நண்பர்களே,
வணக்கம். ரொம்ப நாளாகி விட்டதல்லவா - ஒரே நாளில் பின்னூட்ட எண்ணிக்கை முன்னூறைத் தாண்டி ? "ஜானி ஒரு கராட்டே வெட்டு வெட்டினார் !" போன்ற வசனங்களைப் படிப்பதை விடவும் - அந்த Load more மூட்டைக்குள் புகுந்து புகுந்து comment களைப் படிப்பது மகா சிரமம் என்பதாலும் ; கம்பெனி விதிகளின்படி 300 ஐத் தாண்டும் போதே உப-பதிவு ஆஜராவது அவசியம் என்பதாலும், here I am !! ஒற்றை நாளில் ஒரு போதி மரத்தைத் தேடிப் பிடித்து புது ஞானத்தை உட்புகுத்திக் கொள்வதெல்லாம் நிஜத்தில் சாத்தியமாகாது என்றாலும், உங்களின் ரசனைகள் சார்ந்த மனம் திறப்புகள் நிறையவே insights வழங்கியுள்ளது என்பேன் !! இதற்காகத் தான் மௌனங்கள் வேண்டாமே guys என்று தொடர்ச்சியாய் பதிவுக்குப் பதிவு கூவி வருகிறேன் ! என்ன தான் உங்கள் நாடிகளை அறிய நான் தலை கீழாய் நின்று தண்ணீர் குடித்தாலுமே - அதுவொரு தேர்ந்த யூகமாய் மட்டும் தானே இருக்க முடியும் ?! உங்களிடமிருந்தே விடைகள், பதில்கள் பிரவாகமெடுக்கும் போது - என் பணியின் பிணிகள் திடு திடுப்பென்று மட்டுப்பட்டுப் போய் விடுகின்றனவே ? So keep rocking & keep those thoughts flowing all !!
சரி..உப பதிவுக்கு கொஞ்சம் உற்சாகமூட்ட ஏப்ரலின் இன்னொரு அட்டைப்படத்தைக் கண்ணில் காட்டுவோமென்று நினைத்தேன் ! So இதோ நமது மதிமுக அழகி (அதை பிரித்து கட்சிப் பெயராய் வாசித்திட வேண்டாமே - ப்ளீஸ் ?!) தனது ஆல்பம் # 4 சகிதம் நம்மை சந்திக்க வரயிருப்பதன் preview ! சமீபத்தைய பயணிகளின் நீட்சியாய் அதே ஒரிஜினல் டிசைன் ; வர்ணங்களில் மட்டுமே நாத்து டின்கரிங்கோடு ! கதையைப் பொறுத்தவரையிலும் வழக்கமான வான் ஹாம் த்ரில்லர் ; சிலபல மாமூலான templates சகிதம் ! ஆனால் சித்திரங்களும், வர்னகி சேர்க்கைகளும் ஒரு புது உயரத்தில் இந்த ஆல்பத்தில் இருப்பதாய் எனக்குத் தோன்றியது ! And அச்சிலுமே தக தகக்கின்றன உட்பக்கங்கள் !
But இந்த யுவதியின் சார்பிலுமே சில வினவல்கள் அத்தியாவசியம் என்று படுகிறது எனக்கு ! LADY S நம் ரசனைகளுள் ஏற்படுத்தியுள்ள தாக்கமானது இரு வெவ்வேறு துருவங்களில் தொலைவில் இருப்பதை உங்களில் எத்தனை பேர் கவனித்தீர்களா - தெரியலை ! நிறைய பேரின் TIER 1-ல் இருக்கிறார் அம்மணி ; இல்லாங்காட்டி நேராக TIER 3-ல் குந்திக் கிடக்கிறார் இன்ன பிற நண்பர்களின் பட்டியல்களில் !! இவரை சிலாகிக்க காரணங்கள் புரிகிறது ; but ஓரம்கட்ட அவசியப்படும் (உங்களின்) முகாந்திரங்கள் பற்றிப் பேசிடுவோமா ப்ளீஸ் ? தயக்கங்களின்றி, LADY S மீதான உங்கள் பார்வைகளை முன்வைத்திடலாமே ?
Bye guys !! அப்புறம் - முந்தைய பதிவில் மதியத்துக்கு மேலாய் நீங்களிட்ட பின்னூட்டங்களுள் எனது பதில் அவசியமாகிடக்கூடியவற்றை இங்கே கொணர்ந்து பதில் போடுகிறேன் கொஞ்ச நேரத்தில் !!
1st...
ReplyDeleteவந்தோம்ல ஃபர்ஸ்டா...
Deleteமாலை வணக்கம் சார்...
வணக்கம் நண்பர்களே...
சூப்பர் சார்.
Delete👍👍👍👍
Deleteஅண்ணாந்து பாருங்க டெ வி
Deleteநம்போ மச்சக்கன்னி......
4
ReplyDeleteHAI....SURPRISE..
ReplyDeleteதுணைப்படம் அள்ளுதே.... அந்த கதை எப்ப வருதுங் சார்...?
ReplyDeleteசீக்கிரமே....!
Deleteஅள்ளுதே இல்ல
Deleteதுள்ளுதே ச்சும்மா
மனசை கிள்ளுதே
Deleteபட்டு முகத்து சுட்டி பெண்ணை,
Deleteவட்டம் அடிக்கும் வண்டு கண்கள்...
துள்ளுவதோஓஓஓஓஓ இளமைய்ய்ய்ய்...
Deleteமுன்னட்டையில் முன்னழகு நடையோ
Deleteபின்னட்டையில் பின்னழகு நடையோ..
அடடா! அடடடா!! முன்னட்டையில் அந்த ட்ரக்கின் ஹெட்லைட் வெளிச்சத்தையும், அதன் பிம்பம் நீர்க்கோர்த்த சாலையில் பிரதிபலிப்பதையும் பாருங்களேன்!! ஆஸம் ஆஸம்!!
ReplyDeleteபின்னட்டையில் சிரித்துக் கொண்டிருக்கும் அந்த ஓவியர் Aymond -ஐப் பாருங்களேன் - ரொம்பவே கொஞ்ச வயதுக்காரர் போல் தெரிகிறார் !! மனுஷன் 50 ஐத் தொடவில்லை இன்னமும் !!
Deleteஓவியரைப் பாருங்க ஈவி. நம்மைப் போலவே இளசா இருக்காரு. அதான் நம்ம மனசை புரிஞ்சி அசத்தலா விருந்து படைக்கிறாரு...
Deleteஆசிரியரும் கொஞ்ச(ற) வயசுக்காரர் தான்.
DeletePrabhu : //சேற்றுக்குள் சடுகுடு - மற்றவர்கள் பத்தி எனக்கு தெரியாது ஆனால் நான் இந்த நீல சட்டை அணிந்த கௌண்டமணி செந்திலுக்கு பேன். கலக்கல் கதை. ஒரே மூச்சில் முடித்தேன்.//
ReplyDeleteயுத்த களத்தில் சிரிப்பென்ன வேண்டிக் கிடக்கு ? என்ற ரீதியிலோ - என்னவோ - நண்பர்களில் பலருக்கு இந்த blue பசங்களைக் கண்டாலே லவ்ஸ் வர மறுக்கின்றதே !!
ஷானியா நம்ம லிஸ்ட்ல அவசியம் வேணும் சார்....
ReplyDeleteஇத்தனை காலமாக கோலோச்சி வந்த பெண்மணியின் கதைகளை விட இது கொஞ்சம் நல்லாவே இருக்கு.
கதைக்களனும் நன்றாகவே இருக்கு!
கலரில் பெரிய சைசில் எனும்போது படிக்க தானாகவே இன்ட்ரஸ்ட் வருது!
முக்கியமாக ஓவியங்கள் தூள்; கீச்சல் பாணி, கோட்டு பாணினு சோதிக்காம நச்சுனு அள்ளுது; அதற்கே கொடுத்த காசு சரியாகிடுது; கதை எப்பவும் இலவசம்தான்....
//
Deleteஇத்தனை காலமாக கோலோச்சி வந்த பெண்மணியின் கதைகளை விட இது கொஞ்சம் நல்லாவே இருக்கு.
//
+1
அ-அது யாரைச் சொ-சொல்றீங்க ?
Deleteமாடஸ்தி தான் சார்...
Deleteஹி...ஹி...அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு...
மடிப்பாக்கம் ஆட்டோவுக்கெலாம் பயந்தா இங்கன தொழில் செய்ய முடியாதேங் சார்...!!!
Delete///மாடஸ்தி தான் சார்...
Deleteஹி...ஹி...அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு...///
இந்த உலகத்துல ஒண்ணை விட ஒண்ணு பெட்டரா தெரியும்.அதுக்காக அடிக்கடி மனச மாத்திக்கக்கூடாது (ஜானி பட டையலாக்) .
மடிப்பாக்கத்தில் இப்போ ஆட்டோலாம் கிடையாதே ; நேரடியாய் ஆர்மி தான் ; பீரங்கி தான் ; டாங்கி தானாம் !
DeleteThis comment has been removed by the author.
Delete@எடிட்டர் பாஸ்
Deleteகீழே நண்பர் Ramm சொன்ன மாதிரிதான் "XIII , LARGO , SHELDON போன்ற மற்ற வான் ஹாம்மே கதைகளில் உள்ள விறுவிறுப்பு ,சுவாரஸ்யம் இதில் இல்லை" என்றே நானும் பீல் பண்றேன்!
நான் Tier III போடும்போதே, ஒரு வேல நமக்குத்தான் பிடிக்கலையோன்னு பார்க்கும் போது நீங்க சொன்ன மேட்டர்'எ கவனிச்சேன் ! என்னை போல் பலரும் Tier III கொடுத்திருப்பதை!
ஆனாக்க....நீங்க இவங்க இல்லன்னா அவங்க கதையை போட்ருவேன்னு பயமுறுத்தினீங்கனா...
"லேடி S சூப்பர் அப்பு" என்று பாராட்டறதை தவிர எங்களுக்கு வேறு வழி(வலி) இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் :-)
கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ): //தயவுசெய்து பு.வி யை எந்த சந்தாவிலும் இணைத்து விடாதிர்கள். எல்லா சந்தாவையும் விடாமல் கட்டும் எனக்கு ஒரு சந்தாவை கட்ட முடியாமல் போகும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்.//
ReplyDeleteஎப்டிலாம் யோசிக்கிறாங்க ?
சார்
Deleteநம்மாளுங்க நாசாவுக்கே நாசூக்கா ஐடியா குடுத்து பின்னுவாங்க.
மதிமுக :மதி முக(ம்)
ReplyDelete(லேடி S பிரியர்களுக்காக)
Karthik : //தற்போதைய கார்ட்டூன் காமிக்ஸ்களில் கடந்த காலங்களை விட நகைச்சுவை குன்றியுள்ளது. தற்போதைய லக்கி லூக் மற்றும் சிக் பில் கதைகளே அதற்கு உதாரணம். ஸ்முர்ப்ஸ் பொடி பாஷையையும் என்னால் ரசிக்க முடியவில்லை . கண்டிப்பாக புதிய கார்ட்டூன் காமிக்ஸ்களை முயற்சி செய்யலாம்.//
ReplyDeleteமே மாதம் புது ஜோடியான "மேக் & ஜேக் " தலைகாட்டுகிறது ! ரொம்ப வித்தியாசமான கதைக்களமாக எனக்குப் பட்டது ! பார்க்கணும் - இவர்களுக்கான response எவ்விதம் இருக்குமென்று !
புது வரவுகளுக்கு எப்பவுமே பச்சைக்கம்பள வரவேற்புதான் சார்.
Deleteமேக்&ஜேக் கை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
And இங்கேயும் கலரிங்கில் லேட்டஸ்ட் பாணி ; சும்மா அச்சில் கலக்குகிறார்கள் ! புக்காக்கிக் கையில் வைத்துப் பார்க்கும் போது மிரட்டுகிறது !
Deleteஆசிரியர் சார் @ ஏப்ரல் மாச புக்ஸ் தானே ரெடி ன்னீங்க; இப்ப மே மாசமும் ரெடீங்கறீங்க. கிள்ளிப் பார்த்து கொள்கிறேன் சார்.
Delete"சுந்தர பாண்டியன் "- படத்தில் கதாநாயகி சொல்ற டயலாக்," நம்ம பஸ்ஸாடி இது". அதுமாதிரி "ஏன் சார் நம்ம காமிக்ஸ் தானா இது???"....
தொம்... தலை சுற்றி கீழே விழுகிறேனாக்கும்...
அதற்க்குள்ளேயேவா.
Deleteபஸ்ல வந்துருக்குறது யாரு
Deleteநம்ம எடிட்டர்ல.
ச்சதுக்க்க்
Deleteடெ வி உங்கள அப்டியே தாங்குறேனாக்கும்
// மே மாதம் புது ஜோடியான "மேக் & ஜேக் " தலைகாட்டுகிறது ! ரொம்ப வித்தியாசமான கதைக்களமாக எனக்குப் பட்டது ! பார்க்கணும் - இவர்களுக்கான response எவ்விதம் இருக்குமென்று ! //
Deleteமிகுந்த ஆவலுடன் மே மாதத்தை எதிர் நோக்குகிறேன்!!!!
மே மாசம், நம்ம டியூராங்கோ வேற வர்றார், ஆகா மே மாசம் களை கட்டும் போல...
DeleteSummer holidays special
DeleteRummi XIII : //எனக்கு ஸ்மர்ப்ஸ், லியானார்டோன்னா தான் பயம்... மத்தபடி ஐ லவ் யூங்க...//
ReplyDeleteஎனக்கு என்னமோ - யாரைப் பாத்தாலும் 'ஐ லவ் யூ' தான் தோணுதுங்க !!
லேடி எஸ் வருடத்திற்கு ஒருமுறை (ஒரே இதழில் இரு ஆல்பம்) என்ற அளவு கோலில் வருவது நலம் சார் ...
ReplyDeleteநடப்பாண்டிலேயே 1 ஸ்லாட் தானே சார் ?!
Deleteசிறப்பு சார். அப்படியே ஜூலியாவுக்கும் வருடந்தோறும் ஒரு ஸ்லாட் ஒதுக்கி பார்க்கலாம். நள்ளிரவில் காலன் வருவான் மாதிரி கதைக்களன் இல்லாமல் நின்று போன நிமிடங்கள் மாதிரியான கதையாக பார்த்து தேர்வு செய்து வாய்ப்பளித்து பார்க்கலாம்.விற்பனை சறுக்கல் என்றால் கூடவே மாடஸ்டி கதையையும் இணைத்து லேடி டைகர் ஸ்பெஷல் என்ற தலைப்பில் கூட முயற்சித்து பார்க்கலாமே சார்?
DeleteMithun Chakravarthi11 March 2018 at 14:35:00 GMT+5:30
ReplyDeleteமொழிபெயா்ப்பாளா்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட் !!!
THINK GLOBAL ACTION LOCAL
இந்த ஸ்லோகனை சிறப்பாக நல்ல தமிழில் மொழிமாற்றம் பண்ணுங்கள்!!
சும்மா டெஸ்டுக்காண்டி!!??
ReplyDelete
Replies
Mithun Chakravarthi11 March 2018 at 14:38:00 GMT+5:30
குறிப்பு : இது பிரபல கனரக வாகன உற்பத்தி நிறுமமான ASHOK LEYLAND னுடையது
Delete
Rummi XIII11 March 2018 at 14:46:00 GMT+5:30
பெப்சின்னு நினைச்சுட்டே கோலி சோடா குடி..
Delete
ஈரோடு விஜய்11 March 2018 at 14:47:00 GMT+5:30
"உலகத்துக்காண்டி யோசி
உள்ளூர்க்காண்டி வாசி"
(ஹிஹி நான் கூட மொழிபெயர்ப்புக்கு அப்ளை பண்ணலாம் போலிருக்கே? ;) )
Delete
Mithun Chakravarthi11 March 2018 at 14:51:00 GMT+5:30
ஈவி நிச்சமா நீங்க காா்ட்டூனை மொழி பெயா்க்கலாம் சூப்பா்!!
Delete
Mithun Chakravarthi11 March 2018 at 15:00:00 GMT+5:30
Rummi XIII
நல்ல தமிழ்கிறத தப்பா புாிஞ்சுக்கிட்டாரு போல!!
Delete
ஈரோடு விஜய்11 March 2018 at 15:09:00 GMT+5:30
///பெப்சின்னு நினைச்சுட்டே கோலி சோடா குடி..///
ஹா ஹா ஹா! சூப்பர் ரம்மி!! :)))))
Delete
j11 March 2018 at 16:04:00 GMT+5:30
இலக்கியம்:
கற்பது உலகளவு
செய்வது அவ்வளவும்
பழமொழி:
வெளியூர்ல சடையாண்டி
உள்ளூர்ல கோமணாண்டி(உழைப்பாளி)
நக்கல்:
பாரின் பீர்னாலும்
உள்ளுர் ஊறுகாயோடே.
கைபுள்ள:
எவ்வளவு நெனச்சென்ன,
ஸ்ஸ்ஸ் முடியல...
நாடகம்:
உலகையே திருத்துவோம்
உள்ளூர் ஞானத்தால்
விஞ்ஞானம்:
இருப்பது இன்டர்நெட்
முடிப்பது ப்ராஜெக்ட்.
Delete
Paranitharan K11 March 2018 at 16:35:00 GMT+5:30
கோல்கேட் பேஸ்ட்னு நினைச்சுட்டு லோக்கல் பேஸ்ட்டில் விலக்கு...!
Delete
செந்தில் சத்யா11 March 2018 at 16:44:00 GMT+5:30
சுஸ்கி விஸ்கி ன்னு நினைச்சிகிட்டே
ஸ்மர்ப் பை படி
Delete
Govindaraj Perumal11 March 2018 at 17:50:00 GMT+5:30
வானத்திலேயே பறந்தாலும்,
பூமியே மய்யம் (முக்கியம்) .
Delete
Arivarasu @ Ravi11 March 2018 at 18:31:00 GMT+5:30
ஓலக சரக்கா இருந்தாலும்,உள்ளூர் சரக்கு மாதிரி வருமா,ஆங்.
ஹி,ஹி, சும்மா ஒரு டமாசுக்கு.
Delete
Mithun Chakravarthi11 March 2018 at 18:46:00 GMT+5:30
////மய்யம் (முக்கியம்)////
அட கடவுளே இது வேறையா??
ம்ம்ம்
Delete
Mahendran Paramasivam11 March 2018 at 18:55:00 GMT+5:30
உலகை நினைத்து ஊரை திருத்து.
----------------------------------------------------------------------------------
புலன் விசாரணை என்ன - டா வின்சி code ஐ மொழிபெயர்க்கவே நம்மகிட்டே ஒரு டீம் இருக்கு போல் தெரியுதே ?!! ஆளுக்கொரு கி.நா. பிரிண்ட் அவுட் கூரியர்ர்ர்ர்ர்ர் !!
// ஆளுக்கொரு கி.நா. பிரிண்ட் அவுட் கூரியர்ர்ர்ர்ர்ர் !!//
Deleteதலைவரின் மைண்ட் வாய்ஸ்,தெறித்து ஓடும் படங்கள் பத்து.
ரம்மியின் பெப்சி /கோலி சோடா படித்து சிரிப்பு அடக்க முடியவில்லை ..
Deleteபுவி மொழிபெயர்ப்பு பந்தயத்தில் ஆர்வம் இருப்பினும் நேரப்பற்றாக்குறை காரணமாக நான் இல்லை ..( நம்பிக்கை வைத்து பரிந்துரைத்த பரணி ,ரம்மிக்கு என் நன்றிகளும், வருத்தங்களும் )
MP சொன்னது போல் THINK GLOBAL ACT LOCAL என்பது ஒரு காபிரைட் பெற்ற ஒரு ஸ்லோகன் ...
இப்படி இருக்கலாம்
உலகினிது பெற பெருகட்டும் எண்ணங்கள் பலமடங்கு
அவை உருவாக்கம் பெற முயற்சிகள் உன் வீட்டு முற்றத்தில் நீ தொடங்கு
எளிமையான உதாரணங்கள்
உலகம் வெப்பமயமாதல்
துருவங்களில் அதிகமாய் உருகும் பனி
குளிர்சாதன பெட்டி உபயோகம் குறைப்பாய் நீ இனி.
தண்ணீர் தட்டுப்பாடு
உலகினில் குடிநீர் பஞ்சம் வருமென்பது உன் கருத்து
ஒழுகும் உன் வீட்டு குடிநீர் குழாயை முதலில் நீ நிறுத்து
கார்ப்பரேட் உலகில் இது வேறு தொனியில்
உலகளவு வணிகம் செய் ..உள்ளூருக்கு தகுந்த மாதிரி வளைந்து கொடு ..என்பது கார்ப்பரேட் மந்திரம்.
நீ மாமிச கடை உலகெங்கும் திறக்க முற்பட்டால்
இன்டியானாபோலீசில் கொழுத்த மாட்டை தேடு ( அமெரிக்கா )
இந்திய ஹோட்டலில் தட்டில் சிக்கனை போடு
( அமெரிக்காவில் மாட்டு இறைச்சி அதிகம் உண்டால் இந்தியாவில் கோழி அதிகம் உண்கிறார்கள் )
.
கல்வித்துறையில் இன்னும் மாறுபட்ட தொனியில்
தமிழ்நாட்டில் வரலாறு படிக்கும் மாணவனுக்கு இந்தியாவில் பிற பாகங்களில் என்ன நடக்கிறது என்பதையும் உலகில் என்ன நடக்கிறது என்பதையும் சொல்லி கொடுப்பது
TEACH IN THE FIRST PERIOD ABOUT CHOLAS WHO BUILT BANKS ASISDE RIVER CAUVERY
PREACH IN THE NEXT PERIOD OF CORRUPTIONS THAT HAPPENED AROUND THE BANK OF PUNJAB
வருத்தங்களை வார்த்தைகளில் வடிக்க முடியாது... ஒரு வேளை EBF ல் ஒரு பிரியாணியும் , சிகரெட்டும் சமன் செய்யலாம்...
Deleteரம்மி@ வுடுங்க கவலையை..Johnnieஐ கூட walker ஆ மாத்தி புடுவோம்..:-)
Deleteஈரோடு விஜய் //
ReplyDelete'புலன் விசாரணை'யின் மொழிபெயர்ப்புக்கு இதுவரை விருப்பம் தெரிவித்துள்ள நண்பர்கள் (என் தக்கணூண்டு அறிவுக்கு எட்டியவரை) :
* PfB
* J
* கணேஷ்குமார்
* கார்த்திகை பாண்டியன்
நண்பர்களால் முன்மொழியப்பட்டவர்கள்
* செனா அனா
* கார்த்திக் சோமலிங்கா
இது தவிர இன்னும் சிலரும் எடிட்டருக்கு ஈமெயிலில் விருப்பம் தெரிவித்திருக்கலாம்!
என் கேள்வியெல்லாம், மேற்கூறிய நண்பர்கள் அனைவருமே தகுதிவாய்ந்த திறமைச்சாலிகள் எனும்போது, இந்தப் பணியை எடிட்டர் யாரிடம் ஒப்படைக்கப் போகிறார் - என்பதே இப்போதைய பத்தாயிரம் ரூபாய் கேள்வி! (ஹிஹி எடிட்டர் மாட்டிக்கிட்டாரு)//
---------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்களின்முன்மொழிவு-பின்மொழிவெல்லாம் கதைக்கு ஆகாது ; சம்பந்தப்பட்டவர்கள் இந்நேரத்துக்கு ஜார்கண்ட் பக்கமாய் மாற்றல் வாங்கிக் கிளம்பிப் போய் இருக்கக்கூடும் !!
So நேரடியாய் களத்தில் இறங்க ஆர்வம் காட்டியுள்ள நண்பர்கள் நால்வரே !! இதில் நண்பர் கார்த்திகை பாண்டியன் சார்பில் விண்ணப்பித்துள்ளவரே PFB தான் என்பதால் எண்ணிக்கையை மூன்றாக எடுத்துக் கொள்ளலாமா ?
So எஞ்சிய மூவருமே முயற்சித்துப் பார்க்கட்டுமே - may the best script win !!
///So எஞ்சிய மூவருமே முயற்சித்துப் பார்க்கட்டுமே - may the best script win !!///---ஊய்...ஊய்... 3பேர் என்றாலும் நச் போட்டியே...
Deleteஇதில் J ji- நமக்கு தெரியும், சினிமா கதாசிரியர், வசீகரமான எழுத்தாளுமை கொண்டவர். நகைச்சுவை உணர்வோடு, நீட் பிரசன்டேன் வைக்க கூடியவர்.
K" கணேஷ்- இளம் கன்று பயமறியாது என களம் இறங்கியுள்ளார். கொஞ்சம் கான்ஃபிடென்ஸூம் தெரியுது. ஐடி ஃபீல்டில் இருப்பவர்.
கார்திகை பாண்டியன்- 2013ல் இருந்து நண்பரோடு விழாக்களில் பழக்கம்.பழக நல்ல நண்பர். எழுத்தாளர்; ஏகப்பட்ட புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.
2015ஈரோடு விழாவில், ரஷ்யா பணியை விட தான் விரும்பிய துறையான எழுத்தாளராக பரிணமித்த அனுபவத்தை வித்தியாசமான ஆங்கிளில் சொல்லி அங்கிருந்த எங்களை அசத்தினார்.
இப்படி 3 வித்தியாசமான பின்னணியில் இருந்து போட்டியில் குதித்துள்ள நம்ம 3நண்பர்களும், இத்தனை ஆண்டு காலத்தில் நம் ரசனைகளை அறிந்து இருப்பர். எனவே 3வருமே தங்களது முழுத்திறமையை காட்டி நாம் விரும்பும் நடையில் படைப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
3வருக்கும் என் வாழ்த்துகள் நண்பர்களே...யார் வென்றாலும் மிளிரப்போது காமிக்ஸ் காதலே....!!!
அன்பின் ஆசிரியருக்கு, போட்டியில் நானும் இணைந்திட விருப்பமே. லயன் வரலாற்றில் நாமும் ஒருவகையில் பங்களித்திருக்கிறோம் என்கிற திருப்தி மட்டும் போதும் எனக்கு. என்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்திருக்கும் நண்பர் விஜயராகவனுக்கும் என் அன்பு. நன்றி.
Deleteபிரியமுடன்,
கார்த்திகைப் பாண்டியன்
டெக்ஸ் விஜய் +1
Deleteகலக்குங்க கார்த்திகை பாண்டியன்!!
அருமை... நான்கு நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...பரிசு கிடைக்குதோ இல்லியோ நாலு பேருக்கும் EBF ல் பிரியாணிக்கு நான் கேரண்டி...
Delete///பரிசு கிடைக்குதோ இல்லியோ நாலு பேருக்கும் EBF ல் பிரியாணிக்கு நான் கேரண்டி...///
Deleteநா..நானும் போட்டியில கலந்துக்க விரும்பறேன் யுவர் ஆனர்!
நானும்....!
DeleteJ நல்ல திறமை சாலின்னு தெரியும். கார்த்திகை பாண்டியனும் திறமை சாலின்னு சேலம் டெக்ஸ் சொல்லுவதுதில் இருந்து தெரிகிறது.
Deleteபந்தயத்தில் ஜெயிக்கிறோனே இல்லையோ, இவர்களுடன் சேர்ந்து நானும் ஓடப்போகிறேன் என்பதே எனக்கு உற்சாகமான விஷயம் தான்.
ஹி...ஹி.. நானும்தான்.
Delete@ நண்பர்களுக்கு.. தீவிர இலக்கியம் என்பது வேறு. சற்று கமர்ஷியல் கலந்து செய்திட வேண்டிய காமிக்ஸ் மொழிபெயர்ப்பு என்பது முற்றிலும் வேறு. முயற்சி செய்து பார்க்கலாம் என்கிற எண்ணம் மட்டும். எனக்கென்னமோ திரு.கணேஷின் மொழிபெயர்ப்பு சுகமாக அமைந்திடும் என்று ஒரு எண்ணம். பார்க்கலாம்.
Deleteபிரியமுடன்,
கார்த்திகைப் பாண்டியன்
புலன் விசாரணை மொழிபெயர்ப்பில் ஈடுபடவுள்ள நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
Deleteஇருந்தமிழில் காமிக்ஸ் வெளிவரின் இமையோர்
Deleteவிருந்தமிழ்தாயேயாயினும் யான் வேண்டேன்
என்னும் அளவிற்கு காமிரேடுகளை தனது படைப்பாக்கத்தால் கட்டி போட்டு இருப்பவர் எடிட்டர் ..
அவரது ஆக்கத்திறமைக்கு இணையாக/ அல்லது அவரையும் விஞ்சி தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தவிருக்கும் / புலன் விசாரணை மொழிபெயர்ப்பில் ஈடுபடவிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் ...
இது அந்த ... ... அணி தானே இலக்கணத்தில்..
DeleteSenthil Madesh11 //
ReplyDeleteஅன்பு எடிட்டர் மறு பதிப்புகள் மீதான ஆர்வம் எதுவும் குன்றி விடவில்லை. இன்றும் காரிகன்,கிர்பி,வேதாளர் மீதான ஆர்வம் அடங்கவில்லை. நேரம்,பொறுமை இரண்டுக்குமே இப்பொது பஞ்சமாகி விட்டது.அதுவுமில்லாமல் எடிட்டர் காரிகன்,ரிப்,வேதாளர் மறு பதிப்பில் ஆர்வமின்றி இருப்பதும் எங்கள் மெல்லிய உணர்வுகளை கட்டுப்படுத்தும் காரணிகள். மற்றபடி நமது அனைத்து வெளியீடுகளையும் வாங்கும் எங்கள் ஆர்வம் என்றும் அணையாது//
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சார்...பொறுமையாய் இருப்போம் ; ரசனைச் சக்கரங்கள் ஒரு முழுச் சுற்று சுழன்று, மறுக்கா ரிப் கிர்பி மீதும், காரிகன் மீதும், சார்லி மீதும் காதல் தோன்றினாலும் சொல்வதற்கில்லை !!
I am waiting sir!
Deleteஅய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் :
ReplyDelete//ஸ்மர்ஃப் போன்ற கார்ட்டூன் காமிக்ஸ்களுக்கு நம்மவர்களிடன் வரவேற்பு இல்லை என்பதற்காக அவற்றை தவிர்ப்பது சரியாக இருக்காது. ஏனெனில், இளம் வாசகர்ளுக்கு காமிக்ஸை அறிமுகப்படுத்த கார்ட்டூன் கதைகளை விட்டால் வேறு இல்லை. முடிந்தால் லயன் மினியை மீண்டும் கொண்டு வந்து அந்த பேனரில் கார்ட்டூன் கதைகளை மட்டுமே வெளியிடலாம். புத்தகக் காட்சிகளில் சிறுவர்களுக்கு எவ்வித சங்கடமின்றி காமிஸ்களை அறிமுகப் படுத்த வசதியாக இருக்கும். இதற்கு தனிச் சந்தாவை அறிமுகப் படுத்தினால் சிறுவர்களுக்கு குறைந்த செலவில் சந்தா பரிசளிக்கலாம். கார்ட்டூன் கதைகள் இல்லாத காமிக்ஸ் உலகம் சாத்தியமற்றது.
தற்போது வரும் காமிக்ஸ் ஆல்பங்களை படிக்கும் போது அந்த கால நாயகர்களின் படைப்புகள் பழங்காசுகளாகத்தான் தெரிகின்றன. எனவே, மறுபதிப்புகளை அறவே தவிர்க்கலாம்.
மற்றபடி, சமீப ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட எந்த நாயகரும் சோடை போகவில்லை. எல்லோருக்கும் வாய்ப்பளிக்கலாம்.//
====================================================================================================================================================================
வரிக்கு வரி thumbs up சார் ; அந்த மினி-லயன் சமாச்சாரத்தைத் தவிர்த்து ! இப்போதும் சந்தா C கார்ட்டூன்களின் தனிப்பட்ட தடம் மட்டும் தானே ? அதனில் இடம்பிடிக்கும் சகல கதைகளையும் எவ்வித நெருடல்களுமின்றி சிறார்களுக்கு ; பள்ளி நூலகங்களுக்கு வழங்கிட இயலும் தானே ?!
நண்பர்களுக்குத் தோன்றும் பரவலான அந்த நெருடல் -
கார்ட்டூன்கள் மீதான ஒரு அலர்ஜியே ; பேனரை மட்டும் மாற்றி அந்த அலர்ஜியை சரி பண்ண இயலாதே ?
Sir try to combo of vintage heros..it leads to create more slots for old heros...
ReplyDeleteசார்...சந்தாவில் சுவாரஸ்யத்தைத் தக்க வைக்க வேண்டுமெனில், பழசு சார்ந்த மோகத்திலிருந்து நகன்றிட ஒரு conscious effort அத்தியாவசியம் ! தொடர்ந்து அந்தச் சக்கரத்துக்குள்ளேயே கிடந்து உழன்று வருவோமெனில் அதுவொரு வரலாற்றுப் பிழையாகிடக்கூடும் !
Deleteபழசு - புத்தக விழாவில் சேகரிப்புகளுக்கென வாங்கிடும் வாசகர்களுக்கு மாத்திரமே சார் !
விஜயன் சார், அட்டைப்படம் அருமை.
ReplyDeleteலேடி s கதையின் அட்டை படம் எல்லாவற்றிலும் அவரின் முகத்தை water mark styleல் லேசாக தெரிவது போல் அமைத்து பிரதான படத்தை தனியாக வரைவது ஏன்? இதுவும் ஸ்மர்ப்ஸ் போன்று ஒரிஜினல் பதிப்பகத்தார் standard ஏதாவது வைத்து உள்ளார்களா?
அது Lady s emblem மாதிரி சார்
Deleteசரி. எனது கேள்வி இது அவர்களின் அட்டைப்படத்தின் standard designஆ?
DeleteRedirected to editor
Deleteஆனால் நாம் பார்த்த அட்டை படங்கள் வரை Lady S - italics regular.
Water mark fig also,
நீலச்சட்டை பட்டாளம் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். வாய்விட்டு சிரித்து சிந்தனை செய்ய வைப்பவர்களில் இவர்களும் ஒருவர்.
ReplyDeleteஇவர்கள் இருவர்
Deleteப்ளூ கோட் பட்டாளத்துக்கு ஜே...!
Deleteவருடம் 1 ஓகே...
Delete+1
Deleteஆங்! எல்லோரும் இந்நேரம் தூங்கியிருப்பாங்க. டீலை முடிக்க இதுதான் சரியான நேரம்...
ReplyDeleteஎடிட்டர் சார்...
அதாவது, லாஸ்ட் அண்டு ஃபைனல் ரேட்; 40,000 ரூபாய்! என்ன சொல்றீங்க?
இங்கே சொல்ல கூச்சமா இருந்தா என்னோட மெயில் ஐடியில கூட உங்க சம்மதத்தைத் தெரிவிக்கலாம் நீங்க! :D
அடங்கொக்காமக்கா
Deleteசெயலரே அந்த நாப்பாதாயிரத்துல ஒரு நாப்பது ரூவாவ எடுத்து டீக்கடைகார்ருக்கு பாக்கி கொடுத்துட்டா அவரு நம்ம சங்கத்தை பாத்து முறைக்காம இருப்பாரு...
Deleteகொஞ்சம் மனசு வையுங்க.:-(
//அதாவது, லாஸ்ட் அண்டு ஃபைனல் ரேட்; 40,000 ரூபாய்! என்ன சொல்றீங்க?//
Deleteசூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலை ரெண்டு தபா படிச்சு காட்ட போறேன்னு என்னை மிரட்டி சங்கத்து அக்கவுண்ட்-லர்ந்து ஒரு பிளான்க் செக் வாங்கிட்டு போனது இதுக்குத்தானா ???
selvam abirami@ :-)
Deleteவட போச்சே....
Deleteசரி சரி எனக்கு இன்னும் டீ வரலை.
ஈ வி இன்னக்கி நைட் 50, மூணு சைபரா
Deleteஸ்மர்ப்ஸ் கதைகளில் அதன் ஓவியங்கள் மிக நன்றாக இருக்கிறது, கதையும் நன்றாக இருக்கிறது. அந்த 'பொடி பாசை' அது மட்டுமே சற்று பிரச்சனை போல தெரிகிறது. அதன் சரியான அர்த்தத்தை யோசித்துக் கொண்டிருக்கும் போது அதன் நகைச்சுவையை தவறவிடுவது தான் அதன் பலவீனம் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஉண்மைதான் நண்பரே
Deleteசார் சமீபத்து கதைகளில் இந்த சாரே என்ற வார்த்தை அடிக்கடி வருகிறது. சில கார்ட்டூன் கதைகளில் ஓகே என்றாலும் டெக்ஸ் கதைகளில் வரும்போது நெருடுகிறது. சில சமயங்களில் கார்சன் அவ்வாறு பேசும் பொழுது இன்னும் ஒரு மாதிரி உள்ளது.
ReplyDeleteLady s ன் சுவாரஸ்யமான கதைக்களங்களும்... வசீகரிக்கும் அழகும்... ஜொலிக்கும் வர்ணங்களும் .... பார்த்தவுடனேயே மனதை கொள்ளை கொண்டுவிட்டன...!இந்தத்தொடர் தொடர வேண்டும் என்பதே என் அவா...!
ReplyDeleteஷானியா "இளைஞர்" பாசறை உதயம்....👊👊👊👊👊
Deleteநானு ,நானு,நானு...
Deleteநீங்கள் தான் தலைவரே...
Deleteஅட்றா சக்க
Deleteஅட்றா சக்க
முன்பு ஒரு முறை நான் கூறியது தான் மீண்டும் ஒரு முறை.. ஆங்கிலத்தில் படிக்க முயற்சி செய்து 4 பக்கத்திற்கு மேல் படிக்க முடியவில்லை.. தமிழில் நான் ஸானியாவின் விசிறி ஆகிவிட்டேன்.
ReplyDeleteஓஓஓ இங்கிலீஷ் சானியா ஓவர் செக்சியோ....
Deleteலைட்டா...
DeleteLady S இது வரை வந்த கதைகள் மோசமில்லை .. ஆனால் XIII , LARGO , SHELDON போன்ற மற்ற வான் ஹாம்மே கதைகளில் உள்ள விறுவிறுப்பு ,சுவாரஸ்யம் இதில் இல்லை .. வரும் கதைகளில் இது மாறும் என்று நினைக்கிறேன் ..
ReplyDelete+1
Delete+1111
Delete+1111
DeleteThis comment has been removed by the author.
Delete// மற்ற வான் ஹாம்மே கதைகளில் உள்ள விறுவிறுப்பு ,சுவாரஸ்யம் இதில் இல்லை //
Delete+1
ஆமா....ஆமா...+12345678910
Deleteமிகப்பெரிய 'ஆமாம் '
Deleteபுலன் விசாரணையை சந்தாவில் இணைத்து விடுங்கள், கர்னல் ஆமோஸ்(என்று ஞாபகம்)
ReplyDeleteகாக. கடைகள் ஏறி இறங்க சிரமமாக உள்ளது,
ஷானியா ...லார்கோ ஷெல்டன் போல இப்பொழுது பரபரப்புக்கு கொஞ்சம் குறை வைத்தாலும் விரைவில் அவர்களின் இடத்தை பிடிப்பார் என நம்புகிறேன் ...ஆனால் அதற்காக இப்பொழுது இவரின் வேகம் குறைவு என்றும் சொல்ல முடியவில்லை..லார்கோ ,ஷெல்டன் ரேஸ்காரில் பயணம் செய்கிறார்கள்..லேடி எஸ் இரு சக்கர ரேஸ் வாகனத்தில் பயணிக்கிறார் எனவே எனக்கு லேடி ஓகே...
ReplyDeleteஅதே அதே
Deleteஉண்மை தலீவரே...
Deleteவிரைவில் மச்சக்கன்னியும் உச்சம் தொடுவாள்....லயனின் டாப் நாயகர்கள் வரிசையில் இடம் பெறுவாள்...
இவன்...
ஷானியா "இளைஞர்" பாசறை
பாசறை சார்பாக இடிமுழக்க குரல் போர் நடத்துவோம்.
Deleteசார்...பொறுமையாய் இருப்போம் ; /////ரசனைச் சக்கரங்கள் ஒரு முழுச் சுற்று சுழன்று, மறுக்கா ரிப் கிர்பி மீதும், காரிகன் மீதும், சார்லி மீதும் காதல் தோன்றினாலும் சொல்வதற்கில்லை !!// நன்றிகள் பல சார்
ReplyDeletewill soon
Deleteஅய்யோடா.......
Delete(reply for last time statement… delay due to internet connectivity issue)
ReplyDeleteEditor Mr.Vijayan : சார்....ரசனை சார்ந்த விஷயங்களில் ஒரு sweeping statement எப்போதுமே சரியானதாக இருக்க முடியுமா ?
கமான்சே சித்திரங்கள் poor என்பது உங்களது பார்வை ; அது ஹெர்மனின் ஸ்டைலிலான அழகு என்பது சக வாசகரின் பார்வை !
2018 -ன் கதைத் தேர்வுகள் சுமார் என்பது உங்களது பார்வை ; கடந்த 4 ஆண்டுகளுள் இதுவே best by a distance என்பது உங்களை போலவே selective ஆக வாசிக்கும் இன்னொரு நண்பரின் பார்வை !
ஆண்டொன்றுக்கு 1 கோடி பிரதிகள் இத்தாலியில் மட்டுமே விற்பனையாகும் டெக்ஸ் வில்லர் கதைகள் - வெறும் பக்க நிரப்பிகள் என்பது உங்களது பார்வை ; TEX இல்லையேல் இன்றைக்கு காமிக்ஸே கிடையாது என்பது நம் பெரும்பான்மை வாசகர்களின் பார்வை !
So இங்கே யாரது ரசனைகளிலும் தவறில்லை என்பது தான் யதார்த்தம் ! Tastes simply differ ! உங்கள் ரசனைகளை குறை காண்பது என் நோக்கமல்ல ; பொதுப்படையான கருத்துக்களின் தன்மை பற்றி மாத்திரமே சுட்டிக் காட்டுகிறேன் !
(sorry to write in English again & again. will explain the reason later)
Editor sir, thanks for your reply.
Sir, am not matured like you and so if any comments from my side hurts you, am very very sorry. Anyway I think you as my Uncle.
Am a guy of shy. So it tempts me introduce myself. I have visited EBF 2times & Cbe BF 2times, but will just buy books and fly-off. Through photos I know, Mr. Erode Vijay, Mr.Parani & Kadal yazh and love their characters.... but not willing to speak to them.
Back to the subject. if we compare your work with the cine-field, it will be easier to understand.
Bala, Myskin & Manirathnam films are very typical. All of their films are not success. But these directors never change their method and we can't underestimate their hard-work. No one can make a film like 'Naan Kadavul' & 'Paradesi'. Bala did.
But think of Shankar films. They are meant for huge commercial hits only. Murugadoss, Atlee also join this group. Their stories are mostly out-of-the life characters. They are 100% entertainment based and 90% hits.
So, now tell me who is great? All are extraordinarily talented in some way.
Who is making money?
At some stage, each director gets field-out. Their trend is no more. Like director Sasikumar & Bala.
I was a big fan of Bala & Selvaraghavan, but not today.
Variety is important. But should be NEW & different.
You only know all the background tricks, big big efforts, Budgets, Translation issues etc., in bringing every comics to Tamil.
What people like me do is, only see the cover, public review, price and then chose to buy. We are on the safer side. We can buy or we don't.
For an incident, a very old big fan of your comics (name not known) visited once your stall in cbe book fair with his family.
He ran into your stall and bought only 1book. I understood from his view that he never bought most of the books. He just go through lots of books and kept them back in rack. Even the same day I bought 6-7books.
So, even a very big comic fan like him(compared to me) is very cautious in spending money.
This is today's world.
Apart from money business, you have taken Comics as your passion. This is how you were able to come back again and running successfully today. There is nothing to teach you anything.
And I agree your point - taste differs from one to another.
I never underestimated your vision or business.
I just want you to realize that all of your big fans don't buy all the books. They are very very selective which you are also not aware.
Only selective readers like me buy lots of books :)
Comics is a passion for us. Even today am running into seconds market in cbe to search for your old comics, where I couldn't find any single book.
My father also thinks as immaturity on seeing me reading comics. But my passion for comics started at the age of 8/9 and still continues.
Tex willer - Rajni/Vijay
Captain Tiger - Vikram/Ajith
Lucky luke - Vadivelu
XIII - Kamal
Graphic Novels - Bala films
All above are my personal opinions, but real factors.
Reality speaks... Hats off to you for your open minded statements...
Delete👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼
@ Mahesh kumar
Delete////
Am a guy of shy. So it tempts me introduce myself. I have visited EBF 2times & Cbe BF 2times, but will just buy books and fly-off. Through photos I know, Mr. Erode Vijay, Mr.Parani & Kadal yazh and love their characters.... but not willing to speak to them.///
உங்கள் அன்புக்கு நன்றி நண்பரே! நானும் கூச்ச சுபாவ ஆசாமி தான் (ப்லீவ் மீ)! அதனால, அடுத்த தபா EBFல மீட் பண்ணும்போது நீங்க பேசலைன்னாலும் பரவாயில்லை; என் முன்னாடி வந்தாவது நில்லுங்க... மந்தையிலிருந்து பிரிந்த ஆடுகள் மாதிரி கண்ணாலயே பேசிக்கிடலாம்! :)
பை த வே, அருமையா எழுதறீங்க. தொடருங்கள்!
//Graphic Novels - Bala films//
Delete:-)
Nice my dear
Deletethank you all... will try to write when time allows.
Deleteto the least I will try to write in order to praise our Editor's work..
Martin scorsese,Spielberg ,Nolan doing their work in different genre such as action,drama,phycology ,thriller,battle field,fantacy...etc .but Bala and Myskin are talent but they are not do other genre or rare.
DeleteMani rathnam tried some genre but he also stayed at middle class love most of film (romance).
But new comers do their subjects in different genre...
Just informative purpose only..
//நண்பர்களுக்குத் தோன்றும் பரவலான அந்த நெருடல் -
ReplyDeleteகார்ட்டூன்கள் மீதான ஒரு அலர்ஜியே ; பேனரை மட்டும் மாற்றி அந்த அலர்ஜியை சரி பண்ண இயலாதே ?//
கார்டுன்களுக்கு ஒரு விறு விறுப்பான விற்பனை மார்க்கெட்டை ஏற்படுத்திட, நாம் வால்ட்டிஸ்னிப் பக்கமாக சிறிதுகாலம் கரையொதுங்க வாய்ப்புள்ளதா சார்?
+1
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete@ மதியில்லா மந்திரி
Deleteஹா ஹா ஹா!! :)))))
This comment has been removed by the author.
Delete@ மதியில்லா மந்திரி
Deleteஉங்களை நேரில் சந்திக்க நீண்ட நாள் ஆசை! EBF-2018ல் இது சாத்தியமாகிடுமா?
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஎன் வீட்டுக்காரி, பூனையார் வீட்டம்மோவோடு பேசுவாங்க. அவுங்களும் பேசி ரொம்ப நாள் அச்சு;
Deleteபோன தடவை அவுங்க 2பேரும் பேசும் போதே எங்க 2பேர் காதுலயும் சேம் பிளட் தான்...
இன்று வேணா போன்ல பேச சொல்லிட்டு,
///"எங்க வீட்டுக்காரர் பாவம் உடம்பு சரியில்லாத காரணமாக சென்னை போகல, உங்க வீட்டுக்காரர் போய் வந்தாரு போல; கஸ்தூரி கூட போட்டோலாம் எடுத்து இருக்காராமே, ஏதோ புக்கு கூட வாங்கி கொடுத்தாராமே; ஹூம் எங்க வீட்டுக்காரர் போயிருத்தா, அவரும் கூட போட்டோ எடுத்துருப்பாரு"..../// என கேட்க சொல்லிடுவோம்...
எப்பூடி நம்ம அகுடியா மந்திரி ஜி...(நம்பியார் சிரிப்பை பேக் ரவுண்ட்ல போட்டுக்கோங்க)
This comment has been removed by the author.
Deleteகஸ்தூரி எப்ப நம்போ ஜோதியில ஐக்கியமானாங்கோ.....
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteநம்ப கணேஷ் சார்வாள் கூட புள்ளிமான் தோளோடு தோல் கொடுத்து நின்னதா
Deleteஇல்ல....
அத ஈ வி பொறாமையா பாத்து மூக்குல புகை விட்டதா
எது அந்ந நம்ப(ளோட) தகாத வட்டாரம்
This comment has been removed by the author.
Deleteலேடி S
ReplyDeleteஎன்னைப் பொறுத்தவரை அருமையே
செல்லக் குட்டி ஷானியா பற்றி :
ReplyDeleteமுதல் இரண்டு ஆல்பங்கள்ல செ.கு.ஷானியா மனதின் உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்துகொண்டதென்னவோ உண்மைதான்! ஆனா, கடைசியா வந்த 'சுடும் பனி'யில இக்ளியூண்டு சறுக்கல்! இதற்கான காரணத்தை நான் முன்பே சொல்லியிருந்தாலும், சபையோருக்காக மீண்டும் ஒரு காப்பி-பேஸ்ட்:
/////அசாதாரண மதிநுட்பமும், பல்வேறு திறமைகளும் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் ஷானியா கூட - ஆள் யார், என்னவென்று ஆராயாமல் - இரண்டாவது சந்திப்பிலேயே ஒரு அந்நியனுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்வதும், காதல்வயப்பட்டதாகக் கண்ணீர்விடுவதும் - அவளுடைய பாத்திரப்படைப்புக்கு நேர்மாறான பிம்பத்தை ஏற்படுத்திவிடுகிறது ( யூ டூ ஷானியா?!!).
சிறுவயதிலிருந்தே அவளைப் பல்வேறுவிதங்களில் பாதுகாத்துவரும் ஆன்டனுக்கு இந்த 'வாய்ப்பு' கொடுக்கப்படாததும் 'நல்லதுக்கு காலமில்லேடா சாமி' என்று நினைக்கத் தோன்றுகிறது!////
போவட்டும்! அடுத்த ஆல்பத்திலேர்ந்து கண்ட கண்ட பயபுள்ளைகளோட காதல் வயப்படறதை நிறுத்திக்கிட்டு கரெக்டா ஜாகஜம் பண்ணினா, மீண்டும் உச்சாணிக் கொம்புல உட்காரவச்சுப்புடலாம்! யாராவது ஷானியா கிட்டே இதை எடுத்துச் சொன்னா தேவலாம்!
கண்ட கண்ட பயபுள்ளைகளோட காதல் வயப்படறதை நிறுத்திக்கிட்டு கரெக்டா ஜாகஜம் பண்ணினா.........
Deleteமுதல் PART மட்டும் தான் ''இந்தா புள்ள செல்லி ....''சரியா செய்யுது ........க்கும்
ம்க்கும்
Deleteஅடுத்த ஆல்பத்தில......
அய்........அய்......அய்....
Vijayan sir,
ReplyDeleteThe reason for decrease in sale volume is because we are publishing too many books in a year, people are still interested in comics but the costs of these books are not letting them to buy a whole lot and they become more selective.
As a die hard fan I prefer more comics in a year and i have asked for it many times here may be you missed the above point for decline/improve in sales.
If you reduce the number of books/heroes it will reduce your costing as the sales are not improving.
My point us:
Reduce the books and create interest, will improve sales, if not it will reduce your cost anyway its a win win situation for you.
I agree the point that too many books in a year makes some readers to become selective as i am also one of that.
DeleteI used to buy all the books since 2012 as a regular subscriber. I bought all the books published during 2012 to 2017 even though i don't like some of them. I realized the fact that the amount spent by me for comics every year. Now, I set a comics budget this year and become a selective buyer to choose only the books that are interested to me instead of simply buying all.
Of course , correct
DeleteBut ,,,, what can we do?
Price is a matter of publication.
Selection is a matter of fan's.
//If you reduce the number of books/heroes it will reduce your costing as the sales are not improving. //
Deleteபதிப்புலக economics மட்டும் இத்தனை சுலபமாய் இருந்துவிட்டால் சிக்கலே கிடையாதே ?! உங்களது கருத்தில் உடன்பாடு காண்பது ஏன் சிரமமென்று சந்தர்ப்பம் கிடைக்கும் போது சாவகாசமாய் யோசித்துத் தான் பாருங்களேன் சார் ?!
அப்புறம் "too many books in a year " என்பதன் பின்னணி stats பற்றியும் கொஞ்சமாய் கூகுள் செய்து தான் பாருங்களேன் ப்ளீஸ் ? 7 கோடி மக்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் ஆண்டுக்கு 36 + maybe இன்னொரு 4 = 40 என்பது தான் காமிக்ஸ் எனும் இந்த genre -ன் நமது பிரதிநிதிகள் !! இதர பதிப்பகங்களின் காமிக்ஸ் உருவாக்கங்கள் இன்னொரு 20 என்று வைத்துக் கொண்டாலுமே 365 நாட்களுக்கு 40 + 20 = 60 என்பது தான் மொத்த நம்பரே !! இது too much என்று அடையாளம் காணப்படுவது பொருத்தம் தானா சார் ?
வாசிப்புகள் மீதான நாட்டம் குறைவதே bottomline ; நமக்கென்றில்லை, பதிப்புலகின் அத்தனை துறைகளிலுமே தலைவிரித்தாடும் தலைவலி இது !
// Reduce the books and create interest, will improve sales, //
Delete-1 எனக்கு இதில் உடன்பாடு இல்லை.
Sir,
Delete//வாசிப்புகள் மீதான நாட்டம் குறைவதே bottomline ; நமக்கென்றில்லை, பதிப்புலகின் அத்தனை துறைகளிலுமே தலைவிரித்தாடும் தலைவலி இது//
Mobiles with 4g net for Rs. 150 per month has replaced books & tvs, it's the main reason.
It's the main reason behind not too many books selling. You know die hard fans who buy all books and making them sleep in the cupboards without even reading once, how will we get new readers?
I would love to see 2 books every month rather than nothing. I remember those days I used to call our office and enquire about books not getting published and going to every waste paper mart to search for old books.
Sir, hope you understand my point. This comics is my first love. I just would like to see even one in a month rather than nothing.
My point is all about our comic sales. I am not against too many books per year. personally I am a gundu book Fan who voiced for more gundu books this year. If I said anything wrong please forgive me
DeleteNah Nah - everything in this book business is depending on time,tide ( publicity)and money Mr.Mahesh
DeleteMahesh @ nothing wrong in your input! Don;t feel bad or don;t think that you did something wrong!
Delete@ parani sir,
DeleteThanks
106th
ReplyDeleteDear Sir,
ReplyDeleteI'm reading your comics from 1996 onwards. I know how much i'm happy in 2012 by seeing your Comeback Special.
I love to read most of the comic genre and asking more & more in future. In my opinion VARIETY IS A GIFT NOT a curse. Variety increases my interest, generate new ideas, make me understand what I need... etc... etc...
Need variety... I'm ready to read
Gil Jordan as well as Detective Robin...
Sherlock Holmes as well as James Bond
Blueberry (definite) as well as Tex Willer
Dylon Dog as well as Mystery Martin...
Largo Winch (definite) as well as Thorgal
Thank you...
//In my opinion VARIETY IS A GIFT NOT a curse. Variety increases my interest, generate new ideas, make me understand what I need...//
Deleteஆஹா !
This comment has been removed by the author.
DeleteDiscoverboo @ உங்களை மாதிரி உள்ளவர்கள் நமக்கு நிறைய தேவை.
DeleteLady S title and comics super.....don't put mdmk with it and spoil the comics. Anthony that join with mdmk does not survive. Don't add inauspicious signs
ReplyDelete:-)
Deleteநமபட்டேயவா
Deleteநாம பாக்காத மேடு பள்ளமா try
அதான எடிட்டர் சிரிக்கிறாரு
ஷானியா...டபுள் ஓகே.
ReplyDeleteShall I join in the Translation Army? I too want to take part in translation of Pulan Visaranai (XIII). So please send the book or link for translation. My email id : uk.senthilanthan@gmail.com mobile 9444162648
ReplyDeleteThank you for the interest sir ; but 3 is in itself a big number for this project ! Ultimately just 1 script is going to be put to use...so wasting a whole load of people's time & efforts doesn't quite feel good !
Deleteசிலேடை....
DeleteVijayan, I can drop from here. Please give to him or someone else.
Deleteசுடும் பனி இன்னும் தொடவில்லை,முதலில் லேடி லார்கோ போல் இருந்த S வர வர புஸ்.
ReplyDeleteடெக்ஸ் 70 அறிவிப்பு எப்பொழுது சார்?
ReplyDeleteஅந்த ஏப்ரல் சஸ்பென்ஸ் இதுவா கூட இருக்கலாம். ஆஹா... சீக்கிரம் சஸ்பென்ஸ் உடைஞ்சா பரவாயில்லை...
Deleteடம்மாமாமால்ல்ல்ல்.....
DeleteSalem ji நீங்கள் சொல்வது போல் இருக்கலாம்.
ReplyDeleteடிராகன் நகரம் ஸ்டாக் உள்ளது போல தெரிகிறது.
டெக்ஸ் பின் அட்டையில் பார்த்தேன்.
தற்சமயம் கும்பகோணத்தில் ஜெய் ஸ்ரீ புக் ஸ்டோரில் நமது காமிக்ஸ் கிடைக்கிறது.
ஜனவரி டெக்ஸ் மட்டும் கிடைக்கவில்லை.
எதுக்கும் திருப்பூரிலே விசாரிச்சு பாருங்க... ஸ்டாக் இருந்தாலும் இருக்கலாம்..
Deleteநானும் சில கடைகளிலே பார்த்தேன்..
Deleteகும்பகோணம் நஹி
DeleteWhy don't you check in our online store?
Deleteடெக்ஸ் ஸ்டாக் முடிந்து விட்டது.
ReplyDeleteடெக்ஸ் தீபாவளி மலர் மட்டுமே உள்ளது.
ReplyDeletecheck the shop opposite to Palladam bsustand (tirupur). Most of the missing old comics are easily available there, like modesty blaise pocket comics.. the shoip immediate next to sree ananda bhavan& cycle stand.
ReplyDeleteதங்களது தகவல்களுக்கு நன்றிகள் நண்பர்களே.
ReplyDeleteஇன்று என்ன புதுமை நிகழ்த்தலாம்??!!
ReplyDelete🤔🤔🤔🤔🤔🤔
@ALL : ஒரு கத்தை பின்னூட்டங்கள் சுவாஹா ஆகிப் போனதற்கு சாரி guys ; ஆனால் இந்தத் தளத்தில் திகட்டத் திகட்ட சண்டைக் காட்சிகளைப் பார்த்தாகி விட்டோம் எனும் போது மறுக்கா அதே ரீலை ஒட விடுவானேன் ?
ReplyDeleteகாமிக்ஸ் சார்ந்த அலசல்கள் ; ரசனைகள் குறித்த அபிப்பிராயங்கள் என்ற தடத்தில் தேமே வென ஓடும் வண்டியில் சிறுகச் சிறுக எட்ட நின்ற நண்பர்களும் பயணம் பண்ண முனைந்து வருகின்றனர் ! More the merrier !!
அவர்களையும் வரவேற்ற கையோடு ஜாலியாய் முன்செல்வோமே !! ஆக்ஷன் சீன்களை நமது இரவுக் கழுகாரின் பிரத்யேக உடைமையாக்கி விட்டு, சிவனே என்று நாமெல்லாம் smurfs ஆகவே சுற்றி வருவோமே ப்ளீஸ் ?
ஒரேயொரு SMURFY + ஒரேயொரு லேடி S-ஐ நம் தளத்தில் உலாவ அழைத்து வர முடிந்தால் -அட...அட...அட..!!
DeleteAnd காணாது போன பின்னூட்டங்களை இட்டிருந்த நண்பர்களிடம் apologies ; உங்கள் எண்ணங்களை இருட்டடிப்பு செய்வதல்ல என் நோக்கம். End of the day - நிறைய விவாதங்களில் உஷ்ணம் ஏறிடுவது நான் சங்கடப்படக்கூடாதே என்ற உங்களின் ஆதங்களாலே என்பது அப்பட்டம் ! அந்த அன்பும்,கரிசனமும் இருவழிப் பாதைச் சமாச்சாரங்கள் guys !! I care for your peace of mind in no less measures !!
DeleteSo சிக்கல் என்ற லேசாய் தென்பட்டாலும் பை-பாஸைப் பிடித்து அவுட்டரில் வண்டியை விடப் பழகிக் கொள்ளுவோமே ?
Good move
Delete
Deleteரொம்ப நாளைக்கு அப்புறம் "ஹல்ல்லோ... நாங்களும் பெரிய ரவுடிதேன்"னு காட்டிக்க ஒரு வாய்ப்புக் கிடைச்சது. இப்படி அநியாயமா கெடுத்துப்புட்டீங்களே எடிட்டர் சார்! :D
///காமிக்ஸ் சார்ந்த அலசல்கள் ; ரசனைகள் குறித்த அபிப்பிராயங்கள் என்ற தடத்தில் தேமே வென ஓடும் வண்டியில் சிறுகச் சிறுக எட்ட நின்ற நண்பர்களும் பயணம் பண்ண முனைந்து வருகின்றனர் ! More the merrier !!
Deleteஅவர்களையும் வரவேற்ற கையோடு ஜாலியாய் முன்செல்வோமே !! ///
இந்த ஒரு விசயத்துக்காண்டியே நீங்க தினம் தினம் என்னோட கமெண்ட்டை டெலிட் செய்தாலும் ஏத்துக்கிடுவேன் எடிட்டர் சார்!
///காமிக்ஸ் சார்ந்த அலசல்கள் ; ரசனைகள் குறித்த அபிப்பிராயங்கள் என்ற தடத்தில் தேமே வென ஓடும் வண்டியில் சிறுகச் சிறுக எட்ட நின்ற நண்பர்களும் பயணம் பண்ண முனைந்து வருகின்றனர் ! More the merrier !!
Deleteஅவர்களையும் வரவேற்ற கையோடு ஜாலியாய் முன்செல்வோமே !! ///
இந்த ஒரு விசயத்துக்காண்டியே நீங்க தினம் தினம் என்னோட கமெண்ட்டை டெலிட் செய்தாலும் ஏத்துக்கிடுவேன் எடிட்டர் சார்!//
+1.
அங்கே ஒரு பச்ச புள்ள தலீவர் பதவிய தாங்கிப் பிடிச்சிட்டு ஒரு கஷாயம் போட்டுத் தரக் கூட ஆளில்லாமே தவிக்குது ; இங்கே என்னடான்னா ௩௦ ; ௪௦ ன்னு ரேட் பேசிட்டு புதுசா பேட்டை பிஸ்தாவாக முயற்சி பண்ணிட்டு ?! என்ன கொடுமை ?!!
Deleteசரியா சொன்னீங்க சார்..ஹீம்..எதி்ரணிதலைவர் கொடுக்குற மதிப்பை கூட சொந்த போராட்ட குழு கொடுக்க மாட்டேங்கிறாங்க...பேசாம எதிரணி தலைவர்கிட்ட ஒரு கீரைவடையை வாங்கிகிட்டு அங்கேயே ஒரு கொ.ப.செ. பதவியை வாங்கி டேரா போட்றலாம் போல...:-(
Deleteஒரேயொரு SMURFY + ஒரேயொரு லேடி S-ஐ நம் தளத்தில் உலாவ அழைத்து வர முடிந்தால் -அட...அட...அட..!!
Delete########
சார்...அவங்க எல்லாம் வேண்டாம்..என்னதான் சிறப்பா இருந்தாலும் நல்லவங்க யாருன்னு ,கெட்டவங்க யாருன்னு தெரியாம இன்னமும் என்னை மாதிரியே இருக்காங்க..எங்க மாடஸ்தி இளவரசிக்கு தான் யார்யாரை எப்படி கவனிக்கும்னு கரீட்டா தெரியும் ..அதனால இளவரசிக்கே எனது ஓட்டு..:-)
177th
ReplyDelete
ReplyDeleteபாலைநிலமும் சோலைவனமும்:-
மார்ச் மாத வெளியீடுகளில் பாலைவனத்தில் புலணாய்வும்& வேட்டையாடு விளையாடும் வெவ்வேறு ஜானர்; 2ம் வெவ்வேறு தளத்தில் தத்தம் நிறை குறைகளோடு போட்டி போடுகின்றன; 2லும் கதை என்பது 20%ம் தான் இருக்கு; இருந்தும் 2யும் ஓவியங்களுக்காகவே ரசிக்கலாம். வழக்கமான கதைVsஓவியம்- 50:50 சதவீதத்தில் இருந்து ஓவியங்கள் 80% ஆக்ரமிக்கும் விதமாக ஓரே மாதம் இரு கதைகள் அமைந்துள்ளது கதைப்பிரியர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே... ஓவியப் பிரியர்களுக்கு கண்ணுக்கு விருந்து.
என் பார்வையில் முதல் இடத்தை, மறுபதிப்பாக இருந்தாலும் மிஸ் மார்ஸ் &கோ 10/10வாங்கி தட்டிச் சென்றிட (டைகருக்கு இணையான கேரக்டர் அந்த மிஸ்ஸூக்கும் கொடுத்து சார்லியர் புண்ணியத்தை கட்டி கொண்டார். ஜிரோவும் நல்ல மூடில் நச்சனு மார்ஸின் முகபாவங்களை வரைந்து இருப்பார்.); வெள்ளிப்பதக்கத்தை வென்றிடுவது யார் என்பதே அடுத்த கேள்வி...!!!
ஏற்கெனவே கதை சுருக்கங்களை பரவலாக நண்பர்கள் விவரித்து விட்டதாலும், இரண்டு கதையும் ஒன்லைன் ஸ்டோரி என்பதாலும் ஹைலைட்டான அம்சங்களை மட்டுமே பதிவு செய்கிறேன்.
பாலைவனத்தில் புலணாய்வு...
*பார்க்கும் பெரும்பாலோர் உதிர்க்கும் முதல் வார்த்தை ராணி காமிக்ஸ் அட்டையை போல் இருக்கு என்பதே. ரொம்ப நாளைக்குப் பிறகு கிடைமட்டமாக வெளிவந்துள்ள அட்டைப்படம். ஆவலுடன் புலணாய்வை தொடங்கினால், கதையென்னவோ நம்ம தற்போதைய லயன் ஸ்டாண்டர்டுக்கு இல்லை என்பதே வாஸ்தவம். இதே கதையம்சத்தை ஒட்டி ஏற்கெனவே அடுத்தடுத்த ஆண்டுகளில் 2016ல் திகில் நகரில் டெக்ஸ்"ம்& 2017ல் ஆவியின் ஆடுகளமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.
*இந்த ஆண்டும் அதே ஃபார்முலாவில் அடுத்த கதை எனும்போது இன்னும் பிரம்மாண்டமான படைப்பாக இருந்து இருக்குமே என்றால் சக்கைப் போடு போட்டிருக்கும். மினியாக அமைந்த களம் என்பதால் அதற்கு வாய்ப்பு இல்லை. ஒரு துப்பறியும் கதைக்கு உண்டான சகலமும் இருக்கிறது. 10ரூபாய்க்கு டெக்ஸ் கதைகள் வெளிவந்த காலத்தில் வந்திருந்தால் ஒரு கலக்கு கலக்கியிருக்கும். மற்றொரு பறக்கும் பலூனில் டெக்ஸ் என்ற அளவுக்குத்தான் கதை ஸ்கோர் செய்யுது.
*கதையில் விட்டதை ஓவியங்கள் ஈடுசெய்துட்டன. கதையின் மெதுவான நகர்தலை உணராமல் ஓவியங்கள் பார்த்து கொள்கின்றன. துவக்க பேணலே சும்மா நச் ஓவியம்; தூர மேகங்கள் கோட்டு தீற்றலாக; அடுத்து அந்த மெக்ஸிகோ-அரிசோனா எல்லைப்புற மலைச்சரிவுகள்;
மலைத்தொடர்களுக்கு மத்தியில் அமைந்த சின்னஞ்சிறு கிராமம், டெக்ஸின் பார்வையில் அசத்தலாக வரையப்பட்டு இருக்கும்; டெக்ஸின் இருபுறமும் ஓங்கி வளர்ந்த கற்றாழைகள்; கற்றாழையில் மலர்ந்துள்ள மலர்கள்; மதிய சூரியனின் வெப்பமான கிரணங்களின் நிழல்கள்;
*பக்கம்6- குக்கிராமத்தில் நுழையும் காட்சியில் மதிய கிரணம், டெக்ஸின் குதிரையின் காலடியில் நிழலாக விழுவதற்கு பதில் நம் முகத்தில் தகிக்கிறது. நாமே அங்கே காட்சிக்குள் இழுக்கப்படுகிறோம். அடுத்து கடைசி வரிசை பேணலில், அந்த மெக்ஸிகன் ஸ்டைல் விடுதியை நோக்கி டெக்ஸ் பயணிக்கும் காட்சி சான்ஸே இல்லை; நேரே நம்மை
A Fistful of Dollars போன்ற கிளீன்ட் ஈஸ்ட்வுட் (ஜியோ புண்ணியத்தில், கெளபாய்னு பெயர் வந்தாலே அந்த படம் டவுன்லோடட்) படங்களில் வரும் விடுதியில் கொண்டு சேர்க்கிறது.
*அடுத்து அந்த சாகுவரோ பண்ணைக்கு செல்லும் காட்சி ஓவியத்தின் உச்சம். இந்த ஓவியருக்கு டெக்ஸை மதிய வெய்யிலில் வருத்தெடுப்பது "பெளர்பான்" அடிப்பது போல. இந்த சீக்வென்ஸ்ல இரண்டு பக்கமும் டாப் பேணல் ஓவியங்கள் ஸ்டன்னிங்.அந்த கற்றாழை வரிசை; பாறை முகடு; குதிரையின் காலடியில் தகிக்கும் அரிசோனா பாலை.....ரைட் சைடு ஓவியத்தில் இதே போல பாறைக்கு அருகே கற்றாழை வரிசைக்கு ஊடே பயணிக்கும் டெக்ஸோடு, மற்றொரு குதிரையில் விரையும் நாம்.
......
டெக்ஸ் ஜி.எனக்குமே அதே அதே.
Delete............
Delete*இந்த பண்ணைக்கு செல்லும் வழியில் தனக்கு தானே சிந்திக்கும் டெக்ஸ் வாயிலாக கதை சொல்லப்பட்டு இருக்கும்; பின்னணியில் கதை சொல்வது நிறைய சாகசங்களில் ஹிட் அடித்த, நமக்கு மிகுந்த பிடித்த பாணி என்றாலும், இதில் டெக்ஸின் சிந்தனைகள் ஊடே கதையை நகர்த்தி இருப்பது நல்ல யுக்தி.
*பக்கம் 53- டெக்ஸ் பயணத்தின் ஊடே நாமும் கதையிலும், காட்சியிலும் விரைவோம். தூர கற்றாழைகள் பொடி பொடியாக தெரிய, அடுத்தடுத்த பேணலில் விஸ்வரூபம் எடுக்கின்றன.
*பக்கம் 61 சாகுவேரா நுழைவாயிலில் கம்பீரமாக டெக்ஸ் வீற்றிருக்க, அவருக்கு இருபுறமும் விஸ்வரூபம் எடுத்த கற்றாழைகள், இயற்கைக்கு என்றுமே மனிதன் நிகரல்ல என உரைக்கின்றன. அசத்தலான போர்ட்ராய்ட் இந்த காட்சி. வண்ணத்தில் அசரடித்து இருக்க கூடும்.
*பக்கம் 62 பண்ணையின் தோற்றம் டெக்ஸின் கழுகு பார்வையில் செம; தூர மேகங்களுக்கு இடையே முளைத்த மலைச்சரிவுகள்; சரிவுகளின் காலடியில் கம்பீரம் காட்டும் பண்ணைவீடு; வீட்டின் முன் பரந்த மைதானத்தில் பொடிசைசில் தெரியும் குதிரைகள்; அப்படியே டெக்ஸின் இருபக்கமும் நெடிதுயர்ந்த கற்றாழைகள்; ஓவியரின் உழைப்பு வியக்க வைக்கிறது.
*ரேட்டிங்..... 7/10.
வேட்டையாடு விளையாடு....
*மெக்ஸிகன் பாலையில் தகித்த மனதானது, பொடியர்களின் பூஞ்சோலையில் இளைப்பாறுகிறது. நான் இந்த வரிசையில் படித்த காரணமாக எனக்கு இப்படி தோணுதுனு நினைக்கிறேன் நண்பர்களே.
*இதிலும் கதையம்சம் பொடியளவே; ஆனால் அவர்கள் அடிக்கும் லூட்டிகள் எண்ணிலடங்கா இம்முறையும். அதிலும் துவக்க பேணல், அடேங்கப்பா ஆல்மோஸ்ட் எல்லா பொடியன்களும் இருக்கானுக...
எத்தனை நுணுக்கமாக வரையப்பட்ட ஓவியம்...
---காளானுக்கு அடியில் சோம்பேறி பொடியனை எழுப்பும், ஜீனியஸ்...
--- மரத்தை மாங்கு மாங்குனு வெட்டும் சுறுசுறுப்பு பொடியன்...
---வலது ஓரம் தடிக்கி விழும் மங்குனு பொடியன்...
---கிடையாக மரத்தை அறுத்து கொண்டுள்ள கண்டுபிடிப்பு பொடியன்...
---சின்ன மரத்தை ராட்டினம் வைத்து பாலத்தின் நடுவே இறக்கும் பொடியன்ஸ்...
---வலது புறம் இருந்து சற்று பெரிய மரத்தை போட்டு பாறையில் இறங்கி மேற்பார்வையிடும் டாக்டர் பொடியன்...
---வலது கீழே துணைப்பாலம் அமைத்து அதில் இருந்து ஏணி வைத்து மரத்தை சப்ளை செய்யும் பொடியன்...
----இத்துணை டீட்டெயிலாக ஒரு ஓவியத்தை படைக்கிறார்கள் எனில், அவர்களின் சிரத்தை பிரம்மிக்க வைக்கிறது. இதை ரசிக்கும் போது, 10வயதுக்குள் கார்டூன்களை ரசிப்பது தவறியது இப்போ நிறைவேறுது என எடுத்து கொள்கிறேன்.
*அந்த "சத்து" டாணிக்கை கொட்டும் காட்சி, அந்த பாதாளம்; இடையே துறுத்திக் கொண்டுள்ள பாறை; பாறையில் சிதறும் சீசா; சிதறிய சொட்டுக்கள் இறங்கும் குட்டி கழுகு வாய்; கழுகு கூண்டு; அம்மாடியோவ் மற்றொரு அசத்தலான ஓவியம்.
*அந்தப் பாலத்தை சின்னாபின்ன படுத்தும் காட்சிகள், சிக்கிய சீனியர் தப்பிக்கப் பார்க்கும் சீக்கெவன்ஸ் அட அட டா சிரிப்பு சுரங்கங்கள்...தொடர்ந்து கழுகின் அட்டகாசம் ஒவ்வொன்றும் செம.
*சீனியரோடு கழுகு நடத்தும் ஃபுல் ஃபைட் சீன், சிரிச்சி மாளாது. தொடரும் பக்காவான கிளைமேக்ஸ் நச்.
*இம்முறை "பொடி" குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டு இருப்பது நல்ல யுக்தி. மொழி பெயர்ப்புக்கு ஒரு பிக் தம்ஸ் அப்.
*இத்தனை இருந்தும் பாதி நண்பர்களால் "பொடி"யை ரசிக்க முடியாமல் போவதற்கான காரணமாக நான் கருதுவது வாழ்க்கையின் பிக்கல் பிடுங்கல்களால் அழுத்தமான மனசே. இது கொஞ்சம் கடினமான நிலை தான். கொஞ்சம் ரிலாக்ஸ் மூடில் படித்தால் ஒருவேளை பிடிக்கக் கூடும். வருங்கால சந்ததியினர்க்காக வேணும் "பொடி" வரட்டும்.
*ரேட்டிங்....6/10.
பனிமலையில் செங்குருதி டாப் ரகம்.
ReplyDeleteஇம்மாத புத்தகங்களின் வரிசை.
ReplyDelete1. கனத்த இதயத்துடன் டைகர் மறுபதிப்பு
2. ஓநாய் .. கொஞ்சம் கடி ஜோக் மொக்கை தவிர்த்து நன்றாகவே இருந்தது. இறுதி ட்விஸ்ட் நன்று. இக்கதை கொண்டு தான் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 5 பாகம் எடுத்துருக்காங்கனா பாத்துக்கோங்க.
3. டெக்ஸ் .. ஏங்க துப்பறியும் கதை கூட நேர்கோட்டில் போனால் போனால் என்ன செய்வது. நானும் வேண்டாத சாமி இல்ல கடைசில அந்த பயபுள்ள வில்லனா இருக்கக்கூடாது ஒரு ட்விஸ்ட் இருக்கணும்னு ஆனால்...
4. ஸ்மார்ப்பி .. இருபக்க கதை பரவாயில்லை வேற என்ன சொல்றது
//இக்கதை கொண்டு தான் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 5 பாகம் எடுத்துருக்காங்கனா பாத்துக்கோங்க.//
ReplyDeleteஎங்க அப்படி போட்ருக்காங்க கிருஷ்ணா??
கதைகரு ஒன்றாக சிரிப்பதை வைத்து சொன்னேன் .. அபிசியல் கிடையாது. மேலும் இக்கதைக்கு பின்புதான் படம் வந்துருக்கவேண்டும் 😃
Deleteஓ! அப்ப சரி...!!!
Deletei am new
ReplyDeleteWelcome 🍫
Deleteவருக வருக
Delete200
ReplyDeleteஆ...201...,ஆ😩
ReplyDeleteசாரட்டைப்படமிதுவரையுள்ளதிலேயிதுதானிருக்கிறதாமுதலிடத்திலெம்மனதளவில்.....செவ்வானப் பின்னணியில் ...அந்த டிரக் ஒளி பிரதிபளிப்பில் , துள்ளிக் குதிக்கிறேன் முன்னணியில் நாயகி நடையழகில்...பின்னட்டை நீலவானப் பின்னணியில் ,பளீரிடும் மின்னலில் மர்மக்கோட்டை கண்டும் மலைக்கிறேன் நாயகி போலும்...அட்டகாசம்
ReplyDelete