Saturday, October 26, 2024

பூம்..பூம்...பூம் படலம் !!

 நண்பர்களே,

வணக்கம். மட்டன் விருந்து ; கூட்டம் அலைமோதுது பந்தியிலே ;  எப்படியோ அடிச்சுப் புடிச்சி இலைக்கு முன்னே குந்தியாச்சு ; ஐட்டங்கள் பரிமாறப்படும் முன்னமே சமையலின் மணம் நாசியைத் துளைக்குது ; 'இல்லியே...இங்கே கடைவாயோரமாய் நேக்கு ஜொள்ளு கசியலியே' என்ற கெத்தை மெயின்டெய்ன் பண்ணினாலும், கண்ணு பூரா பிரியாணி தேக்சாவை ஏந்தியிருக்கும் மகராசன் மேலேயே நிலைச்சு நிக்குது ; 'டங்கு..டங்கு' என்று தேக்சாவின் விளிம்பில் அடிக்கொரு தடவை அடிச்சிக்கினே அவர் பரிமாற, 'தோ வந்துட்டாரு..நெருங்கிட்டாரு' என்று மனசு பூரிப்பதை காட்டிக்காம, சிக்கன் ரோஸ்ட் பேஸினை சுமந்து வரும் தேவதூதனை லைட்டா நோட்டம் விடத் தோணுது ; ஆவி பறக்கும் பிரியாணியை, கணிசமான பீஸ்களோடே ரெண்டு சட்டுவம் முழுசா பரிமாறிய நொடியில் மனசுக்குள்ளே கலர் கலராய் மத்தாப்பூ மலர்ந்தாலும், 'ரோஸ்டிலே நல்ல பீசா கெடைக்குமா - இல்லாங்காட்டி சில்லறை பீஸை வைச்சுப்புட்டு நகர்ந்திடுவாரோ ?' என்ற பயம் பிடுங்கித் தின்னுது ; 'ரோஸ்ட்லாம் ரெண்டாது ரவுண்டுக்கு வரவே வராது...ச்சை...அதோ, எதிர்த்த பந்தியிலே இருக்க புளிமூட்டைக்குலாம் சூப்பர் பீஸ் அமைஞ்சிருக்கே !!' என்றபடிக்கே அலைபாயும் மனசுக்கு கடிவாளம் போட முயற்சிக்கும் நொடியிலே லட்டு மெரி ரெண்டு பீஸ்களையும், கணிசமான மசாலையும் இலையில் ஒரு புண்ணியவான் வைச்சிட்டுப் போகும் நொடியில், 'முட்டை இன்னும் வரக்காணோமே...? முழுசா வைப்பாங்களா - இல்லே பாதியா கட் பண்ணி பெப்பரிலே குளிப்பாட்டி ஒப்பேத்திடுவாங்களா ?' என்ற விசனம் தோளில் தொற்றிக் கொள்ளும் அந்த நொடியிலேயே நல்லபடியாய் ரெண்டு பாதி முட்டைகளையும், எண்ணெய் இல்லாத பாயாவையும் பிரியாணி எனும் மேற்குத் தொடர்ச்சிமலைக்குன்றின் மீது ஊற்றிப் போகும் அதிசயம் நிகழ்ந்திடுகிறது ! 

இந்த நொடியில் அந்த இலைக்கு முன்னே குந்தியிருப்பவனின் அகமும், முகமும் எவ்விதம் புளகாங்கிதத்தில் திளைத்திருக்குமென்று மட்டும் உருவகப்படுத்திப் பாருங்களேன் - இங்கே this moment அடியேனின் வதனம் உங்களுக்கு மனதில் ஓடிட வாய்ப்புள்ளது !! இங்கிலீஷில் சொல்லுவார்கள் - "grinning like a cheshire cat" என்று ! Alice in Wonderland கதையில் வருமொரு மொக்கை சைஸ் மாயப்பூனை "ஈஈஈ" என்று பல்லைக்காட்டிக் கொண்டேயிருக்கும் ! அதன் உடல் கண்ணுக்குத் தெரியாது அரூபமாகிப் போனாலும், அந்த இளிப்பு மட்டும் காட்சி தந்து கொண்டேயிருக்கும் ! திஸ் மொமெண்ட் - அந்த இளிக்கும் பூனை = திஸ் ஆந்தையன் !! ஒரு மெகா விருந்துப் பந்தியில், சகலமும் எதிர்பார்த்தபடியே சிறப்பாய், சூப்பராய் கிட்டி விட்டால் சந்தோஷத்துக்கு கேட்கவா வேணும் ?

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று தீபாவளி மலர்கள் !! And மூன்றுமே ஒன்றுக்கொன்று போட்டியிட்டபடிக்கே அனல் பறக்கச் செய்திடும் வெற்றியினை ஈட்டிடுவதெல்லாம் கனவுகளின் சமாச்சாரங்களாச்சே ?! அந்தக் கனவு இன்று கண்முன்னே நனவாகிடும் போது - பிரியாணி, ரோஸ்ட், பாயா என்றெல்லாம் உவமைகள் துள்ளிக்குதிப்பதை தவிர்க்க முடியலை folks !! 

இந்தத் திட்டமிடல் நிகழ்ந்த போதே எனக்கு 2 விஷயங்கள் உறுதிபடத் தெரிந்திருந்தன :

முதலாவது - பணிகளில் நாக்கு தொங்கிப் போவது உறுதி என்பது !

இரண்டாவது - டெக்ஸ் ஒரு massive ஹிட்டடிக்கப் போகிறார் என்பது !!

இந்த நொடியின் சந்தோஷத்தில் விஷயம் # 1 ஒரு பொருட்டாகவே தோணலை ; உங்களின் இந்த உற்சாகங்களையும், உத்வேகங்களையும் தரிசிக்க 'தல' கூட இன்யூட்ஸ் பூமிக்கே நம்ம ஸ்கூட்டரை விடவும் செய்யலாமென்றே தோன்றுகிறது ! So அது பற்றி நான் மொக்கை போடப்போவதில்லை ! மாறாக - இந்த நொடியின் பத்தாயிரம்வாலா பார்ட்டியின் வெற்றி பற்றிய எனது ஆரூடத்தினைப் பேச மட்டுமே முனைந்திடப் போகிறேன் ! 

பொதுவாகவே இத்தனை நீளமானதொரு கதைக்களம் எனும் போது, பக்காவான திட்டமிடல் + சம்பவக்கோர்வைகள் இல்லாது கதாசிரியர்கள் களமிறங்க மாட்டார்கள் என்பது ஒரு பொதுவிதி ! And இது வெகு சமீபத்தைய ஆக்கம் எனும் போது, தனது ஆற்றல்களின் உச்சத்திலுள்ள மௌரோ போசெல்லி கிஞ்சித்தும் பிசக அனுமதித்திருக்க மாட்டார் என்பதையுமே அடித்துச் சொல்லும் 'தகிரியம்' உள்ளுக்குள் ஊற்றெடுத்தது ! எல்லாவற்றையும் விட கதைக்கான அந்தப் பின்னணி - ஆர்டிக் வடதுருவம் எனும் போது, நமது ஒட்டு மொத்த டீமுமே தங்களது comfort zone-லிருந்து முற்றிலுமாய் விலகி ஒரு புது பூமியில் சாதாரண மாந்தர்களாகவே உலவிட இருப்பது என்னை நிரம்பவே excite செய்தது ! இந்தக் கதையின் நீளம் சார்ந்த எனது அனுமானம் மாத்திரம் சொதப்பாது இருந்திருப்பின் - போன டிசம்பரில் மார்டினின் "பனி அசுரர் படலம்" + இந்த "பனிமண்டலப் போராளிகள்" ஒரே சமயத்தில் வெளியாகியிருக்க வேண்டும் ! இரு சாகசங்களும் அந்த 'வடமேற்குக் கடல்பாதை' சார்ந்த தேடலையும், இன்யூட் மக்களையும், ஆர்டிக் துருவத்தில் சிக்கிக்கொண்ட டெரர் மற்றும் யெரெபஸ் கப்பல் பயணங்களையும் சுற்றிச் சுழன்றடிப்பதால் ரொம்பவே வித்தியாசமான அனுபவமாய் அமைந்திருக்க வேண்டியது !! Just miss !! டெக்சின் கதை நீளமாகிப் போனதால் இந்த தீபாவளி மலருக்கென மாற்றிட வேண்டிப் போனது ! 

இன்னொரு காரணமென எனக்குத் தோன்றியது கதையில் தென்பட்ட மாந்தர்களின் எண்ணிக்கை ! இத்தனை பெரிய cast சகிதம் எடுக்குமொரு கதைக்களத்தில் சர்வநிச்சயமாய் வீரியம் இல்லாது போகாதென்று நம்பினேன் ! அப்புறம் இன்னொரு தொஸ்கான் காரணமும் உண்டு ; கர்னல் ஜிம் பிராண்டன் ரூபத்தில் ! இவர் நம்மைப் பொறுத்தவரைக்கும் ஒரு lucky charm ! இவர் தலைகாட்டும் கதைகள் சகலமும் நம்மிடையே ஹிட்ஸ் !! So இம்புட்டு காரணங்களையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போதே இந்த டெக்ஸ் மெகா சாகசம் தெறிக்க விடுமென்ற நம்பிக்கை பக்காவாக இருந்தது ! 

To a slightly lesser extent - மிஸ்டர் நோவின் V காமிக்ஸ் தீபாவளி மலரும் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது என்றே சொல்லியாகணும் ! அந்த நாயகரிடம் ஏதோவொரு ப்ளஸ் இருப்பதாய் ஜூனியர் எடிட்டருக்கு தென்பட்டதை கடந்த சில சாகசங்களிலேயே பார்த்து ஊர்ஜிதம் செய்து கொண்டிருந்தோம் ! அதிலும் அந்த 'கங்கசெய்ரோ' கதை (பெயர் சட்டுன்னு நினைவுக்கு வர மாட்டேன்கி !!) என்னை ரொம்பவே இம்ப்ரெஸ் செய்திருந்தது ! So அமேசான் கானகத்தில் ஒரு முழுநீள உலா போவதாயின் நிச்சயமாய் சோடை போகாதென்று நம்பியவனுக்கு, கதையின் மொழிபெயர்ப்புப் பணியே வந்து சேர்ந்த போது அந்த நம்பிக்கை L&T சிமெண்ட் தரும் பிராமிசைப் போல டபுள் உறுதியாகிப் போனது ! 

கொஞ்ச நேரத்துக்கு புலியா ? சிறுத்தையா ? ஜாகுவாரா ? என்றெல்லாம் போட்டு கூகுளில் ஆராய்ச்சிகள் பண்ணித் தள்ளினேன் & அதனில் கணிசமாகவே ருசிகர துணுக்குகள் கிட்டின ! சின்ன வயசில் எப்போவுமே - 'காட்டிலே சிங்கத்துக்கு, புலிக்கும், சண்டை வந்தாக்கா எது கெலிக்கும் ? எது ரொம்ப பலசாலி ? எது ரொம்பப் பெருசு ?' என்ற ரீதியில் என்னுள் ஒரு fascination ஓடிடுவதுண்டு ! இதோ, பணி நிமித்தம் அத்தகைய தகவல்களை சரி பார்க்க முடிந்த போது அண்ணாச்சி குஷியாகி போயி !!

  • சிங்கங்களை விட அளவில், ஆற்றலில், பலத்தில் கூடுதல் திறன் கொண்டவை புலிகளே என்பது தெரியுமா ?
  • உலகிலுள்ள மிருகங்களை பலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ள BBC - புலிக்கு 8-ம் இடத்தைத் தந்துள்ளது !! அந்த லிஸ்ட்டில் சிங்கத்துக்கு இடமே லேது என்பது தெரியுமோ ?
  • கடிக்கும் ஆற்றலில் ஜாகுவார்கள், புலிகளை விடவும் வலு கூடியவைகள் !
  • பூனைகள் வம்சத்தில் - புலி, சிங்கத்துக்கு அடுத்தபடியான முரட்டு விலங்கு ஜாகுவார் தான் !  
  • மூக்கிலிருந்து, நீண்டிருக்கும் வால் வரைக்கும் அளந்தால் ஒரு ஆண் ஜாகுவார் நெருக்கி எட்டடி இருக்குமாம் !! That is biggggg !!
So இந்த ஆல்பத்தின் மொழிபெயர்ப்பின் போதே புரிந்தது - இதுவும் தீபாவளிக்கு சரவெடியாய் பொரிந்திடுமென்பது !!

The real surprise pack has been ZAROFF !!

"வேங்கை என்றும் உறங்காது" என்ற தலைப்பு இன்றைக்கு செம பாந்தமாய் தென்பட்டாலும், அதனை போன வருஷம அட்டவணையில் அறிவித்த சமயத்தில் இந்த ஆல்பம் பற்றிய இரண்டு வரிக் கதைச்சுருக்கத்தைத் தாண்டி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை ! So குத்துமதிப்பாய் வைத்த தலைப்பு பொருந்திப் போனதில் மகிழ்ச்சி ஒருபக்கமெனில், இந்த அசாத்திய ஆக்ஷன் த்ரில்லர் 'தல' டெக்ஸுக்கே tough தரும் வீரியம் கொண்டிருப்பது டபுள் மகிழ்ச்சி ! இங்கே என்னை முதலில் திகைக்கச் செய்தது சித்திர + கலரிங் ஜாலங்களே ! And பிடரியில் அறையும் ஆக்ஷன் sequences மிகுந்து கிடக்கும் போது இந்தக் கதை நிச்சயமாய் நல்ல மார்க்ஸ் வாங்கித் தேறி விடுமென்றே எடிட்டிங் தருணத்தில் நினைக்கத் தோன்றியது ! ஆனால் அச்சுக்குச் சென்று, அங்கே செம்மையாய் ஸ்கோர் செய்து, புக்காகி கைக்கு வந்து சேர்ந்த போது - தேவா சாரின் ரீ-ரெக்கார்டிங் முடிந்த "பாஷா" திரைப்படம் போல பன்மடங்கு கெத்து கூடி இருப்பதாய் தோன்றியது ! அந்தத் தருணத்தில் தான் இந்த தீபாவளி மலரும் அல்லு தெறிக்க விடுமென்ற நம்பிக்கை துளிர் விட்டது !! இப்போது கண்முன்னே இந்த நம்பிக்கை நிஜமாகிடுவதைப் பார்க்கும் போது - விருந்து முடிச்சு எழும் வேளையினில் ஒரு ஜிகர்தாண்டாவை முன்னே நீட்டியது போலுள்ளது !!   

Thanks a ton folks !! இந்த தீபாவளியை தித்திக்கச் செய்து விட்டீர்கள் !! மனம் முழுக்க சந்தோஷத்தோடு இப்போதே அடுத்த தீபாவளிக்கொரு ஸ்கெட்ச் போட ஆரம்பிச்சாச்சூ ! And ஜூனியர் எடிட்டர் - மிஸ்டர் நோவில் ஒரு செம நீள அதிரடி காத்திருப்பதாகவும் காதில் சேதியொன்றைப் போடுகிறார் ! So இந்தாண்டின் வெற்றி அமைத்துத் தந்துள்ள template-ல் அடுத்தடுத்து அதிர்வேட்டுக்களை போட்டுத் தாக்க இதோ drawing board-க்குப் போயாச்சு !! வேட்டையன் பாணியில் சொல்வதானால் - "You haven't seen anything yet !!"

சீக்கிரமே ஸ்பைடர் சாரோடும், கபிஷ் ப்ரோவோடும் நவம்பரை கலக்கிடலாமா ? பணிகள் பரபரப்பாய் போயிங்ஸ் !! Bye all...see you around guys !! Have a fun weekend !



169 comments:

  1. Replies
    1. வாழ்த்துக்கள் சகோ 👌

      Delete
    2. மீண்டும் மீண்டும் முதலிடம்..
      வாழ்த்துக்கள்...அண்ணா

      Delete
    3. நன்றிகள் நண்பர்களே

      Delete
    4. வாழ்த்துகள் சகோ 💐💐💐

      Delete
    5. 💐🙏𝓒𝓸𝓷𝓰𝓻𝓪𝓽𝓼 𝓚𝓾𝓶𝓪𝓻 𝓳𝓲😘

      Delete
  2. நானும் வந்துட்டேன். வணக்கம்

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே ❤️

    ReplyDelete
  4. 10 எண்றதுக்குள்ள

    ReplyDelete
  5. முதல் பத்தியை படிச்சு முடிக்கறதுக்குள்ளே போனெல்லாம் நணைஞ்சு போச்சு. தொடைச்சுட்டு மறுக்கா போய் அடுத்ததிலிருந்து ஆரம்பிக்கனும்

    ReplyDelete
    Replies
    1. பிரியாணினா சும்மாவா? தொடச்சுக்கோங்க... தொடச்சுக்கோங்க!

      அதுவும் உங்க கோவையிலே ஹரிபவனம் பிரியாணி சாப்பிட்டுப் பாத்த கையோடு எழுதின பதிவு இது 😁!

      Delete
    2. // ஹரிபவனம் பிரியாணி சாப்பிட்டுப் பாத்த கையோடு எழுதின பதிவு இது //

      Noted this sir 😊

      Delete
  6. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  7. எடி சார் எலக்ட்ரிக் 80 எப்போது வரும்

    ReplyDelete
    Replies
    1. நவம்பரில் / சேலம் புத்தக விழாவினில் சார்!

      Delete
    2. John master will come in Salem book fair sir?

      Delete
  8. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  9. மகிழ்ச்சி பொங்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் சார்.
    பண்டிகை வரும் மகிழ்ச்சியை விட இந்த தீபாவளி மலர்களின் மகிழ்ச்சியை முன்கூட்டியே அளித்ததற்கு மனமார்ந்த நன்றிகள் சார் ❤️.

    தீபாவளி மலர்களில்
    எதை படிப்பது என்ற எண்ணத்தில் கடந்த வாரம் படித்த "நில் கவனி வேட்டையாடு" வின் ஜாரோப் தான் முதல் சாய்ஸாக தெரிந்தார்.
    முதல் கதை தந்த அசாத்திய திகைப்பில் இருந்து கொஞ்சமும் பிசகாமல் 2 வது கதையும் திகைக்க வைத்தது.
    ஜாரோப்பின் அசாத்திய தைரியமும்+ ஒவியங்களும் + இதற்கெல்லாம் மேலாக அட்டகாசமான மொழிபெயர்ப்பும் வேற லெவல். நீட்டாக & ஷார்ப்பாக மொழிபெயர்ப்பில் சற்று வித்தியாசம் காண முடிகிறது.

    இரண்டாவதாக மிஸ்டர் நோ...
    நோவின் கதைகள் என்றுமே சலிப்படைய செய்ததில்லை எனும் பட்சத்தில் இந்த தீபாவளி மலரின் முன் பின் அட்டைப்படமே "இந்த கதை நிச்சயம் சூப்பர் ஹிட் அடிக்கும்" என்பதை பறை சாற்றியது.

    அடுத்ததாக டெக்ஸ்...
    அந்த அட்டைக் கவரே பார்க்க பார்க்க அவ்வளவு அழகு. அதிலுள்ள அட்டைப்படமே கதையை படிக்க தூண்டும் விதமாக தங்களின் உழைப்பு அபரிதமானது.
    மேலும்,
    டெக்ஸ் களத்தில் இருந்தாலே மற்ற ஹீரோஸ் தடம் தெரியாது போட்டியிலிருந்து நகர்ந்து விடுவர்.
    ஆனால் இம்முறை டெக்ஸ்க்கே சவால் விடும்படியாக வந்த இரண்டு நாயகர்களுக்கு மத்தியில் "டெக்ஸ் எப்படி இருப்பார்?" என்பதை கதையின் முன்னுரையே சொல்லிவிட்டது.
    ஆர்டிக்கில் மாயமானவர்களை தேடி சென்ற மார்டின் தந்த பிரமிப்பு மறக்காத நிலையில், அடுத்ததாக டெக்ஸ் &கோ அதே களத்தில் இறங்குவது சற்று எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டது. இங்கு டெக்ஸ் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பதை படிக்க மிக ஆவலாக பக்கங்களை புரட்ட வேண்டியுள்ளது.
    ஆக, இரண்டு வித்தியாசமான ஹீரோக்களுக்கு சற்றும் சளைத்தவரல்ல இந்த தீபாவளி டெக்ஸ் என்பது உறுதி.

    சரியான கதைக்கள நாயகர்களுக்கு முன்னால் டெக்ஸ் கூட அடுத்த பட்சம்தான் என நினைக்க வைத்துவிட்டது இந்த தீபாவளி மலர்களில் இடம்பெற்ற 2 நாயகர்களின் கதைகள்.

    மூன்று கதைகளும் மிக மிக திருப்தியான கதைகளாக, மனம் நிறைந்த நாட்களாக மாறி விட்டது இந்த வாரம்.

    இனி தீபாவளி முடிந்து அடுத்த பதிவு எனும் பட்சத்தில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  10. Tomorrow only to start reading diwali specials...

    ReplyDelete
  11. பிரியாணிக்காக வெயிட்டிங் - இந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு என்னா ஜாலம் காட்டியிருக்கிறீர்கள் எடிட்டர் சார் அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. ஹி... ஹி... நம் அனைவரின் mindvoice இது தானே சார்?!

      Delete
  12. சார் இந்த பதிவை படித்த பிறகும் நான் எனது விமர்சனங்களை எழுதாமல் இருக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. முதலில் படித்தது வேட்டையன். செம்ம ஸ்பீடு செம்ம ஆக்சன் ஆனால் என்னைப் பொறுத்தவரையில் போன கதைக்கு இது ஒரு மட்டு குறைவு தான்.

      எனது மதிப்பெண் 9/10

      Delete
    2. அடுத்து படித்தது V காமிக்ஸ்
      Mr. நோ ஒரு தவிர்க்க முடியாத ஹீரோ ஆகிக் கொண்டு இருக்கிறார் V காமிக்சில். முதல் இடத்தை ராபின் இடம் இருந்து கைப் பற்றி விடுவார் இதே போல போனால்.

      Delete
    3. ஜாலியாக ஆரம்பிக்கும் கதை கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து கடைசியில் அனல் பறக்கிறது. அதும் அந்த புலியை வேட்டை ஆட செல்லும் காட்சிகள் எல்லாம் பரபரப்பு.

      கதை முடியும் போது எங்கே Mr நோ வேகமாக விமானத்தை எடுத்துக் கொண்டு பறந்தார்?

      எனது மதிப்பெண் 100/10

      Delete
    4. கடைசியாக படித்தது டெக்ஸ்.

      நீங்கள் சொன்னது போல ஒரே மூச்சில் படிக்கலாம் என்று வியாழன் இரவு முயற்சி செய்து ஒரு 60 பக்கங்கள் படித்து விட்டு வைத்து விட்டேன்.

      Delete
    5. மீதியை வெள்ளி காலை எழுந்து 6.30 போல படிக்க அமர்ந்து முதல் புத்தகம் படித்து முடித்த போது மணி 8. மனைவியும் மகனும் பள்ளிக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவர்களை அனுப்பி விட்டு பிறகு மீதியை படிக்கலாம் என்று நினைத்தேன்.

      Delete
    6. ஆனால் நான் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக 9.30 க்கு முன்பு கிளம்ப வேண்டும். முதல் புத்தகம் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தில் நின்றதால் அதனை விடவும் மனதில்லை

      Delete
    7. உடனே ஒரு மணி நேர பெர்மிஷன் வேண்டும் என்று மேல் அதிகாரிக்கு தகவல் சொல்லி விட்டு. மீண்டும் 8.30 க்கு இரண்டாம் புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிக்க அமர்ந்தேன். அடுத்த 1.30 மணி நேரமும் டெக்ஸ் அண்ட் கோ உடன் அந்த பனிவனத்தில் நானும் உலாவினேன்.

      Delete
    8. என்னா கதைங்க மரியோ பொசெல்லி எழுதும் கதைகள் எல்லாமே வேற லெவல். அதும் இந்த வருடத்தின் டாப் கதைகளில் இது கட்டாயம் உண்டு. என்னா த்ரில் என்னா ஸ்பீடு

      எனது மதிப்பெண் 100/10

      Delete
    9. மிக மிக சிறந்த தீபாவளி மலர்களை எங்களுக்கு அளித்த உங்களுக்கும், உங்கள் சிறு அணிக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.

      Delete
  13. தானை தலைவனையும், பால்ய நண்பன் கபீஷ்சையும் சேலத்தில் சந்திக்க ரொம்ப ஆவலுடன் வெயிட்டிங் சார்.

    ReplyDelete
  14. தானை தலைவனையும், பால்ய நண்பன் கபீஷ்சையும் சேலத்தில் சந்திக்க ரொம்ப ஆவலுடன் வெயிட்டிங் சார்.

    ReplyDelete
    Replies
    1. போட்டுத் தாக்கிப்புடலாம் சார்!

      Delete
  15. என்ன மாரியே நெறய பேரு இருக்காங்க.
    முதல் இடம் ஜாரோப்.
    இரண்டாம் இடம் கறுப்பு மரணம்.
    மூனாவது டெக்ஸ்.

    கறுப்பு மரணத்தில் அந்த புலி ஜாக்குவார் உயிருடன் எப்படி புடிப்பாங்க ன்னு ஒரே சஸ்பென்ஸ்.
    அதே டெக்ஸ் கதையின் மாந்தர்களின் அடுத்தடுத்து திருப்பங்கள்.
    அப்பப்பா.
    தீபாவளி முன் கூட்டியே செமயா வெடிச்சிடிச்சி

    ReplyDelete
  16. // சீக்கிரமே ஸ்பைடர் சாரோடும், கபிஷ் ப்ரோவோடும் நவம்பரை கலக்கிடலாமா ? பணிகள் பரபரப்பாய் போயிங்ஸ் !! //

    கண்டிப்பாக கண்டிப்பாக definitely definitely 😊

    ReplyDelete
  17. ஹஹஹஹ....வந்திருச்சி...நெருங்கிருச்சி....சுத்த சைவமாக எனக்கே வாயெல்லாம்...சுவாரஸ்யமான பதிவு சார்...வேட்டைக்காரன 20 பக்கங்கள்தான் கடந்திருப்பேன்...படிக்க சூழல் கைதரல...துவக்கம் முதலே வேற லெவல்....திக்...திக்...அதுவும் ராணுவ வீரர்கள் அந்த ஜீப்போட...அடேயப்பா மனிதனின் கொடூர உச்சம்...பீதியோடு..சுத்த சைவமாக எனக்கே வாயெல்லாம்...இதே போல ...இங்கே கொடூரம்னாலும் அதை தாண்டி ஏதோ ஓர் நடை மனதில் ஓர் பிடி பிடிக்குது ஆர்வத்த தூண்டுது...முழுதும் முடிக்கலை..படிச்சதும் வருகிறேன்...ஆனா படிக்காமலே இதுவும் இன்னோர் கோகினூர் லயனின் கிரீடத்தில் நாம் வெகுவாய் ரசித்த பரகுடா போலவே...

    ReplyDelete
  18. **அந்த வேட்டையன் பீதியை கிளப்ப...இங்க காட்டிய பக்கத்தில் இரு வேட்டையர்கள் சீகலும் பீலுவும் புன்னகைய தர..இரண்டுமே இரு துருவங்களாய் இருப்பினும் ஈர்ப்பு எனும் வானவில்லில் கரையும் காமிக்ஸ் கலையின் ஜாலம்தானென்ன...வண்ணச் சேர்க்கை வேற லெவல் கபீசுக்கு...இந்த அற்புதங்கள் கடத்தும் உங்கள் மந்திரக்கோல் பேனாவுக்கு பல கோடி....எங்களிடம் சமைத்தத பரிமாறத் துடிக்கும் ஆர்வத்த என்ன சொல்ல..சூப்பர் சார்...


    ஒரே ஏமாற்றம் எலக்ட்ரிக் தீபாவளிக்கு....விரைவில்னு இல்லாம வெகு விரைவில்ன வரி விளம்பரத்தை...கபீஷ பாத்து தீபாவளிக்கு முந்திய நாள் அதிரடி சர்ப்ரைசா கிடைக்குமோன்னு நம்பினேன்...நல்லபடியாய் ரெண்டு பாதி முட்டைகளையும், எண்ணெய் இல்லாத பாயாவையும் பிரியாணி எனும் மேற்குத் தொடர்ச்சிமலைக்குன்றின் மீது ஊற்றிப் போகும் அதிசயம் நிகழ்ந்திடுகிறது ! ....அந்த ரெண்டு *முட்டய* மட்டும் நவம்பருக்கு உருட்டி விட்டுட்டீங்களே**

    ReplyDelete
    Replies
    1. எதையும் முழுசா படிக்காமலே தர்ற அந்த பில்டப் இருக்கே.... அய்யய்யோயோ.... வேற லெவல் தெய்வமே!

      Delete
  19. நண்பர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. சேலம் புத்தகத் திருவிழா எந்த தேதியில் ஆரம்பிக்க உள்ளது சார்?

    ReplyDelete
    Replies
    1. இன்னும் அறிவிக்கலை சார் ; நவம்பரின் மூணாவது வாரத்தில் போல் இருப்பது வழக்கம்...

      Delete
    2. Hmm பார்க்கலாம் சார்.

      Delete
  21. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  22. Electric'80 நவம்பரில் சேலம் புத்தக விழாவில் வருகிறது என்ற அறிவிப்பு என்றன் மனசில் பால் வார்த்துச்சு Sir.. 🥰😘💐

    ReplyDelete
    Replies
    1. ஆவின் பாலா தல?

      Delete
    2. சுத்தமான பசும்பால் சார்.. 🫣🫣🫣🫣🥰😄😘

      Delete
  23. காலை வணக்கம்,

    பணி மண்டலப் போராளிகள்.
    அருமையாக இருந்தது. கதை சொல்லப்பட்ட விரதத்திற்கு 10 கங்கு 10 மதிப்பெண்கள். கதைக்காக டெக்ஸ்ஸின் ஆசிரியர் செய்திருக்கும் ஆராய்ச்சி என்னை வியக்க வைத்தது.

    உதாரணமாக இன்னும் மூன்று மைல்கள் தான் சிக்கிரம் சென்று விடலாம் என்பது. முப்பது கிலோ மிட்டர் நடப்பது எளிதான விஷயம் கிடையாது.ஆனால் பெட்ரோல் வண்டிகள் இல்லாத அந்த காலத்தில் இது சாத்தியமே!!. இதை நவீன வழியில் சொல்கிறேன் என்று போகாமல் நிஜத்தை அப்படியே சொல்லியிருக்கும் கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
    டெரர் கப்பலை ஆராய்ச்சி குழு கண்டுபிடிக்க செல்வது அவர்களை டெக்ஸ் குழு கண்டுபிடிக்க செல்வது தான் காதை. இதனிடையே தன் குடும்பத்தை கொன்ற வடெனுகாக் கை வில்லன் கொல்ல அலைவது கதையில் திருப்பத்தை ஏற்படுத்தியது.

    மொத்தத்தில் போராளிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. வேங்கை என்றும் உறங்காது தான் நான் முதலில் படித்தது. கதையும் சித்திரமும் மிரட்டி உள்ளது.

    கருணை காட்ட சொல்லும் மக்களிடம் தன்னிடம் கருனை எப்படி எதிர்பார்க்கலாம் என்று கோபப்படும் ஜெர்மானிய கேப்டனின் வில்லத்தனம் கொடூரத்தின் உச்சம்.

    மொத்தத்தில் பத்துக்கு பத்து மார்க்.

    ReplyDelete
  25. கானகத்தில் கருப்பு நிழலை தன் பார்க்க முடியவில்லை.

    சுமாரான கதை. ஜாக்குவார் திரும்ப திரும்ப தாக்குதல் நடத்துவதை சுமார் 190 பக்கங்கள் சொல்லி இருக்கிறார்கள். இதுல ஒரு அம்மனி வேற தன் காதலனை கணவன் கொன்னுபுடான்னு கோபப்படுவது.

    இப்படி தான் க்ளைமாக்ஸ் முடியும் என்று ஏற்கனவே தெரிந்து விட்டதால் எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லை ‌.

    பத்துக்கு மூன்று தான் மதிப்பெண்கள் என் தரப்பிலிருந்து கொடுக்க முடிந்தது.

    ReplyDelete
  26. இந்த வருட கலக்கல் மூன்று தீபாவளி மலர்களை போலவே இனி அனைத்து வருடமும் வலம் வர வேண்டும் சார்..

    முன்கூட்டியே பண்டிகையை கொண்டாட வைத்த தங்கள் குழுமத்திற்கு பலத்த பாராட்டுகளும் ,வாழ்த்துகளும் சார்..

    ReplyDelete
    Replies
    1. தெறிக்க விட்ருவோம் தலீவரே 👍

      Delete
  27. இந்த தீபாவளியின் சூப்பர் ஸ்டார் வேட்டையன்தான் . லயன் ,v காமிக்ஸ்களை " உங்க அப்ப
    ன் அழும்ப பார்த்தவன்.உன் மகனும் பேரனும் விசிலடிக்க வைத்தவன்" என்று விட்டார் சீனியர் முத்து காமிக்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. "Tex" தானே சொல்றீங்க.
      அவரை தாண்டி எந்த "ஆன்டி ஹீரோ"வும்,,
      ஸ்கோர் செய்ய முடியாது.
      ஸ்பைடர் தாண்டி.
      ஒருவேளை
      மிஸ்டர் நோ -ன்னு,
      சொன்னா ,
      அதுல எனக்கு
      உடன்பாடு உண்டு...
      இதை தாண்டி,
      வேறோருவர் மீது,
      உங்களுக்கு காதல் இருந்தால், அதை தாண்டி நான் கடந்து போய் கொண்டே இருப்பேன்...

      Delete
  28. நேற்று மிஸ்டர் நோவுடன் அமேசான் கானகத்தை சுற்றிப் பார்த்து விட்டு வந்து விட்டேன். இப்போதுதான் வேட்டையின் ஜாரோப்புடன் ரஷ்யாவில் இறங்கி இருக்கிறேன். இப்போதே குளிர் இந்த வாட்டு வாட்டுகிறதே இன்னும் எவ்வளவு குளிர் இருக்குமோ. வேட்டையின் ஜாரோப்புடன் வேட்டையை முடித்துக் கொண்ட பின் தான் தலயுடன் ஆர்டிக் பகுதிக்குச் செல்ல வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. 👍👌Take care ji👍
      Sweater போட்டுக்கோங்க.. 🫣🫣🫣

      Delete
    2. இந்த மாசம் அம்புட்டு பேரும் வேட்டையில் இறங்கியாச்சு - ஊர்களில் தான் வித்தியாசமே!

      Delete
  29. வேங்கை என்றும் உறங்காது.

    இந்த புத்தகத்தை மூன்று தவணைகளில் படித்து முடித்தேன். ஒரு சில குற்றங்களை நியாயப்படுத்துவதை நான் ஏற்றுக் கொள்வதில்லை. அதில் முதன்மையானது மற்றொரு மானிடரின் உயிரை பறிப்பது. அவன் எப்பேர்ப்பட்ட கொடூரன் என்றாலும் அவன் உயிரை எடுப்பது தப்பு என்றே நினைப்பவன் நான்.

    ஆனால் இந்தக் கதையை இன்னும் ஒரு முறை படித்தேன் என்றால் நானே ஆயுதம் தாங்கி கொடூர மனம் கொண்ட கொலையாளிகளை வேட்டையாட கிளம்பி விடுவேன் என்று தான் உணர்ந்தேன். 

    மார்கஸ் அரேலியஸ் குறித்து நான் கிளேடியேட்டர் படம் பார்க்கும் பொழுது தான் முதல் முதலில் தெரிந்துக் கொண்டது. அவரது தத்துவ ஞானம் சிறப்பானது என்றும் படித்திருக்கிறேன். அவரது புத்தகமான meditation (தியானம்) வாங்கி படிப்பதற்காக வைத்திருக்கிறேன். ஆனால் பக்கத்துக்கு பக்கம் மார்கஸின் வார்த்தைகளை உச்சரித்தபடி செல்லும் கதாநாயக வில்லன் மிரட்டுகிறான். கதாசிரியர் கையாண்ட வசனங்கள் அநேகமாக அப்படியே மொழி பெயர்க்கப் பட்டிருந்தால் எடிட்டரும் அநேகமாக மிரட்டி விட்டார் என்றே சொல்ல வேண்டும். 

    43 ஆம் பக்கத்தில் உள்ள கடைசி பேனலில் உள்ள கண்கள், ஒரு வேட்டை மிருகத்தின் கண்களை ஒத்திருந்தது. ஆகச்சிறந்த வேட்டை மிருகம் மனிதனே என்று ஓவியர் கங்கணம் கட்டிக் கொண்டு வரைந்தது போல் உள்ளது. ஓவியர் தன் பங்குக்கு மிரட்ட. அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று பக்கங்களை திருப்பும் ஒவ்வொரு நிமிடமும் திக் திக் தான்.

    Pearl Harbour இல் 7 டிசம்பர் 1941 இல் ஜப்பான் தாக்கும் வரை அமேரிக்கா இரண்டாம் உலக யுத்தத்தில் கலந்துக் கொள்ளவே இல்லை என்று நான் படித்து இருந்த பொய்யை அம்பலப்படுத்தி, மறைமுகமாக அமேரிக்கா நேச நாடுகளுக்கு உதவிய செய்தியை இந்த கதையின் மூலம் தெரிந்துக் கொண்டேன். 

    மொத்தத்தில் கிராபிக்ஸ் நாவல் கிராபிக்ஸ் நாவல் தான் என்று நிரூபித்து இருக்கிறார்கள். கிராபிக்ஸ் நாவலை விரும்பாத திகில் கதை பேய் கதை விரும்பிகள் இந்த கதையையும் இதன் முதல் பாகமான நில் கவனி வேட்டையாடு புத்தகத்தையும் படிக்கலாம். ஆனால் இளகிய மனம் கொண்டவர்களா நீங்கள், கொஞ்சம் மனதை திடப்படுத்திக் கொண்டே படியுங்கள். ஸ்பூன் அண்ட் வைட் கதையில் சிந்தப்பட்ட இரத்த துளிகளை விட இந்த கதையில் காட்டப்பட்டுள்ள ரத்த துளிகள் வெறும் 10% தான் ஆனால் மிரட்டல் 1000%.

    கதை 11/10

    ஓவியம் 11/10

    மேக்கிங் 11/10

    ReplyDelete
    Replies
    1. //ஆகச்சிறந்த வேட்டை மிருகம் மனிதனே//

      Very true sir

      Delete
    2. அந்த பேனல் ஒரு நிமிடம் என்னை உறைந்து போக வைத்தது சார்.

      Delete
    3. அந்த பேனலைப் பாருங்க. குலை நடுங்குது

      Delete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. மலர்களில் . - பனிப் பிரதேசங்களை விட கானகம் முதலில் வசீகரித்து விட்டது..
    கதையின் எளிமையும், ஓவியரின் ஒரு தேர்ந்த கேமிராமேனைப் போன்ற விவரிப்பும் நேரடிப் படம் பார்த்து போன்ற உணர்வைத் தந்தன.
    ஒரு கரும்புலி சட்டென்று தாக்குவது போல் காட்சி அமைப்பு இல்லாமல்
    அது மரங்களின் வழியாக நடந்து வந்து ,காலை நக்குவது வது வரை காட்சிகளில் விவரித்தது.
    மொத்தத்தில் அந்த குழுவோடு நாமும் பயணித்து போன்ற உணர்வை ஏற்படுத்தியது..
    காடும் - Mr. நோ வும் மிகவும் நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள்.. எங்களுக்கு..

    ReplyDelete
  32. இன்று - ஜாரோ ப் (வேட்டையனை) முடித்து விடுவேன்.. பதைபதைக்கும் நெஞ்சத்தோடு..
    கபீஷ் - சை காண ஆவலோடு ..

    ReplyDelete
    Replies
    1. கபிஷைக் காண நெஞ்சம் பதைபதைப்பது ஏன் சார்?

      Delete
    2. உங்கள் எழுத்து நடை எல்லோரையும் தொற்றிக் கொள்வதால் சாருக்கும் புரிதல் பிரச்சனை..
      பதைபதைக்கும் நெஞ்சம் வேட்டையனை சந்திப்பதில்.. தான்.
      நான் சொன்ன மாதிரியே பதைபதைக்கும் நெஞ்சோடையே கதை முடிவு அமைகிறது...
      அம்மாடி..
      இதை ஏற்றுக் கொள்வதா?
      கதைதானே என்று ரசிப்பதா?... ii

      Delete
  33. கானகத்தில் கருப்பு நிழல் 

    நிழல் கருப்பாக தானே இருக்கும் என்று பகடியோடு தான் புத்தகத்தை கையில் எடுத்தேன். கருநிற வேங்கைகள் என் அபிமான விலங்கு. APOCALYPTO படத்தில் அந்த கருநிற வேங்கையை கதாநாயகன் எதிர்கொள்ளும் தருணம் எத்தனையோ முறை திரும்ப திரும்ப பார்த்துள்ளேன்.

    இந்த கதையிலும் முதல் சில பக்கங்கள் வரும் அந்த கருப்பு வேங்கை ஓவியரின் திறமைக்கு கட்டியம் கூறுகிறது. கதை நெடுக அமேசான் காடுகளில் வாழும் விலங்குகளை வரைந்து தள்ளிக் கொண்டே போகிறார். யாராவது போட்டி வைத்து எத்தனை மிருகங்கள் இந்த கதைகளில் வரையப்பட்டுள்ளது என்று கேட்டால் கண்டிப்பாக தொற்றுப் போவார்கள். இன்னும் அதன் பெயர்களை கேட்டால், கூகிளை தேடித்தான் ஓட வேண்டியிருக்கும். அநேகமாக ஓவியர் அமேசான் காடுகளில் பல வருடங்களில் குடியிருந்திருப்பாரோ?

    கதை நேர்கோடு தான். இரண்டு குழுக்கள். ஒன்று உயிரை வேட்டையாட துப்பாக்கியுடன் களமிறங்க மற்ற குழு தருணங்களை வேட்டையாட காமிராவுடன் களமிறங்க, தமிழ் படங்களுக்கே உரித்தான மசாலா நெடியுடன் கதையை சமைத்திருக்கிறார்கள். 

    புலிகள் மரம் ஏறும் என்பது உண்மை என்றாலும், அதன் உடல் எடை காரணமாக அவை பெரும்பாலும் மரம் ஏறுவதில்லை என்ற உண்மையும் உரைக்கத் தான் செய்கிறது. இருந்தாலும் கதையில் எந்த ட்விஸ்ட்டோ ஆச்சரியமோ இல்லாமல் அருமையாக கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்கள்.

    ஓவியங்களுக்காக சேமித்து வைக்கலாம். கதையை ஒரு முறை படிக்கலாம்.

    கதை 9/10

    ஓவியம் 10/10

    மேக்கிங் 10/10

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் நோ - போனல்லி குழுமத்தின் இரண்டாவது தலைமுறைப் பிரதிநிதியான திரு. செர்ஜியோ போனல்லியின் ஆதர்ஷப் படைப்பு!

      ஏகமாய் சிரத்தை கொண்டு அவர் உருவாக்கிய இந்தக் கதாப்பாத்திரம் தனது உச்சத்தின் போது கிட்டத்தட்ட 2 லட்சம் பிரதிகளுக்கு மேலாய் மாதம்தோறும் விற்பனை கண்டுள்ளது!

      Delete
    2. Wow... Breezy readingகு செம entertainment sir.

      Delete
    3. இது ஒரு மாதிரி கலப்பின கரும்புலி நண்பரே....இங்கு மோர் மனித வேட்டையுமே...

      Delete
  34. November books rating after reading

    1. Zaroff
    2. TeX
    3. Mr.No

    ReplyDelete
  35. பதிவு அருமை சார்.

    கபீஷ வண்ணத்தில் அட்டகாசமாக உள்ளது 👌

    ReplyDelete
  36. மேற்கு தொடர்ச்சி மலை உவமை வேற லெவல் சார். கற்பனையின் உச்சம்.

    ReplyDelete
  37. *வேங்கை என்றும் உறங்காது..!*

    *வேட்டை வேட்கை வேட்டையன் ஜாரோப் சாகசம்*

    இறந்து விட்டதாக நினைத்த தன் மகன் உயிரோடு இருப்பதை.. *நில் கவனி வேட்டையாடு* கதையின் முடிவில் தீவில் இருந்து தப்பித்த தனது வாரிசுகள் மூலம் அறிந்து.. பத்து வருடங்களாக தன் மகன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு அவனுக்கு உதவுவதற்காக அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் மகனை தேடும் தாய் ஒரு பக்கம்.

    தங்களது திட்டத்திற்காக ஜாரோப்பை சம்மதிக்க வைத்து களத்தில் பயன்படுத்திக் கொள்ள தேடும் அமெரிக்க ராணுவம் மறுபுறம்.

    கதையின் முதல் 22 பக்கங்களில் அமெரிக்க ராணுவத்தில் முயற்சி பலித்து அழைத்து வருகிறார்கள்.
    ஸ்ஸ்ப்பா.. இந்த 22 பக்கங்களில் *சில்வர்ஸ்டன் ஸ்டோலனின், ராம்போ 1, த ஸ்பெசலிஸ்ட்* கிளைமாக்ஸ் போல அதிரடி அதிரடி அதிரடி.

    எனக்கு இது *வேங்கை என்றும் உறங்காது*

    *முதல் பாகம் ஆரம்பித்து முடிந்தது போல் இருந்தது.*



    *வேங்கை என்றும் உறங்காது*

    பக்கம் 23 முதல் 79 வரை... உலகப் போரின் ரஷ்யாவின் மாஸ்கோவில் பிக் அப் பாய்ண்டிற்கு மீட்பு விமானம் வருவதற்குள் ஐந்து நாட்களில் ஒரு ஆபரேஷனை வெற்றிகரமான நடத்தி முடிப்பதற்கான காலக்கெடுவுடன் நடப்பது போன்ற சாகசம். ஜாரோப் வேட்டைக் களமும், மார்க்கஸ் ஒளரெலியஸ்ஸின் தத்துவமும் இணைந்து கதையை விட்டு நகர முடியாத அளவிற்கு மனதை எங்கோ கொண்டு செல்வது.. நமக்கான படிப்பினை.. முன்னர் படிக்காத வரலாறு. உலகப் போரில் கொடூரங்களில் சிறு துளி மட்டுமே இது. என்றால் நிஜம் எவ்வாறு கொடுமையாக இருந்திருக்கும். தொடரும் பக்கங்களில் கதை மாந்தர்களின் உயிர் பிழைக்கும் போராட்டம், உயிரைக் காக்க உயிர் பறிக்கும் வாழ்க்கைக் களம் போர்க் களம். அடுத்த நொடிக்கான தேடலாக கதை நகர்கிறது. விவரிக்க முடியாத அதிரடியின் தொடர் சரவெடியுடன் வெடித்து தள்ளுகிறது கதை.

    *79 ஆம் பக்கத்துடன் கதையில் இரண்டாம் அத்தியாயம் முடிகிறது*.

    கதையின் பக்கம் 80 முதல் 93 வரை இரண்டாவது கிளைமேக்ஸ் மற்றும் அடுத்த கதையின் விதை, துணை கதாபாத்திரம் அறிமுகம். இதை எதிர்பார்க்கவில்லை.

    பல வருடங்கள் கழித்து.. மகனை தாயும், தாயை மகனும் சந்திக்கும் களம்..

    ஏட்டு ஏகாம்பரம் கதாபாத்திரத்தில் சொல்வது போல்,
    தாய்ப்பாசத்தில் தாயை கட்டிப்பிடித்து கதற வேண்டியது இருக்கும், கண்ணீரால் தாயின் கால்களை கழுவ வேண்டியது இருக்கும் என நினைத்தால்...

    மூன்றாவது கிளைமேக்ஸ் பக்கங்கள் காத்துள்ளன. வேட்டையன் ஜாரோப்பிற்கு இன்னும் கவனத்தை கற்றுக் கொடுக்கும் அதிரடியான சரவெடியான இறுதிப் பக்கங்கள் பக்கங்கள்.

    *வேட்டையன் ஜாரோப்* அடுத்த கதை எப்போது வரும் ? ஆவலுடன்...

    ReplyDelete
  38. பூம்.. பூம்.. பூம்..
    100 பூம்ஸ் .. 😘👍

    தீபாவளி மலர்கள்..😘🥰💐
    இந்த வருடத்தின் மிக பெரிய பூம்..👍👌

    ReplyDelete
  39. ஆறு நாட்கள் வெளியூரில், நெருங்கிய சொந்தத்தில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்ததால், இன்று இரவு தான் வீடு திரும்பி கொரியர் பார்சல் பிரிக்க முடிந்தது. CD டிஸ்க் வடிவில் பன் கிடைத்தது. சுவை அருமை. புத்தகங்கள் மேலோட்டமான பார்வை மட்டுமே. அற்புதமான மேக்கிங் முதல் முறையாக டெக்ஸ் ஸ்லிப் கேஸில். சூப்பர்.

    ReplyDelete
  40. தீபாவளி ஸ்பெஷலில், முதலில் படிக்க எடுத்தது ஜாரோப்பின் வேங்கை என்றும் உறங்காது. இந்த வேட்டையன், ஒரு நெகடிவ் ஹீரோ. ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பு. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம பேரரசர் மார்க்கஸ் ஔரெலியஸ் அவர்களின் கூற்றுகள் கதை முழுவதும் அங்கங்கே அழகாக கையாளப்பட்டிருந்தது. யுத்தத்தில் எவனுமே யோக்கியனில்லை என்ற வரியும், கோபத்திற்கான காரணங்களை காட்டிலும் பன்மடங்கு கொடூரமானவை அதன் விளைவுகள்! என்ற வரியும், இன்று உலகில் நடக்கும் யுத்தங்களை நினைவு படுத்துகின்றன. சித்திரங்களும், வண்ணங்களும் அட்டகாசம். கதை முடிந்தது என்று நினைக்கையில், கதையின் துவக்கத்தை முடிச்சு போட்டு ஒரு திருப்பம்.... அடுத்த கதை எப்போது என்று எதிர்பார்க்க வைக்கிறது.... நல்ல விறுவிறுப்பான கதை...

    ReplyDelete
  41. *வணக்கம் நண்பர்களே*

    *காமிக்ஸ் எனும் கனவுலகம்*

    *போட்டி எண் 32*

    *இது ஒரு வித்தியாசமான விமர்சனப்போட்டி..*

    *நவம்பர் 2024 முதல் ஏப்ரல் 2025 வரையிலான ஆறு மாதங்களுக்கும் லயன்.. முத்து.. V காமிக்ஸ் உள்ளிட்ட சந்தா இதழ்கள் அனைத்திற்கும் வெளியான அந்தந்த மாதத்தின் 15ஆம் தேதிக்குள் விமர்சனம் எழுதிட வேண்டும்*

    உதாரணமாக..

    நவம்பர் 2024 இதழ்கள் ஏற்கனவே உங்கள் கைகளில் இருக்கும்.. (தீபாவளி மலர்கள்)..! அவற்றிற்கு நவம்பர் 15க்குள் விமர்சனம் எழுதிட வேண்டும்.! அதேபோல டிசம்பர் இதழ்களுக்கு டிசம்பர் 15 க்குள் விமர்சனம் எழுதிட வேண்டும்.! இதே மாதிரி ஏப்ரல் 2025 வரை தொடர்ந்து அனைத்து இதழ்களுக்கும் விமர்சனம் எழுதிட வேண்டும்.! இடையில் ஏதேனும் இதழ்களின் விமர்சனம் தவறினால் போட்டியாளர்கள் தகுதி இழக்க நேரிடும். எனவே தவறாமல் அனைத்து சந்தா இதழ்களுக்கும் விமர்சனம் எழுதிடல் அவசியம்.!

    சந்தாவில் இல்லாத ஷ்பெசல் இதழ்கள்.. அதாவது.. புக்ஃபேர் ஷ்பெசல் & எலக்ட்ரிக் 80 & ஆன்லைன் புக்ஃபேர் ஷ்பெசல் போன்ற சிறப்பு இதழ்கள் போட்டியில் கிடையாது.!

    **இந்தப் போட்டி காமிக்ஸ் எனும் கனவுலகம் வாட்ஸ்அப் குழுவினருக்கு மட்டுமே.. வெளி நண்பர்கள் கலந்துகொள்ள இயலாது.!*

    உங்களின் விமர்சனங்களை *கனவுலகம் விமர்சன போட்டி* என்று குறிப்பிட்டு கனவுலகம் வாட்ஸ்அப் குழுவில் பதிவு செய்ய வேண்டும்.! கனவுலகம் மற்றும் இதர முகநூல் குழுக்களிலும் பகிரலாம்.. காமிக்ஸ் எனும் கனவுலகம் வாட்ஸ் அப் குழுவில் பதியப்படும் விமர்சனங்கள் மட்டுமே போட்டிக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.!

    போட்டி இப்போதிருந்தே.. இந்த நொடியில் இருந்தே ஆரம்பமாகிறது.!

    *ஆறு மாதங்களும் தவறாமல் அனைத்து சந்தா இதழ்ளுக்கும் விமர்சனம் எழுதி நல்ல மதிப்பெண்கள் வாங்கும் நண்பர்களுக்கு (எத்தனை வெற்றியாளர்கள் என்பது போட்டியாளர்களையும் மதிப்பெண்களையும் பொறுத்து தீர்மானிக்கப்படும்) மே 2025ல் வெளியாகவிருக்கும் ஆன்லைன் புக்ஃபேர் இதழ்கள் அனைத்துமே பரிசாக அளிக்கப்படும்.!*

    இந்தப் போட்டிக்கான நடுவர்கள் வழக்கம்போல ரகசியமாக நம்முடனேயே இருப்பார்கள்..! வழக்கம்போல போட்டி முடிவில் நடுவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.!

    முன்கூட்டிய வாழ்த்துகள் நண்பர்களே..

    🥰💐🥰💐🥰




    ReplyDelete
    Replies
    1. தட்டுறோம்
      தெறிக்க விடுறோம்.

      Delete
    2. கிட் பட்டய கிளப்புறீங்க...ஆசிரியருக்கிணையானது உங்க தவிப்பு மட்டுமல்ல...செயலுமே...வெல்லுங்கள்...அப்பதான் எங்களுக்கும் குண்டுபொக்கிஷங்கள் கிடைக்கும் ஆசிரியர் வெளியீட்ட பெருக்க

      Delete


  42. இக்கதையின் பிடியில் துவக்கத்திலிருந்தே சிக்க வைத்தது அந்த வண்ணங்கள் தான்...
    அதனோடு மோதும் காட்சிகள் ...நமது எண்ணங்கள்...
    ஹிட்லரின் வெறியாட்டத்தை காட்டிலும் கொடியது அவன்தூவிய விதைகள்...அந்த குடும்பம் கொல்லப்படும் ஒரு காட்சியே போதும்....அந்த கொல்லப்படா இளம்பெண் ஓநாய்களுக்காக...ஆனால் இங்கே அவள் தற்கொலை செய்யும் போது ஒரே செய்தியை தருகிறாள்....வேட்டையாடு அல்லது இரையாகு....வேட்டையன் வந்துவிட்டான் உங்களை பழிவாங்க என நிம்மதியா சாகிறாள்....யுத்தம் ஒரு சாதாரண செய்தியாக பார்க்கும் போது ...பாதிக்கவில்லை...ஆனால் இக்கதையில் யுத்தகளத்தில் நிற்கும் போது தற்கொலையை தவிர வழியில்லை என் போல் மனங்கொண்டவர்க்கு....யுத்தத்தை நினைத்தால் இப்பவே பீதி கிளம்புது...பாவம் யாராவது நிறுத்துங்களேன் என ஓலமிடுகிறேன் ...அவர்கள் காதுகளுக்கு எட்டாது எனத் தெரிந்துமே...பூர்வீக மக்கள் தங்களிடம் வலுவில்லாமல் ஆயுதங்களால் போராடும் போதும்...வலுவானவனானாலும் அவனும் அடிவாங்கித்தானே தீர்வானெனும் போதும்...ப்ளீஸ் யாராவது சண்டைய ஒழிக்க வாருங்களேன் எனக்கூறி மரணித்தே போகிறேன் நானும் பல ஈனஸ்வரமான குரல்களோடு வரலாற்றை படிக்காதவர்கள் வாழ்ந்து ஒழியுங்கள் என்றே...


    ஆனா ...ஆனா....தொடரத் தொடர...


    கோபத்திற்கான காரணத்தைக் காட்டிலும் பன்மடங்கு மோசமானது அதன் விளைவுகள்....


    இந்த வரிகளைப்படிக்கும் போது நானும் வேட்டையனாக இயலுமா....இக்கதையை ஏற்றுக்கொள்ள முடியுமா என கேள்விகள் தவிடுபொடியாகிப் போனது....

    தாயை கொள்வானா ஒருவன்....பாவம் பெத்த பிள்ளைகளை வீசியெறிவாளா தாய்...விலங்குகளுக்கு கூட தாய்மை உணர்வை வைத்துள்ளானே இறைவன்...ஆனால் சில விலங்குகள் உணவுக்காக தன் குட்டிகளையும் தின்று வாழுமே....வேட்டையாடி மாறு அந்த அரக்கப்பிடியிலிருந்து தப்பி ஓடாமல் எதிர்த்து கொன்றொளி....வேட்டையாட தகுந்த காரணம் கிடைத்து விட்டது...ஓடாதே துரத்து...வேட்டையாடி சாவு


    வேட்டை வேட்டை இவ்வலகமே வேட்டைக்காடு....அந்த ஆயுதத்தை தருபவளும் தாய்மையுணர்வு கொண்ட பெண்தானே...அந்த ஒரே ஆயுதத்தால் உலகத்தையே பொசுக்கி விடுவோமா...கோபம் என்னுள்ளே இயலாமையோ....


    உறங்கிக் கொண்டிருக்கும் என் மகன்களை பார்க்கிறேன்...வாழ்ந்து அலுத்து விட்டோமோ...சிறுவயதில்தான் எவ்ளோ உற்சாகங்கள் தேடல்கள்.விளையாட்டுகள்...அந்த சுகத்தை வசந்தத்தை என் பிள்ளையும் அனுபவிக்க வேண்டாமா...பாவம் விட்டுவிடுவோம் இவ்வுலகத்தை...வேட்டையாடு வோம் உலகை சுடுகாடாக மாற்றத் துடிக்கும் தேவையற்ற எண்ணங்களை...எனக்கு என்ன வேண்டுமென நினைக்கிறோமோ அதுவே அவனுக்கும் வாய்க்கட்டுமே...இதை விட அழகான வரிகளை யாரும் தர முடியாதே

    ReplyDelete
    Replies
    1. // தாயை கொள்வானா ஒருவன்....பாவம் பெத்த பிள்ளைகளை வீசியெறிவாளா தாய்...விலங்குகளுக்கு கூட தாய்மை உணர்வை வைத்துள்ளானே இறைவன்...ஆனால் சில விலங்குகள் உணவுக்காக தன் குட்டிகளையும் தின்று வாழுமே....வேட்டையாடி மாறு அந்த அரக்கப்பிடியிலிருந்து தப்பி ஓடாமல் எதிர்த்து கொன்றொளி....வேட்டையாட தகுந்த காரணம் கிடைத்து விட்டது...ஓடாதே துரத்து... //

      உண்மை.

      Delete
    2. நீ பாட்டுக்கு கிளம்பிடாதல மக்கா...நாடு தாங்காது ....உன்னோட காட்டுலயே வேட்டையாடு அந்த இறைசிந்தனையோடு

      Delete
  43. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய கதை....அது தரும் உணர்வுகளும்...செம சார்...ஹீரோக்களுக்கு ஹீரோயின்களுக்குஅதாவது லார்கோகளுக்கு ரூபின்களுக்குகூட மதிப்பில்லை இப்போது என்னுள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் சார் தமிழேற்காத தாய்மை குறித்த இக்கதைய துணிச்சலாக வேட்டையாடி எங்களுக்கு இரையாக படைத்தமைக்கு

      Delete
    2. // தமிழேற்காத தாய்மை குறித்த இக்கதைய துணிச்சலாக வேட்டையாடி //

      செமலே மக்கா 👌

      Delete
  44. கானகத்தில் கறுப்பு நிழல் :-

    எவ்வித குழப்பங்களும் இல்லாத தெளிவான நேர்கோட்டுக் கதை..! இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி இருந்தால் மிஸ்டர் நோ இதைவிட பயங்கர வரவேற்பை பெற்றிருப்பார் (இப்போதும் குறைந்துவிடவில்லை)..!

    அமேசான் காட்டில் இஷ்டத்துக்கு வேட்டையாடித் திரியும் கரும்புலி ஒன்றை.. டாக்குமென்ட்ரிக்காக வீடீயோ எடுக்கவேண்டி உயிரோடு வைத்திருக்க நினைக்கும் லோலா மற்றும் மிஸ்டர் நோ கும்பலும்..

    அதை வேட்டையாடிக் கொன்று பெருமை தேடிக்கொள்ள முயலும் மெலனியின் ஆத்துக்காரர் பிரான்ஸிஸ் மற்றும் க. காதலன் ரோட்ரிகோ கும்பலும்..

    அந்தக் கரும்புலியை மரணத்தின் கறுப்பு நிழல் என்று அதனைக் கொன்றோ அல்லது அப்புறப்படுத்தியோ தங்களது உயிர்களை காப்பாற்றிக்கொள்ள விரும்பும் காட்டுவாசிகள் கும்பலும்..

    ஆக மொத்தம் ஒற்றைப்புலிக்கு எதிராய் மும்முனை தாக்குதல்.. ஆனால் அத்தனைபேருக்கும் கடைசிவரை பெப்பே காட்டும் கில்லாடி ஜாக்குவார்தான் கதையின் முக்கிய பாத்திரம்.!

    மிஸ் லோலா ஒரு சில கோணங்களில் பார்ப்பதற்கு P K படத்தின் ஜகத்ஜனனி (அனுஷ்கா ஷர்மா.. தற்போது அனுஷ்கா கோலி) போலத் தெரிகிறார்..
    கறுப்பு வெள்ளையிலும் கவர்ச்சியாக இருக்கும் மெலனி கதையோட்டம் போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறார்..!
    மெலனியின் கணவனுக்கும் கள்ளக்காதலனுக்கும் நடக்கும் பனிப்போரில் கணவனே ஜெயிக்கிறான்.. அந்த இடத்தில் ஏனோ ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது.. (பின்னே சும்மா சும்மா கட்டிப்புடிச்சா கோவம் வராதா..?).!

    அமேசான் காட்டில் புலியா..?! அதெப்படி திமிங்கலம்.. அப்படின்னு என்னைமாதிரியே யோசிக்கும் அனைவருக்கும் மிக லாஜிக்கலான காரணம் கதையில் இருக்கு.!

    க்ளைமாக்ஸ் ரொம்பவே நெகிழ்ச்சி..!

    திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. . மயிர்கூச்செறியும் சம்பவங்கள் இல்லை.. சென்டிமென்ட் சோதனைகள் இல்லை.. ஆனாலும் அருமையான பொழுதுபோக்கும் மன அமைதியும் நிச்சயம்..!

    ரேட்டிங் 8/10

    ReplyDelete
  45. *சாதிப்பாரா ஜாரோப்* ..???

    இன்று ஒரு முக்கிய பணி நிமித்தம் கருவூலம் சென்றிருந்தேன் பணியில் இருந்த அலுவலர் ஒருவரிடம் புத்தகங்களைப் பற்றி ஓரிரு நிமிடங்கள் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மகன் 12 வயது., நரிடோ,மங்கா புத்தகங்களை டிவி கார்ட்டூன் மூலம் அறிந்து தற்பொழுது வாசிக்கிறாராம்.. டிவி செல்போன் மோகத்திலிருந்து பையனை விடுவிக்க புரியாமல் தடுமாறுகிறாராம்.

    நான் இம்மாத தீபாவளி வெளியீடு கதை புத்தகங்களை அனைத்தும் கையில் வைத்திருந்தேன் .அவரிடம் மூன்று கதைகளையும் கொடுத்து தங்கள் பிடித்து கதைகளை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது அனைத்துமே கூட எடுத்துச் செல்லுங்கள் தங்கள் மகனை படிக்க சொல்லிப் பாருங்கள் என தந்தேன். நான்கு புத்தகங்களையும் பார்த்துவிட்டு உள்ளேயும் புரட்டிப் பார்த்து,

    *வேட்டையன் ஜாரோப் வேங்கை என்றும் உறங்காது* புத்தகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அவனுக்கு இது மாதிரி கதை புத்தகங்கள் மீது ஆர்வம் இருந்தால் அடுத்த வருட சந்தா தொகையை உடனே கட்டுகிறேன் என கூறியுள்ளார்.

    அந்த சிறுவனை, நமது வாசகர் ஆக்க.. *வேட்டையாடுவாரா ஜாரோப்*

    *சாதிப்பாரா ஜாரோப்* ???

    *ஜெய் ஜாரோப்*

    ReplyDelete
  46. Zaroff 12/10 (yes guys Exceeds Expectations. Like Thillu Mullu). Tex as usual 10/10 (10000 wala!). Mr No. May be 6/10 (Sorry I can't go with this usual storyline).

    ReplyDelete
  47. வேங்கை என்றும் உறங்காது...!


    நடுங்கும் ரஷ்ய பனி மண்டலத்தில், நடுங்காமல் வேட்டையாடுகிறான் வேட்டையன் ஜாரோப்!

    இந்த கதையில் ஜாரோப்பின் குடும்ப பின்னணி பற்றி இன்னும் கொஞ்சம் தகவல்கள் கிடைப்பதுடன், அவனுடைய தனிப்பட்ட குணம் பற்றியும் தகவல்கள் கிடைக்கிறது.

    மின்னல் படையினரின் இரண்டாம் உலகப் போர் கால சாகசங்களை நினைவுபடுத்தும் வகையில், இந்த கதையிலும் இரண்டாம் உலகப் போர் காலகட்டம் கண் முன்னே முழு வண்ணத்தில் பளீரென்று தெரிகிறது.

    அமெரிக்காவின் ஸ்டான்பரோவில் தொடங்கி ரஷ்யாவின் மாஸ்கோ அருகிலுள்ள ஆராய்ச்சி மையம் வரை களம் விரிகிறது.

    ஒரு மீட்பு பணி, அதற்குள் ஜெர்மானியர்களுடன் சிறியளவிலான வேட்டை, அமெரிக்கா திரும்பிய பின்னர் குடும்பத்தில் வேட்டை, கதை முடியும் தருவாயில் தொடங்குகிறது இன்னொரு வேட்டை! ரிலே ஓட்டம் போல தொடர்ச்சியாக படு வேகத்தில் செல்லும் களத்தில், மன்னர் மார்கஸ் அரெல்லியஸ்ஸின் வார்த்தைகள் அனல்!

    ஹிட்லரின் படைகள் ரஷ்யாவை நோக்கி படையெடுத்து செல்லுதல்,

    போரில் நேரடியாக ஈடுபடாமல் அமெரிக்கா நேச நாடுகளுக்கு உதவுதல்,

    செங்கோடியை காக்க, ரஷ்ய கிராமத்தினர்கள் கண்ணி வெடிகளை வழியெங்கிலும் வைத்தல்,

    வீட்டில் இருந்த ஒவ்வொரு ஆண்மகனும், ஜெர்மானியர்களின் தாக்குதலில் பலியாகி விட்டார்கள் போன்ற சூழல்கள்

    அணு ஆயுதம் / பனிப்போர் உருவாகும் பின்னணியில் ரஷ்ய - அமெரிக்காவின் போட்டி பொறாமைகள்

    என கதை முழுவதும் போர்க்களத்திலேயே நடந்தாலும், *அத்தனையையும் தூக்கி சாப்பிடுவதாக அமைந்துள்ளது ஜாராஃபின் வேட்டைக்களம்!*

    *10/10!**

    ReplyDelete
  48. ஜாராஃப். வந்தவுடனே அதிர்வலைகளை சிலர் ஏற்படுத்துவர் (தாத்தாஸ், டெட்வுட் டிக், ஜேசன் பிரைஸ், அன்டர்டேக்கர், பவுன்சர், மேகி, டைகர்,). சிலர் பழகப்பழக தான் பிடிக்கும் (ஸ்டெர்ன், சோடா, ரூபின், ஜெரேமயா, கமான்சே). சிலர் மௌனமாக சாதிப்பர் (லக்கி லுக், சிக்பில், டேங்கோ). ஆனால் சிலர் முகத்தை பொளேர் என சாத்துவர் (க்ரீன் மேனர், பாரகுடா, தேவரகசியம் தேடலுக்கல்ல, ஒற்றை நொடி ஒன்பது தோட்டா, ரஷ்ய பனி கிராபிக் நாவல், சைபீரிய கிராபிக் நாவல், கருப்பர்கள் கிராபிக் நாவல், இன்னும் பல). கடைசி வரிசையில் தான் ஜாரோஃப். முதல் இஷ்யூவை படித்த பின் இங்கே நடந்த பயங்கர குதூகல டிச்க்ஷனே சாட்சி. நமக்கு ஒரு ஆள் கிடைச்சிடாண்டோய் என எல்லோரும் கூத்தாடிய நாட்கள் அவை. என்னதான் இருந்தாலும் மொட்டை சத்யராஜ் வில்லனை மறக்க முடியுமா? இந்த மூன்றாவது இஷ்யுவில், ஜாரோஃப் உண்மையாகவே உலகை காப்பாற்றும் ஹீரோ ஆகிறான். அவன் செய்யும் விஷயங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு லாஜிக்கும் இருப்பதாலேயே ஒரு ஸ்டாராக நம் மனதில் உயர்கிறான். கடைசியில் அவன் நமக்கு தரும் ஒரு கிஃப்ட்-அவனை விட உக்கிரமான ஒரு வாரிசு. ஆகா, நன்றி ஜாரோஃப். வேட்டை தொடரட்டும்.

    மிஸ்டர் நோ, எங்களுக்கெல்லாம் பிடித்திருப்பது ஆச்சரியமே இல்லை. ஒரு அட்வென்ச்சர், ஆக்ஷன், பரபரப்பு இருக்கும் எந்த இதழும் அதிகம் சோடை போனதில்லை. நடக்கும் காலமும், நாம் சிறுவயதில் இருந்த காலம் போன்றே இருப்பதால், நமக்கு ரிலேட் செய்ய முடிகிறது. ஆனால் ஜூனியர் எடிட்டருக்கு நமது ரசனை எப்படித்தெரியும் என்று தான் தெரியவில்லை. கொஞ்சம் யோசித்தால், சிங்கத்தின் கரெக்டான வாரிசு தான் அவர் எனத்தெரிகிறது. உண்மையாகவே ஜிம் கார்பெட் நாவல் படித்த உணர்வை மிஸ்டர் நோ தருகிறார்.

    ReplyDelete
  49. எடிட்டர் சார் மற்றும் லயன் காமிக்ஸ் அலுவலக ஊழியர்கள் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்🎆🎇🎆🎇🎆🧨🧨🧨🧨🧨🧨🧨💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  50. சார் நாளை தீபாவளி ஸ்பெஷல் பதிவு. ஆவலுடன் வெயிட்டிங்.

    ReplyDelete
  51. சார் சும்மா பொசுக் பொசுக்னு வெடிப்பீங்க...ஊரே வெடிச்சிட்டிருக்கு...நம்ம வானம் மட்டும் அமாவாசை இருள்ள கிடப்பது போலருக்கே....சீக்கிரம் வெடிய போட்டு இருள கிழிங்க

    ReplyDelete
  52. எடிட்டர் சார் எப்படியும் தீபாவளி நாளில் நம்மை ஒரு மணி நேர வீடியோ பதிவில் குஷிப்படுத்துவார் என ஒரு பட்சி சொன்னது...

    ReplyDelete
  53. @Edi Sir.. 😘🥰

    தங்களுக்கும் அண்ணிக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா ..🧨❤️‍🔥💥🧨🎉

    ReplyDelete
    Replies
    1. Edi சாரா? அண்ணாவா?

      Delete
    2. ஆமாங்க ஜி.. 😘🥰

      அவரு நமக்கெல்லாம் அண்ணன்.. 🥰அண்ணன்களுக்கெல்லாம் அண்ணன்.. 😘🥰

      🙏🙏🙏🧨🧨🧨🧨🧨

      Delete
  54. ஆசிரியர் சார் ,நம்ப அலுவலக பணியாளர்கள் மற்றும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  55. 150####


    அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  56. ஆசிரியர் அவர்களுக்கும் அவரது குடும்பத்தார்களுக்கும் லயன் முத்து காமிக்ஸ் இல் பணிபுரியும் அன்பான தொழிலாளர் உறவுகளுக்கும் சின்னமனூர் சரவணனின் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  57. Happy deepavali wishes to editor and all our friends

    ReplyDelete
  58. ஆசிரியர் அவர்களுக்கும்..குடும்பத்தினருக்கும்..அலுவலக ஊழியர்களுக்கும் காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி திரு நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  59. கானகத்தில் கறுப்பு நிழல்


    வி காமிக்ஸ் இந்த முறை தீபாவளி மலராக கெத்தாக கொத்தாக ஜொலிக்க மிஸ்டர் நோ வுடன் நாமும் கானகத்தில் களம் இறங்கிய அனுபவம்...

    காட்டிலோ பழங்குடியினரைகொன்று புசிக்கும் கொடிய மிருகம் ...ஒரு பக்கம் விலங்குகளை கொல்வது தவறு என்ற கொள்கையுடன் அதன் நடமாட்டத்தை.. வேட்டையை மட்டும் படம் பிடிக்கும் நாயக கூட்டம்..இன்னொரு பக்கம் அதனை கொன்று... தான் சிறந்த வேட்டைக்காரன் என்ற பெயரை பெற வேண்டும் என்ற வேட்கையோடு அதனை கொல்ல துடிக்கும் ஒரு கூட்டம்..

    இறுதியில் அந்த கொடிய விலங்கு என்னவானது என்பதை நாமும் அந்த கானகத்தினுள்ளே உள்ளே அச்சத்துடன் உலவ வைத்து விட்டது இந்த கானகத்தின் கறுப்பு நிழல்..

    புலி வேட்டையுடன் ஓர் குடும்ப நிகழ்வும்..புலிக்கு சிறையா என பரிதாப்படுபவரே புலியால் வேட்டையாடப்படுவதும்...புலியை கொல்ல கூடாது என்பவரே புலியை கொல்ல ஆயுதத்தை தூக்குவதும் என கதையில் நிகழும் மாறுதல்கள் நிஜ வாழ்வை பிரதிபலிக்கிறது...மாற்றம் ஒன்றே மாறாதது அல்லவா எனும்படி...

    இறுதியில் மிஸ்டர் நோ மிக பரபரப்பாக கிளம்ப வந்த கதையில் தான் திடுக் திருப்பமோ என நினைக்க அது அவரின் அடுத்த சாகஸத்திற்கான திடுக் திருப்பம் என அறிந்து புன்னகையை பூக்க வைத்தது..

    மிஸ்டர் நோ ஐயம் வெயிட்டிங்...

    ReplyDelete
  60. சேலம் மாநகரில் நவம்பர் 29-ல் புத்தக விழா...
    🥰😘💐🙏😄😄😄🧨🧨🧨🧨

    ReplyDelete
  61. நவம்பர் லேயே "Electric'80" வந்துடும்.. 🧨😘🥰💐🧨🧨🧨🧨

    ஐ.. ஜாலி.. ஜாலி.. 😘🥰🧨🧨🧨🧨

    ReplyDelete
  62. நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🧨🧨🧨🧨🧨

    ReplyDelete
  63. ஆசிரியர் அவர்களுக்கும்,
    தங்களது அலுவலக நண்பர்களுக்கும் -
    காமிக்ஸ் ரசிகர்களுக்கும் இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  64. ***** கானகத்தில் கறுப்பு நிழல் ****

    மூன்று தீபாவளி மலர்களில் இன்று 'கானகத்தில் கறுப்பு நிழல்' கதையைப் படித்தேன்! 30 வருடங்களுக்கு முன்பு ஒரு தீபாவளிப் பொழுதில் வெளியாகி இருக்க வேண்டிய கதை! அன்றைக்கு வெளியாகி இருந்தால் இன்றைக்கு ரசித்திருப்பதை விட பல மடங்கு அதிகமாக ரசித்திருக்கலாம்!
    கதையில் வரும் அந்த கரும்புலிக்கு 'டெக்ஸ்' என்று பெயர் வைத்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், எத்தனை பேர் சேர்ந்து சுற்றி வளைத்துச் சுட்டாலும் ஒரு தோட்டா கூடப் படாமல்
    லாவகமாகத் தப்பி விடுகிறது - ஒவ்வொரு முறையும்!

    கரும்புலியை வேட்டையாட மறைவிடத்தில் காத்திருக்கும் தருணத்தில் கூட அனைவரும் பேசியே கொல்கிறார்கள்! 180+ பக்கங்களுக்கு கதை நீண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே பலமுறை புலியை கோட்டை விடுகிறார்கள்! 100 பக்கங்களில் கதையை முடித்து இருந்தால் இன்னுமே ரசிக்கும்படி இருந்திருக்கும்!

    மிஸ்டர் நோவின் கடந்த சாகசமான 'பாலையில் ஒரு போராளி' வித்தியாசமான கதையாக ரொம்பவே ரசிக்கச் செய்திருந்தது!

    இந்த கதை நேர்கோட்டு கதைப்பிரியர்களை ரொம்பவே திருப்தி படுத்தக்கூடும்!

    ReplyDelete
    Replies
    1. // 100 பக்கங்களில் கதையை முடித்து இருந்தால் இன்னுமே ரசிக்கும்படி இருந்திருக்கும்! //

      +1

      படித்து முடித்த பிறகு எனக்கும் இதே எண்ணம் தான்.

      Delete
    2. ஏன் இப்ப உனக்கு பேப்பர் தான் சாப்பாடாலே 😁

      Delete
  65. ...வேங்கை என்றும் உறங்காது...
    அருமையான த்ரில்லர் பாணியிலான கதை.
    அற்புதமான, மிரட்டலான சித்திரங்கள்.
    ரஷ்யாவிலிருந்து அணு விஞ்ஞானியான சினேகிதியை அமெரிக்காவுக்கு கடத்தி வரும் கட்டாயமான அசைன்மெண்ட் மனித வேட்டையன் ஜாரோப்புக்கு. அதை அவர் செய்து முடிக்கும் ரணகளமான,வித்தியாசமான கதை.
    முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. அடுத்த ஆல்பத்திற்கு வெயிட்டிங்.

    ReplyDelete
  66. This comment has been removed by the author.

    ReplyDelete
  67. .பனி மண்டல போராளிகள்..
    அமெரிக்க குளிரிலிருந்து வந்த சில தினங்களிலேயே ஆர்க்டிக் குளிரில் டெக்ஸ் டீமுடன், என்னையும் நடுங்க வைத்துவிட்டார் ஆசிரியர்.
    1800 களில் காணாமல் போன எரபஸ், டெரர் கப்பல்களை தேடி பயணம் மேற்கொள்ளும் ஒரு குழு,
    அவர்களை தேடிச் செல்லும் டெக்ஸ் வில்லர் குழு.
    முதல் குழுவில் உள்ளவர்களுடன்
    சென்ற தன் காதலியை தேடி அதே வழியில் செல்லும் காதலன் மைக். தன் குடும்பத்தையே அழித்த பனிக்கரடியை அழித்தே தீருவது என்று இவர்களை பின் தொடரும். வேட்டையன் டோர்னுக்.
    இவர்களை வேட்டையாட வரும் நரமாமிசம் உண்ணும் பனி மண்டல மனிதர்கள், என பல வகையான கோக்டர்கள். இவர்களை வைத்து பின்னப்பட்ட அருமையான விறுவிறுப்பான கதை.
    அற்புதமான ஓவியங்கள். பனிப்பிரதேச காட்சிகள் அருமை. ஒரு சிறு உறுத்தல்.
    அடிக்கடி வரும் இழவு எனும் வார்த்தை பிரயோகம்.
    அதை தவிர்த்திருக்கலாம்.
    தீபாவளிக்கு அற்புதமான வாசிப்பு அனுபவததை அளித்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்கள்

    ReplyDelete
  68. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  69. தீபாவளி ஸ்பெஷலில், கடைசியாக டெக்ஸ் & கோ - வின் " பனி மண்டலப் போராளிகள்" புத்தகத்தை படித்தேன். டெக்ஸ் கதைகளில் இது தனி முத்திரை பதிக்கும். பொதுவாக டெக்ஸ் கதைகளுக்கு நேர் கோட்டு கதைகள் என்ற விமர்சனம் உண்டு. அந்த விமர்சனத்தை உடைத்து எறிந்திருக்கிறது இந்த கதை. டைகர் ரசிகர்களுக்கு ஒரு இரத்த கோட்டை போல, டெக்ஸ்‌ ரசிகர்களுக்கு இந்த கதை இருக்கும்.

    இந்தக் கதையில் டைகர் ஜாக்கின் பங்கு அதிகம்.

    முதல் புத்தகம் முடியும் இடம், ஒரு‌ விறுவிறுப்பான‌ திரைப்படத்தின் இடைவேளைக்கு கொஞ்சமும் சளைக்காது.

    முன்னுரையில் ஆசிரியர் கூறியது போல, கதை ஐந்து தடங்களில் பயணித்து ஒரு புள்ளியில் இணைகிறது. முழுமையான நல்லவனாகவோ, முழுமையான கெட்டவனாகவோ யாரும் இருப்பதில்லை என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தி சொல்லியிருக்கிறார்கள். சூழ்நிலைக்கேற்ப மனிதர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். மன்னித்தல் என்னும் மாபெரும் இயல்பு, கதை முழுவதும் ஊடே வெளிப்படுகிறது.

    வர்த்தகம் மற்றும் நாடு பிடிக்கும் ஆசைகள் தான் புதிய வழிகளை கண்டு பிடிப்பதில் முக்கிய குறிக்கோள் என்றாலும், அந்த வழிமுறையில் நம் முன்னோர்கள் இழந்தது ஏராளம். அவர்களை குற்றம் சொல்லுவதற்கு பல விஷயங்கள் இருந்தாலும், அதன் பயனை நாம் அடைந்து கொண்டிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்கள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கங்களும், நன்றிகளும்.

    புதிய களம், நம்மையும் கூடவே பயணிக்க வைக்கிறது. அந்த கடினமான சூழ்நிலையிலும் வாழ பழகிய இன்யூட் மக்களையும், ஒரு வேளை தெம்பு இருந்திருந்தால் உன்னைக் கடத்திச் சென்றிருப்பேன் என்று கெத்தாக கூறும் டோர்னுக்கையும் மறக்க முடியவில்லை.

    ஒரு முழுமையான அதிரடியான புத்தகம். மீண்டும் படிக்க தகுதியானதும் கூட. A real Diwali treat... Don't miss it...🥰

    ReplyDelete