Powered By Blogger

Saturday, March 31, 2018

ஒரு தேசமே கொண்டாடுது !!

நண்பர்களே,

வணக்கம். இரவுக் கழுகாரின் 70-வது ஆண்டிது என்பதை டமாரம் அடிக்காத குறையாய் உங்கள் காதுகளில் போட்ட வண்ணம் உள்ளோம் ! அதே சமயம், இந்த நடப்பாண்டானது ஒரு கோஷ்டியின் 60-வது ஆண்டுமே என்பதை எப்படியோ 'மிஸ்' பண்ணிவிட்டோம் !! Oh yes - நமது நீலப் பொடியர்களின் 60-வது பிறந்தநாள் வருஷமிது ! 1958-ல் smurfs முதன்முறையாய்த் தலை காட்டியது Johann & Peewit என்றதொரு கார்ட்டூன் தொடரில். மறு வருஷமே தமக்கே தமக்கென ஒரு புதுப் பிரேத்யேகத் தொடரில் மிளிரத் துவங்கிவிட்டார்கள் ! So இந்த ப்ளூ குசும்பர்களுக்கு 60-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுவோமா ?

இங்கொரு சுவாரஸ்யமான தகவலுமுண்டு ! பெல்ஜிய நாட்டின் பயணிகள் விமான நிறுவனமானது  (Brussels Airlines) தங்கள் தேசத்துக் கலாச்சாரத்தின் மீது அளப்பரிய ஈடுபாடும், பெருமிதமும் கொண்டது !   பெல்ஜியத்தின் தலைசிறந்த நினைவுச்சின்னம் போலான சமாச்சாரங்களை அவ்வப்போது தங்களது விமானங்களின் வெளிப்பக்கத்தில் 'ஜம்மென்று' பெயிண்ட் செய்து பயணிப்பது வாடிக்கை ! டின்டின் இடம்பிடித்துள்ளார்  ; மாக்ரிட் என்றதொரு பிரசித்தி பெற்ற ஓவியருக்கும் அந்த வாய்ப்பு நல்கப்பட்டுள்ளது ; பெல்ஜிய கால்பந்தாட்ட வீரர்களுக்கு அந்த கெளரவம் கிட்டியுள்ளது ; கடந்த 13 ஆண்டுகளாய் பெல்ஜியத்தில் நடைபெற்றுவரும் Tomorrowland என்றொரு நடன நிகழ்ச்சியினை நினைவுகூரும் விதமாய் அதனையும் விமானத்தில் வரைந்துள்ளனர் ! அந்த வரிசையில் சென்றாண்டு புதிதாய் எதைத் தேர்வு செய்யலாமென்று ஒரு போட்டியை நடத்தியது பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் ! பொதுமக்களின் வாக்குகளும், ஒரு உச்ச ஜூரி குழுவுமே தீர்ப்பைச் சொல்லவிருந்தனர் !! இறுதியாய் பெல்ஜியத்தின் கலாச்சார வெளிப்பாட்டுக்கு நமது smurfs பொடியர்களே இம்முறை பொருத்தமானவர்களென்று தேர்வாயினர் !! இளம் இத்தாலிய டிசைனரான மார்த்தா மாஸ்ஸ்ல்லானி தான் இந்த ஐடியாவை முன்மொழிந்து - பரிசீலனைக்கொரு டிசைனையும் தயார் செய்தவர் ! ஏர்பஸ் A-320 ரக விமானத்தின் வெளிப்பக்கமும், உள்பக்கமுமே நமது smurfs கும்பல் அட்டகாசமாய் இடம்பிடித்திட, இந்த மார்ச் மாதம் முதல் அந்த smurf விமானம் விண்ணில் பறக்கத் துவங்கியுள்ளது ! பாருங்களேன் அந்தக் கண்கொள்ளாக் காட்சியை !! இந்தத் தேர்வில் நமது ஆதர்ஷ  smurfs-க்கு ஆதரவாய் இன்டர்நெட் மூலமாய் வோட்டளிக்கும் பெருமை நமக்குமே கிட்டியது ; 'சபக்' என்று ஒரே அமுக்கு பட்டனை !! And அந்த விமானத்தினை பெயிண்ட் செய்யும் அழகை இந்த வீடியோவில் (https://www.youtube.com/watch?v=NPlBD3A2hOM) பார்த்தால் smurfs கட்சியல்லாத நண்பர்களுக்கும் கூட இந்தக் சுட்டுவிரல் மனுஷர்கள் மீது பிரியம் எழக்கூடும் ! ஒரு தேசமே கொண்டாடி, தங்கள் கலாச்சாரத்தின் பெருமிதச் சின்னமாய் அவர்களைப் பார்ப்பதென்பது எத்தனை உயரிய கௌரவம் !!! நாமும் அந்த ரசிகக் கோடிகளில் ஒரு தக்கனூண்டு அங்கமென்பதை எண்ணி காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம் !! 


https://www.youtube.com/watch?v=NPlBD3A2hOM

 டிசைனர் !!

சும்மாவே promotion-களில் ரவுண்ட் கட்டி அடிக்கும் ஜாம்பவான்கள் smurfs படைப்பாளிகள் ; இது ஒரு முக்கிய ஆண்டெனும் போது சும்மா விடுவார்களா ? சீனியரின் சிலை ; smurfs நோட்டுகள் ; நாணயம் ; பொம்மைகள் ; போட்டோ பிரேம்கள் என்று ஏதேதோ போட்டுத் தாக்கி வருகின்றனர் !! Phew....நாமோ இங்கே மதில் மேல் பூனைகளாய்க் குந்தியிருக்கிறோம் எனும் போது மெலிதான சங்கடம் உள்ளுக்குள் !! நம் எல்லோருக்குமே இவர்களைப் பிடித்துப் போய் விட்டிருந்தால் - ஆஹா....?!!  

Back to reality - ஏப்ரல் இதழ்களின் முதல் ரவுண்ட் விமர்சனங்கள் பெரும்பாலும் positive என்பதில் மகிழ்ச்சி ! இங்கு மாத்திரமன்றி, மின்னஞ்சல் மூலமாகவும் நமக்கு இப்போதெல்லாம் விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன !  And இன்னமும் விடாப்பிடியாய்க் கடுதாசி போடும் சில ஆர்வலர்களுமுண்டு ! So  சின்னதாகவோ, நீளமாகவோ குறிப்பிட்ட அந்த 8 வாசகர்களிடமிருந்து ஒவ்வொரு மாதமும் விமர்சனங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன ! அவற்றில் ஒன்றிரண்டில் கொஞ்சம் கோங்குரா காரம் கலந்தே இருக்கும் என்றாலும், பாராட்ட வேண்டியவற்றை 'பச்சக்' எனப் பாராட்டவும் செய்திடுகிறார்கள் !  இங்கே நமது வலைப்பதிவின்கருத்துக்களும், அந்த மின்னஞ்சல் / உள்ளூரஞ்சல் கடிதங்களும் ஒத்துப் போயிருப்பின் - அம்மாதத்து விமர்சனங்கள் bang on target என்று எடுத்துக் கொள்ளலாம் ! And இம்மாதம் சொல்லி வைத்தது போல சகலமும் ஒத்துச் செல்கின்றன !! 

இம்மாதத்து surprise பெரிய இதழ்களல்ல - அந்த குட்டியூண்டு வண்ண TEX இணைப்பு தான் என்பது அப்பட்டம் ! இந்த வீரியம் மிகுந்த சிறுகதைகள்  டெக்சின் ஒரு புதுப் பரிமாணம் என்று சொன்னால் அது hype அல்ல ! இரண்டே இதழ்கள் இதுவரைக்கும் வெளிவந்துள்ளன ; so இதைக் கொண்டே ஒரு தீர்ப்பெழுதுவது jumping the gun என்று தோன்றலாம் தான் ; ஆனால் சில தருணங்களில் பானை முழுசையும் இலையில் கொட்டிக், கபளீகரம் செய்து தான் ருசியைப் பிரகடனம் செய்தாக வேண்டுமென்ற அவசியம் கிடையாது தானே ? "கடைசிப் பலி" - "டிடெக்டிவ் டெக்சின்" இன்னமுமொரு முகமே என்றாலும், இதன் 32 பக்கங்களுக்குக் கிட்டியுள்ள தாக்கம் - "பாலைவனத்தில் புலனாய்வின்" 110 பக்கங்களுக்குக் கிட்டியதை விடவும் கூடுதல் தானே ? ஒரு கதாசிரியர் full form-ல் இருக்கும் போது அவரிடம் டெக்ஸ் போலொரு ஹீரோ ஒப்படைக்கப்பட்டால் பக்க எண்ணிக்கைகள் ஒரு பொருட்டே அவ்வதில்லை போலும் ! இந்தாண்டு காத்துள்ள 4 சிறுகதைகளுமே - இன்னும் வெவ்வேறு பாணிகளில் இருப்பதால் - இந்த கலர் டெக்ஸ் இணைப்பானது, இந்தாண்டின் ஓட்டத்தினில் இன்னும் சில பல பெரியண்ணாக்களையும், மாமாக்களையும் பின்னுக்குத் தள்ளிடும் சாத்தியங்கள் பிரகாசமென்பேன் ! கடுகு...காரம்...என்று புளித்துப் போன உவமைகளை இங்கே பயன்படுத்துவானேன் -காலத்துக்கு ஏற்ற மாதிரி  புதுசாய் ஏதாச்சும் யோசிப்போமா ? பேட்டரி சிறுசானாலும், டாக்டைம் ஜாஸ்தி ? 

"பவளச் சிலை மர்மம்" பற்றிப் பேசுவதாயின், குடுகுடுப்பைக்காரன் அவதார் எடுக்கத் தான் வேண்டிவரும் - simply becos இது ஹிட்டடிக்கும் என்ற ஆரூடம் இந்த இதழின் கலர் கோப்புகளைப் பார்த்த நொடியிலேயே புலனாகிவிட்டது என்பதைச் சொல்லிட வேண்டி வரும் ! இது நீங்களே செய்த மறுபதிப்புத் தேர்வு என்பதாலும், ஆளாளுக்கு அரை டஜன் தபாவாவது படித்திருப்பீர்களென்பதாலும், அங்கே நான் புதிதாய்ச் சொல்லவோ, செய்யவோ அதிகமிராது என்பது புரிந்தது ! மெருகூட்டலுக்கு வாய்ப்பிருக்கும் ஒரே இடம் வண்ண அச்சில் தான் ! பொதுவாய் பிரான்க்கோ-பெல்ஜியக் கதைகளின் அச்சுப் பணிகளுக்கும், (இத்தாலிய) டெக்ஸ் அச்சுப் பணிகளுக்குமிடையே ஒரு மெகா வேறுபாடு இருப்பது வாடிக்கை ! FB படைப்புகளின் லேட்டஸ்ட் கலரிங் பாணிகள் மெர்சலாக்கும் ரகம் - இம்மாத லேடி S கதையில் நாம் பார்த்தது போல் ! அதே சமயம் சற்றே பழைய கதைகளுக்கு சும்மா அடர், பளீர் வர்ணங்களை போட்டுச் சாத்தவும் செய்திருப்பார்கள் ! சிக் பில் கிளாஸிக்ஸ் கூட அதற்கொரு உதாரணம் ! கொலைகாரக் காதலியின் முதலிரண்டு பக்கங்களை பாருங்களேன் - பின்னணிகள் பச்சை ; ப்ளூ என்று அடர் வர்ணங்களில் கண்ணைப் பறிக்கும் ! ஆனால் டெக்சின் கலரிங் பாணிகளிலோ பெரும்பாலும் நீல வானின் பளீர் ப்ளூ ; மின்னும் மஞ்சள் சட்டை என்றிருப்பினும் கண்ணுக்கு ஒரு இதம் தூக்கலாய் இருப்பது போல் எனக்குத் தோன்றும் ! இம்மாத "பளிங்குச் சிலை மர்மம்" டைப்செட்டிங் ஓடிக் கொண்டிருக்கும் போதே, கம்பியூட்டர் screen-களை  எட்டிப் பார்த்த நொடியே தீர்மானித்து விட்டேன் - ஒரு விருந்து காத்துள்ளதென்று ! அதகள ஆக்ஷன் ஒருபக்கம் ; வானவில்லின் ஜாலங்கள் இன்னொரு பக்கமெனும் போது - உங்கள் முகங்களில் சந்தோசம் படர்வதில் வியப்பேது ?

ஒரிஜினலாய் நான் திட்டமிட்டிருந்தது - உங்கள் favorite "ப.சி.ம." மறுப்பதிப்பையும், எனது favorite "சைத்தான் சாம்ராஜ்யம்" மறுப்பதிப்பையும் ஒன்றிணைத்து ஒரு வண்ண குண்டாக்குவதே ! So அதன் பொருட்டு "சை.சாம்." கோப்புகளும் முன்னமே வந்துவிட்டன ! ஆனால் சந்தாத் தொகை எகிறிக் கொண்டே போவதாய்த் தோன்றியதால் - உங்கள் favorite மட்டுமே களம் காண நேரிட்டது ! 

இம்மாதம் ஒரு "கிட் ஆர்டின்" மாதம் என்பதில் mixed reactions இருப்பதை உணர்கிறேன் ! கார்ட்டூன் காதலர்களுக்கு குஷியோ குஷி ; "கார்ட்டூனாஆஆ ??" எனக் கூடிய நண்பர்களுக்கு முகச்சுளிப்பு என்பதில் இரகசியமேது ? இங்கே எனக்கொரு சின்ன கேள்வி ! முன்பெல்லாம் - இந்த genre பிரிப்புகள் ; இத்தனை இதழ்கள் என்றெல்லாம் இல்லாத நாட்களில் முதல் மாதம் டெக்ஸ் வந்திருப்பார் ; அடுத்த மாதம் கறுப்புக் கிழவி ; தொடரும் மாதத்தில் சிக் பில் என்று அட்டவணை இருந்திருக்கும் ! அன்றைக்கெல்லாம் துளி கூட நெருடல்களின்றி கார்ட்டூன்களை அனைவருமே ரசிக்கத் தானே செய்தோம் ? ஆனால் இன்றைக்கு ரசனைகள்வாரியான சந்தாக்கள் என்றான பிற்பாடு - ஆக்ஷன் தவிர்த்த இதர genre-கள் ஒருவித நெளிவை நம்முள் ஒருசாராருக்குக் கொணரும் காரணம் என்னவாக இருக்குமோ ? Confusion .....! 

சிக் பில் க்ளாசிக்ஸ் 2 மறுபதிப்புக் கதைகள் plus 1 புதுக் கதை என்று வந்திருப்பினும், எனக்கு எல்லாமே புதுசாகவே தெரிந்தன ! அந்த (குட்டிக்) கதை # 3 "எல்லாம் இவன் செயல்" தான் இந்த இதழின் best என்னைப் பொறுத்தவரைக்கும் ! வெறும் லெமன் ஜூஸ் குடித்துக் கொண்டே "என்ன ஸ்டெடியா இருக்கேன்னு பார்த்தியா ?" என்று சிலம்பும் கிட் ஆர்டினைப் போலான பார்ட்டிகள் ஒவ்வொரு நட்புவட்டத்திலும் உண்டு தானே ? அப்புறம் இன்னொரு கேள்வியுமே : சிக் பில் க்ளாசிக்ஸ் 3 அடுத்த வருஷத்துக்குத் தேவை என்பீர்களா ? அல்லது ஓராண்டு ப்ரேக் விடல் தேவலை என்பீர்களா ? சி.பி.3 க்கு 'ஜே' போடுவதாயின் - உங்கள் கதைத் தேர்வுகள் எவையாக இருக்குமோ ? 

அப்புறம் "நண்பனுக்கு நாலுகால்" செம breezy read என்று நினைத்தேன் நான் ! 30 பக்கத்தில் முடிக்காது, இதனையும் நார்மலான 44 பக்கங்களில் படைப்பாளிகள் திட்டமிட்டிருப்பின், இன்னுமே கதைக்கு வெயிட் கூடியிருக்குமென்று பட்டது ! And ரொம்பவே நண்டுகளாய் இல்லாது, ஒரு 12 வயது சுமார் பொடுசு உங்கள் வீட்டிலிருப்பின்,இதை படித்துப் பார்க்கச் சொல்லி கொடுங்களேன் - நிச்சயம் ரசிக்குமென்று எனக்குத் தோன்றுகிறது ! ஆர்டினின் அந்த அப்பாவித்தனமும், குடாக்குத்தனமும் யாரையும் சுண்டியிழுத்து விடாதா ? 

Last of the month - லேடி S !!   ஊர் சுற்றுவதைத் தாண்டி அம்மணி எதுவுமே செய்யக்காணோமே என்ற ஆதங்கம் நண்பர்களில் பலருக்கு இருப்பது புரிந்தாலும் - இந்தக் கதையினில் அவரொரு கருவியாய் மாத்திரமே சித்தரிக்கப்பட்டுள்ளதால் அடக்கி வாசித்திருப்பதாய் எனக்குப்பட்டது ! And அந்தச் சித்திரங்கள் ; கலரிங் அற்புதம் ; ஐரோப்பாவினில் நாமும் உலவியது போலான பீலிங்  என்பனவெல்லாம் பாசிட்டிவ்களாய்ப் பட்டன என் கண்களுக்கு ! உங்களின் thoughts ப்ளீஸ் ?

On the road ahead - ட்யுராங்கோவின் எடிட்டிங் பணிகள் ஓடி வருகின்றன ! இந்த விடுமுறை தினத்தில் அதனை முடித்து தொடரவுள்ள வாரத்தில் அச்சுக்குச் செல்ல வேண்டுமென்பது திட்டம் ! அட்டைப்படத்துக்கென பொன்னன் சூப்பராய் 2 டிசைன்களைத் தயார் செய்து தந்துள்ளார் ; அவற்றை இப்போதே கண்ணில் காட்டினால், இதழ் வெளியாகும் வேளைக்குள் பழசாகிப் போய் விட்டதொரு உணர்வு மேலோங்கக்கூடும் என்பதால் கோஷாப் பெண்ணாய் மூடாக்குக்குள்ளேயே தொடரட்டுமே ? இதோ உட்பக்கத்திலிருந்தொரு preview : 
And இதற்கு முன்பான பாகங்களிலிருந்து ஒரு கதைச் சுருக்கம் கோரியிருந்தது மறந்து விட்டதா guys ? யாராச்சும் கொஞ்சம் ஒத்தாசை செய்திடுங்களேன் - ப்ளீஸ் ?

Before I sign off : "ஜம்போ காமிக்ஸ்" சந்தாக்கள் செம விறுவிறு !! ஜூனில் முதல் flight என்பதால் இடைப்பட்ட 60 நாட்களுக்குள் சந்தாக்களை அனுப்பி வைத்து, நீங்களும் takeoff ஆகிடலாமே - ப்ளீஸ் ? And  வழக்கம் போல அன்பின் பிரவாகம் தொடர்கிறது ! நமது அனாமதேய அன்பர் - நண்பர்கள் யுவா கண்ணனுக்கும், கரூர் சரவணன் சாருக்கும் ஜம்போவின் சந்தாவை அன்பளிப்பாக்கியுள்ளார் ! மேற்கொண்டும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! இது தொடர்பாயொரு  சிறுகுறிப்பு மஹாஜனங்களே : நிறைய ஆசை இருப்பினும், நம்மள் கி  அடிமடியின் சுருக்குப் பையின் கனம் ரொம்பவே கம்மி என்பதால் நம்பள் யாருக்கும் சந்தாப் பரிசுகள் வழங்கும் நிலையில் இருக்கிறான் இல்லை ! So முகம்காட்ட விரும்பா ஒரு நண்பரின் தயாளத்தை எனதாகத் தவறாய் எடுத்துக் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் ! 

ஏப்ரலில் விமர்சனங்களும், ஜம்போவின் சந்தாக்களும் தொடரட்டுமே ? Bye all ! See you around ! Wonderful Easter too !!

310 comments:

  1. Replies
    1. விஜயன் சார்,
      இரட்டை வேட்டையர், இரும்புக்கை நார்மன், பெருச்சாளி பட்டாளம்.. இன்னும் பிற ..ஒரு combo வை ஜம்போவில் consider பண்ணுங்க. Thanks.

      Delete
  2. பவளச்சிலை மர்மம் காணக் கிடைக்காத பொக்கிஷம். நன்றி விஜயன் சார்.

    ReplyDelete
  3. Lady s நல்லா தான் இருக்கு...போக போக அதிரடி கூடும் என எதிர்பார்க்கபடுகிறது...

    ReplyDelete
  4. பவளச்சிலை மர்மம் பிரிண்டிங் மற்றும் அதன் வண்ணக்கலவை செம. அட்டகாசமான கதை, முதல் பக்கத்தில் இருந்து கடைசி வரை டெக்ஸ் & கோவின் அதிரடி. புத்தகத்தை தற்போது வரும் டெக்ஸ் புத்தக அளவில் கொடுத்து மிகப்பெரிய ப்ளஸ்.

    இது வரை கருப்பு வெள்ளையில் வந்த இந்த புத்தகத்தை தேடிய நண்பர்களுக்கு இது மிகப்பெரிய பொக்கிஷம். இனி அனைவரும் இந்த வண்ணக் கதையை தேடுவார்கள்.

    இதுபோல் கிளாசிக் மறுபதிப்புகளை தொடர்ந்து எங்களுக்கு கொடுங்கள், பொறுமையுடன் காத்திருப்பேன்(போம்).

    ReplyDelete
    Replies
    1. ஆலங்கட்டி மழை பேய்ஞ்சப்பவே தெரியலியா..

      Delete
  5. பழையதாக இருந்தாலும், கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது என்பதே டெக்ஸ் க்கு பொறுத்தமானது..அட்டகாசமான கதை..குட்டியாய் இருந்தாலும்..மனதை தொட்டது..

    ReplyDelete
  6. வாவ் ஸ்மா்ப்ஸ் 60!!!

    சூப்பா்!!!

    ReplyDelete
    Replies
    1. ////சிக் பில் க்ளாசிக்ஸ் 3 அடுத்த வருஷத்துக்குத் தேவை என்பீர்களா ? ////

      கட்டாயம் தொடர வேண்டும் சாா்!!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  7. ஜம்போ சந்தாவை அன்புப் பரிசாகப் பெற்றிருக்கும் நண்பர்கள் யுவா கண்ணனுக்கும், கரூர் சரவணனுக்கும் எனது வாழ்த்துகள்!!

    அ.அனாமதேயாவுக்கு பாராட்டுகளும், நன்றிகளும்! _/\_

    ReplyDelete
    Replies
    1. ஜம்போ சந்தாவை அன்புப் பரிசாகப் பெற்றிருக்கும் நண்பர்கள் யுவா கண்ணனுக்கும், கரூர் சரவணனுக்கும் எனது வாழ்த்துகள்!!

      அ.அனாமதேயாவுக்கு பாராட்டுகளும், நன்றிகளும்! _/\_

      Delete
    2. அந்த நண்பருக்கு பாராட்டுகளுடன் வாழ்த்துகளும்.

      Delete
    3. வாழ்த்துக்கள் நண்பர்களே...!!!

      பாராட்டுகள் அன்புள்ள அ.நண்பரே...!!

      Delete
    4. நன்றி நண்பர்களே..

      Delete
    5. பரிசளித்த அனாமதேய நண்பருக்கு பாராட்டுக்கள்
      பரிசு பெற்ற நண்பர்களுக்கு
      வாழ்த்துக்கள்

      Delete
    6. ஜம்போ காமிக்ஸ் சந்தாவினை பரிசாக பெற்ற நண்பர்கள் யுவா கண்ணன் சாருக்கும் , கரூர் சரவணன் சாருக்கும் வாழ்த்துக்கள் . அனாமதேய நண்பருக்கு நன்றிகள் .

      Delete
    7. வாழ்த்துகள் யுவா & கரூராரே !!!!

      ஸ்பெசல் நன்றிகள் அ.அனாமதேயா !!!

      Delete
    8. வாழ்த்துகள் யுவா,
      வாழ்த்துகள் சரவணன் ஜி.
      💐💐💐💐💐💐கடா வெட்டு லிஸ்ட் நீண்டு கொண்டே இருக்கே

      Delete
    9. ஜம்போ சந்தாவை அன்புப் பரிசாகப் பெற்றிருக்கும் நண்பர்கள் யுவா கண்ணனுக்கும், கரூர் சரவணனுக்கும் எனது வாழ்த்துகள்!!

      அ.அனாமதேயாவுக்கு பாராட்டுகளும், நன்றிகளும்! _/\_

      Delete
    10. வாழ்ந்துகளோ வாழ்த்துகள் நண்பர்களே ...


      பாராட்டுகளோ பாராட்டுகள் அநாமதேய நண்பரே...:-)

      Delete
    11. பரிசளித்த அனாமதேய நண்பருக்கும், வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் நன்றிகள் பல.._/\_

      Delete
    12. நன்றிகள் அனா...வாழ்த்துகள் நண்பர்களே...அது யாருப்பா ஆடுகளுக்கு மத்தில குள்ளநரி

      Delete
  8. எங்கள் வீட்டுப் பொடியன் இந்த பதிவில் உள்ள சிலையை பார்த்து அந்த ஸ்மர்ப்ஸ் பெயரைச் சரியாகச் சொல்லிவிட்டான்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் பரணி..!!
      ஜூனியர் பரணிக்கு பாராட்டுகள்!!

      இனிமேல், அவரே உங்களுக்கு கதையை சரியாக சொல்லிவிடுவார்னு நினைக்கிறேன்..!:-)

      Delete
    2. இப்போதே அதுதான் நடக்கிறது :-)

      Delete
  9. /// அந்த (குட்டிக்) கதை # 3 "எல்லாம் இவன் செயல்" தான் இந்த இதழின் best என்னைப் பொறுத்தவரைக்கும் !///

    எனக்குமே.!

    கிட் ஆர்டின் க்ளாசிக்ஸ் 2 (சிக்பில் க்ளாசிக்ஸ் 2 )
    எல்லாம் அவன் செயல் :-
    எதேச்சையாக நடந்தாலும் கிட்ஆர்டினின் குறுக்கீடுகளால்தான் டாக்புல் தப்புகிறார்.! ஆனாலும் வழக்கம்போல ஆர்டினுக்கு கிடைப்பது அர்ச்சனைகள் மாத்திரமே.
    டாக்புல்லை போட்டுத்தள்ளுவதற்காக வந்து ஆர்டினிடம் சிக்கி சின்னாபின்னமாகும் அந்த கூலிப்பபடை ஆசாமி கிச்சுகிச்சு மூட்டுகிறார்.!
    எல்லாம் அவன் செயல் - மானிட வாழ்க்கையின் நிதர்சனம் (கதையில் உள்ளதுதான் ஹிஹி ..)

    கொலைகார காதலி :-

    மிஸ் டெய்சியின் காதலில் மயங்கி, வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக பொய் சாட்சி சொல்லும் ஆர்டினின் முகபாவத்தை வரைந்திருக்கும் ஓவியருக்கு ஒரு சபாஷ்.! ஆனால் அடுத்த பேனலிலேயே தன் தவறை உணர்ந்து கதறி அழும் ஆர்டினைப்பார்த்ததும் ஐ எவர் லவ் யூ கிட் ஆர்டின் என மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.!
    ஆர்டினின் அப்பாவித்தனத்தை சிக்பில் பயண்படுத்தும் அந்த க்ளைமாக்ஸ் பாக்சிங் செம்ம காமெடி.!
    கொலைகார காதலி -கிட் ஆர்டின்

    விசித்திர ஹீரோ - ஹாஹாஹா ..! ஏற்கனவே எண்ணற்ற முறைகள் படித்திருந்தாலும் மாண்டனா கிட்டை கலரில் தரிசித்தது நிச்சயம் ஒரு சுகானுபமே! தலையில் அடிபட்டதால் அம்மாஞ்சி கிட் ஆர்டின் அதிரடபுதிரடி மாண்டனா கிட் அவதாரம் எடுத்து போக்கிரிகளுக்கு சிம்மசொப்பனமாகிவிடுகிறார்.!
    பரிசு என்று நினைத்து தண்டனையாய் பெற்ற கன்ஸ்மோக் சிடியை மாண்டனா கிட் பராமரிக்கும் அழகிருக்கே..அடாஅடா ..!! அதுவும் இருக்கும் ஒற்றை மனிதனிடம் வரி என்ற பெயரில் அவன் வைத்திருக்கும் பன்றியையும் வசூல் செய்வது ஹிஹி எதையோ ஞாபகப்படுத்துகிறது.!! வில்லனுடன் மோதிக்கொண்டிருக்கும் ஏடாகூடமான நேரத்தில் டாக்டரின் வைத்தியத்தால் மாண்டனா கிட், கிட் ஆர்டினாக மாறிவிட நடப்பதை கதையைப்படித்து தெரிந்துகொள்ளுங்களேன்.!
    விசித்திர ஹீரோ - மாண்டனா கிட்.

    சிக்பில் க்ளாசிக்ஸ் 10/10

    ReplyDelete
  10. பழையதாக இருந்தாலும், கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது என்பதே டெக்ஸ் க்கு பொறுத்தமானது..அட்டகாசமான கதை..குட்டியாய் இருந்தாலும்..மனதை தொட்டது..

    ReplyDelete
  11. ///"பவளச் சிலை மர்மம்" பற்றிப் பேசுவதாயின், குடுகுடுப்பைக்காரன் அவதார் எடுக்கத் தான் வேண்டிவரும்///

    ////"பளிங்குச் சிலை மர்மம்" டைப்செட்டிங் ஓடிக் கொண்டிருக்கும் போதே, கம்பியூட்டர் screen-களை எட்டிப் பார்த்த நொடியே தீர்மானித்து விட்டேன் - ஒரு விருந்து காத்துள்ளதென்று ! ///

    ஆசிரியர் சார் @ 1986 கோடைமலர்ல் இந்த சிலை கதைக்கு வந்த விளம்பரத்தில் தங்கச்சிலை மர்மம் என உள்ளது.

    பிற்பாடு வந்த ஏதோ ஒரு பழைய இதழில் பளிங்கு சிலை மர்மம் என இருந்தது. இதழ் வரும்போது பவளச்சிலை மர்மம் மாக மாறியது. இன்னும் அந்த பெயர் குழப்பம் தீரவில்லை... இந்த பதிவிலேயே இரு இடங்களில் இரு பெயர்களையும் உபயோகித்து உள்ளீர்கள்.

    ஏதாவது ஒன்றை ஃபைனல் பண்ணுங்க சார்...ஹி...ஹி..

    ReplyDelete
  12. // //சிக் பில் க்ளாசிக்ஸ் 3 அடுத்த வருஷத்துக்குத் தேவை என்பீர்களா ? //

    இன்னும் ஒரு வருடம் மட்டும் போதும் சார். அதன் பின்னர் இன்னும் பழைய கிளாசிக் காமெடி கதைகளை வெளியிட வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ///அதன் பின்னர் இன்னும் பழைய கிளாசிக் காமெடி கதைகளை வெளியிட வேண்டுகிறேன்.///

      அதான் சந்தா D யில வந்துட்டு இருக்கே பரணி.!

      மும்மூர்த்தி + ஸ்பைடர் :-)

      Delete
    2. ////அதான் சந்தா D யில வந்துட்டு இருக்கே பரணி.!

      மும்மூர்த்தி + ஸ்பைடர் :-)////

      😂😂😂😂😂😂

      Delete
  13. ///நீலப் பொடியர்களின் 60-வது பிறந்தநாள் வருஷமிது !//--- ஹேப்பி பர்த்டே டூ ப்ளூ பொடியன்ஸ்...🎈🎈🎈🎈🍭🍭🍭🍭🍭🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰

    ReplyDelete
  14. ///ஒரிஜினலாய் நான் திட்டமிட்டிருந்தது - உங்கள் favorite "ப.சி.ம." மறுப்பதிப்பையும், எனது favorite "சைத்தான் சாம்ராஜ்யம்" மறுப்பதிப்பையும் ஒன்றிணைத்து ஒரு வண்ண குண்டாக்குவதே ! So அதன் பொருட்டு "சை.சாம்." கோப்புகளும் முன்னமே வந்துவிட்டன ! ஆனால் சந்தாத் தொகை எகிறிக் கொண்டே போவதாய்த் தோன்றியதால் - உங்கள் favorite மட்டுமே களம் காண நேரிட்டது !///--- வடை போச்சே...!!!

    ReplyDelete
    Replies
    1. வடை போனா போகட்டும் Pizza வை கேட்போம்.

      Delete
  15. ///சிக் பில் க்ளாசிக்ஸ் 3 அடுத்த வருஷத்துக்குத் தேவை என்பீர்களா ? ///

    டெபனட்லீ டெபனட்லீ

    ///சி.பி.3 க்கு 'ஜே' போடுவதாயின் - உங்கள் கதைத் தேர்வுகள் எவையாக இருக்குமோ ? ///

    நீண்டநாள் கோரிக்கையைத் திரும்பவும் வைக்கிறேன்.!

    தலைவாங்கும் தேசம்
    மிஸ்டர் மஹாராஜா
    மலையோடு மல்யுத்தம்

    மூன்று கதைகளையும் இணைத்தால் சிக்பில் க்ளாசிக்ஸ் 3 பிரமாதப்படுத்திவிடும் என்பது சிறியேனின் எளிய கருத்தாகும்.!

    இல்லையென்றாலும்
    நீலப்பேய் மர்மம்
    தேவை ஒரு மொட்டை
    தேடிவந்த தங்கச்சுரங்கம்
    ஆர்டின் மரணம்

    என நிறைய இருக்கின்றன.!

    ReplyDelete
    Replies
    1. "அதிரடி மன்னன் "---இதுவும் இருக்கு என் ஃபேவரைட்ல..

      Delete
    2. எத வேணாலும் போடுங்க சாா்!

      எதுனாலும் ஒரே கெக்கபெக்க தானே!!

      😂😂😂

      Delete
    3. அதுவும் சரிதான் 😝😝😝😝

      Delete
    4. ரவிகண்ணன் அவர்களே முதலில் உள்ள கதைகள் பலரிடம் இருப்பவையாக இருக்கும் .

      இரண்டாவதில் சொன்ன வரிசை தான் சிறப்பு ..அதுவே சூப்பர் க்ளாசிக்ஸ் .


      ஆங்..மறந்துட்டனே..

      அடுத்தவருடம் சிக்பில் க்ளாசிக் எனக்கும் ஓகே சார்..:-)

      Delete
  16. அனைவருக்கும் வணக்கம். எடுட்டர் சார்.சைத்தான் சாம்ராஜ்யம் வெளியிட முடியலனு வருத்தப்படாதிங்க. சை.சா உடன் வைக்கிங் தீவு மர்மம் சேர்த்து குண்டு புக்கா போட்டா சரியாகி விடும். ஏப்ரல் மாதம் போடாட்டிகூட பரவாயில்லை. மே மாதம் வெளியிட்டா கூட போதும்.

    ReplyDelete
    Replies
    1. // சை.சா உடன் வைக்கிங் தீவு மர்மம் சேர்த்து குண்டு புக்கா போட்டா சரியாகி விடும் //
      +10001

      Delete
    2. நல்ல ஐடியா ...எப்ப வெளியிட்டாலும் சை.சாம்ராஜ்யம் ,வை.தீவு இணைந்து வெளியிட்டால் அருமை சார்..

      Delete
    3. ஆமாம்.அ௫மையான ஐடியா!
      நீங்கள் செய்வீர்களா ஆசிரியர் சார், நீங்கள் செய்வீர்களா?

      Delete
  17. ////Last of the month - லேடி S !! ஊர் சுற்றுவதைத் தாண்டி அம்மணி எதுவுமே செய்யக்காணோமே என்ற ஆதங்கம் நண்பர்களில் பலருக்கு இருப்பது புரிந்தாலும் - இந்தக் கதையினில் அவரொரு கருவியாய் மாத்திரமே சித்தரிக்கப்பட்டுள்ளதால் அடக்கி வாசித்திருப்பதாய் எனக்குப்பட்டது ! And அந்தச் சித்திரங்கள் ; கலரிங் அற்புதம் ; ஐரோப்பாவினில் நாமும் உலவியது போலான பீலிங் என்பனவெல்லாம் பாசிட்டிவ்களாய்ப் பட்டன என் கண்களுக்கு ! உங்களின் thoughts ப்ளீஸ்////

    லேடி S

    சமீபத்திய புதுவரவுகளில் எனக்கு மிகவும் பிடித்த தொடரிது!!

    இக்கதையில் CATRIG என்னும் ரிட்டயா்டு பாா்ட்டிகளின் அமைப்பிற்குத் தான் இனி வரும் காலத்தில் லேடி S பணியாற்றப் போகிறாா் என்பதை காட்டவே ஒரு கதையை படைத்திருக்கிறாா் படைப்பாளி என்பதே என் எண்ணம்!!

    இத்தொடா் இப்போது தான் ஒரு தெளிவான பாதைக்கு வந்திருக்கிறது!!

    இதுவரை வந்த நான்கு கதைகளுமே தொடா்ந்து வரவிருக்கும் கதைகளுக்கான முன்னோட்டம் தான்!!

    தொடரும் கதைகளில் லேடி S ன் அதிரடியை நிச்சயமாக எதிா்பாா்க்கலாம்!

    அப்புறம் நீங்கள் குறிப்பிட்டது போல ஐரோப்பாவை சுற்றிப்பாா்த்த அனுபவத்தை தாராளமாகவே வழங்கியிருக்கிறது!!

    அமொிக்காவின் வறண்ட பாலைவனத்தையும், கௌபாய்களையுமே பாா்த்த கண்களுக்கு ஒரு சிறந்த மாற்றாகவே லேடி S உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ///
      தொடரும் கதைகளில் லேடி S ன் அதிரடியை நிச்சயமாக எதிா்பாா்க்கலாம்!///

      இன்னும் படிக்கவில்லை.!
      நாளைய பொழுதுக்கு துணை மச்சகண்ணி ஷானியாதான். ..!!

      Delete
    2. உண்மை நண்பரே...

      லார்கோ ஒரே சாகஸத்தில் அறிமுகம் எனில் லேடி இதுவரை ...:-)

      Delete
    3. //அமொிக்காவின் வறண்ட பாலைவனத்தையும், கௌபாய்களையுமே பாா்த்த கண்களுக்கு ஒரு சிறந்த மாற்றாகவே லேடி S உள்ளது.//

      Yup !!

      Delete
  18. நீள பொடியர்களுக்கு வாழ்த்துக்கள். சிக் பில் கிளாசிக்ஸ் கண்டுப்பாக வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ல மாறிப் போச்சே

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  19. ஸ்மர்ஃப் படைப்பாளிகளும், அந்நாட்டு மக்களும் 60வது ஆண்டை கொண்டாடும் விதங்களைப் பார்த்துப் பெருமூச்சே வருகிறது!! இன்னும் எத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்தியா ( குறைஞ்சபட்சம் தமிழ்நாடாவது) இப்படி மாறும் என யாராவது கணித்துச் சொல்லுங்களேன் ப்ளீஸ்?

    ஆரம்ப காலங்களில் வெளியான சிக்பில் கதைகளில் பெரும்பாலானவை என்னிடம் இல்லையென்பதால் அடுத்தவருடம் 'சி.பி க்ளாசிக்' வந்தால் மகிழ்ச்சியே!! இல்லாவிட்டாலும் அந்த ஸ்லாட்டில் இதுவரை வெளிவராத புது சிக்பில் கதைகள் வெளியானாலும் சந்தோசமே!! ஐ லவ் கார்ட்டூன்ஸ்!! மனதை இலகுவாக மாற்ற/வைத்துக் கொள்ள மிக எளிய வழி - கார்ட்டூன்களைப் படிப்பதே!!

    ஜம்போ சந்தா விவரங்கள் நல்லதொரு ஏறுமுகத்திலிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!! ஏப்ரல் முதல் வாரத்தில் (சம்பளம் வாங்கிய பிறகு) ஜம்போ சந்தாவைச் செலுத்தத் திட்டமிட்டிருப்பதாக நண்பர்களில் பலரும் தெரிவித்துள்ளனர். எனவே இது அடுத்த வாரங்களில் மேலும் விறுவிறுப்பாகும் என்று கணிக்கமுடிகிறது!!

    'கோடை மலர்' ட்யூராங்கோ இப்பொழுது ஒரு அதிர்வலையை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டார்!! அடுத்த மாதம் டெக்ஸ் இல்லாத குறையை ட்யூராங்கோ தீர்த்து வைப்பார் என உறுதியாக நம்புகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ///எத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்தியா ( குறைஞ்சபட்சம் தமிழ்நாடாவது) இப்படி மாறும் என யாராவது கணித்துச் சொல்லுங்களேன் ப்ளீஸ்?///

      பிப்ரவரி முப்பது
      பிப்ரவரி முப்பது

      Delete
    2. ///பிப்ரவரி முப்பது
      பிப்ரவரி முப்பது///

      அடடா!! ஜஸ்ட் ஒரு மாசத்துல மிஸ் பண்ணிட்டேனே!!!

      Delete
    3. காமிக்ஸ்கள் அவர்களுக்கு ஒரு பெருமித அடையாளம் !! டின்டின் ஆரம்பித்து வைத்த பாரம்பரியம் !!

      பிரஸ்ஸல்ஸ் நகரின் வீதிகளின் கட்டிடங்களின் மெகா சுவர்களில் லியனார்டோ தாத்தாவின் சித்திரங்களை பார்க்க முடியும் ; தோர்கல் கண்ணில் படுவார் ; ரிப்போர்ட்டர் ஜானியைக் காண இயலும் ; ஆஸ்டெரிக்ஸ் & co அதகளம் செய்வார்கள் ; லக்கியும் , ரின்டின் கேனும் உண்டு ; சுஸ்கி & விஸ்கி நிற்பார்கள் ; XIII காட்சி தருவார் !!

      காமிக்ஸ் - வாழ்க்கையின் ஒரு இன்றியமையாப் பங்கு அங்கே !!

      Delete
  20. ///சீனியரின் சிலை ; smurfs நோட்டுகள் ; நாணயம் ; பொம்மைகள் ; போட்டோ பிரேம்கள் என்று ஏதேதோ போட்டுத் தாக்கி வருகின்றனர் !! Phew....நாமோ இங்கே மதில் மேல் பூனைகளாய்க் குந்தியிருக்கிறோம் எனும் போது மெலிதான சங்கடம் உள்ளுக்குள் !! நம் எல்லோருக்குமே இவர்களைப் பிடித்துப் போய் விட்டிருந்தால் - ஆஹா....?!! ///

    முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல, முதலில் பிடிக்கவில்லை என்று மனதுக்குள் ஆழமாய் பதிந்துவிட்டபடியால், ஸ்மர்ஃப் கதைகளை அணுகும்போதே ..ம்ஹூம் ..இது நமக்கு செட்டாகாது என்ற எண்ணத்துடனேயே உள்ளே நுழைகிறார்கள் என்று நினைக்கிறேன்.!
    எல்லாக் கோட்டையும் அழிச்சிட்டு, கொஞ்சமே கொஞ்சம் ஈடுபாட்டோடடு அந்த குட்டிமனிதர்களின் முகபாவங்களையும். அழகையும், கதைகளில் நூலோடும் பகடியையும் கவனித்துத்தான் பாருங்களேன் ..ப்ளீஸ். .!!
    மனதை லேசாக்கும் வல்லமை கொண்டதொரு அற்புதத் தொடரை இழந்துவிட வேண்டாமே நண்பர்களே ..!!

    ReplyDelete
    Replies
    1. ////மனதை லேசாக்கும் வல்லமை கொண்டதொரு அற்புதத் தொடரை இழந்துவிட வேண்டாமே நண்பர்களே ..!!////

      ஸ்மா்ப்ஸை இழந்துவிட்டால் தமிழ் காா்ட்டூனுக்கு பேரிழப்பு தான்!!

      எனக்கென்னவோ ஸ்மா்ப்ஸ் படிக்கும் போதெல்லாம் நமது எடிட்டா் சாா் சீனியா் ஸ்மா்ப்பாகவும், நாமெல்லாம் பொடி ஸ்மா்ப்பாகவுமே தோன்றும் ஹிஹிஹி...

      நமது வட்டத்துக்குள்ளேயே ஜீனியஸ் ஸ்மா்ப், பக்கி ஸ்மா்ப், புடிக்காது ஸ்மா்ப், ஜால்ரா ஸ்மா்ப், ஆப்போசிட் ஸ்மா்ப்னு எத்தனை வகையறாவா இருக்கோம்!!

      Delete
    2. //எனக்கென்னவோ ஸ்மா்ப்ஸ் படிக்கும் போதெல்லாம் நமது எடிட்டா் சாா் சீனியா் ஸ்மா்ப்பாகவும், நாமெல்லாம் பொடி ஸ்மா்ப்பாகவுமே தோன்றும் ஹிஹிஹி..//

      மைண்ட்வாய்ஸ் : அடுத்த தபா டை அடிக்கிறச்சே ஒரு கோட்டிங் ஜாஸ்தியா ஏத்திடு கைபுள்ளே !!

      Delete
  21. sir ,

    Ratha padalam online booking link share pannunga :)

    ReplyDelete
    Replies
    1. http://lioncomics.in/xiii-rathap-padalam/429-pre-booking-for-xiii-the-complete-collection-in-color-tamil-nadu.html

      Delete
    2. Nandri ... Rathapadalam and Jumbo comics irandaiyum book panni achu :)

      Delete
    3. நல்லது சரவணன். இரத்தப்படலம் மற்றோரு காபி புக்கிங் ஆனது மகிழ்ச்சி.
      ஜம்போவுக்கும் கட்டிவிட்டீர்களா! இரட்டிப்பு மகிழ்ச்சி.
      உங்களுக்கு உதவ முடிந்ததற்கு மெல்லிய திருப்தி.

      Delete
  22. என்னவோ தெரியலை... எவ்வளவுதான் முயற்சி பண்ணாலும் மேலே எடிட்டர் போட்டிருக்கும் ஃபோட்டோக்களை திரும்பத் திரும்ப பார்க்காம இருக்கமுடியலை!! குறிப்பா அந்த நாலாவது படத்தை!! ஹிஹி!

    மனிதர்கள் போடும் டிசைனை ஒருபக்கம் விட்டுத்தள்ளுங்க மக்களே; கடவுள் போடும் டிசைனே டிசைன் தான்!!

    ReplyDelete
    Replies
    1. நாலாவது டிசைனை நானூறுவாட்டி பாா்த்தவா் தான்

      கிட் ஆா்டின் + உம்மாவை அட்டையிலே வேண்டாம்னு சொன்னவரோ??!!

      Delete
    2. இதைத் தான் "கலைக்கண்" என்பார்களோ ?

      Delete
    3. Thangalukku aeroplane pommai padam romba pdithirukkuthu pola Sagotharare 😝

      Delete
  23. எல்லாம் ரைட்டு

    ஏப்ரல் 1 க்கு புது புத்தகங்கள் அனுப்பியாச்சுங்களா சாா்!

    அதை மாறந்துறாதீங்க!!??

    😇😇😇🤔🤔🤔

    ReplyDelete
    Replies
    1. காலையிலேயே அனுப்பி,எல்லார் வீட்டிலும் பட்டுவாடாவும் ஆகி விட்டதே சார் ? நீங்கள் வீட்டில் இல்லியோ ?

      Delete
  24. ஞாயிறு வணக்கம் ஆசிரியரே

    ReplyDelete
  25. Replies
    1. நண்பகல் வணக்கங்கள் சார் !

      Delete
  26. கண்டிப்பாக சிக்பில் இல்லை இல்லை
    டாக்புல் &ஆர்ட்டின் கிளாசிக் 3
    வேண்டும்
    எனது தேர்வுகள்
    1.தேவை ஒரு மொட்டை
    2.ஆர்டடின் மரணம்

    ReplyDelete
  27. ஹாப்பி பர்த் டே
    ஸ்மர்ப்ஸ்

    ReplyDelete
  28. //நம் எல்லோருக்குமே இவர்களை பிடித்துப் போயிருந்தால். ஆஹா//
    நம் எல்லோருக்குமே பிடித்த Lady S இந்த மாதம் சாகஸம் எதுவும் புரியவில்லை. பூமிக்கொரு போலிஸ்காரன் இதழின் வெற்றிக்கான காரணங்கள் அனைத்தும் படைப்பாளிகளின் சாகஸங்கள் மட்டுமே.
    நீலப்பொடியர்கள் அப்படியில்லை. அனைத்து கதைகளிலும் சாகஸங்கள் புரிந்து கொண்டுதான் வருகின்றனர். யார்யாரை எங்கே வைக்கவேண்டும் என்பதில் அயல்நாட்டவர்கள் தெளிவாக உள்ளார்கள்.
    மற்றபடி Lady S இதழ் படைப்பு அற்புதமே!

    ReplyDelete
  29. மயிலு மயிலுதான். வான்கோழி வான்கோழிதான்.

    ReplyDelete
  30. ஸ்மர்ப்;
    அசாத்தியமான கற்பனை படைப்பு என்பதில் இரு கருத்துக்கள் இல்லை.சின்னஞ்சிறு சிறு குழந்தைகளுக்காக அடுத்த தலைமுறையினரின் வளத்தை குறித்து கருத்தோடு உருவகப்படுத்த பட்ட முற்றிலும் ஓர் புதிய உலகம்.திரைத்துறையில் ஜேம்ஸ் கேம்ரூன் உருவகப்படுத்திய "அவதார்" ஓர் அசாத்திய கற்பனை.பூமிக்கு மட்டுமே வரும் வேற்று கிரக வாசிகளை ஓரமாக ஒதுக்கி விட்டு;மனிதர்கள் தங்களுக்கான புதிய வாய்ப்புகளைத் தேடி முற்றிலும் மாறுபட்ட புதியதோர் கிரகங்களில் நுழையும் போது இரு தரப்பினரும் எதிர் கொள்ளும் சவால்களை புனைந்திருக்கும் கற்பனையின் உச்சம்.உலக அரசியலின் தலைமை பீடமாக,மனித குலம் தழைத்திருக்கும் உயிர்கோளுக்கு பாதுகாவலர்களாக இருக்கும் இங்கிலாந்தின் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாப்கின்ஸ் சிந்தனையும் இது குறித்ததாகவே இருந்தது.மனிதர்கள் தங்களுக்கு தாங்களே ஏற்படுத்தி கொள்ள கூடிய தொடர்ச்சியான அடுத்தடுத்த சவால்கள் மூலம் இந்த பூமியில் ஜீவித்திருக்க முடியாது.எதிர்காலத்தில் ஏதோ ஓர் தினத்தில் மனித இனம் திக்கற்ற திசையில் பயணித்து,பூமியை விடவும் சவாலான ஓர் சூழலில் வாழும் நிலைவரும்.நாம் வசிக்கும் இந்த உயிர்கோள் ஓர்நாள் கைவிடப்படும்.நவீன அறிவியல் வளர்சியில் மேலோங்கிய மேற்கத்திய நாடுகள் இதற்கான கால அவகாசத்தை குறைந்த பட்சமாகவோ,அதிகபட்சமாகவோ இன்னும் நூறு ஆண்டுகளை நிர்ணயித்துள்ளது.
    மெய்ஞானத்தில் உயர்ந்த கீழை நாடுகளும் இதே சிந்தனையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகுக்கு கொடையாக அளித்துள்ளது.
    இந்து மதத்தில் வழிபாட்டுக்கு பிறகு வழங்கப்படும் திருநீற்றின் மெய்பொருள்,இறுதியில் எஞ்சி நிற்பது சாம்பல் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது.உலகம் எதனால் அழியும் என்பதையும் வழிபாட்டு தத்துவத்தின் மூலமே குறிப்பால் உணத்தி இருக்கிறது.கல்லில் செய்யப்பட்ட கடவுள் சிற்பத்தின் முன் இடமிருந்து வலமாக நீள் வட்டத்தில் காட்டப்படும் தீப ஆராதனையின் மொய்ப் பொருள் இதை குறித்தது.அதில் ஒளிவிடும் தீபம்(அணையும்போது) சர்வமும் அடங்கி சூன்யத்தில் நிலவும் மயான அமைதி அடையும்.சூரியனின் எரிதிறனும் ஓர் நாள் எரிந்து தீர்ந்து விடும்.கற்பூரம் எரிவதற்கும் ,சூரியனின் எரி திறனுக்கும் ஆன மூலப் பொருள்.ஒன்றே. அதனால் வழிபாட்டுக்கு அதை பயன்படுத்தினர்.
    பாரத தேசம் உலகிலேயே அதிக யுத்தங்களை சந்தித்த மண்.பிற தேசங்களை ஆள்வதற்காக இங்கு இருந்து எந்த அரசர்களும் மாற்றார் மீது படையெடுக்கவில்லை.தங்கள் வளங்களை பாதுகாத்துக்கொள்ள மட்டுமே போர் செய்தனர். இந்த தேசம் முழுவதுமே கோவில்களை எழுப்பி மெய்ஞான நெறிகளில் வாழ்ந்தவர்கள்.இசை,நடனம்,சிற்பம் போன்ற கலைத்திறன்களை மேம்படுத்திக் கொண்டு மகத்தான வாழ்வை வாழ்ந்த மாமனிதர்கள்.
    மேலும் வளரும்.....

    ReplyDelete
    Replies
    1. ப்பா!! அருமை அருமை!!

      Delete
    2. சிறப்பான கருத்துக்கள்.

      Delete
    3. அட்டகாசம் ஸ்ரீ...

      அருமையான கருத்துக்கள்...

      தொடருங்கள்; தொடருவோம்...

      Delete
    4. //.சின்னஞ்சிறு சிறு குழந்தைகளுக்காக அடுத்த தலைமுறையினரின் வளத்தை குறித்து கருத்தோடு உருவகப்படுத்த பட்ட முற்றிலும் ஓர் புதிய உலகம்//

      SMURFS கதைகளுக்கு சிறார் / பெரியவர்கள் என்ற பாகுபாடுகளெல்லாம் அவசியமென்று சொல்ல மாட்டேன் சார் ! வளரும் பருவத்தில் இதனில் சில அழகுகள் கண்ணில் படலாம் ; வளர்ந்த பிராயத்தில் வேறு சில !! Universal appeal கொண்ட கதைகளல்லவா இவை ?

      Delete
    5. அருமையான கருத்துகள் &சிந்தனைகள்.

      Delete
  31. //கார்ட்டூன்களை அனைவருமே ரசிக்கத் தானே செய்தோம் ? ஆனால் இன்றைக்கு ரசனைகள்வாரியான சந்தாக்கள் என்றான பிற்பாடு - ஆக்ஷன் தவிர்த்த இதர genre-கள் ஒருவித நெளிவை நம்முள் ஒருசாராருக்குக் கொணரும் காரணம் என்னவாக இருக்குமோ?//

    Sorry Sir and friends. வயசாயிடுச்சோ என்னவோ தெரியவில்லை.. எனக்கு கார்ட்டூன் கதைகள் எவ்வளவு மெனெகெட்டாலும் துளி சிரிப்பு நஹி..

    ReplyDelete
  32. டாக் புல், கிட் ஆர்டின் கலாட்டா அடுத்த வருடமும் தொடரட்டும். ஜம்போ மாதிரியான வழிமுறையில் வித விதமான கார்ட்டூன் மற்றும் டெக்ஸ் கதைகள் மறுபதிப்புகளாக தொடர முடிந்தால் நல்லதே.

    ReplyDelete
    Replies
    1. மூன்றும் முத்தான கருத்துக்கள்.
      மூன்றுக்கும்+3000....

      Delete
  33. ஜம்போ மாதிரியான வழிமுறையில் வித விதமான டெக்ஸ் கதைகள் மறுபதிப்புகளாக தொடர முடிந்தால் நல்லதே.

    ReplyDelete
    Replies
    1. ஜம்போவில் இளம் டெக்ஸ் மாத்திரமே சார் !

      Delete
    2. Super sir.
      டெக்ஸோட பயோகிராபி அந்த காலத்து ஜியோகிராபியோட ஆகா நினைக்கவே அள்ளுது.

      Delete
  34. //ஒரிஜினலாய் நான் திட்டமிட்டிருந்தது - உங்கள் favorite "ப.சி.ம." மறுப்பதிப்பையும், எனது favorite "சைத்தான் சாம்ராஜ்யம்" மறுப்பதிப்பையும் ஒன்றிணைத்து ஒரு வண்ண குண்டாக்குவதே !//
    அடராமா இது என்ன கொடுமை குண்டு புக் எடிட்டர் எப்படி போடுவார் என ஏங்கிட்டு இருக்கோம் இவரோ மனதில் அப்படி ஒரு நினைப்பை வைத்து கொண்டு நடைமுறை படுத்தாமல் விட்டு விட்டாரே......ஏழு குண்டலவாடா இது உனக்கே தகுமா...

    ReplyDelete
    Replies
    1. மறுபதிப்புகளுக்கு இன்றைக்கில்லாது போனால் நாளைக்கு வாய்ப்புத் தந்து கொள்ளலாமே சார் ? எங்கே போய் விடப் போகின்றன ?

      Delete
  35. // நமது நீலப் பொடியர்களின் 60-வது பிறந்தநாள் வருஷமிது. //
    வாழ்த்துக்கள் நீலப் பொடியர்களே.
    அழுத்தம் நிறைந்த வாழ்வியல் சூழலை,அவ்வப்போது வந்து இனிமையாக்கி விட்டு செல்லும் பொடியர்களை மீண்டும் சந்திப்போம் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  36. ///சிக் பில் க்ளாசிக்ஸ் 3 அடுத்த வருஷத்துக்குத் தேவை என்பீர்களா ? ///
    கண்டிப்பாக அவசியம் சார்,நிறைய நல்ல கதைகள் இருக்கு அதை வண்ணத்தில் தரிசிக்கும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை,மேலும் சிக்பில்லின் பழைய கதைகள் நிறைய இல்லை,அதனால் எக்காரணம் கொண்டும் சிக்பில் கிளாசிக்கை நிறுத்த வேண்டாம் சார்,நல்ல கதைகள் முடியும் வரை போட்டுத் தாக்குங்க,அது மட்டுமில்லாமல் விற்பனையிலும் சிக்பில் நல்லாத்தானே போய்கிட்டு இருக்காரு.

    ReplyDelete
  37. அப்படியே அந்த ஜம்போ காமிக்ஸில் வேதாளனையும் அவன் ஜூம்போவையும் கொண்டுவந்தால் காமிக்ஸ் தலைப்புக்கு பொருத்தமாக இருக்கும்..

    ReplyDelete
  38. அதுக்குள்ளயா இத்தன கமெண்டு

    ReplyDelete
  39. // ஒரு தேசமே கொண்டாடி, தங்கள் கலாச்சாரத்தின் பெருமிதச் சின்னமாய் அவர்களைப் பார்ப்பதென்பது எத்தனை உயரிய கௌரவம் !!! நாமும் அந்த ரசிகக் கோடிகளில் ஒரு தக்கனூண்டு அங்கமென்பதை எண்ணி காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம் !! //
    நமது வாசகர்கள் ஒரு காலத்தில் மனம் மாறி பெரும்பாலனோர் ஸ்மர்ப்ஸ் ரசிக்கும் மனநிலைக்கு வந்து விட்டால் அதைக் கொண்டாடும் விதமாகவும்,நீலப் பொடியர்களை கவுரவிக்கும் விதத்தில் ஒரு குண்டு புக் ஹார்ட் பைண்டில் போட வேண்டும் என்பது எனது ஆசை.

    ReplyDelete
    Replies
    1. ////நீலப் பொடியர்களை கவுரவிக்கும் விதத்தில் ஒரு குண்டு புக் ஹார்ட் பைண்டில் போட வேண்டும் என்பது எனது ஆசை.//

      +111111

      Delete
    2. சிங்கிள் டீக்கு லாட்டரி அடிக்கும் வேளையில் லஞ்ச் at Hyatt என்று எதிர்பார்க்கலாமா நண்பர்களே ?

      Delete
    3. நீல பொடியர்கள் குண்டு புக்?...
      சாமீ..exit எந்தப் பக்கம்?.. தல தெரிக்க ஓடு..ஓடு...

      Delete
    4. "நீலப் பொடியார்கள் விக்கலே" - என்பதில் ஓரளவு உண்மை இருக்கலாம் - ஆனால் கண்காட்சி positioning வைத்து பார்த்த போது (CBF), நீலப் பொடியார்கள் தூரத்தில் இருந்த rackகளில் எடுக்கப்பட்டிருந்தது. ஸ்டால் enter ஆனவுடன் இருந்த மேஜைகளில் லக்கி லுக், Tex ஆகியவையே அதிகம் இருந்தது.


      சிறுவர்களை சட்டென்று சுண்டி இழுக்க வேண்டுமெனில் Smurfs and Benny முன்னெடுக்குகளில் இருத்தல் அவசியம். மற்றும் அதற்கான பிரத்யோக போஸ்டர்கள் அவசியமே. பிளஸ் சுட்டி லக்கி - not main line Lucky Luke albums.

      சிறுவர்கள் கேட்கும் போது லக்கி லூக் எடுத்து நீட்டப்படுத்தல் கூடாது - simply because லக்கி கதைகள் are not for kids - especially first timers. அவர்கள் கை செல்லும் அருகாமையில் Smurfs and Benny இருத்தல் வேண்டும்.


      Note : இதெல்லாம் இவ்வருட கண்காட்சியில் இருநாட்கள் நான் கண்டவை.

      முக்கிய விஷயம் என்னவெனில் என் அப்பா, சித்தப்பா, மாமாக்கள் வாங்கிக் கொடுத்து நான் காமிக்ஸ் படிக்க ஆரம்பிக்கவில்லை. அவர்களில் ஒரே ஒரு அம்மான் தவிர மற்றவர்கள் திறந்து கூட பார்த்ததில்லை. எனவே நாம்தான் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. Smurfs and Benny டார்கெட் செய்து சிறார்களுக்கான விளம்பரங்கள் செய்து பார்க்கலாம் - லேபிள், டைம் டேபிள் இப்படி கூட. [Not those "படியுங்கள் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் .. கோபால் பல்பொடி type விளம்பரம்ஸ் ;-) :-p ஹி ! ஹி !! ஹி !!] ....

      Delete
  40. // Back to reality - ஏப்ரல் இதழ்களின் முதல் ரவுண்ட் விமர்சனங்கள் பெரும்பாலும் positive என்பதில் மகிழ்ச்சி ! //
    அதில் மாற்றுக் கருத்தில்லை சார்,அதிலும் பவளச் சிலை மர்மம் அசத்தலோ அசத்தல்.எப்படி இப்படி ஒரு சிறப்பான தருணம் அதற்கு வாய்த்தது என்பது வியப்பாகவே உள்ளது.

    ReplyDelete
  41. இம்மாத இதழ்கள் ரேட்டிங்,
    1.சிக்பில் க்ளாசிக்,
    கொலைகாரக் காதலி -10/10,
    விசித்திர ஹீரோ -10/10,
    எல்லாம் இவன் செயல் -10/10.
    2.நண்பனுக்கு நாலுகால் -10/10,
    நான் மானஸ்தன் -10/10,
    கடமை கண்ணியம் -10/10,
    3. பவளச் சிலை மர்மம் (புத்தகத் தரத்திற்காக) -10/10,
    4.கடைசிப் பலி (மினி டைனமைட்) -10/10,
    5.பூமிக்கொரு போலீஸ்காரன் -9/10.
    எல்லா இதழ்களுமே தரமான படைப்பில் மிளிர்கிறது,அதிலும் டெக்ஸின் பவளச் சிலை மர்மம்,சிக்பில் க்ளாசிக் இரண்டுமே கலரிங் உச்சம்,
    சிக்பில் கதைகள் அனைத்துமே டாப் ரகம்,மனம் விட்டு சிரிக்கவும்,இரசிக்கவும் வைத்தன.

    ReplyDelete
  42. அன்பின் ஆசிரியருக்கு,

    வணக்கம். ஏப்ரல் மாத இதழ்கள் பற்றி சொல்வதற்கு முன்னால் அச்சுத்தரம் பற்றி நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும். 2012 தொடங்கி காமிக்ஸை வண்ணத்தில் நாம் பார்த்து வருகிறோம் என்பதால் மெல்ல மெல்ல புத்தகங்களின் அச்சுத்தரம் அதிகரித்து வருவதையும் எளிதில் உணர முடிகிறது. அவ்வகையில் இம்மாதப் புத்தகங்களை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல ஓவியங்கள் ஒவ்வொன்றும் மின்னுகின்றன. நமது தொழில்நுட்ப அணியினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    அனைவரும் சொன்னது போல எதிர்பாராத ஹிட் வில்லரின் கடைசிப் பலியே. சின்ன சஸ்பென்ஸ், அட்டகாசமான வண்ணங்கள் என பிரித்து எடுத்திருக்கிறார்கள். ஆனால் என்னளவில் பவளச் சிலை மர்மம் சின்னதொரு ஏமாற்றமே. சைத்தான் சாம்ராஜ்யம் நான் வாசித்திருக்கிறேன், அதுவே மறுபதிப்பாக வர வேண்டும் என விரும்பினேன். ஆனால் ஈரோட்டில் நண்பர்கள் அனைவரும் ப.சி.மர்மம் தான் வேண்டுமென சொன்னதால் இதழ் மீதான என் எதிர்பார்ப்புகள் எகிறியிருந்தன. கதையும் பிரமாதமாக ஆரம்பித்தது. மாகௌரின் உயிரை சிலை உறிஞ்சும் இடமும் பலிப்பெண் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் வாவ் ரகம். ஆனால் அதற்குப் பிறகு டெக்ஸ் சுட ஆரம்பிக்கிறார். எல்லாப் பக்கமிருந்தும் ஹூவால்பைக்கள் வருகிறார்கள், டெக்ஸ் & கோ எல்லாப் பக்கமும் சுடுகிறார்கள். ஓடுகிறார்கள், சுற்றி வளைக்கிறார்கள், சுடுகிறார்கள், அரை கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கமிருந்துத் துல்லியமாகச் சுடுகிறார்கள். ஓவியங்கள் என்கிற வகையிலும் பிரமாதமான அச்சுத்தரம் என்பதும் தாண்டி இதுவும் “காலனின் கானகம்” என்பதாகவே எனக்குப் பட்டது. இதற்கு முன் மறுபதிப்பாக வந்த மரணத்தின் நிறம் பச்சையும் இதைப் போலவே ஏமாற்றம் தந்த கதைதான். எனவே மறுபதிப்பு கேட்கும் நண்பர்கள் கொஞ்சம் கருணை காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன். (இதற்கு நிச்சயம் எதிர் கருத்துகள் வருமெனத் தெரியும். என்றாலும் சற்று அடர்த்தியான கதைகளைத் தேர்ந்தெடுத்தால் நலம் என்பது என் நிலைப்பாடு).

    நம் கார்ட்டூன் கதாநாயகர்களில் லக்கியும் கிட் ஆர்டினும் முதன்மையானவர்கள், அவர்களே நம் மாஸ்காட்டுகள். மறுபதிப்புகள் வெளியிடுவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் போதிய இடைவெளியோடு இந்தப் புத்தகங்களை வெளியிட்டால் நல்லது. மறுபதிப்புகள் சார்ந்த எனது எளிய கோரிக்கை இதுவே. 90-களுக்கு முன் வெளியான இதழ்கள் பெரும்பாலான இன்றைய வாசகர்களிடம் இல்லை. எனவே மினி லயன், ஜூனியர் லயன், திகில் போன்ற அந்தக் காலத்து ஆல்பங்களை (ரைட்ஸ் சிக்கல்கள் இல்லாதிருப்பின்) வெளியிட்டால் நிச்சயம் அவை மாஸ் ஹிட்டாக அமைந்திடும். ஆசிரியர் அதற்கு ஆவண செய்ய வேண்டும்.

    லேடி எஸ் இன்னும் வாசிக்கவில்லை. என்னளவில் அவர் வெய்ன் ஷெல்டன். எனவே நிச்சயம் ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்.

    இறுதியாக, XIII - புலனாய்வு 75 பக்கங்கள் முடிந்து விட்டன. இவ்வார இறுதிக்குள் மொழிபெயர்ப்பு முடிந்து விடும். திருத்தங்கள் செய்து ஏப்ரல் 10க்குள் ஒப்படைத்து விடுவேன். (நண்பர்களின் தகவலுக்காக..)

    நன்றி.

    பிரியமுடன்,
    கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete
    Replies
    1. //ப.சி.மர்மம் - கதையும் பிரமாதமாக ஆரம்பித்தது. மாகௌரின் உயிரை சிலை உறிஞ்சும் இடமும் பலிப்பெண் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் வாவ் ரகம். ஆனால் அதற்குப் பிறகு டெக்ஸ் சுட ஆரம்பிக்கிறார். எல்லாப் பக்கமிருந்தும் ஹூவால்பைக்கள் வருகிறார்கள், டெக்ஸ் & கோ எல்லாப் பக்கமும் சுடுகிறார்கள். ஓடுகிறார்கள், சுற்றி வளைக்கிறார்கள், சுடுகிறார்கள், அரை கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கமிருந்துத் துல்லியமாகச் சுடுகிறார்கள். இதற்கு முன் மறுபதிப்பாக வந்த மரணத்தின் நிறம் பச்சையும் இதைப் போலவே ஏமாற்றம் தந்த கதைதான்.//
      Same feel +1

      Delete
    2. "ப.சி.ம. " பெரியதொரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் பெற்ற மறுபதிப்பென்று ஞாபகம் !! Confusion....!!

      Delete
    3. //XIII - புலனாய்வு 75 பக்கங்கள் முடிந்து விட்டன. இவ்வார இறுதிக்குள் மொழிபெயர்ப்பு முடிந்து விடும். திருத்தங்கள் செய்து ஏப்ரல் 10க்குள் ஒப்படைத்து விடுவேன்//

      தூள் கிளப்புங்கள் சார் !

      Delete
    4. பவளச்சிலை மர்மம்-36வாக்குகள்

      வைக்கிங் தீவு மர்மம்-28வாக்கிகள்

      சைத்தான் சாம்ராஜ்யம்-25வாக்குகள்

      கணிசமான முன்னிலையில் தான் பவளச்சிலை வென்றது.

      Delete
    5. 75 பக்கங்களை மொழிபெயர்த்தபின்னும் நண்பர் கா.பா இவ்வளவு தெளிவாக பின்னூட்டமிடுகிறார் என்றால்.... கீழ்க்காணும் இருவாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது!

      இந்தப் பின்னூட்டத்தை கோயில் மண்டபத்தில் யாராவது டைப் பண்ணிக் கொடுத்திருக்கலாம்!
      அல்லது,
      மொழிபெயர்ப்புப் பணியை கோயில் மண்டபத்தில் யாராவது ஒரு ஞானி செய்துகொண்டிருக்கலாம்!
      :D

      Delete
    6. தயாரா👍
      ஆனாலும் பசிம டாப்பான கதை என்னளவில்...

      Delete
  43. \\ அப்புறம் இன்னொரு கேள்வியுமே : சிக் பில் க்ளாசிக்ஸ் 3 அடுத்த வருஷத்துக்குத் தேவை என்பீர்களா ? அல்லது ஓராண்டு ப்ரேக் விடல் தேவலை என்பீர்களா ? //

    சிக் பில் க்ளாஸிக்ஸ் நிச்சயம்வேண்டும் சார்...!

    நீலபேய் மர்மம்
    தேடி வந்த தங்கச்சுரங்கம்
    மிஸ்டர் மகாராஜா
    மிஸ்டர் முகமூடி.

    ReplyDelete
  44. சிக் பில் கிளாசிக்ஸ் கண்டிப்பாக வேண்டும் சார்!!!!!!!!!

    ReplyDelete
  45. இம்மாத நான்கு புத்தகங்களின் விலைகள் எவ்வளவு நண்பர்களே?

    ReplyDelete
    Replies
    1. பவளச்சிலை-125
      லேடிs-75
      நண்பனுக்கு நாலு கால்-75
      சிக்பில் க்ளாசிக்-200

      மொத்தம்-475

      Delete
  46. அறுபதாம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் நீலப் பொடியர்களுக்கு!!!

    ReplyDelete
  47. தற்போது வெளிவரும் லக்கிலுக் கதைகளை சிக்பில் கதைகள் சிறப்பாகவே உள்ளது சார். அதனால் அடுத்த வருடமும் தொடர்ந்தால் நலமே. லயனில் வெளிவந்த சிக்பில் கதைகளை மறுபதிப்பு செய்யாமல் மினிலயனில் வெளிவந்த கதைகளை மறுபதிப்பு செய்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால், பலரிடம் இல்லாத கதைகள் பலர் தேடிக் கொண்டிருக்கும் கதைகள் மினிலயனில் வந்தவையே. டெக்ஸ் மறுபதிப்பை பொறுத்தவரை வைக்கிங் தீவு மர்மம் முதலில் வந்தால் நன்றாகயிருக்கும் சைத்தான் சாம்ராஜ்யமும் எனது பிடித்த கதைதான். தலையை வண்ணத்தில் ரசிப்பதே(படிப்பதே) ஒரு சுகம்தான்.

    ReplyDelete
    Replies
    1. //லயனில் வெளிவந்த சிக்பில் கதைகளை மறுபதிப்பு செய்யாமல் மினிலயனில் வெளிவந்த கதைகளை மறுபதிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.//

      சார்..எனக்கு எல்லாமே ஒட்டுமொத்தமாய் சிக் பில் கதைகளாய்த் தான் மச மசவென்று நினைவில் தங்கியுள்ளன ! கதைகளின் பெயர்களைச் சொல்லுங்கள் - முயற்சிப்போம் 2019 க்கு !

      Delete
  48. சிக் பில் 6 கதைகள் - 10/10
    கடைசி பலி - 10/10
    லேடி S - 9/10
    பவளச் சிலை மர்மம் - 7/10

    ReplyDelete
  49. அட்டைபடம்:
    நண்பனுக்கு நாலு கால் - 10/10
    பூமிக்கோரு போலீஸ்காரன் - 10/10
    சிசிக்பில் கிளாஸிக்ஸ் - 9/10
    பவளச் சிலை மர்மம் - 5/10 (5 mark is for top half of the cover) (bottom cover - டெக்ஸ் கும் அவர் ஓவர் கோட் கும் சம்பந்தமே இல்லாம இருக்கு)

    ReplyDelete
  50. மார்ச் மாதம் மட்டும் பதினொன்று பதிவுகள் !!!!!!
    அப்பப்பா ஆசிரியரின் உழைப்பை என்னவென்று பாராட்டுவது!!!.
    வாழ்த்துக்கள் எடிட்டர் சார்!!.

    ReplyDelete
    Replies
    1. அட....இவையெல்லாம் ஜாலியான அனுபவங்கள் தானே சார் !

      Delete
  51. லேடி எஸ்.... இம்முறை அட்டகாசம் செய்து விட்டது!

    இதுவரை வந்த ஆல்பங்களை எல்லாம் இரட்டை இரட்டையாய் கொடுத்திருந்தால் லார்கோ போல இதுவும் ஆரம்பத்தில் இருந்தே அனைவரையும் கவர்ந்திருக்கும்.

    காத்திருப்போர் பட்டியலுக்கு செல்ல வேண்டிய ஒன்று, நம்மை காக்க வைத்திருப்போர் பட்டியலுக்கு இடம் பெயர்ந்து விட்டது.

    லேடி எஸ் - வெல்கம்.

    ReplyDelete
  52. குட்டி டெக்ஸ் "இரத்தம ஒரே நிறம்" டூ "கடைசிப் பலி"-யாக பெயர் மாறிய காரணம் பற்றி சென்ற பதிவில் சில நண்பர்கள் கருத்து பரிமாற்றம் செய்தனர் சார். தங்களின் பிரத்யேக காரணம் ஏதாவது இருக்கிறதா சார். பெரிய டெக்ஸைவிட குட்டி டெக்ஸ்கள் இப்போ எதிர்பாரக்க வைக்கின்றன சார்.

    ReplyDelete
    Replies
    1. நானும் தங்கள் பதிலை ஆவலுடன் எதிர் நோக்கி!

      Delete
  53. சார் , அரைடிக்கட்டுகள கௌரவிக்கும் வகையில் , அறுபதாண்டை அரையாக்கி , முப்பதாண்டாக்கி ...அந்த முப்பத சுருக்கி மூன்றாக்கி , அத ஹார்டுபௌண்டு அட்டய போட்டு ஆகஸ்ட முப்பெரும் விழாவா அதாவது இப , டெக்ஸ் , ஸ்மர்ஃப் விழாவாக் கொண்டாட வாய்ப்பில்்லையே...😢

    ReplyDelete
  54. Mathias Vanakkangal Aasiriyare ☺
    Durango virku munkathai surukkum ezhuthu ullen Aasiriyare. Maatha kadaisi velai paluvinal pathiyai edit seithu anuppa iyalla villai. By Tuesday will mail the short preview of Durango

    ReplyDelete
  55. ///இம்மாதம் ஒரு "கிட் ஆர்டின்" மாதம் என்பதில் mixed reactions இருப்பதை உணர்கிறேன் ! கார்ட்டூன் காதலர்களுக்கு குஷியோ குஷி ; "கார்ட்டூனாஆஆ ??" எனக் கூடிய நண்பர்களுக்கு முகச்சுளிப்பு என்பதில் இரகசியமேது ? இங்கே எனக்கொரு சின்ன கேள்வி ! முன்பெல்லாம் - இந்த genre பிரிப்புகள் ; இத்தனை இதழ்கள் என்றெல்லாம் இல்லாத நாட்களில் முதல் மாதம் டெக்ஸ் வந்திருப்பார் ; அடுத்த மாதம் கறுப்புக் கிழவி ; தொடரும் மாதத்தில் சிக் பில் என்று அட்டவணை இருந்திருக்கும் ! அன்றைக்கெல்லாம் துளி கூட நெருடல்களின்றி கார்ட்டூன்களை அனைவருமே ரசிக்கத் தானே செய்தோம் ? ஆனால் இன்றைக்கு ரசனைகள்வாரியான சந்தாக்கள் என்றான பிற்பாடு - ஆக்ஷன் தவிர்த்த இதர genre-கள் ஒருவித நெளிவை நம்முள் ஒருசாராருக்குக் கொணரும் காரணம் என்னவாக இருக்குமோ ? Confusion .....! ////




    சங்க கால இலக்கியங்களில் கேகய பறவை பற்றி சொல்லியிருப்பார்கள் .
    யாழிசை கேட்டால் களிக்கூத்தாடும் இப்பறவை பறையொலி கேட்டால் துக்கித்துப்போய் மரக்கிளையில் இருந்து மண்ணில் விழுந்து துடிதுடிக்குமாம். .
    ஆக்ஷன் இன்னபிற காமிக்ஸ்களை யாழிசையாகவும் கார்ட்டூன் கதைகளை பறையொலி எனவும் கருதும் இந்த காமிக்ஸ் கேகய பறவைகள் என்றும் புருவத்தை உயர்த்தவல்லவை ..
    சக காமிக்ஸ் பறவைகள் என்றவகையில் இக்காரணத்தினால் எல்லாம் இப்பறவைகள் மீதான வாஞ்சையில் பங்கமோ குறைவோ ஏதும் ஏற்படுவதில்லை ......


    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை அந்த கேகயப் பறவையில் ஒன்றிரண்டு தற்போது எங்காவது உயிர்வாழ்ந்து வந்தாலும்கூட, அதன் இருப்பிடம் பற்றிய எந்தவொரு தகவலையும் இங்கே தெரிவித்துவிடவேண்டாம் செனாஅனா அவர்களே... நம் நண்பர்களில் சிலர் புதியதொரு பிரியாணி சுவைக்காக ஏங்கி, வெறிகொண்டு அலைவதே காரணம்! :)

      Delete
  56. /////சிக் பில் க்ளாசிக்ஸ் 3 அடுத்த வருஷத்துக்குத் தேவை என்பீர்களா ? அல்லது ஓராண்டு ப்ரேக் விடல் தேவலை என்பீர்களா ? சி.பி.3 க்கு 'ஜே' போடுவதாயின் - உங்கள் கதைத் தேர்வுகள் எவையாக இருக்குமோ ? //////

    ஒன்றுக்கு பின் போதுமான இடைவெளி போன்ற தலைகீழ் முக்கோண சமாச்சாரங்கள் எல்லாம் தமிழ்நாடு குடும்பநலகட்டுப்பாடு /மக்கள்நல்வாழ்வுதுறை /இயக்குனர்களின் தலைவலியாக மட்டும் இருந்துவிட்டு போகட்டுமே சார் !!

    நீங்கள் சிக்பில் தொகுப்பு இதழ்களை இடைவெளி ஏதுமின்றி போட்டு தள்ளுங்கள் ..

    ReplyDelete
  57. லேடி- S.
    பூமிக்கொரு போலிஸ்காரன் .....சிலபல வருடங்களுக்கு முன் இத்தலைப்பு வந்திருக்குமாயின் ராமராஜன் பட டைட்டில் என்று மதுரை பக்க விநியோகஸ்தர்கள் முற்றுகை இட்டிருக்க வாய்ப்புண்டு ..
    கதையின் விமர்சனம் ...
    கதையின் துவக்கத்தில் விர்ஜீனியா –லாங்வே என்னுமிடத்தில் சி ஐ ஏ தலைமையக அறையொன்றில் கதை துவங்குவதாக உள்ளது ..
    அது உண்மையில் வெர்ஜினியா-லாங்லீ என இருக்கவேண்டும் ...அது உண்மையான பெயர் என்பதால் ...
    அப்புறம் ?? என்ன எழுதுவது .....எல்லாவற்றையும் நண்பர்கள் அருமையாக அலசி விட்டனர் ...:-)
    கதை உள்ளது ..கதாநாயகிக்கான இடம் இல்லை என நண்பர் எழுதி இருந்தார்...
    பட்டாம்பூச்சியின் வாழ்க்கை சக்கரத்தில் முட்டை ,லார்வா (கேட்டர்பில்லர் ) பியூப்பா, முதிர்ச்சியான பட்டாம்பூச்சி என நிலைகள் உண்டு
    இதில் லார்வாக்களும் ,பியூப்பாக்களும் பார்க்க சகிக்காது ..வண்ணமயமான பட்டாம்பூச்சியோ பரவசம் அளிக்கும் ..
    இப்போது லார்வா நிலையில் இருக்கும் ஷானியா வான் ஹாமேவின் கைவரிசையில் வனப்புடைய வண்ணத்துப் பூச்சியாக காமிக்ஸ் வானில் சிறகடித்து பறக்கும் நாள் வருமென நம்புவோமாக ...
    எனினும் அரசியல் ,உளவுஸ்தாபன பெருந்தலைகளின் சூத்திர கயிறுகளின் மூலம் ஆட்டுவிக்கப்படும் பாவையாக தொடர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை ...கதையின் பொதுக்களம் அப்படி ஒரு பிம்பத்தை தோற்றுவிக்கிறது ...
    பொதுவாகவே ஆக்ஷன் கதைத்தொடர்களில் பெண்கள் டைட்டிலில் இடம் பெறுவது சொற்பமாகவே உள்ளது ...
    வொண்டர்வுமன்,MS MARVEL போன்ற வெகுசில அமெரிக்க காமிக்ஸ்கள் ,ஜூலியா போன்று விரல்விட்டு எண்ணக்கூடிய ஐரோப்பிய காமிக்ஸ்களில் மட்டுமே பெண்கள் லீட் மற்றும் டைட்டில் ரோலில் இடம் பெறுகின்றனர் ....
    இதை காணுகையில் கதையே பிரதானமாக இருப்பினும் ஷானியாவை வரவேற்பதில் தவறில்லை என எண்ண தோன்றுகிறது ..
    ஒட்டுமொத்த ஆணாதிக்கம் மிக்க காமிக்ஸ் தொடர்களில் மாடஸ்டியை குறைத்து மதிப்பிடுவது வியப்பானதே ..
    மாடஸ்டி கதைகள் பொதுவாக நான் விரும்பத்தக்கவையாகவே உள்ளன ..
    மாடஸ்டி கதைகள் இங்கு நண்பர்களால் வேடிக்கையாக பகடி செய்யப்படினும் –SHEER NUMBER OF MODESTY TITLES-யே அதற்கு பதில் சொல்ல போதுமானவை ..
    இன்னும் ஒரு ஐம்பது டைட்டில்கள் லேடி –எஸ் –க்கு வந்தபின்னும் ஷானியாவையும் மாடஸ்டியையும் ஒப்பு நோக்க முயல்வது மரடோனாவையும் மெஸ்சியையும் ஒப்புநோக்க முயல்வது போலத்தான் அமையும் .. DIFFERENT ERAS….DIFFERENT LEGENDS ..


    ReplyDelete
    Replies
    1. ////பூமிக்கொரு போலிஸ்காரன் .....சிலபல வருடங்களுக்கு முன் இத்தலைப்பு வந்திருக்குமாயின் ராமராஜன் பட டைட்டில் என்று மதுரை பக்க விநியோகஸ்தர்கள் முற்றுகை இட்டிருக்க வாய்ப்புண்டு .////

      ஹா ஹா ஹா!! தேர்ந்த நகைச்சுவை உணர்வு! :))))))))

      Delete
    2. ////ராமராஜன் பட டைட்டில்////

      😂😂😂

      Delete
    3. அது ஏங்க செனாஅனா ஜி

      மாடஸ்டிய சானியாவோட கம்போ் பண்ணனும்!!

      மாடஸ்டி உங்களுக்கு ஏற்புடையதாக தொிகிறது!

      எனக்கு தமாஸாகவே தொிகிறது!!

      சூப்பா் ஹீரோ சப்ஜெக்டுகளை பொதுவாகவே நான் ரசிப்பதில்லை!

      இதில் லேடி சூப்பா் ஸ்டாா் என்ற வாா்த்தையே தமாஸாகத்தான் எனக்கு தோன்றுகிறது!!

      ஒரு கதை நன்றாக அமைய கதை சொல்லும் பாங்கு தான் முக்கியம் என்று எண்ணுபவன் நான்!

      என்னளவில் கதைக்கு கதையே வேண்டியதில்லை; சம்பவங்களை சாியாகக் கோா்த்து அமைத்தாலே போதுமானது என்ற எண்ணமுடையவன்!!

      சானியா எனக்கு பிடிக்கவும் இதுதான் காரணம்!!

      RUN LOLA RUN என்ற ஜொ்மானிய மொழி திரைபடம் என்னை மிகவும் கவா்ந்த திரைப்படம் !!

      சம்பவம் இப்படி நடந்திருந்தால் எப்படி இருக்கும், வேறு மாதிாி நடந்திருந்தால் எப்படியிருக்கும் என்று இரண்டு விதத்தில் ஒரு நிகழ்வைக் காட்டியிருப்பாா்கள்!

      இது அகிரா குரோசவா வை போல ஒரு சம்பவம் நடந்த பிறகு ஒவ்வொரு மனிதனின் பாா்வையில் இருந்து பாா்க்கும்படியாக எடுக்கப்பட்ட சினிமா அல்ல!!

      இது நடந்திருந்தால், காட்சிகள் எப்படி இருக்கும்?? அது நடந்திருந்தால் காட்சிகள் எப்படி அமைந்திருக்கும் என ஒரு சினிமாவில் இரண்டு சினிமாவை காட்டியிருப்பாா்கள்!!

      சம்பவங்களின் நோ்த்தியான கோா்வையே ஒரு அற்புதமான நவீன சினிமாவாக உருப்பெற்று, தன் அடுத்த படிநிலைக்கு சினிமா நகா்ந்துவிட்டது!!

      காமிக்ஸ்களுமே அடுத்த படிநிலைக்கு சென்றுவிட்ட பிறகு, நாம் இன்னும் மாடஸ்டியோடே மல்லுகட்டிக் கொண்டிருப்பது தான் வருத்தத்தை உண்டாக்குகிறது!!

      Delete
    4. /////அது ஏங்க செனாஅனா ஜி
      மாடஸ்டிய சானியாவோட கம்போ் பண்ணனும்!!//////

      *******Govindaraj Perumal30 March 2018 at 22:55:00 GMT+5:30
      மாடஸ்டியோட லேடி Sஐ கம்பேர் பண்ணுவது ரொம்ப கொடுமை.

      மாடஸ்டிமலை

      லேடிS வெறும் மருதானே?*****************

      போன பதிவில் GP சார் இப்படி எழுதியிருந்ததால் அதற்கான பதிலாக பதிவின் இப்பகுதியை கருதுக ...மற்றபடி ஒரு GENRE –வை சேர்ந்த வெவ்வேறு கால கட்டங்களில் வெளியான நாயகர்களை ஒப்பீடு செய்வது இயலாது என்பதே நான் சொல்லவிரும்பியது.....




      ////மாடஸ்டி உங்களுக்கு ஏற்புடையதாக தெரிகிறது!////
      ஆம் ....:-)
      /////எனக்கு தமாஸாகவே தெரிகிறது!!/////

      அதில் எந்த ஒரு தவறுமில்லை :-)


      /////சூப்பா் ஹீரோ சப்ஜெக்டுகளை பொதுவாகவே நான் ரசிப்பதில்லை!//////
      ஆக்ஷன் தொடர்பான காமிக்ஸ்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டும் வண்ணம் வொண்டர்வுமன்,MS MARVEL பெயர்கள் பதிவில் இடம் பெற்றன ...அதைத்தாண்டி சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் பற்றி பதிவில் ஏதுமில்லையே ...ஒருவேளை மாடஸ்டி கதைகள் ‘’சூப்பர் ஹீரோ வகையை ‘’ சார்ந்தவை என நீங்கள் எண்ணியிருப்பின் அது தவறான அனுமானம் ..மாடஸ்டி குற்றப் பின்னணி உள்ளதாக ,பன்மொழி புலமையும் பயிற்சியால் வருவிக்கப்பட்ட சில திறமைகளும் உள்ளதாக ,SUBMISSIVE என்னும் வார்த்தைக்கு எதிரியாக ,பல்வேறு குறைகள் உள்ளதாக சித்தரிக்கப்பட்ட சாதாரண மனுஷியான கதாபாத்திரம் ..



      ///இதில் லேடி சூப்பா் ஸ்டார் என்ற வார்த்தையே தமாஸாகத்தான் எனக்கு தோன்றுகிறது!!////
      இப்பதத்தை மேலே உள்ள என் பதிவில் பூதக்கண்ணாடி வைத்து தேடிப் பார்த்தேன் ..காணக் கிடைக்கவில்லை :-) ஆயினும் பிற மொழி காமிக்ஸ் விமர்சகர்கள் மாடஸ்டியை ‘’ PRINCESS OF SPY-FICTION’’ என அழைப்பது என்னவோ உண்மை ...
      ////ஒரு கதை நன்றாக அமைய கதை சொல்லும் பாங்கு தான் முக்கியம் என்று எண்ணுபவன் நான்!

      என்னளவில் கதைக்கு கதையே வேண்டியதில்லை; சம்பவங்களை சரியாகக் கோர்த்து அமைத்தாலே போதுமானது என்ற எண்ணமுடையவன்!!

      சானியா எனக்கு பிடிக்கவும் இதுதான் காரணம்!!/////
      என்னளவில் ஒரு காமிக்ஸ் பிடிக்க காரணங்கள் தேடுவதில்லை ..அதற்கு ‘’அளவுகோல்களும் இல்லை ..மகிழ்வளித்தால் சரி ..அவ்வளவே ..

      மாடஸ்டி எனக்கு பிடிக்கவும் இதுதான் காரணம் :-)


      ///காமிக்ஸ்களுமே அடுத்த படிநிலைக்கு சென்றுவிட்ட பிறகு, நாம் இன்னும் மாடஸ்டியோடே மல்லுகட்டிக் கொண்டிருப்பது தான் வருத்தத்தை உண்டாக்குகிறது!!///
      காமிக்ஸ்கள் இப்போது லிப்டின் மூலம் சென்று எந்த தளத்தை அடைந்துள்ளன ??? :-)
      மாடஸ்டி இப்போது எத்தனாவது படியில் நின்று கொண்டு இருக்கிறார்?? :-))
      மாடஸ்டி கதைகள் படிப்பது காமிக்ஸ் அடுத்த நிலைக்கு செல்வதை தடுத்து நிறுத்தும் செயலாக நீங்கள் எண்ணுவீர்களாயின் ,மாடஸ்டி பற்றி பேசுவதே உங்களுக்கு வருத்தமளிக்குமாயின் அது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது


      ///RUN LOLA RUN என்ற ஜொ்மானிய மொழி திரைபடம் என்னை மிகவும் கவா்ந்த திரைப்படம் !!///
      ஒரு மாதம் புது தமிழ் திரைப்படங்கள் வெளியாகாததால் என்ன நிலைமை பாருங்கள் ..:-)))
      சும்மா தமாஷுக்கு சொன்னேன் ...:-)

      ///சம்பவம் இப்படி நடந்திருந்தால் எப்படி இருக்கும், வேறு மாதிாி நடந்திருந்தால் எப்படியிருக்கும் என்று இரண்டு விதத்தில் ஒரு நிகழ்வைக் காட்டியிருப்பாா்கள்!

      இது அகிரா குரோசவா வை போல ஒரு சம்பவம் நடந்த பிறகு ஒவ்வொரு மனிதனின் பாா்வையில் இருந்து பாா்க்கும்படியாக எடுக்கப்பட்ட சினிமா அல்ல!!

      இது நடந்திருந்தால், காட்சிகள் எப்படி இருக்கும்?? அது நடந்திருந்தால் காட்சிகள் எப்படி அமைந்திருக்கும் என ஒரு சினிமாவில் இரண்டு சினிமாவை காட்டியிருப்பாா்கள்!!

      சம்பவங்களின் நோ்த்தியான கோா்வையே ஒரு அற்புதமான நவீன சினிமாவாக உருப்பெற்று, தன் அடுத்த படிநிலைக்கு சினிமா நகா்ந்துவிட்டது!! ///

      அதெல்லாம் சரிங்க !! நீங்க தெறி,கபாலி ,தானா சேர்ந்த கூட்டம்,போன்ற கீழ்மட்ட நிலையில் உள்ள படங்களை பார்ப்பதில்லைதானே ...
      ஒருவேளை நீங்கள் இதுபோன்ற படங்களை பார்த்து இருப்பீர்களேயாயின் தமிழ் சினிமா மேலே உள்ள ஜெர்மனி படத்தை போல் சர்வதேச தரத்தை அடையாததற்கும் அடுத்தபடிக்கு செல்லாததற்கும் இம்மாதிரி படங்களோடு மல்லுக்கட்டி கொண்டிருக்கும் நீங்கள்தான் காரணம் ..:-)))

      Delete
    5. சூப்பா்ங்க செனாஅனா ஜி!!

      (திருப்பாச்சிக்கு பிறகு தமிழ் சினிமா, இல்லைங்க சினிமா பாா்க்கரதையே நிறுத்தீட்டங்க!! ஹிஹிஹி)

      நேரமிருப்பின் மீண்டும் வருகிறேன்!!

      Delete
    6. //காமிக்ஸ்கள் இப்போது லிப்டின் மூலம் சென்று எந்த தளத்தை அடைந்துள்ளன ??? :-) மாடஸ்டி இப்போது எத்தனாவது படியில் நின்று கொண்டு இருக்கிறார்?? :-))//

      ஹா ஹா ஹாஸ்யன் ஹாஸ்யன் :)))

      டியர் எடிட்டர் சாார், நீங்கள் இன்னும் ஒரு நூறு கிராபிக் நாவல்களாவது போட்டால் தான் நம் வாசகர்களின் ரசனை மேம்படும் போலிருக்கிறதே :))

      Delete
    7. மிதுன் முதலில் நீங்கள் எல்லா காமிக்ஸ்களையும் ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்கு மாடஸ்டி பிடிக்கவில்லை மும்மூர்த்திகள் ஸ்பைடர் போன்றவர்கள் காலத்திற்க்கு ஒவ்வாதவர்கள் டெக்ஸ் நேர்கோட்டுக் கதைகளின் சொந்தக்காரர் என உங்களுக்கு ஏற்ப்பில்லாதவைகள் நிறைய உண்டு
      கிராபிக் நாவலொன்று எனக்கு பிடிக்கவில்லை ஆனால் நண்பர்கள் பலர் அதை நன்று என பகிர்ந்தனர் நண்பர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நானும் நெகடிவ் கமெண்டுகள் போடவில்லை பாலைவனத்தில் புலனாய்வு எனக்கு மிகவும் பிடித்திருந்தது சில நண்பர்கள் அதை பிடிக்கலை என சிலர் விமர்சனம் செய்யும்போது நான் அவர்களை கிண்டலடிக்கவில்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை
      நானும் ஸ்மர்ப்புகளை படிக்காமல் வைத்திருந்தேன் சமீபமாக நண்பர்களின் நல் விமர்சனங்களை பார்த்து நானும் படித்து ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன்
      ஸ்மர்ப்புக்கு முன்பிருந்ததை விட ரசிகர் வட்டம் சற்று கூடியிருக்கிறது என்னைப்போன்ற மும்மூர்த்திகளை ரசிக்கும் பழமை வாதிகளின் ரசனைகள்
      உங்களை விட பல மடங்கு குறைந்தது தான் அதை குத்திக் காட்ட வேண்டாமே நீங்கள் ரசிக்கும் ஷானியா விற்க்கு நானும் ரசிகனே அந்த விதத்திலாவது உங்களுடன் ஒன்று படுவது பெருமையே

      Delete
    8. ////மிதுன் முதலில் நீங்கள் எல்லா காமிக்ஸ்களையும் ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள்////

      சூப்பா் 👏👏👏

      I am Mithun

      Delete
    9. @ செந்தில் சத்யா.

      சரியான பார்வை!!!

      Delete
  58. Sridhar என்ற profile குடந்தை ஸ்ரீதரன் என மாற்றி அமைத்து உள்ளேன் சார்.

    ReplyDelete
  59. ///ஒரிஜினலாய் நான் திட்டமிட்டிருந்தது - உங்கள் favorite "ப.சி.ம." மறுப்பதிப்பையும், எனது favorite "சைத்தான் சாம்ராஜ்யம்" மறுப்பதிப்பையும் ஒன்றிணைத்து ஒரு வண்ண குண்டாக்குவதே///

    அச்சச்சோ!!!

    ஏப்ரலில் ஒரு தீபாவளி மிஸ் ஆயிடுச்சே.!!

    ReplyDelete
    Replies
    1. @ Gowindh ;
      எப்டி சார் இது மாதிரி அதிரடியா பதிவிடுகிறீர்கள்.மிகவும் இரசனையோட இருந்தது உங்களுடைய பார்வை. சைத்தான் சாம்ராஜ்யம் +பவள சிலை மர்மம் காம்போ வெளிவந்திருந்தால் உற்சாகத்தின் அளவு தாறுமாற எகிறியிருக்கும்.ஆசிரியர் இதை பதிவிட்ட போது பெரும்பாலானோரின் எண்ணம் "வடை போச்சே""எனும் விதமாகத்தான் இருக்கும். ஆனால் உங்களுடைய கற்பனை;!!!!!!! .
      💐💐💐💐💐

      Delete
    2. அன்பான பாராட்டு உங்களின் பெருந்தன்மையான உள்ளத்தைக் காட்டுகிறது. உங்களைப் போன்றோரின் ஊக்கமே எனக்கு சிறந்த உரம். நன்றி சார்.

      Delete
  60. டியூராங்கோவின் ப்ரீவியூ பக்கங்கள் சும்ம்மா தெறிக்க விடுகின்றன.

    வெயில் பட்டயக் கிளப்பும் மே மாதத்தில் டியூராங்கோவும் தன் பங்க்கு செமத்தியாக விருந்து வைப்பார் என்று தாராளமாக நம்புகிறேன்.

    'தல 'இல்லாத மாதம் என்ற போதும் அதற்கும் சேர்த்தே ஈடு செய்து விடுவார்.


    ReplyDelete
  61. Dear Editor,

    ஒரு யோசனை , ஒரு கேள்வி :

    a) இருக்கும் 7 smurf மற்றும் 2 benny கொண்ட ஒரு childrens package இப்போது கோடை விடுமுறையாதலால் announce செய்து பார்க்கலாமே வித் some discount. (I have ordered the first set. May order two more based on the success within this vacation).

    b) நம்மிடம் இருக்கும் ஒரு செட் of புத்தகங்கள் custom binding செய்ய வேண்டுமெனில் எவ்வளவு ஆகும் - say I order all 6-7 available smurf titles but want it custom bound (made to order) - Sivakasi, known for printing should have equal amount of binders too. What could be the cost?

    ReplyDelete
    Replies
    1. Also consider making posters of concept in (a) and send it to your agents who can display them in their book stands for the full summer - until June.

      Delete
  62. Excellent stories in JUMBO COMICS SUBSCRIPTION. NEXT WEEK I WILL PAY FOR 2 SANDHA. WAITING FOR PAYMENTS. EXPECTING STORIES ANNOUNCEMENT OF TEX 70 SPECIAL. PLEASE PUBLISH TEX RARE STORIES LIKE 1. ADHIRADI KANAVAI, 2. RATHA MUTHIRAI, 3. MANDHIRA MANDALAM FULL STORY MORE THAN 800 PAGES. EXPECTING ERODE FESTIVAL.

    ReplyDelete
  63. இன்றைய நிலவரப்படி என்னுடைய ரேட்டிங்.... இன்னும் எந்த கதையையும் படிக்கலை... வீட்டிலிருந்து வந்து 4 நாள் ஆச்சு... நாளைக்கு தான் கை வைக்கனும்...

    ReplyDelete
  64. பூமிக்கொரு போலீஸ்காரன்...
    Lady S கதை வரிசையில் மிக சிறப்பாக அமைந்தது இதுதான். Bourne series ன் சாயலில் அழகான கண்ணாமூச்சி விளையாட்டு. CIA வை கதறடிக்கும் கதைக்கரு. ஒரு சதுரங்க விளையாட்டை ஒத்திருக்கும் கதை நகர்வு. முந்தைய இதழ்களின் புதிர்கள் பலவற்றை விடுவித்திருக்கும் விதம் அருமை.
    என்னளவினில், இந்த மாதத்து இதழ்களில் முதலிடம் Lady S.
    பிற இதழ்களை பற்றி விரைவில்...

    ReplyDelete
    Replies
    1. ////முந்தைய இதழ்களின் புதிர்கள் பலவற்றை விடுவித்திருக்கும் விதம் அருமை.////

      +111

      Delete
  65. குட் நைட் டு ஆல்.

    ReplyDelete
  66. ////SMURFS கதைகளுக்கு சிறார் / பெரியவர்கள் என்ற பாகுபாடுகளெல்லாம் அவசியமென்று சொல்ல மாட்டேன் சார் ! வளரும் பருவத்தில் இதனில் சில அழகுகள் கண்ணில் படலாம் ; வளர்ந்த பிராயத்தில் வேறு சில !! Universal appeal கொண்ட கதைகளல்லவா இவை ?//

    100 % நிஜம் சாா்!!

    நம்மில் பலா் ஒரு கதையை கூட முழுவதுமாகப் படிக்காமலேயே இது குழந்தைகள் கதை முன் முடிவுக்கு வந்திருப்பதாகவே கருதுகிறேன்!!

    டெக்ஸ் ஒரே நோ்கோட்டுக் கதைகள்

    மாடஸ்டி விஜயசாந்தி பாணி கதைகள்

    சிக்பில் கெக்கபெக்க கதைகள்

    மும்மூா்த்திகள் காலத்திற்கு ஒவ்வாதவை

    லக்கிலூக் கதைகளிலே கூட சில கதைகள் பிடிக்காததற்கு சிலா் காரணம் சொல்லியிருக்கிறாா்கள்

    புய்ப கதைகள், காதுல பூ ரகம் என பல விமா்சனங்களை பாா்த்திருக்கிறோம்!!


    ஆனால் ஸ்மா்ப்ஸை பொறுத்தவரை

    இது குழந்தைகளுக்கான கதை!!
    நாலு பக்கத்திற்கு மேல் படிக்க முடியவில்லை என்பது போன்ற அா்த்தமற்ற விமா்சனங்கள் மட்டுமே வந்துள்ளன!

    ஸ்மா்ப்ஸ் கதையை பற்றிய விமா்சனம் என்று இதுவரை ஒரு எதிா்மறை விமா்சனம் கூட நானறிந்த மட்டும் வராததின் காரணம் இரண்டாக மட்டுமே இருக்க முடியும்!!

    1. கதையையே படிக்காத போது விமா்சனமும் செய்ய இயலாது!!

    2. எதிா்மறை விமா்சனமே இல்லாதிருத்தல்

    இதில் இரண்டாவது உலகில் என்றுமே சாத்தியமில்லை என்னும் போது முதலாவதையே காரணமாய் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது!!

    ஸ்மா்ப்ஸ் கதைகளில் பிளஸ் என்று பாா்க்கும் போது

    1. மனிதனுடைய மனோபாவங்களை பகடி செய்வது
    2. உலக நடப்புகளை பகடி செய்வது
    3. விஞ்ஞான வளா்ச்சியின் விபரீதங்களையும், முட்டாள்தனங்களையும் கேலி செய்வது
    4. அரசியல் மனிதனை மாற்றும் விதம்

    5. கூடி வாழ்தலின் பலன்
    6. என்றுமே இப்புவியில் நடக்காத, நடக்க இயலாத கற்பனை களம்
    7. அற்புதமான வண்ணமயமான சித்திரங்கள்
    8. ஒவ்வொரு கதையிலும் மனித வாழ்வியலில் ஒன்றை எடுத்துச் சொல்லும் பாங்கு

    இதுபோல சொல்வதற்கு நிறைய உண்டு!!

    இதற்கெல்லாம் தகுதியான எதிா்மறை விமா்சனம் இல்லாமல் பொத்தாம் பொதுவாக இது குழந்தைகள் கதை என்று சிறுமைபடுத்துவது நியாயந்தானா??

    தொியவில்லை!!??!!

    ReplyDelete
  67. நண்பர்களே ஒரு கேள்வி எத்தனை பேர் டாம் அண்ட் ஜெர்ரி காமிக்ஸாக வந்தால் ரசிப்பீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. ஆனா டயலாக் இருக்காதே!!

      உண்மையில் டாம் அண்ட் ஜொ்ாி காா்ட்டூன் இருக்கா??

      Delete
    2. இப்போதும்கூட ஓய்வான ஒரு பொழுதில், ஏதாவது சேனலில் டாம் & ஜெர்ரி காணக்கிடைத்தால் நான் என் மகளுடள் அமர்ந்து கெக்கேபிக்கே என சிரித்து ரசிப்பதுண்டு!! சில சமயங்களில் அந்த கெக்கேபிக்கே - வீடே அதிருமளவுக்கும் கூட இருப்பதுண்டு!!

      புத்தகமாக வெளியானால் ரசித்திட முடியுமா என்பதை யூகிக்க முடியவில்லை!!

      எதற்காக இந்தக் கேள்வி ஸ்ரீதரன் அவர்களே?!!

      Delete
    3. ஸ்மர்ப் கதைகளத்தையோ,அதன் சித்திர தரத்தையோ ,கண்ணைப்பறிக்கும் வர்ணச் சேர்க்கயோ ,காட்சிப்படுத்தப்பட்ட பார்வை கோணங்களையோ பிரமிக்காமல் இருக்க முடியாது.
      ஸமர்ப் வில்லா என்ற கதைகளத்தில் ஈர்ப்பை ஏற்படுத்த கூடிய கதைகள் உருவாக்கப்படவில்லை.இவை அனைத்துமே அசையும் படங்களாக இருந்து,கதை பாத்திரங்களின் உடல் மொழி,வசன உச்சரிப்பகளில் உள்ள உணர்வுகள், பின்னனி இசைச் சேர்க்கயால் மட்டுமே இந்த படைப்பின் உண்மையான வீரியத்தை பார்வையாளர்களுக்கு கடத்த முடியும்.மற்றபடி இவை தமிழில் வெளியிடுவது விற்பனையாளருக்கும்,நுகர்வோருக்குமான தொடர்ப்பு.இதில் அவரவர் இரசனைகள் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உடமை.பொதுத் தளத்தில் அவரவருடைய கருத்துக்களை எந்தவிதமான சார்ப்பு நிலைப்பாட்டோடும் பதிவிட வேண்டிய தேவைகள் எந்த விதமான தேவைக்கும் உட்பட்டவையாக இருக்காது.யாவருடைய நிலைப்பாட்டையும் தக்கவைத்துக் கொள்வதற்கான வழிமுறைதான் மனநிறைவை ஏற்படுத்தும்.

      Delete
    4. டாம் & ஜெர்ரி அதுவும் Fred quimbyயின் தயாரிப்பில் வந்தவைகளை எத்தனைமுறைகள் பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது.! முகபாவங்கள் அத்தனை தெளிவாகவும் சிரிப்பாகவும் இருக்கும்.!

      காமிக்ஸாக வந்தால் ரசிப்பேனா என்பது தெரியவில்லை.!!

      Delete
    5. ஸ்மர்ப் திரைப்படம் மற்றும் அனிமேஷ்ன் பிடித்து இருக்கிறது. அதை காமிக்ஸ் வடிவில் அதுவும் பொடி பாஷை நமக்கு புரியும் குழந்தைகள் என்ன செய்யும். நான் தூய தமிழ் ஓரளவு நன்றாக படிக்கிரேன் என்றால் காமிக்ஸ் ஒரு சிறந்த காரணம்.உதாரணமாக அற்ப பதரே, அனுமானம் ஊகித்து போன்றவை அது ஸ்மர்பிீல் missing.
      இது திரு ஈ.வி க்காக
      டாம் அண்ட் ஜெர்ரி யை கார்டூனாக பார்த்து விட்டு காமிக்ஸில் ரசிக்க இயலாது அதுபோல ஸ்மர்ப்.
      நான் நமது தளத்தில் பிடிக்காததை பற்றி பதிவிடுவதில்லை.
      பிடித்ததை மட்டுமே ஆசிரியரிடம் கேட்பேன்.
      எனக்கு பிடித்தது பலருக்கு பிடிக்காது அது அவரவ்ர் விருப்பம்.
      திரைப்படம் மற்றும் அனிமேஷன் முறையில் பார்த்த ஒன்றை காமிக்ஸாக ரசிக்க வில்லை என்பதும் ஸ்மர்ப் விற்பனை வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.
      இதற்காக தான் அந்த கேள்வி திரு ஈ.வி. அவர்கள்.

      Delete
    6. வார்த்தைகள் அங்கங்கே தொக்கி நிற்கும். வேகமாக டைப் செய்ய முடியாத காரணம் வேறொன்றும் இல்லை.

      Delete
    7. இன்னொரு தகவல் டாம் அண்ட் ஜெர்ரி வயது 78.

      Delete
  68. அகதா கிறிஸ்டியின் நாவல்கள் முழுமையாக என்னிடம் உண்டு ..மிகவும் பிடித்தவர் அகதா கிறிஸ்டி ...அதில் HERCULE POIROT என்னும் துப்பறிவாளர் கதைகளும் அடங்கும் ..
    பலவித குற்றங்களை ஆய்ந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் இவர் தனது இறுதி நாட்களில் பல்வேறு கொலைகள் நடக்க காரணமான ஒரு நபரை தனது மதியூகத்தால் கண்டுபிடித்து விடுவார்
    ஆனால் சட்டத்தின் முன் நிறுத்த முடியாது ..
    காரணம் கொலையாளியின் ஆயுதம் ‘’வார்த்தைகள்’’
    A PERFECT CRIME என அவரால் வர்ணிக்கப்படும் சங்கதிதான் இணைய உலகில் CYBERTROLL..
    BLOG,FORUM,CHAT ROOM என வியாபித்து இருக்கும் இவர்களுக்கு நேரம் நிறைய இருக்கும் .
    ஒரு குழுமத்தில் இருக்கும் நபரை கோபம் கொள்ள செய்யும் வண்ணம் பதிவிடும் இவர்கள் அதற்கான வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுக்க வல்லவர்கள் .
    .இவர்களை சமாளிக்க மூன்று வழிகள்தான் உள்ளது ..
    1. இவர்களை அலட்சியம் செய்வது ..இது ஒன்றே 100% உத்தரவாதமான வழி ..
    2. பதில் அளிக்க அவசியம் ஏற்படுமாயின் அவர்களை கண்ணியத்துடன் நடத்தி ,கருணையோடு சுருக்கமாக பதில் அளியுங்கள் ..உங்கள் நண்பர்கள் உங்களுக்காக கோபத்துடன் பதில் அளிக்க முயன்றால் அன்புடன் அவர்களை தடுத்து நிறுத்துங்கள் ..CYBERTROLL –களுடன் லாஜிக் பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள் ..LOGIC SIMPLY BOUNCES ON THEM…THEY CANNOT BE REASONED OUT ON ANY MATTER .ஆரோக்கியமான விவாதங்களில் அவர்கள் உள்ளே நுழைந்து பதில் அளித்தால் அதற்கு பதில் அளிக்க முற்பட வேண்டாம் ..
    3. எடிட்டர் மீதோ / தளத்தின் பொதுநலனுக்கு குந்தகம் விளையுமாறோ மிகவும் கடுமையான வகையில் கமென்ட் இருக்குமாயின் எடிட்டரிடம் ஈமெயிலில் சொல்லி நீக்க சொல்லலாம் ..அவர் அவருக்கு உகந்த நேரத்தில் கமன்ட்டுகளை நீக்கலாம் ..


    மறுபடியும் சொல்கிறேன் ..CYBERTROLL –களின் புத்திசாலித்தனத்தை குறைத்து எடை போடாதீர்கள் ..
    உங்களுக்காகவோ ,உங்கள் நண்பர்களுக்காகவோ உங்களை கோபமுற செய்வதே அவர்கள் நோக்கம் ..கோபம் கொண்டால் வார்த்தைகள் மீதான உங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள் ...அது உங்கள் கௌரவத்தை குறைக்கும் ..
    .



    ReplyDelete
    Replies
    1. ///
      மறுபடியும் சொல்கிறேன் ..CYBERTROLL –களின் புத்திசாலித்தனத்தை குறைத்து எடை போடாதீர்கள் ..
      உங்களுக்காகவோ ,உங்கள் நண்பர்களுக்காகவோ உங்களை கோபமுற செய்வதே அவர்கள் நோக்கம் ..கோபம் கொண்டால் வார்த்தைகள் மீதான உங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள் ...அது உங்கள் கௌரவத்தை குறைக்கும் ..///

      செனா அனா ..!

      உண்மைதான்.!
      இதை ஏற்கனவே யூகித்து நண்பர்களிடமும் சொல்லியிருக்கிறேன்.! நண்பர்கள் யாரிடம் இருந்தும் கோவமான கமெண்ட்டுகள் வராது.!

      நாம சிரிக்கிறதுதான் அவங்களுக்கு கடுப்புன்னா சிரிச்சி சிரிச்சி
      கடுப்பேத்துவோம் மைலார்ட்!

      ///அகதா கிறிஸ்டியின் நாவல்கள் முழுமையாக என்னிடம் உண்டு ///

      இப்போ பாருங்க ..அண்ணன் உதய் வந்து 'எங்கிட்ட அகதா க்றிஸ்டி நாவல் எல்லாம் கிடையாது.! அழகு குறிப்புகளும் கோலப்புத்தகமும்தான் இருக்குன்னு 'சொல்லுவாப்ல ..!!

      Delete
    2. ////மறுபடியும் சொல்கிறேன் ..CYBERTROLL –களின் புத்திசாலித்தனத்தை குறைத்து எடை போடாதீர்கள் ..////

      ஒரு இருபது இருபத்தஞ்சு மில்லிகிராம் இருக்கும்னு எடை போட்டு வச்சிருந்தேன்!! அதை விட அதிகமோ?!!! ஒரு நாப்பது?? :D

      Delete
    3. ////உங்களுக்காகவோ ,உங்கள் நண்பர்களுக்காகவோ உங்களை கோபமுற செய்வதே அவர்கள் நோக்கம் ..கோபம் கொண்டால் வார்த்தைகள் மீதான உங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள் ...அது உங்கள் கௌரவத்தை குறைக்கும் ..////

      +111111

      Delete
    4. உண்மைதான் செனா.அனா.....

      இருந்தாலும் சில நேரங்களில் சில வார்த்தைகள், சிலரை நோக்கி சொல்லும்போது பொறுமை போய்விடுகிறது.

      //நாம சிரிக்கிறதுதான் அவங்களுக்கு கடுப்புன்னா நாம தொடர்ந்து சிரிப்போம்...
      சிரிப்பது நமது நல்லுரிமை...

      //
      இது போன்ற பாஸிட்டிவ் எண்ணத்தோடு தான் இங்கும்/எங்கும் தொடர்ந்து இருக்கிறேன்.

      நன்றி! சரியான நேரத்தில் சரியான‌ விசயத்தை ஞாபகபடுத்தியதற்க்கு..

      Delete
    5. மிக அருமை சைபர் ட்ரோல் பற்றி சொன்னதற்கு.இன்று ஒரு புது வார்த்தை கற்று கொண்டேன்.

      Delete
  69. காலம் மாறும் பொழுது நாமும் மாறவேண்டும். என்று பெரும்பாலோனர் கூறுகிறார்கள். எல்லாம் மாற்ற இயலாது. மாறக்கூடியவைகள் மட்டுமே மாறவேண்டும். பொதுவாக பழங்காலத்தில் ஒன்று கூறுவார்கள் சோம்பேறி சித்தப்பன் வீட்டில் பெண் எடுத்தானாம். சிறிது யோசித்துப்பாருங்கள் எது மாறவேண்டுமோ அதுமட்டுமே மாறவேண்டும். எல்லாவற்றையும் மாற்றினால் அனர்தம் தான் விளையும். ஐந்து வயதில் அம்மாவை என்று அழைப்போம் வளர்ந்த பிறகு அத்தை என்றா அழைப்போம்.

    பொதுவாக எதிர்கருத்துக்கள் இத்தளத்தில் ஏற்கப்படுவதில்லை என்றுதான் எனக்குப் படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் மும் மூர்த்திகள் காரிகன் ரிப்கெர்பி போன்றவைகளை மிகவும் ஈடுபாடாக உள்ளது. அதற்காக தற்பொழுது வரும் கதைகள் சரியில்லை என்பதல்ல எனது கருத்து. சில வெளியிடுகள் எனக்கு உடன் பாடில்லை உதாரணமாக நிஜங்களின் நிசப்தம். அதில் உள்ள படங்கள் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கதையும் எனது குருவி மூளைக்கு புரியவில்லை.

    விஞ்ஞானி தாத்தா¸ லேடி எஸ்¸ ராமையா போன்றவைகளும் எனக்கு பிடிக்கவில்லை.

    பிடிக்கும் என்பதை பக்கத்திற்கு பக்கம் சிலாகித்து கருத்து வெளியிடுவோர் பிடிக்காத கதைகளை சிலர் விமர்சனம் செய்யும் பொழுது அதனை தாண்டி சென்றால் நலமே!

    ReplyDelete
    Replies
    1. நல்ல கருத்துகள்!!

      Delete
    2. //பிடிக்கும் என்பதை பக்கத்திற்கு பக்கம் சிலாகித்து கருத்து வெளியிடுவோர் பிடிக்காத கதைகளை சிலர் விமர்சனம் செய்யும் பொழுது அதனை தாண்டி சென்றால் நலமே!//

      நிச்சயமாய் !!

      அதே சமயம் விமர்சனங்களை படைப்பின் மீதான விமர்சனமாய் மாத்திரமே எழுதிட முனைந்தால் பிரச்சனைகள் தலைதூக்கப் போவதேயில்லையே ?! படைப்புகளின் நிறை-குறைகளை, தடிமனான சொற்பிரயோகமின்றி அலசிட்டால் ஆரோக்கியமான தர்க்கங்கள் பலனாகிடும் ; அனைவருக்கும் சுவாரஸ்யமும் கிட்டிடும் அல்லவா ?!

      ஒரு கருத்தை நிலைநாட்ட ; பதிவு செய்ய காரமல்லாத பாணியையும் கையில் எடுக்கலாமே என்பது தான் ஆதங்கமே தவிர்த்து - இங்கே விமர்சனங்களே செய்திடாதீர்களென்று யாரும், யாரையும் வலியுறுத்தியதில்லையே சார் ?

      Delete
    3. வேண்டுமெனில் இப்படி வைத்துக் கொள்வோமா ?

      நான் புரிந்து கொண்டுள்ளவரைக்கும், பெரும்பான்மை எதிர்மறைக் குரல்களுக்கு அதிருப்தி நேர்வது, நண்பர்களின் பாராட்டுக்கள் என்னை நோக்கிப் பயணிக்கும் போதே !

      ஒரு நபரைப் பிடிக்குமெனில் அவரது செயல்கள், வார்த்தைகள், வாக்குக்கள் - என சகலமும் ஸ்நேகமாய்த் தோன்றிடுவது இயல்பு ! அதே சமயம் பிடித்தமிலா ஒரு நபரை சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் எழும் போது, அந்த நபரின் ஒவ்வொரு செயலையும், சொல்லையும் அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து அலசிப் பார்க்கவே தோன்றிடும் !

      நம் வாசகர்களில் அனைவருக்குமே நான் 100/100 ஏற்புடையவன் என்ற கற்பனையெல்லாம் எனக்குக் கிடையாது & வாசகர்களுக்கும் அதுவொரு கட்டாயமும் கிடையாது ! So என்னை சகித்துக் கொள்ள வேண்டியதொரு கட்டாயத்திலுள்ள நண்பர்களுக்கு, எனது வழக்கமான எழுத்துக்களும், செயல்களும், ஏதோ ஒருவகையில் எரிச்சலை உருவாக்குவதும், என் திசையில் நண்பர்கள் பார்சல் செய்து அனுப்பிடும் பாராட்டுக்கள் அந்த எரிச்சலைக் கிளறி விடுவதுமே நடப்பதாக எனக்கொரு யூகம் ! இல்லாவிடின், நண்பர்கள் தோளில் தட்டிக் கொடுப்பதை, காலில் விழும் கலாச்சாரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் அபத்தங்கள் எழும் வாய்ப்புகள் இல்லையே ? I maybe wrong & I would love to be wrong too !

      But - இது சாத்தியமுள்ளதொரு சமாச்சாரமே எனும் போது, ஓயாது எழும் "இந்தக் கையைப் புடிச்சு இழுத்தியா ?" பஞ்சாயத்துக்களுக்குத் தீர்வாய் நானொரு முன்மொழிவை செய்து பார்க்கிறேனே guys ?

      உங்கள் பாராட்டுக்களையுமே இனி படைப்புகளை நோக்கியே அனுப்பிடுங்களேன் ? இதோவொரு நடைமுறை உதாரணத்தோடே விளக்குகிறேனே :

      இதோ - கீழே Dr .Hariharan - "கொலைகாரக் காதலி" பிரமாதம் ; மொழிபெயர்ப்பு அருமையாய் உள்ளதற்கு ஆசிரியருக்கு நன்றி " என்று பதிவிட்டிருக்கிறார் ! Maybe "மொழிபெயர்ப்பு அருமை" என்பதோடு நிறுத்திக் கொண்டால், சிலருக்கு நெருடல்கள் நேராது போகக்கூடுமே ?

      உங்களை அறிந்தவன் என்ற முறையில் உங்கள் பாராட்டுக்கள் அன்பின் வெளிப்பாடாய் எனக்குத் தெரிகின்றன ; ஆனால் ஒரு எட்டு தள்ளி நிற்போர்க்கு அது தனிமனிதத் துதியாய்த் தெரிவது தான் சிக்கலே என்று படுகிறது !

      End of the day - அனைவரும் நம் வாசகர்களே எனும் போது, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கடமை நமக்குண்டு அல்லவா - irrespective of their likes / dislikes for me ?!

      Oh yes - 'ஆடு களவு போனா மாதிரி கனவு கண்டேன் !" என்ற காரணங்களை மட்டுமே கையில் வைத்துக் கொண்டும் பஞ்சாயத்தைக் கூட்ட நினைக்கும் நண்பர்களை இவை எதுவும் மட்டுப்படுத்தப் போவதில்லை ! கடமையே கண்ணாய் தம் இலட்சியத்தில் அவர்கள் குறியாய் இறுக்கப் போவது உறுதி ! அவர்களைப் பற்றிய கவலை நிச்சயமாய் நமக்கு அனாவசியமே !

      contd :

      Delete
    4. தவறு. பிடிக்கவில்லை என்றால் வராதே என்றுதான் கருத்துக்களை பதிவிடுகின்றனர்.

      Delete
  70. இந்த மாதம் வந்த கொலைகாரக் காதலி சிக்பில் காமிக்ஸின் நம்பர் 1 காமெடி ஆகும். சிறந்த மொழி பெயர்ப்புக்கு ஆசிரியருக்கு நன்றி. இந்த மாதம் வந்த அனைத்து சிக்பில் காமிக்ச்சும் சுவையாக இருந்தது. Lady S and tex viller also good

    ReplyDelete
  71. பிடிக்கும் என்பதை பக்கத்திற்கு பக்கம் சிலாகித்து கருத்து வெளியிடுவோர் பிடிக்காத கதைகளை சிலர் விமர்சனம் செய்யும் பொழுது அதனை தாண்டி சென்றால் நலமே!
    +1

    ReplyDelete