Monday, July 01, 2024

அட்வைஸ் அர்னால்டு !!!

 நண்பர்களே,

வணக்கம். ஏழு இல்லே...பதினாலு கழுதை வயசானாலுமே பிழைகளுக்கு விதிவிலக்காகிட மாட்டோம் போலும் ! Yes , நான் குறிப்பிடுவது இம்மாதத்து கலர் டெக்ஸ் இதழில் நேர்ந்துள்ள குளறுபடியினைத் தான் என்பதை புரிந்திருப்பீர்கள் ! "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை !" என்ற பெயரில் கலரில் நாளை உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டவுள்ள ஆல்பமானது 2016-ல் black & white-ல் வெளியான அதே சாகஸமே என்பதை ஞாயிறு இரவினில் தான் உணர்ந்து தொலைத்தேன் ! போனெலியிலிருந்து வந்திருந்த கோப்புகளில் ஏதோ மாறிப் போயிருக்க, அதனை புதுக்கதை என்றெண்ணி போன மாதம் மொழிபெயர்த்த சகோதரியில் துவங்கி, டைப்செட்டிங் செய்த நமது DTP டீமிலிருந்து, மேற்பார்வையிடும் மைதீன் வரைக்கும் சொதப்பியதெல்லாம் கூட பெரிய சமாச்சாரமல்ல - ஆனால் எடிட்டிங்கிற்குத் தூக்கிக் கொண்டு அமர்ந்த எனக்கும் இது எட்டாண்டுகளுக்கு முன்னே பணியாற்றிய ஆல்பமே என்பது உறைக்காமல் போனது தான் மடத்தனத்தின் உச்சம் !! 

ஒரிஜினலாக இந்த ஸ்லாட்டில் வந்திருக்க கதைக்கு வைத்திருந்த பெயரோ "விதி எழுதிய வெற்றி வரிகள்" ! But மொழிபெயர்ப்பு செய்திடும் சகோதரிகளிடம் எப்போதுமே அவர்களது பெயர் suggestions-களை நான் கேட்பது வாடிக்கை ; அதற்கேற்ப இம்முறை அவர் கொடுத்திருந்த பெயர் முதல் தபாவாய் நன்றாகத் தோன்றிட, அதையே போட்டு விளம்பரத்தைப் போன மாதமே சாத்தியிருந்தோம் ! இதில் கொடுமை என்னவெனில், எப்போதுமே இம்மியூண்டு பிசகைக் கூட கவனித்திடும் sharp shooters ஆன நீங்களும், விளம்பரத்தினில் இடப்பிடித்திருந்த  சித்திரங்கள் ஏற்கனவே வெளியானவை என்பதைக் கவனித்திருக்கவில்லை ! So எதுவும் தெரிந்திருக்காமலே அவசரமாய் எடிட்டிங் முடித்து அச்சும் முடித்திருந்தோம் - போன வாரயிறுதியில் ! ஆனால் ஞாயிறன்று பதிவினில் நண்பரொருவர் "இது ஏற்கனவே போட்ட கதையாச்சே சார் ?" என்ற பின்னூட்டத்தினைப் பதிவு செய்த போது தான் தலை கிறுகிறுத்துப் போனது ! நானிருந்ததோ - சென்னையில் - சிகிச்சையில் !! ஞாயிறு இரவு ஊர் திரும்பிய கையோடு ஆபிஸுக்கு ஓடிப் போய்ப் பார்த்தால், நண்பரின் observation ஆகச் சரியே என்பது புரிந்தது !! பேஸ்தடித்துப் போயிற்று - நடந்திருக்கும் கோமாளித்தனத்தின் பரிமாணத்தை எண்ணி !

பொதுவாய் பிழைகளுக்கு சப்பைக்கட்டு கட்டுவது எனக்கு ஏற்புடையதே அல்ல ! பிழையை ஒத்துக் கொண்டு, அதனை நிவர்த்திக்க முனைவதே முன்செல்லும் பாதை என்று நம்புகிறவன் நான் ! அதற்கேற்ப, இந்த மாதத்து சொதப்பலுக்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் folks ; and I apologize for the terrible lapse !! வயசாகி வருகிறதென்பதற்கான எச்சரிக்கையாகவுமே இதனைப் பார்த்திடுகிறேன் !! எது, எப்படியோ - வரும் ஆகஸ்ட்டில் வேறொரு முழுநீள டெக்ஸ் புது சாகசமொன்று, விலையில்லா இதழாய் உங்களது கூரியர் டப்பிகளில் இடம்பிடித்திடும் !! நமது மன்னிப்புகளுடன் அதனை ஏற்றுக் கொள்ளக் கோருவேன் !! 

"ரைட்டு, சிகிச்சைன்னு ஏதோ பிட்ட போட்டியேப்பா ...என்னாச்சு ?" என்ற உங்களின் வினவலுக்கு பதில் சொல்லி விடுகிறேனே ! பொதுவாக பெர்சனலான சமாச்சாரங்களைப் பற்றி, அதிலும் உடல் சார்ந்த நோவுகளைப் பற்றி இங்கு நான் பகிர்ந்திட விழைவதில்லை ! யாருக்குத் தானில்லை சுகவீனங்கள் ? So "எனக்கு இங்கே இஸ்துக்கிச்சு ; அங்கே வலிச்சுக்கிச்சு" என்றெல்லாம் எழுதிக் கொண்டு அனுதாபம் தேடுவதில் எனக்கு உடன்பாடே கிடையாது ! ஆனால் யாம் பெற்ற துன்பத்திலிருந்து நீங்களாச்சும் பாடம் படிச்சிக்கினா தேவலையே ?! என்ற ஒரு எண்ணம் தோன்றியதால் மாத்திரமே இதைப் பற்றி இங்கே வாயைத் திறக்கிறேன் :

ரெண்டு மாதங்களாகவே இடது தோள்பட்டையில் ஒரு வித இறுக்கம், நோவு இருந்து கொண்டிருந்தது ! அந்தப் பக்கமாய்ப் புரண்டு படுத்தால் வலியில் பிராணன் போக ஆரம்பித்த போது தான், 'ஆஹா...இது மாமூலான சுளுக்கோ ; பிடிப்போ அல்ல ! என்று உறைத்தது ! அப்புறமாய்த் தான் தெரிய வந்தது - இது Frozen Shoulder என்றதொரு சிக்கலின் வெளிப்பாடென்று ! தோள்பட்டையில் இருக்கும் உள்தசையானது வலுவாகிப் போக, அந்த மூட்டின் அசைவுகளை அது கொஞ்சம் கொஞ்சமாய் இறுக்கிப் பிடிக்குமாம் ! கையை உயர்த்துவதே பெரும் பிரயத்தனம் என்றாகி, நாளாசரியாய், சின்னச் சின்ன அசைவுகளை செய்வதற்குள்ளே நாக்குத் தொங்கிப் போகுமென்ற நிலைக்கு இட்டுச் சென்று விடுமாம் ! Middle age-ல் வரக்கூடிய இந்தச் சிக்கலானது சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச இணைப்பாகிடுவது சகஜமாம் ! 'பங்க பிரி..பங்க பிடி..!' என்று 20 வருஷங்களுக்கு முன்பாகவே சர்க்கரை வியாதியை எனக்கும், மூத்த 2 சகோதரிகளுக்கும் அப்பா அன்பளிப்பாக்கியிருக்க, இந்த Frozen Shoulder சகிதம் குப்பை கொட்டுவது எப்படியென்ற தேடலில் கடந்த 4 வாரங்களாக நான் பிசி ! சட்டையைப் போடவோ, கழற்றவோ, இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொள்ளணும் ! முதுகுக்குப் பின்னே அரிக்குதெனில் சொரிந்து கொள்ள பசுமாடாட்டம் சுவரைத் தேடணும் ! உசக்கே பெர்த்தில் ஏறிப் படுக்கனுமென்று நினைத்தாலே உறக்கம் ஓடிப்போயிடும் !  இதுக்கு குணமென்று பெருசாய் எதுவும் லேது ;  சமாளிக்கும் வைத்தியம் பாத்துக்கிட்டா, ஒண்ணோ, ரெண்டோ, மூணோ வருஷங்களில் சரியாகி விடும் என்று சொன்னார்கள் ! வைத்தியம் பாக்காங்காட்டி, அதுவாவே அறுநூறோ, எழுநூறோ, எண்ணூறோ நாட்களில் சரியாகிடும் என்றும் சொன்னார்கள் ! 'ஆனா உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு !' என்றபடிக்கே கடந்த 4 வாரங்களாக வெளியூரில் இதற்கான அக்குபங்ச்சர் ; physiotherapy சிகிச்சைகளில் வாரயிறுதிகளை ஓட்டி வருகிறேன் ! 

இந்த Frozen Shoulder தரும் வேதனை ஜாஸ்தியா ? அல்லாங்காட்டி இதற்கென அவர்கள் தரும் பயிற்சிகளும், சிகிச்சைகளும் தரும் வலி ஜாஸ்தியா ? என்றொரு பட்டிமன்றத்தை ஈரோட்டில் வைத்தாலென்னவென்று கூட ஒரு கட்டத்தில்  தோன்றியது ! இதில் கூத்து  என்னவென்றால், ஒரு தோள்பட்டைக்கு வந்து சுகம் கண்ட நோவானது, அடுத்த தோள்பட்டையையும் அரவணைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் ஏக பிரகாசமாம் ! அடடே...ஆடித் தள்ளுபடி மெரி, தோள்பட்டைக்கு "ஆடாத" தள்ளுபடி கூட உண்டாக்கும் ?! என்று டாக்டரிடம் மண்டையை ஆட்டிக் கொண்டேன் ! வீட்டில் வைத்துச் செய்ய ஒரு வண்டி stretches ; exercises என்று தந்துள்ளனர் ; வலியினை பொறுத்துக் கொண்டு தொடர்ச்சியாய் அவற்றைச் செய்து கொண்டே இருக்கணுமாம் ! So வீட்டிலிருக்கும் ஜன்னல் கிராதிகளைப் புடிச்சிக்கினு இப்டிக்கா ; அப்டிக்கா திருகிக் கொள்வது ; கையில் ஒரு குச்சியை 'ஆட்றா ராமா' ஸ்டைலில் ஏந்தியபடியே தலைக்குப் பின்னே வரை கொண்டு போக முனைவது என்று ராத்திரிகளில் சர்க்கஸ் நடத்தி வருகிறேன் ! இந்தக் கூத்துக்களின் மத்தியில் பணிகளில் கோட்டை விட்டுடப்படாதே என்ற கவனமும், ஆதங்கமும் பெருமளவு உள்ளுக்குள் இருந்திருந்துமே இந்த TEX சொதப்பல் நிகழ்ந்துள்ளது தான் ரொம்பவே உறுத்துகிறது ! Maybe இந்த நோவுகளில் கவனம் சிதறிடாது இருந்தாலுமே, இந்தப் பிழை நிகழ்ந்திருக்கும் என்றே என்னைத் தேற்றிக் கொள்கிறேன் - becos இதன் மையப் புள்ளி ஒட்டு மொத்த மறதி & ஒரு வித brain freeze தான் ! 

So இந்த நோவினையோ, அதனை சமாளிக்கும் (எனது) சிரமங்களையோ இங்கே highlight செய்வது எனது நோக்கமே அல்ல ! And இந்தப் பதிவுப் பக்கத்தின் ஆயிரத்துச் சொச்சம் பதிவுகளில் நான் செய்திராத ஒரு விஷயத்தை இந்த தபா மட்டும் பண்ணிக்கிறேனே folks - அது தான் அட்வைஸ் அர்னால்டாக அவதார் எடுப்பது : தயவு செய்து உங்களது நாட்களில் உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்குங்கள் folks !  "வாக்கிங் போறேன் ; சைக்கிளிங் போறேன்" என்று மிதப்பாகத் திரிந்தவன் தான் நான் ; ஆனால் உடம்பில் உள்ள ஒரு வண்டி தசைகளையும், மூட்டுகளையும் செயல்பட வைக்க அது பற்றாதென்று இப்போ முக்கிக்கினே குச்சியைத் தூக்கிடும் போதெல்லாம் புரிகிறது ! மூட்டுகள் ஒழுங்காய் செயல்பட்டு வரும் வரைக்கும் ஆயுட்காலத்துக்கும் அவை அப்படியே தொடர்ந்திடுமென்று நம்பி விடுகிறோம் ! But வண்டி நொண்டியடிக்க ஆரம்பிக்கும் போது தான் தேகப் பயிற்சிகளின் முக்கியத்துவம் புரிகிறது !! கையில் ஒரு எலாஸ்டிக் பட்டையைத் தந்து, அதை 'தம்' கட்டி இழுக்கச் செய்யும் போதெல்லாம் - அதே கையில் செல்லை ஏந்திக் கொண்டு YouTube-ஐ பார்த்தபடிக்கே கெக்கலித்தது தான் நினைவுக்கு வருது !! இன்றைக்கோ "Frozen Shoulder treatments" என்பதைத் தாண்டி என்னோட YouTube அக்கவுண்டில் வேறு எதுவும் ஓட மாட்டேங்குது ! குஸ்தி பயில்வான் ஜாடையிலிருக்கும் வெள்ளைக்கார physiotherapists செய்து காட்டும் பயிற்சிகளையெல்லாம் பார்க்கும் போது கெட்ட கெட்ட வார்த்தைகள் தான் மண்டைக்குள் ஓடுகின்றன !! So ஞான் போட்டு வரும் மொக்கைகளிலிருந்து நீங்கள் பாடம் படிச்சால் அந்தமட்டுக்காவது மகிழ்வேன் !  

Bye all....see you around ! ஜன்னல் கிராதிகளோடு எனது லவ்சை தொடரக் கிளம்புகிறேன் ! Have a fun week !!

And oh yes - புக்ஸ் கிளம்பியாச்சு ! And ஆன்லைன் லிஸ்டிங்ஸ் போட்டாச்சு : https://lion-muthucomics.com/latest-releases/1224-2024-july-pack.html

P.S : தாத்தாஸ் கதையின் மொழியாக்கம் இப்போது தான் நிறைவுறுகிறது ! So ஆகஸ்ட்டில் டின்டின் கூட அவர்களை அனுப்பிடுகிறோம் folks ! விட்டு விட்டு பணி செய்து இந்த ஆல்பத்தின் அழகைப் பாழ் பண்ண மனசு வரலை ! Sorry again !

233 comments:

  1. Replies
    1. வாழ்த்துகள் சகோ

      Delete
    2. கடந்த இரண்டு பதிவில் ‘me first’ 😀 ஆசிரியர் சார் ஏதாவது பார்த்து நமது ஈரோடு விஜய்க்கு பண்ணுங்க 😊

      Delete
  2. உங்கள் உடல் நலனை பார்த்து கொள்ளுங்கள் சார்.

    ReplyDelete
  3. எடிட்டர் மீண்டு வர என் பிரார்த்தனைகள் 💗🙏

    ReplyDelete
  4. Frozen Shoulder treatments - இதற்கான காரணம் என்று சொன்னார்கள் சார்.

    ReplyDelete
  5. // எது, எப்படியோ - வரும் ஆகஸ்ட்டில் வேறொரு முழுநீள டெக்ஸ் புது சாகசமொன்று, விலையில்லா இதழாய் உங்களது கூரியர் டப்பிகளில் இடம்பிடித்திடும் !! நமது மன்னிப்புகளுடன் அதனை ஏற்றுக் கொள்ளக் கோருவேன் !! //


    We can understand sir. No problem sir.
    ☺️😌

    ReplyDelete
  6. @Edi Sir..😍😘

    Me too இந்த Frozen shoulder பிரச்னையால் மிகவும் அவதிபட்டேன்..😏

    காரணம் சுகர் மாத்திரைகளின் தொடர்ச்சியான பயன்பாட்டின் பின்விளைவுதான் என்பதை அறிந்து
    Homiopathi treatment எடுத்துகொண்டேன்.

    தற்போது சிலபல இழப்புகள் இருப்பினும் நலமே உள்ளேன்..👍👌

    தாங்களும் விரைவில் பரிபூரண குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..🙏🙏💐💐

    ReplyDelete
  7. விரைவில் குணமடைய புனித மானிடோ அருளட்டும் சார். Take care.

    ReplyDelete
  8. நமது டெக்ஸ் விஜயராகவன் கூட இதனை எப்படி கவனிக்காமல் விட்டார். ☺️

    ReplyDelete
    Replies
    1. கடையில் பிஸியாகி விட்டார், இல்லைன்னா முதல் ஆளா அலசி ஆராய்ந்து போட்டு தாக்கி விடுவார் 😁😁😁

      Delete
    2. உண்மை தான் ரம்யா☺️

      Delete
    3. அசட்டை ப்ளஸ் கவனப்பிசகும் சேரும் போது எத்தனை எளிதாக கோட்டை விடுகிறோம்னு புரிகிறது PfB....

      என்னுடைய கவனக்குறைவுக்கும் நண்பர்களிடம் சன்னமான மன்னிப்பை கோருகிறேன்.

      மாதம் 4புக் எனும்போது மறுவாசிப்புக்கு நேரம் இல்லை.. இருப்பினும் சித்திரங்களை நினைவு வைத்துக் கொள்ள இயலாதவாறு கவனம் ஒரு முகத்தில் இல்லை எனும்போது எனக்கே வெட்கம் பிடுங்கித் திண்கிறது. வயசாவது தெளிவாக புரிகிறது. 48வயதின் தாக்கத்தை உணர முடிகிறது.

      வியாபாரத்தில் முழு நாட்டமும் போகும் போது மற்றவை பின்னுக்கு போகிறது.. முழு கவனத்தை தந்தாலும் பழையபடி வியாபாரம் இல்லையேங்கிற போது 80% தான் மூளை வேலை செய்கிறது.... 20% கண்டதையும் எண்ணி கவனச்சிதறலுக்கு வழி வகுக்கிறது.. பணஞ் செல்லாதுபோன 2016ல தான் இந்த குற்றம் பார்க்கின்"-புக்கும் வந்துள்ளது..அன்று பிடிச்சதுதாங்க இன்னும் ரிகவர் ஆக இயலவில்லை.. தொடர்ச்சியாக பல்வேறு காரணிகள் சின்ன சின்ன ரீட்டையில்களை காலி பண்ணிட்டே போகுது...!

      Delete
    4. அப்பட்டமான உண்மைய்ய சகோ...
      நீங்க ஒரு காமிக்ஸ் விக்கிபீடியாதான் அதில் எந்த சந்தேகமும் இல்லை,
      ஆனா அதுக்காக காமிக்ஸ் சார்ந்த எல்லா விசியங்களையும், எல்லா நேரமும் நீங்க அப்டோட்ல (பக்கங்கள் முதற்கொண்டு)
      வெச்சிருக்கனும்னு அவசியமில்லையே,
      சில கடமைகள் இருக்கே அதும் பாக்கனும்ல?, அப்பதான நாம நிம்மதியா காமிக்ஸ் படிக்க முடியும்.
      நம்மைச்சுற்றி பல விசியங்கள் நடப்பதால், ஒரு ரிலாக்ஸ்க்காக காமிக்ஸ் படிக்கறமோ தவிர, முந்தி மாதிரி பலதையும் நினைவு வெச்சிக்க முடியலை.
      இதில் எந்த தவறும் இல்ல, நம்மளோட மென்டாலிட்டி சரியாக இருந்தா எல்லாமே ஞாபகத்தில் இருக்கும், அதே பல சிந்தனைகள் ஏற்படும் போது சற்று மறதி சகஜமே, இதுக்கு வயதாகலும் ஒரு காரணம்.
      தப்பில்ல சகோ...

      Delete
  9. குமார் @ please fyi

    // தாத்தாஸ் கதையின் மொழியாக்கம் இப்போது தான் நிறைவுறுகிறது ! So ஆகஸ்ட்டில் டின்டின் கூட அவர்களை அனுப்பிடுகிறோம் folks ! விட்டு விட்டு பணி செய்து இந்த ஆல்பத்தின் அழகைப் பாழ் பண்ண மனசு வரலை ! Sorry again ! //

    ReplyDelete
  10. அடடே...
    சார் முதல்ல உங்க உடல்நிலை மிக முக்கியம், இதெல்லாம் சின்ன தவறுகள்தான், கதை மாற்றி பிரிண்ட் அடித்து விட்டார்கள் அவ்வளவுதானே? Bee cool sir.
    இதற்காக வருத்தப்பட்டு உடல் நிலையை மோசமாக்கிக் கொள்ள வேண்டாமே ப்ளீஸ்.
    அப்படியே மாற்றி அடித்தாலும் ரீ பிரிண்டாக விற்பனைக்கு கொண்டு வந்தால் போயிற்று.
    இதில் எதுவுமே வீணாக போவதில்லை.
    இந்த மாதம் வரலைனா அடுத்த மாசம் வரப்போகிறது. தங்களை புரிந்து கொண்டவர்கள் யாரும் இந்த தாமதத்திற்காக வருத்தப்படப்போவதில்லை.

    ஆகவே...நிம்மதியாக தங்கள் உடல்நிலையை கவனித்து நலமுடன் வாங்க சார்.

    ReplyDelete
  11. For the last one year i am also suffering from this frozen shoulder sir .I can fully understand your problem.The pain that you get when you remove t shirt is unbearable.stopped using t shirt for some time now.Phyisotherapy and regular exercise at home eased the Pain somewhat now

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... துணைக்கு நிறைய பேர் இருப்பாங்க போலிருக்கே! 🤕

      Delete
    2. நானும் கூட sir... ஆனால்,
      எனக்கு கால்களில் வெரிகோஸ் வைன்... "இரத்த நாளப்படலம்... "😄😄
      உட்காந்தா எந்திரிக்க முடியல... எந்திரிச்சா உட்கார முடில.. தொட்டா
      "மரண வலி "😄.. டாக்டர்
      ஆபரேஷன் பண்ணலாம்...
      என்றார். குறைந்தபட்சம் 40
      ரூவா ஆகும் என்று நானா ஒரு கணக்கு போட்டுக்கிட்டு.."வேணாம் டாக்டர்.." வலி குறைய ஒரு வழி " 😄 சொல்லுங்க.. என்றேன்.. 300 ரூபாய்க்கு
      மாத்திரை எழுதி தந்தார்...
      சற்றும் வலி குறையல..
      அப்புறம் u tube ல.. சித்த
      மருத்துவர் சொன்னார் பாருங்க.. ஒரே வாரத்தில்
      வலி போன இடம் தெரியல..❤️👍🙏.. Excellent
      Sir... அந்த மூலிகை.. பச்சை கொத்தவரங்காய்.. 3 வேளையும் நான்கு காய்கள் பச்சையாய் நன்றாய் மென்று திங்க
      சொன்னார்.. வாந்தி வரும்
      போல இருந்தாலும்.. பூண்டு ஊறுகாய் கொஞ்சம்.. சாப்பிடுகிறேன்... அப்படி நரம்பு சுருட்டல்.. இருக்கும்
      வலி இருக்கும் நண்பர்கள்
      முயன்று பாருங்க... ஒத்துக்கொள்கிறதா என்று
      பாருங்க.. 40,000 செலவு..
      வெறும் 40 ரூபாயில் முடிந்தது...கலர் edition
      பெரிய விஷயம் இல்லீங்க..
      Take it easy.. உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் ❤️👍🙏..

      Delete
    3. செந்தில் சத்யா... நான்தான் மிக பழைய வாசகன் பாரதி நந்தீஸ்வரன்... இந்த பெயரில் block ல் நுழைய முடியல... எனவே easwar என்ற பெயரில் வருகிறேன்... நாம் ஈரோடு. முத்து பொன்விழா கொண்டாட்ட அரங்கில் பார்த்து பேசியுள்ளோம்...
      50% உடல் உபாதைகளுக்கு
      உடல் எடை அதிகம் இருப்பது காரணம் என்கிறார்கள்... ரஃபிக் ராஜா கூட கவனம்... நான் 30 வருடங்களாக 2வேளை மட்டுமே சாப்பிடுகிறேன்...
      ஏன் செல் நம்பர்.. 6380974232...வெரிகோஸ்
      வைன் பற்றிய ஏன் அனுபவம் பற்றி சொல்கிறேன்... 20 வயதில் லேசாக நரம்பு சுருண்டது கால்களில்... இதுவரையில் வலி இல்லை.. 60 வயதில்
      நடக்க முடியாத அளவு வலி.. கொத்தவரைங்காய்
      இப்படி அற்புதம் குணமளிக்கும் என்று நான்
      எதிர்பாக்கல... மென்று தின்ன முடியாவிட்டால்
      மிக்ஸியில் 4 காயை போட்டு ஜாம் பண்ணி ஜூஸ் ஆக குடிக்கலாம்...
      எனக்கு ஒத்துக்கொண்டது..
      முட்டி வலி, கூட போகும்
      என்றார் அந்த சித்த மருத்துவர்... நீண்ட நேரம் நிற்கும் நெசவுப்பணி தான்
      60 வயதிலும் பண்ணறேன். நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க.. முதலில் கொத்தவரைங்காய் ஒத்துக்கொள்கிறதா
      என்று பாருங்க.. ❤️👍🙏...

      Delete
    4. வணக்கம் நந்தீஸ்வரன் சார் வாருங்கள் ஈரோட்டில் சந்திப்போம்

      Delete
    5. நீங்களும் நானும் மகி ஜி யுடன் எடுத்த போட்டோ என்னிடமுள்ளது நந்தீஸ்வரன் சார்

      Delete
  12. @Edi Sir..😍😘

    இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனது மனைவியாரும் Frozen shoulder பிரச்னையால் மிகவும் அவதிபட்டார். Hemoglobin குறைபாட்டினால் இந்த பிரச்னை ஏற்பட்டது.

    Kovai KMCH ல் Steroid injection போட்டப்பிறகு
    உடற்பயிற்சியால் சிறிது சிறிதாக சரியானது.👍


    ReplyDelete
    Replies
    1. Steroids இல்லாமலே தாக்குப் புடிக்க முயற்சிப்போம் சார்! எனது physio நம்பிக்கையூட்டியுள்ளார் ; அப்புறம் புனித மனிட்டோ விட்ட வழி!

      Delete
    2. நல்லதே நடக்கட்டும் Sir..💐🙏

      Delete
  13. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  14. சார் என்ன ஒரு ஆச்சரியம். அந்த கதையை தான் மறுபடியும் எழுதுகிறோம் என்று தெரியாமலேயே அதே டைட்டிலேயே மறுபடியும் வைத்திருக்கிறீர்களே?

    ReplyDelete
    Replies
    1. எழுதியது நானில்லை சார்!

      Delete
  15. எனக்குமே 'சியாட்டிகா' எனும் பிரச்சனை சார்..

    ReplyDelete
  16. // Bye all....see you around ! ஜன்னல் கிராதிகளோடு எனது லவ்சை தொடரக் கிளம்புகிறேன் ! Have a fun week !! //
    இந்தப் பதிவை படித்து முடிக்கவே கஷ்டமா இருக்கு சார்,அயற்சியான இந்த தருணத்திலும் தங்களின் நகைச்சுவை இழையோடும் வரிகளே தங்களை மீட்டுக் கொண்டு வரும் சார்...
    விரைவில் மீண்டுவாருங்கள்.....

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. // And oh yes - புக்ஸ் கிளம்பியாச்சு ! And ஆன்லைன் லிஸ்டிங்ஸ் போட்டாச்சு //
    மகிழ்ச்சியும்,வருத்தமும் இரண்டும் கலந்த பதிவு...
    என்ன சொல்றதுன்னே தெரியலையே...!!!

    ReplyDelete
  19. // அது தான் அட்வைஸ் அர்னால்டாக அவதார் எடுப்பது : தயவு செய்து உங்களது நாட்களில் உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்குங்கள் folks ! //
    சரிதான் சார்...

    ReplyDelete
  20. ஆக மொத்தத்திலே நான் சொன்னது சரியா போச்சு...

    ReplyDelete
  21. உடம்பைக் கவனித்துக்கொள்ளுங்கள் எடிட்டர் சார்.. என்ன சொல்வதென்று தெரியவில்லை.. உங்களுக்கு ஏதேனும் ஒன்று என்றால் ஏனோ மனசு பதறிப்போய் விடுகிறது!
    நாமெல்லாம் சேர்ந்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது சார். உடல் உபாதைகள் அதற்கொரு தடையாக இருந்து விடக்கூடாதென்பதை சமீப காலமாக நானும் உணர்ந்து வருகிறேன். முதன் முறையாக வாசகர்களுக்கு நீங்கள் விடுத்திருக்கும் அட்வைஸ்ஐ நானுமே சீரியசாக எடுத்துக்கொண்டு உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் தருவேன். வரயிருக்கும் lion-40 விழாவில் நீங்கள் ஒரு இளம் டெக்ஸ்ஐ சந்திக்க நேரிட்டால் ஆச்சரியத்தில் உறைந்துபோய் நிற்க வேணாமே ப்ளீஸ்! 😎

    ReplyDelete
    Replies
    1. இனி எல்லாம் கிழமே தலைப்பை மாத்தச் சொல்லிடுவோமா ஈ.வி.?..

      Delete
    2. // lion-40 விழாவில் நீங்கள் ஒரு இளம் டெக்ஸ்ஐ சந்திக்க நேரிட்டால் //

      🤔

      Delete
    3. // lion-40 விழாவில் நீங்கள் ஒரு இளம் டெக்ஸ்ஐ சந்திக்க நேரிட்டால் ஆச்சரியத்தில் உறைந்துபோய் நிற்க வேணாமே ப்ளீஸ்! 😎 //

      ROFL

      Delete
  22. ஆசிரியரே தங்கள் உடல்நலனை கவனித்து கொள்ளுங்கள்
    விரைவில் குணமாகி தெம்பாக வாருங்கள்
    ஈரோட்டில் லயன் 40 ஆண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடிடலாங்க, ஆசிரியரே

    ReplyDelete
  23. இரண்டு பெரிய ஆப்ரேஷன் ஒரு சின்ன ஆப்ரேஷன் என் மூன்று பேட்ச் களோடு பத்தாதற்க்கு டிசம்பரில் ஒரு ஆக்ஸிடென்ட் என ஏராளமான டேமேஜ்களோடு காலம் தள்ளி வந்தேன் ரத்த பற்றாக்குறையால் உடல் ஊதி 123 கிலோ வாகி விட்டேன் அப்படியும் உடல்நிலையில் கவனம் செலுத்தாதின் விளைவு காலில் ஜவ்வு கிழிந்து விட்டது காலம் கடந்து இப்போது இரண்டு மாதங்களாக கடும் பயிற்சியின் மூலமாக 8 கிலோ குறைத்துள்ளேன் உங்களின் அறிவுரையை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன் நீங்களும் உங்கள் உடல் நிலையில் சற்று கவனமாக இருங்கள் ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. ஓஓவ்.. டேக் கேர் செந்தில்💐

      Delete
    2. தோழரே உடல்நலத்தில் கவனம் வேண்டும்

      Delete
    3. சகோதரர் பரணி
      நண்பர் விஜயராகவன்
      தோழி ரம்யா
      நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

      Delete
    4. 🤭😔... உடம்பு எடை கவனம்... சத்யா.. சகோ..❤️👍🙏...

      Delete
    5. செந்தில் நண்பரே உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

      Take care friend.
      Get well soon.

      Delete
    6. சரவணன் ஜி
      பத்ரி சகோ
      பொன்ராஜ்
      நன்றி நண்பர்களே தேறி வருகிறேன் ஈரோட்டில் சந்திப்போம்

      Delete
  24. ஹா ஹா, டெக்ஸ் கதைகள் என்றாலே இதெல்லாம் சகஜம் தானே சார்?! எல்லா கதைகளும் படித்த மாதிரியே இருப்பதும், ஏற்கனவே படித்த கதைகள் கூட படிக்காத மாதிரி தோன்றுவதும்...!!!

    இந்த மிகச் சிறிய காமிக்ஸ் வட்டத்தில், தவறுதலாக நடந்த இதைப் பெரிது படுத்தி, விலையில்லா இதழ் எல்லாம் அறிவித்து சங்கடப்படுத்த வேண்டாமே சார்?! அது தான், "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை!" என்று தலைப்பிலேயே இருக்கிறதே?!

    உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் சார்! என்னதான், "தீ சுடும்" என்று அனுபவித்தவர்கள் சொன்னாலும், விரலை விட்டுப் பார்த்து அலறுவதே மனித இயல்பு!  உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்! 

    ReplyDelete
    Replies
    1. கடைசி லைன்தான் இங்குட்டும்...😉🤣

      50ஆகட்டும் ஆரம்பிச்சிடுவோம்னு உள்ளேன்...

      Delete
    2. // உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்! //

      இங்கேயும் அதே! தொடர்ச்சியாக செய்ய முடியவில்லை! :-)

      Delete
    3. 😄😄இங்கும் அப்படியே... ❤️

      Delete
    4. /// 50 ஆகட்டும் ஆரம்பிச்சிடுவோம்னு உள்ளேன்...////

      🥹😁😎🤔

      Delete
  25. உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள் சார்...🙏💐

    தங்களின் அட்வைஸை சீரியஸாக எடுத்துக் கொள்கிறோம் சார்...🙏

    ReplyDelete
  26. தங்களின் உடல் உபாதையும் நையாண்டியாக விவரிக்கும் பாங்குக்கு தலை வணங்குகிறேன் சார்.....

    ReplyDelete
  27. டெக்ஸ் கதைகள் ஆயிரத்தை தாண்டி போனெல்லியில் ஓடிட்டு இருக்கும் போது செலக்சன்ல தடுமாற்றம் வருவது இயல்பேங் சார்....!!!

    நாங்களும் முன்போல ரீப்பீட் ஆக வாசிக்க இயலாத போது கவனிக்க தவறிட்டோம்.... மாதம் 4இதழ்கள் எனும்போது ரிப்பீட் வாசிப்புக்குளாம் இனி வாய்ப்பு இல்லை.. 8ஆண்டு இடைவெளியில் இது மறந்தே போனது ஒன்றே நிலவரத்தை உணர்த்துகிறது.

    என்னைப்போலவே கூர்ந்து கவனிக்கும் நண்பர் சென்னை மொய்தீனும் தவறுவிட்டுள்ளது ஆச்சர்யமாக உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. கோப்பு மாற்றி அனுப்பியதால் சொதப்பலாகி விட்டது. சென்ற வருட வந்த 2024 அட்டவணையில் கூட சரியாக உள்ளது. ஆனால், சென்ற மாதம் வந்த விளம்பரத்தில் விதி எழுதிய வெற்றி பயணம் கதைத் தலைப்பு மாறியும், 132 பக்கங்களுக்கு பதில் 104 என்றும் விளம்பரத்தில் உள்ளது. சென்ற மாத விளம்பரத்தில் 104 பக்கங்கள் என்று கவனிக்கும் போது லேசாக பொறி தட்டியது. ஆனால் நான் பெருசாக எடுத்துக் கொள்ளவில்லை. கொஞம் Care பண்ணி தலைப்பையும், 104 பக்கங்களையும் கோடிட்டு காட்டியிருந்தால் இதை தவிர்த்து இருக்கலாம் என்ற ஆதங்கம். முதன் முறையாக அறியாமல் வெளியிடப்படும் டெக்ஸின் ரிப்பீட்டட் கதையை தவிர்த்து இருக்கலாம்.

      Delete
  28. இரண்டு மாதங்களுக்கு முன்னால் வந்த காமிக்ஸ் கதை என்ன என கேட்டால் தெரியாது எனக்கு அந்த அளவு ஞாபகசக்தி எனக்கு :-) 8 வருடங்களுக்கு முன்னால் வந்த இந்த கதை எனக்கு மீண்டும் படிக்கும் போது புதிய கதையை படித்த எண்ணத்தையே தரும் அதுவும் வண்ணத்தில் சொல்லவே வேண்டாம், ரசித்து படிப்பேன் :-)

    எனவே இதற்காக மற்றும் ஒரு விலையில்லா புதிய டெக்ஸ் இதழ் நீங்கள் கொடுக்க முன்வருவது உங்களின் பெரும்தன்மையை காண்பிக்கிறது சார்! ஆனால் புதிய டெக்ஸ் இதற்கான விலையை கொடுத்து வாங்கிக் கொள்ளவே நான் விருப்புகிறேன் சார்!

    ReplyDelete

  29. "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை !" ஏற்கனவே வந்து உள்ளது என சொன்ன நண்பரின் ஞாபகசக்தி அபாரம். பாராட்டுக்கள் நண்பரே! அதுவும் டீசர் பக்கம்களை பார்த்த உடன் சொல்லவது எல்லாம் செம!

    ReplyDelete
    Replies
    1. யெஸ்...அவருக்கு என்னுடைய பாரட்டுக்களும்....!!

      Delete
    2. நன்றி நண்பர்களே. நேற்று சாப்பிட்ட உணவே மறந்து போகும் எனக்கு..STV மாதிரி புள்ளி விவரம் எல்லாம் தெரியாது. ஆனால் TEX ஏற்ற கதாபாத்திரத்தின் மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு.. அவ்வளவுவே💞💞

      Delete
  30. சார் உடம்ப பாத்துக்கங்க...அந்த விலையில்லா டெக்ச விலைக்கு தந்தா மட்டும் எனக்கு அனுப்புங்க...வண்ணத்ல அதுவும் கலக்குமே

    ReplyDelete
    Replies
    1. +1000 ...பணம் செலுத்தியே வாங்கிக் கொள்கிறோம் சார்.
      பணம் வாங்கலனா என் பார்சலிலும் வைக்க வேணாம்🙏

      Delete
    2. இன்னைக்கு தான் நீ சரியாக எழுதி இருக்கேல மக்கா 👌

      Delete
  31. Take care of ur health sir .. அப்புறம் எல்லா டெக்ஸ் கதைகளும் ஒண்ணு தானே சார் .. V ll adjust ..

    ReplyDelete
  32. சார்..உங்கள் உடல்நலனில் முதலில் கவனம் செலுத்துங்கள்..மற்றவை அடுத்து...
    விரைவில் தாங்கள் பூரண நலமடைய எனது வேண்டுதல்கள்..

    ReplyDelete
  33. Hi Editor sir, Please take care of your health sir. இதற்காக சிரமப்பட வேண்டாம் சார்.விலையில்லா டெக்ச பணம் செலுத்தியே வாங்கிக் கொள்கிறோம் சார்.

    ReplyDelete

  34. /எது, எப்படியோ - வரும் ஆகஸ்ட்டில் வேறொரு முழுநீள டெக்ஸ் புது சாகசமொன்று, விலையில்லா இதழாய் உங்களது கூரியர் டப்பிகளில் இடம்பிடித்திடும் !! நமது மன்னிப்புகளுடன் அதனை ஏற்றுக் கொள்ளக் கோருவேன் !! //

    இரண்டுமே தேவையில்லை சார். ஈரோடு புத்தக விழா செலவுகள் நடுத்தர வர்க்க குடும்பஸ்தனின் தினசரி தக்காளி பட்ஜெட் அளவுக்கு உயர்ந்து கிடக்க எதற்கு இந்த கூடுதல் செலவு சார்? டெக்ஸ் வண்ண மறு பதிப்பாய் வந்ததாய் இருக்கட்டும்.கதையின் தலைப்பே இந்த மாதிரி சூழ்நிலைகளில் எந்த மாதிரி எதிர்வினை இருக்க வேண்டும் என்பதை தானே உணர்த்துகிறது. Hair splitters always end up as lonely sitters.

    ReplyDelete
    Replies

    1. //தாத்தாஸ் கதையின் மொழியாக்கம் இப்போது தான் நிறைவுறுகிறது ! So ஆகஸ்ட்டில் டின்டின் கூட அவர்களை அனுப்பிடுகிறோம் folks ! விட்டு விட்டு பணி செய்து இந்த ஆல்பத்தின் அழகைப் பாழ் பண்ண மனசு வரலை ! Sorry again//

      பிரஞ்சுக் கிழங்கள் மெதுவாக வரட்டும்.
      அதுதான் களம் எங்கும் கிழம் மூலமாக பெல்ஜிய கிழங்கள் வருகிறார்களே. ஏதாவது ஒரு கிழம் வந்தால் சரி 😄

      Delete

    2. ஆலோசனை அரங்கசாமி:
      1.நோயின் பெயர் எதுவாக இருப்பினும் உங்களுடைய ஆர்த்தோ பீடிக் கன்சல்டன்ட் மீதும் அவர் சுட்டிக் காட்டிய பிசியோதெரபிஸ்ட் மீதும் முழு நம்பிக்கை வையுங்கள். மூணாவது வீட்டு முத்தம்மாவுக்கு இதே போல் வந்த போது எனப் பேசத் துவங்குபவர்களிடமிருந்து விலகியிருங்கள்.

      2. இணைய தகவல்கள், செயற்கை நுண்ணறிவு, youtube சமாச்சாரங்கள் இவற்றிடம் இருந்து பெறப்படும் உடல்நிலை பற்றிய தகவல்கள் குழப்பத்தில் ஆழ்த்தும்.
      தவிர்த்து விடுங்கள். சந்தேகம் ஏதேனும் ஏற்பட்டால் உங்கள் மருத்துவரையே நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்

      3. கைக்கு ஓய்வு கொடுங்கள். எழுத வேண்டிய அவசியம் ஏற்படும் போது ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ளுங்கள்.

      4. உடல்நிலை பரிபூரண குணமடைய சிறிது காலம் ஏற்படும் எனில் அதை ஏற்றுக் கொண்டு மனதை இலகுவாக வைத்துக் கொள்ளுங்கள். Time is the true narcotic for any kind of pain ; with time either the pain vanishes or the body, mind and the soul acclimatize to the pain.


      Delete
    3. Sujatha + Raa Ki Ra together effect Doc ! Amazing writing :-)

      Delete
    4. உண்மை... நாமாக ஒரு வைத்தியம் பண்ணிக்ககொள்வதும்
      மிகவும் தவறே... நான், உணவுப்பொருள் என்பதால். வெரிகோஸ் வைன் க்கு.. பச்சையாய்
      கொத்தவரங்கnய் சாப்பிட்டேன்... நலம்... வேறு
      ஏதாவது என்றால் நிச்சயம்
      சாப்பிட மாட்டேன்... ❤️

      Delete
  35. ஆசிரியரே குற்றம் பார்க்கின் ஸ்டாக்கில் இல்லாத எட்டு வருடங்களுக்கு முன்பு கருப்பு வெள்ளை யில் வந்தது இப்போது கலரில் வந்துள்ளது அவ்வளவுதானே எத்தனையோ மாயாவி ஸ்பைடர் மறுபதிப்புகளுக்கு பணம் கொடுத்து தானே வாங்கியுள்ளோம் அதே போல் கருப்பு வெள்ளையில் வந்த கதையை கலரில் படிக்க போகிறோம் இதற்கு நீங்கள் பணம் வாங்கிக்கொள்வதே முறை

    ReplyDelete
  36. Agree with every one Editor Sir - please take care of your health. No free book sir. 2016 story anyways I would have forgotten - so re-reading in color is just fine. You dont have to do a free book for that. Instead you can release it for a price during Deepavali as a bonus book !

    ReplyDelete
  37. எத்தனையோ கதைகள் மறுபடியும் மறுபதிப்பு வந்துள்ளது, ஏன் சமீபத்திய "ஓநாய் வேட்டை" கூட அதுபோல இந்த "குற்றம் பார்க்கின்" கலரில் மறுபதிப்பு போட்ருக்கீங்க.
    தவறு நடப்பது எல்லா இடங்களிலும் சகஜம் தான் சார், ஈ பு வி ஸ்பெஷல் இதழ் விழாவுக்கு முன்கூட்டியே விட்டுட்டீங்க தட்ஸ் ஆல்.
    எங்களுக்கு மகிழ்ச்சிதான், இதில் நீங்க வருத்தப்படாமல், எங்களுடன் மகிழ்ச்சியை
    அனுபவியுங்கள் சார்.👍🏻💓

    ReplyDelete
  38. டெக்ஸ் புத்தகத்தை மறுபதிப்பாக கலரில் வருவதாக எடுத்துக் கொள்ளலாமே சார்.
    இதில் வருத்தப்பட ஏதுமில்லையே சார்.
    Take care of your health Sir.
    நாகர்கோவில் மகாதேவ அய்யர் ஆயுர்வேத வைத்யசாலாவில் காயத்திருமேனி தைலம் என்று ஒரு தைலம் கிடைக்கிறது.
    அதை வாங்கி தினமும் இரண்டு வேளையும் ஒரு கரண்டியில் ஊற்றி லேசாக சூடு பண்ணி தேய்த்து வாருங்கள் சார். விரைவில் பலன் கிடைக்கும்.
    விளக்கெண்ணெயும், வேப்பெண்ணெய்யும் ஒன்றாக கலந்து சுடவைத்து தினமும் வலி உள்ள இடத்தில் தேய்த்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
    இவை என் அனுபவத்தில் நான் தற்போது பலன் கண்டது.
    என் வலது கரத்தில் முட்டி ஜவ்வு வீக் ஆகி விட்டதால், மாத்திரைகள் பலனில்லாமல், நான் தற்போது இவைகளை பயன்படுத்தி வருவதால் வலி குறைந்து நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது .
    இந்த வழிமுறையை பயன்படுத்தி பாருங்கள் சார்.

    ReplyDelete
  39. வணக்கம் ஆசிரியர் சார். உங்கள் உடல் நலனை நன்றாக பார்த்துக் கொள்ளவும். தங்களுக்கு வந்த உடல் நலக்குறையை கூட நகைச்சுவையாக எழுதி உள்ளீர்கள். ஆனால் படித்த என் மனது மிகவும் கனத்துப் போனது. தங்கள் உடல் நலன் விரைவில் சீரடைய எல்லாம் வல்ல இறைவன் ஈசன் அருளை வேண்டுகிறேன். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் உடல் நலம் மிகவும் முக்கியம் ஆசிரியர் சார்.

    ReplyDelete
  40. குற்றம் பார்க்கின் வண்ணத்தில் வந்ததாய் நினைத்துக் கொள்கின்றோம் சார். எனக்கு அனுப்ப வேண்டாம் சார் புது டெக்ஸ் இதழை. பணம் செலுத்தியே பெற்றுக் கொள்கின்றேன் சார். இதில் வருத்தப்படவோ சங்கடப்படவோ ஏதும் இல்லை சார். புது டெக்ஸ் கதை நான் பணம் செலுத்தினால் மட்டுமே அனுப்புங்கள் சார். நன்றி வணக்கம் சார்.

    ReplyDelete
  41. மீண்டு வாருங்கள், எடிட்டரே....

    ஈரோட்டில் நண்பர்கள் கூட்டத்துக்குள் விட்டு, கும்மாங்குத்து குத்தியாவது இலவசமாக மசாஜ் செய்து, கை வலி மட்டுமல்ல, "சர்வதேக வலி நிவாரணி", செஞ்சுப்புடலாம். 🥹

    ReplyDelete
  42. சுவர் இருந்தால் தான் சித்திரம் சார். உடல் நலத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

    40க்கு மேற்பட்ட என் போன்றோருக்கு இது ஒரு விழிப்புணர்வு பதிவு. நடை பயிற்சி மட்டுமில்லாமல் பல்வேறு உடற்பயிற்சிகளும் செய்ய ஆரம்பிக்கிறேன். நன்றி

    ReplyDelete
  43. . புது டெக்ஸ் விலை என்ன வென்று மட்டும் அறிவியுங்கள்.குற்றம் பார்க்கின் வண்ணத்தில் வருவது மிகவும் மகிழ்ச்சிஆகஸ்ட் விழாவிற்கு ஸ்பெசலாக டெக்ஸ் ஒன்று கிடைப்பது சந்தோசம். புனித மனிடோவின் கருணையே கருணை.

    ReplyDelete
  44. இலவச புத்தகம் வேண்டாம் சார்.

    ReplyDelete
  45. வேறு புத்தகம் கொடுத்தே ஆகவேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் 32பக்கத்தில் இலவச இணைப்பாக கொடுப்பீர்களே .. அதுபோல கொடுத்தால் போதும்.

    ReplyDelete
    Replies
    1. @Mahesh ji 😍😃
      அருமையான அகுடியா..👍

      Delete

  46. """"""""""""""""லயன் ஆண்டுமலர்கள்"""""""""""

    #லயன்ல தீபாவளிமலரும், கோடைமலரும் டாப் கவனங்களை எடுத்து கொள்ள, இடையே வெளிவரும் ஆண்டுமலர் உண்டாக்கும் எதிர்பார்ப்பு ஒரு வகையானது! அந்த இரு அதிரடி இதழ்களுக்கு இது எப்படி ஈடுகொடுக்கப் போகிறதோ என்ற எதிர் பார்ப்பு எப்போதும் நிலவும்.....ஆண்டுமலரும் ஒவ்வொரு முறையும் இந்த எதிர்பார்ப்பை ஈடுசெய்தே வந்துள்ளது.

    #1995ல இருவண்ணத்தில் வந்த, "பூம்பூம் படலம்"- என் முதல் ஆண்டுமலர் வாசிப்பு.....பல முறை வாசித்தது அது.. பிற்பாடு வண்ணத்தில் வந்தபோது ரொம்ப ரொம்ப ரசிக்க வைத்து , அந்த காலத்திற்கே கூட்டிபோனது....

    உங்களின் ஆண்டுமலர் கொண்டாட்டாம் எந்த இதழில் இருந்து ஆரம்பித்தது நண்பர்களே????

    லயன் ஆண்டுமலர் பட்டியல் இதோ....!!!! இந்த 40ஐயும் வைத்து உள்ளவர்கள் கைதூக்குங்களேன்....!!!

    1.சைத்தான் விஞ்ஞானி-1985
    2.பவளச்சிலை மர்மம்-1986
    3.அதிரடிப் படை-1987
    4.கானகத்தில் கண்ணாமூச்சி-1988
    5.நடுக்கடலில் அடிமைகள்-1989
    6.எமனுடன் ஒரு யுத்தம்-1990
    7.மர்ம முகமூடி-1991
    8.மின்னலோடு ஒரு மோதல்-1992
    9.கானகக் கோட்டை-1993
    10.மந்திர மண்ணில் மாடஸ்தி-1994
    11.பூம் பூம் படலம்-1995
    12.இரத்தப் படலம்-VI-1996
    13.பேங்க் கொள்ளை-1997
    14.கானகத்தில் கலவரம்-1998
    15.தலைவாங்கும் தேசம்-1999
    16.இரத்த பூமி-2000
    17.மெக்சிகோ படலம்-2001
    18.பயங்கரப் பயணிகள்-2002
    19.பரலோகத்திற்கொரு பாலம்-2003
    20.----------------------------2004
    21.----------------------------2005
    22.சூ மந்திரகாளி-2006
    23.----------------------------2007
    24.----------------------------2008
    25.----------------------------2009
    26.----------------------------2010
    27.----------------------------2011
    28.நியூ லுக் லக்கி ஸ்பெசல்-2012-(கம்பேக்கிற்கு பின்பு)
    29.ஆல் நியூ ஸ்பெசல்-2013
    30.லயன் மேக்னம் ஸ்பெசல்-LMS-2014
    31."தி லயன் 250"-Texஸ்பெசல்-2015
    32.பெல்ஜியம் எவர்கிரீன் ஜானி,XIII&பிரின்ஸ் மலர்-2016
    33.லயன் 300 ஸ்பெசல்-2017
    34.லூட்டி வித் லக்கி-2018
    35.தி லக்கி ஆண்டுமலர்-2019
    36.லக்கி’s லயன் ஆண்டு மலர்-2020
    37.லயன் ஜாலி ஆண்டுமலர்-2021
    38.லயன் லக்கி ஸ்பெசல்-2022
    39.லயன்'S லக்கி ஆண்டு மலர்-2023
    40.லயன் லக்கி 40வது ஆண்டு மலர்-2024

    #இந்த 40 ஆண்டுகளில் எத்தனை விதமான பயணங்கள் என அந்தந்த ஆண்டுமலர்களின் பெயர்களைப் பார்க்கும் போதே தெரிகிறது.

    #வாசிப்பு உச்சத்தில் இருந்த 1980கள்& 1990களில் வளர்ந்த நாம் கொஞ்சம் கொடுத்து வைத்தவர்களே!

    #1990களின் ஹாட்லைன்ஸ் பார்க்கும் போதே எடிட்டர் சாரின் உற்சாகம் நம்மையும் தொத்திகிறது.

    #1முதல் 19 முடிய தொடர்ந்து 19ஆண்டுகள் ஆண்டுமலர்கள் வந்ததே பெரிய சாதனைதான்!

    #வாசிப்பிற்கு சோதனை வந்த 2000களில் எடிட்டர் சாரின் ஹாட்லைன் படிக்கும்போதே, அவரின் வேதனை, சூழலின் கடுமை புரிகிறது.

    #வசந்தம் மீண்ட 2012க்கு பிறகு 2ம் பிற்காலத்தில் ஆண்டுமலர்கள் பீடுநடையுடன் கோலோச்சுகின்றன. இப்ப தொடர்ந்து 13வது ஆண்டாக ஆண்டு மலர் களை கட்டுது...!

    #ரூ3க்கு வெளிவந்த முதல் ஆண்டுமலர் ஆகட்டும், அதிகபட்சமாக ரூ550க்கு வந்த LMSஆகட்டும் கையில் ஏந்தும்போது உண்டாகும் உற்சாகம் ஒன்றே!

    #50வது, 100வது , 200வது ஆண்டுகள்......என லயனின் வெற்றிப் பயணம் சிறக்க வாழ்த்துக்களுடன்.....💐💐💐💐💐

    வித் KOK, ஷெரீப், பேபி& கனவுலகம் ப்ரெண்ட்ஸ்---STV

    ReplyDelete
    Replies
    1. சற்று நேரத்தில் கிடைக்கும் போகும் 40வது ஆண்டுமலரைக் கைப்பற்ற விரைந்து கொண்டேயுள்ளேன்😍😍😍😍

      Delete
    2. நா முதலாம் ஆண்டு மலர்லர்ந்தே...

      ஆனா அந்த இரண்டு ஆண்டு மலர்களுக்கு பின் அந்த காலத்தில் நல்லாருந்தாலும் பெருசா இனிக்கவில்லை...ஸ்பைடர் ஆர்ச்சி வறட்சி தவிர வேறென்ன...

      Delete
    3. காரணம் நல்லநல்ல கதைகள்லாம் கோடைமலருக்கும், தீபாவளி மலருக்கும் பதுக்கி வைச்சிடுவாரு போல இளம் விஜயன் சாரு.. அப்ப அவருக்கு 17,18,19,20வயசுகள் தானே...

      ஆண்டுமலருக்கு என மிச்சம் மீதியானவற்றை போட்டு இருப்பாரு...

      பார்த்தாவே தெரியும்...அதிரடிப்படை, கானகத்தில் கண்ணாமூச்சி, மர்ம முகமூடி, மின்னலோடு மோதல்னு பூராவும் கொஞ்சம் அப்படி இப்படியானவையே..

      பூம் பூம் படலந்தான் ஆண்டுமலர்களின் கொடியை உசக்கே உயர்த்தியது.. தொடர்ந்து நல்ல கதைகள், லக்கி னு ஆண்டுமலருக்கும் உரிய கெளரவத்தை ஆசிரியர் அளித்தார்...

      Delete
  47. ஆசிரியர் விரைவில் குணம் பெறவும், இன்னும் பல்லாண்டுகள் நலமுடன் இருந்து பல புத்தகங்கள் நமக்கு தரவும் இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  48. Take care of yr health sir 💐💐💐
    இது போன்ற பிழைகள் நேருவது சகஜமே... Don't feel sir🤝
    விலையில்லா இதழ் தேவையில்லை சார் எனினும், உங்கள் பெருந்தன்மையின் அடையாளமாகவும், உங்கள் மனதிற்கு அது ஒரு ஆறுதலை தரும் என்பதால் ஏற்றுக் கொள்கிறோம்🙏

    ReplyDelete
  49. ஜூலை இதழ்களை கைப்பற்றியாச்சி சார்...
    ஸ்பைடர் மெகா ஸைஸில் மிரட்டுகிறார்,வர்ண ஜாலங்களில் அதகளம் செய்தாலும்,வர்ணங்கள் சற்றே கூடுதலாய் இருப்பதாய் தோன்றியது...
    இதுவரை படிக்காத இதழ்,எனவே முதலில் ஸ்பைடர்தான்...
    டெக்ஸ் கலரில் மறுபடியும் வந்துட்டோமுல்லன்னு சிரிக்கிறார்...
    ராபின் ஆர்வத்தை கிளப்புகிறார்...
    அசத்தலான ஈர்ப்பான அட்டையில் லக்கி அழைக்கிறார்...
    அடுத்த வெளியீடுகளில் டின்டின் ஈர்க்கிறது...

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. Replies
    1. அந்த வழியாக போனதால் பொறுமையில்லாம வாங்கிட்டு வந்தாச்சு....சிறப்பிதழ்ங்றதால பிரிக்க மனமில்லை...என் மகன் கையில் தந்து பிரித்த பின் பார்ப்போம்...அவன் சந்தோசத்தையும்

      Delete
    2. 1.சைத்தான் விஞ்ஞானி-1985
      Best of 40 years and no.1

      Delete
  52. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  53. //இதில் கொடுமை என்னவெனில், எப்போதுமே இம்மியூண்டு பிசகைக் கூட கவனித்திடும் sharp shooters ஆன நீங்களும், விளம்பரத்தினில் இடப்பிடித்திருந்த சித்திரங்கள் ஏற்கனவே வெளியானவை என்பதைக் கவனித்திருக்கவில்லை//

    Sir,
    All these errors will happen due to overdose of Tex Willer... Sorry to say this...Kindly feel that.

    To @subcsriber friends,
    As this is a loss will touch one lakh amount easily., All Friends who were all affordable can pay lion office Rs.176/- or Rs 200/-
    Thanks for the understanding

    //நானிருந்ததோ - சென்னையில் - சிகிச்சையில் !!//

    May God continue to protect you from all sickness.
    Take care Sir.

    Cheers

    With love and peace
    Udhayakumar Adi



    ReplyDelete
  54. முதல் முறையாக "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" படிக்கிறேன்...

    நல்ல பட்டாஸான கதை...

    அழகான ஓவியங்கள்...

    பட்டைய கிளப்பும் கலரிங்... இவ்வளவு அழகான கலரிங் பார்த்து மாமாங்கம் ஆகிவிட்டது...

    10/10

    ReplyDelete
    Replies
    1. yes... I read it in first edition.. Awesome story...

      டாக்டர் தினமன்று (01 July 2024) டாக்டர் டக்கரின் டக்கரான கதை 🥰👌👌👌👌
      அருமை டாக்டர் டக்கர்... முதல் பக்கமே உங்கள் கீர்த்தி பறைசாற்றுகிறது...

      (என்ன உங்களோடு spider squad aga இணைந்து வண்ணம் or Wrapper artwork கொடுக்க எனக்கொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் எடிட்டர்...)

      Delete
  55. புத்தகங்கள் இன்று கிடைத்து விட்டன சார்! முதலில் படித்தது லக்கி லூக் கதைதான்!


    நடுவில் கொஞ்சம் ஞாபகத்தை காணோம் :-) மிகவும் சரியான தலைப்பு. டால்டன் சகோதர்கள் என்றால் சிரிப்புக்கு பஞ்சம் கிடையாது, இதில் நமது ரின் டின் கேனும் சேர்ந்து, அதற்கும் ஹி ஹி எனும்போதும் கதை முழுக்க சிரிப்பு சிரிப்பு சிறப்பு! ஆண்டுமலரில் முதல்கதை படித்து முடித்த பிறகு முகத்தில் சிரிப்பு!

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான சிந்தனை, டால்டன் சகோதர்கள் ரோலில் லக்கி லூக்; புத்தகத்தை படிங்க முழு கதையையும் தெரிந்து கொள்ள! கண்டிப்பாக படித்து சிரிப்பீர்கள்!

      Delete
    2. லக்கி லூக் கதையை வண்ணத்தில் படிப்பதே ஆனந்தம். அச்சு தரம் டாப்.

      Delete
    3. படங்களை கவனித்து படித்தால் கூடுதல் சிரிப்பு உத்தரவாதம். கதை பரபரவென்று சென்றது, அதுவும் ஒரு காமெடி கதை; சிறப்பு.

      Delete
    4. இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களின் பெயர் சிரிக்க வைத்து உதாரணமாக டியூப் லைட் கவர்னர், அராத அட்டூ 😃

      Delete
  56. எடி அவர்களுக்கு, சுமார் பத்து வருடங்களுக்கு முன் எனது இடது கையில் Frozen Shoulder ஏற்பட்டது. சுமார் 6 மாதங்களுக்கு மேலாக physiotherapy மற்றும் உடற்பயிற்சி செய்து வந்ததால் முற்றிலும் குணமானது. ஓரிரு வருடங்களில் மறுபடியும் வலது கையில் அதே பிரச்சனை. மறுபடியும் 6 மாதங்கள் physiotherapy மற்றும் உடற்பயிற்சி செய்ததால் முற்றிலும் குணமானது. இதற்கு மருந்து, மாத்திரை எதுவும் கிடையாது. முறையான physiotherapy மற்றும் உடற்பயிற்சி மட்டுமே. இப்பொழுது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கு தற்பொழுது வயது 60. சுமார் 24 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது. எனவே பயப்பட தேவையில்லை. ஆனால் physiotherapy மற்றும் உடற்பயிற்சி விடாமல் செய்ய வேண்டும். விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  57. டியர் எடிசார்..
    உடல் நலத்தை கவனியுங்கள் சார்..
    ஆண்டு மலரின் எண்ணிக்கை போல் நாமும் 40 + என்ற சிந்தனையில் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு வந்து விட்டோம்..
    குறிப்பாக ,இரவு நெடு நேரம் கண் விழிப்பதையும் தவிருங்கள் சார்..
    சனி இரவு பதிவு -வின் நேரத்தையும் - பின்னூட்டமிடும் நண்பர்களின் நேரத்தையும் பார்க்கும் போது மனதிற்கு கவலையாகவே இருக்கும் ..
    40வது ஆண்டு மலர் - வாழ்த்துக்கள் - சார்..
    இதழ்களை சைஸ் வாரியாக அடுக்கி அழகு பார்க்கும் போதே
    நீங்களும் ஹாட்லைனில் அதை குறிப்பிட்டிருந்தது அழகு..

    ReplyDelete
  58. சார் குற்றம் பார்க்கின் கலரில் மறு பதிப்பு என்றால் வாங்காமல் விட்டு விடுவோம் என்றா நினைத்தீர்கள்? கண்டிப்பாக அப்போதும் வாங்கி இருப்போம் என்ன சொல்லாமல் வந்துவிட்டது அவ்வளவுதான் இதற்காக நீங்கள் வருத்தப்பட தேவையில்லை வேறு புத்தகம் தர வேண்டிய அவசியமும் இல்லை.

    ReplyDelete
  59. கொரியர் வந்து விட்டதாம். படிப்பதற்கு அக்டோபர் மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  60. என்னுடைய வியப்பு எல்லாம் தாங்கள் கதைகளுக்கு வைக்கும் தலைப்பில் தான். இந்த கதைக்கு இரண்டாம் முறை பெயர் வைக்கும் போதும் மிகச்சரியாய் முன்பு வைத்த அதே பெயரே உங்களுக்கு தோன்றியது எப்படி சார்?

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு தோணல. //மொழிபெயர்ப்பு செய்திடும் சகோதரிகளிடம் எப்போதுமே அவர்களது பெயர் suggestions-களை நான் கேட்பது வாடிக்கை ; அதற்கேற்ப இம்முறை அவர் கொடுத்திருந்த பெயர் முதல் தபாவாய் நன்றாகத் தோன்றிட, அதையே போட்டு விளம்பரத்தைப் போன மாதமே சாத்தியிருந்தோம்//

      ஆனால் சார் வைத்த பெயர் அவங்களுக்கும் தோன்றியது தான் செம்ம

      Delete

  61. ஆருடத்தின் நிழலில்

    நோ ஸ்பாய்லர்!

    ராபின் மற்றும் குழுவினர் ஓய்வு பெற்ற பின் நினைத்துப் பார்ப்பதாக V காமிக்ஸில் வரும் கதைகள் வழக்கமான ராபின் கதைகளை விட துடிப்பு மற்றும் துள்ளல் நிரம்பியதாக இருக்கின்றன.ஒவ்வொரு கதையின் இறுதி பக்கங்களிலும் கதாசிரியரும் ஓவியரும் இணைந்து ஒரு குட்டி ஓவிய மாயாஜாலத்தை நிகழ்த்திக் காட்டுகின்றனர். இந்த கதையின் நடுவிலேயே எதிர்மறைக் கதாபாத்திரத்தை யூகிக்க முடிகிறது என்றாலும் கதையின் நடை அழகு எல்லாவற்றையும் மறக்கச் செய்கிறது . இந்த கதையின் இறுதியில் இதற்கு முன் நடந்த ராபினின் சில பல கதைகள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

    நிஜத்தில் இந்த கதையின் நாயகன் ஜிம்மி கார்னெட் தான். இந்த கதையை படிப்பதற்கு முன் V காமிக்ஸ்-ன் முந்தைய வெளியீடான தலைவனுக்கு ஒரு தாலாட்டு கதையை ஒரு முறை படித்துக் கொள்ளவும். அப்போதுதான் ஜிம்மி கார்னெட், மேட் பார்ன்ஸ் போன்ற பெயர்கள் கதையோடு சம்பந்தப்பட்டிருப்பது எவ்வகையில் என்பது எளிதாகப் புரியும்

    9.3/10

    ReplyDelete
  62. அடேயப்பா விண்வெளிப் பிசாசு....சும்மா பார்சல பிரிந்தும்...பூமிப்பந்த அலேக்க உருட்டிப் பார்க்கும் ஸ்பைடர் அட்டைப்படம் முன் பின்னென பச்சை சிவப்பை கலந்ததுமே தூக்கியடிக்க...உள் பக்கங்களோ வேற லெவல் ...வீரியமான வண்ணங்கள் பக்கங்களை அழகுபடுத்த...உள்ளே காணும் காட்சிகள் பரவசபடுத்த ஸ்பைடரின் தெறிக்கும் செய்யும் வெற்றி 80 களுக்குள் நிச்சயம்....மீண்டு வந்த வலை மன்னர்...செமயா செஞ்சிருக்கார் நம் ஆசிரியர்....நிச்சயமா இங்கிலாந்தே அலறப் போகும் சம்பவம்....சூப்பர் சார் ...இது விட வேறென்ன வேணும்...பிரம்மாண்டம் கதையின் சைசிலும்...வண்ணத்திலும்....சும்மா தெறிக்க....ராபின் அட்டை இம்முறை கலக்க....நீங்க தந்த எலக்ட்ரிக் ஸ்பெசல் விளம்பர பக்கம் மீண்டுமோர் கோடை மலர் விளம்பரம்.....ஈரோட்டில் லயன் வரவேற்பு பத்திரிக்கை அசத்த...டெக்சாஸ் வண்ணக்குதிரைகளுடன் முதல் பக்கமும் ....அட்டையும் வண்ண விழாவ தூள் கிளப்ப...அந்த லக்கி அட்டையும் கலக்க...என்னைக்குமே டாப்தா நானன்கிறாரோ நம்ம ஸ்பைடர்....செம்ம சார்

    ReplyDelete
    Replies
    1. ஹாட் லைன் சும்மா அள்ளுது சார்...அதும் அந்த புத்தகங்கள் காட்டும் ஸ்பைடரின் ராட்சச வளர்ச்சி செம....இந்த முறை ஸ்பைடர் வென்று காட்டனும் விற்பனையில்....வெல்வார் நிச்சயம்

      Delete
  63. அற்பனே என்றாலும்
    விற்பனை என்றாலும்
    அற்பனே என்றாலும்
    விற்பனை என்றாலும்
    ஸ்பைடரே உனை மறவேன்
    நீ அற்பனே என்றாலும்
    விற்பனை என்றாலும்
    ஸ்பைடரே உனை மறவேன்
    புத்தகமாகிய ஒருப்க்க சுடரே
    புத்தகமாகிய ஒருப்க்க சுடரே
    அற்புதமாகிய பலவண்ணச் சுடரே
    மனதின்றும் தேடிடும் காமிக்ஸின் கலரே
    மனதின்றும் தேடிடும் பால்யத்து கலரே
    அற்பனே என்றாலும்
    விற்பனை என்றாலும்
    ஸ்பைடரே உனை மறவேன்
    படித்ததும் நினைத்ததும் நின் கதையாலே
    படித்ததும் நினைத்ததும் நின் கதையாலே
    கிடைப்பதும் மகிழ்வதும் நின் செயலாலே
    கிடைப்பதும் மகிழ்வதும் நின் செயலாலே
    கற்றதெல்லாம் உந்தன் கதைமொழியாலே
    கற்றதெல்லாம் உந்தன் கதைமொழியாலே
    காண்பதெல்லாம் உந்தன் வலைவழியாலே
    காண்பதெல்லாம் உந்தன் வலைவழியாலே
    அற்பனே என்றாலும்
    விற்பனை என்றாலும்
    ஸ்பைடரே உனை மறவேன்
    ஸ்பைடரே உனை மறவேன்
    ஸ்பைடரே உனை மறவேன்

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களுக்கு, ஆறிய தோசையாக இருந்தாலும் அதை சுவையாக கொடுத்து விட்டீர்கள் பின்னே ஏன் . சூடான தோசை இலவசமாக.... அதை ஏனோ இலவசமாக பெற்றுக்கொள்ள மனது இடம் கொடுக்கவில்லை ஆசிரியரே உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அதற்கு பதில் தங்களின் சிங்கத்தின் சிறு வயது கட்டுரையை இலவசமாக தாருங்களேன். ப்ளீஸ்

      Delete
    2. 🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏

      Delete
  64. ஆசிரியரிடம் ஒரு வேண்டுகோள்... இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காமல் இருக்க.... அடுத்த வெளியீடு பற்றிய விளம்பரத்தையும் நமது பதிவில் போட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. 🙏🙏🙏🙏🙏 யாராவது ஒருவரின் பார்வையில் பட வாய்ப்புள்ளது ❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  65. உடம்பு ரொம்ப முக்கியம் பிகிலு (( ஆசிரியர் அவர்களே...) இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஐம்பதை தொடப்போகும் எனக்கு தங்களின் கட்டுரை வாத்தியாரின் அறிவுரையாக தென்படுகிறது நன்றி நன்றி

    ReplyDelete
  66. @Edi sir..😍😃

    Tintin new books advt..

    எனக்கு Whatsapp ல வரலீங்களே சார்..😏

    ReplyDelete
  67. Enjoyed both lucky Luke issues thoroughly. So funny. Translation is great too

    ReplyDelete
  68. ராபின் ஆருடத்தின் நிழலில்

    முதலில் படித்தது எப்போதும் போல V காமிக்ஸ். தலைவனுக்கு ஒரு தாலட்டின் தொடர்ச்சி தான் இந்த கதை. அருமையான ஒரு கதை ஜிம்மி பற்றிய நமது பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. ரொம்பவே நெகிழ வைக்கும் கதை இது.

    எனது மதிப்பெண் 10/10.

    ReplyDelete
  69. Sir, உங்களோட தோள்பட்டை எப்படி இருக்கு?.....உடம்ப கவனமா பாத்துக்கங்க sir. Tex Willer substitute book விலையின்றி வழங்க அவசியமில்லை என்றே கருதுகிறேன் sir.

    ReplyDelete
  70. நடுவுல கொஞ்சம் ஞாபகங்களை காணோம்..லக்கி புது கதாசிரியர், பிதாமகர் மோரிஸ் அவர்களை தாண்டி டால்டன் களை மிகவும் நன்றாக பயன் படுத்திக் கொண்டுள்ளார்.பல இடங்களில் வெடிச் சிரிப்பு.சிறைக்கைதி ஒருவன் பழைய ஞாபகங்களை மறந்துவிட்டதால் (அம்னிசியா)அவனுக்கு விடுதலை.அதேபோல் தங்களுக்கும் அம்னிசியா என்று நாடகமாடதீர்மானிக்கின்றனர் டால்டன்ஸ்..உண்மையாகவே ஞாபகங்களை மறந்துவிட்டனரா என்பதை பரிசீலிக்க அரசாங்கம் லக்கியின் துணையுடன்முயற்சிக்க ,சமாளிக்க டால்டன் கள் குழு முயற்சிப்பதை வயிறு வலிக்க வலிக்க சிரிக்க வைத்து முழு கதையாக வழங்கியுள்ளனர்.எடிட்டரும் மொழிபெயர்ப்பில் நகைச்சுவை வசனங்களில்புகுந்து விளையாடி வழக்கம் போல லக்கியை கோபுரத்தில் தூக்கி நிறுத்தியுள்ளார். இந்த லக்கி கொண்டாட வேண்டிய ஒரு பொக்கிஷமான ஆல்பம்.கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  71. எனக்கு முதுகு தண்டுவடத்தில் ஜவ்வு விலகியதால் சுத்தமாக நடக்க முடியாமல் போய்விட்டது. இடது காலும் வலது கையும் பாதிப்படைந்தது. அந்த ஜவ்வு விலகியதால் ரத்த ஓட்டம் கீழே செல்லாததால் முற்றிலும் நடக்க முடியாமல் போய்விட்டது. அதன் பின் இயற்கை சிகிச்சைக்கு சென்று பலன் இல்லை. கோயமுத்தூரில் தனியார் மருத்துவமனையில் ஒரு மருத்துவரை அணியினேன். அவர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தார். அதன் பின் லேப்ராஸ்கோப் அடிப்படையில் கழுத்தின் கீழே ஓட்டை போட்டு அந்த ஜவ்வு எடுத்துவிட்டு தற்போது பிளேடு வைத்திருக்கிறார்கள். இப்போது இருக்கும் சூழலில் 70 சதவீதம் குணமாகிவிட்டது. ஆனால் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தற்போது பிளேடு வைத்து இரத்த ஓட்டத்தை சரி செய்து விட்டோம் நீங்கள் நடப்பதும் நடக்காததும் அந்த கடவுள் கையில் உள்ளது என்று கூறிவிட்டார். அதுமட்டுமல்ல இது போல் ஒருவர் அறுவை சிகிச்சை செய்து ஒரு வருடம் ஆகியும் இன்னும் எழுந்து நடக்கவில்லை என்றும் அதனால் நம்பிக்கை இழக்க வேண்டாம் முயற்சி செய்யுங்கள் என்று மட்டும் கூறினார். இப்பொழுதும் இடது கால் பழம் சற்று கம்மியாக தான் இருக்கிறது. அதுமட்டுமல்ல புயலே வந்தாலும் என்னால் ஓட முடியாது. அதேபோல் சற்று சரிவான பகுதியில் இறங்கி நடக்க முடியாது சமதளத்தில் மட்டுமே அதுவும் சீராக மட்டுமே நடக்க முடியும். அதுவும் தளராத முயற்சியால் இந்த 70% அளவு நடக்க முடிந்தது. மூன்று மாதங்களுக்குப் பின் அவரிடம் சென்று பார்த்த போது நீங்கள் இந்த அளவு வந்ததே பெரிது. இன்னும் சற்று முயற்சி செய்தால் ஓரளவு நடக்கலாம் என்று கூறிவிட்டார். இப்பொழுது 70 சதவீதம் அளவு என்னால் நடக்க முடியும் என் வேலைகளை செய்ய முடியும். ஆனால் குனிந்து அல்லது வேறு எவ்வகையிலும் 20 கிலோக்கு மேல் எடை தூக்கக்கூடாது. அப்படி தூக்கினால் அந்த பிளேடு விலகிவிடும் என்றும் கூறியிருக்கிறார்கள். இப்போதும் ரத்த ஓட்டம் சீராக ஆறு வகையான எக்சர்சைஸ் சொல்லி கொடுத்திருக்கிறார்கள் அதை நான் தினமும் செய்து கொண்டிருக்கிறேன். ஆகவே ஆசிரியரின் கை வலி எப்படி இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. சதாசிவம் சார் தாங்கள் முழுமையாக குணமடைய இறைவன் அருளை வேண்டுகிறேன். பெருமாள் ஈசன் திருவருளால் தாங்கள் விரைவில் பூரண நலம் அடைவீர்கள். அனைத்து வேதனைகளும் கலைந்து போகட்டும் சார்.

      Delete
  72. ஆனால் அந்த நம்பிக்கையில்லாத நேரத்தில் தன்னம்பிக்கையுடன் இருக்க என்னுடன் துணையாக இருந்தது லயன் காமிக்ஸ் மட்டுமே. லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை செய்திருந்த காரணத்தால் தூங்கும் போது கழுத்தில் பட்டையை மாற்றிக்கொண்டு நேர் மேலே பார்த்த அப்படி மட்டுமே படுத்திருக்க இயலும் திரும்பி படுக்க முடியாது.கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவ்வாறுதான் படுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அதுமட்டுமல்ல செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறிவிட்டார் மருத்துவர். அந்த சூழ்நிலையில் எனக்கு துணையாக இருந்தது லயன் மட்டுமே.

    ReplyDelete
    Replies
    1. சதாசிவம் சார்…நீங்கள் விரைவில் பூரண நலம் அடைய எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்.

      Delete
    2. @உறவுகளுக்காக
      எனக்கு அறுவை சிகிச்சை நடந்தது 2018 ஆம் ஆண்டில். தற்போது என்னால் 70% நன்றாக குணமாகிவிட்டது. தற்போது நலமாக தான் உள்ளேன். அதன் பின் மூன்று வருடங்கள் ஈரோடு புத்தக விழாவிற்கு நான் வந்திருக்கிறேன். இரண்டு முறை வாசகர் சந்திப்பில் இடம் பெற்றேன் ஒரு வருடம் அதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.கோவிட்டுக்கு பின்னர் சில காரணங்களால் என்னால் புத்தக விழாக்களுக்கு என்னால் வர முடியவில்லை. இந்த வருடம் கண்டிப்பாக வருவேன். அப்பொழுது உங்களை நேரில் பார்க்கும் போது முழு விவரம் உங்களுக்கு தெரியும்.

      Delete
  73. சதாசிவம் சார் ..மனதை தளரவிடாதிர்கள்.இதுவும் கடந்து போகும்.நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் .

    ReplyDelete
  74. சதாசிவம் சார். நீங்கள் விரைவில் நலமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  75. டியர் எடிட்டர்…

    விரைவில் பூரண நலமடைந்து ஜாலி ஜம்பர் போல துள்ளிக் குதித்து ஓட எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன். டேக் கேர் சார்.

    ReplyDelete
  76. எது, எப்படியோ - வரும் ஆகஸ்ட்டில் வேறொரு முழுநீள டெக்ஸ் புது சாகசமொன்று, விலையில்லா இதழாய் உங்களது கூரியர் டப்பிகளில் இடம்பிடித்திடும் !! //

    You can send it for your own satisfaction and I will pay the price for my own satisfaction.

    ReplyDelete
  77. முதல் impression

    1. Agent robin
    2. TeX
    3. Lucky Luke
    4. Spyder

    ReplyDelete
  78. நேற்று பார்சலை கைப்பற்றினேன். முதலில் ஸ்பைடர் கண்ணுக்குத் தெரிய அதை படித்துக் கொண்டிருந்தேன் மத்த புத்தகங்களை பார்வையிடவில்லை. அதுமட்டுமல்ல வேலை பொழுது காரணமாக இன்று வரை தளத்துக்கும் வர முடியவில்லை. இப்பொழுது இங்கே வந்து பார்த்தால் தான் டெக்ஸ் புத்தகம் பழையது என்பதே எனக்கு தெரிகிறது. நான் என்ன நினைத்தேன் என்றால் குற்றம் பார்க்கின்றி தான் அன்றைய தலைப்பு வந்தது. இது குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதால் வேறு கதை என்று இருந்தேன். விஜயன் சார் பரவாயில்லை. இதனால் தவறால் உங்களுக்கு நேர்ந்துள்ள பிரிண்டிங் செலவை நினைக்கையில் மனதுக்கு வலிக்கிறது. டெக்ஸ் கதை என்பதால் புத்தக விழாக்களில் சென்று விடும் தான். என் போன்ற வாசகர்களுக்கு இன்னொரு புத்தகம் கிடைத்து விடும் தான். ஆனால் அந்தப் புத்தக தயாரிப்பில் ஏற்பட்ட குளறுபடி வருத்தமாக தான் இருக்கிறது.

    ReplyDelete
  79. சதாசிவம் சார், தாங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். காலத்தின் கட்டாயத்தை எதிர்கொள்ளும் போது மன உறுதி மிகவும் அவசியம் அதனையும் கடவுள் தங்களுக்கு தந்தருள்வாராக..

    ReplyDelete
  80. ஏற்கனவே வந்த கதை என்பது மறந்து போச்சுன்னா அந்தளவிற்கு நிறைய புத்தகங்களை வெளியிடுகிறோம்னு அர்த்தம். இது சந்தோஷமான விஷயமாச்சே !

    ReplyDelete
    Replies
    1. என்ன ஒரு அற்புதமான சிந்தனை 😊

      Delete
  81. சார் ஆகஸ்டு விழாவுக்கப்புறம்...விக்ரம் கைல விட்டுட்டு கம்ப்ளீட் டா ரெண்டு மாசம் இந்த தளம் எல்லாத்துக்கும் ஓய்வு குடுங்க...ஆர்வத்த அடக்க முடியலன்னா தளத்துக்கு மட்டும் வாங்க

    ReplyDelete
  82. மகி ஜியை அப்படியே காப்பி அடிச்சுக்கறேன். You can send it for your own satisfaction and I will pay the price for my own satisfaction

    ReplyDelete
  83. July issues are rocking sir - good selections for 40th year. Tex done. Robin done. Lucky Luke first story done - hilarious. One more to go. Spider reserved for tomorrow evening's weekend read.

    ReplyDelete
  84. I had totally forgotten the Text story - so it was quite a breezy read fitting the occassion. Save the bonus book for Deepavali sir - and at a price not free !

    ReplyDelete
  85. Robin is becoming fast like Young Tex - way too much predictable - two publications publishing together a lot of Robin/Nick Raider stories a year also not helping the overkill ! Still a breezy read !

    ReplyDelete
  86. களம் எங்கும் கிழம் - செம செம காமெடி . மற்றும் ஒரு அட்டகாசமான லக்கி லூக் ஆல்பம்.

    ReplyDelete
  87. கொலைப் படைக்கு அப்புறம் மேக்ஸி சைசில் ஒரு ஸ்பைடர் கதை! வாவ்! பிளாக் & ஒயிட்டில் இருந்திருக்கலாமோ? வண்ணக் கலவை அந்தகாலத்தில் பிளாக் & ஒயிட் டிவி ஸ்க்ரீனில் மேல் வைத்த பல வர்ண கண்ணாடி ஷீல்டை நினைவுபடுத்துகிறது!

    ReplyDelete
  88. வணக்கம் எடி சார்.. உங்களின் உடல் சுகவீனம் பற்றிய பதிவென்றாலும் அதிலும் உங்களின் வழக்கமான ட்ரேட் மார்க் நகைச்சுவையை அள்ளி தெளித்திருப்பது....
    ஒரு கணம் உங்கள் உடல் நலம் பற்றி கவலை கொண்டாலும், அடுத்தடுத்த வரிகள் சிரிப்பை மூட்டியும் விடுகின்றன...
    வடிவேலுவின் வசனம் ஒன்று நினைவு வந்து போகிறது...

    இந்த ரணகளத்திலும்....

    ReplyDelete
  89. குற்றம் பார்க்கின் வண்ணத்தில் அள்ளுகிறது என்று நண்பர்கள் சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இன்னும் ஒரு வாரத்தில் எனக்குமே கிட்டி விடும்..

    ReplyDelete
    Replies
    1. அப்படியானால், மறு பதிப்பை வாங்கி விட வேண்டியது தான்.
      இன்னும் அது என்ன கதை என்று ஞாபகம் இல்லை.
      அது என்னமோ, டெக்ஸ் மறு பதிப்பு கலரில் என்றால், மனசு பரவசமாகி விடுகிறது.
      அதை விரைவில் வாங்கி படிக்க
      வேண்டும் என்று என் நெஞ்சம் படபடப்பாய் துடிதுடித்து கொண்டு இருக்கிறது.

      "நல்லா கொளுத்தி போட்டீங்கய்யா தீக்குச்சிய".

      இங்கு நடந்த அட்டகாசத்தினால்,
      இனி காமிக்ஸ் படிக்கக்கூடாது என்ற எனது தவமே கலைந்து விட்டது.
      நல்லா வருவீங்க ஐயா...
      இந்த நல்ல காரியத்தை செஞ்ச பெரிய ஆசாமிங்க.

      கிளாசிக் டெக்ஸ் முதல் தொகுப்பு வாங்கிய பின்பு, அதற்கு பின் வந்தவைகளை வந்தவைகளில் எதிலும் நான் ஆர்வம் காட்ட வில்லை.

      ஆனால் இந்த,
      " குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை"
      என்பதில் எதுவோ இருக்கிறது.
      அதோடு இது குறு நாவல் வேறு.

      வெயிட்லெஸ்.

      இந்த சமாச்சாரம் செமையாக இருக்கிறது.

      Delete
  90. சார் லக்கி ஆண்டு மலர் தான் இந்த மாத show stopper. Simply awesome. ரொம்ப நாளுக்கு பிறகு மகிழ்ச்சியாய் சிரித்து ரசித்து படித்த லக்கி ஆல்பம் இது. இரண்டு கதைகளும் அருமை. ஒன்றை ஒன்று விஞ்சி விட்டது.

    One of the best books of this year. If not the best.

    எனது மதிப்பெண் 1000/10

    ReplyDelete
  91. 3 நாட்களாக விண்வெளி பிசாசு படிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். கஷ்டம் தான் அப்போது இந்த கதைக்கு சில்லறையை சிதற விட்டேன் தான். ஆனால் இப்போது 🤐 மிடில.

    எனது கருத்து இது கலரில் வந்ததை விட கருப்பு வெள்ளையில் வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

    ஆக மொத்தம் 3 புத்தகங்கள் படித்து முடித்து விட்டேன். குமார் ஹேப்பி அண்ணாச்சி.

    ஸ்பைடர் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக படித்து விடுகிறேன்.

    லயன் 40 ரொம்ப சூப்பர்.

    ReplyDelete
  92. லக்கி ஆண்டு மலர் நேரம் கிடைக்கும் போது விரிவான விமர்சனம் எழுத ஆசை.

    ReplyDelete
    Replies
    1. அப்ப இன்னும் உங்களுக்கு கிடைக் கலியா சார்...:-(

      Delete

  93. டின் டின் காமிக்ஸ் ஸ்கேன் சென்டர் அரியலூர் பக்கம்

    பெயர்: லயன் காமிக்ஸ் ( லக்கி லுக் ஆண்டு மலர் )
    வயது:40
    பாலினம் :
    சூடோ ஹெர்மோ புரோடைட் ( pseudo hermophrodite)[ பிரென்ச் - ஆங்கில கருவிலிருந்து தமிழ் கருவுக்கு ]

    இதுவரையிலான குழந்தைகள் :
    (Gravida) பலநூறு

    உயிர்ப்புடன் இருக்கும் குழந்தைகள் (para): பலநூறு

    அறிவிக்கப்பட்டுவெளிவராத குழந்தைகள்( Abortion): சில பல

    உயிருடன்பிறந்தகுழந்தைகள்(live): பல நூறு

    தவறாக ஜனித்த குழந்தைகள் (Ectopic): சமீபத்தில் ஒன்றே ஒன்று

    தற்போதைய குழந்தைகள் :
    இரண்டு

    இரண்டு சூல் வித்தகங்களுடன்
    இரண்டு பனிக்குடங்களுடன்
    ( dichorionic diamniotic)

    முதல் குழந்தை(foetus1)
    CRL( Crown rump length ) 44 பக்கங்கள்
    சிரிப்பை ஏற்படுத்தும் ஸ்கேல் 9.5/10
    சூல் வித்தகம் : தனி. Fauche &Leturgie

    இரண்டாவது குழந்தை(foetus2)

    CRL ( Crown rump length )44 பக்கங்கள்
    சிரிப்பை ஏற்படுத்தும் ஸ்கேல் :
    9.7/10
    சூல்வித்தகம் : தனி. R. Goscinny

    இரண்டு குழந்தைகளுக்கும் இடையில் (intertwin membrane ) ஒரு ஜவ்வு உள்ளது( பக்கம் 49)

    முடிவு(impression )

    (Dichorionic Diamniotic gestation.)

    இரண்டு சூல் வித்தகங்களுடன்
    இரண்டு பனிக்குடங்களுடன்
    ( dichorionic diamniotic).

    1. குழந்தை ஒன்று. (நடுவிலே கொஞ்சம் ஞாபகத்தை காணோம் )
    44 பக்கங்கள் சிரிப்பை ஏற்படுத்தும் ஸ்கேல் 9.5/10

    2. குழந்தை இரண்டு.( களம் எங்கும் கிழம் ) 44 பக்கங்கள். சிரிப்பை ஏற்படுத்தும் ஸ்கேல்9.7/10



    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான விமர்சனம் சார்...

      நன்று....:-)

      Delete
  94. டாக்டர் ஜி . உங்களது ஒவ்வொரு விமர்சனமும் ஒரு விதத்தில் புதுமையாக வே உள்ளதென்றாலும்இந்த ஸ்கேன் தமிழ் வாசகர் விமர்சனங்களில் சர்வ நிச்சயமாக ஒரு
    ட்ரெண் ட் செட்டராக அமைந்துள்ளது .இனிய பல விமர்சனங்கள் இதன் தொடர்ச்சியாக இதே போல் வரும்.

    ReplyDelete
  95. *விண்வெளி பிசாசு*

    ரிப்போர்ட்டர் ஜானியை இப்பொழுது ரசிக்க முடிகிறது..ஆனால் ஜானி 2.0 வை அந்த அளவு ரசிக்க முடியவில்லை..ஸ்பைடர் 2.0 இப்பொழுது ரசிக்க முடிந்தது ( குறுகிய கதையாக இருந்தாலும்) ..ஆனால் பழைய ஸ்பைடரை இப்பொழுது ரசிக்க முடியவில்லை என நானே சொல்லி உள்ளேன்..ஆனாலும் விண்வெளி பிசாசு கதையை பொறுத்தவரை ஆசிரியரை ஈரோடு மரத்தடி மீட்டிங் சமயம் எல்லாம் இந்த கதை மறுபதிப்பாக கொண்டு வாருங்கள் சார் என மற்ற வாசகர்களை போலவே நானும் வேண்டியுள்ளேன் அப்பொழுது எல்லாம் இன்றைய காலகட்டத்தில் அது ரசிக்காது சார்...என மறுத்து விடுவார்..ஆனாலும் நமது வேண்டுகோளின் படி இதழும் வெளிவந்து விட்டது அதுவும் மெகாஅளவில் வண்ணத்தில்..

    இதழை பார்த்தவுடன் நீண்ட நாள் ஆசை நிறைவேறிய எண்ணத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு மகிழ்ச்சி குஷி என எல்லாமே கலந்து கட்டி குடியேறியது அனைத்தும் உண்மையோ உண்மை தான்


    ஆனால் கதையை வாசிக்க ஆரம்பித்தவுடன் தான் எப்பொழுதுடா முடியும் என கஷ்டபட்டு கொண்டே ஒரு வழியாக முடித்து விட்டேன்.. ஹீஹீ...இது எல்லாம் தேவை இல்லாத ஆசையோ ஆசிரியர் அப்பவே சொன்னாரே என நினைக்க தோன்றியது...

    மற்றபடி ... :-)

    ReplyDelete
    Replies
    1. செம்ம தலைவரே வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். இப்போ எல்லாம் ஸ்பைடர் 😭😭😭

      Delete
  96. ஆருடத்தின் நிழலில்...

    எப்பொழுதும் இணையத்தில் ஆசிரியர் வெளியிடும் அட்டைப்படத்தை விட நேரில் காணும் பொழுது இன்னும் அசத்தாலாக தோன்றும்..ஆனால் இந்த முறை நேரில் பார்த்த அட்டைப்படத்தை விட இணையத்தில் பார்த்தது தான் சிறப்பாக தோன்றியது போல் தோன்றுவது எனக்கு மட்டும்தானா ..?!


    மீண்டும் ராபின்...வழக்கமான வி காமிக்ஸ்லில் ராபின் சாகஸம் வயதான காலத்தில் நினைவு முன்னோட்டமாக கதை தொடங்கும்..இந்த முறை நேரிடையாக தொடங்கி செல்வதை பார்த்து ஓ..மீண்டும் பழைய ராபினோ என நினைத்தேன்..ஆனால் க்ளைமேக ஸில் வழக்கம் போல் நினைவலைகளின் கதையே...எது எப்படியாயினும் கதை நல்ல விறுவிறுப்பு ..இந்த முறை மெயின் கதையில் ராபினே இல்லாமல் விசாரனை நடந்து கொண்டு இருக்கிறதே என யோசித்து கொண்டே வாசித்தால் சரியான இடத்தில் ராபின் வந்து இணைகிறார்..முடிவுரை சிறிது கனமாக அமைந்து உள்ளது வருத்தமே...மொத்தத்தில் ஆருடத்தின் நிழலில் அருமை...

    ReplyDelete
    Replies
    1. // ஆனால் இந்த முறை நேரில் பார்த்த அட்டைப்படத்தை விட இணையத்தில் பார்த்தது தான் சிறப்பாக தோன்றியது போல் தோன்றுவது எனக்கு மட்டும்தானா ..?! // எனக்கும்

      Delete
  97. *குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை*


    அட்டைப்படம் செம அசத்தல் எனில் உட்பக்க வண்ணங்கள் இதழை மெருகூட்டுகிறது...உண்மையில் இந்த இதழ் அறியாமல் வெளிவந்ததை நினைத்து ஆசிரியர் வருந்த தேவையில்லை என நினைக்கிறேன்.காரணம் இந்த இதழ் வந்த பொழுது முதல் பக்க அந்த நதிகளில் மேய ச்சலில் ஈடுபட்டு இருக்கும் குதிரைகளின் சித்திரங்களை வாட்ஸ்அப்பில் ஒரு நண்பர் வண்ணத்தில் வெளியிட்டு இருந்தார்..அப்பொழுது பலரும் அடேங்கப்பா செம அட்டகாசமாக உள்ளது இது வண்ணத்தில் வந்து இருக்கலாம் என்று பலரும் உரையாடியது இந்த இதழின் இப்பொழுது அந்த முதல் பக்கத்தை உணரும் பொழுது நன்றாக நினைவில் வருகிறது..அன்று வாசகர்கள் உரையாடியது இன்று நீங்களே அறியாமல் வெளியிட்டாலும் சிறப்பு தான் சார்..முழு இதழும் அச்சு தரத்தில் ,வண்ணத்தில் கலக்குகிறது..மீண்டும் கதையினே ஒரு மூச்சில் படித்து முடித்தாயிற்று..

    மீண்டும் டெக்ஸ் மீண்டும் வெற்றி..

    ReplyDelete
  98. லக்கி ஆண்டு மலர் இந்த முறை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இதழ் ...இன்று மாலை தான் வாசிக்க....:-)

    ReplyDelete