நண்பர்களே,
வணக்கம்! "பயணம்'' அதற்குள்ளாக ஒரு தூரத்து நினைவானது போலுள்ளது- அடுத்தடுத்த பணிப் பயணங்களில் ஈடுபடும் மும்முரத்தில்! இதோ- ஜுலையில் ஒரு நேர்கோட்டு வாசிப்பு மாதத்துக்கு all is set! But first things first..!
நம்ம 53 ஆண்டு காமிக்ஸ் பயணத்திற்கு சைசில் மாத்திரமன்றி- விற்பனையின் துரிதத்திலுமே "பயணம்'' ஒரு மைல்கல்லாகிடும் போலும்! புத்தக விழாக்களில் விற்பனைக்கு / விளம்பரத்துக்குத் தேவை என கொஞ்சூண்டு புக்சை மட்டும் ஒதுக்கி வைத்துள்ளோம் - மற்றபடிக்கு ஸ்டாக் போயிண்டே! Of course - லிமிடெட் எடிஷன் தான்; சின்னதொரு ப்ரிண்ட்ரன் தான்! But still - மிரண்டே போனோம்-விற்பனையில் தெறித்துள்ள அனலைக் கண்டு! அதிலும் கணிசமான நண்பர்கள் மூன்று; நான்கு என்றெல்லாம் ஆர்டர் செய்துள்ளனர்- தத்தம் நட்பு வட்டங்களில் பகிர்வதெற்கென்று! இத்தனை பெரிய சைஸ் கையாள சுலபமே அல்ல தான்; சேமிப்பிற்கும் கஷ்டமே என்பது புரிகிறது! ஆனால், இந்த இதழை "ஹிட்'' என்ற நிலையிலிருந்து "சூப்பர்-டூப்பர் ஹிட்!'' என்ற நிலைக்கு உயர்த்தியிருப்பது அந்த மெகா சைஸ் தான் என்பேன்! என்ன ஒரே வருத்தம் - இது போலான எனது குட்டிக்கரணங்களை ரொம்பவே ரசிக்கும் சீனியர் எடிட்டரில்லை - இன்று இந்த இதழின் முதல் பிரதியை ரசித்திட..!
Down the line - என்னிடம் இரண்டு கேள்விகள் folks :
கேள்வி # 1 : தொடரும் ஆண்டுகளில் இந்த Father's Day போல வேறு ஏதாச்சும் முயற்சிக்கலாமா? அழுகாச்சிக் காவியங்களாகத் தான் என்றில்லாது - வித்தியாசமாய் ஏதாச்சும்?
கேள்வி # 2: இந்த "அப்புச்சி டே'; "அத்தாச்சி டே' போன்றவையெல்லாம் சற்றே மேற்கின் காப்பிகளாகத் தெரிந்திடும் பட்சத்தில் நமக்கு ஒத்துப் போவது போல் எதையேனும் 2026-க்கு முயற்சிக்கலாமா?
"சுப்ரமணியபுரம்!' படம் வந்து இருபது வருஷங்கள் ஆச்சு... 10 years of பாகுபலி.. என்று பார்ட்டி கொண்டாடுவதைப் போல anything for 2026??
Back to the present- இதோ லக்கி லூக்கின் இரண்டு கலர் ஆல்பங்களிலிருந்துமே தலா ஒரு பக்கப் பிரிவ்யூ! இரண்டிலுமே cast கிட்டத்தட்ட ஒன்றே எனும் போது - திரும்பிய திக்கெல்லாம் டால்டன்களும், ரின்டின் கேனும் தான் வலம் வந்தது போலிருக்கவுள்ளது!
ஜுலையின் அடுத்த கலர் ஆல்பத்தில் போட்டுத் தாக்கக் காத்திருப்பது நமது லோன் ஸ்டார்! 2022-ல் அறிமுகம் கண்ட சமகால மும்மூர்த்திகளிலிருந்து எஞ்சியிருக்கும் ஒரே மனுஷரான "டேங்கோ' ஒரு all out ஆக்ஷன் த்ரில்லரில் தெறிக்க விடுகிறார்! But இந்த முறை ஒரு சின்ன வித்தியாசம்! மாமூலாய் நீலக்கடல்களின் ரம்யமும், புதுப்புது தேசங்களும் கண்முன்னே விரிவதுண்டு டேங்கோ சாகஸங்களில்! இம்முறை கதை நகர்வது ஆர்ஜென்டினியத் தலைநகரில் மட்டுமே! And கடல், கப்பல், படகு என்றெல்லாம் இல்லாது எல்லாமே நிகழ்வது நிலத்தில்! "வேட்டை மறக்கா வல்லூறுகள்!'' சித்திரங்களில் எப்போதும் போல பட்டாசாய் அனல் பறக்கச் செய்கிறதெனில் அந்த டிஜிட்டல் கலரிங் முற்றிலுமாய் வேறொரு லெவலுக்கு இட்டுச் செல்கிறது! இது 2020-ல் தான் உருவானதென்பதால் இன்றைய தொழில்நுட்பங்களின் ஜாலம் வசீகரிக்கிறது! கதை - வசனம் டைரக்ஷன் என்பனவெல்லாம் இரண்டாம் பட்சமே இங்கே ; is an absolute visual delight! பாருங்களேன்- ஒரிஜினல் அட்டைப்படத்தையும், உட்பக்க ப்ரிவியூவையும்!
And ஜுலையில் இன்னொரு highlight நம்ம ''இளவரசியார் பெசல்'' தான் என்பதை மறுக்கவோ, மறக்கவோ, மறுதலிக்கவோ, முறைக்கவோ, வாய்ப்பே லேது என்பேன்- simply becos இம்முறை அமைந்துள்ள இரண்டு (புது) சாகஸங்களுமே தெறி ரகம்! Oh yes - நம்ம அம்மணியை வழக்கம் போல டாக்டர்களும், இம்முறை ஒரு மாற்றத்துக்கு புரபஸர்களும் உசிரை வாங்குவது தொடரவே செய்கிறது தான்! And சில பல காதுகளில் புகை வந்தாலும், சில குய்யாக்கோ - முய்யாக்களும் அரங்கேறிடாது இல்லை தான்! ஆனால், அவர்களையெல்லாம் ஓரமாய்ப் போய் பீடா போடச் சொல்விட்டு கார்வினும், மாடஸ்டியுமாய் நடந்திடும் அதிரடிகள் அதிர்வேட்டு ரகம்!
ஹனிகன்
மரணப் பொறி!
மேற்படி இரண்டு சாகஸங்களுமே மாடஸ்டியின் "நெட்வொர்க்' நாட்களோடு தொடர்பு கொண்டவை! ஹனிகன் உருவானதோ 1996-ல்.. மரணப் பொறி - much before in 1977...! இரண்டிற்குமே ஓவியர் ரொமரோ தான் என்பதால் அந்தச் சித்திர லாவகம் அற்புதமாய் மிளிர்வதை இரண்டு சாகஸங்களிலுமே பார்த்திடலாம்!
And இங்கே நமது மொழிபெயர்ப்பு டீமிற்கு ஒன்றரையாண்டுகளாய் வலு சேர்த்து வரும் Ms.சுகன்யாவுக்கு ஒரு shout-out! இரு கதைகளுக்குமே அவர் தான் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்! And yes - நம்ம புடைப்பான மூக்கு, எங்குமே பட்டி டிங்கரிங் பார்க்காது அமைதியாக இராதென்பதால் - இரண்டு ஆல்பங்களிலும் நிறையவே திருத்தங்கள்/ மாற்றங்கள் போட்டுள்ளேன் தான்! ஆனால், மாடஸ்டி கதைகளைக் கையாள்வதென்பது சுலபமே அல்ல ; and to her credit ரொம்பவே டீசென்டாக அவரது எழுத்துக்கள் இருந்ததால் - அதன் மேலே புல்டோசரை விட்டு ஏற்றிச் செப்பனிட அவசியமெல்லாம் எழவில்லை! ஜல்லி அடிச்சு, தார் ஊற்றி அவர் போட்டிருந்த அடித்தளத்தில், மேலாக்கா சிமெண்ட் பால் ஊற்றி இப்படியும், அப்படியுமாய் டோஸரை ஓட்டி, சாலையை நம்ம முன்மண்டையைப் போல வழுவழுப்பாய் ஆக்கும் பொறுப்பு மட்டும் நம்மள் வசம்!
And இந்த MAXI சைஸிலான இதழின் ஆகச் சிறந்த பஞ்சாயத்து - அட்டைப்படத்தில் மஞ்ச சொக்காயோடு மாடஸ்டி தந்த போஸ் தான்! பொதுவாய் மஞ்சள் சொக்காய்களை நம்ம ஆம்பளைப் பசங்க ஹீரோக்கள் போடும் போதெல்லாம் துளி கூட சிக்கல்கள் எழுந்ததில்லை! ஆனால், முதல் தபாவா மாடஸ்டியை ஒரு மஞ்சக்காட்டு மைனாவாய் சித்தரிக்க நினைத்த போது, ரொம்பவே எதிர்ப்பலைகள்! In fact நமது வாட்சப் கம்யூனிட்டியில் நடத்திய வோட்டெடுப்பில் செம tough fight!பொதுவாகவே இந்த வாக்கெடுப்புகளில் ஏதேனும் ஒரு தரப்பு மளமளவென வாக்குகளை வாரி landslide வெற்றி பெற்றுவிட்டால் என் பிழைப்பு செம சுலபமாகிப் போகும்! அதே போல மூன்றோ, நான்கோ, ஐந்தோ options இருந்து - இங்கே கொஞ்சம்; அங்கே கொஞ்சமென வாக்குகள் சிதறியிருந்தாலும் கூட மெஜாரிட்டி பக்கமாய் மண்டையை ஆட்டுவதுமே ஈஸி! ஆனால், இரண்டே தரப்புகள் and அதனில் இழுபறி என்றாலே நமக்கு "பிக்னிக் ஸ்பாட்"("அந்த'' சந்தின் புது நாமகரணம்) ரெடியாகி வருகிறது என்று அர்த்தம்! வேணும் என்போர் 95 - வேணாம் என்போர் 65 என்று அமைந்தாலுமே, டபுள் குட்டு வைக்க ஹாஸ்டல் முழுக்க லைனாக ரெடியாகிவிட்டதென்று எடுத்துக் கொள்ளலாம்!
ஆகையால், மண்டையைக் காத்துக் கொள்ளும் ஆர்வத்தில் இம்முறை தடுப்பாட்டம் ஆடியுள்ளோம்! இதோ- பொறுப்பாய் கத்தியோடு - 'கரீஸ்' கலரில் நிற்கும் கார்வினே ரெகுலர் அட்டைப்படம்! So புத்தக விழாக்களுக்கும், புத்தகக் கடைகளுக்கும் "க்ரீஸ்' கார்வினே ஆஜராவார்!
அதே சமயம் மஞ்சள் மாடஸ்டியிடம் மனதைப் பறிகொடுத்த இல்லத்துப் பூரிக்கட்டைகளுக்குப் பயமற்ற வாலிபர்களுக்கென "மஞ்சள் மைனா மாடஸ்டி'' variant கவராக- பிரத்தியேகமாய் அமைந்திடுவார்!
So "பூரிக்கட்டைக்குப் பயமில்லை" (Poori kattaiku Payamillai) என்பதைக் குறிக்கும் விதமாய் ''Po.Pa'' என்று மெஸேஜ் அனுப்பும் வீரர்களுக்கு யெல்லோ மாடஸ்டி! தேர்வு செய்திடும் இந்த option இரண்டே நாட்களுக்கே folks- டெஸ்பாட்ச் செவ்வாயன்று என்பதால்!
So Ka.Ga-வா ? Po.Pa-வா?என்பதை அர்ஜெண்டாக நமது கம்யூனிட்டி வாட்சப் நம்பருக்கு மட்டுமே அனுப்பிடக் கோருகிறேன்!
வாட்சப் நம்பர்:96000 61755
இந்த நம்பர் தவிர்த்த வேறு எந்த நம்பருக்கும் அனுப்பிட வேணாம்- ப்ளீஸ்!
And ரொம்ப முக்கியமான தகவலுமே மக்களே: "நேக்கு கரீஸ் கார்வின் வாணாம் - கறுப்பு ஒத்துக்காது..! அப்புறமா மஞ்சள் மைனாவும் வாஸ்துக்கு ஆவாது! அதனாலே உள்பக்கமா நாலு ஸ்பூன் நெய்விட்டு, வெளிப்பக்கமா மூணு ஸ்பூன் ஆயில் விட்டு, மழைச்சாரலாட்டம் லைட் ப்ளூ கலரிலே, இளவரசி சாரட் வண்டிலே வர்றா மெரி 3D-லே ஒரு அட்டைப்படம் போட்டு வேணும்! புக்கை டப்பியிலேர்ந்து பிரிக்கிறப்போவே "ராஜாவின் பார்வை... ராங்கியின் பக்கம்'னு பாட்டும் கேட்கணும்!'' என்ற ரீதியிலான special requests வாணாமே ப்ளீஸ்! நம்மாட்கள் பாவம்- நான் அடிக்கடி செய்யும் குரங்கு பல்டிகளிலேயே முக்கால் நாக்கு தொங்கி விடுகிறது அவர்களுக்கு! இதில் நீங்களுமே 'ஆட்றா ராமா - தாண்ட்றா ராமா' என்று குச்சிகளைக் கையிலெடுத்தால் அத்தினி பேரும் ஜார்கண்ட் பக்கமாய் ஓட்டமெடுத்து விடுவார்கள்! So சிம்பிளாய் இதை வைத்துக் கொள்வோமே!!
1.No message எனில் கரீஸ் கார்வின் ராப்பர்!
2.Po.Pa என்றால் மஞ்சள் மாடஸ்டி!
3. இந்த வாய்ப்பு முன்பதிவு செய்துள்ள Electric'80s சந்தா நண்பர்களுக்கு மட்டுமே!
4.நீங்கள் ஆன்லைனில் மட்டுமே அவ்வப்போது வாங்குவோராக இருப்பின் அங்கே 50 புக்ஸ் மட்டுமே மஞ்சள் மாடஸ்டியோடு சாத்தியமாகிடும்! அதன் பின்பாய் சகலமுமே கரிஸ் தான்!
தயை கூர்ந்து இதை விவாதிக்க நம்மாட்களுடன் திங்களன்று டெலிபோன் யுத்தங்களைத் தொடுக்காதீர்கள் மக்களே! இந்த மந்தி வேலைகள் முழுக்க முழுக்க நம்ம கைவண்ணமே! So அவர்களிடம் இதன் சாதக - பாதகங்களை விளக்கும் முயற்சியில் வீணாய் "தம்'' கட்ட வேணாமே ப்ளீஸ்! அதற்கென நம்ம 'பிக்னிக் ஸ்பாட்டில் ' காத்திருப்பேன் என்பதால் அக்கட வைத்துக் கொள்வோமே - பஞ்சாயத்துக்களை !!
Bye all.. டின்டின் கடைசிப் பத்து பக்கங்கள் அழைப்பதால் கிளம்புகின்றேன்! Have a great weekend! See you around!
👍
ReplyDeleteLucky Luke coming happy
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDelete🙋♂️
ReplyDeleteWelcome
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteKa.Ga-
ReplyDeleteஇங்கே அல்ல சார். And கார்வின் அட்டைக்கு மெசேஜ் அனுப்ப தேவையும் கிடையாது
Deleteபரணி சகோ
Deleteமஞ்சள் மாடஸ்டி வேண்டாம் என தீவரமாக இருப்பது புரிகிறது
ஆமாம் ரம்யா
Deleteவந்துட்டேன்
ReplyDeleteGood evening
ReplyDelete12th
ReplyDeleteஆஜர்
ReplyDelete💐💐💐💐💐
Deleteஆன்லைன் லிஸ்டில் போட்ட உடனே மாடஸ்டிக்கு ஆர்டர் போடனும் போலயே
ReplyDeletehi
ReplyDeleteபரணி 1 என பதிவிட்டிருந்தார் அதனை காணோமே?
ReplyDeleteஆமாம் சார்
Deleteஎனது பதிவு ஒன்றும் காணவில்லை
ReplyDeleteசில நேரங்களில் இப்படி நடப்பதுண்டு, எனக்கு நடந்துள்ளதுங்க, சகோ
Deleteஓகோ!
Deleteஎனக்கும் இன்று. நான் முதலில் 1 என்று போட்ட பின்னூட்டம் நேற்று இருந்தது. இன்று காணவில்லை 😀
Deleteகார்வின் அட்டைப்படத்தில் நல்லா இல்லை
ReplyDeleteடேங்கோ அட்டைப்படம் அசத்தல் 🔥🔥🔥
ReplyDeletePresent sir
ReplyDelete//"நேக்கு கரீஸ் கார்வின் வாணாம் - கறுப்பு ஒத்துக்காது..! அப்புறமா மஞ்சள் மைனாவும் வாஸ்துக்கு ஆவாது! அதனாலே உள்பக்கமா நாலு ஸ்பூன் நெய்விட்டு, வெளிப்பக்கமா மூணு ஸ்பூன் ஆயில் விட்டு, மழைச்சாரலாட்டம் லைட் ப்ளூ கலரிலே, இளவரசி சாரட் வண்டிலே வர்றா மெரி 3D-லே ஒரு அட்டைப்படம் போட்டு வேணும்! புக்கை டப்பியிலேர்ந்து பிரிக்கிறப்போவே "ராஜாவின் பார்வை... ராங்கியின் பக்கம்'னு பாட்டும் கேட்கணும்!'' என்ற ரீதியிலான special requests வாணாமே ப்ளீஸ்//
ReplyDelete😂😂😂😂😂
நன்றாகவே தெரிந்து வைத்து உள்ளீர்கள், சார்
உள்ளேன் ஐயா
ReplyDeleteமாடஸ்ட்டி,செம விறுவிறுப்பான preview சார் அசத்தல்
ReplyDelete///பொதுவாய் மஞ்சள் சொக்காய்களை நம்ம ஆம்பளைப் பசங்க ஹீரோக்கள் போடும் போதெல்லாம் துளி கூட சிக்கல்கள் எழுந்ததில்லை!///
ReplyDelete🥺🥺🥺🥺🥺
எங்கள் வீரதீர மாடஸ்டிக்கு வந்த சோதனை
கேள்வி 1
ReplyDeleteகண்டிப்பாக தொடரலாம் சார்...
Keep us surprising as always.
வணக்கமுங்க.
ReplyDeleteகேள்வி 2
ReplyDeleteசீனியர் எடிட்டரின் நினைவாக
அவர் பிறந்த நாளில் ஒரு special
அவர் மறைந்த நாளில் ஒரு special
+9
Deleteஇந்த இரண்டு நாட்களில் ஏதேனும் ஒரு நாள் தேர்ந்தெடுத்தால் நான் happy அண்ணாச்சி.
Deleteஇரண்டுமே என்றால் அவர் குமார் சார் படு happy அண்ணாச்சி
DeleteSuper Surya sir
Deleteஉள்ளேன் ஐயா..!
ReplyDeletePo.Pa
ReplyDelete💪💪💪💪
வாட்சப் நம்பருக்கு அனுப்புங்க, இல்லைனா கார்வின் தான் வருவாருங்க, ஜமீனய்யா
Delete😱😱😱
Deleteஎனக்கும் po. Pa தான். மெசேஜ் அனுப்பியாச்சு
Deleteகார்வின்லாம் வேணாம் சார்..
ReplyDelete💯💯💯💯💯
Delete'கரீஸ்' கலரில்" 😅😅🤣
ReplyDeleteDubbing Dabba உபயமா??
😎😎😎
Delete1. Yes. fathers day வை நாம சீனியர் எடிட்டர் டே வா கொண்டாடலாம். அதற்கு ஏதுவா நல்ல actin adventure நிரம்பிய fun கதைகளாக செலக்ட் செய்யலாம்.
ReplyDelete+1
Delete+9
DeleteYes Father's day in the memory of Senior Editor. எந்த கதையாக இருந்தாலும் சரிதான். Action, அழுகாச்சி, Adventure, Detective ஆல் ஓகே
Delete+1
Delete++
DeleteEdi Sir😘🥰..
ReplyDeleteMe in.. 😘😘💐🥰
//கேள்வி # 1 : தொடரும் ஆண்டுகளில் இந்த Father's Day போல வேறு ஏதாச்சும் முயற்சிக்கலாமா? அழுகாச்சிக் காவியங்களாகத் தான் என்றில்லாது - வித்தியாசமாய் ஏதாச்சும்?//
ReplyDeleteபண்ணலாங்க, சார்
//கேள்வி # 2: இந்த "அப்புச்சி டே'; "அத்தாச்சி டே' போன்றவையெல்லாம் சற்றே மேற்கின் காப்பிகளாகத் தெரிந்திடும் பட்சத்தில் நமக்கு ஒத்துப் போவது போல் எதையேனும் 2026-க்கு முயற்சிக்கலாமா?//
செய்யலாங்க, சார்
//"சுப்ரமணியபுரம்!' படம் வந்து இருபது வருஷங்கள் ஆச்சு... 10 years of பாகுபலி.. என்று பார்ட்டி கொண்டாடுவதைப் போல anything for 2026??//
ReplyDeleteநம்மிடம் நிறையாகவே உள்ளதுங்க, சார்
2026 டீசம்பர் வந்தார் ப்ளாக் ஆரம்பித்து 15 வருடம் ஆகிவிடும்
2026 ப்ளாக்கின் 15-வது என்றி சொல்லிடலாம்
LMS ரிலீஸ் ஆகி 12 வருடம்
மின்னும் மரணம் ரிலீஸ் ஆகி 11 வருடம்
2012 புத்தக விழாக்கள் முதலாய் தாங்கள் வாசகர்கள் சந்திக்க ஆரம்பித்து 14 வருடம் ஆகிடும்
இன்னும் ஸ்பெஷல் தருணங்கள் உள்ளன்
ஜோக்காக சொல்லவில்லைங்க, நீங்க சிரித்தாலும் பரவாயில்லை 😊😁
நமது ஈரோடு மீட் பெரிய களம் கண்டது 2016 லீஜார்டின் கீழ்தளத்தில், 10 வருடங்கள் ஆகிடும்
பெர்ஸ்னலாய் எனக்கு,சிறுவயது முதல் ஹாட்லைன் மூலம் அறிந்திருந்த தங்களை நேரில் சந்தித்து 10 வருடங்களாகி விடுகிறது, சார்
Wow
Delete✨🙃
Delete1.லீஜார்டின் கீழ்தள பெசல் 💪
Delete2.மரத்தடி 14 பெசல் 🏝️
3.மின்னி மரணி 11 பெசல் 🐎
ஒரு பொங்கல் ஸ்பெசல், ஒரு தைப்பூச ஸ்பெஷல்
Delete🥳🥳🥳🥳🥳
Deleteநமக்கு மே மாதம் கோடை மலர், தீபாவளி மலர் ரெண்டும் மதி அதுக்கு மேல நீங்க என்ன Special போட்டாலும் போனஸ் தான் சாரே
DeleteSuper sago
Deleteஆஹா
DeleteWell said Kumar
DeleteHi..
ReplyDeleteடேங்கோ அட்டையை டக் என்று பார்க்கும் போது லார்கோ பார்ப்பது போலவே ஒரு ஃபீலிங் எனக்கு மட்டும் தானா?
ReplyDelete//And இங்கே நமது மொழிபெயர்ப்பு டீமிற்கு ஒன்றரையாண்டுகளாய் வலு சேர்த்து வரும் Ms.சுகன்யாவுக்கு ஒரு shout-out! இரு கதைகளுக்குமே அவர் தான் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்!//
ReplyDeleteவாழ்த்துகள் & பாராட்டுகள் சகோதரி சுகன்யாவிற்கு
மாடஸ்டி கதைக்கு ஒரு பெண்ணை எழுதியதில் மகிழ்ச்சி, தாங்கள் பட்டி டிங்கரிங் பார்த்திருந்தாலும்
இவர்கள் எழுதியதை போன வாரம் எங்களுக்கு கொஞ்சமாய் காட்டி இருந்தீங்க, நன்றாக இருந்தது
ரூபினுக்கும் இவங்க தானே. நல்லா எழுதறாங்க. வாழ்த்துக்கள்
Deleteஆமாங்க சகோ
Deleteமாடஸ்டி பின்னட்டை டிசைனிங், அருமை
ReplyDeleteவாவ்.. பிளைஸி ஸ்பெஷல்...
ReplyDeleteஅட்டையில் கார்வின் சூப்பர்....
ஆசிரியரே po pa அப்படின்னா பொண்டாட்டிக்கு பயந்தவங்க அப்படின்னு எதாவது ரகசிய குறியீடா
ReplyDeleteபொண்டாட்டிக்கு பயப்படாதவங்க bro
Deleteசெத்தான்டா சேகரு 🥹🥹🥹🥹....
ReplyDeleteஇரண்டு அட்டைப்டங்களும் வேண்டும் என்பவர்கள் என்ன செய்வது. இரண்டு புத்தகங்கள் வாங்க வேண்டுமா
ReplyDeleteஅதற்கு பதில் மஞ்சள் மாடஸ்டியை கவர் Jacket ஆக கொடுத்துவிடுங்கள். மஞ்சள் மாடஸ்டி வேண்டாதவர்கள் ஒரு message தட்டி விட்டால், கவர் jacket இல்லாமல் செல்லட்டும், புத்தக விழாக்களுக்கும் இதையே கடைபிடிக்கலாம். மற்றவர்களுக்கு. இரண்டு கவர்களும் கிடைத்து விடும்
உள் பக்கமா நாலு கரண்டி நெய்... வெளிப்பக்கமா மூணு....!
Deleteயோசிங்க தெய்வமே... ஜாக்கெட்லாம் ஏன் போட முடியாதுன்னு...!
//இரண்டு அட்டைப்டங்களும் வேண்டும் என்பவர்கள் என்ன செய்வது. இரண்டு புத்தகங்கள் வாங்க வேண்டுமா//
Deleteஇதென்ன கேள்வி சாரே - of course ரெண்டும் வேணும்னா ரெண்டு தான் வாங்கணும்!
கம்யூனிட்டி வாட்சப்பில் மஞ்சள் மாடஸ்திக்கு ஆர்டர் போட்டாச்சு.
ReplyDeleteஎனக்கு மாடஸ்தி மட்டும் போதுங்க சார் கார்வின் வேண்டாமுங்க சார்
ஒரு வழியாகப் பயணத்தைப் படித்தாகி விட்டது சார்! தந்தை - மகன் இவ்விருவரின் பிணைப்பும், தனது மகனுக்கு விடாது பயிற்சியும், நம்பிக்கையும் அளிக்கும் அந்தத் தந்தையின் குணமும் பிடித்திருந்தது! கதையில் புதிதாக ஏதும் இல்லையென்றாலும், ஓவியங்கள் அசர வைக்கிறது - வண்ணத்தில் வந்திருந்தால் கூட இந்த அளவு தாக்கத்தை தந்திருக்காது!
ReplyDeleteஒரு 10 - 15 ஆண்டுகளுக்கு முன்னர் என்றால் கொண்டாடித் தீர்த்திருப்பேன், இப்போதெல்லாம் டார்க் ஆன, மன அழுத்தம் தரக்கூடிய திரைப்படங்களையும், சூழல்களையும் நானாகத் தவிர்த்து வருகிறேன், இருந்தாலும் தமிழ் காமிக்ஸில் இப்படி ஒரு முயற்சி literally "பெரிய அளவில்" செய்யப்பட்டிருப்பது, வாசக நண்பர்களின் ஒருமித்த பாராட்டால் ஏற்பட்ட peer pressure - இவற்றுடன் அப்பா சென்டிமென்டும் சேர்ந்து கொள்ள என்னை நானே பிடித்து அமர வைத்து படித்து முடித்து விட்டேன்! :-) இனி "baby வீடியோ, doggy வீடியோ" என்று எதையாவது ஒரு பத்து நிமிஷம் மேய்ந்து விட்டு, ஒரு சயனம் போட வேண்டியது தான் பாக்கி!
மற்றபடி, புத்தகத்தை ஐரோப்பியத் தரத்துக்கு வெளியிட நீங்கள் மெனக்கெட்டிருப்பது கண்கூடு சார், மிகச் சிறப்பு... வாழ்த்துகள்! படைப்பாளர்களுக்கு ஒரு பிரதியை அனுப்பி வைத்தீர்களா, என்ன சொல்கிறார்கள்?!
Yes, கதை என்று பெரிதாக எதுவும் கிடையாது தான் கார்த்திக்.... But இது அந்தப் பயணத்தின் சித்தரிப்பு மட்டுமே ... a road trip of sorts எனும் போது, ஓவியங்களால் கதையின்மையை அற்புதமாய் மறைத்து விடுகிறார் Manu Larcenet.
Deleteநானுமே இப்போதெல்லாம் சுதாகர் -கோபி, டப்பிங் டப்பா என்று இலகுரக பொழுதுபோக்கு சமாச்சாரங்களில் தான் மண்டையை நுழைத்துக் கொள்கிறேன்... But இது நாம் பார்த்தே தீர வேண்டியதொரு படைப்பு என்று பட்டது - and here we are!
கண்டிப்பாக சார், நமது வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை ஜானர்கள் பிடிக்கும் எனும் போது, புதிய முயற்சிகள் வரவேற்கப் பட வேண்டியவையே - அப்படியே ஒன்-ஷாட் மங்காக்கள் சிலவற்றையும் களத்தில் இறக்குங்கள்!
Deleteமஞ்சள் மாடஸ்டியை உட்புற கடைசி அட்டையில் வெளியிட்டு விட்டால் குழப்பம் இன்றி தைரியமாக விற்கலாம், வாங்கலாம், படிக்கலாம்.
ReplyDeleteபூரிக்கட்டைக்காக அல்ல நண்பரே! காமிக்ஸ்க்கே தடை விழுந்து விடலாம்.
அதனால், விற்பனை மிகவும் முக்கியம் அமைச்சரே!
மற்றபடி, தந்தையர் தினத்தன்று சீனியர் எடிட்டர் நினைவு ஸ்பெசலாய் வருடா வருடம், Maxi சைசில் நல்ல திருப்தியான கதைகளை வெளியிடலாம்.
நமது திருவிழாவான பொங்கல் ஸ்பெசலாக, அசத்தலான ஒரு பெரிய சைஸ் காமிக்ஸ் வெளியிடலாம். o.k.
சூப்பர் சார்....இது வரை வந்ததிலேயே டாப் பட்டை இதான்னு டேங்கோ சொல்ல....மாடஸ்டியின் இரு அட்டைகளுமே அருமை...எதை வாங்கன்னு யோசிக்குது மனது...ஆண்பாவம் கார்வின் சூப்பர்
ReplyDeleteபயணம் போல தொடரட்டும் சார் வடிவமைப்பு முயற்ச்சிகள்....
Deleteமுத்து தந்தை ஸ்பெசல்னு....தந்தையார் நினைவு தினத்திலோதினத்திலோ..அல்லது உலக தந்தையார் தினத்தில்.
Deleteமஞ்சள் மாடஸ்டியை அட்டைப்படமாகவும், கார்வினை அதற்கு மேல் டஸ்ட் கவராகவும் கொடுக்கலாம்.
ReplyDeleteஒரே கல்லுல ரெண்டு மாங்கா . பூரிக்கட்டைக்கும் வேலை இல்லை.
சார், 40+ வருஷங்களாய் இந்தத் துறையில் இருப்பவனுக்கு dust jacket பற்றிய யோசனை தோன்றி இருக்காதா - என்ன? Dust jacket புக்கில் அமர கணிசமான ஒரு முதுகு தேவை. அப்போது தான் அது புக்கோடு பிடித்து நிற்கும்.
Deleteஇதுவோ வெறும் 64 பக்கங்கள் கொண்ட இதழ் and சென்டர் பின் பைண்டிங். இதில் டஸ்ட் ஜாக்கெட் நிற்க வேண்டுமெனில், பள்ளிக்கூடப் பிள்ளைங்க நோட்டுக்களுக்கு அட்டை போட்டு, பசை வைத்து உட்பக்கம் ஒட்டுவது போல் செய்தால் மட்டுமே சாத்தியம்.
கதைகள், மொழியாக்கம், ரசனைகளில் யோசனைகள் fine சார், கேட்டுக்கொள்கிறேன். ஆனால் தயாரிப்பில் நிச்சயமாய் எங்களது அனுபவத்திடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டால் நலம்!
சாரி சார். தங்களுக்கு தயாரிப்பில் ஐடியா கொடுப்பது என்னுடைய நோக்கம் இல்லை. மாடஸ்டி ஸ்பெஷல் என்றதால் எட்டு கதைகள் கொண்ட ஒரு ஆல்பம் என்று நினைத்து விட்டேன் அந்த தவறான புரிதலே காரணம். மன்னிக்கவும்
Deleteஏற்கெனவே NBS இதழுக்கும், இனியெல்லாம் மரணமே இதழுக்கும், அண்டர்டேக்கர் கதைக்கும் இது போல் dust கவர் கொடுக்கப்பட்டுள்ளது
ReplyDeleteNBS எத்தனை பக்கங்கள் சார்? பைண்டிங் முறை என்ன சார்? ஒருக்க பாருங்களேன்?
Deleteஊத்தப்பத்துக்கு நாலு கரண்டி நெய் ஊற்றச் சொன்னா பரவாயில்லே... இதுவோ பூரி சார்...! இதுக்கு மழைசாரலாய் மிளகாய் பொடியெல்லாம் தூவ வழி லேது!
//மழைசாரலாய் மிளகாய் பொடியெல்லாம் தூவ வழி லேது!//
Deleteஎன்னவொரு வர்ணனை 😊
ஆப்ஷன் #1 :-இந்த வருடத்தில் தங்களது சூப்பர் தேர்வு கதைகளில் ஹைலைட் "பயணம்" சார்.
ReplyDeleteஆகவே தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான கதைகளை ஸ்பெஷல் தருணங்களில் வரவேற்கிறேன். அல்லது 2026 அட்டவணையில் 1,2 கதைகள் நுழைத்தாலும் சரி.
*ரொம்பவே ரசிக்கும் சீனியர் எடிட்டரில்லை*
சீனியரின் ஆசி என்றென்றும் நமக்கு உண்டுங்க சார்....🙏
"மரணப் பொறி" அருமையான தலைப்பு, இந்த பெயரை பார்த்ததும் 80s ன் அட்டகாசமான தலைப்புக்கள் ஞாபகத்துக்கு வருகிறது சார்.சூப்பர்👌🔥.
கார்வினின் அட்டைப்படம் 🔥.
டேங்கோ அட்டைப்படமும், உட்பக்க ப்ரிவ்யூவும் மரண மாஸ்.
தந்தையர் தின ஸ்பெஷல் தொடர வேண்டும் எடி சார்
ReplyDeleteSir
ReplyDeleteSpecial day books ok for us.
But stories must be in various flavours
Selva
டேங்கோ அட்டைப்படம் அபாரம்! 😍 லக்கி-டால்டன்ஸ்-ரின்டின்கேன் கூட்டணியை நினைத்தாலே குஷியாகிறது! 🤩🤩
ReplyDeleteஉரித்த கோழி போல பரிதாமாய் காட்சி தரும் மஞ்சள் மாடஸ்டியைக் காட்டிலும், 'கர்ர்ரீஷ்' கார்வினே என் தேர்வு! 😐
எதிர்காலத்தில் ஒரு நாள் மாடஸ்டியின் கண்களை மட்டுமே அட்டைப்படமாகப் போடுங்கள் சார்! அந்த காந்தக் கண்களை தாண்டிய கவர்ச்சி வேறொன்றுமில்லை!🫠
என்ன இளவரசே இப்படி பயந்துட்டீங்க????
Deleteஒரு இளவரசர் மண்டையில் போடப்பட்ட மாவுக்கட்டுடன் அந்தப்புரத்தில் என்ட்ரி ஆவதெல்லாம் நன்றாகவா இருக்குமுங்க KS?!!😤😑
Delete//உரித்த கோழி போல பரிதாமாய் காட்சி தரும் மஞ்சள் மாடஸ்டி//
Deleteஉங்களுக்கு பரிதாபமாகவா தெரிகிறாங்க? 😤😤😤
பின்னே பரிதாபப்படாமல்?!! அந்த டிரஸ் எத்தனை இடங்களில் கிழிந்து தொங்குகிறதென்று பாருங்கள் சகோ! 😒
Deleteசிறு வயதில் மாடஸ்டி ஒரு ஏழைப் பெண்! அப்போது போட்ட கிழிந்த உடைகளையே இப்போதும் போட்டுக் கொண்டிருப்பது இளவரசியின் எளிமையை எடுத்துக்காட்டுகிறதல்லவா?!💐😝
இளவரசரே 😂😂😂
Delete😀😀😀😀😀
Deleteகார்வினை ஏன் மாடஸ்டிக்கு சித்தப்பா ரேஞ்சுக்கு ஒவியம் போடுகிறீர்கள்,ஆண் பாவம் பொல்லாதது எடிட்டர் சார்*!
ReplyDeleteநாங்க போடுறோமா 🥹🥹...??அது ஒரிஜினல் படம் சார் ; அப்டியே தூக்கி வைச்சிருக்கோம்! அவ்வளவே!
Deleteஆமாம் சார். கார்வினுக்கு நல்லா கொஞ்சம் தேடி நல்ல படமாக அவர் நிறமாக இருப்பது போல போடலாம் ☺️
Deleteமஞ்ச காட்டு. மைனாவுக்கு ஓட்டு போட்டாச்சு சார்......:-)
ReplyDelete💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾
Deleteதலைவர் பதுங்கு குழியை நிரந்தர வீடாக மாற்றி விட்டார் போல 😀
Deleteடாக்டர் சார் நீங்க பொ .ப வா?க. கா.?வா
ReplyDeleteகார்வின் இல்லாமல் மடாஸ்டிக்கு இளவரசி என்ற பெயர் கிடைத்து இருக்குமா 😊 எனவே கார்வின் உள்ள அட்டைப்படம் எனக்கு 😊
ReplyDeleteஓஹோ, அப்படி வரீங்களா
Deleteசில விஷயம்களை இப்படிதான் சொல்லனும் 😉
Deleteபிக்னிக் ஸ்பாட்....beautyful Sir...😄😄😄❤️👍...
ReplyDelete// anything for 2026?? //
ReplyDeleteஒரு பக்கம் இயற்கை சீரழிவு,மறுபக்கம் பயமுறுத்தும் போர்முனைகள்,இன்னும் கொஞ்சம் ஏறுவோம்னு அடம்பிடிக்கும் கச்சா எண்ணெய் விலை உயர்வுகள்,விண்ணை முட்டும் விலைவாசிகள்,இது போன்ற சூழல்களில் நாம Survival ஆகிக் கொண்டிருப்பதை நினைச்சே 2026 ஐ கொண்டாடலாம் சார்...
// கேள்வி # 1 : தொடரும் ஆண்டுகளில் இந்த Father's Day போல வேறு ஏதாச்சும் முயற்சிக்கலாமா? // தாராளமாக முயற்சிக்கலாம் சார்...
ReplyDelete// கேள்வி # 2: நமக்கு ஒத்துப் போவது போல் எதையேனும் 2026-க்கு முயற்சிக்கலாமா? //
ReplyDeleteநல்ல யோசனை,முயற்சிக்கலாம் சார்...
117th
ReplyDeleteகேள்வி1:- வருடம் ஒரு முறை வித்தியாசமான முயற்சிகள் செய்யலாம் சார்
ReplyDeleteகேள்வி2:-வெஸ்டர்ன் மாதிரி ஆண்டுக்கு 1️⃣ போடலாம்..
ஜூலை 1"- ஆண்டுமலரே அனுப்ப ரெடியாகிட்டீங்க கோடை மலர் எப்போதுங் சார்?
ReplyDelete///இம்முறை கதை நகர்வது ஆர்ஜென்டினியத் தலைநகரில் மட்டுமே!//! அர்ஜென்டீனாவில் ஆரம்பித்த தொடர் மீண்டும் அர்ஜென்டீனாவுக்கே வந்திட்டது....
ReplyDeleteமுதலில் ஆண்டு மலரா? டேங்கோவானு தீர்மானிப்பது கடினம் தான்!!
EE பக்கமே திரும்பல எனும் போது அட்டையில் எது வந்தாலும் நமக்கு கவலையில்லைனேன்...!!!🤣🤣🤣
ReplyDelete😛😛😛
Deleteநெய்வேலி புத்தகத் திருவிழா ஜூலை 4ம் தேதி தொடங்குகிறது. வழக்கம் போல, நமது ஸ்டால் உண்டா சார்?
ReplyDeletevery nice blog best co working space provider
ReplyDeleteOffice Space in Jaipur
ReplyDeleteரொம்ப நாளாக யுத்தம் சார்ந்த கதைக்களங்களை நண்பர்கள் கேட்பதை பார்த்திருக்கிறேன். சமீபத்தில் வானமே எங்கள் வீதி மறுவாசிப்பை செய்த பிறகு என்னைக் குடைந்த விடயம் ஏன் இந்தக் கதை விற்கவில்லை என்பதே? இன்னும் 3 அத்தியாயம் வெளியிடாமல் உள்ளதும்.. அது கண்டிப்பாக உங்க பீரோவில் உறங்கிக் கொண்டிருக்கும் என அனுமானிக்கிறேன்.. Limited run editionனாக வெளியிட வாய்ப்புள்ளதா சார்?
ReplyDelete
ReplyDelete*பயணத்தின் பரிமாணங்கள்....*
*இரும்புக் கை மாயாவி* யின் ஃபேன்டஸியில் தொடங்கிய லயன்-முத்துவின் பயணம், மற்ற இரு ஃபேன்டஸி நாயகர்களான *ஸ்பைடர்& ஆர்ச்சி*-யினால் 1980களில் தமிழ் காமிக்ஸ் வானில் கொடி கட்டி பறந்தது...
ரிப்போர்டர் ஜானி, டெக்ஸ் வில்லர், XIII, கேப்டன் டைகர், கேப்டன் பிரின்ஸ், மாடஸ்தி ப்ளைசி, ரிப் கெர்பி, லக்கி லூக் & etc என பல நாயகர்கள் காமிக்ஸின் சுவையை 1990/2000 காலகட்டங்களில் கூட்டிக் கொண்டே சென்றனர்.
2012க்கு பிறகான பொழுதுகளில் ஒரு புதிய பாதையில் காமிக்ஸ் ரசனையை ஆசிரியர் விஜயன் சார் திருப்பியிருந்தார். அதுதான் கி.நா. எனும் கிராஃபிக் நாவல்கள். நாம் ஏற்கனவே வாசித்த சிலவும் இந்த வகைதான் எனினும் தமிழ் வாசகர்களை பொறுத்து கி.நா. என்றால் இலக்கணம் வேறு.
2012ல் வெஸ்டர்ன் எனும் கி.நா.வோடு இந்த புதிய பாதை துவங்கியது. *எமனின் திசை மேற்கு* என்ற இந்த கி.நா. ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் குறிப்பிடத்தக்கது. துவக்கமே சிறப்பாக அமைந்தாலும் அடுத்து வந்த *பிரளயத்தின் பிள்ளைகள்*--என்ற நாஜிக்களின் கொடுமைகளை விவரித்த கி.நா. கடுங்காபியாக கசந்தது. அடுத்து வந்த *சிப்பாயின் சுவடிகளில்* வித்தியாசமான ப்ளாட் ஆக அமைந்திருந்தது.
2014ல அறிமுகமான தோர்கல் கி.நா. சயின்ஸ் ஃபிக்ஷனா, ஃபேன்டஸியா அல்லது இரண்டும் கலந்த கலவையா என முடிவெடுக்க இயலாமல் சில ஙே..ஙே..ஙே..களைக் கொணர்ந்தது.
அதே ஆண்டு வந்த *தேவரகசியம் தேடலுக்கல்ல* -- சிறப்பான வெற்றியை பெற்று கி.நா. மார்கெட் சரிவை மீட்டது.
2015ல கி.நா.களின் அடுத்த அத்தியாத்தை ஆசிரியர் விஜயன் சார் துவக்கினார். இம்முறை *அலெக்ஸாண்ட்ரோ ஜோடரவ்ஸ்கி*- யின் அடர் கி.நா.கள்.....அவரது *பெளன்சர்* கி.நா.களின் உயரத்தை உயர்த்தியதோடு லயன்-முத்து வாசகர்களின் மெச்சூரிடியையும் அடுத்த லெவலுக்கு உயர்த்தியது.
நடுநடுவே சில ஒன்ஷாட் கி.நா.களும் வந்து போயின...அடுத்து வந்த ஜேசன் ப்ரைஸின் மூன்று பாக கி.நா.வான *எழுதப்பட்ட விதி, மறைக்கப்பட்ட நிஜங்கள் & திரை விலகும் நேரமிது* -- செம ஹிட் அடித்து கி.நா.களின் அத்தியாத்தில் தனி முத்திரையை பதித்தது. 2016ல இதான் டாக் ஆஃப் த இயர்.
2017 கி.நா. பயணத்தின் உச்சமான நேரம்... இந்த சமயத்தில் வந்த போனெல்லியின் சிங்கிள் ஷாட் கதைகளான *ஓரு முடியா இரவு, என் சித்தம் சாத்தானுக்கு சொந்தம், கனவுகளின் கதையிது...* யும், *அண்டர்டேக்கர்* ம் இணைந்து செக்கை போடு போட்டன... ஃபேன்டஸி, கெளபாய் ரசிகர்கள் கூட கொத்து கொத்தாக கி.நா. ரசிகர்கள் ஆக மாறத்துவங்கினர்.
2018 கி.நா. களில் புதிய சிகரத்தை தொட்டது லயன்-முத்து... ஆம் இன்றைய பயணத்தின் துவக்கபுள்ளியான *நிஜங்களின் நிசப்தம்* வெளியானது சென்னை புத்தகவிழாவில். இது படைத்த விற்பனை சாதனை புதிய மாதிரி.
2019 லயன்-முத்து வாசகர்ளின் வாசிப்பு திறனை புதிய உச்சத்துக்கு உயர்த்தியது. மூன்று கி.நா. கள் இந்த பணியை செய்தன.. *பராகுடா* & *பிஸ்டலுக்குப் பிரியா விடை* & *வஞ்சம் மறப்பதில்லை* --- கொஞ்சமும் "ஒளிவு மறைவின்றி"- படைப்பாளியின் எண்ணங்களை வாசகர்கள் அடைய முடிந்தது. கத்தரி யுகம் முடிவுக்கு வந்தது.
அடுத்த சில ஆண்டுகள் கி.நா.களின் பல்வேறு வகைகளை வாகர்கள் வாசித்து மகிழ ஆசிரியர் வகை செய்தார்... *கதை சொல்லும் கானகம், தனியே தன்னந்தனியே, கண்ணான கண்ணே, பனியில் ஓரு குருதிப்புனல், கோழைகளின் பூமி, ஸ்டெர்ன், தாத்தாஸ், பிரிவோம் சந்திப்போம், தனித்திரு தணிந்திரு, மா.து.ஜே.சலாம்* --- என பல்சுவை கி.நா.கள் சின்னதும் பெரிதுமான ஹிட்களை மாறி மாறி கொடுத்தன..
*ஒரு தோழனின் கதை* --2021 ல ஓரு அலையையே அடிக்க வைத்தது. வாகர்களையே இரு அணியாக பிரித்து ஒரு வாரம் வித்தை காட்டினான் தோழன்.
*டெட் வுட் டிக்* --- நிறவெறியின் ஆழங்களை ஆர்ப்பாட்டமாக பேசியது.
அடுத்து என்ன என இருந்த வேளையில் கி.நா. பயணத்தின் புதிய மைல்கல் ஆக வெளியானதுதான் இப்போதைய *பயணம்*. மானு லார்சினெட் & ஆசிரியர் விஜயன் சார் இருவரும் இணைந்து வாசிப்பு தரத்தின் படியை உசக்கே வைத்து விட்டனர். இனி வெளியாகும் ஒவ்வொரு கி.நா.வும் பயணத்தோடு ஓப்பீடு பண்ணப்படும் என்பதே பயணத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு சான்று.
*பயணம்* வகுத்த புதிய பாதையில் காத்திருக்கும் *சாம்பலின் சங்கீதம்* --- வாசிக்க உள்ள ராகம் என்னவோ????
டெ. வி. சார் . அருமையான அலசல். .
ReplyDeleteதேங்யூ சார்
Delete*ஹேப்பி பர்த்டே டூ லயன்....💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂*
ReplyDelete#"பர்த்டே"---குழந்தைகள்கிட்ட இந்த நாள் கொணரும் உற்சாகமும், கொண்டாட்டங்களும் ரொம்பவே ஜாலியானவை.
#லயன் காமிக்ஸ் ஆண்டுமலர் பற்றிய அன்பின் ஆசிரியர் விஜயன் சாரின் முன்னோட்டங்கள், அவரின் சிறுவயது நினைவுகளை ஹாஸ்யத்துடன் வெளிக்கொணர்ந்து இருந்தது......
#லயன்ல தீபாவளிமலரும், கோடைமலரும் டாப் கவனங்களை எடுத்து கொள்ள, இடையே வெளிவரும் ஆண்டுமலர் உண்டாக்கும் எதிர்பார்ப்பு ஒரு வகையானது! அந்த இரு அதிரடி இதழ்களுக்கு இது எப்படி ஈடுகொடுக்கப் போகிறதோ என்ற எதிர் பார்ப்பு எப்போதும் நிலவும்.....ஆண்டுமலரும் ஒவ்வொரு முறையும் இந்த எதிர்பார்ப்பை ஈடுசெய்தே வந்துள்ளது.
#1995ல இருவண்ணத்தில் வந்த, "பூம்பூம் படலம்"- என் முதல் ஆண்டுமலர் வாசிப்பு.....பல முறை வாசித்தது அது.. பிற்பாடு வண்ணத்தில் வந்தபோது ரொம்ப ரொம்ப ரசிக்கை வைத்து அந்த காலத்திற்கே கூட்டிபோனது....
உங்களின் ஆண்டுமலர் கொண்டாட்டாம் எந்த இதழில் இருந்து ஆரம்பித்தது நண்பர்களே????
லயன் ஆண்ட மலர் பட்டியல் இதோ....!!!!
1.சைத்தான் விஞ்ஞானி-1985
2.பவளச்சிலை மர்மம்-1986
3.அதிரடிப் படை-1987
4.கானகத்தில் கண்ணாமூச்சி-1988
5.நடுக்கடலில் அடிமைகள்-1989
6.எமனுடன் ஒரு யுத்தம்-1990
7.மர்ம முகமூடி-1991
8.மின்னலோடு ஒரு மோதல்-1992
9.கானகக் கோட்டை-1993
10.மந்திர மண்ணில் மாடஸ்தி-1994
11.பூம் பூம் படலம்-1995
12.இரத்தப் படலம்-VI-1996
13.பேங்க் கொள்ளை-1997
14.கானகத்தில் கலவரம்-1998
15.தலைவாங்கும் தேசம்-1999
16.இரத்த பூமி-2000
17.மெக்சிகோ படலம்-2001
18.பயங்கரப் பயணிகள்-2002
19.பரலோகத்திற்கொரு பாலம்-2003
20.----------------------------2004
21.----------------------------2005
22.சூ மந்திரகாளி-2006
23.----------------------------2007
24.----------------------------2008
25.----------------------------2009
26.----------------------------2010
27.----------------------------2011
28.நியூ லுக் லக்கி ஸ்பெசல்-2012-(கம்பேக்கிற்கு பின்பு)
29.ஆல் நியூ ஸ்பெசல்-2013
30.லயன் மேக்னம் ஸ்பெசல்-LMS-2014
31."தி லயன் 250"-Texஸ்பெசல்-2015
32.பெல்ஜியம் எவர்கிரீன் ஜானி,XIII&பிரின்ஸ் மலர்-2016
33.லயன் 300 ஸ்பெசல்-2017
34.லூட்டி வித் லக்கி-2018
35.தி லக்கி ஆண்டுமலர்-2019
36.லக்கி’s லயன் ஆண்டு மலர்-2020
37.லயன் ஜாலி ஆண்டுமலர்-2021
38.லயன் லக்கி ஸ்பெசல்-2022
39.லயன்'S லக்கி ஆண்டு மலர்-2023
40.லயன் லக்கி 40வது ஆண்டு மலர்-2024
#இந்த 40 ஆண்டுகளில் எத்தனை விதமான பயணங்கள் என அந்தந்த ஆண்டுமலர்களின் பெயர்களைப் பார்க்கும் போதே தெரிகிறது.
#வாசிப்பு உச்சத்தில் இருந்த 1980கள்& 1990களில் வளர்ந்த நாம் கொஞ்சம் கொடுத்து வைத்தவர்களே!
#1990களின் ஹாட்லைன்ஸ் பார்க்கும் போதே எடிட்டர் சாரின் உற்சாகம் நம்மையும் தொத்திகிறது.
#1985முதல் 2003 வரை தொடர்ச்சியாக 19ஆண்டுகள் ஆண்டுமலர்கள் வந்ததே பெரிய சாதனைதான்!
#வாசிப்பிற்கு சோதனை வந்த 2000களில் எடிட்டர் சாரின் ஹாட்லைன் படிக்கும்போதே, அவரின் வேதனை, சூழலின் கடுமை புரிகிறது.
#வசந்தம் மீண்ட 2012க்கு பிறகு 2ம் இன்னிங்ஸில் ஆண்டுமலர்கள் பீடுநடையுடன் கோலோச்சுகின்றன.
#ரூ3க்கு வெளிவந்த முதல் ஆண்டுமலர் ஆகட்டும், அதிகபட்சமாக ரூ550க்கு வந்த LMSஆகட்டும் கையில் ஏந்தும்போது உண்டாகும் உற்சாகம் ஒன்றே!
#50வது, 100வது , 200வது ஆண்டுகள்......என லயனின் வெற்றிப் பயணம் சிறக்க வாழ்த்துக்களுடன்.....
ஓரிரு நாளில் வரும் 41வது ஆண்டுமலர் வழக்கம்போல பட்டையை கிளப்ப முன்கூட்டியே வாழ்த்துகள்...💐💐💐💐💐💐
********#######******#######
பிறந்தநாள் வாழ்த்துகள் டூ லயன் 💐💐💐💐💐
Deleteஅருமை சகோ💐💐💐
DeleteHappy Birthday lion 🎉🎉🎉🎉🦁🦁🦁🦁
ReplyDeleteலயன் பிறந்த மாதமே நான் பிறந்த மாதம் என்பதில் பெரு மகிழ்ச்சி எனக்கு ( அப்படியே என் பிறந்த நாள் இந்த மாசமுன்னு சொல்லிட்டோம் எல்லாரும் கிஃப்ட் வாங்கி கொடுப்பாங்க ன்னு நம்புவோம்)
ReplyDelete*ஜனவரி 2022 முத்து 50வது* இதழில் அறிமுகமான *டேங்கோ* தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று முத்து காமிக்ஸில் நிரந்தர இடத்தை பிடித்த ஹீரோவாக மாறிட்டார். இவரது தெனாவெட்டு ஸ்டைல்& அதிரடி ஆக்சன்-ம் நிறைய ரசிகர்கள் ரசிக்க வைக்கிறது...இத்தொடரின் ஓவியங்கள் அபாரம்,தொடருக்கு கூடுதல் வலு சேர்க்கிறது...
ReplyDelete*டேங்கோ வாசிப்பு வரிசை*
1.முத்து 50-FFS1- *என் பெயர் டேங்கோ*
2.*சிவந்தமண்*
3.முத்து சம்மர் ஸ்பெசல்2023- *பனாமா படலம்*
4.*தவணையில் துரோகம்*
5.*வேட்டை மறக்கா வல்லூறுகள்*
முந்தைய கதைகளை ஒரு புரட்டு புரட்டிட்டு வாசித்தால் நிறைவான அனுபவம் ஆக இருக்கும்...ஹேப்பி ரீடிங் ப்ரெண்ட்ஸ்....💐💐💐💐💐
உண்மை
Deleteபுத்தகங்கள் கிடைத்து விட்டது. லக்கி கதை புத்தகத்தை கண்டவுடன் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி. இன்றே கதை சொல்லவேண்டும் என்றார்கள், வேலை பழு காரணமாக ஞாயிறு விடுமுறை அன்று கதை சொல்லும் படலத்தை ஆரம்பிக்கலாம் என்று சொல்லி உள்ளேன் ☺️
ReplyDeleteEnjoy sir
Deleteஇம்மாத ஹைலைட் . இளவரசியின் "மரணப் பொறி" அக்மார்க் வான் ஹாமே டைப் சூழ்ச்சிகள் இளவரசியை சுற்றி . லார்கோ வில் முதலில் சூழ்ச்சிக்கான சம்பவங்கள் நடைபெறும் காரண காரியங்கள் விளக்கப்படாது,லார்கோ கண்டுபிடிக்கும் போது கதையின் போக்கில் பிறகு விவரிக்கப்படும்.(இதுவோ பிரிட்டிஷ் ஆல்பம்.) இளவரசியை சுற்றும் சூழ்ச்சிகள் தெளிவாக நமக்கு ஆரம்பம் முதலே விளக்கப்படுகின்றன. விறுவிறுப்பான ,அட்டகாசமான "மரணப் பொறி" ஆக்சன்மற்றும் இளவரசி ரசிகர்களுக்கு மாஸ் கதை இது இளவரசியின் டாப் லிஸ்ட்டில் நிச்சயம் இடம் பெறும்
ReplyDeleteSuper
Deleteஅரசாங்கத்தினால் கைது செய்யப்படும் இளவரசியின் சிறை அறையின் ஒரு ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு,போர்வைகளை நார் நாராய் கிழித்தெடுத்துக் கட்டப்பட்ட கயிறு ஜன்னலுக்கு வெளியே தொங்கிக் கொண்டுள்ளது . பற்றாக்குறைக்கு இளவரசியின் ஆடைகளுமே சிறை அறைக்குள் கிடக்கின்றன.அப்படியானால் ஒரு பெண் நிர்வாணமாய் அந்த சிறைச்சாலையில் உலாத்திக் கொண்டுள்ளார். எங்கே மாடஸ்ட்டி. அதுவும் அந்த நாட்டிலேயே ஏகப் பாதுகாப்பான அந்த இடத்தில் . கதறுகிறான் சூழ்ச்சிக்கு திட்டமிட்ட டைரக்டர். அனல் பறக்கும் மாடஸ்டியின் மரணப் பொறி
ReplyDeleteகதையின் கடைசிப் சேனலில் கதையில் சிரிப்பார் மட்டுமின்றிநாமும் கால காலத்திற்க்கு நினைத்துக் சிரிக்கும் படி இளவரசிக்கு பட்டம் வழங்கப்படுகிறது," உழைக்கும் வர்க்கத்தின் பெருமதிப்பிற்க்குரிய ஒப்புயர்வற்ற நாயகி". ஹாஹாஹா!.
ReplyDeleteஇளவரசி&கார்வினிடம் பிடித்த விசயம் இது தான் . இக்கட்டான சூழலில் இருவரில் ஒருவர் மாட்டிக் கொண்டிருக்கும்போது தன்னைக் காப்பாற்ற மற்றவர் இந்த வழியாகத்தான் வருவார்,இந்த நேரத்திற்க்கு வருவார் என்று யூகிக்கும் போது மற்றவர்அதேபோல் செயல் படுவார்.இருவரும் இணைந்து எதிரிகளை முறியடிப்பர்.
ReplyDeleteவேட்டை மறக்கா வல்லூறுகள்
ReplyDeleteவழக்கம் போல சித்திரங்களும் வண்ணங்களும் அதகளம். கதையின் முதல் பக்கம், பக்கம் 9 ல் கடைசி பேனல், பக்கம் 13, பக்கம் 14ல் டேங்கோவின் வெளிர் நீலக் கண்கள், பக்கம் 22ல் புயெனஸ் எய்ர்ஸ் நகரத்தின் இரவு அழகு, பக்கம் 37 கிராமத்துக்கு செல்லும் பாதை, பக்கம் 41ல் பண்ணையின் புல்வெளி, என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அது மட்டுமன்றி ரணகளத்தை ரசித்து வரைந்துள்ளார் ஓவியர். முதல் பக்கத்தில் தெறிக்கும் வன்முறையே இந்தக் கதையின் இருந்த கதைக்களத்தை நமக்கு காத்திருப்பது என்ன என்று எச்சரிக்கை செய்கிறது.
மரியோ என்ற கதாபாத்திரம் யார்? அவர் எப்படிப்பட்டவர் என்பதெல்லாம் இது வரை ஆங்காங்கே தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் போலவே பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால் இந்தக் கதையில் மரியாவின் வாழ்க்கையின் சில பல பக்கங்களை கொண்டு, மரியோ யார் என்று வாசகர்களுக்கு பரிமாறி இருக்கிறார்கள்.
என்ன தான் மரியோ full meals ஆக இந்தக் கதையில் வந்தாலும், அடிதடி காரத்துக்கு, கோங்குரா ஊறுகாயாக நம்ம டேங்கோ புகுந்து விளையாடி இருக்கிறார்.
இந்தக் கதையில் ஒளிந்திருக்கும் வரலாற்று பக்கங்கள், மேலதிக வாசிப்பை விரும்பும் என் போன்றவர்களுக்கு செமையான விருந்து என்பேன். OPERATION CONDOR, இது எதோ ஒரு கற்பனை சங்கதி என்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில் இதே பெயரில் வெளிவந்திருந்த எனது விருப்பமான ஜேக்கி சானின் படத்தின் பெயர் என்பதால். ஆனால் எதற்கும் தேடிப் பார்ப்போம் என்று கூகிளில் தேடினால் அது தந்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை. தென் அமெரிக்காவின் பொதுவுடைமை சித்தாந்தவாதிகளை 1975 முதல் 1983 வரை வேட்டையாடிய வலதுசாரி சிந்தனாவாதிகளின் வெறியாட்டத்தை காண முடிந்தது. இதன் பின்னணியில் இருந்தது யார் என்பதற்கு ரொம்ப எல்லாம் சிந்திக்க தேவையில்லை. பெரியண்ணன் தான். சோவியத்துக்கும் பெரியண்ணனுக்கும் நடந்த பனிப்போரின் தாக்கம் தென் அமெரிக்காவில் தலைவிரித்தாடியதை காண முடிந்தது. வன்முறையின் உச்சமாக நாஜிக்களின் அங்கத்தினர்களை கூட பயன்படுத்தி இருப்பது தெரிய வந்த பொழுது அதிர்ந்து போனேன். வலதுசாரிகள் அரசியலை புரிந்துக் கொள்ள இந்தக் கதை ஏகத்துக்கும் உதவி இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
condor என்பது ஒரு பெரிய அளவிலான கழுகு. ஆபரேஷன் காண்டோரின் மிச்ச சொச்சமான அடிப்பொடிகளின் ஒருவனான காப்ரேரா, பழிவாங்கும் உணர்ச்சியுடன் வந்து நிற்கிறான். அப்படிப்பட்ட கழுகு குணம் உள்ளவன், கடைசி காலத்தில் நிற்க திராணியில்லாமல் இருந்தாலும் வேட்டையாடுவதை விடமாட்டான் என்பதே இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது . ஆனால் அந்த கழுகை கூட நம் ஹீரோ போன்ற வேட்டையை மறக்காத வல்லூறுகள் வீழ்த்த முடியும் என்பதே ஆறுதலாக இருக்கிறது.
இது வரை வந்த டேங்கோ கதைகள் ஒரு பயணக்கட்டுரை போல அமைந்திருந்தாலும், இந்தக் கதை வரப்போகும் எண்ணற்ற கதைகளின் முகவரியாக வந்திருக்கிறது. இனி வரும் கதைகளில் தென் அமெரிக்க அரசியலின் பல்வேறு கூறுகளை நாம் அறியும் வகையில் கதை நகரும் வகையில் விர்ஜினியா கதாபாத்திரம் அமைந்துள்ளது
அடுத்த இதழுக்காக இப்பொழுதிருந்தே காத்திருக்கிறேன் எடிட்டர் சார்.
கதை 10/10
ஓவியம் 11/10
மேக்கிங் 9/10
இரத்தப் படலத்தில் க்யூபாவில் மரியாவின் சகோதரன் இறக்கும்தருவாயில் ஃபாதர் ஜெசிந்தோ ,உன்னோட மம்மி செல்லமாக எப்படி கூப்பிடுவார் ?இதோ அந்தப்பெயரை நான் எழுதிக் கொண்டேன் என்பார். //என் செல்லக்குட்டி "காண்டோர் "//என்று,என்பது போல் வரும் நிகழ்வு ஞாபகம்
ReplyDeleteஇந்த மாதிரி தகவல்கள்களின் சுரங்கம் நீங்க தான் ஐயா.. கலக்கிட்டீங்க
Deleteநன்றி வஷிஷ்ட்டர் குருதேவரே
ReplyDeleteமரியோ ஒரு முன்னாள் போலிஸ்காரர் என்பது முன்பே தெரிந்துவிட்டது . ஆனாலும் நேர்மை யான போலிசாக இருந்து தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறிவிட்டார் என்பது தற்போது தெரியவந்து மரியோவின் மீதான மதிப்பு உயர்ந்துள்ளது.
ReplyDeleteகோழைகளின் பூமி
ReplyDeleteகால்வாசி படித்து விட்டு, வீடு மாற்றும் போது பரண்யேறிய புத்தகம் இரண்டு வாரங்கள் முன்பு கீழயிறங்கியது
ஆரம்ப முதல் மீண்டுமொரு முறை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஒரு புலனாய்வில் ஆரம்பித்ததால் உடனே பிடித்து போயிற்று, வாசிக்கவிருப்பது ஒரு கிராபிக் நாவல் என்பதை நினைவில் கொள்ளாமல்😶😐
துடிப்பான இளமை நாட்கள் நினைவுகளவும், நிகழ்கால புலனாய்வும் மாறி மாறி பயணாமாகிட, நானோ புலனாய்வு பக்கமே அதிகம் கவனத்தை செலுத்தினேன்.
பக்கங்களை கடக்க கடக்க பழைய நினைவுகளில் தான் முடிச்சு உள்ளது என புலப்பட்டது, பழைய காலத்தில் அப்படி நடந்து விட கூடாது என நினைத்தேன், ஆனால் நடந்து முடிந்த நிதர்சனங்கள் அவ்வாறு இருப்பத்தில்லையே.
பின்னட்டையில் உள்ள கேள்வி "சில நேரங்களில்... சில மூடிய பக்கங்களை மறுபடியும் வாசித்திடக் கூடாதோ?" என்னை துளைத்தது. இருண்ட வானம் போன்று கனத்த மனது வாசிச்சுருக்க கூடாதோ என ஒருகணம் நினைக்க வைத்தது😢😢😢
ஆனால் நிமிடங்கள் கரைய கடிக்க வேண்டிய கதை என சிந்திக்க வைத்தது.
ஆரம்ப பக்கங்களில் ஹேசல், ஐசக்கிடம் கேட்கும் கேள்வி "பரிசு ஒரு ஆளுக்குத் தானெனில் பாக்கிப் பேரெல்லாம் ஓடுவானேன்?"
கதையின் கருவை ஒரு கேள்வியில் சொல்லி இருப்பது புரிந்தது.
ஹேசல், ஐசக் ஆழமாக பதிந்துவிட்டு செல்லும் கதாபாத்திரங்கள்.
இருவருக்கும் தங்கள் வாழ்வினை குறித்து பெருத்த கனவுண்டு, கனவுகள் உடைந்து போகும் போது அது தந்திடும் வலியினை தாங்கி கடந்து சென்றிடும் பக்குவத்தை சொல்லி தரவோ, வழி காட்டிடவோ சரியான பெற்றோர்கள் அமையவில்லை, ஷெரீப் அவர்களை புரிந்து கொண்டாலும் வழிகாட்டிடும் ஆசானாய் அவரும் இருந்திட முடியவில்லை.
விதியென ஏற்றுக்கொண்டு வாழும் சமூகத்தின் ஆதிக்கம் அவர்களை அறியாமல் அவர்கள் மனதில் ஆறாத காயங்களாக நிலை கொண்டு விடுகின்றன. தவறான புரிதல், கோபமும் ஆற்றாமையும் மேற்கொண்டு ரணங்களின் பாதைக்கே அவர்களை இட்டு செல்கின்றன. பக்குவத்தை அடைந்தாக நினைக்கும் ஹேசல், தன் கோபத்திலிருந்தும் ரணங்களிருந்தும் மீளவே இல்லை.
இறுதியில் ஞானயோதமாக செயல்படும் ப்ராவிடென்ஸின் முயற்சி காலம் கடந்த ஒரு செயல் என காண்பிக்க படுகிறது.
அவள் பேசிடும் இறுதி வசனங்கள் வாழ்வின் தத்துவங்களை சொல்கின்றன
"குழப்பங்களின்றி இருக்கும் வரை மனச்சாட்சி என்பது முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி என்பேன்! உள்ளும், புறமும் அமைதியாய் காட்சி தரும்"
"கருணையின் ஒற்றைக் கீற்று ஏகப்பட்ட காயங்களுக்கு மருந்தாகிட முடியும் என்பது எனக்கு இப்போது தான் புரிகிறது"
நிதர்சனைத்தை புரிந்து ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், மனதின் ரணகங்களை ஆற்றிடாமல் மாற்று வழி என எதோ ஒன்றை தேர்நதெடுத்து அதில் வாழ்ந்திடவும் தெரியாமல் இரு நண்பர்களின் முடிவு சோகத்தை தருகிறது
குழப்பவதியாகவோ, இடியாப்ப சிக்கல்களான கதை இல்லை,யதார்த்த வாழ்வில் ஒரு சிறு நகரத்தில் மக்களின் வாழ்வையினையும் கலாச்சாரத்தையும் சொல்கிறது. படிக்க வேண்டிய கதை.
ஆனாலும் 20+ வாசகர்களுக்கு பரிந்துரைப்பேன், வாழ்வின் வலிகளையும், வழிகளையும் சொல்லிடும் இக்கதை புரிந்து கொள்ளும் பக்குவம் தேவைப்படும் என்பதற்காக.
சித்திரங்கள் அச்சிறு நகரத்தின் வாழ்க்கையை அழுத்தமாய் சொல்லிடுகின்றன. 6&7 பக்கங்களில் உள்ள சித்திரங்கள் கதையை படிக்க ஆரம்பிக்கும் போது மிகுந்த சுவாரசியத்தையும் ஆர்வத்தையயும் ஏற்படுத்துகின்றன. முகங்களில் வெளிப்படும் உணர்ச்சி கொந்தளிப்புகளை நுணுக்கமாக வெளிப்படுத்தி உள்ளார் ஆர்டிஸ்ட் Pietro Vitrano.
சிந்தை கலங்கிடாமல் தன் வழியில் செயல்படும் திண்ணமும், நம் போன்று இதழ்களில் மேல் காதல் கொண்ட ஷெரீப் மனதை கவருகிறார்
லயன் காமிக்ஸ் 41 வது ஆண்டுமலர்...
ReplyDeleteஆனந்த மலர் என்பதை நிரூபித்து விட்டது..ஆண்டுமலர் என்றாலே நாயகரும் லக்கி தான்...இதழும் லக்கி தான் என்பது போல அட்டகாசமான இரு காமெடி கதைகள்..
நல்ல காலம் பிறக்குது..ஒரு நாயகன் உதயமாகிறான் இரண்டு கதைகளிலுமே இந்த முறை வழக்கத்தை விட வாய்விட்டு சிரிக்க வைத்த இடங்கள் ஏராளம்..லக்கி சாகஸங்களில் டால்டன் தான் வில்லன் என்றால் அங்கே கலகலப்புக்கு பஞ்சம் கிடையாது என்பது நன்றாகவே அறிந்தாலும் இந்த முறை அவர்களாலும் முக்கியமாக ரின்டின்கேனினாலும் அந்த கலகலப்பு டபுள் மடங்காகி விட்டது இரண்டு கதைகளிலுமே..
கூடவே அட்டைப்பட ஓவியம்..அட்டைப்படத்தின் பளபளப்பு ..தரமானதாளில் வண்ண சித்திரத்தில் அட.டகாசமான இந்த ஆண்டுமலர் மேலே சொன்னது போல வாசகர்களுக்கு ஆனந்த மலரே...