நண்பர்களே,
பண்டிகையும் முடிந்து ஆளாளுக்கு ஊர் திரும்பும் படலங்களும் துவங்கியிருக்குமென்று நினைக்கிறேன் ! பட்சணங்களின் கனம் ஒரு பக்கமெனில், நமது 'தீபாவளி மலரையும்' கையோடு எடுத்து வந்திருந்தால் - அதுவொரு கிலோ எடையை ஏற்றியிருக்கும் உங்கள் பைகளுக்கு ! எது எப்படியோ - இதழ்களை புரட்டுவதைத் தாண்டி படிக்கவும் நேரம் எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய நண்பர்களிடம் எனக்கு சில கேள்விகள் உள்ளன !! (மறுபடியுமா ?? என்ற அலறல் கேட்குதோ ??)
1 .கேரட் மீசை க்ளிப்டன் : 2020 ஸ்லாட்டைத் தக்க வைக்க ஆவன செய்துள்ளாரா ? 'விடுமுறையில் கொல்' - கொல்லென்ற சிரிப்புக்கு இடம் தராது போனாலும், did it make for fun reading ?
2 . மர்ம மனிதன் மார்டினினின் - "விசித்திர உலகம் இது !" : உங்களின் மனம்திறந்த ரேட்டிங் என்னவோ ? Unbiased please !
3 கிரிமினாலஜிஸ்ட் ஜூலியா : "ஒரு இல்லத்தின் கதை" : படிக்கத் திணறியதா ? ரசித்ததா ? அல்லது படிக்கவே தோணலியா ?
4 டைலன் டாக் புது பாணி : இது கலரில் வந்திருக்கலாமே ? என்ற ஒன்றிரண்டு ஆதங்கங்கள் கண்ணில்பட்டன ; ஆனால் சுடும் வடைகள் சகலத்துக்கும் இனிப்பு ஜீரா சாத்தியப்படுவதில்லையே ? ஒரிஜினலாகவே இந்த சாகசம் black & white மாத்திரமே எனும் போது வர்ணங்களுக்கு நாமெங்கே போவதோ ? So இது பருப்புவடையாகவே தொடரும் ; இனிப்பு வடையாய் நஹி !
இந்தக் கதைக்கும், டைலன் 2.௦ பாணிக்குமான உங்கள் ரேட்டிங் ப்ளீஸ் ?
மேற்படிக் கேள்விகளின் பின்னணி ஒவ்வொன்றிலும் நமக்கொரு சேதி ஒளிந்திருப்பதாலேயே இவற்றைப் பற்றிக் குறிப்பாய் வினவுகிறேன் ! So பதில்களை நீங்கள் சொல்லுங்கள் ; செய்திகளை நான் வெளிக்கொணர்கிறேன் !!
And நவம்பரின் இதர கதைகள் சார்ந்த அலசல்களும் துவங்கட்டுமே folks ?
அப்புறம் சந்தா 2020 வண்டியானது F1 கார் வேகத்தில் தெறிக்கத் துவங்கியுள்ளது - துவக்க 3 தினங்களுக்கும் !! நம்மாட்களால் உங்கள் வேகங்களுக்கு ஈடு தர இயலவில்லை என்பதே நிஜம் ! ஆன்லைனில் தீபாவளி மலர் ஆர்டர்களுமே rocking என்பதால் ஆபீஸே அதகளம் ! நாளை (செவ்வாய்) பணிகள் வழக்கம் போல் resume ஆகிடும் எனும் போது உங்களின் சந்தா நம்பர்களை மின்னஞ்சல்களில் அனுப்பிடுவார்கள் ! இம்முறை front desk முற்றிலும் புதுசு என்பதால் சற்றே பொறுமை ப்ளீஸ் !! Bye all ! See you around !
1st
ReplyDeleteநான் தான்
ReplyDeleteடைலன் அமர்க்களம்,,,,கிளிப்டன் படித்துக் கொண்டிருக்கிறேன்,,,,பாதிய தாண்டிய நிலையல், ,,,பரவால்ல ஏதோ போகுது,,,,ஈர்ப்பில்லை பெரிதாய்,,, மாற்றாய் ஆக்சனுக்கு ஓரிடம் தரலாமோ எனும் என்னம் ஓங்குது
ReplyDeleteசார் மறுபடி அவசரப்பட்டுட்டேன்,,,,க்ளிப்டன் பின் பாதிதான் கதை சூடு பிடிக்க,,,கொலைகாரனை அகதா துப்புதுலக்குவதும் நம்ம க்ளிப்டன் விழி பிதுங்குவதும், ,,,,மீண்டும் அவன் கொல்லவில்லை என க்ளிப்டனை பிதுக்கி எடுப்பதும் குறுநகை,,,வாகனமும், வண்ணமய லோகமும்,, இயற்கை கொஞ்சும் அந்த மலையும் மீன் தின்னும் பறவையும் விடுமுறையில் ஜில்,,,7மதிப்பெண்கள்
Deleteகிளப்டன் 2020 கட்டாயம் வேண்டும்!
ReplyDeleteஜூலியா - மிகவும் ரசித்து படித்தேன்!
டைலன் - கலரோ கருப்பு வெள்ளையோ - Super கதை! மிகவும் பிடித்த ஹொரோர் கதை களம்(பேய் கதையும் தான்)
1) செய்துள்ளார்...
ReplyDelete2)9/10
3)ரசித்தது.(பொறுமை தேவை)
4)8:8.5
சந்தா நம்பர் மின்னஞ்சல்க்கு காதிருக்கின்றேன்!
ReplyDeleteமார்டின்...
ReplyDeleteம்யூட்டண்ட்ஸ்....
விநோதப் பிறவிகள்.
அந்த எக்ஸ்ட்ராஸம் பவர்ஸ் இவங்களுக்கு மட்டும் எப்படின்னு - நமது காமிக்ஸ் மண்ணின் மாமேதை செ அ விளங்குவார்கள்.
குரோமோசோம் உட்கன்டன்ட்ஸால மட்டும் டிஎன்ஏ வும் ஆர்என்ஏ வும் வித்தியாசமான குணாதிசயங்கள தரமுடியுமா...
அதுசரி மொத மியூடண்ட் கல்கத்தால பறக்குறாரு.
அந்த மொட்டை தலை மியூடண்ட்டுக்கு டேமேஜானதெல்லாம் தானா புதுப்பிச்சிக்கிது...(நமக்கு அந்த பவர் இருந்தா முக்கிய!யமானத புதுப்பிச்சிக்கலாம் ஹிஹ்ஹி)
இன்னொரு மண்டவீங்கி மியூடண்ட்டோ உக்காந்த எடத்துல இருந்தே இன்னோர்த்தரோட எண்ணங்களை இயக்குவார்.
டோக்கியோ ஜப்பானிய பெண் மியூடண்ட்டோ எண்ணங்களால் ரோபோக்கள இயக்குறார்...
தொடரும்
ஜான் மெட்ரிக்...
Deleteஇவரது சக்தி வித்தியாசமானது.
மென் இன் ப்ளாக் காக நாடகமாடும் இன்னொரு ம்யூடண்ட்டின் எண்ணங்களுக்குள் ஊடுருவுவதன் மூலம் இந்த மண்டைவீங்கி மியூடண்ட் அந்த வில்லனை மண்டைவீங்க வைத்து உப்பி வெடித்து சாகடித்து விடுகிறார்.
இது ஹிப்னாடிஸமா. மாறாக மெஸ்மரிஸமா....
ஹிப்னாடிஸம் - எண்ணங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆக்ரமித்து நமது எல்லைக்குள் அடைத்தல்.
Deleteமெஸ்மரிஸமோ கொஞ்சம் வித்தியாசமானது.
" யத் பாவம்:தத்பவதி:"
எதுவாக நினைக்கிறோமோ அதுவாக ஆகிவிடுவது.
நம்ம முன்னோர்கள் வாக்கு இது.
அப்பிரம்மங்களாகிய மானிடர்கள் சுகபிரம்மங்களாக மாறிவிடலாம்.ஆனால் பரபிரம்மமாக மாறுவதற்கு யத்பாவமான மனோபாவம் தத்பாவமாக மாறவேண்டும்.
இது எப்படி?
Deleteஞாநீ - அவர் பெரிய ஞாநீ யென்றால்
அனைத்தையும் சமமாக பாவிப்பவர் என்றர்த்தம்.
ஞான்(நான்) நீயாக இருந்தால் ஞாநீ.
அவனைப் போல் நான் இல்லயே.அவளைப்போல ஆக நம்மால் முடியலயே என்ற எண்ணமே நம்மை வேறுபடுத்தி விடும்.
அட்டாச்மெண்ட்ஸான எண்ணங்கள் - நான் ,எனது என்ற உன்மத்தங்களை வளர்க்கும்.எப்பொழுது நாம் என்கிறோமோ அதுதான் விடுதலையின் முதல்படி.
சொல்,செயல் இறந்தால் - அமைதி
அமைதி இறந்தால் - மௌனம்.
மௌனம் இறந்தால் - தியானம்
தியானம் இறந்தால் - யோகம்
யோகம் இறந்தால் - ஞானம்
ஞானம் இறந்தால் - பிரம்மம்
இப்ப ஜான் மெரிக் என்ன செய்றார்.
ஹிப்னாடிஸமா...
மெஸ்மரிஸமா...
உங்க முடிவுக்கே விட்டு விடுகிறேன்...
ஆனா பாருங்க.
ஜான் மெரிக்கையே அந்த வில்ல மியூடண்ட் தாட் ரீடிங் பண்ணுன ஆளாக்கும்..
மார்டின் - வித்தியாசம் - 9/10
Deleteமுதல் முறையாக ஒரே மாதத்தில் 12 பதிவு
ReplyDelete😲😲😲😲😲
Delete1. கிளிப்டன் இன்னொரு இடம் அடுத்த வருடம் கண்டிப்பாக அட்டகாசம் இந்த முறை
ReplyDelete2. மார்டின் டிரேட் மார்க் இந்த முறை மிஸ்ஸிங்.
ReplyDelete3. ஜூலியா அருமை இந்த முறை மிக அருமை
4. என்னை பொறுத்த வரை இந்த மாத ஹிட் கண்டிப்பாக dylon dog தான். அருமை. I love this
ReplyDelete1. double ok
ReplyDelete2.okok
3.படிக்கவே இல்ல
4.okok
+1
Delete// அப்புறம் சந்தா 2020 வண்டியானது F1 கார் வேகத்தில் தெறிக்கத் துவங்கியுள்ளது - துவக்க 3 தினங்களுக்கும் !! //
ReplyDeleteசெம்ம செய்தி சார் 👍🏼🙏🏼
.
5. சந்தா நம்பர் க்காக வெயிட்டிங். பொறுமையாக காத்து இருக்கிறேன் சார்.
ReplyDeleteஇந்த மாதம் இந்த இதழ்களை எங்கள் கையில் ஒப்படைக்க நீங்கள் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறீர்கள். Job well done sir.
மாலை வணக்கம் சார்!🙏
ReplyDeleteவிடுமுறை முடிந்து
நாளைதான் புத்தகங்கள் புரட்டி பார்க்க இயலும்!
ஓரிரு நாளில் தங்களது கேள்விகள் கவனிக்கப்படும்!
டைலன் - கருப்பு வெள்ளை ஆனாலும் பரவாயில்லை! பக்கா கதை பேய் கதையா வேணும்,விஜயன் சார்!
ReplyDeleteமார்ட்டின் - mutants வெர்சஸ் MIB வெர்சஸ் மார்ட்டின்!
எக்ஸ் மென் பர்ஸ்ட் கிளாஸ் பட சாயலில்! இறுதியில் மனிதர்களின் உலகத்தில் மியுடன்ட்ஸ்க்கு இடம் இல்லை என்று முடிவது யதார்த்தம் என தோன்றியது!
மெய்யாகவே ரசிக்க முடிந்ததா சார் ?
Deleteஆமாம் சார்!என் முதல் மார்ட்டின் கதை சரித்திரத்தை சாகடிப்போம்- அதிலர்ந்து இப்பவரை மார்ட்டின் எப்போதும் என் பிடித்தமான ஹீரோ!(கார்ட்டூன் தொடரில் பார்த்த மார்ட்டின் இவர் இல்லை என்ற போதும்!) லாஜிக் (இருந்தாலும் )இல்லாவிட்டாலும் மிஸ்ட்ரி! பதில் இருந்தால் அது புதிர் இல்லையே!
Deleteவந்தாச்சுங்கோ.
ReplyDelete// எது எப்படியோ - இதழ்களை புரட்டுவதைத் தாண்டி படிக்கவும் நேரம் எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய நண்பர்களிடம் எனக்கு சில கேள்விகள் உள்ளன //
ReplyDeleteபட்சனம் செய்து பட்சனமாயிருக்கும் எங்களுக்கு நாளை முதல்தான் படிக்க நேரம் கிடைக்குமென்பதால்
சாரி சார் 🙏🏼
.
அதனாலென்ன சார் ? வயிற்றுப்பாடு முக்கியமன்றோ ? நம்ம பாட்டுக்கு முறுக்கு பிழிய மறுத்தால் அப்பாலிக்கா சோற்றுக்கே சிக்கலாகிடக் கூடுமல்லவா ?
Delete///சந்தா 2020 வண்டியானது F1 கார் வேகத்தில் தெறிக்கத் துவங்கியுள்ளது///----அற்புதமான நியூஸ்!
ReplyDeleteஅயர்டன் சென்னா மாதிரி பறக்கலனாலும் ஒரு மைக்கேல் சூமாக்கர் மாதிரி தெறிக்க விட்டீங்க சூப்பர் அட்டவணை வாயிலாக...!!!!
அவர் பாவம் கோமாவில் கிடந்து ; இப்போது சக்கர நாற்காலியில் காலத்தைக் கிடத்தி வருகிறார் சார் !
Deleteசூமாக்கர்ட்ட இருந்து அவரோட பாஸிடிவ்ஸ் மட்டும் எடுத்து கொள்வோம் சார்.,
Deleteஅவர்,ஹைஸ்பீடு ட்ராக் கார்னர்கள்ல 7வது கியர்ல(F1கார்களில் ரிவர்ஸ் கியர் கிடையாது; 300கி.மீ.தாண்டும் 7வது கியர் உண்டு பிரண்ட்ஸ்) லயே ஸ்பீடு குறைக்காம சிக்கென்ஸ்ல போயி போயி வித்தை காட்டி 9சேம்பியன்ஷிப் அடிச்சி இருக்கார்(கூடவே சென்னாவை சேஸிங் பண்ணி சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்ந்தும்)
அவரோட நெளிவு சுளிவுகளை தங்களோட பட்ஜட், வெரைட்டி, ஆல்மோஸ்ட் ஆல் ஹீரோஸ் உள்ளடக்கிய சூப்பர் தமாக்க அட்டவணையில் காண முடிகிறது சார்.
இப்ப தங்களது பயணமும் அதே நெளிவு சுழிவகளோடு ரெக்கை கட்டுது...
ட்ராக்குக்கு சூமாக்கர்;
காமிக்ஸக்கு விஜயன் சார்!
அப்புறம் சந்தா 2020 வண்டியானது F1 கார் வேகத்தில் தெறிக்கத் துவங்கியுள்ளது - துவக்க 3 தினங்களுக்கும் !! //
ReplyDeleteஎல்லாப் புகழும் அட்டகாசமான அட்டவணை திட்டமிடலுக்கே..
அட,புதிய பதிவு...
ReplyDeleteகேரட் மீசை க்ளிப்டன் : 2020 ஸ்லாட்டைத் தக்க வைக்க ஆவன செய்துள்ளாரா ? 'விடுமுறையில் கொல்' - கொல்லென்ற சிரிப்புக்கு இடம் தராது போனாலும், did it make for fun reading ?//
ReplyDeleteமோசமில்லை ரகம்.. கெக்கேபிக்கேன்னு இல்லையெனினும் கதை நெடுகவுமே உதட்டில் புன்சிரிப்பு கேரண்டி..
மர்ம மனிதன் மார்டினினின் - "விசித்திர உலகம் இது !" : உங்களின் மனம்திறந்த ரேட்டிங் என்னவோ ? Unbiased please !///
ReplyDeleteவழக்கமான மார்ட்டின் பாணி குழப்பம் இல்லை, ஆனாலும் அந்த கடைசி நேர ட்விஸ்ட் திகைக்க வைக்க கூடிய ரகமில்லை.. 8/10
கிரிமினாலஜிஸ்ட் ஜூலியா : "ஒரு இல்லத்தின் கதை" : படிக்கத் திணறியதா ? ரசித்ததா ? அல்லது படிக்கவே தோணலியா ?//
ReplyDeleteஇன்னும் படிக்கலை..
படிக்க நேரம் நஹி ? Or ஆர்வம் நஹி ?
Deleteக்ளிப்டன் பாஸ்தான் சார்,விடுமுறையில் கொல் படிக்கவும் ஓகேதான்,சிரிக்கவும் ஓகேதான்.....
ReplyDeleteமற்ற இதழ்களை இனிதான் வாசிக்க வேண்டும்,பண்டிகை தின கவனிப்புகள்,நண்பர்களுடன் மொக்கை என பொழுது ஓடி விட்டது...
விடுமுறையில் கொல்லென்று சிரிக்கத் தானே நண்பர் பட்டாளம் ! ஜமாயுங்கள் சார் !
Deleteஇந்தக் கதைக்கும், டைலன் 2.௦ பாணிக்குமான உங்கள் ரேட்டிங் ப்ளீஸ் ?//
ReplyDeleteடைலான் 2.0 எதுன்னு புரியலை.. இந்த கதையுமே வழக்கமான டைலான் பாணியிலேயே இருந்தா மாதிரி ஒரு பீலிங்..
அதே தான் எனக்கும்.
Deleteகதை பாணி ; சித்திர பாணி ; கதாநாயகரையும் அந்த மொக்கை போடும் அல்லக்கை அஸிஸ்டன்டையும் கையாளும் பாணி - என சகலத்திலும் மாற்றம் இருக்கும்.
Deleteதீபாவளி மலர் நிறைவான மலர்!
ReplyDeleteகமர்ஷியல் ஹிட் டெக்ஸ் வில்லர்!
திகில் ஸ்பெசல் டைலன்!
மிஸ்ட்ரி மாஸ்டர் மார்ட்டின் மிஸ்ட்ரி!
யதார்த்தமான துப்பறியும் கதைகளின் ராபின்!
மனிதர்களின் உணர்ச்சிகளில் மையம் கொள்ளும் துப்பறியும் ஜூலியா!
ஒவ்வொன்றும் தனி ரகம்! 100/100.
///தீபாவளி மலர் நிறைவான மலர்!////
Delete///ஒவ்வொன்றும் தனி ரகம்! 100/100.////
மகிழ்ச்சியான செய்தி!
கிர்பியை கொண்டுவந்ததிற்கு நன்றி!
ReplyDeleteகாரிகனும் கொண்டுவர ஏதாவது செய்யுங்கள்.
ப்ளுகோட்டடு பட்டாளம் எனக்கு சரிபடுவதில்லை
விலையில்லா இதழ்கள் மூன்று சந்தா கட்டினாலும் உண்டா?
கிடையாதென்று உங்களின் இதே பின்னூட்டத்துக்கு ஏற்கனவே பதில் தந்து விட்டேனே சார் ? விலையில்லா இதழ்கள் YELLOW (ALL-IN) சந்தாவுக்கு மட்டுமே !
Deleteநாளைதான் படிக்க வேண்டும்.. 🙏🏼🙏🏼🙏🏼
ReplyDelete///சந்தா 2020 வண்டியானது F1 கார் வேகத்தில் தெறிக்கத் துவங்கியுள்ளது///
அருமை... 🙏🏼🙏🏼🙏🏼
ஆல் இன் ஆல் வண்டியில் இடம் போட்டாச்சு.
ReplyDeleteசூப்பர் நானும் + ஜம்போ
Deleteவணக்கமுங்கோ
ReplyDeleteஇம்முறை டைலன்& ஜூலியா இருவருமே நிறைவை தந்தது அருமை மேலும் இவர்களின் அடுத்த சாகசத்தை காண ஆசை
ReplyDeleteடைலன் டாக்..!
ReplyDeleteரெம்ப திருப்தியான கதை சார்.முதல் பக்கத்திலேயே வேகம் பிடிக்கும் கதை க்ளைமாக்ஸ் வரைக்கும் சிறிதும் நொண்டியடிக்காமல் போகிறது.கொஞ்சம் திகில் கொஞ்சம் அமானுஷ்யம் நிறைய சஸ்பென்ஸ் என கலந்து கட்டி ஆளை கட்டிப் போடுகிறது.அதிலும் அஅந்த க்ளைமாக்ஸ் திருப்பம், திரும்ப கதையை படிக்க வைத்துவிட்டது.
மேற்கொண்டு கதையைக் கிளறினால் சஸ்பென்ஸும், கூட என் மண்டையும் உடையும் அபாயத்திலிருப்பதால், இப்போதைக்கு மூச்..!
டைலன் டாக் கதையில் ஒரேயொரு குறை.அதை குறையென்று சொல்ல முடியாது கொஞ்சூண்டு அதிகம்னு சொல்லலாம்.
Deleteஅந்தி மண்டலத்தை தவிர மீதி கதைகளில் எல்லாம் ஏகப்பட்ட இரத்தம் அநியாயத்துக்கு தெறிக்கிறது.
எங்கே.. பட்டுத் தெறிக்கும் இரத்தம் நம்ம மேல பட்டுவிட்டதோ 'னு அப்பப்ப பார்க்கிறமாதிரி இருக்கு சார்..!
இது ஒரு மனக்குறைதான்.மத்தபடி டைலன் என்னோட பேவரைட்தான்.
மகிழ்ச்சியான செய்தி!
Deleteலயன் தீபாவளிமலர் ஐந்து கதைகள் முதல் கதை டெக்ஸின் சர்க்கஸ் சாகஸம், வழக்கமான டெக்ஸ், சகலகலாவில்லன்களின் திட்டத்தை டெக்ஸ் ஊடுருவி வில்லன்களை அழித்தல், சர்க்கஸ் பின்ண்ணியில் டெக்ஸ், டைலன்டாக் விசித்திர சங்கதிகளை துப்பறியும் சைகோ கில்லர் கதை இதனை கருப்பு வெள்ளையில் வெளியிட்டதற்கு எடிட்டருக்கு நன்றி . கலரில் இந்த இரத்த சகதியை படிப்பது நெருடலாகியிருக்கும். சைகோ கில்லரை ஒரு கவிஞன் மாதிரி மேற்குலகம் சித்தரிப்பதின் பின்னே உலக போலீஸாய் இருப்பதில் அவர்களுக்குள்ள குற்ற மனது, தங்கள் வலிமையால் மனித இனத்திற்கு சொந்தமான வளங்களை சிறுபகுதியினரான தாங்கள் கையாளும் ஆதிக்க மனதின் எதிர்நிலையா? கதை 3 உலகின் மாயங்களின் கற்பனையில் உலாவும் மர்ம மனிதன் மார்ட்டின், இதில் பின்னணியில காமிக்ஸ் மற்றும் சினிமாவில் வெற்றி பெற்ற x men vs men in black மரம பனிதன் மார்டினின் படைப்பாளிக்கு men in black மேல் என்ன கோபமோ அவர்களை தொடர்ந்து இக்கதை தொடரில் வில்லனாக சித்தரிக்கிறார் .வித்தியாசமான கற்பனை.கதை 4 சிஐடி ராபினின் கொலை கொலையா முந்திரிக்கா விறுவிறுப்பான குற்றப்புலனாய்வு கதை. பரபரவென நகரும் சம்பவ கோர்வைகள் , முடிச்சுகள் அவிழுவது அபாரமான கதை . கதை 5.கிரிமினாலஜிஸ்ட் ஜூலியாவின் ஒரு இல்லத்தின் கதை. தொகுப்பில் முதல் தரமான கதை. கிட்டத்தட்ட இலக்கிய படைப்பை நெருங்கும் க் ரைம் கதை. வித்தியாசமான ஒரு எழுத்தாளரின. ரிஷி மூலத்தில் நடைபெறும் குற்றச்செயலை வெளிக்கொணரும் கதை. இதில் அந்த எழுத்தாளர் , அவர் பாத்திரம் மற்றும் படைப்புகள் விவரிக்கப்பட்டிருக்கும் விதம் அபாரம் . கவித்துவம் தோய்ந்த கதை. இவ்விதமான கதைகளின் தேர்வுக்கு இந்த சிறிய வாசக வட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இம்முயற்சிகள் முலம் எடிட்டர் ஒரு காமிக்ஸ் விற்பனையாளர் என்ற நிலையிலிருந்து மகாத்தான வாசகர்,படைப்பாளி என்ற நிலைக்கு உயர்கிறார்.
ReplyDeleteலயன் தீபாவளிமலர் ஐந்து கதைகள் முதல் கதை டெக்ஸின் சர்க்கஸ் சாகஸம், வழக்கமான டெக்ஸ், சகலகலாவில்லன்களின் திட்டத்தை டெக்ஸ் ஊடுருவி வில்லன்களை அழித்தல், சர்க்கஸ் பின்ண்ணியில் டெக்ஸ், டைலன்டாக் விசித்திர சங்கதிகளை துப்பறியும் சைகோ கில்லர் கதை இதனை கருப்பு வெள்ளையில் வெளியிட்டதற்கு எடிட்டருக்கு நன்றி . கலரில் இந்த இரத்த சகதியை படிப்பது நெருடலாகியிருக்கும். சைகோ கில்லரை ஒரு கவிஞன் மாதிரி மேற்குலகம் சித்தரிப்பதின் பின்னே உலக போலீஸாய் இருப்பதில் அவர்களுக்குள்ள குற்ற மனது, தங்கள் வலிமையால் மனித இனத்திற்கு சொந்தமான வளங்களை சிறுபகுதியினரான தாங்கள் கையாளும் ஆதிக்க மனதின் எதிர்நிலையா? கதை 3 உலகின் மாயங்களின் கற்பனையில் உலாவும் மர்ம மனிதன் மார்ட்டின், இதில் பின்னணியில காமிக்ஸ் மற்றும் சினிமாவில் வெற்றி பெற்ற x men vs men in black மரம பனிதன் மார்டினின் படைப்பாளிக்கு men in black மேல் என்ன கோபமோ அவர்களை தொடர்ந்து இக்கதை தொடரில் வில்லனாக சித்தரிக்கிறார் .வித்தியாசமான கற்பனை.கதை 4 சிஐடி ராபினின் கொலை கொலையா முந்திரிக்கா விறுவிறுப்பான குற்றப்புலனாய்வு கதை. பரபரவென நகரும் சம்பவ கோர்வைகள் , முடிச்சுகள் அவிழுவது அபாரமான கதை . கதை 5.கிரிமினாலஜிஸ்ட் ஜூலியாவின் ஒரு இல்லத்தின் கதை. தொகுப்பில் முதல் தரமான கதை. கிட்டத்தட்ட இலக்கிய படைப்பை நெருங்கும் க் ரைம் கதை. வித்தியாசமான ஒரு எழுத்தாளரின. ரிஷி மூலத்தில் நடைபெறும் குற்றச்செயலை வெளிக்கொணரும் கதை. இதில் அந்த எழுத்தாளர் , அவர் பாத்திரம் மற்றும் படைப்புகள் விவரிக்கப்பட்டிருக்கும் விதம் அபாரம் . கவித்துவம் தோய்ந்த கதை. இவ்விதமான கதைகளின் தேர்வுக்கு இந்த சிறிய வாசக வட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இம்முயற்சிகள் முலம் எடிட்டர் ஒரு காமிக்ஸ் விற்பனையாளர் என்ற நிலையிலிருந்து மகாத்தான வாசகர்,படைப்பாளி என்ற நிலைக்கு உயர்கிறார்.
ReplyDelete///இவ்விதமான கதைகளின் தேர்வுக்கு இந்த சிறிய வாசக வட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இம்முயற்சிகள் முலம் எடிட்டர் ஒரு காமிக்ஸ் விற்பனையாளர் என்ற நிலையிலிருந்து மகாத்தான வாசகர்,படைப்பாளி என்ற நிலைக்கு உயர்கிறார்.///
Deleteமகிழ்ச்சியான செய்தி!
அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள் சார் !
Deleteஜூலியா மாதிரியான கதைகளை தனித்து வழங்காது இது போன்ற கூட்டணிகளில் இணைப்பதே அந்த நாயகிக்கு ஒருவித அரண் போல ! இந்த வித்தியாசமான கதை சொல்லும் முயற்சியானது சகல தரப்பு வாசகர்களுக்கும் பிடித்தம் கொண்டதாய் இருக்குமா ? என்பது சந்தேகமெனும் போது இதனை ஒரு solo இதழாய் வெளியிடுவது ரிஸ்க் அல்லவா ? சிறுகச் சிறுக சாதித்துக் காட்டினால் பின்னாட்களில் தனியாய்க் களமிறங்கும் வாய்ப்பை வழங்கிட இயலக்கூடும் !
டியர் எடிட்டர்
ReplyDeleteஷெல்டன் கதை நன்றாக இருந்தது - கடைசி பக்கத் திருப்பம் எதிர்பாராதது. கதையைப் படிக்கும் வாசகர்கள் சில திருப்பங்களை யோசித்து வைத்திருந்தாலும் அவற்றை கடைசீ பக்க திருப்பம் விஞ்சி விடுகிறது.
கிளிப்டன் - ஒரு புன்முறுவல் - சிலவிடங்களில் மிக்க நன்று. 2020 ஸ்லாட்டை தக்க வைக்கிறார் - definitely. ஆனாலும் கிளிப்டனில் சில டப்ஸா கதைகள் உண்டு - அவற்றை தொடாதீர்கள்.
இன்னும் தீபாவளி மலர் ஆரம்பிக்கவில்லை - ஒரு ரெண்டு வாரம் catalog மேய்ந்துவிட்டு ஆரம்பிக்கலாமென்றிருக்கிறேன் :-)
--x --x --
ஜம்போ 3-உடன் சேர்ந்து மொத்தம் 2020ல் 52 புக்குகள் - மற்றும் இளம் டைகருடன் சேர்த்து 53 புக்குகள் என்றாகிறது - அதில் டைகர் குண்டு வரும் மாதம் அஃதொன்றே என்பீர்கள். எனவே இன்னும் 3 புத்தகங்கள் சேர்த்தால் 11 மாதங்களுக்கு தலா 5 புத்தகங்கள் வருமே :-) செய்வீர்களா .. செய்வீர்களா :-D
ராக் ஜி@ 53+4 மினி ஃப்ரீ டெக்ஸ்=57; நீங்க கேட்டு உள்ள 3ம் சேர்த்து கொண்டா 60.
Delete5x12 ஆகிடும். டக்கர் யோசனை! புதிய சரித்திரம்.
///கிளிப்டன் - ஒரு புன்முறுவல் - சிலவிடங்களில் மிக்க நன்று. 2020 ஸ்லாட்டை தக்க வைக்கிறார் - definitely. ///
Deleteமகிழ்ச்சியான செய்தி!
//
ReplyDelete1 .கேரட் மீசை க்ளிப்டன் : 2020 ஸ்லாட்டைத் தக்க வைக்க ஆவன செய்துள்ளாரா ? 'விடுமுறையில் கொல்' - கொல்லென்ற சிரிப்புக்கு இடம் தராது போனாலும், did it make for fun reading ? //
இவர் என்னை வழக்கத்தை விட இந்த முறை ரொம்பவே சிரிக்க வைத்தார். அடுத்த வருடம் இவர் கண்டிப்பாக வேண்டும். இல்லை என்றால் பெங்களூர் மற்றும் தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் ஆட்கள் சிவகாசிக்கு உருட்டு கட்டையோடு வந்து சப்பாத்தி செய்து சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிப்பார்கள் என அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
///பெங்களூர் மற்றும் தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் ஆட்கள் சிவகாசிக்கு உருட்டு கட்டையோடு வந்து சப்பாத்தி செய்து சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிப்பார்கள் என அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.///
Deleteருசியான செய்தி!
This comment has been removed by the author.
ReplyDelete57th
ReplyDelete1 .கேரட் மீசை க்ளிப்டன் : 2020 ஸ்லாட்டைத் தக்க வைக்க ஆவன செய்துள்ளாரா ?
ReplyDeleteYes ...
2. மர்ம மனிதன் மார்டின் ..
can give 2 slots in 2020 ..
3. டைலன் டாக்
double album in B&W in 2020 sir ..
4.கிரிமினாலஜிஸ்ட் ஜூலியா .. இன்னும் படிக்கல sir ..
துரோகமே துணை:
ReplyDeleteமாபியா கேங்கின் பெரும்புள்ளியும் ஓய்வு பெற்றதொரு நபருமான டான் சிசாரியோ மெலஃபார்டே எனும் நபடரிமிருந்து ஒரு முக்கியமான பணி நம் நாயகர் ஷெல்டனுக்கு தரப்படுகிறது....
அப்பணி டானின் ஆலோசகர் ஜேகப் மார்சினியின் சிபாரிசால் தரப்படுவதாக சொல்லப்படுகிறது....
தனது சகோதரன் டான் விட்டாலே மகள் டோமினிகாவுக்கு பிறந்து 40 வருடங்களுக்கு முன் காணாமல் போன லூயிஸாவை கண்டுபிடித்து கொடுக்கும் பெறும் பொறுப்பு ஒப்படைக்கப்பட....
ஷெல்டன் தனது காதலி ஹானஸ்டி குட்னஸுடன் களத்தில் இறங்க,புலனாய்வில் டான் விட்டாலேவின் மகனும் டோமினிகாவின் சகோதரனுமான சில்வஸ்ட்ரோ மர்மமான முறையில் காணபோனது தெரியவருகிறது....
புலனாய்வினிடையே ஷெல்டனின் நண்பரும் காவல்துறையின் முதன்மைக் கமிஷனருமான சார்லியை சந்திக்கும் வாய்ப்புகிட்ட,சார்லியின் உதவியுடன் சில்வஸ்ட்ரோ வழக்கை கையாண்ட பெண் அதிகாரி மூலம் சில தகவல்களை அறிகின்றனர்....
அதில் ஷெல்டனின் காதலி ஹானஸ்டியும்,டோமினிகாவின் மகள் லூயிஸாவும் பிறந்த இடம்,நாள் ஒன்று என தெரிய கதை சூடுபிடிக்கிறது....
அடுத்தடுத்த திருப்பங்களில் டானின் ஆலோசகர் மார்சினி ஷெல்டனின் வழியில் குறுக்கிட ...
மார்சினியின் திட்டம் என்ன?
லூயிஸா கண்டுபிடிக்கப்பட்டாளா?
டானின் திரளான பெரும்செல்வம் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது என சிலபல திருப்பங்களுடன் தடதடக்கும் கதை நிறைவுறுகிறது.....
தொடக்கத்தில் சாதாரணமாக பயணிக்கும் கதை போகப்போக சிலபல திருப்பங்களுடனும்,பரபரப்புகளுடனும் செல்கிறது.....
சிறப்பான ஓவியங்கள் மற்றும் வர்ணங்கள்.....
மீண்டும் ஷெல்டனின் அடுத்த வருகைக்காக ஆவலுடன்....
எமது ரேட்டிங்-10/10.
விடுமுறையில் கொல்:
ReplyDeleteதுப்பறிவாளர் செயல்பாடுகளை பற்றிய குறிப்பு எடுக்க வேண்டி கர்னலை அணுகும் அகதா பாட்டியும்,கர்னலும் அலெக் சிங்க்ளைர் எனும் பணக்கார கனவானின் அழைப்பை ஏற்று விருந்தினராக தங்க நேரிடுகிறது...
இதற்கிடையே அம்மாளிகையில் நடக்கும் களேபரங்களும்,காமெடி கூத்துக்களும், கர்னலின் புலனாய்வும்,அகதா பாட்டியின் காமெடி குறிப்புமாய் கதை நம்மை சுவராஸ்யமாய் நகர்த்திச் செல்கிறது...
பாட்டிம்மா கர்னலை ஆங்காங்கே வாருவது காமெடிக்கு உத்திரவாதமளிக்கிறது,ஆங்காங்கெ கர்னல் அசடு வழிவதும் ஹி,ஹி ரகம்....
வழக்கம் போல் முடிவு சுபம்...
ஒரு சந்தேகம்,
இடக்கை பழக்கமுடைய ப்ரையன் ஏன் வலக்கையால் தற்கொலை முயற்சியை மேற்கொள்ள வேண்டும்?
எமது ரேட்டிங்-9/10.
Delete//
ஒரு சந்தேகம்,
இடக்கை பழக்கமுடைய ப்ரையன் ஏன் வலக்கையால் தற்கொலை முயற்சியை மேற்கொள்ள வேண்டும்?//
** வார்னிங் ஸ்பாய்லர்***""
ஸ்டீபன் மேல் பழியை போட!!!
ப்ரையனின் உள்ளுணர்வு ஸ்டீபன் மேல் குற்றம் ஏதும் இல்லை என கூறினாலும் சகோதரனின் இழப்பு அர்த்தமின்றி ஸ்டீபனை தண்டிக்க விரும்புகிறது..
இடதுகை பழக்கமுடைய ப்ரையன் வலது கையினால் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டால் ஸ்டீபன் ப்ரையனை சுட்டு கொன்றுவிட்டு அவசரத்தில் அவன் இடது கை பழக்கமுடையவன் என்பதை மறந்து ஸ்டீபன் ப்ரையனின் வலது கையில் கொலை செய்ய உபயோகிக்கப்பட்ட துப்பாக்கியை திணித்து விட்டதாக போலிஸ் எண்ணி ஸ்டீபன் மேல் கொலைக்குற்ற வழக்கு பதிவு செய்வார்கள் என ப்ரையன் எண்ணுகிறான்..
////////////////////////
அது போல துப்பறிவாளர்களை பகடி செய்யும் இக்கதை, ,,இடது கையாளர்கள் இப்படி செய்தால் எப்படியிருக்கும் என கேலி செய்கிறது,,,கேள்வியும் எழுப்புது
Deleteசரியான விளக்கம் செனா அனா ஜி.....
Deleteஅதே நேரத்தில் ப்ரையனின் முரண்பட்ட அச்செயல்தான் ப்ரையனை காப்பாற்றுகிறது.....
விஜயன் சார்..i
ReplyDeleteதீபாவளி மலருக்கு வாழ்த்துக்கள்.'i
சென்னையில் தீபாவளி - அதனால் தீபாவளி மலரை புரட்டிப் பார்த்து & ரசித்ததோடு சரி - ஷெல்டனும் - கர்னல் கிளிப்டனும்தான் கையோடு கொண்டு வந்தேன்.
ஷெல்டன் மட்டுமே vடிக்க முடிந்தது. பரபரப்பான ஆக்ஷனை எதிர்பார்த்து - எங்க இது ஒரு துப்பறியும் கதையாக - எல்லாம் அத ன தன் இடத்தில் வந்து விழுந்து விடுகிறது.ஷெல்டனுக்கு என்ன வேலையோ.? i-ஷெல்டன் என்னை வசீகரிக்க வே இல்லை - வரலாறும் _ வல்லூறும் தவிர.
அடுத்த வாரத்தில் தீபாவளி மலரை கரைத்து குடிக்க ஊருக்கு விரைந்து கொண்டிருக்கிறேன்.
//பரபரப்பான ஆக்ஷனை எதிர்பார்த்து - எங்க இது ஒரு துப்பறியும் கதையாக - எல்லாம் அத ன தன் இடத்தில் வந்து விழுந்து விடுகிறது.//
Deleteஎதுவுமே தானாய் அதன் இடத்தினில் விழவில்லை நண்பரே ; ஒன்றுக்கொன்று தொடர்புள்ள நிகழ்வுகள் ! ஒரு trigger தொடர் நிகழ்வாய் மற்றவற்றை தூண்டி விடுகின்றன ! கதாசிரியரி ஆற்றலால் எல்லாமே சுலபமாய்த் தென்படுகின்றது !
கர்னல் பக்கத்திற்கு பக்கம் சிரிப்பை வரவழைக்கும் ரகமில்லை சார்... ஆனால் அவரிடம் லக்கியையோ, கிட் ஆர்டினையோ எதிர்பார்ப்பது சரியாக இராது என்பது என் எண்ணம்.
ReplyDeleteஎல்லா கார்ட்டூன்களும் ஒரே template ஆக இல்லாமல் வெரைட்டியாக இருப்பது கிளிப்டனும் மேக் அண்ட் ஜாக்கும் தான்.
அதனால் கர்னலுக்கு கிரீன் சிக்னல்....
//கர்னலுக்கு கிரீன் சிக்னல்....///
Deleteமகிழ்ச்சியான செய்தி!
//கர்னல் பக்கத்திற்கு பக்கம் சிரிப்பை வரவழைக்கும் ரகமில்லை சார்... ஆனால் அவரிடம் லக்கியையோ, கிட் ஆர்டினையோ எதிர்பார்ப்பது சரியாக இராது என்பது என் எண்ணம்.//
DeleteVery true !!
கர்னலுக்கு ஜே
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇந்த முறை ராபின் கதை எனக்கு சுகப்படலில்லை. இரண்டு வில்லன்கள் ஏதோ கொசு அடிக்கிற மாதிரி இரண்டு பக்கதுக்கு ஒருதடவை யாரையாவது அப்பாவிகளை போட்டு தள்ளி கொண்டே இருக்கிறார்கள்.
ReplyDeleteசஸ்பென்ஸ் என்று பெரிதாக எதுவும் இல்லை.
பேப்பர், IT நிபுணர் என்று ஆரம்பித்து லேயே வந்து விடுவதால், கருப்பு பணத்தை பேங்கில் பதுக்கும் விவகாரம் என்று புரிந்து விடுகிறது.
பணத்திற்காக இத்தனை கொலை என்று தெரிந்தாலும், அதில் போதுமான அழுத்தம் எதுவும் இல்லை.(உ.ம் சுமாராக எவ்வளவு பணம் என்ற விவரம் கூட சொல்வில்லை).
எந்த நம்பிக்கை அடிப்படையில் சீகரெட் அட்டை பின்புறம் எழுதி இருக்கும் ரகசிய எண்ணை இரு கொடிய வில்லன்கள் நாட்கணக்கில் எந்த தேடுகிறார்கள்??. அதுவும் பக்கதுக்கு பக்கம் போட்டு தள்ளி கொண்டே இருக்கிறார்கள்.
சாதாரணமாக சிகரெட் பிடித்த பிறகு சிகரெட் அட்டையை யாரும் பத்திரமாக வைத்து இருப்பதில்லையே!!??.
"ரொம்ப விலை கொடுத்து பாடம் கற்று கொண்டேன்" என்று இறுதியில் அந்த பெண் கூறும்போது.
கவுண்டமணி மணி சொல்லும் " இனிமே நீ வயசுக்கு வந்த என்ன? வரலைன்னா என்ன?. அதான் எல்லாரும் பரலோகம் போயச்சே" என்ற எண்ணம் தான் தோன்றியது.
//கவுண்டமணி மணி சொல்லும் " இனிமே நீ வயசுக்கு வந்த என்ன? வரலைன்னா என்ன?. அதான் எல்லாரும் பரலோகம் போயச்சே"//
Deleteஉருண்டு, புரண்டு சிரிக்கும் image !!
ஷெல்டன்... வழக்கம் போல... ட்விஸ்ட்... ட்விஸ்ட்... ட்விஸ்ட்...! 2020 இல் இவர் உருவாக்கும் வெற்றிடத்தை இப்போதே நிச்சயமாய் உணர முடிகிறது.
ReplyDeleteதுரோகமே துணை: 9/10
1.க்ளிப்டன் கண்டிப்பாக வேண்டும்.இவரின் கதைகள் மென்னகை பூக்கச்செய்கின்றன.
ReplyDelete2.மர்ம மனிதன் மார்ட்டின் இரண்டு ஸ்லாட் தரலாம் இவரின் வித்தியாசமான கதைக்களன்களுக்காக..!.
3.டை டா ஹாரர் கதைக்கு உத்தரவாதம் தருவதால் தொடரலாம்.
4.ஜூலியாவுக்கு ஒரு இல்லத்தின் கதை போன்ற மிகச்சிறந்த கதைகள் இருந்தால் வாய்ப்புகள் வழங்க நோ அப்ஜெக்ஸன் யுவர்ஆனர்!!
மகிழ்ச்சியான செய்தி!!
Delete
ReplyDelete1. க்ளிப்டன் : வெடிச்சிரிப்பு இல்லையென்றாலும் புன்னகை கொடுத்த கதை. நிச்சயம் ஒரு ஸ்லாட் ப்ளீஸ்.
2. மார்ட்டின் : mutant பற்றிய கதை. சூப்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும், நிச்சயம் மோசமான கதையில்லை. இவரது வெரைட்டியான கதைகளுக்காகவே இவர் நிச்சயம் வேண்டும். please keep him on track.
3. ஜூலியா : தீபாவளி மலரிலேயே மிக சிறந்த கதை, என்னளவிலாவது. மிக சாதாரணமாக துவங்கி, சற்றென்று விறுவிறுப்பாகி, இறுதியில் தாய் பாசத்தின் வீரியத்தை உணர்த்திய கதை. Please more stories like this for Julia.
4. டைலன் டாக் : Double OK.
///
Delete3. ஜூலியா : தீபாவளி மலரிலேயே மிக சிறந்த கதை, என்னளவிலாவது. மிக சாதாரணமாக துவங்கி, சற்றென்று விறுவிறுப்பாகி, இறுதியில் தாய் பாசத்தின் வீரியத்தை உணர்த்திய கதை. Please more stories like this for Julia.///
மகிழ்ச்சியான செய்தி!
மிக சாதாரணமாக துவங்கி, சற்றென்று விறுவிறுப்பாகி, இறுதியில் தாய் பாசத்தின் வீரியத்தை உணர்த்திய கதை. Please more stories like this for Julia.///
Deleteநானும் ஒத்துகொள்கிறேன்.
///அப்புறம் சந்தா 2020 வண்டியானது F1 கார் வேகத்தில் தெறிக்கத் துவங்கியுள்ளது - துவக்க 3 தினங்களுக்கும் !! நம்மாட்களால் உங்கள் வேகங்களுக்கு ஈடு தர இயலவில்லை என்பதே நிஜம் ! ஆன்லைனில் தீபாவளி மலர் ஆர்டர்களுமே rocking என்பதால் ஆபீஸே அதகளம் ! ///
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தி!!
EV office வந்துட்டீங்க போல
Delete///EV office வந்துட்டீங்க போல///
Deleteஅலுப்பூட்டும் செய்தி.!!
///EV office வந்துட்டீங்க போல///
Deleteஹிஹி!! :)
///அலுப்பூட்டும் செய்தி.///
நோ நோ!! நிம்மதியான இடத்துக்கு வருவது எப்படி அலுப்பாகும்?! :)
உண்மை தான் கண்ணா . சிறுவனாக இருந்தபோது பிடிக்காதது பள்ளி பெரியவனானதும் பிடிக்காத இடம் வேலை செய்யும் ஆபீஸ்.
Delete//
Deleteபெரியவனானதும் பிடிக்காத இடம் வேலை செய்யும் ஆபீஸ்.
//
செய்யும் வேலையை ஈடுபாடு சந்தோஷமாக செய்தால் ஆபீஸும் பிடிக்க ஆரம்பித்தது விடும். வேலையில் பல புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும்.
இன்னமும் நிறைய பேருக்கு புத்தகங்கள் கிடைக்காத போது கதையை அப்படியே இங்கே கூறுவது சற்று அயர்ச்சியைத்தருகிறது நண்பர்களே ....!
ReplyDeleteகதையை படியுங்கள் விமர்சனம் செய்யுங்க ஆனா கதையையே இங்கே சொல்லவேண்டாமே...இது எனது கருத்து.....
+1
Deleteவிரிவான விமர்சனங்களை மாதம் 7 தேதிக்கு மேல் வைத்துக்கொள்வது நல்லது. விற்பனை நண்பர்களுக்கு மற்றும் நமது விற்பனைக்கு பலவிதத்தில் உதவும்.
// கதையை படியுங்கள் விமர்சனம் செய்யுங்க ஆனா கதையையே இங்கே சொல்லவேண்டாமே...இது எனது கருத்து..... //
Delete+1000
Enathu karuthum ithuvey!
புரிதலுக்கு நன்றி நண்பரே...🙏
Deleteஎன்னிடம் புத்தகம் வாங்கும் நண்பர் ஒருவர் என்ன சார் க்ளிப்டன் சுமாராமே இந்த மாத இதழ்களில் அது வேண்டாம் மீதி மட்டும் கொடுங்க என்கிறார்.....😢😢😢 எங்களைப்போன்ற ஏஜெண்ட்டுகள் பிரதிகளை வாங்கிவிற்பதற்க்கு சற்று அவகாசம் கொடுங்க (ந)பண்பர்களே....
ReplyDeleteநண்பரே இம்மாத கிளிப்டன் சுமார் என்பது படிக்காதவர் கூறும் கருத்தாகவே எடுத்துக் கொள்ள முடியும்- தாராளமாய் display செய்யுங்கள் !
Deleteநகைச்சுவை சற்றே மிதம் எனினும் கிளிப்டனை அந்த biographer செய்யும் பகடியும் - ஒரு அருமையான துப்பறியும் கதையாய் அவிழும் முடிச்சுக்களும் கதையினை அமர்க்களப்படுத்துகிறது - ஒரு ஜாலியான அனுபவம்.
Deleteஎன்னைப் பொறுத்தவரை இஃதொரு ஹிட் கதையே - அருமையான நடையில் சொல்லப்பட்டுள்ளது - நன்றாய் மொழிமாற்றம் செய்யப்பட்டதும் கூட.
Delete//என்னிடம் புத்தகம் வாங்கும் நண்பர் ஒருவர் என்ன சார் க்ளிப்டன் சுமாராமே இந்த மாத இதழ்களில் அது வேண்டாம் மீதி மட்டும் கொடுங்க என்கிறார்.....😢😢😢 எங்களைப்போன்ற ஏஜெண்ட்டுகள் பிரதிகளை வாங்கிவிற்பதற்க்கு சற்று அவகாசம் கொடுங்க (ந)பண்பர்களே....//
DeleteValid point !!
பாராட்டுக்களும், பகடிகளும் நேரடியாய் விற்பனைக்கு உதவுவதும், உதைப்பதும் அப்பட்டமாய்ப் புரிகிறது !
உண்மைதான் சார்....
Delete//என்னிடம் புத்தகம் வாங்கும் நண்பர் ஒருவர் என்ன சார் க்ளிப்டன் சுமாராமே இந்த மாத இதழ்களில் அது வேண்டாம் மீதி மட்டும் கொடுங்க என்கிறார்.....😢😢😢 எங்களைப்போன்ற ஏஜெண்ட்டுகள் பிரதிகளை வாங்கிவிற்பதற்க்கு சற்று அவகாசம் கொடுங்க (ந)பண்பர்களே....//
Deleteஉங்கள் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.உங்கள் கஷ்டம் புரிகிறது.
நன்றி நண்பரே....
Delete//என்னைப் பொறுத்தவரை இஃதொரு ஹிட் கதையே//
Deleteபுத்தகங்களை வாங்கிவிற்க்கும் எனக்கு அனைத்து கதைகளும் நலமே ..ஆனால் இங்கு கதைகளை மேலோட்டமாக விமர்சித்தால் பரவாயில்லை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்வதால் சற்று சுனக்கம் அதுவே எனது பிரச்சினை ....நண்பரே...🙏
அக்கு வேறு ஆணி வேறாக விமர்சனத்தை பொதுவாக ஆசிரியருக்கு அனுப்பி விடுவேன் அல்லது தளத்தில் தாமதமாக பதிவிடுவேன் இல்லை சில நேரங்களில் அதுவும் செய்வது இல்லை.
Deleteஇனி இவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவேன் பழனிவேல்.
ஷெல்டன் 10/10
ReplyDeleteReading now Circus sagasam it's like MGR movie Parkakkum Pavai yet not finished.
ReplyDeleteWow.... Super...!!! 👌👌👌👌👌
Delete"பறக்கும் பாவை" !!
DeleteSubscription rocking is Good news!
ReplyDeleteகிளிப்ட்டன் அண்ணாச்சி பட்டையை கிளப்பி உள்ளார்.
ReplyDeleteYes - it may not have been a laugh riot but it is a well made story - very much likable and is a hit number.
DeleteMy rating for CLIFTON - October - would be 9/10
You never cease to surprise me folks !! மீசைக்காரரை மொத்தப் போகிறீர்கள் என்று பயந்து போயிருந்தேன் ; காப்பாற்றியது மட்டுமன்றி உசக்கே தூக்கியும் விட்டுள்ளீர்கள் !! Awesome !
DeleteGeneration gap sir .. Enna irunthaalum neenga 50+ naanga 30-40+ illiyaa 😀😀😀
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவிஜயன் சார், தீபாவளி மலரின் அட்டைப்படம் மற்றும் அதனில் உள்ள நகாசு வேலைகள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இதற்கு முன்னர் இதே சைசில் வந்த நமது குண்டு புத்தகங்களின் அட்டைபடங்கள் நம்மை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது. இந்த முறை அது மிஸ்ஸிங். :-(
ReplyDeleteNagam pinjirucho :) :)
Delete///விஜயன் சார், தீபாவளி மலரின் அட்டைப்படம் மற்றும் அதனில் உள்ள நகாசு வேலைகள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ///
Deleteஇங்கே தளத்தில் கண்டதைவிடவும், நகாசு வேலைகள் + பளபளா அட்டை சகிதம் நேரில் கண்டபோது எனக்கு பிரம்மிப்பாகவே இருந்தது!
ஆனாலும் ஏதோ ஒன்று குறைவதைப் போலிருப்பதும் உண்மைதான்!
டெக்ஸின் இது போன்ற குண்டு புத்தகங்கள் மற்றும் கடந்த வருடம்/அதற்கு முந்தைய தீபாவளி மலர் அட்டையை ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்; டைனமைட் ஸ்பெஷல் அட்டைப்படம் மேக்கிங் எனக்கு மிகவும் பிடித்தது.
Deleteஎனக்கோ இந்த தீபாவளி மலரின் அட்டை மிக கலக்கலாக படுகிறது..உண்மையாகவே பல நிமிடங்களுக்கு இதழை பிரிக்க தோன்றாமல் முன்பின் அட்டைப்படங்களையே ரசித்தும் ,தடவியும் பார்த்து கொண்டே இருந்தேன்..:-)
DeleteWell - not for me. I have two copies - the White Title Line did not go well with the rest of the cover. There were no decors along the white title line too and it disturbed the whole cover.
Delete"அதனில் உள்ள நகாசு வேலைகள் "
Deleteஎன்னிடமுள்ள இரு பிரதிகளில் நகாசு வேலைகளே இல்லை - அவசரத்தில் பாதிக்கு பாதி பிரதிகள் plain பைண்டிங்கில் வந்து விட்டனவா ? புரியலே !!
ராகவன் @ தீபாவளி மலர் என்பது வித்தியாசமாக தனித்து தெரியும்.
Deleteமீள் பதிவு:
ReplyDeleteவிஜயன் சார், தீபாவளியின் முதல் (கர்னல் கிளிப்டன்) பத்தே சிக்ஸர். சூப்பர், அருமையான காமெடி கதை, முக்கியமாக சீனுக்கு ஏற்றார் போல் நீங்கள் எழுதிய டயலாக்குகள்.
இவர் அடுத்த வருடமும் தாராளமாக வரலாம்.
கிளிப்டன் உடன் வரும் நாவல் எழுத்தாளர் அடிக்கும் கூத்து லக்கியின் புரட்சி தீ கதையின் சில sequenceஐ நினைவுபடுத்தியது. அட்டகாசமான காமெடி விருந்து தீபாவளிக்கு.
Sir Subscription link plz
ReplyDeleteR.Anbu:
Deletehttp://lioncomics.in/2020-subscription/635-2019-abcde-tn.html - All comics Santhaa
http://lioncomics.in/2020-subscription/651-pre-booking-for-jumbo-comics-within-tamil-nadu.html - JUMBO SANTHAA
Both Within TN
Tanq
Deleteதீபாவளியை தூத்துக்குடியில் கொண்டாட செல்வதால் இந்த மாத புத்தகங்களை தூத்துக்குடி முகவரிக்கு அனுப்ப சொல்லி நமது ஆபீஸூக்கு இரண்டு முறை தகவல் சொன்னேன் அவர்கள் சோன்ன what's up எண்ணுக்கு தகவல் அனுப்பியும் புத்தகங்களை பெங்களூருக்கு அனுப்பி விட்டார்கள். நல்ல வேளை நான் தூத்துக்குடி கிளம்புவதற்கு முன்பே புத்தகங்கள் கையில் கிடைத்தால் குண்டு புத்தகத்தை தவிர மீதி புத்தகங்களை தூத்துக்குடி கொண்டு வந்து படித்து விட்டேன்.
ReplyDeleteகுண்டு புத்தகத்தை இந்த வார இறுதியில் பெங்களூர் சென்ற பின்னர் தான் படிக்க வேண்டும்.
எல தம்பி மழையா,,,,டயலன படி மொத
Deleteவெளியே போய் வரமுடியாத படி தொடர் மழைல
Delete//
Deleteடயலன படி மொத
//
இல்ல மக்கா... எனக்கு பிடித்த ஜுலியாவைத்தான் முதலில் படிப்பேன் :-)
விசித்திர உலகமிது
ReplyDeleteமார்டின் என்றாலே வரலாற்றுடன் இணைந்த கதைகளாகத்தான் நினைவுக்கு வரும் அவ்வகையில் இதுவும் ஒன்று
ஹிட்லர் மியூடன்ட் எம்ஐபி என மூன்று பெரும் சக்திகள்
கல்கத்தா டோக்கியோ டொராண்டோ என மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழும் நிகழ்வுகள்
அவற்றின் ஊடே இணைந்திருக்கும் ஒற்றுமை
இவற்றோடு இரு பெண்களுக்கிடையேயான காதல் போட்டி
என சரிவிகித கலவையாக மார்டின் கலக்கிவிட்டார்
ஒரு பரபரப்பான வாசிப்புக்கு உத்திரவாதம்
மார்டின் வழக்கம் போல கலக்கல்
நன்றி சார் 🙏🏼
.
***** லயன் தீபாவளி மலர் - டெக்ஸ் வில்லரின் "சர்க்கஸ் சாகஸம்" *******
ReplyDeleteசாதுர்யமாகப் பல பேங்க் கொள்ளைகளை நிகழ்த்திவிட்டு, தடயமின்றி தப்பிச் சென்றுவிடும் ஒரு கொள்கைக் கும்பலை டெக்ஸும், கார்சனும் எப்படி மடக்குகிறார்கள் என்பதே (ஸ்பாய்லர் அலெர்ட்டுகளுக்கெல்லாம் அவசியப்படாத) கதை!
'சர்க்கஸ்' என்ற வார்த்தை நம்முள் குதூகலத்தை ஏற்படுத்திய; நாம் டவுசர் போட்டிருந்த அன்றைய காலகட்டத்தில் இந்தக் கதை வெளியாகியிருந்திருக்குமேயானால், இதிலிருக்கும் சர்க்கஸ் காட்சிகளுக்காகவே நம்மால் பல ரவுண்டுகள் படிக்கப்படும் கதையாக நிச்சயம் இருந்திருக்கும்!
ஆனால் T20 அதிரடிகளுக்குப் பழக்கப்பட்டுவிட்ட நமக்கு, இன்றைய நாட்களில் ஒருநாள் போட்டிகளே கொஞ்சம் சுதி குறைச்சல் போல தெரியத் தொடங்கியிருப்பதில் வியப்பில்லை தானே?!! அதைப்போலதான் இந்தக் கதையும்!!
ஆனால், பெரியவர் பொனெல்லியின் கதை சொல்லும் ஆற்றலும், 'இவர் தான்பா டெக்ஸ்' என்று அந்நாட்களில் டெக்ஸை நமக்கெல்லாம் காட்சிப்படுத்திய காலெப்பினியின் சித்திரங்களும் இன்றைய நாட்களில் கொஞ்சம் அதர பழசாய் நமக்குத் தெரிவதை என்னவென்று சொல்ல?!! கொஞ்சம் யோசித்துப் பார்க்கையில் சமீபத்திய T20 மேட்ச்களான 'ஒரு ரெளத்திர ரேஞ்சர்', 'புதைந்து போன புதையல்' போன்றவையே காரணம் என்றும் நினைக்கத் தோன்றுகிறது!!
சர்க்கஸ் சாகஸம் - 'சூப்பர் ஹிட்' வரிசையில் இடம் பெறுமா என்று தெரியவில்லை.. ஆனால், நிச்சயம் சோடை போகும் கதையல்ல என்பது உறுதி!
என்னுடைய ரேட்டிங் : 9/10
படித்து விட்டு படிக்க வருகிறேன் செயலரே..:-)
DeleteWayne Sheldon Super!!
ReplyDelete9/10
Clifton ok
Delete8/10
ஷெல்டன் ஓகேனாலும் இதுவே இறுதி என்பதால் ...:-(
Deleteஅனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteம்யூடண்ட்ஸ்க்கு மட்டும் விநோத சக்திகள் எப்படி கிடைக்கின்றன?
ReplyDeleteஅணுகுண்டு வெடிப்பினால் ஏற்படும் கதிர்வீச்சுசில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ம்யூடண்ட்ஸ் சக்தி கிடைப்பதாக கதை போகிறது.
Deleteபண்டிகை ,பயணங்கள் ,பளுக்கள் போன்ற காரணங்களினால் அலுவலக விடுமுறையில் இருந்த காரணத்தால் ஷெல்டனை தவிர எந்த இதழையும் இன்னும் படிக்கவில்லை சார்..எனவே தங்கள் வினாக்களுக்கான பதிலை உடனடியாக அளிக்க நேராமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteஇன்று முதல் அலுவலகம் செல்ல இருப்பதால் இனி இதழ்களை படித்து விட்டு ....:-)
ஓஹோ! தலீவரே @ அப்ப அலுவலகம் செல்வது வேலை செய்வதற்கு கிடையாதா..????🤔🤔🤔🤔
Deleteஹீஹீ...
Delete( அது ஒரு கனாக்காலம் )
சர்க்கஸ் சாகஸம்...
ReplyDeleteஇந்த குண்டான தீபாவளி மலரை எடுத்தவுடன் டெக்ஸ் கதையை இறுதியாக படிக்கலாம் என்று ஆசைப்பட்டாலும் இது போன்ற குண்டு மலர்களில் ஆசிரியர் வரிசைக்கிரியமாக படிப்பது சிறப்பு என ஒரு முறை சொல்லியதாக நினைவு .எனவே வரிசைப்படியே படித்து விடலாம் என நினைத்தப்படி சர்க்கஸில் நுழைந்தேன்..பலரும் சிறப்பாக இருந்தாலும் தீபாவளிமலருக்கு இதை விட சிறப்பாக அமைந்து இருக்கலாம் என நினைப்பது உண்மையே ..ஆனால் அப்படிப்பட்ட கதைகள் பக்க அளவுகளில் நீண்டவையாக இருப்பது வழக்கம் எனும் பொழுது அந்த டெக்ஸ் கதைகளோடு மற்ற நாயகர்களும் இனைந்து கதம்ப இதழ்களாக கலக்க முடியுமா எனில் சந்தேகமே..
வழக்கம் போல டெக்ஸின் எதிரி யார் என்பது ஆரம்பத்திலியே தெரிந்து விடுகிறது தான்..சர்க்கஸ் சாகஸம் தலைப்பின் மூலம் அவர்களின் பதுங்குமிடமும் தெரிந்து விடுகிறது தான் ,எதிரிகள் தப்பிக்கும் முறை டெக்ஸ் குழு அறியாவிட்டாலும் நாம் அறிந்து விடுகிறோம் தான்...இப்படி எல்லாமே நமக்கு தெரிந்தே கதை நகர்ந் தாலும் எப்படி தான் இந்த டெக்ஸ் கதைகள் ஆரம்பித்தால் முடியும்வரை கீழே வைக்காமல் பரபரக்க வைக்கிறதோ தெரியவில்லை...
கதம்ப இதழ்களுக்கான இந்த டெக்ஸ் சாகஸம் என்னை பொறுத்த வரை அருமை.
இந்த சாதாரண கதையே இவ் வளவு விறுவிறுப்பாக செல்லும் பொழுது கண்டிப்பாக அடுத்த வருட டெக்ஸ்ன் அதிக அதிரடிகளுக்கு டெக்ஸ் நியாயமானவரே ( என்னைப் போன்ற டெக்ஸ் ரசிகர்களுக்கு இதுவே குறைவு என்பது வேறு விசயம் )
சர்க்கஸ் சாகஸம் - ஐம்போ சர்க்கஸ் போல இனிமை..
அட்டகாசமாக எழுதி உள்ளீர்கள் விஜய்
Delete****** லயன் தீபாவளி மலர் **** ஜூலியா திறமையான புலனாய்வில் 'ஒரு இல்லத்தின் கதை' *******
ReplyDeleteஜூலியாவின் ஆதர்ச எழுத்தாளரான ஹேய்ஸை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைக்கிறது ஜூலியாவுக்கு! தன் கதைகளில் எப்போதும் ஏதாவதொரு வீட்டைச் சுற்றியே கதை நகர்வை அமைக்கும் பழக்கமுள்ளவரான ஹேய்ஸ் தனிமையில் வசிக்கும் ஒதுக்குப்புறமான அவருடைய வீடு திடீரென்று ஒரு நிலச்சரிவில் சிக்கிக்கொள்ள, பலத்த காயத்துடன் ஹேய்ஸும் மீட்புப்படையால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட, ஏற்பட்ட நிலச்சரிவில் வீட்டினுள் புதைக்கப்பட்டிருந்த ஒரு பதப்படுத்தப்பட்ட சடலமும் விகார முகம் காட்டி வெளியேறி வர, போலீஸின் விசாரணை வட்டத்தில் சிக்குகிறார் எழுத்தாளர் ஹேய்ஸ்!!
இறந்து இருபது வருடங்களான அந்த சடலம் யாருடையது?
கொலை செய்தது யார்?
எழுத்தாளரின் வீட்டினுள் அந்த சடலம் எப்படி வந்தது?
எழுத்தாளர் தான் கொலையாளியா?
கொலைக்கான காரணம் என்ன? - என்ற கேள்விகளுக்கெல்லாம் தன் நேர்த்தியான பாணியில் மிக அருமையாக புலனாய்வு செய்து நம்மை பிரம்மிக்கச் செய்கிறாள் நம் பென்சில் இடையழகி ஜூலியா!!
வியப்பில் ஆழ்த்தும் கதைக்கரு!!
ஏதோவொரு அமானுஷ்யத்தோடே நகரும் கதை நகர்வு!!
மெல்லிய உணர்வுகளைத் தட்டியெழுப்பி 'அட' சொல்ல வைத்திடும் அழகான வசனங்கள்!
அவ்வப்போது ஆச்சரியப்படுத்தும் கோணங்களில் வரையப்பட்ட, நம்மை கதையுடன் ஒன்றிப்போக உதவிடும் சித்திரங்கள்!
ஒரு கி.நா'வுக்கான ஆழம் + ஒரு தேர்ந்த டிடெக்டிவ் கதைக்கான மர்ம முடிச்சுகள் + கொஞ்சூண்டு அமானுஷ்ய உணர்வு + மனித நேசங்களின் மெல்லிய வெளிப்பாடு = 'ஒரு இல்லத்தின் கதை'
தொந்தரவுகள் ஏதுமில்லா ஒரு தனிமையான பொழுதில் இக்கதையைப் படிக்க நேரிட்டால் - ஒரு திகைப்பூட்டும் வாசிப்பு அனுபவம் வாய்க்கப்பெறுவது உறுதி!!
'ஒரு இல்லத்தின் கதை' - நம் உள்ளத்தில் இடம்பிடிக்கும்!
என்னுடைய ரேட்டிங் : 10/10
// தொந்தரவுகள் ஏதுமில்லா ஒரு தனிமையான பொழுதில் இக்கதையைப் படிக்க நேரிட்டால் - ஒரு திகைப்பூட்டும் வாசிப்பு அனுபவம் வாய்க்கப்பெறுவது உறுதி!!//
Deleteசரியா சொன்னிங்க ஈ.வி,ஜூலியா அசத்தல்......
இன்று வரை புத்தகங்கள் கிடைக்கவில்லை. பன் என்னாகுமோ தெரியவில்லை.
ReplyDeleteபன்னுக்கே இந்த நிலைமனா பஞ்சு மிட்டாய் வச்சிருந்தா ......
Deleteகவலைபடாதீங்க தனியாக இரண்டு பன்னு உங்களுக்கு அனுப்பிடலாம் சரவணன்.
Deleteலயன் தீபாவளி மலர்
ReplyDelete"சர்க்கஸ் சாகஸம்"
டெக்ஸ் சாகஸம் என்றாலே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட கதைகளாகவே இருக்கும். அது 100 பக்கங்களோ அல்லது 300 பக்க கதைகளோ லாஜிக் எதுவும் பார்க்காமல் படித்தோமா ஜாலியா என்ஜாய் பன்னோமா என்று இருக்கும். கண்டிப்பாக போர் அடிக்காது. சர்க்கஸ் சாகஸமும் அவ்வாறே. கதையை படிக்கும்போதே, அடுத்த பத்தாவது பக்கத்தில் என்ன நடக்க்ப்போகிறது என்பது முன்னரே யூகிக்க முடியும்தான். வில்லன் அடுத்த பக்கத்தில் என்ன செய்யப் போகிறான், அதற்கு டெக்ஸின் எதிர்வினை எப்படி இருக்கப் போகிறது என்பதை எளிதாக அனுமானிக்கலாம்தான். ஆனால் அதற்காக புத்தகத்தை அப்படியே மூடி வைத்துவிட மாட்டோம். படிக்க ஆறம்பித்தால் முடித்து விட்டுதான் மற்ற வேலைகளை பார்ப்போம். அந்த ஈர்ப்புதான் டெக்ஸ் கதைகளின் ப்ளஸ் பாயிண்ட் மற்றும் வெற்றியும்கூட. எனவே டெக்ஸ் கதைகளை விளாவரியாக விமர்சிக்கும் அவசியமில்லை என்பதே என் எண்ணம்.
டெக்ஸின் "சர்க்கஸ் சாகஸம்" கதையை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு முழு நீள மசாலா படம் பார்த்த திருப்தியை தரவல்லது. மேலும் ஒரு விடுமுறை நாளை ஜாலியாக போக்கவல்லது. That's all.
இந்த கதைக்கு என்னுடைய ரேட்டிங் 9/10.
நன்றி நன்பரே !
Deleteகர்னல் தானாகவேதடுக்கிவிழுவார்.இங்கோஒருபலசாலியானபெண்ணுடன்பயணிக்கும்கர்னல்பக்கத்திற்க்குப்பக்கம்மூக்குடைபட்டுநம்மைசிரிக்க வைக்கிறார். அருமையான நிறைவானநகைச்சுவை விருந்து
ReplyDeleteதீபாவளி மலர்..
ReplyDeleteசர்க்கஸ் சாகசம் :-
ஓவியர் காலெப்பினியின் கைவண்ணத்தில் டெக்ஸும் அவருக்கு ஒருபடி மேலாக கார்சனும் அழகாக இருப்பார்கள்.!
இம்முறையும் அது பொய்க்கவில்லை.!
எப்போதும் பச்சையான சூத்திரம்.. (அதாங்க டமில்ல எவர்க்ரீன் ஃபார்முலான்னு சொல்வாங்களே) கொண்ட டெக்ஸ் வில்லர் கதைகளோடு சர்க்கஸ் சாகசமும் சர்வலட்சணங்களோடு பொருந்திப் போகிறது.! டெக்ஸ் வில்லரையெல்லாம் இன்னும் ரெண்டாயிரம் வருசத்துக்கு ஒண்ணுமே பண்ணமுடியாதுன்றது மறுக்கா ஒருக்கா புரூவ் ஆயிருக்கு.!
ரேட்டிங்.. (தேவையா என்ன.!? )
சிவப்பு ரோஜாக்கள்:-
ஏ..யப்பா..! ஆரம்ப பக்கங்களில் நடக்கும் ஒரு சம்பவத்தைப் பார்த்து.. "யார்ராவன்.. கசாப்புக்கடைக்காரனாட்டம் பண்றானே"ன்னு நினைச்சிக்கிட்டு படிச்சா.. கதையிலயும் அக்கூயரட்டா அதே பேர் வருது..ஹிஹி..!!
டைலன் டாக் ஏமாற்றவில்லை.! யூகிக்க கடினமான திருப்பங்களுடன் வித்தியாசமான க்ளைமாக்ஸூடனும் ஒரு அமானுஷ்யம் கலந்த அறிவியல் கதை.!
அதாவது..
அறிவியலை நம்புவோர்..,
ஸ்பிலிட் பர்சனாலிட்டின்னும்..
ஆவிகளை நம்புவோர்..,
பேய் பிசாசு சேட்டைன்னும்..
எடுத்துக்கொள்ளலாம்.!
ஓவியங்கள் மட்டும் கொஞ்சம் சுமார்..!
டைலன் டாக்.. ஏமாற்றவில்லை.!
ரேட்டிங் 8/10
தீபாவளி மலர்..
ReplyDeleteவிசித்திர உலகமிது:-
நின்ன இடத்துல இருந்தே ஜிவ்வுன்னு ராக்கெட் கணக்கா மேலேறி போயிங் கணக்கா பறக்குற ஒரு ஆசாமி..
மிசினுக்கு பின்னுக்க ஒளிஞ்சிக்கிட்டு ரோபாட்களை எண்ணங்களாலேயே கன்ட்ரோல் பண்ற ஒரு அம்மிணி..
இப்படி விசித்திரமான பிறவிகளை தேடித்தேடிக் கொல்ற MIB கோஷ்டி ஒண்ணு..
இந்நிலையில பாட் அப்படீங்குற ஒரு யுவதி மார்ட்டினோட எதேச்சையா இடறிக்கிட்டு., அப்புறமா அவரோட உதவியை கேக்குறாங்க.!
அந்தப் பாட்டும் ஒரு விசித்திர பிறவியா இருக்க.. அந்த கருப்புசட்டை கோஷ்டி யாரு.., இந்த விசித்திரப் பிறவிக யாரு .., இதுல மார்ட்டினுக்கு என்ன வேலை.. டயானாவுக்கு என்ன ட்யூட்டி.. அப்படின்றதையெல்லாம் கருப்புவெள்ளை திரையில் காண்க.!
கடைசீல ம.ம.மார்டினையும் ரொமான்ஸ் ஹீரோவாக்கிட்டிங்களே..!?
ரேட்டிங் 8/10
கொலை கொலையா முந்திரிக்கா:--
ரொம்ப ரொம்ப பொருத்தமான தலைப்பு.!
ஒரு நைட் க்ளப்புல லிண்டா ங்குற ஒரு ஃபிகரை டான்ஸ் ஆடியே கரெக்ட் பண்ணி வீட்டுக்கு டேட்டிங் கூட்டிட்டு போறான் ஒருத்தன்.!
காலையில அவனுக்கு முன்ன எந்திரிச்ச லிண்டா., அவனோட சிகரெட் பாக்கெட்டை எடுத்துக்கிட்டு கிளம்பிடுறா.. (பீஸா ன்னு கேக்காதிங்க.. சிகரெட் தேவைப்பட்டதால எடுத்துக்கிறா.)
லிண்டா போனதும் அங்கே வர்ர ரெண்டு ஆசாமிக அவனையும் கொன்னுட்டு அந்த சிகரெட் பாக்கெட்டையும் லிண்டாவையும் தேடிப்போறாங்க.!
அங்கேயிருந்து பாத்துக்கிட்டிங்கன்னா, அந்த ரெண்டு ஆசாமிகளும் போற இடத்தில எல்லாம் பாக்குற எல்லாத்தையும் கொலை பண்ணிக்கிட்டே போறாங்க. (கதைத் தலைப்பு செம்ம பொருத்தம்)
அந்த சிகரெட் பாக்கெட்ல என்ன இருக்கு.. கொலைகாரங்க லிண்டாவை புடிச்சாங்காளா இல்லே அதுக்குமுன்னாடி ராபினும் மார்வினும் கொலைகாரங்களை புடிச்சாங்களா என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.!
ரேட்டிங் 8/10
ஒரு இல்லத்தின் கதை :-
அழகான.. ஆழமான.. உணர்வுக்குவியலுடன் ஒரு க்ரைம் கதை.!
வழக்கமான க்ரைம் கதைகளில் ஒரு டெட்பாடி கிடைக்கும்..., கொலையாளி யார் என்று துப்பறிவார்கள்..!
ஆனால் இங்கேயோ அந்த டெட்பாடி யாரென்று துப்பறிவதே பெரும் சவாலாக இருக்கிறது.. அதன்பின்தான் கொலையாளியை கண்டுபிடிக்கிறார்கள்..!
பெரிதாக ஆக்சன் காட்சிகள் இல்லை.. பரபரப்பான நொடிக்குநொடி திருப்பங்கள் இல்லை..,
ஆனாலும் கதையை ஆரம்பித்து சில பக்கங்கள் தாண்டியதும் முடிவு தெரியும்வரை கீழே வைக்கமுடியாதபடி கட்டிப்போட்டு விடுகிறது.!
ஒரு இல்லத்தின் கதை - ஒரு உள்ளத்தின் கதை
ரேட்டிங் - 9/10
அருமையான விமர்சனம் கண்ணா
Deleteநாளைக்கு ஷெல்டனை படிச்சி முடிச்சிட்டா நவம்பர் பிறக்கிறதுக்கு முன்னாடியே நவம்பர் இதழ்களை முடிச்சிருப்பேன்..!
ReplyDeleteம்ம்ம்.. நவம்பர் முழுக்க.. போனவாரம் விட்ட இடத்துல இருந்து கார்ட்டூன்ஸை தொடரவேண்டியதுதான்..!! :-)
நான் குண்டு புத்தகத்தை வரும் ஞாயிறு முதல் பார்த்து பின்னர் நேரம் கிடைக்கும்போது இரண்டு வாரத்தில் படித்து முடித்து விடுவேன்:- ஆப்பரேஷன் நவம்பர் என இதற்கு பெயர்
Deleteஇரண்டு வாரத்துல முடிச்சிட்டா ஆப்பரேசன் பாதி நவம்பர்னுதானே பரணி சொல்லணும்..!? 🏃🏃🏃
Deleteஇரண்டு வாரத்தில் படித்து முடிக்க முடியவில்லை என்றால் நவம்பர் மாதத்திற்குள் முடிப்பேன் ; :-)
Deleteலயன் தீபாவளி மலர்
ReplyDelete"சிகப்பு ரோஜாக்கள்"
ஆரம்பமே சதக் சதக் சதக் என்று இரத்தம் தெறிக்கும் பக்கங்கள். அட என்னடா இது என பதட்டத்தில் பக்கங்களை புரட்டினால், நல்லவேளை தப்பிச்சோம்டா சாமி என பெருமூச்சு விட வைக்கிறது அடுத்து வரும் பக்கங்கள். டாடி ஸ்லாஷர் என்ற சீரியல் கொலைகாரனை புலனாய்வு செய்வதில் தோற்றுப்போய் ரிடையரான அதிகாரி ப்லளோச். எமிலி ரே என்ற பென் எழுத்தாளர் எழுதிய ஒரு நாவல். அந்த நாவலை ப்ளோச் படிக்க, அதில் அவர் புலனாய்வு செய்த சம்பவங்கள் அப்படியே ஒத்து இருந்ததால், அவருக்கு அந்த எழுத்துக்கள் பெண் மீது சந்தேகம் ஏற்படுகிறது. எமிலி ரே கதையின் நாயகன் டைலான் டாக்கின் உதவியை நாடுகிறார். டைலான் ப்ளோச் உடன் இணைந்து, பக்கத்துக்கு பக்கம் ரத்தம் தெறிக்க தெறிக்க புலனாய்வு செய்து உன்மையை கண்டுபிடிப்பதே இந்த சிகப்பு ரோஜாக்கள்.
உண்மையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு விறுவிறுப்பான ஹாரர் காமிக்ஸ். யூகிக்கவே முடியாத க்ளைமாக்ஸ் பக்கங்கள். ஹாரர் கதை விரும்பும் வாசகர்களை நிச்சயம் ஏமாற்றாது. கலரில் படிக்க முடியவில்லை என்பது மட்டுமே குறையாக தோனும்.
தொழில்முறை எழுத்தாளர்கள், அவர்களுக்கான ரகசிய ஏஜென்சிகள் என, நான் இதுவரை கேள்விப்படாத ஒரு விஷயம் வருகிறது. அதுதான் இந்த கதையின் அடிப்படை. படித்துப் பாருங்கள் அது ரொம்பவே சுவராஸ்யமாகவே இருக்கும்.
எனக்கு முழு திருப்தி தந்த இந்த கதைக்கு எனது ரேட்டிங் 9.7/10
//தொழில்முறை எழுத்தாளர்கள், அவர்களுக்கான ரகசிய ஏஜென்சிகள் என, நான் இதுவரை கேள்விப்படாத ஒரு விஷயம் வருகிறது. அதுதான் இந்த கதையின் அடிப்படை. //
Deleteஇங்குமே அந்த நடைமுறை உண்டு சார் ; butbut இதற்கென ஏஜென்சிலாம் உண்டா என்று தான் தெரியாது !
நமது காமிக்ஸ் நண்பர் பழகுவதற்க்கு இனியவர் கரூர் குணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteகரூர் குணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Deleteஅடடே...புன்சிரிப்புக்காரருக்கு நம் வாழ்த்துக்களும் !!
Delete
ReplyDeleteதீபாவளிமலர் 5 கதைகளுமே அட்டகாசமானதாக அமைந்துவிட்டது சார்.
5 கதைகளுமே சஸ்பென்ஸ் கதைகளாக அமைந்தது எதார்த்தமாக நடந்ததா அல்லது நீங்கள் அவ்விதமே தேர்வு செய்தீர்களா சார்?
தேர்வு செய்திருந்தீர்கள் என்றால் பிடியுங்கள் மலர்கொத்தை.
டெக்ஸ் ஒரிஜினல் படைப்பாளிகளின் கதை என்பதால் வரலாறு எல்லாம் சேர்க்காமல் ஒரு நேர்கோட்டு கதையாக அமைந்தது நல்லதொரு Light reading ஆக இருந்தது.
நேர்கோட்டில் இருந்தாலும் தேவையான அதிரடி மற்றும் சஸ்பென்ஸ் நன்றாக இருந்தது.
டைலன் டாக் .. வாவ் செம கதை சார்.. கலரில் வந்து இருத்தால் தெளிக்கும் ரத்தித்திற்கு 18+ போட வேண்டி இருந்திருக்கும். அவ்வாறு இருந்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.
மார்ட்டின்.. மென் in பிளாக் கூட்டத்தினரை வில்லன் ஆக்கும் கதை.. ஒரு ஹாலிவுட் படம் போல இறுதி வரை வில்லன் யாரென்று யோசித்து கடைசியில் வெளிப்படுத்தி நன்றாகவே இருந்தது.
ராபின் தொடர்கொலைகள் அவை ஏன் நடக்கின்றன அவர்களுக்குள் என்ன தொடர்பு என்று இறுதி வரை சென்று பின்பு தெரிவது பெரிய பிளஸ்.
இறுதியில் ஜூலியா மிகவும் வித்தியாசமான கதை ஜூலியா வரிசையில் என நினைக்கிறேன். மிக நன்றாக இருந்தது. இதிலும் சஸ்பென்ஸ் இறுதி வரை சென்று வெளிப்படுவது சூப்பர்.
ஆக அனைத்து கதைகளுமே மிகவும் திருப்தியாக அமைந்தது சார். இனி இவர்களை அடுத்த வருடம் தான் படிக்க முடியும் என்பது தான் வருத்தமே.
எனக்கும் மிகுந்த வருத்தமே கிருஷ்ணா
Delete// 5 கதைகளுமே சஸ்பென்ஸ் கதைகளாக அமைந்தது எதார்த்தமாக நடந்ததா அல்லது நீங்கள் அவ்விதமே தேர்வு செய்தீர்களா சார்? // கதை தேர்வு ஆசிரியர் உடையதே போன வருட அட்டவணையின் போதே தீபாவளி மலர் detective special என்று சொல்லி இருந்தார். அட்டகாசமான இதழ் சந்தேகத்திற்கு இடமின்றி.
Delete"Yes..yes...bomb blast நடந்தப்போ ஜார்ஜ் புஷுக்கு போன் போட்டுச் சொன்னதே நான் தான் " என்ற ரீதியில் பீற்றிக் கொள்ள ஆசை தான் நண்பரே ; ஆனால் முழுசுமாய் இதற்கான கிரெடிட்டை நான் வாங்கிக் கொள்வது முறையாக இராது !
DeleteOh yes - ஜூலியா கதையின் பொருட்டு நிறையவே நெட்டை உருட்டித் தான் இந்தக் கதையில் freeze ஆனேன் ! So இங்கே பூவை வாங்கிக்கலாம் நான் !
Oh yes - ராபின் கதையுமே கொஞ்சம் தேடல்களுக்குப் பின்பே கிட்டியதொன்று ! ஆனால் நண்பர் கணேஷ் குமார் சொல்வது போல இங்கே கொலைகாரர்கள் always 1 step ahead என்றிருப்பது லைட்டான நெருடல் !
Oh yes - டைலன் டாக் கதையின் தேர்வும் நிறைய தேடல்களின் பலனே ! இந்தக் கதைக்கு அங்கு கிட்டியிருந்த அலசல்களையெல்லாம் படித்த பின்பே இந்த ஆல்பம் தேர்வானது ! So இன்னொரு பூவை வாங்கிக்க அருகதையுண்டு என்று நினைக்கிறேன் !
Same with TEX ! இதுவொரு டிடெக்டிவ் TEX அவதார் என்பதைக் கதை புரட்டலின் போதே புரிந்து கொள்ள முடிந்தது ! என்ன - இன்னும் கொஞ்சம் வீரியம் ஜாஸ்தி இருக்குமென்று எதிர்பார்த்தேன் ; மற்றபடிக்கு output இது தானென்பது தெரியும் ! So ஒன் மோர் பூ ப்ளீஸ் !
மார்ட்டின் ...மார்ட்டின்...மார்ட்டின்...! நினைச்சது ஒண்ணு....நடந்தது இன்னொண்ணு என்பதே நிஜம் !! So இக்கட பூ என் காதில் ஒன்று ; உங்கள் காதில் இன்னொன்று என்பது தான் பொருத்தமாக இருக்கும் !
பென்சில் இடையழகி அசத்திவிட்டாள் என்பதே உண்மை
Deleteகார்ட்டூன் கதைகளுக்கு தனி சந்தா வசதி இருந்தால் சொந்தகார சிறுவர்களுக்கு பரிசளிக்கலாம்.
ReplyDeleteமார்ட்டினின் கதை சோபிக்கவில்லை.
அறுநூறு ரூபாய் சந்தாவுக்கு முன்னூறு ரூபாய் கொரியர் கட்டணமா ? என்ற பஞ்சாயத்தை சமாளிக்க யாருக்கு சார் சத்துள்ளது ?
Deleteதீபாவளி மலர்_யை படிக்க எடுத்து , ஒவ் வொரு கதையிலும், 5 Uக்கங்கள் படித்ததில் _ ஏனோ 'டைலன் டாக் , - வசீகரித்து விட்டார். ஷெர்லாக் ஹோம்ஸ் - வாட்சன் என்ற உருவத்திலேயே படித்ததில் மேலும் சுவராஸ்யம் தந்து, ஓவியமும் ஒரு கோணத்தில் -அருமையாக இருந்தது.
ReplyDeleteகதையின் முடிவு தான் இப்படி அல்லாமல் ,வேறு மாதிரி யூகித்து (அதாவது பேய் அல்லாமல் தந்தையே விபத்தில் தப்பி வந்து) இருக்கும் போது ைைடலன் டாக் க்குகுகே உரிய முறையில் முடிந்திந்ததும்.மொத்தத்தில் இந்த கதை திரும்பத் திரும் ப Uடித்து ரசிக்கும் படியாக உள்ளது.
அடுத்த வாரத்தை ஜூலியா - விற்கே ஒதுக்க வேண்டும்.
நிறைய பேர் ஜூலியாவை - சிலாகித்திருப்பதை பார்க்கும் போது எப்படியும் ஒரு சிலாட் வாங்கிகிவிடலாம் என்று எண்ணுகிறேன்..i
// ஜூலியா - எப்படியும் ஒரு சிலாட் வாங்கிகிவிடலாம் என்று எண்ணுகிறேன்..//
Deleteஇதயத்திலா சார் ? இப்போதைக்கு இடமிருப்பது அங்கு மட்டும் தானே ?
ஒரு இல்லத்தின் கதை,
ReplyDeleteபடைப்பாளி பெர்ட்ராண்ட் ஹேய்ஸுன் வீடு ஒரு விபத்திற்குள்ளாகி வீட்டின் சுவருக்குள் புதையுண்ட "மம்மி" கிடைக்க,ஹேய்ஸுக்கு சிக்கல் எழுகிறது....
ஒரு வாசகராக அவருக்கு ஏற்கனவே அறிமுகமான நம் நாயகி ஜூலியா விசாரணை அதிகாரியுமாக களமிறங்க நேரிடுகிறது.....
ஹேய்ஸின் மனநிலையை தெளிவாக புரிந்து கொள்ளும் ஜூலியா ஒரே நேரத்தில் வாசகியாகவும்,விசாரணை அதிகாரியாகவும் பயணிக்க நேரிட,ஹேய்ஸை சிக்கலில் இருந்து விடுவித்தாரா?
மர்ம "மம்மி" யார்?
குற்றவாளி யார் என்ற புதிரை இறுதியில் அவிழ்க்கிறார்....
கதையின் களமெங்கும் விரவிக் கிடக்கும் தத்துவார்த்த சிந்தனைகள்....
ஏனோ தெரியவில்லை இந்தக் கதை மனதிற்கு நெருக்கமாய் தோன்றுகிறது....
கதை உணர்வுப்பூர்வமாய் பயணிக்கிறது.....
அசரவைக்கும் வசனங்கள்:
ஆழமான,அழுத்தமான வசனங்கள், நறுக்கி எடுத்தாற்போல் வார்த்தைகள்.
"நம்பிக்கை எனும் தூண் முறிந்திடும் போது மனக்கோட்டைகளின் அஸ்திவாரங்களே ஆட்டம் கண்டுவிடுகின்றன".
" தீராப் பசியுடன் உலாவும் ஜீவனைப் போல".
"பரபரப்பான தருணங்களில் கூடச் சுடர்விடும் நையாண்டியானது சம்பந்தப்பட்ட நபருடைய அறிவுக்கூர்மையின் மிகத் தெளிவான அடையாளமாகும்!".
" நம்மைச் சுற்றி யார் இருக்க வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்! ".
" வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்கள் பல சந்தர்ப்பங்களில் பொதுவான தன்மை கொண்டவை டியர்".
எமது மதிப்பெண்கள்-10/10.
குழப்பமான ஒரிஜினல் ஸ்கிரிப்ட் ; ஆனால் ரொம்பவே ஆழமானதும் கூட ! இன்னமுமே பல இடங்களில் மொழியாக்கத்தில் ஒரிஜினலுக்கு
Deleteபூரணமாய் நியாயம் செய்துள்ளோமா ? என்ற சந்தேகம் உண்டு எனக்கு !
எல்லாப் புகழும் கதாசிரியருக்கே ; அவரது அழுத்தமான வரிகளை இங்கே ட்ரேஸ் செய்தாலே ஸ்கோர் செய்கின்றன !
இதில் வசனங்கள் மட்டும் நேர்த்தி அல்ல சார்,கதையும் நேர்த்தி தான்....
Deleteகதை நெடுகவுமே ஏதோ ஒரு உணர்வுடன் பயணிப்பதாக மனதிற்கு பட்டது,மனதில் மெல்லியதோற் உணர்வை தட்டி விட்டாற் போல....
பொதுவாக உங்களுக்கு மொழி பெயர்ப்பில் சவால் அளிக்கும் கதைகள் எங்களுக்கு திருப்தியை கொடுக்கும் என்று நம்புகிறேன் சார்,கடினமான உழைப்பு எப்போதும் நிறைவை அளிக்கும்......
சர்க்கஸ் சாகசம்:
ReplyDeleteமர்மமாய் வந்து கொள்ளையடித்து விட்டு மாயமாய் மறையும் ஒரு கொள்ளைக் கும்பலும்,மோர்மன் கூட்டம் என்று அழைக்கப்படும் கொள்ளையர்களை கண்டுபிடிக்க டெக்ஸ் & கோ களமிறங்க.....
இறுதியில் என்ன வழக்கம்போல கொள்ளைக் கும்பல் நாஸ்திதான்...
ஒரு சர்வமும் நானே போல் அட்டகாசமான சாகஸத்தை படிக்க வாய்ப்பு கிட்டியபின் இது போன்ற ஆரம்ப கால சாகஸங்கள் நமக்கு சாதாரணமாக தோன்றுவது இயல்பே,போனெல்லி நம் சரித்திர நாயகரை அனைத்து தளங்களிலும் பொருத்திப் பார்ப்பது என்று முடிவெடுத்தபின் எல்லா முயற்சியும் செய்து விட வேண்டியதுதான்....
அதெப்படி,துப்பறியப் போன இரு ரேஞ்சர்களுக்கு தெரியாத விஷயத்தை நம்ம டெக்ஸ் கண்டுபிடித்து விடுகிறார்?
(நதிகளை ஒட்டி கொள்ளை நடப்பது)
சரி பொதுவா நாம பேசிக்கிட்டு இருக்கும்போது ஒரு விஷயத்தை பேசுவோம்,இன்னொருவர் அதில் இன்னொரு கோணத்தில் சொல்வார்,உடனே நாம் அட இது நமக்குத் தோணலையே என்போம்...
அது மாதிரி இதை எடுத்துக்க வேண்டியது தான்....
வழக்கமாய் டெக்ஸ் கதையில் வசனங்கள் சிறப்பம்சங்களாய் இருக்கும் இதில் மிஸ்ஸிங்....
வில்லன்கள் சவாலான ஆட்களாக இல்லை,ஆனால் நடக்கும் சம்பவங்களால் கடைசிவரை தாக்குப் பிடிக்கின்றனர்...
சர்க்கஸ் சாகசம் பொழுதுப்போக்கு சித்திரம்.....
எமது மதிப்பெண்கள்-8/10
பொதுவாகவே டெக்ஸ் ; டைகர் போன்ற கதைகளில் பன்ச் டயலாக்குகளைத் தாண்டி ஸ்கோர் செய்ய சந்தர்ப்பங்கள் ஜாஸ்தி இருப்பதில்லை ! இம்முறை வீரியமான வில்லன்கள் லேது என்பதால் சிங்கத்தையும் , புலியையும் பார்த்து நம்மவர் ஏதாவது பேசினால் தானுண்டு சார் !
Deleteஆனால் ஜூலியாவிலோ பேனா ஜாலம் செய்திட வாய்ப்புகள் ஏகம் ! எழுதும் போதே இந்தந்த இடங்களெல்லாம் வாசிப்பில் ரசிக்கும் என்பதை யூகிக்க முடியும் !
ஜூலியா - மொழிபெயர்ப்பில் முழி பிதுங்கச் செய்தாலும் ; வூடு கட்ட ஆங்காங்கே வாய்ப்புகளும் வழங்கிடும் தேவதை !
ஒரு வழியாக உண்மையை ரவி அண்ணா ஒத்து கொண்டார். இந்த கதைக்கும் 10/10 போடாமல் இருந்ததால். உங்க நேர்மை எனக்கு எப்போதும் பிடிக்கும் ரவி சார்.
Deleteஅப்படியா குமார் சொல்றிங்க.....
Deleteஇந்த தடவை டெக்ஸ் அடக்கி வாசித்ததால்தான் மற்றவர்கள் கூடுதலாக ஜொலிக்கிறார்கள் போல,கனமான களமும் கூடுதல் துணை......
Deleteடெக்ஸ் சொல்றார்:எப்பவுமே விருந்து சாப்பாடுதானா? அப்பப்ப கொஞ்சம் பழைய சாதமும் சாப்பிடுங்க பாய்ஸ்......
எடிட்டர் சார் இன்று தான் நவம்பர் ஒன்று. எல்லா புத்தகங்களையும் படித்து முடித்து மீண்டும் மீள் வாசிப்பும் செய்து முடித்து விட்டேன். மாத கடைசி வரை என்ன செய்வது? இப்போதைக்கு 2020 அட்டவணை உடன் தான் பொழுது கழிந்து கொண்டு இருக்கிறது. அடுத்த பதிவில் ஏதேனும் கேள்வி பதில் கேளுங்களேன்.
ReplyDeleteThis is why I have not touched the Deepavali Malar yet - I am grazing the 2020 catalog daily twice as a routine :-D
Deleteஇன்று தான் தீபாவளி புத்தகங்கள் கிடைத்தது. படித்துவிட்டு வருகிறேன்
ReplyDeleteஹேப்பி தீபாவளி!! (நமக்கெல்லாம் தீபாவளி மலர் கிடைக்கிற நாள்தானே நிஜமான தீபாவளி!)
DeleteClifton என்னை கவரவில்லை சார் ஏனோ தெரியவில்லை .. may be கதையின் மொக்கை முடிவா இருக்கலாம்.
ReplyDeleteஇன்று தான் தீபாவளி புத்தகங்கள் கிடைத்தது. படித்துவிட்டு வருகிறேன்
ReplyDeleteஅப்பாடா இன்று தான் எனக்கு புத்தகங்கள் கிடைத்தது. ரெண்டு நாட்களும் எனக்கு வேற வேலையே இல்லை. படிக்கிறோம் முடிக்கிறோம்.
ReplyDeleteஹேப்பி தீபாவளி!! (நமக்கெல்லாம் தீபாவளி மலர் கிடைக்கிற நாள்தானே நிஜமான தீபாவளி!)
Deleteசார் எனக்கு தமிழில் type செய்ய வரல . அதனாலேயே இந்த பிளாக்கில் சும்மா பாக்குறதோடு சரி. எப்போவாவது சின்னதா எதாவது எழுதுவேன். நீங்கள் எந்த புத்தகத்தை போட்டாலும் நான் வாங்கி படிப்பேன். அவ்வ்ளோதான். அப்புறம் அந்த நாற்பது ரூபாய்க்கு கடையிலே விக்கிற மாதிரி போடற புக்குகளுக்கு நிச்சயம் வரவேற்பு இருக்கும் சார்.
ReplyDelete18 பேருக்கான சந்தாத் தொகை (சந்தா A + B + C + D + E + MAXI) மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் ஒட்டுமொத்தமாக இன்று ஆன்லைன் மூலமாகச் செலுத்தப்பட்டுவிட்டது!
ReplyDeleteஇதன் மூலம் காமிக்ஸ் ஜனநாயகக் கடமையாற்றப்பட்டிருக்கிறது!
இதுவரை சந்தாச் செலுத்தாத நண்பர்களும் தங்கள் கா.ஜ.கடமையை சீக்கிரமே நிறைவேற்றி அழகான டீ-ஷர்ட் உடைமை ஆக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!!
சந்தா கட்டுங்க!! பந்தா காட்டுங்க!! :)
அருமை,அருமை.......
Deleteஅட்டகாசம் ஈனா வினா...
Deleteஎன்னுடைய தளத்தில் உங்களின் விலைமதிப்பற்ற நூல்களை விரும்புகிறேன்.. 9092787854
ReplyDelete200 Sorry guys couldn't help it.
ReplyDeleteசந்தாதாரர்களின் பட்டியல் வெளியிடலாமே சார்
ReplyDeleteஐடியா நன்றாக உள்ளதே.
Deleteதுரோகமே துணை Wayne Shelton கதைகளில் best கதை என்பேன். Van hammeன் கதையாக்கத்தில் Wayne Shelton கதைகளில் கடைசி கதை இது என்பதுதான் வருத்தமளிக்கிறது. மேலும் Wayne Sheltonனை சிறிது காலத்திற்கேனும் சந்திக்க இயலாது என்பதும் வருத்தமளிக்கிறது.
ReplyDelete