நண்பர்களே,
வணக்கம்! சனிக்கிழமைகள் புலர்வது வழக்கம்..! பேனா, பேப்பர் சகிதம் மோவாயில் கை வைத்தபடியே மேஜையில் நான் அமர்வதுமே வாடிக்கை! அப்புறமாய், எதைப் பற்றி எழுதுவதென்ற மகா சிந்தனைக்குள் ஆழ்ந்திடுவது நடைமுறை! ஆனால், ரொம்பச் சில தருணங்களில் மேற்படி வரிசைக்கிரமத்தில் அல்லாது, நிகழ்வுகள் தாமாய் அரங்கேறுவதும் உண்டு! ஏதேனும் ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்லியே தீரணும் என்ற நமைச்சல் உள்ளுக்குள் படுத்தியெடுக்கும் ! அல்லது ஏதேனும் ஒரு புதுக் கதை / தொடர் பற்றிய அலசலை உங்களுடன் அந்த நொடியிலேயே நடத்திட்டாலென்னவென்று குறுகுறுக்கும் ! Or ஏதேனுதொரு பணியில் ஈடுபட்ட சமயம் கிட்டிய உணர்வுகளை சூட்டோடு சூடாய் உங்களிடம் பகிர்ந்திடும் வேகம் தலைகாட்டும்! அது போலான வேளைகளில் சனி பிறக்கும் வரை காத்திருப்பதில்லை; சுக்கா ரோஸ்டைச் கண்ட கார்சனைப் போல நேராய் பதிவுக்குள் பாயத் தோன்றும் ! அத்தகைய தருணமே இது ; and வியாழன் இரவில் எழுதிய பதிவிது ! இம்முறையோ ஒன்றல்ல- இரண்டல்ல: மூன்று வெவ்வேறு கதைக்களங்களில் ஒரே சமயம் பயணித்த ஒரு வித்தியாசமான அனுபவத்தை உங்களிடம் மொக்கை போடும் அவாவே இந்தப் பதிவின் பின்னணி!
மாமூலான தேய்ந்து போன cliche தான்; இருந்தாலும் நமது சூழலை விவரிக்க அது தான் சாலப் பொருந்துகிறது! பலமே பலவீனம்; பலவீனமே பலம் என்பது தான் அந்த மொக்கை phrase! நமது அணிவகுப்பில் எண்ணற்ற நாயக/ நாயகியர் கரம்கோர்த்து நிற்பதை காலமாய் நாமறிவோம்! Without a doubt, நமது பெரும் பலமும் அதுவே என்பதிலும் இரகசியங்களில்லை தான்! ஆனால், யாரை எங்கே நுழைப்பது? யாரைக் கழற்றி விடுவது? யாருக்கு ஒற்றை ஸ்லாட்? யாருக்கு கூடுதல் சீட்? என்ற குழப்பங்களில் தலையைப் பிய்த்துக் கொள்வதே அது சார்ந்த பலவீனமுமே! And ரகரகமான கதைகளைக் கையாள்வதன் ஒரு மெகா சாதகம்- பணியாற்றும் வேளைகளில் ஒரு குதிரையிலிருந்து முற்றிலும் புது ரகமான வேறொன்றில் தாவச் சாத்தியமாவதே!
மேஜையில் மாயாவியும், இருப்பார்; கிராபிக் நாவலும் கிடக்கும்; கார்ட்டூனும் கிடக்கும்; ரிப் கிர்பியும் கிடப்பார்! So ஏதேனும் ஒன்றில் வண்டி தள்ளாடிடும் பட்சத்தில்- "பச்சக்'' என இன்னொரு குதிரை மீதி குதித்திட முடியும்! களங்கள் ஒட்டுமொத்தமாய் மாறியிருக்கும் போது அயர்வெல்லாம் காணாதே போய்விடுவதுண்டு! அது போலானதொரு தருணமே இந்த வாரத்திலும்!
- ரிப்போர்டர் ஜானி எனும் நூடுல்ஸ் நாயகர்!
- "பயணம்'' எனும் இருண்ட கிராபிக் நாவல்!
- மாண்ட்ரேக் எனும் ஜாலிலோ ஜகஜ்ஜாலர்!
இந்த மூவரின் லாயங்களும் திறந்திருக்க, "இந்தக் குருத-அந்தக் குருத'' என்ற சவாரியானது எனது இந்த வாரத்தையே பிரகாசமாக்கியுள்ளது!
எல்லாம் ஆரம்பித்தது "ஜெர்மனியில் ஜானி'' ஆல்பத்தோடு! நிஜத்தைச் சொல்வதானால்- இந்த மாதம் வண்டி நிரம்பவே தள்ளாட்டங்களோடே பணி செய்து வந்தது! ஆன்லைன் மேளாவின் ஐந்து இதழ்களை நடுவாக்கில் ரெடி செய்தது ஒரு முரட்டுப் பணியென்றால், ஜுன் மாதத்தின் டெக்ஸ் yet another biggie! சமீப மாதங்களில் நமது ரயிலில் தொற்றிக் கொண்டிருந்ததொரு சகோதரியின் கைவண்ணத்தில் "சட்டத்தோடு சடுகுடு'' மொழியாக்கம் செய்யப்பட்டு, முழுவதும் டைப்செட்டிங்கும் பண்ணி முடிக்கப்பட்டது! ஆனால், எடிட்டிங் செய்ய அமர்ந்த போது, நமது பிரிட்டிஷ் மறுபதிப்புகளைக் கண்டு முழிக்கும் செனா.அனாவைப் போலவே என் முகமும் போனது! ரொம்பவே தட்டையான மொழியாக்கம் - அதுவும் ஒரு தெறி மாஸ் கதைக்கு என்ற போது, சுத்தமாய் ஒவ்வவில்லை! இயன்றமட்டுக்கு டிங்கரிங் செய்ததில் நாக்கெல்லாம் தொங்கிப் போக - இதற்குப் பதிலாக rewrite செய்து விடுவதே சாலச் சிறந்ததென்று பட்டது! Phew...240 பக்க ஆல்பம்- கழன்றே போச்சு பெண்டு !
So இந்த மெனக்கெடல் முடியவே தேதி 24 ஆகிப் போச்சு! அப்போது மலர்ந்த முகத்தோடு, இடியாப்பம் பிழியும் கருவியோடு நம்ம ரிப்போர்டர் ஜானிகாரு காத்திருப்பது கண்ணில்பட்டது! "தேவுடா.. நேனு டங்குவார் today சிரிகிபோயிண்டி'' என்ற பீதி அடிவயிற்றைக் கவ்வியது! நல்ல நாளைக்கே நூடுல்ஸையும், இடியாப்பத்தையும், கி.நா எபெக்ட்களோடு பரிமாறி பேனா பிடிப்போரை ஓட ஓட விரட்டும் மனுஷர் இவர் ; நானோ நாலு மூ.ச.மீட்டிங்குகளை back to back முடித்து வந்தவனைப் போல டாரான பட்டாப்பட்டியோடு நின்று கொண்டிருக்கிறேன்! இந்த நிலையில் மறுக்கா ஒரு கத்தை காகிதங்களோடு அமர்ந்து, ஜானியோடும், கமிஷனர் போர்டனோடும் உலா போனால் - மிச்சம் மீதியிருந்த பட்டாப்பட்டிக்கும் ஆபத்தாகிப் போகும்; அப்புறமாய் தலீவரின் வேப்பிலை ஜாக்கியைத் தான் இரவல் வாங்க வேண்டியிருக்குமென்றுபட்டது! தலீவரும் அதை எந்தக் கொடியில் தொங்கப் போட்டிருப்பாரோ - தெரியாதென்பதால் இந்த வம்பே வோணாம்; மருவாதியாக பேப்பரின்றி, பேனாவின்றி voice recorder-ல் மொழிபெயர்ப்பைப் போட்டுத் தந்து விடலாமென்று தீர்மானித்தேன்!
கொஞ்ச காலம் முன்னே இதையெல்லாம் செய்திருந்தேன் தான்; ஆனால், ஏனோ தெரியலை, பேனாக்கள் தரும் அந்த flow குரல் பதிவுகளின் போது கிடைப்பதாக எனக்குத் தென்படவில்லை என்பதால் அந்தப் பாணியைத் தொடர்ந்திருக்கவில்லை! அதிலும் ரெண்டு, மூன்று வரிகள் வரும் இடங்களிலெல்லாம் தடுமாற்றம் ஜாஸ்தியாவது புரியும்! ஆனால், இப்போதோ பேனா பிடிக்க விரல்களுக்குத் தெம்பே இல்லாத நிலையில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு ஜானியோடு ஜெர்மனியில் ரவுண்டடிக்கும் வாய்ப்பானது சால பாகுண்டி! என்று தோன்றியது!
என் யோகத்திற்கு இந்தாண்டின் ஜானி சாகஸமானது comparatively சற்றே ஆக்ஷன் கூடுதலாகவும், வசனங்கள் குறைவாகவும் உள்ளதொரு சாகஸமாய் அமைந்து போயிருந்தது! ஆரம்பமே ஒரு ஆக்ஷன் அதிரடியென்று துவங்க "ஹை... ஜாலி....!'' என்று குஷியானேன்! நமக்குத் தான் ஒரு காபி டபராவை புரட்டி, மைக் ஜாடையில் மூக்குக்கு முன்னே நீட்டினாலும், எதையாச்சும் ஆத்தோ-ஆத்தென்று ஆத்திடும் மேனியா உண்டாச்சே - மொழியாக்கத்தைப் பர பரவென பதிவு பண்ண ஆரம்பித்தேன்! ஆரம்பிக்கும் போது நல்லாவே அமைந்து வந்த டயலாக்குகள் நீளம் கூடக் கூட- வக்கீல் வண்டு முருகனின் வாதங்களைப் போல கச்சா முச்சாவாவதை உணர முடிந்தது! 'இது என்னடா மருதக்காரனுக்கு வந்த சோதனை?' என்றபடிக்கே ஒரு ப்ரேக் விட்ட பின்னே தொடர்ந்தேன்! சிறுகச் சிறுக எஞ்சின் சூடேற இம்முறை flow தேவலாமென்று தோன்றியது! கதை நெடுக ஜானி ஒரு மஞ்சள் நிற ஸ்போர்ட்ஸ் காரில் சீறிச் செல்வார்! அதே பாணியில் நம்ம குரல் பதிவும் ஓட்டமெடுக்க அண்ணாச்சி செம ஹேப்பி! காலைப் பொழுது கூட ஓடியிராது - நெருக்கி 40 பக்கங்களை முடித்திருந்தேன்! சாப்பாட்டு மேஜைக்கு மதியம் போன போது மூணே நாட்களில் ஒரு மேம்பாலத்தைக் கட்டி முடித்தவனைப் போலான கெத்து எனக்குள் குடியேறியிருந்தது! ஒரு மேதாவிக்கேற்ற பெசல் ஐட்டமாய் ஏதாச்சும் தட்டுப்படுகிறதா? என்று பார்த்தால் - புளியோதரையும், தொட்டுக்க பசை போலான ஏதோவொரு வஸ்துவும் மாத்திரமே பல்லிளித்தன! அதுவே ஒரு குறியீடென நான் சுதாரித்திருக்க வேணும் தான்- ஆனால், நாம தான் ஒரே சிட்டிங்கில் நாற்பதைக் கடந்த சூப்பர்மேன் அவதாரில் இருந்தோமே?! புளியோதரையை விழுங்கிவிட்டு, விட்ட இடத்திலிருந்து குரல் பதிவைத் தொடரப் போயாச்சு!
எஞ்சியிருந்த நாலைந்து பக்கங்களைக் கையிலேந்தும் போது தான் புரிந்தது- மேஜை மீதான புளிசாதம், காத்திருந்த ஏழரைகளுக்கு ஒரு முன்னோடி ; ஒரு குறியீடு என்பது! எனது ஆர்வக்கோளாறில் ஜானி கதைகளில் ஒரு அடிப்படை விதியினை மறந்தே போயிருந்தேன் என்பது உறைத்தது !! சின்ன வயசில் கமர்கட் வாங்கித் தின்றது முதலாய், பெரியவனாகி வில்லத்தனங்கள் செய்வதற்கான காரணம் வரையிலான சகல தகவல்களையும் வில்லன்ஸ் + போலீஸ்கார்ஸ் போட்டுத் தாக்குவதை 'ஏக் தம்மில் க்ளைமேக்ஸ் பக்கங்களுக்குள் திணித்திருப்பார்களே என்ற உண்மையினையே மறந்திருந்தேன் !! And என் கையில் எஞ்சி நின்றவையோ க்ளைமேக்ஸ் pages மட்டுமே! உள்ளுக்குள் புகுந்தால் - பக்கம் 9-ல் எவனொவொரு மஞ்ச மாக்கான் பேசிய வசனத்துக்கு சம்பந்தம் வருகிறது ; பக்கம் 16-ல் எழுதிய வரிகளுக்குத் தொடர்பு இங்கே இருப்பது புரிகிறது ; அதுவரை "தேமே' என்று வந்து போய்க்கிட்டிருந்த அழகான பாப்பாவுக்கு முக்கிய பங்கு இருப்பது புரிகிறது! 'ஆத்தீ..' என்றபடிக்கே சகலத்தையும் உள்ளடக்கி க்ளைமாக்ஸ் பக்கங்களுக்கு மொழியாக்கத்தைப் பதிவு பண்ண முயற்சித்தால்.... "ஆங்... இப்போ நான் என்ற சொல்றது...?'' என்று நாக்கு பிறழ்கிறது! வந்து விழும் வரிகளோ தூர்தர்ஷன் தமிழாக்கத் தரத்தில் தவண்டு செல்கின்றன! கதையோ முழு வீச்சில் அந்த இறுதிப் பக்கங்களில் முடிச்சவிழ்ந்து செல்கிறது !
அதைப் படிக்கப் படிக்கத் தான் நான் "புளியோதரைக்கு முன்'' செய்த குரல் பதிவுகளில் விட்டிருந்த ஒரு நூறு ஓட்டைகள் புலனாகின! பேப்பரில் எழுதியிருந்தால் "பச்சக்'' என பின்னே புரட்டி, அடித்துவிட்டு அங்கேயே சிகப்பில் மாற்றி எழுதியிருக்கலாம்! ஆனால், நம்மளுக்கோ இந்தவாட்டி நவீன வழிமுறையாச்சே?! பிழையிருந்த பக்கங்களின் ரெக்கார்டிங்குக்குப் போய் அவற்றை delete பண்ணிவிட்டு, புதுசாய் பதிவு செய்ய முயற்சிக்கத் தொடங்கினால், ஆரம்பத்தில் செட் ஆகியிருந்த வரிகளோ இம்முறை இடக்கு பண்ண ஆரம்பிக்கின்றன ! முன்னே போனால், உதைக்குது.. பின்னே போனால் குத்துது என்று பேய்முழி முழிக்காத குறை தான்!
And பேசுறாங்க... பேசுறாங்க... கதையின் வில்லன் ; போல்ஸ்கார் ; ஜானி- என அத்தினி பேரும் இறுதியில் பேசித் தள்ளுகிறார்கள்! இதுக்கு மேலேயும் நவீனமாய் குரல் கொடுக்கிறேன் பேர்வழி என நான் முயற்சித்தால் சில்லுமூக்கு சிதறுகாயாகிடும் என்பது புரிந்தது! அப்புறமென்ன- "எட்றா பேனாவை; எழுதுறா க்ளைமேக்ஸை" தான்! ஆங்காங்கே தொங்கல்களில் விட்டிருந்த முடிச்சுக்களையெல்லாம் கதாசிரியர் வழக்கம் போல க்ளைமேக்ஸில் லாவகமாய் அவிழ்க்கும் அழகை ரசித்தபடிக்கே எழுதிக் கொண்டே போனேன்! சகலத்தையும் முடித்த பிற்பாடு மைதீனிடம் ஒப்படைக்க, மறுநாளே நம்மாட்கள் DTP முடித்து திருப்பித் தந்துவிட்டார்கள்! கதையினை முழுசாய் வாசித்த போது, "புளிசாதத்துக்கு முன்'' & "புளிசாதத்துக்குப் பின்'' என்ற பாகுபாடு ஸ்பஷ்டமாய் தெரிவது போல்பட்டது! "கிழிஞ்சது போ'' என மறுக்கா பட்டி- டிங்கரிங் பார்த்த பின்பே அச்சுக்குப் போக அனுமதித்தேன்! And வியாழனன்று அச்சும் ஆச்சு! So நவீனத்தை அரவணைக்கும் ஆர்வத்தில் சிலபல முன்பற்களைப் பெயர்த்துக் கொண்ட அனுபவத்தோடே அடுத்த குதிரையினை நோக்கித் தாவினேன்! அதுவோ ஒரு கி.நா!
பொதுவாய் காமிக்ஸ் ரசிப்போரில் இரண்டு ரகங்களுண்டு!
# 1: கதையே பிரதானம்; சித்திரங்கள் சைடுக்கு! என்ற ரீதியில் பரபரவென படித்துச் செல்வோர்!
# 2: ஒவ்வொரு ப்ரேமிலும் ஓவியர் எதையேனும் சொல்ல முனைந்துள்ளாரா? என்ற கேள்வியோடே நிதானமாய் ரசித்து நகர்ந்திடுவோர்!
இதனில் நாம் எந்த ரகமாக இருந்தாலும் சரி- இந்த ஒற்றை ஆல்பத்துக்காவது ஒட்டுமொத்தமாய் ரகம் # 2-ல் ஐக்கியமாகிடல் அவசியமென்பேன்! Becos ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு கட்டத்திலும் சித்திரங்களில் புதைந்து கிடக்கும் தகவல்களை எழுத்தாக்க முயற்சித்தால் ஒரு முழுநீள நாவல் தேவையாகிடலாம்! உயிரைக் கொடுத்து இழைத்து, இழைத்துப் பணி செய்துள்ளார் மனுஷன்! அந்தச் சித்திரங்களை highlight செய்திடவே இம்முறை அந்த மெகா சைஸில் பயணிக்கவிருக்கிறோம்!
கதை நெடுக ஒரு மென்சோகம் இழையோடுவதை மறுக்க இயலாது! எல்லாமே நிர்மூலமாகிப் போனதொரு எதிர்கால உலகில் தங்களுக்கென விடியலைத் தேடிடும் தந்தை - தனயனின் பயணமே இந்தப் "பயணம்!'' And அடைகாக்கும் கோழியாய், உலகமே எதிர்நின்றாலும் தன் பிள்ளையைப் பாதுகாக்க விழையும் அந்தத் தந்தை கேரக்டரே இந்தப் படைப்பின் அச்சாணி! இந்தப் பயணத்தின் முடிவில் வாழ்க்கையின் முழு முதல் நாயகர்களான அத்தனை அப்பாக்களிடமும் ஒரு சன்னமான அதிர்வலைகள் நேராது போயின் ஆச்சர்யம் கொள்வேன்! This is for all the Fathers amongst us!
கதையைப் பொறுத்தவரை "நிஜங்களின் நிசப்தம்'' ரேஞ்சுக்கான அடர்த்தி இங்கே கிடையாது! அங்கே களம் பெரிது; கதை மாந்தர்களும் அதிகம் என்றதால் சம்பவக் கோர்வைகளும் கூடுதலாக இருந்திட சாத்தியப்பட்டது! But அடர்த்தியிலிருக்கும் குறைபாட்டை சித்திர நேர்த்தியில் ஈடுசெய்துள்ளார் Manu Larcenet! So ஒரு பெரும் கலைஞனின் படைப்போடு பயணிக்க வாய்ப்புக் கிட்டியுள்ள இந்த வாரமானது in many ways ஸ்பெஷல் to me! Please don't miss this album folks!
அயல்கிரகத்திலிருந்து புறப்படும் ரெண்டு மீனவர்கள் பிரபஞ்சப் பயணத்தின் போது ஒரு தப்பான லெஃப்ட் எடுக்க (!!😁😁😁) - பூமிக்கு தப்பிதமாய் வந்து சேர்கிறார்கள் - தங்களது மீன்பிடிக்கும் படலத்துக்கென! "பிரபஞ்சப் பஞ்சாங்கம்" ... "சூரிய மண்டலப் பயணம்' என்றெல்லாம் ரவுண்டு கட்டியடிக்கும் கதையில் மாண்ட்ரேக்கையும், நார்தாவையும் தூண்டில் போட்டுப் பிடித்து விடுகின்றனர் அந்த மீனவ சதுர மண்டையன்கள்! தொடர்ந்திடும் ரகளைகள் காதில் மீட்டர் கணக்கில் பூச்சுற்றினாலும், செமத்தியான ஜாலி ரகம்! கருணையானந்தம் அங்கிளின் மொழியாக்கம் இது போலான நேர்கோட்டு க்ளாஸிக் கதைகளில் அழகாய் செட் ஆகிடும் எனும் போது இங்கே எனக்குப் பெரிதாக வேலையும் இருக்கவில்லை! So ஒரு புளிசாதப் படலத்தையும், பயணப் படலத்தையும் முடிப்பதற்கு மத்தியிலான இடைப்பட்ட நேரங்களை மாண்ட்ரேக்கோடு செலவிட முடிந்ததில் செம relief!
And before I sign out- சில தகவல்களும்!
- இன்று (சனி) டெஸ்பாட்ச் done !! வாரயிறுதிக்கு முன்பாகவே இதழ்களை உங்கள் வசம் ஒப்படைக்க விழைந்தோம் தான் - ஆனால், வாரம் முழுக்க "நச நச''வென பெய்து வரும் மழையில், அச்சு + பைண்டிங்கில் சின்னதாய் தாமதம்! So நாளையோ, திங்களன்றோ கூரியர்ஸ் கதவைத் தட்டிடும் !
- ரொம்ப காலத்துக்குப் பின்பாய் இரண்டே இதழ்கள் மட்டுமே உங்களது (ரெகுலர்) சந்தா கூரியரில் இடம்பிடிக்கப் போகின்றன!!
- இம்மாதம் The King's ஸ்பெஷல் - 1 வந்திருக்க வேண்டியது ; ஆனால், ஆன்லைன் மேளாவிற்கும் கணிசமாய் ஆர்டர் செய்திருந்த ஏஜெண்ட்கள் சற்றே மூச்சு விட்டுக் கொள்ள அவகாசமிருந்தால் தேவலாமே என்று மனசுக்குப்பட்டது!
- தவிர இன்னமும் ஜுன் 15-க்கென "பயணமும்'' காத்திருப்பதால் The King's ஸ்பெஷல் - 1 இதழினை ஆகஸ்டுக்கென தள்ளி வைத்துள்ளோம்! ஜூலையில் "The பிளைசி ஸ்பெஷல்" coming : 2 புத்தம் புதிய சாகசங்களோடு !!
- "சாம்பலின் சங்கீதம்'' மொழியாக்கம் நண்பர் கார்த்திகை பாண்டியனின் கைவண்ணத்தில் ஓடிக் கொண்டுள்ளது! அசுரத்தனமான படைப்பிது என்பதால் அவரது பணி முடிந்திட இன்னும் கொஞ்ச அவகாசமெடுக்கும்! மொத்தமும் கைக்கு வந்த பிற்பாடே அதன் ரிலீஸ் மதுரையிலா ? திருச்சியிலா ? சேலத்திலா? என்று தீர்மானித்திட வேண்டி வரும்! நமது பணிகள் முழுமையடைந்த பிற்பாடு படைப்பாளிகளின் approval-ம் அவசியமாகிடும் என்பதால் அதற்கான கால அளவினையும் சேர்த்தே திட்டமிட்டாகணும்!
- கூப்பிடு தொலைவில் காத்திருக்கும் கோவை புத்தகவிழாவுக்கென 2 ஸ்பெஷல் இதழ்களுண்டு! அவற்றுள் ஒன்று இதோ:
- ரிப்போர்ட்டர் ஜானி நம்மோடு 39 ஆண்டுகளாய் பயணித்து வரும் நாயகர் ! இன்னமுமே அவரிடம் நமக்கொரு சுவாரஸ்யம் தொடர்கிறது தானா ? Maybe ஜானி 2.0 பக்கமாய் கொஞ்ச காலத்துக்கு நகர்ந்திட வேணவே வேணாம் தானா ? Given a choice - நான் அங்கே கொஞ்ச காலமாவது உலா வரவே விழைவேன் !! Your thoughts please ?
- ஆன்லைன் மேளாவின் முதல் ரவுண்டிலான 5 புக்ஸ்களை நீங்கள் வாங்கினீர்களா? யெஸ் எனில், அவற்றில் எத்தனையைப் படித்திருப்பீர்கள்?
- "பயணம்'' ஆர்டர் பண்ணியுள்ளீர்களா?
- ஆர்டர் போட்டிருந்தாலும் புக் வெளியான பின்னே படிப்பீர்களா? அல்லது கலெக்ஷனுக்காக மட்டுமேவா?
Bye for now folks... see you around! Have a great weekend!
And புது புக்ஸ் ஆன்லைன் லிஸ்டிங் போட்டாச்சு ; லிங்க் இதோ : https://lion-muthucomics.com/monthly-packs/1341-june-pack-2025.html
ஹாய்
ReplyDeleteவாழ்த்துகள் சகோ
Deleteநன்றி சகோ...
Deleteவாழ்த்துக்கள் அண்ணா
Deleteநன்றி தம்பி...
Deleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteHi
ReplyDeleteMe third. Wow...
Deleteஹைய்யா பர்ஸ்ட்...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteவணக்கம் 🙏🙏
ReplyDeleteவணக்கம் பிரண்ட்ஸ்...
ReplyDeleteவணக்கம்
ReplyDelete9th
ReplyDelete10kulla
ReplyDelete💞😍
ReplyDeleteஆஜர்
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDelete10
ReplyDelete@Edi sir 🥰😘
ReplyDeleteMe in😘🥰
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
ReplyDeleteதிகில் கதைகள் கோவை புத்தக விழா ஸ்பெஷல்
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் சார்
கோவைக்கு தான் என யூகித்து வைத்திருந்தேன்
Deleteஇந்த தடவை கோவை பள்ளி சிறார்களுக்கு திகில் விருந்து காத்துள்ளது
கோவை திகில் திருவிழா 😊😁😁
கடல் முடிந்தால் வந்து விடுகிறேன். இல்லை என்றால் வாங்கி அனுப்புங்க.
Deleteவாங்க வாங்க சகோ
Deleteடெரர் கோவை ஸ்பெஷல் திருவிழாவற்கு வாங்க
Enjoy!!!!
Deleteமாடஸ்டி பயணத்தோடு இணைக்க முடிந்தால் மகிழ்வோம்.மாண்ட்ரக் எந்த மாதம்
ReplyDeleteஜானி அட்டைப்படம் தெறி மாஸ் 🔥🔥🔥
ReplyDeleteஜானியின் பின்னட்டை டிசைன் செம...நம்மில் இந்த மாதிரி புதிது என நினைக்கிறேன், செம 😍😍😍
Deleteநேரில் பார்க்க ஆவலுடன்
2.0. ஜானிக்கு ஆதரவை நல்கிடுங்கள் ப்ரண்ட்ஸ்.
ReplyDelete🙏🙏🙏
ReplyDelete1.ஜானி கண்டிப்பாக தொடரலாம் சார். 2.0 பக்கம் கொஞ்ச காலத்துக்கு வேணாம் ஐயா
ReplyDelete2.MMS மட்டுமே படித்துள்ளேன் ஐயா.
3. பயணம் புக் செய்து விட்டேன்
கண்டிப்பாக புத்தகம் வெளியான பின்னே படிப்பேன்.
4.ஆமாம் கலெக்ஷன்காகவும் தான் சார்.
நன்றி🙏
ஜானி கதைகளில் படங்களும் அருமையாக இருக்கும்.. இக்கதையிலும் படங்களும் ஆஹா ரகம்..
ReplyDeleteவாரக் கடைசியில் அனுப்பினாலே பஞ்சாயத்து தான்,நமக்கு சாமான்யத்தில் கிடைக்காது...
ReplyDeleteமழையினால் கோவை குளிர் தேசமாக மாறி உள்ளதுங்க
ReplyDeleteதிங்கள் கிழமை புத்தகம் நனையாம வரணும்
ஜானி 2.0 வேண்டாம்.
ReplyDeleteஆன்லைன் spl 2 புத்தகம் வாங்கினேன். இரண்டும் படித்து விட்டேன்
1.ஜானியின் சுவராஸ்ய முடிச்சுகள் தொடர்கின்றன...
ReplyDelete2.எல்லா புக்ஸும்(5) வாங்கியாச்சி,எல்லாமே படிச்சாச்சு சார்...
3.யெஸ்,ஆர்டர் போட்டாச்சி...
4.கண்டிப்பாக படிப்பேன்...
பதிவின் தலைப்பு "ஒருபுளிசாதப் படலம்" என்பதற்குப் பதிலாக "ஒரு நாக்குத்தள்ளும் படலம்" என வைத்திருந்தால் கூட பொருத்தமாதான் இருந்திருக்கும் போல...
ReplyDeleteசார்.....புளிசாதம் வரும் முன்னே... நாக்கு தொங்கிடும் தன்னாலே!
Deleteஹி,ஹி,ஓகே சார்...
Deleteகெக்கபிக்கேன்னு 10 நிமிசத்துக்கு சிரிச்சு வச்சுட்டேன் சார்.. 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 குறிப்பா நம்ம தலீவரின் ஒற்றை வேப்பிலை நிஜார் வரிகள் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ReplyDeleteஜாக்கியிலே அந்த டிசைனை அறிமுகம் பண்ண, தலீவரை மாடலா கூப்ட்ருக்காங்களாம் 💪💪....
Delete"காற்றோட்ட range " என்று பெயராம்!
சார் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Delete😂😂😂😂😂
Deleteதலீவர் மாடலாக வந்ததால் சேல்ஸ் அதிகரிப்பு என தகவல்கள் வந்துள்ளன
Deleteஉங்களுக்கு எங்க ஒரு வேபிள்ளை தலைவரை வம்புக்கு இழுக்க வில்லை என்றால் தூக்கம் வராதா சார் 😊
Deleteதலீவர் மாடலாக வந்ததால் சேல்ஸ் அதிகரிப்பு என தகவல்கள் வந்துள்ளன
Delete######
ஓஹோ...
ஆசிரியரே இரட்டை வேட்டையர்கள் மாக்ஸி சைசில் தருவதற்கு பதிலாக டெக்ஸ் சைஸ் தந்தால் வசதியாகவும் இருக்கும் ஒரு குண்டு புத்தகம் படித்த உற்சாகம் இருக்கும்
ReplyDeleteஎனக்கும் அந்த ஆசை தான் 😊
DeleteElla bookuk.vangi oru thadvayavathu padithu vittu tex mattum rendu thadavai padippathi vazhakkam
ReplyDeleteஅருமை சகோ
DeleteThis comment has been removed by the author.
DeletePresent sir
ReplyDeleteவிஜயன் சார், அட்டகாசமான பதிவு!
ReplyDeleteஅடுத்த மாதம் செம விருந்து எங்களுக்கு!
இந்த வருட ஆன்லைன் புத்தகங்கள் அனைத்தும் அருமை! சாகோர் தவிர அனைவரையும் படித்துவிட்டேன்! சாகோர் நாளை படித்துவிடுவேன் சார்!
பதிவில் இருவேறு font உபயோகபடுத்தி உள்ளது போல உள்ளது சார்.
பயணம் அட்டை படம் மிரட்டல் ரகம்! அட்டைப்படம் கண்டிப்பாக பலரை கவர்ந்து இந்த புத்தகத்தை வாங்க செய்யும் விதத்தில் உள்ளது சார்.
ReplyDeleteசெம சித்திர விருந்து கிடைக்கும் போல தெரிகிறது சார். ஆவலுடன் :-)
Yes. செம்ம ஆவலுடன்.
Deleteபுளி சாதம் எனது ஃபேவரைட் சார் 😊
ReplyDeleteவந்துட்டேன்...
ReplyDeleteபடிச்சிட்டு வாரேன்
ReplyDelete// "பயணம்'' ஆர்டர் பண்ணியுள்ளீர்களா? //
ReplyDeleteஆச்சு ஆச்சு சார்
வணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteகோவை புத்தக விழாவில் Special 2 என்ன சார்? இரட்டை வேட்டையர்?
ReplyDelete1. ரிப்போர்ட்டர் ஜானி நம்மோடு 39 ஆண்டுகளாய் பயணித்து வரும் நாயகர் ! இன்னமுமே அவரிடம் நமக்கொரு சுவாரஸ்யம் தொடர்கிறது தானா ? Maybe ஜானி 2.0 பக்கமாய் கொஞ்ச காலத்துக்கு நகர்ந்திட வேணவே வேணாம் தானா ? Given a choice - நான் அங்கே கொஞ்ச காலமாவது உலா வரவே விழைவேன் !! Your thoughts please ?
ReplyDeleteஎனக்கு ஜானி முன்பு போல ரசிப்பது இல்லை சார். ஜானி 2.0 வுக்கு ஒரு வாய்ப்பு தாராளமாக தரலாம்.
ஆன்லைன் மேளாவின் முதல் ரவுண்டிலான 5 புக்ஸ்களை நீங்கள் வாங்கினீர்களா? யெஸ் எனில், அவற்றில் எத்தனையைப் படித்திருப்பீர்கள்?
5ம் அனைத்தும் படித்து விட்டேன்.
"பயணம்'' ஆர்டர் பண்ணியுள்ளீர்களா?
ஆர்டர் போட்டிருந்தாலும் புக் வெளியான பின்னே படிப்பீர்களா? அல்லது கலெக்ஷனுக்காக மட்டுமேவா?
ஆர்டர் போட்டாச்சு, கண்டிப்பா படிப்பேன். நான் வாங்கும் அனைத்து புத்தகங்களையும் கண்டிப்பாக படித்து விடுவேன்.
புத்தகங்கள் கிளம்பி விட்டது என்ற பதிவு எப்போதுமே ஒரு ஸ்பெசல் பதிவு தான்.
ReplyDeleteஆம்...
Deleteஇந்த முறை 2 புத்தகம் ஆனால் 15ஆம் தேதி மூன்றாவது புத்தகம். I'm waiting
ReplyDeleteஆமாங்க சகோ 😊😁
DeleteHi editor sir! Vanakam! On reporter Johnny books , my option is to continue with him . My habit these days is that if I read any hero story and I become fan of them .i try to read their old stories .
ReplyDeleteBut mentioning that , Johnny , captain prince and kamanche - really loved their books sir - please continue these hero’s books sir. Bought all online mela books and payanam as well . Will definitely read payanam . Not sure when I will 😊
ReplyDelete1. ஸ்டெல்லாவின் ஜானி தான் அலர்ஜியே தவிர ரிப்போர்ட்டர் ஜானி அல்ல.-1.0 ஆக இருந்தாலும் சரி 2.0 ஆக இருந்தாலும் சரி. எதுவாக இருந்தாலும் சரி வரவேற்கப்படுகிறது. அடேங்கப்பா 39 வருடம் ஆகிவிட்டதா. ஜான் முழம், காதம் யோசனை என பல மடங்கு தூரம் பயணித்து விட்டதால் கிமீனி என கூப்பிடலாம் போல.
2. மும்பை -ஆபரேஷன்- இந்த தேவைகள் இல்லாமலே திரௌபதியாக மாறி பஞ்ச பாண்டவர்களையும் அரவணைத்தாகிவிட்டது. எதுவும் 'ஸ்ரீ'கி வைக்கவில்லை. 😁
3. பயணம் ஆர்டர் செய்தாகிவிட்டது. அணுசக்தி நாடுகள் எல்லாம் அடித்துக் கொள்வதைப் பார்த்தால் நிஜ பயணமே செய்ய வேண்டி வரும் போல் இருக்கிறது.
4. 25 வயது வாலிபன் 22 வயது பெண்ணை மணந்து கொள்வது
நல்ல சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக மட்டும் தானா?
// எதுவும் 'ஸ்ரீ'கி வைக்கவில்லை. 😁 //
Deleteசெம குத்து...😄😄😄
சகோ 😂😂😂
Delete55th
ReplyDelete1. ஜானிக்கு ஒரு ஓய்வு
ReplyDelete2. வாங்கியாச்சு. கைக்கு வரவில்லை. வந்த பிறகு படிக்க வேண்டும்.
3. பயணம் ஆர்டர் போட்டாச்சு.
4. கைக்கு கிடைச்ச பிறகு தான் வாசிக்கனும்.
சூப்பர் சார்...காலை வரேன்
ReplyDelete1. Rico Chet 2.0 பக்கம் நகர்தல் சாலச் சிறந்தது சார்
ReplyDelete2. ஐந்தில் ஒற்றைக் கண்ணரைத் தவிர அனைத்தும் முடித்தாயிற்று...
3. ஆர்டர் டன்
4. ஆவலுடன் waiting... For READING..!!!
Hi..
ReplyDeleteஅருமையான பதிவு சார்...
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteதான்
ReplyDeleteஇல்லை
இல்லை
NA
1. ஜானி 1.0/2.0 எதுவானாலும் சரிதான்.
ReplyDelete2. ஐந்தும் படிச்சாச்சுங்க சார்...
3,4. யெஸ்!!
//ஜூலையில் "The பிளைசி ஸ்பெஷல்" coming : 2 புத்தம் புதிய சாகசங்களோடு !!//
ReplyDeleteமீகுந்த ஆவலுடன் காத்திருப்பு
1. ஜானி 2.0 -க்கு பச்சை கொடி
ReplyDelete2. டெக்ஸ் தவிர்த்து மற்ற கதைகள் படித்தாச்சு
3. விமர்சன் போட்டி பரிசு என்பதால், பயணம் புத்தகமும் அதில் அடக்கம், ஜூன் 15 இதன் வரவை நோக்கி
4. சித்திரங்களை ரசித்திட ஆவலுடன் தயார்
1. ஜானி "கிளாசிக்" கண்டிப்பாக வேண்டும். சித்திரம், கலரிங் மற்றும் பர பர கதையோட்டம் என இந்த வரிசை எங்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்து விட்டது. 2.0 வை சேர்க்க முடியவில்லை
ReplyDeleteசாம்பலின் சங்கீதம் தள்ளி போகிறது, சரிங்க சார்
ReplyDeleteஅப்போ ஈரோடு ஸ்பெஷல் என்ன புத்தகங்கள் சார்
King's Special ஏற்கனவே முடிவான ஒன்று, அதனை ஈரோடு ஸ்பெஷலாக கருத முடியாதுங்க, சார்
ஈரோடு ஸ்பெஷலாக சிறப்பு புத்தகம் எங்களுக்கு வேண்டும்
முதல் முறையாக மகளிர் அணித் தலைவியின் கருத்துடன் ஒத்துப் போகிறேன். இதுக்கு முன்னாடி நடந்திருக்கலாம். ஆனா இதான் ஃபஸ்ட்டு. கண்டிப்பா ஈரோட்டுக்குன்னு தனியா ஒரு ஈரோடு விஜய் சைஸ் ஸ்பெசல் வேணும்.
Delete//கண்டிப்பா ஈரோட்டுக்குன்னு தனியா ஒரு ஈரோடு விஜய் சைஸ் ஸ்பெசல் வேணும்.//
Delete+9
கிங் ஸ்பெஷல் கிளாசிக் தடம் தானே... அதை ஆகஸ்ட் கணக்கில சேர்க்க முடியாது... வேற வேணும்... பெருசா... புதுசா...
Deleteஈரோடு விஜய் சைஸ் ஸ்பெஷலா?!! மொதல்ல ஈரோடு விஜயின் தொப்பை சைஸுக்காவது ஸ்பெஷல் போடமுடியுமா பாருங்கப்பு.. பூ.. பெ!!😏
Deleteமஹீ சொல்றது மாதிரி Slim sizeல வேண்டாம்... நல்லா பெரிய புக்கா... நிறைய பக்கங்களோட போட்டுருங்க சார்...
Deleteசார் கோவை புத்தக விழாவுக்கு 2 புத்தகம் என்றால் ஈரோட்டுக்கு குறைந்தது 4 புத்தகமாவது வேண்டும். போன வருடம் தான் எதும் நடக்கல இந்த வருடம் கொஞ்சம் கிராண்ட் ஆக செய்யலாம் சார்.
Delete//ஈரோடு ஸ்பெஷலாக சிறப்பு புத்தகம் எங்களுக்கு வேண்டும்// +8888
Delete//கண்டிப்பா ஈரோட்டுக்குன்னு தனியா ஒரு ஈரோடு விஜய் சைஸ் ஸ்பெசல் வேணும்.//
+8888 8888
//ஈரோடு விஜய் சைஸ் ஸ்பெஷலா?!! மொதல்ல ஈரோடு விஜயின் தொப்பை சைஸுக்காவது ஸ்பெஷல் போடமுடியுமா பாருங்கப்பு.. பூ.. பெ!!😏//
Deleteஇளவரசர் சவால் விடுகிறார்
சவாலை ஏற்றுக் கொண்டு, குண்டு புத்தகத்திற்கு கோரிக்கை டபுளாக வைக்கிறோம்
வேண்டும் வேண்டும் ஈரோடு ஸ்பெஷல் வேண்டும் வேண்டும்
Deleteவழிமொழிகிறேன்...
Delete//வேண்டும் வேண்டும் ஈரோடு ஸ்பெஷல் வேண்டும் வேண்டும்//
Deleteசென்னையிருந்தும் குரல் வலுவாக வந்துள்ளதுங்க
ஈரோடு ஸ்பெஷல் கண்டிப்பாக வேண்டும். எவ்வளவு என்று சொன்னால் பணம் அனுப்பி வைக்க வசதியாக இருக்கும் 😊
Deleteஇந்த வருடம் அவர் போடாத கூக்லியா, ஈரோடு மட்டும் விதிவிலக்கா?சிறப்பா, வித்தியாசமா, 2025ல இது வரை சார் எல்லா பந்துகளையும் அடிச்சு வெளுத்துருக்கார். ஈரோட்டுல மட்டும் விட்டுடுவாரா? இருக்கு பெருசா ஏதோ ஒன்னு இருக்கு.. காத்திருக்கிறேன் சார்.
Deleteஈரோடு ஸ்பெசல் கண்டிப்பாக தேவை. தேவை. தேவை.
Deleteகுறைந்தது மூணு புக். அதான்.
புலம்பல் படலத்தை கூட புன்னகை படலமாக மாற்ற தங்களால் தான் முடியும் சார்...:-)
ReplyDelete+ 1 தல
Deleteஜானி 2.0 ன் கதையம்சம் நல்லாவே இருந்தாலும் ஏனோ மனசு முழுசா ஏத்துக்கலை. யோசிச்சு பார்த்தத்துல காரணங்கள் இரண்டு :
ReplyDelete1. ஜானிக்கு அழகே அந்த ஹேர் ஸ்டைல் தான். 2.0-ல அது மிஸ்ஸிங். தோற்றமும் ஜானி மாதிரியே தெரியலன்றது ஒரு குறை.
2. ஜானி 2.O முதல் கதையில நாடீன் ஜானியுடன் அப்படி பப்பி ஷேமா இருந்திருக்கக் கூடாது. மனசு இன்னும் ஏத்துக்க மறுக்குது. கிளாசிக் வரிசையில் ஜானிக்கும் நாடினுக்குமான உறவை பட்டும்-படாமலும் ரொம்ப டீசண்டா காமிச்சிருப்பாங்க.
Verdict : வந்தாலும் சரிதே.. வராட்டாலும் சரிதே!😌
மனதில் இருப்பதை சரியா சொல்லிட்டீங்க
Deleteஆமாங்க இளவரசரே
இந்த காரணங்களால் ஏற்று கொள்ள இயலவில்லை
சகோ.. 🤝🤝😇💐
Deleteபாயிண்ட் 2 மிகவும் சரி 😊 2k கிட்ஸ் ஆன இளவரசரே சொல்லி விட்டார் 😀
DeletePfB.. 😁😁😁
Deleteஜானியை பொறுத்தவரை ஓல்ட் இஸ் கோல்ட் என்று தான் இது வரை எனக்கு தோன்றுகிறது சார்...எனவே என்னுடைய ஆதரவு பழைய ஜானிக்கே....
ReplyDeleteஅதன் சித்திர தரங்களும்...சஸ்பென்ஸ் சாகஸமும் ஓலட் ஜானி க்கு ஜானி 2.0 அருகில் கூட வரமுடியாது சார்...:-)
1.ஜானியின் சுவராஸ்ய முடிச்சுகள் தொடர்கின்றன...
ReplyDelete2.எல்லா புக்ஸும்(5) வாங்கியாச்சி, except Maayavi mama (only for collection) படிச்சாச்சு சார்...
3.யெஸ்,ஆர்டர் போட்டாச்சி...
4.கண்டிப்பாக படிப்பேன்...
ஆன்லைன் மேளா இதழ்கள் காமிக்ஸ் கனவுலக விமர்சன போட்டியில் வென்று பரிசாக கிடைத்து விட்டது சார்...பயணமும் உட்பட...
ReplyDeleteஇதுவரை வாங்கிய ஐந்து இதழ்களையும் வாசித்து இம்மாத இதழுக்காக வெயிட்டிங் சார்..
பயணமும் கையில் கிடைத்தவுடன் அதனுடன் எனது பயணமும் உடனடியாக தொடங்கி விடும் சார்..
பயணத்துக்கு வே. ஜா. வா சார்?
Deleteமீண்டும் திகில்...
ReplyDeleteஆவலுடன்...ஆர்வமுடன் வெயிட்டிங் சார்...
இரட்டை வேட்டையர் சாகஸம்..நார்மல் டெக்ஸ் அளவில் வெளியிட முடியுமா சார்...தாங்கள் மனது வைத்தால்....:-)
ReplyDeleteவாசிக்கவும் ..இதழை பார்க்கும் பொழுது எங்கள் இளவரசரில் பாதி போலாவது இருக்கும்...மேக்ஸி என்றால் என்னில் பாதி போலிருக்கும் ரசிக்கவும் சுகப்படாது சார்...:-)
அந்த புத்தக சைஸ் எல்லாம் இளவரசரின் காது மடல் சைசுக்கு கூட தேறாதுங்க தலைவரே..
Delete// இரட்டை வேட்டையர் சாகஸம்..நார்மல் டெக்ஸ் அளவில் வெளியிட முடியுமா சார்...தாங்கள் மனது வைத்தால்....:-) //
Deleteகிளாசிக் மறு பதிப்புகளை டெக்ஸ் அளவில் கொடுங்கள் சார். இவைகள் தொடர்ந்து மேக்ஸி சைசில் வருவதன் காரணம் எங்களுக்கு தெரியவில்லை.
இனிவரும் காலம்களில் இவைகளை எங்களுக்காக டெக்ஸ் சைசில் கொடுத்தால் படிக்க பாதுகாக்க நன்றாக இருக்கும் சார்.
எனக்கு மேக்ஸி சைஸ் டின்டின் தவிர பிற கதைகளுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. ஆனால் இவைகள் படிக்காத கதைகள் என்பதால் எனக்கு விருப்பம் இல்லாத மேக்ஸி சைசில் வந்தாலும் வாங்கி படிக்கிறேன் 😊
நிறைய முறை பேசியும் / விளக்கியும் உள்ள subject இது!
Deleteஒரிஜினல்கள் இருப்பது MAXI சைசில்! அதே போல சித்திர panel அமைப்புகள் துளியும் சீராய் அல்லாது இஷ்டத்துக்கொரு சைசில் இருக்கும். முன்னெல்லாம் ஆர்ட்டிஸ்ட்கள் பணியாற்றும் போது அவற்றை வெட்டி, ஒட்டி, ஓரம் சாரம்களை நீட்டித்துத் தருவார்கள் - நாம் நினைக்கும் சைசில் எல்லாம் போட முடியும். But இன்று அந்த சாத்தியங்கள் கிடையாதென்பதால் ஒரிஜினலின் சைசிலேயே பண்ணி வருகிறோம்!
MAXI வேண்டாமெனில் அதையே லக்கி லூக் சைசில் போடலாம் - but படங்களும், எழுத்துக்களும் சின்னதாய் உள்ளன என்ற பஞ்சாயத்தை கிளப்பாத வரை சரி தான்!
லக்கி சைஸ் ஓகே சார் எனக்கு 😊
Deleteலக்கி லூக் சைஸ் ஓகே சார்
Deleteஜானியின் அட்டைப்படமும்...பயணத்தின் அட்டைப்படமும் வெகு அழகு சார்...
ReplyDeleteஜானி 2.0 இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றவாறு உள்ளதுங்க
ReplyDeleteபழைய ஜானியை விட புது ஜானியையே விரும்பக்கூடும்
புத்தக விழாக்களில் இன்றைய இளைஞர்களுக்கு டிடெக்டிவ், இன்வெஸ்டிகஷன் ஜானரை தேடி வருபவர்களுக்கு ஜானி 2.0-யை பரிந்துரைத்திடலாங்க, சார்
இனிவரும் காலங்களில் ஈரோடு புத்தக காமிக்ஸ் வாசகர்கள் சந்திப்பு சொன்ன நேரத்தில் ஆரம்பித்து அதனை மதிய உணவு நேரத்தில் முடிக்கும் விதத்தில் திட்டமிட்டால் நன்றாக இருக்கும். கடந்த வருட விழா…. சாரி சார்.
ReplyDeleteமரத்தடி மீட்டிங்குக்கு மதிய உணவே அவசியம் ஆகாதே சார்? அது சாயந்திரத்துக்கு மட்டும் தானே?
Delete2023 - முத்து 50
Delete2024 - லயன் 40
அதன் பொருட்டே அந்த ஆடம்பரங்கள் சார்! ஒவ்வொரு ஆண்டும் அதே லெவலில் செய்தல் பட்ஜெட்டுக்கு ஒவ்வாதே!
ஜானி 2.0 ஒரே ஒரு சூப்பரான கதையை தேர்ந்தெடுத்து ஒரு சான்ஸ் கொடுத்து பார்ப்போம் சார்.
ReplyDeleteஅனைத்தும் வாங்கியாச்சு சார், படிச்சாச்சு சார், தளத்தில் விமர்சனமும் பண்ணியாச்சு சார்.
"பயணம்'' ஆர்டர் போட்டாச்சு சார். தந்தையர் தினத்தை கொண்டாடிடுவோம் சார்
கலெக்ஷனுக்கு புத்தகம் வாங்கும் பழக்கம் இல்லை சார், வாசிக்கணும், படைப்பாளிகளுக்கு மரியாதை தரும் நிமித்தமாக ஒரு அலசி அலசி பதிவும் போட்டுடனும். இது தான் என் வாடிக்கை சார்
இந்த அலசல் வித்தியாசமாக கையாளப்பட்டுள்ளது. இந்த பத்திக்கு பிறகு வரும் அனைத்தும் எழுதியது இந்தக் கதையின் மொழிபெயர்ப்பாளரும், கதாசிரியரும். அங்கொன்றும் இங்கொன்றுமாக தெளித்து விடப்பட்டிருந்த வாசகங்களை எடிட் செய்து கோர்த்தது மட்டுமே நான் செய்த வேலை. கடைசி வரி மட்டுமே நான் எழுதியது. எப்படி இருக்குதுன்னு சொல்லுங்க நண்பர்களே.
ReplyDelete*பனியில் ஒரு குருதிப்புனல்*
காலன் ருத்ர தாண்டவமாடிய அந்தப் பனிக்காலத்துக் கொடுமைகளை நறுக்கென்று விளக்க வார்த்தைகளைத் தேடுகிறேன்.
யுத்தம் எனும் பெரும் பைத்தியகாரத்தனத்தில் நாங்கள் எல்லோருமே சிறு அங்கங்கள் தான் என்றாலும், சுவாதீனத்தை இறுகப் பிடித்து திரிந்தோம்
அந்தப் பனிப்பிராந்தியத்தில் எங்கே போகிறோமென்றே தெரியாத நிலையிலேயும் எதை தேடி போனீர்களோ? எதை எதிர்பார்த்து?
கேள்விகள் இரண்டாக இருந்தாலும்,
பதில் ஒன்றே தான்
எங்களை ஈர்த்தது அந்த வெப்பம்
தொலைவிலிருந்து வெப்பம் எங்களை எட்டித்தொட்ட போதிலும் எங்களை சூடேற்றவில்லையோ?
கோடானு கோடி காலைகளில் உதயமாகிச் சலித்துப் போன சூரியன் இன்று மல்லாக்க விழுந்து விட்டதோ?
சுற்றிலும் வியாபித்து நின்ற பனியின் நிசப்தத்தில் அலைமோதிய கேள்விகள் அனைத்துமே உறைந்து போயினவோ என்னவோ
மரணமும் ஜீவிதமும் ஒரே புள்ளியில் சங்கமிப்பது சாத்தியமாகுமா?
நரகம் அங்கே காத்திருந்தது என்று சொல்ல ஆசை தான் ஆனால் நரகம் என்ற வார்த்தை ரொம்பவே சாந்தமானதாய்த் தோன்றிடுமே என்ற நெருடல் தான்.
நெருப்பின் வெம்மையில் சூடுபட்டவர்களுக்கு அடுப்பங்கரையில் அதற்கு மேலும் ஜோலி ஏது?
உறைந்து கிடந்தது போலான காலம் நகரத் தொடங்கியிருந்தது. இம்முறையே மின்னல் கதியில்.
உயிர் பிழைக்கும் வேட்கை எங்கள் கால்களுக்கு றெக்கைகள் தந்தன.
சில நேரங்களில் நமது இலட்சியங்களை எண்ணி நாமே மிரள்வதுண்டு.அதே சமயம் நம்மை மிரட்டுவதை அடைவதே நம் லட்சியமாகிடவும் வாய்ப்புண்டு.
கவிதைகளும் ரம்யமான வரிகளும் வாழ்க்கையின் வசந்த அத்தியாயங்களின் தோழமைகள்! நாங்கள் இருந்த இருந்த குளிர்காலத்தில் எனும் பொது என் வர்ணனையே ஒரு முரனாகத் தோன்றும் தான்
முரண்களுடன் ஐக்கியமானது மனித இயல்பு.
வாழ்க்கையே ரொம்ப முரணானது மட்டுமல்ல ரொம்பவே மோசமான கதை சொல்லியுமே! அது உருவாக்கும் ஒவ்வொரு கதையுமே மரணம் என்ற முற்றுப்புள்ளியில் தானே நிறைவுறுகிறது?
இது ஒரு கதையாக ஏதேனும் புக்கில் பிரசுரமானால் வாசகன் சட்டையைக் கிழித்துக் கொள்வான். சகலத்தையும் விளக்கக் கோரி என் சட்டையையும் பிடிக்கத் தவற மாட்டான். அதே சமயம் எந்த புக்கைக் கையிலெடுக்காது தெறித்து ஓடவும் செய்வான். கதையின் ஒவ்வொரு முடிச்சுக்கும் ஒவ்வொரு திருப்பத்துக்கும் ஒரு நியாயமான விடை இல்லாது போனால், தான் ஏமாற்றப்பட்டதாய் நினைப்பது சராசரியான வாசக மனம்.
அதே சமயம் ஆதி முதல் அந்தம் வரை ஒரு வாசகனுக்கு சகலமும் விளக்கப் பட்டிருந்தாலுமே அவன் எரிச்சலைடத்தே இயல்பு. சீக்கிரமே சலிப்புற்றுப் போவான். அந்தச் சலிப்பு ஒரு எழுத்தாளனின் ஜென்ம விரோதி.
விளக்கங்கள் சுலபமாய் இருக்கும் பட்சத்தில் தானொரு பச்சைக் குழந்தையாய்க் கையாளப்படுவதாய் அவனுக்குத் தோன்றும்! அதே சமயம் முடிச்சுகள் ரொம்பவே அடர்த்தியாய் இருந்திடும் பொது கதையோட்டத்தின் மீதான பிடிமானம் மட்டுமன்றி அவனது பொறுமையுமே காணாது போயிருக்கும்.
சகலத்துக்கும் முடிவில் காத்திருப்பது என்னவோ? ஒன்றுமேயில்லை தான்! வெறுமை... பூஜ்யம்.. சூன்யம் தான் காத்திருக்கிறது.
*ஆனால் அதையும் ரசிக்கத் தான் ரசனைகளில் முதிர்ந்த லயன் முத்து காமிக்ஸ் வாசகர்கள் இருக்கிறோமே...*
இந்த ஆல்பத்துக்கென நிரம்ப மெனெக்கெட்டது மட்டும் நினைவில் உள்ளது சார் - but சுரீர்.. சுரீர் என்ற அந்த வரிகளெல்லாம் நீங்கள் இங்கே போட்ட பிறகே நினைவுக்கு வருகின்றன 🥹🥹
DeleteJust awesome sir. மறுவாசிப்பை செய்த பொழுது இந்த வசனங்களே இந்தக் கதையின் விமர்சனம் போலிருந்தது. தொகுத்து போட்டுட்டேன்.. இன்னும் மெனக்கெட்டிருந்தா இன்னும் ஒரு பத்து வசனத்தை இதில் சேர்த்திருக்கலாம்..
DeleteBut அவர்களின் அந்த அலசலில் ஒற்றை வரி கூட வசனங்களைப் பற்றி இருக்கலை - கவனிச்சீங்களா சார்? 😀😀
DeleteYes sir..
DeleteExcellent Suresh sir
Deleteஎல்லாப் புகழும் எடிட்டருக்கும் கதாசிரியருக்கும் தான் சார்
Deleteகி. நா வசனங்களை கி. நா விலே படிக்கும்போது ஒரு பரபரப்பில் தானா கடந்து போய் விடுகிறோம்.. நண்பர் சூர்யா ஜீவா போல யாரேனும் தொகுத்துத் தரும்போதுதான் அதன் உண்மையான அழகு புரிகிறது!😍😍
Deleteசூர்யா ஜீவா, வசன கர்த்தா எடிட்டர் மற்றும் படைப்பாளீஸ்க்கு தலா ஒரு மானசீக பூங்கொத்து!💐💐💐
நன்றி சார்..
Deleteஜானி 2.0 விட பழைய ஜானி தான் பிடித்திருக்கிறது
ReplyDeleteபழைய ஜானி கதையிலும் புதிதாக வந்த போன வருட கதை மனதில் ஒட்டவில்லைங்க, எதோ ஒன்று மிஸ்ஸிங்
ஜானியின் பழைய கதைகள் மீண்டும் மீண்டும் படித்துள்ளேன், திரும்பவும் எடுத்து படிப்பேன்
இது எனது பார்வை மட்டுமே
ஜூன் மாத ஜானி எப்படி இருக்க போகிறது என்று அறிய ஆவலாய் உள்ளேன்
ஜானி 2.0 கதைகள் வந்தால் கண்டிப்பாக வாங்கி படிப்பேன், சார்
ஜானி 2.0 புதிதாக ஒரு கதை முயற்சித்து பார்க்கலாம்,சார்
ஆகஸ்ட் கிட்ட வந்திருச்சு ங்க சார் இன்னும்60 நாட்களே
ReplyDeleteரிப்போர்ட்டர் ஜானி அதிக ஆர்வமில்லை. ஜானி நீரோ தான் o.k.
ReplyDeleteஏனென்றால், சர்வ தேச அளவில் சுற்றும் உளவாளி. அவர் கதைகள் மூலமாக உலகின் பல பகுதிகளின் பெயர்களை தெரிந்து கொள்ள முடிந்தது. தற்போதைய (அப்போதைய) வாழ்க்கையை ஏறக்குறைய live ஆக ரசிக்க முடிந்தது.
ஆனால், Texம், ஸாகோரும் இன்னும் பழங்காலத்திலேயே இருக்கிறார்கள். பாலை வனமும், செவ்விந்தியர்களுடனேயே வாழ்க்கை. கதைகள் o.k தான்.
என்றாலும், தற்போதைய நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் கிடைக்கவில்லையா எடிட்டர் அவர்களே?
அதாவது தற்போதைய செல்போன் பயன்படுத்தும் காலம். அப்படிப் படிக்கும் போது காமிக்ஸ் இன்னும் live ஆக இருக்கும், புதிய தலைமுறையையும் ஈர்க்குமே நண்பரே! அப்படியான காமிக்ஸ்கள் கிடைக்கவில்லையா, இல்லை வருவதில்லையா நண்பரே?
tex தவிர மற்ற ஆன் லைன் இதழ்கள் வாசித்தாயிற்று.
பயணம் ஈரோட்டுக்காக வெயிட்டிங்.
பல கதைகள் பத்திரமாக உள்ளன. நேரமும், மனமும் சேரும் போது தான் காமிக்ஸ் வாசிப்பு சுகம் தருகிறது. ம்..
மற்றபடி, தங்களின் புளிசாத எழுத்தில் வழக்கம் போல மசாலா மணம் ஈர்க்கிறது.
1. ரிப்போர்ட்டர் ஜானி நம்மோடு 39 ஆண்டுகளாய் பயணித்து வரும் நாயகர் ! இன்னமுமே அவரிடம் நமக்கொரு சுவாரஸ்யம் தொடர்கிறது தானா ?
ReplyDeletecan give a break to Johnny for a year and can add SODA, CISCO INSTEAD ..
2.ஆன்லைன் மேளாவின் முதல் ரவுண்டிலான 5 புக்ஸ்களை நீங்கள் வாங்கினீர்களா? யெஸ் எனில், அவற்றில் எத்தனையைப் படித்திருப்பீர்கள்?
"பயணம்'' ஆர்டர் பண்ணியுள்ளீர்களா?
YES .. ORDERED ALL .. READ ALL ..
3.ஆர்டர் போட்டிருந்தாலும் புக் வெளியான பின்னே படிப்பீர்களா? அல்லது கலெக்ஷனுக்காக மட்டுமேவா?
WILL READ SIR ..
// இன்று (சனி) டெஸ்பாட்ச் done !! //
ReplyDeleteSuper
❤️❤️❤️❤️👍🙏.
ReplyDelete// தலீவரின் வேப்பிலை ஜாக்கியைத் தான் இரவல் வாங்க வேண்டியிருக்குமென்றுபட்டது! தலீவரும் அதை எந்தக் கொடியில் தொங்கப் போட்டிருப்பாரோ - தெரியாதென்பதால் இந்த வம்பே வோணாம்; //
ReplyDeleteROFL :-)
ஜானி கதைக்கு உங்கள் மெனெக்கெடல் பாராட்டக்குறியது! சொன்ன நேரத்தில் புத்தகம்களை கொடுக்கவேண்டும் என்று அதற்காக அடித்த அந்தர் பல்டிகளை நகைச்சுவையாக சொன்னாலும் அதன் பின்னால் உள்ள உங்கள் உழைப்புக்கு ஒரு ராயல் சலூட் சார்!
ReplyDeleteசட்டத்தோடு சடுகுடு தலைப்பே அசத்துதுங்க .தல ராக்ஸ்
ReplyDeleteOld ஜானி கண்டிப்பாக வேண்டும்
ReplyDelete1. ஜானி மோசமில்லை
ReplyDelete2. டெக்ஸ் ...கிநா படிச்சாச்
3...இன்னைக்கு தான் டிக்கட் போட்டேன்
4. படிக்க
சார் கொரியர் வந்தாச்சா ம்....ரூபினோடு இன்றைய மீதப்பொழுதை கழிக்க திட்டம்
ReplyDeleteஆமா ரூபின் போன மாதம் வந்த புக் இல்லை?
Deleteஇல்லையில்லை குமார் ஆமா
Deleteவந்து விட்டது இந்த மாத புத்தகங்கள் வந்து விட்டது. வெற்றி வெற்றி
ReplyDelete+1
Deleteசார் இம்மாத இதழ்கள் சின்ன ரகலர்ல வர....சும்மா டெக்சட்டை இது வரை வந்ததில்லை நான்தான் பெஸ்ட் என கேக்க ஆமாம்னு சத்தியம் செய்து மனதை கடந்து உள்ள போனா ஓவியங்களும்...வழக்கமான நாலு புரட்டும் கரங்கள் பத்து பக்கங்கள் தடவ ....போதுமென வைத்து விட்டு ஜானி அட்டை கலர்ல மாற்றம் தந்திருக்கலாமோ என் கேட்டு...அடுத்த மாதம் டேங்கோ அடடா...லக்கி மாடஸ்டியும் கூட அருமை
ReplyDeleteஜெர்மனியில் ஜானி....
ReplyDeleteவழக்கமான அட்டகாசமான சித்திரத்தரத்தில்...சிறப்பான வண்ணத்தரத்தில் கண்ணைக் கவர்ந்த இந்த ஜானியின் சாகஸ இதழ்
ஆரம்ப முதல் பக்கத்திலியே கதையும் ஜானியின் காரின் வேகத்தை போல டாப்கியரில் பொறி பறக்க கிளம்ப அதன் வேகம் கதையின் முடிவு வரை குறையவே இல்லை...இறுதி வரை வில்லனின் திட்டமிடல்கள் படு விறுவிறுப்பை கூட்ட வழக்கமான ஜானி இன்னமும் பட்டைய கூர் தீட்டுகிறார்..இறுதியில் க்ளைமேக்ஸிலும் ஒரு திருப்பம் என இந்த ஜெர்மனியில் ஜானி பட்டாஸாய் பறக்க விட்டு விட்டார்...
இப்படி கதையிலும்,சித்திரத்திலும் எப்பொழுதும் மின்னும் இந்த ஓல்ட் ஜானியின் சாகஸத்திற்கு முன் சித்திரத்திலும் சரி ..கதையிலும் சரி இது ஜானிதானோ என்று தோன்ற வைக்கும் 2.0 ஜானி எல்லாம் ஏணி வைத்தாலும் எட்டாது...
ஜானியின் சாகஸத்தை வாசித்து முடித்த கையோடு மீண்டும் "நங் " என்று ஓல்ட் ஜானிக்கு ஒரு ஓட்டு...:-)
////இப்படி கதையிலும்,சித்திரத்திலும் எப்பொழுதும் மின்னும் இந்த ஓல்ட் ஜானியின் சாகஸத்திற்கு முன் சித்திரத்திலும் சரி ..கதையிலும் சரி இது ஜானிதானோ என்று தோன்ற வைக்கும் 2.0 ஜானி எல்லாம் ஏணி வைத்தாலும் எட்டாது...///
Deleteநச்சுனு சொன்னீங்க தலீவரே.. 😍😍🤝
//இப்படி கதையிலும்,சித்திரத்திலும் எப்பொழுதும் மின்னும் இந்த ஓல்ட் ஜானியின் சாகஸத்திற்கு முன் சித்திரத்திலும் சரி ..கதையிலும் சரி இது ஜானிதானோ என்று தோன்ற வைக்கும் 2.0 ஜானி எல்லாம் ஏணி வைத்தாலும் எட்டாது...//
Deleteஆமாங்க தலீவரே
ஜானி 2.0 பழைய ஜானி அளவுக்கு ஹேண்ட்சமாகவும் இல்லை
Deleteடெக்ஸ் சட்டத்தோடு சடுகுடு இதழின் அட்டைப்படமும் அதன் கனமும் உள்ளே சித்திரங்களும் ஆரம்ப பக்கத்திலியே செவ்விந்திய வாம்பை பட்டத்தோடு அறிமுக பக்கமும் இதழை அசத்த இன்னமும் இதழை ரசித்து மட்டும் கொண்டு இருக்கிறேன்...வாசிக்க நாளை உரிய நேரத்தை எதிர் கொண்டு...
ReplyDeleteஜானி இன் ஜெர்மனி..
ReplyDeleteஇந்த முறை இடியாப்பம் அல்ல நேராக இட்லி தான்.. ஆனால் அதனால் கதையின் சுவாரஸ்யம் மட்டுப்பட்டு இருக்கிறதா என்று கேட்டால் அதுதான் இல்லை.. ஓவியங்கள் வண்ணச் சேர்க்கை தயாரிப்பு தரம் எல்லாமே அற்புதம்.
ஜானி வெளிநாடு சென்று சாகசம் புரியும் கதைகள் ஏதேனும் படித்ததாக நினைவில் ஏதுமில்லை.
ஆனால் கதையின் முக்கிய நிகழ்வுகள் என்னவோ ப்ரான்ஸ்ல்தான்.. கதை துவங்குவது ஜெர்மனியில்..
பழைய ஜானியில் ஒரு வசீகரம் இருப்பதை மறுக்க முடியவில்லை.
9.2/10
///பழைய ஜானியில் ஒரு வசீகரம் இருப்பதை மறுக்க முடியவில்லை.
Delete////
+1😍
//பழைய ஜானியில் ஒரு வசீகரம் இருப்பதை மறுக்க முடியவில்லை//
Delete+9
பழைய ஜானியில் ஒரு வசீகரம் இருப்பதை மறுக்க முடியவில்லை.//
Deleteபுதுசுல இல்லேன்னு சொல்லாம சொல்றீங்க
சட்டத்தோடு சடுகுடு..
ReplyDeleteடெக்ஸ் தனது ஆரம்ப வாழ்க்கையில் சட்டத்தின் எதிர்ப்பக்கம் நின்று கொண்டிருந்தது பற்றி எல்லோரும் அறிவோம். பின்னர் சட்டத்தின் பக்கம் மட்டுமே அவரது வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றியும் அறிவோம்.
ஆனால் இந்த கதையில் ஒரே நேரத்தில் சட்டத்தின் பக்கமும் சட்டத்தின் எதிர்பக்கமும் நிற்க வேண்டிய கட்டாயம் டெக்ஸ்க்கு.
கதை இதையொட்டியே நடத்திச் செல்லப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் மிகவும் வித்தியாசமான ஒரு டெக்ஸ் கதை.
வெறும் பத்து பக்கம் மட்டும் படிப்போம் என்று துவங்கிய கதை.
ஆனால் படித்து முடித்த பின்னரே புத்தகத்தை கீழே வைக்க வேண்டியது ஆகிவிட்டது.
பாலுக்கும் காவல் பூனைக்கும் காவல் என்ற நெருக்கடியான நிலையில் டெக்ஸ்.
9.5/10
///இந்த கதையில் ஒரே நேரத்தில் சட்டத்தின் பக்கமும் சட்டத்தின் எதிர்பக்கமும் நிற்க வேண்டிய கட்டாயம் டெக்ஸ்க்கு.///
Deleteஆஹா! வித்தியாசமான கதையா இருக்கும் போலிருக்கே!😍😍
வெறும் பத்து பக்கம் மட்டும் படிப்போம் என்று துவங்கிய கதை. //
Deleteடெக்ஸ தொட்டுட்டு நான் அடிக்கடி கீழே வைத்த கதை என்றால் அது சென்ற மாதம் வந்த mexico special தான் டாக்டர்.. மற்ற எல்லாமே அதிரடி சரவெடி தான்
இந்த ஆண்டின்டெக்ஸ் வெற்றிநடை தொடர்கிறது."சட்டத்தோடு சடுகுடு"ஆரம்பத்தில்ரேஞ்சர்மீது கை வைக்கக்கூடாது என்று உணர்வுடன்செயல்படும் வில்லன்கள் பிறகு அந்த உணர்வை கைவிட்டு முழு உத்வேகத்துடன் சண்டையிட ஆரம்பிக்க டெக்ஸூம் அவ்வாறே களமிறங்க ஆட்டம் சூடு பிடிக்கிறது. பெண்களும் குழந்தைகளும் கயிற்றில் இறங்கி தப்பிக்கும்போதுபடித்துக் கொண்டிருக்கும் நாமே அந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வு.
ReplyDeleteஓ.. இப்பவே படிக்கனும்னு மனசு தவிக்குதே.. இந்நேரம் பாத்து drivingல இருக்கேன்..
Deleteநாளைக்கு ஊருக்கு வந்த உடன் முதல் வேலை டெக்ஸ் தான்.
ஜெர்மனியில் ஜானி
ReplyDeleteஅதுவென்னவோ எப்போதும் ஜானிக்கு வரும் வில்லன்கள் ஜானியின் செயல்பாடுகளை நன்றாக தெரிந்து வைத்திருப்பார்கள், என்னென்ன விசயத்துக்கு எப்படி எப்படி ரியாக்ட் பண்ணிடுவாரிலிருந்து அவரை பற்றி முழுவதும் ஆராய்ச்சி செய்திருப்பார்கள், அவரும் அதற்கு ஏற்றவாறு அவர்கள் விரித்த வலையில் வந்து விழுந்திடுவார்.
ஆனால் ஜானியின் மதியூகத்தை அனைவரும் குறைத்தே எடை போட்டிருப்பார்கள், அவரின் உள்ளுனர்வு, தைரியம், ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்கின்ற குணம், எவனா இருந்தாலும் அவனும் ஒரு மனிதன் தான், நான் தோற்றிட மாட்டேன் என்ற தன்னம்பிக்கையும் அவருக்கு வெற்றிகள் தந்திடும்.
ஒரு புத்திசாலியை ஏமாற்றி தங்கள் பொறியில் விழ வைத்துவிட்டோம் என்ற இறுமாப்பு தட்டிடும் வில்லன்கள் இறுதியில் சூடு கொண்ட பூனையாகி விடுவார்கள்.
ஜானி பார்மூலா இவ்விதமே என்றாலும், மாறுபட்ட கதைகளங்கள், ஒவ்வொரு விதமான வில்லன்கள், கதைக்கு ஏற்ற மனிதர்கள், புதிய இடங்கள், சம்பவங்கள் சுவாரசியமாக புனையப்பட்டு நம்மை கதையுடன் பிணைத்து வைக்கும்
ஜெர்மனியில் ஜானி அட்டகாசமான ஆக்ஷன் புதிர்களம்
படங்களின் வண்ணசேர்க்கை சிறப்போ சிறப்பு
கார் சேஸ்ஸிங் மிகவும் ரசித்தேன்.
கதையோட்டத்தை சிறப்பாக சொல்லிட்ட வசனங்கள் அருமை
அறிமுக வார்த்தைகள் மிக அருமை, நையாண்டிகளும், நகைச்சுவையும் வேண்டிய இடத்தில் சிறப்பாக கையாள பட்டுள்ளன
இறுதி ட்விஸ்ட் எதிர்பாரா ஒன்று 😂😂😂
பக்கம் 46-இல் கையிருக்க, ஏன் காலை பயன்படுத்துகிறார் ஜானி, அதுவும் ஒரு மாதிரியான குங்ப்பூ ஸ்டைலில் ஒரு உதை வேறு, காலை தூக்கி அப்படியே வுட்டேன் பார் என்று சொல்லாமல் காட்டுகிறார், ஆனால் அடுத்த பக்கத்தில் கையை தான் பயன்படுத்துகிறார்
அட்டைப்படம் அனைத்து விதத்திலும் அருமை
முன்னட்டையில் ககலரிங் வேலை👌👌👌
எழுத்துருவ ஆக்கம் மிக சிறப்பு, ஜானி என்கிற எழுத்து அருமையான டிசைன்
பின்னட்டை டிசைனிங் இன்னும் செம
அடடே.. இவ்வளவு சீக்கிரமா உங்க கிட்ட இருந்து விமர்சனமா? கலக்குறீங்க sister
Deleteநன்றி சகோ 😊😁
Deleteநன்றி பரணி சகோ
Deleteஸ்பாய்லர் அலர்ட்
Deleteஜெர்மனியின் விருந்தாளிகள் உபசரிப்பையும் கதாரிசியர் சுட்டி காட்டி சென்றுள்ளார், ஊர் சுற்றி பார்க்கும் ஜானிக்கு பெரிதாக நல்ல அனுபவங்கள் கிட்டவில்லை
அப்போதைய காலகட்டத்தில் இரண்டாக பிளவு பட்டிருந்த ஜெர்மனியில் ஜானி எந்த பகுதியில் என்பதை குறிப்பாக சொல்லவில்லை, மேற்கு பக்கம் பிரான்ஸ் ஆதிக்கமும் இருக்கத்தான் செய்தன, அவருக்கும் கிடைக்கும் உபசரிப்பும், அங்குள்ள கெடுபிடிகளை வைத்து அது கிழக்கு பகுதி என்று எடுத்து கொள்வதா அல்லது பிரான்ஸ் பார்டர் பக்கமாக இருப்பதை வைத்து மேற்கு ஜெர்மனி என்று எடுத்து கொள்வதா?
கதாசிரியர் ஜானி எங்குள்ளார் என்பதை சொல்லாமல், அந்நிய மண் என்றே குறிப்பிட்டு செல்கிறார்
மே ஆன்லைன் விழாவில் வராமல் விட்ட டைலனின் "குட், பேட், அக்ளி" புத்தகம் எப்போது வருங்க, சார்
ReplyDeleteகோவை புத்தக விழா???
DeleteThis comment has been removed by the author.
Deleteசார், நாங்க மறக்க மாட்டோம் அன்ட் விடவும் மாட்டோம் 😊
Delete//ஸாகோரோ, டைலனோ, யாரேனும் ஒருவரை இப்போதைக்குத் தேர்வு செய்தீர்கள் எனில், miss out ஆகிடும் நாயகர் - கோவை or சேலம் புத்தக விழாத்தருணத்தில் களம் காணுவார். So நடப்பாண்டில் இரு இதழ்களுமே கரைசேர்வது உறுதி!//
Deleteஆன்லைன் மேளாவில் வரவில்லை எனில் புத்தக விழா எனக் கூறி உள்ளார்
கோவை புத்தக விழாவில் திகில் கதைகளுடன் திகில் ஹீரோ வெளியீடு பயங்கரமா பட்டையை கிளப்பிடலாம், குமார் சகோ 🤩🤩🤩🤩🤩
*ஜெர்மனியில் ஜானி!*
ReplyDeleteஅட்டையைத் தவிர்த்து உள்ளே எங்கேயும் பெயர் குறிப்பிடப்படாத அந்நிய தேசத்தில் துவங்குகிறது ஜானியின் இந்த சாகசம்.
சதுரங்கத்தில் எதிராளியின் அடுத்தடுத்த நகர்வுகளை முன்னரே சரியாக கணித்து அதற்கேற்ற முறையில் நம் நகர்வுகளை முன்கூட்டியே திட்டமிடுவது வெற்றிக்கு அத்தியாவசியமான பங்கு.
இங்கும் அதே வகையிலான திட்டமிடலும் அதைத் தொடர்ந்த பூனை எலி ஆட்டமும் கடைசிவரை கதையை உச்சபட்ச வேகத்திலேயே கொண்டு செல்கிறது. எல்லாவற்றிலும் பிளான் B ஒன்றை வில்லன் திட்டமிட்டு வைத்திருப்பது அவன் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. இவ்வித வில்லன்கள் அமையும் கதைகள் சிறப்பானதாக அமைந்துவிடும் என்பதற்கு இக்கதை மேலும் ஓர் உதாரணம்.
ஜானியைக் கொல்ல அவன் காரில் குண்டு வைக்காமல் ஏற்கனவே ஜானியின் கார் போல எல்லாவகையிலும் மாற்றியமைக்கப்பட்ட ஒரு காரில் குண்டு வைத்து அதன் கதவு ஜன்னல்களை திறக்க இயலாமல் லாக் செய்து அதை ஜானியின் காருக்கு பதிலாக பார்க் செய்வது உச்சபட்ச திட்டமிடல். ஹாங்மேனின் முன்யோசனைக்கு ஒரு உதாரணப் பருக்கை.
போர்க்கால வைரி ஒருவனின் பழிவாங்கும் வெறியும், அதற்காக அவன் வடிவமைக்கும் திட்டமும், அதற்காக நிர்மானிக்கப்படும் பொறிகளும், வித்தியாசமான ஆயுதங்களுமென அட்டகாசமான அம்சங்கள் கதையை தொய்வின்றி நகர்த்திச் செல்கிறது. ஆங்காங்கே சில முடிச்சுகள் அவிழ்ந்தாலும் ஏதோ ஒரு ரகசிய முடிச்சு அவிழ்க்கப்படாமல் மர்மமாகவே தொடர்வது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.
கடைசியாக அந்த கிளைமாக்ஸும் எதிர்பாரா வண்ணம் அமைந்திருப்பது ஒரு உற்சாகத் திருப்பமே. ஆக மொத்தத்தில் ஜானியின் இந்த இடியாப்பத்தில் சிக்கலும் அதிகம்... சுவையும் அதிகம்!
எல்லோரும் ஜானி கதைய தான் இந்தமுறை முதலில் படித்து வருகிறார்கள். இதுதான் கிளாசிக் ஜானி மகிமை சார் 😊
Deleteஅருமை சகோ 👏👏👏
Delete//இதுதான் கிளாசிக் ஜானி மகிமை சார் 😊//
Delete+9
சார் இரண்டு புத்தகங்களையும் படித்து முடித்து விட்டேன். செம்ம fast and Breezy read இரண்டுமே.
ReplyDeleteமுதலில் படித்தது ஜெர்மனியில் ஜானி. அந்த க்ளைமேக்ஸ் எதிர்பாராதது. ஒரு செஸ் ஆட்டம் போல அந்த வில்லன் எல்லா நிகழ்வுகளையும் கணித்து அதற்கு தக்க முடிவெடுத்து வருவது செம்ம. ஆனால் இறுதியில் அவனே எதிர்பாராத ஒரு Move செம்ம.
இந்த முறை ஜானி நன்றாகவே இருந்தது. எனது மதிப்பெண் 9/10
👌👌👌
DeleteAs usual good review
Deleteரிப்போர்ட்டர் ஜானியின் கதைகளை அதிகம் படித்ததில்லை. அதென்ன ரிப்போர்ட்டர்? கதையில் உளவாளி போல்தான் போலீஸோடு பயணிக்கிறார்!
ReplyDeleteஆனால், கதை ஏறக்குறைய திரைப்படம் பார்ப்பது போல் இருந்து.
ஜானியின் உருவத்தை ஏன் இப்படி கார்ட்டூன் நாயகர் போல வரைகிறார்கள்?
சுவாரசியமான கதைக்கு தகுந்த படங்களாக அமையவில்லை.
ஜானி அவஸ்தைப்பட்டாரோ இல்லையோ, புளிசாதப்படலத்துக்கு முன், பின்
என்று கதை எடிட்டரை அவஸ்தைப்பட வைத்து விட்டது. கிளைமாக்ஸுக்கும் ஆரம்பப் பக்க வசனங்களுக்கும் தொடர்பு உண்டுதான். ஆனால், நீங்கள் எழுதிய மாதிரி 9ம் பக்கம், 16ம் பக்கமாகத் தெரியவில்லை.
பர பர ஆக்ஷன் மேளா என்பீர்களே.
இதுதான் போலிருக்கிறது.
IPL ல் 18 வருடங்கள் கழித்து ஜெயித்த கோலியின் நிம்மதி போல அல்லாமல், வில்லன் Bக்கு வெடிகுண்டில் கிடைத்தது தற்காலிக நிம்மதி.
ஆனாலும், கதை முடிந்த பிறகு நினைவில் நிற்பது கதையின் டவிஸ்ட்களும், வில்லனின் பழி வாங்கும் காரணமும் தான்.
அதிக ஸ்பீட் போனதற்கு அபராதம் வசூலிக்கும் சக போலிஸ்காரரின் பெயரும், வில்லனின் கையாள் பெயரும் ஆல்பிரட் என்று இருப்பது, இது ஒரு டிவிஸ்டோ என்று குழம்ப வைத்தது.
இன்னும் சில சின்னக் குழப்பங்கள் இருந்தாலும், கதையை பத்திரமாய் வைத்திருந்து சில காலம் கழித்து ரிப்பீட்டே என்று படிக்கலாம் என்று நினைக்க வைத்தது வெற்றிதான். Nice.
😊😊😊😊👏🏻
DeleteTest
ReplyDeletePass
Deleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteஆமாங்க சார்
Deleteஇன்னய பதிவு ஹாரர் ஜாரரோ
Deleteஅதே அதே சபாதே
Delete