பனையே. யாரையும் மறைமுகமாக கூட குறிப்பிடவில்லை. “பழைய பேப்பர்” வியாபாரியையும் ஒரு படித்தவரையும் ஒரே கோட்டில் ஒருங்கிணைத்து ஒரு fun. அவ்வளவு தான்.
ஈரோட்டுப்பூனை மிய்யாவ்னு கூடக் கத்தாது. காமிக்ஸ்யாவ்னு தான் கத்தும்.
Deleteஹாஹஹஹ...காமிகிஸ்யாவ்
Delete///காமிகிஸ்யாவ்///
Deleteகாமி கிஸ் யாவ்? ஹிஹி!! ;)
///அந்த நாள்..ஞாபகம்... நெஞ்சிலே... வந்ததே..வந்ததே..!" என்று TMS குரலில் கணீரென்று கானம் பாடிக்கொண்டே ஒருவாட்டியாச்சும் அன்றைய நாயகர்களுடன் கைகுலுக்க விழையும் அணியினரை இக்ளியூண்டாவது திருப்திப்படுத்திப் பார்க்கும் ஆசை///
ReplyDeleteநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
:-)
Deleteஆர்ச்சி பின் அட்டையில்" இவனுக்கு ஈடுமில்லை இணையுமில்லை" என்று இருக்க வேண்டுமல்லவா சார்??? "ல்"missing in both captions Pola sir.
ReplyDeleteவெரிகுட் அப்சர்வேசன்!!
Delete"ல்" காணாது போயிருந்தது மாத்திரமன்றி காப்பிரைட் நோட்டீஸிலுமே ஒரு திருத்தம் அவசியமிருந்தது சார் ; இன்று காலையில் போட்டு விட்டார்கள் !
Deleteகண்ணாடி போட்ட பூனைப் படம் தேடணுமோ - DP க்கு ?
Delete🙏 ஒரு வேளை இணையுமிலை ன்னு ஆர்ச்சி க்கு ஜோடி லேது ன்னு சொல்றாங்களோ!!! 🙄🙄🙄
Deleteஇது ஸ்டீல் தமிழ் :-)
Delete////கண்ணாடி போட்ட பூனைப் படம் தேடணுமோ - DP க்கு ?////
Deleteஆர்ச்சியோட அழகுல கொஞ்சம் ஓவரா மயங்கிட்டேனுங்க சார்! ஹிஹி!!
ஏல அது முருகன் பிள்ளைத் தமிழ்ல
Deleteஅனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteபொங்கல் நல்வாழ்த்துக்கள் பாலன் சார்.
Deleteசென்னை நண்பர்கள் தங்களின் புத்தகத் திருவிழா அனுபவங்களை இங்கு பகிரலாமே?
ReplyDeleteஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeletecomics_reading.com/activate
ReplyDeletesantha.com/setup
ஹிஹி!!
எப்படி பால் போட்டாலும் நாங்க மைதானத்திற்கு வெளியே தான் அனுப்புவோம் :-)
ReplyDeleteகாபியா, டீயா?
ReplyDeleteSetup.activate. ஈ.வி.என்னமோ சொல்லவர்றீங்க போல.
ReplyDeleteஹிஹி!! அதேதான் அதேதான் பத்து சார்!! :)
Deleteடீ ... ரெண்டு துளி பாலுடன்.
ReplyDeleteபத்து activate. சார். deactivate.
ReplyDeleteWelcome Back to Archie !
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசார் ஆர்ச்சி என்றாலே பாதி நண்பர்களுக்கு மின்னல் தோன்றியிருக்கும் உற்சாகமாய். நான் முதல்ல படித்த கதையே இரும்பு மனிதன்தான். எவ்வளவு நாயகர்கள் வந்தாலும் அந்நாட்களில் ஈடிணையற்ற ஆர்ச்சி அடுத்த வெளியீட்டில் அல்லது விரைவில் வருகிறது விளம்பரத்தில் வருதா எனத் தேடுவது வழக்கம்.
ReplyDeleteஆர்ச்சியின் உலகப் போரில் ஆர்ச்சி, குதிரை வீரன் ஆர்ச்சி, ஜூனியர் ஆர்ச்சி, சதிவலையுடன் வந்த நதிக்கரையில் ஆர்ச்சி போன்றவற்றில் பின்னோக்கிய பயணங்கள் கோட்டை வாயிலாக/லில் கொடி கட்டிப் பறந்தது மனதில். அன்று தாம்சன் விக்டராய் நாமிருக்கக் கூடாதா என நண்பர்கள் பலரையும் ஏங்க வைத்த கதை நிறைய உண்டு. பின்னர் குரூக்ஸுடன் பயணித்த எதிர் காலக் கதைகள் லயிப்பில்லையெனினும் ஆர்ச்சியின் நீண்ட நாள் கழித்த வரவு பார்த்த உற்சாகத்தில் ஆயாசம் போய் பாயாசமாய் குடித்து படித்து முடித்த கதை பசுமயாய் இவ்வட்டகாச அட்டை போல் நினைவில்.
Deleteஇக்கதை இராபட்க்ளைவ் காலத்திற்கு அழைத்துப் போவது போல உள்ளதால் கடந்த காலத்தைப் திருப்பிப் பார்க்கத் துடிக்கிறேன் அப்போது போல. கட்டுப்படுத்த முடியல ஆவலை... ஒரு பக்கத்த கண்ல காட்டலாமோல்லியோ சார்...
ஸ்டீல் உண்மை நான் படித்ததாக ஞாபகம் உள்ள முதல் கதை இரும்பு மனிதன் தான். விக்டர் ஆகவும் தாம்சன் ஆகவும் மற விரும்பிய நாட்களும் உண்டு. ஆர்ச்சியை தேடி அலைந்த நாட்களும் உண்டு.
DeleteLong live Archie.
குமார் இரண்டாம் வகுப்பு படிக்கயில் நீண்ட நாட்களாய் தேமே என தொங்கிக் கொண்டிருந்த இரும்புக்கரம் தாங்கி கோட்டையில் பீதியுடன் ஆர்ச்சியோடு பயணித்த நண்பர்கள் என்னை ஈர்த்தது ஆச்சரியமெனில்...அவ்வளவு விலைக்கு கேட்டதும் வாங்கித் தர ஒப்புக் கொண்ட என் தாயாரும் ஆச்சரியம் இன்று பொருளாதாரம் குறித்து நினைத்தால்...நமது பள்ளியை தவிர்த்துப் பார்த்தால் அடுத்து கற்றுத் தந்த ஆசிரியர் ஓர் ஆசிரியரே... இன்று வரை பார்க்க படித்துத் தருவதால் எனக்கென்றுமாசிரியரே....தந்தை உலகை காட்டுவதாய் சொல்வார்கள் அது போல கரம் பிடித்து கற்பனை உலகை தனது சிறகால் பறந்து சென்று தேடித் தந்து...நடக்கும் என்னையும் பறக்கச் செய்ததால் எனது சகோதரரே...கடவுள் போல தேவையானதை தருவதால் நடமாடும் செந்தூர் வேலவனே....பார்த்து பார்த்து படைப்புகளை பக்குவமாய் தருவதால் தாயுமானவர்....
Deleteதாய் தந்தை ஆசிரியர் செந்தூர் வேலவன்...பயணிப்போம்
Steel, நானும் முதன்முதலாக ஆர்ச்சியை சந்தித்தது திருச்செந்தூர் கோவில் அருகேயுள்ள ஒரு புத்தக கடையில் தான். ஆர்ச்சியின் முதல் கதையான “இரும்பு மனிதன்” தீபாவளிக்கு வருவதாக இருந்தது. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறைக்கு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்தோம். அப்போது நான் 7 ஆம் வகுப்பு மாணவன்.
Deleteஅதிகாலை, கோவிலுக்குள் ஒவ்வொரு சந்நிதியாய் பூசாரி ஒருவர் வழி காட்ட கும்பிட்டு சாமி தரிசனம் முடிக்க 3 மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது. பசி பொறுக்கமுடியாமல் தேன் மிட்டாயையாவது சாப்பிடலாம் என்று அருகில் இருந்த புத்தக கடைக்கு வந்தவனுக்கு அங்கிருந்த பல புத்தகங்களில் ஆர்ச்சியும் ‘புத்தகமாய்’ அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்த்ததும் சாமி சத்தியமாய் பசி மறந்தே போய்விட்டது.......
இந்த கதையில் வரும் வீரர்களை பார்க்கையில் சாகச வீரர் ரோஜரின் "மர்ம கத்தி"யில் வரும் வீரர்களை போல தெரிகிறது.
அட... சூப்பர்.
Deleteசுவையான மலரும் நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பர்களே.
This comment has been removed by the author.
Deleteஅட்டகாசம் நண்பரே... முருகன் அருள்....தலைப்புக் கூட ஆர்ச்சியிருக்க/யாமிருக்க பயமேன்....நான் படித்தது கோவையில்...எல பரணி தயாராயிரு
Deleteஜெட்...டெலஸ்கோபிக் கரம்.... மார்பில் பீய்ச்சும் காற்று...கோட்டை....வாள்...மலை குடையும் கருவிகள்....கற்பனைகள் எல்லையறியாமல்...பிரம்மாண்ட பயணம் உறுதியே
ReplyDeleteஎத்தனை விதமான பூக்கள்!!!!
Deleteஅத்தனையும் இனிய பூக்கள் ஈவி....பூன்னா வாசம்/வரம்தான் நம்ம நினைவுல நண்பரே
Deleteஆனா சாத்தியமே என தூண்ட வைக்கும் பூக்கும் கூட...யாவரயும் போல படி/றிக்கத் தூண்டுமே
Deleteஇவ்வாண்டு 2020...என்பதுகளின் தமிழறிந்த நண்பர்களின்
ReplyDeleteபொற்கால நாயகர்கள்.... ஒரே கற்பனை உலக ஆச்சரியங்கள் தாங்கிய மூவர் ஆர்ச்சி ஸ்பைடர் மாயாவி தவிர யாருமில்லை சூப்பர் ஹீரோக்களாய் நம்மிடையே அல்லவா... அவர்கள் ஒட்டு மொத்தமாய் நம்மிடையே...நாம ஸ்பைடர் மாயாவியும் பாத்திருப்போம்...ஆர்ச்சியோட பாத்திருப்போமா....மூளைய தூக்கி மனசுல வச்சுட்டு திறந்த மனசோட காத்திருங்க அதிரப் போவுது டொண்டி டொண்டி 1980 போலவே
பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….
ReplyDeleteபொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வல்ல ஆர்ச்சியும் ஆடிடும் மகாலயன போற்றி சொல்லடியோ
வல்ல ஆர்ச்சியும் ஆடிடும் மகாலயன போற்றிசொல்லடியோ
இந்த லயன் என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இந்த லயன் என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் காமிக்ஸ் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
இவள் காமிக்ஸ் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வல்ல ஆர்ச்சியும் ஆடிடும் மகாலயன போற்றி சொல்லடியோ
எம்பால்ய காலம் தொட்டு இன்பம் யாரால
வா னோடு தாண்டி வரும் லயன் விஜனால
ஸ்பைடரோட சேர்ந்த கதை வித்து விடாதா
ஆர்ச்சியோடு செய்தி சொல்ல வித்து விடாதா
தோர்கள் டெக்சு லார்கோ மாயாவி கூட்டம் தான்
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம் தான்
நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வல்ல ஆர்ச்சியும் ஆடிடும் மகாலயன போற்றி சொல்லடியோ
வல்ல ஆர்ச்சியும் ஆடிடும் மகாலயன போற்றிசொல்லடியோ
இந்த லயன் என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இந்த லயன் என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் காமிக்ஸ் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
இவள் காமிக்ஸ் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
பின்றீங்க ஸ்டீலு கவிஞரே!!
Deleteகுறிப்பா,
///இந்த லயன் என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் காமிக்ஸ் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி///
செம செம செம!!
இதுக்காகவே உங்களுக்கு இன்னுமொரு ஸ்பெஷல் இதழ் போடலாமுங்க ஸ்டீல்! ஆனா இந்தவாட்டியாச்சும் படிக்கிறமாதிரியான கதையா இருந்தா கொஞ்சம்போல நல்லாயிருக்கும்!! :D
ஈவி உங்களப் போன்று ஆசப்படுவோர்க்கு ஆசிரியர் என்பது சதவீத இட ஒதுக்கீடு தந்துட்டாரே...உங்களுக்காய் நானும் மான்ஸ்டர கேக்குறேன்
Delete///ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
Deleteஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு///
அடடா.. அடடா.. அடடடடா...
வாவ்..!சூப்பர்...!
Deleteஏன்ன்னே தெரில ...ஆர்டின் வயலின் வாசிக்க கிளம்பற கதையிலே 'கிறி ..முறி.. கிறி முறி 'ன்னு எழுதின நினைப்பாவே இருக்கு நேக்கு !!
Deleteஅது ஒன்னுமில்லீங்க சார்.. நம்ம ஆர்ச்சி ரொம்பநாள் கழிச்சு ஜாகஜம் பண்ணப் போறதால ரொம்பத்தான் பந்தா பண்ணிட்டு வார்ம்-அப் கீர்ம்-அப்புனு பண்ணிகிட்டுகெடக்கு.. அதான் அந்த கிறிமுறி சவுண்டு! லைட்டா எண்ணெய் விட்டா சரியாகிடுவான்!!
Deleteசார் கிரி னா முருகா.... முரி னா முருகா... ஆம் ev எண்ண விட்டு விளக்கு வெச்சா சரியாகிடும்
Deleteகண்ணா...அருமையான கோரஸ்
DeleteGp ஆர்சசி வரட்டும் சூப்பரோ சூப்பர்...
Delete// அது ஒன்னுமில்லீங்க சார்.. நம்ம ஆர்ச்சி ரொம்பநாள் கழிச்சு ஜாகஜம் பண்ணப் போறதால ரொம்பத்தான் பந்தா பண்ணிட்டு வார்ம்-அப் கீர்ம்-அப்புனு பண்ணிகிட்டுகெடக்கு.. அதான் அந்த கிறிமுறி சவுண்டு! லைட்டா எண்ணெய் விட்டா சரியாகிடுவான்!! // EV சத்தியமாக இதெல்லாம் வேற லெவல். 👍
Deleteமிடியல.
ReplyDeleteநம்புங்க முடியும்
Deleteபட்டாம் பூச்சி படலத்தின் அட்டைப்படத்தில் 007 என்ற எண்ணிற்கேற்ப 7 பட்டாம்பூச்சிகளை வடிவமைத்தது எடிட்டரின் கலைநயத்தை பறைசாற்றுகிறது.!😊😊😊
ReplyDeleteஹிஹி..ஹி.ஹிஹி
படிக்க ஏதும் காமிக்ஸ் இல்லாமல் சும்மாவாக காரணத்தால் இருப்பதால், இருப்பதை வைத்து தோண்டித் துருவி ஆராய்ந்தபோது கிடைத்த முடிவு..!😊😊😊
அடெடே...
Deleteஉண்மையைச் சொல்லணும்னா 8 பட்டாம்பூச்சி இருக்குங்க.எண்ணும்போது ஒண்ணு 'மிஸ் 'ஸாயிடுச்சு..!☺☺☺
Delete126th
ReplyDelete//Cid லாரன்ஸ் & டேவிட் காற்றில் கரைந்த கப்பல்கள் புதுசா வந்து இருக்கு புத்தக விழாவில்...
ReplyDeleteஇதுக்கு மேல சொல்ல தெரியல...
Wow.That is one of my favorite
Deleteஇந்த கதையில் கோப்ரா வருவாரா? அ கொ தீ க தலைவர்?
Deleteதலைவர் வருகிறார்...கப்பல்களை கண்டுபிடிக்கும் கதை...விறுவிறுப்பாக இருந்தது..
DeleteGobra காணாமல் போன ௧டல்
Deleteசார், ஒரு விண்ணப்பம்...
ReplyDeleteபுத்தகத் திருவிழாவில் வெளியிடும் புத்தகங்களுக்கு, அங்கே வழங்கப்படும் 10 சதவீதக் கழிவினை ஆன்லைனில் வாங்கும் நண்பர்களுக்கும் வழங்கினால் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ள இயலாத நண்பர்களுக்கும் பயன்படுமே சார்... செய்ய இயலுமா?
சார் ஒரு விண்ணப்பம் நாம் ஏன் ஷெர்லாக் புதிய சீரிஸ் முயற்சிக்க கூடாது? நமக்கு அழகாக இருக்கும். A study in pink மற்ற கதைகளும். Titan books black and white il அருமை. Please give it a thought Sir.
ReplyDelete///நாம் ஏன் ஷெர்லாக் புதிய சீரிஸ் முயற்சிக்க கூடாது///
Deleteஷெர்லக் ஹோம்ஸுக்கு என் முழூ ஆதரவு!
நானும் ஆதரவு
Deleteமினி டெக்ஸ் ஒரே புத்தகமாக சூப்பர் ஆக உள்ளது. ஏற்கனவே படித்து இருந்தாலும் எல்லா புத்தகங்களையும் சேர்த்து ஒன்றாக படிக்க அட்டகாசமாக இருக்கிறது. அடி தூள். அதுவும் அந்த அட்டைப்படம் அருமை அருமை. இதை தனியாகவே ஒரு ஸ்பெஷல் புக் அட்டையாகவே வெளியிட்டு இருக்கலாம்.
ReplyDelete-சில கவிதைகளும் சில சிந்தனைகளும்
ReplyDelete//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
. “வீட்டின் பெயரோ
அன்னை இல்லம்..!
அன்னை இருப்பதோ
முதியோர் இல்லம்..!”
ஸ்மர்ப்ஸ்..... ஏழு முதல் எழுபத்துஏழு வரை என நாம் பெருமை பேசுவோம் ..
இருபத்திஐந்து சதவிகித தள்ளுபடி நிலையில் நாமே கொண்டு போய் நிறுத்துவோம்
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
.. “சர்க்கரை இல்லை...
Deleteகொழுப்பு இல்லை...
எஜமானரோடு
வாக்கிங்
போகுது
ஜிம்மி...!” .
ஜூலியா
கதைகளில் பெரிய குறைகள் இல்லை
குழப்பமான கதைத் தடங்கள் இல்லை
ஆயினும்
இதர இத்தாலி நாயகர்களுடன் வெளிவருகிறாள்
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
. "வேலிக்கு வெளியே
Deleteதலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே...!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்...?"
-- மு. மேத்தா.
இரும்புக்கை மாயாவி
வேண்டாம் இனி என் மறுபதிப்பு என தளத்தில் வெட்டி விட்டார் ஆசிரியர் ...
புத்தக திருவிழாக்களில் வேர்களாய் என் பழம்பெரும் ரசிகர்கள்
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
. . "ஒவ்வொரு முறையும் அவன் அவளை
Deleteபிறந்த வீட்டுக்கு அனுப்பும் போதெல்லாம்
திரும்பவும் அவர்களை
ஒன்று சேர்த்து வைக்கிறது
ஹோட்டல் சாம்பார்!"
-S. செல்வகுமார்
மாடஸ்டி
வேண்டாம் என்றுதான் ஆசிரியர் நினைக்கிறார் ...
வரவழைப்பது முக்கியமாக ஈனஸ்வரத்தில் ஒலிக்கும் ஒரு சில ரசிகர்கள் குரல்கள் பின்னர் சிறியதொரு காரணமாய் காணப்படும் ராயல்டி தொகைகள் ..//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
. . "கோழித்திருடனை
Deleteஜெயில்ல போட்டாங்க...
ஜெயில்ல அவனுக்கு
கோழிக்கறி போட்டாங்க..!"
- ஒப்பிலான்
ஆர்ச்சி
பழசே வேணாம்னு முதல்ல ஒதுக்கி போட்டாங்க
திருப்பி வர்றச்சே ஸ்பெஷல் எடிஷன் போடறாங்க
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
. . "மாங்கல்யத்தின் மகிமையை
Deleteமனைவி அறிவாள் …
மணவாளன் அறிவான் …
அவர்கள் இருவரையும் விட
மார்வாடியே
அதிகம் அறிவான்...!'
-- கவிஞர் தமிழன்பன்
தமிழ் காமிக்ஸின் மகத்துவத்தை
ரசிகர்கள் நன்கு அறிவர்
ஆசிரியர் குழுமம் அறியும்
அதை விட அதிகமாய்
சிவகாசி கிட்டங்கி அறியும்
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
. . " புறாக்கள் வளர்க்கும்
Deleteஎதிர் வீட்டுக்காரர்
என்னிடமிருந்து பறிக்கிறார்
பூனை வளர்க்கும்
சுதந்திரத்தை...."
- நா. முத்துக்குமார்.
ஆர்ச்சியும் மாயாவியும் புறாக்கள் போல நல்லவையே .
அதனால் அவ்விடத்தில்
புது கதைக்கள பூனைகள் இல்லாமல் போவது வருத்தமே .
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
. . "காற்றில் பறந்து
Deleteபறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை !"
ட்யுராங்கோ அடுத்த வருடம் இறுதி ஆல்பத்துடன் விடைபெறுவான்.
அவன் கதைத் தொடரால் அசைக்கப்பட்ட மனங்கள் ஆடிக்கொண்டிருக்கும் .
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
செல்வம் அபிராமி சார் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இன்னும் என்ன தான் சொல்வது அருமை அட்டகாசம் அபாரம் அற்புதம் அழகு. எப்படி உங்களால் இப்படி சிந்திக்க முடிகிறது. ஒரு விசயத்தை இன்னொரு விசயதுடன் மிக அழகாக கோர்க்க முடிகிறது.
Delete// தமிழ் காமிக்ஸின் மகத்துவத்தை
Deleteரசிகர்கள் நன்கு அறிவர்
ஆசிரியர் குழுமம் அறியும்
அதை விட அதிகமாய்
சிவகாசி கிட்டங்கி அறியும் // இவை எல்லாம் வலி தரும் வரிகள்.
// புது கதைக்கள பூனைகள் இல்லாமல் போவது வருத்தமே . // வருத்தமே
Deleteசெம...! செ.அ. சார்...
Delete@ செனாஅனா
Delete'இதுவரை வெளிவந்த உங்கள் சிந்தனைகளிலேயே இதான் பெஸ்ட்' (நன்றி - டெம்ப்ளேட் உதவி - ஸ்டீல்க்ளா)
இந்தக்காலத்தில் படிக்கும் பழக்கமே அரிது!
அதிலும் படித்ததை நினைவில் வைத்திருப்பது அரிதரிது!
நினைவில் வைத்திருப்பதை தகுந்த மேற்கோளோடு வெளிக்கொணருவது அரிதரிதரிது!!
வெளிக்கொணர்வதை இனிமையான வாக்கியங்களாக்கி மற்றவர் ரசிக்க அளிப்பது அரிதரிதரிதரிது!!
இது அத்தனையையும் சாத்தியமாக்கிடும் உங்களைப் போல நண்பர்களை இத்தளத்தில் காண்பது அரிதோ அரிது!!
இதுக்குமேல நான் எழுதினா உங்களுக்கு ஏற்படும் அரிப்போ அரிப்பு!!
This comment has been removed by the author.
Deleteசெ. அனா. சார். அருமை. ஒவ்வொரு ஹீரோவிற்கான, கவிதையும், உங்கள் ஒப்பீடும் அட்டகாசம். அந்த இரும்புக்கை மாயாவிக்கு உள்ள கவிதை, நம் கவிக்கோ-பால்வீதியில் எழுதியது.
Deleteமேலும் 'மாங்கல்யத்தின் மகிமையை' விட
தங்கக்கம்பிகள் குறைந்ததால்,
தலையில் வெள்ளிக்கம்பிகளுடன்;
ஜன்னல் கம்பிகளின் பின்னே;
சம்யுக்தையாகவும் சமைந்த அக்கா ரெடி;
ஆனால் ராஜகுமாரன்.
சற்றே பொறுத்தமாக இருக்குமா..?!
//இதுவரை வெளிவந்த உங்கள் சிந்தனைகளிலேயே இதான் பெஸ்ட்' (நன்றி - டெம்ப்ளேட் உதவி - ஸ்டீல்க்ளா)
Delete//
மெய்யாலுமே நெனச்சேன்... நன்றி... ஈ வி
செனா
செமனா
Selvam abirami sir excellent description and you are linked the puthukavithai with heroes .👌👌👌👌👌👌👏👏👏👏
ReplyDeleteசெனா அனா ஜீ...
ReplyDeleteஅட்டகாஷ் அனைத்தும் ...
செம...செம....:-)
////. மாடஸ்டி
ReplyDeleteவேண்டாம் என்றுதான் ஆசிரியர் நினைக்கிறார் ...
வரவழைப்பது முக்கியமாக ஈனஸ்வரத்தில் ஒலிக்கும் ஒரு சில ரசிகர்கள் குரல்கள் ///
ஈனஸ்வரத்திலா.. 😡😡😡
ஈரோட்டு மீட்டிங்ல, சும்மா சிங்க கர்ஜனையோடு மொத்தம் விழுந்த நாலு வோட்டுல ரெண்டு கையையும் தூக்கி ஓட்டு போட்டேனாக்கும்.. 💪🏽💪🏽💪🏽
////மொத்தம் விழுந்த நாலு வோட்டுல ரெண்டு கையையும் தூக்கி ஓட்டு போட்டேனாக்கும்..///
Deleteஹா ஹா ஹா!! :)))))
///ஆர்ச்சியும் மாயாவியும் புறாக்கள் போல நல்லவையே .///
ReplyDelete///அதனால் அவ்விடத்தில்
புது கதைக்கள்///
///பூனைகள் இல்லாமல் போவது வருத்தமே .///
ஒருமாதத்தில் சராசரி நான்கு அல்லது ஐந்து கதைகள் வரும்பொழுது அதில் ஒன்று மட்டும் எங்களைப்போன்ற அதி தீவிரமாக காமிக்ஸ் வெறியர்களுக்கு வருவது எப்படி தவறாகும். அதையும் கெடுக்க முயல்வது தவறல்லவா?
ஏதோ ஆசிரியரே பெரியமனது பண்ணி பழசை தூசிதட்டியுள்ளார். எங்களது மகிழ்ச்சி நிலைத்தால் நல்லது.
Dear Doctor Sir,
ReplyDeleteசுஜாதா தனது “வசந்த் வசந்த்” நாவலில் அப்துல் ரகுமானின் இதே கவிதை வரிகளை குறிப்பிட்டு எழுதியிருந்தார். தற்போது நீங்கள்; தளத்தின் சுஜாதா என்று உங்களை E.V குறிப்பிட்டது சரிதான்.
கண்ணே!
உன்னை கண்டேன்
உலகை மறந்தேன்!
உன் ‘சிஸ்ட’ரை கண்டேன்
உன்னை மறந்தேன்!
(94 ஆம் ஆண்டு விகடனில் கல்லூரி மாணவர் ஒருவர் எழுதியது.)
ஒன்றை விட ஒன்று ‘better’ ஆகத்தான் தோன்றும். அதை தவிர்ப்பதற்கில்லை தான். இருப்பினும் உங்கள் கருத்து ரசிக்கவும், யோசிக்கவும் வைப்பதாக உள்ளது. Thank you Sir.
// தளத்தின் சுஜாதா // 100 சதம் உண்மை
Delete200 சதம் உண்மை!
Delete// (94 ஆம் ஆண்டு விகடனில் கல்லூரி மாணவர் ஒருவர் எழுதியது.)
Delete//
என்ன ஒரு ஞாபகசக்தி :-)
Editor Sir, திடீர் என்று என் மனதில் ஒரு எண்ணம் ஏற்பட்டது. காமிக்ஸில் பல சாகசங்கள் புரிந்த தாங்கள் இந்த ஒரு விஷயம் மட்டும் இன்னும் செய்யவில்லை. ஏன் நீங்கள் ஒரு காமிக்ஸ்யை 3D’யில் வெளியிட கூடாது? 30 வருடங்களுக்கு முன்பே பல ஆங்கில காமிக்ஸ்கள் 3D’யில், ஒரு கண்ணாடியுடன் வரும்.
ReplyDeleteஇதை படித்ததும் “சரி, வெளியிடலாம்” என்று உங்களுக்கு தோன்றினால் , முதலில் ஸ்பைடரின் " விண்வெளி பிசாசினை" தான் 3D’யில் வண்ணத்தில் வெளியிட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். (அல்லது அத்துடன் மாயாவி யின் ஒற்றைக்கண் மர்மத்தையும் இணைத்து வெளியிடலாம்.)
புது வருட சவாலாக இதை நினைத்து ஒரு முயற்சி செய்தால் அருமையாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.Thank you.
3D க்கு +1
Delete///ஏன் நீங்கள் ஒரு காமிக்ஸ்யை 3D’யில் வெளியிட கூடாது///
Deleteஎடிட்டர் சார்.. எனக்கு ஒரு 5 காப்பிகள் ஆர்டர் ப்ளீஸ்!
///முதலில் ஸ்பைடரின் " விண்வெளி பிசாசினை" தான் 3D’யில் வண்ணத்தில் வெளியிட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்///
எடிட்டர் சார்.. 5 காப்பிகளும் கேன்சல் ப்ளீஸ்!! :)
3D க்கு +1
Delete3D என்பதெல்லாம் அப்டிக்கா உருவகப்படுத்தி ; இப்டிக்கா அச்சிடும் சமாச்சாரமல்ல guys ! அதற்கான தொழில்நுட்பங்களே தனி ! அவை எதுவுமே நம்மிடம் லேது என்பதால் நடைமுறை சாத்தியங்கள் பூஜ்யம் !
DeleteAnd எல்லாவற்றிற்கும் மேலாய் இது போன்ற முயற்சிகளுக்கு படைப்பாளிகளின் சம்மதங்கள் கிட்டுவதன் வாய்ப்பும் பூஜ்யத்துக்குப் பக்கமே என்பதால் இவை கனவுகளாகவே தொடர்ந்திடும் !
எடிட்டர் சார்..
Deleteஎங்களின் எத்தனையோ கனவுகளை நனவாக்கியவர் நீங்கள் என்பதை வரலாறு அறியும்! இந்தத் 3D கனவையும் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது! என்றாவது ஒரு நாள் முன்னட்டையில் "இலவச 3D கண்ணாடியை கடைக்காரரிடம் கேட்டுவாங்குகள்" என்று burst balloonனுக்குள் அச்சிடப்பட்ட வாசகங்களோடு புத்தகம் வெளிவரப்போவது உறுதி!!
இதற்கு பரிட்சார்த்த முயற்சியாக 'இரத்தத்தடம்' இதழின் சிலபல பக்கங்களை சிலபல வருடங்களுக்கு முன்பே semi-3Dயில் (ஹிஹி) நீங்கள் அச்சிட்டதை நாங்கள் அறிவோம்! ஆட்காட்டி விரலால் ஒரு கண்ணை பிதுக்கிக்கொண்டே பார்த்தபோது டைகரின் மூக்கு ப்ரொஜெக்ட் ஆகி 3D மாதிரியே தெரிந்ததே!! (ஹிஹி)
வரும்.. உண்மையான 3D வரும்.. கொண்டு வருவீங்க.. அதுவரை காத்திருப்போம்!
யார் வேணா மீண்டும் வரட்டும். ஆனா குடோனுக்குள்ள பதுங்கி கிடக்காம இருக்கணும்.
ReplyDeleteடெக்ஸ் மெபிஸ்டோ யுமா கதைகளையும்,ஸ்பைடரின் விண்வெளி பிசாசு, இரும்புக்கை மாயாவியின் ஒற்றைக்கண் மர்மம், கொலைகார விலங்கு சீக்கிரம் போடுங்கள் எடி ஜீ லிமிடட் பிரிண்ட்டாக ஹார்ட் பவுண்டில் பிரீமியம் விலையில் போடுங்க .நல்லா பரபரப்பா விற்பனை ஆகும். 2020 இல்லை 2021 இல் எதிர்பார்க்கிறோம்
ReplyDeleteMy children love smurfs verrrrrrrrrrrrrrry much💐 we want mooooooore... 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
ReplyDeleteMy children love smurfs verrrrrrrrrrrrrrry much💐 we want mooooooore... 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
ReplyDeleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!! :)
ReplyDeleteVery Nice And Interesting Post, thank you for sharing
ReplyDeleteInteresting Inspirational Quotes
Quality Excellence Quotes
Powerful World Quotes
Train Hard Gym Quotes
Wiki Dragons Search
Forever Future Quotes
Gain Independent Quotes
Gain Success Quotes
Good Exams Quotes
اقوال ممتازة
Hey, I’m John. I’m a web developer living in 145 Kelley Blvd, Millbrook AL 36054. I am a fan of technology, writing, and web development. You can read my blog with a click on the button above.
ReplyDeletemcafee.com/activate
mcafee.com/activate