Powered By Blogger

Saturday, January 19, 2013

ஒரு கழுகின் வருகை !


நண்பர்களே,

வணக்கம். தூக்கம் பிடிக்கத் தாமதமானதொரு சமீபத்திய இரவில் என் மண்டைக்குள் உதித்த கேள்வி இது....! 

  • துப்பறியும் ரகக் கதைகளை ரசிக்கிறோம் ..சரி ; 
  • கார்ட்டூன் கலாட்டாக்களை ரசித்து வாய் விட்டுச் சிரிக்கிறோம் ..சரி..; 
  • அமானுஷ்யக் கதைகளை சில வேளைகளில் ரசித்து, அந்த இருண்ட உலகிற்குள் நம் சிந்தனைக் குதிரைகளை உலவ விடுகிறோம் ...சரி ; 
  • யுத்தப் பின்னணிகளைப் படித்து ரசிக்கிறோம்....சரி ; 

ஆனால் நாம் கண்ணில் பார்த்திருக்க வாய்ப்பே இல்லாததொரு கரடு முரடான கௌபாய் உலகை ; நமக்குத் துளியும் தொடர்பற்றதொரு வாழ்க்கை முறையைச் சித்தரிக்கும் இந்த கௌபாய் ரகக் கதைகளை நாம் இத்தனை ஈடுபாட்டோடு ரசிக்கக் காரணம் தான் என்னவாக இருக்கும் ?  வின்செஸ்டர்களும், பிஸ்டல்களும், நமக்கு குச்சி மிட்டாய் ; குருவி ரொட்டி ரேஞ்சுக்குப் பிடித்துப் போனது ஏனோ ? டெக்சாஸ் மாகாணத்தின் நகரங்களும்  ; அரிசோனாவின் பாலைப்பரப்புகளும், கணவாய்களும் -உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டையும், சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனையும் போல் பரிச்சயமாகிப் போனதற்கு பின்னணிக் காரணம் தான் என்னவாக இருந்திட முடியும்?  

இந்த "கௌபாய் காதலுக்கு " முதல் வித்திட்ட பெருமை நம் டாப் ஸ்டார் டெக்ஸ் வில்லருக்கே என்பதில் துளியும் கருத்து வேறுபாடு இருந்திட சாத்தியமில்லை என்று சொல்வேன் ! 1985-ல் டெக்ஸ் தன் அதிரடிகளைத் துவக்கிட்டதற்கு முன்பு சிஸ்கோ கிட் கொஞ்சமாகவும் ; எப்போதாவது வந்திட்ட  "சூதாடும் சீமாட்டி " ரகக் கதைகள் அதையும் விடக் கொஞ்சமாகவும் முத்து காமிக்ஸில் தடம் பதித்திருந்தன ! ராணி காமிக்ஸிலும் "பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர்.." ரக one -shot கதைகளைத் தாண்டிப் பெரிதாய் ஏதும் கௌபாய் தொடர்கள் பரீட்சிக்கப் பட்டதாய் எனக்கு நினைவில்லை ! "தலைவாங்கிக் குரங்கு " நிறைய வகைகளில் நம் ரசனைக்குப் புதியதொரு கதவைத் திறந்து விட்டதொரு landmark இதழ் ! தொடர்ந்த காலங்களில்  சிரிப்பு ; வீரம் ; விவேகம் ; சோகம் என்று பலவித பாணிகளிலான  ஏராளமான கௌபாய்களை சந்தித்து விட்டோம் ! ஆண்டுகள் செல்லச் செல்ல இந்தக் காதலின் வீரியம் துளியும் குறைந்த பாடைக் காணோம் எனும் போது - இந்த கௌபாய்களுக்கும் நமக்குமான chemistry இத்தனை வலுவாய் அமைந்திட்டதற்கு ஏதேனும் logical காரணம் இருந்திட வேண்டுமே என்ற சிந்தனை மேலோங்கியது ?!   

சில ஆண்டுகள் ஓய்வுக்குப் பின்னே மீண்டு ; அற்புத ஆற்றலோடு மீண்டும் உலா வரும் நம் அபிமான டெக்ஸ் வில்லர் & கோ.வின் அறிமுக வேளையில் இந்த சிந்தனை ரொம்பவே பொருத்தமென்று எனக்குப் பட்டது ! "சிகப்பாய் ஒரு சொப்பனம் " வரும் திங்கட்கிழமை முதல் சந்தாக்களுக்கு அனுப்பிடப்படும் ! இது வரை சந்தாவினைப் புதிப்பிக்காது இருப்பின், இதோ ஒரு அழகான காரணம் அதனை ஜல்தியாய் செய்து முடித்திட ! 

நமது லயனில் இது டெக்ஸ் வில்லரின் சாகசம் # 49 !
இரவுக் கழுகார் உங்கள் இல்லம் வந்து சேர்ந்திடக் காத்திருக்கும் சமயத்தில் - உங்களது சிந்தனைத் தொப்பிகளை மாட்டிக் கொண்டு இந்தக் கௌபாய் காதலுக்கு பின்னணி என்னவென்ற உங்களின் அனுமானங்களை இங்கே பகிர்ந்திட்டால் என்ன ? 

அப்புறம், நிறையப் பேசி ; ஏராளமாய் எழுதி முடித்திருந்த போதிலும், NBS இன்னமும் நமக்கு அலுக்கவில்லை என்றே தோன்றுகிறது ! அதற்காக டி.வி. சானல்களைப் போல் காதில் ரத்தம் கசியும் வரை ஒரு வெற்றி பெற்ற நிகழ்ச்சியினை துவைத்துத் தொங்கப் போடுவதில் எனக்கு உடன்பாடில்லை ! எனினும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள NBS தொடர்பான குட்டியான behind the scenes trivia ! இவற்றிற்கு நான் விளக்க உரை எழுதிடலும் தேவையா என்ன ? மௌனமே மொழியானதொரு திறமைசாலியின் ஆற்றலை ரசிக்க மௌனத்தை விடச் சிறந்த கருவி இருக்க முடியாது தானே ?! 





பதிவை நிறைவு செய்து விட்டு மூட்டை, முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சின்னதாய் ஒரு ஐரோப்பியப் பயணம் செல்கிறேன் அதிகாலையினில்  ! இதர பணிகளுக்கு இடையே புதிதாய் சில கதைத் தொடர்களுக்காக, பதிப்பகத்தினர் சிலரையும் சந்திக்கவிருக்கிறேன் ! Will keep you posted ! இப்போதைக்கு adios amigos !

381 comments:

  1. டியர் எடிட்,

    அட்டைகள் கனஜோர்.... இவற்றை NBS உடன் இனாமாக கொடுத்திருந்தால் அட்டகாசமாக இருந்திருக்கும்... இப்படி இணையத்தில் மட்டும் பார்க்கும்படி ஆக்கிவிட்டீர்களே :P

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் இதழ் சென்னை கண்காட்சியில் நாளை முதல் கிடைக்க ஆரம்பிக்குமா...?

      ஏனென்றால், வார இறுதிகளில் இவற்றை விற்று தீர்க்க ஒரு அருமையான வாய்ப்பை நாம் நழுவ
      விட கூடாது.... டெக்ஸின் அட்டையும் தத்ரூபமாக வந்திருக்கிறது.

      கூடவே லக்கி இதழும் தயாராகி விட்டதாக தெரிவித்திருந்தீர்களே... அதுவும் கண்காட்சி முடியுமுன் விற்பனைக்கு வந்து விடுமா ?

      Delete
    2. Yep if TEX is in book fair tomorrow it would be great!!! Will pick it up for a friend who is TEX crazy!

      Delete
    3. Rafiq Raja & Comic Lover : Yes, ஞாயிறு காலை சென்னை புத்தகத் திருவிழாவில் டெக்ஸ் இருப்பார் ! மூன்று மணி நேரங்களுக்கு முன்பு தயாரான இதழ்களை ஆம்னி - பஸ்ஸில் அனுப்பி உள்ளார்கள் நம் பணியாட்கள் !

      Delete
    4. கனஜோர்... நாளை மீண்டும் புத்தக கண்காட்சிக்கு சென்று வர வலுவான காரணம் கிடைத்து விட்டது.

      புத்தக கண்காட்சி முடிவடையும் தருவாயை நெருங்கிவிட்டதால் இனி லக்கி இதழை பிப்ரவரி மாத வெளியீடாகவே முறையுடன் வெளியிட்டு விடலாம்... கூடவே காமிக்ஸ் கிளாசிக் இதழ்களில் இருந்து 2 இதழ்களை முன்பு அறிவித்தபடி வெளியிட்டு விட வாய்ப்புகள் இருந்தால் சுகமே :D

      Delete
    5. கவ்பாய் கதைகள் மீதான ஒரு இனம்தெரியாத கவர்ச்சி எதனால் என்பதை சரியாக காரணம் காட்ட முடியவில்லை. ஒருவேளை நான் முதன முதலில் படித்த கதைகளில் அதிகமான கவ்பாய் கதைகள் தோன்றியது ஒரு காரணமாக இருக்கலாம் (ராணி காமிக்ஸில் அப்போது மாதம் தவறாமல் ஒரு கவ்பாய் கதைகள் பெரும்பாலும் வந்து கொண்டிருந்ததை வைத்து கூறுகிறேன்).

      கூடவே சிவப்பு இந்தியர்கள் என்ற பெயர் வைப்பு படலம், அவர்கள் மீதான கவனத்தை இன்னும் ஈர்த்திருக்கலாம்.... எது எப்படியோ எனக்கு தெரிந்து இந்தியாவிலேயே தற்போது கவ்பாய் கதைகளை இன்னும் ரசித்து படிக்கும் ஒரு வித்தியாசமான காமிக்ஸ் வாசக வட்டம் நம்முடையது என்பதில் எனக்கு பெருமையே.

      உங்கள் ஐரோப்பிய பயணம் வெற்றிகரமாக நடக்கட்டும், புதிய பல காமிக்ஸ் அறிமுகங்களுடன்.

      பி.கு.: ஒரு வழியாக மியாவ் கதைக்கு பெயர் வைத்து விட்டீர்கள் போலிருக்கே.... மியாவி.. வித்தியாசமான பெயர்,

      Delete
    6. Editor, thanks much!

      Rafiq - please pick up a copy of TEX for me - will collect from you on Tuesday - Monday I am on a tour - Thanks !

      Delete
  2. Welcome back (to) Tex!

    Bon Voyage, Editor! Bring more titles back :-D

    ReplyDelete
  3. வெல்கம்-பேக்: டெக்ஸ்! மாடஸ்டியின் ஓவியம் அசத்தலாக இருக்கிறது. இதனை மாடஸ்டி டைஜஸ்ட்டுக்குப் பயன்படுத்துங்களேன்! ஐரோப்பா பயணம் சிறப்புற அமைய வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  4. தங்கள் பயணம் இனிதாக அமையவும், நிறைய புது காமிக்ஸ் தொடர்கள் உரிமம் கிடைக்கவும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. Podiyan & Periyar : நன்றிகள் பல !

      Delete
  5. ஆஹா டெக்ஸ் அட்டைபடம் பட்டாசு !அற்புதம் !அமர்க்களம் !சிறந்த கதைகளுடன் வென்று வர வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  6. பூர்வகுடிகளான செவ்விந்தியர்களுக்கும்- வந்தேறிகளான ஸ்பானிய வெள்ளையர்களுக்கும் நடந்த இனமோதல்கள் , காலங்காலமாய் நமக்கு புராணங்கள் முதல் தற்போதைய செய்திகள் வழியாக தெரிந்த ஆரிய- திராவிட முதல் இன்றைய சிங்கள- தமிழின போர் போன்றதே! அதனால் செவ்விந்தியர்கள் என்பதை நம்மில் ஒரு இனமாக நினைத்தே நாம் மேற்கத்திய கதைகளை படிக்கிறோம். ஆயுதங்களின்றி, கோட்டைகளின்றி தைரியத்தோடு அம்பும்,வில்லும் கொண்டு போராடும் அந்த அப்பாவிகளுக்காக பரிந்து வரும் வெள்ளையரை நாயகராக மனம் ஏற்றுகொள்கிறது. இப்போது வெளியிட்ட இந்த டெக்ஸ் கதை அட்டை கூட , இனவேறுபாடில்லாத ஒரு வெள்ளையரை கண்டு மனம் சந்தோஷம் கொள்வதற்கும் அதுவே ஒரு காரணமாக இருக்கமுடியும் எனபது என் கருத்து! சார், மார்டின் கதைகளும் அவ்வபோது வெளியிடுங்கள்!

    ReplyDelete
  7. Editor Sir,

    The artwork of new Tex is amazing. Our quality is improved too much. Please keep it up.
    I would be very grateful if I can meet you here.

    ReplyDelete
    Replies
    1. Radja from France : Will try my best :-)

      Delete
    2. Wow. Thank you very much sir.
      By the way, it's snowing here. Please prepare for the cold weather (-4°C to -1°C announced for next week).

      Delete
    3. Radja from France : Yes, I looked at the weather forecast too !

      Delete
  8. Thank you so much for your work vijayan sir.

    ReplyDelete
  9. To: Editor,

    டெக்ஸ் இன் 50ஆவது இதழாக வரப்போவது என்ன கதை சார்? நல்ல விறுவிறுப்பான, சற்றே பெரிய கதையாக இருந்தால் நன்றாக இருக்கும்: டெக்ஸ் இன் - அரைச்சத அதிரடி இதழ்!!!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : "பூத வேட்டை" - அல்லது "நீதியின் நிழலில் " ! 240 பக்கங்கள் !

      Delete
    2. அற்புதம். முன்பெல்லாம் - 'பார்க்கலாம்; அதுபற்றி சிந்திப்போம்' என்று சொல்வீர்கள். இப்போது 'சட்'டென்று இதழ் பெயர் சொல்லுமளவுக்கு ஒரு 'டைம் டேபிள்' உங்கள் மனதில் இருப்பது தெளிவாகிறது. அசத்தல்கள் தொடரட்டும்!

      Delete
    3. சார்,குட்டி தலையணை சைசில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்!

      Delete
    4. Expecting Tiger 50th edition soon..:)

      Delete
  10. எனக்கு கௌ பாய் காதல் ராணி காமிச்சாலே துவங்கியது !அனைத்து கதைகளுமே கௌ பாய் வரிசை மட்டுமே அற்புதமாய் இருக்கும் !ஒற்றர் படை தலைவர் கார்சன் தொடர்கள் அற்புதமாய் இருக்கும் !
    நமது காமிக்ஸை மிகவும் நேசிக்கும் பொது இது போல கதைகள் இல்லையே எனும் குறை தாங்கள் விளம்பரபடுத்திய டெக்ஸ்,கார்சோ,டைகர்,கிட் என்ற வீரர்களின் அறிமுக விளம்பரங்கள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை !ராணி காமிக்ஸால் வளர்ந்த காதல் நமது டெக்ஸ் மூலம் கொழுந்து விட்டு எரிய துவங்கியது !டெக்ஸ் அவருக்கு நிகராய் யாருமில்லை என நினைக்கும் பொது டைகரின் வரவு இன்ப அதிர்ச்சி அளித்தாலும் ,டெக்ஸ் அதிரடி,எதிராளியை பேச விடாத தைரியம் ,டக்கென நீளும் கை ,அதுவும் அந்த ஸ்டாரை அணிந்து கொண்டு நண்பர்கள் சூழ டிராகன் நகரம் கதையில் வீதியில் இறங்குவாரே எப்பப்பா ,மேலும் இருளின் மைந்தர்களில் கார்சனுடன் வரும் நக்கல் பேச்சுகள் ,சிரிக்க வைக்கும் கார்சனின் கோபம் என வித்தியாசமான கதை வரிசை ,பவளசிலை மர்மம் ,திகிலை கிளப்பிய தலை வாங்கி குரங்கு இந்த கதை தலைப்பு மாற்ற பட்டே வெளி வந்தது,நட்பின் பெருமையை உணர்த்தும் கார்சனின் கடந்த காலம்,தற்போதைய டெக்ஸ் மனைவி குறித்த பலி வாங்கும் கதை என பசுமையான நினைவுகளை சொல்லி கொண்டே போகலாம் கேட்கும் யாவருக்கும் சுவாரச்யமளிக்கும் விதமாய் ...........

    ReplyDelete
    Replies
    1. செவிந்தியர்கள்,ராணுவ வீரர்கள்,பாலைவனங்கள் ,புரவிகள் ,மேலும் அந்த மரத்தால் ஆன கட்டிடங்கள்,துடிக்கும் துப்பாக்கிகளின் முழக்கம் ,இதோ டெக்ஸ் அணிந்துல்லாறே கச கசவென தொங்க விட்டது போல உடைகள் ......

      Delete
    2. வெய்னே வின் அந்த அட்டை படம் பின்னணியுடன் அற்புதம் !

      Delete
  11. நான் இன்று ஆர்டிஸ்டாக காரணம் நீங்கள்தான்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Bala : பள்ளிக் கூடத்தில் டிராயிங்கில் நூற்றுக்கு இருபது மார்க் எடுக்கத் தடுமாறியவன் நான் :-) ! Congrats Bala !

      Delete
    2. Bon Voyage Sir! Hope you Bring us lot of surprising titles! Take care Sir!

      Delete
    3. டியர் பாலா , welcome to our comics blog , குமுதம் கார்டூனிஸ்ட் பாலாவா நீங்கள் ?

      Delete
    4. இவர் அந்த பாலா இல்லை. இவர் பாலமுருகன். கான்செப்ட் ஆர்ட்டிஸ்ட். இப்போது விகடன் குழும இதழ்களிலும், தினமலரிலும் இவரது ஓவியங்களை நீங்கள் ரசித்திருப்பீர்கள்.

      Delete
    5. இல்லை Dr.Sundar. நன்றி.

      Delete
    6. மிக்க நன்றி.:-)Mr.Podiyan.

      Delete
    7. ஆஹா வாழ்த்துக்கள் நண்பரே ....உங்கள் ஓவியங்களை நானும் ரசித்திருப்பேன்...நன்றி !

      Delete
    8. நன்றி:-) ச.பொன்ராஜ்.

      Delete
    9. டியர் பாலா, உங்கள் ஓவியங்களுக்கு நான் ரசிகன்! காமிக்ஸ் ரசிகரான உங்களின் படைப்புக்கள் நமது முத்து / லயன் இதழ்களில் இடம் பெற வேண்டுமென்பது என் ஆசை! முன்பு ஒரு பதிவில் இது குறித்து நமது ஆசிரியரிடமும் கோரிக்கை விடுத்தேன்!

      Delete
    10. நன்றி கார்திக். என் ஆசையும் அதுவே.

      Delete
    11. HAPPY TO SEE YOU IN OUR COMICS FAMILY MR. BALA. MY GREETINGS TO YOU.

      Delete
    12. Welcome Bala...soon expecting your work in our comics

      Delete

  12. மறுபடியும் புத்தக திருவிழாவுக்கு செல்ல டெக்ஸ் என்ற ஒரு காரணம் கிடைத்துவிட்டது.

    இந்த கௌபாய் ரகக் கதைகளை நாம் இத்தனை ஈடுபாட்டோடு ரசிக்கக் காரணம் தெரியாததை, பார்க்காததை, உணராததை, தெரிந்துகொள்ள நம் தமிழருக்குள்ள ஆவல்தான்.

    உங்கள் வெளிநாட்டு பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. தங்கள் ஐரோப்பிய பயணம் மனதில் குதூகலிக்கச்செய்கிறது நிறைய கதைகள் எங்களுக்காக பதிப்பகத்தாரிடம் பெற்று வருவீர்களல்லவா பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அட்டை படம் பார்க்க பார்க்க அசத்துகிறது !டெக்ஸ் அட்டை படங்களுள் இது ஒரு மைல் கல் என்றால் மிகை அல்ல !வண்ணங்கள் என அனைத்தும அசத்தல் !மியாவி நான்கு கால் மழலைகள் அருமை !

    ReplyDelete
    Replies
    1. ஒரு வார புதிய வாசகர்களை இழந்து விட்டோம் ,இந்த ஈர்க்கும் அட்டை இருந்திருந்தால்....

      Delete
    2. yes that's true.. if we put this poster in our stall then more people might have joined.. i hope already more joined but it might have increased further.. TEX Rocks

      Delete
  15. டெக்ஸின் வண்ண அட்டைப்படம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது! அதில் டெக்ஸின் நெற்றிமட்டும் கொஞ்சம் abnormally illustrated! (பரவாயில்லை, யாரோ டெக்ஸை நெற்றியில் தாக்கிவிட்டதாக எடுத்துக்கொள்ளலாம்) :-)

    இப்போதைக்கு கருப்பு-வெள்ளையில்; குட்டி தலையணை சைசில் டெக்ஸ் வருவதே சந்தோஷம்தான்; எனினும், விரைவில் ஒரு முழுநீள, முழுவண்ணத்தில் டெக்ஸைக் கண்டிட நீண்டநாள் ஆசை! (என்னதான் நீங்க விளக்கம் கொடுத்தாலும், விடமாட்டோம்ல!)

    டெக்ஸை வண்ணத்தில் கண்டிடும் ஆசையை தயவுசெய்து அடுத்தவருடம் வரவிருக்கும் 'லயன் 30வது ஆண்டு மலரில்' நிறைவேற்றுவீர்கள் என உறுதிபட நம்புகிறேன் . (நம்பிக்கையே வாழ்க்கை!)

    அப்புறம், கெளபாய் கதைகளை ஏன் பிடிக்கிறது என்று எவ்வளவு யோசித்தும்; கடைசியில் சப்பையாய் கிடைத்த பதில் : 'பிடிக்கிறது- அவ்வளவுதான்'
    அல்லது
    'ரொம்பப் பிடிக்கிறது - அவ்வளவுதான்' :)

    ReplyDelete
  16. அட்டகாசமான அட்டைப்படம் தலைவா! பயணம் இனிக்க இறைவனை இறைஞ்சுகிறேன்! அள்ளிட்டு வாங்க ஆயிரம் அசுரக் கதைகளை!!! தங்களது முயற்சிக்கு என்றும் உறுதுணையாகவிருப்போம்! நெவர் பிபோர் ஸ்பெஷலுக்காக பார்ட்டியே தரலாம் உங்களுக்கு! ஜி! கலக்குங்கள்!

    ReplyDelete
  17. அப்புறம் பல வருடங்களாக உங்களைத் தொல்லை பண்ணிட்டிருந்தேன் பூத வேட்டைக்காக! அதனை வெளியிடப் போகும் மாதத்தினை மிக மிக மிக ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்! இருபது வருட பந்தமல்லவா? அது வேண்டுமெனக் கடிதத்தில், போனில் அடம்பல பிடித்திருந்தேன்! நன்றி ஜி! ஹி ஹி ஹி மனசுல மதிமயக்கும் சந்தோஷம் நிரம்பி வழிகிறது! அப்படியே திகில் நகரில் டெக்ஸை இறக்கி விட்டீங்கன்னா இடி மின்னல் பொறிபறக்கும்!

    ReplyDelete
  18. சட்டுபுட்டுனு போய் சீக்கிரம் வலைப்பூவுக்கு வந்துடுங்க! 2014 க்கு ப்ளான் ஸ்கெட்ச்சுக்கு we are eagerly waiting!;-)

    ReplyDelete
    Replies
    1. இந்த வருடமே ஜூனியர் லயனை கொண்டு வரலாம்னு போறவரை குழப்புறீங்களே !

      Delete
    2. Eagerly waiting for Junior Lion....and one TEX Lion :::)

      Delete
  19. BON VOYAGE SIR! HOPE YOU BRING US LOT OF SURPRISING TITLES! TAKE CARE SIR!

    ReplyDelete
  20. நண்பர்களே புத்தகதிருவிழா எப்பொழுது முடிவடைகிறது

    ReplyDelete
    Replies
    1. 20th yesterday itself maaaveerare...

      Delete
    2. oops sorryy. in the website it mention Jan 11 to Jan 23...

      Delete
  21. சார் NBS ஒரு மெகா ஹிட் என்பதில் சந்தேகமே இல்லை. எனக்கு பிடித்த வரிசையில் நம் கதாநாயகர்கள்

    1) லார்கொ கதை ஒரு ரோலர் கோஸ்டர் ரைட். மணிக்கு 140 KM வேகத்தில் பறக்கும் சைமனின் பைக் போல பறக்கிறது
    2) அடுத்த இடத்தை நம் டைகருக்கு கொடுக்கலாம் என்றால் புதிதாக வந்த ஷெல்டன் பிடுங்கிவிட்டார்.
    3) மூன்றாவது இடம் நம் டைகருக்கு
    4) சிக் பில் (நகைச்சுவையான மொழி பெயர்ப்பு சூப்பர்)
    5) ஜில் ஜோர்டான் ( இவரின் டெபுடி யை எனக்கு ரொம்ப பிடித்து போய் விட்டது, முதல் கதைக்கு பரவாயில்லை என்று தான் சொல் வேண்டும்)

    ReplyDelete
  22. NBS புத்தகத்தில் எனக்கு பிடித்தவை
    =================================

    1) அட்டை கிளாஸிக் ஆக இல்லை என்று கூறி இருந்தேன் என் முந்தைய பின்னுட்டத்தில். ஆனால் நேரில் பார்க்கும் போது கிளாஸிக் ஆக இல்லாவிட்டாலும் , அட்ட்ராக்டிவ் ஆக இருந்தது. அது தான் நமக்கு இப்போது தேவை. ஒரு தடவை பார்த்தாலே அட என்ன புக் இது என்று எடுத்து பார்க்கும் வகையில் இருந்தது.

    2) இன்டெக்ஸ் கொடுத்திருந்ததும் புதிய முயற்சி.

    3) ஊழியர்களுக்கு உள் அட்டை முழுவதையும் கொடுத்தது நன்று.

    இவை இருந்திருந்தால் மிக நன்றாக இருக்கும்
    ===========================================

    1) Hard Bound Cover - 40 வருட இதழுக்கு இதை நாம் ட்ரை பண்ணி இருக்கலாம்.

    2) மொழி பெயர்ப்பவர்களை உள் அட்டையில் காணோமே.

    3) டைகர் கதையை படிப்பதற்கே மனது வராமல் பண்ணி விட்டது பிரிண்டிங் குளறுபடிகள்.
    மற்ற எல்லா கதைகளும் ஒரு தரத்தில் இருக்க டைகர் கதை மட்டும் முன் தாளில் உள்ள வண்ணங்கள் பின் தாளில் தெரியும் படி இருந்தது வருத்தமளித்தது . ஏன் இப்படி நடந்தது என்று தெரிய வில்லை? தாள் குறைபாடா? பிரிண்டிங்கில் குறைபாடா?

    ReplyDelete
  23. தங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள். டேக் கேர்

    ReplyDelete
  24. Dear Editor Sir,

    I am a big fan of Tex and Tiger, Bon Voyage to you , Please bring more number of Tex books sir.

    If you are having any plans to visit USA, Please let us know, our Comics fans are here in Columbus Ohio USA as well :)

    Thank you Sir
    Maria Arockiaraj

    ReplyDelete
  25. எடிட்டர் சார்,

    தொடர்களுக்கு எண்ணமிடும் முறை என்னை குழப்பி அடிக்கிறது. உதாரணத்திற்கு லார்கோ வின் முதல் இரு பாகங்கள் "Surprise Special" இல் வந்து விட்டது. அதனால் NBS இல் அவை பாகம் 3, 4 என்றுதானே இருக்க வேண்டும்
    திரும்பவும் முதலில் இருந்து பாகம் 1,2 என்று ஆரம்பிக்கிறதே. "Surprise Special" படிக்காதவர்கள் , முன் லார்கோ வந்தது தெரியாதவர்கள் இதைத்தானே பாகம் 1,2 என்று நினைத்துக் கொள்வார்கள்?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே,
      லார்கோவின் எல்லாக் கதைகளுமே இரண்டிரண்டு பாகங்களாய் முடிகின்றன என்று எப்போதோ எடிட்டர் குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம். மற்ற நண்பர்கள் அதை உறுதிப்படுத்தலாமே?!

      Delete
    2. லார்கோவின் கதைகள் இரண்டு பாகங்கள் கொண்டவை. இது தொடர்கதை அல்ல...

      Delete
  26. நீண்ட, அலுப்பான பயணத்தின் முடிவில் நாளை மறுநாள் ஈரோடு சிட்டிக்கு வருகைதரவிருக்கும் டெக்ஸ் குழுவினரை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்!

    அவர்களுக்கு வறுத்த கறியும், வேகவைத்த ஆப்பிளும், சூடான காப்பியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
    (வறுத்த கறியின் வாசனை கார்சனின் முகத்தில் 1000W பல்பை எரியு வைக்குமே; அடடா, அந்த அழகே தனி!)

    ReplyDelete
  27. டியர் விஜயன் சார் ,தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன். டெக்ஸ் இந்த மாதமே வருவது சிறப்பு .தலைப்புதான் ஒருமாதிரி உள்ளது ! டெக்ஸ் கதைக்கு தலைப்புத்தான் சிறப்பு . தலை வாங்கி குரங்கு போல ! அடுத்து வரும் பூத வேட்டையாவது அதே தலைப்பில் வருமா ? இல்லை ஒருசிலர் தலைப்பு படுபயங்கரமாக உள்ளது என்று சொன்னால் கருப்பாய் ஒரு கனவு என்று மாற்றி விடுவீர்களா சார் ? just kidding sir , டெக்ஸ் ன் தலைப்பில் அடிதடி வந்தால்தான் அது டெக்ஸ் கதை . கதைக்குள் போகும்முன்னே தலைப்பிலேயே அடிதடியை நம் கௌபாய் ஆரம்பித்தால் அதுதான் சிறப்பு !

    ReplyDelete
  28. டியர் எடிட்டர் விஜயன் சார்
    நெவெர் before ஸ்பெஷல் இமாலய வெற்றி பெற்று இருக்கும் இத்தருணத்தில் காமிக்ஸ் மறுவரவை தமிழகம் முழுவதும் இன்னும் கொண்டு செல்ல புத்தக கண்காட்சிகள் சிறப்பான வழியாகும். பின்வரும் இடங்களில் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.
    திருப்பூர் - ஜனவரி 25 முதல் பிப்ரவரி 5 வரை
    புது டெல்லி - பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 10 வரை
    பெரம்பலூர் - பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 10 வரை
    காரைக்குடி - பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 24 வரை
    தஞ்சாவூர் - மார்ச் 1 முதல் மார்ச் 10 வரை
    இக் கண்காட்சியில் முடிந்தால் பங்கேற்க பாருங்கள் சார். 50 மற்றும் 60 ருபாய் டெக்ஸ் வில்லர், லக்கி லுக் புத்தகங்கள், மாயாவி, ஸ்பைடர் digest புத்தகங்கள் கண்காட்சியில் அதிக விற்பனையாகும். நமது லைன் முத்து காமிக்ஸ்கள் இன்னமும் இளம் வாசகர்களை சென்று சேரும். நன்றி
    எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  29. டியர் விஜயன் சார் ,தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன். "சிகப்பாய் ஒரு சொப்பனம் " டெக்ஸின் வண்ண அட்டைப்படம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது! நிறைய புது காமிக்ஸ் தொடர்கள் உரிமம் கிடைக்க வாழ்த்துக்கள்!
    எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  30. அடடே மிகவும் சூப்பர் ஆன செய்தி !!! டெக்ஸ் 50 என்பதும் ஒரு மைல் கல்லே !!! கையில் வாங்க ஆவலுடனும் படிக்க துடிப்புடனும் உள்ளேன்!!!
    NBS சூப்பர் என்னக்கு குறைகள் எதுவும் கண்ணில் படவே எல்லை ஏனோ தெரியவில்லை !!! அதுவும் அலைகளின் ஆலிங்கனம் ரசித்தேன்!!

    ReplyDelete
  31. 50ஆவது இதழாக நீங்கள் டெக்ஸ் ஸ்பெஷல் கதைகளில் ஒன்றை என் போடா கூடாது?

    ReplyDelete
  32. *மஞ்சளாய் ஒரு அசுரன்!
    *வெள்ளையாய் ஒரு வேதாளம்!
    *சிகப்பாய் ஒரு சொப்பனம்!
    *பரலோகப் பாதை பச்சை!

    தலைப்புகள் ஸ்டீரியோ டைப்பில் உள்ளன.

    கதைக்கு பொருத்தமான தலைப்புகள் வைக்கலாம்!

    உதாரணமாக லார்கோவின்
    "சுறாவோடு சடுகுடு" கதைக்கு
    "ரோஜா படுக்கை"
    என்ற தலைப்பும்

    "எமனின் திசை மேற்கு" கதைக்கு
    "இழப்பதற்கு எதுவும் இல்லை"
    என்ற தலைப்பும் பொருத்தமாக இருக்கலாம்!

    2013 டிரெய்லரில் உள்ள தலைப்பகள் பெரும்பாலும் நன்றாக உள்ளன!

    வேய்ன் ஷெல்டன் தலைப்புகள் மறுபடியும் ஸ்டீரியோ டைப்!

    தலைப்புகளில் "ஒரு" என்ற வார்த்தை சேர்ப்பதையும் முடிந்தவரை குறைக்கலாம்!......

    ReplyDelete
  33. *மஞ்சளாய் ஒரு அசுரன்!
    *வெள்ளையாய் ஒரு வேதாளம்!
    *சிகப்பாய் ஒரு சொப்பனம்!
    *பரலோகப் பாதை பச்சை!

    தலைப்புகள் ஸ்டீரியோ டைப்பில் உள்ளன.

    கதைக்கு பொருத்தமான தலைப்புகள் வைக்கலாம்!

    உதாரணமாக லார்கோவின்
    "சுறாவோடு சடுகுடு" கதைக்கு
    "ரோஜா படுக்கை"
    என்ற தலைப்பும்

    "எமனின் திசை மேற்கு" கதைக்கு
    "இழப்பதற்கு எதுவும் இல்லை"
    என்ற தலைப்பும் பொருத்தமாக இருக்கலாம்!

    2013 டிரெய்லரில் உள்ள தலைப்பகள் பெரும்பாலும் நன்றாக உள்ளன!

    வேய்ன் ஷெல்டன் தலைப்புகள் மறுபடியும் ஸ்டீரியோ டைப்!

    தலைப்புகளில் "ஒரு" என்ற வார்த்தை சேர்ப்பதையும் முடிந்தவரை குறைக்கலாம்!......

    ReplyDelete
  34. @விஜயன்:
    * சிகப்பாய் ஒரு சொப்பனம் - அட்டகாசமாய் ஒரு அட்டைப்படம்!!!
    * மியாவிக்கு நன்றிகள் பல சார்!!! :)

    ReplyDelete
    Replies
    1. எனது கௌபாய் காதலுக்கு வித்திட்டது ராணி காமிக்ஸ் என்றால், அதை நீர் ஊற்றி விருட்சமாய் வளர்த்தது லயன் என்பதில் சற்றும் ஐயம் இல்லை! நண்பர் captiger மேலே சொன்னது போல - கௌபாய்களை விட, அவர்களின் எதிரிகளாக காட்டப்படும் செவ்விந்தியர்கள் மீதுதான் எனக்கும் ஈர்ப்பு அதிகம்! :) அதனாலேயே அவர்களுக்காக பரிந்து பேசும் டெக்ஸ் & ப்ளூபெர்ரியை நாம் கொண்டாடுகிறோம்! தவிர, spaghetti western படங்களும் ஒரு முக்கிய காரணமே!! தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்ஷங்கர் அவர்களுக்கும் அவரை வைத்து பல கௌபாய் (unintentional காமெடி) காவியங்களை இயக்கிய இயக்குனர் திரு.M.கர்ணன் அவர்களுக்கும் இதில் சிறு பங்கு இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை! :)

      நமது NBS இதழைக் காணும் ஐரோப்பிய பதிப்பகத்தாரின் First Impressions என்ன என்பதை அறிய விரும்புகிறேன்! புதிய நாயகர்களோடு திரும்ப வாழ்த்துக்கள்!

      Delete
    2. டியர் கார்த்திக்!!!
      /// கௌபாய்களை விட, அவர்களின் எதிரிகளாக காட்டப்படும் செவ்விந்தியர்கள் மீதுதான் எனக்கும் ஈர்ப்பு அதிகம்! :) ////
      இது புரிந்து கொள்ளக்கூடியதே.என்றாலும் இதில் ஒரு சுவாரஸ்யமான சிக்கல் இருக்கிறது.பழங்குடிகள் என்றாலே அவர்கள் நல்லவர்கள்.அப்பாவிகள்.அவர்களின் விரோதிகளான வெள்ளையர்கள் கொடுங்கோலர்கள்.கொலைகாரர்கள் என்பதுபோன்ற சித்தரிப்புகள் பெரும்பாலும் தவறானவையாகும்.
      சிவப்பிந்திய மக்களிடம் கலாசாரம் என்ற பெயரில் ஏராளமான கொடிய பழக்க வழக்கங்கள் நிலவினஎன்பதையும்,அவர்களின் விஷ அம்புகளையும் மீறி பல வெள்ளை இனக்குழுக்கள் மேற்கில் குடியேற்றம் அமைக்க முயன்றபோது பெரும் கொலைவெறி தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டி இருந்ததையும் சுலபமாக மறந்துவிடலாகாது.இன்றைய அமெரிக்காவின் பெரும் முன்னேற்றத்துக்கு காரணம் அன்றைய குடியேற்றங்களே !
      புகழ்பெற்ற பத்திரிக்கையாளரும் ,new york tribune நிறுவனர்களில் ஒருவருமான ஹோராஸ் க்ரீலி (horace greeley)பின்வருமாறு கூறினார்."மேற்கு நோக்கி செல் இளைஞனே!தேசத்தோடு சேர்ந்து வளர்!"
      கடவுளாலேயே கைவிடப்பட்ட ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியில் ஏராளமான வெள்ளையர்களின் "மண்டை தொலிகளும்"கலந்திருக்கின்றன என்பதை "அமெரிக்க கனவில்"வாழும் இந்திய இளைஞர்கள் புரிந்து கொள்ள தவறி விட்டார்கள் என்பது அடியேனின் அபிப்ராயம்.

      Delete
    3. நீங்கள் சொல்வது போல இன்றைய நாகரீக ஆடம்பர அமெரிக்காவின் வளர்ச்சிக்கு காரணமானவர்கள்தான் வெள்ளையினத்தவரே , ஆனால் ஒரு மண்ணின் மைந்தர்களை அடிவேரோடு அழித்து அவர்கள் சொந்தபூமி மீது கட்டமைக்கபட்டதே இன்றைய அமெரிக்கா!

      Delete
    4. அன்பின் சோமசுந்தரம்,

      நான் உங்களிடம் சில சுவாரசியமான கேள்விகள் கேட்க விரும்புகிறேன்! :)

      1. முதலில் ஜாலியாய் ஒரு கேள்வி:
      நான் 'எனக்கு செவ்விந்தியர்கள் மீதான ஈர்ப்பு அதிகம்' என்று மட்டும்தானே சொல்லியிருந்தேன் - அதற்க்கான காரணங்களை சொல்லவில்லையே?! :) செவ்விந்தியர்கள் / பூர்வகுடிகள் / வெள்ளையர்கள் குறித்த நீண்டதொரு எண்ணத்தை நமது வாசக நண்பர் cap tiger-தானே பகிர்ந்திருக்கிறார்?! நியாமாக பார்த்தால் இது குறித்த உங்களின் பார்வையை நண்பர் cap tiger-இடம் அல்லவா முன்வைத்திருக்க வேண்டும்?! ;)

      2. சிவப்பு, மஞ்சள் & கருப்பு - வண்ணமயமாக ஒரு கேள்வி!:
      செவ்விந்தியர்கள் 'கிட்டத்தட்ட' முற்றிலும் 'அழிக்கப்பட்டது' குறித்த உங்கள் கருத்து என்ன? தாங்கள் இப்போது சிலாகிக்கும் அமெரிக்க அசுர வளர்ச்சியின் பின்னால் பல வெள்ளை மண்டைத் தொலிகள் உரிந்துள்ளன என்று உச்சுக் கொட்டும் நீங்கள், அந்த வெள்ளையர்கள் அடிமைப்படுத்தி, உழைப்பை உறிஞ்சி நசுக்கிக் கொன்ற லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்களை பற்றி என்றேனும் கவலை கொண்டதுண்டா? சீனா போன்ற ஆசிய நாடுகளில் இருந்தும் அடிமை முறையில் அமெரிக்காவிற்கு இழுத்துச் செல்லப்பட்டவர்கள் பல இலட்சம் - இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?!

      3. கடினமான ஒரு கலாச்சாரக் கேள்வி:
      "அந்தமான் நிகோபார் தீவுகளில் வசிக்கும் ஜார்வா மற்றும் இதர பழங்குடியினர் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான் என்றாலும் கலாசாரம் / பண்பாடு என்ற பெயரில் இன்னமும் வளர்ச்சியின்றி பின்தங்கியே உள்ளனர்! அவர்களை எல்லாம் அழித்து விட்டு அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும் நாகரிகமடைந்த இந்தியர்களை குடியேற்றப் போகிறோம்" என்று நமது இந்திய அரசாங்கம் அதிரடி முடிவெடுத்தால் நீங்கள் அதை ஆதரிப்பீர்களா அல்லது எதிர்ப்பீர்களா?! இந்த கேள்விக்கு கீழ்க்கண்ட இரு வேறு பார்வைகளில் இருந்து பதிலளியுங்கள்!
      3a. நாகரீகத்தில் முன்னேற்றம் கண்ட ஒரு இந்தியராக / தமிழராக!
      3b. அந்த அந்தமான் பூர்வகுடி மக்களில் ஒருவராக!

      4. கடைசியாக விவகாரமாய் ஒரு கேள்வி!:
      இது ஒரு உதாரணத்திற்கு மட்டுமே, கோபித்துக் கொள்ளக் கூடாது! காலம் காலமாய் உங்கள் மூதாதையர் வழி வந்த சொத்தாக உங்களிடம் பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்! அதன் நடுவில் நீங்கள் வழிபடும் குலதெய்வத்தின் ஒரு அழகிய கோயிலும் இருக்கிறது என்றும் வைத்துக்கொள்வோம்! உங்கள் பரம்பரைக்கென்று இருக்கும் சில சம்பிரதாயங்களை பின்பற்றி நீங்கள் உற்றோர் உறவினருடன் மகிழ்வுடன் வாழ்ந்து வரும் அந்நிலையில் திடீரென ஒரு முரட்டுக் கும்பல் உங்கள் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து, உங்கள் சம்பிரதாயங்கள் மூடத்தனமாக உள்ளன; உடனே இடத்தை காலி செய்யுங்கள்; நாங்கள் இந்த இடத்தை தரைமட்டமாக்கி தொழிற்சாலை ஒன்று நிறுவி இந்த இடத்தை முன்னேற்றப் போகிறோம் என்று துப்பாக்கி முனையில் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் மிரட்டினால் நீங்கள் அவர்களின் மண்டைத் தொலியை உரிக்க முயற்சிப்பீர்களா? இல்லை, 'அப்படியே ஆகட்டும் அய்யா' என்று மகிழ்ச்சியுடன் நடையைக் கட்டுவீர்களா?

      இவற்றிற்கு நீங்கள் பதில் அளித்த பின்னர் உங்களின் செவ்விந்திய / வெள்ளையர்கள் பார்வை குறித்த என் பார்வைகளை பகிர்கிறேன்! :)

      அன்புடன்,
      கார்த்திக்

      Delete
    5. ஆஹா, சூடு பிடிச்சிருச்சு!

      ஓ.... சாத்...தா...னோ...வ்....

      Delete
    6. ///இது புரிந்து கொள்ளக்கூடியதே.என்றாலும் இதில் ஒரு சுவாரஸ்யமான சிக்கல் இருக்கிறது.பழங்குடிகள் என்றாலே அவர்கள் நல்லவர்கள்.அப்பாவிகள்.அவர்களின் விரோதிகளான வெள்ளையர்கள் கொடுங்கோலர்கள்.கொலைகாரர்கள் என்பதுபோன்ற சித்தரிப்புகள் பெரும்பாலும் தவறானவையாகும்.
      சிவப்பிந்திய மக்களிடம் கலாசாரம் என்ற பெயரில் ஏராளமான கொடிய பழக்க வழக்கங்கள் நிலவினஎன்பதையும்,அவர்களின் விஷ அம்புகளையும் மீறி பல வெள்ளை இனக்குழுக்கள் மேற்கில் குடியேற்றம் அமைக்க முயன்றபோது பெரும் கொலைவெறி தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டி இருந்ததையும் சுலபமாக மறந்துவிடலாகாது.இன்றைய அமெரிக்காவின் பெரும் முன்னேற்றத்துக்கு காரணம் அன்றைய குடியேற்றங்களே !///

      ஒரு அந்நிய நாட்டார் சொன்ன பழமொழி தான் ஞாபகம் வருகிறது

      '' பொது மேய்ச்சல் நிலத்திலிருந்து வாத்தை திருடும் திருடனை சட்டம் கடுமையாக தண்டிக்கிறது ஆனால் அந்த வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தையே திருடும் கொள்ளைகாரனை சட்டம் போற்றி பாதுகாக்கிறது "

      Delete
    7. அந்த அந்நிய நாட்டார் எத்தனை வாத்துக்களின் மேய்ச்சல் நிலங்களை அபகரித்தாரோ !

      Delete
    8. ஒரு கிலோ வாத்துக்கறி என்ன விலை, ராஜா அவர்களே? :)

      Delete
    9. டியர் கார்த்திக்!
      உங்கள் இரண்டாவது கேள்வியிலிருந்து ஆரம்பிக்கிறேன்.///செவ்விந்தியர்கள் 'கிட்டத்தட்ட' முற்றிலும் 'அழிக்கப்பட்டது' குறித்த உங்கள் கருத்து என்ன? ///
      இது முற்றிலும் தவறான தகவல்.அமெரிக்காவில் சிவப்பிந்தியர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரிசர்வ் பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.அமெரிக்க காங்கிரஸ்,மற்றும் செனட் சபைகளில் இவர்களுக்கு பிரதிநிதித்துவம் உண்டு!!
      ஏதோ அடிமைமுறையை உருவாக்கியவர்களே ஐரோப்பியர்கள்தான் என்பது போல் பேசுவது தவறு.உலகம் முழுதும் பன்னெடுங்காலமாக பல்வேறு இனக்குளுக்களிலும் அடிமை முறை இருந்துள்ளது.அரபு நாடுகளில் ஆப்பிரிக்க கருப்பர்களை பொது இடங்களில் வைத்து "அடிமை சந்தை"நடத்திய வரலாறு உண்டு.அமெரிக்காவில் அடிமை முறைக்கு வெள்ளையர் மத்தியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்ததும் ,அதன் தொடர்ச்சியாக அடிமை ஒழிப்பு சட்டங்கள் உருவாக்கப்பட்டதும் நீங்கள் அறியாத ஒன்றல்லவே!!
      "நேரடியான அடிமைமுறை என்பது ஆலைகளுக்கு இயந்திரம் போல முக்கியமானது.அடிமை முறை இல்லாமல் உங்களுக்கு பருத்தி (காட்டன்)கிடையாது.பருத்தி இல்லாமல் நவீன ஆலைகள் இல்லை.அடிமைமுறையே காலனிகளுக்கு மரியாதை அளிக்கிறது.காலனிகளே உலக வர்த்தகத்தை உருவாக்கியுள்ளன.உலக வர்த்தகமே பெரும் தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளன.எனவே,அடிமை முறை என்பது மிகவும் முக்கியத்துவம் கொண்ட ஒரு பொருளாதார வகைப்பாடு ஆகும்.உலக நாடுகளிலேயே முற்போக்கான நாடான அமெரிக்கா .அடிமைமுறை இல்லையென்றால் பிற்போக்குதனத்தில் மூழ்கிவிடும்.அமெரிக்கா இல்லையென்றால் நவீன வர்த்தகமும் பண்பாடும் இல்லாமல் போய்விடும்."
      மேற்கண்ட கருத்தை உரைத்தவர் மேற்குலக வெள்ளை பண்ணையாளரோ ,வெள்ளை இனவெறி கு-க்ளக்ஸ்-க்ளான் ஆசாமியோ அல்ல.கம்யூனிச முற்போக்கு(!)வாதிகளின் குலகுருவான கார்ல் மார்க்ஸ் !!!
      மூன்றாவது கேள்விக்கு பதில்;பழங்குடிகளை நாம் ஏன் அழிக்கவேண்டும்?அந்த வேலையை செய்யத்தான் மாவோயிஸ்ட்கள் இருக்கிறார்களே!!
      நான்காவது கேள்விக்கு பதில்;அம்மாதிரியான "நில அபகரிப்பு"கடந்த ஆட்சியில் சகஜமாக நடந்தது."அம்மா"ஆட்சியில் இல்லை.அப்படியே என் நிலம் அபகரிக்க பட்டாலும் சட்டபூர்வமாகவே போராடுவேனே தவிர மண்டைதொலி உறிப்பு போன்ற காட்டுமிராண்டிதனத்தில் இறங்க அடியேன் ஒன்றும் "சிவப்பிந்தியன்"அல்லவே!!
      இறுதியாக முதல் கேள்விக்கு அடியேனின் பதில்; cap tiger என்ற பெயரை பார்த்ததும் ,அவர் உங்கள் facebook நண்பர் ஷி-நா-பா -வாக இருப்பாரோ என்று பயந்துவிட்டேன்.ஹிஹி!

      Delete
    10. //சட்டபூர்வமாகவே போராடுவேனே//! ஆஹா! அந்த சட்டங்களை அமைப்பவரே தவறுகள் செய்பவர்கள்தானே?? அதான் நம்மூர்ல சாத்தானே வேதம் ஓதுகிறது என்பார்களே, அதுமாதிரி! ஹிஹி!
      //காட்டுமிராண்டிதனத்தில் இறங்க அடியேன் ஒன்றும் "சிவப்பிந்தியன்"அல்லவே!!// எல்லா சுதந்திரங்களையும் கொண்டுள்ள நமக்கு, தம் தாய்நாட்டுக்காக போராடுபவர் காட்டுமிராண்டிகளாக தெரிவார்களோ??
      //அமெரிக்காவில் சிவப்பிந்தியர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரிசர்வ் பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.அமெரிக்க காங்கிரஸ்,மற்றும் செனட் சபைகளில் இவர்களுக்கு பிரதிநிதித்துவம் உண்டு!!// அந்த மாதிரி ரிசர்வ் பகுதிகள் என்னவென்றால் முள்வேலியில் குடியமர்த்தபட்ட இலங்கை தமிழர் நிலை என்பதை புரிந்துகொள்ளுங்கள். மேலும் அவர்கள் அந்த பகுதிகளில் கீழ்தரமாக நடத்தப்பட்டதற்கு , ஹாலிவுட் நடிகர் மர்லன் ப்ராண்டோ தனக்கு அளிக்கபடவிருந்த ஆஸ்கர் விருதை புறகணித்தார் என்பது வரலாறு!

      Delete
    11. saint ஜி, நான் cap tiger தான், ஆனா, tsi na pah கெடையாது! :)

      Delete
    12. வெள்ளையரிடம் மேம்பட்ட ஆயுதங்கள் இருந்தன !சூட்சும உத்திகள் இருந்தன !!இவை ஏதும் இல்லாமல் ஏதும் பண்ண இயலாமல் ,ஆத்திரத்தில் ,கோவத்தில் செவிந்தியர்கள் இவ்வாறு நடந்திருக்கலாம் ! பண்பாடு தெரிந்த,கலாச்சாரம் மிக்க ,நாகரீக காட்டு மிராண்டி அமெரிக்காதான் கோபத்தில் ,சும்மா இருந்த தங்களை சீண்டி பார்த்த ஜப்பானியரை ,தோல்வி பயத்தில் ,கோபம் கண்ணை மறைக்க அணுகுண்டை தூவி கொன்று குவித்தது! இவர்கள் மட்டும் செவிந்திய குடியிருப்புகளை ஆக்கிரமிக்கலாம் !இன்று உலக காவலனாக காட்டி கொண்டு எல்லை தாண்டி, எல்லை மீறுகிறது !வல்லான் வகுத்ததே வாய்க்கால் !அமெரிக்காவில்,ஐரோப்பாவில் கொடும் தண்டனைகள் இல்லையா !ஐரோப்பிய வரலாறு தங்களுக்கு தெரியாததா !
      அடிமை முறை இல்லாமலும் இவை அனைத்தும் தயாராகும் நண்பரே வயிறு பசித்தால் !

      //இது முற்றிலும் தவறான தகவல்.அமெரிக்காவில் சிவப்பிந்தியர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரிசர்வ் பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.அமெரிக்க காங்கிரஸ்,மற்றும் செனட் சபைகளில் இவர்களுக்கு பிரதிநிதித்துவம் உண்டு!!//

      அதாவது நீ நெல் கொண்டு வா,நான் உமி கொண்டு வருகிறேன் ,இடித்து ஊதி ஊதி திங்கலாம் என்பது இதுதானே !

      தகுதி உள்ளன தப்பி பிழைக்கும் !எதிரியை பயமுறுத்து !இவை இயற்கை நண்பரே !!
      உயிர் வாழ தங்கள் தகுதியை வளர்த்து கொள்ள செவிந்தியர்களுக்கு இயலவில்லை !அதுவே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் !

      Delete
    13. நண்பர் சோமசுந்தரம் அவர்களே :)

      மேற்கோள்களுடன் கூடிய உங்களுடைய தெளிவான பதில்களுக்கு நன்றி!!! :) அமெரிக்காவில் தொடங்கி, கம்யூனிசம் மாவோயிஸம் என பயணித்து இறுதியில் அம்மா அவர்களின் ஆட்சி வரை புள்ளி விவரங்களுடன் பேசும் உங்கள் உலக மற்றும் உள்ளூர் அரசியல் ஞானம் என்னை புல்லரிக்க வைக்கிறது! பாராட்டுக்கள்! :) :)

      அடிமைமுறை இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் இருந்திருக்கிறது என்ற உண்மையை நான் மறுக்கவில்லை. அடிமை முறை என்ற பிற்போக்குத்தனம் அடித்தளமாய் அமைந்திராவிடில் தற்போதைய முற்போக்கு அமெரிக்கா இல்லை என்ற உண்மையை நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள்! இதன் அடிப்படையில் பார்த்தால் ஜெர்மனி உலகப் போரின் போது நிகழ்த்திய கொடூரங்களும், ஆக்கிரமிப்புகளும், இன ஒழிப்பும் உங்கள் பார்வையில் நியாயமானவைதான் இல்லையா?! அவர்களும் தங்கள் இனத்தை முன்னேற்றத்தானே மற்ற இனங்களை அடிமைப்படுத்த எண்ணினர்?! செவ்விந்தியர்கள் போலவே யூதர்களும் ஒன்றும் ஒட்டு மொத்தமாய் அழிந்து போய் விடவில்லையே?! பல நாடுகளில் சிதறுண்டு இன்னமும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள், இல்லையா?! நாகரிகத்தில் / தொழில்நுட்பத்தில் வெகுவாய் முன்னேற்றம் கண்டிருந்த நாஜி ஜெர்மானியர்கள் நிகழ்த்திய ஹோலோகாஸ்ட் - மண்டைத்தொலி உரிப்பதை விட ஒன்றும் கொடூரமான செயல் அல்ல, இல்லையா?!

      அதே போல அமெரிக்கா அணுகுண்டு வீசி இரண்டு ஜப்பானிய நகரங்களை அழித்ததும் உங்கள் பார்வையில் காட்டுமிராண்டித்தனமான செயல் இல்லை, அல்லவா?! அந்நிகழ்வுக்கு முன்னர் ஜப்பானியர்களும் சளைத்தவர்களாக இருந்திடவில்லை என்பது வேறு விஷயம்! ஆக்கிரமிப்பு பற்றி இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம்! அறிவியல் முன்னேற்றம் கண்ட மனிதர்கள் நவீன ஆயுதங்களின் உதவியுடன் தங்கள் பிரதேசத்தை / எல்லையை பாதுகாக்கப் போராடினால் அதற்குப் பெயர் போர்! பூர்வகுடிகள் தங்களுக்கு தெரிந்த வகையில் போராடினால் அது காட்டுமிராண்டித்தனம், இல்லையா?!

      சரி விடுங்கள்!!! அடிமை முறை / இன ஒழிப்பு குறித்த உங்களின் 'யதார்த்தமான' பார்வை இதுதான் என்றால் அது பற்றி நான் மேற்கொண்டு இங்கே விவாதிக்க விரும்பவில்லை! :) இருந்தாலும் நான் உறுதி அளித்திருந்தபடி உங்கள் பார்வை குறித்த என் பார்வை இதுதான்! தங்கள் நிலத்திற்காக போராடிய செவ்விந்தியர்கள் கொலைவெறியர்கள் / காட்டுமிராண்டிகள் என்றால் அவர்களை அத்து மீறி சுட்டு வீழ்த்திய வெள்ளையர்களும் அப்படிப்பட்டவர்களே! இன்றைய அமெரிக்க முன்னேற்றத்திற்கு அன்றைய குடியேற்றங்கள்தான் காரணம் என்றாலும் அவர்கள் இழைத்த குற்றங்களை எவரும் எளிதில் மறந்துவிடலாகாது! அன்றைய வெள்ளையர்களுக்கு இன்றைய அமெரிக்காவில் எவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவு பங்கு அவர்களால் நசுக்கப்பட்ட பூர்வகுடிகளுக்கும், அடிமைகளுக்கும் இருக்கிறது!

      கடைசியாக ஒரு சிந்தனைத் துளி! செவ்விந்தியர்கள் குறித்த நமது அறிதலானது, மேலைநாட்டவர்கள் எழுதி வைத்த வரலாறு, அவர்கள் படைத்த காமிக்ஸ் மற்றும் திரைப்படங்கள் - இவற்றின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது! இந்தத் தகவல்கள் முழுமையானதாகவோ, நடுநிலைமையானதாகவோ இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை!

      //இறுதியாக முதல் கேள்விக்கு அடியேனின் பதில்; cap tiger என்ற பெயரை பார்த்ததும் ,அவர் உங்கள் facebook நண்பர் ஷி-நா-பா -வாக இருப்பாரோ என்று பயந்துவிட்டேன்.ஹிஹி!
      ஹாஸ்யமான உங்கள் பதிலை மிகவும் ரசித்தேன்! :) நேற்று நீங்கள் முதன் முதலாய் எனக்கு எழுதிய நீண்ட பின்னூட்டத்தைக் கண்டதும், உங்கள் வலைப்பூ நண்பர் ம-ம -தான் மீண்டும் என்னுடன் வாதம் செய்ய வந்திட்டாரோ என்று நானும் சற்று பயந்துதான் போய்விட்டேன்! ;) பிறகு உங்களின் பெயர் கண்டு அச்சம் தெளிந்தேன்! :) :)

      ***

      @ஆடிட்டர் ராஜா: உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி - உண்மையில் மிக அருமையான பழமொழி அது!

      @ஸ்டீல் க்ளா: உங்களுக்கும் மிக்க நன்றி! ஆனால் நீங்கள் இட்ட அந்த கருத்து ஏனோ காணாமல் போய் விட்டது! :)

      @cap tiger: நன்றி நண்பரே! :)

      @விஜய்: உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி! ;) வலைப்பூ இன்னும் தொடங்கவில்லையா?! (நாங்களும் ஊக்குவிப்போம்ல!) :D

      Delete
    14. காலம் வலிமையானவனுக்கே சொந்தம்,பிறர் யாரும் அவனை அண்டி பிழைப்பதோ,அனுசரித்து போவதோ நலம் !இல்லையெனில் காணாமல் போவாய்,இதுதான் காலம் முழுதும் நடந்து வருகிறது !அங்கங்கு தேவையான முகமூடி அணிந்து கொள்கிறோம் நம்மை நிலை நிறுத்தி கொள்ள !

      Delete
    15. //அதாவது நீ நெல் கொண்டு வா,நான் உமி கொண்டு வருகிறேன் ,இடித்து ஊதி ஊதி திங்கலாம் என்பது இதுதானே !//
      ஹா ஹா ஹா, சரியாக சொன்னீர்கள் ஸ்டீல் க்ளா! :)

      Delete
    16. பெரும்பாலும் நண்பர் புனித சாத்தானோடு உடன்படும் நான் , இம்முறை கடுமையாக மாறுபடுகிறேன்......

      நண்பர்களே....

      உலகம் முழுக்க வெள்ளையர்கள் குடியேற்றம் என்பது பூர்வ குடிகளை அழித்தே நிகழ்ந்தது........அதிலும் ஸ்பானியர்கள் மிகக்கொடியவர்கள்......மதன் அவர்கள் எழுதிய [ மனிதனுக்குள் ஒரு மிருகம் ? ] புத்தகம் ஒன்றில் ஸ்பானிய தளபதி பிஸாரோ தன்னை வரவேற்க வந்த மாயன் மன்னர் அட்வால்பாவை எப்படி தந்திரமாக சிறைப்படுத்தி படுகொலை செய்தான் என்பதை விவரித்திருப்பார்....கல் நெஞ்சையும் கரைய வைக்கும் கொடூரம் அது.....................செய்யும் காட்டுமிராண்டித்தனங்களை வெள்ளையர்கள் செய்துவிட்டு நாகரீகத்தில் சிறந்து விளங்கிய மாய‌ன்களை
      காட்டுமிரான்டிகளாக சித்தரித்து ''அபோகலிப்டோ '' போன்ற படங்களை எடுப்பதுவெள்ளையர்களுக்கு மட்டுமே உரித்தான‌ அயோக்கியத்தனம்.......


      ஆஸ்திரேலிய பழங்குடிகளான அபாரிஜின்ஸ் இன்று கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டனர்........அமெரிக்காவில் உள்ள செவ்விந்தியர்கள் தப்பிப்பிழைத்தவர்கள்........

      ஒரு வாதத்துக்காக நீங்கள் சொல்வது உண்மை என்றுவைத்துக்கொண்டால் , வெள்ளையர்கள் வராவிட்டால் நாமும் காட்டுமிரான்டிகளாக இருந்திருப்போமா என்ன?

      Delete
    17. நண்பரே ,புனித சாத்தான் நம் அனைவருக்குமே நண்பரே ,மேலும் அவர் எனது நெருங்கிய நண்பர் கூட அவரது கருத்துக்களே இங்கே எதிர் .......முகம் பார்க்க வேண்டாம் ,கருத்துக்களை மட்டுமே பார்ப்போம் ,மனதில் பட்டதை தயங்காமல் முன் வையுங்கள்.......

      Delete
    18. டியர் கார்த்திக்,
      நமது விவாதம் கொஞ்சம் சுவாரசியமாய் இருக்கும்போலிருக்கிறது.நீங்கள் குறிப்பிட்ட ஜெர்மானியர் -யூதர் பிரச்னையை இந்த இடத்தில் நியாயமாய் நான் தான் உதாரணம் காட்டவேண்டும்.அமெரிக்காவின் பூர்வகுடிகள் சிவப்பிந்தியர்.வெள்ளையர் வந்தேறிகள் என்கிற உங்கள் வாதத்தில் சற்று நாஜிவாடை அடிக்கிறது.நாஜிகள் பாலஸ்தீனத்திலிருந்து வந்த "வந்தேறிகளான யூதர்கள்"நம்மை அதிகாரம் செய்வதா?என்று பிரச்சாரம் செய்து தங்கள் அரசியலை நடத்தினார்கள்.அதன் கொடூர விளைவே ஹோலோகாஸ்ட் .ஆனால்,யூதர்கள் ஒன்றும் தெரியாத அம்மாஞ்சிகள் அல்லவே.தற்போதய அமெரிக்க தேசத்தையும்,உலக வர்த்தக அமைப்புகளையும் ஆள்பவர்கள் பெரும்பாலும் யூதர்களே!!google ,facebook ஆகியவற்றின் பிதாமகர்கள் இவர்களே!!
      ஒரு நாட்டில் பூர்வ குடிகள் மட்டுமே வாழவேண்டும்.மற்ற வந்தேறிகள் வெளியேறவேண்டும் என்றால் நமது புண்ணிய தேசத்தில் எண் பது சதவீதம் பேர் வெளியேற வேண்டியதுதான்.
      அன்றாடம் நாம் பயன்படுத்தும் பல்வேறு உபகரணங்கள்,விஞ்ஞான கருவிகள்,விமானம்,ரயில்,கம்ப்யூட்டர் தொலைபேசி இன்னபிற லொட்டு லொசுக்குகளை உருவாக்கியவர்கள் அமெரிக்கர்களே.நாமோ இவற்றையெல்லாம் ஜாலியாக அனுபவித்துக்கொண்டு மனம்போனபடி அமெரிக்கர்களை வசைபாடுகிறோம்.

      இந்தியர்கள் நன்றியுடையவர்கள்.ஹிஹி!!


      Delete
    19. ஜெர்மானியர்கள் அடிமைப்படுத்தியது யூதர்களை மட்டுமல்லவே?! :) சரி இந்த நாஜி வாடை, பஜ்ஜி வாடையை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள்! நான் இந்த விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை என்று முன்னரே சொல்லி விட்டேன் நண்பரே! :) மாவோயிசம், நாஸிசம், கேபிடலிசம் என வகை வகையாக பிளந்து கட்டும் நீங்கள் உங்கள் வாதங்களை, சும்மா போய்க் கொண்டிருந்த என்னை மட்டும் இழுத்து வைத்து அடுக்குவானேன்?! :) :) :) இதுதான் சாத்தானிசமோ?! ;) செவ்விந்தியர்களை பிடிக்கும் என்று சொன்னது 'சாத்தான் குற்றமா'?! ;) அப்படியே உங்கள் வாதத் திறமைகளை நண்பர் cap tiger, ஸ்டீல் க்ளா, ஆடிட்டர் ராஜா, சிவ சரவணக்குமார் போன்ற மற்ற நண்பர்களிடமும் காட்டலாமே?! :) :) :) அவர்களுக்கு இன்னமும் ஒரு பதில் கூட சொல்லவில்லையே நீங்கள்? இது பாவமில்லையா?! :D

      Delete
    20. என்ன சாத்தான் ஜி?? கார்த்திக்கு மட்டும் பதிலுரைக்கிறீர்கள்? நாஜிவாடை என்றெல்லாம் வேறு! பூர்வகுடிகள், வந்தேறிகள் என்று ஆரம்பித்ததே நாந்தான். கார்த்திக் கௌபாய்களை விட செவ்விந்தியர்களே மிகவும் கவர்கிறார்கள் என்று கூறினார், மண்டைதொலி உரித்த்து எனக்கு பிடித்திருக்கு என்றெல்லாம் சொல்லவில்லை . இதிலென்ன தவறு கண்டீர்களோ? செவ்விந்தியர்களுக்கு ஆதரவாக பலபேர் இங்கு பதிலிட்டுள்ளார்கள், என்னையும் சேர்த்து.ஆனால் நாங்கள் யாருமே யுத்தமுறைகளையோ, கையாண்ட வன்முறைகளையோ சொல்லவில்லை. பொதுவாக கௌபாய் கதைகள் என்றாலே பெரும்பாலும் ராணி காமிக்ஸில் வங்கிகொள்ளைகள், சூதாட்டங்கள், கொலைகள் துப்பறிதல் என்று மேற்கத்திய உலகின் ஒரு பகுதியை மட்டுமே நமக்கு வழங்கிவந்தனர்(நான் படித்தவரையில்) ஆனால் டெக்ஸ், மற்றும் டைகர் கதைகள் லயன்/முத்து மூலமாக நமக்கு அறிமுகமான பிற்பாடே செவ்விந்தியர்கள் என்ற சமூகமும், அவர்களே அம்மண்ணின் பூர்வகுடிகள் என்பதும் தெரிய ஆரம்பித்தன. அதுலும் கூட கோசைஸ் என்ற செவ்விந்திய தலைவர் கடைசியில் தம் மக்களுக்காக துப்பாக்கியுடன் தனிமையில் இறந்துகிடப்பதாக டைகர் கதையில் வரும்( உண்மையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கபடும் கோசைஸ் பிற்பாடு ராணுவமுற்றுகையால், வேறுவழியில்லாமல் பட்டினி கிடந்த தம் மக்களுக்காக சரணடைந்து இறுதியில் ஒரு அப்பாச்சே ரிசர்வ் முகாமில் நோய்வாய்பட்டு இறக்கிறார்) இந்தியாவின் வந்தேறிகளை இங்கே யாரும் வெளியேற சொல்லவில்லை. பூர்வகுடிகளான நாம், இன்னொரு தேசத்தின் பூர்வகுடிகளை மதிக்கவாவது செய்வோம் என்றே சொல்லி கொள்கிறேன்!

      Delete
    21. டியர்ஸ் கார்த்திக்,cap tiger,ஸ்டீல் க்ளா,சிவ.சரவணகுமார்,மற்றும் கணக்கரசர் அவர்களே!!!
      நான் ஒன்றும் சிவப்பிந்தியருக்கு எதிரியல்ல.நம்மில் பலர் சிவப்பிந்தியரை ஆதரிக்கும் சாக்கில் மனிதாபிமானமற்ற முறையில் வெள்ளையர்களை "வந்தேறிகள்"என வசைபாடுவதைதான் எதிர்க்கிறேன்.வெள்ளையர்கள் வந்தேறிகள் என்றால் காஸ்ட்ரோ,சே போன்றவர்களும் ஸ்பானிஸ்காரர்கள் தானே!!
      அவர்களும் உங்கள் பார்வையில் வந்தேறிகளோ?
      வெள்ளையர் அமெரிக்காவில் குடியேற்றம் அமைத்த அதே காலக்கட்டத்தில் இந்தியாவிலும் புதிய இனக்குழுக்கள் பல குடியேறின.ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றின.அவர்களும் உங்கள் பார்வையில் வந்தேறிகளோ?
      ஒரு கண்ணில் வெண்ணை.மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற உங்கள் வாதத்தில் மிக பெரிய "ஓசோன்"ஓட்டை இருக்கிறது.

      Delete
    22. சிகப்பாய் ஒரு சொப்பனத்தில் விட இந்த விவாதத்தில் ஆக்சன் அதிகமாக இருக்கும் போல் உள்ளதே...:)

      Delete
    23. டியர் சாத்தான் ஜி!
      பூர்விகக்குடிகள் தவிர்த்து எந்த ஒரு நாட்டிலும் புதிதாக் குடியேறியவர்கள் வந்தேறிகள்தான்.இது ஒன்றும் மனிதாபிமானமற்ற சொல் அல்ல! நீங்கள் செவ்விந்தியர்களை காட்டுமிராண்டிகள் என சொல்லிய பிறகே இங்கே விவாதம் நீள்கிறது! இரு பக்க வன்முறைகள் பற்றி பேசி கொண்டிருக்கிறோம்! தாங்கள்தான் குழம்பி கொள்கிறீர்கள்! எங்கள் கௌபாய் காமிக்ஸ் ஈர்ப்புக்கான பதில் செவ்விந்தியர்களே! இதில் எந்த தவறும் இல்லையே??

      Delete
    24. எங்கெல்லாம் பூர்வகுடிகள் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுகிறஅர்களோ அங்கு மட்டுமே வந்தேறிகள் என்ற வார்த்தை வெருக்கதகுந்த சொல்லாக கருதபடுகிறது .

      Delete
    25. வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டு சுரண்டவில்லையா !செல்வ செழிப்பே,பரந்து விரிந்த வேட்டை நிலங்களே நம்மை ,செவிந்தியர்களை மேற் கொண்டு ஏதும் செய்யாமல் சந்தோசமாக வைத்திருந்தது !ஆனால் விற்பனை சந்தை ,மேய்ச்சல் நிலம் தேவை என்பதும் வறண்ட பகுதிகளுக்கு சொந்தமான அந்நியர்களை கவர காரநமாயிற்று ! அண்டை நாடுகளை வெல்ல உதவி,போர்வைகள்,உற்ச்சாக பானம் , என்று ஆரம்பித்து பின்னர் சுரண்ட ஆரம்பித்ததுடன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இனத்தை மூலைக்கு கொண்டு சேர்த்ததும் ,அழித்தொழித்ததுமே காட்டு மிராண்டித்தனம் !
      ஃபிடல் அவரது மக்களுக்காகத்தானே போராடுகிறார் !செவிந்தியரை பொறுத்த வரை அவர்களை ஒடுக்கிய ,அளித்தொளித்த அனைவருமே குற்றவாளிகள்தாம் !
      பல கண்டு பிடிப்புகளை தந்த அவர்கள் ஆய்த வியாபாரம் ,அந்த கண்டு பிடிப்புகளின் விற்பனை சந்தை என்று இன்னும் மேலும் உறிஞ்சி கொண்டிருக்கிறார்கள் ....பசுமைப்புரட்சி என்று நம்மை ஏமாற்றி ,இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத விற்பனை சரிவடைய ,அவர்களது ரசாயனங்களை விற்பனை செய்ய உரங்களை தந்து நமது நிலங்களை மலடாக்கிய செயல், பிற நாடுகளின் கண்டு பிடிப்புகளுக்கும் உரிமை கோரி அதனும் காசாக்கும் செயல் என இன்னும் உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கிறார்கள்......அவர்களுக்கு ஒரு அமெரிக்கா போதாது !அன்று பஞ்சத்தை போக்க பசுமை புரட்ச்சி உதவியிருக்கலாம் ஆனால் அது தேவை அல்ல என்று இன்று நிரூபிக்க பட்டு வருகிறது !
      மேலும் வரலாறுகள் ஆளும் வர்கத்திற்க்காக திரிக்க படுவதும் உண்டு !நமது நாட்டிலே சிப்பாய் கழகம் என திரிக்க படவில்லையா ........
      ஏன் டெக்ஸ் என்ற வெள்ளயர்தாம் போராட வேண்டுமா ,அங்கும் அவர்கள்தானே ஆதிக்கம் செலுத்துகின்றனர் !

      Delete
    26. செவிந்தியர் யாரும் கதை உருவாக்கி இருந்தால் அங்கே வெள்ளையரை காக்க ஒரு செவிந்திய தலைவர் உருவாகி இருப்பார் !

      Delete
    27. //ஏன் டெக்ஸ் என்ற வெள்ளயர்தாம் போராட வேண்டுமா ,அங்கும் அவர்கள்தானே ஆதிக்கம் செலுத்துகின்றனர் !//

      Valid Point.

      Delete
    28. மைடியர் சாத்தான் ஜி! :)

      நான் வெள்ளையர்கள் வந்தேறிகள் என்பதால் அவர்கள் அமெரிக்காவை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்று எங்கேயாவது டயலாக் அடித்தேனா?! :) :) :) அதே போல நான் எந்த விதமான கொச கொச 'இசமும்' இங்கே பேசவில்லை!!! ;)

      நான் சொல்வதெல்லாம் இதைத்தான்:
      //தங்கள் நிலத்திற்காக போராடிய செவ்விந்தியர்கள் கொலைவெறியர்கள் / காட்டுமிராண்டிகள் என்றால் அவர்களை அத்து மீறி சுட்டு வீழ்த்திய வெள்ளையர்களும் அப்படிப்பட்டவர்களே! இன்றைய அமெரிக்க முன்னேற்றத்திற்கு அன்றைய குடியேற்றங்கள்தான் காரணம் என்றாலும் அவர்கள் இழைத்த குற்றங்களை எவரும் எளிதில் மறந்துவிடலாகாது! அன்றைய வெள்ளையர்களுக்கு இன்றைய அமெரிக்காவில் எவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவு பங்கு அவர்களால் நசுக்கப்பட்ட பூர்வகுடிகளுக்கும், அடிமைகளுக்கும் இருக்கிறது!//

      நீங்கள் நடுநிலைமை தவறாதவர் என்பதால் இன்றைய அமெரிக்க முன்னேற்றத்தின் பின்னால் அன்றைய வெள்ளையர்களுக்கு மட்டும் அல்ல - நிலத்தை இழந்த செவ்விந்தியர்களுக்கும், உழைப்பைக் கொட்டிய அடிமைகளுக்கும் அதே அளவு பங்கிருக்கிறது என்பதையும் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!

      நீங்கள் சொன்னது: //நம்மில் பலர் சிவப்பிந்தியரை ஆதரிக்கும் சாக்கில் மனிதாபிமானமற்ற முறையில் வெள்ளையர்களை "வந்தேறிகள்"என வசைபாடுவதைதான் எதிர்க்கிறேன்//
      மிகச் சரியான கருத்து! :) அப்படியே, வெள்ளையர்களை உயர்த்திக் காட்டும் சாக்கில் சிவப்பிந்தியர்கள் எல்லாம் நாகரிகமற்ற கொலைவெறியர்கள் / காட்டுமிராண்டிகள் என நீங்கள் வசைபாடிய வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்! மேற்கத்தியர்கள் எழுதி வைத்த ஒரு தலை சார்பான வரலாற்றையும் / படைப்புகளையும் இதே வீரியத்துடன் வாதிட்டு எதிர்ப்பீர்கள் என்றும் நம்புகிறேன்! அமெரிக்க வளர்ச்சியின் பிரதிபலன்கள் செவ்விந்தியர்களை முழுதும் சென்றடைய விடாமல் ரிசர்வ் பகுதிகள் என்ற பெயரில் அவர்களை ஒட்டுமொத்தமாய் ஒடுக்கி வைத்துள்ள அவலத்தையும் எதிர்ப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.

      //இந்தியர்கள் நன்றியுடையவர்கள்.ஹிஹி!!//
      நம்மைப் போன்ற பல நாடுகளை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சுரண்டு சுரண்டு என சுரண்டி, முடிந்த அளவு செல்வத்தை வாரிச் சென்று விட்டு, நம்மை இப்போது மூன்றாம் உலக நாடு என்று (அதாவது ஏழை நாடு என்ற அர்த்தத்தில்) முத்திரை குத்தி அழைத்தாலும் அவர்கள் விட்டுச் சென்ற ஆங்கிலம், 230V மின்சாரம்(?!), அரசியல் அமைப்பு இன்னபிற லொட்டு லொசுக்குகளை இன்னமும் கட்டிக்கொண்டு அழும் இந்தியர்கள் நன்றியுடையவர்கள்தான்! மேலைநாட்டவரே என்றாலும் சொந்தமாய் நிதி திரட்டி அணை கட்ட உதவிய பென்னி குக் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்துக் கொண்டாடும் தமிழர்களும் நிச்சயம் நன்றி உடையவர்கள்தான்! :)

      @ஸ்டீல் க்ளா:
      //ஏன் டெக்ஸ் என்ற வெள்ளயர்தாம் போராட வேண்டுமா ,அங்கும் அவர்கள்தானே ஆதிக்கம் செலுத்துகின்றனர் !//
      அதாவது நமது வேதாளர் (எ) மாயாவி (எ) Phantom என்ற வெள்ளையர், ஆப்பிரிக்க பூர்வ குடிகளுக்காக தன உயிர்(களை) கொடுத்து தலைமுறை தலைமுறையாக போராடவில்லையா?! அப்படித்தான் இதுவும்! ;) 'மீசையில் மண் ஓட்டினாலும் நாங்க (மட்டும்தான்) எப்பவுமே சூப்பர் ஹீரோஸ்!' :) :) :)

      Delete
    29. //ரிசர்வ் பகுதிகள் என்ற பெயரில் அவர்களை//
      "கொஞ்சமாய் எஞ்சிப் பிழைத்த அவர்களை" என்று திருத்திக் கொள்ளுங்கள்! :)

      Delete
    30. //நம்மைப் போன்ற பல நாடுகளை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சுரண்டு சுரண்டு என சுரண்டி, முடிந்த அளவு செல்வத்தை வாரிச் சென்று விட்டு, நம்மை இப்போது மூன்றாம் உலக நாடு என்று (அதாவது ஏழை நாடு என்ற அர்த்தத்தில்) முத்திரை குத்தி அழைத்தாலும் அவர்கள் விட்டுச் சென்ற ஆங்கிலம், 230V மின்சாரம்(?!), //

      Delete
  35. Dear Editor, Wish you a happy journey. NBS is awesome. Kudos for that. Please take a copy of NBS on your Europe trip. Please get rights for

    1) Blake & Mortimer
    2) IR$

    I really liked Gil Jordan. His presence of mind on the crime scene is super.

    Please consider to publish the stories as single issues.It will helpful for us to arrange it like largo winch collection, chick bill & Co collection, blueberry collection, etc...

    ReplyDelete
  36. NBS எனது வரிசை 1.லார்கோ
    2.ஷெல்டன்
    3.இருளில் ஒரு இரும்பு குதிரை
    4.ஜில் ஜோர்டான்
    5.கான்சாஸ் கொடூரன்
    6. சிக் பில்
    7.மாடஸ்டி
    8.மாயாவி

    ReplyDelete
  37. நீண்ட நாட்களுக்குப் பிறகு டெக்ஸ் வில்லரின் வருகை மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. அட்டைப் படம் கலக்களாக உள்ளது. எடிட்டர் அவர்களின் பயணம் சிறப்பாகவும்,வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  38. இதற்கு மட்டும் யாரும் எதுவும் சொல்லமாட்டார்களோ???

    //இந்தப் புத்தகக் காட்சி விழாவில் புத்தகங்களின் விற்பனைக்காக விகடன் பிரசுரம் இரண்டு அரங்குகளையும் (231, 376,377) சந்தா தொடர்பான விவரங்களுக்காக (211) ஓர் அரங்கையும் அமைத்துள்ளது. .......
    .......

    ......அதற்கு மறுதினம், விகடன் பிரசுர அரங்குக்கு வருகை தந்த திரைப்பட இயக்குநரும் நடிகருமான வி.சசிகுமார், இயக்குநர் சமுத்திரக்கனி, இசையமைப்பாளர், ஜேம்ஸ் வசந்தன், ஒளிப்பதிவாளர் கதிர், இயக்குநர் ஷி.ஸி.பிரபாகரன் ஆகியோர், 'சுப்ரமணியபுரம்' (திரைக்கதை, வசனம்) நூலை வெளியிட்டனர்.///

    http://news.vikatan.com/index.php?nid=12067

    ReplyDelete
    Replies
    1. NBS வெளியிட்டா மட்டும் கண் உறுத்துதாம்!

      அடுத்த வருஷம் 'விகடன்' நிறுவனத்துக்கும் ஸ்டால் தரமாட்டோம் என்று மிரட்டிப் பார்க்கட்டும் பார்ப்போம். நண்பர்கள் யாராவது இதனை உரியவர்கள் கவனத்துக்கு கொண்டுபோகவேண்டும்! நாக்கை பிடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்கவேண்டும்! காமிக்ஸ் என்றால் இளக்காரமாப் போச்சா அவங்களுக்கு?

      Delete
    2. இந்த வருடம் மொத்த கண்காட்சிக்கும் ஸ்பான்சரே விகடன் தான்.. பின் அவர்களை முறைக்க முடியுமா... மொத்தம் 9 ஸ்டால்கள் ஆக்கிரமிப்பு செய்தததோடு அல்லாமல், மற்றும் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் ஸ்பான்சர் பணம் மட்டும் செலவழித்திருக்கிறார்களாம்.

      நான் கேள்விபட்டவரை புத்தக வெளியீடிற்கு எந்த தடங்கலும் இருப்பது போல தெரியவில்லை. அந்த அந்த ஸ்டால்களில் அது நடந்து கொண்டு தான் இருக்கிறது. கூட்டம் கூடி மற்ற ஸ்டால்களை மறித்தது போல இருந்தது ஒன்று தான் பிரச்சனையாக இருந்திருக்கும். கூடவே, முதல் நாள் தள்ளுபடி இல்லாமல் விற்றதற்காக புகார்கள் போய் இருந்தன என்பதற்காகவும், சற்று அதிகமாக கடிந்து கொண்டனர் போல.

      Delete
  39. டெக்ஸ்சின் ஒரிஜினல் நீலவண்ண பின்னணி அட்டைப்படத்தை சாக்லேட் வண்ணபின்னணியோடு தாங்கள் அரங்கேற்றியிருக்கும் விதம் ஒரிஜினலை விட அட்டகாசமாக உள்ளது! தாங்கள் ஐரோப்பாவிலிருந்து வந்தவுடன் ஜில் ஜோர்டான் போல் அசத்தலான புது கார்ட்டூன் கதைகளை எதிர்பார்க்கிறேன்?

    ப்ளீஸ், consider like 1. Bluecoats & Legends of percevan? சீக்கிரம் நமது ரேடாரில் ஏற்றுங்கள்?

    ReplyDelete
    Replies
    1. Bluecoats - ஆதரவு அதிகமாக இருந்தால் கொண்டுவர முயற்சி செய்வார். இந்த கதைக்கு ஆசிரியர் தயங்குகின்றார்.

      Delete
  40. எனக்கு
    கௌபாய் கதைகளில் ஆர்வம் வந்ததற்கு காரணமே
    'மன்றோ' தோன்றும் "கணவாய்க் கொள்ளையர்" தான்

    ReplyDelete
  41. இன்று மதியம் கண்காட்சிக்கு போய் இருந்த எனக்கு ஆச்சர்யம் டெக்ஸ் கதை அங்கே கிடைத்தது.
    வாங்கிவிட்டேன் இன்னும் படிக்கவில்லை.
    அட்டை படம் அருமை.இப்பொழுது வருகின்ற அட்டை படங்கள்
    எல்லாமே மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளது வரவேற்கத்தக்கது.
    சென்று இருந்த இடத்தில் நண்பர் விஸ்வா அவர்களையும் ஸ்ரீராம் அவர்களையும் சந்திக்க முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் தலையணை அளவில் எதிர்பார்த்த எனக்கு சற்று ஏமாற்றமே.

      Delete
    2. இரவு கழுகின் வருகை இரவு கழுகுடன் துவங்குகிறது போலும் !நன்றி !

      Delete
  42. அடுத்து வர இருப்பது யார் கதை ? எப்போது வரும்?

    ReplyDelete
  43. I suppose Comics Classics இந்த மாதத்திலிருந்து வரத்தொடங்கவேண்டும். அதைப் பற்றிய செய்தி ஏதாவது உண்டா?

    ReplyDelete
  44. 'சிகப்பாய் ஒரு சொப்பனத்தில்' மாதம் ஒரு வாசகராய் கலக்கியிருக்கும் நண்பர் ஜான் சைமனுக்கு வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  45. மிக்க நன்றி நண்பா! அனைவரது அதிரடி பயோடேட்டாவும் அரங்கேற வேண்டுமென்பதே என் அவா! உடனடியாய் தங்களது விவரம் இணைத்து சிங்கத்தின் அரண்மனைக்கு அஞ்சல் செய்ங்க ஜி!

    ReplyDelete
  46. இருளில் ஒரு இரும்புக்குதிரை ''VON RYAN'S EXPRESS'' சினிமாவை ஞாபகப்படுத்துகின்றது. நல்ல விறு விறுப்பான கதை . எனினும் NBS ல் இதற்கு மூன்றாம் இடமே!
    முதல் இரண்டு இடங்கள் லார்கோவிற்க்கும் வேய்னிர்க்குமே !
    சிக் பில் & கோ பிடித்தமானவர்கள் என்பதால் விரும்பி படித்தேன். ''அந்த முஸ்தபாவை காட்டு எனக்கு...அவன்கிட்ட நான் சித்தே பேசியே தீரனும் !'' கலக்கல் கலாட்டா.

    கௌபாய் கதைகள் ஏன் பிடிக்கின்றன என யோசித்ததில் ,மாறுபட்ட வாழ்க்கை முறையோடும், கலாசாரதோடும் சேர்ந்து கதைகள் பயணிப்பதால் இருக்கலாம்.
    மேலும் வரலாற்று சம்பவங்களின் கோர்வையாக இருப்பதாலும் முந்தய வரலாற்றின் மீதும் வாழ்க்கை முறை மீதும் நமக்கிருக்கும் அடிப்படை ஆர்வத்தினாலும் இருக்கலாம் .(உ .ம் -பொன்னியின் செல்வன் ,காவல் கோட்டம் ,கருவாச்சி காவியம் )

    இவ்வாறும் இருக்கலாம் என்றுதான் கூறுகிறேனே தவிர நான் கூறுவதுதான் சரியென்று கூறவில்லை.

    நண்பர் விஜய் சொல்வதை போல பிடிக்கின்றது, ரொம்பபிடிக்கின்றது அவ்வளவுதான். இதற்கெல்லாம் காரணம் தேட முடியுமா...?!

    ReplyDelete
    Replies
    1. //கௌபாய் கதைகள் ஏன் பிடிக்கின்றன என யோசித்ததில் ,மாறுபட்ட வாழ்க்கை முறையோடும், கலாசாரதோடும் சேர்ந்து கதைகள் பயணிப்பதால் இருக்கலாம்.
      மேலும் வரலாற்று சம்பவங்களின் கோர்வையாக இருப்பதாலும் முந்தய வரலாற்றின் மீதும் வாழ்க்கை முறை மீதும் நமக்கிருக்கும் அடிப்படை ஆர்வத்தினாலும் இருக்கலாம் .(உ .ம் -பொன்னியின் செல்வன் ,காவல் கோட்டம் ,கருவாச்சி காவியம் )//

      கண்டிப்பாக இதுவும் இருக்கலாம் !

      Delete
    2. நீங்கள் சொன்ன கருத்தே எனக்கும்.. வரலாறு கலந்திருப்பதே காரணம் என நினைக்கிறேன்.

      Delete
    3. நன்றி நண்பர்களே !

      Delete
  47. சார் அடுத்த இதழில் இருந்து 3 பக்கங்கள் குட்டீஸ் கார்னருக்கு ஒதுக்குவது மிக நல்ல முயற்சி.
    விரைவில் ஜூனியர் லயன் தொடங்குவதற்கு ஒரு நல்ல முன்னோட்டமாக இருக்கும்.

    ReplyDelete
  48. இந்த அட்டை படம் ஒரிஜினலா,நமது ஆர்டிஸ்ட் வரைந்ததா என்பதை யாராவது கூறுங்களேன்,நண்பர் மொஹிதீன் கூறுவது போல ஒரிஜினலா ,இல்லை என்கிறான் என் நண்பன் !

    ReplyDelete
    Replies
    1. ஒரிஜினல் தான் நண்பரே.
      சற்றே கலர் மட்டும் தூக்கலாக.

      http://m.facebook.com/home.php?refsrc=http%3A%2F%2Fm.facebook.com%2F&refid=8&_rdr#!/photo.php?fbid=2720676791681&id=1699917914&set=o.37137139775&ref=bookmark&__user=0

      Delete

    2. ஒரிஜினல்

      http://m.facebook.com/home.php?refsrc=http%3A%2F%2Fm.facebook.com%2F&refid=8&_rdr#!/photo.php?fbid=2720678351720&id=1699917914&set=o.37137139775&ref=bookmark&__user=0

      Delete
    3. சரியான இணைப்புக்கள் இதோ:
      * மூல அட்டை!

      * நமது லயனின் வண்ணக் கோர்வை!

      இரண்டு அட்டைகளுமே அட்டகாசம்தான்! ஆனால், லயனின் சாக்லேட் கலவை கவர்கிறது! :)

      @விஜய்:
      நீளமான நெற்றி - ஒரிஜினலே அப்படித்தான்!!! :)

      Delete
    4. //இரண்டு அட்டைகளுமே அட்டகாசம்தான்! //
      ஆம் !நன்றி கார்த்திக் !

      Delete
    5. நன்றி கார்த்திக்!

      ஆனாலும், நமது லயன் அட்டையில் டெக்ஸின் நெற்றி சற்று உள்வாங்கியிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இது ஒரு பெரிய விசயமே இல்லையென்றாலும், இயல்புக்கு மாறாகத் தோன்றியதை சும்மாவேனும் சரிபார்த்திட ஒரு ஆசை, அவ்வளவே!

      Delete
    6. முன்னட்டை நமதும்,பின்னட்டை ஒரிஜினலும் தந்திருந்தால் கலக்கலாய் இருந்திருக்கும்!

      Delete
  49. நான் முதலில் கெளபாய் கதைகள் படிக்கும் போது அதன் வரலாறு-புவியியல் பற்றி பெரிய அளவில் அறிந்திருக்கவில்லை. ஹீரோவிற்கும் வில்லன்களுக்கும் நடந்திடும் சதாரண கதைகளாகவே ரசித்தேன். நமது முத்துவில் டைகர் அறிமுகம் ஆகும் போதுதான் கெளபாய் உலகத்தின் அடிப்படை தகவல்களை தெரிந்து கொண்டேன். தெரிந்து கொண்ட பின் அதன் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமாயிற்று...

    மேலும்..
    இத்தாலி-பிரான்ஸ்க்கும் கெளபாய் உலகத்திற்கும் என்ன பெரிய சம்பந்தம் இருக்க முடியும் (மிகச்சிறு அளவிலான இத்தாலி-பிரான்ஸ் மக்கள் அங்கு குடியேறியதை தவிர)?? அவர்கள் நம்மை விட கொலவெறியோடு டெக்ஸையும் டைகரையும் ரசித்திடுகிறார்களே....

    ReplyDelete
    Replies
    1. சரிதான் !மனிதனுக்கு/அதிகமானவர்களுக்கு கடந்த காலங்களில் நடந்ததை அதாவது வரலாற்றின் மேல்,மூதாதையர் மேல்,அந்த சம கால நிகழ்வுகள் மேல் ஓர் ஈர்ப்பு உண்டு....அதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம் ,நமது தாத்தா பாட்டி கால நிகழ்வுகளை தந்தை ,தாய் மூலமாக அறிய நமக்கிருக்கும் ஆர்வம் போல .....அன்றைய மக்கள் இப்படி இருந்திருப்பார்கள் என்பது நமது ஈர்ப்பை அதிக படுத்திகிறது .....

      Delete
  50. NBS குறை: எற்கனவே அனைவரும் கேட்டுக்கொண்டபடி தயவு செய்து தொடர் கதைகளை "SPECIAL" இதழ்களில் வெளிஇடாதிர்கள்! குறிப்பாக "TIGER" கதைகளை!! குவான்டரின் முடிவு என்ன தெரிய நாங்கள் இன்னும் எத்தனை மாதம்கள் / வருடம்கள் காத்திருக வேண்டும்? TIGER இருளில் ஒரு இரும்பு குதிரை கதைக்கு பதில் கான்சாஸ் கொடூரனின் இரண்டாம் பாகம் வெளிவிட்டு முழுமையான ஒரு கதையை கொடுத்து இருக்கலாம்! இனியும் இது போன்ற "SPECIAL" வெளீடுகளில் தொடர் கதைகள் வேண்டாம் என அன்புடம் கேட்டு கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பரணியின் கருத்துக்கு நானும் ஆதரவளிக்கிறேன்.

      Delete
    2. நானும் இதை வழிமொழிகிறேன். தொடர்கதைகளை தனியாக வெளியிட்டால் நல்லது.

      Will be helpful to collectors and especially for those people who want to bind them together.

      Delete
    3. நண்பா பரணி......


      நான் சொல்ல நெனச்சேன்... நீங்க சொல்லிட்டீங்க......

      Delete
  51. மாடஸ்டியின் படம் அருமை!
    தங்களின் பயணம் மேலும் பல வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைய வாழ்த்துகள்!

    ReplyDelete
  52. Have a nice journey sir.. and bring more titles to us...

    ReplyDelete
  53. Dear Editor,

    BON VOYAGE.

    நலமுடன் பயணம் செய்து, திரும்பி வரும்போது உங்கள் பயண மூட்டையில் எங்களுக்காக நிறைய புதிய காமிக்ஸ் கதைகளை வாங்கிக் கொண்டு வருவீர்கள் என்ற ஆவலில் நாங்கள் அனைவருமே காத்திருக்கின்றோம். Fingers Crossed. (;-P)

    கௌபாய் கதைகள் நமது மனம் கவர்ந்த நம்பர் 1 தேர்வாக இருப்பதன் காரணம் என்ன ?

    முக்கிய காரணம், 1. நமது ஆழ்மனது, 2. விறு விறுப்பன ஆக்‌ஷன்.

    கான்செப்ட் ஒன்று தான். பெரும்பாலான இந்திய தெய்வங்கள் அனைவரின் கையிலும் பல வகையான ஆயுதங்கள்.

    அரிவாள், வேல், கம்பு, கத்தி, கதாயுதம், உடைந்த தந்தம், வில், அம்பு என்று எத்தனை வகையான ஆயுதங்கள் இருக்கின்றன!

    ஈஷ்வரருக்கு திரிசூலம், மஹா விஷ்ணு கையில் சக்ராயுதம். அன்பே உருவான கடவுளர்களின் கையில் ஆயுதம் எதற்கு?

    சத்தியத்தையும், தர்மத்தையும் காப்பாற்றவே கடவுளர்களின் கையில் ஆயுதங்கள்.

    எதிரி நாட்டிடம் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்றால், எல்லையில் இருக்கும் ராணுவத்திற்கு ஆயுதம் அவசியம்.

    அதனால் வன்மையான ஆயுதமாக இருந்தாலும் கௌபாய் ஹீரோக்களின் கையில் உள்ள ஆயுதம் நியாயத்தை நிலைநாட்ட உதவுகிறது.

    தீமை அழிந்து நன்மை தழைக்கும் விதமான கதைகள் என்றுமே நமது மனதில் நீங்கா இடம் பெறும்.

    இன்னுமொரு முக்கிய காரணம், 1960 களிலும் அதற்கு முன்பும் வெளிவந்த மெக்கனாஸ் கோல்ட்,
    பைவ் மேன் ஆர்மி,
    மை நேம் இஸ் நோபடி,
    தே கால் மி ட்ட்ரினிடி,
    ட்ரினிடி இஸ் ஸ்டில் மை நேம்,
    ஜாங்கோ,
    ஸெர்ஜியோ லியோனின் எ ஃப்பிஸ்ட் ஃபுல் ஆஃப் டாலர்,
    ஃபார் எ ஃப்யூ டாலர்ஸ் மோர்,
    தி குட் பேட் அக்ளி,
    ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் தி வெஸ்ட்,
    போன்ற சிறந்த வெஸ்டர்ன் திரைப்படங்கள் இன்றும் உலகில் உள்ள அனைத்து வயதினராலும், அனைத்து நாட்டு மக்களாலும் மிகவும் விரும்பி பார்க்கப்படும் படங்கள். இந்த திரைபடங்கள் 1950, 1960 கால கட்டங்களில் எடுக்கப் பட்ட படங்களாக இருந்தாலும், VHS, VCD, DVD, BLURAY என்று ஒவ்வொரு பார்மேட்டில் வெளியிடப்பட்ட போதும் விற்பனையில் சக்கை போடு போடும் படங்கள்.

    இது போல உலக நாட்டு மக்களின் மனம் கவர்ந்த பல நூற்றுக் கணக்கான வெஸ்டர்ன் திரைப்படங்கள் இருக்கின்றன.

    நமது அன்றாட வாழ்கையில் நம்மை விட்டு பிரிக்க முடியாதபடி நம்மோடு இணைந்துவிட்ட காப்பி மற்றும் டீ போன்ற பானங்களைப் போலத்தான் வெஸ்டர்ன் கதைகளும், திரைப்படங்களும். அவைகளின் பிறப்பிடம் எந்த ஊராக இருந்தாலும் சரி, அவைகள் நமது வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்று. ஒரு விஷயம் சிறப்பாக இருந்துவிட்டால் அது இனம், மொழி, மதம் மற்றும் நட்டு எல்லைகளை கடந்த ஒரு விஷயமாக போற்றப்படும்.

    இந்த வெஸ்டர்ன் படங்களின் கதை நடப்பதென்னவோ மேற்கு அமெரிக்காவில் என்றாலும், அந்த வெஸ்டர்ன் திரைப்பட வெற்றி ரகசியத்தை அறிந்தவர்களும், அந்த வெற்றியை சுவைப்பவர்களும் இத்தாலியர்கள்தான்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவு நல்வரவாகுக !எங்களை எல்லாம் மறந்து விட்டீர்கள் போலும் !ஏது தூர தேசம் போயிருந்தீர்களோ !

      Delete
    2. தனது நீ.,ளமான, அர்த்தம் பொதிந்த பின்னூட்டங்களால் நம்மைக் கவர்ந்த நண்பர் பாலாஜி சுந்தரை நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே காண்பதில் நானும் மகிழ்ச்சியடைகிறேன். :)

      Delete
    3. @ ஸ்டீல் க்ளா
      உள்ளூரில் இருந்தும் தூரமாக இருந்தேன்.

      Delete
    4. @ ஈரோடு விஜய்
      @ ஸ்டீல் க்ளா

      இபோழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில், நமது எடிட்டரை முதல் முறையாக சந்தித்தேன். நான் எடிட்டரிடம் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், கை குலுக்கிய எடிட்டர், ஒரு செகண்ட் யோசித்தார்,அடுத்த நொடி, “பாலாஜி சுந்தர், உங்களை எனக்கு முன்னமேயே நன்கு தெரியுமே” என்றார்.
      அடுத்து அவர் கூறியது, “என்னங்க இப்பவெல்லாம் ஏன் நீங்க நம்ம ப்ளாக் பக்கம் வருவதில்லையே” என்றார். அதற்கு நான் சங்கடத்துடன் “சார், இனி அடிக்கடி வருவேன்” என்று பதில் கூறி சமாளித்தேன்.
      So, இப்போது இதையே காரணமாக கொண்டு, மீண்டும் வந்து விட்டேன்.

      இனி என் நீ........ளமான பின்னூட்டங்களையும், கோரிக்கைகளையும் கண்டு எடிட்டர் என்ன நினைப்பார் என்றால், “ஏண்டா இவனை காணோம் என்று கேட்டோமோ தெரியலை”

      Delete
    5. ஆஹா உங்களையெல்லாம் பார்க்க இயலவில்லை !அடுத்த 13ன் பிரம்மாண்ட விழாவில் சந்திப்போம்,நண்பரே !

      Delete
  54. NBS Story: "Irulil Oru Irumbu Kuthirai"
    Page 281: "Inge nirkum ovovru kanamum ANUGUNDAI madiyil katti kondu irupathu pol..."

    I am not sure if "ATOM bomb" was invented during that period, if that is the case how come a person
    mention that in 18th Century ? Logical error ?

    Just for fun :-) I know the most easiest job is fault finding :-)


    ReplyDelete
    Replies
    1. அணுவை மற்றும் bomb இரண்டும் தனி தனியே அப்போதே கண்டு உணர்ந்திருந்தனர் .....இவ்வாறு டைகரிடம் கூற பட்டதே atom bomb கண்டு பிடிக்க பின்னாளில் பெரும் தூண்டுதலாய் அமைந்தது ,வடக்கும் தெற்கும் இணைய வேண்டும் என அவர் பாடு படுவது போல இரண்டும் இணைந்து உருவானது .......

      Delete
  55. சிவப்பாய் ஒரு சொப்பனம்! - டெக்ஸ் கதை வரிசையில் வந்திருக்கும் ஒரு புதிய வகையான சித்திரம். அருமையான மற்றும் வித்தியாசமான சித்திரம். கதை, திருப்தியான ஒன்று. இந்த கதையை முன்பே படித்த ஞாபகம். முன்பு பார்த்து ரசித்த டெக்ஸ் மற்றும் கார்சன், இந்த கதையில் முற்றிலும் மாறுபட்டுள்ளனர், ஆனால் ரசிக்கும் படியாக.

    ReplyDelete
  56. இரண்டு NBS இதழ்களை பெற்றுக்கொண்டேன் ...இன்னும் ஒரு பக்கம் கூட படிக்கமுடியவில்லை ...அதற்குள் TEX வந்துவிட்டார் ...சீக்கிரம் பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்ப வேண்டும் ....அன்பு ஆசிரியர் வெளிநாட்டுப்பயணம் வெற்றிக்கரமாக முடித்துக்கொண்டு க்ஷேமமாக வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்

    ReplyDelete
  57. தூய நீர்நிலைகள் வானத்தின் வண்ணத்தை அப்படியே பிரதிபலிப்பவை! அந்த வகையில், ஓரிஜினல் அட்டைப்படத்தில் நிறையவே ரியாலிட்டி இருந்தாலும், எடுப்பான வண்ண வேலைப்பாடுகளால் நம் லயன் அட்டையே உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. :)

    ReplyDelete
    Replies
    1. நானும் இதனையே நினைத்தேன் ,ஆனால் மனதை ஈர்க்கிறதே,வண்ணம் அதன் வேலையே செய்து விட்டது!

      Delete
  58. டெக்ஸ் வில்லருக்காக waiting!

    ReplyDelete
    Replies
    1. இரவுக் கழுகார் நாளை கிடைப்பது சந்தேகமே.. எதோ சில காரணங்களால் ஒன்று அல்லது இரண்டு நாள் தாமதம் ஆவது போல் தெரிகிறது ..

      Delete
  59. திரு புனித சாத்தான் அவர்களே எந்த ஆஸ்பத்திரில அட்மிட் ஆகி இருக்கிங்க?

    இதோ ஆப்பிள் வாங்கி வந்துடுறேன். :-D

    ReplyDelete
    Replies
    1. ஆ! சாத்தான் ஆஸ்பத்திரியில் அட்மிட்டா?!!

      செவ்விந்திய தாக்குதலுக்கு ஆளாகிவிட்டாரா?

      சாத்தானையே சாத்திவிட்டார்களா? :-D

      Delete
    2. @ சாக்ரடீஸ் :

      ஆப்பிள் வேண்டாம்; விலை அதிகம். ரெண்டு ஆரஞ்சுப்பழம் வாங்கிக்போய் 'மண்டைத்தொலி'யை உரிப்பதுபோல் உரித்துக் கொடுங்கள். அவருக்கு ரெம்பப் பிடிக்கும்.

      (சாத்தானுக்கே சாத்துக்குடியா?! ஹிஹி!)

      Delete
  60. திரு புனித சாத்தான் அவர்களே எந்த ஆஸ்பத்திரில அட்மிட் ஆகி இருக்கிங்க?

    இதோ ஆப்பிள் வாங்கி வந்துடுறேன். :-D

    ReplyDelete
  61. Dear Vijayan Sir,

    A bon voyage to you..!
    In midst of your tight schedule... take rest as well as you have put your tremendous hard work in
    Never Before Special...

    -Udhay

    ReplyDelete
  62. சிகப்பிந்தியர்கள் கப்பல் ஏறி ஐரோப்பா போய் வெள்ளையர்களின் மண்டைத்தொலி உரித்தார்களா?! அல்லது தன் வீட்டுக்குள் வந்து அதிகாரம் செய்தவனின் மண்டைத்தொலி உரித்தார்களா?
    வெள்ளையர்கள் தந்தியை கண்டுபிடிக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புகை மூலம் செய்தி பரிமாறிகொண்ட நாகரிகம் தெரிந்தவர்கள் சிகப்பிந்தியர்கள் அல்லவா !?
    வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற கருத்தை போன்றது சிகபிந்தியர்கள் காட்டுமிராண்டிகள் என்பது.

    ReplyDelete
  63. நண்பர்கள் பலரும் விரும்புவது போல் ஒரு கதையை பாகம் பாகமாக வெளியிடுவதற்கு பதில் அனைத்து பாகங்களையும் ஒரே இதழாக வெளியிட்டால் படிப்பதற்கு திருப்தியாக இருக்கும். வாங்குவதற்கு அனைவரும் தயாராகவே இருக்கிறோம் ஆசிரியரே!

    ReplyDelete
  64. டியர் எடிட்டர்,ட

    சமீப காலத்தில் மிகப்பெரிய கொடுமை நம் காமிக்ஸ் உலகில் நிகழ்ந்தேறியிருக்கிறது! இது எதேட்சையாக நிகழ்ந்த ஒன்றா அல்லது இந்த சூழ்ச்சிவலை உங்களால் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டதா என்பது இன்னும் எங்களுக்குக் குழப்பமான ஒன்றாகவே இருக்கிறது!

    விசயம் என்னவென்றால், முத்துக் காமிக்ஸின் டாப் ஸ்டாரும், தனது மதியூகமான செயல்பாடுகளால் எங்கள் மனதைக் கொள்ளை கொண்ட சூப்பர் கெளபாயுமான 'கேப்டன் டைகர்' சமீக காலங்களில் நயமாக வஞ்சிக்கப்பட்டு தனது ரேட்டிங்கில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

    WWS -ல் அந்தப் பாழாய்போன கிராபிக் நாவலால் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டாரென்றால், NBS -ல் நிலைமை இன்னும் மோசம்; லார்கோ, ஷெல்ட்ன் போன்ற நேற்று முளைத்த காளான்களால் அநியாயமாக மூன்றாமிடமே எங்கள் கேப்டன் டைகருக்கு கிடைத்திருக்கிறது. டைகரின் நிலைமை கவலைக்கிடமாகி வருவது எங்களை அதிர்ச்சியிலும், துயரத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.இரு மாதங்களுக்கு முன் வெளியான தங்கக்கல்லறை ஓரளவிற்கு உதவினாலும்; அது ஒரு மறுபதிப்பு என்பதால் இழந்த டைகரின் மார்கெட்டை தூக்கி நிறுத்த பூரண ஆதரவளிக்கவில்லை.

    ஆகவே, டைகருக்கு இழைக்கப்பட்ட இந்த துரோகத்தை நேர் செய்ய; விரைவில் ஒரு SCTS (சூப்பர் கெள-பாய் டைகர் ஸ்பெஷல்) ரூ.250 விலையில், முழுவண்ணத்தில் வெளியிட்டு அவருடைய வாட்டத்தைப் போக்குமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    (யாராச்சும் அந்தக் கர்சீப்பை எடுங்கப்பா; கண்ணீரைத் துடைச்சிக்கறேன்)

    இப்படிக்கு,

    டைகரின் குதிரைக்கு சேனமிடும் வேலையைக் கூட செய்யத் தயாராயிருக்கும் அவருடைய அபிமானிகளில் ஒருவன்.

    ReplyDelete
    Replies
    1. கவலை படாதீர்கள் நண்பரே ,டைகரின் பின்னடைவு கண்டு மனம் பொறுக்காத ஆசிரியர் நேற்று முளைத்த காளான் லார்கோவை பின்னுக்கு தள்ளும் வேலையாக வேறு சிலரை கொண்டு வீழ்த்த அயல் நாட்டிற்கு சென்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன !

      Delete
    2. ஏறத்தாள அதில் வெற்றியும் பெற்று விட்டார் , கர்சீப்பை பிழிந்து காய போட்டுட்டு வேலைய பாருங்க !

      Delete
    3. இங்க டெக்ஸின் நிலைமையே கேள்விக்குறியாக இருக்கும் பொழுது நீங்க டைகருக்கு போய்டீங்க.
      அவரே ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் ஆசிரியர் தந்திருக்கார்.

      Delete
  65. என்ன தான் NBS கலரில் படித்து மகிழ்ந்தாலும்,
    பழைய பாணியில் ஒரு டெக்ஸ் ஆக்சன் கதை படிக்கும் அனுபவமே அலாதிதான்.

    சிவப்பாய் ஒரு சொப்பனம் ஒரு அக்மார்க் டெக்ஸ் கதை.
    ஆக்சன்,கார்சனின் நகைச்சுவை,டெக்ஸின் அதிரடி இப்படி அனைத்து வகையிலும் கலக்கி விட்டது.

    மொழிபெயர்ப்பு அருமை.

    ReplyDelete
  66. comment 1 of 6

    விஜயன் ஐயா அவர்களுக்கு,
    நான் ஐந்து நாள் விடுமுறை வேண்டி தங்களுக்கு இங்கே விண்ணப்பித்தது யாவரும் அறிந்ததே! ஆனால் இதில் தாங்கள் கையொப்பமிட மறந்து விட்டீர்களோ என் ஐயபடுகிறேன்! இதனிடையே தாங்கள் மண்ணுலக சொர்க்கம் என போற்றப்படும் ஐரோப்பா சென்று விட்டீர்கள் என அறிந்து மகிழ்ச்சி கொண்டேன்!

    எனவே எனக்கு ஐந்து நாள் தினப்படி கிடைக்காது என்று இங்கு கூறிவிட்டார்கள்! பரவாயில்லை Over time செய்து சமாளித்துக் கொள்கிறேன்! டெக்ஸ் வில்லரை நாம் விரும்பியது, இன்றும் நாம் விரும்புவது ஏன் என்பதை பற்றிய என் கருத்தை தங்களின் அடுத்த பதிவின் முதற் காலையில் தங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகிறேன்! தங்கள் பயணம் இனிதே அமைய எல்லாம் வல்ல ஆண்டவன் துணையிருக்கட்டும்
    வாழ்க வளமுடன்!!!

    என்றும் அன்புடன்
    மரமண்டை

    ReplyDelete
  67. comment 2 of 6

    பூர்வகுடிகளா? வந்தேறிகளா?
    வெள்ளையர்களா? சிவப்பிந்தியர்களா?
    உங்கள் ஆதரவு யாருக்கு? ஓர் அலசல்!

    *//மர மண்டை29 December 2012 20:30:00 GMT+05:30

    நண்பர்களே, 3 நிமிடம் முன்பு ''மேற்கே ஒரு மின்னல்'' கதையில் 6 ஆம் பக்கம் படித்த போது எனக்கு ஒரு
    மிகப்பெரிய சந்தேகம் வந்து விட்டது! அமெரிக்கா வை கண்டுப்பிடித்த கொலம்பஸ் (columbus) நல்லவரா ! கெட்டவரா !

    நல்லவர் : உலகின் மிகப்பெரிய செல்வ செழிப்பு மிக்க வளமான ஒரு நாட்டை கண்டுப்பிடித்து
    அது, பின் நாளில் உலக வல்லரசாக மாற்றம் கொண்டு இன்றுவரை பரிணமிக்க காரணமானவர் !

    கெட்டவர் : அமெரிக்கா வை கண்டுப்பிடிக்க காரணமாயிருந்து அந்த மண்ணின் பூர்வீக குடிகளான
    எண்ணற்ற லட்சக்கணக்கான செவ்விந்திய மக்களின் கொடும் அழிவுக்கு காரணமாக இருந்துவிட்டார் !

    தயவு செய்து விவரம் அறிந்த வாசகர்கள் என்னுடைய சந்தேகத்தை
    தீர்த்துவைத்தால் இனிமேலும் இது போன்ற கேள்விகளை இங்கு எழுப்ப மாட்டேன்//

    contd part 2 :

    ReplyDelete
  68. comment 3 of 6

    பூர்வகுடிகளா? வந்தேறிகளா?
    வெள்ளையர்களா? சிவப்பிந்தியர்களா?
    உங்கள் ஆதரவு யாருக்கு? ஓர் அலசல்!

    எனவே வாசகர்களே! சில விஷயங்களை எல்லோருக்கும் பொதுவாக அறுதியிட்டு கூறமுடியாது. நாணயத்தின் இருப்பக்கம் போன்றதே இவை போன்ற சரித்திரங்கள்! ஒரு பக்கத்தை நாம் ஏற்கும் போது மறுப்பக்கம் மதிப்பிழந்து அந்த நாணயமே செல்லாக்காசாக மாறிவிடும் அபாயம் இருக்கும்!

    நாம் இதுவரை நம்மால் ஏற்கபட்ட உண்மையின்படி, நாம் இதுவரை அறிந்துவந்த சரித்திரத்தின்படி, நம் மனதின் ஓரத்தில் உள்ள ஈவிரக்கத்தின்படி அல்லது ஆதிக்க மனப்பான்மையின் படியேதான் ஒவ்வொரு விஷயத்திலும் ஈடுபாடோ அல்லது தவிர்த்து தாண்டிவிடும் ஒரு கடந்த கால நிகழ்வாகவோ ஈர்க்கப்படுகிறோம்! இதில் அடுத்தவரின் எண்ணம் தவறானது என்றும், தம் எண்ணம் உயர்ந்தது என்றும் எவரால் தான் நிருபிக்க முடியும்? ஒன்றை ஏற்று, மற்றொன்றை மறுக்கலாமே ஒழிய, அதுதான் சரியானது என்று எவரால் தான் பட்டயம் கட்ட முடியும்?

    அழிக்கப்பட்டவர்கள் நமக்கு சோகத்தையும், ஆளுமை கொண்டவர்கள் நமக்கு அதிகார மமதையும் தருவது மனரீதியான இயல்பு! இதில் நியாயம் தர்மத்தை விட சோகத்தின் பால் சாய்வது நமக்கு ஒருவித மன ஆறுதலை தருகிறது! இயற்கையிலேயே மனிதன் உதவும் குணம் கொண்டவன்! அதனால் தான் கொடூர வில்லன் ஒருவன் இறக்கும் போதும்கூட இரண்டு சொட்டு கண்ணீராவது நம் கண்களின் ஓரத்தில் எட்டிப்பார்க்கும்! அதற்கு பெயர்தான் பாசம்! அதுதான் இன்றுவரை மனித இனத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது! அதுவே இம்மையில் பாவத்தையும் தூண்டுகிறது! அதுவே சுகம், துக்கம், கோபம், வெறி, ஆசை, அதிகாரம், ஆளுமை, அநீதி, கோர தாண்டவம் என அத்தனைக்கும் அடிகோள்கிறது!!!

    பூமியில் இருப்பதும்
    வானத்தில் பறப்பதும்
    அவரவர் எண்ணங்களே !!!

    ReplyDelete
  69. comment 4 of 6

    டெக்ஸ் வில்லரும் கௌபாய் உலகும்!

    நாம் கண்ணில் பார்த்திருக்க வாய்ப்பே இல்லாததொரு கரடு முரடான கௌபாய் உலகை ; நமக்குத் துளியும் தொடர்பற்றதொரு வாழ்க்கை முறையைச் சித்தரிக்கும் இந்த கௌபாய் ரகக் கதைகளை நாம் இத்தனை ஈடுபாட்டோடு ரசிக்கக் காரணம் தான் என்னவாக இருக்கும் ?// காரணம்:

    1. டெக்ஸ் வில்லர்
    2. எல்லைகளற்ற கற்பனை
    3. மொழிப்பெயர்ப்பு

    contd part 2 :

    ReplyDelete
  70. comment 5 of 6

    டெக்ஸ் வில்லரும் கௌபாய் உலகும்!

    1. டெக்ஸ் வில்லர் :

    நேர்மை, வீரம், அதிரடி, அசத்தலான ஸ்டைல் ஒருபக்கம்!
    சற்றும் சாயாத நடுநிலை மறுபக்கம் என இவ்விரண்டும் அவரை
    நமக்கு ஆதர்ஷ நாயகனாக காட்டி இன்றுவரை கொண்டாட வைத்து விட்டது!

    உதராணமாக ஒருகாலத்தில் The shaolin temple-Jet lee, Rambo-Sylvester stallone, பின் Terminator,Predator- Arnold Schwarzenegger என்பதாய் நமக்கு காமிக்ஸ் காலத்தின் கட்டாயமாக்கப் பட்டதுதான் டெக்ஸ் வில்லர்! ஏழடுக்கு மாடியிலிருந்து தாவி குதித்து, விரைந்துவரும் எக்ஸ்பிரஸ் ரயிலை ஒற்றைக் கையால் தடுத்து நிறுத்தி, நமக்கு பஞ்ச் டயலாக் சொல்லும் 5 அடி மைனஸ் 2 அங்குலம் உள்ள கதாநாயகர்களின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர் கூட்டம் உள்ள அப்பாவி மக்கள் தானே நாமெல்லாம்!


    2.எல்லைகளற்ற கற்பனை (எ) தடையற்ற கற்பனையும், தடங்கலற்ற விசாலத்தன்மையும் :

    பரந்த பாலைவனமும், கணவாய்களும் மனதிற்கு ஒரு விசாலத்தன்மையை கொடுக்கிறது! தடைகளற்ற வறண்ட பூமியும், உயர்ந்தோங்கிய மலை முகடுகளும், சுட்டெரிக்கும் வெயிலும், ஆவியோடு பேசும் மாந்திரீர்களும் நம் கற்பனை தங்கு தடையற்று விரிந்து பரவ ஏதுவாகிறது!அங்கே நடக்கும் கொடூர கொலைகள் நம் உள்ளே தூங்கும் மாமிச பட்சணி க்கு சற்றே உணவாகிறது! நாம் இதுவரை அறியாத ஓன்று நமக்கு மலைப்பாக தோன்றுவது இயற்கைதானே!


    3.மொழிப்பெயர்ப்பு :

    கதையின் உயிர்நாடி! கதை எனும் உடலின் சுவாசத்துடிப்பு! உன்னதமான nostalgia fell தர வல்லது! இதுவரை LM comics க்கு ஈடாக வேறு எதுவுமே தமிழகத்தில் இருந்ததில்லை! நிச்சயமாக இதற்கு ஈடாக சமகால ராணி காமிக்ஸ் ஒருபோதும் ஒப்பீடாக வந்ததேயில்லை! மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான் LM comics vs Rani comics. அதனால் டெக்ஸ் நம்மையும் அவருடன் சேர்த்து பாலைவனத்திற்கும், டெக்சாஸ் மாகாணத்தின் நகரங்களுக்கும், அவர்களின் பழக்கவழக்கத்திற்கும் நம்மை அடிமையாக்கி விட்டார்!

    டெக்ஸ் மற்றும் கார்சன் ஒரேடியாக ஓய்ந்து
    தாகசாந்தி செய்யும் போதும், தாக சாந்திக்கு சைடு டிஷ்ஷாக வறுத்தக்கறி
    கொண்டு இளைப்பாறும் போதும் எனக்கு இயலாமையால் அழுகையே வந்துவிடும்!!!

    பின்குறிப்பு: கேப்டன் டைகர் கதைகளுக்கும் இது பொருந்தும்!

    contd part 3 : option B

    ReplyDelete
  71. comment 6 of 6

    டெக்ஸ் வில்லரும் கௌபாய் உலகும்!

    எனக்கும் தெரியும் வாசகர்களே! எல்லோரையும் எல்லா நேரங்களிலும்
    திருப்தி படுத்த முடியாது என்று! அதனால் தான் என் கருத்தில் மாறுபடும் உங்களுக்காக Plan B ;

    மர மண்டை6 January 2013 09:56:00 GMT+05:30
    நீங்கள் +6 TEXWILLER என்று பதிவிட்ட காரணம் ?

    1. டெக்ஸ் வில்லர் துப்பாக்கி வைத்திருப்பதால் !
    2. எப்பொழுதும் மஞ்சள் சட்டை போட்டுக் கொண்டிருப்பதால் !
    3. கதையின் இறுதியில் அவர் மட்டுமே வெற்றி பெறுவதால் !
    4. கம்பெனிக்கு கார்சன் இருப்பதால் !
    5. குதிரை மீது சவாரி செய்வதால் !

    பின்குறிப்பு : இதற்கு உண்டான smiley :)

    ReplyDelete
  72. ஏழடுக்கு மாடியிலிருந்து தாவி குதித்து, விரைந்துவரும் எக்ஸ்பிரஸ் ரயிலை ஒற்றைக் கையால் தடுத்து நிறுத்தி, நமக்கு பஞ்ச் டயலாக் சொல்லும் 5 அடி மைனஸ் 2 அங்குலம் உள்ள கதாநாயகர்களின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர் கூட்டம் உள்ள அப்பாவி மக்கள் தானே நாமெல்லாம்!

    ம.ம. சார் சூப்பர். தனியே ஒரு பிளாக் ஆரம்பித்து விடுங்களேன்.
    பு.சாத்தானின் ஆசிர்வாதங்களுடன்(ஹிஹி)

    ReplyDelete
    Replies
    1. COMICSPRIYAN@SALEM.AMARNATH :
      நன்றி! ஆனால் தாங்கள் //(ஹிஹி)// சிரிப்பதை பார்க்கும் போதுதான் சற்று பயமாக இருக்கிறது!

      Delete
  73. ஒரு காமிக்ஸ் கிச்சுகிச்சு:
    டெக்ஸ்க்கு பிடித்த டைரி: ஈகிள் டைரி
    டைகருக்கு பிடித்த ஹீரோ: ’கேப்டன்’ விஜயகாந்த்
    மாடஸ்டிக்கு பிடித்த பொன்மொழி: ஆள்பாதி, ஆடைபாதி
    ஜானிக்கு பிடித்த டிபன்: இடியாப்பம்
    லக்கிலூக் பிடித்த?! அரசியல்வாதி: மருத்துவர் அய்யா
    மாயாவிக்கு பிடித்த தமிழ்நாட்டு நகரம்: சென்னை(தடையில்லா மின்சாரமாம்)
    ஸ்பைடருக்கு ஏமாற்றம் தந்த படம்: மிருதங்க சக்கரவர்த்தி( குற்றசக்கரவர்த்திக்கு போட்டின்னு நெனச்சுட்டாரு)
    ஆர்ச்சிக்கு பிடிக்காத வார்த்தை: “பழைய இரும்பு சாமானுக்கு பேரீச்சபழம்...”
    லார்கோவுக்கு சென்னையில் பிடிக்காத இடம்: மூர்மார்கெட் (அவங்க ஊரு ஷேர் மார்கேட் மாதிரின்னு நெனச்சுட்டாரு)
    வெய்னேவுக்கு சமீபத்தில் கிடைத்த பதவி: தமிழ்நாடு லாரி ஓட்டுனர்கள் சங்கதலைவர்
    ஷெரீப் டாக்புல்க்கு பிடித்த நடிகர்: கவுண்டமணி
    சைமனுக்கு பிடித்த சினிமா டயலாக்: ”ஆமா! இவர் பெரிய்ய கப்பல் வியாபாரி, போடா!”
    ஜானி நீரோ கடைசியாக படிக்கமுயற்சி செய்த கல்லூரி: ஸ்டெல்லா மேரீஸ்! ;)
    லாரன்ஸ்&டேவிட் தினமும் பொதிகையில் விரும்பி பார்க்கும் தொடர்: ”காணாமல் போனவர்கள்” பற்றிய அறிவிப்பு
    வேதாளர் எப்போதும் ரசிக்கும் பாட்டு ஸ்டைல்: (கும்மாங்)குத்துபாடல்!
    மர்மமனிதன் மார்டின்னுக்கு பிடித்த கம்பியூட்டர் மொழி: ஜாவா
    டிடெக்டிவ் ராபினுக்கு பிடித்தவேலை: கைரேகை ஜோசியம்
    XIII சமீபத்தில் பார்த்து கடுப்பான படம்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்!

    ReplyDelete
  74. இன்றாவது சந்தாதாரர்களுக்கு டெக்ஸ் வில்லர் கிடைக்க வாய்ப்பு உள்ளதா நண்பர்களே?

    ReplyDelete
    Replies
    1. நான் இன்றுதான் விசாரித்தேன் ....சற்று தாமதமாகுமாம்.......சகோதரி எப்போ என்பதை கமிட் செய்துகொள்ளவே மாட்டேன் என்கிறார்..........

      Delete
    2. புத்தக கண்காட்சியில் வாங்கிய ஒரு சில அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன் என நினைக்கிறன்.
      படித்துவிட்டேன்,மிக நன்றாக உள்ளது.

      Delete
  75. டெக்ஸ் வில்லரின் வருகை பற்றிய புகை சமிக்ஞை ஏதாவது வந்ததா, நண்பர்களே?

    வறுத்த கறியும், வேகவைத்த ஆப்பிளும் தயார் நிலையில் வைத்திருக்கிறேன்.

    பசி வேறு வயிற்றைக் கிள்ளுகிறது. அவர்கள் வந்துசேர தாமதமாகிடும்பட்சத்தில்..... டெக்ஸ் குழுவினருக்கு காப்பி மட்டும்தான் கிடைக்கும்; துளியூண்டு பால் சேர்த்து! :)

    ReplyDelete