நண்பர்களே,
வணக்கம். முன்னெல்லாம் "ஹாட்லைன்" மாத்திரமே எனக்கான communication தளமாக இருந்தது ; நிதானமாய் தலைக்குள் தோன்றிய சகலத்தையும் அங்கு ஒப்பித்தேன் ! அப்பாலிக்கா "சிங்கத்தின் சிறு வயதில்" என்று ஆரம்பிக்க, அங்கேயும் கொஞ்சம் பின்னோக்கிய பார்வைகளுடன் பேச சாத்தியமாகியது ! ரெம்போ காலம் கழித்து நமது மறுவருகையின் சமயத்தில், இதோ இந்த blog என்ற வலைப்பூ துளிர் விட - அடுத்த 12 ஆண்டுகளுக்கு இட்லி சாப்பிட்டதிலிருந்து, தொட்டுக்க காரச் சட்னியா ? மல்லிச் சட்னியா ? என்பது வரைக்கும் அலசித் தள்ளிட முடிந்தது ! And இதோ மூன்றோ, நான்கோ மாதங்களுக்கு முன்பாய் வாட்சப்பில் "கம்யூனிட்டி" என்ற ரவுசை ஆரம்பித்த பிற்பாடு, இங்கே பதிவிட தோதுப்பட்டிருக்கா நண்பர்களோடும் கும்மியடிக்க இயன்ற வருகிறது ! பற்றாக்குறைக்கு சமீப வாரங்களில் நம்ம YouTube சேனலில் எதையாச்சும் பேசும் படலமும் ஆரம்பித்திருக்க, அங்கேயும் ஆத்தோ-ஆத்தென்று உரையாற்றிங் ! So இப்போல்லாம் காலையில் வீட்டுக்காரம்மாவைப் பார்க்கும் போது கூட "ஹை..ஹல்லோ..வணக்கம் !" என்று தான் ஆரம்பிக்கத் தோன்றுகிறது ! ("நீயெல்லாம் ரெம்போ லேட்டு பாஸு ; நாங்கல்லாம் கண்ணாலம் ஆன நாள் முதலாவே அப்புடி தான் !!" - என்ற இதர வீரர்களின் மைண்ட்வாய்ஸ் கேட்காதில்லை !!)
இதில் கொடுமை என்னவென்றால் இப்போதெல்லாம் நம்ம ஆபீஸ் புள்ளீங்க மாத்திரமன்றி, நமக்கு மொழிபெயர்ப்பு செய்து வரும் யுவதிகளுமே, ஆங்காங்கே நம்ம திருவாய் மலரும் படலங்களை வாசிக்க / கேட்க ஆரம்பித்துள்ளனர் என்பதால் ஜாக்கிரதையாகவே எழுத / பேச வேண்டி கீது ! ஆனால் நமக்குத் தான் மோட்டார் ஓட ஆரம்பிச்ச சற்றைக்கெல்லாமே இஷ்டப்பட்ட திக்கிலெல்லாம் வண்டி இஸ்துகினு போகுமே - so ஒரு மந்தகாச 'ஹி...ஹி..' சகிதம் கடந்து செல்ல வேண்டி வருகிறது ! And இந்த லூட்டிகள் மத்தியில் எனக்குள்ளான 'டர்ர்ர்' படலமோ இருமடங்கு படுத்தி எடுக்கிறது !
டர்ர்ர் # 1 : ஒரே விஷயத்தை இங்கேயும் எழுதி, இன்ன பிற ஒலிபரப்புகளிலும் கதைத்து, மொக்கை போடாதிருக்க வேண்டுமே என்பது பிரதான டர்ர் !
டர்ர்ர் # 2 : வேளைக்கொரு பாணியிலோ, விதத்திலோ, ஸ்டைலிலோ எழுதுவதும், செப்புவதும் நமக்கெல்லாம் அசாத்தியமே ! So ஒரே பாணியிலான நம்ம எழுத்துக்கள் / பேச்சுக்கள் உங்களுக்கு அலுத்துப்புடலாகாதே - என்பது மெயினான டர்ர்ர் !!
எந்தச் சாமியின் புண்ணியத்திலோ, இரண்டு இடர்களுக்கும் இதுவரையிலுமாவது கடுக்காய் கொடுத்து, குரங்கு பெடலடிச்சபடிக்கே வண்டியை ஓட்டி வருகிறேன் ! பெர்சனலாக எனக்கு உதறுவது கூடுதலாய் இன்னொரு காரணத்தின் பொருட்டுமே !! மொழிபெயர்ப்புகளை யாரேனும் செய்து விட்டு, எடிட்டிங் மட்டும் என் பொறுப்பாகிடும் வேளைகளில் பேனாவினை கொஞ்சம் ஓய்வாக இருந்திட அனுமதிக்கலாம் ! ஆனால் இதோ - லேட்டாகி விட்ட இம்மாதத்து ஸ்டெர்ன் கதைக்கு ஒற்றை நாளில் தமிழாக்கம் செய்திடும் லூசுத்தனமான கட்டாயம் ; ரிப்போர்ட்டர் ஜானியை கிட்டத்தட்ட முக்கால்பங்கு மாற்றி எழுதும் அவசியம் - என்றெல்லாம் நேரும் போது, மண்டைக்குள் சர்வ சதா காலமும் வஜன டயலாக்ஸ் ஓடிக்கொண்டே இருப்பது போலவே இருக்கும். And அவற்றை எல்லாம் தக்கி, முக்கி முடிக்கும் நொடியில், வாரமே ஓட்டம் கண்டிருக்க, இங்கே blog-ல் புதுசாய், சுவாரஸ்யமாய் எதையாச்சும் எழுதும் சமயம் புலர்ந்திருக்கும் ! So நமக்கே நம்ம வரிகளை கண்டு போரடிச்சுப்புடுமோ ? என்ற பயமும் அவ்வப்போது தலைதூக்குவதை மறுக்க மாட்டேன் !
நான்பாட்டுக்கு "அது பாருங்க.....எங்க ஊரு பரோட்டாவை பிச்சி போட்டு சால்னா ஊத்தினா.." என்று foodvlogs பாணியிலோ ; அல்லது, இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு கருத்து சொல்லும் கந்சாமியாகவோ ; அல்லது "டிரம்பை வன்மையாய் கண்டிக்கிறேன் !!" என்று சவுண்டு விடும் சுந்தரனாகவோ இருந்திடும் பட்சத்தில், content-க்குப் பஞ்சம் எழாது தான் ! ஆனால் நாமோ, நம்ம புழைப்பைத் தவிர்த்து வேறு எது பற்றியும் எழுதுவதில்லை எனும் போது, நடுநடுவே ரோசனையில் கேசத்தைக் கொஞ்சமாய் பிய்த்துக் கொள்ள வேண்டி வரும் தான் ! But - மாதம்தோறும் 4 புக்ஸ் என்பதால், எழுத சமாச்சாரம் இல்லாதே போவதில்லை & பற்றாக்குறைக்கு "சுந்தர சந்துக்குள் உலா போவோமா நைனா ?" என்று ஆராச்சும் அவ்வப்போது அன்பொழுக இட்டுப் போவதும் நடைமுறை என்பதால், blog வண்டி சீராகப் பயணித்து வருகிறது ! இதோ - இதுவும் ஒரு 4 புக் மாசம் எனும் போது லேப்டாப்பை தூக்கிக்கினு குந்தும் சமயமே பதிவு உருவகம் கண்டு விட்டது !! So here we go :
பொழுதுபோக்கு துறையில் இருக்கும் அம்புட்டு பேருக்கும் பிடித்தமானதொரு phrase - "ரொம்பவே வித்தியாசமான" என்ற ஜிகினா தான் ! நம்மளுமே அந்த ஜோதியில் சேர்த்தி தான் ; "வித்தியாசமான கதைக்களம்" என்று ஜடாமுடி ஜானதனுக்கும் பில்டப் தந்தவர்களாச்சே ! But trust me guys - இந்த அக்டோபரின் நான்கு - மெய்யாலுமே ஒன்றுக்கொன்று நிரம்ப மாறுபட்டவையே !!
*ஒரு அக்மார்க் கவ்பாய் தொடர் - டெக்ஸ் ரூபத்தில் !!
*இன்னொரு West களமே - வெட்டியான் ஸ்டெர்னுக்கும் - but முன்னதுக்கும், பின்னதுக்கும், இம்மி கூட ஒற்றுமை இராது ! முதலாவது கற்பனையின் மிகை எனில், இரண்டாவதோ நிஜத்தின் gory முகத்துடனானது !!
*அப்புறம் ஒரு க்ரைம் த்ரில்லர் - ரிப்போர்ட்டர் ஜானியின் ரூபத்தில், பாரிஸ் எனும் வட்டத்துக்குள் !
*மறுபடியும் ஒரு க்ரைம் த்ரில்லர் - இம்முறையோ பூமியின் ஒரு துருவ எல்லைக்கே இட்டுச் செல்லும் பாணியில் - ப்ருனோ ப்ரேசில் புண்ணியத்தில் !
So ஒரே மாதிரித் தோன்றினாலும், ஒரே மாதிரியானவை அல்ல எனும் போது - "வாசு"என்றதொரு வாசகனாய் மட்டும் நானிருப்பின், இந்த நான்கினுள் எவற்றை எந்த வரிசையில் வாசிப்பேன் ? என்று யோசிக்கத் தோன்றியது ! ரஷ்ய-யுக்ரைன் யுத்தத்துக்கே தீர்வு சொல்லும் ஆற்றல் வாய்ந்த அந்த மகா ரோசனையே இந்த வாரத்தின் பதிவு :
Honestly - உள்ளே காத்திருப்பது என்னவென்று தெரியாத வாசகப் பார்வையில் நானிருந்திருக்கும் பட்சத்தில் சர்வ நிச்சயமாய் உள்ளே இழுத்திருக்கக்கூடியது ஸ்டெர்ன் தான் !! அந்த மனிதனிடம், அந்தக் கதாப்பாத்திரத்திடம், அவரை கதாசிரியர் இட்டுச் செல்லும் இடங்களிடம் - ஒரு இனம்புரியா சோகம், தனிமை இருப்பது போலவே எனக்குத் தோன்றுவதுண்டு ! முகத்தில் ஒரு சலனமற்ற expression மாத்திரமே, ஆனால் அவரது உணர்வுகளை சுற்றுமுற்றும் இருக்கும் சூழலைக் கொண்டே கடத்திடுவதில் ஓவியர் செம ஜித்து எனும் போது, ஸ்டெர்ன் பெருசாய் முகத்தில் எமோஷன்ஸ் காட்டிட அவசியமாவதில்லை ! And எல்லாவற்றிற்கும் மேலாக என்னை ஈர்ப்பது அந்த சித்திர ஸ்டைலும், கலரிங்கும் தான் ! அந்த இரண்டுக்காகவுமே ஆட்டத்தை வெட்டியானிடமிருந்தே ஆரம்பித்திருப்பேன் ! ஒற்றை வசனம் கூட இல்லாத முழுப் பக்கங்கள் ; மொழிபெயர்ப்பாளனாய் அவற்றைக் கடந்திடும் போது "ஹை...ஜாலி..ஜாலி !!" என்று கூவும் உள்ளம், ஒரு வாசகனாகவுமே கூவியிருக்கும் - கதை நகர்த்தலுக்கு மௌனத்தையே பாஷையாக்கி ஓவியர் செய்திருக்கும் அட்டகாசத்தைக் கண்டு ! And அந்த அழகுப் பெண் வாலென்டினா அறிமுகமாகும் பக்கத்தில் கலரிங் திடீரென வேறொரு உச்சத்தில் செம bright ஆகிடுவதை ரசிக்கத் தவறியே இருக்க மாட்டேன் ! கதையோடு மூழ்கும் போது என்னை impress செய்திடும் முதல் பாத்திரமாய் மர்ரே என்ற அந்த சீனியர் (கருப்பு) வெட்டியான் தான் இருந்திருப்பார் ! வெட்டியான் வேலையினையும் ஒரு ஒழுக்கத்தோடு, கர்ம சிரத்தையாய் செய்யும் மனுஷன், தனக்கு ஜூனியராக வந்து சேரும் ஸ்டெர்னுக்கு திடீரென பெரிய இடது சகவாசமெல்லாம் கிடைக்கும் போதுமே பொறாமை கொள்ளாது, இயல்பாய் தன பிழைப்பைப் பார்த்துச் செல்வதில் காட்டிய கண்ணியத்தை ரசித்திருப்பேன் ! பற்றாக்குறைக்கு, மனசு ஒடிஞ்சு போய் ஸ்டெர்ன் திரும்பும் சமயத்தில், "ஹி..ஹி..ஹி..நாங்க தான் சொன்னோம்லே... உன் முகரைக்கு அந்தப் பொண்ணு கேக்குதாக்கும் ?" என்று கெக்கலிக்காது - "நண்பா...இது நியூ ஆர்லியன்ஸ் ! இன்னிக்கி ராத்திரிக்குள்ளாற அவளை விடவும் பத்து மடங்கு அழகான ஒரு மந்தைப் பொண்ணுங்களை நீ சந்திக்க வாய்ப்புண்டு !!" என்று தேறுதல் சொல்வது அற்புதம் !! அதே போல "இந்தப் பெண் நம்ம ரேஞ்சுக்கு அப்பாற்பட்ட பெரிய இடம் தான் ; ஆனாலும் அவளது காதல் நமக்குக் கிடைக்க ஏதாச்சுமொரு அதிசயம் நிகழ்ந்து விடாதா ?" என்ற கடைசிக் கட்டம் வரைக்குமான மௌன ஏக்கம் நிச்சயமாய் ஸ்டெர்ன் மீது எனது கரிசனத்தைக் கூட்டியிருக்கும் ! அதே சமயம், கதையின் வில்லனாக பில்டப் தந்து ரெடியாகும் "சேலம்" - படித்துறை பாண்டி ரேஞ்சிலான பிஞ்சு வில்லனே என்பதை உணர்ந்த சமயம் கொஞ்சம் ஏமாற்றம் தலைதூக்கவே செய்திருக்கும் ! But ஸ்ட்ராங்கான அந்தப் பெண்மணி கேரக்டரும், க்ளைமாக்சில் நடந்திடும் களேபரங்களும், அதன் மத்தியில் நம்மாள் ஸ்டெர்னுக்கு கிடைக்கும் ஒரு "இச்" ஜாக்பாட்டும் அந்த ஏமாற்றத்தினை மறக்கடித்திருக்கும் ! In fact - படித்து முடிக்கும் நொடியில், கதையில் ஆழம் குறைச்சலோ ? என்ற எண்ணம் மேலோங்கியிருந்தாலும், கொஞ்ச நேரம் அந்த அனுபவத்தினை அசை போட்ட பிற்பாடு - ஸ்டெர்னின் யதார்த்த கதாப்பாத்திரத்துக்கு இது தான் சரி என்றே தோன்றியிருக்கும் ! கதை முழுசும் விரவிக் கிடக்கும் அந்த melancholy ; இறுதிப் பக்கத்தில் ஆளே இல்லாத அறையிலிருந்து குடையை விரித்தபடிக்கே மெது நடை போடும் ஸ்டெர்னை காட்டி ஓவியர் தந்திருக்கும் ஓராயிரம் குட்பைகளை ரசித்தபடிக்கே 8 /10 போட்டிருப்பேன் !
எனது அடுத்த தேர்வு நிச்சயமாய் ப்ருனோ ப்ரேசில் 2.0 வாகத் தானிருந்திருப்பார் - becos டெக்சிலும் சரி, ரிப்போர்ட்டர் ஜானியிலும் சரி - என்ன எதிர்பார்ப்பதென்று முன்னமே எனக்கொரு ஐடியா இருந்திருக்கும் ! ஆனால் கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்குப் பின்பாய் மீள்வருகை செய்திடும் முதலைப் பட்டாளம் சொல்ல வருவது என்னவோ ? என்ற curiosity என்னை உள்ளே இழுத்திருக்கும் ! அட்டைப்படத்திலேயே ரெண்டு நிமிஷம் லயித்திருப்பேன் - அந்த ஓவிய ஜாலத்தில் மயங்கியவனாய் !! இங்கும் ப்ருனோவின் விழிகளில் தென்படும் ஒரு மென்சோகம் கதை சார்ந்த எனது ஆர்வத்தினை அதிகப்படுத்தி இருக்கும் ! மெதுவாய் உள்ளே புகுந்தால் உட்பக்க சித்திரங்கள் மட்டுமன்றி, அந்த layout கூட என்னை நிரம்ப இம்ப்ரெஸ் செய்திருக்கும் ! பின்னணிகளுக்கு முக்கியத்துவம் தந்திட வேண்டிய தருணங்களில் பக்கத்துக்கு நான்கே படங்கள் - page 12 போல !! அதே போல ஒரு குளிர் பிரதேசத்து பாரை கண்ணில் காட்டிடும் போது ஓவியரின் details சார்ந்த நுணுக்கம் (பாருங்களேன் page 17) ; அந்த வானிலை அறிக்கை வாசிக்கத் துவங்கும் நொடியில் அங்குள்ளோர் அனைவரும் அதற்கு முழுக்கவனமும் தந்திடும் யதார்த்த பாங்கு - இது வெறும் பொம்ம புக் அல்ல ; இதன் பின்னணியில் ஒரு லோடு research உள்ளதென்பதை புரியச் செய்திருக்கும் ! And கதைக்குள் ஆழமாய்ப் போகப் போக, அந்த வடதுருவத்து வனாந்திரங்கள், அங்குள்ள வித்தியாசமான இன்யூட்கள், அவர்களது வாழ்க்கை முறைகளோடு பின்னிப் படரும் கதைக்களத்தை நிச்சயம் ரசித்திருப்பேன் ! 'இது போலத்தான் கதையின் மையப்புள்ளி இருக்கும் ' என்பதை யூகிக்க ஆங்காங்கே குறிப்புகளை கதாசிரியர் சிதற விட்டுச் சென்றிருந்தாலும், நம் கண்முன்னே உயிரோட்டமான சித்திரங்களுடன் கதை ஒரு க்ளைமாக்ஸை நோக்கி unravel ஆகிடுவதையே விரும்பியிருப்பேன் ! அந்தப் பழங்குடிச் சிறுவன் ; அவனுக்கிருக்கும் அந்த விசேஷ ஆற்றல் ; அதனை 'காதிலே பூ' சமாச்சாரம் போல தெரியவிடாமலே கதாசிரியர் நகர்த்திக் கொண்டு சென்ற லாவகத்தை நிச்சயம் applaud செய்திருப்பேன் ! கொஞ்சம் மிகையான கற்பனையாய் க்ளைமாக்ஸ் தென்பட்டிருந்தாலுமே, வாசிப்பின் முடிவில் 9 /10 மார்க் போட தயங்கியே இருக்க மாட்டேன் தான் !
And வாசகனாகவோ, புடலங்காய் எடிட்டராகவோ, எந்த அவதாரத்தில் இருந்திருந்தாலும் கடைசிப் பக்கத்தில் ஒரு கணம் தடுமாறி நின்றே இருப்பேன் - அங்கிருந்தது அம்மாவின் நினைவஞ்சலிப் படம் என்பதால் ! Of course இழப்புகளை சந்திக்காதோர் எவரும் இருக்க முடியாது தான் & முடிவே இன்றி இந்த ஆயுள் யாருக்கும் தொடரவே போவதுமில்லை தான் ! Yet - அம்மாவின் அந்த போட்டோவை பார்க்கும் நொடியில் கடைசி 4 வருடங்களில் அவர் பட்ட கஷ்டங்களும், வலி, வேதனைகளும் தான் மனதில் நிழலாடுகின்றன ! எங்கள் சக்திகளுக்கு மீறியும் செலவழித்து வைத்தியம் பார்க்க முயற்சித்தும், அவரது வலிகளை இறுதி வரைக்கும் மட்டுப்படுத்த இயலவில்லையே என்ற ஆற்றாமை தான் இன்னமும் பிடுங்கித் தின்னுகிறது ! 2018-ன் இறுதியில் ஒரு இக்கட்டான அறுவை சிகிச்சையின் போதே அம்மா இயற்கை எய்தியிருப்பின் ஒரு ராஜவாழ்க்கை வாழ்ந்த திருப்தி எல்லோருக்குமே கிட்டியிருக்கும் ! ஆனால் அன்று பிழைக்கச் செய்த எங்களுக்கு, தொடர்ந்த 4 ஆண்டுகளின் இன்னல்களை தடுக்கவே முடியாது போனது தான் விதியின் கோர முகம் போலும் !! சாரி folks ; இது இங்கே தேவையில்லா ஒரு சமாச்சாரமாய் இருக்கக்கூடும் தான் - but அந்த கடைசிப் பக்கத்தைப் பார்த்து விட்டு இதை எழுதாது இருக்க முடியவில்லை !! Sorry again !!
Moving on, எனது வாசிப்பு # 3 நிச்சயமாய் டெக்ஸாகவே இருந்திருக்கும் ! 'தல' நம்பள் கி சர்டிபிகேட்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் எனும் போது - அவரைப் பற்றியோ, கதையைப் பற்றியோ 'ஆஹா..ஓஹோ..' என்றெல்லாம் எழுத மெனெக்கெட மாட்டேன் ! மாறாக, அட்டகாசமான சித்திரங்களை ரசித்தபடிக்கே அந்த வன்மேற்குக்குள் நுழையும் கணமே, போனெல்லியின் ஒட்டு மொத்த டீமுக்குமே ஒரு மானசீக வணக்கத்தைப் போட்டிருப்பேன் ! கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கும் மேலாய் ஒரு நாயகரை, நாம் யாரும் கண்ணில் பார்த்தே இருக்காத பூமியில் உலவ விட்டு, அங்கேயே தொடர் வெற்றிக்கொடிகளை நாட்டிடச் செய்வதென்பது எத்தனை அசாத்திய சாதனை !! அதை இம்மி பிசகாமல் ஆண்டுதோறும், மாதம்தோறும் செய்து வரும் அசாத்தியர்களை என்னவென்று புதுசாய் சிலாகிப்பது ? சிங்கிள் ஆல்பம் ; அதுவும் நம்ம V காமிக்சில் - so நிச்சயமாய் இது செம breezy read ஆகவே இருந்திடுமென்ற எதிர்பார்ப்போடே ஒரு துள்ளலுடன் உட்புகுந்திருப்பேன் ! மிரளச் செய்யும் உயிரோட்டமான சித்திரங்கள் இங்கேயும் கட்டிப் போட, 'நீங்க வந்தா மட்டும் போதும்....நீங்க வந்தா மட்டும் போதும்" என்று டெக்சிடம் வழிந்து தள்ளியிருப்பேன் ! சிம்பிளான storyline ; இருப்பினும் அதனை துளி தொய்வுமின்றி நகற்றிச் சென்றுள்ள பாங்குக்கே சென்டம் தரலாம் என்ற சபலம் எழும் ; but "சொடலமுத்து ரொம்ப ஸ்டிக்ட்டுப்பா !!" என்ற சிலாகிப்பை ஈட்டவாச்சும் 8.5 /10 போட்டிருப்பேன் !
Last, but not the least - ரிப்போர்ட்டர் ஜானியின் "நள்ளிரவின் நாயகன்" !!
இந்த இதழைக் கையில் எடுத்துப் புரட்டும் போது எனக்குத் தோன்றியிருக்கக்கூடிய முதல் சிந்தனை - இதனை அச்சிட்ட பிரிண்டரைக் கூப்பிட்டு ஒரு மோதிரம் போடுவதாகவே இருந்திருக்கும் ! But தங்கம் விற்கின்ற விலைக்கு அதுலாம் கம்பெனிக்கு கட்டுபடியாகாது என்பதால், எங்க பால்யங்களில் போல, ஒரு ஜவ்வுமிட்டாய் மோதிரத்தை செஞ்சு வாங்கி அவருக்கு மாட்டி விட்டிருப்பேன் ! Oh wow - இந்த இதழின் பிரிண்டிங்கில் தான் என்னவொரு துல்லியம் !!! லேட்டஸ்ட் டிஜிட்டல் கலரிங்கில் படைப்பாளிகள் பின்னிப் பெடலெடுத்துள்ளனர் தான் - but still அதை துளியும் சொதப்பாது அச்சில் கொணர்வது சுலபமே ஆகாது !! செவாசிக்காரன் என்றமுறையில் அது பற்றி "வாசு" வுக்குக் கூட விபரம் தெரிந்தே இருக்கும் !! பக்கம் 26 -ஐ பாருங்களேன் : இரவில் ஷூட்டிங் நடக்கிறது ; அந்த லைட்ஸ் உமிழும் ஒளி ; அப்புறமாய் கடைசி பிரேமில் மோட்டார் சைக்கிளில் வரும் வில்லனை highlight செய்திட க்ரே பின்னணி ! அதே போல பக்கம் 35 !!! காரின் ஹெட்லைட்ஸ் எறியும் ஒளி ; பூட்டியுள்ள ஆபீசுக்குள் இருளில் ஜானி புகும் போது அவர் முகத்தில் தெரியும் பிரதிபலிப்பு ; தரையில் சிகப்பு அம்புகளோடு நிலா வெளிச்சம் - என கலரிங்கில் அவர்கள் செய்துள்ள அத்தனை அதகளங்களையும் பிசிறின்றி இங்கு அச்சில் நமக்குக் கொண்டு வந்துள்ளார்களே - hats off !!
ஆங்...கதையைப் பொறுத்தவரை இங்கே எல்லோருமே நம்ம ஸ்டீலின் தட்கல் பின்னூட்டங்களின் பாணியிலேயே பேசுவதால் பேந்தப் பேந்த முழித்தபடிக்கே பயணித்திருப்பேன் ! Oh yes - முடிச்சு முடிச்சா போட்டுகினே போவார் ; கடாசி 2 பக்கங்களில் தான் சகலத்தையும் அவிழ்ப்பார் என்பதும் தெரியும் தான் ! Yet - ஆந்தை விழிகள் எக்ஸ்ட்ராவாய் ரெண்டு mm திறந்தே இருப்பது போல் பட்டது - கதை நெடுகிலும் !! And நம்ம ஜானிகிட்டே நாம் எதிர்பார்ப்பதே இந்த இடியாப்பங்களைத் தான் எனும் போது, கதையை முழுசாய் படித்து முடித்த கணத்தில் - ஒரு ஜிகர்தண்டாவை அடிச்ச குஷி விரவி நின்றிருக்கும் !! My marks : 7.5 /10
So, இந்த மாதத்து இதழ்களை இந்த டப்ஸா வாசுவின் பார்வையில் பாத்தாச்சு ! இனி மெயின் ; ஒரிஜினல் ; அசல் "வாசுக்கள்" ஆகிய நீங்கள் தான் அலசி, ஆராய்ந்து மார்க் போட்டாக வேணும் !! ஒரு சித்திர அதகளமான அக்டோபர் முழுசாய் சாதித்துள்ளதா ? என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாய்க் காத்திருப்போம் !! Bye all ....have a beautiful weekend !! See you around !!
And lest I forget :
- திருச்சி
- விருதுநகர்
- தூத்துக்குடி
என ஒரே சமயத்தில் 3 இலக்குகள் விழாக்களில் கலந்து கொண்டு வருகிறோம் !! இது நமக்கொரு record !!! ஆங்காங்கே வருண பகவான் மட்டும் புகுந்து விடுகிறார் ; மற்றபடிக்கு ரகளைஸ் தான் !! அதிலும் தூத்துக்குடி இறுதி நொடியில் எடுத்த தீர்மானம் - and அங்கு கிட்டிடும் விற்பனை a real surprise !!! Thanks all !!!
என்ன அதிசயம்
ReplyDeleteMe in..😍😘
ReplyDeleteHi
ReplyDeleteHi
ReplyDeleteJai thorgal
ReplyDeleteWow 🤩
ReplyDeleteவணக்கமுங்கோ…
ReplyDeleteSixth
ReplyDeleteOh 😱 my god ... I am in 4th
ReplyDeleteWelcome friend
Deleteவணக்கம்
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteவணக்கமுங்க!
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்.
ReplyDelete//ஆனால் அன்று பிழைக்கச் செய்த எங்களுக்கு, தொடர்ந்த 4 ஆண்டுகளின் இன்னல்களை தடுக்கவே முடியாது போனது தான் விதியின் கோர முகம் போலும் !!//
ReplyDeleteமரணம் மகா கொடுமையானது...
படித்தது கொஞ்சம் தான்... துக்கம் தொண்டையை அடைக்கும் அளவு பேச்சு அற்று போனாலும்... அம்மாவின் இழப்பு.ஈடு செய்யவே முடியாது போனாலும்...
வாழ்நாள் முழுதும் அழுகையை அடக்க முடியாது போனாலும், உங்களின் பேணிய அம்மாவின் வலியை மனதில் கொண்டு...
Deleteபடைத்தவரிடம் அன்பு கூறும் எவருக்கும் சகலமும் நன்மைக்கே நடக்கிறது என்பதே நமக்கு கிடைக்கும் பெரும் ஆறுதல்... நம்பிக்கை தானே ஐயா எல்லாமே.
எல்லாம் கடந்து போகும் ஆதி !
Deleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDeleteநானும் ஜானியைதான் முதலில் படிக்க வேண்டும் என்று எண்ணினாலும் மனது ப்ரூனோ பிரேசிலைதான் செலக்ட் செய்தது.😘👍
பனிபிரதேசத்தில் நடக்கும் தடாலடிகள் அருமை.👌
IWSO ல் நானும் சேர்ந்துவிடலாம் என்று இருக்கிறேன்..😘✊👍
கதை, திரைக்கதை, வசனம், சித்திரங்கள் அத்தனைக்கும் 10/10..❤💛💙💚💜
ஆஹா....கோடாரி மாயாத்மா பேரவை அம்போவா ?
Deleteஇவருதான் ஜம்போவாச்சே சார்....தாவட்டும்...அங்கிமிங்கும்
Deleteவணக்கம்
ReplyDeleteகாமிக்ஸ் உறவுகளுக்கு வணக்கங்கள்❤️🙏
ReplyDelete@Edi Sir..🙏
ReplyDeleteஅம்மாவின் இழப்பை யாராலும் ஈடு செய்ய இயலாதுதான்..😥
வாருங்கள் கடந்துசெல்வோம்..
அடுத்த கட்டத்தை நோக்கி..🙏அம்மாவின் ஆசிர்வாதங்களுடன்..💐💐
நிச்சயமாக சார் !!
Delete🙏🙏🙏🙏🙏🙏
Deleteஇறைவன் மிகக் கொடூரமானவன் என்று சில சமயங்களில் நான் நினைப்பேன். அது உண்மை என்று பல சமயம் உறுதியாகியுள்ளது. அதில் ஆசிரியரின் அன்னை இழப்பும் ஒன்று. மரணம் மட்டுமே நிரந்தரமானது தான். அந்த மரணம் கூட ஏன் வலிகளோடும் வேதனைகளோடும் ஏன் இறைவன் தர வேண்டும். அன்னையின் ஆசிகள் என்றென்றும் ஆசிரியர் தங்களுக்கு உண்டு. அம்மாவின் ஆன்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பாறிக் கொண்டிருக்கும். கொண்டிருக்கும்
ReplyDeleteஇறைவனின் சித்தம் சில நேரங்களில் நமக்குப் புரியாது சார்!
DeleteHi..
ReplyDelete28th
ReplyDeleteஜானி, பிரேசில் கதைகள் நன்று...
ReplyDeleteமற்ற கதைகள் இனிமேல் தான்
Delete82
Deleteஅதென்ன ஜானிக்கு மட்டும் 7.5 மார்க். இது போங்கு ஆட்டம்!
ReplyDeleteஎழுதுறவனின் நோவு கொஞ்சமாய் எடியிடமிருந்து வாசுவுக்கும் transfer ஆகியிருக்குமோ?
Deleteஎன்னாலும் இத்தனை அருமையான வண்ண ஆக்கத்திற்கு 7. 5 ஏற்று கொள்ளவில்லை இயலவில்லை...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசார் அட்டைப் படங்கள் நாலுமே அசத்த...உத்து பாத்தா ஜானி எல்லாத்தையும் விட பளபளக்க...பட்டய கிளப்புது டெக்ஸ் நானே டாப்பென...
ReplyDeleteஉள்ள புரட்டுனா ...முதல்கட்ட ( முதல்காட்சிக்கே கொடுத்த பணம் ஈடுன்னு தோண)வழிமறிக்கும் மரத்த கஷ்டபட்டு கடக்க ... நம்ம வெட்டியான் அசால்டா இழுக்க ஒட்டுக்காக படிப்போம்னு நிதானமா தள்ள...
டெக்ஸ் துவக்கமும் பதறவைக்க...என்னாகுமோ அடுத்து என அச்சப்பட்டு பாத்தா டெக்சும் கார்சனும் அதிரடியாக எழ ...ஆஹான்னு துள்ளவைக்கும் எண்ட்ரில இதுவரை வந்த எண்ட்ரில டாப்னு ஓவியங்க தலையில்லா போராளி சைசுல வந்தா என ஏங்க வெக்க...அடுத்து படிக்கைல துள்ள வைக்கனுமேன்னு அடுத்த கட்டத்த தாண்டாம தள்ள...ஜானியும் துவக்கத்திலேபதற வைக்க பின்பு ஒன்னுமில்லன்னு சிதற வைக்க நாளைன்னு தள்ளி வைக்க...
எல்லாரும் ஓரமா போங்கப்பூன்னு துவக்க கட்ட காட்சிய பார்ப்பதா...சிதறி கிடக்கும் வரிகள் சேப்பதான்னு ...வண்ணத்தை கோப்பதான்னு யோசிக்க விடாம சிம்பாளிக்கா டாப்ஸ்பீடு காரக்காட்டி கதையும் டாப்ஸ்பீடெடுக்க சத்தியம் செய்து தெறிக்க வைக்க...நடு சாமம் படிப்போம்னு ...சாமத்துல வாரேன் சாமந்தி பூ தாரேன்ன கதையோட தூங்க...இப்ப துவங்கியாச் மரண ஓட்டத்த அந்த மீன்களுக்கு நடுவே யாரென ...செம சார்...லார்கோ துவக்க கதை கார் சேசிங்க நினைவு படுத்தி அதையும் மிஞ்சுமோ என பார்கிறேன் பாயிலிருந்தெழுந்து
பதிவு துவக்கம் சூப்பர் சார்...கதய சொல்ல ஆரம்பிச்சதால முதல்முறையா கஷ்டபட்டு கடக்கிறேன்...படிச்சி பிறகு விமர்சனத்தோட உங்க விமர்சனத்துக்கு வாரேன்
ReplyDeleteFacebook ல் எழுதியது இங்கும்.
ReplyDeleteமாயா.. எல்லாம் மாயா...!
லயன் காமிக்ஸ்
முத்து காமிக்ஸ்
ஸ்டெர்ன்
இம்மாதம் வெளிவந்துள்ள ஸ்டெர்னின் மாயா.. எல்லாம் மாயா...! வாசித்தேன்,
நியூ ஆர்லியன்ஸில் உள்ள ஒரு பணக்கார யுவதி ஒருத்தி உள்ளூரில் அமானுஷ்ய மேஜிக் ஷோ நடத்தும் விக்டர் சேலம் என்பவனின் பிடியில் இருப்பதாக அவளின் தந்தை நம்புகிறார். நமது நாயகன் எலிஜா ஸ்டெர்னிடம் தம் மகளை அந்த விக்டரிடம் இருந்து விடுவித்து தருமாறு கோருகிறார் அவளின் தந்தை. அவரின் கோரிக்கைக்கு சம்மதிகிறார், இறுதியில் அந்த விக்டர் சேலம் என்பவனின் பிடியில் ஸ்டெர்னே சென்று மாட்டிகொள்கிறார். இறுதியில் அவர் மீண்டரா? அந்த யுவதியை காப்பாற்றினாரா? என்பதுதான் மொத்தக்கதை.
மேற்படி மெல்லிய கதைக்கு JULIEN MAFFRE அவர்களின் அபாரமான சித்திரங்கள்தான் பெரும் பலமாக அமைந்துள்ளது. அந்த கால நியூ ஆர்லியன்ஸ் நகரின் கட்டிடங்கள், தெருக்கள், குறிப்பாக அந்த ஊரின் சுடுகாடு என ஒவ்வொரு பேணலும் நம்மை அந்த காலகட்டத்திற்கே அழைத்துச் செல்கிறது. மேலும் கதையை சில இடங்களில் வசனமேயின்றி மெளனமாக சித்திரங்கள் வழியே சொல்லும் பாணி மிகவும் அபாரமாக உள்ளது. துவக்கத்தில் கத்தோலிக்கர், ப்ராட்டஸ்டண்ட், யூதர், ஊடு நம்பிக்கை சார்ந்தோர், கருப்பர் என ஐந்து வகை நம்பிக்கை உள்ள மக்கள் அந்நகரில் வசிப்பதாக கூறி, அவரவருக்கு மயானத்தில் தனி இடம் உண்டு என்பதாக ஒரு வசனம் வரும். அதை தொடர்ந்து ஒரே நாளில் அந்த ஐந்து நம்பிக்கை ஆட்களின் சவ அடக்க காட்சியை ஓவியர் JULIEN MAFFRE கையாண்டுள்ள விதம் உண்மையில் அசத்தல், அடுத்தக் காட்சியில் விக்டர் சேலம் நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் சுமார் ஒரு மணிநேரம் நீளும் காட்சியை உருகும் மெழுகுவர்த்தியை கொண்டு காட்சிப் படுத்தியது அபாரம்.
கதை என்னவோ அழுத்தமற்று தோன்றினாலும், ஓவியர் JULIEN MAFFRE அவர்களின் சித்திர நேர்த்திக்காகவே இந்த ஸ்டெர்னின் மாயா.. எல்லாம் மாயா...! புத்தகத்தை வாங்கிடலாம்.
கீழே நான் விவரித்த சித்திர பக்கங்களை இணைத்துள்ளேன்.
நவீன வெட்டியான் ரசிகர்கள் வட்டம் பெரியதாகி வருகிறது. மகிழ்ச்சி
DeleteYes, கதாசிரியருக்கு இங்கே tough தருவது ஓவியர் தான் நண்பரே! பக்கத்துக்குப் பக்கம் ஓராயிரம் கதைகளை அவர் ஒருபக்கமாய் சொல்லிப் போகிறார்!
Deleteஉண்மை! ஓவியர் தனி ஆவர்த்தனம் நிகழ்தியுள்ளார்!👌👌
DeleteFacebook ல் எழுதியது இங்கும்.
ReplyDeleteபனிக்கடலில் முதலைகள்!
லயன் காமிக்ஸ்
முத்து காமிக்ஸ்
ப்ருனோ ப்ரேஸில்
இம்மாதம் முத்துவில் வெளிவந்துள்ள ப்ருனோ பிரேஸிலின் பனிக்கடலில் முதலைகள்! வாசித்தேன். ஒரே வார்த்தையில் சொல்வது எனில் கதை படு அட்டகாசம்.
கிட்டத்தட்ட வெகு ஆண்டுகளுக்கு பிறகு நம் தோழர் ப்ருனோ மற்றும் அவரது டீமை சந்திக்கிறேன். குள்ள நரிகளின் இரவு! தான் ப்ருனோ வந்த கடைசி கதை என்று எண்ணுகிறேன்.
ஸ்டெர்னின் கதையை வாசித்து முடித்ததும் அடுத்து ரிப்போர்டர் ஜானி கதையைத்தான் வாசிக்க தேர்வு செய்தேன்.. ஏனோ முதல் இரண்டு பேணல் வாசித்ததுமே சுவாரஸ்யம் குறைந்து போய்.. ப்ருனோவை வாசிக்க எடுத்துக் கொண்டேன். “என்னை வசித்து விட்டு தான் நீ மறுவேலை செய்ய போகவேண்டும்!” எனும் அளவுக்கு ப்ருனோவின் புத்தகம் என்னை ஈர்த்துக் கொண்டது.
முதலைப் பட்டாளம் டீமின் மறுவருகைக்கு நல்வரவு.
பாஸ்டன் கான்லே துறைமுகத்துக்கு பதப்படுத்திய மீன்கள் வந்து சேர்க்கிறது. மீன்களை வேனில் கொட்டும்போது மீன்களோடு ஒரு மனித உடலும் வந்து விழுகிறது. போதாதற்கு அந்த உடலின் கழுத்து மற்றும் முன்னங்கை தோலில் மீனைப் போன்று செதில் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் அந்த இறந்த மனித உடலில் இரத்ததிற்கு பதில் ஆக்சிஜன் தான் உள்ளது என்று ரிப்போர்ட் கூறுகிறது. இதன் மர்மம் என்ன என பரபரவென்று கூறியுள்ளனர்.
கதாசிரியர் LE BOLLE மிகவும் தெள்ளத் தெளிவான ஸ்க்ரிப்டை எழுதியுள்ளார். முதல் பக்கம் துவக்கி இறுதிவரை கொஞ்சம்கூட சுவாரஸ்யம் குன்றவில்லை அந்தளவிற்கு கதை விறுவிறுப்பாக நகர்கிறது.
சித்திரங்கள் PHILIPPE AYMOND அவர்கள். தமது ஆற்றல் மிகு சித்திரங்கள் மூலம் இக்கதைக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார். முன்பு இந்த கதை வரிசைக்கு சித்திரம் வில்லியம் வான்ஸ் அவர்கள்.. அவரின் சித்திர தரம் எந்தளவிற்கு இருக்கும் என்பது நமக்கு நன்கு தெரியும், அந்தளவிற்கு ஈடுகொடுத்து PHILIPPE AYMOND அவர்கள் தமது சித்திரங்களால் நம்மை வசீகரிக்கிறார்.
கலரிங் DIDIER RAY அவர்கள். உண்மையில் இந்தக் கதையின் நிஜ நாயகர் இந்த கலரிங் ஆர்டிஸ்ட்தான். ஒவ்வொரு பேணலிலும் தமது கைவண்ணத்தால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார். மேஸ சூ செட்ஸ் நகரில் நடக்கும் காட்சிகளும், கனடாவின் எஸ்கிமோ பாயிண்டில் உள்ள பனிப்பொழிவு காட்சிகள், யுடா வின் இயற்கை காட்சிகளும் வண்ணச்சேர்க்கை அற்புதம். முதல் பேணல் துவங்கி இறுதி பேணல் வரை வர்ண ஜாலம் செய்துள்ளார் இந்த DIDIER RAY அவர்கள்.
இந்த மாதம் வெளிவந்துள்ள கதைகளில் ப்ருனோவின் பனிக்கடலில் முதலைகள்! தான் முதலிடம் பிடிக்கும் என்று எண்ணுகிறேன். இவ்வருடத்தின் சிறந்த கதைகள் பட்டியலில் இக்கதைக்கு நிச்சயம் இடமுண்டு.
தற்போது வந்துள்ள பனிக்கடலில் முதலைகள்! (Terreur boréale à Eskimo Point, 2022) ப்ருனோவின் The new adventures சீரிஸின் மூன்றாவது கதை. முதல் இரண்டு கதைகளான
1. Black Program 1, (2019)
2. Black Program 2, (2020)
ஆகியவற்றை தமிழில் விரைவில் வெளியிடவும் எடிட்டர் Vijayan S அவர்களிடம் இங்கு கோரிக்கை வைக்கிறேன்.
இம்மாதம் வெளிவந்துள்ள ஸ்டெர்னின் மாயா... எல்லாம் மாயா..! ப்ருனோவின் பனிக்கடலில் முதலைகள்! ஆகிய இரண்டு புத்தகங்களும் ஒரே நாளில் வாசிக்க வைத்ததும் இல்லாமல் இரண்டு கதைகளுக்கும் விமர்சனமும் எழுத வைத்துவிட்டது. 🙂
நன்றாக எழுதியுள்ளீர்கள் நண்பரே.
Deleteஅந்த மழை பெய்யும் மீன்கள் கம்பனி...பனித்தூவலுள் நீங்கள் நனைத்ததை பார்க்கிறேன்...அருமை நண்பரே
Delete//ரத்தக் காட்டேரிகளை முறியடிக்க பூண்டு செம் வீரியமான சக்தி தெரியுமோ.// ஒரு ட்ராகுலா படம் பார்த்துக் கொண்டிருப்பதான உணர்வு . இன்னும் மீள முடியவில்லை . ஸ்டெர்ன் எப்ப படிச்சாலும் அப்படியே உள்ளே இழுத்துக் கொள்வார்
ReplyDeleteஇதிலும் அப்படியே
Editor sir, Bruno Brazil கதையில்
ReplyDeletePage number 31 / 5வது பேனலில் டோனி பேசிய வசனம் என்ன?
3வதா 5வதா
Deleteஆபீஸ் போனால் தான் தெரியும் சார் 🤕
Deleteஏதோ ஒரு பேனல் blankகா இருக்கு சார்
Deleteகரண்ட் கட்...நேற்று முன்னிரவு பத்து பக்கங்கள் படித்த பின்னே தூங்கினேன் ப்ரூனோல...மீண்டும் முதல்வருக்கு படிக்க வசனங்கள் இன்னுமோர் படி சிலிர்க்கச் செய்ய தவறல..கௌச்சோ நா வர தாமதமாகலாம்னு உள்ள போக...போன வேகத்துலயே திரும்புவான் அடிபட்டு..முதல்ல படிக்கைல கவனிக்கல...காட்சிக்கும் வசனத்திற்குமுள்ள பகடி...இரண்டாம் முறையா படிக்கும் போது மனம் இயல்பாக உள்ள போகைல கதையின் சுவாரஸ்யம் கூடுது....இரத்தப் படலம் போல வீரியமிகு கதைகள் மறுக்கா படிக்கைல விஷயங்கள் கூடுதலாக கிடைக்க சுவாரஸ்யம் கூடுது...இது போலான கதைகள் நேர் கோட்டுக்கதைகள்ங்றத விட ..zigzag...லைனா தோனுனாலும் மீண்டும் வாசிக்கைல ஒன்று கூடும் போது நேர்கோடாவது உணர இயலும்...மீண்டும் மீண்டும் படிக்க உகந்த கதைகள் இவைதாம்...கரண்ட் வந்தாச்...
ReplyDeleteநீண்ட காலத்திற்கு பிறகு புத்தகம் கைக்கு வந்த முதல் நாளே படித்தாகி விட்டது...!
ReplyDeleteமுதலில் "மாயா எல்லாம் மாயா"
இந்த வெட்டியான் கதைகளில் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருப்பதினால் இதைத்தான் முதலில் வாசித்தேன்! அந்த ஈர்ப்பை இக்கதையிலும் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டான் வெட்டியான்...! 8/10
இரண்டாவது - ப்ருனோ ப்ரேஸில்
எடிட்டர் சார் சொன்னது போல 17ஆம் பக்கம் நானுமே சற்று நின்று, அந்த பாரிலே கொஞ்சம் லயித்துவிட்டுத் தான் அடுத்த பக்கத்திற்கு போனேன்...!
வண்ணக்கலவைக்காகவே : 8/10
மூன்றாவது - ரிப்போர்டர் ஜானி
கடந்த இரண்டைக் காட்டிலும் என்னை அதிகம் ரசிக்க வைத்தது இந்த கிளாசிக் இடியாப்பச் சிக்கல் தான்! ரொம்ப நாட்களுக்கு பிறகு ஜானியின் கிளாசிக் இடியாப்பம் அதே ருசியுடன் சூப்பர்...! 9/10
வழக்கமாக கடைசியாகப் படிக்கும் டெக்ஸை முதலில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியதே சித்திரங்கள் தான்...! இருந்தாலும் கடைசியாகத் தான் படித்துக் கொண்டிருக்கிறேன்...!!
மணி அதிகாலை 4.00 ஹிஹி!
வாயில் நுழையாத பெயர் கொண்ட ஓவியர் வாழ்க...!
சித்திரங்களுக்காண்டி : 10/10
அருமை. மிதுன்
Delete'தல ' க்கான மார்க்ஸ் சார்?
Deleteகாலை வணக்கம்.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteஇனிய காலை வணக்கங்கள் 💐💐💐
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஇறுதி ஆட்டம் : சூடான காபியை குடித்து கொண்டே விறுவிறுப்பான இந்த ஆட்டத்தை படித்து விட்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு வழக்கமான டெக்ஸ் மசாலா, நன்றாக இருந்தது. V- காமிக்ஸ வரும் அனைத்து கதைகளை போல் இதிலும் ஓவியங்கள் சிறப்பு; மிகவும் துல்லியமான நுணுக்கமாக வரைந்துள்ளார் ஓவியர். V- காமிக்ஸ நிறைய பேர் விரும்பி படிக்க காரணம் நல்ல ஓவியம் நேர்கோட்டு கதை எளிதான வாசிப்பு, இந்த கதை அதற்கு உறுதி.
ReplyDeleteஎல காபியை குடிச்சியா குளிச்சியா
Deleteபல்லு வெளக்குனாரான்னும் கேட்டுப்புடுங்க ஸ்டீல்
Deleteவாயத் தொறந்தா அவ்ளோதான் சார்...அதான் பயபுள்ள ஃபோட்டாவுக்கு போஸ் குடுக்கைல கூட திறக்கலயே
Deleteபார்சலை பிரித்ததும் முதலில் கவர்ந்தது ப்ரூனோ தான்.
ReplyDeleteஎனவே . முன்பே வரிசைப் படித்தியது போல் , "முதலைப் பட்டாளத்தை, " - படித்து முடிச்சாச்சு..
ஒரு ஆங்கிலப் படத்தை DVD - கேசட் - டில் பார்த்த திருப்தி..
அந்த அளவிற்கு ஓவியத்திறமை..
அப்றம் - ஒரு துப்பறியும் கதையில் . மிக இயல்பாக கடந்து சென்று இறுதியில் வில்லன் (என்பவரிடம்) - இடம் சென்று நிற்கும் - முடிவடையும் நேர்த்தி என்று அட்டகாசமான வாசிப்பு அனுபவம்..
நிச்சயம் காமிக்ஸ் - படிப்பதற்கு, காமிக்ஸின் - பவரை தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு பரிசளிக்க ஏற்ற இதழ்..
அப்றம் - "அதுல பாருங்க..." - இரண்டாவதா - ரிப்..ஜானி தான் படிப்பேன்னு சொல்லி இருந்தேன்..
நா .. எப்பவுவே புத்தங்களை ஒரு புரட்டு புரட்டி உள்ளே - ஹாட்லைன் - அடுத்த வெளியீடுகள் - பார்த்து விட்டு - ஒவ்வொரு புத்தகத்தையும் இரண்டு பக்கம் படித்து கதைப் போக்கை தெரிந்து கொள்வேன்..
இந்த தடவை - டெக்ஸ் இதழின் அந்த ஓவிய அழகு என்னை கட்டி இழுத்து விட்டதால் - டெக்ஸை படிச்சுப் புட்டேன்..
ஆனாலும், நீங்க சொன்ன அந்த கனவு நாள் - இன்று கிடைத்துவிட்டது ..
காலையில் - ரிப்ஜானி -
மதியம் - ஒரு சினிமா -
மாலையில் - ஸ்டெர்ன் .
என்று plan செய்து விட்டேன்..
அதேதான் நண்பரே ...அட்டகாச திரைப்படத்த துல்லியமாக HD பிரிண்ட்ல பாத்த திருப்தி
Deleteஜமாயுங்கள் சார் 💥
Deleteஇந்த மாதம் நிச்சயம் கடும் போட்டி தான். நான்கும் வெவ்வேறு விதங்களில் அசத்துகிறது. அதிலும் ஜானியா, டெக்ஸா என்பதில் கடும் போட்டி எனக்குள். மூன்று அபார வண்ணங்களுக்கு இடையே, கறுப்பு வெள்ளையில் இருந்தும் கடும் போட்டியை உருவாக்கிய டெக்ஸின் அந்த மெர்சலூட்டும் சித்திர பாணிக்கே எனது முதல் பார்வைக்கான ஓட்டு
ReplyDeleteஞாபக படுத்திட்டீங்க...என்னோட அடுத்த பயணம் டெக்சோடதா
Deleteஆனால் கதைகளை பொறுத்தவரை ஸ்டெர்ன் அனைவரையும் பின்னுக்கு தள்ளி விடுவார் என்பது என் கணிப்பு. பார்ப்போம்
ReplyDeleteபடிங்க மாறும்
DeleteI completed my books. Rating as per my reading order
ReplyDeleteBrune Brazil. - 9/10
Stern - 7/10
Reporter Johnny - 8/10
Tex - Outstanding
டெக்ஸ் மார்க்குகளுக்கு அப்பாற்பட்டவரே 💪💪
Deleteமுதலைப்பட்டாளம் நல்ல கனமான கரு,அட்டகாசமான சித்திரங்கள்,டெக்ஸ் வழக்கம்போல் விரைவான வாசிப்பிற்கு ஏற்ற ஆக்ஷன் மேளா,ஸ்டெர்ன் தலைமுடி,உடல்வாகு கதாசிரியர் எட்கார் ஆலன்போவின் தாக்கத்தில் உருவாக்கியது என நினைக்கிறேன்.ஸ்டெர்னின் கதையில் கரு,கதை சொல்லல்,சித்திரங்கள்,அனைத்திலும் வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான தொனி,ஸ்டெர்ன. தொடர் காமிக்ஸ் ரசனைக்கு ஒரு சான்று,
ReplyDeleteTrue... ஸ்டெர்ன் நமது வாசிப்பின் எல்லைகளை இன்னமும் விரிவாக்கம் செய்திடும் ஒரு தொடரே சார்!
DeleteContent கேட்டீர்களானால் ஏற்கனவே ஆரம்பித்து பாதியில் விட்ட காமிக்ஸ் நாயகர்களின் வரலாறு,தகவல்கள் தொடர் ஸ்பைடரிலிருந்து ஆரம்பிக்கலாம்.
ReplyDeleteஇஸ்திரி, ஜாகிரபி என்றெல்லாம் ஆரம்பித்தால் கொட்டாவி விடத் தொடங்கி விடுவீர்கள் நண்பரே! இணையத்தில் குவிந்து கிடக்கும் தகவல்களை இங்கு நாமும் போட்டுத் துவைப்பானேன்?
Deleteவண்ணமும் அதில் விளைந்த எண்ணமும்
ReplyDeleteகதை கதையா காரணமா ....காரணத்த கூறனுமா.....
கதையை படித்த உணர்வே எழவில்லை...வேற்றுலகில் வாழ்ந்த வந்த பிரம்மை நீங்கவேயில்லை....நம்ம லயனில் இரண்டாம் உலகப் போருக்கு பின் ஹிட்லரின் இரட்டை சகோதர ஆராய்ச்சியென பிரளயத்த வெளிப்படுத்திய பின்...அதிரடிக் கதையா வருது இக்கதை....கதையை செலுத்த துவக்கத்திலே காரணிகளைக் தந்து விட...செதில் உடல்...இரத்த நாளங்களில் ஆக்சிஜன்...சிறுவன் நீரினுள் மூச்சடைக்கும் திறன்...என ஆர்வத்தை தூண்டி துரத்த அநாசயமாய் அவிழ்க்கிறார்கள் முடிச்சை இரு திசைகளில் பயணித்து ஒன்றாகும் முதலைப்பட்டாளத்தார்...ஒரு குழு கண்டறிய அறிய இன்னோர் குழு செல்லும் வேகமும் பிரம்மிப்பைத் தருது...
கௌச்சோவோடு கதையில் வேகமாய் காரை செலுத்தும் நாற்காலிப் பெண்...அந்த கரடியை கட்டுபடுத்தும் காது வாயில்லா சிறுவன்...பிரேசிலோடு பயணிக்கும் கட்டைகால்ல் துணைவன் நமக்கு மோர் வாழ்வியல் எனர்ஜியை தந்து செல்ல தவறலை...
அச்சிறுவனின் தாய் சைகை பற்றி சொல்ல...ப்ரூனோ சிறுவனை சந்தேகமா பாக்க அந்த சந்தேகக் கண்ணோடு நம்மையும் தன்வயப்படுத்தி அழைக்கிறார் கதாசிரியர்...ஆனா முடிவு வேறு திக்கில்...
இது தாத்தாக்கள் காலம் போலும்...ப்ரூனோவும் முதிர முடிவு ...ப்ரூனோவயும் தவிக்க வைத்து அழைத்துச் செல்ல ...உயிரைபணயம் வைத்து காத்த ப்ரூனோவை தன் மகனை பாக்க ...கதையினோட்டத்தில் வீரமான ப்ரூனோ ...பார்க்க முயன்று...என்னால் முடியாதென திரும்பும் உணர்ச்சிப் பிரவாகம்....பிறருக்கு உதவும் போது காணாமல் போன பயம் தனக்கு என வரும் போது....என கேள்வியோடு முடிய
அந்தக்கரடிகளோடு ஊளையிட்டு பனிப்பாதையை பிளந்து வில்லனை ஜில்லிட வைக்கும் சிறுவனால் நம்மையும் ஜில்லென உறையவிடத் தவறாது...
உறைந்து தான் போனேன் கதையினுள்....செம சார்...இன்னோர் லார்கோ...இன்னோர் ஸ்பைடர்...இன்னோர் தாத்தா ....அவ்ளோதான்
டாக்டரின் கதையென்பதால் நம்ம டாக்ட*'ரின்* அலசலுக்காக ஆர்வமுடன் உங்களைப் போல நானும்
நிறுத்தி, நிதானமாய் விமர்சனம் எழுதும் போது பின்னுறீர் ஓய்!
Deleteஎல்லாம் தங்கள் மகிமை சார்
Deleteவணக்கம் உறவுகளே.. ❤️❤️
ReplyDeleteமஞ்சள் மாநகரிலிருந்து இம்மாத பொஸ்தவங்கள் கிளம்பிடுத்து.. நாளையோ, நாளை மறுநாளோ கிடைக்க வாய்ப்பு..
ReplyDeleteமாயா மாயா எல்லாம் மாயா❤️ மாயா எல்லாம் மாயா❤️
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete'கிடப்பது' சார்... 🙂
DeleteGoogle correction which I missed it sir 😊
Deleteமுற்றிலுமே ஓர் வித்தியாசமான கதை இது. மொழிபெயர்ப்பு கனகச்சிதமாக இருந்தது. "எல்லோருக்குள் ஒரு புறம்போக்கு பதுங்கி கிடப்பது தான் நிஜம்"
Deleteசரி செய்து விட்டேன் சார்
Delete
Deleteமீசயயால....அந்த மீசயாலல்லா நீ புறம்போக்காக முடியாதுல
Finished all four books
ReplyDeleteAfter reading rating
1. Stern
2. Bruno
3. TeX
4. Johnny
அடுத்த மாத புத்தகம் வர இன்னும் எத்தனை நாள் இருக்குன்னு calendrரை பிராண்டிகிட்டு இருக்கேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇந்த மாத ரீடிங் வரிசை :
ReplyDelete1. ஜானி
2. Tex
3. ஸ்டெர்ன்
ReplyDeleteமுதலைகள் - ப்ரூனோ பிரேசில்
மாயவிற்கு அடுத்து படிக்க எடுத்தது ப்ரூனோ பிரேசில் 2.0 தான்.
2.0 வந்த அனைத்து ஹீரோக்களும் எனக்கு பிடித்திருந்தது அதனால் இவர் மீதும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்தது.
வான்ஸ் அவர்களின் ஆர்ட் பார்த்து பழகிய நமக்கு அதில் இருந்து பெரிதும் விலகாமல் கொடுத்தது நன்றாக இருந்தது.
ஆர்டிக்கின் பனி பொழிவுகளும் , நகரத்தின் கார் சேசிங்கும் கண்களுக்கு விருந்தாக இருந்தது.
கதை ஆங்கில பட த்ரில்லர் போல இருந்தது. மீன்கள் வரும் கண்டைனரில் ஒரு இளைஞன் பிணம் கிடைக்க அது யார் என அறிய களம் இறங்குகிறார்கள் முதலை பட்டாளத்தார் ( கதையில் அவர்களை அப்படி கூப்பிடும் இடம் இல்லை)
ஒரு சிறு நெருடல் அவர்கள் நிறுவனபெயர் இரண்டு இடங்களில் wiso என இருக்கிறது ஆனால் மற்ற இடங்களில் இருக்கும் wsio தான் சரி என நினைக்கிறேன்.
அடுத்து அட்டையில் இருக்கும் பெயர் font எனக்கு பிடிக்கவில்லை. வேறு முயற்சி செய்திருக்கலாம்.
மற்றபடி இரண்டாம் வருகை எனக்கு பிடித்திருக்கிறது. சுலப வாசிப்பிற்கு உகந்தது. அதிகம் யோசிக்காமல் ஒரு ஒரு சிட்டிங்கில் முடிக்கலாம்
தோழர்களுக்கு ஆபத்து என்றவுடன் உடனே பாய்ந்து வரும் விப் ரபேல் சக்கர நாற்காலியில்....மனமுடைந்து போனேன்.ஏதோபழகியவர்களுக்கு ஏற்ப்பட்ட நிகழ்வு போல் மனம் கனக்கிறது.
ReplyDeleteஇறுதி ஆட்டம் கதையின் தலைப்பே வெகு பொருத்தமாய் அமைந்துவிட.....தாளில் சித்திரத் தரமும் ...வழுக்கி செல்லுது கதையின் வேகத்தோடு பக்கங்களும் பளபளப்பான தாளின் தரத்தாலும்....
ReplyDeleteவழக்கம் போல கொள்ளையர்கள துரத்தும் டெக்ஸ்.....
கதையில் மனதிற்கு பயந்த நேர்மையான சீட்டாடி கொள்ளையன...அவளின் மகளை துருப்புச் சீட்டாய் வைத்து டெக்சை வீழ்த்த நினைக்கும் ஒரு களவாணிக் காதலனின் கதை கூட...
வழக்கத்தை விட கூடுதல் உற்சாகம் கார்சன் டெக்ஸின் வரிகளில்...
வாழ்க்கையில் நான் பார்க்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு...உயிர் பிழைக்க ஏதாவது நல்ல யோசனை யோசனையா சொல்
...வழக்கம் போல டெக்ஸ்...
வர வர நல்லா எழுத ஆரம்பித்து விட்டலே மக்கா 👌
DeleteThis comment has been removed by the author.
Deleteசரில
Delete**** மாயா எல்லாம் மாயா ****
ReplyDeleteஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில் இக்கதையை படித்தாயிற்று!
அன்றைய நியூ-ஆர்லியன்ஸ் நகரில் நானும் ஒரு சில நாட்கள் வாழ்ந்துவிட்டுவந்த உணர்வை அற்புதமான சித்திரங்களும் வண்ணக்கலவைகளும் ஏற்படுத்திக் கொடுத்தது! வித்தியாசமான கதைக்களமும், விதவிதமான கதை மாந்தர்களும் இத்தொடரை தனித்துவமான இடத்தில் நகர்த்தி வைக்கிறது!
முந்தைய பாகங்களில் பாவப்பட்ட ஜீவனாக காட்சியளித்த ஸ்டெர்னுக்கு இந்த பாகத்தில் மெட்ரோ சிட்டியில் வெட்டியான் வேலை.. மாடி(யில்) வீடு.. வீடு தேடி வரும் பணமுடிப்புகள்.. பணக்கார யுவதியின் சகவாசம்.. அவள் தரும் எதிர்பாரா 'உம்மா'க்கள் - என்று நிறையவே - சந்தோசச் சம்பவங்கள்!
மேடை நாடகம் ஒன்றில் நம் வெட்டியானுக்கு (அட்டகாசமான மேக்கப் எல்லாம் போட்டு) பிணமாகப் படுக்கவைத்த காட்சி போதும் - கதாசிரியரின் படைப்பாற்றலை வெளிச்சம் போட்டுக் காட்ட!
வீ லவ் வெட்டியான்ஸ்!!😍😍😍🥰🥰🫠🫠
நல்ல விமர்சனம்
Deleteவழக்கமான action அதிரடி பாணியில் ஆரம்பித்த ப்ருனோ பிரேசில் கதை சில பல thrill களுக்கு பிறகு அறிவியல் ஆராய்ச்சி, மற்றும் செண்டிமெண்ட்ஸ் களுக்கு பிறகு கதை முடியும் தருணத்தில் ப்ருனோ வின் personal விஷயத்தை ஆரம்பித்து நம்மை அடுத்த பாகத்திற்காக எதிர்பார்க வைத்து ஒரு தற்காலிக முற்று புள்ளி வைத்த விதம் அருமை.
ReplyDeleteதொடர்ச்சியை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். 😍🥰💐
நள்ளிரவின் நாயகன் :
ReplyDeleteமெகா சீரியல் ஒன்றில் கெஸ்ட்ரோலில் நடிக்கப் போகிறார் ஜானி.! இவர் போனநேரம் அத்தொடரின் லீடிங் ஆக்டர் சில காரணங்களுக்காக கோவித்துக்கொண்டு தொடரைவிட்டு வெளியேற.. அவரை சமாதானப்படுத்தும் வகையில்.. ஜானியை வைத்து ஒரு போலி இன்ட்டர்வியூவை தயார் செய்கிறார்கள்.! அந்த படப்பிடிப்பின் போது யாருமே (நாமுமே) எதிர்பாராத வகையில் அந்த லீடிங் ஆக்டர் சுட்டுக்கொல்லப்படுகிறார்...!
அதைத்தொடர்ந்து அந்த மெகா சீரீயலுக்கு தொடர்புடையவர்களும் தொடர்பே இல்லாத சிலரும் ஒரே மாதிரி கொல்லப்படுகிறார்கள்..! அதுவும் அத்தனை கொலைகளையும் ஜானியிடம் சொல்லிவிட்டே செய்கிறான் கொலைகாரன்..!
அச்சுறுத்தலின் பேரில் ஜானியும் தொடக்கத்தில் இருந்தே கொலைகாரன் பேச்சை கேட்கவேண்டிய சூழலுக்கு ஆளாக.. நாடின் மற்றும் கமிஷ்னர் உதவியுடன் மர்ம கொலைகாரனை கண்டுபிடிக்கிறார் ஜானி..!
கலரிங்தான் இக்கதையின் முதல் ப்ளஸ்பாயிண்ட்.! ஜானியின் முந்தைய சாகசங்களின் பெயர்களை வைத்தே.. கொலைகாரன் புதிரினை அமைப்பது சுவாரஸ்யமாக இருந்தது.!
சில சம்பவங்கள் ரிப்பீட்டாக வருவது லேசான ஆயாசத்தை தருகிறது.!
கொலைகாரன் இவனாகத்தான் இருக்கும் என்று முதல் கொலை நடக்கும்போதே யூகித்திருந்தேன்.. சொன்னா நம்பமாட்டிங்க.. என்ன ஒரு ஆச்சரியம்.. நான் நினைத்தபடி அவனேதான் அந்த கொலைகாரன்........ இல்லை.. வேறு ஒருத்தர்..!
வழக்கமாக அழகாக இருக்கும் நாடின் இக்கதையில் ஏனோ டோரா போல தெரிகிறார்..!
கதையில் சொல்லியபடி பார்த்தால் இது ஜானியின் 77 ஆவது சாகசம்..! முந்தைய 76 கதைகளில் இருக்கும் இதைவிட நல்ல கதைகள் விரைவில் வெளியாக வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்..!
கலரிங் 10/10
அறுமையா எழுதி இருகீங்க.
Deleteபுருனோ ப்ரேசில் ஆரம்பமே அமர்க்களம்..👌👌👌
ReplyDeleteநான்கு புத்தகங்களையும் படித்து முடித்து விட்டேன்.
ReplyDeleteStern and Bruno ரெண்டும் டாப்.
டெக்ஸ் மூன்றாவது இடம்
ஜானி நான்காம் இடம்
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகடந்த 2-3 வாரங்களில் காமிக்ஸ் சம்பந்தமான நிகழ்வுகள் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!
ReplyDelete1. திகில் மற்றும் சஸ்பென்ஸ் விசயங்களை விரும்பும் எனது துணைவியாரை ஸகோரின் பனிமலைப் பலிகள் படிக்க கொடுத்தேன்; முதல் பத்து பக்கங்களை ஆர்வமுடன் வாசித்த அவர், அடுத்த இரண்டு நாட்களில் முழு கதையும் படித்து முடித்துவிட்டார். இந்த மாதம் நமது புத்தகங்கள் வந்தவுடன் படிக்க ஏதாவது புத்தகம் உண்டா என கேட்டவருக்கு ரிப்போர்ட்டர் ஜானி-ன் நள்ளிரவில் நாயகன் புத்தகத்தை நேற்று கொடுத்தேன் இன்று முழு கதையையும் படித்து விட்டார்; பொதுவாக அவருக்கு சஸ்பென்ஸ் என்னவென்று தெரிய கதை/படம் முழுவதும் படிப்பதற்குள்/பார்ப்பதற்கு கிளைமாக்ஸ் படித்து/பார்த்து விடுவார், ஆனால் இந்தக் கதையை முழுவதும் படித்து முடித்து குற்றவாளி யார் என தெரிந்து கொண்டார் என்பது சிறப்பு!
2. எனது அபார்ட்மெண்ட் நண்பர் ஒருவரிடம் கடந்த ஒரு மாதமாக நமது காமிக்ஸ் பற்றி பேசி வந்தேன், கடைசியில் அவர் ஒரு சில காமிக்ஸ் கதைகள் கொடுங்கள் படிக்கிறேன் என்றார், அவருக்கு டின் டின் 3 புத்தகம்களும், மேற்கே இது மெய்யடா, கென்யா, பந்தம் தேடிய பயணம், லார்கோ இந்த வருடம் வந்த கதை ஆகிய புத்தகம்களை கொடுத்தேன்! திபெத்தில் டின் டின் படித்து விட்டு, புத்தகம் தரம் பற்றி மிகவும் வியந்து பேசினார்; கதை நன்றாக இருந்தது, கொஞ்சம் அந்த அந்த ஊர்களின் சிறப்பு மற்றும் பேச்சுவழக்கில் கொஞ்சம் சேர்த்து இருந்தால் நன்றாக இருக்குமே என்றார் (அவரின் முதல் காமிக்ஸ் வாசிப்பு, தனக்கு காமிக்ஸ் பற்றி தெரியாது என்று சொல்லி இதனை சொன்னார்) நான் டின் டின் உரிமையாளர்கள் சொல்வதை தவிர வேறு எதுவும் இங்கு செய்யமுடியாது என சொன்னேன்; கேப்டன் வசனம் அவருக்கு பிடித்து இருந்தது. மேற்கே இது மெய்யடா நன்றாக இருக்கிறது என்றவரிடம் நவீன வெட்டியானின் முதல் கதைகளையும் தருகிறேன் படித்து விட்டு உங்கள் எண்ணங்களை சொல்லுங்கள் என்று சொல்லி உள்ளேன். கென்யா மிகவும் ரசித்து படித்ததாக சொன்னார், "ரொம்ப சூப்பர்ங்க" என்றார். நேற்று ஈரோடு ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்ய .ஆரம்பித்தவர், பயணத்தின் நடுவே "பந்தம் தேடிய பயணம்" படித்து முடித்த கையோடு, "ரொம்ப இன்டெரெஸ்ட்டிங் ஆக இருந்தது" என்று மெசேஜ் செய்து இருந்தார்; அவர் முதலில் படிக்கும் டெக்ஸ் கதை இது!
அவரிடம் காமிக்ஸ் பற்றி பேச ஆரம்பித்த போது முதலில் IRS கதை பற்றி தான் சொன்னேன், அவர் MBA என்பதால் இது போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகம், அந்த புத்தகத்தை கொடுங்கள் என்றார், புத்தகத்தை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை, இன்றுவரை கிடைக்கவில்லை; அவை கிடைக்கும் வரைக்கும் மேலே சொன்ன கதைகளை படிக்க கொடுத்தேன். IRS கதை புத்தகம் கிடைத்தவுடன் படிக்க கொடுக்க வேண்டும் அவருக்கு!
இந்த மாதம் படித்த கதைகளின் தர வரிசை மற்றும் மதிபெண்
1. மாயா எல்லாம் மாயா 10/10
2. இறுதி ஆட்டம் 9/10
3. பனிக்கடலில் முதலைகள் - முதல் 10 பக்கம்கள் தான் முடித்து உள்ளேன், அதே இது வித்தியாசமான கதை என்ற ஆர்வத்தை கிளப்பி விட்டது; இன்று அதனை எப்படியும் படித்து விடுவேன்.
4. நள்ளிரவின் நாயகன் - எனது துணைவியார் படித்து விட்டார்! நன்றாக இருந்தது என்றார்!
சூப்பர்ல மக்கா
Delete@PFB.. 😘❤️
DeleteSuper.. Super.. 👍
பரணி நல்ல முயற்சி.... Keep it up
Deleteபரணி சார்.. தொடருங்கள்.. புதிய வாசகர் ஒருவர் உதயம்.. வாழ்த்துக்கள்.
Delete@ PfB
Deleteதரமான சம்பவங்கள்!! பகிர்ந்தலுக்கு நன்றி! சம்பவங்கள் தொடரட்டும்..
சாளரங்கள் திறக்கட்டும்..👏👏👏💐💐
அட்டகாசம் சார் 💪💪💪
Delete*பனிக்கடலில் முதலைகள்*
ReplyDeleteமுதல் முறையாக முதலைப் பட்டாளத்தை படிக்கிறேன். ஒரு பலசாலியான வில்லன் என்றால் அவர் ஒரு விஞ்ஞானியாக சித்தரித்து விட்டால் போதும் எனும் அடித்து துவைத்த கதையை கையில் எடுத்திருக்கிறார்கள். சலிக்காமல் கதையை நகர்த்திக் கொண்டு போனதில் ஆனந்தமே.
ஒரு துளி ரத்தம் கூட இல்லாத மானிடன் எனும் ஒரு கூடை பூவை காதில் வைத்ததை கூட மறந்து கதையை ரசிக்க முடிந்தது. அதற்கு ஈடு செய்யும் விதமாக ஓவியங்களும் வண்ண சேர்க்கையும் simply extraordinary.
சைகை மொழி மூலம் சங்கேத செய்திகளை பரிமாறிக் கொள்வது என்ற புதிய விஷயத்தை கையாண்டது வித்தியாசமாக இருந்தது. கதையில் பல்வேறு விஷயங்கள் ஏன் இதை செய்ய வேண்டும், ஏன் துப்பறிய வந்தவர்களுக்கு voluntaryயாக துப்பு கொடுக்க வேண்டும் எனும் சந்தேகம் வந்தாலும் அதையும் கடந்து போகும் படி தான் கதையை அமைத்திருக்கிறார்கள்.
ஈடு இணையற்ற வேகத்தில் சில பல சந்தேகங்கள் மறந்தே போய் விடுகிறது. மொத்தத்தில் ஒரு முறை படிக்க, அருமையான கதை.
கதை 8/10
ஓவியம் 12/10
மேக்கிங் 6/10 (sorry friends)
*நள்ளிரவின் நாயகன்*
ReplyDeleteஓட்டலில் கூட்டம் அதிகமானால், சமாளிக்க உப்புமா கிச்சடி போன்றவற்றை அதிகரித்து சமாளிப்பார்கள் என்று அழகன் படத்தில் வரும் வசனம் போல, கதைக்கான வறட்சியால் இது போன்ற ஒரு படைப்பை உருவாக்கி இருப்பது போல் முதலில் எனக்கு தோன்றியது இருந்தாலும் கதையை சுவாரசியமாகவே நகர்த்தியிருக்கிறார்கள்.
கதையின் நம்பர்களை வைத்தும் தலைப்புகளை வைத்தும் விளையாடியிருக்கும் புதிர் விளையாட்டு முதலில் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை, அப்புறம் கதையெல்லாம் முடிந்த பிறகு மீண்டும் வாசித்து பார்த்ததில் அர்த்தம் தெளிவாகியது.
கொலைகாரன் இவர் தான் என முதலிலேயே குறிப்பிட்டு விட்டார்கள். அதை படிக்கும் நாம் தான் கவனிக்க மறந்து விடுகிறோம். முன்னுக்கு பின் முரணாக ஒரு இடத்தில் பேசும் நபரே குற்றவாளி என்றும், அதே சீனிலேயே இவர் தான் கொலையாளி என்றும் குறிப்பிட்டு விட்டார்கள்.
ஒரு அரை மணிநேரம் பொழுது போக்க அருமையான புத்தகம்
கதை 9/10
ஓவியம் 9/10
மேக்கிங் 10/10
இறுதி ஆட்டம் - டெக்ஸ்
ReplyDeleteவழக்கமான டெக்ஸ் கதை தான். ரோட்டில் போகும் பிரச்சனையை wanted ஆக போய் தோலில் போட்டுக்கொண்டு அதை இறுதி வரை சென்று உயிரை பணயம் வைத்து ஆட்டத்தை முடித்து வைக்கிறார்கள்.
இதில் பாருங்கள் ஒருவனை கொல்ல பல தோட்டாக்கள் தேவைப்படுது. டெக்ஸ் குறி கூட தவறுகிறது.
ஆர்ட் வித்தியாசமாக கோடோவியங்கள் போல உள்ளது. இதற்கு முன்பு கூட இந்த ஆர்டில் கதை வந்த ஞாபகம்.
மற்றபடி எதையும் யோசிக்காமல் பர பர என செல்லும் கதை.
இம்மாத நான்கு புத்தகங்கள் வாசித்தாயிற்று...
ReplyDeleteஎனது வரிசை..
ப்ருனோ பிரேசில்
ஸ்டெர்ன்
டெக்ஸ்
ஜானி
சார் அட்டவணை பதிவு எப்போது???
ReplyDeleteசேலம் புத்தக விழாவில் கபிஷ் மட்டும் தானா? அல்லது இரட்டை வேட்டையர் ஜான் மாஸ்டர் உண்டா?
தீபாவளி மலர் x 3
Deleteபுத்தக விழாக்கள் x 3
நாக்கு தொங்கிங்ஸ் x 3 மடங்கு!!
கொஞ்சமாய் நாக்காரை உள்ளாற சுருட்டி வைச்சுக்கிறேன் சார் மொதல்ல 😵💫
Deleteசரிதான் சார். தங்களால் முடிந்த போது பார்த்து செய்யுங்கள்.
DeleteSir, no hurry sir. Do as per your plan. We will wait. இது போன்ற தருணங்களில் காத்திருப்பது எப்போதும் எங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் தருகிறது .
Deleteசெம சார்
Deleteமதங்கொண்டு திமிறும் 86 அ எப்படியாச்சும் வீழ்த்தனும்
Deleteஅட்டவணை பதிவு இந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு இருந்ததால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteஇது நெடும் வாரயிறுதி சார் ; அல்லாரும் பிஸியா இருப்பாங்க!
Deleteஅதனாலே எல்லாரும் இங்க தான் இருப்பாங்க சார். கொஞ்சம் தயவு பண்ணுங்க
Deleteசார்... நான் தயவு பண்றதா - எனக்குப் படியளக்கும் மகான்களே நீங்கள் ஒவ்வொருவரும் தான்! நியாயப்படிப் பார்த்தால் நான் தான் உங்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டிருக்க வேண்டும் 🤕🤕
Deleteஅப்ப அழைங்க சார் இந்த வாரம்...எங்கள் வாழ்வில் மாதந்தவறாது...வாரந்தவறாது ...நாள் தவறாது...ஏன் வேளை தவறாது சந்தோசம் தந்து கொண்டிருக்கும் தாங்களே அழைக்கும்...நாங்க விருப்பப்பட்ட படி நாங்களே உங்கள அழைக்க சொல்வதால்...
Deleteநீங்க விருப்பப்படி எங்கள் இந்த வாரம் அழைங்க சார்...நாங்க வாரோம்
வந்து எல்லாம் வேலையும் செஞ்சும் தந்துவிடுகிறோங்க ஆசிரியரே😊😊😊
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்று கையில் எடுத்த புத்தகம் கண்ணீருக்கு நேரமில்லை. சும்மா பட்டாசாய் தெறிக்கும் கதை! எப்படித்தான் ஆசிரியர் தலைப்பை யோசித்து வைக்கிறார் என்று தெரியவில்லை. மிகச்சரியான தலைப்பு. டெக்ஸ் வில்லரின் தந்தை கொலை செய்யப்பட்டவுடன் அதற்காக பதறி அழாமல் குற்றவாளியை தேடிச் செல்லும் இடம் டெக்ஸ் ஒரு சூப்பர் ஹீரோ என்பதை மிகத் தெளிவாக உணர்த்தியது. ஆனால் டெக்ஸ் வில்லரின் தம்பி சாம் வில்லரின் கதையை சாதாரணமான முறையில் முடித்ததுதான் மனதுக்கு சற்று நெருடியது. அதற்கு அப்புறம் டெக்ஸ் அந்த ரிபோ பண்ணை ஆட்களுடன் மோதும் ஒரு ஒரு சீனும் சும்மா தெறி ரகம். வசனங்களையும் ஆக்சன் பிளாக்கையும் மிகவும் ரசித்தேன். ரொம்ப நாள் கழித்து படித்த ஒரு நிறைவான டெக்ஸ் கதை ! 10/10
ReplyDeleteசூப்பர் ராஜா 😊 short and sweet review
Deleteகதையின் outline ஐ வாசிக்கும் போதே தலைப்பு மண்டைக்குள் துளிர் விட்டு விடும் சார் - இம்புட்டு காலம் ஆச்சில்லியா?!
Deleteவழக்கமாக எல்லாவற்றையும் இரண்டு மூன்று நாட்களில் படித்து விடுவேன். சமீபத்தில் பிசியோ பிசி என்பதால், கடந்த மூன்று நாட்கள் இரவில் ஸ்டெர்ன் படித்து முடித்தேன். இந்த ஸ்டெர்ன் ஒரு பண்டோரா பாக்ஸ் போல இருக்கிறான். எந்த இஷ்யூவில் என்ன கதை வரும் என்ற யூகத்திற்கே இடமில்லை. இதன் கதாசிரியரின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படி ஒரு தொடர் நமது காமிக்ஸில் வந்ததே இல்லை. இந்த கதையோட்டமும் சரி, ஓவியங்களும் சரி, என்னால் திறந்த வாயை மூடவே முடியவில்லை. அடுத்து என்ன நடக்கும் என கண்கள் அடுத்த பக்கத்திற்கு அலைபாய்வதை தடுக்கவே முடியவில்லை. எப்படி ஒரு சீரியஸ் படமான மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டில் அதிரி புதிரி ஹிட் ஆகியதோ, அதே போல் ஸ்டெர்ன் நமகெல்லாம் கிடைத்தற்கரிய நெல்லிக்கனி. ஸ்டெர்ன் கதாசிரியர், ஓவியர் மற்றும் தமிழுக்கு இட்டாந்த கட்டைவிரல்-வாய் ஆசாமிக்கு நன்றி. அட்டைப்படம் மற்றும் அதன் குவாலிட்டி மாஸ்.
ReplyDeleteஇந்த நவீன வெட்டியான் பற்றி நச என்று சொல்லி விட்டீர்கள் சார். சூப்பர். பெரிய ஆக்சன் இல்லாமல் பஞ்ச் டயலாக் இல்லாமல் பெரிய நகைச்சுவை என்று ஏதும் இல்லாமல் சுவாரசியமான விறுவிறுப்பு வாசிப்பு அனுபவத்தை கொடுப்பது இந்த ஸ்டெர்னால மட்டுமே முடியும்.
Delete//இப்படி ஒரு தொடர் நமது காமிக்ஸில் வந்ததே இல்லை.//
Deleteஅந்தக் கதாப்பாத்திரம் செம unique சார்... And இங்கே இன்னொரு பின்னணி நபருக்குமே நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்! அது தான் இந்தத் தொடருக்கு ஒரு thumbs up தந்து உருவாக்க அனுமதித்த project editor!
புதுசாயொரு ஐடியாவுடன் கதாசிரியர்கள் வந்து தங்களது (புது) தொடருக்கான outline - ஐ சொல்லுவார்கள். இன்ன மாதிரி ஹீரோ / ஹீரோயின் ; இன்ன மாதிரி காலகட்டத்தில் ; இன்ன மாதிரிக் கதைகளை, இத்தனை ஆல்பங்களுக்கு கொண்டு போகலாம் ; இந்த ஓவியரைக் கொண்டு இன்ன ஸ்டைலில் படம் போடலாம் என்றெல்லாம் pitch செய்வார்கள். அந்த நொடியில் அந்த project editor தான் வேணும் / வேண்டாம் என தீர்மானிப்பார்! அவர் அன்னிக்கே nopes என்று சொல்லிப் போட்டிருந்தால் ஜோலி அன்னிக்கோடே முடிஞ்சிருக்கும் 🤕
டெக்ஸ் படித்துக்கொண்டிருக்கிறேன். ஏன்னா ஓவியம். வாவ். கோடுகள் வரைந்தே ஸ்கேல் தேய்ந்திருக்கும் என நினைக்கிறேன்.
ReplyDeleteபனிக்கடலில் முதலைகள்...
ReplyDeleteப்ரூனோ 2.0 எதிர்பார்க்கவே இல்லை..அட்டகாசமான சித்திரத்தரங்களும்..அச்சுதரமும் மட்டுமல்ல கதையுமே அக்மார்க் பட்டாஸான த்ரில்லர் ஆக கலக்கி விட்டது என்பது உண்மை...என்னை பொறுத்தவரை 2.0 வில் வந்த நாயகர்கள் எல்லாம் ( பாண்ட்..ஜானி..) மனதை கவர்ந்து விட்டார்கள் என்று சொன்னால் அது பொய்யுரை தான்...எனவே ப்ரூனோவையும் ஓர் எதிர்பார்ப்பு இல்லா நாயகராக தான் வாசிக்க நேர்ந்தது..ஆனால் ஆரம்ப சாகஸங்களை விட இந்த 2.0 சாகஸம் சரவெடி...இதற்கு கதையும் மிக காரணம் என்றாலும் பழைய நாயகர்களின் 2.0 போல நவீன பாணி என்ற பெயரில் சித்திரங்களை கொத்துக்கறியாக்காமல் இருந்து முன்பை விட சிறப்பாக அமைந்து இருப்பதும் முதல் காரணம் என்பேன்...மற்ற மறுவருகை நாயகர்களின் 2.0 சாகஸம் மறுவருகைக்காக காத்திருக்க ஆர்வமில்லை தான்...ஆனால் ப்ரூனோ 2.0 இருகரம் கூப்பி வரவேற்கிறேன்....
*நள்ளிரவின் நாயகன் ஜானி*
ReplyDeleteவழக்கம் போல அழகன்...
வழக்கம் போல சஸ்பென்ஸ்...
வழக்கம்போல த்ரில்லர்...
வழக்கம் போல ட்விஸ்ட்...
வழக்கம் போல சிறப்பு...
சினிமா.. படப்பிடிப்பு சம்பந்தமான கதைகளம் என்றாலே ஓர் இனம்புரியா ஈர்ப்பு தான் எனக்கு ..இதில் சினி நாயகனாகவும் ஜானி இறங்க வழக்கத்தை விட விறுவிறுப்பாகவே வாசிக்க நேர்ந்தது.. குற்றவாளியின் க்ளூக்கள் ஜானியின் முன்னர் சாகஸங்களை கொண்டு அமைத்து இருந்தது இன்னும் சிறப்பு...
மீண்டும் நள்ளிரவு நாயகனை எதிர்நோக்கி....
//சினிமா.. படப்பிடிப்பு சம்பந்தமான கதைகளம் என்றாலே ஓர் இனம்புரியா ஈர்ப்பு தான் எனக்கு .//
Deleteநீங்க இருக்க வேண்டிய எடமே பாலிவுட் அல்லாங்காட்டி கோலிவுட் ஆச்சே தலீவரே... கெரகம், இந்த சங்கத்துக்கு தலீவரா ஒரு பதுங்கு குழிக்குள்ளாற குப்பை கொட்டுற மெரி ஆகிப் போச்சு 🥴
அதுவும், இப்புடி ஒரு செயலரை வைச்சு சமாளிச்சிக்கிட்டு 🤕
Deleteசார்.. நான் பாட்டுக்கு சிவனேன்னு தானே ரவுண்டு பன் சாப்பிட்டுக்கிட்டு டெக்ஸ் புக்கை புரட்டிகிட்டிருக்கேன்? 😐😑
Delete😂😂😂😂😂
Delete*இறுதி ஆட்டம்*
ReplyDeleteரிப்போர்ட்டர் ஜானி எப்படியோ அதே போல் வழக்கமான பாணியில் டெக்ஸ்...வி காமிக்ஸில் வழக்கமான டெக்ஸ்ன் முழுநீள சாகஸம் அமைந்ததில் மிக மகிழ்ச்சி..வில்லன் இறுதிவரை வில்லனாக இருந்தாலும் பணயகைதியாய் இருக்கும் எதிரியின் மகளை கண்ணியமாய் நடத்திய பாங்கு நன்று...எப்பொழுதும் போல ஓர் அரைமணி நேரத்திற்கு வன்மேற்கு உலகில் உலவ விட்டு விட்டார் எங்கள் டெக்ஸ்....
டெக்ஸ் ன் இறுதி ஆட்டம் விறுவிறுப்பான ஆட்டம் மட்டுமல்ல முடிவுறா ஆட்டமும் கூட...
*மாயா எல்லாம் மாயா*
ReplyDeleteமீண்டும் வெட்டியான் ..ஆனால் இதற்கு முன் வந்த சாகஸங்களை வாசிக்காமல் இருந்தால் கூட புரிவது போல் ஒரு தனிப்பட்ட சாகஸ பயணம் ..வெட்டியான் பணியை அமைதியான நகரில் இருந்து புலம்பெயர்ந்து அமைதியாய் அதே வெட்டியான் பணியை தொடங்கும் இந்த நாயகனை ஓர் அமைதியான இரவில் வாசிக்க நேர்ந்தது... புது நகரில் நடக்கும் எதிர்பாரா நிகழ்வுகளும் சாகஸங்களுமே இந்த மாயா எல்லாம் மாயா...
கிராபிக் நாவல் என அடைமொழி இந்த சாகஸத்திற்கு இடப்பட்டு இருந்தாலும் ஒரு விறுவிறுப்பான சாகஸமாகவே இந்த ஸ்டெர்ன்னின் சாகஸம் அமைந்து உள்ளது...
மொத்தத்தல் இந்த மாதம் வந்த நான்கு இதழ்களுமே சித்திரத்தரத்தில்...அச்சுத்தரத்தில்...அட்டைப்பட அழகில்...கதை தேர்வில் என அனைத்துமே ஒன்றுக்கொன்று போட்டி போடுகிறது...
இனி தீபாவளி மலர்களை எதிர்நோக்கி....
அக்டோபர் இதழ்கள்
ReplyDeleteமுதலிடம்
பனிக்கடலில் முதலைகள்
விட்டேத்தியாக படிக்க துவங்கிய கதை.
கதையின்அழுத்தம்,சித்திரங்களின் தரம், கதை சொல்லப்பட்ட விதம் இவையே முக்கியமானவை என்றாலும் வாசிப்பு எவ்வளவு மகிழ்வை தந்தது என்பதே ஒரு புத்தகத்தைப் பற்றிய மதிப்பீட்டிற்கான முக்கிய காரணி.
அவ்வகையில் புருனோ பிரேசிலின் பனிக்கடலில் முதலைகள்
9.5/10
இரண்டாம் இடம்
நள்ளிரவின் நாயகன். ஜானி தனக்குத்தானே செட் செய்து வைத்திருக்கும் பெஞ்ச் மார்க் எனப் பார்த்தால் இக்கதை ஒரு மாற்று குறைவு.
9.3/10
மூன்றாம் இடம்
வீகாமிக்சில் வந்த டெக்ஸின் இறுதி ஆட்டம்.
9.2/10
நான்காம் இடம்
ஸ்டெர்ன் மாயா எல்லாம் மாயா.
பொதுவாக ஸ்டெர்ன் மனதை மிகவும் வசீகரிப்பது வழக்கம்.
ஆனால் இம்முறை....?????
9/10
///பொதுவாக ஸ்டெர்ன் மனதை மிகவும் வசீகரிப்பது வழக்கம்.
Deleteஆனால் இம்முறை....?????///
உண்மைதான் செனா அனா ஜி.. நானும் இதை உணர்ந்தேன். ஸ்டெர்னிடம் இளையோடும் ஒருவித மென்சோகம் இம்முறை இல்லை. வேலை நேரம் போக மீதநேரங்களில் எப்போதும் புத்தகங்களில் மூழ்கிக்கிடக்க விரும்பும் ஸ்டெர்ன் இம்முறை காதலிலும், சாகசத்திலும் ஈடுபாடு காட்டுவதும், அத்தனை பெரிய நியூ-ஆர்லியன்ஸ் நகரத்தில் பழைய புத்தகக்கடைகளைத் தேடிச்செல்லாமலிருப்பதும் சற்றே வித்தியாசமாய் தான் படுகிறது.
// அத்தனை பெரிய நியூ-ஆர்லியன்ஸ் நகரத்தில் பழைய புத்தகக்கடைகளைத் தேடிச்செல்லாமலிருப்பதும் சற்றே வித்தியாசமாய் தான் படுகிறது. // புது இடம் இல்ல அதனால புத்தக கடை தேடிப் போக நாளாகும்.
Delete///புது இடம் இல்ல அதனால புத்தக கடை தேடிப் போக நாளாகும்.///
Deleteஎன்னதான் புது இடம்னாலும் நாடகக் கம்பேனிகளை மட்டும் உடனே தெரிஞ்சுடுதாக்கும்?!! எல்லாம் காதல் படுத்தும் பாடு!😁😁
Kumar & Vijay @ ROFl
Delete//அத்தனை பெரிய நியூ-ஆர்லியன்ஸ் நகரத்தில் பழைய புத்தகக்கடைகளைத் தேடிச்செல்லாமலிருப்பதும் சற்றே வித்தியாசமாய் தான் படுகிறது.//
Deleteஒரு வேலை அவரும் GPay அனுப்பி, ஸ்கேன்லேஷன்ஸ் வாங்க ஆரம்பிச்சிப்புட்டாரோ - என்னவோ?!
சார்.. 😂😂😂😂😂 ஸ்டெர்ன் புத்திசாலி சார்!
Deleteசார் @ நல்லா போட்டு தாக்குறீங்க கிடைக்கும் gapல 😃
Deleteஇம்மாத ஹிட் . நான் எதிர்பார்த்தபடியில்லை. வெட்டியான் முதலிடம் பிடிப்பார் ஜானி இரண்டாமிடம் பிடிப்பார் டெக்ஸ் மூன்றாமிடம் புரூனோ பிரேசில் நான்கு என்று எதிர் பார்த்தேன் . ஆனால் முதலிடத்திற்கு ஸ்டெர்ன் மற்றும் புரூனோ பிரேசில் இடையே கடும் போட்டி". முதலிடத்தில் இருவரும் இருக்க நேர் கோட்டுக்கதையாக மாதாமாதம் வந்தாலும் இரண்டாம் இடத்தில் "தல". தனக்கென தனி வாசகர் வட்டத்தையும் ஒரு தனி பாணியை யும் சுமார் நாற்பது ஆண்டுகளாக வைத்திருந்தாலும் வாராது வந்த மாமணி யாய் வருடம் ஒரு ஸ்லாட் மட்டுமே வந்தாலும் ஜானி டெக்ஸ் பின்னே தான் நிற்கிறார் . . வாசகர்கள் மட்டுமின்றி ஆசிரியருக்கும் இந்த மாதம் ஒரு உற்சாகமான மாதம்
ReplyDelete// வாசகர்கள் மட்டுமின்றி ஆசிரியருக்கும் இந்த மாதம் ஒரு உற்சாகமான மாதம் // உண்மை தான். கொண்டாட்டம் இன்னும் முடியல சார்.
Deleteஇந்த மாதம் இன்னும் நவராத்திரி விடுமுறை நாட்கள் உள்ளது. அட்டவணை பதிவு உள்ளது. தீபாவளி மலர்கள் உள்ளது. தீபாவளி வருகிறது. ஒரே ஜாலி தான் போங்க
Deleteஆமா செம ஜாலி...அப்படியே ஆயுதபூஜைக்கு சுண்டல் பொறிய தின்னுட்டு மந்தமான படுத்திருக்கும் போது....நம்மள ஓய்வ லயிக்க வைக்கும் அட்டவணையும் சேந்தா 86... 86 ரடி போவாதா
Deleteஸ்டீல், சுண்டல் சாப்பிட்டுப்புட்டு படுக்கலாம் முடியாது 🤕
Deleteபடுத்துக்கிட்டே ஒரு பறக்கும் பலூனை ரெடி பண்ணிடுவார் சார் நம்ம ஸ்டீலு!😝😝
Deleteகாத்துக்கும் பிரச்னை இல்லை..
Delete**** இறுதி ஆட்டம் ****
ReplyDeleteகடந்த மாதம் ஒரு கனமான டெக்ஸ் ஃபுல் மீல்ஸ் கதை (சினம் கொண்ட சின்னக் கழுகு) அமைந்துவிட, இம்மாத 'இறுதி ஆட்டம்' ஃபாஸ்ட் புட் சாப்பிட்டு வாயை துடைத்துக்கொண்டு எழுவது மாதிரி அமைந்திருக்கிறது!
கொஞ்சம் சுமாரான கதைக்களமே என்றாலும், பிரம்மிக்கச் செய்திடும் சித்திர வேலைப்பாடுகளுக்காகவே ஆவென்று வாயைப் பிளந்தப்படி பக்கங்களை புரட்டச் செய்கிறது இப்படைப்பு! குறிப்பிட்ட சில பேனல்களிலிருந்து கண்களை நகர்த்தவே ரொம்பச் சிரமப்பட வேண்டியுள்ளது! அட்டைப்பட ஓவியமும் அதகளமே!
இறுதி ஆட்டம் - உறுதி வெற்றி!
//நவராத்திரி விடுமுறை நாட்கள் உள்ளது.அட்டவணை பதிவு உள்ளது . தீபாவளி மலர்கள் உள்ளது. தீபாவளி வருகிறது.ஒரே ஜாலிதான் போங்க//.இந்தியாவுலயே அதிக சந்தோசமாக இருப்பது . தற்போதைக்கு நாம எல்லோரும்தான் போங்க.
ReplyDeleteதீபாவளிக்கு electric 80s புத்தகம் ஏதாவது ஒன்று களம் இறங்க போகிறதா எடி ஜி
ReplyDeleteஇந்த மாத டெக்ஸ் பிரெஞ்சு ஓவியர் போல. பாண்டிச்சேரி போல நேர்கோடுகளை வரைந்து தள்ளியிருக்கிறார். ஒரு பிரேமில் இத்தனை கோடுகள் ஒரே சீராக போட எப்படி முடியும் என வியந்து கொண்டிருக்கிறேன். வழக்கமான கதைக்களத்தில் இருந்து சற்றே மாறுதல் என்பதும் ஒரு ஆறுதல். வழக்கமாக இல்லாமல் விருப்பத்தோடு படித்தேன். ஓவியர், கதாசிரியர், இட்டாந்தவருக்கு நன்றி.
ReplyDeleteஇந்த ஸ்டெர்ன் பைத்தியம் பிடித்து ஆட்டுகிறது. கஷ்டப்பட்டு தேடி, நேற்று முதல் இரு ஆல்பங்களை படித்து முடித்தேன். ஓவிய மெருகு இதழுக்கு இதழ் கூடுகிறதா, அல்லது வேறு ஓவிய டெக்னிக்கா தெரியவில்லை. ஸ்டெர்னே ஒரு குட்டி மனுஷன். குட்டி மூஞ்சி. எப்படி சில கோடுகளில் இவ்வளவு எக்ஸ்பிரஷன் காட்ட முடிகிறது?
ReplyDeleteபுருனோ பிரேசிலா இது? லார்கோ ரேஞ்சுக்கு இருப்பார் போலேயே. இன்னிக்கு நைட்டு முடிச்சிடுவோம்.
நாளைக்கு கொஞ்சம் மனச தேத்திக்கிட்டு, எக்சர்சைஸ் எல்லாம் செஞ்சு இடியாப்பம் சாப்பிட ரெடி ஆகணும்.
செமயா எழுதுறீங்க டாக்டர்
Deleteஒரு அட்டவணை ஆட்டம் ஆடுவோமுங்களா?
ReplyDelete*1.ஆண்டின் மொத்த புக்ஸ் எண்ணிக்கை?
2.யார் -யாருக்கெல்லாம் இடம்?
3.டெக்ஸ்க்கு எத்தினி ஸ்லாட்?
4.புதியவர்கள் இருப்பார்களா?*
என்று உங்கள் யூகங்களை போட்டுத் தாக்குங்களேன் பார்ப்போம்! 💪
ரியல் சந்தாவை யூகிக்க முடிந்திடும் பட்சத்தில் 2025-ன் சந்தா பரிசாகிடும்!
1. 24 plus 12v +10 (special issues). 2. Tex8, lucky Luke, tango, Johnny, one cartoon, tintin2, stern, zagor3, Mr. No4, vedalar2, Robin2, young tex 1, xiii, thorgal, thatha, Maggi, Rubin, 2 graphic novels, Chick bill, bouncer/undertaker. Special issues-reprints 6, pre order 4.
Delete3. 8
4. May be 2
1. Regular 30 to 36
DeleteV comics 12 so total around 42 to 48 books.
2. அநேகமாக அனைவரும் உள்ளே..
3. Tex 10 to 12
4.புதியவர்கள் இல்லாமலா?
TeX 12 (inc ilam TeX)
Tiger 1
Stern 1
Tango 1
Tintin 2
Luke 1
Chick bill 1
Rubin 1
Thorgal 1
XIII 1
Johnny 1
Bruno 1
Martin 1
Largo 1
Thaththas 1
Spoon 1
Graphic 1
New entry visham 1
New entry 1
Magi or Cisco or blue coat or soda 1(may be all 4)
V comics as usual.
I will do my listing tonight ji
Delete*1.ஆண்டின் மொத்த புக்ஸ் எண்ணிக்கை? 26லயன் ,முத்து+12 V காமிக்ஸ்
Delete2.யார் -யாருக்கெல்லாம் இடம்? டெக்ஸ்(யங் டெக்ஸ் சேர்த்து)- 10, டின்டின் -3, லார்கோ -1, டேங்கோ -1, ரூபின் -1, தாத்தாஸ் -1, லக்கி -1, சிக் பில் -1, ப்ளூ கோட் -1, புருனோ -1, ஜானி -1, தோர்கல் -1, புது முகம்-1, விஷம் -1, ஸ்பூன் அண்ட் ஒயிட் -1
3.டெக்ஸ்க்கு எத்தினி ஸ்லாட்? 10
4.புதியவர்கள் இருப்பார்களா? கண்டிப்பாக
V காமிக்ஸ் 12
Delete2 வேதாளர்
3 ராபின்
2 Mr நோ
2 ஸாகோர்
1 மாடஸ்டி
2 புது முகங்கள்
நான் கடந்த மாதம் கோயமுத்தூரில் இருந்து, சென்னைக்கு வீடு மாற்றும் போது முக்கியமான டாக்குமென்ட்ஸ், நகை ஆகியவற்றுடன் காமிக்ஸ் புத்தகங்களும் எங்களுடனே காரில் பயணித்தன. இடபற்றாக்குறை இருந்த போதும், அவற்றிற்கு முதல் இடம் கிடைத்திருந்தது. மற்ற புத்தகங்கள் எல்லாம் லாரியில் தான்.....
ReplyDeleteகடந்த ஒரு மாதமாக காமிக்ஸ் புத்தகங்களை அடுக்கி, லேப்டாப்பில் விபரங்களை பதிவு செய்து கொண்டிருந்தேன். நல்ல நிலையில் 518 புத்தகங்களும், கிழிந்த, நைந்து போன நிலையில் 20-25 புத்தகங்களும் உள்ளன. அதில் டெக்ஸ் மட்டுமே 110 புத்தகங்கள். பாக்கெட் சைஸ் கிளாசிக் காமிக்ஸ் 16 புத்தகங்கள் - அத்தனையும் பொக்கிஷங்கள்....இனி கொஞ்ச நாட்களுக்கு கால இயந்திரத்தில் பயணம்....🥰
சார் அட்டவணை பதிவு எப்போது
ReplyDeleteபாலன் சார் எப்படி இருக்கீங்க
Deleteவிற்பனை முகவர்கள் இடம் Bruno Brazil தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளாரா சார்?
ReplyDeleteV-காமிக்ஸ் 12 புத்தகங்கள்
ReplyDelete2 வேதாளர்
3 ராபின் 2.0
2 ஸகோர்
3 மிஸ்டர் நோ
1 டெக்ஸ்
1 கேப்டன் பிரின்ஸ் புதிய கதை
லயன் - முத்து - கடந்த வருடம் போல எளிய வாசிப்பு மற்றும் குண்டு புத்தகங்கள் இல்லாத சந்தா. ஆசிரியர் கடந்த வரும் போல் ரெகுலர் புத்தகங்கள் 30 என்றால், எனது கணிப்பு இதுவே!
நவீன வெட்டியான் - 1
அண்டர்டேக்கர் - 2 ஆல்பகதை
இளம் டைகர் - கடந்த வருடம் போல ஹார்ட் பௌண்ட் புத்தககம் ஒன்று
டெக்ஸ் - 12
லக்கி லூக் - 2 ஆல்பகதை ஆண்டு மலராக
சிக் பில் - 1
ஸ்பூன் வைட் - 1
ப்ளூ கோட் - 1
டாங்கோ - 1
ரூபின் - 1
சிஸ்கோ - 1 (டவுட்)
லார்கோ - 2 ஆல்பகதை (அடுத்த ஆல்பம் தயார் என்றால்)
XIII - 1
தாதாஸ் -1
தோர்கல் -1 (டவுட்)
டின் டின் - 1 (அதிக பட்சம் 2)
சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் (ஸ்பைடர் & ஆர்ச்சி & மாயாவி இணைந்து கலக்கும்)
ஜானி - 1
புதிய கதைகள் - 2
Note: ப்ருனோ கதை V-காமிக்ஸ் அல்லது லயன்-முத்துவில் டவுட்-இல் இருக்கும் கதைகளுக்கு பதிலாக வரலாம்!
இன்னும் 2024 சந்தாவில் வரவேண்டிய புத்தகங்கள் இவை என நினைக்கிறேன் சார், தவறு இருந்தால் மன்னிக்கவும்.
ReplyDelete1. மேற்கே போ மாவீரா
2. வேங்கை என்றும் உறங்காது
3. இது யூத்த பூமி - கேப்டன் பிரின்ஸ் (V காமிக்ஸ்)
4. கடலோரம் ஒரு கார் விபத்து - ராபின் (V காமிக்ஸ்)
5. ஊழியம் செய்ய விரும்பு
6. தீதும் நன்றும் பிறர் தரவாரா
7. கரமெல்லாம் குருதி
8. ரூட் 99
9. வீதி எழுதிய வெற்றிப் பயணம்
எல்லாமே தவறு தான்.
DeleteYup... சகலமுமே தப்புங்க சார் 🤕
Deleteஇன்னும் வர இருக்கும் இதழ்கள்
Deleteநவம்பர்
டெக்ஸ் லயன் தீபாவளி மலர்
Zaroff முத்து தீபாவளி மலர்
Mr. நோ V காமிக்ஸ் தீபாவளி மலர்
டிசம்பர்
Delete1. அடிமையாய் தோர்கல்
2. மேஜிக் Moment Special டெக்ஸ்
3. யங் டெக்ஸ் ஒரு பாகம்
4. V Comics கேப்டன் பிரின்ஸ்???
Thank you thank you for the correction 🙏🏻
Deleteரூபின் இந்த வருடம் வந்த கதை துப்பறிதல + தாய் சென்டிமென்ட் + மாப்பிள்ளை பார்க்கும் படலம் என சென்றது, அதில் உடல் உறுப்பு கடத்தல் என்று கொஞ்சம் தெரிந்த விஷயம் என்பதால் கதையை ஒன்றிப் படிக்க முடிந்தது. கடந்த இரண்டு கதைகளை விட இந்த கதை சுமார் தான் ஆனால் மேற்கூறிய காரணத்தால் பலருக்கும் பிடித்தது என நினைக்கிறேன். மொழிபெயர்ப்பு இயல்பாக இருந்தது; ரூபின் வழக்கமான தென்மாவட்டமான இந்த கதையில் மிஸ்ஸிங், காரணம் புதிய மொழிபெயர்ப்பாளர் என்பதனால் இருக்கலாம் என்று நினைக்கிறேன். நன்றி.
ReplyDeleteதென்மாவட்டம்? தெனாவெட்டு???
Deleteதெனாவெட்டு @ குமார். thanks for the correction. இந்த அம்மணியின் முதல் கதை வந்த போது இதனை பற்றி சொன்னதாக ஞாபகம்.
Delete2025 லயன்+ முத்து காமிக்ஸ் = 28
ReplyDeleteV காமிக்ஸ்= 12
மொத்தம் 40 புத்தகங்கள்
1) டெக்ஸ் வில்லர். - 10
2) லக்கி லூக். - 1
3) லார்கோ. - 1
4) கேப்டன் டைகர். - 1
5) டின் டின். - 3
6) ரூபின். -1
7)பவுன்சர். -1
8)தோர்கல். -1
9)டேங்கோ or
வெயின் ஷெல்டன் -1
10)ப்ளூ கோட் or
கிட் ஆர்டின். -1
11) ஹாரர் -1
12) ஜானி 2.0. -1
13) மார்ட்டின். - 1
14) கிராபிக் நாவல். -1
15) முதலை பட்டாளம் 2.0 -1
16) திரில்லர் (காலனின் கால் தடத்தில் -2 ) -1
17) புதிய அறிமுகம். -1
மொத்தம் -28 கதைகள்
V காமிக்ஸ்
1) சாகோர். -3
2)இளம் டெக்ஸ் - 1
3) மயாத்மா. -1
4)Mr. நோ. -2
5) மாடஸ்டி. -1
6) டிடெக்டிவ் ராபின்- 2
7) கேப்டன் பிரின்ஸ்-1
8) புதிய அறிமுகம் -1
மொத்தம் - 12 கதைகள்
28+12= 40 கதைகள்
புதியவர்கள் இல்லாத அட்டவணையில் சுவாரசியம் கிடையாது சார். எனவே 2025 அட்டவணையில் சுவாரசியம் கண்டிப்பாக உண்டு சார்.
ReplyDeleteசரி தான் பரணி சார்..
Deleteஹாரர்
கிராபிக் நாவல்
புதியவர்
3 இடங்கள்
V காமிக்ஸ்
புதியவர்
1 இடம்
என 4 இடங்கள் என் கணிப்பில் ஒதுக்கியுள்ளேன். இன்னும் அதிகமாக புதியவர்கள் இடம் பெறுவார்களா தெரியாது.
சார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteஅதே குமார் ☺️
Deleteஆமாங்க ஆசிரியரே
Deleteஇன்று 2025 அட்டவணை பதிவு எதிர்பார்க்கலாம்
Deleteஅதே தான். I'm eagerly waiting
Delete@Edi Sir.. 🥰
ReplyDeleteஇன்று பதிவு கிழமை.. 💐💐
1.20 - 30 புத்தகங்கள். 2. மேகி கேரிசனுக்கு இடமில்லை என்று நினைக்கிறேன். 3. Tex தனித்தடத்தில் வருவார் 4.3 புதிய வரவுகள் இருக்கலாம்
ReplyDeleteMe too hundred
ReplyDeleteசார்.இன்று பதிவுக்கிழமை+ அட்டவணை வாரம். எதோ பாத்து செய்ங்க !!
ReplyDelete