Friday, April 03, 2026

நவ நாயகர்களின் மாதம் !!

 நண்பர்களே,

வணக்கம்.வேறு இடமே கிடைக்கவில்லை என்று தேள் எதற்காக தென்னை மரத்தில் போய் போட வேண்டும் என்பதும் தெரியாது ; அந்த நெறியானது பனைமரத்துக்கு எவ்விதம் டிரான்ஸ்பர் ஆகிவிடும் என்பதுமே புரியாத புதிர்தான். ஆனால் பழமொழியாச்சே, அனுபவித்துத்  தான் தீரணும் போலும்...!தொலைதூர டாலர் தேசம் மத்திய கிழக்கில் நடத்தும் யுத்தத்தின் தாக்கம் இதுவரையிலும் டிவி செய்திகளாகவும், ட்விட்டர் பதிவுகளாகவும் இருந்து வந்ததெல்லாம் சில நாட்களுக்கு முன் வரையில்தான்.

​இதோ ரவுண்டு கட்டி அத்தனை விலைகளும் தெறிக்கத் தொடங்கிவிட்டன. அமெரிக்கக்  கொடுக்கு பாய்ச்சி வரும்  விஷத்தின் வேகம், பூமி எங்கும் எதிரொலிப்பது தவிர்க்க முடியா நிகழ்வு போலும்......!! பேப்பரில் துவங்கி, அச்சுப்பொருட்கள், இங்க் ; அட்டை ; பற்றாக்குறைக்கு பாலித்தீன் கவர் வரை அத்தனையும் மானாவாரியாய் விலைகளில் எகிறத் தொடங்கிவிட்டன. இன்றைக்கோ DTDC மற்றும் ST கொரியர்களும்  தாக்கீது அனுப்பிவிட்டனர் - ஏப்ரல் முதலாய் கட்டணங்களில் 25 சதவீத உயர்வு என்று. இதென்ன பிரமாதம் - நம்மகிட்டே இன்னொரு பேசல் ஐட்டம் கீதே ..? முப்பதே நாட்களில் அமெரிக்க டாலரின் அன்னியச் செலாவணி மதிப்பு சுத்தமாய் ரூ.10 கூடி விட்டது !! போன மாதம் இதே நேரத்துக்கு ரூ. 83 விலையிருந்த டாலர் இப்போது ரூ .94 கிட்டே குலாவியபடி நின்றுகொண்டிருக்கிறது !! ராயல்டி கட்டணங்களில் மூக்காந்தண்டை தாறுமாறாய் சாத்து வாங்கப் போவது சர்வ நிச்சயம் !!  ஆண்டின் மீத 8 மாதங்களை பற்களுக்கு சேதாரம் இன்றி முழுசாய் நகற்ற முடிந்தால் அது பகவான் புண்ணியமாகத்  தான் இருக்க வேண்டும்."போச்சுடா முழியாங்கண்ணன் ட்ரம்ப்பின் யுத்தத்தை காரணம் காட்டி விலையை ஏத்தப்போறானா?" என்ற பயம் இந்த நொடியிலாவது அனாவசியம். Becos சந்தாவில் உள்ள நண்பர்களுக்கு எவ்வித விலை உயர்வுகளையும் pass on செய்திடும் உத்தேசம் நகி. என்ன - கூரியர் கட்டண உயர்வு தான் தினப்படி துடைப்பத்தால் சாத்தப் போகிறது !!

இதோ இன்றைக்கு ஏப்ரலின் அதிரடி கூட்டணி கொரியர்களில் கிளம்பியாச்சு. ஒவ்வொரு மாதமும் அகஸ்மாத்தாய் அமைந்து போகும் இந்த இதழ்களின் காம்போவே என்னை அவ்வப்போது சுவாரஸ்யப்படுத்தும் விஷயம். 'ஒரு டெக்ஸ் ஆல்பம் மாதம்தோறும் வேண்டும்' என்ற நிரந்தரப் புள்ளியினைத்  தவிர்த்து, பாக்கிப் புள்ளிகள் சகலமுமே வசதிக்கேற்ப, பணி செய்யும் தோதிற்கு ஏற்ப, கதைகளின் கோப்புகள் கிடைப்பதற்கு ஏற்ப, ஆங்காங்கே தாமாய் ஸ்லாட் இன் ஆகிக்கொள்வதுண்டு. And, இந்த ஏப்ரலில் உங்களை சந்திக்க காத்திருப்பதோ ஒன்றல்ல இரண்டல்ல, ஒன்பது நாயகப் பெருமக்கள். So, நவநாயகர்களின் கதையே இந்த ஏப்ரல்.

ஏற்கனவே ஹாட்லைனில் இதையே எழுதியது நினைவிருக்கிறது. இந்த மாதத்து வாசிப்பினை யார் எவ்விதம் அணுகிடுவார்களோ என்ற கேள்விக்கு பதில் தரும் பொறுப்பை நானே கையில் எடுக்கும் பட்சத்தில் - எனது முதல் சாய்ஸ் ஐயமின்றி டின்டினாகத்தான் இருக்கும்.96 வருட ஜாம்பவான் என்பது ஒருபுறம் இருக்க, பால்யத்தின் தீரா craze என்ற அடையாளமும் டின்டினோடு கைகோர்த்திடும் போது நம்மையும் அறியாமல் அந்தப் பக்கமாய் ஒரு மையல் எழுவதை தவிர்க்க முடியவில்லை.  டின்டின் வரிசையில் இரண்டாவது ஆல்பமாக விளம்பரப்படுத்தப்படும் ‘The Crab with the Golden Claws' ஆல்பமே இம்மாதம் ‘பாலைவனத்தில் ஒரு பொன் நண்டு’ என்று தமிழில் அவதார் எடுத்துள்ளது. இங்கே, இந்த நொடியில் நேக்கொரு திடீர் டவுட் : பொன்+ நண்டு = "பொன்னண்டு" என்று வருமோ ?? ஆத்தாடி ....சீவக சிந்தாமணியிலிருந்து யாப்பிலக்கணம் வரைக்கும் கிளாஸ் நடக்குமோ ? 😕

புக்கைப் பொறுத்தவரையில் வழக்கம் போலவே கெட்டியான காகிதம், அதே பெரிய சைஸ், தெறிக்கவிடும் அதே தரம் and வழக்கம் போலவே செம ஜாலியான + பரபரப்பான வாசிப்பு அனுபவம் இங்கு வெயிட்டிங்.நமது லபோதீபோ கேப்டன்  ஹேடாக் - டின்டினையும், ஸ்னோயியையும் முதன்முறையாக சந்திப்பது இந்த சாகசத்தின் வாயிலாகவே. சரக்கைப்  போட்டுவிட்டு கப்பலுக்குள் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கும் கேப்டனை காப்பாற்றி சஹாரா பாலைவனம் முழுக்க இழுத்துச் செல்கிறார் டின்டின்.இதற்கு முந்தைய ஒன் ஷாட் ஆல்பங்களான கால்குலஸ் படலத்திலோ, விண்கல் வேட்டையிலோ இருந்த depth இந்த சாகசத்தில் ஒரு மிடறு குறைவுதான். ஆனாலும் காலத்தை வென்றதொரு அசாத்தியப் படைப்பு இது என்பதில் உலகெங்கும் காமிக்ஸ் படிக்கும் சகல வயதினருக்கும் சந்தேகமே இருக்க இயலாது.டின்டின் பற்றிப்  பேசிக்கொண்டிருக்கும்போது சன்னமானதொரு சந்தோஷ செய்தியுமே. கொஞ்ச காலமாகவே தலைநகரில் - அதாவது தேசத்தின் தலைநகரில் - நமது இதழ்களை வாங்கி ரசித்திட ஒரு சின்னஞ்சிறு வட்டம் உருவாகியிருப்பது புரிகிறது. டின்டினின் ஒவ்வொரு ஆல்பத்திலும் தவறாமல் 20 பிரதிகள் வரை தருவித்து அங்கு விற்பனை செய்வது கடந்த சில மாதங்களாக நடந்தேறி வருகிறது.விளம்பரப்படுத்தும் அவசியம் இம்மியும் இல்லாது ஜெகஜோதியாய் ஜொலிக்கும் ஒரு global சூப்பர் ஸ்டாரை கையில் எடுக்கும்போது இதுபோலான சகாயங்கள் சாத்தியமாகிடும் போலும். தவிர வழக்கம் போலவே ஐரோப்பிய சேகரிப்பாளர்களும் செம ஆர்வம் காட்டி வருகின்றனர். எது எப்படியோ - "ஜப்பானில் கூப்பிட்டாகோ, சைனாவில் ‘கூப்பிட்டாகோ, ஜாக்கிசான் கூப்பிட்டாகோ" என்று நான் கூவப் போவதில்லை. உள்ளூரில் நம் வட்டத்தில் டின்டின் பெற்றிடக் கூடிய பாராட்டுகளே மெய்யான மகிழ்வைத் தந்திடும். So, நேரம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு அமையும் பட்சத்தில் - ஏப்ரலின் காம்போவில் டின்டினுக்கு முதலிடம் கொடுக்கப் பாருங்களேன் மக்களே!

Next in line என்று நான் சொல்லக்கூடியது இன்னொரு செம breezy read இம்முறை GEN Z சந்தாவின் "ஜாக்கி போட்ட ஓநாய்" ரூபத்தில்.இந்தத் தொடர் உருவானதே செம வித்தியாசமான ரூட்டில். நம்ம தாத்தாக்கள் கதை உருவாக்கிய கதாசிரியர் வில்ஃபிரிட் லுபானோ , பொம்மலாட்டம் நடத்தும் பேத்தி சோபியின்  ஷோக்களில் ஒரு ஓநாயைக் காட்சிப்படுத்தியிருப்பார். ஒரு பட்டாப்பட்டி டிராயரை மட்டும் போட்டுக்கொண்டு வரும் அந்த ஓநாய் காட்டு விலங்குகளுக்கு மத்தியில் செய்யும் லூட்டிகளை பொம்மலாட்டத்தில் காட்ட பசங்க விழுந்து சிரித்து ரசிப்பது போன்ற sequences தாத்தாக்கள் கதைகளில் உண்டு.அட அந்த ஓநாயை மெய்யாலுமே ஒரு காமிக்ஸ் பாத்திரமாக்கினால் என்னவென்று ஒற்றை நாளில் யாருக்குத் தோன்றியதோ தெரியவில்லை, ஆனால் The Wolf in Underpants என்ற பெயரில் இந்தத் தொடருக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டனர்.இது ரெகுலரான , மாமூலான காமிக்ஸ் பாணியிலிருந்து சற்றே விலகி நிற்கும் என்பது முதல் தகவல். சித்திர பாணிகளும் கலரிங்கும் இங்கே செம லேட்டஸ்ட்  பாணி. And இது முழுக்கவே நம்ம இல்லத்துக் குட்டீஸ்களுக்கு என்று சொன்னால் தப்பில்லை என்பேன்.ஒவ்வொரு ஆல்பத்திலும் ஒரு சன்னமான மெசேஜ் & அதைப் பரபரப்பான கதைக் களம் மூலம் பசங்களுக்கு லுபானோ சொல்ல முனைகிறார். So வீட்டில் பசங்க இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குத் தவறாமல் படிக்கக் கொடுங்கள் மக்களே - அல்லது உறவினர் / நண்பர்களின் பிள்ளைகளுக்குப் பிறந்தநாள் பரிசு அனுப்புவதாக இருப்பின் இவற்றைத் தேர்வு செய்தால் பசங்களும் சரி, நீங்களும் சரி நிச்சயம் மகிழ்வீர்கள். So எனது லிஸ்ட்டில் "ஜாக்கி போட்ட ஓநாய்" இரண்டாவது வாசிப்பு இடத்தை ஆக்கிரமித்திடும்.

அதற்கடுத்து சந்தேகமே இன்றி நம்ம இரவு கழுகாரையும், வெள்ளி முடியாரையும் ஒரு சேர மாந்திரீகர் மோரிஸ்கோவுடன் நாம் ரசித்திட உள்ள **'மரணம் மறந்த மம்மி'**யைத் தான் சுட்டிக்காட்டுவேன்.இங்கே சின்னதாய் ஒரு பிளாஷ்பேக்...! 2026-ன் அட்டவணை தேர்வில் ஒரிஜினலாய் இந்த ஆல்பத்திற்கு இடம் இருந்திருக்கவில்லை தான். ஒரு வெகு சமீப 220 பக்க டெக்ஸ் கதையினையே தேர்வு செய்து அதை வரவழைக்கவும் செய்தாயிற்று.​ஆனால், போன வருடத்தின் நடுப்பகுதியின்   ஏதோ ஒரு தருணத்தில், நண்பர் பல்லடம் சரவணக்குமார் எனக்கு ஓரிரு இத்தாலிய டெக்ஸ் அட்டைப்படங்களை அனுப்பிய கையோடு, "சார், மோரிஸ்கோ கதைகள் எதையாச்சும் அவ்வப்போது கண்ணில் காட்டுங்களேன்" என்று ஒரு கோரிக்கையை எழுப்பியிருந்தார்.​எனக்குமே இந்த எகிப்திய வைத்தியர் + மாந்திரீகரை பிடிக்கும் என்பதால், "ஓ! அதற்கென்ன சார்? 2026-ல் பார்த்துக்கொள்ளலாம்" என்று சொல்லி வைத்திருந்தேன்.அட்டவணையை இறுதி செய்யும் கடைசி கட்டத்தின் போதுதான் நான் தந்திருந்த வாக்கு நினைவுக்கு வந்தது. "ஆஹா! மோரிஸ்கோவை மறந்து தொலைத்துவிட்டோமே !" என்றபடியே அவசர அவசரமாய் போனெல்லியின் மோரிஸ்கோ சாகசங்களை உருட்ட ஆரம்பித்தேன். அப்போது சிக்கிய ஆல்பம் தான் இந்த 'மரணம் மறந்த மம்மி'. And yes, மெபிஸ்டோவின் 2026 தீபாவளி சாகசமுமே இதேபோல் ஈரோட்டில் தந்த பிராமிஸை மறந்துவிட்டு, அப்புறமாய் கடைசி நொடியில் அடித்துப் பிடித்து உள்ளே நுழைத்த சங்கதி தான். வெண்டைக்காய் கொத்சு அடிக்கொரு தபா அவசியம் போலும் ....! என்ன... நண்பர் கோரிய மோரிஸ்கோ இதோ வந்துவிட்டார்....... ஆனால் அவருக்குக் கொடி பிடித்த நண்பர் SK இன்று வெகு தொலைவிற்குப் போய்விட்டார்.எங்கிருந்தாலும் நண்பர் இதை ரசிக்கத் தவறமாட்டார் என்பது மட்டும் உறுதி.

இந்த சாகசத்தைப் பொறுத்தவரையில் பேனா பிடிக்கும்போது கொஞ்சம் இப்படியும் அப்படியுமாய் நெளியச் செய்தேன் என்பதை நான் மறுக்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் விறைப்பான ஒரு ரேஞ்சர், விட்டலாச்சாரியா லோகத்தினுள் புகுந்திடும்போது நிறையவே நெருடுகிறது.அதனால்தான் ஒவ்வொரு மெபிஸ்டோ கதையினையும், ஒவ்வொரு மாந்திரீகம் சார்ந்த கதையினையும் களமிறக்கும் முன்பாக ஓட்டை ரெக்கார்டாட்டம் உங்களிடம் அபிப்ராயம் கேட்டுக்கொண்டே இருப்பேன்.இந்த முறையோ எகிப்திய புராணங்கள் சகலமுமே இந்தக் கதையின் பின்னணி. வரிசை கட்டி ஒவ்வொன்றாய் உயிர்கண்டு எழுவதுதான் இம்முறை நம்ம தலை சந்திக்கவிருக்கும் சவால்கள்.So ஒரு முக்கால் மணி நேரத்திற்கோ, ஒரு மணி நேரத்திற்கோ "லாஜிக்" எனும் சமாச்சாரத்தை ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு பிலாரேஸ்க்குள் புகுந்தீர்களெனில் ஒரு அதகள ஆக்ஷன் மேளா வெயிட்டிங். ஷாப்திக்கள் , சைனோசெபாலிக்கள் , தோத் , ஜானி, டிக்வாலி... இவையெல்லாம் என்னவென்று இந்த நொடியில் புருவம் உயர்த்தக்கூடிய நீங்கள், அந்த ஒரு மணி நேரத்திற்குப் பின்பாய் கரைகண்டிருப்பீர்கள்.So, ஒரு வித்தியாசமான உலகம் காத்துள்ளது folks. Get ready, Get going......!!

இம்மாத்து இறுதி இதழ் இம்மாத்தின் ஆகப் பெரிய இதழும் கூட. பத்து கதைகள், ஆறு ஜாம்பவான் நாயகர்கள், அட்டையில் நடமாடும் மாயாத்மா... செம வித்தியாசமான காம்போ (Combo) தான், மறுப்பதற்கில்லை. And, 1950-களில் துவங்கி, 90-கள் வரையிலான வெவ்வேறு காலகட்டங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கதைகள் இவை. சார்லியின் சாகசங்கள் ஏற்கனவே முத்து காமிக்ஸில் வந்த கிளாசிக்ஸ். அவை தவிர்த்த பாக்கி எல்லாமே தமிழுக்குப் புதிதோ இல்லையோ, நமக்குப் புதியவைகளே .சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஒற்றை கதையை ; இரண்டு கதைகளை ; வாசிக்க நினைக்கும் பட்சத்தில், அடுத்த 10-15 நாட்களுக்கு இந்த கிங் ஸ்பெஷல் அட்டகாசமான துணையாக இருக்குமென்பதில் ஐயமே இல்லை.

​அப்புறம் இந்த இதழோடு Electric 80's தனித்தடம் நிறைவடைகிறது.இதே ரீதியில், இதே போல கிளாசிக் நாயகர்களைக் கலந்து கட்டி, இந்த கிங்ஸ் அணிவகுப்பு மேற்கொண்டும் ஒரு சீசனுக்குத் தொடரலாமா ? அல்லது போதுமா ? என்பதே இந்தப் பொழுதில் எனக்கு நீங்கள் சொல்ல வேண்டிய பதில்.இதேபோல இன்னும் ஒரு மூன்று இதழ்களை ஓர் ஆண்டின் அவகாசத்திற்குள் நடுநடுவே நுழைத்தால் ஓ.கே.தானா? And மறுபடியுமே முதல் சீசனின் மேக்ஸி சைஸுக்கே போய்விட்டால் என்ன guys? அளவு மாற்றம் செய்திடும் போது பணிகள் ஏகமாய் பெண்டைக் கழற்றுகின்றன. ஒரிஜினல் சித்திர அமைப்பிற்கு ஏற்ப மெகா சைஸில் போடுவதாயின் இன்னும் பிரமாதமாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். What say all?

ரைட் , இந்த வார இறுதியினை கூரியர் நண்பர்கள் சிறப்பித்துத் தரும் பட்சத்தில், தேர்தல் ரவுசுகளுக்கு இணையாக நம்ம அதகளமும் உங்கள் கைவசம் இருக்கும். So Happy reading !

​இங்கே ஏப்ரலின் முதல் வாரத்தில் எப்போதும் போலவே அம்மன் கோவில் திருவிழா என்பதால், காத்திருக்கும் திங்கள் நமது அலுவலகத்திற்கு விடுமுறை. அந்த ஒற்றை நாள் மட்டுமே உங்களது அழைப்புகளுக்குப் பதில் சொல்ல ஆள் இருக்காது....Please do note.!

Bye all.....see you around...! ரிப்போர்ட்டர் ஜானியோடு ஒரு மர்மத்தை முடிச்சவிழ்க்கப் புறப்படுகிறேன் ! Have a wonderful week ahead.....Bye for now !!

ONLINE LISTINGS ARE READY & WAITING.....!

https://lion-muthucomics.com/latest-releases/1457-2026-april-pack.html



33 comments:

  1. அட... வெள்ளியன்றே பதிவு..

    வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  2. க்ளாசிக் நாயகர்கள் தொடரலாம் சார்...

    ஆனால் எனக்கு என்னவோ மெகா சைஸை விட இப்போதைய டெக்ஸ் பாணி அளவு தான் அதனுடன் பயணிக்க ,வாசிக்க ஏதுவாக உள்ளது...மற்றபடி உங்கள் வசதிக்கேற்ப...

    ReplyDelete
    Replies
    1. என் கருத்தும் இதுவே...

      Delete
  3. வந்தாச்சு இப்பவும் பத்துக்குள்ள..!

    ReplyDelete
    Replies
    1. கிளாசிக் ஹீரோஸ் தொடரலாம். மாக்ஸி சைஸ் ok..!

      Delete
  4. This size s best for classics sir .. maxi a big no

    ReplyDelete
  5. கிளாசிக் நாயகர்கள் தொடர்ந்து வரட்டும் சார்.

    எந்த சைசில் வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் படங்களை ரசிக்கும் வகையில் பெரிய அளவில் இருந்தால் சுகம்.

    தற்போது வேதாளர் மட்டுமே வண்ணத்தில் வருகிறார். மற்றவர்களையும் வண்ணத்தில் முயற்சி செய்யலாம்.

    காரிகன், சார்லி தவிர ரிப் கெர்பி, ஜார்ஜ், மாண்ட்ரெக் கதைகள் வண்ணத்தில் நன்றாக இருக்கும்.. அவை கலக்டர்ஸ் ஸ்பெஷலாய் கொண்டாடப்படும்.

    ReplyDelete
  6. கிளாசிக் நாயகர்கள் தொடரட்டும்
    சைஸ் ஒரிஜினலில் உள்ளது உள்ளபடி
    வருஷம் 6 புத்தகங்கள் வேண்டும்

    ReplyDelete
  7. எனக்கும் மோரிஸ்கோ பார்த்ததும் சரவணகுமார் சகோ ஞாபகம் வந்ததுங்க சார்
    கனவுலக சகோதரர்கள் சிலருக்கும் அவரது ஞாபகம் வந்திருக்க வாய்ப்புண்டுங்க
    உங்களிடம் கோரிக்கை வைத்த அதே தருணங்களில் கனவுலக க்ருப்பில் மோரிஸ்கோ தலை காட்டிடும் கதைகளை பற்றி பெரிய பத்தி எழுதினார்

    ReplyDelete
  8. கிளாசிக் 😘கிங்ஸ் ஸ்பெஷல் தொடர வேண்டும் 😘💐சார் 🙏

    சைஸ் doesn't matter Sir😘
    Your choice 👍💐

    ReplyDelete
  9. தி கிங் ஸ்பெஷல் தொடரட்டும், maxi சைஸ் முயற்சி செய்து பார்க்கலாம், மூன்று புத்தகத்தையும் நான்கு புத்தகம் மாற்றலாம், 3x4

    ReplyDelete
  10. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  11. விலையேற்றங்கள் நம்மை கலங்கடிப்பது உண்மையே. ஆனால் எல்லா யுத்தங்களும் ஓய வேண்டும். உலக அமைதி திரும்பி சமாதானம் ஓங்க வேண்டும் என்பதனை நம் வேண்டுதல்களில் வைப்போம். நம்பிக்கை கொள்வோம். சீக்கிரமே இதுவும் கடந்து போகும்.. ஏப்ரல் இதழ்கள் ஆவலைத் தூண்டுகின்றன..

    ReplyDelete
  12. Kings Special please continue sir. Same size makes it handy. Maxi is difficult to hold. 4 books a year is fine.

    ReplyDelete
  13. Maxi size ok if the panels can be broadened sir - otherwise it does not make readability any better.

    ReplyDelete
  14. கிளாசிக் தொடரலாம் சார் ஆனால் இப்போதைய சைஸே தேவலாம் சார்

    ReplyDelete
  15. சூப்பர் சார்...முதல் கதை டின்டின்லதான்...மேக்சி சைஸ்ல முத்து நாயகர்கள் தொடரலாம்

    ReplyDelete