நண்பர்களே,
வணக்கம். ஒரே நாளில் முச்சதம் போட்டுத் தாக்கி விட்டீர்கள் !! And கொஞ்சமும் மொக்கைகளின்றி அலசல்கள் நகர்ந்தது தான் செம highlight ! So நமது சம்பிரதாய வழக்கப்படி - இதோ பிடியுங்கள் ஒரு உபபதிவினை !!
கிராபிக் நாவல்களின் கூடி வரும் தாக்கம் ; XIII போன்ற அழுத்தமான தொடர்கள் எட்டிப் பிடிக்கும் வெற்றிகள் என நமது நாட்கள் நகர்வதால் தான் - ரசனைகளில் ஒரு திருப்புமுனை நமக்குக் காத்துள்ளதா ? என்ற கேள்வியினை எழுப்பினேன். ஆறு மாதங்களுக்கொருமுறை நான் இதே பாட்டைப் பாடுவது போல் தோன்றலாம் தான் ; ஆனால் ரசனைசார் விஷயங்களில் எதுவும் சாஸ்வதமல்ல என்பதாலேயே எனது அவ்வப்போதைய வினவல்கள் ! இன்றைய KFC தலைகாட்டும்வரை எங்கள் மதுரையில் கோலோச்சியது கோணார் மெஸ் & குமார் மெஸ் ! IBACO -க்களும் ; Haagendaaz ; Movenpick ஐஸ்கிரீம்கள் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாய் கடைவிரிக்கும் வரையிலும் உள்ளூர் குச்சி ஐஸ் & சேமியா ஐஸ் தானே ராஜாக்கள் ? நாட்களும், நம்முன்னே உள்ள தேர்வுகளும் மாறிக் கொண்டே செல்லும் சமயம் - ரசனைகளும் மாறுவதை வாழ்க்கையின் ஒவ்வொரு இண்டு இடுக்கிலும் பார்க்க முடிகிறதென்பதால் தான் - "நான் சரியா தானே பேசிட்டிருக்கேன் ?" என்று அவ்வப்போது சங்கிலிமுருகன் ஆக நேரிடுகிறது !
ஆனால் "நாங்க சேமியா ஐஸும் சாப்பிடுவோம் ; KFC -யிலும் ரவுன்ட் கட்டி அடிப்போம் ; கோணார் கடையையும் விட்டு வைக்க மாட்டோம் ; 5 ஸ்டார் விடுதிகளையும் ஒரு கை பார்ப்போம் !" எனும் ரீதியில் பழசையும், புதுசையும் ஒருங்கே அதே வாஞ்சையோடு அரவணைத்து வரும் நீங்கள் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் ரகம் guys !! உங்களின் இந்த ரசனைகளின் பன்முகத்தன்மை எனக்குச் சொல்லாமல் சொல்லும் சேதி - இதோ ஒரு memes ரூபத்தில் இணையத்தில் கண்ணில் பட்டது !!!
RESPECT THE PAST - பழசை ஆராதிப்போம் !!
EMBRACE THE FUTURE - புதுசை அரவணைப்போம் !!
அசத்துங்கள் அசாத்தியர்களே !! Bye now !!
P.S : ஒரு பெரிய்ய பின்குறிப்பு : இது கண்ணில்பட்டவொரு memes மாத்திரமே ; நாம் சூப்பர்மேனையோ ; பேட்மேனையோ ; ஒண்டெர் வுமனையோ (இப்போதைக்காவது) வெளியிடவிருக்கிறோம் என்று நினைத்துவிட வேண்டாமே - ப்ளீஸ் !!
வந்தாச்சி.
ReplyDelete🕺🕺🕺🕺
Deleteமஹிஜி, 2 பதிவா எண்ணங்களை விட எண்களே தெரியுதே!
Delete2
ReplyDelete2
ReplyDelete3 rd ..............
ReplyDeleteHi
ReplyDeleteசந்தா catalogue தீபாவளி இதழ்களுடன் வந்தால் நலம்.
ReplyDeleteசிங்கத்தின் சிறுவயதில்
ReplyDeleteசிங்கத்தின் சிறு வயதில்
Deleteசிங்கத்தின் சிறு வயதில்...!!!
Deleteசிங்கத்தின் சிறுவயதில்!!!!!
Deleteசிங்கத்தின் சிறுவயதில்!!!!!!!
Deleteசிங்கத்தின் சிறுவயதில்!!!!!!!
Deleteசிங்கத்தின் சிறுவயதில்!!!!!!!
Deleteசிங்கத்தின் சிறுவயதில் !!!!!!! + 2
Deleteசிங்கம் ஹே சிறுவயசு ஹே வேணும்ஹே..!!
Deleteலயனின் ஸமால் ஏஜில் இஸ் வாண்டட்
Deleteசிங்கத்தின் சிறுவயதில்.....
Deleteசிங்கத்தின் சிறு வயதில்......!!!!!!!@@!!!!!!!!!
Deleteலயனின் ஸ்மால் ஏஜ்ஜில் .....:-)
Deleteபயமறியா சிங்கத்தின் சிறு வயதில்
Deleteஆனாலும் பிரானேஷ்பெயரிலும் ஒரு பின்னூட்டம் என்பதெல்லாம் டூ டூ மச் !! :-)
Delete//ஆனாலும் பிரானேஷ்பெயரிலும் ஒரு பின்னூட்டம் என்பதெல்லாம் டூ டூ மச் !! :-)//
Deleteசார், சங்கத்தோட எண்ணிக்கை கூடிகிட்டே போயிட்டு இருக்கு ... :)
தலைவர் (சங்க உறுப்பினர்களுக்கு) அனுப்பிய கடிதத்தில், அனைவரையும் கொஞ்ச நாட்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த சொல்லி இருப்பத்தால் ..... நாங்களும் அமைதியான முறையில் போராட்டத்தை ஆரம்பித்து உள்ளோம் சார்.
_____/\_____
ஆனாலும் பிரானேஷ்பெயரிலும் ஒரு பின்னூட்டம் என்பதெல்லாம் டூ டூ மச் !! :-)
Delete######
ஹாஹா....:-)))))))
சார்...நீங்க நீங்க தான் ..நான் நான் தான்....கரீட்டா கண்டுபிடிச்சுட்டீங்க..
எனது கமெண்டக்கு பிரேனேஷ் பதில் அளிக்க சார்..,ஐயான்னு கூப்ட்டு பேசினேன் சார்..கடைசில தான் தெரிஞ்சது நான் குண்டு பல்பு வாங்கியது ...:-(
ஆமாம் ஆமாம்
Deleteவேண்டும் வேண்டும்
சிங்கத்தின் சிறுவயதில்
ஒவ்வொரு மாதமும் :)
.
// ஆனாலும் பிரானேஷ்பெயரிலும் ஒரு பின்னூட்டம் என்பதெல்லாம் டூ டூ மச் !! :- //
DeleteMay I know who is this?
@ PfB
Deleteஎனது நண்பர். நமது சந்தாதாரர். போராட்டக்குழுவின் இளைய தலைமுறை உறுப்பினர். ப்ளூபெர்ரியின் மகன்!
நேக்கும் லயனின் ஸ்மால் ஏஜில் வேணும்.
DeleteThank you Vijay
DeleteHello my dear friends 😆😆😆😆🐴🐴🐴
ReplyDelete////ஆனால் "நாங்க சேமியா ஐஸும் சாப்பிடுவோம் ; KFC -யிலும் ரவுன்ட் கட்டி அடிப்போம் ; கோணார் கடையையும் விட்டு வைக்க மாட்டோம் ; 5 ஸ்டார் விடுதிகளையும் ஒரு கை பார்ப்போம் !" எனும் ரீதியில் பழசையும், புதுசையும் ஒருங்கே அதே வாஞ்சையோடு அரவணைத்து வரும் நீங்கள் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் ரகம் guys !!////
ReplyDeleteவீட்லயே ஒரு வேளைக்கு மசால் தோசை கிடைச்சதுன்னா, அடுத்தவேளைக்கு பழைய சோறுதானே கிடைக்குது?
ஆனா எது கிடைச்சாலுமே நாங்க தொந்தி ரொம்பாம முந்திக்கிட்டு எந்திரிக்கறது கிடையாதாக்கும்! ஹிஹி!
சரியா சொன்னீங்க செயலரே...நான் கூட பீட்சா சாப்பிட ஆரம்பிச்சேட்டேன் ...:-)
Deleteஆ.....உப பதிவு ஓரே நாளில்!. கலக்குவோம் காமிக்ஸ் காதலர்களே!!!!!!!
ReplyDeleteHi...
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDelete///ஒரு பெரிய்ய பின்குறிப்பு : இது கண்ணில்பட்டவொரு memes மாத்திரமே ; நாம் சூப்பர்மேனையோ ; பேட்மேனையோ ; ஒண்டெர் வுமனையோ (இப்போதைக்காவது) வெளியிடவிருக்கிறோம் என்று நினைத்துவிட வேண்டாமே - ப்ளீஸ் !! ///
ReplyDeleteஹாஹாஹா!!
😂😂😂😂😂😂
:-)
Delete18
ReplyDelete.
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteநானும் உள்ளேன் ஐயா
Deleteநடிகர்கள் மாறினாலும் கதாபாத்திரம்
ReplyDeleteஅதேதான்.PLEASE NOTE THIS POINT YOUR HONOR.
13 நம்பர கேட்டாலே ச்சும்மா அதிருதில்ல.
ReplyDelete///நாம் சூப்பர்மேனையோ ; பேட்மேனையோ ; ஒண்டெர் வுமனையோ (இப்போதைக்காவது) வெளியிடவிருக்கிறோம் என்று நினைத்துவிட வேண்டாமே - ப்ளீஸ்///
ReplyDeleteரொம்பவே அலாட்டா இருக்கீங்க சார்.
பழைய விசயம்லாம் ஞாபகம் வந்து போகுமில்லையா...!!!
Delete:-))
Delete/// And கொஞ்சமும் மொக்கைகளின்றி அலசல்கள் நகர்ந்தது தான் செம highlight! ///
ReplyDeleteஅதாகப்பட்டது குருநாயரும் நானும் கருத்து எதுவும் பதிவிடாமலேயே ன்னு தானே சொல்ல வர்ரீங்க சார்.!! :-)
////ஒரே நாளில் முச்சதம் போட்டுத் தாக்கி விட்டீர்கள் !! And கொஞ்சமும் மொக்கைகளின்றி அலசல்கள் நகர்ந்தது தான் செம highlight ! ////
Deleteபோன பதிவுல நான் அதிகமா கமெண்ட் போடாததென்னவோ உண்மைதான்! ஆனா அதுக்காக இப்படித்தான் போட்டுத் தாக்குவீங்களா, எடிட்டர் சார்?
இதை டைப் பண்ணி வச்சுக்கிட்டு போடலாமா வேண்டாமான்னு இம்புட்டு நேரமும் யோசிசுக்கிட்டிருந்தேன்! ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்கறது ஆச்சர்யம் தான்!
Deleteஆனா அப்பக்கூட நான் உங்கபேரை 'மொக்க' லிஸ்ட்டுல கொண்டுவரலைன்றதை நீங்க கவனிக்கணும்! ;)
///ஆனா அப்பக்கூட நான் உங்கபேரை 'மொக்க' லிஸ்ட்டுல கொண்டுவரலைன்றதை நீங்க கவனிக்கணும்! ;)///
Deleteநானில்லாம நீங்க வரலாம் - பொட்டி இல்லாம இஞ்சின் ஓடுறமாதிரி.
நீங்க இல்லாம நான் வரமுடியாது - இஞ்சின் இல்லாம பொட்டி ஓடாதமாதிரி..
எப்பூடி???? 😜😜😜
///எப்பூடி????///
Deleteதிருப்தியான, புத்திசாலித்தனமான பதில்! :)))))
ஹா..அப்படியெல்லாம் இருக்கவே வாய்ப்பில்லை. கார்ட்டூன் ரசிகரான ஆசிரியர் உங்கள் காமெடியை ரசிப்பவராகத்தான் இருப்பார்.
Delete:-)))
Deleteஈ வி யும் KOKயும் இல்லாத தளம்
Deleteநகையில்லா பெண்போல
( புன்னகை & பொன்நகை)
சுவையில்லா பிரியாணி போல.
இருவரும் நம் கண்கள்.
அதுக்காக வெங்காயம் உரிக்கக்கூடாது
என்றால் எப்படி.முன்னவர் பாட்டெழுதினால்
பின்னவர் குறைகண்டுபிடிப்பார்.அவனின்றி
அசையாது உலகு.இவர்களின்றி இயங்காது
நம் தளம்.
@ Friends : அட...நமது வுட் சிட்டியில் சிரிப்புப் போலீஸ் எத்தனை முக்கியமோ ; அத்தனை முக்கியமே நம் தளத்திற்கு இந்த ஷெரிப் & கிட ஆர்டின்னும் !
Deleteஆனாக்கா இதில் யார் டாக் புல் ? ; யார் கிட் ஆர்டின் ? என்று அடிச்சுக் கேட்டாலும் நான் சொல்லவே மாட்டேன் !!
ஆசிரியர் சார்...கரீட்டா சொன்னீங்க....ஆனா அந்த குள்ளன் யார்ன்னு மட்டும் சொல்லிருங்களேன் ...:-))
Deleteமாடஸ்டியின் பழைய கருப்பு வெள்ளை கதைகளை ஆராதிப்போம். மாடஸ்டியின் புதிய வண்ணக் கதைகளை அரவணைப்போம்
ReplyDelete+6
Delete+1
Delete@ Friends : கிட்டங்கிகளில் நிரந்தரத் துயில்பயிலா எதனையும் ஆராதிப்போமே ?
Delete//
ReplyDeleteP.S : ஒரு பெரிய்ய பின்குறிப்பு : இது கண்ணில்பட்டவொரு memes மாத்திரமே ; நாம் சூப்பர்மேனையோ ; பேட்மேனையோ ; ஒண்டெர் வுமனையோ (இப்போதைக்காவது) வெளியிடவிருக்கிறோம் என்று நினைத்துவிட வேண்டாமே - ப்ளீஸ் !! //
ஆசிரியர் அவர்களே,
நீங்கள் பெண்கள் கோட்டாகாவது ஒண்டர் உமனையாவது டிரை பண்ணலாமே???
ஹசன் : சார்..ஒரு ஓரமாய் புட் போர்டிலாவது தொங்கி கொண்டு வரட்டுமே என்று கேட்கக் கூடியளவிற்கு நாம் ஜாம்பவான்களுமல்ல ; ஒண்டர் உமன்நலிந்து போன்றதொரு கதாப்பாத்திரமுமல்ல !! DC குழுமத்தின் ஒரு மெகா ஸ்டார் அவர் !! ஒரு பக்காவான திட்டமிடலோ ; மிகக் கணிசமான slot களோ இல்லாது அத்தனை சுலபமாய் நெருங்கிடலெல்லாம் சாத்தியமல்ல சார் !
Deleteகிட் மாமாவுக்கு ஒர ஒண்டர் வுமன் பார்சல்
ReplyDelete///ஒர ஒண்டர் வுமன் ///
Deleteபுதூஷ்ஷா இருக்கு..!! :-))
கேரளா பாஷை மாமா
Delete///கேரளா பாஷை மாமா ///
Deleteஅங்கே மலையாளம்தானே பேசுவாங்க..! கி.கி.கி :-)
கேட்டா அடிக்க வர்ராங்க
ReplyDelete2018 லிஸ்ட்ல XIII Spinoff உண்டா சார்.? மார்த்தா அல்லது ஜானதன் ப்ளை ட்ரை பண்ணலாம் சார்
சூப்பர் பழனி.
Deleteநான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்.....
palanivel arumugam : தாண்டி இருப்பது பாதிக் கிணறே பழனிவேல்....அதற்குள் புதுசு புதுசாய்க் கனவுகளுக்குள் புகுந்திட வேண்டாமே ?
Deleteவிஜயன் சார்
Deleteடாக்டர் APJஅப்துல் கலாம் அவர்களே
சொல்லியிருக்கார்
கனவு காணுங்கள் என்று.
கனவு மெய்ப்பட வேண்டும்.
Present Sir
ReplyDeleteஉண்மையிலேயே பெரிய்ய பின் குறிப்பு தான் சார்....:-)
ReplyDeleteGood morning friends .
ReplyDelete2018 சந்தா கட்டப்போகும் நான் எடிட்டர் சாரிடம் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் இந்த ஆண்டு கர்னல் ஆமோஸ்சை சந்தாவில் இல்லாமல் வெளியிட்டது போல எந்த இதழையும் வெளியிட வேண்டாம்.
ReplyDeleteகாமிக்ஸுக்காக நான் புத்தக கடைகளில் ஏறி இறங்க விரும்பவில்லை.
ஆன்லைனும் எனக்கு அவதி தான்.
நீங்கள் வெளியிடும் புது,மறு மதிப்புகள் எல்லாம் எனக்கு வேண்டும்.
தொண்ணிற்றைந்து சதவீதம் உங்கள் செலக்ஷன் எனக்கு ஓகே.
சந்தாவில் நீங்கள் வெளியிடும் அனைத்து புத்தகங்களும் இருக்கவேண்டும் சார் ப்ளீஸ்.
சேலம் அமர்நாத் சார்....நீங்கள் சொல்வது சரிதான் ..ஆனால் பெரும்பாலும் சந்தா கட்டும் நண்பர்கள் அனைவரும் புத்தக காட்சிக்கு வருகை தரும் பொழுது அங்கு சந்தாவில் இல்லாத இதழும் ஒரு வெளியீடு எனில் நண்பர்களின் ஆவலும்,வருகையும் அதிகரிக்குமே...
Deleteபாருங்க ....சேலத்தில் இருக்கும் நண்பர்கள் அனைவரையும் அதிகம் அறிந்து விட்டேன்.உங்களை இன்னும் அறிய முடியவில்லை.இப்படி வெளியீடு வந்தாலாவது நீங்கள் புத்தக காட்சிக்கு வருகை தருவீர்கள் தானே..உங்களையும் நண்பர்கள் அறிந்து கொள்வோமே...:-)
பெரும்பாலும் வெளியூர் பயணங்களே எனது நேரத்தை தின்று விடுவதால் சந்திக்கும் வாய்ப்புக்கள் குறைந்து போகின்றன.
Deleteஅன்புக்கு நன்றி தலைவரே அவசியம் விழாக்களில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
(சேலத்தில் நீங்கள் அதிகம் இல்லாத்த்தால் இன்று முதல் நீங்கள் சேலம் அமர்நாத் அல்ல வெறும் அமர்நாத் தான் என்று ஈரோடு விஜய் கூப்பிடுவாரோ என்று பயம்ம்மா இருக்கு.)
அப்புறம் "சார்" வேண்டாமே.
(சேலத்தில் நீங்கள் அதிகம் இல்லாத்த்தால் இன்று முதல் நீங்கள் சேலம் அமர்நாத் அல்ல வெறும் அமர்நாத் தான் என்று ஈரோடு விஜய் கூப்பிடுவாரோ என்று பயம்ம்மா இருக்கு.)
Delete####
:-)))
அப்புறம் "சார்" வேண்டாமே..
க்கும்....நீங்க வேற நானெல்லாம் நாலாப்பு படிக்குற ப்ரெண்ட்யே சார்ன்னு தான் கூப்பிடுவேன் ..:-(
////
Delete(சேலத்தில் நீங்கள் அதிகம் இல்லாத்த்தால் இன்று முதல் நீங்கள் சேலம் அமர்நாத் அல்ல வெறும் அமர்நாத் தான் என்று ஈரோடு விஜய் கூப்பிடுவாரோ என்று பயம்ம்மா இருக்கு.)////
அதான் அமரக்கூட நேரமில்லாமல் சுத்திக்கிட்டே இருக்கீங்களே... அப்புறம் எதற்கு 'அமர்'நாத் ன்றேன்? வெறும் 'நாத்' மட்டும்தான்! ;)
///அதான் அமரக்கூட நேரமில்லாமல் சுத்திக்கிட்டே இருக்கீங்களே... அப்புறம் எதற்கு 'அமர்'நாத் ன்றேன்? வெறும் 'நாத்' மட்டும்தான்! ;)///
Deleteஅதை அமர்NOT ன்னு படிக்கணும் குருநாயரே..! சரியாத்தான் இருக்கு..! :-)
'சேலத்தில் அமர முடியாதவர்'னு பொருள்படுது! ஆங், அப்பச் சரிதான்! :P
Deleteநண்பர்களே
Deleteநன்றி நன்றி நன்றி
(என் பெயரில் இவ்ளோ அர்த்தங்களை எனக்கு தெரியப்படுத்தி விட்டீர்கள்)
ஸ்மைலிக்கள் ஒரு நூறு.. :-))
நாங்க சேமியா ஐஸும் சாப்பிடுவோம் ; KFC -யிலும் ரவுன்ட் கட்டி அடிப்போம் ; கோணார் கடையையும் விட்டு வைக்க மாட்டோம் ; 5 ஸ்டார் விடுதிகளையும் ஒரு கை பார்ப்போம் !" எனும் ரீதியில் பழசையும், புதுசையும் ஒருங்கே அதே வாஞ்சையோடு அரவணைத்து வரும் நீங்கள் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் ரகம் guys !!
ReplyDelete########
இதற்கு காரணம் எதை பரிமாறினாலும் எங்களின் சுவையை அறிந்து நீங்கள் பரிமாறுவது தான் சார்...
சேந்தம்பட்டியின் வெளிநாட்டின் கிளை கழக தலைவர் மகேந்திரன் பரமசிவம் என்கிற மகிஜீ அவர்களுக்கு ..
ReplyDeleteஇனிய ...இனிய ...இனிய ...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் MP அவர்களே! 💐💐💐💐🍰🍰🍰🍰🎂🍻🍧🍨🍦🍡🍭🍬🍫
Deleteமஹேந்திர அமெரிக்க பாகுபலிக்கு மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்..!!
Deleteமஹியின் அன்புக்கு அமெரிக்காவே ஈடாகாது.. இன்று போல் வாழ்க டியர் மஹேந்திரன் ஜி..!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
நண்பர் மகேந்திரன் பரமசிவம்
Deleteஅவர்களுக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.அப்படியே ட்ரம்பை
கேட்டதாக சொல்லவும்.
🍫🍫🍫🍫🍰🍰🍰🍰🍰🍭🍭🍭
Delete🍨🍨🍨🍨🍦🍦🍦🍦🍦
அன்பின் உறைவிடம்;
பண்பின் பாசறை;
பாசத்தின் பீடம்;
நடமாடும் நேசம்;
நடுநிலையில் நாயகன்;
பழகுவதில் எளிமையானவர்;
தமிழக ரேஞ்சர் இன் ஆஸ்டின்;
ஆருயிர் நண்பரும், தளத்தின் உயர்ப்புகளில் ஒருவருமான நேசமிகு நண்பர் மஹி ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...🎂🎂🎂🎂🎁🎁🎁🎁🎉🎉🎉🎉🎉🎄🎄🎄🎄🎄🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎆🎆🎆🎆🎆🎆🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹💖💖💖💖💖💖
🍫🍫🍫🍫🍰🍰🍰🍰🍰🍭🍭🍭
Delete🍨🍨🍨🍨🍦🍦🍦🍦🍦
அன்பின் உறைவிடம்;
பண்பின் பாசறை;
பாசத்தின் பீடம்;
நடமாடும் நேசம்;
நடுநிலையில் நாயகன்;
பழகுவதில் எளிமையானவர்;
தமிழக ரேஞ்சர் இன் ஆஸ்டின்;
ஆருயிர் நண்பரும், தளத்தின் உயர்ப்புகளில் ஒருவருமான நேசமிகு நண்பர் மஹி ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...🎂🎂🎂🎂🎁🎁🎁🎁🎉🎉🎉🎉🎉🎄🎄🎄🎄🎄🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎆🎆🎆🎆🎆🎆🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹💖💖💖💖💖💖
மகேந்திரன் பரமசிவம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
Delete🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹💖💖
Deleteஅன்பின் உறைவிடம்;
பண்பின் பாசறை;
பாசத்தின் பீடம்;
நடமாடும் நேசம்;
நடுநிலையில் நாயகன்;
பழகுவதில் எளிமையானவர்;
தமிழக ரேஞ்சர் இன் ஆஸ்டின்;
ஆருயிர் நண்பரும், தளத்தின் உயர்ப்புகளில் ஒருவருமான நேசமிகு நண்பர் மஹி ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹💖💖
🎁🎁🎁🎁
🎁🎁🎁
🎁🎁
🎁
நட்பூஸ்...அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. எங்கெங்கெயோ இருந்த நம்மை ஒன்று சேர்தத ஆசிரியருக்கும் நன்றி. சின்ன கரெக்ஷன் என்னோட பிறந்த நாள் போன புதன் கிழமை. செப்டம்பர் 13. 🙏🙏🙏🙏🙏🙏🙏
Deleteபரவாயில்லை
Deleteகடந்து சென்ற Sep13க்கும்
வரவிருக்கும் பல நூறு Sep13களுக்கும்
எங்கள் நிரந்தர பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
///சின்ன கரெக்ஷன் என்னோட பிறந்த நாள் போன புதன் கிழமை. செப்டம்பர் 13. 🙏🙏🙏🙏🙏🙏🙏 ///
Deleteஇந்த பத்தொன்பதாவது சித்தர் பண்ற வேலையால.. . 😭😭😭😭😭😭
வேறுவழி இல்லை மகிஜீ ...அடுத்த வருட பிறந்த நாளுக்கான வாழ்த்தை தான் கொஞ்சம் முன்னாடியே சொல்லிட்டோம்ன்னு நினைச்சுகிட்டு அசடு வழியறோம் ..:-)
Deleteநண்பர் மகேந்திரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
Delete@ MP
Delete////சின்ன கரெக்ஷன் என்னோட பிறந்த நாள் போன புதன் கிழமை. செப்டம்பர் 13. ////
ஹிஹி! இதெல்லாம் எங்களுக்கு முன்னாடியே தெரியுமாக்கும்! வாழ்த்தை லேட்டாச் சொன்னா உங்களோட ரியாக்ஷன் எப்படியிருக்கும்னு நாங்கள்லாம் சேர்ந்து டெஸ்ட்டுப் பண்ணிப் பார்த்தோம். டெஸ்டுல நீங்க பாஸாகி ஒரு நல்ல அமெரிக்க குடும்பஸ்தன்னு புரூஃப் பண்ணிட்டீங்க. ட்ரம்ப்கிட்டே சிபாரிசு பண்ணி இன்னிக்கே உங்களுக்கு கிரீன் கார்டும், பால் கார்டும் அனுப்பச் சொல்றோம்!
உங்க பிறந்தநாள் பரிசா 'சிங்கத்தின் சிறு வயதில்' தொடரை அடுத்தமாச புத்தகங்களில் ப்ரின்ட்டு பண்ணி அனுப்பவும் எடிட்டர் முடிவு பண்ணிட்டாராம்!!!
ஹவ் லக்கிங்க யூ ஆர்ங்க!!!
🤣🤣🤣. நல்லா டெஸ்ட் பண்ணிணிங்க. எனக்கு க்ரீன் கார்டு தேவையில்லை. சிங்கத்தின் சிறு வயதில் கிடைச்சா போதும். போரட்டத்தை வலுப்படுத்துங்க.
Deleteநண்பர் மகேந்திரன் பரமசிவம்
ReplyDeleteஅவர்களுக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.
🙏🙏🙏🙏
Deleteமகேந்திர(பாகுபலி)ன் பரமசிவம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்வின் எல்லா நாட்களுமே காமிக்ஸ் படித்து சந்தோஷமாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
ReplyDelete🙏🙏🙏🙏
Deleteஅன்பு நண்பர் மஹி ஜி அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.
ReplyDelete😍😍😍😍😍🎂🎂🎂🎁🎁🎁
// நண்பர்களே,
ReplyDeleteவணக்கம். ஒரே நாளில் முச்சதம் போட்டுத் தாக்கி விட்டீர்கள் !! And கொஞ்சமும் மொக்கைகளின்றி அலசல்கள் நகர்ந்தது தான் செம highlight ! //
காரண கர்த்தாவே நீங்கள் தானே விஜயன் சார்
குரு எவ்வழியோ சிஷ்யர்கள் அவ்வழியே
உங்களுடைய உற்சாகம் எங்களையும் தொற்றிக்கொண்டது அவ்வளவேதான்
.
// நண்பர்களே,
ReplyDeleteவணக்கம். ஒரே நாளில் முச்சதம் போட்டுத் தாக்கி விட்டீர்கள் !! And கொஞ்சமும் மொக்கைகளின்றி அலசல்கள் நகர்ந்தது தான் செம highlight ! //
உங்கள் பதிவுகளின் சப்ஜெக்ட் தான் இதை தீர்மானிக்கிறது சார்...
10செப்டம்பர் பதிவான "காமிக்ஸ் கொத்தவால் சாவடி"- பதிவின் சப்ஜெக்ட் அப்படி... குடல் குப்பி எல்லாம் வெளியே வந்து கிடக்கும் மனிதன், அருவறுக்கத்தக்கு சல் ஒழுகும் புகைப்படங்கள்-- போட்டோவே அப்டீனா கதை முழுவதும் இந்த உருவங்களை எப்படி சகிப்பது என்ற பயம் தான் பதிவை விட்டே தலை தெறிக்க ஓட வைத்தது....
இந்த ஞாயிறு பதிவு இளமை காலத்தை வெளியே கொண்டு வரும் ஸ்பைடர், டெக்ஸின் இளமை கால தொடரின் முதல் இரு பாகங்கள் என பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்க்கும் விசயங்கள்; அதகள வரவேற்புக்கு இவையே காரணம்; ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உணர்த்தும் சமிக்ஞை இவைகள் தான் சார்....
பொக்கிசமான ஹீரோஸ் வளையவரும் பழையனவும், காமிக்ஸ் படிக்க காரணமான கதைகளையும் பற்றிய பதிவெனில் நாற்சதம் , பஞ்ச சதம் எல்லாம் நண்பர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல....!!!
100th
ReplyDeleteமுதல் செஞ்சுரி.வாழ்த்துக்கள் நண்பர்
ReplyDeleteதிருச்செல்வம் பிராபாநாத் அவர்களே.
நண்பர் மகேந்திரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...😊🎈
ReplyDeleteஎடிட்டா் சாா்!
ReplyDeleteகனவு மெய்ப்பட வேண்டும் 5ஆம் பக்கம்
Tex "ஒரு தலைவன்... ஒரு சகாப்தம்!"
சந்தா A ன்னு போட்டிருக்கீங்க!!
ஆனா அது சந்தா B தானே!!
அதே புக்கில் பக்கம் 100ல் சந்தா B ன்னு போட்டிருக்கீங்களே ???
வாழ்த்துகள் மிதுன் அவர்களே! யாருக்குமே அறிவிக்காம(!) எடிட்டர் நடத்திய 'பெஸ்ட் பிழை திருத்தகர்' போட்டியில நீங்க ஜெயிச்சுட்டீங்க! ;)
Deleteஇ.ப-வின் 18 பாகங்களும் உடனடியாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். சட்டுபுட்டுனு பிழை திருத்தி திருப்பி அனுப்பி வச்சுடுங்க. :)
நன்றி நன்றி!!
Delete///இ.ப-வின் 18 பாகங்களும் ///
Deleteவண்ணப் பதிப்பா குடுத்தீங்கன்னா வாங்கி பத்தரமா வெச்சுக்குவேன்!!
வாழத்துகளுக்கு நன்றி அன்பு நட்பூஸ்.
ReplyDeleteDr.Selvam Abirami: Kindly see Facebook inbox message - Thanks - Raghavan
ReplyDeleteSorry ragavan and done!
Delete110
ReplyDeleteஇது போல இதழில்லை என சொல்லல..ிதப் போல கதை இனி வராது ..xiiiன்னா சும்மாவா...பில்லிங்ற சிறையில் சுட்டுக் கொல்லப்படும் கிறுக்கனுக்கு கூட கிளைக்கதை கொண்ட இதிகாசம் விரைவில் வர சீக்கிரம் பணம் செலுத்துங்கள் நண்பர்களே.....
ReplyDeleteவிழி பிதுங்க வைத்து கொண்டிருக்கும் பணிச்சுமைகளின் மத்தியில்
ReplyDeleteகடற்குதிரையும் எண்ண குதிரையும் ......................
நக்கீர பார்வை .....
அ. தலைப்பு சரியா ???
கடற்குதிரை முத்திரை .....சரி ?
கடற்குதிரையின் முத்திரை ...தவறு ????
( seahorse signet ….right
Signet of seahorse …wrong )
Signet of ‘’ free mexico ‘’ or signet of lady Manuela is seahorse ….
ஆ.பக்கம் இருபத்து நான்கில் அப்போதுதான் டெக்ஸ் & கோ ஹோட்டல் அறையுன்னுள்ளே நுழைந்து இருக்கிறார்கள் ..
பக்கம் 25-ல் டாமும் எல்லிசும் டைனமைட்டை பொருத்தி விட்டு வெளியே வரும்போது வரவேற்பாளர் அவர்களை பார்த்து கேட்கும் கேள்வி சரிதானா ?
இ.வெடி விபத்து நடந்தபின்னும் டாம் ,எல்லிஸ் இருவரும் சாண்டபே நகரில் இருக்க முனைவது அடிப்படை லாஜிக் –க்கு முரணானது அல்லவா ??/
ஈ.அதைவிட முரண் இருவரும் கிராபோர்ட் –ஆல் விடுவிக்கபட்டபின் லேடி மானுயுலா பண்ணை வீட்டிற்கு விரைவது.
உ. பக்கம் 71-ல் கிட் கத்தியை கொண்டு இரும்பு பூட்டினை திறப்பது சாத்தியமா ???
கதை அட்டகாசமாகத்தான் உள்ளது ...
மறுபடியும் ஒரு கதையில்டெக்ஸ் எதிரியின் மதியூகத்தினால் வீழ்த்தப்படுவது (கதையில் பலமுறை டெக்ஸ் மண் கவ்வ நேரிடுகிறது ) வித்தியாசமாகத்தான் உள்ளது ...டெக்ஸ்-ன் ஆரம்ப கால கதை என்பதாலோ என்னவோ ??
கிரேக்க புராணங்களில் குறிப்பிடப்படுவது போல் –கடல் அரசன் போசிடோனின் வேலையாட்கள் ,தூதுவர்கள் என செயல்படுபவை கடல் குதிரைகள் – இங்கும் லேடி மானுயுலாவின் வேலையாட்கள் கடற்குதிரைகளாக செயல்படுவது சிறப்பு ...
போசிடோன் ஆதெனாவிடம் ஏதன்ஸ் நகரை வெல்லும் போட்டியில் தோல்வியுற்றது போலவே லேடி மானுயுலா –வின் சுதந்திர மெக்ஸிகோ கனவும் கானலாய் போனது ...
கடற்குதிரைகளில் ஆண் குதிரையே கருவை சுமந்து அவற்றை பெரிதாக்கி வெளிவிடும் ..ஒரு பேச்சுக்கு லேடி மானுயுலாவை பெண் கடற்குதிரை என கொண்டால் ‘’ சுதந்திர மெக்ஸிகோ ‘’ என்னும் கருவை பிற ஆண்கடற்குதிரைகளை சுமந்து திரிய வைப்பதாக கருத முடியும் ..
கடற்குதிரையின் விலங்கியல் பெயர் ஹிப்போகாம்பாஸ் (hippocampus).
மனித மூளையில் ஹிப்போகாம்பாஸ் என்ற பகுதி உண்டு .லிம்பிக் சிஸ்டத்தின் முக்கிய பகுதியான இது நினைவுகளுக்கும் ,உணர்வுகளுக்குமான பகுதி .
சுதந்திர மெக்ஸிகோ வை தனது நினைவாகவும் ,உணர்வாகவும் கொண்டு வாழும் லேடி மானுயுலாவை முக்கிய கதாபாத்திரமாக கொண்ட இக்கதைக்கு கடற்குதிரையின் முத்திரை என்ற பெயர்தான் எவ்வளவு பொருத்தமானது ???
////கடற்குதிரையின் விலங்கியல் பெயர் ஹிப்போகாம்பாஸ் (hippocampus).
Deleteமனித மூளையில் ஹிப்போகாம்பாஸ் என்ற பகுதி உண்டு .லிம்பிக் சிஸ்டத்தின் முக்கிய பகுதியான இது நினைவுகளுக்கும் ,உணர்வுகளுக்குமான பகுதி .
சுதந்திர மெக்ஸிகோ வை தனது நினைவாகவும் ,உணர்வாகவும் கொண்டு வாழும் லேடி மானுயுலாவை முக்கிய கதாபாத்திரமாக கொண்ட இக்கதைக்கு கடற்குதிரையின் முத்திரை என்ற பெயர்தான் எவ்வளவு பொருத்தமானது ???
////
செம்ம!!!
(எப்படியோ வளைச்சுப் பிடிச்சு - ஒவ்வொருதபாவும் தலைப்புக்கு சரியான காரணத்தைக் கொண்டுவந்திடறாங்களே... )
நடமாடும் பல்கலைக்கழகம் செனா அனா
Deleteஅவர்களுக்கும்
நண்பர்களுக்கும் காலை வணக்கம்.
பேக் டூ ஃபார்ம் பொருளர் ஜி, செம...👌👌👌
Deleteஅபாரமான காரணத்துடன் பெயர் விளக்கம் பிரமாதம்...👏👏👏
விழி பிதுங்கும் பணிச்சுமை என ஓப்பனாக நீங்கள் கூறி விட்டதால், கடற்குதிரையில் எழுந்துள்ள சந்தேகங்களை தள்ளி வைத்து விடலாம் ஜி. நீங்கள் நார்மலான பணிக்கு திரும்பி பின் அவற்றை நிவர்த்தி செய்து கொள்கிறேன், தங்களிடம்... டேக் கேர் ஜி..
அருமையான விளக்கம் டாக்டர் ஜீ.
Delete//கடற்குதிரையில் எழுந்துள்ள சந்தேகங்களை தள்ளி வைத்து விடலாம்//
Deleteஏன் தள்ளி வைப்பானேன் டெக்ஸ் ??? @ பதிவிடுங்கள் ..ஒருவர் சிந்திக்காத கோணத்தில் இருந்து மற்றொருவர் சிந்தனை செய்வார் என்பதற்கான சமீபத்திய மிக சிறந்த உதாரணம் அன்டர்டேக்கர் விவாதங்கள் என்பது அனைவரும் அறிந்ததே ...
காமிக்ஸ் குறித்து கலந்துரையாடுவது விட இன்பம் அளிப்பது என்னவாயிருக்க கூடும் இத்தளத்தில் ...????
கேள்விகளை அள்ளி வீசுங்கள் ...பலரும் பங்கு பெறட்டும் ..
இதோ நானே துவங்கி வைக்கிறேன் ...
பக்கம் 5-ல் ரேஞ்சரால் சுடப்பட்டு விழுந்து கிடக்கும் ராக்கியின் உடலில் இரு துளைகள் இருக்க கூடும் என டெக்ஸ் சொல்வதும் அதற்கான காரணம் என அவர் அடுத்த பக்கத்தில் கூறுவதும் ஏற்புடையதா ??? இரு தோட்டாக்களும் ராக்கியின் உடலை துளைத்து இருக்க வேண்டிய கட்டாயம்தான் என்ன ????
ஹூம்... 'இருபது தேதியாகிடுச்சு.. இதுக்குமே மேல யாரு பெருஷ்சா ஆராய்ச்சி பண்ணிடப்போறாங்க'ன்னுட்டு நேத்திக்குத்தான் ஆபீஸ் பேக்'லேர்ந்து எல்லாப் புத்தகங்களையும் எடுத்து வீட்டுல வச்சேன். மறுபடியும் ஆபீஸ் பேக்கா?
Deleteஎடிட்டர் சார், நம்ம வெளியீடுகள் எல்லாத்துக்குமே ஹார்டு பைன்டு போடறதைப்பத்தி என்ன நினைக்கறீங்க?
@ ஈவி ..ஹி ..ஹி ..நேற்று முன்தினம்தான் கடற்குதிரை படித்து முடித்தேன் ...தோர்கல் இனி படிக்க முயற்சிக்க வேண்டும் ..:-)
Delete@ டெக்ஸ் ..டெக்ஸ் கதைகளில் கதாசிரியர்கள் ஏற்படுத்தும் கால முரண் இக்கதையில் தெளிவாகிறது ..
அமெரிக்க உள்நாட்டு போர் ஏற்பட சிறிதுகாலம் முன்பு கதை நடப்பது போல் கதைவரைவு உள்ளது ..
ஆனால் கிட் இளைஞனாக கதையில் வலம் வருகிறார் ...இந்த முரண் குறித்து நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறீர்கள் ...
////.தோர்கல் இனி படிக்க முயற்சிக்க வேண்டும்////
Deleteபுரிஞ்சுக்கிட்டேன் செனாஅனா ஜி! அதாவது, தோர்கல் புக்கையும் நான் பேக்'ல எடுத்து போட்டுக்கிடணும், அதானே? போட்டாச்சி.. போட்டாச்சி!
///@ டெக்ஸ் ..டெக்ஸ் கதைகளில் கதாசிரியர்கள் ஏற்படுத்தும் கால முரண் இக்கதையில் தெளிவாகிறது ..
Deleteஅமெரிக்க உள்நாட்டு போர் ஏற்பட சிறிதுகாலம் முன்பு கதை நடப்பது போல் கதைவரைவு உள்ளது ..
ஆனால் கிட் இளைஞனாக கதையில் வலம் வருகிறார் ...இந்த முரண் குறித்து நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறீர்கள் ... ///---ஆம் ஜி.
என்னுடைய பழைய சந்தேகத்திற்கு மீண்டும் அடிக்கல் நாட்டி விட்டது இந்த கதை...
1861ல் தொடங்கும் உள்நாட்டு யுத்தத்திற்கு ஒரு ஆண்டு முன்பு என இந்த கதையின் கால கட்டத்தை வைத்து கொண்டாலும், 1861ல் கிட்டுக்கு வயது 15அல்லது 16, எனவே டெக்ஸ்க்கு மினிமம் 35... கார்சனோடு அதுதான் முதல் சாகசம்...
கதை போக்கில் மெச்சூரிடி இல்லை...
இன்னும் பல்வேறு காரணிகளை வைத்து பார்க்கும் போது டெக்ஸின் வயது, இளமைப் பருவம்- இதைப்பற்றி நிறைய ஆராய்ச்சி செய்யனும்... பிறகே ஆண்டுகளையும், சம்பவங்களையும், அந்த சமயத்தில் அவர்கள் ஈடுபட்ட போர், உள்நாட்டு புரட்சி போன்றவற்றோடு தொடர்பு படுத்தி ஒரு முடிவுக்கு வர இயலும் ஜி...
///பக்கம் 5-ல் ரேஞ்சரால் சுடப்பட்டு விழுந்து கிடக்கும் ராக்கியின் உடலில் இரு துளைகள் இருக்க கூடும் என டெக்ஸ் சொல்வதும் அதற்கான காரணம் என அவர் அடுத்த பக்கத்தில் கூறுவதும் ஏற்புடையதா ??? இரு தோட்டாக்களும் ராக்கியின் உடலை துளைத்து இருக்க வேண்டிய கட்டாயம்தான் என்ன ????///--- இது சுவாரசியமான கேள்வி ஜி...
Deleteடெக்ஸ் விழுந்து கிடக்கும் ரேஞ்சரின் யூனிபார்மை பார்த்து விட்டு, கிடப்பது ரேஞ்சர் என முடிவு செய்கிறார். துப்பாக்கியில் இரு தோட்டாக்கள் இல்லை...(இதை படத்தில் 6ம் பக்கம் காட்டுகிறார்கள்)
முன்னே அந்த கொலையாளி விழுந்து கிடப்பது சுமார் 40தப்படிகள் (நன்றி:அம்ப்ரியா பிரபு) தொலைவில்...
ரேஞ்சர்களுக்கு அளிக்கப்படும் அடிப்படை பயிற்சிகள் அனைத்தும் டெக்ஸ் அறிவார். இவ்வளவு அருகே விழுந்து கிடக்கும் ரேஞ்சர், என்னதான் காயம் பட்டு இருந்தாலும் குறி பிசக வாய்ப்பு இல்லை- என்பதே டெக்ஸின் தீர்க்கமான முடிவு. எனவே இரண்டு தோட்டாக்களும் சிறிது தொலைவு சென்ற அந்த கொலையாளியின் உடலை துளைத்து இருக்கனும் என்ற கூற்று சரியே... விளக்கத்தை நாமும் ஏற்று கொள்ளலாம் ஜி...
@ TVR
Delete////ரேஞ்சர்களுக்கு அளிக்கப்படும் அடிப்படை பயிற்சிகள் அனைத்தும் டெக்ஸ் அறிவார். இவ்வளவு அருகே விழுந்து கிடக்கும் ரேஞ்சர், என்னதான் காயம் பட்டு இருந்தாலும் குறி பிசக வாய்ப்பு இல்லை- என்பதே டெக்ஸின் தீர்க்கமான முடிவு. எனவே இரண்டு தோட்டாக்களும் சிறிது தொலைவு சென்ற அந்த கொலையாளியின் உடலை துளைத்து இருக்கனும் என்ற கூற்று சரியே... ///
செம்ம விளக்கம்!!!
சேலம் தல...கலக்கல் பதில்கள்.
Deleteமாத்தியோசி-184
ReplyDeleteசூப்பா் ஜி!!
Deleteமாத்தியோசி-185
Deleteமாத்தியோசி-186
Deleteபுதையல் பார்சல் தாமதமாக என்றாலும் வந்து வந்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டது. கூடவே கர்னல் அமோஷின் Soin off உம்+ Early Bird பாட்ஜும் வந்து கிடைத்து விட்டன. மிக்க நன்றிகள்.
ReplyDelete////கூடவே கர்னல் அமோஷின் Soin off உம்+ Early Bird பாட்ஜும் வந்து கிடைத்து விட்டன.////
Deleteஒன்றை மாசங்களுக்கப்புறம் கிடைச்சா அது 'Early bird'ங்களா திருச்செல்வம் சார்? :D
Early Bird பேட்ச் இனை பிந்தி என்றாலும், வந்து கிடைத்ததே ஈ வீ என்று சந்தோசப்பட்டு கொள்ள வேண்டியதுதான் .
Deleteபொருளர் ஜி@
ReplyDeleteநக்கீர பார்வை .....(சிறு விளக்கம், தவறுகள் இருந்தால் மன்னிச்சு, திருத்தவும் நண்பர்களே)
அ. தலைப்பு சரியா ???
கடற்குதிரை முத்திரை .....சரி ?
கடற்குதிரையின் முத்திரை ...தவறு ????
"கடல் குதிரையின் முத்திரை"- என்றே பிரிண்ட் செய்யப்பட்டு உள்ளது. தமிழ் இலக்கணப்படி "கடற்குதிரை முத்திரை" சரியானது, அதற்கே என் வாக்கு...
ஆ.பக்கம் இருபத்து நான்கில்
அப்போதுதான் டெக்ஸ் & கோ
ஹோட்டல் அறையுன்னுள்ளே நுழைந்து
இருக்கிறார்கள் ..
பக்கம் 25-ல் டாமும் எல்லிசும்
டைனமைட்டை பொருத்தி விட்டு
வெளியே வரும்போது வரவேற்பாளர்
அவர்களை பார்த்து கேட்கும் கேள்வி
சரிதானா ?
சரிதான் ஜி. பிற்பாடு டெக்ஸ் வரவேற்பாளரை விசாரிக்கும் போது, (27வது பக்கத்தில்)
டெக்ஸ் கோஷ்டி ரேஞ்சர்களின் அலுவலகம் சென்றபிறகு வந்த இரு போக்கிரிகளும், டெக்ஸ் கோஷ்டியை தங்களது நண்பர்கள் என சொல்லி விசாரித்து உள்ளனர். அதனாலேயே , வெடியை வைத்து விட்டு வெளிவரும் போக்கிரிகளிடம், "ஹே..உங்கள் நண்பர்கள் வரும் வரை நீங்கள் காத்திருக்கப் போவது இல்லையா?"- என வரவேற்பாளர் கேட்கிறார்.
இ.வெடி விபத்து நடந்தபின்னும்
டாம் ,எல்லிஸ் இருவரும் சாண்டபே
நகரில் இருக்க முனைவது அடிப்படை
லாஜிக் –க்கு முரணானது
அல்லவா ??
டெக்ஸ் கோஷ்டி வெடி விபத்தில் பலியாகிப்போகும் என்ற ஓவர் கான்ஃபிடனஸ் தான் காரணம். அதிர்ஷ்டவசமாக அந்த பீரங்கி வண்டியை பார்க்க சாளரக்கதவு அருகே வர்லனா மூவரும் பலியாகத்தானே வேணும்.
ஈ.அதைவிட முரண் இருவரும் கிராபோர்ட்
–ஆல் விடுவிக்கபட்டபின் லேடி
மானுயுலா பண்ணை வீட்டிற்கு
விரைவது.
இந்த சாகசம் 1961ல் வெளியானது; என்னுடைய கணிப்பு அதற்கும் முன்பே இது ஸ்ட்ரிப் பார்மேட்ல இது உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்; 1948முதல் 1958வரை பெரும்பாலும் ஸ்ட்ரிப் பார்மேட்ல தான் வந்து இருக்கு, 1958அக்டோபர் 1ல் இருந்து தான் இப்போது வெளிவரும் மாதாந்திர பார்மேட்ல தொடர்ச்சியாக வெளிவருகிறது(போனெல்லி தளத்தில் உள்ள தகவல்). துவக்க கால சாகசம் என்பதால் கதை நகர்த்தலில், ஆரம்ப கட்டத்தில் இருந்த கால கட்டம் என்பதை கணக்கில் எடுத்து கொண்டால் இது போன்ற முரண்களுக்கு வாய்ப்பு இருக்கவே செய்கிறது.
உ. பக்கம் 71-ல் கிட் கத்தியை
கொண்டு இரும்பு பூட்டினை
திறப்பது சாத்தியமா ???
கதை நடக்கும் காலகட்டமான 1860ல் பூட்டுக்களின் அமைப்பு அப்படி ஒன்றும் மேம்பட்ட டெக்னிக்கலில் இருந்து இருக்க முடியாது. திருகாணிகள் கத்தி முனையை கொண்டே கழட்டும் படியான தரத்தில் மட்டுமே இருந்திருக்கலாம் என்பது என் யூகம் ஜி.
செம்ம... டெக்ஸ் கதைக்கு இது போன்ற விளக்கம்.இதை வேற லெவலுக்கு கொண்டு செல்கிறது. வெல்டன்.👏👏👏👏👏👏
ReplyDeleteஅக்டோபர் இதழ்களோடு 2018க்கான கேட்லாக் கிடைக்குமா சார்?
ReplyDeleteகேட்லாக் கிடைத்தால் இது தான் எங்களுக்கு உண்மையான தீபாவளியாக இ௫க்கும்!!!.
சென்ற தீபாவளிக்கு" சர்வமும் நானே"மெகா இதழ் எங்களுக்கு மெகா வி௫ந்து படைத்தது.இந்த வ௫டம் ஓரே ஒல்லிமயமாக இ௫க்கிறது.என்னமோ போடா மாதவா ஒண்ணும் சரியில்ல.!
ReplyDelete///Top of the list - லக்கி லூக் தான் ! And டெக்ஸ் வில்லர் இரண்டாமிடத்தில்///
ReplyDeleteடெக்ஸ் டெக்ஸ்ன்னு கூவரவீங்கெல்லாம் பாருங்கப்பா!!
லக்கி தான் first
மத்ததெல்லாம் next
காமிக்ஸ்னாவே காா்ட்டூன்!!
Deleteகாா்ட்டூன்னாவே லக்கி லூக்!!
The man who shoots faster than his own shadow!!
Delete🔫🔫🔫🔫🔫
வரப்போகும் லக்கி தனிச்சந்தாவுக்கு
Deleteமுன்கூட்டிய வாழ்த்துக்கள்...
எனக்கென்னவோ டெக்ஸுன்னு நினைச்சுத்தான் லக்கிய வாங்கிப்புடறாங்களோன்னு தோணுது! :P
Deleteகாமிக்ஸ் என்றாலே லயன்...
Deleteலயன் என்றாலே டெக்ஸ் ...
டெக்ஸ் என்றாலே லயன்...
வாழ்க்கை ஒரு அல்ல ஒரே வட்டம் மட்டுமே....:-)
///
Deleteகாமிக்ஸ் என்றாலே லயன்...
லயன் என்றாலே டெக்ஸ் ...
டெக்ஸ் என்றாலே லயன்...
////
நல்லா ஸ்பேஸ் விட்டு அழகா சொன்னீங்க தலீவரே!
யாரோ ஒரு ஒல்லிப்பிச்சான் தன்னோட நிழலை விட்டுட்டு; சின்னவயசிலேர்ந்து தன் கூடவே வளர்ந்த நிழலை பரிதாபமா தவிக்கவிட்டுட்டு முந்திரிக்கொட்டை மாதிரி சுடுதாம். உடனே அவருதான் பெரிய ஹீரோவாம். இதுமாதிரி கூத்தை வேற எங்காயாவது கேள்விப்பட்டிருக்கோமா நாம?
இவங்களையெல்லாம் நிழலைவிட வேகமா பிறாண்டி வைக்கணும் தலீவரே!
இவங்களையெல்லாம் நிழலைவிட வேகமா பிறாண்டி வைக்கணும் தலீவரே
Deleteஈ வி அடிக்கடி பூனையை நினைவுபடுத்துகிறது உங்கள் பேச்சு.
தலீவரே நீங்கள் கட்டம் போட்டால்
அதற்க்குள் நாங்கள் வட்டம் போடுவோம்.
////ஈ வி அடிக்கடி பூனையை நினைவுபடுத்துகிறது உங்கள் பேச்சு.///
Deleteபாத்தீங்களா மக்களே?!!!
அப்படீன்னா இத்தனை நாளும் நான் கரடியையோ, காட்டெருமையையோ ஞாபகப்படுத்துற மாதிரியா பேசிக்கிட்டிருந்தேன்?!!
ரொம்ம்ம்பக் குழப்புறாங்களே...
இவங்களையெல்லாம் நிழலைவிட வேகமா பிறாண்டி வைக்கணும் தலீவரே
Delete#####
ஹா....ஹா.....:-)))))
குற்றச்சக்கரவர்தி ஸ்பைடர் வர்ராரு.. சின்னப் பசங்க எல்லாம் ஓரமாப்போய் விளையாடுங்க..!!
Deleteஅப்படீன்னு யாராச்சும் சொல்லிகிட்டு வருவாங்கன்னு நினைக்கிறேன்..!
😂😂😂
டெக்ஸ் காரக்குழம்புன்னா..
Deleteலக்கியும் ஆர்டினும் வத்தக்குழம்பு..
தட் புரட்டாசி எஃபெக்ட்டு.. 😭😭😭
///குற்றச்சக்கரவர்தி ஸ்பைடர் வர்ராரு.. சின்னப் பசங்க எல்லாம் ஓரமாப்போய் விளையாடுங்க..!!
Deleteஅப்படீன்னு யாராச்சும் சொல்லிகிட்டு வருவாங்கன்னு நினைக்கிறேன்..! //
ஐயோ... ஐயோ.. ஒரே தமாஸூ!!
இந்த சிறுபுள்ளைங்கெல்லாம் எப்போ தான் நம்மல மாதிாி பொிய ஆளா மாறுவாங்களோ!!!
புது இதழ்கள் கையில் எந்த இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ளது....:-)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅடுத்த வருட இதழ்களுக்கு எடிட்டர் எந்தமாதிரியான தலைப்புகள் வைக்கப்போரார்னு தெரிஞ்சுக்க ஏக ஆர்வமா இருக்கு!
ReplyDeleteபடலம், மர்மம், மரணம், இரத்தம் - இந்தமாதிரியான வார்தைகள் இடம்பெறாம தலைப்புகள் வைக்கறதுன்னா அது ரொம்பவே சேலன்ஜிங்கான வேலையால்ல இருக்கும்?
எத்தனை விட்டங்கள் எடிட்டரால் வெறித்துப் பார்க்கப்படுகிறதோ...?!!!
ஏனுங்க ஈவி!
Deleteஇந்த படலம் படலம்ங்கறாங்களே அப்டினா என்ன அா்த்தமுங்க!
கொஞ்சம் ஆசிாியா்ட்ட கேட்டு சொல்லுங்களேன்!!
@ மிதுன்
Delete///இந்த படலம் படலம்ங்கறாங்களே அப்டினா என்ன அா்த்தமுங்க!///
இதுமாதிரி அற்ப விசயத்துக்கெல்லாம் எடிட்டரை ஏன் தொந்தரவு பண்ணணும்னு நானே மல்லக்கப் படுத்துக்கிட்டு ரொம்ப நேரம் யோசிச்சேன்...
அப்புறம்தான் புரிஞ்சது... படலமும் 'காதல்' மாதிரியே வார்த்தைகளால் விளக்கமுடியாத ஒரு மெல்லிய உணர்வுன்னு!
இரத்தப்படலத்தை நீங்களும் மல்லக்கப்படுத்துக்கிட்டு படிச்சுப் பாருங்க... ஒரு இனம்புரியாத உணர்வு அப்படியே உங்கமேல படர்வதுமாதிரியே ( பெட்ஷீட் போட்டு மூடுறாப்ல) இருக்கும். அதான் படலம்! ;)
@ மிதுன் ...ரத்த படலம் ..படலம் என்ற வார்த்தைக்கு உங்களை போலவே குழப்பம் ஆரம்பத்தில் இருந்தது...இரத்தப்படலம் கம்ப்ளீட் கலெக்ஷன் படிக்கும்வரை ...நான் முதலில் ரத்தப்படலம் படிக்க துவங்கியது ஆறாவது பாகத்தில் இருந்ததுதான்...
DeleteXIII-ன் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு ஒரு மெல்லிய ஜவ்வு போல் அதாவது படலம் போல் இருப்பதாக மார்த்தா ஆபோவிடம் பக்கம் ஆறில் உரையாடும்போது சொல்கிறாள் ..அந்த படலம் அவளுக்கு கவலை அளிப்பதாகவும் சொல்கிறாள் ..
XIII-ன் நினைவாற்றலை மறக்க செய்ததில் பிரைன் கன்கஷன்-ஆல் ஏற்பட்ட அந்த ‘’ ரத்தப்படலத்துக்கு பெரும்பங்கு உண்டு ....மூளையின் மேற்பகுதியை போர்த்தியிருக்கும் துரா மேட்டர் எனப்படும் மெல்லிய ஜவ்வுக்கு கீழே ஏற்பட்ட சப் டுரல் ஹேம்மரேஜ் என்பதையே இது குறிப்பிடுவதாக தோன்றுகிறது ....
ஆக இங்கு படலம் என்பது – A THIN FILM OF BLOOD OVER THE BRAIN -என்ற விதத்தில் பில்ம் என்று பொருளாகிறது ...ஆங்கில பதிப்பு கையில் வைத்து இருப்பவர்கள் இதை சரிபார்த்து எந்த ஆங்கில வார்த்தைக்கு எடிட்டர் படலம் என்ற மொழிபெயர்ப்பை செய்துள்ளார் என சொல்லவும் ..
படலத்தில் படலம் ..
ஆறாவது பாகம் ...ஜேசன் பிளை படலம்
பதினைந்தாவது பாகம் ...மான்டிகிரிஸ்டோ படலம் ‘
இங்கு படலம் என்பது சேப்டர் –CHAPTER –என்ற வகையில் பயன்படுத்தபடுகிறது ..
அதாவது அத்தியாயம் என ..........
விபத்துகள் ,குத்துசண்டை போன்ற தொழில்முறை போட்டிகள் அல்லாமல் அமெரிக்காவில் பள்ளிகளில் விளையாடும்போது பேஸ்பால் ,புட்பால் போன்றவற்றில் ஏற்படும் பிரைன் கன்கஷனில் பல ஒருவாரம் வரை ஞாபக மறதி ஏற்படுத்த வல்லவை ......
(கேர்ல்பிரண்டுக்கு கொடுத்த சாதாரண முத்தம் ,மருத்துவ முத்தம் எல்லாமே ஒரு வாரத்துக்கு மறந்து போகும் )
தலையில் அடிபட்டால் சிலசமயம் மறந்து போகும் என்பது உண்மைதான் ..
ஆனால் விதிவிலக்குகள் உண்டு ...பூரிக்கட்டையால் அடிபடும்போது பல விஷயங்கள் ஞாபகம் வருவதும் உண்டு பின்வரும் சம்பாஷணையை பாருங்கள் ..
எங்க போயிருந்தீங்க????
ஆடிட்டர் வீட்டுக்கு ...
மடார் ..மடார் ...
இல்ல ..இல்ல பாருக்கு ...
என்ன இழவை குடிச்சீங்க ???
கொஞ்சூண்டு பீரு ..
மடார் ..மடார் ..
இல்ல ..இல்ல ..ரம்மும் விஸ்கியும் ..
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
சூப்பா் ஜி!!
Delete😁😁😁🤔🤔🤔😁😁😁
பேசாம 'படலம்'ன்னா என்னன்னு நம்ம செனாஅனா உள்ளிட்ட இத்தளத்தில் ஆராய்ச்சிக்காரவுகள வச்சு ஒரு முழுநீளக் கட்டுரை ஆய்வுக் கட்டுரை தயாரிச்சு, அடுத்தவருசம் வெளியாகப்போற 'இ.ப' வண்ண மறுபதிப்புல அதை 19வது பாகமாப் போட்டுடலாம் போல இருக்கு!
Deleteஇந்த ஆராய்ச்சியாளர் கூட்டணியில நம்ம தோஸ்த் கார்த்திக் சோமலிங்கா'வையும் சேர்த்துக்கிட்டோம்னா - 19வது பாகம் பட்டையக் கிளப்பிடும் பாருங்க?
டெக்ஸ் விஜயராகவன் இப்போதுதான் வாட்ஸ் அப்பில் ரத்த படலம் பாகம் ஒன்றின் படங்களை அனுப்பி இருந்தார்...
Deleteநன்றி டெக்ஸ் !!!!!
அதில் – THE DAY OF THE BLACK SUN – MARTHA -வுடைய ABE – யுடன் பேசும் வசனம் இதுதான் ...
I did my best ,abe . The skull bones will heal in time ,but the BRAIN ..i just don’t know,no way of telling .
இதில் மூளை என குறிப்பிடப்பட்டாலும் அதில் ரத்த கசிவு அல்லது படலம் என எதுவும் குறிப்பிடப்படவில்லை ..
ஆனால் எடிட்டர் பிரெஞ்ச் மூலபிரதியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட வசனத்தையே தமிழில் மறுபடி மொழிபெயர்ப்பு செய்து இருக்க வேண்டும் ...நெடுங்காலம் முன்பு நிகழ்ந்தது என்பதால் இப்படித்தான் இருக்க கூடும் ..!!!
ஒரு மாபெரும் காவியம் என கருதப்படும் படைப்பின் தலைப்பு தமிழில் குறிப்பிட்ட பேனலில் உள்ள வசனத்தில் இருந்துதான் கொடுக்கப்பட்டுள்ளது ..
டாக்டர் பொடியன் :
ReplyDeleteஆரம்பம் முதல் இறுதிவரை வித்தியாசமான வைத்தியங்களுடன் விறுவிறுப்பாக நகரும் கதையம்சம் சிரிக்க வைத்தது.
எனக்கென்னவோ டாக்டரைவிட நர்ஸ்தான் அதிகமா வைத்தியம் பாத்தமாதிரி தோணுது :)
டொக்குபொடிபஞ்சர், சைக்கோபொடியோ, பிசியோபொடிதெரபி, கிச்சுகிச்சோதெரபி, ஹைட்ரோபொடிரோதெரபி - ஹாஹாஹா சிரிச்சி மாளலை சார்.! :)
ஒரேயொரு ஆம்புலன்ஸ் பேசன்டை கூட்டிட்டு வர்ர அட்ராசிடி செம்ம ரவுசு போங்க..:)
"பொதுமருத்துவ பொடியர்னு மருத்துவ கழகமே எனக்கு தந்த டிப்ளமோ இது "
"அந்த மரியாதைப்பட்ட அமைப்போட உறுப்பினர்கள் யாராம்?"
"இப்போதைக்கு அங்கே நான் ஒருத்தன் மட்டும்தான் முறையான மெம்பர் "
இப்படி பல இடங்களில் சூழலும் வசனமும் சேர்ந்துகொண்டு விலாவை பதம் பார்க்கின்றன. :)
க்ளைமாக்ஸில் கார்காமெல் ஸ்மர்ஃப்வில்லாவுக்கு திரும்பிவரும் வழியை அடையாளம் பார்த்துகொண்டே போனாலும் மறுபடியும் வழக்கம்போல வழிமறந்து சுத்திசுத்தி தன்னுடைய வீட்டுக்கே போய்ச்சேர்வதும் சரியான காமெடி..!
மொத்தத்தில் மீண்டும் இந்த செல்லாக்குட்டி ஸ்மர்ஃப்ஸ் நிறைவான வாசிப்பனுபவத்தை வழங்கினார்கள்..!
ரேட்டிங் - 10/10
முக்கிய குறிப்பு :
என்னாது சிவாஜி செத்துட்டாரா? ன்னு யாராச்சும் கேட்டீங்க.. அம்புட்டுதேன். .!!
////அந்த மரியாதைப்பட்ட அமைப்போட உறுப்பினர்கள் யாராம்?"
Delete"இப்போதைக்கு அங்கே நான் ஒருத்தன் மட்டும்தான் முறையான மெம்பர் "////
அருமையான வசனம்!!
நிஜத்திலும் பல இடங்களில் அதுதான் நிலைமை!!
பொடியர்கள் என்னை மிகவும் கவர்ந்து விட்டார்கள்.
Deleteசித்திரங்களை விட வசனங்கள் தான் மிக வாய் விட்டு சிரிக்க வைத்தன. சிவகாசியிலி௫ந்து புத்தகங்களை வாங்கிக் கொண்டு ஊர் தி௫ம்ப பே௫ந்தில் ஏறியமர்ந்தேன்.
அதுவோ இரவு நேரம். நெடுந்தொலைவு செல்லும் பே௫ந்து.ஐன்னல் ஓர இ௫க்கையில் அமர்ந்த நான் பொடியர்களை பொடிய ஆரம்பித்தேன். வாய்விட்டுச் சிரிக்க சிரிக்க பே௫ந்தில் உறக்கத்தில் இ௫ந்த பலர் என்னமோ ஏதோ என்று நினைத்து என்னை முறைத்தார்கள் தூக்கம் கலைந்த ஆத்திரத்தில்.
அவர்கள் பார்வைகள் என்னைப் பைத்தியம் என்பதைச் சொல்லாமல் சொல்லின. தலையைக் குனிந்தவன் தான் ஊர் வர்ர வரைக்கும் முகத்தைத்
தூக்கவில்லை.
ஒரே நாள்ள 333+ பதிவுகள் போட்ட நாம்
ReplyDelete150+ பதிவுகளை ஒரு வாரமா பதிவு
செய்திருக்கோம்னா ஹ்ம்ம்
என்னத்த சொல்ல
இதுல விஜயன் சாரையும் காணோமே?
சித்தம் சாத்தானுக்கு சொந்தம் :
ReplyDeleteபெர்லினை கிழக்கு மேற்காக பிரித்த அந்ந பெர்லின் சுவரை மையமாக வைத்து பின்னப்பட்ட சுவாஸ்யமான கதை.
கிழக்கில் இருந்த கட்டுப்பாடுகளையும் கஷ்டங்கறையும் சகிக்க இயலாத மக்கள் மேற்கிற்கு தப்பியோட முயற்ச்சித்த வரலாற்று நிகழ்வின் அடிப்படையில் சில கேரக்டர்களை எடுத்துக்கொண்டு 110 பக்கங்களுக்கு ஒரு த்ரில்லரை கொடுத்திருக்கிறார் கதாசிரியர்..!
சொந்த குடும்பத்தையே காட்டிக்கொடுத்து அரசின் நன்மதிப்பை பெற்று அதிகாரியாகும் ப்ரெடெரிக் தில்லாலங்கடின்னா, அவனுக்கே ஆப்பு வைக்கும் மர்லின் பெக்கர் எமகாதகிதான்.!
ஆனால் கடைசியில் விசம் கலந்த க்ளாஸை மாற்றிவைத்து ரிவிட்டை மர்லினுக்கே திருப்பி அடித்து எமனுக்கு எமன்னு நிரூபிக்கிறான் ப்ரெடெரிக். .!
மர்லினை உளவு பார்ப்பதாக நினைத்துக்கொண்டு கடைசியில் அவளிடம் ஏமாந்து போய் விழிக்கும் ப்ரெடெரிக் மேல் நார்மலாக வரும் பச்சாதாபம் நமக்கு வருவதில்லை,
ஏனெனில் சுயநலனுக்காக குடும்பத்தையே காட்டிக்கொடுத்த ப்ரெடெரிக்கை அதே சுயநலனுக்காக மர்லின் சிக்க வைக்கும்போது உனக்கு வேணும்டான்னுதான் தோணுது. !
மர்லின் பெக்கர் - அடேங்கப்பா.. . . மேற்கு பெர்லினுக்கு தப்பிசெல்வோரைப் பற்றி உளவு பார்த்து அரசுக்கு தகவல் சொல்லவேண்டி என்னென்ன வேலையெல்லாம் பாக்குது..!
சந்தா E ஒவ்வொன்னும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரத்தினங்களாய் ஜொலித்துக்கொண்டு வருகின்றன சார்.!
அடுத்த வருடம் சந்தா Eயை முடிந்தால் இந்தவருடத்தைப்போல் இருமடங்கு ஆக்குங்கள், முடியாதென்றால் எண்ணிக்கையை அட்லீஸ்ட் ஒரு டஜனாவது ஆக்குங்கள் சார்.!! :-)
ரேட்டிங் 10/ 10
நண்பர்களே...!!!
ReplyDeleteநம்முடைய நண்பர் Shinesmile foundation நாயகம், 2016ஈரோட்டில் ஒரு வித்தியாசமான கோரிக்கையை வைத்தார். இதுவரை லயன்& முத்துவில் வெளிவந்த புத்தகங்களின் அட்டைப் படங்களை தொகுப்பாக வெளியிடவேணும் என்பதே அது.
சில நண்பர்களுக்கு காமெடியாக தோன்றி சிரிப்பை வரவைத்தாலும் இதுபோன்ற வித்தியாசங்களை ரசிப்பது உலக வழக்கந்தான் போலும்.
சமீபத்தில் இத்தாலியில் டெக்ஸ் வெளியீடுகளின் அட்டைப்படங்களை தொகுத்து கார்டு வடிவில் 100முதல் 200வரை வெளியிட்டுளனர். 700அட்டைப்படங்களும் இப்படி கார்டு வடிவில் வெளிவரும் போல தெரிகிறது.
அதன் புகைப்படங்கள் பின்வரும் லிங்ல பார்க்கலாம்...
https://m.facebook.com/groups/1723924691198965?view=group&fc=photos_upload_success&_rdr
Shinesmile foundation @ நண்பரே இதை பார்க்கும் நீங்கள் , உங்கள் எண்ணம் உலகின் எங்கோ ஒரு இடத்தில் செயல்வடிவம் பெற்றுள்ளதை எண்ணி உற்சாகம் கொள்ளலாம்...
தவறு செய்வது சகஜம்; உங்கள் தவறை உணர்ந்து கொண்ட நீங்கள் வழக்கம்போல உங்கள் விமர்சனத்தை இங்கே வைக்கலாமே...!!!
ATR Sir@ நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்???
உங்கள் பணிகள் முடிய ஒரு மாதம் ஆகும் என சொன்னதாக ஞாபகம். பணிகள் முடிந்து இருந்தால் இங்கே எட்டி பார்க்கலாமே...!!
ஆஹா டெக்ஸார்,பொம்மை புக்குக்கே பொம்ம புக்கா சூப்ரப்பு ஏம் ஓட்டு உங்களுக்கு தான்.
Deleteஐயாக்களா நீங்கள்ளாம் வந்து பின்னூட்டம் போடுவதற்குள் ஞாயிறே
ReplyDeleteவந்து நமது விஜயன் சாரே அடுத்த
பதிவ போட்டுடுவார் போலிருக்கே.
@ கணேஷ் ஜி
Deleteநமது இந்த மாத வெளியீடுகள் எல்லாம் படித்துவிட்டீர்களா? அதைப் பற்றி சுந்தரத் தமிழினில் பாட்டிசைத்தால் - நாங்களும் உங்கள் கருத்தைத் தெரிந்துகொள்வோமில்லையா?
யாராவது ஏதாவது கருத்தை வச்சாத்தானே பதிலுக்கு மத்தவங்களும் தங்களோட கருத்தை வெளிப்படுத்த முடியும்ன்றேன்?
A T R சார் நலமா?
ReplyDeleteமடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன் சார் நலமா?
ReplyDeleteஈ வி ஏதோ ரெண்டு வரி கிறுக்கினதுக்கு
ReplyDeleteகவிஞர் என்று சொல்லி காயவைக்கிரிர்களே.
வில்லரின் சாகசம் விண்ணையும்
ReplyDeleteவெல்லும்.
தோர்கலின் மாய உலகம் தோரணம்
கட்டும்.
நீலப்பொடியர்களின் நகைச்சுவை
அறுசுவைக்கும் மேல் ஏழாம் சுவை.
சித்தமெல்லாம் சிவமயம் என்றில்லாவிட்டால் நம் சித்தம்
சாத்தானுக்கு சொந்தமாகிவிடும்.
சத்தியமாக இது கவிதையில்லை ஈ வி.
///சத்தியமாக இது கவிதையில்லை ஈ வி. ///
Deleteதெரியும் ஜி... தெரியும்! கவிதைன்னா கடேசியா ஆச்சரியக்குறி இருக்குமே?
அடுத்ததபா எகனை மொகனையா எதையாவது எழுதி கடேசில ஒரு ஆச்சரியக்குறிய தொங்க வுட்டுடீங்கன்னா கபால்னு ஒரு கவிதை ரெடி!
கவிதை சம்மந்தமா ஏதாச்சும் டவுட் இருந்தா நம்ம எடிட்டர்ட்ட கேளுங்க! ;)
///தெரியும் ஜி... தெரியும்! கவிதைன்னா கடேசியா ஆச்சரியக்குறி இருக்குமே? ///
Delete///எகனை மொகனையா ///
😂😂😂😂😂😂
///இது கவிதையில்லை///
ReplyDeleteஅப்ப புதுக்கவிதை னு சொல்லலாமா சார்?
அப்ப புதுக்கவிதைன்னா ?
Deleteஇப்ப பழங்கவிதையா.....?
அப்ப புதுக்கவிதைன்னா ?
Deleteஇப்ப பழங்கவிதையா.....?
போனவாரம் மாதிரியே இந்த தபாவும் சனிக்கிழமை பத்துமணிக்குள்ள புதுப்பதிவு போட்டா நல்லா இருக்கும்! தூக்கம் கண்களைத் தழுவும்போது ஒரு இனம்புரியாத உற்சாகம் கனவுகள் வரை வழிநடத்துமே...?!! - அது வேண்டும்! ஞாயித்துக்கிழமை 9 மணிவரை காத்துக்கிட்டிருப்பதெல்லாம் மண்டைகாய வைக்குது! அரைகுறையா பதிவப் படிச்சுட்டு, ஒரு பொறுப்பான குடும்பஸ்திரனா மாறி ஓட வேண்டியிருக்கு! மறுபடியும் கொஞ்சம்போல நேரம் கிடைக்க ராவாயிடுது!
ReplyDeleteஏதோ பார்த்து எடிட்டர் சமூகம் மனசு வைக்கணும்! சனிக்கிழமை பதிவு போடும் எடிட்டர்களுக்கு வாசகர்களெல்லாம் சேர்ந்து வேணுமின்னா 'early bird' பேட்ஜ் அனுப்பி வைக்கறோம்? ன்னான்றீங்க? ;)
அதாவது,
Deleteபழைய பதிவை - ஆராதிப்போம்!
புதிய பதிவை - அரவணைப்போம்!
அதுவே, சனிக்கிழமைப் பதிவு'ன்னா - அரவணைச்சு கொஞ்சிப்புடுவோம்! :D
Yes +1
Deleteராத்திரி ஆனாக்கா பூனைக்கு
Deleteகொண்டாட்டமாம்.உருள்றதும்
பொறள்றதும்னு. ( அப்பப்ப பிறாண்றதும்)
சனிக்கிழமை சாயந்திரமாயிட்டாலே காட்டுக்குள் தனித்திருக்கும் மர்ம பங்களாவுக்குள்ள பூந்தாமாதிரி ஒரே நிசப்தமா இருக்கும் இந்தத் தளம்! நான் பேசுறது எனக்கே எக்கோ அடிக்கிறாப்ல இருக்கும்! 16-வயதினிலே படத்துல சந்தைக்குப்போயிட்டு ராத்திரி காட்டுப்பாதையில திரும்பிவர்றப்ப பயமில்லாம இருக்க தனக்குத்தானே சத்தமா பாடிகிட்டு சப்பாணி கமல் ( அதாங்க.. நம்ம நாளைய-முதல்வர்) நடந்துவருவாரே... எனக்கும் சனிக்கிழமை ராத்திரிகள்ல அப்படித்தான் இருக்கும்!
ReplyDeleteஆனா புதுப்பதிவு பப்ளிஷ் ஆன அந்தக் கணத்துல எங்கிருந்துதான் வருவாங்கன்னே தெரியாது - நம்ம நண்பர்கள்! 'மீ ஃபர்ஸ்ட்'டாம்... 'ஜஸ்ட் மிஸ்டு த ஃபர்ஸ்ட்'டாம்... 'in top-10 for the first time'மாம்...
இவங்கள்ளாம் எங்ஙனக்குள்ளதான் ஒளிஞ்சிருப்பாங்கன்னு தெரியலையே... ;)
///ஆனா புதுப்பதிவு பப்ளிஷ் ஆன அந்தக் கணத்துல எங்கிருந்துதான் வருவாங்கன்னே தெரியாது - நம்ம நண்பர்கள்! 'மீ ஃபர்ஸ்ட்'டாம்... 'ஜஸ்ட் மிஸ்டு த ஃபர்ஸ்ட்'டாம்... 'in top-10 for the first time'மாம்...
Deleteஇவங்கள்ளாம் எங்ஙனக்குள்ளதான் ஒளிஞ்சிருப்பாங்கன்னு தெரியலையே... ;)///--- இந்தப் பெருமை முழுக்க முழுக்க திருவாளர் வாட்ச்ஆப்பாரையே சாரும்...
ஆங்காங்கே லிங்குகள் பறக்கும்; கமெண்ட்ஸ் தெறிக்கும்...
இங்க தான் ஒளிஞ்சுருக்கோம் பூனையாரே. ரிப்ரெஷ் பட்டனை அழுத்தி அழுத்தி பாத்துகினு இருக்கிறது தான் எங்க பொழுது போக்கு. சனிக்கிழமை ஆனாலே அப்படிய பரபரன்னு்இருக்கும். அப்படியே கையெல்லாம் நடுங்கற மாதிரி இருக்கும். புது பதிவை பாத்திட்டா தான் படபடப்பு அடங்கும். பதிவைக் கூட படிக்காம சர்ரருனு ஸ்க்ரோல் பண்ணி கீழே கமென்ட்ஸ் பாத்துட்டு யாரும் கமென்ட் போடாம் இருக்கும் போது பட்டுனு 1 இல்ல 2 ன்னு போட்டுட்டா கிடைக்கும் பாருங்க ஒரு ஆத்ம திருப்தி.
Deleteஅப்பறமா ஒரு டீயோ்காப்பியோ போட்டு எடுத்துட்டு வந்து நிதானமா குடிச்சுகிட்டே பதிவை படிக்கிற சுகம் இருக்கே. அடடா..பேரின்பம்.
இன்னும் பதிவைக் காணாமே?
ReplyDelete12:30க்கு வரக்கூடும்
Deleteஇப்பவே பசிக்குதே
DeleteAwaiting.. 👀👀👀
ReplyDeleteகண்ணா நீ தூங்கடா...........
Deleteகுழந்தை மன
கண்ணா நீ தூங்கடா...........
காத்திருந்து காத்திருந்து
ReplyDeleteகாலங்கள் போகுதடி.
அவ்வவுதான்.
ஒரு ஸ்பெஷல் சூப் அனுப்பவா
Deleteபுது பதிவு எப்போது எடிட்டர் சார்?
ReplyDeleteபுது பதிவு எப்போது எடிட்டர் சார்?
ReplyDeleteஅது வரும் போது தான் சரவணன் சார்
Deleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!:)
ReplyDelete