Saturday, November 09, 2024

மேஜிக் மொமெண்ட்ஸ்!

நண்பர்களே,

வணக்கம். தடதடத்து வரும் நடப்பாண்டு எக்ஸ்பிரஸ் மெதுமெதுவாய் அதன் இறுதி ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரமிது! டின்டின், லார்கோ ரகளை செய்த ஜனவரியெல்லாம் ரெம்போவே பின்னால் ஒரு தூரத்துப் புள்ளியாக மாத்திரமே இன்று நினைவுகளில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன! So இதோ - தொடும் அண்மையினில் காட்சி தந்து கொண்டிருக்கும் டிசம்பரின் மீதான பார்வைகளைப் படர விடலாமா folks?

The Magic Moments ஸ்பெஷல்!!

முழியாங்கண்ணனின் மேற்பார்வையினில் 1000+ இதழ்கள் உருவாகியிருப்பதைக் கொண்டாட நீங்கள் முன்மொழிந்து, பெயரிட்டும் தந்திருக்கும் இதழ் இது! (பெயரிட்ட நண்பரின் பெயர் மறந்து போச்சூ... தயைகூர்ந்து கரம் தூக்கி உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள் நண்பரே - அந்த இதழினில் குறிப்பிட வேணும்!) 

நிஜத்தைச் சொல்வதானால் நம்ம STV இந்த மைல்கல் குறித்துப் பதிவிட்டிருக்காவிட்டால் இப்படியொரு சமாச்சாரம் பற்றியே எனது சிந்தனை போயிராது தான்! பல விதங்களில் எனது பணியானது ஒரு சர்க்கஸ் ரிங் மாஸ்டரின் பொறுப்பை ஒத்தது என்பேன்! "ஆங்... கூடாரம் செட் பண்ணியாச்சா? லைட்கள் பொருத்தியாச்சா? மரணக்கூண்டை மாட்டியாச்சா? அதிலே ஓட வேண்டிய மோட்டார் சைக்கிளை காயலான் கடையிலேர்ந்து எடுத்தாந்தாச்சா? கோமாளிகள் ரிகர்சல் பண்ணி விட்டார்களா? உசரத்திலே ட்ரபீஸில் கலக்க வேண்டிய கலைஞர்களுக்கான பாதுகாப்பு வலையெல்லாம் கச்சிதமா கீதா?" என்ற ரேஞ்சுக்கு வகைவகையான தயாரிப்புப் பணிகளுக்கு ஒரு உந்துதல் தருவதே எனது பிரதானப் பணி! Of course பேனா பிடிக்கும் பொறுப்பொன்றுமே எனக்குண்டு தான் – மறுக்க மாட்டேன்; ஆனால் ஒட்டுமொத்தமாய் சகல பணிகளையும் ஒருங்கிணைத்து ஒரு ஷோவை வெற்றிகரமாய் நடத்திக் காட்டுவதே ஒரு ரிங் மாஸ்டரின் முன்னுள்ள சவால்களின் உச்சம் என்பதைப் போல ஒவ்வொரு இதழினையும் பூர்த்தி செய்து கையில் ஏந்துவது தான் அடியேனின் மாதாந்திர சவால் quota! So இந்த நொடியில் 1000+ சர்க்கஸ் காட்சிகளை நமது டீமுடன் இணைந்து வெற்றிகரமாய் நடத்தி முடித்திருக்கும் மனநிறைவோடும், பணிவோடும் ரசித்து வருகிறேன்!

Looking back, இந்தப் பயண மும்முரத்தில் நாம் கடந்திருக்கும் தொலைவு குறித்தான புரிதல் என்னுள்ளே இருந்திருக்கவில்லை தான்! “ஆங்... இந்த மாசம் முடிஞ்சது; அடுத்து என்ன?” என்ற ரீதியிலேயே தான் நாட்களின் ஓட்டம் இருந்து வந்துள்ளது! So ஆயிரம் ப்ளஸ் இதழ்களைக் கடந்து 1100-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று நம்ப நிரம்பவே கஷ்டமாகவுள்ளது! 

எத்தனை எத்தனை நாயகர்கள்... நாயகியர்! 

எத்தனை எத்தனை சைஸ்கள்... எத்தனை எத்தனை விலைகள்! 

எத்தனை எத்தனை உச்சங்கள்... எத்தனை எத்தனை பாதாளங்கள்! 

எத்தனை எத்தனை சந்தோஷங்கள்... எத்தனை எத்தனை சங்கடங்கள்? 

எத்தனை எத்தனை மைல்கல்கள்... எத்தனை எத்தனை அழுகிய முட்டைகள்! 

Phewww...! இதழியல் துறையினில் வாராந்திர, மாதம் இருமுறை இதழ்களை நடத்தி வரும் ஜாம்பவான்களுக்கெல்லாம் இந்த ஆயிரம் ப்ளஸ் என்ற நம்பரானது கொட்டாவியை வரவழைக்கவல்ல குயந்தைப்புள்ள மேட்டராக இருக்கக்கூடும் என்பது புரியாமலில்லை! ஆனால் குயந்தைப்புள்ளைகள் மாத்திரமே படிக்கும் ‘பொம்ம புக்குகள்‘ என்ற வெகு ஜன முத்திரை தாங்கி வரும் நமது துறைக்கு இந்த 1000+ ஒரு பெத்த மேட்டர் என்பதை மண்டை சொல்வதால் நெஞ்சம் ஏற்றுக் கொள்ள முயல்கிறது!

- இங்கிலாந்து

- அமெரிக்கா

- ப்ரான்ஸ்

- பெல்ஜியம்

- இத்தாலி

- ஹாலந்து

- டென்மார்க்

- ஸ்லொவேனியா

- ஜெர்மனி

- ஆஸ்திரேலியா

என்று உலக வரைபடத்தின் பல தேசங்களது கதைகள் / தொடர்களோடு அன்னம்-தண்ணீர் புழங்கியிருப்பது மகிழ்வின் ஒரு பகுதியெனில் – நாம் வெளியிட்டிருக்கும் எண்ணற்ற கதைகள் இந்தியாவில் மாத்திரமன்றி, ஆசியாவிலேயே முதல் தபாவாக வெளிவந்திருக்கின்றன என்பது இன்னொரு பகுதி! அட, ஒரு சில கதைகள் – ஒரிஜினலாய் வெளியான மொழிக்குப் பின்பாக நமது தமிழில் மட்டும் தான் வெளியாகியுள்ளன என்பதுமே ஒரு கொசுறுத் தகவல்!

நாற்பது ஆண்டுகளாய்த் தொடர்ந்திடும் பயணம் என்றாலுமே நமது வண்டி டாப் கியரைத் தொட்டு பந்தயக் குரிரையாய் பாய்ச்சல் எடுக்கத் துவங்கியிருப்பது நமது இரண்டாவது இன்னிங்ஸில் தான் என்பதில் ஏது இரகசியம்? 2012-க்கு பின்பான இந்தப் பன்னிரெண்டு ஆண்டுகளில் முதல் 28 ஆண்டுகளின் முயற்சிகளைக் காட்டிலும் ஜாஸ்தி சிக்ஸர்களை வெளுத்திருக்கிறோம்! So பழைய பாணிகளில் ஒரு பாதியும் புதுயுக பாணிகளில் மீதமும் நமது பட்டியலில் இருப்பது ஒரு சந்தோஷ முரண் என்பேன்!

இந்த ஆயிரம் இதழ் கண்ட அதகளப் பயணத்தில் எனது பெர்சனல் Top Moments பற்றி யோசிக்க முனைந்தால் – ‘மச மச‘ வென ஏகப்பட்ட சமாச்சாரங்கள் குறுக்கும் மறுக்குமாய் ஓடிவிளையாடி வருகின்றன!

- பிள்ளையார் சுழி போட்டுத் தந்த ‘கத்தி முனையில் மாடஸ்டி‘

- ‘எத்தனுக்கு எத்தன்‘ நான் – என்று கெத்து காட்டிய ஸ்பைடர் அறிமுக வேளை!

- முதல் தீபாவளி மலர்! பொங்கல் மலர்! கோடை மலர்!

- ‘தல‘ தாண்டவங்களைத் துவங்கிய “தலைவாங்கிக் குரங்கு” வெளியான தருணம்!

- ‘ட்ராகன் நகரம்‘ – லயனின் 50வது இதழ்!

- திகில்; ஜுனியர் லயன்; மினி லயன் அறிமுக நாட்கள்!

- முத்து காமிக்ஸ் எனது பொறுப்புக்கு வந்த பொழுது!

- லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் 1987!!

- XIII அதகளம் பண்ணத் துவங்கிய வேளைகள்!

- கேப்டன் டைகரின் வருகை!

- மெகா ட்ரீம் ஸ்பெஷலின் திட்டமிடல்!

- மின்னும் மரணம்!!

- நமது மீன்வருகையின் Comeback ஸ்பெஷல்!

- நெவர் பிஃபோர் ஸ்பெஷல் - சென்னை 2013

- LMS வெளியீடு – ஈரோடு 2014

- மின்னும் மரணம் – ஆயிரம் ரூபாயென்ற மைல்கல்லைத் தொட்ட அதிசயப் பொழுது...!

- இரத்தப் படல வண்ணத் தொகுப்புகள் – 2018 ஈரோடு

- கொரோனா லாக்டௌன் பொழுதுகளிலும் தடதடத்த மறக்கவியலா வேளைகள்!

- டின்டினின் அறிமுகம்!

- நடப்பாண்டின் ட்ரிபிள் தீபாவளி அதிரடிகள்!

என வாணவேடிக்கைகளாய் ஏதேதோ பளீரிடுகின்றன! Maybe இன்றிரவு படுத்துறங்கி விட்டு, நாளை கண்முழிக்கும் போது புதுசாய் இன்னொரு டஜன் அனுபவங்கள் மனசில் பிரதானப்பட்டும் இருக்கலாம் தான்! ஆனால் சகலத்துக்கும் மத்தியில் ஒற்றைச் சமாச்சாரம் மட்டும் பொதுவாக இருந்திடும்! And அது நாம் கூட்டாக உணர்ந்துள்ள மகிழ்ச்சிகளே!

காக்காய் தன்னோட குஞ்சுகளை எந்த ஊரில் அழகிப் போட்டிகளுக்கும் அனுப்பியதாய் எனக்குத் தெரிய தரவுகள் ஏதும் கிடையாது தான்; So ‘காக்காய் – பொன் குஞ்சு‘ என்ற உவமைகள்லாம் சொல்லி மொக்கை போட மாட்டேன்! மாறாக நமக்குப் பொருந்துகிற மாதிரியானதொரு உவமையை இறக்கி விடட்டுமா? ”ஆந்தையனுக்கு அவன் கைவண்ணமும் அதகளங்களே!” So என்னைக் கேட்டால் ஜடாமுடி ஜனநாதனின் கதைக்கே பில்டப் தருவேன் தான்! பச்சே இங்கே எனது அபிப்பிராயங்கள் பெருசாய் எதையும் சாதிக்கப் போவதில்லை! 

மாறாக – இந்த 1000+ இதழ்களின் மத்தியிலான உங்களின் Top 3 மறக்கவியலா தருணங்கள் எதுவென்று தெரிந்து கொள்ளத் தான் ஆர்வம்! So இந்தப் பயணப் படலத்தின் எந்தத் தருணத்தில் நீங்கள் இணைந்தவராக இருந்தாலும், உங்களை மகிழ்வித்த Top பொழுதுகள் எவையென்று அடையாளப்படுத்திடலாமே folks?

Moving on, இந்த MAGIC MOMENTS-க்கென காத்துள்ள நம்ம ‘தல‘ கலர் சாகஸ மேளாவின் first look இதோ!! ஒரிஜினல் போனெலி அட்டைப்படமே; துளி கூட கூட்டல் – குறைத்தலின்றி! ‘தல‘ firing squad முன்னே நிற்பதும், சாட்டையால் விளாசப்படுவதும் சில பாயாசப் பார்ட்டிகளின் கனவுகளில் மட்டுமே அரங்கேறியிருந்தாலும் – இதோ இந்த டிசம்பரில் அவற்றை ஜொலிக்கும் கலரில் பார்த்திடவுள்ளோம்! 

டெக்ஸ் தொடரில் ஒரு லாரி லோடு கதைகள் இருந்தாலும் – இந்த 40 ஆண்டு கால எடிட்டிங் அனுபவத்தில் ஒரு விஷயத்தை மட்டும் ஸ்பஷ்டமாய்ப் புரிந்து கொள்ள முடிந்துள்ளது :

- டெக்ஸின் சில சாகஸங்களில் அனல் பறக்கச் செய்யும் ஆக்ஷனிலும், பரபரக்கும் சம்பவக் கோர்வைகளிலுமே கதைகள் சிட்டாய்ப் பறந்து விடும்! So கதை நெடுக முகம் முழுக்கப் புன்னகையோடு பயணிக்க நமக்கு சாத்தியமாகிடும்!

- டெக்ஸின் மற்ற சாகஸங்களிலோ – நிறைய பில்டப்; கதைக்களங்களை நிறுவ நிறைய மெனக்கெடல்கள்; நிறைய கதைமாந்தர்கள்; அவர்களது பின்னணிகள் என்றிருக்கும்! So அங்கே கதையோடு ஒன்றி, சீரியஸான முகங்களோடு நாமும் ட்ராவல் செய்து கொண்டிருப்போம் – சமீபத்தைய “பனிமண்டலப் போராளிகள்” ஆல்பத்தைப் போல!

டெக்ஸ் ரசிகர்களாகிய நமக்கு இரண்டுமே புல் மீல்ஸ் போலானவை என்றாலும், எடிட்டர் என்ற குல்லாவோடிருக்கும் தருணங்களில் ரகம் # 1 செமத்தியாய் ரசித்திடும்! ‘ஆங்... குத்துங்க ‘தல‘! அவனைப் போடும்யா கார்சா! வுடாதே கிட் தம்பி! ‘இழுத்து வச்சு சாத்துப்பா டைகரு!‘ என்று குஷாலாய் குதி போட்டுக் கொண்டே எடிட்டிங்கை நகர்த்திச் செல்ல இயலும்!

இந்த MAGIC MOMENTS இதழில் காத்திருப்பதே இந்த breezy ரக அதிரடி! போன மாதம் நாம் படித்த நெடும் சாகஸமானது ஆர்டிக் துருவத்துக்கு இட்டுச் சென்றதென்றால் இந்த இதழோ நம்மை மெக்ஸிகோவுக்கு இட்டுச் செல்கிறது! பெரும் சூழ்ச்சியில் சிக்கிடும் டெக்ஸ் மெக்ஸிகோவில் கம்பி எண்ண நேரிட, தொடரும் பட்டாசுகள் பத்தாயிரம் வாலாவுக்கு சளைக்காதவை! And இந்த 250 பக்க சாகஸம் முழுவண்ணத்தில் வரவுள்ளதால் – ஒரு visual feast வெயிட்டிங்! ரூ.350 விலையில் காத்திருப்பது டெக்ஸ் தொடரின் ஒரு மைல்கல் இதழ் folks! So கூடியவரையில் இதனை உங்களிடம் ஒப்படைக்கும் ஆர்வத்தோடு வெயிட்டிங்!


And இதோ – இந்த இதழோடு குட்டியான விலையில் வரவிருக்கும் இளம் டெக்ஸின் சாகஸத்தின் அட்டைப்பட ட்ரெய்லருமே! இந்த 64 பக்க சிங்கிள் ஆல்பத்தோடு ஒரு கதைச் சுற்று நிறைவுறுவதால் ”டெக்ஸாஸ் ரேஞ்சர்ஸ்” solo சாகஸமாய் ரூ.50 விலையில் வரவுள்ளது.

இதனையும் MAGIC MOMENTS ஸ்பெஷல் இதழில் இணைத்து ரூ.400 விலைக்கு ஒரே புக்காய் வெளியிட்டிருக்கலாம் தான்; ஆனால் இளம் டெக்ஸ் ஏற்கனவே 2 black & white ஆல்பங்களில் தனித்தனியாய் வெளிவந்திருக்க, இந்த climax இதழை ஒரு பெரிய புக்குக்குள் நுழைத்தால் புத்தக விழாக்களில் வாங்கிடக் கூடிய புது வாசகர்களுக்கு சிரமமாகிடக் கூடும் என்று பட்டது! தவிர ஒரு fresh அட்டைப்படமும் சாத்தியமாகாது போயிருக்கும்! ஆகையால் 2 தனித்தனி இதழ்கள் எள்ற திட்டமிடல்! இதுவுமே ஒரிஜினல் அட்டைப்படமே! இதான் உட்பக்க preview அடுத்த வாரம்!

Before I sign out – சின்னதொரு தகவல்! 2024 அட்டவணையில் அறிவிக்கப்பட்டிருந்த

- மேற்கே போ மாவீரா – ரூ.250

&

- TEX – எல்லையோர ஓநாய்கள் – ரூ.160

ஆகிய 2 இதழ்களுக்குப் பதிலாகத் தான் Magic Moments ஸ்பெஷல் + டெக்ஸாஸ் ரேஞ்சர்கள் இதழ்கள் வெளிவருகின்றன! ஆகையால் “மேற்கே போ மாவீரா”வை விழுங்கிப்புட்டீங்களா? என்று நம்மாட்களின் சில்லுமூக்குளைச் சிதறச் செய்ய வேணாமே – ப்ளீஸ்?!

ரைட்டு... நம்ம தானைத் தலைவர் ஸ்பைடரின் “பாட்டில் பூதம்” எடிட்டிங் பணிகள் கூப்பிடுவதால் நடையைக் கட்டுகிறேன்! Bye all... See you around! Have a beautiful weekend ஆல்!

கடந்துள்ள வாரத்தினில் நமது சந்தா 2025 எக்ஸ்பிரஸ் செம வேகம் எடுத்துள்ளது! அதே துரிதத்தில் தொடரும் பொழுதுகளிலும் சந்தாக்கள் போட்டுத் தாக்கிடும் என்ற நம்பிக்கை நிரம்பவே உள்ளது! இன்னமும் இணைந்திருக்கா நண்பர்கள் - please do consider joining in at your earliest convenience 🙏


136 comments:

  1. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  2. யப்பா என்னா speed! ஒரு Hi type பண்ணாக்கூட 4லாவது தான் வர முடிஞ்சுது 😀

    ReplyDelete
    Replies
    1. உங்க hi அசல்நாட்டு hi சார் ; இவுக நம்மூர் hi! So அந்த டைம் difference 😁

      Delete
  3. JSVP என்கிற விக்ரம் from பெரம்பலூர் sir 🙏 (Magic Moments Special)

    ReplyDelete
  4. சூப்பர் பதிவு சார். என்னோட டாப் 3 உடன் வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க... வாங்க..

      Delete
    2. சேலம் குமார் அண்ணா தூங்கிவிட்டார் போல.. நானும் விட்டத்தை பார்த்து ஆராய்ச்சி செய்ய போகிறேன் நன்றி.. நாளை காலை எதிர்பார்க்கிறேன்.

      Delete
  5. @Edi Sir😘😘😘🥰🥰

    Me in😘😘😘

    ReplyDelete
    Replies
    1. அடடே, இன்னும் உறங்கலியா தல?

      Delete
  6. அனைவருக்கும் இரவு வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  7. கனவுலகம் விமர்சனப் போட்டி....

    தலைப்பு- கானகத்தில் கருப்பு நிழல்....!!!

    சாகசம்- ஜெர்ரி டிரேக் என்ற மிஸ்டர் நோ.

    கதை-MIGNACCO.

    சித்திரம்-DISO.

    தமிழில் S. விஜயன்.

    அருமையான நேர்கோட்டு கதை. கொலைகள் நடக்கவில்லை. எனவே இது கொலை கதை அல்ல. மர்மங்கள் இல்லை. எனவே மருமக்கதை அல்ல. ஆனால் துரோத்தோ துரத்து என்று துரத்துகின்றார்கள்.

    ஜாகுவார் என்ற கொடூர மிருகத்தை டாக்குமெண்ட்டரிக்காக படம்பிடிக்க ஒரு குழு மிஸ்டர் நோ தலைமையில் செல்கிறது. இன்னொரு குழு அந்த ஜாக்குவாரை வேட்டையாடி கொல்ல துடிக்கிறது. இந்த இரு குழுக்களுக்கும் மத்தியில் அந்தக் கருப்பு நிழலான கரும்புலி என்ன ஆகிறது என்பதை 192 பக்கங்களில் மிக விறுவிறுப்பாக பரபரப்பாக நேர்த்தியான சித்திரங்கள் மூலம் சொல்லி செல்கிறது இந்தக் கதை.

    நிறைய பக்கங்களில் சித்திரங்கள் மட்டுமே கதை சொல்லி செல்கின்றன. இந்தக் கதையின் மிகப்பெரிய பலமே சித்திரங்கள் தான். நாமும் அந்தக் காட்டில் உலவிய பிரமை ஏற்படுகிறது.

    புலி பிடிபட்டதா இல்லை மேலும் இரத்தப் பலி வாங்கியதா என்பதை இறுதி பக்கங்கள் விவரித்துச் சொல்கின்றன. மிஸ்டர் நோவிற்கு மிகப் பெரிய கம்பு சுற்றும் வேலை இல்லை. ஆனால் அவரின் தேவை புரிகிறது. நல்லதொரு சித்திரக்கதை படித்த நிறைவை இந்த புத்தகம் தர தவறியதே இல்லை.

    அமேசானில் நீங்களும் உலவவேண்டுமா?
    இந்த சித்திர கதையை வாங்கிப் படியுங்கள். அமேசான் காடுகளுக்கு சுற்றுலா சென்ற உணர்வு ஏற்படும்.

    ReplyDelete
  8. விதி எழுதிய வெற்றிப் பயணம் வருமா வராதுங்களா எடிட்டர் சார்?

    ReplyDelete
  9. 1,இரத்தப்படலம் முழு
    தொகுப்பையும்
    கையில் கிடைத்த போது,
    2, மின்னும் மரணம் ,
    3, தேவ ரகசியம் தேடலுக்கு அல்ல
    படித்து முடித்த பிறகு
    ஒரு திருப்தி
    அப்புறம் சனி மற்றும்
    ஞாயிற்று கிழமைகளில் உங்கள் பதிவை ஆவலுடன் படிக்கும் போதும் .....

    ReplyDelete
  10. இன்றிரவு படுத்துறங்கி விட்டு, நாளை கண்முழிக்கும் போது புதுசாய் இன்னொரு டஜன் அனுபவங்கள் மனசில் பிரதானப்பட்டும் இருக்கலாம் தான்!


    தூங்கினா தானே... நெகிழ்ச்சியான பதிவுங்க சார்..என் மனம் சிலுக்கை கண்ட சிறை வார்டன் போல நிரம்பி வழிழிழிழ்ழிகிறது..

    ReplyDelete
    Replies
    1. // என் மனம் சிலுக்கை கண்ட சிறை வார்டன் போல நிரம்பி வழிழிழிழ்ழிகிறது.. //

      :-) ROFL

      Delete
  11. MAGIC செய்கிறது MAGIC MOMENTS அட்டைப்படம்.🔥🔥🔥💪💪

    ReplyDelete
  12. அப்புறம் இன்னொரு சந்தேகமுமே.. Magic Moments ல் நிறைய flavors இருக்குதுங்க.. வரப் போறது Chocolate ஆ, Apple ஆ, Orange ஆ.. இல்லே புது flavour ஆ??

    ReplyDelete
  13. ///நாம் வெளியிட்டிருக்கும் எண்ணற்ற கதைகள் இந்தியாவில் மாத்திரமன்றி, ஆசியாவிலேயே முதல் தபாவாக வெளிவந்திருக்கின்றன என்பது இன்னொரு பகுதி! ///

    நம் காலரை உயர்த்தி கொள்ளும் தருணங்கள் 💥💥💥

    Hats Off to u Sir & Team & All😍💐🎊

    ReplyDelete
  14. ரொம்ப நாள் கழித்து அருமையான.. இனிமையான.. கண்களுக்கு குளிர்ச்சியான .. மனதிற்க்கு இனிமையான .. அட்டகாசமான அட்டைப்படம் சார்..

    2012-2024 வருடங்களில் மிகச் சிற்ந்த அட்டை படம் சார்..அருமை..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete

    2. // 2012-2024 வருடங்களில் மிகச் சிற்ந்த அட்டை படம் சார்..அருமை.. //

      :-)

      இன்னும் சொல்லலாமே போனெல்லி வரலாற்றில் மிக சிறந்த அட்டை படம் இது என்று கூட நீங்கள் சொல்லலாம் ரம்மி :-)

      Delete
  15. 1. டிராகன் நகரம்.

    சிறிது சிறிதாகச் சேமித்து முதன் முதலில் வாங்கிய லயன் காமிக்ஸ். எத்தனை முறை படித்திருப்பேன் என்று கணக்கே சொல்ல முடியாத அளவுக்கு படித்த புத்தகம்.
    2. NBS இதழை விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடையில் கண்டு 400என்ற மிகப்பெரிய விலையை கண்டு மெய்மறந்து நின்றது. பின் சாத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்குப் பலகாரங்கள் வாங்க வைத்திருந்த பணத்தில் NBS இதழை வாங்கி மனம் பூரித்தது எல்லாம் இன்று நடந்தது போல் உள்ளது. உறவினர் வீட்டிற்கு வெறும் கையுடன் சென்றது எல்லாம் பழங்கதை.
    3. மின்னும் மரணம் முழு வண்ணத் தொகுப்பை முதன் முதலில் முன்பதிவு செய்து வாங்கினேன். கையில் இதழை ஏந்தியபோது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. // NBS இதழை விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடையில் கண்டு 400என்ற மிகப்பெரிய விலையை கண்டு மெய்மறந்து நின்றது. பின் சாத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்குப் பலகாரங்கள் வாங்க வைத்திருந்த பணத்தில் NBS இதழை வாங்கி மனம் பூரித்தது எல்லாம் இன்று நடந்தது போல் உள்ளது. உறவினர் வீட்டிற்கு வெறும் கையுடன் சென்றது எல்லாம் பழங்கதை.// நம்ம காமிக்ஸ் காதல் அப்படி

      Delete
    2. // மின்னும் மரணம் முழு வண்ணத் தொகுப்பை முதன் முதலில் முன்பதிவு செய்து வாங்கினேன். கையில் இதழை ஏந்தியபோது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.// ஆமா நானும் புக் செய்து புத்தகம் வீட்டுக்கு வந்த போது கிடைத்த சந்தோஷத்துக்கு விலையே கிடையாது.

      Delete
    3. அருமையான நினைவுகள் சரவணன்! அட விருதுநகர் வந்து இருக்கிறீங்களா! விருதுநகரில் பஸ்ஸ்டாண்ட் உள்ளே உள்ள கடையில் நமது காமிக்ஸ் வாங்கனீங்களா?

      Delete
  16. For me magic moments: Diwali 1987 (I read when I was 4th std. Then XIII black and white (Received it as my wedding gift 😀). Minnum maranam (Treasure of all time 🤩).

    ReplyDelete
  17. Top 3 Moments :

    1) 4 வது அல்லது 5 வது படிக்கும் போது, முதன் முதலில் ஸ்பைடர் கதையை வாசித்து மிரட்டல் அடைந்த தருணம்

    2) பெரிய interest இல்லாமல் படிக்கத் தொடங்கி பின் கீழே வைக்கவே முடியாமல் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் தொடர்ச்சியாக முழுக் கதையையும் படித்து முடித்து கிறங்கிய " இரத்தப் படலம் " கதையின் Goosebumps தருணம்

    (பொன்னியின் செல்வன் கதைக்கு பிறகு கிட்டத்தட்ட அதே போன்ற பரவச வாசிப்பு அனுபவம்)

    3) Magic Moments Special என்ற பெயர் தேர்வு செய்யப் பட்ட மேஜிக் தருணம் 🎊. அன்று முழுவதும் ' அய்யய்யோ ஆனந்தமே mode தான் '... (Special Thanks to editor sir & STV sir & All friends🙏😊)

    ReplyDelete
  18. எனது டாப் 3.
    1) ஸ்பைடர்... நீதிக் காவலன் ஸ்பைடர்.

    முதன் முதலில், ஆறாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி அறையில் அருகில் அமர்ந்திருந்த சக நண்பர் வைத்திருந்த இந்த கதையை எட்டிப் பார்த்ததிலேயே அசத்திய கதை. ஆதர்ச மானசீக ஹீரோ ஸ்பைடர். சேர்வராயன் மலையோர கிராமத்தில், தியேட்டரில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் நடித்த கருப்பு வெள்ளை படங்களை பார்த்து வாழ்ந்த எனக்கு.. ஸ்பைடர் எல்லாம் என் கற்பனைக்கும் அப்பாற்பட்ட கதாபாத்திரம், ஹீரோ அந்நாட்களில்.. என்ன ஒரு ஆக்சன்! என்ன ஒரு விறுவிறுப்பான கதைகள் !!! என்ன ஒரு திமிர் பிடித்த எவருக்கும் தலைவணங்காத தைரியம் !!! வாய்ப்பே இல்லாத தைரியம் !!!

    2) லக்கி லூக்.. புரட்சித் தீ.

    எனக்கு லக்கி முதல் கதை இது. வசனங்களே சரிவர புரிந்து கொள்ளாத வயதிலும், படங்களை பார்த்தும் அரைகுறையாக வசனத்தை படித்தும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த கதை. லக்கி லூக், ஜாலியும் போட்டி போட்டுக்கொண்டு பத்திரிகை வெளிவர உழைப்பது, உதவி செய்ததெல்லாம் அந்நாள்களில் எந்த திரையிலும் நான் பார்க்காத கதை.
    பிறந்தது முதல் பெயரை மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கும் சிறுவனின் வசனமும்.. பேப்பரை படித்து விட்டு தண்ணீரில் போட்டால் காப்பியாக மாறும் காப்பி மை யுக்தியும், மாட்டின் மேல் செய்தியை எழுதி அனுப்புவதும், லக்கி ஒரு கதைக்கு ஒரு தடவை மட்டுமே துப்பாக்கி குண்டு மாற்றுவதும் வசனங்களும்... மறக்க இயலாத லக்கி லூக் அறிமுக கதை மிக மிக பிடித்தமான கதை எனக்கு.

    3) XIII.. ரத்தப் படலம்.

    எனது வாசிப்பு, ரசனைகளை அடுத்த கட்டத்திற்கு தூக்கிச்சென்ற மறதிக்கார ஹீரோ. என் சுபாவத்தை புரட்டி போட்ட ஹீரோ மற்றும் கதை ரத்தப் படலம் தொடர்.. ஒவ்வொரு பாகமாக மில்லியனியம் ஸ்பெஷல் வரை 10 பாக கதைகளையும் ஒவ்வொரு முறையும் வாசித்து விட்டு அடுத்த பாக கதைக்காக 4 முதல் 5 ஆண்டுகள் வரை காத்திருந்த தவிப்பு எஸ் விரக்தியாக மாறிய காலகட்டம் அது... 2004 அல்லது 2005 இது சார்ந்து முதன் முதலில் நண்பரின் பெயர் மூலம் எனது கருத்தினை (அப்பொழுது எல்லாம் பதிவுகள் ஆங்கிலத்தில் என்பதால்) XIII வேண்டும் என லயன் பதிவில் ஒரு நீண்ட பதிவு செய்தது ஒரு தனி கதை.

    ரத்தப் படலம் 1 முதல் 18 பாகம் வரை அறிவிப்பு பார்த்ததும் ஆனந்தத்தில் இதயமே அதிர்ந்தது. கருப்பு வெள்ளையில் வந்த மெகா புத்தகத்தை கையில் ஏந்திய போது.. ஏற்பட்ட உணர்ச்சி பெருக்கு வார்த்தையில் விவரிக்க முடியாத பேரானந்தம் மறக்க இயலாத புத்தகம். என்றுமே தவிர்க்க இயலாத ஹீரோ...XIII

    ReplyDelete
  19. ரகுராமன் sir,
    உங்களுடைய 2 moments உம், என்னுடைய 2 moments உம் Same ஆக உள்ளன😍🤝

    ReplyDelete
  20. 50...


    தல அட்டைப் படம் தெறி மாஸ்.

    ReplyDelete
  21. அடடே சந்தோஷமாக உள்ளது.. கையைகொடுங்கள் சார் வாழ்த்துக்கள்...

    ஸ்பைடர், ஆர்ச்சி, ரிப்போட்டர் ஜானி, கேப்டன் பிரின்ஸ், கருப்பு கிழவி கதைகள், இரும்பு கை மாயாவி.. இவர்களுக்காக எப்பொழுதும் எங்கேயாவது ஒரு ஓரத்தில், கீறல் விழுந்த இசைத்தட்டில் வரும் சத்தம் போல் என் குரல் எட்டிப் பார்க்கும் அவ்வப்போது...

    ReplyDelete
  22. My top three
    1. லயன் சூப்பர் ஸ்பெஷல் 1987
    2. கார்சனின் கடந்த காலம் 1997
    3. மின்னும் மரணம் கலெக்டர் எடிசன்

    ReplyDelete
  23. Sir - 12-13 years have just whizzed past filled with color comics ! What memories !! What moments !!

    My favourites - first introduction via Sadhi Valai and that red Robot Archie special , Junior Lion First Book - Super Circus, Junior Lion Scrooge - Oru Naanaya Poraattam, Lion-Dhigil Kodai Malars, Batman, Lion Super Special 1987, Dragon Nagaram, The Muthu Special book with Timothy Dalton cover for 5 rupees when you took over (featured an inhouse story too with artwork by Chellam), Batman Kirukkanaa? , Batman-Pournami Vettai, Batman - Killing Joke (forgot the Tamil Title), Roger Moore stores, Mr Z, Danger Diabolik, Adhiradippadai, Puratchi Thee. Personally for me from 1993 to 2006 there was a hiatus from Lion Comics as I went for higher studies followed by employment at Hyderabad, Bangalore etc. Upon return the comeback melas and what followed 2012 - oh what memories !!

    Some of the best moments and distraught moments in the last 12 years were in company of Lion-Muthu comics always ! Plenty more thoughts surging in - will have to take time to collect.

    Last but not the least, அது லயன் கோடை மலரோ திகில் கோடை மலரோ - கடைசீ பக்கத்தில் இருந்த ஒரு முத்தக் காட்சி மட்டும் அம்மாவின் பார்வைலயில் பட்டுவிட அதுக்கப்புறம் 2 மாசம் போராடி தமிழ் காமிக்ஸ் படிக்க அனுமதி பெற்று மறுபடியும் வாசித்த 85-86 நினைவுகள் !! :-)

    ReplyDelete
    Replies
    1. The most exciting issues ever for me have been:

      a) Super Circus - Junior Lion first book
      b) Lion Super Special - Deepavali 1987
      c) Sirithu Kolla Vendum - the first time I held aloft my favourite hero in Tamhiz (Batman) in a full tale - (the Dhigil kodai malar had only the introductory bit)

      Delete
  24. 1. ரத்தப்படலம் கலெக்டர் எடிசன் 1
    2. மின்னும் மரணம்
    3. கத்தி முனையில் மாடஸ்டி

    மறக்கவியலா தருணங்கள் வேறு. பிடித்த கதைகள் வேறு எனும் போது லயனை அறிமுகப்படுத்திய தருணம், டைகரை அறிமுகப்படுத்திய தருணம், முதன்முறையாக ரத்தப்படலத்தை தொகுத்த தருணத்தில் நடைபெற்ற சம்பவங்கள் என்னால் மறுக்க இயலாதவை.

    ReplyDelete
  25. தோர்கல் எப்போது வரும்?

    ReplyDelete
    Replies
    1. டிசம்பர் மாதம் வருகிறது சார்.

      Delete
  26. மனமார்ந்த வாழ்த்துகள் சார்!!

    மூன்று அல்ல முன்னூறு தருணங்கள் சொல்லலாம். மூன்று என்பதால்
    1. 87 தீபாவளி மலர் - 10 ரூபாய்க்கு பாக்கெட் சைஸ் குண்டு புக் கையில் வாங்கிய போது
    2. கம் பேக் ஸ்பெஷல் சென்னை புத்தக கண்காட்சியில்
    3. நெவர் பிஃபோர் ஸ்பெஷல் அட்டகாசமான தரத்தில் , முழு வண்ணத்தில் பார்த்த போது.

    இதுபோக சூப்பர் சர்க்கஸ், புரட்சித்தீ, மில்லெனியம் ஸ்பெஷல், ரத்தப்படலம்(கருப்பு வெள்ளை&வண்ணத்தில்), மின்னும் மரணம், லார்கோ என பலப்பல தருணங்கள் உண்டு. பால்யத்தின் மறக்கவே முடியாத இனிய தருணங்களிலும், வயதும் பொறுப்புகளும் கூடிய பிறகும் கூடவே பயணித்து மனதை இலகுவாக்கும் தருணங்களிலும் லயனின் பங்கு இன்றியமையாதது. எடிட்டர் அவர்களுக்கு நன்றிகள் பலப்பல.
    சிங்கராஜா கம்பீரமாக இன்னும் பலப்பல தசாப்தங்களுக்கு ராஜநடை நடக்க பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. // சிங்கராஜா கம்பீரமாக இன்னும் பலப்பல தசாப்தங்களுக்கு ராஜநடை நடக்க பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும். //

      +1

      Delete
  27. முதற்கண் "1000+ இதழ்களை கடந்து, இன்றும் எங்களை பால பருவத்தில் வைத்திருக்கும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும், லயன் காமிக்ஸ் குழுமம் என்றென்றும்,மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார் ❤️ 💐 ❤️.
    இதை வெறும் வரிசை எண்களாக பாக்காமல்,
    ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு வித உணர்வுகளை தந்து, ஆயிரக்கணக்கான வாசகர்களை மகிழ்வித்த எண்ணங்களாகவே பார்க்கத் தோன்றுகிறது.

    """நாம் வெளியிட்டிருக்கும் எண்ணற்ற கதைகள் இந்தியாவில் மாத்திரமன்றி, ஆசியாவிலேயே முதல் தபாவாக வெளிவந்திருக்கின்றன என்பது இன்னொரு பகுதி! அட, ஒரு சில கதைகள் – ஒரிஜினலாய் வெளியான மொழிக்குப் பின்பாக நமது தமிழில் மட்டும் தான் வெளியாகியுள்ளன என்பதுமே ஒரு கொசுறுத் தகவல்!"""
    ஆஹா கேக்கவே ஆனந்தமாக உள்ளது.
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    மறக்கவியலா தருணங்களில்...
    1)காமிக்ஸ் படித்த நாட்களில் மாடஸ்டியும்,ஸ்பைடரும்,ஆர்ச்சியுடன் பல பல புது நாயகர்கள் கலக்கிய 1985,86,87 நாட்களில் ஒவ்வொரு மாத புத்தகங்கள் அனைத்துமே அளவற்ற மகிழ்ச்சியை தந்து கொண்டிருந்த காலங்கள்.

    2) இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 1987 தீபாவளி மலரான "லயன் சூப்பர் ஸ்பெஷல்" 10₹ புத்தகத்தை வாங்க சிரமப்பட்டு, ஒரு மாசம் கழிந்து,1.50 பைசா கடைக்காரரின் தயவால் டிஸ்கவுன்டில் கையில் வாங்கிய தருணம் என்றுமே மறக்காது.

    3) 1993,94களில் "காமிக்ஸ் வருகிறதா?" என தெரியாமல் கிட்டத்தட்ட 28 வருடங்கள் போன பின்,கடந்த 2021 ஆகஸ்டில் லயன் காமிக்ஸ் தொடர்ந்து வருவது தெரிந்து - அம்மாவிடமிருந்து காணாமல் போன பூனைக்குட்டி, மீண்டும் தாயை கண்ட மகிழ்ச்சியைப் போல காமிக்ஸ்டன் இணைந்த இதமான தருணம்.

    இந்த 1000+ வெற்றி மென்மேலும் வளர்ந்து, 10000+ இதழ்களில் பெரிய வெற்றியாக எங்களுடன் கொண்டாடி, 100000+ வெற்றியாக வரும் காலங்களில் தொடர வாழ்த்துக்கள் சார் 💐.

    ReplyDelete
  28. சார் அட்டைப்படம் சும்மா தெறிக்க விட...டெக்சின் மைல்கல் இதழென குதூகலப்படுத்த....கீழ வந்தா அந்த கம்யூனிச வண்ணம் தெறிக்கும் டெக்சட்டை அதகளம்...இது வரை வந்ததிலேயே இதான் டாப் பென சத்தியம் செய்யும் மனச என்னவென்பது

    ReplyDelete
  29. 1." கத்தி முனையில் மாடஸ்டி " முதன் முதலில் பார்த்த தருணம் .ராணி புத்தகம் மட்டும் விற்கும் ஒரு பெட்டிக் கடையில் இரவு ஏழு மணி சுமாருக்கு கரண்ட் வேறு இல்லாத கும்மிருட்டிலும்ஜொலித்த மாடஸ்டியை முதன் முதல் பார்த்த அந்த தருணம் . இப்பொழுது நினைத்தாலும் ஜிவ்வென்று உள்ளது. 2. படக்கதை புத்தகங்கள் வருவதே மறந்தபல நாட்களுக்குபிறகு அதே பெட்டிக்கடையில்" காபாலர் கழகம் " பார்த்தேன் .அதன்பிறகேலயன்காமிக்ஸ்இனி தொடர்ந்து வரும் என்ற நம்பிக்கை ஒளி தெரிந்தது . அதன் பிறகு புத்தகங்கள் விற்கும் கடைகளில் ,மற்றும் பழையபுத்தககடைகளில்எல்லாம் "லயன் "தேடல் தொடர்ந்தது.3. வெற்றிவிழா படம் பார்த்துவிட்டு இது நம்ம கதையாச்சே என்று எங்கோ ஜெர்க் அடிக்க படம் பார்த்துவிட்டு வரும் பொழுது இரண்டுகசின் பிரதர்களை வீட்டுக்கு இழுத்து வந்து இரத்தப் படலத்தை க் காட்டி இங்க பார் கமலை சுட்ட பிறகு கடலில் இருந்து காப்பாத்த றாங்களா?அதே மாதிரி இதிலும் ஹீரோ கடலில் விழுவறாரா?காப்பாத்த றாங்களா ?ரெட்ண்டிலயும் ஞாபக மறதி ஆயிடுதா என்று புல்லரித்த தருணம்

    ReplyDelete
  30. சார் டாப்3 என கட்டுபடுத்த முடியுமா என் நினைவுகளை....முதல் முதலில் என் அன்னையோடு வாங்கிய இரும்பு மனிதன்...அந்த நாலு ரூவா இதழை அன்றைக்கு எனக்கு வாங்கித் தந்த என் அன்னையை வியப்பதா அந்த அற்புத உலகில் இரு வண்ணத்தில் ...இரும்பு மனிதன் எனும் ஆச்சரியத்தை சிறுவயதில் யாருக்குமே வாய்க்காத வண்ணம் எனக்களித்த லயன வியப்பதா...


    அப்புறம் ஆங்காங்கே கிடைத்த பழம் கதைகளில் அட்டையில் லாம கிடைத்த பால்பிரபுவின் இயந்திர மனிதர்களோடு மோதும் மாயாவதியின் அந்த கடிகாரம் கொண்ட கொலையாளி தந்த பக் பக் அனுபவங்கள் சொல்லாமல் விட முடியுமா...


    அந்த முதன்முறையாக தேம்ஸ் நதியில் மிதந்த மஞ்சள் பூ மர்மங்கள் இன்று நமது குளங்களை ஆக்கிரமித்த வெங்காயத்தாமரை செடிகளை ஒப்பிட்டு...உலகமே விரும்பும் கோகோ கோலா பானம் விளம்பரத்தை கதையினூடே தந்த வரிகள மறக்க முடியுமா...அது பச்சைநிறமென எனது மனது வடித்த கற்பனைய மறக்க முடியுமா...



    அதன் பின்னர் கிடைத்த ஸ்பைடரின் ஆர்ச்சி யின் ஆண்டு மலர் தந்த அற்புத அனுபவத்தை ...அந்த குதிரை வீரன் ஆர்ச்சியை...ஸ்பைடரோடு மோதும் விஞ்ஞானியை...டெலிபதியை..ஆர்ச்சியின் டெலஸ்கோப் கரத்தை...காலப்பயணத்தை..மார்பில் காற்று பீச்சும் கருவியை..இருவரும் கொண்டிருந்த ஜெட்டமைப்பை...ஹெலிகாரை...காலப்பயணத்தை அறிமுகப்படுத்திய கோட்டையை...டாக்டர் ஆக்ரோவை...அந்த காலத்துல என்னை மட்டும் மேதாவியாக்கிய இக்கதைகளை...என் வீட்டருகே ஒருவரிடம் வாங்கி அரண்ட இருவண்ண ஸ்பைடரை தந்த பொம்மைகளின் பேரரசரை...அதனை நேற்று நினைவாக்கிய ஆசிரியரின் கொடையை...பாதாள போராட்ட குகைப்பயணத்தில் காணும் அதிசய உயிரிகளை ....பறவைவிரட்டியின் சூலாயுதத்தை..பள்ளி நண்பனிடம் மூனாப்பு படிக்கைல புத்தகத்துக்குள் வைத்து படித்த உலகப்போரில் ஆர்ச்சியை ...நம்மகிட்ட இல்லையேன்னு அது வளத்த பொறாமையை...தேடினால் நாமும் வாங்கலாமே என அன்று வராத எண்ணத்தை...
    முதன்முதலாக அதீத ஆர்வம்னா சொல்ல முடியா பரிதவிப்போடு வாங்கி ரசித்த யாரந்த மினி ஸ்பைடரை...
    ஜீனியரார்ச்சியை...கற்பனையின் உச்சமாய் பீதி கிளப்பிய களிமண் மனிதர்களை...இரும்புக்கை
    ன்னு தேடி அசோக் பொன்னி காமிக்ஸ்...விரல் மனிதர்கள்..என சொர்கமே இரும்புக்கை தான் என தேடிய ஆவலை...எந்த கதையும் மொக்கையா தோணாத நாட்களை...தவளை எதிரியை...விண்வெளிப் பிசாசை..கரடி முகத்தானை...குகுமாயி தெய்வத்தை...மீண்டு மிஸ்டர் மர்மத்தோடு வந்த பொம்மைகளின் அரசர் தந்த ஆர்வத்தை...நீதிக்காவலனாய் மாறிய ஸ்பைடர் பிடிக்குமா என்ற பதிலளிக்க அறியா அந்த காலத்தை எதிர் கொண்ட தங்கள் கேள்வியை ...எதிர்கொண்ட நீதிக்காவலன் ஸ்பைடரோட மோதும் முகமூடியை...இருண்ட இருவண்ண ஜிபால்டி ஆவி கயிற்றில் பறந்த பறக்கும் பிசாச...சிறுவன் மோரிசோடு பயணித்த ப்ளாக் மெயிலை...கோடை மலரை...பெரிய சைசில் வந்த அதிரடி வீரன் ஆர்ச்சியோடு வந்த ஜான்மாஸ்டரை அந்த மொட்டை நண்பரை இழந்த சோகத்தை...காராத்தேன்னா அசந்து வாய்பிளந்து கேட்ட கதைகளை நிசமாக்கி உலவ விட்டு தந்த கராத்தே டாக்டரை ...நான் க்யா என உற்சாகமா கத்தி கொண்டு நண்பர்களை எதிரிகளை வீழ்த்திய நாட்களை...அந்த விமான விபத்தில் கண்ட உயரமான மனிதர்களை அவர்களை விட்டு வரமுடியாதென மறுத்த ஹீரோவோடு நானும் போய் விடத் துடித்த நாட்களை...கெக்தீவு மன்னனாய் அனாதை இல்ல சிறுவர்களோடு போராடிய சாகசத்தை...அந்த காலிழந்த மனிதர் முதுகுதண்டை உறைய வைக்கும் கதைகளை கேட்டு தரும் கொடையை தந்த கதைகளை...அந்த விச்சுகிச்சுவை...கபீசை...நாமும் வந்த ரேம்போவை...வண்ணத்தால் பரவசபடுத்திய பறக்கும் ஈகிள் மேன்மை...மனதை கலவரபடுத்திய ஜோக்கரோடு மோதிய பேட்மேன் கதைகளை...கதை சொல்லும் சிம்மாசனத்தில் அமர்ந்து வேதாள ரோடு அமர்த்திய கதைகளை ..தங்க மணலை...நீர்வீழ்ச்சி கபாளர் குகையை...அவர் வைத்திருக்கும் அதிசய பொருட்களை. தொட்டுத் தடவிய மனதை...தீபாவளி களை மேலும் கலைகட்டச் செய்த தீபாவளி மலரை....அன்றே நாம் பாத்த பிரம்மாண்ட கம்ப்யூட்டரை...இப்ப எந்த வழில போலாம்னு தடுமாறும் போது உனக்கு பிடிக்கும் வழில போன்று உற்சாகபடுத்திய தந்தை தந்த....எந்த விளையாட்டு என தடுமாறும் கால்பந்து வீரனின் இருவண்ண கதையை....



    ReplyDelete
  31. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  32. ...மறக்க வியலா தருணங்கள்...
    முதல் இதழான இரும்புக்கை மாயாவியை 90 காசுகள் கொடுத்து வாங்கி புரட்டிப் பார்த்து படித்து மகிழ்ந்த அந்த முதல் தருணம்.
    அன்று தொடங்கிய அதே பரவசம், 40 ஆண்டுகள் கழித்து NBS இதழை dust Cover உடன் கையில் ஏந்தி ரசித்த தருணம் என தொடர்ந்தது.
    அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், ஒரு படி தூக்கலாகவே மகிழ்ந்த தருணங்கள் மின்னும் மரணம் இதழையும், ஸ்லிப் கேஸில், வண்ணத்தில் வெளிவந்த இரத்தப்படலம் கனவு இதழையும் , முத்து 50 ஆவது ஆண்டு சிறப்பு இதழையும் பிரித்து படித்து ரசித்த தருணங்கள்.
    எல்லாம் மறக்கவியலா பொன்னான நிகழ்வுகள்.
    ஒவ்வொரு E.B.S., தீபாவளி இதழ்களும் , Tex 70ம் ஆண்டு கொண்டாட்ட குண்டு புக் என, அனைத்தும் அதே பரவசத்தை தரத் தவறவில்லை.
    இன்றும் ஒவ்வொரு மாதமும் அதே உணர்வுகளுடனேயே கொரியர் பார்சலை பிரித்து புத்தகங்களை ரசித்து படித்து மகிழ்கிறேன்.
    முத்து, லயன் இரண்டும் என் வாழ்வுடன் பின்னிப் பிணைந்து விட்டது என்பது ம(று)றக்கவியலா நிதர்சனமான உண்மை.

    ReplyDelete
    Replies
    1. பத்து சார் செம்ம செம்ம உங்கள் வாழ்வில் மட்டும் அல்ல எனது வாழ்விலும் தான்.

      Delete
  33. மேற்கே போ மாவீரா,
    விதி எழுதிய வெற்றி பயணம்,
    என்பது போன்ற விடுபட்ட காமிக்ஸ்களை அடுத்தடுத்த மாதங்களில் ஏதாவது ஒரு வகையில் போடுங்கள் சார்.

    ReplyDelete
  34. @Edi Sir.. 😘😘

    #Magic moments special#

    கொலை மாஸ் அட்டைப்படம் 🥰😘🧨🫣🫣🫣🫣

    கதை அள்ளு உடும் போல இருக்கே...🧨🧨🧨🥰😘

    ReplyDelete
  35. 1. புதையல் பாதை - புத்தக கடையில் பார்த்து வாங்கிய முதல் காமிக்ஸ் புத்தகம்.
    2. மின்னும் மரணம் - என் ஆதர்ச நாயகனின் magnum opus
    3. சாத்தான் வேட்டை - எத்தனை முறை படித்தேன் என்றே கணக்கிலாத டெக்ஸ் இதழ். இதை வண்ணத்தில் மறுபதிப்பு செய்யுங்கள் sir, please.

    ReplyDelete
  36. 1. இரும்பு மனிதன் முதன் முதலில் தீபாவளி ஸ்பெஷல் ஆக வந்த புத்தகம்
    2. லயன் சூப்பர் ஸ்பெஷல் 1987
    3. திகில் காமிக்ஸ் முதல் இதழ் (இந்த புத்தகம் ஒரு பொங்கல் பண்டிகை வெளியானது. கரூரிலிருந்து எங்கள் சொந்த ஊரான திருச்சிக்கு செல்லும்போது என் அப்பா எனக்கு வாங்கி கொடுத்து ட்ரெயினில் படித்துக் கொண்டே வந்தேன். அவருக்கு அந்த சிறுகதைகள் ஸ்டைல் பிடிக்கவில்லை ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது)

    ReplyDelete
  37. எனக்கு தெரிந்து முதன் முதலில் ஸ்டிக்கர் ஒட்டும் படலம் இந்த புத்தகத்தில் தான் நடந்தது

    ReplyDelete
  38. 1.ஆப்ரிக்க சதி
    2.திக்கு தெரியாத தீவில் (லயன்)
    3.இரத்தப் படலம் ஜம்போ

    ReplyDelete
  39. மறக்கவியலா தருணங்கள்...

    MDS மெகா ட்ரீம் ஷ்பெசல்..

    நான்கு.. ஐந்து..பத்து.. பதினைந்து ரூபாய் விலைகளில் சின்ன சின்ன புத்தகங்களையே பார்த்து பழகியிருந்த வேளையில்.. முதன் முதலாய் நூறு ரூபாய் விலையில் டெக்ஸ் + டைகர் ஃப்ளோ அப்புடன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய புக்கை கையிலும் கண்ணிலும் ஏந்திய தருணம்...


    LMS வெளியீடு 2014..

    அதற்கு முன்பிருந்தே ப்ளாக்கில் எழுதி பலருடன் அறிமுகம் ஆகியிருந்தாலும்... முதன்முதலாய் எடிட்டர் சாரையும்.. ப்ளாக் நண்பர்களையும் நேரில் நெருக்கத்தில் சந்தித்த அந்த ஈரோட்டு LMS வெளியீட்டுத் தருணம்...

    Comeback Special ...

    இனி காமிக்ஸ் வருமோ.. வராதோ என ஏங்கித்திரிந்த சமயத்தில்.. திடுமென ஒருநாள் தபாலில் வந்து சேர்ந்த Comeback ஷ்பெசலை வாஞ்சையோடு அணைத்து நெக்குருகிய தருணம்... அதன் கிளையாக New look special இதழில் இரண்டு லக்கிலூக் கதைகளை அதற்குமுன் கண்டிராத ஒரு தரத்தில்.. வண்ணத்தில் தரிசித்த தருணம்...

    இன்னும்.. நான் என்னோடு தனிப்பட்ட முறையில் எண்ணிக் களிப்புற ஏகப்பட்ட தருணங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறது சார் நம்ம காமிக்ஸ்....😍

    ReplyDelete
  40. 1.iratha padalam
    2.minnum maranam
    3. All Lucky luke books

    ReplyDelete
  41. எனக்கு எப்போதும் ஸ்பெஷல் மொமென்ட் முதலில் நான் வாங்கிய குண்டு புத்தகம் லயன் செஞ்சுரி ஸ்பெஷல் பச்சை கலர் அட்டையோடு 20 ரூபாயில் டெக்ஸின் இரும்புக்குதிரையின் பாதையில் கதையோடு மறக்க முடியாத இதழ்.

    அடுத்து செம அழகாக 25 விலையில் வந்த டாப் 10 ஸ்பெஷல்

    தல முகம் ரொம்ப அடிவாங்கி உள்ளது போல தெரிகிறது இந்த கதையில் , ஒரே கதையில் அதிக அடி வாங்கிவிட்டாரோ.

    ReplyDelete
  42. // ஆந்தையனுக்கு அவன் கைவண்ணமும் அதகளங்களே! //

    ROFL 😂

    ReplyDelete
  43. சார் டாப் 3 moments

    1. முதல் முறை அந்த பெரிய சைசில் இரும்பு மனிதன் புத்தகத்தை பார்த்த போது. அப்போது இருந்து இப்போது வரை அந்த Wow பேக்டர் தொடர்கிறது. எனக்கு லயன் என்றாலே முதலில் ஞாபகம் வருவது இரும்பு மனிதன் தான்.

    ReplyDelete
    Replies
    1. 2. நமது எல்லாருக்கும் பிடித்த ஹீரோ லக்கி லூக் இன் முதல் கதை சூப்பர் சர்க்கஸ் புத்தகம். அதில் நீங்கள் லக்கி கு எழுதிய அறிமுகம் இன்று வரை கார்ட்டூன் கதைகளை நான் ரசிக்க காரணம் அந்த கதை தான்.

      Delete
    2. 3. தங்கக் கல்லறை அதும் அந்த முதல் புத்தகத்தை படித்து விட்டு ஒவ்வொரு நாளும் கடையில் அந்த புத்தகம் வந்து விட்டதா என்று போகும் போது ஒரு முறை வரும் போது ஒரு முறை check செய்தது. அந்த இரண்டு பாகங்களையும் ஒரு 200 தடவை படித்தது இதை எல்லாம் எப்படி மறக்க முடியும்.

      Delete
    3. நண்பர் M Harris சொன்னது போல 3 அல்ல 300 தருணங்கள் சொல்லலாம். இன்னும் சொல்லாமல் விட்டது எத்தனை எத்தனையோ.

      எனது ஆதர்ஷ நாயகன் ஸ்பைடர் இந்த டாப் 3இல் இல்லை.
      நான் 200 முறை படித்த கார்சனின் கடந்த காலம் இல்லை.
      இரத்தப் படலம் கலர் இதழ் பற்றி சொல்லவில்லை.
      மின்னும் மரணம் இல்லை
      டின் டின் பற்றியும் சொல்லவில்லை.

      Delete
    4. இதில் என்ன முரண் என்றால் புது யுக காமிக்ஸ் பிரியனான நான் சொன்ன டாப் 3 எல்லாமே 2012 kku முன்பான நினைவுகளே.

      Delete
  44. - The மேஜிக் மொமெண்ட் , ஸ்பெஷல் - இதழுக்கு (1000... )எனது
    வாழ்த்துக்கள் சார்.. ii
    எனக்கு மறக்க முடியாத
    பரவசமான தருணங்கள்
    எனக்கு முதல் 6 இதழ்களுக்குள்ளேயே முடிந்துவிட்டதே சார்..
    1. காமிக்ஸ் - என்றாலே இரண்டு வருடங்களாக (1982 To 1984) படித்து பழகி இருந்த பாணியிலிருந்து மாறுபட்டு ஒரு பெண் -கதாநாயகியாகவும் .
    மாறுபட்ட கதை ஓட்டமாகவும்
    (இப்படித்தான் கதை ஆரம்பிக்கனும் - இப்படித்தான் கதை முடியனும் என்றில் லாம்)

    .. "கத்தி முனையில் மாடஸ்டி "
    - யை கைகளில் ஏந்திய தருணம்..
    (மேலும் எனது பாக்கெட் மணியில் வாங்கிய முதல் காமிக்ஸ் இதழ்..)
    2. மூன்றாவது இதழாக வெளிவந்த
    "எத்தனுக்கு எத்தன்... " -
    அந்த இதழின் சைஸ் - ஓவிய அழகு..
    ஒரு வில்லனை ஹிரோ - வாக ரசித்த தருணம்.. நமக்கு பழகிய
    அ. கொ.தி.கழகத்தை - விட
    வித்தியாசமாய் யோசித்த - டாக்டர் - நட்- (வில்லன்..? i )
    இந்த கதையில் யார் வில்லன்..
    யார் ஹீரோ - என்று திரும்பத் திரும்ப படித்து பரவசப்பட்டது
    (புதிய கோணங்களில் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்து விட்டோம் என்ற ஆர்ப்பரிப்பு..)
    3. அப்றம் - தீபாவளி மலர் - இரும்பு மனிதன் ஆர்ச்சி -
    அந்த காலத்தில் அந்த விலை (ரூ 4.00)
    இதழின் சைஸ்..
    இருவண்ணத்தில் - ரசிப்பதற்கு ஏற்ற கதையின் பிரமாண்டம்..
    ஒரு ஆங்கிலப்படத்தை புரிந்து கொண்டது போல் ஏற்பட்ட பிரமிப்பு..
    இதழை கைகளில் ஏந்தி பரவசப்பட்ட தருணம்..
    மறக்க முடியாத Top - 3 தான்..
    நண்பர்கள் குறிப்பிட்ட
    மற்ற இதழ்களின் பரவசம் என்பதும் இதன் சாரம்சம் தானே..
    - இரத்த படலம் முதழ் இதழ்.
    - சூப்பர் சர்க்கஸ் - லக்கிலூக்
    - 10 ரூ சூப்பர் தீபாவளி ஸ்பெஷல்.
    - இரத்த படலம் | ( B&W - முழு தொகுப்பு)
    - 2012 - யில் கம்பேக் ஸ்பெஷல்.
    - மின்னும் மரணம் - (ரூ 1000)
    அப்றம் - 2013-ல் என்று நினைக்கிறேன். லார்கோ வின்ச்
    வுடன் சேர்ந்து வெளிவந்த 4 இதழ்களை - பார்சலை -கொரியர்
    ஆபீஸிலிருந்து வாங்கிக் கொண்டு நடந்து வீட்டிற்கு வரும் போது ஏற்பட்ட பரவசம்..
    காமிக்ஸ் என்பதைவாழ்வின் ஒரு அங்கமாகவே மாற்றி விட்ட

    உங்களுக்கு என்றென்றும்
    எங்களது நன்றிகள் சார்..
    The magic moment S - சார்..

    ReplyDelete
    Replies
    1. // காமிக்ஸ் என்பதைவாழ்வின் ஒரு அங்கமாகவே மாற்றி விட்ட

      உங்களுக்கு என்றென்றும்
      எங்களது நன்றிகள் சார்..
      The magic moment S - சார்.. // ஆமா ஆமா இங்கே இருக்கும் அனைவருக்கும் பொதுவான கருத்து இது.

      Delete
  45. பல நூறு மேஜிக் மொமெண்ட்ஸ் இருக்கிறது. அதில் எதைச் சொல்ல? எதை விட? முதல் மொமென்ட் கத்தி முனையில் மாடஸ்டி
    இரண்டாவது மறக்க இயலா சூப்பர் சர்க்கஸ்
    மூன்றாவது XIII
    நிஜங்களின் நிசப்தம்
    பழி வாங்கும் புயல்
    பழி வாங்கும் பாவை
    கிங்ஸ் ஸ்பெஷல் வல்லவன் வீழ்வதில்லை.
    பிஸ்டலுக்கு பிரியா விடை
    ஒற்றை நொடி ஒன்பது தோட்டா
    ஸ்பைடர்
    ஆர்ச்சி
    ........
    பல நூறுகள்

    ReplyDelete
  46. Waiting eagerly for magic moments special.... MMS😍🥰💐💐💐💐💐👌💓

    ReplyDelete
  47. எடிட்டர் அவர்களின் 1000+ இதழ்களில் மறக்கவியலா இதழ்களின் எண்ணிக்கை வண்டி, வண்டியாய் கொட்டிக் கிடக்கிறது..
    இருப்பினும் சில தருணங்கள் என்றென்றும் பசுமையான நினைவுகளை கிளறிக் கொண்டையிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை..!

    1987-ம் வருடத்தின் துவக்கம் அது..
    11 வயது பச்சைப் பாலகன் நான்..
    காவிரி ஆற்றுக்கும், எனது வீட்டிற்குமான தூரம் தோராயமாக 1 கிலோ மீட்டர் இருக்கலாம்.. அன்று பள்ளி விடுமுறை நாள்..
    எப்போதும் விடுமுறை நாட்களின் பொழுதுகளை ஆற்றில் குளித்தே நகர்த்துவது எங்களது வாடிக்கை..
    அன்றைய நாளும் அது போலவே ஆற்றில் குளிக்கச் சென்றேன்.. அன்று என் அண்ணன் உடன் வரவில்லை.. (தறியில் ஏதோ வேலை என்று அப்பா அவனை வீட்டோடு இருத்திக் கொண்டார்)
    வழக்கம் போலவே ஆற்றில் குளித்து, குதித்து முடித்த கையோடு நடையக் கட்டினேன்..
    பேருந்து நிலையம் தாண்டிப் போகும் பொழுது எப்போதும் போலவே அங்கிருக்கும் கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் காமிக்ஸ்களின் மீது பார்வையை ஓட விடுவதும் வாடிக்கை..
    அந்தச் சின்ன பெட்டிக் கடைகளின் ஒரு புறத்திலிருந்து அடுத்த புறம் வரை ஒரு சணல் கயிறு கட்டப்பட்டிருக்கும்.. அந்த கயிற்றினூடே, காமிக்ஸ் புத்தகங்களை நடுப்பக்கமாக வகுந்து தொங்க விட்டிருப்பார்கள்..
    முன் பக்க அட்டையில் கதையின் தலைப்பைப் பார்த்து விட்டு, பின் பக்க அட்டையை நோட்டமிட நைசாக கடைக்காரர் பார்க்காத வண்ணம் எட்டிப் பார்த்தேன்..
    அடுத்த வெளியீடு என்னவென்று தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம்..

    அவ்வாறு எட்டிப் பார்க்கையிலே கடையினுள்ளே புதிதாய் ஒரு இதழ்..
    சொர சொரப்பான வித்தியாசமான, அதுவரை அதுபோலவே பார்த்திராத ஓர் அட்டை..

    அது ஒரு சர்க்கஸ் கூடாரம்..
    கூடாரத்தின் நடுவிலே கயிறு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது..
    கயிற்றின் நடுவிலே பெரியதாய் பந்து ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது..
    சுற்றிக் கொண்டிருக்கும் பந்தின் நடுவிலே நான்கு கால்கள் சுதி, லயத்தோடு கயிறு தாண்டிக் கொண்டிருக்கிறது..
    அட..
    அது குதிரை..
    அழகான குதிரை..
    கண்கள் மூடி கெக்கே, பிக்கேவென சிரித்தவாறு..
    அதன் முதுகிலே ஒரு குதிரை வீரன்..
    மூடிய வாயிலே சிகரெட்டை புகைத்தபடி ஒரு மந்திரப் புன்னகையுடன்.. ❤️❤️
    ஏனோ தெரியவில்லை..
    இனம் புரியாமல் வசீகரித்தான் அந்த ஒல்லிப் பிச்சான்..(இன்று வரையிலுமே வசீகரித்துக் கொண்டேயிருக்கிறான்.)
    அவனிடமிருந்து பார்வையை சற்று விலக்கிப் பார்த்தால்..

    *ஜூனியர் லயன் காமிக்ஸ்*

    *சூப்பர் சர்க்கஸ்*

    அடடே என பிளந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன்..

    பாதத்தில் தொடங்கிய ஒரு விதமான குறுகுறுப்பு மெது மெதுவாக உடல் முழுதும் பரவி, விரவி உச்சந் தலை தொட்டு படீரென வெடித்தது..
    அது ஒரு வெறித்தனமான சந்தோசம்..
    கால்கள் தரையில் நிற்கவில்லை..
    இந்த புது காமிக்ஸ் பற்றி அண்ணனிடம் உடனே சொல்லியாக வேண்டுமே என்கிற படபடப்பு.. பரபரப்பு..
    ஒரு மான் குட்டியைப் போன்று துள்ளிக் கொண்டு ஓடினேன்..
    மூச்சிறைக்க வீடு சேர்ந்து அவனிடம் சொல்ல..
    அந்தப் பரபரப்பு அவனிடமும் தொற்றிக் கொள்ள மீண்டும் இருவருமாய் சேர்ந்து பேருந்து நிலையம் நோக்கி ஒரு ஓட்டப் பந்தயம்..

    புத்தக விலை இரண்டு ரூபாய்..
    அய்யோவென நாங்கள் பதறினோம்..
    இஞ்சி தின்ற குரக்கானோம்..

    முழு வண்ணச் சித்திரக் கதை என்பதை பிறகு கவனிக்க..
    கள்ளுண்ட நரியானோம்..

    கையிருப்பாக 75 பைசா எங்கள் வசமிருக்க,மீதி ஒன்னேகால் ரூபாயை பத்து நாட்களாக சேகரித்தோம்..
    அந்த பத்து நாட்களுமே அந்த புத்தகம் கடைகளில் இருக்கிறதா, விற்றுத் தீர்ந்து விட்டதா என்பதை ஒவ்வொரு நாளும் கண்காணித்துக் கொண்டேயிருந்தோம்..

    ஒரு வழியாக அந்த சூப்பர் சர்க்கஸை வாங்கி, கைகளில் ஏந்தி பார்வையை ஓட விட்டபோது.....

    எங்களின் மனவோட்டத்தை எப்படி எழுதுவதென்று தெரியவில்லை..

    இன்றளவிலுமே எங்களுக்குள் பெரிய தாக்கத்தையும், மறக்கவியலா தருணங்களையும் தந்த பல இதழ்களில் இந்த சூப்பர் சர்க்கஸுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு!

    ReplyDelete
  48. செம தகவல் எடி ...

    2024 சந்தா லிஸ்டில் இருந்த இரண்டு புத்தகங்கள் ஏற்கனவே வந்துவிட்டனவா இல்லை ... நான் தான் மிஸ் பண்ணிட்டேனா ... ?!

    அப்படின்னு , ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன்

    நல்ல வேலை அதற்கு பதிலாக தான் மேஜிக் மூவ்மெண்ட் ஸ்பெஷல் வருதுன்னு கன்ஃபார்ம் பண்ணிட்டீங்க.

    ஆல் இஸ் வெல்

    ReplyDelete
  49. 3 Magic ✨ moments மட்டும் என்றாள் சொல்வது கடினம், சில நூறு moments உள்ளது.

    1.ஹாலிடே ஸ்பெஷல் பாட்டில் பூதம்
    2. செஞ்சுரி ஸ்பெஷல்
    3. டாப் டென் ஸ்பெஷல்(பாலைவன பரலோகம்)
    4. மில்லேனியம் ஸ்பெஷல்.
    5. மின்னும் மரணம்
    6. மெகா ட்ரீம் ஸ்பெஷல்
    7. இரத்தப்படலம் 200 ரூபாய் புத்தகம்.
    8. தங்கக் கல்லறை வண்ணத்தில்.
    தனிப்பட்டையை இதழ்கள் என்றால் பல நூறு உள்ளது.

    ReplyDelete
  50. 1.
    Comeback ஸ்பெஷல் - பெங்களூர் வந்த பிறகு சிவாஜி நகரில் உள்ள ஒரு ஏஜென்ட் மூலம் மாதாமாதம் நேரில் சென்று நமது புத்தகங்களை வாங்கி படித்து வந்தேன், அதன் பிறகு நமது புத்தகம் ரெகுலராக வருவது இல்லை என்பதால் நமது காமிக்ஸ் படிக்க முடியவில்லை. ஆனால் நமது காமிக்ஸ் பற்றிய தேடல் இருந்து கொண்டே இருந்தது. அவ்வப்போது கூகிள் மூலம் நமது காமிக்ஸ் பற்றி தேடிக்கொண்டே இருப்பேன்! அப்படி ஒருநாள் தேடும் போது, நமது காமிக்ஸ் தளம் மற்றும் "Comeback ஸ்பெஷல்" இதழ் பற்றிய தகவல் கிடைத்தது; ஆனால் இதழை எப்படி வாங்குவது என்று தெரியவில்லை, அலுவலகத்திற்கு போன் செய்து இந்த புத்தகம் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டேன்! அதன் பிறகு உடனே சிவகாசியில் வேலை பார்க்கும் எனது மச்சானுக்கு போன் செய்து சிவகாசி நமது காமிக்ஸ் அலுவலகத்திற்கு சென்று இந்த காமிக்ஸ் புத்தகத்தை வாங்கி தரமுடியுமா? அடுத்த வாரம் நான் விருதுநகர் வரும்போது உங்களிடம் இருந்து வாங்கி கொள்கிறேன் என்றேன், அவர் சரி என்று சொல்லி அவரின் நண்பர் சிவகாசியில் வசிப்பவரிடம் சொல்லி (எனது மனைவியின் cousin பிரதர்) வாங்கி வைத்து இருந்தார்! விருதுநகர் சென்றவுடன் புத்தகத்தை பார்த்தவுடன் மனதில் தோன்றிய ஆனந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது! எனது கோரிக்கையை சாதாரணமாக (ஏதோ காமிக்ஸ் புத்தகம் இதற்கு நாம் ஏன் மெனக்கிடனும்) எடுத்து கொள்ளாமல், புத்தகத்தை வாங்கி கொடுத்த எனது மச்சானின் கடமை உணர்ச்சியை மறக்க முடியாது! அதன் பிறகு நமது காமிக்ஸ் சந்தாவில் பயணம் செய்ய ஆரம்பித்தேன், இன்று வரை தொடர்கிறது, என்றும் தொடரும்.

    காமிக்ஸ் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் இது!

    ReplyDelete
  51. நெவர் பிஃபோர் ஸ்பெஷல் - சென்னை 2013 - நமது மறுவருகைக்கு பிறகு ரொம்பவே ஆர்வத்தை கிளப்பிய சிறப்பு இதழ் இது! சென்னை சென்று ஆசிரியர் மற்றும் காமிக்ஸ் நண்பர்களை சந்திக்க முடியவில்லை, இந்த இதழ் வந்தது பொங்கல் நேரத்தில் என்று நினைக்கிறேன்; ஆரம்பத்தில் ST கொரியர் மூலம் நமது இதழ்களை பெற்று வந்தேன், விடுமுறை ஆம்பிப்பதற்குள் புத்தகத்தை வாங்கிவிட வேண்டும் என்று காலையில் இருந்து ST கோரியர் ஆபீஸ் போன் செய்து ஒருவழியாக மதியத்திற்கு மேல் வந்து விட்டது என்று சொன்னவர்கள் இன்று டெலிவெரி செய்ய முடியாது , விடுமுறை எல்லாம் முடித்த பிறகு தான் கொடுப்போம் என்று சொன்னதாக ஞாபகம்! சென்னை தான் போக முடியவில்லை, புத்தகத்தையாவது இன்றே வாங்கிவிட வேண்டும் என்று 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவர்கள் அலுவலகத்திற்கு மதியம் 3 மணிக்கு பிறகு கிளம்பி சென்று வாங்கி அதனை அங்கேயே பிரித்து அதனை பக்கம் பக்கமாக ரசித்த பிறகு நண்பர் கார்த்திக் சோமலிங்காவை போனில் தொடர்பு கொண்டு "நான் புத்தகம் வாங்கிவிட்டேன்" சூப்பர்ராக உள்ளது என்று சொன்ன நாட்கள், ஒரு NBS புத்தகம் கொடுத்த மகிழ்ச்சி வாழ்க்கையில் மறக்க முடியாது! எதோ விண்வெளிக்கு முதல் முதலாக நான்தான் சென்றவன் போன்ற அனுபவத்தை கொடுத்தது NBS புத்தகம்.

    ReplyDelete
  52. சிறுவயதில் பக்கத்துக்கு வீடு மூலமாக அறிமுகமான நமது காமிக்ஸ், ஒவ்வொரு மாதமும் நமது காமிக்ஸ் புத்தகங்களை படித்த எனக்கு அந்த ஒவ்வொரு காமிக்ஸ் நாட்களும் மேஜிக் மொமெண்ட்ஸ் ஆப் மை லைப்!

    ReplyDelete
  53. // கடந்துள்ள வாரத்தினில் நமது சந்தா 2025 எக்ஸ்பிரஸ் செம வேகம் எடுத்துள்ளது! //

    Super! super!!!
    விரைவில் புல்லல்ட் ரயில் வேகத்தில் காமிக்ஸ் சந்தா வேகமெடுக்கட்டும்!

    ReplyDelete


  54. மறக்கவியலா(ஏகப்பட்டது உள்ளன என்றாலும்) மூன்று கதைகள்…

    1.மின்னும் மரணம் க/வெ. காரணம்..முதன்முதலில் மணியார்டர்(25+3) பண்ணி வாங்கி ..வியந்த கதை.

    2.இரத்தப்படலம் க/வெ. கலரில் மூன்று புக்காக பாக்ஸ் சகிதம் வந்ததும் நீங்கா இடம் பெற்றாலும்..க /வெ நினைவுகள் ஒருபடி முன்னே.

    புத்தகத்துக்கு முன்பணம் கட்டிவிட்டு..எப்போ வருமென்றே தெரியாத நிலையில் மாதம் தவறாமல் ஆபிஸுக்கு போன் செய்வது வாடிக்கை.எல்லையற்ற போன் காலுக்குப் பின்னே..திடீரென ஒரு காலில்..புத்தகம் அனுப்பிட்டோமே என்ற பதில் வர திக்குமுக்காடிப் போனேன்.ஆகாயத்தில் மிதத்ந்தவன் ஒரு வழியாக தரையில்தான் உள்ளோம் என்று உணர்ந்தபின்னே.கொரியர் பற்றி விசாரித்தேன்.ப்ரொபெசனல் எனத் தெரிவித்து..கூட புக்கிங் நம்பரையும் தந்தார்.

    கொரியர்னா என்னன்னே தெரியாத காலம்.தெரிந்த நண்பனிடம்(கொரியர்காரன்தான்) விசாரித்தேன்.பஸ் ஸ்டாண்ட் பக்கம்தான் ஆபிஸ் இருக்கும் என்றான்.சரின்னு வீட்லேர்ந்து கிளம்பி பஸ் ஸ்டாண்ட் (1.5 கி.மீ)போய் விசாரித்தால்…பரிமளம் காம்ப்ளக்ஸ் பக்கத்தில இருக்கும்னு சொன்னாங்க.பொடிநடையா (0.5 கி.மீ)அங்கேயும் போனால்.இல்லை.ஒரு ஆட்டோக்காரர் லோட்டஸ் TVS பின் பக்கம் ஆபிஸ் இருக்குனு நெஞ்சில் பால் வார்த்தார்.
    யூ டர்ன் போட்டு மீண்டும் பஸ் ஸ்டாண்ட் வழியா போய்…டிவிஎஸ் ஷோரூம் (1கி.மீ)பேக்சைட் சென்று கேட்டால்..பக்கத்து கடைக்காரர் “இங்கதாங்க கொரியஸ் ஆபிஸ் இருந்தது..பத்து நாளைக்கு முன்னே ஷிஃப் ஆகி திருநகர் காலனி கிட்ட(எங்க வீட்டு பக்கத்துல) போயிடுச்சுன்னு சொன்னாரு பாருங்க.அடப்பாவி! முதுகுக்கு பின்னாடி இருக்கிற கடைக்கா ஊர் முழுக்க சுத்தி அலைஞ்சேன்னு நொந்து நூலாகி வந்த வழியே மீண்டும் திரும்பி(1.கிமீ )வந்து கொரியர் ஆபிஸ்ல விவரம் சொல்லி புக்கிங் நம்பரைக் கொடுக்க.அவங்களும் இதோ இருக்குனு கொடுத்தப்புறம் ..அடைந்த சந்தோசம் இருக்கே..அதை எல்லாம் வார்த்தைல சொல்லவே முடியலை.

    பிற்பாடு 24 மணிநேரமும்(சாப்பாடு..தூங்கிற நேரம் தவிர) இரத்தப்படலத்தோடு ஐக்கியமாகி ஒரு வாரமா தொடர்ந்து மூழ்கிப் படித்து முழுக்கதையையும் முடித்தது தனி வரலாறு.அந்தகிளைக்கதை பிற்பாடு..

    3. என் பெயர் லார்கோ..

    சத்தியமா தமிழில் இப்படி உலகத்தரமா வண்ணத்திலும்..மேக்கிங்லும் பின்னியெடுத்த லயன் காமிக்ஸை பாத்து வாயடைத்துப் போனது நிஜம்.ரெண்டு மூணு நாளுக்கு வெறுமனே புரட்டிப் புரட்டிப் பார்த்தே மெர்சலானேன்

    ReplyDelete
    Replies
    1. அருமை சார் உங்களின் காமிக்ஸ் நினைவுகள்.

      Delete
  55. கானகத்தின் கருப்பு நிழல்: ஜாகுவார படமெடுக்கும் ஒரு கும்பல், அதனை வேட்டையாட துடிக்கும் ஒரு கும்பல் + கணவன் மனைவி இடையே ஒரு நெருடல் , அது போக இந்த ஜாகுவாரல் பாதிக்கபட்ட காட்டுவாசிகள் ஒரு பக்கம் மற்றும் அமேசான் காடு என அட்டகாசமான கதைகளம்; இறுதியில் ஜாகுவார் என்ன ஆனது என்பதை பதபதைக்க சொல்லி உள்ளார்கள். சித்திரங்கள் மிக சிறப்பு. கதையை இயல்பாக கொண்டு சென்று இருகிறார்கள், அதனால் தான் பெரிய கதையாக கொடுத்து உள்ளார்கள். நல்ல வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது.

    ReplyDelete
  56. அட்டாஹாச writing sir... வாழ்த்துக்கள்... மின்னும் மரணம்... Xlll. வண்ண தொகுப்பு.. கார்சனின் கடந்த காலம்.. முதல்
    பதிப்பு... இன்னும் சொல்லிட்டே
    போலாம் sir... ❤️❤️❤️🙏

    ReplyDelete
  57. மறுவாசிப்பு என்பது எவ்வளவு சுகமானது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது.
    கடந்த 3 நாட்களாக தோர்கல் மறுவாசிப்பில் இருக்கிறேன்.
    வாவ்.. என்ன மாதிரியான அட்டகாசமான கதையமைப்பு.
    21 பாகங்கள் முடித்திருக்கிறேன் இதுவரை.
    சிகரங்களின் சாம்ராட் கற்பனையின் உச்சம் என்றால், ஒரு அழகிய அகதி அதன் மறுபரிமாணம்.
    அதில் தோர்கலின் காலப்பிரயாணம் என்றால், இதில் ஜோலனின் காலப்பிரயாணம். ஜோலன் காலப்பிரயாணம் செய்து, தோர்கலை மரணத்தில் இருந்து காப்பது, இரண்டு ஜோலன்கள் (சிறு வயது ஜோலன், வயதான ஜோலன்) சந்திப்பது என வான் ஹாம்மே அசுரத்தனமான, கற்பனையின் அதி உச்சத்திற்கே சென்று விட்டார். பிரமிப்பு இன்னும் நீங்கவேயில்லை.
    மீதி கதைகளையும் படித்து முடிக்க வேண்டும்.
    இது போன்ற அற்புதமான கதைகளை தேடித் தேடி நமக்கு தரும் ஆசிரியரை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
    வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  58. எனது மறக்கவியலா Magic Moments...

    1) தானைத் தலைவரின் கடத்தல் குமிழிகள்

    முதன்முதல் லயன் முத்து அறிமுகம். அந்த நொடி என் வாழ்வில் எப்படிப்பட்டதொரு இனிய நண்பனை பெற்றேன் என உணராத தருணம்.

    2. மின்னும் மரணம் Hardbound.

    சென்னையில் அந்த புதையலைப் பெற்ற தருணத்தில் இனி இது போன்ற சிறந்த புத்தகம் கிடைக்குமா என்று மலைத்த நொடி...

    3. திபெத்தில் டின்டின்

    ஆசிரியரே சூடம் அணைத்து சத்தியம் செய்திருந்தாலும் இந்த புதையல் தமிழில் வராது என எண்ணியிருந்தேன். மிக மிக மிக இனிய தருணம்...

    4. Valerian and Laureline தமிழில்

    இந்த கணமும் மறக்க இயலா மகிழ்ச்சியை... wait... what..!?

    ReplyDelete
  59. விஜயன் சார், இளம் டெக்ஸ் - மாதம் மாதம் வருவதை வரவேற்கிறேன். இன்னும் நண்பர்கள் குண்டு புத்தகம் வேண்டும் என்றால் வருடத்துக்கு 3 இளம் டெக்ஸ் ஒவ்வொன்றும் 2-3 பாகம் கொண்டதை இந்த முறை தீபாவளி மலராக வந்த டெக்ஸ் போன்று economy ஸ்லிப் கேசில் கொடுங்கள் சார். இது குண்டு புத்தக ரசிக கண்மணிகளை + என்போன்ற குறைந்த பக்கங்கள் உள்ள புத்தகங்களை விரும்பும் ரசிகர்களையும் கவரும் வகையில் இருக்கும். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்கள் 😊

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்காக பல குட்டி கரணங்கள் அடித்து இருக்கீங்க, இத செய்ய மாட்டீங்களா 😊 இது எல்லாம் கார்னேஷன் பேக்கரி ஸ்பாஞ்ச் கேக் சாப்பிடற மாதிரி உங்களுக்கு 😊

      ஏதோ என்னால முடிந்த ஒரு கைப்புள்ள ஐடியா 😊

      Delete
  60. டெக்ஸ் கதைகள் வண்ணத்தில் என்பது எனக்கு இப்போது மிகவும் பிடித்திருக்கிறது; படிக்கும் போதும் சரி படித்து முடித்த பிறகும் சரி மனதில் ஒரு இனம் புரியாத சந்தோசத்தை ஏற்படுத்தி விடுகிறது. அடுத்த மாத டெக்ஸ் புத்தகத்துகு இப்போது இருந்தே காத்திருக்கிறேன். I love Tex stories in color 😍

    ReplyDelete
  61. ரத்தப்படலம் தனித்தனியாக வந்ததை காட்டிலும், தொகுப்பாக வந்த போது கொடுத்த மகிழ்ச்சி சொல்லி மாளாதது. தனி தனியாக கொடுக்க வேண்டும் என்றால் ஸ்லிப் கேஸில் வைத்து நான்கு மாதத்திற்கு ஒரு முறையோ ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ கொடுத்து விடுங்கள். அவரவர் விருப்பம் போல் படித்து கொள்ளட்டும். எல்லாம் ஒன்று தானே. யாருக்கும் பங்கம் இல்லை. வருவதை யாரும் தடுக்கவும் போவதில்லை. இதை முடிந்தால் செயல் படுத்துங்கள். இல்லை என்றால் இப்போது இருப்பது போலவே மொத்தமாக வரட்டும். தனி புத்தகமாக குண்டு புக்காக வந்தாலே டெக்ஸ் கதைகள் அடுத்த மாதத்தில் நினைவில் தங்க மறுக்கிறது. இதில் மாதம் ஒன்று என்று தொடராக வந்தால் நினைவில் நிறுத்தி ஒவ்வொரு முறையும் படிப்பது சாத்தியமில்லை. இது மேலும் அயர்ச்சியை கொடுத்து பட்டிக்காமல் போவதற்கே சான்ஸ் அதிகம். நன்றாக போய் கொண்டிருக்கும் டெக்ஸ் பிறகு ஜாகோர் போல் (V காமிக்ஸ் 64 பக்க கதைகள்) படுத்து விடும்.

    ReplyDelete
  62. இளம் டெக்ஸ் 2,3 தனித்தனிபுத்தகங்கங்களாக எகானமி ஸ்லிப்கேஸ்களில் 3. அல்லது 4மாதங்களுக்கு ஒருமுறை .இந்த ஆப்சன் நன்றாக உள்ளது ங்க சார் .2026ல் ட்ரை பண்ணி பார்க்கலாங்க சார்

    ReplyDelete
  63. ****- வேங்கை என்றும் உறங்காது ***

    அம்மாடியோவ்!! இப்படி எல்லாம் கூட ஒரு கதையை உருவாக்கிட முடியுமா என்ற ஆச்சரியப்பட வைக்கிறார்கள்! முன்பு வெளியான முதல் பாகமான 'நில் கவனி வேட்டையாடு' கதை ஒரு மடங்கு ஆச்சரியப்படுத்தியது என்றால், இந்த பாகமோ நான்கு மடங்கு ஆச்சரியப்படுத்துகிறது! வேட்டையன் ஜாரோபின் புத்தி கூர்மையும், அமெரிக்க படையை அவன் வழிநடத்திச் செல்லும் விதமும் - வேற லெவல்!
    திரைப்படமாக எடுக்க உகந்த கதை!! சித்திரமும், வண்ணக் கலவைகளும், மொழிபெயர்ப்பும் அழகாய் துணை இருக்க இந்த வேட்டையன் வெற்றியாளனாய் மிளிர்கிறான்.

    அடுத்த வேட்டையை ஆவலுடன் எதிர்பார்க்கிறது மனம்!

    ReplyDelete
  64. குமார் @ இன்றைக்கு அதானே 😊

    ReplyDelete
  65. ஆமா பாதி நாள் போயிருச்சு

    ReplyDelete