Saturday, November 23, 2024

டிசம்பரில் டைலன்!

நண்பர்களே,

வணக்கம். ‘தட‘ ‘தட‘வென சகலமும் fast forward-ல் ஓட்டம் எடுப்பது போலவே உள்ளது சமீப பொழுதுகளில்! 

**செப்டம்பரில் 4 புக்ஸ்

**அக்டோபரில் 4

**நவம்பரில் தீபாவளி மலர்கள் x 3

**இதோ - காத்திருக்கும் டிசம்பருக்கென இன்னொரு 4

**அப்பாலிக்கா சேலம் ஸ்பெஷல்ஸ்; 

**Electric '80s புக் # 1 

என சமீபத்தைய நமது திட்டமிடல்களில் புல்லெட் டிரெயினின் வேகம்! And அதற்கு மெருகூட்ட இதோ வரும் வார வெள்ளியன்று சேலத்தில் புத்தக விழா & டிசம்பரின் இறுதியிலேயே சென்னைப் புத்தக விழா என்ற அட்டவணைகளுமே அறிவிக்கப்பட்டிருக்க, வாரிச் சுருட்டிக் கொண்டு அவற்றிற்கான முஸ்தீபுகளிலுமே மூழ்கிடல் அவசியமாகிறது! இரண்டே ஆண்டுகளில் (நமக்கு) விற்பனையில் Top 3-க்குள் இடம்பிடித்து விட்டிருக்கும் சேலமும் இப்போதெல்லாம் ‘பெத்த தலைக்கட்டு‘ என்பதால் துளியும் அசட்டையாக இருக்கலாகாது தானே folks? So ஒரு கல்யாண வீட்டுக்கு ரெடியாகும் உற்சாகக் களேபரத்தில் நாட்கள் ஓட்டமெடுத்து வருகின்றன!

இதற்கு மத்தியில் நடப்பாண்டின் இறுதி batch சந்தா இதழ்களைப் பூர்த்தி செய்திடலில் கோட்டை விடலாகாது என்பதால் அக்கடவுமே நமது கவனங்கள் மையம் கொண்டுள்ளன! இதில் கொடுமை என்னவென்றால் வழக்கமாய் பெரிய சைஸ் புக்ஸ் / கலர் இதழ்களில் தான் பணிகள் ஜவ்விழுக்கும்! Black & White புக்ஸ்களில்; அதுவும் நூறு பக்கங்களுக்கு உட்பட்ட அந்த crisp வாசிப்புக்களம் சார்ந்த புக்ஸ்களில் பெருசாய் சிக்கல்கள் எழுந்திடாது தான்! ஆனால் சகலத்துக்குமே ஒரு முதல் தபா உண்டு தானே? அந்த முதல் முறை இதோ இந்த நொடியில் என் கேசத்துக்கு ஆபத்தை விளைவித்து வருகின்றது!

- The Magic Moments ஸ்பெஷல் ரொம்பச் சீக்கிரமே ரெடி! ‘தல‘ சாகஸங்கள் என்றைக்குமே ஒரு எடிட்டருக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகு போன்றவைகளே! சுவைகளிலும் சரி, சர்க்கரை வியாதிஸ்தனின் நாக்கில் வழுக்கிச் செல்லும் லாவகத்திலும் சரி, இரண்டுமே இணையற்றவை! So அக்கட துளியும் சிக்கலின்றி ரெடியாகி தற்போது புக் பைண்டிங்கில் உள்ளது!

- தோர்கலும் இந்த முறை இம்மி நோவுமின்றி ரெடியாகி, புக்காகி நம் ஆபீஸில் ஒரு வாரமாய் தேவுடா காத்து வருகிறது!

- Ditto for கபிஷ் ஸ்பெஷல் – 1! கலரில் கலக்கலாய் ரெடியாகி ஆபீஸில் பராக்கு பார்த்து நிற்கிறது!

- அதே போல க்ளாஸிக் சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் – 3 இதழுமே அச்சாகி, பைண்டாகி இன்னொரு திக்கில் குந்திங்க்ஸ்!

- Electric ‘80s – நம்ம ஸ்பைடரின் மெகா புக்கும் ரெடி!! 

அத்திரி பாச்சா – சிக்கலான சமாச்சாரங்களெல்லாம் ரெடியாகியாச்சு; இனி சிம்பிளான வேலைகள் மட்டுமே பாக்கி என்றபடிக்கே -

இளம் டெக்ஸ் – டெக்சாஸ் ரேஞ்சர்ஸ்

&

V காமிக்ஸ் – எழுந்து வந்த எதிரி (ஏஜெண்ட் ராபின்)

கதைகளுக்குள் புகுந்தால் – சலூனின் நடுக்கூடத்தில் ‘தல‘கிட்டே ‘ணங்‘ என்று குத்து வாங்கியது போலவே ஒரு பீலிங்கு! மூக்கில் ஒழுகிய நெத்தத்தை கர்சீப்பில் துடைத்தபடிக்கே பார்த்தால் – இளம் டெக்ஸில் களம் செம அழுத்தம்! மாமூலாய் தாண்டிப் போகும் துரிதத்தில் இங்கே பணிகளை முடிக்க சாத்தியமாகாது; நிரம்பவே நேரம் தந்து தான் எடிட்டிங் செய்திட வேணுமென்பது புரிந்தது. பற்றாக்குறைக்கு  இன்னிக்குக் காலையிலே போட்ட சொக்காய் எதுவென்று மதியமே மறந்து போயிருக்கும் எனும் போது, முந்தைய 2 இதழ்களின் கதை மாந்தர்கள்லாம் யாரென்று நமக்கு நினைவுக்கு வரவழைக்க செம பல்டி அவசியமாகிறது. So இளம் ‘தல‘ பணிகளை லாஸ்டாக முடிச்சுப்புடலாம் என்றபடிக்கே V காமிக்ஸின் ஏஜெண்ட் ராபினோடு பழகிப் பார்க்க புறப்பட்டேன்!

கதையை முழுசாய்ப் படித்துவிட்டு, மொழிபெயர்ப்பினை துவக்கிடும் பழக்கமே இல்லாது போனதன் கூமுட்டைத்தன பின்விளைவுகளை நிறையவே அனுபவித்துள்ளேன் தான்! & இது அதனது லேட்டஸ்ட் அத்தியாயம்! 

செம விறுவிறுப்பாய் புதுசாய் ஒரு டீமோடு நமது ராபின் 2.0 இந்த hi-tech கதையில் களமாட, எனக்கோ செம உற்சாகம்! புதுயுக பாணியில் கம்ப்யூட்டர்கள்; செல்ஃபோன்கள் கொண்டு அரங்கேற்றப்படும் கொலைகள் தான் கதையின் அச்சாணி என்ற போது – “ஹை... காலத்துக்கு ஏற்ற கதை தான் போல்!” என்று குஷியாகிப் போனேன். கொஞ்சம் டெக்னிகலான பத்தியொன்று வந்த போது நம்ம கார்த்திக் கிட்டே அது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளவெல்லாம் செய்தேன்! அப்டிக்கா எழுதிக் கொண்டே போகப் போக, கதையின் மீதப் பக்கங்கள் சொற்பமாகிக் கொண்டே போக – “இன்னிக்கே முடிச்சுப்புடலாம் ; நாளை இளம் தல திக்கில் கவனத்தைத் திருப்பலாம்!” என்று மனசு கூவியது! ஆனால்... ஆனால்... பக்கங்கள் குறைந்து கொண்டே போனாலும், கதையின் முடிச்சு இன்னும் அவிழ்ந்த பாட்டைக் காணோமேடா என்று வயிற்றில் புளி கரைந்து கொண்டே போக – வேக வேகமாய் கடைசிப் பக்கத்துக்குப் போனால் – இருளில் ஒரு வில்லன் அமர்ந்து ‘கெக்கே பெக்கே‘ என்று சிரித்துக் கொண்டிருக்கிறான்! அவன் சிரிப்பது என்னைப் பார்த்தே என்பது போலவே இருக்க – அப்புறமாய் போனெலியில் விசாரித்தால் தான் தெரிய வந்தது – இது தொடரின் மத்தியிலுள்ளதொரு நெடும் சாகஸம் என்பது! ராபின் எப்போதுமே சிங்கிள் ஆல்பங்களில் தடதடத்து முடித்து விடுவார் எனும் போது; இப்படியொரு நெடும் த்ரில்லர் இருக்கும் சாத்தியம் மண்டையில் உறைத்திருக்கவே இல்லை!

அப்புறமென்ன – what next? இந்த இடத்தில் யாரைப் புகுத்தலாமென்று, V எடிட்டரும், நானும் பேந்தப் பேந்த யோசிக்கும் போது டைலன் டாகின் “சட்டைப்பையில் சாவு” ஆல்பத்தை V காமிக்ஸ் எடிட்டர் எடுத்து நீட்டியது பலனாகியது! இதற்கான ராப்பரும் ரெடியாகக் காத்திருக்க – இதோ இன்று காலை (சனி) முதலாய் மாங்கு மாங்கென்று எழுதிக் கொண்டிருக்கிறேன் இந்த 96 பக்க சாகஸத்தின் தமிழாக்கத்தை! இந்தவாட்டியோ முதல் காரியமாய் கடைசிப் பக்கத்துக்குப் போய் – அங்கே சுபம் போட்டிருக்கிறதா? என்று சரிபார்த்த பின்னரே பிள்ளையார் சுழியையே போட முனைந்தேன்! So இந்தப் பதிவை எழுத மட்டும் ப்ரேக் எடுத்துக் கொண்டு பள்ளி விடுமுறைகளின் கடைசி நாளில் assignment-களை மாங்கு மாங்கென்று ஒட்டுமொத்தமாய் எழுதும் புள்ளையாண்டனைப் போல டைலனை எழுதிக் கொண்டிருக்கிறேன்! எண்ட குருவாயூரப்பா!

And சும்மா சொல்லக் கூடாது தான் – கதை தாறுமாறு – தக்காளிச் சோறாய் பறக்கிறது! யூகிக்கக் கூடியதொரு கதைக்கரு தான் என்றாலும் அதனை கதாசிரியர் கையாண்டுள்ள விதம் செம தெறி! அதிலும் சித்திரங்களில் மிரட்டோ மிரட்டென்று மிரட்டியுள்ளார்கள்! இதோ – அட்டைப்பட preview & உட்பக்க ட்ரெய்லர்!


So இன்னிக்கு சாமக்கோடாங்கியாய் கூத்தடித்தால் நாளை காலைக்குள் நமது அமானுஷ்ய ஆய்வாளர் சாரை கரை சேர்த்து விடலாம்! அப்புறமாய் இளம் டெக்ஸோடு கைகுலுக்கக் கிளம்பிடும் பட்சத்தில் – காத்திருக்கும் வாரயிறுதிக்குள்ளாக டிசம்பர் புக்ஸை டெஸ்பாட்ச் செய்திட சாத்தியமாகிடும்! ஜெய் ராக்கோழி!

Moving on சென்னைப் புத்தக விழா சற்றே முன்கூட்டித் துவங்கி, பொங்கலுக்கு முன்பாகவே நிறைவும் பெறுவதால் அதற்கான திட்டமிடல்களையுமே இதே போல காலில் வென்னீர் ஊற்றியபடியே நாம் செய்திட வேண்டி வரும்! சென்னை முடிந்த சூட்டோடு சூடாகத் திருப்பூரும் வெயிட்டிங்காம்! So மறுபதிப்புகள்; புத்தக விழாக்களுக்கென்றான திட்டமிடல்கள் வேக வேகமாய் அரங்கேறி வருகின்றன!

- இரும்புக்கை மாயாவி ஏதோ ஒரு வடிவத்தில் கணிசமாய் இல்லாது இந்தப் புத்தக விழாக்களுக்குச் சென்றால் குமட்டிலேயே குத்துவார்கள் என்பது அனுபவப்பாடம் என்பதால் நமது மறுபதிப்புப் பட்டியலில் அவர் தவறாமல் இடம் பிடித்திடுவார்!

- இன்னொரு புத்தக விழா favourite ஆன லக்கி லூக்கின் ஏதாச்சுமொரு மறுபதிப்புமே புத்தக விழாவிற்கு அவசியமாகிடும்.

- And of course – CID ஜான் மாஸ்டரின் மறுபதிப்புமே ரேடாரில் உள்ளது!

- இவை தவிர, சிறார்களோடு நமது ஸ்டால்களுக்கு வருகை தரும் பெற்றோர்களின் கவனங்களை ஈர்க்கக்கூடிய சில இதழ்களையும் தயார் செய்திட உள்ளோம்! And இது முழுக்கவே ஜுனியர் எடிட்டரின் வைண்ணத்திலிருக்கும்!

So ஒரு வண்டி நிறைய புக்ஸோடு காத்திருக்கும் புத்தக விழாக்களில் சந்திப்போமா மக்களே?

சேலம் புத்தகவிழாவிற்கு முதல் சனி மாலை (30th நவம்பர்)அல்லது இரண்டாம் சனி (டிசம்பர் 8) மாலையில் ஆஜராகிடத் திட்டமிட்டுள்ளேன்! அடுத்த சில நாட்ளில் அதை உறுதிப்படுத்தி விட்டுச் சொல்கிறேன் – அப்பகுதி நண்பர்களைச் சந்தித்த திருப்தி கிட்டும் என்ற அவாவில் வெயிட்டிங் 🔥

Bye all! See you around! Have a lovely Sunday!

பின்குறிப்பு

🦁 2025 சந்தாக்களுக்கொரு reminder folks 🙏🙏

🦁 Electric '80s சந்தாவிற்குமே ஒரு reminder 🙏🙏

🦁சேலம் ஸ்பெஷல்ஸ் கூட காத்திருக்கும் folks 🙏🙏







88 comments:

  1. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  2. வணக்கம் காமிக்ஸ் உறவுகளே 💐😍.....இளம் டெக்ஸ் எப்படி வேண்டுமானாலும் வரட்டும் நிறைய வர வேண்டும் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிறேன் நன்றி வணக்கம் 🙏

    ReplyDelete
  3. அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  4. அதெப்பெடி ராபின் கதையை மாத்தலாம்...?? நெடுந்தொடரின் ஒரு பகுதின்னா மொத்தமா ஒரே குண்டு பொஸ்தவமா போட்டு முடித்திருக்கலாமே..?

    ReplyDelete
    Replies
    1. 3 பாகங்கள் சேர்ந்த கதையை ராத்திரியோடு ராத்திரியாய் வரவழைக்கவும், மீதத்தை ஒரே நாளில் மொழிபெயர்க்கவும், DTP ரெடி பண்ணவும், அதுக்கான கூடுதல் கட்டணத்தை வசூலிக்கவும் ஒரு சூப்பர்மேனை தேடிப் பிடிக்க முடிஞ்சால் போட்றலாம் தான்!

      Delete
    2. "லேட் ஆனாலும் பரவாயில்லை ங்க sir... நேக்கு மொத்தமா பேக்கு "
      😄😄❤️...

      Delete
    3. 😄😄😄Me too.. மொத்தமாவே பொறுமையாவே பேக் பண்ணுங்க சார்...👍😘💐🧨🧨🧨🧨

      Delete
  5. ஒற்றைக்கண் மர்மமா ,,ஜான் மாஸ்டர் இரண்டு கதைகளையும் ஒரே ஸ்பெஷலாய் தரக்கூடாதா

    ReplyDelete
  6. And of course – CID ஜான் மாஸ்டரின் மறுபதிப்புமே ரேடாரில் உள்ளது!


    அப்போ இரட்டை வேட்டையர்கள் எப்போ

    ReplyDelete
  7. நானும் ஆவலுடன்..

    ReplyDelete
  8. எடிட்டர் சாரின் சேலம் வரவு உற்சாகத்தை தருகிறது... அன்புடன் வரவேற்கிறேன் சார்..

    ReplyDelete
  9. சேலம் புத்தக விழாவில் நமது காமிக்ஸ் விற்பனை புதிய உச்சம் தொட வாழ்த்துக்கள் சார்💐💥🎊

    ReplyDelete
  10. ஞானும் வந்துட்டேன்!

    ReplyDelete
  11. // சேலம் புத்தகவிழாவிற்கு முதல் சனி மாலை (30th நவம்பர்)அல்லது இரண்டாம் சனி (டிசம்பர் 8) மாலையில் ஆஜராகிடத் திட்டமிட்டுள்ளேன்! //

    டிசம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை அல்லவா??

    ReplyDelete
  12. டைலன் முன்கூட்டியே வருவதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  13. கபிஷ் வண்ணத்தில் கலக்குகிறது சார்...அட்டகாசம்..சேலம் புத்தகவிழா மாபெரும் விற்பனையை சாதிக்க வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
  14. தாங்கள் வரும் நாளை உறுதி செய்து விட்டால் நண்பர்களும் விரைவில் அந்த நாளை உறுதி செய்ய வசதியாக இருக்கும் சார்..


    *****

    சேலம் புத்தக விழாவில் மாண்ட்ரேக் 2 விற்பனையில் இருக்குமா சார்..!

    ReplyDelete
  15. // பற்றாக்குறைக்கு இன்னிக்குக் காலையிலே போட்ட சொக்காய் எதுவென்று மதியமே மறந்து போயிருக்கும் எனும் போது, முந்தைய 2 இதழ்களின் கதை மாந்தர்கள்லாம் யாரென்று நமக்கு நினைவுக்கு வரவழைக்க செம பல்டி அவசியமாகிறது.//

    இதனால் தான் சார் மொத்தமாக குண்டு புக்காக கேட்கிறோம்.

    ReplyDelete
  16. // சேலம் புத்தகவிழாவிற்கு முதல் சனி மாலை (30th நவம்பர்)அல்லது இரண்டாம் சனி (டிசம்பர் 8) மாலையில் ஆஜராகிடத் திட்டமிட்டுள்ளேன்! //

    Super

    ReplyDelete
    Replies
    1. டிசம்பர் 1 தேதி சேலத்தில் நண்பர்கள் கிரிக்கெட் விளையாட உள்ளார்கள் சார் அதே போல் Sunday பல நணபர்களுக்கு விடுமுறை எனவே உங்கள் சேலம் பயணம் Sunday இருந்தால் நன்றாக இருக்கும். உங்களுக்கும் Sunday வசதியாக இருந்தால் வாருங்கள் சார் .🙏🏽

      Delete
  17. // பற்றாக்குறைக்கு இன்னிக்குக் காலையிலே போட்ட சொக்காய் எதுவென்று மதியமே மறந்து போயிருக்கும் எனும் போது, முந்தைய 2 இதழ்களின் கதை மாந்தர்கள்லாம் யாரென்று நமக்கு நினைவுக்கு வரவழைக்க செம பல்டி அவசியமாகிறது //

    நம்பிட்டோம்... டியர் எடி. 80 களில் காமிக்ஸ் தொடங்கிய காலத்தை கூட நேற்று நடந்தது போல விவரிக்கும் உங்கள் ஞாபக சக்தியை பார்த்து ஆச்சரியப்படும் எங்க கிட்டயே லந்தா ?!? 😁

    ReplyDelete
    Replies
    1. சார்... நமக்குமே அரை டவுசர் போட்ட காலத்தில் நடந்ததெல்லாம் திடமா ஞாபகத்திலே தங்கியிருக்க முந்தாநேத்து நடந்த விஷயம் மட்டும் சுத்தமா மறந்து போறதுதானே பிரச்சினை!!

      Delete
    2. பல்லடம் சகோ... வியக்க வைக்கும் உண்மை.. எனக்கும் அப்படியே.. ❤️👍🙏...

      Delete
  18. ராபின் சிங்கிள் ஆல்பம் ஒன்று வெளியிட்டு விட்டு இதை அட்டவணையில் இல்லாமல் முன்பதிவு க்கு ஒரு குண்டு புத்தகமாக வெளியிடலாமேங்க சார்.முதல் முறையாக ராபின் குண்டு புத்தகம் சான்சை தள்ளி போட வேண்டாங்க சார் விரைவில் ப்ளிஸ்

    ReplyDelete
    Replies
    1. அடடே அருமையான ஐடியா. ராபின் குண்டு புத்தகம் +1000

      Delete
  19. நீண்ட இடைவேளைக்குப் பின் டைலன் டாக் முழுநீள சாகஸத்தோடு வருவது...வாவ்..எதிர்பாராத ஆனந்தம் சார்.

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. சூப்பர் சார்...முதல்ல படிக்கப் போவது ஸ்பைடரல்ல... டயலன்தான் ....

    அந்த மூனு பாக டயலன் அட்டகாசமா இருந்தா ஜனவரி திருவிழாவுக்கு...

    ReplyDelete
  22. 'சட்டை பையில் சாவு' - அட்டைப்படம் மிரட்டல் ரகம்! புத்தக திருவிழாக்களில் அனைவரையும் கவரும்!

    ReplyDelete
  23. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  24. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  25. பழம் நழுவி தேனில் விழுந்து...அது பலாச்சுளையாக மாறினால் கசக்குமா என்ன?,
    "ராபினுக்கு மாற்று டைலன்"ஐ அட்டகாசமாக சுவைக்கலாம், அட்டைப்படம் மிரட்டல்.
    அப்படியே இந்த நளினமான தலைப்புக்களையும் சற்று மாற்றி - கம்பீரமாக வைக்கலாம்ங்களே சார்?
    "சட்டைப்பையில் சாவு".

    "CID ஜான் மாஸ்டரின் மறுபதிப்புமே"
    இன்னொரு தேனில் ஊறிய பலாச்சுளை.

    "இரும்புக்கை மாயாவி ஏதோ ஒரு வடிவத்தில்",
    "ஒற்றைக் கண் மர்மம்" போல மறுபதிப்பு வராத கதைகளாக இருந்தால் ஹாப்பி அண்ணாச்சி....

    இந்த செ பு வி ஸ்பெஷல்கள் கூட, அலிபாபா+ ஏதாவது ஒரு புதிய கதையும் போட்டால் நல்லாருக்கும்.

    "சென்னை முடிந்த சூட்டோடு சூடாகத் திருப்பூரும்" ஆஹா....டபுள் ஹாப்பி...

    சேலம் மீட்டில் தங்களை சந்திக்க ஆவலுடன் வெய்ட்டிங்...

    ReplyDelete
  26. @Edi Sir.. 😘🥰

    Goodumorning Sir😄💐🙏

    ReplyDelete
  27. காலை வணக்கம் உறவுகளே.. 🙏🏻🙏🏻

    ReplyDelete
  28. //// இருளில் ஒரு வில்லன் அமர்ந்து ‘கெக்கே பெக்கே‘ என்று சிரித்துக் கொண்டிருக்கிறான்! அவன் சிரிப்பது என்னைப் பார்த்தே என்பது போலவே இருக்க /////

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    ReplyDelete
  29. வாவ்.. டைலன் டாக்.. 👌🏻👌🏻

    ReplyDelete
  30. அடடா.. டைலன் வண்ணத்தில் இருந்திருந்தால் செத்தியாய் இருந்திருக்குமே... ☹️☹️

    ReplyDelete
  31. வாவ்..
    2024 - டிசம்பரை ஒரு காமிக்ஸ்
    கொண்டாட்டத்துடன் நிறைவு
    செய்கிறீர்கள் சார்..
    அருமை .. அற்புதம்..
    உவகை .. உற்சாகம் ..

    ReplyDelete
  32. சட்டைப் பையில் சாவு!!

    ஆசானே.. இந்த மாதிரி தலைப்பெல்லாம் எப்படி ஆசானே யோசிக்கறீங்க... 👌🏻👌🏻👌🏻😂😂😂

    ReplyDelete
  33. "சட்டைப் பையில் சாவு" 2025 அட்டவணை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கதை. அப்படியேன்றால்,
    2025ன் அட்டவணையில் "சட்டைப் பையில் சாவு" கதைக்கு பதிலாக என்ன கதை வெளியிடுகிறீர்கள் சார்?

    ReplyDelete

  34. டிசம்பர் ஜனவரி மாதங்களில் கணிசமான அளவு காமிக்ஸ் கிடைக்கப் போகிறது.
    Steel claw மறு பதிப்பு செய்யாத புதிய புத்தகங்கள் ஒன்று இரண்டு கொண்டு வாருங்கள்.

    வெயிட் for
    John master கூடவே இரட்டை வேட்டையர்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    🕷️
    கபிஷ்
    Dylon dog

    Sir,

    2024 பட்டியலில் இருந்த Captain prince பற்றி எந்த தகவலும் இல்லையே.

    ReplyDelete
    Replies
    1. பிரின்ஸ் இடத்தை தான் ராபின் பிடிச்சாரு அவரிடத்தை னடைலானடக் பிடிக்கிறாரு

      Delete
  35. // டைலன் டாகின் “சட்டைப்பையில் சாவு” // நமது இதழில் வரும் இந்த நாயகரின் முதல் கருப்பு வெள்ளை கதை என நினைக்குறேன் 🤔

    ReplyDelete
  36. "மூக்கில் ஒழுகிய நெத்தம்"...
    சnnnnnnர்.... சூப்பர் டைட்டில் sir.. 😄😄❤️👍..

    ReplyDelete
  37. இரும்புக்கை மாயாவி ஏதோ ஒரு வடிவத்தில் கணிசமாய் இல்லாது இந்தப் புத்தக விழாக்களுக்குச் சென்றால் குமட்டிலேயே குத்துவார்கள் என்பது அனுபவப்பாடம் என்பதால் நமது மறுபதிப்புப் பட்டியலில் அவர் தவறாமல் இடம் பிடித்திடுவார்! அந்த "மாயாவிக்கோர் மாயாவி" களமிறக்கி விடுங்களேன் சார். கொக்கிக் கையுடன் மோதுவார் அந்த சாகசம் சில வருடங்களுக்கு முன்பு சன்டிவியில் ஒரு கோடி பரிசுப் போட்டியில் ஜெயித்த சேலம் நண்பர் திரு வசந்த் என்கிற காவலர் வாசிக்கத் தந்தார். அந்த சித்திரக்கதை எத்தனை முறை மறுபதிப்பாகி இருக்கிறது என்று தெரியவில்லை. இன்னொரு ஆப்ஷன் தவளை மனிதர்கள்.. எத்தனை முறை வாசித்தாலும் இனிக்கும்.. மாயாவி வாழ்க..

    ReplyDelete
  38. CID ஜான் மாஸ்டரின் மறுபதிப்புமே ரேடாரில் உள்ளது! வண்ணத்தில் வந்துள்ளார் என்று நண்பர் ராஜ் குமார் கூறினார். கொஞ்சம் வண்ணத்தில் முயற்சி செய்யுங்களேன் சார்.

    ReplyDelete
  39. இவை தவிர, சிறார்களோடு நமது ஸ்டால்களுக்கு வருகை தரும் பெற்றோர்களின் கவனங்களை ஈர்க்கக்கூடிய சில இதழ்களையும் தயார் செய்திட உள்ளோம்! And இது முழுக்கவே ஜுனியர் எடிட்டரின் வைண்ணத்திலிருக்கும்!-எளிய விலை சித்திரக்கதைகள் மிகவும் வரவேற்பை வழக்கமான வாசகர்களைத் தாண்டி பெற்று வருகின்றன.. முப்பது-ஐம்பது விலைகளில் நிறைய வெளியீடுகள் அரங்கத்தினை அலங்கரித்தால் நன்று..

    ReplyDelete
  40. // ஒரு வண்டி நிறைய புக்ஸோடு காத்திருக்கும் புத்தக விழாக்களில் சந்திப்போமா மக்களே? //

    சூப்பர் சார்

    ReplyDelete
  41. மாயாவி இது வரை மறுபதிப்பாக வராத கதையை கொடுங்கள் சார்.

    ReplyDelete
  42. இந்த மாதம் வந்த தீபாவளி புத்தகங்கள் அனைத்தையும் படித்து விட்டேன். அடுத்து படிக்க புத்தகங்கள் இல்லாத நிலையில் கிளாசிக் மறுபதிப்பு குண்டு புத்தகங்கள் பெரிதும் உதவுகிறது. ஈரோட்டில் புத்தக திருவிழாவில் வந்த மாயாஜால மன்னன் கதை தொகுப்பு படிக்க புத்தகங்கள் இல்லாத குறையை சரி செய்கிறது. இந்த புத்தகம் வந்த போது முதல் இரண்டு கதைகளை படித்தேன், அதன் பிறகு வேலை மற்றும் குடும்ப வேலை காரணமாக படிக்க முடியவில்லை, இப்போது நேரம் உள்ளது; இந்த சமயத்தில் இந்த புத்தகம் என்னை ஆக்கிரமித்து கொள்கிறது. 6 கதைகள் படித்து விட்டேன் மிகவும் சுவாரசியமாக எளிதான வாசிப்பு அனுபவத்தை தருகிறது.
    இந்த கிளாசிக் புத்தகம் மட்டும் அல்ல இதுவரை வந்த அனைத்து புத்தகங்களையும் படித்து விட்டேன்.

    ReplyDelete
  43. இரும்பு கை மாயாவியின் "ஒற்றை கண் மர்மம்" வெளியே வர ஏற்பாடுபண்ணுங்க சார்.. 💐💐😘🥰🧨🧨🧨

    ReplyDelete
  44. சட்டை பையில் சாவு அட்டைப்படமும் சரி தலைப்பும் சரி செமயாக உள்ளது. இதற்காகவே இந்த புத்தகம் பலரையும் கவரும்.

    ReplyDelete
  45. டைலன் டாக் வருவது மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  46. Ji, புத்தக திருவிழா ஸ்பெஷல் புத்தகங்களில் சில புத்தகங்களை பாக்கெட் சைஸில் கொண்டு வாருங்கள். அப்போதிலிருந்து இப்போது வரை பாக்கெட் சைஸில் ஒரு மோகம் இருக்கத்தான் செய்கிறது.

    ReplyDelete
  47. **** மாயமில்லே.. மந்திரமில்லே.. *****

    பிடிச்சிருக்கு!
    இதமான வாசிப்பு அனுபவம்! தாத்தாக்களின் வழக்கமான நையாண்டி உரையாடல்கள் ரசிக்கவைக்கிறது. எப்படியோ ஒரு வழியாக ஷோஃபியின் குழந்தைக்கு அப்பா யார் என்ற புதிருக்கு இந்த பாகத்தில் விடை சொல்லப்பட்டிருப்பது கூடுதல் மகிழ்ச்சி! மில்சே தாத்தாவின் லவ்ஸ் அலப்பறைகள் வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன. வெட்டுக்கிளிகளை கதையின் போக்கிற்கு ஏற்றாற்போல் பயன்படுத்தியிருப்பது - கதாசிரியரின் திறமைக்குச் சான்று!

    சித்திரங்களும், வண்ணக்கலவைகளும் கண்களுக்கு இதம்!

    பிடிச்சிருக்கு!

    ReplyDelete
  48. Sir,

    The big boys special 2 pending la இருக்கு, ஒரு நல்ல நாள் பார்த்து அவற்றை களம் இறக்கி விடவும்.

    Classic கருப்பு கிழவியின் கதைகளை ஒரு தொகுப்பாக கிடைக்க வாய்ப்புள்ளதா ஏடிஜி

    ReplyDelete
  49. சற்று முன்பு புத்தகங்களை கைப்பற்றினேன்! 5 புத்தகங்கள் டப்பினுள்! தினுசு தினுசாய் - கலர் கலராய் - அட்டகாசமான வடிவமைப்புகளில் - கிட்டத்தட்ட எல்லா அட்டைப்படங்களுமே ஒன்றுக்கொன்று போட்டி போட்டன இம்முறை! பக்கங்களை புரட்டியபோது எல்லா புத்தகங்களின் சித்திரங்களுமே நேர்த்தியாக அசத்தின - ஸ்பைடர் புத்தகம் உட்பட!

    MMS -ஐ கையில் ஏந்திய போது அதன் தயாரிப்புத் தரமும், கனத்த வடிவமைப்பும், துள்ளியமான வண்ண அச்சுத்தரமும் - மூச்சை இழுத்துப் பிடிக்க வைத்தன! ஒரு மைல்கல் இதழ் - கைகளில் கல்போன்று கனத்துக்கிடப்பதுதெல்லாம் மெய்யாலுமே ஒரு பரவச அனுபவம்!!

    ஒரே மாதத்தில் 7 அசாத்திய தயாரிப்புகள் என்பதெல்லாம் நம் சிவகாசி டீமுக்கு எப்படித்தான் சாத்தியமாகிறதோ!! அசத்துகிறீர்கள் - டீம் சிவகாசி!!💐💐💐

    இன்னும் இரண்டு புத்தகங்களை நாளை சேலம் புத்தக திருவிழாவில் வாங்கினால்தான் நிம்மதி!!

    ReplyDelete