நண்பர்களே,
வணக்கம். விஞ்ஞானத்துக்கே tough தரும் சிலபல வல்லிய கண்டுபிடிப்புகளை அவ்வப்போது தோண்டிப் பிடிக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டிடுவதெல்லாம் காலத்தின் கட்டாயம் போலும்! நல்லா ஒரு குதிரைக்கு கால்களில் அடிக்கும் ஒரு லாடத்தின் ஷேப்பில் - மண்டே மேலே இருக்கும் கேசம் காணாமல் போக ஆரம்பிப்பதை Male pattern baldness அல்லது Alopecia என்று சொல்வார்கள்! முப்பதுகளிலேயே நம்மள் சிரத்தில் ப்ளாட் போடும் காலியிடங்கள் அப்படித் தோன்ற ஆரம்பிக்க - அதற்கான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களைத் தேடிப் பிடிச்சுப் படிக்க முயன்றேன்! 'இந்த ஹார்மோன் சாஸ்தியாவதால் இது ஆகுது; அந்த genetics காரணமாய் பொட்டலாகுது !' என்றெல்லாம் போட்டிருந்தது! ஆனால் விஞ்ஞானத்துக்கே கிஞ்சித்தும் தெரிந்திருக்கா ஒரு அசாத்திய காரணத்தைப் போன வாரத்தில் கண்டுபிடிப்பதில் அடியேனுக்கு ஜெயம்!
அது வேறொன்றுமில்லீங்க - மண்டையிலே ஆண்டவன் தந்த உரோமங்கள் கொத்துக் கொத்தாய் காணாது போவதன் ஒரு அதிமுக்கிய காரணம் - நம்ம ரிப்போர்ட்டர் ஜானியின் கதைகளை தமிழில் மொழிபெயர்க்கவும் ; கதாசிரியரின் நுணுக்கமான திட்டமிடலை யூகிக்க நாம் செய்திடும் மெனக்கெடல்களுமே என்பது புரிந்தது! கதாசிரியர் எனும் அசாத்தியர் கதைகளில் layer-layer-களாக மர்மங்களைப் புதைத்து வைத்து விட்டு, ஒட்டுமொத்தமாய் இறுதி 2 பக்கங்களில் முடிச்சவிழ்க்கும் மாயாஜாலங்களெல்லாம் maybe ஒரிஜினலாய் ப்ரெஞ்சில் வாசிக்கும் வாசகர்களுக்கு பெரும் பிரயத்தனமின்றிப் புரிந்து விடுமோ - என்னவோ?! ஆனால் french to english & english to tamil என மூன்றாவதாக ஒரு மொழிக்கு மாற்றம் செய்ய ‘தம்‘ கட்டும் நமக்கெல்லாம், கபாலத்தின் இருதரப்புக் கேசங்களையும் பிய்த்துக் கொள்ளவே சாத்தியமாகிறது!
“நள்ளிரவின் நாயகன்”! ரிப்போர்ட்டர் ஜானியின் தொடரின் கதை நம்பர் 77 இது! In fact ஜானியின் க்ளாஸிக் தொடரின் கடைசிக்கு முந்தைய ஆல்பமிது! நம்பர் 78 க்ளாஸிக் தொடரின் இறுதி ஆல்பமாகிட, அதற்குப் பின்பாக ஜானி 2.0 தான் களத்திலுள்ளார்!
1986 முதலாய் “இரத்தக் காட்டேரி மர்மம்” வாயிலாக நமக்கு அறிமுகமான இந்தப் புன்னகை இளவரசர் அன்றிலிருந்தே மொழிபெயர்ப்பாளரின் டெரராகவே இருந்து வந்திருக்கிறார்! அந்த முதல் ஆல்பத்தை எடிட் செய்யும் முனைப்பில் நான் போட்ட மொக்கைகள் 38 ஆண்டுகள் கழிந்தும் மனதில் பசுமையாக உள்ளன! And அந்த மொக்கை போடும் படலங்கள் இத்தனை காலத்தில் இம்மியும் குறைந்தபாடில்லை என்பது தான் களேபரமே! கதையில் கணிசமான மாந்தர்கள்; அவர்களின் மத்தியில் ஒரு குற்றம்; கும்பலிலுள்ள அம்புட்டுப் பேர் மீதும் சந்தேக நிழல் படிய முகாந்திரங்கள் & இறுதியில் சரசரவென அத்தனை முடிச்சுகளையும் கமிஷனரோடு சேர்ந்து முடிச்சவிழ்ப்பது என்பது தான் தொன்றுதொட்ட ஜானியின் template என்பதை நாமறிவோம்! And தொடரின் இறுதிப் பகுதியிலான இந்த ஆல்பத்திலும் அது துளி கூட மாறிடவில்லை! இன்னும் சொல்லப் போனால், இது முந்தைய இடியாப்பங்களை விடவும் எக்கச்சக்க நெளிவுகளைக் கொண்டதொரு பதார்த்தம்! And இதை யதார்த்தமாய் கருணையானந்தம் அங்கிளின் தலையில் நான் சுமத்தியிருக்க, இயன்றமட்டுக்கு அவரும் முயற்சித்திருந்தார் தான்! ஆனால் சொக்காயைக் கிழித்தால் தவிர இந்த ஆல்பத்துக்கு நியாயம் செய்திட இயலாதென்பதை எடிட்டிங்கின் போது போன மாதமே புரிந்திருந்தேன்! So ரூபின் அம்மணிக்கு ஒற்றை மாத புரமோஷன் கிடைத்ததுமே அதன் பொருட்டுத் தான்! ஆனால் கண்ணிமைக்கும் நொடிக்குள் மாதமொன்று ஓட்டம் எடுத்திருக்க - ஜானியாரை இதற்கு மேலும் ஒத்திப் போட இடமில்லை! So ‘தம்‘ கட்டியபடியே பணிக்குள் இறங்க, கிட்டத்தட்ட முக்கால்வாசியை மாற்றி எழுத அவசியப்பட்டது ; and அந்த முயற்சியினில் தான் முதல் பத்தியில் நான் குறிப்பிட்ட விஞ்ஞான உண்மைகள் நடைமுறை கண்டதை உணர முடிந்தது! Phewwww... இந்தக் கதாசிரியரின் ஆற்றல்களுக்கு ஒரு மெகா சல்யூட் வைத்தபடியே காலுக்குள் கொட்டிக் கிடக்கும் கற்றைகளை கூட்டி அள்ளி மண்டையில் மறுக்காவும் ஒட்டிட பெவிகால் ஏதாச்சும் கிடைக்கிறதா? என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்! An absolute Johnny classic! இதோ - அதன் ஒரிஜினல் அட்டைப்படம் ப்ளஸ் அதன் உட்பக்க preview!
இந்த அக்டோபரில் எனக்கு ஒரு குஷியான சமாச்சாரத்தினையும் கவனிக்க இயன்றது! And அது தான் - நம்ம ஜானியின் செட்டான ப்ரூனோ ப்ரேசிலும் இதே மாதத்தில் ஆஜராகிடவிருப்பது!
- XIII
- ரிப்போர்ட்டர் ஜானி
- கேப்டன் ப்ரின்ஸ்
- ப்ரூனோ ப்ரேசில்
- சாகஸ வீரர் ரோஜர்
இந்த ஐந்து ஜாம்பவான்களுமே 1986-ல் ஒட்டுமொத்தமாய் debut செய்தவர்கள்!!
- 1986 ஜுன் மாதத்தில் XIII
- 1986 ஜுலை மாதத்தில் “மர்மக் கத்தியோடு” ரோஜர்
- 1986 ஆகஸ்ட் மாதத்தில் ரிப்போர்ட்டர் ஜானி
- 1986 நவம்பர் மாதத்தில் “பனிமண்டலக் கோட்டை”யுடன் கேப்டன் ப்ரின்ஸ்
- 1986 டிசம்பரில் “மர்மச் சவப்பெட்டிகள்” இதழோடு ப்ரூனோ ப்ரேசில் !
என பட்டாசாய் “திகில்” பொரிந்து தள்ளிய நாட்கள் அவை! And அந்த ஐவர் அணியில் XIII-ன் கதைகளை போட்டு முடித்து விட்டோம்; ப்ரின்ஸ் தொடருமே அவ்விதம் & ப்ரூனோ ப்ரேசில் தொடரிலும் ஆல்பங்கள் பாக்கியில்லை! ரோஜர் கதைகள் அத்தனை சோபிக்காது போனதால் - அவருக்கு மட்டும் தற்காலிகமாய் break தந்திருந்தோம்! And இதோ ப்ரூனோ ப்ரேசிலின் முதலைப் பட்டாளம் அவதார் 2.0ல் களமிறங்கியிருக்க இந்த அக்டோபரில் அவர்களையுமே பார்த்திடலாம்! அவர்களது preview அடுத்த பதிவில்!
மேலேயுள்ள இந்த 5 சூப்பர்ஸ்டார்களுள் உங்களது favorite யாரோ ?
And 1986-லேயே இந்த நாயகர்களை சந்தித்தோர் யாரேனும் இங்குண்டோ ?
And இதோ - ஒரு 110 பக்க crisp த்ரில்லரில் இரவுக் கழுகாரும், வெள்ளி முடியாரும் நம்ம V காமிக்ஸில் போட்டுத் தாக்கிடும் “இறுதி ஆட்டம்” ஆல்பத்தின் அட்டைப்பட முதல் பார்வை!
Yet another புது ஓவியர் உட்பக்க சித்திரங்களைப் போட்டு தந்திருக்க, பக்கத்துக்குப் பக்கம் மிரட்டலானதொரு அனுபவம் காத்துள்ளது! And நிஜத்தைச் சொல்வதானால் - போன மாதத்து “சினம் கொண்ட சின்னக் கழுகு” போலான heavy சாகஸத்துக்குப் பின்பாக, இந்த இலகுவான ஆக்ஷன் த்ரில்லர் ஜாலியான வாசிப்புக்கு உரமிடுகிறது! Don't miss it please !!
- ரிப்போர்ட்டர் ஜானி பணிகள் முடிந்து - வரும் வாரத்தில் ப்ரிண்டிங் புறப்படுகிறார்.
- டெக்ஸ் கூட வரும் செவ்வாயன்று ப்ரிண்டிங்குக்கு ரெடியாகிடுவார்.
- இதோ - ஞாயிறுக்கு ப்ரூனோ ப்ரேசில் எடிட்டிங் முடிப்பதென்ற target-ஐ பூர்த்தி செய்து விட்டேனென்றால், அடுத்த வாரத்தில் ஸ்டெர்னின் மொழிபெயர்ப்பினை பூர்த்தி செய்யும் பணி மாத்திரமே பாக்கியிருக்கும்!
இடையிடையே கம்யூனிட்டியில் ஏதாச்சும் posts; நம்ம Youtube சேனலில் வீடியோப் பதிவுகள் என்றும் கூத்தடித்து வருவதால் திட்டமிடலில் கொஞ்சம் தாமதங்கள் தலைதூக்குகின்றன! But அங்கேயும் உற்சாகமாய் பொழுதுகள் ஓட்டமெடுப்பதால் அதன் பொருட்டும் நேரம் ஒதுக்குவதில் தப்பில்லை என்றே படுகிறது !! இதோ - சமீபமாய் போட்ட 2 ஜாலி வீடியோக்களின் லிங்க்ஸ் !! இரண்டுமே கணிசமான பார்வைகளை பெற்றிருப்பதில் எனக்கே கொஞ்சம் ஆச்சர்யம் தான் :
கல்கண்டு ad பற்றி ஒரு flashback😁
ஸ்டெர்னில் ஏற்கனவே கால்வாசி எழுதியாச்சு என்பதால் மீத முக்கால் பாகத்தை வரும் வார மத்திக்குள் முடித்து விடலாமென்ற நம்பிக்கையில் உள்ளேன்! Fingers crossed!
இன்னொரு பக்கமோ அடுத்தடுத்து வரவிருக்கும் ரெகுலர் அட்டவணையில் அல்லாத இதழ்களின் பணிகளும் வேகமெடுத்து வருகின்றன!
- கலரில் கபிஷ்
- ஸ்பைடரின் “பாட்டில் பூதம்”
- அந்த ஸ்பைடர் 2.0 தொடரின் இறுதி (color) இதழ்
என கலந்து கட்டி பணிகள் ஓடி வருகின்றன! And சென்னைப் புத்தக விழா maybe டிசம்பர் மத்தியிலேயே துவக்கம் காணக்கூடுமென்ற தகவல்களும் உலவி வருவதால், அதற்கான முஸ்தீபுகளுமே இன்னாரு பக்கம் going on! பற்றாக்குறைக்கு - “யார் அந்த மினி-ஸ்பைடர்?” ; Replica மறுபதிப்புகள் என்ற திட்டமிடல்களுமே !!
And by the way, சமீபத்தில் நடந்து முடிந்த மதுரைப் புத்தக விழா பற்றியும் இங்கே நான் குறிப்பிடாது விட்டால் அது பெரும் தப்பாகிப் போகும்! பொதுவாய் மதுரை, திருச்சி, நெல்லை போலான நகரங்களது விழாக்கள் விற்பனை நம்பர்களில் கொஞ்சம் பின்சீட்டில் இருப்பதே வழக்கம். ஈரோடு; சென்னை; சேலம் போன்ற பெரிய ஆட்டக்காரர்களுக்கு வழிவிட்டு விடுவது இதுவரையிலுமான வாடிக்கை! ஆனால் போன ஆண்டு திருப்பூர் காட்டிய அதே அதிரடியை இந்தவாட்டி மதுரையும் கண்ணில் காட்டியுள்ளது! And மதுரையில் நமக்கான விற்பனையில ஒரு புது ரெக்கார்ட் ஏற்படுத்தியுள்ளது! ஆக “நாங்களும் சண்டியர் தான்வே” என்று மதுரை, திருப்பூர் நகரங்களும் மார் தட்டுகின்றன இப்போது! பார்க்க வேணும் - அடுத்த வாரம் துவங்கவிருக்கும் திருச்சி என்ன கெத்து காட்டக் காத்துள்ளதென்று! Not to forget, எங்க ஏரியாவிலான விருதுநகர் விழாவுமே அடுத்த வாரம் துவங்கிடவுள்ளது !
இம்மாதப் பணிகள் முடித்த கையோடு, அட்டவணைப் பதிவுக்கான நெடும் பதிவினை தொடங்கியாகணும் !! ஒவ்வொரு வருஷமும் அட்டவணையினை தயாரிக்கும் அவகாசத்துக்கு நிகரான நேரமெடுப்பது அது குறித்த பதிவும் தான் !! தீபாவளிக்கு முன்பாக அட்டவணையினை unveil செய்திட வேணும் எனும் போது, இப்போதிலிருந்தே சன்னம் சன்னமாய் எழுத ஆரம்பித்தால் தேவலாமென்றே தோன்றுகிறது ! அல்லாங்காட்டி, அட்டவணையினையும் வீடியோ பதிவாய் செய்திட சாத்தியமானால் எனக்கு வேலை ரெம்போ ஈசி ! What say மக்களே ?
ரைட்டு...ப்ருனோ பிரேசிலை நலம் விசாரிக்கக் கிளம்புகிறேன் இப்போது ; you have a fun Sunday all !! See you around !! Bye for now !!
அனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteஅடடே வாழ்த்துக்கள் நண்பா
Deleteநன்றி குமார் அண்ணா..
Deleteவாழ்த்துக்கள் ரகுவய்யா
Deleteநன்றி செந்தில் ஜீ,..
Delete'ஐ பஸ்ட்' போடறதெல்லாம் இருக்கட்டும்.. 'திகில் காமிக்ஸ்' திரும்ப வந்தால் ஆதரிப்பீர்களா, மாட்டிர்களா?👻💀👽☠️👿
Delete// ஐ பஸ்ட்' போடறதெல்லாம் இருக்கட்டும்.. 'திகில் காமிக்ஸ்' திரும்ப வந்தால் ஆதரிப்பீர்களா, மாட்டிர்களா?👻💀👽☠️👿 //
Deleteவிஜய் அண்ணா..
ஒரு புத்திசாலி வாசகர் என்ன செய்வாரோ... அதை காப்பி அடித்தாவது கண்டிப்பாக செய்வேன்... மன்னாரன் கம்பெனி டணால் தங்கவேல் மேல் சத்தியம்..
Hi all
ReplyDeleteAgain 10க்குள்ள..!
ReplyDelete3rd
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம் நண்பர்களே
ReplyDeleteஅன்பு ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய இரவு வணக்கம் ❤️🙏
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteஅனைவருக்கும் இரவு வணக்கங்கள்.
ReplyDelete9 is lucky number
ReplyDeleteகுட்!
Delete'திகில் காமிக்ஸ்' திரும்ப வந்தால் ஆதரிப்பீர்களா, மாட்டிர்களா?👻💀👽☠️👿
அனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteஅனைவருக்கும் இரவு வணக்கம்
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDeleteMe in..😍😘
'உம்மா' கொடுக்கறதெல்லாம் இருக்கட்டும்...
Delete'திகில் காமிக்ஸ்' திரும்ப வந்தால் ஆதரிப்பீர்களா, மாட்டிர்களா?👻💀👽☠️👿
Definetly ji..😍😘
Delete"https://lion-muthucomics.blogspot.com/2024/09/breezy.html"
ReplyDeleteவணக்கம் சார். யார் அந்த மினி ஸ்பைடர்?
இரண்டாவது மறு பதிப்பு வருவதில் பெரு மகிழ்ச்சி சார்...
ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் எனக்கு உண்டு..🙏🙏🙏
என்னுடைய favorite ப்ரூனோ பிரேசில் .&என்னுடைய ஆல் டைம் பெஸ்டில் ப்ரூனோவின்"குள்ள நரிகளின் இரவு"ம் உண்டு
ReplyDeleteஇரவு வணக்கம் நண்பர்களே
ReplyDeleteசார் சூப்பர் அட்டவணை பதிவை வீடியோவாகவே போடுங்கள். எதற்கும் முதல் முறை உண்டு
ReplyDeleteஆஹா.. ஏதோ சம்பவம் இருக்குது போல. டாப் 10 ஐ அண்ணா குறிவைத்து விட்டார்
Deleteபுருனோ பிரேசில் வில்லியம் வான்ஸ் ஓவியத்தில் காண துடிக்கிறேன்., ஆனால் புது வெர்ஷன் சிறந்தது என்று நீங்கள் நினைத்தீர்கள் ஆனால் அப்படியே செய்திடலாம்...
ReplyDeleteஇந்த 5 இல் XIII தான் டாப்
ReplyDeleteModesty yai தூக்கி சாப்பிட்டு விட்ட Mild Queen ஜூலியா வை வரும் ஆண்டில் எதிர்பார்க்கலாமா சார்,?
ReplyDeleteநல்ல ஜோக்கு சார்.. அடுத்தது?😀😀😀
Deleteநன்றி, வருவோம்
Deleteஅக்டோபர் புத்தகங்கள் தூள் கிளப்பும் போலிருக்கே..
ReplyDeleteரோஜர் பில், மீண்டு(ம்) வருவார்களா?
ReplyDeleteஅட்டவணையில் கார்சனின் கடந்த காலம் இருக்குதா, Sir
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDelete2025 அட்டவணை யினை Both "you tube" & "ப்ரிண்ட்" என ரெண்டுலயுமே போட்டு தாக்குங்க சார்..👍✊👌
// சமீபத்தில் நடந்து முடிந்த மதுரைப் புத்தக விழா பற்றியும் இங்கே நான் குறிப்பிடாது விட்டால் அது பெரும் தப்பாகிப் போகும்! //
ReplyDelete// மதுரையில் நமக்கான விற்பனையில ஒரு புது ரெக்கார்ட் ஏற்படுத்தியுள்ளது! //
சந்தோசமான தகவல், வாழ்த்துக்கள்..!!!
புத்தக விழாவில் துணையாக நின்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..
Modesty, பிரின்ஸ் reprint, ஜானி reprint, Phantom, Archie, ChickBill, Robin, கருப்பு கிழவி கதைகள்
ReplyDeleteஇவர்களும் வேண்டுமே சார் இவர்கள் அனைவரும்...
Deleteசிஐடி மார்ஷல், கோடை மலர் 86 reprint, வண்ணத்தில் கிச்சு கிச்சு ஸ்பெஷல், ஜான் மாஸ்டர் முழு தொகுப்பாய்,
Delete5 பேரில நம்ப ஆளு "கேப்டன் ப்ரின்ஸ்" சார்..😍😘
ReplyDelete#அந்த ஐவர் அணியில் XIII-ன் கதைகளை போட்டு முடித்து விட்டோம்; ப்ரின்ஸ் தொடருமே அவ்விதம்#
ReplyDeleteஇல்லை எடிட்டர் சார்... ப்ரின்ஸ் தொடரில் வண்ணத்தில் ரீபிரின்ட் வராத கதைகளையும் வண்ணத்தில் வெளியிட வேண்டும்!
வணக்கம் நண்பர்களே
ReplyDeleteகண்டிப்பாக ஆதரவு உண்டு.
Deleteஎப்போது வரும்.
// 1986 ஜுன் மாதத்தில் XIII
ReplyDelete- 1986 ஜுலை மாதத்தில் “மர்மக் கத்தியோடு” ரோஜர்
- 1986 ஆகஸ்ட் மாதத்தில் ரிப்போர்ட்டர் ஜானி
- 1986 நவம்பர் மாதத்தில் “பனிமண்டலக் கோட்டை”யுடன் கேப்டன் ப்ரின்ஸ்
- 1986 டிசம்பரில் “மர்மச் சவப்பெட்டிகள்” இதழோடு ப்ரூனோ ப்ரேசில் ! //
அனைத்துமே அருமையான கதைகள்
Golden days
Delete37th
ReplyDeleteநம்பர் போடறதெல்லாம் இருக்கட்டும்..
Delete'திகில் காமிக்ஸ்' திரும்ப வந்தால் ஆதரிப்பீர்களா, மாட்டிர்களா?👻💀👽☠️👿
Good Morning Guys🙏
ReplyDelete13 ஸ்பின் ஆஃப், அதிரடிப்படை முழு தொகுப்பை reprint, இரட்டை வேட்டையர்கள், மினி லயன் சொர்க்கத்தின் சாவி மறு பதிப்பு, மீட்போர் ஸ்தாபனம் புதுக்கதைகள், யுத்த கதைகள், இப்படி ஏராளம் மறக்கப்பட்ட நாயகர் கதைகள்...
ReplyDeleteவந்தேன் ஐயா!
ReplyDeleteசூப்பர் சர்க்கஸ், பூம் பூம் படலம், பயங்கர பொடியன், புரட்சித்தீ, இப்படி ஏராள ஸ்டாக் இல்லாத லக்கி லுக் கதைகள் please?
ReplyDeleteஅன்றைக்கு ஒரு ரூபாயில் வெளிவந்த மினி லயனின் மரண சர்க்கஸ் நினைவு கூறுவீர்கள் தானே சார்?
ReplyDeleteஆஜர்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசார்,
ReplyDelete* நீங்கள் போட்டுள்ள வரிசை தான், 1986 நாயகர்களின் எனது top 5 வரிசை ஆகும் (Though not knowing more about Bruno brazil and Roger)
* நள்ளிரவின் நாயகன் ரிப்போர்ட்டர் ஜானி எப்போதும் my favourite நாயகர்களில் ஒருவர், so Very happy😊
*தானைத் தலைவர் Spider இன் பாட்டில் பூதம், யார் அந்த மினி ஸ்பைடர் இரண்டுமே படித்தது இல்லை, சோ இரண்டு கதைகளும் வருவதில் very very happy 😍
*திருச்சி புத்தக விழாவிற்கு கண்டிப்பாக வருவேன்👍😊
ஆதரிப்போம் சார்👍😊
Deleteலயன் தீவிரவாசகர் விரும்பும் 96 பக்க பாக்கெட் சைஸ் "உலகப் போரில் ஆர்ச்சி" என்றைக்கும் மறுபதிப்பு வந்தால் கலக்கிடாதா (விற்பனையில்) சார்?
ReplyDeleteசூப்பர் ஸ்டார் வரிசை
ReplyDelete1. நம்ம ஜேசன் மக்லேன்
2.ரிப்போர்ட்டர் ஜானி
3.பிரிண்ஸ்
4.ப்ரூனோ பிரேசில்
5.ரோஜர்
This comment has been removed by the author.
ReplyDelete// மேலேயுள்ள இந்த 5 சூப்பர்ஸ்டார்களுள் உங்களது favorite யாரோ ? //
ReplyDeleteவெகு கடினம்.
இறுதிவரை களத்தில் நின்று சாதிப்பவரே l..
உங்க உடல் நலனை பாருங்க சார்.
ReplyDeleteஏற்கனவே தோள்பட்டை வலியோடு அவஸ்தைப் படும் போது நெடும் பதிவு ஏன்.
அட்டவணை வெளியீடு வீடியோவாக போட்டாலே கூட போதும்.
💯
Deleteரீ பிரிண்ட் ஆகாத 6வது ஆண்டுமலர் டெக்ஸ், 96 பக்கம் தானே? வண்ணத்தில் கிடைக்குமா?
ReplyDeleteமுடி கொட்டுவதுக்கு காரணத்தை புதுசா எதாவது சொல்லுவீங்கன்று நெனச்சு படிச்சா- "போன வாரம் கண்டுபிடிச்சேன்" என்றதும் நம்ம வாசகர்கள் ஏதாவது 7½ ய போட்டருப்பாங்களோனு நெனச்சா இது மொழிபெயர்ப்பு சிக்கல்.
ReplyDeleteஉங்களுக்கே ஜானி டஃப் குடுக்கறார்னா ஆச்சரியம்.
ஜானியின் கதைகளில் பிடிச்ச விசியமே அதுதானுங்களே சார் - ஆரம்பத்தில் பல மர்மங்கள் தொடர்ந்து, கடைசியில் முடிச்சை அவிழ்ப்பது அபாரமாக இருக்கும் படிக்க.
முன்னட்டையைவிட பின்னட்டை திகில் காமிக்ஸை நினைவுபடுத்துகிறது- திகில் காமிக்ஸ் ன் "இரத்த அம்பு & விசித்திர நண்பன்" இரண்டின் பின்னட்டை படம் இதுவே.
சித்திரங்கள் பளீச் பளீச்.
"முந்தைய இடியாப்ப சிக்கல்களை விட நெளிவுகள்" 🔥🔥waiting sir...
86 காமிக்ஸ்மேனியா உச்சகட்டத்தில் இருந்த வருடம்.
ஒவ்வொரு கதைகளையும் படித்து மகிழந்த காலமாச்சே சார் மறக்க முடியுமா?..
"மர்மக்கத்தி" ரோஜர் அந்நாளில் கொண்டாடிய கதைங்க சார்.
சமீபத்தில் "நேற்றைய நகரம்" வாசித்தேன் அருமையான த்ரில்லர்.
இவர் நின்று விட்டது சற்று வருத்தமே. வாய்ப்பிருந்தால் போடுங்களேன் சார்.
"இறுதி ஆட்டம்" அட்டைப்படத்த விடுங்க - ஓவியமே ஆயிரம் கதைகள் பேசுகிறதே சார், நேரத்தியான ஓவியம்.
தங்களுக்கு பணிகள் ஓய்வில்லாது இருக்கும் வேலை பளுவுக்கு இடையில் எங்களுக்காக நேரம் ஒதுக்கியமைக்கு நன்றிகள் பல சார்.
அட்டவணையை யூடியூப்பில் பதிவிட்டாலும் ஓகேதான் சார், ஆனால் அட்டவணைகளை பார்த்து ரசித்து படிக்கும் மகிழ்ச்சி யூடியூப்பில் கிடைக்காது சார்,
பதிவாகவே போடுங்கள் சார்.
திருச்சி புத்தகத் திருவிழா வாழ்த்துக்கள் 💐 சார்
'திகில் காமிக்ஸ்' திரும்ப வந்தால் ஆதரிப்பீர்களா, மாட்டிர்களா?👻💀👽☠️👿
Deleteகண்டிப்பாக விஜய்.அதைவிட மகிழ்ச்சி வேறென்ன...
Deleteகத்தி முனையில் மாடஸ்டி,
ReplyDeleteதிகில் முதல் வெளியீடு,
சூப்பர் சர்க்கஸ்,
துப்பாக்கி முனையில்...
எல்லாமே ரிப்ளைக்கா ரீ பிரிண்ட் தேவையானவைகள்.... பார்த்து செய்யுங்கள் சார்,
நன்றிகள் உரித்தாகட்டும்...
"அண்ணே! இவன் நம்ம குடும்பத்துக்கு வேண்டாண்ணே "
Delete😃😃😃
Delete😂😂😂😂
DeleteY not vijay sago?
Deleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteஉங்க காது வலி சரியாகிடுச்சுங்களா ஜி?
Delete2025 அட்டவணைக்கு பதிவு அவசியம் சார். வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமே தனி சார். மேலும் தங்கள் எழுத்தில் இருக்கும் கலகலப்பான நையாண்டிகள் Y.T. ல் கிடைக்காதே சார்.
ReplyDelete///மேலும் தங்கள் எழுத்தில் இருக்கும் கலகலப்பான நையாண்டிகள் Y.T. ல் கிடைக்காதே சார்///
Deleteஆமாம் பத்து சார்.. யோசிக்க வேண்டிய விஷயம்!🤔
1000000+
Deleteஎல்லாவற்றுக்கும் மேலாக
ReplyDelete'சூப்பர் ஸ்டார் ஸ்பைடர்"
7.5"x5" அளவிலான 16 பக்க புக்லெட் ரிப்ளைக்கா 2025 சந்தா உடன் சேர்த்து தாருஙகள் சார், ப்ளீஸ்
"எனக்கு வேலை ரெம்போ ஈசி !"
ReplyDeleteமொழிபெயர்ப்பு, உங்கள் கட்டுரைகள் போன்றவகளுக்கே முக்கியத்துவம் கொடுங்கள் சார்.
மற்றவைகள் யாவும் உங்களுக்கு எது சுலபமோ செய்யுங்கள்...
ஆயிரம் புத்தகம் தயாரித்த நீங்கள் சீக்கிரமே 'முனைவர்' விருது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது எங்களுடைய ஆவா..
Deleteஇந்த முறை V காமிக்ஸில் ரெகுலர் டெக்ஸ் இதழ் என்பதே ஒரு ஆச்சரியம் தான். ஏன் என்ற கேள்விக்கு வரலை. But, its feels so good. அதிலும் இந்த கதைக்கு ஓவியர் Sandro Scascitelli ன் சித்திரம் ஒரு விஷுவல் ட்ரீட் தான்.
ReplyDelete1986 ஆண்டு ஒரு பொற்காலம் தான். ஒவ்வொரு மாதமும் ஒரு புது அறிமுக நாயகர் என்று பட்டையைக் கிளப்பியது. அதிலும் ரோஜரின் மர்மக் கத்தி நெருக்கமான ஒரு இதழ். கொஞ்சம் புதுமை, Sci-fi & டைம் ட்ராவல் என்று ரொம்பவே பரவசத்தைக் கூட்டியது. என்னுடைய one of the all time favourite ன்னு சொல்வேன். அப்புறம், இந்த ஐந்து நாயகர்களில் யாரு பெஸ்ட் என்று சொல்வது கடினம் தான். என்னளவில் இந்த ஐந்து நாயகர்களுமே all time favourite தான்.
டிசம்பரில் தலைக்காட்டவிருக்கும் கேப்டன் பிரின்ஸையும் இருவருடன் சேர்த்து இந்த மாதத்திலேயே கையைப் பிடித்து இழுத்து உள்ளே போட்டிருந்தீர்களேயானால் கலக்கலாக இருந்திருக்கும். வடை போச்சே....?
மொழி பெயர்த்த நம் ஆசிரியருக்கே இப்படி முடி கொட்டி இருந்தால் ஒரிஜினல் கதை எழுதியவர் தலை எப்படி இருக்கும்...
ReplyDelete😂😂😂😂
Deleteஎனக்குப் பிடித்த வரிசை
ReplyDeleteகேப்டன் பிரின்ஸ்
XIII
புருனோ பிரேசில்
ஜானி
ரோஜர்
சூப்பர் பதிவு சார்...
ReplyDeleteஎல்லா கதைகளும் அப்பவே சுடச்சுட...பொறுமையில்லாமல் வாங்கி வர வர படித்தவை...
*கேப்டன் பிரின்ஸ்...*
பனி மண்டல கோட்டை...வீட்ல படிச்சா முதுகு பழுத்துரும்னு ஒரு மழை நாளில் பக்கத்து வீட்டு திண்ணையிலமலர்ந்து வாசித்து மிரண்டது நினைவில்...நீங்க கசகசன்னு சொன்னாலும்...சித்திரங்களை கண்டுகொள்ளாத எனக்கு வெகுவாய் ரசித்த நினைவு
*XIII*
முதல் கதை படித்த போது ஈர்த்ததா என நினைவில்லை...ஆனா இரண்டு மூன படிச்சிட்டு வாழ்க்கையே தொலைத்து விட்டது போல முதல் பாகத்த தேடித் திரிந்தேன்....கிருஸ்துமஸ் தாத்தா...கருப்பு கதிரவன் தினம்...முதல் பாகத்துல ஏதோ விஷயமிருக்கோ என தேட...1998 வாக்கில் என நினைவு ...பழய புத்தக கடைல உக்கடத்துல முதல் பாகத்த கைப்பற்ற..இந்த லோகத்லயே நானில்லை...டிவிஎஸ்50 ல சந்தோசமா ஃபேண்ட் பாக்கெட்ல வச்ச புக் வழியில் நழுவ...பதிமூனு தன் கடந்த காலத்த தேடியது போல ஒரு குப்பைத் தொட்டி விடாம தேடித் தவித்து கிடைக்காம...மீண்டும் ஓரிரு வருடத்ல முதல் பாகம் கிடைக்க...கதை தெறிக்க விட்டு அசத்தினாலும் கடந்த காலம் பிடிபடாம புதிய வரவுகளுக்காக காத்திருக்க...கடைகளில் குண்டு புக்க விசாரிச்சா கடைய இழுத்து மூடிட்டாங்கன்னதுமே...அடடா முடிவு தெரிஞ்சே ஆகனுமேன்னு...நம்பிக்கையோடும் நம்பிக்கையில்லாமலும் தேட... இக்குண்டு புக் கடைகளுக்கில்லைன்னதுமே அவர் எரிச்சல்ல உளறி வச்சாரோ தெரியல...வந்தாச்சென அறிந்ததால் அதிரடியாக சிவகாசி வந்து எனக்கும் நண்பன் சுஸ்கிவிஸ்கிக்குமொன்ன வாங்கி வர பஸ்ஸிலே முதல் பாகத்த படிக்கத் துவங்க மீண்டது பொற்காலம் 86 ய்...மீண்டும் சில மாதங்களில் எனது புத்தகம் காணாம போக...மீண்டும் தீபாவளிக்கு சிவகாசி பயணம் நண்பனிடம் கேக்க மனமில்லாம...
இந்த ஓர் புத்தகம் மட்டும் கிடைக்காமலிருந்தா என் வாழ்க்கையும் தொலைந்து போயிருக்குமென நினைத்துக் கொண்டிருக்கையில் முதல் பாகம் மீண்டும் சாய்பாபா காலனி ரவி புத்தக கடையில் கிடைத்தத போல...இரண்டாம் முறையாக வாங்க அதன் பிறகு வண்ணக் கனவா மாறி அதுவும் கைகூட...இந்த கதையை எத்தனை முறை படித்து அதனுள் வாழ்ந்திருப்பேனென நினைவில்லை...ஆசிரியர் ஈரோட்ல வைத்த தேர்வில் வைத்து அனைத்து கேள்விகளுக்கும் சரியாய் பதிலலளித்த நபர்களில் நானுமுண்டு...அந்த ஆகஸ்டு 3 நள்ளிரவு மட்டும் பிங்கி பாங்கி போட ...அதிர்ஷ்ட தேவதை அணைப்பில் அதுவும் சரியாக வெற்றி...
இரண்டாம் சுற்றோ இன்னும் மலைக்க வைக்கும் புகைப்படங்களோடு வான்ஹாம்மேக்கே டஃப் தருமளவில் வர அரண்டு போய் முழிக்க...ரசிக்க...பல முறை படிக்க ஒவ்வோர் முறையும் புதுசாக தோணுவதும் பல விஷயங்கள் பிடி படுவதும் ....என் வாழ்க்கையில் இன்று வரை உற்சாகத்தை எப்பவுமே உறுதி செய்யும் ஓர் கதை என் மகன்கள் மனைவிக்கடுத்து இப்புத்தகமென உறுதி செய்வேன்
*புருனோ பிரேசில்*
இக்கதையும் தலைப்பே வெகுவாய் ஈர்க்க....கதை அன்று முதலைபட்டாளம்ங்ற பேர் அடடா...ஆனா அன்று ஈர்த்ததா என நினைவில்லை...பின்னாட்களில் தேட வைத்து கைப்பற்ற இவ்ளோதானா என நினைத்த இதழ்..சாக மறந்த சுறாவோடு சடுகுடு போட...இப்ப வண்ணமும் தெறிக்குன்னு நீங்க சொன்னதும் லார்கோ வண்ணபக்கங்கள இங்க காட்டியது பாத்த போலிருந்த எதிர்பார்ப்பு கூடுது நீங்க ப்ரீவியூ காட்டாததால ...பட்டய கிளப்புவதால அடுத்த வாரம் தாக்க நீங்க வைத்த தாள் என நினைத்து
*ஜானி*
ஏகமாக எதிர்பார்த்து ...தலைப்புகளால் அமானுஷ்யமென நினைத்து ...பேய்கதைக்காக ஏங்கிக் கிடந்த நாட்களை...எங்கப்பா வாயிலாக அறிந்த கதைகளை தவிர வேறேதுமில்லாததால் ஏங்கி வாங்க...பேயுமில்ல பிசாசுமில்ல இவ்வுலத்துலன்னு நானும் பகுத்தறிவுவாதியா மாறி புலம்பிய கதை..எனக்கு இடியாப்ப சிக்கல் தலைப்பே...அடுத்தடுத்து வந்த தலைப்புகளால வாங்கி அமானுஷ்யமில்லாம ஏமாந்தாலும் ஏமாத்தாத கதை
*ரோஜர்*
மர்மக்கத்தி நேரே எதிர்பாத்து எங்க வைத்த கதை...வாங்கி ரசித்ததா என நினைவில்லை ...பின்னர் தேடியலைய...மறுபதிப்பில் பரவால்லயா பட்ட இதழ்..
1986 ன்னதுமே ஏற்பட்ட உற்சாகம்...அந்த கோடை மலர் காலத்துக்கு அழைத்து செல்ல...அடேயப்பா இத்தனை நாயகர்களும் ஒரேயாண்டில் கோடை மலராய் கொட்டியிருக்கே...அந்த வருடம் தானே அனைவரையுமீர்த முதல் கோடை மலர் கூட..86 அ அசைக்க முடியாது எக்காலமும் என அருதியிட்ட பதிவு இது... சூப்பர் சார்
சூப்பர் ஸ்டீல்! மினி பதிவே போட்டுடீங்க👍
Deleteஅருமை சார்..
Deleteஅற்புதமான வாசகர் ஸ்டீல் நீங்க. உற்சாகம் கொப்பளிக்கும் பதிவு. சூப்பர்👌🌹
Deleteஜானி பாத்து அசந்தா... கீழ வந்தா டெக்சட்டை சுலபமா இது வரை வந்ததிலே நான்தான் டாப்புங்குது...செம சூப்பர் சார்
ReplyDeleteகலரில் கபிஷ்
ReplyDelete- ஸ்பைடரின் “பாட்டில் பூதம்”
- அந்த ஸ்பைடர் 2.0 தொடரின் இறுதி (color) இதழ்...
பற்றாக்குறைக்கு - “யார் அந்த மினி-ஸ்பைடர்?” ; Replica மறுபதிப்புகள் என்ற திட்டமிடல்களுமே !!
...வேறென்ன வேணும் சார்..86 களில் இவ்வளோ நாயகர்கள்..திகில் ...ஜுனியர் மினி லயன் வரவுகள் போல மீண்டுமோர் அற்புதம் இவ்வறிவுப்புகள்...அசத்துவோம்
அட்டவணையா பதிவாவும் தந்தாங்க வீடியோ கூட...படிக்கையில் அந்த அட்டவணை சுவாரஷ்யமே வேற லெவல்
ReplyDeleteஅட்டவணை வீடியோ நல்லாத்தான் இருக்கும். Summary மட்டும் பதிவா குடுத்துடுங்க. அடிக்கடி ஏதாவது கேள்வி வந்தா செக் பண்ண பதிவு பெட்டர்.
ReplyDeleteYes Good Suggestion.
Deleteகரெக்ட்டுங்க ஷெரீப்!👍
Deleteநல்ல கருத்து.. தனிப்பட்ட முறையில் வரவேற்கிறேன்.
Deleteஆனால், அட்டவணை புத்தகம் வருவதை குறிப்பாக எதிர்பார்க்கிறேன். தீபாவளி மாத இதழ் விற்பனையின் போது இந்த அட்டவணை புத்தகம் பெரிது கை கொடுக்கிறது புத்தக விழாக்களில், தற்போதைய, மற்றும் புதிய வாசகர்களுக்கு, சந்தா பெற... அட்டவணை புத்தகத்தை, அடுத்த ஆண்டிற்கான பயணத் திட்டத்தை பெரிதும் ரசித்து பார்க்கிறார்கள்.
அட்டவணை புத்தகம் கண்டிப்பாக வரும்.
DeletePlease post here.
ReplyDeleteWe don't like YouTube posts
We can read your post again in work time gaps. So post is the best
ஐயா, அதென்ன we? உங்க கருத்த மட்டும் சொல்லுங்க. பல்வேறு தளங்களில் வாசகர்களை சென்றடையும் ஆசிரியரின் முயற்சி அது.
Deleteஹா, ஹா.... Beautiful... Sir... 😄😄❤️👍
ReplyDeleteசிரிச்சுக்கிடக்கறதெல்லாம் இருக்கட்டும்... 'திகில் காமிக்ஸ்' திரும்ப வந்தால் ஆதரிப்பீர்களா, மாட்டிர்களா?👻💀👽☠️👿
Deleteப்ரின்ஸ் தொடரில் வண்ணத்தில் ரீபிரின்ட் வராத கதைகளையும் வண்ணத்தில் வெளியிட வேண்டும்!
ReplyDeleteஆமாங்கோ...
'இறுதி ஆட்டம்' என்ற தலைப்பும் சரி; தல & கார்ஸனின் துப்பாக்கி டான்ஸும் சரி - அட்டைப்படத்தை சும்மா தெறிக்க விடுகிறது! 😍😍😍😍😍😻😻😻😻
ReplyDeleteMe in 1986 sir - I guess some of them came in summer time? Which is why I remember reading them.
ReplyDeleteYes - aana vandhaa Batman-a dhaan varanum ;-)
DeleteAlways Blog is the Beat Tool to convey Attavanai 2025 sir due to space and download Data constraint. Blog can be read at any pont of time. Whereas youtube link, every time fresh data will be consumed to see the link.
ReplyDeleteI had missed captain prince back then on the month of release - later a school mate gave it for reading. I had gotten Bruno Brazil but somehow was not attracted - so do not remember much about it. Other three I remember vividly.
ReplyDeleteSir - Vlog is only an option, Attaivanai is an emotion - no video - only blog entry - this year you can also print that blog entry colorfully and attach with the booklet !! :-)
ReplyDelete//மேலேயுள்ள இந்த 5 சூப்பர்ஸ்டார்களுள் உங்களது favorite யாரோ ? //
ReplyDeleteஇந்த 5 இல் XIII தான் டாப் .. second will be JOHNNY ..
RELEASE THE CATOLOGUE ALONE IN BLOG SIR .. IF ITS EASY FOR U MEANS VLOG S OKAY SIR ..
ReplyDeleteதிகில் காமிக்ஸ் திரும்ப வந்தால் ஆதரிப்போம்
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete// மேலேயுள்ள இந்த 5 சூப்பர்ஸ்டார்களுள் உங்களது favorite யாரோ ? //
ReplyDeleteசந்தேகமில்லாமல் 100 % ரிப்போர்ட்டர் ஜானிதான்...
// And 1986-லேயே இந்த நாயகர்களை சந்தித்தோர் யாரேனும் இங்குண்டோ ? //
ReplyDeleteநஹி சாப்...
நான் இருக்கேன்.
Deleteஅடடே...
Delete// நள்ளிரவின் நாயகன்”! ரிப்போர்ட்டர் ஜானியின் தொடரின் கதை நம்பர் 77 இது! //
ReplyDeleteநள்ளிரவில் இடியாப்பச் சிக்கல் நாயகன் வருகை மகிழ்ச்சி...
2025 இல் கதை எண் 78 இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன்...
ஈவி திகில் காமிக்ஸ்...அந்த காலத்ல துக்கடா கதைகளால் ஈர்க்காத நினைவு....ஆனா திகிலுக்கு அலைந்தேன்...அந்த பேட்மேன் பட்டய கிளப்ப தொடங்கைல கை விட்டுட்டார்/ டோம்...திகில் கோடை மலர்..அந்த அனைத்து நாயகர் கொண்ட பின்னட்டை என பரேடு கிளப்ப...நம்ம மறுவரவில் தூள் கிளப்பி அதகளப்படுத்த ....அடுத்த ஒரே ஒரு கதை பயங்கரப் பூனைகள் ஏகமாக எதிர்பாக்க வைக்க...அது வந்திருந்தா கூட போதுமென நினைக்க...பச்சை குழந்தை கைல கொடுத்த முட்டாய படக்கென பிடுங்கிய நிலை...ஆனா வராத கதைக மீண்டும் வந்தா நானாராதிக்க தயார்...அந்த துக்கடாக்களுக்காய் ஏக்கமோடு
ReplyDelete// அட்டவணையினையும் வீடியோ பதிவாய் செய்திட சாத்தியமானால் எனக்கு வேலை ரெம்போ ஈசி ! What say மக்களே ? //
ReplyDeleteஉங்களுக்கு எது செளகர்யமோ அதை செய்யுங்கள் சார்...
ஸ்பைடர்லாம் வருது. திகில் காமிக்ஸ் வருவதற்க்கென்ன? நிச்சயம் ஆதரவு உண்டு
ReplyDelete// இதோ - ஒரு 110 பக்க crisp த்ரில்லரில் இரவுக் கழுகாரும், வெள்ளி முடியாரும் //
ReplyDeleteஅட்டைப்படம் செம ஸ்டைலீஷா இருக்கு,ஓவியங்கள் தெறிக்குது...
V காமிக்ஸை இன்னும் ஒருபடி மேலே தூக்கி விடப் போகும் டெக்ஸின் இந்த சாகஸம்...
// ஸ்பைடரின் “பாட்டில் பூதம்” //
ReplyDeleteரெகுலர் சைஸ் வாய்ப்பு இருக்குங்களா சார் ?!
கேப்டன் பிரின்ஸ் ஒரு early Bird! முதன் முதலில் வந்து 1986இல் ஒரு பெரிய தாக்கத்தை என் மனதில் ஏற்படுத்திச் சென்றவர். என் வாக்கு அவருக்கே! மின்மினி என்ற வார இதழில் வந்த கதையையும் கொஞ்சம் சீக்கிரம் கொடுத்து விட்டீர்களானால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteIt's in my Bucket list. Waana read it before I die.
எனது வரிசை
ReplyDelete1. XIII
2. கேப்டன் பிரின்ஸ்
3. ரிப்போர்ட்டர் ஜானி
4. ப்ரூனோ பிரேசில்
5. ரோஜர்
அட்டவணைப்பதிவு அவசியம். அவ்வப்போது அதை படிப்பது தனி சுகம். கூடுதலாக வீடியோ பதிவும் இருந்தால் கூடுதல் சுகம்
இதே தான் எனது வரிசையும்
Deleteகுமார் ஜி
Deleteஇவர்கள் ஐவரையும் சேர்த்து ஒரு கோடை மலர் கேட்கலாமா. XIII spin off, பிரின்ஸ் இதுவரை வராத மறுபதிப்பு, கிளாசிக் ஜானி, முதலை பட்டாளம் 2.0 மற்றும் ஒரு புது ரோஜர் கதை. மிகவும் refresh ஆக இருக்கும்
மேற்கூறிய கதைகள் எதுவும் வெளிவந்த போது படித்ததில்லை. பின் நாட்களில் படித்தது தான்
ReplyDeleteஅன்பு வணக்கம் உறவுகளே.. 🙏🏻🙏🏻
ReplyDelete
ReplyDelete'///திகில் காமிக்ஸ்' திரும்ப வந்தால் ஆதரிப்பீர்களா, மாட்டிர்களா?///
கண்டிப்பாக ஆதரவு உண்டு.. 👌🏻👌🏻💪🏻💪🏻
ஜானியின் அட்டைப்படமும் சரி...டெக்ஸின் அட்டைப்படமும் சரி பட்டையை கிளப்புகிறது சார்....செம அழகு...திகில் காமிக்ஸில் வரும் அதே ஜானியின் பின் அட்டை இன்னமும் அழகு..உட்பக்க சித்திரங்களும் கண்ணை கவர்கிறது...என்னை பொறுத்தவரை அன்று ( பதிமூன்று முழுமையாக அறியாத காரணத்தால் ..)ஜானி தான் எனது பேவரைட் சார்...அதிலும் அவரின் சித்திரங்களுக்காகவே அவ்வளவு ரசிப்பேன்..தெளிவான அழகான நிதர்சனமான பாணி ஜானியின் சித்திரங்கள்..எனவே அன்று முதல் இன்று வரை என்னை மனம் கவர வைக்கிறார் ரிப்போர்ட்டர் ஜானி..
ReplyDeleteஅட்டவனை அறிவிப்பை பதிவாக வெளியிடுங்கள் சார்...புது இதழ்களை பற்றி வாசிக்கும் பொழுது அதன் மகிழ்வு தனி சார்..
ReplyDeleteபதிவிற்கு பிறகு தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது ஒரு வீடியோவையும் போட்டு விடுங்கள்..:-)
தல வாக்கு "தெய்வ வாக்கு"👍✊👌
Deleteஅதே அதே. பதிவை படிக்கும் சுகம் வேறு எதிலும் கிடையாது. அதுவும் காமிக்ஸ் அட்டவணை பதிவு கொடுக்கும் ஆனந்தம் வேறு எதிலும் கிடையாது. 🙏🙏🙏🙏
Deleteஅடுத்த ஆண்டு காமிக்ஸ் அட்டவணை பதிவை type நான் உதவ தயாராக உள்ளேன் சார். 🙏
ஏன் நாங்க உதவ மாட்டோமா?
Deleteடைப்படிப்பதற்கா ஆட்பஞ்சம் சார் - எழுதுவதல்லவோ கசுட்டம்?!
DeleteThis comment has been removed by the author.
Deleteஎது எப்படியோ காமிக்ஸ் அட்டவணை பதிவாக தான் வேண்டும் ஆமாம் சொல்லி விட்டோம் 😊 என்ன குமார் ☺️ வருத்தபடாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயன் styleல படிக்கவும்.
Deleteநீங்கள் சொல்ல சொல்ல நாங்கள் எழுதி அதன் பிறகு type செய்யவும் நாங்கள் தயார் சார்.
//டைப்படிப்பதற்கா ஆட்பஞ்சம் சார் - எழுதுவதல்லவோ கசுட்டம்?!//
Deleteபரணி சகோ டைப்படித்து தருவதை பிழைதிருத்தம் பார்க்க நான் ரெடிங்க ஆசிரியரே
ரம்யா @ 😁 பாருங்க சார். எதற்கும் தயார் நாங்கள்😂
Delete// நீங்கள் சொல்ல சொல்ல நாங்கள் எழுதி அதன் பிறகு type செய்யவும் நாங்கள் தயார் சார். // 100 சதம் சரி. Voice note மட்டும் போடுங்க. மத்ததெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம்.
Deleteசுத்த சைவ வணக்கமுங்கோ....
ReplyDeleteபதிவை வாசித்துட்டு வர்றேன்....
ஈரோடு விஜய் அண்ணாவின் பிரச்சாரம் தீவிரமாக உள்ளது. இருக்கு.. இன்னைக்கு இருக்கு.. ஏதோ இருக்கு.. ஏதோ சம்பவம் இருக்கு.. ஏதோ சம்பவம் இன்னைக்கு இருக்கு..
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅசைவ சாப்பிட முடியாத புரட்டாசி யில் திகில் காமிக்ஸ் கேட்டு திகிலடிக்கும் செயலாளரருக்கு "பன்"பான வணக்கங்கள்
ReplyDelete// "பன்"பான வணக்கங்கள் //
DeleteROFL 😂 😂😂😂😂
ஹீ ஹீ ஹீ (இது கறுப்புக் கிழவியின் சிரிப்பு) வணக்கம் சகோ!🙏💐
DeleteAll stories been read since the first issue. But I have lost more than 400 comics books including muthucomics vaaramalars during 2004-2005.
ReplyDeleteநம்பிள்கு first "பிரின்ஸ்"..😘
ReplyDeletenext "ஜானி"..😍
அப்புறம் "Xiii",'
ப்ரூனோ',
'ரோஜர்'...
திகில் ஊட்டுகிறது EV ன் திகில் வேண்டுகோள்..😱😱😱
ReplyDeleteவாழ்க்கையே 'திகில் லைப்ரரி' மாதிரிதானுங்களே ஜம்பிங் தலீவரே!!👻
DeleteYou too..😊😊😊
DeleteMe too..😃😃😃
இந்த மாத புத்தகங்கள் வாசித்த பிறகு:
ReplyDelete1. டெக்ஸ் , ரூபின், spoon அன்ட் white
2. ஸ்கோர்
டெக்ஸ் இன்னும் 30 பக்கங்கள் அட்டகாசமாக போய் கொண்டு உள்ளது.
இந்த மாதம் மூன்று கதைகள் முதல் இடம்.
வாசித்த பிறகு எனது ரேட்டிங்
Delete1. ரூபின்
2. ஸாகோர்
3. டெக்ஸ்
4. ஸ்பூன் அண்ட் ஒயிட்
அடுத்த ஆண்டு (2025) காமிக்ஸ் அட்டவணை பதிவை type செய்து உதவ நான் தயாராக உள்ளேன் சார். 🙏
ReplyDelete💐💐👌👌🙌
Deleteஅப்புறம் எங்களை நம்பி இந்த வேலையை கொடுக்கலாம் சார், அட்டவணையை பிளாக்கில விற்பனை எல்லாம் செய்து கல்லா கட்ட மாட்டோம் என உறுதி அளிக்கிறோம் சார் ☺️😊
Deleteஅதுக்கென்னல...அட்டவணையே தயார் செஞ்சு குடேன்...யார்ட்ட கேக்குற நம்ம ஆசிரியர்ட்டதான
Delete//அதுக்கென்னல...அட்டவணையே தயார் செஞ்சு குடேன்...யார்ட்ட கேக்குற நம்ம ஆசிரியர்ட்டதான//
Deleteஸ்டீல்!@😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂
Deleteசிறப்பாக செய்து விடுவோம் மக்கா 🤣
Delete// அதுக்கென்னல...அட்டவணையே தயார் செஞ்சு குடேன்...யார்ட்ட கேக்குற நம்ம ஆசிரியர்ட்டதான // ROFL செம்ம ஸ்டீல்
Deleteபடிப்பதற்கு அவ்வப்போது நேரம் ஒதுக்கி படிக்கிறோம். தயவு செய்து வீடியோ அட்டவணை வேண்டாம் சார். வீட்டில் மொபைல் பார்ப்பதே குறைவு இதில் நான் மொபைலில் வீடியோ பார்ப்பது தெரிந்தால் பெரிய கலாட்டாவாகி விடும் சார்.
ReplyDeleteபதிவு என்றால் பார்க்க நிறைய படங்கள் இருக்கும் ரசித்த படியே படிக்க சுவாரசியமாக இருக்கும் சார்.
1000000++++
Delete+ 108
Deleteநீங்க TV ல stream பண்ணுங்க பரணி. Simple
DeleteTV ரிமோட் என் கையில் கிடைப்பது அரிது குமார். 😊
Delete// And 1986-லேயே இந்த நாயகர்களை சந்தித்தோர் யாரேனும் இங்குண்டோ ? //
ReplyDeleteநான் இவைகளை அந்த ஆண்டே படித்து இருக்கிறேன் சார்.
திகில் லைப்ரரி கதைகள் இந்த காலத்தில் ரசிக்க முடியமா என்பது சந்தேகம் சார்; ஒரு புத்தகம் விட்டு எப்படி போகிறது என்று பார்த்து முடிவு செய்யலாம் சார். முடிந்தால் கிராஃபிக் நாவல் கதைகளை மீண்டும் கொடுங்கள் சார்.
ReplyDeleteஇவர்கள் ஐவரையும் சேர்த்து ஒரு கோடை மலர் கேட்கலாமா. XIII spin off, பிரின்ஸ் இதுவரை வராத மறுபதிப்பு, கிளாசிக் ஜானி, முதலை பட்டாளம் 2.0 மற்றும் ஒரு புது ரோஜர் கதை. மிகவும் refresh ஆக இருக்கும்
ReplyDeleteஇது நல்லாருக்கே
DeleteThis comment has been removed by the author.
Deleteபடிக்க நல்லா இருக்கனுமே 😃 சில வருடங்களுக்கு முன்பு வந்த ரோஜர் கதை என்னை ரொம்ப பயமுறுத்தி விட்டது 🤣
Delete// And 1986-லேயே இந்த நாயகர்களை சந்தித்தோர் யாரேனும் இங்குண்டோ ? //
ReplyDeleteநானுமே...
இந்த கேள்வியை இப்படி கேட்டிருக்கக் கூடாது. மாறாக, வரிசைப்படுத்த சொல்லி இருக்கலாம்!
ReplyDeleteஎன்னுடைய வரிசை:
Xiii
ரிப்போர்ட்டர் ஜானி
கேப்டன் பிரின்ஸ்
சாகச வீரர் ரோஜர்
ப்ருனோ பிரேசில்
ஈரோடு விஜய் பெயரில் யாரோ அட்டுழியம் செய்றாங்க. கீழே கண்ட message உள்ள பின்னூட்டங்களை நீக்கி விடுங்கள் 😆😆😆😆
ReplyDelete// 'திகில் காமிக்ஸ்' திரும்ப வந்தால் ஆதரிப்பீர்களா, மாட்டிர்களா?👻💀👽☠️👿 //
திகில் காமிக்ஸ் திரும்ப வந்தால் ok தான். ஆனா கமெண்ட் திரும்ப திரும்ப வந்தால்?..... ஒரே திகிலா இருக்கே .....
Deleteவிஜய் IDய யாரோ hack செய்து விட்டார்கள் சார் 😂
Delete// நாங்களும் சண்டியர் தான்வே” என்று மதுரை, திருப்பூர் நகரங்களும் மார் தட்டுகின்றன இப்போது! //
ReplyDeleteசூப்பர் சார். மகிழ்ச்சி.
என்னுடைய வரிசை:
ReplyDelete1. Xiii
2. ரிப்போர்ட்டர் ஜானி
3. கேப்டன் பிரின்ஸ்
இப்போது திரும்பி பார்த்தால் மற்ற இருவரின் அட்டைப்படம் நன்றாக இருந்த அளவுக்கு அவர்கள் கதைகள் இல்லை.
##1986-லேயே இந்த நாயகர்களை சந்தித்தோர் யாரேனும் இங்குண்டோ ? ##
ReplyDeleteநான் படித்திருக்கிறேன் சார்..😍😘👍✊👌
1986 ல். நானும் அனைத்து நாயகர்களின் கதைகளையும் படித்து இருக்கிறேன்
ReplyDeleteEV எதோ code word போல திகில் காமிக்ஸ்? திகில் மட்டுமல்ல, ஜுனியர் லயன், மினி லயன், ஜம்போ காமிக்ஸ் என்று எது வந்தாலும் ஆதரிப்போம்.
ReplyDeleteஅவர் வீட்டில் அவர யாரோ பயமுறுத்தி விட்டார்கள் குமார் 🤣
Deleteசினம் கொண்ட சின்னக் கழுகு :-
ReplyDeleteடெக்ஸ் குழுவினர் கதை முழுவதும் வரும் கதை என்றால் டமார் டுமீல் நங் சத் இருக்கும் கதை என்று உள்ளே நுழைந்தால் ஒரு அழுத்தமான கதை அடி தடி அளவோடு ஒரு வலிமையான வில்லனுடன் மோதும் கதை. வழக்கமான டெக்ஸ் கதையில் வில்லன் இவன்தான் என்று ஆரம்பத்தில் தெரிந்துவிடும் ஆனால் இந்த கதையில் வில்லன் யார் என்பதே பாதி கதைக்கு மேல் தான் தெரிய வருகிறது; சிறப்பு. நமது குழுவினர் தனித்தனியாக பிரித்து சென்று வில்லனை கண்டுபிடிப்பது மற்றும் அவர்கள் இறுதியில் இணையும் புள்ளி சிறப்பு. சமாதானம் பேச வரும் செவ்விந்தியர்கள் வெள்ளையர்களால் அனைத்து கதவுகளை அடைத்து வைத்து சுட்டு கொள்வது ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுபடுத்தியது.
சுவாரசியமான சம்பவங்கள் சில பல திருப்பு முனைகள் கதையை சுவாரசியமாக கொண்டு சென்றது.
குறை என்று பார்த்தால் கதைக்கு தலைப்பு பொருத்தமாக தோன்றவில்லை.
இந்த வருடத்தின் அழுத்தமான டெக்ஸ் கதை.
கதையில் நிறைய கதாபாத்திரங்கள் ஆனால் அவை ஒவ்வொன்றும் கதையில் ஏதோ ஒரு இடத்தில் சரியாக உபயோகபடுத்தி உள்ளார்கள்.
Deleteகார்சன் மற்றும் டெக்ஸ் கலாய்க்கும் காட்சிகள் குறைவு என்றாலும் அழுத்தமான கதை அமைப்பு போரடிக்காமல் படிக்க செய்தது.
Hi..
ReplyDelete////அட்டவணையினையும் வீடியோ பதிவாய் செய்திட சாத்தியமானால் எனக்கு வேலை ரெம்போ ஈசி ! What say மக்களே ? ////
ReplyDelete---எனக்கே ஓகே சார்...
வீடியோ அட்டவணை சிறப்பாகவே இருக்கும்...
சம்மரியை மட்டுமே பதிவாக போட்டா போதும்..
கதைகள் எத்தனை, சந்தா வகைகள் எத்தனை உள்ளது...சந்தா தொகை, ஸ்பிளிட் சந்தா கட்ட தவணை நேரங்க் என முக்கிய விபரங்கள் மட்டுமே பதிவில போதுமான ஒன்று..
கதை தேர்வுகள், தேர்வுக்கான காரணங்கள், விலக்கப்பட்ட காரணம், கேள்வி பதில் என அனைத்தும் வீடியோவில் அறிகிறோம்.
வருடா வருடம் ஒரே மாதிரி இருப்பதற்கு வீடியோ ரீலீஸ் வித்தியாசமானதாக இருக்கும் சார்
ஜானி கதைகள் ஒவ்வொரு முறையும் வாசிக்கும்போதும் இதை டீகோட் செய்ய தாங்கள் எத்தனை சிரமம் பட்டு இருப்பீர்கள் என ஒரு எண்ணம் வரும்.. அதற்கான பதிலாக இந்த பதிவு உள்ளது... ஜானி ஒர்த்தி ரீடிங்..ஹேட்ஸ் ஆஃப் டூ யூ சார்
ReplyDelete///- XIII
ReplyDelete- ரிப்போர்ட்டர் ஜானி
- கேப்டன் ப்ரின்ஸ்
- ப்ரூனோ ப்ரேசில்
- சாகஸ வீரர் ரோஜர்
இந்த ஐந்து ஜாம்பவான்களுமே 1986-ல் ஒட்டுமொத்தமாய் debut செய்தவர்கள்!!////
5ல தாங்கள் பதிவிட்டு உள்ளதே என் ஃபேவரைட் வரிசையும் கூட...
ஆசிரியர் வரிசையும் இது தான் என்று நினைக்கிறேன் ☺️
Deleteஆமா..ஆமா..XIIIகாதல் ஆசிரியர் சாருக்கும் இருக்க தானே செய்யும்... அவரின் காமிக்ஸ் பயணத்தின் இரு முனைகளையும் காண வைத்த கதையல்லவா அது...
Deleteமேலேயுள்ள இந்த 5 சூப்பர்ஸ்டார்களுள் உங்களது favorite யாரோ ?
ReplyDeleteசந்தேகமேயில்லாமல் """XIII ,💞💞💞இரத்தப்படலம் எனும் சகாப்தம்...💞💞💞"""
1993ல் வெளியான இரத்தப்படலம் பாகம் 4 தான் எனக்கு அறிமுகம்.. அப்போதுலாம் இரத்தப்படலம்னாவே ஒரு ஜிவ் ஓடும் அடிவயிற்றில்......,
இரத்தப்படலம் தேடி ஓடிய நாட்கள்....!!!!
*1990களில் காமிக்ஸ் படிக்க வந்த காலத்தில் டெக்ஸ் வில்லர் கதைகளுக்கு அடுத்து நான் மிகவும் ரசித்தது இரத்தப்படலம் தான். அதுவரை 4பாகங்கள் வந்திருந்தன போல. அவற்றை சேர்க்கவும், படிக்கவும் இரத்தப்படலம் ரசிகர்கள் இடையே கடும் போட்டியும், அதீத ஆர்வமும் நிலவி இருக்க கூடும். இயல்பான ரசிகர்கள் மிகுந்திருந்த காலம் அல்லவா அது.
*இரத்தப்படலம் பாகம்4 தான் நான் முதலில் படித்தது. 1993ல் பாகம் 4 வந்தபோது கடையில் நேரடியாக வாங்கினேன்! துவக்கத்தில் பழைய புத்தக்கடை அல்லது நண்பர்களிடம் இருந்த இரவல் வாங்கித்தான் புத்தகங்கள் படித்து உள்ளேன். இரத்தப்படலம்-கதையின் ஓட்டம் முந்தைய பாகங்களை படிக்க வேணும் என்ற ஆசை வேட்கையை தூண்டியது.
*சரி தேடுவோம்னு அழைந்து திரிந்தபோது பாகம்3 எளிதாக கிடைத்து விட்டது. ஆனால் பாகம் 2ம், பாகம் 1ம் என்ன தலைகீழாக நின்றும் கிடைக்கல. (பாகம்2- லயன் சூப்பர் ஸ்பெசலில் வந்துள்ளது என்ற தகவல் எனக்கு தெரியாத நாட்கள் அவை). இதற்கு இடையில் பாகம்5 "நெருக்கடி வேளை ஒத்திகை" மார்ச் 1995ல் வெளிவந்து சக்கை போடுபோட்டது. அப்போது நான் கல்லூரி முதல் ஆண்டு.
*மேலும் ஓராண்டு ஓடிப்போனது. 1996ல் வெளியான மரணமுள் இதழில் சேலம், அன்னதானபட்டில வசிக்கும் மூத்த வாசகர் திருA.சிவா அவர்களின் அறிமுகம் "மாதம் ஒரு வாசகர்"-பகுதில வெளிவந்தது. ஒரு மாசம் தயங்கி தயங்கி அவரோட வீட்டுக்கு சைக்கிளை மெதுவாக விட்டேன்.
*அரசு பணிக்கு தேர்வு எழுத ரெடி ஆகிட்டு இருந்தார். நிறைய புத்தகங்கள் இறைந்து கிடைந்தன. பழகியதும் புரிந்து போனது மனிதர் அசாதாரணமான காமிக்ஸ் அறிவு கொண்டவர் என! இரத்தப்படல தீவிர வாசகர் எனவும் தெரிந்து கொண்டேன். பாகம் 1,2,3,4,5 என எல்லாம் பக்கம் பக்கமாக சொன்னார். அவரின் ஆர்வம் சற்றே தூக்கலாகி பாகம் 2, 3,4 ஐ பாகம் 5ன் பெரிய சைஸ்க்கு ஜெராக்ஸ் எடுத்தும், பாகம்1ஐ அப்படியே ஒரிஜினல் புக்கை வைத்தும்(அவரிடமும் பாகம்1க்கு அட்டை நஹி) பைண்டிங் செய்து வைத்து இருந்தார். அப்படியே அள்ளி கொடுத்தார், படிக்க! துள்ளும் மனதுடன் வீட்டுக்கு சைக்கிளை கிளப்பினேன.
*பாகம்1&2வை பலமுறை படித்து தலைல ஏற்றிக் கொண்டேன். தொடர்ந்த மாதங்களில் அவரிடம் பேசும்போது பாகம் 2 லயன் சூப்பர் ஸ்பெசல் என்ற குண்டு புக்கில் வந்திருந்த தகவல் தெரிந்து கொண்டேன். இரத்தப்படலம் பற்றி பேசும் போது அவரது கண்கள் எக்ஸ்ட்ராவாக ஜொலிக்கும். கர்னல் ஆமோஸ்க்கு ஒற்றை கை தான் என்பது அவரிடம் இருந்து தான் தெரிந்து கொண்டேன். அப்போது அத்தனை நுணுக்கமாக பார்க்கும் ரசிகன் அல்ல நான். மேலும லயன் பொற்கால தகவல்கள் எல்லாம் அடியேன் தெரிந்து கொண்டது அவரிடம் இருந்தே! எத்தனை கேட்டாலும் மனிதர் சளைக்காமல் பலமணி நேரம் சொல்லிட்டே இருப்பார். இரத்தப்படலம் 1&2உடன் லயன் குண்டு புக்குகளும் என் தேடலில் சேர்ந்திருந்தன!
பிற்பாடு அவற்றை நிறைய தேடலுக்குப்பின் ஒரு நாள் அடைந்தேன்.. அதுபற்றி பின்னர் ஒரு பதிவில பார்ப்போம்.
And 1986-லேயே இந்த நாயகர்களை சந்தித்தோர் யாரேனும் இங்குண்டோ ?
ReplyDeleteஇதற்கு சீனியர் வசாகர்களின் பதில்கள் அனைத்தும் அருமை..
மீ 1989/90/91கால கட்டங்களில் தான் காமிக்ஸ் வாசிக்க ஆரம்பம்
V comic's டெக்ஸ் ஓவியங்கள் மாஸ் சார்....
ReplyDeleteஅக்டோபரில்
ReplyDeleteடெக்ஸ், ஜானி, ப்ரூனோ & ஸ்டெர்ன் என 4வரும் ஹெவி வெயிட்ஸ்...
செப்டம்பரில் ரூபின், ஸ்பூன் என இரு லைட்ஸ் & ஜோகோர்+ டெக்ஸ் டாப்ஸ்...
அட்டவணையில் இருந்து மாதா மாதம் ப்ளான் பண்ணும்போது ஈவனாக வரும்படி அமைக்க வேண்டுகிறேன் சார்.
புதியவர்கள் & சமீபத்திய அறிமுகம் எல்லாம் மாதம் ஒன்று என மட்டுமே இருந்திருந்தால் செப்டம்பரில் ஏற்பட்ட ஒரு சின்ன வெற்றிடம் இருந்திராது..
டை ஹார்டு பேன்ஸ் தாண்டி சாமன்ய ரசிகர்கள் ரூபின்& ஸ்பூன் 2யும் யோசிப்பார்கள்.
இப்படி அமைந்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளீர்கள் சார்.. தங்கள் உடல் நலம்& பணிச்சுமை புரிகிறது..
//கலரில் கபிஷ்
ReplyDelete- ஸ்பைடரின் “பாட்டில் பூதம்”///
ரொம்ப ஆவலுடன் இரண்டிற்கும் வெயிட்டிங் சார்😍😍😍😍😍😍😍😍
/// - “யார் அந்த மினி-ஸ்பைடர்?” ; Replica மறுபதிப்புகள் என்ற திட்டமிடல்களுமே !!///
ReplyDelete--- ஐயா அந்த கடத்தல் குமிழிகள் & உலகப் போரில் ஆர்ச்சி ரிப்ளிகாகள்????😍😍😍😍😍
ரஷ்யாவின் முன்னாள் ஏஜெண்ட் ஒருவன் க்யூபா சிறையில் இருக்கிறான்.அவனை விடுவிக்க பெரும்தொகையை கோரி சிறையின் வார்டன் ரஷ்ய உளவுத்துறைக்கு தகவல் கொடுக்கிறான்.அந்தத் தகவலை இடைமறித்துக் கேட்கும் ஜேஸன் வகையராக்கள்…ரஷ்யா உளவுத்துறை பணம்கொடுத்து ஏஜெண்டை மீட்கும் முன்னே..தாம் முந்திக் கொண்டால்..நடக்கவிருக்கும் தேர்தலில் ஜெயிக்க அந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளலாம் என தீட்டம் தீட்டுகிறார்கள்.
ReplyDeleteஇடையே.. ஜேசனின் முன்னாள் நினைவுகளை அழித்து (மறுபடியுமா.?) தன் கைப்பாவையாக்கி.. அவனை இந்நாள் துணை ஐனாதிபதி ஆக்க வாலி ஷெரிடனின் முன்னாள் மனைவி பிட்சிம்மன்ஸ் தரும் ப்ரசர் மற்றும் நாடுகடத்தப்பட்ட. முன்னாள் ஜெனரல் காரிங்டன் தேர்தலில் போட்டியிடுவதான குடைச்சலில்..இந்நாள் அதிபர் கடுப்பாகி..க்யூபா ஆபரேசனில் ஜேசனை போட்டுத் தள்ள ஒரு உளவாளியை கூடவே அனுப்புகிறார்.
ஒரு பக்கம் மாஸ்கோவிலிருந்து ஒரு க்ரூப் க்யூபா வருகிறது.மறுபக்கம் வாஷிங்டனிலிருந்து ஒரு க்ரூப் க்யூபா வருகிறது.ரெண்டு க்ரூப்பும் சிறையில் ஏக காலத்தில் சந்திக்கும்போது மக்லேனை ஸ்டண்ட் மேன் என ரஷ்ய அதிகாரி போரிஸ் கண்டு கொள்கிறார்.ஸ்நைப்பர் வைத்து விளையாடிய காலத்திலேயே இருவருமே ஜிகிடி தோஸ்த் எனப் பிற்பாடு தெரிகிறது.
நடுவிலே..சிறையில் நடக்கும் தில்லாலங்கடியை சிறை அதிகாரி ஒருவர் மேலிடத்துக்கு விளக்க..க்யூபா உள்துறையிலிருந்து முக்கிய அதிகாரி ஒருவர் அவசர அவசரமாக க்யூபா சிறைக்கு வருகிறார்.அப்போதான் தெரிகிறது அந்த அதிகாரி வேறு யாருமல்ல க்யூபா ரகசிய முகாமில் ஸ்டண்ட் மேனுக்கும்..போரிஸுக்கும் ட்ரெய்னிங் கொடுத்தவர்.
ஆ….ஆ….
மந்தையிலிருந்து பிரிந்த ஆடுகள்..ஒன்று சேர்ந்த போது..பேச முடிய வில்லையே.
என்ன செய்ய… மூன்றுபேரும் மூன்று துருவங்கள்.அதிகார பலம் கொண்ட போரிஸ் இருவரையுமே கடத்திக் கொண்டு ரஷ்யா விரைய..அடுத்து என்ட் கார்டு.
இதுக்கு இல்லையா சார் ஒரு என்ட்.
😁 வித்தியாசமான விமர்சனம் ☺️
Deleteஅவன்: மச்சான் இன்னைக்கு என்ன காமிக்ஸ் படிக்கலாம்.?
ReplyDeleteஇவன் : நல்ல ஐடியா.டெக்ஸ் கதை படிக்கலாம். சூப்பரா இருக்கும் மாய்ள.
அவன் : அட்டையை எடுத்திட்டா அதெல்லாம் ஒரே கதைதானே.
இவன் : அப்ப கேப்டன் டைகர் படிக்கலாமா.?
அவன்: அதெல்லாம் கரைச்சி குடிச்சிட்டோமேடா.
இவன் : சரி…லக்கி லூக் படிக்கலாமா.?
அவன் : லக்கியில பழைய கதை மாதிரி இப்பல்லாம் இல்லையே.
இவன் : அப்ப ஸ்பைடர்..இரும்புக்கை மாயாவி..ரிப் கெர்பி..யோட க்ளாசிக் கதையை படிப்போம் மாப்ள..செம ஜாலியா இருக்கும்.
அவன்: என்ன ஜாலி.?புதுக் கதைங்க ஆயிரக் கணக்குல கொட்டிக் கிடக்கு. அதப் படிச்சி வாசிப்புத் திறனை டெவலப் பண்ணி முன்னேறலாம்னு பாத்தா..இப்படி காலரைப் பிடிச்சி பின்னாடி இழுக்குறியே.நியாயமா.?
இவன் :அதுவும் சரிதான்.அப்படின்னா ஆல்ஃபா..சிஸ்கோ..IRS..டேங்கோ கதைங்களை ட்ரை பண்ணுவமா.?
அவன்;என்னய்யா…ஆல்பா..நசநசன்னு ஒரே டயலாக்கா இருக்கு..IRS புரியவே மாட்டேங்குது.சிஸ்கோவைப் பாத்தா கடுப்பாகுது.எல்லாத்துலேயும் பேசிட்டே இருக்காங்க மச்சான். காது வலிக்குது
இவன்;கரெக்டுதான்..அப்படின்னா…நிஜங்களின் நிசப்தம் கதையைப் படிப்போமா.யலாக்கே இருக்காது.
அவன் ; போதும்பா..கதையெல்லாம் ஒரே இருட்டா இருக்கு.கேட்டா..குறியீடுங்குறாங்க.வேற நல்ல அட்வென்சரரா சொல்லு
இவன் ; அட்வென்சர்னா தோர்கல் தான் வேற சாய்ஸே இல்ல.படிக்க செமையா இருக்கும்.
அவன்; எங்க படிக்கிறது..அதான் வருஷா லருஷம் போட்டிக்கு படிக்குறதுக்கு புரட்டி புரட்டி புக்கே கிழிஞ்சே போச்சு.
இவன் ; அடப் பாவமே.! சரி விடு. ஜெரெமையா டிரை பண்ணுவோம்.டிபரென்டா இருக்கும்.
அவன் ; எங்க..மூஞ்சியெல்லாம் ஒரே மாதிரி இருக்கு.படிக்கிற மூடே வரமாட்டேங்குது.
இவன்; வித்தியாசமான ஆர்ட் ஒர்க்ன்னா மார்டின் ஓ.கே வா.?
அவன் ; ஏன் பைத்தியம் புடிக்கவா.?
இவன் ; சரி..ஜாகோர்.?
அவன் ; நேத்து வந்த பையன்டா
அவன்.; மாடஸ்டி.?
அவன் ; நல்ல வித்தியாசமான ஜானரோட கதையை சொல்லுவேனு பாத்தா..மமாடஸ்டியை ஏன் தொந்திரவு பண்றே.
இவன் ; சரி..பௌன்சர்.அண்டர் டேக்கர் இதெல்லாம்…
அவன் ; 18+ கன்டென்ட் மச்சான்.அதில்லாம கதையெல்லாம் ரத்தம் தெறிக்குது.ஓவர் வயலன்ஸ்.
இவன் ; பேசாமா..டெக்ஸ் கதையே படிக்கலாம்.
அவன் ; படிக்கலாம்தான்…ஆனா அட்டையை எடுத்திட்டா எல்லாம் ஒரே கதைதானே.
etc.,....
etc…..
etc…..
😃😃😃
செம செம கற்பனை. அட்டகாசம்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete