நண்பர்களே,
வணக்கம். இப்போதெல்லாம் உப பதிவுகளும், செம உற்சாகப் பின்னூட்டங்களை ஈட்டி வருவதை சந்தோஷமாய் ரசித்து வருகிறேன் ! சந்தா E-வின் வருகையும், அவை கொணர்ந்துள்ள அலசல்களும் இந்தப் பொங்கும் உதவேகத்துக்கு ஒரு பிரதான காரணமெனத் தோன்றுவது எனக்கு மட்டும்தானா ? எது எப்படியோ - தொடர்ச்சியாய் ஆர்வத்தைத் தூண்டும் கதைகளுக்கான தேடலை முன்னெப்போதையும் விட இப்போது ஜரூராய்ச் செய்திடல் அவசியம் போலப்படுகிறது !
ஜேசன் பிரைஸ் துவக்கி வைத்த இந்த ரசனைகளை அண்டர்டேக்கர் மெருகூட்டியது ஒரு பக்கமெனில், இந்தக் கருப்பு-வெள்ளை போனெல்லி படைப்புகள் தம் பங்கிற்கு சுவாரஸ்ய மீட்டர்களை உயர்த்தியுள்ளன ! பெர்லின்..இப்போது வேல்ஸ்....தொடரும் காலங்களில் இன்னமும் பூமியின் வெவ்வேறு மூலை முடுக்குகள் என இந்தப் பயணம் தொடர்ந்திட்டால் - பொம்மை புக்குகள் கூட ஒரு உலகப் பயண டிக்கெட்டாகிட முடியும் !! 7 முதல் 77 வரையிலும் என இதுநாள்வரைக்கும் நாம் செய்து வந்த விளம்பரங்களில் சாரம் இருந்ததோ - இல்லையோ ; தொடரும் நாட்கள் அதற்கு நிச்சயம் நியாயம் செய்யுமென்பேன் ! அதற்காக ஒற்றை ராத்திரியில் "ONLY AWARD MOVIES" என்ற போர்டை கடைவாசலில் நாம் மாட்டிடப் போவதில்லை தான் ! வழக்கம் போல தலைகீழாய் சிரசாசனம் செய்தபடிக்கே SMS அனுப்பும் பராக்கிரம நாயகர்களும் ; ஈயத் தோட்டாக்களை ஒட்டு மொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருக்கும் தொப்பிவாலாக்களும் தொடர்வார்கள் ! ஆனால் கேக்கின் மேலிருந்து வந்த ஐஸிங்கில் சின்னதாய் மாற்றம் இனி இருக்கக்கூடுமென வைத்துக் கொள்ளலாமா guys ?
எப்போதையும்விட இன்றைய பொழுதுகள் செமையாய் தோன்றுகின்றன !! Keep it going folks !! Bye for now !
I am first
ReplyDeleteவந்தாச்சி.
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteவந்தாச்சி _/\_
ReplyDelete.
// சந்தா E-வின் வருகையும், அவை கொணர்ந்துள்ள அலசல்களும் இந்தப் பொங்கும் உதவேகத்துக்கு ஒரு பிரதான காரணமெனத் தோன்றுவது எனக்கு மட்டும்தானா ? //
ReplyDeleteஉங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் அதே தான் சார்
ஆகையால் அடுத்த வருட சந்தா " E " ல் 12 புத்தகங்கள் வருமாறு பார்த்துக்கொண்டால் நல்லது
முன்கூட்டிய நன்றிகள் சார் _/|\_
.
//ஆகையால் அடுத்த வருட சந்தா " E " ல் 12 புத்தகங்கள் வருமாறு பார்த்துக்கொண்டால் நல்லது //
Delete+ 1
+11111111
Deleteநானும் வந்துட்டேன்ல!!!!
ReplyDeleteஐந்தாம் இடம்!!!!
// பெர்லின்..இப்போது வேல்ஸ்....தொடரும் காலங்களில் இன்னமும் பூமியின் வெவ்வேறு மூலை முடுக்குகள் என இந்தப் பயணம் தொடர்ந்திட்டால் //
ReplyDeleteபேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே
.
வணக்கம் காமிக்ஸ் நண்பர்களே..
ReplyDeleteசந்தா "E"பிரிவுக்கு கூடுதல் இதழ்கள் ஒதுக்கினால் நன்றாக இ௫க்கும் சார்@!!!!
ReplyDelete+111
Deleteநானும் வந்திட்டேன்.
ReplyDeleteஇந்த மாதம் தலைவனைப் பற்றிய ரிவியூ எழுத வேண்டி இருப்பதால் இன்னும் சந்தா Eஐ படிக்கவில்லை... விரைவில் ரிவியூ.....
ReplyDeleteஒரு மாசம் ரிவியூ எழுதற அளவுக்கு குற்றத்தொழிற்சாலையில மேட்டர் இருக்கா ரம்மி.?!?!?
Deleteஎண்டே குருவாயூரப்பா..!! 😳
///சந்தா E-வின் வருகையும், அவை கொணர்ந்துள்ள அலசல்களும் இந்தப் பொங்கும் உதவேகத்துக்கு ஒரு பிரதான காரணமெனத் தோன்றுவது எனக்கு மட்டும்தானா ? எது எப்படியோ - தொடர்ச்சியாய் ஆர்வத்தைத் தூண்டும் கதைகளுக்கான தேடலை முன்னெப்போதையும் விட இப்போது ஜரூராய்ச் செய்திடல் அவசியம் போலப்படுகிறது ! ///
ReplyDeleteஅதேதான் சார். .!
2018 அட்டவணையில் சந்தா Eக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கும் என்று நம்புகிறோம் .! 😃
சந்தா E இந்தாண்டின் அதிரடி ஹிட்...
ReplyDeleteஒவ்வொரு மாதமும் இதன் தாக்கத்தை சமன்படுத்த ரெகுலர் ஹீரோக்கள் மிகவும் சிரமப் படுகிறார்கள்...
கடுமையான போட்டி, நமக்கு லூட்டி...
ரெகுலா் ஹீரோன்னு
Deleteடெக்ஸையா சொல்றீங்க??!!
தனி சந்தா கேட்கும் லக்கி தானுங்க...!!!
Deleteவிஜயன் சார் வணக்கம்.
ReplyDeleteE யோ கொசுவோ எங்களுக்கு A - z
சந்தா வேணும்.
😁😁😁
Deleteசந்தா E-ல் 12 புக்கா E... E... ஈ.... ஈ
ReplyDeleteஐயா.. ஆன்லைன் வினியோகத்தில் மொபைல் வாலட்டில் paytm சேர்த்து விடுங்கள்.. வாங்குவதற்கு கொஞ்சம் எளிதாக இருக்கும்..
ReplyDelete// கேக்கின் மேலிருந்து வந்த ஐஸிங்கில் சின்னதாய் மாற்றம் இனி இருக்கக்கூடுமென வைத்துக் கொள்ளலாமா guys ?//
ReplyDeleteநீங்க பொடியறதை பார்த்தா,கொஞ்சம் வித்தியாசமான பொடிகளும் தயரா இருக்கும் போல,ஏதோ நல்லதா பொடிஞ்சா சரி.
அப்புறம் சார்,தீபாவளிக்கு ஏதாவது சர்ப்ரைஸ் உண்டா? அட்டவணை,தல என்ட்ரி இப்படி,அப்படி?
ReplyDeleteரவிக்கு பார்சலில் ஒரு யானை வெடியாச்சும்.. ம். .ம்ம்..! 😜
Deleteஎனக்கு யானை வெடின்னா,உங்களுக்கு குதிரை வெடி,ஈ வி க்கு பூனை வெடியா?
Deleteகுருவி வெடி யாருக்கு அனுப்பலாம்.
அது எனக்கு.
Deleteஅறிவரசு சார்க்கு கைதட்டும் படங்கள் பத்தாயிரம்.......!!!!
Deleteநமக்கு ஓரு சைவ வெடிங்கோ...
Deleteவெங்காய வெடி போதுமா?
Deleteஏதோ ஒரு வெடி.. ரவி பார்சலை திறந்ததும் வெடிச்சா சரி..!
Delete😝😝😝
அடப்பாவி மனுஷா,ஏன் இப்படி?
Deleteஹி ஹி ஹி..!!
Deleteஇங்கே தான் இருக்கேன்
ReplyDeleteஅப்ப ஆபீசுக்கு போகலை நீங்க?!
Deleteஆபிசுக்கு போனாலும் இங்க தான இருக்கோம்
Delete///வழக்கம் போல தலைகீழாய் சிரசாசனம் செய்தபடிக்கே SMS அனுப்பும் பராக்கிரம நாயகர்களும் ; ஈயத் தோட்டாக்களை ஒட்டு மொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருக்கும் தொப்பிவாலாக்களும் தொடர்வார்கள் ! ஆனால் கேக்கின் மேலிருந்து வந்த ஐஸிங்கில் சின்னதாய் மாற்றம் இனி இருக்கக்கூடுமென வைத்துக் கொள்ளலாமா guys ? ///
ReplyDeleteசிரசாசன SMSலாம் இல்லைன்னா நம்மள காமிக்ஸ் சங்கத்தில இருந்தே ஒதுக்கி வெச்சிடுவாங்களே.. அய்யகோ..!!
கேக்கின் மேலிருக்கும் ஐசிங்கை அதிகமாக்கி ஜில்லுன்னு கொடுத்தா போதுமே சார்.!!
அம்பு விடும் படத்தில் எதாவது
ReplyDeleteகுறியீடு உள்ளதோ.
@#$!%&*](}_{>{=]"])~{>_}^#*@(&
ReplyDeleteஎல்லோருக்கும் வணக்கம்-கிறத தான் செவ்விந்திய மொழியில் முயற்சி பண்ணினேன்!!
நான் கூட சைனா பாஷையோனு நெனச்சிட்டேன்.
Deleteநண்பரே கோவி!
DeleteFirst person
Second person
Third person
எல்லாத்தையும் பேதமே இல்லாமல் தத்தமது பெயரைச் சொல்லியே அழைத்தால் அது செவ்விந்திய பாஷை!
பேச்சு மொழி OK!
எழுத்து வடிவம் கொடுக்கத்தான் கடின முயற்சியெடுத்து ஆராய்ச்சி பண்ணீட்டிருக்கேன்!!
புகை சமிஞ்சை பத்தி தனியா புக்கே எழுதலாம்னு இருக்கேன்!!
ஹிஹிஹி!
2018 ல் காா்ட்டூனுக்கு அதே பத்து தானா அல்லது 2 கூடுதலா 12 புத்தகங்களானு தொியலையே !!
ReplyDeleteIs anybody know that??
//எப்போதையும்விட இன்றைய பொழுதுகள் செமையாய் தோன்றுகின்றன !//
ReplyDeleteஅட்டவணை ரெடியான குஷியா சார்,தீபாவளிக்கு அட்டவணையை அனுப்பினால் எங்களுக்கும் குஷியா இருக்கும்,அற்புதமான ஒரு தீப ஒளி திருநாளில்,ஏகாந்தமான ஒரு தருணத்தில் அட்டவணையை தரிசிக்கும் சுகமே சுகம்.
ஒரு பொன்மாலை தருணத்தில்,சில்லென்று ஊதக் காற்று வீச,மழைத் துளிகள் பொன் துளிகளாய் விழ ராஜாவின் மெலடி மெட்டுகளை கேட்கும் தருணத்திற்கு இணையானது.
+11111
Delete///அற்புதமான ஒரு தீப ஒளி திருநாளில்,ஏகாந்தமான ஒரு தருணத்தில் அட்டவணையை தரிசிக்கும் சுகமே சுகம்.
Deleteஒரு பொன்மாலை தருணத்தில்,சில்லென்று ஊதக் காற்று வீச,மழைத் துளிகள் பொன் துளிகளாய் விழ ராஜாவின் மெலடி மெட்டுகளை கேட்கும் தருணத்திற்கு இணையானது///
இரசணை இரசணை!
தீபாவளிக்கு மறு நாள் ; சில பல பட்சணங்களையும், பல சில பிரியாணிகளையும் full tank அடித்த கையோடு, லுங்கியையோ, வேஷ்டியையையோ..பட்டாப்பட்டியையோ லைட்டாக லூஸ் பண்ணிக் கொண்டே, ஏகாந்தமாய் ஒரு ஏப்பத்தை காற்றோடு கரைய விட்ட பின்பாக இங்கே ஆஜராகிடுங்களேன் - அட்டவணையோடு காத்திருப்பேன் !
Deleteஅடுத்த நாளா,அடடே????
Deleteஅட்டகாசமான செய்தி சார்.
Deleteஉண்மையிலேயே சந்தா E யில் இப்பொழுது வந்த இதழ்கள் அனைத்தும் அட்டகாச ரகமே...இப்படியே அதிகமாக தொடர்ந்தாலும் ஓகே..அப்படியே ரெகுலர் நாயகர்களை பாதிக்காத அளவில்..:-)
ReplyDelete+11111
Delete///எப்போதையும்விட இன்றைய பொழுதுகள் செமையாய் தோன்றுகின்றன///...பெவிகாலுக்கு கொஞ்சம் லைட்டா கேப் விட்டுட்டு, ஓட்டைவாய் உலகரை கொஞ்சம் உலவ விடலாமே சார்...
ReplyDelete@ ALL :
ReplyDeleteஆனாலும் இது கூவத்தூரையும், கூர்கையும் கலந்து செய்த கூத்துடா சாமி :
Votes so far : 3056 :
C P : 1636 (53%)
R J : 1414 (46%)
இந்த 3056 எனும் எண்ணிக்கை மட்டும் மாதந்தோறும் ஆகிடும் நமது விற்பனையின் நம்பராக இருப்பின் : uffffff !!
Deleteஅடடே..!
Deleteஜானி பின்தங்கிட்டாரே?
///இந்த 3056 எனும் எண்ணிக்கை மட்டும் மாதந்தோறும் ஆகிடும் நமது விற்பனையின் நம்பராக இருப்பின் : ///
Deleteஅப்படி இருந்தாட்டால்.. .
வருடம் 12 குண்டு டெக்ஸ் கலர்ல வெளியாகும்.
வருடம் 24 கார்ட்டூன்கள் வெளியாகி பட்டையை கிளப்பும்.
வருடம் 12 கி.நா க்கள் கலர், க / வெ ன்னு கலந்துகட்டி அடிக்கும்.
மறுபதிப்புகளில் ஆர்ச்சியும் சுஸ்கி விஸ்கியும் இடம்பிடிக்கும்.
புதுப்புது Genre கள் மாதந்தோறும் அறிமுகப்படுத்தப்படும்.
அத்தோடு
மாடஸ்டி ரசிகர்களின் எண்ணிக்கை நாலைந்து கூடியிருக்கும். .! :)
// அடடே..!
Deleteஜானி பின்தங்கிட்டாரே?//
வட போச்சே பீலிங்.
கண்ணன் நீங்க சொல்றது எல்லாமே நடந்தா நல்லாதான் இருக்கும்,அந்த தருணமும் வாய்க்கும் என்று நம்புவோம்.
Delete///வருடம் 24 கார்ட்டூன்கள் வெளியாகி பட்டையை கிளப்பும்///
Deleteகனவு மெய்ப்பட வேண்டும்!
எது எப்படியோ பிரின்ஸ் தானே கெலிச்சாரு!!
Delete👍👍👍👍👍
///எது எப்படியோ பிரின்ஸ் தானே கெலிச்சாரு!!///
Deleteசிவாஜி படத்துல ரசினி ரெண்டு கையாலயும் சரசரன்னு கையெழுத்து போடுவாரே, அப்படி ரெண்டு கையிலயும் ரெண்டு மொபைலை வெச்சிகிட்டும், கால் விரலாலே சிஸ்டத்தை ஆப்ரேட் பண்ணியும் கள்ளவோட்டு போட்டா, பரட்டை ஏன் கெலிக்கமாட்டாரு??
😱😱😱😱😱😱
எங்கப்பா நம்ம ஜானி ஆளுங்க....இன்னிக்கு போடற போடுல பரச்ன்டேஜ் நூத்தம்பதுக்கு மேலே போகனும்..:-))
Delete//எங்கப்பா நம்ம ஜானி ஆளுங்க....இன்னிக்கு போடற போடுல பரச்ன்டேஜ் நூத்தம்பதுக்கு மேலே போகனும்..:-))//
Delete:D
தலைவரே 300சொச்சம் இருக்கும் SUBSCRIBERS மத்தியில கிட்டத்தட்ட 3000 வோட்டு விழுந்திருக்கு 150%னு சொல்லறீங்களே :D அப்புறம் எடிட் நேத்திக்கே (நான்பார்த்தவரைக்கும் ) வோட்டிங் கிளோஸ் பண்ணிட்டாரு
ரெம்போ சாரிங்க தலீவரே....ஆனாக்கா வோட்டிங் முடிஞ்சு, சாவடிகள் அடைத்து ; ஓட்டுகள் எண்ணப்பட்டு ; முடிவுகளும் பலகையில் எழுதப்பட்டு ஒரு மாமாங்கம் ஆச்சு போல் தெரியுதே ! இப்போ பொங்கி பிரயோஜனம் நஹி !
Deleteஒரு தலைவன் ஒரு சகாப்தம்:-
ReplyDelete*ஒரு தொடரின் ஸ்பின் ஆஃப் வரும்போது, மூல தொடரில் இருந்து விலகி இருக்க கூடும் சில சமயங்களில்...இதற்கு நல்ல உதாரணம் அந்த பெட்டி ஃபர்னோவ்ஸ்கி...மற்றும் கர்னல் ஆமோஸ்... "இளமையில் கொல் தொடரில் "-டைகரின் இளம்பருவத்தை இம்மி கூட பிசகாமல் படம் பிடித்துக் காட்டி இருப்பார்கள்.
*இந்த டெக்ஸ் ஸ்பின் ஆப்பில் அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல், மிக கவனமாக பழையனவற்றை கையாண்டு மூலத்தொடருக்கு நெருக்கத்தில் கொண்டு வந்து உள்ளார்கள்.... அதுவும் வழக்கம்போல பரபரப்பான சில்லிட வைக்கும் ஆக்சோனோடு எனும்போது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. நமக்கு தீபாவளி மலர் எனும் சுவையும் சேர்த்து ஐசிங் ஆன் த கேக் ஆக தித்திக்கிறது.
*நாம் அறிந்த டெக்ஸின் முதல் இளமை காலத்தை சொல்லும் தொடரான,
"இரத்த ஒப்பந்தம்,
தணியாத தனல்,
காலன் தீர்த்த கணக்கு"
இருந்தால் எடுத்து முதல்பாகமான இரத்த ஒப்பந்தத்தை மட்டும் வாசித்து விட்டு சம்பவங்களை நன்றாக உள்வாங்கி கொண்டு பின்பு, இந்த தலைவன் ஒரு சகாப்தம் படித்தோமானால்,
அந்த இளம் டெக்ஸோடு நாமும் ப்ளாக் மூனோடு பொருதலாம்.
Chanta "E" 12 BOOKS Next yearil venum.. ..
ReplyDeleteModesty 2 book venum ....
ஐ யாம் 59th
ReplyDeletefor the first time!
உடனடி தேவை......
ReplyDeleteவீட்டு முகவரி .....
அப்புறம் ஒரு போர்வை ........
அப்புறம் ஒரு தலையணை .......
அப்புறம் கனவு காண ஒரு மூலை ........
முதலில் ரோஜெர் மூர் வீட்டு விலாசத்த வாங்கணும் ......
அப்புறம் ஒரு போர்வை ........
அப்புறம் ஒரு தலையணை .......
அப்புறம் கனவு காண ஒரு மூலை .......
அடுத்தது யாருப்பா க்யுவில
///அடுத்தது யாருப்பா க்யுவில///
Deleteமாடஸ்தி தான்! :)
மாடஸ்தி விலாசம் ப்ளீஸ் ......ஹி ஹி ......
Deleteஎடிட்டர்ட்ட கேளுங்க. அவர்தான் அடிக்கடி ஃபாரின் டூர் போறார்! :D
Deleteமாடஸ்தி..
Deleteகேர் ஆப் கார்வின் ..,
100 % ...கழுகு மலை கோட்டை..
இஸ்தான்புல்....
ஆஹாங்
Deleteலண்டன்....லண்டன் மெயின் ரோட்...லண்டன் குறுக்குச் சந்து...பஸ் நிலையத்துக்கு மிக அருகில்...!
Deleteநானும்கூட சிவகாசி பஸ்ஸ்டாண்ட், சிவகாசி mainroad, சிவகாசி குருகுசந்து னு தவறான அட்ரசுக்கு தீபாவளி வாழ்த்து அட்டை அனுபவிருந்தேன் :P
Deleteஇன்னிக்கு படிக்க வேற காமிக்ஸ் இல்லை...
ReplyDeleteடெக்ஸ் விஜய் சொன்ன அந்த மூனு புக்குகளைத் ///இரத்த ஒப்பந்தம்,
தணியாத தனல்,
காலன் தீர்த்த கணக்கு// தேடி எடுத்துப் படிக்க சிரமம்றதால இன்னிக்கு இஸ்பைடரின் 'குற்றத் தொழிற்சாலை'யை படிக்கப்போறேன். என்னை யாரும் தடுக்க வேண்டாமே ப்ளீஸ்? இது என்னுடைய சுய விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவுதான். யாரும் பொறுப்பல்ல! :D
மொன மொன மொன...
பயங்கரக் குற்றவாளியான ஸ்பைடருக்கு தொழில்முறை போட்டியாளர்கள் ஏராளம்!
மொன மொன மொன......
அச்சச்சோ.. சொந்தகாசுல சூனியம் வெச்சிக்கிறாரே..!!
Deleteநீங்க தெகிரியமா படிங்க சாரே.எதுன்னாலும் பாத்துக்கலாம்.
Deleteம்..ம்.. எதுக்கும் ஆத்தா மகமாயிய ஒரு தபா கும்புட்டுகுங்க.
ஈரோடு விஜய் : விதி வலியது....!
Deleteஆமாம் சார்... ரொம்ப வலிக்குது! :D
Delete// இது என்னுடைய சுய விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவுதான். யாரும் பொறுப்பல்ல!//
Deleteஆனாலும் உங்களுக்கு குசும்புதான் ஈ வி,ஹா,ஹா,ஹா,
ஆனாலும் ஸ்பைடர் வாசகன் என்ற முறையில் இதை கண்டிக்கிறேன்.😈😈😈
😈
Deleteஸ்பைடர படிக்க படிக்க தான் புடிக்கும்.
Deleteகாமிக்ஸ் உலகில் வாழ்நாள் சாதனையாளர் எங்கள் ஸ்பைடர்
Deleteகாமிக்ஸ் உலகில் வாழ்நாள் சாதனையாளர் எங்கள் ஸ்பைடர்
Deleteஅப்புறம் இந்தவாரம் மக்னெட் ஸ்டிக்கிங் பிக் அருமை மனம் கவர்ந்தது நன்றி !:)
ReplyDeleteதாமதம் தான் ஆயினும் கூறியேஆகவேண்டிய விஷயம்
ReplyDeleteவெட்டியான் :
யப்பா நான் படித்தது தமிழ் காமிக்ஸ் தானா ! எத்தனை ட்விஸ்ட், அந்த பிணவண்டி ஒரு ரவுண்டு காட்டிவிட்டது. மொழி நடை அபாரம். அலட்டலில்லா அதிரடி நாயகன் அசுரத்தனமான கதை கரு. புயலாய் நகரும் கதையோட்டம். இந்த வருடத்தின் சிறந்த இடத்தை இதுவரை வந்த புத்தகத்தில் வெட்டியானுக்கு கொடுக்கலாம். perfection to the core ! நன்றி எடிட் !
போச்... கோபியில் ஒருவர் இனி ஒருவாரம் தூங்க மாட்டாரே...
Deleteதிருவண்ணாமலையிலோ்ந்து இப்பதான் வா்றேன்!!
Deleteஇப்படியொரு இன்ப அதிா்ச்சியா??
பாா்த்தீங்களா டெக்ஸ் விஜய்!!
// வழக்கம் போல தலைகீழாய் சிரசாசனம் செய்தபடிக்கே SMS அனுப்பும் பராக்கிரம நாயகர்களும் ;//
ReplyDeleteஅடுத்த வருஷம் தலைவரின் பாட்டில் பூதம் விசிட் இருந்தா இன்னும் சிறப்பு.😁😁😁
Sir please publish kalam thavaria kalan graphic novel 🙇🙇🙇🙇
ReplyDeleteபெர்லின்..இப்போது வேல்ஸ்....தொடரும் காலங்களில் இன்னமும் பூமியின் வெவ்வேறு மூலை முடுக்குகள் என இந்தப் பயணம் தொடர்ந்திட்டால் - பொம்மை புக்குகள் கூட ஒரு உலகப் பயண டிக்கெட்டாகிட முடியும் !!-சத்தியமான வார்த்தைகள் குருநாதா!
ReplyDeleteVijan Sir and friends,
ReplyDeleteJust an idea...
How about a special edition (outside of regulars) in 2018 with following conditions?
1. 100% fully managed by our Junior Editor
2. From source story selection to dispatch and everything in between (ofcourse he could use professionals wherever needed)
3. Size, price totally fixed by him
4. We could call it as..
NextGen special or
3Gen or 3G special
(P.S. please don't get me wrong, I love all current work done by you.
It is just a wish to kick start the next gen now when we are all at full speed.)
G 5th generation 5G intially launched by RELIANCE JIO. SO TITLE NAME CHANGED TO 5G FUTURE SPECIAL.
Deleteநல்ல ஐடியா..!!
Delete+1
With this special edition, the newly promoted editor could set the price and minimum target booking to Kickstart this NextGen Special (NGS). Once the target reached, he could take off ;-).
ReplyDeleteஇம்மாத இதழ்கள் ரேட்டிங்
ReplyDelete1.குற்றத் தொழிற்சாலை 10/10
2.ஒரு ஷெரிப் சிப்பாயாகிறார் 10/10
3.கணவுகளின் கதை 10/10
4.ஒரு தலைவன் ஒரு சகாப்தம் 10/10
🙏🙏🙏
Deleteஎதுக்கு வம்பு!!
DeleteMithun Supero Super
DeleteDear Ed,
ReplyDeleteNext pocket size book which story?
Mabhisto story possible in 2018 SANDHA?
Please publish rare stories in reprint books like VAIKING THEEVE MARMAM, Archie stories like.
Regards
I.V.SUNDARAVARADAN
LITTLE KANCHEEPURAM
CELL: 7667291648.
மாத்தியோசி-197
ReplyDeleteமாத்தியோசி-198
Deleteமாத்தியோசி-199
Deleteகனவுகளின் கதையிது....பாசம் என்ற கனவின் கதையிது...லயனின் அசுரப் பாய்ச்சலின் கதையிது...ஆசரியரின் தேடல் வேட்கையின் கதையிது...நாம் அனைவரும் ஏங்கும் பாச உணர்வு , எனக்கு மட்டும்தான் என அடித்து பேசியதால் விளைந்த கதையிது . தனது அன்னையை ஏமாற்றிய தந்தையை வெறுக்கும் ஒருவன் ....தன் மேல் செலுத்திய பாசத்தை விட மாற்றாந்தாய்க்கு பிறந்த தங்கை மேல் செலுத்தியதற்காக பழி வாங்கிய ஒருவள்....நாயகிக்கோ தாய்பாச ஏக்கம்..ஒரு வகையில் அருகில் இல்லாததை நினைத்து ஏங்கி இருப்பதை கோட்டை விடுகிறோம் . இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது இதுதானோ ! இதை உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் போது பழகி விடுகிறது . ஏற்காத மனதின் பிறழ்வால் பிறந்த கதை இது . ஆனால் நமக்கு சொல்லித் தருபவர்கள் பெரும்பாலும் இல்லாத ஒன்றை அல்லது இயல்பான வாழ்க்கையை இழித்து பேசுவது வாடிக்கையாக உள்ளது . நாயகி கூறும் இரண்டு கால் விலங்குகள் எனக் கூறுமிடம் பொருந்தும் . எல்லோரும் சுயநலவாதிகள் ....என பிறரை குறை கூறுமிடம் . இயல்பாகவே மனிதனின் குணம் இதுதானே . இங்கே கொல்லப்பட்டது நாட்டை ஆண்டவர் எனும் போது சிறிது வருத்தத்தை காட்டி விட்டு நமது வேலையை தொடர்கிறோம் .உலகமே குருடாய் இருப்பதாகவோ அல்லது நடிப்பதாகவோ நகர்கிறதுதானே தமிழ்நாட்டு வாழ்க்கையும் . அக்கறை என்பது எனது குடும்பத்தின் மேலாவது காட்டியாக வேண்டுமே என்ற சம்பிரதாய சடங்கை பாசாங்காய் காட்டிக் கொண்டே .. நாம் கூட ஒரு வகையில் இல்லாத ஒன்றை ஹீரோயிசமாக தேடுகிறோமா என கேள்வியை எழுப்புகிறது இக்கதை . இவ்வளவு பேசிய நாயகி கூட தோழிக்காக அக்கொலையை மறைக்க முயல்வது யதார்த்த இரண்டுகால் மிருகமாய் அவளும் வாழ்கிறாளே !தனது தங்கையை கொல்பவள் , தனது காதலனிடம் தனது தோழி என்பதற்காக அவளை விட்டு விடு என நாயகனிடம் கேட்பதும்...தனக்கு தேவை என்றால் பாசத்தை அதீதமாய் வெளிப்படுத்துவதுமே இயல்பாய் இருக்கும் போது ....தேவை என்ற ஒன்றுதானே இங்கே எல்லாத்தையும் அதாவது பாசத்தையும் தீர்மானிக்கிறது . தேவை எனும் வரை தாய் , தந்தை பாசம் ...தேவை தீர்ந்ததும் மனைவி , பிள்ளை பாசம்....முடியா விட்டால் சன்னியாசம் .. கடைசியில் வில்லன் காதலி தன்னை காட்டி விடக்கூடாதே என்று அவளயும் கொன்று நாயகியை கொல்ல முயல்வது ஆசிரியர் நம்மை முடித்துக் கொள்ளுமாறு கூறுகிறாரோ...கதையை கோர்வையாய் அற்புதமாய் நகர்த்துகிறார் அடுத்து என்ன என்ற ஏக்கங்களுடன் ஆசிரியர் . சார் அருமை...100/100
ReplyDeleteகடைசியில் வில்லன் காதலி தன்னை காட்டி விடக்கூடாதே என்று அவளயும் கொன்று நாயகியை கொல்ல முயல்வது ஆசிரியர் நம்மை முடித்துக் கொள்ளுமாறு கூறுகிறாரோ. வில்லன் எங்கே தன் காதலியை மற்றும் நாயகியை கொல்கிறார் ?
Delete98th
ReplyDeleteஆசிரியர் சார்@ மேலே உள்ள படத்தில் உள்ள ஹீரோ யார்?
ReplyDeleteகி.நா. ஹீரோவா???
அடுத்து ஆண்டு அறிமுகம் ஆகும் புதிய ஹீரோவா???
எதுவும் சொல்லாம படத்தை மட்டும் போட்டா எதுவும் புரியாம இருக்குங்களே சார்...!!!
100😎
ReplyDeleteதளம் அமைதியாக உள்ளதே. நம் சந்தேகம் கேட்க சரியான சந்தர்ப்பமோ...!?!?
ReplyDeleteநேற்றுதான் 'கனவுகளின் கதையிது' படித்தேன்.! முடிவை புரிந்துகொள்ள சில நிமிடங்கள் தடுமாற்றம் இருந்தாலும் கூட....சம்பவங்களை அசைபோட்டதில் தெளிவு பிறந்தது.
ஆனால் ஒரே ஒரு இடம் மட்டுமே புரியவில்லை. அந்த இடம் பக்கம் எண் - 59.
அந்த பக்கம் சொல்லும் செய்தி என்ன..?
புரிந்தவர்கள் விளக்குங்களேன்.!
அது ஷானன் காணும் நிஜ கனவு.
Deleteஏற்கனவே கண்ட கனவின் விளைவாக
பயத்தில் காணும் அதேபோன்ற
கனவு.
@ KV கணேஷ்
ReplyDeleteஅந்த கட்டம்போட்ட சட்டை,ஜீன்ஸ்,சுருள் சுருளாக முடி...
முகத்தில் உள்ள பருகள் என அவள் சானென் என்பதில் சந்தேகமில்லை.அது ஒரு கனவு சித்திரம் என்பதிலும் சந்தேகமில்லை.ஆரம்பகாட்சியில் வரும் அதே உடையில்...அல்லது...முதல்கனவு காணும்போது உடுத்தியிருந்த உடையில் தான் அந்த காட்சியில்..கனவில் தோன்றுகிறாள்.
அந்த கனவு அவள்தான் காண்கிறாள் என்ற யூகம் சரியாக இருந்தாலும்கூட...
ஜெர்ரி போன் பேசியதை அடுத்து அந்த காட்சி வருவதுதான் குழப்பமே.
ஒருவேளை பக்கங்கள் ஏதும் மாறிவிட்டதோ..????
பக்கம் 37 ல் அந்தகெட்ட கனவை ஒரு மெய்யான கெட்ட கனவாய் நினைத்து மறந்து தொலைப்பது நல்லது.! என நினைப்புடன் தூங்கும்போது வரவேண்டிய காட்சியாக பொருந்துகிறது.!
அல்லது..பக்கம்-69 ல் அந்த காட்சி இடம்பெற்றிருந்தால்...
விபத்தில் இறந்த கெப்ரை பற்றிய கனவு வராமல்,பயத்தில் நிஜகனவு வந்ததால்...அவள் முகம் மாறியிருப்பதை டிம் சுட்டிகாட்டுவதும்,அந்த பெண் பற்றிய கனவு என் மண்டைக்குள் வண்டாக குடைந்து சித்திரவதை செய்து கொண்டிருகிறது.! என சானென் பதறுவதும், என பொருந்தி வருகிறதே.!
அந்த காட்சி பக்கம் 59 ல் இருப்பது எங்கோ இடிகிறதே...!!
///ஆனால் ஒரே ஒரு இடம் மட்டுமே புரியவில்லை. அந்த இடம் பக்கம் எண் - 59.///
Delete//அந்த காட்சி பக்கம் 59 ல் இருப்பது எங்கோ இடிகிறதே...!!//
மாயாவிஜி !!!
கணேஷ் சொன்னது சரிதான் !!! அக்கனவு நாயகியின் சாதாரண நைட்மேர் !!! நாயகியின் சக்தி இறந்தவர்களின் இடத்தில் படுத்தால் அவர்களின் இறுதி உணர்வுகள் அவள் கனவில் வரும் ...
59-ம் பக்கத்தில் வருவது நாயகியின் தீக்கனவு !!!
இதற்கும் கதைக்கும் தொடர்பில்லை .............................
இடிப்பதற்கு இதில் ஒன்றுமில்லை ...
இது கதாசிரியையின் யுக்தி
மர்டர் மிஸ்ட்ரி கதைகளில் இதை INTENTIONAL FORMAL FALLACY என்று அழைப்பர் ....அதாவது வாசகர்களை தொடர்பற்ற தகவல்களை கொடுத்து தவறான திசைக்கு திருப்ப முயற்சிப்பது ...
நண்பர் செனா சொல்வத போல குழப்பி சுவாரஷ்யத்தே கூட்டும் முயற்சிதான் மாயாவியாரே...கதையில் துவக்கத்திலேயே தெளிவாக , சரியானபடி அதாவது அவர்கள் படுத்த இடத்தில் படுக்கணும் அதே போல எனவும் இறந்தவர் வாயிலாக கனவு வெளிப்படும் என தெளிவாக கூறி அதன் படியே தொடருது . வில்லன் உயிரோடு இருப்பதால் இவள் காண்பது தெளிவு ..ஆக அது தீக்கனவே..கடைசியில் இவள் தோழி கொல்லபட்டத கனவின் மூலமே சொல்லாமல் சொல்கிறாரே...என்ன அருமை..ஆசிரியரின் தெளிவான மொழிபெயர்ப்பயும் அடிச்சிக்க முடியாதில்லயா..
Delete@ செல்வம் அபிராமி
Delete///அதாவது வாசகர்களை தொடர்பற்ற தகவல்களை கொடுத்து தவறான திசைக்கு திருப்ப முயற்சிப்பது ...///
சபாஷ்...இந்த பாயிண்டைதான் எதிர்பார்த்தேன்.
முதல் வாசிப்பில் அந்த காட்சிகள் ஒருவேளை சானென் இறந்தவர்களின் கடைசி கனவை காணும் கட்டத்தில் இருந்து...
எதிர்காலத்தை கனவாக காணும் திறனுக்கு நகர்கிறாளோ..???
அந்த கைகள் கட்டப்பட்ட பெண்ணே அவள்தானோ..???
அவள்தான் கொல்லப்பட போகிறாளோ..???
அவளை கொல்லப்போவது ஜெர்ரி தானோ..???
என துப்பறியும் மூளை வேகமாக பல கணக்குகள் போட்டன.
ஆனால் மறுவாசிப்பில் அந்த கனவை அவள் படுக்கையில் பயத்தில் காண்கிறாள்.இதுவரையில் அவள் கண்டதெல்லாம் ஒரு இயற்கையான மரணப்படுக்கையின் நினைவுகளைதான்.! ஆனால் முதல் முறையாக ஒரு கொலைசெய்யப்பட்ட மரணப்படுக்கையின் நினைவுகளை பார்த்து குழம்பியும்,பயந்தும் கனவுக் காண்கிறாள் என புரிந்தது.!
அந்த கனவின் விளைவே அவள் படிக்காமல் கிளாசுக்கு சென்று ஆசிரியரையே முதல்தடவை வியக்க செய்கிறாள்.அந்த நிகழ்வால் அவள் தன் படுக்கையில் கனவை கண்டுவந்ததுள்ளாள் என்றும்....கதாசிரியர் நம்மை திசைதிருப்பவே அந்த குறிப்பிட்ட இடத்தில் அந்த காட்சியை சொருகியுள்ளார் என்பது புரிந்தது.!
மறுவாசிப்பில் மேலும்மேலும் சில நுட்பமான விஷயங்கள் புரிந்தன.
பக்கம்-95 ல் என் அம்மாவை நடுதெருவில் நிறுத்தியது பற்றாதென-அங்கே சுரங்கத்தில் மூன்றாவதாக ஒரு சகவாசத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். வாசகத்தை கவனியுங்கள்.
கதாசிரியர் நம் யூகிக்கும் திறனுக்கு ஒரு போட்டியை மறைத்து வைத்துள்ளார்.
அந்த மூன்றாவது நபர் யார் என கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்களேன்.! [கண்ணடிக்கும் துப்பறிவாளன் விஷால் படம் ஒன்று]
அடுத்து...
உங்களுக்கு இது ஒரு திரைபடம் நினைவுக்கு வந்தது போலவே எனக்கு ஒரு திரைபடம் நினைவுக்கு வந்தது.அது ஒரு கொரியன் படம்.
விவரம் சொல்லலாமா என யோசித்து...
கி.நா வாசகப் பெருமக்களே!!
Deleteஎமது வல்லுநர்களில் பலரும் சென்ற வாரத்தில் அதிக வேலைப்பளு, ஆன்மீகப் பயணம், தீபாவளி வசூல், கள்ளவோட்டுப் போடுதல் - போன்ற முக்கிய பணிகளில் மூழ்கிக் கிடந்ததால் இந்த மாதத்திற்கான கி.நா அலசல்கள்/விவாதங்கள் சற்றே தாமதமாகத் துவங்கப்பட்டுள்ளது. அவ்வமயம், கி.நா'வை படித்துமுடித்துப் பதுக்கிவைத்த வாசக நண்பர்கள் மீண்டும் அதை தோண்டியெடுத்து கையில் வைத்துக்கொள்ளும்படி 'தானா சேர்ந்த கி.நா ரசிகர்கள் நற்பணி மன்றம்' சார்பாக வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்! :)
மாயாஜி
Deleteஅப்ப அந்த ஆயிரம் பொற்காசுகள்?
😂😂😂😂😂
@ KV கணேஷ்
Deleteசொல்ல விட்டு போச்சி.! சரியான பதில் வந்தது எனக்கு வியப்பில்லை.! ஆனால் அந்த பதிலை உங்களிடமிருந்து சற்றும் எதிர்பார்க்கலை,ஆபிஸில் இருக்கும் நேரத்தில் புத்தகத்தை எடுத்து புரட்டிப் பார்க்க வாய்ப்பே இல்லாத சூழலில்...
சற்றும் யோசிக்காமல் பதிலை அள்ளிவிட்ட வேகம்,ஞாபகதிறன்...
யப்பா...செம சாரே..செம..!!!! மொத்த பொற்காசும் உங்களுக்கே சாரே..!!!!!!!!!!!! :)))
யாருட்டயும் சொல்லாதீங்க.உங்க கேள்வியை பார்த்தபோது மதிய உணவுக்காக வீட்டில் இருந்தேன்
Deleteஉடனடியாக பார்த்து பதில் அளித்தேன்.
தம்பி இன்னும் பொற்காசு வரலை.
Delete////யாருட்டயும் சொல்லாதீங்க.உங்க கேள்வியை பார்த்தபோது மதிய உணவுக்காக வீட்டில் இருந்தேன்
Deleteஉடனடியாக பார்த்து பதில் அளித்தேன்.////
இந்த நேர்மைக்கே ஒரு பொற்கிழி பரிசளிக்கலாம் கணேஷ் ஜி!
Paola barbata –ன் சாதுர்ய கதை சொல்லும் யுக்தியை எண்ணி வியக்காது இருக்க முடியவில்லை ...
ReplyDeleteபர்பட்டா இத்தாலி மிலன் நகரை சார்ந்தவர்...
இவ்வகை மர்டர் மிஸ்ட்ரி கதைகளை இத்தாலியில் ஜெல்லோ –giallo – என அழைப்பார்கள் ....ஜெல்லோ என்றால் ஆங்கிலத்தில் மஞ்சள் என பொருள் ..முன்னொரு காலத்தில் மர்டர் மிஸ்ட்ரி கதைகள் இத்தாலியில் மலிவுவிலையில் மஞ்சள் அட்டையுடன் பெருமளவு பதிப்பிக்கப்பட்டதால் இப்பெயர் வந்தது ....அது இன்னமும் தொடர்கிறது ....
சூப்பர் நேச்சுரல் மர்டர் மிஸ்ட்ரி கதைகளும் இதில் அடங்கும் ...
டைலன் டாக் போன்ற பாராநார்மல் கதைகளும் இவ்வகையே ..
பர்பட்டா டைலன் டாக் கதை வரிசையின் எழுத்து இலாகாவில் இருப்பவர் ..முப்பதுக்கும் மேற்பட்ட டைலனின் கதைகளில் பங்களித்தவர் என்ற விஷயம் கனவுகளின் கதையிது படித்தபின் வியப்பளிக்காதுதான் .....
கதையின் மையப்புள்ளி 1978 –ல் வெளி வந்த EYES OF LAURA MARS திரைப்படத்தை நினைவூட்டியது ..லாரா மார்ஸ் என்கிற தொழில்முறை புகைப்படம் எடுக்கும் கதாநாயகிக்கு அவளை சுற்றி இருப்பவர்கள் கொலையாகும் முன்பு கொலையாளியின் கண்ணோட்டத்தில் அவர்களை பார்க்கும் சக்தி இருக்கும் ....கதையின் போக்கும் கனவுகளின் கதையிது போலவேதான் ...
திகில் ,பேய் படங்களின் மன்னர்களில் ஒருவரான ஜான் கார்பெண்டர் –ஆல் எழுதப்பட்ட இக்கதையை படத்தின் இயக்குனர் இர்வின் கேல்ஷ்ணர் இயக்கிய அற்புதமான விதத்தை பார்த்து இண்டியானா ஜோன்ஸ் மற்றும் ஸ்டார்வார்ஸ் தயாரிப்பாளர் லுகாஸ் ஸ்டார்வார்ஸ் ஐந்தாம் பாகத்தை இயக்க இர்வினுக்கு வாய்ப்பளித்தார்
பாசிப்லி ஒரு ரேண்டம் கோ இன்சிடன்ஸ் .........!!!!!!
அப்டியே இரத்த படலத்துக்கும் விளம்பரம் தேடுற மாதிரி அட்டகாசமா ,ஈர்க்கும் வண்ணம் தந்தா ஆசிரியர் அடுத்தமாத டிராகன் நகரத்துல இணைக்ற மாதிரி தந்தா நல்லாருக்குமே நண்பரே.
Delete👌
Deleteசெனா அனா ஜி,அருமையான தகவல்கள்.
Delete///பர்பட்டா டைலன் டாக் கதை வரிசையின் எழுத்து இலாகாவில் இருப்பவர் ..முப்பதுக்கும் மேற்பட்ட டைலனின் கதைகளில் பங்களித்தவர் என்ற விஷயம் கனவுகளின் கதையிது படித்தபின் வியப்பளிக்காதுதான் .....///
Deleteஅடடே!!!
தாம்பரத்தில் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் ?
ReplyDeleteதாம்பரத்தில் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் ?
ReplyDeleteஏன் அவ்வளவு கஷ்டம்.
சந்தா கட்டுங்க சந்தோஷமா படிங்க.
Captain Prince & Reporter Johnny No comparison is needed . Captain Prince is head & shoulders above Johnny. I find Captain Prince stories's artwork more enjoyable in black and white because colouring is not that good.
ReplyDeleteSpider stories are always enjoyable even if read again and again
ReplyDeleteஇன்று பிறந்தநாள் காணும் மயிலை அரசர்,போஸ்டல் பீனிக்ஸ் @ சகோதரர் ராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅவர் வாழ்வில் வளமும்,நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
🎂🎂🎂😍😍😍
அன்பிற்கும், நட்புக்கும், விருந்தோம்பலுக்கும் இலக்கணமாகியிருக்கும் மயிலை அரசருக்கு ஈனாவினாவின் இனிய வாழ்த்துகளும்!
Deleteஇன்று பிறந்தநாள் காணும் மாயூரத்தின் மாமன்னர் ,போஸ்டல் பீனிக்ஸ், மைத்துனர் ராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
ReplyDeleteஅவர் வாழ்வில் வளமும்,நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
🎂🎂🎂😍😍😍
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteபோஸ்டல் பினிக்ஸ் ராஜா.
🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷
ReplyDelete🎆🎆🎆🎆🎆💖💖💖💖🍰🍰🍰🍰🍭🍭🍭🍭
இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடும் விருந்தோம்பலின் இலக்கணம்,
பாசத்தின் பிறப்பிடம்,
பழகுவதில் பண்பாளர்,
அருமை நண்பர்,
அன்பான மாப்பிள்ளை,
"போஸ்டல் பீனிக்ஸ்"
நம்முடைய அன்பின் ஆசிரியர் சாருக்கு தபால்தலை வெளியிட வைத்த அன்புள்ளர்,
மயிலை இளவல் ராஜா சக்ரவர்த்திக்கு இனிப்பான இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...🎂🎂🎂🎂🍫🍫🍫🍫🎉🎉🎉🎁🎁🎁
+1 Many more happy returns friend!
Deleteபரகுடாவுக்கு டிரஸ் தச்சாச்சா சார்
ReplyDeleteRaja happy birthday.many more happy returns of the day.
ReplyDeleteமுழுமதியின் புன்னைகை போலானவர்...
ReplyDeleteதபாலின் தளபதியார்....
" ஆசிரியரையே "தபால்தலையில் சிறை பிடித்த சேனாதிபதியார்...
விருந்தோம்பலின் அரசர்...
நட்பின் மரியாதைகுரிய படைவீரர்.
எங்கள் இனிய
மயிலை ராஜா அவர்கள்
இன்று போல் என்றும் இளமையுடனும்.,மகிழ்வுடனும் வாழ இனிதே வேண்டுகிறேன் ..
பி.கு : இந்த பிறந்த தேதி எப்பிஐ..சிபிஐ..இன்டர்போல் போன்ற பல ரகசிய ஏஜெண்ட்களால் உண்மையானது என நிரூபனம் செய்யபட்டுள்ளது.:-)
காமிக்ஸ் ராஜாவையும் மயிலை ராஜாவையும் புன்னகைக்க வைக்கும் வாழ்த்துக்கள் பார்க்க...இங்கே'கிளிக்'
Delete:))))))
சூப்பர் மாயாஜீ...:-))
Deleteசெம
Deleteஅருமை வேதாளரே
Deleteசெம க்ளிக்!
Delete@ POSTAL PHOENIX : புன்னகை மாறா நண்பர் ராஜாவுக்கு நமது பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ! மென்மேலும் பல 'கிடா விருந்துகள்' + 'காவேரி நீராடல்கள்' நடத்திட நலமோடும், வளமோடும் வாழ்ந்திட வாழ்த்துவோம் !!
ReplyDeleteஒரு தலைவன் ...
ReplyDeleteதுப்பாக்கியை உயர்த்திப் பிடித்த போஸுடன் அட்டைப் படம்... விழிகளை நகர்த்தவே முடியவில்லை . இந்த ஆண்டின் மிகசிறந்த அட்டை படம் .
உள்ளே சித்திரங்களோ அட்டைப் படத்திற்கு சிறிதும் சோடை போக வில்லை.
தெளிவான நேர்கோட்டு கதை.
பலமான வில்லன். நண்பர்கள் ஆபத்தில் .. சட்ட பிரதிநிதிகளும் ஏதும் செய்ய முடியாத சூழல்.
தன்னுடைய பலத்தை மட்டுமே துணையாக கொண்டு எதிரியை வீழ்த்தி சட்டத்தை நிலை நாட்டும் நாயகன்.
ஆரம்பம் முதல் கடைசி வரை செம விறுவிறுப்பு .
முழு கதையையும் படித்து முடிக்காமல் புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை.
குற்ற தொழிற்சாலை ...
இம்மாதத்தின் டாப் வெளியீடு ...
👍👌👌👏👏🙏🙏
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ஜி ...
ReplyDeleteஎன்னாச்சி எல்லோரும் பிஸியா இருக்காங்களா?
ReplyDelete🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷
ReplyDelete🎆🎆🎆🎆🎆💖💖💖💖🍰🍰🍰🍰🍭🍭🍭🍭
இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடும்
விருந்தோம்பலின் இலக்கணம்,
பாசத்தின் பிறப்பிடம்,
பழகுவதில் பண்பாளர்,
அருமை நண்பர்,
அன்பான மாப்பிள்ளை,
"போஸ்டல் பீனிக்ஸ்"
நம்முடைய அன்பின் ஆசிரியர் சாருக்கு தபால்தலை வெளியிட்ட அன்புள்ளர்,
மயிலை இளவல் ராஜா சக்ரவர்த்திக்கு
இனிப்பான இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் _/|\_
...🎂🎂🎂🎂🍫🍫🍫🍫🎉🎉🎉🎁🎁🎁
.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Deleteவாழ்க பல்லாண்டு
🎂🎂🎂🎂🎂🎂🎂
Just now I bought The Spider's ' kutrathozhirsaalai'. Print is very clear. Editor sir pls keep it up. Though I have Kodaimalar 1986, this reprint is better in quality. Very nice very nice!
ReplyDeleteJust now I bought The Spider's ' kutrathozhirsaalai'. Print is very clear. Editor sir pls keep it up. Though I have Kodaimalar 1986, this reprint is better in quality. Very nice very nice!
ReplyDeleteஆசிரியரின் கனிவான கவனத்திற்கு..
Deleteஇவ்வளவு பாராட்டு பெறும் இந்த இதழை படிக்க முடியாமல் கலங்கி போய் நிற்கும் ஒரு ஜீவனை உங்கள் கண் முன் கொண்டு வாருங்கள் சார்...;-(
திரு.போஸ்டல் பீனிக்ஸ் ராஜா அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
Deleteமீசை வைத்தவரெல்லாம் பாசக்காரங்க என மீண்டும் நிரூபித்த, அண்ணன் ராஜா சக்ரவர்த்தி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே.💐💐💐💐
ReplyDeleteஅழகாய் ஒரு அதிரடி - page 53 - இதைவிட ஒரு சூப்பர் அதிரடி intro தலைவருக்கு நான் பார்த்ததில்லை...
ReplyDeleteநாளைய இன்றைய பதிவில் ஏதாவது அட்டவணை தகவல்கள் கசியக் கூடுமோ???
ReplyDeleteஎடிட்டர் சமூகத்தின் லேப்டாப்பை யாராவது ஹேக் பண்ணிக்கொடுத்தால் அப்புறம் நாமே போடலாம் - அட்டவணை பற்றிய புத்தம்புது பதிவு! [சிறந்த ஹேக்கருக்கு சங்கத்தின் சார்பாக சிறிய பணமுடிப்பு ( சில்லரைக் காசுகள்தான் ஹிஹி) தலீவரின் கைகளால் வழங்கப்படும்!]
Deleteபுதிய பதிவின் தலைப்புக்கூட யோசிச்சாச்சு! "ப.போ.கா.அ - ப.போ.ஃ.பெ.சா" ( அதாவது 'பறிபோன காமிக்ஸ் அட்டவணையும் - பதறிப்போன ஃபெவிக்கால் பெரியசாமியும்')
ஹிஹி!
அட்டவணை எனக்கு அனுப்பி விட்டார்.
Deleteஆனால் அவர் வேண்டுகோளுக்கிணங்க
நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்.
காதில் புகை வந்தால் நான் பொறுப்பல்ல.
( ஏம்மா என்ன எழுப்பிவிட்ட நல்ல
கனவு.)
அட்டவணைக்கு இன்னமும் 10 தினங்கள் wait மாடி சாரே !
Deleteபச்சே இன்னிக்கு குறைச்ச சமயத்தில் ஒரு ஜாலியான சேதி இவ்வட ஞான் பரயும் !
///பச்சே இன்னிக்கு குறைச்ச சமயத்தில் ஒரு ஜாலியான சேதி இவ்வட ஞான் பரயும் !///
Deleteஎண்ட அம்மே..!! 😍😍😍
மயிலை அரசருக்கு மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்ததுகள்.
ReplyDeleteHi
DeleteHi Freinds!
ReplyDeleteI am a newcomer for this blog!
Deleteவெல்கம் 🍫🌷
DeletePRINCE CLASSIC
DeleteWhen it comes PRINCE CLASSIC
Just a time
I also come here!
I like very much PRINCE adventures
And I wait for that
நல்வரவு நண்பரே.அசல் அடையாளத்துடன்
Deleteவரும் அனைவரும் அரவணைக்கப்படுவார்கள்.
Welcome பிரின்ஸ்.
Deleteவருக.🎉🎊🎇
Deleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே.
ReplyDeletetest
ReplyDelete