நண்பர்களே,
வணக்கம். பெரும் வாணவேடிக்கைகளோ, ஆர்ப்பாட்டங்களோ இல்லாததொரு compact சந்தா அட்டவணையினை வழங்கியிருக்கும் சன்னமான திருப்தி என்னுள் விரவி நிற்கின்றது! முன்நாட்களைப் போல வானத்தை எட்டிப் பிடிக்கவெல்லாம் நாம் முயற்சித்திடப் போவதில்லை என்பது எனக்கு இந்தத் திட்டமிடலின் ஆரம்பத்திலேயே புரிந்திருந்தது ! இந்த நொடியின் தேவைஸ் - முழுக்க முழுக்க உங்களின் வாசிப்புகளைக் கோரும் ஆற்றல் கொண்ட படைப்புகளை முன்நிறுத்துவது தான் என்பதால் “கம்பி மேலே நடக்குது ஷாமியோவ்!” என்று வித்தை காட்டும் விஜயேந்திர அவதாரினை எடுக்க முனைந்திடவே இல்லை! தவிர, டின்டின் போலான ஜாம்பவானுமே இன்றைக்கு நமது இருக்கைக்குக் கீழே நெருப்பைப் பற்ற வைத்திடும் ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை எனும் போது “புதுசாய் அதைத் தேடினோம் - இதைத் தேடினோம்" என்றெல்லாம் பல்டிகள் அடித்திடவும் பெரியளவில் பிரயாசை எடுத்திடவில்லை! மாறாக அந்த வித்தை காட்டும் படலங்களை - சந்தாக்களில் அல்லாத தடங்களில் / தருணங்களில் களமிறக்குவதில் உறுதியாக உள்ளோம்! So சந்தாத் தடத்தில் சீராய்ப் பயணிக்கும் “வந்தே பாரத்” எக்ஸ்பிரஸ் மாடுகளோடு மோதலின்றித் தடதடக்க ஒருபக்கம் தயாராகிட -
- Replica இதழ்கள் / க்ளாஸிக் மறுபதிப்புகள் வாகான தருணங்களில் சின்ன ப்ரிண்ட்-ரன்களில் வெளிவந்திடும்!
- And கிராபிக் நாவல்கள்; புதுப் பாணிகளிலான படைப்புகள்; குரங்குக் குட்டிக்கரணங்கள், ஆன்லைன் மேளாவின் போதும், புத்தக விழாக்களின் போதும் களம் கண்டிடும்! ஒரேயடியாய் மரத்தைச் சுற்றி டூயட் பாடும் நார்மலான கமர்ஷியல் கதைக்களங்களாய் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தால், எனக்கே போரடித்துப் போய்விடும் ஆபத்துள்ளது! So “கோக்கோ-மாக்கோ கட்டைவிரலோ காதலியோ” தடமானதும் 2025-ல் மின்னலாய் பளீரிடும்!
அறிவிக்கப்பட்டுள்ள 2025 சந்தாவில் நான் கவனித்த வரைக்கும் தென்பட்ட விசனங்கள் இவையே:
1. V காமிக்ஸ் சேர்த்து மொத்த இதழ்களின் எண்ணிக்கை 32 மட்டுமே!
2. SODA-வைக் காணலை!
3. தங்கக் கல்லறை; இன்னபிற மறுபதிப்புகள் பற்றிய தகவல்கள் லேது!
இவை சகலத்திற்கும் போன பதிவிலேயே பதில் சொல்லியிருந்தேன் தான்! Yet - சுருக்கமாய் ஒரு மறு ஒலிபரப்பு!
“வாசிப்புக்கு நேரம் பற்றலை; புக்ஸ் தேங்குது” என்ற குரல்கள் ஒரு சிறிய நம்பரில் இருந்தாலும், கௌஷிக்கைப் போல குறுக்கும், மறுக்கும் உலாற்றுவதை மறுப்பதற்கில்லை! அந்த இடருக்கு மருந்திடவே எண்ணிக்கையில் சிக்கனம்!
மாறாக வரும் நாட்களில் “வாசிப்புக்கு புக் பற்றலை!” என்ற குரல்களும் ஒலிக்க மட்டும் ஆரம்பிக்கட்டுமே - பழைய பன்னீர்செல்வமாய் விஸ்வரூபமெடுத்து பின்னிப் பெடலெடுத்துப்புடலாம்! நிறைய சமைத்து, நிறைய மீதம் போக வேண்டாமே என்ற அக்கறையில் தான் உலை வைக்கும் பானையில் அரிசியை அளந்து போட நினைத்துள்ளோம்! “பற்றலையே... இன்னுமிருந்தால் தேவலாமே?” என்ற குரல்கள் ஒலிக்க நேர்ந்திட்டால் - rest assured ஜமாய்த்து விடலாம்!
And மறுபதிப்புகள், இனி என்றைக்குமே ரெகுலர் தடங்களில் இடம் பிடித்திடாது - “தங்கக் கல்லறை” போலான blockbuster ஆக இருந்தாலுமே! அவை எப்போதுமே தனியாகவே பயணித்திடும்!
By the way இன்னொரு கொசுறுச் சேதியுமே! “யார் அந்த மினி ஸ்பைடர்?” இதழினை அந்நாட்களில் வெளியிட்ட போது, ஓவரான புய்ப்பக் பக்கங்களை கத்திரி போட்டிருந்தோம்! “இதோ நான் ஆத்தப் போகும் கலைச்சேவையில் கத்திரியின்றி முழுசம் இருக்கும் மகாசனங்களே!” என்று மினி ஸ்பைடரைக் கொண்டு சேவை செய்திட ஒருத்தர் வீறுகொண்டதை நாமறிவோம்! அந்தத் தருணத்தில் நாம் குறுக்கிட்டு மினி-ஸ்பைடர் நார்மலான விலையில் நமது இதழாகவே வெளிவந்திடும் என்று ப்ராமிஸ் செய்திருந்ததையும் மறந்திருக்க மாட்டீர்கள்! இதோ - இங்கிலாந்தில் ஸ்பைரின் தொகுப்புகள் பிச்சு உதறுவதைத் தொடர்ந்து தொகுப்பு # 4-ல் மினி-ஸ்பைடர் அட்டகாசமாய் remaster செய்யப்பட்ட சித்திரங்களோடு ரெடியாகி வருகிறது! So ‘ஜம்‘மென்று மினி ஸ்பைடரை முழுக் கதையோடும் 2025-ல் நம் மத்தியில் சந்தித்திடலாம்!
And சமீபமாய் முகநூலில் ஒரு பின்னூட்டத்தையும் கவனித்தேன் - இங்கே blog-ல் கம்பு சுத்தும் வேகத்தை மறுபதிப்புகளை கலமிறக்குவதில் நான் காட்டுவதில்லை என்று! நண்பர் புரிந்து கொள்ளத் தவறிய சமாச்சாரத்தை இங்கே சுட்டிக் காட்டும் அவசியம் எனக்குள்ளது! வடை சுடும் கல்லா பார்ட்டிகளுக்கு ஒரிஜினல்கள் உயர்தரத்தில் இருக்க வேண்டுமென்ற அவசியங்கள் லேது ; சிக்கியதை ஸ்கேன் செய்து ஈரோட்டு டிஜிட்டல் பிரஸ்ஸில் கொடுத்து பிரிண்ட் போட்டு வாங்கினாலே போதும்! ஆனால் நமக்கோ நிலவரம் அவ்விதமல்ல! இந்த க்ளாசிக் Fleetway கதைகளின் ஒரிஜினல்களை கொஞ்சம் கொஞ்சமாகவே இங்கிலாந்தில் சீர் செய்து டிஜிட்டல் கோப்புகள் ஆக்கி வருகின்றனர்! முத்து வாராமலரில் தொடராய் வந்த மாயாவியின் "ஒற்றைக்கண் மர்மம்" கதை கூட அவர்களது restoration பிராசசில் உள்ளது! So அவை முறைப்படி ரெடியாகும் வரைக்கும் காத்திருக்கத் தேவைப்படும் தான்! "பல் கூசுது" என்ற சொல்லும் மறு நொடியிலேயே ரூட் கேனால் செய்திடவோ, பல்லைப் பிடுங்கிடவோ முனைவதில்லையே நண்பரே?! அதற்கான முன்னேற்பாட்டு அவகாசத்துக்கு காத்திருப்பது இயல்பு தானே? தவிர நமது பிரதானப் பணியான புது இதழ்களின் வெளியீட்டுக்கு நடுவாக்கில் தானே இந்த reprint முயற்சிகளை உட்புகுத்த நாம் முனைந்திட இயலும்? மறு நாளே வடைச்சட்டியை பரணிலிருந்து எடுத்து, மாவை தப்பி, வடைகளை சுடல் சாத்தியம் தான் ஆகிடுமா?
Moving on இந்த நொடியில் ஒளிவட்டத்தை முழுமையாய் கபளீகரம் செய்திட சரமாரியான நமது 3 தீபாவளி மலர்கள் வெயிட்டிங்ங்ங்...! இந்தப் பதிவின் ஹைலைட்டே அவை தான்!! We start with Tex!!
தீபாவளி with டெக்ஸ் ‘24!!
ஆண்டுமலர் வேளைகளென்றால் லக்கி லூக்கின் ஆட்டகளமென்று நிர்ணயமாகியிருப்பதைப் போலவே இப்போதெல்லாம் தீபாவளித் தருணங்கள் ‘தல‘ டெக்ஸின் சாம்ராஜ்ஜியமாகியுள்ளன! வீட்டில் நீங்கள் போடும் பட்டாசுகளுக்குச் சிஞ்சித்தும் சளைக்காத அதிர்வேட்டுக்களை நம்மவர்கள் போட்டுத் தாக்கி வருவது ஒரு காரணமென்றால், டெக்ஸின் positivity பண்டிகைக்குப் பொருத்தமான addition ஆக அமைந்திடுவது முக்கிய காரணமென்பேன்! இதோ இந்த தீபாவளிக்குக் காத்திருப்பதோ ஒரு செம நெடும saga!
“பனிமண்டலப் போராளிகள்!” இதுவுமொரு நார்மலான 224 பக்க டபுள் ஆல்ப சாகஸமே என்ற நினைப்பில் 2022ன் இறுதியிலேயே இதனை வாங்கியிருந்தோம்! And 2023 அட்டவணையில் விளம்பரமும் செய்திருந்தோம்! But கதைகளெல்லாம் வந்து சேர்ந்த பிற்பாடு அலசுகையில் தான் இதன் முழுமையான நீளம் 440 பக்கங்கள் என்பது புரிந்தது! நம்மிடம் முதல் பாதி மாத்திரமே இருந்ததால் பாக்கி 2 அத்தியாயங்களையம் வரவழைத்த கையோடு 2024-ன் தீபாவளி மலராக்கத் தீர்மானித்தோம்! And here we are!!
எத்தனை தான் திட்டமிட மெனக்கெட்டாலுமே ஆண்டின் ஒரு பகுதியில் வேலைப்பளு சற்றே லாத்தலாக இருப்பதும், இன்னொரு பகுதியில் நாக்குத் தொங்கச் செய்யும் விதத்திலும் இருப்பதைத் தவிர்க்கவே முடிவதில்லை! இதுவரையிலுமான நமது கம்பேக் ஆண்டுகளின் சகலத்திலும் இதுவே கதையாக இருந்துள்ளது! நடப்பாண்டிலும் அதே pattern தொடர்ந்துள்ளது - ஆண்டின் கடைசி க்வாட்டரில்!
செப்டம்பரில் 4
அக்டோபரில் 4
அப்புறமாய் அட்டவணை
நவம்பரில் 3 மெகா தீபாவளி மலர்கள் -
என்று அமைந்திட்ட பணிகள் கடந்த சில மாதங்களாகவே என்னை பாம்பு டான்ஸ் ஆடச் செய்து கொண்டிருந்தன! And எல்லாற்றையும் விட மெகா மிரட்டலாய் மண்டைக்குள் வீற்றிருந்ததோ - நம்ம தீபாவளி with டெக்ஸ் தான்; Simply becos 440 பக்கங்கள் எனும் போது, அசாத்தியமாய் பெண்டைக் கழற்றிடும் என்பதில் சந்தேகமே இருக்கவில்லை!
- 440 பக்கங்கள்!
- சராசரியாக பக்கமொன்றுக்கு 5 படங்கள்!
- படமொன்றுக்கு சராசரியாய் இரண்டோ, மூன்றோ வசனங்கள்!
- ஆக இந்த ஒற்றை இதழுக்கு மட்டுமே சுமார் 5000 வசன boxes & பலூன்ஸ்!!
இதனை மொழிபெயர்த்து வரும் நமது டீமின் youngest அம்மணிக்கோ இது கிட்டத்தட்ட 4 1/2 மாதங்களைப் பிடித்த பணி! And நானோ அதனை 'ஏக் தம்'மில் எடிட் செய்திடவும், திருத்தி எழுதவும், மெருகூட்டவும் வேணும்! அதை நினைத்தே கடந்த 1.5 மாதங்களாய் உச்சா போகாத வான்கோழியைப் போலவே ‘திரு திரு‘வென விழித்தபடிக்கே சுற்றிக் கொண்டிருந்தேன்!
“ஆங்... ஒரே நேரத்திலே மொத்தமா வேலைக்கு எடுத்தாத் தானே நோவு? ஒரு நாளைக்கு 20 பக்கம் வீதம் பிரிச்சுப் பிரிச்சுப் பார்க்க ஆரம்பிச்சா 22 நாட்களிலே இம்மி கூட சிரமமின்றி முடிச்சுப்புடலாமே?” என்ற மகாசிந்தனை எங்கிருந்தோ உதிக்க -மைதீனிடம் சொல்லி இருபது-இருபது பக்கக் கத்தைகளாக கதையின் முழுசையும் ஒன்றரை மாதங்களுக்கு முன்னமே வாங்கி விட்டேன்! அவனும் தினத்துக்கு “இன்னிக்கு கோட்டா முடிஞ்சதா அண்ணாச்சி?” என்று கேட்க ஆரம்பிக்க, நானோ - “இன்னைக்கு அஷ்டமி, நாளைக்கு நவமி” இதோ இதோ அடுத்த வாரத்திலே ஆரம்பிச்சுப்புடலாம்” என்று சதாய்ச்சபடியே நாட்களைக் கடத்தியிருந்தேன் - இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியதில் ஆரம்பித்து 20 பக்கங்களைத் தாண்டியபாட்டைக் காணோம் என்ற போது அவனும் கேட்பதையே விட்டுப்புட்டான்! அக்டோபர் இதழ்களும் ரெடியாகி; அக்டோபரின் முதல் வாரமும் பிறந்து; ஓடி முடிந்த போது தான் மெய்யாலுமே உறைத்தது - தீபாவளிக்குக் குறைந்தபட்சமாய் ஒரு வாரத்துக்கு முன்னமே புக்ஸை டெஸ்பாட்ச் செய்தாலொழிய கதை கந்தலாகிப் போகும் என்பது! ஆக மிகச் சரியாக இரண்டே வாரங்கள் அவகாசம் தானிருப்பது புரிந்தது - எடிட்டிங்; பிராசஸிங் & பிரிண்டிங் பணிகளை முடிக்க! ஆராமாய் பிட்டத்தை அத்தனை நாட்களாய் தேய்த்துக் கொண்டிருந்த சேருக்கு யாரோ ஒரு அக்னிச்சட்டியைப் பற்ற வைத்தது போலிருந்தது! To cut a very long story short - இந்த 440 பக்க டெக்ஸ் சாகஸத்தினை நான்கோ, ஐந்தோ நாட்களில் பூர்த்தி செய்தேன் - வெறி பிடித்தவனைப் போல! Phewww... சொல்லி மாளாது அந்தப் பனிமண்டல பணிநாட்களின் உக்கிரத்தை!
ஆர்டிக் துருவப் பனிமண்டலம்!
இந்த பூமியும் சரி, அங்கே வசித்து வந்த இன்யூட் (எஸ்கிமோ) மக்களைப் பற்றியும் சரி, அவர்களது நம்பிக்கைகள் பற்றியும் - மர்ம மனிதன் மார்ட்டினின் “பனிஅசுரப் படலம்” வாயிலாக நாமறிவோம்! அது மட்டுமன்றி ”வடமேற்குப் பாதை” எனப்படும் கடல் பாதையினைத் தேடி ஐரோப்பியர்கள் அந்தப் பனி மண்டலத்தில் பட்ட அல்லல்களையுமே அந்தக் கதை நமக்குச் சொல்லியிருப்பது அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும், பசிபிக் பெருங்கடலுக்கும் மத்தியில் ஆர்டிக் கடல் வழியாக சிதறலாகக் கிடக்கும் தீவுகள் மற்றும் நிலப்பரப்புகள் வழியாக வளைந்து செல்லும் ஒரு கடல் மார்க்கத்தைக் கண்டுபிடித்து விட்டால் ஆசியாவோடு வணிகம் பண்ணிட சுலபமாய் சாத்தியப்படும் என்ற நம்பிக்கையில் வெறியோடு தேடல் நடத்தியது வரலாறு.
அந்த வரலாற்று நிகழ்வை எடுத்துக் கொண்டு நமது ரேஞ்சர்களின் முழு டீமையுமே ஆர்டிக்குக்குக் கொண்டு சென்றுள்ளார் கதாசிரியர்! வழக்கமாய் ஒரு டெரரான வில்லன் இடம்பிடித்த மறுகணமே அந்த ஆல்பத்தில் அனல் பற்றிக் கொள்ள ஆரம்பிப்பது வழக்கம்! இங்கேயோ அந்த வனாந்திர பூமியே அசாத்தியமான வில்லனாய் உருவெடுத்து நிற்க, கதை நெடுக ஒரு திகில் விரவி நிற்பதை உணரலாம்! அண்ட் இது ரொம்பவே சமீபப் படைப்பு என்பதால் கலரில் இன்னமும் தயாராகவில்லை; இல்லையேல் வண்ணத்தில் தாண்டவமாடியிருக்கும் இந்த ஆல்பம்! மிரட்டலான பனி பூமியில் குதிரைகள் லேது; கோவேறு கழுதைகளும் நஹி.. So பயணங்கள் சகலமுமே நடராஜா டிரான்ஸ்போர்ட்டில் தான்!
- டெக்ஸ், கார்சன், டைகர், கிட் வில்லர் மற்றும் கனேடிய போலீஸ் அதிகாரியான ஜிம் ப்ராண்டனும் ஒரு அணியாய் தேடலில் இறங்கிட...
- அவர்கள் தேடிச் செல்லும் அணியோ இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து தனித்தனியாகப் பயணிக்க,..
- அந்த அணிகளில் உள்ள பெண் வேட்டையர்களில் ஒருத்தி கடத்தப்பட்டு, வேறொரு பாதையில் பிரிந்து போக....
- இவை எதையுமே அறியாதவனாய் தன் காதலியை இந்த வனாந்திரத்தில் தேடிடும் கௌபாய் இன்னொரு தடத்தில் நடை போட...
- இவர்களில் யாரைப் புசிப்பது? என்ற பசியோடு அத்தனை பேரையும் பின்தொடர்ந்திடும் ஒரு வெறிபிடித்த கூட்டமும் பயணம் பண்ண...
- இவர்கள் அம்புட்டு பேரையும் பின்தொடரப் போவது நாம்!
மெகா டெக்ஸ் சாகஸங்கள் நமக்குப் புதுசே அல்ல தான்; ஐநூற்றுச் சொச்சப் பக்கங்கள் கொண்ட டைனமைட் ஸ்பெஷலெல்லாம் நமது இடைவாரில் உள்ளதே! ஆனால் இதுவோ முற்றிலும் மாறுபட்டதொரு த்ரில்லர் folks! கூப்பிடு தொலைவில் சிறு நகரங்களது ஷெரீப்கள் கிடையாது; அவசரத்துக்குத் தந்தியடித்து வரவழைக்க இராணுவக் கோட்டைகள் கிடையாது; சொகுசாய்ப் படுத்துறங்கி ஓய்வெடுக்க விடுதிகள் கிடையாது! சுழற்றியடிக்கும் பனிக்காற்றின் மத்தியில் உறைந்து கிடக்கும் ஏரியின் மேல்பரப்பில் தங்களது படகுகளைக் குப்புறக் கவிழ்த்துப் போட்டு விட்டு அத்தனை பேரும் உறங்க முற்படும் போது, வாசிக்கும் நமக்கே நடுக்காது போகாது! அது மட்டுமன்றி இன்யூட் பழங்குடியினரின் நம்பிக்கைகள்; நரமாமிசங்கள் உண்ணும் கொடூரங்கள்; காணாமல் போன ஆய்வுக்கப்பல்களிலிருந்து எழும் அமானுஷ்ய மணியோசைகள் என கதாசிரியர் மௌரோ போசெலி கதை நெடுக திகில் தாண்டவமாடியுள்ளார்! அது மட்டுமன்றி இந்த மண்ணில் ஹீரோயிஸம் காட்டும் நாயகராய் டெக்ஸை சித்தரிக்காமல் - சூழலுக்கேற்ப அனைவரது உதவிகளையும் ஏற்றுப் பெற்று காரியம் சாதிக்க விழையும் யதார்த்த புருஷனாகக் காட்டியுள்ளார். In fact பழங்குடி மைந்தனை டைகர் ஜாக்ருககு இங்கே நிரம்பவே முக்கியப் பொறுப்புகளும் தந்திருக்கிறார்! So ஒரு முன்னாள் பல்லடத்துக்காரர் எம்புட்டு முக்கினாலும் இந்தவாட்டி பாயாசம் போடும் வாய்ப்புகள் செம சொற்பமே என்பேன்!
ஒற்றை வரியில் சொல்வதானால் - இதை மாத்திரமே சொல்வேன் : Folks... என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ தெரியாது; ஆனால் சூட்டோடு சூடாய் இந்த தீபாவளி டமாக்காவை வாசிக்க நேரம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!! முடிந்தால் இரண்டே இரவுகளில் இரண்டு ஆல்பங்களையும் (சு)வாசித்திட முயற்சி பண்ணுங்கள் - ப்ளீஸ்! ஆறப் போட்டுப் படிப்பதும் சரி, தவணை தவளையாய் படிப்பதும் சரி, இந்தக் கதையின் வீரியத்தை ஒற்றை மிடறு மட்டுப்படுத்தி விடக்கூடும்! So “குண்டு புக் லேதுவா பாவா?” என்று “கம்பு சுத்துவோர் கழகம்” களமிறங்கி ஆடித்து ஆட அட்டகாசமானதொரு வாய்ப்பு இது!
And இதோ - 4 ஒரிஜினல் அட்டைப்படங்களும் - தெறிக்கும் வர்ண மெருகூட்டலுடன்! (அந்த economy slipcase ரொம்பவெல்லாம் திடமாய் இராது guys - பக்காவான பொட்டிகள்லாம் இன்று நெருக்கி நூறு ரூபாய் கிரயம் புடிக்குறது 🤕)
Moving on, பணியும், பரபரப்பும், பட்டாசான ஆக்ஷனும் தொடர்கின்றன முத்து காமிக்ஸ் தீபாவளி ஸ்பெஷலிலும்! ஜம்போ காமிக்ஸில் 4 ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த ஜாரோஃப் இன்னொரு ஒன்-ஷாட் அதிரடியோடு வெளிவந்திருக்கிறார் என்பதை அறிந்த நொடியே கதைக்கான உரிமைகளை வாங்கியிருந்தோம்! And பெரிய திட்டமிடல்களெல்லாம் இல்லாமலே - அகஸ்மாத்தாய் தீபாவளி ஸ்பெஷலாகவும் அறிவித்திருந்தோம்! ஆனால் கதையில் இப்படியொரு தெறியான fire இருந்திடக்கூடுமென்பதை சர்வநிச்சயமாய் நான் அறிந்திருக்கவில்லை! உலக யுத்தத்தில் சின்னாபின்னமாகிக் கிடக்கும் பனிக்காலத்து மாஸ்கோ தான் இங்கே கதைக்களம்! And பிறப்பால் ரஷ்யனான ஜாரோஃப் அந்த மண்ணுக்குத் திரும்பச் செல்லும் ஒரு நெருக்கடி எழுகிறது! மனுஷன் பிழைக்கப் போன அமேசான் காட்டிலேயே ராவான ரவுடியாய் ராட்சஸ ஆட்டம் போட்டான்; தனது தாய்மண்ணுக்குப் போகும் போது கேட்கவும் வேண்டுமா? தீபாவளிக்கு நீங்கள் வெடிக்கப் போவதெல்லாம் சும்மா ஜுஜுப்பி என்றாகும் விதமாய் இங்கே கதை நெடுக ஜாரோஃப் ரகளை பண்ணுகிறான்! And ஓவியரும் சரி, கலரிங் ஆர்டிஸ்டும் சரி, லேட்டஸ்ட் பாணிகளில் கலக்கியுள்ளார்கள்! பனி படர்ந்த இரவுகளில் நடக்கும் மோதல்களின் போது வெளிச்சச் சிதறல்கள் ஆங்காங்கே விரவிக் கிடக்கும் sequences ஒரு புது உச்சம்! இதோ – ஒரிஜினல் அட்டைப்படம் & உட்பக்க previews!
Hi
ReplyDeleteவாழ்த்துகள் தம்பி
Deleteநன்றி சகோ 😄
Delete🫰😅
ReplyDelete2Nd
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletePresant sir
ReplyDeleteஅடடே....என்ன ஒரு ஆச்சர்யம் 😹
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteவெற்றி வெற்றி
ReplyDelete😄
Deleteவணக்கம் நண்பர்களே
ReplyDelete10
ReplyDeleteXIII
ReplyDeleteஅடடே....
ReplyDeleteஎல்லாம் உங்க நேரத்துக்கு ஏற்ப தலீவரே 💪
DeletePresent sir
ReplyDeleteHi😍
ReplyDeleteவணக்கமுங்க!!
ReplyDeleteHi
ReplyDeleteடெஸ்பட்ச் 24 ஆம் தேதி இருக்கும். இதை விட இனிய செய்தி இருக்குமா? இது தான் தீபாவளி.
ReplyDelete12 நிமிடத்தில் பதிவை படிச்சாச்சு......நிச்சயம் பனி மண்டல வேட்டைக்கு வெயிட்டிங் சார்🫠☃️❄️.....மறு பதிப்புகள் ரெகுலர் தடத்தில் வராது என்பதை ஆணித்தரமாக அறிவித்தது வேண்டும் என்பவர்கள் மட்டும் வாங்க வழிவகை செய்யும்....நீண்ட நாள் கழித்து ரஷ்ய வேட்டையன் அதுவும் சும்மா பனி மண்டலம் தான் ❄️☃️😅....அடுத்த ஆண்டு அண்டர் டேக்கர் இல்லை இரண்டில் ஒரு ஆல்பம் பாக்கி அதனால் நிலை புரிகிறது ஆனால் பவுன்சர் ஏதாவது ஸ்பெஷல் தடத்தில் விடலாமே?அதுவும் முந்தைய ஆசிரியர் திரும்பும் ஆல்பம் எதிர்பார்ப்பு எகிறி விடும் என்பதால் 2026 வரை காத்திருக்க முடியுமா என தெரியவில்லை....2025 இல் மினி கலர் டெக்ஸ் ஒரு 2 இதழ் ஆவது தல வரும் பட்சம் முழுமை அடைந்து விடுமே!
ReplyDeleteBest wishes for deepavali and all dear sir.well done job sir. Stay blessed always 💯🎉👍✨
ReplyDelete🙏🙏
Deleteஆப்ரிக்கா, ஆர்டிக், ரஷ்யா..... உலகெங்கும் தீபாவளி கொண்டாட்டம்....
ReplyDeleteதிருத்தம் சார் - தென்னமரிக்க அமேசான், ஆர்ட்டிக் & ரஷ்யா!
DeleteHi..
ReplyDelete3 தீபாவளி மலர்களுமே பட்டையை கிளப்பப்போவதாக தெரிகிறது!
ReplyDeleteஇந்தவாட்டி முதல் வாசிப்பு - தல தான்!! 😍😍😍😍
Me too👍
Delete@Edi Sir.. 😘🥰
ReplyDeleteMe in.. 🥰💐👍🙏
அனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteஒரே சர வெடி மயம். தீபாவளிக்கு எண்ணெய் முழுக்கு போட்டோமா, கோயிலுக்கு போனோமா முறுக்கு அதிரசம் மற்றும் அசைவ பதார்த்தங்களை உள்ளே தள்ளினோமா..... நம்ம தீபாவளி ஸ்பெஷல் சை படிச்சோமா னு போக போகுது பொழுது.... Eagerly waiting for the receiving day of courier from SIVAKASI. 😍🥰💐🤩
ReplyDelete
ReplyDelete🥰😘தெறி மாஸ் தீபாவளிதான் இந்த தடவை 💐
Waiting for 25th.. 🥰💐💐
# இதோ - 4 ஒரிஜினல் அட்டைப்படங்களும் - தெறிக்கும் வர்ண மெருகூட்டலுடன்!#
3 படங்கள்தான் உள்ளது சார்.. 🫣🫣
இன்னொன்னு எங்க சார்.. 🫣🫣
அது செமயாருக்கும் போலயே
Deleteநல்லா எண்ணி பாருங்க தல !
DeleteTex, வேட்டையன் ஜாரோப்
ReplyDelete& Mr.No.. னு 3 பேருமே திகிலை கூட்டுறாங்களே..🫣🫣🫣
இந்த தடவை அமானுஸ்ய தீபாவளியா இருக்கும் போல..🫣🫣🫣
பரபரப்பான சரவெடியான மூன்று கதைகள் அமர்க்களமாக உள்ளன..
ReplyDeleteவாசிப்பிலும் ஒன்றுக்கொன்று செம tough தரும் சார் !
DeleteTeX புத்தகத்த எடுத்துட்டா ஒரே மூச்சுல தான் படிப்பேன் சார்.. தவனை முறையெல்லாம் எனக்கு செட் ஆகாது சார்
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteஇந்த வருட தீபாவளி நிஜமாகவே தெறிக்கவிடத்தான் போகிறதுங்க சார்... வெயிட்டிங்!!
Deleteஞானுமே வெயிட்டிங் சார் !
Delete"மினி ஸ்பைடர் வருது முழுசா" ன்ற செய்தியே
ReplyDeleteமனச சிலு சிலு னு ஆக்குதே... 😘😘🤩🥰😍😘
//என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ தெரியாது; ஆனால் சூட்டோடு சூடாய் இந்த தீபாவளி டமாக்காவை வாசிக்க நேரம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!! முடிந்தால் இரண்டே இரவுகளில் இரண்டு ஆல்பங்களையும் (சு)வாசித்திட முயற்சி பண்ணுங்கள் - ப்ளீஸ்! ஆறப் போட்டுப் படிப்பதும் சரி, தவணை தவளையாய் படிப்பதும் சரி, இந்தக் கதையின் வீரியத்தை ஒற்றை மிடறு மட்டுப்படுத்தி விடக்கூடும்!//
ReplyDeleteவழக்கமாகவே நீளமான டெக்ஸ் கதைகள் எனக்கு ரொம்பவுமே பிடிக்கும். இம்முறை 440 எனும்போது முதலில் டெக்ஸ்தான்!!
வேட்டையன் ஜாரோப்.... பராக்!பராக்!!
Deleteமிஸ்டர் நோ அட்டைப்படம்தான் செம த்ரில்!!
Deleteவணக்கம் நண்பர்களே.. 🙏🏻🙏🏻
ReplyDeleteStories which will take place Amazon, Arctic, Russia (Snow)... all these.3 Geographical places.... I like more. Dont know which one to read First. What a Happy Confussion... 🤩😊 Awaiting Eagerly for all these 3 Treasures..
ReplyDeleteHAPPY DIWALI WISHES TO YOU, YOUR FAMILY AND YOUR STAFF MEMBERS SIR.. 💐💐💐🍭🥮🍥🍿🎂🍰🧁🌋🌋🌋🌠🌠🍫🥧🥮🍾🍾💥✨💥💥💥🎇🎆🧨🎉🎊🎋
Many thanks sir !!
Deleteசெம்ம preview சார். அந்த வார சனி ஞாயிறு படித்து முடித்து விடுகிறேன். முதலில் V காமிக்ஸ், அடுத்து வேட்டையன் கடைசியாக டெக்ஸ்.
ReplyDeleteTex - ஒரே புத்தகமாக வராதது வருத்தமே
ReplyDeleteஅதே கதையை - ரெண்டு ராப்பர்களைப் பார்த்திருக்காது, கூடுதல் விலை தந்து வாங்கியிருப்பீர்கள் நண்பரே!
DeleteV காமிக்ஸில் மூன்று புத்தகங்கள் கம்மியாகி விட்டது, அதில் 12 புத்தகங்கள் போட்டதிருந்தால் நன்றாக இருக்கும்
ReplyDeleteசோடா, ஆல்பா, சிஸ்கோ இன்னும் பிற புத்தக விழாக்கள் ஸ்பெசலில் வந்தால் நன்றாக இருக்கும்
அட்லீஸ்ட் இவங்க மூன்று பேரும்
அனைத்து புத்தகங்களும் எங்க வீட்டில் படித்து விடுவார்கள், எனக்கு மட்டுமே தாமதம் ஆகும்
2025 அட்டவணை நல்லா இருக்குது, கதாநாயகர்களும், புத்தகங்கள் எண்ணிக்கை குறைந்ததில் சிறு வருத்தம்
வாசிப்பு வேகமெடுக்கட்டும் ரம்யா... பார்த்துக்கலாம்!
Deleteநம்மகிட்டே பீரோவிலே உறங்கும் கதைகளைக் கொண்டே ஒரு வருஷ சந்தா போட்டிடலாம்!
///வாசிப்புக்கு நேரம் பற்றலை; புக்ஸ் தேங்குது” என்ற குரல்கள் ஒரு சிறிய நம்பரில் இருந்தாலும், கௌஷிக்கைப் போல குறுக்கும், மறுக்கும் உலாற்றுவதை ///
ReplyDeleteகிர்ர்ர்....
தீபாவளி புத்தகங்கள் மூன்றுமே தெறி
ReplyDeleteமிஸ்டர் நோ-வை ரொம்ப எதிர்பார்க்கிறேன் 😊😁
////அந்த வித்தை காட்டும் படலங்களை - சந்தாக்களில் அல்லாத தடங்களில் / தருணங்களில் களமிறக்குவதில் உறுதியாக உள்ளோம்!///
ReplyDeleteWaiting...
///யார் அந்த மினி ஸ்பைடர்?” இதழினை அந்நாட்களில் வெளியிட்ட போது, ஓவரான புய்ப்பக் பக்கங்களை கத்திரி போட்டிருந்தோம்! “இதோ நான் ஆத்தப் போகும் கலைச்சேவையில் கத்திரியின்றி முழுசம் இருக்கும் மகாசனங்களே!” ///
ReplyDelete😁😁😁😁😁
///டிசம்பரின் Magic Moments ஸ்பெஷல்///
ReplyDelete😇😇😇😇😇
///2025-க்கான கலர் அட்டவணையும் இம்மாத புக்ஸோடு பயணமாகிடும்! அது டெக்ஸ் தீபாவளி மலருடனான இணைப்பு என்பதால்,///
ReplyDelete🤩🤩🤩🤩🤩
பற்றலையே... இன்னுமிருந்தால் தேவலாமே?”
ReplyDeleteஎதுங்கண்ணா.... கோவையிலே கிண்டுற அல்வாவா?
Deleteசார் திருநெல்வேலி அல்வாவை கோவைல முடியுமா...ஆனா வரனும் சார் பன்னீர் செல்வமா குண்டா
Deleteசூப்பர் சார்...நீங்களே விமர்சனமும் பன்னியாச்....கேக்க கேக்கவே ஈர்ப்பாருக்கு...ரஷ்ய வேட்டையா...டெக்சா...நோவா என திகைப்பாருக்கு...அட்டைப்படம் ஒன்ன ஒன்னு விஞ்சுது ..சூப்பர் சார்
ReplyDeleteSir...வேங்கை என்றும் உறங்காது... Story.... நில் கவனி வேட்டையாடு கதையின் தொடர்ச்சியா அல்லது தனி story ah sir?
ReplyDeleteதனிக்கதை சார்...
DeleteBut அந்த புக்கை வாசித்திருந்தால் தான் வேட்டையனின் கேரக்டர் புரியும்...
Deleteஇரட்டை வேட்டையர்கள் கதை வந்தால் நன்றாக இருக்கும்
ReplyDeleteதீபாவளி 2024 வெளிவரும் இதழ்களில்...
ReplyDeleteஜாரோப்
Mr. நோ
டெக்ஸ் வில்லர்
நான் வாசிக்க உள்ள வரிசை.. இதுதான்
Me டூ ஜி..😘😘👍
Deleteதீபாவளி மலர் புத்தகங்கள் கிடைத்த அன்றே முதல் விமர்சனம் பதிவு செய்யப் போவது..
ReplyDelete@SURESHJEEVA
@கிருஷ்ணா வ வெ
இருவரில் யார் முந்திக் கொண்டு சிறந்த விமர்சனத்தை பதிவு செய்வார்கள். என்பது எனக்குள்ள ஒரு கேள்வி..
திருவண்ணாமலை யா
பழனி யா
திருத்தணி
Delete// திருத்தணி //
Deleteஆரு பா ? அவர்
//SURESHJEEVA
Delete@கிருஷ்ணா வ வெ //
மன்னிக்கவும்.. பெயர்கள்
SURYAJEEVA
கிருஷ்ணா வ வெ
அண்ணா... எனக்கென்னவோ இந்த தடவ பரணி சார் அல்லது ஈரோடு விஜய் சார் விமர்சனம் தான் first வரும்னு தோனுது..
Deleteநம்ம NTK தலீவரின் டயலாக் தான் நினைவுக்கு வருது சார் !
Deleteநான்தான்ங்ரேன்...வாய்ப்பிருக்கா சார்
Deleteமூன்று கதைகளையும் முதலில் வாசித்து முடிக்க போவது...
ReplyDelete@சேலம் குமார் அண்ணன்
சாய்பாபு@ஸ்ரீ பாபு சார்
@பரணி சார் பெங்களூர்
மூவரில் முதலில் படித்து முடித்து கருத்தினை தெரிவிக்க போவது யார் என்ற கேள்வியும்
ஆவலுடன் நானும்
Deleteஇந்தவாட்டி 100 கிராம் மிக்சருக்கு பதிலா எதை வாங்கி வைச்சு வாசிப்பை ஆரம்பிக்கணுமோ - thinking !!!
DeleteIt is not possible this week, since I plan for a travel with my family on this week-end! Let me try complete the reading of at least ஜாரோப் :-)
DeleteNovember 1-ம் தேதியும் லீவு..😄
ReplyDeleteஅப்புறம் என்ன ஜாலிதான்...🥰🥰
எல்லா காமிக்ஸ் படிச்சிடலாம்.. 😘😘😘
நீங்க நடத்துங்க ஜம்பிங் தல !
Deleteமினி லயனில் வந்த அலிபாபா, ஜூனியர் லயனில் வந்த சிந்துபாத் கதைகள்
ReplyDeleteஅடுத்த ஆண்டு எதிர்பார்க்கலாமா சார்
Deleteசிந்துபாத் 40 வருஷங்களுக்கு முன்னமே ரொம்பவே குழந்தைத்தனமானதாகத் தென்பட்ட தொடர் சார்.... 🤕🤕
Deleteகுழந்தைகளை வசீகரிக்குமே சார். இளம் வாசகர்களையும் உருவாக்குமே.
Deleteஎனக்குமே இக்கதைகளின் படங்கள் மிகப் பிடிக்கும். தெளிவான படங்களும் வண்ணங்களும் அருமையாக இருக்கும்.
ஹ்ம்ம் காலம் மாற வேண்டும். நம்மக்கள் கார்ட்டூன் கதைகளை ரசிக்க வேண்டும்.. காத்திருக்கிறேன்.
புள்ளைங்க பேர சொல்லி அடுத்த இலைக்கு பாயசமா 🤭
Deleteஹா..ஹா.. கண்டு பிடிச்சிட்டீங்களா... நம்ம ரெண்டு பேருமே கார்ட்டூன் ரசிகர் சங்க உறுப்பினர்கள் (நீங்க தான் தலைவர்)... சங்கத்தோட மற்ற பதவிகளுக்கே ஆளைக் காணோம்... சங்கமே அபராதத்துல தான் ஓடிக்கிட்டிருக்கு... காத்திருப்பதைத்தவிர வேறென்ன செய்ய...
Deleteஅபராதத்திலே நீங்க வேற ஒரு வண்டி சாக்லேட் வாங்கி அனுப்பிப்புட்டீங்க சார் !! நம்மாட்கள் அத்தினி பேர் முகத்திலும் அன்னிக்கி அப்பிடி ஒரு புன்னகை - UK Dairy Milk-ஐ பார்த்து !!
Deleteமிக்க மகிழ்ச்சி சார். ஒவ்வொரு முறை தொலைபேசியில் பேசும் போதும் நேரிலே பார்த்திராத ஒருவருடன் பேசுகிறோம் என்று தோன்றியதே இல்லை. நெடுநாள் பழகியவர் போல் பேசும் அந்த அன்பிற்காக இது ஒரு சிறு பரிசு.
Deleteசங்கம் அபராதத்தில் இருந்தாலும் அன்பைத் தெரிவிப்பதில் குறை இருக்கக் கூடாது இல்லையா...
என் நன்றிகளை அவர்களிடம் சொல்லிவிடுங்கள் சார்
சிறப்பான செயல் சங்கர் சார். பாராட்டுக்கள் ☺️
Delete// சங்கம் அபராதத்தில் இருந்தாலும் அன்பைத் தெரிவிப்பதில் குறை இருக்கக் கூடாது இல்லையா... //
Delete+1
இந்த முறை சந்தாவில் இணைவோருக்கு சிறப்பு குட்டிப் புத்தகங்கள்/பரிசுகள் ஏதும் இல்லையாங்க சார்... அல்லது சர்ப்ரைஸாக தரும் திட்டமுள்ளதா...?
ReplyDeleteமுதலில் சந்தா குடும்பத்தில் இணையுங்கள் சார். மற்றவைகளை ஆசிரியர் பார்த்து கொள்வார் சார்.
Deleteநன்றிகள் சார் !
Deleteநான்கைந்து ஆண்டுகளாக எல்லா விதமான சந்தாக்களிலும் தொடர்ந்து உள்ளேன் சார். வழக்கமாக சந்தா செலுத்துவோருக்கான விலையில்லா சிறப்பு பரிசுகளை முன்னரே அறிவித்து விடுவார் நம் எடிட்டர் இம்முறை ஏதும் அறிவிக்காததால் கேட்டேன். சிறப்பு பரிசுகள் சந்தா எண்ணிக்கையை இன்னும் விரைவு படுத்தும் என்பதனால் தான் கேட்க வேண்டியதாகி விட்டது. நிச்சயமாக சர்ப்ரைஸாக தருவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லைங்க சார்.
DeleteSuper super sir 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Deleteவாசகர்கள் படிக்க ஏதுவாகவும் & பட்ஜெட்டுக்குள் அடங்குமாறும் அட்டவணை தயாரித்தது சிறப்பு.
ReplyDeleteஆனாலும் குண்டு புக்ஸ் & முன்பு போல் நிறைய புத்தகங்கள் வராமல் விட்டதும் வருத்தம் இருந்தாலுமே நிதர்சனம் ரொம்பவே மாறுபட்டது.
முன்பு எல்லாம் படிக்க நேரம் அதிகம் இருந்தாலும் காமிக்ஸ் வரத்தும் & வாங்கும் திறனும் குறைவாகவே இருந்தது.
ஆனால் புக்ஸ் நிறைய வரும்போது வாங்கக் கூடிய நிலை மாறினாலும் படிப்பதற்கான ஓய்வு நேரம் ரொம்பவே குறைந்து விட்ட சூழல் இருப்பது யதார்த்தம் தான்.
காமிக்ஸ் விற்பனை மட்டுமே பிரதானம் என்று நினைக்காமல் வாங்குபவர்கள் கண்டிப்பாக அதை படிக்க கூடிய வகையில் கடந்த ஆண்டும் & வரும் ஆண்டுகளிலும் அட்டவணை தயாரித்தது மிகச் சிறந்த முடிவு & இதன் மூலமாவது வாங்குபவர்கள் அனைத்தும் படிக்க வேண்டும் என்ற உங்களின் ஆதங்கமும் ஆர்வமும் கலந்திருப்பது நன்கு தெரிகிறது எடிட்டர் சார்.
உங்களின் இந்த நல்ல மனதிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் 💐🤝
சுவரா ? சித்திரமா ?
Deleteமுட்டையிடும் வாத்தா ? வாத்து பிரியாணியா ?
என் முன்னேயிருந்த கேள்விகள் இவையே சார் ! பதிலை தேர்வு செய்வது சிரமமாக இருக்கவே இல்லை !
அக்டோபர் 4 இதழ்களையும் படிச்சிட்டேன் சார். கலர் இதழ்களின் கதைகள் அனைத்துமே அருமை.குறிப்பாக நள்ளிரவின் நாயகன்.அதிகமாக குழப்பாமல் தெளிவான கிளைமேக்ஸ்.கலரிங் அசத்தல்.புரூனோ பிரேசில் இலவசமாக அலாஸ்கா அழைத்து சென்று விட்டார்.சித்திரங்கள் அதகளம்.வெட்டியான் வழக்கம் போல அசத்தி விட்டார்.தல சாகசமும் வழக்கமான அதிரடி.வித்தியாசமான சித்திர பாணியில் வனாந்தர மேற்கு கொள்ளை அழகு.
ReplyDeleteமொத்தத்தில் திருப்திகரமாக அமைந்து விட்டது அக்டோபர் இதழ்கள்.
சூப்பர் சார் ! அப்பப்போ நடிப்புப் பணிகளுக்கு மத்தியில் இங்கேயும் தலை காட்டுங்கோ ப்ளீஸ் !
Deleteஇதை தான் sir... எதிர்பார்த்தேன்.. ❤️❤️👍👍🙏..
ReplyDeleteபடத்தில் (பனி மண்டல...) வரும் ஒரு நபரின் பற்கள் 🙄🤭... உண்மைதான் sir...ஒரு பழங்குடி இனத்தின் ஆண்கள் பற்களை அரத்தால் அப்படி ராவிக்கொள் வார்கலாம்... செப்டம்பர், அக்டோபர் இதழ்கள் 8 ஐயும் 2 நாளில் படித்து விட்டேன்... (Spoon, ruby விட்டுப்போனது) ஸ்டாலின் எடுத்து வைத்திருந்தார்.. உடனே ஈரோடு சென்று வாங்க முடியல..
ReplyDeleteசந்தா கட்ட முடியும் என்றாலும் tvs ல் ஒரு பயணம் பண்ணி ஸ்டாலின் சகோ வின் இல்லம் சென்று புத்தகங்கள் வாங்கி வந்து எங்க ஊர் டீ கடையில் டீ குடித்துக்கொண்டே ஒரு புத்தம் முடிப்பது.. அப்படி ஒரு சந்தோசம்.. 😄😄❤️👍
Good info
DeleteLovely sir
Delete//செப்டம்பர், அக்டோபர் இதழ்கள் 8 ஐயும் 2 நாளில் படித்து விட்டேன்//
Deleteஅட்டகாசம் சார் !
ஆமாம் sir... இத்தனைக்கும் ஓவியங்களை நிதானமாக பார்த்துக்கொண்டே கதையை உள் வாங்குவேன்... நேரம் ஒரு பொருட்டே அல்ல..சில சமயங்களில் விடிகாலை 3
Deleteமணியாகும்.... காலை 7 மணிக்கு பாவு போட செல்வேன்... அப்படி ஒரு ஆர்வம்.. வேறு எதையும்
நான் இப்படி படிப்பதோ, பார்ப்பதோ இல்லை.. நன்றி sir. ❤️👍🙏..
25...10.24ல்.இந்த வருட தீபாவளி"தல"பட்டாசுடன் ஆரம்பம்
ReplyDeleteவணக்கம் சார்.
ReplyDeleteயாரந்த மினி ஸ்பைடர்...அடடா...ரிப்ளிகா ஒன்னு..இப்ப தரத்ல ஒன்னு...ரிப்ளிகாவ வேனா அடுத்த மாசம் போடலாமே
ReplyDeleteதீபாவளி வந்தாச்சு உள்ளங்களில்
ReplyDeleteவாசிப்புக்கு புக் பற்றலை!”...சார் முதல் குரல்
ReplyDeleteஅல்வா பதம் பத்தலை !
Deleteஸ்டீல் அதையெல்லாம் புத்தகம் படித்து விட்டு வந்து சொல்லவேண்டும்
Deleteபடிச்ச பிறகு அதைத்தான் சொல்லப் போறேன்
Deleteபாகசுர பசி சார் நம்மது...திங்க ஆரம்பிச்ச பின்பு இல்லாம போனா...அதான் சேத்து வச்சி
Deleteமாசத்திற்கு,
ReplyDeleteமூன்று இதழ்கள் ( புது கதைகள் )
குறைந்தால் வருத்தமே...
கடந்த 1.5 மாதங்களாய் உச்சா போகாத வான்கோழியைப் போலவே ‘திரு திரு‘வென விழித்தபடிக்கே சுற்றிக் கொண்டிருந்தேன்!
ReplyDeleteவான்கோழியை இனிமேல் தான் சரியா கவனிக்கணும்.
பாருங்க...பாருங்க...!!
Deleteஆகா ஆசிரியர் இந்த முறை தீபாவளி புத்தகங்களை ரொம்ப சீக்கிரம் தயார் செய்து முடித்து போல் தெரிகிறது. வாழ்த்துக்கள் சார். நன்றாக ஓய்வு எடுங்கள் சார்.
ReplyDeleteஹெ..ஹெ...டிசம்பருக்குள் புகுந்தாச்சு சார் !!
DeleteAnd அடுத்த டின்டின் மொழிபெயர்ப்பும் வெயிட்டிங் !
This comment has been removed by the author.
DeleteSuper sir. Your are rocking star 😊
Delete100
ReplyDelete##கடந்த 1.5 மாதங்களாய் உச்சா போகாத வான்கோழியைப் போலவே ‘திரு திரு‘வென விழித்தபடிக்கே சுற்றிக் கொண்டிருந்தேன்!##
ReplyDelete#Rofl#😄😄😄😄🫣🫣
உங்களுக்கு மட்டும் எப்படிதான் இப்படி எல்லாம் தோன்றுகிறதோ தெரியவில்லை.. 😘😄😄😄😄😄
வான்கோழியை அடுத்த தபா பிரியாணி material ஆகப் பார்க்காமல் சும்மா கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்களேன் சார் - கழுத்தை ஒரு தினுசா ஆட்டிக்கினே, சவுண்டு விட்டுக்கினு, முழிச்சிக்கிட்டே திரியும் ! பசிக்கே அப்டினா, நோ உச்சா கோயிங்னா எப்படி இருக்கும் ? அடியேன் முழிச்சா மெரியே இருக்கும் !
DeleteROFL sir
Delete😄😄😄😄👍👍
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteசார் பாக்க பாக்க...மிஸ்டர் நோமுன்னட்டையும் பின்னட்டையும் தெறிக்க விடுது....டெக்ச மிஞ்சிடுமோ
ReplyDeleteசார் வெள்ளோட்டமா தீபாவளி மலர்23 எடுத்தாசீ...பயலுக தொல்லையில்லன்னா இன்னைக்கே முடியுதான்னு பார்க்கிறேன்...இது 386 பக்கம் பெரிய குண்டெல்லாமில்லை....அது 400 சொச்சம்...அடுத்த வருடத்துக்கடுத்தவருடமாவது அந்த 1000 பக்க கௌபாய் தீபாவளி மலரா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபனிக்கடலில் முதலைகள் :. மீன் குவியல் இடையே ஒரு பிணம் யார் அது எப்படி எதனால் என்று ஆரம்பிக்கும் கதை, இரண்டு இடங்களில் முதலை பட்டாள நண்பர்கள் இரு குழுவாக செய்யும் விசாரணை சாதாரண துப்பறியும் கதையாக தெரிந்தாலும் நம்மை அடுத்து என்ன என்று கட்டிப்போட்டு அவர்களுடன் பயணிக்க வைத்து கதாசிரியரின் வெற்றி. அந்த வாய் பேச முடியாத சிறுவன் கதைக்கு வலு. படங்கள் மிகப்பெரிய பலம்
Deleteமொத்தத்தில் படித்து முடித்த உடன் மனம் முழு நிறைவு.
கொசுறு செய்தி: எனது துணைவியார் இந்த கதையையும் படித்து முடிக்க போகிறார்.
இம்மாத முதல் வாசிப்பு வழக்கம் போல டெக்ஸ் வில்லர். அடுத்தது புத்தகம் வந்தபிறகு முதல் பார்வையில் தீர்மானிப்பேன் .பெரும்பாலும் அதுவே தரவரிசையாகவும் அமைந்துவிடும். ராஜ சேகரன்
ReplyDeleteசந்தா புத்தகங்கள் பத்தாது என்ற என் குரலையும் முதலில் ஒலித்து விடுகிறேன்.வாழ்வின் பாதியைக் கடந்து முடிவின் முனை நோக்கி செல்லும் நேரத்தில் முடிந்த அளவு காமிக்ஸ் தேனை அள்ளி பருக வேண்டும் என்ற ஆசையினால் ஒலித்த குரல் அது. மற்றபடி ஆசிரியரின் விற்பனை எதார்த்தங்களை ஏற்றுக் கொள்கிறேன்.
ReplyDeleteJai Thorgal
ReplyDeleteJai Thorgal
Deleteபனிக்கடல் முதலைகள் :-
ReplyDeleteப்ரூனோ ப்ரேசில் 2.0 :-
கதை என்னன்னா... அட.. கதையை விட்டுத்தள்ளுங்க நண்பா.. அதை அப்புறம் பார்த்துக்கலாம்.!
ப்ரூனோ ப்ரேசிலின் முந்தைய கதைகளுக்கு திரு வில்லியம் வான்ஸின் சித்திரங்கள் மிகப்பெரிய பலமாக இருந்ததுண்டு..! ஃப்ரேம்களுக்குள் கட்டுப்படாத வான்ஸின் சித்திரஜாலம் மெய்மறக்கச் செய்த காலங்களை நம்மில் பலரும் மறந்திருக்க முடியாது.! இப்போ 2.0 என்றவுடன் என்னமா இருக்குமோ ஏதா இருக்குமோ என்கிற தயக்கத்துடன்தான் புரட்டத் தொடங்கினேன்....!
ஆங்கிலத்தில் Astounding என்றொரு வார்த்தை உண்டு.. அதன் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்த தருணம் இன்று.! Philippe Aymondன் சித்திரங்களும் அவற்றிற்கு வண்ணமூட்டிய Dider Ray அவர்களின் கலரிங்கும் சேர்ந்து அமெரிக்கா மற்றும் கனடாவை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றன.!
பாஸ்டனின் ஃப்ளைஓவர் ஒன்றில் நடக்கும் கார் சேசிங் அத்தனை தத்ரூபமாக இருந்தது..! தொடர்ந்து கனடாவின் எஸ்கிமோ பாயிண்டின் பனிபடர்ந்த சாலையில் கார் போகும் இடங்களும்.. பனிக்காடுகளின் ஊடே ஸ்னோ பைக் சீறிப்பாயும் காட்சிகளும்.. நாமே அங்கு உலாத்துவதானதொரு பிரமையை உண்டாக்கின..!
வெர்மாண்ட் மற்றும் பென்சில்வேனியாவின் அழகிய கட்டிடங்களும்.. யுடாவின் எழில்கொஞ்சும் மலைத்தொடர்களும் கானகங்களும்.. அடேயப்பா.. போட்டோ காப்பிதான் போங்கள்.!
இந்தக் கதையை நான் ஒரு வாரமாக படித்தேன்.. காரணம் சித்திரங்களும் வண்ணச் சேர்க்கையும்தான்..! ஒரு நாளைக்கு ஏழெட்டு பக்கங்களையே தாண்ட முடியவில்லை.. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது..!
இனி கதைக்கு வருவோம்..
கனடாவின் எஸ்கிமோ பாயிண்டில் இருந்து அமெரிக்காவின் பாஸ்டனுக்கு கப்பலில் வந்திறங்கிய மீன் லோடில் ஒரு இரண்டுங்கெட்டான் இளைஞனின் சடலமும் வந்து சேர்கிறது..! அதனை விசாரிக்க முதலைப் பட்டாளம் இரு பிரிவாக பிரிந்து ப்ரூனோவும் டோனியும் மீன் லோடு ஏற்றிய எஸ்கிமோ பாயிண்ட்டுக்கு செல்ல.. மாத்யூஸூம் விப் ரபேலும் சடலமாகக் கிடந்த பையனின் பின்னனியை ஆராய்கிறார்கள்..!
இருகுழுக்களின் விசாரனையில் காணாமல் போனது.. பிணமாக கிடந்தவன் உட்பட மூன்று பையன்கள் எனவும்.. மூவருமே பென்சில்வேனியாவின் காசிடி அனாதை இல்லத்தில் இருந்தவர்கள் என்பதும் தெரியவருகிறது..!
தொடரும் புலனாய்வில் வெளியாகும் அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் திடுக்கிடும் திருப்பங்களையும்.. கொலையாளி யார்.. காரணம் என்ன என்பதையும் கதையைப் படித்து.. தப்பு தப்பு.. கண்குளிர ரசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்..!
இந்தச் சித்திரஜாலத்திற்காகவே ப்ரூனோ ப்ரேசில் 2.0 விற்கு நல்வரவு..😍😍😍
Super review
Delete@PFB 😍
Deleteஅடுத்த வருஷம் சந்தா கட்ட ரெடியாகச் சொல்லீட்டாரு...
ReplyDeleteம்ஹூம்...
These Alibaba and sindbad issues i feel different varients for generationext and foreseeing release in our superprint which will be a pleasure for us. Best wishes for hard load managed by you sir. My cordial greetings to you and family and your team as well as.
ReplyDeleteசிந்துபாத் இப்ப கைல இருக்கா நண்பரே
DeleteTo be searched if available let u know dear
DeleteOkநண்பரே...படிச்சு பாருங்க...ஆசிரியர் சொல்வது புரியும்
Deleteகிடைச்சா
Delete🥰💐தீபாவளி மலர் இன்னைக்கு கிளம்பிடுச்சு...😘🙏
ReplyDeleteஅடி தூள்
Delete🎈🧨🧨🧨🎉🎇🎊🎆சிங்கமுத்து வாத்தியார் இந்த தீபாவளிய முன்னாடியே கொண்டாட வச்சிட்டாரு..
ReplyDelete😄🎁🧨🧨⚡🔥
சபாஷ் வாத்தியாரே.. 😘🥰👌🧨🎆🎇
எனக்கு நாளைக்கே தீபாவளியா வாரே வா. சார் உங்களது சாதனைகளை நீங்களே முறியடித்து விட்டீர்கள்.
ReplyDeleteFirst look rating
ReplyDelete1. TeX
2. Zaroff
3. Mr.No..
But I might start reading first Mr.no and then TeX sir
I am waiting 💐🥰🥰🥰
ReplyDeleteஉங்களது முந்தைய சாதனைகளை நீங்களே முறியடித்து விட்டீர்கள் ."கௌபாய் எக்ஸ் பிரஸ் "லக்கி லூக் கில் கடைசி பக்கத்தில் இந்த வாசகம் வரும்
ReplyDeleteEnjoy Kumar
ReplyDelete