Sunday, March 01, 2026

காலியாய் ஒரு கடைவாய் !

 நண்பர்களே,

வணக்கம். சின்னதாக ஒரு குவிஸ்  போட்டியோடு ஆரம்பிக்கலாங்களா?

​Quiz No.1 :

எதிர்பாராமல் வந்து எக்குத்தப்பான வெற்றிகளைக் குவித்திருக்கும் நமது பல இதழ்களின் மத்தியில் என்ன ஒற்றுமை என்பீர்களோ?

A) அதிரிபுதிரி அட்டைப்படங்கள்
B) அட்டகாச கதைக்களங்கள்
C) கடைவாய்க்குக் கட்டைவிரல்

​Quiz No.2:

எதிர்பார்த்திருந்த பல இதழ்கள் எசகுபிசகாய் கடைசி நொடியில் காணாமல் போனதன் பின்னணியில் என்ன ஒற்றுமை என்பீர்களோ?

A) கதைகளில் குழப்பங்கள்
B) தட்டையான மொழிபெயர்ப்பு
C) ஒரு வளர்ந்த மாடனின் சோம்பல்

​மேற்படி இரண்டு குவிஸ்களுக்கும் நீங்கள்  Option A பதிலினை டிக் செய்திருந்தால், உங்களது செலவிலேயே உங்களது வீட்டுக்குக் கிட்டக்க 'காமிக்ஸ் ஏரி' என்றதொரு சிலை வைத்துவிட்டு பில்லைத் தலீவரின் சங்கத்திற்கு அனுப்பி விடுங்கள்.

​Option B பதிலை டிக் செய்தோராயிருந்தால் - உங்கள் ஏரியாவின் பிரதான சாலையில் 'காமிக்ஸ் கடல்' என்றொரு சிலை வைத்துக்கொண்டு அதற்கான பில்லை இளவரசரிடம் அனுப்பி விடுங்கள்.

​அதே சமயம் இரண்டு வினாக்களுக்குமே  Option C தான் உங்களது பதிலாக இருந்திருக்கும் பட்சத்தில், தேர்தலுக்குப் பின்பாய் அரசாங்கத்திடம் மனு போட்டு மெரினா பீச்சில் லை-னா-ய் சிலைகள் வைக்கப் பெர்மிஷன் வாங்கிப்புட்டு 'காமிக்ஸ் சமுத்திரம்' என்று வரிசைக்குச் சிலைகளை நாமளே வச்சுப்புடலாம். நம்ம காமிக்ஸ்களின் பின்னணியைக் கரைத்துக் குடித்த விற்பன்னர்கள் என காலம் உங்களைச் சிலாகிக்கும்!

'மேட்டருக்கு வா மேன்' என்கிறீர்களா? வந்துவிட்டால் போச்சு. Becos இந்த வாரம் சொல்லவேண்டியிருக்கும் இரண்டு சமாச்சாரங்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவை and அந்த இரண்டுமே மேற்படி இரண்டு கேள்விகளோடும் தொடர்பும் கொண்டவை.

கதை ஆரம்பிச்சதே இந்த வாரத்தின் துவக்கத்தில் தான். மார்ச்சுக்கான டெக்ஸ்  சாகசம், 'சகுவாரோ' அதிரடி மற்றும் Gen-Z-ன் குட்டி புக் என மூன்றுமே ஜல்தியாய் ரெடியாகி இருந்தன. கலரிலான 'புதைகுழிப் பூக்கள்' மட்டுமே என் மேஜையில் இருக்க, அதனையும் சட்டுப்புட்டென்று முடித்துவிட்டால் "பிப்ரவரியில் மார்ச்" எனப் பீற்றிக்கொள்ள எல்லாமே தயாராக நின்றது.வழக்கமாய் இது போன்ற தருணங்களில் மொழிபெயர்ப்பில் மொக்கை போடல்கள் தலைதூக்கி விடுவது வாடிக்கை and அவற்றைச் செப்பனிடும் நோவை ஒப்பாரியாக நான் இறக்கி வைப்பேன். ஆனால் இம்முறையோ Ms.சுகன்யாவின் மொழியாக்கத்தில்  no complaints at all....செமையாகவே இருந்தது. ஆகச் சடுதியில் பணிகளை முடித்துவிடலாம் என்று வேலைக்குள் புகுந்தபோதுதான் கதையின் கட்டமைப்பிலேயே சில இடர்கள் இருப்பது தெரிய வந்தது. கதையின் புரிதலில் நிறையவே ஓட்டைகளும் ஆங்காங்கே கண்ணில் பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாய் 'என்னமோ நடக்கப்போகுது, ஏதோ சம்பவம் காத்திருக்குது' என்று பக்கங்களைப் புரட்டிக்கொண்டே போனால் முற்றுப்புள்ளி போட்டுவிட்டு கதாசிரியர் கிளம்பியே விட்டார்.எனக்கு இதனை எவ்விதம் எடுத்துக்கொள்வதென்றே புரியவில்லை - becos டெக்ஸும் ஒற்றை சிங்கிள் ஆல்பத்தில் மட்டுமே களம் காணும் ஒரு மாதத்தில் ரெகுலர் கலர் இதழானது தட்டையாக அமைந்து போனால், அம்மாதத்து ஒட்டுமொத்த வாசிப்பு அனுபவமே உதை வாங்கிடுமே என்ற பயம் அடிவயிற்றில் பந்தாய் சுருண்டது.

​இந்த ஆல்பத்தினை நான் தேர்வு செய்ததே ஒரு தனிக்கதை. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக நமது ரேடாரில் இருந்து வந்த போதிலும் போடலாமா? வேணாமா? என்ற குழப்பத்திலேயே வண்டி ஓடிக்கொண்டிருந்தது. சரி, இங்கிலீஷ் மொழிபெயர்ப்பையாவது பண்ணி வாங்கலாம் என்றபடிக்கு நமது கோவை எழுத்தாளருக்கு அனுப்பி இருந்தேன். அவர்களோ 'இது முழுக்க முழுக்க மகளிர் ஒன்லி கதையாக உள்ளது, வித்தியாசமாகவே உள்ளது ஜி' என்று அபிப்பிராயப்பட்டிருந்தார்கள்.அடடே! பொதுவாய் டாக்புல் அண்ட் கிட் ஆர்டின் கூத்துகளைத் தவிர்த்த வேறு எந்தக் கதைக்குமே சிலாகித்துக்கொள்ளாதவர், இந்தக் கதையைப் பாராட்டியுள்ளாரே என்ற மகிழ்வில் சட்டுப்புட்டென்று உரிமைகளை வாங்கிப் போட்டோம் and 2026-ன் அட்டவணைக்குள்ளும் நுழைத்தும் விட்டாச்சு. இந்த பின்னணியில் தான் போன வாரம் முதலாய் கபாலத்தைச் சொரிந்துகொண்டிருந்தேன்.

​ரைட்டு, இதனைச் செப்பனிட கொஞ்சம் மறுபரிசீலனை பண்ணிட அவகாசம் கணிசமாகவே தேவைப்படும் ; நின்ற நிற்பில் இது வேலைக்கு ஆகாது என்று தலைக்குள் தீர்மானமான நொடியில் இந்த ஸ்லாட்டில் வேறு எதை நுழைப்பது என்ற குழப்பம் குடிகொண்டது.​டின் டின் இன்னும் கோப்புகள் அப்ரூவல் ஆகி இருக்கவில்லை. இளம் டைகர் ஆல்பத்திலோ வேலையே துவங்கி இருக்கவில்லை. 'குருதியின் கூலி' பைல்கள் நேற்றைக்குத் தான் வரவே செய்திருந்தன. 'ராபினின்' இரண்டு பாகத் திரில்லரிலோ பணிகள் கால்வாசி தான் முடிந்திருந்தது.So, திரும்பிய திசையெல்லாம் இடர்கள் மட்டுமே தென்பட்டன. ஏதாச்சும் மொழிபெயர்ப்பு கண்டு ரெடியாக இருந்தால் அதை அப்படியே தூக்கி இந்த ஸ்லாட்டில் நுழைத்து விடலாமே என்று பறக்கப் பறக்கப் பார்த்தால் இந்த 200 ரூபாய் விலைக்கு நியாயம் செய்யும் ஆல்பமாய் எதையுமே காணோம். தளராமல் பீரோவை தலைகீழாய் உருட்டியபோது பகீரென்று முன் நின்றதுதான் 'மேற்கே போ மாவீரா'.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னமே ரூபாய் 250 விலையில் வருவதாக இருந்த ஒரு மைல்கல் இதழ் இது என்பது 'பச்சக்' என நினைவுக்கு வந்தது. பிராங்கோ-பெல்ஜியப் படைப்புலகின் ஒரு வண்டி சமகாலப் படைப்பாளிகள் கரம் கோர்த்து இந்த ஆல்பத்தில் பணியாற்றியுள்ளனர் என்பதும் உரைத்தது.​வன்மேற்கின் ரத்தக்களரியான பரிணாம வளர்ச்சியை ஒவ்வொரு படைப்பாளி டீமும் சின்னச் சின்னக் கதைகளாய் உருவாக்கி, ஒரு 200+ வருட டைம்லைனுக்குள் கதையை நகர்த்தியிருப்பார்கள். ஒரு தங்கக் கடிகாரம் மாத்திரமே அத்தனை சிறுகதைகளிலும் இடம்பிடித்திட, அது ஒவ்வொரு காலகட்டத்தையுமாய் பார்த்திடும் ரகளைகளை, ரத்த வெள்ளங்களைத் தொகுத்திருப்பர் இந்த ஆல்பத்தில்.இந்த இதழை ஒரிஜினலாய்  அறிவித்திருந்த சமயத்தில் கருணையானந்தம் அங்கிளிடம் மொழிபெயர்த்து வாங்கி டைப்செட்  செய்தும் ரெடியாக்கி இருந்தோம். ஆனால் ரொம்பவே தட்டையான மொழிபெயர்ப்பில் ஒருவித டாக்குமெண்டரி  படம் பார்த்த உணர்வே எனக்கு அன்றைக்கு மேலெழுந்ததால், 'மேற்கே போ மாவீரா'வை 'பரணுக்கு போ பையா' என்றே சொல்ல வைத்தது.But இந்த நொடியில் ஆபத்பாந்தவனாய்த் தென்பட்ட வீரனைக் கையில் எடுத்து பட்டி டிங்கரிங் பார்த்தால் வேலை ஆகிடுமா? என்ற கேள்வியோடு வேகவேகமாய் உட்புகுந்தேன். 

Nopes, கிட்டத்தட்ட 60 சதவீதத்தையாவது முழுதுமாய் மாற்றியெழுதினால் தவிர இந்த கதை - கதைக்கு ஆகாது என்பது புலப்பட்டது.​அப்புறம் என்ன? அடுத்த இரண்டு நாட்களுக்கு மறைகழன்ற மாங்காய் மண்டையனைப் போல் விடிய விடிய பேனாவும் கையுமாய்ப் பணி செய்து கிடந்தேன். ஒருவழியாய் முதல் 60 பக்கங்களை முழுக்கவே மாற்றியெழுதிய பிற்பாடு தொடர்ந்து வரும் 40+ பக்கங்களை ரிப்பேர் பண்ணத் துவங்கினால், அடிப்படையிலான பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பிலேயே கணிசமான சொதப்பல்களும் இருப்பது புரிய வந்தது. இன்றைக்கு அவற்றையெல்லாம் சரிபார்க்க கூகிளின் சகாயம் சாத்தியப்படுவதால் இன்றைக்கு எந்த ஒரு மொழியாக இருந்தாலும்  கூகிள்  மற்றும் AI கருவிகள் நானாச்சு என்று தோள் கொடுக்கின்றன ! 

அடுத்த ஒன்றரை நாட்களுக்கு பாக்கி நாற்பது சொச்சம் பக்கங்களைச் சரிபார்ப்பதிலேயே ஓடிவிட்டது. ஆக ஒட்டுமொத்தமாய் பிள்ளையார் சுழியிலிருந்து மங்களம் பாடும் வரை முழுமையாக மறுக்கா டைப்செட் செய்திடும் அவசியம் எழுந்து நிற்பது புரிந்தது.மறுபடியுமா? கோட்டை அழிச்சிட்டு முதல்ல இருந்து பரோட்டா சாப்பிடணுமா? என்று மலைப்பாக இருந்தாலும், பாதி கிணறைத் தாண்டிய நிலையில் வேறு வழியே தெரியவில்லை. தொடர்ந்து நாட்களில் 'ஆடுறா ராமா, தாண்டுறா ராமா' என்றபடிக்கு நம் ஆட்கள் DTP பணிகளுக்குள் மூழ்கிட, எனக்கோ அட்டைப்படத்தைத் தயார் செய்ய வேண்டுமே என்ற பதட்டம்.
இதற்கான ராப்பர் டிசைன்  ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தோம் தான். ஆனால் அச்சிட்டிருக்கவில்லை. அவசரம் அவசரமாய் அந்த கோப்புகளை எடுத்துப் பார்த்தால் திருதிருவென முழிக்கத்தான் தோன்றியது. Becos அந்த ஒரிஜினல் டிசைனானது ரொம்பவே சப்பையாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு 'மொளுக்கட்டீர்' அட்டைப்படத்தோடு களம் இறங்கினால் கட்டையை கொண்டு சாத்துவீர்கள் என்பது அப்பட்டமாய் புரிந்தது.அவசரம் அவசரமாய் அமெரிக்காவிற்கு நமது ஓவியரிடம் 'ஆபத்பாந்தவராக' மாறிட கோரிக்கை விடுத்தோம். "மாப்பிள்ளை இவரே தான், ஆனால் சொக்காயை மட்டும் மாற்றித் தர முடியுமா ப்ளீஸ்? செம செம அவசரம்" என்று சொன்னோம். 'பொழுதன்னிக்கும் இவனுங்களுக்குப் பிழைப்பே இதுதானா? என்று அவர் முகம் சுளித்திருக்கலாம் தான். ஆனால் அவ்விதம் செய்யாமல் பட்டையைக் கிளப்பும் ஒரு பின்னணியைத் தயார் செய்து அனுப்பி வைத்தார். இதோ பாருங்களேன்!



To cut a very long story short - அட்டைப்படம்  நேற்றைக்கு பிரிண்ட் ஆகி ரெடியாகிவிட்டது. நூற்றுச்சொச்சம் பக்கங்களும் முழுமையாய் மறுபடியும் டைப்செட் செய்யப்பட்டு, நேற்று மாலை என் கைகளுக்கு வந்து சேர்ந்துள்ளன. இதோ இன்றைக்கு இந்தப் பதிவைப் போட்ட கையோடு final எடிட்டிங்கிற்கு  அவற்றுள் புகுந்தால், நாளை அச்சுக்குச் செல்லலாம் என்பதே எனது எதிர்பார்ப்பு.​அதுவும் அத்தனை சுலபமே அல்லதான். Becos கிட்டத்தட்ட 225 ஆண்டுகள் நீண்டு செல்லும் ஒரு timeline இந்தக் கதைக்களத்தில். அந்தத் தங்கக் கடிகாரம் கைமாறி கைமாறி பயணிப்பதைப் பிசிறின்றி நகர்த்திட கதாசிரியர்கள் செய்துள்ள மெனக்கெடலினை நான் சரிவரப் புரிந்து கடத்தியாக வேண்டும்.So ஒரு டப்பா டான்ஸ் ஆடும் ஞாயிறு காத்திருப்பது புரிகிறது.
இந்தத் தாமதத்தினை தவிர்த்திருக்கலாமோ ? என யோசிக்கும் போது - கொஞ்சம் சுமாராய் அட்டைப்படம் இருந்தாலும் அவசரத்திற்குச் சரிக்கட்டிக்கொள்ளலாம் என்று சமரசம் செய்ய மண்டை மறுப்பது புரிகிறது ! இத்தனை காலம் ஆன பிற்பாடுமே - எனக்கே திருப்தி தராத ஒரு ஸ்கிரிப்ட் சகிதம் ஒரு கதையை உங்களிடம் ஒப்படைக்க தைரியம் தலைதூக்க மாட்டேன் என்கிறது. விடிய விடிய பல்டியடித்தாலும் ஒரு குறைந்தபட்ச தர அளவீட்டைத் தாண்டிடாத எதுவுமே நேரடியாய் மூத்திரச்சந்துக்கே இட்டுச் செல்லும் என்று தலைக்குள் குந்தியபடியே 'ரூல்ஸ்  ரமணிதரன்' கூக்குரல் இடுவதால் - இத்தனை அவசரத்திலும் நிதானமாகவே பணிகளைச் செய்திட வேண்டியுள்ளது folks. So காத்திருக்கும் வாரத்தில் இதழினைத் திருப்தியாய் நிறைவு செய்து உங்களிடம் கொண்டு சேர்ப்போம். அதுவரை கொஞ்சமே கொஞ்சமாய் பொறுமை ப்ளீஸ் ! வியாழன் டெஸ்பாட்ச் என்று வைத்துக் கொள்ளுங்கள் !

ஆச்சா? இது இன்றைய பதிவின் முதல் பாதி.  And yes இந்தப் பதிவின் துவக்கத்தில் நான் கேட்டிருந்த குவிஸ்களுக்கும்  இந்த இரண்டாம் பாதிக்கும் சம்பந்தம் உண்டுதான். போன வாரம் ஒரு ஏழு எட்டு கதைகளின் ஆப்ஷன்ஸ் தந்து இவற்றுள் இருந்து ஏதேனும் மூன்றை மட்டும் தேர்வு செய்து சொன்னீர்களெனில் மே மாதத்து ஆன்லைன் புத்தக விழாவிற்குப் போட்டுத் தாக்கிடலாமே என்று கேட்டிருந்தேன். இப்படியும் அப்படியுமாய் ஓட்டெடுப்பில் பதில்கள் கிட்டியிருந்தன தான். ஆனாலும் நிதானமாய் உங்களது முடிவுகளைப் பரிசீலனை செய்தபோது தலைக்குள் ஒரு எண்ணம் உதித்தது. 

மாதம்தோறும் ஏகப்பட்ட புக்ஸ்களை வெளியிட்டு வந்த நாட்களெல்லாம் மலையேறி கொஞ்சகாலம் ஆச்சு என்பதில் no secrets ! இப்போதெல்லாம் at best ரெகுலர் தடத்தில் இரண்டோ மூன்றோ இதழ்கள் + Gen-Z குட்டிச் சந்தாவில் ஒற்றை புக்  என்பது தானே நிலவரம்?! ​நடப்பாண்டின் அட்டவணையில் மொத்தமே முப்பது இதழ்கள் தான் எனும்போது, ஒரு சில மாதங்களில் ரெகுலர் தடத்தில் இரண்டே இதழ்கள் வெளிவருவதுமே தவிர்க்க முடியாத நிகழ்வு என்று புரிகிறது. காத்திருக்கும் மாதங்களில் எந்தெந்த இதழ்களை எந்தெந்த மாதங்களுக்கு slot-in செய்வது என்று எழுதிப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், நிறைய மாதங்கள் ஜிலோவென்று காற்றாடுவது புரிய வந்தது.சில மாதங்களிலெல்லாம் ஒரு டெக்ஸ்  + ஏதேனும் ஒரு இதழ் என்பதோடு கையைத் தட்டிவிடும் அவசியம் இருப்பதும்  தெரிந்தது. So "ஆன்லைன் மேளா" என்று சொல்லி ஒற்றை மே மாதத்தில் நாலைந்து இதழ்களைப் போட்டுத் தாக்கிவிட்டுத் தொடரக்கூடிய மாதங்களில் கையை வீசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, ஒரு குட்டியான புதிய முன்பதிவு வழித்தடத்தை முன்மொழிய முடிந்தால் அதன் வாயிலாகச் சாத்தியமாகிடக்கூடிய இதழ்களை மாதா மாதம் ஒவ்வொன்று வீதம் add செய்தால் அந்தந்த மாதங்களின் கூரியர்களும்  புஷ்டியாகிடுமே என்று நினைக்கத் தோன்றியது.​நமக்குத்தான் மண்டைக்குள் ஏதாச்சும் மகா சிந்தனை குடியேறிவிட்டால் அப்புறம் ரிவர்ஸ் கியர் போடும் பேச்சே கிடையாதே! இதோ அந்த எண்ணத்தின் பலனாய் - we present : The FAB FIVE முன்பதிவுத் திட்டமிடல் :

​நான் ஏற்கனவே சொன்னது போல "விஷம்"  செம பெரிய பிராஜெக்ட் என்பதால் அதனை இந்த ஆட்டத்திற்குள் சேர்த்துக்கொள்ளவில்லை.And, தல டெக்ஸ் வில்லரின் கலர் சாகசமுமே உங்கள் அனைவரது முதல் சாய்ஸாக இருந்த போதிலும் அவரை கொஞ்சமாய் ஓரங்கட்டினால் அதனிடத்தில் குறைந்தபட்சமாய் வேறு மூன்று  இதழ்களை நுழைத்துவிடலாம் என்பது புரிந்தது. தல இங்கில்லையெனில், வேறெங்கேனும் புகுந்து கொள்வார் எனும் போது அவரது சீட்டுக்கு என்றைக்குமே ஆபத்தில்லை, என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இந்தப் பாவப்பட்ட ஸ்டார்பவர் குறைச்சலான பசங்களோ, இப்படி ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அன்றி கரைசேரும் சாத்தியங்கள் மிகக் குறைவே.So, 'தல' வராமல் போக வாய்ப்பே இல்லை என்பதால் அவருக்குப் பதிலாக இந்தப் புது முயற்சிக்குள் மற்றவர்களை மட்டுமே நுழைத்திடத் தீர்மானித்தேன். 

ஏற்கனவே அறிவித்திருந்த இதர கதைகளோடு பெண்டிங் நிற்கும் இன்னொரு ஆல்பத்தினையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளத் தீர்மானித்தேன். அங்குமே இதே ரீதியிலான சிக்கல்தான் common factor ! மொழிபெயர்ப்பில், புரிதலில் நிறைய குறைபாடுகள் இருக்கப்போனதால அதனை அன்றைக்கு ரிப்பேர் செய்திட இந்தச் சோம்பேறி மாடனுக்குத் தீரவில்லை என்பதால் பரணுக்கு அனுப்புவதே சுலபமாய்த் தென்பட்டிருந்தது. அந்த ஆல்பம் மர்ம மனிதன் மார்ட்டின் + டைலன் டாக்  இணைந்து ஒருசேர சாகசம் புரியும் 'உலகத்தின் கடைசி நாள்'.ஆக முடங்கிக் கிடந்த அந்த இதழையுமே இந்த வாட்டி இந்த FAB FIVE திட்டமிடலுக்குள் புகுத்திடத் தீர்மானித்தேன். பல விதங்களில் ஒற்றுமை கொண்டுள்ள இந்த ஐந்து இதழ்களும் இந்த முன்பதிவுத் தடம் மூலமாக உங்களைச் சந்திக்கத் தயாராகி வருகின்றன. யாருக்கும் அசாத்திய ஸ்டார் பவர் கிடையாது தான் ; ஆனால் கதைகள்  ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதத்தில் மிளிரும் திறன் கொண்டவை.So, இப்படி ஒரு தனித்தடம் அவர்களுக்குக் கிட்டிடும் பட்சத்தில் நிச்சயம் ரவுண்டு கட்டி அடிப்பார்கள் என்று எதிர்பார்த்திடலாம்.

'சரி, அன்றைக்கே இவற்றுள் பணி செய்யத் தீராத நிலையில் இன்னிக்கி இன்னா மேன் மாறிப் போச்சு ?' என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது !  அது வேறொன்றுமில்லீங்கோ - ரெகுலர் தடத்தில் கொஞ்சமே கொஞ்சமாய் மூச்சு விட்டுக்கொள்ளும் அவகாசம் வாய்த்திருக்கும் இந்த நடப்பாண்டில் கடைவாயைக் காலியாய் விடுவானேன்? என்று நினைத்தேன்.  அப்புறம் கடைவாய்க்குள் கட்டை விரலைத் திணிப்பது என்று ஆகிடும் பட்சத்தினில்  ஒட்டுமொத்தமாய் ஐந்து தபா திணித்துவிட்டால் ஐந்து பெண்டிங் இதழ்களுமே கரை சேர்ந்துவிடுமே என்ற ஞானோதயம் உதித்தது.​ ஆனது ஆச்சு, உருண்டோ புரண்டோ - இந்தக் கதைகள் ஒவ்வொன்றையும் கரை சேர்ப்பதை நடப்பாண்டின் சவாலாக ஏற்றுக்கொண்டால் போச்சு ! 



So  இந்த ஐந்து இதழ்களுக்குமான பிரத்யேக முன்பதிவுத் திட்டமிடலின் பின்னணி இதுவே. ரெகுலர் சந்தாக்களில் இடம்பிடித்திருக்கும் நண்பர்களுக்கு  சலுகை சாத்தியமாகிடும் வாய்ப்பு இது. அந்தந்த மாதங்களது கூரியர் இதழ்களுடன் இந்த ஸ்பெஷல் இதழ்களுமே மாதமொன்று வீதம் தொற்றிக்கொள்ளும் என்பதால், தனியாகக் கூரியருக்கெனக் கட்டணங்கள் ஏதும் செலுத்தத் தேவயிராது.ஆனால் சந்தாவில் அல்லாத நண்பர்கள் ஐந்து கூரியர் கட்டணங்களுக்குப் பணம் செலுத்திட அவசியமாகிடும். And சமீப காலத்துப் பழக்கம் போலவே இந்த முன்பதிவுகள்  strictly முன்பதிவுகளுக்கான பிரிண்ட்ரன் சகிதமே களம் கண்டிடும். ஆகையால் சாவகாசமாய் எப்போதாவது வாங்கிக்கொள்ளலாம் என்பதற்கான வாய்ப்புகள் பூஜ்யத்திற்கு மிக அருகில்.முகவர்களுமே இந்த இதழ்களைப் பொறுத்தவரையில் முன்பணம் அனுப்பினாலொழிய புக்குகள் தருவிக்க வாய்ப்புகள் இராது. இந்த ஐந்து ஆல்பங்களுமே, சூப்பர் ஸ்டார் நாயகர்கள் யாருமே இல்லாத விளிம்பு நிலை படைப்புகள் என்பதால் மறுபடியும் ரெகுலரான பிரிண்ட் ரன்னில் கணிசமாக அடித்து வைத்து கிட்டங்கியை நிரப்பிக்கொண்டு ஊர் ஊராய் தூக்கித் திரியும் அந்த டுபுக்கு பழக்கத்தை இவற்றில் தொடர்வதாக இல்லவே இல்லை.இதோ மார்ச் முதல் தேதி முதலாய் இந்த முன்பதிவுக்கென நாம் குறிப்பிட்டதொரு அவகாசத்தினை ஏற்படுத்தியுள்ளோம். அதற்குள் என்ன நம்பர் சாத்தியமாகிடுகிறதோ அதை மட்டுமே பிரிண்ட் செய்வதாக இருக்கிறோம்.

முன்பதிவே முன்செல்லும் பாதைக்கு வெளிச்சம் - என்பதுதான் இன்றைய நிலவரம் மக்களே. டெக்ஸையும் இதில் சேர்த்துவிட்டு Super 6 போல ஆறு இதழ்களாக அமைத்திருக்கலாமே - என பற்பல திசைகளிலிருந்து சிந்தனைக் கணைகள் ஈரான் மீது ஏவப்படும் மிஸைல்களைப் போலத் தாக்கிடும் என்பது தெரியாதில்லை.ஆனால் 600 ரூபாய்க்கு ஐந்து இதழ்கள் எனச் சாத்தியமாகிடும்போது கலர் டெக்ஸை உள்ளே நுழைத்துத் தொகையை ஆயிரத்திற்கு கொண்டு செல்ல மனமொப்பவில்லை. ஏற்கனவே தாத்தாக்களும் மேகி கார்சனும் ஒரு 400 + இந்த ஐந்து இதழ்களின் பொருட்டு ஒரு 600 என்பதே தற்சமயத்திற்குப் போதும் என்று தீர்மானித்துள்ளேன்.கூடுவாஞ்சேரி போய், கும்மிடிப்பூண்டி போய், அரக்கோணம் போய், ஆந்திரா போகலாமே என்ற ரீதியிலான அகுடியாக்களின்றி தயவு கூர்ந்து திட்டமிடப்பட்டுள்ள சாலையிலேயே பயணிப்போமே ப்ளீஸ்...?!தவிரவும் எனக்கு இது வேண்டாம், இது வேண்டும் என்று pick and choose செய்திடும் வாய்ப்பு இந்தத் தனித்தடங்களில் இராது என்பது தவிர்க்க இயலா நிஜம் guys. அதன் பொருட்டும் ஆலமரத்திற்கு ஜமுக்காளம் சகிதம் ஒருக்கா கிளம்பிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

​ரைட், இந்தப்பதிவை நிறைவு செய்த கையோடு 'மேற்கே போ மாவீரா' பணிகளை நிறைவு செய்யப் புறப்படுகிறேன் guys. இடையிடையே இங்கே எட்டிப்பார்க்க நிச்சயம் ஆஜராவேன். Bye now...Have a great sunday !


142 comments:

  1. சூப்பர் அப்பு

    ReplyDelete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. ஐந்து புலன்களும் வரப்போகும் ஐந்து இதழ்களுக்காக இப்போதிருந்தே காத்திருக்கின்றன

    ReplyDelete
  4. அடடே முத்து ஆண்டு மலராக வந்து இருக்க வேண்டிய மேற்கே போ மாவீரா களம் காண்பதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. கட்டி விடுவோம் 5 புத்தகங்கள் 600 ரூபாய். மாதம் ஒன்று என்று வரும் போது நிதானமாக வாசிக்கவும் நேரம் இருக்கும். செம்ம சார்.

    ReplyDelete
    Replies
    1. என்னது இனிமே மே மேளா இல்லையான்னு ஒரு செக்கண்ட் தோணிச்சு.. இதுவரைக்கும் வந்த புத்தகத்தையே படிக்கலியாம்.. மொத்தமா வந்தா மட்டும் கிழிச்சிருவியான்னு என்ன நானே திட்டி சமாதானப்படுத்திகிட்டேன்.

      Delete
  6. மே மாதம் பெரிய பெட்டியாகப் பார்த்துப் பழகிவிட்டது. மாற்றம் ஒன்றே மாறாதது.. இதுபோன்ற ஆஃப்பீட் புத்தகங்கள் வர இதுவே வழி என்பதும் புரிகிறது. முன்பதிவு செய்தாகிவிட்டது.

    ReplyDelete
  7. Ji, இந்த இரட்டை வேட்டையர்கள் ,ஜான் மாஸ்டர் மறந்து விட்டீர்களே, அவர்களையும் இத்துடன் சேர்த்து விடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. வர்றாங்க சாரே - நடப்பாண்டின் புத்தக விழாஸ் circuit-ல்!

      Delete
  8. என் இனிய பொய்யே,
    ஒரு எளிய கதை முடிச்சைக் கொண்டு இவ்வளவு பரபரப்பாய்,சுவராஸ்யமாய் கதைக் களத்தை நகர்த்துவது எல்லாம் டெக்ஸ் கதைகளுக்கே வாய்க்கும் வரம்...
    பென் போன்ற கதை சொல்லி இக்கட்டான தருணத்தில் தனது கதையடித்துவிடும் ஆற்றலை பிளஸ்ஸாக மாற்றிக் கொள்ளும் உத்தி சிறப்பானது,தனது இயலாமையை ஒப்புக்கொண்டு பென் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் பென் கேரக்டரின் தன்மையை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்திச் செல்கிறது...

    வழக்கம்போலான டெக்ஸ்,கார்ஸனின் பங்களிப்பில் எதிரிகள் இரையாக முடிவு சுபமாய் இருக்கும் என வாசிப்பாளனின் மனதிற்கு தெரிந்திருந்தாலும் ஒரு வசியத்தன்மை நம்மைக் கடைசி வரை கட்டி இழுத்து செல்கிறது...
    ஜெமினா,கட்டோ போன்ற கதாப்பாத்திரங்கள் வாசிப்பின் ஆர்வத்தைக் கூட்டுகின்றன...

    எங்கேயும் போரடிக்காத கதைநகர்வை கொண்டுசெல்வதே டெக்ஸ் கதைகளின் ஆகச் சிறந்த விஷயம்,என் இனிய பொய்யேவும் அதை முழுமையாக செய்கிறது...

    சில பொய்கள் நிஜமாகும்போது மகிழ்ச்சிதான்,அந்த பொய்யும் இனிமையானதாய் மாறுகிறது...

    ReplyDelete
    Replies
    1. அருமையான விமர்சனம் அண்ணா...

      Delete
    2. //எங்கேயும் போரடிக்காத கதைநகர்வை கொண்டுசெல்வதே டெக்ஸ் கதைகளின் ஆகச் சிறந்த விஷயம்,என் இனிய பொய்யேவும் அதை முழுமையாக செய்கிறது...//


      +9

      Delete
  9. மேற்கே போ மாவீரா அட்டைப்படம் கெத்தா இருக்கு,வர்ணச்சேர்க்கைகளும் அசத்தலா இருக்கு...

    ReplyDelete
  10. வணக்கம் ஆசிரியர் சார்.

    ReplyDelete
  11. வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  12. வணக்கம் நண்பர்களே.. 🙏🙏

    ReplyDelete
  13. Fab five க்கு முன்பதிவு செய்தாகிவிட்டது.

    இப்படிக்கு காமிக்ஸ் குட்டை( ஒன்னுலயும் உருப்படியான ஆப்ஷன் எடுக்கலையே 😁)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஒரு காமிக்ஸ் OCD பேஷண்ட் சார். 😊 எல்லாம் சரி அப்படின்னு உங்க மனசுக்கு தோணினால் மட்டும்தான் புக்கு வெளியே வரும் போல.
      WE ARE BLESSED ACTUALLY

      Delete
    2. OCD.... BPD... SAD..... பொஸ்தவங்களிலே உங்களுக்கு கத்துக் கொடுத்திருந்த அத்தனை ஐட்டங்களும் இக்கட உண்டோன்னு எனக்கே ஒரு டவுட்டு உண்டு சார் 🤕

      Delete
  14. காமிக்ஸ் ஏரி present sir. new 5 books எதிர்பார்ப்பை தூண்டுகின்றன..

    ReplyDelete
  15. இதில் செக்ஸ்டன் பிளேக்கையும் சேர்த்திருக்கலாம்.அதில் நல்ல கதைகள் உண்டு.தேவையில்லாமல் தேர்தல் நடத்தி அவரை தோற்கடித்து விட்டீர்கள்!

    ReplyDelete
  16. இதில் செக்ஸ்டன் பிளேக்கையும் சேர்த்திருக்கலாம்.அதில் நல்ல கதைகள் உண்டு.தேவையில்லாமல் தேர்தல் நடத்தி அவரை தோற்கடித்து விட்டீர்கள்! ஆர்டர் போட்டாச்சு சார்!

    ReplyDelete
    Replies
    1. கணிசமாய் காசை போட்டு செக்ஸ்ட்ன் ப்ளேக் கதைகளை வாங்கி, கையில் வைத்துக்கொண்டு, அட்டைப்படத்தையும் அச்சிட்டு முடித்து இருப்பவனுக்கு அதை வெளியிடும் ஆசை இல்லாது போய் விடுமாக்கும் சார்?

      அவரை போடாமல் இருப்பதற்கா வாக்கெடுப்பு வைக்கப் போகிறார்கள் ?? பெரும்பான்மை வேணாம் எனும் போது - அது குறித்த வினவல் "தேவையில்லாத தேர்தல் " ஆகிடுமாக்கும்?

      Delete
  17. மேற்கே போ மாவீரா, யப்பா என்னாவொரு அட்டைப்படம். ஓவியர் சும்மா பின்னி பெடல் எடுத்துட்டார். சும்மா தெறிக்கிறது. One of the best wrapper in the recent times.

    ReplyDelete
    Replies
    1. அந்த அரிசோனா மண்ணில் வசிப்பவராச்சே சார் - நம்ம ஓவியை 🤩🤩.... அதான் அந்தப் பின்னணி ஒரு மிடறு தூக்கல் போலும் !

      Delete
    2. Yes அட்டைப் படம் உண்மையில் அருமை.

      Delete
  18. மகளிர் தின ஸ்பெஷல் போச்சு 😔😔😔

    ReplyDelete
    Replies
    1. ///மகளிர் தின ஸ்பெஷல் போச்சு///

      ஆமாங்க சகோ! ரொம்ப வருத்தமா இருக்கு!! கலர் கலரா கண்டுகளிக்கக் கனவு கண்டுக்கட்டிருந்தேன்!😤🤧

      Delete
    2. அந்த பொண்ணு, துப்பாக்கியோட பார்த்தா பார்வை இருக்கே செமயா இருந்தது
      🤧🤧🤧

      Delete
  19. பரணில் உருண்டு கொண்டிருந்த "மேற்கே போ வீரா" வருவதில் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. அதுக்குத்தானே பரண் உருட்டும் படலம்...

      Delete
  20. சார் மார்ச் மாத இதழ்களில் மாற்றம் எதிர்பாராதது. கடல் சொன்னது போல மகளிர் தின special போச்சு. இதை இந்த வருடத்தில் பிறிதொரு தருணத்தில் ஈடு செய்து விடுவீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நானும் நம்புகிறேன்

      Delete
    2. வரும் கண்டிப்பாக வரும்.

      Delete
  21. மே மாத ஆன்லைன் புத்தக விழாவுக்கு வேறு ஏதேனும் திட்டம் உள்ளதா? அல்லது Fab Five மட்டும் தானா?

    ReplyDelete
    Replies
    1. போன மாசம் மாடஸ்டி தலைப்பு என்ன சார் - மறந்துட்டேனே?! ஒருக்கா ஞாபகப்படுத்துங்க ப்ளீஸ்?

      Delete
    2. 'காத்திரு நீ கண்ணாளா!" 😍😍😍😍 அப்படின்னா ஆன்லைன் மேளாவுக்கு வேற ஒரு திட்டமிடல் இருக்கு!!😍😍😍😍

      Delete
    3. அப்பாடி இப்போதான் மனசுக்கு நிம்மதி ஆச்சு சார்.

      Delete
    4. குமார் @ அநேகமாக கிராபிக்ஸ் ட்வின்ஸ் ஆன்லைன் திருவிழாவின் மற்ற புத்தகங்கள் உடன் வரலாம் என்று நினைக்கிறேன்.

      Delete
  22. மேற்கே போ மாவீரா அட்டைப்படம் பட்டையை கிளப்புகிறது சார்...செம...சிறிது தாமதமானாலும் தரமாக அனுப்பும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...


    மே மாத ஆன்லைன் இதழ்கள் மாத இதழ்களாக மாற்றம் கண்டதிலும் மகிழ்ச்சி சார்...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு என்ன மெரி சிலை வைக்கணும்னு சொல்லவே இல்லியே தலீவரே?

      Delete
    2. காக்கா ஆயி போற மாதிரி எந்த சிலையா இருந்தாலும் ஓகே தானுங்க சார்.. 😝

      Delete
    3. அப்ப தலைவர் சிலை பக்கத்துல உங்க சிலையையும் வைத்துவிடலாம் விஜய் 😊

      Delete
    4. ///அப்ப தலைவர் சிலை பக்கத்துல உங்க சிலையையும் வைத்துவிடலாம் விஜய்///

      PfB... குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகக் கருத்தப்படுவதைப் போல, வேப்பிலைத் தலீவரின் பாசறையே வெள்ளந்திச் செயலரின் புகழிடம் ஆகும்!😇😇

      Delete
    5. லாஜிக் தப்பு. , எங்க தல தான் உங்க பின்னால் ஒழிய முடியும்

      Delete
  23. FAB FIVE ஸ்பெஷல்.. 😘💐👍
    அருமையான ஐடியா Sir💐👍

    *மேற்கே போ மாவீரா*💐
    அட்டைப்படமும், ஒரு பக்க கதையுமே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது சார் 🙏💐😘

    இதோ உடனே ரூ.600/- அனுப்பி விடுகிறேன் சார் 💐👍


    அந்த FAB FIVE விளம்பரத்தில், கலரில் "ஜூன் to அக்டோபர்" என்பதற்கு பதிலாக, *ஜூன் 10 அக்டோபர்* என அச்சாகி உள்ளது சார் 🙏🙏

    ReplyDelete
    Replies
    1. திருத்தச் சொல்லி வாங்கிருவோம் தல... 👍

      Delete
    2. பாத்தீங்களா சார்...எங்க ஜம்பிங் தலயின் 'சூப்பர் ஜூம்' ஜூம்பலக்கா கண்ணுகளுக்கு முன்னால ஒரு மைக்ரோ மிஸ்டேக் கூட மைக்ரேட் ஆக முடியாதாக்கும்!😇😇🥲

      Delete
  24. உங்கள் உழைப்புக்கும், எக்ஸ்ட்ரா மெனக்கெடல்களுக்கும் தொப்பி தூக்கி சிரம் தாழ்த்துகிறோம் எடிட்டர் சார்? 'Fab five ' திட்டமிடலை ஆரவாரமாக வரவேற்கிறோம்! ஒவ்வொரு கதையும் தினுசு தினுசான கதைக்களங்கள் என்பதே காரணம்! மாதம் ஒன்றாய் வந்திடும்போது நிதானமாய் ரசித்திடவும் தருணங்கள் அமைந்திடும்! நாளை 'Fab five' க்கான தொகை அனுப்பப்படும்! ('தல'இல்லாததில் துளியூண்டு ஏமாற்றம் இல்லாமலில்லை! ஆனால் நீங்கள் சொல்வதில் நியாயமும் இல்லாமலில்லை! )

    அப்படின்னா 'ஆன் லைன் மேளா'?😯

    'மேற்கே போ மாவீரா' அட்டைப்படம் அசத்தல்! ரசணையோடு மெருகூட்டிய அந்த அமெரிக்க ஆர்ட்டிஸ்ட்கு நம் வாழ்த்துக்கள்! தமிழ் ரசிகர்களின் ரசணையை கட்சிதமாகப் புரிந்துகொண்டிருக்கிறார் போல! ஒருவாட்டி EBF க்கு வரச்சொல்லுங்க - அவங்களோட நின்னு ஆளுக்கு ரெண்டு போட்டோ எடுத்துக்கறோம்!☺️☺️

    ReplyDelete
    Replies
    1. அவுக கலாமிட்டி ஜேன்க்கு தூரத்து உறவாம்... சாக்கிரத 🤕🤕!

      Delete
    2. 😄😄😄😄😄😄😄😄.. Sir.. ❤️❤️👍👍👍🙏🙏🙏...

      Delete
    3. டெட் வுட் விட மோசமாக பேசுவாரா சார்?

      Delete
  25. சூப்பர் சார்....மேற்கே போ மாவீரா அட்டை இது வரை வந்ததிலேயே டாப்....
    ஆவலை கிளப்புது...
    ஃபேபுலஸ் ஃபைவ் அட்டகாச கதம்பம்....

    உலகத்தின் கடைசி நாள் அதகளம் சார்

    ReplyDelete
  26. ஆபந்பாந்தவாக வந்த மேற்கே போ மாவீரா அட்டைப்படம் நல்லா பண்ணிருக்காங்க
    அமெரிக்க ஓவியயைக்கு வாழ்த்துகள்👏👏👏
    எழுத்துரு ஆக்கமும் செம👏👏

    ReplyDelete
  27. Fab Five
    யார் அந்த அந்நியன் & உலகத்தின் கடைசி நாள் இதனில் களம் காணுவதில் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. உண்மை. யார் அந்த அந்நியன் தொடரா? இல்லை இந்த ஒரு கதை மட்டும் தானா?

      Delete
    2. @ குமார், ஓவியர் மேக்னஸ் எனும் ராபர்டோ ரவியோலா 1975 - ல் உருவாக்கிய இந்த கல்ட் கிளாசிக் 6 பாகங்கள் கொண்ட ஒரு தொடர். இதன் ஆங்கில வடிவம் 1987-ல் The Specialist என்ற பெயரில் வெளிவந்தது.

      Delete
    3. சூப்பர் Mohideen, நீங்கள் ஒரு தகவல் பெட்டகம். அப்போ இன்னும் 5 பாகம் இருக்கு. வாரே வா....

      Delete
    4. ///இதன் ஆங்கில வடிவம் 1987-ல் The Specialist என்ற பெயரில் வெளிவந்தது///

      அப்பாடா!! நான்கூட புதுஸூன்னு நினைச்சு பயந்துட்டேன்!😁

      Delete
  28. Replies
    1. என்னது அடுத்தடுத்து இரண்டு இளைய ராஜாக்களும் வணக்கம் சொல்லி இருக்காங்க

      Delete
    2. ஒரு மரியாதைங்க

      Delete
  29. உலகத்தின் கடைசி நாள் - வாவ். இந்தியா மேட்ச் முடிந்தவுடன் பதிவுக்குள் மூழ்கிவிட்டு திரும்பவும் வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அட்டவணையில் அறிவிக்கப் பட்டு பிறகு ட்ராப் ஆன கதை. எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். செம்ம ஹீரோ combination.

      Delete
    2. நன்றாக இருக்கும் குமார்

      Delete
  30. அறிவரசு @ நாம நேத்து சொன்ன அதே தான் இது.

    உங்கள் கடைசி நேர குட்டிக்கரணம் வழக்கம் போல சூப்பர், செம சுவாரசியம்.நீங்கள் கடைசி நேரத்தில் குட்டிக்கரணம் அடித்து வெளியிட்ட கதைகள் எல்லாம் ரொம்பவே நன்றாக இருந்தது சார். இதுவும் எங்களை மகிழ்விக்கும் என்று நம்பிக்கை உள்ளது சார்.

    ReplyDelete
    Replies
    1. கடைசி நேர குட்டிக் காரணம் எப்போதுமே எங்களுக்கு மகிழ்ச்சியையே தந்து உள்ளது.

      Delete
  31. Fab 5
    ஒவ்வொரு புத்தகத்தின் விலை, பக்கங்கள், size, black & white or colour போன்ற விவரங்களை இன்னும் கொஞ்சம் தெளிவாக தெரியும்படி விளம்பர படுத்தவும். மேலே உள்ள போஸ்டரில் எதுவும் தெளிவாக இல்லை

    ReplyDelete
  32. FAB FIVE ஸ்பெஷல் - A Warm Welcome Sir. Lion Office-க்கு mail அனுப்ப வேண்டியது தான்!

    ReplyDelete
  33. மேற்கே போ மாவீரா... அட்டாஹாசம்... 👍👍👍❤️Sir..வாழ்த்துக்கள். மனம் கனிந்த நன்றி... ❤️👍🙏🙏🙏...

    ReplyDelete
  34. FAB FIVE ஸ்பெஷல் - பணம் அனுப்பியாச்சு சார்

    ReplyDelete
  35. FAB FIVE ஸ்பெஷல் ஓகே சார். அப்ப ஆன்லைன் புத்தக திருவிழாவிற்கு என்ன புத்தகங்கள் வர போகுது சார்?

    ReplyDelete
    Replies
    1. காத்திரு நீ கண்ணாளா ! :-)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. இன்னும் அந்த கதையை படிக்கல ராஜா!

      Delete
  36. // இத்தனை காலம் ஆன பிற்பாடுமே - எனக்கே திருப்தி தராத ஒரு ஸ்கிரிப்ட் சகிதம் ஒரு கதையை உங்களிடம் ஒப்படைக்க தைரியம் தலைதூக்க மாட்டேன் என்கிறது. விடிய விடிய பல்டியடித்தாலும் ஒரு குறைந்தபட்ச தர அளவீட்டைத் தாண்டிடாத எதுவுமே நேரடியாய் மூத்திரச்சந்துக்கே இட்டுச் செல்லும் என்று தலைக்குள் குந்தியபடியே 'ரூல்ஸ் ரமணிதரன்' கூக்குரல் இடுவதால் - இத்தனை அவசரத்திலும் நிதானமாகவே பணிகளைச் செய்திட வேண்டியுள்ளது folks. //

    உங்க டிசைன் அப்படி சார்!

    ReplyDelete
  37. // So காத்திருக்கும் வாரத்தில் இதழினைத் திருப்தியாய் நிறைவு செய்து உங்களிடம் கொண்டு சேர்ப்போம். //

    இதுதான் சார் நீங்க! சிறந்ததை எங்களுக்கு எப்போதும் தரவேண்டும் என்று நினைப்பது. மகிழ்ச்சி சார்.

    ReplyDelete
  38. இன்னைக்கு புதையல் பெட்டி கிடைத்து விடும்.

    ReplyDelete
  39. மார்ச் மாத பொக்கிஷ பெட்டியை கைப்பற்றியாச்சி,
    முதல் புரட்டலில் இருளில் ஒரு நிழல்-ஸகுவாரோ முதலில் படிக்க ஆர்வமூட்டுகிறார்...
    மேற்கே போ மாவீரா அட்டை டூ அட்டை வர்ணத்தில் ஜாலம் செய்கிறார்,புரட்டி பார்த்ததில் என்னை முதலில் வாசிக்கவும்னு ஸகுவாரோவுக்கு சரியான போட்டியா நிற்கிறார்...
    கார்சனை தேடிப்போறேன்னு டெக்ஸ் அட்டையில் கெத்தாய் கலக்க,உட்பக்க ஓவியங்கள் தெறி ரகத்தில் இருக்கு,யாரை படிச்சாலும்,படிக்காட்டியும் நான் லிஸ்டில் கண்டிப்பா இருப்பேன்னு டெக்ஸோட லுக் சொல்லுது...
    லயன் மினியும் Landscape வடிவமைப்பில் கலக்குது...
    மார்ச் இதழ்கள் பக்க அளவுகள் கொஞ்சம் குறைவா இருப்பினும் எல்லாமே ஈர்க்குது...
    The Fan Five Specials அறிவிப்பு வண்ண அட்டையில் சூப்பரா இருக்கு,ஒவ்வொரு இதழுக்கும் மினி முன்னோட்டம் செம ஐடியா...
    அடுத்த வெளியீட்டில் டின் டின்,டெக்ஸ்,The King's Spl-3 என அதுவும் ஆர்வமூட்டும் அறிவிப்புகள்...
    மிக,மிக மகிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கும் மகிழ்ச்சி

      Delete
  40. புத்தகங்கள் கிடைத்து விட்டன. நேரில் பார்க்கும் பொழுது மேற்கே போ மாவீரா அட்டை படம் மிரட்டுகிறது.

    ReplyDelete
  41. அடுத்த வீட்டில் ஒரு சூனியக்காரி

    லயன் மினி Steals the Heart. செம்ம கதை சார். நம்ம ஜூ டி டீம் பனிச்சறுக்கு விளையாடும் போது ஒரு பாழடைந்த வீட்டின் வாசலில் வந்து விழ. அங்கே ஒரு பெண் மந்திரங்கள் சொல்லி அண்டாவில் ஏதோ சமைத்துக் கொண்டு இருக்க. ஹிஸ்டரி டெஸ்டுக்கு படிப்பதை விட்டு விட்டு அந்த சூனியக்காரியை ஆராய்ச்சி செய்ய கிளம்புகிறது நம்ம டீம். மர்மத்திற்கு விடை கிடைத்ததா? ஹிஸ்டரி டெஸ்ட் என்ன ஆனது என்பதை அறிய படியுங்கள் அடுத்த வீட்டில் ஒரு சூனியக்காரி.

    ReplyDelete
    Replies
    1. இப்போது தான் இதனை படித்து முடித்தேன் குமார்.

      கதை ரொம்ப திரில்லிங் ஆக இருந்தது. உண்மையில் அடுத்து என்ன நடக்குமோ என்று அந்த குட்டீஸ்களுடன் சூன்யகாரி வீட்டில் நுழைந்தேன். கடைசி பக்கத்தை முதலில் படித்து விட்டு தொடரலாமா என்று முதல் சில பக்கங்களை படிக்கும்போதே தோன்றியது.

      சின்ன சின்ன முடிச்சுகள் சுவாரசியமாக, துப்பறியும் நேரத்தில் அவர்கள் படிப்புக்கும் முக்கியதுவம் கொடுப்பதை அழகாக சொன்னது குழந்தைகளுக்கு நன்று.

      Delete
    2. ஜூடி இன்னும் ட்ரை பண்ணலை
      இந்த மாதம் வாங்கி விடுகிறேன்

      Delete
    3. நன்றாக இருக்கிறது. நம்மை போன்ற குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

      Delete
  42. கார்சனைக் காணோம் .


    கதாசிரியர் செம் ஜாலியாக இருந்திருக்கிறார் . கதை முழுக்க மாஸ் காட்சிகளாக,மாஸ் வசனங்களாக அமைத்து தள்ளி விட்டார்.
    ஆரம்பம் செவ்விந்திய வைத்தியர்:
    வெள்ளையர்கள் டெக்ஸ் வில்லர் என்று அழைக்கும் உங்கள் உயிர் மூச்சான இரவுக் கழுகாரின் ரத்த சகோதரன் நான்!
    இசபெல்லா:சான் ஆன்ட்ரியா வில் யாருடைய உதவியையாவது எதிர் பார்க்கிறிர்களா...?
    கார்சன்: உதவி எங்கிருந்து வேண்டுமானாலும் வரக்கூடும்! எப்போது என்பது மட்டுமே கேள்வி!
    வில்லன்கள்;கார்சனுக்கு காயம் பட்டிருப்பதை மறந்து விட்டீர்களே?!
    அடுத்தவன்;காயம் பட்டாலும் சிங்கம் பூனையாகி விடாது என்பதை நீ மறந்துவிட்டாய்

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சார். சுட சுட விமர்சனம்.

      Delete
  43. குமாரு @ என்ன நாளைக்கு ரெடி தானே 😍

    ReplyDelete
  44. அடுத்த வீட்டில் சூனியக்காரி,
    என்னதான் வளர்ந்துட்டோம்,பக்குவம் ஆயிட்டோம்னு சொல்லிக்கிட்டு இருந்தாலும்,ஒவ்வொருவருக்கும் சிறுபிராயத்து நினைவுகள் மீது ஒரு மையல் இருக்கத்தான் செய்யும் என்று நம்புகிறேன்...
    அந்த வகையில் அடுத்த வீட்டில் சூனியக்காரி நம் ஆழ்மனதின் சிறுபிராயத்து நினைவுகளை மேல் எழும்பச் செய்கிறாள்,
    ரொம்பவே நேர்க்கோடான கதை குழந்தைகளை கதைக்களத்திற்கு கைப்பிடித்து அழைத்துச் செல்லும்,வாசித்தவுடன் நம்மிடையே சின்னதொரு புன்னகை அரும்புவதை உணர முடிகிறது...
    ஓஷோவின் உரைகளில் ஓரிடத்தில் சொல்லி இருப்பார் அவரின் சிறுபிராயத்தில் சட்டைகளில் கைக்கெட்டும் அனைத்து இடங்களிலும் பாக்கெட் வைக்கச் சொல்லி அடம்பிடித்து தனது சட்டைகளைத் தைப்பாராம்,ஆற்றங்கரையோரம் விளையாடச் செல்லும் போது,அங்கிருக்கும் கூழாங்கற்களை எடுத்து தனது சட்டைப்பைகளில் நிரப்பிக் கொள்வராம்,அது மகிழ்ச்சி நிறைந்த ஒரு விளையாட்டு என்று வர்ணித்திருப்பார்...
    சில விஷயங்கள் செய்ய எந்தக் காரணமும் தேவையில்லை,அதை செய்கிறோம் அவ்வளவே...
    இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொன்றுடன் கனெக்ட் ஆகியிருப்பதாக நான் நம்புகிறேன், இந்த இதழை வாசித்தவுடன் ஆழ்மனச் சிந்தனையைக் கிளறி என்னை பின்னோக்கி நகர்த்தி விட்டது...
    லாஜிக் தேவையில்லா மேஜிக்...
    மகிழ்ச்சி...

    ReplyDelete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
  46. என்ன குமார் & ரம்யா இன்றைக்கு பதிவு பற்றி உங்கள் பின்னூட்டத்தை காணவில்லை. இன்றைக்கு பதிவு வராது என்று முடிவு செய்து விடீர்களா :-)

    ReplyDelete
  47. 2024 ஜனவரிலேயே வந்திருக்க வேண்டிய இதழ். 2 வருஷத்துக்கு அப்புறம் எதிர்பாராமல் களம் கண்டிருக்கிறது. லேட்டா ஆனாலும் பரவால்ல லேட்டஸ்டாக வந்திருக்கிறது. மேக்கிங் பொறுத்தவரைக்கும் ரொம்ப அட்டகாசமா இருக்கு. இந்த மாதம் வரவேண்டிய பூக்களை புதைத்து விட்டு, அந்த புனித மனிடோ மேற்கே போவென்று மாவீரனை அனுப்பி விட்டால், அதை யாரால் தான் தடுத்து நிறுத்த முடியும்.

    இந்த இதழ் பொருத்தவரை பத்தோடு பதினொன்று அல்ல. இது ஒரு யூனிக் இதழாகத் தெரிகிறது. இந்த டெம்ப்ளேட் நமக்கு புதுசு, இதுக்கு முன்னாடி நாம் ஒரே கதையில் இரண்டு ஓவியர்கள் எல்லாம் பணி புரிந்ததைப் பார்த்து இருக்கிறோம் தான். ஆனால், இந்த இதழில் அட்டகாசமான ஓவியர் "TIBURSE OGER" இந்த முறை கதையை மட்டும் கையாள ( இதற்கு முன் வந்த "துணைக்கு வந்த மாயாவி" - ல் கதை & ஓவியம் இவரது ஆக்கமே) ஒரு சேர 16 வெவ்வேறு ஓவியர்களின் கை வண்ணத்தில் 14 அத்தியாயங்களில் மிளிர்கிறது. வன்மேற்கின் 150 ஆண்டுகளுக்கு மேலான ஒரு நிகழ்வில் பாக்கெட் வாட்ச்சை மையப்படுத்தி கதையை வித்தியாசமாக படைத்துள்ளார். இந்த 16 ஓவியர்களில் பாதிக்கு மேல், நமக்கு ஏற்கனவே நாம் பார்த்த சில கதைகளின் மூலம் பரீட்சயமானவர்களே. மூன்று/நான்கு பக்கங்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் வழங்கி இருந்தாலும் நல்ல ஒரு அர்ப்பணிப்புடன் ரொம்ப அழகான ஒரு ஓவிய மாயாஜாலத்தை அனைத்து ஓவியர்களும் நிகழ்த்தியுள்ளார்கள்.

    இது ஒரு அட்டகாசமான காமிக்ஸ் பெட்டகம் தான். எனக்கு ஒரு சின்ன சந்தேகம் என்னவென்றால், ஆக்சுவலா இது வந்து ஒரிஜினலில் தோர்கல் இதழ் சைஸ்ல வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் எடிட்டர் வந்து விலையைக் கட்டுக்குள் வைக்க, டெக்ஸ் இதழ் சைசில் வெளியிட்டு இருக்கிறார். வன்மேற்கிற்கு இதொரு உண்மையான Tribute இதழ். இது ஒரு அவசர இதழாக வெளிவர வேண்டிய கட்டாயம், இல்லை என்றால் இன்னும் கொஞ்சம் நாள் வெயிட் பண்ணி, வேறொரு சரியான நேரத்தில் இந்த இதழை மேக்ஸி சைசில், ஹார்ட் பவுண்ட்ல போட்டு இருந்தால் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும் எ. எ. க.

    ReplyDelete
  48. கார்சனைக் காணோம். சிங்கிள் சாட் என்றாலும் சரவெடியாய் பட்டையை கிளப்பி விட்டது. புத்தகத்தைக் கையில் எடுத்ததும் தெரியவில்லை. படித்து முடித்ததும் தெரியவில்லை. ".

    "டெக்ஸ் மாஜிக் "
    வழக்கம் போல.தல தல தான்

    ReplyDelete
  49. கார்சனைக் காணோம்,
    "சுட்டெரிக்கும் அந்தப் பின்மதிய வேளையில், காய்ந்த சருகுகளை உருட்டிச் செல்லும் காற்றின் ஓலம் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தது"
    -அடடா செமையான வர்ணனை...
    "காயம்பட்டாலும் சிங்கம் பூனையாகிவிடாது"
    -நச்சுனு ஒரு டயலாக்...
    "மூன்று வித்வான்கள் வாத்தியங்களோடு தயாராக இருக்கிறார்கள்"-ஹி,ஹி,ஹி...
    " யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பதை அந்த வாத்து மடையன்களுக்குப் புரிய வைத்திருப்பான்"
    - செம பஞ்ச்...

    " வாட் ப்ரோ-காவலின் போது கவனமின்றி இருப்பது வெரி ராங் ப்ரோ"-இந்த வசனம் பொருத்தமில்லையோன்னு தோணிச்சி...

    கதை நகர்வில் ராக்கெட் வேகம்,க்ளோட்டன் குழுவினருக்கும்,கார்ஸனுக்குமான ஆடுபுலி ஆட்டம் பரபர...
    ஷெரீப்பும்,அவரது டெபுடியும் மோசமான ஒரு கூட்டணி,அதிகாரத்திற்கும்,பணத்திற்கும் துணைபோகும் கூட்டணி,தற்போதைய அரசியல் சூழலுக்கும் இது பொருந்துவது நகைமுரண்...

    சான் ஆன்ட்ரியாஸுக்குப் போகும் பாதையில் கண்காணிக்கும் இரு போக்கிரிகளுக்கு சொல்லத்தான் தோன்றியது,அவர் டெக்ஸ்வில்லர்டா சொம்பைகளா...
    கார்சனைக் காணோம்-டெக்ஸ் எப்போதும் வேணும்...

    ReplyDelete
  50. கார்சனை காணோம்:
    அக்மார்க் டெக்ஸ் & CO கதை. கதையின் தலைப்புக்கு வலு சேர்க்கும்படி கார்சன் கதையில் மைய பாத்திரமாக வருகிறார். விறுவிறுவென்று செல்கிறது. வசனங்கள் குறைவு, என்னை போன்று படிக்க குறைத்த நேரமே உள்ளவர்களுக்கு இது மிக பெரிய பிளஸ். கதையின் ஹைலைட் என்றால் ஓவியம் தான், அட்டகாசமான ஓவியம் அனைவரையும் அழகாக காண்பித்தது, குதிரை மற்றும் துப்பாக்கியை கூட ரொம்ப அழகாக வரைந்து உள்ளார் ஓவியர்!

    ReplyDelete
    Replies
    1. குறை என்று பார்த்தால், கிளைமாக்ஸ் ஒரு நல்ல சண்டையை எதிபார்த்தேன் ஆனால் பட் என்று என்று குத்தை முகத்தில் கொடுத்து முடிந்து விட்டார்கள்.

      Delete
  51. அடுத்த வீட்டில் ஒரு சூனியக்காரி..

    இந்த ஜீனியர் டிடெக்டிவ் டீம் தாத்தா பேத்தி சாகஸத்தை விட அதிகமாகவே மனதை கவர்கிறார்கள் எனக்கும் சரி எனது வாரிசுகளுக்கும் சரி..சந்தா இதழ்கள் கிடைக்கும் முன்னரே குடும்பத்தினர் வாரிசுடன் வெளியூர் சென்று இருக்க இன்று எதற்கும் லயன் மினி இதழை வண்டியில் வைத்து கொண்டு நானும் அங்கே செல்ல திட்டமிட அங்கே சென்றவுடன் கொண்டு சென்ற இதழை நான் மறந்து விட மகளோ மறக்காமல் அப்பா என்னோட புக்கு இன்னும் வரவில்லையா என்று வினவ எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யம் ....

    நாம் எப்படி மாத இதழ்கள் எப்பொழுது வரும் என காத்திருந்து செய்தி வருமோ என காத்திருப்பது போல முதலில் காமிக்ஸ் பார்சல் வரும் பொழுது அதை பற்றி கண்டுகொள்ளாமலே இருப்பவர்கள் இந்த முறை அவர்களாக நினைவில் கொண்டு வினவியது மிக்க மகிழ்வை அளித்தது..நல்லவேளை கவருடன் அந்த இதழை கொண்டு சென்றோமே என்று நினைத்து இதழை எடுத்து அவர்களிடம் கொடுக்க மகளின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது ..உடனே அரைமணி நேரத்தில் வாசித்து முடித்து நல்லாருக்குப்பா என சான்றிதழும் அளித்து விட்டார்.தாத்தா பேத்தி கதையை விட இது நல்லாருக்குப்பா என ஒப்பீடு வேறு..( அவர்கள் எங்கள் இருவர் தரப்பிலும் தாத்தாவை கண்டதில்லை என்பதால் அதிகம் நெருக்கமாகவில்லையோ என்னவோ..) ஆனால் மொத்தத்தில் காமிக்ஸ் வாசிக்கும் ஆர்வம் நான் சொல்லாமலே அவர்களாக கேட்டு வாசிக்கும் எண்ணம் வந்ததே என்னை பொறுத்தவரை லயன் மினி இதழுக்கான வெற்றிதான்...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தல குழந்தைகள் நமது காமிக்ஸ் பக்கம் திரும்பி உள்ளது.

      Delete
  52. கார்சனை காணோம்...

    அழகான அட்டைப்படம்..அசத்தலான சித்திரங்கள் என புரட்டும் பொழுதே கண்ணை கவர்ந்தது இதழ்..தெளிவான சுத்தமான சித்திரங்கள் வாசிக்க வாசிக்க இன்னமும் நெருக்கமாகியது...120 ற்கும் குறைவான பக்கங்கள் என்பதால் இந்த முறை முதலில் டெக்ஸ்வில்லரையே வாசித்து விட்டாகிவிட்டது..

    கதையின் தலைப்பு என்னவோ கார்ஸனை காணோம்...ஆனால் கதையில் டெக்ஸ்வில்லரை தான் காணோம் என்பதை போல இந்த முறை ஒன் மேன் ஆர்மியாக கார்ஸன் தான் நாயக அவதாரம் எடுக்கிறார் ..சில டெக்ஸ் கதைகளில் கார்ஸன் சில பக்கங்களில் அல்லது க்ளைமேக்ஸில் மட்டும் கெளரவ வேடத்தில் வருவார் ..அது போல் இந்த இதழில் ஆரம்பம் முதல் இறுதி வரை கார்ஸன் முழு நாயகனாய் களம் இறங்க டெக்ஸ் கவுரவ வேடத்தில் வருவது போல் வந்து செல்கிறார்..ஆனால் இதுவும் ஒரு வித மாற்றம் போல் படு விறுவிறுப்பாகவே கதை செல்கிறது.

    வழக்கமான ஓர் சிறுநகரம்...அங்கே செல்வாக்குமிக்க பிரமுகரே வில்லன் அவதாரம் ..அவனுக்கு விசிறி விடும் ஷெரீப் ..அந்நகரத்தில் நுழையும் கார்ஸன்... பின் நாம் அறிந்த முடிவு என வழக்கமான டெம்ப்ளேட் சாகஸம் என்றாலும் நறுக் சுருக் படக்கென வாசிக்க வைத்து விட்டது இம்மாத டெக்ஸ்ன் கார்சனை காணோம் இதழ் ..ஆச்சர்யமாய் வழக்கமாக கார்ட்டூன் நாயகர்களுக்கு மொழிபெயர்க்கும் நண்பர் மேச்சேரி ரவிக்கண்ணன் அவர்கள் டெக்ஸ் வில்லர் இதழுக்கும் மொழிபெயர்ப்பு செய்து அசத்தி விட்டார்...ஆசிரியருக்கும்...நண்பருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்...

    ReplyDelete
  53. மேற்கே போ மாவீரா...

    இந்த மாத இதழ்களில் மட்டுமல்ல இந்த வருடம் இது வரை வந்த இதழ்களில் இதன் அட்டைப்படம் தான் செம அசத்தல் தரம்..பத்து நிமிடங்களுக்கு அட்டைப்படத்தையே திரும்ப திரும்ப பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன்...அட்டைப்படம் தான் அப்படி எனில் உள்ளே சித்திரங்களும் அட்டைப்படத்திற்கு போட்டி போடுகிறது...அத்தியாயத்திற்கு ஏற்றவாறு சித்திரபாணிகளும் வேறு வேறு வடிவில் நகர்வது சிறப்பு...அட்டைப்படம் ,சித்திரங்களுக்கு என்னுடைய மதிப்பெண்கள் பத்துக்கு பத்து...புத்தக காட்சிகளில் இதன் அட்டைப்படத்திற்காகவே அதுவும் வன்மேற்கு கெளபாய் சாகஸம் எனும் பொழுது அதிரடியாய் விற்று தீர்வது நிச்சயம்...

    ஆனால் கதையை பொறுத்தவரை ஆசிரியர் சொன்னது போல் வழக்கமான கெளபாய் ஆக்‌ஷன் கதையை இதில் எதிர்பார்க்காதீர்கள்..இது ஓர் பல வருட நிஜ வன்மேற்கு பயணம் அனுபவம் என்றெல்லாம் சொல்லி இருந்தார் ..உண்மை பலருக்கு இந்த இதழ் மிகவும் கிராபிக் வன்மேற்கு சாகஸமாக அட்டகாச படைப்பாக தோன்றும் .ஆனால் எனக்கு ஏனோ கதை கவரவில்லை ..அது ஏனோ...என புரியவில்லை...எனவே அதன் அட்டைப்படத்திற்கும்...சித்திரங்களுக்கும்..தரத்திற்கும் பலத்த கைத்தட்டல்களை தெரிவித்து கொண்டு இருளில் ஒரு நிழலை தேடிக்கொண்டு செல்கிறேன்...:-)

    ReplyDelete
    Replies
    1. தல இருளில் கையில் தீ பந்தத்துடன் செல்லுங்கள்

      Delete
  54. ஸகுவாரோ...

    இருளில் ஒரு நிழல்...

    சிறப்பான அட்டைப்படம்...

    வன்மேற்கு உலகில் நிலத்திற்காக துப்பாக்கி சூடு மூலம் நிலத்தை கையகம் படுத்தும் சாகஸத்தை வாசித்து இருக்கும் நாம் இந்த முறை அந்த வன்மேற்கிற்கும்..நாகரீக உலகிற்கும் இடையில் இருக்கும் சூழலில் அதிகார வர்க்கம் பழங்குடியினரின் நிலத்திற்காக எப்படிப்பட்ட சூழலை உருவாக்கி அவர்களையும்..அவர்களுக்காக உதவும் பெரிய அதிகாரிகளையுமே தடம் தீர்க்க அவர்களின் முகத்திரையை நமது நாயகர் ஸகுவாரோ எவ்வாறு துப்பறிந்து கண்டு பிடிக்கிறார் என்பதை விறுவிறுப்பாகவே சொல்லி இருக்கிறார்கள் கதை ஆசிரியர்கள்...இந்த முறை ஸகுவாரோ ஒரு ஸ்பெஷல் படை கேப்டனாக இருக்க நிர்ப்பந்தம் ஏற்பட அதனை மறுத்து கொண்டே தமது கடமையை நிறைவேற்றிய ஸகுவாரோ இறுதி க்ளைமேக்ஸில் அதனை ஏற்றிட இனி வரும் சாகஸங்கள் இன்னமும் சூடு பறக்கும் என இப்போழுதே பட்சி சொல்கிறது..டெக்ஸ்வில்லர் இதழை போலவே வாசிக்க ஆரம்பித்தவுடன் இறுதிவரை விறுவிறுப்புடன் வாசிக்க வைக்கிறார்..வி காமிக்ஸின் வெற்றி நாயகராய் ஸகுவாரோ தொடர்வார் என்பது இந்த சாகஸத்திலும் தெளிவு பட தெரிகிறுது...இனி அடுத்த மாத இதழ்களுக்காக...

    ReplyDelete
  55. இருளில் ஒரு நிழல்,
    "கால்நடைகள் இல்லாத நிலம் இதயம் இல்லாத உடலைப் போன்றது"
    -ஆழமான வார்த்தைகள்...
    "கணிப்பதிலும் சரி,முத்திரை குத்துவதிலும் சரி,நம் மக்கள் மின்னலுக்கு நிகரான வேகம் கொண்டவர்களாச்சே"
    -எதார்த்தமான உண்மை...

    கொஞ்சம் ஆக்‌ஷன் மிடறு குறைவாக இருப்பினும் ஸகுவாரோ&கேய் வால்கன் கூட்டணியின் புலனாய்வு கதையின் தொய்வுத்தன்மையை குறைக்கிறது...

    ஸகுவாரோ புலனாய்வுப் பிரிவின் தலைமைப் பொறுப்புக்கு அடுத்த கட்ட நகர்வில் செல்வது மகிழ்ச்சி, அடுத்தடுத்த சாகஸங்களில் இன்னமுமே அவரின் தரம் உயரும் என்று தோன்றுகிறது...

    இருளில் ஒரு நிழல் ஏமாற்றமளிக்காத வாசிப்பு...

    ReplyDelete
  56. ... மேற்கே போ மாவீரா...
    1763 முதல் 1938 வரையில் நடக்கும் சம்பவங்களின் மௌன சாட்சியாய் பயணிப்பதுடன், ரிலே ரேஸ் மாதிரி ஒவ்வொரு கையாக மாறிக் கொண்டிருக்கிறது ஒரு தங்கக் கடிகாரம். ஆனால் கதை அதன் கதையல்ல.
    முன்பு 80 களில் குமுதத்தில் ஒரு தொடர்கதையை தொடர்ச்சியாக அன்றைய பிரபல கதாசிரியர்கள் மாற்றி மாற்றி தங்கள் பாணியில் எழுதினார்கள்.
    இது அது போன்ற ஒரு முயற்சி. பலரது கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது.
    வன்மேற்கின் நிஜமுகங்கள், துரோகங்கள், போரின் கோர தாண்டவங்கள் என நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் யாராவது ஒருவரது மூலமாக கடிகாரம் பங்கேற்று உடன் பயணிக்கிறது.
    1763ல் யாரிடமிருந்து பிரிகிறதோ, அவரது வம்சாவளியிடமே 1938 ல் இறுதியில் கடிகாரம் சென்றடைகிறது.
    அற்புதமான குழப்பமில்லாத, பிசிரடிக்காத கதையோட்டம்.
    அருமையான சித்திரங்கள், கலரிங்.
    கதையின் முதல் பக்கத்தில் ஆசிரியர் குறிப்பிட்டது போல், கதை முன்னும் பின்னும் பயணித்து குழப்புமோ என்று நினைத்தேன். அப்படி ஏதுமில்லை.
    ரசித்துப் படித்தேன்.
    ஒன்று மட்டும் புரியவில்லை. இந்தக் கதைக்கு ஏன் அந்த தலைப்பு?... புரியவில்லை..

    ReplyDelete
    Replies
    1. வன்மேற்கின் கதை என்பதால் என்று நினைக்கிறேன்

      Delete
  57. The King's ஸ்பெஷல்-2,
    ஸ்மைல் ப்ளீஸ்,
    ஸ்டூடியோவில் ஹிப்னாடிசம்,கற்பனையையும் மிஞ்சிய போக்கிரித்தனம்...
    உண்மைதான் சுவாராஸ்யமூட்டும் சாகஸம்...

    தெய்வம் நின்று கொல்லும்,
    சிறிய சாகஸம் என்றாலும் நறுக் தத்துவம் சொல்லும் கதை...

    கப்பலில் ஒரு காரிகை,
    வழக்கமே வழக்கமான கெர்பிக்கே உரிய Soft Touch துப்பறியும் களம்,அழகான சாகஸம்...

    பயங்கரப் பல்வலி,
    ரொம்பவே ஆர்வமூட்டிய கதை,கதாசிரியர்கள் எப்படி எல்லாம் யோசிக்கறாங்கன்னு தோணுச்சி,மாண்ட்ரேக்கின் ஜாலவித்தைக்களுக்கு அதிகம் வேலையில்லை,ஜால வித்தையை காட்ட முடியாமல் பல்வலிக்கு அவரும் பலியாகிறார்...

    பிரபுக்கள் ஜாக்கிரதை,
    அட்டகாசமான கதை,டெஸ்மாண்டின் இளகிய மனமும்,லார்ட் பிரபு ஆனவுடன் திகைப்பும்,கொஞ்சம் நகைச்சுவை இழையோடும் களமுமாய் நல்லதொரு கதை,மனதிற்கு நிறைவான வாசிப்பு...

    பேய்த் தீவு ரகசியம்,
    நேர்கோடான கதைன்னாலும் நல்ல வாசிப்பாவே போச்சு...

    சில கதைகள் ஆங்காங்கே கொஞ்சம் காதில் பூ ரகம்,கொஞ்சம் லாஜிக் சொதப்பல்னு இருந்தாலும் வாசிக்க ஓகேவாதான் இருந்தது...

    பல கதைகளில் குறிப்பாக கெர்பி,சார்லி கதைகளில் இழையோடும் அந்த மனித்தன்மை,உதவும் குணம் கொண்ட அம்சங்கள் ஈர்ப்பா இருந்தது...

    உதவுக் குணம் கொண்டவர்கள் எல்லோரும் King's தானே...

    ReplyDelete
  58. இந்த வாரம் பதிவு உண்டா சார்.

    ReplyDelete
  59. இன்று பதிவுக் கிழமை சார்...

    ReplyDelete
    Replies
    1. கூடவே Vlog வேண்டுங்க சார்

      Delete
    2. போன வாரத்துக்கும் சேர்த்து பெரிய பதிவாக வேண்டும்

      Delete
    3. ///போன வாரத்துக்கும் சேர்த்து பெரிய பதிவாக வேண்டும்///

      யெஸ்!!

      Delete
  60. //போன வாரத்துக்கும் சேர்த்து பெரிய பதிவாக வேண்டும்//
    Double Yes

    ReplyDelete