நண்பர்களே,
வணக்கம். வருஷம் முழுக்க ஏதேதோ காரணங்களைச் சொல்லி ‘மாங்கு மாங்கென்று‘ இங்கே எழுதுவது என் பொறுப்பு- என்றாகி வருடங்கள் 5 ஆகப் போகிறது ! அதிலும் ‘ஞாயிறுதோறும் பதிவு‘ என்ற நடைமுறையை நாமாக அமல்படுத்திக் கொண்டும் கிட்டத்தட்ட 2 ½ ஆண்டுகளாகப் போகிறதென்று நினைக்கிறேன் ! ஆனால் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு மட்டுமாவது நான் பேச்சைக் குறைத்துக் கொண்டு – உங்கள் எண்ணங்களுக்கு, விமர்சனங்களுக்கு, அபிப்பிராயங்களுக்கு, ஆண்டின் அனுபவங்களுக்கு, முக்கியத்துவம் தரலாமென்று மனதுக்குப் பட்டது ! So- ஞாயிறு காலைகளில் சோம்பல் முறித்துக் கொண்டே செல்போனில் எனது அன்றையப் பதிவைப் படித்து விட்டுப் புரண்டு படுத்துத் தூக்கத்தைத் தொடர்வதற்குப் பதிலாய்- உங்கள் எண்ணங்களை எழுத்தாக்கும் வேளையிது folks !
For starters – எனது முதல் கேள்வியானது : உங்கள் பார்வைகளில் 2016-ன் Top 3 இதழ்கள் எதுவோ ? என்பதே ! “என் பெயர் டைகர்”; “ஈரோட்டில் இத்தாலி”; “சர்வமும் நானே”; “தலையில்லாப் போராளி”; “லக்கி ஸ்பெஷல்” என்று நிறையவே மெகா இதழ்களும் ; ஜேஸன் ப்ரைஸ் ; பெட்டி பார்னோவ்ஸ்கி ; பென்னி என்று புதுவரவுகளும் ; ‘தல‘யின் ஏகப்பட்ட தாண்டவங்களும் அரங்கேறிய ஆண்டிது ! So ஒவ்வொருவரின் ரசனைகளின் அளவுகோல்களுக்கேற்ப இந்தாண்டின் Top 3 இதழ்கள் விதவிதமாய் அமைந்திடும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் ! இந்த வருடத்தை மனதில் ஓடவிட்டு, நினைவுகளைத் தட்டியெழுப்பி - ஆண்டின் Top 3 இதழ்களைத் தேர்வு செய்யுங்களேன் - ப்ளீஸ் ?
2. எனது கேள்வி # 2 என்னவாகயிருக்குமென்று நிச்சயம் யூகித்திருப்பீர்கள் ! இதற்கான பதிலும் என்னவாகயிருக்குமென்று நாம் பரவலாய் அறிவோம் தான் ! But still – ஓராண்டின் வாசிப்பு அனுபவத்திற்குப் பின்பாய்- ‘மாதமொரு TEX‘ என்ற பரிசோதனையை எவ்விதம் பார்த்திடுவீர்கள்?
- அட்டகாசம் – A
- குட்... ஆனால் கொஞ்சம் போல எண்ணிக்கையைக் குறைத்தால் தப்பில்லை ! – B
- திகட்டுது ஷாமியோவ் ! – C
3. இந்தாண்டின் இன்னுமொரு துவக்கம்- பிரத்யேக கார்ட்டூன் தடத்திற்குமே ! டெக்ஸ் வில்லரின் அளவுக்குக் கார்ட்டூன் genre-ஐயும் நம்மில் பெரும்பாலானோர் ரசிப்பதுண்டு தான் என்றாலும் - அந்த ரசிக எண்ணிக்கை உத்தேசமாய் என்ன சதவிகிதம் என்றறிவதில் ஒரு சுவாரஸ்யம் இருப்பதாக நினைக்கிறேன் ! So நடப்பாண்டின் சந்தா C பற்றியும் ; காட்டூன் தனி track பற்றியும் உங்கள் எண்ணங்கள் என்னவோ ?
- A – நிச்சயம் தொடர்ந்திட வேண்டும்!
- B–ஆசைக்கு ஓரிரண்டு வருடங்கள் இதனை முயற்சிப்பது ஓ.கே. தான்!
- C–வேறு பாணிகளுக்கும் கவனம் தந்து பார்க்கலாமே?
4. இது Evergreen மறுபதிப்பு நாயகர்கள் பற்றிய கேள்வி ! இந்தாண்டின் 10 மும்மூர்த்தி + ஸ்பைடர் மறுபதிப்புகளுள் நீங்கள் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ? எத்தனையை வருடித் தந்து- ‘அந்தக் காலத்திலே...‘ என்ற நினைவலைகளுக்குள் மூழ்கி விட்டுப் புத்தகத்தை மூலை சேர்த்திருப்பீர்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளலாமா ?
- A – படித்தது – 10/10
- B – பாதிக்குப் பாதி !
- C – ஹாவ்வ்வ்வ்!
5. 2016-ன் பல தருணங்கள் நமக்குப் பளீரென்று நினைவில் தங்கியிருக்குமென்ற நம்பிக்கை எனக்குள்ளது ! அவை நமது வாசகச் சந்திப்பு வேளைகளாக இருந்திருக்கலாம் ; ஏதேனும் memorable இதழ்களின் வெளியீட்டு மாதமாக இருந்திருக்கலாம் ; அல்லது ஏதேனும் ஒரு ஞாயிறின் பதிவாகவோ, அது சார்ந்த உற்சாகப் பங்களிப்பாகவும் இருந்திருக்கலாம் ; அல்லது தொடரும் ஆண்டின் அட்டவணை unveil செய்யப்பட்ட வேளையாக இருந்திருக்கலாம் ! என் கேள்வியெல்லாம் இதுவே : “2016-ன் மறக்க முடியாத சந்தோஷத் தருணங்கள்” என்று எந்த 2 நிகழ்வுகளைப் பட்டியலிடுவீர்கள் ? அது பற்றி லேசாகவோ / விரிவாகவோ எழுதினால் இன்னும் சூப்பர் !
6. Best of the lot – என்ற கேள்வியினை இந்தாண்டின் அட்டைப்படங்கள் பக்கமாகவும் கொண்டு செல்லும் போது- உங்கள் கண்களுக்கு 2016-ன் Top 3 ராப்பர்களாகத் தோன்றுவது எவையாக இருக்குமோ ? வரிசைப்படுத்திடலாமே ?
7. Best-களைப் பார்த்து விட்டு, ‘பாதாள பைரவிகளைப்' பார்க்காது செல்வது முறையாகாதல்லவா ? So “2016-ன் TOP 3 டப்ஸா இதழ்கள்” எவையாக இருக்குமென்று வெளிச்சம் போட்டுக் காட்டுங்களேன் ப்ளீஸ் ? எவை சோடை போன இதழ்கள் என்பது பற்றிய கோடு போடப்படும் போது - தொடரும் காலங்களில் தவிர்க்கப்பட வேண்டிய சமாச்சாரங்கள் எவையென்ற புரிதலும் எங்களுக்குக் கிட்டி விடும் என்பதால் இதுவொரு முக்கிய கேள்வி என்பேன் ! So சற்றே சிந்தித்துப் பதில்கள் ப்ளீஸ் ?
8. ஆண்டில் புதுவரவுகளென்று பார்த்தால் ஜேஸன் ப்ரைஸ் & பென்னி மாத்திரமே கைதுதூக்கி நிற்கின்றனர் ! இந்த இருவரும் – இரு மாறுபட்ட கதைபாணிகளின் பிரதிநிதிகள் ! இவர்களை rate செய்வதெனில் உங்களின் மதிப்பெண்கள் எவ்வளவாக இருக்குமோ ?
- A – ஜேஸன் ப்ரைஸ்
- B – சுட்டிப் புயல் பென்னி
9. சந்தா முறையில் இதழ்களைப் பெற்று வருபவர்களாக நீங்கள் இருப்பின் - நடப்பாண்டில் எங்களின் செயல்பாடுகளை நீங்கள் எவ்விதம் பார்த்திடுவீர்கள் ? தவறுகளின்றி, flawless performance தந்திருப்போமென்ற பகற்கனவெல்லாம் எனக்கில்லை! ஆனால் on a scale of 1 to 10 இந்தாண்டின் “சந்தா அனுபவத்தை” எவ்விதம் பார்த்திடுவீர்களோ ?
10. இறுதியாய் ஒரேயொரு கேள்வி ! நிச்சயமாய் ஒவ்வொரு தரப்பிலும் மாற்றங்கள் / முன்னேற்றங்களை நனவாக்கிட ஆனமட்டிலும் முயற்சித்தே வருகிறோம் ! கதைத் தேர்வில் தொடங்கி, மொழிமாற்றம், தயாரிப்பு, அட்டைப்பட உருவாக்கம், பைண்டிங், தாமதத்தைத் தவிர்த்தல், புத்தக விழாக்களின் பங்கேற்பு என்று பல பரிமாணங்களிலும் தினம் தினமும் ஏதேனும் கற்றறிய முயற்சித்துக் கொண்டேயிருக்கிறோம் ! இந்தத் தொடர் பயணத்தில் எங்களை 2016-ல் எவ்விதம் rate செய்வீர்கள்- ப்ளீஸ்?
A – சரியான திசையில் தான் வண்டி ஓடுகிறது !
B – மேலே போகவில்லை; கீழே பாயவுமில்லை !
C – ஊஹும்.... திருப்தி லேது !
ஆக- இவையே இந்த ஞாயிறுக்கான எனது கேள்விகள் ! ‘அட போய்யா... ATM-ல் நின்று தாவு தீர்ந்து போச்சு ; நீ வேற இந்த வயசிலே பரீட்சை வச்சுக்கிட்டு !! என்ற சலிப்பு முகத்தைக் காட்டாது - இவற்றிற்குப் பதில் சொல்ல மெனக்கெட்டால் - நிச்சயமாய் அதனில் நம் அனைவருக்குமே பலனிருக்கும் ! ‘2017-ன் அட்டவணை தான் ஏற்கனவே அறிவிச்சாச்சே...? நான் இப்போ அபிப்பிராயம் சொல்லிப் புதுசாய் எந்த ஆணியைப் பிடுங்குவதாக உத்தேசம் ?‘ என்ற கேள்வியும் சிலபல மனங்களில் எழாது போகாது தான் ! ஆனால் ஒரு முடிவிலாப் பயணத்திற்கு இந்த inputs ரொம்பவே விலைமதிப்பற்றவை தானே ? 2017-க்கு இல்லாது போனாலும் தொடரும் அடுத்த ஆண்டுக்கு அவை பயனாகுமல்லவா ?
வழக்கம் போலவே வேண்டுகோள் folks : அவரவர் கருத்துக்களை – அவரவர் ரசனைகளின் பிரதிபலிப்புகளாய் மட்டுமே பார்த்திட்டால் தலைவலிகள் எழாது ! So அவரவரது அபிப்பிராயங்களுக்குக் கருத்துச் சுதந்திரம் ப்ளீஸ் ?!
Before I sign off - பாருங்களேன் நண்பர் அஜயின் அட்டகாசக் கைவண்ணத்தை ! இதனை SUPER 6-ன் ‘இளவரசி இதழுக்கு‘ ராப்பராக்கிடலாமா ? ஓ.கே.எனில் - இந்த நான்கில் உங்களது தேர்வு எதுவாக இருக்கும் ? சொல்லுங்கண்ணே... சொல்லுங்க !
அப்புறம் சந்தாப் புதிப்பித்தல்கள் & புது வரவுகள்இவ்வாரம் செம வேகமாய் நடந்து வருவது மகிழ்வாய் உள்ளது ! நீங்களும் 2017 -க்கான சந்தா ரயிலுக்கு டிக்கெட் போட்டு விடலாமே ? Bye all ! மீண்டும் சந்திப்போம் !
P.S.: டிசம்பர் விமர்சனங்கள் தொடரட்டுமே ப்ளீஸ்?
கிராபிக் நாவல்கள் பற்றியதொரு இந்திய பார்வை !! - என்ற விதமாய் இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு ஸ்பெஷல் கட்டுரை வெளியாகியுள்ளது பாருங்களேன் !! அழகாய் இதனை செதுக்கியுள்ள எக்ஸ்பிரஸ் எடிட்டோரியல் டீமுக்கும், அதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கெடுத்த சென்னையைச் சார்ந்த feature writer Ms .ஜெயந்தி சோமசுந்தரத்துக்கும் நமது நன்றிகள் !!
http://epaper.newindianexpress.com/1023546/The-Sunday-Standard-Magazine/04-12-2016#page/2/1
கிராபிக் நாவல்கள் பற்றியதொரு இந்திய பார்வை !! - என்ற விதமாய் இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு ஸ்பெஷல் கட்டுரை வெளியாகியுள்ளது பாருங்களேன் !! அழகாய் இதனை செதுக்கியுள்ள எக்ஸ்பிரஸ் எடிட்டோரியல் டீமுக்கும், அதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கெடுத்த சென்னையைச் சார்ந்த feature writer Ms .ஜெயந்தி சோமசுந்தரத்துக்கும் நமது நன்றிகள் !!
http://epaper.newindianexpress.com/1023546/The-Sunday-Standard-Magazine/04-12-2016#page/2/1
Ist
ReplyDeleteI am firest. Good morning to all
ReplyDeleteI am second only
ReplyDeleteHave a nice happy sunday
ReplyDeleteMadasty front cover super
ReplyDeleteபதிவு வந்திருச்சே.... அஜய் சாமி அசத்தியிருக்கிறார்.. முதலாவது அட்டை பொருத்தமாக இருக்கும். அச்சில் அசரடிக்கும்!!!
ReplyDelete//முதலாவது அட்டை பொருத்தமாக இருக்கும்.//
Delete+1
1st cover is very nice. Coloring effect is very perfect.
//முதலாவது அட்டை பொருத்தமாக இருக்கும்.//
Deletesame feeling :-)
அஜய் சூப்பர் வாழ்த்துக்கள்
Delete//முதலாவது அட்டை பொருத்தமாக இருக்கும்.//
Delete+1
Yes, 1st one is nice...
Deleteநீல பொடியர்கள்: தவறான முகவரியில் கூரியர் டெலிவரிபாய் (நாரை) ஒரு குழந்தை நீல பொடியனை கொடுத்து விட்டு, கதையின் இறுதியில் அந்த குழந்தை நீல பொடியனை நமது நீல பொடியர்களே வைத்து கொள்ளும்படி டெலிவரிபாய் (நாரை) விட்டு செல்லும் கதை. இடைபட்ட பகுதியில் நமது நீல பொடியர்கள் அந்த குழந்தை மேல் அன்பை பொழிவதும் அந்த குழந்தையை டெலிவரிபாய் திரும்ப பெற வரும் போது நடக்கும் (நெகி)நிகழ்சிகள்தான் கதை. இந்த கதையின் ஹீரோ என்றால் நமது சிடுமூஞ்சி பொடியன்தான், ஏதுவும் எனக்கு பிடிக்காது என பொடியும் இவன் தனது உள் மனதில் உள்ள அன்பை அந்த குழந்தை மேல் பொடிவது அவனை காப்பாற்ற கஷ்டபடுவது, எல்லோருக்கும் இவனை பொடிக்கும்படி அமைந்துவிட்டது.
ReplyDeleteவானம் தந்த வரம் கண்களில் கண்ணீரை பொடிந்து விட்டது என்றால் மிகையில்லை.
வழக்கமாக நீல பொடியர்கள் முதல் கதை நன்றாக இருக்கும் ஆனால் இந்த முறை இந்த புத்தகத்தில் உள்ள மூன்று கதைகளும் டாப்; சுமர்போனி செம!!
வழக்கம் போல் நீல பொடியர்கள் இந்த முறையும் என்னை கவர்ந்து விட்டார்கள்.
அட்டையில் வானம் தந்த வரம் எழுதிய (டிசைன்) விதம் அருமை, அட்டைபடம் வண்ணத்தில் மிகவும் நன்றாக உள்ளது. புத்தகத்தின் அச்சின்தரம் முதல் தரம்.
+1
Delete7th..!
ReplyDeleteமாடஸ்டியின் 2 வது அல்லது 4 காவது இரண்டில் எதாவது ஒன்றை அட்டைபடமாக போட்டால் அருமையாக இருக்கும்
ReplyDeleteஇம்மாத இதழ்களில் வருடம் தொடங்கிய ஜனவரி போலவே நான்கு இதழ்களும் அசரடித்து விட்டது சூப்பர்
ReplyDeleteவானம் தந்த வரம் ஸ்மர்ப் இதழ்களில் முதல் இதழாக வெளியிட்டிருந்தால் நீலப் பொடியர்களின் ரசிகர்கள் வட்டம் அதிகமாக இருந்திருக்கும் இவ்வருடம் வந்த ஸ்மர்ப்புகளில் இதுதான் டாப் களை கட்டட்டும் நீலப்பொடியர்களின் பொடி பாஷை வானம் தந்த வரம் அருமை
ReplyDeleteGud night to all
ReplyDeleteDasu Bala @ பெங்களூரில் இப்போது தான் விடிந்து இருக்கு :-)
Deletehehehehe...
Deleteஅஜயின் அட்டைபடத்தில் 1 & 2 சூப்பர்! கதைக்கு ஏற்ற மாதிரி உள்ளது!! வாழ்த்துக்கள் அஜய்சாமி.
ReplyDeleteவிஜயன் சார், அப்படியே இளவரசியின் கழுகு மலைகோட்டை எந்த மாதம் என சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும். அனேகமாக ஜனவரி சென்னை புத்தக திருவிழாவில் கிடைக்கும் என்று பட்சி (பஜ்ஜி இல்லங்க) சொல்லுகிறது.
Parani from Bangalore : அட...ஸ்டால் உறுதியாய்க் கிடைக்குமா ? என்று அந்தப் பட்சியிடம் கேட்டுச் சொல்லுங்கள் !
Deleteநமக்கு கண்டிப்பாக ஸ்டால் கிடைக்குமாம் சார்! கவலைபடாமல் புத்தகம்களை ரெடி பண்ண சொல்லுச்சி அந்த பட்சி.
Deleteமறைக்கப்பட்ட நிஜங்கள்
ReplyDeleteஎழுதப்பட்ட விதி யின் வீரியத்தில் சற்று கூட குறையாமல் அதே வேகத்தில் பயணித்தது வருடக் கடைசியில் வந்தாலும் முதன்மை நாயகனாக கலக்குகிறார் ஜேஸன் பிரைஸ் 21 ன்றாம் பக்கத்தில் சித்திரங்கள் அருமை மிக அருமை மூன்றாவது பாகத்தை மிக ஆவலாக எதிர்பார்க்கிறேன் ஜேஸன் பிரைஸ் மூன்று பாகங்களோடு விடை பெறுவது வருத்தமளிக்கிறது
13-வது .கண்விழித்தும் இந்த இடத்தை தான் பிடிக்கமுடிந்தது.
ReplyDeleteநான் படித்தது,பார்த்தது,கேட்டது இவற்றோடு அலசி காய வைத்து நாளை வருகிறேன்.பரீட்சை பேப்பரை திருத்த (ஏதோ எனக்கு தெரிந்த வரை) bye gd ngd
விஜயன் சார், ஜேசன் பிரைஸ் மூன்று கதைகளையும் ஒரே புத்தகமாக கொடுத்து இருந்தால் இன்னும் பல ரசிகர்கள் கிடைத்து இருப்பார்கள் என்பது ஒரு பக்கம் என்றால் எங்களது வாசிப்பு அனுபவத்தை 2 படி மேலே கொண்டு போய் இருக்கும்.
ReplyDeleteagain a good story is split into multiple months!
Parani from Bangalore : சுலபமாய்த் தோன்றிடும் அந்த எண்ணம் எனக்கும் தோன்றியிருப்பினும் கொஞ்சம் யோசியுங்களேன் நண்பரே - கதையினை பாகங்களாய்ப் பிரிக்க நான் நினைத்ததன் காரணம் என்னவாக இருக்குமென்று ?
DeleteVijayan @ நன்றாகவே தெரியும் சார்! நீங்கள் இதனை என்னிடம் கேட்பீர்கள் என்று.
Deleteஇது ஒரே புத்தகமாக வந்தால் நமது வாசிப்பு அனுபவத்தை எங்கோ கொண்டு சென்று இருக்கும் என்பதால் எனது எழுத்துகளை கட்டுபடுத்த முடியவில்லை!
///: சுலபமாய்த் தோன்றிடும் அந்த எண்ணம் எனக்கும் தோன்றியிருப்பினும் கொஞ்சம் யோசியுங்களேன் நண்பரே - கதையினை பாகங்களாய்ப் பிரிக்க நான் நினைத்ததன் காரணம் என்னவாக இருக்குமென்று ?///
Deleteவிற்பனை சிக்கலாகவே இருக்கக்கூடுமென்று நினைக்கிறேன் சார். மூன்று பாகங்களையும் ஒன்றாக வெளியிட்டிருந்தால் குறைந்தது ₹200 விலை இருந்திருக்கும்.
முன் அறிமுகமில்லா ஜேஸன், கி நா என்றாலே பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட்டமெடுக்கும் ஒரு சாரார், ஏற்கனவே ஒரே இதழாக வெளியிட்ட சி சு, இ இ கொ , தே ர தே போன்றவற்றின் விற்பனைகளில் ஏற்பட்டிருந்த மந்த நிலை போன்றவற்றை மனதில் வைத்தே குறைந்த விலையில் பிரித்து வெளியிட்டு இருப்பீர்கள் என்று கருதுகிறேன் சார்.
கிட் ஆசிரியரின் எண்ணம் அதுவே விலை காரணமாக ஒரு சூப்பர் ஹிட் கதை தோல்வியடைவதில் ஆசிரியருக்கு விருப்பமில்லை
DeleteHai
ReplyDeleteதல இந்த மாதம் சிறு வித்தியாசத்தில் முதலிடத்தை பிடிக்கிறார் அற்பப் பிறவிகள் உத்தமர் வேஷம் போட நினைத்தால் அது துளிகூட பொருந்தாது வழுக்கை கண்ணா என்று பார்னேவை டெக்ஸ் புரட்டி எடுக்கும் இடம் சிரிப்பை வர வரவழைத்தது கடைசியில் தோலில் நிறத்தை கொண்டு ஒருவனின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இந்த பிராந்தியத்திலிருந்து விலகிப் போவதில் நிச்சயம் எனக்கு வருத்தமில்லை என டெக்ஸ் உணர்ச்சிகரமாக கூறும் போது இந்தப் பகுதிகளில் வறுத்த கறி கூட அத்தனை சுகமில்லை மனுஷன் தங்குவானா இங்கே என்று கார்சன் தனது வருத்தத்தை கூறுமிடம் யப்பா செம
ReplyDeleteநீதிக்கு நிறமேது
டெக்ஸுக்கு தோல்வி ஏது
லக்கி லூஸ் கிளாசிக் நம்மை போன்ற காமிக்ஸ் கலெக்டருகளுக்கு ஒரு புதையல
ReplyDeleteஹார்ட் பைண்டிங் அருமை
கதைகளை பற்றி சொல்லவே தேவையில்லை ஏற்கனவே ஹிட் இப்போது சூப்பர் ஹிட்
தலப்பாகட்டு க்கு பதில் தொப்பிக்கட்டு ஹோட்டல் என்ற இடம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சாதாரண இடமே காமெடியை அள்ளித் தெளிக்கிறது கதை முழுக்க காமெடியை சொல்ல வா வேண்டும் கிழி கிழி சூப்பர்
செந்தில் சத்யா : அந்தத் "தொப்பிக்கட்டு ஹோட்டல்" சமாச்சாரமெல்லாம் இப்போதைய எடிட்டிங்கின் போது சேர்த்தது !! கவனித்தீர்கள் என்பதில் மகிழ்ச்சி !!
Deleteமுதலாவது வில்லியுடன் சூப்பர்
ReplyDeleteAd,மற்றும் காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் என் அதிகாலை வணக்கங்கள்.மேற்கொண்டு படித்து விட்டு வருகிறேன்.
ReplyDeleteDec 4 puthakangalum arpudam.mudal vote lucky look ukae!
ReplyDelete1.இந்த வருடம் டாப் 3
ReplyDelete1. தலையில்லாமல் போராளி(இந்த சைசுக்கே முதலிடம் தாரளமாக கொடுக்கலாம்)
2. சர்வமும் நானே
3.எழுதப்பட்ட விதி
2.மாதமொரு டெக்ஸ்
அட்டகாசம்
3. கார்ட்டுன் தனி ட்ராக்
நிச்சயம் தொடர்ந்திட வேண்டும்
4. மறுபதிப்புகள்
படித்தது 10/10
5. மறக்க முடியாத சந்தோஷத் தருணங்கள்
1.ஈரோட்டில் தங்களுடன் ஆனந்தமாக களித்த இரு நாட்கள் அதுவும் உங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருந்தது வாழ்வில் என்றுமே மறக்க முடியாத சந்தோஷத் தருணங்கள்
2.தலையில்லாமல் போராளியை கையிலேந்திய தருணம் அந்த சைஸ் என்னை ஆனந்த கடலில் மூழ்கடித்தது
6. டாப் 3 அட்டைப்படம்
கஷ்டமான கேள்வி இந்த வருடம் ஒன்றிரண்டைத் தவிர எல்லா அட்டைகளுமே அருமை இருந்தாலும் எனது பார்வையில்
1.சர்வமும் நானே
2.துரோகத்திற்க்கு முகமில்லை
3.ஈரோட்டில் இத்தாலி
7. இந்த வருடத்தின் டப்ஸா இதழ்கள்
1.பெட்டியின் ஸ்பின் ஆப்
2.மேஜிக் விண்டின் பூமிக்குள் பிரளயம்
3. கணவாயின் கதை
8. இந்த வருடத்தின் சிறந்த அறிமுகம்
ஜேஸன் பிரைஸ்
9. இந்த ஆண்டின் சந்தா அனுபவம்
அருமை அபாரம் தொடரட்டும் உங்கள் மகத்தான சேவை
10. கதைத் தேர்வு
சரியான திசையில் தான் வண்டி ஓடுகிறது
1: Top 3
Deleteஎழுதப்பட்ட விதி(ஜேஸன் பிரைஸ்), இனி எல்லாம் மரணமே(மார்டின்) இடையே கடும் போட்டி இருந்தாலும் எழுதப்பட்ட விதி நூல் இழையில் முதல்.இரண்டவது 'இ.எ.ம'
மூன்றாவது திருடனும் திருந்துவான்.
2.என்றைக்குமே எனக்கு டெக்ஸ் பிடித்தது இல்லை. அதனால option D சுத்தமாக நல்லாயில்லை.
3.Cartoon சந்தா
நிச்சயமாக தொடர வேண்டும்.
4. மறுபதிப்புகள் மிது எனக்கு ஈடுபாடு இல்லை.
5. லக்கி A.B.S வாங்கிய போது. அற்புதம் என்று சொல் கூட இதை பாராட்டுவதற்கு பத்தாது(போன பதிவில் இருந்து சுட்டது)
6.first எழுதப்பட்ட விதி(ஜேஸன் பிரைஸ்) secound லக்கி ABS. Third தலையில்லாப் போரளி
7. டபாஸா இதழ்கள்: டெக்ஸ் அத்தனையும்.
8.சிறந்த அறிமுகம்
ஜேஸன் பிரைஸ்.
9.முதல் பத்து மாதம் DCTC சர்விஸ் சரியில்லை. அதுவும் ஈரோட்டில் இத்தாலி கிடைபதற்கு 10 நாள் ஆகிவிட்டது.
அனால் கடந்த இரண்டு மாதமாக
சரியாக அனுப்பிய மறுநாள் வந்துவிடுகிறது.நன்று.
எனக்கு பிடிக்காத டெக்ஸ் கதை நிறைய வருவதால் சந்தா கட்டுவது பற்றி இன்னும் முடிவெடுக்க வில்லை.
10. கதை தேர்வு.
சந்தா B யின் காரணமாக எனது Option B தான் (மேலே போகவும் இல்லை. கிழே பாயவுமில்லை)
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆனையிட்டு யார் தடுத்தாலும் அலைகள் ஓய்வதில்லை
Deleteநான் நினைத்ததை அப்படியே கூறி
Deleteவிட்டார்.(Basically i am a சோம்பேரி)
மாடஸ்டியின் Original கழுகு மலைக்
கோட்டை அட்டை படம்முன் அட்டையாக வந்தால் மகிழ்ச்சி.
( சோம்பேறி)
DeleteGaneshkumar Kumar : //என்றைக்குமே எனக்கு டெக்ஸ் பிடித்தது இல்லை. //
Deleteஅட ! ஆச்சர்யக் குறி !
நா சந்தா கட்டறது சந்தேகம் சொன்னதுக்கு உங்க கிட்ட இருந்து எந்த ரியாக்ஷனும் இல்ல. இவ என்ன சொன்னாலும் கடைசியாக சந்தா கட்ட தான் போறன்றது தெரிஞ்சு போச்சு...
Deleteஆசிரியரின் கேள்விக்கு பதில் எழுதிய முதல் மாணவன் நான்தான்
ReplyDeleteசெந்தில் சத்யா : நன்றிகள் சத்யா ! பாக்கிப் பேரும் எழுதத் துவங்க நீங்களொரு காரணியாக அமைந்தால் இன்னும் சூப்பர் !
Deleteகுறள் பால்:அறத்துப்பால்.குறள் இயல்:துறவறவியல்.அதிகாரம்:தவம்
ReplyDeleteகுறள் 266:
''தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.''
மு.வ உரை:
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.
பரிமேலழகர் உரை:
தம் கருமம் செய்வார் தவம் செய்வார் - தம் கருமம்செய்வாராவார் துறந்து தவத்தைச் செய்வார், மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம்செய்வார் - ஒழிந்த பொருள் இன்பங்களைச் செய்வார், அவற்றின்கண் ஆசையாகியவலையுள்பட்டுத் தமக்குக் கேடு செய்வார். (அநித்தமாய் மூவகைத் துன்பத்ததாய்உயிரின் வேறாய உடற்கு வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பம் எய்தி வருகின்றஉயிர் ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம் செய்வாரைத் 'தம் கருமம்செய்வார்' என்றும், கணத்துள் அழிவதான சிற்றின்பத்தின் பொருட்டுப்பலபிறவியும் துன்புறத்தக்க பாவஞ்செய்து கோடலின், அல்லாதாரை 'அவம் செய்வார்' என்றும் கூறினார். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.).
மணக்குடவர் உரை:
தங்கருமஞ் செய்வார் தவம் செய்வார்; அஃதல்லாதனசெய்வாரெல்லாம் ஆசையிலே அகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றார். இது தவம்பண்ணவேண்டுமென்றது.
1st cover easily looks the best... That Sun baked look for the full blown art page right out of Comics is incredible.
ReplyDeleteOnly change, the white background needs to be tinted with some shade.
Good morning folks!
ReplyDeleteகும்மாங்கோ 36
ReplyDelete37வது
ReplyDelete37th
ReplyDeleteTest
ReplyDeleteஎனது முதல் கேள்வியானது : உங்கள் பார்வைகளில் 2016-ன் Top 3 இதழ்கள் எதுவோ ?
ReplyDeleteபதில்- சர்வமும் நானே , தலையில்லாப் போராளி , சட்டத்துக்கு ஒரு சவக்குழி
2. எனது கேள்வி # 2 என்னவாகயிருக்குமென்று நிச்சயம் யூகித்திருப்பீர்கள் ! இதற்கான பதிலும் என்னவாகயிருக்குமென்று நாம் பரவலாய் அறிவோம் தான் ! But still – ஓராண்டின் வாசிப்பு அனுபவத்திற்குப் பின்பாய்- ‘மாதமொரு TEX‘ என்ற பரிசோதனையை எவ்விதம் பார்த்திடுவீர்கள்?
அட்டகாசம் – A எடிட்டர் சார் டெக்ஸ் என்றைக்குமே ஒவர் டோஸ் ஆகாது அடுத்த ஆண்டும் மாதம் ஒரு முறை டெக்ஸை கையில் தந்து விடுங்கள் கோடி புன்னியமா போகும்
3. இந்தாண்டின் இன்னுமொரு துவக்கம்- பிரத்யேக கார்ட்டூன் தடத்திற்குமே ! டெக்ஸ் வில்லரின் அளவுக்குக் கார்ட்டூன் genre-ஐயும் நம்மில் பெரும்பாலானோர் ரசிப்பதுண்டு தான் என்றாலும் - அந்த ரசிக எண்ணிக்கை உத்தேசமாய் என்ன சதவிகிதம் என்றறிவதில் ஒரு சுவாரஸ்யம் இருப்பதாக நினைக்கிறேன் ! So நடப்பாண்டின் சந்தா C பற்றியும் ; காட்டூன் தனி track பற்றியும் உங்கள் எண்ணங்கள் என்னவோ ?
C–வேறு பாணிகளுக்கும் கவனம் தந்து பார்க்கலாமே? கார்ட்டூன் சந்தா புத்தகங்களீன் பக்கம் தலை வைத்து கூட நான் பார்ப்பதில்லை அவற்றை விட்டு விட்டால் தேவலாம்
4. இது Evergreen மறுபதிப்பு நாயகர்கள் பற்றிய கேள்வி ! இந்தாண்டின் 10 மும்மூர்த்தி + ஸ்பைடர் மறுபதிப்புகளுள் நீங்கள் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ? எத்தனையை வருடித் தந்து- ‘அந்தக் காலத்திலே...‘ என்ற நினைவலைகளுக்குள் மூழ்கி விட்டுப் புத்தகத்தை மூலை சேர்த்திருப்பீர்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளலாமா ?
5/10
2016-ன் மறக்க முடியாத சந்தோஷத் தருணங்கள்
ஒரு மாத கால காத்திருப்புக்கு பின் டெக்ஸ்ன் சர்வமும் நானே ,நில் கவனி சுடு, நிலவொளியில் ஒரு நர பலி இவைகளை மொத்தமாக கையில் ஏந்திய தருனம்
Aashique.stark //கார்ட்டூன் சந்தா புத்தகங்களீன் பக்கம் தலை வைத்து கூட நான் பார்ப்பதில்லை அவற்றை விட்டு விட்டால் தேவலாம் //
Deleteஅட..அனைத்தையும் ரசிக்க இயலாவிடினும் லக்கி லூக் ; சிக் பில் கதைகளையாவது முயற்சித்துப் பார்க்கலாமே நண்பரே ?
நீங்கள் சொல்லிவீட்டீர்கள் தானே சார் முயற்சித்து பார்த்துவிடுகிறேன் இனி புத்தகங்கள் வாங்க லிஸ்ட் போடும் போது சிக் பில் , லக்கிலூக் இவர்கள் இருவரும் அங்கம் வகிப்பார்கள்
Deleteஅட்டகாசம் நண்பர் அஜய்சாமியின் கைவண்ணங்கள். .!
ReplyDeleteமுதலாவது டாப்பாக இருக்கிறது. அடுத்த இடம் மூன்றாவதாய் இருக்கும் ஓவியத்திற்கு. .!
///அட்டகாசம் நண்பர் அஜய்சாமியின் கைவண்ணங்கள். .!
Deleteமுதலாவது டாப்பாக இருக்கிறது. அடுத்த இடம் மூன்றாவதாய் இருக்கும் ஓவியத்திற்கு. .!///
+11111111
நண்பர் அஜய் சாமியின் அசாத்திய திறமை வியக்க வைக்கிறது! வாழ்த்துகள் நண்பரே! ( மாடஸ்டி பயங்கர டயட்டில் இருக்கும்போது பார்த்து வரைச்சீங்களா? ஹிஹி! ;) )
Erode VIJAY : பூனைக்குப் விடியும் போதே லொள்ளு..ஜொள்ளு...!
Delete43rd
ReplyDeleteஅஜய் அட்டை படம் அனைத்துத்தும் நன்றாக வந்துள்ளது.
ReplyDeleteGaneshkumar Kumar : அதே துறையில் உள்ள வல்லுனரிடமிருந்தும் பாராட்டுக்கள் ! Awesome !!
Deleteஇந்த கதைக்கு நான் வரைகிறேன் என்று கேட்டு இருந்தேன். ஆனா புது புராஜெக்ட் போட்டு அடிச்சு அடிச்சு தெளிய வைக்கிறாங்க....
Deleteஎன்ந நண்பர் ஓருவர் நான் வரைகிறேன் செல்லி B&W ல வரைஞ்சு முடிச்சிட்டாரு. ஆனா கலர் பன்றதுக்கு நேரம் கூடல
இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி கொல்லன் சொல்வது போல்.
"எல்லாம் சரியாக இருக்கிறது மன்னா ஆனால் ஓட்ட வைக்க தான் நேரம் வரவில்லை...."
Ganeshkumar Kumar : ஓட்ட வைக்க கொஞ்சம் மெனக்கெடச் சொல்லுங்கள் சார் ; அதையும் நுழைக்க முடிகிறதா பார்ப்போம் !
Deleteகண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.
Deleteஅஜய் ராக்ஸ். முதல் அட்டை அட்டகாசம் என்று கருதுகிறேன். மற்றவையும் அருமை.
ReplyDelete2016 ன் டாப் 3;
ReplyDeleteதலையில்லா போராளி.
சரவமும் நானே.
என் பெயர் டைகர்.
இதில் சர்வமும் நானேதான் முதல் இடத்தை பிடித்திருக்க வேண்டியது.ஆனால் தலையில்லா போராளியின் மெகா சைஸும் சித்திரங்களும் தை முதல் இடத்திற்கு கொண்டுவந்து விட்டன.
என் பெயர் டைகரின் மிக கனமான கதை களமும், ஏகப்பட்ட கதை மாந்தர்களும்,கதையின் சம்பவங்களும்.., மொழியாக்கத்தின் போது நிச்சயம் உங்களை சிண்டை பிய்த்துக்கொள்ள வைத்திருக்கும்.ஆனால் படிக்கும் வாசகர்களுக்கு கேச சேதாரமின்றி,எளிதில் புரிந்து கொள்ள முடிந்ந உங்கள் மொழி மபயர்ப்புக்கு ஒரு ராட்சஸ சைஸ் பூமாலை.வெல்டன் சார்.
அது போல டெக்ஸ் வில்லர் போன்ற ஒரு மாஸ் ஹீரோவுக்கு,அவரின் தன்மைக்கேற்ற அனல் தெறிக்கும் பட்டாசு வசனங்களை சர்வமும் நானேவில் மிக ரசித்தேன்.
ஜேடர்பாளையம் சரவணகுமார் : //டெக்ஸ் வில்லர் போன்ற ஒரு மாஸ் ஹீரோவுக்கு,அவரின் தன்மைக்கேற்ற அனல் தெறிக்கும் பட்டாசு வசனங்களை சர்வமும் நானேவில் மிக ரசித்தேன்.//
Delete"சர்வமும் நானே" என்று மார்தட்டும் ஒரு நாயகருக்கு முதல் மரியாதை செய்திட நமக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அந்த வசன நடையில் தானே...? அதைக் கோட்டை விட்டுவிட்டால் ஆயுசுக்கு வறுத்த கறியோ ; பீன்சோ கிடைக்காது போய் விடுமே !!
@ ALL : கிராபிக் நாவல்கள் பற்றியதொரு இந்திய பார்வை !! - என்ற விதமாய் இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு ஸ்பெஷல் கட்டுரை வெளியாகியுள்ளது பாருங்களேன் !! அழகாய் இதனை செதுக்கியுள்ள எக்ஸ்பிரஸ் எடிட்டோரியல் டீமுக்கும், அதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கெடுத்த சென்னையைச் சார்ந்த feature writer Ms .ஜெயந்தி சோமசுந்தரத்துக்கும் நமது நன்றிகள் !!
ReplyDeleteLink : http://epaper.newindianexpress.com/1023546/The-Sunday-Standard-Magazine/04-12-2016#page/2/1
புத்தக அலமாரியுடன் உங்க போஸ் சூப்பர் எடிட்டர் சார்! (கொஞ்சம் சிரிச்சு வச்சிருக்கலாம் நீங்க. உங்களுக்கு மேலேயும் கீழேயும் இருக்கும் அம்மணிகள் என்னமா சிரிச்சுட்டிருக்காங்க பாருங்க!) ;)
DeleteCBSE பாடத் திட்டத்தில் கணிசமான எண்ணிக்கையில் கி.நா'கள் பரிந்துரைக்கப்பட்டிருப்பது வருங்காலத்தில் இந்திய காமிக்ஸ் துறையை இன்னும் வளமாக்கிடும்!
திடீரென்று ஒரு காமிக்ஸ்/கி.நா புரட்சி உருவாகிடவும் வாய்ப்புகள் இல்லாமலில்லை!
///திடீரென்று ஒரு காமிக்ஸ்/கி.நா புரட்சி உருவாகிடவும் வாய்ப்புகள் இல்லாமலில்லை!///
Deleteஉருவாகோணும்..! உருவாகோணும்..!!
Erode VIJAY : ஒண்ணா...ரெண்டா...எத்தினி கவுண்டர் படம் பார்த்திருப்போம்....? அப்புறமும் அந்த 'ரொமான்டிக் லுக்கை' எடுத்து விடாட்டி எப்புடி ?
Deleteமாதமொரு டெக்ஸ் நிச்சயம் தொடர வேண்டும்.அலுக்கவில்லை.
ReplyDeleteஅட்டையை எடுத்துவிட்டால் எல்லா கதையும் ஒன்னுதான் என யாரும் இனி சொல்லமுடியாத வகையில் இருந்தன கதை தேர்வுகள்.டெக்ஸ் தனியாகவோ,கார்ஸனோடோ, இல்லை தன் மொத்த டீமோடோ களமிறங்கிய கதைகள் அனைத்தும் அட்டகாச ரகம்.கெஸ்ட் ரோலில் வந்த குற்றம் பார்க்கின்,தற்செயலாய் ஒரு ஹீரோ கூட சிறப்பாகவே இருந்தன.டெக்ஸ் டிடெக்டிவ் பாணியில் கலக்கிய திகில் நகரில் டெக்ஸை மிகவும் ரசித்தேன்.
கணவாயின் கதை மட்டும்தான் திருஷ்டி பரிகாரம் போல் அமைந்துவிட்டது.
10. மிகச் சரியான திசையில் சரியான வேகத்தில் வண்டி பயணிப்பதாய் தெரிகிறது.அந்த சந்தா E என்ற ஆக்ஸிலேட்டரையும் சந்தா D என்ற ப்ரேக்கையும் நல்ல கன்டிசனில் வைத்துக் கொண்டோமேயானால் வண்டி ச்சும்மா பிச்சிகினு ஓடும். . .!!
ReplyDeleteKiD ஆர்டின் KannaN : "ஆங்...மாயாவி எல்லாத்திலேயும் 20 போட்டிருங்க...மத்த மறுபதிப்பு எல்லாத்திலேயும் 10 ...அப்புறம் டெக்ஸ் வில்லரிலே 10 ...மத்த புது புக்குலே ஒரு ரெண்டோ / மூணோ போட்டுக்கோங்க !! "
Deleteஇது தான் நிறைய புத்தக நிலையங்களின் பொதுவான ஆர்டர் விபரம் !! சந்தா D -க்கு brake போட்டால், என்மண்டையை break பண்ணிவிடுவார்கள் !!
என்னை பொறுத்தவரை கார்ட்டூன்களில் லக்கிலூக்கை தவிர மற்றவை அதிக சுவாரஸ்யம் ஏற்படுத்தவில்லை.லியானார்டோவெல்லாம் பத்து பக்கங்களுக்குமேல் புரட்டமுடியவில்லை.கிளிப்டனும் அப்படியே....!
ReplyDeleteவேறு பாணிகளுக்கு தாராளமாய் கவனம் தரலாம்.
மறுபதிப்புகள்...:சூப்பர் சார்..!ஏற்கனவே பலமுறை படித்த கதைகள்தான் என்றாலும் ரொம்ப தரமாக சேகரிப்புக்கு உதவுகிறது.காமிக்ஸ் க்ளாஸிக்ஸில் வராத கதைகளையும் போட்டால் சந்தோஷம்.கைக்குவந்தவுடன் முதலில் படிப்பது மறுபதிப்புகளைத்தான்.
ReplyDeleteடப்ஸா இதழ்கள்....:
ReplyDeleteகார்ட்டூன்கள்தான்.
ஏமாற்றமளித்த இதழ்கள்...!
இரண்டு இருக்கின்றன.அவை இரண்டுமே சிறப்பிதழ்கள் என்பதுதான் துரதிர்ஷ்டவசமானது.
முதலாவது..லயன் 32 ஆவது ஆண்டு மலர்.வளவளா கொழகொழா பெட்டி பார்னோவ்ஸ்கியும்,துண்டும் துக்கடாவுமான கேப்படன் பிரின்ஸும் (அதில் ஏற்கனவே வந்த சிறுகதைகள் வேறு.முழுநீள மறுபதிப்பு கதை ஏதோவொன்றை போட்டிருக்கலாம்)கொஞ்சமும் ரசிக்கமுடியவில்லை. ரிப்போர்ட்டர் ஜானி மட்டுமே ஒரு சின்ன ஆறுதல்.
இரண்டாவது ஈரோட்டில் இத்தாலியும் ஏமாற்றமளித்த இதழே.இப்பேர்பட்ட சிறப்பிதழுக்கு கொஞ்சம் கூட நியாயம் சேர்க்காத டெக்ஸின் கணவாயின் கதையும்,மேஜிக் விண்டின் மிகச்சுமாரான கதையும் சிறப்பு சேர்க்கவில்லை.டைலனும் ராபினுமே இந்த இதழை காத்த புண்ணியவான்கள்.
ஜேடர்பாளையம் சரவணகுமார் : நடப்பாண்டின் மேஜிக் விண்ட் கதையினை fantasy -யின் ஒரு அழகான புள்ளியாய் நான் பார்த்தேன் ; ஆனால் அது எடுபடாது போனதில் ஆச்சர்யமே எனக்கு !
Deleteமேஜிக் விண்ட் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
Delete9. சந்தா அனுபவம், முந்தைய ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் சிறப்பாகவே இருந்தது. ஒவ்வொரு மாதமும் பார்சலை ஓடியோடிக் கைப்பற்றி, பரரப்புடன் பார்சலைப் பிரித்து, பளபளப்பான புத்தகங்களை வாஞ்சையுடன் வருடும் சுகத்துக்கு ஈடுஇணையே கிடையாது. நன்றிகள் சார். ஒரேயொரு மாதம் மட்டும் DTDC சோதித்துவிட்டதைத் தவிர்த்து இந்த ஆண்டின் சந்தா அனுபவமும் முழுத் திருப்தியே சார்.!!
ReplyDelete8 . ஜேஸன் ப்ரைஸ் ரேட்டிங் 15/10
புயல் பயல் பென்னி ரேட்டிங் 10/10.
பென்னி தொடருவான் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது. பிப்ரவரியில் ஜேஸன் முடிந்துவிட்டாலும், புதுப்பபுது தொடர்களுக்கான திறவுகோலாக இருப்பார் என்றும் நம்புகிறேன். .
KiD ஆர்டின் KannaN : //ஜேஸன் ப்ரைஸ் ரேட்டிங் 15/10 //
ReplyDeleteஅடடே !!
கேள்வி 1.
ReplyDeleteசர்வமும் நானே.
எழுதப்பட்ட விதி
என் பெயர் தங்க தலைவன்
ரம்மி நீங்களா ......நம்பமுடியவில்லை...இல்லை....இல்லை.....
Deleteமாற்றம்... நல்ல முன்னேற்றம்... வெல்டன் ரம்மி...
DeleteRummi XIII : அடடே !!
Deleteடைகர் ரசிகர்கள் உண்மையை பேசியே பழக்கப்பட்டவர்கள்...
Deleteஎல்லா நண்பர்களுக்கும் வணக்கம்! இதோ வந்திடலாம்னுதான் போனேன், கொஞ்சம் தாமதமாயிடுச்சு. ஹிஹி!
ReplyDeleteநண்பர் அஜயின் இளவரசி ரேப்பர்ஸ் அனைத்தும் அட்டகாசம். என் தேர்வு 2.
இனி கேள்விகளுக்குள்:
1 டாப்3
என் பெயர் டைகர்
சர்வமும் நானே
வானம் தந்த வரம்
சிறப்புப்பரிசுகள்: இனியெல்லாம் மரணமே, பென்னி
2 மாதமொரு டெக்ஸ்:
பல இதழ்களும் சிறப்பு எனினும் ஒன்றிரண்டில் மறுபதிப்புகளுக்கு இணையாக குறட்டைவிட நேர்ந்தது. ஆகவே என் ரேங்க் B.
3 சந்தா C
சந்தா A, சந்தா டெக்ஸை விடவும் நான் அதிகம் எதிர்பார்ப்பது, விரும்புவது, ரசிப்பது எல்லாம் Cதான். சந்தா Cக்கு என் ரேங்க் A+
4 மறுபதிப்பு
படித்தது 10ல் 2. தூக்கமாத்திரை சப்ளையர்ஸுக்கு என் ரேங்க் C-
(சேகரிப்புக்காகவே வாங்குகிறேன். 2017லும் முழு சந்தா தொடர்ந்துள்ளேன். 2018லும் தொடர்ந்தால் மறுபதிப்பை மட்டும் தவிர்ப்பேன்)
5 சந்தோஷ தருணம்
சென்னை சந்திப்பு. வெயிலில் வெந்தாலும் புதிய நண்பர்கள் பலரையும் சந்தித்ததால்! (ஈரோட்டைத்தான் மிஸ் பண்ணிட்டேனே!)
6 பெஸ்ட் ரேப்பர்ஸ்
கேள்வி ஒன்றுக்கான அதே பதில்தான்.. செமல்ல!
என் பெயர் டைகர்
சர்வமும் நானே
வானம் தந்த வரம்
மொக்கை ரேப்பர்ஸ்:
இனியெல்லாம் மரணமே உள்ளட்டை, மறுபதிப்புகளில் பல!
7 டப்பா இதழ்கள்
சாய்ஸ்!
8 ஜேஸன், பென்னி
இருவருக்குமே A+
9 சந்தா அனுபவம்
10
10 ஓவரால் பயணம்
A
(ஸ்மர்ப் ரசிக நண்பர்கள் கவனத்துக்கு: ஸ்மர்ப்ஸ்ரன் எனும் ஸ்மார்ட்போன் கேம், ப்ளேஸ்டோரில் கிடைக்கிறது. அழகழகான லொகேஷன், க்யூட் ஸ்மர்ப்ஸ் என கொஞ்ச நாள் திளைக்கலாம்.)
பின்குறிப்பு: ஜேஸன் மூன்றையும் ஒன்றாக படிக்கலாம் எனும் நோக்கத்தில் படிக்காமல் வைத்துள்ளேன். இருப்பினும், இதுபோன்ற ஷார்ட் ஆல்பங்கள், கிராபிக்ஸ் நாவல்கள் வரவேற்பு, அட்டைப்படம் ஆகியவற்றை வைத்து ரேங் தந்துள்ளேன்.
Deleteவெல்கம் பேக் நண்பரே ஆதி...
Deleteநலமா???
லேசான தாமசந்தானே...ஹி..ஹி...சற்றே காத்திருந்தால் ஒரு வருடம் கழித்தான நிலையில் மீண்டும் சென்னையில் சந்தித்து இருக்கலாமே..
நல்வரவு ஆதி மீரா அவர்களே
Delete😊
Deleteவெல்கம் பேக் நண்பரே ஆதி
Deleteடியர் விஜயன் சார் ...
ReplyDeleteஇனிய காலை வணக்கம் ....
1) உங்கள் பார்வைகளில் 2016-ன் Top 3 இதழ்கள் எதுவோ ?
சர்வமும் நானே
என் பெயர் டைகர்
ஜேஸன் ப்ரைஸ்
2) ‘மாதமொரு TEX‘ என்ற பரிசோதனை
அட்டகாசம் – A
3) சந்தா C பற்றியும் ; காட்டூன் தனி track பற்றியும் உங்கள் எண்ணங்கள்
A – நிச்சயம் தொடர்ந்திட வேண்டும்!
4) Evergreen மறுபதிப்பு நாயகர்கள்
A – படித்தது – 10/10
5) “2016-ன் மறக்க முடியாத சந்தோஷத் தருணங்கள்”
ஈரோடு திருவிழா
சூப்பர் 6 அறிவிப்பு
6) 2016-ன் Top 3 ராப்பர்கள்
சர்வமும் நானே
ஒரு பட்டா போட்டி
சட்டத்திற்கொரு சவக்குழி
7) 2016-ன் TOP 3 டப்ஸா இதழ்கள்
லியனார்டோ
பிரின்ஸ் சிறுகதைகள் இன் ஆண்டு மலர்
8) ஜேஸன் ப்ரைஸ் & பென்னி
ஜேஸன் ப்ரைஸ் - 10/10
பென்னி - 10/10
9) சந்தா அனுபவம்
10/10
10) 2016-ல் பயணம்
A – சரியான திசையில் தான் வண்டி ஓடுகிறது !
திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்
5) “2016-ன் மறக்க முடியாத சந்தோஷத் தருணங்கள்”
Deleteஈரோடு திருவிழா
சூப்பர் 6 அறிவிப்பு
என் பெயர் டைகர்
:)
திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன் : உங்களது இளவலை சந்திக்க முடிந்தது இந்தாண்டின் எனக்கானதொரு அழகான தருணமென்பேன் சார் !
Deleteஉண்மை ... இதை எப்படி மறந்தேன் .... ஒவ்வொரு வருடமும் இதைப் போல ஒரு விசிட் அடிக்க திட்டம் இருக்கு சார் _/\_
Deleteநண்பர் அஜயின் இளவரசி ரேப்பர்ஸ் அனைத்தும் அட்டகாசம். என் தேர்வு 1 (இது காப்பி பேஸ்ட் இல்லை)
ReplyDelete7. டப்ஸா இதழ்கள் :-
ReplyDelete(மனசாட்சிக்கு விரோதமில்லாமல்)
1. காணாமல் போன கைதி உள்ளிட்ட சில மறுபதிப்புகள்
2.சட்டமும் சுருக்குக் கயிறும்
3 .பெட்டி பார்னோவ்ஸ்கி (ப்பூபூபூவ்வ்வ் கண்ணீர் மல்க டைப்புகிறேன். .ப்ப்பூபூவ்வ்வ்)
6. டாப் ரேப்பர்கள்
1. லக்கி க்ளிசிக்ஸ்
2.என் பெயர் டைகர்
3 .ஈரோட்டில் இத்தாலி
சுமாரான ரேப்பர்ஸ்
1. இனியெல்லாம் மரணமே உள்ளட்டை மட்டும் (மேல் கவர் சூப்பர்)
2 .மறுபதிப்புகளில் பல.
KiD ஆர்டின் KannaN : // டப்ஸா இதழ்கள் :- 2.சட்டமும் சுருக்குக் கயிறும் //
Deleteஇப்போ பார்த்து MV சாரைக் காணோமே ?! ஆட்டோவில் கிளம்பியிருப்பாரோ மேச்சேரி வரைக்கும் ?
///இப்போ பார்த்து MV சாரைக் காணோமே ?! ஆட்டோவில் கிளம்பியிருப்பாரோ மேச்சேரி வரைக்கும் ?///
Deleteயார் வந்து கேட்டாலும் வெளியூர் போயிருக்காரு, திரும்பிவர நாலஞ்சி மாசம் ஆகும்னு சொல்லச்சொல்லி வீட்டில் சொல்லிவிட்டேன் சார். .!
பின்குறிப்பு : Insurance ம் எடுத்து வைத்துவிட்டேனே!! :-)
5 .மறக்க முடியாத தருணங்கள்
ReplyDeleteசென்னை, ஈரோடு திருவிழாக்கள்.
Absolute classics அறிவிப்பு.
அம்மு மெஸ் லஞ்ச் :-) .
4. மறுபதிப்புகள் எல்லாவற்றையும் எப்படியாவது படித்துவிடுவேன். என்ன. .. நாலைந்து பக்கங்களுக்கு ஒருமுறை தூங்கியெழ வேண்டியிருக்கும் அம்புட்டுதேன். .!! விற்பனையில் பட்டையை கிளப்புவதால் மறுபதிப்புகள் தவிர்க்க முடியாதவை என்பதை ஏற்றுக்கொண்டாலும், இன்னும் எண்ணிக்கை அதிகமாகிவிடுமோ என்ற அச்சமும் மனதை ஆட்டிப்படைக்கவே செய்கிறது. .!
KiD ஆர்டின் KannaN : அச்சம் தவிர்ப்போம் ; கொட்டாவிகள் குறையுமே தவிர, ஜாஸ்தியாகிட வாய்ப்புகளில்லை !
Delete\\எண்ணிக்கை அதிகமாகி விடுமோ\\
Deleteஎனக்கு இதே பயம் டெக்ஸ் வில்லரிடம்.
இரண்டு பேருக்கும் ஒரே ஒற்றுமை...விற்பனையில் டாப்.....!
Delete1.இந்த வருடம் டாப் 3
ReplyDelete1. சர்வமும் நானே,
2.எழுதப்பட்ட விதி,
3.இனி எல்லாம் மரணமே.
2.மாதமொரு டெக்ஸ்
அட்டகாசம்
3. கார்ட்டுன் தனி ட்ராக்
நிச்சயம் தொடர்ந்திட வேண்டும்
4. மறுபதிப்புகள்
படித்தது 10/10
5. மறக்க முடியாத சந்தோஷத் தருணங்கள்
1.ஈரோட்டில் ஒரு திருவிழா-நமது நமது நண்பர்களின் சங்கமம்,
2.தலையில்லாமல் போராளியை கையிலேந்திய தருணம்,
3.2௦17 அட்டவணை அறிவிப்பு.
6. டாப் 3 அட்டைப்படம்
மிகக் கடினமான கேள்வி,
1.நெஞ்சில் ஒரு நட்சத்திரம் - காமன்சே,
2.துரோகத்திற்க்கு முகமில்லை,
3.சர்வமும் நானே.
7. இந்த வருடத்தின் டப்ஸா இதழ்கள்
1.இரத்த படலம் - The End,
2.ஜீனியஸ் உறங்குவதில்லை,
3.பிரியமுடன் ஒரு பிணைக்கைதி.
8. இந்த வருடத்தின் சிறந்த அறிமுகம்
1.ஜேஸன் பிரைஸ்,
9. இந்த ஆண்டின் சந்தா அனுபவம்,
இரண்டு நிகழ்வுகளை தவிர வேறு எதுவும் சங்கடங்கள் நேரவில்லை,அடுத்த ஆண்டு இது நிகழாது என்று நம்பிக்கை உள்ளது,மற்றபடி தங்களது சேவை மேம்பட்டுள்ளது.
10. கதைத் தேர்வு
சரியான திசையில் தான் வண்டி ஓடுகிறது.
Arivarasu @ Ravi : //இந்த வருடத்தின் டப்ஸா இதழ்கள்: பிரியமுடன் ஒரு பிணைக்கைதி.//
Deleteபோச்சுடா !! புது வருஷத்திலேயாச்சும் சுதாரிச்சுக்கோடா ரி.டி.கே !!
இளவரசி அட்டைப்படத்தில் முதலும்,மூன்றும் நன்றாக உள்ளது,என்ன இளவரசி முகம்தான் பார்க்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு.
ReplyDelete3. கார்ட்டூன் தனித்தடம் :-
ReplyDeleteஎன்னைப்பொருத்தவரை கார்ட்டூன் இல்லையேல் காமிக்ஸ் இல்லை ..!
நிச்சயம் தொடர்ந்திடவேண்டும். இன்னும் அதிகப்படுத்துவதைப்பற்றி வேண்டுமானால் யோசிப்போமே சார். :-)
2 .மாதமொரு டெக்ஸ்.
A அட்டகாசம். . . இன்னும் கொஞ்சம் எண்ணிக்கையை குறைக்கலாம் என்பதற்கும் என்னுடைய ஆதரவு உண்டு. .
இரண்டு மூன்று கதைகளாக சேர்த்து குண்டு குண்டாக வெளியிட்டு புத்தகங்களின் எண்ணிக்கையை குறைக்கலாமே தவிர கதைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டாமே.
KiD ஆர்டின் KannaN : ஆட்டைத் தூக்கிக் குட்டியோடு போட்டாலும்...குட்டியைத் தூக்கி ஆட்டோடு போட்டாலும்...கணக்கு ஒண்ணுதானே நண்பரே ?
Deleteஹி,ஹி.
Delete/// ஆட்டைத் தூக்கிக் குட்டியோடு போட்டாலும்...குட்டியைத் தூக்கி ஆட்டோடு போட்டாலும்...கணக்கு ஒண்ணுதானே நண்பரே ?///
Deleteஅதேதான் சார். ஆடு, குட்டி என்று எப்படி வேண்டுமானாலும் போட்டு பிரியாணியை தயார் செய்தால் போதுமே.! எங்களுக்கு முக்கியம் பிரியாணி மட்டும்தானே சார்..! :-)
KiD ஆர்டின் KannaN : அட..ஞாயிற்றுக் கிழமை அதுக்குள்ளாறவே பிரியாணி வாசனை அடிச்சிடுச்சா ?
Deleteஇந் வாரம் டயட்டில் இருப்பதால் சிக்கன் பிரியணி வித் லெக் பீஸ் மட்டும்தான் சார். .!
Delete--// என்னைப்பொருத்தவரை கார்ட்டூன் இல்லையேல் காமிக்ஸ் இல்லை //--
Deleteகார்ட்டூன் கதைகளில் வைகிங்ஸ் கதைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த மாத ரேட்டிங்:
ReplyDelete1.நீதிக்கு நிறமேது - ௦9/1௦,
2.வானம் தந்த வரம் - ௦9/1௦,
3.மறைக்கப்பட்ட நிஜங்கள் - 9.5/1௦,
4.லக்கி லூக் - 1௦/1௦.
என்ன ரவி, 0 வுக்கு பதிலா o வை டைப்பியிருக்கிங்க. !!
Deleteஜஸ்ட் மிஸ்.
Deleteஅய்யா லக்கி லுக் classics online purchase pana mudiyadha???
ReplyDeleteTop 3 books
ReplyDelete1 en peyar tiger
2 jason Brice
3 ini ellam maranam..
1. எனது முதல் கேள்வியானது : உங்கள் பார்வைகளில் 2016-ன் Top 3 இதழ்கள் எதுவோ
ReplyDeleteஇனி எல்லாம் மரணமே
நெஞ்சில் ஒரு நட்சத்திரம்
ஒரு பட்டாப் போட்டி/நின்று போன நிமிடம்கள்
(டெக்ஸ் ஒரு டாப் செல்லிங் நாயகன், அவரை இங்கு வரிசை படுத்த விரும்பவில்லை)
2. ‘மாதமொரு TEX‘ என்ற பரிசோதனையை எவ்விதம் பார்த்திடுவீர்கள்?
குட்... ஆனால் கொஞ்சம் போல எண்ணிக்கையைக் குறைத்தால் தப்பில்லை ! – B
3. காட்டூன் தனி track பற்றியும் உங்கள் எண்ணங்கள் என்னவோ ?
A – நிச்சயம் தொடர்ந்திட வேண்டும்!
4. இது Evergreen மறுபதிப்பு நாயகர்கள் பற்றிய கேள்வி ! இந்தாண்டின் 10 மும்மூர்த்தி + ஸ்பைடர் மறுபதிப்புகளுள் நீங்கள் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ?
A – படித்தது – 10/10
5. 2016-ன் பல தருணங்கள் நமக்குப் பளீரென்று நினைவில் தங்கியிருக்குமென்ற நம்பிக்கை எனக்குள்ளது !
ஈரோடு புத்தக திருவிழா மறக்க முடியாத தருணம், நமது விட்டு விசேஷம் போல் களைகட்டியது!
டெக்ஸ் படம் போட்ட T-ஷர்ட் போட்டு இந்த விழாவை சிறப்பித்த விதம்!
6. 2016-ன் Top 3 ராப்பர்களாகத் தோன்றுவது எவையாக இருக்குமோ ? வரிசைப்படுத்திடலாமே ?
எழுதப்பட்ட விதி
நெஞ்சில் ஒரு நட்சத்திரம்
வானம் தந்த வரம்/ஜீனியஸ் உறங்குவதில்லை
7. 2016-ன் TOP 3 டப்ஸா இதழ்கள்
ரத்த படலம் - தி end
ரத்த படலம் - போட்டி போனச்கி
பாலைவனத்தில் பயணகைதி
8.இரு மாறுபட்ட கதைபாணிகளின் பிரதிநிதிகள் ! இவர்களை rate செய்வதெனில் உங்களின் மதிப்பெண்கள் எவ்வளவாக இருக்குமோ ?
A – ஜேஸன் ப்ரைஸ் 8.5/10
B – சுட்டிப் புயல் பென்னி 7/10
9. "சந்தா அனுபவத்தை” எவ்விதம் பார்த்திடுவீர்களோ ?
இந்த வருடம் DTDC நமது புத்தகம் வெளியான மறுநாளே கைகளில் கொடுத்து விட்டார்கள்! இந்த வருடம் 10 பக்கம்களில் சில கதைகளை சேர்த்து கதம்பமாக நியூஸ் பேப்பர் வடிவில் ஒரு இணைப்பு கொடுத்தீர்கள், நன்றாக் இருந்தது. ஆனால் அது தொடரவில்லை என்பது மன வருத்தம்.
10.இந்தத் தொடர் பயணத்தில் எங்களை 2016-ல் எவ்விதம் rate செய்வீர்கள்- ப்ளீஸ்?
A – சரியான திசையில் தான் வண்டி ஓடுகிறது !
Parani from Bangalore : // 2016-ன் Top 3 இதழ்கள் எதுவோ ?
Deleteஇனி எல்லாம் மரணமே
நெஞ்சில் ஒரு நட்சத்திரம்
ஒரு பட்டாப் போட்டி/நின்று போன நிமிடம்கள்//
செம வித்தியாசமான தேர்வுகள் !!
ஒரு சிறு திருத்தும்
Delete7. 2016-ன் TOP 3 டப்ஸா இதழ்கள்
ரத்த படலம் - தி end
ரத்த படலம் - போட்டி போனச்கி
காற்றில் கரைந்த காதலி (ஈரோட்டில் இத்தாலி புத்தகத்தில் வந்த) என்னை காணாமல் போக வைத்து விட்டார். அதே போல் இந்த வருட magic-wind கதை பிடிக்கவில்லை, இவரின் ரசிகராக நான் இருந்தாலும். இவரின் கதை தேர்வில் கொஞ்சம் கவனம் தேவை.
Top covers
ReplyDelete1 துரோகத்திற்கு முகமில்லை
2 சர்வமும்
நானே
3 ஜேசன் ப்ரைஸ்
1. டாப் 3 இதழ்கள். :-
ReplyDeleteஇன்றைய பரிட்சையில் இதுதான் ரொம்பவும் கடினமான கேள்வியாக தெரிகிறது.
ஏனெனில் ஏறக்குறைய எல்லா இதழ்களுமே டாப்பாக அமைந்திட்ட ஒரு வருடத்தில் டாப் 3ஐ மட்டும் தேர்வு செய்வதென்பது சாதாரண விசயமாக படவில்லை. எனினும் ஒவ்வொரு சந்தாவுக்கும் ஒன்றிரண்டு டாப் இதழ்களை தர்மசங்கடத்துடன் தேர்வு செய்திருக்கிறேன்.
சந்தா A
1. சர்வமும் நானே
2. எழுப்பட்ட விதி & மறைக்கட்ட நிஜங்கள்.
3. விதி எழுதிய திரைக்கதை & கடன் தீர்க்கும் நேரமிது & ஈரோட்டில் இத்தாலி
சந்தா B
1. தலையில்லாப் போராளி
2. நின்று போன நிமிடங்கள் & இனி எல்லாம் மரணமே
3.சட்டத்திற்கொரு சவக்குழி & துரோகத்துக்கு முகமில்லை & நீதிக்கு நிறமேது
சந்தா C
1. ஆர்டினின் ஆயுதம்
2. பட்டாப்போட்டி & திருடனும் திருந்துவான்
3. கோடியும் ஒரு கேடியும் & வானம் தந்த வரம் & பிரியமுடன் ஒரு பிணைக்கைதி
சந்தா D
1. பழி வாங்கும் புயல்
(ஹிஹி. . இந்த பதில் கொஞ்சம் ஈஸியா இருந்துச்சி.)
அத்தோடு டாப் இதழ்களில் லக்கி க்ளாசிக்ஸையும் சேர்த்துக்கொள்வோம்.
முடிந்தவரை குறைவான கதைகளை குறிப்பிட்டு இருக்கிறேன். :-)
ரகத்துக்கு அரை டஜன் கதைகளைத் தேர்வு செய்து விட்டு - "முடிந்தவரை குறைவான கதைகளை குறிப்பிட்டு இருக்கிறேன்." என்று பில்டப் வேறயா ?
Deleteஇந்த மாத இதழ்கள் மினி பார்வை,
ReplyDelete1.நீதிக்கு நிறமேது - விறுவிறுப்பான,சற்றே அழுத்தமான கதைக்களம்,மொழிபெயர்ப்பு கதையின் முக்கிய பலம்,சில இடங்களில் லாஜிக் சொதப்பல்கள் இருந்தாலும் டெக்ஸ் எனும் கதை நாயகனின் பலம் அதை மறக்க செய்கிறது,ஆண்டின் இறுதியில் வேகமான ஒரு ராக்கெட்.
2.வானம் தந்த வரம் - ஸ்மர்ப்ஸ்களால் காமெடியில் மட்டும் அல்ல,சென்டிமென்ட்லும் கலக்க முடியும் என்று நிருபிக்கும் கதைகளம்,வாசிக்க சுவாரசியமான இதழ்,நல்லதொரு மொழிபெயர்ப்பு,
3.மறைக்கப்பட்ட நிஜங்கள் - கதையை கையில் எடுத்தால் புல்லட் இரயிலில் அமர்ந்தது போல ஒரு பீலிங்,என்ன ஒரு வேகம்,டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்,இறுதி பாகத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
4.லக்கி லூக் - மொழிபெயர்ப்பில் சற்றே மாற்றம் செய்துள்ளிர்கள் போல,பிரிண்டிங் தரம் அசத்தல்,வர்ணக் கலவைகளும் அசத்துகின்றன,ஹார்ட் பைண்டிங்கில் அருமையான ஒரு கலெக்சன்.
Arivarasu @ Ravi : //லக்கி லூக் - மொழிபெயர்ப்பில் சற்றே மாற்றம் செய்துள்ளிர்கள் போல//
Deleteநிறையவே மாற்றங்கள் ; அவசியப்பட்ட மாற்றங்கள் !
2. ‘மாதமொரு TEX‘ என்ற பரிசோதனையை எவ்விதம் பார்த்திடுவீர்கள்?
ReplyDeleteடெக்ஸ் ஒரு அசகாய சூரர்தான்.. ஆனாலும் குறைவாக இருந்தால் போதும். எனவே B
3. காட்டூன் தனி track பற்றியும் உங்கள் எண்ணங்கள் என்னவோ ?
A – நிச்சயம் தொடர்ந்திட வேண்டும்!
4. இது Evergreen மறுபதிப்பு நாயகர்கள் பற்றிய கேள்வி ! இந்தாண்டின் 10 மும்மூர்த்தி + ஸ்பைடர் மறுபதிப்புகளுள் நீங்கள் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ?
எல்லவற்றையும் வாங்கினேன். ஸ்பைடர் தவிர இதர கதைகள் தேவலைம்
5. 2016- ஈரோடு புத்தக விழா.. செம..
6. 2016-ன் Top 3 ராப்பர்களாகத் தோன்றுவது எவையாக இருக்குமோ ? வரிசைப்படுத்திடலாமே ?
சர்வமும் நானே
துரோகத்திற்கு முகமில்லை
ஜசன் ப்ரைஸ்
1. எனது பார்வைகளில் 2016-ன் Top 3 இதழ்கள் :
ReplyDeleteநின்று போன நிமிடங்கள்
இனி எல்லாம் மரணமே
எழுதப்பட்ட விதி
கூடுதலாக ஆர்ட்டினின் ஆயுதம்.
(தலை யின் கதைகளை பொறுத்தவரை இந்த எண்களுக்குள் அடங்காது)
2. ‘மாதமொரு TEX‘ என்ற பரிசோதனையை எவ்விதம் பார்த்திடுவீர்கள்?
அது பரிசோதனை இல்லை. அதுவே சென்டர் அக்ஸில். கண்டிப்பாக தொடரட்டும்.
3. காட்டூன் தனி track பற்றியும் உங்கள் எண்ணங்கள் என்னவோ ?
நிச்சயம் தொடர்ந்திட வேண்டும்! (தாத்தா மற்றும் ரின் டின் மறுபரிசீலனை செய்யலாம்)
4. இது Evergreen மறுபதிப்பு நாயகர்கள் பற்றிய கேள்வி ! இந்தாண்டின் 10 மும்மூர்த்தி + ஸ்பைடர் மறுபதிப்புகளுள் நீங்கள் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ?
மறுபதிப்பு கதைகளை வாங்குவதோடு சரி... பல கதைகளை இன்னும் படிக்கவில்லை.
5. 2016-ன் பல தருணங்கள் நமக்குப் பளீரென்று நினைவில் தங்கியிருக்குமென்ற நம்பிக்கை எனக்குள்ளது !
கதை தலைப்புகளில் கொண்டுவந்த மாற்றம். மிக அருமையாக அமைத்தது.
சூப்பர் 6 விலையில் உருவான மாறுபட்ட கருத்துக்களை (நான் உட்பட) மிக அழகாக கடந்து வந்தது.
தலையில்லா போராளியை கையில் ஏந்திய அழகான தருணம் .
6. 2016-ன் Top 3 ராப்பர்களாகத் தோன்றுவது எவையாக இருக்குமோ ? வரிசைப்படுத்திடலாமே ?
எழுதப்பட்ட விதி
துரோகத்திற்கு முகமில்லை
பாலைவனத்தில் பணயக்கைதி
ரத்தப்படலாம்.
7. 2016-ன் TOP 3 டப்ஸா இதழ்கள்
பிரியமுடன் பிணைக்கைதி
திருடனும் திருந்துவான் (ரின் டின் வசனங்கள்)
ஜீனியஸ் உறங்குவதில்லை...(துக்கடா கதைகளால்)
8.இரு மாறுபட்ட கதைபாணிகளின் பிரதிநிதிகள் ! இவர்களை rate செய்வதெனில் உங்களின் மதிப்பெண்கள் எவ்வளவாக இருக்குமோ ?
A – ஜேஸன் ப்ரைஸ் : மிக நன்று
B – சுட்டிப் புயல் பென்னி : நன்று
9. "சந்தா அனுபவத்தை” எவ்விதம் பார்த்திடுவீர்களோ ?
இந்த வருடம் நான் சந்தா செலுத்தவில்லை
10.இந்தத் தொடர் பயணத்தில் எங்களை 2016-ல் எவ்விதம் rate செய்வீர்கள்- ப்ளீஸ்?
சரியான திசையில் தான் வண்டி ஓடுகிறது !
சிம்பா : //‘மாதமொரு TEX‘ என்ற பரிசோதனையை எவ்விதம் பார்த்திடுவீர்கள்?
Deleteஅது பரிசோதனை இல்லை. அதுவே சென்டர் அக்ஸில். கண்டிப்பாக தொடரட்டும்.//
நெத்தியடி !
அஜய் சார் ....அட்டகாசம் ....எனக்கு இரண்டு ...மூன்று அருமையாக படுகிறது....அதனை அட்டைப்படத்தில் வெளியிட்டால் சூப்பர் சார் ..
ReplyDeleteலக்கி க்ளாசிக்ஸ் :-
ReplyDeleteAbsolute classic வரிசையின் முதல் இதழே தோனியின் Helicopter shot ஆக stadium த்தை விட்டே பந்து வெளியேறிய Sixerஆக அமைந்துவிட்டது. தொப்பித்தூக்கும் படங்கள் பல ஆயிரங்கள் சார்.!!
96 பக்கங்கள் மட்டுமே கொண்ட இதழுக்கு ஹார்ட் கவர் என்பது தோட்டக்காரருக்கு கூலிங்க்ளாஸ் போட்டது போலிருக்குமோ என்ற சஞ்சலம் என் மனதில் இருந்ததை மறுக்கமுடியாதுதான் . ஈரோட்டில் இதுகுறித்து தங்களிடம் கேட்டபோது, புக் வெளியான பிறகு உங்க கருத்தை மாற்றிக்கொள்வீர்கள் என்று சொல்லியிருந்தீர்கள் சார். பார்சலை பிரித்து முதலில் லக்கி க்ளாசிக்ஸை கையில் ஏந்திய மறு கணமே நூற்றுக்கு நூறு மாற்றிக்கொண்டேன் சார்.
( வில்லாய் வளைந்து செலுத்தும் மரியாதையை ஏற்றுக்கொள்ளவும். அதான் சார் bow : -) )
ஜெஸ்ஸி ஜேம்ஸ் :-
அமெரிக்க ராபின் ஹூட் ஆக நினைத்து ஜெஸ்ஸி செய்யும் கோணங்கித்தனங்களும், சேக்ஸ்பியரை மேற்கோள் காட்டியே எப்போதும் பேசும் ஃப்ராங்கும், தண்டவாளத்தை வளைத்து ட்ரெய்னை ஊருக்குள் ஊடுருவ வைக்கும் கோலியும் சேர்ந்து கதையை கலகலவென நகர்த்துகிறார்கள். போதாக்குறைக்கு இந்த பிங்க்கர்ட்டன் ஆசாமிகள் வேறு தங்கள் பங்கிற்கு கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். குதிரையின் முதுகில் தொடங்கி கர்சீப், ஹேர்கட் என அனைத்தாலும் போலிஸ்காரர்கள் என்ற அடையாளத்தை வெளிப்படுத்திக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் மப்டியில் வந்திருப்பதாக பீற்றிக்கொள்வதும், நாங்க போலிஸ்னு எப்படி கண்டுபிடிச்சாங்கன்னே தெரியலை என்று புலம்புவதும் ஹிஹி ரகங்கள்..
ராபின்ஹூட் போல மரத்தின் மேல் ஒளிந்திருப்பது, கொள்ளையடித்த பணத்தை ஏழைக்கு கொடுத்ததும் அவன் பணக்காரனாகிவிட, உடனே அவனிடமிருந்து வழிப்பறி பண்ணுவது என்று அப்பாவித்தனமும் முரட்டுத்தனமும் ஒருங்கே அமைந்த ஜெஸ்ஸியும், கோலியின் வழக்கை நத்திங் கல்ச் நீதித்துறை விசாரிக்கும் விதமும், குதிரை வண்டி கணக்காய் ட்ரெய்னை தெருவுக்குள் கொண்டுவந்து நிறுத்துவதும் என மீண்டும் மீண்டும் படிக்கவைக்க சிரிக்கவைக்க ஏராளமான விசயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பான ஒரு விசயம் "தொப்பிக்கட்டு ஹோட்டல் " . . ஹாஹாஹா..!!
ஜெஸ்ஸி ஜேம்ஸ் - பிடிங்க அப்ளாஸ்.
கோச் வண்டியின் கதை :-
Deleteலக்கிலூக் கதைகளில் எனக்கு ரொம்பவும் பிடித்தமான கதையிது. எண்ணற்ற முறைகள் ஏற்கனவே படித்திருந்தாலும் மூச்சிருக்கும் வரை மறுக்கா மறுக்கா படிக்கத்தூண்டும் கதையிது.
லக்கியுடன் பயணம் செய்யும் ட்ரைவர் ஹாங்க்புல்லி, ஸ்காட், ஸ்டப்பிள், ஆலிவர் அரபெல்லா பிலிம்ஸி தம்பதியினர் , போட்டோகிராபர் ஜெர்ரி , (போலி) ஃபாதர் அனைவரும் நினைவிலிருந்து நீங்காத பாத்திரப்படைப்புகள்.
வழிப்பறி செய்ய வந்து தூங்கிவிடும் நபர், ஹேய் நில்லு என்று பள்ளத்தில் வண்டியை நிறுத்த முயலும் நபர், ஜெர்ரியின் யாரும் அசையக்கூடாது என்ற சத்தத்தில் மாட்டிக்கொள்ளும் நபர் (எத்தனை முறை படித்தாலும் வாய்விட்டு சிரிக்கும் இடம் இது) , என்று கதைநெடுக வழிப்பறி கொள்ளையர்களின் காமெடிகளுக்கு அளவே கிடையாது. உச்சகட்டமாக ப்ளாக் பார்ட் ...,! கவிதை எழுதிக்கொணடு்வர அவகாசமில்லாததால் பாடியே காண்பித்து வழிப்பறி செய்யும் விதம் செம்ம கலகலப்பு.
"குள்ளநரிக் கூட்டத்துக்கும் மொள்ளமாரிக் கும்பலுக்கும் பொல்லாத்தனம் சொல்லித் தந்தவன் நான். " ஹாஹாஹா. .! ப்ளாக் பார்ட் நீ கவிஞன்யா. .!!
இன்றைய மெனு பீன்ஸும் கறியும்,
ஹோஹோ ஹோ ஹோஹோ - மாந்தீரிகர் நக்கலாக சிரிக்கிறார்,
ஏன், சான்பிரான்சிஸ்கோ வரைக்கும் நாங்களே தள்ளிட்டு போயிடுறோமே?
யாரும் அசையக்கூடாது.
போன்ற வெகு பொருத்தமான ஹாஸ்ய வசனங்களும் இக்கதையை இன்னும் பலமுறை படிக்கத்தூண்டும் காரணிகள் என்பது கண்கூடு.
கோச்சு வண்டியின் கதை - திகட்டவே போவதில்லை.
KiD ஆர்டின் KannaN : //கோச்சு வண்டியின் கதை - திகட்டவே போவதில்லை.//
Delete+101
KiD ஆர்டின் KannaN //96 பக்கங்கள் மட்டுமே கொண்ட இதழுக்கு ஹார்ட் கவர் என்பது தோட்டக்காரருக்கு கூலிங்க்ளாஸ் போட்டது போலிருக்குமோ என்ற சஞ்சலம் என் மனதில் இருந்ததை மறுக்கமுடியாதுதான் //
Deleteவெறும் 44 பக்கங்களுக்கே ஹார்ட் கவர் போட்டு தூள் கிளப்பும் பிரான்க்கோ-பெல்ஜிய மார்க்கெட்டை 30 + ஆண்டுகளாய்த் தான் பார்த்து வருகிறேனே நண்பரே ! அந்த தைரியம் தான் எனது உறுதியின் பின்னணி !
மறைக்கப்பட்ட நிஜங்கள் :-
ReplyDeleteஎழுதப்பட்ட விதியில் அடைந்த ஆச்சர்யம் கலந்த பரவசம் இன்னும் அதிகமாகிவிட்டது.
ஸ்டன்னிங்கான சித்திரங்கள்., பிடறியை பற்றியிழுக்கும் கதையோட்டம்., திடுக்கிடவைக்கும் திருப்பங்கள் .,நறுக்குத் தெறிக்கும் வசனங்கள், சூப்பர் சஸ்பென்ஸ், செம்ம த்ரில்லிங் இன்னும் என்னென்ன வார்த்தைகள் இருக்கின்றனவோ அத்தனையும் ஜேசனுக்கு சமர்ப்பிக்கிறேன்.
ஏற்கனவே இருக்கும் ஆச்சர்யங்களோடு, நான்கு தடியன்களை சமாளிக்கும் ஜெஃப்ரி, மார்கன் ஃபடாயின் இருப்பிடத்தை நெருங்கியதும் கருவிழிகள் மேலேறி கண்கள் வெள்ளையாக காட்டும் க்ளோ, அதே நேரம் தொலைவில் இருக்கும் டேவிட் க்யூ என்ற ஆறடிக்கூந்தல் ஆணழகனுக்கும் கருவிழி மேலேறுவது, ஐந்து வால்யூம் கொண்ட ஜேசன் ப்ரைஸ் தலைப்பிட்ட புத்தகங்கள், எகிப்தின் கல்லறையில் கண்டெடடுக்கப்பட்டது என்ன என்ற பல ஆச்சர்யங்களும் கூடவே சஸ்பென்ஸும் சேர்ந்து கொண்டன.
பிப்ரவரி 2017 வரை பொறுத்துதான் ஆகவேண்டுமே ஆண்டவா ..!
மூன்று ஆல்பங்களையும் சேர்த்து ஒன்றாக வெளியிட்டிருந்தால் அட்டகாசமாகத்தான் இருந்திருக்கும்.
என்ன செய்வது திரை விலகும் நேரம் வரும்வரை இமை விலக்கி காத்திருக்க வேண்டியதுதான். . .!!
எடிட்டர் சார்,
இப்படிப்பட்ட அற்புதமான குருந்தொடர்களை வருடத்திற்கு ஒன்றாவது வெளியிட்டு, எங்களை காமிக்ஸ் காதலில் கட்டுண்டு கிடக்கும்படி செய்யுங்கள் என்று கரம்கூப்பி கேட்டுக்கொள்கிறேன் ..!
மறைக்கப்பட்ட நிஜங்கள் - சிலிர்க்க வைத்த ரஸங்கள்.
KiD ஆர்டின் KannaN : The Undertaker காத்திருக்கிறார் 2017 -க்கு ! மிரட்டலான கதைக்களம் !
DeleteAha😊
Deleteசார் மாடஸ்டிக்கு அட்டை மூன்று சூப்பர்
ReplyDelete2016 ன் டாப் 3 இதழுக்கு அனைத்து இதழ்களையும் சிறிது அசை போட வேண்டி இருப்பதால் அதனை கடைசியாக தெரிவு படுத்த விரும்புகிறேன் சார் ....எனவே அதற்கடுத்த வினாவிற்கு செல்கிறேன் ..
ReplyDeleteமாதமொரு டெக்ஸ் ....
கண்டிப்பாக சிறப்பான ஒன்று ...மாதம் எவ்வளவு சிறப்பான இதழ்களாக நான்கும் வந்தாலும் ஒரு டெக்ஸ் அட்டைபடத்துடன் கூடிய ஒரு இதழை கையில் எடுக்கும் பொழுதே ஒர் இனம் புரியா இன்ப பரபரப்பு மனதில் ஒட்டிகொள்கிறது ...பின்பு படிக்க ஆரம்பித்தால் கதை ஆரம்பித்தவுடன் முடியும் வரை டெக்ஸ் உடன் அந்த கெளபாய் உலகில் நாமும் சூப்பர் ஸ்டார் உடன் உலவி கொண்டே வருகிறோம் ...உண்மையை சொன்னால் இந்த வருடம் பதினொரு டெக்ஸ் வருவதாக அறிவித்தாலும் விளம்பரத்தில் முழுமையான டெக்ஸ் சந்தா இல்லாத காரணத்தாலும் ..டெக்ஸ் இதழுக்கு என தனி சந்தா தடம் இல்லாத காரணத்தாலும் சின்ன ஏமாற்றமே..மேலும் டெக்ஸ் இதழுக்கே மட்டுமே சந்தா கட்டி வாங்கும் எனது சில நண்பர்கள் இந்த முறை ஏமாற்றம் அடைந்து கடைகளில் வந்தால் மறுக்காமல் மறவாமல் வாங்க தவீத்து கொண்டு இருக்கிறார்கள் .
எனவே டெக்ஸ் ....டெக்ஸ் தான்....வானில் லட்சம் நட்சத்திரங்கள் இருப்பினும் காமிக்ஸ் நட்சத்திரம் நேற்றும் இன்றும் என்றும் ஒருவரே .....
கார்ட்டூன் ...
ReplyDeleteகண்டிப்பாக தொடரலாம் ....ஆனால் லக்கி ...சிக்பில் ....போன்ற வெற்றிகரமாக நடை போடும் நாயகர்களுக்கு இன்னும் கூடுதல் இடத்தை கொடுக்கலாம் ....
மறுபதிப்பு .....
பத்தும் கண்டிப்பாக படித்து விடுகிறேன் சார் ..என்ன ஒன்று சிசியில் வராத கதைகளுக்கும் இன்னும் கொஞ்சம் கூடுதல் இடம் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் ..
ஒரு சிறு திருத்தும்
ReplyDelete7. 2016-ன் TOP 3 டப்ஸா இதழ்கள்
ரத்த படலம் - தி end
ரத்த படலம் - போட்டி போனச்கி
காற்றில் கரைந்த காதலி (ஈரோட்டில் இத்தாலி புத்தகத்தில் வந்த) என்னை காணாமல் போக வைத்து விட்டார். அதே போல் இந்த வருட magic-wind கதை பிடிக்கவில்லை, இவரின் ரசிகராக நான் இருந்தாலும். இவரின் கதை தேர்வில் கொஞ்சம் கவனம் தேவை.
Parani from Bangalore : மேஜிக் விண்ட் - இந்த சாகசம் ஒரிஜினலில் 4 முறை மறுபதிப்புக் கண்டதாம் ! ஆங்கிலத்திலும் வெளியாகி ஹிட்டானது !
Deleteபாண்டஸியில் லாஜிக் தேடுகிறோமோ நாம் ?
2016 ன் மறக்க முடியாத சந்தோஷ தருணங்கள் ....
ReplyDeleteபனிரெண்டு தருணங்கள் சார் ...
ஒவ்வொரு மாதமும் கொரியரில் இதழ்கள் பெறும் அத்தனை நாளும் மறக்க முடியாத தருணங்கள் எனில்
புத்தக காட்சி அன்று தங்களையும் நண்பர்களையும் சந்திக்கும் அந்த தித்திப்பான தருணங்கள் இந்த முறை சீனியர் எடிட்டர் உடன் தங்கள் தாயாரும் இணைந்து கொண்டது
இன்னமும் மறக்க முடியா ஸ்பெஷல் தருணம் .....
From lucky classics we reached international standard in comics but this kind of hard bound covers editor can print more pages . for example four lucky stories then it would be real collector's edition .price no problem. I hope editor may consider this issue in future .
ReplyDeleteganesh kumar ganeshkumar : //.price no problem//
Deleteதுரதிர்ஷ்டவசமாய் பிரச்சனையே அது தான் !!
அனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteA. 2016 ன் டாப் இதழ்கள்:
1.தலையில்லா போராளி( அதன் பிரமாண்டமான சைஸ் முதலிடத்திற்கு வர காரணமாகிவிட்டது.)
2.சர்வமும் நானே
3.என் பெயர் டைகர்(மூன்றாவது இடத்தில் பாதியை ஜேசன் ப்ரைஸூக்கும் கொடுத்துவிடுகிறேன். வந்த நொடியே அசுரப்பாய்ச்சலாய் பாய்ந்ததால் பாதியாய் பங்கு போட்டுவிடுகிறேன். மன்னிக்கவும்)
B. மாதமொரு டெக்ஸ் பற்றி.....
கண்டிப்பாக தேவை சார்.அவரின் நாக் அவுட் பஞ்ச் களும், அவரின் துப்பாக்கி உமிழும் தோட்டாக்களும், வாயிலிருந்து வந்துவிழும் கெத்தான வசனங்களும் இதுவரை சலிப்பை ஏற்படுத்தாததால் மாதமிருமுறை வந்தால்கூட பரவாயில்லைதான்!
C. கார்ட்டூன் இதழ்கள்: வரூம் ஆனா வராது மாதிரி
புடிக்கும் ஆனா புடிக்காது
ரகம்தான்.
D.மறுபதிப்புகள்: முதலில் படிப்பது மும்மூர்த்திகளைத்தான்."கண்டிப்பாக" வேண்டும். எல்லாவற்றையும் திரும்பதிரும்ப படிப்பேன்.
E. சந்தோஷ தருணம்: ஒவ்வொரு முறை பொக்கிஷங்கள் என் கையில் கிடைக்கும் எல்லா தருணங்களும்.
F. டாப் அட்டை படங்கள்:
1.என் பெயர் டைகர்
2.சர்வமும் நானே
3.தலையில்லா போராளி பின்னட்டை.
G. மொக்கை அட்டைகள்:
மும்மூர்த்திகளின் பல அட்டைகள்.
இனியெல்லாம் மரணமே.
H. மொக்கை இதழ்கள்: மரண மொக்கையாய் ஏதுமில்லை.
I. புதிய அறிமுகம்: பென்னியை எண்ணி காத்திருக்கிறேன். வாய்ப்பு இன்னும்கூட தரலாம்.
ஜேசன் ப்ரைஸவந்த நொடியே அசுரப் பாய்ச்சல்.ஆனால் வந்த வேகத்திலேயே அவருக்கு ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிய படைப்பாளிகளுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
J. கூரியர் பற்றி. நமது காமிக்ஸால் அங்கு பணியாற்றும் அத்தனை தோழர்களும் நண்பர்களாகி விட்டனர். குறையேதுமில்லை.
K. நமது காமிக்ஸ் போகும் பாதை:
சரியான திசையை நோக்கித்தான் போகிறது.
டப்ஷா இதழ்கள் ...
ReplyDeleteவாயில் நுழையாத பேராக ஒரு தாத்தா தாடி வச்சுண்டு வருவாரே ..அவருது எல்லாமே சார் ..
அப்புறமா ஒரு பொம்பளை ஆம்பளை கட்டிங் பண்ணியிருக்குமே சார் பேரு கூட பெட்டியோ ..சூட்கேஸோ ன்னு வரும் ...
அறபுதமான மாளிகை ஒன்று எழுப்பப்படுகிறது..!
ReplyDeleteகலை நயம் மிளிரும் அட்டகாசமான கோட்டை அது!
பார்ப்பவர் வியக்கும் வண்ணம் அமைந்து போன அந்தக் கோட்டை,அதை நிர்மானித்த பொறியாளறால் ஓரு மூலை கொஞ்சமாக பின்னப்படுத்தப் படுகிறது..!
ஏன் என்ற வினவலுக்கு பதில் இப்படி வருகிறது....,
''கொஞ்சமாவது ஒச்சம் வேணும் ஓய்...இல்லையான கண்ணு பட்டு போயிடும்!!''
2016-ன் ஒச்சம்.......
லியனார்டோ..!!
புது வரவு பென்னி பத்துக்கு பத்து..
ReplyDeleteஜேஷன் ....முதல் பாகத்தை மட்டுமே படித்துள்ளேன் ..நன்று ....இன்று தான் இரண்டாம் பாகம் ..மற்றும் டெக்ஸ் அவர்களை காண வேண்டும் ...கண்டிப்பாக ஜேசன் சோடை போக வில்லை என்பது மட்டும் உண்மையோ உண்மை...
சந்தா ....
ReplyDeleteகண்டிப்பாக சிறப்போ சிறப்பு சார் ...நீங்கள் இங்கே பதிவில் இன்று புத்தகம் அனுப்பி விட்டதாக தகவல் தெரிவித்த அடுத்த நாள் காலை எல்லாம் எஸ்டி கொரியரில் சார் பார்சல் வந்து விட்டது என ஒவ்வொரு மாதமும் தவறாது தகவல் வந்து மனதை கூதுகல படுத்திவிடும் ...
இதற்கு முன் கடையில் புத்தகம் வந்து விட்டதா இல்லையா ...என தெரியாமலே அடிக்கடி அலைவதும் பின் அதற்காக பயண நேரம் ...செலவு என திரிவதும் ம்ஹீம் ...சந்தா சந்தா தான் ....
சந்தா கட்டுவோம் சந்தோசமா இருப்போம் ...
( இந்த வருடம் எனக்கு சந்தா பரிசளித்த அந்த முகமறியா நண்பருக்கு மீண்டும் மனம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் )
அப்புறமா ..
வண்டி எல்லாம் இப்போது எந்த தடங்களும் இன்றி சந்தோசமா தான் போகுது சார் ....ஆனா கொஞ்சம் வண்டில ஒரு பெட்டியாவது பெரிசாஆஆஆஆஆஆஆ.....இனைச்சுங்கின்னா இன்னும் சூப்பரா இருக்கும் சார் ...:-)
தலீவரே....வண்டிலே "பெட்டியை" - அதுவும் பெருசாய் ஏற்றிக் கொள்ள விரும்பும் தகவல் செயலாளருக்குத் தெரியுமோ ? மேச்சேரிக்காரருக்குத் தெரியுமோ ?
Delete//வண்டி எல்லாம் இப்போது எந்த தடங்களும் இன்றி சந்தோசமா தான் போகுது சார் ....ஆனா கொஞ்சம் வண்டில ஒரு பெட்டியாவது பெரிசாஆஆஆஆஆஆஆ.....இனைச்சுங்கின்னா இன்னும் சூப்பரா இருக்கும் சார் ...:-)//
Delete+111111111111
நண்பர் அஜய்யின் அற்புதமான முயற்சிக்கு முதலில் பாராட்டுகள்...
ReplyDeleteமுதல் படம் அசரடிக்கும் அழகு...
வெள்ளை நிற பின்னனி க்கும் ஏதாவது வண்ணம் சேர்த்தால் அழகு கூடுமெனில் சேரக்கலாம்...
2016 இன் டாப் 3 ...
ReplyDeleteசத்தியமா ரொம்ப ரொம்ப கஷ்டம் சார் ...மேலே நான் சொன்ன டப்ஷா இதழ் இரண்டை தவிர எல்லாமே எனக்கு டாப் தான்.. சார் ...
நானும் எவ்வளவோ நேரம் யோசித்து கொண்டே தான் இருந்தேன் சார் ..மூன்று இதழை தேர்வு செய்ய ...ஆனா முடியலை..
எனவே இந்த வினாவிற்கு பதிலளிக்கா முடியா சூழலுக்கு மன்னிக்க வேண்டுகிறேன் சார் ...:-(
SUPER?
ReplyDelete2016 ன் சந்தோஷ தருணங்கள்:
ReplyDeleteஈரோட்டில் எடிட்டர் மற்றும் நணபர்களுடான சந்திப்பு.
தலையில்லா போராளி இதழை கையில் ஏந்திய தருணம்.
2017 ட்ரெய்லர் புத்தகத்தை கண்ட தருணம்.
இவையெல்லாவற்றையும் விட எனக்கு ஸ்பெஷலாய் ஒரு சந்தோஷம் என்னவென்றால்.....இதுவரை வேண்டாத விருந்தாளிகளாய் வந்து போன...எனக்கு மிகப்பிடித்த நாயகர்களான மார்ட்டினும் ஜூலியாவும்..இம்முறை வாசக அபிமானத்தில் ஒரு படி மேலே சென்றுள்ளனர் என்பதே....!
ஜேடர்பாளையம் சரவணகுமார் : //இதுவரை வேண்டாத விருந்தாளிகளாய் வந்து போன...எனக்கு மிகப்பிடித்த நாயகர்களான மார்ட்டினும் ஜூலியாவும்..இம்முறை வாசக அபிமானத்தில் ஒரு படி மேலே சென்றுள்ளனர்//
Deleteமார்ட்டின் என்றைக்குமே வாசக அபிமானம் பெற்றவர் தானென்பேன் ; அவரது கதைக் களங்கள் சிரமமானவை என்றாலும், அவரைக் கண்டு யாரும் ஓட்டம் பிடித்ததாய் நினைவில்லை எனக்கு !
Top3சார் டாப் 3
ReplyDeleteஎன் பெயர் டைகர்
இனி எல்லாம் மரணமே
எழுதப்படா விதி...
குறிப்பு...சர்வமும் நானே படிக்கவில்லை...
2.டெக்ஸ்..அட்டகாசம்
Delete3.கார்ட்டூன் சந்தா தொடரட்டும்....பென்னி போன்ற கதைகள் வரட்டும்...தாத்தா பிடிச்சிருக்கா..இல்லையான்னா தெரியலை...சூப்பர்னு சொல்ல முடியல...பரவால்ல...
4.பனிக்கடலில் பயங்கர ெரிமலை மட்டும் படிக்கவில்லை ....ஆனா நிச்சயம் நல்லாருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு...தொடரட்டும்....ஸ்பைடர் கதைகளை படிக்கும் போது அந்த பொற்காலம் கண்ணில் தெரிவது அசைக்க முடியா ஆச்சரியம்
Delete5.மறக்க ியலா தருணம்...1.டெக்சோட அந்த பெரிய ிதழ சதிவலையோட அளந்து பாத்ததும்...அதன் பிரம்மாண்டமும்...
Delete2.மில்லியன்ஹிட்ஸ் நாயகர் கதை அழிவி்ன் விளிம்பு உலகம் என சிறு வயதில் சிறுவர் மலரில் படித்த கதை போல ென அறிந்து ....எப்படா வரும்னு இப்ப வரை காத்திருப்பதும்...பென்னியின் அறிமுகமும்....ட்யூராங்கோ விளம்பரமும்....ஸ்பைடரின் இருவண்ண கொலைப்படை அறிவுப்பும்...ஷெல்டன் கதைகள் புதிதாய் வர ுள்ளதும்..இரத்தபடலம் தொடர் புதிய அதிர்வில் ஆரம்பமாக போவதும்...லக்கியின் ஷ்பெசலின் அட்டையும்..மறக்க முடியுமா
6....7....அட்டை எல்லாம் அருமை....சொதப்பல் இல்லை....தாத்தா தெரியலை....8....ஜேசன் ,பென்னி இருவரும் அமர்களம் அவரவர் வகையில் ஒருவரை ஒருவர் விஞ்சுவர்..9.சந்தா பரம திருப்தி...10/10....10......10\10
Deleteஒரே ஒரு ஊரிலே அட்டை...கோடியும் கேடியும் அட்டய மேம்படுத்தி இருக்கலாம்...ஈர்ப்பு குறைவு....பிற அட்டைகள் பட்டாசு
Deleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் //.டெக்சோட அந்த பெரிய ிதழ சதிவலையோட அளந்து பாத்ததும்.//
Deleteஇதெல்லாம் எப்போ நடந்தது சாமி ?
பார்சல பிரிச்சதும் ஒப்பிட்டு பார்த்தேன்..மலைத்தேன்..இது மலைத்தேன் என மலைத்தேன்...
Deleteபெஸ்ட் அறிமுகம்
ReplyDeleteஜேஸன் ப்ரைஸ்
கார்ட்டூன்களில் லக்கி,சிக்பில்,ஸ்மர்ப் பென்னி ஓகே..!
ReplyDeleteதனித்தடம் தேவையில்லாதது...!
Guna Karur : 4 நாயகர்கள் ஓ.கே. எனும் பொழுது - ஆளுக்கு 2 கதைகளென்றாலே மொத்தம் எண்ணிக்கை 8 ஆகிறது ! 2017-ன் ஒவ்வொரு தனித் தடச் சந்தாவின் இதழ் எண்ணிக்கையுமே 10 தான் ! ஆக நீங்கள் சொல்வதை விட 2 இதழ்களை மட்டுமே கூடுதலாக்கினாலும் ஒரு தண்டவாளம் உருவாக்கி விடுகிறதல்லவா ?
Deleteகேள்வி1.இந்த வருடம் டாப் 3
ReplyDelete1.சர்வமும் நானே...!!!
2.தலையில்லா போராளி.
3.லக்கி classic ஸ்பெசல்.
ஆறுதல் பரிசு: என் பெயர் டைகர்& ஒரு பட்டா போட்டி
2.மாதமொரு டெக்ஸ்
அட்டகாசம்.A
கோல்டு...கோல்டு...கோல்டு......மெக்கனாஸ் கோல்டு ராகத்தில்..
டெக்ஸ்... டெக்ஸ்... டெக்ஸ்... லயன் டெக்ஸ்... என பாட்டை போட்டு கொள்ளலாம் சார்...
(கணவாய் கதைகள், டாக்டர் டெக்ஸ்-போன்றவை தவிர்த்தல் பட்டியலில் சேர்த்தால் இன்னும் சிறப்பு)
3. கார்ட்டுன் தனி ட்ராக்
நிச்சயம் தொடர்ந்திட வேண்டும்.A
ட்ரஸ் ரிலீவர்கள் என்ற இடத்தில் இருந்து அவசியம் வேணும் என்ற நிலைக்கு வளர்ந்து விட்டன கார்டூன்ஸ்...லயனின் எதிர்காலத்தில் இவர்கள் பங்கு இன்னும் அதிகமாக இருக்கும் என கணிப்பு ஏற்படுத்துகிறது.
4. மறுபதிப்புகள்
B.பாதிக்குப் பாதி- விற்பனை முனையில் சாதிப்பவர்கள் இவர்கள் என்பதால் நோ கமெண்ட்ஸ்...
5. மறக்க முடியாத சந்தோஷத் தருணங்கள்
*3.திருப்பூர் விழாவில் வரவேற்பில் அசரடித்த நண்பர்கள், 4நாட்களாக தூங்காமல் களைப்பிலும் அசராமல் பணிசெய்த குமார்.
*2.சென்னையில் 3யானையில் "என் பெயர் டைகர்" வெளியீட்டு விழா; இனியர், ஆதிதாமிரா, பரிமல் சார் மற்றும் பலருடன் முதல் சந்திப்பு; அடுத்த நாள் காலை நண்பர்களுடன் மெரீனாவில் குத்தாட்டம்; மதியம் தீவு திடல் ஸ்டாலில் பல புதிய நண்பர்களை சந்தித்தது;
*1. ஈரோடு விழா- வெளிநாட்டு நண்பர்கள் மஹிஜி, ஹசன், ராட்ஜா, கார்த்திகேயன், கேப்சன் சரவணன் பாஸ் & சகோ கடல் மற்றும் பலப்பல நண்பர்களுடன் நடந்த சனிக்கிழமை மீட்டிங், அன்னையார் வருகை, அவருடைய முகத்தில் தெரிந்த பெருமிதம்-ஆனந்தம்- அவருடன் பேசிய கணங்கள்; எழுத்தாளர் சொக்கன் சாருடன் காரில் பயணம், டிபன் சாப்பிட்டது, இருநாட்கள் ஆசிரியர் & நண்பர்களுடன் செலவிட்டது; சனி இரவு நண்பர்களுடன் விடிய விடிய கதை பேசியது& ஞாயிறு மதியம் நண்பர் அஜய்யின் கெடாவெட்டில் ஆசிரியர் உடன் உணவருந்தியது. தனிப்பட்ட முறையில் நடந்த சேந்தம்பட்டி சொந்தங்களின் கெடா வெட்டுக்கள், இல்ல விழாக்கள், -என ஆண்டு முழுதும் காமிக்ஸ் கொண்டாட்டங்கள் அது கொணர்ந்த உற்சாகங்கள் என தி பெஸ்ட் இயராக 2016 அமைந்தது...
6. டாப் 3 அட்டைப்படம்
1.லக்கிclassics& சர்வமும் நானே.
2.ஈரோட்டில் இத்தாலி&என் பெயர் டைகர்.
3.வானம் தந்த வரம்&தலையில்லா போராளி
ஆறுதல் பரிசு:விதி எழுதிய திரைக்கதை
7. டப்பா இதழ்கள்
1.பெட்டி பர்னோவ்ஸ்கி
2.மேஜிக் விண்ட்
3.கணவாயின் கதை
8. இந்த வருடத்தின் சிறந்த அறிமுகம்
ஜேஸன் பிரைஸ்10/10
பென்னி9/10
9. இந்த ஆண்டின் சந்தா அனுபவம்
2012ல் மீள்வருகைக்கு பிறகு சிறந்த ஆண்டு.
10. கதைத் தேர்வு
A.சரியான திசையில் தான் வண்டி ஓடுகிறது.
தி பெஸ்ட் ஆண்டாக இதற்கு முன்னாள் அறியப்பட்ட 1987க்கு இணையான தரமான கதைத்தேர்வுகளுடன் அமைந்த சிறந்த ஆண்டு.
சேலம் Tex விஜயராகவன் : //கார்ட்டுன் தனி டிராக் : ஸ்ட்ரெஸ் ரிலீவர்கள் என்ற இடத்தில் இருந்து அவசியம் வேணும் என்ற நிலைக்கு வளர்ந்து விட்டன கார்டூன்ஸ்...! லயனின் எதிர்காலத்தில் இவர்கள் பங்கு இன்னும் அதிகமாக இருக்கும் என கணிப்பு ஏற்படுத்துகிறது.//
Delete+101
1. Top 3
ReplyDeleteதுரோகத்திற்கு முகமில்லை - டெக்ஸ்
நின்று போன நிமிடங்கள்-ஜீலியா
கடன் தீர்க்கும் நேரமிது-லார்கோ
2. மாதம் ஒரு டெக்ஸ்
குட்... ஆனால் கொஞ்சம் போல எண்ணிக்கையைக் குறைத்தால் தப்பில்லை ! – B
3. சந்தா பற்றி
A – நிச்சயம் தொடர்ந்திட வேண்டும்!
4. மறுபதிப்புகள்
C – ஹாவ்வ்வ்வ்
(மறு மறு மறு பதிப்புகளுக்கு பதில் மறுபதிப்பு கதைளை ோடவும்)
5. மறக்க இயலா தருணம்
-சூப்பர் 6 ன் லக்கி இதழை கையில் புரட்டிய தருணம்
-ரயில் முன்பதிவெல்லாம் செய்து, தவிர்க்க முடியா காரணங்களால் ஈரோடு புத்தக விழாவை மிஸ் செய்திட்ட தருணம்
6. சிறந்த அட்டைப்படம்...
சர்வமும் நானே
பென்னி இதழ்
லயன் 32வது ஆண்டு மலர்
7. டப்ஸா இதழ்
மாடஸ்டி இதழ்
பெட்டி ஸ்பின் ஆஃப் இதழ்
டாக்டர் டெக்ஸ்
8. புது வரவு?
ஜேஸன்-10/10
பென்னி -8/10
9. சந்தா அனுபவம்? மிகச் சிறப்பாக இருந்தது
10) ஆக மொத்தம்
A – சரியான திசையில் தான் வண்டி ஓடுகிறது !
SIV : //மறு மறு மறு பதிப்புகளுக்கு பதில் மறுபதிப்பு கதைளை ோடவும்//
Deleteஅத்தனையும் ஒட்டு மொத்தமாய் மறுபதிப்பு காணவுள்ளவை எனும் போது இன்றைக்குத் தேர்வு செய்து வெளியிட்டு விட்டு, கடைசி (மறுபதிப்பு) ஆண்டில் ஈயோட்ட வேண்டியதாகி விடக் கூடாதல்லவா ?
1. தலையில்லா போராளி
ReplyDeleteசர்வமும் நானே
என் பெயர் டைகர். இந்த கதையில் குறிப்பிடத்தக்க அம்ச!ம் என்னவென்றால் பரபரப்பான குடிகார்ர்கள் அதிகமுள்ள நகரில் ஒய்வில் உள்ள நாயகன் பத்திரிக்கையாளருக்கு பேட்டி தரும் விதமும, தர்ம சங்கடமான நிலையில் கதாநாயகியை காப்பாற்றுவதும, ஆகும்
My Answers
ReplyDelete1 a jason brice
b vidhi potta vidukathai
c shoo mandiri gali
2 B
3 B
4 C
5 Receiving new year and diwali books
6 1 ezhuthappata vidhi
2 sarvamum naane
3 aandu malar/sattathuku savakuzhi
7 1 Xiii
2 leonardo
3 erode italy whole book
8 Jason brice 200 out of 100
Benny 70/100
9 great overall
10 B
Overall great design book was lucky classic!
ReplyDeleteARVIND : :-)
Delete2. தொடரலாம் ஆனால் வித்திய்யாசம் தேவை.
ReplyDeleteடப்சா இதழ்: கணவாயின் கதை.
பெட்டி மற்றும் இரத்த படலம் தி என்ட் கதைகளும் அருமையான கதைகளே. கதையின் போக்கில் அக்கதையை வேறு எவ்விதம் கொண்டு போக இயலும்...
leom : இரத்த படலம் தி என்ட் - ஒரு முடிச்சை இழுவோ இழு என்று இழுத்து ஒரு மெலிதான அயர்ச்சியை எட்டிப் பார்க்க அனுமதித்ததே இங்கு சிக்கல் என்பேன் !
Deleteஎடி சார் சில கேள்விகள்:
ReplyDelete1.அடுத்து வரவிருக்கும் க்ளாசிக்
மாடஸ்டியின் கழுகு மலைக் கோட்டையா?
2.அனைத்து க்ளாசிக் இதழ்களும் ஹார்ட் பவுன்ட் அட்டையுடன் வருமா?
3. அடுத்த க்ளாசிக் எப்போது?
விடைகள் ப்ளீஸ்.....(ஃபெவிகால் பெரிய சாமியை தலைகாட்டவிடாதீர்கள்.)
முதல் க்ளாசிக் இதழ் சூப்பர் சார். குட்டீஸ்களுக்கு பிறந்த நாள் பரிசாக வழங்குவதற்கு உகந்த புத்தகமாக வந்திருக்கிறது.ஃபில்லர் பேஜ் களை கூட சிரத்தையுடன் உருவாக்கியிருப்பது
உங்கள் மீதுள்ள மதிப்பை இன்னும் அதிகரிக்க செய்கிறது.
நாங்கள் தரும் ஒற்றை ரூபாய்க்குகூட நியாயம் செய்கிறீர்கள் என்பதைவிட ஒற்றை ரூபாயை பலமடங்கு மதிப்புள்ளதாக மாற்றி தருகிறீர்கள் என்பதே நிஜம்.(இதை பதிவிடுகையில் ஈ.வி.அவர்களும், தான் யாரென்று வெளிப்படுத்த விரும்பாத சகோதரரையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்)
AT Rajan : விளம்பரங்களில் சொல்வார்களல்லவா சார் - "கறை நல்லது " என்று !! அதே மாடுலேஷனில் நானும் : "சஸ்பென்ஸ் நல்லது" என்று சொல்வதாய் நினைத்துக் கொள்ளுங்களேன் !!
Deleteஅறிவிக்கப்பட்டுள்ள சந்தா இதழ்கள் 46 + சூப்பர் 6 -ல் எஞ்சியிருக்கும் 5 - ஆக மொத்தம் 51 இதழ்கள் இப்போது நம் முன்னே ! என் பார்வை ஒட்டு மொத்தமாய் அந்த இதழ்கள் மீது படிந்துள்ளது - எவற்றை -எங்கு- எவ்விதம்- கையாள்வதென்று !
So உரிய வேளையில்....உரிய பதில்கள் கிட்டிடும் சார் !
காத்திருப்பதிலும் ஒரு சுகம் உண்டு சார்.
Deleteஅடுத்து நடக்கவிருப்பதை முன்னரே தெரிந்து கொண்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பது புரிகிறது சார். எவ்வளவு நாள் காத்திருந்தாலும் புத்தகம் கைக்கு வந்தவுடன் ஆளை அசரடிக்கும் உத்தி புரிந்த உங்களின் சஸ்பென்ஸ் நல்லதுதான் சார். அதுவரை ஃபெவிகால் பெரியசாமியாக நான் சந்தோஷத்துடன் மாறிக்கொள்கிறேன் சார்.
நமது காமிக்ஸ் நண்பர்கள்(மாணவர்கள்)ஆசியர்க்கு மதிப்பீடு வழங்கும் இந்த நேரத்தில் இன்னும் என்னால் ,டிசம்பர் மாத இதழ்களின் பிரமிப்பில் இருந்து விடுபடமுடியவில்லை.
ReplyDeleteகுறிப்பாக Super6,ஹார்ட் கவர் பைண்டிங்கின் லக்கி லூக் சூப்பரோ சூப்பர்,அதனை கைகளால் எடுத்தால் அதை கீழே வைப்பதற்கு கூட மனம் வரமாட்டேன் என்கிறது.அவ்வளவு நேர்த்தியாகவும் அழகாகவும்,அதன் மேல்பக்க டிசைன்கள் கண்களை பறிப்பதாக உள்ளது.
இதற்காக நமது ஆசிரியருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!
இம்மாத இதழ்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போடுகிறது.அனைத்து இதழ்களின் அட்டைபடங்களும் மிகவும் நன்றாக உள்ளது.
என்னால் இந்த மாத இதழ்கள் நேரமின்மையால் இதுவரை படிக்க இயலவில்லை.
ரிப்போர்ட் கார்ட் மூலமாக என்னால் மதிப்பீடு செய்ய முடியுமா என்பது எனக்கு கேள்விகுறிதான்.ஏன்னென்றால் இந்த வருடம் வந்தவைகளில் சிலவற்றை தவிர,குறிப்பாக TeX இதழ்கை நான் அவசரகதியில் படித்ததால் எனக்கு ஞாபகத்தில் இல்லை.இவைகை மீண்டும் பொறுமையாக படிப்பதற்கு வாய்ப்பு வரவேண்டும்.ஆனால் அதற்குள் நடப்பு மாத புதிய இதழ்கள் வருவதால் என்னால் படிக்கா முடிவதுயில்லை.
ஆனாலும் என்னை பொருத்தவரை இந்த வந்த வருட அனைத்து காமிக்ஸையும் ரசித்துப்படித்தேன்.ஆனால் இதில் கார்ட்டூன்களில் மதியில்லா மந்திரவாதி மற்றும் லியனார்டோவை அதிகபச்சமாக ஐந்து அல்ல ஆறு பக்கங்களுக்கு மேலாக என்னால் படிக்கவே முடியவில்லை.மிகவும் போர்அடித்தது.
suresh suriya : சார்...மந்திரி எப்போது மந்திரவாதியானார் ?
Delete@ AJAY Sir... !!!
ReplyDeleteமாடஸ்டி அட்டைப்படங்கள் அருமை நண்பரே....வாழ்த்துக்கள்.
நண்பரே....மாடஸ்டியின் தலை சற்றே பெரியதாக தோன்றுகிறது.ஒரு நூல் சின்னதாய் அமைந்தால் இன்னும் அருமையாய் இருக்கும்.
Ad சார்,மன்னிக்கவும்,மந்திரியார் என்னளவுக்கு மந்திரவாதி ஆகிவிட்டார்.அந்த அளவுக்கு என் மனதினை கொள்ளை கொண்டுவிட்டார்!!
ReplyDeleteவிஜயன் சார், இன்று நீங்கள் அனுப்பிய நன்றி அட்டையை உற்று பார்த்தபின், அதில் உள்ள உங்கள் கையோபோம் பிரிண்ட் செய்யப்பட்டது அல்ல என்பதை புரிந்து கொண்டேன்! உங்களின் உண்மையான கையொப்பம் என்பதை உறுதி செய்யவும்! நன்றி!! உங்களின் மேனகேடல் தெரிகிறது!!
ReplyDelete@ PfB
Delete600+ நன்றி அட்டைகளுக்குத் தன் கைப்பட பேனாவால் கையெழுத்திட்டிருக்கிறார் என்பதுதான் உண்மை! சிம்ப்பிளாக பிரின்ட் செய்து அனுப்பியிருக்க முடியும்தான், ஆனால் இந்த 'மெனக்கெடலே' முறையான நன்றி அறிவிப்புக்கு உகந்ததெனக் கருதியிருப்பார் நம் மெனக்கெடல் சக்கரவர்த்தி! :)
Good new name to our editor.
Deleteஒவ்வொரு வாசக சந்திப்பின் போதும் ஏதேனும் ஒரு சன்னமான விஷயமோ ; ஒரு கூச்சமான கோரிக்கையோ மனதின் ஆழத்தில் எங்கோ பதிந்து விடுவதுண்டு ! இந்தாண்டும் ஈரோட்டில் அதை போலொரு விஷயம் !
Deleteசனிக்கிழமை மாலையில் வழக்கம் போலவே மரத்தடியில் நம் அரட்டை நடந்து கொண்டிருக்கும் போது புது நண்பர் ஒருவர் - லேசாக நெளிந்து கொண்டே "ஈரோட்டில் இத்தாலி" இதழை என்னிடம் நீட்டி கையெழுத்திடக் கோரினார்.! நானும் என் கோழி கீச்சலைப் போட்டுக் கொடுத்த பொழுது - "அந்த நாட்களில் உங்கள் கையெழுத்து தான் சார் - நானே கையெழுத்துப் போடுவதற்கான முன்மாதிரி " என்று கூச்சமாய்ச் சொல்லி வைத்தார் ! அப்போதைக்கு ஒரு பொத்தாம் பொதுவான புன்னகையோடு வேறேதோ பேசத் தொடங்கி விட்ட போதிலும், ரொம்பவே என்னை பாதித்தது அந்த விஷயம் ! சின்னச் சின்ன விஷயங்களின் பின்னும் சில தருணங்களில் நமக்குத் தெரியா தாக்கங்கள் இது போல் உண்டென்பதை அந்த நொடி புரியச் செய்தது !
So இந்த நன்றி சொல்லும் கார்டு அனுப்பும் நேரத்தில் - அச்சிட்டு அனுப்புவதில் ஒரு 'பர்சனல் டச்' இராதே என்று தோன்றியது...! பின்னென்ன...எடுறா பேனாவை ! போடுறா கீச்சலை தான் !!
சில மெனக்கெடல்களில் நோவு தெரிவதில்லை !!
///சில மெனக்கெடல்களில் நோவு தெரிவதில்லை !!///
Delete👏 👏 👏 👍 👍 🙏 🙏
///சில மெனக்கெடல்களில் நோவு தெரிவதில்லை !!///
Delete👏 👏 👏 👍 👍 🙏 🙏
1 ) 2016 ம் ஆண்டின் Top 3 இதழ்கள் :
ReplyDeleteA) சர்வமும் நானே ( இப்படி ஒரு அட்டகாசமான கதை வரும் என்று எதிர்பார்க்கவேயில்லை )
B ) இனி எல்லாம் மரணமே + எழுதப்பட்ட விதி (50/50)
C ) விதி போட்ட விடுகதை ( பழிவாங்கும் புயலுக்கு அடுத்து நீண்ட நாட்களாக இப்படி ஒரு கதையைத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன் )
2.‘மாதமொரு TEX‘ என்ற பரிசோதனையை எவ்விதம் பார்த்திடுவீர்கள்?
B குட்... ஆனால் கொஞ்சம் போல எண்ணிக்கையைக் குறைத்தால் தப்பில்லை (ஒரு புக்கில் இரண்டு அ மூன்று கதைகள் வீதம் சார் )
3. கார்ட்டூன் தனி track பற்றியும் உங்கள் எண்ணங்கள் என்னவோ ?
A – நிச்சயம் தொடர்ந்திட வேண்டும்! தாடிக்காரரையும் + புளு கோட்டாரும் வேண்டாமே சார்
4. 10 மும்மூர்த்தி + ஸ்பைடர் மறுபதிப்புகளுள் நீங்கள் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ?
B – பாதிக்குப் பாதி !
(கலக்ஷனுக்காக மட்டும்தான் இந்த சேகரிப்புகள் - மஞ்சள்பூ மர்மத்தைத் தவிர்த்து வேறெதுவும் கவரவில்லை )
5. “2016-ன் மறக்க முடியாத சந்தோஷத் தருணங்கள்”
A) முதன்முதலாய் எங்கள் திருப்பூர் மாநகரில் லயன் ஸ்டால் அமைக்க கடைசி நேரத்தில் இடம் கிடைத்ததும் + இங்கு இடம் கிடைக்க முழு முயற்சி எடுத்த திருப்பூர் நண்பர் முரளிகுமார்க்கும் + இடம் கிடைத்த தகவல் எனக்கு தெரிந்ததும் என் இன்னோர் நண்பர் திருப்பூர் குமார்க்கு தகவல் தெரிவித்ததும் அவர் புயலெனப் பாய்ந்து வந்து ஸ்டாலுக்கான பணத்தை உடனடியாக கட்டி நமது ஸ்டாலை உறுதி செய்ததும் + கிடைக்கும் நேரங்களில் நமது ஸ்டாலுக்கு வருகை புரிந்து உதவி செய்த நண்பர்களும் + ஞாயிரண்று நமது சேலம் காமிக்ஸ் குழு நண்பர்கள் திருப்பூர்க்கு வருகை புரிந்து நண்பர்களுடன் அளவாவியதும் மறக்கமுடியாத மனம் நிறைவான தருணங்கள்
B) மிக முக்கியமான சந்தோஷமான தருணம் ஈரோடு புத்தகத்திருவிழா
சாதரணமாக சுமார் 20 - 30 பேர் மீட்டிங்கிற்க்கு வருகை புரிந்ததே சாதனையாக இருந்த ஈ.பு.தி.விழா வை மாற்றி அமைத்து உள்ளூர் வெளியூர் வெளிநாடு களிலிருந்து நண்பர்களை வரவழைக்க வைக்கும் விதமாய் பணியாற்றி அதிலௌ வெற்றி கண்டு மற்றவர்கள் ஏதோ கல்யான வைபவம் என்று வியக்குமளவிற்க்கு கிட்டத்தட்ட செஞ்சுரி அடித்து நேரில்பார்த்திராத நண்பர்கள் குழுமத்தை கூட்டி நேரில் சந்திக்க வைத்து சாதித்துக் காட்டியது சேத்தம்பட்டி கரகாட்டக் கோஷ்டியின் அன்பான செயல்பாடுகளும் (இந்த நேரத்தில் அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றிகளைக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்)
+ திருப்பூர் நண்பர்கள் சிவா வும் குமார் ரும் தன்னலமில்லாமல் நண்பர்கள் அனைவருக்கும் டெக்ஸ் டீ சர்ட் கொடுத்து அசத்தியதும் +
எடிட்டர் என்னையும் நமது நண்பர்களையும் இத்தாலியின் போனெல்லி குழும வலைப்பக்கத்தில் இடம்பெற செய்து மகிழ்ச்சியில் திளைக்க வைத்ததும் மிக்க மகிழ்ச்சி யான தருணங்கள் ( டாங்ஸ் எடிட்டர் சார் )
6. 2016-ன் Top 3 ராப்பர்கள்
A) லக்கி கிளாசிக்ஸ் & ஒரு பட்டாப்போட்டி
B) எழுதப்பட்ட விதி
C) சட்டத்திற்கொரு சவக்குழி
7. “2016-ன் TOP 3 டப்ஸா இதழ்கள்”
A) ஒரு கணவாயின் கதை
B) நின்று போன நிமிடங்கள்
C) தாடி வச்ச தாத்தா (இவர் எப்பொழுதுமே வேண்டாமென்பது என் கருத்து)
8. ஆண்டில் புதுவரவுகள்
A – ஜேஸன் ப்ரைஸ் 9/10
B – சுட்டிப் புயல் பென்னி 10/10
9. “சந்தா அனுபவம் ”
மமுதலில் சொதப்பிய ST கூரியர் பின்னர் டெக்ஸ் + கிட் கார்ஸனின்
சிவகாசிக்கே சென்று எடிட்டரிடம் "தனி கவனிப்புடன்" கேள்விக்கொடிகளை தொடுத்தவுடன் உடனே சுதாரித்து உளவுத்துறை மூலம் தகவல் சேகரித்த பின்னர் ST கூரியர் அதிகாரிகளை போனில் பின்னிபெடலெடுத்ததும் இரண்டு மூன்று நாட்கள்தாமதமாக வந்த கூரியர் பாய்கள் காலை ஆறு மணிக்கேஎங்களுக்கு அலாரம் அடித்து விடுகின்றனர் சோ சந்தா அனுபvaம் சூப்பர்
10. இறுதியாய் ஒரேயொரு கேள்வி ! நிச்சயமாய் ஒவ்வொரு தரப்பிலும் மாற்றங்கள் / முன்னேற்றங்களை நனவாக்கிட ஆனமட்டிலும் முயற்சித்தே வருகிறோம் ! கதைத் தேர்வில் தொடங்கி, மொழிமாற்றம், தயாரிப்பு, அட்டைப்பட உருவாக்கம், பைண்டிங், தாமதத்தைத் தவிர்த்தல், புத்தக விழாக்களின் பங்கேற்பு என்று பல பரிமாணங்களிலும் தினம் தினமும் ஏதேனும் கற்றறிய முயற்சித்துக் கொண்டேயிருக்கிறோம் ! இந்தத் தொடர் பயணத்தில் எங்களை 2016-ல் எவ்விதம் rate செய்வீர்கள்- ப்ளீஸ்?
A – சரியான திசையில் தான் வண்டி ஓடுகிறது !
1)2016-ன்Top இதழ்கள்:
ReplyDelete1)என் பெயர் டைகர்
2)தலையில்லாப் போராளி
3)ஜேஸன் ப்ரைஸ் {A}
2)மாதமொரு TeX:
மிக கண்டிப்பாக வர வேண்டும்{A}
3)கார்ட்டூன் தனி ட்ராக்:
OK,லியனார்டோ மற்றும் மதியில்லா மந்திரி நீங்ககலாக.
4)Evergreen மறுபதிப்பு நாயகர்கள்:
குறிப்பாக மாயாவி 10/10
முதல் வேலை கையில் கிடைத்த உடனே படித்து விட்டுத்தான் மறுவேலை.
5)2016ன் மறக்க முடியாத சந்தோஷ தருணங்கள்:
1)ஒவ்வொரு மாதமும் காமிக்ஸ் என் கைகளில் கிடைக்கும் தருணங்கள்.
2)Super6 லக்கி லூக் இதழ்
3)(தங்களை நேரில் சந்திக்கும்,அந்த சந்தோஷ தருணம் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை.)
6)2016-ன் Top ராப்பர்கள்:
1)தலையில்லா போராளி
2)என் பெயர் டைகர்
3)Super6 லக்கி லூக்
7)2016-ன் டப்ஸா
1)லியனார்டோ
2)மதியில்லா மந்திரி
3)கானாமல் போன கைதி(மறுபதிப்பு)
8)ஆண்டின் புது வரவு:
1)A. ஜேஸன் ப்ரைஸ் 10/10
2)B.சுட்டிப் புயல் பென்னி 7/10
9)சந்த அனுபவம்:
மிக நன்றாக தங்களின் செயல்பாடுகள் உள்ளது. பேஷ் பேஷ்
பிரமாதம்!! 10/10
10)தங்களின் சரியான திசையில்தான் வண்டி ஓடுகிறது.
மனத்திற்கு மிகவும் திருப்தியாகவும் மகிழ்சியாகவும் உள்ளது.{A}10/10
//3)(தங்களை நேரில் சந்திக்கும்,அந்த சந்தோஷ தருணம் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை///---- நண்பரே சுரேஷ்@ என்னை இந்த மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள், அடுத்த ஆசிரியர் சந்திப்பில் உங்களையும் அழைத்து சென்று விடுகிறோம்...
Deleteviji.comics@gmail.com
நீதிக்கு நிறமேது??
ReplyDeleteஅக்மார்க் டெக்ஸ் சாகசம்...
வழக்கமாக முதலில் வில்லனை காட்டி விடுவார்கள். இதில் வில்லன் செம கில்லாடி. டெக்ஸே உணராவண்ணம் அவரோடு சேர்ந்து ஆதரவாக முதலில் இருக்கிறான் , பிறகே டெக்ஸை போட்டு தள்ளப் பார்க்கிறான். இது வழக்கமான பாணியில் இருந்து சற்றே மாறுபட்ட கதையமைப்பு...
டெக்ஸ் சாதாரண மனிதராகவே போராடுகிறார், தன்னுடன் இருக்கும் இருவரையும் காப்பாற்ற இயலாமல் போவதாக காட்டப்படுவது , சூப்பர் ஹூரோவாக இல்லாமல் இருக்கும் இதுபோன்ற கதைகள் அனைவரையும் கவரக்கூடியது.
டெக்ஸ் உடன் இள வயதில் இணைந்து பணியாற்றிய டெக்ஸின் நண்பர் , அவரது குணத்தை அறிந்து இருந்தும் சகோதர பாசத்தால், கைதியை தன்னிடம் ஒப்படைக்க கேட்பதும் மற்றொரு இயல்பான காட்சி அமைப்பு...
ஆண்டின் ஆரம்ப சட்டம் அறிந்திரா சமவெளியில் ஊர் மக்களையே எதிர்த்து போராட நேரிடும் நிலையே, ஆண்டின் இறுதி சாகசத்திலும், இதுவும் இந்த ஆண்டின் எதிர்பாரா ஒற்றுமை...
10/10க்கு மதிப்பெண் சாதாரணதாக அள்ளுகிறது...
, I am not satisfied about erode meeting, because I had very bad experience, when I came there, no lunch arrangement,lot of people came out side,there is no guidance,ofter meeting all are went many ways. It's not correct path. Money is not a problem. There is no perfect guidance.
ReplyDeleteவழக்கமாக புத்தக விழாவிற்கு வருபவர்கள் சராசரியாக 30 இருந்து 50 தண்டாது என்று ஆசிரியர் குறிப்பிட்டு இந்த வருடம் 100 தாண்டியது ஆசிரியரே எதிர்பாராத ஒன்று.
Deleteசரியான நேரத்திற்கு வந்த பரனி என்னையும் security கூடவே வந்து அரங்கத்திற்கு வந்து வழி கட்டினர்.
விழா ஆரம்பிக்கும் போதே 100 பேர் வேண்டாம் 50 பேர் வந்திருந்தால் கூட எதாவது மாற்று ஏற்பாடு செய்திருகலாம். ஆனால் பாதி விழாவின் திடீர் என்று கூட்டம் இரண்டு மடங்கை தாண்டி விட்டது.
அப்போழுது கூட அனைவரையும் உட்கார வைக்க ஆசிரியர் முயன்றார்.
இடையிடையே snakes வந்து கொண்டு தான் இருந்து.
சப்பாடு விஷயத்தில் தான் ஏற்பாடு செய்து கொடுப்பதாக ஆசிரியர் எந்த இடத்திலும் சொல்ல வில்லையே.
மேலும் சேத்தம்பட்டி குழுவினர் சாப்பாடு அவரரவர் செலவு தான் என்று தெளிவாக பிளாக்கில் சொல்லி இருந்தனரே(ஏன் ஆசிரியர் ரால் ஏற்பாடு செய்ய முடியாது என்பது கூட ஏதோ ஓரு பதிவில் வந்த இருந்தது)
மாயாவி சிவா அவர்கள்
ReplyDeleteஎங்கிருந்தாலும் இங்கு வந்து ஆசிரியரின் கேள்விகளுக்கு பதிலெழுதுமாறு
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
வேகமாக வாருங்கள் வேதாளரே